logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 3. சித்தாந்த தரிசனம்

                   பாயிரம். 
                   விநாயகர் துதி.

          சீரார் சித்தாந்த தெரிசனத்தையானோதக் 
          காரானை மாமுகனே கா.

    அம்மையப்பனா யுயிருக்காதார மாய் நிறைந்த 
    செம்மைசிவன் றாளென் சிரம். 1

    ஒன்றாய னேகவித சத்தியா யுன்மனையாய் 
    நின்றாடன் பாத நினை. 2
      சற்குருவாய் முன்னாட் சனகாதி கட்கருளு 
      முக்கணனை நாவே மொழி. (3). 
      திருப்பா சுரத்தானற் சித்தாந்தஞ் செய்தோன் 
      றிருப்பாத மென்றன் சிரம். (4) 
      நின்றதிருத் தாண்டகத்தா னீடுயிர்பொய்ப் போதமற 
      வன்றுரைத்தோன் றாளகம் வைப் பாம். (5) 
      வாழ்வா வதுமாய் மென்றுரைத்தோன் மாமலர்த்தா 
      டாழ்வாமெப் போதுந் தலை. (6) 
    சிவபுரா ணத்தகவ லாலுயிரின் சிக்கறுத்தோ 
    னவமலர்த்தாட் சென்னிநயப் பாம். (7) 
    சிவவாக்கி யதேவர் திருமொழியைக் கொண்டே 
    யவவாக்கியத்தையடு வாம். (8) 
    திருமூலர் மாலையெனுந் தெப்பத்தைப் பற்றிக் 
    கருவேலை யைக்கடப்போங் காண். (9) 
    மெய்கண்டேன் மேற்பிறவி காணேன் றிருவெண்ணை 
    மெய்கண்டா னூலை வினாவி. (10) 
    முன்னூலிற் சொன்னதொரு முப்பொருளை யும்விரித்திங் 
    கிந்நூலிற் சொல்வே னிசைத்து. (11) 
    அவாக்கடலுள் வீழ்ந்தழுந்து மாருயிரைத் தூக்குஞ் 
    சிவாகமசித் தாந்தக் குறள். (12) 
              பாயிரம் - முற்றிற்று. 

                பதியியல். 
மதிதவழுஞ் செஞ்சடையோன் மாமலர்த்தா ளுன்னிப்
பதியியல்பைச் சொல்வாம் பணித்து. 1

 பதியாவ தொன்றாய்ப் பரிபூ ரணமாய்த்
 திதமாகி நிற்குஞ் சிவம்.  2
    
அற்றார்கட் கண்ணிதா யல்லார்க்குச் சேய்மையாய்ப் 
பற்றற் றிருக்கும் பதி. (3)

எங்குமிலை யென்பா ரிதயந் தொறுமறிவா 
    யெங்குமிருப் பானெம் மிறை. 4
    உன்மனைக்குமேலா யுருவருவ மின்றாகிச் 
    சின்மயமாய் நிற்குஞ் சிவம். (5) 
    அசல னகளங்க னானந்த ரூபன் 
    சசிசேக ரன் சங்கரன். (6) 
    சச்சிதா னந்தன் சதாநித்தன் சுத்தன் 
    மெய்ச்சருவா னந்த விம லன். (7) 
    நிராமயனிற் சங்க னிராலம்பன் சோதி 
    பராபர னாதி பகவன். (8) 
    விருப்பு வெறுப்பில்லான் வேதவிதி செய்தோ 
    னெருப்புருவ னெங்கணிம லன். ம (9) 
    பத்தர்க்கெளியன் பதிதர்க்கறவரியன் 
    சித்தத்து ணின்றுஞ் சிவன். (10) 
    ஊனக் கண்ணார்க்கொளித்து முட்புறம்பு மொன்றாய 
    ஞானக்கண் ணார்க்கருள்வ னாடு. (11) 
    மலரயனா யாக்கி மாலாகிக் காத்திட் 
    டுலைவிலர னாயொடுக்கு வான். (12) 
    பஞ்சவதி காரத்தாற் பாகம்வரு வித்துயிரைத் 
    தஞ்சரனில் வைக்கு மிறை தான். (13) 
    சிருட்டிதிதி சங்காரந் திரோபாவ ஞான 
    வருட்றிறத்தோ டைந்தொழில்க ளாம். (14) 
    தேகத்தின் முன்மூன்றுஞ் சீவன்பான் மற்றிரண்டு 
    மாகத்தான் செய்வா னரன். (15) 
    அவிகாரி யீச னனாதிமுத்த னென்றா 
    லிவிகார முண்டோ விறைக்கு. (16) 
    ஐவகை யசத்தியினா லைந்தொழிலு மாருயிர்க்காய்ச் 
    செய்யாமற் செய்யுஞ் சிவம். (17) 
    வாளிரவி சந்நிதியின் மரைமலர்ந்து வாடிடினும் 
    வாளிரவிக் குண்டோ மயல். (18)
   ஆக்க லளித்த லழித்தன் மறைத்தலரு 
    ணோக்க லிறைக் குண்டோ நுவல். 19
    அரையன் வறிதிருக்க வைந்தொழில்செய் வார்செய் 
    தரையன்மே லேறு மஃது. 20
    பரமன்வா ளாங்கிருந்து பரையைந் தொழில்செய்தும் 
        ம பரமன்மே லேறும் பழி. (21) 
    ஐங்கரும் சாக்கியா யப்பாலைக் கப்பாலாய்ப் 
    பங்கறனிற் பானெம் பரன் (22) 
    அறிவுக் கறிவா யவிகாரி யாகி க 
    நிறைதல் பதிநிச்சயம். (23) 
    கேவலத்துங்காணக் கிடையான் கிளர்ந்தெழுந்த 
    வாவல்சகலத்துமணு கான். (24) 
    சாற்றிரண்டு மற்ற சமநிலைய சுத்தத்து 
    வீற்றிருப்ப னெங்கள் விமலன். (25) 
    ஆகி லவனை யறியப்படாவோபெண் 
    பாகம் பிரியாப் பரன். (26) 
    அறியாப் பொருளுமல னறிவாலூன் கண்ணா 
    லறியும் பொருளு மலன். (27) 
    ஆகாயம் போல வறிவாகி நிற்பானை 
    நீகா ணறிவாகி நின்று. (28) 
    நீருக்குட்டப்பம்போ னின்னறிவி னின்றானைப் 
    பாரருட்கண் கொண்டு பரிந்து. (29) 
    எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கு நிறைந்தானை 
    யுள்ளுக்குட் பார்நீ யுவந்து. (30) 
    எங்கு மிருப்பானை யேகமிரண் டென்னாம 
    லெங்குமாய் நீகண் டிரு. (31) 
    மோகமுறு பெத்தத்துண் மூடர்க் கிரண்டாகு 
    மேகமே முத்தருக்கீ சன். (32) 
    இன்ப மயனீச னின்பம் விளைத்தலாற் 
    சம்புவெனும் பேருந் தகும். (33)

   குருவுருவங் கொண்டிக் குவலயத்துட் டோன்றிப் 
    பருவரலை நீக்கும் பரன். (34) 
    போக்குவர வில்லாத பூரணா நந்தர்க்குப் 
    போக்குவர வுண்டோ புகல். (35) 
    ஆருயிரி னுள்ளினிருந் தாங்காங் கறிவிப்பா 
    ராருயிரே மேனி யவர்க்கு. (36) 
    அறிவுக் கறிவா யறிவிப்பான் சில்லோர்க் 
    கறிவுருவு கொண்டருளு வான். (37) 
    பார்த்தும் பரிசித்தும் பஞ்சமலக் கொத்தையெலா 
    நீத்தொழிப்பா னெங்க ணிமலன். (38) 
    பக்குவர்க்குத் தோன்றும் பயன்கொடுக்கு மற்றொழிந்த 
    பக்குவர்க்குத் தோன்றியுமென் பாழ். (39) 
    பாற்கடல்போ லாவி பலமீன்போ லாருயிர்கள் 
    பாற்கடலா லுண்டோ பயன். (40) 
    அருட்கண்ணார்க் கீச னலரொளியாய் நிற்பன் 
    மருட்கண்ணா ருக்கிருளா மன். (41) 
    செங்கதிரோன் வந்து தயஞ் செய்தாலு நாட்டமிலோன் 
    செங்கதிரோ னில்லையெனுஞ் சீர். (42) 
    மனவாக்குக் காய மசையாம னிற்பர் 
    சனாதவின் பத்தைத் தழீஇ. (43) 
    பூனை விழிக்கியுறு பொங்குமிரு ளற்றதுபோன் 
    ஞானவிழிக் கில்லை நவை. (44) 
    சிதம்பரமா யெங்குஞ் செறியினுமென் னாவி 
    மதமடங்கிக் காணா வகை. (45) 
    கூகை யறியாக் குலவுங் கதிரவனை 
    மூகரறி யார்சிவனை முன். (46) 
    கண்ணிரவி யின்றிக் கலந்தரியா தொன்றையுமக் 
    கண்ணுங் கதிருமொன்றோ காண். (47) 
    காக்கை விழிக்குக் கருமணியொன் றானாற்போ 
    லாக்கைக்குச் சாக்கியவன். (48)
   அத்துவித மொன்றேயா மாங்கிரண் டின்மையெனி 
    லத்துவித மன்றோ வது. [ சித்தாந்த (49). 
    துவிதமிரண் டாகுமத் துவிதமொன் றாகுந் 
    துவிதமயல் கெட்டோய் துணி (50) 
    அத்து விதத்துக் கருத்தம் பலவென்னுஞ் 
    சிற்றறிவு கொண்டுசில கீழ். (51) 
              பதியியல் - முற்றிற்று. 

