பாயிரம்.
விருத்தம்.
காப்பு.
பெரியபண்டியன் பெய்கரியானன
னரியஞானத்தபோதனரஞ்சலிக்
குரியவாமனரூபனையுள்ளுவாஞ்
சுருதிசாரவிளக்கந்து திக்கவே. 1
பரசிவ வணக்கம்.
காதெவனாலே கேட்குங்கண்ணெவனாலே காணு
மோது நாவெவனாலுண்ணுமுடலெவனாலேயோரு
மோதுமூக்கெவனான் மோக்குமூச்செவனாலேயோடும்
போதெவனாற்போய்மீளுமவனடிபோற்றுகிற்பாம். 1
பராசத்திவணக்கம்.
(வேறு)
ஆதிப்பிரமத்தொருசத்தியபினாசத்தியாயதன்பாற்
பேதசத்தியாயதன்பாற்பின்னாபின்னசத்திகளா
யோது நாமரூபமாய்விரிந்து முடிவினொன்றாகிப்
போதமயமாய் நின்றாடன் பொற்றாமரைத்தாள் போற்றுவாம். (2)
முருகக்கடவுள் வணக்கம்.
(வேறு)
செத்துச்செத்துப் பிறக்குஞ்செருக்கற
மெய்த்தஞானவிவேகங்கண்மேலிடச்
சுத்தவான்மசொரூபமேநீயெனுஞ்
சத்தி வேற்கைச்சரவணற்போற்றுவாம். (3)
அடியார் வணக்கம்.
வேறு.
முப்பாழும்பாழென்ற மூலனாரடிபோற்றி
யப்பாலும் பாழென்றசடகோபாடிபோற்றி
யொப்பாருமிலையென்றசீவாக்கருரைபோற்றி
பொய்ப்பாரையறத்துறந்தவெண்காடர்புகழ் போற்றி. 4
கண்ணாலுங்கருத்தாலுங்கையாலுமெய்யாலு
கண்ணாதபரஞ்சுடரை நாதாந்தநாயகரை
யுண்ணாடுபவர்க்கெளியவுத்தமரையுபநிடதக்
கண்ணாரக்கண்டவரைக்கருத்தாரப்போற்றுவாம். 5
பெற்றதபோதனர் பாதப்பெய்தூளிபுனைந்திடவும்
குற்றமுறுமெனதுள்ளங்குவிந்தறிவைக்குறுகிடவும்
பற்றறத்தீரத் துறந்தசுகமுனிபங்கயத்தாளை
யற்றமறத்துறந்தவன்போலறிவாகிவணங்குவாம். 6
குரு வணக்கம்.
ஆக்கையலவிந்தியநீயல்லவகக்கரணமல்
தேக்குபிராணனுமல்லசீவனலசாக்கியல்
போக்குவரவில்லாத பூரணநீயென்றருளு
மாக்குரவன்றிருத்தாளை மறவாமல் வணங்குவாம். (7)
நூற் சிறப்பு.
வேறு.
மறைகிடந்தமதுரநால்வாக்கிய
நறவமென்ன ஞானிகளுண்டிடப்
பிறவி தீர்தரப்பேணிப்பெருகிரு
ளறவிளம்புவனங்கையினெல்லிபோல். 8
வேறு.
ஐயமுடையோரின்னுமாசையுடையோரதம்
பையரவன் முடியுலகப்பசி நூலின் விருப்புடையோர்
மையுறுகொக்குவம் பரதமலிகணிதஞ்சத்தமிதி
னையுமவாவுடையோருமிந்நூலினயமறியார். (9)
அவையடக்கம்.
ஆலவிடஞ்சிவன் மிடற்றிலடங்கியத்தாலகிலமெலா
மாலவிடமென்றிகழாரஞ்சலி செய்வார்போல
மூலமகாவாக்கியமாமணிச்சரமுமந்திடுமிம்
மூலகறிந்தோரிகளாரதுவேயென்மொழியம்மா. 10
நாரதாதியர் சுகர்க்குநவின்றாார்வாக்கியமுந்
தீரராய்முத்திபெறச்சித்தம் மாருப்பட்டவர்க்குத்
தூரமாயணித்தாயசயம்பிரகாசுப்பெயரோ
னாரியன் சேவடி போற்றியறைவனருந்தமிழாலே. 11
பாயிரம் முற்றிற்று.
முதல்வாக்கியம்.
தீரத்துறந்தசுகமுனிவன்றிவுமகரயாழ்முனிவ
னாரப்பொலிந்ததாமரைப்பூவடியில் வீழ்ந்துமுகநோக்கிப்
பாரை துறந்துபோமறுபகர்தியென்னப்பக்குவனே
சேரப்பிரகம்பிரபஞ்சமேவாப்பிரமோகந்தெளியே. 1
வேறு.
உலகமே பரப்பிரமமுரைக்குமந்தப்பிரமநா
மலகில் கலையுணர்ந்தாலுமருத்தமிதேபறிகண்டாய்
பலமயலைத் துறந்தரியபரம்பதந்தனைத்தாவி
யுலவுசுகமுனிவரனேயென்றுரைத்தானுயர்முனிவன். 2
ஆகிலிந்தப்பரப்பிரமமகிலமயமாயிற்றென்றாற்
சோகமொடுபிறந்திறக்குந்தொழிளுளவோவென்பாயே
லிகைபலபணியாயுமிறந்தனவோவதுபோல
வேகபரமகிலமுமாயிருக்கும் வியாபகத்தாலே. 3
தந்தைவயினுண்டாய சந்ததியுமவனென்றே
முந்துமறையுரைதருமான் முழுவதுந்தானன்றியொரு
சிந்துமிலையென வீசன் சேயிழைக்கோதிய பரிசாற்
பந்தமறுஞ்சுகமுனிவபார்பிரமஞ்செகமென்றே. 4
எல்லாவண்டமுமியானேயாவருமென்சொரூபமே
நல்லார்பொல்லார்நானே நன்மையொடு தீமையுநா
னுல்லாசபரமுத்தியொன்றொழியவிரண்டில்லை
கல்லார்க்கிப்பொருடெரியாகண்ணிலர்க்குக்கதிருண்டோ. 5
ஒலியாகிப்பரிசமாயுருவாகியிரதமாய்ச்
சலியாதகந்தமாய்த்தாரணியாய்ப்புனலனலாய்
மலிவாயுவானமாய்மதியிரவியமானா
யலியாகியாணாகிப்பெண்ணாகியமர்கின்றேன்.6
சாவதுவும் பிறப்பதுவுந்தனுவன்றோவஃதறிதி
சாவதுவும் பிறப்பதுவுந்தாமென்றேயுரை தருவார்
போவதுவும்வருவதுவும்புரியட்டசரீரமே
போவதிலை வருவதிலைபோதமயப்பொருணாமே. 7
இ அவ்வண்ணமறியாதாரில்லறத்தைத் துறந்துபோ
யுய்வண்ணம்பெறக்கானிலூசிநுதித்தவம்புரிவர்
நைவண்ணமனத்தோடு நானிலம் போய்த்திரிதருவார்
கைவண்ணவனலோம்பிக்காலத்தைக்கடத்துவார். 8
(வேறு.)
தன்னையறிந்தோர்தபோதனரே தன்னையறியார்தபோதனரோ
முன்னைவினையின் முடிபறியார் முதன்மைப்பிரமந்தானென்றே
சொன்னமறையின் பொருளறியார் துறந்துந்துறவார்சுபமுத்தி
பின்னமென்றேபிதற்றுவாரென்னேயுலகின் பேதமே. 9
முதல்வாக்கியம் - முற்றிற்று.
இரண்டாம் வாக்கியம்.
வான்முதலுலகமெல்லாமனத்திடையாக்கவல்ல
நான்முகப்பிரமன் றன்னைநவில் சுகமுனிவனோக்கி
மோனவத்துவிதச்சொற்குமொழிபொருளிரண்டோவொன்றோ
ஞானசற்குரவசொல்வாயென்றுளநைந்துகேட்டான். 1
(வேறு.)
ஏகமேவாத்துவிதம்பிரமோகமென் றிசைப்பத்
தாகமொடுஞ்சுகமுனிவன் சந்தேகத்தடை நீங்கி
யாகமெனுஞ்சிறையுலவா தாநந்தச் சிறையாகி
யேகமேய்த்துவிதம் பிரமநாமெனத்தெளிந்தான். 2
அத்துவிதந்துவிதமல்லாதெனவரியமறையேக
மத்துவிதமிதற்கையமிலையென்றேயறைந்தாலும்
பொய்த்துவிதமயக்கொழியார்பூருவவாதனையாலே
யத்துவிதமொழிபொருடான்னியமாய்த்தெளிவரால். (3)
வேறாகிப்பிறந்திறந்தகாலமெலாம்விவேகமிலாக்
கூறாகியருட்குரவன்குற்றேவலாற்றியபின்
னீறார்ந்திருமேனிநிமலன்மாவாக்கியத்தால்
வேறாகாப்பதமளித்தால் வேறாகும்விரகிலிகள். 4
ஒன்றாகிப்பரவெளியாயுருவருவமிலதாகிக்
குன்றா தபரப்பிரமங்குகையிருக்குமதை விளக்கி
னன்றாருமிதயகுகை நாமதுவேயையமிலை
கன்றா தநின் மொழியான் மெய்ஞ்ஞானங்கடைப்பிடித்தேன். (5)
ஊனாடியுயிர்நாடியுண்ணாடிப்புற நாடி
வானாடிவளிநாடி மண்ணாடிநீர் நாடித்
தீநாடி நாதவிந்து செங்கதிரோன்றனைநாடி
நானாடிப்பார்ப்பளவினானேயப்பரப்பிரமம். 6
பல்கலையாலாமத்தாற்பகர்கீதைபதினெட்டா
னல்வினையாற்கருமத்தானான் மறையான் ஞானத்தாற்
சொல்லூகத்தான் மறையாத்துணிவாலிற்றுயந்தோரா
னல்லோரானான்பார்க்கினானேயப்பரப்பிரமம். 7
ஒருகாலந்தோன்றினேனொருகாலம் வளர்கின்றே
னொருகாலஞ்சாம்பினேனென்றுரைக்குமுணர்விலிக
ளொருகாலம் பிறந்ததிலையொருகாலம் வளர்ந்ததிலை
யொருகாலமறிந்ததிலை நானேயவ்வுயர்பிரமம். (8)
நான்மனிதனன்று நானவிலுறு தேவனுமன்று
நானிராக்கதனன்றுநலியசுரனானன்று
நான்முனிவனன்றுரகனான்முகனுநான்று
நான்றிருமாலன்றரனுமன்றரியபிரமநான்.
முன்னவருநானல்லமுடிமன்னர் நானல்ல
துன்னுவசியருமல்லசூத்திரருநானல்ல
வன்னியருநானல்லவன்னியருநானல்ல
பின்னமொடுபிறப்பிறப்புமில்லாதபிரமநான். 10
நான் பிரமமெனுஞான ஞானிகள் பாலுள்வாகு
மூன்பிரமையொழியாதார்க்கொருக்காலுந்தோன்றாவா
மான்வயிற்றினரிதாரமருவுமன்றிவராகவயிற்
றூன்பிறக்கண்டாருமுண்டோபொய்க்கலியுகத்தும். 11
ஆதலாலகம்பிரமமெனுஞ்சுருதியகந்தெளிந்து
போதினான் முகப்பிரமபுண்டரிகத்தாள் வணங்கி
யோதொணாமகிழ்ச்சியொடுமுலாவினானுலகமெலாஞ்
சோதியிவன்றானென்னத்துறந்தசுகமுனியம்மா. 12
இரண்டாம்வாக்கியம் - முற்றிற்று.
மூன்றாம் வாக்கியம்.
சொன்னவருஞ்சுகமுனிவன்றுயர்க்கடலைக்கடந்திடுவான்
முன்னைவினை நல்வினையான் மொய்த்தெழுந்தபூங்கயிலை
மன்னியுறைகல்லாலின்மாதேவர் திருமுன்பு
துன்னினானனேகமுறைதொழுதழுதான் சொல்லுவான். 1
காண்பதெலாம் பிரமமெனிற்கண்டிதமாயழி தருமே
காண்பதலா தனவெல்லாங்காணாமல்ழிதருமே
மாண்பயிலுமாலறியாமலர்ப்பதத்தாய் புகன்றிடுதி
வீண்பயிலாகச் சுமையான்மிகநொந்தேன் விண்ணப்பம் 2
சிறந்ததிருக்கல்லாலிற்றிகழ்கின்றதெய்வமே
பிறந்திறவாப்பெற்றியனேபேதையேன் விண்ணப்ப
மறந்தவிரப்பாவமுறுமஃதொழியவறனெய்து
மிறந்தொழிவதெக்காலமெய்ஞ்ஞான்றுன்பதம்பெறுவேன். (3)
பக்குவர்க்காய்க்கல்லாலின்பாங்கெழுந்ததெய்வமே
தக்கவிராட்டிருவுருவாய் தமியேன் றன் விண்ணப்ப
முக்குறும்புங்கடந்தவிடமுழுத்துரியநிலையென்
லக்குறும்பைக்கடப்பவன் யாரவனேயப்பரப்பிரமம். 4
பொய்ப்பிரமையொழியதிருக்கல்லாலின்புடையெழுந்தோய்
செப்புமுறையறியாத சிற்றடியேன் விண்ணப்ப
மப்பிரமேயப்பொருளாமறிவென்னிலறிபவர்யார்
சுப்பிரமமுடறோறுந்தோற்றியுமென்றேற்றவே. (5)
அருந்தவர்க்காய்க்கல்லாலினகத்திருந்ததெய்வமே
புரங்கடந்தாற்றூரியநிலப்பொற்பொதுவுங்கடந்தேறி
யிருந்தபடியிருவென்றாலேழையேன் விண்ணப்ப
நிரந்தரநாமென்றறியினிடேதமெனோவி தியென்னோ. (6)
வேதியர்க்காய்க்கல்லாலின் வீற்றிருந்ததெய்வமே
போதமிலாப்புன்மதியேன் பொய்யாதவிண்ணப்பம்
பேதமிலையெனிற்பேதம்பெற்றமையென்பினும் பேதம்
போதுமோர்பிராந்தியெனிற்பூரணர்க்கேனிப்பொய்ம்மை. (7)
ஆதலாலடியேனுக்ககந்தெளியவிடைதேற்றிக்
காதலாலடியேனைக்காப்பையெனக்கைகுவித்துச்
சீதரன்முன்னறியாத்திருவடிக்கீழ்வீழ்ந்தலறிப்
போதமசைவறநின்றான்புரமட்டோன் புகலுமால். 8
சத்தியமீதிதற்கையஞ்சாராது சமுசயமா
மித்தையிதிலொழிந்துபோமிவ் விடைக்கு விடையில்லை
சுத்தகிளிப்பெயரோய்கேள் சுருதிமுடிவினுஞ்சார
மெய்த்தமறையொன்றாலுன் விரிவொடுங்குமிஃதறிதி. 9
பாவாபாவாதீதம் பிரமோகமெனப்பகரு
மூவாதவாக்கியத்தின் முடிவறியின் முன்மாயை
நீவாதபின் மாயையிரண்டிற்கு நீண்டிருக்கு
மோவாதபரப்பிரம்நீயாமென்றுணர்கண்டாய். (10)
(வேறு)
கேவலசகலமென்னக்கிளைத்தெழுமாயை தன்னைக்
கேவலஞானத்தாலே கிழித்தறிவாகிநிற்பாய்
பூவலம்புரிந்தமாந்தர் புண்ணியதீர்த்தமாதி
யாவலாய்த்தானமாதியாகமாதியவிதாமால். 11
(வேறு.)
நினைவழிப்பினதன் பின்னே நினையாமையெழுமத்தை
நினைவறியாவறிவுருநாமென்றவற்றினயனிற்பாய்
மனிதரறியாவிந்தமாறாதசுகோதயத்தைத்
தனியிருந்துகாண்டியாற்சகங்கடந்ததவத்தோயே. 12
காரணகாரியங்கடந்தகரிப்பிரமநாமென்றே
யாரண நூற்புகன்றபடியனுபவிப்பாயருந்தவனே
காரியமேழ்காரணமேழ்கழறினுபாதிகளாகுங்
காரியமுன்பாலுடைத்துக்காரணமக்கடவுடன்பால். 13
தேகமொடுபொறிகரண கரணஞ்செறியுயிரோடேழென்பா
ராகிலுயிருபாதியிதால கிலேகனுபாதிசொலிற்
சோகமிலாச்சருவசிட்டிமுதற்சருவாந்திரியாமி
பாகமுறுஞ்சுகமுனிவகடையேழும்பரிந்தறியே. 14
இன்னணமாயிரரணைக்கடந்தேறியிறையாணைப்
பன்னுமறையின்படியே கடந்திடிற்பைங்கிளிப்பெயரோய்
சொன்னபரப்பிரமமயநீயாயேதோன்றுமா
லன்னியமாயொருபொருளுந்தோன்றாவேயனுபவத்தே 15
தேகமலேன் பொறியல்லேன் செறிகரண நானல்லேன்
மூகபிராணனுமல்லன் முழுப்பிரமநானென்னச்
சோகமெனப்பாவிக்கிற்சுகமுனிவவுயிர்த்தடைபோம்
மாகமுறுமதிபோலவிளங்குமுன்றன்மதிதானே. 16
சிட்டி முதற்றொழிக்கெல்லாஞ்செப்பிடினான்பரமென்ன
விட்டவைக்குச்சாக்கிநானெனில் விமலமடைகின்றாய்
வெட்டவெளிப்பெரும்பாழில் வீற்றிருக்கும்பரம்பொருணீ
யிட்டசெழுங்கதிர்போல் வையிருக்குமுனையறியாவே. (17)
பாவனையெலாமிறந்தாற்பாழன்றோபரமேட்டி
பாவனையெலாமிருந்தாற்படுசகமன்றோ விரண்டு
மோவியதேநின்னிலையமுபாதியறு சூனியமா
யோவியம்போனிருவிகற்பவுணர்வாய்நில்சுகமுனிவ. 18
(வேறு)
அறிவையன்றியறியப்படும்பொருள்
சிறிதுமில்லையெனத்தெளியாவிடின்
மறியுமைப்புலவாதைத்திரைகளில்
பிறவிமைக்கடல் வீழ்வை பெருந்தவ. (19)
(வேறு)
அனந்தகுணகலியாணவப்பிரமேயப்பொருளே
மனந்தடுமாறாநிலையம் வகுத்தநந்திவாகனனே
தனந்தனியேயிருந்தாடுஞ்சங்காரகாலத்தின்
முனைந்தபரவெளிக்கோயின் முக்கண நின்னாலுய்ந்தேன். (20)
(வேறு)
வேதநாரணன் புள்விலங்காகியு
மாதியந்தமறிந்தனரில்லையாற்
பேதபாவனை நீத்துப்பெருந்தகாய்ப்
பாதமாமுடிபற்றியதென்கோலோ. 21
வேறு.)
உளதிலதாம்பொருண்முடிவினுறுபொருளையான் கண்டே
னுளதிலதேபொருளென்னுமுணர்விலிகள்காண்பாரோ
வளவிலாப்பொருண்முடிவைக்கண்டேனின்னருட்கண்ணா
லளவிலாவாநந்தம் பெற்றேன்யார்பெறுவாரே. 22
காணாக்கண்கேளாதகாது முரைகழறா நாய்
பூணாதபூடணமும்புனையாதபொற்றுகிலும்
வேணாதவெட்கையுமேல் வீழாதவிரிவியப்பு
மாணாதிநாமல்லாவறிவாதி தந்தனையே. (23)
கைம்மாறுகாண்கிலேன்கடையுக வெந்தீயாடி (சுருதிசார
பெய்ம்மாரிக்குதவியெவர்பெறவளிப்பார்பேருவகைப்
பெம்மானேபணிந்திறைஞ்சும்பெரும்பேறெற்கருடியென
மும்மாயைப்புரங்கடந்தசுகோதயமாமுனி போனான். (24)
மூன்றாம்வாக்கியம் - முற்றிற்று.
நான்காம் வாக்கியம்.
உண்ணார்போன்முகம்வாடியுண்டிமேல்விழைவின்றி
யுண்ணாடிப்பரம்பொருளையுன்னிலவாத
வெண்ணாதநெடுங்காலமிதுவதுவென்றோர்கின்ற
வெண்ணாதவெண்ணமெலாமெழவதனையிடிக்கின்றான். 1
(வேறு)
எத்தனை தாயைக்கண்டோமெத்தனை தமரைக்கண்டோ
மெத்தனை மனையைக் கண்டோமெத்தனைமகவைக் கண்டோ
மெத்தனையூரைக்கண்டோமெத்தனைபேரைக்கண்டோஞ்
சித்தமேதிருப்பாயீசன் றிருவடி காணுமாறே. 2
வேறு.
வாமனமேயென்கண்டாய் வையகத்திற்போயழுந்திச்
சாமளவுமென்னையேன் றடுமாற்றஞ்செய்கின்றாய்த்
தூய்மனமேயென்னோடுந்துணைப்பட்டாலன்ற
தேய்மதியூர்சடையானையின்றே சென்றடைவேனே. 3
பொல்லாதபுலன்மரத்திற்போயேறிப்புகழிகழாம்
பொல்லாதகனியுண்டுபோதொழிக்கும்புன்குரங்கே
நல்லார்போம்வழி நாடி நால்வரைப்போலிருந்தக்கா
னல்லாய் நீயல்லையென ஞாலமுனைத் தூற்றுமே. 4
ஆக்கறக்குமந்நேரமகந்தொறுஞ்சென்றிரவாதே
கோக்களிடத்தே சென்று குற்றேவல் செய்கின்றாய்
மூர்க்கருறவே தேடி முயல்கின்றாய்முது நெஞ்சே
போக்குவரவகன்ற பரிபூரணனைப்புறகிட்டே (5)
போகாதபுல்க்கடலிற்புக்கதனிற் பொருமியெழு
மாகாதநஞ்சினையண்டந்தோநீயழிகின்றாய்
மூகமனமேயுனக்கு முடிவுமொருக்காலுமுண்டோ
காகமுறாக்சாட்டிலுனைக்கனன்றிடிலென்களையாறும். 6
விரியமனங்கடவதெனவியாதனிட்ட சாபமோ
பெரியபிராரத்தயோபிரமன்விதித்தனலிபியோ
தரியமனக்கள்ளாங்கவலைவனம்புகுகின்றா
யொருமொழியாலுனைக்கட்டியுருட்டிவிடக்காண்பேனோ. 7
அஞ்சுபுலன் வழியோடியலைகின்றமன்மேவா
கஞ்சமுதமாயுண்டநாதன்பாற்போவோம்வர்
தஞ்சமினி வேறில்லைசங்கரன்றாட்டஞ்சமன்றி
யுஞ்சிடவோர்நெறியில்லையோகியர்பாற்போவோம்வா. 8
பெரியவர் தந்தரிசனத்தாற்பெறாத பொருளொன்றுண்டோ
வரியவவர்மொழித்தடியாலடிக்கின்றேன் வாமனமே
யொருபொழுதோர்நொடியளவுநிற்பாயேலுயர் முத்திக்
கரைகாண்பேன் மெய்ஞ்ஞானக்கடவுளையுங்காண்பேனே. 9
அகமுகமாயைந் தடக்கியாறொடுக்கியாநந்தச்
சுகமடைந்தசனகனைச்சென்றடைகின்றான்சுகமுனிவன்
பகலிரவும் பொருட்டேடிப்பரியவர்பாலடையாது
சகதியிடைக்கேழலெனத்தவமிலர்பாலடைகின்றார். 10
சனகனெனுமன்னவர்கோன்றயைமுகநோக்கினர்க்குண்டோ
மனசமுகமெனக்கேட்டு வாய்தனிலீரேழ்பகலு
மனதாகமின்றியேயவனிருப்பப்புரவலனு
நனிவாவென்றழைப்பவந்தான் ஞாலத்தையறத்துறந்தான். (11)
பைந்தொடி சங்கமமின்றி மற்றையபல்லுபசார
மங்கியற்றவேலினான்றவாழிதரிசனகன்
புங்கவனேயெவ்வண்ணமிருக்கின்றாய்புகறியென
விங்கறியேன்சுகவசுகமிரண்டுமென்றான் சுகமுனிவன். 12
அறிகின்றேனறிவில்லேனெனுநிலையங்கடந்தநிலம்
பிறிவறியசுவானுபவாதீ தம்பிரமோகமென
மறுவின்மறைகூறுமாவாக்கியத்தைக் கடைப்பிடிக்கி
னறிகின்றவனுபவமுமனுபவமன்றாமன்றே. 13
அவ்வறிவுங்கடந்தொளிருமனுபவமேதென்றாயே
லிவ்வறிவுசீவனமாயிருப்பளவுந்தோற்றாவாஞ்
செவ்வறிவாய் நீ நிற்பிற்றெரியுமதையென்சொல்கேன்
பௌவமடைந்தியெனவுன் பசுபோதமடங்கிடுமால். 14
நீயறியப்பட்டதெலாநிட்டையல்லவதீதத்தே
போயறியுமறிவினையும்புகவிழுங்கிப்பூரணமாய்த்
தாயறியுங்குழவியினைத்தனையன் றியாவணம்போ
லாயபெரும்பாழறிவாரறியாதவனிர்வசனம். 15
உன்றந்தையுரைத்ததுவுமுயர்முனிவனுரைத்ததுவு
மன்றல் கமழ்கமலனுரைவாக்கியமுமகதேவ
ரன்றுரைத்தவாக்கியமும்யானுரைத்தவரும்பொருளு
மொன்றேயாமையமிலையுனையன்றி வேறில்லை. 16
பேறாதபெரும்பேற்றைப்பேசாதபெரும்பேச்சை
யூறா தகண்ணீருமுடையாதபேரன்பு
மாறாதவனுபவமுமணுகாதவணுகலுமாய்
மாறானுங்காணாத மகத்துவத்திலழுந்துவாய். 17
பெறுபவன் யார்பேறியாதுபேசென்றான் சுகமுனிவ
னறிபவன்போயாநந்தத்தனுகூலமானபினர்ச்
செறிபிரமமொன்றொழியவிரண்டில்லாத்திறத்ததேல்
பெறுபவன்யார்பேறியாதுபேசென்றான்பெருஞ்சனகன் 18
காண்பவன் யார் காண்பயார்கழறென்றான் சுகமுனிவன்
சேண்பயிலுமொளிக்கொளியாய்ச்சித்தாகிப்பரவான்மா
தான்பிரகாசித்தப்பினர்த்தானே தானானமையாற்
காண்பவன்யார்காண்பனயார்கழறென்றான்கனசனகன். 19
உண்பதியா துண்பவன்யாருரையென்றான் சுகமுனிவன்
புண்பயிலுமுடல்பொருளும் பொன்றா தவாவியுமந்
தண்புனலோடாரியற்குத்தத்தமெனவீந்தபின்
ருண்பதியா துண்பாயென்றானுயர்சனகன். (20)
பூசனையார் பூசகன்யார்புகலென்றான் சுகமுனிவ
னாசையெலாநிராசையாயாநந்தமுங்கடந்த
வீசனானானீசனிரண்டற்றவெல்லையிலே
பூசனையார் பூசகன்யார் புகலென்றான்புகழ்ச்சனகன். 21
தோத்திரியார் தோத்திரம்யார்சொல்லென்றான் சுகமுனி
னார்த்தமொடுமனவாக்குக்க தீதத்தேயளவிறந்த
சேத்திரத்திற் சிவமாகித்திறம்பாதநிலையத்திற்
றோத்திரியார் தோத்திரம்யார்சொல்லென்றான்றுரைச்சனகன். (22)
முத்தியுண்டோபெத்தமுண்டோமொழியென்றான் சுகமுனிவன்
சித்தமலமிறந்தரியசிற்பரையுங்கடந்துபோ
யெத்திசையுமெப்பொருளும்யாமாகிநின்றிடத்தின்
முத்தியுண்டோபெத்தமுண்டோமொழியென்றான் முதிர்சனகன் (23)
(வேறு)
கூர்கொண்டவாள் கொலைசெய்யுமோகொலைசெய்பவன்கையன்றியே
கார்கண்டலோபயிர்செய்வதுகதிர்கண்டலோவிழிகாண்பது
பர்கண்டியானிருவாதனைப்பயிர்செய்வதுமிறைகண்டலோ
தீர்கின்றநாளெஞ்ஞான்று சொல்சிவயோகியேசிவயோகியே. 24
முன்பண்ணியவிருவாதனை முதிர் தேசிகன் விழியாலுகும்
பின்பண்ணியவிருவாதனைப்பிரமாற்பணத்தாலேகெடு
மன்பொன்றிய நாமச்சுதனென்கின்றபேராநந்தமேற்
றுன்பங்களாரின் பங்களார்சுகயோகியே சுகயோகியே. 25
(வேறு).
ஐயமெனும்புறங்காட்டட்டேனின்னருண்மொழியால்
வையகத்தினின்போன்றமாதவராரெனவாழ்த்த
வுய்யுநெறியுணர்ந்தேனேயுன்வரவெற்கிடைக்குமோ
செய்தவத்தாலுன்பாதத்தெரிசனையான் பெற்றேனே. (26)
என்றொருவருக்கொருவரிவ்வண்ணந்தமிற்பேசிச்
சென்றொடுங்குமாறென்னச்சித்திரிகன் கண்ணென்னக்
கன்றிறந்தவானென்னக்கண்ணிழந்தான்கதியென்னத்
துன்றரியசுவபானுபவத்தழுந்தினான் சுகமுனிவன். (27)
வாழ்த்திடவும்வாயில்லை வணங்கிடவுஞ்சிரமில்லை
சூழ்த்திடவுமலரில்லைதொழுதிடவுங்கையில்லை
யேத்திடவும்பாவில்லையெதிர்ந்திடவோரிறையில்லைப்
பார்த்தவிடந்தொறுமியானே யெனையானே பணிகின்றேன். 28
பண்டைமறைமொழிப்படியே பரம்பதமினி துணர்ந்து
தண்டுதலில்வியாதமுனிமனங்குவியத்தானினைப்பக்
கண்டையொத்தமனங்குவித்துக்கனகவரைமீதடைந்தங்
கண்டரெலாமறியாதமத்துவிதவீடுற்றான். 29
மாறாதவாசையெலாமனமாரத்துறந்துபோ
யெறாதமுத்திமலையினிதேறியிச்சகத்தை
றாக்கிநினையாமனித்தியாநந்தமுற்றான்
றேறாவென்போலியெலாந்தினமலையுந்தெரிவையர்க்கே. 30
காற்றிலாவிளக்கொளியோகண்ணாடி மண்டிலமோ
கீற்றொளியோசரர்க்கால நிறைமதியோநிறைவான
தேற்றுறு பூங்கங்கையோதிரையற்றபாற்கடலோ
வாற்றரியதவனோற்றசுகமுனிவனகமம்மா. 31
ஆங்கவனை நினைதொறுமென்னகங்காரமடுக்கழியும்
பூங்கமலத்திருத்தாளையுள்குதொறும்புகலுளவாந்
தீங்கருமன்னவன்காதை செவிபுக வென்றீமையுகுங்
பாங்குடையோன்றுறவெனக்கும்பதியுமோபாரிடத்தே. 32
ஐயாசையாறாசையற்றவறிவுடையோரை
யையாண்டாயினுமறியாண்டேனுஞ்சோதித்துப்
பொய்யாவிந்நூலவர்க்குப் போதிக்கபுகழ்க்கீயின்
பொய்யாரும்புலை நிரையம்புகுவர் புவியுள்ளளவும். 33
குக்குடம்போற்சற்சீடன் குப்பையைப்போற்சற்குரவன்
குக்குடம்போலாராயின் குருக்குப்பைக்குருக்காட்டு
மற்கடம்போற்றிரிவோர்க்குமகிடம்போலிருப்போர்க்குங்
கற்கடகம்போல்வார்க்குமிந்நூலைக்காட்டற்க. 34
ஆ திருவிருத்தம்- 95.
சுருதிசாரவிளக்கம் - முற்றிற்று.
முதல்வாக்கியம் - பிரக்கியானம்பிரமம்.
இரண்டாம்வாக்கியம் - அகம்பிரமாஸ்மி,
மூன்றாம்வாக்கியம் - தத்துவமசி,
நான்காம்வாக்கியம் - அயமான்மாப்பிரமம்.