logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நிர்குண மானஸ பூஜா - தமிழ் உரை - R. கிருஷ்ணஸ்வாமி அய்யர்

நிர்குண மானஸ பூஜா - தமிழ் உரை - R. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 


॥ निर्गुणमानसपूजा ॥
நிர்கு³ண மானஸ பூஜா 
ஸ்ரீ சங்கரபகவத்பாதாசார்யர் அருளியது.

[ஆத்ம ஸாக்ஷாத்காரமடைந்த ஞானிக்கு ஸதாசாரானுஷ்டானம் எவ்விதம் என்பதைப் பற்றி "ஸதாசாராநுஸந்தானம்'' என்ற சிறிய கிரந்தத்தில் ஸ்ரீமத் பரமாசா ர்யார் வர்ணித்திருக்கிறார். ஞானிக்கும் ஒருவிதமாக ஸ்நாநம், ஸந்த்யா, ஜபம், ஹோமம் எல்லாம் உண்டு என்று சொல்லிவிட்டு அவருக்கு தேவதாராதனமும் உண்டு என்கிறார். ஆனால் அந்த தேவதாராதனம்,

देहो देवालयः प्रोक्तो देही देवो निरञ्जनः । 
अर्चितः सर्वभावेन स्वानुभूत्या विराजते ॥ 
தே³ஹோ தே³வாலய꞉ ப்ரோக்தோ தே³ஹீ தே³வோ நிரஞ்ஜன꞉ ।
அர்சித꞉ ஸர்வபா⁴வேன ஸ்வானுபூ⁴த்யா விராஜதே ॥
- ஸதாசாரானுஸந்தானம் சு. 13

என்ற முறையில் இருக்குமென்று விளக்குகிறார். அதாவது தேஹத்தையே தேவால யமாகவும் ஹ்ருதய குகையாகிற கர்ப்ப கிருஹத்தில் பிரகாசிக்கும் பரமாத்மா வையே தேவதையாகவும் வைத்துக்கொண்டு எல்லாவிதத்திலும் தன்னுடைய ஞானானந்த அநுபவத்தினாலேயே பூஜை செய்வது என்கிறார். பூஜை என்பது ஸாதார ணமாக தியான ஆவாஹனாதி ஷோடச உபசாரங்கள் அடங்கியுள்ளதாகையால் அவ்வுபசாரங்களை ஆத்ம ஞானி எவ்விதம் செய்ய முடியுமென்று ஏற்படும் ஸந்தே ஹத்தை எடுத்துச் சொல்லி அதற்கு ஸமாதானம் விரிவாக இந்தப் பிரகரணத்தில் ஸ்ரீமத் ஆசார்யாரால் மிகக் கருணையுடன் சொல்லப்படுகிறது.]

शिष्य उवाच - 
अखण्डे सच्चिदानन्दे निर्विकल्पैकरूपिणि । 
स्थितेऽद्वितीयभावेऽपि कथं पूजा विधीयते ॥ १ ॥ 
ஶிஷ்ய உவாச -
அக²ண்டே³ ஸச்சிதா³னந்தே³ நிர்விகல்பைகரூபிணி ।
ஸ்தி²தே(அ)த்³விதீய பா⁴வே(அ)பி கத²ம் பூஜா விதீ⁴யதே ॥ 1 ॥


सच्चिदानन्दे   = ஸத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும்
ஸச்சிதா³னந்தே³   உள்ள ப்ரஹ்மமானது,
अखण्डे   = பிரிவற்றதாகவும், 
அக²ண்டே³
निर्विकल्पैकरूपिणि  = எவ்வித விகல்பத்திற்கும் இடமில்லாமல்
நிர்விகல்பைகரூபிணி  ஒரே ரூபமாகவும்,
अद्वितीयभावेऽपि  = இரண்டாவது பொருளில்லாததாகவும், 
அத்³விதீயபா⁴வே(அ)பி
स्थिते    = இருக்கும்போது, 
ஸ்தி²தே
पूजा    = பூஜையானது, 
பூஜா
कथं    = எப்படி, 
கத²ம்
विधीयते   = செய்யப்படுகிறது? 
விதீ⁴யதே

ஸச்சிதாநந்த ஸ்வரூபமான ப்ரஹ்மம் பிரிவற்றது. ஒருவித விகல்பமும் இல்லாமல் ஒரே ரூபமாக உள்ளது. அதைத்தவிற இரண்டாவது பொருள் கிடையாது. இப்படி இருக்க அதில் பூஜை எப்படி செய்யக்கூடும்? 

[தன்னைத்தவிர வேறாக தேவதை, பூஜைக்கு வேண்டிய ஸாதனங்கள் இடம் முதலானவை இருந்தாலல்லவா பூஜை நடத்த முடியும். ஆத்மஞானிக்கோ தன்னை த்தவிர வேறு எதுவும் கிடையாதே? அவர் எப்படி பூஜை செய்வார்? என்பது சிஷ்யனு டைய கேள்வி. "எப்படி" என்ற பதத்திற்கு இரண்டு விதமாகத் தாத்பர்யம் சொல்லலாம். பூஜை செய்யவேண்டிய முறை எப்படி என்று தெரிந்துகொள்ள விரும்பியும் "எப்படி” என்று கேட்கலாம். பூஜை செய்யவே முடியாதே என்று ஆக்ஷேபிக்கவும் "எப்படி" என்று சொல்லலாம். இந்த இரண்டுவித தாத்பர்யங்களையு மே மனஸில் வைத்துக்கொண்டுதான் இந்த சுலோகத்திலும் மேல் சுலோகங்களி லும் சிஷ்யன் தன் குருவை அண்டி தன் ஸந்தேஹங்களைப் போக்கடித்துக் கொடுக்கவேண்டு மென்று பிரார்த்திக்கிறான். முதல் சுலோகத்தில் ஆத்மஞானிக்கு பூஜையிருக்க நியாயமில்லையென்பதற்குள்ள காரணத்தைப் பொதுவாக சொல்லி விட்டு மேல்சுலோகங்களில் தேவதாராதனத்திலுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக எடுத்துச் சொல்கிறான்.]        (1)

पूर्णस्यावाहनं कुत्र सर्वाधारस्य चासनम् । 
स्वच्छस्य पाद्यमर्घ्यं च शुद्धस्याचमनं कुतः ॥ २ ॥
பூர்ணஸ்யாவாஹனம் குத்ர ஸர்வாதா⁴ரஸ்ய சாஸனம் ।
ஸ்வச்ச²ஸ்ய பாத்³யமர்க்⁴யம் ச ஶுத்³த⁴ஸ்யாசமனம் குத꞉ ॥ 2 ॥
पूर्णस्य    = எங்கும் நிரம்பியிருக்கிற பிரஹ்மத்திற்கு, 
பூர்ணஸ்ய
आवाहनं   = ஆவாஹனம், 
ஆவாஹனம்
कुत्र    = எங்கே செய்வது? 
குத்ர
सर्वाधारस्य   = எல்லாவற்றிற்குமே ஆதாரமாயிருப்பதற்கு, 
ஸர்வாதா⁴ரஸ்ய
आसनं च   = ஆஸனமும் (எங்கே கொடுப்பது)? 
ஆஸனம் ச
स्वच्छस्य   = மிகவும் நிர்மலமாயிருப்பதற்கு, 
ஸ்வச்ச²ஸ்ய
पाद्यं    = பாத்யமும், 
பாத்³யம்
अर्घ्यं च   = அர்க்யமும் (ஏது?) 
அர்க்⁴யம் ச
शुद्धस्य    = சுத்தமாயிருப்பதற்கு, 
ஶுத்³த⁴ஸ்ய
आचमनं   = ஆசமனம், 
ஆசமனம்
कुतः    = எங்கிருந்து வரும்?
குத꞉

எங்கும் நிரம்பியிருக்கிற பிரஹ்மத்திற்கு ஆவாஹனம் எங்கே செய்வது? எல்லாவற்றிற்குமே ஆதாரமாயிருப்பதற்கு ஆஸனம் எங்கே கொடுப்பது? மிகவும் நிர்மலமாயிருப்பதற்கு பாத்யம், அர்க்யம், ஆசமனம் இவை எங்கிருந்து வரும்?

[தேவதைகளுக்கும் எல்லா இடங்களிலும் இருக்கும் யோக்கியதை இருந்த போதிலும் சிறிய பிரதிமை முதலான பிரதீகங்களில் விசேஷஸாந்நித்யமடைந்து பூஜையை கிரஹித்துக் கொள்ள வேண்டியதற்காக ஆவாஹனம் செய்வதுண்டு. ஸர்வ வியாபகமாய் எங்கும் ஒரே மாதிரி நிறைந்திருக்கும் வஸ்துவான பிரஹ்ம த்திற்கு ஆவாஹனம் எவ்விதம் செய்வது? ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்படிச் செய்வதல்லவா ஆஸனம் என்பது? எவ்விடத்திலும் இருந்துகொண்டு தான் எல்லா பதார்த்தங்களுக்கும் ஆதாரமாய் இருந்துகொண்டு, தான் இருப்பதற்கு வேறு எதை யும் ஆதாரமாகத் தேடாத, பிரஹ்மத்திற்கு ஆஸனம் எப்படி? வெளியில் ஸஞ்சாரம் செய்வதனால் கைகால்கள் அசுத்தப்பட்டிருக்கக்கூடியவர்களுக்கு கால்கழுவ பாத்ய மும் கையலம்ப அர்க்யமும் அவசியமாகும். பிரஹ்மமோ எப்பொழுதும் நிர்மலமாய் இருக்கும் வஸ்து. அதற்கு பாத்யமும் அர்க்யமும் தேவையில்லை. அப்படியே சுத்தி ஏற்படுவதற்காக ஆசமனம் சொல்லப்பட்டிருக்கிறது எப்பொழுதும் சுத்தமாகவே யிருக்கும் பிரஹ்மத்திற்கு ஆசமனம் எதற்கு?]      (2)

निर्मलस्य कुतः स्नानं वासो विश्वोदरस्य च । 
अगोत्रस्य त्ववर्णस्य कुतस्तस्योपवीतकम् || ३ || 
நிர்மலஸ்ய குத꞉ ஸ்னானம் வாஸோ விஶ்வோத³ரஸ்ய ச ।
அகோ³த்ரஸ்ய த்வவர்ணஸ்ய குதஸ்தஸ்யோபவீதகம் ॥ 3 ॥

निर्मलस्य   = நிர்மலமாயிருக்கிறவருக்கு, 
நிர்மலஸ்ய
स्नानं    = ஸ்நாநம், 
ஸ்னானம்
कुतः    = எதற்காக? 
குத꞉
विश्वोदरस्य   = பிரபஞ்சத்தையே தன் வயிற்றில் அடக்கியுள்ள 
விஶ்வோத³ரஸ்ய   வருக்கு, 
वासः च   = வஸ்திரம்தான் (எதற்கு)? 
வாஸ꞉ ச
अगोत्रस्य   = கோத்திரமில்லாதவரும், 
அகோ³த்ரஸ்ய
अवर्णस्य तु   = ஜாதியில்லாதவருமான, 
அவர்ணஸ்ய து
तस्य    = அவருக்கு,
தஸ்ய
कुत:    = எதற்காக,
குத:
उपवीतकम्   = யக்ஞோபவீதம்? 
உபவீதகம்

நிர்மலமாயிருக்கிறவருக்கு ஸ்நாநம் எதற்காக? பிரபஞ்சத்தையே தன் வயிற் றில் அடக்கி வியாபகமாக உள்ளவருக்கு வஸ்திரம்தான் எதற்கு? கோத்திரமும் ஜாதியுமில்லாத அவருக்கு எதற்காக யக்ஞோபவீதம்?

[அழுக்குப் போவதற்காக ஜலத்தினாலும், பாபம் நீங்குவதற்காக மந்திரத்தி னாலும் ஸ்நாநம் செய்வதுண்டு. வெளி அழுக்கோ உள் பாபமோ, இருவித மலமும் பிரஹ்மத்திற்குக் கிடையாத படியால் அதற்கு எதற்காக எப்படி ஸ்நாநம் செய்து வைக்க வேண்டும்? சிறிய சரீரத்தோடு கூடியவருக்கு அவரைச்சுற்றி வஸ்திரம் கட்டிவிட முடியும். பிரபஞ்சம் பூராவையுமே தன் குக்ஷியில் அடக்கிக்கொண்டும், தனக்கு வெளியில் இடமேயில்லாமலும், இருக்கிறவருக்கு எப்படி வஸ்திரம் கட்டுகிறது? பிரஹ்ம க்ஷத்திரிய வைசியர்களென்ற மூன்று வர்ணங்களில் ஏதேனும் ஒரு வர்ணத்தில், ஏதேனும் ஒரு வம்ச பரம்பரையில், பிறந்தோருக்கல்லவா யக்ஞோபவீதம் விதிக்கப்பட்டிருக்கிறது? பிறக்காமலும், முன்னோர்கள் அற்றும், ஜாதியற்றும், இருக்கும் பிரஹ்மத்திற்கு யக்ஞோபவீதம் ஏது?]    (3)

निर्लेपस्य कुतो गन्धः पुष्पं निर्वासनस्य च । 
निर्विशेषस्य का भूषा कोऽलंकारो निराकृतेः ॥ ४ ॥
நிர்லேபஸ்ய குதோ க³ந்த⁴꞉ புஷ்பம் நிர்வாஸனஸ்ய ச ।
நிர்விஶேஷஸ்ய கா பூ⁴ஷா கோ(அ)லங்காரோ நிராக்ருதே꞉ ॥ 4 ॥

निर्लेपस्य   = எவ்வித பூச்சும் அற்றவருக்கு, 
நிர்லேபஸ்ய
गन्धः    = வாஸனை திரவ்யமான சந்தனம் முதலானது, 
க³ந்த⁴꞉
कुत:    = எதற்காக,
குத:
निर्वासनस्य   = எவ்வித வாஸனையுமற்றவருக்கு, 
நிர்வாஸனஸ்ய
पुष्पं च    = புஷ்பமும் (எதற்கு)? 
புஷ்பம் ச
निर्विशेषस्य   = எந்த விசேஷமுமில்லாதவருக்கு, 
நிர்விஶேஷஸ்ய
भूषा    = நகை,
பூ⁴ஷா
का    = எது? 
கா
निराकृतेः   = ரூபமேயில்லாதவருக்கு,
நிராக்ருதே꞉
पुष्पं च   = அலங்காரம், 
புஷ்பம் ச
कः    = எது?
க꞉

எவ்வித பூச்சுமற்றவருக்கு வாஸனை திரவ்யமான சந்தனம் முதலானது எதற்காக? எவ்வித வாஸனையுமற்றவருக்கு புஷ்பமும் ஏதற்கு? எவ்வித விசேஷ மும் இல்லாதவருக்கு நகை எது? ரூபமே இல்லாதவருக்கு அலங்காரம் எது? 

[எதிலும் ஒட்டாத பிரஹ்மத்திற்கு சந்தனப் பூச்சு எதற்காக? ஸகலவித வாசனைகளும் அற்ற நிலையே பிரஹ்மமாயிருக்க, அதற்கு புஷ்பம் எதற்காக? கை, கால், முகம், மார்பு முதலான அங்கங்களே இல்லாதவருக்கு நகை எப்படிப் போடுகிறது? அவருக்கு திலகம், ஹாரம் முதலான அலங்காரங்கள் தான். எப்படிச் செய்ய முடியும்?]           (4)

निरञ्जनस्य किं धूपैर्दीपैर्वा सर्वसाक्षिणः  । 
निजानन्दैकतृप्तस्य नैवेद्यं किं भवेदिह  ॥ ५ ॥
நிரஞ்ஜனஸ்ய கிம் தூ⁴பைர்தீ³பைர்வா ஸர்வஸாக்ஷிண꞉ ।
நிஜானந்தை³க த்ருப்தஸ்ய நைவேத்³யம் கிம் ப⁴வேதி³ஹ ॥ 5 ॥

निरञ्जनस्य   = எவ்வித தோஷமுமில்லாதவருக்கு, 
நிரஞ்ஜனஸ்ய
धूपै:    = தூபங்களினால், 
தூ⁴பை
किं    = என்ன பிரயோஜனம்?
கிம்
सर्वसाक्षिणः   = எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் 
ஸர்வஸாக்ஷிண꞉   கொண்டிருக்கிறவருக்கு, 
र्दीपैर्वा    = தீபங்களினால்தான் (என்ன பிரயோஜனம்)? 
தீ³பைர்வா
निजानन्दैकतृप्तस्य  = தன்னுடைய ஆனந்தத்தினாலேயே திருப்தி
நிஜானந்தை³க த்ருப்தஸ்ய அடைந்துள்ளவருக்கு, 
इह    = இங்கே, 
இஹ
किं    = எது, 
கிம்
नैवेद्यं    = நைவேத்யமாக, 
நைவேத்³யம் 
भवेत्    = ஆகும்? 
ப⁴வேத்

எவ்வித தோஷமுமில்லாதவருக்கு தூபங்களினால் என்ன பிரயோஜனம்? எல்லாவற்றையும் நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறவருக்கு தீபங்களினால்தான் என்ன பிரயோஜனம்? தன்னுடைய ஆனந்தத்தினாலேயே திருப்தியடைந்துள்ளவரு க்கு இங்கே எது நைவேத்யமாக ஆகும்?

[துர்வாஸனையைப் போக்கடிக்கவோ, நல்ல வாஸனையை உண்டாக்கவோ, தூபம் அவசியம். பிரஹ்மத்தினிடத்தில் துர்வாஸனை கிடையாது. புதிதாக வாஸனை யை ஏற்றவும் முடியாது. ஆகையால் தூபத்திற்கு அவசியம் இல்லை. தனக்குத் தெரியாத பதார்த்தத்தைப் பார்ப்பதற்காக தீபவெளிச்சம் தேவையாகும். தானே ஸ்வயம்பிரகாசமாயிருந்து வேறு வெளிச்சத்தை அபேக்ஷிக்காமல் எல்லாப் பதார்த்த ங்களையும் ஸாக்ஷாத்கரிக்கும் பிரஹ்மத்திற்கு தீபம் எதற்காக? பசியுள்ளவனுக்கும், ஆஹாரத்தினால் பசிதீரக்கூடியவனுக்கும் ஆஹாரம் கொடுக்கவேண்டியது நியாயம். பிரஹ்மமோ தன் ஸ்வரூபமான ஆனந்தத்தினாலேயே திருப்தியுடையதாயிருப்ப தால் அதற்கு ஆஹாரம் வேண்டுமென்ற பசிக்கே இடமில்லை. தவிரவும் அது ஆனந்தானுபவத்தினால் திருப்தியடைந்துகொண்டேயிருப்பதினால் வேறு எவ்வித ஆஹாரமும் தேவையில்லை. அப்படியிருக்க அதற்கு நைவேத்யம் எதற்காகக் கொடுக்க வேண்டும்!]          (5)

विश्वानन्दयितुस्तस्य किं ताम्बूलं प्रकल्पते । 
விஶ்வானந்த³யிதுஸ்தஸ்ய கிம் தாம்பூ³லம் ப்ரகல்பதே ।

विश्वानन्दयितु:   = பிரபஞ்சம் பூராவையும் ஆனந்திக்கும்படி செய்கிற, 
விஶ்வானந்த³யிது:
तस्य    = அவருக்கு, 
தஸ்ய
किं    = எது, 
கிம்
ताम्बूलं   = தாம்பூலமாக, 
தாம்பூ³லம்
प्रकल्पते   = ஆகும்?
ப்ரகல்பதே
    
பிரபஞ்சம் பூராவையும் ஆனந்திக்கும்படிச்செய்கிற அவருக்கு எது தாம்பூல மாக ஆகும்?

[வாயின் நாற்றத்தைப்போக்கி நல்ல வாஸனையைக்கொடுத்து முகத்திற்கே ஒருவிதத் தெளிவையும் ஆனந்தத்தையும் கொடுப்பதற்காகத் தாம்பூலம் ஏற்பட்டிருக் கிறது. தான் ஆனந்த ரூபமாயிருந்துகொண்டு ஸகல பிரபஞ்சத்திற்கும் தன்னுடைய ஸ்வபாவ ஸித்தமான ஆனந்தத்தின் லேசத்தைக்கொடுத்து ஆனந்திக்கும்படி செய்கிற ப்ரஹ்மத்திற்கு எதற்காகத்தாம்பூலம்.] 

स्वयंप्रकाशचिद्रूपो योऽसावर्कादिभासकः  ॥ ६ ॥
गीयते श्रुतिभिस्तस्य नीराजनविधिः कुतः ।

ஸ்வயம்ப்ரகாஶசித்³ரூபோ யோ(அ)ஸாவர்காதி³பா⁴ஸக꞉ ॥ 6 ॥
கீ³யதே ஶ்ருதிபி⁴ஸ்தஸ்ய நீராஜனவிதி⁴꞉ குத꞉ ।

यः    = எவர்,
ய꞉
स्वयंप्रकाशचिद्रूपः  = ஸ்வயம்பிரகாசமான ஞானஸ்வரூபரோ,
ஸ்வயம்ப்ரகாஶசித்³ரூப꞉
असौ    = அவர், 
அஸௌ
अर्कादिभासकः  = ஸூர்யன் முதலானவர்களை பிரகாசிக்கச் 
அர்காதி³பா⁴ஸக꞉   செய்பவராக, 
श्रुतिभिः   = வேத வாக்யங்களினால்,
ஶ்ருதிபி⁴꞉
गीयते    = சொல்லப்படுகிறார்,
கீ³யதே
तस्य    = அவருக்கு, 
தஸ்ய
कुतः    = எதற்காக, 
குத꞉
नीराजनविधिः   = நீராஜனம் என்ற முறை? 
நீராஜனவிதி⁴꞉

ப்ரஹ்மம் ஸ்வயம்ப்ரகாசம், ஸூர்யன் முதலானவர்களைக்கூட அதுதான் ப்ரகாசப்படுத்துகிறது என்று உபநிஷத் கூறுகிறது. அப்பேற்பட்ட ஆத்மாவுக்கு நீராஜனம் எதற்கு?

[தானாக விளங்கக்கூடாத பதார்த்தங்கள் விளங்கவேண்டுமானால் வெளிச்சம் வேண்டும். வெளிச்சத்தைப்பார்க்க இன்னொரு வெளிச்சம் தேவையில்லை. பிரஹ்ம மோ ஸ்வயம் பிரகாசம். மேலும் உலகத்தில் எதையெல்லாம் நாம் வெளிச்சமென்று நினைக்கிறோமோ, அதாவது ஸூர்யன், சந்திரன், அக்னி, முதலானதுகள், இவைகளுக் கெல்லாம் சொந்தமான பிரகாசமில்லாமல் பிரஹ்மத்தினாலேயே இவைகள் பிரகாசிக்கின்றபடியால், இவைகளைக்கொண்டு பிரஹ்மத்தை எப்படிக்காண முடியும்? ஆகையால் கற்பூரம் ஆரத்தி முதலிய நீராஜனம் பிரஹ்ம விஷயத்தில் கொஞ்சமே னும் பிரயோஜனப்படாது].         (6)

प्रदक्षिणमनन्तस्य प्रणामोऽद्वयवस्तुनः ॥ ७ ॥ 
ப்ரத³க்ஷிணமனந்தஸ்ய ப்ரணாமோ(அ)த்³வயவஸ்துன꞉ ॥ 7 ॥


अनन्तस्य   = எல்லையற்றவருக்கு, 
அனந்தஸ்ய
प्रदक्षिणं   = சுற்றிவருவது, 
ப்ரத³க்ஷிணம்
अद्वयवस्तुनः   = இரண்டாவதற்ற வஸ்துவிற்கு, 
அத்³வயவஸ்துன꞉
प्रणामः   = நமஸ்காரம், 
ப்ரணாம꞉
कुतः    = ஏது)? 
குத꞉

எல்லையற்றவரை எப்படிச் சுற்றிவருவது, இரண்டாவதற்ற வஸ்துவை எப்படி நமஸ்காரம் செய்வது?

[ஒருவன் ஒரு வஸ்துவைச் சுற்றிவரவேண்டுமானால் அந்த வஸ்துவிற்கு வெளியில் இடமிருக்கவேண்டும், அதாவது அந்த வஸ்துவிற்கு நான்கு பக்கங்களி லும் எல்லையிருக்கவேண்டும். ஸர்வவியாபகமான பிரஹ்மத்திற்கு அவ்விதம் எல்லையோ, வெளியில் இடமோ. கிடையாதபடியால் பிரதக்ஷிணத்திற்கு வழியில்லை. நமஸ்காரம் செய்வதென்றால் நமஸ்கரிக்கிறவன் நமஸ்கரிக்கப்படுகிறவன் என்ற வேற்றுமை அவசியம். பிரஹ்மத்தினிடத்திலோ அவ்வித வேற்றுமைக்கு வழியேயில்லை. ஆகையால் நமஸ்காரமும் ஸாத்தியமில்லை].    (7)

वेदवाचामवेद्यस्य किं वा स्तोत्रं विधीयते । 
வேத³வாசாமவேத்³யஸ்ய கிம் வா ஸ்தோத்ரம் விதீ⁴யதே ।

वेदवाचां   = வேத வாக்யங்களினாலேயே, 
வேத³வாசாம்
अवेद्यस्य   = அறிய முடியாமலிருப்பவருக்கு, 
அவேத்³யஸ்ய
स्तोत्रं    = ஸ்தோத்திரமாக, 
ஸ்தோத்ரம்
किं वा    = எது தான்,? 
கிம் வா
विधीयते   = விதிக்கமுடியும்? 
விதீ⁴யதே

வேத வாக்கியங்களினாலேயே அறிய முடியாமலிருப்பவருக்கு ஸ்தோத்திர மாக எதுதான் விதிக்கமுடியும்? 

[ஸ்தோத்திரம் என்றால் ஒருவருடைய குணங்களைப்பற்றியோ செய்கைகளைப் பற்றியோ ஸ்வரூபத்தைப்பற்றியோ விசேஷமாக எடுத்துச்சொல்வது என்று தாத்பர்யம். பிரஹ்மம் நிர்நிர்குணமாயும் நிஷ்கிரியமாயும் இருப்பதுடன் அதன் ஸ்வரூபம் வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாததாக இருப்பதால் அதை எப்படி ஸ்தோத்திரம் செய்யமுடியும்? பிரஹ்மத்தை பிரதி பாதனம் பண்ணுவதற்காகவே பிரவிருத்திக்கும் அபௌருஷேயமான வேத வாக்குக்கே அதை இவ்விதமென்று தெரியப்படுத்த முடியாமலிருக்கும்போது, வேறு வாக்கியங்களுக்கு ஸ்தோத்திரம் செய்ய சக்தி ஏது?]

अन्तर्बहिः संस्थितस्य उद्वासनविधिः कुतः ॥ ८ ॥ 
அந்தர்ப³ஹி꞉ ஸம்ஸ்தி²தஸ்ய உத்³வாஸனவிதி⁴꞉ குத꞉ ॥ 8 ॥

अन्तर्बहिः संस्थितस्य  = உள்ளும் வெளியும் நன்கு நிலைத்திருப்பவருக்கு,
அந்தர்ப³ஹி꞉ ஸம்ஸ்தி²தஸ்ய
उद्वासनविधिः   = வெளிக் கிளம்பும் முறை, 
உத்³வாஸனவிதி⁴꞉
कुतः    = எப்படி? 
குத꞉
[ஒரு குறுகிய இடத்தில் இருக்கச்செய்து பூஜை செய்தான பிறகு அவரை அந்த இடத்திலிருந்து உத்வாஸனம் செய்வது, அதாவது கிளம்பிப்போக வழியனுப்புவது நியாயமாகும். எங்கேயும் வியாபித்திருக்கும் பிரஹ்மத்தை வழியனுப்புவது எப்படி?]

(அவதாரிகை) இவ்விதமாகப் பூஜையின் அம்சங்களான ஆவாஹனம் முதல் உத்வாஸனம் வரையுள்ள எதுவும் நிர்குண பிரஹ்மத்தினிடத்தில் ஸம்பவிக்காது என்று விஸ்தாரமாக சிஷ்யன் எடுத்துச் சொல்லியதின் பேரில் குருவானவர், ஆத்ம ஞானி பூஜை செய்யும் முறை உலகத்திலுள்ளதுபோலல்ல, வேறுபட்டது, என்பதை 
மேல் சுலோகங்களில் எடுத்துச்சொல்கிறார்: - 

श्रीगुरुरुवाच -
आराधयामि मणिसंनिभमात्मलिङ्ग 
मायापुरीहृदयपङ्कजसंनिविष्टम् । 
श्रद्धानदीविमलचित्तजलाभिषेकैः 
नित्यं समाधि कुसुमैर पुनर्भवाय ॥ ९ ॥ 
ஶ்ரீகு³ருருவாச -
ஆராத⁴யாமி மணிஸம்நிப⁴மாத்மலிங்க³
மாயாபுரீ ஹ்ருத³யபங்கஜஸம்நிவிஷ்டம் ।
ஶ்ரத்³தா⁴ நதீ³விமல சித்த ஜலாபி⁴ஷேகை꞉
நித்யம் ஸமாதி⁴ குஸுமைர புனர்ப⁴வாய ॥ 9 ॥
मायापुरीहृदयपङ्कजसंनिविष्टम् = மாயாபுரியின் ஹ்ருதய பத்மத்தில்
மாயாபுரீ ஹ்ருத³யபங்கஜஸம்நிவிஷ்டம் நன்குவீற்றிருக்கும், 
मणिसंनिभं    = ஸ்படிகம்போல் நன்கு விளங்குகிற, 
மணிஸம்நிப⁴ம்
आत्मलिङ्गं    = ஆத்மாவாகிற லிங்கத்தை, 
ஆத்மலிங்க³ம்
श्रद्धानदीविमलचित्तजलाभिषेकैः  = சிரத்தையாகிற நதியிலுள்ள நிர்மலமான
ஶ்ரத்³தா⁴ நதீ³விமல சித்த ஜலாபி⁴ஷேகை꞉ மனஸாகிற ஜலத்தினால் 
     அபிஷேகங்கள் செய்து வைத்து, 
समाधि कुसुमैः   = ஸமாதியாகிற புஷ்பங்களினால், 
ஸமாதி⁴ குஸுமை꞉
नित्यं     =  எப்பொழுதும், 
நித்யம்
अपुनर्भवाय    = மறுபடியும் ஸம்ஸாரபந்தத்தில் அகப்படாம 
அபுனர்ப⁴வாய    லிருக்க வேண்டியதற்காக,
आराधयामि    = ஆராதிக்கிறேன். 
ஆராத⁴யாமி

மாயாபுரியின் ஹ்ருதயபத்மத்தில் நன்கு வீற்றிருக்கும், ஸ்படிகம்போல் நன்கு விளங்குகிற ஆத்மாவாகிற லிங்கத்தை சிரத்தையாகிற நதியிலுள்ள நிர்மலமான மனஸாகிற ஜலத்தினால் அபிஷேகங்கள் செய்துவைத்து ஸமாதியாகிற புஷ்பங்களி னால் எப்பொழுதும் மறுபடியும் ஸம்ஸாரபந்தத்தில் அகப்படாமலிருக்க வேண்டியத ற்காக ஆராதிக்கிறேன்.

[ஆத்ம ஞானியின் ஆராதனைக்குத் தனக்கு வெளியில் லிங்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மாயாபுரீ என்ற இந்த சரீரத்திலுள்ள ஹ்ருதய புண்டரீ கத்தில் எப்பொழுதும் ஸ்வயம்பிரகாசித்துக்கொண்டிருக்கும் ஆத்மாதான் லிங்கம். அதற்கு அபிஷேகம் செய்துவைக்க கங்கை முதலான நதிகளிலிருந்து தீர்த்தமோ, தாமரை முதலான புஷ்பமோ, தேவையில்லை. பகவானிடத்திலும் வேதத்திலும் குருவினிடத்திலும் சிரத்தை அதிகப்பட அதிகப்பட மனஸ் பரிசுத்தமாகும். அவ்விதம் பரிசுத்தமான மனஸையே ஜலமாகக்கொண்டு ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம். அப்படியே நிர்மலமான அந்த மனஸை ஏகாக்ரமாகச் செய்து தியானம் செய்து ஸமாதி நிலையை ஸாதிப்பதே தான் புஷ்பார்ச்சனை].      (9)

(அவதாரிகை) இவ்வாறு குருநாதர் பொதுவாகச் சொல்லிவிட்டு ஆத்மஞானி க்கும் ஆவாஹனாதி கிரமங்கள் உண்டு என்பதை விஸ்தாரமாக வர்ணிக்கிறார்: -

अयमेकोऽवशिष्टोऽस्मीत्येवमावाहये त्छिवम्   । 
आसनं कल्पयेत् पश्चात् स्वप्रतिष्ठात्म चिन्तनम् ॥ १० ॥ 
அயமேகோ(அ)வஶிஷ்டோ(அ)ஸ்மீத்யேவமாவாஹயேத் சி²வம் ।
ஆஸனம் கல்பயேத் பஶ்சாத் ஸ்வப்ரதிஷ்டா²த்ம சிந்தனம் ॥ 10 ॥

अयं    = இந்த,
அயம்
एकः    = தனித்து, 
ஏக꞉
अवशिष्टः   = மிஞ்சினவனாக, 
அவஶிஷ்ட꞉
अस्मि    = (நான் தான்) இருக்கிறேன், 
அஸ்மி
इति    = என்று, 
இதி
एवं    = இவ்விதமாக, 
ஏவம்
शिवं    = மங்களஸ்வரூபியான பரமாத்மாவை, 
ஶிவம்
आवाहयेत्   = ஆவாஹனம் செய்யவேண்டும்,
ஆவாஹயேத்
पश्चात्    = பிறகு, 
பஶ்சாத் 
स्वप्रतिष्ठात्म चिन्तनम्  = தன்னிடத்தில் நிலைத்திருக்கும் ஆத்மாவை
ஸ்வப்ரதிஷ்டா²த்ம சிந்தனம் சிந்தனை செய்வதையே, 
आसनं    = ஆஸனம் (இருக்கச் செய்வது) என்று, 
ஆஸனம்
कल्पयेत्   = பாவிக்கவேண்டும். 
கல்பயேத்

தனித்து மிஞ்சினவனாக நான் ஒருவன்தான் இருக்கிறேன் என்று மங்கள ஸ்வரூபியான பரமாத்மாவை ஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு தன்னிடத்தில் நிலைத்திருக்கும் ஆத்மாவைச் சிந்தனை செய்வதையே ஆஸனம் (இருக்கச்செய்வது) என்று பாவிக்கவேண்டும்.          (10)

पुण्यपापरजःसङ्गो मम नास्तीति वेदनम् । 
पाद्यं समर्पयेद्विद्वान् सर्वकल्मषनाशनम् ॥ ११ ॥
புண்யபாபரஜ꞉ஸங்கோ³ மம நாஸ்தீதி வேத³னம் ।
பாத்³யம் ஸமர்பயேத்³வித்³வான் ஸர்வகல்மஷநாஶனம் ॥ 11 ॥

पुण्यपापरजःसङ्गः  = புண்ணியம், பாபம் என்கிற அழுக்கின் சேர்க்கை, 
புண்யபாபரஜ꞉ஸங்க³꞉
मम    = எனக்கு, 
மம
न अस्ति   = கிடையாது, 
ந அஸ்தி
इति    = என்று, 
இதி
वेदनम्    = அறிவதையே, 
வேத³னம்
सर्वकल्मषनाशनम्  = எல்லா தோஷங்களையும் போக்கடிக்கக்கூடிய, 
ஸர்வகல்மஷநாஶனம்
पाद्यं    = பாத்யமாக, 
பாத்³யம்
विद्वान्    = அறிவாளி, 
வித்³வான்
समर्पयेत्   = கொடுக்க வேண்டும். 
ஸமர்பயேத்

புண்ணியம் பாபம் என்கிற அழுக்கின் சேர்க்கை எனக்குக்  கிடையாது என்று அறிவதையே எல்லா தோஷங்களையும் போக்கடிக்கக்கூடிய பாத்யமாகக் கொடுக்க வேண்டும்.            (11)

अनादिकल्पविधृतमूलाज्ञानजलाञ्जलिम् । 
विसृजेदात्मलिङ्गस्य तदेवार्ध्यसमर्पणम् ॥ १२ ॥ 
அநாதி³கல்பவித்⁴ருதமூலாஜ்ஞானஜலாஞ்ஜலிம் ।
விஸ்ருஜேதா³த்மலிங்க³ஸ்ய ததே³வார்த்⁴யஸமர்பணம் ॥ 12 ॥

अनादिकल्पविधृत  = அநாதி கல்ப காலமாய் சுமந்து வந்த,
அநாதி³கல்பவித்⁴ருத
मूलाज्ञान   = மூல அவித்யையான, 
மூலாஜ்ஞான
जलाञ्जलिम्   = ஜலம் கொண்ட அஞ்ஜலியை, 
ஜலாஞ்ஜலிம்
विसृजेत्   = நழுவ விடவேண்டும்,
விஸ்ருஜேத்

तत् एव    = அதுவே தான்,
தத் ஏவ
आत्मलिङ्गस्य  = ஆத்மாவாகிற லிங்கத்திற்கு, 
ஆத்மலிங்க³ஸ்ய
अर्ध्यसमर्पणम्   = அர்க்யத்தைக் கொடுத்தல் ஆகும். 
அர்த்⁴யஸமர்பணம்

அநாதி கல்ப காலமாய் சுமந்து வந்த மூல அவித்யையான ஜலம் கொண்ட அஞ்ஜலியை விடவேண்டும். அதுவேதான் ஆத்மாவாகிற லிங்கத்திற்கு அர்க்யத் தைக்கொடுத்தல் ஆகும்.          (12)

ब्रह्मानन्दाब्धिकल्लोलकणकोट्यंशलेशकम् । 
पिबन्तीन्द्रादय इति ध्यानमाचमनं मतम् ॥ १३ ॥ 
ப்³ரஹ்மானந்தா³ப்³தி⁴கல்லோலகணகோட்யம்ஶலேஶகம் ।
பிப³ந்தீந்த்³ராத³ய இதி த்⁴யானமாசமனம் மதம் ॥ 13 ॥

ब्रह्मानन्दाब्धि   = பிரஹ்மாநந்தமாகிற ஸமுத்திரத்தில், 
ப்³ரஹ்மானந்தா³
कल्लोलकण   = அலையிலிருந்து கிளம்பிய திவிலையில், 
கல்லோலகண
कोट्यंश   = கோடியில் ஒரு அம்சத்தின், 
கோட்யம்ஶ
लेशकम्   = சிறு துளியைத்தான், 
லேஶகம்
इन्द्रादयः   = இந்திரன் முதலான தேவர்கள், 
இந்த்³ராத³ய꞉
पिबन्ति   = பானம் செய்கிறார்கள்,
பிப³ந்தி
इति    = என்று,
இதி
ध्यानं    = தியானம் செய்வது, 
த்⁴யானம்
आचमनं   = ஆசனமென்று,
ஆசமனம்
मतम्    = எண்ணப்படுகிறது.
மதம்

பிரஹ்மானந்தமாகிற ஸமுத்திரத்தில் அலையின் திவிலையில் கோடியில் ஒரு அம்சத்தின் சிறுதுளியைத் தான் இந்திரன் முதலான தேவர்கள் பானம் செய்கிறார்கள் என்று தியானம் செய்வது ஆசமனமென்று எண்ணப்படுகிறது.    (13)

ब्रह्मानन्दजलेनैव लोकाः सर्वे परिप्लुताः । 
अक्लेध्योऽयमिति ध्यानमभिषेचनमात्मनः  ॥ १४ ॥
ப்³ரஹ்மானந்த³ஜலேனைவ லோகா꞉ ஸர்வே பரிப்லுதா꞉ ।
அக்லேத்⁴யோ(அ)யமிதி த்⁴யானமபி⁴ஷேசனமாத்மன꞉ ॥ 14 ॥

ब्रह्मानन्दजलेनैव  = பிரஹ்மாநந்தமாகிற ஜலத்தினாலேயே, 
ப்³ரஹ்மானந்த³ஜலேனைவ
सर्वे    = எல்லா, 
ஸர்வே
लोकाः    = உலகங்களும், 
லோகா꞉
परिप्लुताः   = நாலாபக்கங்களிலும் மூழ்கப்பட்டிருக்கின்றன. 
பரிப்லுதா꞉    (ஆனால்),
अयं    = இந்த ஆத்மா (எந்த ஜலத்தினாலும்), 
அயம்
अक्लेधः   = நனைக்கக்கூடிய வரல்ல,
அக்லேத⁴꞉
इति    = என்று, 
இதி
ध्यानं    = எண்ணுவதே, 
த்⁴யானம்
आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
अभिषेचनं   = அபிஷேகமாகும். 
அபி⁴ஷேசனம்

பிரஹ்மாநந்தமாகிற ஜலத்தினாலேயே எல்லா உலகங்களும் நாலாபக்கங்களி லும் மூழ்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ஆத்மா எந்த ஜலத்தினாலும் நனைக்கக் கூடியவரல்ல என்று எண்ணுவதே ஆத்மாவிற்கு அபிஷேகமாகும்.   (14)

निरावरणचैतन्यं प्रकाशोऽस्मीति चिन्तनम् । 
आत्मलिङ्गस्य सद्वस्त्रमित्येवं चिन्तयेन्मुनिः ॥ १५ ॥

நிராவரணசைதன்யம் ப்ரகாஶோ(அ)ஸ்மீதி சிந்தனம் ।
ஆத்மலிங்க³ஸ்ய ஸத்³வஸ்த்ரமித்யேவம் சிந்தயேன்முனி꞉ ॥ 15 ॥

निरावरणचैतन्यं  = மறைவில்லாத சைதன்யமாகவும், 
நிராவரணசைதன்யம்
प्रकाशः   = பிரகாச ஸ்வரூபமாகவும், 
ப்ரகாஶ꞉
अस्मि    = நான் இருக்கிறேன்,
அஸ்மி
इति    = என்று, 
இதி
चिन्तनं    = நினைப்பதே, 
சிந்தனம்
आत्मलिङ्गस्य  = ஆத்மாவாகிற லிங்கத்திற்கு,
ஆத்மலிங்க³ஸ்ய
सद्वस्त्रं    = நல்ல வஸ்திரம்,
ஸத்³வஸ்த்ரம்
इति    = என்று, 
இதி
एवं    = இவ்விதமாய், 
ஏவம்
मुनिः    = முனியானவர், 
முனி꞉
चिन्तयेत्   = எண்ண வேண்டும். 
சிந்தயேத்

மறைவில்லாத சைதன்யமாகவும் பிரகாச ஸ்வரூபமாகவும் நான் இருக்கி றேன் என்று நினைப்பதே ஆத்ம லிங்கத்திற்கு நல்ல வஸ்திரம் என்று எண்ண வேண்டும்.            (15)

त्रिगुणात्माशेषलोकमालिका सूत्रमस्म्यहम् । 
इति निश्चय एवात्र ह्युपवीतं परं मतम् ॥ १६ ॥ 
த்ரிகு³ணாத்மாஶேஷலோக மாலிகா ஸூத்ரமஸ்ம்யஹம் ।
இதி நிஶ்சய ஏவாத்ர ஹ்யுபவீதம் பரம் மதம் ॥ 16 ॥

त्रिगुणात्म   = ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிய 
த்ரிகு³ணாத்ம    முக்குணங்களை ஸ்வபாவமாகவுடைய,

अशेषलोक   = எல்லா உலகங்களும் சேர்ந்த, 
அஶேஷலோக
मालिका   = மாலைக்கு, 
மாலிகா
सूत्रं    = நாராக, 
ஸூத்ரம்
अहं    = நான், 
அஹம்
अस्मि    = இருக்கிறேன்,
அஸ்மி
इति    = என்ற,
இதி
निश्चय: एव   = தீர்மானமே,
நிஶ்சய: ஏவ
अत्र    = இங்கு, 
அத்ர
परं    = உத்தமமான, 
பரம்
उपवीतं   = யக்ஞோபவீதமாக, 
உபவீதம்
मतं हि    = கருதப்படுகிறது. 
மதம் ஹி

ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிய முக்குணங்களை ஸ்வபாவமாகவுடைய எல்லா உலகங்களும் சேர்ந்த மாலைக்கு நாராக நான் இருக்கிறேன் என்ற தீர்மானமே இங்கு உத்தமமான யக்ஞோபவீதமாகக் கருதப்படுகிறது.     (16)

अनेकवासनामिश्रप्रपञ्चोऽयं धृतो मया । 
नान्येनेत्यनुसंधानमात्मनश्चन्दनं भवेत् ॥ १७ ॥ 
அனேக வாஸநா மிஶ்ர ப்ரபஞ்சோ(அ)யம் த்⁴ருதோ மயா ।
நான்யேனேத்யனுஸந்தா⁴னமாத்மனஶ்சந்த³னம் ப⁴வேத் ॥ 17 ॥

अनेक    = பலவிதமான, 
அனேக
वासना    = வாஸனைகள், 
வாஸநா


मिश्र    = கலந்த,
மிஶ்ர
प्रपञ्चः   = பிரபஞ்சமாகிற, 
ப்ரபஞ்ச꞉ 
अयं    = இது, 
அயம்
मया    = என்னால், 
மயா
धृतः    = தாங்கப்பட்டிருக்கிறது,
த்⁴ருத꞉
अन्येन    = வேறு எதனாலும், 
அன்யேன
न    = இல்லை, 

इति    = என்று,
இதி 
अनुसंधानं   = அனுஸந்தானம் செய்வதுதான், 
அனுஸந்தா⁴னம்
आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
चन्दनं    = சந்தனம் கொடுப்பதாக, 
சந்த³னம்
भवेत्    = ஆகும். 
ப⁴வேத்

பலவிதமான வாஸனைகள் கலந்த இந்த பிரபஞ்சம் என்னால் தாங்கப்பட்டிருக் கிறது, வேறு எதனாலும் இல்லை, என்று அனுஸந்தானம் செய்வதுதான் ஆத்மாவிற் குச்சந்தனம் கொடுப்பதாக ஆகும்.        (17)

रजःसत्त्व तमोवृत्तित्यागरूपैस्तिलाक्षतैः । 
आत्मलिङ्गं यजेत्नित्यं जीवन्मुक्तिप्रसिद्धये ॥ १८ ॥ 
ரஜ꞉ஸத்த்வ தமோவ்ருத்தி த்யாக³ரூபைஸ் திலாக்ஷதை꞉ ।
ஆத்மலிங்க³ம் யஜேத் நித்யம் ஜீவன்முக்தி ப்ரஸித்³த⁴யே ॥ 18 ॥

जीवन्मुक्तिप्रसिद्धये  = ஜீவன்முக்தி நிலை நன்கு ஸித்திக்க வேண்டிய 
ஜீவன்முக்தி ப்ரஸித்³த⁴யே தற்காக,

रजःसत्त्व तमोवृत्तित्यागरूपै: = ரஜஸ், ஸத்வம், தமஸ் இவைகளால்
ரஜ꞉ஸத்த்வ தமோவ்ருத்தி த்யாக³ரூபை: ஏற்படும் மனோவிருத்திகளை விட்டு
       விடுவது என்பதாகிய, 
तिलाक्षतैः   = எள்ளு கலந்த அக்ஷதைகளால், 
திலாக்ஷதை꞉
आत्मलिङ्गं   = ஆத்மாவாகிற லிங்கத்தை, 
ஆத்மலிங்க³ம்
नित्यं    = எப்பொழுதும்,
நித்யம்
यजेत्    = பூஜிக்கவேண்டும். 
யஜேத்

ஜீவன் முக்தி நிலை நன்கு ஸித்திக்கவேண்டியதற்காக ரஜஸ், ஸத்வம், தமஸ் இவைகளால் ஏற்படும் மனோவிருத்திகளை விட்டு விடுவது என்பதாகிய எள்ளு கலந்த அக்ஷதைகளால் ஆத்மாவாகிற லிங்கத்தை எப்பொழுதும் பூஜிக்கவேண்டும். 
(18)
ईश्वरो गुरुरात्मेति भेदत्रयविवर्जितैः । 
बिल्वपत्रैरद्वितीयैरात्मलिङ्गं यजेत्छिवम् ॥ १९ ॥ 
ஈஶ்வரோ கு³ருராத்மேதி பே⁴த³த்ரய விவர்ஜிதை꞉ ।
பி³ல்வ பத்ரை ரத்³விதீயைராத்மலிங்க³ம் யஜேத்சி²வம் ॥ 19 ॥

ईश्वरः    = ஈசுவரன், 
ஈஶ்வர꞉
गुरु:    = குரு, 
கு³ரு:
आत्मा    = ஆத்மா, 
ஆத்மா
इति    = என்கிற, 
இதி 
भेदत्रयविवर्जितैः  = மூன்றுவித வேற்றுமையும் அற்று,
பே⁴த³த்ரய விவர்ஜிதை꞉
अद्वितीयैः   = இரண்டற்றதாயிருக்கும் தன்மையாகிற, 
அத்³விதீயை꞉
बिल्वपत्रै:   = பில்வபத்திரங்களினால், 
பி³ல்வ பத்ரை:
शिवं    = மங்களஸ்வரூபமான, 
ஶிவம்
आत्मलिङ्गं   = ஆத்மாவாகிற லிங்கத்தை, 
ஆத்மலிங்க³ம்
यजेत्    = பூஜிக்கவேண்டும்.
யஜேத்

ஈசுவரன், குரு, ஆத்மா என்கிற மூன்றுவித வேற்றுமையுமற்று இரண்டற்ற தாயிருக்கும் தன்மையாகிற பில்வபத்திரங்களினால் மங்களஸ்வரூபமான ஆத்மலிங் கத்தைப் பூஜிக்கவேண்டும்.         (19) 

समस्तवासनात्यागं धूपं तस्य विचिन्तयेत् । 
ज्योतिर्मयात्मविज्ञानं दीपं सन्दर्शयेद्बुधः ॥ २० ॥ 
ஸமஸ்த வாஸனா த்யாக³ம் தூ⁴பம் தஸ்ய விசிந்தயேத் ।
ஜ்யோதிர்மயாத்ம விஜ்ஞானம் தீ³பம் ஸந்த³ர்ஶயேத்³பு³த⁴꞉ ॥ 20 ॥

समस्तवासनात्यागं  = எல்லா வாஸனைகளையும் விட்டு விடுவதையே, 
ஸமஸ்த வாஸனா த்யாக³ம்
तस्य    = அவருக்கு, 
தஸ்ய
धूपं    = தூபம் என்று, 
தூ⁴பம்
विचिन्तयेत्   = எண்ண வேண்டும், 
விசிந்தயேத்
ज्योतिर्मयात्मविज्ञानं  = ஜ்யோதி ஸ்வரூபமாயிருக்கும் ஆத்மாவை
ஜ்யோதிர்மயாத்ம விஜ்ஞானம் நன்கு அறிவது என்பதையே, 
दीपं    = தீபமாக, 
தீ³பம்
बुधः    = ஞானி, 
பு³த⁴꞉
सन्दर्शयेत्   = காட்ட வேண்டும். 
ஸந்த³ர்ஶயேத்

எல்லா வாஸனைகளையும் விட்டுவிடுவதையே அவருக்கு தூபம் என்று எண்ணவேண்டும். ஜ்யோதிஸ்வரூபமாயிருக்கும் ஆத்மாவை நன்கு அறிவது என்பதையே தீபமாக ஞானி காட்ட வேண்டும்.      (20)

नैवेद्यमात्मलिङ्गस्य ब्रह्माण्डाख्यं महोदनम् ।
पिबा (चिदा) नन्दरसं स्वादु मृत्युरस्योपसेचनम् ॥ २१ ॥
நைவேத்³யமாத்மலிங்க³ஸ்ய ப்³ரஹ்மாண்டா³க்²யம் மஹோத³னம் ।
பிபா³ (சிதா³) நந்த³ரஸம் ஸ்வாது³ ம்ருத்யுரஸ்யோபஸேசனம் ॥ 21 ॥

पिबा (चिदा) नन्दरसं  = சிதாநந்தத்தை ரஸமாகக்கொண்ட,
பிபா³ (சிதா³) நந்த³ரஸம்
ब्रह्माण्डाख्यं   = பிரஹ்மாண்டம் என்கிற, 
ப்³ரஹ்மாண்டா³க்²யம்
महोदनम्   = பெரிய அன்னம்தான்,
மஹோத³னம்  
आत्मलिङ्गस्य  = ஆத்மாவாகிற லிங்கத்திற்கு, 
ஆத்மலிங்க³ஸ்ய
स्वादु    = வெகு ருசியாயுள்ள, 
ஸ்வாது³
नैवेद्यं    = நைவேத்தியம், 
நைவேத்³யம்
अस्य    = அதற்கு, 
அஸ்ய
मृत्यु:    = மிருத்யுவேதான், 
ம்ருத்யு:
उपसेचनं   = தயிர் முதலிய வியஞ்ஜனம்.
உபஸேசனம்

சிதாநந்தத்தை ரஸமாகக்கொண்ட பிரஹ்மாண்டம் என்கிற பெரிய அன்னம் தான் ஆத்மாவாகிற லிங்கத்திற்கு ருசியுள்ள நைவேத்தியம். அதற்கு மிருத்யுவே தான் தயிற் முதலிய வியஞ்ஜனம்.        (21)

अज्ञानोच्छिष्टकरस्य क्षालनं ज्ञानवारिणा । 
विशुद्धस्यात्मलिङ्गस्य हस्तप्रक्षालनं स्मरेत् ॥ २२ ॥  
அஜ்ஞானோச்சி²ஷ்டகரஸ்ய க்ஷாலனம் ஜ்ஞானவாரிணா ।
விஶுத்³த⁴ஸ்யாத்மலிங்க³ஸ்ய ஹஸ்தப்ரக்ஷாலனம் ஸ்மரேத் ॥ 22 ॥

अज्ञानोच्छिष्टकरस्य  = அக்ஞானமாகிற எச்சில்பட்ட கைக்கு, 
அஜ்ஞானோச்சி²ஷ்டகரஸ்ய
ज्ञानवारिणा   = ஞானமாகிற ஜலத்தினால், 
ஜ்ஞானவாரிணா
क्षालनं    = அலம்புதலையே, 
க்ஷாலனம்

विशुद्धस्य   = மிகவும் பரிசுத்தமான, 
விஶுத்³த⁴ஸ்ய
आत्मलिङ्गस्य  = ஆத்மாவாகிற லிங்கத்திற்கு, 
ஆத்மலிங்க³ஸ்ய
हस्तप्रक्षालनं   = கையலம்புதல் என்று, 
ஹஸ்தப்ரக்ஷாலனம்
स्मरेत्    = நினைக்கவேண்டும். 
ஸ்மரேத்

அக்ஞானமாகிற எச்சில் பட்ட கையை ஞானமாகிற ஜலத்தினால் அலம்புவ தையே அதிபரிசுத்தமான ஆத்மாவாகிற லிங்கத்திற்கு கையலம்புதல் என்று நினைக்க வேண்டும்.            (22)

रागादिगुणशून्यस्य शिवस्य परमात्मनः । 
सरागविषयाभ्यासत्यागस्ताम्बूलचर्वणम् ॥ २३ ॥ 
ராகா³தி³கு³ணஶூன்யஸ்ய ஶிவஸ்ய பரமாத்மன꞉ ।
ஸராக³ விஷயாப்⁴யாஸ த்யாக³ஸ் தாம்பூ³லசர்வணம் ॥ 23 ॥

रागादिगुणशून्यस्य  = ராகம் முதலான முதலான குணங்களற்ற, 
ராகா³தி³கு³ணஶூன்யஸ்ய
शिवस्य   = மங்களமான, 
ஶிவஸ்ய
परमात्मनः   = பரமாத்மாவிற்கு, 
பரமாத்மன꞉
सरागविषयाभ्यासत्याग: = ஆசையுடன் விஷயங்களில் ஈடுபடுவது 
ஸராக³ விஷயாப்⁴யாஸ த்யாக³ என்பதை விடுவதே, 
ताम्बूलचर्वणम्  = தாம்பூலம் போட்டுக் கொள்ளுதலாகும். 
தாம்பூ³லசர்வணம்

ராகம் முதலான குணங்களற்ற மங்களமான பரமாத்மாவிற்கு, ஆசையுடன் விஷயங்களில் ஈடுபடுவதென்பதை விடுவதே தாம்பூலம் போட்டுக்கொள்ளுதலா கும்.             (23)

अज्ञानध्वान्तविध्वंसप्रचण्डमतिभास्करम् । 
आत्मनो ब्रह्मताज्ञानं नीराजनमिहात्मनः ॥ २४ ॥ 
அஜ்ஞான த்⁴வாந்த வித்⁴வம்ஸ ப்ரசண்ட³ மதிபா⁴ஸ்கரம் ।
ஆத்மனோ ப்³ரஹ்மதா ஜ்ஞானம் நீராஜனமிஹாத்மன꞉ ॥ 24 ॥

अज्ञानध्वान्त   = அக்ஞானமாகிற இருட்டை, 
அஜ்ஞான த்⁴வாந்த
विध्वंस   = போக்கடிப்பதில், 
வித்⁴வம்ஸ
प्रचण्डं    = மிகவும் ஸாமர்த்தியமுள்ளதாயும், 
ப்ரசண்ட³ம்
अतिभास्करं   =  ஸூர்யனை மீறியதாயும் (வெகு பிரகாசத்தைக்
அதிபா⁴ஸ்கரம்   கொடுக்கக்கூடியதாயும்) உள்ள, 
आत्मनो ब्रह्मताज्ञानं  = ஆத்மா பிரஹ்மம்தான் என்ற ஞானமே, 
ஆத்மனோ ப்³ரஹ்மதா ஜ்ஞானம்
इह    = இங்கு,
இஹ
आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
नीराजनं   = நீராஜனம் (கர்பூர ஆரத்தி) ஆகும். 
நீராஜனம்

அக்ஞானமாகிற இருட்டைப் போக்கடிப்பதில் மிகவும் ஸாமர்த்தியமுள்ளதா யும் ஸூர்யனை மீறினதாயும் (வெகு பிரகாசத்தைக் கொடுக்கக்கூடியதாயும்) உள்ள ஆத்மா பிரஹ்மம் தான் என்கிற ஞானமே இங்கு ஆத்மாவிற்கு நீராஜனம் (கர்பூர ஆரத்தி) ஆகும்.           (24)

विविधब्रह्मसंदृष्टि मालिकाभिरलंकृतम् 
पूर्णानन्दात्मतादृष्टिं पुष्पाञ्जलिमनुस्मरेत् ॥ २५ ॥ 
விவித⁴ ப்³ரஹ்ம ஸந்த்³ருஷ்டி மாலிகாபி⁴ ரலங்க்ருதம்
பூர்ணானந்தா³த்மதா த்³ருஷ்டிம் புஷ்பாஞ்ஜலிமனுஸ்மரேத் ॥ 25 ॥

विविध    = நாநாவிதமான பிரபஞ்சம், 
விவித⁴
ब्रह्म    = ப்ரஹ்மம் என்ற,
ப்³ரஹ்ம  
संदृष्टि    = ஸம்யக்ஞானமாகிற, 
ஸந்த்³ருஷ்டி
मालिकाभि:   = மாலைகளினால், 
மாலிகாபி⁴:
अलंकृतम्   = அலங்கரிக்கப்பட்டதாயுள்ள,
அலங்க்ருதம்

पुष्पाञ्जलिं   = பூர்ணமான ஆனந்தமே தன்னுடைய
புஷ்பாஞ்ஜலிம்   ஸ்வரூபமென்று உணர்வதை, 
अनुस्मरेत्   = புஷ்பாஞ்ஜலியாக, 
அனுஸ்மரேத்
अनुस्मरेत्   = நினைக்கவேண்டும். 
அனுஸ்மரேத்

பலவிதமான பிரபஞ்சமும் ப்ரஹ்மம்தான் என்ற நல்லறிவு பூமாலை. இத்துடன் கூட நிறைந்த ஆனந்த ஸ்வரூபமான ப்ரஹ்மமே நான் என்று அறிவதையே புஷ்பாஞ்ஜலியாக நினைக்க வேண்டும்.        (25)

परिभ्रमन्ति ब्रह्माण्डसहस्राणि मयीश्वरे । 
कूटस्थाचलरूपोऽहमिति ध्यानं प्रदक्षिणम् ॥ २६ ॥
பரிப்⁴ரமந்தி ப்³ரஹ்மாண்ட³ஸஹஸ்ராணி மயீஶ்வரே ।
கூடஸ்தா²சலரூபோ(அ)ஹமிதி த்⁴யானம் ப்ரத³க்ஷிணம் ॥ 26 ॥

ईश्वरे    = ஈசுவரனாயிருக்கிற,
ஈஶ்வரே
मयि    = என்னிடத்தில், 
மயி
ब्रह्माण्डसहस्राणि  = ஆயிரக்கணக்கான பிரஹ்மாண்டங்கள், 
ப்³ரஹ்மாண்ட³ஸஹஸ்ராணி
परिभ्रमन्ति   = சுழலுகின்றன,
பரிப்⁴ரமந்தி
अहं    = நான், 
அஹம்
कूटस्थाचलरूपः  = கூடம் (பட்டரையில் அடிஇரும்பு) போல் இருந்து
கூடஸ்தா²சலரூப꞉   கொண்டு அசையாமலிருக்கும் ஸ்வரூபத்தை
உடையவன்,
इति    = என்று, 
இதி
ध्यानं    = தியானம் செய்வதுதான்,
த்⁴யானம்
प्रदक्षिणम्   = பிரதக்ஷிணம் செய்வதாகும். 
ப்ரத³க்ஷிணம்

ஈசுவரனாயிருக்கிற என்னிடத்தில் ஆயிரக்கணக்கான பிரஹ்மாண்டங்கள் சுழலுகின்றன. நான் கூடம் (பட்டரையில் அடி இரும்பு) போல் இருந்துகொண்டு அசையாமலிருக்கும் ஸ்வரூபத்தையுடையவன் என்று தியானம் செய்வதுதான் பிரதக்ஷிணம் செய்வதாகும்.         (26)

विश्ववन्द्योऽहमेवास्मि नास्ति वन्द्यो मदन्यकः । 
इत्यालोचनमेवात्र स्वात्मलिङ्गस्य वन्दनम् ॥ २७ ॥ 
விஶ்வவந்த்³யோ(அ)ஹமேவாஸ்மி நாஸ்தி வந்த்³யோ மத³ன்யக꞉ ।
இத்யாலோசனமேவாத்ர ஸ்வாத்மலிங்க³ஸ்ய வந்த³னம் ॥ 27 ॥

अहं एव   = நான் தான், 
அஹம் ஏவ
विश्ववन्द्यः   = ஜகத்பூராவினாலும் நமஸ்காரம் செய்யப்பட
விஶ்வவந்த்³ய꞉   வேண்டியவனாக,
अस्मि    = இருக்கிறேன்,
அஸ்மி
मदन्यकः   = என்னைத்தவிர வேறு யாரும், 
மத³ன்யக꞉
वन्द्यः    = வந்தனம் செய்யப்படவேண்டியவனாக, 
வந்த்³ய꞉
न अस्ति   = கிடையாது,
ந அஸ்தி
इति    = என்று, 
இதி
आलोचनं एव   = ஆலோசிப்பதுதான், 
ஆலோசனம் ஏவ
अत्र    = இங்கு, 
அத்ர
स्वात्मलिङ्गस्य  = தன்னுடைய ஆத்மாவாகிற லிங்கத்திற்கு,
ஸ்வாத்மலிங்க³ஸ்ய
वन्दनम्   = வந்தனமாகும். 
வந்த³னம்
நான்தான் ஜகத் பூராவினாலும் வந்தனம் செய்யப்பட வேண்டியவனாக இருக்கி றேன். என்னைத்தவிர வேறு யாரும் வந்தனம் செய்யப்படவேண்டியவனாக இல்லை என்று ஆலோசிப்பதுதான் இங்கு தன்னுடைய ஆத்மாவாகிற லிங்கத்திற்கு வந்தன மாகும்.            (27)

आत्मनः सत्क्रिया प्रोक्ता कर्तव्याभावभावना ।
नामरूपव्यतीतात्मचिन्तनं नामकीर्तनम् ॥ २८ ॥ 
ஆத்மன꞉ ஸத்க்ரியா ப்ரோக்தா கர்தவ்யாபா⁴வ பா⁴வனா ।
நாமரூபவ்யதீதாத்ம சிந்தனம் நாமகீர்தனம் ॥ 28 ॥

आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
सत्क्रिया   = உபசாரம் என்பது,
ஸத்க்ரியா
कर्तव्याभावभावना  = செய்யவேண்டியதொன்றும் கிடையாது என்று
கர்தவ்யாபா⁴வ பா⁴வனா  பாவிப்பதே என்று, 
प्रोक्ता    = சொல்லப்பட்டிருக்கிறது,
ப்ரோக்தா
नामकीर्तनम्   = நாம கீர்த்தனம் என்பது,
நாமகீர்தனம்
नामरूपव्यतीतात्मचिन्तनं = நாமரூபங்களையெல்லாம் தாண்டின
நாமரூபவ்யதீதாத்ம சிந்தனம் ஆத்மாவைச் சிந்திப்பதுதான்.

ஆத்மாவிற்கு உபசாரம் என்பது செய்யவேண்டியதொன்றும் கிடையாதென்று பாவிப்பதே என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம கீர்த்தனம் என்பது நாமரூபங்களை யெல்லாம் தாண்டின ஆத்மாவைச் சிந்திப்பதுதான்.      (28)

  (அவதாரிகை) ஸாதாரணமாயுள்ள பாஹ்ய பூஜையில் த்ரிகரணங்கள் என்று சொல்லப்படும் சரீரம், வாக்கு, மனஸ் என்பவைகளால் செய்யவேண்டிய அம்சங்க ளில் ஆவாஹனத்தில் ஆரம்பித்து ஸ்தோத்திரம் வரையில் சரீரத்தினாலும் வாக்கி னாலும் செய்ய வேண்டியவைகளாகும். ஸ்தோத்திரம் முடிந்த பிறகு மனஸை ஒருமைப்படுத்தி தியானத்தில் ஈடுபடச்செய்வதே முறை அந்த தியானம் நிலைக்க வேண்டுமானால் உபாஸிக்கப்படும் தேவதையின் ஏதேனும் ஒரு நாமாவை மனதிற் குள் உச்சரித்துக்கொண்டு அதன் அர்த்தத்தை அனுஸந்தானம் செய்யவேண்டும். அதன் பிறகு அந்த நாமா எவ்விதம் அந்த தேவதைக்கு நன்கு பொருந்துகிறதென்று ஆலோசிக்கவேண்டும். பிறகு அந்த நாமாவினால் குறிக்கப்படும் குணத்தோடு கூடிய மூர்த்தியை நன்கு தியானம் செய்ய முடியும். தியானம் செய்யச்செய்ய, தான் தியானம் செய்கிறோமென்பதையே மறந்து தியானத்திற்கு விஷயமான ஸ்வரூபத்தி லேயே மனது லயித்துவிடும். ஆக வேதாந்த விசாரத்தில் எப்படியோ அப்படியே பூஜாக்கிரமத்திலும் ஒருவிதமாக சிரவணம், மனனம், நிதித்யாஸனம், ஸமாதி என்கிற நான்கு படிகளும் உண்டு. அவைகள் ஞானிக்கு எவ்விதம் என்பதை மேலுள்ள சுலோகங்களில் ஸ்ரீமத் ஆசார்யார் வர்ணிக்கிறார்: -

श्रवणं तस्य देवस्य श्रोतव्याभावचिन्तनम् । 
मननं त्वात्मलिङ्गस्य मन्तव्याभावचिन्तनम् ॥ २९ ॥

ஶ்ரவணம் தஸ்ய தே³வஸ்ய ஶ்ரோதவ்யாபா⁴வ சிந்தனம் ।
மனனம் த்வாத்மலிங்க³ஸ்ய மந்தவ்யாபா⁴வ சிந்தனம் ॥ 29 ॥

तस्य    = அந்த, 
தஸ்ய
देवस्य    = ஸ்வயம்பிரகாச ஆத்மாவிற்கு, 
தே³வஸ்ய
श्रवणं    = சிரவணம் என்பது, 
ஶ்ரவணம்
श्रोतव्याभावचिन्तनम्  = கேட்டறிய வேண்டியதாக ஒன்றும்
ஶ்ரோதவ்யாபா⁴வ சிந்தனம் கிடையாதென்று சிந்திப்பதுதான்,
आत्वात्मलिङ्गस्य  = ஆத்மாவாகிற லிங்கத்திற்கு, 
ஆத்வாத்மலிங்க³ஸ்ய
मननं तु    = மனனம் என்பதோ, 
மனனம் து
मन्तव्याभावचिन्तनम्  = மனனம் செய்யவேண்டியதாக ஒன்றும்
மந்தவ்யாபா⁴வ சிந்தனம்  கிடையாதென்று சிந்திப்பதுதான்.

அந்த ஸ்வயம்பிரகாச ஆத்மாவிற்கு சிரவணம் என்பது கேட்டறிய வேண்டியதாக ஒன்றும் கிடையாதென்று சிந்திப்பது தான். ஆத்மாவென்கிற லிங்கத்திற்கு மனனம் என்பது மனனம் செய்யவேண்டியதாக ஒன்றும் கிடையா தென்று சிந்திப்பதுதான்.          (29)

ध्यातव्याभावविज्ञानं निदिध्यासनमात्मनः । 
समस्तभ्रान्तिविक्षेपराहित्येनात्मनिष्ठता ॥ ३० ॥ 
த்⁴யாதவ்யாபா⁴வ விஜ்ஞானம் நிதி³த்⁴யாஸனமாத்மன꞉ ।
ஸமஸ்த ப்⁴ராந்தி விக்ஷேப ராஹித்யேனாத்ம நிஷ்ட²தா ॥ 30 ॥

समाधिरात्मनो नाम नान्यत्चित्तस्य विभ्रमः । 
तत्रैवं ब्रह्मणि सदा चित्तविश्रान्तिरिष्यते ॥ ३१ ॥ 
ஸமாதி⁴ராத்மனோ நாம நான்யத்சித்தஸ்ய விப்⁴ரம꞉ ।
தத்ரைவம் ப்³ரஹ்மணி ஸதா³ சித்த விஶ்ராந்திரிஷ்யதே ॥ 31 ॥

आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
निदिध्यासनं   = நிதித்யாஸனம் என்பது, 
நிதி³த்⁴யாஸனம்

ध्यातव्याभावविज्ञानं  = தியானம் செய்யவேண்டிய விஷயமே
த்⁴யாதவ்யாபா⁴வ விஜ்ஞானம் கிடையாதென்று அறிவதேயாகும்,
आत्मनः   = ஆத்மாவிற்கு, 
ஆத்மன꞉
समाधिर्नाम   = ஸமாதி என்பது, 
ஸமாதி⁴ர்நாம
समस्त    = எல்லாவித, 
ஸமஸ்த
भ्रान्ति    = பிராந்தியும், 
ப்⁴ராந்தி
विक्षेप    = விக்ஷேபமும், 
விக்ஷேப
राहित्येन   = இல்லாத்தன்மையோடு, 
ராஹித்யேன
आत्मनिष्ठता   = ஆத்மாவிடத்திலேயே நிலைத்திருத்தல் என்பது 
ஆத்மநிஷ்ட²தா   தான்,
अन्यत्    = வேறு, 
அன்யத்
न    = அல்ல. (மற்றவை), 

चित्तस्य   = மனஸின், 
சித்தஸ்ய
विभ्रमः   = பிரமமேதான்,
விப்⁴ரம꞉
एवं    = இவ்விதமாக, 
ஏவம் 
तत्र    = அந்த, 
தத்ர
ब्रह्मणि    = பிரஹ்மத்தினிடத்தில், 
ப்³ரஹ்மணி
सदा    = எப்பொழுதும், 
ஸதா³
चित्तविश्रान्ति:   = மனஸிற்கு ஓய்வு, 
சித்த விஶ்ராந்தி
इष्यते    = விரும்பப்படுகிறது. 
இஷ்யதே

ஆத்மாவிற்கு நிதித்யாஸனம் என்பது தியானம் செய்ய வேண்டிய விஷயமே கிடையாதென்று அறிவதேயாகும். ஆத்மாவிற்கு ஸமாதி என்பது எல்லாவித பிராந் தியும் விக்ஷேபமும் இல்லாத்தன்மையோடு ஆத்மாவிடத்திலேயே நிலைத்திருத்தல் என்பதுதான், வேறு அல்ல. அவை மனஸின் பிரமமேதான். இவ்விதமாக அந்த பிரஹ்மத்தினிடத்தில் எப்பொழுதும் மனஸிற்கு ஓய்வு விரும்பப்படுகிறது.

[சிஷ்யன் எட்டாவது சுலோகத்தில் "உள்ளேயும் வெளியிலும் நிலைத்திருக்கும் பிரஹ்மத்திற்கு உத்வாஸனம் எப்படி?" என்று கேட்டதற்கு மாத்திரம் குரு பதில் சொல்லவில்லையென்பதை கவனிக்கவேண்டும் அவர் பதில் சொல்லாததினாலேயே ஸர்வ வியாபகமான பிரஹ்மத்திற்கு உத்வாஸனம் ஸாத்தியமில்லைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.]            (30-31)

(அவதாரிகை) பூஜாக்கிரமம் எல்லாம் ஏதாவது ஒரு பூஜாகல்பத்திலிருக்குமே இந்த நிர்கு குண பிரஹ்மத்தை மனஸினால் பூஜை செய்வதற்கு என்ன பிரமாணம் எனில் வேதாந்தமே பிரமாணம் என்பதையும், இவ்விதம் மானஸிக பூஜை செய்கிற வருக்கு நிரதிசயானந்தரூபமான மோக்ஷமே பலன் என்பதையும் கடைசி இரண்டு சுலோகங்களில் விளக்குகிறார்: -

एवं वेदान्तकल्पोक्तस्वात्मलिङ्गप्रपूजनम् । 
कुर्वन्ना मरणं वाऽपि क्षणं वा सुसमाहितः ॥ ३२ ॥
ஏவம் வேதா³ந்த கல்போக்த ஸ்வாத்ம லிங்க³ ப்ரபூஜனம் ।
குர்வன்னா மரணம் வா(அ)பி க்ஷணம் வா ஸுஸமாஹித꞉ ॥ 32 ॥

सर्वदर्वासनाजालं पदपांसुमिव त्यजेत् । 
विधूयाज्ञानदुःखौघं मोक्षानन्दं समश्नुते ॥ ३३ ॥ 
ஸர்வத³ர்வாஸனா ஜாலம் பத³பாம்ஸுமிவ த்யஜேத் ।
விதூ⁴யாஜ்ஞான து³꞉கௌ²க⁴ம் மோக்ஷானந்த³ம் ஸமஶ்னுதே ॥ 33 ॥

एवं    = இவ்விதமாக,
ஏவம்
वेदान्तकल्पोक्त  = வேதாந்தமாகிற கல்பத்தில் சொல்லப்பட்ட, 
வேதா³ந்த கல்போக்த
स्वात्मलिङ्गप्रपूजनम् = தன்னுடைய ஆத்மாவாகிற லிங்கத்தை பூஜை
ஸ்வாத்ம லிங்க³ ப்ரபூஜனம் செய்வதை, 
आमरणं वाऽपि  = மரணம் வரையிலோ, 
ஆமரணம் வா(அ)பி
क्षणं वा   = ஒரு க்ஷணமேனுமோ,
க்ஷணம் வா

सुसमाहितः   = நன்கு மனதை ஒருமைப்படுத்தியவராக, 
ஸுஸமாஹித꞉
कुर्वन्    = செய்கிறவர், 
குர்வன்
सर्वदर्वासनाजालं  = எல்லாக் கெட்டவாஸனைக் கூட்டத்தையும், 
ஸர்வத³ர்வாஸனா ஜாலம்
पदपांसुं इव   = காலிலுள்ள பழுதியைப்போல,
பத³பாம்ஸும் இவ
त्यजेत्    = உதறி விடுவர்,
த்யஜேத்
अज्ञानदुःखौघं   = அக்ஞானத்தையும் துக்கக் குவியலையும், 
அஜ்ஞானது³꞉கௌ²க⁴ம்
त्यजेत्    = உதறிவிட்டு, 
த்யஜேத்
मोक्षानन्दं   = மோக்ஷானந்தத்தை, 
மோக்ஷானந்த³ம்
समश्नुते   = நன்கு அடைவார்.
ஸமஶ்னுதே

இவ்விதமாக வேதாந்தமாகிற கல்பத்தில் சொல்லப்பட்ட தன்னுடைய ஆத்ம லிங்க பூஜையை மரணம் வரையிலோ ஒரு க்ஷணமேனுமோ நன்கு மனதை ஒரு மைப்படுத்திச் செய்கிறவர் எல்லா கெட்ட வாஸனைக்கூட்டத்தையும் காலிலுள்ள புழுதியைப் போல உதறிவிடுவர் அக்ஞானத்தையும் அதனால் ஏற்படும் துக்கக் குவியலையும் உதறிவிட்டு மோக்ஷானந்தத்தை அடைவார்.

நிர்கு³ண மானஸ பூஜை முற்றும்.
 

Related Content

வேதஸார சிவஸ்தோத்ரம் - உரை

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை

சிவானந்த லஹரீ - தமிழ் உரையுடன் 

ஶ்ரீ சிவ பாதாதிகேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்

ஶ்ரீ சிவ கேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்