உபதேசமரபு கர்ணபாரம்பரை.
தெயவ சிவமேவம்பரந்தெய்வம்) என்னுங் கருத்தைப்பற்றத்
மென்பதோர் சித்தமுண்டாகிச் சிவனென யானுந்தேறினன் றேறிய
காலைத் தேயத்துளனோவன்றித் தேயத்திற் சிறந்த சினகரனே
வென்று மனந்தடுமாறி மயங்கியகாலை யறிவிடை மறைந்த வமலனோர்
குருவாய்ப் புவனியிற் சேவடி தீண்டிப் போதித்த வான்மொழிக்கு
அருத்தம் பூதப்பழிப்பிலும் பொறியறவுணர்த்தலு மந்தக்கரண வடுக்
கழிமுடிவினும் கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்
டேன் கண்டபெருமிதத்தா னிறும்பூதிட்டு மாலயனாதியை யலர்தூற்
றுக் கூற்றுக்குணஞ் சிலவருமாயிற்று,
''நாடிநாரண னான்முகனென்பவர் தேடியுந்திருந்துங் காணவல்லரோ மாடமாளிகை சூழ்தில்லையம்பலத் தாடிபாதமென் னெஞ்சுளிருக்கவே'- என்றாரின்னும் பற்றத் தேடிக்கண்டுகொண்டேன் றிருமாலொடுநான்முகனுந்
தேடியுந்தேடொணாத் டாணாத் தேவனையென்னுள்ளே
தேடிக்கண்டுகொண்டேன் "
என்னுமிக் கூற்றுக ளுபதேசமரபு.
வைதிகமரபு.
வையச்சொல், வழக்கச்சொல், வேதச்சொல், விதிச்சொல்
இந்த நான்கானும் வற்புறுத்திக் கூறுவான் றொடங்கினார். உலக
வெறுப்பு முடல்வெறுப்பு மீக்கொண்ட மாணாக்கனுக்கு ஞானதேசி
கர் திட்டாந்தமுகத்தால் அனித்தியதரிசனம் வையச்சொல் மேல்
வைத்துக் காட்டுகிறவண்ணம், (நடலை வாழ்வுஞ் சுடலைக்குடியிருப்பு
மென்றும், காணப்பட்டதெல்லா மழியப்பட்டதென்றும், சாகாத
நாட்டி லோலை வாங்கிவந்தோமோ வில்லையேயென்றும், இன்றைக்
கோ நாளைக்கோ வின்னமரை நாழிகைக்கோவென்றும், வரவிட்ட
வன் றரவிட்டால் நில்லாதேயென்றும், நிலத்திலெழுந்த பூண்டு நிலத்
திலே மடியுமென்றும், நேத்திருந்தாரின்றைக்கு நீறானாரென்றும்,
திட்டென விழுந்து பொட்டெனப்போம்) என்றும், இவ்வாறு வரு
மனந்த வையச்சொல்லாற்றெளியக்கடவை. இந்தச்சரீரம் நீயல்ல;
நீ யசரீரி. அகாயன் ஆத்மாவென்று வேதம் வெகுவசனமாகச் சொல்
லும். இது என்ன நுபவத்துக்குப் பற்றவில்லையே யென்பாயேல்,
வழக்கச்சொல்லாற் றெளியக்கடவை. (நான் சாட்சியாயிருக்கிறே
னென்றும், தன்னை விடப்பிரபஞ்சமில்லையென்றும், தானாய்நின்று
தனமாய்ச்சொரியுதென்றும், அஞ்செழுத்தும் பாவனையு மவனே யிவ
னென்றும், தானே சிவமல்லாற் றனிச்சிவம் வேறில்லையென்றும்,
சீவனுக்குஞ் சிவனுக்குஞ் முதற்சிகாரச் சுழியாகிய நீயன்றி வேற்
றுமையில்லை யென்றும்,
''அறிவேசிவமென் றறிந்திலாய் கொல்லோ "
வென்றும், இவ் வழக்கச்சொல்லால் ஆத்மா நாமென்றறியக்கட
வாய். இங்ஙனஞ் சொல்லிய வநுபவம் சம்பவமாகவில்லையே யென்
பாயேல், வேதச்சொல்லாற்றெளி, அஃதெங்ஙனம்? என்னில்,
66 பாசபத்ததே சீவா பாசமுத்தேசதாசிவா " எ - ம்.
" திட்டேபூர்வமாத்மா யேகமேவா " எ - ம்.
" சரீரபின்னம் பரமாத்மனேகம் " -- எ - ம்.
" ஏகப்ரம்மம் " -- எ - ம்,
" சர்வசாட்சி சிவோகம்'- எ -ம்,
பிரத்தேகாத்ம சிவோகம் " - எ - ம்,
சமனாந்தம்பாச்சால முன்மனாந்தம்பரசிவா " -எ - ம்.
" சிவோதாதா சிவோபோக்தா " -எ - ம்,
66 அன்னம்ப்ரம்மா ரசோவிஷ்ணு
போக்தாதேவோ மஹேஸ்வரா " -எ - ம்,
கர்த்தாபோக்தா செனார்த்தனா " - எ - ம்,
ஆயிரமுகத்தாலு மகலச்சொல்லிய வேதச்சொல்லா லீசுரருண்
டென் றறியக்கடவாய். சமுசய மென்னைவிட்டு நீங்கவில்லையே
யென்பாயேல், விதிச்சொல்லவேண்டுமாறு வரும். அதனாற்சமு
சயம் நீங்கக்கடவாய். அஃதெங்ஙனம்? என்னில்,
சீவனைச்சிவனாய்த் தெளியார்களே'- எ -ம்,
தன்னையர்ச்சிக்கத் தானிருந்தானே'- எ - ம்.
" தேவணங்கோ மினிச் சிந்தை தெளிந்தனம்
போய்வணங்கும் பொருளாயிருந்தோமே " - எ - ம்.
