கலிவிருத்தம் வேத மாகமம் வேறும் பலப்பல வோதி நாளு முளந்தடு மாறன்மின் சோதி காணிருள் போலத் தொலைந்திடுந் தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1 புல்ல ராயினும் போதக ராயினுஞ் சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு நல்ல வாகு நவையென் றகற்றிய செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2 நாக்கி னானு நயனங்க ளானுமிவ் வாக்கை யானு மருஞ்செவி யானுநம் மூக்கி னானு முயங்கிய தீவினை தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3 சாந்தி ராயண மாதி தவத்தினான் வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப் போந்த பாகத மேனும் பொருக்கெனத் தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4 வில்லி தென்ன விளங்குந் திருநுதல் வல்லி பங்கன் மலரடி காணிய கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ் செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5 தீய நாளொடு கோளின் செயிர்தவு நோய கன்றிடு நூறெனக் கூறிய வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6 வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7 முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் வந்த தீவினை மாற்றுவ னாதலாற் சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8 நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் நீச ரேயென் றியம்புறு நின்றுப தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9 எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர் வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன் றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசி£யவிருத்தம் இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட னெனினும் பொல்லாப் பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப் பகரா நின்ற மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென் றொருமுறைதான் மொழியி லன்னோன் செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள்குல தெய்வ மென்ப. 11 - திருச்சிற்றம்பலம் -
- சிவநாம மகிமை முற்றிற்று -