பராபரமாய் நித்தமாய்ப்பரிபூரணமாய்
நிராமயமாய்நிட்களமாய் நீங்காப் - புராதனமாய்ச். (1)
சத்தியமாய்ச்சித்தாய்ச் சதானந்த தேசாய்ச்
சுத்தவெறுவெளியாய்ச்சூனியமாய்ப் - புத்தமாய். (2)
தற்பரமாய்ச்சிற்கனமாய்த்தத்துவாதீதமாய்ச்
சிற்பரமாய்ஞானச் செழுஞ்சுடரா - யற்புதமா. (3)
யறிவுக்கறிவாயகண்டிதமாயெங்குஞ்
செறியும்பரமசிவமாய்ப் - பிறியாத. (4)
வேதச்சினகாரத்துள் வீற்றிருந்ததெய்வமே
போதகுருவாய்ப்புவிமீது - நாதனென. 5
வந்தான்றிருவடியைமத்தகத்திற்சேர்த்தினான்
றந்தானென்சென்னித் தடக்கையைச் - சிந்தா. 6
குலமொழியத்தன்னுளத்திற் சிந்தித்தான் கோணை
மலமொழியப்பார்வையினைவைத்தான்-சலமொழியா . 7
வாங்காரம்பொன்றவமுத்திருவாக்களித்தான்
சாங்காரயோகந்தலைப்பட்டா - னீங்காத. 8
மெய்ஞ்ஞான நூலைவிரித்துரைத்தான் மாணவக
வஞ்ஞானவாக்கை நீயன்றென்றா - னெஞ்ஞான்று 9
நாற்றவுடனானன்றேனானாவதியாரிதனைச்
சாற்றிடிங்கென்போல் வந்ததற்பரனே - யூற்றைக்கு 10
மாக்கைக்குச் சாக்கியாமான்மாவே நீயதனைப்
போக்குவரவுபுரிகின்றா - யூக்கமொடு - (11)
தேகஞ்சடமென்றுந்தேகியறிசித்தென்று
மாகமங்களெல்லாமறையுங்கா - ணோகையொடுந் (12)
திரிசியமேகாயமதிற்சித்தேதிருக்கென்
றருமறைகளெல்லாமறையுங்கா - ணிரிகின்ற (13)
வன்னமயகோசத்தையான் மாவலவென்று
பன்னுமறையந்தமெலாம்பாரென்றிங் - குன்னியுனிக் (14)
கான்பார்க்குக்காணப்படும்பொருள்வேறானதுபோற்
பூண்பார்க்கிவ்வாக்கை பொதுவன்றோ - மாண்பகன்ற - (15)
வனித்தமொடு துக்கமசுத்தமிவைமூன்றுந்
தனித்தவுடற்கன்றியுனைச்சாராச் - சனிப்பொழியா (16)
மாயாதனுவை நீயென்று மயங்கற்கத்
தோயாத நீயே துரையென்றான் -மாயாத (17)
வாணவத்தான் மூடனெனவன்று முதலின்றளவும்
வீணவத்தைக்குள்ளேவிரவினா யாணவத்தை (18)
யறுவகையாற்போக்கினேமானமையானீயே
பிறிவில்பிரமெனப்பேணி - மறுபிறப்பை (19)
ற்றென்றானீதொழியமாயச்சமயத்தார்
பேய்த்தேரைமித்தையெனப்பேணென்றா - னாத்தமொடு (20)
சோகமெனப்பாவித்தாற்சோகமுனக்கில்லையென்றான்
மோகமொழியெல்லாமுனியென்றான் - றாகமொடு (21)
மீசன்வேரியான் வேறென்றெண்ணுகின்ற பாதகரை
நீசரெனக்கண்டுநினையென்றா - னாசையொடும் (22)
வேதமுடிவறிந்தவேதியரைக்கூடென்றான்
பேதநிலையெல்லாம்பிரியென்றான் - சாதல்பிறப் (23)
பொன்றுமிலையென்றேயுணர்வோடுறங்கென்
னின்றநிலைதானேநிலையென்றா - னென்றுமுறு (24)
மும்மாயைக்கப்பாலாமுப்பாழுங்கண்டுநீ
சும்மாவிருவென்று சொல்லினா -னம்மாணை (25)
வேறுபொருளில்லையென்றான் வெற்றவெறுமானந்தப்
பேறிலுனைப்போக்கென்று பேசினா -னாறு கடற் (26)
சென்றொடுங்குமாபோற்சிவத்திலொடுங்கென்றா
னொன்றுமறவொன்றாயுருகென்றா னன்றாய (27)
சாத்திரத்தையோதிமதந்தர்க்கியாதென்றனக்கோர்
வார்த்தையினைச்சொல்லி வழக்கறுத்தான் - காத்திரமுங் (28)
காஞ்சனமுமாருயிருங்கைம்மாறதாயெனக்கு
வாஞ்சையுடன்றா வென்றுவாங்கினான் பூஞ்சரணஞ் 29
சென்னியிலுமென்னுடையசித்தத்தும்வைத்தாண்ட
மன்னவற்குக்காணேன் கைம்மாறு. 30
அத்துவிதக்கலிவெண்பா - முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.