மெய்யைப்பொய்யென்றான்வெளியை நல்லவீடென்றான்
சைவத்துரைகாழிச்சம்பந்தன் - ஐயமற
நின்போதம்போமிடத்தேநீயேசிவமென்றா
னென்போதத்துள்ளேயிருந்து. 1
இருந்தபடியிருந்தாலிறையுருவந்தோன்றும்
பொருந்துமலமிம்மையிலேபொன்று - மிருந்தபடி
யேதென்றங்குன்னியிரண்டாட்டுவார்க்குண்டோ
போதமுண்டபிள்ளைபுகல். 2
புகலிக்கரசேயுன்பொய்ப்போதம்போனா
சகலமறுங்கேவலமுஞ்சாயும் - அகலாத
நல்வினையுந் தீவினையுநட்டமாமென்றுரைத்து
மொல்காவென் போதவொழுக்கம். 3
போதவொழுக்கமென்றுபொன்றுங்கொல்சம்பந்த
நாதனேயுள்ளபடி நாட்டுவாய் - பேதா
யறிந்தவறிவெல்லாநாமன்றறிந்திட்டாங்கே
செறிந்தறிவாய் நிற்கிலிருந்தேர். (4)
தேரிலதிதூரமெனச்சிந்தை விடாதையென்றா
னோருருவாயினையென்றவும்ப - னோரு
மறிவேயறிவென்றானவ்வறிவுக்கப்பா
லறியோமறிவையறிவால். (5)
அறிவாலறியப்படும்பொருளேயாகிற்
பொறியாலறியப்புகாவோ - பொறியாரக்
கண்டதெலாமாயையெனக்கண்டித்தான் மெய்ஞ்ஞான
முண்டதிருச்செவ்வாயானுற்று. (6)
உற்றுணரினீயெயுயர்பிரமமென்பதுவு
மற்றசிவன்றானாய்வகுப்பதுவு - முற்று
மிறந்தவிடத்திரண்டுமேகமேயென்றான்
சிறந்த சீகாழிவருதே. (7)
தேவே திருஞானசம்பந்த தேசிகனே
யோவிலெழுத்தஞ்சினையுமோ தாய்கொ - லாவியார்
பின்னிரண்டைத்தள்ளிப்பிரியாதவானந்த
முன்னிரண்டைக்காணுதன்முத்தி. 8
முத்திநடநத்தைமொழி ஞானசம்பந்தா
சத்திதிருவம்பலத்திற்றான்றானாய்ச் - சுத்தவுயிர்
காணமுயலகனைக்காலான்மிதித்தருளித்
தானுநடம்புரிவான்றான். 9
தானேசிவமான சத்தியஞாநாநந்த
மோனநிலைசொல் காழிமுன்னோனே - ஞானிகடம்
முள்ளமாகாயமாயொன்றாயவானந்த
வெள்ளமாய்நிற்குமவர்மெய். 10
நிராமயவந்தாதி - முற்றிற்று.