                பசுவியல். 
    சசிசே கரகுரவன் றாடலைமேற் கொண்டு 
    பசுவியலி னைப்பகரு வாம். (1) 
    பசுவென்ப தான்மாமுப் பந்தமுளா னன்றே 
    ச்சிசே கரனிறைவன்றான். (2) 
  கட்டியவன் றானவிழ்க்கி னல்லாற்றன் கண்ணரிவா 
  லெட்டுணையுந் தானவிழ்க்கா தின்று. (3) 
  ஆணவத்தான் மூடமா யன்றுமுத லின்றளவும் 
  வீணவத்தைக் குள்ளே விழும். (4) 
  இருட்டறையிற் கண்ணி லிளங்குழவி போலு 
  மருட்டறையி லாவி மயங்கி. (5) 
  மெய்ஞ்ஞானக் கண்ணை மிகமறைப்ப வாவியா 
  ரஞ்ஞானக் கண்ணி லழுந்தும். (6) 
  பாம்பின்வாய்ப் பட்ட பருத்தியைப்போ லஞ்ஞானப் 
  பாம்பின்வாய்ப் பட்டழுங்கும் பார். (7) 
  உவர்மூடு சிந்து மும்மூடு நெற்போற் 
  சவிமாளு மாணவத்தாற் றான். (8) 
  ஈசனி ரங்கி யிணையில்கலைக் கரத்தாற் 
  பாச நெகிழ்த்திடலும் பண்டு. (9) 
  தனுவாதி நாலைத் தழுவிவெளிப் பட்டு 
  நனவாதி யைந்தினை நண்ணி. (10)
  யானென தென்னு மிருசெருக்கா லாருயிர்கள் 
    யோனிபே தத்துழலு முற்று. (11) 
    புற்றாறு கீடங்கள் புள்விலங்கு மானிடர்கள் 
    சொற்றேவ ரேழ்வகைத்தோற் றம். (12) 
    அண்டசஞ்சு வேதசமுற் பீசஞ்ச ராயுசங்கள் 
    மண்டியநால் யோனி வகுப்பு. (13) 
    எண்பத்து ணான்கிலக்கம் யோனிதொரும் புக்கதுவாய்ப் 
    புண்பொதியு மியாக்கை புணரும். (14) 
    புல்லாய னேகவுருப்போனபினர் நல்லறுகம் 
    புல்லாய்ப் பிறக்கவது போம். (15) 
    பூமரங்களாய்ப்பிறந்து புண்ணியனுக் கானமையாற் 
    போமரத்தி னார்பிரவி போல். (16) 
    புண்ணியதீர்த்தத்துட் புழுவாய்ப் பிறந்தமையாற் 
    கண்ணும் புழுப்பிறப்புக் காண். (17) 
    புள்ளா யனேகவுருப் போயபினர்ப் புட்பிறவி 
    விள்ளுநதி தோய விரைந்து. (18) 
    துட்டமிரு கப்பிறப்பிற் றுதைந்து நெடுங்காலங் 
    கட்டப்படு முயிரார் காண். (19) 
    எல்லாவுருவு மெடுத்தெடுத்து நல்வினையா 
    னல்லா வுருவாகு நாடு. (20) 
    ஆனைந்து மைம்முகனுக் கபிடேக புண்ணியத்தா 
    லானுருவை நீங்கு மற. (21) 
    ஆனுருவ நீங்குதலு மளவில்சிவ புண்ணியத்தான் 
    மானிடரா யிங்ஙன் வரும். (22) 
  வேதாக மம்வழங்கா மேதினியிற் போய்ப்பிறந்திட் 
    டாதார மின்றியலை யும். (23) 
    உடம்புமுக மொவ்வா வுருவமெடுத் துப்பின் 
    விடம்புரையுந் தானம் விடும். (24) 
    நல்லசிவ புண்ணியத்தா னல்லார் பயிறேய 
    மெல்லவரு மாவிக்கு மெய். (25) 
 கிடையாத வாக்கை கிடைத்துமென்கொ லாவி 
    யடையாச் சிவனடி யாய்ந்து. (26) 
    இந்தமனி தப்பிறவி கொண்டறிவை யெய்தாம் 
    லந்தரிக்கு மைம்புலன் களால். (27) 
    அன்னை யுலகன்னை யப்பனம்மை யப்பனென்று 
    முன்னுதலை யுன்னா துயிர். (28) 
    ஒப்புக்கு வந்தாரை யுற்றார்பெற் றாரென்னுங் 
    கப்புவினை யான்மயங்கிக் காண். (29) 
    முந்தை வினையான் முகிழ்முலையா ராசையெனும் 
    பந்தக் கடலுட் படும். (30) 
    என்றந்தை யென்றாய ரென்மனைவி யென்னொக்க 
    லென்சாதி யென்னவியம் பும். (31) 
    உயிர்ச்சார்வா லாவி யுணர்வழிந்து காகங் 
    குயிற்சார்வை யொக்குங் குறி. (32) 
    தானல்லாச் சங்கடத்தைத் தானென் றிறுமாக்கு 
    ஞானமிலா தாய நரர். (33) 
    எல்லாமிறந்தாலும் யானிறவே னென்றோதுங் 
    கல்லாமை யாலுங் கடை. (34) 
    பொருட்சார்வா லானமாப் புழுங்குமெரி புக்க 
    கரிச்சார்வை யொத்துக் கடை. (35) 
    சனகாதிக் கீசன் றனித்திருத்தல் கண்டு 
    மனை வாழ்க்கை யைத்துறவாமல். (36) 
    நல்லாரைத் தூடித்து நவைக ளெடுத்தோதிப் 
    பொல்லாரைக் கண்டு புகழும். (37) 
    ஒழுக்கமுடை யார்சொல்லை யுற்றுக்கே ளாம 
    லிழுக்கர்மொழி கேட்கு மிசைந்து. (38) 
    என்னுடம்பி தென்கால்கை யென்வயிறீ தென்விழிநா 
    வென்சென்னி யென்றுமயங் கும். (39) 
    ஆக்கை சடமென்று மான்மா வறிவென்று 
  நோக்காது நூலின் வழி. (40)
 கன்மத்தா லாவிகறங்காய்ச் சுழன்றுழந்து 
    சென்மித் திறக்குந் தெரி. (41) 
    தந்தைவிந்து வாகனமாய்த் தாயுதரத் தேநுழைந்து 
    பந்தப் படுமதிபத்தும். (42) 
    அன்னையகட்டி லனேகதுய ரென்சொல்கே 
    னென்னைப் பிறவி யிது. (43) 
    இனிப்பிறவே னீசனருள் பெற்றுய்வே னென்னு 
    நினைப்பு மறக்கு நிலத்து. (44) 
    பிறக்கும் பொழுதுமிகும் பேரிடும்பை பின்னுக் 
    துறக்க முடியாத் துயர். (45) 
    சுகர்வாம தேவர் துறந்தாரித் துன்பை 
    யகன்ஞாலத் தியார்க்கு மரிது. (46) 
    குழந்தை பருவத்துங் குமார பருவத் 
    தழுந்துந் துயருக் கணு. (47) 
    காயவிளக் களித்த கண்ணுதலை யுள்ளாமன் 
    மாயையினை யுள்ளு மனம். (48) 
    இல்லத் திருந்தெழிலா ரேந்திழையா லார்ப்புண்டு 
    புல்லிக் கிடக்கும் புயம். (49) 
    வசம்புந் தசையு மலசங் குலமாம் 
    பசுந்தொடியைப் புல்லும் பசு. (50) 
    நாற்ற விதழ்ப்புனலை நாணாம லுண்ணும்பின் 
    காற்றுணையில் வீழுங் கரைந்து. (51) 
    இன்னணமா யாவி யிளமையினை நீத்திட்டுத் 
    துன்னுமுறு மூப்பைத் தொடர்ந்து. (52) 
    நல்லிளமை காலத்தி னாதனைச்சற் றுன்னா 
    கொல்மூப்பா லாவிகுலை யும். (53) 
    அமுதத்தாற் கால்கழுவி யாதனத்தனாய் கடவிச் 
    சமிதைமிசை யேறுந் தனி. (54) 
    காலபடர்க் கண்டஞ்சிக் கண்ணீர் சொரிந்தழுங்கி 
    யோலமிடு மந்தோ வுயிர். (55)
   மாசற்ற சோதி மலரடியை யுன்னாமற் 
    பாசத்தை யுன்னும் பசு. (56) 
    இவ்வண்ண மான்மா விறந்து பிறந்துழலு 
    முய்வண்ண மின்றி யொதுங்கி. (57) 
    மாலாயயனாய் மகபதியாய் வானவராய் 
    மேலாய வாக்கைவிர வும். (58) 
    புண்ணியத்தான் மேலேறும் பாவத்தாற் கீழிறங்கும் 
    புண்ணியபா வத்தாற் புவி. (59) 
    ஈகைதவ மின்றி யிரக்கமறி வின்சொல்லு 
    மேக விருக்கு மிவண். (60) 
    அபுத்திபுத்தி பூருவத்தா லாங்கிருநா லெய்திச் 
    சுபுத்திவரு மாவி துலங்கும். (61) 
    மூர்த்திகள்சே வித்தத்துந் தீர்த்தத்துண் மூழ்கியத்துஞ் 
    சேத்திரத்திற் சென்மித்தத் தும். (62) 
    தெய்வஞ் சிவமென்னுஞ் சித்தமுண்டா மக்கணமே 
    யுய்யுநெறி யுண்டா முயிர்க்கு. (63) 
    ஈசனடி யார்க்காணி லென்புருகிக் கைகுவித்து 
    மாசில்சரி தைக்குள் வரும். (64) 
    சென்றா லயந்தோறுந் தீபமல கிட்டுருகி 
    நன்றா மலர்தொடுக்கு நாடு (65) 
    பருப்பதங்கே தாரம் பகர்காசி காஞ்சி 
    திருப்பதிநற் காளத் திரி. (66) 
    கழுக்குன்றஞ் சோணகிரி கனகசபை யோத்தூர் 
    செழுக்கமலை சீரொற்றி யூர். (67) 
    விரிஞ்சிபுரந் தீர்த்தகிரி வெண்கா டிடைமருது 
    சிரபுரங் கோகன்னந் தினம். (68) 
    ஈச னிருக்குமிட மீதெல்லாஞ் சென்றிறைஞ்சிப் 
    பாச மறுக்கும் பசு. (69) 
    முன்னோன் சரிதை முற்றி முற்கிரியை வந்தணைந்திட் 
    டுன்னு சுத்தி யைந்தினை யுற்று. (70)
    மிருத்திகைலிங் கத்தின் விதிப்படியர்ச் சிக்கின் 
    மரித்தல் பிறப்பகற்று மால். (71) 
    பால்வண் ணமான படி கலிங்கம் பூசிக்கின் 
    மால்வண்ண நீங்கு மதி. (72) 
    மன்னும் படிகத்தின் வாணலிங்க மேயதிகம் 
    பன்னுசுயம் பாதலினாற் பண். (73) 
    மூவிலிங்கத் தும்பூசை முற்றிற் சிவனருளா 
    லாவியிலிங் கத்தையணை யும். (74) 
    திருப்பணியி னாலுஞ் சிவபூசை யாலுங் 
    குருக் கரணமாகுங் குறி. (75) 
    அந்தரியா கப்பூசை யாலு மகந்தெளிந்து 
    சிந்திதயோ கத்திற் செலும். (76) 
    ஐயெரிநாப் பண்ணின் றணிலந்த னையடக்கித் 
    துய்ய மதியமுதந் துய்த்து. (77) 
    ஆதார மாறுங்கண் டப்பாற் பரவெளியி 
    னாதாந்த வின்பத்தை நாடி. (78) 
    ஊனமிலா யோகத்தைச் சின்னா ளுழக்கியொரிஇ 
    ஞானத்தைத் தாவுமுயிர் நாடு. (79) 
    ஈச னருணூலை யெஞ்ஞான்று காண்பமெனு 
    மாசை பெருகு மற. (80) 
    வினையொப்பு பாகம் வியன்சத்தி பாதந் 
    தனையெய்து மெய்துந் தரம். (81) 
    துறவு மவாவிற் றுயரும் பிறப்பி 
    லுறவு மருட்பாலு முறும். (82) 
    பி றவாமை கள்ளாமை பேணிவகு ளாமை 
    மறவாமை மற்றுமரு வும். (83) 
    கொல்லாமை தின்னாமை கோள்குறளை குத்திரங்கள் 
    சொல்லாமை யாவுந் தொடும். (84) 
    பாசவெறுப்பும் பரவிருப்பும் வந்தவுயி 
    ராசானால் முத்தியடை யும். (85)
   தந்தைதமர் மேல்வெறுப்புஞ் சங்கரன்றன் மேல்விருப்புஞ் 
    சிந்தையிடை வந்துதி கழும். (86). 
அத்திகழ்வா லீச னருளுருவு கொண்டருளி 
முத்தியடை விப்பன் முறை. 87

              பசுவியல் - முற்றிற்று. 

                பாசவியல். 

    பாசவிய லைந்து பகுப்பா யிருக்குமதை 
    யீசனருள் கொண்டியம்பு வாம். (1) 
    மலமாயை கன்மமா மாயைதிரோ தாயி 
    குலமொன்று வேறாங் குணம். (2) 
    பாசமறி யாமை பகராண வம்விச்சை 
    மூசுபெத்த மூல மலம். (3) 
    அநேகவித சத்தியினா லாருயிரை மூடுங் 
    தினகரனைப் பன்னகம்போற் சென்று. (4) 
    அன்னியத்தைக் காட்டி யனன்னியத்தைத் தான்மறைக்கு 
    மென்னே மலத்தி னியல். (5) 
    தண்டுலத்தைச் சில்லுமியுந் தாம்பிரத்தைக் காளிதமு 
    மண்டுதல்போ லாவிமறைக் கும். (6) 
    ஆனை யுலாவு மடவியைப்போ லாருயிராங் 
    கானிலுலாவு மலங் காண். (7) 
    கிஞ்சிக் கியன்மூடன் கேடன் கொடும்பாவி 
    வஞ்சனித னால்வந் தது. (8) 
    பாசன் பெரும்படிறன் பாமரன்பே ராங்காரி 
    மாசனித னால்வந் தது. (9) 
    கன்மவிருப்புங் களேபரத்தில் வாஞ்சனையுங் 
    குன்மமலத் தின்றீக் குணம். (10) 
    இச்சைவழி சென்றங் கிருவினையை யீட்டிவரல் 
    கொச்சைமலத்தின் குணம். (11)
  தாட்டுணைக்கீழ் நின்றபினுஞ் சாதிபா ராட்டலிந்தக் 
  கோட்ட மலத்தின் குணம். (12) 
  ஈச னகத்திருக்க வில்லையெனக் கூறலிந்தக் 
  கூசு மலத்தின் குணம். (13) 
  ஆசையுறுங் காலமெலா மாலிங் கனஞ்செய்யு 
  மாசு மலமா மகள். (14) 
  உலகந் தெரியா துபத்தத் தடக்குங் 
  கலகமலக் கன்னி கை. (15) 
  உண்ண லுறங்க லுயிர்க்கும் பொழுதெல்லா 
  மெண்ணைப் பிரியா ளிவள். (16) 
  கன்மமகப் பெற்றதின்பாற் காயமெனும் போனையுஞ் 
  சென்மிக்கப் பண்ணுந் திரு. (17) 
  அந்தோ மலத்துயர மாற்றகிலே னாற்றகிலே 
  னெந்தா யிரங்கா யினி. (18) 
  கலையாங் கரத்தாலிக் கட்டவிழ்த்தாற் றீதோ 
  வலரோ வடியேற் கருள். (19) 
  ஈச னருளுதய காலத் திறக்குமிது 
  பேசுவா மாயைப் பெயர். (20) 
  மாயை சடமயக்க மதந்தா மதம்பொய்ம்மை ம 
  காயம் விளக்குக் கனா. (21) 
  மூலை யிருந்தாரை முத்தத்தில் லிட்டதன்றிச் 
  சாலப் பெருமயக்கந் தான். (22) 
  பிருதிவியப் புத்தேயு பெருமருத்து வானைம் 
  பொறிபுலன் கன்மேந் தியம். (23) 
  மனம்புத்தி யாங்கார மாறாத சித்த 
  மினமான்ம தத்துவமென் றெண் (24) 
  காலநியதி கலைவித்தை ராகமொடு 
  மாலும் புருடன்மா யை. (25) 
        ம முன்னான்ம தத்துவமும் பின் வித்தியா தத்துவமுஞ் 
  சின்மாயை யார்தந் திரம். (26)
    சுத்தவித்தை யீச்சுரம்பின் சொல்லுஞ் சாதாக்கியங்கள் 
    சத்திசிவ மைந்துந் தனி. (27) 
    சிவதத் துவமிதனாற் சேட்டிக்கு மெல்லா 
    மிவை தந்த மாமாயை யெண். (28) 
    ஆறாறுக் குள்ளாக யகப்பட் டுயிர்சுழலு 
    மாறாப் பிரானை மறந்து. (29) 
    மயிரெலும்பு தோனரம்பு மன்னுதசை யைந்துஞ் 
    செயிர்புவியின் கூறென்று தேர். (30) 
    ஓடும் புனலுதிர மொண்சுக் கிலமூளை 
    கூடுமச்சை யப்புவின் கூறு. (31) 
    ஆகாரந் தூக்கம் பயமை துனஞ்சோம்பு 
    நீகாணெ ருப்பின்கூறு. (32) 
    ஒட்ட நடைகிடத்த லுற்றிருத்த னிற்றலைந்துங் 
    கூட்டனிலன் கூறென்று கொள். (33) 
    காமங் குரோதங் கழிலோப மோகமதஞ் 
    சேமவிசும் பின்கூறு தேர். (34) 
    வாயுமொரு பத்து மலிநாடி யோர்பத்து 
    மோகுண மூன்றக மூன்று. (35) 
    வசனாதி யைந்துமபின் வாக்காதி நான்கு 
    மிசையுந் தொண் ணூற்றாறா யெண். (36) 
    இதற்குள்ளாயாவி யிறந்து பிறந்தே யிழலு 
    மதுக்கொன்றை யானை மறந்து. (37) 
    காய்விளக்களித்த கண்ணுதலை நண்ணி லிந்த 
    மாயைப்படலமறை யும். (38) 
    நனவின்முப் பானைந்து நற்கனவி லையைந்து 
    முனைசுழுத்தி யிற்கருவி மூன்று (39) 
    துரியத்திரண் டாகுந் துரியாதீ தத்திற் 
    கருவியொன்றா மைந்தவத்தை காண்.. (40) 
    அந்தரங்கத் துள்ளிருந் தரையர்புறம் போதல்போ 
    லந்தரங்கத் துள்ளாவி யும். (41)
 ஆணவத்தான் மூடனா மாயையாற் கிஞ்சிகனாம் 
  பூணும்வினை யாற்புருட னாம்.(42) 
    குருவையெதிர் தூடித்தல் குற்றமெடுத் தோதல் 
    குருக்கொல்லன் மாயா குணம். (43) 
    பற்றற்றார் கண்ணும் பருவரலைச் செய்வித்தல் 
    குற்றமிகு மாயா குணம். (44) 
    ஈசனிலை யாவியிலை யீசனடி யாரில்லை 
    மாசகலா மாயா மகற்கு. (45) 
    நூலில்லை கேள்வியில்லை நுண்ணறிவு மில்லையால் 
    மால்கலா மாயா மகற்கு. (46) 
    ஞானமிலைப் பத்தியிலை நல்லார்கண் ணட்புமிலை 
    மானமிலை மாயா மகற்கு. (47) 
    முன்னவன்பா தாம்புயத்தின் முற்று மெனையடைக்கா 
    தன்னை வயிற்றிலடைக் கும். (48) 
    மாயை விளக்கவியா தவியமா தேவனருண் 
    மோய வெயின்முகிழ்க்கு மோ. (49) 
    மாயா புரமெரித்த மதிசேகரர்க்கின்றென் 
    மாயாபு ரம்வலிதோ மற்று. (50) 
    இம்மாயை நட்ட மெழிற்சோகம் பாவனையாற் 
    கன்மமலக் கட்டுரைப்பேன் காண். (51) 
    கன்மம் வியாபி கடம்போற் சடமன்று 
    சென்மிக்கப் பண்ணுஞ் செயல். (52) 
    வல்வினையாந் தாயகட்டில் வந்து பிறந்தனவால் 
    நல்வினையுந் தீவினையு நாடு. (53) 
    நல்வினையாற் புண்ணியமு நவிறீதாற் றீவினையுந் 
    தொல்லை வினைக்கேற்பத் தொடும். (54) 
    முற்சொன்ன வூழ்வினையான் முடியா விகாரமுறு 
