logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 6. ஞானவிளக்கம்

                 பாயிரம் 
    கல்லாலின் கீழிருந்த கண்ணுதலை மாமேரு 
    வில்லாற் புரமெரித்த வேதியனைச் - சொல்லாமற் 
    சொல்லிப் பிறப்பறுத்த தூயவனை நன்னெஞ்சே 
    சொல்லிப் பல்காலுந் தொழு. (1) 
    அன்னை வயற்றி லமுக்கிச் சிலகாலம் 
    பின்னை யுலகிற் பிறப்பித்து - மன்னுகலை - 
    யெல்லா மறியவெனக் கென்போல வந்தாண்ட 
    கல்லாலா முற்றுமெனைக் கா. (2) 
    ஒருவாக்கி னாலடியே னுள்ளந் தெளியத் 
    திருவாக் களித்திட்டாற் றீதோ குருநாதா 
  வட்டிலுக்கு வாய்வைத்த வாறேபோன் மாமறைநூல் 
    கட்டிவைத்த தென்னோ கழறு. (3) 
    பக்குவத்துக் கீடாயப் பன்னெறி களுஞ்சொல்லு 
    மிக்கவதி பக்குவற்கு வேதந் - துக்கமிலா - 
    ஞானத்தைச் சொல்லுமதை நன்றாய் விசாரித்துன் 
    னூனத்தைப் போக்கிடநீ யுன். (4) 
    கங்கை நிகர்க்குமருட் கண்ணுதலோன் சொற்றநூல் 
    கங்கை யொழிந்த கழியொக்குங் - கங்கைநதி 
    சூழ்கிடந்த சென்னியற்கே தொண்டுபட்ட நன்மாண 
    வூழ்கிடந்த நெஞ்சா ருரை. (5) 
              பாயிரம் - முற்றிற்று. 
    சத்து மசத்துஞ் சதசத்து நீயல்ல 
    சுத்தசிவ நீயென்று சொல்லினான் - மொய்த்தெழுந்த 
    கல்லாலின் கீழிருந்து கதிகாண நால்வர்க்குஞ் 
    சொல்லாமற் சொன்ன துரை. (6)

    ஒருபொருளை நீத்தங் கொருபொருளைப் பற்றி 
    யிருபொருளும் போக்கி யிடையே - யொருபொருளு 
    மற்றநிலை யேதோ வஃதுன் னிலையென்றான் 
    குற்றமற்ற ஞான குரு. 7

    காயந் துவளாமற் கரண மசையாமல் 
   வாயும் பதையாமன் மாற்றியே - நேயத் 
    தறிவாநந் தத்தி லரைக்கண நின்றாலும் 
    பிறவார் சிவனாணை பின் (8)

  ஆக்கறக்கு மந்நேர மம்புவிழு மந்நேர 
  நோக்கிமைக்கு மந்நேர நுண்ணறிவா - னீக்கமற 
  நானென்னும் போத நழுவிச் சிவமானார்க் 
    கீனபிறப் புண்டோ வினி. (9)

  மேலவத்தை கீழவத்தை வீட்டி நிராலம்ப 
  சாலவறி வாகத் தரியென்று வாலறிவன் 
  கால்வைத்தான் சென்னியிலே கைவைத்தா னென்னுளத்தின் 
  பால்வைத்தான் றன்னுருவைப் பார். (10)

  தலையெல்லாந் தெய்வமெனுந் தன்னை மற்றேனை 
  யிடையெல்லாம் வேறிருக்கு மென்னுங் - கடையெல்லா 
  மரத்தைப்பா டாணத்தை மண்ணையிருஞ் செய்பைக் 
  கருத்துருகத் தெய்வமெனுங் காண். (11) 
  உத்தமங்களெல்லா முணர்வையே தாம்பேணு 
  மத்திமங்க ளேபதுமை யைவாழ்த்துஞ் - சுத்த 
  வதமங்க ளெல்லாந்தன் னாகத்தைப் போற்று 
  நதியோடை கூப்மென நாடு. (12)

  சீடனறி வெவ்வளவோ வவ்வளவுஞ் சிந்தித்துக் 
  கூடுமுப தேசங்கள் கூறுவா - னீடுபுக 
  ழூக்கமுடைச் சீராம னொண்ணுதற்கா யன்றெய்தான்
  காக்கைக்குத் தக்க கணை. 13

  ஆகாயந் தேடி யலைவோருக் காகாய 
  மாகாயத் துட்காட்டன் மானுமே- யேகபரி 
 பூரணத்தைத் தேடிப் புலம்புவோ னுக்காசான் 
  பூரணனீ யென்றுபுக றல்.(14)

  மீனைமதியம் விழுங்க விரிவெண் மதியைப் 
  பானு விழுங்கும் பரிசேபோ - லூனுயிரைப் 
  பரைவிழுங்கப் பட்டுப் பரையைப் பரைக்குத் 
    துரைவிழுங்கப் பட்டதுசொர்க்கம். (15)

  அறிவா லறிந்தவது வெல்லா மறிவன் 
  றறியா மையுமறிவே யன்றா - லறியா 
  வறிவா யிருந்து மறிவிலே னென்னு 
  மறிவிலர்க்கு ஞானமரி தாம். (16)

  உள்ளத் தொளியா யொருகா லவியாத த 
  வெள்ளவெளிப் பெம்மானை வேறாக்கிக் - கள்ளமுறுங் 
  கற்பனையால் வேறோர் கடவுடமைக் காமிக்கு 
  மற்பருக்கு ஞானமரி தாம். (17)

  ஆறாறு தத்துவத்துக் கப்பா லதீதத்தே 
  வேறாகத் தம்மை விசாரித்துங் - கூறாக - 
  வாநந்தந் தாமென் றறியா வறிவிலிக 
  ளாநந்தந் தேடியலை யும். (18)

  தத்துவத்துக் கப்பாலே தன்னைத் தரிசித்து 
  நித்தபரி பூரணத்தி னில்லாமல் - சுத்த 
  பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு 
  நனிமா னிடமிருக நாடு. (19)

  ஆக்கைநீ யல்ல வறிவுநீ யென்றுமறை 
  வாக்கியங்க ணான்கும் வகுத்துரைத்து - நோக்காமன் 
  மீட்சிதரு மீசன் விழியெதிராய் முன்னின்று 
  காட்சிதா வென்னுங் கடை (20) 

  ஊழா லுடம்புண் டுடம்பால் வினையுண்டு 
  தாழும் வினையாற் சகமுண்டு - காழ்கொண்ட 
  வித்துமுளை யும்போல வீயா தொருக்காலு 
  முத்தியிலே வீயு முளை. (21)

   கன்னிக்கு மின்பநிலை கற்றோர்க்கு மின்பமிலை 
    கன்னியொழிந் தாலின்பங் கன்னிக்குப் - பன்னுதமிழ் 
    கற்றவருக் கின்புதயங் கற்றுங்கற் றஃதொழிந்தா 
    லற்றநிலை யீதென் றறி. 22

    ஞானமிலான் செய்யுங் குருத்துவத்தை நாடுங்கால் [ ஞான (22) 
    யோனியிலாப் பெண்டா னுருவத்தான் - மேனி 
    யலங்கரிக்கும் பின்ன ரனுபவகாலத்திற் 
    கலங்கி மனமுடையுங் காண். (23) 
    நிதம்பமிலாப் பெண்ணு நிகழலியுங் கூடி 
  யிதம்பெற்ற வின்பசுக மேய்க்குஞ் - சிதம்பற்ற 
    நற்குண மிலாசானு ஞானமிலாச் சீடனுமாய்த் 
    தொக்கிவரு மின்ப சுகம். (24)

  அங்கோட் டகலல்கு லாயிழையு மாடவருந் 
  தங்கிவரு மின்பந் தழைத்தாற்போற் - சங்கையற்ற 
  வாசானுஞ் சீடனுமா யாங்காங் களாவியே 
   பேசவரு மின்பப் பெருக்கு. 25

          பிராரத்துவத்துக்கிரங்கல். 

  ஞானத்தை யீதென்று காட்டி நவை சேரு 
  மூனத்தை நீமிதிக்க வொண்ணாதோ வீனச் 
  செவிநாசி யாலறிவாற் சென்றறிய லாகா - 
  அவிநாசி யப்பா வறை. (26) 
  காமப் பெருநெருப்பைக் கங்கை யவியாதோ 
  தீமையினைச் சாந்தந் தெகியாதோ - வாமப்பாற் 
  பெண்மயலைப் போக்காதோ பிரமனரி காணாத 
  வொண்மயிலை யப்பா வுரை. (27) 

ஆங்காரந் தன்னை யழியாத வாணவத்தை 
  வாங்கு மழுவெரிக்க மாட்டாதோ நீங்காத
  மாயப் பிறப்பதனை வன்சூலந் தாக்காதோ 
  வாயுமறைக் காடா வறை.  (28)


  வானவர்க்கா யன்றுதிரு வாய்மலர்ந்த மெய்ஞ்ஞான 
    மேனையடி யோங்களுக்கு மெட்டாதோ ஞான
    குருநாத னாயன்று குமரருக்குச் சொன்ன 
    பெருஞான மெங்களுக்குப் பேசு. 29

              பிறவிவருத்தம். 

    எண்டிசையும் போற்ற வெழிலார் முடிசூடி 
  யண்டமொரு குடைக்கீ ழாண்டாலு - மண்டும் 
    பிறவியிலே யின்பமிலை பேரிடும்பை யல்லாற் 
    றுறவிலே யின்பச் சுகம். (30)

    தருநிழலை நல்லமிர்தைத் தண்டாத மங்கையரை 
    யொருவி யுயர்வனத்தி லேகிக் - கருதரிய 
    பிறவி வருத்தமெனப் போகி நெடுங்காலந் 
    துறவியாய் நின்றிலனோ சொல். (31)

    காமாதி யாலுங் கடுவெம் பசியாலுஞ் 
    சாமாறுந் துன்பமதைச் சாற்றகிலேன் - கோமானே 
    யெண்சா ணுடம்பாலே பட்டதுய ரென்சொல்கேன் 
    புண்பாலில் வேனுழைந்தாற் போல். (32)

    பாசமுத லைவகையு நீக்கிப் பதியாக்கிப் 
    பூசை தவம்விரதம் பொய்யென்ற -வாசிரியன் 
    காலாலு தைத்தாலுங் கைதவங்கள் செய்தாலுங் 
    கோலா லடித்தாலுங் கொள். (33)

    குருவாக் கமுதமெனக் கொண்டுவந்த சீடன் 
    குருவாக்கை யன்றி மற்றைக் கொள்ளான் - குருவாக்கா 
    லுய்ந்தோமென் றிந்த வுலகறியப் பன்முறையும் 
    தொந்தோமென் றாடித் தொழும். (34)

    மானுமழு வுங்கரந்து மானிடன்போல் வந்தாரைப் 
    பூநீருங் கொண்டடிக்கீழ்ப் போற்றா தார் - கானகத்துள் 
    வேடராய் நாடோறும் வெம்பசியி னால்லைந்து 
    பீடினர கம்புகுவார் பின். (35) 

                ஈசுரபத்தி. 

    பல்லா யிரங்கோடி பானு வுதித்தாற்போற் 
    கல்லாலின் கீழிருந்த கண்ணுதலை -வில்லார் 
    மணிப்புருவ நாப்பணிலே வைத்திருந்தார்க் கில்லை 
    பிணிப்பிறவி யென்னும் பிழை. (36) 

    ஈசன் றிருமேனி யெட்டுமெனக் கண்டறிந்தாற் 
    பாசநமை விட்டகலப் பார்க்குமே - யீசன் 
    றிருமேனி யென்றுனது சிந்தையிடைக் காணிற் 
    கருமேனி யில்லையெனக் காண். (37) 

    ஈசன்வே றியான்வேறென் றெண்ணுங் கடையினங்க 
    ளீசனடி யென்னு மிடையினங்க www ளீசனே 
    யானோமென் றேமாக்கு மாயிற் றலையினங்க 
    ளானாத மாணா வறி. (38) 
              பிரமக்கியானம். 

    எல்லா மறிவாகக் காண்ட லெழிற்பூசை 
    யொல்கா வவனாத லுட்பூசை - நில்லா 
    வுலகத்தை மாயா வுடலைத்தூ டித்த 
    லிலகுமரன் றோத்திரமா யெண். (39)

    உயிர்க்குயிரா யீச னொழியாம னிற்க 
    வுயிர்க்குயிராக் கண்டிங் குணரா - துயிர்க்குயிரை 
    வேறாக்கிப் பூசிக்கும் விரகிலிக்கு முண்டாங்கொல் 
    வேறாகா மெய்ஞ்ஞான வீடு. 40

              பாசவைராக்கியம். 

    நினைப்பு மறப்புமிந்த நீடுலகு மித்தை 
    யனைத்தும்போ னாலீச னாவேன் - உனற்கரிய 
    கன்னனுக்கு வேடு கழித்தகதை போலுனக்கு 
    மன்னியமே வேடென் றறி. (41)

              சீவகாருண்ணியம். 
    மென்புழுக்க ளாதியுயிர் வீடுமென நாடித்தம் 
    மென்பதத்தை மெல்லென்ன வேவைப்பார் - இன்பக் 
    குடைநிழற்கீழ் நிற்பதெலாங் குற்றமெனக் கண்ட 
    சடபரதனே இதற்குச் சான்று. 42

    வேங்கை புலான்மறுத்து வீடுற்ற தன்றியுமோர் 
    தீங்ககன்ற நாரையுமீன் றின்னாமற் - பூங்கயிலை 
    யுற்றிருந்த தந்தோ வொருபுறவுக் காயரசன் 
    முற்றுமரிந் தீந்திலனோ முன். 43

                ஞான நிலை. 

    நல்ல குலத்திற்பிறந்து நல்லாரைச் சேர்ந்தொழுகி 
    நல்லறிவு பெற்றுடைய நன்மாணா - நல்ல 
    சிவம்வேறே யென்றெண்ணிச் சிந்தை கலங்காதே 
    சிவமென்ற நீயே சிவம். (44) 
  தேகநா மென்றெண்ணிச் செத்துப் பிறந்துழலும் 
  பாகமுற்ற மாணா பகரக்கேள் - பகரக்கேள் - சோகமுற்று 
  மாகாயம் பொன்றுமதின் மன்னுயிர்பொன் றாதங் 
  காகாயம் போலே யறி. (45) 
    காயுங் கிழங்குங் கனியருந்தி நோற்றாலு 
  மாயும் பிறப்பகல மாட்டுமோ -காயத்திற் 
  றங்குஞ் சதாசிவனைத் தானாகக் கண்டுதனை 
  யெங்குமாய்க் கண்டா லிறும். 46

              சற்குருதரிசனம். 
  நெருப்பு வழிநடப்பி னீர்தேடு வார்போற் 
  கருப்பிலனந் தேடுங் கதைபோல் - விருப்புற்றுப் 
  பக்குவத்து நாயகனைத் தேடுகின்ற பைந் தொடிபோற் 
  சற்குருவைத் தேடுந் தரம். 47

  கிடைத்தகுரு வைப்பணியாக் கீழ்மையொடு நிற்றற் 
  குடைத்து பலகதைக ளோகோ -தொடுத்த (-16) (17)
   சசிகொழுநன் வாணனெனுங் தானவர்கோன் பொல்லாச் (48) 
    சிசுபால னாதியெனத் தேர்.48

    அறியா தனவெல்லா மாங்காங் கறிவித்துப்
    பிரியா தனவெல்லாம் பேசி - நெறியாரும் 
    பக்குவத்தின் மெய்ஞ்ஞானப் பாலருத்தி விக்குமொரு 
    சற்குருவைப் போலுமுண்டோ தாய். (49)

    வானெங்கே மண்ணெங்கே மாயாமலமெங்கே 
    யூனெங்கே யீனினுயுரெங்கே - கோனெங்கே 
    யொன்றா யுருவிலனா யொக்கவெடுத் தேவிழுங்கி 
    நின்றான் பரிபூ ரணன். (50) 
    விடையக் குழாங்கடமை வீட்டி யிருந்தாலு 
    மடையவுடம் பாடேயா னாலும் - நொடியளவும் 
    விட்டுப் பிரியகிலேன் மெய்ஞ்ஞானப் பெண்ணையன்பாற் 
    கட்டியணைந் தொன்றானக் கண். (51) 
    தத்துவத்துக் கப்பாலாந் தத்துவமன் றந்தனிலே 
    முத்தியெனும் பெண்ணை முயங்குவோர்க் - கெத்தனையோ 
    கோடிவிடையக் குழாங்க ளெதிர்ந்தாலும் 
    பாடழிய மாட்டா ரப்பா. (52) 
    அஞ்சின்வழி செல்லா ராறின் படிநில்லார் 
    வஞ்சரொடுங் கூடி மருவார்க -டுஞ்சுநிலை 
    தபனனெதிர் நின்றுபல்காற் சாற்றினுங் கொள்ளார்க 
    ளுபநிடத மன்றியுண ரார். (53) 
    வெந்தமடிதோலுண் விளாப்போல் விழியெதிர்ந்து 
    பந்தமுற வொன்றேனும் பாவியா - ருந்துஞ் 
    சிவன்பா னினைவெல்லாஞ் சென்றடையச் செய்வார் 
    நமன்பா லணுகாதார் நாடு. (54) 
    ஐவரொடுங் கூடாம லந்தரங்கச் சேவையினைத் 
    தெய்வகுரு காட்டத் தெரிசித்தே -னையமறக் - 
    கண்டே னெனுஞ் சொல்லுங் காணாமை காட்டுதலால் 
    விண்டேன்வா யில்லையினி மேல். (55)

    மதப்பட்டவா னையனார் மாதர்பாற் சிக்கி 
     யுதைப்பட் டுணர்வழிந்தா ரோகோ -நதிப்பட்ட 
     செஞ்சடையான் செம்பதுமச் சேவடிக்கீழ்த் தொண்டராய்த் 
    துஞ்சிச் சுகமடையா தோர். 56

    உற்றசரிதையனுக் கோராயிரம் பிறப்பு 
    மற்றையர்க்கு நூறாகும் வன்பிறப்பு - முற்றுகின்ற (56) 
    யோகிக் கொருபிறப்பு வண்மைச் சிவஞான 
    மோகிக்கு விப்பிறப்பின் முத்தி.57

    எறும்பு கடிக்காவி யிறக்குமென வஞ்சுங் 
     குறுந்திவலைக் கண்ணனுக்குங் கோல் - நறுந்தொடையன்
    மார்பகத்து வேல்பிடுங்கி மாற்றலர்மே லெய்வாற்குந்  
    தூரமோ வண்ணிதோ சொல். 58

    இருளகன்ற ஞானிகள்பா லின்பமயமாகி 
    மருளகன்ற ஞான மணியே - யிருளகலா 
    முழுமக்க டம்பக்கன் முடமாய் நின்றாயென் 
    றழுவக் குழைந்தவனே சாற்று. (59) 
    காமாதி குற்றங் கழன்றிருத்த லானுமுய 
    ரோமாதி யுள்ளுணர்த லானு - மாமையென 
    வைம்புலன்க ளுள்ளடக்க லானு மடியவர்பா 
    லின்பமுறக் காண விருப்போம். (60) 
    பாவனா தீதம் பரமசிவ மென்றுரைத்தாற் 
    பாவித்து நீயதனைப் பாராதே - பாவித்த 
    போதேநீயுண்டாவை புத்திமுதற் றத்துவங்க 
    டீதொன்ற வுண்டாந் தெளி. (61)

    அறிவே சிவமென் றறைந்த திருமூலர் 
    பிறிவின் மொழியொன்றைப் பிடித்தார் - பிறியாச் 
    சநந மரணமிலை சங்கேத மில்லை 
    மனனமிலை யென்றே மதி. 62

    அறிவு திருவிதத்துக் கப்பா லறியு 
    மறிவு சிவமதுவே நீயா - மறிவொன்றிக் 
    கண்டாருங் காணாக் கதியை மழபாடிப் 
    பண்டாரங் காணும் படி.  (63)

    வாக்கிலியாய்க் கண்ணிலியாய் மத்தராய் போகாமற் 
    றேக்கு மறிவோடு சென்மித்தும் பாக்கொண்டு 
    பாடார் குருபதத்தைப் பாரார் பலநினைப்பும் 
    வீடார் சும்மாவருமோ வீடு. (64)

    கூனுஞ் செவிடுங் குருடு முடமும்போய் 
    மானிடரா யங்கங்கள் வாய்த்திருந்து - ஞானநிலை 
    சேர்ந்தறியா ரந்தோ செகசாலத் துட்பட்டுச் 
    சாந்துணையுஞ் சஞ்சலித்தார் தாம். (65)

    தருநிழலு நல்லமிர்துந் தண்டாத மங்கையரும் 
    வருமென்று வேள்விசெயு மத்திமர்கா - டருமரமே 
    யமிர்தம் பசுவின்பா லாயிழையார் வேசியென 
    வுமைபங்க னாகம மோதும். (66) 
    சரிதையிலே யீசன் சடவடிவாய் நின்றான் 
    கிரியையிலே மந்திரத்திற் கிட்டி - யருகிருந்தா 
    னூனமிலா யோகத்தி லுள்ளொளியா யேநின்றான் 
    ஞானமதி னானாயி னான். (67) 
    பாழூரைக் கண்டு பராவி யழுவாரை 
    வாழூரர் கண்டு மதிப்பரோ -பாழூரை 
    வாழூர்மேல்வைத்து மனமிறந்த மாண்பினரை 
    யூழூருங் கண்டறியு மோ. (68) 
    சுத்தப் படிகமுச்சிச் சூரியனைச் சந்தித்தா 
    லெத்தன்மைத் தத்தன்மை யீசனிலை - யுற்றுற்றுப் 
    பாராத வர்க்குப் பவமும் பலபிணியும் 
    போராடு மெஞ்ஞான்று போம். (69) 
    தன்னை வினையைத் தலைவனையு முன் து 
    பொன்னைப் புவியையெழிற் பொற்கொடியை - யுன்னியுனிக் 
    காலங் கடத்துகின்ற காமுகர்க்கு முண்டாங்கொல் 
    ஞாலங் கடத்துகின்ற நாடு. (70)

  என்னை யொழிய விரையு மிருண்மலமுந்
 அன்னு முயிரின் றொகையாவும் - பன்னுகின்ற
  வந்திமக னும்விண் மலருஞ் சரோருகமும் 
  முந்துமுயற் கோடுமென வோர். 71

    பொன்னை யரித்தெடுக்கும் பொன்னரிப்பன் போலாசான் 
    என்னை யரித்தெடுத்தா னிவ்வுடலிற் - றுன்னரிய 
    பாலை யரித்தெடுக்கும் பாலன்னஞ் சற்கரையை 
    யாலை யரித்தெடுக்கு மால். (72) 
    அடிக்கரும்பு காட்டுகின்ற வாராத வின்பை 
    முடிக்கரும்பு காட்டுமோ மூட - மிடிக்கின்ற 
    மெய்ஞ்ஞானி காட்டுகின்ற மெய்ஞ்ஞானந் தன்னையொரு 
    பொய்ஞ்ஞானி காட்டுவித்தல் பொய். (73)

    கிணறுதொடா முன்விளங்காக் கேடிலா காயங் 
    கிணறுதொட முன்விளங்குங் கேண்மை - யுணருங்காற் 
    கருவிகளிற் றன்னைத்தான் காணாமை நின்றதுவும் 
     கருவியினிற் கண்டதுவுங் காண். 74

    ஆனையுரி போர்த்தாடு மம்பலவா வென்னுடைய 
    ஆனவுரி போர்த்தாட வொண்ணாதோ -ஞானநிலை 
    வெள்ளிமலை வீற்றிருந்து வேதியரோர் நால்வர்க்கு 
    முள்ளபடி சொன்னா யுரை. 75

    பொங்கு மலநீங்கப் பூரணவா காயத்தி 
    லெங்குநிறைந் தாடுகின்ற வெந்தையே - யிங்கெனைப்போல்
    வந்தானஞ் ஞானமே மாயையே கன்மமே 
    நந்தாம லின்றே நட. 76

    ஆணவமே நீர்போமி னஞ்சலிசெய் தேனுமக்கு 
    கோணைசிவ னென்பாற் குடிகொண்டா னீணிரையத் 
    துன்பம் பயக்கின்ற துக்கசுகமே போமி
    னின்பமுறு காயத்தோ டின்று. 77

    எல்லாமிறந்து மிறவாத ஞானிகட்குச் 
    சொல்வார்க டிட்டாந்தஞ் சோம்பரையே - யெல்லாமுந்
     தீரத்துறந்த துறவிக்குத் திட்டாந்தம் 
    போர்முகத்து வீரர்மனம் போல். (78)

    எல்லாத்தையுந் துறந்துந் தற்றுறவா யோகிக்கிங் 
    கெல்லாப் பிறப்பு மிரியாவா -மெல்லா 
    மிறந்தோ மெனுமுணர்வு மிம்மையிலே போனா 
    லிறந்தோடிப் போம் பிறவியே. (79)

    முப்புரத்தை யன்றெரித்த முக்கணப்பா வென்னுடைய 
    பொய்ப்புரத்தை யின்றெரிக்கப் போகாதோ - முப்புரத்தின் 
    மூவரைக்காத் தாண்டதுபோன் முப்புரத்திற் சான்றாய் 
    சீவரைக்காத் தாலுண்டோ தீது. (80) 
    வெள்ளைக் குடைநிழற்கீழ் வேந்தாகி யாண்டாலு 
    மெள்ளவிரந் துண்டிங் கிருந்தாலு - முள்ளத்தை 
    மாலயனுங்காணா மலரடிக்கீழ் வைத்திருப்பர் 
    சாலவறி வாருந் தவர். (81) 
    ஆசிரிய னாலடங்கி யடியர்புறம் போந்தருளா 
    ரீசனையே கூடி யிருளகன்று - மாசறவே 
    நாட்டானை காட்டெறும்பு நதிவிளக்குப் போலாவர் 
    தாட்டுணைக்கீழ் நிற்குந் தவர். (82) 
    உள்ளமெனு மாநந்த வோங்கன் மிசையேறி 
    வெள்ள வெளிக்குள்ளே விளையாடும் - பிள்ளை 
    யுலகமெனுஞ்சேரிக் கொருக்காலும் வாரார் 
    கலகம் விளையுமெனக் கண்டு. (83) 
    கூறைக் கலையார்கள் குப்பைதரு மென்றெண்ணிச் 
    சோறுக் கலையார் துயருற்றுத் -தூறுக்குட் - 
    கல்லை யுவந்துண்ணுங் கபோதம்போ லேதேனு 
    நல்லோ ரருந்திடுவர் நாடு. (84) 
    நானே பரமசிவ னானே பரப்பிரமம் 
    நானே யுலகுயிர்த்த நாதன் - நானேயோ 
    கண்டதுவுங் காணாது மென்றிவணங் கண்ணாரக் 
    கண்டவனே சீவன்முத்தன் காண். (85)
   ஆக்கையே தானென் றபிமானஞ் செய்விக்கு 
    மோக்கமிலை யென்றே முடிப்பிக்கும் - பூக்கமழும் 
    பூங்குழலார் பொய்யின்பப் புணரியைமெய் யாக்குவிக்கும் 
    வாங்குதலைச் செய்யா மலம். (86) 
    ஆசாரியனை யனவரதந் தூடிக்கும் 
  பாச மிறந்தோரைப் பகையாக்கு - மாசற்ற 
  வுத்தமர் கட்கெல்லா முறுதிங்கே யீட்டுவிக்கு 
  மத்திமஞ்செய் மூல மலம். (87) 
  மெய்ஞ்ஞானக் கண்ணை விழிக்கவொட்டா தெஞ்ஞான்று 
  மஞ்ஞானந் தன்னி லழுத்துவிக்குஞ் -சுஞ்ஞான 
  வீசனிலையென்றே யிறுமாப்பைச் செய்விக்கும் 
  மாசுற்ற மாயா மலம். (88) 
  விருப்பு வெறுப்பாலே மேல்வினை யுண்டாக்கும் 
  கருப்பையிலே மீட்டுமுறக் கட்டும் - நெருப்புருவ 
  னெங்குமிருந்தாலு மில்லையென்றே சாதிக்கு 
  மங்குதலைக் கன்ம மலம். (89) 
  ஈசன்றிருவடியை யெஞ்ஞான்று காண்பேனோ 
  பாசமெனை விட்டெக்நாட் பாறுமோ நீசக் 
  குடும்பத்தை நீத்தாசான் குற்றேவல் செய்வேனோ 
  வுடம்பைத் துறப்பேனோ வுற்று. (90) 
  அன்னியமே பாசமென்று மன்னியமே யீசனென்று 
  முன்னுதலே பாச வொழிவன்றோ - வெந்நிலையு 
  மற்றநிலை யீதொழிய வாறுசமையத்தார் 
  சொற்றநிலை யெல்லாந் தொலை. (91)


  ஆணவத்தாற் பட்டதுய ராற்றகிலே னந்தோகோ 
  வீணவத்தை யெஞ்ஞான்று வீயுமோ - மாணவத்தை 
  வேறென் றறிந்த விவேகமே ஞானத்தின் 
  கூறென்று சொன்னான் குரு. (92)

  மலமில்லை மாசில்லை மானாபி மானங் 
  குலமில்லை யென்னறிவின் கூற்றிற் - கலக 
    மலமுண்டு மாசுண்டு மானாபி மானங் 
    குலமுண்டு திரிசியக் கூற்றில்.93

    சம்பந்தர் பேரறிவும் வாகீசர் தன்றுறவு 
    நம்பியா ரூரன்ற நட்பினையு - மன்புருவாந் 
    திண்ணனார் பேரன்புஞ் சிறுத்தொண்டர் பத்தியையு 
    மண்ணலே யெற்கீந் தருள். (94)

    திருவாத வூரர்க்கு வைத்த திருநோக்கங் 
    கருவாதை போயொழியக் காட்டி- யொருவாத 
    பஞ்சமலக் கொத்தைப் பறித்ததிருக் கரத்தை 
    யஞ்சலிசெய் தாற்போ மையம். (95) 
    சத்துமசத்துஞ் சதசத்து முன்காட்டிச் 
    சத்துமசத்துஞ் சமமாக்கிச் - சத்தசத்து 
    மில்லா விடத்தி லெனதொழிவைக் காட்டிற்று 
    கல்லாலின் கீழிருந்த கை. (96) 
    என்னை யெடுத்து விழுங்கியிரும் பூரணமாய் 
    யுன்னுமன மாதிகளை யோட்டிவித்துத் - தன்னிகரி 
    லெல்லா மிறந்த விடத்தி லெழுந்ததாற் 
    கல்லாலின் கீழிருந்த கால். (97) 
    சஞ்சிதத்தை நீறாக்கிப் பிராரத்தத்தைப் புசித்து 
    விஞ்சுமா காமியத்தை வீறடக்கித் - துஞ்சிருளா 
    யொல்லா மலமகற்றி யொன்றாக்கி வைத்ததாற் 
    கல்லாலின் கீழிருந்த கண். (98) 
    ஆணவத்தி லேகிடந்து வாருயிர்க்குக் காயமெனும் 
    கோணை விளக்களித்த கோமானே - ஆணவமு 
    மாக்கையும் வந்தென்னைதின மல்லற் படுத்தாமற் 
    சாக்கிரா தீதத்தைத் தா. (99) 
    ஆகாயம் போலுன் னறிவுபரி பூரணமா 
    யேகானுபூதி யெழுந்தாலு - மாகாயம் - 
    போமளவு மாளவந்த புண்ணியனைப் போற்றிநினைந் 
    தாமளவுஞ் செய்யற் சனை. (100)
     
வாழி திருச்சனகர் வாழி சனற்குமரர் 
வாழி சனாதர் மறைச்சநந்தர் - வாழிமறைக் 
கல்லாலின் கீழிருந்த கண்ணுதலார் மாமேரு 
வில்லார் மணிச்சிலம்புமே. (101) 
            ஞானவிளக்கம் - முற்றிற்று. 
              திருச்சிற்றம்பலம். 
 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin