இருவினையொப்பும் மலபரிபாகமுமொரு தலையாயெய்திய சீட்
னே மகா வாக்கியோபதேசமே யுபதேசம். ஆனாலிதற்கு மேலில்லை
யோ? இல்லை உண்டுபோலத்தோன்றுகிறதே ! என்னில், (விநாச
காலே விபரீதபுத்திதோன்றும்) அது உன்னிடத்திற் றோன்றிய
தென்றறி.மகாவாக்கியத்தில் அடியேனுக்குச் சிரத்தாபத்தியேன் வர
வில்லை? அநுபவகாலம் வரவில்லை. ஆனாலிதன்றி அநுபவம் இல்
லையோ? வேதாகமங்களுக்கும், சற்சனராகிய ரிஷிகளுக்கும், முனி
களுக்கும், சனகாதிகளுக்கும், தட்சணாமூர்த்திக்கும், சம்மதம்.
உனக்குமாத்திரமே சம்மதமில்லை. எனக்கு மாத்திரஞ் சம்மதமில்
லாமற்போவானேன்? நீபண்ணினகன்மம், (புத்திகன்மா நு சாரணி
என்று, வசனமிருக்கிறபடியினாலே, இது சம்மதப்படவில்லை. ஆனால்
எப்போது இதற்குக்காலம்? என்னில், அந்தக் கன்ம மொழிந்த
காலத்தில் ஒழியுங்கால மெக்காலம்? ம
" சற்சங்கத்துவே நிர்ச்சங்கத்துவம்
நிர்ச்சங்கத்துவே நிர்மோகத்துவம்
நிர்மோகத்துவே நிர்ச்சலசித்தம்
நிர்ச்சலசித்தே சீவன்முத்தா "” -என்னும்,
ஒழுங்குவந்த காலத்தில், கன்மமொழியும். ஒழியவே, மகா
வாக்கியத்தில் விசுவாசம்வரும். சிவாகமத்தில் விருப்பில்லாதவனுக்
குச் சிவன்மேல் விருப்பில்லாததுபோலும், சந்தானத்திலே விருப்ப
மில்லாதவனுக்குத் தாரத்தின்மேலே விருப்பமில்லாதது போலும்,
வேதவிருப்பற்ற வனுக்கு, வேதவாக்கியவிருப் பெங்ஙனம் வரும்.
சிவம் நீயானாய் என்றமாத்திரத்திலே முத்திவருமோ? இன்னம்
இதிலும் அதீதநிலை யில்லையோ? என்னில், இம்மாத்திரம் அறி
வுடைய வுனக்கு, மகாவாக்கியஞ் சொன்ன நீசனுக்கு, ஜெனன
மரணம் பற்றறா தெனக்கொள்க;
“குருப்ரம்மாகுருவிஷ்ணு குருதெய்வம்மயேஸ்வரா
குருசாட்சாத் பரப்ரம்மம் தஸ்மீஸ்ரீகுருவே நம : " - என்று,
வியாழவட்டங் காத்திருந்தபின் இவன் கருத்து வெகுமுகமோ
அகமுகமோ, சந்தேகனோ அசந்தேகனோ, துர்ச்சனனோ, சர்ச்சன
னோ வென்றுசோதித்து, வேதாந்த விசுவாசம் வரப்பண்ணி, விருப்
பம் வருவதைப் பார்த்துச் சர்வக்கியானோத்தர முகமாக, உபதேசம்
பண்ணினால் அன்றே பசுமரத்தாணியாம். இவ்வழிபாடின்றிய உல
கச் சுவானங்களுக்குப் புகழைக்குறித்தும், பொருளைக் குறித்தும்,
குலகோத்திரங்களைக்குறித்தும், பந்துவைக்குறித்தும், கன்மத்தைக்
குறித்தும், சவுக்கியபோஜனத்தைக் குறித்தும், மகாவாக்கியத்தை
அநுக்கிரகம் பண்ணினால், (வரகிலேமுளைத்த செந்நெல் களையதான
வாறுபோல்) அபக்குவன் வாய்ப்பறையறைந்து, தோட்டிக்கு மூத்
தானாயிருவரும் அதோகதியையடைவது சித்தம்; ஆனால், சுவாமி?
இந்த மகாவாக்கியத்தான் முத்திபெற்றவருண்டோ? என்னில்,
அநாதிமுதலிற்றைவரைக்கும் மோட்சமடைந்தவர்களெல்லாம், மகா
வாக்கியத்தாலே யாமென்றறி; இத்தனை விசுவாசமுமக்கேனென்
பாயேல், உன் சமுசயத்தைப் பற்றி வந்த தெனவறிக. முதற்பதம்
பரம்; இரண்டாம்பதம் - ஆன்மா; மூன்றாம்பதம் - அயிக்கியம்;
முதற்பதத்தில் மாயைநட்டம்; இரண்டாம் பதத்திற் கன்மநட்டம்;
மூன்றாம்பதத்தில் ஆணவ நட்டம்; இப்படி யநுபவித்தறிவாயாக.
இதற்கு அவிரோதம்,
செம்பதத்துச்சம்புவுக்குந் தொம்பதத்துப் பண்புணர்த்
தும் பெருமாளே " - எ - ம்.
'' வழக்கையறவொருகணக்கையருளிய பெருமாளே " -எ - ம்,
தெளியத் தெளியப்பவளச்சடிலச் சிவனுக்கொரு சொற்
புகல்வோனே'- என்றும்,
(அன்றுரைத்த சத்தமே சத்தம்) என்று குறிப்பு மொழியாற்
காட்டியதும் இஃதேயாம். மகாவாக்கியமறிந்தவனே ஞானி. மற்
றைய மந்திரங்களறிந்தவன் ஞானியன்றோ? என்னில்,
சத்தகோடி மகாமந்திரஞ் சித்தவிப்பிரமகாரணே
என்றமையால், அந்தஞானி ஞானியன்றென்பதே சித்தாந்தம்.
இது தவிர்ப்பஞ்சாட்சரம், பிரணவம், அசபைமுத்திநெறியல்லவோ?
என்னில்,
முத்திபலவும் பகர்ந்தோம் பக்குவத்துக்கீடாய்
முத்தியதிகாரிக்குச்சொன்னமுத்திகுகன்கேள்'
என்னும்
திருவாக்கா லவைகளைத்தள்ளி, [ அநுபவ
" ஓர்வார்த்தையுட்படுத்திப் பற்றினாய்பதையேன் " - என்
பதையே கொள்வாயாக.
மகாவாக்கியத்திற் றிரிசியந்திருக்குமற்றால், ஆன்மாவும் ஆனான்
மாவுங் காணக்கடவாய். கண்டு உன்ன நுபவப்படியாய்ப் பிழைத்
தேன் உய்ந்தேன் கடைத்தேறிப்போனேனென்று தேறித் தேறினோ
மென்பதையு மறந்துபோனதே சமுசயநிவிர்த்தி. இங்ஙனஞ் சமுச
யநிவிர்த்தியான தற்கடையாளஞ் சிவோகம்பாவனை மின்னல் மின்
னித் தோன்றுவபோலவாய், அகத்தி னடித்துக்கொண்டிருக்கும்.
ஆனால் நான் சிவனோ? பின்னைத்தா னாராய்நினைத்தா யறிவில்லாய்.
ஓ ஓ நாயே ! ஒ ஓ ஓஓ பேயே ! ஒ ஒ மூடா ! ஒ ஒ மூர்க்கா ! ஓ ஒ பயலே !
என்று விளித்தால், இத்தாதிகளிலும் வெறுப்பையடைந்து, ஒலுசாமி !
ஓ ஓ சர்க்குரு ! ஒ ஒ சைதன்னியா ! ஓ ஒ சங்கரா ! என்று விளித்தத்
தில் சந்தோடம் வந்தமையால், நீயே சிவனென்பதற்குச் சமுசயமே
யில்லை. அவிரோதயம்,
''உன்னை யொருவ னுயர்சாமியென் றுரைத்தா
லென்ன மகிழ்ச்சி யங்கே யெய்தினாய்- பின்னொருவன்
பாவி பசுவென்றாற் பதைபதைப்பா யாகையினாற்
சீவனல்ல நீயே சிவன் ".
இந்த மகாவாக்கியம் பொருளல்லவென்பாரு முண்டோ? என்
னில், அவரைக்கூடாமல் அவர் வாய்மொழி கேளாமற்போவதே சற்
காரியம். இது பொருளல்லவென்கின்ற புத்தியெவனுக்கிருக்கிறதோ
அவன் கற்பகோடிகாலங்களினு மோட்சமடையானென்பதே சித்
தாந்தம்; இதற்கு ஈஸ்வரவாக்கியமுமுண்டு. சர்வக்கியானோத்தரத்திற்
கண்டுகொள்க. சுப்பிரமணியருக்குச் சிவன் கயிலாசபர்வதத்தி
லெழுந்தருளி யநுக்கிரகம்பண்ணி யேறு கடைசியில் மகாவாக்கி
யோபதேசம் பண்ணித் திருவுளம்பற்றியது,
ஒருவசனமாகவே முடிந்தபொருளுரைத்தோ மொன்றா
கக்காண்பதுவே காட்சி யின்னும் பலவாய்ப், பெருவசனமாக
நீபலபடக்கேட்டாலும் பின்னு நாம் நிகழ்த்துவது மிந்தவுப
தேசந், தருவசனஞ் சமுதாயம் பலபொருளும் விளக்குந் தடு
மாறாதேகமாய்த்தானேதானாகி, நிருவசனமாய் ஞானமோன
மொன்றுமின்றி நில்லாத நிலையன்றி நின்றநிலைநிலையே " -
ஆகையால்,
இதுவே கடாசாரம் இப்படி நீயும் அநுபவப்படக்கடவாய். (1)
நீயே சிவம்; நானெப்படிச்சிவம்? அறியாமை அறிவு இரண்டுக்
குஞ் சாட்சி சைதன்யமானமையால். நீயோ? நானுஞ்சிவமாயே
போனேன். எப்படி? உமக்கற்றபடி. இந்தச்சராசரங்களோ? சர்
வம்ப்ரம்மமயம். இன்னங் கேட்கவேண்டுமோ. நானார்? நானே.
நீயார்? நீயே. இதற்கு அவிரோதம். ஆகமம்,
'' சீவோசிவோ சிவோசீவா சற்சீவோகேவலசிவா " ஆத்மசர்வபூதானாங் கேவலஞ்சங்கமஸ்தலம். "
அத்துவிதம் நீ; துவி தஞ் சரீரபந்தம். மாகாவாக்கியத்தில் அசி
பதத்தீக்காகவந்தது அத்துவிதம். அதற்கு இரண்டல்லவென்பதே
சித்தாந்தம். அத்தைத் துவிதக்கலப்பென்பாருமுளர். ஏகமென்ற
தநுபவத்திற்கேசரி, விவகாரத்தடாதென்பது கண்டுகொள்க,
சீவனுஞ்சிவனும்வேறோ திருப்புலிவனத்துளானே " -
என்பதைக் கடைப்பிடித்தோர்க்கு ஐயந்திரிபு திரிகாலத்துமில்லை.
தேவிகாலோத்தரத்தில் (நித்தனாம்பரமீச) னென்னும் பாசுரத்
தாற் றெளியக்கடவை.
அநுபவசந்திரிகை - முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்