    முற்சாக நன்முயற்சி யுற்று. (55) 
    முயற்சியா லீசனையும் பின்னிட்டு முந்திப் 
    பயிர்செய்யு மூழ்வினையின் பால். (56) 
   ஊழ்வினையாற் சஞ்சிதமு முலவில் பிரா ரத்தமுமேல் 
    வீழுமா காமியமு மே. (57) 
    விருப்பும் வெறுப்புமாய் வேண்டல்வேண் டாமை 
    மரிப்போ டுதிப்பும் வரும். (58) 
    கறங்குவரி கொள்ளிவட்டங் கடிதிற் சுழல்வண் 
    டுறுங்குலா லன்றிகிரி யொப்பு (59) 
    மூன்றுகுற்ற மூன்றுகுண மூன்றவத்தை மூன்று துக்க 
    மூன்று பிராரத்த மொழி. (60) 
    காமம் வெகுளி மயக்கமிவை மூன்றும் 
    வாமச் சமையத்தார் மாட்டு. (61) 
    சாத்துவிதஞானஞ் சமநிலைய மற்றிரண்டுஞ் 
    சாற்றி லிருளொளியுந் தான். (62) 
    சாக்கிரமுஞ் சொப்பனமுந் தணவாச் சுழுத்தியையும் 
    போக்கிற் றுரியம் பொருள். (63) 
    ஆன்மீகம் பௌதீக மறையுந் தெய்வீகமிவை 
    யான்மாவுக் கில்லை யறி. (64) 
    முன்னைவினைப் பின்னைவினை மூவா நிகழும்வினை 
    யுன்னை யணுகாமை யோர். (65) 
    இச்சைய னிச்சை பரவிச்சை யிம்மூன்றா 
    னிச்சஞ் சுழலு முயிர் நின்று. (66) 
    தன்னிச்சை யால்வருத றானிச்சி யாதுறுத 
    லன்னியரால் வந்தடைத லாம். (67) 
    ஆன்மீகந் தெய்வீக மான பவுதீகந் 
    தான்மேவு மான்மாத் தனித்து. (68) 
    மன்னவராற் கள்வரான் மாவாலுறு பிணியா 
    லின்னலுற லான்மீக மெண். (69) 
    தாயகட்டிற் றங்க றரணிதனில் வந்தழித் 
    லாயிற் றெய்வீக மெனலாம். (70) 
    வானி லிடியான் மழையான்மற் றச்சடத்தா 
    லூனமுறல் பௌதிகமா யோர். (71)
   சஞ்சிதமுன் கட்டுவினை சற்குருநோக் காற்சரியும்
    பஞ்சுமலை பட்ட நெருப்பாய். (72) 
    உள்ளப் பொசிப்பெல்லா முண்டொழிப்ப தன்றியிதைத் 
    தள்ளப் படாதெவர்க்குந் தான். (73) 
    கொடுப்பானு மீசனதைக் கொள்வானு மீசனெனின் 
    மடுக்காவெதிர் வினைகள் வந்து. (74) 
    ஞானபுலிவாழ்காட்டி நள்ளிரலை வாழுமோ 
    தானசிப்ப தல்லாற் றரித்து. (75) 
    வறுத்தவிதையுண்ப தன்றிமா நிலத்தைக்கீன்று 
    செறித்துவிதைப் பாரோ தெளி. (76) 
    வெறுப்புவிருப் பாற்பிறப்பா மேலைக்கிப் போதே 
    வெறுப்புவிருப் பற்றால் விடும். (77) 
    கூத்தியைப்போற் பாவங் குலக்கொடிபோற் புண்ணியங்க 
    ணீத்தார்க் கிரண்டு நெருப்பு. (78) 
    நாடுவினை யொப்புவந்த நாதாந்த யோகருக்கிங் 
    கோடுந் திரவியமு மொன்று. (79) 
    இருவினை யொப் புற்ற வுயிரிதயத் தானந் 
    திருவம் பலமிறைக்குத் தேர். (80) 
    நற்சாதி துர்ச்சாதி நல்லாயுதத் தீயாயு 
    நற்போகந் துர்ப்போக நாடு. (81) 
    நல்வினையா னாகம்போந் தீவினையாற் றீநிரயஞ் 
    செல்லு முயிரென் செயும். (82) 
    நல்லன்சிறு புல்ல னபுஞ்சன் விதுரனெனத் 
    தொல்கருமத் தார்தந் தொழில். (83) 
    உன்ன லொருகால்பின் னுரைத்தலிரு காலதனைத் 
    துன்னன் முக்கா லொன்றே தொழில். (84) 
    இன்னவகை யெவ்வுயிர்க்கு மேறுமிரு வினையு 
    முன்ன லொருக்கிலொழியும். (85) 
    சற்கன்மத்தாலே தனுவைநா னென்றுவருந் 
    துர்க்கன்ம மெல்லாந் தொலை. (86)
   இக்கன்மத் தாற்றுயர மென்சொல்கே னென்சொல்கேன் 
    முக்கண்ண நீயே முகிழ். (87) 
    கன்ம வெயிலகற்றிக் காற்கமல நீழலின்க 
    ணென்னை யிருத்தா யினி. (88) 
    அவிகாரி யீச னருளுதய காலஞ் 
    சவிமாளுங் கன்மமலந் தான். (89) 
    ஓமாதி வாக்கியமா யுயிரறிவுக் கூதியமா 
    மாமாயை தன்னைவகுப் பாம். (90) 
    வேதாக மங்கலைகள் விஞ்ஞானர் மாலாதி 
    நாதர்க் குடலாதி நாடு. (91) 
    எண்பத் தொருபதமு மேழ்கோடி மாமனுவு 
    மைம்பத்தோ ரக்கரமு மாம். (92) 
    சரிதாதி மூவர்க்குச் சாலோக மாதி 
    விரிபதமூன் றாகியுமே வும். (93) 
    இரவிலெழு சந்திரன்போ லென்றூழ்வரு மளவும் 
    விரியபர ஞானமாம் விந்து. (94) 
    இந்தவிந்து ஞானமின்றே லெவ்வுயிர்க்கு மெஞ்ஞான்றும் 
    பந்தமுத்தி யில்லையாம் பார். (95) 
    சிவஞான சூரியன்முற் சீவமதிப் பல்கருவி 
    யவஞான மீனு மறும். (96) 
  சனகாதி கட்கன்று சாற்றபரம் பொன்ற 
  வுனாதபரஞ் சொன்னவனே யுற்று. (97) 
  அபர வுணர்வை யறவகற்றி யென்பாற் 
  சுபரம் வருமாறு சொல். (98) 
  மாமாயை யீசனருள் மாறாதெதிர்ந் தன்றிப் 
  போமாறு முண்டோ புகல். (99) 
  மறைப்புருவ மாயறிவின் மாறுசெயும் பொல்லாச் 
  சிறப்புமலஞ் சொல்வாந் தெரித்து. (100) 
  அன்னை யருட்சத்தி யாவிமலம் பொன்றப் 
  பின்னைத் திரோதானப் பேர். (101)
  இருவினையொப் பாவிக் கெய்தளவுஞ் செய்யுந் 
    திரைமயக்க மாறித் தினம். (102) 
    மடித்துயிரின் வல்வினையை மானாதருத்தி 
    யடித்துப் பாலூட்டு மருள். (103) 
    செகத்தை மறைத்துச் சிவங்காட்டிப் பின்ன 
    ரகத்தை மறையா தருள். (104) 
    மலமொழிந்த காலத்து மாறுந்தி ரோதை 
    சலமில் சிவஞானத் தாய். (105) 
    அச்சோ நெடுங்கால மாவிதிகைத் தெய்த்தலைந்தே 
    னற்சோம் சேகரனே நான். : (106) 
    பஞ்சமலத் தாலிடுக்கண் பட்டுயிர்க ளெஞ்ஞான்று 
    நஞ்சணிகண் டத்தனை நாடா (107) 
    கோடிசிவ புண்ணியத்தாற் குவியு மனம்பின்னர் 
    நாடுஞ் சிவனை நனி. (108)

