logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயர் இயற்றிய 

(அத்தியாயம் 1 - 13)

 

Seekazhi Thalapuranam - Part-I 
of Arunachala Kavirayar



Acknowledgements: 
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this literary work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. 
We thank the following persons in the preparation and proof-reading of the etext: 
R. Aravind, Senthan Swaminathan, S. Karthikeyan,
Nalini Karthikeyan, S. Mithra, R. Navaneethakrishnan, V. Ramasami,
R. Alagaraj, R. Rajasankar, K. Ravindran, Santhosh Kumar Chandrasekaran,
V.S. Kannan, V. Devarajan, S. Govindarajan and Sriram Sundaresan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 

 

© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
https://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அருணாசலக் கவிராயர் இயற்றிய 
சீகாழித் தலபுராணம் / பாகம் 1 (அத்தியாயம் 1-13)


Source: 

திருச்சிற்றம்பலம்
அருணாசலக்கவிராயரருளிய "சீகாழித்தலபுராணம்" 

திருக்கைலாச பரம்பரை நிகமாகம சித்தாந்த
சைவ சமயாசாரியபீடமாய் விளங்காநின்ற
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்
கட்டளையிட்டருளியபடிக்கும், ம-ள-ள-ஸ்ரீ சீகாழி சபாநாயக 
முதலியாரவர்கள் விருப்பத்தின்படிக்கும்,
ஷயூர்நேடிவ் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சீகாழி சிதம்பரபிள்ளையாலும்,
சிதம்பரம் சபாபதிதேசிகர் குமாரர் சோமசுந்தரதேசிகராலும்,

சென்னை: ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

விய ளூ மாசி மீ
-----------------------------------------------------------



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சீகாழி

அருணாசலக்கவிராயர் சரித்திரம்


சோழமண்டலத்திலே தில்லையாடியிலே, கார்காத்தவேளாண்மை மரபிலே, நல்லதம்பிபிள்ளையும், கற்பிலேசிறந்த அவரது மனைவி வள்ளியம்மாளும், புரிந்த அரியதவப்பேற்றினாலே, அருணாசலக்கவிராயரென்பவர், அவதரித்து, உரியபருவத்தே கல்வி பயின்று வருங்காலத்தில் இவரது 12-வது வயதில், தாய்தந்தையர்கள் தேக வியோகமடைந்தமையால் கல்விப்பயிற்சிக்கு இடையூறாயினும் ஊழ்வலிதுணைக்காரணமாய் சமீபமாயுள்ள, திருக்கைலாயபரம்பரை நிகாகம சித்தாந்த சைவாசாரிய பீடமாய் விளங்காநின்ற தருமபுரவாதீனத்தைச் சார்ந்து அப்போதைய பண்டாரச்சந்நிதிகளால், அபிமானிக்கப்பெற்று அவ்வாதீனத்துப் பிரபலவித்துவானாகிய அம்பலவாணக்கவிராயரிடத்தே 25-வது வயதுவரையில் உபயபாஷாப்பிரணீதங்களாகிய, பொதுநூல்களையும், சைவசமய நூல்களையும் ஐயந் திரிபறக் கற்றுணர்ந்து வருங்காலத்து அவ் வாதீனத்துப் பண்டாரச்சந்நிதிகள் இவரது புத்திநுட்பத்தையும், கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்து விளங்கும் பரிபக்குவத்தையும் உணர்ந்து, நிருவாணதீக்ஷைசெய்து, திருவுந்தியார்முதல் சங்கற்பநிராகரணமீறாக சித்தாந்தநூல்கள் பதினான்கையும் உரையுடனே விதிப்படி உபதேசிக்க உணர்ந்து அவற்றின் மெய்பொருளாவார்; சிவபெருமானே என்றும் தெள்ளிதிற்றுணிந்துகொண்டார். பின்பு திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த திருக்குறளில், அறத்துப்பாலில் முதற்கண் இல்லறமும், பின்னர்துறவறமும் கூறியிருத்தலால், தாமும்வாறே இல்லறத்தை அடையவேண்டுமென்னும் விருப்பை பண்டாரச்சந்நிதிகளுக்கு விண்ணப்பஞ்செய்து அநுமதிபெற்றுத் தமது ஜனனபூமியாகிய தில்லையாடியை அடைந்து 30-வது வயதில் அபிஷேகக்கட்டளைக்கருப்பூரில் குலமுறைக்கேற்ற ஒருகன்னிகையை விதிப்படிவிவாகஞ்செய்தப்புண்ணியவதியோடு தில்லையாடியிலிருந்தில்லறத்தை நடத்துதற்குத் துணைக்காரணமாகிய பொருளை பிறவுயிர்களுக்குக் கேடுபயவாத நன்னெறியிலீட்டவும், நித்திய கருமத்துக்கும், பொருளீட்டுதலுக்கும், உரிய காலமல்லாக்காலமெல்லாம் அவமாகாது புண்ணிய நூராய்ச்சிசெய்யவுங்கருதி, காசுக்கடைத்தொழிலைக் கைக்கொண்டு இல்வாழ்வாயினார்.

 

வாழுநாளில் தமது வியாபாரநிமித்தம் புதுவைக்கேகுழி சீகாழிக்கோயில் கட்டளை விசாரணைக்கர்த்தரும் முன்னர்த்தம்மோடு பயின்றவருமாகிய சிதம்பர நாதமுனிவரை ஷையூர் தெற்குவீதிக் கட்டளைமடத்திற்கண்டிருவரு நெடுநாட் பிரிந்த பிரிவுநீங்கப்பரஸ்பரம்தழுவியத்தியந்த விநயத்தோடுசம்பாஷிக்குங்கால் முனிவர் சீகாழிக்குப்பள்ளுப்பாடுவதற்குப்பீடிகை இட்ட கட்டளை முடிக்கப் பிரமேசர் கைங்கரியத்தால் தனக்கவகாசம் இன்மையையுங் கூறி இவர்கையிற் கொடுக்க அன்று இரவிலேயே, சொற்சுவை பொருட்சுவையமையப் பள்ளை முடித்து, அவசியம்தாம் புதுவைக்கேகும்பயணச்செய்தியைமுனிவரிடங்கூறாது அவரது அணுக்கத்தொண்டினர்பாற் கூறிக் காழிப்பள்ளைக் கொடுத்துவிட்டுப் புதுவைக்கேகிச் சிலகாலம் அங்கு வசித்தார்.

 

சிதம்பரநாதமுனிவர் வைகறையிற் றமது தொண்டரால் காழிப்பள்ளின் முடிவையும் கவிராயர் பயணச்செய்தியையும், கண்டும், கேட்டும், களித்தும், சலித்தும், இவரை எவ்வாற்றானுமிங்ஙனம் இருத்தவேண்டுமென்னுங் கருத்தால் இவருக்கென்றே ஒருகிருகம் வடக்குவீதியிற்கட்டுவித்து அவரதுகுடும்பத்தைக் கவிராயர்தருவிக்கிறதுபோற் சீகாழிக்குத்தான் வருவித்து, புதுவைக்குச்சென்ற கவிராயர் இங்ஙனம் விரைவில் வருவாரென அவர்களுக்குத் திடவாக்களித்துத் தம்மாற்கட்டவித்த புதுக்கிருகத்திற் சுபதினத்திற் பிரவேசம்பண்ணுவித்தார்.

 

கவிராயர் புதுவை நீங்கி சீகாழிக்கு சிதம்பரநாதமுனிவரிடம் வந்தபோது அவர் சற்று சலித்துப் பின்னர் கவிராயரும் முனிவரும் உலாப்போவதுபோற் சென்று இவர் குடும்பத்தார் வசிக்கின்ற புதுக்கிருகத்திற் புகுந்தார்கள்.

 

கவிராயர் தமது மனைவி முதலாயினோர் அங்கு இருக்கக்கண்டு வியப்புற்று அவர்களால் நடந்த எல்லாவரலாற்றையும், குருலிங்கசங்கம க்ஷேத்திரமாயும், திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவவதாரத் தலமாயும், விளங்கும் சீகாழித் தலத்தில் வசிக்க ஆகூழிருந்தமையையு முணர்ந் தம்முனிவர்வேண்டுகோளுக்குஇசைந்து அவ்விடத்திலேயே வசித்திருந்தார். ஆதலால், இவர் அன்றுதொட்டு சீகாழி அருணாசலக்கவிராயரெனப் பேர்பெற்றனர்.

 

இவரிடத்தே ஸ்ரீமத்கம்பராமாயணங்கற்று வல்லவராகிய சட்டநாதபுரம் கோதண்டராமையர் வேங்கிடராமையர், என்னும் சங்கீதவித்வான்கள் வேண்டு கோளின்படி கீர்த்தனாரூபமாக ஷை இராமாயணத்தையும், அசோமுகிநாடகம், அநுமார்பிள்ளைத்தமிழ், காழியந்தாததி, காழிக்கலம்பகம், காழிக்கோவை, தியாகே சர்வண்ணம், சம்பந்தசுவாமிகள் பிள்ளைத்தமிழ், முதலிய பிரபந்தங்களையும் இயற்றினார்; பின்னர் சிதம்பரநாதமுனிவர் வேண்டுகோளின்படி வடமொழியினின்று தென்மொழியில் சீகாழித்தலபுராணத்தை 31 , அத்தியாயமாக இயற்றி குருலிங்கசங்கம சந்நிதியில் எழுந்தருளப்பண்ணி விதிப்படி யருச்சித்து நமஸ்கரித்து இருந்துகொண்டு அங்குவந்திருக்கும் உபயபாஷாப் புரோக்த சைவசித்தாந்த சாஸ்திரிகள் முதலாயினோரும் சிதம்பரநாதமுனிவரும் கேட்டு மகிழ வாசித்துப் பொருள்கூறி அரங்கேற்றினார்.

 

இவர் சாலிவாகனசகாப்தம் 1634-ல் அவதரித்து 1701-ல் சீகாழியில், சிவபெருமானுடைய திருவடியை யடைந்தார்.

சம்பந்ததீர்த்தசரணாயநம:

திருச்சிற்றம்பலம்.


உள்ளடக்கம் - பாகம் 1 (அத்தியாயம் 1- 13) 

1.    கடவுள் வாழ்த்து    31 (1-31)
2.    திருநாட்டுச்சிறப்பு    60 (32-91)
3.    திருநகரச்சிறப்பு    90 (92-181)
4.    புராண வரலாறு    46    (182-227)
5.    1-ஆவது தலவிசிட்டவத்தியாயம்    48 (228-275)
6.    2-ஆவது, தோணிபுரமானவத்தியாயம்.    41 (276-316)
7.    3 -ஆவது. பிரமபுரமானவத்தியாயம்.    50 (317-366)
8.    4-ஆவது. திருவிழாவத்தியாயம்    81 (367-447)
9.    5-ஆவது. பூதவிமோசனமானவத்தியாயம்.    45 (448-492)
10.    6-ஆவது. ஸ்ரீகாளிபுரமானவத்தியாயம்.    61 (492-553)
11.    7 -ஆவது. வெங்குருவானவத்தியாயம்.    39 (554-592)
12.    8-ஆவது. காகவிமோசனமானவத்தியாயம்.    44 (593-636)
13.    9-ஆவது புகலியானவத்தியாயம்.    39 (637-675)
14.    10 - ஆவது. சிரபுரமானவத்தியாயம்.    24 (676-699)
15.    11-ஆவது. குருத்துரோகவிமோசனமானவத்தியாயம்.    50 (700-749)
16.    12-ஆவது. சண்பையானவத்தியாயம்.    34 (750-783)
17.    13 - ஆவது, கொச்சையானவத்தியாயம்.    37 (784 -821 )



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீசம்பந்தகுரவேநம:

சீகாழித்தலபுராணம்

 

விநாயகர் காப்பு

 

பொன்னாரிதழிமதுமாலைப்புனிதன்மருமமிசைமேவி
மின்னாருமையாணுதற்பிறையின்வேணிப்பிறையைச்சேர்த்திலகும்
பன்னாணிறைந்தமதியமெனப்பார்த்துமகிழ்ந்துமுகமலரும்
தென்னார்காழியாண்டபிள்ளைசெந்தாமரைத்தாளினைப்பணிவாம்.

 

வேறு

 

நீண்டவடவரைமீதுநிறைகுணத்தோன்சொல்பனுவல்
பூண்டதனிமருப்பாரப்புனைந்தெழுதிநினைந்தவெலாம்
ஈண்டவரும்பழவடியார்க்கின்பமுடன்காழி
ஆண்டகணபதிதுணைத்தாளம்புயங்கள்வணங்குவாம்.

 

1. கடவுள் வாழ்த்து.(1-31)

1    பிரமேசர்

 

பூத்தபேரொளியாயுயிர்க்குயிராயகண்டிதமாய்நிறைவாய்நீங்காப்
பேர்பூத்தகுணங்குறிகளிகந்தபழமறைக்கொழுந்தாய்ப்பெருமைசான்ற
பார்பூத்தபரையினொடுகலந்துகுருவாதிமும்மைப்படிவமாகிச்
சீர்பூத்தகாழிநகரமர்ந்தபிரமேசனையாஞ்சிந்தைசெய்வாம்.    1

 

2    திருநிலைநாயகி

 

ஒருநிலையேயுலகனைத்தும்பொருணிலைசேர்வெண்டிருநீறுயுர்ந்துவேதம்
தருநிலையால்வளர்ந்தோங்கவிரங்குமருமறைக்குகுழவிதன்பாலன்பால்
பெருநிலைசேர்லைக்கண்ணுஞ்சிலைக்கண்ணுமிரங்கியவெம்பிராட்டியன்பந்
கருநிலைதீர்த்தருள்காழித்திருநிலைநாயகிதுணைத்தாள்கருத்துள்வைப்பாம்    2

 

3    பெரியநாயகர்

 

அரியநாயகனாரணனாயகனணங்கராமுடிவாய்ந்த
கரியநாயகன்காணருநாயகன்கவுணியமுனிகாட்டத்
தெரியுநாயகன்றோணிமேலோங்குயர்தெய்வநாயகன்காழிப்
பெரியநாயகன்கைமணிநூபுரம்பிறங்குசேவடிபோற்றி    3

 

4    பெரியநாயகி

 

அகலினாயகிமணியெனச்சுடரையுய்த்ததற்கருமறைக்காட்டின்
இகலினாயகிலாண்டால்கியமுதலிடத்திருந்தொருகோடி
பகலினாயகியாதியைப்படைத்துநீள்பழமறைக்கொழுந்தாய்
புகலினாயகிபெரியநாயகிமலர்ப்பொன்னடித்துணைபோற்றி    4

 

5    சட்டைநாதர்

 

துங்கமாமணித்தூணில்வந்திரணியன்றோள்வலிதனைவாங்கும்
சிங்கவேற்றுரியரைக்கசைத்துலகெலாந்தேர்ந்தளந்தவன்மேனி
அங்கம்யாவுமோர்கதையதாய்க்கொண்டதளங்கியாப்புனைகாழிச்
சங்கவார்குழைச்சட்டைநாயகன்றுணைத்தாமரைச்சரண்போற்றி    5
 

6    ஆபத்துக்காத்த பிள்ளையார்

 

பூத்தபிள்ளையனத்தன்புகழ்நிலாக்
கோத்தபிள்ளைமதியணிகோமகன்
மூத்தபிள்ளையைமுன்னினராபத்துக்
காத்தபிள்ளையைக்கைதொழுதேத்துவாம்    6

 

7    குமாரக்கடவுள்

 

அலமடையுங்கொடுஞ்சூரன்குலமடியப்புள்ளினங்களமரைவேட்ட
பலமடையப்பெரும்பூமிபலமடையக்கரும்பகட்டிற்படருங்கூற்றன்
வலமடையுங்கரம்வருந்தாநலமடையப்பிரமாதிவானோர்தங்கள்
தலமடையத்தனதுகரதலமடையும்வேலெறிந்தோன்சரணம்போற்றி    7

 

8    திருநந்திதேவர்

 

ஆதியிடையீறில்லானருளேகண்ணாகநின்றோனமலன்பாத
மீதிலிறைஞ்சிடநணுகும்வாசவனான்முகனெடியோன்மிடைந்தபோது
போதிர்விலகுதிரெனலாற்றருமலரம்புயந்துளபம்பொதிந்ததெய்வத்
தீதின்மணம்படைத்தமணிப்பிரம்புடையதிருநந்திதிருத்தாள்போற்றி    8

 

9    கலைமகள்

 

கருமழைத்தண்டுளிபொழியுங்காலமதியொளியுமொளிகாலுமுத்தின்
பருமணிமாலையும்பயவரதமும்புத்தகமும்வடப்பளிங்குந்தாங்கி
முருகுயிர்க்குநறுந்தவளமுளரியாலயத்திருந்தமுதுபிராட்டி
இருபதமுங்கடைப்பிடித்தேனெப்பதம்வாராதபதமெனக்குமன்னோ    9

 

10    திருஞானசம்பந்தசுவாமிகள்

 

குழுவேறச்சமணமூகரழலேறவிடுத்ததனைக்கூடற்கோமான்
வழுவேறுமுடலேறவுடன்முரணுமனமுரணுமாற்றியன்னார்
கழுவேறவெண்ணீறுமைந்தெழுத்தும்விரித்துலகைக்கதியிலேற்றி
மழுவேறுங்கரத்தான்றனருளேறுங்கவுணியர்கோன்மலர்த்தாள்போற்றி    10

 

11    திருநாவுக்கரசுசுவாமிகள்

 

விடற்கரியகொடும்பாசத்தொடரறுத்தைம்புலனாயவேழஞ்சீறி
அடற்கரியன்மும்மதமுமமணருடைத்துன்மதமுமழியநூறித்
தடக்கடலைக்கன்மிதவையாலுழக்கிச்சிவஞானதானம்வீசும்
கடக்களிறென்றுலகேத்தவருநாவுக்கரசர்பதங்கருதிவாழ்வாய்    11

 

12    சுந்தரமூர்த்திசுவாமிகள்

 

இருக்காதிமறைகாணாவிணைத்தாளைமறலிமூடியிடறுந்தாளைத்
திருக்கேள்வன்விழிபுனைந்தசெழுந்தாளையரக்கன்முடிதிரித்ததாளை
ஒருக்காலுக்கிருக்காலாய்ப்பரவைமனையகந்தேடியுறுமாசெய்தோன்
மருட்தாழாதலர்ந்ததுணைமலர்த்தாளையகத்தாழவணக்கஞ்செய்வாம்    12

 

13    மாணிக்கவாசகசுவாமிகள்

 

விலங்குமனத்தினர்கடுக்கையுடுக்கையர்கார்மயிற்பீலிவிளங்குகையர்
புலம்புமொழிக்கட்டறுத்துநிறைதிருவாசகவமுதப்புணரிதேக்கி
இலங்குமதித்திருக்குலத்தான்பிறப்பறுத்துமணிமன்றத்திறைதாள்சேர்ந்தோர்
அலங்குசினைப்பொழில்புடைசூழ்வாதவூரடிகளடியகத்துள்வைப்பாம்    13
 

14    சண்டேசுரநாயனார்

 

எந்தைதாள்முறுவாரிருவினைத்தாளறுக்கவெனா
முந்தையாரணம்புகன்றமுதுக்குறைவானதுபொதிந்த
சிந்தைதானரனடிக்கேசெறிவித்துச்சினந்துவரும்
தந்தைதாளோரிரண்டுந்தடிந்தவன்றுடலைக்கொள்வாம்    14
 

15    அறுபத்துமூவர்

 

அத்திமான்கலைமானைந்தருநிழன்மானயில்விழிக்கஞ்சனமமைத்த
புத்திமானென்றேகடுவடையாளம்பொறித்தகந்தரமுளபெம்மான்
சத்திமான்காழித்தடவரையெம்மான்றன்னடிநீழலிற்சேரும்
முத்திமான்றனைச்சேரோரறுபத்துமூவர்தாண்முடிமிசைவைப்பாம்    15
 

16    பட்டினத்துப்பிள்ளை

 

துறவாதமும்மைவினைத்தொடர்பரிந்துமையல்விழிக்
குறவாயபொருணீக்கியுழுவலன்பிற்கழுமலர்த்தார்க்
கிறவாமும்மணிமாலையியற்றியருள்வழிநின்று
பிறழாதபட்டினத்துப்பிள்ளையிணையடிபோற்றி.    16
 

17    அட்டவைரவர்

 

துண்டமதிபுனைந்தகல்விண்டோய்சிகரத்தினிதமர்ந்த
அண்டர்பிராங்கணத்தலைமையசிதரங்க‌ன்காபாலி
சண்டனுருருக்குரோதன்சங்கரன்பீடணன்சீர்
கண்டருளுன்மத்தனிவர்கழற்கமலம்பரவுதுமே.    17
 

18    காலவித்தரசர்

 

சுருதிவழியுலகனைத்துந்தனிக்கவிகைநிழற்றிமுதுதோணியர்க்கு
மிருதிபுகழ்கயிலைவரைச்சிகரமுங்கோபுரமுமெயில்விதமுமன்பால்
கருதியெனைப்பலபணியும்புரிந்துபிறவாநெறியைக்காணிகொண்ட
பருதிகுலத்தவதரித்தகாலவித்துமகிபதிதாள்பணிந்துவாழ்வோம்.    18
 

19    குணதலைப்பாடியுடையார்

 

கலைப்பாடியூர்ந்தாற்போற்கண்டுணர்ந்துகாழிநகர்
மலைப்பாடிவளவென்னாமாணிதியாலமைத்துவினை
அலைப்பாடியுழலாமேயமலனடியடைந்தகுண
தலைப்பாடியுடையாரென்றனையாளவுடையாரே.    19
 

20    பரிசாரத்தொண்டர்கள்

 

தாயினுமன்னுயிர்க்கினியசண்பைன்நகர்க்காவலன்வாழ்
கோயின்மணிமுன்றிறொறுங்குயின்றதுராலகற்றுமுது
வாயினரையீறாகவழுவில்பரிசாரகணம்
ஆயினசீர்த்தொண்டர்துணையடியெமதுமுடிவைப்போம்.    20
 

21    வாழ்த்து

 

தெண்ணீர்குதட்டும்புயறிங்களின்மூன்றுபெய்க‌
எண்ணீரரசன்றிருக்கோன்முறையேந்தியாள்க‌
பண்ணீரறநீடுகநன்னெறிபல்கவெங்கோன்
வெண்ணீறொடொரைந்தெழுத்தோங்குகமேதினிக்கே.    21
 

22    நூல் செய்ததற்குக் காரணம்

 

பண்டேபழிச்சாமையினாற்பவம்பற்றினேமி
னுண்டேயெனவாழ்த்தினுமேற்பவமுற்றிடேமால்
வண்டேய்பொழில்வேணுபுரத்தானையிம்மாண்பில்யாக்கை
கொண்டேதுதிப்பாமிஃதெம்முடைக்கோளதன்றே.    22

 

23    வேறு

 

நாதனாலருணந்திபாற்றெளிசனற்குமரன்
வாதராயணற்குரைப்பமற்றவன்புகல்வழியே
சூதனோர்ந்ததைநைமிசாரணியம்வாழ்துகடீர்
மாதவர்க்கெலாம்வழங்கியபுராணமூவாறில்    23

 

24    

 

முறைதரும்பவுடிகத்துமுன்கேத்திரகாண்டத்

தறைதருந்தனியாதிபாகத்தினுங்காந்தத்
திறைதரும்பரிச்சேதமூன்றாவதனிடத்தும்
பொறைதருந்திருப்புகலிமான்மியமிதுபுகலின்    24
 

25  

 இனையகாதையீண்டியம்பவும்வல்லனோதருமை

முனைவனன்புசால்சிதம்பரநாதமாமுனிவன்
வனையுமாரியமொழிவழியருந்தமிழ்வகையால்
எனைவிளம்புகென்றோதலுமிதுதுணிந்தனென்யான்    25
 

26    அவையடக்கம்

 

விண்ணலங்கொள்காரெழிலிநீர்விரிதிரையுடுத்த
மண்ணலங்கொளமஞ்சமமாயினவல்லோர்
எண்ணலங்கொள்பேரவைபுகுந்தினியவாய்க்காழி
அண்ணலஞ்செவிக்காவனவளியனேன்புன்சொல்    26

 

27    வேறு

 

பொருமாலேற்றுக்கொடியுயர்த்தபுகலிபெருமான்புகழையளந்
தொருநான்மறையும்வரம்பறியாதுழலவேயுமுரைப்பெனெனத்
தருமாதரவால்வினையேனுஞ்சமைத்தவாறுவான்கிளைத்து
வருநாண்மதியைவருகென்றுமகவொன்றழைத்தவாறேயால்    27

 

28 

 

   குறுமையிலையேனெடுமையதன்குணமாரறிவாரெனதுமொழிச்
சிறுமையிலேயேன்முதுமைமொழித்திறமெவ்வாறுபுலப்படுங்கார்
உறுமையிழைத்தலிருட்பிழப்பாருறையிங்கிலயேலுரகன்முடிப்
பொறுமைநிலத்துக்கதிர்த்திங்கட்புத்தேட்பொலிவும்பொலிவின்றே    28

 

29

 

    பொற்காலகத்தைம்பேரமளிப்பொறிவாய்விளக்கிட்டாயிழையார்
நற்கால்வருடமகிழ்வார்முனடுநாளிருளின்மின்மினியிட்
டொற்காவரிபுற்குடம்பையுட்பேட்டுடனேமகிழுங்குரீஇக்கணம்போல்
சொற்காவலர்செந்தமிழியன்முன்சிறியேன்புகலத்துணிந்தேனே    29

 

30    சிறப்புபாயிரம் -- சிதம்பரநாதமுனிவரியற்றியது

 

மாத்தவருஞ்சிலையாகமணிநாணும்பணியாகவான்காத்தின்பம்
பூத்தவருந்தகைவாழுஞ்சீகாழிமான்மியத்தைப்புலமைசான்ற
நாத்தவரும்வியந்ததமிழ்புனைந்தருணாசலக்கவிஞனாளுமன்பர்
ஏத்தவருங்குருலிங்கசங்கமசந்நிதியிலரங்கேற்றினானே    30

 

31

 

    செவியுணருந்தமிழ்க்கடல்வாயநாமணிமந்தரநிறுவித்தெளிசாலன்பின்
அவிரொளியமண்வடந்தொட்டான்றமைந்ததொல்கேள்வியறிவாலீர்த்துப்
புவிபுகழுமாலருணாசலமதித்துச்சீகாழிப்புராணமென்னும்
கவியமுதந்தனையளித்தான்புலவரெலாமுண்டுமனங்களிக்கமாதோ. 31

 

(கடவுள் வாழ்த்து முற்றிற்று. 
ஆக திருவிருத்தம். 31)

 

 

2. திருநாட்டுச்சிறப்பு. (32- 91 )

 

32    பொன்னீரிமையப்பொலன்குவட்டிற்புவியையிழைத்துக்கலியிருடீர்த்
தின்னீர்முளரிப்பண்ணவனீன்றிருள்வாய்ப்பாந்தண்முடிவளர்த்தி
முன்னீருடுத்தநிலமகளைமுறையான்மணந்தசெம்பியர்வாழ்
சொன்னீர்வளமைபழுத்ததமிழ்ச்சோணாட்டணியீண்டுரைசெய்வாம்.    1

 

33    வேறு

 

முடங்கல்வாயகலமேந்தினானுருவெனமுதுவான்
இடங்கலந்துசென்றிமிழ்திரைமுகட்டுநீராழி
அடங்கமேய்ந்துபாட்டளிமுரலல்லியங்கமலத்
தடங்கணானுருக்கொண்டுமீண்டனசலதரங்கள்.    2

 

34    விழையுமார்கலியிறைமகனீண்டுமெய்யன்பு
தழையுமீயுயர்சையமால்வரைத்தடங்குவட்டில்
குழையினீண்டகட்குலமனைக்கிழத்தியைக்கூவும்
உழையர்போன்மெனவுற்றனமழைக்குலமொருங்கே.    3

 

35    வகுத்தகார்மகண்மறிதிரையாடினண்மலர்த்தா
துகுத்தவார்குழல்விதிர்த்தெனவுதறிவள்ளுகிரான்
மிகுத்துலாமயிர்க்காறொறுமுளர்ந்தெனவிரிந்து
பகுத்தவால்வகிர்காட்டினமின்னலின்பரப்பே.    4

 

36    அண்ணன்மால்வரையலர்முலைக்கட்டிரையாடை
வண்ணமாகவெள்ளருவிவேய்ந்துளநிலமகளைக்
கண்ணழன்றிருட்களிறுகைத்தைங்கணைக்காளை
தண்ணலங்கணைபெய்வதொத்தனமழைத்தாரை.    5

 

37    மண்டிலம்படுமணிதழீஇநித்திலம்வரன்றித்
திண்டிறற்கரிமருப்பெறிந்தகிற்றுணிசிதறிக்
கண்டிரண்டவேயடர்வரைவளனெலாங்கவர்ந்து
கொண்டிழிந்தனகறங்குநீர்க்கோதைவெள்ளருவி.    6

 

38    அறனெலாமிழைத்துலகருளன்னையையடல்சேர்
விறல்கெழுங்குவட்டிமயவேந்தளித்தெனவிண்கீண்
டுறநிவந்தமால்வரைதருசெவிலிபோன்றொழுகிப்
புறவமேயதுநளிர்புனற்புண்ணியப்பொன்னி.    7

 

39    குயின்றமூரலுண்டகட்டிருபுடைபுறங்கோப்பு
அயின்றமாக்களிற்காந்தள்கைம்மறிப்பவாண்டொருவி
எயின்குழாங்களாறலைத்ததாறலைத்ததென்றிரையப்
பயின்றபல்பொருண்மடுத்தகன்பாலைவிட்டதுவே.    8

 

40    அள்ளற்பூம்புனல்வெளியபாலொளியினாலரனாய்
உள்ளத்தாழியுள்வெண்ணெய்வாய்மடுத்துமாலுருவாய்
வள்ளத்தாமரையொடுவிராய்மலரயனுருவாய்
வெள்ளத்தாழ்புனல்வியன்பணைமருதமேவியதே.    9

 

41    பாட்டகன்றிரைத்தலைமகன்குலமனைப்பன்னி
வேட்டகம்பெறமருதமான்விரியிதழ்க்கமல
வீட்டமெல்லிலைத்துளியினீராஞ்சனமேந்திக்
காட்டவெண்மணற்புன்னையங்கானலெய்தியதே.    10

 

42    முரண்டடஞ்சினைப்புன்னைமுத்திறைத்துமொய்த்தலர்ந்த
திரண்டகாலெனநெய்தலின்விழிகளாற்றெரித்துப்
புரண்டவெண்டிரைக்கைகொடுபுல்லியப்புணரி
அரண்டனிற்புகுந்தகலிடம்பொலிந்ததையன்றே.    11

 

43    வேறு

 

அள்ளற்றண்புனல்பாய்மதகாத்தொலி
கொள்ளப்பண்முழவொத்திரைகொள்கைதான்
மள்ளமாக்களிரட்டுமருதநீள்
வெள்ளநீர்ப்பறைவீங்கொலிமாய்க்குமே.    12

 

44    நானமும்புழுகுந்நறுஞ்சந்தமும்
தானவாரணக்கோடுந்தலைசிறந்
தூனமின்மணியும்பொனுமுய்த்தலால்
மானவாணிகமாக்களுமானுமே.    13

 

45    அணையுலாந்திரையாற்றிலெலாமடுத்
துணையெலாமலர்ச்சோலையெலாமகன்
றிணையெலாநறுஞ்சேயிதழ்க்காவியம்
பணையெலாஞ்சென்றுபாய்ந்ததுவெள்ளமே.    14
 

 

46    ஏறுபைம்புயலேழுங்கலங்கிய
ஆறுதானுங்கலங்கியருட்புனல்
ஊறுகங்கையுறுங்குடிமன்னர்சொல்
தேறுநீரிற்றெளிந்ததுதண்புனல்.    15

 

47    அயர்விலாவொலியொன்றெழுத்தாயஃ
துயிருறுப்புயிர்மெய்யெனவோதல்போல்
இயல்குளங்கிடங்கேரிதண்காலெனப்
பயிலுநாமம்படைத்தனவாரியே.    16

 

48    உழுநரோதையுமொள்விசிவார்கிணை
தெழிநரோதையுமிந்திரதெய்வதம்
தொழுநரோதையுந்தூநறைவாய்மடுத்
தெழுநரோதையுமேழ்களலோதையே.    17

 

49    கயத்துவாய்ப்பகடோச்சியகாளையர்
நயத்தவேர்செலநல்குமிசைத்தமிழ்
பயக்குமேகக்குழாத்திடைப்பண்ணமைத்
தியக்கர்பாடுமிசையமுதொக்குமே.    18

 

50    இலங்குமள்ளர்பிறையிரும்பின்னிழல்
மலங்குகொல்லெனமாதரலமரக்
கலங்கிநோக்கினர்கண்ணிழல்சேலென
விலங்குகாளையர்வீழ்ந்துநகுபவே.    19

 

51    ஏய்க்கும்பன்மொழியீட்டத்தைப்பேர்முத
லாய்ப்பபகுத்தவையாக்குநர்போல்வயல்
வாய்க்குழீஇயபன்னாறுகள்வாங்கினர்
போய்க்கரும்புலத்தூன்றுவர்பொற்பவே.    20

 

52    பெருமனைக்கண்வளர்ந்தோர்பெருந்தகை
உறுமனைக்கணின்றோங்கியமாதரின்
மறுபுலத்திடைமன்னியநாறெலாம்
சிறுபசுங்கிளிபோனிறஞ்செய்தவே.    21

 

53    கோலிநாட்டமுங்கொம்மைவதனமும்
ஏலுமாதரையிண்டையுநீலமும்
போலிகாட்டினவென்னப்புலம்புநீர்
வேலிவாய்க்களைவீசியெறிபவே.    22

 

54    உள்ளுகாமமெனக்கருவுற்றுலா
எள்ளுமூடலெனநெறித்தன்னலார்
கள்ளநீத்தகலவியிற்பைங்கதிர்
கொள்ளமல்கியந்நாணிற்குனிந்தவே.    23

 

55    பொருமழுப்படைப்பிஞ்ஞகன்பூங்கழற்
குருகுசிந்தையினோங்கிவளைந்தவை
பெருகுதொண்டர்திறத்தவன்பேரருட்
டிருவிளைந்தெனச்செந்நெல்விளைந்தவே.    24

 

56    எழினல்லாரியலாய்ந்தினகல்வியின்
ஒழுகுமின்சுவையிற்பயனோங்குபு
கெழுதடம்பணைவாய்க்கிளர்செந்நெலின்
குழுவனைத்துங்குயங்கொடுகொய்வரால்.    25

 

57    அரியுநெல்லரிசுமு்மையிட்டாரழல
எரிவிழிப்பகட்டேற்றின்மிதித்துவை
பரியநீத்தநெற்பற்பலகுன்றென
உரியபூமியுவப்பக்குவிப்பரால்.    26

 

58    வழுவகன்றுமதுரித்துமென்பொருள்
தழுவிநின்றசொற்சால்கவியீட்டம்போல்
அழிவிலாநெற்குவையையலங்கொளி
பொழியுமாடத்திற்போந்துதொகுப்பரால்.    27

 

59    தவர்க்கும்வானப்பிரத்தர்க்குந்தன்னிலை
யவர்க்கும்வன்னியர்க்கும்மமுதூட்டலால்
எவர்க்குமின்பந்தனித்தனியேதரும்
சுவர்க்கமென்பதுதொன்மனைமாலையே.    28

 

60    வேறு

 

தளர்வருமன்னஞ்செந்நீர்தனைத்தரத்தந்தவூன்கொண்
டிளகியபொறியாலாவியிசையவெவ்வுலகுமுண்டாய்
அளவறுமின்பந்துய்க்குமளப்பருங்கடவுளாட்சி
வளவநாடிதற்குநேராய்வந்தநாடெந்தநாடே.    29
 

61    முட்டுவவறுமைநோயேமுருக்குவகழையேயாண்டும்
தட்டுவவயலோர்நூலேதாழ்வனநறையைம்பாலே
வெட்டுவவினைக்கண்வாளேமெலிவசிற்றிடையேமாதர்
கட்டுவகணவர்திண்டோள்கடியனநெடியபைங்கர்.    30

 

62    வேர்த்தவெங்களிறுமாயவேலிசெய்சாலியெல்லாம்
வார்த்தகாரெழிலிபெய்துவளர்ப்பதென்வெறுக்கையோடும்
ஆர்த்தநான்மறைவல்லாளரங்கையில்வீழ்ந்துதுன்பம்
தீர்த்தநீரோடும்பொன்னித்தீர்த்தநீர்வளர்க்குமாதோ.    31
 

63    மடையெலாமுத்தஞ்செம்பொன்வரம்பெலாமுத்தம்பூகத்
திடையெலாமுத்தஞ்செந்நெலிடமெலாமுத்தம்வில்வேள்
படையெலாமுத்தஞ்சூல்வெண்பணிலங்களுயிர்த்தகால்வாய்
அடையெலாமுத்தமோடையகமெலாம்வனசமுத்தம்.    32

 

64    பரம்பெலாநாறுசேறுபாலெலாநாரைதேரை
கரம்பெலாமோங்குகோங்குகயமெலாங்கஞ்சமஞ்சம்
வரம்பெலாம்வாழைதாழைவயலெலாங்கன்னல்செந்நெல்
குரம்பெலாநாகம்பூகங்குறையெலாஞ்சாலைசோலை.    33

 

65    உள்ளவாங்குழக்கன்றுன்னியொழுகுபாலுவட்டவாயால்
பள்ளவான்செந்நென்மேய்ந்துபசுங்கதிர்ப்பாலும்பில்க
வெள்ளநீர்திரிந்துதீம்பால்வெள்ளலையாழியென்னப்
புள்ளவாங்கவைக்கான்மேதிபுயலெனத்திரியும்பண்ணை.    34

 

66    பாசிலைக்கமலப்பள்ளிபண்ணளிகுமுறச்செந்நெல்
வீசிளங்கவரிதூங்கமென்பசுந்தவளைபாணி
பேசிடவெடிகொள்வாளைபெருநடங்கவினக்கண்டு
காசினிவேந்தரென்னக்களியனங்களிக்குமோடை.    35

 

67    நிரையிதழ்க்கதவஞ்சாயநிறைமதுப்பிலிற்றும்வெண்டா
மரைமலர்மலர்ந்துவாவிவயின்வபினிருந்ததோற்றம்
குரைபுனற்பொன்னிவைப்பிற்குளிர்புனலாடிக்கொண்ட
புரைமறுக்கழுவுந்திங்கட்பூரணக்கடவுள்போலும்.    36

 

68    பிரிவுநோயகலக்கேள்வர்பெருமணித்தடந்தேர்மீட்சி
உரியதங்கற்பினல்லார்க்குணர்த்துறுபாணரேபோல்
விரிகதிர்மணித்தேர்தோன்றமெல்லிதழ்பொதுளுஞ்செய்ய
வரிமலர்க்கமலந்தோறும்வண்டுபாண்மிழற்றும்பொய்கை.    37

 

69    தோடலர்சினைமுட்டாழைத்துறுமலர்த்துறைவாய்நீர்க்கண்
ஆடல்செய்நிழலையாவிப்பெடையெனவயிர்த்துநோக்க
நீடல்செய்கயல்களோடிநிழலிங்காமையுன்னி
ஊடலினாளித்தென்னாவுருகுமால்கருங்கால்வெண்புள்.    38

 

70    வரியிலைப்பலவின்வீழ்ந்தமாண்சுளைவவ்விக்காலால்
அரிமலர்புனங்கொய்தாறிட்டளைபுகுமலவன்காட்டும்
பெருவலித்தெவ்வராண்டபேரெயிலுடுத்தகொற்றத்
திருவினைத்தடிந்துசெல்லுமிறைமகன்படைஞர்செய்கை.    39

 

71    நெடியதன்னிலையினல்குநெறிபிறழ்ந்திடுனும்வான்செய்
குடிமையார்தமதுசெய்கைகுறைபவோகுடக்காய்த்தெங்கின்
ஒடிகனிமுட்பலாவைக்கதலயையுலையமோதித்
தடிதொறுமெருக்கள்செய்யுந்தன்னிலைதிரிந்தபோதும்.    40

 

72    வெள்ளெயிற்றுழாவேமேதியொருத்தலைவிலக்குமாலை
உள்ளுகுகதிர்கான்முத்தங்கருவெனக்கொடுபோயுற்ற
தெள்ளொளிப்பசியசூட்டுத்தோலடிசிறகரன்னம்
முள்ளரைக்கமலச்சேக்கைமுகட்டடைகிடக்குமன்றே.    41

 

73    உடைதிரைக்குடிஞைதோறுமுறுசிறைவிரித்துமீக்கண்
அடைகயல்வேட்டுப்பல்காலாழ்ந்தெழுசிரல்கள் காட்டும்
இடையிடைதருவவேண்டியிழிந்தெழுந்தும்பரேறிக்
கொடைகுறித்துழலும்வேழக்கூத்தியராடற்றன்மை.    42

 

74    குருச்சுடரிதழ்வண்டாடக்கொல்லழனிகர்த்தவிண்டை
நெருக்கிடைமுகிழ்த்துநீலநிற்பனபருவக்கொல்லன்
இருப்பெனவங்நகனாளுமெய்கரவாளிபண்டை
உருத்துருசகற்றிநீட்டியொண்கணையமைத்தல்போலும்.    43

 

75    மொய்ம்மலர்குடிஞைதோறுமுளரியங்கொடினையன்னார்
கொமைவெம்முலையிற்றோய்ந்தகுங்குமநறுநீர்பாய்ந்து
வெம்மைசால்சுறவுபண்டைவிரிபுலான்மாறலாலே
தம்மின்வேறென்னவையுற்றிரிவனசலதிப்பன்மீன்.    44

 

76    தழைதருநெல்லின்சும்மைசாரலென்றெண்ணியாண்டே
பிழைவழியிழியவேர்க்கட்பெருவிறன்மள்ளர்பூட்டி
உழைதொறுமுழுங்காலஞ்சியொல்கிமீண்டொருசார்தூங்கும்
மழையெனமருதநீழல்வைகுவமேதியேறு.    45

 

77    கரப்பதுசெய்யார்நல்குங்கடமையார்கரத்தக்காலும்
இரப்பதுபூண்டோர்யாண்டுமெய்துபவன்றேமோட்டுப்
பரப்பணையன்றிவேரிற்பழுபழம்வெடித்தவாய்புக் 
கரற்றுவஞிமிறுந்தேனுமள்ளிலைப்பலவுதோறும்.    46

 

78    பைந்துழாய்மெளலிமள்ளன்சுராசுரப்பகடுபூட்டி
மந்தரவலத்துப்பாந்தள்வடங்கொளியாழிப்பண்ணை
முந்துறமுயன்றுதாவாமொய்யுயிரெவையுமுண்ணச்
சந்ததமமுதுநல்லூண்டருவனமருதவைப்பு.    47

 

79    காசறநிவந்ததெங்கின்காவெலாங்ககனந்தோயப்
பாசொளிப்பசுங்காயெண்ணில்பரித்தனகண்ணனீந்த
தேசமுதொருநாளென்றுதினந்தொறுமும்பருண்ண
வாசநீரமுதம்பெய்துவைத்ததண்குடங்கள்போலும்.    48

 

80    அள்ளிலைப்பலவும்யாத்தபுதுக்கலமனையசெங்காய்
வெள்ளகன்சினைசெய்யாலுமாவொடுமிடைந்துநீழல்
கொள்ளவாறியங்குஞ்சோலைகுறைவிலாநிறைமைத்தேனும்
ஒள்ளொளிப்பரிதிப்புத்தேளுறுசுடர்க்குறையொன்றுண்டே.    49

 

81    புனிதனும்புனிதநல்கும்பொன்னியுமன்னும்வீட்டை
நனிதருபதியுமுள்ளநாடரோவிதனைநண்ணார்
கனிதரப்பெற்றுந்தீயகாய்க்கவாவுறுதல்போலாம்
மனிதரோரறத்தைவேண்டிமற்றொருநாட்டைச்சேறல்.    50

 

82    கிணறெலாம்புனிதமந்தாகினிமலர்த்தடங்களெல்லாம்
துணர்செய்மானதப்போரோடைதுருமமைந்தருவானெல்லாம்
குணமலிசுரபிவைத்தகுரமெலாந்தீர்த்தந்தூய
மணலெலாமிலிங்கமென்றால்வழுத்தலாந்தகைமைத்தன்றால்.    51

 

83    ஆன்றநீர்ஞாலமீன்றதகன்புன்ற்பொன்னிபொன்னி
ஈன்றதுதிருவையன்னதியலிசைநாடகங்கள்
மூன்றையுமீன்றதன்னமுதுக்குறைவீன்றவாய
தீன்றதுவீட்டையெல்லாமீன்றதுவளன்செங்கோல்.    52

 

84    ஆயிரங்கலையிலொன்றேயகலிடத்தளிகடோறும்
மேயினபூசைவேட்டுமீண்டுயர்கனகமன்றக்
கோயிலாளுடையான்மேனிகுலவலாலுலகில்யாண்டும்
போயினுமுத்திநல்கும்புண்ணியநாடிந்நாடே.    53

 

85    மாவலானாதிவிண்ணோர்வந்தடிபரவிவாயிற்
காவலான்கடைக்கணோக்கங்கண்ணியகயிலையெம்மான்
பாவலான்விடுப்பக்கங்குல்பழுத்தபானாளிலந்தோ
ஏவலானாகப்பெற்றதெத்திருநாடுமன்னோ.    54

 

86    ஒருமறைக்கிழவன்றன்னையுலகுண்டானிலகுநாபித்
திருமலரீன்றதன்றேதெய்வநூறிவளுமார்பின்
அருமறைக்கிழவரெண்ணிலவரையிப்பொன்னிநாடாம்
ஒருமலரீன்றதென்றாலொக்குமோவனையானுந்தி.    55

 

87    பையழற்பகுவாய்ப்பாந்தட்படலையானுலகமென்கோ
நெய்யொளிர்பவளக்கொண்டனீடுலகென்கோவோரெண்
கய்யரசுலகமென்கோகாவிரிநாட்டையீதென்
றையமற்றுரைத்தறேற்றேனறிஞர்தமதியின்மேற்றே.    56

 

88    கூற்றவளோடுமிந்நாட்டணிவளங்குறித்தோபொன்னி
ஆற்றுநீர்விருப்போவேனையடியர்பத்திமையினாலோ
நாற்றியலென்னநாதன்றளிதொறுநண்ணலாலே
சேற்றியல்கம்பமானதென்னுளஞ்சென்னிநாட்டில்.    57

 

89    தமிழ்முனிதென்னாட்டென்னத்தக்கதென்னவனையீன்ற
கமழ்மலர்முனிவன்பூசைக்கடவுண்மாமுனிவன்காதில்
அமிழ்துறுகுடிலையோதியருண்முனிமகவாய்த்தோன்றித்
தமிழ்வளம்படைத்தாலீதேதண்டமிழ்நாடுமாதோ.    58

 

90    தீர்த்தகோடிகள்போயாடுஞ்செழுந்திரைக்கங்கைதன்மேல்
கூர்த்தவல்வினைகடீரக்குரைதிரைப்பொன்னிவைப்பில்
வேர்த்தவெள்ளரிமேல்வேந்தன்மேவியவாண்டிற்கும்பம்
பார்த்துவந்தாடுநாட்டைப்பகர்வதென்பார்க்கப்பல்கால்.    59

 

91    ஏமமாதவத்தோர்முத்திக்கேணியாய்வேணிவாய்ந்த
சோமனார்க்கிருக்கையாகுஞ்சோழநாடெனுமாண்பூண்ட
வாமநல்லாரமாகிவயங்கிசைதருமீராறு
நாமநீர்வளஞ்சூழ்காழிநகர்வளம்பகரலுற்றாம்.    60

(திருநாட்டுச்சிறப்பு முற்றிற்று. ஆக திருவிருத்தம் 91)

 

 

3. திருநகரச்சிறப்பு. (92-181 )

 

92    அகலிடக்கொடியணிகெழுமேனியம்புவியே
புகரில்பல்வளமல்கியபொன்னிநடனையாள்
முகமலர்ச்செழுங்கமலமேயம்மலர்முகத்தின்
நகையுலாமணித்திலகமேகாழிமாநகரம்.    1

 

93    தானமெண்ணிலவுழன்றருட்குரவனைச்சாரின்
ஆனமுத்திவீடெய்துமீதருமறைவழக்கே
மோனவீடுமவ்வீடெளிதேயுறமொழியும்
ஞானதேசிகனிருக்கையுங்காழிமாநகரம்.    2

 

94    சுற்றுமோரிருகோளும்வந்தனைசெயத்தொலையா
முற்றும்வல்வினையிருள்கெடமுதுக்குறையடியார்
பெற்றநீற்றொளிவெண்ணிலாவயங்கிடப்பிறந்த
நற்றமிழ்க்கதிரிமைப்பதுகாழிமாநகரம்.    3

 

95    தரைப்புறத்தினைமறைப்பனகொழுநிரைத்தண்ணீர்
திரைப்புறத்தினைமறைப்பவெள்வளைக்குலஞ்செந்நெல்
நிரைப்புறத்தினிற்கடுங்களைகட்டலானீண்ட
கரைப்புறத்தினைமறைப்பனவள்ளிதழ்க்கமலம்.    4

 

96    காயும்வெங்கதக்களிறுகால்யாத்திடக்கரத்தால்
மாயிருந்தொடர்கொடுத்தெனமள்ளர்கையெறிந்த
சேயிருங்குவளையுங்கமலமுங்கொடுசிலைவேள்
பாயநொந்தனருழத்தியர்விழிவலைப்படுவார்.    5

 

97    மடையுஞ்செம்புனல்வளாகமுமண்முதுகுடைக்கும்
படையுமென்கிளிநிறத்துநெட்டிலைவளைபசுநெற்
கிடையுமுட்டுநீர்வாலரிக்கற்றைகள்கிளைத்த
தொடையுமன்றிவெள்ளிடைபெறாவகல்வயற்சூழல்.    6

 

98    உள்ளடங்கிநல்லுருக்கொளீஇயுரத்திறுமாந்தாங்
கள்ளிடங்குழைந்தவாப்பெருந்தன்னிலைபிறழ்ந்து
கள்ளநோக்கியரெழுபருவந்தொறுங்காட்டும்
எள்ளறீர்முலைநிகர்த்தனகதிர்த்தநெல்லீட்டம்.    7

 

99    கருவிபோழ்தருநூழைபோங்கள்வனைக்காணா
ஒருவனீர்த்திடவொலித்தலின்மகளிரார்த்தென்னத்
திருகளைப்புகுந்தேரையைநீரராப்பற்ற
வெருவியார்த்தலினார்த்தனவிரிசிறையன்னம்.    8

 

100    வாலிதாமுளையொருபுறம்வளர்செறுவொருசார்
பாலிநெல்லொருசாரொருசாரரிப்பறம்பு
சாலிவேலையோர்சாரிவைதலைமயக்குறலால்
வேலியாயிரம்விளையுளென்பதுமிதன்மேற்றே.    9

 

101    குண்டலாதிபனிடுபணிதலைக்கொடுகுமுறி
மண்டலத்துநீருமிழ்கரும்புயலெனவயவர்
திண்டடக்கையாலிடுகழையுண்டுவாய்சிலைப்ப
எண்டருஞ்சுவைமழைபெய்வதாலையெந்திரங்கள்.    10

 

102    குறுத்ததாழ்சினைவருக்கையுங்கோழரையரம்பை
பொறுத்தபைங்கனியீட்டமும்பொரியரைத்தேமா
இறுத்தமென்கனிப்பெருக்குநல்லெருக்களாயீண்டிக்
கறுத்தசேதகத்தெழுவனநாற்றிளங்கானம்.    11

 

103    எழுந்துலாங்கதிர்ப்புரவிபுக்கயர்வுயிர்த்தேகச்
செழுந்தணீழலைச்செய்வதோவியப்பமஞ்சிறைத்தேன்
விழுந்தநாண்மலர்ப்பொதும்பரின்கோடுகள்விசைத்துக்
கொழுந்துதேய்த்தலிற்களங்கமுற்றிடுமுயற்கூடு.    12

 

104    வளர்ந்தநாண்மலர்ப்பொதும்பரிற்சேயொளிவாய்ந்த
இளந்தளிர்க்குழாமெரிக்குழாங்கொல்லெனவிரங்கிக்
கிளர்ந்துகூவியயாழிசைமிடற்றகோகிலத்தைத்
தளர்ந்தநோய்கெடத்தைவருந்தவழ்நடைத்தைன்றல்.    13

 

105    வீங்குதெண்டிசைமுகடுகீண்டெழுகதிர்வேந்தை
ஈங்கிருட்பகைதுடைத்தனைவருதியென்றெதிரே
பூங்குடத்தினீரேந்தினபோன்றுமுப்புடைக்காய்
தாங்கிநிற்பனநெட்டிலைவிரிதலைத்தாழை.    14

 

106    கூடல்வைகையோர்கவுணியமுனிவரன்குணத்தைப்
பாடல்கொண்டறிவுறுத்தியதென்றுதண்பனிநீர்
ஆடல்செய்துளோர்க்கவனருட்குணத்தையக்கணத்தே
கூடல்செய்நதிக்கழுமலமந்நகர்க்குடிஞை.    15

 

107    கல்லெனார்ப்பினாற்கலினமான்றிரையினாற்கனகச்
சில்லியந்தடந்தேர்ப்பெருங்கலத்தினாற்சிறுகண்
வல்விலங்கெனுஞ்சுறவினான்மணியினாற்பசித்தோர்
செல்லறீர்த்தலாமுதவாரிதியனதெருக்கள்.    16

 

108    பாழிசாலிருங்கொடிநிரைபரிதிவானவன்பொன்
ஆழிதட்பனமேலிடத்தன்னலார்புலப்பால்
வீழிருங்கலன்மிடைந்துதேர்வேத்திளங்குமரர்
ஆழிதட்பனகீழிடத்தகன்மணிவீதி.    17

 

109    வேனில்வேளனார்முடிமணியுறைத்ததயன்மிதித்த
கானிலாமொழியாரடியலத்தகங்கரையப்
பானிலாமதிக்கெதிருமிழ்நறும்புனல்பரப்பும்
வானிலாவுமிழ்சந்திரகாந்தநீண்மாடம்.    18

 

110    செறித்தமாமணியிழைத்ததெற்றிகடறுஞ்செங்கேழ்
எறித்தமென்சுடர்க்கற்றையந்தளிர்களையெட்டிக்
கறித்தபைங்குளககறறிவன்றொடரறக்கழுத்தால்
நெறித்துநாநிமிர்த்தயில்வனநெட்டையொட்டகங்கள்.    19

 

111    நேர்ச்சிநுண்மருங்கலம்வரநிரைவளைகறங்கக்
கார்ச்சிகண்டிபோன்மாதராடரங்கமுங்கலைநூல்
தேர்ச்சிவல்லவரறிவினாற்செம்பொருடுணிந்த
சோர்ச்சிவல்லவர்கழகமும்பதமலிதொடைகள்.    20

 

112    நலத்தமேலவர்நன்னரன்பொடுதமைநட்டார்
கலக்கமில்குணமாவரென்பதுமிவண்கண்டேம்
இலக்குவெண்பளிக்குபரிகையயனின்றவெவையும்
புலப்படுத்திநின்றோங்கினபுயலுரம்பொறுத்தே.    21

 

113    நீட்டுகையொடுமடுபுகர்முகத்தொடுநெறிவெண்
கோட்டுவாரணப்போர்புரியமலையிற்குரைத்தே
தீட்டுகாலவாய்நிணம்பொதியலகவாய்ச்சிலைக்கும்
சூட்டுவாரணப்போர்புரியிளையவர்துழனி.    22

 

114    கற்றைவெண்டிரைகலந்திடத்தோணியிற்கலந்த
வெற்றிவானவன்பொற்றொடிக்கின்னருள்விளக்கும்
கொற்றவன்றனாதிருக்கையைப்பொன்னெடுங்குன்றம்
முற்றல்போன்றனமுழுமணிக்கொடிநுடங்கெயில்கள்.    23

 

115    ஈறிலாமையால்விதிமுகங்காட்டலாலெவர்க்கும்
கூறொணாமையாற்பலவணங்குவலாற்புலவோர்
ஆறுமஞ்சுநன்மதியொடுமுடித்தலாலளவால்
தேறுநான்மறைநிகர்த்தனசெயிரில்பொன்னெயில்கள்.    24

 

116    கலவியாலுகுத்தமுத்தமுங்கணவர்பாலடுத்த
புலவியாலெறியிழைகளும்பொன்னணிமறுகில்
குலவுவேற்கணார்வண்டலில்விண்டிடக்குயின்ற
கலனுமல்லதுகுப்பையென்றுறுபொருள்காணா.    25

 

117    ஆளியன்னவரகலமேலாலைவில்லநங்கன்
வாளிபாய்ந்தபுண்ணழல்கெடமணிவடம்புனைந்த
கேளியாலுறவழுத்தியுங்கிஞ்சுகச்செவ்வாய்க்
கோடிலாமருந்தூட்டியுந்தணிப்பர்கொம்பனையார்.    26

 

118    வசனமென்கிளிவாயிதழ்கொவ்வைவெண்மடங்கல்
அசைமருங்குலகண்ணானவைமான்முகமதியம்
இசையுமெல்லடிநளினமாய்ப்பகைத்தமெல்லியலார்
பசையுமன்பர்தாரளியொடும்பகைப்பர்தம்பதத்தால்.    27

 

119    வேறு

 

நெட்டிலையயிற்கணல்லார்நிலாமணிமுன்றிலேறி
மட்டின்மேனிலைக்கண்ணாடவாங்கியபொன்னம்பந்து
முட்டியைந்தருவினொண்கேழ்மொய்ம்மலருகுப்பமாரன்
புட்டில்வாய்மலர்களோடும்பூமழைபொழியும்வீதி.    28

 

120    சேலைவென்றடர்த்துநீண்டசில்லரித்தடங்கண்மாதர்
வேலைவெள்ளாரம்வேய்ந்தவெம்முலைமதுகைமாந்தர்
ஆலைவில்லநங்கன்வாளியஞ்சினரணைந்துநிற்ப
மாலைவெள்ளருவிதூங்குமலையரண்கடுக்குமன்றே.    29

 

121    அன்னமென்னடையார்செம்மாந்தணிந்தவெம்முலையிற்சாந்தம்
பொன்னிலத்திறைத்துமைந்தர்புரவிமான்குரத்தாலெற்றுண்
டெந்நிலவரைப்புஞ்சூழ்போயெண்டிசைபரிக்கும்யானை
மன்னெடுங்கரடத்தாழ்ந்தவண்டினமுயிர்க்குமாதோ.    30

 

122    அதிரொலிகலினமான்றேரார்ப்பொலியடுங்கையானை
முதிரொலிகறங்குவள்வார்முரசொலியரசர்கோயிற்
சதிரொலியனைத்துமிண்டித்தரைசெவிடெறிவதொன்றோ
பொதிரெறிந்திடுமாலந்தண்புயல்படுககனகூடம்.    31

 

123    நடையறிகின்றதேர்ச்சித்துணைவரைநயவாதுள்ளக்
கடையரைநயந்தவேந்தைக்கடுத்தனகாகப்பந்தர்
அடைவுறக்கவிப்பப்பாகனங்குசநிமிரவம்பொற்
புடைமணிக்கவ்வைபோர்ப்பப்புனைமறுகியங்கும்யானை.    32

 

124    நாகிளஞ்சுரும்பர்பாடக்குவளையுங்குமிழுநான்ற
பாகவள்ளையுஞ்சேதாம்பலலரியும்பனிவெண்முல்லைச்
சேகருமுகையுங்காட்டிச்சிறைப்புனற்பழனத்தன்றிப்
பூகமென்முளரிவைகும்புயறொடுகுடுமிமாடம்.    33

 

125    மறங்கிளர்வேற்கணாருமைந்தருமாடத்தும்பர்
உறங்குழியுறங்காவிற்கையுருவிலியானைமீக்கொண்
டிறங்கிவெண்கோல்கொண்டெற்றியின்பறாக்காமப்பைங்கூழ்
திறம்பெறவளர்ப்பிப்பான்போற்றிங்களங்கதிர்பாய்ந்தன்றே.    34

 

126    தண்ணளிநூல்களாகத்தாழ்மொழியலர்கள்சேர்த்திக்
கண்ணளியாசைமாலைகைபுனைந்திளைஞர்சூட்டப்
பெண்ணலங்கனியநின்றார்பெருவளைக்கையாற்கட்டி
விண்ணமுதுவர்ப்பச்செவ்வாய்விருந்தமுதூட்டுவார்கள்.    35

 

127    கன்னலின்புகையுமட்டிற்காரகிற்புகையுநல்லார்
பின்னலின்புகையுமல்கிப்பகலிருள்பிறக்கவில்வேள்
அன்னிலைவாளியெய்தலருமையேயவிவேட்டன்றோ
இன்னவென்றுணரார்விண்ணோர்நோக்கின்றாரிமைப்பிலாராய்.    36

 

128    பருதிவாய்பற்றலாணிபண்வழிதிருத்திச்செவ்வாய்ச்
சுருதியாழ்நரம்போடொன்றத்தூக்கிமெல்விரனடாத்திக்
குருதிவேலனையகண்ணார்பாடலற்குமரரன்னார்
கருதியுள்ளுடைவதொன்றோகவின்றதூண்டளிர்க்குமென்றால்.    37

 

129    குளங்கிளர்சுதையின்மாணக்கோட்டியகிளியுமாதர்
மணங்கிளர்கரத்துத்தீஞ்சொன்மழலைவாய்க்கிளியுஞ்சோதிக்
கணங்கிளர்பளிக்குததூணிற்காண்பனகல்விசான்ற
நுணங்கியகேள்வியார்முன்னுண்ணறிவில்லார்போலும்.    38

 

130    புட்பிணியளகக்காட்டிற்புணர்முலைக்களிற்றின்மென்சொல்
பட்பிணிவலையினம்பொற்பகட்டெழிலல்குற்றேரின்
நட்பினிற்படுத்திப்போர்செய்தாடவர்நனவைப்போழ்ந்த
கட்படைக்கணிகைமாதர்கற்பகப்பொலன்கொம்பன்னார்.    39

 

131    வான்படுமயிலஞ்சாயன்மணிநகைமுறுவல்கோட்டித்
தேன்படுகிளவிதன்னாற்சிலைத்துமீதலத்துநின்று
கூன்படுபுருவத்தூண்டிற்கூர்விழிமுள்ளிலாசை
உடன்படுத்திளைஞருள்ளமீன்படுத்தூற்றங்கொள்வர்.    40

 

132    பொன்னலர்காமவல்லிபுறந்தரப்பாணியொற்றிக்
கன்னன்மென்றனையசொல்லார்காமகீதங்கள்பாடித்
தென்னிளங்காளையன்னார்சிந்தையைப்பரிசில்வாங்கிப்
பன்னிலவரைப்பும்பெட்பப்பட்டிமைவிளைப்பர்மாதோ.    41

 

133    எழுந்தளந்தெடுத்தபாடலெழுவகைநரம்பினல்யாழ்
ஒழுங்குறமாதர்பாடவுணர்ந்ததோவியமொன்றேயோ
அழுங்கவர்வரிந்தவுள்ளத்தரவர்வேட்டிரங்கப்பைம்புற்
கொழுந்தையுந்தின்னாதன்றோகோவிளம்பசலைக்கன்று.    42

 

134    தருமமுந்தருமந்தாங்குந்தானமுந்தானமோங்கும்
கருமமுங்கருமங்காக்குங்கருணையுங்கருணைதீரா
வருமமும்பலன்களாகவைகலும்பழுத்ததெய்வத்
துருமமேயனையாரின்னதொன்னகர்மேழிச்செல்வர்.    43

 

135    ஆடியற்பாவைபோலவகன்றுழியகலாதென்று
நீடியசீர்த்திப்பாவைநிலவியசெஞ்சொன்மாலை
பாடியபனுவன்மாக்கள்பருவரலுழந்துபன்னாள்
வாடியவறுமைநோயைவறுமையாய்ச்செய்யவல்லார்.    44

 

136    பிச்சிநாண்மலர்செய்வேணிப்பிஞ்ஞக‌னடியார்க்காணின்
உச்சிநீரவலிற்பாய்ந்தாங்குழுவலன்போடுந்தாழா
எச்சமிலமுதந்தெண்ணீர்க்கிணற்றிடையெழப்பெற்றார்போல்
இச்சையோர்ந்தளிமிக்கூறிக்குறித்தவாறிழைத்தல்செய்வார்.    45

 

137    முழுமதிசிதறியன்னமுளிதயிர்வெருகின்கண்போல்
எழுதருங்குய்யறாதவின்புறுகருணைவாசம்
ஒழுகுமுக்கனிநெய்வாரியூட்டியாளுடையானன்பர்
கெழுமனமகிழ்ச்சிதூங்கக்கிழமைபூண்டேவல்செய்வார்.    46

 

138    மலைதருவனவுநீண்டமலையெனச்சுழவுமாழி
அலைதருவனவுந்தூவெள்ளலைபுரள்கலுழிக்கானத்
தலைதருவனவுஞ்சூழ்தண்டலைபலகிளைத்தவேலி
நிலைதருவனவுமுண்டுநிவந்தபீடிகைமாடங்கள்.    47

 

139    பதித்தவெண்பளிக்குவேதிப்பவளக்கானிறுவிப்பைங்கேழ்
கதிர்த்தல்கல்விடங்கமூட்டிக்கண்ணக‌ல்விண்ணாடேய்ப்ப
மதித்துணியனையவொள்வாள்வயிரமுந்துகிரும்பொன்னும்
கொதித்தெரிகலனுமுத்துங்குவிந்தனபயின்ற‌கூடம்.    48

 

140    நனந்தலையுலகத்துள்ளார்நல்குரவிரவுமோவாத்
தினந்தருமிரவுஞ்சீய்க்குஞ்செம்பொனாவணத்துச்செல்வர்
கனந்தருங்கண்டன்காழிக்கடவுண்மூவுருவானானென்
றினந்தருந்தோழன்வெவ்வேறியைத்தனவியந்தார்மாதோ.    49

 

141    உரைசெயாரியமேமுன்னாமொன்பதிற்றிரண்டுகூற்று
வரைபடாவொலியாலார்க்கும்புட்பொழின்மானுங்கூலம்
புரைபடாதுறுபல்வேறுபொருள்களாலுலகமுண்ட
விரைசெயுந்துளபப்பைந்தார்மேலவனுதரம்போன்ற‌.    50

 

142    வண்டலமருமென்கூந்தன்மாணிழைமகளிர்செம்பொற்
குண்டலந்திருவில்வீசக்கோழிமேல்வீழ்த்தமுன்றிற்
கண்டலக்கவைக்கான்மேதிகாலுறைத்தழுங்குமென்றால்
மண்டலத்திவர்தஞ்செல்வவளனெடுத்துரைக்கற்பாற்றோ.    51

 

143    உறைகழித்தொளிறுவாளாலொன்னலார்மடவார்மைக்கண்
கறைகழித்துயர்திண்டோளிற்களிறுவீழ்ஞாட்பிற்பட்ட
நிறைபடச்சுவட்டின்மாதர்முகிழ்விரலுகிரினேர்ந்த
பிறைகழிப்பில்லாவேந்தர்பெருவிறலாளியன்னார்.    52

 

144    வானிரப்படைகள் போழுமணிநிறத்தணங்கனார்கண்
வேனிறத்தாழத்தொங்கல்விளரியஞ்சுரும்பர்பாடக்
கோனிறக்கணையிற்றூண்டிக்கோவிளங்குமரர்வாய்ந்த
தூனிறக்கவரிநெற்றித்துரகத்தேரூர்தல்செய்வார்.    53

 

145    இருணக்கபவளக்காலின்முழுமதியிருத்தியன்ன
வருணத்தண்குடைக்கீழ்மன்னர்மல்லடுபோருங்கூன்கோட்
டருணத்தின்போருங்காண்பாரமலையான்மலிந்ததம்மா
கருணைக்குன்றனையான்காழிக்கடிமணிமாடவீதி.    54

 

146    சூலம்வாள்கதைகணிச்சிசுரிகைசக்கரங்கள்பிண்டி
பாலநீள்குலிசமேறுபலகைகப்பணமுலக்கை
கோலெழுஞாங்கர்வன்றோல்கொடுமரமலிந்தகூடம்
சேலுலாந்தடங்கட்கன்னித்திருமகள்சகூடம்போலும்.    55

 

147    புனன்மடுத்தெழுகொண்மூவைப்பொங்குளையரிமானேறு
சினமடுத்துரத்தாலென்னத்தீவிழிகாலச்சீறிக்
கனன்மடுத்துழலும்வைவேற்காளையர்கைவாளோச்ச
இனமடுத்தூறச்சோனையெனமதம்பொழிவயானை.    56

 

148    பொன்பொலிவடிவுகாணப்பொலிதலான்மதனின்மிக்கார்
இன்பொருளறிந்துநாவொன்றியைந்தனந்தனிலுமிக்கார்
ஒன்பதுநிதிக்குமேலாயுயர்ந்துபிங்கலனின்மிக்கார்
அன்பினிற்கவடிலாமையளித்தலாற்றருவின்மிக்கார்.    57

 

149    இலையயிற்குமரனன்னாரியங்குதண்டலைகளெங்கும்
தலைவிரிகுழையத்தேமாத்தண்மலருகுப்பமாரன்
கொலைமுகப்பகழிக்காற்றார்குளிர்நிழல்புகல்புக்காங்கும்
தொலைவறுகாமத்தீக்குத்துப்புறைபொழிதல்போலும்.    58

 

150    இருமணித்தடக்கைநல்லாரிழைத்திடுவண்டல்வீட்டில்
உருமணிமுத்தம்வெண்சோறோரைமார்செங்கைதீண்டக்
குருமணியாதல்கண்டுகுறுநகைவிளைத்துப்பண்டைப்
பருமணிமுத்தமாகவிளநிலாவிரிக்கும்பாங்கர்.    59

 

151    பெறவருங்கொடிமென்முல்லையில்கரும்பீன்றதென்னா
நறைவிரியலங்கலோதிநங்கையர்வதுவையாற்றும்
சிறுகணார்முழவமார்த்தவின்னொலிசெவியின்மாந்தி
அறிமுகிலென்னமஞ்ஞையாலுவசோலைதோறும்.    60

 

152    அறுசுவைகனிந்துவிண்ணாட்டமிழ்தினுமியன்றுமுல்லைக்
குறுமுகைகவற்றுமூரற்குழைவுறுமுகமன்வுறி
மறுவறுமனுக்களார்ந்தவாயினின்மறைதேர்வாழ்க்கை
உறுவரையருத்திவெவ்வேறொக்கலோடுண்பரன்றே.    61

 

153    மந்திரத்திறலார்காலமும்மையும்வரம்புகண்டார்
எந்திரப்பவத்ததைவேர்கீண்டெறிபடையடனையநாவார்
சுந்தரமுளரிமாலைத்தொழுதகுதெய்வமன்னார்
அந்தரத்தயனையொப்பாராணிநகரந்தணாளர்.    62

 

154    மறைகளுமங்கமாறுமறுவின்மூவறுபுராணத்
துறைகளுமிருதிநூலுந்துளக்கறவிளக்கிச்சூழ்ந்த
இறைகொடுத்தெதிர்வினாக்கொண்டெவற்றினுந்தோய்ந்துந்தோயா
நிறைபரம்பொருண்மேலுள்ளநிறுவியவறிவின்மிக்கார்.    63

 

155    கிளந்தறியாதவேதக்கிடையிடைப்பதங்கள்கோவை
அளந்தபேரோதைப்பொம்மலண்டகோளகையுமுட்ட
வளந்துநான்முகத்துத்தங்கள்பெருந்தகைமகிழவோதும்
இளந்துணைமறைச்சிறார்களீட்டமெண்ணிலவுமீண்டே.    64

 

156    அருள்விளைபுலத்திற்காமமாதியபூடுபூத்த
இருவினைக்களைகட்டார்வத்தெயிலுடுத்துயிர்க்கூறஞ்சும்
திருமணிபிழைத்தஞானச்சேயிழையொடுகுலாய
கருணையங்கோயில்வைகுங்கடவுளர்மடங்களெங்கும்.    65

 

157    வடநிழல்விரித்தநாலேழ்மருத்துநூலுரைத்தவாறே
கடவுள்கண்மணியாலைந்தக்கரத்துமந்திரத்தால்வெண்ணீற்
றடல்கெழுமருந்தால்யார்க்கும்பிறவிநோயறுக்குஞ்சைவத்
தொடர்கொள்வேதியர்தாமாயுள்வேதியராயதொல்லோர்.    66

 

158    இருவிரல்கூட்டிநால்வர்க்கிசைத்தமெய்ப்பொருளையீதென்
றொருவிரல்காட்டிப்பாடுமொருவனைப்பயந்தோன்சுற்றத்
தருமறைபயின்றசெந்நாமுனிவரராற்றல்சான்ற
தருமநூன்மருமச்செல்வர்தனிமடமாலையெங்கும்.    67

 

159    பைந்தமிழ்ப்பாவையாடும்பன்மணியரங்குநீலக்
கந்தரனடியார்காணிகாசினித்திலகம்யோக
மந்திரர்முத்திவைப்புமறைவிளைதெய்வப்பூமி
அந்தணர்க்குறையுள்சீர்த்தியணங்கினுக்கிணங்குபீடம்.    68

 

160    உறக்கமென்பனநல்யோகமுணர்வுசால்புருவான்கண்கள்
திறப்பனநிறைமெய்ஞ்ஞானஞ்செப்புவமனுக்களிவ்வூர்ப்
புறத்துளார்செயலுமெம்மான்பூசனையெனவீதேபோல்
துறக்கநாட்டகத்துமோரூர்தொல்லைவையகத்துமின்றே.    69

 

161    வேறு

 

விண்கொண்டகாவலவன்வேணுவுருவெய்திப்
பண்கொண்டடித்துணைபழிச்சவருள்வீசும்
வண்கொண்டலன்னவன்மணிச்சினகரத்தான்
தண்கொண்டபேரொளிதருங்கயிலைபோலும்.    70
 

 

162    நாதித்தவெள்ளருவிநன்மலைமுகட்டில்
ஆதித்தமண்டிலமமைந்தொளிர்வதென்னா
மிதிற்கிளர்ந்திருள்விழுங்கியொளிகாலும்
சோதித்தசும்பொடுதுளங்குறுவிமானம்.    71

 

163    நீரேறுமன்பர்பிழைநேரினுமவர்க்கே
சீரேறுநன்றிபலசெய்கடனெனக்கென்
றாரேறுவேணியனசைத்தகொடிபோலும்
போரேறிலங்குகொடிபொங்குமணிமுன்றில்.    72

 

164    சேல்பாய்வயற்கழுமலச்சிவனைவேதன்
சால்பாயருச்சனைசெய்தன்மையதுணர்ந்து
மால்வாய்நெடுந்திசைவழாதுகடைநின்ற
நால்வேதமேயனையநற்கோபுரங்கள்.    73

 

165    மின்றோய்நெடுஞ்சிகரிவிண்ணகடுதோயத்
தன்றேசுலாவுமதிசாளரவழிக்கண்
சென்றேகுறைந்தமைதெரிந்துபுடைசெல்வேன்
என்றோவிரண்டயனாமெய்தினனவ்வெய்யோன்.    74

 

166    நன்றாயகோளுமுதுநாளுமணிமாலை
என்றாய்விளங்கவதினேறுகொடியின்கால்
கன்றாமலர்த்தருவனக்காமவல்லி
குன்றாதணைத்தகொழுகொம்பரெனநின்ற.    75

 

167    மைந்நாடுகொண்டல்கள்வளைந்துருவமூடிப்
பொன்னாடுகஞ்சுகபுராணனைநிகர்ப்பத்
தன்னாதனெத்தகையனத்தகையதானை
என்னாவிரும்புவியிசைப்பதையிசைக்கும்.    76

 

168    மய்யார்வினைப்பவம்வராதகலுகைக்கோ
பொய்தீருஞானவொளிபொங்கியெழுகைக்கோ
மெய்யானதொண்டர்கள்விரும்பிவருகைக்கோ
வெய்யாதலங்குவவிலங்குதுவசங்கள்.    77

 

169    வேறு

 

ஐம்பொறிமிசையவூட்டுமமுதுவாலறிவன்சொன்ன
செம்பொருளாகமங்கடெளித்ததெள்ளமுதுமூவர்
தம்புலத்தமைத்தஞானத்தண்டமிழமுதுமிக்கார்
இம்பரிற்புணர்த்தசெஞ்சொலமுதுமேயெவ்விடத்தும்.    78

 

170    விடுபொருள்விடுத்துமேற்கொள்வினாவெதிர்மறுத்துஞ்செவ்வே
தொடுபொருளிலக்கியங்கடொகைவகைவிரித்துந்தொன்னூற்
படுபொருள்வரம்புகண்டார்பனுவலந்தமிழைக்காழி
வடுகனேமகிழ்ந்தாலேனைவானுளோரென்படாரே.    79

 

171    வேதநாவலர்கள்வாயும்வீதியுந்தழைவவாசி
போதருநிதியுமன்னர்புயங்களுந்தருமறங்கள்
கோதையர்விழியும்வீடுங்குவவுறுமயில்கண்ஞானப்
போதகர்கையுஞ்செய்யும்பொலிவனபலவண்டானம்.    80

 

172    தன்மைநீர்க்கிடங்குமன்னசாலையும்பாலனங்கள்
புன்மைதீரியலும்பைம்பூம்பொங்கருமறுபதங்கள்
நன்மறுகிடமும்யாருநவின்மதவாரணங்கள்
பன்மையோர்தொழிலுங்காவும்பலவிரதங்கண்மாதோ.    81

 

173    மாதர்தமருங்குமம்பொன்மாடமும்விலக்குமின்னல்
கோதையர்கையுமன்னர்கோன்மையுமளிக்குமையம்
சீதமென்பொழிலுமுத்தீச்செயல்களுஞ்சிறப்பவாவி
வீதியினயலுஞ்செந்நெல்வேலியும்பொலிவவேழம்.    82

 

174    விளரிவண்டொலியுஞ்சூழும்வேலியுஞ்சந்தக்கானம்
வளைகரும்பிடத்துமேலோர்மனத்தினுங்கொழிப்பவாரம்
நளிபொழிலிடத்துமந்தணதிதொறும்வாசவண்டல்
இளநலார்குழலுமில்லுமிலங்குகாசறையுமாதோ.    83

 

175    காசிற்றபுலமைசான்றகாப்பியக்கலைகளெல்லாம்
வாசித்துமிழுக்கொன்றில்லாமாசறுகாட்சியாரை
நேசித்துங்காழிமேயநிருமலக்கொழுந்தின்றாளைப்
பூசித்தும்பொழுதுபோமாற்பொன்னகர்மாக்கட்கெல்லாம்.    84

 

176    எண்ணருங்காதையெல்லாமிலக்கணநெறியாற்பாடல்
பண்ணவுந்தருமமாதிப்பயக்குநூலியற்கையாய்ந்து
நண்ணவுஞ்சுவையாறெள்ளிநவச்சுவைபிறந்தகேள்வி
உண்ணவும்போவதல்லாலொல்லையும்போகாவீணில்.    85

 

177    சசிமுளைகிடந்தவேணிச்சண்பைநாயகற்குவேண்டிக்
கசிவுடைத்தொண்டராற்றும்விழவையார்கணிக்கற்பாலார்
பசியகட்பேழ்வாய்மோட்டுப்பறந்தலைக்கருந்தாட்பேய்கள்
நிசியிடைத்துயில்யாமத்துநிரைமுழவுறங்காமூதூர்.    86

 

178    பாடுவார்பல்லோரென்னிற்பழிபடாநிதியாலின்பம்
கூடுவாரவரிற்பல்லோர்குழகனதடிக்கீழன்பு
சூடுவார்பல்லோரென்றாற்றுவருறத்துறந்துமுத்தி
வீடுகாண்குறுவாரின்னவியனகர்வளமைகாண்பார்.    87

 

179    பொறிவழிப்புலன்கள்செல்லும்புரையொடுபசுபோதங்கள்
அறவெறிந்தடுமுப்பாழையகன்றருள்வழியேயுள்ளம்
பிறிவறக்கலந்தார்க்கன்றிப்பெருநகரிதன்மாண்பெல்லாம்
சிறிதுணரறிஞர்வாயாற்செப்பவும்பெறுமோதேர்ந்து.    88

 

180    பழிப்பிலோரெழுத்தான்மெய்ந்நூற்பரப்பெலாம்பரமன்காதில்
ஒழுக்கியவொருவன்றோன்றியுவமைதீர்கவிகளாக்கி
வழுக்கில்பல்லெழுத்தாற்கூறும்வளநகரியல்பையின்றோ
ரெழுத்தையுமுணரமாட்டேனென்னெடுத்தியம்புமாறே.    89

 

181    காமரஞ்சுரும்பர்பாடக்கடிமுகையவிழ்ந்ததண்ணந்
தாமரைக்கிழத்திவாழுந்தனிநகர்வளனீதாகப்
பூமகட்கணியாமிவ்வூர்ப்புண்ணியக்காதைவெவ்வே
றாமவைபலவென்றாலுமறைகுவாமறிந்தவாறே    90
(திருநகரச்சிறப்பு முற்றிற்று. திருவிருத்தம் - 181)
---------------------------

 

4. புராணவரலாறு (181- 227)

 

182    மழைவாய்ந்தன்னகருமிடற்றுவரதன்காழிமான்மியத்தைக்
குழைவாயன்பர்தமக்குரைப்பான்குறுகுஞ்சூதமுனியென்பான்
கழைவாய்வழிதீஞ்சுவைமொழியாற்கரையமுனிவர்கணங்கொண்ட
தழைவாய்குரம்பைத்தவப்பள்ளிதன்னையறிந்தவாறுரைப்பாம்    1
 

 

183    வேறு

 

தெய்வவெண்டிரைக்கங்கையங்கரையதுசிறந்தோர்
மெய்வளந்தரப்பொலிவதுவேதநூலாதி
சய்வநூல்களானிகழ்வதுமாயையின்றனயர்
அய்வருஞ்செருக்கொழிவதுநைமிசாரணியம்    2

 

184    ஏன்றவல்வினையிருளொழிந்தெமக்குளத்தூய்மை
தோன்றவோருழைதருகெனமுனிவரர்தொழலும்
ஈன்றநான்முகனுருட்டுபுவிடுத்தவீன்றருப்பை
ஆன்றவாழிசென்றிறுத்ததுநைமிசாரணியம்    3

 

185    மெய்யராரணக்கிழவர்வெண்ணீற்றொளிமேனி
அய்யர்தன்னளியுளத்தராணவத்தைவேரரிந்த
செய்யமாதவத்திறலர்முக்குற்றமுந்தீர்ந்த
துய்யரெண்ணிலார்பிறங்குவதவ்வனச்சூழல்    4

 

186    குணத்தின்மிக்கவரோம்புமுத்தீவளர்குண்டத்
துணக்குவாய்ந்தபல்சமித்துகண்மனுமுறையூட்டி
அணக்கும்வெஞ்சுடர்க்கின்றுணையாய்வளியாட்ட
மணப்பொதும்பரிற்சிறைவிரித்தாடுவமஞ்ஞை    5

 

187    புதையவிண்கவித்தோங்குயர்பொழிலிருள்போக்கித்
ததையுமெல்லிணர்த்தீபகத்தருச்சுடர்தாங்க
இதையநல்லவர்க்கேந்தியசிரகமென்றிலையால்
துதையுமென்சினைநீட்டுவபுதுக்கனிச்சும்மை    6

 

188    மலக்குறும்பறவெறிந்தநான்மறைபயில்வாழ்க்கை
அலக்கனில்லவரிமிழ்திரைக்கங்கைநீராடி
நலத்ததொல்கடனிரப்புபஞாங்கரினின்று
புலர்த்தும்வேணியைக்காட்டுவபூங்கனிக்கொன்றை    7

 

189    எல்லொளித்தழலிறையவனெழுவகைநாவால்
அல்லறீர்மகப்பொருணுகர்ந்தரும்புகையீட்டம்
எல்லைநீத்தநாக்கொடுபுகையீட்டுதலேய்க்கும்
செல்லினங்கிடந்துறங்குதண்குழைநறுந்தேமா.    8

 

190    போதுகொள்பவர்சமித்தொடுசெல்பவர்புரைதீர்
வாதுகொள்பவர்நல்லருட்குரவர்தாள்வனசத்
தாதுகொள்பவர்மனோலயவின்பசாகரமேல்
காதுகொள்பவர்கணிப்பிலர்தாபதகணங்கள்.    9

 

191    நாமநூன்முதுவோர்தவப்பள்ளியின்ஞாங்கர்
காமநூறெரிவிடரெனக்கடுவனின்றிரங்க
ஏமவைம்பொறியவித்துளவிரதரினீண்டைக்
காமதன்றெனவகலுவகருவிரன்மந்தி.    10

 

192    புந்திவல்லவர்மகவினைப்பொடிகளைக்கரத்தால்
சிந்திமெய்வெளிறடைந்தவெஞ்சினக்கடகளிற்றை
இந்திரன்றனாதுயரியமருப்புடையிமையாத்
தந்தியாங்கொலென்றயிர்ப்பனதளர்நடைப்பிடிகள்.    11

 

193    முன்னமெம்முருவடைந்துளோன்காணருமுளரி
அன்னசேவடியிவையெனப்புல்லுறைத்தழுங்கா
தின்னமாதவர்மெல்லடியியங்கலாறெல்லாம்
கொன்னவின்றவெங்கோட்டினாலகழ்வனகோலம்.    12

 

194    கொம்மைச்சூதத்திற்கதலியிற்பலவினிற்குழைந்த
அம்மைத்தீங்கனிச்சாற்றினாலாணவமாதி
மும்மைப்பங்கமுமகன்றுளாரேனுமிம்மூன்று
செம்மைப்பங்கமீண்டகலுமாறறிந்திலர்திரிவார்.    13

 

195    ஏகமாமுனிசுகமுகமெண்ணிலாமறையும்
யோகநூல்களும்விரிந்ததுகடுப்பநல்லுரவோர்
யாகசாலையின்மருங்கெலாமெழுதொணாக்கிளவி
மோகநீத்தநூல்விரிப்பனபலசுகமுகங்கள்.    14

 

196    நன்றுசெய்ததோருயிரெனினக்குலநன்மை
என்றுமேசெயுமென்பதீண்டறிந்தனமெரிகட்
கன்றுவெஞ்சினவுழுவையும்புயங்கமுங்கனக
மன்றுண்முன்னுளோர்பணிதலைக்கொள்ளுமவ்வனத்துள்.    15

 

197    புரங்கடந்தவற்கடிமைசால்கற்றுகில்புனைவார்
தரங்கநீர்படிந்தெழுந்துழித்தாங்கும்வற்கலையை
மரந்தெரிந்துகூர்நகம்பொதுத்துரித்துவல்லியங்கள்
இரங்கிநல்கநின்றீர்ங்கலையேந்துவகவிகள்.    16

 

198    ஆசிலிவ்வனத்தருந்தவர்பெருமையையளந்து
பேசில்வாளராவிறைவனுமிற்றெனப்பெறுமே
பாசிலைத்துழாய்முகிலுநேடரியபொற்பதத்தை
ஏசிலன்புநூல்பிணித்துளத்திருத்தினரென்றால்.    17

 

199    புலனடக்குநர்புவிக்கெலாந்தண்ணளிபூப்பார்
நலன்விளைந்தநன்னெறியொழுக்கத்தினர்நாதத்
தலனகன்றசின்மயப்பெருவெளியினிற்சலியா
துலவுநோக்கினருறங்கலாவுறக்கமிக்குடையார்.    18

 

200    கூறிவித்ததையத்திரிகோதமன்குமுதன்
மாறில்கண்ணுவன்வாமதேவன்சுகன்வசிட்டன்
வேறில்காசிபன்சவுனகனாதியர்மேனாள்
ஈறில்சத்திரவேள்வியொன்றிழைக்குவவ்வெல்லை.    19

 

201    இயலிலங்குபன்மறைகளுங்கலைமுதலெவையும்
மயலகன்றுளவாதராயணமகோததியில்
பயனுகர்ந்துயிர்ப்பயிர்க்கெலாமின்னருள்பணிக்கும்
புயலையேநிகர்சூதமாமுனிவரன்போந்தான்.    20

 

202    அடைந்தவண்ணலையாயிடையந்தணரடியேம்
மிடைந்தவெல்விடாய்க்காய்ந்துநூற்கடலெலாமீண்டே
கடைந்துதெள்ளமுதளிக்குமெங்கருணையம்பொருப்பே
மிடைந்தசெல்வமேயென்றனரெதிர்கொடுவிருப்பால்.    21

 

203    அருக்கியாதிதந்தாய்மணிப்பீடமிட்டதன்மீ
திருத்தியெம்பிரானீண்டெழுந்தருளினையென்னா
விருத்தவேனில்வாய்க்கருவிமாமழைத்துளிவீசக்
குருத்தசெந்நெலிற்களித்தனரோருரைகொடுத்தார்.    22

 

204    மறுவின்மூவறுபுராணமும்வளரிதிகாசத்
திறனுமோதினைபலதருமாதியுந்தெரித்தாய்
உறுதிவாய்ந்திலாவெமக்கடிகேண்மனத்துண்மை
பெறவழங்கியபற்பலதலங்களும்பேசின்.    23

 

205    வேறு

 

உடனுறைமடவார்யாருமோம்புநரின்றிவாடும்
மடவரன்மகப்பேறெய்தவல்விழிமூடிமற்றை
இடவிழிநோக்கிப்போற்றியெந்தையாயானதேனை
அடல்வினையறுப்பதாங்கொல்லதுசிராப்பள்ளிக்குன்றம்.    24

 

206    நொய்யகாற்சிலம்பிமாட்டுநூலிழைப்படலஞ்சாய்க்கும்
வெய்யகால்யானைமாட்டுமொருநிலைவெளிப்பட்டோங்கும்
அய்யநீர்த்திரளாயென்றுமமர்ந்தவானைக்காவென்று
பொய்யிலாத்திருநீறிட்டபுரிசைசூழ்கிடந்ததொன்றே.    25

 

207    மெய்யாறு முகக்கோன்றந்தைமேதகுவதகுவடிவும்வாழ்வும்
கய்யாறுபிரம்புங்கோயில்காவலுஞ்சுடிகைப்பேறும்
உய்யாறுபெறுவானந்தியொருவன்முன்பணிந்ததுண்டால்
அய்யாறுமாறுநீங்குமருளாறுந்தருமையாறு.    26

 

208    காரகன்மிடற்றுமுக்கட்கனிசெவிகொடுத்துத்தாழத்
தாரகப்பொருண்மையோதுஞ்சண்முகத்தொருவன்கோட்டம்
பாரகப்பரிக்குஞானப்பண்ணவர்துதைந்துபோற்றும்
ஏரகமென்னுந்தெய்வவின்பவீடளிப்பதொன்றே.    27

 

209    குடம்பொலிமுனிக்குமன்றற்கோலமுங்காட்டியெம்மான்
இடம்படுகோவணங்கொண்டியலமர்நீதியுய்ய
மடந்தையைமணியைப்பொன்னைமகவைமற்றுளவையெல்லாம்
அடங்கலுஞ்சூறைகொண்டாங்களித்ததொன்றுளதுநல்லூர்.    28

 

210    பன்னருவினைகளெல்லாம்பலதலஞ்சாரப்பாறும்
என்னநீள்சுருதியாவுமிசைத்திடுந்தன்பாற்செய்த
துன்னருவினையும்யாண்டுந்தொலைவுறாவினையுமெல்லாம்
தன்னகத்தெளிதுதீர்க்குந்தலங்குடமூக்கொன்றுண்டே.    29

 

211    பத்தியங்கிலரேனுங்கண்படைகொள்ளினன்றேயோரெண்
சித்தியும்பெறுவர்மேலுஞ்சிவனருள்பெறுவரென்னா
முத்தியங்கனியைவேட்டுமுழுமணிச்சுடிகைச்சேடன்
துத்தியஞ்செய்யுநாகீச்சுரமொன்றுதுலங்கிற்றம்மா.    30

 

212    பூசநீர்ப்படிந்ததொண்டர்பூங்கழற்றோய்ந்தசின்னீர்
பாசநீருடலிற்றோயப்பரித்தநீர்வேணியான்றன்
வாசநீரிருக்கவென்னாவரன்றருமறலருஞ்சாயற்
கேசநீர்ப்பொன்னிசூழக்கிளரிடைமருதொன்றுண்டால்.    31

 

213    கோவோடுபுலவரீண்டிக்கூன்பிறைக்கோட்டுநல்லான்
மாவடிவெய்திப்போற்றமதிநுதலதிதியீன்ற
தேவடுசெறுநர்ச்செற்றதிரிபிலைம்படையான்வைகும்
ஆவடுதுறையென்றுண்டாலரும்பதியொன்றுமாதோ.    32

 

214    மற்றாலம்புனைந்தோன்வேப்பங்கண்ணியான்வயங்குசோதி
பற்றாலம்புயத்தைவென்றுபன்னிறந்தருதாட்சென்னி
பொற்ராலம்போற்றுமந்தண்பொன்னிசூழ்துருத்தியாய
குற்றாலமென்னமன்னுங்கோநகரஃதொன்றுண்டால்.    33

 

215    முதுசெல்வச்செழியனேவமுதல்வன்மண்பரித்தவாற்றால்
அதுவையைக்கரைக்குவார்த்தையாயதென்றமலனேற்ற
புகுவெள்ளப்பொறைதான்கொண்டுபூந்திரைசிவிறிப்போற்றும்
மதிபுனற்பொன்னிசூழுமணியெயின்மயிலையொன்றே.    34

 

216    உடம்படுமாயைபுக்கவுயிரெலாந்தமிழான்முத்தித்
தடங்கரையேற்றுஞானசம்பந்தர்துறைகாண்மூதூர்
முடங்குளைமடங்கலானோன்முதுபவந்தேறுமுச்சீர்க்
கடந்திருமறையோர்போற்றுங்கடவுண்மாநகரமொன்றே    35

 

217    கள்ளியல்பொழில்சூழிஞ்சிக்கார்சிராநனியேகாட்டுப்
பள்ளிநான்கினுமிக்காயபள்ளிபூம்பள்ளியானும்
வெள்ளியந்திரைபுரட்டும்வெண்கடற்பள்ளியானும்
தெள்ளியராதப்போற்றுந்திருச்செம்பொன்பள்ளிமாதோ.    36

 

218    தென்னவன்கூனுங்காமன்சிலையுடைக்கூனுமாற்றும்
மன்னவனடியார்க்கன்பனானவனரக்கியாய
கன்னிமாதிரங்கக்கூனிக்கலையற்குநிமிர்ந்துகாட்டும்
மன்னவன்கருணைகூர்ந்தவளநகரதுபனைந்தாள்.    37

 

219    கருக்கொடியொழிக்கும்பொன்னிக்கரைக்கொடியடைந்துகும்பன்
மருக்கொடிமலர்கடூவிமனமிறுமாப்பனின்போல்
உருக்கொடிமும்மையன்பருளரெனவுருவிற்காட்டிச்
செருக்கொடியகலக்காத்தான்றிருக்கோடிகாவொன்றுண்டே.    38

 

220    விருப்பங்கூர்ந்துமையாளேத்தவெள்ளியங்கிரியிலென்றும்
இருப்பங்கேயென்னமேவுமிறையவன்வினைவெங்கோடை
உருப்பந்தீர்த்தருளுஞானவொண்முகிலானோன்வாழும்
திருப்பங்கூராயதொன்மைச்சிவலோகநகரொன்றுண்டால்.    39

221    கானமர்கடுக்கைவேணிக்கடவுளேயடல்குன்றாத
மானமந்திரத்தாலேனைமருந்தினாலுலகில்யார்க்கும்
ஊனவல்வினையுமோவாவுற்பவவினையுந்தீர்க்கும்
மானபுள்மறைபூசித்தவகன்பதிவேளூருண்டால்.    40

 

222    போதியன்முலைதொட்டுண்ணாமகவைத்தம்பொழிபாலூட்டும்
நீதியன்னையர்போன்முக்கணருளைநீடுயிருண்டுய்ய
மாதியல்பாகனன்பால்வகுத்தமுக்குளத்தினோங்கும்
ஆதிவெண்காடாமாதியம்பலமென்பதொன்றே.    41

 

223    பண்ணவந்தகக்கூவேனற்குயின்மொழிப்பேதைபாகத்
தண்ணல்கண்ணனல்சான்றாகவாழிநீர்க்கிழவன்பொன்னித்
தண்ணலங்கொடியைவேட்டசங்கமத்துறைநீராடி
விண்ணலங்கனிந்தோன்போற்றும்வியன்சாயாவனமொன்றுண்டால்.    42

 

224    எனவருஞ்சையவோங்கலிடைநிகழ்பிரமகுண்டம்
முனமதாய்க்கன்னிப்பொன்னிமுயங்குசங்கமமீறாக
மனவுடைப்பணியானூர்மான்மியமெலாம்வகுத்தாயெந்தாய்
உனதுழையடியேங்கேட்பவுரைத்ததொன்றுண்டுமேனாள்.    43

 

225    மற்றதன்முன்னும்பின்னும்வரம்பறுகாதையெல்லாம்
சொற்றனையெம்மனோர்க்குத்துளக்கறமுன்வினாய
பெற்றியையளித்தாயல்லைபெரிதுறவிழைந்தவெம்பால்
முற்றுறவருளல்வேண்டுமுழுதொருங்குணர்ந்ததொல்லோய்.    44

 

226    வேறு

 

திருத்தலத்திலுத் தமமுமெய்த் தீர்த்தத்துத் தமமும்
கருத்தர் தம்மிலுத் தமனையுந் தனித்தனி கரைந்தாய்
நிருத்த னேகுரு லிங்கசங் கமமென நிலைபெற்
றருத்தி வீடருள் பதியுமொன் றுண்டென வறைந்தாய்.    45

 

227    மூல வல்வினை யிருள்கெட வருணிலா முகிழ்க்கும்
சீல வெண்கதிர்த் திங்களே யந்நகர்ச் சிறப்பை
ஏல வெங்களுக் குணருமா றருளுதி யென்னாக்
கால மும்மையு மொருங்குணர் சவுனகன் கரைந்தான்.    46

 

(புராண வரலாறு முற்றிற்று. ஆ திருவிருத்தம்- 227)
---------------------------------

 

5. முதலாவது தலவிசிட்டவத்தியாயம். (228-275)

 

228    மறுவின்மாதவனுவற்சியைச்செவித்தொளைமடுத்துத்
தெறுசினத்தழலவித்தமாமுனிவரன்செவ்வே
உறுமுளத்தில்வைத்தோதியிலுணர்ந்தனனறனக்கோ
ரிறுதியில்லவனெழிலுலாங்காழிமான்மியமே.    1

 

229    வேறு
குரவுவார்சோலைக்கழுமலவாணன்குரைகழல்வியப்பமுமாங்கண்
உரவுநீர்ப்பொன்னிவியப்பமுநினைந்துள்ளுருகிமெய்சிலிர்ப்பவாய்மலரக்
கரமலர்குவியவறிவறியாமைகடந்தபூரணப்பெருங்கடலில்
பரவசமடைந்தமுனிவர்தம்பெருமான்பகருவானிகரிலாதனவே.    2

 

230    முன்னுமேறகதியைத்தருபலதலனுமொழிந்தனமுதல்வனேமூன்று
வன்னமாய்க்கதியைத்தருதலமொழிந்தாமற்றுநீர்விழைதலாலதன்சீர்
உன்னுமாறரிதாமேனுமெம்மறிவாலுணர்ந்தவாறுரைத்துமென்றுரைத்தான்
மன்னுநான்மறையாலெண்ணிலாரணங்கள்வடித்தவனடித்துணைமனத்தான்.    3

 

231    உருண்டபொறபழுத்தபொரியரைக்கருங்கோட்டுயரியவெதிரிகாச்சிரமத்
திருண்டபொறகளத்தான்கழுமலத்தியலையெம்முகத்தளித்தநாளெவையும்
தெருண்டநங்குரவனெவர்க்குமிவ்வியலைச்செப்பலையென்றனன்பவத்தால்
வெருண்டபக்குவத்தீர்க்குறைத்ததுமெமக்காம்வேட்டலுநுமக்கரனாமால்.    4

 

232    புரையறுதவத்துமுனிவிர்காளந்தண்பொன்னிசூழ்வரக்கிடந்தமையால்
லிரைமலரங்கன்மிலைந்ததுபோன்றும்வினைக்குறும்பேறொணாவியப்பால்
கரைபொருதலைக்குநீரரண்போனறுங்கடவுளப்புலன்கெழுகோட்டு
வரையகத்துறலாற்கயிலையேபோன்றும்வயங்குமான்மணிமதிட்காழி.    5

 

233    வண்டுழத்திரந்தகமலமண்டபத் துவானவன்மலர் தலையுலகம்
பண்டுகைம்மலர்தூய்ப்பழிச்சியவாற்றாற்படைத்திடற்களித்தும்பன்னீர்
மொண்டுகொண்டணைந்துகொண்டலாட்டயருமுரிதிரைக்கலலெழூஉங்கடை
நாள், மண்டுபொற்றோணியுருக்கொடுகுடிலைவலியடைந்துவுமிந்ந்கரே.    6

 

234    நீடுந‌ல்லறங்களிழைத் துளோர்கயிலைநேர்வரீ தருமறைநெறித்தே
தேடுமவ்வறத்துக்குறுபதமளிப்பான்சிவனலாற்றேவரில்யாரே
நாடுமச்சிவனேமூவுருவாகிநற்றலம்பற்றினனென்றால்
கூடுமோவிதறகுவேறொருதலத்தைக்குவலயத்திணையெனக்குறித்தல்.    7

 

235    உறுவரிலுயர்ந்தபராசரன்மேனாளொண்மலர்க்கிழவனைமறைநூல்
நெறிபிறழ்கலியின்வலிதவவலிக்குநெடுந்தலநிகழ்த்துகென்றிரப்ப‌
அறிவகேளெம்மான்கயிலையிலுமைக்கீதறைவுழியறிந்தயான்றெளிய‌
பெறுதலமெதையுங்காழியுமிருபாற்பிறங்கிருதட்டினும்வைத்தே.    8

 

236    துலையிடைநிறுப்பவிந்நகர்க்கவைதாந்தொகுபதினாறிலோர்கூறு
நிலைபெறாதொழியவெற்றினுமோங்கிநிலவியதடியகநெறித்தாய்த்
தலைமையெய்தியதுசந்ததமென்போற்சதுமுகரளவிலார்பணிந்த‌
துலைவறுதவத்தோய்நீயவணேகினுன்னியவெய்துமாலொருங்கே.    9

 

237    எனவருட்பனுவலாட்டிதன்கேள்வனியம்பலுமனையவன்விடையால்
மனவலிகடந்தபராசரன்றொன்னாள்வந்தரும்பூசனைபுரிந்து
சினவிடைப்பாகன்றிருவருள்பெறலாறறிகழ்ந்தகேத்திரவரமெனும்பேர்
பனவரேத்தெடுப்பக்கொடுங்கலிவலியைப்படுத்திமீதுயர்ந்ததிப்பதியே.    10

 

238    ஆதிதெய்விகமேயாதிமுத்துயரவடவியைவடவைபோற்காய்வ‌
தீதிடைவதிவோரருந்தவந்தானம்யாகநற்பலன்களெய்துவரால்
ஆதலினதணைகலார்மேலாமரும்பதமணைந்திடாரணைந்தார்
போதருமறிவாலழைத்தவல்வினைகள்போகுமாலிரவிமுன்பனிபோல்.    11

 

239    விரதமெண்ணிலவுமெண்ணிருதானவிகற்பமும்வேள்விகள்பலவும்
சரதமாமறைநூற்பயிற்சியநாளுந்தவரின்முத்தழலுஞற்றுதலும்
பரவுமட்டாங்கயோகமுமளிக்கும்பலனெலாமரியுரிபோர்த்த‌
வரதனென்றொருகாலுன்னினர்பலத்தைமானுமோவணுவளவேனும்.    12

 

240    சேயமென்கமலத்தயன்முனங்கொணர்ந்ததெய்வதாருவைமுறைவணங்கித்
தூயமென்றளிரைமுடித்துளோரிடந்தொடருறுபிணிகளுமுடிப்பார்
ஆயதன்னடிமண்ணுதன்மிசையணிவாரும்பெறன்முத்திவீடணிவார்
பாயதண்ணிழற்கீழோர் மனுக்கணித்தோர்பலமனுச்சித்திநண்ணுவரால்.    13

 

241    வீதியினங்கப்பிரதக்கணம்புரிந்தோர்விமலனோடளவளாயிருப்பார்
நீதியின்வணங்கிவணங்கியோநடந்துநிகழ்வலமொன்றொருகோடி
போதுதுவலமென்றோரடிநடக்கிற்புகன்மகமாயிரகோடி
மாதியல்பாகற்குவப்புறுபூசைவலஞ்செயலன்றிவேறுளதோ.    14

 

242    கற்பநாண் முடிவி னரும்புறு மனம்போற் கலந்துமென் போதலர் மணம்பொல்
உற்பவ நாளி லோங்கியுங் காழி யுயர்சிவன் விளங்குமன் னவன்பால்
பொற்புறு மாய னாதிமன் னுயிர்கள் புக்கொடுங் குறுமுய ரிலிங்கத்
தற்பமின் மாயை ஒடுங்குமுற் பயத்தி னடங்கிய முறையுதித் திடுமால்    15

 

243    ஏந்தெழிற் காழி மான்மிய மனைத்து மியம்பபுறி லாயிர முகத்துப்
பாந்தள்வேந் தனுக்கு யெண்ணில்பல் லுகங்கள் பகறினு முலப்புறா வதனால் 
பூந்துண ரிதழிச் சடிலவா னவனே புலனுறத் தெரிகுவ னல்லால்
ஆந்தனி மறையுந் தெறிவுறா தந்தோ வன்னது சத்திய மாமால்    16

 

244    பிறந்துளோர்க் கருளு முத்தியை யாரூர் பிணக்குறு நிணப்பொதி யாக்கை
துறந்துளோர்க் கருளு முத்தியைக் காசி துணைவிழி களிப்புற கண்டு
சிறந்துளோர்க் கருளு முத்தியைப் புலியூர்ச் சேரவும் பிறந்துளோ ரிறந்தோர்
அறந்தகக் கண்டோ ரனைவர்க்கு முத்தி யருளுமிந் நகர்வியப் பதே    17

 

245    கல்லையன் னவருங் கண்படை கொள்ளிற் கணமரைக் கணவமண் வதியின்
தொல்லைவல் வினைகள் பரிதிமற் பனிபொற் றொலையபட் டிரியல்போல்
எல்லைகண் டவரு மெல்லைக் டறியா விறையிருட் கடல்படிந் திடலால்
ஒல்லையம் பதிபுக் கவர்க்கே கிளையோ டோங்கலங் கயிலைபுக் குறைவார்    18

 

246    தோற்றமு மீறு முகந்துயிர்க் குயிராய் துணையிலி யாம்பரம் பொருளே
சாற்றரு லிங்க மனமெனக் குரவன் வாக்கெனச் சங்கம முடலென்
றாற்றுமுக் கரண மிவைகொடு மூல மலமதன் மூன்றையு மாற்றி
ஏற்றருங் கதியுந் தரும்பொருட் டன்றே வினிதுவீற் றிருந்ததிந் நகரில்    19

 

247    ஆதலாற் றலங்கட் கதிகமா கியதிவ் வணிநக ராய்பரஞ் சுடரெங்
கோதிலான் முலையே யிலிங்கநல் லுறுப்பே குரவன்மா வதனமன்
றோதலா லிந்தத் தலத்தின்வா ழன்பர்க் கூழ்முறை பணிபுரிந் துள்ளோர்
சீதவான் கொழுந்தணி வேணிச் செம்மலா குவரிது திண்ணம்    20

 

248    ஒல்கலில் பசும்புன் முலையகத் திடினு முடன்மிசை யுறுத்தினு நறும்பால்
பில்குமோ துளியு மிலிங்கமுங் குருவும் பேணினார் பெரும்பய னனைத்தால்
மெல்கிய வறுவகை முகத்தருத் துவரோன் மேனியுங் குளிர்ந்துபான் முலைக்கண்
மல்குமா லதனா லிருபொருட் கூங்கே வதிகுவான் சங்கம வடுகன்    21

 

249    மனமெனு மிலங்கத் தாணவ மாயும் வாக்கெனும் குருவின்மா யைகள் போம்
துணிவின்மெய் யெனுஞ்சங் கமத்தினால் வினைபோஞ் சொல்லிலொன் றொன்றினாற்
நினைவிலோர் கருவி யோர்கரு வியதாய் நிகழ்ந்திடா மும்மலப் பரப்பை
வி¡னவலி தன்னை யித்தலம் போல் மேதினித் தலங்கள்போக் கறியா    22

 

250    அல்லியிண் டையின்கா லிறினுநூ லிறுவ தருமைபோல் யாக்கையிற் றாலும்
புல்லிய பிருவினை போகா போக்கறச் சமநிலை பெறுநாள்
ஒல்லியற் கடலை பிணைகொடு கடந்தாங் குறுகரை காண்டல்போற் கண்டால்
மல்லியன் ஞானம் வரும்பர கதியும் வருமது மன்னுயிர்க் கரிதால்    23

 

251    மூவகை மலமு மூவகை வடிவ முருக்குமித் திருக்கிளர்த் தலத்தை
எவரே நயந்தா ரேனுமேல் வீட்டை யெளிமையி னெய்துவர் யாண்டும்
மாவளந் தருநீர்க் குய்யகா சியும்நீண் மத்திய சிதம்பரந் தானும்
ஆவதிந் நகராலாதலி னிதன்சீ ரறிகுநர் யாரருந் தவத்தீர்    24

 

252    அலம்வரு மிடற்றான் காழியைத் துதித்தா லலமரு மரதந்தைதோய் யகல்வார்
வலம்வர னென்பா னீரண் டிலக்க வலம்வரு பிறவியு மாயும்
பலம்வரப் பணிந்தால் விண்ணில்வா னவர்தம் பலமவர் தமக்குறு முடிக்கீழ் 
தலமுறத் தொழுத ரனைபுண் டீரேழ் தலம்வரு மவரடித் தலத்தே    25

 

253    சாணள வாடை யொருவர்மா லிந்தத் தலத்துற வளித்தவர் தகைசால்
பாணளி மிழற்றும் பசுந்துழா யலகற் பண்ணவன் பதவியைப் பெறுவர்
தோணியா ளுடையான் றிருமுன மொடுகாற் றெழுதெழிற் சஞ்சித மாதி
ஏணிலா வினைப்பே ராழியை நீந்தி யிறையருட் கரையில் வீற்றிருப்பார்    26

 

254    தேசுறு திங்கட் டிருநுத லழகி திருநிலை யழகி தன்றிருமுன்
மாசறு பிரம தடத்துவெண் டிரைக் காலீர்ந் துளி மன்பதை யுடன்மேல்
வீசுற விமல ராவரஞ் செழுத்தை விரிப்பரேற் காசியே முதலா
ஏசறு தலத்தி லிட்டிகள் பலவு மிழைத்தபே றெளிதிலெய் திடுவார்    27

 

255    இகலறு குணத்தாற் கெளிவரும் பிரம லிங்கநே ரிலிங்கமு மிருட்டீர்
அகிலதே சிகனெம் பெரியநா யகன்போ லருட்பழத் தளிந்ததே சிகனும்
பகவனார் முடைவெண் டலைபுனை தண்ட பாணிநேர் சங்கமமப் பொருளும் 
புகலில்வே றில்லை மட்புலத்தினிலும் புலவர்சேர் விட்புலத் திலுமே    28

 

256    வேறு
 

 

பணிப் பெருந்துயில் வானவ ராதியர் பசும்பு லான்முடைநாறும்
கணிச்சி யெம்பிரா னருள்வழி நான்முகன் கண்டவிவ் வண்டத்துள்
இணைக் குமேழ்பெருந் தீவிடை நாவலம்தீவுமற் றிதனுள்
அணிப்பொலங் கிரி யெண்பதிற் றீரண் டாயிர நிவப்பிற்றாய்    29

 

257    முடிப்ப ரப்புமுப் பரனிரண் டாயிர முற்றியன் னதிற்பாதி
அடுப்ப ரப்புரீஇ யன்னபே ரளவதா யுவிரிரு சுடர்சூழ்
வடித்த நிலமுஞ் சிரங்கமும் விடையுமா வரைகளுத் தரங்காண
படிகுண மந்தரம் கிழக்குற விபுலமாம் பரப்பத மேற்காக    30

 

258    இமைய மால்வரை நிடதமால் வாரயொடு மெம்கூடப் பேராண்
அமைய மால்வார தென்தி¡ச தொன்ற விவ் வகவிதழ் பலபூத்துச்
சமையயு மேருவாம் பொகுட்டொடு நீடிரை தவபூதி னிறவேலை
அமையுதி ருந்தடத் தலர்ந்தசெந் தாமரை யாகிய தணிவாய்ந்தே    31

 

259    பொன்பரா வுமிந்நா வலந்தீ விடைபுகன்ற யோசனை யெல்லை
ஒன்பதா யிரம் பரதகண் டத்துமே லும்பர்மா லயனாதி
அன்பரால் மைத்தவ முளைத் தெழுந்தது மளவிலாத் தானங்கொண்
டென்பரா பரனியமுன் மலயமட் டிருந்தன னிவைதம்மில்    32

 

260    கறையகன்றவிக்கருமபூமியினிடைக்காசியேகயையேசீர்
உறைபிரயாகையேதில்லையேகுடந்தையேயோங்குதென்னாரூரே
மறைபழிச்சியகானமேதிருவிடைமருதமேயெனவெட்டா
இறைதருந்தலமிவைகளையதிகமென்றியம்புவபலநூல்கள்.    33

 

261    ஈண்டுநாலிருதலத்தினுமுயர்ந்ததாலித்தலமெவற்றென்றால்
சேண்டயங்குநீர்புதைத்தபேரூழியிற்றிரிபிலாததனானும்
பூண்டவைதிகசைவநாட்டியதமிழ்ப்புதல்வரைப்பெறலானும்
ஆண்டநாயகன்குருமுதன்முப்பொருளாய்வதிதரலானும்.    34

 

262    ஐங்குரோசமட்டெல்லையின்வைகியவழிவுள்ளோரறிவில்லோர்
தங்குகிற்பனபறப்பனதிரிவனதவழ்வனகிடந்தூர்வ
மங்குபுற்கொடியாவையுமயற்புலம்வந்திவணிறந்தோரும்
பொங்குகூற்றடுந்திருவடிநிழலிற்புகுதல்சத்தியமாமால்.    35

 

263    வருபதங்கனைமலைமகன்றந்தையால்வானவர்க்கிறைமாட்சி
ஒருபதம்பெறவுன்பதம்புகலெனுமொலியறுபதம்பாடிப்
பொருபதந்திகழ்கடம்பணிதடம்புயன்புகலிநாயகன்காட்சி
தருபதம்பணிந்தைம்பதம்பெற்றனன்றறபதம்பெறவிண்ணோர்.    36

 

264    துகிருலாஞ்சடையலமரப்பணித்தொடைதுயல்வரக்குழையாட
வகிருலாம்பிறைவயங்கவின்னருணகைவதனமண்டலம்பூப்ப
நகிலிளங்கொடிகாண்வரவாரணனரைமுதுதலைகொய்த
உகிருலாங்கரத்தொருவனிப்பதியிலன்பொடுங்குனித்தனன்மேனாள்.    37

 

265    குன்றிருஞ்சிறையொருங்குறவரிந்தவாட்குலிசவேலிறைமுன்னாள்
வென்றியெண்டிசைத்தலைவருமந்நகர்விடைவலானடிபோற்றி
மன்றவோரொருகடவுளுந்தடமுமவ்வயினிறீஇவழிபாட்டால்
என்றுமேதகவிருந்தனர்வரன்முறையெண்ணில்விண்ணவரோடும்.    38

 

266    வாணிலாமணியிழைத்தபொற்குவட்டினில்வதிந்தருளியதண்ட
பாணிமுன்னமர்பீடமேன்மலர்கடூஉய்ப்பார்க்கவன்றினத்தேத்தி
ஏணிலாவியபுழுகணிந்தள்ளிருளிடத்தவன்றிருத்தாளைப்
பேணினார்க்கொருவறுமைவல்வினையெழுபிறப்பினுந்தொடராதால்.    39

 

267    இயக்கர்கின்னரர்சித்தர்வித்தியாதரரிமையவருரகேசர்
பயங்குமைங்குரோசத்தளவெல்லையும்பலவகையிலிங்கங்கள்
நயக்குமானிறீஇவழிபடவிருத்தலினகரமிங்கிதைமேலோர்
மயக்கமில்லிலிங்காடவியென்றலான்மணலுமவ்வடிவாமால்.    40

 

268    துஞ்சல்போயதெள்ளமுதுண்டேழிசைத்துழனிசூழ்தருநீழற்
பஞ்சிமெல்லடிச்சசிமுலைமுயங்கலாற்பணைப்புயத்தணைதூளை
நெஞ்சினல்லவரருவருத்துறுப்பினானிகழ்வலம்புரிந்தந்தோ
கஞ்சமாதுறையிந்நகர்வீதியிற்கலந்ததூளணிகிற்பார்.    41

 

269    கண்ணகன்றசேட்புலத்தினிற்சிகரிகள்கண்ணுறக்கரங்கூப்பித்
தெண்ணறும்புனல்படிந்துநீறணிந்துருத்திரமணித்தொடைவேய்ந்து
புண்ணியப்பொலன்சினகரம்புக்குமுப்பொருளையுந்தொழப்பெற்றார்
அண்ணலஞ்சரணிழலிடையொன்றியொன்றாநிலையடைவாரே.    42

 

270    விழுதுவிட்டமென்புரிசடையந்தணன்வியன்மணித்தடங்கோயில்
பழுதுபோக்குவோர்புதுக்குவோரிட்டிகைபரப்புவோர்புல்லாதி
உழுதுமாற்றுவோர்மேனிமாசகலுமாறுலகுபூத்தருளன்னை
தொழுதகுந்திருவுத்தரீயங்கொடுதுலக்கநன்மகவாவார்    43

 

271    அரவவேணியன்றிருமுடித்தலத்திலானைந்தமுதொருங்காட்டிற்
பரனருட்கடல்படிந்தினிதாடுவார்பதியிதிற்சிவநாமத்
திரவில்யாமநான்கெவலயும்வரன்முறையெந்தைதாள்பணிந்தேத்தி
விரவுவார்க்கலாதயலவர்ககிடங்கலோமேலரும்பெறல்வீடு    44

 

272    எண்ணிலாதொல்வலிங்கமும்பெயருநல்லெழிற்றடங்களும்வாய்ந்து
நண்ணியோங்குவலிந்நகரிவற்றின் முன்னான்குபுண்ணியமூர்த்தி
தண்ணிலாவியதடங்கண்முன்னான்கபிதானமுந்நான்காக
உண்ணிலாவுமாலிவற்றிறும்பூதெலாமுரைசெயக்கரையின்றே.    45

 

273    தோணியம்புரத்தொடுபிரமாபுரந்தொல்லியறசெழுங்காழி
தாணுவெங்கு ருபுகலிவண்சிரபுரஞ்சண்பைநகரகொச்சை
வேணூர் புரங்கழுமலம்புறவமேர்மிக்கபூந்தராயென்றே
காணுமிப்பெயராறிரண்டையுமுளங்கருதுவாகதிசோவார்    46

 

274    நனியுரைப்பதென்னிழிகுலத்தழிபுலனாறுமென்கொடிமென்றோள்
முனிமுயக்குறவாங்கவன்சிறுமையைமுழுவதுமகன்றோடத்
துனிவகற்றிமூவறுபுராணங்களுந்தொகைவகைவிரியாகத்
தனியெனக்கருள்குருவருட்குருவெனத்தந்ததித்தலமென்றால்    47

 

275    இன்னுமான்மியமெண்னிலகண்ணியதிசைத்தனமிருடீரப்
பொன்னொழுக்கியபுரிசடைமாதவப்பொருப்புறழ்முனிவீர்காள்
கன்னிமூதெயிலிந்நகர்ப்பெயரியற்காரணமீராறில்
முன்னதாகியதோணியம்புரிவரன்முறையினையறைகிற்பாம்.    48

 

(1-ஆவது தலவிசிட்டவத்தியாயம் முற்றிற்று. திருவிருத்தம்- 275) 
-------------------------


2-ஆவது, தோணிபுரமானவத்தியாயம். (276 - 316 )

 

276    என்னவேணிமெளலிச்சவுனகாதிமுனிவர்க்
கன்னவூர்திநிகராயமுதுசூதமுனிவன்
கன்னலஞ்சுவையெனக்கடவுளாரமுதெனச்
சொன்னகாதையதனிற்சிறிதுசொல்லுவனரோ    1

 

277    வெம்புமாயைதிரிவெவ்வினைமணிக்கயிறுசூழ்
பம்பரம்பொரவுழன்றலைபடாதுபரிவால்
வம்பராமுளைமதிச்சடிலமாமுனிவனோ
ரைம்பெருந்தொழிலியற்றுவனுயிர்க்கருளினால்.    2

 

278    மறைவலாளனில்வகுத்துநெடுமாயனிலளித்
திறையுருத்திரனிலீறுபுரிவித்துவினையின்
பொறைமகேசனின்மறைத்துநிறைபோதமுதல்வன்
சிறையுயிர்க்கருளுமைவகையசெய்கையிவையே.    3

 

279    மாசிலிவ்விறைவனாணைவழிவைகுவனவாம்
ஆசிலண்டநிரையெண்ணிலவைகட்கிடனதாய்
ஏசிலாவலையிலேழ்கடலையுந்திவலைபோல்
வீசுமூலநெடுவேலையஃதொன்றுளதரோ.    4

 

280    வேலையன்னதில்விராட்புருடன்மெய்ம்மயிர்தொறும்
பாலெலாமுதுபழம்பொதியுதும்பரமெனச்
சாலவண்டநிரைதங்கநடுநின்றனனிவற்
றேலுமண்டமிதனெல்லையைவிளம்புவனியான்.    5

 

281    தோமிலாவுலகமீரெழுமைதொக்கவிதனுள்
ஏமமால்வரையிலங்குமிதனைத்தழுவுமால்
சேமநாவலுறுதீவுமதுசேருவரியும்
தாமியோசனைதனித்தனியிலக்கவிரிவாய்.    6

 

282    அறையுமவ்வியலிரண்டெனுமிலக்கமகலத்
திறலியென்றமுதுதீவுமயலிக்குவடிசா
றுறைதடங்கடலுமோங்குமதனுக்கயலிலே
சிறைகுலாமிலவுசேருமொருதீவுமுளதால்.    7

 

283    நாலெனுந்துணையிலக்கமதைநண்ணுமதுவார்
வேலையும்புகலினத்துணைவிளங்குமயலே
சால்புநீள்குசைதயங்குமொருதீவுமருகே
ஏலுநெய்க்கடலுமெட்டளவிலக்கமுறையே.    8

 

284    அதனிரட்டிகிரவுஞ்சமடுதீவுமதுசூழ்
ததியுடைக்கடலுமத்துணைதயங்குமதன்மேல்
முதியசாகமுளதீவுமலைமோதுநிறைபால்
உத்தியுந்துணைதனித்தனியிரட்டியுறுமே.    9

 

285    மண்டலம்புதையிருட்படலம்வாரிநுகரும்
சண்டபானுவுதயந்தருவதுந்தனிவலங்
கொண்டுமேல்கடல்குளிப்பதுமதற்குளெனவே
பண்டைநான்மறைபயின்றவர்பகர்ந்தனரரோ.    10

 

286    மற்றதற்கயல்வயங்குவதுபுட்கரமெனச்
சொற்றதீவுமதுசூழ்வருபுனற்புணரியும்
முற்றும்யோசனைகண்முன்னதினிரட்டியனவாம்
பெற்றயோசனையிலக்கவகைபேசியிடினே.    11

 

287    வேறு

 

அயலிலீரைந்துகோடியகன்றபொற்பூமியப்பால்
உயர்பதினாயிரத்தியோசனையாழிவெற்பாம்
பெயர்வருமயலினீண்டபெரும்புறக்கடலினெல்லை
இயலுமோர்கோடிமேலுமிருபத்தேழிலக்கமப்பால்.    12

 

288    மய்யாருமிருளுலோகம்வகுத்தயோசனைகள்கோடி
அய்யேழினொடுபத்தொன்பானிலக்கநான்கயுதமாமால்
எய்யாதவண்டப்பித்திக்கணங்கோடியெல்லையென்ப
மெய்யார்யோசனைகளின்னவிரியினித்தொகையுஞ்சொல்வாம்.    13

 

289    வளமலியம்பொன்மேருமத்திதொட்டண்டப்பித்தி
அளவும்யோசனைகடேரினைம்பதுகோடியாக
விளைதருகிழக்கினெல்லைவிரித்தனமேனைமுன்று
தளர்வருதிசையுமிவ்வாறகன்றனசாற்றுங்காலே.    14

 

290    தெரிவுறுவகலநூறுகோடியோசனைசெறிந்த
விதிபுவிக்குக்கீழ்தொட்டுமேன்மட்டுநூறுகோடி
துரிசறுமுயர்வாமண்டமீங்கிதைத்தொலையாவெள்ளப்
புரிபுறக்கடல்பாய்ந்தெற்றிப்புகுந்ததோரூழிநாளில்.    15

 

291    அலையினமலையிற்பொங்கியண்டகோளகையைமுட்டி
நிலைகுலைத்தடுக்கையெல்லாநெரிநெரித்தார்ப்பினோங்கித்
தலைபடுஞ்சுழியாலெட்டுத்தடந்திசையொடுங்கவோரெண்
கொலைமதக்களிறுஞ்சாயக்குமைத்ததுமுதுநீர்க்கொள்ளை.    16

 

292    ஆழிமால்வரையுமோரெட்டாகியவரையுஞ்செம்பொன்
ஊழிமால்வரையுமேல்கீழுயரியவரையுமாநீர்ப்
பாழிவெண்டிரைகள்பாயப்பொடிந்தனபடிந்தபல்வே
றேழிரண்டுலகில்வாழெவ்வரையுமவ்வரையின்மாதோ.    17

 

293    நாளறாவலிசான்மோட்டுநாலிருதிசையினின்ற
கோளராவினமுநாளுங்கோளும்விண்ணோரும்விண்ணில்
வாளறாக்குலிசனாதிமாதிரத்தவருஞ்செம்பொற்
றூளறாத்தருவும்வேறுசுடர்களுமிரிந்தமாதோ.    18

 

294    பேர்வனபறப்பநிற்பபிறங்கிருணிரயந்தம்மில்
ஆர்வனநீரில்வாழ்வதத்துவவரவமாதி
ஊர்வனதவழ்வவெவ்வேறுலவிலாமனிதராகிச்
சார்தருமுயிர்களெல்லாஞ்சாய்ந்தனதேய்ந்தவன்றே.    19

 

295    கமலநாரணனொடுங்குங்கடையினுமுதல்வனாவான்
நிமலனேயன்றிவேறுநிலையுநர்யாரேயார்க்கும்
தமரசாகரநீர்மோதத்தம்முயிர்தேம்பினாரை
அமரரென்றுறுரைப்பாரன்னோர்பெற்றியையறியாரன்றே.    20

 

296    சொல்விரிபொருள்கடாமெத்துணையவத்துணையவெல்லாம்
வல்விரைந்தழியவாங்கண்மன்னுயிரீட்டம்யாவும்
மெல்லியமானமாயையிடத்தவாயொடுங்கலோடும்
அல்விரவியதாலெங்குமாழிநீர்பரக்கமாதோ.    21

 

297    மின்கிளர்ந்தனையாங்கேவிழுங்குறுமேகமென்ன
முன்குறித்தண்டந்தொக்கபொருளெலாமுரிந்துமாயை
தன்கணேயொடுங்கிப்பன்னாட்டகைந்தனதகைதலோடும்
வன்கறைமிடற்றுத்திங்கள்வகிரணிவரதனன்பால்.    22

 

298    நூக்கியவொருவனாட்டநுடங்குபாவையினைச்சின்னாட்
போக்கியமற்றெடுப்பான்போன்றுபுவனகோடிகளைமுற்றும்
தாக்கியதலைவன்றானேதன்னருள்வலியான்முன்போல்
ஆக்கியதுணிந்தானெல்லாமளித்தழித்தாக்கவல்லான்.    23

 

299    நஞ்சுமிழுரகப்பூணுநகைநிலாக்கொழுந்தும்வாசப்
பைஞ்சுடரிதழித்தாரும்பாய்புலியதளுமின்றி
மஞ்சுறழ்கருமென்கூந்தன்மாதொடுமருவியெண்ணெண்
துஞ்சருங்கலைகளென்னுந்துலங்குபொற்கலைகடாங்கி.    24

 

300    பருமையாய்ச்சிறுமையாகிப்பதங்களாய்வண்ணமைந்தாய்
நிருமலமாய்முத்தேவாய்நிகிலமாய்க்குணமோர்மூன்றாய்
இருமையாயெழுத்தாய்நாதவெல்லையாய்வேதமாதி
பெருமைசாலொலியாய்நின்றபிரவணந்தோணியாக்கி.    25

 

301    கரியநாரணனாலந்தண்கமலவாகனனாலேனை
உரியநான்மறையான்மிக்காருளத்தினாலளவையாலும்
தெரிவிலாவொளியாய்நின்றசின்மயன்றானேதெய்வப்
பெரியநாயகனென்றோதும்பேர்புனைந்துருவமெய்த.    26

 

302    ஏறினானென்பவெம்மானெழில்கனிந்தொழுகுமேனி
தேறினவிமலமாயதிவளொளிக்கற்றைசுற்ற
மாறினவிருள்கண்மேனாண்மலைமகளமுதமாந்தி
ஊறியஞானச்சேயாலொதுங்கமணிருட்டுப்போன்றே.    27

 

303    பெய்யுநீர்த்திரைசுருட்டும்பிரளயவத்திநீத்தத்
தையனாண்மலர்த்தரிளூன்றியருள்கனிந்தொழுகவூர்ந்தான்
பொய்யிலாமறையினீறும்பொருப்பிறைமடந்தைகண்ணும்
மையிலாவுரிமைத்தொண்டர்*ன்முமேயனையதோணி.    28

 

304    தோட்டமுண்டகத்துப்புத்தேடொழில்புரியண்டகூடம்
பாட்டகன்றிரைநீர்ப்பவ்வப்பாயலையலைப்பவெற்றுண்
டீட்டமாம்பொருள்கள்யாவுமிறுதிகண்டிரங்குமுந்நீர்
கோட்டமேலூர்ந்தானன்பர்குணத்துமேலூருங்கோமான்.    29

 

305    அருமைசாலறத்துக்கென்றுமழிவிலையென்றமேலோர்
பொருண்மையைவிளக்கியண்டம்புறக்கடன்மடுத்தஞான்றும்
இருமைசாலுயிர்கள்பன்னாளிழைத்திகலெறிந்ததெய்வத்
தருமமேவடிவாய்நின்றதலத்தரசிதனைக்கண்டான்    30

 

306    காண்டலுமுவகைதூங்கிக்கரமலரசைத்துநோக்கா
நீண்டபேரண்டமுட்டிநிமிர்பிரளயத்துஞ்செவ்வே
பூண்டதோரிறும்பூதுன்னிப்புவனகோடிகளிலீதே
ஏண்டகுமூலாதாரகேத்திரமென்றான்வள்ளல்.    31

 

307    காலமிதாகக்கோடிகதிர்புரையுருவத்தாதி
மூலகாரணனைமாநீர்முகட்டிடைக்கண்டான்மேலைக்
கோலமாதிரமுங்கோட்டுக்கோட்சுறாவேறுஞ்சோதிப்
பாலதாந்தரளத்தாரும்படைத்துளவருணப்புத்தேள்.    32

 

308    ஒண்மலரடிச்செஞ்சோதியுண்மலரென்னவாய்ந்த
கண்மலர்பதித்துநீண்டகரமலர்குவித்துவாயால்
பண்மலர்புகழ்ச்சியோதிப்பனிமலர்த்தாண்முன்வீழ்ந்தான்
விண்மலருடுமினன்னவெண்மணிமுத்தமாரி.    33

 

309    சுருக்கமின்முளரியன்னதுணையடிபணிந்துபோற்றத்
திருக்கிளர்கடைக்கணோக்காற்றெண்டிரைக்கடல்வாழ்வானை
அருட்கடலாழவைத்தானகந்தைவேரரிந்துளாரைக்
கருக்கடல்வீழாதேற்றுங்கருணையங்கடலான்றானே.    34

 

310    கணத்திடையெயின்மூன்றட்டகண்ணுதற்சாமிபின்னர்க்
குணிப்பிலாவண்டஞ்சிந்துங்கொள்ளைநீர்வெள்ளஞ்சூழ
மணத்தபூங்குழலாளோடும்வன்பிறத்தம்பியூடே
தணிப்பிலாதமர்ந்தானின்னதலத்திடையளப்பில்காலம்.    35

 

311    விரிதிசைபுரப்பானெட்டுவியன்கணத்தலைவர்க்கேவிக்
கிரிபுரைதண்டமேந்திக்கேத்திரபாலனாதி
புரிசடைமுதல்வர்சூழ்ந்துபுறந்தருந்தோணிமேற்கொண்
டரில்படாதுலகங்காக்குமன்னையோடிருந்தானெந்தை.    36

 

312    முழுமலாமுளரிப்புத்தேண்முடிவுநாள்காறுமாநீர்
அழுவமுற்றிருந்தானுன்னவாசறவறந்ததன்னான்
விழியனலுண்டதோநாள்வேற்றுமைகுடித்ததேயோ
மழுவலான்விளையாட்டென்னோவிளம்பறா**நீத்தம்.    37

 

313    ஏணிலாத்தெய்வதங்களிறினுமோரிறுதியின்றிப்
பேணிவீற்றிருக்குந்தெய்வப்பெரியநாயகனாமெந்தை
தோணிமேல்வைகுமாற்றாற்றோணியம்புரமீதென்றே
காணியவிருந்ததின்னுங்காரணப்பேர்வேறுண்டால்.    38

 

314    காமருவருடைநள்ளிகலைதுலையிரவிதோற்றம்
தேமலிசிலையிற்செங்கைசிவநிசிதெறுதேளாரல்
ஆமெழுதினமுமெந்தைக்கணிநறும்புழுகுமன்னைக்
கேமுறுசாந்துஞ்சாற்றினெவையவர்க்கரியமாதோ.    39

 

315    பதனறாமணிவித்தென்றும்பயன்படுவிளைவுகுன்றா
முதனிலம்புக்காலென்னமுதக்குறைவறிஞர்பேணும்
விதமலிவிரதந்தானம்வேள்விகண்மனுக்கண்மற்றும்
இதமலிந்தொன்றுகோடியெனத்தருந்தலமீதொன்றே.    40

 

316    மங்கலம்பொலியுமிந்தத்தலத்திலைம்பதத்தைவாழ்த்தும்
அங்கவரன்றோசெந்தோட்டம்புயனிழலுமாழிப்
புங்கவனிழலுமந்தண்பூந்தருநிழலுமேவார்
திங்களங்கண்ணியெம்மான்சேவடிநிழலொன்றல்லால்.    41

 

2-ஆவது. தோணிபுரமானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம்- 316.
---------------------


3 -ஆவது. பிரமபுரமானவத்தியாயம். (317- 366)

 

317    பொங்காழிசுற்றவொருதோணிபெற்றபுரமான்மியத்தினியல்போல்
எங்காதன்மிக்கபிரமாபுரத்தினியலுந்தெரித்தருளென
அங்காதரத்தினுரவோர்வியப்பவறவோனுரைத்தமுறையே
பங்கேருகத்துமுனிவன்பணிந்துபலனுண்டகாதைபகர்வாம்.    1

 

318    மங்கும்பிறப்பினழியாதணுக்கள்வழிகண்டுமுத்திபுகுவான்
பொங்கும்படைப்புமுதலைந்தொழிற்செய்புரவென்பதொன்றுடைமையால்
எங்கும்புதைத்தபுனல்வற்றவண்டமிசைவிக்கவெண்ணுமிறைவன்
தங்கைந்துசத்திகளினன்புவைத்துநெடுமாயைதந்துதகைவால்.    2

 

319    நாதாதிதந்துநழுவாதமந்திரபதம்வன்னநல்கியதனின்
மீதேகலாதிநிலநீரசுத்தவிரிதத்துவங்களுதவிப்
போதாவிரட்டைவினைசேதனங்கள்புகுமாறுசெய்துமுறையே
கோதாடுமும்மைபெறுதேவர்மும்மைவினைசெய்யவென்றுகுறியா.    3

 

320    குலநான்மறைக்குமதலோனைமிக்ககுணராசதத்தின்வருவித்
தலமேறுசாத்துவிதமாகுணத்தினடலாழிவெற்பையருளி
வலமேறுகொற்றமருவானைவெற்றிவளர்தாமதத்தினுதவி
உலவாதமைத்திநெறியாலளித்தியொழியாதொழித்தியெனலும்.    4

 

321    அணியம்புகத்துமலரோனவர்க்குளடியேனமைக்கவடிகேள்
துணியென்றதற்கோர்வலியில்லையெந்தைதுணையுண்டெனிற்சிறுமைசால்
அணுவொன்றுவெற்பினுருவாகும்வெற்புமணுவாமதற்கருமையே
பணியென்கணிட்டபடிசெய்வலாதிபகவாவருட்கணுளதேல்.    5

 

322    மற்றின்னகூறுமறையோனையண்ணன்மகிழ்வெய்திமாயைவழியில்
பற்றின்றியெங்குநிறைவாய்நிறைந்தபரமொன்றுநித்தமிடையே
உற்றுள்ளயாவுநிலையாவெனாநல்லுணர்வாலுணர்ந்தவொருநீ
முற்றும்படைக்கலுறுசத்தியின்றிமுடியாதுனக்குமதுவே.    6

 

323    அச்சத்திதானுமெனதேவலின்றியணையாதியானுமடைவே
இச்சிக்கிலின்றியணையேனுளத்திலெனையெய்துமாறுவினையைக்
குச்சித்துமூலமறையாகமஞ்சொல்குறியேமனுக்கள்வழியால்
நச்சிப்பராவுமவர்பாலிருப்பனானென்பதொன்றுமறினே.    7

 

324    அம்மந்திரங்களெழுகோடியாகுமவையிற்சிறந்துளனவாம்
மெய்ம்மந்திரங்களொருநூறும்வேதவிதியிற்சிறந்தவையாம்
செம்மந்திரங்கள்பலவற்றிலாதிதிருவைந்தெழுத்ததிகமால்
இம்மந்திரத்தின்வலிபெற்றிசத்தியெவையும்படைத்தியெளிதே.    8

 

325    நந்தாமலிந்தமனுவைம்பதத்தினடைபெற்றியங்குமவைதாம்
ஐந்தாவிளங்குபதிசத்தியாவியபிதானமாமலமெனா
ஐந்தாமெழுத்தின்முதலீரெழுத்துமதன்மேலெழுத்துமதன்மேல்
முந்தாமெழுத்துமதன்மேலெழுத்துமுறையேகுறிக்கொண்மறையோய்.    9

 

326    மூதண்டகோடிவகையிற்பிறத்தன்மூதண்டகோடிவளர்தல்
பேதுண்டுசாய்தல்வழிகண்டணுக்கள்பிணியுண்டமும்மைமலமும்
கோதுண்டுபோகவறியாதறிந்தகுணவாரிமூழ்கன்முதலா
ஓதிங்கனைத்துமாமென்றிருத்தியோரைந்தெழுத்திலெனவே.    10

 

327    அம்போருகத்துமுனிவன்பராவியவைகூறுமண்ணலடியில்
பைம்போதுதூவியடிநீழனின்றுபரநாதபோற்றியடல்சேர்
வெம்போதகத்தினுரிதோலசைத்தவிடையூர்திபோற்றியெனையாள்
செம்போதபோற்றியருளாளபோற்றிசிவபோற்றியென்றுதொழுதே.    11

 

328    அல்லைப்பொறுத்துமயலிற்குளிக்குமளியேன்மனத்தையுருகாக்
கல்லைக்கரைத்தமொழியைப்பணித்தகனிவாயபோற்றியிமையத்
தொல்லைப்பொருப்புவில்விட்டரண்கடுகளாய்விளைத்துமடியான்
வில்லிட்டதற்குவடுவிட்டசென்னிவிறல்வாளிபோற்றியெனவே.    12

 

329    பலகாலெழுந்துபலகால்விழுந்துபதமேலிறைஞ்சியருளால்
உலகாதியுய்யவெனையுய்யஞானவொளியாய்நிறைந்தருளுநின்
மலர்வாய்திறந்தமனுவானதொன்றைவருமாறிரங்கியருளென்
றலரோன்விளம்பவிளமூரல்கொண்டவமுதானனன்கருணையால்.    13

 

330    கொய்யாதலர்ந்தவனசங்குவிந்துகுமுதம்புதைத்தவியல்போல்
கய்யான்மணத்தகனிவாய்புதைத்தகமலாலயன்செவியினில்
செய்யாமறைக்குமுதலாகநின்றதிருவைந்தெழுத்துமனுவைப்
பொய்யார்பிறப்பினலையைக்கடத்துபுணையைப்புகன்றருளியே.    14

 

331    உன்போலநேகர்தலமீதிறைஞ்சியொளிபெற்றமூலவுருவில்
முன்பூசைசெய்துதடமொன்றுகண்டுமுழுமுத்திபெற்றமுறையே
நின்பூசைசெய்துவலியும்படைத்துநிகிலம்படைத்திடுதிநீ
நின்போதமென்றுநினையேன்மறந்துமென்போதமென்றுநினைவாய்.    15

 

332    குணராசதத்தினிலைநிற்றிவேறுகுணமற்றிருத்தியருளும்
துணையேறுசத்தியிதனூடெழுந்தசுடராலடைந்திடுதிமேல்
மணிநூல்கிடக்குமருவாவுனக்குவகையாயுளுக்குவரைநாள்
அணியேறுகற்பமுறுநாளதற்குமளவானதைத்தெரிதியால்.    16

 

333    வேறு

 

இயற்கைமாந்தர்குறிப்பின்றியிமைக்குமிமையீரொன்பதுறின்
அயிர்ப்பில்காட்டையதுமுப்பானமையிற்கலையாங்கலைமுப்பான்
பெயர்ச்சிகணமுந்நான்குகணம்பேரின்முகுர்த்தமதுமுப்பான்
மயக்கிலொருநாளைம்மூன்றாய்வருநாள்பக்கமறைவல்லோய்.    17

 

334    பக்கமிரண்டுமதியாம்பகருமிரண்டுமதியிருது
தக்கவிருதுமூன்றயனஞ்சாருந்தெற்குவடக்குமெனப்
புக்கவயனமிரவுபகல்புலவோர்க்கொருநாண்மூந்நூற்றோ
டொக்கவறுபதுறினாண்டீதொருநூற்றின்விண்ணவராயுள்.    18

 

335    உம்பருகமீதெழுபத்தொன்றுற்றான்மனுவதாமீரேழ்
பம்புமனுநாள்பகலாகப்பகுத்தநாளிலாண்டாக
நம்பும்வருடமொருநூறுநண்ணினுனதுகற்பமெனச்
செம்பொன்முளரித்திருமனையிற்செறிவாயென்றான்பிறைசூடி.    19

 

336    வரிவண்டுழக்கமுகையவிழ்ந்துமதுவூற்றெடுக்குமடற்கமலத்
தெரியன்மார்பனிதழிமலர்ச்செழுந்தார்மார்பன்மொழிந்தனகொண்
டுரியசெவிநாலிரண்டாலுமுவட்டாவமுதுண்டுடல்சிலிர்ப்பப்
பரியுமலர்க்கணருவிதரப்பணிந்தான்விடைபெற்றெழுந்தானால்.    20

 

337    எழுந்தானார்வத்தொடுமிமையாவெகினவூர்திதிகழ்சோதிக்
கொழுந்தாயொளிருந்திருமூலக்குறிக்கீசானத்திசையூடே
அழுந்தாமணிநீர்த்திரைக்கரத்தாலடலாணவப்பேரிருள்சீக்கச்
செழுந்தாமரைப்பூஞ்சுடரேந்துந்தீர்த்தத்தடத்தைக்கண்ணுற்றான்.    21

 

338    எறிக்கும்படிகத்திரடெளித்தாலெனநின்றிலங்கித்தன்பெயரைக்
குறிக்குந்தடத்தீம்புனலாடிக்கொய்பூங்கலைகண்மெய்தாங்கிப்
பொறிக்கண்டிகையாற்பூதியினாற்பொலிந்துநியதிச்சடங்காற்றி
நெறிக்கொண்டருமாமறைக்கொழுந்தாய்நின்றான்றிருமுன்சென்றானே.    22

 

339    இருளாய்வெளியாய்ப்பரபதமாயேகமாகிப்பலவாகித்
தெருளாயகண்டமுழுமுதலாய்ச்செறியாதெவையுஞ்செறிந்தபரம்
பொருளாய்ப்பசுபோதங்கடந்தபுரையோருள்ளத்தகம்பழுத்த
அருளாய்நின்றபிரமேசனடித்தாமரைகண்டஞ்சலித்தான்    23

 

340    உருகியுருகிநெக்குள்ளுடைந்துகுழைந்துமலர்விழிகள்
அருவிகொழிப்பவுறுப்பைந்தாலாட்டங்கத்தால்வீழ்ந்திறைஞ்சிப்
பெருகியொளிகால்சிவலிங்கப்பேரானந்தப்பெருஞ்சுடர்முன்
மருவிநறுமஞ்சனமாட்டிவழிபாடிழைத்துமலர்தூவி    24

 

341    தென்பால்வடபான்மேல்கீழ்பால்சிகைவெஞ்சுடர்செயருக்கன்மிசை
இன்பால்விழிவைத்தைந்துமவித்திழைத்தாயிடையாண்டாயிரமும்
நன்பாலாற்றிவளியுண்டுநலஞ்சேரைந்துபதங்கூறி
அன்பாலாறுமடக்கியெந்தையாராதனையுங்கடைப்பிடித்து    25

 

342    கோவேபோற்றியாதிமறைக்கொழுந்தேபோற்றியருள்குழைக்கும்
காவேபோற்றிமெய்ஞ்ஞானக்கண்ணேபோற்றியென்னிடும்பை
மாவேதனைக்கோர்மருந்தாகிமதிமாசகற்றிமறித்தாண்ட
தேவேபோற்றிதோணிபுரச்செல்வாபோற்றிசிவபோற்றி    26

 

343    பின்னன்மவுலிப்பெருமுனிவர்பெட்பமறையின்பொருளனைத்தும்
மன்னுங்குருவாய்வடநிழற்கீழ்வதிந்துபுகன்றவியல்போற்றி
முன்னமறையின்விரிவையெல்லாமுழங்குந்தவளக்கிண்கிணிக்கால்
கன்னன்மழலைமகவுரைப்பக்காதுகொடுத்தநிலைபோற்றி    27

 

344    வடுவார்தடங்கண்முனிவர்மனைவைகுந்தவத்துப்பன்னியர்கை
இடுமூணயந்தின்னெழில்காட்டியிரங்குங்கருணைமுகம்போற்றி
கடுவார்நோக்கினரமகளிர்கனிவாயமுதுமமுதுமுண்ணப்
படுமால்விடமுண்டும்பர்தமைப்பரிந்துபுரிந்தவருள்போற்றி    28

 

345    இனையபலவும்வாழ்த்தெடுக்குமீர்ந்தணகமலத்திறையோன்முன்
முனைவனிமயப்பாவையொடுமுக்கட்பெருமானெதிர்தோன்றி
இனையலுவந்ததளித்துமெனவேறூர்தோன்றாலுன்கழற்கால்
வனையுமலர்த்தாமரையடியேன்மனவாவியினிற்பெறல்வேண்டும்    29

 

346    ஏணியாயவிவ்வண்டமினிதுபடைக்கலுறுசத்தி
பேணியளித்தாட்கொளல்வேண்டும்பெருமானினதுதிருத்தொண்டில்
கோணிலாதகுற்றடிமைக்குழுவோடெனையுங்குறிக்கொள்ள
மாணிலெளியேன்பெறல்வேண்டும்வரமீகென்றான்பரமேட்டி    30

 

347    அள்ளற்கமலத்திறையிவ்வாறறையக்குறையாவரமனைத்தும்
கொள்ளக்கொடுத்துப்பேரருளுங்கொடுத்துக்ககனத்திடைமறைந்தான்
தெள்ளித்தெளிந்தவமுதநிலாத்திசைசூழ்வளைப்பச்சுடர்கொழிக்கும்
வெள்ளிப்பொருப்பிலிவர்ந்ததெனவெள்ளேறிவர்ந்தவிரிசடையோன்    31

 

348    கதிர்காலொற்றைக்குழைக்கிழவன்ககனத்திடைபோக்கயர்தலொடும்
கொதிவேலலைத்துக்கயன்மருட்டிக்குழையோடெதிர்பேர்மழைமதர்க்கண
மதிவாணுதலார்நிலையழகிமலர்த்தாள்பரவியிருவருக்கும்
துதிசால்கனகபெருங்குடுமிச்சுடர்ப்பூங்கோயிலினிதமைத்து    32

 

349    வெண்ணந்துயிர்த்தமணிமுத்தம்வெடிவாயாம்பன்முகையவிழ்க்கும்
தண்ணந்துறைநீர்ப்படித்துறையுந்தடமாமதிலும்புடைதிருத்தி
எண்ணும்பெறுசீர்பிரமதடத்தென்னக்கடவுட்டீர்த்தமெல்லாம்
நண்ணும்படியுய்த்தளிதுளும்பநான்குமருங்குந்தளமமைத்து    33

 

350    விதிப்பேரண்டப்பரப்பகத்தமேல்கீழுலகுநெடுந்திசையும்
நிதிச்சாகரழுநடப்பனவுநிற்கின்றனவுமோரிரண்டு
கதிர்க்காவலரும்பிறபொருளுங்கண்டான்றண்டாமரைக்கரத்தால்
பதித்தான்கடவுட்கணித்தாகப்பாரிசாதத்தருவொன்றை    34

 

351    ஆள்வேட்டுழன்றுசெவ்வரிதோய்ந்தயிலைத்துரந்துகயலலைத்து
வேள்வார்கணையைப்புறங்கொண்டுவிழையப்படர்ந்துகுழைகடந்து
வாள்போற்பிறழும்விழிகளுங்கைம்மலரும்பரதவழிச்செல்ல
நாள்வாயெழுந்தமின்போன்றுநம்பன்றிருமுன்னடிப்பாரை    35

 

352    ஓலிக்குங்கருவியைந்துமிசைத்தொழுகுவாரைச்சிறையறுகால்
கலிக்குமலர்ப்பூந்தெரியல்வினைக்கைவல்லாரைச்சிவகருமம்
பலிக்குங்கிழமைச்சைவதவப்பான்மையோரையிருள்பருகிச்
சொலிக்குஞ்சுடர்ச்செந்தீபநிரைத்துகடீர்செய்கைத்தொழிலோரை    36

 

353    பாயதிருமஞ்சனமெடுக்கும்பரிசாரகரைத்திருமேனிக்
காயபசும்பொற்கலநிறைத்தவரைக்காவலரைச்சுரபிகளை
ஏயபணியிற்பழுதுதுடைத்திடுகிற்பாரையிறையடிக்கே
தூயகருத்தானகம்படிமைத்தொழிலாலுயர்ந்ததொல்லோரை    37

 

354    வல்லையியங்குஞ்சாரணரைமடைவல்லோரைமாகதரைக்
கொல்லவினைஞர்மட்பகைஞர்குவளைக்களத்தெந்தோணிபுரிச்
செல்வன்முடிக்காட்டுநராதிசெறியுந்துகண்மாற்றுநரீறா
எல்லையிகந்தபணிவிடையிலிகவாதொழுகுமியல்பினரை    38

 

355    முளரிமாலைக்கவுணியர்கோதமலர்முற்கலர்பாரத்துவசர்
வளரரரீதரெனக்கிளந்தமறைக்கோத்திரத்துமுனிவரரைப்
புளகமறையாகமமலர்ந்தபுணரிமடுத்தமுதுகேள்வித்
தளராவாதிசைவகுலத்தகுமைம்பான்மைக்கடவுளரை    39

 

356    சேராரிணைச்செஞ்செவிபுதைக்குஞ்சீர்த்திபுனைந்தபார்த்திபரைப்
பாராவறுமையிருடுரக்கும்பானுவனையவணிகர்தமைச்
சாராதுலரைக்கடவுளரைத்தமையொக்கலைத்தென்புலத்தாரை
ஏராலுழந்துபுறந்தந்தாங்கிறையேவலின்வாழ்பின்னவரை    40

 

357    மங்குலுறங்குங்குறுங்கோட்டுவருக்கையழிசாறுவட்டெடுத்துச்
சங்குதவழுமடையுடைக்குந்தடஞ்சூழ்தோணிபுரம்புரக்கும்
செங்கண்விடைப்பாகனுக்குரியசெய்கைக்குடிமைத்திறலிவரை
ஐங்குரோசத்தெல்லையினுமமைத்தானிழலுஞ்சமைத்தானே    41

 

358    வைகறோறுமைந்துமகமாறாக்குடிகள்பற்பலவும்
செய்கலாற்றாவளனோங்கிச்செம்பொனுலகினெழில்காட்டக்
கைகொளுரகக்கங்கணத்தான்கடிவிழாவுமினிதாற்றி
மெய்கொண்மறையோனுயிர்க்குயிராய்விர்ந்தான்பூசைபுரிந்தானே    42

 

359    பலநாளினையபணிபிழைத்துப்பரவுங்கமலமுனிகாணக்
குலமாமறைதேர்சிவலிங்கக்குறியூடெழுந்தின்னருள்பூத்து
நலனாலுனதுபணிமகிழ்ந்தேநாளுமெமதுதிருத்தொண்டிற்
புலனாலுயர்ந்தவுனையாரேபொருவாரென்றான்பொருவில்லான்    43

 

360    முன்னாளுன்னேர்மறைமுதல்வர்மூழ்கிக்கண்டதடமிதனிற்
பொன்னாரமுதநிறைமதியம்புணர்சித்திரையிற்சித்திரைசேர்
அந்நாள்படிந்தாரிடும்பைவினையதனிற்படியாரருண்ஞானம்
பன்னாள்படைத்துநின்னாலும்படையாநிலைமைபடைப்பாரே    44

 

361    கிழமைபூண்டுமதியாறிக்கெழுநீராடின்வந்தியரும்
மழலைமிழற்றுமிளந்தளிர்வாய்மகப்பேறடைவார்துறக்கமிசை
முழுமாமதிவாண்முகத்தியர்தோண்முயங்குவாருஞ்சலசரமாய்
ஒழுகவிழைவாரென்னினெடுத்துரைப்பதெவனோபரப்பாக    45

 

362    உறுதிபயப்பநின்னுழையாமுரைத்தவோரைந்தெழுத்தையுளத்
தறனில்லவர்பாலுரையற்கவான்றகறபமுடிவுழிபோம்
திறனில்வருகவெனமூலக்குறியூடொளித்தான்செருக்ககனறு
மறனில்லவர்க்கோர்களைகண்ணாமாறாக்கருணைவானவனே    46

 

363    துன்றும்பழையமூதண்டந்தொலைந்தஞான்றுந்தொலையாமல்
என்றும்பிரமன்றனைத்தந்துமேனைப்பொருளுந்தரலாலீ
தொன்றும்பிரமபுரமதில்வாழொளியேபிரமலிங்கமிந்நீர்
என்றும்பிரமத்தடமெனவேயெறிநீர்ஞாலத்திலங்கினவே    47

 

364    கன்னிக்கமுகினெருத்தலைத்தகமஞ்சூற்பாளைமுகங்கிழித்துச்
செந்நெற்படைப்பவிளிம்புடையச்செந்தேனாடிச்சினவாளை
பொன்னித்துறையாட்டயர்தோணிபுரத்தான்றிருமுனிக்காதை
முன்னிப்புகன்றோரெவரேனுமுத்திநிலத்துவித்தாவார்    48

 

365    இன்னகடவுண்மான்மியத்தையினிதுகேட்போரெழிற்புலன்சூட்
டன்னவூர்தியுலகிலவனாயுள்வரையுமாங்கிருந்து
பின்னரிழுக்காவிழுக்குடியிற்பிறந்துஞானப்பெரும்படையால்
முன்னைவினையின்கட்டறுத்துமோனவீடுமெய்துவரால்    49

 

366    கோட்டுமதியந்தவழ்மாடக்குடுமிதொடுத்தகொடிநிரைகள்
நாட்டுங்ககனத்தலம்புதைப்பநகைவெண்சுதையாலமுதநிலா
வீட்டும்பிரமபுரத்தியலீதென்றானகந்தையிகலெறிந்து
வாட்டுந்தவத்துச்சவுனகனேமுதலோருவப்பமாமுனிவன்    50

(3-ஆவது பிரமபுரமானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் 366)
-------------


4-ஆவது. திருவிழாவத்தியாயம் (367-447)

 

367    ஏற்றியலுமெந்தைபிரமாபுரியியற்கை
சாற்றியசொல்லாரமுதுதஞ்செவிமடுத்துப்
போற்றியதவர்க்கருள்புராணமுனிவேதன்
ஆற்றியவிழாவணியறிந்ததுரைசெய்வாம்.    1

 

368    மாற்றுமகநின்றகமதத்தின்வழியெய்தித்
தேற்றுமறைவாய்மைகடெளிந்துசிவனன்பர்
காற்றுணைபடிந்துபலகாலும்விரதாதி
நோற்றவர்களேபரமநூலைவிழைகிற்பார்.    2

 

369    ஆதிசிவலீலைகளையார்வமொடுபாரித்
தோதினருமன்னதையுகந்தவரும்வைத்துப்
போதமொடருச்சனைபுரிந்தவருமன்றோ
சீதரன்மலர்க்கண்ணிசேவடியில்வாழ்வார்.    3

 

370    எய்தரியமானுடமெடுத்துமிறைகாதை
அய்துமுணராதுபுல்லடர்ந்துநிலம்விட்டு
மெய்தளர்பசிக்களரின்மேவியபசுப்போல்
வெய்துறுவர்காலனிடைமேலுறுவதென்னா.    4

 

371    வாரமுறுமெய்த்தவவரத்துமுனிவீர்காள்
பாரமுதுவானரகுபாரிவியல்பூத
சாரமொடுபூதமதுசார்ந்தபரிநாம
மாருமுடலெய்தலுறுமாருயிரவற்றுள்.    5

 

372    புத்தியொடுநல்வினைபுரிந்தவர்களின்பத்
சுத்தவெளிமேவியதுறக்கிமிசையெய்திப்
பத்தியொளிகாலெழில்படைத்தடிநிலத்தே
வைத்திடலொழிந்துபுலராமலர்மலைந்தே.    6

 

373    ஓர்பொறியறிந்தபுலனோர்பொறியினூடே
சார்தலிலதாமதுதனக்குநிகராக
வேர்படருமின்பநிலையேயுணர்வதல்லால்
சூர்படுமிடும்பைநிலைசூழ்ந்துமறியாரே.    7

 

374    மய்ம்மலிநெடுங்கணரமங்கையர்கள்கொங்கைக்
கொம்மையெழிலாடுமிருகோடுகளுழக்கச்
செம்மைமுகைவிண்டுவிழிதேனொழுகுதண்டார்
மொய்ம்மலிபுயத்தர்கண்முகிழ்த்தறிகலாதார்.    8

 

375    அம்பவளவாயரணிமூரலரலர்ந்த
செம்பதுமவாண்முகவர்தெள்ளமுதின்வந்த
கொம்பரனையார்கலவிகொள்ளமுதுமேனாள்
உம்பர்கடைவேலையமுதும்பருகலோவார்.    9

 

376    வெம்புதுளிவேர்வையறுமேனியிசைவானா
வழ்பவிழுமைந்தருவின்மாநிழல்வதிந்து
பம்புமிசையைங்கருவிபல்குமிசையுண்டும்
தம்புலநயப்பொடுதணப்பர்பலகாலம்.    10

 

377    நாகமொழிநாள்கள்பதினைந்தெனவிமைப்பார்
சோகமுறுவாருயிர்துறக்கமுமிழப்பார்
மோகமுறுதீவினைமுயன்றுபெறுபூத
தேகருறுமாநிரயமுஞ்சிலதெரிப்பாம்    11

 

378    வாஞ்சையுறுதீவினைஞர்வம்மெனமறித்துப்
பூஞ்சிகையவொள்ளெரிபுதைந்தநிரயத்தே
நாஞ்சிலொடொறுத்துமெரிநாந்தகநிறைத்தும்
தாஞ்சமனடும்படர்சவட்டலொழியாராய்    12

 

379    வறுத்தமணல்கீழுமனன்மாரிதலைமேலும்
பொறுக்கவழியிட்டடியினூசிகள்புதைத்தும்
செறுத்துலருபங்கியொடுதீயெழவிழித்தும்
தறிப்பருடலின்றசைதகர்ந்துதிரவன்றே.    13

 

380    துடிப்பவொளியாடெரிதுளும்புசுடுபாளம்
கொடிற்றிடையிருத்தியெறிகுந்தமிசையுய்ப்பார்
கடிப்புனலிடைத்திரிகயற்குலம்வளைத்துப்
பிடித்துயிரகற்றியபிரட்டர்களையம்மா.    14

 

381    கைப்படுகுடம்பையுறுபுட்கவருவாரைத்
துப்பெரிவிலங்கொடுதுவைப்பரயல்வாழும்
மைப்புருவமங்கையைமணந்தவரைவெந்தீச்
செப்புருவமங்கையொடுசேரவணைவிப்பார்.    15

 

382    நோதகவிலங்குகளைநூல்வலையிலார்க்கும்
காதகரைஞாளிகள்கனன்றெயிறுகவ்வப்
பாதமடியொட்டிநுதிபாயவிழிசெந்நீர்
போதரவுறுத்துவர்பொருப்பனையதோளார்.    16

 

383    சார்நிலைபெறாதுயிர்தளர்ந்தழுவிலங்கைக்
கூர்கருவியாலுடல்குறைத்தமடவோரை
வேர்மறலிவீரர்தனமெய்ம்மயிரினொன்றுக்
கோர்தசைபடப்படவுரித்தரிதல்செய்வார்.    17

 

384    மின்படுசடைப்புனிதன்மெல்லடியைவிள்ளா
அன்பர்களெதிர்ப்படினடித்துணைதொழாரை
வன்புறுவிழிக்கெரிமணிச்சுரிகையிட்டுத்
துன்புறுதடக்கைகடுணித்திடுவர்வாளால்.    18

 

385    நாதன்முதுகாதையைநயப்பொடுவிரும்பாக்
காதகர்மனத்தர்தலைகாதொடுதெறிப்பக்
கோதுறமலைந்துசதகோடியுருமென்னத்
தூதுவர்புடைப்பவரர்சொல்லியலுமற்றே.    19

 

386    வள்ளலடியார்தமைவருத்துநரணுக்கத
தெள்ளளவுமேவரிசைவார்மறையிசைக்கும்
பிள்ளைமுனியால்வலிபிழைத்தமைவழுக்கா
துள்ளவனுருப்பதையுரைப்பதெவனேயோ.    20

 

387    மழுக்களெறிபட்டுதிரவாரிமிசைபாயப்
புழுக்கள்குடையப்பதைபதைத்துடல்பொறாராய்
எழுக்கலடியாலழலெரிச்சிகையினால்வெங்
கழுக்கடையினாலளவில்காலம்வதையுண்டார்.    21

 

388    செக்கினுழல்வார்திரிகையிற்சுழலுவார்தீப்
புக்கயருவாருறுபுலாலழிகுவாரால்
முக்கணமலன்பழையமூவறுபுராண
மெய்க்கதையினைப்பெறவினாவுமறிவில்லார்.    22

 

389    வன்றொடரினிற்கழுவின்மாமுளிலவத்திற்
கொன்றுமெழுவித்துநடுவன்றமர்குமைப்பக்
கன்றியபசுங்கணனல்காறெயிறுகாட்டி
நின்றலறுவார்கொடியநீணிரயவாணர்.    23

 

390    நீர்நசைபெறாதுதசைநீர்பெருகியங்கட்
சோர்பவருயிர்க்குதவிதூதருழையுண்டோ
காரெலியைவாயொடுகவர்ந்துதறுபூசை
யாரழினுமெள்ளளவதற்குதவியின்றே.    24

 

391    காந்துதயரன்றியொருக்காலுநலமின்றித்
தேய்ந்துநரகத்துறுநர்செய்தியிவையின்னும்
ஏய்ந்துயிரினோடுறுமிரட்டைவினைதம்மால்
போந்துபயனுண்ணுமுடல்பூதபரிளமம்.    25

 

392    வேறு

 

இப்பூதபரிநாமயாக்கையினையிருவினையின்
வைப்பூறுகதிவயத்தால்வரப்பெறினும்பொருப்பகமும்
கைப்பூறுவறுங்கூவற்கடறுடையநாடுமொரீஇ
அப்பூறவளனூறுமணிகெழுநாட்டுறலரிதே.    26

 

393    வெண்ணிணத்தவெயிற்றெயினரிழிகுலமுமீன்படுக்கும்
கண்ணிரைத்தவலைவினைஞர்கழிகுலமுமகன்றொருவிப்
புண்ணியத்தொல்குலத்தினிடைப்புகவரிதாமதிற்புகினும்
பெண்ணொழித்துப்பழுதொழியப்பெறுதலுமிக்கரிதன்றே.    27

 

394    இன்னணமேசெந்நிறத்தவெழிற்பவளத்தடம்புலத்தில்
பொன்னணிமுத்துருக்கனையபொறிபரந்தவமயத்து
மின்னலுமொக்குளும்போன்றுவீயினும்வீந்திடுமிலையேல்
பின்னரும்வெண்ணெயிற்றிரண்டுபிறந்திடவும்பெறுமதுவே.    28

 

395    கூன்புறத்தயாமையுருக்கொண்டறினுமறுமின்றேல்
ஊன்புறத்திலுறுமமயத்தொழியினுமாங்கொடிநாபி
ஈன்புழைக்குளிரதமடுத்தெழினுமெழுமுழுமதிபோல்
தான்புறத்திலுதித்தளவேசாயுமதுதணந்திடினும்.    29

 

396    விரிநிதியமிரவலர்பால்வீசிப்பேர்புனையுழியும்
இரியுமகன்குளத்துமலரெனவளர்ந்துமையாடி
முரியவுமாமுருகெறிபமூதுணர்கேள்விகடுறைபோய்
வரிநெடுங்கண்ணியருருகமாமதின்மாயாதேல்.    30

 

397    பஞ்சிபுனைசெம்பதுமப்பாட்டிசையக்கிண்கிணிக்கால்
வஞ்சியர்தோணலம்பருகிமல்கியநாட்பலசனமும்
நெஞ்சுருகியழன்றுசெங்கைநெரித்தலறவுருத்தெழுந்த
செஞ்சிகைவெங்கூற்றணுகச்சிதையுமிதுதிறம்பிடினும்.    31

 

398    மழலைமொழிச்சிறுவரொடுமாழாந்துமூப்பலைப்பக்
கழலுறுப்பிலுரையாடிக்காய்பிணிவெம்புலிபாயக்
கிழவனகன்றொருபிணமாய்க்கிளைக்கவைநாவளைத்தயிலும்
அழல்கதுவும்புறங்காட்டிலணையுமதுவொருதலையே.    32

 

399    வெள்ளிடையின்விளக்கமெனவிளியுமிதனிலையாமை
உள்ளியுணர்ந்தவர்வாளாவொளிப்பரோவொருகணமும்
கிள்ளைமொழிப்பாகனிசைகிளக்கவுங்கேட்கவுநமர்காள்
உள்ளதவப்பேறிதனினுண்டுகொலோவுயிர்க்குறுதி.    33

 

400    அளக்கரியதவப்பேற்றாலழுக்கறநல்லான்வயிற்றில்
கிளக்கரியபலநூறுகிடைக்கின்மறையவனாவான்
இளக்கமுறவதிற்பரமனியல்கேளாரிழுக்குடம்பு
துளக்குமரப்பாவையன்றோதோன்றிடினுந்தொழுகுலத்தே.    34

 

401    தொழுகுலத்தாரேனுமொருதோடுடையான்றிருக்காதை
முழுமதியினொடுங்கேளார்முகனோக்கக்கிடைத்தவினை
எழுகொளிவெம்பரிதியழலுதகமறையவர்பசுக்கள்
மழவிடையாதியகண்டுமாற்றுவரான்மதிவல்லோர்.    35

 

402    வாலாமைப்பிறவியதின்மழுவலான்புகழ்கேட்டல்
மேலாராதனையிழைத்தன்மெய்யடியாரடிபோற்றல்
ஏலாதேலென்னுறுதியிதுகேட்கவிரும்புமுமைப்
போலாரேயுளராவார்பூதலத்துமீதலத்தும்.    36

 

403    பின்னுமுனிவரர்கேட்பப்பெருந்தவத்துக்கயமுனியால்
துன்னுமறையெழுதுமுனிதுணையடிகடொழுதமுனி
மன்னுமலர்க்கமலமுனிமதிமிலைந்தமுடிமுனிக்குப்
பன்னுபிரமாபுரத்திற்பணித்தவிழாவளனுரைப்பாம்.    37

 

404    திரியுமிரட்குறும்புடைத்ததிங்கண்முளைகிடந்திமைக்கும்
முருகலர்வேணியன்மகிழமுதன்மதியின்வளர்மதியின்
விரிநிலமுங்கீழ்மேலாவிரிநிலமுமுணரமதக்
கரிமுதுகினெந்தைவிழாக்கடிமுரசமிரட்டுதலும்.    38

 

405    உரைதருவேதியர்முன்னாவுள்ளவர்களெள்ளருஞ்சீர்
வரையறுதொல்லுருத்திரர்வாழுலகமெனமகிழ்தூங்கி
விரைமலராளரசிருக்கைவீதிமனைமாலைதொறும்
கரையறுபல்வளனூட்டிக்கடிநகரமெழில்புனைவார்.    39

 

406    கற்பாருமடந்தையருங்காளையருங்கைதூவார்
பொற்பாருமலர்த்தொடையற்பொலிநறுங்குப்பைகள்களைவார்
எற்பாருமணியலகாலெம்மருங்குந்துகள்விளக்கி
நற்பூழியுள்ளடங்கநறியபனிநீர்தெளிப்பார்.    40

 

407    வருங்கொடியேற்றென்றென்பார்மான்றலைநாளெனவுரைப்பார்க்
கொருங்குவகைதலையுய்ப்பாரோர்தினமோருகமென்பார்
அருங்கடிகாணியவென்றோவலர்விழியுமகலமுமே
மருங்குதுடித்தனவென்பார்மனவெழுச்சியொடுநிகழ்வார்.    41

 

408    சுதைகொடுபித்திகைபுனைவார்தோரணங்கள்பலநிரைப்பார்
இதமலிகுங்குமமெழுகியெரிமணித்தெற்றிகள்புனைவார்
நிதிமணியோவியம்பொறிப்பார்நிறைகுடமும்பாலிகையும்
விதமலியும்பளிக்குமணிவேதிகைகடொறுமமைப்பார்.    42

 

409    பூவணத்தன்புனறெளிப்பார்பொற்றிரள்கால்பத்திபுனை
காவணத்திற்பழக்குலையகதலிகமுகொருங்கமைப்பார்
தூவணத்தசுடர்நிரைபொற்றுளங்கொளியாடிகள்பதிப்பார்
மாவணத்தபாவைபெறுமணிவிளக்கினிரைநிறுப்பார்.    43

 

410    தண்ணளிக்கோர்வரம்பாயதலைமைமறைப்பொருள்விரிக்கும்
அண்ணலடியவரிருக்கையவிர்மணிப்பீடிகைசமைப்பார்
சுண்ணமிறைத்தெம்மருங்குந்துயல்வருபூந்தொடையசைப்பார்
வண்ணமணிநித்திலமுமரகதமாலையுஞ்செறிப்பார்.    44

 

411    கோட்டுமதவரைமுகத்திற்குங்குமமோடைகளணிவார்
ஆட்டுபரியணிகளமைத்தைங்கதியுமியறெரிவார்
பூட்டுமணித்தேருதயப்பொருப்புறழத்திருப்புனைவார்
நாட்டுருப்பொற்கலமேந்திநவமணித்தீவகமிடுவார்.    45

 

412    காசறையுங்கற்புரமுங்கமழமணிக்கலனேந்திக்
கோசிகமென்கொம்பரெனக்குயிலின்மொழிந்தயிலின்விழித்
தேசறுமெவ்வகையுயிருமிரங்கமணியாழ்வருடி
வாசமனைதொறுமடவார்மங்கலங்கள்பலபுகழ்வார்.    46

 

413    அருட்கடமைமறைக்கிழவர்க்கறுசுவைநால்வகையமுதம்
ஒருப்படவங்கினிதளிப்பாரும்பர்பிரான்பழவடியார்
திருக்குறிப்பினெறிநின்றதெள்ளமுதமடுத்திடுவார்
ஒருத்தரின்முனொருத்தரின்னவோகையினிலழுந்துவரால்.    47

 

414    வேறு

 

இவ்வாறெங்குங்களிசிறப்பவீர்ந்தண்கமலாசனத்திறைவன்
சைவாகமச்சுப்பிரபேதஞ்சாற்றுமியறேராற்றலினால்
செவ்வாரழற்காசினத்தாலுஞ்செம்பொனாலுந்திசைபொதிந்த
மைவானிருள்சீத்தொளியுமிழுமணிமண்டபமொன்றலங்கரித்தான்.    48

 

415    பவளம்பழுத்துமரகதத்தபசும்பாசிலையிட்டொளிமுத்தம்
திவளும்பாளைவெண்பொன்னாற்செழித்தகணைக்காற்கமுகநிறீஇத்
துவளுங்கனகத்தாற்றரம்பைசூழவிருத்திநீடியவிட்
புவனமலர்மீனனையமுத்தின்புல்லார்மாலைப்படங்கசைத்து.    49

 

416    செம்பொற்சினையதருக்குலங்கடிசைதோறூன்றியிருளுடைக்கும்
பைம்பொற்படிமக்கலந்தூக்கிப்பைம்பூந்தென்றல்புறந்தவழும்
அம்பொற்சிறுசாளரந்திருத்தியரிவாய்வயிரச்சுடர்பரப்பி
விம்பப்பொகுட்டுக்குறுத்தமுளைவிரைப்பாலிகைபற்பலநிறைத்து.    50

 

417    வானின்றிழிந்தவிருநிதியுமணியும்பொருத்தியலையுயிர்த்த
தேனின்றிழிபூங்குழன்மடவார்செங்கைக்கோலம்பெறவளைத்துக்
கானின்றொளிர்சாமரைதோட்டிக்கயல்கண்ணடிமென்கொடிமுரசு
தானின்றலர்பூஞ்சுடர்நிறைநீர்த்தசும்போடெண்மங்கலந்துலக்கி.    51

 

418    வெளிறுபனிநீர்குங்குமநீர்விரைமான்மதஞ்சாந்தொருநான்காம்
அளறுமெழுகியகம்புறமென்றறியாப்படிகச்சுவர்தோறும்
களிறும்பிடியுமறிப்பிணவுங்கலையுங்கோட்டிக்கனகநிறத்
தோளிறும்பாவைதுணைக்கரத்திலொளிமாமணிச்செஞ்சுடரேத்தி.    52

 

419    தாமமாலைகற்பகப்பூந்தருவின்மாலைதவராற்றும்
ஓமமாலைமந்திரநூல்யோகமாலைநறியவிரைத்
தூமமாலையேனையவுந்தொடுத்தமாலையயனியற்றும்
ஏமமாலைவிழாவிறைஞ்சவெழுந்தார்மேல்கீழிருந்தார்கள்.    53

 

420    மென்றுநிணநீர்முடைமாறாவிறலார்கணிச்சிப்பெருந்தடக்கைக்
குன்றுபுரைதோயுருத்திரர்கள்கோடியமைந்தபதினொருவர்
சென்றுதிரைநீரெறிமுகட்டிற்சிலைமத்தெறிந்தமலர்க்கரத்தால்
கன்றுகுணிலாக்கனியுகுத்தகாயாமேனிப்பசுந்துளவோன்.    54

 

421    ஓராயிரங்கண்மலர்பூத்தவுருவத்தொருவன்முதலெட்டுப்
பேராகியமாதிரத்தலைவர்பெருகத்திறலேழ்மருத்துக்கள்
சூராதபர்தாமாறிருவர்துளிக்கும்முதகலைத்திங்கள்
ஆரார்விழியன்னையரெழுவராயுள்வேதமருத்துவர்கள்.    55

 

422    சித்தரியக்கர்வசுக்கண்மணிச்சிரத்துநாகரரமாதர்
நித்தர்வடுகர்வேதாளர்நிருதர்யோகர்கந்திருவர்
வித்தியாதரர்நாரதன்சனகன்வியாதன்புலியன்பதஞ்சலியோன்
வைத்தவசந்தன்குறுமுனிவன்வருடமயனம்பருவங்கள்.    56

 

423    மதிசூழ்பக்கம்பகலிரவுவாரிநதிகளருவரைகள்
விதியைம்பூதந்திக்கயங்கள்வேதாகமங்கடிருவாணி
முதிர்மாதவத்துள்ளவர்பிறருமுறையேதத்தமூர்திமிசைக்
கதியாலணைந்தாரயனாற்றுங்கடியார்வீதிமுருகாரூர்.    57

 

424    எழுந்தசீலர்பிரமபுத்தியன்மேற்கருத்தருருகுபுனல்
பொழிந்தவிழியர்பணிவேட்கும்புலவரொடும்போந்தலர்மேலோன்
பழங்கணீக்குஞ்சிவபெருமான்பாதம்பழிச்சியெம்மடிகேள்
குழந்தைமதியேனிழைக்கும்விழாக்கொள்வாயென்றின்னருள்பூண்டு.    58

 

425    குவளைக்குறுங்கட்பிறைக்கோட்டுக்கொழிக்குங்கரடத்தழைசெவிய
கவளக்களிற்றைங்கரன்பூசைக்கடன்களாற்றிமறுகுதொறும்
அவிர்தத்தகுசாந்தியுமாற்றியடரங்குரத்துவினைமுடித்துப்
புவனப்பெருமான்றலைசிறப்பப்போற்றும்பெருமான்றலைநாளில்.    59

 

426    எடுக்குஞ்சமயத்துறைதோறுமேற்றம்பாசுபதமென்றும்
அடுக்குந்திருத்தொண்டுடையார்மாட்டடையாதனமும்மலமென்றும்
நடுக்கும்பவத்துக்கொருமருந்துநன்னீரென்றுமோனமுத்தி
கொடுக்கும்பெருமான்பிடித்ததனிக்குணவெள்ளேற்றுக்கொடியேற்றி.    60

 

427    இருமங்கலதூரியமியம்பலிசைமங்கலஞ்செய்தனையசிவ
தருமங்கலந்தமறைமுதல்வன்றகைசாலன்பினருள்பூத்த
மருமங்கலந்தவிதழியினான்மனத்தாறறிந்தவளகேசன்
திருமங்கலத்தினெழில்புனையச்செம்பொன்மழைக்கீட்செலவயந்தான்.    61

 

428    வாதத்துறையும்பரசமயவழுக்குத்துறையுநீத்தொருதன்
பாதத்துறையன்பினர்க்கருளப்பாகத்துறையும்பூவையொடு
நாதத்துறையுநாதாந்தநவிற்றுந்துறையுமளப்பரியான்
வேதத்துறையின்முறைபிறழாவேள்வித்துறையின்றலைவந்தான்.    62

 

429    வேறு

 

சந்தைப்பெருமறைமுந்தைத்திருமொழிதருமுந்நூலவனொருபொன்னூல்
பந்தத்தோழின்முதலாராதனைசிவபாராயணர்செயவருவான்முன்
கந்தப்புரிகுழல்விந்தைக்கிளிபணிகயலார்விழியுமைமயில்காணத்
தந்தித்திருமுகனந்தக்குகனிவர்தகைசெய்யொளியொடுமெழில்செய்ய.    63

 

430    ஓராயிரவளைபேரோதையின்முதிரோதக்கடலெனநாதிப்பச்
சீரார்கரமிசைநேரேநிரைகொடுசென்றேபலகணநின்றூதப்
பேராதயலயல்பூதத்தலைவர்கள்பெருமங்கலவொலியெழுவிக்க
வாராருருமினமொருகோடிகளெனவாணன்குடமுழவொலிபம்ப.    64

 

431    வானத்தவரிசைபலதுந்துபியொலிமடவார்நடவொலிகடமாவின்
தானப்புனலொலிதாரைத்திரளொலிதாளச்சதியொலிமணிவீணை
கானத்திரளொலிபலபல்லியவொலிகல்லென்றுறுதிசைசெல்லச்சூழ்
ஞானக்கடலொடுசூரற்படைகொடுநந்தித்திருமுனிவந்திக்க.    65

 

432    மகவானுயர்தருமலர்சிந்திடவெதிர்வருணன்பனிமழைநனிபெய்யப்
பகலோன்கலைமதிபளிதச்சுடர்நிரைபணிமாறினரிருபுடைபோதத்
தொகுமாரழலிறைதூபந்தரவொருதோழன்றமனியமலர்தூவ
நகைகாண்வருமுனிவரர்வாழிகள்சொலநதிநாரியர்கவரிகள்வீச.    66

 

433    நீடஞ்சலிபுரிமாரன்பரிவொடுநிறைமாலிகைதரநிறைமன்றின்
ஆடங்கணன்முனமாடக்கணநிரையணிவீசணிகொளவனிலேசன்
சேடன்பணமணியடருஞ்சுடர்கொடுதிசைநாலிலும்வளரொளிசெய்யக்
கோடம்பெறுகடன்மதிபோலலர்குடைகுண்டோதரன்முறைகொண்டேக.    67

 

434    ஞானக்கொடிபுணர்நளினாலயமுனிநலியாதிறையருள்வழிநிற்பச்
சேனக்கொடியடலெகினக்கொடியிடிசெறியுங்கொடியடுசிலைமாரன்
மீனக்கொடிபலசேவித்துடன்வரவிடையின்கொடியவைநடுவாக
வானத்தெழுதரமகதித்திருமுனிமணியாழிசைசெவியமுதூற.    68

 

435    படகஞ்செறிகிணையொளியாகுளிவயிர்பதலைக்குலமடல்கெழுமொந்தை
துடிதுந்துபிமுழவடுசல்லரியிசைதொகுதண்ணுமைவகைபலபொங்கி
அடருங்கடலெனவெவையுங்குளிறிடவரன்வந்தனனொருகளிறீன்ற
பிடிவந்தனளெனவொலிதந்திசையொடுபீலிக்குலமவையாலிக்க.    69

 

436    கண்ணன்கரமலர்நண்ணும்பொழுதொருகரபங்கேருகமலர்வைத்துத்
தண்ணஞ்சுடர்மணிமானத்தினிலுயர்தானத்தவர்தொழவினிதேறிக்
கண்ணம்புயமலர்மலரக்கரமலர்குவியப்பலமுனிவருநாளும்
வண்ணந்துதிசெயமணிமாநகர்வலம்வந்தானெளிமையின்வாராதான்.    70

 

437    மாரிமாரிகளெனவடியாருருகுகண்மணிநீர்பொழிதரவடநூலின்
பாமாரிகள்விரிதிக்கெட்டினுமறைபயின்மாமுனிவரரியலோதத்
தேமாரிகண்முழுமணிமாரிகளெறிதிரையார்கலிதரநிறைவிண்ணோர்
பூமாரிகள்பொழிதருமாலயமதுபுக்கானெவரினுமிக்கானே.    71

 

438    வடிவம்பொலிவழகொழுகுந்திருமுகவனசம்பலமலர்பலசெம்பொன்
கொடியொண்சுடர்நிரைபணிமாறிடவருள்கூறுந்திருமுனநேர்நின்றோர்
முடிமண்டிலமிசையிருசெங்கரமலர்முகிழும்படியரகரவென்றே
அடிகண்டவரவர்தொழமண்டியவொலியதிருண்டதுமுதுபகிரண்டம்.    72

 

439    மாலைப்புரிகுழலுமையோடெழுகொளிவளருஞ்சினகரமதிலெய்திக்
காலைப்பவனியுமனம்வைத்தினையனகரைதீர்வளமலிமறுநாள்வாய்
ஏலக்குழலொடுபூதப்பரிமிசையிலகிப்பவனியுமுலவிச்சீர்
மூலப்பழமறையோலிட்டவனொருமுன்னாளெனவருமந்நாளில்.    73

 

440    கோணைப்பெருவரைதிரியப்பொருதிரைகுமுறக்கடல்வருமொருபுத்தேள்
யாணர்த்திருமலர்பொலிகற்பகமிசையிமையோர்மணிமுடியடிதோயக்
காணப்பவனிசெய்தோணிப்பரனொளிகாலாரழல்கொடுநாலாநாள்
மாணத்திருமணிமானத்தெழில்பெறவந்தானுறுவலிசிந்தாதான்.    74

 

441    இறைவேலனையகண்மடவார்நடமிடவிகலாரிரவொருபகலாகத்
துறைதோறொளிவிடுமுடிசேரமரர்கதிபேரொலிவிரிதிசைமூடப்
பிறைவாதறிருநிலைநாயகியருள்பின்றானடன்வரவைந்தாநாள்
மறைநாவலர்தொழவலம்வந்தனனொருவடமாலெனுமுயர்விடைமீதில்.    75

 

442    அரவார்மணிமுடியுரவோனுறுதினமாறிற்பொருதிறல்வேழத்தும்
இரவாதுயரியகரையானதுதருமேழிற்புனைகயிலாயத்தும்
துரகாதிபனிலுமிருநாலெனவருதொகைநாளிடைநகர்வலமாகப்
பிரமாதியர்பணிசெயவந்தனனொருபெண்பாலவளொடுமொன்பானாள்.    76

 

443    அரவப்பெருமணிசுடரக்கொடிநிரையடர்துந்துபியொலிகடல்பொங்கத்
தரணிக்குலவரைபரவத்திசைதடவித்தளநிலைபுடையொற்றக்
குருமைக்குடைபலமிடையத்தலைபுனைகும்பந்தினகரவிம்பம்போல்
உருவத்தரைநெளிநெளியப்படர்வதொரூழிக்கிரிநிகராழித்தேர்.    77

 

444    மதியேறியவழியறியார்களையுநல்வழியேறிடநுவன்மறைவாசிக்
கதியேறிடவுமைபதியேறினன்முதுகலைகற்றவர்புகழ்நிலையத்தேர்
பதிநாயகமதில்வலம்வந்துறுநிலைபயிலுற்றுயர்சினகரமுற்றே
விதிபேர்புனைதடநீர்நல்கினன்மறைவித்தானவனொருபத்தாநாள்.    78

 

445    ஞானத்தவர்களும்வானத்தவர்களுநளினாலயமுனிதடமாடி
ஏனைப்பகிரதிகுலபாலகர்பணியிசைமண்டபமிசைபதினொன்றாம்
மானத்தினமதில்வளர்கங்கணனடிமலருந்தொழுதுபினொருதோணித்
தானத்தினுமலர்தூவித்தொழுதனர்தண்டாவருளமுதுண்டார்கள்.    79

 

446    உரகங்களினியல்கரகங்கணமும்வில்லுமிழுங்குழைகளுமணிநூலும்
கரதண்டமுமழகொழுகும்புழுகணிகனகாசலநிகரியதோளும்
வரகஞ்சுகமொடுவளரும்பயிரவவடிவம்புனைமலைவடுகேசன்
சரணந்தொழுதனர்விடைகொண்டவரவர்தந்தம்பதியிலணைந்தாரால்.    80

 

447    பிறவும்பலபலபணியும்புரிதருபிரமன்றனையருள்பெறவைத்தே
உறுநின்பதமெனவிடைகொண்டகிலமுமுதவுஞ்செயலினின்முயல்கின்றான்
இறையின்றிருமுருகிதுவென்றனனுயரிசையேபுனைதருவசைதீர்நூல்
முறையின்படிபுகலீரொன்பதினொடுமுன்னூலையுமுணர்முனிசூதன்    81

(4-ஆவது. திருவிழாவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் 447)
---------------


5-ஆவது. பூதவிமோசனமானவத்தியாயம். (448 -492)

 

448    கொழுதிவண்டினமலமருஞ்செழுமலர்க்கோயிலாளுடைப்புத்தேள்
முழுதினாற்றியபெருவிழாவொருவழிமொழிந்தனமினியோர்வெங்
குழிவயிற்றழலெரிமயிர்ப்பசியகட்குறியதாட்டெறும்பூதப்
பழிதுடைத்தொருமன்னவனன்னெறிபடர்ந்ததும்பகர்கின்றோம்.    1

 

449    கடிவருங்கழைத்தலைதொறுங்கவிழ்தலைக்கருவிரற்சூன்மந்தி
படிதமாற்றுநீடருவியந்தடவரைபரந்தமாளுவதேயத்
துடல்சினம்பொருவாளரியன்னவனொண்மதிமரபுக்கோர்
கொடுமறுப்பிறந்ததுவெனப்பிறந்தனன்கொலைவிடூரதனென்பான்    2

 

450    நிலைவழங்குதன்குலப்பெரும்புகழெலாநீடொளிதருந்திங்கட்
கலைவிழுங்குவாளரவெனவிழுங்கியகருமனத்துறுதீயோன்
பலகைநால்வகைவன்னவல்லாடுவான்பகலிடையிரவெல்லாம்
குலவிநால்வகைவன்னவல்லாடுவான்கோதையரகலத்தே.    3

 

451    அறங்கடிந்துவெவ்வினைகளைவித்திநல்லார்வமென்களைபோக்கித்
தெறுஞ்சினப்புனலூட்டுபுவேலியாய்ச்சிற்றினம்படக்கோலி
உறும்பவப்பயனடைந்தவனுயிர்க்கெலாமூழிவெங்கூற்றன்னான்
இறங்குபுள்விலங்கிடுபுறங்காடெனவிழுக்குடையுதரத்தான்.    4

 

452    கோலிழுக்குறவைம்பெருந்தீவினைகுயிற்றிவெம்பொருள்யாவும்
வேலிருந்தடறொழித்தவாட்கண்ணியர்விடயமேற்செலவுய்ப்பான்
நூலிழுக்குறார்மகத்தழலவிந்துகநுவலருந்துயர்காட்டி
மேலழற்றுவதிவனடுசினத்தழன்மிக்கவர்வயிற்றெல்லாம்.    5

 

453    வெள்ளிவெண்டிரைமுகட்டெழும்விடமெனவெண்மதிக்குலவேந்த
ருள்ளிவன்பிறந்தரசியலிழுக்கினையொன்னலர்புறங்கூறக்
கள்ளுங்காமமுங்கொலைகளும்புலைகளுங்கனிந்தொருதாய்பெற்ற
பிள்ளைபோலிவன்வளர்ப்பதேபெற்றனன்பெற்றிலன்பிறிதொன்றை    6

 

454    மானிரப்புறாசிறுபுலப்பயன்களும்வயக்கரிநிலைநாடித்
தானளித்திடிலடுபசிகெடுமதுசார்ந்துபுக்குணில்வேலி
ஆனதென்னினும்வாலினுங்காலினுமழிந்துவாய்புகலின்றிப்
போனதாமதுபோன்றதவ்விறைமகன்புவியெலாம்பொலிவற்றே.    7

 

455    வனையுமெல்லணிவாரொடுதுறந்துமேல்வரவரத்தலைசாய்த்த
புனைகலன்கழிமங்கையர்கொங்கையிற்பொலிவுபோய்ப்புல்லென்று
கனைகரும்புயல்வறப்பமாநிலமெலாங்கலிபரந்ததுதேர்ச்சி
வினைஞரின்மையாற்கோடழிகுளனெனவீறழிந்தனன்வேந்தன்.    8

 

456    விடையத்தீப்பிணிவெதுப்புநல்லாருயிர்மெலியவாயுளுங்குன்றி
அடையச்செல்வமுமரும்பெறலரசும்வேற்றரசுகொண்டேமாப்பக்
கடையிற்போந்தெழுகார்புரைபகட்டின்மேற்கனன்றுகட்கடைதோறும்
வடவைத்தீயுகவந்தகூற்றுவன்படர்வலையிடைத்துவக்குண்டான்.    9

 

457    நுதியயிற்குல்மழைபொழியாறுபோய்நுவலருநிரயத்தே
கொதியழற்சுடவெண்ணில்பல்காலம்வெங்கொடுமையாற்கொட்புற்றுப்
பதியதங்ககன்றரின்மிடைவிந்தமென்பருவரைத்தடஞ்சாரல்
கதியடைந்தனனவுணனாய்விடுக்குமோகழிவினைத்தொடரம்மா.    10

 

458    பேதுசெய்துபல்விலங்கெலாமாழியபிலத்துவாய்புகப்பெய்தும்
ஓதுமந்தணராருயிர்வவ்வியுமொண்டடியார்க்கொன்றும்
தீதுபூத்தலர்நெஞ்சினான்வைகலுஞ்செய்கொலைத்திறத்தாலே
காதுமுத்தலைக்காலனுமுயிர்கொளுங்கைவினைகைதூவான்.    11

 

459    வைகலுங்கொலையயின்றவாயவுணன்முன்வையகக்கொடுங்கோன்மை
செய்கையிற்சிறிதறனிழைத்தனன்கொலோதேமறைப்புள்ளார்க்கும்
பொய்கையானவாங்கீரன்வாழ்பாசிலைப்புரையுள்புக்கறவோனைக்
கைகவர்ந்துவாய்மடுப்பலென்றொளித்தனன்கண்டனன்றவக்கோமான்.    12

 

460    கரந்திவண்புகுங்கள்வனீயாரைநின்கயமையாலெமைவாட்டி
அரந்தைவெம்பசிதணிப்பவந்தனைகொலெம்மடிகளார்நும்முன்னோர்
பரந்ததொல்லுயிர்பருகுமாலுதிரநீர்பருகும்வித்தகரன்றே
தரந்தெரிந்திலாயகலுதியென்றனன்சதுமுகன்வழித்தோன்றல்.    13

 

461    அகல்வதுன்னுயிரருந்துவதெனதுவாயன்றிநீபலவாளா
புகல்வதென்னையென்பொலிவெலாமறையவர்புதுநிணப்பொலிவன்றோ
பகரலென்றுகண்பொறியுகக்செறிமயிர்ப்பங்கியங்கியிற்காண
இகனெடுங்கரமெடுத்தொருகூனிபோலெய்தலுமுனிகண்டான்.    14

 

462    கண்டுபொள்ளெனக்காலமூன்றையுமுணர்கடவுண்மாமுனிதெய்வக்
குண்டிகைப்புனல்விதிர்த்தவன்றொன்மையுங்குடிப்பிறப்பையுங்கூறி
மண்டுமிவ்வுருவேகொடுதிரிகெனமற்றவன்முரட்சாபம்
கொண்டுபாழிவாயவுணன்வல்லுருவுபோய்க்கூளியாகினனன்றே.    15

 

463    சிரகநீரதுதெறித்தலுஞ்சாபமுந்தெளிவுவந்தனபோலும்
உரவனேயுனைப்பிழைத்தநானிப்பழியொழிப்பதெங்ஙனமெந்தாய்
விரவுநீர்க்கடல்வெதுப்புறிலாங்கதைவிளாவுநீர்பிறிதுண்டோ
குரவனேயிதுபொறுக்கெனக்கருநெருங்குன்றின்வீழ்ந்ததுகூளி.    16

 

464    திருகுவெஞ்சினத்தளலயிராவதத்தேவனும்பழிபூண்டான்
கருநிறப்பசுங்கொண்டலும்பவம்பலகண்டனன்றொகைகாணார்
முருகுயீர்த்தபூங்கொன்றையான்றொண்டர்வாய்முனிவுபெற்றனனென்றால்
ஒருவனெய்துதல்வியப்பமன்றெனமுனியுன்னினஃதுய்ய.    17

 

465    எமதுதாபதப்பள்ளிபுக்கனையுனக்கிப்பெரும்பழிநீத்து
விமலமாகுமாறுணர்த்துவெனகேண்மதிமிக்கதக்கணதேயத்
தமலனாதரம்பெருகியதிருவநீளணிகெழுசோணாட்டில்
இமிழ்தடந்திரைப்பொன்னிநீருண்டதையெய்துதியதன்மாடே.    18

 

466    வடக்கினிற்பெருங்குடக்கனிக்குறும்பலாவழிந்தசாறிழிந்தாறாய்த்
தடக்குரம்பினிற்பரமபினில்வேலியிற்புறஞ்சூழ்போய்க்
கிடக்கவாடகப்புலத்தினின்மரகதக்கிளரொளிக்கொழுந்தேய்ப்பப்
படப்பைநாறுகள்வீறுசெய்தோணியம்பழம்பதியதுகாண்டி.    19

 

467    அற்புதன்றிருவுளத்ததுமுத்திவீட்டகத்தபரஞானச்
சிற்பரப்பொருண்மூன்றதுதோன்றுறுசேகொழிப்பதுமாயை
உற்பவநதரும்பொருளெலாமயனொடுமொருங்குலப்புறுமூழிக்
கற்பகம்வென்றதுகருதியார்கருதுவகாட்டுவதம்மூதூர்.    20

 

468    தாளதாமரைத்தாக்கணங்குறையுமத்தனிநகரதுபுக்கால்
தோளறாவரியரவணியந்தணன்றுணையடிப்புணைபற்றிக்
கோளறாவிழிப்பிறந்தையார்கலிதனைக்குப்புறுங்குணமிக்கான
வாளறாமணிவேணியான்காலவமாமுனிதனைக்காண்பாய்.    21

 

469    தயங்குமம்முனிமறைநெறிபுரிதருசத்திரப்பெருவேள்வி
முயங்குமெல்லையினிரந்தனைநிற்றியேனமுனிவனாகுதியொன்றால்
பயங்கொள்பாரிடப்படிவமும்பழவினைப்பளகுநீக்குவன்றோல்போய்
வயங்கராவெனப்பொலிகுவையென்றனன்மறைமுடிப்பொருள்வல்லான்.    22

 

470    கோதகன்றவன்றிருமொழிகரிந்தபைங்கூழ்முகத்தினிற்பெய்த
சீதமாமழைகடுத்தலாற்செவியினுஞ்சிந்தையிற்களிகொண்டு
பூதரங்களுங்கடறுடைக்கடங்களும்பொருதலைக்கான்யாறும்
பாதவங்களுங்கடந்தவாசியின்றிசைபடர்ந்ததுகரும்பூதம்.    23

 

471    பாரகத்திருமடந்தைமேலணிந்தபொற்பணிபுரைசோணாட்டில்
பேரகன்றிரைப்பொன்னியாற்றடைகரைப்பிறங்குதீசியின்மாடே
காரகிற்கொழும்புகைதவழ்மனைதொறுங்கடிமுரசுறங்காத
சீருலாம்பிரமாபுரஞ்சேர்ந்ததுசிவபதந்தனிற்சேர்வான்.    24

 

472    கேழினான்முகன்பிரளயநீத்தமேற்கிளர்ந்ததோணியின்மீதே
கோழிளம்பிறைக்கண்ணியானுறைதிருக்கோயிலின்குடக்காக
வேழ்விவேட்டுயிர்வேதவாணிபர்நடுவிளங்குகாலவனென்னும்
தாழ்விலாமுதுமாதவக்குன்றனான்றன்னைநோக்கியதாங்கன்.    25

 

473    புகரின்மும்மையாயிரத்துநான்மறைமொழிப்புலமையோர்புடைசூழப்
பகருநீணிலப்பதிதொறுநதிதொறும்பணிந்தனன்வலம்போந்து
புகரில்பொன்னிநீராடியெந்தோணிவாழ்புண்ணியனடிபோற்றி
அகனுறும்பொருள்யாவையுஞ்சுரபியாலமைத்தெரிவளர்ப்பானை.    26

 

474    கிருதுகோசிகனங்கசத்துருவிறல்கெழுஞ்சவுபரிவேதத்
தெரிசியாதிமாமுனிவரோடளவாய்த்திண்டிறற்றண்டீசன்
வருபதஞ்சலிபுலிமுனிதிருநந்திவானவருள்பூண்டு
குருமுகத்தழன்முழங்குமுக்குண்டமுங்கோட்டியசெயலானை.    27

 

475    உதிர்ந்தபூவெனப்பலபொரிநெய்விராய்யூபவாயழற்பேணி
அதிர்ந்தமாமணியிரட்டுறமனுவழியாகுதிவகையாற்றி
முதிர்ந்ததெய்வதவெண்ணிரண்டிருத்துவைமுறைமுறைபணிவானை
எதிர்ந்துநின்றதாற்புரையெயிற்றுரகம்வாழிருஞ்செவிப்பெரும்பூதம்.    28

 

476    கரிந்தகையெடுத்தலம்வரவுயிர்ப்பினிற்கருவரைக்குலஞ்சாய
எரிந்தகுஞ்சியினழல்விழிசுழற்றியாண்டெதிரியபூதத்தைத்
திருந்துமாறிருதினமுமாகுதிவினைசெய்துபன்மூன்றாநாள்
வரும்பிராசதமனமெனுமாகுதிவழங்குமாமுனிகண்டான்.    29

 

477    புடைகலந்ததொல்லுறுவருமெறுழ்வலிப்புணரியினிடைப்பட்ட
உடைகலம்படுமாந்தரினிரியலிட்டோடினரிதுகாணா
விடையம்வென்றவனிங்கொருபாரிடமெய்தியதெனவந்தோ
இடையிலம்மகம்பிழைக்குமேயெனக்குழைந்தினையலுற்றனன்பல்கால்.    30

 

478    இனையுங்காலவன்படரடச்சிறுமுனிக்கேற்றகூற்றுவன்சாய
முனையுங்காலவன்கஞ்சுகன்செஞ்சரண்முளரியையுளப்போதில்
புனையுங்காலவனெனக்கிடர்வருவதுபொறுப்பனோவெனப்போற்றி
நினையுங்காலவன்முன்னர்முப்புவனமுநீண்டகாலவன்போற்ற.    31

 

479    வேறு
ஆடுமணிகுஞ்சியுமகோரமுகமுந்துடியுமங்கையுமுகந்தடியும்
கோடுமணிகஞ்சுகமுநஞ்சுரகமுங்குழைகுலுங்குமிருகாதுமறைநால்
தோடுபுனைசெங்கரமுமங்கியொளியுந்திரிவிலோசனமுமொண்புழுகுமா
சேடுபடுமோருருவினெய்தினனெடுஞ்சயிலதெய்வவடுகேசனருளால்.    32

 

480    ஐந்துபடுதுந்துபிகளுங்குணில்பெருந்துழனியண்டமுகடெங்குமதிரக்
கந்தமலர்வந்தமரர்சிந்தவெதிர்முந்தியகணங்கள்புடைகொண்டுமிடைய
நந்துகண்முழங்கவிசைகந்திருவர்பம்பவொலிநண்ணுபலசின்னநிரைகள்
வந்தனனரன்பசியகஞ்சுகதரன்கடவுள்வந்தனனெனுந்துதிசெய.    33

 

481    சூலமுதன்மூவறுபடைக்கலமெடுத்துநிறைதூரியமியம்பமறையோர்
நாலுமறையோலமிடநாலிருவர்காரியர்கண்ஞாளிமிசையேறினர்வரப்
பாவலைமகோததியினீறுபுனைமேனியர்பணிந்தனரணைந்துபரவக்
காலவனிருந்தமுதுவேள்விமலிசாலையதுகண்டருளவந்தருளினான்.    34

 

482    நேசசரணஞ்சரணமுத்தியடியார்க்குதவுநித்தியநிர்வாணசரணம்
வாசசரணஞ்சரணமாதியிடையீறுதவிர்மானசிவஞானசரணம்
தேசசரனைஞ்சரணம்யோகசனகாதியர்தெளிந்தகுருநாதசரணம்
ஈசசரணஞ்சரணமென்றுமுனிகாலவனுமேவருமெழுந்துதொழுதார்.    35

 

483    செம்மலுமவன்பணியுமம்முனிவருக்கருள்செங்கடமையான்முனிவிர்காள்
உம்மகமுடிப்பளவும்யாமிவணிருத்துமெனயோகதலமீதமர்தலும்
எம்மடிகளுக்கரியதென்னையிதுவேள்விபுரியேழையடியேமருளவோர்
பொம்மலுருபூதமிவண்வந்ததெனநின்றதொருபூதமதுமாதவனொடே.    36

 

484    என்னையுயிரஞ்சும்வினைகண்ணியுளபூதமெனவெண்ணலையிரங்கியடிகேள்
முன்னையொருதாண்முளரியந்தணன்மகன்றமுரட்பழிபடைத்துளனியான்
அன்னவரவென்னையெனின்மாளுவநெடும்புவியிலாய்மதிகுலத்திலொருவென்
உன்னரியதீவினைசெய்மன்னவன்விடூரதனென்னூழ்வினையுருப்பவுயிர்போய்.    37

 

485    காலபடர்கொண்டுநிரயத்தினிலழுத்தினர்கழிப்பவருசேடமதனால்
மாலிருநெடுங்குடுமிவிந்தவரைவாயடர்வனத்தினிலரக்கனுருவாய்க்
கோலுறுமெறும்புகடையானைமுதலானவைகுறைத்துநுகர்நாளிலொருநாள்
ஆலுமனல்பொங்குமெனகட்டினிரைகொள்வலெனவங்குமுனிவன்புரையுளில்.    38

 

486    பாரிடவுருக்கொடுபடர்ந்தவனைநுங்கவருபான்மையினையன்னமுனியாம்
கீரனெனையிவ்வுருவொடேதிரிகெனப்பழிகிடைத்தனெனிரங்கியவனே
ஒருகதியுண்டுபிரமாபுரியில்வேள்விகளுஞற்றுமுனிகாலவனுழைச்
சாருதியொராகுதிபலன்றருவனிப்பழிதணந்திடுதியென்றருளினான்.    39

 

487    மற்றவன்விடுப்பவிவணுற்றனெனுனைப்பரவவந்தவழியிந்துமௌலிக்
கொற்றவனையும்பரமமுத்தரையுமென்விழிகுளிர்ந்திடவெதிர்ந்தனெனியான்
உற்றபழிவிட்டகலநற்கருணைவைத்திடுதியூனவடிவானசிறியோர்
குற்றமவையெத்துணையிழைத்திடினுநற்றவர்குணத்தொடுகுறிக்கொளுவரால்.    40

 

488    முந்தையியலுந்துருவிவந்தவிகலும்படமொழிந்துபணிகூளிபெறுமா
றந்தமுனிமேதகுபிராதசமனந்தனிலொராகுதிபலன்றருதலும்
நிந்தையுறுபூதவுடலந்தொலையவானமிசைநீளொளியின்மாளுவபிரான்
வெந்துறுகளிம்பகலவேறுபடுசெம்பொனெனவீறுபடநின்றனனரோ.    41

 

489    ஆயிடையுதித்தகதிர்ஞாயிறெனவிட்புலவராதரவினுய்த்தவொருதேர்
மேயினன்முளைத்திகிரிமாயனிடுசட்டையணிமேனியனைமுற்பரவியும்
தாயினுமுயிர்க்கினியகாலவனடித்துணைதனக்குமலர்கொண்டுதொழுதும்
தீவினையகற்றியவிடூரதன்வழுக்கறுசிவானுபவமுற்றனனரோ.    42

 

490    மாளுவபதிக்கருளுமாமுனியுமத்தகையமாமகமுடித்துவிமலன்
தாளிணைபழிச்சிவழிபாடுபுரியக்கருணைதானுருவமானிபரமன்
கோளறவிழைத்தவுனதியாகநிறைவுற்றதுகுறித்தமையுரைத்தியெனலும்
நாளுமுனடிக்கமலநீழலின்மிகக்குலவிநானினிதிருக்கவருள்வாய்.    43

 

491    மாதவர்களோதுபிரமாபுரியிதற்கயலில்வாழுநர்தமக்குமடல்சேர்
பூதமிடிநோய்வறுமைகோள்பகைபசாசமிவைபோம்வழிபுணர்த்தருளுவாய்
ஆதிமுதல்வித்தகவெனாமுனியுரைத்துளவனைத்தையுமளித்துமுனிவோர்
ஏதமறுதத்தநிலையேறவருள்செய்திறைவனேறினனிருந்தசிகரம்.    44

 

492    அட்டவடுகத்தலைவரப்பதிபுறந்தரவமைந்தபரிசோமுனிவர்கோன்
முட்டலின்மகத்தொழின்முடித்தபரிசோகுறண்முரட்பழிதொலைத்தபரிசோ
சட்டையணிவித்தகனிருந்தபரிசோவுறுதலத்தியல்விளங்குபரிசோ
சுட்டவளவில்லையெனமாதவகணங்களொடுசூதமுனியோதினனரோ.    45

 

(5-ஆவது பூதவிமோசனமானவத்தியாயம்முற்றிற்று 
ஆக திருவிருத்தம்.492.)
--------------------------


6-ஆவது. ஸ்ரீகாளிபுரமானவத்தியாயம். (493- 553)

 

 

493    மைம்மலிபசுங்கட்கூளிவன்பழிதொலைந்துமுத்திச்
செம்மறாளடைந்தகாதைதெரித்தவன்றில்லைமோடி
இம்மணிநகர்வாய்நோற்றவியலையுந்தெரித்தவாறே
அம்மவீண்டரியதேனுமறைகுவாமறிந்தவாற்றால்.    1

 

494    கொடிமுகிறுழாவுமாடக்கொழுமணிக்குப்பைவீதி
முடிவிலாமுனிவராற்றுமுழுமறைச்சடங்கும்பன்னாள்
ஒடிவில்பேரறமுமோவாவுற்சவப்பொலிவுமுன்னா
அடியர்மாட்டுவகைதோன்றவளவில்பேரருளான்மேனாள்.    2

 

495    அருவமாயுருவமாகியருவுருவந்தானென்றாய்
நிருமலமாகியெங்குநிறைந்துசொற்பதங்கடந்த
பொருவிலாவொருவன்பொன்னம்பொதுவினின்முதுவர்போற்றக்
கருணைமாநடனமொன்றுகாட்டுவானாட்டம்வைத்தான்.    3

 

496    வய்த்தலுமிமயச்செல்விவடிவினில்வாய்ந்துநீண்ட
நெய்த்தலைவேற்கண்மோடிநின்மலன்றிருமுனெய்தி
இத்தலைகுனித்தலெந்தைக்கிதுநகைப்பாலதென்னா
அத்தனையிழித்தால்பேதைக்குறியினையறிவிப்பாள்போல்.    4

 

497    நிரைவளைமடவார்க்கென்றனிலையுமாடவருக்கென்றால்
புரைபடுமன்றேயாடிற்புகலுபசற்சனத்தோ
டுரையங்கம்பிரத்தியங்கமுபாங்கமென்றுரைத்தவாடல்
வரையறுவிகற்பமெல்லாம்வல்லையேல்வருதியென்றாள்.    5

 

498    என்றலுமியைந்தவாறேயியைந்திருவிழியிலாதான்
றன்றடிபிடித்துலானுந்தலர்நடையியற்றுவான்போல்
அன்றியல்வென்றிதோல்வியவையுளார்தெரிப்பரென்னாக்
கன்றியவையையாடக்கண்ணுதலாடல்செய்தான்.    6

 

499    எழுதொணாக்கிளவித்தொன்னூலேத்தொலிதழங்கவெண்ணீற்
றெழுகொளிவாணன்றெய்வவொண்குடமுழவமார்ப்ப
முழுதுணருரகவேந்துமுனைவரிநகங்கடோறும்
விழிமலர்பூத்தவேங்கைவேந்துநின்றேத்தெடுப்ப.    7

 

500    ஈரிருகுடுமிப்புத்தேளேந்துபொற்றாளம்பேணக்
கார்புரையுருவத்தண்ணல்கணைதுடியிரட்டஞானப்
பாரதிமகரவீணைபரித்தனளிசைப்பவானத்
தோரிருசுடருமாங்கண்வேய்ங்குழலொலிப்பமாதோ.    8

 

501    இறைதருநந்திசெங்கையின்னொலிமுழவமேங்க
முறைதருஞ்சுருதித்தீந்தேன்முனிவரோரிருவர்பெய்ய
அறைகழலமரர்வெவ்வேறமர்ந்துபல்லியந்துவைப்பப்
பொறைமலியன்பர்செங்கட்புளகநீரருவிகால.    9

 

502    வேறு

 

பிறவருத்தமாவருத்தமசுவபாதம்பிறத்துருதமுபத்துருதம்விளம்பமேரு
விறலுபகாலனம்பிரசாதனமனாதவிப்பிரமம்வலமிடச்சுற்றிலகுதீர்க்கம்
நிறைகவுடம்பின்னபிரபின்னநேமிநிவ்வருத்தமகமேருநேத்திரப்பூ
உறைகுறுக்குப்பார்வையாகாசப்பார்வையுபபின்னம்புட்கலாவருத்தத்தோடும்    10

 

503    குணிப்பரியபலபரதத்துறைகள்யாவுங்குழகனு
        வந்தாடும்வண்ணங்குன்றாவென்றித்,
தணிப்பரியதெறுஞ்சினத்துக்கடலந்தானைத்தாருகனைப்
        பொருதழித்தாடானுமாட,
மணிச்சடிலப்பெருமுனிவர்வானோரேனோர்மதி
        மருளக்கதிரொளிகால்வடிவமொன்று, 
கணிப்பரியகாலமவைசெல்லக்கொண்டகண்ணுத
        லோன்றிருவுளத்தோர்கவவுகொண்டான்.    11

 

504    வேறு

 

சிட்டர்கோடிநின்றிறைஞ்சுசெம்பொன்மன்றநடுவணோர்
நட்டமாடவென்றுகொண்டநம்பனம்பொன்வடிவுதான்
விட்டபேரொளிக்கரங்கள்வீசியூழிமுடிவினில்
பட்டவாழியிற்கிளந்தபானுகோடியொத்ததே.    12

 

505    உச்சியங்கியுரறுபங்கியுடனழன்றமுயலகன்
பச்சைமேனிவெரிநெளிந்துபடியநந்தன்முடியுகப்
பொச்சையங்குலஞ்சுழன்றுபுவிகுலுங்கவவிரொளிக்
கைச்சரோருகங்கள்சென்றுககனகூடமுலவவே.    13

 

506    இட்டமார்பினுத்தரீயமேமவெற்பினருவிபோல்
தொட்டுமீதுதுயல்வரச்சுடர்க்குழைக்கண்வெயில்வரப்
பட்டவாணுதற்பகீரதிப்பெணாடல்பயிலுநீள்
வட்டவார்சடைக்குலங்கண்மாதிரம்புதைப்பவே.    14

 

507    அரவமந்தரம்பிணித்ததாமெனத்திரண்டதோள்
உரகதுங்கவலயமாடவுபயபாதமவையிலோர்
சரணபங்கயந்தராதலம்பொருத்திவலமலர்க்
கிரணபுண்டரீகம்விண்கிழித்துமீதலம்பவே.    15

 

508    தொடித்தலங்கடித்தபைந்தொடைக்குலம்புடைக்கவும்
படித்தலந்துடிப்புறும்படிக்கெழுந்துடிக்குலம்
தடுத்தியம்படைக்கவுந்தடுப்பருந்திடத்துநின்
றடிச்சிலம்பிலிப்பமன்றிலையனாடல்செய்வனால்.    16

 

509    உய்யுமாறுசெய்யுமின்னவூர்த்ததாண்டவத்திலேழ
வய்யமாடமேருவாதிவரைகளாடநாடகம்
செய்யலாமெனப்படர்ந்துதீதுலாயவாதுகூ
றய்யைகண்டுநாணமாடவையனாடல்செய்வனால்.    17

 

510    மய்யளாயகண்டன்மற்றுமண்ணும்விண்ணுமிணையடித்
துய்யபோதலர்த்திநின்றுதூண்டுமின்னதாண்டவம்
தய்யலாயுன்னாடலோடுசமதைகோடியோவெனப்
பய்யநாணெதிர்ந்தவல்லிபக்கன்மிக்கெழுந்தவே.    18

 

511    நீணிலத்திலன்றிமேனிவந்துதாளெடுக்குமக்
கோணியண்ணலாடுகின்றகொள்கைகண்டுவெள்கியே
நாணியங்கம்வேர்வரும்பிநகையொடுங்கிமுகிழ்விரற்
றாணிலங்கிளைத்துவஞ்சிதலைகவிழ்ப்பவவையுளார்.    19

 

512    குழகனாடுபாதமின்றுகூடவாடுகிற்பெனென்
றழலரங்குமீதுவெண்ணெயாயபாவையாடல்போல்
உழலுமாடலாடியின்றுடைந்ததுன்றனடமெனாக்
கழகமாமுனிக்கணங்கள்கழறியொன்றுநுவல்வரால்.    20

 

513    கூனுடைப்பிறைத்துகிர்க்கொடிப்பிரானிடத்துவாழ்
நீனிறக்கொடிக்குள்வந்தநின்னையாதுமுன்னலான்
ஆனவன்றனைப்பிழைத்தியாதலாலழுக்கிலா
மேனியுங்கறுக்கவுன்றன்வென்றியுங்கறுத்ததே.    21

 

514    நஞ்சுயிர்க்குமுரகவாய்நடுக்கரங்கொடுப்பதூஉம்
வெஞ்சினந்தணித்தலின்றிமேன்மைஞானம்வருவதூஉம்
துஞ்சுகற்பிணித்திருந்துறைக்கடற்கடப்பதூஉம்
தஞ்சநெஞ்சொருப்படாதுதக்கமுத்தியடைவதூஉம்.    22

 

515    அதிதியர்க்கருத்தலானகத்திருந்துவாழ்வதூவும்
முதிர்மறைப்பழக்கமின்றிமுடிவினைத்தெரிவிப்பதூஉம்
மதிமிலைந்தவரதனோடுவருகவாடவருகவென்
றெதிரினாடனீகுறித்தெழுந்ததூஉமிழுக்கரோ.    23

 

516    நுண்ணியற்கையாயநூல்கணூறுகோடிபழகினும்
பெண்ணியற்கைபோவதன்றுபேதைநீகந்தையால்
அண்ணலைப்பிழைத்தபாவமகலுமாறுமற்றவன்
கண்ணருள்கிடைக்கினுன்களங்கம்விட்டிகக்குமால்.    24

 

517    நீரகத்தெழுந்தசேறுநீரகத்தொழித்தல்போல்
போரகத்திலாடகப்பொருப்புவிற்குழைத்தவன்
பேரகற்றிநின்றிவண்பிழைத்ததீமையவனருட்
காரகம்பிடித்திநீகடத்தியென்றுகூறினார்.    25

 

518    முழுதொருங்குணர்ந்ததில்லைமுதுவர்சொன்னவிதியறிந்
திழுதையேன்செய்வினைவிலங்கவிறைவனன்புபுரியுமோ
ஒழிவதென்றுபெறுவலென்றவுணர்வறிந்ததுணையிலான்
குழைகடந்தவிழியைநெஞ்சுகுழையலென்றுமொழ்குவான்.    26

 

519    பாவமென்பவற்றின்மிக்கபாவநின்புறத்திலே
மேவநின்றதிதுகடக்கும்வினயமொன்றுநினைதியேல்
பூவளஞ்செய்தோணியம்புரத்திலெம்பதத்திலே
நீவணங்குகென்றளிப்பநின்றமோடிநன்றெனா.    27

 

520    வேறு

 

பவளமுருக்கும்புரிசடையான்பணிகொண்டெழுந்துபுனைகலன்கள்
திவளுமலர்ப்பூங்கொம்பரெனத்தென்பாலணைந்துபெண்பாகம்
கவரும்பாகன்பதிதோறுங்கதிர்வால்வளைமுத்தலர்தூவிக்
குவளைவிழிக்கும்புனற்பொன்னிகுடைந்தாள்வடபாலணைந்தாளே.    28

 

521    மாநீர்த்திரையின்வெடிவாளைமடைவாய்க்கருங்காற்குருகிரியத்
தீநீர்க்குரும்பைக்குலைசிதற்றுந்தென்னைவனஞ்சூழ்தோணிபுரித்
தூநீர்மணியாடகத்தசும்பிற்சுடருந்திருக்கோபுரநான்கும்
வேநீரிருங்கண்ணெதிர்காணவிழித்தாளிடரையொழித்தாளே.    29

 

522    மணக்கும்கமலவாவிகளும்வரிவண்டிமிர்தண்டலைபலவும்
இணக்குங்கனகத்தனிமறுகுமெங்கும்வலங்கொண்டிடுகிடையை
அணக்குமிருபொற்குடம்வணக்குமதுபோன்மதிவாணுதலுடலை
வணக்குமொருபொற்குடமிருந்தமானக்கோயிலகம்புக்காள்.    30

 

523    கதியாவர்களும்பெறவழங்குங்கடவுட்பிரமத்தமூழ்கி
விதியானியமச்சடங்காற்றிவெண்ணீறாடிக்கலைமகடன்
பதிநாயகனைப்பணிவான்போற்பணிந்துமூலப்பதிதுகுந்தாள்
கொதிவேலனுக்கிக்கயன்மருட்டுங்குடங்கைக்கடங்காத்தடங்கண்ணாள்.    31

 

524    பண்டாடகப்பேரவையினின்றபரமவெளியாகியகுறியைக்
கண்டான்மலர்மஞ்சனமாட்டிக்கனிந்துபூசைக்கையாறு
கொண்டாள்பவளக்கொடிபோலக்குழைந்தாள்கருணைக்கொழுந்தேறல்
உண்டாண்மேலைத்தடங்கோயிலுற்றாளெண்டோள்பெற்றாளே.    32

 

525    வேயாலாவின்கணங்குவித்தவிபுதாதியர்மற்றெவரெவர்க்கும்
மாயாமயத்தோணியிலிருந்துமாசையகற்றுந்தேசிகனைப்
போயாயிடைப்புக்கிறைஞ்சியொருபொன்னஞ்சிகரத்தென்னையருள்
தாயாகியகஞ்சுகனடியுந்தலைமேற்கொண்டாடவங்கொண்டாள்.    33

 

526    குருக்கும்பிறைவாணுதல்பின்னோர்குளிர்நீர்த்தடம்பொற்றளிமேல்பால்
இருக்கும்படிகண்டதிலாடியிறைகோளிலிங்கமொன்றிருத்தி
உருக்குங்கருத்தானருச்சனைகளோவாதுஞற்றவதனினின்றும்
பெருங்கருணைக்கடலனையபெருமான்வந்தான்பொருமான்மேல்.    34

 

527    மாலைக்குழல்சூழ்முகத்தியொடும்வல்லேறூர்ந்தநல்லோனைக்
கோலைப்பழித்தவிழியருவிக்குளிப்பத்தாழ்ந்தகொடியனையாள்
மேலைப்பவத்தின்பொறையிழித்துவீழ்ந்தாலெனத்தாண்மிசைவீழ்ந்து 
சோலைக்கிளிகண்மருளநின்றுதுதித்தாளருளைமதித்தாளே.    35

 

528    மறையோனறியாதருவரையாய்வானங்கடந்துமேனிவந்து
நிறைவாளரக்கிநறைமாலைநீட்டக்குனிந்தவியல்போற்றி
நறைமாமலர்கோலிறைமாரனகையாருருவம்புகையூட்டிக்
கறைதீரிரதிமனங்களிப்பக்காத்தகருணைப்புகழ்போற்றி.    36

 

529    வேணிமுடித்தபெருந்தவத்துமிக்கார்தமக்குமிக்கான
காணிவனத்திரரனுருவங்காட்டிநடந்தகதிபோற்றி
ஆணமலிதாய்வரும்வழிபார்த்தழுதசூலிக்கன்னையெனப்
பேணியெழிலார்பெண்ணுருவம்பெற்றுநடந்தநெறிபோற்றி.    37

 

530    எண்காற்பறவையுருக்கொடுமானுடவாளரியினிகறடிந்து
தண்பூமடந்தைமங்கலநாண்டகையாலளித்ததகைபோற்றி
பண்பாவலர்சூழ்மணிமன்றிற்பரமாவுனதுதிருமுன்னர்ப்
பெண்பேதைமையால்யானிழைத்தபிழையைப்பொறுக்குமருள்போற்றி.    38

 

531    பலவுமினையதுதிகூறிப்பணிமாதரசைத்துணிவாய்ந்த
நிலவுபொதிந்தசடைமுனிவனெஞ்சமினையேலுனைத்தொடர்ந்த
பலபாதகத்துந்தலையாயசிவநிந்தையுமாபாதகத்தால்
இலகுங்களங்கவினையுமகன்றிடுதியான்முன்னெழில்பூண்டே.    39

 

532    செம்மாந்தணந்தவனமுலையிற்சேயிழாய்நின்றிருநாமம்
இம்மாநகர்க்குநீவழிபாடியற்றக்குயிற்றுமுருவினுக்கும்
மைம்மாசகன்றதடத்தினுக்குமலிந்தோங்குகவித்தடம்படிந்தோர்
எம்மாநிலத்துமெமைப்பிழைத்தவதிபாதகந்தீர்த்திலங்குகவே.    40

 

533    புடைக்குஞ்சிறைவாரணங்கூடயபுலரிக்காலத்துன்பெயரைப்
படைக்கும்பதியீங்கிதைமுக்காற்பகர்ந்தோரகந்தைவினையனைத்தும்
துடைக்குந்தலத்துந்துடைப்பரியதொல்லைச்சிவநிந்தனைமுதலா
அடைக்கும்பவங்களெவையுமொரீஇயமலராகவாயிழையே.    41

 

534    தெரிசதினத்தித்தடமூழ்கிச்செய்தென்புலவர்கடன்முடித்தோர்
துருசுபொதிந்தவிருவினையின்றொடர்ப்பாடகல்வார்கார்த்திகையாம்
புரியுமதியிற்கதிர்நாளிற்புக்காடுவரேலெவ்வினையும்
பரிசியாமலொழிவரிந்நீர்படிந்தாரடித்தூள்படிந்தாரும்.    42

 

535    மண்ணாமணிச்சூட்டரவணிந்தவரதனினையவரங்கொடுத்துப்
பெண்ணாரமுதம்பணிகுறியிற்பெருமான்மறையவிறற்காளி
பண்ணார்பலபல்லியந்துவைப்பப்பனிநீர்மழையின்றளிதமெனக்
கண்ணார்கலவமயிலாடுங்கனகமணிமன்றினிற்புகுந்தாள்.    43

 

536    வேறு

 

இழைதவழ்கொம்மைவனமுலைக்காளியிறைஞ்சலாற்காளியெம்புரியென்
றழகியவொருபேரிந்நகர்க்குற்றதன்றியுங்காளிதனெனுமோர்
புழையெயிற்றுரகவேந்தனாற்காளிபுரமெனும்பேருமன்றுளதென்
றுழையதட்போர்வைமுனிவர்கேட்டுவப்பவுறுதவச்சூதனாண்டுரைப்பான்.    44

 

537    தொழுதகுகற்பிற்காசிபன்மகிழுந்துணிவறுவினதைதன்பாலன்
பழுதருமமரரளித்ததொல்வலியாற்பலவரிக்கொடுஞ்சிறைபுடைத்துக்
குழிவயிற்றழலும்பசிகெடவெறிநீர்க்குரைதிரைவளாகமேலடல்சேர்
முழுமணிச்சுடிகைமோட்டராவினத்தின்மொய்யுயிர்படுத்துணுங்காலை.    45

 

538    மாயிருஞாலத்தரவெலாம்பறவைமன்னவவுருத்தொருபகலே
நீயெடுத்துண்ணவாற்றலமடியேநித்தமோருணவுநீவிரும்பித்
தாயினம்புரத்தியென்றலுமுறையேதரத்தரநுகர்ந்தனனிருப்ப
ஏயினவநந்தனாதிவாளரவவிறைவரிற்காளிதனென்பான்.    46

 

539    வேந்துபுள்ளினுக்கோவெனக்குமோவுணவைவீசுமாறென்னையென்னூறு
காந்துவாய்படைத்துமெலிவெனோவென்னாக்கரைந்துதன்சுற்றநின்றிரங்கப்
போந்துதெண்டிரைநீரரண்புகுந்துழியும்புவிபலபொதிந்தசேவடியை
ஏந்துபொற்றோளான்முறையினாலாடுபோரேற்றனனவனுநின்றேற்றான்.    47

 

540    குருமணிச்சுடிகைநாகராவேறுங்கொடுஞ்சிறைக்கலுழனுஞ்சீறிச்
செருவிடையுடன்றுவரையொடுவரைபோர்செய்தனவையகங்கலங்கக்
கருவரைசுழலவிருசுடர்திரியக்கடுஞ்சமம்புரிந்துழிக்கடுங்காற்
பொருசிறையடிக்கும்வரிநகப்புடைக்கும்போயினனுறுவலிபுயங்கள்.    48

 

541    ஈட்டியவலிசாய்ந்தகிபதிமேனாளெய்தருஞ்சாபமொன்றடைந்து
தோட்டிவாயுவணத்திறைபுகாயமுனைத்துறையினோர்மடுவினிற்கரந்தான்
கோட்டியமலர்த்தாளண்ணலங்கண்ணன்கொன்றையந்தீங்குழலிசைத்துக்
காட்டியபசும்புற்கறித்தவானிரைகள்கண்டனயமுனையின்மடுநீர்.    49

 

542    புனல்விடாய்த்தயராவுகளுமான்கன்றும்புனிற்றிளம்கோக்களும்பெருநீர்
மனவிடாய்தணிப்பருகலுமுயிர்போய்மறிந்தனநிரைசுரைகிடப்பக்
கனைகடன்முகடுகிழியமத்தெறிந்தகண்ணனுங்காரிநீரென்னா
அனையதுதெரிவானிறங்கலுமவனையணங்கராவளைந்ததையன்றே.    50

 

543    அரும்பெறற்சித்தியெட்டினுமகிழாவானதையுன்னினன்பெருகப்
பெரும்பொறியரவய்தளர்ந்ததுபிணிக்கப்பெற்றிலதாங்கவனணிமா
விரும்புகழ்ச்சித்தியெண்ணினன்சுருங்கியெறுழ்வலிவால்பிடித்திவர்ந்தான்
பரும்பொறிபரந்ததொள்ளைவெள்ளெயிற்றுப்பள்ளவாய்ப்பாந்தளின்றலைமேல்.    51

 

544    ஆயிரம்பகுவாயநந்தனிற்பதிற்றோன்றியபடந்தொறுமுகைத்துத்
தாயினன்பவுரிபிடித்தனனடிப்பத்தலைதொறுந்தகர்ந்திழிசெந்நீர்
வாயிழிகரைநீரிரண்டினுமாலைவயங்கலவ்விரணியனுரம்போல்
போயினபடங்களமரர்கோவாகப்போரரியாகினன்புனிதன்.    52

 

545    விரிந்தவாயரவத்திறைவனுமெலிந்துவிடுதிநீவிடுதியெய்யாமை
புரிந்தனெனினதுபுண்ணியநாறும்புனைகழல்பொறுத்தலாலுன்னைத்
தெரிந்தனென்மலர்த்தாள்பரித்தவனறையச்சிதைந்தநானின்னடியடிபீண்
டரிந்தமாவாற்றேனென்றலுமிழிந்தவண்ணலுமவனவாவறிந்தான்.    53

 

546    கடுவளிபுடைக்குமடுசிறைக்கலுழன்கதத்தினாற்றிறத்தைநீங்கியதும்
தொடுகடற்றுறந்தீண்டுற்றதுமுணர்ந்தேந்துதித்தநீயலமரேலுனக்குப்
படுவனபகர்தியெனமருதிடந்தபண்ணவனுரைத்தலுமென்பால்
விடுவதுவெகுளிதன்னையீண்டுண்டேல்வேண்டுவவுண்டெனக்கரைந்தான்.    54

 

547    கேழ்கிளர்கமலத்தடங்கணாயளியேன்கிளைஞரைப்பிழைத்தகாதரமும்
ஆழ்கடல்வரைப்பிற்கலுழனுக்குடையாவாற்றலுமெய்துமாறருள்கென்
றூழ்முறைபழிச்சவுலகொருங்கீன்றவுந்தியானுளமகிழ்பூத்துத்
தாழ்தடம்பணைசூழ்தோணியம்புரியிற்சதுமுகனாடியதளத்தில்.    55

 

548    வரன்முறையாடிப்பிரமநாயகனைமஞ்சனமாட்டிநன்மலர்தூஉய்ப்
பரவினையெனினீவிழைந்தனவாதிபரம்பரனருளுவனென்னா
அரவணைச்செல்வன்விடுப்பமற்றவனுமந்தணீர்ப்பொன்னிபுக்காடிப்
பிரமமாதடத்தின்மூழ்கியாளுடையபிஞ்ஞகன்றிருமுனமிறைஞ்சி.    56

 

549    குழகனைவேதக்கொழுந்தனைஞானக்கோதைநந்திருநிலையழகிக்
கழகனைமலர்மஞ்சனமுதற்பொருளாலருச்சனைவினைமுடித்தாதி
முழுமுதல்போற்றிமுக்கணாபோற்றிமூவெயின்முருக்கியநுதற்கண்
மழுவலாபோற்றியிழுதையேனரந்தைமாற்றருள்போற்றியென்றிரந்தான்.    57

 

550    இரந்துதாமரைத்தாள்வணங்கராவரசையிறைவனுமகிழ்ந்துநின்பூசை
நிரம்பினபெறுகோவரம்பலவென்னநின்மலாவெனமனச்செருக்கின்
அரந்தையுங்கிளையையிகழ்ந்ததீவினையுமடுஞ்சிறைக்கலுழனுக்குடையா
நிரந்தரவலியுநின்னடிபுரியாநேயமுந்தருகெனநிமலன்.    58

 

551    கூறியபலவுமளித்தனமம்பொற்கொடிமணிவீதியிந்நகர்க்குத்
தேறியநின்பேர்விளங்கவுமளித்தாந்திருமனைக்கிழத்தியரொடுநீ
ஈறளந்தறியாவளனெலாநுகர்ந்துன்னிறுதியிலெம்முழைவருகென்
றாறுதாழ்வேணியந்தணனுமையோடாலயக்குறியிடையடைந்தான்.    59

 

552    கொடிநிழல்கவித்தநெடுமனைமுகட்டிற்குடுமிமாமயிலணைந்தாடும்
ஒடிவறுவளஞ்சேர்தோணியம்புரியாளுடையவன்விடைகொடுதான்வாழ்
கடிநகரெய்திவாளராவெவையுங்களிப்புறக்கலந்தனனிருந்து
பொடியணிபுயத்துப்புண்ணியன்கமலப்பொன்னடிநீழலிற்புகுந்தான்.    60

 

553    கறையணற்பகுவாய்க்காளிதனாலுங்காளியம்புரியெனவொருபேர்
இறைகெழுஞாலத்திலங்கியதிதன்சீரேவரேதெரிவுறநோக்கி
அறைகுவரென்னாவருட்கடன்பூண்டவறுதொழின்முனிவரருவப்ப
முறைதெரிவேதத்துறையறிசூதமுனிவரன்கனிவுறவுரைத்தான்.    61

 

(6-ஆவது ஸ்ரீகாளிபுரமானவத்தியாயம்முற்றிற்று 
ஆக திருவிருத்தம் - 553)
-------------------


7 -ஆவது. வெங்குருவானவத்தியாயம் (554-592)

 

 

554    பொன்றரும்புகழ்க்காளியம்புரியியல்போற்றி
மன்றமாநகர்வெங்குருப்பெயர்புணர்வரவை
வென்றிமாதவன்சவுனகர்க்குரைத்ததொல்விரிவில்
இன்றறிந்தவாறியம்புவாமொருவழியெடுத்தே.    1

 

555    வெறிமலர்க்கமலாலயன்பதியிடைமேனாளள்
தெறுசினத்துவாளவுணர்வந்தடிதொழுஞ்செருக்கால்
உறுமனக்கொடுசென்றநாளயன்வெகுண்டொழிப்ப
மறுகிவீழ்ந்தனன்கிழக்குறப்பிருகுவின்மைந்தன்.    2

 

556    தானவன்புகுந்துற்றதுஞ்சதுமுகன்றருக்கும்
மானவென்றிவேனிருதருக்குரைத்துவானவர்மேல்
தானையோடெழீஇவெஞ்சமந்தொடங்கியசமைந்தான்
ஆனகாலையின்மகதியாழ்முனிவனாண்டணைந்தான்.    3

 

557    முனியையாதனத்திருத்திநல்விழுத்தகுமொழியால்
இனியகூறியகவிமுகநோக்கினனேழாய்
முனிவராட்சியைமுண்டகன்பதவியைநின்போல்
புனிதமில்லவரெய்துமாறெவ்வழிபுகலாய்.    4

 

558    தெரிவைசெய்வினையாடவனெய்துறுந்தேயத்
தரியவல்வினைகாவலனெய்துமாணாக்கன்
புரியும்வல்வினைகுரவனெய்துறுமரோபுகலுன்
பரிவிலார்வினைபற்றினநின்னையும்பளிங்கே.    5

 

559    கோறல்வல்லவர்கொழுந்தசையூணினர்வளைவாய்ப்
பாறலம்புவெம்படையினர்தருமநூற்பழக்கம்
மாறன்மிக்கவரின்னவர்புன்மதிவளரத்
தேறல்செய்குருநீயெனினுன்னிலார்தீயார்.    6

 

560    இழுக்கிலோர்பொருள்வெஃகியாறிரட்டியாண்
ஒழுக்கினூசிநூல்கட்கிமையுடற்குயிர்போலப்
பழுத்தபண்பிலாதவனுமப்பதகனுக்கொருசொல்
வழுத்தினானுமேநிரயமேற்பயிதெனவளர்வார்.    7

 

561    குரவன்மேலவனாயினுங்குணமிழிசீத்தை
விரவுசீடனாய்விடினவன்கெடுவதுமெய்யே
உரியதெண்ணிலாவாயிடையும்பர்களுண்ணப்
பரியுமாரமுதங்கணத்துக்கவடிப்படிபோல்.    8

 

562    ஒட்பமிக்கநீயுன்னுடையிழுக்கினாலோரெண்
கட்பிரானுலக்கன்றுகீழுற்றனைகவ்வேல்
விட்பசும்பிறைமிலைந்தவன்பூசையான்மேலோர்
உட்பதங்களுமுலவதிசீலனோடொத்தே.    9

 

563    என்றிரங்கியைம்பதத்தையுமருளியிவ்வண்டம்
பொன்றினுங்கடாவொருபிரமாபுரிப்புனிதன்
றன்றிருப்பதம்பணிதியென்றளித்தனன்றணந்தான்
ஒன்றுமின்னிசைமகதியாழ்முனிவரனொருசார்.    10

 

564    மகதிவல்லவனருள்கொடுமாடநீள்கொடிகள்
பகல்செய்வானவன்பரிக்கெதிர்வீசணிபரப்பும்
இகலில்காளியம்புரிபுகுந்திரணியகருப்பன்
புகரறுந்தடத்தீர்ம்புனலாடினன்புகரோன்.    11

 

565    விரவுபற்பலகடன்முடித்தணிமணம்விரிக்கும்
வரமலர்ப்பிரானாட்டியதருநிழல்வதிந்த
பிரமநாயகனடிப்பராயருச்சனைபெருக்கி
அரவணிந்தவனயலவாசியினெயிலகத்துள்.    12

 

566    தெய்வலிங்கமொன்றிருத்தியாராதனைதிறம்பா
தைவகைப்புலனடக்கியைம்பதத்தினாரமுதைப்
பொய்யிலாவுயிர்த்துணையைநாத்தழும்புறப்போற்றி
எய்யவாங்கணையளவையாமியத்திசையெய்தி.    13

 

567    நந்துலாந்திரைநளிதடமொன்றுதன்னாமத்
தைந்துகோணமிட்டணிகெழுகங்கையாதியநீர்ச்
சிந்துமான்மியமெவையுமுய்த்தாயிடைத்திருத்தி
இந்துசேகரன்றன்னையீரிடத்தினுமிறைஞ்சி.    14

 

568    பொறிபுலாதிகளவித்துமுக்குறும்பையும்புறங்கண்
டறிவினாலறியாதறியறிவன்மாட்டறிவைப்
பிறிவறக்கலந்தூழ்சருகருந்தியும்பெருநாள்
எறியுமேல்வளிபருகியுந்தவம்புரியிவன்முன்.    15

 

569    பருதியாயிரங்கோடியிற்பாயொளிபரப்பிச்
சுருதிநாயகனுலகெலாந்தொகுத்தசிற்றுதரத்
தருமநாயகியொடுமெழுந்தருளலுந்தாழ்ந்தான்
அருவியென்பதோர்பொருளினையலர்விழிகாட்ட.    16

 

570    தருமசுந்தரசச்சிதானந்தபாண்டரங்க
பெருமபிஞ்ஞகபிரளயவிடங்கவென்றேத்தி
இருபதம்பணிந்துருகியபிருகுவையெம்மான
ஒருவராற்றுறாவருந்தவமகிழ்ந்தனமொழிவாய்.    17

 

571    விழைந்தவென்னெனவெண்ணிலாவமுதொளிவிரிக்கும்
குழைந்தவெண்பிறைக்கண்ணியாய்தயித்தியகுருவாம்
பழங்கணீக்குறுபவுத்திரப்படிவமுநின்பால்
அழுங்கல்செய்கலாவார்வமுந்தருகெனவமலன்.    18

 

572    நம்பியிந்நகர்வியப்பறிந்தெமைப்பணிநலத்தால்
உம்பர்தேசிகன்சமத்துவம்பெறுதியென்றுதவி
வெம்புறாதநன்மிருதசஞ்சீவனவிஞ்ஞை
எம்பிரானவன்பெறும்வகையுதவினனெழுந்தான்.    19

 

573    தன்னுடைப்பெயரிலிங்கமூடெம்பிரான்சாரப்
பொன்னுடைத்தவமெய்தியகவியும்விண்போனான்
அன்னவன்பெருந்தடத்தினிலன்னவன்றினத்தின்
முன்னியாடுநர்கனவினும்வறுமைநோய்முன்னார்.    20

 

574    தலையிற்கோமயவறுகொடுவெள்ளிநாட்சார்ந்து
துலையிலாடுநர்தொலைவிலாவினையெலாந்தொலைவார்
அலைவளாகமேலிருசுடர்நிலையுநாளளவும்
நிலையுமேதருபுகழொடுநிலவுவர்நெடுநாள்.    21

 

575    தலையுவாவிலித்தடம்படிந்தருங்கடன்சமைத்தோர்
அலைவிறென்புலத்தவரொடுங்கயிலைவிட்டகலார்
கொலையும்வாள்விழிப்பிணிகுருப்பிணிமுதற்பிணியால்
மலைவிலாரொருதினமதிற்படியினுமாதோ.    22

 

576    விருப்பினாற்றயித்தியகுருப்பணியவெங்குருவாம்
இருக்குமிந்நகரன்றியுமெருமையேறுகைக்கும்
ஒருத்தனாலும்வெங்குருப்பெயரிப்பதிக்குற்ற
விருத்திதன்னையுங்கேண்மெனமுனிவரன்விரிப்பான்.    23

 

577    வேறு

 

ஆறாடுஞ்சடைமுதல்வனருளாணைத்திறநாடியறியாறெடடைக்
கூறாடுநிரயமிசைக்குமைந்தாடுநரகரெல்லாங்குழுமிமேனாள்
நீறாடிநெய்மிதந்துமுடைநாறிப்புடைதோறுநிணச்சேறாடிப்
பாறாடுமூவிலைவேல்பரித்தாடுமறலியடப்பரித்தார்மன்னோ.    24

 

578    அரும்பெறல்யாக்கையைவரைவானயலவன்கைத்தீட்டாணியதனைப்பற்றி
வருந்தியுறவரையாமுனிழந்ததெனவிழுந்துகடுமறலியூர்போய்த்
திருந்துமனையெரிகதுவத்தணிக்குமருங்கூவன்முன்னேசெய்காலாற்றா
திருந்தழுவாரெனநிரயத்திருந்தழுவார்மறலிதன்னையினையசொன்னார்.    25

 

579    மூவாவின்னமுதருந்தித்துறக்கமிசையரமகளிர்முகிழ்மென்கொங்கை
ஓவாதுபுல்லுநருமண்ணகத்திற்பலபோகமுறுகின்றாரும்
தாவாயின்னணமிருப்பவெம்முழையினின்கிளைஞர்தண்டஞ்செய்ய
ஆவாவிங்ஙனமாற்றேந்தறுகண்ணாவென்செய்கேமளியேமென்றார்.    26

 

580    சமிக்கரியமுள்ளறைந்துமூசிமிசைச்சவட்டியுஞ்செந்தழல்வாய்ப்பெய்தும்
உமிழ்தழலூட்டியுங்கூடத்தோச்சியும்வாய்ச்சிகளாடியொறுத்தும்வேறாய்த்
துமித்ததுணிகூட்டியும்வெம்புழுக்களொடுகழுக்களிடைசோரச்சோர
அமிழ்த்தியுமிவ்விருத்தியிலேவிளிவற்றாயெவரிடத்துமளியற்றாயால்.    27

 

581    ஒருத்தரின்முந்தொருத்தரிவ்வாறரற்றியபேரோதைவளியுயிர்க்கநூறு
துருத்தியழல்பொருத்தியசெஞ்சுடர்ப்படையாற்செவித்தொளையைத்தொளைத்
தாற்போன்று, கருத்திளகிக்கண்பனிப்பக்கையறவுமீதூரக்கவன்றகூற்றன்
பெருத்தவினைத்தொடரறியாதுரைக்கினுமிவ்வுரையெனக்கோர்பிழையாமன்றே.    28

 

582    நல்வினையின்பயனுகரந்நாளிலெனையுன்னினரோநன்மைநீங்கி
அல்வினையின்பயனுகரச்சுளித்தனராலவரவரவறிவைநீக்கித்
தொல்வினையின்றொடரறியுமறிவையறிவுறுத்தும்வழிதொடுப்பலென்னா
வெல்வினையின்முடைத்தருமனடறபிரமாபுரம்பணியமேவினானால்.    29

 

583    கண்ணடருங்கழைக்கரும்புதுவைத்திழிசாறெரித்தபுகைக்கருங்காரென்னா
அண்ணலங்கட்சிறைமயில்களாலுமலர்ச்சோலைகளுமகன்றுவேதப்
பண்ணலங்கொள்பழம்பாடன்முனிவர்பணிசினகரத்திற்பதுமத்தண்ணல்
எண்ணலஞ்சேர்தடமூழ்கிப்பிரமேசன்றிருமுனம்வீழ்ந்திறைஞ்சியேத்தி.    30

 

584    கருநீர்மையறவெறியுந்திருமூலப்பரஞ்சுடரிற்கனிவாலந்தண்
பெருநீர்மஞ்சனமாட்டியருச்சனையின்றுறைமுடித்துப்பிறழுந்தீபத்
திருவாராதனையாற்றியாணர்முகைவிரிந்ததடஞ்சினையதெய்வத்
தருவாருநாண்மலர்தூஉய்த்தடக்கைமுகிழ்த்தேத்திசைத்தான்றருமமூர்த்தி.    31

 

585    வேறு

 

அந்தமறைகாணாதாதியிடையீறிகந்த
சுந்தரமாய்நின்றிலங்குதோணிநிலைபோற்றி
தோணிநிலையூர்ந்துசுலவுங்கடல்புதைத்த
பாணிநிலைகண்டபகவாநின்றாள்போற்றி.    32

 

586    சாயைமறைகாணாத்தாவாவிழுப்பொருளாய்
மாயமயத்தோணியின்மேல்வந்தநிலைபோற்றி
வந்தநிலையான்மலரோன்முதலெவர்க்கும்
பந்தமறுத்தாளும்பகவாநின்றாள்போற்றி.    33

 

587    கவ்வைமறைகாணாதகாரணாதீதமமாய்த்
தெய்வமலிதோணிவருந்தேவாநின்றாள்போற்றி
தேவாதிதேவாய்ச்சிவகுருவாயெவ்வுயிர்க்கும்
பாவாதிமாற்றும்பகவாநின்றாள்போற்றி.    34

 

588    வேறு

 

படரகலவுருகியின்னபலதுதிகளெடுத்தேத்திப்பணிந்தசெங்கோற்
கடவுண்முன்மடலேற்றிற்கயிலைமிசையிவர்ந்ததெனக்கதிர்வேலுண்கண்
மடவரலோடெழுந்தருளிமறலியுளமகிழ்பூப்பமைந்தாவின்றுன்
இடரகலவிழைத்தபணிமகிழ்ந்தனநீவிழைந்தனகேளெனவெங்கூற்றன்.    35

 

589    புண்ணியநின்னடிக்கமலப்போதினிலென்னுளக்கமலம்புனைதல்வேண்டும்
கண்ணிநிரயத்துயிர்களெனைநோக்கியினையாமற்காத்தல்வேண்டும்
அண்ணுமிருவினைத்தொடரினிருபயனுமவ்வவுயிரறிதல்வேண்டும்
நண்ணியமாநகரிதற்குநின்னடியேன்பேரேநல்கவேண்டும்.    36

 

590    நடுவனிவையிசைத்திரப்பவடுவகிரினெடியவிழிநாரிபாகன்
கடுவினையின்பயனுயிர்களறியுமறிவளித்தனநீகவலேல்கண்ணில்
படுவனகண்ணினையறியாதாடியெதிர்விழித்தறியும்படிபோலுன்றன்
நெடுமுகநோக்கியவளவேயவரவர்தந்தீவினையைநினைந்துநொந்தே.    37

 

591    இருவினையுமுத்திபுகற்கிடர்வினையாமுயிர்களிவையிகப்பவேண்டி
ஒருவினையைத்துறக்கமிசையுய்த்தகல்வித்திடினுமரோவொன்றையுன்கை
தருவினையானிரயமிசைசவட்டியொழித்திடுமாமித்தகைமைத்தால்வெங்
குருவெனப்பேர்புணர்ந்தனைநீபணிந்தமையாலிந்நகர்வெங்குருவாமன்னோ.    38

 

592    பொன்பழுத்தமணித்திதலைப்பொறிபழுத்தபுளகமுலைப்பூவைபாகன்
அன்பழுத்துமறமகற்கிவ்வருள்பழுத்துவிந்துளியினகத்துப்புக்கான்
பின்பழிச்சியொருதருமன்றன்பதத்தினினிதிருக்கப்பெற்றானென்னா
முன்பழிச்சுமுனிவரர்க்குமுறைபழிச்சினான்கலைகண்முழுதும்வல்லான்.    39

 

(7 -ஆவது வெங்குருவானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் 592)
---------- 


8-ஆவது. காகவிமோசனமானவத்தியாயம் (593- )

 

593    மங்கலம்பொலியுமிந்நகர்க்குமாண்டகு
வெங்குருப்பெயரியல்விரித்துவெங்கொடி
இங்கிதிலுயர்ந்ததுமிசைப்பலென்றருட்
புங்கவன்புகன்றதுபுகலுவாமரோ.    1

 

594    முச்சகமிசைநிலாமுயங்கமுன்னைநாள்
எச்சமிலிந்திரதிருவுமெய்தினோன்
அச்சமிலடல்விகடாங்கன்கன்னியர்
குச்சமென்புவிப்பொறைகொண்டதோளினாள்.    2

 

595    தெறுகலியிருள்கெடத்தெண்ணிலாவுமிழ்
நெறிமதிக்கவிகையினிவந்தகாட்சியான்
துறுவலியொன்னலர்துதைந்தசேகரப்
பொறிமுடியுழுதெழும்பொன்னந்தோளினாள்.    3

 

596    சுகமழையுய்த்தவானவர்க்குத்தூமமென்
மகமழையுய்ப்பவன்வாரிநீத்தநீர்
அகனுறுகயலெனவவனித்தொல்லுயிர்
சுகனுறமனுநெறிதுலங்குங்கோலினான்.    4

 

597    பொறையினிலிரும்புவிபொற்பின்வேனில்வேள்
கறையறுநயனுடைக்கல்விக்கெல்லைநூல்
முறையினிலறமகன்முரணுந்தெவ்வர்கைத்
தெறைவரைரமீதுலாஞ்சினவெள்ளேறனான்.    5

 

598    பொன்னடிமருவலர்புகழ்ச்சிபாவலர்
அன்னசீர்மறையவராணைநீணிலந்
தன்னருளாதுலாசாற்றுமுப்பொறி
முன்னவன்றமர்கொளமுறைமைசெய்யுநாள்.    6

 

599    ஆழியொன்றுருட்டிநீடவனிமங்கையை
வாழிரும்புகழ்ப்படாம்வனைந்தகோமகன்
ஊழொளிமாப்படுத்துலவுவேட்டமேல்
ஏழுயர்களிற்றினானெழுந்துசென்றனன்.    7

 

600    வலைஞருமண்டமர்கடந்தமள்ளரும்
கொலைஞருமறவருங்கூர்ம்பன்ஞாளியும்
மலைமுரிகடலெனவாரத்தானையும்
இலையயின்மன்னருமியைந்தசூழ்வர.    8

 

601    மொய்யுறுவெரிநிடைமுகந்தகூன்சிலை
எய்யுறுகணைக்குமுன்னெய்துகூந்தலம்
கொய்யுளைப்பரியிவர்குமரன்சேனையால்
மய்யன்மாவுழிதருவனத்தைமுற்றினான்.    9

 

602    தலைத்தலையெறிவலைவிசிறித்தானையை
நிலைத்தலைநிறுவிவேலெறிந்துநீனெயி
றுலைத்தலைஞாளியினுரப்பிப்பல்லியம்
சிலைத்தலும்விலங்குகடிரண்டுமாண்டவே.    10

 

603    கார்க்கடமுதுகடல்கறைகள்வைகறை
வார்ப்படைகில்லியர்மாமந்தேகர்வெம்
போர்க்கணைகதிர்களாப்புரவியொன்றுவா
பார்க்கிறையிருளடுபதங்கன்போலுமால்.    11

 

604    அவையிலோர்கேழல்கையகலமன்னவன்
கவையறுகவிழ்குரக்கலினமானிழிந்
தெவருநின்றலமரவெண்ணில்காவதம்
நவையறுகருங்கழனாலவோடினான்.    12

 

605    பெருந்தகைமற்றதைப்பிழைப்பில்வேல்கொடு
தெரிந்துயிர்கொண்டனன்சேனைவேறுவே
றிரிந்தனவுச்சிவாயிறையென்றூழ்படக்
கரிந்தனனடுபசிகனற்றவெம்பினான்.    13

 

606    பொருபசியகஞ்சுடப்புறத்தென்றூழ்சுடக்
கருதியதனிமகன்கண்ணுற்றானுயிர்
வெருவராநடையெனன்விமலன்வெள்ளிநூல்
மருமன்மேதாதிதிமடத்தினொண்புகை.    14

 

607    துருவியாண்டேகலுந்தோமின்மாதவன்
திருமுகங்கையினன்மலர்த்திச்செல்வனை
வருதியென்றரும்பெறல்வாழிகூறினான்
குருசிலும்வரன்முறைகூறினானரோ.    15

 

608    செங்களம்புனம்படத்திரிந்துநால்வகை
அங்கமுமென்பெயரடையயானொரு
வெங்கருங்கேழல்பின்மேவிநுன்னுழைத்
தங்கவந்தனன்பசிதணிப்பவெண்ணியே.    16

 

609    அறைழலரசரேறனையகூறநான்
மறைவலானென்றவமாண்டதிவ்வுழி
உறைதியென்னிறந்துளோர்க்கூட்டும்வேள்வியின்
துறைமுடித்துன்பசிதுடைப்பலென்றனன்.    17

 

610    துடைப்பதுபசியெனிற்றுண்ணென்றின்னுணாப்
படைத்தருள்பின்னெனல்பரந்தவாரழல்
உடைப்புறுமுறையுளாங்கொருவிவேறொரு
புடைச்சிறுதுச்சிலைப்போற்றல்போன்றதே.    18

 

611    துலைமணிநாவெனத்துலங்குகோன்மையால்
மலர்தலையுலகருண்மதலைகேட்டியால்
புலனுறுமறையவர்ப்போக்கியேனைய‌
குலனுணுங்கான்மகங்குறையுமுண்மையே.    19

 

612    ஒழுக்கமும்வழக்கமுமோங்குதண்டமும்
வழுக்கறநாடினைவழக்கொழுக்கினால்
இழுக்கினார்தமைத்தெறுமெந்தைக்கிச்செயல்
வழுக்கெனமுனிசொலமன்னன்சீறியே    20

 

613    புழுங்கியெய்துழையரைப்புகுத்திவெண்பலி
உழந்திடுகருணைநல்லோசைமென்றுவை
அழுங்குறவவ்வியுண்டரசுதேக்கெறிந்
தெழுந்தனன்முனிவெகுண்டினையசொல்லினான்.    21

 

614    அருங்கடிமனைபுகுந்தயின்றவேள்வியை
முருங்கினைபலியினமுகந்தகாக்கையின்
இருங்கடிநகர்புகாதெரிவெங்கானிடைக்
கருங்கொடியாகெனக்கழறிநீக்கினான்.    22

 

615    முனைவனல்கியமுரட்சாபமூண்டுவெங்
கனையிருட்காரியாய்க்கவிகைக்காவலன்
துனைவினாலுழன்றனனென்னிற்றூயவர்
இனையறுதவவலிக்கேற்றம்யாவதே.    23

 

616    ஆய்பதனுண்டிபோயலறுகாகமாய்ப்
பூபனும்பன்னிருவருடம்போயபின்
மாபதன்கோதமனென்றமாசறு
தாபதனுறைதவச்சாலைநண்ணினான்.    24

 

617    நண்ணலுமழல்வினைநடத்திநண்பகல்
பண்ணுறுபலியிடுபகவன்கண்டனன்
விண்ணிமிர்சிறையொடும்வெடித்தவார்ப்பொடும்
கண்ணுழல்காரலகார்வெங்காக்கையை.    25

 

618    மேலதனியற்கையும்வேட்டமேயதும்
சீலமாமுனிவரன்செய்தசாபமும்
சாலையினிடைந்ததுந்தன்னுட்கண்டனன்
காலமூன்றையுமுணர்கடவுண்மாதவன்.    26

 

619    முனிவனைக்காண்டலுமுன்னராக்கமும்
துனிபடுமிவ்வுருத்தொடர்ந்தவாற்றையும்
நனியுணர்ந்திறைமகன்ஞானவாரியை
இனியெனக்கருளெனவிரங்கியேத்தினான்.    27

 

620    பேமுறுமொருகரும்பிள்ளைவேந்திவை
ஏமுறவுரைத்தலுமிதயத்தெண்ணினான்
நாமுறுமுனிபழிநலியவாழியான்
தோமறுத்துயரியதொல்லைக்காழியை.    28

 

621    வார்ந்தகாவிரிமுதலிறுதிமாதலம்
ஓர்ந்தனமவற்றின்மிக்குபயவாளியிற்
கூர்ந்தநூற்கும்பனுந்தானுங்கோட்டிய
ஈர்ந்தடத்தினிலிரண்டிலிங்கமுள்ளதை.    29

 

622    ஆலுமாமறையவர்ப்பிழைத்தலாதியும்
சாலநூறியவிதிதடங்குலாயதைக்
காலுலாந்திசையின்முக்கணையினெம்பிரான்
வேலினாற்றியதடம்விளங்கநின்றதை.    30

 

623    கருதுபுமன்னவகவலன்மாகநாள்
மருவியதெம்மொடும்வருதிநின்னுடை
ஒருவிழிப்பவமின்னேயொழிப்பமென்றுகொண்
டருண்மலிபொன்னிபுக்காடிமேலவன்.    31

624    வேறு

 

சேட்டிளஞ்செவ்விவாய்ந்ததிண்கழைகுதட்டுமேதி
பாட்டிளந்தும்பிபாடப்பரிசிலர்க்குதவுவாரிற்
காட்டிமாமருதநீழ‌ற்கண்முகிழ்ந்துறங்குமந்தண்
கோட்டநீள்காழிமூதூர்க்கொடிமதிட்கோயில்புக்கான்.    32

 

625    மாகநீர்ப்படிந்தமேனிவனசநீர்த்தடத்திலாட்டி
நாகநீர்வேணியெந்தைநற்பதம்பரவிச்சூலத்
தேகநீர்த்தடத்துமாடியிரும்புனறெளிப்பவெங்கட்
காகநீருருவமாறிக்காவலன்பொலிந்தான்மாதோ.    33

 

626    சிறுவரையடைந்தமாசுதெண்டிரையனையநீர்மை
உறுவரையடைந்தாற்றீர்வதுண்மையேயிவனிந்நீரின்
மருவரையொருவனாடிவருடமீராறுநீங்காப்
பெருவரையனையமாசைப்பிரிந்தனன்றெறிந்தநீரால்.    34

 

627    பின்னெடுங்குணக்குன்றன்னபெருமுனியிறும்பூதெய்தி
அந்நெடுந்தகைக்கோரைந்துபதத்தையுமளிப்பவன்னான்
முன்னெடுஞ்சாபமீந்தமுனிவரன்வேள்விமுற்றித்
தன்னெடுந்துயர்விண்டென்னத்தன்றுயர்விண்டான்வேந்தன்.    35

 

628    முத்தலைத்தடம்புக்காட்டிமுரட்டடங்கரையினூடே
பைத்தலையரவவேணிப்பரமனைநிறுவிப்போற்றிப்
பித்தலைத்தென்னையாண்டபிரமநாதனையும்வாசத்
தொத்தலைத்தருமென்கூந்தற்சுந்தரிதனையும்போற்றி    36

 

629    ஆனமுதைந்துஞ்சேதாவளிநறும்பாலுந்தேனும்
ஏனவுமாட்டிப்பன்மாமலர்கடூஉயிமயமீன்ற
பானலங்கண்ணியோடுபணிந்துசூக்குமம்பகர்ந்த
மாநலங்கொண்டெம்மாற்குமணமுருகாற்றினானே.    37

 

630    சந்ததம்விழவுகாணத்தகும்பொருள்கோடிநல்கி
நந்நியூர்பகவன்கோயினற்பணிபழுதுபோக்கி
மைந்துறவிரித்துதாவாவல்லிருட்பிழம்புசீக்கும்
செந்தழல்விரிக்குஞ்சோதித்தெய்வதவமணியொன்றீந்தான்.    38

 

631    நிருமலபோற்றிகுன்றாநித்தியபோற்றிமேனாள்
குருவரபோற்றியொற்றைக்குழவலாய்போற்றிமேனாள்
அருமுனையாழியான்மாமலர்விழிகவர்ந்துதெண்ணீர்
இருமணிச்சூலத்தாலென்னிருவிழியளித்தாய்போற்றி.    39

 

632    போற்றியென்றமலன்காழிப்புண்ணியனிச்சைபூண்டு
சீற்றவேரரிந்ததெய்வமுனியையும்பணிந்துசெவ்வே
தூற்றுசீர்முகில்பெறாதசெந்நெலிற்றுவண்டுகண்கள்
நாற்றிசைபரப்புந்தொல்லைநகர்வயினடைந்தான்மன்னோ.    40

 

633    பின்னிருகூந்தனல்லார்பெருங்களியமுதமாந்தித்
தென்னிசைவளர்த்துந்தெவ்வர்சேண்முடிபணித்துநேமி
இந்நிலத்தோச்சிமேலுமிறுதியினிறுதியில்லான்
பொன்னடிநீழல்புக்கான்பொருந்தலர்க்கடந்தவேலான்.    41

 

634    காகமோசனமாமின்னகாரியம்புரத்தியாரேனும்
ஏகநாலரைநாள்யாமங்கண்மரைக்கணமிருந்தோர்
நாகமாலிகையான்றொல்லைநல்லுலகடைவதல்லால்
போகபூமியினும்போய்ச்சார்ந்தடைவரோபுகலினம்மா.    42

 

635    மெய்ப்படுமெண்ணெயெள்ளும்வெண்ணெய்தீம்பாலுங்கட்டி
துப்படுசாறுமூரற்றொகுதிநல்லனவுமாகா
அப்பரிசறத்தாற்காளிபுரத்தவதரித்துளாரும்
ஒப்பிலியாவரல்லாலுற்பவத்தினராகாரே.    43

 

636    பன்னியகாகநீங்கிமறுபவம்படைத்தலாலே
பொன்னிசூழந்தண்காழிபுனர்சன்மபுரமென்றோர்பேர்
மன்னியதென்றானெண்ணின்மறைபலவடித்தகேள்வி
துன்னியமுனிவன்றாளைத்தொழுமுடிமுனிவன்றானே.    44

 

8-ஆவது காகவிமோசனவத்தியாயம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் -636. 


9-ஆவது புகலியானவத்தியாயம். (637- 675 )

 

637    விண்ணியலுருவக்காரிவேற்றுருவமைந்துதோணி
நண்ணியவொருவன்றாளைநண்ணியதுரைத்தமேலோன்
புண்ணியப்புகலியாயபொருளையுந்தெரித்தவாறே
கண்ணியவறிவுகொண்டுகழறுவான்கருதினேனால்.    1

 

638    அறந்தலைபணிப்பநீதியரசுகோல்கோடநீண்ட
மறந்தலையெடுப்பநான்குவருணமுமருண்டுதத்தம்
திறந்தலைகலங்கமாதர்செயிரறுகற்புநீங்கி
இறந்தலைபடப்பொல்லாதவிருட்கலிபரந்துமேனாள்.    2

 

639    பரந்தவன்கலிப்புத்தேளைப்படிறுடைக்குறளைநூலின்
அரந்தைமந்திரத்தாற்பல்லோரழுகணீராட்டியெள்ளிச்
சுரந்தபொன்மலரிற்பேதைக்கோயிலுட்சூட்டிக்காம
நிரம்பமுதருத்திப்பூசைநீணிலமன்னனாற்ற.    3

 

640    மானநூன்மறையோர்யோகமகளிராலவிந்தவேறு
தானமெண்ணிலவேட்டங்கைத்தழலும்வீறழிந்தவாக்கில்
ஆனபொய்யுரையால்வாழ்த்துமாசிகளவிந்தபல்லோர்
போனகம்பயில்வால்வேதம்போற்றலுமவிந்தமாதோ.    4

 

641    தொழுகுலத்தவர்மாழாப்பச்சுருதிநூழற்றுறைகள்யாவும்
இழிகுலத்தவன்விரிக்குமிறையில்லைவினைகளில்லை
முழுவதுந்தானேயென்றுமொழிந்துமுற்றுணர்ந்தார்போல
இழுதைகளொடுசெம்மாக்குமிகம்பரமில்லையென்றே.    5

 

642    அரிவைதன்கொழுநன்கேட்டவாய்மதியுறுத்துமன்னான்
தெரிவிலவதற்குமைந்தன்றெருட்டுறுந்தெருட்டுங்காலை
உரியதன்றெனமறுத்தாலுணர்விலியஞ்ஞையின்னும்
பிரிவிலன்மருந்திற்றீராப்பித்தனென்றெள்ளுமாங்கே.    6

 

643    மறப்பதுகுரவன்வாய்மைமடுத்தினிதுண்பவேரி
துறப்பதுபெரியோர்கேண்மைதொடங்குவவிடும்பைசூது
சிறப்பதுகயமைச்சூழ்ச்சிசெய்வதுகாமப்பைங்கூழ்
இறப்பதுகடவுட்பூசையிசைப்பதுபுலனில்கோட்டி.    7

 

644    வற்புறுமகங்கடேய்ந்துமழைவளஞ்சுருங்கிமாதர்
கற்பிகந்தான்பாலஃகிக்காசினிபொய்த்துத்தேயம்
பொற்பழிந்தொழுக்கமாறிப்பொய்கொலைகளவுகாமம்
பற்பலகளியாட்டாடப்படர்கலியாடுமந்நாள்.    8

 

645    புறக்கொடுகளைகண்மொய்ப்பபுலம்புறுபைங்கூழ்போன்று
திறப்படுமுலகமெங்குஞ்செறிகலிபுதைப்பநோக்கி
இறப்பருந்துயராலோர்சாரிருந்துதன்னிலம்பாடுன்னி
அறப்பெருங்கடவுளுள்ளத்தாரஞரெய்தினானே.    9

 

646    ஆடகக்கொடிமென்சாயலன்னையோடமர்ந்தஞான
நாடகக்கொழுந்தைவெள்ளிநகத்திடைப்பரவிப்போந்த
மாடகப்பருதிபற்றன்மகதியாழ்முனிவனந்த
நீடகங்குழையாநின்றதருமனைநெறியிற்கண்டான்.    10

 

647    என்கொலோதருமப்புத்தேளீண்டிருந்தனைநின்சோதி
மின்குலாமேனிவாடிமெலிந்தனையிளவெண்மூரல்
உன்குலாமுகத்திற்காணேமுற்றதுசொற்றியென்ன
நன்குலாந்தருமச்செல்வனாணியீதுரைக்குமன்றே.    11

 

648    முன்னுகமதனினான்காய்மொழிந்தபின்னுகத்தின்மூன்றாய்ப்
பின்னுகமதிலிரண்டாய்ப்பிறழுமிக்கலியினொன்றாய்ப்
பன்னியவறங்களின்னபாங்கிலேதாழத்தாழ்ந்து
மன்னியதாள்கடேய்ந்துவருந்தினேன்வருந்தினேனால்.    12

 

649    கலியிடைச்சுருங்கியொற்றைக்கால்கொடுதிரிகலாற்றேன்
வலியுடைத்தாளோர்நான்கும்வரும்வழியருளுகென்ன
மெலிவினையறிந்ததெய்வவீணையங்கிழவனீண்டே
நலியலைதருமவென்றுநகைமுகமலரச்சொன்னான்.    13

 

650    களித்தபுள்விலங்குதம்மிற்கனிவுகூர்ந்தீன்றதாய்தம்;
அளித்தலைப்பிரிந்தஞான்றேயயலெனத்திரியுமாபோல்
சுளித்தலையில்லோயுன்னைத்தோய்ந்தநாளுன்னாள்பொச்சாந்
தொளித்தநாள்கலிநாளல்லாலுன்னில்வேறுண்டோகூறாய்.    14

 

651    பொன்வலிகாட்டும்வேணிப்புண்ணியனுளத்துவந்தாய்
நின்வலிநீயுங்காணாய்நிகழ்த்துமுன்னுகத்திற்குன்றா
மன்வலித்தவமாசாரம்வளரருண்மெய்ம்மைமல்க
உன்னுடைநான்குதாளாயுற்றனநினக்குவேந்தே.    15

 

652    அதுவழியுகத்தாசாரமருண்மெய்ம்மைமூன்றுமோங்கக்
கதுவுபொற்றாளோர்மூன்றிற்கவின்றனைமற்றையூழி
பொதுவுடைக்கருணைமெய்ம்மைபொலிந்திடத்துணைத்தாள்பெற்றாய்
முதுகலிமடங்கன்மெய்யேமுயங்கவோர்தாள்பெற்றாயால்.    16

 

653    மெய்யொன்றேநின்றவாற்றால்விதிசுடரிரண்டுஞ்செல்ல
மய்யொன்றுபுணரிநிற்கமன்பதைமலைந்துதம்முள்
பொய்யொன்றுமுள்ளந்தேறப்புகன்றுசூளறவுகாணக்
கய்யொன்றுமழல்சான்றாகக்கண்ணுவபலவுங்கண்டாய்.    17

 

654    ஆதலினொருதாளுற்றாயணுக்கள்செய்வினைக்கீடாக
மாதொருபாகன்றந்தவகுப்பலாற்கலிவேறொன்றோ
நீதுயருறவாயல்லைநிகழ்ந்துளபரதகண்டத்
தோதுதென்றிசையிற்பொன்னியுத்தரதிசையினூடே.    18

 

655    வாரடமிடைந்தகொங்கைமடநலாரோடும்வைவேல்
சூரடமெலிந்தவிண்ணோர்துதைந்தனர்புகலான்மூதூர்
ஏரடர்புகலியென்றேயிலங்கியதிறுதிவேலை
நீரடவிழியாதொன்றிநின்றநீயுங்காண்டி.    19

 

656    அனையதிலெம்மானோர்மூன்றருளுருப்புணர்ந்தான்றன்னை
நனைமலர்கொடுதூஉய்ப்போற்றிநான்குறுதாளும்பெற்று
வினையறவிலங்குகென்றுவிடுத்தலும்வீணைச்செல்வன்
புனைகழலிறைஞ்சிப்போந்தான்யுண்ணியவுருவத்தோன்றல்.    20

 

657    வேறு


தருமாதிதருந்தருமத்தொருவன்
திருமாதுறைசெம்பியநாடணுகிப்
பெருவால்வளைவீசுபெருந்துறைநீர்
வருகாவிரியாடினன்மாடுறவே.    21

 

658    மடபான்மயில்வால்சிறைவீசியகால்
அடல்வேல்விழியார்மணியூசலசைந்
துடனாடவுலாதருதண்டலைசூழ்
இடனார்பிரமாபுரமெய்தினனால்.    22

 

659    பொன்னாரெயின்முற்றியபொற்றளிவாழ்
தன்னேரிலிதாடொழுதாய்மறையோன்
முன்னாடுதடத்தினின்மூழ்கியதன்
பின்னாதனருச்சனைபெட்புறவே.    23

 

660    வழிபாடுவழாதுமுடித்தயலே
மொழிதாருவினீழலின்முக்கணனைப்
பழிபோயதனாமமுறப்பயில்வித்
தொழியாதிருதானமுமுண்மையினால்.    24

 

661    வந்தித்துவணங்கினன்மாவருடம்
பந்தித்தொருநூறுளர்கால்பருகிச்
சந்தித்ததவந்தருமன்செயலால்
அந்திப்பிறைவெணியனவ்வுழியே.    25

 

662    முகிலூர்குழன்மின்னொடுமூவிலையார்
இகல்வேலொடுமெய்தலுமீரடிமேல்
அகலாதவருத்திகொடாய்மலர்தூஉய்ப்
புகவீழ்ந்துபுகழ்ந்துபணிந்தனனால்.    26

 

663    பணிகின்றவன்மேனிகளைப்பணிதோய்
அணிசெங்கையினீவியருந்தவநீ
தணியெவ்வரமுந்தருதுந்தருமா
பணியென்றபணித்தொடையானெதிரே.    27

 

664    உன்மாணடியுள்ளமிருந்ததெனா
என்மாமுதுகெய்தவுமீரிருதாட்
சொன்மாவலிகொண்டுசுமக்கவுமுன்
பொன்மால்விடைபோல்வலியுந்தருவாய்.    28

 

665    என்றின்னவிரந்தவரம்பலவும்
பொன்றுன்னுபொலன்சடையானுதவி
என்றுந்தனியேறுருவாயுறைகென்
றொன்றுங்கரமுச்சியில்வைத்தறைவான்.    29

 

666    செம்மாமறையுஞ்சிவகண்டிகையும்
மெய்ம்மானவெண்ணீறுமொரைம்பதமும்
இம்மானுடைநின்னொடுமைந்திவையே
எம்மோடொருதன்மையவென்றறிநீ.    30

 

667    வேறொன்றும்விளம்பலைமெய்விரதன்
நீறும்பதமைந்துநிறைத்துளவன்
ஏறும்பொறையன்பிறனிற்கவரான்
வீறுஞ்சிவபூசைகள்மேவுழியும்.    31

 

668    அரசோடுதுழாயணிவிளமா
னிரைவேதநெடுந்தளிசந்தமடம்
முறைநூல்விரிவேள்வியுஞற்றுழியும்
வரையாதுவதிந்துவிளங்குகநீ.    32
 

 

669    நீயெவநெடுந்தவமாமவையே
நாமேவுவநம்மருள்கொண்டுலகம்
தாமேவவிளங்குகரோதகையால்
யாமேவுலகெங்குநிறைந்தமையால்.    33

 

670    இவணீசெயுமிலிங்கமிதைப்பணிவார்
பவமாறுகபாய்பரிமேதபலன்
துவமோடினிதெய்துகதூயொளிவிட்
டவராளுகநங்கயிலாயமதே.    34

 

671    பொருமாடைபுனைந்தவர்மாவருணன்
திருமேவுகசெய்வழிபாடுடையார்
ஒருகோடிமகப்பலனுற்றுமணந்
தருமாதியினெய்துகசந்ததமே.    35

 

672    வெடிசந்தமிழைப்பவர்மிக்கமகம்
படியொன்றுபவுண்டரிகம்பெறுக
நொடியிங்ஙனிருப்பினுநோதகவற்
றடியந்தமிலாவுலககாளுகவே.    36

 

673    நடநாதனிவ்வாறருணல்கியுகந்
தடலேறுருவானவன்மாமுதுகில்
படநாகணையான்விழிபற்றியநீள்
மடலார்வனசங்களைவைத்தனனால்.    37

 

674    இடையிற்கொடியோடினிதேறியபொற்
சடைமுத்தெனருட்கொடுதன்னுருவோர்
விடைபெற்றவன்மேலும்விடாவிடையேற்
றடையத்தனரும்பதமுற்றனனால்.    38

 

675    பரிவார்தருமன்பணிபண்ணவனும்
தெரியாநிலைசென்றனனென்றுலவா
விரிவார்முதுவேதவியாதனருட்
பிரியாமுனிபேசினன்மாசறவே.    39

 

9-ஆவது. புகலியானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் -675 


10 - ஆவது. சிரபுரமானவத்தியாயம். (676- 699 )

 

676    பரவுகொடுங்கலிநலியமெலிந்துயிர்பதறிநெடுந்தருமன்
சரணமடைந்துளநெறியிவையிங்கிதுதனிலொருவன்பணியச்
சிரபுரமென்றொருபெயரின்விளங்கியதிறனும்விளம்புவெனென்
றுரவன்விளம்பியகதையையுணர்ந்ததிலொருவழியிங்கறைவாம்.    1

 

677    அமரரும்வெம்பியவசுரருமந்தரவருவரைகொண்டெறிபால்
இமிழ்திரையுந்தியினடுதறிசந்திரனிடுமுரகங்கயிறாய்த்
தமரநெடுங்கடல்குமுறவிரும்புவிதகர்படவெண்டிசையும்
திமிதமிறைந்திடவமுதம்விழைந்துறுதிறலினருங்கடைநாள்.    2

 

678    சுலவுதடங்கடலலமரமண்டியசுடுகடுவெங்கறைநீர்
அலர்மகளைந்தருமுழுமணிவெம்பரியடுகரியும்புவிசூழ்
நலனுறுமங்கையர்சுரபிகள்வந்தபினரைதிரைதுஞ்சலிலா
திலகுமருந்தெனுமமுதமெழுந்ததிலெவருமகிழ்ந்தனரால்.    3

 

679    எழுமமுதந்தனையிருமுதுபந்தியினினிதுபகுந்திடுமா
றொழுகியவன்பினின்மழையுறழுந்திருவுருவனெழுந்துணர்வால்
முழுவலிதுன்றியநிருதருமுண்டுழிமுரணிமுடிந்திலராய்
அழிவறுவெஞ்சமம்விளையுமிவஞ்சரையடுதிறமெங்கணெனா.    4

 

680    மதிவதனம்புனைதிலதமும்வெண்பிறைவரிநுதலுங்குழையோ
டெதிர்பொருதுந்துணைவிழியுமருங்கொடியிடையுநறுங்குழலுந்
திதலையரும்பியவிளமுலையுங்கொடுதிருவளர்பெண்கொடியாய்
அதிர்செய்சிலம்பொலிகுமுறநடந்தனனசுரர்மயங்கிடவே.    5

 

681    குறுநகைவெங்கயலெறிவிழிபொன்புனைகுவிமுலைகண்டிவளே
உறுகதியென்றுகணினைபறியுண்டவருணர்வுமழுங்கியிடத்
தெறுவியொர்செங்கையிலமுதொருசெங்கையில்வரும்வ**
முறையினிருந்தகைநிறையநறுஞ்சுதைமுதல்வ.....**    6

 

682    வேறு

 

அந்நிலையேமருங்குநரிலடற்சயிங்கிகேயனென்பானமரர்பந்தி
தன்னிலிருசுடர்க்கிடைவேற்றுருக்கொடுபோயிருந்தமுதந்தனைக்கொள்காலை
மின்னுறுமாழியன்கதிர்வானவர்குறிப்பாற்றெறுவிகொடுவிசைத்துவீசப்
பின்னரவன்றலைதுணிந்துவிசையினில்வீழ்ந்ததுகாழிப்பெருவீதிக்கண்.    7

 

683    அவ்வெழில்வீதியின்கீழ்பாலொருகுரோசத்தளவிலனையவெய்யோன்
வெவ்வெழில்யாக்கையும்வீழ்ந்ததிருகூறுமமுதமுண்டவியப்பினாலும்
இவ்வெழிற்காழியையடைந்தநலத்தாலுமிருபாந்தளிறைவராகிச்
செவ்வியொடுபணிகுவராலன்னவரின்முடிக்கூற்றுத்திறலோனிப்பால்.    8

 

684    வேறு

 

நோதகவித்துணைநானடையத்தனிநோனலரிற்பிழைகூ
றாதவமிக்கதிவாகரனைத்தெறுமாறுநினைத்திமையோர்
நாதனையிப்பிரமாபுரிமுத்தனைநாலுமறைச்சிகைவாழ்
பாதனையர்ச்சனைபேணிவலித்தெதிர்பற்றியமுற்றறிவால்.    9

 

685    நீடலகைக்குழுவார்கண்முகிழ்க்கினுநீள்கண்முகிழ்த்தறியா
ஆடலிசைப்பலதூரியமிக்கொலியாலயமுற்றலரோன்
ஏடடர்பொற்றடமூழ்கியருட்பிரமேசனடித்துணைமேல்
ஊடுருகிப்பலபூசைமுடித்தயலூதநிலைத்திசைவாய்.    10

 

686    மாணுறுமோரிருகோலளவாயொருவாவிசெய்தாயிடையோர்
தாணுவையாலயமீதுசெய்தோரிருதானமுமேன்மையினால்
ஆணமற்வழிபாடுடையானசையாமலைவாயழல்வாய்
ஊணிலியாய்வளிபூணுகர்மாதவமோவறவாடினனால்.    11

 

687    கார்படுநாளையிலேவெளிமேலொருகாலினிலேநிலையா
ஓர்பனிநிளையினீரிடைமூழ்கிநல்யோகினிலேயுணர்வாய்ச்
சூர்படுமாணவவேரறவீசுசுகோதயவாரியிலே
ஆர்படுநேயமறாதருளேபொருளாயுறைவானெதிரே.    12

 

688    பரையொருபக்கலிலிலகமலைக்கிணைபகர்விடையிற்கரமேல்
வரதமழுப்படைபொலிதரமுக்கணும்வலியவரைப்புயமா
உரகமணித்தொடையசையமுகத்தருளொழுகவரிச்சிலைவேள்
முரணையகற்றியபிரமபுரிக்கிறைமுதல்வனுதித்தனனே.    13

 

689    எந்தையெழுந்தமைகண்டிருகண்களினும்புளகந்தருநீர்
முந்தவுடம்புகுளிர்ந்திருசெங்கைமுகிழ்த்துமுகுந்தன்முனோர்
சிந்தையுகந்துகுழைந்துபொதிந்தசெழுஞ்சரணங்களின்மேல்
வந்தனையுந்துதியும்பலதந்துவருந்தியிரந்தனனால்.    14

 

690    எஞ்சலிலண்டரினஞ்செறிபந்தியினின்பமருந்துணநான்
செஞ்சுடர்வெண்சுடரின்குறிகண்டுதெரிந்துநறுந்துளவோன்
வெஞ்வினமண்டியரிந்திடவிங்குவிழுந்தனெனின்பணியால்
உஞ்சனெனென்கண்விரும்பியிரங்குவதொன்றுளதெம்பெருமான்.    15

 

691    புரைபடுமுற்பழிவரினவரைப்பழிபுரிவதெமக்கியல்பால்
நரைதிரையற்றதெள்ளமுதமெடுப்புழிநலிவுசெயுஞ்சுடராம்
அரையரவர்க்குளவ்விரவிதனைத்தெறுமடலைபணித்தியெனா
வரைபொருவப்பொருகரியரியுத்தமன்மனமலரப்புகல்வான்.    16

 

692    வேறு

 

பொறிபுலாதிகள்புறக்கடைகண்டொருபுனைதாள்
நிறுவிமாதவமிழைத்துளராநினனிகர்யாரே
உறுதியின்னதேலளித்தனமுன்னுடலாய
வெறுள்செய்வாளராவேந்தனுந்துணைபடைத்திகலால்.    17

 

693    இயலுநள்ளியோடளரிபிருசுடரமைய
முயலுமால்புகர்சேய்மறையோன்சனிமுறையே
அயலயற்களையிரண்டினுமமைவருமமைந்த
வியனுலாவியசோதிசக்கரத்திருவீரும்.    18

 

694    வருடையாதிபன்னிரண்டினுமவரன்முறையெதிரே
பொருதிராகுகேதுக்களாயேழினேழ்பொருந்தத்
திரிதிரீருவாவொழிந்தநாட்சுடர்களைத்தீண்டீர்
ஒருபதத்தினோர்மீனிலோர்வீட்டுறிலிருப்பீர்.    19

 

695    துத்தியம்புரிந்தருஞ்சிரந்தவம்புரிதொடர்பால்
இத்திருப்பதிசிரபுரமாகவிவ்விலிங்கம்
பத்தியாற்பணிந்தித்தடம்படிந்துளாரோரெண்
சித்தியெய்துகவுளத்தழுக்காறுகடீர்ந்தே.    20

 

696    என்றுநல்வரமளித்துமையவளொடுமேற்றுக்
குன்றிவாந்தவன்மறைதலுங்குழகனதருளால்
அன்றனுக்கைபெற்றரும்பதம்புக்கிருசுடர்மேல்
என்றுமின்னணம்படங்கொடுமறைத்தனரிருந்தார்.    21

 

697    முறுக்குகோட்டுமானிரலைகண்டூதியான்முடிமேல்
செறித்ததாண்மடக்குண்டெனச்செழுஞ்சுடரிரண்டும்
குறித்ததம்முடைமொழியினாற்சுடுவிடங்கொழித்துப்
பொறித்தமாசுணம்படக்கதிர்மழுங்கினர்போவார்.    22

 

698    கொள்ளைவெள்ளெயிற்றரவரசிரண்டொடுங்குழுமா
எள்ளல்போய்கோளொன்பதாகெனவிவண்வதிந்த
வள்ளறன்செயலுரைப்பரிதென்றனன்மறைநூல்
தெள்ளுமாமுனியிணையடிதொழுமுனிச்செம்மல்.    23

 

699    மன்னிரும்புயறவழ்கொடிமாகமூடறுக்கும்
கன்னியாரெயிலுடுத்தபொற்காழிமாநகரத்
தென்னையாளுடையான்முனமிக்கதைபடித்தார்
பன்னிவேட்டுளாரிருவருமேபவம்படியார்.    24

 

10-ஆவது சிரபுரமானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் - 699. 


11-ஆவது. குருத்துரோகவிமோசனமானவத்தியாயம். (700- 749)

 

700    பிறைவாளெயிற்றோரரவண்ணல்பெருஞ்சிர‌ப்பே
ரிறைமாநகர்க்குற்றதுகூறியிதற்குளாசான்
குறையால்வருதீவினைபோயதுகூறிகின்ற
நிறைமாதவன்சொல்வழியானுநிகழ்த்துவேனால்.    1

 

701    பூவாளிதாழப்பொறியட்டவர்நேமிவாய்ந்த
தேவார்மனம்வாழ்திருமாமுனிச்செல்வர்மேனாள்
மூவ்யிரருஞ்சிவகாதையின்முன்னமிக்கார்
தாவாவருட்சூதனையொன்றுவினாதல்செய்வார்.    2

 

702    மஞ்சூருமைம்பால்வனவல்லிமணந்தகோவும்
நஞ்சூர்களத்தானடியேவல்செய்நந்திதானும்
நெஞ்சூரருட்டேசிகனின்னொடுமூவரன்றே
தஞ்சூருலகுக்குருவென்பத‌லத்தின்மிக்கார்.    3

 

703    கவனம்படுபல்லுயிருங்கதிகாட்டியுய்ப்பான்
சிவகண்டிகையுந்திருநீறுமெழுத்தொரைந்தும்
புவனத்தொறுமாரழ‌லாடிபுணர்த்ததேபோல்
தவனம்படுமெம்முழைநின்னையுந்தந்தவாற்றால்.    4

 

704    ஆசானியல்பும்பிழையாதடியான்செய்மாண்பும்
கூசாதவனைப்பிழைத்தான்படுகோளுமெல்லாம்
மாசானதுபாறிட‌நின்றிருவாக்கினின்று
பேசாவிடினெவவழியுய்வதுபேதையேங்கள்.    5

 

705    எனவாதரத்தோடிவைகூறியசவுனகாதி
முனிவோருவப்பமுகிழ்வாணகைபூத்தசோதிக்
கனிவாய்மலர்ந்துகருணைக்கண்மலர்ந்ததொன்னூல்
தனிவார்கலியன்னவனின்ன‌னசாற்றலுற்றான்.    6

 

706    நன்றேயிவணீர்வினவுற்றதுஞானவாசான்
என்றேபிரமீசனேயெய்திலியம்பலொல்லா
ஒன்றேயெனினுமுணர்ந்தாங்குரைசெய்வெனென்னாக்
குன்றேய்குணத்தான்குரவோனியல்கூறுகின்றான்.    7

 

707    தோளாமணிபோற்றொழுதொல்குலமேவியீன்ற
கேளாரிருதெய்வதபூசைகிடைத்துவேதத்
தாளாலுயர்வைதிகசைவமுந்தாங்கியெம்மாற்
காளாகிநின்றானவனென்பவறிந்தவாசான்.    8

 

708    காரன்னவீகைக்கதிரன்னநுவற்சிவான்றோய்
நீரன்னதூய்மைநிறைகோன்முறையன்னநீதி
பாரன்னவாற்றல்பனிமால்வரையன்னதோற்றம்
சீரன்னநோன்புதிரையன்னதொல்கேள்வியாய்ந்தே.    9

 

709    நடையேபலவங்கமுநலகநவிற்றுமன்னான்
இடையேபலதெய்வமுமெய்தவியம்புமாதிக்
கொடையேயிருமைப்பயனுந்தரக்கோதிலான்கண்
கடையேவினைப்பாடறுத்துக்கதிகாட்டுமேலோன்.    10

 

710    நன்மார்க்கனோரைம்பதத்தோடறுநான்கும்வல்ல
சன்மார்க்கனாற்றுந்தழலன்றருமாதியோதும்
சொன்மார்க்கன்வெண்ணீரொடுகண்டிகைதோய்ந்தவுண்மைப்
பன்மார்க்கன்முக்குற்றமுநீத்தபழிப்பின்மேலோன்.    11

 

711    இவனேகுரவோனிவனன்றியுமானமுன்னோன்
நவைதீர்விரதனசிவவாச்சியநன்குணர்ந்தோன்
சுவைநீரமுதீபவனச்சமகற்றுந்தொல்லோன்
புவிமேலிவருங்குருவென்பபொருட்டுணிந்தார்.    12

 

712    அய்யந்திரிபொன்றிலாதாயறத்தாறுகூறி
மெய்யென்றுயிர்போற்பலமன்னுயிர்மேலுமன்பு
செய்யுந்தகையால்வழிபாடுடைச்சீடனுக்கே
கய்யொன்றுநெல்லிக்கனிபோற்பொருள்காட்டல்வேண்டும்.    13

 

713    காலம்புனைகற்பனையில்லிகனிந்துயிர்க்கா
ஆலம்புனைநீண்முடியைந்துமுகத்தினின்று
நாலைந்துமெட்டுநயந்தோதியஞானநூல்கள்
ஓலம்புரிகிற்பனமுப்பொருளுண்டுமாதோ.    14

 

714    பதியென்றுதொல்லைப்பசுவென்றடர்பாசமென்று
துதிநின்றமூன்றிலுயிரோடுறத்தோய்ந்துதோயா
அதிபன்பதியாமவனாரருளொன்றையென்றும்
பதியும்பொருளேபசுவாமிவைபன்னின்மன்னோ.    15

 

715    மாமாயைமாயைவினையாண்வமேமறைப்பே
ஆமாமிவைபாசமநாதியருட்பெறுங்கால்
போமாலருளும்புணரப்புணர்கின்றவின்பத்
தேமானொளியேபொருளென்றனர்தேர்ச்சிவல்லார்.    16

 

716    விளியாவிருட்டைவிழுங்கிச்சுருங்காததீப
வெளியாதவனோடொருவாதுறவுண்டதேபோல்
தெளியாமலப்பாழிருள்சீக்குமோர்தெய்வஞான
ஒளிகாரணத்தேவனொளியோடுறவுண்டதுண்மை.    17

 

717    இவ்வாருயிர்கட்குயிராம்நெறியெங்குமொன்றாய்ச்
செவ்வாய்த்தெளிந்தோரறியாதறிசித்ததாகி
ஒவ்வாவொருபேரொளியென்பவுயர்ந்தகாழி
மொய்வாய்வரைமேலமருங்குருமூர்த்திதானே.    18

 

718    அல்லார்மிடற்றானணியாலினிழற்கீழன்று
சொல்லாதுசொன்னபொருட்பாடுதொகுத்துரைக்க
வல்லானருட்டேசிகனன்றியுமற்றோர்தெய்வம்
எல்லாரையும்வீடெளிதுய்க்குமதியாதுகண்டீர்.    19

 

719    மண்ணங்கறிசோறமைத்துண்டமகாரின்யாமே
எண்ணும்பிரமமெனக்கூறியவீணராதி
கண்ணுங்கயமைத்துறைஞர்க்கிதுகாட்டலாகா
நண்ணும்பருவத்தவர்க்கீதுநவிற்றலாமால்.    20

 

720    அருகித்தருபஞ்சடர்குண்டிகைபேறலாகா
பெருகிப்பயில்வார்க்குதவாமடற்பெண்ணைபோன்று
தருநர்க்கிலைகாயுதவாமுடத்தாழைபோன்றும்
உருகிப்பணிவாரொழித்தல்லவர்க்கோதலாகா.    21

 

721    இருளொன்றுதன்னைத்தெரிக்குந்தெரியாவிருட்டாய்
மருளும்மலவல்லிருட்சத்திருகாரமாக
ஒருவுஞ்செயலாகுவதோதுறுகாரமாகக்
குருவென்றசொற்குப்பொருளீதுகுறிக்கொள்வீரால்.    22

 

722    வேறு

 

ஏதமிலனையகுரவனையடுத்தாங்கிரவினும்பகலினும்விள்ளாக்
காதன்மீக்கூரமுன்னொடும்பின்போய்க்கைவிடாதுடலிடைநிழல்போல்
கோதகன்மனத்தாற்குணத்தொடுபழகிக்குறிப்பறிந்தொழுகியுள்ளவர்மாட்
டாதுலர்போன்றுமரசிளஞ்செல்வரடுத்துழியிழிந்தவர்போன்றும்.    23

 

723    வெருவருமுளத்தன்பொறிவழிபுலன்கள்விடுக்கிலாவிரதன்வெந்தழலன்
தருமநூலறிஞனிருமுதுகுரவர்தம்மடித்தொழும்பினன்யாண்டம்
பொருவருங்குரவன்மக்களிலொருவன்போலுமென்றெண்ணலான்பொறையன்
பருவமோர்நாலையியற்றுறும்பருவம்பயின்றவன்படிறுதீர்மொழியான்.    24

 

724    பாசிலையரம்பையீர்ந்துணிதழல்வாய்ப்படிந்தனபருவமுங்கவைநா
வீசியதழல்வாயிந்தனத்திரளைவீழ்ந்தனபருவமுங்கரிகள்
மூசியதழல்பெய்தனபருவமுமிம்மூன்றுமற்றாரழன்முகத்தில்
ஆசியல்பஞ்சிபோன்மெனும்பருவமடுத்தவனெடுத்தமாணாக்கன்.    25

 

725    துலைநிலைதுன்னீளிருவினையொத்துத்தொடக்குறுமிப்பருவத்துக்
கலைபலதேர்ந்துகுரவனீரடியைக்கைகொடுவினைக்கடல்கடப்பான்
மலைவில்கண்டிகையுநீறுமைந்தெழுத்தும்வனைந்தமாணவன்றிறத்தொருசொல்
உலைவறவளித்தகுரவனுமவனுமுறுவரால்வீடுபேறொருங்கே.    26

 

726    மூவெயில்படுத்தானடியரைப்பணிதன்முதல்வனாராதனைவிரும்பல்
ஆவலிற்புரிதலிறையடிபணிதலான்றவொப்பிலிபுகழ்கேட்டல்
பூவலர்கண்ணீரரும்பமெய்சிலிர்த்தல்புண்ணியன்பணிகொடுண்ணாதல்
ஓவறுபணியடெண்வகைப்பத்தியொழுக்கிலார்க்கோதுதலிழுக்கே.    27

 

727    பூதகாரியத்தினெழுவெயிலொளியைப்பொருண்மிசையுற்றலாற்கண்ணால்
பேதறக்காண்டலரிததிலரிதாய்ப்பிரிவிலாதுயிர்க்குயிர்தானாய்
வாதமுங்கடந்துகுணங்குறியகன்றுவரவுபோக்கிறந்தபேரொளியைப்
போதமேற்காட்டுங்குரவதனடியேபொருளெனார்க்குணர்த்தலும்புரையே.    28

 

728    உதகநீத்தமுதுண்ணோதிமம்போலவுறுதியையுணர்த்துமென்கிளிபோல்
நுதலியபொருண்மைக்கடைப்பிடித்தாங்கேநுவன்றுமொல்லொளியுணரேற்றி
இதனுவல்போற்றியுணர்ந்துமேற்கோளிலேக்கறவெய்தியுங்குரவன்
பதமலாநிழற்கீழின்னணம்பயிலாப்பதகருக்குரைப்பதுபழுதே.    29

 

729    அடுத்தவாணகையன்குரவனினிருப்போனனுச்சையிலவனவன்பொருளை
எடுத்தவனவன்சொன்மறுத்தவனெதிர்போயிருக்கையீந்திறைஞ்சலான்வன்சொல்,
விடுத்தவன்றுயில்வோன்பேதைபொச்சாப்பன்வெகுளியன்விரகியனென்சொற்,
படுத்தவர்திறத்தொன்றளிப்பதுகளர்வாய்ப்பட்டவால்வித்தினும்பழுதே.    30

 

730    கூன்குரங்கெறியும்விளங்கனிகல்லாற்கொள்பவர்போற்குரையாது
தான்குளகருந்துமாட்டின்வெவ்வேறுதலையுழலாதொருநிலைக்கண்
மான்கொளுமான்போல்மானுடம்வாய்ந்துவள்ளலேதனதுகுற்றேவல்
நான்கொளவந்தானென்றொருங்கெண்ணாநலமிலிக்குரைப்பறுநவையே.    31

 

731    மானமாதவத்துமுனிவிர்காளாசான்மலரடிபிழைத்தமாணாக்கன்
ஈனமாநிரயத்தெய்துவன்பரமற்கிழைத்தவல்வினைபெரிதேனும்
ஆனவன்றொலைப்பானவனருள்பிழைத்தவருவினையமலனுமகற்றான்
தானதுதெரியக்கேண்மினோமேனாட்டன்னருட்குரவனைப்பிழைத்தோன்.    32

 

732    கழைமுகந்தொடுத்ததேனிறாலிழியக்கரைமிசைவைத்ததாளலவன்
நுழைவளைப்பெருகாதளிக்கருஞ்சேற்றினுண்கதவடைக்குநீர்வேலிக்
குழைமுகம்பொதிந்தமழைமலர்ப்பொங்கர்குலுங்கியகலிங்கநாடளிப்போன்
முழைபகவிடிக்குஞ்சிங்ககேதனத்தான்மூரிவேன்மன்னவர்மன்னன்.    33

 

733    அன்னவனொருநாட்பரிமகமியற்றுமாதரத்தினில்வெகுசுருதன்
என்னுநீள்குலத்துக்குரவனைத்தொழலுமெழின்மகவன்றியிவ்வேள்வி
உன்னரிததனாலாண்டினின்மகப்பேறுறுகுவைபரிமகம்யானே
நின்னகமகிழமுடிப்பெனென்றுரைப்பநிருபனும்பழவினைச்செருக்கால்.    34

 

734    அயலுடையிரதிதரமுனிமுதலவந்தணர்பலரொடுங்குழுமி
முயலரும்வேள்விதொடங்கினனிழைப்பமுனிவனுமுனிவுறாதெறிநீர்க்
கயமலர்ப்பொதுளங்கமழலந்துறைசேர்கனைதிரைதுங்கபத்திரையாற்
றியலடைவசிட்டன்பாசிலைப்புரையுளெய்தினனளவளாயிருந்தான்.    35

 

735    தேசிகன்றருசொன்மறுத்தலின்வேள்விசிதைந்துவானவரவிதேய்ந்து
காசினியதிபனாயுளும்வாளாகரைந்துவெங்கதழ்சினப்பகுவாய்
மூசியதழற்கண்மறலிவெந்தூதர்முரண்வலையீர்த்தனர்தூர்ப்பக்
கூசிருள்புதைந்தநிரையவாயெல்லாங்குளித்தனனயுதமாண்டெல்லை.    36

 

736    நிரையவெந்துயரிற்குளித்தவன்பின்னர்நீள்பனிமுயங்குகோட்டிமய
வரையகந்தனில்வேதியப்பெரும்பேயாய்மண்டியபசியடச்சுழன்றான்
உரைபடுந்தீயோரிடத்திலோருறுப்பிலுறுமலர்க்குரவனைப்பிழைத்துப்
புரைபடுந்தீபோல்யாண்டுமெப்போதும்புக்குழிப்புக்குயிர்சுடுமே.    37

 

737    வய்கலும்பசியாலூனுறக்கின்றிவானுயரரசிலைநுதிநீர்க்
கய்கலனாகவெடுத்துவாய்மடுத்துங்கனன்றுவெவ்வழல்சுடக்கரிந்தும்
உய்கலனாகிமுன்னைநாளறியாதுஞற்றியவினைப்பயனோர்ந்து
செய்குறைநினையாக்குரவனைநினைந்துதேம்புவானினையனதெரிவான்.    38

 

738    மெய்யெழுத்தியக்குமுயிரெழுத்தேபோன்மெய்புகுந்தெனையசைத்தாண்ட
வய்யவென்னுயிரேயிழுதையேன்றனைநீத்தணைந்ததெவ்வுழியறிந்திலென்யான்
கய்யர்நோதகவுற்றிழைப்பினும்பெரியோர்காப்பதுசரதமின்றெளியேன்
உய்யுமாறெதிரேபோதராயென்னினொழிவருந்துயரமென்றொழிவேன்.    39

 

739    பெருகுகண்ணிரயத்தயுதமாண்டாகப்பேதுறுதுயரெலாமனையான்
உருகணத்துறுநோய்க்கிணைபெறாதாவியுருகியுநெட்டுயிர்ப்பெறிந்தும்
அருவினைத்தொடராலுலகலமருவானரற்றியவோசைபுக்கதுவால்
ஒருதனிமுளரிவானவன்சிறுவனுறையுள்புக்கிருந்தவன்செவியுள்.    40

 

740    செவித்துணைபுகலுமெழுந்தமாமுனிவன்செயிரறுமேனிதோயிளங்கால்
குவித்தகையலகைத்தலைவன்மேலுறலுங்கூறுணர்வெயதியைம்பொறியும்
அவித்துளார்முடிதோயந்தளிரடிமேலடுத்தடுத்திறைஞ்சிவல்வினையால்
கவித்தவென்னுருவைத்துடைத்தியானுய்யுங்கதிதனைத்தருகெனக்கரைந்தான்.    41

 

741    மாசறுதவத்துக்குறுமுனியவன்கொண்மம்மர்நோயகலுமாமதித்தான்
ஆசறுபரதகண்டமேற்பொன்னியகல்வயற்புகலியம்பதிவாழ்
ஏசறுவடமேற்றிசையினிலிருகோலெல்லையிலிராகுமுன்னமைத்த
வாசநீர்த்தடத்தையதிபவமாதிமாபவந்தொலைக்குமாமருந்தை.    42

 

742    பின்னெடுந்தகையைமருளலையென்னாப்பெருகுவாய்பருகுநீரளித்து
நன்னெடுந்திவசமொருபதினைந்தினளிபுனற்பொன்னிநாடணுகி
அந்நதியாடிச்சிறுபசுங்குழவியடுபிணிக்கருமருந்தயிலும்
தன்னிருதாய்போலதன்வடக்காகச்சார்ந்தனனிருவினைசாரான்.    43

 

743    தெளிநிலாவிரியமுகிழ்த்தவாய்முளரிச்சிறைப்படுநாகிளஞ்சுரும்பர்
வளரொளிப்பரப்பிவைகறைவிளக்குமானவனரசியல்புரிநாள்
எளிவரமருவார்சிறைவிடுத்தெனநின்றிரங்குநீர்வேலிகள்சூழ்ந்த
ஒளியெயிலுடுத்தகாழியாளுடையவொருத்தன்வாழ்திருத்தளிபுகுந்தான்.    44

 

744    மரைமலர்க்கிழவனாடியபிரமமலர்த்தடங்குடைந்துபூங்கொன்றை
விரைமலர்வேணிப்பிரமநாயகனைவிதிமுறைபூசனையாற்றிக்
கரைபொருதலைக்குமிராகுமுன்கண்டகடிமலர்த்தடம்படிந்தந்நீர்
உரைமனுவழியாற்றெளிப்பமுன்னுருவோடோங்கினன்மடங்கலேறுயர்த்தோன.    45

 

745    பொங்கழல்கட்டுமுறையுறழ்படிவாய்ப்பொரியரைக்கருநெடும்பனைத்தாள்
அங்கவல்லல்லகைமுரணிரும்பாகவறவனோர்சித்தர்கோவாகத்
துங்கவல்வினையின்காளிமம்படுநீர்த்துவலையாங்குளிகையினொருவச்
சிங்ககேதனத்தோன்செம்பொனிற்பொலியச்சித்தநீராயதத்தெளிநீர்.    46

 

746    முழுமதிமுகமுமொழுகொளிநகையுமொய்ம்மணிச்சுடிகையுமுரணார்
கொழுமணிமார்புமெழுவுறழ்தோளுங்குடைக்கடனிறுக்குநீள்கரமும்
செழுமலர்விழியும்வேனில்வேளனையசெவ்வியும்வாய்ந்துமுன்றோய்ந்த
கழுதுருவகன்றுகலிங்கர்கோன்பொலிந்தகாட்சியையாவரேநுவல்வார்.    47

 

747    நன்னகர்முழுதுநலனெடுத்தேத்தநளிதடம்படிந்துமேற்கரையில்
பொன்னவிர்கடுக்கைப்புரிசடைமுதல்வன்பூசனைவரன்முறையாற்றித்
தன்னருட்குரவன்முடிப்பமுன்பரிமான்றருமகப்பலனுமாங்கெய்தி
ஒன்னலர்க்கடந்தமுழவுறழ்தடந்தோளொளிருவேன்மன்னவன்பொலிந்தான்.    48

 

748    சூட்டழன்முகத்துப்பாட்டுருமுகுக்குந்துலங்கொளிக்குலிசவேலென்ன
நாட்டுறுகுரவர்பிழைத்தவெவ்வினையைநகர்வயினிழந்தவனிரட்டைக்
கோட்டுவெண்பிறைதாழவேணியற்களவில்கோடிபொன்னடியுறைகொடுத்துச்
சேட்டிளம்பரிதித்தெரியல்சூழ்மார்பன்றிருமுனமிறைஞ்சினன்சென்றான்.    49

 

749    கன்னியந்திங்கட்டெரிசநாளந்நீர்க்காவலன்படிந்துபார்முழுதும்
தன்னியலாழியொருதனியுருட்டித்தவலரும்வீடுபுக்குறலால்
இந்நிலத்தன்னாளத்தடம்படிவாரிடரறுத்திகலறநூறி
உன்னியபொருண்மையாவையுமெளிதேயுறுவர்வீடுறுகுவருண்மை.    50

 

11-ஆவது. குருத்துரோகவிமோசனமானவத்தியாயம் முற்றிற்று)
ஆக திருவிருத்தம் - 749.


 

12-ஆவது. சண்பையானவத்தியாயம். (750-783)

 

 

750    தன்னிகரிலொருமுனிவன்முடங்குளையாளரிக்கொடியான்றணப்பில்வெந்நோய்
இந்நகரிலகற்றியவாறியம்பியொருகடவுண்மணியிமைக்குமார்பில்
பொன்னியலுந்திகிரியினான்பழிகழுவிச்சண்பையெனப்புனைபேர்வாய்ந்த
இன்னியலைமுனிவன்விரித்திசைத்தவழியளியேனுமியம்பலுற்றேன்.    1

 

751    மெய்ம்மலியுமறம்பலவுந்தலைநிறுவிக்கறங்குதிரைவிரிநீராடை
மொய்ம்மலிமாநிலமுழுதும்பொதுநீக்கியைவரையுமுறையினாட்டி
மைம்மலியுநருங்கூந்தற்பொதுவியர்தோண்மணந்துவடமதுரையாளும்
பொம்மலணிவண்டிமிருந்தண்டுளபப்பசும்படலைப்புனிதன்மேனாள்.    2

 

752    வீங்குமொலிமுரசுயர்த்தாற்கரும்பெறல்வேள்விகள்பலவும்விருப்பினாற்றித்
தாங்குநிலப் பொறையனைத்துந் துடைத்தொருதன் பெரும்பதத்திற்சார்வானெண்ணி,
ஈங்கெமதுகிளையுரிமையாதவரெண்ணிலரிவரீண்டிருப்பின் மேலைத்
தீங்குபயக்குறுமிவரைத் தெறினுலகம் பழிக்குமெவன் செய்துமென்பான்.    3

 

753    வனமணியுமம்புயத்தாடனமணியுமழுந்துமணிமார்பனிவ்வா
றினமணியும்பருவரையோரெட்டையும்வட்டுருட்டுமுரத்திளைஞர்தம்மை
முனமணியப்பதத்திலுய்ப்பான்மனமணியுமமயத்துமூரிமோட்டுக்
கனமணிவெந்தலைநாகத்தினமணியை விழுங்குறுநாள் கண்டதன்றே.    4

 

754    காண்டலும்விண்டொடுபுரிசைவடமதுரைமாசனங்கள்கனைநீராழி
மூண்டதெனவயக்களிறுமயக்குழுவும்வியக்குமணிமுடித்திண்டேரும்
தூண்டியருட்கடலனையசாரணர்கொசலனாதிதுறவோர்சூழ‌
ஏண்டருபூந்திரைசுருட்டும்பிரபாதநதிக்கரைவந்திறுத்தவன்றே.    5

 

755    பழமைமறைப்பொருடுணிந்தபண்ணவரோடுபராகப்பனிநீராடும்
கிழமைகொடுபோந்தவரில்வல்லுவணப்புள்ளூர்திகேண்மைமாக்கள்
நுழைபுலநான்மறைக்கிழவர்தொழுகுலவாய்மையும்பிறவுநோக்கிநோனார்
குழுவுமியவருக்கநிலையறிதுமெனமனத்துறுகோள்கொண்டுசூழ்வார்.    6

 

756    தம்மிலெழிற்சாம்பனுக்குமணிவளையுமணிகலையுந்தரித்துவாசக்
கொம்மைமுலைபொருத்தியடிவயிற்றின்மடக்கசைத்துநறுங்கூந்தல்வாரி
அம்மலர்மெல்லடிபெயர்ப்பவந்தணர்பேரவையினிலுய்த்தாணோபெண்ணோ
இம்மகடன்கருநிலையோர்ந்துரைத்திரெனவடிநிழற்கீழிறைஞ்சுமேல்வை.    7

 

757    அனலூட்டிப்பின்னுகருங்கபிலமுனிவரனெறிபாலலையுட்டோன்றி
மனவேட்கையழுக்கின்மிசைவைத்துளமீனெனநெடியோன்வழியின்மாக்கள்
கனலூட்டுங்கயமையராய்த்திரிந்தனரென்றறிந்திவள்பாற்கரும்பொன்வாய்ந்த
தனியேற்றபெருமுசலமதனில்வருமுமக்குலகிற்சரியவாழ்க்கை.    8

 

758    முதுமுனியிவ்வணமளித்தமுரட்சாபவலியினிலோர்முசலமாங்கே
கதுமெனவந்தடிநிலத்திலிடிபொருவவீழ்ந்ததரோகதிருஞ்சோதி
மதியுமெனுமிருகுலமுமற்றையுவாவினில்விழுங்கிமதுகைப்பாந்தள்
எதுகுலமும்விழுங்கமணிப்படமொடுக்கிப்பெருந்தரையிலிழிந்தாலென்ன.    9

 

759    குருலக்கைவிழவெருவித்துகள்படுத்திநீரில்விடத்துகட்கொவ்வொன்றாய்க்
கோரையயில்வாளுருவிற்கிளைப்பமடம்படுமவலக்குணத்தாலொவ்வொன்
றோரொருவர்க்கோரொருவர்பற்றினரெற்றினருயிர்போயுலந்தார்மண்மேல்
ஆரொருத்தன்வல்லவன்கைப்புல்லுமாயுதமென்பதறிவிப்பார்போல்.    10

 

760    வெறிக்களிவண்டிசைமுரலும்புண்டரிகப்பெருந்தடங்கண்விமலன்கேளாக்
குறித்தமுறைமுடிந்ததெனவரக்கடவுள்வலிபாடிக்கொடியசாபம்
மறித்தெனையுந்தொடருமிதுதுடைப்பினுமாறாதினியான்வளைவாய்க்கோட்டுப்
பிறைச்சடிலத்திறைமலர்த்தாளருச்சனையாற்றுடைப்பலெனப்பெரிதுமோர்ந்தே.    11

 

761    சகரர்குலந்துகள்படுத்ததழல்விழியந்தணன்முனிவாற்சாம்பனாதி
நிகரில்வலிதரும்புதல்வகுலந்தவினைதொலைந்தகலநிறைநீர்ப்பொன்னி
அகல்வயல்சூழ்பிரமபுரத்தடிகளடிக்கருச்சனைசெய்தருளாலன்னான்
புகரின்முனித்துவமடைந்தான்யானுமதுபணிவெனெனப்போந்தான்மன்னோ.    12

 

762    இடிமுரசக்கொடித்தானைப்புடைநிறுவிப்பூமடவாரிருவர்சூழக்
கொடிமுகிறோய்மண்மாடக்காளிபுரத்தாளுடையான்கோயில்புக்குக்
கடிமலர்வானவன்றடந்தோய்ந்தருநியமச்சடங்காற்றிக்கடவுட்கங்கைப்
பிடிபயிலுநெடுவேணிப்பிரமேசன்றனையொருபாற்பேதையோடும்.    13

 

763    பனிமலரும்கற்பகப்பூந்தனிமலருங்கொடுத்திரைவெண்பசும்பாலாழித்
தனியமுதுங்கனியமுதுமானைந்துந்தேனாறுஞ்சாந்தச்சேறும்
பனுவன்மரபுளியாட்டிநனிவழிபாடாற்றியருட்பகவன்கோயில்
அனிலதிசையினின்முக்கோலளவையினிற்கிளரொளிகாலாழிதன்னால்.    14

 

764    ஒல்லொலிநீர்த்தடங்கண்டுசில்லரிக்கட்டிருமனையாரொடுபுக்காடி
அல்லலறுத்தமலவுருவடைந்தனனோபுயலுருவத்தருட்கண்ணீர்சாய்த்
தொல்லையில்வெண்புயலுருவிற்பொலிந்தனனோவெனவெண்ணீற்றொளியின்மூழ்கி
மல்லல்வளர்கண்டிகையுமைம்பதமுமுவந்திறைதாண்மனத்திலூன்றி.    15

 

765    பற்பலவாமுதுகடவுட்டீர்த்தமமைத்தாழியின்பேர்பகர்ந்துஞானத்
தற்புதநீடொளியிலுளமிருத்தியாறிருபருவமருநோன்பாற்றிச்
சொற்பதந்தீரருளுருவப்பரஞ்சுடரைமுப்போதுந்தொழுவான்முன்னர்ப்
பொற்பமருநறுங்கடுக்கைச்சிகழிகையானகமகிழப்போந்தானன்றே.    16

 

766    ஆரணமாய்மறைமுடிவாயளப்பரியபேரொளியாயளவைகாணாப்
பூரணமாய்வரவுபோக்கிறந்தபெருங்குணக்கடலாய்ப்பொருமாலேற்றின்
வாரணந்தபுளகமுலைக்கொடிபுணரப்புணர்ந்தெதிரேவயங்காநின்ற
காரணகாரியங்கடந்தவொருபொருளையிருவிழியுங்களிப்பக்கண்டான்.    17

 

767    பணிந்துமிசையேத்தெடுத்துப்பாடியுமூடியவிருளைப்பறித்ததாளை
அணிந்துமலர்விழியருவியாடியுமுன்பரவுமடலாழிவேந்தைத்
துணிந்ததவமகிழ்ந்தனநீவிழைந்தனகேளெனவமலன்சுடர்வாய்பூப்பத்
தணிந்தமனத்தளிதூங்கத்துவரைநகர்க்கிறைவனிதுசாற்றுகின்றான்.    18

 

768    அலகிலுயிர்க்குயிராயதனிமுதல்வாநின்னடிக்கீழடியேன்மைந்தர்
பலருமுலப்புறக்கபிலமுனிமொழியால்வருமுசலபழிவாட்கோரை
உலகிலெனைநலியாதுமுசலசேடத்தாலென்னுலகூடெய்தி
மலர்பொருமுன்றாண்மறவாநிலைதருதியெனவிரப்பமழுவாளண்ணல்.    19

 

769    ஆயிரவாயரவணையிலறிதுயில்வோயஃதளித்தேமகலாதென்று
நீயிவணோர்கலையுருவினிலைபெறுகவாட்சண்பைநினைத்தொடாது
தூயவலிபெறுமிவ்வூர்சண்பையெனவிளங்குகவென்றருளித்தொல்லை
ஞாயில்படுந்தடம்புரிசைநகுமணியாலயம்புகுந்தானங்கைபாகன்.    20

 

770    போரவுணக்கடல்கடந்தவொருதிகிரிமலர்க்கரத்துப்புனிதன்பின்னர்
ஏரகலாமணிவீதிக்காளிபுரிக்குத்தரத்திலிருகுரோசத்
தோரகத்திலொருகடவுட்டடமதுகண்டயலிருகோட்டொருவெண்டிங்கட்
டாரணியுமறைக்கொழுந்தையிருத்தியருச்சனைபுரிந்தான்றவத்தின்மிக்கான்.    21

 

771    அங்கதிலெண்ணருங்கோடியருந்தானம்வீசியிறையடிமைமாறாப்
புங்கவர்தம்முளமகிழநிகழ்வித்தவொருபறவாப்பூவைவண்ணன்
பங்கமில்சீருணர்வறிந்துபேருவகைமீதாடப்பரிவுள்ளாட
அங்கணாயிரம்பருவமாடினானவன்பணிகொண்டாடினானே.    22

 

772    ஒற்றைநெடுங்குழைக்கிழவனுவந்துவரந்தரலானுமொருகோட்டங்கைக்
கொற்றவன்மெய்த்திருநாமம்பெறலானுமாய்பசும்பொன்கொழித்துவாய்ந்த
கற்றைநெடுந்திரைத்தடமிக்காசினியிற்சிறந்ததனாற்கலசத்திங்கள்
முற்றிலுமந்நீர்பணிந்தார்முற்றிலும்வல்வினையகன்றுமுத்திசேர்வார்.    23

 

773    முப்பகலந்நீர்படிந்துமுத்துறழ்வாலரிசிபெய்துமுக்கண்வேணி
அப்பனடியார்க்களிப்பினோரரிசிக்கோர்பருவமருவித்தண்கோ
டொப்பருதென்கயிலையில்வீற்றிருப்பரெழுத்தோரைந்துமொருக்காலோதில்
எப்பெரியதலங்கடொறுமொருகோடிகணித்தபலனெய்துவாரே.    24

 

774    ஒருமாசித்திங்கள்வருமுழுத்திங்கடனிலாடிலுரவோர்சாபம்
அருமாசுவினைபலவுமரன்பாதமறியவிரிந்தகலுமேனாள்
பெருமான்மின்னொடுமிருந்துகயிலையிற்கற்பகத்தருக்கட்பேசமுன்னம்
திருமால்கொள்ளைம்பதத்தையித்தடத்தில்விரிப்பவரேசீவன்முத்தர்.    25

 

775    தகலருந்தேசிகனருளாற்பிரணவத்தோடாறெழுத்துஞ்சாரவெட்டுப்
பவவிருளைத்துடைப்பவர்க்கும்வேண்டுமிடம்வினவுதிரேற்பகருங்காலை
நுவலரியவருட்குரவனெதிர்ந்துழியேசாலுமெனநுவல்வாரன்றிச்
சிவபெருமான்முளைத்துழியுமுனிவர்முதலமைத்தபிரதிட்டைக்கண்ணும்.    26

 

776    காசிபிரயாகைகயைதிருச்சயிலங்காளத்திகாஞ்சிதில்லை
ஆசின்மயூரங்கழுக்குன்றருணையிடைமருதுகுடமூக்கையாறு
வாசமலிபழமலைவெண்காடுகடவூர்வேதனங்கோடிக்கா
ஓசைபெறுகோகரணமிவற்றினுமைந்தெழுத்தையினிதுரைக்கற்பாற்றே.    27

 

777    விரித்தபலதலந்தோறுங்குருகுபெயர்க்குன்றெறிந்தோன்வேழக்குன்றை
உரித்தபிரானேவல்புரிதிருநந்திசீடரிவருபதேசிக்கின்
பரித்திடலாம்பிரமபுரத்தொருமுதல்வன்குருவடிவம்படைத்துவாய்மை
தெரித்தசிவாசாரியமர்புரமெனலாலீண்டுரைசெய்திறத்தைக்கேண்மின்.    28

 

778    சிவகுலவேதியர்முதலீரிருவருணத்தவருமுபதேசஞ்செய்யத்
தவறிலருட்டேசிகராய்வயங்குவர்மற்றவரடிக்கீழ்த்தாழ்ந்துளோரும்
நவமணிதோயிருஞ்சுடிகைநாகராப்பசுங்குருளைநகுமதாணிப்
பவனுலகந்தனிலெய்திப்பழிப்பரும்வீட்டின்பநலம்பருகுவாரே.    29

 

779    மெய்ப்போதமிலரேனுங்காளிபுரத்தாளுடையான்விமலன்வேடம்
தப்பாதுவனைந்தனரேன்ஞாளிதனக்கூணிழைக்குந்தகையரேனும்
அப்போதவருட்குரவராங்கவரேயீங்குரைக்கோரையமுண்டேல்
இப்போதேசென்னிதெறித்திப்பாரின்வீழ்ந்துபுரண்டிடுகமாதோ.    30

 

780    துளக்கருஞ்சூள்புகன்றதெனதுளச்செருக்காலன்றடிநாட்டொடுநீர்வேலி
வளப்பெரும்பாரணிபுயத்துக்கவுடபதிக்கித்தலத்தோர்மனைக்கட்டீஞ்சொற்
கிளக்குறுமாமடக்கிளியொன்றைந்தெழுத்தாலிருட்படலங்கிழியவோதி
விளக்கருந்தீவினையகற்றிவிடுத்தலினான்மக்கள்வலிவியப்பாமன்றே.    31

 

781    குருவுருவாயிருந்துவிதிகொடுப்பவனுங்கொடுத்தவிதிகொண்டுபோற்றத்
தருவுருவாயெழுந்தசிவலிங்கபரம்பரனுமுளந்தடுத்தாட்கொள்ள
அருவுருவாயமைந்ததொருசங்கமனுமோரிடத்தில்வைகக்கண்டும்
பெருநிலமேலிதையறியார்விளக்கிருந்துந்தீக்குழலும்பித்தராமால்.    32

 

782    பூதானமிவணளித்தார்புண்டரிகன்றானமுமென்பூவைநல்லார்
மாதானமிவணளித்தார்வனமாலிதானமும்பொன்மறைவல்லார் மாட்
டியாதாமிவணளித்தாருருத்தினபெறலாலியல்வழாமல்
ஆதானமிவணளித்தாராதியிடையீறிலிதாளடைவரன்றே.    33

 

783    குலைத்தலைநெட்டிலைத்தாழைக்குமரியிளங்குடப்பசுங்காய்குலையமாநீர்
துலைத்தலைவாழைகள்வெடிபோந்திருப்புகலிவியப்பனைத்துஞ்சொல்வான்புக்கால்
சிலைத்தலைவாணுதற்பரைசேர்திருத்தன்விரித்திசைப்பதல்லாற்சிறியேனென்னில்,
மலைத்தலையுமறிவென்றான்வாதராயணனிருதாண்மறவாமேலோன்.    34

12-ஆவது சண்பையானவத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம் 783.


13 - ஆவது, கொச்சையானவத்தியாயம். (784- 821)

 

784    பச்சையந்துளபத்திருமறுமார்பன்பழிவிடச்சண்பையென்றொருபேர்
இச்சையினியன்றவாய்மையீதாகவிதிலொருமுனிவரனிறைஞ்சிக்
கொச்சையென்றுறுபேர்புனைந்ததுஞ்சவுனகாதியர்க்காரருள்கொழிக்கும்
நிச்சயமுனிவன்விரித்தாவாதொகுத்துநிகழ்த்துவாமொருமருங்கெடுத்தே.    1

 

785    தாமரைத்தெரியனான்மறைக்கிழவன்றனைநிகாமுனைவர்தம்பெருமான்
மாமறைப்பொருடேர்வசிட்டன்மாதவம்போல்வருமுனிசத்தியன்பாலன்
ஆமருட்கடன்பூண்டாரழல்வேட்குமாரணத்தறிஞனெவ்வுயிர்க்கும்
ஏமமர்குணத்தானிதியுறழ்வத்தானியல்பராசரமுனிமேனாள்.    2

 

786    ஆடகக்கடுக்கையலங்கறாழ்வேணியந்தணன்பதிகள்பற்பலவும்
நாடருங்கடவுணதிகளும்படிந்துநனந்தலையுலகெலாம்வலங்கொண்
டேடவிழ்கமலத்தண்ணலம்பொலன்சூட்டெழினலமிறைகொளநறைவாய்ப்
பாடல்வண்டிமிருங்கவுதமையாறும்படிந்தனனிடும்பைநோய்படியான்.    3

 

787    இமிழ்திரைசுருட்டுங்கவுதமையாடியிரும்புனல்கடக்குமாறெண்ணிக்
கமழலந்துறைக்கணோடமுய்ப்பவரைக்காணலனாயிடைக்கண்டான்
அமிழ்துறுமொழியுந்தமிழிளந்தென்றலசையினுமொசியுமென்மருங்கும்
உமிழ்கதிர்பூணுங்குமிழ்பொருங்கண்ணுமுடையதோர்வலைமடவரலை.    4

 

788    மடவராலிந்நீரோடமுய்க்குநர்யார்மற்றுநீவல்லையேலின்னே
கடவுதியெனலுமக்களாயிரவர்கலந்துழியன்றியிந்நாவாய்
விடவரிதெனவேற்படைபொருதடங்கண்மெல்லியலுரைப்பாவாயிரவர்
உடனுறுபொறையீண்டமைக்குவென்கணத்தேயொண்ணுதல்விடுகெனவுரவோன்.    5

 

789    கோலொருதலையங்குடமொருதலையுங்கூன்புறத்திமிலிருதலையும்
மேலவனிருத்திமச்சகந்திப்பேர்மின்னொடுதானும்வீற்றிருந்து
சேலுலாந்திரைநீர்ச்செல்லுழிமுனியைச்சிவனெனநோக்குறாவடிநாள்
பாலலோசனத்தாற்றெறுபழிமீட்பப்பகழிகடுரந்தனன்படைவேள்.    6

 

790    மாரவேள்வாளிக்குரனழிந்தயர்வான்வலைஞர்தந்திருவினைநொக்கிச்
சூரரமகளிரெழினலங்கனிந்தசுடரிழாய்தெய்வநீராற்றுள்
பேரலைகடத்துமோடமீதென்னப்பெருவலியநங்கன்வெஞ்சமத்து
நீரலைகடத்துமோடநீயல்லானேடினுமில்லைநீணிலத்தே.    7

 

791    குறுநகைநிலவாலிருட்களிறதுபோங்குறுநடையனத்தின்மீன்கொடிபோம்
இறுமிடையரவாற்றென்றலந்தோர்போமிணைமுலைநேமியாற்குடைபோம்
தெறுசிலைப்புருவத்தடுசிறைப்பரிபோந்தீவிழியுருத்திரனுதல்போல்
பொறிநுதல்விரித்தசிந்துரத்தெழிலாற்போர்மதனாண்மையும்போமால்.    8

 

792    இடைக்கணேயெழுந்துந்தலைக்கணார்மருங்குலிளைப்பநின்றெழுமுலையின்னே
உடைக்குநீரிடைநீரோடமூர்ந்துழிமுன்னூற்றமின்றியுந்தனிவாளா
இடைக்கணேயுறுவேற்கிரங்குறாவெனினுமிரங்கிவந்தடைந்துளோர்க்களித்தல்
அடைக்கலநூலினியற்கையேவேலையகத்தினும்பெறலருமமுதே.    9

 

793    பழுத்தபண்கொழித்துமழலைவண்டுழலும்பங்கயப்பொகுட்டினிதமர்ந்த
முழுப்பெருங்கிழத்திமுதன்மடவாரைமுறைவகுத்துன்னையும்வகுத்தான்
எழிற்கனிந்தவர்கண்டனையவாவெள்காவெண்ணியோநான்முகனுள்ளத்
தழுக்கறாமையினோநின்னியன்மணத்தையழிபுலாலாக்கினனணங்கே.    10

 

794    தேம்படுமெறிபான்முதுபயோத்தியிற்றேவர்தெள்ளாரமிழ்தருந்தித்
தாம்படுமிறப்பொன்றொழிந்தனரல்லாற்சரமதன்போர்தொலைந்திலரால்
காம்படுகழைவார்சிலையலர்பாயவிடையிலேமுரியுமிக்கலகத்
தோம்புநின்கனிவாயமுதுறாதெவ்வாறுய்யுமாறையநுண்ணிடையாய்.    11

 

795    உருவிலிவாளியொருங்குறப்பாய்ந்தவுரம்படுபுண்முகங்குளிர
இருமுலைப்புளகவேதுகொண்டொத்தியிலவிதழ்வாய்மருந்தூட்டிக்
குருகணிகரத்தாலிருகுறப்பிணித்துக்குறைவருபுதுமணம்புணர்ப்பின்
பொருவிலிக்கணமேயானுமுடலைப்புதுமணம்புணர்த்துவென்பொன்னே.    12

 

796    குழைபொருதலைத்தவிழியினுமழலைக்குயில்பொருமொழியினும்பைம்பூண்
இழைதவழ்சிகரமுலையினுமதியோடிகலியநுதலினுமதிபோய்
அழல்படுமெழுகும்வான்மணலெக்கரலைத்தலைப்பொருமுதுநீத்தத்
துழைபடுகரையுமெனவுடைந்திவ்வாறுருகியவொருவனோடரிவை.    13


797    என்னைமாமுனியீண்டியம்பியதென்னாவெழுமடமாதினாற்குணமும்
தன்னையேநலியநகைமுகங்கோட்டித்தாழ்குழற்சிறுபுறஞ்சாய்த்து
முன்னையாயிரவர்பெரும்பொறையுய்த்தமொய்ம்மலிமாதவத்தோன்றால்
தன்னையேயுணர்வார்க்கிழிகுலத்தறியாட்டமுலைமுயங்கவுந்தகுமே.    14

 

798    ஊன்படுவலைஞர்காவலனெந்தையுணர்ச்சியுமறிந்திலன்பெருநீர்
தான்படுபுலன்கோடிரண்டினுமாக்கடதைந்தனர்திருவுளமறியேன்
வான்படர்யாழோர்புணர்ச்சியினின்னைமணக்கவுமியைந்தனென்மாறா
மீன்படுமுடைபோய்நறுமணங்கமழவித்தகாதருகெனப்பணிந்தாள்.    15

 

799    அற்றமின்முனிவனதுகணத்தொருதன்னாற்றலாற்பணிகொடுகவித்துப்
பற்றருந்தெய்வமலர்மணமளிந்துப்பரிமளகந்தியென்றனையாள்
முற்றருங்குரும்பைமுகிண்முலைகுழையமுகமணைதரக்கரமிறுகப்
பொற்றொடிகறங்கநறையிதழுறைப்பப்பூங்குழலலமரப்புணர்ந்தான்.    16

 

800    பூங்கலைதிரையாவுரவர்தந்திலகன்புயவரைநாகமாவிழிகள்
வாங்கரும்புளகவனமுலைமலையாமற்றிருவோருளத்தார்வம்
ஆங்கணின்றிர்ப்பப்பெண்ணலங்கனிந்தவரிவையந்தடங்கடலந்நாள்
நீங்கருமின்பக்கலவியாரமுதைநிறைமுனிக்களித்ததையன்றே.    17

 

801    மெய்யிரண்டுயிரொன்றெனநடுநாவாய்மேலிருவருநலந்திளைப்ப
நெய்யிருங்கூந்தனெருங்குபூண்முலைபானேமியான்கலையெழில்வாய்ந்து
மய்யறுதவமுமனுவும்வேள்வியுநான்மறைகளுமுறைகளுமுயிர்கட்
குய்யவந்துதிப்பநிகரில்பேரெழிலாலுதித்தனனொருபெருந்தனயன்.    18

 

802    தனையன்முற்றுணர்ந்தான்மனமலர்களிப்பத்தயங்கலும்வயங்கெழிற்றையல்
முனைவனைவணங்கிமுன்னைமாணெலிலுமுருகுலாமகவையுந்தருகென்
றினையமேலவனவ்வெழிலினையருளியிம்மகவேண்டுமேல்யாண்டும்
நினைவுழிவருவனிவனையீண்டளிப்பினின்னுடைக்கன்னிமைக்கிழுக்கே.    19

 

803    அங்கைநீரிறைப்பமுன்னெழில்வாய்ந்தவரிவைகேளாய்வலைவினைஞர்
மங்கையென்றுன்னேல்யாழ்வல்லோர்குலத்தோர்வசுவெனுமிறைமகன்றேர்மேல்
அங்கண்வான்வழிக்கொண்டிவ்வுழிமேனாளணைந்தவனருமனைக்கிழத்தி
கொங்கையைநினைப்பவிளகியதாதிக்குடிஞையினடுவண்வீழ்ந்ததுவே.    20

 

804    வெடிகொண்மீனொன்றுவீழ்ந்தவீரியத்தைவிழுங்கலுமதன்வயிற்றோன்றிக்
கடிபுலரல்வினைஞர்மனையிடைவளர்ந்தாய்காலமூன்றையுமுணர்திறனால்
அடியியலறிந்துனிளமுலைவேட்டேனாதலினலமரேனின்னில்
படிபுகழைவர்முடிபுனைகதையும்பல்குமாலுன்னுழைப்பாவாய்.    21

 

805    மோட்டறாமுடிமேற்கிடந்தநீராடைமுழுநிலமொருபுயத்தேந்தும்
ஈட்டுதொல்புகழான்சந்தனுவெனும்பேரிறைபுணர்சத்தியவதியாய்த்
தீட்டுமால்வென்றிச்சித்திராங்கனையும்விசித்திரவீரியன்றனையும்
தோட்டுவார்குழலாய்நீயினிதீன்றுதுலங்குவைமற்றவர்வழிநாள்.    22

 

806    திருத்தகுகுலத்துமடநலாரிருவர்செங்கைபற்றினருயிருலப்பப்
பெருத்ததொன்மரபுக்குறுமகாரின்றிப்பேதுறுமேல்வையீண்டளித்த
ஒருத்தனாலனையாரிருவரும்பாண்டுவொடுவிழியில்லியைப்பயந்து
விருத்தியால்வழியேபாரதப்பெரும்போர்விளையுமேலுணர்குவைமின்னே.    23

 

807    என்னமாமுனிவனன்னவட்கோதியென்னெழிற்குரவனைக்கொடுபோய்
நன்னெந்தகைசால்வெதிரிகாச்சிரமநண்ணினன்முளைமதியிமைக்கும்
பொன்னவிர்வேணிப்புனிதனாரருளாற்பொறிக்குறும்பெறிந்தமாதவத்தீர்
கன்னிகாகாமியெனப்பராசரனைக்கரைந்தனரன்றுதொட்டுலகோர்.    24

 

808    ஆன்றமைகேள்விமுனிவனுக்கிழிவென்றறையுநீரலைகடற்றோய்ந்து
தோன்றினுமுவருட்டோய்விலாமீன்போற்சுந்தரமின்றியெவ்வினைக்கும்
ஏன்றவனிறைவனொருவனேகெடுப்பானெடுப்பவன்றடுப்பவனெவைக்கும்
சான்றவனெனமெய்ப்போதமுற்றமலன்றாளிணைக்காள்வினைப்படலால்.    25

 

809    அளிவினையுளத்துமுனிவரன்சிறுநாணடைந்தஞரெய்தினனந்தோ
விளிவினைமுனியுமெய்துமோவென்னாவிரட்டுறக்கருதலீர்யாண்டும்
தெளிபொருட்டிறத்தோரையமுந்தெளியாத்திரிபொருட்டிறத்திலோர்துணிபும்
விளிவருநிரயம்பயக்குமாலுலகில்விரகிலரிகழநோனாது.    26

 

810    கோதகல்குணக்குன்றனையவனினையகொச்சையையகலுமாறெண்ணிச்
சீதவான்பொன்னித்திருநதியாடித்தேனினமுரன்றுதாதருந்திப்
போதலர்பொதுளிக்கருகிநெய்த்திருண்டபுனைகுழற்றிருநிலையழகி
மாதுபாலொருவன்மனமகிழ்பூத்தமணிமதிட்காழிவந்தடைந்தான்.    27

 

811    கடையளந்தறியாவளமலிமாடக்கடிமணிவீதிகள்வலங்கொண்
டிடைவளர்முருகார்விழுமணித்தளிபுக்கினவளைநித்திலமிறைப்பப்
புடைநிலாவளைக்கும்பிரமமாதடத்துப்புண்ணியப்புனல்படிந்தெனையா
ளுடையகாரணனைவிதிமுறைவழிபாடுழுவலன்பொடுமினிதாற்றி.    28

 

812    அண்ணலங்குடுமியாடகமானத்தணியகோணத்திலேடவிழ்பூங்
கண்ணியங்கொன்றைப்பராசரேசுரனைக்காதலினிருத்தியாயிடையோர்
புண்ணியக்கூவமிருத்திநாத்தழும்பப்புகரிலைம்பதமுறைபோற்றி
நண்ணருந்தழல்வாயாறிருபருவநற்றவமுற்றுறவிழைத்தான்.    29

 

813    புனிற்றிளந்திங்கட்புரிசடைமுனிவன்புகழ்பராசரமுனிக்கருள்வான்
பனிக்குமென்கமலப்பாடகமுளரிப்பைங்கிளியொடுமடலேற்றின்
முனிக்கணமிறைஞ்சக்கருணைவார்ந்தொழுகுமுகமலர்முகிழ்நகைபூப்பத்
தனிப்பரஞ்சுடரோன்வருதலும்விழிநீர்ததும்பமெல்லடிமிசைபடிந்தான்.    30

 

814    உருகிமெய் யரும்பித் தழுதழுத் தவச மொடுபராய் மலர்கடு யவணை
முருகியல் வேணி முதல்வனு மகிழ்ந்து முன்னிய தென்னென முதல்வா
பருகியுன் னருளே பொருளெனப் பெறுமென் பாலிட ரெய்துமோ வெளியேன்
இருநிலத் தொருபேர் கன்னிகா காமி யெனுங்கொடு வாய்தணிக் லொளலே    31

 

815    குறுநிலா விரித்த சிறுபிறை யலங்கற் குழகனுங் கொச்¨சயி னகன்று
பெறுவர மளித்தே முனவரேத் தெடுக்கும் பெருந்தகை யாதியிந் நகர்க்கும்
உறுபெயர் கொச்சை யெனவகன் ஞாலத் தோங்குக வெனவொருங் களித்து
மறுவினா லமைத்த குறியினின் மறைந்தான் மாசற வயங்கினன் முனிவன்    32

 

816    தேண்மதி யடுத்த முழுமதி தினத்துந் தீர்த்தமீ தடியா யிடையில்
கோண்மதி மிலைந்த பராசரே சுரனைக் குளிர்மலர்த் தூயடி பணிந்து
நீண்மதி விளைநெல் ளித்துளோ ரொவ்வோர் நெற்கொரு பருவநீ டொளிகால்
காண்வரும் வனப்பிற் கயிலைமால் வரையிற் கண்ணுத லுருவுபெற் றிருப்பார்    33

 

817    அயன்மனை விழைத லூனவூன் மிசைத லருநறை மடுத்தலான் றவரை
நயனிலகூறன் மனையிளங் கொடியை நாளலா நாளிடைப் புணர்தல்
கயமைசூழ் வினைக ளெவையும்விண் டாதி கமலநீ டுலகினூற் றெட்டுப்
பயனுறு குலத்தோ டுறைவரிக் கூவல்படிந்துநற் றானமென் றளித்தோர்    34

 

818    துலைமதி யாதி தகர்மதி யாதி சுலவுமீ ரயனவெம் பாந்தள்
அலர்கதிர் தொடுநா ளிவற்றினீ ராடி யரியதென் புலச்சடங் காற்றி
உலைவரு மெண்ணீ ரிறைத்துளோர் மேல்வீட் டுறுகுவ ருகமொரு நான்கின்
மலையுறு கவிக்கட் டானமே யெவைக்கும் வலிதென மறைவழங் குதலால்    35

 

819    நுவலருங் கடவுள் மான்மிய மிதற்கே நோக்குறி னளவிலை யடிநாட்
பவனிகா முனிவன் கொச்சைபோ யதனாற் பராசர கேந்திர மெனும்பேர்
கவினுமிந் நகரம் புனைதலாற் குலமே காரண மன்றுசெய் வினையால்
உவமமி லுயர்வுந் தாழ்வும்வந் துறலா லொழுக்கமே விழுமிதென் றுணர்வீர்    36

 

820    அள்ளிதழ் முளரி வானவன் றனைநே ரண்ணலஞ் சுருதியாழ் முனியும்
தெள்ளிய நுமக்கீங் கிதுபுகல் யானுஞ் சேயரி பரந்தகட் கணிகை
எள்ளிய வயிறுவாய்ந் தனமேனு மிறைவனை வழிபடுந் திறனால்
ஒள்ளிய ரெனும்பேர் வாய்ந்தன மென்ப வுறுவிற்கா ளெனவவ ருரைப்பார்    37

 

821    எந்தைநின் வரவொன் றிசைத்ததெஞ் செவியி லேறில தெவ்வகை யுயிர்க்கும்
தந்தைநீ யென்றே யெம்முளம் பெறலாற் சாலவு மெம்மனோர்க் குனைப்போல்
சிந்தைமா சகன்ற குரவர்யா ரென்னச் சேகறு முகமனன் குரைத்தார்
முந்தைநூற் சூதமுனிவர னவர்பான் முகமலர்ந் தொருகதை மொழிவான்    38

13 ஆவது கொச்சையான வத்தியாயம் முற்றிற்று
(ஆகத் திருவிருத்தம் 821)


 

Related Content

திருமுல்லைவாயில் அந்தாதி

தல புராணங்கள்

Thirugnanasambandar Thevaram - 3.024 - Sirkazhi-5 - Mannil N

சீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்

திருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிக