(பாகம் 1 : படலங்கள் 1- 21)
Source:
மாயூரப்புராணம் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது.
இஃது இந்நூல் செய்தவர் மாணாக்கரு ளொருவராகிய சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராயசெட்டியாரால் பார்வையிடப்பட்டு மாயூரத்திலிருக்கும் அரங்கக்குடி முருகப்பிள்ளையவர்கள் குமாரர் வயித்திலிங்கம் பிள்ளையவர்களால் சென்னை சி. டிக்குரூஸது, மலைச்சாலையிலிருக்கும் அத்திநீயம் அன்ட் டேலிநீயூஸ் பிரான்ச் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. விபவ வருஷம் - கார்த்திகை மாதம்.
சூசீபத்திரம்.
==========
படலப்பெயர். | பாடற்றொகை. |
1. கடவுள் வாழ்த்து. | 25 (1-25) |
2. அவையடக்கம் | 9 (26-34) |
3. சிறப்புப் பாயிரம் | 1 (35) |
4. திருநாட்டுப் படலம். | 120 (36-155) |
5. திருநகரப் படலம் | 135 (156-290) |
6. நைமிசைப் படலம் | 51 (291-341) |
7. திலீபன்முத்தியடைந்த படலம் | 30 (342-371) |
8. பிரமன்சிருட்டிபெறு படலம் | 40 (372-411) |
9 தக்கன்மகம்புரி படலம் | 40 (412-451) |
10. யாகசங்காரப் படலம் | 49 (454-500) |
11. மாயூரப் படலம் | 51 (501-551) |
12. தேவிவரம்பெறு படலம் | 27 (552-578) |
13. மாயூரநாதர்வள்ளலாரென்னும் பெயர்பெற்ற படலம் | 30 (579-608) |
14. தேவியாராதனைப் படலம் | 25 (609-633) |
15. திருநடனப் படலம் | 21 (634-654) |
16. திருமணப் படலம் | 100 (655-754) |
17. யானையுரித்த படலம் | 60 (755-814) |
18 தலவிசேடப் படலம் | 71 (815- 885) |
19. கவுண்டின்னியப் படலம் | 24 (886- 909) |
20. யோகவித்தமப் படலம் | 27(910- 936) |
21. சுசன்மப் படலம் | 30 (937-966) |
உ
சிவமயம்
மாயூரப் புராண மரங்கேற்றுவித்தவர்மேல்
சென்னைக் கவரன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர்
திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராயசெட்டியார் இயற்றியது
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் சீர்பூத்த பல்வளமு மல்குபெரும் பூங்குடியிற் செழித்து வாழ்வே னேர்பூத்த கனதனவா னடுத்தவரைத் தானாக்கு மியல்பின் மிக்கான் பேர்பூத்த சோணாட்டு வேளாளர் குலதிலகன் பிறங்கு சீர்த்தித் தார்பூத்த சைவசிகா மணிசுகுண சிதம்பரமா றவத்தில் வந்தோன் | (1) |
மாமேவு பல்கலையு நுண்ணறிவிற் கற்றுணர்ந்த வாய்மை தேர்ந்து பூமேவு மன்னவர்தங் கண்மணியா யதிகாரப் பொலிவின் மேவித் தேமேவு கண்ணோட்ட முதற்பலநற் குணத்தாலுஞ் சிறந்து வாழ்வோ னோமேவு மந்திரமென் றோதுசர வணபவப்பே ருற்ற வள்ளல் | (2) |
அகழேறு மணிப்புரிசை யாணேறு சிராப்பளியி னகத்து மோவா லிகழேறு மெனதிதயத் தகத்துமென்று மிடையறா துறைவோன் மெய்மைப் புகழேறு நயவிபுலன் பொறையேறு மிருங்குணத்தோன் புவனி மீது திகழேறு மீனாட்சி சுந்தரநா வலரேறு சிந்தை யோர்ந்து | (3) |
துன்னியபா வலர்களிப்ப லியற்றுதிரு மயிலாடு துறைப்பு ராண மன்னியமான் மியமும்தன் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் வயங்கத் தேர்ந்து மின்னியபே ரருள்வள்ளல் சந்நிதியி லியாவர்களும் லிரும்ப மேவி நன்னியமந் தலையெடுப்ப வரங்கேற்று வித்தளவா நலம்பெற் றானே | (4) |
சிறப்புப் பாயிரம் - 2
இப்புராணம் செய்யுங்காலை யுபசரித்தவர்மேல்
சென்னைப்ப்ரீசர்மிஷன் பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர்
தெய்வசிகாமணிமுதலியார் இயற்றியது
கலிவிருத்தம் சேதன்வாழ்க்கையர்கள்செறிதிகழ்மாயூரத்தமர்வான் கோதமையவொண்ணாதகூடலுடைக்கோத்திரத்தான் மாதயவான்கோவிந்தவள்ளறவத்தினிலுதித்த மேதகையமிகுகுணத்தான்வேங்கடாசலமகிபன் | (1) |
நல்லகுணவிபவத்தோனல்லநெறிவழுவாதோன் பல்லநூலொருங்குணர்ந்தோன்பல்லநூலொருங்கியற்றும் வல்லனாரெனவல்லோர்வயங்குறவோர்ந்தினையனெனச் சொல்லவருமீனாட்சிசுந்தரநாவல்லோனே | (2) |
தூயசீர்மயிலாடுதுறைப்பெருமான்மான்மியமாம் பாயபாயிரமாதிநைமிசத்துப்பண்ணவர்வந் தேயபூசனைபுரிதலீறாகப்பாடளவு நேயமுடனுபசரித்துநிரம்புபுகழ்பெற்றனனே | (3) |
சிறப்புப்பாயிரம் - 3.
இப்புராணம் பதிப்பித்தவர்மேல்
கும்பகோணம் புரோவின்சியால்கல்லீஜ் தமிழ்ப்பலவர்
திருசிரபுரம் தியாகராசசெட்டியார் இயற்றியது.
உ மாயூரப்புராணம் |
அகத்தியவிநாயகக்கடவுள் *பூமேவுதன்னடியார்தமைவிளக்கிமுந்திருக்கைபுணர்த்தல்வல்ல தேமேவுபெருங்கருணையாளனெனறெரிப்பமறைத்திருநாமங்கள் பாமேவுபலவிருகுக்கவகத்தியமால்களிறெனும்பேர்பரித்துநாளு மாமேவுமயிலாடுதுறைத்தளிவாழ்பெருமானைவணக்கஞ்செய்வாம் *அடியாரைவிளக்கஞ்செய்து தேவர்முதலியயாவரினுமுந்தி யிருப்பச்செய்தல்தோன்ற, விநாயகக்கடவுள் திருநாமம் பலவிருக்கவும், தமது திருப்பெயர்முன், அடியார்பெயர்கொண்டாரென்பது கருத்து. *முடியும், அடியும், யானையும் பூதமுமாகிய பேருருவங் கோடலால், அதற்கேற்பப் பெரிய விநாயக ரெனத்திருப்பெயர்பூண்டு, அத்திருவுருவிற் கேற்பப் பெரிய கோயிலி லெழுந்தருளினாரென்பது கருத்து. | (1) |
பெரியவிநாயகக்கடவுள் *மன்னியபேருருவாய்ந்தமதாசலமாமுடிமேக்குமறாத *நாமே துன்னியபேருருவாய்ந்தபூதத்தினடிகிழக்குந்தோய்தற்கேற்ப மின்னியபேருருவாய்ந்துபெரியவாரணமெனும்பேர்விளங்கப்பூண்டு பன்னியபேருருவாய்ந்தமாமயிலைத்தளியமரும்பரன்றாள்போற்றி *நாம் அச்சம் "பேநாமுரு மென வரூஉங்கிளவி, ஆ முறைமூன்று மச்சப் பொருள்" தொல்காப்பியம் உரியியல், 49 சூத்திரத்தாணுணர்க. | (2) |
வதானியீசர் சீர்பூத்தலிமையாரும் *அமையாருந்தோட்சசிசேர்செல்வவேந்தும் பார்பூத்ததிருவானும்பெருவானும்புகழ்பரவுபண்ணுவானுங் கூர்பூத்தவேனோருந்தேனோருமலர் * இறைப்பக்குறித்தநல்கி யேர்பூத்தமயிலாடுதுறையமரும்வள்ளலாரிருதாள்போற்றி * அமை, மூங்கில் * தேனோருமலர் வண்டாராயுமலர் | (3) |
சூதவனேசர் இச்சையறிவுறுதொழிலாய்ப்பரையாதியாதியாயெண்ணிலாத விச்சைசெயாரணிமுதலாய்ச்சத்திவிந்துவாதியாய்வேறாயின்னு மச்சையிணிதோம்பிடுவானளவாதகருணையிற்பல்லண்டமீனும் பச்சைமயில்போற்றெடுக்கமாவடிவீற்றிருப்பாரைப்பரவிவாழ்வாம் | (4) |
அபயப்பிரதாம்பிகை பரவுபிறரபயவரதம்புனைந்தும்பாவனையாம்படியானாண வுரவுமிகுமவைமலர்க்கையமைத்தமைத்தபடியகிலவுயிர்க்குமாற்றிக் கரவுதவிர்தரவனையவுபயமேதிருப்பெயராய்க்கதிர்ப்பப்பூணுற் றரவுமதிபுனைவார்பாலமரஞ்சனாயகிதாளடைந்துவாழ்வாம் *முனமகிழ், மயிலுருவங் கொள்ளாமைக்கு முன்னமே திருநடனங்கண்ட மகிழ்ச்சி. *வான்முதலியவை, ஆகாயமுதலியதத்துவம்36. | (5) |
இ து வு ம து பரந்தமலர்க்கருங்குழலுஞ்செவ்வாயும்வெண்ணகையும்பசுவேய்த்தோளுஞ் சுரந்தவருள்பொழியுமிருவிழியுமெழில்வழிமுகமுந்துணைப்பொற்றோடுங் கரந்ததிருவிடையுமொண்செம்பட்டுடையுமங்கலப்பொற்கழுத்துநாளு மிரந்தவருக்கருளஞ்சனாயகிநூபுரப்பதமுமிறைஞ்சிவாழ்வாம். | (6) |
ம யி ல ம் மை. வாவிபொலிபிரமவனமாயூரமெனுமொருபேர்மருவியோங்கத் தூவியனமுணராதமுடிச்சரபமொருமயிலாத்தோன்றியாங்கு மேவியமர்தருவிடபமரங்கமாநடம்புரியவிழைந்துநோக்கி யோவியெலாம்*முனமகிழ்பூத்தமர்ந்துதொழும்பசுமயிலையுன்னிவாழ்வாம். | (7) |
ச பா நா ய க ர். மாடுவானகைநோக்கநாடுவானவர்பலரும்வணங்கிவாழ்த்த வூடுவான்பொழிவதெனப்பாடுவான்புலவர்துதியுரைப்பயாமு நீடுவான்முதலியவைகளோடு*வான்வளிபொருவல்*நீத்தானந்தங் கூடுவானம்பலத்துளாடுவான்குஞ்சிதத்தாள்குறித்துவாழ்வாம். *வான்வளிபொருவல், ஆகாயமுங்காற்றும்போலத் தத்துவங்களோடு, அபேதமாவிருக்கை. | (8) |
சி வ கா மி ய ம் மை. கரமூன்றுமடியிரண்டுஞ்சிருட்டிமுதலைந்தொழிலுங்கதிப்பவாற்றச் சிரமூன்றுநான்குமுளார்சேலிப்பவெண்முறுவல்செவ்வாய்த்தோற்றிப் புரமூன்றுமெரித்தார்செய்நடங்காண்டல்*அதுவலிக்கப்போதல்*ஆய திரமூன்றுமிரண்டனுக்கும்வினைமுதலாம்பராபரைதாள்சேரந்துவாழ்வாம் *அது, காண்டலைக்குறித்த குறிப்பு வினைமுற்றுப்பெயர். *வலிக்கப்போதல், காட்டல். | (9) |
தட்சணாமூர்த்திக்கடவுள். மான்மலரவன்முன்னோர்தொன்முதலெனவழுத்தற்கேற்பச் சூன்மலர்கருணையாலோர்தொன்முதல்*அமர்ந்தான்மாக்கள் கான்மலரடங்குமுண்மைகைமலர்க்காட்சியாலே தான்மலர்தரத்தெரிக்குந்தம்பிரான்சரணஞ்சார்வாம். * தொன்முதல், ஆலடி. | (10) |
வயிரவக்கடவுள். ஓங்குசொற்படைமுன்னஞ்சுமொள்ளுகிர்ப்படையுந்தேசு வீங்குசக்கரமுன்னானவெம்படையஞ்சுமஞ்சுந் தாங்குசூற்படையுங்கொண்டோர்தலைக்கலநெய்த்தோரேற்ற பாங்குசேர்வடுகப்புத்தேள்பதமலர்க்கன்புசெய்வாம். | (11) |
அகத்தியவிநாயகக்கடவுள். உயர்திணையுமஃறிணையுமாயவொருதிருவுருவமுற்றுமேவும் பெயர்வில்கருணைக்கிணங்கவவ்விரண்டுதிணையுயிரும்பேணித்தாங்க லயர்வுலகந்தெரிப்பவிளமதியுமுதுவரவுமுடியலங்கத்தாங்கி மயர்வுதபவீற்றிருக்குமகத்தியவாரணத்தடிகள்வணக்கஞ்செய்வாம். | (12) |
குமாரக்கடவுள். நெடுவரைவிற்பவளவொளிவரையைக்கூறுசெய்துநிலவுமண்டத்-தொடுவ ரைவிலுயிர்க்குமுடன்முதலியதன்கூறுசெயுமொருவேல்கொண்டோர்-கொடுவ ரையைக்கூறுசெய்துகடன்மாவுங்கூறுசெய்துகொடும்பக்கஞ்சார்ந்-தடுவரை யிற்பொலிமயின்மேற்பொலிதருசேவகன்மலர்த்தாளடுத்துவாழ்வாம். | (13) |
நந்திதேவர் வண்ணம்பொலியுமேருமால்வரையைமேவுநசையினர்சீர் விண்ணம்பொலியுமிளாவிரதமேவலெனமான்மறியினொடு தண்ணம்பொலியுங்கைப்பாமற்சாரும்விருப்பரறிவுடையோ ரெண்ணம்பொலியுந்தனைச்சாரவிருக்குமொருவன்பதம்பணிவாம். | (14) |
இடபதீர்த்தம். நதிநதமுநதிபதியு*நபப்புனலுமற்றுமுளநாரம்யாவுந் துதிகெழுவப்படிந்தாடித்தாமீட்டும்பாவமெலாந்தொலைத்துப்போயுங் கதியருணின்மலமாகியுயிரோம்புகவேரனருள்கன்னித்தீர்த்த மதிசெய்துலாத்தீர்த்மெனுமிடபதீர்த்தத்தினையாம்வணக்கஞ்செய்வாம். *நபப்புனல்-ஆகாயகங்கை | (15) |
தமிழாசிரியர். மயிலைநிகரஞ்சாயன்மங்கையொடுமருள்பரப்பிவானோர்சூழக் கயிலையமர்பெருமானிலுலோபாமுத்திரையெனும்பேர்க்கற்புவாய்ந்த குயிலையடுமொழியொடுஞ்செந்தமிழ்பரப்பிமுனிவர்குழாங்குலவிச்சூழ வெயிலைவிடுமணிப்பொதியத்தமருமொருமுனிவரன்றாண்மேவிவாழ்வாம். | (16) |
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். தமரொடுவெள்ளநீந்தத்தவமுயன்றெழுநாளரற்றி யமர்கொடுங்கணையொன்றுய்த்துவருந்துமாலவன்போலாது தமரொடுவெள்ளநீந்தநாவாய்க்கட்டவிழ்த்துத்தாவா தமரொருபதிகஞ்செவ்வாய்மலர்ந்தவர்ககடிமைசெய்வாம். | (17) |
திருநாவுக்கரசுநாயனார். பெறுமணிநிறத்தமைத்தும்பிறங்குபொன்னுடம்பிற்போர்த்து முறுபெருங்காவல்பூண்டோர்ந்துறங்குமாயவன்போலாது பெறுமணிபொன்னெலாங்கைப்பேருழவாரத்தாற்சோ வுறுபுறம்விட்டானந்தவுறக்கஞ்செய்பவர்தரளுள்வாம். | (18) |
சுந்தரமூர்த்திநாயனார். எண்ணிமாலயன்முன்னோர்குற்றேவல்செய்பெரும்பேறென்று நண்ணிநாமுய்வோமென்றுநாளுங்காத்திருக்கவுள்ள புண்ணியமுதல்வன்றானேபோந்துகுற்றேவல்செய்ய வண்ணியதோழமைப்பாலமைந்தவர்க்கன்புசெய்வாம். | (19) |
மாணிக்கவாசகசுவாமிகள். பரமனைப்புறந்தழீஇமுன்பாற்சுவடுறுத்தாள்போலா துரவகந்தழீஇயன்னான்மன்சுமந்துழன்றடியொன்றேற்றுக் கரவின்மேல்கீழ்பின்னென்னக்கரைதருமொருமுப்பாலுந் திரமுறுசுவடுகொண்மார்திகழ்ந்தவர்க்கன்புசெய்வாம். | (20) |
தண்டீசநாயனார். பாதகவரக்கற்கொன்றுபடுபழியலைக்கப்பட்டு நோதகவடைந்துதீர்ந்தநோன்சிலையிராமனாண மேதகவந்தணாளனாருயிர்வீயமாய்த்து மாதகவமையுமுத்திமருவினார்சரணஞ்சார்வாம். | (21) |
அறுபத்துமூன்றுநாயன்மார். தகைபெறுமுண்மைவாய்ந்ததஞ்சரித்திரமேயாய தொகைவகைவிரியோர்மூன்றுந்தொழுபெரியோர்க்குச்சொற்ற பகைதவிர்குரவனாவான்படர்சடைப்பிரானேயாக நகைகொளுமறுபான்மூவர்நறுமலர்ப்பாதம்போற்றி. | (22) |
பஞ்சாக்கரதேசிகர். வினையொடுமிருளனாதிமேவியசெயலைநீக்கி யனையினுமுயிர்க்குநல்கியாவடுதுறைக்கண்மேய தனைநிகர்நமச்சிவாயகுருபரன்சரணஞ்சார்ந்தார் புனைமலரடியென்சென்னிக்கணியெனப்பொலியுமன்றே. | (23) |
குருவணக்கம். வடுவகிர்க்கண்ணாராசைவலைப்படார்செறிகோமுத்தித் தொடுகடலுலகமேத்துஞ்சுப்பிரமணியதேவ னொடுகலந்தமராநிற்குமொருவனம்பலவாணப்பேர் கொடுவருசிவனென்னெஞ்சங்கொண்டனன்குறிப்பதெங்கே. | (24) |
மற்றையடியார்கள். மன்னியமாமயிலாடுதுறைத்தளியுள்வள்ளலார்வயங்குசீர்த்தி பன்னியநாவுடையரகம்படித்தொண்டினெறிநிற்போர்பரவுநீறுந் துன்னியகண்மணித்தொடையுமைந்தெழுத்தும்பொருளாகத்துணிந்தோராய முன்னியவிந்நியமரெவராயினுமற்றவர்சரணமுடிக்கொள்வாமே. | (25) |
1. கடவுள்வாழ்த்து முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.25
-------------
தண்ணியநீராவடுதண்டுறைநமச்சிவாயகுருசாமிபொற்றா ளண்ணியசிந்தையன்கௌரிமாயூரப்பெருமான்கட்டளைமேற்கொண்டு புண்ணியமேன்மேலுயரவளர்ப்பவனற்குணசீலன்பொறையிற்கூர்ந்தோன் மண்ணியமாமணிமுத்துக்குமாரமுனிவரனருட்கோர்வைப்பாயுள்ளான். | (1) |
வடமொழியிருந்ததெய்வமாயூரமான்மியத்தைத் திடமொழிபெயர்த்தெடுத்துச்செந்தமிழ்மொழியாலின்பம் படமொழியென்னவன்னான்பணித்தசொன்மறுத்ததற்கஞ்சித் தடமொழிப்புலவர்முன்புசாற்றிடத்துணிந்தேன்மன்னோ. | (2) |
நன்மொழியமைந்தசான்றோர்கூடுமந்நகருள்யானென புன்மொழிகொண்டுசேறல்புவனங்களெடுத்துப்பேசும் வன்மொழியமைந்தசாதிமலர்பயிலிடத்துநன்மை யன்மொழியொருவனொல்லாவருக்கங்கொண்டணைதல்போலும். | (3) |
தண்ணியவிமயப்பச்சைமயில்செய்பூசனைதழீஇய புண்ணியமுதல்வன்காகபூசையுந்தழீஇயவாற்றா லெண்ணியபெரியோர்செய்யுமினியபாவேற்றலோடு கண்ணியஞானமில்லேன்பாடலுங்கைக்கொள்வானால். | (4) |
இலைமலர்தாங்கப்பட்டவிருவருமிறைஞ்சும்வெள்ளி மலையவன்பெருமைக்கேற்றபாக்கொனின்வாய்ப்பாட்டென்னிற் புலைமுடைத்தோலும்பாம்பும்புன்றலைத்தொடையுமென்பு மலைவின்மற்றனையாற்கேற்றவாடைபூணாமோசொல்லீர். | (5) |
நன்மொழியியலுணர்ந்தோர்நாயினேன்புகன்றபாடல் *அன்மொழியாவதேனும் *அல்வழியாவதேனும் புன்மொழிப்*போலியேனும்வேற்றுமைபொருந்திற்றேனும் வன்மொழிபுகன்றுதள்ளலாவதோர்வழக்குமுண்டோ. *அன்மொழி- தீயமொழி, *அல்வழி-தீயவழி, *போலி- உட்பொருளின்மை | (6) |
பரசிவபுராணமென்னும்பத்திசற்றேனுமில்லார் விரவுவகுற்றமென்றுவிளம்புவரெவர்சொற்றாலு மரவணியனையானிந்தையறையவுந்துணியுமந்தக் கரவரென்கவிக்குற்றங்கழறலோரிறும்பூதன்றே. | (7) |
வாரியுட்கலந்தபுன்னீர்வாரிதிநீரேயாகுஞ் சீரியபயங்கலந்ததீர்த்தமும்பாலேயாகும் வேரியங்கடுக்கையண்ணன்மான்மியம்விரவாநின்ற பூரியனாமென்சொல்லும்புனிதமாய்ப்பொலியுமன்றே. | (8) |
ஒடுங்கலில்குரவனாகியுண்மைபோதிக்குமம்மா னெடுங்கணக்குணராரெல்லாநிகழ்தருகுரவரென்றோர் படும்பெயர்பூண்டுமண்மேற்பயிலவும்வெறுத்திலான்கை விடுந்திறமுணராரென்சொன்மேலவனாரானார்நாளும். | (9) |
2. அவையடக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 34
---------
துன்னுதிரைக்கருங்கடல்சூழ்புலிபுகழுமயிலாடுதுறைப்புராணம் பன்னுவடமொழிநின்றுமொழிபெயர்த்துத்தென்மொழியிற்பாடித்தந்தா னுன்னுசிவஞானகலைமுதலாயபல்கலையுமொருங்குதேர்ந்தோன் மன்னுதிரிசிரபுரம்வாழ்மீனாட்சிசுந்தரநாவலவறேரே. | (1) |
3. சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்.35
---------------
அரவுவார்சடையெம்வள்ளலாருயிர்ப்பொருட்டுவாசக் குரவுவார்கூந்தற்செவ்வாய்க்கோற்றொடியோடும்வைகும் பரவுவார்மயிலைமுன்னாப்பஃறலந்தன்னுட்கொண்டு விரவுவார்சோழநாட்டின்வளஞ்சிலவிளம்பலுற்றாம். | (1) |
பூவினுட்பதுமம்போலும்புருடருட்டிருமால்போலுங் காலினுட்கற்பம்போலுங்கலைகளுண்ஞானம்போலு மாவினுட்சுரரான்போலுமறத்துளில்லறமேபோலு நாவினுண்மெய்ந்நாப்போலுநாட்டினுட்சோழநாடு. | (2) |
மேக்குநீர்கிழக்குநீரென்றுரையிருநீருமேன்மே லாக்குவாய்ப்புடையதாயவிலங்கலுமதனினின்று தாக்குமாவாராநின்றதண்ணீரும்வடிவுதீர்த னீக்குமாநகருமென்றுநிரம்பவுள்ளதுசோணாடு. | (3) |
குன்றலில்விளைவுசெய்யுங்குடிகளுந்துறவுபூண்ட நன்றறிபவருமந்தணாளர்முன்னாயினோருந் துன்றவன்கலத்திற்பண்டிகளிற்பொருடொகுக்கும்வாழ்க்கை யன்றலிலாருஞ்சேரவமைந்ததுவளவநாடு. | (4) |
பெரும்பொருளுடைமையாலேயாவரும்பெட்பதாகி யரும்புமோர்கேடுமின்றியாற்றவும்விளைவதாகி வரும்பொறையனைத்துந்தாங்கிமன்னவற்கிறையுமுன்போற் றரும்புகழுடையதம்மாதவாப்புகழ்ச்சென்னிநாடு. | (5) |
மயின்முதலுருவந்தாங்கிமலைமகளாயவன்னை பயிலவும் * மந்திரங்கள்பல்லகொண்டூழியோங்குங் கயிலையெம்பெருமான்மேவிக்கலப்பவுந்தவஞ்செய்தன்றா லெயில்வளைநகரமெங்குமியைதருமபயநாடு. * மந்திரம் - கோயில் | (6) |
நோக்கியவிடங்களெல்லாநுவலருந்தலங்களாகத் தேக்கியதீர்த்தமாகச்சிவலிங்கமூர்த்தியாக வாக்கியதவத்தானாளுமடைந்தவர்க்கறமென்றோதும் பாக்கியமாக்கிமேலுய்ப்பதுமுதுசென்னிநாடு. | (7) |
மறைநெறிதிறம்புவாரையாகமமறவியாரை முறைதபவொழுகுவாரைமொய்பழிப்பொருள்வேட்பாரைக் குறையறவிருந்தோம்பாரைக்குறித்தனகொடாரைமுக்க ணிறையடிபூசியாரையில்லதுகிள்ளிநாடு. | (8) |
திருமிகப்பெருகலாலேதீயவெம்பசியுங்காலப் பருவரலின்மையாலேபாறுறாநோயுமன்னற் கொருவரும்படையினாலேயுடற்றுவெம்பகையுமில்லை திருநிலம்புகழநாளுமியைந்தசெம்பியர்தநாடு. | (9) |
தலையமைசென்னிநாடுதவாவகளங்கநா டு நிலைபெறுமபயநாடுநிரம்பியவளவநா டு தொலைவிலாப்பெருநீர்நாடென்றின்னமுஞ்சொல்லப்பெற்று மலைவிலாப்பயன்செய்நாடுமற்றிதுபோலொன்றுண்டோ. | (10) |
வேறு. பொங்குவெண்டிரைக்கங்கைமேற்படர்ந்ததுபோலத் தங்குவெண்முகில்வான்வழிப்படர்ந்திறைச்சயிலம்* *முங்குதண்கடற்புனல்கொளீஇக்கருநிறமுற்றி யங்குநின்றுகாளிந்திபோந்தென்னவானணைந்த. *இறைச்சைலம்-சிறையையுடையமலை *முங்கு-மூழ்நற்பொருளுணர்த்துமுதனிலைத்தொழிற்பெயர் | (11) |
வாரியஃகுமாமால்குடித்தெழுதிறமதிக்கின் வேரியந்தொடைத்தம்மிறையாகியவேந்தன் மூரிவெம்பகைவரையமரிடங்கண்டுமுற்றிச் சோரிசிந்திடப்பறையரிவான்செயறுணையும். | (12) |
விதிக்குமாற்றல்செய்* கருமுகில்வானளாய்மின்ன றுதிக்குமங்கதிர்காளிந்தியெனுமொருதோகை மதிக்குமேனியிற்பொற்பணிபுனையமற்றவைதாங் கதிக்குமாறவண்மெய்நின்றுமின்னுதல்கடுக்கும். *விதிக்குமாற்றல்செய்-பிரமனுக்குஞ் சிருட்டிவலிகுறையும் | (13) |
முற்றுசூற்பெருங்கொண்டல்கள்வானின்றுமுழங்க லெற்றுதெண்டிரைநதிகளின்விளக்கமிக்கியைத லுற்றுலாங்கதிர்ப்பால்வருதன்சிறப்புன்னி மற்றுமேற்படர்காளிந்திமுழங்குதன்மானும். | (14) |
மீதுமூடியபயோதரம்வேனில்வெப்பழிய மோதுவாமெனமுனிதரல்கூற்றொடும்பிறந்த மாதுமாநதியாதலிற்காளிந்திமாறாத் தீதுநோக்குபுதண்டிக்கமுயல்வதுசிவணும். | (15) |
கருநிறங்கொள்காளிந்தியோர்பாதியிற்கலப்பப் பொருவில்குங்குமம்பூசிடப்பொலிதருநுதல்போல் வெருவில்வானகமெங்கணுமூடியமேக மொருவில்வாங்கியதுறுகடுங்கோடைபோயொளிப்ப. | (16) |
உள்ளமாநதிபல்லவுமுறுபெருவெப்பங் கொள்ளவேனில்செய்கொடுமையுட்குறித்தகாளிந்தி மெள்ளமெய்வெயர்த்திடவெயர்நிலத்துவீழ்ந்தென்னத் தள்ளரும்பலவுறைசிதறினசலதரமே. | (17) |
வெப்புநோய்செயும்வேனிலைவீட்டுவனென்று பப்புகாளிந்திபல்வழிக்கொண்டுபாரிறங்கு மப்பெருந்திறமெனவள்ளலாரருளென்னச் செப்பருஞ்சலதரம்பொழிந்தனசெழுமழையே. | (18) |
மலைகளெங்கணும் பொழிந்தன மரஞ்செ றிகான நிலைகளெங்கணும் பொழிந்தன நிரம்புகா லோடைத் தலைகளெங்கணும் பொழிந்தன தாழையங்கழிசூ ழலைகளெங்கணும் பொழிந்தன வள்ளியரருள்போல். | (19) |
செய்யகோல்வலியரசு சீர்த்தெழுதருகாலை வெய்யகோலுடைக்குறும்புமாய்ந்தொடுங்குறுவிதம்போற் பொய்யுறாமுகில்பொழிந்தநீர்பரவுறுகாலை யெய்யுறாவிளைத்தொடுங்கினவேனில்வெப்பெங்கும். | (20) |
கொண்டலாகிய கவுணியகுலத்திளங்கன்று கண்டல்சேர்புனற்கடலெனுங்கௌரிதன்முலைப்பா லுண்டல்செய்தரும்பாமழைபொழிதலாலொழிந்த மண்டல்கொண்டதீவேனில்வெப்பெனும்பரமதமே. | (21) |
வரைநிரம்பினவருவிகான்யாறுபன்மரஞ்சார் தரைநிரம்பினவோடைகாலேரிகடவாச்செய் நிரைநிரம்பினநெய்தலங்கைதைசூழ்வேலித் திரைநிரம்பினசிறுமணற்கேணிமிக்கூறி. | (22) |
தரையடங்கலுமழைபொழிவெள்ளநீர்தவழ வுரைசிறந்தபைம்புற்களங்குரித்தனவொருங்கு லிரைநறுங்குழன்மண்மகள்வெப்புநோய்தீர்ந்து புரைசெய்பைம்படாங்குளிர்தபப்போர்த்ததுபொருவும். | (23) |
விண்டபல்கமர்வெள்ளநீர்புகுதரவொன்றிக் கண்டதேமெலாமேல்வழிந்தோடுமாகாணுங் கொண்டனீர்தரைக்கேயன்றிப்பாதலங்குறித்து மண்டனீதியன்றென்றுமோக்கறுப்பதுமான. | (24) |
கொடிமரம்கண்முற்பல்லுயிர்களுநிலைகூட முடிவிலாமுகில்பொழிதருபுவனமாழ்முந்நீர்ப் படியடங்கலும்போர்த்தமைநோக்கியப்படிக்கோ ரொடிவில்வான்பெயர்புவனமென்றுரைத்தனகுரவோர். | (25) |
குறிஞ்சி. நலம்விராவியபொன்னிசூழ்சோழநன்னாட்டுப் பலம்விராவியமழைவளம்யாவரேபகர்வார் குலம்விராவியவைந்திணைவனத்துளுங்குறித்த புலம்விராவியகுறிஞ்சியின்வளமுதற்புகல்வாம். | (26) |
ஈன்றதந்தைலாழிருக்கையினினமெனல்குறித்தோ சான்றவன்னையைத்தந்ததன்குலமென்றேர்ந்தோ வான்றகாதலியுயிர்த்தவரிடமெனலறிந்தோ தோன்றமந்திரங்கொண்டுறும்வேள்வரைதோறும். | (27) |
கோலவள்ளியாரொடுகுகனமர்தருகுணத்தா னீலமாமயிலாவயினமருவநீங்கா சாலமற்றவைதழைவிரித்தாடுமாறாங்கு மேலமைந்தவிண்வேந்தனூர்கருமுகில்விரவும். | (28) |
எங்கள்சாதியிலொன்றுமுன்வளர்த்தினிதெடுத்த திங்கள்வாணுதற்றெய்வதப்பிடிபுணர்செல்வன் றுங்கமாரிடத்தகன்றிடோமென்றுசூழ்ந்தாங்குப் பொங்கமும்மதம்பொழியுவாப்பலவவட்பொலிவ. | (29) |
மறையினந்தமுந்தொடரொணான்மருகனாய்மருவு முறைதெரிந்துபசரித்தல்போன்முழுவலிவேட ரிறைகொள்சந்தகில்விரையெழும்படியெரியிடுவார் நிறையுணாக்கொளநெடுங்குரற்செந்தினைவிளைப்பார். | (30) |
அறவனாகியகுமரவேட்காட்டவுமினிய நறவமேனலினிடியொடுகூட்டுபுநயந்து குறவருட்டவுங்குறித்துநாடோறுமுய்த்தீட்டும் புறவமுற்பலவிடமெலாம்போய்ப்புகூஉவருமீ. | (31) |
ஒருமடங்கலுமொருமதலையுமுன்னுடன்று பொருதழிந்தனவழிபடிற்பொலிவுளதென்றே யிருநிலம்புகழ்குறிஞ்சிவேலிறைவன்மந்திரத்தை மருவுநண்பொடுசூழவமடங்கலுங்களிறும். | (32) |
ஊடுமாதர்பாலங்குறைந்துன்னுவார்வினையைச் சாடுமண்ணல்பாற்றாழ்தலல்லாற்பிறதாழார் நீடுவேங்கையோடமர்புரிதிறத்தினானிறத்திற் கூடுபல்வடுவன்றியோர்வடுவிலார்குறவர். | (33) |
ஊரும்வான்மதிகாந்தளைப்பாந்தளென்றுன்னிப் பேருமாலொருசாரொளிபிறங்குசெம்மணியைச் சாருந்தீயெனவுளியமோடுறுமொருசார்மெய் தேருந்தன்மைவாரவிடிற்செறிவனபலவே. | (34) |
நீலமாமணித்துறுகல்கீழ்ப்படிதாநிலவு கோலமாமதிமேலுறநடுவிராக்குலவிச் சாலமேலுயர்சோதியந்தருநிற்றலிருவர் மாலவானுரீஇச்சிவபிரானின்றதுமானும். | (35) |
கரையிரும்பினாலிறாவுளர்தொடுவதுகவலை புரையிலாதவர்விளைத்தலும்போக்கரும் #கவலை வரையின்மற்றவர்படுதலும் # மாதாக்கவலை கரையிலாவவர்க்கென்றுமில்லாததுங்கவலை. # கவலை, தினை, # மாதரக்கவலை, பெண்களது கண்ணாகி யவலை | (36) |
குன்றவாணர்தங்குறிச்சிசூழ்வேலியுஞ்சென்னி யொன்றவைத்திடுமணையுமற்றவர்தமொள்ளிழையார் நன்றவாவுகையுலக்கைநகுதலைச்சீப்பு மன்றநாடொறுமாவனயானைவெண்மருப்பே. | (37) |
பொங்குசெம்மணிவிலங்கலுமரகதப்பொருப்புந் தங்குகற்குடிச்சைலமுமுலகெலாந்தழைய வெங்கும்வாள்விடுமுத்தலையிரும்பெயர்கிரியு நங்குதீரெறும்போங்கலுநயந்தது குறிஞ்சி. | (38) |
அரவுபூண்டநம்பிரானமர்சுந்தரப்பொருப்புங் குரவுபூண்டொருகுமரவேள்பொலிதருகுன்றும் பரவுமற்றவுந்தன்னகம்பொலிதரப்படைத்த வுரவுசேர்பெருங்குறிஞ்சியினருந்தவமொன்றோ. | (39) |
முல்லை. விண்டுவாதியர்தொழப்பொலிவெற்றிவேலிறையே மண்டுதற்கிறையாக்குபுவாழுமொண்குறிஞ்சி யண்டுபலவளத்தெவனுரைத்தனமினியறைவாம் வண்டுகிண்டுபன்முல்லைசூழ்நிலப்பெருவளமே. | (40) |
வேறு. பாயபலபெரும்புவனப்பகுதிபொதுக்கடிந்தோம்பு மாயன்மதித்திசுசிறப்புட்சிறப்பாகவனமோம்பிற் றூயதிரைப்பாற்கடலோவைகுந்தத்தொல்பதமோ வாயவனமிவைக்கதிகமாகுமெனில்வரும்பழியென். | 41 |
விரைமலர்செற்றிதருக்கண்மிகச்செறியும்பெருவனத்தைத் திரையெறிபாற்கடலென்றுசெப்புவதற்கையமிலை வரைவில்பசுக்கன்றூட்டிமடித்தலநின்றிழித்திடுபால் புரையில்பெருக்கெடுத்தோங்கப்போற்றிமால்வசித்தலினால். | 42 |
அண்டர்குழாம்பலசூழவாங்காங்குமலர்காயாக் கொண்டபெருஞ்சாரூபத்தவரமர்கோலந்தெரிக்க வண்டடையுந்தண்டுழாய்மாயனினிதமர்தலினாற் கண்டவனம்வைகுந்தமெனக்கரைதற்கையமெவன். | 43 |
மழைமறுத்தகாலத்துங்காயாவாய்மல்குதலாற் றழைமலர்செய்காயாவென்பெயர்பெற்றுத்ததையவற்றை விழைதருபைந்துழாய்சூழ்வமேயமாறம்பாற்கொள் குழையும்விழைவுணர்ந்தவைகள்குழாங்கொடுசூழ்ந்தமைமானும். | 44 |
கொடியிடையாய்ச்சியர்திரட்டிக்கொண்டசுவைநவநீத மொடிவறுதாழியினழல்வைத்துருக்குமணங்கவர்வதற்கும் படியிலவர்முறிமேனிபரப்புமணங்கவர்வதற்கு நெடிவனம்பன்னாசிபடைநீர்மையெனக்குமிழ்மலரும். | 45 |
திரையெறுபாற்கடனடுவட்டிருத்துயில்கொண்மணிமார்பன் புரையில்வனத்தாய்ச்சியரிற்றொறும்புகுந்துபால்கவர்ந்து விரைதரமத்தடியுண்டுங்கட்டுண்டும்விழைந்தமர்வா னுரைசெயவர்கையளையவுறுசுவையாதலையுணர்ந்தே. | 46 |
அழன்மிசையுற்றுறுபாறளளவுசுருங்கியுங்கரிய குழலிடைமின்னாரின்சொற்கொவ்வாமைகுறித்தன்றோ நிழலுருவந்திரிந்தனையார்நிரைவளைக்கைமத்துடைக்கச் சுழலடைந்தும்* அலர்கலந்துந்தோற்றமுறக்கதறிடுதல். *அலர்-நீர் | 47 |
தொறுவியர்தங்குவட்டுமுலைத்துணைக்கொவ்வாமையினன்றோ வுறுசுவைகொள்பாற்குடங்களுடம்புமுழுவதுங்கறுக்கு மறுவறுகற்புடையவர்தம்மருங்குலொவ்வாமையினன்றோ துறுதளவக்கொடியனைத்துந்தொலையாதவலர்படுமே. | 48 |
திருமகளாகியவுழையைச்சேர்ந்தவினமென்றுழையும் பொருவிலவளொடும்பிறந்தான்புடையமருமுயற்கினமென் றொருவில்பலமுயற்குலமுமுரிமைகடைப்பிடித்தொழியா வருமணிமார்புடைமாயோன்வீற்றிருக்குமாவயினே. | 49 |
திங்கணுதற்றிருமகள்சேர்செல்வனினிதோம்பிடுங்கா டங்கண்மலர்க்கடுக்கைதழைந்தமர்தலினாலறுகுறலாற் கொங்களவின்மலர்செறியுங்கூவிளங்கள்பொருந்துதலா லெங்கள்பிரான்செஞ்சடைக்காடென்றுரைத்தற்கையமிலை. | 50 |
வெள்ளியகோத்திரவப்போர்மேலுயர்ந்துதோன்றுதலால் வள்ளியநீன்மணிவண்ணமால்காக்கும்புறவவள மொள்ளியமால்வரைகாணவொருங்கடைந்துநிற்றல்பொரூஉந் தெள்ளியபல்பயற்றோங்கல்சிறுகுன்றச்செறிவொக்கும். | 51 |
நீலமணிகண்டனமர்நெடுங்களமுநிரம்புதவச் சீலமருவிடமேலைத்திருக்காட்டுப்பள்ளியுமெந் காலமுநன்றாங்கங்கைகண்டசோழீச்சரமுஞ் சாலவனத்தமைந்தவெனிற்றவஞ்சிறிதோபெரிதன்றே. | 52 |
மன்னன்முதல்வானரெலாம்வந்துதொழவரங்கொடுத்து முன்னவனெக்காலுமமர்*முற்கபுரமுதலாகப் பன்னரும்பஃறலந்தன்பாற்பரம்பவுளதெனத்தெரிந்தா லென்னருமுல்லையின்பெருமையெடுத்துரைக்கவல்லுநரோ. * முற்கபுரம் - பயரணியீசம், அது, உடையார் பாளையமென வழங்குகின்றது | 53 |
அம்மையார்நீழலில்யாமமர்வோமென்றருள்செய்த செம்மையார்வீற்றிருக்குந்திருத்தஞ்சைமுதலாக வெம்மையாரருளுய்க்குமிறைவர்தலம்பலவென்னில் வெம்மையார்பெருவனத்தைவிண்ணுலகுநிகர்க்குமோ. | 54 |
மருதம். குழக்கன்றுபின்றொடரக்குடஞ்சுட்டுப்பலபயில மழக்கன்றுகுணில்கொண்டமால்காக்கும்வனம்புகழ்வா னெழக்கன்றுநசையாற்சற்றியம்பினாமருதவளஞ் சழக்கன்றுசிறிதுரைப்பாம்பெரிதுரைக்கத்தகாமையினால். | 55 |
வேறு. பன்னரும்பெருமைவாய்ந்துபடர்தருவைந்தனீழன் மின்னருநிதிமுன்னெல்லாம்பணிதலைமேவிநிற்ப நன்னலவரம்பைமாதர்நடங்கண்டுவானங்காக்கு மன்னவன்காக்குமேன்மைவாய்ந்ததுமருதவேலி. | 56 |
வரைதரவருதலானுமாமலர்தாங்கலானும் புரையில்பல்பேதமாகிப்பலபெயர்பொருந்தலானுந் தரையகமோம்பலானுந்தண்ணளிநீரினானுங் கரையறப்பெருகும்பொன்னிகடுக்குமெம்பிராட்டியாரை. | 57 |
மலைபடுவயிரங்கொண்டுவருதலின்வானவேந்த னிலைமலைமலர்மேலாகலியைதலினெண்கணாளன் றலைவளைசுமத்தலான்மால்கடுக்கைசார்ந்தணைதலாலே கலைமறைபுகழுமெம்மான்கடுக்குநீரறாதபொன்னி. | 58 |
மணிமயிற்றழைமால்யானைமருப்பகினறுஞ்சந்தாதித் துணியொளிர்சுவணநெய்பாறுதைமலர்கரும்புகந்தி யணிகெழுசாலிபல்பூவலங்குநித்திலத்துப்பாதிக் கணிதமிலுறலாற்பொன்னிகலந்தபண்டாரம்போலும். | 59 |
இருகரைமுறியக்குத்தியெங்கணும்வெள்ளமாகிப் பெருகிமுன்னெழுந்தகங்கைப்பெருக்குமோர்திவலையென்ன வருகொருவருஞ்சாராமல்லையெறிந்தகடுகீண்டு கருகுபைங்கடல்கலக்குங்காமருதெய்வப்பொன்னி. | 60 |
உடைகரையடைத்துமள்ளரொருவழிச்செலுத்தலாலே யடைமனுத்தகைக்கப்பட்டவரவெனவடங்கிச்சென்று மிடைதருபொறிவாய்தோறும்விரைந்துபோய்ப்புகுமனம்போற் புடையமர்மதகுதோறும்போய்ப்புகுந்ததுநீர்வெள்ளம். | 61 |
கால்வழியோடியெல்லாக்கழனியும்புகுந்துமுன்னாட் பால்படுவேனில்செய்தபற்பலகமருமொன்றச் சால்புயர்தன்பாலாயபிளப்பெனச்சடுதிசெய்து கோல்வலிமன்னரார்ப்பக்குறையறுத்ததுநன்னீத்தம். | 62 |
சிவவியாபகமேயென்னச்செய்யெலாந்தகவிற்புக்க உவமையில்வெள்ளநோக்கியுவகைமேற்கொண்டமள்ளர் கவலரும்பழையர்பாற்போய்க்கடைவழிதரக்கண்மாந்தித் தவலருமுழன்மேற்கொண்டுசார்ந்தனர்பழனமெங்கும். | 63 |
பெருவலித்துணைக்கடாவின்பியலுறநுகங்கிடத்திப் பொருவருமதற்குநாப்பட்பொருந்திடவேர்க்கால்சேர்த்தி மருவுறவிடக்கைமேழிபிடித்துமற்றொருகைமேவ வொருகுறுமுட்கோல்பற்றியுழுவராலுப்பிமள்ளர். | 64 |
குடதிசைநின்றுமள்ளர்குணதிசைச்செல்லவுய்த்தும் வடதிசைநின்றுமற்றைத்தென்றிசைமருவவுய்த்து மிடர்செய்புல்லாதிமாயவிரும்படைச்சானெருங்கத் தொடர்பலவிளாக்கள்கோலியுழுதனர்தொள்ளிசெய்தார். | 65 |
செறிபலவுயிர்காப்பாளர்சிதைவுசற்றடைவராயி னறிதருபயன்கொள்வார்மற்றதுதவிர்த்துயர்த்துவார்கள் செறிபலபயிர்காத்தோம்பும்வரப்புறுசிதைவுநோக்கி யறிதருமுழவர்தாங்கங்கரிந்துயர்த்தினர்மேன்மேலும். | 66 |
உழுதொழில்புரிந்தகாலையழுந்தலோடூழ்த்தறந்தா டழுவியதுணர்ந்துமாற்றித்தனியிறுமாப்பேய்வார்போல் வழுவறுபரம்புபூட்டிமற்றதன்மேற்கொண்டூர்ந்து கொழுநிலமாடியென்னச்சமஞ்செய்தார்குலவுமள்ளர். | 67 |
மருதநன்னிலத்துவேந்தைவயல்வளம்பொலிகவென்று கருதுபுகைகள்கூப்பிக்காமருமணங்கூர்செந்நெற் குருமுளைவாரிவித்திக்கொண்டநீர்மறுநாட்போக்கிப் பருவலிமள்ளரோம்பமுளைத்தனபழுதொன்றின்றி. | 68 |
உறுமழப் பசிய றிந்து பாலூட்டி யோம்புந் தாய்போற் குறுமுளை யளவ றிந்து தகுதியிற் குளிர்நீர் பாய்த்திச் செறுவலி மள்ள ரோம்பச் சீமரு மகள்வெற் பீன்ற நறுநுத லுருவுற் றென்ன விளரொரீஇப் பசந்த நன்கு. | 69 |
பல்லுயி ரடைய மாயைப் பாலமை போக மெல்லாம் புல்லுற வளந்து நல்கும் புண்ணியப் பெருமான் போல நல்லியற் கழனி மேவ நாற்றங்கா னாற னைத்து மொல்வகைப் பறித்து நட்டா ரொன்றொழி யாமன் மள்ளர். | 70 |
ஈன்றவள் கிரக நின்றும் விருத்தியாங் கிரக மெய்துஞ் சான்றவொண் ணுதலா ராங்குத் தாழ்ந்தன ரெழுதல் போல வான்றபல் வயலு ணட்ட நாறெலா மமையத் தாழ்ந்து தோன்றமே லெழுந்த தோம்புந் தொழிலின ரெழுந்து துள்ள. | 71 |
புலைமிடி பிணி* முன்னான் கல்வியைப் பொருந்திற் றென்ன வலைதரு காம மாதி யருந்தவத் தினைச்சூழ்ந் தென்ன மலைமல மாயை கன்மம் வளருணர்ச் சியைச்சார்ந் தென்னத் தொலைவில்பல் களைகள் வந்து சூழ்ந்தன பயிரை மாதோ. | 72 |
உயிர்மல முழுது மோப்பக் காலமோர்ந் துறுபெம் மானிற் பயிரிடர் முழுதுந் தீர்ப்பான் பருவந்தேர்ந் தடைந்த வாட்க ணயிர்படு மதுரத் தீஞ்சொ லுழத்திய ரடங்கக் கூடித் தயிருடை மத்தே யென்னக் களைபல சாட லுற்றார். | 73 |
முண்டக மனைத்துங் கொய்வார் கொய்தவை முருங்கு மாறு கொண்டபங் கயப்பேர் தேர்ந்து குளிர்ந்தசேற் றிடுதல் செய்யார் கண்டபல் குலையுஞ் சேர்ப்பார் கதிருங்கண் ணோட்ட மின்றித் தண்டலி லுணவாம் பைங்கூழ்க் கூறாத லுணர்ந்து சாடும். | 74 |
அடிகர முலைக்கு மாறா வலரரும் படங்கக் கொண்ட முடிவரு மம்பு யத்தை முடுக்கெனக் கண்கள் காட்டத் தடிதரு மவர்கை காட்டுந் தாரைவன் பகையா மென்று கடிதருங் குவளை யெல்லாங் காமரு கழனி மாட்டு. | 75 |
பரம்பரன் முடிமே லேறும் பாங்குடைக் கமல மெல்லா நிரம்புநீ ரோடை யாவி நீத்துநீர் சிறிதே தங்கும் வரம்பமை செய்யுண் மொய்த்த வண்ணத்தா லுழத்தி மாதர் கரம்பறித் துதிர்க்க வன்னார் காற்றுவைப் புண்ட வெங்கும். | 76 |
இடவிய வாவி யோடை யெனப்படும் புக்கி னீத்துத் தடநெடுஞ் சாலி மேய செறுவெனுந் துச்சில் சார்ந்த மடமையா லிருகோ ணட்டு மற்றிரு காலப் பூவும் படரடைந் தொழிந்த யார்க்கு மொதுக்கிடம் பண்ப தன்றே. | 77 |
பிடிநடை யுழத்தி மார்கள் பிறங்குநன் னிலத்து வேந்தற் கொடிதலில் செல்வ மெல்லா மொழியமுன் செய்த திந்த கடிமல ரொன்றே யென்று கமலங்க ளனைத்துங் கொன்றார் படியமற் றதுசார் பூவும் பாற்றினார் விடுவார் கொல்லோ. | 78 |
விளைநலத் துழத்திமாதர்விரிசெழுங்கமலப்போதுங் களைகெழுகுவளைப்போதுங்கைரவப்போதுமற்றை வளையியல்கொடியுமஞ்சைவலங்களுநனிமுயன்று தளைவிடப்புரிந்தார்நல்லாரெனும்பெயரவர்க்கேசாலும். | 79 |
நிலம்வெளிவழிச்செலுத்திநெடும்புரஞ்செற்றபெம்மான் பலவகைதடிந்துசின்னம்பண்புறுமெய்ப்பூண்டாங்குச் சிலமலர்குழலில்வேய்ந்தார்சிலமலர்கையிற்கொண்டார் சலமலிபண்ணைநீங்கித்தாமமரிருக்கைபுக்கார் | 80 |
களையொருங்கறுதலோடுறுகருநிறங்கொடுசெஞ்சாலி விளைபயிர்காமமாதிமேவுறாத்தவத்தினோங்கி வளைமதிமுடியான்பாதமலரடைந்தவர்கைத்தானத் தளைபயன்கிளைத்தல்போலொன்றனந்தமாய்க்கிளைத்தபண்ணை. | 81 |
மனக்கினிதாயபூக்கண்மடிதரற்கேதுவாஞ்சொ லிளக்குமேலேழறீர்ப்பாமென்றெண்ணிவெங்கலியைநாளுஞ் சினக்குமற்றவைசூற்கொண்டுவெளிவிடறெரிந்துமேன்மேற் கனக்குமாசெய்ததிந்துகதிர்கவிழ்த்ததுநீர்தெவ்வி. | 82 |
பதடியொன்றேனுமின்றிப்பழுத்தசெஞ்சாலிநோக்கி மதவலிமள்ளர்யாரும்வேதினமங்கைவாங்கி முதலரிந்தவனிவீழ்த்திமுதுசுமையாகயாத்துச் சுதமில்வண்களத்துத்தத்தந்தலைமிசைசுமந்துசேர்ப்பார். | 83 |
போற்றுசெஞ்சாலிபல்லபொன்மலையெனப்போர்செய்துந் தோற்றுவெண்சாலிவெள்ளிக்கிரியெனத்தொகுபோர்செய்து மாற்றுபல்குறியுஞ்செய்வாரடுகடபலபிணைத்து வீற்றுவீற்றாகவப்போர்தள்ளுபுமிதிக்கவிட்டார் | 84 |
உழுதவந்நாளிலிந்நாளுவகைசெய்நன்னாளென்று முழுவலியொருத்தலெல்லாமுதுகளஞ்சூழும்போது கொழுவுவைவாயிற்கவ்விக்குதட்டுபுநனிமுயன்று தழுவியபலாலநின்றும்பிரித்தனசாலிமுற்றும். | 85 |
சொற்றவையுதறிப்போக்கித்தூற்றிநெற்குவித்தளந்து கற்றவன்மறையோர்முன்னாக்களச்செலவொருங்குசெய்து கொற்றவனாறிலொன்றுகொளக்கொடுத்தெச்சம்வாரி முற்றவுமனைக்கணுய்ப்பார்முழக்கம்விண்செவிடுசெய்யும். | 86 |
அரிசனஞ்செறியுமிஞ்சிவாதியவகழ்கின்றாரும் விரிதலைக்கரும்புவெட்டியுடைத்தலைமேற்கொள்வாரு மெரிதரப்பாகுசெய்துகட்டிகளியைக்கின்றாரும் பொரியரைத்தேமாவாதிப்பூங்கனிகொள்கின்றாரும். | 87 |
கந்திகளீன்றதாற்றுப்பழம்பலகவர்கின்றாரும் புந்திசெய்நல்லாரோடுபுதுப்புனலாருவாரு முந்தியகிழத்திமார்தமூடலையுணர்த்துவாரு முந்தியநகரமெங்குமொய்த்துளாரிடையறாமே. | 88 |
மன்னியவாரூர்நல்லம்வாஞ்சியமிழலையம்பர் பன்னியபுகழ்க்கோமுத்திபகரிடைமருதுநாளு மின்னியகுடந்தையையாறுயர்வளமிகுமாயூரந் துன்னியபிறவுங்கொண்டமருதம்போற்றூயதுண்டோ. | 89 |
நெய்தல். வாய்ந்தவிண்ணுலகங்காக்கும்வள்ளலாயிரங்கண்கொண்ட தேய்ந்தபல்வளமுநோக்கற்கெனப்பொலிமருதவைப்பி னாய்ந்தசில்வளமுஞ்சொற்றாமல்லாம்யாமலர்ப்பூம்புன்னை தோய்ந்தபைங்கானநெய்தற்றொகுவளஞ்சிறிதுசொல்வாம். | 90 |
வலிகெழுசுறவுகைக்கும்வருணனாற்புரக்கப்பட்ட பொலிவுடையதுநீர்நெய்யிற்பொலியழற்குண்டமாகி மெலிவில்பல்பரதவர்க்கூண்விளைநிலமாகியோவாக் கலியமைகடல்விராயகருங்கழிநெய்தல்வைப்பு. | 91 |
மணிகளும்பொன்னுமாயமாண்பெருஞ்செல்வமேவிக் கணிதமில்பெருமைவாய்ந்தகடற்குவர்புலாலென்றோதுந் தணிவரும்பழியிரண்டுந்தபுத்தலிற்புகழாமென்றே யணிகொள்புன்னாகமாதியலர்ந்துதேனாற்றம்வீசும். | 92 |
ஒருதினமுதல்வன்பாற்பொய்யொன்றுரைதோடநீங்க வருதினமெல்லாங்கைதைவருதிரைமூழ்காநிற்குங் கருதிதுகண்டுந்தீரார்கரைவர்பொய்யென்றுஞாலத் துருவினரென்னிற்றீர்க்குமுபாயமென்னுணர்ந்தார்கொல்லோ. | 93 |
கூடியபவளக்காட்டிற்கூன்வளையூர்ந்துசேற லாடியபெருமான்வேணியணிபிறைதவழ்தலேய்க்கு நிடியவல்லியொன்றுநிற்கமீன்சுற்றுந்துள்ளல் வாடியமருங்குற்கூத்திவாளாட்டுவினோதந்தேற்றும். | 94 |
வடுவகிரனையவுண்கண்வலைச்சியர்மீன்பிளத்த றொடுகடலுப்புமாட்டலுணக்கல்சூழ்தருபுள்ளோப்பல் விடுதல்செய்திடலானுண்டோமேனியிற்புலவுநாற்றங் கெடுவகையனையரைம்பாற்கேதகைவாசம்வீசும். | 95 |
கலந்துநின்றிழியும்வேழங்கருநிறங்கெழுபுன்னாக நலத்தறல்குடித்தமேகநாடிவேறறியவேண்டி னிலத்தியைநடையாலென்றுநிலைகொடுநிற்றலான்மேல் வலத்துறவெழலன்றிமற்றொன்றாலறியலாகா. | 96 |
உறுதிமில்லிடுக்குமோதையுமணருப்பளக்குமோதை பெறுவலைவீசுமோதைபெற்றமீன்கவருமோதை மறுகுநீர்குளிக்குமோதைவளைபலபோழுமோதை யிறுபன்மீனீர்க்குமோதையெழுகடலடைக்குமோதை. | 97 |
இழிபொருளூயர்வுசார்ந்தாலுயர்பொருளிழிவுசார்ந்தாற் கெழியதன்குணமாமென்றேகிளத்தன்மெய்புலவுசார்ந்த கழிநறுநீலந்தீயபுலானாறுங்கழிபுலான்மீன் கொழிநறுநீலஞ்சார்ந்துமலர்நாறுங்குணமீக்கொண்டே. | 98 |
போதலிலாகூழுள்ளார்பொருண்முயன்றீட்டுங்காலை நோதலிலாதுமந்தப்பொருளுறனுவலக்கேட்டோங் காதலினாவாயுந்திக்கணக்கின்மீன்குவிக்கும்போதே யாதலுண்டாகத்துள்ளியாவயின்விழுவபன்மீன். | 99 |
கிடைநின்றுமெழுந்தமாலிற்கிளர்கரும்புன்னைநிற்குந் துடையின்றிப்பவளவல்லிதழுவன்மாத்தழுவனேரு முடையபொன்றழுவவம்மானகையொருங்குற்றாலென்ன மிடைதருகுழைமுகத்துவெள்ளியவரும்புதோன்றும். | 100 |
வலைமடமகளிர்காயுமயிலைமுற்சாரவொட்டா தலைபுரிகுவரானாலுமாவயினகலாபுட்டங் கொலைபுரிமதனேவாயகொழுமலருண்டுமன்னர் தலையமைபோருண்டென்னுந்தன்மையுட்டெரித்ததொத்தே. | 101 |
முடிவலையெடுத்துவீசிமொய்த்தமீன்பலவுங்கொல்லுங் குடிகளையிழிந்தவென்றுகூறுதற்கஞ்சுகின்றா முடிவலையெடுத்துவீசிமொய்த்தமீன்பலவுங்கொன்றே யடியரிலொருவராயவதிபத்தர்பெருமையெண்ணி. | 102 |
மறையெலாமருச்சித்தேத்தவள்ளலாரமரும்வைப்பு மறையுமோர்தவத்தினானைக்காயத்தாரோகணித்து முறையருள்செய்துநாளுமுதல்வனாரமரும்வைப்பு நிறைதருதவத்திந்தநெய்தலோமற்றுமொன்றோ. | 103 |
மயற்பகையனைத்தும்வென்றுமாதவத்துயர்ந்தோனாய வியற்பகையென்னும்வள்ளலெம்பெருமானைக்கண்டு செயற்படுமொருசாய்க்காடுபல்லவனீசஞ்சேர்ந்த தயற்படுநிலமோநெய்தலெனிலதன்றவஞ்சற்றாமோ. | 104 |
பாலை. வளமலிமுல்லைவாயின்மயேந்திரப்பள்ளிமுன்னா வளவறுதலங்கடன்னுளடக்கிமற்றளவின்மேன்மை யுளதெனவெவருங்கூறவுறுநெய்தல்வளமென்சொற்றாம் பளகறுபுலமைவாய்ந்தீர்பாலையின்வளமுஞ்சொல்வாம். | 105 |
வேறு. சொற்றநானிலவெல்லையுட்சுண்டலாயொதுங்கப் பெற்றதெந்நிலமந்நிலம்பெருமுதுவேனி லுற்றநண்பகற்பாலையென்றொருபெயர்பூணுங் கொற்றமேவுறக்காத்தினிதோம்புவாள்கொற்றி. | 106 |
நீரிலாநிலமாயினும்வேம்புகணிரம்பிச் சாரிலாந்தருநிழறருமீந்துகடதைந்து பேரிலாப்பசிபேர்தருகனிதருநெல்லி யோரின்வாய்ப்புனலுறச்செயுமினப்புகழுறவே. | 107 |
எந்நிலத்தருந்தோல்வியையெண்ணுநரல்லர் நன்னிலத்தமர்ந்தென்பயனெனவதைநண்ணி யந்நிலத்தமர்கொற்றிதனடிதொழுதந்த வெந்நிலத்தமர்பூக்கொளினினியெவன்வேண்டும். | 108 |
மன்னுபல்பரன்முரம்பினைவரையெனவாங்குத் துன்னுநிம்பவண்கனிசிவக்குறியெனத்துணிந்து பன்னுபல்கழுகளாவுவாரணப்பறம்பின்* மின்னுசோதியைச்சூழ்கழுகடைவதுவிளைந்தே. | 109 |
ஒல்லுமிந்நிலம்பயனிலதாகுமென்றுரைப்பார் புல்லுமற்றதனுண்மையைப்புந்தியுட்குறியார் சொல்லுமெந்நிலத்துள்ளதாலிந்நிலந்துதைத்த கல்லுநல்லுணவாயுயிரோம்புதல்கருதின். | 110 |
பரவுகோங்கங்களெங்கணுமுகுந்தமென்பஞ்சு விரவுதன்மையானடப்பவரந்நிலமிதியார் கரவுதீர்தரநோதலுமிலரெனிற்கரையு முரவுசாலவர்சுரநிலத்தவரெனலொக்கும். | 111 |
திணைமயக்கம் செற்றமார்மறத்துவலை # யார்குரம்பைகள் செறியக் கொற்றமேவியகொற்றிவாழ்கோட்டமுட்கொண்டாங் குற்றயாவர்க்குங்கூடுமாறருள்சுரத்துறுசீர் சொற்றனம்மினித்திணைமயக்கமுஞ்சிலசொல்வாம். # உவலை - ஓட்டை | 112 |
வரையகம்பொலியொருதருத்தேத்தடைவழியும் புரையிலின்மதுப்பொதுவியர்பாற்கலத்தேற்ப விரைசெய்கானவான்பான்மதுக்கலம்விழிந்தேற்பா ருரைசெயுங்கொடிச்சியர்பரிவருத்தனையுன்னி. | 113 |
கானவேறுபுற்றினைக் * குதர்ந்தெழக்கண்டகழனித் தானவான்பகடடிகொடுதரையினைவெட்டு ஞானநாயகனூர்திகண்டொருநமனூர்தி யானதஞ்சிமண்புகமுயன்றிடுதிறனமையும். * குதர்தல் - சிதறுதல் | 114 |
நல்லநீர்வயனின்றெழுவயலைமாநாலைப் புல்லென்னீரளாமுவர்ப்புனனின்றெழுபவள மெல்லவந்துசெய்நல்லநீரளாமிருவினையா லொல்லைமேன்மையுங்கீழ்மையுமாறுறுமுயிர்போல். | 115 |
குன்றமேவியவிறவுளர்சிறுமகார்குழுமி வென்றவெம்புலித்தோலுகிர்பறித்தனர்வீச வொன்ற நெய்தலங்குழமகார்ஞாழலொள்ளரும்பு நன்றவாவுபுபறித்தெதிர்வீசினர்நகுவார். | 116 |
கரியகுன்றமர்பசுமயிலாலுதல்கண்டு பிரியமேயகானகத்துவான்கோழிபேருலகந் தெரியவாடுவபற்பலகலைகளுந்தெழிந்த வரியர்போன்றுபுன்கவிஞரும்பயிலுமத்திறம்போல். | 117 |
குரவுதாங்கியபாவைக்கான்பால்வநங்கொடுக்கும் விரவுவாரிமுத்தெறிதரும்பணைகழைவீசு முரவுமால்வரைபொன்மணிமுதலியவுதவும் பரவுபாவையென்றாற்கொடார்பாரிடத்தெவரே. @ ஆரணப்பறம்பு - வேதாசலம். | 118 |
நலமலிந்தவிவ்வளங்கெழுசோழநன்னாட்டு வலமலிந்தபல்குடிகளுந்தமக்குரிமரபிற் புலமலிந்தநல்லொழுக்கமன்பமைதரப்பொருந்திப் பலமலிந்தவான்றிருவொடும்பொலிவபன்னாளும். | 119 |
. பொன்னுநேர்தராப்புலவர்பல்லோர்களும்புகழ மன்னு நீர்வளநாட்டின்வான்சிறப்புறச்சொல்வான் முன்னுமாசைமற்றொருவிதந்தணிதரமொழிந்தாந் துன்னுமேன்மைமாயூரத்தின்வளஞ்சிலசொல்வாம் | 120 |
4. திருநாட்டுப்படலமுற்றிற்று
ஆக திருவிருத்தம் 155
---------------
பாங்குசேர்தவமுடையரேவசித்திடுபண்பாற் றாங்குவார்சடைப்பிரானுமையொடுமமர்தகவால் வீங்குபேரொளியாலழியாதமர்விறலா லோங்குவான்சிவலோகமேகௌரி மாயூரம். | 1 |
சொற்றபல்வகைநூலுந்தன்பானின்றுதோன்றப் பெற்றமேன்மையாற்பரன்*அகப்பொருளெனப்பெற்று மற்றவானவர்புறப்பொருளெனக்கொண்டமாண்பா லுற்றமாமறைபோல்வதுகௌரிமாயூரம். *அகப்பொருள் - அகநகரத்துப் பொருள் | 2 |
கரியமான்மகன்கண்டபன்னகரத்துளொன்றே லரியவாமலர்த்தூயவன்வழிபடற்காமோ பிரியமேவவெம்பிரான்புரிநகரெனல்பெற்றா முரியநான்மறைமுழக்கறாக் கௌரிமாயூரம். | 3 |
மருவுமெண்டிசைப்பாலர்கண்மலரவன்மாயன் பொருவுதீர்தருமொவ்வொருபதமுறப்போற்றத் திருவொடுந்தருவள்ளலார்செறிதிருநகரே லுருவமற்றுமொன்றொப்பதோகௌரி மாயூரம். | 4 |
முத்தவாணகைச்செய்யவாயரம்பையர்மொய்த்த சுத்தமாநகராயதொல்வானகரென்றும் *அத்தமாநகரென்றெடுத்தியாவருமறைதற் கொத்தவேதுவாமுழுநகர்கௌரிமாயூரம். *அத்தமாநகரம் - பெரியபாதிநகரம் எனவும், பெரியபொன்னகரம் எனவுங்கொள்க. | 5 |
தேனவாங்குழலஞ்சனாயகியொடுதெய்வ வானநாயகர்வள்ளலார்மருவுமாயூர மானமோவுபேரொளிகொடுவயங்கலால்வானத் தானமாநகர்*நிசிநகரெனச்சொல்வார்சான்றோர். *நிசிநகர் பொன்னகர் எனவும், இருணகர் எனவுங்கொள்க. | 6 |
வரைமுன்னாகிய நால்வகைநிலவளமதித்தே புரையிலாநிலஞ்சுரநிலமெனப்புகல்வதுபோ லுரைசெய்மேன்மைமாயூரநான்கெல்லையுளோர்ந்தே கரைவர்வானகர்சுரநகரெனப்பலகற்றோர். | 7 |
பரித்தபல்வளக்கௌரிமாயூரமிப்பாரே யுரித்தவாயுறைவதற்கெனவுறையவும்வறுநீ விரித்தமேலென்பாலமர்வதென்னெனமதிமிளிர்வான் சிரித்ததாகும்பொன்னகரினைத்தாரகைச்செறிவு. | 8 |
விரிதரும்புகழ்ந்கௌரிமாயூரத்துவிளங்கும் பரிகள்குஞ்சரம்பசுநிதிதருமணிபல்ல தெரியுமிவ்வளனமைதராச்சிறியபுன்னகரைப் பிரியமிக்கதற்கொப்பெனவெவர்சொல்லப்பெட்பார். | 9 |
அளகையென்பதுமிகுபொருளுடையதேயானும் பளகறப்பகுத்தீதராமையினுவர்ப்பரவை தளர்விலாநிதிபடைத்தமாயூரஞ்சார்ந்தோர்க்கு வளநிலாவுறக்கொடுத்தலால்வயங்குபாற்புணரி. | 10 |
வேறு. அன்பினையருள்சூழ்ந்தென்னவருளினையமலச்சோதி வன்புறும்படிசூழ்ந்தென்னமயிலாடுதுறையென்றோது மின்புகழ்மாயூரத்தையெற்றைக்குஞ்சூழாநிற்கும் பொன்புலமெனக்கொண்டார்க்குநிழல்செயும்பொங்கர்ச்சோலை. | 11 |
தெருள்வளரருளைச்சூழ்ந்தசிவப்பிரகாசத்தூடே பொருள்வளரிடையறாதவானந்தம்பொலியுமாபோ லருள்வளர்மயிலைசூழ்ந்தவந்தளிர்ப்பொழிலினூடே கருள்வளர்கலிதீர்செஞ்சொற்காமருகழனிமல்கும். | 12 |
வயலகம்பொலியாநின்றவான்கழைக்கருப்பங்காட்டோ டயலமர்தருவிற்றேமாங்கனிவநமளாவுந்தன்மை யியல்வளர்காழிஞானசம்பந்தவிளவேற்றோடு மயறவிர்ஞானவாய்மைவாகீசர்கலந்ததொக்கும். | 13 |
கரியபுன்னாகநிற்றனிற்கின்றவடுகற்காட்டுந் தெரியுமுக்கிளைக்கோடொன்றுதிருக்கையிற்சூலங்காட்டும் புரிதரவருகுவெள்ளைமுழுமதிபொருந்தமேவ லரியமற்றொருகைமேயவயன்றலைமண்டைகாட்டும். | 14 |
மதுவுகக்குழிந்ததேத்துவாழைமாங்கனிகள்சோப் புதுமணங்கொழிக்குமற்றைக்கனிகளும்பொருந்துங்காட்சி முதுபுகழ்ச்சிவத்தானத்துக்கவுணியமுதல்வாகீசர் கதுமெனப்புகுதச்சூழுமடியரேகடுக்குமென்றே. | 15 |
கரையமர்த்தலியீன்றகாமர்பாசிலைமேல்வீழ்ந்து வரையறைதளிர்செஞ்சாலிக்கதிர்பலவருடுந்தோற்றம் புரைசெய்மேற்போர்வைநீத்துப்போற்றுதண்டுலமாய்ச்சோறா யுரைகெழப்பின்புமேவுமுரிமைமுன்னுறுதல்போலும். | 16 |
மயிலியலென்றுகூறும்வழக்கறமயிலேயாய குயின்மொழியுமையாள்பூசைகுயிற்றியதானமென்று வெயினிலவாகுஞ்சோலைவிரிமலர்க்கொம்பர்தோறும் பயினடமியற்றாநிற்கும்பசுந்தழைத்தோகைமஞ்ஞை. | 17 |
சோலைசூழோடைதோறுந்தொடுபுனற்பட்டந்தோறு மாலைவாய்மலர்செவ்வாம்பன்மலர்பலசெறிந்துதோன்ற லாலைசூழ்திருவாரூரினமிநந்தியடிகணீர்மேற் பாலையார்பற்பறீபம்பரப்பியகாட்சிமானம். | 18 |
நால்வகைமலரும்பூத்தநந்தனவங்கடோறு மோல்வகையொழியாவண்டரொருங்குறவளைக்குங்காட்சி நூல்வகைமுழங்குந்தேவர்நூனந்தீர்ந்தமர்தேமென்று மால்வகையவுணர்பல்லோர்வந்துவந்தடைதல்போலும். | 19 |
புறநகர். கலைபுகல்வளஞ்சான்மேன்மைக்கௌரிமாயூரச்சீர்த்தி யலைவரும்பொதுமைதன்னிலறைந்தனஞ்சில்லவப்பா னிலைபுறமிடையுள்ளென்றுநிகழ்த்திடுநகரமூன்று ளுலைவறுபுறமென்றோதுநகர்வளஞ்சிலவுரைப்பாம். | 20 |
உம்பராதியர்பல்லோர்க்குமூறுதீர்வலியேரம்பத் தம்பிரானடைந்ததெங்களுறுப்பொன்றன்சார்பாலென்னிற் பம்புபல்லுறுப்புஞ்சேர்ந்தவெம்வலிபகர்வார்யாரென் றிம்பரையுணர்த்தியாங்காங்கியங்குவவெண்ணில்யானை. | 21 |
தரைமுதலெட்டுமாயதம்பிரான்மேனிமுற்றும் புரைதபமறைத்ததொன்றுபோர்த்தியதோலேயென்னிற் கரைசெயம்முடம்பின்பாழிகணக்கிடப்படுமோவென்று வரையறமுழங்கியென்னமுழங்குவமதலால்யானை. | 22 |
கறையடியென்றுந்தந்தாவளமென்றுங்கரியென்றும்பா ரறைதருநால்வாயென்றுமலிர்புகர்முகமதென்று மிறையிலொவ்வோருறுப்பான்மிகுதியும்பெயர்பெற்றோம்யாங் குறையுளபிறவென்றெள்ளுங்குஞ்சரமனந்தமாங்கண். | 23 |
எங்கடந்தலையிற்கோடொன்றில்லதையெய்தப்பெற்ற திங்களஞ்சடையான்றாளிற்றிறனரமடங்கற்சென்னி பங்கமுற்றொழியத்தாழும்படிகண்டுமரிதெவ்வென்பார் தங்களொள்ளறிவென்னென்றுதந்தத்தானகைக்கும்வேழம். | 24 |
மருவலர்மருமம்போழுமருப்பினமகுடச்சென்னி திருகுறுங்கரத்தயாக்கைசிதைதரத்தேய்க்குந்தாள வெருவருமுகிலுமஞ்சுமுழக்கினவென்றிசோட லொருவருமதமால்யானைவாரிகளுலப்பிலாத. | 25 |
அரிவிறலுருவங்கொண்டவரியெனப்படுமோர்தேவும் விரிதருமீற்றிலெங்களுருக்கொளல்வேண்டுமென்னிற் புரியுமெம்முருவச்சீர்த்திபுகலுதற்கடங்காதென்று தெரிதரமுழங்கல்போலச்சிலைத்தனதிரிவபாய்மா. | 26 |
எங்களினான்குகூடியிமையவர்கூட்டத்தோடு துங்கவெண்கயிலைமேயசோதியைப்புலிமேலேற்றிப் பொங்கமுன்னீர்த்தவென்பார்புகழதன்றொன்றேசாலு மங்கதுதெரிவார்யாரென்றியம்பலினார்க்கும்வாசி. | 27 |
மறைமொழியந்தணாளர்வழாதுமுப்பொழுதுஞ்செய்யு நிறைபெருஞ்சகாயத்தாலேநிகழுமோராழிபூண்ட பொறையிலாவொருதேரீர்த்துப்போமெழுபரிகளிவ்வூர்க் குறைவிலாவொன்றேயீர்க்குஞ்சகாயமுங்குறிக்கொள்ளாதே. | 28 |
ஆயதம்முருவங்கொள்ளுமலங்கலந்துளபமாயோன் மேயநன்மனையாளென்னுமெய்யுளத்துணர்ந்ததேயோ பாயபல்புரவியெல்லாம்பார்வடுப்படுமென்றஞ்சித் தோயவுந்தோயாவாகவடியிடாத்துனைந்துனைந்துசெல்லும். | 29 |
செறுநர்தஞ்செம்பொன்மோலிச்சென்னிமேற்குரமழுத்து மறுதியினமயம்வந்தாலாழியோரேழுந்தாண்டும் பெறுவதுவென்றியன்றிப்பெற்றறியாதவென்று மறுவறுவாசியாத்தமந்திரம்பல்லவாங்கண். | 30 |
தரைகிழித்தேகுஞ்செய்யதாளும்விண்ணுலகமென்னும் வரைகிழித்தேகுமம்பொற்சென்னியும்வாய்ந்தபொற்றே ருரைகிழித்தேகுஞ்சீர்த்*தீயுருவன்பூண்கரியவாசி புரைகிழித்தேகும்வெள்ளைத்துவசநாடிரண்டும் போலும். *தீயுருவன், அக்கினி மலையாகிய சிவபெருமான். | 31 |
தழுவியதளிரியற்குக்குழைந்தவன்பாதஞ்சார வழுவியவச்சுவாய்ந்தசயந்தனமாறாநாணுண் முழுகியாருறினுமச்சுமுறிதராவினையபொற்றே ரொழுகியசுமவாநிற்குந்தோற்றதற்குறுவதென்னே. | 32 |
மறையெலாமெடுத்துக்கூறுமாதேவனேறும்பொற்றே ரிறையிலோரவுணன்வௌவிக்கரப்பதற்கியைந்ததன்றே நிறையொளியினையபொற்றேரதுபெறாநிலைமையாலே முறையின்மற்றதனோடொப்புமொழிதரல்குற்றமன்றோ. | 33 |
விரைதரவீர்த்துச்செல்லும்வெம்பரிக்குழாத்தையோதும் புரைதபுசயந்தனந்தான்றொடர்ந்ததுபோகுங்காட்சி யுரைமறைக்காட்டினின்றுமும்பர்நாதனைவாகீசர் திரைசெய்நீர்வளஞ்சால்வாய்மூர்சேர்தரத்தொடர்ந்ததேய்க்கும். | 34 |
தரியலர்கூட்டமேவிற்றரைமிசைக்கிடத்தியேறி விரிகுடர்முளைநெய்த்தோர்பரந்திடமிகத்துவைக்கு மரிமணிப்பொலந்தேருட்கொண்டலங்குயர்சாலைமேலாற் றெரிதரவோராழித்தேர்முதலியதிரிவமாதோ. | 35 |
விழித்தகண்ணிமைத்தல்செய்யார்வேலெதிர்வந்தபோதுங் கொழித்தபொற்கழற்கால்பின்னர்வைத்திடார்கூற்றுற்றாலு மழித்தபல்லூறுற்றாலும்பிடித்தவாளங்கைசோரா ரிழித்தசொல்லடையுங்காலத்துயிர்ப்பொறையெய்தாவீரர். | 36 |
தரியலரம்புமார்புத்தையவாம்வடுக்களின்றி யுரியபொற்கலங்கள்வேறொன்றுவப்புறார்தெவ்விலாமைப் பெரியகண்டூதிதின்னப்பித்தரிற்றிரிவார்நேரிற் சரியவென்றிடலாமென்றுதடம்புயம்வீங்கும்வீரர். | 37 |
ஒருகையிற்பலகைமற்றையொருகையில்வடிவாடாங்கித் திருகையுற்றமர்செய்வார்முற்செல்லுவரவர்பின்னிட்டாற் பொருகைகொண்டமைக்குத்தம்மைப்புலந்துதாமேயிழிப்பார் முருகையொப்பவரோரைந்துமுகமிலாக்குறையொன்றுண்டே. | 38 |
இன்னபல்வீரர்வாழுமிருக்கையுமிவருக்கேவன் மன்னநன்காற்றுவார்தம்வாழ்க்கையும்பரிமால்யானை யுன்னதவிரதமற்றுமுள்ளவைதமக்குவேண்டு மின்னகுபலவுமாற்றும்வினைஞர்தமிருப்பும்பல்ல. | 39 |
இடைநகர். அறநகரென்றுபன்னூலறிந்தவரெடுத்துப்பேசுந் திறநகராயதீராச்செல்வஞ்சேர்மாயூரத்தின் புறநகர்வளத்தென்சொற்றாம்பொற்பொடுபொலிவுநாளு முறநகரரசாய்மன்னுமிடைநகருரைக்கலுற்றாம். | 40 |
அளிவளர்கதுப்பினல்லாராடவரொடுங்குலாவு மொளிவளர்மணிசெய்மாடமோங்கொளிபரப்பலாலே களிவளர்கருப்புவில்லான்களிற்றிவர்ந்தேகல்செய்யா னளிவளரொருதேரேறிச்சாளரநுழையுநாளும். | 41 |
நன்னலங்கனிந்தமேனிநங்கையரிலக்கமாகத் கன்னலஞ்சிலைபெய்வாளிக்கமலம்வாழ்வதனமுல்லை பன்னலநறியநீலம்பார்வைகண்டணுகற்கஞ்சு மின்னலமசோகமாம்பூவிரண்டுமஞ்சாதுமேவும். | 42 |
மலையினும்பொலியுந்திண்டோண்மைந்தர்யாவரையும்வாங்குஞ் சிலைநுதன்மடநலார்தந்திருமுகநினைப்புண்டாக்கும் விலையில்வெண்ணகையேநாளுமிகுகிடைகாட்டுங்கண்ணே கொலைசெயுமென்னிற்காமன்கொடுங்கணைமிகையாமன்றே. | 43 |
மேலுயரிந்துகாந்தவெண்ணிலாமுற்றத்திட்ட காலுயர்பரியங்கத்திற்கண்டுயின்மாதர்மைந்தர் பாலுயர்மதியந்தோன்றப்பொழிந்தநீர்பரத்தலாலே சேலுயர்கடலிற்றுஞ்சுந்திருவொடுமாயனொத்தார். | 44 |
வெள்ளியவிந்துகாந்தவெண்ணிலாமுற்றநாப்ப ணொள்ளியவாடலாற்றியணைமிசையுறங்குநல்லார் வள்ளியமதிகண்டாங்குவண்புனல்பெருகலாலே துள்ளியகடலிற்பற்பறுகிர்க்கொடிப்படர்ச்சிபோன்றார். | 45 |
வானுயர்மாடமேலாற்றுகிற்கொடிவயங்கல்கண்ட மீனுயர்கடல்வைப்போர்வான்றோலுரிவிதமென்னென்பார் கானுயர்கற்பநாட்டார்கண்டுமண்முளைத்தெழுந்து தானுயர்தருவின்பாலோர்தளிருறும்பெயர்யாதென்பார். | 46 |
மேலுயர்செம்பொன்மாடவெண்ணிலாமுற்றஞ்சார்ந்த பாலுயர்மொழியாரெட்டிக்கற்பகப்பழம்பறிப்பார் மாலுயர்வானநாட்டுமாதர்சற்றேகுனிந்து காலுயர்மனைப்பாற்றேமாங்கனிபலபறித்துவப்பார். | 47 |
புயறவழ்மாடமேலாலரிசனமாதிபூசி வியனெடுங்கண்ணார்மண்ணிவிடுபுனலனையதேத்துக் கயலொழுகாற்றுவீழவதின்முழுகமரர்தாம்வே றியன்மணமதித்தூடந்நலார்க்கிடைந்திரங்கிச்சோர்வார். | 48 |
ஓங்குபொன்மாடமேலாலொள்ளிழைமடவார்கூட்டிப் பாங்குசெய்மஞ்சளாடல்பயின்றிடவனையமஞ்சள் வீங்குவாசனைசுலாவமெய்மணங்கமழ்வதோரார் தேங்குவானரம்பையர்க்குச்செயற்கைவாசனையின்றென்பார். | 49 |
கொழிசுவைத்தமிழ்நேரஞ்சொற்கோற்றொடிமடநல்லாரும் பழிதபுமைந்தராரும்பயிலுபரிகையின்மாட்டுக் கெழியபன்மடவார்போக்கல்செய்யவுங்கிளர்ந்தகுப்பை கழிதரக்காணார்பஞ்சதருக்களைக்கனன்றுவைவார். | 50 |
வெள்ளியமுறுவற்செவ்வாய்விளங்கிழைமடநலார்சேர் வள்ளியபொற்கீழ்மாடமண்ணுவபொன்னிநன்னீ ரொள்ளியமணிச்சாலேகமுறந்தபொன்னொளிர்மேன்மாடந் தெள்ளியபிறவுமண்ணுந்திருந்துவான்கங்கைநன்னீர். | 51 |
துன்னியசெம்பொன்மாடச்சோபானமார்க்கஞ்செல்லின் மன்னியசுவர்க்கலோகமருவுதற்கையமில்லை மின்னியவவ்வாறேகாவிதமெவனெனவினாவி லுன்னியவஃதிவ்வூர்போற்சிறவாமையுணர்ந்தார்போலும். | 52 |
காரும்வாரறலுமஞ்சுங்கதுப்பினார்செல்வமாட மேருவோடிகலிநின்றவிந்தமொத்துயர்ந்ததேனுஞ் சாருநாள்கோளியங்கச்சாளரம்விடுத்ததாலே யோருமோர்முனிகைசெய்வதொன்றுமின்றாயிற்றம்மா. | 53 |
வலிதருமைந்தரெல்லாமதனனேயென்னும்பொற்பார் பொலிதருபரமன்மேலும்பூப்பலதூவுவார்க ளொலிதருநுதற்கணோக்காதொழிந்ததென்னெனவினாவின் மலிதருபூவைப்பூவென்றெண்ணுதல்வாய்ந்துளாரே. | 54 |
பொருவில்வெண்சுதைசெய்மாடம்பொங்கபாற்கடலாமேலா லொருவருமடநல்லாராங்குதித்தெழுஞ்செய்யாளொப்பார் வெருவருமைந்தர்வேட்டுமேவியமாயோனொப்பார் பருவரலில்லாப்பாலர்பசுங்கழைக்குமரனொப்பார். | 55 |
நறுமலர்கட்டிமைந்தர்நகுமனக்கட்டவிழ்ப்பா ருறுவகைநோக்கியன்னாரொன்றுநோக்காதுசெய்வா ரிறுமருங்கலசக்கொங்கையெடுத்தவரெடுப்பொழிப்பார் மறுவறநடந்தன்னார்தநடையொழித்திடுவர்மாதர். | 56 |
கண்டத்தினழகைவௌவுங்களவறிந்தொறுத்தன்மானக் கண்டொத்தமொழியார்கந்திக்கழுத்துறப்பாசம்பூட்டிக் கண்டத்துகுழைகளாடக்காமர்பொன்னூசலாடக் கண்டுற்றபுருடர்நெஞ்சுங்கலக்கமுற்றூசலாடும். | 57 |
வெயில்விடுமணிசெய்மாடமீமிசையந்நலாரை மயிலெனவஞ்சியன்றோவானகத்திராகுகேதுப் பயில்கதிர்மதியைநாளும்பற்றல்செய்யாவாம்பற்ற லயில்விழிமடவாரங்கணமர்தராக்காலத்தம்மா. | 58 |
மாதரார்வதனங்கண்டம்வயங்கிருநிதிகளாக வோதமுத்தாரக்கொங்கையுவக்கும்வெள்யானையாக நோதகமருங்குல்கற்பக்கோடாகநுவலுமைந்தர் காதலிந்திரன்போல்வார்மெய்க்கண்ணிலாக்குறையொன்றுண்டே. | 59 |
முரிதிரைப்பரவையல்குன்முயங்குமந்தரம்போற்கொங்கை வரியரவொருமருங்குல்வயங்குறுதாங்களென்னு முரியவோடதிமடுத்திட்டுறுசுவையமுதங்கொண்டு தெரியவந்நகர்வாழ்மாந்தர்யாவருந்தேவரொத்தார். | 60 |
பெருகொளிமாடமேலாற்பிரசமென்கூந்தலோடு முருகெழுமடநலார்தந்திருமுகத்துண்மைதேரார் கருமுகிலென்பதம்மாகலைநிறைதருவீபத்தி னருகமர்ந்ததுமறைத்தற்கஞ்சியதிறும்பூதென்பார். | 61 |
செங்கயல்விழியாரென்றுந்திருவனாருறுப்பேயென்றுந் தங்களுளுணரார்கன்னிதவாச்சிலைகடகங்கும்பந் துங்கவண்மகரஞ்சிங்கமொவ்வொன்றேதுலங்குமிங்குப் பங்கமில்பாரிற்பல்லவெனப்பகருவர்வானாடர். | 62 |
வணக்கநன்குடையார்செல்வம்வாய்ந்துமேலாவர்நாளும் வணக்கமில்லவர்கீழாவர்வறியராயென்றெரித்தாங் கிணக்கவண்மூங்கின்மேல்கீழியைந்தயானத்துமேல்கொண் டிணக்கநன்குடையசெல்வரியங்குறுசிறப்புமல்கும். | 63 |
வடதிசைக்கிறையுநாணுமாப்பெருஞ்செல்வமுற்று மிடமிகுமதைமதித்தலென்றுமில்லவரெஞ்ஞான்றுந் தடமுகிலாதிநாணுந்தவாக்கொடையடைந்தும்யார்க்கும் விடலிலரினியகூறல்விழையுமந்நகரமாக்கள். | 64 |
பேரதிகாரத்தோடுபெருங்கண்ணோட்டமுநன்குள்ளார் சாரருந்திறன்மையோடுதவாதவொப்புரவுமுள்ளார் தேருமாசாரத்தோடுஞானமுஞ்சிறப்பவுள்ளார் தீரரும்வளத்தாலோங்கிச்சிறக்குமந்நகர்வாழ்மாந்தர். | 65 |
காவணமெங்குமிட்டுக்கரும்பொடுகதலியாத்து மாவணவிதானந்தூக்கிவயங்குபொற்றொடைகளோடு பூவணத்தொடையுநாற்றிப்புதுப்புனலிறைத்துக்கைசெய் தூவணநியமவீதிசுவர்க்கத்தைநரகஞ்செய்யும். | 66 |
மங்கையர்பின்பான்முட்டுமைந்தர்கள்வடிவுவாய்ந்த வங்கவர்முன்பான்முட்டுமவர்க்குளநாணுவார்க டுங்கநன்மைந்தர்பின்பான்முட்டியதொடிக்கைநல்லார் தங்கமற்றவர்முன்பான்முட்டவர்க்குளந்தகநாண்கொள்வார். | 67 |
வரையகத்துள்ளயாவும்வயலகத்துள்ளயாவுந் திரையகத்துள்ளயாவுஞ் செருத்தலான்குலங்கண்மல்கு தரையகத்துள்ளயாவுந்தழைதலானியமவீதி புரையறத்திணையோர்நான்கும்புக்கினிதமர்தல்போலும். | 68 |
மெல்லுவவொருபான்மல்கவிழுங்குவவொருபால்வீங்க வொல்லுவபருகற்காயவுணாத்திறமொருபாலோங்கப் புல்லுவபிறவுங்கொண்டுபொலிதருநியமவீதி சொல்லுவபோகபூமித்தோற்றமேயனையதம்மா. | 69 |
உண்ணகர். மிடைதருமைந்தர்மாதர்வேட்டுலாம்விழவுமாறா விடைநகர்வளத்திற்சில்லவியம்பவும்வல்லர்யாரே கடையுறலென்னுமில்லாக்காமருசிறப்புவாய்ப்புற் றடையவிண்ணகருநாணுமுண்ணகரறையலுற்றாம். | 70 |
ஆசையின்மேலுமெய்தவள்ளலாரருள்வதெண்ணி யோசையினுயர்பாலாழியொத்திடநன்னீராழி மாசையின்றாயமேன்மைவளம்பெறல்குறித்துச்சூழ்ந்தாங் கேசையில்கிடங்குசூழுமகநகரிஞ்சிசூழ. | 71 |
பாம்புரியெனவோர்நாமம்பகருவர்கிடங்கிற்கப்பேர் நாம்புரியிதற்கேசாலுநாடுபல்பாம்புவாழ வேம்*புரிவைப்பினுக்குமுரிமையின்மேவிச்சூழ்ந்து தோம்புரிதெவ்வுமேவாவண்ணங்காப்பியற்றுஞ்சூளால். *வேம் -வெம்மை என்னும்பண்புக்பகுயிறுதியுலுள்ள எழுத்துக்கள் கெட்டுமுதளீண்டு, வருமெழுத்திற்கு இனவெழுத்து மிகுந்து விருப்பமென்னும் பொருளைத்தந்தது | 72 |
எறிகளிறருகுமேவினுறுப்புத்தொட்டீர்த்தல்செய்யா தறியமாலாழியோடுமங்காந்துவிழுங்கவல்ல செறிவலிக்கராங்கள்பல்லதிரிதருகிடங்குநன்னீர் நெறியுயிர்தினையாவாற்றாற்கன்னியர்நிதம்பம்போலும். | 73 |
தனையடைந்தவரையுள்ளேகொண்டுபின்வெளிச்சாராம னினைதாவொளிக்குங்குண்டுநீர்க்கிடங்கெந்தஞான்றுந் தணையடைந்தவரையுள்ளேகொண்டுபின்வெளிச்சாராம னினைதரவொளிக்குமெங்கணின்மலப்பிரானோதேரேம். | 74 |
பெரும்புறக்கடலீதென்றுபெருங்கிடங்கரையுட்கொண்டு விரும்புறமுகில்கள்வீழ்ந்துவிரிபுனனிறையவுண்டு சுரும்புறமலருந்தாருச்சூழ்நேமிவரையீதென்று தரும்புறமதின்மீதேறுந்தலையடையாதிளைக்கும். | 75 |
அஞ்சனாயகியாரோடுமமர்ந்தளவிலாவுயிர்க்குந் தஞ்சமேயாகயாவுந்தருமொருவள்ளலார்த மஞ்சவாம்புகழேபோலவானகங்கிழித்தப்பாலும் விஞ்சவேசென்றதம்மாவிறலுடைநொச்சியிஞ்சி. | 76 |
பொறிபலவடக்கியோவாப்புண்ணியமுதல்விபாகப் பறிநிகர்சடைப்பிரானைப்பரவுதன்னகத்தேகொண்டு சிறிதசைவேனுமின்றித்திகழ்நிலையமைந்தவாரை மறிவறநோற்றல்வன்மைமருவியயோகிபோலும். | 77 |
கொடிபலசெறியநிற்குங்கோணைமாமதிற்கணென்பார் படியின்மற்றுள்ளவாயபன்மதிலகத்துங்கண்டோ நெடியவிம்மதிற்கட்காணேநிலவமேலுள்ளவேநான் முடியபுட்பறந்தபோதுமுற்றுமோகாண்டலம்மா. | 78 |
இம்மதில்சிறிதுகண்டவெமக்குநேமியங்குன்றென்னு மம்மதில்காணவேண்டுமாசைசற்றேனுமில்லை மும்மதில்புரிந்ததுன்பமுழுமையுமறக்குமாறிச் செம்மதிலுயர்ந்துசென்றுதேவரூர்பலவுங்காக்கும். | 79 |
கடக்கருமதிலோர்மூன்றுங்கடந்தசேவகனைத்தன்னு ளடக்கியமதிலின்மேன்மையளப்பவரெவரேவாயில் விடற்கருமுயரஞ்சொல்லவேண்டுமோகோளுநாளும் படற்கரும்பொன்செய்மேக்குப்படியுறாகிழக்கேசெல்லும். | 80 |
தம்மனமிதுபோற்கோணல்சமைந்ததென்றறிவிப்பார்போ லம்மநல்யாழ்க்கைக்கொள்வாராயினுநவிலுமாற்றஞ் செம்மையென்றறிவிப்பார்போற்றெள்விளியிசையெழுப்புங் கொம்மைவெம்முலையார்சேரிகோலமார்துறக்கமேய்க்கும். | 81 |
மின்னனார்கரங்குவிக்கமிளிர்சாமிகரங்குவிப்பார் முன்னருமுத்தொன்றீயமுகந்துபற்பலமுத்தீவா ரன்னர்நாணொன்றேதோற்கவனைத்தையுந்தோற்பார்மைந்த ரென்னின்மற்றவரிலாபமெய்துநர்மண்மேலியாரே. | 82 |
மெய்வாய்கண்மூக்குக்காதாமைந்தற்கும்விடயமாகி மைவாய்கண்மற்றைநல்லாரின்புசெய்வழக்குண்டேனுங் கைவாய்மிக்குளபொன்முற்றுங்கவருபுவெறுமைசெய்து பொய்வாய்நெஞ்சிவர்போல்யார்க்குந்துறவின்பும்புணர்த்திடாரே. | 83 |
எத்துணையளித்தபோதுஞ்சாலுமென்றேமுறாத முத்தவெண்முறுவனல்லார்முதிரழற்பிரானேபோல்வா ரத்தகுதிறனாலன்றோவனையருச்சிட்டநாளும் வித்தகமறையோராதியாவரும்விருப்பிற்கோடல். | 84 |
வாடுதலற்றசெற்றமணமலர்புனைதலானும் பாடுதல்வாய்ந்தசூழும்படமழுக்குறாமையானுங் கூடுதலிரவேயென்றும்பகலென்றுங்கொளாமையானு மாடுதல்வல்லமாதரரமடந்தையரேயொத்தார். | 85 |
பொருவருவனப்புவாய்ந்தபுலோமசையிட்டிநூறு வெருவறமுடித்துள்ளாரைவிருப்பொடுதழீஇயுயர்ந்தா டுருபதன்மகளோரைவர்த்தோய்ந்துமேல்லிழைந்துயர்ந்தா டிருவனாரிவருமன்னர்செப்புதற்கிழிபொன்றுண்டோ. | 86 |
வெள்ளணிபுனைந்துளாருஞ்செவ்வணிவிழைந்துளாரு மொள்ளணிமைந்தர்க்குற்றதுணர்த்துவான்விலைமினார்தந் தெள்ளணிமறுகுலாவல்செழுங்கலைமகளுஞ்செல்வ நள்ளணிமகளுமாங்குநயந்தனருலாவல்போலும். | 87 |
ஆடவர்மகளிர்நன்னீராடலோர்ந்தகன்றநாளே யேடவிழ்குழலார்பாற் பன்னிரண்டுநாளனுபவித்துக் கூடலைவிரும்பிமைந்தர்புகுநாளாதலிற்குலாவு நீடமைத்தோணல்லாருக்கொழிபுநாணேராதென்றும். | 88 |
கயில்செறிகடகச்செங்கைக்கருங்குழலுமையைநீங்கி யெயிலொருமூன்றுஞ்செற்றோனின்னும்யோகிருப்பானென்னின் மயிலியல்பொழில்சுலாவுமயிலாடுதுறையின்மேய வயில்விழிப்பொதுமின்னாருக்கொழிபுநாளமையுமன்றே. | 89 |
அவையவக்குறைவிலாமையாரழகுடைமைவாய்ந்த குவைமலர்க்குழலார்போகங்கூட்டுணல்வெறுத்துமைந்தர் செவையுறவூருந்தேருஞ்சிவிகையுமாவுஞ்செற்ற கவைமனத்தஞ்சொலார்தமறுகியல்கழறப்போமோ. | 90 |
அறைதருமேனைநீர்போலாதகம்புறமுஞ்சுத்தி நிறைதருவிதஞ்செய்தெய்வநீர்க்கங்காகுலத்தரென்னு முறைதருபுகழுக்கேற்பமுயங்கிருசுத்தியும்பெற் றுறைதருபுகழ்வேளாளர்தெருவளமுரைக்கலுற்றாம். | 91 |
புதியராயடைந்துள்ளாரைப்பொன்னியந்துறையிற்கோணன் மதிநிலாமுடியார்கோயில்வாயிலிற்காணல்போலப் பொதிபசியொழித்துவேண்டும்பொருள்கொளப்புகுதலாலே திதிபெறுபுகழ்வேளாளர்தெருத்தொறுங்காணலாமே. | 92 |
வருவிருந்தெதிர்கொண்டேற்றுமனமகிழ்முகத்திற்றோற்றி யொருவரும்விருப்பமிக்கூறுணாப்பலவமைத்துக்கொண்டு பெருகியமுகமனோடுபேணினரூட்டிப்பின்னு மருகமர்ந்தவாவலுந்தேர்ந்தளித்துமிக்குவக்குநீரார். | 93 |
விண்ணவர்பிறர்பாலன்புசெய்யாதுவிடையோன்பாலே யண்ணலம்புகழ்வேளாளரன்புசெய்திடுவதோர்ந்தா நண்ணல்செய்கடல்கடைந்தநாளடைந்தாரைவஞ்சித் துண்ணல்செய்ததுமஃதாற்றாதுண்டதுங்கண்டேயன்றோ. | 94 |
இறைபடுசெந்நெலானும்யாவருஞ்செறிதலானு முறைசெறிந்தவர்க்கப்போதேயிலம்பாடுமுடிதலானுங் குறையில்பன்மரக்காலோடுகாவணங்குலவலானுங் கறைதபுவேளாண்மாக்கடெருவவர்களமேபோலும். | 95 |
அட்டிலினுலைநீர்ப்பெய்யவரிமதர்மழைக்கணல்லார் மட்டிறண்டுலங்களைந்துவடிக்குநீர்வயல்விளைக்கு முட்டில்குய்ப்புகையெழுந்துவானமுமூடுமென்னிற் கட்டின்மற்றனையார்செல்வப்பெருமையார்கணிக்கற்பாலார். | 96 |
ஆன்றதம்பொருளேபோலவயலவர்பொருளுங்காண்பா ரேன்றகாரியமின்றென்னிலிம்மியுஞ்செல்லவொண்ணார் சான்றசீர்தூக்குங்கோலிற்றம்மைமுன்னிறுத்தல்வல்லார் மான்றவுள்ளிலராய்வாழும்வணிகர்தந்தெருவும்பல. | 97 |
கொள்ளுநாட்கொளலவ்வாறுகொண்டபல்பண்டமுற்றுந் தள்ளுநாள்விடுத்தலின்னதன்மையிற்சற்றுங்குன்றா ரள்ளுநாளுவத்தல்போலேயாவையுமயலார்கொள்ள விள்ளுநாளுறுவாரன்னார்மேதகவெவருக்குண்டே. | 98 |
அலர்கதிர்மணியுஞ்சந்துமகிலுமால்யானைக்கோடுங் குலவுசெம்பொன்னுமுத்துங்கொழுஞ்சுவைத்தேனுமற்று நிலவுபல்பொருளுஞ்சேர்ந்துநிரம்பலால்வணிகர்மாடம் பலர்புகழ்வரையேயென்றுபாடுதற்கையமின்றே. | 99 |
நகப்படுவணிகர்வீதிநாடொறுமரிப்பார்கையி லகப்படுமணியுமுத்துமளகையர்வேந்தன்காதன் முகப்படுமிளநலார்தமுலைமுகட்டில்லையென்னிற் றகப்படுமகவான்வைப்பிலுண்டெனச்சாற்றுவார்யார். | 100 |
கறுத்துவந்தெதிர்த்தமாற்றார்கற்பகமாலைசூடப் *பொறுத்துவண்டும்பைமாலைவண்டுகள்பலபொருந்த வொறுத்தலான்*மீடராவண்டொன்றுய்க்கும்வலிசால்வேந்த ரிறுத்துவமானமோங்குமில்லம்வானத்துமோங்கும். *பொறுத்துவண்டும்பைமாலைவண்டுகள்பலபொருந்த, பலவண்டுகள் பொருந்த வளவியதும்பைமாலையைப் பொறுத்து, எனக் கொண்டு க்கூட்டாகப் பொருள் கொள்க *மீடராவண்டு-திரும்பாதபாணம். | 101 |
பாதகம்புரிந்தாரேனும்பறந்தலையெதிர்ந்தாராகின் மாதகவவர்க்காக்கிப்பொன்*வாளுடல்வழிமேற்போக்கி நோதகவொழிந்துவாழநுவன்றுசெய்வலிசால்வேந்தர் மாதகவுடையராகிமனுமுறைதழுவிவாழ்வார். *பொன் - சூரியன் | 102 |
அரிநடத்திடவல்லாளையாளிநேர்புயத்தினேந்திக் கரிநடத்திடவல்லாருங்கணிப்பருஞ்செண்டுபோகும் பரிநடத்திடவல்லாரும்பார்கிழித்தேகுமாழிக் கிரிநடத்திடவல்லாருங்கெழுவியதரசவீதி. | 103 |
மைவழிகருங்கட்செவ்வாய்வாணுதன்மடந்தைநல்லார் கைவழிக்கண்ணுமந்தக்கண்வழிமனமுஞ்செல்ல நைவழியில்லாத்தாளந்தண்ணுமையாதிநல்கோ தைவழிநடிப்பநோக்கிச்சதமகனினுமின்பார்வார். | 104 |
அழலுறுவுடையதேவையருமறையுரைத்தவாறே யழலுருநாப்பணோக்கியம்புயத்தவனுமேத்த வழலொருகரத்திற்றாங்கியரியநூலனைத்துந்தெள்ளி யழல்சினமாதிநீத்தவந்தணர்மறுகுபல்ல. | 105 |
அறுதொளிலாளரென்றேயாவருஞ்சொலப்பட்டாரன் பறுதொழிலாற்றாரென்றுமாக்கமுமழிவுந்தம்வா யுறுமொருமொழியாலாற்றுமுரவினர்பலருங்காண வுறுபசுக்கொலையேசெய்துமொருபழியேனும்பூணார். | 106 |
தாவருமெழுநாச்செல்வன்சடசடமுழங்குமோதை மேவரும்வானோர்தம்மையவியுணவிளிக்குமோதை பாவரும்பணைமுழங்கப்பைம்புனலாடுமோதை யேவரும்வியப்புக்கொள்ளவெழுகடலவிக்குமோதை. | 107 |
பொன்னிநீராடியீரப்புடவைதம்மரையிற்சூழ்ந்து *துன்னியேர்வரியசெந்தீயட்டிலைச்சுவையுணாக்க ளுன்னுமாதரவினாக்கியதிதியருண்ணவூட்டி மன்னுபார்ப்பனமின்னாரால்விளங்குவமாடமெல்லாம். * துன்னியோவரியசெந்தீட்டிலை-செந்தீயோவரிய அட்டிலைத்துன்னி எனக்கொண்டுகூட்டாகப்பொருள்கொள்க. | 108 |
கரம்பொலிபலாசத்தண்டுங்கரையரைமுஞ்சிநாணு முரம்பொலிமான்றோல்சேர்த்தவொள்ளியபஞ்சிநூலுந் திரம்பொலிசிகையும்பொற்பச்செறிதுகிற்செருக்குத்தூங்க வரம்பொலிமறைநூல்கற்குமகார்கிடைவயங்குமெங்கும். | 109 |
காதேறுகலைநூல்வல்லகவுரிமாயூரப்பார்ப்பார் மாதேவனுருவமன்றிமற்றையோருருவம்பாரார் போதேயுமயன்மாலாதிப்புலவரையழைத்தவாவின் மீதேயுமூட்டவல்லார்மறுகணிவிளம்பப்போமோ. | 110 |
அண்ணலார்திருமுகங்களைந்தினுந்தோற்றமுற்றார் கண்ணலார்பொதுச்சிறப்பாமறைகளாகமங்கள்கற்றார் நண்ணலார்பரார்த்தத்தோடான்மார்த்தமுநயந்தர்ச்சிக்கு மெண்ணலாராதிசைவரிருக்கையும்பல்லவாங்காண். | 111 |
எழுமதநிறுவியோரைந்திரண்டுகுற்றமுங்கடிந்து தழுவியையிருவனப்புமுத்திசாற்றியவெண்ணான்கு மொழுகுகாண்டிகைவிருத்தியுறுமுறைமாணாக்கர்க்குச் செழுமையினியல்கேட்பிப்போர்கழகமுஞ்சிறக்குமாங்கு. | 112 |
கவியொருகவியினோடுங்கமகனோர்கமகனோடு மவிதலில்சிறப்பின்வாதியமைந்தவோர்வாதியோடும் புவிபுகழ்வாக்கிமேன்மேற்பொலியுமோர்வாக்கியோடுஞ் செவியுறவமர்ந்தளாவுங்கழகமுஞ்சிறக்குமாங்கண். | 113 |
அடைந்தவர்தரந்தெரிந்தாகமம்புகல்சமயமாதி மிடைந்தமுத்தீக்கையாற்றி*நான்கினும்விராவவுய்த்துத் தடைந்தவைம்பாசராக்கித்தனிமுதற்கலப்பாயின்பங் குடைந்தவராகச்செய்யுங்குரவர்வாழிடமும்பல்ல. *நான்கு சரியைமுதலிய நான்கு. | 114 |
போதமுற்பலவுந்தேர்ந்துபொருந்துகாமாதிநீத்து வாதமற்றொன்றுபத்தாமாண்பினிற்சிறந்தோராகி நாதமிற்றிதுவென்றோராநலத்தசோதியிற்கலப்புற் றேதமற்றிருக்குஞ்சைவமுனிவர்வாழிடமும்பல்ல. | 115 |
தளவரும்பனையபொம்மறழல்வெதுப்புற்றபொன்னிற் பிளவரும்பருப்புநெய்பால்பெருகுகுய்க்கருனையாதி கொளவருங்கருப்புக்கட்டிகொழுஞ்சுவைக்கனிகண்மற்று முளவரும்விரும்பச்செய்யுமுலப்பில்சத்திரங்களெங்கும். | 116 |
இனனெழுமுனநீர்தெவ்வியினநிறைநிறையவாக்கி மனனமர்வேரும்பூவுமணமலிதுடியுமிட்டுக் கனவிலிகுசத்தின்சாறுங்கலந்துமோரளாவிவாக்குஞ் சினமகல்சுவைநீர்ப்பந்தர்தெருத்தொறுந்திகழ்வபல்ல. | 117 |
மருவலர்துளபத்தண்டார்மணிமறுமார்பத்தண்ண றிருமகளொடுவாழ்கின்றசெய்யமந்திரமுமன்னா னொருவருங்கூற்றிற்றோன்றியுலகுபகாரமாய வெருவருமும்பர்பல்லோர்மேவுமந்திரமும்பல்ல. | 118 |
சிறுவிதிமகஞ்சிதைத்தசேவகன்வடுகப்புத்தே டெறுதொழின்மகிடற்காய்ந்தாடிரிதலைச்சூலிசாத்த னறுமுகப்பெருமானைங்கையமலன்மற்றிவர்முன்னோர்வாழ் மறுவறுசெம்பொற்கோயில்வயங்குவவளவிலாத. | 119 |
மண்மகண்மார்பினுக்குமாயூரமொருமதாணி கண்ணுமற்றதிற்பதித்தகதிர்மணியுரைத்தயாவுந் தண்ணுறுசிறப்பார்நாப்பணாயகமணியேபோலும் விண்ணவர்புகழநாளும்வள்ளலார்விளங்குங்கோயில். | 120 |
முனிதரப்பட்டமுன்னைமூவகைமதிலும்பின்னாட் கனிதரத்தவமியற்றிக்கரிசிலாவுருவம்பெற்றுத் தனிதரவமர்பிரானைத்தம்முட்கொண்டிருப்பபோலும் பனிதரவெழுகொண்மூவும்பகநிமிர்ந்துயர்ந்தசோக்கள். | 121 |
மதில்வலியடக்கநாளும்வல்லவனானவையன் மதிபகவெழுந்துவானவருநடுக்குறப்போமிந்த மதிலடக்கெனச்சேவேவமற்றதுபலவாயேறி மதியுறப்படுத்தழுத்தன்மானுமேவிடபக்கூட்டம். | 122 |
பாலனென்றெண்ணுமெண்ணம்பரிகரித்திடச்சூர்முன்வேண் மேலுயர்ந்தனனென்றியாரும்வியப்பர்யாம்வியக்கமாட்டேஞ் சால்புயர்மாயூரப்பொற்றளியெதிர்க்கோபுரத்துக் கோலமாருயர்ச்சிமேலாலுயர்ந்ததுமுண்டுகொல்லோ. | 123 |
படிமுழுவதும்விற்றாலும்பற்றாதமணியிழைத்த படிபலவுடையதாகிப்பல்லவாலிகளுமிந்தப் படியுறவேண்டுமென்னப்பங்கயமாதிபூத்துப் படிபவர்க்கின்பஞ்செய்துபொலிதரும்பரவுதீர்த்தம். | 124 |
பேறுவந்தருளுமுக்கட்பிரான்றிருமுன்னர்நின்று நீறுவந்தவர்சார்தோறுநிறைபலமளிப்பதன்றி வேறுபூவிலைகொடாருமிசையேற்றினோடுவானத் தேறுவந்தளவளாவுமினத்தொடுமினஞ்சாராதோ. | 125 |
பொன்மலைதவஞ்செய்தீன்றபுதல்விசெய்பூசைகாணப் பன்மலையோடும்வந்துபார்த்தினிதமர்தன்மான நன்மலைலில்லியஞ்சனாயகிசோமாக்கந்த ரென்மலைமற்றைவானோர்விமானங்களிலகாநிற்கும். | 126 |
தம்மகநுழைந்தார்தண்டதரன்வாயினுழைதன்மாற்றி விம்மனோயனைத்துந்தீர்த்துமிளிர்சிவலோகவாயில் செம்மையினுழையச்செய்யுந்திகழ்திருவாயில் பல்ல வம்மணியொளியானத்தமண்டத்தின்புறத்ததாக்கும். | 127 |
மயிலுருக்கொண்டவம்மைபூசனைமரபிற்கொண்ட கயில்வளைக்குழையினார்க்குநிழல்செயுங்கலின்றதேமா வெயில்படுதிறமுண்டேனும்விரிஞ்சன்மாலாதியார்க்குங் குயின்மொழியரமாதர்க்குநிழல்செயுங்குணம்பூண்டன்றே. | 128 |
பழிதபுமுடையாள்பூசைபண்ணியபெருமானுக்கு வழிதருமதுக்கொண்டாட்டிவண்டளிர்நறும்பூச்சூட்டிக் கொழிசுவைக்கனிகளூட்டிப்பூசிக்குங்குணத்தானன்றே கழிதருவுள்ளுந்தான்மாமரமெனக்கவின்றதம்மா. | 129 |
நிருத்தமண்டபம்விழாக்கணிரம்புமண்டபநன்காய வருத்தமண்டபந்தூணோர்நூறாயிரமென்றுசொல்லப் பெருத்தமண்டபஞ்சார்ந்தார்க்குப்பிரிவதற்கருமைசெய்யுந் திருத்தமண்டபமற்றியாவுஞ்செப்புதற்கடங்குங்கொல்லோ. | 130 |
மன்னுதேவாரத்தோதைவயங்குவாசகத்தினோதை பன்னுவன்மறையினோதைபரவுமாகமத்தினோதை துன்னுபல்புராணத்தோதையாவெனத்தொகுவாரோதை யின்னுமற்றுள்ளவோதைதுயின்றிடாவெந்தஞான்றும். | 131 |
அடைந்தவிண்ணோர்மண்ணோர்நன்கடியுறைவைத்துத்தாழ மிடைந்தபன்மணிகளோர்பால்விளங்குபொற்கட்டியோர்பா லிடைந்தசெம்பொற்காசோர்பாலிலங்குபட்டாதியோர்பாற் கடைந்தசெப்பனையகொங்கைக்காரணிகோயில்வாயில். | 132 |
வளையெழுமொலியும்பீலிவயிரெழுமொலியுஞ்சுட்ட முளையெழுமொலியும்பற்பன்முரசெழுமொலியும்வீணைக் கிளையெழுமொலியுந்தாளங்கிளர்ந்தெழுமொலியுமற்றைத் துளையெழுமொலியுமாழித்தொக்கெழுமொலியைமாற்றும். | 133 |
காலையிற்றரிசிப்பாருங்கைகுவித்துருகியுச்சி வேலையிற்றரிசிப்பாரும்வீழ்ந்துவீழ்ந்திறைஞ்சிச்சூழ்ந்து மாலையிற்றரிசிப்பாருநெருங்கலால்வானநாட்டுச் சோலையிற்பயில்வார்காப்பார்தொழும்பதங்கிடைக்குங்காறும். | 134 |
இன்னபொற்கோயிலுள்ளாலேழுலகொருங்குபெற்ற வன்னமென்னடையாரெங்களஞ்சனாயகியாரோடும் பொன்னமர்கடிலமோலிப்பொருவிலாவள்ளற்புத்தே டன்னமர்கருணைபொங்கத்தானமர்ந்தரசுசெய்யும். | 135 |
5. திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 290.
----------------------
வரையின்மிக்கவெள்வயிரமுஞ்சேயொளிமணியும் விரைமிகுத்தசந்தகில்களும்வேழவெண்மருப்புந் திரையெடுத்தெறிசாநவித்திருநதியுதீசிக் கரையணித்துளதேர்கிளர்நைமிசக்கானம். | 1 |
நாட்டவல்லதுநற்றவம்பவஞ்சவாதனையை வீட்டவல்லதுவெள்ளியங்கிரிப்பெருமானைக் காட்டவல்லதுகழலரிதாம்பரபோக மூட்டவல்லதுற்றோர்க்குயர்நைமிசக்கானம். | 2 |
தரையினுள்ளதேயாயினுந்தரைக்குமேலுலகர் விரையவந்துவந்தவியுணாவிழைந்துகையேற்றுக் கரையிலாமகிழ்பூத்திடவீகையிற்கதித்துப் புரையிலாதுயர்ந்தோங்கிடுநைமிசப்புறவம். | 3 |
எண்ணிலார்முயலினுங்கவரப்படாதிகலி யெண்ணிலார்குழீஇயினும்வருத்தப்படாதென்று மெண்ணிலாரும்வாழ்த்துதலன்றிவைதலெய்தாதா லெண்ணிலார்நிறைந்தினிதமர்நைமிசாரணியம். | 4 |
மற்பகப்பொலிவாகுவோரிந்திரன்மேனாட் கற்பகத்தினைச்சீழ்கினுங்கடையெனவெறுத்துப் பொற்பகத்துயர்பொருள்கொளத்தன்னகம்புகுமா றற்பகத்துறவமைப்பதுநைமிசவடவி. | 5 |
அரனருச்சனைசெயத்தளிராட்டலோடூட்டப் பரவுதீங்கனிமகவிறகொண்குடம்பரிக்க விரவுபைந்தழைமுனிவருக்குதவிவேளலர்க்கா வரவுதீர்ந்துவப்பெய்துமத்தவத்தவரின்மாக்கள். | 6 |
அரியசாக்கியர்தீயவேடமுநலத்தமைவுந் தெரியவுற்றெனக்கண்டகம்புறமெலாஞ்செறியப் பிரியமிக்கவின்றீஞ்சுளையகமெலாம்பெற்ற பரியவண்கனிபற்பலசுமப்பனபலவே. | 7 |
பூவினுந்தழையினுமிகப்பொலிந்ததல்லாது மாவினும்பலவினுநனிகனியும்வண்கனிகண் மேவினுங்கருவாற்கொலையுறுதலின் வெள்கிக் காவினுந்தலைசாய்த்துநிற்பனபலகதலி. | 8 |
அளவிலந்தணர்குழாங்குழாமாகியெவ்விடத்து மளவின்மாதவமாற்றுமிவ்வடவியினமர்த லளவின்மேன்மைமேன்மேலுமுண்டாமெனவறைந்தாங் களவில்கண்மணியீன்றிடுதருக்களுமடர்வ. | 9 |
எடுத்தநம்பிறப்பின்பயனிதனினுமென்னென் றடுத்தவுண்மையையறிந்தனபோன்றுகாமாதி விடுத்தயோகியர்கொளவவருறையுண்முன்மேன்மேல் வடுத்தவிர்ந்தகண்மணிக்கனிசிந்துவவாவல். | 10 |
இனியவல்லனவெனுமுழுவித்துமுள்ளியைத்த கனியபல்லவுமுழுமரஞ்சிறிதலாற்கதிர்வித் தனியமாக்கலிற்கொண்டபேரியையுமென்றறிஞ ருனியவெங்கணுமோங்குபுநிற்பமுந்திரிகை. | 11 |
நனிசிதைந்திடுங்கனிசிலவுறவி*முன்னணுகப் புனிதநீங்கிடுங்கனிசிலவுகினவைபோலா தினியவூறிலபுனிதமென்றுறுவர்கையேற்பக் கனிகள்பற்பலவுகுப்பனசெறிதருகபித்தம். *உறவி- எறும்பு | 12 |
மாறுகொண்டவன்விடத்தைமுன்கனியெனவயக்கி *யூறுதீர்ப்பவற்கூட்டிமுனொழிந்ததுபோலோ வேறுசங்கையின்றூட்டலாமுய்யலாமென்னச் சாறுபாய்கனிபலகொடுநிற்பனசம்பு. ஊறுதீர்ப்பவன் - விநாயகக்கடவுள் | 13 |
பெயர்விலாயிரமுதற்பலகண்கள்பெற்றாரு ளுயர்வுமூன்றுகண்ணேயுடைப்பரம்பொருளொன்றே யயர்வின்மற்றதுபோற்பலகட்டருவுள்ளு மயர்வின்மூன்றுகணிதேயுயர்பெனத்தெங்குவயங்கும். | 14 |
நாடுமாயவனின்றெனநிற்பபுன்னாகங் கூடுபொன்னெனத்தழுவுவசோதியொண்கொடிபா னீடுமூத்தசேயெனச்சொலநிற்பபூஞ்செருந்தி மாடுசேரிளஞ்சிறானெனப்பொலிவவண்காஞ்சி. | 15 |
சுற்றுமுற்றும்வெண்மலர்செறிபல்பிடாத்துன்ன லுற்றுநிற்பமற்றதனடுப்பூத்தவொண்கொன்றை மற்றுமேலுயர்ந்தோங்குபுநின்றிடல்வானம் பற்றுவெள்ளியங்கயிலைமேற்பரனிலைகாட்டும். | 16 |
அன்னகொன்றைமேலச்சம் *ஈனரும்பொன்றுதங்கல் சொன்னதம்பிரான்முடிமிசைப்பிறையெனத்துலங்கு மன்னமற்றதன்கிளைகரும்பூவையைவருட னன்னரப்பிரான்மான்மகட்டழுவுதனாட்டும். *அச்சம் - அகத்திமரம் *மான்மகள் - மோகினி. | 17 |
மின்னுபேருயிர்குறுமையுநெடுமையுமெய்கள் பன்னுவன்மையுமென்மையுமிடைமையும்பட்டாங் குன்னுமிவ்வகையைந்துமாவயினுறத்தொகலாற் றுன்னுமவ்வநநெடுங்கணக்கேயெனத்தோன்றும். | 18 |
கோடுகொண்டனபல்லகால்கொண்டனபல்ல கூடுபுள்ளிகள்கொண்டனபல்லமேல்விலங்கும் பாடுகொண்டனபல்லகீழ்விலங்குவபல்ல நீடுமின்னதானெடுங்கணக்கெனற்கையமின்றே. | 19 |
செறிதருந்தளிநிலையரும்பலர்சிறுபிஞ்சு நறியகாய்கனியாதியநாளுநீங்காது நெறியசெங்கதிர்வெப்பமுட்புகாதுறநிலைத்த குறியவவ்வநப்பெருமையார்கூறுதற்கமைவார். | 20 |
வேறு. பொருவரும்வளஞ்சாலிந்தநைமிசம்பொருந்திவாழ்வா ரொருவருநீறுபூசியுவந்துகண்மணிகள்பூண்டு வெருவருமெழுத்தைந்தெண்ணிவிடையவற்பூசைசெய்வார் மருவருமுயர்மெய்ஞ்ஞானவாய்மையார்தூய்மையாரே. | 21 |
இன்புவந்துற்றபோதுமெதிர்மறையுற்றபோது முன்புகூலுறுமூழென்றேவிருப்புறார்முனிவுஞ்செய்யா ரன்புசிற்றுயிரகத்துமமைத்துவாழ்கின்றநீரார் வன்புமும்மலமுநீங்கத்திருவருண்முழுகுமாண்பர். | 22 |
விழியொருபத்துநூற்றுவிண்ணவர்வேந்தன்வாழ்வும் பொழிமதுக்கமலவாழ்க்கைப்புண்ணியப்பிரமன்வாழ்வுங் கழிசுடர்ப்பரிதிவட்குங்கவுத்துவமார்பன்வாழ்வும் பழிதபுத்தறியாக்கான்றபதமெனக்கண்டகண்ணார். | 23 |
இன்னுமற்றவர்பிறப்புமிறப்புமெத்தனையோகண்டார் துன்னுமைம்பூதமெல்லாந்தொலைந்தனகழிகாலத்தும் பன்னுதமுடம்பின்கண்ணோருரோமமுங்கழிதல்பாரா ருன்னுசெம்பொன்னுமோடுமொப்பெனமதித்தமேலோர். | 24 |
காரணநோக்கலன்றிக்காரியநோக்குகில்லார் பூரணப்பொருளின்கண்ணேயெற்றைக்குமுறக்கம்பூணார் வாரணவியபொற்கொங்கைமங்கையர்வலியவந்து தாரணத்தழுவினாலுந்தாயெனக்கருதுநீரார். | 25 |
பரசிவபுராணங்கேட்டல்பரசிவமணமேமோத்தல் பரசிவநாமம்பேசல்பரசிவக்குறியேகாண்டல் பரசிவபணியேசெய்தல்பரசிவவுருவேயெண்ணல் பரசிவபத்திவாய்ந்தார்ப்பரவுதலிவையேயுள்ளார். | 26 |
அத்திரிததீசிகார்த்தியாயனன்சுனப்புச்சன்ன கத்தியன்சுகன்மாதேவன்கண்ணுவன்கருக்கன்காமச் சத்துருவாம்பிருங்கிசதானந்தன்புகழ்மார்க்கண்ட னுத்தமப்பிருகுபோதாயனனுயராபத்தம்பன். | 27 |
இலகிதன்சுதீக்கணன்சாண்டில்லியன்பரத்துவாச புலகன்சந்திரசூடன்குச்சகன்புலத்தியன்சாபாலி வலகவுதமன்சனற்குமாரனாரதன்சீர்ச்சம்பு நலமிகுமாணிமாண்டவியனரபத்தநல்லோன். | 28 |
காசிபன்விச்சுவாமித்திரன்கலைச்சிருங்கன்கற்கி கூசுமாண்டன்மாதேசன்குசுருபார்க்கவன்சனந்த னாசுவிலாயனன்றாலப்பியன்றிருதன்சங்கன் பேசகமருடணன்பராசரன்பெருஞ்சநாதன். | 29 |
கிருதன்சநகன்வசிட்டன்பிரசண்டன்றுருவாசன்கேழ் தருபருப்பதன்சிலாதன்றத்தாத்திரேயன்சத்தி வருதவுமியன்சுமந்துபப்புருவாமதேவ னொருசரபங்கன்வச்சனுபமனியன்சீர்க்கண்டு. | 30 |
அரிதகன்சவுநகன்றேவலன்சுநனசிதன்விந்து பெரியபாணினிவிபண்டகன்காலவன்பெருஞ்சீ ருரியவங்கிரசுசாதாதபன்சுநச்சேபனுண்மை தெரிசருச்சரனிரைப்பியன்வசுதிரணவிந்து. | 31 |
முற்கலன்கபிலனட்டவக்கிரன்காணன்முத்தி யொற்கமில்சுநகன்சீர்த்தியுரோமசன்பகவன்மேன்மை வற்கமார்தருகவுண்டின்னியன்பயிலவன்மறாத விற்கஞலுக்கிரஞ்சேர்வீரியன்றூமபானன். | 32 |
செந்தமிழியலுரைத்ததிரணதூமாக்கினிப்பே ரந்தணனையான்றந்தையாஞ்சமதக்கினிப்பேர் முந்தனெல்லாரும்பேசுஞ்சவுபரிமொழியுமற்றைப் பந்தமின்முனிவர்யாரும்பரவுமோரிடத்திற்கூடி. | 33 |
திருவளருமையோர்பாகன்றிருவுளமுவக்கும்வண்ண மொருமகமுஞற்றலுற்றாருற்றவக்காலையையன் மருமலர்ப்பாதங்காண்டன்மறிபெரும்பிறவிமாய்க்குங் கருவியக்கருவியாதாற்பெறலெனக்கருத்துட்சூழ்ந்தார். | 34 |
யாகமோவிரதமோநல்லெச்சமோகொடையோமெய்யோ யோகமோஞானமோமற்றுண்மையிற்றுறவுபூணும் பாகமோவெதுவென்றாய்ந்துபகர்துணிபுறாரேயாகி மோகமோவியவுட்சூதமுனிவனாற்றெளிவாமென்றார். | 35 |
புரிமகங்காணப்போதும்புண்ணியமுனிவரோடு முரியமாணாக்கர்சூழவொள்ளொளிநீறுசெய்ய வரியகண்மணிவிளங்கவைந்தெழுத்துளத்துமன்னத் துரிசறுத்துயர்ந்தோனாமச்சூதமாமுனிவன்வந்தான். | 36 |
நினைந்தவப்பொழுதேயிந்தநேயமாமுனிவந்தானென் றினைந்தசிந்தையினானந்தமெழுதரவுவந்தெழுந்து துனைந்தனரெதிரேசென்றுதொழுதனராடிப்பாடிப் புனைந்தவஞ்சலியராகிப்போற்றினரழைத்துவந்தார். | 37 |
ஆயவிட்டறத்*திருத்தியருக்கியமாதிகொண்டு மேயநற்பூசையாற்றிவிதியுளிப்பணிந்தெழுந்து நேயமிக்கிருபானின்றார்நின்றவர்தமையிருக்கென் றேயவவ்வார்த்தைகேளாவிருந்தனரியம்பலுற்றார். *விட்டறம்-தருப்பைப்புல்லாலமைந்த வாசனம். | 38 |
திரைவிடமுண்டபெம்மான்றிருவுளமகிழும்வண்ண முரைமகமொன்றுசெய்யவுபக்கிரமித்தோம்யாங்கள் விரையவப்பொழுதேசன்மம்வீட்டிடுங்கருவியந்த நரைவிடைப்பாகன்பாதங்காண்டலென்றுளநயந்தோம். | 39 |
அன்னதுபெறுமுபாயம்யாதெனவாராய்ந்தாராய்ந் தின்னதென்றுளத்துத்தேரேமெக்கலைகளுந்தேர்நின்னாற் சொன்னதுதெளிவானெண்ணியிருந்தனஞ்சூதமேலோய் பன்னதுபோதுநீயும்பண்புறுகாட்சிதந்தாய். | 40 |
பெரியவர்காட்சிவீண்போகாதுறப்பிறங்காநிற்கு மரியநற்பயன்றந்தன்றியென்றுலகுரைக்குமாற்றாற் றெரியநீவகுத்துச்சொற்றிசிவபெருமானேயென்ன விரியயாவுந்தெரிந்தமேலவவென்றிறுத்தார். | 41 |
முனிவரருரைத்தவார்த்தைமுனிவறச்செவியினேற்றுக் கனிதருபெருமான்பாதங்காண்டலுக்கேதுவொன்றா லினிதவனமருந்தானத்தியையமுச்சிறப்பும்வாய்ந்த புனிதமாத்தலத்திற்குற்றமான்மியம்புகலக்கேட்டல். | 42 |
அதுதனியாராய்ந்துள்ளத்தமைத்தடல்பிறர்க்குக்கூறல் கதுமெனவனையதானங்கலந்துறவசித்தலந்த முதுதலதலத்தமர்நீராடன்முக்கணான்சேவைசெய்தன் மதுமலரிறைத்திறைஞ்சிவழிபடலாதியாக. | 43 |
இவையுள்யாதானுமொன்றாலெய்தலாமென்றுகூற நவையறுமுனிவருண்மையீதெனநயந்துகொண்டு செவையுறுமுனிவமூன்றுஞ்சிறந்தவோர்தானமாய தவையகமகிழுமாறொன்றாய்ந்தறைந்தருடியின்னும். | 44 |
மற்றதுசேய்மைக்கண்ணும்வதிந்துளத்தெண்ணினாலும் பற்றமைதரச்சொற்றாலுந்திசைநோக்கிப்பரவினாலு மற்றமிலிம்மையம்மைமுத்தியுமளித்தல்வேண்டுங் கற்றவர்பலருமுண்மையேயெனக்கரைதல்வேண்டும். | 45 |
கொடியபாதகங்கள்கோடாகோடியுள்ளனவேயேனு நெடியமற்றதன்பேர்சொல்லநினைக்குமுனீங்கல்வேண்டு முடியநாமுரைப்பதென்னேயெண்ணியவனைத்துமுற்றும் படியதாமொருநற்றானமாராய்ந்துபகர்கவென்றார். | 46 |
என்றலுமுவகைபொங்கநெடும்பொழுதுள்ளத்தெண்ணிக் கன்றலிலருளாற்றெய்வக்கவுரிமாயூரங்கண்டு பொன்றலில்புகழ்சாலீதற்புதத்தலமெனவியந்தீ தொன்றலதுயர்ந்ததானமுலகில்யாதெனத்துணிந்து. | 47 |
மருளடியவர்க்குமாற்றுமகத்தியவாரணத்தை யருள்பொழிவள்ளலாரையஞ்சனாயகியையுள்ளத் தெருடருகுமரவேளைச்சிந்தையிற்றியானஞ்செய்து பொருள்பெறுவியாதன்றாளும்போற்றுபுநவில்வான்சூதன். | 48 |
அந்தணீர்கேண்மினீவிர்கேட்டவாறாயுங்காலைச் சிந்தனைக்கரியதொன்றுசிவபிரானருளாற்றேர்ந்தே னிந்தநற்றலச்சீர்முன்னமொருவற்குமிசைத்ததின்று கந்தவத்தலநன்னாமங்கவுரிமாயூரமாமால். | 49 |
நினையுமுனெனக்கானந்தநிகழுவதென்னசொல்வேன் புனையுநுங்களுக்குண்டாதல்புகன்றிடற்பாலதேயோ வனையமெய்த்தலத்தையொப்பதகிலலோகத்துமில்லை வினையின்மெய்த்தவமிலாதார்மேவரிதெந்தஞான்றும். | 50 |
மன்னியவத்தலச்சீர்யானேயோசொல்லவல்லேன் முன்னியபுகழ்சால்வாதராயணமுனிவன்வைத்த பன்னியவருணோக்கத்தாற்றொகுத்தியான்பகர்தலுற்றே னந்நியமத்தீர்கேண்மினெனநவின்றருள்வான்சூதன். | 51 |
6. நைமிசப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 341.
~~~~~~~~~~~~~~~~~
சூரியன்மரபிற்றோன்றித்தொன்னகரயோத்தியாளுஞ் சீரியன்கவிகையொன்றாற்றிருந்துலகெலாநிழற்று மாரியன்மருவாரென்னும்யானைகட்கரியேறாய வீரியன்றிலீபனென்னுமெய்ப்புகழ்நாமவேந்தன். | 1 |
பாரின்மன்னியவெல்லாரும்பல்லாண்டுபல்லாண்டென்னச் சீரின்மன்னியகுணத்தான்செறிந்தெழுகீர்த்தியாய தாரின்மன்னியபுயத்தான்றாண்டவப்பெருமான்றாட்கு நாரின்மன்னியமனத்தானானிலங்காக்குநாளில். | 2 |
வரியளிக்குலம்பண்பாடமதுமடையுடைத்துப்பாயப் புரிமுறுக்குடையுஞ்செந்தாமரைமலர்ப்பொகுட்டுமேலான் றெரிதரவுயிர்த்தமைந்தன்செழுந்தவவசிட்டனென்பான் விரிபலமுனிவரோடும்வேத்தவைமேயினானால். | 3 |
வரமுனிவரவுகண்டுமன்னவனெதிர்சென்றேத்திப் பரவினனழைத்துவந்துபைம்பொனாதனத்தின்வைத்து விரவுமுள்ளன்பிற்பூசைவிதியுளிமுடித்துப்போற்றிக் கரதலங்குவித்திருந்துகாதலினிதுவினாவும். | 4 |
தரைகிழிதரவிரைந்துசையநின்றிழிந்துபோந்து திரையுவர்க்கடல்கலக்குங்காவிரியிருதீரத்து முரைசிறந்துள்ளதாயதலமெலாமொருங்குகேட்கப் புரையறுமொரோவொன்றாகப்புகன்றனையாலவற்றுள். | 5 |
மேதகுதிருவானைக்காமிளிர்சிராமலைவானோரு மோதருமன்பிலாலந்துறைதவத்துறையுற்றார்தங் கோதறுமொருநெய்த்தானங்குலவுமையாறுவாசப் போதவனிறைஞ்சுங்கண்டியூர்பொலிபூந்துருத்தி. | 6 |
வலஞ்சுழிகும்பகோணமேரகம்வளர்பட்டீச நலந்தரவொளிர்சித்தீசநாளுமோங்குறுநாகீச மிலங்கியபலரும்போற்றுமிடைமருதுயர்கோமுத்தி விலங்கலிறுருத்திமற்றும்விசேடமென்றுரைத்தாயைய. | 7 |
இவையுளுமதிவிசேடமெனமறையுரைப்பதாகி நவையறுமுத்தியெண்ணநல்கிடுந்திறத்தாகிச் செவையுறுதலமுன்மூன்றுந்திகழ்தரசிறந்ததாகி யவைமதித்திடுவதாயதறைதியென்றடியேன்கேட்டேன். | 8 |
அனையமாதலமாயூரமதற்கிணையில்லையென்று நினையவேயிம்மையம்மைமுத்திநிரப்புமென்றும் புனைவாமதலத்துப்பொலியுமான்மியமனைத்துந் துனையநீதொகுத்துச்சொற்றாதோன்றியதிலைதிருத்தி. | 9 |
திருத்தியுண்டாகுமாறத்தெய்வமாயூரமேன்மை விறுத்தியிர்புகலவேன்டுங்கேட்டிடவேண்டுமென்று மருத்தியென்னுள்ளத்தையீறுமாதலாலதன்சீர்முற்றும் பொருத்தியல்லாதுநீயும்போவதுகூடாதென்ன. | 10 |
முனிவனுமுவகைபூத்துமுழுமுதலவன்புராணங் கனிவொடும்யாவன்கேட்குங்காதலவனேயெல்லாப் புனிதவானவர்க்குமேலானறமெலாம்பொலியசெய்தோன் றணியமர்சீவன்முத்தனெனமறைசாற்றுமன்றே. | 11 |
சிறந்தமாயூரமென்னுந்திருத்தலமுவமையில்ல துறந்தமற்றதன்சீர்கேட்குநீயுமோருவமையில்லா யறந்தவாதுரைக்கும்யானுமனையனேயென்றுகூறி வறந்தகாமதிமேலோன்வகுத்திடலுற்றான்பின்னர். | 12 |
பரவியசிவபுராணம்பத்தனுட்பிரமாண்டத்து முரமிகுமாக்கினேயபுராணத்துமுரையாநிற்கும் வரமிகுமாயூரத்தின்மான்மியதனைச்சொல்கேன் றிரமிகுமன்பிற்கேட்டிதிலீபன்வென்றெடுத்துபேசி. | 13 |
அணிமலர்மிசையோன்பூசிதாரருள்பெற்றவாறுந் திணிமனதக்கனென்பான்றீமகஞ்செய்தவாறுந் துணிவலிமிக்கவீரனம்மகந்தொலைத்தவாறுந் தணிவருமருட்பிராட்டிமயிலுருச்சமைந்தவாறும். | 14 |
திருமயிலாயவம்மைசிவார்ச்சனைசெய்தவாறு மொருவருகருணையன்னாள்பண்டுருவுற்றவாறு மருவுகாதலினான்மீட்டுமாகமவிதிவழாமற் பொருவருஞ்சிவபிராணைப்பூசனை புரிந்தவாறும். | 15 |
விழியொருமூன்றோனாயவிண்ணவர்பெருமானுள்ளங் கழிமகிழ்பூத்துவெள்ளைவிடையின்மேற்காட்சிநல்கிப் பழிதபுமுமையாண்மாயோன்முதலியபலரும்வேட்ட வொழிவறநல்கிவள்ளலெனும்பெயருற்றவாறும். | 16 |
மன்னியதலத்தின்சீரும்வளமலிதீர்த்தச் சீரு முன்னியவாக்கினேயமுரைத்தருள்பலவுமற்று முன்னியவிரித்துச்சொற்றான்மொழிந்தனயாவுங்கேட்டு மின்னிய வேற்றிலீபவேந்தனுண்மகிழ்ச்சிபூத்து | 17 |
குரவனாம்வசிட்டமேலோன்குருமலரடியிற்றாழ்ந்து வரநிலாம்விடையும்பெற்றுவயங்குநாற் படையி னோடு முரவுகூரமைச்சரேனைப்புரோகிதரொருங்குசூழப் பரவுநாளெழுந்தானென்பபகைத்தவர்க்கேறுபோல்வான் | 18 |
வான்றவழ்குன்றுங்கானுமறாதநீர்நதியுமற்றுந் தேன்றவழலங்கன்மார்பன்பிற்படச்செவ்வேவந்து மீன்றவழ்கங்கையாடிமிளிர்காசிபுகுந்துவிண்மீன் கோன்றவழ்சடிலமோலிலிச்சுவநாதற்கூடி. | 19 |
பனிமலரிறைத்துப்போற்றிப்பரவியாங்காங்குமேய முனிவறுதலங்களெல்லாமுறைமுறைசென்றுபோற்றிக் குனிசிலைநுதற்பிராட்டிகுளிர்மலர்ப்பதமும்போற்றிக் கனிபடுசோலைசூழ்ந்தபருப்பதங்கண்டுபோற்றி. | 20 |
மாதாரநிறத்தானாதிவானவர்வணங்கிப்போற்றுங் கேதாரமேயபெம்மான்கிளர்மலர்ச்சரணந்தாழ்ந்து தீதாரவுடன்படாதுசெறிந்தவர்க்கருளியென்று மாதாரமாயினானைக்காளத்தியணைந்துபோற்றி. | 21 |
வேதமாநீழல்வைகுமேகம்பவிமலனார்தம் பாதமாமலர்கள் போற்றிப்பராய்த்தொழுதாலங்காடு நாதமாமுரசந்துஞ்சாநகுபுகழ்க்கழுக்குன்றம்பே ரோதமாரொற்றிமற்றுமுள்ளனவனைத்துந்தாழ்ந்து. | 22 |
அடிமுடியிருவர்தேடவழலுருவாகிநின்ற நெடியவண்சிலம்புமேன்மைநிறைமுதுகுன்றுமிந்தப் படிபுகழ்ந்தெடுத்துப்பேசும்பாதிரிப்புலியூரும்பொன் முடிபுனைவேந்தர்வேந்தன்முந்துசென்றிறைஞ்சிப்போற்றி. | 23 |
வளவர்நன்னாடுபுக்குமன்றிடைநின்றுநாளு மளவிலானந்தமேவவாடுமம்மானைத்தாழ்ந்து துளவினான்போற்றுங்காழிதூயபுள்ளிருக்கு வேளூர் களவிலாப்பிறவும்போற்றிக்காவிரிநதிவந்துற்றான். | 24 |
இரவிவண்டுலாத்துவைகுமேற்றநாளந்நாளாகப் பரவுமாமுனிவராதிப்பலரொடுமந்நீராடி விரவிவெண்ணீறுமெய்யின்விளங்குறப்புனைந்துபாயும் புரவிமாத்தானைவேந்தன்போற்றுபஃறானநல்கி. | 25 |
பலரொடுங்கோயிலெய்திப்பைந்தமிழ்மணக்குஞ்செவ்வா யலர்புகழ்முனிபூசித்தவண்ணலங்களிற்றையேத்தி நலர்தொழுவள்ளலார்மு னண்ணியுள் ளுருகித் தாழா வலர்பலகொண்டுபூசித்தானந்தத்தழுந்தினானே, | 26 |
நலம்பொலிகருணையஞ்சனாயகிகோயில்வாயிற் புலம்பொலிதரவவ்வாறேபுகுந்துநேர்கண்டுபோற்றி வலம்பொலிமற்றுமுள்ளவானவர்களையுந்தாழ்ந்து நிலம்பொலிதானைவேந்தனெடிதுறவசித்தானங்கு. | 27 |
சினகரப்பணிகள்செய்துந்திருவிழாநடாத்தல்செய்து மனகருள்வள்ளலார்க்குமஞ்சனாயகியாருக்குங் கனமணிப்பொற்பூணாடைகணிப்பிலகொடுத்துமெண்ணில் பனவருக்கமுதமீத்துமடியரைப்பரவித்தாழ்ந்தும். | 28 |
பன்னெடுங்காலமிந்தப்படிவசித்திருந்துபின்னா ணன்னெடும்புகழ்த்திலீபனாயகன்விடைபெற்றேகித் தொன்னெடுநகரஞ்சார்ந்துசுதமின்றிப்பன்னாள்வாழ்ந்து பின்னெடுஞ்சிவலோகத்துப்பிறங்கிவாழ்ந்திருந்தானன்றே. | 29 |
அனையவன்வசிட்டன்பாங்கரன்புறக்கேட்டவாறே வினைதபுமாயூரத்தின்மேன்மைகண்முறையிற்சொல்வே னினைதருமிதுவேயிம்மைமுதன்மூன்றுநிரப்புமென்று புனைபுகழ்முனிவர்கேட்பப்புகலுவான்சூதமேலோன். | 30 |
7. திலீபன் முத்தியடைந்தபடலம் முற்றிற்று
ஆக திருவிருத்தம் 371
-----------------
கரைதருமுந்தொருகற்பத்தாதியில் விரைதருதண்டுழாய்விண்டுவுந்தியில் வரைதருசிலைப்பிரானருளின்மாட்சியா லுரைதருமறையவனொருவன்றோன்றினான். | 1 |
தோன்றியமறையவன்றுளபத்தானடி யூன்றியவன்புளமுருகித்தாழ்ந்தெழூஉ யான்றியங்காவகையியற்றிடும்பனி மூன்றியல்சிரத்தினாய்மொழிதியென்றலும். | 2 |
தனையகேணினக்குமென்றனக்குநாயகன் முனையசூற்படைக்கரமுக்கண்மூர்த்தியா லனையனைநோக்கிநீயருந்தவம்புரிந் தினையலாகாப்படைப்பியற்றுகென்றனன். | 3 |
என்றலும்விரைந்தெழுந்திண்டைமேலவன் பொன்றலும்பிறத்தலுமிலாதபுண்ணிய னொன்றல்செயருள்விரைந்துறுதி நல்கிடுங் கன்றலிலாத்தலங்கருத்தினாய்ந்தனன். | 4 |
அதுபொழுதுடலில்வாக்கந்தணாகுண முதுகடற்பச்சிமமொழிதருந்திசைக் கதுமெனயோசனைகடந்துமேலுறிற் புதுமலர்தருபுனற்பொன்னித்தென்கரை. | 5 |
அமைவொடும்விளங்குமோரடவியாயிடைச் சமைதரவிருந்துநீதவஞ்செய்வாயெனி லுமையுடையான்விரைந்துதவுமென்றது கமையுடையானதுகாதினேற்றனன். | 6 |
எண்ணியகாரியமெய்தப்பெற்றெனக் கண்ணியமறையவன்கடுப்பினிற்செலா வண்ணியவாவயினணைந்துகண்டனன் புண்ணியந்தழைத்தெனப்பொலிவநத்தினை. | 7 |
காண்டலுங்கைகுவித்திறைஞ்சிக்காவிரி மாண்டகுபுனல்விதிவழியினாடியே யேண்டருநீறுமெய்யிலகப்பூசுபு தாண்டவப்பிரானடியுளந்தரித்தரோ. | 8 |
காமமாதியகரிசொழியக்கட்டறுத் தேமநாயகனருளியைதரும்படி மாமனாலுதவியவந்ததாமரைத் தாமமார்பினன்பெருந்தவம்புரிந்தனன். | 9 |
அறைகொடுவேனிலினழலுள்வைகியு நிறைபெருங்கூதிருணீருண்மூழ்கியு மிறைசிறிதாயினுமேவுறாவகை மறையவன்பெருந்தவம்வயங்கவாற்றினான். | 10 |
ஒருபதினாயிரவருடமுண்மையி னருமறையோன்றவமிங்கணாற்றலும் பெருவிடைமேற்சிறுபிறைக்கொழுந்தணி திருமுடியோனெழுந்தருளல்சிந்தித்தான். | 11 |
வளைதுகிர்க்கொடிவந்நடுவயங்குகூன் வளையெனச்சடைநடுப்பிறைவயங்குற வளைபிறையமுதுகுத்தன்னதென்னவவ் வளைவரநதித்துளியலங்கிமேவுற. | 12 |
ஆயவவ்வநம்புகவவாவித்தாவலின் மேயகைத்தலத்தொருமான்விளங்குற வேயமற்றதன்செலவிரிக்கமேவல்போற் றூயவெங்கனன்மழுவொருகைத்தோன்றுற. | 13 |
உழைகுறும்பியற்றினுன்னுடம்பிற்போர்த்ததோல் தழையுமென்போலரைசாருமாலென விழைதரவுணர்த்தல்போன்மிளிர்தாக்கதள் பழையதாய்த்திருவரைசூழ்ந்துபம்புற. | 14 |
திருமுடிமதிகுறைதீர்ந்ததோவெனப் பொருவிறோளராப்படம்பைத்துப்பொள்ளென வருகுநோக்குபுபரைமயிலென்றஞ்சுபு துருகுதீர்ந்தொடுங்குபுமுன்னைச்சீர்பெற. | 15 |
மன்னியபவளமால்வரையினோர்புறந் துன்னியபச்சிளங்கொடியின்றேற்றம்போன் மின்னியவிதிபடையாதமேனிப்பாற் பன்னியபனிவரைப்பாவைமேவுற. | 16 |
நந்திமுற்கணங்களுநளினப்பூவெனு முந்தியங்கடவுளுமுறுமற்றோர்களு முந்தியும்பிந்தியுமொய்த்துச்சூழ்வரத் துந்துமிபல்கடற்றொழிப்பு*மாற்றிட. *தொழிப்பு-ஓசை | 17 |
அரியநற்காட்சிதந்தருளினான்பரன் பிரியமிக்கீதியான்பெற்றுளேனெனாக் கரியவன்மகன்விரைந்தெழுந்துகைதொழா வுரியபொன்மலரடியொல்லைத்தாழ்ந்தனன். | 18 |
சூழ்ந்தனன்பன்முறைசூழ்ந்துசூழ்ந்துமண் டாழ்ந்தனன்பன்முறைதாழ்ந்துளத்துயர் போழ்ந்தனனினியொருபுகருமின்றியான் வாழ்ந்தனன்வாழ்ந்தனனெனவழுத்தினான். | 19 |
சுத்தமெய்ஞ்ஞானநன்னெறிதொடர்ந்துபோ முத்தர்களகக்கணுமுயன்றுங்காணரு மித்தகுகாட்சியிவ்வேழைக்காவதோ சத்தறிவின்புருத்தலைவனேயென்றான். | 20 |
வேறு. என்றகாலையிலிறையவன்றிருவுளமிரங்கி யொன்றமாதவமயுதமாண்டுவந்துநீயியற்றிக் கன்றமெய்யிளைத்தாயெனத்தன்றிருக்கையா லன்றவன்புறந்தைவராவறைவிழைவென்றான். | 21 |
அருமையாயநீகாட்சிதந்தளித்ததன்மேலும் பெருமையாயதொன்றுண்டுகொல்பிறைமுடிப்பெரும வொருமையாளர்தம்முள்ளொளியாய்விளங்கொருவ விருமையாவையும்படைக்குமாறருள்புரியென்றான். | 22 |
என்றுநைந்துநைந்திறைஞ்சினன்வேண்டலுமிறைவ னன்றுநின்விழைவிதுவெனினாடுமிவ்வநத்து ளொன்றுநங்குறியுள்ளதுமற்றஃதெவைக்குந் தொன்றுதோன்றமுன்றோன்றியதோற்றத்ததம்மா. | 23 |
இனையகோசமொப்பாகியகோசம்வேறில்லை நினையநோக்கமெய்யானந்தநிரப்புவதிதுவே துனையவெத்துணைக்கோடிபாதகங்களுந்தொலைக்கும் புனையவல்லமாமறைபுகழ்வதுமிதன்புகழே. | 24 |
அன்னதாகியவிலிங்கத்துக்கெதிர்வலத்தமைய நன்னர்வான்றடமொன்றுகண்டப்புனனயந்து சொன்னமூர்த்தியையாட்டுபுபூசித்துத்துதித்து மன்னநீவிழைந்ததுபெறுகுதியெனவகுத்து. | 25 |
அனகவிவ்வநமின்றுதொட்டந்தணபிரம வனமெனப்படும்பின்னருநீபெருமாண்பாற் கனகமாமணிமாளிகைநகர்படக்காண்பாய் முனகர்தீரந்தநகரமுநின்பெயர்முயங்கி. | 26 |
வரமிகத்தருவள்ளனாம்பொலிதரப்பிரம புரமெனப்படுமிலிங்கமும்வாவியும்பூணும் பரவுநின்பெயரென்றுரைத்தருளியெம்பரம னுரவுமிக்கபல்கணத்தொடுமொய்யெனமறைந்தான். | 27 |
ஐயனங்ஙனமறைதலுமம்புயமலர்மேற் செய்யனவ்வநந்தேண்டினனொருசிறைக்கண்டான் வையமாதியெப்புவனமும்வாழ்தரமுளைத்துப் பொய்யவாவுளங்கடந்தொளிர்பூரணப்பொருளை. | 28 |
கண்டுகண்கணீர்துளித்திடக்கசிந்துளமுருகி மண்டுகாதலிற்சூழ்ந்துபன்முறைதுதிவழுத்தி விண்டுநாத்தழுதழுத்திடமெய்ம்மயிர்பொடிப்பத் தண்டுபோலெதிர்வீழ்ந்தனன்றரைமிசைக்கிடந்தான். | 29 |
எழுந்துதம்பிரானருளியபடியெதிர்வலப்பாற் கொழுந்துகொண்டெழுதீவினைமுழுவதுங்குலைந்து விழுந்துபோம்படிபுரிதடம்விரைவினுண்டாக்கி யழுந்துமன்பினானதிற்படிந்தெழுந்தனனம்மா. | 30 |
அந்தநீர்முகந்தமலலிங்கத்தினையாட்டிச் சந்தநாண்மலர்சூட்டியொண்சாலுணவூட்டிப் பந்தமோவுமட்டாங்கபஞ்சாங்கமாப்பணிந்து முந்தநின்றுளமுருகுபுதோத்திரமொழிவான். | 31 |
சுருதியந்தமுந்தொடரொணாச்சுயம்பிரகாச பரிதியாயிரங்கோடியிற்பொலிதிருப்படிவ கருதியாவரும்பவத்துயர்கடக்குமுக்கண்ண வெருதியாவருந்தொழவுகைப்பவநினையிரந்தேன். | 32 |
உருவமொன்ப*தாறெட்டமைந்துருவொன்றுமில்லாய் பருவமங்கைபான்மருவவுமயல்சற்றும்பற்றாய் பொருவவைந்தொழிலியற்றியுந்தொழிலொன்றும்பூணாய் திருவவானவதேவதேவேசநிற்சேர்ந்தேன். | 33 |
பூதமுங்கரணங்களுங்கலைகளும்பொருந்தாய் நாதமுங்கடந்தியோகியருள்ளமேநயந்தாய் வாதமும்பலபேதமாஞ்சமயர்தம்வயத்த போதமுந்தபுபூரணானந்தநிற்புணர்ந்தேன். | 34 |
போற்றிசங்கரபொங்கரவணிந்தருள்புராண போற்றிமாயவன்காணொணாத்திருவடிப்புனித போற்றியெங்கணுமொழிவறநிறைந்துறப்பொலிவோய் போற்றியான்றொழுபிரமலிங்கத்தமர்புலவ. | 35 |
என்றுதோத்திரம்புரிபவற்கெதிரெழுந்தருளிக் கன்றுமான்மழுக்கையினார்நனிகடைக்கணித்துத் துன்றுபல்வகைச்சிருட்டியும்புரிகெனச்சொல்லி யன்றுதூயவவ்விலிங்கத்துண்மறைந்தனரம்மா. | 36 |
பெற்றநான்முகனவ்வநம்பிழையறத்திருத்திக் கற்றவிச்சுவகன்மனாலாலயங்கண்டு பொற்றமாநகராக்கினான்பொருந்துபல்குடியு மற்றமில்வகைச்சிருட்டிமுன்கற்பம்போலமைத்தான். | 37 |
வேறு. பிரமனருந்தவம்புரிந்தபிரமவநமொருநகராய்ப் பிரமபுரமெனுமொருபேர்பெற்றதெதிர்வலப்பானீர் பிரமதடமெனும்பெயராற்பிறங்கியதுசுயம்புலிங்கம் பிரமலிங்கமென்றெவரும்பேசவிளங்கியதம்மா. | 38 |
அப்பிரமதடநறுநீரான்றவிதிப்படிமூழ்கி யப்பிரமலிங்கத்தையன்புமிகத்தரிசித்தே யப்பிரமபுரத்துறைவாராரேனுமப்பொழுதே யப்பிரமன்மான்முதலோரங்கைகுவித்திடப்பொலிவார். | 39 |
ஒன்றாகிப்பலவாகியுருவாகியருவாகித் தொன்றாகிப்புதியதாயசுயம்புலிங்கப்பிரான்விடைபெற் றன்றாதரவிற்பிரமனமர்தருதன்னுலகடைந்து குன்றாதசிருட்டியெலாங்குறித்தியற்றிவாழ்ந்தனனே. | 40 |
8. பிரமன்சிருட்டிபெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 411.
~~~~~~~~~~~~
வரத்தமர்முனிவர்பண்ணவர்மற்றோர்வாழ்த்திடப்பொலிதருபிரம புரத்தமர்சுயம்புலிங்கநாயகன்றன்பொலியருள்பெற்றகாரணத்தாற் றிரத்தமர்தெய்வத்தாமரைக்கிழவன்செறிதரவியங்குவநாளு முரத்தமர்நிலையினிற்பனபலவுமொய்யெனப்படைத்தனன்மாதோ. | 1 |
உரைசெயிச்சிருட்டிக்கேதுவாயனையானுளத்துவந்தவர்களொன்பதின்மர் புரைதவிர்பிருகுபுலத்தியன்புலகன்புண்ணியக்கிருதுபல்கலையுங் கரைதருவலியாங்கிரசுமாதவத்தக்கன்புகழ்மரீசிமெய்ந்நலத்தாற் றரைபுகழ்தருமத்திரிநலவசிட்டன்றழையுமற்றவர்பெயரம்மா. | 2 |
அனையவர்தம்முடக்கனென்றுரைக்குமளவின்மாதவத்தினான்பல்ல தனையரைப்படைத்துப்படைமினென்றேவத்தாழ்ந்தெழுந்தனையரஃதேற்று வனைதருபடைப்புச்செயமுயல்காலைமகதியாழ்முனிவரன்றோன்றி வினையம்வல்லவர்நீர்முயல்வதென்னென்றான்மற்றவருள்ளதுவிரித்தார். | 3 |
அவனதுகேட்டுப்பந்தமேற்பந்தமாக்குவான்முயன்றுளீரழகே புவனமேத்தெடுக்கப்பொலிதருபிரமபுரத்தினைநீவிரின்றடைந்து கவனமால்விடையானருட்குறிபோற்றிக்காமருபெருந்தவமாற்றித் தவலருமுத்தியடைமினென்றுரைத்தான்சார்ந்தனரனையரத்தலமே. | 4 |
அத்தலப்பிரமதீர்த்தத்துமூழ்கியவிர்தருபிரமலிங்கேச வுத்தமற்போற்றித்திருவருடரப்பெற்றொன்றியொன்றாக்கலப்புற்றார் வித்தகத்தக்கனன்னதுதெரிந்துமிகமனம்புழுங்குபுபின்னும் புத்திரர்பலரைப்படைத்துமுன்போலப்பொருத்தினனேவினனம்மா. | 5 |
அந்தமைந்தரையுமுந்தைமைந்தரைப்போலாக்கினானாரதமுனிவன் வெந்தசிந்தையனாய்த்தக்கனென்பவனும்வீணைமாமுனிவனைநோக்கி நந்தவண்சிருட்டிசெய்திடாவகையென்னலமகார்தமைக்கெடுத்தமையா. லுந்தநீமனைவிமகவிழந்தெங்குமுழிதருவாயெனச்சபித்தான். | 6 |
தீயவெம்பாசத்தளைந்துமாழாந்துதிரிதராவண்ணமுன்மகாரை நாயனொண்கமலச்சேவடிகலந்துநலம்பெறவிடுத்ததெண்ணாது தீயநீயென்னைச்சபித்தனையதனாற்றேவர்கோனாயவெம்பெருமான் பாயவெஞ்சினக்கோட்பட்டுநின்றலையும்பறிபடுவாயெனச்சபித்தான். | 7 |
முனிவரன்சாபங்கொடுத்துநீங்குதலுமொய்பெருந்திறலுடைத்தக்கன் பனிமதிநுதலார்பலர்வரப்படைத்துப்பலர்கொளக்கொடுத்தனன்பின்னுங் கனிதரவண்டபகிரண்டமனைத்துங்கலந்தபல்லுயிர்களுமீன்று தனியொளிர்தாயைமகளெனப்பெற்றான்றவத்தின்மேற்சிறந்ததொன்றுண்டோ. | 8 |
சதியெனுமகளையுலகெலாங்களிப்பத்தன்றிருமனையகம்போந்து பொதிதருகருணைப்பெரும்பிழம்பாயபூரணன்மணந்தருளியபின் விதிவலிதானோவாணவமலத்தின்வீக்கமோமூவகையுயிர்க்கும் பதியினையந்தமதியிலிமருகர்பலருளுமொருவனாமதித்தான். | 9 |
அனையவன்மதிப்போர்ந்தையனும்வாளாவணுகினன்சதியொடுங்கயிலை துனையமற்றொருநாண்மதியெனுமருகன்றுடியிடையொருமகள்பாலே நினைதருநசைவைத்ததுதெரிந்ததனைநீக்கெனக்கொளாமைதேர்ந்தவனை யினைதரவொருநாட்கொருகலையாத்தீர்ந்திறுதியென்றுரைத்தனன்கொடியோன். | 10 |
கொடியவன்மொழியானாட்குநாளொன்றுகுறைவதுகண்டவவ்வாலோ னெடியவன்முதலாமமரருமஞ்சிநீத்ததுங்கண்டுவான்கயிலை யடிகளையடைந்துகாத்தியென்பதன்முனங்கைதொட்டெடுத்தனன்சடில முடிமிசைவைத்தோர்நாமமும்பூண்டான்முருக்கினானாமமம்மதியே. | 11 |
அதுதெரிதக்கனாகியமூர்க்கனழுக்கறுத்திருந்தனன்பின்னர்க் கதுமெனவெழுந்துமதுமலர்ப்பொகுட்டுக்கடவுளையடைந்தடிபணிந்து சதுமுகமகமொன்றியற்றுநல்குறித்தேன்றகுமிடம்புகலெனவனையான் விதுமுடிப்பெருமான்விரைந்தருள்புரியுமேதகுதலமுளத்தாய்ந்து. | 12 |
குணகடன்மேல்பால்யோசனைக்கப்பாற்குலவுகாவிரிக்கரைத்தென்பா லணவுமோர்வநமுண்டதைநகர்கண்டேனப்பெருந்தானத்தினெல்லை புணர்தருஞ்சுற்றும்யோசனையளவுபோற்றுமவ்வெல்லையுளழலோற் குணர்தருதிசையினழல்வளர்த்திடுதலுத்தமமாகுமென்றுரைத்தான். | 13 |
மலாவனுரைத்தமொழிசெவியேற்றுமண்ணிடைப்பலரொடுமிழிந்து கலரணுகரியவத்தலநோக்கிக்கரிசிலதென்றுவப்புற்று வலர்புகழ்தெய்வத்தச்சனைக்கூவிமகம்புரிசாலையொன்றீங்கே யுலர்தலில்வண்ணம்புரியெனப்பணித்தானொய்யெனப்புரிந்தனனவனும். | 14 |
திசையொருநான்குமுயர்மதிலெடுத்துத்திகழநால்வாயிலும்போக்கி யசைவில்கோபுரமுமமைத்ததனுள்ளாலலங்குபொற்சாலையொன்றாக்கி வசைதவிர்குண்டமண்டலம்வேதிவயங்குமேகலையொடுமமைத்திட் டிசைபெறுமறையோரிருப்பதற்கதவத்தியன்றவாதனுங்களுமாக்கி. | 15 |
திசைபுரப்பவருமாயவனாதித்தேவருமிருப்பதற்கிடமு நசைகெழுமடவார்நயந்துநீராடுநன்மலரோடையுங்குளனு மிசைபதமமைக்குமிடங்களுமறையோர்விலாப்புடைவீங்கவுண்டிடற்காம் பசைதருமிடமுஞ்சுவணமுற்பலவாம்பண்டங்களமைத்திடுமிடமும். | 16 |
செறிதருமற்றையிடங்களுமமைத்துச்சிருக்குமுன்யாவையும்புரிந்தா னறிதருதக்கனுளமிகமகிழ்பூத்தண்டராதியர்விரைந்தணுகக் குறிதருதூதுசெலுத்துபுதானேகுலவயன்மால்புரத்தெய்தி நெறிதருமகத்திற்கணுகுமாறுரைத்துநீள்பெருங்கயிலையையடைந்தான். | 17 |
வெள்ளியங்கயிலையடைந்தவனந்தியனுஞைவேண்டாதொருதனையே யுள்ளியுட்புகுந்தான்கருணையங்கடலாங்கொள்ளரியாதனத்திருப்ப வெள்ளியதரத்தான்வணங்கிலான்வணங்காவிரும்பெருங்குற்றமுமெண்ணான் வள்ளியவெனைக்கண்டெழுந்திலான்சாம்பர்வயங்குமேனியனெனவெகுண்டான். | 18 |
தீயவூழடைந்ததக்கனோர்குணமில்சிவன்மகத்தவிகொளறகாது மேயநானழையேனெனவகன்றொருதன்வேள்வியஞ்சாலையையடைந்தான் றூயநான்மறையுமுணர்தராப்பரமசுயம்பிரகாசனெம்பெருமா னாயவத்தனையுமறிந்துமற்றறியான்போலுமையொடுநகைத்தமர்ந்தான். | 19 |
படுமகச்சாலையடைந்தவக்கொடியோன்பைந்துழாய்முகில்வரக்கண்டு நெடுமரமெனமற்றவனடிவீழ்ந்துநிலவவென்மகம்புரந்தளித்தி கடுவமர்களத்தனிவணுறாவண்ணங்கழித்தனனெனவொன்றுமுரையான் றடுவரியவன்போலிருந்தனன்கேடுசாருமேற்றடுப்பவரெவரே. | 20 |
ஆயவக்காலைமலரவன்மகவானழலவன்கூற்றுவனிருதி பாயநீர்க்கிறைவன்சதாகதியளகைப்பதிபுரப்பவனலீசானன் மேயகிம்புருடர்கின்னரரியக்கர்வித்தியாதரர்வலிக்கருடர் தூயமெய்ச்சித்தர்சாரணரெவருந்தொக்கனரம்மகச்சாலை. | 21 |
கதிரவன்மதியமுதற்பலகோளுங்ககனவாசிகளெனப்பட்ட வதிர்தலின்மற்றையாவருமடைந்தாரடுதகரூனுகர்நசையும் பிதிர்விறக்கணையும்பெறுவதுகருதிப்பிறங்குவேதியரெலாம்புகுந்தா ரெதிரில்பொன்மானத்தேறுபுதக்கனில்லுறையாவருஞ்செறிந்தார். | 22 |
வந்தவர்பலரும்வெள்ளியங்கயிலைவளர்பெருமானுலகீன்ற சுந்தரவுமையோடணைதராவிதமென்சொன்மினென்றொருவருக்கொருவர் தந்தமுள்வினவிக்கொடுப்பவன்வெறுப்பிற்சாற்றுவதெவனெனவிறுத்து நந்தநங்கருமம்பார்க்கலாமென்றுநவின்றனர்பின்வரலுணரார். | 23 |
யாவருநமதாணையிற்குழீஇயினரென்றெக்கழுத்தங்கொடுதக்கன் மேவருமிருத்து*விக்குகண்முதலோர்விதியுளியவரவரிருக்கும் பூவருமிருக்கையிருந்திடப்புரிந்துபொலிமகப்பெருந்தழல்வளர்த்தான் றாவருமயன்மாலாதியர்பலர்க்குந்தவாவினைப்பெருந்தழல்வளர்த்தான். | 24 |
பலமுனிவரர்நற்றதீசிமுன்னானோர்பங்கயன்மாயன்முற்பலர்க்குங் குலமறைமுடிக்குமெட்டவொண்ணாதகுழகனையிகந்திதுசெய்த னலமலவென்றுமறைமுதலெடுத்துநவிலவுமறுத்தனனவரு மலமருமுளத்தார்வைதனரகன்றாரகல்பவரகல்கவென்றிருந்தான். | 25 |
கெடுந்தொழிற்றக்கன்செயலிதுவாகக்கேழ்கிளர்பெருங்கயிலாயத் தடுந்தொழிற்றரக்கினதளரைக்கசைத்தவண்ணறனிணையடியிறைஞ்சி விடுந்தொழில்கருதாக்கருணையெம்பிராட்டிவெவ்வினைத்தந்தையாந்தக்கன் படுந்தொழிறவிர்ப்பானவன்மகங்காணப்படர்குவனிறைவயானென்றாள். | 26 |
என்றலுநம்மையிழித்துரைதக்கனெனும்பொறியிலியுனைமதியான் பொன்றலுந்தவிரானாங்குநீபோதல்புல்லியதாகுமென்றருள வன்றலுமவிரோதித்தலுமில்லாயாயினுமடியனேனாங்குச் சென்றலும்பகலுந்தெருட்டிநிற்கடிமைசெய்குவனவனையென்றெழுந்தாள். | 27 |
எழுதலுந்தீங்குவருவதுதிண்ணமெனப்புகன்றெம்பிரான்விடுத்தான் முழுதுலகீன்றபிராட்டியும்வேறுமுன்னலடுணையும்வேண்டாளாய் வழுவறுபெரியோர்தொழுநனிபள்ளிமருவினளாங்குநின்றெழுந்து பழுதறவடுத்தோர்க்கருடிருச்செம்பொன்பள்ளிவந்தடைந்தனண்மாதோ. | 28 |
ஆங்குநின்றெழுந்துபற்பலவிரிச்சியடுத்தடுத்துறத்தடைசெயவும் பாங்குகொளுள்ளத்தெண்ணலளாகிப்பாதசாலம்புலம்படையத் தேங்குதன்காதற்றிறத்தினாற்கொடியோன்றீமகச்சாலையையடைந்தா ளோங்குபேருலகத்துயிரெலாமொருங்கேயுயிர்த்தினிதோம்புமெம்பிராட்டி. | 29 |
பிறைநுதற்கருங்கட்செய்யவாய்வெண்பற்பிராட்டிநேர்வந்துநின்றிடவுங் கறைமனத்தீயகொடியவன்கண்டுங்கண்டிலாதவனெனவிருந்தான் மறைமுதற்கலைகள்பற்பலவுணர்ந்துமாசறத்தெளியினும்பெருமா னிறையருள்சாலாக்கயவரைவிடுமோநிகழ்பெருங்கருமலச்செருக்கு. | 30 |
விழித்தகண்குருடாவிருக்குஞானியர்போல்வெய்யவனிருத்தலுமமுதைப் பழித்தமென்மொழியெம்பிராட்டியுநெஞ்சம்பதைபதைத்தவணின்றுகாதல் கொழித்ததன்றாய்பாலடைந்தனளவளுங்கொழுநனொத்திருந்தனள்பாச மொழித்தவண்மீட்டுந்தக்கன்முன்னடைந்தாளுறச்சினந்தனளிதுசொல்வாள். | 31 |
தீமதியமைந்ததியற்கையோவன்றிச்செயற்கையோமறைகளாயிரமுந் தாமதியாதவொருபரம்பொருளைத்தத்துவங்கடந்தபேரொளியை நீமதியாமலிகழ்ந்ததென்னிகழ்ந்துநீரெழுமொக்குளிற்சிதைவாய் தூமதியார்க்குமில்லையோலிங்குச்சூழ்ந்துளாரறிவுமிப்படியோ. | 32 |
என்றுவான்கருணையிறைவிசொன்மாற்றமிருசெவியேறலுங்கனன்று நின்றுநீயுரைக்குமிதிற்பயனில்லைநிரம்பியதாமதகுணத்தன் றுன்றுமாமகத்துவரத்தகானீயுந்தொடர்புடைமகளலையென்றோ னன்றுமாமனத்தன்மகளலையென்றதறிதரினுண்மையேயன்றோ. | 33 |
கொடியமாபாவியிம்மொழிசொலவுங்குடங்கையாலஞ்செவிபுதைத்து நெடியவேற்கருங்கணம்பிகையந்தோநின்மலன்வார்த்தையுமிகந்து சடியபல்விரிச்சிநிகழ்ச்சியுமெணாதுசுழிமடன்பாலடைந்ததற்கு முடியவாங்கழுவாயினன்மகளென்னுமுறையொழிப்பாமெனக்கருத. | 34 |
ஆயவக்காலைநடுங்கியதவனியசலங்கள்வெடித்தனசகுபம்* மேயவெண்களிறுநிலைகுலைந்தழிந்தவிண்ணின்றும்வீழ்ந்தனவுற்கை பாயபல்லுயிருமலரவன்முடியப்படுதினமிதுகொலென்றயிர்த்த காயநின்றதிர்ந்துவீழ்ந்தனவுருமுக்கணமுடுக்கணமெலாமுதிர்ந்த. | 35 |
இதுநிகழ்காலையொருபெருவிருக்கத்திணர்மலர்க்கோட்டின்மேனின்றுங் கதுமெனநொச்சியிலைபுரைபைந்தாட்கலாபமாமயிலொன்றுவீழ்ந்து முதுபுகழுமையாள்கேசபாரந்தனினமெனமுந்திவந்தடைய மதுமலர்க்கூந்தன்முதல்வியுமுள்ளமகிழ்தரவதையனைநோக்கி. | 36 |
அஞ்சலைதோகாயஞ்சலையென்னாவாரருளபயநன்களித்தாள் விஞ்சலையுடுத்தபுடவிவாழுயிர்க்கும்விண்ணுலகத்துவாழுயிர்க்கு நஞ்சலையெயிற்றுப்பாந்தள்வாழுலகநண்ணியவுயிர்க்குமெஞ்ஞான்று நெஞ்சலைதுயரநீங்கிடவபயநிரப்புவாட்கீதுமோர்புகழோ. | 37 |
பிணிமுகமுவகைபெறவருள்செய்தபின்னர்வெந்தக்கனைநோக்கிக் கணிதமில்பாவக்குழிசியாங்கயவகளைகணெவ்வுலகிற்குமாய துணிபரம்பொருளையிகந்தனையதனாற்றொலைந்துநீகெடுகவின்னேயிவ் வணியுறவுடம்புமொழிப்பலென்றியோகத்தருந்தழலெழுப்பினளம்மா. | 38 |
அன்னசெந்தழலிற்புகுந்தனண்மறைந்தாளமரர்கள்கண்டுளம்பதைத்தார் மின்னகுகுலிசத்தவன்முதலெண்மர்மெய்நடுநடங்கினரிருந்தார் பன்னகப்பாயற்பகவனுமலர்மேற்பனவனுங்கண்டுநெட்டுயிர்த்தா ருன்னருமற்றையுயிரெலாம்பட்டதுரைத்திடவல்லவர்யாரே. | 39 |
அறிவிலரானார்பெருந்திருவடையினப்பெருந்திருவொடுஞ்சிதைவர் செறிதருமுலகத்தென்பதுதேற்றந்தீவினைத்தக்கனம்பிகையை நெறிமகளாகப்பெற்றனன்மகளுநீத்திடத்தானும்வாழ்வொழிந்தான் பிறிதெவனுரைப்பாமேலினிநடக்கும்பெற்றியுமெடுத்துரைசெய்வாம். | 40 |
9. தக்கன் மகம்புரிபடலம்முற்றிற்று.
ஆக திருவிருத்தம் 451.
~~~~~~~~~~~~~~~
நயங்குலவாததக்கனகுமகம்புரியுமாறு மியங்குபல்லமரரோடியாவருந்தொக்கவாறுஞ் சயங்குலவிறையைநிந்தைசொலுமாறுஞ்சார்ந்ததேவி வயங்குருமறைத்தவாறுமகதியாழ்முனிவனோர்ந்தான். | 1 |
கருவியாழ்நழுவவேணிகட்டவிழ்ந்துலையச்சீற்ற மருவியோடுபுவேதண்டமருவினன்றனியேவைகும் பருவியாளப்பூட்செல்வப்பரனையஞ்சலித்துநின்று வெருவியான்போந்தேன்றேவிவெந்தழன்மறைந்தாளென்றான். | 2 |
ஆவயினடந்ததென்னென்றறிந்தறியான்போற்கேட்குந் தூவயிற்கழுமுளார்க்குச்சிறுவளிதடவுந்தோறும் பரவயினிரம்பப்பாடும்பத்தர்யாழ்க்கருவிமேலோ னாவயினடுக்கந்தோன்றநடந்தனவனைத்துஞ்சொற்றான். | 3 |
முனிவரனுரைத்தலோடுமுடிவிலாமுனிவுபொங்கப் பனிமதிமுடித்தபெம்மான்படர்சடையொன்றுபற்றித் தனிநிலத்தறைந்தானாகத்தரைமுதலுலகம்யாவு நனிநடுநடுங்கவீரநம்பன்வந்துதயஞ்செய்தான். | 4 |
திருமுடிவிசும்புபோழத்திசைபுயந்தடவாநிற்க மருமலர்ச்செய்யபாதமண்பரப்பனைத்துமாகக் கருகிருளனைத்துமேய்ந்துகண்ணெழுசுவாலைபொங்க வொருபரனடிக்கீழ்த்தாழ்ந்தீதுரைக்கலுற்றனனவ்வீரன். | 5 |
எழுகடற்புனலுமுண்கோவிரவியுமதியுஞ்சூழு முழுவரைபெயர்க்கோமற்றைவரையெலாமுறித்தல்செய்கோ கெழுபுவியடங்கவாங்கிக்கேழ்கிளர்வாயிற்பெய்கோ செழுமவியவண்டமெல்லாஞ்சிதர்படச்சிதைத்தல்செய்கோ. | 6 |
அதிர்கழனெடியமாலையயனையிந்திரனையின்னே பிதிர்தரவங்கைவைத்துப்பிசைந்துபொட்டிடுகோவான்மீ னுதிர்தரவதிர்க்கோயாவுமொடுங்கிநீறாகநோக்கோ வெதிரடிமுளைத்தாய்செய்யவேண்டுவதென்னையென்றான். | 7 |
தீயவன்றக்கனென்னுஞ்சிதடனோர்வேள்விசெய்வான் மேயநந்தமக்குப்பாகமிலையெனவிளம்புகின்றா னாயவன்றனைச்சார்ந்துண்டென்றால்விடுவிலையென்பானேற் சாயவங்குள்ளாரோடுஞ்சாடுதிபோதியென்றான். | 8 |
இத்தனைதானோவையனிடும்பணியெனக்கென்றெள்ளி யத்தனையுருவுவேண்டாதமைதருமுருவுதாங்கி முத்தனையுலகுக்கெல்லாமுதல்வனைப்பணிந்துபோற்றி நத்தனையயனைவாட்டுநம்பிரானெழிந்தானன்றே. | 9 |
வரைபொடிபடுக்கவேண்டின்வானத்தைமாய்க்கவேண்டிற் றரைமுழுதெடுக்கவேண்டிற்சலதியைக்குடிக்கவேண்டி னுரைகெழுமொன்றேசாலும்பூதங்களுலப்பிலாத விரைதரத்தொடர்ந்துமேவவேள்வியஞ்சாலைபுக்கான். | 10 |
மகவினைச்சாலைபுக்கவாள்வலிவீரர்வீரன் றகவொருநால்வாயிற்குந்தவாப்பெருங்காவல்வைத்துட் புகவவன்வரவுநோக்கிப்புலிப்போத்தின்வரவுகண்ட ககனமான்குழாங்களென்னக்கலங்கினரமரரியாரும். | 11 |
கொடுமகமிழைக்கும்பாவக்குழிசியாந்தக்கன்முன்போ யிடுமவியெம்மாற்குண்டோவில்லையோசொற்றியென்றான் கெடுவதுகுறுகப்பட்டான்கெடாதபேரகங்காரத்தாற் கடுவுணிதனக்குப்பாகங்கரையாதுவேதமென்றான். | 12 |
என்னலுமிருக்குவேதம்விரைந்துருவெடுத்துவந்து முன்னவனுக்கெல்லாமுதலவனயன்மாறேறா வன்னவனொருவனேயெவ்வழன்மகங்களுக்குநாத னின்னமுமெமக்குநாதனென்றெடுத்தியம்பிற்றன்றே. | 13 |
அரியயனாதிவானோரனைவருமுய்யுமாறு கரியநஞ்சமுதாக்கொண்டகண்ணுதற்பிரானையன்றி யுரியவன்யாவன்வேள்விக்கும்பர்தங்குழாத்துளென்றும் பெரியவனியாவனென்றுபேசியதிரண்டாம்வேதம். | 14 |
எவனருள்வலியாற்பாசமிரிதருமுத்தியெய்து மெவனருள்வலியாலோரைந்தொழில்களுநடக்குமின்னு மெவனுமையவண்மணாளனெவன்றிரிபுரந்தகித்தோ னவன்மகத்திறைவனாமென்றமைந்ததுமூன்றாம்வேதம். | 15 |
எவன்விழிபுதைப்பவெங்குமிருளுறும்யோகின்மேவி யெவனமர்ந்திருக்கவெல்லாம்புணர்ப்பறுந்தரைமுன்னெட்டு மெவனுடைவடிவமாகுமெவன்பசுபதியாயுள்ளா னவன்மகத்திறைவனாமென்றறைந்ததுநான்காம்வேதம். | 16 |
மறையொருநான்குமிவ்வாறுரைக்கவுமனத்துக்கொள்ளா கறையுடைத்தக்கன்றன்மைகண்டுவண்குடிலைதானு நிறையுருவொன்றுதாங்கிநேர்வந்துபுகலாநிற்கு முறையிலாமடவற்கியாதுமொழியினுமாவதென்னே. | 17 |
மறைபலவற்றினுக்குமூலம்யான்வகுத்தல்கேட்டி நிறைதருமெனக்குமற்றைநெடியவன்முதலானோர்க்கு மறையுலகினுக்கும்யாகமனைத்திற்குமிறைவனாவான் மிறைமுடியவனேயென்றுபிரணவம்பேசிற்றன்றே. | 18 |
மொழிதருமனைத்துங்கொள்ளான்முன்னையிற்கனன்றுமூர்க்கன் பழிதருசுடலையாடிபடுதலையெலும்புபூண்பா னிழிதருதமோகுணத்தனெனப்படுமுருத்திரற்குப் பொழிதருமவியூணல்கேளென்றனன்புன்மையாளன். | 19 |
அவனஃதுரைத்ததாலோடுமாண்டகைவீரச்செம்மல் சிவபரநிந்தைகாதுணுழைந்துளச்சினமெழுப்பக் கவலருமொருகைவாளாலவன்றலைகழியவெட்டி குவலயநடுங்கயாககுண்டத்துவீழ்த்தினானால். | 20 |
உழையினதுருவங்கொண்டாங்கோடும்யாகத்தின்சென்னி பிழையுறவாளால்வெட்டிப்பிரமனுநெடியமாலுங் குழைதரத்தண்டான்மொத்திக்குவலயக்கிடக்கைசெய்து விழைகதிர்முகத்தறைந்துபற்களைவீட்டினானே. | 21 |
மதியவனுடலந்தேயவண்கழற்காலாற்றேய்த்தான் பொதிதருமழலினோற்குப்பொலிதருகரமறுத்தான் வதிதருபகனென்பான்றன்மரைமலர்க்கண்கள்சூன்றான் குதிதருமகவானாயகுயிலிருசிறகுமீர்ந்தான். | 22 |
தலையமைவானோர்யார்க்குஞ்சாலுமித்தண்டமாற்றி நிலையமைவடிவாளாதிநிகழ்பலபடைகளானும் புலையறிவமைந்தமற்றைப்புத்தேளிர்களுக்குத்தண்டந் தொலைவறச்செய்தான்பூதத்தொகைகளுஞ்செய்யலுற்ற. | 23 |
கரமிழந்தாருஞ்சில்லோர்காலிழந்தாருஞ்சில்லோ ருரமிழந்தாருஞ்சில்லோரொளிருத்தமாங்கமென்னும் பரமிழந்தாருஞ்சில்லோர்பல்லிழந்தாருஞ்சில்லோர் வரமிழந்தாருஞ்சில்லோர்வாயிழந்தாருஞ்சில்லோர். | 24 |
சிவநிந்தைசெய்தபாவத்தீயனைநோக்குங்கண்ணு மவமிகுமனையான்வார்த்தையடைதருசெவியும்பொல்லாத் தவறினாற்கெதிர்சொலாததாலுமாங்கிழந்தாரின்னும் பவமிலாற்பிழைத்தபாவம்பாறுமோவெளிதினம்மா. | 25 |
முலையிழந்தாருஞ்சில்லோர்மூக்கிழந்தாருஞ்சில்லோர் தலைமயிரிழந்துளாருஞ்சிலர்தவாதரையுடுத்த கலையிழந்தாருஞ்சில்லோர்கருத்துமுற்றாதுதத்த நிலையிழந்தாருஞ்சில்லோர்நிரம்பியமடவார்தம்முள். | 26 |
விலாப்புடைவீங்கவுண்டேமலம்விளங்கவியாமாட்டூன் குலாப்பெறக்கவர்ந்தேமல்லேந்தக்கணைகொளலுந்தீர்ந்தேங் கலாய்த்தவிக்கொடியாற்சார்ந்துகலங்கவமானத்தோடின் பலாப்பழியடைந்தோமென்றேயழுதனர்மறையோரெல்லாம். | 27 |
விதிவழிபுரிந்தகுண்டமண்டலம்வேதிமுற்றுந் துதியறச்சிதைவுசெய்துந்துவன்றுநெய்க்குடமுடைத்தும் பதிதரவிருந்தபற்பல்பண்டமுமழலிற்பெய்துங் கொதிசினக்குறுத்தாட்பூதர்செய்தவைகுணிக்கப்போமோ. | 28 |
பண்ணியயாகசாலைபாழ்படுத்திந்தவண்ண நண்ணியமகத்தீமாயநகுசினத்தீயுமாய்த்த புண்ணியநிமலவீரபத்திரப்புத்தேளாங்குத் தண்ணியசிவபிரானைத்தன்மனத்துறநினைந்தான். | 29 |
வெள்ளியங்கிரியின்மேலோர்பொன்மலைமேவிற்றென்ன வள்ளியவிடைமேற்றோன்றிமலமாயைகன்மமூன்றுந் தள்ளியமுனிவர்பல்லோர்சயசயசயவென்றேத்த வொள்ளியமேனிக்காந்தியுறுதிசையனைத்தும்போர்ப்ப. | 30 |
குடைகொடியாலவட்டமொலியல்கோண்கொண்டதண்ட மிடைசெய்கோண்கொள்ளாத்தண்டஞ்சாமரைமிளிர்சாந்தாற்றி யடைதருவிறவும்பூதரங்கைகொண்டமைந்துசூழ மடையுடைந்தென்னச்சூதர்மாகதர்விருதுபாட. | 31 |
செறிமலர்மணங்கவர்ந்துதென்றலங்கன்றுலாவ மறிதிரைசுருட்டுங்கங்கைமௌலிமேற்றிவலைவீசக் குறிகெழுநிலவுகான்றுகுளிர்பிறைதயங்காநிற்க வறிவுருவாயபெம்மனாவயிற்காட்சிதந்தான். | 32 |
அண்ணலைக்காண்டலோடுமடிபணிந்தெழுந்தான்வீரப் பண்ணவன்யாகசாலைபாழ்பட்டவாறும்யாருந் துண்ணெனத்துடிக்குமாறுநோக்கியசுயம்புமூர்த்தி யெண்ணிலாவிரக்கமுற்றான்பூதர்களிரைத்தார்த்தாரால். | 33 |
பரவியகருணைமூர்த்திபத்திரப்பிரானைநோக்கி விரவியவிவரையெல்லாம்விரைந்தெழுப்பிடுகவென்றான் வரவியலவனுந்தாழ்ந்துமாண்டவர்பலருமின்னே யுரவுபெற்றெழுகவென்றானுறக்கமுற்றெழுந்தார்போல. | 34 |
எழுந்தனரயனுமாலுமெழுந்தனர்திசைகாப்பாள ரெழுந்தனரமரர்சித்தரெழுந்தனர்கருடர்நாக ரெழுந்தனர்விஞ்சைவல்லோரெழுந்தனர்கதிர்முற்கோள்க ளெழுந்தனர்செவ்வாய்மாதரெழுந்தனர்மறையோரெல்லாம். | 35 |
மாயவனாதிவிண்ணோர்வள்ளலைவிடைமேற்கண்டு பாயபேரச்சத்தோடுபரந்தெழுநாணும்பூப்பத் தூயவன்றிருமுகம்பார்ப்பதற்குளந்துணியாராகிச் சேயவந்நிலத்திற்சேற்றுப்பணிந்தெழல்செய்யாராக. | 36 |
அதுதெரிந்தமலச்சோதியனைவருமெழுகவென்னக் கதுமெனவெழுந்தெல்லோருங்கைதலைக்குவித்துநின்றார் பதுமனைமாலைநோக்கிப்படுமகத்தெமக்குப்பாக முதுபுகழுடையீர்தாரீரோவெனமொழிவான்மாயன். | 37 |
அடியரேமெந்தஞான்றுமாணவமலக்கோட்பட்டுக் குடிகெடுகின்றொநீயுங்குரங்குபோலாட்டுவிப்பாய் செடியுடலேழையேங்கள்செய்பிழைபொறுத்தாட்கொள்ளும் படியிரந்திரந்துவிண்ணப்பஞ்செய்வேம்பிறிதென்செய்வேம். | 38 |
கொடுவிடமெழுந்தஞான்றுகொடியரேமிரந்துவேண்டத் தடுவருங்கருணையாலேசமைந்தவின்னமுதாக்கொண்டு வடுவகிர்க்கண்ணாரெங்கண்மனைவியர்கழுத்திற்பூண்ட விடுசுடர்ச்செம்பொன்காத்தாய்மேலினியுரைப்பதென்னே. | 39 |
இதுநிகரனேகமாகவியற்றியுமறந்துநாங்கள் கதுமெனப்பிழையேசெய்வோங்கண்டித்தபின்புதேர்வோ முதுபுனல்விலக்குங்காலையொழிதரும்பாசியம்மா வதுசெயாவிடின்முன்போலாமற்றெங்கள்செய்கைநாளும். | 40 |
ஆதலினின்றுநாங்களவமதித்திருந்ததற்காக் காதலினடிகள்கண்டித்ததுபெருங்கருணையாகு மேதகுமிதற்குக்கைம்மாறேதுண்டுமெய்மையேயுன் பாதபங்கயங்கள்பல்காற்பணிதரலன்றியைய. | 41 |
என்றுரைத்தடியில்வீழ்ந்தவிணர்த்துழாய்மாலையாற்கு நன்றுளக்கருணைபூத்துநாயகனுரைக்கலுற்றான் குன்றுகைக்கொண்டாய்நீயுங்கூடியபிறருமின்னே சென்றுமுன்பிரமன்போற்றச்சிருட்டிநாந்தருமோர்தேத்து. | 42 |
வயங்குநற்குறியொன்றுண்டுமற்றதுகண்டுபோற்றி லியங்குறுபாதகம்போமெம்மருட்பேறுமுண்டாம் பயங்கிளர்நுங்கடீமைபறிசெய்தோமித்தேத்தற்றாற் றயங்குமித்தானமென்றும்பறியலென்றொருபேர்சார்க. | 43 |
இத்தலஞ்செம்பொன்பள்ளிநனிபள்ளியின்னம்பல்ல முத்தலம்படைக்குமாற்றன்முளரிமேலவற்குநல்கு மத்தலத்தெல்லையுள்ளவாதலாலிவைகண்டோர்தாங் கைத்தலநெல்லிபோலுமத்தலங்கண்டோராவர். | 44 |
என்றுரைத்தரியைமற்றையிமையவர்தம்மைப்போக்கி யொன்றுதன்பாங்கர்நிற்குமொண்படைவீரற்பாரா நன்றுநீயனையதேத்துநலங்கொளப்பொலிகவென்று குன்றுவிற்குழைத்தகோமானவற்கருள்கொடுத்தபின்றை. | 45 |
சூக்குமவுடம்புதாங்கியொருபுறந்துதைந்துநிற்கும் வாக்குமனாதீதச்சீர்வாய்ந்தபூரணியைநோக்கிப் போக்குநீதவிர்தியென்றதேற்றிலாய்போதல்செய்தாய் வீக்குமற்றதற்குத்தக்கபயனுமேதகவிற்பெற்றாய். | 46 |
எனவுரைத்தருளநாணியிறைஞ்சினளெம்பிராட்டி கனமருள்கண்டன்மேனிசுழித்திடும்பொழுதோர்தோகை யினமெனவடையப்பாதுகாத்திரங்கினையாலற்றா லனநடையணங்கேதோகையாயதோருருவங்கொண்டு. | 47 |
பிரமன்முனெமைப்பூசித்தபெருந்தலத்தெய்தியாங்கே வரமுறநமைப்பூசித்துமருவுதியாமுமாங்குப் பரவுமோர்மஞ்ஞையாகிப்பயிலுவோந்துணையாயின்னே கரவறச்சேறியென்றான்கடுவிடைநடாத்தினானே. | 48 |
விடைநடத்தியநங்கோமான்விரிஞ்சனார்பூசைசெய்த கடையுறலென்றுமில்லாக்காமருதலத்தைச்சார்ந்தாங் குடையதன்குறியிலுற்றானும்பராதியர்பல்லோரு மிடையறத்தொடர்ந்துசென்றாங்கியைதரவமர்ந்தாரன்றே. | 49 |
10. யாகசங்காரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 500.
~~~~~~~~~~~~~~~~
இலகவானவர்யாவருந்தம்பிழையிரிந்து விலகமாமலராளியூர்மேவிடுமுன்னர்த் திலகமாகியமூவர்தந்தேவருள்சிந்தித் துலகம்யாவையுமீன்றவளொருமயிலானாள். | 1 |
பரவுநொச்சியின்பாசிலையன்னபைந்தாளும் விரவுபேருலகடங்கமூடுஞ்சிறைவிரியு முரவுசேர்தரமேற்கவிவாலுமிக்கொளிரக் கரவுதீர்மனவநம்பயில்பசுமயில்கவினும். | 2 |
கலவுபல்லுயிர்ப்பயிர்தழைதரக்களங்கறுத்து நிலவுவேணியொண்டடித்துறமறையொலிநிகழ்த்தி யுலவுபேரருண்மழைபொழியொருமுகிலுவந்து குலவுபற்பலவண்டமீன்மயினனிகுலவும். | 3 |
வரையுதித்திடுமயிலென்றுமயிலியலென்றும் புரையில்கேள்வியருருவகஞ்செய்தலும்போற்றி யுரைசிறப்பவன்மொழித்தொகைசெய்தலுமொருவக் கரைசெய்சாதிப்பேரெனமயிலாயினள்கவுரி. | 4 |
பாயபச்செனுமொளியினாற்பண்புறவிடபம்* மேயகொள்கையான்*முருகுபெற்றமைதலான்விடாம லாயவார்*பணிகோறலாலறம்வளர்த்தவளா நேயமாமயிலெனச்சொலநிலவியதன்றே. *விடபம்-மரக்கொம்பு-இடபம்; * முருகு-இளமை-முருகக்கடவுள். *பண்கோறல்-பாம்பைகொல்லுதல்-ஆபரணங்களைக்கோலுதல். | 5 |
அண்டநாயகியொருதிருமயிலுருவமையக் கண்டதாமரைச்செல்வியுங்கலைத்திருமானுந் தண்டவாமலர்க்குழலயிராணியுந்தயங்கல் கொண்டவேனையமாதருமயிலுருக்கொண்டார். | 6 |
வளவநிந்திதைகமலினிமுதலியமடவா ருளவரியாவருமொண்சிறைமயிலுருவுற்றார் துளவனாதிவானவரெல்லாஞ்சூழ்ந்தனர்காத்தார் களமிலாமயில்சூழ்ந்தனகவுரிமாமயிலை. | 7 |
ஆடுமோர்சிலவோர்சிலசிறைவிரித்தகவி நீடுமோர்சிலநிலத்தடிதோய்தரநடக்குங் கூடுமோர்சிலபந்தரிட்டெனக்குலாய்ப்பறக்கு நாடுமோர்சிலநயந்தபூங்கொம்பரினண்ணும். | 8 |
ஒருத்திமாமடமயிலுருவாதலுமுடனே விருத்திசாலுமற்றவரெலாமயிலுருவிழைந்தார் துருத்திவாயிவள்கோவுருவாதலுந்தொலையா வருத்திகூருமற்றவரெலாங்கோவுருவானார். | 9 |
பெண்ணுருக்கொடுமற்றிவள்பொலிதலும்பெண்மை நண்ணுருக்கொடுபொலிவர்மற்றைநல்லாரு மெண்ணுருக்கொளுந்தலைவியெப்படியுலகெங்கு மண்ணுருக்கொளுமேனையரப்படியன்றோ. | 10 |
உலககாரணியாகியபரையொடுமேனோ ரிலகமாமயிலுருக்கொடுநிகழ்தலையெண்ணி விலகவருவோரிடமின்றெனப்புவிமிசைமிடையுந் திலகமாகியநாகநாஞ்செறிந்தொளித்தனவே. | 11 |
திசையினாகமுமஞ்சினசெறிந்துபாதலத்தி னிசையுநாகமுமஞ்சினவிருகதிர்விழுங்கும் வசையினாகமுமஞ்சினகத்துருமடந்தை மிசையுமாத்துயிர்மூழ்கினளுவந்தனள்வினதை. | 12 |
வலிசெய்நோன்பினாற்பரனணியாக்கிடமகிழ்வுற் றொலிசெய்புள்ளரசினைச்சுகமோவெனவினவு நலிசெய்பாந்தளுமுள்ளுறநடுங்கினவென்னிற் கலிசெய்மற்றுளபாந்தளுளெவைகலங்காத. | 13 |
எங்குநாமினிக்காண்டலிவ்வதிசயம்பிரமன் பொங்குபூசைசெய்தலத்துமான்மியங்கொலோபுனிதை தங்குமான்மியமாங்கொலோமுசலிகடாமே நங்குதீரவந்தடிதொழுதின்பமேநண்ணும். | 14 |
அந்தமாமயில்குமரனைவெரிந்*புறத்தமைக்கு மிந்தமாமயின்மடித்தலங்கைத்தலமிரண்டிற் சந்தமேவுறவகத்தமைத்திடுமிதன்சால்பு முந்தயாவர்காண்குவரெனவறிந்தவர்மொழிவார். | 15 |
பொருந்துபற்பலமாதராமயிலொடும்புவன மருந்துகொண்டன்முன்வரவருமம்பிகைமஞ்ஞை திருந்துவேதன்முன்பூசித்ததிருத்தலம்புகுந்து வருந்துதீர்ந்துபல்வளமெலாநோக்கிடுகாலை. | 16 |
அரியமாதவரம்மயிலுண்மையையறிந்து தெரியவாமரையோமறையந்தமோதிகழ்ந்து பிரியமார்தரும்பிரணவமோசிவயோக ருரியநெஞ்சமோவித்தலமென்றுளமுவந்தார். | 17 |
அதிசயத்தின்மேலதிசயமாகவவ்வேலை கதியடுத்தவர்க்கினிதருள்காரணமுதல்வன் மதிநுதற்பிராட்டிக்குமுன்வழங்கியபடியே துதிசிறப்புறுமொருமயிலாகிமுன்றோன்ற. | 18 |
கண்டபுண்ணியமாமயில்கருதருமுவகை மண்டவொள்விழிவழிச்செலீஇமனமதைமருவ முண்டகாசனன்முகுந்தனுமறிதரமுடியா வண்டநாயகமயிலிதென்றார்வமுற்றன்றே. | 19 |
உரித்துநந்தமக்கிதுவெனவுணர்த்தல்போற்றோகை விரித்துமேற்கவிதரச்செய்துவிளங்கிருசிறையு மிரித்துமெய்யிலொன்றாவகைமுகமெழிலியையப் பரித்துநின்றுநன்றாடியததிசயம்பயப்ப. | 20 |
வம்பலர்க்குழலுலகமீன்றருண்மயில்காணக் கம்பலைத்தெழுமறையெலாங்களித்துநின்றாட நம்பலுற்றபல்சராசரங்களுநயந்தாட வம்பலத்தினிதாடுறுமயிலுவந்தாடும். | 21 |
அமரமாதரோடொருபுறமயிலவாய்நோக்கச் சமரவேல்விழியம்மயிறாளங்கைத்தாக்கப் பமரமார்தொடையும்பர்கள்பழிச்சிநின்றேத்தக் *குமரனாய்முனமாடியகுருமயிலாடும். - *குமரன்-கௌமாரபருவமுடையவன். | 22 |
கிள்ளைமேவியமலர்க்கரக்கிளர்விழிக்கயறோய் வள்ளைவார்குழையுமையெனுமாமயில்காணத் தொள்ளையுள்ளமாலயன்முதற்பலரையுந்தொலைத்து வெள்ளைநீறணிந்தாடுறுமயில்வியந்தாடும். | 23 |
அலகிலண்டமுமீன்றருளியமயில்காண வலகிலண்டமுமதிர்தரவெழுந்தவணாண வலகிலாற்றலினொருபதம்விண்பொதிர்த்தணைய வலகிலற்புதநடஞ்செயுமயிலுவந்தாடும். | 24 |
புனிதமங்களபூரணமாமயினோக்க முனிவரஞ்சலித்தரகரகரவெனமொழியப் பனிபரந்தகண்ணடியர்மற்றியாவரும்பரவத் தனியமைந்துநன்னடம்புரிமயிறகவாடும். | 25 |
இறைவியென்றுலகேத்திடுந்திருமயில்காண மறையினந்தமும்வான்றவயோகியருளமுங் குறையறும்பெருந்தானமாக்கொண்டுகூத்தாடும் பிறையிருஞ்சடைப்பெருமயிறங்கிநின்றாடும். | 26 |
அறைந்தவண்ணமொண்சரபமாகியமயிலாடக் குறைந்தமாமதிநுதன்மயிலன்புமீக்கூர நிறைந்தபற்பலமயில்களுநோக்கியுண்ணெகிழ மறைந்ததொன்றுமின்றாதநோக்குபுமகிழ்ந்தன்றே. | 27 |
ஆங்குநிற்குமாந்தருமிசைப்பயின்றிடுமதன்கீழ்த் தேங்குபேரொளியாயதன்செழுங்குறிசூழு மோங்குவேதியன்பூசித்தகுறியுங்கண்டுவக்கு நீங்குறாமயிலொடும்பசுமயினெறிதொடர. | 28 |
சத்தனெவ்வுருக்கொள்ளுமவ்வுருவிற்குத்தகவே சத்தியும்முருக்கொளுமெனச்சாற்றலுமிருக்கச் சத்தியெவ்வுருக்கொள்ளுமவ்வுருவிற்குத்தகவே சத்தனும்முருக்கொளுமென்றரையெழுந்தன்றே. | 29 |
மன்றைநாடியாட்டயர்தருமறைமுடிமயிலு நன்றையாதரித்ததுதெரிஞாலமீன்மயிலு மொன்றையொன்றுநீங்காதமைந்துவகையிற்றிளைப்பப் பின்றைநீங்கலற்றுவப்புமேயினபிறமயிலும். | 30 |
ஆயகாலையினாங்கசரீரிவரக்கொன்று நேயமாமலராளிவாவியினெறிபடிந்து தூயமாவடிச்சிவலிங்கபூசனைதொடங்கன் றேயமாபரைமயில்செவியுறவெழுந்தன்றே. | 31 |
அந்தவாசகங்கேட்டலுமுவகைமிக்கமையப் பந்தமேதுமின்மஞ்ஞையவ்வாவியிற்படிந்து சந்தமாவடிச்சிவக்குறிமுன்னுறச்சார்ந்து நந்தமற்றதன்பொலிவினைநயந்துகண்டன்றே. | 32 |
மஞ்சனஞ்செயப்பன்மலரருச்சனைவயக்கத் தஞ்சமின்றிநன்னிவேதநந்தவாதெடுத்தூட்ட வஞ்சலித்திடக்கையிலேமருந்துதியறையக் கஞ்சநேர்தருவாயிலேமென்செயக்கடவேம். | 33 |
என்றுதன்னுளத்தெண்ணுபுமானதபூசை நன்றுசெய்திடத்தடையிலையாலெனநயந்து வென்றுமேம்படுமயில்விழைந்தாட்டுதலாதி யொன்றும்யாவையுந்தன்மனத்துறப்புரிந்தன்றே. | 34 |
மாவின்மேற்செலீஇநறுந்தளிர்வாயினால்வௌவுந் தாவினம்பிரான்மேனிமேற்றதைதரச்சாத்துஞ் சேவின்மேலவன்செய்யபட்டணிந்தனனென்று நோவின்மாட்சிசெய்கண்களாலினிதுறநோக்கும். | 35 |
நாடுகொக்குமந்தாரையின்றுமலர்கொணருங் கூடுதம்பிரான்மெய்யெலாமறைதரக்குவிக்கு நீடுவெள்ளியபட்டலங்காரத்தைநிகர்த்த தாடுநம்பிரான்கோலமென்றதிசயமடையும். | 36 |
முல்லைவெண்முகைகொடுவந்துமேனியைமூடு மெல்லையில்லவற்கின்றுவெண்பதஞ்சமைத்தியைய வொல்லைநன்கபிடேகித்ததொத்ததென்றுவக்குங் கொல்லையேற்றனைமாவொடுகுலவுறச்சூழும். | 37 |
தந்தியீருரிபோர்த்தவத்தம்பிரான்மேனி நந்திவாசனைநாறுசெவ்வந்தியானயக்க முந்தியெண்ணிலகொடுவந்துகொடுவந்துமூடு மந்திவண்ணனென்பதுதகுமெனமனத்தமைக்கும். | 38 |
துன்னுமல்லிகைமலர்பலகொடுவந்துதொகுக்கும் பன்னுமெம்பிரான்றனைச்சுத்தப்படிகசங்காசன்* என்னுமோருரைமெய்யெனவிரதயத்துவகை மன்னுமாறுகொண்டெழுந்துமேற்செயுந்திறமதிக்கும். *சங்காசன் - ஒத்தவன் | 39 |
பட்டியின்பலவன்னமாமலர்களும்பறித்துக் கிட்டியெம்பிரான்கிளர்திருவுருவத்தைமூடு மொட்டிநோக்கியிக்கோலம்வெம்புலியதளுடையான் கட்டிநீத்ததுபோர்த்ததொத்திருந்தெனக்களிக்கும். | 40 |
கோலமார்கருங்குவளைமாமலர்பலகொண்டு நீலமார்களத்தண்ணறன்றிருவுருநிறைக்குஞ் சீலமார்முனிவரர்விடச்செறிந்தவாரணத்தோன் ஞாலமார்தரப்போர்த்ததொத்ததுவெனநயக்கும். | 41 |
செறிதருஞ்செழுஞ்செருந்திகொண்மலர்பலசெறித்துக் குறிதருந்திருமேனிமேற்குளிர்தரமூடும் பறிதரும்பலகாசுகொண்டன்புளம்பதித லறிதரும்படியாட்டியதொத்ததென்றமையும். | 42 |
பத்தகோடிகட்கெளியவனாகியபரம நித்தநாயகன்மேனிமேற்கோங்கங்கணிரப்புஞ் சித்தமின்புறநோக்குநஞ்சிவபிரான்செம்பொ னொத்தவண்ணனென்றுரைத்தன்மெய்யேயெனவுகளும். | 43 |
குலவுகொன்றையினறுமலர்பற்பலகொணர்ந்து நிலவுதம்பிரான்மேனியுட்படமிசைநிறைக்குங் குலவுயோகியர்பிரணவத்துட்குலவுமாறு கலவுமெய்ப்பொருளென்பதுமெய்யெனக்களிக்கும். | 44 |
மேயசீறிலைவில்வங்களநேகமாகக்கொணர்ந்து நாயனார்திருமேனியுண்மறையமேனாட்டும் பாயமூவகைச்சத்தியுட்பொருளெனப்பண்பி னாயமேலவர்கூறன்மெய்யேயெனவமையும். | 45 |
உறுவதாகவிவ்வண்ணமொண்பூசனைமுந்நூற் றறுபதாண்டுநன்காற்றியாவயினமர்ந்தன்று பெறுவதென்னிதன்மேலெனப்பெரிதுளங்களித்த திறுவதாயமறமுவர்ப்பாஅரவைசூழிடத்தில். | 46 |
தலையெடுத்துநின்றார்த்தனதருமங்களனைத்து நிலையெடுத்தபன்முனிவருமுவகையுணிறைத்தார் மலையெடுத்தகைக்குடையினான்முதலியவரனோர் கொலையெடுத்தசூற்படையினானருள்குறித்தமர்ந்தார். | 47 |
உற்றவான்புகழ்க்கௌரியேமயூரமாயுவந்து நற்றவஞ்செயப்பெற்றகாரணத்தினானலஞ்சேர் மற்றவாத்தலங்கௌரிமாயூரமென்றொருபேர் பெற்றதிவ்வுலகத்தொடெவ்வுலகமும்பேச. | 48 |
மன்னுமேன்மைசால்கௌரிமயூரமென்றொருகாற் பன்னுவாரெனினவர்பெரும்பாதகரெனினுந் துன்னுமப்பெரும்பாதகமடியறத்தொலைய வுன்னுமுத்தராகுவரெனிலுரைப்பதென்னினியே. | 49 |
வேதமுஞ்சிறப்பாயலாகமங்களுமிக்க போதமேயருள்புராணமுமற்றுளநூலு மேதமோதுமிக்கௌரிமாயூரமாமிசைத வாதமந்திரமெவற்றினுமுயர்பெனவழங்கும். | 50 |
இசைகுலாவியகௌரிமாயூரமென்றிசைக்குந் திசைகுலாவியமாந்திரமுரைப்பவர்சிறந்தோர் வசைகுலாவியபாதகர்மறந்துமோதுவரோ நசைகுலாவியமேற்சரிதமுநடத்திடுவாம். | 51 |
11. மாயூரப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 551.
----------------
பூசையிவ்வாறுசெய்யும்புவனமுற்றீன்றதோகை
யாசைதன்னரையிற்சூழுந்தோகையாங்ககவாநிற்கு
மோசைமுற்கவர்ந்துநாளுமுவகையிற்றிளைப்பதோர்நாண்
மாசையிலுருவங்காட்டாவகைதெரிந்துயங்கிற்றன்றே.
1 | |
எதுபிழைசெய்தேன்கொல்லோவெளிமையிற்காட்சிநல்கு மதுமலர்க்கடுக்கைமாலைமயிலின்றுமறைந்ததற்றை முதுபிழைதீர்த்தற்கிங்குமுற்றினேனிங்குமேய விதுபுகுந்தெங்குத்தீர்ப்பேனெனக்கவன்றிரங்காநிற்கும். | 2 |
பிரிதராக்கருணைமஞ்ஞைபிரியுமேபிரிந்ததோர்ந்து மிரிதராவுடம்பினோடுமிருப்பதேயானென்றேங்கும் பரதராக்கொடியேன்பூசைபண்ணலிற்குற்றமென்னோ சரிதராவதுமுன்போலத்தழைவதுதோதெரிவேனென்று. | 3 |
வாவியுன்மூழ்கிவந்துமலர்முதற்பலவுநேடி யாவியினினியகோவையந்தரியாகபூசை மேவிநன்கியற்றிப்பின்னர்விழித்ததுதெரியக்கண்ட தோவியர்முயன்றுந்தீட்டாவுருவத்தானுவக்குங்கோசம். | 4 |
நாட்டியவக்கோசத்துநறுமணத்தைலமாதி யாட்டியபலவுமேன்மையாயகூவிளமுமாகக் சூட்டியபலவுமன்னஞ்சுவைக்கறியபூபமற்று மூட்டியபலவுமெம்மானுவத்தலின்வெளிப்பட்டன்றே. | 5 |
நீட்டியசடையான்சூதநீழல்வாழ்பெருமான்பாங்க ராட்டியவனைத்துமோடிவழியவுமனையான்மேனி சூட்டியவனைத்தும்பற்றித்துதையவுந்திருமுன்னேர்வைத் தூட்டியவனைத்துமாங்காங்குறையவுங்கண்டதன்றே. | 6 |
அதிசயமிதுவாமென்றாங்ககன்றுவேதியன்பூசித்த நிதிநிகரிலிங்கமுன்புஞெரேலெனச்சேறலோடும் பதியுமெவ்விடத்துமந்தப்படியேகண்டிறும்பூதுற்றுப் பொதிதருமுவகைமேவப்புளகம்பூரித்ததன்றே. | 7 |
இதுகொலோநாம்பூசித்ததினியமாநீழல்வைகு மதுகொலோவென்றோரையமடைந்ததுபசியதோகை யுதுவிதுவென்பதென்னேயுணர்தரினிரண்டுமொன்றே கதுமெனநாஞ்செய்பூசையிரண்டினுங்கண்டவாற்றால். | 8 |
என்றுதன்கருத்திற்றெள்ளியிப்படியிருந்துநம்மோ டொன்றுபுகளிப்புச்செய்யுமொருசிகாவளமித்தேத்து நின்றுநீங்கிடுதற்கேதுவென்னெனநினைந்துசாம்பும் பொன்றுமேவுற்றாலன்றிப்போகாதித்துயரென்றுள்ளும். | 9 |
எனநினைந்தெம்பிராட்டியெனுமயில்கவலுங்காலை யினமறைவாழ்த்துமல்கவியமையவர்பலருமேத்த வனகமாமுனிவரியாருமரகரகரவென்றார்ப்பக் கனவிடைமீதுகாட்சிநல்கினான்கருணைமூர்த்தி. | 10 |
காட்சிதந்தருளுமையன்காமருமயிலைநோக்கி யாட்சிநம்மெதிராந்தீர்த்தத்தாடுவையொடுமூழ்கென்ன மாட்சியினதுபஃறோகையோடுமகிழ்ந்தாடிப்பண்டைப் பூட்சியுற்றெழுந்ததம்மாபுலவர்பூமாரிதூர்ப்ப. | 11 |
பிணிமுகவுருவநீத்துப்பண்டையவுருவம்பெற்ற மணிமருள்கூந்தற்செவ்வாய்வாணுதலெம்பிராட்டி யணிகிளர்விடைமேற்றோன்றுமண்ணலைவிரும்பிநோக்கித் தணிவருமன்புபொங்கத்தரைமிசைப்பணிந்தெழுந்தாள். | 12 |
சூழ்தருமயில்களெல்லாந்தலைவிதன்றோற்றம்போல வாழ்தருகளிப்புமேவமயிலுருவொருங்குநீத்து வீழ்தருபழையரூபமேவியெம்பிரானையன்னாற் றாழ்தருபரையைச்சூழ்ந்துதாழ்ந்தளவளாவிநின்ற. | 13 |
தாழ்ந்தெழுமுமையைநோக்கித்தம்பிரானருளிச்செய்வான் போழ்ந்தநின்கரிசுமுற்றும்போயதித்தலம்புக்கன்றே யாழ்ந்தவன்புடைநின்பூசைக்காற்றவுமகிழ்ந்தேமற்றால் வீழ்ந்தபல்வரமுங்கோடியென்றலும்விமலைதாழ்ந்து. | 14 |
ஐயனேபோற்றிபோற்றியழலவிர்மழுமானேந்து கையனேபோற்றிபோற்றிகையர்கண்காணாமேனிச் செய்யனேபோற்றிபோற்றிதேவரைக்காத்தகண்ட மையனேபோற்றிபோற்றியென்றிதுவகுக்கலுற்றாள். | 15 |
அடியனேன்புரிபுன்பூசைக்கையநீயுவந்ததுண்டேற் கடியவிரினையதானங்கௌரிமாயூரமென்றே நெடியவன்முதலோரேத்திநினைதரப்பொலியவேண்டு மொடிவிலிந்நாமஞ்சொற்றோருவப்பெலாமுறுதல்வேண்டும். | 16 |
தாயுமாயுலகுக்கெல்லாந்தந்தையுமானவைய நீயுமாயூரநாதனெனும்பெயர்நிலவப்பூண்டு தோயுமாதீர்த்தமாடிவந்துனைத்தொழுவோர்க்கெல்லாங் காயுமாபாதகங்கள்கழற்றியின்புதவவேண்டும். | 17 |
நன்றுநான்பூசைசெய்யுநலத்தவிக்குறிகண்மாட்டு நின்றுநீகழலாவண்ணநிகழ்பிரசன்னமாகி யென்றும்வீற்றிருக்கவேண்டுஞ்சேய்மையினிருந்துநின்பே ரொன்றுளத்தெண்ணுவோருமுயர்கதியடையவேண்டும். | 18 |
தினகரன்றுலாத்திற்செல்லுஞ்செழுமதிமுழுதுமோர்சா றனகயான்புரிதல்வேட்டேனதுநிறைவேறுமாறு முனகரும்பொன்னிநன்னீர்மூழ்கினருய்யுமாறு மனனமர்தீர்த்தநல்கிவயங்கருள்புரிதல்வேண்டும். | 19 |
வழிச்செலவொருநாணின்னைக்கண்டவர்வளர்சாலோகம் பழிப்பறவொருநாள்வந்துகண்டவர்பகர்சாமீப மிழித்தலற்றிடச்சின்னாளிங்கிருந்துபோற்றினர்சாரூப மொழித்தலற்றுறைவோர்நின்றாட்கலப்புநன்குறுதல்வேண்டும். | 20 |
கொலைகளிற்சிறந்ததாயவந்தணக்கொலையும்வீரக் கொலையுநாரியரைக்கொன்றகொலையும்பீடபச்சிதைத்த கொலையுமாக்கொலையுந்தந்தையாதியர்தம்மைக்கொன்ற கொலையுமித்தலத்தைச்சாரிற்குலைகுலைந்தோடல்வேண்டும். | 21 |
இத்தலத்துதித்தபுல்லுச்செடிகொடிமரங்களின்னுங் கைத்தபுள்கிருமிகீடங்கழுதைநாய்மலமார்பன்றி மொய்த்தபல்கீரிபூஞைபறவைகண்மொழியாமற்றும் பைத்தபாப்பணியாய்நின்பொற்பாதமேசேரவேண்டம். | 22 |
என்னொடுநின்னைப்போற்றுமியல்பினரியாவரேனும் பொன்னொடுமணியுமற்றும்புகல்பொருள்யாவுமெய்தி மின்னொடுநிகர்மருங்குன்மனைமகரரோடுமேவி முன்னொடுபின்னிலாய்வாழ்ந்தீற்றுனைமுயங்கல்வேண்டும். | 23 |
பொருணனிவேண்டினாலும்புலமையிற்சிறந்தோராகுந் தெருணனிவேண்டினாலுஞ்சித்திகள்வேண்டினாலு மருணனிவேண்டினாலும்வழங்காமலின்பந்துய்க்கு மருணனிவேண்டினாலுமித்தலமளித்தல்வேண்டும். | 24 |
விழியிலார்செவியுமில்லார்மேதகுகைகாலில்லார் மொழியிலார்குட்டமாதிமொய்த்துளாருய்யும்வேறு வழியிலாரியாவரேனும்வந்தித்தித்தலஞ்சார்வாரேற் பழியிலாராகியின்பப்பயநனிநுகர்தல்வேண்டும். | 25 |
பற்பலவுரைப்பதென்னைபரமநீவீற்றிருக்கும் பொற்பமரினியகோயிற்பொருள்கவர்தீங்கினோடு நிற்பழித்திழிக்குந்தீங்குநிற்கமற்றெனையதீங்கு மற்பமுமின்றாய்நீங்கவருண்மதியென்றுதாழ்ந்தாள். | 26 |
பராபரையிரந்தவாறேபராபரனனைத்துநல்கிப் புராதனவிலிங்கத்துள்ளேபுக்கினிதமர்ந்தானாக வராவணையவன்முன்வானோரலர்மழைபொழிந்தாரப்பாற் றராதலமகிழுமாறுநடந்ததுசாற்றலுற்றாம். | 27 |
12. தேவிவரம்பெறுபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 578.
-----------------------
அறிவில்கொடியவினைத்தக்கனாற்றுமகச்சாலையிற்புகுந்து செறியுமயன்மான்முதற்றேவர்திறல்சால்வீரபத்திரரான் முறிவிறண்டஞ்செயப்பெற்றுமுழங்கும்வீரட்டானமெனும் பறியனின்றுமாயூரம்படர்ந்தார்பூசைசெயல்குறித்தார். | 1 |
உரியவதிகாரமுமிழந்தோமுற்றமேன்மைகளுமிழந்தோம் பெரியபரனையவமதித்தபேயன்றனைச்சார்ந்தறக்கெட்டோ மரியதண்டமுறப்பெற்றுமறாதநமைச்சார்ந்துறுகரிசு மிரியமாயூரேசனைநாமின்றேபணிவோமெனக்கருதி. | 2 |
மன்னம்பிரமதடந்தோய்ந்துவயங்குநீற்றுத்தூளனமும் பன்னுமதன்மேற்புண்டரமும்பகராகமஞ்சொல்வழிபுனைந்து மின்னுமுருத்திராக்கமணிவிளங்கப்பூண்டைந்தெழத்தெண்ணித் துன்னுமயன்மான்முதலாயசுரர்கள்யாரும்புறப்பட்டார். | 3 |
ஆட்டுந்தயிலமுதற்பலவுமான்றமனுக்ளெடுத்தோதிச் சூட்டும்வில்வமுதற்பலவுந்தொக்கமுகமன்புகன்றுகசிந் தூட்டுமமுதுமுதற்பலவுமுற்றதீபம்பலபொருத்திக் காட்டுங்கருவிமுதற்பலவுங்கருத்துக்கியையவீட்டினார். | 4 |
அருமாதவர்தமுளத்தொளியையன்றுபுவனமுழுதுமுய்யக் கருமாவிடமுண்டமைந்தானைக்கனிந்தபிரமற்கருள்சுரந்த திருமாமணியைத்தக்கன்மகஞ்செற்றகோவைமாதேவை யொருமாயூரேசனைப்பூசித்துவந்துதுதிக்கத்தொடங்கினார். | 5 |
அருவாயுருவாயருவுருவாயனைத்துங்கடந்தவசஞ்சலமாய்ப் பெருமாமறையின்முடிப்பொருளாய்ப்பெரிதாய்ச்சிறிதாய்ப்பேருணர்வா யொருமூவுலகிற்குயிராகியுற்றகுறியாதிகள்கடந்து கருதாவொளியாயமர்மாயூரேசநின்றாள்கைதொழுதேம். | 6 |
ஒன்றாயருவாயுருவாய்மற்றுபயமாயொன்பதுங்கடந்து நின்றாய்மூலமலவிருளானெருக்குண்டுடையுமூவுயிர்க்கு நன்றாயுணர்வுபுணர்த்திடுவானவிலுமாயைமாமாயை *என்றாயிரண்டிற்றனுவாதியியைப்பாய்நின்னைச்சரணடைந்தேம். *என்றாயிரண்டில்- என்றாயஇரண்டிலெனப்பிரித்து, அகரம் தொகுத்தல் விகாரமாகக்கொள்க. | 7 |
ஒருமூவகையதத்துவமுமுள்ளும்புறமுமெனப்புகலு மிருபேரிடத்துங்கொளப்பொருத்தியியலுமாறுதொழிற்படுத்த மருவாரணுக்களைந்துபுலன்வழிச்சென்றாற்றும்வினைசுவர்க்கங் கருளார்நரகந்துய்ப்பித்துக்கழிப்பிப்பாய்நிற்புகல்புகுந்தேம். | 8 |
மேவியமையும்பருவமுறவினைகளொக்குஞ்சமநோக்கி யாவியருளுற்றிடப்பதித்தேயமைந்தசகலந்தனினீக்கித் தாவி*அறிவோரிரண்டுமறத்தாவாச்சுத்தந்தனில்வயக்கி யோவியகலாவின்பளிக்குமொருவாநின்னைச்சரணடைந்தேம். *அறிவு இரண்டு-பாசஅறிவு, பசுவறிவு. | 9 |
ஏதங்கடந்துவினைகடந்துகருவியென்பவெலாங்கடந்து வாதங்கடந்தாருயிர்கடந்துமாறாவருளின்றொடர்கடந்து பேதங்கடந்துபரவசமாய்ப்பிரியாச்சுகவாரிதிமடுத்துப் போதங்கடந்துநிறைந்தபரம்பொருளேநின்னைச்சரணடைந்தேம். | 10 |
அல்லார்கண்டத்தற்புதனேயடியார்க்கெளியகருணையனே சொல்லார்மறையின்முடியானேதூயபிறைசார்வேணியனே செல்லார்கூந்தலுமையம்மைசெறியோர்பாதிமேனியனே நல்லார்புகழுமாயூரநாதாநின்னைச்சரணடைந்தேம். | 11 |
என்றுதுதிக்குமலரோற்குமெஃகத்திகிரிப்படையோற்குங் கன்றுவயிரப்படைசுமந்தகடவுண்முதலாமெண்மருக்குந் துன்றுமொளிசாலிலேகருக்குந்தொக்கமற்றையாவருக்கு மன்றுகருணைசெயவெளிவந்தனனவ்விலிங்கநின்றையன். | 12 |
அண்ணல்வெளிவந்ததுகாணூஉவயன்மான்முதலோரடிமிசைத்தாழ்ந் தெண்ணலினியாதெனநிற்கவெம்மானனையர்முகநோக்கிக் கண்ணலருந்தீதித்தலநங்குறிப்பூசனையாற்கழிந்துயர்ந்தீர் நண்ணலரியவரமுமக்கின்றருள்வோமென்றுநவில்கின்றான். | 13 |
போற்றுமறைகண்முழுதுணர்ந்துபொலியுங்கலைமாமகட்புணர்ந்து சாற்றுஞ்சிருக்குமணிவடமுற்பலவுந்தவாதுகைத்தாங்கி யாற்றுஞ்சிருட்டிமுன்போலவாற்றியடுத்தார்வினையனைத்துங் காற்றுநந்தாள்கருதிவாழென்றுகஞ்சன்றனைவிடுத்தான். | 14 |
பொறியைப்புணர்ந்துதிகிரிமுதற்பொலியைம்படையுங்கைத்தாங்கி நெறியைக்கருதாயவவுணருயிர்நீப்பச்சவட்டிமழுவொடுமான் மறையைப்புணர்கைத்தலத்தொருநம்மலர்த்தாள்கருதியுலகோம்புங் குறியைக்கொடுவாழென்றருளிக்கொண்டன்மேனியனைவிடுத்தான். | 15 |
வேறு மேகவானசசியொடுவிண்ணவர்வணங்க நாகநாடுபல்வளத்தொடுநன்குகாத்திடுதி வேகமாகவேழ்தாலுளாய்விண்ணவருண்ணும் பாகமேந்திமற்றவரவர்க்குதவெனப்பகர்ந்து. | 16 |
கூற்றுநீயறஞ்செயர்க்களைக்குமைபெருந்தவத்தோர் சாற்றுமிந்தமாயூரஞ்சார்ந்தார்களைத்தாழ்தி யேற்றுவேறொன்றுசெய்யலையென்றுநின்றிசையைப் போற்றிவாழ்கெனநிருதியைப்பார்த்திதுபுகன்று. | 17 |
வருணகேளனுசிதலொமுசிதராய்வயங்கப் பொருணயந்துநீபுரிந்திடுவாயெனப்புகன்று வெருவிலாதுவாவாயுவேமேதினிக்குயிராய்ப் பருவமோர்ந்துநீதகுதியிற்பயிலெனப்பகர்ந்து. | 18 |
அளகையாளியைந்திக்கிறையாகெனவறைந்து பளகிலாதவீசானனைப்பார்த்துறுதுட்டர் தளர்தரும்படிதண்டித்துவருகெனச்சாற்றிக் கிளரநாலிருவோரையுங்கேழுறவிடுத்தான். | 19 |
பொருள்பெறத்தினகரபுகல்கருமசான்றாகி யிருளறுத்துநீயியங்குபுவாழ்தியென்றியம்பித் தெருண்மிகுத்திடுமதியமேயோடதிசெழிப்ப வரூண்மிகுத்துனநீநன்றுகாத்திடுகெனவறைந்து. | 20 |
இவ்விரண்டுகோளோடுமற்றுளவெழுகோளுஞ் செவ்விதாகநேர்கூவுபுதிருந்திராசிகளி லெவ்வமோவநீரிருந்துயிரின்பமுந்துபுந் தெவ்வுமாறளித்திடுகெனச்செப்பினன்விடுத்தான். | 21 |
வேறு உடுக்கணத்தைவிண்மீதிலுறுதிபெறவிருக்கென்றும் வடுத்தவிர்பைங்கொண்டல்களைமழைபொழிமினீரென்று நடுக்குகுணுங்கினமுருவநண்ணாதுதுபயில்கவென்று மடுத்தநதிகளைநீரோடமைந்தறமாக்குகவென்றும் | 22 |
வரைகளைப்பூதரமெனும்பேர்வயங்கவமருகவென்றும் விரைமலர்ப்பல்வநங்களைப்புண்மிருகமோம்பிடுகவென்றுந திரையெறிவாரியையளவில்செந்துகளோம்புகவென்றும் புரையிலுலகங்களைநஞ்சத்தியாற்பொலிகவென்றும் | 23 |
பலதலையசேடனைப்பார்பரித்தினிதுவசியென்றும் பலமறையோர்களும்யாகம்பண்ணிவாழ்குகவென்றும் பலவமரர்களும்யாகபலியுண்டுபொலிகவென்றும் பலமறையுநம்முடையபடிவமாகுகவென்றும். | 24 |
மருவுமிருதுகளாறும்வயங்குதேவுருவாகிப் பொருவறவாழ்தரவென்றும்புண்மிருகமுதலான வொருவில்பலவுயிர்களுக்குமுணவுமலிதரவென்றுங் கருதியபற்பலவுமுளங்களிப்பவருளுபுவிடுத்தான். | 25 |
நந்திமுதற்கணத்தவரைநாடிவேறுறநோக்கி யந்திமதிமிலைந்தநமக்கன்னியமில்லாநீவி ரிந்தியம்வெல்யோகியர்சேரித்தலத்தில்விதிப்படியே முந்தியெமதருட்குறிகண்டேத்திடுமினெனமொழிந்து. | 26 |
அன்னதிருக்குறிதொறுநாமிடையறாதமர்கிற்போ மென்னவரங்களுநீரேயாவருக்குமீயும்வர முன்னமுந்தந்தனமின்னுமொழிந்தனமென்றருள்புரிந்து சொன்னமலைகுழைத்தபிறான்றொழுமிலிங்கத்துட்புகுந்தான். | 27 |
மலரோனுநெடுமாலும்வானாடர்கோமகனும் புலராமற்றிமையோரும்பூரணன்பேரருணோக்கி விலகாதபெருவரங்கண்மிகக்கொடுத்தபெருமானை நலமாரும்வள்ளலென்றோர்நாமமுவந்திட்டழைத்தார். | 28 |
தக்கனெனுங்கொடியனுமாங்கடைந்துவிதித்தடமூழ்கி முக்கணுடைவள்ளல்பதமுருகலர்கள்கொடுபோற்றித் தொக்கசிறுமைகடவிர்த்துத்தூயனாயவனருளுற் றக்கணமேசிவலோகத்தினிதமரும்பேறுற்றான். | 29 |
பெருங்கருணைவள்ளலார்பேரருளைமிகப்புகழா வொருங்குபலவானவருமுறைதத்தமிடம்புக்கார் நெருங்குபுகழ்வள்ளலெனும்பெயர்நிகழ்தற்காரணமீ தருங்குரைத்தென்றிடுமற்றைக்காதையினியறைகுவாம். | 30 |
13. மாயூரநாதர்வள்ளலாரென்னும் பெயர்பெற்றபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 608.
~~~~~~~~~~~~~~~~~
தரையாதியுலகனைத்தும்படைப்பாதியைந்துமொருதனிநின்றாற்ற வுரையாதிகடந்தொளிரும்பரையாதியாயமருமொருத்திவெள்ளி வுரையாதியினுமவாய்மாயூரத்தலத்தமரும்வள்ளற்றேவைக் கரையாதிநிகமாகமப்படிபூசனைபுரியுங்கருத்தளானாள். | 1 |
பூப்பொலியுந்தோழியருமநிந்திதைமுற்றோழியரும்புரிந்துசூழ மாப்பொலியுமலர்ப்பிரமதடங்குடைந்துவெண்ணீறுவயங்கப்பூசி மீப்பொலியும்பெரும்புகழ்சாலுருத்திரகண்மணிமாலைவிரவப்பூண்டு நாப்பொலியுமைந்தெழுத்துங்கணித்தெழுந்துநந்தவனநண்ணினாளால். | 2 |
தோழியராகியபலரும்பிடகைகரங்கொண்டேவுந்தொழின்மேனிற்ப வாழிபுடையுடுத்தரைமகள்பதந்தீண்டிடுபெரும்பேறடைந்துள்ளோங்க வாழிமறப்பகையனைத்தும்வளர்ந்தோங்கவளர்த்த்திருமலர்க்கைகொண்டு வீழிநறுங்கனிபுரையுஞ்செய்யவாய்க்கௌரிமலர்மிதப்பக்கொய்வாள். | 3 |
நந்தியாவட்டமாமலகமாமந்தாரஞாழலொண்செவ் வந்திபாடலங்கன்னிகாரமாதளைகுராவகுளம்வில்வஞ் சிந்துவாரங்கடுக்கைதேங்கொன்றைநீர்முள்ளிசெவ்வகத்தி சந்துகூதாளமராநீர்மிட்டான்வழைகாஞ்சிதண்புன்னாகம். | 4 |
குருந்துபொன்னாவிரைபொன்னூமத்தைவன்னிகுசைகூத்தன்குதம்பைவேங்கை செருந்திகொக்குமந்தாரையெண்மலரார்பலாசுபட்டிசெவ்வரத்தம் பொருந்துபன்னீர்வெட்பாலையசோகம்வெள்ளிலோத்தம்விளாப்பூளைதான்றி திருந்துதுரோணம்பருத்திமாவிலிங்கநாயுருவிசெழுஞ்சரோசம். | 5 |
மருமருவின்கொழுந்தருக்கம்வெள்ளைக்காக்கணந்துழாய்மாயன்காந்தி கருவிளங்குவளையாம்பல்சதகுப்பைசெங்கீரைகாந்தள்வெட்சி யொருதளத்தாமரைகண்டங்கத்திரிமல்லிகைகிளுவையோங்குகோட்டம் பொருவில்விலாமிச்சவேர்வெட்டிவேர்குச்சுப்புல்புலிதொடக்கி. | 6 |
வழுதுணைவெற்றிலைமஞ்சணாத்திசூரியகாந்திவாகைதாழை கொழுவழிஞ்சில்கருஞ்செம்பைகடம்பறுகுகருங்காலிகுளவிநாவ லெழுநரந்தமெலுமிச்சைபாரிசாதங்காரையிருங்கரந்தை தழுவுபச்சைவதரிகாயாநரணன்மயிலைநறுந்தாளிசாலி. | 7 |
அலரிமுதற்பலவுநிரம்பவெடுத்தமைத்தொருதேத்தணுகிவைகி வலரியனுமிண்டைகளுமாலைகளுந்தொங்கல்களும்வயங்குதண்டிற் பலரிடையப்பனைவனவுமினும்வெவ்வேறாப்புரியும்பணியுநோக்கிச் சிலரினியபல்வகையநிவேதனமுமமைமினெச்செப்பிப்பின்னர். | 8 |
கதிரெழுமுன்மஞ்சனநீர்வடித்தெடுத்துப்புதுநிறையுட்கலக்கக்கொட்டி முதிர்மணஞ்செய்கருப்பூரம்பொடித்திட்டுமலர்வேருமுயங்கச்சேர்த்துப் பிதிர்தலிலாவகையமைக்கச்சிலரையேவிமணம்பிறங்குசந்த மதிர்தரத்தேய்த்துறுவிரையுங்கலந்தமைக்கச்சிற்சிலரையனுப்பினாளால். | 9 |
நறைகமழுஞ்செழுந்தயிலமினியதேனயிர்கனிகணல்லாவின்பால் குறைவிறயிர்கழைச்சாறுமுதலியவுமோரிடத்தேகுழுமச்சேர்த்து நிறைதருவட்டகைகலசம்படலிகைதொப்பரிகும்பநிகழ்தூபக்கான் முறையமையுந்தீபக்கான்முதலாயபற்பலவுமுன்னியீட்டி. | 10 |
குடைகொடிசாமரையாடிசிவிறிமுதற்பற்பலவுங்குலவச்சேர்த்து மிடைதருபற்பலகாம்புமுதலாயபரிவட்டம்விளங்கவீட்டி யடைமணிசெய்குண்டலங்கேயூரமரைஞாண்முதலாவனைத்துங்கொண்டே யுடைதிரையினியமுழங்கப்பூசைசெயல்குறித்தெழுந்தாளுச்சிவேலை. | 11 |
முன்போலநீராடிநீறாதிபுனைந்திறைவன்முன்புசென்று மின்போலநுடங்கிடையாளவனனுஞைபெற்றுளத்துவிருப்பமூறப் பொன்போலப்பொலிபுண்ணியாகவாசனஞ்செய்துபொலிவுமேவத் தன்போலவேறிலவள்கெளவியபூசனைபுரிந்தாடரணிவாழ. | 12 |
சுவையமுதமோரைந்தும்போற்றிநவகும்பநிறீஇத்தொழுதுமேலா னவையகலவக்கினிகாரியம்புரிந்துவேழமுகநம்பனாதி யவைவியக்குந்துவாரவானவர்பூசையாயவெலாமன்பினாற்றிக் குவைமலர்வானவரிறைப்பக்கருப்பகிரகம்புகுந்தாள்கொம்பர்போல்வாள். | 13 |
தக்கவரநதிபூசைதகச்செய்துபூதசுத்திதானசுத்தி மிக்கமனுச்சுத்திதிரவியசுத்தியிலிங்கசுத்திவிருப்பினாற்றி நக்கபுகழ்ப்பாத்தியமாசமனமருக்கியம்பண்ணிநலம்விராய்த்தோ முக்கவாதாரசத்திமுதற்சத்திமண்டலமீறுறப்பூசித்து. | 14 |
உரைசெயுமாவாகனமுந்தாபனமுமுள்ளத்தன்புறைப்பவாற்றி வரைசெயுமையாறதன்மேலெட்டங்கநியாசமுநன்மாண்பினாற்றிக் குரைசெய்சந்நிதானமொடுசந்நிரோதனமவகுண்டனமுஞ்செய்து புரைசெயுமாநற்றேனுமுத்திரைமுற்பற்பலவும்பொருந்தநல்கி. | 15 |
தக்கவகைப்பாத்தியாசமனவருக்கியங்கொடுத்துத்தழைவிண்மேலு மிக்கவியம்பலமுழங்கநறுந்தயிலமாநெல்லிவிளங்குமஞ்ச டொக்ககுடஞ்சுட்டுறுமைந்தைந்தமிர்தநறுநெய்பாறோயுந்தன்மை புக்கதயிர்தேனயிர்வண்கதலிபலாச்சூதமிக்கிற்புரிந்தசாறு. | 16 |
நல்லவிலிகுசநரந்தநயக்குமாதுளைதமரநல்குசாறு வல்லவிளநீரன்னஞ்சந்துதபனங்கங்கைமாண்பேயென்று சொல்லவமைதருவில்வக்குழம்புசகத்திரதாரைசுடர்சிருங்கம் பல்லவலம்புரியுரைத்தமுறையாட்டியாட்டுதொறும்பசுங்கொம்பன்னாள். | 17 |
இடையிடையேசுத்தநீராட்டனிவேதனமாதியினியசெய்து கடைமுறையொற்றாடையிட்டுப்பரிவட்டம்புனைந்துநூல்கவினச்சேர்த்து மிடையுமணிமகுடம்பொற்குழைவாகுவலயமொளிவிளங்கச்செய்த கிடைவயிரகடகமிளிர்மதாணிமோதிரமரைஞாண்கெழுமச்சாத்தி. | 18 |
வெள்ளியநீறணிந்துசாந்தணிந்துபலதொடைவகையும்விளங்கச்சூட்டி யொள்ளியவாநறுந்தூபமொளிர்தீபமுறனயக்கியுதற்குமேலா னள்ளியவண்டளவரும்பிற்பொலிசுத்தோதனம்பருப்புநயந்தபொம்மல் புள்ளியவண்குளச்சொன்றிபாலடிசிறிலமூரல்புளிசாலன்னம். | 19 |
நாடுமரிசயினிநெய்சொட்டயிர்மிதவைததிமடைநன்னறுங்குய்மொய்த்து நீடுபலகருனைசுவைப்பாகரிலட்டுகந்தோசைநிரம்பவுள்ளரற் கூடுசுவைமோதகமென்பிட்டுழுந்தவடைமற்றுங்குலவபூபந் தேடுமிளநீர்குளநீர்கனிநீர்நீர்மோர்சுத்தத்தெளிசானன்னீர். | 20 |
இன்னவைபற்பலவுமொவ்வொன்றாவிருப்பின்முகமனொடுமினிதினீந்த பின்னரருக்கியங்கொடுத்துத்தாம்பூலமுகவாசம்பேணிநல்கிப் பொன்னவிர்தூபங்கொடுத்துமேலடுக்குத்தீபமுதற்பொருந்தாநின்ற பன்னரும்பற்பலவாராதனம்புரிந்துநறியமணப்பலபூத்தூவி. | 21 |
பாடுநீராஞ்சனஞ்செய்தபின்பளிதவிளக்கெடுத்துப்பருத்திவித்துங் கூடுவேப்பிலையுமுறச்சூழ்ந்தெறிந்துநீறணிந்துகுலவுமாடி நீடுவான்குடைகவரியாலவட்டஞ்சிவிறியிவைநேர்வயக்கி யேடுசானறுமலரக்கதைசாத்தியருக்கியமுமீந்தபின்னர். | 22 |
ஆயமலர்பல்லவெடுத்தைந்தெழுத்துமுளத்தெண்ணியண்ணல்பாதந் தோயநலமுறச்சாத்தித்தொழுதெழுந்துவெளிவந்துதொல்லோன்மேனி யேயவொருதலத்தினமர்ந்திதயத்துக்குறித்திருந்தாளீனாதீன்று தூயமலரவன்முதலாம்பல்லுயிருமினிதோம்புஞ்சுகுணவல்லி. | 23 |
இந்தவிதமிருந்தவள்பின்னெழுந்துவள்ளல்பிரசாதமெவர்க்குநல்கி யந்தமிலான்முன்னிற்பவவ்விறைவன்வெளித்தோன்றியம்பிகாய்முன் வந்தமயிறனக்கபயங்கொடுத்தனைநாமமுமதுவாமருவியார்க்கும் பந்தமறுத்தெவ்வரமுமித்தலத்தெம்மோடமர்ந்துபாலிப்பாயால். | 24 |
என்றுதிருவருள்புரிந்துமுதல்வன்புக்கமர்ந்தானவ்விலிங்கத்துள்ளால் வென்றுமிளிர்ந்தோங்குமபயப்பிரதாம்பிகையெனும்பேர்விளங்கப்பூண்டு குன்றுதலற்றெவ்வுயிருமீடேறப்பெருங்கருணைக்கோலங்கொண்டு நன்றுமகிழ்ந்தினிதமர்வாண்ஞாலமுழுதீன்றளிக்குநம்பிராட்டி. | 25 |
14. தேவிதிருவாராதனைப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 633.
---------------------------------
இந்தவாறுளங்களிதரவமர்தருமிறைவியெம்பெருமாட்டி சந்தமாமறைமுடிப்பொலிதருபெருந்தம்பிரானருள்போற்றி யந்தமாதியிலாய்முன்மயூரமாயழகியநடஞ்செய்தாய் பந்தமேவியதண்ணுமையாதியபலதழுவிலையன்றே. | 1 |
உரைசெய்தண்ணுமையாதியபலதழீஇயொள்ளியமலர்மேலான் றிரைசெய்பாற்கடற்பாயலான்முதலியதேவருமுனிவோரும் வரைசெய்மண்ணுலகத்தவரியாவருமற்றுளாரெல்லாரும் புரைசெயானந்தமருவியின்பமர்தரப்பொலிநடஞ்செயல்வேண்டும். | 2 |
தில்லைமாநகர்மன்றினும்விசேடமித்தேத்தெனவுரைசெய்ய வொல்லையிவ்வுருவடைந்தயான்கண்டுகண்டுளங்கனித்திடயாருந் தொல்லைவல்வினையிரிதாநோக்குபுதொழுதுகைகுவித்தேத்த வெல்லையில்லவவருடியென்றிரந்திரந்திறைஞ்சினளதுகாலை. | 3 |
ஆதிநாயகன்றிருவுளமிரங்கிநீயவாவியபடித்தீமை சாதியோங்குமித்தலத்துநாந்தாண்டவங்கரிசறப்புரிகிற்பா மோதிமாமுகில்புரைதருகௌரியாமுன்பொருட்டதனாலே சோதியாகியகௌரிதாண்டவமெனச்சொலப்படுமெனக்கூறி. | 4 |
நந்திவாண்முகநோக்கியித்தலத்தியாநடஞ்செய்வாமதுகாண முந்தியாவரும்வரும்படிசெய்யெனமொழியமுற்றாவோகை தந்தியாலெனப்பணிந்தெழுந்தியாவருஞ்சார்கவென்றுளத்துன்னக் கந்திசூழுமாயூரத்தில்யாவருங்கடுகவந்தடைகின்றார். | 5 |
தந்தியூர்திறலிந்திரன்முதலியதந்திசைகாப்பாள ருந்திபூத்தவனுந்தியினுதித்தவனும்பர்தானவர்சித்தர் மந்தியாதுகற்றுயர்ந்தவித்தியாதரர்வயங்குகின்னரர்நாகர் புந்திசாலிவர்முதலளவில்லவர்பொள்ளெனப்புகுந்தாரால். | 6 |
புக்கயாவரும்பாவநாசப்பெரும்புனலுறப்படிந்தாடித் தக்கநீறுகண்மணிதரித்தெழுத்தைந்துந்தம்முள்ளத்துறவூன்றி மிக்கவள்ளலாரஞ்சனாயகியிவர்மென்பலர்ப்பதம்போற்றி யுக்கதீவினையாளராய்நடனமுள்ளுவந்துகாண்பானின்றார். | 7 |
அம்மையாவருநடங்கண்டுபோற்றிடவணைந்துளாரெனக்கூறச் செம்மைநாயகன்மன்றமுண்டாகெனத்திருவுளங்கொளலோடும் வெம்மைதீர்ந்துபல்கதிர்திரண்டமைந்தெனமேவியதொருமன்ற மெம்மையாள்பவனத்தகுமன்றமேலெழுந்தருளுபுநின்றான். | 8 |
வலமலிந்ததோட்டிருநெடுமாலொளிர்மத்தளமதுதாக்கப் புலமலிந்தநான்முகமுளான்றாளங்கைப்பொறுத்தொலியெழமோத நலமலிந்ததேனொழுக்கெனத்தும்புருநாரதரிசைபாட வலமலிந்தயோகியருளத்துறைபவனானந்தநடஞ்செய்வான். | 9 |
மல்லல்வான்றவமுனிவரரரவொலிவயக்கியஞ்சலிசெய்யச் செல்லறீர்ந்தனமென்றடியவரெலாஞ்சிந்தையிற்களிப்பெய்த வொல்லல்வாய்ந்தவேய்ங்குழன்முதற்கருவிகொண்டுரியரப்பணிசெய்ய வல்லறீர்ந்தெமையாள்பெருங்கருணையானானந்தநடஞ்செய்வான். | 10 |
ஒருபுறத்துநின்றருள்பராபரைமுகத்தொளிர்விழிக்கடைசெல்ல கருகிருட்பெருங்குறள்வெரிந்மிசைவிழிகழலவோர்தாளூன்றிப் பெருவனப்பொருதாண்மலர்குஞ்சிதப்பெற்றியினெடுத்தோவா வருள்சுரந்தெமைப்புரந்தருள்பரம்பரனானந்தநடஞ்செய்வான். | 11 |
தோயும்வான்றமருகமொருகைத்தலத்துழனிசெய்திடவோர்கைக் காயுமாரழலெழவிருகரத்தொன்றுகவியவொன்றமைவெய்தப் பாயுமால்விடையரபுரகரவரபரவெனுந்துதிமல்க வாயுமாமறைக்கதீதமாகியபிரானானந்தநடஞ்செய்வான். | 12 |
சடைகளெண்டிசைதடவரவெண்பிறைதண்புனலொடுதுள்ள வுடையெனும்புலியதளரைவயங்கிடவொள்ளியதலைமாலை மிடைபுயங்களிற்றுயல்வரக்குறுநகைமிளிர்ந்தசெவ்வாய்த்தோற்ற வடையுமெம்மனோர்க்காரருள்சுரப்பவனானந்தநடஞ்செய்வான். | 13 |
பொற்புமேவியசெவிக்குழையசைதரப்புருவமுமுரிவெய்த வற்புமேவியபிரணவமலர்ப்பெருமாலிகைமணம்வீசக் கற்புமேவியமறைச்சிலம்புண்மையிற்கலகலகலவென்ன வற்புமேவியவுளங்குடிகொள்பவனானந்தநடஞ்செய்வான். | 14 |
மறையுமற்றதனந்தமும்பந்தமின்மற்றுளகலையாவு நிறையும்பூதமுங்கரணமும்பொறிகளுநிகழிவற்றொளியாகி யுறையும்பேதமுங்காலமும்விந்துவுமோங்குநாதமுந்தேறா தறையுமற்புதஞானரூபப்பிரானானந்தநடஞ்செய்வான். | 15 |
உரியவஞ்செழுத்தெட்டெழுத்தாறெழுத்தோங்குநாலெழுத்தப்பாற் பிரியமிக்கபிஞ்செழுத்தெனயாவரும்பேசுமூவெழுத்தெல்லாந் தெரியநின்றதாமீரெழுத்தோரெழுத்தென்னுமெண்டிறனாகி யரியமாமறையந்தத்திற்பயில்பவனானந்தநடஞ்செய்வான். | 16 |
சிகரமாமுகநகரமொண்டாடிருவுதரமகரந்திண்டோள் வகரஞ்சென்னியசிதுடிகவிதருகைவகரமபயக்கைய மகரம்வெங்குறணகரந்தீபிரணவம்வாசிகையதுவாக வகரநேர்தரநிற்குமெம்மிறையவனானந்தநடஞ்செய்வான். | 17 |
தோற்றமந்தமருகஞ்செயவபயஞ்சார்துதிக்கரம்புரவாற்ற வேற்றசெந்தழன்முழுவதுமழித்திடவிருங்குறள்வெரிநோர்தாண் மாற்றருந்திரோபவஞ்செயவெடுத்ததாண்மதித்தனுக்கிரகிக்க வாற்றன்மேயவெண்டோளுடையெம்பிரானானந்தநடஞ்செய்வான். | 18 |
ஒன்றதாமலமிருவினைமூவகைமாயைமற்றுடலாதி யென்றநான்கவத்தைகளைந்துமனுமுதலாறுமற்றிவ்வாறும் பின்றவெண்ணுவார்புரிபணியெரன்பதும்பிறங்குமொன்றெனும்பத்து மன்றதென்றிடாவண்ணமொண்சபைப்பிரானானந்தநடஞ்செய்வான். | 19 |
புண்ணியம்புணராநந்தநடநெடும்பொழுதிவ்வாறுறச்செய்ய நண்ணியங்கமர்பிராட்டியுள்ளுவந்தனணான்முகன்முதலானோ ரெண்ணிலின்பமுற்றாமெனத்தாழ்ந்தனரிறைவியுமிவ்வாறே மண்ணிலெற்றைக்கும்வழங்குகவென்றனள்வள்ளலுமோமென்றான். | 20 |
திருந்துதெய்வமாயூரத்திற்கௌரிதாண்டவதரிசனஞ்செய்வார் பொருந்துபேற்றினையாவரேயறைகுவார்புண்டரீகத்தானுங் கருந்துழாயனும்பணிந்துமைவதுவைநீகனிதரச்செயப்பெற்றா லிருந்தியாங்கள்கண்டுய்குவமென்றனரிசைந்தனன்பெருமானே. | 21 |
15. திருநடனப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 654.
~~~~~~~~~~~~~~~~~~
கண்ணந்தாமலர்க்கற்பகவேந்தனுந் தண்ணந்தாமரைமேயதவத்தனும் வெண்ணந்தாளொருகைத்தலவிண்டுவு மெண்ணந்தான்மிக்கெழுமற்றையாவரும். | 1 |
நடனங்கண்டுநனிமகிழ்பூத்தநா மிடமருங்கமரேழுலகீன்றவ ளுடனமர்ந்தொருவன்புரிமன்றலுந் திடனமர்ந்துகண்டேத்துந்தவஞ்செய்தோம். | 2 |
என்றுபேசியித்திங்களுமைப்பசி நன்றுசெய்ததுநாடுந்தவமெனாக் கன்றுதீர்ந்தமனத்துக்களிப்பினா ரின்றுசெய்வனசெய்துமென்றெண்ணினார். | 3 |
கற்றவிச்சுவகன்மனைக்கூயிவட் பொற்றமன்றல்புரிதிருமண்டப மற்றமில்வகையாக்குதியாலெனச் சொற்றனர்தலைமேற்கொண்டுசூழ்ந்தனன். | 4 |
நீலமாமணிவேதிநெடுநிலஞ் சாலவாக்கித்தவாதமரகதக் கோலமார்ந்துகுலவுபடிகளு மேலநாற்புறத்தும்மியையச்செயா. | 5 |
அந்தவேதிகைமேற்பளிங்காற்சுவர் சந்தமார்தரநாற்புறத்துஞ்சமைத் துந்தவாயிலொருநான்கும்போக்குபு நந்தவெண்ணில்சாலேகமுநாட்டினான். | 6 |
ஆயவுள்ளிடத்தாயிரஞ்செம்மணி மேயகும்பவடிநிலைமேற்கொளத் தூயவச்சிரச்சோதிபரப்பிடு நேயவாயிரந்தூணநிறுவினான். | 7 |
அந்தத்தூண்மிசையம்பொன்செய்போதிகை சந்தத்தாயதுலாமுஞ்சமைத்தன னந்தச்செம்பவளஞ்செய்நலுத்திரம் பந்தத்தேய்ந்துபதியப்பொருத்தியே. | 8 |
திருந்துமுத்திரமேற்றிகழ்மேதகம் பொருந்துபல்சரம்பொற்பக்கிடத்தியல் லருந்துமம்பொற்றகடுமிசைக்கொள வருந்துதீர்தொழின்மாண்பிற்பரப்பினான். | 9 |
நாப்பணம்பொற்குறடுநசுச்செய்து மீப்பல்செம்மணியாதிமிளிர்தரக் கோப்பமைத்துக்குலாவுமடிநிலை யாப்பமைந்ததூணான்கதன்மேனிறீஇ. | 10 |
போதியுத்திரமாதிபொருந்தமுன் னோதியாங்கொளிவீசவுஞற்றியே சோதிமேவத்துலங்குவிமானமும் பேதியாதுபிறங்கவியற்றினான். | 11 |
சுற்றுமேவத்துவங்குகொடுங்கையி னுற்றுநாலவொளிர்தரளத்தொடை பற்றுகுஞ்சங்கணாப்பட்பயின்றிடக் கற்றுவல்லகருமனியற்றினான். | 12 |
இரசதத்தினியற்றியவுண்டைகள் பரவியெங்கும்பண்பார்ந்திடத்தூக்கியே விரவுசெம்பொன்விதானமுதலிய வுரவின்மிக்கவையாவுமுறுத்தினான். | 13 |
சோதிமண்டபஞ்சூழ்தரக்காவண நீதிவானமறையநிரப்பியே தீதிலாதவிதானஞ்செழுந்தொடை யாதியாவுமமையப்பொருத்தியே. | 14 |
காவ ணத்தமை கால்பல வற்றினு மாவ ணத்தக தலிவ ளக்கழை தூவ ணத்தக முகுந்து றுத்துபு பூவ ணத்ததொ டையும்பொ ருத்தினான். | 15 |
அடியின் முத்த மணலள வில்லன நெடிய தாகப் பரப்பி நிரப்பியே யொடிவின் மண்டபத் தொண்மணிக் கம்பலம் படிய விட்டுப் பலவு மியற்றினான். | 16 |
வந்து மாலய னாதிய வானவர் முந்து நின்றுமு டித்தன னென்றலு நந்து மோகையி னன்கெழுந் தாரிரு ளுந்து மற்றது நோக்கியு வந்தனர். | 17 |
விண்ணின் மேயவர் யாவரும் பாதலக் கண்ணில் வாழ்பவர் யாருங் கடல்சுலா மண்ணில் வாழ்க்கையர் யாரும் வரப்புரிந் தெண்ணி லாவுவப் பெய்தி முயலுவார் | 18 |
மண்ணு ளாரென்று மாமலர்க் கற்பக விண்ணு ளாரென்று மேவரும் பாதலக் கண்ணு ளாரென்றுங் காணிவ ரித்தனை யெண்ணு ளாரென்றுந் தேர்தலங் கில்லையே. | 19 |
மாட மாளிகை மண்டபங் கோபுரங் கூட மேடை செய்குன்றஞ் சதுக்கங்க ளாட ரங்க மணிமறு காதியா நீட வாய்ந்த நெருக்கமெண் வீழ்தரா. | 20 |
இன்ன வாறு நெருக்க மியைதா வன்ன வாகன னாதிய வானவர் முன்ன வன்கலி யாண முகுர்த்தநாள் சொன்ன வந்நகர் தேற்றிடச் சூழுவார். | 21 |
இன்று நாதன் றிருமண மெய்துமென் றொன்று கேள்வி மாயூரத் துளார்க்கெலா நன்று சொற்றி நகுமுறை யாலெனாத் தொன்று வள்ளுவற் பார்த்திது சொற்றனர். | 22 |
நாடு வள்ளுவ னக்குநீ ராடுபு கூடு நீறணிந் துண்டுகு லாய்ப்புனைந் தீடு சாலிப மேன்முர சேற்றியே பாடு மோகையி னீது பகருவான். | 23 |
அஞ்ச னாயகி யார்வள்ள லாரிவர் தஞ்ச மாகம ணம்புரி தன்மையா லெஞ்ச லின்றிப் புனைமினிம் மாநகர்த் தஞ்ச லின்றித் தொழவரு வீரென்றான். | 24 |
என்ற வார்த்தை செவியகத் தேறலு மொன்ற யாவரு முள்ளங் களித்தனர் வென்ற மாதவ மிக்குளேம் யாமெனா வன்றம் மாநக ரம்மண் வாரரோ. | 25 |
வேறு. காவண மிடுவாருங் கணநிரை கோப்புண்ண மாவண மாளிகைமேல் வண்கொடி நடுவாருந் தூவண மணிபொன்னாற் றோரணம் புனைவாரும் பூவண நறுமாலை பொலிதரத் தொடுப்பாரும். | 26 |
கன்னலுங் கதலிகளுங் காறொறு மசைப்பாரு மின்னல்செய் பசும்பொன்சார் விதானங்க ளிசைப்பாரு முன்னல தரிதென்ன முகந்துபொன் னிறைப்பாரு மின்னலென் பதுதீர்ந்த தெங்குமென் றுரைப்பாரும். | 27 |
கரிமிசை வருவாருங் கடுநடை விறல்வாய்ந்த பரிமிசை வருவாரும் பார்கிழி யுருள்பூண்ட கிரிமிசை வருவாருங் கிளர்மணிச் சிவிகையெனு மரிமிசை வருவாரு மணிதல்கண் டுவப்பாரும். | 28 |
அடிசில்கள் சமைப்பாரு மந்தணர்க் கிடுவாரு முடிவருந் தாம்பூல முகந்தனர் கொடுப்பாருங் கடிதலில் கருப்பூரக் கலவைக ளனைவாரு நொடிதலின் மலர்மாலை நோன்மையிற் றரிப்பாரும். | 29 |
புதுக்கலன்புனைவாரும்புத்துடையுடுப்பாரு மதுக்கமழ்மலர்க்கூந்தன்மகளிரைப்புனைவாரும் விதுக்குறைநுதலார்தமிளிர்நடங்காண்பாருஞ் சதுக்கமுன்மறுகெங்குந்ததைதரப்பயில்வாரும். | 30 |
வேறு. ஆயினர்மைந்தர்மாதரத்தகுகாலத்தாங்கு வேயினவயன்மாலாதிவிண்ணவரொருங்குகூடிப் பாயினசீர்த்திவள்ளற்பரம்பரன்மணத்தின்முன்னாண் மேயினமண்கவர்ந்துவித்துகள்வித்தினாரால். | 31 |
பணைபலமுழங்காநிற்கப்பன்மறையெழுந்துதுள்ள விணையிலாப்பெருமான்றன்னையிலங்குபொற்பீடத்தேற்றி யணைதருசெம்பொனன்னாணலங்கமுன்கையிற்சேர்த்திப் பிணைதருவாழ்த்தெடுத்தார்பிரமன்முற்றேவர்யாரும். | 32 |
புரிதருசடங்குமற்றும்பொலிதரச்செய்தபின்பு வரிதருபணைமுழங்கமஞ்சனச்சாலைபுக்குத் தெரிதருகங்கையாதித்தீர்த்தங்கள்பலவுங்கொண்டு விரிதருமன்பினாட்டல்வேண்டினாரீதுசெய்வார். | 33 |
அடிகள்செஞ்சடையும்புற்றோலாடையுமரவப்பூணுஞ் செடிதருகபாலமாலைசெறியும்வெள்ளெற்புமாலை முடியவுமொழித்துவேறோர்முழுக்கவினுருவங்கொள்ளி னொடிவறயாங்குற்றேவலுஞற்றுதற்கழகாமென்றார். | 34 |
என்றுவிண்ணப்பஞ்செய்யவடியவரெண்ணியாங்கே நன்றுவந்தளித்தல்வல்லநம்பிரான்வள்ளற்புத்தே ளொன்றுமப்படியேயாதுமென்றொருவடிவங்கொண்டான் கன்றுதறவிர்ந்தியாருங்கைகுவித்திறைஞ்சிநின்றார். | 35 |
மறைமுடியிருக்குந்தேவைமணிசெய்பொற்பீடத்தேற்றிக் குறையறப்பூரித்துள்ளகும்பத்துநன்னீராட்டிக் கறையிலொற்றாடையிட்டார்கனிந்துசுந்தரப்பேர்நம்பி யிறையில்வட்டகையேந்தத்தொட்டியையநெற்றியினீறிட்டு. | 36 |
புலியதள்பிணங்கிச்சோரப்பொருந்துதிக்கெட்டுமெண்ண நலிவறுசெம்பொன்னாடைநலத்தகமருங்கிற்சேர்த்தி யொலிசெய்முற்செருக்கின்சீருமுற்றபிற்போக்கின்சீரு மெலிவருமுகுந்தற்கம்மாமிகுமயல்செய்யாநிற்க. | 37 |
முன்னிகழ்கரித்தோனீங்கிமுனிந்துளம்புழுங்காநிற்கப் பொன்வரைச்சிகரநின்றும்பொன்னரித்திழியாநிற்குந் தன்னிகரருவிமானத்தனையொவ்வாச்செம்பொன்னாடை மின்னியவுத்தரீயம்வெகுண்டிருளனைத்துமேய. | 38 |
ஒழுகொளிபரப்புந்திங்களொளிர்சடைநின்றுஞ்சற்றே வழுவிநெற்றியினுற்றென்னவயங்குபுண்டரவெண்ணீறுந் தழுவுமம்மதியின்பாங்கர்ச்சாருரோகணியேயென்னக் கெழுமணிகரைத்தசந்தக்கேழ்கிளர்பொட்டுமின்ன. | 39 |
வரநதிசடைக்காட்டோடுமறைந்தவண்மன்றநாப்ப ணுரவுறமுடியின்மேலானுறுதலுங்கூடுமென்று பரவுறுமதைமறைத்தபண்புபோன்முடியின்மேலால் விரவுறவிளங்குங்காந்திமிளிர்மணிமகுடஞ்சேர்த்து. | 40 |
சடையெனுமிருக்கைதீர்ந்துதனியமர்கங்கைமங்கை *இடைசெவியடைந்தேதேனும்விளம்பினுமேறாவண்ண மடையவும்வயிரமாதியலங்குபன்மணிகால்யாத்த புடையமர்செம்பொற்றோடுபொலியிருபாலும்சேர்த்து. *இடைசெவி-என்பதில்சகரம்தொகுத்தல்விகாரம். | 41 |
தன்னைமுன்குழைத்துநாளுந்தவாதெழுவீக்கமாற்ற மின்னைவென்றொளிர்மாமேருமேயபன்மணிகளோடு மென்னையென்றெண்ணாவண்ணமியைந்துமேற்கவிந்ததொக்கும் பொன்னைவென்றொளிருந்தோளிற்பொருத்தியமணிக்கேயூரம். | 42 |
பிழையறியாதுசெய்யிற்பெருஞ்சினங்கொடுபல்பல்லுந் தழையொளிவிழியும்போக்கறவிர்த்திடப்பன்னிரண்டு விழைகதிர்களுஞ்சீராழிக்கடகமாய்விராய்முன்கையி னுழைவிரல்களினுற்றென்னவுரைத்தவையொளிரச்சேர்த்து. | 43 |
பன்றிமுன்கொடுத்தகோடும்பரந்தகச்சபத்தினோடுந் துன்றியவனப்புமார்பிற்றுலங்கமுத்தாரஞ்சாத்தி வென்றியசெழும்பாலாழிநடுவெழுவெய்யோன்மான வொன்றியவரற்குநாப்பணொண்மணிமதாணிசாத்தி. | 44 |
திசையுடுத்தரையின்மாட்டுநேத்திரஞ்செறியச்சூழின் வசையெனவிலக்கினாலும்விலக்குமற்றதுசெயாம லசைவறப்பிடித்தல்போலவணிகெழுமுதரபந்த மிசைதரவெடுத்துப்பூட்டியிருண்முழுதறுத்தபின்றை. | 45 |
உலகில்யாவரும்யான்சொற்றவுரைவழிபற்றுவாரே லிலகமேலுயர்வர்பற்றலிதுவெனத்தெரித்தல்போலக் குலமறைஞெகிழியாகிக்கோலங்கொள்பாதம்பற்ற வலர்தொடையெடுத்துத்தோளிலற்புதம்பொலியச்சேர்த்து. | 46 |
இன்னுமற்றுள்ளயாவுமிமையவர்புனையப்பெற்று மன்னுபேரழகுபொங்கமறைமுதனிற்றனோக்கி முன்னுகண்ணெச்சில்போக்கிமுகுந்தனாதியவானோர்கள் பன்னுமுண்மகிழ்ச்சிபொங்கப்பரவினர்வாழ்த்திநின்றார். | 47 |
திருவுலாப்போதல்வேண்டுமென்றுவிண்ணப்பஞ்செய்து மருவுலாங்கடுக்கைமாலைவள்ளலாருடன்பாடோர்ந்து குருவுலாஞ்செம்பொன்மானங்கொணர்ந்தெதிர்நிறுத்தினார்க ளுருவுலாமமரராதியாவருமொருங்குமொய்த்தார். | 48 |
முரசுதண்ணுமைதடாரிமொந்தைகல்லலகுபம்பை விரசுபன்முருடுமற்றுமிளிர்தகுணிச்சமெல்லாம் பரசுபல்கடலுமொன்றியார்த்தனெப்பரவியார்ப்ப வரசுகுணத்தினோங்கிமற்றுளவனைத்துமார்ப்ப. | 49 |
கொடிகுடையாலவட்டங்கோணியதண்டங்கோணாத் தடிகிளரொலியலாதியாவையுந்ததைந்துமொய்ப்ப நெடியவன்பிரமன்பாங்கர்நீட்டுகைமிசைக்கைவைத்துக் கடியபாதுகைத்தாள்வைத்துநடந்தனன்கருணைமூர்த்தி. | 50 |
மறைமுடியமர்வான்வந்தான்மாயூரநாதன்வந்தா னறைபெருங்கருணைச்செல்வியஞ்சனாயகியைவேட்கு முறையுடன்மணாளன்வந்தான்மூவுலகாளிவந்தா னிறையவன்வந்தான்வந்தானென்றுசின்னங்களார்ப்ப. | 51 |
மறைபலமுழங்காநிற்கவானவர்பல்லாண்டோதக் கறைதபுமுனிவரெல்லாங்கைதலைகுவித்துநிற்ப நிறைபெருவிமானத்தேறிநிகழ்தரநடத்துங்காலைக் குறைமதிநுதலார்யாருங்கூடுபுநோக்கினாரால். | 52 |
நோக்கியமடவார்தம்மைநோக்கினன்மாரவேளு நோக்கியலனையான்கையினோன்சிலைவிடுக்கும்பூவு நோக்கியவுடைவாளென்றுநுலல்விரைத்தாழம்பூவு நோக்கியவையன்மட்டுநோக்கிலானாகிச்செல்வான். | 53 |
கருங்குழற்பரமுநெஞ்சுங்கட்டவிழ்ந்துலைந்துசோர நெருங்கியமுலையுங்கொண்டகாமமுநிமிர்ந்துவீங்க மருங்குலுமுயிருந்தேம்பவரிவளையாழியாடை யொருங்கிழப்புற்றமாதருயிரிழப்பதற்குமுள்வார். | 54 |
ஒருமடமயிலஞ்சாயலுமையைநீர்வரைவீரென்னிற் பருவமங்கையரேயாயயாமெலாம்படரின்மூழ்கி வெருவரமையல்பூட்டல்வேண்டுமோவிதிதானீதோ பொருவரும்வனப்புவாய்ந்தீர்புகலுவீரென்பார்மாதர். | 55 |
மயர்வுற்றமங்கைநல்லாளொருத்திமாதேவற்பாரா வயர்வுற்றயானவாவுமதனைநீரளித்தல்செய்யீ ருயர்புற்றீர்வறுமையீருமலீருமைவள்ளலென்றோர் பெயர்வைத்துவிளித்தார்க்காணிற்பேசுதல்பலவுண்டென்றாள். | 56 |
இளமுலைமங்கைநல்லாளொருத்தியெம்மிறைவன்முன்போய்க் குளநடுவலர்ந்தசெங்கட்கமலத்தாற்கோலமார னளமாவழல்செய்தீரென்றறைகுவர்நும்மையாரு முளமமர்வில்லுமேவுமொழித்தெரித்தீரோவென்றாள். | 57 |
எண்ணியவெண்ணியாங்கேயடுத்தவரெய்தச்செய்யும் புண்ணியரென்றுநும்மையாவரும்புகழ்வார்பொய்யே யெண்ணியவெண்ணியாங்கேயெனக்கருள்செய்யீரேனு நண்ணியசிறிதுநல்கீரெனநவின்றனளோர்நங்கை. | 58 |
உற்றின்பவாரியாயவும்பர்நாயகன்முன்சென்று பற்றின்பநுகரவெண்ணும்பைந்தொடிக்கரத்தொருத்தி முற்றின்பங்குறித்தீர்நம்மைமுயங்குமினென்பீரெற்குச் சிற்றின்பஞ்செய்யாநீரோபேரின்பஞ்செய்வீரென்றாள். | 59 |
தளரிடையொசியக்கொங்கைபொருமிடச்சார்ந்தோர்மங்கை கிளர்புகழ்மிகுமாயூரகேத்திரத்தும்மைக்கண்டோர் விளர்தபுத்தெண்ணம்வாய்ப்பாரெனவிளம்பிடும்புராணம் வளர்மயலெனக்குமட்டுமற்றதுபொய்யோவென்றாள். | 60 |
நிறைகருங்கூந்தற்செவ்வாய்நேரிழையொருமடந்தை மறைபுணரொருதேர்வேட்டீர்மறைபுணரொருதேரென்பான் முறையுறவமையுமென்றுமொழியவும்வேளீர்நும்மைக் குறைமதியுடையாரென்றுகூறுதலொக்குமென்றாள். | 61 |
அருத்தியினொருமடந்தையண்ணறன்னெதிர்சென்றோர்தேத் தொருத்திபூமாலைசூட்டியுமைவளைவித்தரண்முன்னம் பொருத்தியவதுபோலாதுபூமாலைசூட்டுவேனான் றிருத்திகொண்டனங்கவேள்செய்சிறுமைதீர்த்த்ளுமென்றாள். | 62 |
சினவிடையாளிமுன்னஞ்சென்றொருதெரிவைநின்று மனவிடையாமையோடுவயக்கியமார்பீரென்னை நனவிடைவந்துகூடீராயினுநள்ளிராவிற் கனவிடைவருவீரப்பாற்காண்பனும்விரதமென்றாள். | 63 |
உவாமதிமுகத்துநல்லாளரிவையாங்கொருத்திநேர்ந்தென் கவானொருதிருப்பைஞ்ஞீலிக்கதலியேதோணெல்வேலித் தவாதெழுகழையேயென்னிற்றழுவுறத்தடையொன்றுண்டோ வவாவியதிருக்கநீர்பின்னளித்திடுபயனென்னென்றாள். | 64 |
தக்கன்மாட்டடைதல்கூடாதென்னவுந்தடுத்துச்சார்ந்த பக்கமாமடநலாளைப்பரிந்தின்றுவதுவைசெய்வீர் புக்கயான்மறுத்தல்செய்யேனென்னவும்பொருந்தல்செய்யீர் தக்கதோவிதுவென்றோதித்தாழ்ந்தனளாங்கோர்தையல். | 65 |
கண்ணகன்புவனமெல்லாங்காப்பவர்நீரேயென்பா ரண்ணலங்கருப்புவில்லானடர்ந்தெனைவருத்தஞ்செய்யு நண்ணருந்துயரங்காப்பார்மற்றெவர்நவிலுமென்றாள் பண்ணலங்கனிந்ததீஞ்சொற்பைந்தொடியொருபொற்கொம்பு. | 66 |
கொடுவிடமுண்ணப்பார்த்துக்கொண்டிருந்தவள்பால்வேட்கை விடுவதுசெய்யீர்மேலுமேலுநீர்விழைதல்செய்வீர் தொடுமுனம்யானுண்பேனென்றெழுமெனைத்தொடர்புகொள்ளீர் படுவதீதழகோவென்றுபகர்ந்தனளங்கோர்மங்கை. | 67 |
ஒருபுறத்தொருத்திமேவவுவந்துநீர்வைத்தீர்மற்றை யொருபுறத்தென்னைவைப்பிலுண்டாகுங்குற்றம்யாதே பொருவருமுடம்புமுற்றும்பசந்ததும்பொருந்தக்காண்பீர் பொருவிலீரென்றுபோற்றிப்புகன்றனளெதிர்ந்தோர்மாது. | 68 |
உடைமுதலெவையுந்தோற்றேமும்பொருட்டாயகோல மடையவுமுகத்துநோககானோக்குமினதற்கொவ்வீரேன் மிடையழனெற்றிநாட்டம்விழித்தேனுநோக்கல்செய்வீர் புடைமழுப்படையீரென்றுபுகன்றனள்சினந்தோர்பூவை. | 69 |
இவ்வண்ணம்பேதையாதிப்பேரிளம்பெண்ணீறாய செவ்வண்ணமடவாரெல்லாஞ்செறிபெருங்காமமூழ்க வெவ்வண்ணமாயினோருமிறைஞ்சிநின்றேத்தல்செய்ய வவ்வண்ணமானோன்கோயிலணிகிளர்வாயில்வந்தான். | 70 |
மானநின்றிழிந்துமன்றன்மண்டபநாப்பணெய்தி யூனமில்செம்பொற்பீடத்தும்பர்நாயகனிருந்தா னானவப்பொழுதுபற்பலரமடமாதர்யாருங் கானமுற்றழுவிநின்றுகவின்பெறநடித்தாரன்றே. | 71 |
திருமகண்முதலோராயதெய்வமின்னார்கள்பல்லோ ரருமறைவாழ்த்துமல்கவான்றபல்லியமுமார்ப்பப் பொருவருமுலகமீன்றாண்முன்கையிற்பொன்னாண்சேர்த்தி மருவுமஞ்சனச்சாலைக்குட்போயினார்மகிழ்ச்சிதுள்ள. | 72 |
கருங்குழற்கட்டவிழ்த்துக்கமழ்நறுந்தயிலம்பூசி யொருங்குபல்விரையினோடுமுறுதுவர்பலவுமப்பி யருங்குரைத்தென்னுநன்னீர்மஞ்சனமமையவாட்டி மருங்குமொய்த்தகலாரெல்லாம்வயங்கவொற்றாடையிட்டார். | 73 |
செறிபலபல்வாய்த்தந்தச்சீப்பெடுத்தொருங்குசீவிப் பறிநிகர்சடையான்றேவியெனல்வெளிப்படுத்துவார்போ னெறிதருஞ்சடையியற்றிநிகழ்தருநாகமாதிக் குறிகொளுங்குஞ்சமீறாக்கோப்பனபலவுங்கோத்து. | 74 |
குழலெனுமிருளைவேறல்குறித்தசெங்கதிரும்வானத் துழல்பிறைமதியுங்கூடியொருங்குவீற்றிருத்தலென்ன வழல்படகமலராகமலங்குவெண்டரளமேவி நிழல்படுபணியிரண்டுநிலவுறமுன்னர்வைத்து. | 75 |
பிறைமிசைவானவில்லுப்பிறங்குறக்கண்டாற்போல நிறையொளிநுதலின்மேலாலிலம்பகநிலவச்சூட்டி மறைபுகல்கற்புவாய்ந்தமாதரார்திலகமாய விறைவிதனெற்றிநாப்பணிலங்கவோர்திலகமிட்டு. | 76 |
கருந்தடங்கண்ணியென்றுகரைவதற்கேற்பவேலைப் பொருந்தடங்கண்ணினம்மவஞ்சனம்பொலியத்தீட்டித் திருந்தியவாயோசெய்யபவளமோவெனத்தேர்பாக்குப் பொருந்தியமுத்தமென்னமூக்கணிபொருந்தக்கோத்து. | 77 |
முடிமிசையொருபெண்வைத்தானென்னெனின்முழுநீரென்பான் கொடிவிடையுடையானீயேகுறிக்கொளென்றுணர்த்தும்பாக்கு வடியிளங்கதிரிரண்டோரிருபாலுமருவியாங்குப் படியில்செம்மணிகுயின்றகாதணிபலவுங்சேர்த்து. | 78 |
கொடியெனத்துவளாநிற்குங்கோலமார்மருங்குல்சூழப் படிபெறலரியசெய்யபட்டுடைகொய்துடுத்திக் கடிதலில்கச்சுப்பூண்டுகவின்றதோண்மிசைமுன்றானை வடிவமைந்திடச்சூழ்வித்துமருங்குற்பாற்செருகல்செய்து. | 79 |
கொங்கையங்குவட்டுமேலாற்குலவிவீழருவியென்ன வங்கதிர்முத்தமாலையமைதரவெடுத்துப்பூண்டு பங்கமில்கழுத்துச்சூழப்பற்பலபணியுஞ்சேர்த்துப் பொங்குபொன்மணிசெய்கோவையாவையும்பொருந்தப்பூண்டு. | 80 |
இரவினுங்குவிதல்செய்யாக்கமலங்களிவையாமென்று பரவிவந்ததிசயித்துப்பார்குஞ்செங்கதிரேபோல வரமணிக்கடகமாதிவளைபலமுன்கைசேர்த்து விரனிறைதரப்பொன்னாழிபற்பலவிளங்கக்கோத்து. | 81 |
திருவரையொட்டியாணமேகலைசெழுங்கலாப மொருவரும்பிறவுஞ்சேர்த்திட்டொளிகிளர்பாதசால மருவியவனைத்தும்பூண்டுமணியாழிவிரலிற்கோத்துப் பொருவரும்வனப்புநோக்கிப்போற்றிநின்றனரெல்லாரும். | 82 |
கணிதநூல்வல்லமாந்தர்காலமீதென்னவல்லே பிணிவிசியியமுழங்கப்பெருமறையார்ப்புமல்கத் தணிவருமுலகமீன்றுதயங்குகற்பகப்பூங்கொம்பை யணிபெறக்கொண்டுவந்தாங்கையன்மாட்டிருத்தினரால். | 83 |
இரவியுங்கதிரும்வேறுவேறிருந்தென்னமேய பரமனையுமையைநோக்கிப்பங்கயத்தவன்மாலாதி வரமிகுபுலவரெல்லாம்வாழ்ந்தனமென்றுதாழ்ந்தார் திரமிகுமுவகைபொங்கவெழுந்தனன்செங்கண்மாயோன். | 84 |
சுவைமதுப்பருக்கநல்கித்தொடங்குபாவனையில்பூசை நவையறப்புரிந்துமுந்தைநாமமாதிகளுரைத்துச் செவையுறுவள்ளல்கையிற்றிருத்தகநன்னீர்வார்த்தா னவையகத்துள்ளார்யாருமரகரகரவென்றார்த்தார். | 85 |
செம்மலராளுமையன்குண்டத்துச்செந்தீயிட்டுக் கைம்மலர்நிறையவோமகாட்டமுமுறித்துச்சேர்த்துப் பொம்மலுற்றமைசிருக்குச்சிரவத்தானெய்பூரிப்ப விம்மலுற்றெழுந்ததம்மாவேள்வித்தீவலஞ்சுழித்தே. | 86 |
ஆயபல்லியங்களார்ப்பவந்தணர்வாழ்த்துமல்க மேயபன்மறைமுழங்கவிரும்புமூவுலகும்வாழத் தூயமங்கலநாண்கையிற்சுந்தரவள்ளல்கொண்டு நாயகிதிருக்கழுத்தினலமுறப்பூட்டினானே. | 87 |
ஆர்த்தனதடாரிபேரியார்த்தனமுருடுமொந்தை யார்த்தனபடகந்தக்கையார்த்தனசின்னம்பீலி யார்த்தனபம்பைசங்கமார்த்தனதாளம்வீணை யார்த்தனமுனிவர்செவ்வாயார்த்தனமறைகளெல்லாம். | 88 |
வள்ளலும்பிராட்டியங்கைமலரொருகையிற்பற்றி யொள்ளழற்கடவுளுந்தானென்பதானுவந்துசூழ்ந்து தெள்ளரிச்சிலம்பலம்பச்சேயிழையொடுநேர்நின்று விள்ளலைக்குறித்திடாதவெண்பொரியட்டினானால். | 89 |
மங்கலமணாட்டிபாதமலரொருகையாற்பற்றி மங்கலவம்மிமேலான்மலர்ப்பரப்பியையவைத்து மங்கலவடமீனேரேவந்தடிபணியக்காட்டி மங்கலத்தவிசின்மேலான்மருவினனுலகம்வாழ்த்த. | 90 |
நத்தமென்றுரைக்குங்கூந்தனாயகியோடும்வைகுஞ் சுத்தமெய்ஞ்ஞானானந்தச்சுந்தரச்சோதிமுன்ன ருத்தமவயன்மாலாதியும்பர்கடூர்வையோடு முத்தவாலரிசிவாரிமுனிவறத்தூவிவாழ்ந்தார். | 91 |
இருவரும்யானமேலாலியைந்துலாப்போதல்வேண்டும் பருவருந்தன்மைநீங்கிப்பாரெலாமுய்யவென்ன மருவருங்கடக்கைமோலிவள்ளறான்குறித்தவாறே யொருவருமஞ்சலம்மையொடுமுலாப்போந்தானன்றே. | 92 |
ஆரணமுடிக்குமெட்டானஞ்சனாயகியைவேட்டு வாரணமாதிசெற்றமறுகுலாப்போதல்கண்ட தாரணவியதோண்மைந்தர்தடங்கணாருவகைபூத்து நீரணக்கும்பிட்டேத்தியிவையிவைநிகழ்த்தலுற்றார். | 93 |
சீலமார்வள்ளலார்தந்திருக்கோலஞ்சிறந்ததென்பார் கோலமாரஞ்சலம்மைகோலமேசிறந்ததென்பார் மூலமாரிருவர்கோலமுழுமையுஞ்சிறப்பேயென்பார் ஞாலமாரீதுகாணநாஞ்செய்ததவமென்னென்பார். | 94 |
விழிபடைத்ததற்குப்பேறுமேதகப்பெற்றோமென்பார் பழியிலிச்சன்மமேநற்பண்புகூர்சன்மமென்பார் தழியமற்றிதுநோக்கார்தஞ்சன்மமேசன்மமென்பார் கழிசுவையுடைத்தாலிந்தக்கல்யாணக்காட்சியென்பார். | 95 |
சிலர்நறுமலரிறைப்பார்சிலர்செழும்பொரியிறைப்பார் சிலர்நறும்புனலளாயசந்தனச்சேறிறைப்பார் சிலர்பசும்பொன்னிறைப்பார்சிலரணிவிளக்கெடுப்பார் சிலரரக்கமைந்ததூநீர்சுழற்றுபுகவிழ்த்தல்செய்வார். | 96 |
இன்னணநகரம்வாழ்வோர்யாவருமின்பமெய்தக் கன்னலங்குதலைச்செவ்வாய்க்காமருதோகையோடு முன்னவன்வள்ளற்பெம்மான்முனிவருமுலாப்போந்துற்றான் சொன்னமுமணியுமேயசுடர்ப்பெருங்கோயிலம்மா. | 97 |
ஆங்குச்செய்சடங்குமுற்றுமழகுறச்செய்தபின்றை யோங்குபேரிடபதீர்த்தத்துற்றுநீராடல்செய்து வீங்குதன்மணத்துவந்தவேதன்மாலாதியோர்க்கும் பாங்குசேர்விருந்துமுன்னாப்பலமுகமனுநன்காற்றி. | 98 |
அவரவரிருக்கைசேரவிடைகொடுத்தனுப்பிப்பின்பு கவர்மனத்தடையாவையன்கருதிலிங்கத்தைமேவி யிவர்பெருங்கருணையோடுமிருந்தனனிலகுவஞ்சிப் பவர்புரைமருங்குற்செவ்வாய்ப்பைந்தொடித்தோகையன்னாள். | 99 |
ஒருகரமபயஞ்செய்யவூருவிலொருகைவைத்தே மருவுபல்லுயிர்க்குமின்பவாழ்வளித்தமர்ந்தாளிந்தப் பொருவருமன்றல்காண்போர்பொலிதரநடாத்துவோர்மெய்த் திருவொடும்பொலிந்துபின்னர்ச்சிவகதியடைந்துவாழ்வார். | 100 |
16. திருமணப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 754.
~~~~~~~~~~~~~~~~~~
இயங்குபல்லுயிருமேனையுயிர்களுமிரியாவின்ப முயங்குமான்மியத்ததாகிமுழுமறைமுடியினாளுந் தயங்குமுண்மையதேயாயதவாப்புகழ்மாயூரத்தின் வயங்குதென்மேல்பாற்றாருவனமெனும்வனமொன்றுண்டால். | 1 |
அத்தகுவனத்தில்வாழுமருந்தவமுனிவர்பல்லோர் சுத்தவில்லொழுக்கம்பூண்டுகருமமேதுணிபாமன்றிச் சத்தறிவின்பரூபத்தனிமுதல்வேறின்றென்னும் வித்தகமருவிநின்றார்மேல்வரும்விளைவுதேறார். | 2 |
அனையபன்முனிவர்தங்களில்லறக்கிழமையாளு நனையமென்கூந்தற்செவ்வாய்ப்பார்ப்பனநல்லார்பல்லார் புனையவாங்கற்புப்போலப்பொற்புமேம்பட்டோமென்று ளினையயாவரையுமெள்ளித்தருக்குவாய்ந்திருப்பாரம்மா. | 3 |
இருதிறத்தவருங்கொண்டவிருஞ்செருக்கொருங்குதேர்ந்து பொருவருமகதிநல்யாழ்ப்புங்கவன்மாயூரஞ்சார்ந் தருவுருமுபயமாயவண்ணலையடியிற்றாழ்ந்து பெருகுமற்றவர்செருக்கின்பெருக்கம்விண்ணப்பஞ்செய்தான். | 4 |
அன்னவன்செருக்குக்காண்டுமென்றவற்கருளிப்போக்கி முன்னவன்மாயூரேசன்முகுந்தனைநினைத்தானம்மா மன்னவன்வந்துதாழமாயமாதாகியாழோன் சொன்னவன்முனிவர்பாற்போய்ச்சோதனைபுரிதியென்றான். | 5 |
என்றலும்வணங்கிமாயனெழுந்தன்னஞ்சலம்மை கன்றலில்கருணையேற்றுக்காமருமடந்தையாகி மன்றல்செய்மலர்சூழ்தாருவனத்திடைச்சென்றானாக வொன்றல்செய்முனிவர்யாருமொருங்குகண்விடுத்துக்கண்டார். | 6 |
காண்டலுங்கருப்புவில்லான்கணைக்கெலாமிலக்கமாகி முண்டவெங்காமம்பொங்கப்பருகுவார்போலமொய்த்துப் பூண்டமால்யானையுண்டவெள்ளிலங்கனியேபோன்று மாண்டதந்தவமுமுள்ளச்செருக்குமாண்டவரேயானார். | 7 |
முலையொன்றேகண்டுசில்லோர்முரிதருபுருவமாய சிலையொன்றேகண்டுசில்லோர்சிற்றிடையுடுக்கப்பட்ட கலையொன்றேகண்டுசில்லோர்கலையுளுமணிகால்யாத்த தலையொன்றேகண்டுசில்லோர்தவமொரீஇமயங்கிவீழ்ந்தார். | 8 |
விழியினாலுடைந்தார்சில்லோர்கிளியினுமிழற்றுமின்றே மொழியினாலுடைந்தார்சில்லோர்மேர்கஞ்செய்மேனிச்சாயற் கழியினாலுடைந்தார்சில்லோர்கண்டனகவருமுந்திச் சுழியினாலுடைந்தார்சில்லோர்தோற்றத்தாலுடைந்தார்சில்லோர். | 9 |
முந்தியகடுப்பிற்சென்றுமோகினிவடிவங்கண்டு பிந்தியநடையராகிப்பேதுற்றுநெஞ்சமாழாந் திந்தியமனைத்தும்வீழ்த்திச்செயலின்றியேங்கிவீழ்ந்தா ருந்தியகருமமொன்றேயுறுபொருளெனக்கொண்டுள்ளார். | 10 |
இவர்செயலின்னதாகவினியமாயூரமேய பவர்படுசடிலமோலிப்பரம்பரன்வள்ளற்பெம்மான் றவர்மனைக்கிழமைபூண்டுதருக்குமேன்மேலுங்கொள்ளு மவர்திறமளக்குமாறோரழகியவுருவங்கொள்வான். | 11 |
மன்னியகுறுக்கையின்கண்மதனனையெரித்தபின்ன ருன்னியவனையான்செய்கையொருதானேசெயக்கொண்டாங்குத் துன்னியவனந்தகோடிசூரியர்திரண்டாலொத்து மின்னியவனப்புவாய்ந்துவிளங்குமோருருவங்கொள்வான். | 12 |
எண்ணிலாவண்டத்துள்ளுமியைதரவியாபித்துள்ள வெண்ணிலாவனப்புமுற்றுமெழுந்தொருங்குற்றாலென்ன வெண்ணிலாவுயிர்களுக்குமெஞ்ஞான்றுங்களைகணாய வெண்ணிலாமறைக்குமெட்டானிலங்குமோருருவங்கொள்வான். | 13 |
மாமருமதிகளங்கமாறிவந்திருந்தாலன்ன காமருமுகமுமம்பொன்கடைந்தெடுத்தனையதோளும் பூமருமாலைமார்பும்பொழிபெருங்கருணைக்கண்ணுந் தூமருவியவெண்மூரறோற்றிடுஞ்செய்யவாயும். | 14 |
அணிகெழுமுழந்தாடோயுமங்கையுமெழிற்கவானுங் கணிகெழுசிறப்புவாய்ந்தகணைக்காலுங்கமலத்தோடு பிணிகெழுதுயர்க்கணாழப்பிறங்குசெம்பதமுமற்றுங் குணிகெழுமாமைசொட்டுங்கோசமும்பொலியநின்றான். | 15 |
பனிமுகமலர்ச்சிகாட்டப்பவளவாய்கீதம்பாடத் தனிநுதனீறுமல்கமணிக்குழைசெவியிற்சார முனிவரைமயக்கிவீழ்த்தமோகினிமயங்கிவீழக் கனியொளியலங்கிமின்னிக்கட்டழகெறிப்பநின்றான். | 16 |
ஒருமேனிவீசாநின்றசேயொளியுலகமூடு மிருண்மேயவெழுந்தகாலையிளங்கதிருதயஞ்செய்ய வருமூரலொடுவெண்ணீறுமாமதியுதயஞ்செய்யத் திருமேனியழகன்வேதம்பாதுகைசிவணவேறி. | 17 |
தமருகமொருகையார்ப்பப்பலிக்கலமொருகைதாங்கப் பமரமுண்மலரிற்பாடும்பாட்டின்வாய்கீதம்பாட வமருவந்தியமற்கோலையனுப்புமைக்கருங்கணல்லார் தமரொடுவாழுஞ்சேரிச்சார்ந்தனன்பலிகொள்வான்போல். | 18 |
பயப்பயநடந்துபெம்மான்பார்ப்பனமடவார்வீதி நயப்புறச்சேர்ந்துகையினகுதுடிமுழக்கலோடுங் கயப்பில்யாழோசைகேட்டவசுணங்கள்கடுகவந்து முயக்குறல்போலவங்கைப்பலியொடுமொய்த்தார்மாதர். | 19 |
பலியிடவந்தமாதர்பரம்பரன்முகமுங்கண்ணும் வலிகெழுபுயமுமார்பும்வயங்குசெங்கையுங்காலும் பொலிதிருவரையுங்கோசப்பொற்புமற்றனைத்துநோக்கி மெலிவருமயக்கம்பூண்டார்வேளுந்தன்வலிதெரித்தான். | 20 |
நடுக்கலைநெகிழ்ந்ததோராநங்கையங்கொருத்திபிச்சை யெடுக்கவந்தனையேலாடையின்றிவந்தனையென்னென்றாள் கொடுக்கவந்தனையேனீயெக்கோலமாய்வந்தாயென்றா னுடுக்கைவிண்டதனையப்போதுணர்ந்தவணாணுக்கொண்டாள். | 21 |
நள்ளியவளையும்வீக்குகலையுமேகலையுஞாலங் கொள்ளியநெகிழ்ந்துவீழ்ந்தகுறித்தவைசிறிதுநோக்காள் வெள்ளியமுறுவறோற்றிப்பலிகொளமேயவைய னொள்ளியகோசநோக்கியொருத்திகும்பிட்டுநின்றாள். | 22 |
தண்ணியவடிகேள்யானோதனப்பிச்சைதருவேனென்னி லண்ணியகலத்திலேற்றுக்கோடுமென்றறைந்தாளோர்பெ ணெண்ணியமடவாய்நீயிங்கிரட்டுறமொழிதலாலே கண்ணியவதுதேறேனென்றுரைத்தனன்கருணைமூர்த்தி. | 23 |
கடுமிடற்றொளித்துநிற்குங்கடிஞையோன்வதனநோக்கி நடுவெனமேனிமுற்றுநலிந்திளைத்திடுமோர்மங்கை யிடுபலிகொளவந்தீரோவென்னுயிர்ப்பலிமற்றின்னே கொடுவெனக்கொளவந்தீரோகூறுமின்குறித்ததென்றாள். | 24 |
ஒருமடமங்கையெம்மானுருவெளிதோற்றக்கண்டப் பொருவிலாவுருமுன்சென்றுபொள்ளெனக்கோடியின்னே தருபலியென்றுசெங்கைத்தலக்கலத்திட்டாண்மண்வீழ்ந் தருவருப்படையப்பொள்ளற்கலங்கொலோவமைந்ததென்றாள். | 25 |
பொன்னுடைப்பூணாளங்கோர்பொன்னிறையுருவந்தோன்ற மன்னுடைக்கலத்திற்சோறிட்டதுமண்ணில்வீழக்கண்டாங் குன்னுடைக்கலமிக்கோட்டையுளதென்றாளிறைவனோட்டை யென்னுடைக்கலமோபிச்சையிட்டநின்மனமோவென்றான். | 26 |
ஒருமகள்கடிஞைவாய்ச்சோற்றொடுவளையாழியிட்டு மருமலர்க்கைகள்கூப்பிவணங்கிப்பின்னெழுந்துசொல்வா ளருமையாயான்மாலானேன்வளையாழியளித்தாயென்னில் வருகுறையில்லையென்றாளிடைக்குறைமாறாதென்றான். | 27 |
காதல்கூரொருத்திநேரேகைகுவித்திறைஞ்சிச்சொல்வா ளோதறான்யாதுக்குள்ளக்குறிப்பறிந்துடம்பாடெய்திப் போதராய்நீயிரக்கமனமிலாய்போலுமென்றாண் மாதராய்நாமிரக்கமனங்கொண்டேவந்தேமென்றான். | 28 |
புள்ளவாமலர்மென்கூந்தற்பொற்றொடியொருத்தியாங்கே நள்ளவாதரவுதோற்றிநண்ணவுமுணர்தலில்லா யுள்ளவாறுணர்ந்தேன்முன்மாலறியாய்கொலுரைத்தியென்றாள் வள்ளனாயகனுமென்றுமாலறியான்யானென்றான். | 29 |
இனங்கிளர்மயிலஞ்சாயலேந்திழையொருமடந்தை மனங்குழைந்தனைத்துநல்கவாஞசித்துநிற்பதோரா தனங்கொணாவென்பரயன்னங்கண்டறியாய்கொலென்றாள் கனங்குழாயின்னுமன்னங்கண்டறியான்யானென்றான். | 30 |
மாசற்றவடிவீரீங்குவந்துளீர்பயிக்கம்வேண்டி யேசற்றகோசமூடலறமெனவிசைக்கும்போதே தூசற்றவளிவளென்றுசொலக்கலையிழந்தாளோர்பெண் ணாசற்றவனிதாய்நீயுமறமல்குன்மூடலென்றான். | 31 |
முதிர்மயலொருத்தியன்னமுகந்துகையேந்தியைய னெதிருறவணையுங்காலையிடுக்கியுமுடுக்கைவீழ வதிர்கழலான்பின்னிட்டானவள்பயந்தனையோவென்றாள். கதிரிழாயல்குற்பாம்புகண்டுநான்பயந்தேனென்றான். | 32 |
பூணுருவொழிந்தவாங்கோர்பொன்னிறையெதிரேநோக்கி யாணுருவொன்றாலின்றியானரையுடம்பானேனென்றா ளேணுருவுடையானன்னளெதிர்நோக்கியான்முன்னேபெண் மாணுருவொன்றான்மன்றவரையுடம்பானேனென்றான். | 33 |
போனகங்கொள்ளவந்தீர்பொலிதருசுவர்க்கமீது வானகம்பதிப்பீர்கொல்லோவென்றொருமடந்தைகேட்டாள் போனகம்விடமாக்கொண்டோன்பொலிதருசுவர்க்கமீது வானகம்பதிப்பேன்போற்றிவழிபடுவாரையென்றான். | 34 |
மருவுலாங்கோதைக்கூந்தன்மடநலாளொருத்திவந்து பொருவினும்மூரலென்னோர்புரஞ்சுடலென்னேயென்றாள் வெருவினம்மூரன்முன்னம்புச*மூன்றும்வேவச்சுட்ட தருமையோபுரமொன்றின்றுசு*டுதிறமென்றானையன். | 35 |
விரைக்கருங்கூந்தற்செவ்வாய்வெண்ணகையொருத்திநேர்வந் துரைக்கரும்வனப்புவாய்ந்தவுத்தமவடிவுள்ளீர்நும் மரைக்கலையெங்கேயென்றாளரைக்கலைமுடியுமேவென்றான் வரைக்கரும்பித்தரோவென்றாளதுவாய்மையென்றான். | 36 |
கொன்னரைவிடையான்முன்போய்க்கோற்றொடியொருத்திகண்டா டன்னரையுடுக்கைநீத்தாடரைவிழுமிதைநீவாங்கி யென்னரையுடுத்துகென்றாளுடுத்திடல்யான்கற்றன்றோ வுன்னரையுடுத்தல்செய்வேனென்றனனுயங்கிநின்றாள். | 37 |
கயல்புரைகருங்கட்செவ்வாய்க்காரிகையொருத்தியோவா வியல்கெழுமேனியான்முன்னியம்புவாளென்னைநோக்கால் வியலுறச்சுடுவாய்மேலும்மெய்நடுக்கடைவானாற்ற முயன்மதற்சுடுதியென்றாண்முன்னமேசுட்டோமென்றான். | 38 |
கொம்மையொண்மதியம்போலுங்குளிர்முகத்தொருத்திநேர்வந் தும்மையானிறுகப்புல்லியுகளவெம்முலைக்கோட்டானுஞ் செம்மைசேர்மார்புந்தோளுங்குழைதரச்செய்வேனென்றா ளெம்மையாளுடையான்பாகமெய்திலையேலாதென்றான். | 39 |
தானெனச்செய்யவல்லான்சார்ந்தவர்தமையெலாநங் கோனெனப்புகல்வர்மேலோரதுகுறித்துணரின்மெய்யே மீனெனப்பிறழுங்கண்ணார்யாவருமேவிமேவி யூனெனப்படுதம்மெய்யினுடையிலாதொழித்தநீரால். | 40 |
வேறு. வண்ணங்கிளர்குலமடவார்பலருவிவ்வண்ணந்தழைதரன்மலிகற்புத் திண்ணங்குலைதரவவணின்றேகியொர்சிறையுற்றான்மறைமுறையுற்றான் றணணம்புயமகடழுவுந்தனியொருதயலாடலின்மயன்முதிர்வுற்றே யெண்ணந்தபவுயர்தவமுங்கெடவுடைமுனிவோர்யாவருமிதுதேர்வார். | 41 |
நாமுந்தவநிலைகெட்டுக்குலைதரநம்மாதருமுயர்நிலையற்றுத் தோமும்புனைதரலிதுசெய்தவனுயர்சூதப்பொழில்வளைமாயூரத் தாமுஞ்சிறுமதியுங்கொக்கிறகுமலங்குஞ்சடைமுடியவனேயென் றோமுந்துறமொழிமறைதேர்முனிவருடன்றாரழல்சினமுற்றாரே. | 42 |
கொடுவெஞ்சினமலிதரலாலாங்கொருகுண்டஞ்செய்தனரழலிட்டார் கடுவெம்பரிதிகணிம்பத்துறுநெய்கலந்திட்டனர்மனுமுறையோதித் தொடுவெங்குழிநிறைதாமற்றுள்ளவுமிட்டார்துகன்றமுயல்காலை யடுவெங்களிறுசினத்தொன்றதிர்தரவார்த்திட்டதுவெளிவந்தன்றே. | 43 |
வருவெங்கடகரிதிசையிற்கரிகளும்வானக்கரியுமயங்குற்றுத் தெருமந்துலைதரவுவராழித்தரைசிந்திக்கவிழ்தரவடிபோரப் பொருமந்தகனுநடுங்கிப்புகல்புகுமிடமாய்தரமுகில்களினுள்ள வுருமுங்கடிதுகவுறாவெதிர்மலையுறுதூள்படவுழிதருமன்றே. | 44 |
நீலப்பெருமலைபோலப்பொலிதருமுருவிற்றிருபிறைநிகர்கோட்ட தேலப்புவிதடவந்தூசற்றிறமெனவாடுந்துளைபடுகைய தாலத்தினுமுலகெல்லாமுலைதரவழலுங்கொடுமையதடுமூழிக் காலத்தெழுகனல்குளிரக்கனல்சொரிநிரியாணத்ததுகருவேழம். | 45 |
இத்தன்மையினெழுகொடுவேழத்தினையெம்மானெதிர்செலவிட்டார்க ளத்தன்மையினுயிரெல்லாநிறைதருமண்ணற்பரமனுமதுகாணூஉ மைத்தன்மையின்மலையெனநேர்வருமதமாமுன்வேறொருவடிவுற்றுக் கைத்தன்மையின்வலிசிறிதோர்தருவகைகாட்டத்திருவுளமதுகொண்டான். | 46 |
அவ்வேலையினிஃதென்னாகுவதெனவச்சுற்றஞ்சலணங்கோவாச் செவ்வேலுடைமழவோடுஞ்சென்றுயர்தேவன்புடையொருசிறைநின்றாண் மைவேலையின்வருகொடுவாரணமுயர்வள்ளற்பரனைவிழுங்கிற்றா லெவ்வேதமுநனிகதறப்பெருவலியிமையோர்களுமுளம்வெருவுற்றார். | 47 |
கனிவாயிதழ்புடைபெயரக்கண்பிசைசேயுந்தாயையணைத்திட்ட தினிநாம்யாதுசெயத்தக்கதுவெனவெங்கோமாட்டியுமச்சுற்றாள் பனியாழித்தரைவாழ்மன்பதைபடுபாட்டைப்பகர்தரவல்லார்யார் நனியாதரவுசெயெம்மானுண்மையைநாடித்தேறுநருளரேயோ. | 48 |
மதவேழத்தினுளுற்றானதனுடல்வகிராமேற்பொதியதள்கொண்டே யிதமாமிதுவெனமெய்யிற்போர்த்திருண்மழைமூடியகதிரெனநின்றான் சுதமேதினியுலகிற்கென்றமார்கடூமாமலர்மழைநனிபெய்தார் சதமாமகனயனெடுமாலிவரிவர்தாவாவுவகைதலைக்கொண்டார். | 49 |
ஐயன்கொடுமதவேழத்துரியோடணைந்தான்வெளியெனமகிழ்வுற்றுக் கையங்குலிகொடுசாட்டிற்றிளமுளைகண்டாளன்னையுமயர்வோப்பி வையம்பொலியவுவந்தாள்பற்பலவுயிருநனிமனமகிழ்பூத்த செய்யம்புயமலர்மதியங்கண்டதுசெத்துத்தவர்முகம்வாடுற்ற. | 50 |
வேறு. கருமமேபொருளாக்கொண்டார்கருத்தின்மிக்கிலச்சைபூண்டு தருமமால்விடையான்முன்னர்ச்சார்ந்துபொற்றாளின்விழ்ந்தே யருமருந்தன்னாய்நின்னையறியாதுகெட்டேமெங்கள் பொருமலந்தவிர்த்தாட்கோடியெனப்புகன்றிரந்துநின்றார். | 51 |
மெலிதருமனையார்செய்தவிண்ணப்பஞ்செவிமடுத்துக் கலிதருமுனிவீர்நம்மைப்பொருளெனக்கருத்துட்கொண்டு பொலிதருமாயூரத்திற்புகுந்துநும்மடவாரோடும் வலிதருநமைப்பூசித்துமருவுதிர்முத்தியென்றான். | 52 |
என்றருள்செய்யக்கேட்டமுனிவரரிறைஞ்சிப்பின்னுங் குன்றவிற்குழைத்தாயிந்தக்கோதிலாத்தானத்தெம்மை வென்றமெய்க்கோலங்காட்டிவிளங்கிடவேண்டுமென்றா ரன்றதற்கிரங்கியெங்கோனங்ஙனமாகவென்றான். | 53 |
முனிவரர்மடவாரோடுமுழங்குமாயூரஞ்சார்ந்து பனிமலர்ப்பிரமவாவிபடிந்துவெண்ணீறுபூசிக் கனிதரவள்ளலாரையஞ்சனாயகியைக்கண்டு துனிதவிர்தரப்பூசித்துத்தோலாதமுத்திபெற்றார். | 54 |
முழுமறையுணர்ந்தார்கொண்டகோளுமொய்குழலார்கற்பும் வழுவுகாரணத்தானாமம்வழுவூரென்றுரைப்பாரின்னுஞ் செழுமதக்களிற்றைக்கீண்டுசெற்றலாலத்தானத்தை யுழுவலன்புடையோர்வீரட்டானமென்றுரைசெய்வாரால். | 55 |
பண்ணியதவத்தார்போற்றும்பறியல்வீரட்டானம்போற் புண்ணியவழுவூர்வீரட்டானமும்பொலிந்துமன்னு நண்ணியவங்குச்சார்ந்துநலமுறவழிபாடாற்றுந் திண்ணியதவத்தோரெய்தும்பெருமையார்தெரிக்கற்பாலார். | 56 |
பறியல்வாழ்மகசங்காரபத்திரப்பெருமான்போல முறிகுலாஞ்சோலைசூழ்ந்தமுழுப்புகழ்வழுவூர்த்தேத்து மறிவில்வெங்களிறுவென்றவலியுடைப்பிரானுமாதர் செறிதருகற்புமாய்த்ததேவனும்பொலிந்துவாழ்வார். | 57 |
மதமலையுரித்துப்போர்த்தவலியனைமாதர்கற்புச் சுதமுறப்பயிக்கம்புக்கசுந்தரவடிவினானை யிதமுறக்கண்டுபோற்றுமியல்பினரடையும்பேற்றை யுதவியினியங்குமென்னாலொருங்குரையாடப்போமோ. | 58 |
முனிவரர்வசித்ததானமொய்யழல்வளர்த்ததானங் கனிதரமற்றும்பல்லகருமங்கள்செய்ததான மினியவாயவ்வப்பேராலின்னமும்வழங்குமந்தத் தனியமர்தானமெல்லாந்தம்பிரான்றளியுமேவும். | 59 |
இனியமாயூரத்தானத்தெல்லைசூழ்யோசனைக்குட் பனியவாஞ்செம்பொன்பள்ளிநனிபள்ளிபறியன்மூதூர் முனிவர்சூழ்வழுவூரின்னமொய்புகழ்ப்பெருமையிற்றே னனிசெயுமாயூரத்தினகுபுகழ்பேசற்பாற்றோ. | 60 |
17. யானையுரித்தபடலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 814.
~~~~~~~~~~~~~~~
கும்பிபாகமிரவுரவங்கொடியதவனம்வாலுகமே வெம்புமசிபத்திரவனமேவீமோர்க்கடமேமகாசூலங் கம்பித்திடுசான்மலிதத்தசூலங்காலசூத்திரமே தம்பம்புரியுநிருச்சுவாசம்வைதரணிதத்தசிலை. | 1 |
மலபூரணமூடிகாகூடமாறாக்கயசோணிதகூப மிலகாதெழுமூத்திரபானமிருகசோணிதகூபமெழ லுலவாவன்னிசுவாலைசிலாவருடமுறுவாதாதிக்க மலகீர்சுரதாரணம்வன்னிவருடமங்காரசயனமே. | 2 |
கீலவருடம்பதனஞ்சுக்கிலபூரணமைப்பூரணமே ஞாலம்வெருவுந்தயிலவியந்தாமேகுதிகானரம்பெடுத்தல் சூலவாரோகணம்பாசபந்தந்தூமபானமே சாலநெடியதருவேற்றித்தள்ளறிரிகையிடைச்சுழற்றல். | 3 |
நிலையாநீரிற்றள்ளிடுதலூசிநுனையினிறுத்திடுத லுலையாச்சிதலையீயுறவியுருத்தேளரவுபுழுவருத்த றொலையாதுறுப்பினூசிவிடறொக்கதரக்காதிகள்வருத்தல் குலையாகநடுங்கக்காய்தயிலங்குடிக்கச்செய்தன்முதலாக. | 4 |
எண்ணிலாதகொடுநரகமின்னும்பலவாலியம்புநரார் மண்ணிலமைந்துபாதகஞ்செய்மறவரேயிந்நரகடைவார் கண்ணிலோரெண்பத்தாயிரம்யோசனைகள்கழியளவும் புண்ணில்வாளிட்டெனவியவைத்தண்டம்பொருந்திப்போயதற்பின். | 5 |
மலமூத்திரமாநரகத்தில்வருடம்பதினாயிரமுறுப்பி லுலவாவூசிசெருகப்பட்டுடற்றும்புகையேயுண்டழுந்தி நலவாசனையில்சண்டாளகோடிசன்மநயந்துதுயர் கலவாவுழிதந்திடுமந்தோகள்ளுண்டுழன்றகண்ணிலியே. | 6 |
கொடியவிடமூடிகநரகங்கொள்ளப்பதினாயிரவருட நெடியதுயரத்தொடுமழுந்திநீத்தமுடுத்தபுடவியிடைக் கடியசிலைவேட்டுவனாகப்பிறந்துபிறந்துகழிதருவான் படியவாவும்பொற்கரவுபண்ணுந்தீயபாதகனே. | 7 |
குறியிலூசிபலசெருகக்கொடியகாலசூத்திரத்து முறியநெடுநாளழுந்திப்பின்மூர்க்கவரக்கன்புலையனாய் மறியுமரிட்டங்கோட்டானாய்க்கரமாய்நாயாய்வந்துழல்வா னறிவிலவனாய்க்குருமனையையவாவிப்புணர்ந்தகொடியோனே. | 8 |
பெற்றதாயைமூத்தாளைப்பிறங்கவுடன்வந்தவர்க்குரிமை யுற்றதாரமடவாரையுஞற்றலரியவிட்டிசெயக் கற்றமறையோர்பன்னியரைக்கற்புவழாதமங்கையரைச் சொற்றவுபாத்தியாயரிருதோடோய்நலத்துமங்கையரை. | 9 |
தந்தைகூடப்பிறந்தாரைத்தகுமாதுலர்தமனைவியரை நிந்தையில்லாமாமியரைநிலவுஞ்சிறியதாயாரை யந்தையகன்றகுருவீன்றவந்நலாரைப்புணர்கொடியோர் முந்தையாசானிற்புணர்ந்தமூர்க்கர்க்குரைத்தவெலாமுறுவார். | 10 |
பந்திபேதஞ்செய்தல்குடும்பத்தில்வேறுவிதஞ்செய்து முந்தியிருந்துபுசித்தல்சந்நியாசிகளைமொய்யிழிபுரைத்த லந்திநிறத்தானடியாரையந்தணரைநிந்தித்துரைத்த னந்திநலமிக்குடையாரைப்பொல்லாரென்றேநவின்றிடுதல். | 11 |
மறையைவிற்றலிவைசெய்தோர்மறையோர்க்கொலைசெய்தவராவர் முறையிலிவர்கள்கடுங்கும்பிபாகநரகமுயங்கியே நிறையுந்துயரமனுபவித்துப்பின்புநிகழூர்ப்பன்றியாய்க் குறைவினூறுயுகம்பிறந்துபவ்வீக்குழிவீழ்ந்துழிதருவார். | 12 |
தத்தசூலம்யுகமொன்றுதழுவுங்கணிகையனம்புசித்தோன் சித்தமருண்டுமீனாயுஞ்செனித்துவலையன்கொலப்படுவா னொத்தவினமல்லார்தமுணவுண்டோன்மதுபானியைநிகர்வான் முத்தநிகர்பற்பரமாதர்முயக்கங்குருவின்முயக்கமே. | 13 |
பூத்தகாலைமனையாளைப்புணர்ந்தானிரத்தகூபத்தில் யாத்தநூறுயுகமழுந்துமிரியும்புலைச்சிமுலைதோய்ந்தான் மூத்தவிருத்தயோனியிடைமுயங்கும்படிசுக்கிலங்கவிழ்த்தான் சீத்தகயினிமுலைதிளைத்தான்வலிந்துபரமாதரைச்சேர்ந்தான். | 14 |
இன்னகொடியபாதகத்தோர்நாயூனுகநூறெடுத்தருந்திப் பின்னமருவிக்காலொடுகைபெயர்க்கக்கூடாவிதங்கிடப்பார் சொன்னவிரதத்துபவாசத்தோகையரைச்சேர்ந்தவனுப்புத் துன்னநிறைகூபத்திலுகந்துளைந்துசெந்நாயாய்ப்பிறப்பான். | 15 |
மறையாளருக்கொன்றீவேனென்றுரைத்துப்பின்னர்மறுத்துரைத்தோன் குறையாவசிபத்திரவனத்தேகிடந்துகுரைநாயாய்ப்பிறப்பா னிறையாம்பரமனடியார்வேதியராக்களுக்கூறிழைத்திட்டோன் மிறையார்சூலவளற்றழுந்திவேடனாய்ப்பின்புழிதருவான். | 16 |
நானம்பானந்தவமோமஞ்செபமற்றிவைகணலியூறு மானவிழைத்தோனுற்பதனமருவியளவாத்துன்புற்றுப் போனபின்னர்மூகையாய்வெதிராய்ப்புகலில்கொத்தையா யீனமருவுமினும்பலவாய்த்தோன்றியந்தோவிழிதருவான். | 17 |
நீதீநூல்சோதிடநூலேநிகழுங்கழுவாயுரைக்குநூல் பேதியாததரணிநூலிவற்றைப்பேதித்திடுபாவி யோதியுணராப்பிரமகாதகனென்றுரைப்பாருறுநரக மோதியலைப்பத்துன்புற்றுப்பின்புகழுதையாய்முளைப்பான். | 18 |
பொருள்பெற்றனமென்றிறுமாக்கும்புன்மையாளன்பொய்யுரைப்போ னருளிற்பணித்தமந்தணத்தையாருமறியவெளிவிட்டோன் மருளிற்றீர்ந்ததருமத்தைமதித்திடாதுநிந்தித்தோ னிருளிற்பொலியும்பாடாண்டர்வேடமினிதென்றுறப்பூண்டோன். | 19 |
இணையரிழிநாயூனருந்தியெரிவெந்நிரையத்துகமழுந்திப் புனையலாகாவிழிபறவையாகிப்பின்னர்ப்போதருவார் நினையமுடியாப்பயம்பொருத்துநீசர்கோளர்நிறைதருதீ வினையர்கொடுமூத்திரபானமெய்திமிருகமாய்ப்பிறப்பார். | 20 |
பதிதரன்னஞ்சூதகங்கோட்பட்டோரன்னம்புசித்திடுவார் முதிருஞ்சுடுபாறையிற்கிடந்துமுற்றிமூகையாய்ப்பிறப்பார் விதியிற்புசிக்குங்காலத்துவிழைந்துபூத்தவளைநாயைப் பொதியப்பார்த்தோர்பேசிடுவோர்பொல்லாநரகத்தழுந்திடுவார். | 21 |
பிரமசரியமனுட்டிப்போர்பிறங்கீருள்ளிமல்லிமுதற் பரவுபிறவுங்கவர்ந்திடுதல்பழுதாம்புசிக்குங்காலத்தில் விரவப்பேசல்கோபித்தனகைத்தலிவையும்விரோதமாங் கரவினுலோகஞ்சந்தாதிகனியாய்முதற்றெவ்வலும்பழுதே. | 22 |
தந்தைதாய்க்குத்திதிகொடான்றக்ககாலங்கிரியைசெயான் றந்தைதாய்வார்த்தையைக்கடப்பான்றன்னில்பிழைதீரவுந்துறந்தோன் றந்தைதாயர்பசித்திருக்கத்தானேயுண்பானன்றிகொன்றான் றந்தைதாயர்முதுமையிடைத்தாங்கானினையர்பாதகரே. | 23 |
புத்தர்மனையுட்போனவனுமவர்சாத்திரமோர்புந்தியனு மொத்தமறைநிந்தித்தவனுமுவக்குங்கொடையைத்தடுப்பானுஞ் சுத்தமார்க்கம்விடுத்தானுமதிதிபூசைதொலைத்தானுஞ் சத்தமகமைந்தாற்றானுந்தாவாக்கொடும்பாதகராவார். | 24 |
தேவாலயத்துமகச்சாலையிடத்துஞ்செந்தீயெதிரிடத்து மோவாப்பசுக்கொட்டிலினிடத்துமுயர்பிப்பிலத்தினடியிடத்துந் தாவாதுழுதபூமியினும்வன்மீகத்துநந்தனத்து மாவார்தீர்த்தக்கரையினுமீரியக்கம்விடுத்தோர்களுமனையர். | 25 |
பருவந்திங்கட்பிறப்புவிதிபாதம்பகருமட்டமியே மருவும்வைதிருதிசிறப்புவாய்ந்துவிளங்குஞ்சதுர்த்தசியே பொருவில்விரதத்தினமிவற்றிற்பொருந்தமகளிர்முலைதோய்வார் பெருகவியைகண்டொறாவரசர்பேசுமிவருமனையரே. | 26 |
தம்மையெடுத்துப்புகழ்ந்திடுவோர்தம்போனினையாதன்னியரை வெம்மையுறநிந்தித்திடுவோர்வேதாதிகள்சொல்லியகருமஞ் செம்மையுறச்செய்யாதொழிப்போரெடுத்தவிரதஞ்செயாதுவிட்டோர் மும்மைப்புவனங்களுமிழிக்கமுடிந்தவிவருமவர்கண்டீர். | 27 |
உரைத்தவிவர்மற்றிரவுரவமாதியொழியாநரகங்கள் புரைத்தமனத்தராய்த்திளைத்துப்புவியின்மீட்டுப்பிறந்திடுங்கால் வரைத்தகுருடுசெவிடுமுதன்மற்றுமுறுப்புக்குறையாகிக் குரைத்தபுலைவாய்ஞாளியினுமிழிந்துதுயரக்கோட்படுவார். | 28 |
கொடியபாவம்புரிநரெலாங்கொடியநரகெலாந்துளைந்து கடியவிலங்குபறவைகளாய்ப்பிறந்துபிறந்துகழிந்ததற்பின் முடியவுறுப்புக்குறையோராய்ப்பிறந்துபிறந்துமுடிந்திடுவார் நெடியவுறுப்புக்குறைநீத்துநிலத்துமருவப்பிறந்தாலும். | 29 |
பிறந்தபொழுதேகழிவாரும்பிறந்துசிலநாளிருந்துவனப் புறந்தபொழுதேகழிவாருமொத்தவாயுளடைந்தாலு நிறந்தவறுமையடைவாருமாகிநிலத்துத்துயருறுவார் சிறந்தபிறப்புற்றென்பெற்றாரறிவிலாவிச்சீத்தையரே. | 30 |
வேறு. வெருகுவதைத்தவன்பொற்கண்ணினன்கீரைகவர்ந்தவனீல்விழியன்மாடு கருகுறக்கொன்றவன்றலைநோய்காதுவலிவயிற்றுவலிகலந்துவாழ்வன் வருகுலமாமறையோர்க்குக்கொடுப்பேனென்றுரைத்தீயான்வயிற்றுநோயன் பெருகுபிதாவனைப்புணர்ச்சிசகியாதான்வெதிராகிப்பெருந்துன்பாழ்வான். | 31 |
கலையிழந்தமடவாரைப்பார்த்தவன்கண்ணோயாளன்மூலநோய னுலைவில்பரமாதரிணைவிழைச்சுற்றோன்சுபகருமத்துறக்கொபித்தோ னிலைகுலையுந்தாபசுரத்தினன்புரிந்தவுபகாரநினைதல்செய்யா னலைசெய்கபரோகமொடுசுவாசகாசமும்பிறவுமடைந்துசோர்வான். | 32 |
புண்ணியநற்றலத்தனையகாலத்துத்தானங்கொள்புன்மையோனு மண்ணியவபாத்திரத்தீந்தவனுமிரத்தமும்புழுவுமளையுமெய்யன் றண்ணியமாநதிக்கரையின்வழியினீழலினிழிந்தசலம்விட்டோன்பா ரெண்ணியசோகையனொருவனுணவுதடுத்தவனுமதேயெய்திச்சோர்வான். | 33 |
மறையவர்தம்பொன்கவர்ந்தோன்பாண்டுநோயினனாற்றுமகந்தொடங்கி நிறையமுடியானந்நோயொடுதலைநோயும்பொருந்திநிலைமைதீர்வன் முறையில்புலைச்சியைப்புணர்ந்தகயவனுமந்நோயடைவன்முடிக்கும்யாக நிறைதராவிதமூறுபுரிகொடியோன்பெரும்பீசநிலவச்சோர்வான். | 34 |
உத்தமசாதியின்மடவார்ப்புணர்ந்தவன்றன்றலைக்கொடும்புண்ணுடையன்வேத வித்தகர்தம்மடவாரைப்புணர்ந்தவனாசியினழிபுண்மேவிச்சோர்வான் சுத்தமிகுநற்கருமம்புரிகாற்கோழிகள்கரங்கடோன்றக்கண்டோன் சித்தமயற்புகவிடுத்தோனிருவருமேற்சொல்லியதுசிவணுவாரே. | 35 |
தன்னுடைச்சாதியிற்பரமாதரைப்புணர்ந்தோன்மார்பிடைப்புண்டங்கச்சோர்வன் மன்னுடைத்தன்றந்தையுடன்பிறந்தாட்சேர்ந்தவன்வலப்பான்மறாப்புணாளன் மின்னுடைப்பல்பூக்கனிகாயாதிகளையபகரித்தோன்விரற்புண்ணாளன் றென்னுடையபிறர்புண்ணிலுபத்திரஞ்செய்தோனரப்புச்சிலந்தியாளன். | 36 |
குளங்கவர்ந்தோன்கண்டமாலையன்புலைவீதியிற்புசித்தகொடியன்பித்த முளங்கவலப்பெறுந்தலைவற்கியற்றியபாதகன்வாதமுறுநோயாளன் விளங்குகுருப்பகைத்தவனுமதுமேவும்விளங்குபக்கபாதமேயோன் களங்குலவுமந்நோயனீயாதுபுசித்தவன்விக்கலைச்சார்வானே. | 37 |
நித்தியகன்மம்புரியான்கபநோயன்மறையோர்கணிலவிமேவுஞ் சுத்தியநன்மனையமைக்கவொட்டாதான்காக்கைவலிதொலையாதெய்துங் கத்தியநாய்பூஞைதொடுமனம்புசித்தோன்வாய்நாற்றங்கலந்துசோரு மெத்தியபொய்ச்சான்றுரைத்தோனதனொடுபித்தமுங்கலப்பவெருவிச்சோர்வான். | 38 |
குறிமதுவுண்டவன்றேய்ந்தபல்லினன்குக்குடம்வதைத்தோன்கோணன்மூக்க னெறிதபமற்றோர்புணர்ச்சிநோக்கினவனேத்திரநோய்நிரம்பிச்சோர்வ னறிதரவாலயங்குளத்திலிருக்குமரம்வெட்டினவனந்தனாவ னெறிதருபிரேதசிராத்தம்புசித்தோன்கிருமிகள்வாயியையத்தேம்பும். | 39 |
கன்னிகையைப்புணர்ந்தவன்பற்பலநோயனதிசாரன்காடுசுட்டோன் மின்னியபால்கவர்ந்தவனீரழிவுடையான்கருச்சிதைத்தவெய்யபாவி துன்னியவெந்தொழுநோயன்குதிரைவதைத்தவன்கோணல்சூழ்ந்தகாதன் பன்னியபல்லோர்நடக்கும்வழியின்முள்ளிட்டோனொழியாப்பாதநோயன். | 40 |
வழியிடைத்தன்மனையாளைப்புணர்ந்தவன்றன்குறிப்புற்றுமருவிச்சோர்வன் பொழிசுவைப்பாற்பசுக்கொன்றோன்குட்டநோயினனயலார்புதல்வற்கொன்றோ னிழிபுதகமகவிலாதவனாவனுடுத்தகலையெணாதுதெவ்வும் பழியுடையோனிளம்பருவத்தேதலையெலாநரைக்கப்பட்டுச்சோர்வன். | 41 |
அரவுவதைத்தவன்விடபாண்டடைகுவன்றன்மகட்புணர்ந்தோனழியாக்குட்டி பரவுமறையாகமபுத்தகந்தாண்டினோன்முடநோய்ப்பட்டுச்சோர்வன் விரவுசுவைவிளக்கம்வௌவினோன்கோட்டான்மணந்தடுத்தமேன்மையில்லா னுரவுதடுபங்கமுறும்புத்தகங்கள்வௌவினவனூமையாவான். | 42 |
இத்தனைமாபாதகமுமிரித்திடுதற்காங்கழுவாயியம்புங்காலை முத்தனையானனனாயபரமசிவன்பூசையன்றிமொழிவதில்லை யெத்தனைநாண்முயன்றாலுமதுபோலப்பயன்படுவதிலையாலந்தச் சுத்தனையாதரித்தன்பிற்போற்றுதற்கும்விசேடதலந்துதைதல்வேண்டும். | 43 |
காசிகுருக்கேத்திரஞ்சீபருப்பதமனேகதங்காவதமெஞ்ஞான்றும் வாசிபடுகேதாரஞ்சோமநாதம்புகழேவளர்கோகன்னம் பேசிமுடியாவொளியிந்திரநீலப்பருப்பதம்விண்பிறங்குவெய்யோன் கூசியகன்மணிமாடவிரூபாக்கங்கேதீசங்கோணவோங்கல். | 44 |
ஓங்குதிருக்காளத்திதிருக்காஞ்சிகழுக்குன்றமொற்றியூர்நீர் தேங்குதடமலிபாசூர்திருவாலங்காடுபுகழ்திருவேற்காடு நீங்குதலில்வெண்பாக்கந்திருமுல்லைவாயிலெழினிலவுகச்சூர் பாங்குபுனையிடைச்சுரமச்சிறுபாக்கமரசிலிவண்பனங்காட்டூரே. | 45 |
கோவலூர்வீரட்டந்திருவண்ணாமலையதிகைக்குலவீரட்ட நாவலூர்திருத்துறையூரிடையாறுமுண்டீசநலக்கண்டீசங் காவலூர்மதிற்றிருப்பாதிரிப்புலியூர்வெண்ணெய்நல்லூர்கவினார்சோலை மேவலூர்விருத்தகிரிதூங்கானைமாடமொளிமிளிர்நெல்வெண்ணெய். | 46 |
அவிநாசிதிருப்பாண்டிக்கொடுமுடியானிலைக்கோயிலமையநாளும் புவிசேருங்கருவூர்வண்டிருவஞ்சைச்களம்பரமன்பொலியும்பேரூர் கவிகூரம்பொழிலுடுத்ததிருமுருகன்பூண்டிமணங்கமழ்நணாவு தவியாகவடைந்தார்க்குவானவர்கள்சூழ்தருவெஞ்சமாக்கூடல்லே. | 47 |
தில்லைமயேந்திரப்பள்ளிசாய்க்காடுவெண்காடுதிருச்சங்காடு முல்லையுயர்கழிப்பாலைகுருகாவூர்சீகாழிமுதிர்கோலக்கா வெல்லையிலாவளப்புன்கூரிலகோமாம்புலியூர்புள்ளிருக்குவேளூர் தொல்லைவினைமுழுதொழிக்குங்குறுக்கைவிளத்தொட்டிநலந்தோயுமாற்றூர். | 48 |
மன்னியவாளொளிபுற்றூரானைக்காபராய்த்துறைவாண்மருவுமீங்கோய் துன்னியவாட்போக்கிசிராமலைபஞ்சநதஞ்சோற்றுத்துறைகோமுத்தி மின்னியநள்ளாறுமறைக்காடுவாஞ்சியமாரூர்வீழிமேலோ ருன்னியவாலங்குடிகோட்டூர்நெல்லிக்காப்பனந்தாளுறுமாப்பாடி. | 49 |
இடைமருதுகுடந்தைதிருவாலவாய்சேதுவிராமீசங்கானை யடைகொடுங்குன்றாப்பனூர்திருப்புத்தூர்திருச்சுழியலமராடானை கடையில்பெருந்துறைநெல்லைகுற்றாலங்காயாரோகணங்கோட்டாறு மிடைதருபல்வளம்பொலியுமித்தலங்களெவற்றுள்ளும்விசேடமாமால். | 50 |
இன்னதலங்களுக்கதிகங்கவுரிமாயூரமறையெடுத்துக்கூறு மன்னதலத்தெல்லையளவோசனையொன்றாஞ்சுற்றுமதற்குமேலாச் சொன்னதலமெத்தகையபுவனத்துமில்லையிதுதுணிபேயின்னு மென்னதலங்களுமதற்குத்தாழ்ந்ததலமல்லாமலிணையாகாவே. | 51 |
இத்தகையகவுரிமாயூரம்விளங்குதறெரியாரிலங்குதீப மொத்தகையிலிருப்பவுமோர்பாழ்ங்குழியில்வீழ்ந்துழலுமுணர்விலார்போற் பித்தகையும்பிறப்புற்றுமெஞ்ஞான்றுந்தீராதபிணிக்கோட்பட்டு மத்தகையவரினுழன்றுமிறந்துநரகத்தழுந்திவருந்துவாரால். | 52 |
மன்னுபுகழ்பெருங்கவுரிமாயூரத்தலத்தெல்லைவணங்கிச்செய்யு முன்னுபிரதக்கணமொன்றாற்சுவர்க்கமுறுமிரண்டாலும்பர்வாழ்த்த மன்னுமகபதியுலகமுறுமூன்றான்மலர்மேலான்வைப்புமேவு மின்னுமொருநான்கனாற்சுதரிசனப்படைக்கடவுளிருக்கைமேவும். | 53 |
நல்லதவம்பொலியைந்தாலெவ்விடத்துஞ்சஞ்சரிக்குநலமுண்டாகும் வல்லபுகழிருமூன்றால்வடதிசைக்கோமகனாகும்வாழ்க்கைமேவும் வெல்லவுயர்திறலேழால்வெற்றிவேற்படையாளிவியன்வைப்பெற்று மல்லறவிரிருநான்காலங்குசபாசத்தனுலகமையமேவும். | 54 |
ஒன்பதனாற்பராசத்தியுலகமுறுங்கயிலாயமுறுமோர்பத்தா லின்பமிகுபன்னொன்றாற்சிவலோகசாலோகமெய்தாநிற்கு மன்புமிகுபன்னிரண்டாற்சாமீபம்பதின்மூன்றாலரன்சாரூபம் வன்புதவிர்பதினான்காலடிக்கலப்பாம்பதினைந்தான்வரன்மற்றின்றே. | 55 |
பிரதமையின்மாயூரத்தலஞ்சூழிற்பாவமெலாம்பெயர்ந்துநீங்கும் வரமுதவந்துதியையின்வான்சுவர்க்கமுறுந்திரிதியையில்வானவேந்தன் பரவுபதமுறுஞ்சதுர்த்தியிற்பிரமபதமாம்பஞ்சமியினெல்லா வுரவுலகங்களுமாளுமரசாகுஞ்சட்டியினாமொழியாவின்பம். | 56 |
சத்தமியினிட்டமெலாமுறுமட்டமியிற்கணத்தின்றலைமையெய்து மொத்தநவமியிற்பிரமபதமெய்துந்தசமியின்மாலுறையுண்மேவும் வித்தகவேகாதசியிற்கயிலையுறுந்துவாதசிமுன்விளம்புநான்கிற் சித்தமமைசிவலோகசாலோகமுதனான்குஞ்செறியுமன்றே. | 57 |
வேறுமொருதலத்துஞற்றுமேருநிகரறங்கொடுக்குமேன்மைதீமை யீறுபடுமாயூரத்தணுவளவேசெய்யினஃதெளிதினீயும் வேறுமொருதலத்திலக்கமறையவருக்கனமூட்டவிளையிலாப மீறுபடாமாயூரத்தொருபுலையற்கொருபிடிசோறிட்டாலுண்டாம். | 58 |
மற்றொருமாதலத்திடையாயிரவருடம்வசித்தலினால்வருமிலாபம் பற்றொருவாமாயூரத்தினொருகணம்வசிக்கிற்பண்பினாகு மற்றொருமாதலத்திடைக்கால்வருந்தநடந்தடைபேறுவானநாடர் பற்றொருவாமாயூரத்திருந்தவிடத்திருந்ததனாற்பண்பினாமே. | 59 |
ஏனையமாதலங்களிற்சென்றரியவுபவாசஞ்செய்தெய்தும்பேறு மாநயமார்தருகவரிமாயூரப்பெருந்தலத்தின்மகிழ்ச்சிபொங்க பானயமார்நெய்முதலாப்பல்சுவையமடையுடம்புபருக்கவுண்டு தூநயமார்மடவார்தங்குழாத்தொடிருந்தாலுமெய்தறுணிபாமன்றே. | 60 |
வேறு. கவுரிமாயூரத்தெல்லைகாதலிற்சூழுவோரை யுவரிசூழ்புவியோர்சூழ்வாரென்றுரைத்திடுதலென்னே தவலிலாமலரின்மேயசதுமுகனாதிவானோ ரவரையேபரமனாகவவாய்த்தினஞ்சூழ்வாரென்னில். | 61 |
கண்ணுதலினிதுமேயகவுரிமாயூரத்தெல்லை நண்ணுதல்செய்தபுல்லுநகுகொடிதருவுமற்று மெண்ணுதலியற்றவீற்றிற்சிவலோகமெய்துமென்னி லொண்ணுதலதனையன்றிமற்றொன்றையுன்னலாமோ. | 62 |
உறுவழிச்செலவினேனுமுற்றவாணிகத்தினேனுந் தெறுவிழிப்பரத்தைமாரைச்சேருமோர்விழைவினேனு மறுவின்மற்றொருவனட்புமதித்தேனுமெய்வாற்றேனு குறுகுதலுறாமாயூரஞ்சார்வதுகுணமாம்யார்க்கும். | 63 |
தவலருங்காசியாதித்தலங்களில்வசிக்குநல்லோர் கவலருந்தாங்களீன்றகான்முளையாதியோர்க்கு நுவலருமாயூரப்பேர்நுவன்றுபல்காலழைப்பா ரெவலருமிப்பேரொன்றேயேற்றமந்திரமாமென்பார். | 64 |
பலபலவுரைப்பதென்னைபகர்பெருமாயூரத்தி னலகறுகுளங்களெல்லாமற்புதத்தீர்த்தமாகும் மலமகல்சிலைகளெல்லாஞ்சிவலிங்கவடிவமாகும் புலமுறவசித்தோரெல்லாங்கயிலையிற்பொருந்துவாரே. | 65 |
புண்ணியமாயூரத்திற்பொலிதரவருவோரெல்லா நண்ணியவிடங்கொடுத்துநயந்தவர்க்குணவுமூட்டி யண்ணியபிணிமுன்னாயவறமருந்தாதிநல்குந் திண்ணியரடையும்பேற்றையானேயோதெரிந்துசொல்வேன். | 66 |
மறைமுதலடியராயமறையவராதியோர்க்குக் குறைவிலாவிருக்கைநல்கியன்னமுங்கொடுப்பாரென்னின் மிறையிலாவவர்தம்பேற்றைவெண்ணிலாவணிந்தவேணி யிறைவனேயுரைப்பானன்றியெவரறிந்துரைக்கவல்லார். | 67 |
வளமலிசிறப்புவாய்ந்தமாயூரதலத்தைமேவி யுளநெகிழ்தரவசித்தலுறவலஞ்சூழ்தலின்னும் பளகறுதானமாதிபண்ணுதலிவைவல்லாற்குத் தளர்வுபட்டொடியுமெப்பாதகங்களுஞ்சலித்துமாதோ. | 68 |
பாதகம்புரிந்தோர்யாரும்படுபெருந்துன்பந்தீர்ப்பான் மேதகவுறுமாயூரமேவிமுன்சொன்னவாறே மாதகவியற்றிவாழ்வார்மற்றிதுதனக்குமேலாப் போதகருங்கழுவாயில்லைபோற்றுமினுண்மையீதே. | 69 |
பழிபடுநரகம்பற்றார்கூற்றின்வெஞ்சினமும்பாரா ரிழிபடுபிறவியெய்தாருறுப்பிலாதிழிதலெய்தா ரொழிவரும்வறுமையெய்தாருவக்குமாயூரஞ்சார்ந்து வழிபடறானமாதிவயக்கதலாற்றுவாரோ. | 70 |
பெண்மையோர்பாதியாகிப்பிறங்குமாதேவனாணை யுண்மையேயுரைத்தேனிம்மாயூரத்திற்கொப்பொன்றில்லை வண்மையினதனைச்சார்ந்துவலஞ்செயலாதிபோலோர் திண்மைசெய்கழுவாயில்லைதேர்தரினுணர்வுமிக்கீர். | 71 |
18. தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 885.
~~~~~~~~~~~~~~~~
போற்றவரும்கங்கையெனும்புண்ணியமாநதிக்கரையிற் சாற்றவருமந்தணர்கடவாச்சேரியிடைவாழ்வான் றேற்றவருமறையொழுக்கந்திறம்பாததிருமனத்தா னேற்றவருநலத்தகவுண்டின்னியனென்பானொருவன். | 1 |
அந்தமுனியோமவிறகத்தனையுமொடிப்பதற்குக் கந்தமிகுமலர்துவன்றிக்காய்கனிகள்பலமல்கி முந்தவெழுகொடுமிருகமொய்சிறைப்புள்ளிவைமொய்த்துச் சந்தமுறமருவுமொருதவானத்தைத்தலைப்பட்டான். | 2 |
அரசுமுதற்பல்விறகுமாங்காங்குக்கவர்தருகாற் புரசுமுதற்பலதருவும்பொருந்திமிடையவ்வனத்துள் விரசுமொருபாழ்ங்கிணறுமேவியதாயிடைநின்றும் வரசுகுணனவன்கேட்பமறாதுகூவொலியெழுந்த. | 3 |
செவிசுடுகூகூவொலியின்றிறமின்னதெனத்தெரியா னவியமரர்க்குதவுமுனியஃதுணர்வானருகெய்தச் சவிமறையோயிதுகேட்டிதவாப்பெருநின்குலப்பிதிர்யாங் குவிபெரும்பாதகமியற்றிக்கொடுநரகுகொளப்பட்டேம். | 4 |
ஏலாததானங்களேற்றனமிம்மித்துணையு மாலாதபெரியோர்க்குவாஞ்சித்துக்கொடுத்தறியேங் காலாதமறையொழுக்கங்கைவிட்டேஞ்சிவநாமங் கோலாதநாவுடையேங்கொடுநரகுகொளப்பட்டேம். | 5 |
எங்கள்குலத்தொருவனீயருமருந்தினிருக்கின்றாய் கங்களொருநான்குடையான்முதற்றேவர்கைகுவிக்குந் திங்கண்முடிப்பெருமான்வாழ்திருத்தலமொன்றனையணுகி யங்கள்பெரும்புண்ணியத்தாலடியறுத்துக்கதியுய்ப்பாய். | 6 |
திரைபொருகங்கையின்முழுகுதிகழ்கயையிற்சிராத்தஞ்செய் தரைபுகழப்படுமன்னதானம்பூதானமுல குரைகிருகதானங்கோதானமுயர்பொற்றானம் வரைவறிச்செயாங்களெல்லாமாண்கதியிற்புகல்வேண்டில். | 7 |
குணமுருவங்குலம்வாய்ந்தகுழகனொருவனுக்கீன்ற மணமலியுங்குழன்மகளைவளவியதானங்கொடுத்தா லணவியவன்பிரமபதமடைவன்மகளில்லாதான் றணவரியபொருள்கொடுப்பினப்பதமேசார்தருவான். | 8 |
அகவையிருநான்குடையாள்கன்னிகையஃதொன்பதுளா டகவமையுமுரோகணியோர்பத்துடையாடான்கவுரி நகவதன்மேலாண்மலினையவளையுடைநயவாத மகளையளித்தவனேற்றோனொடுநரகின்வசித்திடுவான். | 9 |
ஆதலாற்றக்கபடியறிந்துதானங்கொடுத்தி யீதலாலைவகையவெச்சமுநன்காற்றிடுதி காதலாற்சிவநிசியிற்கருதுவிரதமும்புரிதி யோதலாற்பொலிபெருமானாமங்களுரைத்திடுதி. | 10 |
இன்னுமறையியம்புவனவெல்லாநீயாற்றுவையேற் றுன்னுநரகத்தழுந்தறொலைந்தியாங்கதியுறுவோ மன்னுமிதுசெய்யாயேன்மற்றெமக்கோர்கதியில்லை பொன்னுநிகராவருமைப்புதல்வவெனப்பிதிரர்சொற்றார். | 11 |
சொற்றமொழியனைத்துமுளத்துயர்மூளச்செவியேற்றுக் கொற்றமுறுபுகழ்வாய்ந்தகுண்டினகோத்திரத்துதித்தா னற்றமுறுமிவர்துன்பமகற்றுவேனெனத்துணிந்து பொற்றமனையகம்புகுந்துபுந்தியுறவிதுசூழ்வான். | 12 |
எத்தலநம்மெண்ணமெலாங்கைகூடவெளிதருளு மெத்தலநம்மெண்ணத்துமேலாகலினிதருளு மெத்தலமெண்ணியதுவிரைந்தெய்திடப்பேரருள்சுரக்கு மெத்தலநாமெய்துதலென்றெண்ணிமனமுழிதருவான். | 13 |
காசிமுதலகலிடத்துக்கணக்கில்லாத்தலமுள்ள வாசியுளதிதுவென்றுதுணிந்திலேமற்றிதனைப் பேசிவரையறுத்திதுவென்றுரைப்பார்யார்பெருந்துயரம் வீசியவரின்பமுறவிளைத்திடலென்றெனக்கவல்வான். | 14 |
அப்போதுசிவபெருமானருள்போலவழலினுந்தீ வெப்போதுநரகுழப்பார்முன்புரிநல்வினைபோல முப்போதுஞ்சிவனடியேமுன்னுபுகாலங்கழிக்குந் தப்போதுதராவீணைமுனியாங்குச்சார்ந்தனனால். | 15 |
அந்தமுனிவனைவணங்கியான்றகவுண்டின்னியனாஞ் சந்தமுனிபிதிரர்நாகுழப்பதுவுஞ்சாற்றியது முந்தவவர்துயரனைத்துமுருக்குவதற்குன்னியதுஞ் சிந்தலிலாவகையெடுத்துச்செப்பினானவனுரைப்பான். | 16 |
வேறொன்றுகருதாதுமிளிர்கவுரிமாயூரப் பேறொன்றுதலத்தடைதிபிரானெதிரோர்தீர்த்தமுள தாறொன்றுசடையானுமதன்பெருமைசொலமாட்டா னீறொன்றுமதின்மூழ்கினெப்பெரியபாதகமும். | 17 |
அன்னதிருப்புனலாடியத்தலத்தோர்நாள்வசித்தி முன்னவனைத்தரிசித்திமுப்பொழுதுமிதுசெய்யி னென்னபெரும்பாதகமுமிரிந்தவர்மேல்வீடுறுவார் சொன்னபடிசெய்யென்றான்றுண்ந்தனன்மற்றம்முனியும். | 18 |
மற்றவனைவிடைகொண்டுமாயூரத்தலம்புகுந்து சொற்றபடிவள்ளலார்திருமுன்னர்ப்புனறோய்ந்து பற்றமையவொருபொழுதுபட்டினியுற்றாங்கமர்ந்தான் முற்றவுணரனையாரைமுப்பொழுதுங்கைதொழுது. | 19 |
இந்தவிதமிவனொருநாளிருக்கநெடுநரகுழக்கும் பந்தமிகுபிதிரரெலாமத்துன்பம்படநூறிச் சந்தமிகுசிவலோகத்தடைகின்றார்தாமுவக்க வந்தமகன்றனைக்கண்டார்மாயூரத்திதுசொல்வார். | 20 |
இத்தலத்துநீயியற்றுமிருந்தவத்தாலிடர்நீங்கிக் கைத்தலத்தாமலகமெனக்கதிகண்டோம்புண்ணியங்க ளெத்தலத்துமிதுபோலவியைப்பதுவேறில்லையினி முத்தலத்தும்புகழ்பரம்பவாழிநீயெனமொழிந்து. | 21 |
கண்காணவர்சென்றுசிவலோகங்கைக்கொண்டார் பண்காணவிசைமுனிவன்பகர்ந்தமொழிநனிவியந்து மண்காணத்தவம்புரிந்தமாமுனிவனத்தலத்தே தண்காணப்பெருமகிழ்வுதலைக்கொண்டுவீற்றிருந்தான். | 22 |
முன்பிதிரருரைத்தபடிமொழிபலதானமுங்கொடுத்தா னன்புசெறிசிவநிசிமுன்னாயவிரதமுமுடித்தான் றுன்புதன்பேருரைப்பார்க்குமில்லையெனவுலகுசொல வன்புதவத்துறக்கொண்டமுனிபன்னாளவண்வசித்தான். | 23 |
ஒருதினஞ்செய்திடுதவத்தாலுறுபிதிரரளறொருவிக் கருதியதின்மேலாயகதியுற்றாரெனிற்கோடு பொருதிரைநீருலகிடையத்தலம்போலுமொன்றுளதோ சுருதியுணர்முனிவனுந்தன்றொன்னகர்ப்போய்வாழ்ந்திருந்தான். | 24 |
19. கவுண்டின்னியப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 910.
-----------
கரைபொருதிரைவிருத்தகங்கையந்தீரத்துள்ளான் விரைகெழுபனவன்யோகவித்தமனென்னும்பேரான் றரைபுகழனையானில்லாள்சண்டியென்றுரைக்கும்பேராள் புரைதபுமனையார்க்குள்ளபுத்திரர்பல்லோர்மன்னோ. | 1 |
சாதுவாமறையோனேனுமுன்செய்தீவினைச்சார்பாலே தீதுசான்மிடிக்கோட்பட்டுச்செறிதருபுதல்வராலு மோதுநற்குணமொன்றில்லாச்சண்டியென்றுரைப்பாளாலு மோதுமாதுயரமுற்றான்மிடியுறின்முளைப்பதென்னே. | 2 |
மாதவமுயன்றுசெய்துவறுமையைமுருக்குவேனென் றாதரமுளத்துமல்கவருந்தவமுயலுங்காலை மேதகுவானநாடர்விரிஞ்சனுக்குரைத்தாராந்தப் போதன்வந்தெதிரேநின்றான்பொருக்கெனத்தவனுணர்ந்தான். | 3 |
எழுந்தடிபணிந்துநின்றவிருபிறப்பாளற்பாராச் செழுந்தவயாதுவேண்டுஞ்செப்புதிதருதுமென்றான் விழுந்தெழுந்தையயானோவறுமையான்மெலிவுபூண்டே னழுந்துமத்துயரநீங்கத்திருவநன்களித்தியென்றான். | 4 |
பிரமனுமுறுவல்செய்துபெருந்திருவளித்தோமந்த வரமிகுதிருவையார்க்கும்வழங்கிவாழென்றுபோனான் கரவறுமறையோன்பின்னர்க்களிப்புறுமனத்தனாகிப் பரவுதன்னிருக்கைபுக்கான்பாலராதியருமொய்த்தார். | 5 |
யாவருந்திருவம்பெற்றதறிதரவெடுத்துக்கூறித் தாவருமறையோன்வாழ்நாட்டட ங்கொள்கோதாவரிப்பான் மேவரும்விருப்பினோடுமேவினன்றீர்த்தமாட வேரவருங்கரையுட்பக்கமிடிந்தாற்றினுறவீழ்ந்தன்றே. | 6 |
உள்ளுறவிழுதலோடுமோரொலியெழுந்ததாங்கு நள்ளுறவிதுவென்னென்றுதெரிதரநடந்தானைய னெள்ளுறவில்லாச்செம்பொன்வரையெதிர்ப்பட்டாற்போலத் தள்ளுறமுடியாச்செம்பொன்வைப்பெதிர்தயங்கக்கண்டான். | 7 |
காண்டலுமகிழ்ச்சிபூண்டாங்கிருந்தவையாவுங்கைக்கொண் டாண்டதன்மனையினுய்த்தானதுகனவினுங்காணாத நீண்டபல்புதல்வரோடுசண்டியுநிரம்புமோகை பூண்டனண்மறையோன்றன்னைப்புல்லுபதுதித்தாளன்றே. | 8 |
மறிவருஞ்செல்வம்பெற்றமறையவன்வருவார்யார்க்கு முறிவருமன்னநல்கிவேட்டனமுகந்துவீசி யறிவருந்தருமமெல்லாமாற்றுதற்குள்ளங்கொண்டான் பிறிவருஞ்சண்டியென்பாளஃதுளம்பேணாளானாள். | 9 |
புதல்வருமனையாராகமறையவன்மனம்புழுங்கி முதலவனருளாலிந்தமுகப்பருஞ்செல்வம்பெற்றோ மிதமுறநடவேமென்னிலென்பயனிதனாலென்று கதமுறும்வெயர்வின்மூழ்குங்கலங்கிமூர்ச்சித்துவீழும். | 10 |
அடியொருபதினான்குள்ளதாமெழுமுழக்கோலாலே நெடிதளந்திட்டவொன்பானாயிரங்குழிநிலந்தா னொடிவில்கோகன்னமென்னும்பெயர்பெறுமுதுதானஞ்செய் படியறுபலத்தினாலேபண்புறக்கொடுத்தமேலோன். | 11 |
ஒத்தவந்நிலநெருக்கமுற்றுறவமைந்தபைங்கூ ழெத்தனையுள்ளவாகுமத்தனையாண்டுமட்டும் புத்தமுதயிலும்வாழ்க்கைப்புலவர்வாழ்சுவர்க்கமேவி வித்தகமருவிவாழ்வன்வேறினியுரைப்பதென்னே. | 12 |
பயன்படுகல்வியில்லான்பிணிதவிர்சரீரம்பற்றா னயந்தருகுணச்சாதுக்கணட்புறான்சொற்றவார்த்தை வியந்துகொண்மனைவிமைந்தர்மேவுறானிவன்மண்மேலா லியங்குபுதிரிவானேனும்பிரேதமென்றிசைக்கலாமால். | 13 |
வருவிருந்தூட்டலின்றேன்மனையறமென்பதென்னாம் பொருவருமறையோராதிப்புண்ணியரடைந்தாரென்னில் வெருவருமுள்ளத்தோடுமிக்கவமானஞ்செய்வா ளொருவருஞ்சண்டியாமித்தீயளையொழிவதென்றியாம். | 14 |
தகுகுணந்தவிரில்லாளைச்சார்ந்துலகுள்ளோர்யாரு நகுமுகத்தினரேயாகநயந்துவாழ்வதினுஞ்சீவ னுகுதிறமெதனாலேனுமுடம்பினையொறுத்தனன்றாஞ் செகுதிறற்றுன்பம்யாவுஞ்சேராதுன்மரணமென்றே. | 15 |
மறைமுதலன்புபூண்டமறையவராதியோரை பொறையறவவமானஞ்செய்பொல்லாங்குவறிதுபோமோ கறையறுமறையோர்தம்மைமதித்திடாக்கயமையாலே நிறைதிருப்பெற்றும்பாம்பாய்நெடுநிலநரூடன்வீழ்ந்தான். | 16 |
என்றிவைபலவுமெண்ணியினிச்செயல்யாதுமில்லை நன்றியின்மனைவிமக்களொடுநயந்திருக்குங்காறுந் துன்றியநரகேயன்றிச்சுவர்க்கமென்பதுதானுண்டோ வொன்றியென்னுயிருக்காயவுறுதியேசெய்வேனென்று. | 17 |
மனைமகார்முதலியோரைத்துரும்பெனமதித்துப்போக்கிப் புனைபொருள்வேண்டுமாறுபொருந்துதன்கையிற்கொண்டு கனைகுரலெழுவிருத்தகங்கையந்தீரநீந்தித் துனைதரவவாசிநோக்கிநடந்தனன்றூய்மைவாய்ந்தான். | 18 |
சாத்திறமுறையேபற்பறானமுங்கொடுப்போமென்னிற் பாத்திரமாவார்முக்கட்பரனடிக்கன்புபூண்டார் மாத்திரம்பொலியவர்க்குமாத்தலத்துதவனன்றிக் கேத்திரங்சிறந்ததென்றெக்கிளர்ச்சிகொண்டுணர்வேனென்னா. | 19 |
ஆய்தருமுளத்தனாயபதிகனுக்காகாயத்தே தோய்தருதிருவாக்கொன்றுசுந்தரமாயூரத்தி னேய்தரவடைதியெல்லாமெண்ணியபடிசெயென்ற தோய்தராவுவகையுற்றான்யோகவித்தமனென்பானே. | 20 |
முன்னருஞ் சிறந்த தென்று மொழிதரக் கேட்ட துண்டு பின்னரு மருள்வாக் கஃதே பேசிடிற் பேச லென்னே நன்னரும் பரைமுன் னானோர் நயப்பதத் தலமொன் றேயென் றென்னரும் புகழுந் தூயோ னெய்தினா னொருமா யூரம். | 21 |
மன்னுமா யூரத் தெய்தி வள்ளலார் திருமுன் னாகத் துன்னுமா தீர்த்தத் தாடிச் சுந்தர நீறு பூசிப் பன்னுமா மறையோர் முக்கட் பரனடிக் கமல மென்று முன்னுமா தவத்து மற்றோர் முகந்திடத் தான மீவான். | 22 |
பூதானஞ் சிலர்க்குச் செய்தான் புனிற்றிளங் கன்றி னோடு கோதானஞ் சிலர்க்குச்செய்தான் குளிர்மணஞ் செய்வான் செம்பொன் மாதானஞ் சிலர்க்குச் செய்தான் வசித்திடு கிரக மென்னு மீதானஞ் சிலர்க்குச் செய்தான் மற்றவும் விருப்பிற் செய்தான். | 23 |
இவ்வகைத் தான மெல்லா மியல்புறச் செய்த பின்ன ரவ்விய மவித்த சிந்தை யந்தணன் மாயூ ரேசன் செவ்விய மலர்த்தாள் போற்றித் தெரிசனஞ் செய்யப் புக்கான் வெவ்விய பாவம் போக்குங் கோபுர மேய வாயில். | 24 |
மன்னிய வங்குத் தாழ்ந்து வளம்பொலி கோயில் புக்குத் துன்னிய வனப்பு வாய்ப்பச் சூழ்ந்துபின் றிருமுன் புக்குப் பன்னிய வள்ள லாரைத் தரிசித்தான் பரிவு தீர்ந்தா னன்னிய மில்லாத் தேவி யஞ்சனா யகிமுன் சென்றான். | 25 |
உருகிநெஞ் சுடைய மேனி யுரோமங்கள் சிலிர்ப்ப வின்பம் பெருகிநாக் குழற வெல்லாம் பெற்றவட் காணப் பெற்றான் றிருகிய லாத சிந்தைத் திருமறை முனிவன் பின்ன ரருகிய லாத வாங்கு வசித்திடு மாசை பூண்டான். | 26 |
இன்னணம் பன்னாண் மேவி யெம்பிரான் மாயூ ரேசன் றன்னருள் விரவி யின்ப முத்தியிற் றலைப்பட் டுய்ந்தா னன்னவன் மாயூ ரத்தி னறஞ்செய்து வசித்த வாற்றாற் சொன்னபன் மகாரு மில்லுஞ் சுவர்க்கத்து வாழ்க்கை பெற்றார். | 27 |
யோகலித்தமப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 936.
~~~~~~~~~~~~~~~
பாய நான்மறைப் பரப்பு ணர்ந்தவ னாய மாமக மனைத்து மாற்றினான் காய வானவர் களிக்க வாழ்தரு தூய வேதியன் சுசன்ம னென்பவன். | 1 |
சத்த வேதமுற் சகல நூல்களு மொத்த தாமென வுணர்விற் றெள்ளியு நித்த மாதிப்பல் வினைநி ரப்பியுஞ் சித்த சுத்தியோர் சிறிது முற்றிலான். | 2 |
இனியியற்றுவதென்னையென்றுபூங், கனிவிராவியகற்பநீழல்வாழ் புனிதவேந்தனைப்புந்திசெய்தனன், றனியனாயவன்முன்புச்சார்ந்தனன். | 3 |
எனையவாவியதென்னையென்றலு, மனையனாய்பலகருமமாற்றியுந் தினையோர்பாதியுஞ்சித்தசுத்தியைப், புனையவெய்திலேன்புலந்துமாழ்கினேன். | 4 |
செம்மைமேவியசித்தசுத்தியை, யிம்மையேயினிதெய்தியுய்ந்திட மும்மைமாமதமுழகறாதவெண், கொம்மையானையாய்கூறுகென்றனன். | 5 |
என்றபோதவனிதயத்துள்ளுற, வென்றமால்விடைவிமலனைக்கொளா வொன்றயாமெவனுரைசெய்வாமெனத், துன்றவோதியாற்சூழ்ந்துகூறுவான். | 6 |
பாரவாவமேம்பட்டகவுரிமா, யூரமென்பதோருத்தமத்தல மாரமான்மியமளவிலாதது, நேரயாவருநினைத்ததீவது. | 7 |
கஞ்சமேவியகடவுணான்முகன், றஞ்சமேயெனச்சார்ந்துபோற்றிட நெஞ்சம்வேட்டதோர்சிருட்டிநேர்தர, வஞ்சமொன்றிலாவண்ணமீந்தது. | 8 |
பறியலூரிடைப்பரவித்தக்கன்வா, னறியவாற்றியவம்மகத்தில்யாஞ் செறியமேவியதீங்குநீங்குபு, முறியவொல்லையின்முறையிற்செய்தது. | 9 |
மாயவன்முதல்வானவாழ்க்கையர், நேயமாரவாங்கெய்திநீர்மையிற் றூயபூசனைதொடங்கியேத்திடப், பாயயாவையும்பண்பினீந்தது. | 10 |
அம்மையேமயிலாகியாங்கடைந், தெம்மையாடருமிறைவற்போற்றுபு செம்மைசேரவாஞ்சிறப்பினெய்திட, வெம்மைதீரருள்விளைத்தமாண்பது. | 11 |
தாருமாவனத்தையலாரோடு, சேருமாதவர்செருக்குமுற்றொழிந் தோருமேன்மைமாயூரமாத்தலஞ், சாருமேன்மையாற்றலைப்பட்டார்கதி. | 12 |
தக்கனென்பவன்றனையர்யாருமே, தக்கவீணையோன்சாற்றுமாற்றத்தாற் றக்கவத்தலஞ்சார்ந்துபோற்றிநந், தக்கசிந்தனர்சார்ந்துளார்கதி. | 13 |
யோகவித்தமனென்னுமுத்தமன், பாகமெத்துமத்தலத்தின்பாலடைந் தேகனைப்பணிந்தெண்ணிறானத்தான், மோகம்விட்டுயர்முத்திசார்ந்தனன். | 14 |
இனியசீர்க்கவுண்டின்னியப்பெயர், முனிவனத்தலமுன்னிப்போற்றுபு தனியளற்றிலாழ்பிதிரர்சாந்தராம், புனிதராய்க்கதிபொருந்தவுய்த்தனன். | 15 |
தீயவாகியகனவுசெய்பல, னேயமாதரார்நிகழுந்தீமையே மேயநாண்முதுக்குறைதலால்விளைந், தாயதீப்பலமனைத்துமாயுமே. | 16 |
தூமகேதுமுற்றோற்றத்தால்வரு, நாமமாரஞரனைத்துநாசமா மேமமாருமாயூரமெய்திடுங், காமமேவிடிற்கணத்தினுள்ளரோ. | 17 |
சாந்திராயணந்தகுகிரிச்சிர, மாய்ந்தமற்றுளவிரதமாற்றலி னேய்ந்தநற்பலமிசைத்தவத்தலந், தோய்ந்தவெல்லையேசுரக்குமென்பரால். | 18 |
அத்தலத்தின்மேலாயவோர்தல, முத்தலத்தினுமொழியினில்லையா லெத்தளங்களுமிதற்கொப்பாகுமோ, கைத்தலத்தினாமலகங்காண்டியால். | 19 |
அஞ்சனாயகியம்மையோடுமோ, ரெஞ்சலின்றியேயென்றுமேவுவார் மஞ்சலேயெனுங்கண்டவள்ளலார், துஞ்சலின்றுபேரருள்சுரந்தரோ. | 20 |
வள்ளலாரெதிர்வயங்குதீர்த்தமொன், றுள்ளலாரெலாமுலகமுள்ளலார் நள்ளலாரெலாமின்பநள்ளலார், விள்ளலாரெமதுள்ளம்விள்ளலார். | 21 |
பிறங்குமாவயிற்பிரமதீர்த்தமொன், றறங்குலாவுமற்றதன்சிறப்பினை நிறங்குலாவுமற்றெவர்நிகழ்த்துவார், மறங்குலாவுதறவிர்க்குமற்றது. | 22 |
ஏத்துகாவிரியிடபதீர்த்தச்சீர், பாத்தியாமெலாம்பகரற்பாலமோ சீத்துவல்வினைசிதைக்கவல்லது, கோத்துநன்னலங்கொளக்கொடுப்பது. | 23 |
அந்தமாத்தலமடையின்வல்வினை, சிந்தவாய்ப்பதுசித்தசுத்தியோ முந்தயாவையுமுடியுமென்றுதன், சந்தவானுலகத்துச்சார்ந்தனன். | 24 |
அனையன்சென்றபினான்றவேதியன், புனையவல்லமாயூரம்புக்கன னினையவின்பருணிமலனுக்கெதிர், துனையவேகிநற்றீர்த்தந்தோய்ந்தனன். | 25 |
நீறுபூசினனிகழுமாமறை, கூறுகண்மணிகுலவப்பூண்டன னாறுசேர்சடையமலவள்ளலா, ரேறுசீர்த்திருமுன்னரெய்தினான். | 26 |
கண்டுதாழ்ந்தனன்கசிந்தெழுந்தனன், மண்டுகாதலிற்றுதிவயக்கினன் றொண்டுபூண்டவர்க்கருளுஞ்சுந்தரி, யண்டுமஞ்சனாயகியைச்சார்ந்தனன். | 27 |
ஆங்குமிங்ஙனமன்பிற்போற்றினன், வீங்குமானந்தமிகுபெருக்கெழத் தேங்குமேதுவாஞ்சித்தசுத்திபூண், டோங்குமாமறையோனுவந்தனன். | 28 |
மாரவேளுடல்பொடித்தவள்ளன்மா, யூரநாயகனருளுறுத்தலாற் சாரவானவர்தக்கமாதவர், பேரவாவுறுமின்பம்பெற்றனன். | 29 |
சிந்தவல்வினைசித்தசுத்தியை, வந்தகாலையேவழங்கவல்லது பந்தம்பாற்றுமாயூரமென்றிடி, லிந்தமாத்தலமெதனொடொப்பதே. | 30 |
21. சுசன்மப்படலம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம். 966.
~~~~~~~~~~~~~~~~
This file was last updated on 20 August 2011.
Feel free to send corrections to the webmaster.