logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 5. சிவஞானப்பிரகாசவெண்பா

                   பொது  
                  பாயிரம். 
            கடவுள் வணக்கம். 
  உலகளந்த மாலு மோதிமமூர் தேவுங் 
  குலமறையுங் காணாத கோமா - னிலகியுமி 
  ழுள்ளக் கயிலாய வோங்கன்மிசை நின்றாடும் 
  வள்ளலுக்கு முண்டோகைம்மாறு. 1

                குருத்துதி. 
  உண்டுமிலை யென்றா னொருவ னொருத்தி சுகங் 
  கண்டுமிலை யென்றான் கருத்தென்னே மண்டனிலே 
  யென்போலவந்திங் கிருநிலத்தோர் கண்காண 
  வென்போத மாய்த்தா யிசை. (2)


                வேதச்சிறப்பு. 

    வேதந் தனக்கருகர் வேதியரே யாதலினால் 
    வேதநெறி மெய்ந் நெறியே வீட்டின்பம் - வேதந்தா 
    னுள்ளபடி சொற்றா லுலகநூ லென்றுரைக்குங் 
    கள்ளர் தலை வெட்டக் கடன். 3

              ஆகமச்சிறப்பு. 

    சிந்திக்கக் கேட்கத் தெரிசிக்கக் கைகுவித்து 
    வந்திக்கத் தக்கநூன் மாணாகேள் - பந்தித்த 
    செஞ்சடையா னன்றுரைத்த தேவிகா லோத்தரமே 
    பஞ்சை நூன் மற்றதெலாம் பார். (4) 

              அடியர்வணக்கம். 

    சிவஞான சம்பந்தர் சீகாழித் தோன்றல் 
    பவஞானம் பற்றறுக்க வேண்டி - யுவமையிலா 
    வைகை நதியின் மணிக்கரத்தி னாவிட்டார் 
    சைவநெறி யோங்கத் தமிழ். (5) 
    எல்லாஞ் சிவனென் றெடுத்திசைத்த வாகீசர் 
    சொல்லாற் றெளியாத துன்மதியோர் - பல்காலு 
    நாத்தழும்ப வாகமமு நான்மறையு மற்றனைத்தும் 
    பார்த்ததனா லென்னை பயன். (6) 
    உன்னைப்போ லேயென்னைப் பாவிக்க வேண்டுமெனச் 
    சொன்னதிருப் பாட்டாற் றுணியாதார்- மென்மே 
    லிடம்பட்ட வேழுலகி லுள்ளநூற் கற்றுங் 
    கடன்பட்டும் பட்டினிபோற் காண். 7

    காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் 
    பூண வுரைத்தமொழி போதாதோ மாணவக 
    வாய்த்த மனைவியவ டோடோயா தல்குற்புண் 
    கூத்தியரைத் தோயுங் குணம். (8)



                நூற்பெயர். 
    தன்னை யறிவிக்குந் தன்றலைவ னைக்காட்டு 
    முன்னை விலையின் முதல்களையுஞ் சொன்ன 
    சிவஞானப் பிரகாசச் செந்நூலே நூன்மற் 
    றவஞான மென்றே யறி. 9

              அவையடக்கம். 
    நாய்த்தோலிற் கட்டிவைத்த நாகமணியைப் பெரியோர் 
    தூத்தூ வெனவுமிழ்ந்து தூடியார் - போற்றுவர்க 
    ளாங்கதுபோ லென்சொற்கு ளையனரு டங்குதலாற் 
    பாங்காகக் கொள்வர் பரிந்து. 10
              பாயிரம் - முற்றிற்று. 

            பரிபாகியிலக்கணம். 
    ஈசனார் யானார்கொ லென்னை மறைத்திருக்கும் 
    பாசமியா தென்றென்று பல்காலுங் - கோசரங்க 
    ளுண்டான காலமே யுன்னையறி யுங்கால 
    மண்டாசை யற்ற மாணா. 11

    பக்குவமி லார்க்கருளல் பாவிக் கற்மோதல்
    மட்கலத்தைப் பொன்னாக்க வாஞ்சைகொளல் - சொர்க்கமிலாக் 
    கன்னிக்குக் காமனூல் கட்டுரைத்தல் கண்ணிலர்க்குப் 
    பொன்னாரம் பூட்டுதல்போ லும். 12

    ஒருகோடி சூரியர்க ளொக்கவுதித் தாலுங்
    குரு டர்க் கிருளகலாக் கோட்போல் - மருடீர் 
    வாசானு ரைத்தாலு மஞ்ஞானச் சித்தர்க்குப் 
    பாசாதி நீங்காது பார். (13) 

    கருட னைமீன் றுய்யலெனக் கண்ணன்றை கூவி 
    வருடமயு தஞ்சொலினு மாற்றா - திருடீர்ந்த 
    வுள்ளத்தார் வேண்டுவன சொற்று முணராரே 
    கள்ளத்தார்க் குள்ள கடன். (14)

    தாமடங்கக் கல்லாச் சவலர் தனித்தொருவர்
    தாமடங்கா ரென்பதற்கோர் சாக்கிகே  - ணாமடங்கா
    தந்தோ தகர்தின்னி யாத்தினியை நோக்கியிகழ்ந் 
    தந்தோநீ பாவியென லாம் (15) 
   மூடனைப்போ லேயிருப்பன் முத்த னெனச்சொற்றா 
    லீடு பொருந்துமோ வெங்கோவே- சீடாகே 
    டுக்க விடயஞ் சுகவிடயந் துய்த்தாலும் 
     பொய்க்குதிரை யேறுவான் போல். 16
          துவிதசைவனைமறுத்தல். 
  ஒன்றா யுலகனைத்து மானாரென் றப்பமுனி 
  பொன்றா மொழியாற் புகன்றிருக்கக் - குன்றாத 
  முத்தியினு மும்முதலு முண்டென் றுரைத்தலெவன் 
  பித்தமுறுஞ் சைவாநீ பேசு. (17)
  ஓசை யொலியெல்லா மானாய்நீ யென்றபினர்ப் 
  பேச விரண்டுண்டோ பேய்ச்சைவா வாசையெல்லா 
  மற்றவிட முத்தி நிலையோ வஃதெல்லா 
  முற்றவிட முத்திநிலை யோ. (18)

            மங்கையர்மயக்கறல். 

  மூத்திரத்தி னானனையப் பட்டமுடை யோனிக்காய்க் 
  காத்திரத்தை விட்டார் கணக்கில்லை - சாத்திரத்தால் 
  வானைக்கா றீநீரை மண்ணைப் பிரித்துசிவ 
  னானக்கா லாசை யறும். 19

  மங்கையர்தம் யோனிமிசை வைத்திருக்கு மாசையினைப் 
  பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்துக் - கங்கையணி 
  வேணியான் பாதார விந்தத்தில் வைத்தக்காற் W 
    காணலாங் காணாக் கதி. 20

                ஞானபூசை. 
    ஆத்துமலிங் கம்பொருளாக் கொள்ளா வறிவிலிகள் 
    வேற்றுமையா யெண்ணி விருப்பத்தாற் - பாத்திபர்கள் 
   கள்ளனைப் பாசத்தாலே கட்டியிறுக்குதல் போல் 
    வள்ளறனைக் கட்டு மதி. (21) 
    ஆலயமே காய மறிவே சிவலிங்க 
    மாலயனுங் காணாத வள்ளலுக்குச் - சீலமுறு 
    மன்பே யபிடேக மன்போல் லர்ச்சனையு 
    மன்பேநை வேத்தியமு மாம். (22) 
    பெண்ணாடை யாபரணம் பெய்தயிலந் தாம்பூல 
    முண்ணலணை சந்தனத்தோ டோரெட்டும் - விண்ணவர்க்கா 
  யாகாத நஞ்சுண்ட வண்ணலடி யார்தமக்கிங் 
    காகாது சொன்னோ மறி. (23) 
    தீர்த்தம் பிரசாதந் திருநீறஞ் சக்கரமுஞ் 
    சாற்றுமிறை கட்பிறந்த தாழ்வடமும் - போற்றுங் 
    குருலிங்க சங்கமமுங் கொள்குறிக ளெட்டாங் 
    கருவகலக் கட்டுரைத்தேங் காண். (24) 
    பாடப் படிக்க வெழுதப் பயன்சொல்லக் 
    கோடாமல் வந்துங் குணமில்லை - சீடாகேள் 
    சித்திரதீ பம்போலச் சிந்தை தனைநிறுத்திச் 
  செத்தசவம் போலே திரி. (25) 
    மங்கைநிதம் பத்தானங் கண்டான் மதிமயங்கித் 
    தங்கருமங் கைவிடுவர் தாரணியோர் - புங்கவர்க 
    ளீசனடி காண்டோறு மென்புருகி நைந்துகரைந் 
    தீசனே யாவாரி தென். (26) 
  அண்டங்கா றீநீரவனியிய மானனுடன் 
  வெண்டிங்க நீள்கிரண வெய்யோனும் - பண்டுற்ற 
  ஊனக்கட் குண்டாகு மொன்றாய் முளைத்தெழுந்த 
  ஞானக்கட் குண்டோ நயந்து. (27) 
                சதாநிட்டை. 
  சோர மனையாட்டி சோரபிரான் மேன்மனமாய்ச் 
  சேரத் தொழிற்செய்யுந் திட்டம்போற் - பேர்பெரியர் 
  அத்தனடி மேன்மனத்தை யானாது வைத்துகந்தே 
  யெத்தொழிலுஞ் செய்வ ரிசைந்து. (28)

   அஞ்சு புலன்வழியிற் போகா தகமுகமாய் 
  நஞ்சுண்ட நாதனடி நட்புற்றோர் -நெஞ்சலையக் 
  கோடி மடந்தையரைக் கூடிப் புணர்ந்தாலும் 
  வாடுதலு முண்டோ மதி. 29
  ஆனை துரத்திடினு மஞ்சோ மரியுழுவை
  யீன முறவரினு மியாமஞ்சோ -ஞானப்பெண் 
  கொங்கைக் குவட்டின்மிசை நின்றோங் குவலயமுங் 
  கங்குல் பகலறியோங் காண். (30) 
  பாலோடு சேர்ந்தநீர் பாலாகு மாங்கதுபோல் 
  வாலறிவ னைச்சேர்ந்த மன்னுயிர்கள் வாலறிவன் 
  றானாகி நிற்பதல்லாற் றண்டாத வைம்பாச் 
  வூனாகி நில்லா ருவந்து. (31) 
  ஆயிழையைக் காமுற்றே யாலிங்க னஞ்செய்தே 
  னாயிழையே தானான வாதரம்போன் - மாயையைவிட் 
  டையனொடு சேர்ந்தபினு மாங்கிரண்டுண் டேயென் றா 
  லுய்யுநெறி யில்லை யுவந்து. (32) 

  அரசன் மகனாச னாகிநின்றாற் போலப் 
    பரமசிவ னிற்றோன்றும் பல்லுயிரும் - பரம - 
    சிவனாகி நிற்பதலாற் சீவனாய் நில்லா 
    சிவனாணை யுள்ளே தெளி (33) 
      அருளாசிரியனருமையுரைத்தல். 

   ஆசானே நீனானென் றங்கைத் தலைவைத்தான் 
    பாசா திகளைந்தும் பாறித்தே - யாசானை 
    யுள்ளபடி நோக்கி யுறுபூசை செய்வதல்லாற் 
    கள்ளனிடத் துண்டோ கைம்மாறு. (34)

    அம்புலியு நீரு மறுகுமர வுங்கரந்தே 
    யம்புவியி லென்போ லருளுருக்கொண் - டும்பரெலாங் 
    காணாத தெய்வமிங்கே கண்காண வேவந்தா 
     னாணாத தென்னோ நயந்து. (35)

    நீயேநா னென்று நிலையளித்த தேசிகனைத் 
    தூய மலரெடுத்துத் தூவாதார்- பேய்வாழுங் 
  காட்டிற் கனிதுய்க்குங் கருங்குரங்காய்ச் சென்னாயாய் 
  வேட்டுவனாய்ச் சென்மிப்பார் மேல். (36) 

   உள்ள மலமகற்றி யொண்பொருளைக் காட்டிவைத்த 
  வள்ளலடி யெஞ்ஞான்றும் வாழ்த்தாதார் - கள்ள 
  நரையானாய் ஞெண்டாகி ஞாளியாய்ப் பொல்லா 
  மரநாயாய்ச் சென்மிப்பார் மாண்டு. (37)

  தாய்போ லெழுந்தருளித் தானாக்குந் தேசிகனை 
  மாயப் பிறப்பறுக்கு மன்னவனைக் - காய்ச் 
  சினகரத்திற் பூசைசெய்து சேமிப்ப தன்றிச் 
  சினகரத்தில் வையேன் றெளிந்து. (38)

  வேதமுடி வைக்காட்டும் வெற்றவெறுந் தேசிகனைப் 
  போதமலர் கொண்டியைப் போற்றாதார் -பாதமின்றி 
  யங்கை விரலின்றி யாறாத நோயராய்ப் 
  பங்குகுரு டாவார் பரிந்து. (39)

  உள்ளங்கை நெல்லியென வுள்ள படிநமக்குத் 
  தெள்ளித் தெளிவித்த தேசிகற்குக் - கள்ளவிழ்ந்த 
  பூத்தேடி நீர்த்தேடிப் போனகமுந் தேடியே 
  யாத்தமாய்ப் பூசிக்க லாம். (40)

  ஆக்கையு நீ யல்ல வைம் பொறியு நீயல்ல 
  தாக்கு கரணங்க டானல்ல- சூக்க 
  வுடலல்ல சீவனல்ல வுண்மைநீ யென்றார்க் 
  குடலுருகி நிற்பே னுவந்து. (41)

  வெள்ளங் கிடந்தானும் விரிதா மரையானும் 
  விள்ளும் படியறியா மெய்ப்பொருளை - விள்ளும் 
  படிவந்த தேசிகற்குப் பாதகா ணிக்கை 
  கடிவந்த மென்மலரே காண். (42)

  ஐயந் திரிவறுத்திங் காளவந்த தேசிகற்கு 
  நையு மனத்தோடு நாடோறு - நெய்யவிழ்ந்த
   பூமா மலர்தூவிப் போற்றிநிற்ப தல்லாம் 
   லேமாப்ப துண்டோ வினி. 43

    ஐய மெடுத்தருந்தி யாடையின்றிச் சென்றாலு 
    மையந் தவிர்த்தநம தாசானை - ஐயாவென் (43) 
    றாதரத்தாற் பூசைசெய்யு மன்பினவ ரேமண்மேல் 
    மாதருத ரம்மணுகார் வந்து. (44)

    ஆகந் திருக்கோயி லாசான திற்றெய்வஞ் 
  சோகம் புகைக்களியே சூழ்சுடராம் - போகங்க 
  ளெல்லாரை வேத்தியங்க ளிவ்வண்ண நாடோறுங் 
  கல்லாருஞ் செய்யக் கடன். (45) 

  ஆசானைக் காண்டோறு மன்புருகுங் கைகுவியு 
  மாசா ருடம்புமயிர்க் குச்செறியும் - பேசாத 
  வானந்த முள்ளூறு மக்கணமே பாசங்க 
  டானந்து முத்தி தரும். (46)

  ஆன்பா லறக்கைக்கு மக்காரம் வேம்பாகு 
  மூன்பா லொறுத்திருக்க வொட்டாவாம்- வான்பா 
  லொளித்திருந்த வுத்தமனா ரோருருவாய்ப் பாத 
  நளிர்த்தமலர் தந்தொழிந்த ஞான்று (47) 

  என்றைக்கோ வீசனரு ளென்றைக்கோ முத்திநெறி 
  யென்றைக்கோ யேமாக் திருக்குநிலை - யென்றைக்கோ 
  வென்னும்பா சண்டமதத் தெய்தா தளித்தாரை 
  யென்னென்று வாழ்த்துகேனி யான். (48) 

  குருவே திருமாலாங் கோகனகத் தானாங் 
  குருவே யுரையிறந்த கோவாங் - குருவேயிங் 
  கெல்லாமா யல்லவுமா யெங்கு நிறைவானாம் 
  வல்லாள னாகு மதி. (49) 

  கறுத்த விரும்பைக் கனகமய மாக்குதல்போற் 
  சிறுத்தநமைப் பேருருவாய்ச் செய்தாரை - வறுத்த
விதைபோல் வரும்பிறப்பை வேரறுத்த வேதியரைப் 
  புதைமனத்து ளெப்போதும் போல். 50

              பொது - முற்றிற்று. 

                உண்மை. 

  காமக் கடலழுந்திக் கள்ளைக் குடித்துளறும் 
  வாமச் சமய மயக்கறுத்த - கோமானே 
  யாணவமே தாருயிரே தாதிசிவ மேதிதனைக் 
  காணவருள் வள்ளலே காட்டு. (51) 
  சிவனொருவ னுண்டவனாற் செகமுண்டு மற்றச் 
  சிவனருளைக் கொண்டறியுஞ் சீவன் - சிவனின்றா 
  லண்டபிண்ட மின்றாகு மைந்தொழிலு மின்றாகும் 
  பண்டைமறை யின்றாநீ பார். (52) 
  ஆணவமே யஞ்ஞான மறியாமை யென்றறி நீ 
  காணுமறி வுனக்குக் காட்டுமிறை - கோணைமலம் 
  பொன்றுமுட னானல்ல போதமே நானென்னி 
  லன்றொழியு மப்பா வது. (53) 
  கலகா யிழையார் கலவிமுத்தி யென்னு 
  முலகா யுதமொழித்த நாதா -விலகாத 
  வாணவமெக் காலத் தெனையணைந்த வாறறைதி 
  வீணரறி யாதவனே விண்டு. (54) 
  அறிந்தவிடத் தில்லை யறியாமை யத்தைப் 
  பிறிந்தபினும் பேசல்பிழை யன்றோ செறிந்த - 
  சுடர்கொண் டிருட்டேடித் துயருறுவா ருண்டோ 
  மடமகன்ற மாணாக்கனே. (55) 
  எல்லா மிறந்திடத்தே யேகமிரண் டென்றுரைக்கும் 
  பொல்லார் மதமறுத்த புண்ணியா - வொல்லா 

   வவிகாரி யானானால் யானாரோ வென்னுந் 
    துவிதம்வரு மாறேது சொல். (56) 
    அவிகாரி யீச னருளைநீ பெற்றா 
    ல்விகாரி யாவையன்றி யச்சோ - வவிகாரி 
    நானென்ற மாத்திரத்தே நண்ணுமோ வக்காரத் 
    தேனென்றாற் றித்தியா தே. (57) 
    காட்டமனல் சேர்ந்தாற் கனலாவ தன்றிமுனங் 
    காட்டப்புத்தி சேர்வதுவே கன்மமா - நாட்ட 
    மதுவாவே நிற்பதல்லா லாங்கிரண்டென் றுன்னிற் 
    பொதுவாவை போகாப் புவி. (58) 
    பாவனா தீதப் பதியேறிப் பின்னுநாஞ் 
    சீவனென்றுஞ் சிந்திப்பா ருண்டோசொல் - சீவ 
    மகன்றபுழுப் பின்புழுநா னென்றறை லுண்டோ 
    சுகமறிந்த துண்டோ சுகம். (59) 
    ஊமைகண்ட சொப்பனம்போன் றுள்ளே யறிவதன்றி 
    நாமிதெனச் சொற்றிடவு நண்ணுமோ - தாமதம்போ 
    லாங்கதுவாய்ப் போவதலா லன்றிதா மென்றுரைக்க 
    வீங்கொருவ ருண்டோ விசை. (60) 
    ஊனுறங்கி யானாத வுள்ள முறங்கியொரு 
    நானுறங்கி ஞால முறங்கியுமே - தானுறங்காச் 
    சிவனை யறிந்தவனைச் சீவனென லாமோ 
    சிவகுருநாதா விதனைச் செப்பு. (61) 
    நெருப்பிரும்பை நீருப்பை நீர்நிழலைத் தேடி 
    யரிப்பன்போ லாயினுமங் காகா - தருப்பணத்திற் 
    றன்னைத்தான் கண்டதுபோற் றன்னிழப்பிற் றற்றேடித் 
    தன்னைத்தான் கண்ட தரம். (62)

    ஒன்றென் றிரண்டென்று மொன்றிரண்டே யாமென்று 
    மென்றோ நீ முத்திதனி லேய்ந்திடுவா - யொன்றென்று - 
    சொல்லு மறிவைத் துரியாதீ தம்விழுங்கிற் 
    சொல்லுமவ னெங்குற்றான் சொல். (63)

   கொன்றிடுத றின்றாற் கொலையல்ல வென்றுரைக்கும் 
    புன்றலைய புத்தன்மதம் போக்கினோ - யென்று 
    மழியாப் பரமசிவ னாகத்தின் கண்ணே 
    யொழியாம லெங்கிருப்பா னேது. (64)

    உள்ளந் திருக்கோயி லூனுடலே சுற்றுமதிள் 
    வள்ளலுக்கு வாயே மணிச்சிகரந் - தெள்ளித் 
    தெளிந்தவர்க்குச் சீவன் றிருமேனி தீப 
    மளந்தறியு மைம்புலனே யாம். (65)

    எண்பத்து நான்குநூறாயிரமா மியோனிதொறுங் 
    கண்பொதிந்த சீவர் கருத்துள்ளே - பண்பொதிந்த 
    தேவியொடு மீசன் செறிந்திரா னேயாயி 
    னாவியொன்றை யுற்றறியா தாம். (66)

    எங்குஞ் சிவனிருப்ப னானாலு மேசற்ற 
    சங்கமத்துஞ் சற் குருவின் றன்னிடத்தும் - லிங்கத்து 
    மாவினுடம் பெல்லாமு மாவரித்து நிற்கினும்பால் 
    பாவுமுலைக் கண்மிகுதிப் பார். (67)

    பூவின்மணம் போலுள்ள புண்டரிகத் துள்ளேமா 
    தேவியொடு நீங்காச் சிவனாரைத் - தாவிநீ 
    யைம்புலனை வென்றாங் கறிந்தா லவனாவை
     யைம்புலனுக் கெட்டா னவன். 68

   ஆகாய மெங்கு மகண்டமாய் நின்றாற்போ 
   னீகாய மின்றியெங்கு நிற்பாயேல் -மாகாயத் 
   துள்ளொளியா மீச னுனைப்பிரியா தேநின்ற 
   கள்ளந் தெரியுமங்கே காண். 69

    பதிமார்க்க நிட்டையன்றிப் பசுமார்க்க நிட்டை 
    விதிகால நீசெயினும் வீணாம் - பதிமார்க்கந் 
    தானுமெதி ருங்கழன்ற சமாதியிலே தாக்கற்று 
    நீநின்றாற் போது நி மிடம். (70)

    தம்மை யறிந்தருளிற் சம்பந்த மானவனே 
  செம்மைநிலை யொன்றுளது செப்பக்கேண் - மும்மை
   யறிவுகடந் தப்பா லதீதத்தே நிட்டை த 
  செறிபவனார் சொல்லாய் தெளிந்து. (71)

  பதிநூல் பயிலாத பாசண்டர் மார்க்கங் 
  கதியல்ல வென்றுரைத்த கர்னா - பதிநூலே 
  துள்ளபடி சொல்லா யுயர்ஞானக் கண்ணுடைய 
  வள்ளலே யெற்கருளை வைத்து. (72)

  சிவஞான போதத்தாற் சென்மவிடாய் தீர்ந்து 
  சிவஞான சித்தியாற் றேறிச் - சிவஞான 
 போதத்தை மெய்கண்டான் போதித்தான் சித்தியினைச் 
  சாதித்தான் றானருணந்தி (73)

  மற்றிரண்டு மாய்ந்து மறுவி லுமாபதியார் 
  சொற்ற சிவப்பிரகா சத்தொன்னூ - லற்றநிலை 
  யாங்கதுவே சீவன்முத்த னாக்குவிக்கு மந்நூலே 
  யோங்கும்நீ டூழியும்பின் னும். (74)

  அம்மைதிரு வந்தாதி நற்கீர ரந்தாதி 
  பொய்ம்மையிலாப் பொன்வண்ணத் தந்தாதி - செம்மைத் 
  திருமூலர் மாலையிவை சித்தாந்தமாகும் 
  வருமூவர் வாக்கியமு மாம். (75)

  சித்தாந்த மென்னுந் திருவிளக்கைக் கொண்டறிந்தேன் 
  முத்தாந்த வாவி முதற்பொருளைச் - சித்தாந்தத் 
  தேனைப் பருகிச் செநந மரணமெனுங் 
  கானைக் கடந்தொழிந்தேன் காண். (76)

  ஆறாத கண்ணீரு மடங்காத பேரன்பு 
  மாறாத வஞ்சலியும் வாய்த்தவருக் - கூறாத 
  கல்லிற் புறப்பட்ட கையுடையா னக்கணமே 
  மல்லற் பிறப்பகற்று வான். (77)

  குடும்பத்தை யென்னாட் குலைப்பேனோ பொல்லா 
  விடும்பையினை யெஞ்ஞான்றீர் வேனோ - குடம்பையினிற் 
  புட்பறந்தாற் போலேயான் பொய்யுடல்விட் டேகுவனோ 
  நுட்பசிவ னானாவே னோ. (78) 
 
   புண்ணுடலை நீப்பேனோ பொன்றாத மெய்ஞ்ஞானக் 
    கண்ணுடைய வள்ளல்பதங் காண்பேனே - வெண்ணுடைய 
    வஞ்செழித்தி னுண்மை யறிவேனோ வாங்கதுவாப் 
    பிஞ்செழுத்தைப் பின்னிடுவே னோ. (79 )

    இவ்வண்ணம் பக்குவருக் கீசனரு ளக்கணமே 
    யுய்வண்ணங் காட்டி யிருளோட்டு - மெய்வண்ண 
    மார்க்கண்டற் காகமுனம் வந்தசிவ னெங்கொளித்தான் 
    மூர்க்கற்கு முன்னின்றான் முன். (80)

    இல்லாத வன்பினர்க்கே யீசன் மிகவரியன் 
    றொல்லாழி வையகத்திற் றோன்றானே- நல்லார்தங் 
    கல்லுஞ் சிலையுமொரு கைப்பிரம்பும் பட்டமையா 
    லெல்லார்க்கு மீசனெளி யன். (81)

    எல்லாங் கழன்றிடமே யேகாந்த மானவிடஞ் 
    சொல்லா ரிறந்திடமே சுகவுதய - நில்லா 
    விசுவ மிறந்திடமே மென்சுவர்க்க மென்றான் 
    சிசுக்குமுடி சாய்த்த சிவன். (82)

  ஊமை மணிபோ லொடுங்கிச் சிவமான 
  தூமனத்தார்க் கிந்நூற் சுகங்கொடுக்கும் - வாய்மையிலாச் 
  சழக்கர்க்கிந் நூல்போதா தாகுஞ் சமய 
  வழக்கே யவர்க்கமையு மால். (83)

  ஆரா வியற்கை யவா நீப்பி னந்நிலையே 
  பேரா வியற்கை தருழென்றல் - பேராசை 
  நீக்கத்தி லீச நிறையா நிறைவாதல் 
  சூக்கத்தின் மோக்கத் துறை. (84)

  தத்தைபோ நாடோறுஞ் சாத்திரங்கற் றோதுகின்ற 
  பெத்தருக்கு ஞானப் பிரகாச - நத்தலிலா 
  வேம்பூமத் தங்காயும் வெங்காஞ்சி ரங்காயு 
  மாம்பாகு போன் முத்தர்க் காம். (85)

  கல்லைப்பொன் னாக்கிக் கடுமுதலை வாய்ப்பிள்ளை 
  மெல்ல வழைத்து வெறுக்கையினைச் - செல்லுகின்ற
 வாற்றிலிட்டு மீட்டு மருங்குளத்திற் கண்டதுவுஞ் 
  சாற்றிற் சிவகரணந் தான். (86)

  என்பைப் பெண்ணாக்கி யிரும்பாலை நெய்தலா 
  யும்பர் மகிழ்ந்திடவன் றோதியதுந் - தம்பிரான் 
  கதவ மடைக்கக் கழறியது மெல்லாம் 
  பதிகரண மென்றுணரப் பா. (87)

  அரவங் கடித்திறந்தா னாருயிரை மீட்டுக் 
  திருமறைக்காட் டிற்பின் றிறந்துங் - கரமலையை 
  நீற்றறையை வேகமற நீராகப் பாடியதுங் 
  கூற்றுதைத்தான் போதமெனக் கொள். (88)

  ஊமையினை மாற்றி யுணர்மொழியைச் செய்ததுவுங் 
  காமனைவென் றோனெழுதக் கற்றதுவு - மாமையைப்போ 
  லைந்தடக்கி யீச னருளிற் கலந்ததுவு 
  முந்தும் பசுகரண மோ. (89)

  பசுகரண நீங்கிப் பதிகரண மானாற் 
  பசுபாச மக்கணமே பாறு - மசிபதத்தை 
  யெதிரிட்டுக் கொள்ளற்க வென்றாலும் பின்னு 
  மெதிரிட்டுக் கொள்வா யிதென். (90)

  சரியைகிரி யாயோக சங்கடத்தை மாற்றி 
  வொருஞானப் பேறளித்த வுன்னைத் - தெரியாத 
  பெத்தத்தி லுங்காணேன் பேராத வானந்த 
  முத்தியினுங் காணேன் மொழி. (91)

  அண்ணலைக் காணி லவனிவனே யாமென்னும் 
  வண்ணத் திருமூல மந்திரமு - நண்ணுகின்ற 
  வென்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மீசனெனும் 
  பொன்வண்ணத் தந்தாதியும். (92)

  அத்துவித முத்தி யளித்தகுரு நாதாவென் 
  பொய்த்துவிதம் போமாறு போதித்த - கத்தனே 
  முத்தியில் மும்முதலு முண்டென் றுரைப்பதுவுஞ் 
  சத்தியமோ மித்தையோ சாற்று. (93)

   கையிலுறு புண்ணுக்குக் கண்ணாடி வெண்டுவமோ 
    மெய்யுணர்வி லுண்டோ விபரீத - மையறிவு 
    மோரறிவாய்ப் போனவிடத் தோகோகோ மும்முதலுஞ் 
    சோராம னிற்குமோ சொல். (94)

    சைவஞ் சிவத்தோடு சம்பந்த மானமையாற் 
    சைவமே யத்துவிதஞ் சாதிக்குஞ் -சைவத்தை 
    வேறென்று கொள்ளற்க வேறற்ற வேதாந்தக் 
    கூறென்று கொள்ளுதலே கொள். (95)

    இருவினையொப் புற்றா லெய்துமல பாகந் 
    திரிகரண சுத்தியுனைச் சேரு - மருள்பதியு 
    மாசா னெழுந்தருளு மமல னருளுதவு 
    நாசமடை யும்பிறவி நாடு. (96) 
    சிவத்தோ மசியென்னுந் திருவாக்கா லென்றன் 
    பவத்தை நசித்த பரனே - யவத்தையிலே 
    சீவனென்றுங் கேவலத்திற் சேதனனன் றென்றுமுறும் 
    பாவனைகள் போமா பகர். (97)

    பொன்மலையைச் சேர்ந்தசிறு புன்காக்கைப் புள்ளினங்க 
    டன்னிறமும் பொன்னிறமாய்ச் சாருமால் - முன்னவனைச் 
    சேர்ந்தாரு மன்ன சிவோகம்பா வித்தலா 
    லாய்ந்தவனே யாமா ற்றி 98

    சீரார் சிவோயமத்தி யென்னுந் திருவாக்காற் 
    பேராசை யெல்லாம் பிரிந்தோனே 
    வன்பாலுன் பாதத்துக் கர்ச்சனையு மற்றிரண்டி 
    லென்புருகும் பத்தியுமெற் கீ. யாராத (99)

    சிவஞானப் பிரகாசச் செந்நூலை முன்செய் 
    தவமுடையார்க் கெஞ்ஞான்றுங் சாற்றப் - பவமுடைய 
    பாமரருக் கிந்நூலைப் பனனற்க பன்னுகவெங் 
    காமாதி யெல்லாங் கழற்றி.(100)
        சிவஞானப்பிரகாசவெண்பா - முற்றிற்று. 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin