logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 16. குருமரபுசிந்தனை

     பதி, பசு, பாசமென்னுமுப்பொருளுக்குட்பதிமுதலாய்ச் சொல் 
வதோ? பாசமுதலாய்ப் பகரவேண்டியதோ? என்னின். பாசம் பசு 
பதியென்பது பெத்ததசை; ஆகையால், பாசத்துக்குள்ளே பசுமறை 
ந்து பசுக்குள்ளேபதி மறைந்து நின்றமையாற் பெத்தமென்றது. 
முத்திதசை- பதிக்குள்ளே பசு மறைந்து பசுக்குள்ளே பாசமறைந்து 
நின்றமையான் முத்தமென்றது.பதிபசுவாகப் பசு பதியாகப் பாசங்

கழன்ற தோற்றமும், பின்னிட்ட பரமுத்தியிற் பதியன்றிப் பசு 
பாசங்கழன்ற அனுபவத்தாற்காண்க. சாட்சி - மகுடாகமம், 
சிவச்சீவோ சீவோசிவா சற்சீவோகேவலசிவா'- ஆனால், 
  பாசமென்பதியாது? பசுவெந்தக்காரணத்தாற் பாசபெந்தப்பட் 
டான்? பசுவையும் பாசத்தையு மீறிநின்ற பதியாவதியார்? இந்தச் 
சங்கைமுடிச்சை யவிழ்த்துக்காட்டினதே முத்தியெனப்படும். அநுக் 
கிரகமுறையிற் பசு பாசம் பதியெனப்படும். ஆகையாற், சாட்சி (பசு 
வாவதுதான்மா, அப்பசு அசுதந்தரன், தான் பகர்சின்மாத்திரன், மல 
தூடிதன் மலத்தான் மூடன்) என்னுந் திவ்வியாகமத்தால் அறிக; 
  " பாசபத்ததேசீவா பாசமுத்ததேசதாசிவா'- எ - ம். 
  வாக்கியத்தால் நான் மூடனென்னும் பாவனை நீங்கக்கடவன். 
(பாசபெந்தத்தினாலே சீவனாம் பாசம்போனால் ஈசனாம் என்னுந் திரு 
வாக்கினுமறிக. 
              ஆணவ வழக்கு. 
  அனாதியே ஆணவசம்பந்தம் இயற்கைச்சம்பந்தம் அன்று; 
செயற்கைச் சம்பந்தமே. சீவனுண்டானபோதே சீதத்துவமுண்டா 
யிற்று. ஊருண்டானபோதே புலைச்சேரி யுண்டானாற்போலும், 
சமுத்திரமுண்டானபோதே நீருண்டானாற்போலும், செம்புண்டான 
போதே களிம்புண்டானாற்போலும், மேகமுண்டானபோதே மழை 
யுண்டானாற்போலும் இப்படி அனந்தமுவமையுண்டு. அதனாற், சீவன் 
சிவனை நோக்காமற் பாசத்தை நோக்கப் பாசியென்னும் பெயர் வந் 
தது. கள்ளப்பார்வையாற் கள்ளனென்றாற்போலவும், விகடத்தால் 
விகடனென்றாற்போலவும், சாதுவினாற்பசுவென்றாற்போலவும், வித 
ரணையால் பார்ப்பானென்றாற்போலவும், இப்படியும் அனந்தமு 
வமையுண்டு; ஆனால், இஃதொருகால் தீர்வுமுண்டோ? உண்டு. 
எங்ஙனம்? விசுவாமித்திரன் பிரமரிஷியானாற்போலும், குணுங்கி 
அருந்ததியானாற்போலும், அத்திமரம் தேவதையானாற்போலும், 
சீவனுஞ் சிவனாவன். சாட்சி, 
   திசையாருஞ்செம்பிரதக் குளிகையிற்பொன்னதுபோற் 
    சீவனுமெய்ஞ்ஞானத்தாற் சிவத்துவத்தைப்பெறுமே " 
                                      எ - ம். "

   'பண்டிரும்பிரதத்தினாற் பசும்பொனாமா போன் 
    மண்டலந்தனின் மனிதருஞ்சிவமயமாவார் " என்னும், 
    வாக்கியங்களானுமறிக. (சிவத்துவமசி - சிவோகமஸ்மி- சிவோய 
மஸ்தி) இது அநுக்கிரகமுறைமையெனக்கொள்க. தன்மை, முன் 
னிலை, படர்க்கை மூன்று வாக்கியத்துங்காண்க. தன்மை குரு சிவனா 
னாயே யிருக்கின்றேனென்பதாம். சீடன் நானாரென்ன நீ சிவமானாய் 
என்பதாம். படர்க்கை சர்வமுமாமோவென்னச் சருவமுஞ் சிவமாயே 
யிருக்கிறதென்பதாம். நான் நீயடங்கலுஞ் சிவமேயென்பது வாக்கியத் 
திரையத்திற்காண்க. பேதசித்தாந்தி இதைக்கைக்கொள்ளான்.சரி 
தை கிரியை யோகத்திலுள்ள விருப்பத்தாலெனவறிக. (அபுரூபாநாம் 
நரசென்மாநாம் விவேகமதி துல்லபம்) என்னுஞ் சுருதிகளானுமறிக. த 
              மாயை வழக்கு. 

    மாயையே யான்மாவை மறைக்குமென்னின், மறையாது விளக் 
கைப்போல் விளக்குவதேயன்றி மறையாதென்பதே துணிவாயின், 
மறைக்குமென்று நூல்களிற் சொல்லுவானேன்? மாயை மயக்கஞ் 
செய்தலின் மறைப்பென்றுஞ் சொல்லலாம். சாட்சி, 
      ஆக்கையுங்குருவான தாசனே'- எ - ம். 
    " மாசற்ற கொள்கை மனத்திலடக்கினா 
      லீசனைக்காட்டு முடம்பு " - 
என்றதனானுமறிக. திரோதானசத்தி, மாயையானமையான் மறைப் 
பென்றுங் கொள்ளலாம். 

குரு கன்ம வழக்கு. கன்மம் அனாதியே சீவனுக் குண்மையாகுமென்னில், 
அது சற் சந்நி தானத்திலே நீங்குகிறபடியினாலே, 
எப்படி யனாதியென்று சொல்லலாம். செயற்கையென்னில் மீண்டுவரும் ஆனாற் போம்வழி? 
மலமுண்டானபோதே மாயையுண்டு; மாயையுண்டா ண்டானபோதே 
கன்மமுண்டு; எப்படிப்போலென்னில், பசியுண்டானபோதே விகார 
முண்டு விகாரமுண்டானபோதே முயற்சியுண்டானதுபோலென் 
றறி சீவனுக்கு மல மாயை கன்ம மூன்றும் அநாதியியற்கையன்று; த


 அநாதி செயற்ைெகயென்றே சித்தாந்தம் சுண்ணாம்புக்கு வெளுப்பும், 
  கரிக்குக் கறுப்பும் அநாதியியற்கை. செம்புக்குக் காளிதமும், நெல்லுக் 
  குமியும் அநாதிசெயற்கை யெனக்கொள்க. சாட்சி, 
      " களிம்பறுத்தானெங்கள் கண்ணுதனந்தி " - எ - ம் 
      நெல்லிற்குமியு நிகழ்செம்பினிற்களிம்புஞ் 
      சொல்லிற்புதிதன்று தொன்மையே'' -எ - ம். - 
      மாயமெலாநீங்கியான் மலரடிக்கீழிருப்பன் 
      மாறாதசுவானுபவ மருவிக்கொண்டே,” - என்னும் 
      திருவாக்கினுமறிக திருமேனிகொண்ட வழக்கு.

    சிவனுக்குத் திருமேனியுண்டென்னில், மலமாயை கன்மமுண்டு; 
  என்னதியானென்னுஞ் செருக்குமுண்டு; உண்டாகவே நம்மைப் 
போலக் கலியாணமும் நிரியாணமு முண்டாம். எவ்விதத்தினுங் 
கூடாது. அஃதெங்ஙனம்? என்னில், சிவன் அப்பிரமேயரென்றும், நிர 
வயரென்றும், நிராமயரென்றும், அகாயரென்றும், அசிந்திதரென்றும், 
சைதன்யரென்றும், சநாதரென்றும் வேதஞ்சொல்லுகையால், திரு 
மேனியில்லையெனில்கூடாது. அஃதெங்ஙனம்? என்னில், திருமேனி 
யில்லாவிட்டால் வேதமில்லை; வேதமில்லாதபோதே பிரமாதிதேவ 
தைகளில்லை; தேவதைகளில்லாதபோதே கன்மமில்லை; கன்மமில் 
லாதபோதே மழையில்லை; மழையில்லாதபோதே பிரபஞ்சமில்லையா 
ய்முடியும். ஆனாற் றிருமேனியுண்டென்பதே சித்தாந்தமென்னில், 
சாட்சி யொவ்வாதிருப்பானேன்? எப்படி? த 
  " சிவனுருவருவுமல்லன் சித்தினோடசித்துமல்லன் " - எ -ம் 
  ஆணல்லார்பெண்ணுமல்லா ரதிகைவீரட்டனாரே " - எ - ம் 
  " பெண்ணோடாணென் ணடாணென்று று பேசற்கரியவன்'- எ -ம் 
  " ஒருநாமமோருருவமொன்றுமிலார் " - என்றும், 
    இப்படி அனந்தமுவமையுண்டு. சனகாதிகளுக்கநுக்கிரகநிமித்தி 
யமாய்க்கொண்ட திருமேனியும், தனஞ்சயனுக்கா வனசரவடிவாய் 
விற்றழும்புபட்ட திருமேனியும், மார்க்கண்டேயருக்காக லிங்கோற்

 பவமூர்த்தியாய் வந்த திருமேனியும், அம்மை தழுவக்குழைந்த திரு 
மேனியும் பொய்யோ? மெய்யே. ஆனாலிதன் கருத்து ரகசிய சம்பந் 
தம். சமுத்திரத்தில் குமிழியெழும்பி நின்றொடுங்குவதுபோலச் 
சீவ காருண்ணியத்தாற் காருண்ணியமே திருமேனியெனக்கொண்டு 
பிரமாதிகளைச் சிருட்டிப்பன்; பிரமாதிகளால் அகிலநிகிலப் பிரபஞ் 
சங்களையும் சகல வேதமாதிய நூல்களையுஞ் சிருட்டித்துப் பழைய 
பரமசிவனாய் நிற்பன். மகத்துக்களிடத்தும், சூரியனிடத்தும், அக் 
கினிச்சிகையினிடத்துந் தியானத் திருமேனியாயே யிருப்பன். 
தியானமே திருமேனியன்றி வேறில்லையோ? வென்னில், இல்லை 
சாட்சி, 
 மறைநான்கேவான்சரடாய்த் ''தன்னையே கோவணமாய்ச் சாற்றினன் " - எ -ம், 
 உமையலா துருவமில்லை'' - எ - ம், " இலங்கியவிருசுடருந்திருநயன மீறிலடியிலாவெண்டிசைத் 
          ணிலந்திருவடிநீள்புனலாடை நீர்மருவுந்தழனின் 
னுதற்செந்தீ, கலந்தெழுமாருதநாசியிற்காற்று கடுவெளியெ 
ல்லாந் திருவுருவானால், வலஞ்செய்வதெங்கே வணங்குவ 
தெங்கே மாலயனறியாமன்றினுளாடி திண்டோ, ணிலந்திருவடிநீள் " என்னும், 
    திருவாக்கினாலுமறிக. மானுமழுவு மறைத்துச் சிவமே ஆசாரிய 
ராய் வருமென்னில், வானந்திரண்டுருவாய் வருமோ? வராது. 
ஆனாற் போம்வழி? காருண்ணியத்தால் அதிட்டித் தநுக்கிரகிப்ப 
ரெனவறிக. இதே யாகம சித்தாந்தம். 
              அநாதி வழக்கு. 
    ஆத்மாவை அநாதியிலே மலம்வந்து சம்பந்தப்பட்டதென்னில், 
அநாதி யாத்மாவென்றும், நிரவய னத்மாவென்றுங் கூறும் வேத 
வாக்கியம் பொய்யாம். ஆனாற் பிறப்பிறப்பு, நரக சொர்க்கம், நல் 
வினை தீவினை, வெறுப்பு விருப்பு, போக்கு, வரவு, சரியை யாதி 
பாதம், சாலோகாதிபத முத்திகள், இத்தியாதியுஞ் சிவன் தனக்குச் 
சிருட்டித்துக்கொண்டாரோ உனக்குச் சிருட்டித்துவைத்தாரோ 
வென்னும் வாதம் வரும். ஆனால், (நான் பிறந்தகாலம் நீயும் பிறந் 
தாயென்றும். நானிறந்தகாலம் நீயுமிறந்தாயென்றும்)

''வள்ளலார்சாஸ்திரம். இன்பமுந்துன்பமு மில்லானேயுள்ளானே " - எ - ம், 
  " சேடனருளொப்புருவஞ் சேய்கிணற்றில் வீழளவிற் 
    கூடவிழுந்தாயின் குணம் " - என்று, 2 + 1 
  இப்படி அன்னோன்னிய வாசிரியம் வருமேயென்னில், இந்த 
அன்னோன்ய வாசிரியதோடத்துக்குப் பிரமாணமில்லை. அநுபவ 
காலத்திற் காணலாம். குருக்கிடை. ஆனால் நிச்சயத்துக் கெட்டா 
தோ? எட்டும். சாட்சி, 
  " நீக்கிமுன்னெனைத்தன்னொடு 
        கைக்குரம்பையிற் புகப்பெய்து'- எ - ம், 
    அருங்கற்பனை கற்பித்தாண்டா 66 
    யாள்வாரிலி மாடாவே டாவேனோ " - எ - ம், 
" மால்கொடுத்தாவிவைத்தார் மாமறைக்காடனாரே'- எ - ம், தானெனை முன்படைத்தானஃதறிந்து தன் பொன்னடிக்கே'

'' வழித்தலைப்படு வான்முயல்கின்றே க (-எ - ம். 
  னுன்னைப்போலென்னைப் பாவிக்கமாட்டேன்'- எ - ம், 
  என்னைவகுத்திலையே லிடும்பைக்கிடம்யாது சொலே " 
    என்றும், இப்படி அனந்தமுவமையுண்டாயினும், அனுபவ 
காலத்தன்றி தெரியவாராது. ஆயிற் சித்தாந்தமென்னவாய் முடி 
யும்? என்னில், ரகசியசம்பந்தம். உலகெலாம்படைத்தான், உயிரை 
யும் படைத்தான்; உலகமுந்தியோ? உயிர்முந்தியோ? என்னிற், பசு 
வின்கொம்பிரண்டு மொருகாலத் தெழுந்தாற்போலும், ஆணும் 
பெண்ணுமொருகாலத்திற் பிறந்தாற்போலும், சிவன் சிருட்டிவல் 
லபம் நம்போதமயக்குகளாற் காணப்படாதாயினும்,. 
    திஷ்டேபூர்வமாத்மாயேகமேவா " -எ - ம், 
    காலமுநாள்களூழி படையாமுனேகவுருவா ஓ - எ - ம். 
  ஒருவனாயுலகேத்தநின்ற நாளோ ஒருருவே மூவுருவமான ஒருருவேமூவுருவமான நாளோ'' 
   
    என்றும், இத்திருவாக்குகளால், ஊமை கண்ட கனவுபோன் றெ 
ன்னனுபவத்துக்கே யொக்கும்போலுந்தோற்றுகிறது. ஆகையால், 
  ''உருவாகியென்னைப் படைத்தாய்போற்றி 
    யுள்ளாவி வாங்கி யொளித்தாய்போற்றி " 
    என்பதனால், இச்சங்கை தீரலாம். ஆயினின்ன மிதற்கோருறு 
திப்பாடில்லையோ? என்னில், அவன் கற்பித்தசித்தமலம் நீங்கினா 
லொழிந்து அறியப்படா தியார்க்குமென்பதே சித்தாந்தம். சிவத்துக் 
குள்ளேசீவன், சீவனுக்குள்ளே சீவத்துவம்; இந்தச் சீவத்துவத்தைச் 
சாத்திபதிந்த காலத்தில், சிவம் ஆசாரிய மூர்த்தமாய்வந்து அறுவகை 
தீக்கைகளாற் சீவத்துவத்தை நீக்கி யில்லாமையாக்கி நின்றநீயே 
நானென்ற மகாவாக்கியத்தாற் றன்மயமாக்கிய சித்த வித்தையை 
வேதந்தானெப்படிச்சொல்லும்? ஆகமந்தானெப்படிச்சொல்லும்? மகத் 
துக்கள் தானெப்படிச்சொல்லுவார்கள்? சொல்லாமற் சொல்லியிருக்கு 
மென்பதே சித்தாந்தம். அவன் முன்னிவன் கற்பிக்கப் பட்டவ 
னென்று கொள்வதே அநுபவசம்பந்தம். 
              பிராரத்த வழக்கு. 
    பிராரத்தம் மூவகைப்படும். அஃதெங்ஙனம்? என்னின், பௌ 
தீகம், ஆத்மீகம், தெய்வீகம்.இன்னமொரு பிரகாரம். இச்சயா 
பிராரத்தம், அனிச்சயா பிராரத்தம், பரேச்சா பிராரத்தம், விருப்பு, 
வெறுப்பு, நொதுமல், இப்படி யநேகவிதமாயும் விரிந்திருக்கும்; 
இந்தப் பிராரத்தத்தைப் பெத்தத்திலே சீவன நுபவித்தான். முத்தி 
யிலே சிவன நுபவித்தான் என்னில், சீவன் விகாரியாகையாற் புசித் 
தான்; சிவன் அவிசாரியாகையாற் புசியான்; சீவன் முத்தன் புசித்த 
தெல்லாஞ் சிவன் புசித்ததென்று வேதாகமங்கள் பிரத்தியட்சமாய்ச் 
சொல்லுகிறதே? என்னில், பத்திகாண்டத்திற் சொல்லும். ஞான 
காண்டத்தில் கர்த்தா போக்தா சீவனுக்கே ஒழிந்த சிவத்துக்கில்லை 
யென்பதே சித்தாந்தம். ஆனாற் சிந்தியாகமத்திற் (சிவோதாத சிவோ 
போக்தா) வென்று சொல்லுவானேன்? என்னில், அதுசம்மதமே. 
சீவன் முத்தியுங்கடந்த விதேகமுத்திக் கதே சித்தாந்தம். விதே 
முத்தியிற் சீவத்துவமில்லையோ? என்னில், உண்டில்லையென்பதை 
யுன்னநுபவத்திற் கண்டுதெளி. ஆனாலிந்த விதேகமுத்தியடைந்த 

நாயன்மாருண்டோ? என்னில், உண்டு. யார்? என்னில், சுந்தரர் 
தான் (சுந்தராபோக மெவ்வணமிருந்து தென்னப் படுக்கை மெத்தை 
யறியுமோ படுப்பானீயறிவை) யென்னத் திருவுளமகிழ்ந்ததும் ஒக் 
கும். திருநாவுக்கரையர்தான் (நின்னாவார் பிறரன்றி நீயேயானாய்) 
என்னத் திருவுளமகிழ்ந்ததும் ஒக்கும்; சம்பந்தமூர்த்தி தான் (நிலை 
யவனென துரை தனதுரை) யென்னத் திருவுளமகிழ்ந்ததும் ஒக்கும். 
ஆனால், இந்த அநுபவத்தால் புசிப்பான் சிவனென்று சொல்லலாமே? 
என்னில், அந்நிலைக்கே ஒழிந்த மற்றைய நிலைக்குத் தகாதென்பதே 
சித்தாந்தம்; 

  " உண்ணாதுதங்கா திருந்தாய்போற்றி 
    யோதாதேவேத முணர்ந்தாய்போற்றி'என்னும், 

                    த த திருவாக்கினால் சிவனிருவித முத்தியினும் புசித்தாரென்பதே 
கூடாது. கூடுமென்று சொல்லிற்றே? அதுவு முபசார மென்றறிய 
வும். பின்னை யார்தான் புசித்தார்? என்னில், சாட்சி, 

  " ஒர்ப்பொடுபசியுந்தாகமுச்சாகஞ்சுகதுக்கங்க 
    டார்பரியங்கனபோகந்தன்மமுமதன்மந்தானு 
    நீப்பறியாதபுத்திநிகழ்குணமாகுமத்தை 
    யாத்துமன் குணமேயென்பரயிக்கவாதத்தினாலே " 

    உண்டுறங்கியபிள்ளை விடிந்தகாலை யுண்ணவேயில்லை, யென்று 
சாதித்தாற்போலும், சுத்தவீரனுக்கு உயுத்திகளத்தி னிரியாணக்கி 
லேசம் மறைந்துநின்றாற்போலும், இருவித முத்தியிற் பிராரத்தம் 
நின்ற நேர்மைகாண்க. 

            குருமரபுசிந்தனை - முற்றிற்று. 

                திருச்சிற்றம்பலம்.
 

 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin