logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 1. சத்தியஞானபோதம்

                   பாயிரம். 
              கணபதி காப்பு. 
                  சூத்திரம்.

பிளிறுமாதங்கப் பிரானடி வணங்குதுங் 
கருவியங்கயிற்றைக் கதுமெனத்துமியா 
மருவினைப்பாகன் வாயின்மண்ணட்டாக் 
கண்மனம் மறிவில் காமுகர்நுழையா 
வல்பகலிரண்டினு மணுகாமுத்தி 
நெடுவனம்புக்கு நிலாவுதற்பொருட்டே. 


            தக்ஷிணாமூர்த்தி துதி. 
கல்லாலின்புடை நல்லார்தொழுதெழச் 
சின்முத்திரையொடுந் தென்றிசைமூர்த்தியாய்த் 
தனாதுமொழியைத் தடக்கையினேந்தி 
யனாதிமுத்தன் யானெனவமர்ந்தாங் 
கறம்பொருளின்ப மருளியபின்றை 
மொழியாமொழியான் முதுவீடளித்த 
பெருந்தகைபோற்றுதும் பிறப்பறும்பொருட்டே. 1
 

                நூற்சிறப்பு. 
சத்தியஞானத் தமிழ்மாலியானை 
பன்னிருசமயப் பணைகளைமுறியாச் 
சைவத்தாமரைத் தடத்திடையாழா 
நவைதபுமறிஞர் நாமறுகுலவா 
வசத்தியபோதக் கவளமருந்தா 
குவிவிரிவகன்ற கூடத்திருந்தவே. 2

    ஐம்புலக்கதவ மடையாதடைத்துப் 
    பயிலப்பயிலப் பராவமுதாகி 
    யாகமநூலோர்க் கவிரொளியாகி 
    யிம்மானிலத்தி னிடர்கெடப்போ 
    சத்தியஞான போதத்தமிழே.  3

              பாயிரம் - முற்றிற்று. 

                பதியியல். 

உலகமுமுயிறு மொருங்குறப்படைத்தவ், வுயிரிடைநடனமோ 
வாதுஞற்றினு, மாருயிரறியா வற்புதமென்கொல், லுலகமார்த்தா 
ண்ட னொளிகொடறிந்து, முலகமார்த்தாண்ட னுருவறியாவே. (4)

உவனுவளுதுவெனு முரைமுச்சுட்டாய்த், தோன்றிநின்றொ 
டுங்குந் தொழிலுளவதனாற், பொன்விழுதனைய புரிசடைமுக்கட், 
சிவனுளனவனாற் சீவனுமுண்டா, யறிவினை மறைக்கு மவிச்சையு முளவே. (5)

பொன்பலபூணாய் மண்பலகடமாய், வருவதுதானே வருதலின்மை, 
தருபவனொருவன் றானுளனதுபோற், பொன்புரைகடுக்கையம் புண்ணியனுளனே. (6)

நிரவயனிமல் னிராமயனருளை, யொருவிடிலாவி யுலவாக்காலம், 
போலாமாக்கை புணைகைப்பிடியா, யானெனதென்னு மிருஞ்செ 
ருக்கடையா, நமர்பிறரென்னு ஞானமிக்குறுமே. (7)

அகாயனசல னந்தரியாமி, யருளொடுங்கூடிக் கூடாவான்மாத், 
தீயிரும்பொன்னச் சிந்துறுநதியெனத், திருவடிநிழலிற் சேருமன்றே. (8)

மலர்மணமணியொளி மன்னியவண்ண, மாவிக்கியல்பு மபி 
முகமாதலு, மாகாயம்போ லாந்தரங்கண்டாங், கெழுமியெங்கணு 
மாய்க் கிளரொளிச்சடையனைப், பின்னியொன்றாகிப் பெறுமெனு நூலே. (9)

நீரிடையுப்பும் பாரிடையப்புந், தாயிடைச்சூலுந் தளிரிடைத் துவளுந்,
தீயிடைவெம்மையுஞ் செறிந்தாங்கன்ன, வறிவிடையீச னமர்ந்தாங்குறலே. (10)

அத்துவிதம்பெற வாங்காங்கிருப்பினு, மாருயிரறிவா லறிதரப் படாஅ, 
வூனக்கண்ணுக் கொளியாதொளித்து, ஞானக்கண்ணின் வெளிப்படுநாதன். (11)

அவனைக்காணு மறிவன்பாலே, காந்தம்பசாசைக் கவர்ந்தனமான,
வொன்றென்றுன்னு மூற்றையவ்வூழிப், பிரளையம் வாயிற் பெய்தனவன்றே. (12)

பூவைத்தேடியும் பொருளைத்தேடியுங், காணாரளவில் கற்பத் தும்பே. (13)

தரையிதுவென்னத் தான்கண்டாற்போற், பொருணீயென்ன வறியாப்புவியே. (14)

ஒன்றோவிரண்டோ வுபயப்பெருக்கோ, வறிதரப்படாவோ வவயவமிலியை, 
யாழிவாய்ப்பட் டழிலவணக்குவால், காணுதியாயிற் காணுதிநீயே. (15)

அறிவான் போந்த வறிவைவிழுங்கிக், வறிவைவிழுங்கிக், குரைகடல்விழுங்கிய 
குறுமுனிமானச், செறிவான்சிவனெனத் தேறுதிநீயே. (16)

குருட்டுச்சேரியிற் கோடியாதவர்க, ளுலவினும் பேசினு முறங் 
கினுமென்கொல், புலன்றெரிகாலைப் பொதுவரநிற்பினும், பாடிகாவலிற் பட்டனவுயிரே. (17)

வியாபகமாதி விரிக்குங்காலை, வியாபகமேலிடு நிறைவாமென்ப, 
வியாத்திசமநிறை வாகும்விளம்பின், வியாப்பியமொன்றின் மிடைந்தநிறைவே. (18)

வியாபகங்கடலே வியாத்தியந்நீரே, வியாப்பியமுவரென விளக் கிய நூலே.(19)

வியாபகமீசன் வியாத்தியாருயிர், வியாப்பியமலவென வீக்கிய (20)

வியாபகங்கதிரே வியாத்திக்கண்ணே, வியாப்பியமிருளென விதித்தன நூலே. (21)

சமட்டிவியட்டி சாற்றுங்காலைச், சமட்டியாகாயந் தனித்தவிய ட்டி, குடவானென்னக் கூறற்பாற்றே. (22)

அமலன்சமட்டி யாருயிர் வியட்டி, யமலனோடொன்றி லாருயிர் சமட்டி, வியட்டியாக்கை விளம்புங்காலே. (23)

ஐயெரிநாப்பணைந் தவித்திருப்பினு, மிருகாலடக்கி யொருகா னிற்பினுஞ், சேயிழைமாதரைத் தீரத்தணப்பினு, 
முடையைத்து றக்கினு முணவை மறப்பினு, மம்மர்செய்மாயை மழுங்காதம்ம, குரு பரனோக்கிற் குழையுமன்றே. (24)

மாரியைநோக்கும் வனப்புட்பொலும், பாரியைநோக்கும் பாவ லர்போலுங், 
கொழுநனை நோக்குங் குலமகள்போலுந், தேசியைநோ க்குஞ் சீடன்றெரிவே. (25)

கட்கிமையொத்துக் காற்றுணைவருடும், பக்குவர்க்கிரங்கிப் பர சிவனுருவத், திருவடியானுந் திருநோக்கானு,
மையலகன்ற மறை நூலானும், பாவனையானும் பரிசத்தானும், யோகாத்தானு முணர் வாக்கும்மே. (26)

               பதியியல் - முற்றிற்று. 

                பசுவியல். 

கட்டியகட்டோ கருமலக்கட்டு, பூட்டியதளையோ பொன்றா 
நசைத்தளை, யடைத்தவச்சிறையோ வறிவிலாகச்சிறை, யெனிலுயிர்க்கள்வ னெங்ஙன்முயுமே. (1)

இருவினைமுசலம் யாக்கையுரலே, யதிற்பெய்பண்டம் போலாருயிரே, 
நிரைநிரைதாக்க நெளிவபுழுங்கி, யடுவான்காலை யல்லற் 
பட்டு, விடுவான்காலை விம்மிதமுறுமே. (2)

கொடிவிழியன்ன கொள்கையனாகி, யாசாபாசத் தார்ப்புண்டன்றே, 
தன்னைமுன்னிட்டுத் தான்பின்னாகி, மறந்துநினைந்து மதிக 
தனாகி, யாகம்பேணி யறிவை மறந்தாங், கிச்சைப்புலிவா யிடர்ப்படு முயிரே. (3)

ஆணவமாதிய வாப்பையாவி, தானவிழ்க்கறியா தானேயவிழா, 
கரணமொடுக்கிக் கருதியகாலைச், சங்கரநவிழ்க்குந் தயைக்கையாலே. (4)

சனாதக்குருட்டுச் சந்ததியிருட்டறை, வாய்ப்பட்டாங்கு மல 
வாய்ப்பட்டுப், பன்னாளழுங்கிப் பருவரலுழக்கு, மனாதிகேவலத்தாருயிரம்ம. (5)

கலைமதிச்சேகரன் கலைக்கையாலே, கட்டவிழ்த்திடலுங் கரு 
வியிற்புக்கிக், கோலங்கொண்ட வாறைக்குறைத்து, ஞாலங்காவல்னானெனுமுயிரே. (6)

கருத்தளைப்புக்கிக் கண்முனர்த்தோற்றா, வாணவப்பாம்பின் 
வாயகப்பட்ட, சீவத்தேறைச் செந்நெறிகாணாப், பன்னாளலம் வரல் பசு வினியல்பே. (7)

விந்துமோகினி மானெனவிரிந்த, தத்துவக்காட்டிற் றனித்திடு 
முயிரை, யாணவ்வேங்கை யொருபாலடர்ப்ப, மாயைக்குடாவடி 
யொருபான்மயக்கக், காமியக்கடமா வொருபாற்கறுவ, விருவினை 
மலைப்பாம் பொருபாலிழுக்க, வாசையாமண்ணை யொருபாலறையக், 
குலமெனுஞமலி யொருசார்குறைப்பக், கல்விக்கானியா றொருசார்க 
வரச், சமயச்சூறை யொருசார்தாக்க, வவாவெனும்படுதீ யறிவைக் 
கொளுவ, மாயாவாத வனசரர்வெருட்ட, வின்னணமாவி யிடருறுங் 
காலை, யுயிரிடையொளிபுக்கிருந்தவொருவரத், தாயினுஞ்சாலத்தயா 
நிதியிரங்கிக், கட்கடைவாளாற் காடறமாற்றலு, முட்கினயாவு முயிர் 
பிழைத்தன்றே. (8)

          ஆ இயல் 2 க்கு சூத்திரம் - 34. 
              பசுவியல் - முற்றிற்று. 

              பாசவியல். 

செயற்கையியற்கை தெரிக்குங்காலை, செயற்கையுயிர்க்குத் திரி 
மலமென்னில், வெண்மடிக்கழுக்கு விரவுந்தன்மை, போல நீங்கிப் 
புகுவனவதுவே. (1)

இயற்கையுயிருக் கிருண்மலமென்னி, லிருந்தைகறுப்பு மெழிற் 
பால்வெண்மையு, மிடையில்விடாதென் றிசைத்தனர்புலவ, ராயின 
னாதி செயற்கையாமே. (2)

மலமிலைமாயை மறைக்குமென்னின், மலகுணமறைத்தல் மா 
யைவிளக்க, லளைபுக்கொடுங்கிய வரவின் வாலுள, தலையிலையெனுஞ் 
சொல் சவலைச்சொல்லே. ய (3)

மாயா தனுவின் மன்னியவான்மா, கன்மவிருப்பங் கருமலமின்றே, லேயாதொன்றை யிடருமுறாவே. (4)

 கன்மமயக்கக் கடுமலமறைப்ப, மாயைவிளக்க வருவன் போவன் 
மூவகையுயிரு மும்மையவுலகிற், கறங்கெனச்சுழன்று கதிதொறுமடுத்தவே. (5)

அவிரொளியீசனை யன்னியனென்று, மிருள்புரியாக்கையை 
யானெனதென்று, மன்னியமடந்தையை யாருயிரென்று, முன்னுறச் செய்த லுயிர்மலமோரே. (6)

குருவைக்கோறல் குருமொழிமறுத்தல், குருவை வணங்கக் கூச 
ல் பிழைத்தல், குருப்பொருள்கவர்தல் மாயைக்கூறே.(7)

செருவினுழைத்தறீமலத்தழுத்தன், முக்கரணத்தொடு முந்தி 
டநூக்கல், செருக்கிகழ்கூறல் சிற்றினமருவல், குலம் பாராட்டல்கன்மக்கூறே.(8)

நிச்சயமறவி நீடஞ்ஞானம், விகற்பந்தீமை விரோரதந்துஞ்ச, லழிபொருள்வேட்ட லல்வழிச்சேறல், பொய்ம்மொழிகூறல்
புணர்ந்ததை வெறுத்த, லெனைநிகரில்லை யான்பரமென்ன, லச்சமிலாமையாணவக்கூறே. (9)

ஈட்டலிரத்த லிழுக்கையியற்றல், வேட்டல்வெறுத்தல் விதிவ ழிச்சேற, 
லறிவைமறத்தலாகம் பேண, லோதியவெட்டு முயிர்க்குணமென்ப. (10)

அவாவறலீத லானவைகுயிற்றல்,விருப்பறன்மகிழ்தல் விதி 
நெறியகற், லறிவைநினைத்த லாகமொறுத்தல், பன்னியவெட்டும் பதிகுணமென்ப. (11)

மூதுரைவியத்தல் மொய்மலந்தணத்த, லடியரைக்காணி லகமு 
டைந்தழுதல், சில்லோர்குழுவைத் தீதெனத்தேறுத, லருச்சனை 
வணக்க மன்பிவையேழும், பிறவாக்காலைப் பிணைந்தெழுகுறியே. (12)

பசுநூலோதல் பழிமலங்கவர்தல், சான்றோர்க்கலக்கண் சால 
விளைத்தல், புல்லினஞ்சேர்தல் புகர்த்தொழில்புரிதல், கயவர்வணங் 
கல் கண்மனமேழும், பிறப்புழிமன்றப் பெருகுறுங்குறியே. (13)

 அருளெனுமலைமக ளவளொடுங்கலத்தல், முழுதுணர்ஞான 
முழுவதுமுடைமை, முழுதனுக்கிரக முழுப்பரிபூரண, மனாதிமுத் 
தன் வயவமிலாமை, விவகாரக்குறி யரற்கெண்குணமே. (14)

அரிசடுவருக்க மடலர்ச்சனையொடு, வணக்கம்பரவுயிர்க் கன்ப 
கமதிநூல், பெருந்துறையெங்கு நிறைபொருள்பேண, லருளினக் 
கூட்ட மடுபவநடுக்க, மறைகுணமெட்டு மடியர்க்கமைத்தவே. (15)

கதிரிடைக்கலந்த கண்ணொளியொப்ப, வைவகையவத்தை 
யான்மா நீங்கிச், சிவத்தொடுங்கலந்த தேற்றமென்ப. (16)

நோக்காநோக்கை நோக்கநோக்க, நோக்காநோக்க நோக்காநோக்க நோக்கு மன்றே. (17)

பாசப்பகுப்பும் பஞ்சவிந்தியமு, மந்தக்கரணமு மைவகைப் 
புலனு, நீங்கநீங்கி நிறையிருள்கடந்த, பரையொடுமளாவிப் பரை 
நிலைகடந்த, வறிவொடுங்கலந்த வான்மாப்பாச, சாலங்கடக்கு மென்னுஞ்சைவமே. (18)

 சேதனமான்மா வசேதனஞ்சீவஞ், சேதனமான்மா வறிவை 
மறையா, சேதனச்சிவனைச் சேர்தரிலாவி, சேதனனன்றிச் சித்தாபாசனே. (19) 
                                  
கருவிக்கானமாக் கத்தாகருது, மறிவுக்கரனே யாயிற்கத்தா,  
கருவியையருளாற் கழற்றியவாவி, யருளாய்நிற்கில வனிவனாமே. (20)

சடத்திரணீப்பத் தனித்திடுமான்மாச், சோகம்பாவனை தொக் 
கியபின்றைக், கருடனை நினைப்பான் கடுக்கழன்றன்ன, வுபாதி நீங்கி யுணர்வாயினவே. (21)

அறிவறியாமை யகலாதகன்ற, வறிவேசிவமெனு மாகமமுடிவே.(22)

கண்கதிர்பண்டங் கழியிருள்கிரணம், விளக்கெனுமாறு நிரை 
நிரைவிளக்குது, முயிரேயிறைவ னவனாலுறுபொரு, ளதனை மறை 
க்கு மாணவமதனைத், தணக்கவந்த தண்ணருளதனை, யறிவான்வந்த வாக்கையொடாறே. (23) 
    
இருவினையொப்பா லிருண்மலபாகம், மலபாகத்தின் மருவும் 
பாதம், பாதப்பதிவாற் பயிலுங்குரவன், குரவன்வரலுங் கொடும்பவ 
மேழுந் தனித்தனியோடுந் தலைகெட்டன்றே. (24)

          ஆ இயல் 3 - க்கு சூத்திரம் -58. 
              பாசவியல் - முற்றிற்று. 

            உபதேசவியல்.  

ஊனுயிற்வேற்றை யுரைக்குங்காலை, யென்மாடென்மனை யென் 
பான்போல, வென்காலென்கை யென்பனவேறே, பருத்தேனிளைத் 
தே னெனும்பன்மொழியா, னவயவமான்மா வாகுமென்னிற், சின் 
னாணின்று தேய்ந்தறமாய்தலி, னவயவமான்மாவன்றெனவுணரே (1)

ஐம்புலனறிதலி னவத்தைப்படுதலி, லுணராக்கால முடல்சவ 
மாதலி, னருத்தாபத்தியி னாலுளனான்மா. (2)

பிறத்தலுமிறத்தலும் பெருகலுஞ்சுருங்கலும், போதலும் வருதலும் 
புணர்வுநீக்கமு, மன்னமயத்துக் கடுத்தனவாதலி, னன்னமய கோச மான்மாவன்றே. (3)

ஒருமரத்திற்பே யுண்டிலையென்ன, லைதீகம்மற வாக்கையகத் 
தே, யான்மாவுளவென் றறைந்தன நூலே. (4) 

கோசரமுடலம் கோசரமான்மா, வவயவங்காய நிரவயமான்மா, வாதிகாய மனாதியான்மா. (5)

பொய்ம்மைசடல மெய்ம்மைபுருடன், சொற்பிரமேயந் தோன் 
றியயாக்கை, யப்பிரமேய மான்மாவன்றே. (6)

ஐம்புல வேடராற்றனைமறந்து, கரணமென்னுங் கடிகுரன்ஞாளி 
சூழ்தரப்போதத் துனிவிற்பிடித்திட், டிரக்கமின்றிய வீமிசைக்குயிற்றிப், 
பிறவியங்கானிற் பேதுறுங்காலைச், சிவநரபாலன் றிருவுளத் 
திரங்கிச் சீவவேடு நீக்கித்தேற்றித், தன்னருள்காட்டித் தானாக்கும்மே. (7)


இருவினையீட்டி யீட்டாவியல்புங், கருவியிற்றோய்ந்துந் தோ 
யாக்கலப்புஞ், சிவனலனாகியுஞ் சிவனாந்தரமுங், காட்டிமீட்டன கருணைக்கையே. (8)

 சிவனீயானா யென்னுந்திகழ்வுஞ், சிவனானானே னென்னுந்திற 
முஞ், சிவனேயாவினுமுளனெனுந்திருவுஞ் சிவனே காட்டித் தெளித் தனனெனக்கே. (9)

தசகாரியத்தைச் சாற்றுங்காலைத், தத்துவம்யாவும் சடமெனக் 
காண்டல், தனித்தனிச்செயலைத் தானறிந்திடுத, லிவைமல்நாமல் 
மென்னத்தணத்த, றத்துவரூபந் தத்துவதெரிசனந், தத்துவசுத்தி 
நிரைநிறைதானே. (10)

அறிவாகரனா னெனவறிந்துணர்தல், செறிபரப்பிரமம் யானெ 
னத்தேற, லறைசிவனருளி லடங்காதடங்க, லுருவதெரிசனஞ் சுத்தியுமுயிர்க்கே. (11)

சுகமயமீசன் சொரூபங்காண்ட, லச்சுகமயனை யாங்காங்கறித, 
லவனே தானா யச்சுகத்தழுந்த, லிவனவனாகி யின்பமேலிடுத லுருவந்தெரிசனம் யோகம் போகமே. (12)

உயிருபலக்கலி னுணர்பானுப்படின், பஞ்சவிந்திரியப் பன்னிறங்கவரா, 
துணரொளியாவு முபலங்கவர்தலி, னொன்றேயாமென்றுணர்தற்பாற்றே. (13) 
    
தாடலைபொன்றான் றன்னோடொன்றாய்க், கண்ணுங்கதிருங் 
கலந்ததோற்ற மன்னமோக்கத் தமர்வனவுயிரே. (14) 
              
சந்திரனிறவாத், தன்மைச்சீவஞ் சந்திரியிறந்துஞ் சந்திரனிறவாத், தன்மைச்சீவஞ் 
சிவனவன் பாலே, யேயுமண்ண வென்மனார் புலவர். (15)

கன்னன் கௌந்தி புத்திரகதைபோற், சீவன்சிவத்தாற் சீவநீங்கி, 
மாசறு திங்கண் மண்டிலம்போன்றாங், கவாவிறந்தொளிரு மதிசயம் பெறுமே. (16)

கூன்மதிச்சடிலக் குன்றவிற்குளவி, மாலறியாத மலர்வாய்ப்ப 
ட்ட, சீடக்கீடந் திசைமுகனறியா, முடியாவின்ப முடிபெற்றனவே. (17)

புவிமுதனாத மீறெனப்பொலிந்த, தத்துவசாலங் கடப்பான் 
கடந்திட், டறிவறியாமை யாங்காங்ககன்றா, ரருளொடுங்கூடி யரன் 
யாலொன்றா, யருளையுமறந்தபின் னறியகிலேனே. (18)

ஆலம்பன்னிவ னவனிராலம்பன், சுதந்தரமிலியிவ னவன் 
சுதந்தரனே, சரீரியிவன் சரீரியவனெனு, மலநீக்கத்தி லிவ்வழக் கின்றே. (19)

அஞ்செழுத்துண்மை யறையுங்காலே, சிவாயநம வெனுந் திருவாக் 
கியத்திற், சிவமருளான்மா திரோதைமலமிவை, பாந்தளைநலியாப் 
பருவிடம்போன்றச், சிவன்றனைமறையாச் சீவனை மறைக்கு, மதோ 
முகமாகி லறிவைமயக்கு, மூர்த்தமுகத்தி லுருவழிந்தனவே. (20)

அருளம்பலத்தி லருளுருவாகிச், சிகாரம் பிரமந் திரைமல நீங்கி, 
யகாரவுயிர்தன் னடியிணைசேர்வான், றிருநடஞ்செய்யுந் திருத்தில்லைக்கணே. (21)

          ஆ இயல் 4 - க்கு சூத்திரம் -79. 
            உபதேசவியல் - முற்றிற்று. 

          அணைந்தோரியல். 

              முதற்காண்டம்.

நஞ்கீழ்பகுவாய் நாகபூடணன், றேனவிழ்கமலச் சேவடி நீ 
ழன், மலவெயிற்கொதுங்கி மதிநலம்பெற்றோ, ரானாத்தன்மை யறை 
குதுமெடுத்தே. (1)

வேழமயின்ற வெள்ளிலங்கனியோ, வழல்வாய்ப்பட்ட வாடை 
கொல்லோ, வாய்முலைவையா மாய்ந்தவான்கன்றோ, நனையவிழ்கொ 
ன்றை நாதனதருளா, லகக்காழற்ற வடியவர்மாண்பே. (2)

மணிப்பாம்பிருளை மழவாயிழையைச், செல்வன்சிறுமையைத் 
தீயன்குளிரை, யாக்கனிரக்கை யறியாப்போன்று, மாதேவன்கழல் 
மன்னியவுயிரு, மறியாபிறப்பி னவத்தைப்பெருக்கே. (3)

ஊமைகனவு மூழின் வரவு, மாழிநிலையு மகல்வானிறைவும், பன்னியுளமும் பதிதர்மயக்கு,
மலநிலையகன்ற மாதவர்வரம்பு, மியம்பு தற்படா வென்மனார் புலவர். (4)

இரக்கமும்வணக்கமு மிறந்தவவாவு, மிணங்காதவரோ டிணங்காவிணக்கமுஞ், 
செம்மலாலயந்தொறுஞ் செல்லுந்திறமு, மும்மலம்கன்ற முத்தர்பாலுளவே. (5) 

பூரணபோதப் பொருடானாகலி, னாரணமாகம் மவர்க்கென் செய்வே. (6)

நினைப்புமறப்பு நீத்தமையாலே, யனைத்துங்கண்டுங் கண்டிலரன்றே. (7)

பதியெனிற்பாசத் தோடுளையென்றும், பசுவெனின் முத்திப்படுதலுமின்றே. (8)
    
சூனியபாச மாண்டுழிச்சோதி, நானதுவென்னு ஞானமு மின்றே.(9)

ஐவகைஞானத் தந்தரவான்மா வாங்கவையிறப்பி னதுபர மான்மா. (10)

மாயைமயக்குங் கன்மவழக்கு, மூலமலத்தின் முடிவின்மறைப் 
புஞ், சுயம்பிரகாசர்க் கிலையெனுஞ்சொல்லே.. (11)

முன்னலுமுரைத்தலு முறுதொழிலுஞற்றலு, மாவிக்கிலைபொறி 
யறிவொடுமாய்தலி, னாக்கைமாட்டென் றறைந்தனர்புலவர். (12)

சிதம்பரமாதலிற் சேர்விடமில்லை, யவனிவனாதலி னணுகலு 
மில்லை, யறிவுருவாதலி னாக்கையுமின்றே (13)

ஒன்றேயாதலி னுணர்பவனின்று, நானவாதலின் ஞானமு மின்றே. (14)

சேர்வினமறிந்து சேர்வானொத்த, பன்னகபூடணன் பாதப் 
புணையா, னீந்தாக்கடலை நீந்திப்போந்தனர், தானாய்நின்ற தனிவான் கரையே. (15)

சத்தஞ்சோதிடந் தருக்கங்காவியங், கொக்குவம்பரதங் கோதெ 
னத்தள்ளாப், பித்தர்க்கிந்நூல் பேசிற்பிழையே. (16)

பிறவிக்கடலைப் பின்னிடமுன்னூற், புணைதாவென்னப் பொரு 
மியிரந்து, பன்னாட்கேட்கும் பக்குவநோக்கி, யன்னோர்க்கிந்நூ லறையலுமாமே. (17)

கோறல்வெகுளல் குறைகொள்குணத்தன், றிருவருளில்லோன் செகமுகனையன், 
வழிபாடில்லோன் மந்தனிவர்க்கிங், கிந்நூலறையி னேழைக்குருவே. (18)

ஆவிக்குறிய வறநூல்புகன்றுபின், சத்தஞ்சோதிடஞ் தருக்கம் 
புகன்றவன், சுவர்க்கம்புகுத்தித் துயருறுநிரையப், பதிபுகுவிக்கும் படிறனன்றே. (19)

நுனாதிகமின்றி நுண்னுணர்வாகி, யனாதிமுத்த னருளிய 
வாகமந், தந்திரகலையெனச் சாற்றலுமாமே. (20)

மனாதிகளொடுக்கி மறைமுடிவுணர்ந்து, வழிபடன் மந்திர கலை யெனமதியே. (21) 
    
அறியாவறிவு னருளிற்கலந்தாங், காதவனொளிபுக் கழுந்திய 
கண்ணாய், மும்மைப்பாழு முறைமுறைகடவா, வபாவப்பாழி னடங் 
காதடங்க, லுபதேசக்கலை யிஃதெனவுணரே. (22)

கேவலஞானக் கிழவனாளுடைப், பிள்ளைநாவரசு பேராரூர, 
னர தனவாக்கிய னருந்தமிழ்மூலன், சீவன்முத்தர் திருவாய்மலர்ந்த, 
நூல்பவநோய்க்கு நுண்ணியமருந்தே. (23)

               ஆ - சூத்திரம் - 1002. 
              முதற்காண்டம் - முற்றிற்று. 

              இரண்டாங் காண்டம். 

  உடலெனும் பெண்ணை யுயிரெனுநாயக, னெந்நாள்விடுவ னெவ் 
வழியானே, விடுவதில்லை விதியுள்ளளவும், விதிவச மின்றேல் 
வெறுப்புற்றிடுமே, வெறுப்பும்விதியின் மேம்பாடாமே, யறிநூலிடத் 
து மற்றவரிடத்து, மாக்கைவெறுப்பு மகங்கரவானியு, முறுமெனக் 
கண்டாங் கொழிந்திடுமாணா. 1

ஈசனென்போ ணெவ்வணமவன்யா, ருலகமீன்ற வொருவனா மாயி, 
னாங்கவனெங்குள னாலயத்துள்ளா, னாலயம்புகினு மவனைக்காணே, 
னாமரூப நட்டமாதலி, னீசனைக்காணே னென்செய்கேனே (2)

நீரிடையிருப்ப னிலத்திடையிருப்பன், காற்றிடையிருப்பன் 
கனலிடையிருப்பன், விண்ணிடையிருப்பன் வெயிலிடையிருப்பன் 
மதியிடையிருப்பன் மனத்திடையிருப்பன், றதியிடைநெய்போற் சங்கரன்றானே. (3)

 உருவோவருவோ வுபயப்பெருக்கோ, காணும்பொருளோ கா 
ணாப்பொருளோ, கரியோசெய்யோ கைகாலுண்டோ, வுண்பதுமுற் 
க்கமு முடையுமுண்டோ, கண்டவருண்டோ கழறுமினீரே. (4)

அதிதிதன்மைந்த ரலமருகாலைப், பிரமகீதையைப் பேசின 
னெவனோ, சிதாகாயத்திற் றிருவுருத்தாங்கி, மறலியைமுனிந்த வரத 
னெவனோ, வரன்முறையுலகம், வயின்வயினுதிக்க, நான்முகத்திருந் 
து நான்மறையுரைத்தன், றுபனிடதத்தி லொளித்தவனெவனோ, 
வ்வனே பிரம் மென்றறிமன்னே. (5)

 மூலமென்றழைத்த முனைக்கொம்பியானை, வருத்தந்தீர்ப்பான் 
வந்தனெவனோ, தூணிலியிருப்பன் றுரும்பிலுமிருப்பன் எனுமழ 
சொல்லுக் கெதிர்ந்தவனெவனோ, துகிலுரிகாலைத் துருவதன்மகட்கு, 
மாளாத்துகிலை வருத்தினனெவனோ, வருச்சுனற்காக வமரிடையிரு 
ந்தாங், குணர்மெய்ஞ்ஞான முரைத்தவனெவனோ, வவனே பிரம் 
மென்றறிமன்னே. (6)

 கல்லாலின் கீழ்க் கடவுளாகிப், பொல்லாஞானம் புரிந்தவனெவ 
னோ, மால்வரைவில்லாய் வலியவர்புரங்க, ணீறெழவொருக்கி நின்ற 
மூவரைச், சேவடிநீழலிற் சேர்த்தவனெவனோ, காலனைமாட்டிக் 
கவின்சிறுபாலன், மரணந்தவிர்ப்பான் வந்தவனெவனோ, வவனே 
பிரம மென்றறிமன்னே. (7)

உளனோபிரம் முயிரோபிரமம், வானோபிரம் மறையோபிரம், 
நானோபிரம் நாடுங்காலே. (8) 

வடிவோபிரம் மதியோபிரம், மொலியோபிரம்முணர்வோபிரம், 
மறிவோபிரம் மாயுங்காலே. (9)

ஒருமலவழக்கு மிருவினைத்தொடரு, மும்மலச்செருக்கு நால் வகைவாக்கு, 
மைவகைப்பொறியு மறுவகைக்குற்றமு, மற்றாலன்றியறிவாகாயே. (10)

கண்ணொளி கண்ணே கதிரொளிகதிரே, கண்ணாகாதே கதிருங் 
கண்ணுங், கதிராகாதே கலப்பின்வைப்பே. (11)

வானோவளியோ மறுகனல்புனலோ, மண்ணோமதியோ வளரென்றூழோ, 
யானோபரம்பொரு ளெட்டும்பிரிவே, தானேயதுவேயதுதானென்ப, 
மானாததுவும் வழக்கச்சொல்லே, நானேயதுவென் நாடலுமாமே. 12
          
ஆ இயல் 5 - க்கு சூத்திரம்- 114. 
            இரண்டாங்காண்டம் - முற்றிற்று. 
          சத்தியஞானபோதம் - முற்றிற்று. 
 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin