சிவஞான மோகதாக மீதூர்ந்த அதிகாரப்பிள்ளை, ஈசனார் யா
னார் என்னை மறைத்திருக்கும் பாசமியாதென்னும் வீசாரமீக்கொண்டு
கேட்கக் காரணஞானக் கண்ணுடையோன் சித்தாந்த மகாவாக்கி
யம் விவகரிக்கும்படி. சிவம் நானானேனென்ன நானாரென்ன நீயுஞ்
சிவம் எப்படியென்ன ஞானதீக்கையால், திருநோக்கால், திவ்வியபா
வனையால், சிவயோகத்தால், திருவாக்கால், திருப்பரிசத்தால், சிவ
மானாயென்ன எனக்குண்டான அநுபோகசிவ மெங்குமுண்டோவெ
ன்ன அச்சிவமானது, பூதபௌதிகங்கடோறு முண்டென்ன, விந்த
வாக்கியத்தாலுய்ந்து போனேனென் றானந்தமாக் கடலழுந்திய மா
ணாக்கனுக்கு மீட்டும் வற்புறுத்தி மேற்கூறுவார்.
முதல்வாக்கியஞ் சத்து, இரண்டாம்வாக்கியஞ் சித்து, மூன்றாம்
வாக்கியம் ஆனந்தம்; முதல்வாக்கியத்தான் மலநாசனம், இரண்டாம்
வாக்கியத்தாற் கன்மநாசனம், மூன்றாம்வாக்கியத்தான் மாயை நாச
னம்; முதல்வாக்கியத்தால் சஞ்சிதநீக்கம், இரண்டாம்வாக்கியத்தாற்
பிராரத்தநீக்கம், மூன்றாம்வாக்கியத்தா லாகாமியநீக்கம்; முதல்வாக்
கியம் பிரமா, இரண்டாம்வாக்கியம் விஷ்ணு, மூன்றாம்வாக்கியம் உரு
த்திரன்; முதல்வாக்கியம் ஞாதுரு ஞானஞேயமிறந்தநிலை, இரண்
டாம்வாக்கியம் தற்போக்கு, மூன்றாம்வாக்கியம் ஞானகேவலம், இத
ற்குச் சாமியம், பதி பசு பாசவிளக்கம்,
சிவத்துவமசிசிவோக மத்துமிசிவோயமத்தி
நவத்துதிவாக்கிய'-மென்னும் திருவிருத்தம்,
முதல்வாக்கிய விசேடம் வகுக்குதும். சிவனார்? சீவனார்? உபா
தியொழிவிற் கூடாமற் கூடலைக்காணுதி. இரண்டாம்வாக்கியம்விசே
டம்வகுக்குதும். சர்வமுங்கழன்ற சிவம், சர்வமுங்கழன்ற நான், சர்
வமுங்கழன்றானேன். சர்வானந்த ஊற்றிற் பிரளயமுதித்தாற்போ
ன்ற தன்மைகண்டையோ? கண்டேன்,
" கண்டேனவர்திருப்பாதங் கண்டறியாதன கண்டேன் " -
சுவானுபூதிக்குச் சாமியம் வகுத்தனம். மூன்றாம்வாக்கிய விசே
டம் வகுக்குதும். சர்வமுங்கழன்ற சிவன், பூதபௌதிகங்கடோறு
முளன்,
6 " புல்லுயிர்க்குப் பூட்சி புணர்த்தாய்போற்றி
கல்லுயிராய்நின்ற கனலேபோற்றி " -
உரைசேருமெண்பத்துநான்கு நூறாயிரமாம்யோனி பேதம்
நிரைசோப்படைத்தவற்றி னுயிர்க்குயிராயங்கங்கே நிற்பா
ன்கோயில்'
சிவானுபூதிக்குச் சாமியம் வகுத்தனம். வாக்கியமேன்மை விசி
ட்டம் வகுக்குதும்,
சிவத்தொமசியென்னுந் திருவாக்காலென்றன்
பவத்தைநசித்த பரனே''
(எ - து) சத்தியநிருவாணதீக்கையிற் செவிப்புலன்வழி வாது ளாகமத்துண்டாகிய மகா
வாக்கியார்த்தத்தால் சிவம் நீயானாய் என்று திருவாய்மலர்ந்து என்னுடைய
வெழுவகைத்தோற்றப் பிறப்பை நாசம்பண்ணிய மேலோனே,
- அவத்தையிலே என்பது, கீழால் வத்தையிலேயும் மேலாலவத்தையிலேயுஞ் சுத்தாவத்தையிலேயும்,
சீவனென்றும், கேவலத்திற் சேதன னன்றென்றும்; என்பது,
சீவாத்மாவென்றும், அந்தராத்மாவென்றும், பூதாத்மாவென்றும்,
அனாதி கேவலத்திற் சேதனவியாபக னன்றென்பதே சித்தாந்த
மென்றும், அசேதனன், சிதாபாசன், சதசத்தன், அகர்த்தா, ஆம
பன், ஆணவமூடன், அசிந்தியன் என்று பலவாற்றானும் வந்த பாவ
னைகள் போமாபகர். என்பது, - நான் மூடன், நான் கிஞ்சிக்கியன்,
நான் சத்தன், நானவலன், நான் பாவி, நான் சமுசாரி, நான் பிறப்
சிவத்தொ மசியென்னுந் திருவாக்கா லென்றன்
பவத்தை நசித்த பரனே - அவத்தையிலே
சீவனென்றுங் கேவலத்திற் சேதனனன் றென்றும்
பாவனைகள் போமா பகர் "
பவன், நானிறப்பவன் நான் சீர்காழியிலே பிறந்தேன், சிதம்பரத்
திலே வளர்ந்தேன், திருவாரூரிற்சென் றிறப்பேனென்னு மளவிற்
ந்த பாவனைகள் போமாறறியாது புலம்புகின்றேற் குய்வண்ணங்
காட்டி யுபாயஞானத்தாலுளவாகுமுபதேச ஞானமாத்திரத்தாற்போ
மாறு திருஞானசம்பந்தநாதனே திருவாய்மலர்.
''பொன்மலையைச்சார்ந்த சிறுகாக்கைப்புள்ளினங்க
டன்னிறமுமந்நிறமாய்ச் சாருமால்'' -
(எ - து) மகாமேருவென்னுஞ் சாம்பூநதமாகிய வாயிரத்தெண்
மாற்றுப் பொன்மலையிற்சேர்ந்த சிறிய காக்கைப்பாக்கிகள் பொன்மய
மாய்ப்பின் கருநிறம் நினைப்பினில்லாமையாய்ச் சாம்பூநதமாய்ச்சார்ந்த
தன்மையைப்போன்று,
முன்னவனைச்
சேர்ந்தாருமண்ணச் சிவோகம்பாவித்தலா
லாய்ந்தவனே " _
(எ - து) உபாதிசூனிய சிவனையுபாதிசூனிய சற்சீவனாய்ச் சேரா
மற் சேர்ந்தாரும் பரமவித்திரமாகிய சிவோகஞ் சிவோகமென்று பன்
முறையாற்பயிற்றித்தியானம் பண்ணலாலே பலநூலையுமாய்ந்து மகா
வாக்கிய சிரவணப்படாதசமுசயாத்மனே, ஆமாற்றி, - என்பது,
இந்த இரண்டாம் வாக்கியத்தாற் சமுசயநிவிர்த்தி யடைந்து அது நீ
யான வண்ணங் குப்பக்காட்டுக் காக்கை நாமென்று நினையாத வண்
ணம் போன்று என்னால் நீயானான தன்மையு முன்சீவத்தன்மையையு
மிவ்வணமென் றறியாதறிந்துணர்ந் திந்நிலையிலேநிற்பாய் அடிக்கடி
வாக்கியசிரவணத்தாற் சீவபாவனையைக் கழற்றி,
பொன்மலை யைச்சார்ந்த சிறுகாக்கைப் புன்ளினங்க
டன்னிறமு மந்நிறமாய்ச் சாருமால் - முன்னவனைச்
சேர்ந்தாரு மண்ணச் சிவோகம் பாவித்தலா
லாய்ந்தவனே யாமா ற்றி "
சீரார்சிவோயமத்தி யென்னுந்திருவாக்காற்
பேராசையெல்லாம் பிரித்தோனே'-
ஆராத (எ - து) அழியாத சிறப்புடைய சிவன்
பூதபௌதிகங்கடோறு முண்டென்று திருவாய்மலர்ந்து பிராமணன்,
க்ஷத்திரியன், வைசி யன், சூத்திரனிலும், பிருதிவி யப்பு தேயு வாயு
வாகாசத்திலுஞ் சந் திரன் சூரியனாத்மாவிலும், பூமி யந்தரம் பாதாளத்தினு,
மாண்பெ ண்ணலியினும், விருப்பு வெறுப்பு நொதுமலிடத்திலு,
மிருக்கக்காட் டியனித்தியத்தை நீக்கி நித்தியத்தைக் காட்டியநாதனே,
வன்பால் என்பது, இந்த மூன்றாம்வாக்கியத்தா லாசைக்கிழங்கை
யகழ்ந்தெடுத்த வல்லபத்தை நினைந்தமாத்திரத்தெழுந்த வன்பைப்
பாழாக்காம லவ்வன்பால், - உன் பாதத்துக் கர்ச்சனையுமற்றிரண்டி,
லென்புருகும்பத்தியு மெற்கீ என்பது, சாமிகள் சீர்பாதங்களுக் கர்ச்
சனையும் சிவலிங்கப்பெருமானிடத்திலேயுஞ் சரமூர்த்திகளாகிய சங்
கமத்தினிடத்திலேயுங் கடின வெலும்புகளெல்லா முருகும்படிக்குச்
சிவபத்தியு மடியார்பத்தியு மாயாவாதியைப்போலப் பாழ்போகாம்
லெனக் கநுக்கிரகம்பண்ணக்கடவாய். வாக்கியமேன்மை விசிட்டம்
வகுத்தனம்.
வாக்கியசித்தாந்தம் வகுக்குதும். முதற்பதம் சச்சிதானந்தமாய்
நிராமயமாய், நிட்களமாய், நின்மலமாய், யனந்தானந்தமாயிருக்கும்.
இதற்குச் சாமியம்; பதி பசு பாசவிளக்கம். பதியிலக்கணம்,
" நிராமயமாய் நிட்டகளமா நின்மலமாய் "
என்ற திருவிருத்தம், இரண்டாம்பதம். சராகாயமாய் நின்ம
லோதகமாய் அகளங்கமாய் அபிவிர்த்தியாய்ச் சாங்குசித்தமாய்ச் சுசி
ர்ப்பூதமாய்ச் சுத்தபடிக சங்காசமாயிருக்கும்; இதற்குச் சாமியம்;
பதி பசு பாசவிளக்கம். பசுவிலக்கணம்,
'''சீரார் சிவோயமத்தி யென்னுந் திருவாக்காற் பேராசை யெல்லாம் பிரித்தோனே - ஆராத
வன்பாலுன் பாதத்துக் கர்ச்சனையு மற்றிரண்டி
லென்புருகும் பத்தியுமெற் கீ.
" ஆன்மாசுத்தன் சதாநித்தன் " 255
என்ற திருவிருத்தம். மூன்றாம்பதஞ் சுகோதயமா யிரண்டற்ற
வின்பமாய்த் தடையற்ற வானந்தமாய்க் சமுசயனாசமாயிருக்கும்;
தற்குச் சாமியம்; பதி பசு பாசவிளக்கம். நின்மலாவத்தையில்,
போக்கிலைவரவிலை புணரக்கையிலை " -
யென்னுந்திருவிருத்தம். வாக்கியசித்தாந்தம் வகுத்தனம். மேல்
வாக்கியவிசேடம் வகுக்குதும்,
"
ஆக்கையே தானென் றபிமானி யாக்கிவிக்கு
மோக்கமிலை யென்றே முடிப்பிக்கும் - பூக்கமழும்
பூங்குழலா ரின்பப் புணரியைமெய் யாக்குவிக்கும்
வாங்குதலைச் செய்யா மலம்'எ - து)
ஆக்கையே யாத்மாவன்றிப் பிரத்தியேகாத்மாநாத்தி
யென் றறிவைப்பிறித் தபிமானிப்பட்டங்கட்டு மகாவாக்கியத்தால்
வரும் மோட்சானந்த நாத்தியென்றே சித்தாந்தப்படுத்திப் பூவார்ந்த
வழகிய வளகபாரத்தையுடைய மாதர்பால்வரும் பொய்யாகிய வின்ப
வெள்ளத்தினை மெய்யாகவழுத்தி முழுகப்படுத்தும். எக்காலமும்
வளைதவில்லாத வாணவமலம் பிரதமவாக்கியத்தி லசிபதத்திற் காண்
பாய். இந்தப்பிரகாரத்தைச் சிவஞானப்பிரகாசத் துண்மையிற் கண்டு
தெளியக்கடவை. பதி பசு பாசவிளக்கம், ஞானவிளக்கம், உபதேச
மாலை, சிவஞானப்பிரகாசம், அத்துவிதக்கலிவெண்பா, அதிரகசியம்,
சிவாகமக்கச்சிமாலை, இந்தவேழு மொருகொத்தாயிருக்கும். இவற்
றிற் பதி பசு பாசவிசாரணையும், உண்மைநிட்டையும், தசகாரிய
விசேடமும், குருசிரத்தையும், மகாவாக்கியமும், தீட்சாக்கிரமமும்,
ஞானோபதேசமும், ஆகமசித்தாந்தமுங் காணக்கடவை. சத்திய நிரு
வாணதீக்கை யில்லா தவர்க் கிந்தமார்க்கம் போதிக்கில் நீரருந்துமா
வைய தட்டினோன் சாருங்கதியடைவை; 1
புண்ணுடலை நீப்பேனோ போன்றாத மெய்ஞ்ஞானக்
கண்ணுடைய வள்ளல்பதங் காண்பேனே - வெண்ணுடை
வஞ்செழுத்தி னுண்மை யறிவேனா வாங்கதனுட்
பிஞ்செழுத்தைப் பின்னிடு வேனோ. 22
அதிகாரப்பிள்ளையட்டவணை - முற்றிற்று.