              பாசவியல் - முற்றிற்று. 

              பாசமோசனவியல்.

    சிவஞான தீக்கையினாற் றிணிமலந்தீர்ந் தாவி 
    சிவமாதல் சொல்வாந் தெரித்து (1) 
    அஞ்சு மலத்தாலு மாவிபடுந் துயரம் 
    வஞ்சிபங்கன் றீக்கையின்மா யும். (2) 
    மீன்போற்றிரு நோக்கால் விமல னுருவாக்குந் 
    தான்போக்கி நின்ற தரம். (3) 
    ஆமைபோற் சிந்தித் தருளுருவ மாக்குமாற் 
    காமா நீத்தவரைக் காண். (4) 
    கோழிபோற் றீண்டியுயிர்க் குற்ற மறுத்தாளு 
    வழிவிட முண்ட வரன். (5) 
    திருநோக்கான் மூலமலந் தீயும் பரிசத்தா 
    லிருண் மாயைக் கூட்டமிரி யும். · (6)
   திருமொழியாம் கன்மமலஞ் சிந்துந் தியானத்தாற் 
    பெருமாயை போயொழியும் பின். [ சித்தாந்த (7) 
    சிவநூலாற் பொன்றுந் திரோதையப்பா லாவிச் 
    சிவதீக்கை யாலாஞ் சிவம். (8) 
    பசைநீங்கு மாருயிர்க்குப் பரமசிவன் சொன்ன 
    தசகாரிய மறைவன் றான். (9) 
    கருவிசட மென்றவற்றின் கன்மத்தைக் காண்டல் 
    கருவிக் குருவமெனக் காண். (10) 
    தத்துவத்தா னாமறியோஞ் சாட்சிநமைக் கொண்டறித 
    லுற்றுணூர்தல் காட்சியா யுன். (11) 
    பாசக் குழுக்குப் பதிநா மெனத்துறத்தல் 
   பாச்சுத்தி யென்னப் படும். (12) 
    சைதன் னியவுருநா னென்று தமநீங்கல் 
    சைதன்னிய னுருவந் தான். (13) 
    எனைவிடவே றில்லையியானே பரப்பிரம 
    மெனவுணர்த றற்றெரி சனம். (14) 
    சீவனுக்குச் சாக்கி சிவமென் றுணர்தலே 
    சீவனுக்குச் சுத்தியெனத் தேர். (15) 
    சிவனன்றி யாருயிர்க்குச் சேட்டையிலை யென்னில் 
    சிவரூப நன்றாய்த் தெளி. (16) 
    எவ்வுயிர்க்கும் போத மிறையென் றறிதலே 
    செவ்வே சிவதரி சனம். (17) 
    அந்தச் சிவநம்மை யன்றியிலை யென்றோர்த 
    லுந்துஞ் சிவயோக மோர். (18) 
    உவனிவனென் றுன்னாதங் கொன்றாகிப் போதல் 
    சிவயோக மென்றே தெளி. (19) 
    பத்துவித காரியத்தா லாவி பசையற்று 
    முத்தியிடை நிற்க முறை. (20) 
    பத்தைவிட வுண்டோ பரமபத மாருயிர்க்குக் 
    சித்தைவிட வுண்டோ செயல். (21)
  ஈரைந்து காரியத்தா லிச்சையறு மாருயிர்க
    டாரமிழந் தானைத் தக. (22) 
    உள்ளமொடுங்கி யுரையொடுங்கி யானந்த 
    வெள்ளத் தழுந்திநிற்கு மேல். (23) 
    பெத்தத்தை நீங்கிப் பிரானோ டிரண்டற்று 
    முத்தத்தி னிற்கு முதல். (24) 
    ஐந்தடக்கி யாறொடுக்கி யம்பரம்போ லொன்றாகிச் 
    சந்தற்று நிற்குமுயிர் தான். (25) • - 
    விமரிசஞா னத்தால் வெறுப்புவிருப் பற்றுச் 
  சமரசத்தை யெய்துந் தனி. (26) 
    கண்ணு முயிர்களெல்லாங் காசத்தை மோசித்து 
    விண்கதிரோ டொன்றாய் விடும். (27) 
    அறிவி லறிவை யறியா தறிந்து 
    குறியிறந்து நிற்குங் குலம். (28) 
    ஐந்தவத்தை சென்றாலு மாவரண மற்றதவர் 
    சிந்தைசிவன் பாலே தெளி. (29) 
    ஆமயத்தை நீங்கி நிராமயத்தை யாதரிக்கி 
    னாமயம்போ நீயே யவன். (30) 
    பின்னபின மாய்நோக்கும் பேசிற் கடையிடைக 
    டன்னையே நோக்குந் தலை (31) 
    அவயவமோ நிரவயமோ வான்மா வறியேன் 
    புவன்குரு நாதா புகல். (32) 
  உணருமுயி ரில்லை யுடம்பே யுயிரென் 
    றுணர்வ னுலகா யுதன். (33) 
    நான்பருத்தே னானிளைத்தே னென்றுரைக்கு ஞானத்தா 
    லூன்சடல மன்றே யுயிர். (34) 
    ஊமனொளி யில்லையெனி லொப்புவரோ வத்தன்மை 
    யேமவுயி ரின்றென்பாரில். (35) 
    உள்ளே யிருந்த வுயிர்போன தென்றுலகஞ் 
    சொல்லுவதென் கொல்லோநீ சொல். (36)
   அவயவமே காய நிரவயமே யான்மா 
    வவயவமே தோன்றியழி யும். (37) 
    கட்டையடுக்கிக் களேபரத்தை மீதடுக்கிச் 
    சுட்டிடுவ தென்கொல்லோ சொல். (38) 
    உடல்கிடக்க வாவி யோடியதென் றியாருங் 
    கடல்போற் கதறுவதென் காண். (39) 
    மூட வுடலுயிரோ மூடா விதென்கொலுயிர் 
    கூடாமோ பக்கிக் குலம். (40) 
    உணர்ச்சியுயி ரில்லையோ வென்றுரைக்குஞ் சொல்லை 
    யுணராயுலகா யுதா. (41) 
    ஆக்கையகத் துள்ளேநல் லான்மா வுளதென்று 
    தூக்கிமறை சொல்லுந் துணி. (42) 
    இந்தியமே யான்மாவென் றெண்ணு மறிவில்லா 
    மந்தச் சவலை மதம். (43) 
    சத்தம் பரிசு முருவரச கெந்தத்தை 
    யுய்த்தறிவான் சீவனென வோர். (44) 
    இந்தியத்துக் கெல்லா, மிறைவ னுயிரன்றி 
    யிந்தியத்துக் குண்டோ விறை. (45) 
    ஒன்றறிந்த தொன்றறியா தாலு முயிரல்லை 
    மன்றலன்றி மூக்கறியா மற்று. (46) 
    கண்ணுருவ மன்றியொன்றைக் காணறியாக் கையார 
    வுண்ணலன்றி நாக்கறியா தோர். (47) 
    காதொலியை யன்றியொன்றைக் காணறியா விவ்வுடம்பு 
  மோது பரிசமன்றி யுற்று. (48) 
    ஆகையா லைந்தறிவைக் கொண்டறிவ தான்மாவென் 
  றோகையொடுஞ் சொல்லுமறை யோர். (49) 
    செல்லும் பிராணனன்றிச் சீவனிலை யென்றுணர்ந்து 
    சொல்லுஞ் சுவாசமதஞ் சூழ். 50
  மூக்குறுநன் மூக்கணியை மூடச் சுழுத்தியினிற் 
  போக்கடித்த தாமோ பொருள். (51)
 பிராணனைமுன் விட்டுப் பிடிப்போன் பிராணனென 
    வராவணியான் வேதமறை யும். (52) 
    மனமே புருடனன்றி மற்றிலையென் றோதுங் 
    கனமாயா வாதிமதங் காண். (53) 
    என்மனத்தா லியானொந்தே னென்றுரைக்கப் பட்டமையாற் 
    றன்மனந்தா னன்று தனி. (54) 
    புத்தியே யான்மாவா மென்றுணராப் போதித்த 
    புத்திகெட்ட புத்தன்மதம் பொய். (55) 
    புத்திக்குச்சாக்கியாம் போதமய வான்மா 
    புத்திசட மாதலினாற் பொய். (56) 
    ஆங்கார மான்மாவா மென்றுறைக்கும் பேரிருளா 
    ராங்கார வாத மறி. (57) 
    சடஞ்சித்தத் தாலறியுஞ் சைதனிய னன்றென் 
    றிடமறைக ளோது மெடுத்து. (58) 
    சித்தமியமான னென்றுணரேல் சீர்சான்ற 
    சித்தர்மதம் பின்னிட நீ செல். (59) 
    சைதன்னியன் சந்நிதியிற் றானறியுங் கிஞ்சிக்கியன் 
    சைதனிய னுக்குச் சடம். (60) 
    காயமுதற் சித்தங் கடையாமிவை கட்குச் 
    சேயன்சை தன்னிய சீவன். (61) 
    சீவனத்தாற் சீவனெனல் சீவமிறந்தா லிந்தச் 
    சீவனே யந்தச் சிவம். (62) 
    தன்னைக் கண்டாங்குத் தலைவனையு முன்னாது 
    முன்னைப் பிரமமெனு மோர். (63) 
    ஊனையொதுக்கி யுணர்வாக்கி விட்டபினர் 
    நானே பிரமமென நாடு. (64) 
    சொப்பனமுஞ் சாக்கிரமுந் தொலையொத் தகாலத்துச் 
    சுப்பிரம் மென்றுநீ சொல். (65) 
    நான்பிரம மென்னு நடைமலையைச் சிவைபாகன் 
    றானடக்கி யாட்கொள்வான் றான். (66) 
  
    நீபிரம்மென்று நெடுநாட் பிறந்திறந்தாய் 
    மாபிரம மென்னை மறந்து. (67). 
    ஆதிமுத்தன் சீவ னனாதிமுத்த னீசனென 
    வேதமுறை செய்யும் விரித்து. (68) 
    உள்ள மசையா. துயர்துருவன் போனிற்கில் 
    வள்ளலுரு வானாய் மதி. (69) 
    சித்திரத்தை யொத்துச் சிவோகமெனச் சிந்தித்தா 
    லத்தனுரு நீயாவை யால். (70) 
    இந்நிலையி னிற்பரிதே லெல்லாஞ் சிவமென்னு 
    மந்நிலையி னிற்பா யற. (71) 
    அஃதுமரி தேயாகி லஞ்செழுத்தி னுண்மைப் 
    பகுதியறிந் துள்ளே படி. (72) 
    சொன்ன நிலைக்குட் டுதையா மனமாயின் 
    முன்னூலை யோதி முயல். (73) 
    சாத்திரத்தை யோதச் சழக்கு மனமானா 
    லூர்த்தகுரு நாதனை நீ யுன். (74) 
    குருவுருவ முன்னக் கோதகன்றிட் டாவி 
    பரிபூ ரணத்துட் படும் (75) 
          பாசமோசனவியல் - முற்றிற்று. 

              சிவயோகவியல். 

    அவயோகத் தன்மை யகற்றியலை வில்லாச் 
    சிவயோகத் தன்மை தெரிப் பாம். (1) 
    நதிப்பாங்கர்ப் பன்னகத்தி னண்ணிப்பத் மாசனத்தில் 
    வதியாக் குருவை வணங்கி. (2) 
    நீர்க்குமிழி மின்னற்கு முண்டுநிலையில்லை 
  யாக்கைக்கென் றெண்ணி யறிந்து. (3) 
  முன்னோ னுரைத்த மொழிநிறுவிப் பற்பலவாம் 
  பின்னமொழி யெல்லாம் பிரித்து (4)
சிவத்தோமசி யுண்ணி னைந்து சிவயோக நிட்டை 
    சவுக்கியதா னத்தேறித் தான். (5) 
    அவிரோத வாளா லகங்கரத்தை யட்டிப் 
    பவரோகத் துக்குப் பயந்து. (6) 
    அல்லல் கிளைக்கு மவாமனத் தின் வேரை 
    யொல்லை யகழ்ந்திட் டொரீஇ. (7) 
    அகாயனவி காரி யனந்தவா னந்தன் 
    மகாதேவன் றன்னை மதித்து. (8) 
    பதைத்தெழு முள்ளப் பதைப்பைப் பறித்து 
    மதத்தை யொடுக்கி மரித்து. (9) 
    தத்துவத்தைப் பின்னிட்டுச் சகசமல கேவலத்தை 
    யத்தனருள் கொண்டாங் ககன்று. (10) 
    அமுசோகம் பாவனையை யண்ணியறி வாகிச் 
    சமுசயத்தீப் பாவனையைத் தள்ளி (11) 
    சீவன்வே றாண்ட சிவன்வேறென் றெண்ணுமயற் 
    பாவனைக்கண் ணுள்ளில் படா (12) 
    நதியோடிப் புக்கழுந்து நாட்டம்போ னின்ற 
    பதியிற் கலந்து பழகி. (13) 
    அதுவுதுவென் றெண்ணா தறிவோ டறிவாய்ப் 
    பதிதல் சிவயோகம் பார். (14) 
    ஒன்றென் றிரண்டென்று முன்னா துறங்கியே 
    யொன்றாத லேசிவயோ கம். (15) 
    சாத்திரத்தை யுன்னிற் சமாதி குலையு மெனி 
    நேத்திரத்தும் பாரே னிலத்து. (16) 
    நவவிதநா தங்க ணனிதோன்று மாயின் 
    சிவனருளைக் கொண்டு செகு. (17) 
    சுட்டி லசத்தா நீ சுட்டைப் பிறகிட்டுச் 
    சுட்டாமற் சுட்டித் தொடர். 18
    ஒளியி லொளியா யொடுங்கி யுருகில் 
    வெளியில் வெளியாய் விடும். (19)
  குறியாக் குறியைக் குறித்துணரப் போகும் 
    குறியே பிறவிக் குறி. (20) 
    மான்குறிக்கும் வேடனவண் மன்னன் வரவறியா 
    மான்றானாய் நின்றதைமானும் (21) 
    ஆகாயப் புள்ளறியா வண்டத்தைப் பொய்ச் சார்வை 
    யோகானு சாரி யுண ரார். (22) 
    அம்புவிழு மந்நேர மாக்கறக்குஞ் சில்காலஞ் 
    சம்புவின்யோ கத்திற் றரி. (23) 
    உழுவையரி மாவானை யுரகங் கரடி 
    தொழும்யோகி தன்னைத் தொடர்ந்து. (24) 
    திடர்சுகங்க ளெல்லாஞ் சிவனேந்திக் கொள்ளு 
    மடர்வதிலை யொன்று மவரை. (25) 
    இந்திரனுஞ் சோதித் திடுக்கணுறு வானீத்த 
    பந்தச் சிவயோகர் பால். (25) 
    வண்ணப் பயோதரத்து மணியல்குற் பூந்தடத்துங் 
    கண்ணைக்கொ டார்யோகர் காண். (27) 
    செத்தசத்தின் கண்ணுமொரு சித்திரத்தி னற்கண்ணு 
    மொத்திருக்கும் யோகியுயர் கண். (28) 
    பழிமுனையைக் காட்டுகின்ற பல்லுலகை நோக்காச் 
    சுழிமுனையை நோக்கித் தொடும். (29) 
    கண்ணியதீம் பாலைக் கமரிற் கவிழத்தற்றே 
    பண்ணுங் கருமம் படில். (30) 
    அசையாச் சிவயோகத் தானந்த மீதூர்ந் 
    தசையா வுளமாதி யாங்கு. (31) 
    அலையற்ற சாகரமோ வவிழ்ந்த கயிற்றூசலோ 
    வலையற்ற யோகி யகம். (32) 
    பல்லூழி யோரிமைப்பாய்ப் பண்ணுங்கொ லோவெதிர்ந்த 
    தொல்லூழை வென்ற சுகம். (33) 
    சரற்சந் திதிரனோ தடையற்ற வானோ 
    வாச்சந்த யோகர் மனம். (34)
   பொன்னாக்கை கிட்டியுமென் யோகப் புணர்ப்பிலையே
    லென்னாம் பிறந்து மிவண். (35) 
    ஊர்ச்சுணங்க னைப்போன்றிங் குண்டிக் கலையோகர் 
    பார்க்கக் கிடையாப் பரம். (36) 
    வேணி யழகும் விபூதியுடைப் பூணழகும் 
    பாணர்க் கிருந்தென் பயன். (37) 
    வேடப் பொலிவிருந்தென் வேசியர்போ னாடோறு 
    நீடுசிவ யோகமி னீசர். (38) 
    துறந்துஞ் சிவயோகந் துன்னாத மூடர் 
    பிறந்தும் பிறவா தவர். (39) 
    தண்டிகையுங் கொம்புந் தவசிக் கிவையடா 
    வம்பர்க்கு வைத்த வழி. (40) 
    உண்டி புசிக்கவோ யோக முஞற்றவோ 
    வண்டர்பிரான் றந்தனனாக் கை. (41) 훈큔 
    ஊழைத் துறந்தா லுலகைத் துறப்பையன்றி 
    யூழிருக்க நீதுறவி யோ. (12) 
    வல்லியத்தோல் போர்த்தா வயன்மேயு மாபோல் 
    புல்லர்க்கும் யோகம் பொது (43) 
    அணுவுக் கணுவா யகண்டமாய் நின்ற 
    பணிசெய்ய நீயே பணி. (44) 
    எங்குமாய் நின்றாயை யெக்காலும் பூசித்தே 
    யெங்குமாய் நிற்கவெனக் கீ. (45) 

        ஆ இயல் ஐந்துக்குக் குறள் - 378. 
            சித்தாந்ததரிசனம் - முற்றிற்று.
 

Related Content

Explanation of Tiruvarutpayan of Umapati Sivachariyar in Eng

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன் 

A Study Of Saiva Siddhanta By Kantimatinatha Pillai

Nature Of The Jiva By Mr. J.M. Nallasami Pillai

Personality of God (By Mr. J. M. Nallaswami Pillai, B.A., B.