logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolதிருவிடைமருதூர் உலாOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ஆண்டபிள்ளையார் துதி. சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப் பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த வாண்டமா தங்க மது. நூல் 1706. கலிவெண்பா. 1 பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு 2 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில் 3 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற் 4 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான் றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண் 5 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண் மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி 6 யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான் மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே 7 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப் போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம 8 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த் தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ் 9 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன் 10 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண் 11 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற் 12 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங் குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால் 13 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த 14 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத் 15 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக் கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும் 16 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார் முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை 17 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால் கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக் 18 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல் வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார் 19 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன் மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை 20 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன் றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும் 21 புணரு மடியார் புரிபிழையு மேனோர் குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங் 22 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத் தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல 23 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந் தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண் 24 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி 25 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச் சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ 26 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற் றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங் 27 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதா;ருங் 28 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும் வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர் தலவிசேடம் 29. மின்னையு மாதவனும் வேதனுங் காணாத தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ் 30. வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார் 31. திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும் விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப் 32. பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத 33. னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித் தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய் 34. மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப் பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப் 35. பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப் பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க் 36. காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ் 37. சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு 38. நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற் பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக் 39. கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர் மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே 40. யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக் கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற் 41. காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென் பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு 42. சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத் 43. துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா 44. முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப் பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ் 45. தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய் வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன் 46. றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி 47. முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப் புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து 48. தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர் 49. வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற் 50. றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன் 51. மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச் சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு 52. ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத் தானே யருச்சித்த தம்பிரான் - வானாட 53. ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர் 54. காகம் படியக் கனகவுரு நல்கிப்பி னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக 55. மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத் 56. தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை 57. யொருவீர சோழ னொளிரா லயமும் வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத் 58. திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு 59. கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப் 60. புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான் வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற 61. பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக் காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான் 62. கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக் 63. குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி லமர நதியை யமைத்துத் - தமரமிகப் 64. பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு கேசிக் கினிய கிளர்மதலை - வீசி 65 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென 66 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக் கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு 67 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர் மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு 68 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச் சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர் 69 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ் சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த 70 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில் 71 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித் திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன் 72 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா 73 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந் தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச 74 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ 75 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து 76 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன் றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல் 77 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட 78 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர் 79 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற் கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி 80 நடையார் வருண னறுநீர் படியக் கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங் 81 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப் பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன் 82 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந் தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா 83. னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச் சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான 84. கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக் கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம் 85. பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே 86. மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன் 87. கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல் 88. யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித் தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே 89. ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில் 90. வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக் கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய 91. சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங் கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச் 92. செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப் 93. பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர் 94. வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும் வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார் 95. திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர் புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற 96. வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன் வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த 97. னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர 98. சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த் தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு 99. சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப் புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த 100. மறையோன் கனகதடம் வந்து படியக் குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய் 101 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர் வரகுணபாண்டியதேவர் வழிபாடு. 102 மன்னன் மதுரை வயங்கு வரகுணத் தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு 103 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர் தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி 104 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர் 105 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ 106 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ் 107 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத் தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா 108 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச் 109 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல் 110 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி 111 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென் றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத் 112 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று 113 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான் றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா 114 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண் டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற் 115 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக் குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற் 116 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர் 117 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு 118 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந் தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா 119 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத் 120 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண் வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன் 121 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு 122 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத் தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ 123 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ் வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப் 124 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந் தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற 125 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ 126 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன் 127 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத் தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப் 128 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத் தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு 129 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு 130 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர் சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி 131 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான் றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது 132 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர் 133 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா 134 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந் 135 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர் மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற் 136 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ 137 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற 138 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும் வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற் 139 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல் லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார் 140 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங் கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ 141 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ் சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச் 142 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப் 143 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக் கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு 144 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத் தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற் 145 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும் வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற 143 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும் பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி 147 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண் 148 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும் 149 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற 150 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற் 151 பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன் மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த 152 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக் காரழகு மேனி கலந்ததென - வீரமலி 153 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு 154 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத் தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர் 155 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது 156 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப் பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப் 157 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும் பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ 158 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர் பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம் 159 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு 160 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத் தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய் 161 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும் வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய 162 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச் சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற் 163 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன் மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா 164 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத் தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக 165 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன் 166 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள் செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா 167 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற் றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை 168 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர் குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு 169 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய் 170 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற் றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ் 171 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை 172 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய 173 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா 174 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல் லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக் 175 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா விருமை மணிக்கடக மிட்டுக் - கருது 176 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு 177 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு 178 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட் 179 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன் கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத 180 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய் மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை 181 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை 182 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா 183 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள 184 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு 185 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக 186 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர் மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய 187 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென் றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக 188 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ் செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப் 189 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப் பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப் 190 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர் துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி 191 பாகு கருனை பகரும் வறையறுவை யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை 192 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ் சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை 193 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா 194 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக் குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய 195 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர் 196. வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற் றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த 197 வெழுதா மறையு மெழுது மறையும் வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார் 198 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத 199 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத் தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா 200 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங் கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு 201 கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன் 202 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத் தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை 203 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன் 204 பாய கடலமண ராழ வரையொடலை மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண் 205 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின் மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது 206 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத் 207 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு 208 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை 209 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை 210 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக 211 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு 212 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன் 213 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத் 214 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத் தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த 215 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு 216 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங் 217 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல் 218 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச் செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற் 219 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப் 220 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந் நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே 221 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய 222 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத் 223 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப் 224 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை 225 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ் சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ 226 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற் றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ 227 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும் மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி 228 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற் கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித் 229 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின் மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப் 230 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார் 231 புகழ வருங்குரவர் போரேறு ஞானந் திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி 232 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக் குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு 233 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு சான முடையார் தனித்துணைவன் - மானத் 234 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை மருவா வருநமச்சி வாயன் - பொருவா 235 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப் பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை 236 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற் 237 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற் றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு 238 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப் பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு 239 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத் தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு 240 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு 241 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன் ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல 242 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில் 243 பதலை முழவம் படகந் திமிலை முதல முகிலின் முழங்க - நுதலினொளிர் 244 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம் பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக் 245 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான் றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த 246 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார் 247 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான் வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால் 248 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம் மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத 249 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி 250 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின் 251 றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற் பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர் 252 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத் 253 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி 254 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண் டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல் 255 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன் 256 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத் 257 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன 258 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த வாவு மிளமட மானென்னத் - தாவாத 259 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக் கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு 260 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா யிடையடைய வந்தமின லென்ன - வுடையதன

Related Content

பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா

வாட்போக்கிக்கலம்பகம்

மதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்

Madurai Chokkanathar Ulaa in English

திருவெங்கையுலா