தக்ஷிணாமூர்த்தி துதி.
ஏணியைப் போலியாவரையுமேற்விட்டுமியானேறேன்
றோணியொப்புப்பல்லியொப்புச்சொல்லலா - நாணமற
வெல்லார்க்கும்போதித்தும்யானில்லேனென்செய்கேன்
கல்லாலாமுற்றுமெனைக்கா. 1
குரு வணக்கம்.
அம்மைமுலைப்பாலன்றழுதுபெறுஞ்செல்வ
வெம்மைப்புரக்கவந்த வீசனே செம்மை
யரக்காம்பல்வாயினாலாகம நுட்பத்தைத்
துரைக்காழிச்சம்பந்தாசொல் (1)
ஆகமங்கள் சொன்னபரப்பெல்லாமறச்சுருக்கி
யோகையுறச்சொல்வேனீயுற்றுக்கேள் - பாகமொரு
நாலாம்பருவமுறஞானதாகம் பிறக்கு
மேலாதுமற்றையர்க்கெல்லாம். (2)
படைப்பிழைத்துப்போவார் போற்பதைபதைக்கு மஞ்சு
முடலாவமென்றலறியோடு - நொடியளவும்
வீண்போதுபோக்காதுமெய்யடியார் தங்குழாங்
காண்போமோவென்றுருக்குங்கால் (3)
சருவபரிபூரணமாய்ச்சதானந்த தேசாய்
சருவபுவனங்களுந்தானாமிறைவன் - மருவிலருட்
டிருமேனிகொண்டுவந்து திருநோக்கத்தாலுன்
கருமேனிபொன்றிவிக்குங்காண். 4
பொன்னைப்பொருளைபுகழைக்குறியாது
தன்னையளித்தவனேசற்குருவா - மின்னமின்னம்
பொன்னீபொருளீயென்றோ துங்குருவெல்லா
மன்னியனே சற்குருவன்றாம். 5
ஐயந்திரிவகற்றியான்மாவைக்காட்டியதற்
கையனருளையறிவித்து - மெய்யன்
திருவடியைக்காட்டிச்சிவோகம் பாவிக்க
வருள்செய்வோன் ஞானகுருவாய். 6
உள்ளஞ்சுழலவுயிர்சுழலவூன்சுழலக்
கள்ளப்புலனிலெனைக்காட்டாதே - யுள்ளத்திற்
கண்டாருங்காணாதகத்தாவைக்கைவிரலால்
விண்டாழக்காட்டுவிரகா. 7
கண்போலவான்மாகதிர்விளக்குப்போலாக்கை
விண்போற்சிவமதி போல் விஞ்ஞானம் - விண்போந்த
சூரியன்போல் மெய்ஞ்ஞானஞ்சூழிருள்போலஞ்ஞானந்
தாரகைபோற்றத்துவங்கடான். 8
சரவசரந்தோறுஞ்சாக்கியாநிற்பன்
பரமசிவனையப்படாதே - திரிபுரைக்கன்
றில்லாவிடமில்லையென்றதிருவாக்கு
நல்லாய்நமக்கரணநாடு. 9
சிவன்வேறுசீவவேறென்னாதேசீவன்
சிவன் கூறுசிவை கூறுதேகஞ் - சிவனிதயத்
தான்மாபிறந்தானன்றைம் முகத்துமைம்பூதந்
தான் பிறக்கக்காண்கிலைநீதான். 10
தேறினார்சித்தத்திருந்தார்சிவனென்றால்
வேறுபடுத்துவதேன் வீணா நீ - மாறுபட்டுப்
பேசாதையெல்லாம் பிரமமென்னும் வேதாந்த
மாசையற்றானீயேயது. (11)
சிவன்வேறு சீவன் வேறென்றிரண்டாய்ச்செப்பு
மவன்சிவனையென்றுமறியாதான் - றவமில்லா
வுள்ளத்தார்க்கெய்துமோவூர்க்குருவியாகாச்
மெள்ளப்பறந்தறியுமே. 12
அதுவே நீயாமென் றருமறைகள்சொல்லு
எதிர்சிவனே நீயானாயென்னு - முதுசைவம்
வேறோவேறன்றோ சொல்வேதியனே விண்விசும்பும்
வேறோவேறன்றோ விளம்பு. 13
ஐம்பொறியுமைம்புலனுமைம்பூதமுமகற்றி
யின்பசிவநீயென்றாலேலாதோ - வன்பனே
முத்திமுடிவீதென்றான் முன்னூலும்பின்னூலு
மற்ற நூலெல்லாமற் (14)
தானேபரமானாற்றத்துவசாலத்திலே
யேனோபிறந்திறந்தேனித்தனைநாள் - மாணா கேள்
நீ பிறந்ததில்லையுண்மைநெஞ்சுபுலனும் பொறியு
நீ பிறந்தாற்போனிச்சயம். 15
கடத்திருக்குமாகாயமென்றாகதிச்செய்யு
ளுடற்குள் வருதுன்பமெலாமோட்டும் - விடற்கரிய
மன்னுமனேகாகாரமென்ற திருவார்த்தை
யின்னேபிறப்பறுக்குமேண். 16
ஓரிடத்துநில்லாவுலகுயிரஞ்ஞானமிவை
யாரிடத்தினுண்டாயதண்ணலே - காரிடத்தின்
மின்றோன்றுமாபோல் விளங்குமுயிர்ப்போதத்தின்
முன்றோன்றுமென்னுமுமை 17
ஒன்றுடனுந்தோய்வில்லானென்றவுரையாலே
யென்றும் பிறப்பறுத்தாயென்றாயே - யென்று
மிவனவனாகில்லானென்றவுரையென்கொல்
தவமிலர்க்குச்சொன்னமொழிதான். (18)
அமுசோகம்பாவனையாலாருயிரின் போதச்
சமுசயத்தையென்மொழியாற்றள்ளி - யிமையளவுங்
கட்டவுடலாகாமற்காமிகத்திற்சொன்னவண்ண
நிட்டையிலேநின்றுவிடும். (19),
மெய்கண்டான் வெண்காடனெங்குருச்சிற்றம்பலவன்
பொய்கண்டகண்டசுகர்பூரணர்க - ளைவரையு
முள்ளடக்கியொன்றாயுணர்வாயுறங்கினர்போ
ளுள்ளடங்கிநீயுமுணர் (20)
ஆட்பாலவாக்கருளுமென்றருளிச்செய்த
கோட்பாடுடையவருட்கோவே - தாட்டா
லணைந்தவுயிர்க்குவயாதோமுன்னீருப்
பணைந்ததுபோலாமென்றறி. 21
ஏதுக்களாலுமென் றகடையாப்பைச்
சோதித்தார்க்கன்றோசுகவுதய -மாதுக்கம்
போக்குமருந்தொழித்துப்பொய்க்கடலில் வீழ்பவர்போ
வாக்கமிழந்தேனான்ற 22
தானேசிவமல்லாற்றனிச்சிவம் வேறில்லையென்ற
மோனமொழியொன்றின் முடிபறியா - யோனிதொறுஞ்
சென்றுபிறந்தெய்த்தேன் சிவாயசிவவென்செய்கே
னென்று கடத்தேறுவேனியான். 23
எழுவாய்ச்சி வங்காட்டியீற்றிலசிகாட்டு
முழுவாக்கியத்தின்முடிபறியா - விழுதையே
னுய்யு நெறிகாணேனுயர்ந்தகுலத்திற்பிறந்துஞ்
சைவநெறிப்புக்கியுமெந்தாய். 24
அறிவென்றறியாதவாணவமே ஞானச்
செறிவாயவென்னைநீ தீண்டற்க - வறிவாய்
வென்னைச்சிவமாக்கியென்னறிவிலெக்காலும்
பின்னமற நின்றான்பிரான். 25
மொழிந்தசிவசம்பந்தாமுப்பதுமோரானுங்
கழிந்தவிடத்தென்னையெண்காண்பேன் - கழிந்த
கருவிகளிற்சீவனெனக்காணுமதீதத்திற்
பரமசிவநீயுணரப்பார். (26)
கேளா தனவெல்லாங்கேட்பித்தாயன்னைபோல்
மீளாதவாநந்தம் வேட்பித்தா - யாளுடைய
பிள்ளாயுனையன்றிப்பேய்த்தெய்வம்பேய்ச்சமயங்
கொள்ளேனவருரைக்குங்கோள். 27
சிந்தனையால்மாறாத்திரோதமல நீங்கிப்
பந்தமகன்றுபரையாகிச் - சந்திரனை
யொத்தாவிக்குள்ளவுறு துயரமொன்றின்றிச்
சுத்தான்மாவாகித்தொழு. (28)
புத்தகப்பேயேயிந்தச் சிற்றிலைக்கீழ்ப்போதென்ற
சித்தன்மொழியிந்நூற்குச் சித்தாந்தம் - வைத்த
பரப்பெல்லாநீத்துப்பழையசிவத்தோன்றா
யிருப்பன்றோவாவிக்கியல். (29)
எல்லாவுயிர்கட்குமின்பங்கொடுத்தலால்
எல்லாஞ்சிவனையேயெண்ணலால் - எல்லாஞ்
சிவனுருவேயாமாற்றெவிட்டாப் பேரின்பஞ்
சிவனுருவமென்றுணர்விற்றேர். (30)
ஆகாயந்தன்னையளக்கமரக்காலெடென
வாகாயமம்மரக்காற்குள்ளிருக்க - வாகாயங்
கண்டாயேலந்தக்கருத்தேகருத்தாகிக்
கண்டாலதுவேகதி. 31
பவனமாய்ச்சோடையாயென்றபத்துப்பாட்டுஞ்
சிவன்றாளடைவோர்க்குத்தெப்பங் - கவலை
யுருவழியச்சொன்னவுபதேசமன்றோ
சொருபத்திருப்பாசுரம். 32
ஞானசம்பந்தன் சொன்னாடோறுமேத்துவா
ரூனசம்பந்தமுறாரென்ற - ஞானமொழி
யொன்றும் போதாதோசொல்லுள்ளமேயெப்போது
நின்றதிருத்தாண்டகத்தினில். 33
சீர்பூத்தவேதச்சிரப்பொருளையெல்லா
மேர்பூத்திருக்கடையாப்பென்ன - நேர்பூத்த
திருஞானசம்பந்தன் சீர்பாத தூளிக்
கருகனானன்றியிலையாம். 34
சமயம்விசேடஞ்சத்தியநிர்வாண
மமைவில் பிடேகமானா - லுமைபங்க
னாகமசித்தாந்தமறைதியஃதில்லாப்
பாகமுறார்க்கீயிற்பவம். 35
சிந்தனைவெண்பா - முற்றிற்று.