logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 2. பதிபசுபாசவிளக்கம்.

                   பாயிரம். 
             விநாயகர் துதி. 
                  விருத்தம். 
      சித்தகக்கோயிலிலிருக்குஞ்செல்வனை 
      மத்தகக்கரிமுகத்தரசைவல்லபைப் 
      புத்தரவல்குலிற்புழைக்கைபோக்கியுஞ் 
      சத்துமாலிலாதவன்றன்னைப்போற்றுவாம்.

                நடேசர்துதி. 
                  (வேறு) 
    முன்னைநான்மறைமுடியினில் வீற்றிருப்பவனை 
    யன்னையத்தனாயுலகெலாமமர்ந்திடுபவனை 
    யென்னையாளுடையிறைவனையிருண்மலங்கழியப் 
    பொன்னினம்பலத்தாடியபுனிதனைத்தொழுவாம். (1)


   பரைவணக்கம். 
                      (வேறு.) 
    மூவர்க்குமுதற்பொருளாய்முத்தொழிற்கும் வித்தாகி 
    நாவிற்குமனத்திற்குநாடரிய பேரறிவாய்த் 
    தேவர்க்குமுனிவர்க்குஞ்சித்தர்க்குநாகர்க்கும் 
    யாவர்க்குந்தாயாகுமெழிற்பரையை வணங்குவாம். (2)
                 கணபதி வணக்கம்.

    நீங்காதமலனென்னுநீண்டமூக்குடைத்தும்பி 
    யாங்காரமெனுந்தறியையடியோடும்பறித்தோடத் 
    தூங்காதவொருகோடி சூரியர்கடோற்றங்க 
    ரோங்காரக்கயமுனியையுளக்கூடத்திருத்துவாம்.(3)

            சுப்பிரமண்ணியர்வணக்கம். 
                      (வேறு.)
    அறுவிதசமயத்தோர்க்குமறுமுகசாமியாகிச் 
    செறிபரப்பிரமம்யானேயென்று சின்மயிலிலேறிக் 
    குறுமுனிக்கருளிச் சீவக்குகைதொறும் வீற்றிருந்த 
    மறுவிலாக்குகனைப்போற்றிமாய்ந்தனென்பிறவியெல்லாம். (4) 
            தக்ஷிணாமூர்த்திவணக்கம். 
                     (வேறு) 
    வீராதனத்திலெழுந்தருளி மின்னிற் சிறந்தவேணியராய்த் 
    தீராவையந்தீர்த்தருளுஞ்சின்முத்திரைச்செங்கையினராய்ப் 
    பாரோர்விண்ணோர்பணிந்தேத்தப்பரமகுருவாய்ப்பலகாலு 
    மோரானீழலமர்ந்தாரையுள்ளும் புறம்பும்வணங்குவாம். (5)
                                    (வேறு.)  
 மூலமாயெவைக்கு மறியொணாவுருவாய் மும்மலங்களைந்தவர்க் 
கெளிதா, யாலபோசனஞ்செய் தழிவிலாதவனாயருமறைச் சிரத்தொ 
ளிர்பவனாய்ப், பாலலோசனனாய்ப் பசுதொறும்பதியாய்ப் பக்குவச் 
சனக னாதியர்க்கா, யாலமர் நீழலமர்ந்துறைபவனை யகத்தவிசிருத்தி 
யின்படைவாம். (6)

  குருவணக்கம். 
                                        ( வேறு.) 
      பாசமைந்தையுந் தனித்தனிப்பரிந்திடநீக்கி 
      நேசமாகியவறிவுருநீயெனக்காட்டிப் 
      பேசுமேழ்வகைப்பிறப்புனக்கிலையெனப்பேசித் 
      தூசு நீக்கிய சுயம்பிரகாசனைத்தொழுவாம். 7
                       (வேறு) 
      தாரணியவர்க்குநாலாஞ்சத்தினிபாதமெய்த 
      ஆருணிபோலத்தோன்றியொருமொழியாலெனக்குக் 
      கோரணிகாட்டுமாறு சமயத்தின் கோளை நீக்கிப் 
      பூரணசொரூபங்காட்டும்புண்ணியன் பொலந்தாள் போற்றி. (8)

                திருமூலர்வணக்கம். 

                       (வேறு.) 
      ஐயமாகடலாழ்ந்தவுயிர்க்கெலாங் 
      கையிலாமல்கம்மெனக்காட்டுவான் 
      மையறீர் திருமந்திரஞ்செப்பிய 
      செய்யபொற்றிருமூலனைச்சிந்திப்பாம். (9)

              வியாசமுனிவணக்கம். 

      துக்கசாகரத்துக்கொருதோணியாய்ப் 
      பக்குவச்சுகனைப்பெறுபாக்கிய 
      தக்க வான்மதயாபரனாகிய 
      மிக்கவேதவியாதனைப்போற்றுவாம். (10)

                   நூற்சிறப்பு.
                    வேறு.) 
  பாவமகலப்பரிகாரவிதத்தைப் பகருஞ்சில நூல்க 
    ளாவலோடுமறம்வளரவறங்கள் பகருஞ்சிலநூல்க 
  ளேவமில்லாமுத்தியினுமிரண்டேயென்னுஞ்சில நூல்கள் 
  சீவபிரமவயிக்கியத்தைச்செப்புமிந்நூற்சித்தாந்தம். (11)


(வேறு.)

    புன்னூலாம்பரசமயப்பொய்ந்நூலின் மயங்குவரோ 
    செந்நூலாமருமறையின் சிரத்தொளிருமுபநிடத் 
    நன்னூலிநெறிநின்றநயமுணர்ந்தநாதாக்க 
    ளெந்நூலுங்கைவிட்டேயிந்நூலைப்பற்றுவார்.  (12)

              அவையடக்கம். 
    அங்கணநீரிழுக்குடையதானாலுநதிகலக்கி 
    லங்கணநீரென்றிகழாரதுபோலென்பன் சொல்லும் 
    புங்கமறையொடுகலக்கிற்புன்சொலுநன் சொல்லாகும் 
    புங்கமலிசான்றோரும்புன்சொலி தென்றிகழாரே. (13) 
                நூற்பெயர். 
                  (வேறு) 
பொய்ப்புவியதனினாளும்பொருக்கெனத்தோன்றிமாயு 
மெய்ப்பிலாவுயிர்கட்கெல்லாமெளிதினின் ஞானமெய்த  
வப்பணிசடையோன் முன்னரறைந்தவாகமத்திற்சொல்லு 
முப்பொருள்விளக்கஞ்சொல்வேன் முக்கணனருளைக் கொண்டே. (14) 
                பாயிரம் - முற்றிற்று. 

            குருகாருண்ணியம். 
                  (வேறு.) 
      உலகமுமாழையுமொண்கண்மாதரு 
      நிலையலவென்றுணர் நெடியமாணவன் 
      கலையெலாந்தெரிந்தவன்கதிவிருப்பின 
      லைமலிகுரவனை நாடித்தேடுவான். 1
                  (வேறு.) 
உலகநெருப்பைக்கடந்தொழியாஞானவுத்திமடுப்பேனோ 
விலகுகுடும்பத்துயர்நீங்கியெந்நாட்டுறவியாவேனோ 
திலகமறையின் பொருளிதெனத்தேற்றுங்குரவன்காண்பேனோ 
கலகவுடலப்பிணி தணந்து கடவுடனையான் காண்பேனோ. 2

 

    (வேறு.) 
    மருவியவுடல் வெறுப்பும் வையகவெறுப்பும் வந்தா 
    லிருவினையொப்புமங்கணெய்திடுமெய்துங்காலைக் 
    கருமலபாகமுண்டாம்பாகத்தாற்கடிதிற்சேருந் 
    திருவருட்சத்திபாதஞ்செறிந்திடுங்குருவுமன்றே. 3
                  (வேறு) 
இனையவண்ணநினைந் திரங்குமெழின்மாணாக்கன்றனைப்புரப்ப 
நினையுநினைவிலொளித்திருந்தநிமலனீங்காக்கருணையினான் 
மனிதன் போன்றேயுண்டுடுத்தன்மருவிக்குருவாய்வரச்சீடன் 
கனியுஞானக்கண்ணாரக்கண்டான் பவநோய்விண்டானே. 4

தேனுண்டளிகள் பண்பாடுஞ் செறிகற்பகநேர்குருந்தடிக்கீ 
மானுமழுவுஞ்சதுர்ப்புயமுமணிக்கந்தரமுமறைத்தருளி 
யீனமகன்றதிருவாதவூரர்க்காகவெழுந்தருளு 
ஞானமுனியேயிவனென்றுதெளிந்து நாவாற்பழிச்சினனே. 5
                  (வேறு.) 
  அப்பிரமேயபோற்றியாருயிர்த்துணைவாபோற்றி 
  யொப்பிலா வொருவபோற்றியுணர்பவர்க்கணியாபோற்றி 
  நட்பயலில்லோட்போற்றிநா தநா தாந்தபோற்றிச் 
  சுப்பிரமணியாபோற்றிச்சுயம்பிரகாச போற்றி. (6) 

 அற்புதவமலவேகவசிந்தி தவகண்டாகார 
 நற்சிதம்பரவேகாந்தஞானநாதாந்தவின்ப
 சொற்பிரகாசசுத்தசூனிய துரியாதீத 
 தற்பரவனந்தானந்த சற்குருநாதபோற்றி. 7

  கண்ணிலாக்குழவிவெய்யகாரிருட்டறைபட்டாங்குத் 
  திண்ணியமலவறைக்குட்சிக்கிய சிறியேன்றன்னை 
  நண்ணருஞானக்கையானான் முகன் முதலோரேங்கத் 
  தண்ணளியாலெடுத்த சற்குருநாதாபோற்றி. 8

  முத்தரைப்பகைவரென்றுமூர்க்கரையுறவரென்றும் 
  பெத்தனாயனேககாலம் பிறந்திறந் தெய்த்திட்டேற்குப் 
  பத்தியான்ஞானங்காட்டிஞானத்தாற்பரனைக்காட்டும் 
  சத்தியஞானானந்த சற்குருநாதாபோற்றி. (9)

பொச்சையாமுடலங்காட்டிப்பொறிபுலன்கரணங்காட்டி 
    யிச்சையாயிருங்காட்டியெழிற்றிருவளுங்காட்டி 
    யச்சமினிலையங்காட்டியகம்புறந்தானாய்க்காட்டி 
    சச்சிதானந்தங்காட்டுசற்குருநாதாபோற்றி. 10

              ஆ திருவிருத்தம் -24. 
             குருகாருண்னியம் - முற்றிற்று. 

                குரூபதேசம். 
    அஞ்சினேன் பவத்துக்கென்னை யாளெனவடியில் வீழ்ந்த 
    வஞ்சமில் சீடன்றன்னை வாவென வருகில் வைத்துக் 
    துஞ்சிருள் கிழியப்பாத தாமரை சிரத்திற்சூட்டி 
    யஞ்செழுத் தருளிப்பின்ன ரதன்பொரு ளரையலுற்றான். (1) 

                  (வேறு.) 
      அஞ்செழுத்தினிலொருபுடையரும்பதியமரும் 
      வஞ்சமுற்றுளவொருபுடைபாசமாய்வதியுந் 
      துஞ்சலின்றியவொருபுடைபசுவெனத்துலங்கு 
      மஞ்செழுத்தினின்மும்முதலறிந்தவர் பிறவார். 2

                  (வேறு) 
      பானுவாமிறையெழுத்துவதனொளிபரையெழுத்து 
      வூனமில்கண்ணேயாகுமுயிரெனுந் தனியெழுத்துத் 
      தீனமில்விளக்கேயாகுஞ்செப்பியதிரையெழுத்து 
      நானெனுமிருளேயாகுநவையுறுமல்வெழுத்தே. 3

      நகரமாகிய சேரியைநஞ்செனவெறுத்து 
      மகரமாகியமயலெலாம் வேரொடுங்களைந்து 
      வகரமாகியவனத்தினிலிருந்திளைப்பாறிச் 
      சிகரமாகியநகரியையடைந்தனன் சீவன். (4)

      பாசமாகியவிரண்டையும்படிறெனத்தள்ளி 
      நேசமாகியவிரண்டையுநெஞ்சிடையழுத்திக் 
      காசநீங்கியகண்ணெனமுத்தியைக்காண்பா 
     யாசை நீங்கியநிலையிதுவிதற்கிலையையம். 5
          
ஆ திருவிருத்தம் -29. 
            குரூபதேசம் - முற்றிற்று. 

