logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 9. சிவாகமக்கச்சிமாலை

 திருமாலயனொடுதேவருநாகருஞ்சித்தர்களு 
மருமாமுனிவருமண்டத்துயிர்களுமன்புசெய்ய 
வொருமாதுமையொடுமொண்குகனோடுங்கம்பாநதிக்கண் 
விரிமாமறைநிழல்வீற்றிருந்தாய் கச்சியேகம்பனே. 1

அல்லார்கருங்குழலம்மை திருக்கண்புதைத்தவன்று 
நில்லாவுலகமிருண்மூடிப்போனபின்னெற்றிக்கண்ணா 
லொல்லாவிருளையொதுக்கியுறு துயர்நீத்தமையா 
லெல்லாவொளிக்குமுதலொளி நீகச்சியேகம்பனே. 2

  மூவுலகத்தினுமூடிய பாவமுழுதகல் 
மாவடி நீழலின் வந்தம்மைபூசிக்கமண்டுமன்பாற் 
றாவியவேகத்தொடும் வானளவித்தழைத்தகம்பை 
யேவிவிட்டேதழுவக்குழைந்தாய் கச்சியேகம்பனே. 3

நல்லாரைப்போன்றிட்டிருப்பினும் வஞ்சகர்நல்லால்லர் 
பொல்லாரைப்போன்றிட்டிருப்பினுநல்லவர்புண்ணியரே
யுல்லாசமாய்மலர்கொண்டடெறிந்தானன்றுருவழிந்தான் 
கல்லாலெறிந்தவன்முத்திபெற்றான் கச்சியேகம்பனே. 4

தம்மாலறிந்தனயாவையுந்தாமல்வென்றறிந்து 
மும்மாயைமும்மலமுக்குணநீங்கி முழுதறிவாய்ச் 
சும்மாவிருக்கத்துரியங்கடந்தசுகமுதிக்குஞ் 
சன்மார்க்கமுத்தியிதென்றான்றடங்கச்சியேகம்பனே. 5

சாந்தமுநோன் புந்தவமுமடக்கமுந் தண்ணளியும் 
வாய்ந்தகுருச்சொலும் வாக்கியங்கேட்டு மனமவன்பால் 
காந்தமுமூசியுங்கண்ணுங்கதிருங்கலப்பதுபோ 
லேய்ந்ததுவே முத்தியென்றானெழிற்கச்சியேகம்பனே. 6

கூவிளமாலையுங்கொன்றையுந் தும்பையுங்கூரறுகு 
மாவலொடுமெடுத்தர்ச்சனை செய்தங்ககங்குழைந்து 
நாவினிற்றோத்திரஞ்சொல்லிநலந்தெரிஞானிகளுக் 
கேவல்செய்தாலன்றிமுத்திகொடான் கச்சியேகம்பனே. 7

எல்லார்க்கு நல்லவனிங்கில்லையங்கில்லையெங்குமில்லை 
யெல்லார்க்கு நல்லவன் சந்திரனாயினுமேந்திழையா 
ரெல்லார்க்கு நல்லவனாயேயிருந்திலனென்றிகழ்வா 
ரெல்லார்க்கு நல்லவனீயேபுகழ்க்கச்சியேகம்பனே.  (8)
அன்னியமேசெயுமாணவநீக்கத்திலாருயிர்க
ளன்னியமேயிலையென்றுநின் வேதமறைதலினா 
லென்னுடலுன்னுடலென்பொறியுன்பொறியென்னதுன்ன 
தென்னினைவுன்னினைவென்றுரைப்பேன் கச்சியேகம்பனே. (9)

எல்லாஞ்சிவமெனுநான்மறையாகமமெக்கலையு 
மெல்லாஞ்சிவமென்றெழிற்குருவாய் வந்தெடுத்திசைத்து 
மெல்லாஞ்சிவமெனலெவ்வெவர்கோட்குமிசைந்திருந்து 
மெல்லாஞ்சிவமென்றுணரகில்லேன் கச்சியேகம்பனே. 10

காசமறுவிழிகாய்கதிரோடு கலந்துவிடிற் 
காசம்பினும் வந்து கண்ணினையுற்றுக்கலங்கல்செய்யா 
பாசமறுமுயிர்நின்னொடொன்றாகிப்பதிந்தபின்பும் 
யாசம்படர்வதென்சொல்லாய்பழங்கச்சியேகம்பனே. 11

பாசஞ்சடமென்றுயிர்தற்சுதந்தரபங்கனென்று 
நாசமிலீசன் சுதந்தரனேயென்றுநான்மறையும் 
பேசுமுயிர்க்குப் பிரேரகநீயெனப்பெற்றமையா 
 லேசுறுமென்செயனின் செயலே கச்சியேகம்பனே. (12)

அன்னவெறியெடுத்தண்டங்கள் சாமுன்னினாகத் தம்மை 
யன்னப்பெயர்கொடுவந்தறச்சாலையமைத்திருப்ப 
வன்னத்தயன் றலைகைத்தலத்தேந்தியகங்கடொறு 
மன்னப்பலிக்குழன்றாலழகோகச்சியேகம்பனே. (13)

அன்றுவிடமுண்டமரரைக்காத்தெதிரந்தகனைக் 
கொன்றொருபாலற்குறிக்கொண்டுகாத்துக்கொடும்புரத்தைக் 
கன்றெரிதாவிடுங்காலொரு மூவரைக்காத்தமையா 
லின்றெனைக்காப்பதரிதல்லவேகச்சியேகம்பனே.14

அல்லற்பிறவிப்பிணியாளனாருயிராதிசிவன் 
மல்லற்றருமவயித்தியனாகுநன்மாமருந்து  
சொல்லிற்பஞ்சாக்கரமென்று சுருதிமுறையிடினும் 
புல்லருனைப்பொருளென்றறியார்கச்சியேகம்பனே. (15)

பொல்லாதமாதர்மயக்கத்திலாழ்ந்து பொருந்துகினும் 
வில்லார்மணிச்சிலம்பேறித்தவங்கள் விரும்புனு 
நல்லார்தொழுமுன்றன்பாதாரவிந்தத்தினாட்டம் வைத்திட் 
டெல்லாமுநின் செயலென்றிருப்பேன் கச்சியேகம்பனே. 16

ஆட்டைச் சுமந்தநின்பாதாரவிந்தத்திலன்புசெய்யாக் 
கூட்டைச் சுமந்துகுடும்பத்தையோம்பிக்குருக்கிடையாப் 
பாட்டைச் சுமந்துபயன்றெரியாமலப்பாட்டெழுது 
மேட்டைச் சுமந்தவர்க்கின்பமுண்டோகச்சியேகம்பனே.17

உள்ளந்தொறுமொளித்தாங்காங்கிருப்பினுமுன்னியல்பை 
வெள்ளந்துயின்றவன் காண்கிலன்வேதனும் வெட்கினனால் 
பள்ளம்புகும்புனல்போன்றென்றனன்பையுன்பாற்பதித்துக் 
கள்ளமறிந்துனைக்கண்டுகொண்டேன் கச்சியேகம்பனே. 18

பாலன்பசிக்கன்றுபாற்கடலீந்தனை பங்கயனு 
மாலும் வணங்கிடமால்விடமுண்டனை மாதினொடு  
மாலின் புடையிருந்தந்தணர்க்கோதினையன்றியென்பாற் 
காலன்வரும்பொழுதஞ்சலென்பாய் கச்சியேகம்பனே. (19)

பொன்வண்ணம்பூணினுங்கண்டமையாற்புலன்பூதமுதற் 
கொன்வண்ணவந்தக்கரணக்கருவிகள்கூட்டமெல்லாந் 
தன்வண்ணமன்றென்றனித்தனி நீக்கித்தனித்திடத்தி 
லென்வண்ணநின்வண்ணமென்றுரைப்பேன் கச்சியேகம்பனே. (20)

பல்லாயிரமறையொன்றென்று சொல்லியும்பாமரர்கள் 
சொல்லாயுதத்தின்மலமாயைகன்மத்தொடர்களறுத் 
துல்லாசமுத்திபெறமுயல்வாரிதென்யுத்திகொல்லோ 
புல்லாலெரிசுடும்புத்தியைப்போற்கச்சியேகம்பனே. 21

அறிவேசிவமெனுமாகமம் வேதங்களவ்வறிவாய்ச் 
செறியுமுனைப்பொருளென்று கொள்ளாது நற்றெய்வமெல்லாம் 
வறிதே திரிந்தலைந்தெய்த்தொழிந்தேன் றம்மனையகத்தி 
லெறிசுடர்விட்டனற்றேடுவர்போற்கச்சியேகம்பனே. 22

தொல்லாழியண்டத்தைத்தோற்றிவிப்பானன்றோற்றியத்தை 
நல்லாரிவர்சிறு தீயாரிவரெனுநாட்டமின்றி 
வில்லாருதரத்தில் வைத்தளிப்பான் விண்டுமற்றிவைக 
ளெல்லாந் துடைப்பவனீயேபுகழ்க்கச்சியேகம்பனே. 23

மைவண்ணக்கண்டம்புயமொருநான்குமதிச்சடையுங் 
கைவண்ணமானுமழுவுங்கருணை பொழிமுகமு 
மெய்வண்ணத்தம்மையும் பாதத்துணையொடுமேதினியோ 
ருய்வண்ணமாநிழலுற்றிருந்தாய்கச்சியேகம்பனே. 24

ஆக்கின்றசத்திற்களித்தாய்யனாக்கியத்தைக் 
காக்கின்ற சத்தியரிக்களித்தாயரிகாப்பையெல்லாம் 
  போக்கின்ற சத்தியரற்களித்தாய்சிறுபுல்லர் தம்பா 
  லேற்கின்ற சத்தியையெற்களித்தாய்கச்சியேகம்பனே. 25

விண்ணுக்குநாயகஞ்செங்கதிரோனென்பர்வேதமுன்னூற் 
பண்ணுக்குநாயகமூன்றாம் மறையென்பர்பற்பலவா 
  மண்ணுக்குநாயகநாவலந்தீவென்பர்மன் பதைதங் 
கண்ணுக்குநாயகநீயே கலிக்கச்சியேகம்பனே. (26)

சொல்லாரிறந்திடமுத்தியென்பார்சிலர் தோதகஞ்செய் 
பொல்லாமனோலயமுத்தியென்பார்சிலர் பொய்யொழிவே 
யெல்லாதமாமுத்தியென்றுரைப்பார்சிலரோதியவை 
யெல்லாமிறந்திடமுத்தியென்றான் கச்சியேகம்பனே. 27

  அங்கையினெல்லிப்பழம் போலகந்தொறுநீயிருப்பச் 
சங்கையறவுனைநோக்கஞ்செய்யார் சமயச்சழக்கர் 
செங்கணனிந்திரனான்முகன்றன்னையுந்தெய்வமென்பர் 
கங்கைமகத்துவமீனறியாகச்சியேகம்பனே. 28

மன்னாதிநாதவரையுருநாமன்றெனமதியா 
நண்ணாவறிவுருநாமெனக்கண்டு மெய்ஞ்ஞானத்தினா 
லுண்ணாடியொன்றிரண்டென்னாதுறங்குவதன்றியுன்னைக் 
கண்ணாலறியப்படுமோகக்கச்சியேகம்பனே. 29

பற்றறத்தீரத் துறந்தாகமத்தின் பரப்பறிந்து 
குற்றமறுசிவஞானக்குரவன் குறிப்பினின்று 
வெற்றவெறுவெளிகண்டவர்க்கேயின்பமேவுமன்றிக் 
கற்றடங்காதவர்க்கின்பமுண்டோகச்சியேகம்பனே. 30

ஆக்கைசடத்திரளான்மாவறிவிலியானமையாற் 
போக்குவரவுபுரிபவனீயன்று புந்திசெய்தே 
யாக்கையுமாவியுமானப்பொருளுமுனக்களித்தேன் 
காக்குஞ்சுதந்தரனீயே கலிக்கச்சியேகம்பனே. 31

உண்டிபசியிலுறக்கில் விழிப்பிலுணர்கனவில் 
வண்டமர் பூங்குழன்மா தர்முயக்கின்மலி துறவிற் 
றண்டுறு சிந்தைப்பரப்பிற்குவிவிலுன்றாண்மலரைக் 
கண்டுகொண்டேனயல்காணேன் கலிக்கச்சியேகம்பனே. 32

கோட்டகங்காரமென்கொல் கனிற்றானையின் கோளடக்கி 
வாட்டமிலாக்குடும்பப்புலிவாயினின் மண்ணையட்டி 
யீட்டுமிருவினைப்பேயுடல் கீறியிணையில்பவக் 
காட்டைக்கடந்துனைக்கண்டுகொண்டேன் கச்சியேகம்பனே. (33)

ஐம்புலனாலலமந்தேனடைக்கலமாலறியாச் 
செம்பதுமக்கழல்சேர்ப்பாயடைக்கலஞ்சேயிழையா
ரின்பவலையகப்பட்டேனடைக்கலமேன்றுகொள்வாய் 
கம்பயிரைத்தலைமோ துங்கலிக்கச்சியேகம்பனே. 34

மாயாப்படலத்தினான்மறைப்புண்டு வழிதிறம்பிக் 
காயாபுரியடைந்தந்தோகவலைப்பெண்கையகப்பட் 
டோயாப்பிணிமகப்பெற்றே துயர்த்தடியூன்று பெனக் 
கேயாப்படலமிரிப்பதென்றோ கச்சியேகம்பனே. 35

புல்லாதி தாபரநீங்கி நற்சங்கமம்புக்கினவர் 
கொல்லாவிரதங்குறிக்கொண்டுன் பாதக்குற்றேவல் செய்து 
பொல்லாப்பிறப்பையொழிக்கறியாரவர் புந்தியந்தோ 
கல்லோமரமோவிரும் போகலிக்கச்சியேகம்பனே. 36

சித்தந்தெளிந்தவருள்ளச்சினகரத்தேதிகழுஞ்  
சுத்தநிராமயச்சோதியனேயென்று தோத்திரத்தாற் 
பத்திசெய்யாவெறும்பாவிகள் சிந்தையிற்பாறிநின்றா 
யெத்திறத்தாலுனைக்காணவல்லார்கச்சியேகம்பனே. 37

வெள்ளிமலையும் பொன்மேருவுஞ்சந்ததம் வீற்றிருக்கப் 
பிள்ளைமதியொடுவேதியன் புன்றலைகைப்பிடித்துப் 
பள்ளநெடுங்கடல் சூழுலகிற்சில்பலிக்குழன்றா 
லெள்ளுவர்நிற்பொருளென்றறியார்கச்சியேகம்பனே. 38

ஆசையொழி வெந்தக்காலுமுறா தந்தவாசையெல்லாம் 
வீசிநிராசை செய்வித்தகரேயுன்னைக்கண்டுகொள்வா 
ராசைவழிச்செலுந்துன்மார்க்கருன்னையறிவர்கொல்லோ 
காசியினுஞ்சிறந்தோங்குங்கலிக்கச்சியேகம்பனே. 39

ஓமாதிவாக்கியமொன்றைப்பிடித்தவருத்தமர்கள் 
சாமாறுமந்நிலைநிற்பவர்சத்தியர் சற்குருவா 
லாமாறறிந்தவரந்தணரியோகிகளஞ்சடக்கிக் 
காமாதிகுற்றங்களைந்தவர்காண்கச்சியேகம்பனே. 40

உம்பர்பணிகயிலாயச் சிலம்பையொருவியம்மை 
கம்பை மணலைக்குவித்துச் சிவாகமங்கைப்பிடித்துச் 
செம்பதுமக்கரத்தாலலர் சாத்தித்தெரிசிக்குமுன்  
கம்பைநதியையென்னோ விடுத்தாய்கச்சியேகம்பனே. (41)

வீணாய்ச்சுழலுமெனக்கொருஞானவிழியளித்துக் 
கோணகத்துள்ளொருகூத்தப்பிரானுண்டக்கூத்தப்பிரா 
னாணாவதுமன்றுபெண்ணாவதுமறலியுமன்று 
காணாக்கண்கொண்டினிக்காணியென்றான் கச்சியேகம்பனே. 42

அறிவாயிருந்தறியாமையைநோக்கினஃதொழியுஞ் 
செறியும்பரிபூரணவுருத்தானெனிற்றேகமறு 
மறிகருமங்கட்குச்சாக்கியுயிரெனின்மாளுமது 
பிறியாநிலையிதுவென்றான் பெருங்கச்சியேகம்பனே. 43

படிகக்கடச்சுடருள்ளும் புறம்பும் பாப்பதுபோ 
லுடறொறு நீயுணர்வாகியகம்புறமுற்றிருந்து 
மடைமலவல்லிருளாருயிர்ஞானத்தை யாவரித்துத்  
தொடர்வதென்சொல்லு திபைம்பொழிற்சூழ்கச்சியேகம்பனே. (44)

துட்டற்குஞானச்சுருதிகளோதியுந்துர்க்குணம்போய்ச் 
சிட்டற்குளகுணமெள்ளளவேனுந் திகழ்தல் செய்யா 
விட்டுச்சொரியினுமான் பாலுந்தேனும்விரவியென்று 
மெட்டிப்பழத்துக்கினிப்புமுண்டோகச்சியேகம்பனே. 45

அந்தோகுருபதமெய்ஞ்ஞான்றுகாண்பனென்றாகமுற்றும் 
வெந்தோலமிட்டுப்பதைபதைத்தோடிவிழுந்தலறிச் 
சந்தோடமேற்கொடுன்பாதாரவிந்தத்தைத்தாவுமன்பர்க் 
கெந்தாய்மிகவுமிரங்குகண்டாய்கச்சியேகம்பனே. 46

அஞ்சிப்பவத்தினுக்காரித்தை மோசிப்பரென்றலைந்து 
நெஞ்சங்கனிந்திருகண்ணீர்சொரிந்திடநெட்டுயிர்த்துத்
தஞ்சமுன்பாதந்தலைவைத்தவுத்தமர்சங்கடங்க 
டுஞ்சும்படிக்கருள்செய்யாய் சுடர்க்கச்சியேகம்பனே. (47)

பொய்யாமுடல்பொருளாவியும் வாங்கியுன் பொன்னருளான் 
மெய்யாமுடல்பொருளாவியுமீந்தவிரகையுன்னிப் 
பொய்யாமொழிகொடுன் பாதாம்புயத்தினைப்போற்றியன் பாங் 
கையாலுனைத்தொழக்கண்டுகொண்டேன் கச்சியேகம்பனே. 48

ஒன்றேபரமென்றுரைப்பவனேயிரவ்வுயிரை 
யன்றே மறைப்பதுமாணவமாதிகளானமையால் 
வென்றேபுலனை வெறுமறிவாகிவியன்பரமாய் 
நின்றேவிடுநிலையென்றானெழிற் கச்சியேகம்பனே. (49)

இல்லையுயிரென்றுரைக்குமுரைக்குளிருக்குமுயிர் 
தால்லையுயிரிலையென்பவனேயுயிர்தோன்றிடலு 
நல்லமலர்மணம்போலுயிர்நாதனுநண்ணுமென்றான் 
கல்லிற்புறப்பட்டகையுடையான் கச்சியேகம்பனே. (50)

மேலாலவத்தையுங்கீழாலவத்தையும்வீட்டியரு 
ணூலார்சொல்சுத்தநுணுக்கநிலையினையென்றருள்வாய் 
நாலாமறையொருமாவாகவன்னிழனண்ணியுமை 
கோலாகலந்தழுவக்குழைந்தாய்கச்சியேகம்பனே. (51)

தாயன்றிமைந்தர்க்குத்தாரகமுண்டுகொறாரணியில் 
வேயொன்று தோளி தன்பங்காமலைவில்விடைத்துவச 
நீயன்றி வேறொரு தெய்வமுநிட்டையு நேர்வதுண்டோ 
காயன்றிச்செங்கனியுண்டோகளிக்கச்சியேகம்பனே. 52

பேசுவதுன்பெயர் பூண்பதுன் சாதனம் பேணலுன்னை 
நேசமும்பாசமுநின்கழற்கே சென்று நீக்கமில்லா 
வாசையை நீத்துன்றனன்பாற்கடல்புகுமாறெனவே 
யேசறுமுன்னொடொன்றாகிநிற்பேன்கச்சியேகம்பனே. 53

அஞ்சக்கரமன்றி வேறொருமந்திரமாயினில்லை 
யஞ்சிலிறையருளாவிதிரோதைசில்லாணவமற் 
மஞ்சிலிரண்டையருளாலகற்றிடிலாவியந்த 
வஞ்சிலிரண்டையணையுமென்றான் கச்சியேகம்பனே. (54)

மந்திரமாவதுமஞ்செழுத்தேயந்தமந்திரத்தி 
னைந்துபொருளையுங்காட்டியிரண்டின்வழியடைத்து 
முந்துமிரண்டின் வழியைத்திறந்துயர்முத்திதந்தான் 
கந்தன் கணபதிக்கப்பன்கலிக்கச்சியேகம்பனே. 55

ஒருதலைமாணிக்கமுன்னரெனக்குபதேசஞ்செய்தா 
னிருதலைமாணிக்கம் பின்னரும் பேசியிருளறுத்தா 
னரிதலை மற்றையயன்றலை சூடியகங்கையின் மூ 
வெரிதலைச் சூலத்தொடுநடிப்பான்கச்சியேகம்பனே. (56)

  ஊமைமணிக்கொலியற்றமைபோற்றன்னிலொன்றுபடத் 
  தோமுறுமென்னகத்துள்ள துரிசையுந்தொக்கிவருந் 
  தாமதத்தோடு தனுவாதியையுந்தகித்துவிட்டான் 
  காமனுடலட்டகண்ணாற்கலிக்கச்சியேகம்பனே. 57

  பந்தமறுக்கும்பரஞ்சுடரேயென்றும்பாவமகல் 
  சிந்தையிருக்குஞ்செழுஞ்சுடரேயென்றுஞ் சிந்தித்தெங்க 
  ளந்திவண்ணாவென்றலரிட்டிறைஞ்சுநல்லன்பர் தம்மை 
  யிந்தவுலகிலிருக்கவொட்டான் கச்சியேகம்பனே. 58

  நொச்சியறுகுகரந்தைவிளாவில்வநொய்யதுமமைப்  
  பச்சிலையாயினும்பாதத்திலிட்டுப்பரவுமன்பர்க் 
  கிச்சித்தபேறுமெழிற்சிவஞானமுமிம்மையிலே 
  யச்சப்படாதளிக்கும்மருளாற்கச்சியேகம்பனே. 59

  பாலையுந்தேனையும் வேம்பாக்குமானந்தப்பந்தையிலே 
  சாலநடத்தியென்மும்மதவாய்தற்றடையகற்றி 
  நாலுமறைசொலுநா தாந்தமுத்தியை நண்ணுவித்தா 
  னேலக்குழலிக்கினியபிரான் கச்சியேகம்பனே. 60

  உள்ளும்புறம்புமொழிவறநிற்பினுமுன்னுருவைத் 
  தெள்ளுமத்தினரன்றிச்சிறியவர்காண்பரிதா 
  னள்ளுங்கிரணத்தொடுசூரியனெழினாட்டமில்லோ 
  ரெள்ளத்தனையொளிகாண்குவரோகச்சியேகம்பனே. (61)

  செப்புமொழிமனமாதியகொண்டுனைச் சேர்வமெனி 
  லப்பிரமேயமெனுமறையாதியவாகமங்க 
  ளொப்புவமைக்கணுங்காணவொண்ணானெனுமென்னிலந்தோ 
  வெப்படியுன்னையறியப்படுங்கச்சியேகம்பனே. 62

  பாம்புக்குபாலளித்தாங்கிப்படிவத்தைப்பாங்குசெய்திட் 
  டோம்பிமகளிருக்குத்தமனாகியுணர்வழிந்து 
  தூம்பிடை வீழ்ந்து துயருறுவான் பொருட்டொல்லுலகி 
  லேன்படைத்தாயறிவில்லாவெனைக்கச்சியேகம்பனே. 63

அன்னவுருவெடுத்தந்தணன் கான்கிலனந் தணனைப் 
  பொன்னந்திருவுந்திபூத்தவன் காண்கிலன்போதமுறை 
பன்னியும் பூசித்துமெட்டுணையேனும்பரிசறியா 
வின்னவுருவெடுத்தெங்கொளித்தாய் கச்சியேகம்பனே. 64

இருவினையொப்பின் மலபரிபாகமுமெய்துமெய்த 
மருவிடுஞ்சத்தினிபாதமும் வந்திடமன்னுமருட் 
குருவுருவாகிக்கொடும்பவமேழையுங்கொய்யுமென்றான் 
கரிமுயல்கொண்டு தடுத்தபிரான் கச்சியேகம்பனே. 65

விதிவழியே மதி சென்றுவிருப்பும் வெறுப்புமுண்டாய் 
நதிவழியோடிக் கடல்புகுநீரென நாணிரையப் 
பதிவழியே செலுநெஞ்சைத்திருத்தியுன் பாதமலர்க் 
கதிவழியே செலக்கண்பார்கலிக்கச்சியேகம்பனே. 66

யானெனதென்னுஞ்செருக்கொழியாமையினெவ்வுயிர்க்கு 
மீனவகக்கரணங்குவியாது பின்னிச்சைவழி 
வானகம்மண்ணகம்பாதலமூன்றினும்வாறிவரும் 
யானெனதென்செருக்கற்றோர் தொழுங்கச்சியேகம்பனே. 67

விருப்புவெறுப்பற்றுன் வேதமொழிப்படி மெய்யுணர்ந்து 
மரிப்பைச்சனிப்பையுமற்றொளியாகியமா தவர்பாற் 
கருப்புச்சிலையனுங்காலனும்வந்தென்செய்க்கடவர் 
நெருப்பைப்புழிப்பற்றுங்கொல்லோ நெடுங்கச்சியேகம்பனே. (68)

சதுமறையாகமமங்கம்புராண நற்சாத்திரமும் 
பதிபசுபாசமிம்மூன்றையுமே சொலும்பான்மையினான் 
முதுபதி நீபசுநானெனை மூடுமிருண்மலமிங் 
கிதைமறையாவருள்செய்யாயெழிற்கச்சியேகம்பனே. 69

காலன்றனையட்டகாலாவடைக்கலங்கடவுளர்க்கா 
யாலநுகர்ந்திட்டவையாவடைக்கலமாணவத்தாற் 
சாலப்பிறந்திறந்தெய்த்தேனடைக்கலஞ்சங்கரியாய்ச் 
சூலம்பிடித்த செங்கையாய் சுடர்க்கச்சியேகம்பனே. 70

ஆதாரமாறையுங்கண்டாங்ககன்றிட்டருளுருவாய் 
மீதான யோகச்சிவானந்த மேலிட வீழ்ந்ததுவாய்ப் 
பாதாதிகேசங்கடோன்றாதவண்ணம்பதிந்திருக்க 
நீ தான்றிருக்கடைக்கண்பார் நெடுங்கச்சியேகம்பனே. 71

ஆங்காரகோட்டைக்ககந்தைச்சிகரங்களாங்கமைத்துச் 
சாங்காலமின்றியறியாமைச்சத்தியைத்தான்றழுவி 
நீங்காதவணவக்கோனுமொளிருமுன்னெற்றிக்கண்ணாற் 
போங்காலஞ்செய்வதுமுண்டோபொழிற்கச்சியேகம்பனே. 72

புண்ணியமேலிடப்பாவங்கள் கீழிட்டுப்பொன்றும் பொன்ற 
நண்ணும் விவேகங்கண்ண்ணிடஞானிகணட்புண்டத்தா 
லண்ணலுயிர்வினையாதென்றுணருமறிவுதிக்குங் 
கண்ணகன்ஞாலத்தின்மேற்பிறவார்கச்சியேகம்பனே. 73

ஓசைபரிசமுருவஞ்சுவை மணமோரைந்தையும் 
வீசியகமுகமாகி வெறுப்புவிருப்புமற்று கி 
மாசறு திங்களைப்போன்றுசதானந்தவாழ்வையுன்னி 
யேசறுமுத்தியிலென்றிருப்பேன் கச்சியேகம்பனே. 74

ஆணவமேலிடவாருயுர் கீழிட்டடங்கிநிற்கு 
மாணவங்கீழிடவாருயிர்மேவிட்டருளுருவா 
மாணவநீங்கியவாருயிர்வேறலவென்றறைந்தா 
னாணவநீங்கியவன்பர்க்கருள்கச்சியேகம்பனே. 75

அண்டமொருகுடைக்கீழாளவேண்டிலனம்புயத்தோன் 
விண்டுபுரந்தரன்றன் வாழ்வும் வேண்டிலன்மெய்யன்பினாற் 
றொண்டுசெய்தாங்குன் றிருவடி நீழலிற்றூங்கியுன்னைக் 
கண்டுகொளும்வரம்வேண்டுவன்யான் கச்சியேகம்பனே. (76 )

வாட்டங்குகண்ணியர்வண்ணப்பயோதரவாழ்வையுன்னிக் 
கீட்டங்குயோனியிற்போய்ப்பிறவாமற்கிளர்ந்தொளிருந் 
தாட்டங்குஞானச்சமாதியியல்பையுஞ்சங்கையறக் 
காட்டங்கமாயெனக்கிம்மையிலே கச்சியேகம்பனே. (77)

பிறந்தாரிறப்பரிறந்தார் பிறப்பர் தம்பேதமையான் 
மறந்தாயினும்பவம்வேண்டேன்மறைமுதலாகமங்க 
ளறிந்தாரிணக்கமுமன்பும்வணக்கமுமானந்தமுஞ் 
செறிந்தாங்கெனக்கருள்செய்யாய் செழுங்கச்சியேகம்பனே. 78

பொய்யாமொழியும் பொறுமையுஞானமும்புண்ணியமும் 
மெய்யாகமும்விவேகமுங்கல்வியுமேன்மையுமென் 
கையாற்றிருத்தொண்டுங்காணாதகாக்ஷியுங்காரணமு 
மெய்யாதெனக்கருளிம்மையிலேகச்சியேகம்பனே.(79)

கல்லாரிணக்கமுங்காமுகர்வார்த்தையுங்காரிகையார் 
பொல்லாத வேட்கையும்புத்திரதாகமும்பூமயக்கு 
நில்லாதவாழ்வும் விதிநிடதத்தையுநெஞ்சினையு 
மெல்லாமறுத்தருள்செய்திகண்டாய் கச்சியேகம்பனே. 80

பேசாதபேச்சும்பிறவாப்பிறப்பு நற்பேதையர்பா 
னேசாதநேசமுநினையா நினைவையுநின்மலமுந் 
தூசாச்சமாதித்துரியங்கடந்தசுகமயமு 
மேசாதெனக்கருள் செய்யெழிலார்கச்சியேகம்பனே.81

வன்புறுகல்லைநீ பொன்னாகச்செய்யற்க மற்றெனக்குச் 
செம்பொன்னைக்கல்லுருவாகத்திருவுளஞ்செய்தி வெறு 
மென்பைப்பெண்ணாக்குதல் வேண்டாமெனக்கெழிற்பெண்ணையிழி 
யென்புருவாகச்செய்கண்டாயெழிற்கச்சியேகம்பனே. (82 )

மூர்த்தியுந்தீர்த்தமுமூவாத்தலங்களுமூன்றுருவாய்ச் 
சேர்த்ததுமெய்மொழிசித்தந்தெளிதரச்செப்புமறை 
மூர்த்திமனச்சுத்தி தீர்த்தமொழிசுத்திமூடவுட் 
லார்த்ததல சுத்தியென்றானணிக்கச்சியேகம்பனே.83

உறங்காச்சமாதியுமுண்ணாத்திருத்தியும் யோனிவழிக் 
கறங்காய்ச்சுழன்றுஞ்சுழலாவறிவின் கடைப்பிடியு 
மறம்பாவமென்றிரண்டச்சந்தவிர்த்தவனுபவமுந் 
திறம்பாதெனக்கருள்செய்யாய் திருக்கச்சியேகம்பனே. 84

நெஞ்சங்குழைந்திருகண்ணீர்சொரிந்திட நெட்டுயிர்த்திங் 
கஞ்சலி செய்துன்றன் பாதத்துணையையகத்திருத்தி 
வஞ்சகமற்றுனைவாழ்த்தும்படிக்கருள்வைப்பை கொலோ 
கஞ்சமலர்ப்பொய்கைசூழுங்கலிக்கச்சியேகம்பனே. 85

மனமொன்றும்வாயொன்றுமின்றியொருப்பட்டமாதவர்பா 
னனவினிற்றோன்றுவனான்முகனுட்கிநடுக்கமுற 
மனமொன்றுவைத்துப்பின்வாயொன்று பேசியவஞ்சகர்பாற் 
கனவிலுந்தோற்றப்படுவதுண்டோகச்சியேகம்பனே. (86)

நாற்றக்குரம்பையை நாயாதிக்குண்டியை ஞானமிலார் 
போற்றுஞ்சடத்தைப்புனன்மேற்குமிழியைப்பொய்யுருவைத் 
தூற்றுநவையைத்தொலையாவிடக்கினைத்தோகையர்க 
ளேற்றுமுடம்பினையென்றொழிப்பேன் கச்சியேகம்பனே. (87)

காயத்தைக்கல்லினுந்திண்ணி தென்றெண்ணிப்பொற்காரிகையார் 
மாயத்திற்பட்டுத்தருமஞ் சிறிதின் றிமட்கிரையாய்ப் 
பேயொத்தருநிரயந்தொறும்புக்குப்பிறந்துழலு 
நேயத்தையென்றைக்கு நீக்குவையோகச்சியேகம்பனே. 88

மாலறியாமலர்ப்பாதாவென் விண்ணப்பமங்கையர் தங் 
கால்வழியேறியுதரப்பதிக்குக்கண்கலக்கஞ் 
சாலவுறாவண்ணங்காத்துச்சௌக்கியமுத்தியினை 
யேலவெனக்கறிவிப்பாயெழிற்கச்சியேகம்பனே. 89

பங்கயப்பாசடை நீரிடை நிற்பினும்பற்றையுறா 
சங்கையெரியிற்சுடினுந்தவளநிறங்குறையா 
துங்கமணிப்பாம்பிருட்குகை துன்னினுமல்லையுறா 
விங்கிவைபோனின்னடியாரெழிற்கச்சியேகம்பனே. (90)

அஞ்ஞான நீக்கத்திலாருயிரேசிவமானமையான் 
மெய்ஞ்ஞானியென்பதெவர்க்குஞ்சரியொக்கும்வேறென்றுன்னிப் 
பொய்ஞ்ஞானம் பேசும்புருடர்க்குன் பாதப்புணைகிடையா 
வெஞ்ஞான்றவர்க்கருள்செய்குவையோகச்சியேகம்பனே. 91

வேறென்று பேசுவதெல்லாம் விவேகமிலாமையன்றோ 
கூறொன்றிலாமறை கூறுஞ் சிவனுருச்சீவனென்றுந் 
தறுமுமையுருத்தேகமென்றும்மிதைத்தேறுவரோ 
பீறின்மலவயப்பட்டோரெழிற்கச்சியேகம்பனே. 92

கிருட்டிக்குமுன்னுயிரெல்லாஞ்சிவமெனச்செப்புமறை 
சிருட்டிக்குப்பின்னுயிர்வேறுபட்டான் சிறுசீவனென்றே 
திருட்டியை நீக்கிச்சிவோகமென்பானைசேர்தரலுஞ் 
சிருட்டிக்கு முன்சிவமானான்றிகழ்கச்சியேகம்பனே. 93

ரணப்பதைப்பறச்சித்திர தீபமுங்கல்லுமொத்துக் 
மும்பானுவும் வேறற்றொளிருமக்கேண்மையைப்போற் 
சரணத்திருநிழற்கீழ்நிற்குஞானத்தபோதனர் தம் 
மரணப்பிறப்பையுமாற்றிவிப்பான்கச்சியேகம்பனே. (94)

முன்னைவினைத்தொடரெல்லாஞ்சின்முத்திரை கொண்டெரித்தேன் 
பின்னை வருவினையெல்லாமருளிற்பிரித்துவிட்டேன் 
றின்னும்வினையினையெல்லாஞ்சிவாற்பணம் செய்தொழித்தே 
னின்னமெனக்குப்பிறப்புமுண்டோகச்சியேகம்பனே. 95

வைதாரை வாழ்த்துவர்பின்னுமிரங்குவன் வாழ்த்தி நலஞ் 
செய்தாரைப்போற்றுவர்பின்னுஞ்சிரிப்பர்பற்றீவினையை 
யெய்தாரை நோக்குவரேவினைநோக்கியிகழ்தல்செய்யார் 
மைதாவிடுமலமற்றார் மதிகச்சியேகம்பனே. 96

துயருற்றபோதுமதிற்றுளையார் நற்சுகமடுப்பி 
னயமுற்றதிலழுந்தாரிந்தஞாலத்துணாட்டமுறார் 
பயமுற்ற நீரெனநின்னொடொன்றாகிப்பதிந்திருப்பார் 
செயலற்றுநின்னைத்தெரிசித்தபேர்கச்சியேகம்பனே. 97

நாமார்நமக்குப்பதியாரெனவருஞானங்களே 
மாமாயை கன்மமலத்திரள்மாற்றிடுமாற்றிடலுக் 
தாமாய்முழுவதுஞ்சத்தியஞானத்தைச்சார்வனென்றான் 
காமாட்சியம்மைக்கினியபிரான் கச்சியேகம்பனே. 98

சும்மாவிருக்குஞ்சுகோதயங்காட்டித்துரிசகலா 
மும்மாயைக்கப்புறத்தொன்றாய்க்கிடந்தமுழுதறிவாஞ் 
சிம்மாதனமெனக்கீந்தாயுனக்கென்செய்க்கடவேன் 
கைம்மாறுமாரிக்கு முண்டோநவிக்கச்சியேகம்பனே. 99

வெய்யிற்படுப்புழுபோலும்பவத்தின் மெலிந்துவிம்மி 
யுய்யுநெறியறிவிப்பவருண்டுகொல்லோவென்றுன்னி
நையுமுளத்தினரன்றோவிம்மாலைநயமறிவார் 
கையிலுழைமழுவேந்துங்கலிக்கச்சியேகம்பனே. (100)

            சிவாகமக்கச்சிமாலை - முற்றிற்று. 
                திருச்சிற்றம்பலம்.

 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin