logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வள்ளலார் சாத்திரம் - 15. தசவழக்குச் சிந்தனை

      சிந்தனையென்பது, ஆகமவாக்கியங்களா யுள்ளவை. அஃதெத் 
தனை? ஏகசிந்தனை, துவிதசிந்தனை என்றிருவிதம். அதில், துவித 
சிந்தனை யொழிப்பான் பொருட்டு ஏகசிந்தனை வந்தனவாம். இதற்குச் 
சாமியம் 
  " சிந்தனையைத் தந்தென்னைச் சிவமாக்கியாண்டானை 
    சிந்திக்கச்சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க 
    வந்திடுமவ்வொளிபோல மருவியரனுளத்தே 
    வரவரவந்திடுவன் பின்மலமானதறுமே.'
      பிரதமந் திருமேனிகொண்டவழக்கு. 

சிவனுக்குத் திருமேனியில்லை; எங்ஙனம்? என்னில், ஆகாசமே 
பிர்மத்துக்குச் சரீரமென்று வேதஞ்சொல்லும். அஃதன்றியும், 
அனாதி தொடுத்து இற்றை வரையுஞ் சிவனுருவமாய் வரக்கண்டோ 
மில்லை. ஆனால், அட்டமூர்த்தி, அண்ணாமலை யென்பதும், மந்திர 
சொரூபி யென்பதும் பொய்யோ? என்னில், அஃதெல்லாம் தியான 
மாத்திர மன்றிப் பயன்படாதேயென்னில், உன்னைப்போலக் 
கண்டிதப்பட்டு மலசரீரியாய்க்காமாற்றங்களோடுங் கூடிநின்றால் 
அப்போதிவன்தான் சிவனென்றறிவை; இந்த அறிவையாரோ 
உனக்குப் போதித்தவர் ! அவரே குருட்டுக்குரு, நீயே குருட்டுச் 
சீடன் பேதாய் ! இந்த ஏழைமதியாலேயன்றோ பிறந்திறந்தாய்; ஆகை 
யாற் சிவனுக்குத் திருமேனி யுண்டென்பதே சித்தாந்தம்.சாமியம்; 
    அருளே திருமேனி யான்மாத்திருமேனி 
    குருவேதிருமேனிக் கொள்'- 
    அறிவுக்கறிவா யறிவிப்பான் சில்லோர்க் 
    கறிவுருவுகொண் டருளுவான் 
    எங்குமிலையென்பா ரிதயந்தொறுமறிவா 
    யெங்குமிருப்பா னெம்முறை. "

(நாதவிந்துகளாதீத நமோநம : வேதமந்திரசொரூபாய நமோநம :) 
என்னுந் திருவாக்குகளா லறியக்கடவாய். 

          துவிதியை யுயிர்வழக்கு. 

    சிவனுக்குத் திருமேனியுண்டாகில், இந்தச் சிவனையன்றி 
மாக்களில்லை; எங்ஙனம்? என்னில், சருவதேகங்கடோறுமாய் நின்று 
உண்ணல் உடுத்தல் முதலிய காரியங்களைச் சிவனே செய்வன். 
அன்றியும் சுருதி " சரீரபின்னம், பரமாத்மனேகம் " என்று சொன்ன 
மையால் ஆத்மா நாத்தி; ஆனால், உன் பெயர் மாயாவாதியோ ! 
அனீச்சுரவாதியோ ! இருபெயரும் உனக்கே தகும்; இந்தக் கொச்சை 
மதியாலேயன்றோ, 
    மாயவாதமென்னுஞ் சண்டமாருதஞ் ருதஞ் சுழித்தடித்தார் 
        21 -என்று, தது 

    மாணிக்கவாசகரால் தூற்றப்பட்டாய், மதிகேடனே ! உயி 
ருண்டு நரகசொர்க்கஞ் சிவனுக்கோ? சீவனுக்கோ? சிவனுக்கே ஆனாற் 
சீவனெங்கே? நீதான். என்னாக் கெனக்குண்டோ வில்லையோ? 
என்னில், உண்டில்லையென்பதே நாக்கென் றறிந்தாற்போலச் சீவனை 
யறிவாய். மூடனைச் சீவாத்மாவென்றும், விவேகியைப் பரமாத் 
மாவென்றும், சொல்லுகையாலும் சீவனுண்டு. கருவியோடுங்கூடி 
னதே உயிர்க்குப்பிறப்பு; கருவியைப் பிரிந்ததே உயிர்க்கிறப் 
பென்றறி; சிரசிலே மயிருண்டானதுபோல, நாயன்மார் உள்ளத்திலே 
உயிருண்டென்று மதிக்கப்பட்டது. உள்ளங்கையிலே மயிர் கொத்துக் 
கொத்தாய் முளைத்தெழுந்த கதைபோல, உன்னறிவிலே உயிரில்லை 
யென்று மதிக்கப்பட்டது. உன் கண்ணறி உடைமைக் கேற்கக் 
கழறினை. கோட்டான் சூரியனில்லை யென்றால் ஆதானொப்புக் 
கொள்வார்; இதற்குச் சாமியம், 

 'ஊமனொளியில்லையெனி னொப்புவரோமற்றதுபோ 
    லேமவுயிரின்றென்பாரில் உவனுவளுதுவெனுமுரைமு 
    தோன்றிநின்றழி முத்தொழிலுளவதனாற் [ ச்சுட்டாய்த் 
    சிவனுண்டவனாற் சீவனுமுண்டாங்

    கறிவினை மறைக்கு மவிச்சையுமுளவே 
    உடலிழந்தழுதீரோ உயிரிழந்தழுதீரோ [ தசவழக்குச் [ ண்டீ 
    உடலிழந்தழுதீராகில் லுடறனையன் றுங்கண்டீரின்றுங்க 
    ருயிரிழந்தழுதீராகி லுயிர்தனையன்றுங்காணீ ரின்றுங் 
                                (காணீர்'- எ - ம், 

    தொல்லையுயிரிலையென்பவனேயுயிர் தோன்றிடலு இல்லையுயிரென்றுரைக்கு முரைக்குளிருக்குமுயிர் 
  நல்லமலர்மணம்போலுயிர் நாதனுநண்ணுமென்றான் 
  கல்லிற்புறப்பட்டதையுடையான் கச்சியேகம்பனே'

 உளதிலதென்றலிவியந்திரதனுவிளான்மா) என்னுந் திருவாக் 
கால் அறியக்கடவாய். 

          திரிதியை யாணவவழக்கு. 

    ஆத்மா உண்டு; ஆத்மாவைப் பஞ்சபாசத்தி லாணவமறைக்கு 
மென்பது கூடாது. ஏன் கூடாது? ஆத்மா சுவயஞ்சோதி, அசரீரி, 
அனாமி, அவிகாரி, நிரவயன், அநந்தாநந்தன்; ஆகையாலாணவமறை 
யாது. உன் பெயர் அகம்பிரமவாதியென்றுயர்ந்தோர் சொல்லுவர்; 
கெடுவாய்? பிரமன், நான் பிரமமென்று பட்டபாடும், புருடோத்த 
மன், நான் பிரமமென்று பட்டபாடும், புராணங்களிற் கேட்டறிந்தா 
யில்லையோ ! ஆகையால், உன்கருமமே கட்டளைக்கல்லாயிற்று 
தாய் ! இந்த மதியைக்கொண் டெங்ஙன்பிழைத்தாய் ! இத்தனைகோ 
ரணிக் கிடங்கொடுத்ததே அஞ்ஞானம் ! குழந்தையைப் பராக்குச் 
செய்வதுபோல, நாடோறு முன்னை விடயப்பராக்குச் செய்வதாண 
வம்; அன்றியும், (உன்னாணவத்துக்கசதிவந்ததில்லையோ வென்னும் 
வையச்சொல்லானு மறியக்கடவாய்; இதற்குச் சாமியம், 

    அன்னியத்தைக்காட்டிய நன்னியத்தைத்தான் 
    மறைக்குமென்னே மலத்தினியல்'' - பே 
    அன்னியமானவற்றையுணர்த்தி யன்னியமாய் நிறைந்தவறிவறி 
யாமையானும் மலமிலை மாயை மறைக்குமென்னில்,

  " மலகுணமறைத்தல் மாயைவிளக்க 
    லலைபுக்கொடுங்கிய வான்வாலுள 
    தலையிலையென்னல் சவலைச் சொல்லே " - 
    ஆனால், இந்த மலம் அனாதியோ? ஆதியோ? அனாதியென்னில் 
நீங்காது. ஆதியென்னின் நீங்கிப் பின்னுமாவரிக்கும். பாலுக்கு 
வெண்மையும், கரிக்குக் கறுப்பும் இயற்கை. சுக்கிலாம்பரத்துக்கு 
அழுக்கேறல்செய்கை; ஆனால், இந்த இருதலைக் கொள்ளிக் கிடைப் 
பட்ட யான் போம்வழி, பன்னிரண்டு வருடங் குருக்கிடை. 
          சதுர்த்தி மாயைவழக்கு. 
    மாயையேயில்லை; எவ்வாற்றானில்லை? சருவம் பிரமமயமென்று 
சுருதிசொல்லும்; அதன்றியுங் காணப்படுவன, கேட்கப்படுவன, உண் 
பன, உடுப்பன, கலியான, நிரியான முதலியவெல்லாம் பிரமமென்று 
என்னனுபவத்துக்கே யொக்கும்போலும்; ஆயின்முன்னே ஒரு சர்வ 
சீவதயாபரக்கொக்கு நாமமாத்திரஞ் சிறப்ப, ஏரி, குளம், மடுக்கள், 
குட்டையிலுள்ள மீனெல்லாந் துய்த்த கதையை விளக்க, நீயும் அவி 
காரவாதிப் பட்டங்கட்டிக்கொண்டு, கிருட்டின விலாச புத்தகத்தைக் 
கைப்பிடித்து, மேலுஞ் சர்வாத்மாக்களும் போம்வழி தூர்த்தனை. 
மாயையிலே அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறதும் வனிதையருபத்தத் 
திலே சிங்கவைப்படுவதும் உனக்கே தெரியும்.மத்திமப்பேதாய் ! தற் 
போதச் சிவன் மற்ற நாதாக்கள் அனுபவநிலையை யறியாது பிதற்று 
கின்றன. உன் கருமமே கட்டளைக்கல்லாயிற்று. சாமியம், 
      ஒருமலவழக்கு மிருவினைத்தொடரு 
      மும்மலச்செருக்கு நால்விதவாக்கு 
      மைவகைப்புலனு மறுவகைக்குற்றமு 
      மற்றாலன்றி யறிவாகாயே - எ - ம், 
  " மாயையேயுடலமாகும் யாவையுமாயையாமே " எ - ம். 
  ஆகையாலிந்தமாயை யறிவினைமுழுதுமூடித்ர் 
  தேகமேயான்மாவென்றுஞ் சேயிழைமடவார் தங்கள் 
  போகமேமோக்கமென்றும் புத்தியைத் திரிபுபண்ணுஞ் 
  சோகம் பாவனையாலித்தைத்தொலைப்பர்கள்சீவன்முத்தர்''

என்னுந் திருவாக்காலு மாயையுண்டென்றறி. இந்த மாயை 
அறிவை மறைக்குமன்றி விளக்காதென்னில், 
    ஆணவத்தி லேகிடந்த வாருயிர்க்குக் காயமெனுங் 
    கோணைவிளக் களித்த கோமானே - யாணவமு 
    மாக்கையும்வந் தென்னைநித மல்லற் படுத்தாமற் 
    சாக்கிரா தீதத்தைத் தா " 

    என்னுந் திருவாக்காற்றெளி. ஆகிலிந்தமாயையெங்கே பிறந் 
தது? என்னில், மனதிலே பிறந்தது. அந்தமனதெங்கே பிறந்தது? 
என்னில், வியாழவட்டங் குருக்கிடை. 
            பஞ்சமி கன்மவழக்கு. 

    கன்மமே கர்த்தா; கர்த்தாவொருவன், வேறென்பதில்லை. பிற 
க்கப்பண்ணுவதுங்கன்மமே, பாலயௌவனவிருத்தம் நோய் சாக்காடு 
முதலியன பண்ணுவதுங்கன்மமே. இந்தக் கன்மந் துலையொத்தகால 
த்தில் கன்மமே முத்தியைக்கொடுக்கும் இந்த கன்மநுட்பந் தெரி 
யாதவர் கர்த்தா கன்மக்கயிற்றலே யாட்டுவிப்பாரென்பர்; ஆயின் 
உன்பெயர் கர்மவாதியென்றும், காலவாதி சகோதரனென்றும், கேட் 
டிருப்போம் பேதாய் ! இந்த ஏழைமதியைக்கொண்டல்லோ அனேக 
காலம்பிறப்பை வளர்த்தாய் ! தெரிந்துந் தெரியாதவன், கற்றறி 
மோழைநீயே, கங்கையை யடுத்தும் கழியிடை மூழ்குங் குணத்தவன், 
அறம்பாவமென்னு மருங்கயிற்றாற் கட்டி.''- 
    என்னுஞ் சுருதிதெரிந்துந் தெரியானாகி விளக்கைப்பிடித்துக் 
கிணற்றிடை வீழ்பவனீயே, உனக்கொப்பு வாரிபுடைசூழ்ந்த வைய 
கத்துளில்லை. கெடுவாய்? பூர்வசென்மத்திற் செய்த விருப்பும் 
வெறுப்பும் சடமாகையாலும், அதை யுனக்கு ருசிக்கப்பண்ணிப் 
பொசிப்பிக்கிறவரே கர்த்தா. எனக்குக் கன்மமில்லையோ கர்த்தா 
வில்லையோ வென்னும் வழக்கச்சொல்லாற்றெளி. ஆனாலந்தக் கன் 
மஞ் சாகாரமோ? நிராகாரமோ? என்னின், சாமியம், 

    அருவாயவல்வினைநோ யடையாவண்ண 
    மாவடு தண்டுறை யுறையுமமரரேறே'-

 என்னுஞ் திருவாக்காற்றெளி. கன்மத்துக்குச் சடமுஞ் செயலு 
முண்டோ? என்னில், சாமியம், 
    கன்மம் வியாபிகடம்போற் சடமன்று 
    சென்மிக்கப்பண்ணுஞ் செயல்'' - 
    ஆனாலிந்தக் கன்மம் நாசமடையுமோ? நித்தியமடையுமோ? 
என்னில், சாமியம், 

" மாயப்பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின் வாயிற்பொடியட்டிப் பூவல்லிகொய்யாமோ " - எ - ம். ஊழா லுடம்புண் டுடம்பாலிங் கூழுண்டு தாழும் வினையாற் சகமுண்டு - காழ்கொண்ட வித்துமர மும்போல வீயா தொருக்காலு முத்தியிலே வீயு முளை " - எ - ம். [ ன் ஞ்சி தந்திருநோக்காற்போம் பிராரத்தந்தனுவோடேகும் விஞ்சுமாகாமியங்கள் விளங்கனுபவத்தால் வீயுஞ் செஞ்சயான் செய்ததெல்லாஞ் சிவன் செய்ததென்றுதேறி மஞ்சனே வினைத்திறங்கள் வந்துனைச்சந்தியாவே'- எ - ம், " முன்னை வருவினையெல்லாஞ் சின்முத்திரைகொண்டெரித் 
தேன், பின்னை வருவினையெல்லா மருளிற்பிரித்துவிட்டேன், 
றின்னும் வினையினையெல்லாஞ் சிவார்ப்பணஞ் செய்தொழித் 
தே, னின்ன மெனக்குப் பிறப்புமுண்டோ கச்சியேகம்பனே. " 
    இக்கருத்தா னாசமடையுமென்பதே சித்தாந்தம். ஆயின், இந்தக் 
கன்மம் ஆதியோ? அனாதியோ? என்னில், குருக்கிடை. கன்மத் 
துக்குப் பிறப்பிறப்பெங்கே? என்னின், உன் னனுபவத்திற் றெரியு 
மன்றி, நிருவசனம் வசனத்துக் கெட்டாதென்றறி. கன்மம் நினைத் 
தாலுந் தீண்டினாலுந் தொழிலுரையாலும் வரும், 

" உன்னலொருகால் பின்னுரைத்தலிருகாலதனைத் துன்னன் முக்காலொன்றே தொழில் " திரிகரண மசையாது நிற்பின் கன்மம் பற்றாதென்பதே சிந்தாந்

   விருப்புவெறுப்பற்று வேதமொழிப்படி மெய்யுணர்ந்து 
    மரிப்பைச்சனிப்பையு மற்றொளியாகியமாதவர்பாற் 
    கறுப்புச்சிலையனுங் காலனும் வந்தென்செயக்கடவர் 
    நெருப்பைப்புழுப்பற்றுங்கொல்லோநெடுங் கச்சியேகம்பனே'- எனவும் வரும். 

            ஷஷ்டி யநாதிவழக்கு. 
    சொல்லிப்போந்த மும்மலங்களும், ஆன் மாவை யநாதியிலே பற் 
றிச் செப்புங் காளிதமும், உவருஞ் சமுத்திரமும், மணியு மாசுண 
மும், உமியுந் தண்டுலமும், காசமும் விழியும்போலப் பசுவையு 
மறைத்துப் பதியையு மறைக்கும். கண்ணைத்தா னிருண்மறைத்தது, 
கதிரையு மறைக்குமோ? என்னில், இவனுக்குப் பதிமுகந் தெரியா 
வண்ண மறைப்பது பாசமானமையால் மறைக்கும்; ஆன்மா, 
அனாதி, சுகரூபி, நிராகாரன், சிவசம்பந்தனானால் எப்படி மலம் மாயை 
கன்மம்வந்து கிராணமானது? என்னில், முயற்கொம்பும், ஆகாசத் 
தாமரைப்பூவும்; வந்திபுத்திரனும், கானற்சலமும், தாணுபுருடனும் 
போல மலம், மாயை, மாமாயை, கன்மம், திரோதாயி யென்று 
வேதஞ் சொன்னால், உனக்கேன் அனாதி சங்கைவரும்; ஒருத்தியைப் 
பேய்பிடித்ததென்று ஐதீகமாகச் சொல்லவே, அவள்பேயான பிற்பாடு 
பூசாரி ஆட்டி, அடித்து, அயோக்கியை யோக்கியையாக்கித் தெய் 
வத்தைச் சிரசின்மேல்வைத்துப் பேய்போனதென்னவே, 
பேரிலே தெய்வமிருக்கிறதென்பதுபோலச் சீவான்மசம்பந்தம் போக் 
கிச் சிவத்துவம் வருவித்தபின், சீவத்துவம் வந்தவழியும் பேய்வந்தவழி 
யும் விசாரிப்பது அவம். குழந்தையை யுறங்கென்று பிட்டத்தைத் 
தட்டத்தட்ட வுறங்காது வுறங்காது சிரசைக்கிளப்பினாற்றாயென்செய்வாள். 
அதுபோலச் சீவன் சிவத்திலே யுறங்கினால், அனாதிவழக்குத் தெரி 
யுமென் றாசாரியன் சொல்லச்சொல்ல இரட்டித்துப் போதந் தலை 
யைக்கிளப்பும். இதற்குச் சாமியம், 
  முன்பு கண்டேனில்லை பாசம்பசுபதிமும்முதலும் 
  பின்பு கண்டேனில்லை யென்னகண்மாயம் " - எ - ம், 
  இல்லேயெனுமாயையி லிட்டெனை நீ 
  பொல்லேனறியாமை பொறுத்திலையே " - எ -ம். என்

வெளித்தோற்றம்போலானதெல்லா மையாடுகண்ணியு மைந்தருஞ்சுற்றமும் வாழ்வுஞ்செந்தி லைபாகின்மாபையுரு 
  மெய்யாயிருந்தது நாட்செல்லநாட்செல்ல வெற்றவெறும் 
  பொய்யாய்ப்பழங்கதையாய்க் கனவாய்மெல்லப்போய்விட் 
                        _ " தே'' -- எனவும் வரும், 
    ஆனால், மித்தையென்றால் ஆகமசித்தாந்தம் என்னவாய் முடி 
யும்? மல சத்தியிறந்தும், மலம் அப்பிரகாசமா யிருக்குமென்றதுஞ் 
சரியோ? என் தகப்பன் செத்துத் தெய்வமா யிருக்கிறானென்றும், 
வீமனெறிந்த யானை ஆகாயத்திலே தொற்றி ஒன்றொன்றாய் விழு 
மின்றைக்குமென்றும், இந்த மரத்திலே பேயிருந்தது இப்போது 
சிறிது காலமா யிறந்திருக்கிறதென்றும், கலியுக அந்தியத்திலே கற் 
கோழி கூவுமென்றும், பொய்வழக்குப் பலவிதம். இதுபோலாமென் 
றறிவாய். இருள் போனபிறகு இருட்டுண்டென்னில், சொல்லள 
வன்றிப் பொருளில்லை. உண்டே? என்னில், உனக்குண் டெனக் 
கில்லை என்பதேசித்தாந்தம். பெத்தான்மாவுக்குண்டு, முத்தான் 
மாவுக்கில்லை.வாயுபூதத்துக்கு வடிவுண்டு, ஆகாசத்துக் கதுவுமில்லை; 
சாமியம், 
    அசைவற்றால் வாயுவாகாசம்பின்னு 
    மசைவுற்றால் முன்வாயுவாம் " -எ - ம். 
    ஆசையுற்றாற்சீவ னாகாரமாமந்த 
    வாசையற் றானீயேயான்” எனவும் வரும், 
    ஆனால், முத்தனானபின் மலசம்பந்த முண்டோ? உதித்த பிறகு 
இருட்டுண்டோ? இல்லை. உதியாததற்குமுன் இருட்டுண்டோ? 
உண்டு. இல்லையென்பது நீ அனுபவியேயானால் அகமுகமாய்ப் 
பார்த்தறிதி. திருநோக்கம் பட்டபிற்பாடு, பஞ்சபாசங்களு மில்லை 
யென்று, வேதாகமப்படி பிரத்தியேகான்மாசிவோகம் என்றறிவதே 
சைவசித்தாந்தம். (பாசமென்னை விடுவான் காலமெந்நாளோ) என் 
னல், சமுசயாத்மாவா மென்றறி. இதற்குச் சாமியம், 
  " சிவன்வேறு சீவன்வேறென் றிரண்டாய்க்காணு 
    மவன்செனனமரணத்தை யடைவனாதலினா 
    லத்துவிதபாவனையை முத்தனாதரிப்பன் " - எ -ம்,

(தவசவழக்குச் ஆன்மாவே பரமசிவமென வுண்மையாக வறிகின்றானவனெந்த வவத்தையடையினுமிவ் 
    வான்மாவே பரமுத்தி யெளிதடையுமிந்த 
    வான்மலாபத்தையொத்த லாபம் வேறில்லை " - எ - ம், 
  சீவன் சிவலிங்கமாகத் தெளிந்தவர்தம் 
    பாவநசிக்கும் பரிந்து'. - எ - ம், 
    அறிவென் றுனையறிந்தா லானந்த போதச் 
    செறிவும்பொய் யாணவத்திற் சேர்வும் - பிறிவும் பொய் 
    யானாவித வகிதத் தாட்டுங் கருவிகளிற் 
    போனாலும் பொய்பொய்பொய் பொய்'- எ - ம், 
    அறிந்தவிடத்தில்லை யறியாமைதன்னைப் 
    பிறிந்தபினும் பேசல்பிழையன்றோ " -எ - ம், 
    சுத்தபடிக சங்காசமாய்ப் பஞ்சபாசங்களு நமதிடத் தில்லை 
யென்று பாவிக்கப்படுவதே சித்தாந்தம். 
            சத்தமி சமயவழக்கு. 
    சைவம், பாசுபதம், காளாமுகம், வாமம், பைரவம், மகாவிரதம், 
உலகாயுதம், புத்தம், சமணம், வைணவம், மாயாவாதம், அனீச்சுர 
வாதம் ஆகப் பன்னிரண்டு மதம். இந்தப் பன்னிரண்டுங் கடந்தவனே 
சீவன்முத்தன்; சமயசாத்திரம், சமயஅனுட்டிப்பு, சமயதேவதை 
  வைகளெல்லாம் மனம்பழுக்கக் கட்டிய வுபாயசூத்திரம்; நாமார் 
நமக்குப் பதியாரெனவரும் ஞானங்களே சமயாதீதஞானம்; இந்த 
ஞானத்தால் சுகர், வாமதேவர், வதித்டாதி, கபிலரீறாய இருடிகளும், 
சம்பந்தர்முதல் மாணிக்கவாசகரீறாய மகத்துக்களும், முத்தியடைந் 
தார்கள். ஆகையால், 
    தன்னையறியுமறிவே யறிவன்றிப் 

    பின்னையறிவது பேயறிவாமே " - என்னும், திருமூலர் வாக்கியமே வாக்கியம். 
    " உவலைச்சமயங்க ளொவ்வாதசாத்திரமாங் 
    கவலைக் கடல்'- என்றதுஞ் சரியொக்கும்
     அன்றென்று மாமென்று மாறு சமயங்க 
    ளொன்றொன்றோ டொவ்வா துரைத்தாலு - மென்று 
    மொருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கு 
    மருதனையே நோக்கி வரும்'- எ - ம். 

" பன்னிருசமயத்தோரும்பணிந்திடாப்பராபரத்தை'- எ - ம், 

  நன்றென்றுந் தீதென்று நானென்றுந் தானென்று 
    மன்றென்று மாமென்று மாகாதே - நின்றநிலை 
    தானேதான் றத்துவத்தீர் சம்பறுத்துங் காக்கைக்குப் 
    போனாற்போற் றேடும் பொருள் " 

    கருணைக்கையானம்மைத் தூக்கினமையானல்லனென்றுந், தூக் 
காமையாற் றீயனென்றும், நானே பரப்பிரமமென்றும், வத்துவன்றி 
யாத்மா வில்லையென்றும், மனவாக்குக் காயத்துக் கெட்டாமையா 
லில்லையென்றும், ஈச்சுரனின்றே லிரவுபக லுளவோவென்னு மைதீ 
கத்தாலாமேயென்றுங், கூறும் பற்பல சமயிகள் கோரணிக்குத் 
தரவுமாகாதே, சுபாவமா இத்தனைக்கு மிடங்கொடுத்த வறிவே நின்ற 
நிலை; யதுவே தான் இந்தவறிவாய் நின்று சமயப்பேய்களை நோக்கா 
மனோக்கித் தத்துவவிசாரணை பண்ணுந் தத்துவத்தீர் சம்பையறுத் 
தொருவன் கட்ட நாணின்று நெடியமரத்தால் கட்டுவோமோ, நீர்ப் 
பாம்பால் கட்டுவோமோ, அன்றி விலாங்குமீனாற் கட்டுவோமோ, 
நீண்டகற்றூணாற் கட்டுவோமோ, வென்றாவி திகைக்குங்காலை, 
யாத்தனானவ னனைத்தையுங் கட்டுவதச் சம்பேயென்னவுந் தேறாது, 
நெடுந்தூரம்போனாரைப் போன்றனவாம்; தன்னைத் துறந்து பொருள் 
காணவேண்டி நீர் போந்தபோக்கென்றதிசயித்தனவா மென்றவாறு. 
இதற்குச் சாமியம், 
    தானேசிவமல்லாற் றனிச்சிவம் வேறில்லை " - எ - ம். 

    (அஞ்செழுத்தும் பாவனையு மவனைப்போன்றன) என்னும், வையச்சொல், 

" சிவச்சீவோசீவோசிவாசற் சீவோகேவலசிவா'' -எ - ம்,

     அறிவு திரிவிதத்துக் கப்பா லறியு 
    மறிவே சிவமதுவே நீயா - மறிவொன்றிக் 
    கண்டாருங் காணாக் கதியை * மழபாடிப் 
    பண்டாரங் காணும் படி " - என்பது, 
    மழபாடிப் பண்டாரமே? யிதேசமயாதீதப் பரமாகியமுத்தி 
காணக்கடவாய். ஆன்மதத்துவ வறிவும் வித்தியாதத்துவ வறிவுஞ் 
சிவதத்துவ வறிவுமாய மூவகைத் தத்துவசாலத்துக் கப்பாலறியப் 
பட்ட சுபாவவறிவே சர்வவுபாதி சூனியமாகிய சிவம். அந்தச் சிவமே 
நீயாம். இதற்கோ ரையப்பாடில்லை. மகாவாக்சியமு மிஃதே; 
ஐயறிவுமோரறிவா யொடுங்கிய யோகீஸ்பராளுங் கண்டுங்காணாத 
முத்தியை யென்றறிவித்ததா மென்றவாறு. றறிவித்ததா மென்றவாறு. அறிவு திரிவிதமென் 
பதைச் சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி யென்கினுமாம். இதுவு 
மதே - அறியுமறிவே சிவமென்றது தூலவருந்ததி நியாயம் போலத் 
தூலவறிவைக் காட்டிச் சூக்குமவறிவை மூன்றையுஞ் சாக்கியமாய்க் 
கண்டதுவே நீயென்று காட்டியது : (அறிவொன்றிக்கண்டாருங் 
காணாக்கதி) என்றது அறிவாலறியும் பொருளல்ல வென்றதாம். 
காணும்படியென்றது, மாயாவாதியைப் போன்று வாசாப்பிரமமாய்ப் 
போகாமையென்பதாம்; சாமியம், 
    " நீருக்குட்டம்பம் போ னின்னறிவினின்றானைப் 
    பாருட்கண்கொண்டு பரிந்து " -எ - ம். 
  " எங்குநிறைந்தானை யேகமிரண்டென்னாதே 
    யெங்குமாய் நீகண்டிரு - என்றும் வரும். " 
      அட்டமி ஞாதுருஞான ஞேயவழக்கு. 
    ஞாதுரு - ஆன்மா, ஞானம் - ஆத்மாவினுடைய தசேந்திரிய ஞா 
னம், ஞேயம்- ஈச்சுரன். இந்த ஈச்சுரனாலே தசேந்திரிய ஞானத்தை 
ஆன்மா வறியும். இந்த ஞானம் முத்தியிலுமுண்டு, கூடாதென்னில் 
முத்தியின்ப மனுபவிக்கிற வான்மாவுமில்லை. ஆகமுமில்லையாம். 
மிகவும் நன்று எல்லா மில்லாமற்போகிறதே சுபாவமுத்தி; 
  அவனுநானுமெய்ம்முயங்கி யனுபவிக்குமளவிலே 
  யவனுமில்லைநானுமில்லை யாருமில்லையானதே. என்று, 
          மழபாடிப்பண்டாரம் என்பது சீடனது பெயர். " "

    சுருதியிருக்கிறதென்னில், சுருதிக்குப் பொருடெரியாமல் யாரு 
மில்லையென்றாய், நேயத்தழுந்தினவிடம் எல்லாமிறவா திறந்திருக் 
கும். அஃதெங்ஙனம்? என்னின், ஒருத்தியை ஆலிங்கனம் பண் 
ணிய ஒருவன் காட்டிற் புலி முதலிய மிருகங்கள் குறுகினுங் காணா 
னென்னுங்கதையே சாட்சி. ஆனாலிந்தக் கரணத்தோடு முத்தியை 
யடைவதோ? என்னில், முத்தியென்பது கைலாயம் வைகுந்தம் 
பொன்னெயில் வட்டமுதலிய தானமன்று, ஆனாற் பின்னைத்தா 
னெது? என்னில், தானே முத்திதானம். பெத்தக்கரணம் போய் 
முத்திக்கரணமாதலே இறவாதிறத்தல். மூடன் ஞானியானால் முன் 
மூடனாயிருந்த தசேந்திரிய வந்தக்கரணமெங்கே யோடிப்போனது? 
போகவில்லை. எவ்வண்ணம்? என்னில், தேவதத்தன் நியாயம்போலா 
மென்றறி. சாமியம், 

ஙன (6 ஆனந்தந்தாமென் றறியாவறிவிலிக ளானந்தந்தேடி யலையும் " 
ஆனால், ஒரு பாடாணத்தைச் சிற்பன் றெய்வவுருவாக்கினால் 
முன் பாடாணமுண்டோ? இல்லையோ? இல்லையென்னிற் கைக்குத்தட்டு
படாமற்போகவேண்டும். குணுங்கி கற்பிலே மறைந்து நின்றாற் 
போலப் பாடாணந் தெய்வவுருவின் மறைந்திருக்குமென்றறி. 
அங் மறையாதுண்டோ? என்னில், பாடாணத்தியானமேயில்லை யாலும், 
முத்தி சத்தியாலும், நினைக்குமிடத்துத் தெய்வப்பிரசன்ன 
மாதலாலும், இல்லையென்பதே சித்தாந்தம். இதுபோலும் அது 
வென்றறி. வான்மீகி, வதிட்டர், மதங்கர், கபிலர் கதையே சாட்சி. 
நதிமுலம், ரிஷிமூலம், குருமுலம், ஸ்ரீமூலம் அறியக்கூடாது.சாமியம், 
   " எல்லாருங்களிதுளங்க விரும்பையிரும்பொன் 
    நல்லார்கடொழுந்தேவாய் நாட்டுகின்றஞாயம்போ 
    கல்லாதபுலையேனைக் கருணையாற்கடைக்கணித்துப் 
    பொல்லாதபரப்பிரம மாக்கினையென்போல் வந்தே'- 
                                எனவும் வரும். 
            நவமி தெய்வவழக்கு. 
    தெய்வமென்பது பொது; தெய்வத்தை யார்கண்டவர்? கயிலா 
யம், பொன்னெயில் வட்டம், ஸ்ரீரங்கம், திருப்பாற்கடல், செகந்ம நாதம், 
இவை ஒருகாலந்தோன்றும் ஒருகாலமழியும்.ஒருதெய்வம் 
ஒரு தெய்வமாகியும் போகியும்வரும். ஆனாற் றெய்வநிச்சய மில்லையோ? 
என்னில், தெய்வநிச்சயம் தெய்வமறியாதவனுக்கு நாமே சித்து, சிதா 
நந்தன், திவ்வியசொரூபனென்று கண்டவன் எந்தத்தெய்வத்தை 
வணங்குவான்? எந்தத் தெய்வத்தையும் வணங்கான். ஆகையால், 
சிறுபிள்ளைகள் தெய்வங்களைக் கொண்டாடுதல்போல, அறிவில்லாப் 
பெரிய பிள்ளைகளுந் தெய்வத்தை யாராதனை பண்ணுவார்களென் 
றறி. தனக்குத்தானே மரம், கல், மிருத்திகை தாம்பிரமென்று 
தெரிந்தும் (நாட்டோடே நடுவேயோடும்) என்கிற ஐதீகத்தைப் பற்றி 
மயங்குமென்றறி.சாமியம், 

“அத்தேவர்தேவரவர் தேவரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப்புலம்புகின்ற பூதலத்தே " -எ - ம், பூவும்புகையும்புனலும் பொருடேடித் 
      தவை மறைக்குந் தினம் " எ - ம், 
    (சிவோகஞ்சிவோகம்) என்று வேதாகமங்கள் சொல்லுவதே பிர 
மாணம். சைவபுராணத்திற் சர்வசாட்சி சிவோகமென்று சொல்லும். 
கீதைகளிலும் பிரத்தேகான்மா சிவோகமென்று சொல்லும்; ஆகை 
யாலிதுவே சித்தாந்தம். வேதசித்தாந்தமு மிதுவே; 
  " உள்ளமேபீடமுணர்வே சிவலிங்கந் 
    தெள்ளியரா லற்சிக்குமாறு 

  எ - ம், சீவன் சிவலிங்கமாகத் தெளிந்தவர்கள் பாவநசிக்கும் பரிந்து " எ - ம், புன்புலாலியாக்கை புரைபுரைகனியப் 
    பொன்னெடுங்கோயிலாய்ப் புகுந்தென் " " - 

  " உள்ளமே கோயிலா யுள்குமென்னுள்ளமே " எ - ம். எம், 
  இப்படி அனந்தஞ் சாமியமுண்டு. அனுபவிக்கேதெளியும். 
மற்றையர்க்குத் தெளியாதென்பதேசித்தாந்தம். கைலாயம், வைகுந் 
தம், பொன்னெயில்வட்டம், வை கற்பனைத்தானமேயன்றிக் கற்

 பனை கடந்த அறிவிலில்லை. உண்டென்னில் அனுபவியன்று, ஆகை 
யால் (தானேசிவமல்லாற் றனிச்சிவம் வேறில்லை) என்னுந்திருவாக்கே 
ஏறுகடைசி ஆகமசித்தாந்தம். 
            தசமி துறவிவழக்கு. 

    துறவாவது பற்றறத்துறத்தல். கன்மத்தை நீங்கலாவதெப்படி? பட்டின 
    னத்தார், பத்திரகிரி, சுகர், வாமதேவர், சடபரதர் முதலாயி 
னோர் பற்றறநிற்றல். அமைத்தபடியன்றி யாராலுந் துறக்கப்படா 
தோ? என்னில், உயிர்க்குணமாகிய காமாதிக ளடங்கிநிற்பதே 
துறவு; அவை யடங்காமனிற்பதே சமுசாரம்; அறிவாகி நிற்பதே 
துறவு; ஆகமாய் நிற்பதே சமுசாரம்; எத்தை யெவன்றான் துறந் 
தான்; ஸ்ரீகளைத்துறந்தான் ஸ்ரீமாயை யானபடியினாலே துறந்தது 
போய் துறந்திருப்பாரெல்லாம் வீணோ? என்னில், 
  " புலவுநாய்க்குறிகாணினும் புருடர்நெஞ்சுவப்பர் " 
    ஆகையால், புறப்பரிசமன்றி அகப்பரிசமுண்டென்பதே சித் 
தாந்தம். ஆனாற்றுறவறமில்லையோ? என்னில், இல்லையென்றால் 
வேதாகமம் ஒப்புக்கொள்ளாது. ஆகையால், துறவறமில்லறம் இரு 
விதமாய் விளங்க வகுத்தனவாம். இதற்குச் சாமியம், 
  6 துறப்பார்மற்றுப்புரவில்லா ருறற்பால 
    வூட்டாகழியு மெனின் " - எ - ம், 
    ஊழைத்துறந்தா லுயர்துறவியாவையன்றி 
    யூழிருக்கநீ துறவியோ'
      ஆகையால், சித்தாந்தம் கன்மநீக்கமே துறவு; கன்மசம்பா 
  ணமே சமுசாரம். காமாதிகளிற் பற்றறத்துறத்தலாவது, 
    கண்டவின்பமே மீளவுங் காண்கின்றதொருநாட் 
    கொண்ட கோலமேமீளவுங் கொள்கிறதுவந்து 
    கண்டகாட்சியேமீளவுங் காண்கின்றதென்றால் 
    விண்டமேலவர் நாணுறா தொழிவரோவெறுத்து'' 

    என்னுங் கருத்தைப்பற்றிவரும் உபாதியேயாம். பிருங்கிமா 
முனி தீரத்துறந்தும் பின்பட்டபாடு செகமேயறியும்; சீவக்கூறு-

சிவம். தேகக்கூறு - சத்தி : ஆனபடியினாலே, சிவத்தை யெந்தக்கால 
முஞ் சத்தி நீங்காதென்பதே சித்தாந்தம். சாமியம், 
    எத்திறநின்றானீச னத்திறமவளுகிற்பள் " - ஆனதால், 
  பார்ப்பான் - பார்ப்பாத்தி, ராசா - ராசாத்தி, வைசியன் - வைசியச்சி, 
சூத்திரன் - சூத்திரச்சி, இங்ஙனஞ் சிவக்கூறு சத்திக்கூறு கண்டு 
கொள்க. இல்லத்தான் பாசபெந்தமென்றுஞ் துறவி ஞானபெந்த 
மென்று முலகங்காணும்வரம்பு காட்டியது. உபாதியாலே வேற் 
றுமை காண்பதன்றிக் கன்ம வேற்றுமையின்று. மரணகாலத்திலே 
மதிவேற்றுமையால் நல்லார் பொல்லாரென்று மதிப்பதன்றிப் பிண 
வேற்றுமையின்று. அதுபோலச் சனவேற்றுமையின்று.சாமியம். 

பிறப்பொக்குமெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையால் " 
ஞானம்வந்த ஞான்றெந்தவறமாயினுந் தகும். அகண்டாகார ஞானத்தை 
இல்லறமுந்துறவறமும் மறையாதென்பதேசித்தாந்தம். 
செத்துப்பிறந்துழல்பிணக்கைச் சின்மயநன்முத்திரை 
யைப், புத்தியிடைப்புதைத்தருளிப் பொன்றுவித்துப் பொ 
ருண் முடிவைப், பத்து வழக்கினுந்தேற்றிப் பரமபதமெற் 
களித்தா, னத்துவிதமெழுவாயி னமைத்தசிவப்பெயரோ 
னே எனவும்வரும். - 
          தசவழக்குச் சிந்தனை - முற்றிற்று. 

 

Related Content

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Tiruvarutpa of ramalinga at

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramal

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal tirumurai -IV (v

திருவருட்பா Tiruvarutpa of ramalinga atikal part -V (verses

திருவருட்பா இராமலிங்க வள்ளலார் Part 4 Tiruvarutpa of ramalin