              தசகாரியம். 
தரை முதனாத மீறாய்த் தனித்தனிக்காண்டல்ரூபக் 
தரைமுதனாத மீறாய்த்தற்செயல் காண்டல் காட்சித் 
தரைமுதனாத மீறாய்ச்சடமயமென்றுகண்டு 
குருபரனருளானீங்கல் சுத்தியாய்க்குறித்துக்கொள்ளே. 1

தத்துவாதீதந்தன்னிற்சகசவாணவமலந்தா 
னுற்றிடுமிதற்குச் சாக்கிநானெனலுயிர்க்குரூபஞ் 
சித்துருநானேயென்றுதேறலே தெரிசனந்தான் 
முற்றுணரீசன் முன்னர்முகிழ்த்திடாதடங்கல் சுத்தி. 2

எங்கணுஞ்சிவனுளானென்றுணர்தலேயிறைவன்ரூப் 
மங்கவன்றொழிலெங்கண்ணுமறிதலே தெரிசனந்தான் 
றிங்கள்வேணியனோடொன்றல் சிவயோகமலர்மணம்போற் 
புங்கநேயத் தழுந்தல்போகமென்றரையுநூலே. 3
         
 ஆ திருவிருத்தம் -32. 
            தசகாரியம் - முற்றிற்று. 

          நின்மலசாக்கிரம். 
காய்கதிரிரவிமுன்னர்க்கண் செயலடைந்தாற்போலத் 
தூய்மனக்குரவனோக்காற்றுகளறுபோதனாகிப் 
பாய்பசுகரணமெல்லாம்பதி கரணங்களாகிப் 
பேய்பிடியுண்டான்பாலன்பித்தன் போலொழுகுவானே. 1
         
 ஆ. திருவிருத்தம் -33. 
          நின்மலசாக்கிரம் - முற்றிற்று.

  நின்மலசொப்பனம். 
   (வேறு.) 
ஐம்பொறியாலைம்புலன்களாரத்தான் புசித்தாலுமறிவான்மிக்கோ 
ரும்பர்பிரான் றிருவடிக்கீழுள்ளததைவைத்தங்கேயுறங்காநிற்பர் 
நம்பனை நீத்தொருசோரநாயகனை விருப்புற்ற நாரி வேண்டு 
மன்பவன் றன்பாற்கிடக்குமாக்கையிவன்பாற்கிடக்குமதுபோலன்றே. 1

                    ( வேறு.) 
    காண்பதுங்கேட்பதுங்கருத்துஞ்சொப்பனம் 
    பூண்பதும்புனைவதும்புசிப்புஞ்சொப்பனஞ் 
    சேண்படுநாகமுஞ் செகமுஞ்சொப்பனம் 
    வீண்படுமிவைக்கெலாம்விசுத்தனானரோ. 2
              ஆ திருவிருத்தம் -35. 
            நின்மலசொப்பனம் - முற்றிற்று. 

              நின்மலசுழுத்தி. 

                  வேறு. 
    வழுத்துசாக்கிரசொப்பனமருவிடுகாறுஞ் 
    சுழுத்திவந்துறாமற்றையச்சுழுத்திவந்துற்றால் 
    விழுத்தசாக்கிரசொப்பனமேவிடாததுபோன் 
    முழுத்தபூரணசுழுத்தியுமுற்றுறா தன்றே. (1) 

    குடும்பபாரமுஞானமுங்கொண்டவனின்பு 
    மடங்கநீத்துயரறிவினையடைந்தவனின்பு 
    நடந்துறங்குவோனின்பமுநாண்மலர்ப்பாயல் 
    கிடந்துறங்குவோனின்பமுமானுமேகிளக்கில். 2
              ஆ திருவிருத்தம் -37. 
            நின்மலசுழுத்தி - முற்றிற்று 
 
நின்மலதுரியம். 
                  (வேறு) 
    முப்புரமென்பதிவ்வவத்தை மூன்றையு 
    மிப்புரமூன்றிலுமிருந்திடர்ப்படா 
    கப்புமுப்புரத்தையுங்கடந்தசீவனே 
    செப்புறு துரியனாய்ச்சீவன்முத்தனாம். 1
                  (வேறு.) 
  மண்ணொடு மண்ணார் போனார்வளியொடுவளியார்போனார் 
  தண்ணொடு தண்ணார் போனார் தழலொடு தழலார்போனார் 
  விண்ணொடுவிண்ணார் போனார் விளங்கறிவுருவாய்நின்ற 
  நுண்ணிய நானேயெங்கு நுழைந்திடாதிருக்கின்றேனே. 2

            ஆ திருவிருத்தம் - 39. 
            நின்மலதுரியம் -முற்றிற்று. 

            நின்மலதுரியாதீதம். 
  இந்நிலை துரியமாகுமென்றருமறைகள்கூறு 
  மிந்நிலைநின்றோமென்னுமெண்ணமுங்கடந்துபோன 
  வந்நிலை துரியாதீதமாகுமென்றறைவர் நல்லோ 
  ரந்நிலைதனக்குமேலோர்நிலையிலையறையுங்காலே. 1
                  (வேறு) 
    போக்கிலைவரவிலை புணரக்கையிலை 
    தாக்கிலையேக்கிலைசரிக்கக்காலிலை 
    மோக்குற மூக்கிலைமுகிழ்க்கக்கண்ணிலை 
    வாக்கிலைமனமிலையதீதவாழ்விலே. 2
                  (வேறு.) 
    நீரிடை மூழ்கினோனிறையவுண்டவன் 
    வாரமிறாமதன்போன்றுமாமய 
    றீர்சிவபோகத்திற்றிளைத்திருப்பர்க 
    ளாரவர்பெருமையையளக்கற்பாலரோ. (3)

 (வேறு) 
      இத்துரியாதீதத்திலிமைக்கொட்டுமளவானாலு 
      முற்றகண்ணாடி தன்னிலுளுந்துருள்பொழுதானாலுங் 
      கைத்தலத்தாலாவின் பால் கறக்குறுங்காலமேனுஞ் 
      சித்துருவாகிநிற்போர்சின்மயவீடுகாண்பார். 4
              ஆ திருவிருத்தம் -43 
            நின்மலதுரியாதீதம் - முற்றிற்று. 

                பதிவிளக்கம். 
    நிராமயமாய்நிட்களமாய் நித்தியமாய் நின்மலமாய்ப் 
    புராதனமாய்சஞ்சலமாய்ப் பூரணமாய்ப்புனிதமாய்ச் 
    சராசரமாய்ச்சாக்கியாய்ச் சத்தியமாய்ச்சித்துருவாய் 
    பராபரமாய் வெறுவெளியாயிருக்குமந்தப்பரமசிவம். 1

    சொல்லாலுமனனாலுந்தொடராதசூக்குமமாய்ப் 
    பல்லான்றகேள்வியருமீதென்றுபகர்வரிதா 
    யொல்லாதபரஞ்சுடராயுயிர்க்குயிராயுண்மையா 
    யெல்லாமால்லவுமாயிருக்குமந்தப்பரமசிவம். 2

    ஒன்றாயும் பலவாயுமுருவாயுமருவாயுங் 
    குன்றாயுமணுவாயுங்குணமாயுங்குணியாக 
    நன்றாயுந்தீ தாயுநானாயுந்தானாயு 
    மின்றாயுமுளதாயுமிருக்குமந்தப்பரமசிவம். 3
                  (வேறு.) 
    சிவனறிந்தருளுவன் சீவராசியைத் 
     சிவனிலாவிடமிலை செடசித்தெங்கணுஞ் 
     சிவன்றனையறிந்திடாச்சீவராசிகள் 
      சிவனிலாவிடிலுயிர்செகமற்றில்லையே. 4

      அவனவளதுவெனுமகிலபாசமே 
      யவனவளதுவெனவறைபவன்பசு 
      வ்வனவளதுவினையாக்குவான்பதி 
      யவனவளதுவறிலறிவைக்காணலாம்.   (5)

  அவனசைந்திடிலொருவணு வசைந்திடு 
  மவனசையாவிடிலணுவசைந்திடா 
  சிவன் சத்தியோடுறிற்செகம்விரிந்திடுஞ் 
  சிவன்றனித்திடில்விரிசெகமொடுங்குமால்.  6

  மன்னுமாலயனொடுவானும் வையமும் 
  பின்னமும்பினமும் பேசுஞ் சீவனும் 
  பன்னுமாணவமுதற்பாசம்யாவையு 
  முன்னுமிச்சிவத்திடைதித்தொடுங்குமால்.  7
                (வேறு.) 

பதியறிவாகுமத்தைப்பகுத்தறிவதுவே சீவ 
னிதுவதுவோவென்றுன்னற்கிடமதேபாசமாகு 
மதுவிதுவெனுஞ்சட்டற்றாலறிவறிவாகிநிற்கு 
மதுவிரி கொன்றைத்தாரான்மலரடிகாணலாமே.  8

  பதிபசுபாசமூன்றும்பகுத்தறிந்தவரே முத்தர் 
  பதியொன்றும்பற்றா தாகும்பசுவொன்றைப்பற்றிநிற்கும் 
  பதிமுகந்தெரியாவண்ணமறைப்பது பாசமாகும் 
  பதிகுருவானஞான்று நீங்குமப் பாசந்தானே.  9

  கண்பலபொருளைப்பற்றிக்கதிரினையிழந்து நிற்குங் 
  கண்பலபொருளைப்பற்றா தாயிடிற்கதிரைக்கூடும் 
  புண்புலன்பற்றித்தாவிபுனி தனைப்பிரிந்து நிற்கும் 
  புண்புலன்பற்ற தாயிற்புனிதனைச்சேருமன்றே. 10

  பளிங்கியமானனாகும்பகலவனிறைவனாகும் 
  பளிங்கினிற்பஞ்சவன்னம் பார்க்கிலைம்புலன்களாகும் 
  பளிங்கினில்வன்னம்பற்றும்பகலவன்பக்கஞ்சாரிற் 
  பளிங்கினில்வன்னம் பற்றாவுச்சியிற்பானுவந்தால். 11
 
  செம்புயிராகுமந்தச்செம்பினிற்க்களிம்புபாசஞ் 
  செம்பினிற்களிம்புபோனாற்செம்பொனாமாறுபோல 
  நம்பனார்ஞானத்தாலே நானெனுமலம் போம்போன 
  னம்பனாராவனென்று நான்மறை சொல்லுமன்றே. (12)

 சாக்கிரசொப்பனங்களிரண்டையுந்தாண்டிப்போனாற் 
  சூக்கமாஞ்சுழுத்திவந்துதொல்லிருளாகி மூடு 
 மாக்கமுமழிவுமில்லாவறிவினாலதுவும் போனாற் 
  போக்கொடுவரவுமில்லாப்பூரணப்பொருள்வந்தெய்தும். 13

  காணுறுபுலன்கள்போகிற்கரிசுறுமனம்போம் போனா 
  லாணவம் போகும் போனாலாருயிர்ப்போதம்போகுஞ் 
  சேணுறுமொளிக்குமேலாஞ் சிவப்பிரகாசந்தோன்றும் 
  மாணனேயிதுவே முத்திநிலையெனமதித்திடாயே. 14

  மன்னையுமறந்துமிக்கவனசரவடிவமாகித் 
  தன்னையுமறந்திருந்ததனயனைப்போன்று நீயு
  மென்னையுமறந்தைம்போதவெயினர் தம்வடிவமாகி 
  யுன்னையுமறந்தாய் நீயென்னுருவெனவுணர்ந்துகொள்ளே. (15)

  பளிங்கினில்வன்னம் பற்றும்பகலவன்பக்கஞ்சாரிற் 
  பளிங்கினில் வன்னம் பற்றாபகலவனுச்சிசாரில் 
  விளங்குயிரிறையைக்காணவேலையிற்புலன்கள்பற்றும் 
  விளங்குயிரிறையைக்காணும் வேலையிற்புலன்பற்றாவே. (16) 
                  (வேறு) 
    அறிவறியாமையையகன்றவாருயி 
    ரறிவறியாதபேரருளைக்கூடிடிற் 
    பிறிவறியாதவெம்பிரானுட்கொண்டுபோய்ப் 
    பிறிவறியாவகைவைக்கும்பின்னையே. 17

                  (வேறு) 
  மாசறப்படித்தானேனுமயலறத்தெளிந்தானேனு 
  மாசறத்துறந்தானேனுமஞ்செழுத்துணர்ந்தானேனு 
  மீசன் வேறியான் வேறென்னுமிருமையுங்கழலானாகிற் 
  பாசமுங்கழல்வதின்றாம்பதித்து வந்தானுமின்றே. 18

  தத்துவமுப்பத்தாறுந்தனித்தனிகளைந்து நீக்கின் 
  மொய்த்திருண்மூடுமத்தை முன்னவனருளால் வீட்டின் 
  மெய்த்த தன்னுருவநன்றாய் விளங்குறுமதற்கப்பாலே 
  சுத்தமெய்ஞ்ஞானமேனிச்சோதி தானாயிருப்பன். 19
    
   வேறுவேறாகியோடும் விரிநதிக்குலங்களெல்லாங் 
    கூறுமுன்னீரினொன்றாங்கொள்கையதாகுமாபோல் 
    வேறுவேறாகிநின்றவிதிவழிச்சமயமெல்லாங் 
    கூறுமுத்தியினிலொன்றாங்கொள்கைய தாகுமன்றே. 20

            ஆ திருவிருத்தம் -63. 
              பதிவிளக்கம் - முற்றிற்று. 

                பசுவிளக்கம். (20) 

      பாசத்தாற்பசுவெனப்பகரப்பட்டன 
      பாசந்தானிரிதரப்பதியெனப்படுங் 
      காசத்தாற்குருடெனக்கழறப்பட்டன் 
      காசந்தானிரிதரக்கண்ணெனப்படும். (1) 
      ஐம்பொறிவனத்திடையாவிவேட னார் 
     வம்புறுபோதவில்வளைத்துமாழ்குறுந் 
     துன்பெனுங்கணையினைத்தொடுத்துமெல்லநின் 
    றின்பெனுமறியினரியவெய்யுமால். 2
                  (வேறு.) 
    எண்ணரியவான்மாக்க ளிலக்கணங்கூறுங்கா லிருண்மலத்தான் 
மூடராயிறந்து பிறந்துழல்வார், புண்ணியத்தாற்பாவத்தாற் புண்ணிய 
பாவத்தாற் பொன்னாடுநரகுதரை போக்குவரவுடையார், நண்ணிய 
விஞ்ஞானகலர் பிரளயாகலர்க ணவில்சகல ரொன்றிரண்டு மூன்றும் 
லமுடையார், தண்ணிலவுமதி முடியா ரருளுதயகாலஞ் சாங்குசித்த 
ராய்மலத்தைத் தணந்து சிவமாவார். (3)

எல்லாமுநானேகா ணெனைவிட வேறில்லை யெனுமலத்தாலார்ப் 
புண்டிங் கேந்திழைபொன்பூமி, நில்லாதபொருளெல்லா நிலையென 
வேகருதி நின்மலனைத்தனை வினையை நினையாதுமயக்கும், பொல்லா 
தபுலன்வழியிற் றிரிந்துதடுமாறிப் புகழிகழானல்வினையுந் தீவினை 
பும்பொருந்தி, யொல்லாதயோனிதொறும் பிறந்து பிறந்திறப் பா 
ருமைபாகனருள்கிடைக்கி லிரண்டினையுமொழிப்பார். (4)

  (வே று.) 
    அன்பூனைவிட்டு மற்றோரவலனை விரும்பிப்பின்னர் 
    துன்புறுவார்கள்போலச் சுயம்பிரகாசனாகு 
    நம்பனைவிட்டுப்பொல்லா ஞாலத்தைவிரும்பிப்பின்னர் 
    துன்பறுவார்களந்தத்துயரினுக்கொழிவுமுண்டோ. 5
                  (வேறு.) 
    ஆவாவென்னவாச்சரியமரியஞானந்தனை நீத்திட் 
    டோவாமாயாமோகிதராயுணராக்கனவினிலைபோன்ற 
    மூவாக்குடும்பப்பாழ்நிரையந்தன்னின் மூழ்கிமூர்ச்சித்துப் 
    பாவவயத்தாற்பாவங்களீட்டியதையே பண்ணுவார். 6
                  (வேறு.) 
    எஞ்ஞான்று குடும்பபாரமேகுமென்றிரங்கல் வேண்டா 
    மஞ்ஞானமெம்பட்டுண்டோவம்மட்டுங்குடும்பபார 
    மெய்ஞ்ஞானமுண்டேல் முத்திமேவுதற்கையமில்லை
    சுஞ்ஞானத்தாலஞ்ஞானஞ் சுருங்குமந்நிலையேமுத்தி. 7
                  1 வேறு) 
    உண்ணலுறங்கல்பற்றல்விடலுலகந்தழுவல்வரல்போத 
    லெண்ணுமிவைகளான் மாவுக்கியற்கையென்னிலிவனுக்கிங் 
    கெண்ணில் கோடிபிறவியினுமடும்பைக்குடும்பந்தனினின்று 
    பண்ணற்கரியபரமபதமோக்கமில்லைபகருங்கால். 8
                  வேறு.) 
    சீவனாமிந்தவான் மாவியற்கையைத்தெரிக்குங்காலைக் 
    கேவலன் சுத்தன் சாந்தன் சூக்குமன்கிளர்சனாதன் 
    பாவமில்சர்வானந்தன்பகரருஞ்சர்வசாக்கி 
    மேவுசின் மாத்திரத்தன்மிகுசுகசொரூபனாமால் 9
                    (வேறு.) 
    யாதாமொருவனிவ்வண்ணமிலகுமான்ம சொரூபத்தைப் 
    பேதமாகவறியுமவன் பேசினான் மவபகாரி  
    யோது சோரனாலெந்தப்பாவமுஞற்றப்படவில்லை 
    வேதமெல்லாமுறையிடினுந்தெளியாரையமேலிட்டோர் (10)


 (வேறு) 
        புண்ணியபூமியிற்பிறந்தும் பூசுரப் 
        பண்ணவனாகியுமூங்கை பாறியுங் 
      கண்ணியகுடும்பமாங்கடலை நீந்திடான் 
      றிண்ணியபிரமபகாரிதோடே. 11 
                  (வேறு) 
ஆகையானானாமுயற்சியினாலுமவிழ்ந்த பேராதரவாலுங் 
கோகனகத்தாடருகுரவன்பாற்குறைவறுபத்தியினாலும் 
மோகமேவிளைக்கும்பிரகிருதியின் றன் பாவனை முழுதையுந்தணந்திட் 
டேகமாஞ்சிவனேநானெனச்சிந்தித்திடரொழிந்திருந்திடத்தகுமால். 12
                  (வேறு.) 
    முரசதிர் தானை வேந்தர் முன்னர் நீநானென்றோ 
    லரசனுமிகச்சினந்தேயாக்கினை பலவுஞ் செய்வன் 
  விரைசெறிகொன்றைமாலைவேந்தன்முன்னீநானென்னிற் 
    றிருவுளமகிழ்வனென்றாலியாரிதைத்தெளியவல்லார். 13
                  (வேறு.) 
  யாவனொருவன் றன்னிடத்திலிருக்குஞ்சிவனைவிட்டயலே 
  மேவியிருக்குஞ்சிவனைநனிபூசிப்பவன் றன்வியன்கையிற் 
  பாவியிருக்கும் பாயசத்தைவிட்டுக்கூன்கைபரந்தோடித் 
  தூவுந்துளியைநா நுனியாற்றுய்க்குமவனே சொல்லுங்கால். (14) 
                  வேறு.) 
  சகல பூதங்கடோறுஞ்சாக்கியாய்விசுத்ததேசாய்த் 
  தகுஞானதேகியாகித் தங்கியபரமான்மாவை 
  யகமுகமாகவுள்ளும் புறம்பு மொன்றாயறிந்து 
  பகவறயாவன் பார்ப்பானாங்கவன்முழுதும் பார்த்தான். (15) 
                (வேறு.) 
  ஆக்கைமேவிமேவானாயணுவாய்மகத்தாய் விபுவாகிச் 
  சூக்கவுருவாய் வியாபகனாய்ச் சொலுமானந்தசொரூபனாய் 
  வீக்கு நாசரகிதனாய் விளங்குஞ் சிவனையுள்ளபடி 
  நோக்கியறிந்து திரனானோனொய் தாஞ்சோகமடையானால். (16)

    (வேறு.) 
    வானவர்தமக்கு நீங்காமயறருபேதவேது 
    வானவஞ்ஞான ஞானவலியினாற் சிதைந்தபின்னர் 
    தீனமார்சீவனென்றுஞ்சிவனென்றுமில்பேதத்தை 
    யீனமார் புந்தியாலேயெவன் பண்ணப்படுவான் கொல்லோ. (17) 
                  (வேறு) 
    ஆன்மாசுத்தன் சதாநித்யாவின்பச்சுகசொருப 
    னான்மாசெஞ்சொற்பிரகாசனஞ்ஞானத்தாலசுத்தனைப்போ 
    லான் மாதோன்றப்படுகின்றானருவமாகிநிரவயமா 
    மான்மாஞானத்தாற்சுத்தனாகிவிளங்கப்படுகின்றான்.18

    யாவனொருவனஞ்ஞானச்சேற்றைஞானவிரும்புனலா 
    லோவக்கழுவுவானவனேயொளிசேரமலசதாசுத்தன் 
    றாவுகருமதற்பரனாய்த்தபனனெழுமுன் றரியானா 
   யாவலோடுங்கங்கை முதற்படிந்தானேனுமசுத்தனே. 19

    ஞானநீராற்சுத்தனாய் நண்ணுங்கிருதகிருத்தியனாய்
    ஞானவானாயமர்ந்திருக்கும்யோகிக்கிந்தஞாலத்தி 
    லான்கரும்மணுவேனுமில்லையுண்டுபோற்றோன்றின் 
    ஞானந்தன்னையுள்ளபடியறிந்த ஞானியல்னவனே. (20) 
                  வேறு.) 
        பாவமில்பரமாத்துமஞானர்க்கு 
        மூவகையுலகத்தினுமொய்ம்பினா 
        லாவதோர்பயனொன்றிலையாங்கவர் 
      சீவன்முத்தரெனச்செப்பும்வேதமே. (21)

        ஞானமென்னுமோர் நல்லமிர்தத்தை நீத் 
        னமாயையினிச்சையிழுதையோர் 
      தீனமார்குடும்பக்கடல்சிக்கியே 
      யூனமாய்ச்சுழன்றேயுழல்வார்களே. (22)

      யாவனாயினுமியாதோர்பொழுதினி 
      லாவிஞானவமுதச்சுவையினை 
      யாவலோடுமருந்தினனாயிடில் 
      யாவையும்விட்டதனையேயெய்துவான். (23)

     அரியஞானவமுதச்சுவையைநீத் 
      திரியுமம்புலவின்பங்கடுய்ப்பனே 
      லரியஞானவமுதச்சுவையைமுன் 
      பருகப்பட்டவனன்று பகரிலே. (24)

      பண்டிதரிந்தப்பாரை முழுதையுந் 
      தொண்டினான்ம சொரூபத்தறிவர்கள் 
      மண்டஞ்ஞானமறைப்புண்டவரஃ 
        தண்டிச்சங்கரனையறியார்களே. 25
                  (வேறு) 

    அசரீரியாய்மகத்தாயமர்ந்துளவமலவான்மா 
    வசைசுகமருவானாகிமாண்டுறுகிலே சனாகி 
    யிசை பிரசனனான்மாவாயிருந்திடப்படுமன்னோனைப் 
    பசையறு ஞானவானான் முத்தனென்றுரைக்கற்பாலார். (26)

    ஆகையாற்றேகிகட்கேயளவறு துயரமெல்லா 
    மூகவஞ்ஞானத்தின் கண்மூலமாயிருக்குமன்றே 
      யேகஞானத்தஞ்ஞானமிறக்குமற்றியற்றலோ 
      சோககன்மத்தஞ்ஞானஞ்சுருங்குமோசுருங்கிடாவால். 27

      ஞானத்தைத்தவிரப்பாவக்குழாங்களை நாசஞ்செய்யு 
      ஞானம் வேறில்லையிந்தஞானம் போனலெனொன்றில்லை 
      ஞானசாதகத்தையன் றிவையுறு குடும்பம் போக்கு 
      ஞானசாதனம் வேறில்லைநன்னெறியறிமாணாக்கா. 28

      பாதகமனைத்து நீங்கும் பக்குவசித்தத்தார்க்கு 
      மேதகுஞானத்தின் கண்விருப்பமும்வியப்புமுண்டாம். 
      பாதகத்தாற் கட்டுண்டபதிதசித்தத்தார்க்கெல்லா 
      மேதகுஞானவார்த்தைகிடை வார்த்தைகிடைக்குமோவிளம்புங்காலே. 29

                    (வேறு) 

    ஆன்மாநித்தன்சருவபரிபுரணனரிய கூடத்த 
    னான் மாதோடமிலியேகனாகியிருந்தும் பிராந்தியினா 
    லான்மாபின்னம் போற்றோன்றப்படுவனரியஞானத்தா 
    லான்மாபின்னம்போற்றோன்றப்படானென்றறைந்தானழலாடி. (30)

   (வேறு) 
       ஒருவனுக்கிப்பிறப்பிலுரியதோர் 
        பரமவான்ம சொரூபம்பகவற் 
        விரவுமேலவன் மேலாம்பராபர 
        வரியமுத்தியடையப்படுவனால். 31

        எந்தயோகிக்கெப்போது மனதிலே 
        யுந்துஞானவொளியசைதன்னிய 
        மிந்தஞாலமெங்கெங்கும்விளங்குமேற் 
        சந்தமுத்தி தானாயேவிளங்குமால். 32

        எப்போது தன் சொரூபமெதார்த்தமா 
        யொப்பநோக்கியுலகங்களியாவையுங் 
        கப்புமாயாமயமெனக்காண்பனே 
        லப்போதேயச்சுகவடிவாயினான். 33

        எப்போதுந்தன்னிடத்திற் சருவமுந் 
        தப்பலின்றியே தான் சருவத்தினு 
        நுட்பஞானநோக்கானோக்குவானெனி 
        லப்போதேயப்பிரமமடைவனால். 34

        எப்போதியாதாமொருவனுக்கிப்பவ 
        வெய்ப்புலாம்பிணிக்கேகமூலிக்கையாம் 
        பெட்பின்மேலாம்பிரமஞானம்பெறி 
        லப்பொழுதிவனே சிவனாயினான். 35
                  (வேறு) 
        செந்தழல்விளக்கது சிறியதாயினு 
        மந்தகாரத்தினையகற்றுமாறுபோற்  
        சிந்தலில்ஞானமுஞ்சிறியதாயினு 
        மந்தமில்பாவங்களனைத்தும் போக்குமால். (36)

        ஒளிவளர் பெருநெருப்புலர்ந்தகாட்டமுந் 
        தளிர்பசுங்காட்டமுந்தகிக்கும் பான்மைபோ 
        னளிர்மதியனையவோர்ஞான வங்கியுங் 
        களவிருவினையையுங்கணத்தில் வாட்டுமால். (37)

           மந்திரம்வல்லவன்வலியபாம்பொடு 
          தொந்தனையாயினும்விடந்தொடப்படா 
          னிந்தியப்பாம்பொடு விணங்கிநிற்பினு 
          நந்தியஞானியுநவைதொடப்படான். 38

          அம்புயபத்திரமறலின் மூழ்கியும் 
          பைம்புனலாலொரு பந்தமின்மையோ 
          னம்பனையகத்தவிசிருத்துஞானியு 
          மைம்புலன் மூழ்கியுமார்ப்புணானரோ. 39
                    (வேறு.) 
  மருந்தினான் மந்திரத்தான்மன்னுயிர்ச்செகுக்கும் பொல்லா 
  வருந்தியவிடநசிக்கப்படுதல்போலமலயோகம் 
  பொருந்தியஞானிகட்குப்பொருவில் பாவங்களெல்லாந் 
  திருந்தொருகணத்திறக்குந் தீர்பவமுடையமாணா. 40
                    (வேறு) 
        வேதமெய்ம்மொழி கண்டு விமலரா 
        யாதியான்மநிலையறிஞானியை 
        நோதகச்சொலித்தூடிக்குநொய்யவ 
        ரேதமாநரகுக்கிரையாவரே. 41
                  (வேறு) 
        ஞானியே புருடோத்தமனாதலால் 
        வான நாடரும் வந்துவணங்குவா 
        ரேனைநாடருமேவலினிற்பர்காண் 
        ஞானிபூச்சியமென்பதற்கையமோ. 42
                  (வேறு.) 
  துல்லியமொழிந்தானேனுந்துல்லுயமுடையானேனுங் 
  கல்வியில் மூர்க்கனேனுங்கற்றுணர்பெரியோனேனு 
  மொல்கலில் ஞானயோகப்பயிற்சியையுடையோனானா 
  னல்லவனவனேயார்க்கும்பூச்சியநாடுங்காலே. 43
                  (வேறு.) 
  பேதாபேதமகன்றொழிந்தமாணாவின்னும் பேசக்கேள் 
  யாதாமொருவன் கிருகத்தைஞானியெய்தப்பெறிலவன்றன்
மூதாதையராம் பிதிர்க்குழுக்கண்முத்தியடையப்படுவோமென் 
றோ தாமகிழ்ச்சியொடுநடனமுஞற்றாநிற்பரொழியாதே. 44
                  வேறு) 
    தவற்றவெவன்மனந்தத்துவத்திலே 
    பவமகலனுபவப்பரியந்தஞ்செலி 
    னவன் விழியெதிர்ப்படுமனுக்களியாவரும் 
    பவமெலாநசித்துயர்பதத்தைச் சேர்வரால். (45)

    மாசகல்மாணனேமகிமைதங்கிய 
    தேசுணர்ஞானிக்டெரிசனத்தினால் 
    வேசரி நீங்கியேவிரவும் விண்ணுளார் 
    வாசவன்பதத்தையேபெறுவர்மண்ணுளார். 46
                (வேறு) 
  பாலன்மாநிதியைப்பெற்றுமற்றொன்றைப்பற்றலேபோ 
  லேலவிம்மனிதரெல்லாமீசனுக்கீசனான 
  மேலைநல்வினையினாலே ஞானியைமேவப்பெற்றுஞ் ல 
  சாலமோகத்தானீத்துச்சஞ்சரிப்பார்களந்தோ. 47
                  (வேறு.) 
  ஓகோவிந்தமாயைமயலொழியாதிருக்குமானிடர்கள் 
    வாகார்பரமார்த்தத்தெரிசியான மகிபர்தமைநீத்துத் 
  தாகாரிதத்தும்பொருட்டுலகில்யாதாமொருவர்சரிக்கின்றா 
  ராகாவவரேயமுதத்தைவிட்டுவிடத்தையருந்துவோர். 48

            ஆ திருவிருத்தம்- 111. 
            பசுவிளக்கம் - முற்றிற்று. 

              பாசவிளக்கம். 
                  முதலாவது. 
            ஆணவவிலக்கணம். 

ஆணவமலமான்மாவுக்கனாதியிலியற்கையென்னின் 
மாணவசங்கின் வெள்ளைபோலொருகாலுமாயா 
வாணவமலமான்மாவுக்கனாதியிற்செயற்கையென்னிற் 
காணும் வெண்மடிக்கழுக்குக்கலத்தல்போற்பினும் வந்தெய்தும். (1) 
                  (வேறு) 
    சரிதையிலாணவங்கால் சரிந்திடுங் 
    கிரியையிலரைமலங்கெடுதியுற்றிடு 
    மருவுயோகத்தின் முக்கான்மடிந்திடும் 
    விரிசிவஞானத்தின் முற்றும் வீயுமே. 2
                  (வேறு) 
    வீணுரைக்கரும்புமீசன்மெய்யுரை வேம்புமாக்குந் 
  தாணுவையிறைஞ்சலொட்டாதையலையிறைஞ்சப்பண்ணு 
  நாணறவிரத்தல்செய்யுநல்லவர்க்கீதல் செய்யா 
    வாணவமலத்தின் செய்தியிவ்வணமறிந்துகொள்ளே. 3
                  (வேறு.) 
    நெல்லினுக்குமியுஞ்செம்பினீடுகாளிதமும்போலத் 
    தொல்லைதொட்டின்றுகாறுமுயிரிடைத் தொக்கிநிற்கும் 
    வல்லியோர்பங்கனாசான்வடிவெடுத்தருளுங்காலம் 
    புல்லுறுபனிபோற்பொன்றும்போதவாதவனெழுங்கால் 4
            ஆ திருவிருத்தம் -115. 
          ஆணவவிலக்கணம் - முற்றிற்று. 

                இரண்டாவது. 
            மாயையிலக்கணம். 

  மாயையேயுடலமாகுமாயையே கரணமாகு 
    மாயையேபுவனமாகுமாயையேபோகமாகு 
    மாயையேபொறிகளாகுமாயையே புலன்களாகு 
    மாயையேயண்டபிண்டம்யாவையுமாயையாமே. 1

    சாயைபோலொத்தவாழ்வைமெய்யெனச்சந்தோடிக்குந் 
  தூயமெய்ஞ்ஞானவாழ்வைப்பொய்யெனத்தூடித்துட்கு
 மாயவன் பிரமனீசன்யாரையுமயக்கஞ்செய்யுங் 
  காயமேமாயையானாலியாரிதைக்கடக்கவல்லார். (2)

                  (வேறு.) 
    காமத்தாலிந்திரன்கலக்கமெய்தினான் 
    காமத்தாலிராவணன்கருத்தழிந்தனன் 
    காமத்தாற்கீசகன்கவலையுற்றனன் 
    காமத்தாலிறந்தவர்கணக்கிலார்களே. 3

    கோபத்தாற்கௌசிகன்றவத்தைக்கொட்டினான் 
    கோபத்தான குடனுங்கோலமாற்றினான் 
    கோபத்தாலிந்திரன் குலிசம் போக்கினான் 
    கோபத்தாலிறந்தவர்கோடிகோடியே. 4

    கோபமே பிறவியைக் கொடுக்குங்கொள்கையாங் 
    கோபமேயறிவினைக்குறைக்குங்குட்டநோய்
    கோபமேதாயையுங்கொல்லுந்திண்படை 
      கோபமேதவத்தினைக்குலைக்கும் பேயரோ. (5) 

      ஆசையாற்சந்திரனங்கந்தேய்ந்தனன் 
      ஆசையாற் சவுபரியறிவை நீங்கினான் 
      ஆசையானராசுரனாவிபோக்கினான் 
      ஆசையால் வாலியுமழிந்துபோயினான். 6
                  (வேறு.) 
    ஆகையாலிந்தமாயையறிவினைமுழுதுமூடித் 
    தேகமேயான்மாவென்றுஞ் சேயிழைபடவார்தங்கள் 
    போகமேமோக்கமென்றும்புந்தியைத்திரிவு பண்ணு 
    சோகம்பாவனையாலித்தைத்தொலைப்பர்கள்சீவன்முத்தர். 7

            ஆ திருவிருத்தம் -122. 
            மாயையிலக்கணம் - முற்றிற்று

                  மூன்றாவது. 
              கன்மவிலக்கணம். 

    வினையினால்விகாரமுண்டாம்விகாரத்தால் விருப்புண்ட 
    னுனலுறும்விருப்பநானாவிதவுலகங்களுண்டா 
    நனியுலகத்தான்மெல்லநானெனுமகமுண்டாகுந் 
    துனிவுடையகங்காரத்தாற்றுஞ்சலும் பிறப்புமுண்டாம். 1

    ஊழ்வினையானுடம்புமுடம்பினாலூழுமாகித் 
    தாழ்வினையிரண்டாய் மூன்றாய்ச்சதுர்விதமாகியோங்கி 
    வாழ்வொடுவறுமையாகிமன்னுயிர்தொறும்வதிந்து 
    காழ்மரம் விதையும்போலாங்கன்மநீ கண்டுகொள்ளே. 2

    சஞ்சி தந்திருநோக்காற்போம் பிராரத் தந்தனுவோடேகும் 
    விஞ்சுமாகாமியந்தான் விளங்குஞானத்தினாற்போஞ் 
    செஞ்சயான் செய்ததெல்லாஞ்சிவன் செய்ததென்றுணர்ந்தால் 
    மஞ்சனே வினைத்திறங்கள் வந்துனைச்சந்தியாவே. (3)

    இம்மலமூன்றாலாவியிருளடைந்தறிவுமாழ்கி 
    மும்மைகொள்புவனந்தோறுமுறைமுறைபோகிமீளுஞ் 
    செம்மலங்கருணைவள்ளற்றிருவருட்டிரோதைமாறி 
    மம்மர்கொள்பாம்புமிழ்ந்தமதியென விளங்குமன்றே. 4

              ஆ திருவிருத்தம் -126. 
              பாசவிளக்கம் - முற்றிற்று. 

            ஞானதீக்கையிலக்கணம். 
      பூசையால் விரதந்தன்னாற்புண்ணியதீர்த்தந்தன்னா 
      லாசறு தருமந்தன்னாலளவறுவேள்வி தன்னாற் 
      பாசபந்தங்கள் பொன்றாபாரிடைநம்போல் வந்த 
      தேசிகனருளுஞான தீக்கையாற்பொன்றுமன்றே. 1
                  (வேறு.)
    அண்டமெலாம் வலம்புரிந்தானறுமுகவன் கரிமுகவ னறிவாலா 
  ய்ந்திட், டெண்டிசைக்குஞ் சிவனிறைவன் சிவனையல்லா துலகுயிரு
மில்லையென்றே, மண்டியவன் பாலெழுந்து வலம்புரிந்தான் மகிழ்ந்தி 
றைமாங்கனியளித்தான், கண்டவிருவகையாலுங் சன்மபலஞானபலங்காணலாமே. 2
            
 ஆ திருவிருத்தம் -128 
          ஞானதீக்கையிலக்கணம் - முற்றிற்று. 

            ஆசாரியனிலக்கணம். 

      சீவகாருணியம்பாசவைராக்யஞ்சீர்பிறங்கி 
      யோவிலா வீசன்பத்தியொளிவளர்பிரமஞானந் 
      தாவியநான்குந்தானேகுரவற்குச்சடலமென்னுஞ் 
      சாவதும்பிறப்புமில்லாச்சங்கரனாகமங்கள். 1
                  (வேறு.) 
      மண்ணலைநீரலைவளிநெருப்பிலை 
      விண்ணலைமதியலை விரிந்தபானலை 
      பெண்ணலையாணலைபேடுமல்லையா 
      லண்ணலேநீயெனவறைபவன் குரு. (2) 

                  (வேறு. } 

  சிவத்துவமசிசிவோகமத்துமசிவோயமத்தி 
  நவத்துதிவாக்கியத்தைநவையறு சீடற்கோதி 
  யவற்றுறுபொருளைத்தேற்றியாங்கவன்கிலே நம் போக்கிப் 
  பவத்துயர்நசித்தான்றன்னைப்பரமவாசிரியனென்ப. 3

  யானெனதெனுஞ்செருக்கையிரித்தொளியாயெறிக்கு 
  ஞானதேசிகற்குத் தன்னை நதிர்கொடுத்திறைஞ்சாநின்ற 
  வானமாணாக்கற்கிந்தவனுபவமறையலாகு 
  மேனையோர்க்குரைப்பினன்னோனிருள்புரைநிரையத்தெய்தும். (4) 

                எதிர் - திசைச்சொல்.

        சீடன்றன்பவநோய்க்குத்தேசிகன் வாய்மொழி மருந்தா 
        பாடகமாமலையேறியானந்தமடைந்தான்போ 
      னாடரியவுயர்முத்தன்ஞானத்தாலடைந்தோரை 
        வீடுபுகக்குடியேற்றும் வித்தகனுமிவனாமால். 5

            ஆ திருவிருத்தம் -133 
          ஆசாரியனிலக்கணம் - முற்றிற்று. 

              சீடனிலக்கணம். 
      பூதகாரியங்களெல்லாம் பொய்ம்மை மெய்ப்பூ தநாத 
      னாதலாற்புவனத்தாசையந்தரத்தாசையற்ப 
      மோதறுவகைச்சம்பத்துமுயர் முத்திவிருப்புமிந்தச் 
      சாதனநான்குந்தானே சீடற்குச்சடலமென்ப. 1
                  வேறு.) 
      நரனலனிவன்மையாளவந்திடும் 
      பரசிவனெனத்தினம்பணியத்தக்கவ 
      னிருவினையாழியையெளிதினீந்துவான் 
      றிருமலிமுத்தியைச் சேருந்திண்ணியன். 2
                  வேறு) 
    கடப்பருங்கடல்கடத்துங்கருணையாரியன் முனிந்தே 
    யடித்துதைத்தருவருத்திட்டக்கிரமஞ்செய்தாலு 
    முடற்பிணியகற்றவல்லவுத்தமனிவனேயென்று 
    திடப்படுசிரத்தையுள்ளோன் சீடனென்றுரைக்கும்வேதம். (3)

    மன்னர்முன்காலம்முன்னுமகிழ்ச்சியைப் பிரிக்கவந்த 
    தன்னிகர் நோயின் முன்னுந்தானடங்கிடுவார்போல 
    மின்னமர்கயிலைநீத்துமெய்யுடையார்போல் வந்த 
    கொன்னமர்குரவன் முன்னரடங்குவான் குலமாணாக்கன். 4

    குருவிலான் பெற்றஞானங்குமரியைக்குமரிகூடி 
  மருவியவின்பமொக்குமண்ணிடை நம்போல் வந்த 
குருவினாற்பெற்ற ஞானங்குமரியைக்குமரன் கூடி 
    மருவியவின்பமொக்குமென்பர்நன்மதியுளாரே. 5

முந்து நூலுழைப்புமின்றிமுத்தர்பாலிணக்குமின்றிச் 
சுந்தரக்குரவன் பாதத்தொழும்புகள் சிறிதுமின்றி 
யந்தமில்ஞானம் வேண்டுமவாவெலாங்கொழுனற்கொன்று 
சந்ததிவேண்டிநோற்குந்தன்மையோடொக்குமன்றே. 6
                  (வேறு) 
முன்புறுவானிரவெல்லாமுப்போதும்பணிந்தெழுவான் 
பின்புறுவான்பகலெல்லாம்பெட்புறுவானெப்போதுங் 
கொன்புனைந்தவுரை கொள்ளான் குறிக்கொள்வான்றிருமொழியை 
யன்புடைய மாணாக்கற்களவில் குறியுண்டாமால். 7
                  (வேறு.) 
நானார்கொல்லோவென்றனக்குநாதனார்கொல்லோவெனக்கிங் 
கானாப்பிறப்புமிறப்புமிவணடைந்ததென்கொலோவென்று 
தானே தனக்கிவ்விசாரங்கடலைப்பட்டிடலுந் தேசிகனைத் 
தேனாரளிபோற்றேயமெலாந் தேடுமவனே சற்சீடன். 8

            ஆ திருவிருத்தம் -141. 
            சீடனிலக்கணம் - முற்றிற்று. - 

            ஞானகுருமான்மியம். 
    பிதிர்க்கடம்பூசையாவும் பேசிடிற் பாசதன்மம் 
    புதுப்பொழிற்றடாகமாதிபுகல்பசு தன்மமாகு 
    முதுக்குறையறிஞர்பூசைமுப்புரதகனன்பூசை 
    துதிக்கருமாசான் பூசைசொலிற்சிவதருமமன்றே. 1
                  (வேறு) 
      எந்நாளிருப்பினுமிறப்பது நிச்சயம் 
      பொன்னாட்டிலிந்திரனாயினும் பொன்றுவ 
      னன்னாட்கழியுமுன்ஞானத்தினாலே 
      தன்னாலறிவதுசற்குருபாதமே. 2

    சித்தஞ்சிவத்தோடொருக்கிச்சிவமான 
    முத்தன் சிவமெனமொழிந்திடுமாகமஞ் 
    சத்தியஞ்சீவன் சங்கரனென்றே 
    குற்றமினான் மறை கூறும்வகுத்தே 3
                  (வேறு) 
    ஆதலாற்குருப்பிரானதிகமென்றுநால் 
    வேதமுமுறையிடும் விவேகியானவன் 
    போதொடுநீரொடும் போற்றி நாடொறுங் 
    காதலாற்குருபதங்கைவிடானரோ. 4
            
ஆ திருவிருத்தம் -145. 
          ஞானகுருமான்மியம் - முற்றிற்று. 

              கொல்லாவிரதம். 

  ஆமுயிர்க்கொலாதமேலோரறிவினையறிந்த நல்லோர் 
    மனமொடுக்கவல்லோரிவர்களே தேவராவர் 
  காமராய்க்கற்பழித்தோர்களவுசெய்துடல் வளர்த்தோர் 
  மாமிசந்தின் போரெல்லாமானிடப்புலை பராவார். 1
                  வேறு) 
    அரியவாக்கையின்மானிடவாக்கையேயாக்கை 
    விரியுநோன்பினிலுயிர்க்கொலாவிரதமேவிரதங் 
    கருதிற்றெய்வதங்கண்ணுதற்றெய்வமே தெய்வந் 
    தெரியிற்றேவிகாலோத்தரதேற்றமே தேற்றம். 2
                  வேறு
அம்மாவெனவலறவாருயிரைக்கொன்றருந்தி 
யிம்மானிடரெல்லாமின்புற்றிருக்கின்றா 
ரம்மாவெனுஞ்சத்தங்கேட்டகன்றமாதவர்க்கும் 
பொய்ம்மா நிரையமென்றாற்புசித்தவர்க்கென்சொல்லுவதே. 3
                  (வேறு)
கங்கையிற்படிந்திட்டாலுங்கடவுளைப்பூசித்தாலு 
மங்குல்போற்கோடி தன்மம்வள்ளலாய் வழங்கினாலுஞ்
  சங்கையில்லாதஞானதத்துவமுணர்ந்திட்டாலும் 
  பொங்குறுபுலால்புசிப்போன் போய்நரகடைவனன்றே. 4

  கொலையிலானுதவுமன்னங்கூறிற்பேரமுதமாகுங் 
  கொலையுளானுதவுமன்னங்கூறிற்மேர்விடமதாகும் 
  புலையர் தம்மனையிலுண்போன் புலையனாமாறுபோலக்  
  கொலைஞர் தம்மனையிலுண்போன் கொலைஞனேயாவனென்றே. (5)

  கலையெலாமுணர்ந்தானேனுங்கரிசறத்தெளிந்தானேனு 
  மலையெனவுயர்ந்தானேனுமனமயலகன்றானேனு 
  முலகெலாம்புகழ்ப்பல்லோர்க்குதவியகையனேனு 
  மிலகியவிரக்கமின்றேலெழுநரகடைவனன்றே. 6

  இத்திறனருள்கைப்பற்றியுயிர்க்கெலாமிதத்தைச்செய்க 
  சத்தியவிரக்கமின்றேன்முத்தியைச்சாரானாகும் 
  பத்தியால் யோகஞ்சாரும்யோகத்தாற்பரமஞானஞ் 
  சித்தியாமிதற்காதாரஞ்சீவகாருணியமன்றே. 7

            ஆ திருவிருத்தம் -153. 
            கொல்லாவிரதம் - முற்றிற்று. 

              யாக்கையருமை. 

    மக்களாக்கையிற்பிறத்தலேயரிதுமற்றதிலுந் 
    துக்ககூன் குருடூமையைத்துறத்தலுமரி 
    நற்குலத்திடை வருதலுமரி துஞானத்தான் 
      முக்கணீசனுக்காட்படல் முற்றிலுமரிதே. 1

                  (வேறு.) 
      உடம்பெலாநீங்கிநல்லுடம்பு பெற்றவ 
      ருடம்பினாலுறுபயனொன்றுமோர்கிலா 
      ருடம்பினாலுறுபயனாவதேதெனி 
      லுடம்புயிருணர்வையுமோரலாகுமே. 2

      அரிதுமானிடயாக்கையிற்பிறத்தன்மற்றதினு 
      மரிதுவேதநூல்சைவ நூலாலகந் தெளித 
      லரிதவ் வீசனே நாமெனவறிவுமேலிடுத் 
      லரிதுவாய்ப்பறையறைந்திடாததினடங்கிடலே. 3

            ஆ திருவிருத்தம் - 156. 
            யாக்கையருமை - முற்றிற்று. 

      சரிதைகிரியாயோகவிலக்கணம். 
      பெரியவிம்மானிடயாக்கை பெற்றவர் 
      சரிதையுங்கிரியையுந்தான் செய்கின்றிலர் 
      சரிதையுங்கிரியையுந்தான்செயாவிடி 
      லுரியயோகத்தினையுணரலாகுமே. 1
                  (வேறு.) 
      எங்கணுநிறைந்து நின்ற வீசனோடொன்றலாலே 
      சங்கரனாமேயென்னச்சமாதியோகம் புரிந்து 
      துங்கவெண்மதியோலுள்ளந் துலங்கிடச்சுவானுபூதி 
      யங்குதித்திடவானந்தமடைவதேயமலயோகம். 2
                  (வேறு) 
        அரியவிம்மானிடயாக்கைபெற்றவர் 
        கருமயோகங்களாற்காலந்தள்ளுவ 
        சூரியமெய்ஞ்ஞானயோகத்தினாலரன் 
        அரியயோகத்தினைச்சோதியார்களே. 3
                    (வேறு.) 
    ஒருகணமிருப்பன்றெய்வவுருவினிலீசன்றான் மற் 
    றிருகணஞ்செங்கோலோச்சுமிறையவர்பாலிருப்ப 
    னருமறையவர்குழாத்துளம்பு வீழளவிருப்பன் 
    றூரியயோகிகளுளத்திற்றூங்குவனிருந்தெப்போதும். 4

            ஆ திருவிருத்தம் -160. 
        சரிதைகிரியாயோகவிலக்கணம் - முற்றிற்று.  

          ஞான நிட்டையிலக்கணம். 

    சராசரப்பொருள்கடோறுந்தங்கிநின்றவற்றின்றன்மை 
    விராவுதலின்றியொன்றாய்விமலமாய் விண்ணினொய் தாய்ப் 
    பராபரவெளியாய் நீங்காப்பாச் சாலங்கடந்த 
    நிராமயசிவந்தானாகிநிற்பதுஞானநிட்டை 1

    மத்திமவுடறானாகாவளர்கரணந்தானாகா 
    மொய்த்தவிந்தியந்தானாகாமூலவாயுவுந்தானாகா 
    சித்திர தீபம்போலச்சீவபாவங்கழன்று 
    நித்தியசிவந்தானாகிநிற்பதுஞானநிட்டை. (2)

    கன்மவாதாரமாறுங்கடந்து கற்பனை கடந்து 
    வுன்மனைகடந்துசீவ்வுணர்வையுங்கடந்து மேலாய்ச் 
    சின்மயமாகிநின்ற சிற்பரநிலைகடந்து 
     நின்மலசிவந்தானாகி நிற்பதுஞானநிட்டை. 3

    மக்களுமனையுநீத்துமாதராராசை நீத்துச் 
    சொர்க்கமேலாசைநீத்துச்சுத்தனாய்ப்பற்றொன்றின்றிக் 
    கற்கவேண்டியது நீத்துக்கருத்திருவினையுநீத்து 
    நிர்க்குணசிவந்தானாகிநிற்பது ஞானநிட்டை. 4 
                  (வேறு) 
      சிந்தனைபுறஞ்செலாச்சிவோகம் பாவனை 
      சந்ததமுஞற்றிடிற்சமாதிவந்துறு 
      மந்தநற்சமாதியாலறிவுமேலிடு 
      மிந்தநன்னிலையிலேயிருக்கற்பாலையே. 5

      ஆங்கறியாமையுமறிவு நீங்கவே 
      யோங்கியவறிவொடுமொன்றுபட்டவண் 
      டூங்குபேரானந்தத்தூக்கவந்துறு 
      மூங்கைகாண்கனவெனமுத்திக்காண்டியே. 6
                  (வேறு.) 
    பாவனா தீதந்தன்னினாடொறும் பதிந்துநிற்பாய் 
    பாவனா தீதந்தன்னினெஞ்சகம்பதியாதாயின் 
     பாவனை தனிலே நெஞ்சைப்பழக்கிடுபழுத்தகாலைப் 
      பாவனாதீதம்வந்து பதிந்திடும்பான்மையோடே 7

            ஆ திருவிருத்தம் -166. 
          ஞானநிட்டையிலக்கணம் - முற்றிற்று. 

          ஐம்புலனால்வருமிலக்கணம். 

    சத்தத்தால் சுணமாயும்பரிசத்தாற்றந்திமாயும் 
    வெற்றிசேருருவத்தாலேவிட்டிலம்பறவைமாயும் 
    பற்றியாரிரதத்தாலே பாணி மீனங்கண்மாயும் 
    மொய்த்தகந்தத்தினாலே மூசுவண்டினங்கண்மாயும். 1

    ஓதியவசுணமாதியொன்றொன்றாலழியாநிற்குங் 
    தாதினாற்றொக்கான் மூக்காற்கண்ணினானாவாலிந்தச் 
    சாதிமானிடர்களெல்லாமஞ்சினாற்சாகாநிற்பர் 
    போதமேலிட்டகாலம்புலன்வழிப்போகாரன்றே. 2

                  (வேறு.) 
        ஐம்புலன் வழியோடிமானிடரெலாமழிவார் 
        ஐம்புலன் வழித்தாவிமேலமரருமலைவார். 
        ஐம்புலன் வழியடைத்தவன் யோகியேயன்றி 
        ஐம்புலன் வழியடைத்தவருலகினில்யாரே. 3

            ஆ திருவிருத்தம் -169. 
        ஐம்புலனால்வருமிலக்கணம் - முற்றிற்று. 

      ஐம்புலன்வென்றவறிஞரிலக்கணம் 

    ஐம்புலனடக்கலாலுமறிவினையறிதலாலு 
    மின்பதுன்பங்களெல்லாமியல்பெனவொறுத்தலாலுஞ் 
    செம்பொருளறைதலாலுஞ்சிவோகம் பாவித்தலாலும் 
    நம்பனையகத்துணர்ந்தஞானியென்றறியலாமே.(1)

    வேதநூலுணர்தலாலும் விதிவழியொழுகலாலுஞ் 
    சூதகந்துறத்தலாலுஞ்சுகமயமாதலாலும் 
    பேதமற்றிருக்கையாலும் பெரியவர்கூட்டத்தாலு 
    நாதனையகத்துணர்ந்தஞானியென்றறியலாமே. 2

            ஆ திருவிருத்தம் - 171. 
      ஐம்புலன் வென்றவறிஞரிலக்கணம் - முற்றிற்று. 

            சந்நியாசியிலக்கணம். 

ஆக்கைக்குஞ்சாக்கினாமேயனைத்திற்குஞ்சாக்கினாமே 
போக்கொடுவரவுமில்லை புண்ணிய பாவமில்லை 
வாக்கொடுமனமுமில்லை மந்திரந்தியானமில்லை 
சாக்கிமாத்திரமேயென்று தெளிந்தவன் சந்நியாசி. 1
                  (வேறு.) 
அறிவிலறிவாய் கண்டிதமாயனந்தானந்தமயமாகிச் 
செறியும்பரமசிவந்தன்னைத் தன்னுட்கண்டு தியானித்துக் 
கறவையருந்தப்பால் சுரக்குங்காலமேனுங்கடைப்பிடிப்போர் 
பிறவிக்கடலைக்கடந்தோர்களவரேயுலகிறபெரியோரே. 2

மண்போற்பொருமையுடையோருமதிபோற்சாந்தமுடையோரும்   
புண்போலுடலைப்புனைந்தோரும்புனல் போலொழுக்கம் பூண்டோருங் 
கண்போலிரக்கமுற்றோருங்கனல்போற்புசிக்குங்கதியோரும் 
விண்போலறிவையறிந்தோரும்பிறவாரிந்தமேதினிக்கே. 3
            ஆ திருவிருத்தம் -174. 
          சந்நியாசியிலக்கணம் - முற்றிற்று'. 

        அதிவன்னாச்சிரமியிலக்கணம். 
    ஊன்றுமூன்றவத்தைக்கப்பாலுயர்முத்தனாகியந்த 
    மூன்றவத்தைக்குஞ்சான்றாய்முதலொளியாய்ப்பிறங்கித் 
    தோன்றுமாதேவதேவையெவன் சும்மாவனுபவிப்போ 
    னான்றவனவனே மேலாமதிவன்னாச்சிரமியாவான். 1


                  (வேறு) 
      நிறைந்தமாகடற்போலுயர் நெடுமறை முடியிற் 
      சிறந்தபோதமாவாக்கிய சிரவணத்தாலே 
      யிறந்த சிந்தையினாற்றனையீச்சுரனாக 
      வறிந்தவன்சொலுமதிவன்னாச்சிரமியாவானால் 2
                  (வேறு) 
    வருணமாச்சிரமமாகிமலினதேகத்தின் கண்ணே 
    கருமலிமாயை தன்னாற்கற்பிக்கப்பட்டதெல்லாம் 
    பொருவருபோதனாமெற்கெப்போதுமில்லையென்றே 
    யருமறையாலுணர்ந்தோன திவன்னாச்சிரமியாவான். 3

    சொன்னத்திற் கடகமாதிசூழணிதோன்றுமாபோ 
    லென்னிடத்தகிலமெல்லாங்கற்பிக்கப்பட்டதென்றே 
    பன்னுமாமறையந்தத்தாற்பகுத்தறிந்தனுபவித்திங் 
    கன்னியமிலாமைகண்டோனதிவன்னாச்சிரமியாவான்.(4)

    ஆதித்தன் சன்னிதானத்தகிலஞ்சேட்டிக்குமாபோற் 
    போதத்தென்சனிதானத்திற்புவனஞ்சேட்டிக்குமென்றே 
    வேதத்தினந்தத்தாலேமெய்ப்படவறிந்துணர்ந்தோ 
    னாதித்தனிவனேயென்னவதிவன்னாச்சிரமியாவான். (5)

    இப்பியிற்பிராந்தியாலேயிர சிதந் தோன்றுமாபோன் 
    மெய்ப்படுமென்னிலிந்தவியன் சகமுதித்ததென்றே 
    இப்படியாவனேனுமெழின்மறைமுடிவினாலே 
    யற்புதவறிவுணர்ந்தோன திவன்னாச்சிரமியாவான் (6)

    பறையர் தம்முடம்பின்கண்ணும் பசுவாதியுடம்பின் கண்ணு 
    மறையவருடம்பின்கண்ணும்வானவருடம்பின்கண்ணு 
    நிறையுமாகாயம்போல நிற்குமாதேவன்றானென் 
    றறிவினாலறிந்துணர்ந்தோன திவன்னாச்சிரமியாவான். (7)

    இந்தஞானத்தினாற்றன்னஞ்ஞானமிறக்குமத்தாற் 
    றொந்தமாந்துவிதவத்துதொலைந்திடுந்தொலைந்தவத்தாற் 
    புந்தி தானசிக்குமத்தாற்புகழிகழ்நசிக்குமத்தா 
    னந்திடுங்குடும்பமத்தானானெனுஞ்சொரூபந்தோன்றும். (8)

   பாம்பிதென்றுணர்ந்தபோது பழுதையேயில்லைவெய்ய 
    பாம்பி தன்றெனவுணர்ந்தாற்பழுதையேயானாற்போலச் 
    சோம்புறு குடும்பியென்னிற்றுக்களுறுசீவனாகுஞ் 
    சோம்புறாக்குடும்பியென்னிற்றுகளறுபிரமமாவான். 9

            ஆ திருவிருத்தம் -183. 
        அதிவன்னாச்சிரமியிலக்கணம் - முற்றிற்று. 

          மகாவாக்கியவிலக்கணம். 
ஆதி திருநான் மறைமுடியிலறையுந்தத்துவமசியென்றே 
யோதிலது நீயானாயென்றுரைக்குமும்மைப்பதமாகப் 
போதமுடையோயி தன்பொருளையெவ்வாறெடுத்துப் போதிப்பேன் 
பேதமகன்றவுள்ளத்தாற்காணும் பெரியவாக்கியமே. 1
                  (வேறு.) 
    கன்னனான்புளிஞனென்றேகவலையுற்றழுங்குங்காலைக் 
    கன்ன நீகிராதனன்கௌந்திபுத்திரனென்றாற்போ 
    லன்னியவுடனானென்றேயயர்ந்துள மழியேன் மைந்த 
    வன்னியமென்றுகண்டவழிவுநீயுணர்ந்துகொள்ளே. 2

    கல்லெலாமெறிந்துமீதிக்கையினையெறிவாருண்டோ 
    சொல்லியகருவியெல்லாந்தொலைத்தவன்மீ தியன்றோ 
    வல்லறீரவனே சோதியாகிய பிரம்மாவா 
    னெல்லையின் மறைகளெல்லாமிவ்வணமுரைக்குமன்றே. 3
                  (வேறு.) 
    ஒருவனொருதேயத்திற்பிரமசரியாயுற்றான் 
    மருவிமற்றோர் நாட்டகத்தின்மகிழ்கிரா 
    பரவிபின்னோர்மண்டலத்திற்பகர் துறவியாய் நடித்தான் 
      விரவியகோலம் போக்கின் வேறில்லையவனிவனே. 4
                  (வேறு.) 
    ஓடுமாநதி கடந்தோரொன்பதுபேரையெண்ணித் 
    தேடும்பத்தானைக்காணான்றிகைத்து நின்றலறாநிற்ப  
     நீடியவொருவனாலே நீபத்தானென்னலோடும் 
    வீடியதுயரமெல்லாம் வியப்பினையடைந்தானன்றே. (5), 

    அன்னியகருவியெல்லாநாமல்வென்றறிந்தோன் 
    பின்னரங்கருவியெல்லாம்பிரித்தவன் றனை மறப்ப 
    மன்னியசேடநீயேயென்றுமாதவத்தின்வந்த 
    செந்நிலைக்குரவன் சொல்லாற்றெளிவதுஞானமாமே. 6

    மச்சுக்கூப்பிட்டுதென்றேமதிப்பவருண்டோந்த 
    மச்சுளேயொருவனன்றிமச்சுக்கூப்பிடுமோபேதாய் 
    நச்சியதேகசேட்டையாவையுநாடிப்பார்க்கி 
    லச்சுளேநின்றவான்மாவாலெனவாய்ந்துகொள்ளே. 7

      முப்பகைகடந்துஞானமுத்திரை திகழவேதஞ் 
    செப்புமாவாக்கியத்தின்றெரிசனங்கிடைத்தமேலோ 
    ரப்பிரமேயமானவறியொடுங்கலவாராயி 
      னிப்புவிதன்பான் மீட்டுமெய்துவரையமின்றே. 8

                  (வேறு.) 
    பொன்னையன்றிப்பூணில்லை பூணையன்றிப்பொன்னில்லை 
    யென்னையன் றிச்சிவனில்லை சிவனையன்றியானில்லை 
    யின்னவண்ணமறிந்தோனே யீசன் றனையுமறிந்தோனா 
    மின்னவண்ணமறியா தானீசன் றனையுமறியானே. 9

                  (வேறு.) 
    நிறையறிவாயிருந்துநின்மலன்றன்னைத்தேடி 
    மறைமுதனூலாராய்ந்தும் பின்னருமயங்குந் தன்மை 
    யிறைவனேயெனக்குநாக்குண்டில்லையோவென்று கேட்க 
    வறைவது நாக்கேயென்னவகந்தெளியானைப்போலும். 10

    ஆதவன்றன்னைப்பார்த்திட்டகிலத்தைப்பார்த்தபோது 
    வாதவனொளி மேலிட்டேயகிலந்தோன்றாதவாபோற் 
    சேதனச்சிவத்தை நோக்கிச் செகத்தினை நோக்குங்காலைச் 
    சேதனச்சிவமேலிட்டுச்செகமெலாமறைந்துபோமே. (11)

                  (வேறு) 
  என்றுமிருந்தபடியிருக்குமியல்பேயென்னுமொரு வேத 
  மொன்றேயொழியவிரண்டாம் வத்தில்லையென்னுமொருவேதம் 
  வென்றிப்பரமுநீயும் வேறில்லையென்னுமொருவே தந் 
  துன்றுமதுவே நீயானாயென்றே சொல்லுமொருவேதம். 12
                  (வேறு.) 
    நாலுவேதமுந்தத்துவமசியெனநவிலுஞ் 
    சாலநீர்தெளிந்துறுதிகொள்வீரெனச்சாத்திப் 
    பாலலோசனன்மவுனமுற்றிருந்தனன்பருவக் 
    போலநால்வருநிட்டையைக்கூடினரன்றே. 13
            ஆ திருவிருத்தம் -196. 
          மகாவாக்கியவிலக்கணம் - முற்றிற்று. 

          அனுபவவிலக்கணம். 
    ஊசலாடுளமுமின்றியுருவருவு பயமின்றிக் 
    கோசரவகோசரங்கள் குறிகுணபேதமின்றிப் 
    பாச்சாலங்கடந்து பராபரைக்கப்பானின்ற 
    வீசனையறிந்தஞானிக்கினிப்பிறப்பில்லையன்றே. 1

    சிறையறக்கடலொடுங்குஞ்செறிந்திக்குலங்கள்போலு 
    மறுகுறுவேடு நீக்க மன்னனைக் கூடல்போலு 
    மறிவறியாமை நீங்கவறிவினுளறிவாய்நின்ற 
  விறைவனைக்கூடுஞானிக்கினிப்பிறப்பில்லையன்றே. 2
                  (வேறு.)
அரியணையிலிருந்துலகவரசாட்சி புரிந்தாலுமங்கையேற்றுத் 
தெருவுெ தாறுந் திருந்திரந்து தின்றாலுமிளம்பருவத்தெரிவைமாரைப் 
பிரியாமலிருந்தாலும் பிரிந்து தவம்புரிந்தாலும் பேசிற்றெல்லாம் 
விரிசீவன்முத்தனுக்கிங்குடம்பாடேயன்றியொன்றும் விரோதமின்றே 3
                (வேறு) 
      ஆயிரமடந்தையராகந்தோய்ந்துநான் 
      றூயவனென்றுமால் சூளுஞ்சாற்றினான் 
      காயமுங்கரணமுங்கடந்ததன்மையா 
          னீ சீயுமந்நிலையிலே நிற்கப்பாலையே. (4)

          அறுசுவையடிசிலையாரவுண்டவன் 
          வெறுமுபவாசிநானெனவிளக்கினான் 
          சிறுநுதற்பேதையைத்தினமுஞ்சேர்ந்தவன் 
          றுறவிநானெனவுளந் துலங்கக்காட்டினான். 5
                    (வேறு.) 
      கேவலச்சனகன் முன்னாட்கேள்பகையிரண்டுமின்றி 
      மேவியசுத்தமென்னுமெல்லணைமீ திருந்து 
      சாவுயர்பிறப்புமில்லாத்தத்துவச்செங்கோலோச்சிப் 
      பாவனையிலாதகானம்படந்துருமாறினானே. 6

              ஆ திருவிருத்தம் - 202. 
            அனுபவவிலக்கணம் - முற்றிற்று. 

              சிவயோகவிலக்கணம். 
      காமமாதிகளை நீத்துக்கரணவாதனை கடந்து 
      நாமதுவெனுஞ்சம்பந்தஞானமேஞானமாகி 
      யோமொழிப்பொருளைத்தேறியுணர்வுணராமை போக்கி 
      யாமைபோலைந்தடக்கிநிற்பதேயமல்யோகம். 1

      அறுவகைச்சமையத்தோர்க்குமதீதமாய்கள்மாகி 
      மறுவறுபொருளாயொன்றாய்மன்பதை தொறுநிறைந்து 
      குறைவறு பிரம்நாமேயென்று கோசங்கணீங்கி 
      யறியுருவாகிநிற்றலழகியயோகமாமே. 2

      உறொருமுயிருமாகியுயிர்தொறுமுணர்வுமாகிச் 
      சடமசடங்கடோறுஞ்சாக்கியுமாகிநின்ற 
      வடல்புனைசிவனார் நம்மையன்றி வேறில்லையென்றே 
    யுடைகுடவிசும்புபோலொன்றா தலேயோகமாமே. 3

    சிந்தையைப்புறத்தேவிட்டுத்தேகமேநாமென்றுன்னி 
சந்தமற்றொளிருமந்தயோகியைச்சந்திதோறும் 
    வந்தனை செய்துளோரும்பெறுவர்மாநிரையவைப்பே. 4

    ஆகையாற்கருத்தடங்கிய சைவறலியோகமாகு 
    நாகமார்முழைஞ்சுபூங்காநதிபாழுங்கோயிலாதி 
    யோகதானங்கள் புக்கியுயர்சிவோகம் பாவித்துத் 
    தேகமாதிகணானல்லவென்று சித்திரம்போனிற்பாய் 5

    இம்முறைசிவயோகத்திலிருப்பவர்சீவன்முத்தர் 
    நம்மையினாதந்தோன்றுநவவிதங்கடந்துபோனாற் 
    செம்மையசுவானுபூதிசெனித்திடுமனந்தானந்த 
    விம்மிதந்தோய்ந்துந்தோயாதிருப்பர்கள் விதேகமுத்தர். (6)

    காட்டெரிமாசுணங்கள்கண்படு வரிமா வேங்கை 
    வீட்டுறுபுலவன் றூதால்வெருவுறாதிருக்கும்யோகி 
    நாட்டமூன்றுடையநாதனடிவல் நண்ணலாலும் 
    வேட்டுறுபுலனொடுங்கிவிவேகமேலிடுதலாலும். (7)

    மித்தையாமுடலமென்ன விவேகமேவிடுதலாலே 
    நித்தனானெனும்விவேக நேரிடும் நேர்ந்தகாலை 
    முத்தர்பேரவைகிடைக்குங்கிடைத்தலான்முதிர்ந்தஞானஞ் 
    சித்தியாமன்றேசீவன்முத்தனாய்ச்சிவனுமாவன். (8)

      காசியிலிறக்கமுத்திகமலையிற்பிறக்கமுத்தி 
      தேசுறுதில்லைமன்றுட்டெரிசிக்கமுத்தியென்ப 
      ராசையையிறக்கமுத்தியாருயிர் பிறக்கமுத்தி 
      யீசனைக்காண முத்தியெதுவரிதானமுத்தி. 9

            ஆ திருவிருத்தம் -211 
          சிவயோகவிலக்கணம் - முற்றிற்று. 

        வாதனைமாண்டாரிலக்கணம். 
      இல்லறம்பொருளெனவிருந்துகாமிய 
      வல்லல் சேர்வாழ்க்கையின் மிழ்ந்திநிற்பினு 
        மெல்லையில் ஞானவின்பத்தையெய்தியே 
        புல்லியும்புல்லிடாதிருப்பர்புண்ணியோர். (1)
போதெலாமவத்திலேபோக்கிடாவகை 
சாதலும் பிறத்தலுந்தணந்தஞானியர்க் 
காதரம்பெருகிடவடிமைசெய்குவார் 
காதகங்கரத்தையுங்கடந்தகாரணர். 2
(வேறு) 
சாத்திரஞ்சமயம் வேண்டார்தத்துவக்கத்துவேண்டார் 
கோத்திரங்குலங்கள் வேண்டார் கூறுமாவிரதம் வேண்டார் 
மூர்த்திசேவைகளும்வேண்டார்முன்னவன் பூசைவேண்டார் 
தீர்த்தமும் வேண்டார்ஞானச்சின்மயமானமேலோர். 3

உம்பர்வாழுலகம் வேண்டாருலகரசாட்சி வேண்டார் 
பொன்புனைமகளீர்வேண்டார்புண்ணிய பாவம் வேண்டா 
ரின்பொடு துன்புவேண்டாரிறப்பொடுபிறப்பும் வேண்டா 
ரைம்புலப்பகையைவேண்டாரறிவினையறிந்தமேலோர். 4
                    வேறு.) 
    அன்னமயமுதலாகவானந்தமயமீறாய்ப் 
    பின்னநிலையிவை கடந்தபேரின்பசாகரத்து 
    ளின்னபடியென்றறியாதிருந்தசிவயோகிக்குச் 
    சொன்னமகளும்புவியுந்துரும்பாகத்தோற்றுமால். 5

            ஆ. திருவிருத்தம் - 216. 
        வாதனைமாண்டாரிலக்கணம் - முற்றிற்று. 

            பிராரத்தவிலக்கணம். 
வேம்புறுபுழுவை வாங்கிமென்கரும்பிடைவிட்டாலும் 
வேம்பையே நோக்கிப்பின்னும் வியப்புறுமாறுபோலச் 
சோம்பு மூன்றவத்தை நீக்கித்துரியத்தில் வைத்தபோதுஞ் 
சோம்பு மூன்றவத்தை தன்னைத்தோயவேநினைக்குஞ் சீவன். 1

பாசத்தை நீக்கியாசான்பதியிடைப்பதியவைத்தும் 
பாசத்தை மீட்டுநோக்கிப் பரிந்திடும்பசுவின்றன்மை 
மாசுற்றவுவரைப்போக்கியலைமிசை வைப்பமேக 
மாசற்றவரையை நீங்கி வாரியிற்புகுநீர்போலும். 2

            ஆ திருவிருத்தம் -218. 
          பிராரத்தவிலக்கண - முற்றிற்று. 

          சிவத்துரோகவிலக்கணம். 
    சுருதிகண்முறைமுறைதுதித்தகத்திய 
    னிருவினைக்குறும்பெறியெதியொடும்வாப் 
    பரசிவமிவரெனப்பதைத்தெழாமையால் 
    வரனெனுமாதவன்மகிடமாயினான். 1

    பாசமோசகன்சிவன்பரசுவார்வினை 
    நாசமாக்குவனெனமறைநவிற்றியு 
    மீசனைப்புகழ்ந்திடாதிகழ்ந்ததக்கனா 
    ராசுறுதகர்முகமாயினாரரோ. 2

            ஆ திருவிருத்தம் -220. 
          சிவத்துரோகவிலக்கண - முற்றிற்று. 

          சுவானுபவவிலக்கணம். 
    நன்னெறியறி தருநல்லமாணனே 
    யென்னனுபவமெலாமெடுத்தியம்பினே 
    னுன்னனுபவந்தனையுரைத்தியென்றலுக்  
    தன் என்னுபவந்தனைச் சாற்றன்மேயினான். (1) 
                  வேறு 
    ஆகிநின்றழிதலாலுமருவருப்புடையதாலுங் 
    காகநாய்கவர்தலாலுங்கனலிடைப்படுதலாலுஞ் 
    சோகமேவிளைத்தலாலுஞ்சுகதுக்கமறியாத்தாலுந் 
    தேகநானல்லவென்றுந் தேகிநானென்றுங்கண்டேன். 2

    இந்தியமாமாவென்பரிறைவ நின்றிருநோக்கில்லார் 
    முந்தியபிராணன் றன்னையுயிரெனமொழியாநிற்பர் 
   சிந்தையைமனவகத்தைப்புந்தியைச் சீவனென்பர் 
   சந்துறுமிவைகட்கெல்லாஞ்சாக்கிநானென்றுகண்டேன். 3

    பிண்டமாமுடனானல்லேன் பிராணவாயுவு நானல்லேன் 
    கண்டவைம் பொறியுமல்லேன் கரணமோர்நான்குமல்லேன் 
    பண்டையவறிவனானென்றுன்னருள் கொண்டு பார்க்கி 
    லெண்டிசைகீழ்மேலெங்குமேகனாயிருக்கின்றேனே. 4
                  (வேறு.) 
    தூலத்தனுவுநானல்லேன்சூக்கத்தனுவுநானல்லேன் 
    மூலத்தனுவுநானல்லேன்மும்மைத் தனுவும் பொய்யன்றோ 
    ஞாலத்தனுவைநானென்றேநம்பிக்கெட்டேனெடுங்காலஞ் 
    சாலத்தெளிந்தேனினி ஞான தனுவேயெனக்குத் தனுவென்றே. (5) 

                  (வேறு.) 
    கானலைநீரென்றுன்னிக்காதலித்திடுவார்போல 
    வூனுடனானென்றுன்னியுணர்வினைப்பிரிந்திருந்தேன் 
    கானலைநீரன்றென்றுகைவிடுவார்கள்போல 
    வூனுடனானன்றென்றேயுணர்வொடு முறங்கினேனே. 6

    ஊனுடல்பொறிபிராணனுறுகரணங்களென்னுங் 
    கானகங்கடந்தஞ்ஞானக்காரிருட்பரப்பு நீங்கித் 
    தானெனுஞ்சீறூர்நீத்துத்தற்பரைப்பொழிலினின்று 
    மோனியாய்ஞானானந்தமுத்திமாநகரங்கண்டேன். 7

    வானகம்போலெங்கண்ணுமருவியெப்பொருளுந்தானாய்ச் 
    சூனியப்பொருளாயொன்றாய்த் துரியமுங்கடந்தபாழாய் 
    ஞானமாத்திரமாய்நின்ற நாதாந்தவின் பந்தன்னைத் 
    தானறிந்திருப்பதல்லாற்சாற்றிடப்படாதேயெந்தாய். 8
                  வேறு.) 
  எல்லாமிறந்தயோகியர்க்குமெட்டாதிருந்தபேரின்பை 
  யெல்லாநானென்றகங்கரிக்குமேழையறியாப்போறிவைச் 
  சொல்லார்மனத்தாரிறந்திருந்த துரியாதீதப்பெரும்பாழைச் 
  சொல்லாலுரைக்கப்படுங்கொல்லோவென்போல் வந்ததூயோனே. (9)

                  (வேறு.) 
    ஆகையாலிதுவேசீவ்வறிவையுங் கடந்தமுத்தி 
    யோகமாமறையின் சென்னியுபநிடதத்துமீதே 
    சேகருமனத்தாயிந்தத்தேகம் போமளவுநிற்பாய் 
    சோககடகத்தால் 55 வெட்டித்துமியெதிர்பிறவியெல்லாம். (10)

            ஆ திருவிருத்தம் -230. 
          சுவானுபவ்விலக்கணம் - முற்றிற்று. - 

              குருதோத்திரம். 
    காயனையகாயனாக்கிக்கண்டனைய கண்டனாக்கிப் 
    பேயனைப்பிரமமாக்கிப்பிறப்பிறப்பிலாமையாக்கித் 
    தாயினுமினியனாகிவந்தெனைத்தகைந்தாட்கொண்ட 
    தூயசற்குரவநின்னைத்தொழுந்தொறுங்களி துளங்கும். (1) 
                  (வேறு) 
ஆழ்ந்தேகிடந்தேன்பவக்கடலிலனககாலம்புகலின்றிச் 
சூழ்ந்தேகருணையாலெடுத்துத்துரியக் கரையிற்சேர்த்தாய்க்கு 
வீழ்ந்தே வீழ்ந்தேபணிந்திறைஞ்சிவியந்து வியந்துமகிழ்க்கடலில் 
வாழ்ந்தேன் வாழ்ந்தேன் கைம்மாறுகாணேன் வலியத்தடுத்தாய்க்கே. (2) 
                  (வேறு.) 
    மும்மாயைக்கப்பால்முழுப்பாழுக்கப்புறத்தே 
    சும்மாவிருக்கத்துரியங்கடந்தநலச் 
    சிம்மாதனமளித்த சிவஞானதேசிகற்குக் 
    கைம்மாறு போதமலாற்காணேன் கடையேனே. 3

    உண்ணாத சோறுமுடுக்காதவத்திரமும் 
    பண்ணாதபாயும்படுக்காதநித்திரையு 
    மெண்ணாமனுவுமியம் பாததோத்திரமுங் 
    கண்ணாலளித்தார்க்குக்கைம்மாறுகாணேனே. 4

    தீராதவைம் பொறியுந் தீர்த்துச் சிவமாக்கிப் 
    பேராதவானந்தப்பிறங்கன் மிசைவைத்தாருக் 
   காராதவன் பாலகங்குழைந்துமெய்யரும்பிப் 
   பாராததெண்டனிட்டுப்பத்திசெயக்கடவேனே. 5

        கல்லாவின் கீழிருந்தகண்ணுதலென்போலாகிக் 
        கல்லாவுலகிற் கருணையொடும்வந்தெனக்குச் 
        சொல்லாத சொல்லையொருசொல்லாலுரைத்தார்க்குச் 
        சொல்லாதசொல்லானற்றோத்திரங்கள் செய்வேனே. (6) 
                    (வேறு) 

ஞான ஒன்றென்றும்பலவென்று முபயமென்று முருவென்று மருவென் 
றுமுறைவதென்று, நன்றென்றுந்தீதென்று  ஞான
யென்று மென்றுஞேயமென்றுஞாதாவென்று, மன்றென்றுமாமென்றுஞ் சம 
யப்பேய்க ளறைகின்ற பிணக்குவழியனைத்துநீத்துக், குன்றலிலாவா 
னந்தக்குரவநின்னைக்கும்பிட்டேனென்பிறவிபின்பிட்டேனே. (7)

  செறிவாகுமலமற்றுமாயையற்றுத் திரிவிதமாங்கன்மமலத்திரளு 
  மற்றுப், பிரிவாகுங்குணமற்றுக்குறியுமற்றுப் பேதாபேதங்களற்றுப் 
  பேச்சுமற்று, வறியமையறிவற்றுவனந்தகோடு யாதவர்போலெழு 
  கின்றபரையுமற்றுக், குறியாதவானந்தக்குரவநின்னைக் கும்பிட்டே 
  னென்பிறவிபின்பிட்டேனே. (8)

   பொய்யா தபுனன் மூழ்கிச்சாந்தமென்னும் பொடிபூசிக்கருணை 
  மணிபுனைந்தெஞ்ஞான்று, நையாதவுளமெல்லாநையநாவா னவி 
  லாதமாமனுவைநவின்றுமேலீ, ரையாறுமாறாறுங் கடந்துநின்ற வானந் 
  தத்தேசிகநின்னடிப்போதுக்கே, கொய்யாதமலர்கொண்டங் கரிச்சித் 
  தேத்திக் கும்பிட்டேனென்பிறவிபின்பிட்டனே. (9)

   ஆசிலன்னமயகோசந்தாண்டியப்பா லழியாதபிராணமயகோசந் 
  தாண்டி, மாசின்மேனோமயகோசந்தாண்டியென்று மாராவிஞ்ஞானமய 
  கோசந்தாண்டி, நாசமுறுமாந்த கோசந்தாண்டி ஞானவடிவாய்நின் 
  றகுரவநின்னைக், கோசமெலாமற்றசிவகோசியாகிக் 
  னென்பிறவிபின்பிட்டேனே. கும்பிட்டே (10)

    தத்துவங்களாறாறும்பின்னிட்டப்பாற் றத்துவா தீ தமாந்தன்னைக் 
  கண்டு, பற்றொன்றுமில்லாதபரையைக்கண்டு பரிந்துபரிந்துள்ளுரு 
  கியதிலொடுங்கி, வெற்றவெறுமானந்தவுருவங்கண்டு விழையாமல்
விழைந்தப்பால் வெளியைக்கண்டு, குற்றமெலாமறநீத்தங்கறிவாய் 
நின்று கும்பிட்டேனென்பிறவிபின்பிட்டேனே. 11
                  (வேறு. 
    பாசத்தாற்பாசியாகிப்பலபலபிறப்பிற்சென்று 
    பாசத்தாற்பிறந்திறந்து பலபலபோகந்துய்த்த 
    பாசத்தைத்தாளாற்போக்கிப்பதித்துவம்பதித்தநாதன் 
    பாசத்தைநினையுந்தோறும் பசுத்து வங்கழலுமன்றே. 12

    ஒன்றென்பாரொன்றேயென்கவோரிரண்டென்பாரென்க 
    நன்றென்பார்நன்றேயென் கநவையென்பார்நவையேயென்க 
    வின்றென்பாரென்கவன்றியுண்டென்பாருண்டேயென்க 
    வன்றி தாமென்னாமுத்தியடியனேற்களித்தானாசான். 13

    வடக்குளேதெற்குந்தெற்கில் வடக்கையுங்காட்டுவார்போ 
  லுடற்குளேயுயிருமந்தவுயிர்குளேயுணர்வுங்காட்டி 
நொடிக்குளே மலமகற்றி நுண்ணுணர்வாக்கி மீட்டும் 
 விடக்குளேபிறவாவண்ணங்காத்தருள்விகிர்தபோற்றி. 14

    அய்யமாங்காட்டைஞானவழலினாற்றகித்துப்பாதச் 
    செய்யதாமரைகள் சூட்டித்திவ்வியமனத்தனாக்கி 
    மெய்யடியாரைக்கூடும்விவேகமும்மெய்ம்மையில்லாப் 
    பொய்யடியாரைக்கூடாப்புந்தியுந் தந்தாய்போற்றி. 15
                  (வேறு.)
தன்னுளுலகுமுலகதனிற்றானுமாகிச்சகசமாய்ப் 
பின்னையபினையெனுஞ்சத்திபிரியாதிருக்கும்பிரமமா 
யுன்னுமுணர்வுக்குணர்வாகியுருவாயருவாயுபயமுமா 
யென்னுளிருந்தபரசிவத்தைநின்னாற் கண்டேனிறையோனே. (16)

மண்ணை விழுங்கிப்புனலகனலை விழுங்கிவாயுதனை விழுங்கி 
விண்ணைவிழுங்கிவெண்மதியை விழுங்கிவெய்யோன் றனை விழுங்கி 
மொண்ணையியமானையும்விழுங்கிமுற்றும்விழுங்கிப்பற்பலவா 
மெண்ணை விழுங்கியிருந்ததனைநின்னாற்கண்டேனிறையோனே. (17)

            ஆ திருவிருத்தம் -247. 
            குருதோத்திரம் - முற்றிற்று. -


            விம்மிதவிலக்கணம். 
    காகுத்தன்பதந்தாக்கக்கல்லெழிற்பெண்ணானாற்போ 
    லாகத்தனாய்க்கிடந்தவடியேனைப்பதந்தாக்கிப் 
    பாகத்தை வருவித்துப்பழமறையின் பொருடேற்றி 
    மாகத்தனாக்கிவித்தோய்மறவேனுன்றிருவடியே. 1

    எல்லாருங்களி துளங்கவிரும்பையிரும்பொன்னாக்கி 
  நல்லார்கடொழுந்தே வாய் நாட்டுகின்ற ஞாயம்போற் 
    கல்லாதபுலையனைக்கருணையினாற்கடைக்கணித்துப் 
    பொல்லாதபரப்பிரமமாக்கினையென்போல்வந்தே.2 
                  (வேறு) 
      அனாதிகேவலத்தினிலழுந்துமேற்குநீ 
      மனாதியகருவியான்மலத்தை நீக்கியே 
      சனாதவின் பந்தனைத் தந்ததேசிக 
      கனாவிலுமுன்னையே கருதற்பாலனே.3
                  (வேறு) 
    ஊழையொதுக்கியொருசொல்லாலானந்த 
    வாழ்வைப்பெருக்கிமலகன்மமாயையறப் 
    பாழிற்குடியேற்றிப்பரமசுகமெற்களித்தோன் 
    வாழிநெடுங்காலமாணாக்கர்க்கருள்புரிந்தே. (4)

    பாரோரும்விண்ணோரும் பங்கயன் மாலிந்திரனு 
    மாராய்ந்துங்காணாதலம் வந்துளந்தளா 
    வாராமல்வந்தெனக்குமாறா தபேரின்பந் 
    தாராமற்றந்தார்க்குத் தனுவாதிகைம்மாறே. (5)

            ஆ திருவிருத்தம் -252. 
          விம்மிதவிலக்கணம் - முற்றிற்று. 

          நூலருமையிலக்கணம். 
    மைப்பொலிமிடற்றோன் சொன்னவாதுளாகமத்திற்சொல்லு 
    முப்பொருள்விளக்கத்தாலேமும்முலங்களைந்தொன்றாய 
    சிற்பதம்பெறுவர்மீண்டுஞ்சென்மவாரணியங்காணார் 
    தற்பரஞானத்தோர்கள் சமயசாத்திரமிகழ்ந்தே. (1)

ஆகையாலிந்தநூலுக்கதிகாரி குடும்பந்துன்ப 
    சாகரமெனத்துறந்து சற்குருசாமிபாத 
  மோகமீ தூர்ந்திழுக்கமுறுக்கவிழ்கமலந்தேடுங் 
    தாகவண்டனையனாகித்தவிப்பவன்றானேயம்ம. 2
                  (வேறு.) 
      இந்நூலைப்பருவமிலார்க்கீயற்கவீந்தக்காண் 
    முன்னூலைச்சூத்திரர்பான் மொழிந்தகரி சுறுகின்றாய் 
    நன்மாலைகுரங்கறியா நலம்போலுஞானத்தைத் 
    துன்மார்க்கரறியாததோற்றம் போலுந்துணிந்தே. 3

      வாழிசுயம்பிரகாசப்பெயரோன்மாணாக்கர் 
        வாழியெனத்தூக்கிமதி தந்தவார்கழல்கள் 
        வாழியொருமொழியான் மயக்கறுத்த திருச்செவ்வாய் 
      வாழியருள்கொழிக்குந்திருவதன மண்டலமே. 4

            ஆ திருவிருத்தம் - 256. 
          நூலருமையிலக்கணம் - முற்றிற்று. 

          பதிபசுபாச விளக்கம் - முற்றிற்று. 
                திருச்சிற்றம்பலம். 
 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin