முதலாவது
பதிசங்கை.
சிவன் தானோ தெய்வம்? இதர தெய்வங்கள் தெய்வமன்றோ?
வேதாகம புராண கீதைகளெல்லாம், சிவனே தெய்வமென்று சத்திய
மாய்ச் சொல்லும். அஃதன்றியும், வியாசபகவான் விட்டுணுவே
தெய்வமென்று சொன்ன நாவும் எடுத்தகையும் தம்பித்து நின்றதுவே
சாட்சி.- இதனால் (வியாசமர்த்தநாயநமா :) என்று சிவனுக்குப் பெயர்
வந்தது; ஆனால், சிவனே பரதெய்வமென்பதற்கு வசனம் உண்டோ?
உண்டு, எப்படி?
" சிவனை யொக்குந் தெய்வந் தேடினுமில்லை'' - எனவும்,
" சிவனென யாவுந் தேறினன் காண்க " - எ - ம்,
" ஈசனை யொப்பவர் தேவகணத்திடையாரேயோ' எ - ம்
ஈசனை யன்றி யிணையொருதேவில்லை
பூசனையன்றிப் புறம்பொருநோன்பில்லை'' - எ - ம்.
" சிவமேவம் பரந்தெய்வஞ்சிகாராய நமோநம் :
எனவும் வரும். (1)
சிவனுக்குத் திருமேனி உண்டோ இல்லையோ? உண்டென்றா
நம்மிலொருவர்; இல்லை யென்றால் வேதாகமமில்லை; வழிபடுமாண
கருமில்லை; ஆனால், திருமேனி யுண்டானதெப்படி? தியானத்தி
மேனி மந்திரத் திருமேனியுண்டு. இதற்கு வசனமுண்டோ? உண்டு
எப்படி?
ஒருவயிற்றும்வாரா வுடம்புடையான் வந்தான் ".
வேதமொழி விசும்பு மேனிசுடர் விழிமண்
பாதந் திருப்பா திருப்புலியூர் - நாதர்
பரமாம் பரமாம் படுகடலெண் டிக்குங்
கரமா மவர்க் குயிர்ப்பாங் கால் " - எ - ம்,
அருளே திருமேனி யான்மாத் திருமேனி
குருவே திருமேனி கொள் " - எ - ம்,
சிவனுரு வருவுமல்லன் சித்தினோ டசித்துமல்லன்
எனவும் வரும். (2)
சிவன் ஆணோ? பெண்ணோ? அலியோ? என்னில், சொன்ன
மூன்றும் அன்றென்பதே சித்தாந்தம்; ஆனால்,
" பெண்ணாகி யாணா யலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி " என்று
வசனம் உண்டே என்னில்; அதன் பின்னே, " இத்தனையும் வேறாகி " என்று வசனம் உண்டாயிருப்பானேன்? ஆனால் ஒரு
பொருளுக் கிரண்டு தன்மையுண்டோ? உண்டில்லை யென்பது
இரண்டும் பெத்தநிலை; இதற்கு வசனமுண்டோ? உண்டு. எப்படி?
வாக்குமனமு மில்லாமனோலயந்
தேக்கியெனக்குச் சிந்தை தெளிவித்து'- எ -ம்,
" வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா க்கா வுணர்வாய தன்மையனை - நோக்கிப்
பிரித்தறிவு தம்முட் பிறியாமை தானே
குறிக்கு மருணல்கக் கொடி எ - ம்.
" வீணாய்ச் சுழலுமெனக் கொருஞானவிழியளித்துக்
கோணாகத்துள்ளொருகூத்தப்பிரானுண்டக்கூத்தப்பிரான்
ஆணாவதுமன்றுபெண்ணாவது மன்றலியுமன்று
காணாக்கண் கொண்டினிக் காணியென்றான் கச்சியேகம்பனே "
ஆணோவலியோ வரிவையே வென்றிருவர்
காணாக்கடவுள்'- எனவும் வரும். எ - ம், (3)
ஆனால் அந்தச் சிவன் எங்கேயிருப்பார்? கயிலாயம், காசி, காஞ்சி
முதலிய தானத்திலிருப்பார். நாம ரூபமான படியினால் முத்தி என்ன
மாய் முடியும்? ஆனால் எங்கும் வியாபி, சருவேந்திரியாமி, சருவபரி
பூரணன், சருவலோக நாயகன், சருவசாட்சி, ஈஸ்வர சர்வபூதானா
மென்னும் வசனத்தால், சிவனெங்கு மிருப்பதே சித்தாந்த மாயினும்
பசுவுக்குப் பால், கால் கொம்பு, சரீர மெங்கும் இருந்தாலுந் தன்னி
யத்தின் வெளிப்படு மாறுபோலக் கயிலை முதலிய தானங்களிலேயும்,
சிவக்கியானிகள் சித்தத்திலேயும், வெளிப்படுவார். இதற்கு வசனம்
உண்டோ உண்டு, எப்படி?
" பைங்கணேற்றினர் திங்கள் சூடுவர்
பட்டினத்துப் பல்லவனீச்சுரத்
தெங்குமாயிருப்பா ரிவர்தன்மையறிவாரார் " - எ - ம்,
" சிவனறிந்தருளுவன் சீவராசியை
சிவன்றனையறிந்திடாச் சீவராசிகள்
சிவனிலாவிடமிலைச் செடசித்தெங்கணுஞ்
சிவனிலாவிடிலுயிர் செகமற்றில்லையே " - எ - ம்.
" வானத்தா னென்பாரு மென்கமற் றும்பர்கோன்
றானத்தா னென்பாருந் தாமென்க - ஞானத்தால்
முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தா
னென்னெஞ் சத்தா னென்பன் யான் " - எ - ம்.
" விறகிற்றீயினன் பாலிற்படுநெய்போன்
மறையநின்றுளன் மாமணிச்சோதியா
னுறவு கொண்டெ னுணர்வுக்கயிற்றினான்
முறுகவாங்கிக் கடைய முன்னிற்குமே "
எனவும் வரும். (4)
ஆனால் அந்தச் சிவனுக்கு எண் குண முண்டென்றால், ஒருகுண
மும் இல்லாதவர் என்று வசனம் உண்டாயிருப்பானேன்? இல்லை
யென்பது பஞ்சகிருத்தியங் கடந்தவிடத்தில். ஆனால், எண் குணத்துக்
கும் வசனமுண்டோ? உண்டு, எப்படி?
" தன்வயத்தவன் றூயவுடம்பினன்
றானியற்கை யுணர்வின னாகுதல்
பன்னுமுற்ற வுணர்தலியல்பினன்
பாசநீக்குதல் பேரருளாகுதல்
மன்னுமீறில் வாற்றலுடைமையும்
வரம்பிலின்பமு மாகியவெண்குண
மின்னதாகச்சை வாகமமோதுமெம்
மீசன்றாளை யெப்போதும் வணங்குவாம் " - எனவும் வரும். (5)
எல்லாஞ் சிவன் வசமாமோ என்னில், திரிபுரவிசயம் பண்
ணுங்காலைச் சருவமுந்தன் வசமாய்த் தான் மீதியாய் நின்றபடியினா
லும், ஆலபோசனஞ் செய்தபடியினாலும், உயிர்க்குயிராய் நின்று
தொண்ணூற்றாறு கருவிகளையு மியற்றுதலாலும்,
சருவதத்துவாதி பதயே சிவாயநம : " வென்று
வசனம் இருத்தலாலும், தன்வயத்த னென்னும் குணந்தகும்.
இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
"
அவனசைந்திடி லொருவணுவசைந்திடு
மவனசையாவிடி லணுவசைந்திடா
சிவன் சத்தியோ டுறிற்செகம்விரிந்திடுஞ்
சிவன்றனித்திடில் விரிசெகமொடுங்குமால் " - எனவும் வரும். (6)
தூயவுடம்பினன் என்றது எவ்வாற்றால் வந்தது? ஒரு கருப்பா
சயங்களிற் படாமையாலும், நரை, திரை, மூப்பு முதலிய இல்லாமை
யாலும், சர்வமும் அழிந்துந் தானழியாமையாலும், சிவன் நிர்மலதேகி
என்று வேதமுறையிடுதலாலுமாம். இதற்குவசனமுண்டோ? உண்டு,
எப்படி?
யோனிவழி யேயுதித்து யோனிவழி யேநினைந்து
யோனிவழி யேயொடுங்கு மூமர்காள் - யோனிவழி
வாரா வொருவனையே வந்தித்தால் யோனிவழி
" வாரா வகையருளு வான் " - எனவும வரும். (7)
சிவன் இயற்கை யுணர்வினன் என்பது எவ்வாறு? எனில்,
தெட்சணாமூர்த்தியாய்ச் சருவதேவர் முனிவர் கணங்களுக்கு முப
தேசியா நின்றபடியினாலும், தசாவதாரத்திலே விஷ்ணுவுக்கு ஐந்து
நிக்கிரகமும், ஐந்து அநுக்கிரகமும் பண்ணினபடியினாலும், சிவஞ்
சத்தியாய் நின்று உயிர்களின் அனாதிகன்மங்களை அறிந்து ஊட்டி
விக்கையினாலும், எல்லாம் அறிந்து வேதமோதிவைத்தலினாலும், சூரி
யனைப்போல இயற்கைவுணர்வுதகும். இதற்கு வசனமுண்டோ?
உண்டு, எப்படி?
" அறிவிக்கக்குரவரில்லை யன்னையும்பி தாவுமில்லை
யறிவிக்கவயலொன்றில்லை யம்பலத்தாடியென்று
மறிவிக்குமம்மானேயென் றயனரிமுனிவரெல்லாஞ்
" செறிவுடையடிமைசெய்வார்திருப்புலிவனத்துளானே'
எனவும் வரும். (8)
சிவனுக்கு முற்றுணர்தல் வருமாரு எங்ஙனம்? என்னில், அண்ட
ரண்ட பிரமாண்டங்கள் தோறுமுள்ள உயிர்களுக்குத் தனு, கரண,
புவன், போகங் கொடுக்கையாலும், சிவதத்துவம், வித்யாதத்துவம்,
ஆத்மதத்துவமாக முப்பத்தாறு தத்துவங்கள்தோறும் நின்று அறிவிக்
கையாலும், அளவிறந்த கண்களுக்குள்ள செய்தியெல்லா மங்கங்கே
போயறியாமல், ஏகமாய்நின் றறிகிற சூரியனைப்போல, முற்றுமுணர்
வன். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
" எங்கணுமிருக்கையாலு மிருவினையருத்தலாலுஞ்
செங்கதிர்மதியமீனந் தேய்ந்திடநிற்கையாலுஞ்
சங்கையொன்றின்றியெல்லாந் தானறிந்திடுதலாலுஞ்
செங்கண்மாற்கதிகநீயே திருப்புலிவனத்துளானே " -எ - ம்
" எங்குஞ்செவியுடையா யடியேற்கிரங்காயே " - எனவும் வரும். (9)
சிவனே பாசமோசக னென்றால் மற்றத்தேவதைகளுக்கு அட
தோ? என்னில், எவ்வழியானும் அடாது. இராஜாவின் கண்ணுக்கு
ஊழியக்காரன் கண்ணுக்கும், சூரியனிருளைத்துரப்பதுபோலச் சீ
ராசிகள், மனிதர், தேவர் முதலிய கண்ணுக்குச் சிவாதித்தனை அன்றி
பாச நீங்காது; ஆகையால், அநுக்கிரககாலத்தில் சிவனே முன்னிட்
டறிவிப்பன். தேவர்களுக்கு அநுக்கிரகம் பண்ணவர் ஆர்? தேவேந்திர
னுக்கு அநுக்கிரகம் பண்ணவர் ஆர்? பிரமனுக்கு அநுக்கிரகம் பண்ண
வர் ஆர்? விட்டுணுவுக்கு அநுக்கிரகம் பண்ணவர் ஆர்? உருத்திரமூர்த்
திக்கு அநுக்கிரகம் பண்ணவர் ஆர்? ஆகையா லெல்லா வநுக் கிரகங்
களும் சிவனேயென்றறி. ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை, இது
தீது இது நன்மையென்று சொல்லுவதுஞ் சிவாநுக்கிரக மெனக்
கொள்க. இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
" பண்டொருகாலந்தன்னிற் பதஞ்சலிக்கருளிச்செய்தா
னண்டர்கோன் வழிபட்டேத்த வநுக்கிரகங்கள் செய்தான்
முண்டகன்றிருமால் போற்ற முத்திமோக்கங்கொடுத்தான்
டிண்டிறற்புலி பூசித்த திருப்புலி வனத்துளானே'- எ -ம்
" ஆவுக்கும்புலிக்குமுன்ன மநுக்கிரகங்கள் செய்தா
னாவிக்கும்வலியனுக்கு நாரைக்குமருளிச்செய்தான்
மூவர்க்குமுனிவர்கட்கு முதுக்குறையறிஞருக்குந்
தேவர்க்கு முத்திதந்தான் திருப்புலிவனத்துளானே " எனவும் வரும். (10)
சிவன் அருளோடு கலத்தலால் அவர் மகா காருண்ணியரே யென்
றால் அஃதெவ்வாற்றால்? வருமாறு, பன்றிக்கு இரங்கிப் பால்கொடுத்
தமையாலும், ஆனைக்கிரங்கி யரியையேவின்படியாலும், சர்வசீவ
தயாபர ரானபடியாலு காருண்ணியரென்பதற் கடையாளமாய் அந்த
நாரியாகையாலும், இராக்கமெல்லாஞ் சிவகுணமேயாம். ஈயாமை,
இரங்காமையெல்லாம் மலகுணமேயாம் இதற்கு வசனமுண்டோ?
உண்டு, எப்படி?
" பரைவடிவீசற்கான படியினாற்பன்றிக்கன்றுக்
கருண்முலைகொடுத்தான்பின்னு மானைக்காயரியைவிட்டா
குருவடிவாகிக்கல்லால் குறுகினானாதலாலே [ ன்
தெரியருண் மூர்த்திபோலுந் திருப்புலிவனத்துளானே " எனவும் வரும். (11)
சிவனுக்கு முடிவிலாற்றலுடைமை எங்ஙனம்? என்னில், இரா
வணனைச்சிறுவிரலால் ஊன்றியபடியாலும், விட்டுணுமேகமாய்த்தாங்
கிப்பொறுக்கமாட்டாமல் வெட்கிப்போனபடியாலு, அன்றுதொட்டு
மேகவாகன கர்ப்பமானபடியாலும், ஊழிகாலையில் சங்காரகர்த்தா
வாய்ச் சர்வத்தையுந் தகிக்கிறபடியாலும் பூமியைச் சேடன், சேட
னைக்கூர்மங், கூர்மத்தைக் காலாக்கினிருத்திரராய்த் தாங்குகிறபடி
யாலும், அளவிறந்த பலமுடையா ரென்பதற்கு ஐயப்பாடுண்டோ
ல்லை.இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
''அரக்கனை மிதித்தலாலு மரிவெட்கிப்போனதாலு
முருக்கனலாகியண்டம் யாவையுமொருக்கலா லுஞ்
சுருக்கமிற்புவியைத்தாங்கித் தூலமாயிருத்தலாலுஞ்
செருக்களவாற்றலுள்ளான் றிருப்புலிவனத்துளானே'' எனவும் வரும், (12)
சிவனுக்குவரம்பி லின்பமுடைமை வந்த வழிகாட்டுமென்னில்
ஈச்சுரன் இன்பமயனேயாம். எங்ஙனமென்னில், வேதம், வேத்தியம்,
ஆத்மா, அனாத்மா, திருக்கு, திரிசியம், இவற்றை யறியாமற் சச்சிதா
னந்தமானபடியாலும், ஞாதுரு ஞானநேயங்களுக்கப்பாற் பட்டிருக்
கிறபடியாலும், இன்பமெல்லாம் விளைகிற பூமியானபாடியால் சம்பு
என்ற நாமம் வந்தமையாலும்,
''சட்டோநினைக்கமனத்தமுதாங்சங்கரனை "
என்றமையாலும்,
" நினைத்தோறுங்காண்டோறும் பேசுந்தோறெப்போது
மனைத்தெலும்புண்ணெக வானந்தத் தேன்சொரியும் " - என்றமையாலும்,
முடிவில் இன்பனென்பதற்கையமே இல்லை.- அரிகரப்பிர
மாதி, நாரதாதியிருடிகள், முனிகள், மனிதர், தேவர்கள், சர்வகளுக்
தியானிக்கிறபடியினால், சிவன் இன்பமயனேயாம். இன்பங்கொடுக்
கிறவர், சிவனென்பதே வேதாகமசித்தாந்தம். இதற்கு வசனமுண்
டோ? உண்டு. எப்படி?
" எல்லா வுயிர்கட்கு மின்பங்கொடுத்தலினால்
எல்லாஞ் சிவனையே யெண்ணலால் - எல்லாஞ்
சிவனுருவே யாமாற் றெவிட்டாத வின்பஞ்
சிவன்பா லிருக்குமெனத் தேர்'- எ - ம்,
" இன்பத்துளின்பமாய் நின்னடியெய்தும் வண்ணங்
துன்பத்துட்டுன் நீங்கித் துறவிகடுங்கிநிற்பார்
பொன்பதுமத்தோன்மாயன் புண்ணியதவங்கணோற்பார்
செம்பதுமத்தாள்காட்டாய் திருப்புலிவனத்துளானே "
எனவும் வரும்.
. ம (13) ஆனால் இந்தச்சிவன் எங்கேயிருப்பார்? எங்கும் இருப்பரென்று முன்னமே சொன்னோமே. எங்கும் இருந்தால் எனக்குத் தெரிய வில்லையே? எங்கும் இருப்பவர்; நின் அறிவிலேயும் இருப்பர். எந்த அறிவிலே? சுட்டறிவுகெட்ட சுகாதீத அறிவிலே. அந்த அறிவுவேறு நான் வேறோ? அந்தவறிவே நீதான். அந்த அறிவே
நானா யிருந்தால் எனக்குத்தெரியாதோ? வெகுமுகமானபடியினால்
தெரியாது. அகமுகமானால் தெரியுமோ? அகமாய்ப்பார்த்துப் பின்பு
கேள். ஆனால், அந்த அறிவுவேறுதானே? அனுபவித்தால் தெரி
யும். அனுபவித்தவர் உண்டோ? உண்டு, அவர்கள்யார்? சுகர், வாம
தேவர், திருமூலர், நந்தி, சிவவாக்கியர், அப்பர், சுந்தரர், திருஞான
சம்பந்தர், மாணிக்கவாசகர், சடகோபர், பட்டினத்தார், பத்திரகிரி
முதலியமகத்துக்கள் எல்லாம் அனுபவித்தவர்கள்; தின்ற பண்டந்
தேக்கிட்டாற்போல, அவர்கள் வாக்கியங்கள் காட்டும். இதற்கு
வசனமுண்டோ? உண்டு, எப்படி?
சுகன் வாமதேவன் றுருவா சன்காதி
மகன் விதுரன் வெண்காடன் மாறன் - சகமாண்
பத்திரகிரி வான்மீகி பற்றற்றே முத்தியினை
யுற்றா ருறார்க்கிவ ரொப்பார்”
சிவனை நான் சிந்தையுட் கண்டவாறே''
" தேடிக்கண்டுகொண்டேன் றிருமாலோடு நான்முகனுந்
தேடியுந்தேடொணாத் தேவனையென்னுள்ளே
க்கண்டுகொண்டேன்” -எ - ம்,
'' உள்ளத்தி னொளியைக் கண்டதுள்ளமே " எ - ம், வரும்.
அறிவுக்கறிவாய் நிற்கின்றசிவம் எனக்கேன் தெரியவில்லை?
பஞ்சபாச மறைப்பு. நான் அறிவானால் எனக்கேன் மறைப்பு? சிற்
ற்றிவானபடியினாலே; இந்தச் சிற்றறிவு பேரறிவாமோ? ஆகும்.
எப்படி?
ஓங்காரமான கலசத்தமுதுண்ணிற்
போங்கால மீசனே யாம் என்று,
வசனம் இருக்கிறபடியினாலே பேரறிவாம், ஆகிறத்துக்கு ஏது
எத்தாலாம்? மாமிசபிண்டம், மந்திரபிண்டமாய்த் தேகம் இந்திரியம்
அந்தக்கரணம் பிராணவாயு இந்த யேழுபாதியும் நீங்கினால் பேரறி
வாகி, அச்சிவனைக் காண்பாய். இதற்கு வசனமுண்டோ? உண்டு,
எப்படி?
" பிண்டமாமுடனானல்லேன் பிராணவாயுவு நானல்லேன்
கண்டவிந்திய நானல்லேன் கரணமோர் நான்குமல்லேன்
பண்டையவறிவேநானென் றுணர்தருபருவம்வாய்ப்பின்
வண்ட டறை கொன்றைத்தாரான் மலரடிகாணலாமே'-
எனவும் வரும். (15)
இரண்டாவது
பசுசங்கை
ஆத்மாக்கள் அளவிறந்ததென்றால் அளவிறந்தகாலம்
அவிறந்த உயிரும் முத்தியடைந்தும் ஒழியாமல் நிற்பானேன்? இந்
ஆத்மாக்கள் பிறந்த இடந்தெரிந்தால் அந்தச்சங்கை ஒழியும்,
" நரியைக்குதிரை செய்வானும் "
" கிக்கிலா கபோது சீவனில்லை " - என்னும்,
திருவாக்கானும், அகமுகமாய்த் தியானசமாதியில் தன்னைப்
போக்கித் தானதுவாய் நிற்பின், அந்த நுட்பந் தெரியும். இதற்கு
வசனமுண்டோ? உண்டு, எப்படி?
'' பாவமுமறமுமொத்துப் பக்குவம்பருவமுற்றிங்
காவியைம்புலனைப்பற்றா தகமுகமாகியென்று
மோவியம்போல நின்றங் குணருணராமைபோக்கிற்
சீவனுஞ்சிவனும் வேறோ திருப்புலிவனத்துளானே''
எனவும் வரும். (16)
ஆத்மாவிலே சிவன் எப்படியிருப்பர்? பூவும் வாசனையும்போலே
இருப்பர். அத்தனை சமீபமானால் தெரியாதிருப்பானேன்? விடைய
வாதனையாலே. விடயமின்றிப்பார்த்தால் தெரியுமோ? உன்னைப்
போல வெகுபேர் பார்த்து,
கரியன்கமால் செய்யன்கொல் காண்கின் றிலேனே " _
என்று,
அலர்தூற்றினார். ஆனால், காணப்படாதபொருளோ? அன்று;
காணும் பொருளோ? அன்று; பின்னைத்தா னெவ்வழி? பார்க்கவே
ண்டுமென்னும் பசை யற்றால் அன்றைக்குச் சொல்லுவேன். இதற்கு
வசனமுண்டோ? உண்டு, எப்படி?
தசதாசிவா " - எ - ம், பாசபத்ததே சீவா பாசமுத்தேசதாசிவா
நிறையறிவாயிருந்து நின்மலன்றன்னைத்தேடி
மறைமுதனூலாராய்ந்து பின்னருமயங்குந்தன்மை
யிறைவனேயெனக்குநாக்குண் டில்லையோவென்று கேட்க
வறைவது நாக்கேயென்ன வகந்தெளியாரைப்போலும் "
[ எ - ம்
66 வாக்கினான்மனத்தினான் மதிக்கொணாதசோதியைப்
பார்க்கவேணுமென்றலோ பலதிசைகளோடுவீர்
நோக்கிலாதநோக்கை நோக்கி நோக்கிநிற்கவல்லிரா
னோக்கிலாதநோக்குவந்து நோக்கநோக்கநோக்குமே'-
எனவும் வரும், (17)
ஆத்மாவுக்குள்ளே சிவமும், சிவத்துக்குள்ளே ஆத்மாவும், சமவா
யசம்பந்தமா யிருக்குமென்று ஆகமங்கள் சொல்ல, பஞ்சபாசங்களும்
ஆத்மாவை மறைக்குமென்பது எப்படி என்னின் ஒரு கடத்திலே
நீர்விட்டு எரிக்குங்கால், அதிலே ஆகாசம் வியாபகமா யிருந்தும்
அந்தத்தீ நீரைச்சுடுமன்றி ஆகாசத்தைச்சுடுமோ; ஆனால், ஆத்மா
கண்டிப்போ? அன்று; அகண்டமென்று கண்டால் அந்தச்சங்கை
யில்லை. ஆத்மாவும் அகண்டமும், சிவமும், அகண்டமானால் பஞ்ச
பாசம் பின்னை யாருக்கு? இந்த விவேகமில்லாதவர்களுக்கு. இதற்
க்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
6 6 ஒழிந்தேன்பிறவி யுறவென்னும் பாசங்
கழிந்தேன் கடவுளு நானுமொன்றானே
ழிந்தாங்கினிவரு மாக்கமும் வேண்டேன்
செழுஞ்சால்புடைய சிவனைக் கண்டேனே
எனவும் வரும். ன் " (18)
சிவத்துக்கு ஒப்பு சூரியன், சீவனுக்கு ஒப்பு படிகமலை, பாசத்து
க்கு ஒப்பு பஞ்சவன்னங்கள். இப்படி அனாதிதொடுத்து இன்றை
வரையும் சிவம் உன்னை விட்டுப் பிரியவில்லை. இந்த ஆத்மலாபத்தை
நான் எப்படி மறந்தேன்? சற்சங்கதி, சன்மார்க்க சந்ததி, சிவாகமசம்
பாடணம் இல்லாமையால் மறந்தாய். இப்போது குருதரிசனத்தால்
எல்லாங் கிடைத்ததென்றறி. இதற்கு வசனமுண்டோ? உண்டு
எப்படி?
''சுத்தப் படிகமுச்சிச் சூரியனைச் சந்தித்தா லெத்தன்மைத் தத்தன்வை யீசனிலை - யுற்றுற்றுப்
பாரா தவர்க்குப் பவமும் பலபிணியும் போராடு மெஞ்ஞான்று
போம்'எனவும் வரும். (19)
சீவசம்பந்தம் எனக்கெப்படி வந்தது? சீவத்துவம் நீங்கிச் சிவ
மெப்படியாவேன்? சீவசம்பந்தம் அறியாமையாலே. சிவசம்பந்தம்
அறிவாலே. அந்த அறியாமை எங்கே பிறந்தது? உன்னிடத்திலே
ஆணால் என்னை மறைத்த இருளையான் அறியாமற்போகவேண்டியது
என்னை? இந்த அஞ்ஞானத்தை என்றைக்குக் கடப்பேன்? இந்த
மாயையாலே மூடுபட்டேன் ! இந்த கர்மம் என்னை விடவில்லையே !
என்பதனால் அறிந்தாயோ யில்லையோ. அனால் அறிவு எங்கே பிறந்
தது? உன்னிடத்திலே. அறியாமையும் அறிவும் ஒரு சம்பந்தமாய் இரு
க்குமோ? இருக்கும். எப்படி? ஒரு கடலிலே விடமும், அமுதமும்,
பிறந்தாற்போலவும்; ஒரு மரத்திலே ஈரமும், நெருப்பும், பிறந்தாற்
போலவும்; ஒரு கண்ணிலே கொடுமையும், கிருபையும், பிறந்தாற்
போலவும்; உன்னறிவிலே அறியாமையும், அறிவும் ஒன்றாய்ப்பிறந்த
தைக்கண்டுகொள்ளுதி. அந்த அறியாமை எத்தால் இறந்தது? அறிவு
மேலீட்டாலே. அந்த அறிவு எவ்வண்ணம்? நான் எவ்வண்ணம்?
அத்தை இரண்டாட்ட இடமில்லை. ஆனாற்போம் வழியாது? (அறிவுஞ் ஆனாற்போம்வழியாது?
சிவனுமொண்ணு அல்லவென்கிறவன் வாயில் மண்ணு) என்கிற உலக
வசனமே சாட்சி. இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
66 ம ஆணவமேலிடவாருயிர் கீழிட்டடங்கி நிற்கு
மாணவங் கீழிடவாருயிர் மேலிட்டருளுருவாம் " -எ - ம்,
" அறிவென் றறியாத வாணவமே ஞானச்
செறிவாய வென்னைநீ தீண்டற்க - வறிவாய
வென்னைச் சிவமாக்கி யென்னறிவி லெக்காலும்
பின்னமற நின்றான் பிரான் " எனவும் வரும். (20)
ஆத்மாவுக்கு அனாதியிலே மலசம்பந்தம், செம்புக்குக் காளிதம்
போலும், கடலுக்கு உவர்போலும், நெல்லுக்கு உமிபோலுமான தென்
னில், ஆத்மா அறிவென்றால், மறைக்குமோ? சிற்றறிவான படியி
னாலே மறைக்கும்; ஒளியை இருள் மறைக்குமோ? மறைக்கும். சந்
திராதித்தர்களை, இராகு, கேது மறைக்கிறாப்போலும்; நெருப்பை
ஈரம் மறைக்கிறாப்போலும்; ஆகாசத்தை, மலைமறைக்கிறாப்போலும்.
ஆனால், இந்த மறைப்புத்தான் வருவானேன்? நீ பண்ண கன்மத்
தால். நான் அவயவம் இன்றிநிரவயவமாயிருக்கக் கன்மத்தை எப்
படிச் செய்தேன்? நிரவயவன் நானென்பதை மறந்து, அவயவம்
நானென்னுங் கருத்தாற் கன்மம் வந்தது, அந்தக் கன்மத்தால் மாயை
யுண்டாச்சுது, இந்த மாயையால் சர்வபதார்த்தமும் உண்டாச்சுது.
இதுபோமாறு? சிற்றறிவாகிய நீ, போறிவாய் நின்றால் பசுபாசம்
இல்லை. இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
" அறிவுருவாயவென்னை யாணவமாதி கூடிப்
பிறிவறியாதநின்னைப் பிறித்துத்தான் முழுதுமாகி
நெறியினை மறைத்துப்பொல்லா நீசருக்கடிமையாகிச்
செறியிருணின்றதென்னே திருப்புலிவனத்துளானே'
எனவும் வரும். (21)
சிவமே குருவாய் வருமென்னில் விரோதஞானமாம்; உங்கள்
சிவனுக்குக் காலுங் கையும் உண்டோ என்னுந் தர்க்கம் வரும்.
65 குருவே சிவமெனக் கூறினனந்தி " -- என்று,
வசனம் உண்டாயிருப்பானேன்? ஆனால், சிவனைக் குரவ
னெனச் சிந்தியேலந்த அவமதியா லாழ்வைநிர்யத்து- என்று வசனம்
இருப்பானேன்? ஆனால், இதற்கு வாயில்லை. இனிப்போமாறு? சிவ
ஞானிகளை அதிட்டித்துக்கொண்டு அநுக்கிரகம் பண்ணுவர். இதற்கு
வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
வரும். அறிவுக்கறிவா யறிவிப்பான்சில்லோர்க் கறிவுருவுகொண் டருளுவான்'- எ - ம், ஆட்டுவித்தா லாரொருவராடாதாரே காட்டுவித்தா லாரொருவர்காணாதாரே காண்பாரார்கண்ணுதலாய் காட்டாக்காலே எனவும் 22 (22)
பதிதான், அனாதிபசுவும், பாசமும், அனாதியோ சூரியன்
உள்ளபோதே கண்ணும் அனாதி. கண்ணை மறைத்த இருளும் அனாதி.
பதிதான் நித்தியம், பசுவும் பாசமும் நித்தியமோ? ஆதித்தன் உள்ள
போதே கண்ணும், கண்ணை மறைத்த இருளும் நித்தியம். ஒன்றுக்கே
நித்தியப்பட்டம் அன்றி மூன்றும் நித்தியமோ? வென்னில், சிவனறி
விலே சீவனறிவு கலக்கப்பண்ணிப் பிரபஞ்சத்தை மறைக்கிறபடி
யினாலே, பாசத்தை நித்தியம், அனாதியென்றது. ஆனால்,
துரியமாச்சுது. துரியங்கடந்து விடத்திலே ஆகமமும் எனக்கெட்டா
தென்று சொல்லும்; வாழையடி வாழையாய் உலகத்தை மறைக்
கலால், அனாதியென்றாலும் ஆகமத்துக்கு விரோதமில்லை வேதாந்தம் து
ஒன்றேயென்று சாதிப்பானேன்? அடியேனுக்கு அது தெரிய
வில்லையே? தெரியப்படுத்துமென்று கேட்கத் தேவையில்லை. வேதம்
விரோதஞ்சொல்லுமோ? சொல்லாது. உன் போதம்போனால் எல்
லாம் அவிரோதமாம். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
" சுடரொளியானென்றுமுள னன்றளவும் யானுமுனா கி
நின்றநிலையிற்றரித்து நில்லாமல் " -எ - ம்,
" பதிபசுபாச மெனப்பகர்மூன்றும்
பதியினைப்போற்பசு பாசமனாதி " -எ - ம்,
“ அறிவறிவென்ற வறிவுமனாதி
யறிவினைக்கட்டிய பாசமனாதி
யறிவுக்கறிவாம் பதியுமனாதி
யறிவுபதியிற் பிறப்பறுந்தானே " -எனவும் வரும். (23)
ஆத்மா ஒன்றென்று வேதாந்தஞ்சொல்ல, விஞ்ஞானகலர், பிர
ளயாகலர், சகலரென்று அனேகமாக ஆகமஞ் சொல்லுவானேன்?
வேதவழிபோனவன் ஆகமவழியிற் போகான்; வடக்கேபோகிற
வனுக்குக் காவேரிமகத்துவந் தெரியுமோ; தெற்கே போகிறவனுக்
குக் கங்கைமகத்துவந் தெரியுமோ; அப்படிபோல்,
" முத்தி பலவும் பகர்ந்தோம் பக்குவத்துக்கீடாய் "
என்பதைப்பற்றில், சமுசயநாத்தி. இதற்கு வசனம் உண்டோ?
உண்டு, எப்படி?
''ஒன்றதேபேரூர் வழியாறதற்குள்'ஒன்றென்று சொல்பவர் சொன்னாலுஞ் சொல்லுகவோ
ரிரண்டா, மென்றென்று சொல்பவர் சொன்னாலுஞ்சொல்லுக
வேத்தியன்பர், சென்றன்று நல்கு சிற்றம்பலநாடி சிரபுரத்
ன்றென்றி தாமென்று சொல்லாதமுத்தியளித் தோ 7
தன்னே. " (24)
வேதம், வேதாந்தம், வேத்தியம் வேதமகாவாக்கியம், வேதாந்த
மகாவாக்கிய விசாலம், வேத்தியப்பிரமம்; இப்படி, வேதபண்டிதாள்
வெகுமுகமாகச்சொல்ல, ஆகமவாக்கியமே பிரதானமென்று முற்
சொல்லிய வேதத்தை நிந்திப்பானேன்'தத்துவமசி, சித்துவமசிக்
கும், அது நீயானாய், சிவம் நீயானாய் என அர்த்தம் ஏகமே; இதற்கு
அத்தாட்சி; அங்கயற்கண்ணி, மீனாட்சி, இடைச்சி, கோனிச்சி
வெள்ளிமலை, ரசிதமலை; காஞ்சி, கச்சி, காசி, வாரணாசி, வெண்காடு,
சுவேதவனம், வேதாரண்ணியம், மறைக்காடு. இதற்கு வசன உண்
டோ? உண்டு, எப்படி?
அதுவேநீ யானாயென் றருமறைகள் சொல்லு
மெதிர்சிவனே நீயானா யென்னு - முது நூலும்
வேறோவே றன்றோசொல் வேதியனே விண்விசும்பும்
வேறோவே றன்றோ விளம்பு " - எ - ம்,
" தன்னைவிட்டொரு தற்சிவந்தேடியே
பின்னசில்லுருப் பெற்றுயைநாடியே
மன்னுமாலையுங் காலைவழிபட
வன்னசில்லுரு வாகுவனாணையே - எனவும் வரும். (25)
ஆத்துமாவே சிவமென்பது சித்தாந்தமானால், சிவமென்றும்,
பிரமமென்றும், அரிகரப்பிரமாதியென்றும் பலவாய் வருவானேன்?
உபாசிகள், உபாசனையால் வேறுவேறாயின. இதற்கு வசனமுண்டோ?
உண்டு, எப்படி?
காவேரியொன்று கால்வாய் நூற்றெட்டு
மண்ணொன்று பாண்டம் வரும்பலவாகி
விண்ணொன்று ஆகாயம் வேறுவேறாகு
மாவியுமிவ்வணமாய்ந்து கொள்வீரே >> -என்று,
வசன மிருக்கிறபடியினாலே சங்கையில்லை. இதற்கு வசனம் உண்
டோ? உண்டு, எப்படி?
" என்னகத்துளென்னைநா னெங்குமோடி நாடினே
னென்னகத்துளென்னைநா னறிந்திலாமையானதா
னென்னகத்துளென்னைநா னறிந்துமெய்தெளிந்தபின்
என்னகத்துளென்னையன்றியாதுமொன்றுங்கண்டிலேன்'' -
எனவும் வரும். (26)
இவன் அறிவு, சிவன் அறிவிலே கலந்தால் மலம், மாயை, எக்கா
லும் இல்லையா? இல்லை. எப்படியில்லை? மத்தியான சூரியனை அத்த
ராத்திரி மறைக்குமோ; நீரிலே முழுகினவனை நெருப்புச் சுடுமோ;
மக்சுவிளக்கை வாயு அலைக்குமோ; அதுபோலாமென்று அறி. ஒரு
காலஞ் சிவன் கலந்ததென்றால், ஒருகாலம் பிரிந்ததுண்டோவென்னு
மாற்றம் வருமெயென்னில், குருடனுக்குக் காசத்தடை மாத்திரமே
யன்றி, அவன் கண்ணுக்கு பிரகாசம் ஒருகாலம் வரவுபோக்குநாத்தி.
ஒளியிருந்தால் மறைப்பு வருவானேன்? அப்பிரகாசமா யிருக்குங்
காசம் நீங்கப்பிராகாசிக்குமெனக் கொள்க. இதற்கு வசனமுண்டோ?
உண்டு, எப்படி?
குருடர்க்குமுன்னே குடிகொண்டிருந்ததென்
கோலமல்கு " - எ - ம்,
அறிவுங்கரணமும்போ யானந்தபூரணத்தைக்
குருடன் விழியொளிபோற் கூடாமற்கூடினமே " எனவும் வரும். (27)
உடலுக்கு - மூலம் இந்திரியம்; இந்திரியத்துக்கு - மூலம் பிரா
ணன்; பிராணனுக்கு - மூலம் கரணம்; கரணத்துக்கு - மூலஞ் சீவன்;
சீவனுக்கு- மூலஞ் சிவன்; சிவனுக்கு - மூலஞ் சிவனே. இச் சிவனே
வைகளைப் பிரேரிக்கிறபடியினாலே, சிவன் அல்லாதது எல்லாஞ்
சிவன்போலத் தோற்றும்; ஆகையால், எல்லாஞ் சிவம் என்பதும்,
நானே பரப்பிரமமென்பதும், இக்கருத்தைப்பற்றி வந்தன. இதற்கு
வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
66 உடம்பினை சிவமேயென்ப ருடம்பிற்குமூலமோரார்
திடம்படுபிராணன்றானே கத்தனென்றுரைப்பரஞ்சு
மடம்பெறுமிந்தியத்தை மதியென்பரிவைக்கு மூலந்
திடம்படநின்னைக்காணார் திருப்புலிவனத்துளானே''
எனவும் வரும். (28)
தத்துவ முப்பத்தாறும் ஆத்மாவுக்கு விடயஞானம். இந்தத் தத்
துவம் ஆத்மா அல்ல. ஆத்மதத்துவம் அசுத்தமாயை. வித்தியாதத்து
வம் அசுத்தாசுத்தமாயை. சிவதத்துவஞ் சுத்தமாயை. ஆத்மதத்துவம்
நட்சத்திரங்களைப்போல, வித்தியாதத்துவஞ் சந்திரனைப்போல, சிவ
தத்துவஞ் சூரியனைப்போல, ஒரு மாயையிலே மூவிதமாயிருப்பதெப்
படி? அத்தாட்சி, கருப்பஞ்சாற்றிலே வெல்லம், சர்க்கரை, கற்கண்டு
உண்டானாற்போலவும்; மண்ணிலே இரும்பு, வெள்ளி, பொன்னுண்
டானாற்போலவும்; இப்படி மும்மாயையும் ஒன்றுக்கொன்றுமேலீடு
காண்க. இந்த மும்மாயையுமே முப்பாழுமானபடியினால் தத்துவாதீ
தன் ஆத்மாவென்று வேதஞ்சொல்லும் இந்தத் தத்துவத்தோடே
ஆத்மாக் கூடுவானேன்? கூடாவிட்டால் பஞ்சகிருத்தியம் இல்லை.
பஞ்சகிருத்தியம் இல்லாவிட்டால் என்ன? உன்னைக் கேட்டோ ஈசு
ரன் பஞ்சகிருத்தியம் பண்ணுவான்; ஈசுராக்கினை அறியப்படாதென்
பதே சித்தாந்தம். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
'' பூதமுங்கரணம் பொறிகளைம்புலனும்
பொருந்திய குணங்களோர் மூன்று
நாதமுங்கடந்த வெளியிலே நீயுநானுமாய்
எனவும் வரும். நிற்குநா ளுளதோ (29)
ஆத்மா, சுதந்தர ஈனன். தத்துவஞ்செடம், செடத்தையுஞ் சித்
தையுங் கூட்டிவைக்கிறவர் சிவன். இந்தச் சிவன், ஏன் செடசி
தைப் படைத்தார்? திருவிளையாட்டு. செடமுஞ் சித்துஞ்சிருட்டிக்கு
முன்னே எப்படி யிருக்கும்? பழைய பரமசிவமா யிருக்கும். ஆனால்,
எல்லாஞ் சிவமென்னலாமோ? அதுக்குச் சந்தேகமில்லை. ஆனால்,
ஆண்டவன் அடிமையில்லையோ? அனுபவித்துப்பார். இதற்கு வசன
முண்டோ? உண்டு, எப்படி?
" நன்று கண்டீரிது நமச்சிவாயப்பழந்
''தின்று கண்டார்க்கது தித்தித்தவாறே " -எ - ம். அனுபவத்தறிவதன்றி யளவையாலறியக்கூடாச்
சனகனைச்சாக்கிசொன்னாற் சருவருமொப்புக்கொள்வர்
மனமொருபாலேவிட்டுன் மலரடிநோக்கும்வஞ்சர்
தினமலரிடினும் வேண்டாத் திருப்புலிவனத்துளானே
எனவும் வரும். (30)
ஆத்மாவை யெப்படி யறியப்படும்? ஆத்மாவே பிடிபடாமற்
போனால் சிவம் எப்படிப் பிடிபடும்? சோத்திராதியால் சத்தாதிகளை
யறியப்படுதலாலும், உசுவாசம் நிசுவாசம் வாங்கிவிடுகிறபடியினாலும்,
சந்திராதித்தர்கள் தோன்றி யொடுங்குகிறபடியினாலும், இதற்கெல்
லாம் பிராணாதாரியாயிருக்கிறவனே ஆத்மா. இந்த ஆத்மாவைவிடச்
சிவமில்லையோ? விலாங்கு சம்பந்தம்போல உண்டு. அதெப்படி?
ஆமடிகெட்டேனே - பாம்படி
- யல்லடி கெட்டேனே விலாங்கடி " என்பது போல,
வெகு முகத்திற் சீவனாயும், அகமுத்திற் சிவனாயு தோற்றும்.
இந்த வித்தை நானெங்குங் கண்டதில்லையென்னில், வேதாகம வீதி
யிலே போனாற் காணலாம். இதற்கு அத்தாட்சி,
ஆமடி கெட்டேன் பாம்பீதன்று கெட்டேன் விலாங்கென்னுமோ குடியம்போலுமுளன் " -எ - ம்.
இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி? " காதெவனாலே கேட்குங் கண்ணெவனாலே காணு
மோ தூநாவெவனாலுண்ணு முடலெவனாலேயோரு
மோதுமூக்கெவனான் மோக்கு மூச்செவனாலேயோடும்
போதெவனாற்போய்பீளு மவனடி போற்றுகிற்பாம்'' எனவுரும் வரும். (31)
ஏகமோ, துவிதமோ. அத்துவிதமோ, சிவ சீவநாத்தியோ, முத்தி
நிச்சயார்த்தம் எப்படி? என்னில், எகமென்றால், ஆண்டவனடிமை
என்கிற குணம் வரத்தேவையில்லை. துவிதமென்றால் அயிக்கமுத்தி
கூடாது.கலப்பென்னின், ஒருவீட்டிலிரண்டு பயித்தியக்காரரில்லை
யென்பதேயாம். சிவனுமில்லை சீவனுமில்லையென்னில், அனீச்சுர
வாதியாய் முடியும். ஆனாற் போம்வழி? (நிட்டையிலே நட்டமா
னேன்) என்னு மகாவாக்கியத்தாற் காண்க. இதற்குவசனமுண்டோ?
உண்டு, எப்படி?
'நீரிடைமுழுகினோ னிறையவுண்டவன்
வாரமிறாமதன் போன்றுமாமயன்
றீர்சிவயோகத்திற் றிளைத்திருப்பர்க
ளாரவர்பெருமையை யளக்கற்பலரே'- எ - ம்,
" அண்ணலுமுயிரும் வேறெனவறைந்தா லயிக்கியமுத்தி
கூடாவா, லண்ணலுமுயிரு மொன்றெனவறைந்தா லாண்
டவனடிமையின்றாகு, மண்ணலுமுயிரு மிரண்டலவொன்று
மன்றெனினையுறவாகு, மண்ணலுமுயிரு நாத்தியென்றுரைக்
கிலனீச்சுரவாதிநீயாமல்'' எனவும், வரும். று (32)
ஆத்மா சுதந்தரபோதனா? வசுதந்தரபோதனோ? என்னில், ஆக
மம் முத்தியில் சுதந்தரபோதனென்று சொல்லும். வேதப் பெத்த
முத்தியிரண்டிலுஞ் சுதந்தரபோதனென்று சொல்லுமானால் சுபாவ
சித்தாந்த மேதென்னில், அனுபவத்திற் காண்க. முன் சொன்ன
வேதாகமஞ் சொல்லவில்லையோ? என்னில், தற்போக்கே சிவம் தான்
இல்லாமையே யதற் கடையாளமென்றும், அகந்தத்துவா சுதீபவா
வென்றும் சொல்லும். ஆனால், அது தெரிகிறவழி எப்படி? என்
னில், உன் சித்தம் ஈசுரத்தியானத்தில் அழுந்தினால் அன்றைக்குத்
தெரியும். தெரிந்துவந்து உலகர்க்கு உபதேசம் பண்ணக்கடவோ
மென்னும் ஆசையை விடக்கடவாய். இதற்கு வசன முண்டோ?
உண்டு, எப்படி?
காணாத காட்சியைக் கேளாதகேள்வியைப்
பூணாத பூணைப் போற்றுது நாமே'' - எ - ம்.
அனுபவத்தன்றிவேற்றியொணா
விறையுடனம்புலீயாடவாவே'- எ - ம்,
யணுவினுக்கணுவதாய்நின்ற
நேர்மையையறிந்தம்புலீயாடவாவே " எனவும் வரும். - (33)
மூன்றாவது.
பாசசங்கை.
ஆணவமலத்துக்கு அனேச சத்தியும் சிவனுக்கு இரண்டு சத்தியு
மாயின், ஆணவமுயர்ந்து சிவந்தாழுமோ? என்னில், சிவந்தானாயறி
கிற சத்தியொன்று, சருவாத்மாக்களுக்கும் அறிவிக்கிற குணசத்தி
யொன்று. ஆணவத்துக்கு அனந்த சத்தி அனந்தாத்மாக்களை மறைக்
கிறபடியினாலே, பெருங்குலத்தானென்னும்பேர் புலையனுக்கு வந்த
மையால் அவனுயர்ந்தானோ இல்லை. அதுபோலவா மென்றறி.
இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
சிவத்தினுக்கிரண்டு சத்தி திமிரத்துக்கனந்தசத்தி
சிவத்தினுக்குயர்ந்ததென்பர் தெளிவிலா மாந்தரெல்லாஞ்
சிவத்தின்றன்றன்மையெல்லாந் திமிரமே மறைத்தலாலே
சிவத்தினையறிந்தோர் போற்றுந் திருப்புலிவனத்துளா எனவும் வரும். " (34)
இந்த ஆணவமலம் அருவமோ? உருவமோ? இரண்டுமல்ல. உரு
வமென்னிற் கண்ணுக்குத் தெரியவேண்டும். அருவமென்னின் மறை
க்கமாட்டாது. பின்னைத்தான் போம்வழி? பாசம் உண்டென்று
முன் சொன்னதும், ஆசாரியன் இல்லையென்று பின் சொன்னதும்,
ஆசாரியன். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
அறிவறியாமைதன்னை யன்றுநானறியேனின்றுங்
குறியுறக்காணேனின்றன் கூத்தாட்டலிருந்ததென்னே
மறிமழுக்கரத்தாயுன்றன் மலரடிகாண நோக்கிச்
செறியலமுனிவர்போற்றுந் திருப்புலிவனத்துளானே எனவும் வரும். " (35)
இந்த ஆணவமாகிய பஞ்ச பாசங்களும் நித்தியமென்று சிவாக
மஞ் சொல்லுமெனில் கூடாது. எப்படி? ஒரு வேதம் பஞ்சபாசங்க
ளும் அநித்தியமென்று சொல்லிற்று; பின்னொருவேதம் கானற்சலம் று
போலத் தோற்றரவு மாத்திரமேயென்று சொல்லிற்று; பின்னொரு
வேதம் ககனாரவிந்தம், வந்தியாபுத்திரன், சசவிஷாணம்போல அனு
பவத்திலே பஞ்சபாச மில்லையென்று சொல்லிற்று; நாலாம் வேதம்
மாயையேயில்லை, இருக்கிறதெல்லாம் பிரமமேயென்று சொல்
லிற்று; அட்டாவக்கிரகர் தன்றாய்வயிற்றிலிருந்துக்கொண்டு தகப்
பனைநோக்கி, (எல்லாம் மாயையென்கின்ற வாய் எல்லாம் பிரம்ம
மென்று சொல்லாதோ) - வென்று, திருவுளம் பற்றினபடியாலும்,
பஞ்சபாசங்களுமில்லையென்பதே சித்தாந்தமென்னில்; உண்டாயிருந்
ததென்பது வரத்திரியும். ஆகையால், இல்லை யுண்டென்பதிரண்டும்
அனுபவத்திலே தோன்றுமென்பதே சித்தாந்தம். விபகாரத்துக்
கொப்பக் காட்டென்னில், அனுபவம் விபகாரத்துக் கெட்டது.
இதற்கு வசன உண்டோ? உண்டு, எப்படி?
“ “ இல்லேயெனுமாயையி லிட்டெனை நீ
பொல்லேனறியாமை பொறுத்திலையே -- எ -ம்வரும். (36)
மலம், மாயை, கன்மம், ஒரு குணமோ? பல குணமோ? மலம்
மறைக்கும்; மாயை - விளக்கும்; கன்மம் - விகாரப்படுத்தும். மலம்
அறிவை மறைக்குமோ? மனத்தை மறைக்குமோ? மனத்தைத்தான்
மறைக்கும். அறிவை மறைக்குமென்று வசனமிருப்பானேன்?
மனமும் அறிவின் சம்பந்தமானபடியினால் அங்ஙனஞ் சொல்வாரு
முளர்; சென்னமரணப்படுவது மனந்தானோ? ஆத்மாவோ? ஆத்மா
தான். செனனமரணப்படுவதென்றால், அனுபவி யொப்புக்கொள்
ளான். செனனம் - கருவியிற்றோய்தல்; மரணம் - கருவியை நீங்கல்;
நரகம் - ஆயாசம்; சொர்க்கம் - அநாயாசம். இதற்கு வசனமுண்டோ?
உண்டு, எப்படி? சுருதிசார முற்றிலுங்காண்க. - (37)
இந்தக் கண் நானல்ல; கண் - சடம்; நான் - சித்து; கண்ணைக்
கொண்டறிகிறது - மனம்; மனத்துக்குச் சாட்சி - நான்; கண்ணும்-
விடயமும் - மனமும் - மாயை, நான் - அறிவு, என்பெயர்- - ஆத்மா
இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
" கண்ணெவனாலே காணும் - எ -ம்,
காளத்தியானவனென் கண்ணுளானே " - எ ம் வரும். (38)
இந்தச் செவி நானல்ல; செவி - செடம்; நான் - சித்து; செவி
யைக்கொண்டறிகிறது - மனம்; மனத்துக்குச் சாட்சி - நான்; செவி
யும் விடயமும் - மனமும் -தூலம்; நான் சூக்குமம், என்பெயர் ஆத்மா.
இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
''காதெவனாலே கேட்கும் " - எ - ம்.
சத்தத் தினுள்ளே சதாசிவங்காட்டி " - எ -ம் வரும். (39)
இந்தத் தொக்கு நானல்ல, இது சடம், நான் சித்து, தொக்
கால் பரிசத்தையறிகிறது - மனம், இந்த மனத்துக்குச்சாட்சி - நான்,
இவை யெல்லாமிறந்தாலும் நானிறவாதபடியினாலே நான் சின்மாத்
திரன். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
உடலெவனாலேயோரும் " - எ - ம்.
" உடற்சக்கரத்தி னுயிர்ப்பையுங்காட்டி " - எ -ம் வரும். (40)
இந்த ஆக்கிராணம் நானல்ல, இது சடம், நான் சித்து, ஆக்கி
ராணத்தைக்கொண்டு கந்தத்தையறிகிறது - மனது, அந்த மனத்து
குச் சாட்சி -நான், எனக்குச் சாட்சி - சிவம், இந்த சிவம் வேறு
நான் வேறல்ல; ஆக்கிராணமும், கந்தமும், மனசும் அழிய நானழி
யாமல் சிவத்தை முன்னிட்டுப் பாசத்தை பின்னிட்டபடியால், நான்
சிதானந்த ரூபன். இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
மோது மூக்கெவனான் மோக்கும்'' - எனவும் வரும். (41)
இந்தநாக்கு - நானல்ல, நான் - சித்து, நாக்கு - சடம், நாக்கைக்
கொண்டு ருசியையறிகிறது - மனம்; இந்த மனத்துக்குச் சாட்சி-
நான், எனக்குச் சாட்சி - சிவம், இந்தச் சிங்குவையும், ருசியும், மன
மும் அழிய நான் அழியாதபடியால் நான் நித்தியானந்தன் - இதற்கு
வசனம் உண்டோ? உண்டு, எப்படி? -
ஓதுநாவெனாலுண்ணும்'' - எனவும் வரும். (42)
பிராணவாயுவும் நானல்ல, பிராணன் - சடம், நான் - சித்து,
பிராணனைக் கொண்டறிகிறது - ஆத்மா, அந்த ஆத்மாவே - நான், இந்
தப் பிராணனும், மனதும் அழிய, நான் அழியாதிருக்கிறபடியால்,
நான் சருவானந்தன். இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
'மூச்செவனாலேயோடும்” - எனவும் வரும். (43)
இந்த மனமும் நானல்ல, புத்தியும் நானல்ல, ஆங்காரமும்
நானல்ல, சித்தமும் நானல்ல, அந்தக்கரணம் - ஆத்மாவுக்கு மந்திரி,
பிராணன் - பிரதானி, ஆத்மதத்துவம் - தூசிப்படை, வித்தியாதத்து
வம் - சிற்றணி, சிவதத்துவம் - பேரணி, காயமே- அரண்மனை, இப்
படி சாக்கிரமாதி தானமாகிய உத்தியானவனங்களிலே சம்சாரி
போலச் சஞ்சரிப்பன்; ஞானக்கண்ணினாற் பார்க்கிறவர்களுக்கு
தோற்றப்படுவன்; ஊனக்கண்ணினாற் றோற்றப்படான்; ஆத்மா
இன்னானென்று ஏன் தோற்றப்படவில்லை? தோற்றியுங் கன்மத்
தால் தோற்றப்படவில்லை; நீ யார், என்னில், நான் தான், நீ யார் நீ
என்னில் யாருமில்லை, என்பவனே ஆத்மா, இதற்கு வசனம் உண்
டோ உண்டு, எப்படி?,
நானாரென்றுரைப்பவனே நாடிலந்த வான்மாவா
நாகாரென்றானாக்குக் கயல்வேறோர்நாக்குண்டோ
நானே நீ நீநானே ஞானமுடையமாணாக்க
நானாவேதப்பொருளு நாட்டுவதற்கையமிலை "
எனவும் வரும். (44)
ஆணவம்- இருள், மாயை - விளக்கு, கன்மம் - கருக்கனோ வெள்
ளியோ - வென்னு மயக்க அறிவு; கண் - ஆத்மா, சூரியன் - சிவம், பகல்-
சகலம், இரா - கேவலம்; இப்படி அனாதிதொடுத்து இன்றளவும்
வரும். ஈற்குரு ஞானதீக்கையால் சகலகேவலம் அறும்; அறவே
ஞானசூரியன் உதயமாம்; ஆகவே ஆணவவிருள் நாசத்தையடையும்;
அடையவே மாயை - விளக்கவியும், அவியவே - ஐயந்திரிபு அறும்,
அதனால் ஆத்மா சுவானுபவத்தைப்பெறும், பெற்றால் வேறுபடுமே
யென்னில், வேறிலாமையைக் கண்டதே பெற்றதெனக்கொள்க.
இருள் சூரியனில் மறைந்தாற்போல, ஆணவஞ் சிவத்தில் அடங்கும்
எனக்கொள்க; இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
" சருவக்கியா க்கியானோத்தரமேயாம் " எனவும் வரும். (45)
சிவத்தைவிட ஆத்மாவென்று நாமம் வருவானேன்? சிருட்டி
யால்; ஆனால் சிருட்டிக்குமுன் சீவராசியில்லையோ? இல்லை யெனறே
வேதஞ்சொல்லும் : வேதாந்தத்துக்கு மேலான ஆகமம் உண்
டென்று சொல்லுகின்றதே; அது பூருவகாண்டத்திற்சொல்லும்;
உத்தரகாண்டத்தில் வேதஞ் சொன்னபடியே சொல்லும்; இதற்கு
வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
காலமுநாள்களூழிபடையாமுனே கவுருவாகி மூவருரு
ற், சாலவுமாகிசமயங்கலாறினுருவாகி நின்றகழலோன்,
ஞாலமுமேலை விண்ணோ ருலகேழுமுண்டு குறளாயோராலி
னிலைமேற், பாலனுமாயவற்கோர்பரமாயமூர்த்தியவனாநமக்
கோர்சரணே " -எ - ம்.
" திஷ்டேபூர்வமாத்மா யேகமேவா " -எ - ம்.
சிருட்டிக்குமுன்னுயிரெல்லாஞ் சிவமென்று செப்பு
மறை, சிருட்டிக்குப்பின்னுயிர் வேறுபட்டான் சிறு சிவனென்
றே, சிருட்டியை நீக்கிச் சிவோகமென் பாவனைசேர்தாலுஞ்
சிருட்டிக்குமுன் சிவமானான் றிருக்கச்சியேகம்பனே''
எனவும் வரும். (46)
ஆனால் அந்தச்சிவத்தை எந்தப்பிரகாரம் அனுபவிக்கலாம்? என்
னில், வனத்தின் வள்ளி முதலின் நுனியைப்பற்றி அதன் மூலம்
பற்றுவாரைப்போல, வசனத்தைப்பற்றி - வாக்கு, வாக்கைப்பற்றி
மனது, மனத்தைப்பற்றி - புத்தி, புத்தியைப்பற்றி - ஆங்காரம், ஆங்
காரத்தைப்பற்றிச் - சித்தம், சித்தத்தைப்பற்றிச் - சீவன், சீவனைப்பற்
றிச் - சிவம், இப்படி யனுபவிப்பாயாக. அனுபவிக்கிறவன் யார்?
அவனருளாலே யவன்றாள் வணங்கி'' -- என்பதே.
சித்தாந்தம். இதற்கு வசனமுண்டோ? உண்டு, எப்படி?
" வெள்ளநீர்சடையர்போலும் விரும்புவார்க்கெளியர்
உள்ளுளேயுருகிநின்றங் குவப்பவர்க்கன்பர்
போலுங் கள்ளமேல்வினைகளெல்லாங் கரிசறுத்திடுவர்போலு
மள்ளலார் பழனமேய வாலங்காட்டடிகளாரே " எனவு வரும். போலும், ம் (47)
தேகவாசனை, லோகவாசனை, சாத்திரவாசனை இந்த மூன்றுக்
கும் விபரம்; தேகவாசனை - பூப்பிரதக்கணமுதலிய செய்யவேண்டு
மென விருப்பம்; லோகவாசனை - தன்னையுலகமதிக்க நடித்துப் புகழை
விரும்பி யிகழைவிலக்கல்; சாத்திரவாசனை - அநந்தசாத்திரங்களு
மறிவோமென்றல்; தேகவாசனையாவது- சருவஞ்சிவமயஞ் செகத்து
என்கிற விவேகத்தால் நசிக்கும்; லோகவாசனை - அரிகரப்பிரமாதிக
ளையும் புகழ் இகழ்விடாதென்பது சித்தாந்தப்பட்டால் நசிக்கும்; சாத்
திரவாசனை - ஆத்மக்கியானஞ் சற்குருகடாக்ஷத்தால் அன்றி விளங்
காதென்பது, சித்தாந்தப்பட்டால் நசிக்கும்; சாத்திர விருப்பம்- எவ
னுக்குண்டோ அவனுக்கு அனுபவங் கொசுக்காலத்தனையானாலும்
இல்லை என்பதே சித்தாந்தம். இதற்கு வசனம் உண்டோ? உண்டு,
எப்படி?
" உத்தமமீசுரத்தியானம் மத்திமமாகமசாத்திரயோ
கோகனிட்டங்கீதநாதாயா வாதார்த்தம்பசுலட்சணம்'- எனவும் வரும். - (48)
ஆத்மா - குருடன், குருடு - ஆணவம், கோல் - சரீரம், கோல் கொடுத்
திழுப்பான் - ஆசாரியன், சூரியன் - சிவம், படுகுழி - நரகம், மேடு-
சுவர்க்கம், கோயிலுக்கிழுத்தால் - கொளத்துக்குப் போவேனென்பதே
சீவபோதம், (அரவானிருந்தறுக்குது- ஆளிருந்துலாவுது) என்னும்
வசனத்தால் ஈசுரன் உண்டு; அவனால், செகசாலமுண்டென்பதே
சித்தாந்தம்; (எங்குஞ் சிதம்பரம் - பொங்கிவழியுது) என்னும் வசனத்
தால், அகமுகமாயினோர்க்கு அக்கணமே பஞ்சபாசங்களும் விடுபடும்.
இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
" இருட்டறைமூலை யிருந்தகுமரி
குரு டுக்கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பலகாட்டி
மருட்டியவனை மணம் புணர்ந்தாளே'- எனவும் வரும்.
சூரியனுக்குள்ளே - மேகம், மின்னல், இடி, இந்திரதனுசு, மழை
முதலிய அஞ்சுந் தோன்றினாற்போலச் சருவசூனியசிவத்தில் ஆண்
வம், மாயை, கன்மம், மகாமாயை, திரோதாயி அஞ்சுமலமுந் தோன்
றியவாறுகாண்க. சிருட்டிகாலத்திற் றோன்றிச் சங்காரகாலத்திற்
சிவனிடத்தெப்படி இல்லாதேபோம்? கார்காலத்திற் சூரியனிடத்
திலே தோன்றிய - அஞ்சுங் கோடையில் மறைந்துபோனது சூரிய
னிடத்திலேயே யென்பதே சித்தாந்தம். இதற்கு வசனம் உண்
டோ? உண்டு, எப்படி?
" தோற்றுவதெல்லா நின்னிடத்தோற்றந்
தோற்றம்பிரிதிற் றோற்றாச்சுடர்முனை " - எ - ம்.
மன்னுமாலயனோடு வானும் வையமும்
பின்னமுமபினமும் பெருகிச்சீவனும்
பன்னுமாணவ முதற் பாசமியாவையு
முன்னுமிச்சிவத்திடை யுதித்தொடுங்குமால் எனவும் வரும். " (49)
தோற்றமு மொடுக்கமுஞ் சிவத்திலே கூடாதென்று சிவாகமஞ்
சொல்லுமே யென்னில், நீ ஆகமக்கரைகண்டால் முற்றுந் தெரியும்;
அஃதெங்ஙனம்? அங்ஙனம் பூர்வகாண்டத்திற் சொல்லும்; உத்தர
காண்டத்தில் வேதஞ் சொன்னபடியே சிவத்திலே உற்பத்திலயஞ்
சொல்லும்; மாயையிலே உற்பத்திலயமென்னில்,
" ஏழுபாரெழுகட லிபங்களெட்டுவெற்புடன்
சூழும்வாளகிரிதொடங்கிச் சூழுமேழுலகமும்
ழிமால்விசும்பினோடு பிரமவண்டம்பாவையு
மூழியானொளிக்குளே யுதித்துநின்றொடுங்குமே " வா
என்றும், வசனம் வரக்கணக்கில்லை; சர்வபரிபூரணர், சர்வ
காரணர், சர்வலோகநாயகர், சர்வசீவதயாபரர், சர்வகாரியகாரணர்,
சர்வஞானகாரணர், சர்வதேவசிகாமணி என்று சிவத்துக்கு நாமம்
வரக் கணக்கில்லை. இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
திரை நுரைகுமிழியெல்லாந் திரைகடற்றோன்றுமா
போ, லுரையுயிர் மாயையாக்கை யுனதிட முதிக்கக்கண்
டேன், பரைதிருவுருவமாகிப் பசுத்தொறுங் குடியிருந்த,
திருமறுமார்பன் போற்றுந் திருப்புலிவனத்துளானே "
எனவும் வரும். (50)
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், மயேசுவரன், உருத்தி
ரன், விட்டுணு, பிர்மா, இந்த நவந்தருபேதமுஞ் சிவபேதமுஞ் சத்தி
பேதமுமாம். சரீரபேதமெல்லாஞ் சத்தி; சீவபேதமெல்லாஞ்சிவம்
என்று திவ்வியாகமஞ்சொல்லும்; அதற்கு முன்னே வேதமுஞ்சொல்
லும். இந்த வேதாகமக் கண்கள்பெற்ற நாதாக்களும்
சத்தியாவதும்முடற்றயங்குசீவனுட்சிவம் பித்தர்காளிதற்குமேற்பிதற்றலாவதில்லையே "
என்று சொல்லியிருக்கிறார்கள். எண்பத்துநான்கு நூறாயிர யோனி
பேதந்தோறும் பிறந்திறக்கிறவன் இவன் சிவனாவானோ? சிவனுக்கு
உற்பத்தி லயமில்லையென்று சிவாகமஞ் சொல்லும்; ஆனாற்செனன
மரண மாருக்கென்னில், மனதுக்கென்றே ஆகமசித்தாந்தம்; இது
எங்கே சொல்லியிருக்குதென்னில், சர்வக்கியானோத்தி தத்திலுஞ்
சிந்தியாகமத்திலுங் காண்க. இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
தேகமாதுமையாள்கூறு சீவனின்கூறதானா
லாகமாய்ப் பிறந்திறப்ப தாரெனவறையலாமே
வாகனவிடபவூர்தி மனமெனவறிந்துகொண்டேன்
றேகவாலயத்தை நீங்காத் திருப்புலிவனத்துளானே "
-எனவும் வரும். (51)
அனாதியிலே பாசம் பசுவை யெவ்வண்ணம் வந்து பற்றிக்
கொண்டது?
" மால்கொடுத்தாவிவைத்தார் மாமறைக்காடனாரே "
என்பதனால், அனாதியிலே ஈசுரசங்கற்பத்தை யுன்பொய்ப் போ
தத்தால் அறியப்படாதே என்னில், ஒரு பரிகாரம் பசிகண்ட குழந்
தைக்கு விகாரமுமுண்டானாற்போல அனாதியிலே மலம்வந்து பொருந்
திற்றென்னில், ஆத்மா நிர்வயனோ அவனே வென்னுஞ்
சங்கைவரும். சந்திரனிடத்திலேயிருக்கிற களங்கத்தை முயல்லென்
றும், மானென்றும், ஆலவிருட்சமென்றும், பூமிச்சாயையென்றும்
பலவாய்ச்சொல்லுவதன்றிப் பிரத்தியட்சமே பிடிபடாமல் மயங்குற
மென்னில், அனாதியிலே விளைந்த விருத்தாந்தம், நீ சிவமாய்நின்றாற்
றெரியுமன்றிச் சீவனாய் நின்றுபார்க்குமளவுந் தோன்றாதென்பதே
சித்தாந்தம். இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
* அனாதியின்மலம் வந்தென்னை யடுத்ததுமதற்கு
முன்ன, மனாதிகளிலாதவாறு மலடிபான்மைந்தன் போலத்
தனதநின்சத்தியாலே தனுகரணங்கள் வந்து, பினாதிநிற்
பெற்றுப்பின்னர்ப் பிரிந்ததும் பேசல்வேண்டுஞ் செனாதி
பன் வழிபட்டேத்துந் திருப்புலிவனத்துளானே'- எனவும் வரும். (52)
சீவராசி, சிவசம்பந்தமானால் பின்னர்ப் பாச்சம்பந்தப்படுமோ?
படாது. பரமமுத்தனானால் பிராரத்தம் அனுபவிக்கிறவன் சுகதுக்கப்
படானோ? பட்டும் பட்டவனல்ல; கண்டுங் கண்டவனல்ல; கேட்டுங்
கேட்டவனல்ல; பார்த்தும் பார்த்தவனல்ல; உண்டும் உண்டவ
னல்ல; மோந்தும் மோந்தவனல்ல; என்று சர்வக்கியானோத்தரஞ்
சொல்லும். இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
" கடலிலே கலந்தவாறு கதியிடைப்பின் வந்தாலும்
கடலினுட்டன்மைகுன்றாக் கதையென நினைக்கண்டோ
முடலிடமிருந்துமுண்டு முறங்கியுமுலாவிநின்றுந்
திடனுடைஞானியன்றோ திருப்புலிவனத்துளானே' எனவும் வரும். (54)
சிவமும் - சீவன் முத்தர்களும், பூவும் - வாசனையும், மணியும் - ஒளி
யும், நீரும் - தட்பமும், நெருப்புஞ் - சூடும்போலுமென்னில்; இவை
இரண்டுபடாதோ? இவைகளொன்றுக்குரிய வுவமைகளென்பதே
சித்தாந்தம். ஒன்றென்பதும் விலக்கேயென்னில்,
“ இரண்டுபட்டவூரிற் குரங்குங்குடியிரா” - என்றும், மதியுங்கதிருமொன்று பட்டதமாவாசிய புண்ணியதினம் "
" கண்டனுங்கண்டியுங் கலந்தொன்றுபட்டார் ".
இஃது ஐ அடிச்செய்யுள்.
என்றுஞ்சொல்லுகின்ற இந்த வசனங்களெல்லாம் விலக்கு; ஆனால்,
அனுபவத்தில் ஒன்றென்ற அனுபவமும் விலக்காம். அனுபவத்துக்
கெல்லாம் ஒன்றென்பதே சருவமத சம்மதம். இதுதர்க்கத்துக்கடாது.
இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
'ஒன்றாயுலகனைத்து மானார்தாமே
''யூழிதோறூழி யுயர்ந்தார்தாமே - எ -ம்,
ஒன்றா யுலகனைத்து மானாயென் றப்பமுனி
பொன்றா மொழியாற் புகன்றிருக்கப் - பொன்றாத
முத்தியிலு மும்முதலு முண்டென் றுரைத்தலெவன்
பித்தமுறுஞ் சைவா நீ பேசு " - எ - ம்,
" ஒன்றிரண்டல்லவென்றாங் கொன்றினையொன்றாற் பற்றி
நன்று தீதென்னாநிற்குஞ்ஞானிகளுள்ளக்கோயி
லென்று நிற்கினியதென்றோ விடைவிடாதிருந்ததெம்மான் சென்றடையாத செல்வத் திருப்புலிவனத்துளானே எனவும் வரும். (55)
பஞ்சபாசங்களும் பஞ்சஞானங்களாற்றனித்தனி நீங்கும்; பஞ்ச
ஞானமாவது சொற்சொரூபம், பரசொரூபம், புருடார்த்தசொரூபம்,
உபாயசொரூபம், விரோதிசொரூபம். சிவனுடைய நாயகி சிவகாமி
என்றாற்போல, ஆத்மாவுக்கு ஆத்மநாயகி யென்றுண்டானது. அது
சிவத்தோடு கலந்தபோதும் உண்டோ? என்னில், அப்போது அவனே
பிவனும், அவளே யிவளுமாம். அது என்போலவென்னில்,
சந்திரனும், சந்திரிகையும், அமாவாசியிற் சூரியனோடொன்றி அது
இதுவாய் நிற்றல் போலாமென்றறி. இதற்கு வசன உண்டோ?
உண்டு, எப்படி?
பாசத்தாற்பாசத்தோடும் பதிந்திடப்பசுவார் நின்பாற்
காசற்ற விழியார்போலக் கலந்தபின் பிரிவதில்லை
யாசற்ற நீயும் நானு மன்னியமின்மையாலே
தேசத்தாற்பரவலான திருப்புலிவனத்துளானே'- எ - ம்,
" ஈண்டியமாயாவிருள்கெட வெப்பொருளும்விளங்கத்
தூண்டியசோதியைமீனவனுஞ் சொல்லவல்லனல்லன் " எனவும் வரும். (56)
ஒரு மனிதன், பரமசிவ சொரூபமாவது அதிசயமன்றிடாதே?
ஆகமஞ் சொன்னால் உனக்கேன் சமுசயம்; ஆகமமே, சிவன்வேறு
சீவன்வேறு ஆண்டவனடிமைக் கழிவுவாராதென்று சொல்லுமே.
அதுவெல்லாம் பூர்வகாண்டம்; உத்தரகாண்டத்திற் சொல்லுகிற
தைச் சொல்லுகிறேன் கேள். ஒரு குளவியாற் கீடத்துக்குக் கீடத்
துவம் போய்க் குளவிசிந்தனை முற்றமுற்றக் குளவியான தன்மையும்
ஒரு பாடாணஞ் சிற்பனால் வேதாங்கப்படி செய்யத் தெய்வமான
தன்மையும், ஒரு விழல் ஆறு அமாவாசிப் பிடிங்கிப்பிடுங்கி நட விலா
மிச்சியான தன்மையும்போல,
என்று, சீவன் தீக்கையாலுஞ் சிவஞானத்தாலும் சிவமாவன் "
சர்வக்கியானோத்தரம், தேவிகாலோத்தரம், வாதுளாகமமுதலி
யவை சித்தாந்தப்படுத்தும்; ஆகையால், பூர்வகாண்டம் பொருளல்ல;
பொருளென்னில் - உனக்கனுபவகாலஞ் சமீபமில்லை யென்பது வரத்
திரியும். இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
கீட்படுகீடநல்ல கேழ்கிளர்குளவியாலே
யாட்படவதுதானான ததிசயம்போலுமம்ம
நாட்படப்பிரிந்தநாயே னாதநிற்காட் செய்தத்தாற்
சேட்படச்சிவமதானேன் றிருப்புலிவனத்துளானே'-
பச்சைமண்பொதுப்பிலே புழுப்பொதிந்தவேட்டுவ
னிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணமாயிடும்
பச்சை மண்ணிருந்திடப் பறந்துதும்பியாயிடும்
பிச்சர்காளறிந்திலீர் பிரானிருந்தகோலமே "
எனவும் வரும்.
சீவன்முத்தாள் உலகத்தோடு கூடியுங் கூடாமல் எப்படி யிருப்
பார்? தாமரையிலையுந் தண்ணீரும் சேறும் பிள்ளைப்பூச்சியும், புளி
யம்பழமும் ஓடும்போலும் நிற்பர். அதுவு மில்லையென்று சொன்னாற்
குற்றமோ? பிரார்த்தகன்மம் பொசிக்கிறவரார்; தேகம் பொசிக்கு
மென்னில், மாயாவாதியாய் முடியும்; மனந்தான் பொசிக்கு
மென்னின், மனத்துக்கு வாயும் வயிறுமுண்டோவென்னுஞ் சங்கை
வரும். ஆனாற் சித்தாந்தமெப்படி? தேகந்தான் பொசிக்கிறது.
விருப்பு வெறுப்படைவது மனது. அதெப்படி? அத்தாட்சி, ஒரு
குடும்பி சமுசாரம் பண்ணுகையில் கலியாணம்வந்தாற் களிப்பும்,
நிரியாணம்வந்தாற் கிலேசமும் அடைவன். தனக்கவையின்றி
யிருந்துஞ் சுசதுக்கமடைவது போலவும், ஒரு நகரந் தீப்பற்றிக்
கொள்ள, ஒரு நகரம் பிரதிட்டை பண்ணி இரண்டுக்குஞ் சரிநோக்க
மின்றிச் சுகதுக்கமடையும் அரசனைப்போலவுமாம். பின்சென்றறிக;
இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
'பங்கயப்பாசடையென்னப் பங்கமுறும்புழுவென்ன
மங்குலகைத்துறந்தாலும் துறவாதமாண்பினராய்ச்
சிங்கமெனமேே மனமேனோக்கிக் கீழ்நோக்காத்திறத்தினரே
லங்கமுறுஞ்சுகதுக்கமறிவடையாமனமடையும் எ - ம்,
" பங்கயப்பாசடை நீரிடை நிற்பினும்பற்றையுறாச்
சங்கையெரியிற்சுடினுந் தவளநிறங்குறையாத்
துங்கமணிப்பாம்பிருட்குகை துன்னினுமல்லையுறா
விங்கிவைபோனின்னடியாரெழிற்கச்சியேகம்பனே
எனவும் வரும். (58)
இந்தச் சிவஞானத்தைப்பெற்ற மகாயோகிகளுக்குக் காயம்-
அகாயம், கரணஞ் - சிவகரணம், சிந்தை - நிர்ச்சிந்தை, ஏது - நிரேது,
பாவனை - சோகம்பாவனை, பூசை - சமதரிசனம், அநுட்டானஞ்- சிவோ
கம், சந்தியாவந்தனம் - மகாவாக்கியம், வந்தனை வழிபாடு - தற்றெரிசனம், -
சமதி- சிவதெரிசனம். இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
வடிவிலா வடிவினின்று மனமிலாத்தொழில்குயிற்றி
யடிமுடியில்லாஞான வாரமுதுண்டு நிற்போர்
படுகுழியனைய பெண்டீர் பாழ்நரியனையமைந்தர்
செடியுடையாக்கைவேண்டார் திருப்புலிவனத்துளா
னே'- எனவும் வரும். " (59)
சிவாஞானிகள் பஞ்சாக்கரத்தின் முத்தியானந்தம் பெற்றிருப்ப
தெப்படி? என்னில், நகாரமாகிய மாயையை நாமல்லவென்று நழுவா
மனழுவி, மகாரமாகிய வாணவமறைப்பு நீங்கி, யகாரமாகிய வாதம
தரிசனம்பண்ணி, வகாரமாகிய தாயைக்கண்டு, சிகாரமாகிய பிதா
வைத் தாயாற் கண்டுங்காணாமற் சுவானுபவத்தி லழுந்திநிற்பர்கள்.
அழுந்தல் வேற்றுமையைக் காட்டாதோ? என்னில், அழுந்த
லென்றது ஒப்பனை. இதற்கு வசனம் உண்டோ? உண்டு, எப்படி?
''நகாரத்தின்மயலைஞான வாளினான்றுக்கிப்பின்னர்
மகாரத்தின் மறைப்பை நாமே மணியெனமதியால் வாட்டி
வகாரத்தின் வழியே சென்று மாலயனறியாதெங்குஞ் சிகாரத்தைக்கண்டே
நின்னாற் றிருப்புலிவனத்துளானே " -எ - ம், மந்திரமாவதுமஞ்செழுத்தே யந்தமந்திரத்தி
னைந்து பொருளையுங்காட்டி யிரண்டின்வழியடைத்து
முந்துமிரண்டின் வழியைத் திறந்துயர்முத்திதந்தான்
கந்தன்கணபதிக்கப்பன் கலிக்கச்சியேகம்பனே எனவும் வரும்.(60)
தற்போக்கே சிவமாய்த் தானில்லாமையே அதற்கடையாளமாய்க்
கண்டமகத்துக்கள், திருநடன தரிசனங் கண்டிருக்கும் வண்ணஞ்
சொல்லில், ஆனந்தமூர்த்தி நடனத்துக் காடரங்கம் ஆத்மாவாக,
ஆத்மா அபேட்சை உபேட்சையென்னு மிரண்டு கண்களையுமூடி
நிர்வாணபதத்தை நினையாமல் நினைப்பதே நடன தரிசனம். இதற்கு
வசன முண்டோ? உண்டு, எப்படி?
நோயிலாவாக்கைபெற்று நுண்ணறிவுடையராகித்
தாயினுமினிய நின்னைச் சமாதியிற்காணமாட்டார்
மாயையால் வகுக்கப்பட்ட வடிவிடை நின்னைக்காணச்
சேயராயரற்றுகின்றார் திருப்புலிவனத்துளானே " எனவும் வரும். (61)
சிவஞானியைப் பிராரத்தம் வாதிக்குமோ? வாதியாதோ? வெகு
முகத்தில் வாதிக்கும்; அகமுகத்தில் வாதியாது. அகமுகமானால்
வெகுமுகம் வருமோ? அதுதான் பிராரத்தவாசனை. இந்த வாசனை
கிருஷ்ணர், சீராமர், சுகர், வாமதேவர், நந்தி, பிருங்கி, வதிட்ட
வான்மீகி இவர்களிடத்திலுங்காண்க. இதற்கு வசன முண்டோ
உண்டு, எப்படி?
" அமைத்தபடியெல்லா மனுபவிப்பதன்றியே
யுமைக்குரியோனாலு மொழிக்கமுடியாவே " -எ - ம்.
ஆழியானு மயனுமறிகிலா
வேழைபங்கனை யன்றியிருநிலத்
தூழைவென்றவ ருண்டுகொலோசொலாய்
மாழைபோன்று மலர்ந்துளஞாழலே'-- எ - ம்.
தனுவொடுகல்வாராயின் சார்தராவினையிரண்டுந்
தனுவொடுகலத்தலாலே சார்தரும் வினையிரண்டு
மனமொழிகாயமூன்று மவுனமுத்திரையினிற்பச்
சினமயலகன்றோர்போற்றுந் திருப்புலிவனத்துளானே எனவும் வரும். (62)
சிவயோகிகள் சிவாலயதரிசனம், குருதரிசனம், சங்கமதரி
சனம், செய்வாரோ? சீவனே ஆலயமாகவும், சிவமே குருவாகவும்,
அறிவே சீடனாகவும் தரிசிப்பர்; தன்னைச் சிவாகாரமாவ ே சங்கம
மாகவுந் தரிசிப்பர்; சிவாலயமாகவுந்தரிசிப்பர்; இப்படி மூவகைப்
படுமோ? என்னில், உபசாரமன்றிச் சுபாவத்தில் ஒன்றேயாம்.
இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
குறியறிவாகுங்கோயில் குறிப்பருமாவியாகு
மறிவுசங்கமமேயெல்லா மறிவெனக்கண்டுகொண்டேன்
ற்றியெனவுடலுங்கண்ணுஞ் சமாதியிலிருக்குங்காலைச்
செறியவமினியெற்குண்டோ திருப்புலிவனத்துளானே-'' எனவும் வரும். (63)
சிவயோகிகள் சிவதரிசனம் பண்ணுவாரோ? பண்ணின், மன
வாக்குக்காயம் அசையாதோ? அசைந்து மசையாத நிலையிலிருப்பர்.
போகம் போக்கியம், சாமி - சாமியம், சாக்கி - சாக்கியம், இரண்டு வகுப்பு
மின்றி நித்தியானந்த துரியத்தில் தேகபரியந்தம் வரவும்போக்கு
மிருக்கும்; ஆகையால், வழிபடுவோரைக்குறித்துச் சினகரமே தேக
மென்றும், சிவமே தாமென்றும் நினைப்புள்ளமட்டும் நினைப்பர். பஞ்ச
பாசங்களுக்குஞ் சாட்சிநாயகர் தாமானபடியால், அந்த அனந்தானந்
தத்தை என்னென்று சொல்லுகேன். கடைசாரஞ் சீவாத்மாவே பர
மாத்மா; பரமாத்மாவே சிவமானாற் சைவசித்தாந்தம் ஒப்புக்கொள்ளு
மோ? பூர்வகாண்டத்திற்குத் தள்ளுபடி; உத்தரகாண்டத்திற்குச்
சம்மதம். இதற்கு வசன முண்டோ? உண்டு, எப்படி?
''வானகமண்ணகம் வளைந்துதிரியினு
ஞானிகள் வாய்மொழி நாம்பல கேட்பினுந்
தானேசிவமலாற் றனிச்சிவம் வேறிலை
மோனநிலையிதுக் கையமுமுட்டுமே " -எ - ம்,
சைவசித்தாந்தமெல்லாந் தானவனாகிநிற்றல்
மையறுவேதசித்த மற்றதுநானேயென்ன [ லாபஞ்
லுய்வகைக்கிரண்டுமொன்றென் றோதியென்னுயிர்க்கி
செய்தசற்குரவனீயே திருப்புலிவனத்துளானே'எனவும் வரும். (64)
இந்த அறுபத்துநாலு சங்கையும், அறுபத்துநாலு கலைக்கியான
மும் இதற்கு யோக்கியம்; நிருவாணதீட்சைபெற்ற சத்துக்கள் இத
னாற் பஞ்ச பாசத்தினின்றும் விடுபடுவர்.
சிவயோகிவாக்கு நான்மறைவேதம்,
அறுபத்துநாலு சங்கை - முற்றிற்று.