பாயிரம்.
கணபதி துதி.
விருத்தம்.
மோகமெனுங்கடல்கடந்து முத்தியெனுங்கரைகாண்பான் முதி
ர்ந்தநாலாம், பாகமெனுமலர்கொண்டு பத்தியெனும்புனலாட்டிப் பரி
ந்துசாத்திச், சோகமெனப்பாவித்துத் துரியமெனும்விளக்கேற்றிச்
சோகநீங்கி, யாகமெனுங்கோயிலின்கண் ணறிவென்னுங்கணபதிக்
கே யன்பு செய்வாம். (1)
பரபொருள் துதி.
(வேறு)
கண்ணோராயிரத்தானுங்கதிராழிப்படையானு
தண்ணாரும் பூங்கமலத்தவிசுறையும் பிரமாவும்
பெண்ணாயிருந்திருமேனிப்பெருமானுங்கை கூப்பி
யுண்ணாடும்பரம்பொருளையுண்ணாடிவணங்குவாம். 2
திரிமூர்த்தி துதி.
(வேறு.)
உலகமேழையுமீன்றவனெவனவன்றனையு
முலகமேழையுமோம்பினோனெவனவன்றனையு
முலகமேழையுமொடுக்கினோனெவனவன்றனையு
முலகமேழையுங்கடந்தவனடிகளையுவப்பாம். 3
பரமசிவன் துதி.
(வேறு.)
ஈசனாய்ப் பரமதத்துவனாகியீறிடைமுதலிலனாகி
யேசறுமணியாயெவைக்குமாதாரமாகியே தனக்கவையிலையாய்ப்
பாசமோசகனாயனாதி முத்தனுமாய்ப் பருஞானானந்தக்கடலா
பாசையாற்காண்போர்க்கற்புதவடிவாமம்பிகாபதியினைப்பணிவாம். 4
தக்ஷிணாமூர்த்தி துதி.
(வேறு.)
பாலனாயனைத்திருமுலைப்பருகினும்பருவ
வேலவார்குழலிதழ்வெள்ளத்தழுந்தினுமிளையாக்
கோலனாயுயிரிழப்பினுங்குறிகொளாதொழியே
னால்நீழலிலமர்ந்தமுக்கண்ணனுக்கன்பே. 5
பரமரகசியப்பொருள் துதி.
(வேறு.)
சாத்திரத்தாலளவுபடாத்தனிமுதலைப்பராபரத்தைத்தானே தானா
பாத்திரமாய்நிற்பதனை வாய்விட்டுப்பேசாதமௌனவைப்பைக்
காத்திரவாதனைகடந்தவறிஞருக்குப்பலமீயுங்கற்பகத்தைப்
பார்த்தவிடந்தொறுநிகழும் பரமரகசியப்பொருளைப்பணி தல்செய்வாம். 6
நடேசர் துதி.
(வேறு)
உலகமூன்றையுமீன்றவளுளங்களிசிறப்ப
உலகமூன்றையும் படைத்தவன்றாளமொத்திசைப்ப
உலகமூன்றையுமுண்டவன் குடமுழாமுழக்க
உலகமூன்றிலும் நடம்புரியொருவனைப்பணிவாம். 7
ஞானகுரு துதி.
(வேறு.)
வானே முதலாம் பூதங்களல்லைகரணவகுப்பல்லை
யானப்பொறியுமைம்புலனுமல்லையறியுமறிவல்லை
யூனாருடம்பின்வயத்தாலேயுள்ளந்தளரேலொன்றாய
நானேநீயென்றருள்செய்தஞானகுருவைவணங்குவாம். 8
வேதச்சிறப்பு.
ஆலயந்தொழுவறந்தலை நிரப்புநல்லருச்சனை புரியென்றே
யோலமிட்டுநான்மறையெலாமுரைப்பதுவுலகரைக்குறித்தன்றோ
மூலகாரணபரம்பரஞ்சூக்கமாய்முழுதையுங்காணென்னாச்
சீலமுற்றியவறிஞரைக்குறித்துரை செய்ததம்மறையன்றே. 9
ஆகமச்சிறப்பு.
பாகமங்கியசிந்தையர் தமக்கெலாம் பரிந்து
மோகமங்குறச்சரிதையாதிகளையே மொழியுந்
தாகமங்கியதத்துவஞானிகடமக்கு
வாகமங்களுஞ்சிவத்துவமசியெனவறையும்.
அவையடக்கம். (10)
அதிரகசியத்தையானுமளவிடத்துணிதல்வானின்
மதியினை மழதன்கையால் வவ்வுதலொக்குமேனு
மெதிகடம்மருளானிந்நூலிசைப்பனிங்கிழிந்தநாய்த்தோல்
வதியினுமணியையெள்ளார்மணிநலந்தெரிந்தோரெல்லாம். (11)
நூற்கருத்து.
அரிதுயில்கடலுமிந்தவாசையங்கடற்கொவ்வாமை
பருவமிக்குயர்ந்தோனோக்கிப்பாசமாதிகளை நீத்துக்
குரவனைத்தேடிக்கண்டுகூடரும் வீடுகூடு
மொருமையையிந்நூலின்கணுணர்த்துவனுணர்வினாலே. 12
பாயிரம் - முற்றிற்று.
மாநிலவரைப்பினுள்ளோர் மாணனுக்குலகமெல்லாங்
கான்னீர்போலத்தோன்றிகரப்பது கருத்துட்டோன்றித்
தேனுலாமொழியாராசை சீயெனவெறுத்துமிழ்ந்தான்
பானல் வாமகவினாசைபாசத்தாராசைநீத்தான். 13
தத்தைதாயிவரோவென்றான்றாரகம்பிரமமென்றான்
பைந்தொடியாசையாலே பரகதியிழந்தேனென்றான்
புந்தியார் போந்தபோக்குபொறுக்கிலேனென்றானந்தோ
வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேனெனவுளம்வெருவினானால். 14
ஈதுமெய்யீதபொய்ம்மையெனும் வத்துவிவேகமெய்திப்
பூதலத்தாசைமேலைப்புவனத்திலாசை போக்கிச்
சாது நற்சமமேயாதிசட்குணதரனாய்மீளா
மோதுவெங்கலியைமாய்ப்பான் முத்தியில்விருப்பமுற்றான். (15)
சித்திரபானுவாலுஞ்சிதைவிலாவிருளை வீட்டி
யுத்தமமுத்திஞானமுதவுவானுளனோவென்றிங்
கத்திசூழ்ஞாலமெல்லாமளிமதுக்கலையுமபோற்
பொத்தகப்பொருளைக் காட்டும் போதகாசானைத் தேர்வான். (16)
(வேறு "
மண்ணுக்கிரையாமிவ்வுடம்பை மாற்றவேண்டிவனமலைகள்
மொண்ணைப்பொதும்பர்நந்தவனமூதூர்தனித்தவிடந்தோறு
முண்ணெக்குருகித் தேசிகனைத் தேடிவாடியுயிர்ப்பெறிந்து
கண்ணிலருவியொழியானாய்க்கலங்குமலங்கிக்கதறினனே. 17
எங்ஙனமறைந்தாயென்னுமெங்கணுநிறைந்தாயென்னுந்
திங்களைநோக்கு மற்றைச் செங்கதிரோனை நோக்கு
மங்குலைநோக்கும்பின்னும் வரும் வழிகாணேனென்னு
மங்கணாவென்னுமென்பாலாதரவிலையோவென்னும். 18
இவ்வணமியம்புமேல்வையீசனுமுளத்திரங்கி
யுய்வணமறியாநின்றவுவனையோர்வசனத்தாலே
பொய்வணநீக்கிநம்போற்புனிதனாக்குவமென்றுன்னி
மெய்வணமுடையார்போலுமேதினிவந்தான ற. (19).
(வேறு.) 137
கண்டான் குருவைக்கண்ணாரக்கதறி வீழ்ந்தான் கமலமிசை
பண்டாவரனேநெடுமாலேயயனேயென்றான கமகிழ்ந்தான்
றொண்டாலியலும்பணிசெய்யத்துணிந்தான் பணிந்தான் மும்முறை
பண்டானிறைந்த பாவாலுங்காவாயென்னப்பாடினான். 20
(வேறு)
அருவமாய் நின்றாய்போற்றியடியனென்பொருட்டாயிங்ங
னுருவமாய் வந்தாய்போற்றியுயிர்பொருளுடலுங் கொண்டு
பருவமில்பாவியேனைப்பரிந்தருள்செய்வாய்போற்றி
குருபராபோற்றியுன்றன் கோகனகத்தாள்போற்றி. 21
என்று பன்முறையாலேத்துமிருந்தவச்சீடன்றன்னை
நன்றுநின்பருவநேர்மைநன்றெனநயந்து நோக்கி
மன்றலங்ஙகமழ்பூம்பாதமலிபுனலாட்டி நாத
னொன்றியவன்பாற்றுய்த்தவோதனமுதவிப்பின்னர். 22
(வேறு)
காவிமாலையம்புயத்தினான் கருணையாற்பொருளு
மாவியாக்கையுந்தாவெனவங்கையாலேற்றுப்
பாவநாசனம்பவித்திரனாயினையென்னாத்
தேவநாயகன்றிருக்கரஞ்சென்னிமேற்செறித்தான். (23)
மாதவத்தனை வாவெனக்கூவிமந்திரத்தா
லோதினான் செவிப்புலன் வழியோமெனும்பொருளைப்
பாத்தாமரை சூட்டினான்பவமெலாமிரித்தா
னாதிமத்தியுமந்தமுமிலாதவெம்மண்ணல். 24
சங்கையற்றிடச்சலிப்பறத்தத்துவங்கழலப்
பொங்குபேரொளிபொதிந்திடப்புதையிருள்கழியப்
பங்கயாசனன் முதலியோரறிவரும்பரத்தை
யங்கை நெல்லிபோற்றிகழ்தரவருளுவனருளால். 25
(வேறு)
பஞ்சபூதநீயல்லைபஞ்சகோசநீயல்லை
விஞ்சுகரணநீயல்லைவிகுதிபகுதி நீயல்லை
துஞ்சுசீவனீயல்லைதோன்றுபரமுநீயல்லை
நெஞ்சிற்சிறிதுமையுறேனீயேயந்தப்பரமசிவம். 26
(வேறு)
ஆகமே வடிவாகிய சீடனை ய
யேகனீயென்றியம்பலுமெம்பிரான்
மோகவாரியின் மூழ்கியபாவியே
னேகனாகுவதெவ்வணமெந்தையே. (27)
என்றியம்பியவேழையை நோக்கியே
நன்றெனநகைத்தானெங்கணாயகன்
றொன்றுதொட்டுறும் வாதனைச்சோம்பினா
லன்று நீயப்பரம்பொருளாகுவாய். (28)
நாலுவேதமுமோ துநலத்தினை
யேல்வோதியுமேழைகட்டுகென்செயப்
பாலுநெய்யும்பறையனுக்கென்செயத்
தோலுமென்புந்துரிசுமொழியவே. (29)
சங்கற்பமெனுஞ்சாகைப்படர்ந்தது
பொங்குபேரொளிப்போதமறைந்தது
துங்கஞானச்சுடர்வடிவாள்கொடு
மங்கவெட்டுதி மாணவநீயென். 30
வேட்டையீதெனக்காட்டவெகுண்டெழும்
வேட்டநாயெனமேலறிவொன்றிலேன்
மாட்டிலுள்ள மலினங்கள் யாவையுங்
காட்டுவாயெனக்காட்டத்தொடங்கினான்.
பிரபஞ்சவைராக்கியமுணர்த்துதல். 31
வையத்தாசையும் வானகத்தாசையுங்
குய்யத்தாசையுங்கூறையினாசையு
மெய்யினாசையும் வேரறவீட்டினோ
ரையனாசைக்ககப்படுசிந்தையார். (32)
குலகோத்திரவபிமானமாகாதென்றுணர்த்துதல்.
பறையரென்பதும் பண்டிதரென்பது
மறையுமிந்தமலின்வுடலையே
பறையர் தம்முளும் பண்டிதர் தம்முளு
மறிவனேகமென்றாரறிந்தோர்களே. (33)
சமயபரமீதென்றுணர்த்துதல்.
சமயமேபரமென்னுஞ்சமத்தராய்ச்
சமயசாத்திரங்காட்டுஞ்சழக்கார்காள்
சமயமென்னுஞ்சத்தார்த்தமுணர்கிறீர்
சமயமென்பது தன்னையறிதலே. 34
தீர்த்தமீதென்றுணர்த்துதல்.
தீர்த்தந்தேடித் திகைத்துத்திரிவீர்கா
டீர்த்தமாவதுதேசிகன் வாசகந்
தீர்த்தமீதெனத்தேர்ந்துகொளாதவர்
தீர்த்தமாடியுந்தேரையொப்பார்களே. (35)
க்ஷேத்திரமீதென்றுணர்த்துதல்.
அள்ளிக்கோவிலையென்னாவாசானையே
நள்ளிக்கோவிலைநத்திப்பெற்றாங்கொளி
யுள்ளக்கோவிலையூன்றிப்பாராதவர்
கள்ளக்கோவிலைக்காமுறுவார்களே.
அருச்சனையீதென்றுணர்த்துதல். 36
பூசையென்பது பூவொடுபாணியோ
வாசை கோபமகந்தையகற்றியே
நீசவைம் பொறிநெஞ்சுணிறுத்தியே
யீசனைத் தம்மிதயத்துட்காண்டலே. (37)
வாதசங்கற்பமாகாதென்றுணர்த்துதல்.
ஏதங்கூறியிடுக்கண்களைந்தவர்
பாதங்கூறிப்பவித்திரராய்ப்பர
போதங்கூறிப்பொழுதைச்சுருக்கிலார்
வாதங்கூறித்தம் வாணாள் கழிப்பரே. 38
தியானசங்கற்பமாகாதென்றுணர்த்துதல்
ஆவிக்காவியென்னாராவமுதினைப்
பாவிக்க நினைவார்சிலபாவிகள்
பாவிக்குங்கருத்தாங்கவன் பாங்கர்போ
யாவிக்கானிவந்தானந்தமானதே.
துறவு இலக்கணமுணர்த்துதல். 39
(வேறு)
புண்ணியநதியினும்பொருப்பிடத்தினுந்
தண்ணறுங்காவினுந்தருப்பைச்சூழலு
மண்ணறன்கோயிலுமடவி தன்னிலும்
நண்ணியயோகிகள்வதியுநல்லிடம். 40
தந்தைதாய் முதலியதமரைக்காண்குறி
வெந்துயர்விளை தலால் விருப்புமேவலா
லந்தநன்னிலமகன்றைம்பதியோசனை
மைந்தனே நீபரதேயம்வைகுவாய். 41
ஊன்பிறந்தவுடலைச்சுமப்பதற்
கேன்பிறந்தமென்றெண்ணியறிஞர்க
டான் பிறந்தவிடத்தைத் தணந்துபோய்
வான்பிறந்தவனத்திற்சரிப்பரே. 42
(வேறு.)
வரிக்கயலனைய கண்ணார்மாநலந் துய்த்தபின்னர்
விருத்தனாங்காலமேனும்விரத்தனாயாவுநீத்தே
யிருக்குமந்நிலமகன்றோர் யோசனையெய்தப்பெற்றாற்
றிருக்கண்மூன்றுடையபெம்மான் சேவடி சேர்தறிண்ணம். (43)
சூத்திரராதியாகத்தொழுகுலத்தவரீறாக
மூத்திரக்குழியிலாழ்ந்து மூழ்கியபின்னரேனுங்
காத்திரத்தானேரின் பங்கடையெனவிகந்து மூன்று
நேத்திரத்தானை நோக்கிநெடுவனம்புகுதல்வேண்டும். 44
(வேறு. (44)
காயசம்பந்தமனைவி தாய் தந்தைகான்முளையென்னுமிங்கிவரை
மாயசம்பந்தமெனத்துறந்தொழிந்தோன் மாநிலம்பரவுமெய்ஞ்ஞானி
தேய சம்பந்தத்தவரொடுமருவிச்செனித்தவந்நகரிடைமருவான்
றூயசம்பந்தத்தவரொடுமருவித்துறவியாயவாவெலாந்துறப்பான். (45)
கரும்பினுமின்பங்காண்பான் கட்டறத்துறந்தமேலோ
ரரும்பொனால் வெள்ளியாற்செய்யணிகலன் பூணல்செய்யார்
விரும்பியகொழுனர்த்தீர்ந்தமெல்லியல் போலநாளு
மிருந்தவஞ்செய்தியாக்கையிளைப்பதேகருமமன்றே.46
கற்புடைமகளிரெல்லாங்கணவனே தெய்வமென்பர்
சிற்பொலிசமயவேடர்சிலையையே தெய்வமென்பர்
தற்கொலிமாந்தரெல்லாந்தாருவே தெய்வமென்ப
ரற்புறுபெரியோரெல்லாமறிவையேதெய்வமென்பார். (47)
மண்ணாலரனைவகுத்தளித்துமறித்து மண்ணாய் மதிப்பரா
லெண்ணார்கழுத்தினிலிங்கத்தையிறுக்கிப்பொருள்காணிதுவென்பார்
புண்ணார் சென்னிபறித்தலே பொருளாமென்று புலம்புவார்
கண்ணாரிரவிபாதவங்கள்கருடன் றனையும்பொருளென்பார். 48
ஐவகைப்பிராந்தியையுணர்த்துதல்.
நித்தனன்றுரைத்தவாக்கியப்படியேநிகழ்த்துவன் பிராந்தியைந்தினை
சத்தியமிந்தவுலகெனல்கருவி தணந்திடாதுடலைநானென்னல் [ யுஞ்
கத்தபோத்தாவு நானென்றானுங்கடவுளும் வேறெனக்கருதல்
சித்துருவாகியிருந்துநானாகேன் சிவனெனல் சிதடர்பாலறியே. (49)
(வேறு.)
ஆன்ற நற்சனகனாதிநால்வருமரன் முகத்தை
மூன்றரைக்கோடிகற்பம் பார்த்தபின் முத்தரானார்
தோன்றிநின் றழியுமிந்தத்தொடுகடற்புவியினுள்ளோ
ரூன்றியோர்கணமதேனும் பார்த்திடினுறுவர் முத்தி. 50
வேலைசூழ்ஞாலத்துள்ளோர் மெய்ம்மையுணரமாட்டார்
மாலைவாய்மடந்தையார் தம்வசத்தராய்மதியிலாரா
யாலமாநீழலின் கண்ணமர்ந்தவெம்மாதிபாதஞ்
சாலயான் கண்டுகொண்டேனென்றுளந்ததும்புவாரே. 51
பழுதையிற்பாம்பேயில்லை பாம்பினிற்பழுதையில்லை
பழுதையைப்பாம்பென்றெண்ணிப்பாம்பினைப்பழுதையாக்கு
முழுதறிவில்லாமூர்க்கமூடரோடுறவுவேண்டேன்
முழுதறிவாகிநின்றமுத்தநிற்றொழலே வேண்டும். 52
மெய்யினிற்பொய்யேயில்லை பொய்யினின் மெய்யேயில்லை
மெய்யினைப்பொய்யென்றெண்ணிப்பொய்யினை மெய்யென்றுன்னும்
மையரோடுறவுவேண்டேனறிவுருவாகி வந்த
வையனேயுனைப்பூசித்தேயறிவுருவாதல் வேண்டும். (53)
வெள்ள நீர்க்கிடந்தோன் காணான் வேதியப்பிரமன்காணா
னெள்ளியசிறியேன் கண்டேனெனும்படியெளிதின் வந்தாய்
கொள்ளை வண்டிரைக்குந்தொங்கல்குளிர்புயத்தணிந்தகோவே
தெள்ளியதேனேசிந்தைத்தவிசுறைஞானதேசி. 54
(வேறு)
காசிவாஞ்சியங்காளத்திக்கழுக்குன்றங்காஞ்சி
மாசிலாருறைப்பருப்பதங்கோகன்னமறைக்கா
டேசிலாதுறைமூர்த்தி தந்தெரிசனமெல்லாந்
தேசிகன்றிருச்சேவையை நிகர்க்குமோசெப்பில் 55
மன்னுமாமறையின் சென்னிவாக்கியமுடிவுங்கண்டே
னன்னியபாசமானவாணவாதியையுங்கண்டே
னென்னையுங்கண்டேனென் றனிதயதாமரையின்மேய
நின்னையுங்கண்டேனெந்தாய் நீ தந்தஞானக்கண்ணால். 56
ஆகையானானேயெல்லாப்பொருள்கட்குமறிவாய்நின்றே
ே தகமாதிகளுக்கப்பாற்சிதம்பரவடிவமாகி
யேகனானாதித்தனாயெனில் வேறொன்றின்றிப்
போகமோகங்களின்றிப்பூரணவறிவானேனே. (57)
(வேறு)
அறிவென்னுமுதல்வேதமகமென்னுமிரண்டாமோத்
தறிவதுநீயானாயென் றறையுமூன்றாம் வேதஞ்
செறியிந்தவான்மாவேசிவமென்னுமதர்வண்ணஞ்
செறியுநால்வாக்கியத்தின் சித்தாந்தமறிந்தேனே. 58
நானே நீ நீநானேயானமையான்ஞானகுரு
வானவனேகைம்மாறும் வழிபாடுந்தோத்திரமு
மீனமிலாப் பூசனையுமியற்றுவான்றனைக்காணே
னூனுமிலையுயிருமிலையுனையன்றியொன்றுமிலை. 59
எல்லாநானென்றுணராக்காலத்திலிடர்ப்பட்டே
னெல்லாநானென்றுணர்ந்தகாலத்திலின்புற்றே
னெல்லா நானேயென்றிங்கெனையெடுத்துவிழுங்கினா
யெல்லாநீயென்றுணருமெண்ணமும்போய்மாண்டதே. 60
ஒன்றென்று சொல்வதற்குமுரையில்லை நாவில்லை
யன்றி தாமென்பதற்குமறிவில்லை செயலில்லை
சென்றொடுங்குமாறில்லைசேராநிற்பதுமில்லை
நன்றுமிலைதீதுமிலை நானுமிலை நீயுமிலை. 61
திரண்டொழுகும் பேராற்றிற் சிறு வூற்றுக்குழிதேடிப்
புரண்டு புரண்டழுவார்க்குப்புத்தியெவர்போதிப்பா
ரிரண்டிறந்தவானந்தமெழுந்தபினரறுசமய
முரண்டகு சிற்றூற்றுண்டோமுழு ஞானமூர்த்தியே. 62
ஆகாயந்தனைத்தேடியவனிதொறுமலைவோருக்
காகாயநீயென்றால்லைவொழியமாட்டுவரோ
மாகாயமாட்டுதற்குமதிதேடுமனிதர்க்கு
மாகாயத்துள்ளுறையுமதியெனினுமயங்குவரே. 63
(வேறு.)
ஐயந்திரிவுமழல்விடமுமானதே
ஐயந்திரிவுமறுத்தான் குருநாதன்
மெய்யன்றிருமேனிவிமலன்றிருமேனி
மெய்யன்றிருமொழியே வேதத்திருமொழியே. (64)
(வேறு)
அதிரகசியத்தான் மேலாமறிவினை விளக்கிவித்தோய்
கதிபிறிதில்லையென்னக்காட்டிய கருணைமேரு
பதிகுடிகொண்டஞானதேசிகப்பரமாவுன்னை
விதிமுற்பணிவனோக்கிவிம்முவனென்செய்கேனே. 65
பிண்டமாமுடனானல்லேன் பிராணவாயுவு நானல்லேன்
கண்டவிந்தியநானல்லேன் கரணமோர்நான்குமல்லேன்
பண்டையவறிவேநானென்றுணர் தருபருவம்வாய்ப்பின்
வண்டறைகொன்றைத்தாரான்மலரடிகாணலாமே. 66
- அதிரகசியம் - முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.