logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolதிருக்கொற்றவாளீசரந்தாதி - Sri cuppaiya cuvamikalin tirukkorravalicarantatiOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


Sri cuppaiya cuvamikalin tirukkorravalicarantati Acknowledgements: Our Sincere thanks go to Digital Library of India for providing a scanned images version of the work. Etext preparation and proof-reading: This etext was keyed-in by K. Kalyanasundaram. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2007 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. இவை ஸ்ரீசமிவன க்ஷேத்திரமென்னும் ஸ்ரீகோவிலூர்மடாலயம் ஸ்ரீமன் முத்திராமலிங்க ஞானதேசிகர் ஆதினத்திற்குரிய ஸ்ரீவீரசேகரஞானதேசிகர் பாதசேகரராகிய ஸ்ரீசுப்பைய சுவாமிகளவர்களால் இயற்றப்பட்டு, மேற்படி ஸ்ரீ வீரசேகரஞானதேசிகர் மாணாக்கருள் ஒருவராகிய கா‍ரைக்குடி ஆ.வெ.வெங்கடாசலஞ் செட்டியாரவர்களால் சென்னை, கோமளேசுவரன்பேட்டை, சச்சிதானந்த அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டன. 1910 ------------- திருக்கொற்றவாளீசரந்தாதி. கணபதி துணை சிவமயம் சிற்சொருப் பமான சிவராச கட்கேசன் பொற்சொருபம் போற்றிப் புகழவே - தற்சொருப வானை முகத்த னரவிந்த மாகதியற் றேனை யெனக்கின் றினி. 1 நூல் பூரணணே யினபப் பிராதனனே பொன்னளிசேர் தாரணனே தந்தாயித் தாரணியின் - காரணனே மன்னவா ளீச மகிழ்ந் திருநெல்லை கன்னலே யென்னைமிகக் கா. 1 காரூர் மிடற்றானைக் கண்ணுதலைக் காணுமா றூரூர்க டோறுநீ யுற்றுழன்றா - யேரூரும் வன்னை வனத்தை வணங்கிலையா னெஞ்சகமே யன்னைவனைக் காண்ப தரிது. 2 அரிதா யமதா யாரறிவா யொன்றா யுரிதோ லுடையானா மொண்சீர் - விரிதேனா ராறோ டுடையாருக் கன்பியற்று நெஞ்சகமே மாறே டுடையார்க்கு மற்று. 3 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகையென்றிங் - கற்றார்க ளோதும் பெருமொழியை யுட்கொண்டு வன்னிவனத் தாதியினை நெஞ்சே யறி. 4 அறிவே யெனதுருவ மாவா னடைந்தேன் குறியேதோ யானறியேன் கூரோய் - பொறியோடே யோடே வெனிளுள்ள மோயா வளிநிகர்நிற் கூடவெனி னோவ்சையாக் குன்று. 5 குன்றாக் குடியர் குறத்தி மணவாளர் கன்றாப் புதல்வருமக்க காமாமா - மென்றாக்கா னீயசியைக் கொண்டுவர னீதியே நீலிமலை யாய்வயலைக் காப்பதுவு மாம். 6 ஆமோ வலவோவென் றையமுறும் பாடில்லை காமாரி யாமென்னுங் கட்கேசன் - பூமாதண் வன்னி வனத்தை வளம்படவே நீயடையி லுன்னதிநன் குள்ளமே யுண்டு. 7 உண்டோ விலையோதா னொள்ளிடையின் னெல்லைக்கென், றுண்டாம் பெரும்பீதி யுற்றோதான் - கொண்டாய்நீ, நல்ல விடபான நங்கொற்ற வாளீச வொல்லை யெனக்கே யுரை. 8 உரையா யுசியுடையா யோகரமோ பாம்பை யிரையா யரியாவை யேற்குந் - திரையாளு நென்மாதுங் காதலரு நீங்கார் முரணென்றோ சன்மார்க்க சங்கரனா னாய். 9 ஆனா யுலகா யதனுண் ணுழைந்தனைநீ வானேய் க்டத்தின் வள்னெப்ப - வேனோதான் பேதத்தைப் பேசிப் பிறழ்ந்து திரிகின்றா ரோதத்தை வாளோ யுக. 10 உகத்தொ லொடுமிகத்த லொன்றேனுந் துன்றா திகத்தி லடிநாயே னின்பே - யகத்துறுமா செய்வாய் கழனித் திருநெல்லைக் கின்னமுதே ஐவா ளிரதத்தாஅ யான். 11 ஆனை முகனானா யாறுமுக னும்மானாய் வானை முக்னானாய் வாளீச - வானையுகந் தேறினாய் நெல்லைக் கினிய தவனானாய் பாறினா யென்னையினிப் பார். 12 பாராதி யெட்டாய்ப் பரந்து விளையாட றேரா திருப்பார்க்குத் தெய்வமாய்க் - காரோதி நென்னா யகியோடு நீகொற்ற வாளீச பொன்னா லயமமர்ந்தாய் போய். 13 போக்கும் வரவும் புணர்வுமிலாப் பூரணத்தைத் தேக்குந் திரமனத்துத் தேன்முனிக்குத் - தீக்கானிற் சாம முடிகாண்பார் சார்வான் வரந்தந்தா யேமமுற நின்கருணை யே. 14 ஏதோ வறியே னினிவருவ தெந்தாயே மாதே சரணாய் மருவினேன் - றீதேதான் செய்து திரிகின்றேன் சின்மயமாய் நின்றில்லை னெய்துவதிங் கென்னே யினி. 15 இனியா யினிநாயே னின்றாளிற் சேர்ந்தாற் கனியாதோ நின்னுள்ளங் கட்கோய்f - பனியாலே வாடுங் கமலத்தில் வாடியதிங் கென்னுள்ளங் கூடுங் கருணையினைக் கூர். 16 கூரா ரிறைவாளைக் கொண்டுபணி கொண்டாய்முன் னேரார் திருநெல்லைக் கேற்றோனே - வீரேச்ற் கென்ன வியற்றிநீ யிந்நகரைத் தொல்லிலிலு முன்னதியாய்ச் செய்துகொண்ட தோ. 17 ஓங்கார துட்பொருளா யொன்றா யமலமதா யாங்கார நீங்கினார்க் காரமுதாய்ப் - பாங்காக நின்றா னசியீச னீங்காம லெங்கெங்கு நன்றாய்ப் பணிந்திடவே நாம். 18 நாம வுருவெல்லா நங்கொற்ற நாதனைவிட் டாமணுவு மில்லையவ னானையெனிற் - பீமமுறக் காய்வதுவு மாய்வதுவுங் கானிகர்த்த நெஞ்சகமே தோய்வதுவு மாராரைச் சொல். 19 சொல்லாய் மடநெஞ்சே சொன்ன மலைவிலியைப் புல்லாய்ப் புரத்தை யெரித்தானை - நெல்லாய்க் கினியானைப் போற்றா திருந்தாயே யென்னென் னினியார்ந்து துன்பளிப்ப தே. 2 தேனா கமலத் திரள்சேருஞ் செந்தடமார் வானோர் பணிகழனி வாளீச - மானார் மயலிற் சுழலாமன் மன்னிடுவா னீயுன் புயலிற் கருணையவுன் போது. 21 போத்தனைப் போக்கப் புகல்வாய் பெருநூலாம் வாததனை நெஞ்சகமே வாடாதே - தீதகலக் கள்ளந் தனைத்தவிர்ததுக் கட்கேசன் கான்மலரை யுள்ளபடி யுள்ளத்தே யுன். 22 உன்னவுன்ன வோடிவிடு முன்னுருவங் கட்கேச வுன்னா திருந்தா லுணரலாம் - பின்னமிலா நல்லாற்றை விட்டுவிட்டு நாயே நலைந்தேனே சொல்லாற்ற லென்பயக்குஞ் சொல். 23 சொல்லிற் கடங்காத சோதியுனை வாதியர்கள் சொல்லிற் க்டங்கச் சொலவுறுத - ன்ல்லெழிலா ரம்பரத்தைத் திக்கா யணிந்த வசியீச வம்பரத்தைக் கட்டலையொப் பாம். 24 ஆமோ வயின்றிடுத லைம்முகத்தெம் வாளீச மாமா முகன்னீயு மற்றாறா - மாமுகனு மன்னத்தின் பூரணியா ளாவியென வில்லக்கா லென்னத்தைப் பண்ணுகிற் பீர். 25 ஈசாறை யையைந்தோ டீர்நான்கிற் கப்பாலாஞ் சீராருங் கொற்றேசன் சேவடிக் - ளோராமற் கற்றாற் கலைகளையே கண்டார் நகையாரோ பற்றார் புரிவாரோ பார். 26 பாரோரும் விண்ணோரும் பற்றாப் பரஞ்சுடரைத் தோரதே நெஞ்சே திரிந்தெய்த்தாய் - பேரேது மில்லானே யென்றாலு மேற்றானெங் கட்சேச னல்லார் தொழும்பதமே நாடு. 27 நாடிகழிஞ் சோரமுற னன்கெனினென் னற்றாதாய் தோடமுறென் றீமனதைச் சோரஞ்செய் - தோடிவிடு நாயே னெவ்ர்பாள் நாட்டே னுந்தாணை பேயேன்பொய் பேசுவனோ பேசு. 28 பேச்சும் பொருளும்போற் பேதையொடு நீநின்றான் மூச்சும் விடப்படுமோ மோகத்தை - யோச்சமென மற்றவர்கள் கொற்றேச மாகருணை நீபுரியி லற்று விடலடியே னாம். 29 ஆமோ வகிலத் தரும்போகி த்யாகிகடாங் கோமா னுனையன்றிக் கொற்றேச - சீமானே மாதுக்குப் பதிகொடுக் காடையென மாதிக்கை தீதற் றுடுத்ததிரத் தே. 30 தேவாதி தேவன் றிருநெல்லை நாயகனற் பூவார் திருவடியிற் போந்தக்காற் - சாவாதே யோவ லெளிதென் றுயர்மா ளிகைமாட்டுக் கூவி யழைக்குங் கொடி. 31 கொடிமேன் மலையிருக்குங் கொற்றேச ரூரி லடியா ரதனருகே யாரார் - பிடியோட வன்னம் பயின்றுவர வாவா குயில்பாடப் பொன்னம் ம்யிலாடும் போய். 32 போயழைகான் மைத்துனனைப் பொங்கரவ நாணாயாத் தேய்சருமங் கோவணமா யேனென்று - காய்கலுழற் கண்டரியுங் கீழ்வீழக் கானோக்குங் கட்கேசன் புண்டரிகத் தாணிதமுதம் போற்று. 33 போற்றுங் குமரேசன் பொற்றலையின் மேலேறி யாற்றிற் கரமிட்டே யாகாவென் - றேற்றுகணிற் காய்ச்சற்கோ கட்டழலுங் கங்கையதுங் கட்கேச தூய்ச்சற் றணிந்ததுநீ சொல். 34 சொல்களனி லேலகளமுந் தூய்சிரசிற் பெண்ணிடபா னெல்லைமுகந் தோலிடையினேரார்க்குத் - தொன்மாலார் சஞ்சேர்க்குஞ் சம்புசல பிந்துசல சஞ்சம்பா லஞ்சாலம் போலவனு லா. 35 உலாவித் திரிதேனோ வொண்பசுவா மோதே னிலாகற் பகதருவோ நீள்கோ - நிலாவணியாய் சிந்தா மணியோ சிறுகல்லா மென்றாலும் வந்தார்க் குதவும் வளன். 36 வளமார் கருணையினல் வாரிதியாய் வாடா வுளவாற்றல் பூரணமா யுள்ளாய் - களவாணீ யென்றாலுங் காட்சியினை யெற்கே னளித்திலைநீ கன்றாத நெற்பெணின்கொண் கா. 37 காலிலியிற் றண்மதியிற் காணென்பிற் கங்கையினில் வாலடலைப் பானெலையின் வார்முலையின் - மேல்சியற் கச்சம் பிரிய மசுசிசுசி கோரஞ்ச மெச்சம்பந் தந்தானு மில். 38 இல்லாண் மலைநீலி யின்றனய ரின்றீன்பெண் ணல்லாது வேறுநினைப் பார்ப்பில்லா - ரல்லலெனச் சங்கரனே சங்கரனாய்ச் ச்ந்யாசஞ் சார்ந்தக்கா லிங்குரனி லிற்பேண் லேன். 39 ஏனோ விரக்கந்தா னென்பேரி னிற்கிலைதான் வானோர் பணிகழனி வாளீச - நானோதா னன்பிலனோ வன்பிலனே லன்பதனைத் தந்துநித மென்புருகப் பாடவா மீ. 40 ஈயென்றே காட்டியிவ ணீர்பதினா றேரெயிறை யீயென்றா லீவாயோ வீர்வாளோ - யோயுள்மாய் நின்னுருவத் தேநின்றா னீயருள்வா யாதலினா லன்னவணஞ் செய்வா னருள். 41 அருளே திருவுருவா மாரியனார்க் கேவல் புரியாது நெஞ்சகமிப் பூமீ - தருமாலுற் றோடி யுழன்றிடுமா லோடா தருள்புரிவான் வாடிருடும் வண்மையனே வா. 42 வாளா வனையுவதி வாளாயான் வந்ததலான் மாளாத காதலினை மாய்த்துன்றான் - வாளீச சித்துருவை யேநினைந்து சித்துருவே யாயிலனோர் சத்துருவென் சித்தமே தான். 43 தானே யலதுசக சீவபரஞ் சற்றுமிலை யேனோ வறிந்து மிடர்கின்றேன் . கோனசியாய் நின்னருள்சற் றில்லையதே நின்மலனே காரணமாம் பன்னுகுடம் போலதிலே பால். 44 பாலே மதுரமதாம் பற்றிவிடிற் சர்க்கரையை மேலே விளம்பலெவன் மின்வாளோய் - போலேகே ணின்னை நினைத்தலதே நின்மலமா நேர்துதுயே னன்னய்த்தை யென்சொலுவே னான். 45 நானோ வசுசியெனி னன்காமோ வென்பாரங் கானார் கசடனெனிற் கட்செவியென் - றோனாறோ யென்னை யிகழாதே யின்னருடந் தாளுதியே லுன்னதியுற் குண்டெனவே யுன். 46 உன்னை யலதொன்றை யுன்னேனே யிந்நாயே னென்னை நினையாமை யேசலவோ - மன்னசியாய் சென்னியா லென்றதனைத் தீரமறந் தாய்கொன்னீ சென்னியா றொன்றுடையாய் செப்பு. 47 செப்பிடிலோ நின்சரிதஞ் சித்திரமாங் கொற்றேச திப்பியவை ராகியுமாஞ் சேர்ராகி - முப்பிரிவேற் கொண்டு நிராமயனாங் கொண்டும் பலியதனை யண்டு மகேச்சுரனா மால். 48 8 ஆலநிழற் கீழேயா மாச்சரியங் கண்டோமே சாலமிகப் பாலியரிச் சாயகனார் - கோலமிகுஞ் சிட்டர்களோ சீர்க்கிழவர் செப்பிடலோ மோனமொழி கெட்டவரா மையமதைக் கேள். 49 கேளுந் திருநெல்லை கேள்வனே யொன்றுரைப்ப வாளின் றிருட்டில் வழக்கெடுக்கி - னாளைபினைப் பொல்லாத பொய்ச்சான்று போடில் வருகின்றேன் வல்லை யெனக்கருள வா. 50 வாரா விடினும் வளநெல்லை நற்றாய்க்காய்ச் சாரா துரைப்பேனச் சான்றதனைத் - தீரமுட னீயருளா தேகிடினு நென்மா நினையாளோ தாய்மனமுங் கல்லாமோ தான். 51 தானே விளையாடத் தன்சங்கற் பத்தாலே வானே முதலாய் வகுத்ததலாற் - கேனமுளா யுண்டோ சிறிதேனு மோதாயெங் கொற்றேச மண்டானன் றிக்குடத்தின் மாண். 52 மாணார் மனோலயத்தை மாசற்றார் மன்னிடயான் பூணா ரரிவையர்தம் போகத்தை - வீணேதா னாடி யுழன்றேனே நங்கொற்ற நாதாகாற் றாடி யெனவெற் கருள். 53 அருளே யவயவமா மாகாகா நாடாத் தெருளே திருவுருவந் தேரீர் - பொருளோதுங் கொற்றேசர்க் காதலினிக் கோண்மனமாம் வெம்பகையற் றுற்றோரே பற்றார்பற் றோர். 54 ஓர்கொம் புடையானே யொருருவா யிங்குற்றுப் பார்கொற்ற நாதனைநீ பாங்கென்றா - னேர்கோளுவீர் பார்த்தேனே பார்த்தவெனைப் பற்றிச் சுகோததியி லார்த்தானே யந்தோ வவன். 55 அவனே யிவனா மிவனே யவானாஞ் சிவனே யிவையாவுந் தேரீர் - பவநோயற் றர்வாளி தீக்கானி லாடும் பொருளீதே பேர்வாழி சொல்லியிருப் பேம். 56 பேமற்றோ நாமளவில் பேரற்றோ மற்றோமென் னாமற்றோங் கொற்றேசர் நாடுற்றே - யோமுற்றார்க் கென்றும் பணிசெய்வோ மேமாறோ மேயுலகின் முன்றுன் பினியிடைவோ மோ. 57 மோதப் பெருங்கடலே மும்முலையா ணாயகனே யோதப் பெரிதருளு முண்மையனே - கோதற்ற முத்தீசன் போற்று முளரிப் பதத்தோனே சத்தீவா ளோயெற்குத் தான். 58 தானே யுலகன்றிச் சத்தியமே சத்தியமே யூனார் சிறிதிலைமற் றோர்வீர்நீர் - கோனசியோ னன்னகரில் வீரேச னாயேற் குரைத்ததிதே யெந்நகர்க்கு மெட்டா திதே. 59 தேவாதி தேவனிவன் றென்கழனி வாளீசன் காவார் வனிக்கானைக் காதலிமி - னோவாதே தன்மயமே யாகித் தணர்ந்தே பிணமதியை யின்மயமே யாகியிடு வீர். 60 ஈரார் கருங்குழலா ரீமக் குண்பம்போ லோரா ருடனுறவோ வூன்றியெனா - நேராரும் வாளீசன் மாநகரில் வாழடியார் தாளிணையி னாளாக் நெஞ்சே யமை. 61 அமையாய் மடநெஞ்சே யங்கிங்கும் பற்றல் குமையோ விதுவுண்ணக் கூறாய் - நமையாளும் வீரேசன் கொற்றேசன் வெற்றிநக ருற்றேநற் சீரா யளித்தமொழித் தேன். 62 தேனார் குணமார் திருச்சனகன் போலேமற் றேனோ வுணரா யிடர்நெஞ்சே - தேனாறோன் பாதம் பணிதருநற் பண்ணவனாம் வீரேசன் பாதம் பணிந்தென்றன் பால். 63 பாலார் கடலினையப் பாலகனுக் கீந்தருளு மேலாங் கருணையசி மேலோனே - நூலளவே யாகுமா நுண்ணறிவிங் கந்தா மரைநீர்போற் போகுமே யன்பருளுன் போல். 64 போலி யுலகிதனைப் பொய்யென்றே யெண்ணாமற் கோலி யலைந்தேனே கோனசியாய் - பாலியென நின்றாட் பணிந்தேனே னீயருளைச் செய்தெனையே கன்றாக் கருணையினிற் கா. 65 காடுங் கடிவீடுங் கண்ணாரு மொண்ணாரு மோடுங் கனகமதூஉ மொப்பாக - நாடுமவர் வாழிங் கழனிநகர் வாளீச னேநினதாட் டாழும் வரமெனக்குத் தா. 66 தாரணியென் சொல்லன்றித் தாரணியென் றொன்றில்லை பூரணிநெற் கொண்கனெனும் போர்வாளோய் - தாரணியி னின்பா லடைந்தாரே நேரா விதைநேர்வார், மன்பா லடைவார்போன் மன். 67 மன்னப் பெரியோர்கண் மாசிலா நிட்டையினை யுன்னப் படுநீள்கா ரோதியரோ - டின்னட்பாய்ச் சேர விரும்புஞ் சிறியேனை யாட்கொள்வாட் சார விரும்புறுநா தா. 68 தாமரையைக் கண்டே தண்ந்தார்நற் றையலர்த மாமரிபர் ணம்புசிக்கு மாரியருங் - காமரியே நன்னெய்பா லேகொள்ளு நாயேன் புலன்றாண்ட லென்னயமார் கன்னாவா யே. 69 ஏசாத நிட்டை யிசைந்தானந் தக்கண்ணீர் கூசா தயிலக் குறங்கமிசைப் - பேசாதே வந்து ககங்கூடி வாணாளு முண்டுகொலோ தந்திரவாட் கொண்டருடா தாய். 70 தாயார் திருநெல்லைத் தாய்நீநற் றந்தைகணத் தூயோர் கடவுளுநற் றோகையனு - மாயாத சேட்டரா நின்னடியார் சேட்டமுறுஞ் சுற்றத்தார் வாட்டமிலை வாளெடுத்த வா. 71 வாக்கு மனமும் வருந்தித் திரும்புறுநீ போக்கும் வரவற்ற பூரணனீ - காக்குமெழிற் காவலனற் கட்கத்தைக் கண்டுயிலக் கொண்டுவரு மாவலனு நீயன்றோ வா. 72 ஆரார் பழித்தென்னா மாரார் துதித்தென்னாஞ் சீரார் நினதாளே சேர்ந்தேன்யான் - கூர்வாளோ யென்னைக் கருணைசெய னின்கடனா மென்கடனோ வுன்னைப் புகழுதலே யோ. 73 ஓயா துளப்பேய்தா னோடிப் படிமிசையே வீயா மடந்தையர்மேல் வேட்கையுறுங் - கூயதனை வேண்டா மெனவல்லார் வெற்றிவா ளோயுனையற் றீண்டாரு மில்லையெனக் கே. 74 ஏதக் களஞ்சியநா னென்றாலு நின்றாளை யோதக் கழியேனீ யோர்வாயால் - போதமருள் வீரமுத்தி யாரியனை வேண்டிக் கொணர்ந்தருளக் காரைசெலுங் கன்னியின்கொண் கா. 75 காலைப் பிடித்துங் கடுமனதைக் கண்டித்தும் பாலைக் குடித்தும் பலபுரிந்தும் - வாலைமண வாளனெனும் வாளனுனை வந்தடைவார் வந்தடையத் தாளைப் புகழுவன்யான் றான். 76 தானே பகையுறவுந் தானே சுகந்துயருந் தானே யுருநாமத் தாரணியுந் - தானேதா னெல்லா மெனவே யெளியேற் கியம்பினைவா ணல்லோய்பின் னாடுவதென் னான். 77 நானா விதவுயிரா நாதாநீ செய்பவனா மூனா ரக்மதியா மோதலெலாந் - தேனாறோய் பேய்த்தேரே யென்றுரிய பேரின்ப மாயினபின் னாய்த்தேயெற் கந்தோவா வா. 78 ஆக்க லளித்த லழித்தன் முதலவெலா நோக்கின் மனமொன்றே நுண்ணசியாய் - வாக்கிற்கு மெட்டாத நின்னுருவை யெட்டிவிடிற் சுட்டாதே மட்டுண்டோ வின்பழியு மால். 79 மாலா ய்ரனாய் மலரோனாய் மற்றவராய்க் காலா யறறீயாய்க் கம்பாராய் - மேலசியோய் மெய்யா யுனையல்லால் வேறிலைநன் னீநானே பொய்யோது மோமறைதான் போய். 80 போயெட்டிப் பாராதே பொய்ம்மாயா வாதமெனும் பேய்மட்டிப் பேதையுடன் பேசாதே - வாய்கட்டிப் பொல்லா வுளமொருக்கிப் பூரணமே காணென்றாய் கொல்லேதி யோனையென் கோ. 81 கோணா மதுமுனிவன் கோறவமே நற்றவமா மாணா ருனதுவர மாண்பேமாண் - பேணோர்க ளென்ன வரம்பெற்றா ரித்தகைய மெய்த்தவர்வா ழின்னவாம் போலோதி லே. 82 ஏமாந் திருந்தேனே யித்துணையு மைய்யய்யோ நீமாந்த வைத்திலையே நீளமுதைப் - பூமாந்தண் வல்லபத்தி னாயகனே வந்திலையோ பக்குவமுங் கல்லிபத்திற் கிக்களிப்போய் கா. 83 காவிற் சொரிதேனே கண்டோநற் றேனாறாய் மாவிற் குயில்கூவும் வல்லபமே - தேவிற் சிறந்ததிருக் கட்கேசன் சோநகராங் கண்டீ ரிறந்திடினு நீர்மறவீ ரெல். 84 எல்லாம் புலப்பந்தா னென்றுரைத்த முத்தீசன் சொல்லாற் சுகம்பெறலாஞ் சோர்வின்றி - யல்லாமல் வேறு வழியிலையெம் வெற்றிவா ளீசரைவிட் டேறுங் கரையேது மில். 85 இல்லா தறிவான்மூன் றேய்ந்திருப்ப தேமுத்தி யல்லாமல் வேறின்றென் றாரியனோர் - சொல்லாலே சொன்னவுப தேசத்தைத் தோமறுநற் கொற்றேச வின்னபடி யென்றிலக்கி டே. 86 ஏதக் கடுவுடையோ ரின்னமுதீ வாரெனினு மோதத் தலைமாலை யோரெனினும் - பூதரிவ ரோதத் தகுமோவிங் கோர்வாரார் கொற்றேச ராதலெலாஞ் சித்திரமே யாம். 87 ஆமெனினு நற்பவனா யான்றோர் பவந்துடைப்பன் காமனெரி கோடிட்டிக் காரனுமே - யாமெனினுஞ் சீரார் சமதிருட்டித் தேவனிவன் கொற்றேசற் சேரா ரறிவாரோ செப்பு. 88 செப்பேம் பவன்சருவன் சீரார் பசுபதியா மொப்பா ருருத்திரனோ டுக்கிரனும் - மெய்ப்பீம னீசானன் மாதேவ னென்றருள்வா ளீசனுடைத் தேசார்ந்த நாமமதின் சீர். 89 சீரார் கழனித் திருவே திருநெல்லைக் காரா வமுதே யருளுருவே - தேராதார்க் க்ல்லேயா மாதியற்ஞ் சோதியனை யாழ்நெஞ்சே யல்லும் பகலும் மறி. 90 அறிவுருவாங் கொற்றேச னானபினர் நோக்கிச் செறியுலகஞ் சித்துருவாய்ச் சேர்ந்தே - பொறியாறு மோட லொழிந்ததுவே யோர்சாந்தி வந்ததுவே கேடதற வுற்றனமிங் கே. 91 கேதாரா போற்றியொரு கேடில்லா விஸ்வேசா தாதாவே போற்றி சயபோற்றி - யாதியிலாய் போற்றி யசியீசனே போற்றிநெலை நாயகனே போற்றியுன தாமரையின் போது. 92 போதா ரயனுடனே புள்ளோனுங் காணாத தாதாவே சீர்கழனித் தண்ணிறையே - நீதாதா நாயேற் குனைமறவா நல்வரத்தை நல்குதியேற் பேயேற்கு முண்டோ பிணி. 93 பிணியார்ந்து மங்கும் பிணவுடலைப் பேயே னணியா மெனக்கருதி யார்ந்தே - துணியாமற் றோயாம னின்னுருவைத் தோத்திரமுஞ் செய்யாம லோயாமற் றுன்புற்றே னோ. 94 ஓகோ திருநெல்லைக் கொப்பான நாயகரே ஆகாயம் போலகண்ட மானவரே - தேகோகம் புந்தியினைத் தீர்த்தே புலையனையு மாட்கொளுவீர் மந்திரவாட் கொள்பவரே மா. 94 மாவும் வளர்தெங்கு மாகத்தின் சோலையாங் கோவிற் பெருமூரோய் கொற்றேச - கூவியிடுங் கோகிலமே போலமிகக் கூடிதனை விட்டொழித்திங் காகிலனே நின்றா ளனி. 96 அணியும் பணிபோற்றி யம்பலவா போற்றி பணியு மடியவர்தம் பாதந் - துணிவாக நிற்பாதி கொண்டதிரு நெல்லை வயற்கேகு நற்பாதம் போற்றுவனே நான். 97 நானேநீ யாகிப்பன் னீயேபின் னானாகி யூனே முதலாய தோட்டிமிக - வானேவா னானவா போலரிய வையாவெம் வாளீச வானோமே நாமிருவோ ரா. 98 ஆச்சரியங் கண்டோமே யம்மா வசியீசன் பேச்சிறக்கப் பண்ணுவனே பேணினரைச் - தூர்ச்சடிதன் போற்றும் பதந்தனையே போற்று. 99 போற்றிநங் கொற்றேசற் போற்றுவார் பொற்கழல்கள் போற்றிநம் வீரேசன் பொன்மலர்கள் - போற்றிமிகப் போற்றி கழனிநகர்ப்ப பொன்னடியார் பொற்றாள்கள் போற்ரிகரிப் பாதமரைப் பூ. 100 திருக்கொற்றவாளீசரந்தாதி முற்றிற்று.

Related Content

ஸ்ரீசுப்பைய சுவாமிகளின் திருக்கொற்றவாளீசரந்தாதி