Tiricirapuram makavitvan minatci cuntaram pillaiyin pirapantat tirattu
tirukkarkutimamalaimalai
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S. Karthikeyan, Swaminathan Narayanan, V.S.Kannan and V. Devarajan Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிவமயம்
நிருத்தவிநாயகர். விருத்தம்.
திருவளர் செம்பொன் மாளிகை யுடுத்துத் |
1 |
அஞ்சனக்கணம்மை |
2 |
சைவசமயாசாரியார் |
3 |
நமச்சிவாயதேசிகர். |
3 |
நூல்.
மலர்தலை யுலகிற் புன்னெறிச் சமயர் |
1 |
பண்வழுக் குற்ற வீர்ஞ்சொலர் மையற் |
2 |
இட்டமா விரையாக் கலிபிழைத் தாரென் |
3 |
நளிமனம் வாக்குக் காயமூன் றாலு |
4 |
மங்கைமூக் கரிந்த தொன்றுமோ போது |
5 |
புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார் |
6 |
மறைநெறி வழாத புகலிகா வலனார் |
7 |
மண்பொழி தானக் களிற்றொடு பாகர் |
8 |
யாதனின் யாத னினீங்கியா னோத |
9 |
சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குத் |
10 |
மெல்வினை ஞானம் வல்வினை |
11 |
மெய்யெலா முரோமஞ் சிலிர்ப்பவென் |
12 |
செயிரறு நினது திருவருள் காட்டுந் |
13 |
ஏந்தறற் செறுவிற் செந்நெலுட் பதடி |
14 |
கல்லினால் வல்லப் பலகையால் வாளாற் |
15 |
வேணவா வெகுளி முதற்களை கட்டு |
16 |
சூதினாற் பொருள்செய் துன்னடி யார்க்கே |
17 |
துன்றிய பூத விருளொரு பொருளுந் |
18 |
தரணியான் மாக்க ளுடற்குரி மைகளிற் |
19 |
சேரர்நின் கயிலைக் கெழுந்தநாட் பரிக்குந் |
20 |
அன்றுநன் புகலூர் மணிமுதற் றோற்றி |
21 |
பிறைவடங் கிடந்த பொம்மல்வெம் முலையார் |
22 |
வறியவ ரகட்டும் பசித்தழ லவிய |
23 |
பொற்புறு சபையின் மாதரார் நடனம் |
24 |
தட்பமே மிகுந்த சாகரம் புனிதத் |
25 |
மைக்கணார் முதலா மாயகா ரியங்கண் |
26 |
வேடமே பொருளா வுயிரளித் தவரை |
27 |
பனிமதி நுதலெம் பிராட்டிமேற் கடைக்கண் |
28 |
வளிமுதன் மூன்றும் பயிறர விடக்கால் |
29 |
மன்னெகப் புளக முடலெலாம் புதைப்ப |
30 |
தடித்தெழு மன்பே யுருவமாம் வேடர் |
31 |
தேயுநுண் மருங்கு லிறுத்தெழு முலையார் |
32 |
பந்தமார் கிளைக ளறத்துணித் துரிமைப் |
33 |
நண்ணிமுன் னாலங் காட்டிற்குத் தலையா |
34 |
மதித்துனை யுள்ளச் சினகரத் திருத்தி |
35 |
ஏத்தியன் புறுநின் னடியரை நின்னை |
36 |
பொருந்திய சாந்தம் பொற்பணி முனிந்து |
37 |
அருந்தலை விரும்பி யணைத்தலைக் காண |
38 |
மன்னுசெங் கதிரோ னன்றியு மவன்கல் |
39 |
சந்திரற் றரித்த நின்றிரு முடியிற் |
40 |
தெளியுநின் கருணை மரகதக் கொழுந்தே |
41 |
தேகமே நானென் றுனியிரு சார்புந் |
42 |
பணியும்வெள் ளெலும்பு நரம்பும்பூண் டதற்குன் |
43 |
மல்லலம் புவியிற் கூற்றினைக் கடத்தல் |
44 |
பஃறலைப்பாய லான்முதற் றேவர் |
45 |
மையினுங் கழிந்த கருங்குழன் மடவார் |
46 |
கொடும்பசித் தழலு ணனிமுழு கியும்பொற் |
47 |
மறையவர் திருவை வைதிகர் துணையை |
48 |
மைக்கருங் கடலிற் கன்மிசை மிதந்து |
49 |
நின்னுடைத் தோழப் பெருந்தகைப் |
50 |
துதிகரைந் துனக்குன் னடியருக் கன்பு |
51 |
ஆணவ மகன்ற வறிவன்றி யுருவி |
52 |
தினகரன் பூத விருள்விடக் கிரணஞ் |
53 |
நவையறு மாசி னாமமப் பூதி நாயனார் |
54 |
தாலிகொண் டுறுநெற் கொளச்செலும் பொழுது |
55 |
தூரமாஞ் செல்வச் செருக்கர்பி னடந்து |
|
கூற்றினை யுதைத்துங் காமனை விழித்துங் கொன்றநின் றனக்கன்பு செய்யார், மாற்றறுங் கூற்றின் றண்டமுங் காம வருத்தமு மெங்ஙன மொழிவார், தாற்றிளங் கமுகின் கழுத்திறப் பாயுந் தகட்டகட் டிளநெடு வாளைக், காற்றடம் பணைக ணனியுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
மின்னுசெந் தழலாய் நின்றுமென் பாதி மிலைந்துமல் லறநுதல் விழித்து, முன்னுநஞ் சயின்றுந் தெரிக்குநிற் கயன்மா லொப்பெனக் கரைநரும் வாழ்க, பன்னுகூன் குலைய குறுங்கழுத் தரம்பைப் பழங்கனிந் தொழுகிய செழுந்தேன், கன்னலின் படப்பை நனைக்குந்தண் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
இயல்புடை யோகத் திருந்தநா ளெவரு மெவையுமின் புணர்ப்பற விருந்த, செயலுணர்ந் துமையைப் புணர்ந்தரு ணீயே தெளிபர மென்பது தெளிந்தே, னயலுறு முளரி மணந்தமக் கிலாத தறிந்துநெற் கதிர்தலை வணக்குங், கயலுடைப் பழனக் கணியுடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
பராபர நினது மேனியிற் பட்ட பாண்டியன் கைப்பிரம் படிதான், சராசர மனைத்தும் படுதலா னீயே தறபர னெனவுளந் துணிந்தே, னிராவெனத் திரியுங் கவையடிக் கயவா யெருமைகள் கன்றுளிப் பொழிபால், கராமலை மடுக்க ணிறைதரும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பங்கயா சனனுந் திருநெடு மாலும் பாகசா தனனும்வா னவரு, மெங்குநா டியுங்கா ணரியநின் பாத மெளியதன் பருக்கென வுணர்ந்தேன், கொங்குலாந் தடத்திற் சலஞ்சல முகுத்த கொழுங்கதிர் முத்தம்வில் வீசிக், கங்குலை மழுக்கும் பணைமருங் குடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
ஐயவென் னுள்ள வெள்ளமிந் திரிய வடற்குலை யுடைத்ததி விரைவிற, செய்யநின் பாத பங்கயக் கடலிற் சேர்தரப் படருநா ளென்றோ, நெய்யணி கூந்த லுழத்தியர் நெடுங்க ணிழலற லிடைக்கண்டு மள்ளர், கையினாற் கயலென் றரித்திடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
கட்டுவீ டருள்வோ னீயெனத் தெளிந்து கரிசுறு புன்றெய்வப் பற்று, விட்டுனை யடைந்தேற் கெப்பற்று மறுத்துன் மெய்ப்பற்றைப் பற்றுமாறருள்வாய், வட்டவாய்க் கமல மதுமடை யுடைக்க மள்ளர்கள் கரும்படு மினிய, கட்டியா லடைக்குங் கணிமருங் குடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
விரிதனு கரண புவனபோ கங்கள் வினைவழிக் கொடுத்தவை துய்த்த, பரிவுயி ரறப்பி னொடுக்கிமீட் டாக்கும் பரிவினுங் கதிதர லெளிதே, நெரிமருப் பெருமை கரும்பினைக் குதட்ட நேரிழி சாறவ னிரப்புங், கரிசறு மகணி மருங்குடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
செறிபிறப் பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பெனுஞ் செம்பொருள் காண்ப, தறிவெனத் தெரிக்குங் குறட்பொரு ளறிந்து மறிகிலன் போற்பிற காண்பேன், வெறிமலர்ப் பணைநெற் பச்சிளங் கதிர்கள் விண்ணகத் தேனுநா நீட்டிக், கறிசெய வளரும் படுகர்சூழ் பழனக் கற்குடி மாமலைப் பரனே. |
|
வெம்பிய காமம் வெகுளியுண் மயக்கம் வேரறப் பறித்துநின் பதமே, நம்பியென் புருக வனபுசெய் நாளு நாயினேற் குள்ளதோ வருள்வாய், பம்புபன் மலர்கண் மருதவேந் துறையப் பன்மணி குயிற்றிய பைம்பொற், கம்பலம் விரித்தாற் போலடர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
வையமும் வானு முய்யவன் புருவாய் வாதவூர் வந்தவ தரித்த, வையனன புரையை நயந்துபா ராட்டு மவ்வள வாவதெற் கருள்வாய், செய்யதா மரையின் பன்மல ரொளிர்த றிகழ்தர விழித்துவச் சிரத்த, கையினான் கிடத்தல் போன்மெனும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
ஒழுக்கமன் பருளா சாரநற் சீல முறவுப சாரம்வந் தித்த, லிழுக்கிலா வாய்மை தவந்துற வடக்க மிவைகளி லொன்றும்யா னறியே, னழுக்கிலா வமுத முடுக்கள போற் சிதற வணிமதி மேற்பெரு வாளை, கழுக்கடை யெனப்பாய் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. |
|
நின்னுரை வழியே நிற்பவர் நில்லார் நீளற மறஞ்சுவர்க் காதி, மின்னுபோ கத்தா னரகத்தாற் றொலைத்து வீட்டுய்ப்போ னீயெனத் தெளிந்தேன், மன்னிய தென்னம் பழம்பல வீழ வருக்கையின் பழங்கிழிந் திழிதேன், கன்னலங் கழனி பாய்தரும் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
மானிடப்பிறவி வந்தது மனத்தால் வாக்கினாற் காயத்தாற் பணிசெய், தானிடத் தைந்து மாடுநின் னடிக்கீ ழமரவென் றறிந்திலன் சிறியேன், கூனுடைக் குலைய குறுங்கழுத் தரம்பைக் கொழுங்கனி யிழிந்ததேன் கருப்பங், கானிடைப் பாயும் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. |
|
பொருள்செய்சன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம் புத்திர மார்க்கமின் பாக்கு, மிருமைசெய் தாத மார்க்கமிம் மார்க்கத் தியானொரு மார்க்கமு மறியேன், பருமர கதமுத் தந்துகிர் கண்டம் பாளைசெம் பழத்தினாற் காட்டிக், கருமுகி லணவுங் கமுகடர் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
கொச்சையர்க் குயர்மா னியுமர சினுக்குக் குலவுமப் பூதியுமுலக, நச்சுசுந் தரருக் குதியரும் போல நான்சிறந் துய்வதெந் நாளோ, வச்சணங் கயில்வேற் கண்ணுழத் தியர்நெல் லரிதருங் கொடும்புற விரும்பைக், கச்சப வெரிநிற் றீட்டிடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
படர்புகழ்க் காழிப் பிள்ளையார்க் கிவனைப் பாரெனச் சற்றுநீ மொழிந்தாற், பிடகன்மாத் தலையி லுருமுவீழ்த் தவரென் பெருவினைக் கும்மது வீழ்ப்பா, ரடுமடைப் பள்ளி யுலைக்கழு நீர்செய் யாவிகால் குளம்பல நிரம்பக், கடலுடைத் தென்னப் பாயுமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
நயந்தரு நாவுக் கரசருக் கிவன்பா னாட்டம்வை யென்னினப்பூதி, பயந்தசேய்க் குற்ற விடந்தொலைத் தவரென் பாசவல்விடத்தையுந் தொலைப்பார், வயந்தரு மள்ள ருடைப்பினை யூரு வரைகுவி நவமணி வாரிக், கயந்தலை யெனநின் றடைத்திடுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பழிதபு குணவன் றொண்டருக் கிவன்பாற் பார்வைசெ யென்பையேற் கராவாய்க், குழியினின் றொருசேய் மீட்டவர் சனனக் குழியினின் றென்னையு மீட்பார், வழிமதுப் பொழிபூங் கொடிகடாய் வளைப்ப வளைந்துபைங் கழைகணின் றிடுதல், கழிவில்கைக் கொடுவேள் பொரல்பொருங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
அருவமா யுருவ மாயரு வுருவா யனைத்துயிர்க் குயிருமா யறிவாய்ப், பொருள்படு மறைக்குந் தெரிவரி யாயாம் புராணநிற் றெரிதலெற் கெளிதோ, சுருள்விரி யரம்பைக் குருத்துமீ யசைந்து சுரர்மினார் கலவியெய்ப் பாற்றுங், கருள்படு பொதும்பர்ப் படுகர்சூழ் தெய்வக் கற்குடி மாமலைப் பரனே. |
|
செவியினாற் கேட்டு மறிகிலே னின்னைத் தெரிந்தவர் போற்பல பிதற்றிக், குவிதரக் கவியும் புனைவனுன் னிடினென் குணமெனக் கேநகை தருமா, லவிருநெற் பணையின் ஞெண்டுகள் கிளைத்த வளவில்பல் வளையெலா நிரம்பக், கவிழிணர்ச் சூதத் தாதுகுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
அருமறை தெரிதண் டீசர்பா லென்னை யடைக்கலம் புகுத்துவையானால், வெருவறத் தந்தை தாடுணித் தவரென் வெம்பவத் தாளையுந் துணிப்பார், மருவிய வுணவு கொடுவரச் சென்ற மடவனச்சேவலை நோக்கிக், கருவுயிர்த் துறைபே டலமருங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
நானவார் கூந்தற் பரவையார் மனைக்கு நள்ளிரு ணாப்பணீ தூது, போனநா ளாரூர் மறுகிலோ ரெறும்பாய்ப் பொருந்தினும் வருந்திடா துய்வேன், கூன்முது கிப்பி யுயிர்த்தவெண் முத்தங் குவிதரக் கயிலையே யென்று, கான்மலர் தூவிச் சுரர்தொழுங் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
கெடுத்திடு முலோகா யதன்முத லான கீழ்ப்படுஞ் சமயர் பொய் யுரையை, யடுத்திடும் படியெப் பிறப்பெனக் குறினு மருளனின் னடிக்கன்பே யருள்வாய், மடுத்தவெண் குருகோர் முடக்கிழ நாரை வாய்க்கொளு முணவினைத் தட்டக், கடுத்திடா தறவோர் போலுறை கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
தரிசனங் கொடுத்தா ளுயர்ந்தவ னீயான் றாழ்ந்தவ னியல்பினெப்பொருளுந், தெரிபவ னீயா னீதெரி விக்கத் தெரிபவ னின்னடிக் கடியே, னரிசிதர்ந் தயில்கொன் றாள்வழக் கறுக்கு மங்கணார் முகமதி கண்டு, கரிசறக் குமுத மலருமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பொருவினின் பூசை யென்னும்புண் ணியத்தாற் பொலிசிவ ஞானம்பெற் றடங்கி, மருவுற மேல்கீழ் தருமறம் பாவ மாற்றிநின் னடிக்கணென் றுறுவேன், குருமலர்ச் செந்தேன் புலியடிப் பைங்காய்க் கோழரை யரம்பையைச் சாய்த்துக், கருநிறக் கவரி நீந்தப்பாய் கணிசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
யானது செய்தேன் பிறரிது செய்தார் யானென தென்னுமிக் கோணை, ஞானவா ரழலால் வெதுப்புபு நிமிர்த்து நான்செவ்வே நிற்கவென் றருள்வாய், மீனுண வளித்து விரிசிறை நாரை மென்மடப் பெடையொடு திளைக்குங், கானகன் மென்பூந் தடத்தமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
மூதறி வுடையோர் புகழ்சிறுத் தொண்டர் முளரித்தா ளடைந்திலே னடைந்தான், மேதகு சேயை யறுத்தவர் வெறுத்தென் வினையினை யறுக்கவஞ் சுவரோ, மாதர்மென் றடத்தில் வெள்ளிதழ்க் கமல மலரினை மடவனச் சேவல், காதலி னணைக்கப் பெடைதுயர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பெருகிய வெள்ளந் திரைக்கட லன்றிப் பிபீலிகை யளையினும் புகல்போ, லுருகிய வன்ப ரன்றியென் பாலு முன்னருள் புகுவது வழக்கால், பருதிய யிரமோர் கடலிடைத் தோன்றும் பானமைபோ லொவ்வொரு மடுவிற், கருதுசெங் கமலம் பலமலர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
உயிரெலா நின்ன தடிமையெப் பொருளு முன்னுடை மைப்பொரு ளென்னச், செயிரற வுணர்ந்த நின்னடி யவாதாள் சிறியனே னடைந்துய்வ தென்றோ, குயிலெனப் பேசுங் கடைசியர் வதனக்குறுநகை மதிநில வென்னக், கயிரவங் கருதி மலர்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
பாவியேன் சிந்தை நின்னடிக் காக்கிப் பணிவிடைக் கிருகையுமாக்கி, நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி நவையற வுய்யுநா ளுளதோ, வாவியிற் பொலிவெண் டாமரை மலர்போன் மதியுறப் பெருக்கெடுத் தொழுகுங், காவிரிப் புனல்பாய் நெடும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
மிடைத்தம ருடற்றும் பலகுண மறுத்து மிகுசிவா னந்தமூற் றெடுப்பக், கிடைத்துனைக் காண வாணவ வெழினி கீழயான் பெறுவதெந் நாளோ, வுடைப்பினை மள்ள ரடைக்குமுன் வராலவ் வுடைப்படை படவுடை மடையின், கடைத்தலை வெடிபோய் விழும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
ஐந்துபே ரறிவும் பார்வையாய் முடிய வடுத்திடு கரணமீ ரிரண்டுஞ், சிந்தையாய் முடிய நின்றிரு ந்டனந் தரிசிக்கு நாளுமெற் குளதோ, விந்திர தருவோ ரளிக்குந்தே னளியா வியல்பினை நோக்கிவெண் மலராற், கந்தவார் பொழில்க ணகைக்குமென் பால்சூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பூப்பயி னந்த வனம்பல வியற்றேன் பொருந்தல கிடேனினா லயத்தி, லாப்பிகொண் டைதா மெழுகிடே னெங்ங னடியனே னுய்யுமா றருள்வாய், வீப்பயி லளிகண் மூக்குழ வழிதேன் விரிகடற் படுமுவ ரகற்றுங், காப்பயின் மென்பான் மருங்குடுத் தோங்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
அவாவெனப் படுவ வெவ்வகை யுயிர்க்கு மணியவெவ் விடத்து மெஞ்ஞான்றுந், தவாவரு பிறப்பின் வித்தென வுணரேன் றண்ணரு ளெங்ஙனம் பெறுவே, னுவாமதி தவழுஞ் சோலையி லிளைஞ ரொளிர்கத லியைமறை மாதர், கவானென வணைக்கு நெடும்பணை யுடுத்த கற்குடி மாமலைப் பரனே. |
|
மலைக்கொடி படருங் கற்பக தருவே வயங்கருண் மழை பொழி முகிலே, புலைக்கொடி யனையா ளென்றுமெய் யாவிப் பொய்யினே னடையுநா ளென்றோ, நிலைக்கொடி யாட வுலகங்கொண் டாட நிறைமலர்ச் செங்கொடி யாடக், கலைக்கொடி யாடு மாளிகை பலசூழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
அற்குடி கொண்ட விரைநறுங் கூந்த லணிமுலை யெம்பிராட்டி யையான், சொற்குடி கொண்ட யாப்பினா லன்பாற் றுதித்திடப் பெறுநன்னா ளென்றோ, விற்குடி கொளும்பொன் னுலகமேத் தெடுப்ப வியனொளி குடிகொள்பன் மணியென், கற்குடி கொளச்செய் நற்குடி மலைதாழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பல்லெலாந் தெரித்துச் சொல்லெலாந் துறுத்துப் பாட்டெலாம் பாடினீர் யாமு, மில்லெலா மாய்ந்தோங் கொடுப்பதற் கிலையென் னிவர்கள்பாற் புலவரென் பெறுவார், சொல்லெலாந் திருவைந்தெழுத்திவண் வாழ்வோர் தொழிலெலாம் பணிவிடை யென்றுங், கல்லெலாஞ் சிவலிங் கம்மெனச் சுரர்தாழ் கற்குடி மாமலைப் பரனே. |
|
பொற்பக மலர்ந்த மாதரர் மையற் புணரியி லழுந்திடா துனக்கே, யற்பக மலர்ந்து சிவானந்தப் புணரி யழுந்திடு மாறெனக் கருள்வா, யெற்பக மலர்ந்த குவட்டுறும் யானை யீர்ங்கவு ளளிகளைக் கையாற், கற்பக மலர்ந்த குழையெடித் தோச்சுங் கற்குடி மாமலைப் பரனே. |
|
புவிமுழு தளந்தோ னேடியுங் காணாப் பொன்னடித் தாமரை காண்பான், குவிமனத் தோடு மகம்படித் தொண்டு கொண்டியா னுய்வதெந் நாளோ, வவிர்தரு பிறையைக் கண்டவில் வேட ரவாவொடு கொடிச்சியர் தமது, கவினுத லென்னப் பொட்டணிந் துவக்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
மன்றினின் னடனங் கண்டகண் கொண்டு மற்றினிக் காண்பதி யாதென், றொன்றிய சிந்தை யுறுதிகொள் ளுவனே லுய்குவே னெனக்கது போதுங், குன்றவ ரேனற் குரல்களை யறைக்கட் கொண்டுபோய்க் குவித்தடும் யானைக், கன்றினான் மிதிப்பித் துதிர்தினை யளக்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
நனியிடை யறாம லுன்னடி நினைக்க நாயினேற் கருளுவை யாயி, னினிவரு கதிரெங் கெழினுமெண் ணேன்யா னிருப்பனீ தருளிட வேண்டுந், துனியறு களிற்றின் கோடுபட் டுடைந்து சுட்டபொன் போற்பல வருக்கைக், கனிபழங் கீண்டு சுளைபல வுதிருங் கற்குடி மாமலைப் பரனே. |
|
நீதிசேர் சைவத் தடைந்தவ ரடையா நின்றவ ரடைபவர் தமக்கியான், பாதகக் குழிசித் தொடர்பற வடிமைப் படும்பரி சென்றுநீ யருள்வாய், கோதில்கற் பகத்தி னறுங்குள கருத்திக் கொழுமத யானையங் கூந்தற், காதலம் பிடியைப் புலவிதீர்த் தணைக்குங் கற்குடி மாமலைப் பரனே. |
|
சைவமே பொருண்மற் றவையல வென்று சார்திரு நீறுங்கண் டிகையுந், தெய்வவைந் தெழுத்தும் பற்றறப் பற்றத் திருவரு ளென்றெனக் கருள்வாய், பைவளர் மணியைத் தழலென நினைந்து பாவடிப் பருமநல் வேழங், கைவளர் கடநீர் மழையெனப் பொழியுங் கற்குடி மாமலைப் பரனே. |
|
வெண்பா. நிலமாலை கொண்ட நெடுஞ்சடையி லென்பின் குலமாலை யுஞ்சேர்த்துக் கொண்டாய் -- பலமேலோர் சொன்மாலை கொள்செவியிற் றூக்கற் குடியாயென் புன்மாலையுங் கொளது போல். |
திருக்கற்குடிமாமலைமாலை முற்றிற்று.