இவை ஸ்ரீசமிவன க்ஷேத்திரமென்னும் ஸ்ரீகோவிலூர்மடாலயம்
ஸ்ரீமன் முத்திராமலிங்க ஞானதேசிகர் ஆதினத்திற்குரிய
ஸ்ரீவீரசேகரஞானதேசிகர் பாதசேகரராகிய
ஸ்ரீசுப்பைய சுவாமிகளவர்களால் இயற்றப்பட்டு,
மேற்படி ஸ்ரீ வீரசேகரஞானதேசிகர் மாணாக்கருள்
ஒருவராகிய காரைக்குடி ஆ.வெ.வெங்கடாசலஞ் செட்டியாரவர்களால்
சென்னை, கோமளேசுவரன்பேட்டை,
சச்சிதானந்த அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டன.
1910
-------------
திருக்கொற்றவாளீசரந்தாதி.
சிற்சொருப் பமான சிவராச கட்கேசன் பொற்சொருபம் போற்றிப் புகழவே - தற்சொருப வானை முகத்த னரவிந்த மாகதியற் றேனை யெனக்கின் றினி. |
1 |
பூரணணே யினபப் பிராதனனே பொன்னளிசேர் தாரணனே தந்தாயித் தாரணியின் - காரணனே மன்னவா ளீச மகிழ்ந் திருநெல்லை கன்னலே யென்னைமிகக் கா. |
1 |
காரூர் மிடற்றானைக் கண்ணுதலைக் காணுமா றூரூர்க டோறுநீ யுற்றுழன்றா - யேரூரும் வன்னை வனத்தை வணங்கிலையா னெஞ்சகமே யன்னைவனைக் காண்ப தரிது. |
2 |
அரிதா யமதா யாரறிவா யொன்றா யுரிதோ லுடையானா மொண்சீர் - விரிதேனா ராறோ டுடையாருக் கன்பியற்று நெஞ்சகமே மாறே டுடையார்க்கு மற்று. |
3 |
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகையென்றிங் - கற்றார்க ளோதும் பெருமொழியை யுட்கொண்டு வன்னிவனத் தாதியினை நெஞ்சே யறி. |
4 |
அறிவே யெனதுருவ மாவா னடைந்தேன் குறியேதோ யானறியேன் கூரோய் - பொறியோடே யோடே வெனிளுள்ள மோயா வளிநிகர்நிற் கூடவெனி னோவ்சையாக் குன்று. |
5 |
குன்றாக் குடியர் குறத்தி மணவாளர் கன்றாப் புதல்வருமக்க காமாமா - மென்றாக்கா னீயசியைக் கொண்டுவர னீதியே நீலிமலை யாய்வயலைக் காப்பதுவு மாம். |
6 |
ஆமோ வலவோவென் றையமுறும் பாடில்லை காமாரி யாமென்னுங் கட்கேசன் - பூமாதண் வன்னி வனத்தை வளம்படவே நீயடையி லுன்னதிநன் குள்ளமே யுண்டு. |
7 |
உண்டோ விலையோதா னொள்ளிடையின் னெல்லைக்கென், றுண்டாம் பெரும்பீதி யுற்றோதான் - கொண்டாய்நீ, நல்ல விடபான நங்கொற்ற வாளீச வொல்லை யெனக்கே யுரை. |
8 |
உரையா யுசியுடையா யோகரமோ பாம்பை யிரையா யரியாவை யேற்குந் - திரையாளு நென்மாதுங் காதலரு நீங்கார் முரணென்றோ சன்மார்க்க சங்கரனா னாய். |
9 |
ஆனா யுலகா யதனுண் ணுழைந்தனைநீ வானேய் க்டத்தின் வள்னெப்ப - வேனோதான் பேதத்தைப் பேசிப் பிறழ்ந்து திரிகின்றா ரோதத்தை வாளோ யுக. |
10 |
உகத்தொ லொடுமிகத்த லொன்றேனுந் துன்றா திகத்தி லடிநாயே னின்பே - யகத்துறுமா செய்வாய் கழனித் திருநெல்லைக் கின்னமுதே ஐவா ளிரதத்தாஅ யான். |
11 |
ஆனை முகனானா யாறுமுக னும்மானாய் வானை முக்னானாய் வாளீச - வானையுகந் தேறினாய் நெல்லைக் கினிய தவனானாய் பாறினா யென்னையினிப் பார். |
12 |
பாராதி யெட்டாய்ப் பரந்து விளையாட றேரா திருப்பார்க்குத் தெய்வமாய்க் - காரோதி நென்னா யகியோடு நீகொற்ற வாளீச பொன்னா லயமமர்ந்தாய் போய். |
13 |
போக்கும் வரவும் புணர்வுமிலாப் பூரணத்தைத் தேக்குந் திரமனத்துத் தேன்முனிக்குத் - தீக்கானிற் சாம முடிகாண்பார் சார்வான் வரந்தந்தா யேமமுற நின்கருணை யே. |
14 |
ஏதோ வறியே னினிவருவ தெந்தாயே மாதே சரணாய் மருவினேன் - றீதேதான் செய்து திரிகின்றேன் சின்மயமாய் நின்றில்லை னெய்துவதிங் கென்னே யினி. |
15 |
இனியா யினிநாயே னின்றாளிற் சேர்ந்தாற் கனியாதோ நின்னுள்ளங் கட்கோய்f - பனியாலே வாடுங் கமலத்தில் வாடியதிங் கென்னுள்ளங் கூடுங் கருணையினைக் கூர். |
16 |
கூரா ரிறைவாளைக் கொண்டுபணி கொண்டாய்முன் னேரார் திருநெல்லைக் கேற்றோனே - வீரேச்ற் கென்ன வியற்றிநீ யிந்நகரைத் தொல்லிலிலு முன்னதியாய்ச் செய்துகொண்ட தோ. |
17 |
ஓங்கார துட்பொருளா யொன்றா யமலமதா யாங்கார நீங்கினார்க் காரமுதாய்ப் - பாங்காக நின்றா னசியீச னீங்காம லெங்கெங்கு நன்றாய்ப் பணிந்திடவே நாம். |
18 |
நாம வுருவெல்லா நங்கொற்ற நாதனைவிட் டாமணுவு மில்லையவ னானையெனிற் - பீமமுறக் காய்வதுவு மாய்வதுவுங் கானிகர்த்த நெஞ்சகமே தோய்வதுவு மாராரைச் சொல். |
19 |
சொல்லாய் மடநெஞ்சே சொன்ன மலைவிலியைப் புல்லாய்ப் புரத்தை யெரித்தானை - நெல்லாய்க் கினியானைப் போற்றா திருந்தாயே யென்னென் னினியார்ந்து துன்பளிப்ப தே. |
2 |
தேனா கமலத் திரள்சேருஞ் செந்தடமார் வானோர் பணிகழனி வாளீச - மானார் மயலிற் சுழலாமன் மன்னிடுவா னீயுன் புயலிற் கருணையவுன் போது. |
21 |
போத்தனைப் போக்கப் புகல்வாய் பெருநூலாம் வாததனை நெஞ்சகமே வாடாதே - தீதகலக் கள்ளந் தனைத்தவிர்ததுக் கட்கேசன் கான்மலரை யுள்ளபடி யுள்ளத்தே யுன். |
22 |
உன்னவுன்ன வோடிவிடு முன்னுருவங் கட்கேச வுன்னா திருந்தா லுணரலாம் - பின்னமிலா நல்லாற்றை விட்டுவிட்டு நாயே நலைந்தேனே சொல்லாற்ற லென்பயக்குஞ் சொல். |
23 |
சொல்லிற் கடங்காத சோதியுனை வாதியர்கள் சொல்லிற் க்டங்கச் சொலவுறுத - ன்ல்லெழிலா ரம்பரத்தைத் திக்கா யணிந்த வசியீச வம்பரத்தைக் கட்டலையொப் பாம். |
24 |
ஆமோ வயின்றிடுத லைம்முகத்தெம் வாளீச மாமா முகன்னீயு மற்றாறா - மாமுகனு மன்னத்தின் பூரணியா ளாவியென வில்லக்கா லென்னத்தைப் பண்ணுகிற் பீர். |
25 |
ஈசாறை யையைந்தோ டீர்நான்கிற் கப்பாலாஞ் சீராருங் கொற்றேசன் சேவடிக் - ளோராமற் கற்றாற் கலைகளையே கண்டார் நகையாரோ பற்றார் புரிவாரோ பார். |
26 |
பாரோரும் விண்ணோரும் பற்றாப் பரஞ்சுடரைத் தோரதே நெஞ்சே திரிந்தெய்த்தாய் - பேரேது மில்லானே யென்றாலு மேற்றானெங் கட்சேச னல்லார் தொழும்பதமே நாடு. |
27 |
நாடிகழிஞ் சோரமுற னன்கெனினென் னற்றாதாய் தோடமுறென் றீமனதைச் சோரஞ்செய் - தோடிவிடு நாயே னெவ்ர்பாள் நாட்டே னுந்தாணை பேயேன்பொய் பேசுவனோ பேசு. |
28 |
பேச்சும் பொருளும்போற் பேதையொடு நீநின்றான் மூச்சும் விடப்படுமோ மோகத்தை - யோச்சமென மற்றவர்கள் கொற்றேச மாகருணை நீபுரியி லற்று விடலடியே னாம். |
29 |
ஆமோ வகிலத் தரும்போகி த்யாகிகடாங் கோமா னுனையன்றிக் கொற்றேச - சீமானே மாதுக்குப் பதிகொடுக் காடையென மாதிக்கை தீதற் றுடுத்ததிரத் தே. |
30 |
தேவாதி தேவன் றிருநெல்லை நாயகனற் பூவார் திருவடியிற் போந்தக்காற் - சாவாதே யோவ லெளிதென் றுயர்மா ளிகைமாட்டுக் கூவி யழைக்குங் கொடி. |
31 |
கொடிமேன் மலையிருக்குங் கொற்றேச ரூரி லடியா ரதனருகே யாரார் - பிடியோட வன்னம் பயின்றுவர வாவா குயில்பாடப் பொன்னம் ம்யிலாடும் போய். |
32 |
போயழைகான் மைத்துனனைப் பொங்கரவ நாணாயாத் தேய்சருமங் கோவணமா யேனென்று - காய்கலுழற் கண்டரியுங் கீழ்வீழக் கானோக்குங் கட்கேசன் புண்டரிகத் தாணிதமுதம் போற்று. |
33 |
போற்றுங் குமரேசன் பொற்றலையின் மேலேறி யாற்றிற் கரமிட்டே யாகாவென் - றேற்றுகணிற் காய்ச்சற்கோ கட்டழலுங் கங்கையதுங் கட்கேச தூய்ச்சற் றணிந்ததுநீ சொல். |
34 |
சொல்களனி லேலகளமுந் தூய்சிரசிற் பெண்ணிடபா னெல்லைமுகந் தோலிடையினேரார்க்குத் - தொன்மாலார் சஞ்சேர்க்குஞ் சம்புசல பிந்துசல சஞ்சம்பா லஞ்சாலம் போலவனு லா. |
35 |
உலாவித் திரிதேனோ வொண்பசுவா மோதே னிலாகற் பகதருவோ நீள்கோ - நிலாவணியாய் சிந்தா மணியோ சிறுகல்லா மென்றாலும் வந்தார்க் குதவும் வளன். |
36 |
வளமார் கருணையினல் வாரிதியாய் வாடா வுளவாற்றல் பூரணமா யுள்ளாய் - களவாணீ யென்றாலுங் காட்சியினை யெற்கே னளித்திலைநீ கன்றாத நெற்பெணின்கொண் கா. |
37 |
காலிலியிற் றண்மதியிற் காணென்பிற் கங்கையினில் வாலடலைப் பானெலையின் வார்முலையின் - மேல்சியற் கச்சம் பிரிய மசுசிசுசி கோரஞ்ச மெச்சம்பந் தந்தானு மில். |
38 |
இல்லாண் மலைநீலி யின்றனய ரின்றீன்பெண் ணல்லாது வேறுநினைப் பார்ப்பில்லா - ரல்லலெனச் சங்கரனே சங்கரனாய்ச் ச்ந்யாசஞ் சார்ந்தக்கா லிங்குரனி லிற்பேண் லேன். |
39 |
ஏனோ விரக்கந்தா னென்பேரி னிற்கிலைதான் வானோர் பணிகழனி வாளீச - நானோதா னன்பிலனோ வன்பிலனே லன்பதனைத் தந்துநித மென்புருகப் பாடவா மீ. |
40 |
ஈயென்றே காட்டியிவ ணீர்பதினா றேரெயிறை யீயென்றா லீவாயோ வீர்வாளோ - யோயுள்மாய் நின்னுருவத் தேநின்றா னீயருள்வா யாதலினா லன்னவணஞ் செய்வா னருள். |
41 |
அருளே திருவுருவா மாரியனார்க் கேவல் புரியாது நெஞ்சகமிப் பூமீ - தருமாலுற் றோடி யுழன்றிடுமா லோடா தருள்புரிவான் வாடிருடும் வண்மையனே வா. |
42 |
வாளா வனையுவதி வாளாயான் வந்ததலான் மாளாத காதலினை மாய்த்துன்றான் - வாளீச சித்துருவை யேநினைந்து சித்துருவே யாயிலனோர் சத்துருவென் சித்தமே தான். |
43 |
தானே யலதுசக சீவபரஞ் சற்றுமிலை யேனோ வறிந்து மிடர்கின்றேன் . கோனசியாய் நின்னருள்சற் றில்லையதே நின்மலனே காரணமாம் பன்னுகுடம் போலதிலே பால். |
44 |
பாலே மதுரமதாம் பற்றிவிடிற் சர்க்கரையை மேலே விளம்பலெவன் மின்வாளோய் - போலேகே ணின்னை நினைத்தலதே நின்மலமா நேர்துதுயே னன்னய்த்தை யென்சொலுவே னான். |
45 |
நானோ வசுசியெனி னன்காமோ வென்பாரங் கானார் கசடனெனிற் கட்செவியென் - றோனாறோ யென்னை யிகழாதே யின்னருடந் தாளுதியே லுன்னதியுற் குண்டெனவே யுன். |
46 |
உன்னை யலதொன்றை யுன்னேனே யிந்நாயே னென்னை நினையாமை யேசலவோ - மன்னசியாய் சென்னியா லென்றதனைத் தீரமறந் தாய்கொன்னீ சென்னியா றொன்றுடையாய் செப்பு. |
47 |
செப்பிடிலோ நின்சரிதஞ் சித்திரமாங் கொற்றேச திப்பியவை ராகியுமாஞ் சேர்ராகி - முப்பிரிவேற் கொண்டு நிராமயனாங் கொண்டும் பலியதனை யண்டு மகேச்சுரனா மால். |
48 |
8 ஆலநிழற் கீழேயா மாச்சரியங் கண்டோமே சாலமிகப் பாலியரிச் சாயகனார் - கோலமிகுஞ் சிட்டர்களோ சீர்க்கிழவர் செப்பிடலோ மோனமொழி கெட்டவரா மையமதைக் கேள். |
49 |
கேளுந் திருநெல்லை கேள்வனே யொன்றுரைப்ப வாளின் றிருட்டில் வழக்கெடுக்கி - னாளைபினைப் பொல்லாத பொய்ச்சான்று போடில் வருகின்றேன் வல்லை யெனக்கருள வா. |
50 |
வாரா விடினும் வளநெல்லை நற்றாய்க்காய்ச் சாரா துரைப்பேனச் சான்றதனைத் - தீரமுட னீயருளா தேகிடினு நென்மா நினையாளோ தாய்மனமுங் கல்லாமோ தான். |
51 |
தானே விளையாடத் தன்சங்கற் பத்தாலே வானே முதலாய் வகுத்ததலாற் - கேனமுளா யுண்டோ சிறிதேனு மோதாயெங் கொற்றேச மண்டானன் றிக்குடத்தின் மாண். |
52 |
மாணார் மனோலயத்தை மாசற்றார் மன்னிடயான் பூணா ரரிவையர்தம் போகத்தை - வீணேதா னாடி யுழன்றேனே நங்கொற்ற நாதாகாற் றாடி யெனவெற் கருள். |
53 |
அருளே யவயவமா மாகாகா நாடாத் தெருளே திருவுருவந் தேரீர் - பொருளோதுங் கொற்றேசர்க் காதலினிக் கோண்மனமாம் வெம்பகையற் றுற்றோரே பற்றார்பற் றோர். |
54 |
ஓர்கொம் புடையானே யொருருவா யிங்குற்றுப் பார்கொற்ற நாதனைநீ பாங்கென்றா - னேர்கோளுவீர் பார்த்தேனே பார்த்தவெனைப் பற்றிச் சுகோததியி லார்த்தானே யந்தோ வவன். |
55 |
அவனே யிவனா மிவனே யவானாஞ் சிவனே யிவையாவுந் தேரீர் - பவநோயற் றர்வாளி தீக்கானி லாடும் பொருளீதே பேர்வாழி சொல்லியிருப் பேம். |
56 |
பேமற்றோ நாமளவில் பேரற்றோ மற்றோமென் னாமற்றோங் கொற்றேசர் நாடுற்றே - யோமுற்றார்க் கென்றும் பணிசெய்வோ மேமாறோ மேயுலகின் முன்றுன் பினியிடைவோ மோ. |
57 |
மோதப் பெருங்கடலே மும்முலையா ணாயகனே யோதப் பெரிதருளு முண்மையனே - கோதற்ற முத்தீசன் போற்று முளரிப் பதத்தோனே சத்தீவா ளோயெற்குத் தான். |
58 |
தானே யுலகன்றிச் சத்தியமே சத்தியமே யூனார் சிறிதிலைமற் றோர்வீர்நீர் - கோனசியோ னன்னகரில் வீரேச னாயேற் குரைத்ததிதே யெந்நகர்க்கு மெட்டா திதே. |
59 |
தேவாதி தேவனிவன் றென்கழனி வாளீசன் காவார் வனிக்கானைக் காதலிமி - னோவாதே தன்மயமே யாகித் தணர்ந்தே பிணமதியை யின்மயமே யாகியிடு வீர். |
60 |
ஈரார் கருங்குழலா ரீமக் குண்பம்போ லோரா ருடனுறவோ வூன்றியெனா - நேராரும் வாளீசன் மாநகரில் வாழடியார் தாளிணையி னாளாக் நெஞ்சே யமை. |
61 |
அமையாய் மடநெஞ்சே யங்கிங்கும் பற்றல் குமையோ விதுவுண்ணக் கூறாய் - நமையாளும் வீரேசன் கொற்றேசன் வெற்றிநக ருற்றேநற் சீரா யளித்தமொழித் தேன். |
62 |
தேனார் குணமார் திருச்சனகன் போலேமற் றேனோ வுணரா யிடர்நெஞ்சே - தேனாறோன் பாதம் பணிதருநற் பண்ணவனாம் வீரேசன் பாதம் பணிந்தென்றன் பால். |
63 |
பாலார் கடலினையப் பாலகனுக் கீந்தருளு மேலாங் கருணையசி மேலோனே - நூலளவே யாகுமா நுண்ணறிவிங் கந்தா மரைநீர்போற் போகுமே யன்பருளுன் போல். |
64 |
போலி யுலகிதனைப் பொய்யென்றே யெண்ணாமற் கோலி யலைந்தேனே கோனசியாய் - பாலியென நின்றாட் பணிந்தேனே னீயருளைச் செய்தெனையே கன்றாக் கருணையினிற் கா. |
65 |
காடுங் கடிவீடுங் கண்ணாரு மொண்ணாரு மோடுங் கனகமதூஉ மொப்பாக - நாடுமவர் வாழிங் கழனிநகர் வாளீச னேநினதாட் டாழும் வரமெனக்குத் தா. |
66 |
தாரணியென் சொல்லன்றித் தாரணியென் றொன்றில்லை பூரணிநெற் கொண்கனெனும் போர்வாளோய் - தாரணியி னின்பா லடைந்தாரே நேரா விதைநேர்வார், மன்பா லடைவார்போன் மன். |
67 |
மன்னப் பெரியோர்கண் மாசிலா நிட்டையினை யுன்னப் படுநீள்கா ரோதியரோ - டின்னட்பாய்ச் சேர விரும்புஞ் சிறியேனை யாட்கொள்வாட் சார விரும்புறுநா தா. |
68 |
தாமரையைக் கண்டே தண்ந்தார்நற் றையலர்த மாமரிபர் ணம்புசிக்கு மாரியருங் - காமரியே நன்னெய்பா லேகொள்ளு நாயேன் புலன்றாண்ட லென்னயமார் கன்னாவா யே. |
69 |
ஏசாத நிட்டை யிசைந்தானந் தக்கண்ணீர் கூசா தயிலக் குறங்கமிசைப் - பேசாதே வந்து ககங்கூடி வாணாளு முண்டுகொலோ தந்திரவாட் கொண்டருடா தாய். |
70 |
தாயார் திருநெல்லைத் தாய்நீநற் றந்தைகணத் தூயோர் கடவுளுநற் றோகையனு - மாயாத சேட்டரா நின்னடியார் சேட்டமுறுஞ் சுற்றத்தார் வாட்டமிலை வாளெடுத்த வா. |
71 |
வாக்கு மனமும் வருந்தித் திரும்புறுநீ போக்கும் வரவற்ற பூரணனீ - காக்குமெழிற் காவலனற் கட்கத்தைக் கண்டுயிலக் கொண்டுவரு மாவலனு நீயன்றோ வா. |
72 |
ஆரார் பழித்தென்னா மாரார் துதித்தென்னாஞ் சீரார் நினதாளே சேர்ந்தேன்யான் - கூர்வாளோ யென்னைக் கருணைசெய னின்கடனா மென்கடனோ வுன்னைப் புகழுதலே யோ. |
73 |
ஓயா துளப்பேய்தா னோடிப் படிமிசையே வீயா மடந்தையர்மேல் வேட்கையுறுங் - கூயதனை வேண்டா மெனவல்லார் வெற்றிவா ளோயுனையற் றீண்டாரு மில்லையெனக் கே. |
74 |
ஏதக் களஞ்சியநா னென்றாலு நின்றாளை யோதக் கழியேனீ யோர்வாயால் - போதமருள் வீரமுத்தி யாரியனை வேண்டிக் கொணர்ந்தருளக் காரைசெலுங் கன்னியின்கொண் கா. |
75 |
காலைப் பிடித்துங் கடுமனதைக் கண்டித்தும் பாலைக் குடித்தும் பலபுரிந்தும் - வாலைமண வாளனெனும் வாளனுனை வந்தடைவார் வந்தடையத் தாளைப் புகழுவன்யான் றான். |
76 |
தானே பகையுறவுந் தானே சுகந்துயருந் தானே யுருநாமத் தாரணியுந் - தானேதா னெல்லா மெனவே யெளியேற் கியம்பினைவா ணல்லோய்பின் னாடுவதென் னான். |
77 |
நானா விதவுயிரா நாதாநீ செய்பவனா மூனா ரக்மதியா மோதலெலாந் - தேனாறோய் பேய்த்தேரே யென்றுரிய பேரின்ப மாயினபின் னாய்த்தேயெற் கந்தோவா வா. |
78 |
ஆக்க லளித்த லழித்தன் முதலவெலா நோக்கின் மனமொன்றே நுண்ணசியாய் - வாக்கிற்கு மெட்டாத நின்னுருவை யெட்டிவிடிற் சுட்டாதே மட்டுண்டோ வின்பழியு மால். |
79 |
மாலா ய்ரனாய் மலரோனாய் மற்றவராய்க் காலா யறறீயாய்க் கம்பாராய் - மேலசியோய் மெய்யா யுனையல்லால் வேறிலைநன் னீநானே பொய்யோது மோமறைதான் போய். |
80 |
போயெட்டிப் பாராதே பொய்ம்மாயா வாதமெனும் பேய்மட்டிப் பேதையுடன் பேசாதே - வாய்கட்டிப் பொல்லா வுளமொருக்கிப் பூரணமே காணென்றாய் கொல்லேதி யோனையென் கோ. |
81 |
கோணா மதுமுனிவன் கோறவமே நற்றவமா மாணா ருனதுவர மாண்பேமாண் - பேணோர்க ளென்ன வரம்பெற்றா ரித்தகைய மெய்த்தவர்வா ழின்னவாம் போலோதி லே. |
82 |
ஏமாந் திருந்தேனே யித்துணையு மைய்யய்யோ நீமாந்த வைத்திலையே நீளமுதைப் - பூமாந்தண் வல்லபத்தி னாயகனே வந்திலையோ பக்குவமுங் கல்லிபத்திற் கிக்களிப்போய் கா. |
83 |
காவிற் சொரிதேனே கண்டோநற் றேனாறாய் மாவிற் குயில்கூவும் வல்லபமே - தேவிற் சிறந்ததிருக் கட்கேசன் சோநகராங் கண்டீ ரிறந்திடினு நீர்மறவீ ரெல். |
84 |
எல்லாம் புலப்பந்தா னென்றுரைத்த முத்தீசன் சொல்லாற் சுகம்பெறலாஞ் சோர்வின்றி - யல்லாமல் வேறு வழியிலையெம் வெற்றிவா ளீசரைவிட் டேறுங் கரையேது மில். |
85 |
இல்லா தறிவான்மூன் றேய்ந்திருப்ப தேமுத்தி யல்லாமல் வேறின்றென் றாரியனோர் - சொல்லாலே சொன்னவுப தேசத்தைத் தோமறுநற் கொற்றேச வின்னபடி யென்றிலக்கி டே. |
86 |
ஏதக் கடுவுடையோ ரின்னமுதீ வாரெனினு மோதத் தலைமாலை யோரெனினும் - பூதரிவ ரோதத் தகுமோவிங் கோர்வாரார் கொற்றேச ராதலெலாஞ் சித்திரமே யாம். |
87 |
ஆமெனினு நற்பவனா யான்றோர் பவந்துடைப்பன் காமனெரி கோடிட்டிக் காரனுமே - யாமெனினுஞ் சீரார் சமதிருட்டித் தேவனிவன் கொற்றேசற் சேரா ரறிவாரோ செப்பு. |
88 |
செப்பேம் பவன்சருவன் சீரார் பசுபதியா மொப்பா ருருத்திரனோ டுக்கிரனும் - மெய்ப்பீம னீசானன் மாதேவ னென்றருள்வா ளீசனுடைத் தேசார்ந்த நாமமதின் சீர். |
89 |
சீரார் கழனித் திருவே திருநெல்லைக் காரா வமுதே யருளுருவே - தேராதார்க் க்ல்லேயா மாதியற்ஞ் சோதியனை யாழ்நெஞ்சே யல்லும் பகலும் மறி. |
90 |
அறிவுருவாங் கொற்றேச னானபினர் நோக்கிச் செறியுலகஞ் சித்துருவாய்ச் சேர்ந்தே - பொறியாறு மோட லொழிந்ததுவே யோர்சாந்தி வந்ததுவே கேடதற வுற்றனமிங் கே. |
91 |
கேதாரா போற்றியொரு கேடில்லா விஸ்வேசா தாதாவே போற்றி சயபோற்றி - யாதியிலாய் போற்றி யசியீசனே போற்றிநெலை நாயகனே போற்றியுன தாமரையின் போது. |
92 |
போதா ரயனுடனே புள்ளோனுங் காணாத தாதாவே சீர்கழனித் தண்ணிறையே - நீதாதா நாயேற் குனைமறவா நல்வரத்தை நல்குதியேற் பேயேற்கு முண்டோ பிணி. |
93 |
பிணியார்ந்து மங்கும் பிணவுடலைப் பேயே னணியா மெனக்கருதி யார்ந்தே - துணியாமற் றோயாம னின்னுருவைத் தோத்திரமுஞ் செய்யாம லோயாமற் றுன்புற்றே னோ. |
94 |
ஓகோ திருநெல்லைக் கொப்பான நாயகரே ஆகாயம் போலகண்ட மானவரே - தேகோகம் புந்தியினைத் தீர்த்தே புலையனையு மாட்கொளுவீர் மந்திரவாட் கொள்பவரே மா. |
94 |
மாவும் வளர்தெங்கு மாகத்தின் சோலையாங் கோவிற் பெருமூரோய் கொற்றேச - கூவியிடுங் கோகிலமே போலமிகக் கூடிதனை விட்டொழித்திங் காகிலனே நின்றா ளனி. |
96 |
அணியும் பணிபோற்றி யம்பலவா போற்றி பணியு மடியவர்தம் பாதந் - துணிவாக நிற்பாதி கொண்டதிரு நெல்லை வயற்கேகு நற்பாதம் போற்றுவனே நான். |
97 |
நானேநீ யாகிப்பன் னீயேபின் னானாகி யூனே முதலாய தோட்டிமிக - வானேவா னானவா போலரிய வையாவெம் வாளீச வானோமே நாமிருவோ ரா. |
98 |
ஆச்சரியங் கண்டோமே யம்மா வசியீசன் பேச்சிறக்கப் பண்ணுவனே பேணினரைச் - தூர்ச்சடிதன் போற்றும் பதந்தனையே போற்று. |
99 |
போற்றிநங் கொற்றேசற் போற்றுவார் பொற்கழல்கள் போற்றிநம் வீரேசன் பொன்மலர்கள் - போற்றிமிகப் போற்றி கழனிநகர்ப்ப பொன்னடியார் பொற்றாள்கள் போற்ரிகரிப் பாதமரைப் பூ. |
100 |
திருக்கொற்றவாளீசரந்தாதி முற்றிற்று.