" நானே நீயாய் நீயேநானாய் நானாவேதப்பொருளாலு
நாடாவீடாயீடேறாதே நாயேன்மாயக்கடவேனோ " -எ - ம்,
" நிச்சமென்னெஞ்சின்மன்னி யானாகிநின்றனனே'- எ - ம்,
நீராயுருக்கியென் னாருயிராய் நின்றானே " -எ - ம். 66
''யானுந்தானாயொழிந்தானை யாதுமெவர்க்குமுன்னோனை " -
பசுவானு மீசனே " -எ - ம்,
" என்னகத்துளென்னையன்றி யாதுமொன்று கண்டிலேன்'பாவமுமறனுமொத்துப் பக்குவம்பருவமுற்றிங்
காவியைம்புலனைப்பற்றா தகமுகமாகியென்று
மோவியம் போன்றிட்டங்க னுணருணராமைபோக்கிற்
வனுஞ்சிவனும் வேறோ திருப்புலிவனத்துளானே "
என்றும், இங்ஙனஞ் சொல்லிப்போந்த மாற்றத்தால், நீயே
அறிவறியாமை இரண்டிற்குஞ் சாட்சியாகையால், இந்த அறிவாய்ச்
சதாகாலமு நிற்கக்கடவாய் சாமியம்,
(பிரமசாரியார் விரதமக்கினியில் வீழ்தல் பிண்டோதக் கிரிகை
யொடு பிரவுதகநிவிர்த்தி, புரியுமருச்சுனைகள் வரைபாய்தல் சுழிபாய்
தல் புண்ணியபாவங்க ளருணியம்முபவாசந், தெரி சீவன்முத்தனுக்கு
வேண்டுவதேயில்லை சிவஞானவமுதபானம் பண்ணிக்கொண்டு, பர
சிருட்டிக்கன் மத்தி லகப்படாதென்றும் பரமசிவனைப்போல நித்தனாயிருப்பன்.)
சைவமரபு. ஆத்மாவைச் சிவனென்று சொல்லப்படுமோவென்னுஞ்
சமுச யத்துக்குச் சிற்பன்முதலிய வுவமைகள் வருமாறு; சிற்பன், சிலை,
தெய்வம் என மூன்றாம். இதிற் சிற்பனைப்போல ஞாநாசாரியர்,
சிலையைப்போலச் சீவன், தெய்வத்தைப்போலப் பரமசிவம்.
சிற்பன் சிலையைத் தெய்வவுருவாய்த் தியானித்துச்
சாங்கோபாங்கயமாய்ச் சிற்ப நூலைத் தழுவிச் செய்தமையாற்
சிலையென்பது மறைந்து சிவமென்பது பிரகாசித்ததாம். ஆகையால்,
சீவபாவனையை யதார்த்த மாய் விடக்கடவன். சீவபாடாணத்தைச்
சிவமேலிட்ட வாசாரியா கிய சிற்பன் சீவபாவனையைச் சேர்த்து
மகாவாக்கியத்தாற் சிவம் நீயானா யென்றமாத்திரத்தே சிவமான
தன்மையாற் சீவபாவனையை யெப்பாலும் நாத்தியென்பதே சித்தாந்தம்.
வேடச்சேரி, வேடர், ராசாப்பிள்ளை, வேட்டைவனம், வேட்டைநாய்,
வேடக்கோலம், ஆக -6. வேடச்சேரி - யஞ்ஞானம், வேடர் - பஞ்சதன்மாத்திரை,
ராசப்பிள்ளை - ஆத்மா, வேட்டைவனம் - முலகம், வேட்டைநாய்-
அந்தக்கரணம், வேடர்கோலம் - சரீரம்; ஆத்மாவாகிய சிறுபிள்ளை,
அஞ்ஞானமாகிய வேடச்சேரியை முன்னைவினையா லடைந்து, நாம்
சைதன்னியனென்பதை மறந்து, வேட்டைவனமாகிய வலகத்தை
யடைந்து, வேட்டைநாயாகிய வந்தக்கரண வசத்தனாய்த் தசேந்திரிய
துவாரத்தினால் வேட்டைக்காரராகிய தன் மாத்திரையோடுங்கூடித்
தயிலதாரைப்பிரவாகனாதிய வேடக்கோலச் சரீரத்தைத் தழுவிச்
சீவாத்மாவென்னும் நாமஞ்சிறப்பவந்தான். இது போமாறு. ஞான்
வரசன், ஞானவேட்டையாடுவான் காலைக்கண்டு, சீவராச வேடப்
பிள்ளாய் நீ நம்மினத்தாய்; அஞ்ஞானவிளமையா லென்னை மறந்
தாய்; என்வண்ணமே நின்வண்ணம் அன்னியர்வண்ணம் நின்வண்ண
மன்று. அந்தக்கரண ஞாளிசம்பாடன முனக்கடாதென் றநுக்கிர
கித்தார். சைதன்னியத் தராபதியாக்கின தன்மைபோலச் சீவவேடு
நீக்கங் கண்டுகொள்க. சாமியம், --
மன்னையுமறந்துமிக்க வனசரவடிவமாகித்
தன்னையுமறந்திருந்த தனயனைப்போன்று நீயு
மென்னையுமறந்தைம்போத வெயினர் தம்வடிவமாகி
யுன்னையுமறந்தால்நீயென் னுருவெனவுணர்ந்துகொள்ளே.''
மன்னவன்றன்மகன் வேட ரிடத்தே தங்கி வளர்ந்தவனை
அறியாது மயங்கிநிற்பற்'
தானாக்கி மழரடிக்கீழ்வைப்பன்'"
கன்மவொப்பு. நல்வினையுந் தீவினையு மொன்றாகக் காண்பது.
அஃதெவ்வாற்றானென்னில், பொன்விலங்கும், இருப்புவிலங்கும்
பிரகாசம் அப்பிரகாசம் வேறன்றித் துக்கமிரண்டிற்குஞ்சரி. பொன்
விலங்கைப்போலப் புண்ணியம். இருப்புவிலங்கைப்போலப் பாவம்
விலங்கார்ப்புண்டவனைப்போலச் சீவன். விலங்கைப் பூட்டினவனை
ப்போலச் சிவன். துக்க த்தைப்போல அஞ்ஞானம். இந்த அஞ்ஞா
னத்துக்குச் சாட்சிபூதம் நாமென்றறியின் அஞ்ஞானமுமில்லை.நல்
வினை தீவினையாகிய விலங்குமில்லை. அதற்குமுன்னே நரகசொர்க்க
முமில்லை. இதற்குச் சாமியம்,
''ஒன்றுடனுந்தோய்வில்லான் என்றுநினைந் தடிக்கடியும்
பிரமமென நோக்குதலேயியல்பதாமே நித்தனாம்பாமீசன் யானென்று நிச்சயிக்கின்
முத்தனலனெனினு மவன்முத்தனாம்'-
'பூவும் புகையுங் கொண்டேத்திப் புறம்பே போய்ப்
பாவனையால் வாளா பரிசிழப்ப - ராவா
நமையுறப் பார்க்கிற் றெய்வ நாமேயா மென்று
தமையுறப் பாராதவர்க டாம்'
ஆகநாமல்லவிந்த வைம்பொறிநாமேயல்ல "
வேகனே நாமென்றுன்னு மிருடிகளிதயத்துள்ளாய்
பாகமாமுமைமணாள பசுபதிபிறவிவேண்டேன்
சேகறுமுத்திவேண்டுந் திருப்புலிவனத்துளானே''
மாயையென்பது மனம். இந்த மனமாயையிலே அண்டபிண்
டம் அரிகரப்ரம்மாதி நவந்தருபேதமு முண்டாயிற்று. இந்த மனஞ்
சற்குரு கடாட்சத்தா லிறந்தபோது எல்லாமிறந்தது. அறிவாய்நின்றால் மனமில்லை.
மனமாய்நின்றா லறிவில்லை. அறிவேசிவம்; சிவமே
யறிவு; மனமே மாயை : மாயையே பிரவஞ்சம்; பிரவஞ்சமே சரீ
ரம்; சரீரமே தத்துவம்; தத்துவமே நாதம்; நாதமே விந்து, இப்படிச்
சிருட்டிமார்க்கங் காணக்கடவை. சாமியம்,
அறிவினிலகமுண்டாகி யகத்தினின்மனமுண்டாகிப்
பிறிவருமனத்தின்மாயை பிரவஞ்சமாயை தன்னின்
மறிவுலகத்தினாக்கை வந்தவிம்மாயமெல்லாஞ்
செறிதராதருளிச்செய்யாய் திருப்புலிவனத்துளானே "
ஆகாசவுவமைகள் வருமாறு. ஆகாசம், கடங்கள், கடாகாசம்,
கடசலம், கடசலவழக்கு, ஆக- ஆகாசம்போலச் சிவன். கடகங்
களைப்போலச் சரீரம். கடாகாசம்போல வாத்மா. கடசலத்தைப்போல
வந்தக்கரணம். கடசலத்தழுக்குப்போலப் பஞ்சபாசம். இந்தச் சிருட்
டிக்குச் சங்காரமுண்டோ? உண்டு, எப்படி? சூரியன் சந்நிதானத்
தில் சலம்வறண்டு அத்தோடே அழுக்கும்போம். கடாந்தத்திற் கடா
காசம் மகாகாசமாம். புண்ணியபாவம் ஞானிக்குண்டோ? வில்
லையோ? உண்டுந்தா னில்லையுந்தான். ஆனாலைதீகமோ? அன்று.
பின்னையெப்படி?
ளானே " இன்பமுந்துன்பமு மில்லானேயுள்ளா
என்பதைப்பற்றி வந்தனவாம்,
" மெய்யைப்பொய்யென்றான் வெளியைநல்ல வீடென்றான்
சைவத் துரைகாழிச் சம்பந்த- னையமற்
நின்போதம் போமிடத்தே நீயே சிவமென்றா
னென்போதத் துள்ளே யிருந்து "
(எ - து )மெய்ப்பேர்கொண்ட சரீரம் நீயல்ல அது பொய்யென் றான், இருவிதமாயையு மிறந்தவிடத்திற் பிரகாசித்த சூனியமே நன்
மையுடைய வீடென்றான், வைசமயத்துக்கு ஞானமன்னன் சீகாழிச்
சிவஞானசம்பந்தசுவாமியென தையந்திரிபுக எறுக்கும்படிக்குத் தற்
போதப்போக்கே நான் தற்போதமீட்சியே நீயென்றான், என்னறிவி
னுள் ளெழுந்தருளியிருந் தென்றவாறு. (இதுதற்போக்கே சிவமென்று கூறியது.) (1)
இருந்த படியிருந்தா நிறையுருவந் தோன்றும்
பொருந்துமல மிம்மையிலே பொன்று - மிருந்தபடி
யேதென்றங் குன்னியிரண் டாட்டுவார்க் குண்டோ
போதமுண்ட பிள்ளை புகல் " [ மர
(எ - து) சிருட்டிக்குமுன்னுள்ள சுபாவ சைதன்னியமாயிருக்கில்
சுகாதீத சிவந்தோன்றும். தோன்றியவந்நிலையே யநாதிசம்பந்தமான
வாணவ நசிக்கும். இங்ஙனமன்றி இருந்தபடி யெவ்வண்ணமென்று
போதக்கையாற் றடவி யாங்கொன்றுந் தட்டுப்படாமையா லென்செ
ய்யக்கடவேன் றெய்வமேயென்று தெய்வத்தை நொந்து தோத்திர
மாதியவற்றா லிரண்டுபடுத்துவார்க்கு எங்ஙனமுண்டாம், ஞானப்பா
லுண்ட சம்பந்தபிள்ளைப் புகலிடமென்றவாறு. (இது போதத்தை
யழிக்குமுபாயங் கூறியது.
புகலிக் கரசேயுன் பொய்ப்போ தம்போனால்
சகலமறுங் கேவலமுஞ் சாயு - மகலா த
நல்வினையுந் தீவினையு நட்டமா மென்றுரைத்து
மொல்கா வென்போத வொழுக்கம்
(எ - து) புகலியென்னுந் திருப்பதிக்கரசாகிய சம்பந்தசுவாமி,
உன் பொய்ப்போத மிறந்துபோனால் நினைப்பு மறப்புங்கெடும்,
கெடவே சகலங்கெடும், சகலங்கெடவே கேவலமுமிறக்கும்,
இறக்க. வே யிரண்டறப்பின்னியகலாத நல்வினை நாசமாம். அதற்குமுன்னே
தீவினையு நாசமடையுமென்று நீயுரைத்த திருவாய்மொழியைச் சிரத்
தையாற்கொள்ளாத வென்போதத்துக் கென்கொலோ பிரவிர்த்தி
யே யடைவதன்றி நிவிர்த்தியடையவில்லை யென்றவாறு. (இது
அறிந்துமறியாமையைக் கூறியது.)
" போத வொழுக்கமென்று பொன்றுங்கொல் சம்பந்த
தனே யுள்ளபடி நாட்டுவாய் -பேதா
யறிந்த வறிவெல்லா நாமன்றறிந்திட் டாங்கே
செறிந்தறிவாய் நிற்கிலிறுந் தேர் " (3)
(எ - து) பிரவாகனாதியாய்ப் பொய்ப்போத வொழுக்க மெக்கால
எமிறக்குங்கொல்லோ சம்பந்தசுவாமி சித்தாந்தப்படி நாட்ட வேண்டு
மென்ற விண்ணப்பத்துக்கு விடை. யறிவில்லாத சீடனே கேள்
திரிசியவறிவெல்லாஞ் சுபாவ சைதன்னியமாகிய நாமல்லவென்று
நியதி களைந்து, நின்ற சுயம்பிரகாசத் திருக்கே நாமென்றறிவாய் நிற்
பாயேற் போதங்கெடுவதன்றிப் பிறவேதுக்க ளெத்தாலுங் கெடா
தென்பது தானேயாயிற்றென்றறிவா யென்றவாறு. (இது போத
நிரியாணவொடுக்கங் கூறியது..
தேரில்தி தூரமெனச் சிந்தைவிடா தையென்றா
னோருருவா யினையென்ற வும்ப - னோரு
மறிவே யறிவென்றா னவ்வறிவுக் கப்பா
லறியோ மறிவை யறிவால்'' (4)
(எ - து) விசாரிக்கி லிங்ஙனஞ் சொல்லிப்போந்த வறிவு வெகு
தூரம் எமக் கெட்ட மாட்டாதேயென்று சித்தத்தைச் சோரவிடாதே
யென் றருளிச்செய்தான். திருவெழுகூற்றிருக்கையி லோருருவாயி
னையென்ற ஞானசம்பந்ததேவன், அவனருளிச்செய்த தியாதோவெ
ன்னிற் சர்வத்தையும் விசாரித்தறிகின்ற சைதன்னியமே சைதன்னி
யமென்றா னதற்கப்பா லநுபவமில்லை. சைதன்னியவறிவைக்கொண்
டறியவென்றென்றவாறு. (இது) சைதன்னியத்துக்கு மேலநுபவ
மில்லையென்றறிவித்தது : (5)
அறிவா லறியப் படும்பொரு ளேயாகிற்
பொறியா லறியப் புகாவோ - பொறியாரக்
கண்டதெலா மாயையெனக் கண்டித்தான் மெய்ஞ்ஞான
முண்ட திருச்செவ்வாயா னுற்று'
(எ - து) பிரமேயமாய்ப் பூரணவத்துப் பிரமாணமாகாதோ வா
னால் இந்திரிய காட்சிக்குத் தூரமல்லவேயென்ற விண்ணப்பத்துக்கு
விடை. இந்திரியத்துக்கெட்டிய பொருள்களெல்லாந் திரிசியமாயை
யென்று கண்டித்து விலக்கினான் மெய்ஞ்ஞானப்பாலைப் பானம் பண்
ணின திருச்செவ்வாயா னங்ஙனெழுந்தருளி வந்தென்றவாறு. (இது
திரிசியமாய்க் காணப்பட்டவையெல்லா மாயாகாரியமென்றது.)
" உற்றுணரி னீயே யுயர்பிரம மென்பதுவு
மற்றசிவன் றானாய் வகுப்பதுவு- முற்று
மிறந்த விடத்திரண்டு மேகமே யென்றான்
சிறந்த சீகாழி வருதே'மர
(எ - து) சிறப்புடைய சீகாழி ஞானசம்பந்த தெய்வம்பொருந்தி
விசாரிக்குமிடத்துத் தத்துவமசி மகாவாக்கியமும், சிவத்துவமசி மகா
வாக்கியமும், வேதாகமம் வகுத்தகிரமஞ் சமயவாதிகளுக்குச் சம்மதப்
படாது. மாயாபோதமு மஞ்ஞானமு நீங்கிச் சீவபோத மிறந்த
விடத்திலும், தத்துவங்களு மாணவமலமும் நீங்கி யான்மபோத மிற
ந்தவிடத்திலும், வேதவாக்கியமு மாகம மகாவாக்கியமு மாணிக்கமும்
அரதனமும் போலாமென்றா னென்றவாறு. து மகாவாக்கிய
விசேடமுஞ் சமயாதீத விசேடமுங் கூறியது.)
தேவே திருஞான சம்பந்த தேசிகனே
யோவிலெழுத் தஞ்சினையு மோதாய் கொல் - லாவியார்
பின்னி ரண்டைத் தள்ளிப் பிரியாத வானந்த
முன்னிரண்டைக் காணுதன் முத்தி " (7)
(எ - து) தேவனே திருஞானசம்பந்தனென்னுந் திருநாமத்தினை
யுடைய வெமது ஞானாசாரியனே யோர்காலத்து மொழிவின்றி
அஞ்செழுத்தி னுண்மையைத் திருவாய்மலர்ந் தருளிச்செய்யவேண்
டுமென்ற வினாவுக்கு விடை. யகாரமாகிய வாத்மாப் பின்னாகிய நகா
ரமகாரங்களைத் துக்கவேதுவென்று தள்ளி, முன்னாகிய வகாரசிகா
ரங்களை விட்டுப் பிரியாதது வானந்தவேதுவென்று தழுவிக் காணு
தன் முத்திநிச்சயமென்ற தென்றவாறு. தன்றவாறு. (இது பஞ்சாக்கரத்தின்
முத்திநிலை கூறியது.)
'முத்தி நடனத்தை மொழிஞான சம்பந்தா
சத்திதிரு வம்பலத்திற்றான் றானாய்ச் - சுத்தவுயிர்
காணமுய லகனைக் காலான் மிதித்தருளித்
தாணுநடம் புரிவன் றான் " - (8)
எ - து) மோட்ச நடனதரிசினத்தை யான் காணத் திருவாய்
மலர்ந்தருளவேண்டுந் திருஞானசம்பந்த தேசிகனேயென்ற வினா
வுக்கு விடை. வகாரமாகிய சிற்றம்பலத்தின்கண்ணே சிகாரத் திரு
மேனியோடுங் கூடினவனா யகாரவுயிராகிய சுத்தாத்மாக்கள் தெரிசிக்
கும்பொருட்டு ஆணவமாகிய முயலகனை யொருபாதத்தி லூன்றி
மாயையை யொருபாதத்தா லுதைப்பான் றவாநந்தத் தாண்டவராயர்
நடன தரிசனத்தைக் காண்பாயென்றவாறு. (இது பஞ்சாக்கர
சொரூபமாகிய திருவம்பலதரிசன நடனத்தைக் கூறியது.
. தானே சிவமான சத்தியஞா நாநந்த
மோனநிலை சொல்காழி முன்னோனே
முள்ளமா காயமா மொன்றாய வாருந்த
வெள்ளமாய் நிற்குமவர் மெய் " - ஞானிகடம் (9)
(எ - து ஊன சம்பந்தங்களெல்லா மொருவி ஞானசம்பந்தப்
பட்டுச் சத்தியஞானானந்தத்தைப் பெற்ற மௌனயோகிகள் நிறைவு
நிலையைச் சொல்லவேண்டுங் காழித்துரைச்சாமியென்ற வினாவுக்கு
விடை. ஞானிகளுடைய வுள்ளமொன்றையும் பற்ற தாகாசம்போ
ன்று நிற்கும், அவாள் சரீரம் ஏகபரிபூரண வானந்தமேலிட்ட பிர
வாகமாய்நிற்கு மென்றவாறு. உள்ளமாகாயமென்றது பராசத்தியை.
மெய்யானந்த வெள்ளமென்றது சுகப்பேற்றை. (இது அணைந்தோர்
தன்மையையு மானந்தப்பேற்றையுங் கூறியது.) (10)
இந்த நிராமய வந்தாதியின்கண் முன் சொல்லிப்போந்த சிந்
தனை யதிகாரப்பிள்ளையட்டவணை குருமரபு திருமுகப்பாசுர முதலிய
வற்றின் கருத்தெல்லா மடங்கக் காண்பாயாக. (ஒன்றாய் முளைத்தெ
ழுந் தெத்தனையோ கவடுவிட்டு) என்னுங் கருத்தைப்பற்றி விவேக
வுவமைகள் வருமாறு. மனமொன்று, மனத்தைத்தவிர ஆங்காரமா
திகளில்லை இந்தமனந் தானே - 36-96-1008-14-8-5-4-3 என்கின்ற
தத்துவங்களாயும் விரியும். இந்த மனத்தையே சீவனென்பதும், போத
மென்பதும், உள்ளமென்பதும், விவேகமென்பதும், அறிவென்பதும்,
வெகுமுகத்திலித்தனையும், அகமுகத்திற் சைதன்னியமென்பதும்,
பிரமமென்பதும், சிவமென்பதும், இத்தனையும், ஒரு புருடனைத்
தானே நன்மையா னல்லவென்றும், தீமையாற் றீயனென்றும்,
இரண்டுமொத்த கருத்தான் கருத்தான் ஞானியென்று ஞானியென்று வருவதுபோலும்.
சாமியம்,
“ மனந்தானோதத்துவ மானதும்போனது
மனந்தானோ சீவனு மாறாதவீசனு
" [ மர மனந்தானோவித்தனை மாறாட்டமானது மனந்தானோ பின்னையு மாறாதபோதமே
புத்தியாய்ப்பொறிகளாகிப் புலன்களாய்ப்பூதமாகிக்
கத்தனாய்க்காமமாதி குணங்களாய்க்காமியாகிப்
பெத்தனாய் முத்தனாகிப் பேணுவார்பேணநின்ற
சித்தனாய்நின்றதென்னே திருப்புலிவனத்துளானே'
மேலாத்மா சடமென்பாரைப்பற்றி விபரீதவுவமைகள் வருமாறு.
ஆத்மா சடம் அசடம் பிறப்பிறப்படைவனென்பது சித்தாந்தமன்று.
(யதார்த்தவாதி வெகுசெனத்திரேஷியென்றும்,
66 வையகத்திலுண்மைதன்னை வாய்திறக்கவஞ்சினே
னையவைத்ததென்கொலோ நமச்சிவாய நாதனே " - எ - ம்,
சகலகுணசம்பன்ன வேக்குணவீன - என்பதுபோல, ஆத்மாவே
பிடிபடாதேயானாற் சிவத்தைப் பிடிப்பேனென்பது அபத்தம். அத்
துருவமாக்கை துருவமாத்மா. ஆதியாக்கை யனாதியாத்மா. பிரகாச
மாக்கை யப்பிரகாசமாத்மா. இப்படி அனந்த சாமியமுண்டு,
" தன்னையருச்சிக்கத் தானிருந்தானே
"அறிவையறிவது பொருளெனவருளியபெருமாளே சீவனுஞ்சிவனும்வேறோ
திருப்புலிவனத்துளானே''. அறியுமறிவே சிவமுமாம் " நல்லகுலத் திற்பிறந்து நல்லாரைச்சேர்ந் தொழுகி
நல்லறிவு பெற்றுடைய நன்மாணா - நல்ல
சிவம்வேறே யென்றெண்ணிச் சிந்தைகலங் கற்க
சிவமென்ற நீயே சிவம் "
" ஒன்பதுவாய்தலார்ந்த வூரினிலோரைந்தாய
துன்பமிலமைச்சரோடுஞ் சுகதுக்கத்தேவரோடு
முன்பினோடுறவரோடு முற்றுநீயிருந்ததென்னே
செம்பொனார்மாடுநீடு திருப்புலிவனத்துளானே
" பல்லுயிராய்ப் பார்தொறு நின்றாய்போற்றி
பற்றியுலகை விடாதாய்போற்றி " -
இன்னஞ் சமுசயமுண்டானாற் சர்வக்கியானோத்தரத்திற் சமு
சயநிவிர்த்தி கண்டுகொள்க. ஆதிமூலமென்றழைத்த யானைக்கு முன்
வந்ததார்; தூணிலுமிருப்பன் றுரும்பிலுமிருப்பனென்ன வந்ததார்;
துருபதைக்கு மாளாத்துகில் கொடுத்ததார்; அருச்சுனனுக்கு மெய்ஞ்
ஞானம் போதித்ததார்; கல்லாலின்கீழ் சனகாதியருக்குப் போதித்
ததார்; முப்புரதகனம்பண்ணி மூவரைக் காத்ததார்; மார்க்கண்ட
ருக்காக வந்தவன்யார்; தேவர்களுக்கு ஞானம் போதித்ததார்; ஆகாச
த்தி லாகாயபுருடனாய் நின்றவன்யார்; நான்கு முகத்தாலும் நான்கு
வேதத்தைப் புகன்றவன்யார்; இந்த வதிட்டானத்தைப் பற்றிச்
செய்வதெல்லாம் பராபரவத்துவே யென்றறிந்து அரிகரப்பிரமாதிக
ளென்னும் பிணக்கை யுள்ளபடி விடக்கடவை. இதற்குச் சாமியம்,
மூலமென்றழைத்த முளைக்கொம்பியானை
வருத்தந்தீர்ப்பான் வந்தவனெவனோ
தூணிலுமிருப்பன் றுரும்பிலுமிருப்ப
னெனுமழசொல்லுக் கெதிர்ந்தவனெவனோ
துகிலுரிகாலைத் துருபதன்மகட்கு
மாளாத்துகிலாய் வருத்தினனெவே
வருச்சுனர்க்காக வமரிடையிருந்தாங்
குணர்மெய்ஞ்ஞான முரைத்தவனெவனோ
வவனே பிரம மென்றறிமன்னே " -
" கல்லாலின்கீழ்க் கடவுளாகிப்
பொல்லாஞானம் புரிந்தவனெவனோ மாமலைவில்லாய் வலியவர்புரங்க
ணீறெழவொருக்கி நின்ற மூவரையுஞ் சேவடி நீழலிற் சேர்த்தவனெவனோ
காலனைமாட்டிக் கவின்சிறுபாலன் மரணந்தவிர்ப்பான்
வந்தவனெவனோ வ்வனே பிரம் மென்றறிமன்னே 39 அதிதிதன்மைந்த ரலமருகாலைப்
பிரமகீதையைப் பேசினனெவனோ
சிதாகாயத்திற் றிருவுருத்தாங்கி
மறலியைமுனிந்த வரதனெவனோ
வரன்முறையுலகம் வயின்வயினுதிக்க
நான்முகத்திருந்து நான்மறையுரைத்தன்
றுபநிடதத்தி லொளித்தவனெவ
வ்வனே பிரம் மென்றறிமன்னே''
தீக்கை விபரம் வருமாறு : சமயம் - தீரத்துறத்தல்; விசேடம்- பற்றறநிற்றல்;
நிருவாணஞ் - சிவன்றானாதல்; அபிடேகம் - ஆ ே மென்பதையுமறத்தல்.
பஞ்சகிருத்திய விபரம் வருமாறு : அநுக்கிர கம் - சோகம்பாவனை;
திரோபாவம் - முன் சீவனாயிருந்தோமென்ப - தை மறத்தல்;
சங்காரம் - குலகோத்திரவபிமானம், தேகாபிமானம்,
பசுசாத்திரவனுட்டிப்பு, இன்னதேசம், இன்னவருணம், இன்னான்
சந்ததி, இன்னகிருத்திய மென்பதை யறவும் விடுத்தல்; திதி - சற்ச
னசகவாசம், சிவோகமென்பதை நாடோறும் பயிறல்; தோற்றம்
அண்டாண்ட பகிரண்டம் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகர் தா
மாய் நிற்றல்; சீவகாருண்ணியம்- சிவாநுக்கிரகம், சிதேந்திரியபதிகர
ணம், சுவானுபூதிகம், எண்குணம் இவையுடைத்தாதல்; சவுசாதியா
றும் வருமாறு : சவுசம் - உட்கரணசுத்தி புறக்கரணசுத்தி; பற்கொ
ம்பு - நிதானம்; ஸ்நானம் - நாம் நிராமயமென்று மகாவாக்கிய சிரவ
ணம்பண்ணல்; அநுட்டானம் - நாமறிவென்பதை மறவாமை; பூசை-
நாமெங்குமிருக்குஞ் சைதன்னியமென்று தெட்சணாமூர்த்தியைத்
தியானித்தல்; போசனம் - விசுவத்தையெல்லாஞ் சாப்பிட்டுத் தான்
மீதியாய்நிற்றல்; திரிகரணசுத்தி வருமாறு : மனம், வாக்கு, காயம்
நாம் சைதன்னியமென்று தேறலே மனோசுத்தி; நாம் சைதன்னிய
மென்பதற் கடையாளமாகச் சிவோகம் பாராட்டல வாக்குச் சுத்தி;
நாம் சைதன்னியமென்பதை மறவாமல் அங்க கரந்நியாசங்களால்
விளக்கலே காயசுத்தி; இதற்குச் சாமியம்,
" மானிடராக்கை வடிவுசிவலிங்க
மானிடராக்கை வடிவுசதாசிவ
மானிடராக்கை வடிவுசிதம்பர
மானிடராக்கை வடிவுதிருக்கூத்தே
விபூதி, ருத்திராட்சம், செபம், சின்முத்திரை, சமாதி, நமஸ்காரம்,
கும்பிடு ஆக வேழுக்கும் விபரவம்; விபூதி - பசுமலமாகிய பசுபோதத்
தை நீறாக்கித் தரித்தல்; ருத்திராட்சம் - சைதன்னியம் நாமென்ப
தற் கடையாளமாகச் சோகம்பாவித்தல்; செபம் - அவனானென்னும்நு
பவத்திநிற்றல்; சின்முத்திரை - சிவனுஞ் சீவனுமொன்றாதல்; சமாதி-
நான் சைதன்னியமென்பதையுமறத்தல்; நமஸ்காரம் - நானும் நீயா
ய்ப்போனே னென்னுந்திடமுண்டாதல்; கும்பிடு - துவிதங் கெட்டு
அத்துவிதமானோமென்னல்; தலந்தீர்த்த மூர்த்திக்கு விபரம் : தல
மென்றது தான்; தீர்த்தமென்றது தன்னாத்மபோதம்; மூர்த்தியெ
ன்றது சுபாவ சைதன்னியம்; (ஆவிலிங்கபீடமா யார்ந்ததேசிவாய
மே என்றது மிக்கருத்தைப்பற்றி வந்தனவாம்; திருக்கு - திரிசிய
விபரம் : காணப்பட்டதெல்லா மாபையானபடியா லவை யனைத்துக்
திரிசியம்; காண்பது யாதொரு சைதன்னியமுண்டோ வதுவே திரு
க்கு; வேதாகம மிரண்டுங்கருத்தொன்றே விரண்டோ வென்பதற்கு
விபரம் : நொடித்தான் மலைவேறு கயிலாசம் வேறென்பாரும், சிதம்
பரம் வேறு புண்டரீகபுரம் வேறென்பாருமில்லை; அதுபோலும்
இந்த வைதீக சைவமுங் கண்டுகொள்க. ஆகாசம்போ லாத்மா, சந்தி
ரன்போ லாதமபோதம், நட்சத்திரங்கள்போ லாத்மசத்திகள். பகலை
ப்போல சகலாவத்தை, இரவைப்போலக் கேவலாவத்தை, சூரியனைப்
போல ஞானம், பர்வம்போல பெத்தகாலம், அமாவாசியைப்போ
லாத்மபோதம், ஞானத்திலடங்கிய முத்திகாலம், நாகலோகஞ்- சுழு
த்தி, மத்தியலோகம் - சொப்பனம், சொர்க்கலோகஞ் - சாக்கிரம்,
சத்தியமாதா பிதாக்கியானஞ் தர்மோபிராதா தயாசகா
சாந்தம்பத்தினி சமாபுத்திரா சட்வித மமபாந்தவா
யதார்த்தமே - மாதா, பிரக்கியானமே - பிதா, சிவதர்மங்களே - உட
ப்பிறப்பு, தயவே - தோழன், கலியாண நிரியாணமிரண்டுந் தோன்றாத
சாந்தமே - தாரம், பிரமாதி பிபீலிகாந்தத்துஞ் சைதன்னியமே யெ
ன்று காணுஞ் சமபோதமே - சந்தானம். இந்தவாறு மெனக்குப் பாந்த
வ்வியமென்று உலகத்தை கடைக்கடவன். ஞானி கன்மங்களை விடுவ
தே சித்தாந்தம். அது யதார்த்தமோ அயதார்த்தமோ. அயதார்த்த
மென்றே நீர் சொல்லில், வசனமுண்டாயிருப்பானேன்? அபக்குவரைக் குறித்து. அவைகள் வருமாறு :
வள்ளலார்சாஸ்திரம். வில்வக்குடலை யெடுக்காமல் வீ ணுக்குடலை யெடுத்தேனே " - எ - ம்
வில்வக்குருகாதல் கொம்பாதல்கொம்புதிர்ந்து வீழ்ந்த
சருகாதல் மண்ணாதல் சாத்து'' -
என்றும், முக்கோடியேகாதசி, காசி, பிரையாகை, காவேரி, ர
மேஸ்வரம் என்றும் நினைக்குந் துவிதசித்தப் பிரமையொழிந்து, அத்
துவிதசித்தம் பிறக்கக்கட்டிய கட்டெனவறிக;
ஆர ரணவுருவமாகி யம் பரக்கோயிறோறு
நாரணன் பிரமன்காணா நட்டநீ செய்ததென்னே
காரணமுயி முயிரேயென்னக் கண்டவர்காணாதேங்கச்
சீரணிமாடமோங்குந் திருப்புலிவனத்துளானே'
அத்துவிதம் இரண்டல்ல. துவிதமே இரண்டு. நீர் சொன்ன
அத்துவிதத்துக் கருத்த மிதுவல்ல. இரண்டின்மையாயிருக்கும். இர
ண்டின்மையென்ப தொன்றோ? ஒன்றுமல்ல. இரண்டோ? இரண்
டுமல்ல. பின்னைத்தா னெவ்வழிவிடுவாய் சண்டாளா ! மூர்க்கரை
நேயம்பற்றிச் சாதிக்கிறையோ ! (மூர்க்கனுக்கு வாழ்க்கைப்பட்டால்
முன்னும்பின்னுங் குற்றம்) என்பதுபோலாயினை. அத்துவித சூரிய
னெழுந்தானென்னில், அதற்கருத்தம் துவிதசூரியன் வந்தாலும்பொ
சொல்லேனென்னு மாற்றம் உனக்கடாவோ,
'' ஏகமே வாத்துவித'
மென்னுஞ் சுருதிசாரத்தையு மறந்தாயாயினை,
அத்துவிதத்துக் கருத்தம்பலவென்னுங்
சிற்றறிவு கொண்டு சிலகீழ் "
(எ - து) கொஞ்ச புத்தியைக்கொண்டு கீழ்ச்சாதிகள் தாதமார்க்
கத்தைத் தழுவி யத்துவிதத்துக் கருத்தமொன்றுமல்ல, விரண்டும
ல்ல, உபயமுமல்லவென்று கூறுந் துவித பாசண்டர்களென்பதாம்.
வேதச்சொல்லை நம்பாதவன் நீசனென்று வியாச சூத்திரத்திற்
சொல்லும். தேவதத்தன் நிரியாணமானானோ? இல்லை. கலியாணமா
னானோ? அதுவுமில்லை. அமங்கலியோ? அன்று. சுமங்கலியோ?
அன்று. கன்னிகையோ? அதுவுமன்று. ஆனாற் குதர்க்கமாக யாது
மன்றென்னில், நீபெரும்பாவி ! நாட்டிலுள்ள சாவுனக்கெய்திற் குற்
றமில்லை ! வியாழவட்டங் காத்திருந்தால் உபதேசிப்பனென்னில் ஒரு
பூனை கயிலாசத்துக்குப்போகிற கொக் கெலி கோழிக்கூட்டத்தைச்
சம்பாடனம்பண்ணிக் கூட்டிக்கொண்டுபோய் ஒருபாழுங் கோவிலி
லே யிருக்கச்சொல்லி உங்கள் போதமடங்கவில்லையே யென்று பன்
னிரண்டுவருடம் ஒன்றொன்றாய் அனுக்கிரகம் பண்ணியகதை யுனக்
கேதகும். ஆனாற்சுவாமி? நீர்சொன்ன புத்தியைகேட்கிறேன். அத்
துவிதத்துக் கருத்தஞ் சொல்வாயாக வென்பாயேல், சாமியம்,
. அத்துவிதமேகமே யாங்கிரண்டின்மையெனி
லத்துவித மன்றோவது
(எ - து) அத்துவதம் ஏகமே. ஆருக் கேகம்? பஞ்சபாசங்களை
நீங்கிய சீவனுக்குஞ் சிவனுக்கும். அஃதர்த்தமன் றிரண்டற்றுப பூவு
மணமும் போலவென்னில், போதச்சுவானமே இலங்கையிலே யிரு
ம்புதிருடாதே உன்சத்த மென்றைக் கடைக்குமோ இரண்டின்மை
யென்று சொல்லியது மஃதேயாம். சாமியாம்,
" மாயையாலிரண்டுபட்டுன் மலரடிபுகலிழந்தேன்
றூயமெய்ஞ்ஞானத்தாலே துறந்திடினேகமாகுந்
தாயினுமினியனாகித் தடுத்தெனையாண்டுகொண்ட சேயமாகதிதென்பாங்கார் திருப்புவிலனத்துளானே "
இப்படி அனந்தம் சாமியமுண்டு. நதி- நத - உவமைகள் வருமாறு :
குடக்கிலிருந்து குணக்கோடியந்தியே ஆத்மா நதித்தடைகள் - ஐம்பு
லன்கள். அச்சிறை மீங்க (நதீனாஞ்சாகரோகதி. சாகரஞ்சிவம், நதம்
குணக்கிருந்து குடக்கோடினு பின் குணக்கோடி சாகரோகதி. விளக்
போலுஞ் - சஞ்சிதம். வீடுபோலும் - ஆகாமியம். அவிகிறதுபோலும் - நி நெய்போலும் - பிராரத்தம். திரிபோலுஞ் - சூக்குமசரீரம். காற்றுப் குவமைவருமாறு : விளக்குப்போலும் -ஆத்மா.தகளிபோலும்- சரீரம்.
ரியாணம். தாரகசத்தியிலே முன்னிருந்தவண்ண மொடுங்குவது
போலும் - மோட்சம். இப்படிவிட்டுணு வாகமங்களிலும் சிவாகமங்
களினுங் காண்க. சாமியம், " கண்ணொளிகதிரின் மாட்டுங் கடவெளிவிசும்பின்மாட்டு
மண்ணுறுவிளக்கின் சோதி தாரகசத்திமாட்டு
நண்ணுதன்மானப்பொல்லா நாயினேன் வந்தடைந்தேன்
றெண்ணிலாவெறிக்குஞ்சென்னித் திருப்புலிவனத்து
ளானே”
இந்த விளக் குவமைப்படி விஷ்ணு வாக்கியங்களினுஞ் சிவ
வாக்கியங்களினுங் காண்க.
மரபட்டவணை - முற்றிற்று.
புண்ணுடலை நீப்பேனோ பொன்றாத மெய்ஞ்ஞானக்
கண்ணுடைய வள்ளல்பதங் காண்பேனே - வெண்ணுடை
வஞ்செழுத்தி னுண்மை யறிவேனோ வாங்கதனுட்
பிஞ்செழுத்தைப் பின்னிடு வேனோ.
தியஞானபோதஞ் சாற்றுமுப்பொருள்விளக்கஞ்
த்தசித்தாந்தக்காட்சி சூளுபதேசமாலை
மெத்தஞானப்ரகாச மெய்ஞ்ஞானவிளக்கமேலா [ ய
மத்தனத்துவித வெண்பா வதிரகசியமுமன்றே.. (1)
சிவாகமக்கச்சிமாலை செழுங்கர்நாவமிர்தமன்பர்
தவாகரச்சுருதிசாரஞ் சான்றசிந்தனையின் வெண்பா
வவாவறு நிராமயம்பின் னறுபத்துநாலுசங்கை
யுவாவனதசவழக்கோ டுயர்குருமரபுமாலோ (2)
அநுபவசந்திரிக்கை யவிர்முகப்பாசுரம்பின்
மனமயலகன்றபிள்ளை பட்டணைமரபினோடுந்
தினகரனுதயமென்னத் திருவுளமகிழ்ந்துரைத்தான்
புனலிடையமிழாக்காழிப் புரிவருபோதவள்ளல். (3)
இருபதிவ்வுண்மை நூலு மியம்பியஞானவள்ளல்
மருவுதம்பவங்கணீங்கி மாறாப்பேரின்பவெள்ளம் திருவடி தொழுதுபோற்றித் தெளிதரத்தேர்ந்தமேலோர்
பெருகியசுவானுபூதி பெற்றுவீற்றிருப்பர் தாமே. (4)
வள்ளலார் சாஸ்திரம்
முற்றிற்று.