[காஶி க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகச் சென்று மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையில் ஸ்னானம் செய்வதும், காஶி க்ஷேத்ரத்தில் ஸாந்நித்யம் கொண்டுள்ள விச்வேச்வரர், பவானீ முதலான தேவதா மூர்த்திக தர்சனம் செய்வதும் கயை, ப்ரயாகை முதலான புண்ய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதும் மிகுந்த புண்யத்தைக்கொடுத்து சித்த சுத்தியைத் தரும். ஆனால் ஞானிகளுக்கு இது அவசிய மில்லை. அவனிடத்திலேயே இந்த தீர்த்தங்களும் க்ஷேத்திரங்களும் குடி கொண்டு ள்ளன. ஆகையால் ஞானிக்கு தான் இருந்த இடத்திலேயே தீர்த்த யாத்திரா பலன் கிடைத்துவிடுகிறது. தன்னிடத்தில் புண்யதீர்த்த தேவதா அநுஸந்தான ப்ரகாரத்தை இதில் கூறுகிறார்].
मनो निवृत्तिः परमोपशान्तिः सा तीर्थवर्या मणिकर्णिका च ।
ज्ञानप्रवाहा विमलादिगङ्गा सा काशिकाऽहं निजबोधरूपा ॥ १ ॥
மனோ நிவ்ருத்தி꞉ பரமோபஶாந்தி꞉
ஸா தீர்த²வர்யா மணிகர்ணிகா ச ।
ஜ்ஞானப்ரவாஹா விமலாதி³க³ங்கா³
ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோ³த⁴ரூபா ॥ 1 ॥
मनो निवृत्तिः = உலக விஷயங்களிலிருந்து மனம் திரும்புவதும்
மனோ நிவ்ருத்தி꞉ (அதனால் ஏற்படும்),
परमोपशान्तिः = மேலான சாந்தியும் (ராகத்வேஷாதிகளற்ற
பரமோபஶாந்தி꞉ நிலையும்),
सा = அந்த,
ஸா
तीर्थवर्या = தீர்த்தங்களில் சிறந்ததான்,
தீர்த²வர்யா
मणिकर्णिका = மணிகர்ணிகையாகும்,
மணிகர்ணிகா
विमलादिगङ्गा = நிர்மலான ஆதிகங்கையானது,
விமலாதி³க³ங்கா³
ज्ञानप्रवाहा = நிதித்யாஸன காலத்தில் தொடர்ந்து தாரையாக
ஜ்ஞானப்ரவாஹா வரும் ஆத்மாகாரமான விருத்தியை பிரவாஹ
மாக உடையது,
अहं = நான்,
அஹம்
निजबोधरूपा = ஆத்மஞான ரூபமான,
நிஜபோ³த⁴ரூபா
सा = அந்த,
ஸா
काशिका = காஶி க்ஷேத்ரம்.
காஶிகா
மனம் உலக விஷயங்களை நோக்கிச் செல்லாமல் அதிலிருந்து திரும்பி விடுவது, ராகம், த்வேஷம் முதலான தோஷங்கள் எல்லாம் நீங்கி மனதில் எவ்வித விகாரமும் ஏற்படாமல் மேலான உபசாந்தி ஏற்படுவது. இதுதான் தீர்த்தங்களில் சிறந்த மணிகர்ணிகையாகும். காஶிக்குப்போய் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதால் மனதில் சாந்தி ஏற்படவேணும். ஞானிக்கு மனம் சாந்தமாகிவிட்டபடி யால் அவனிடத்தில் மணிகர்ணிகையிருப்பதாகக் கூறுகிறார். மனோநிவிருத்திக்கும் உபசாந் திக்கும் மணிகர்ணிகை காரணமானபடியால் மனோநிவிருத்தி உபசாந்திகளை மணிகர்ணிகையாகக் கூறுகிறார். ஞானிகளுக்கு பிரவாஹம்போல் இடைவிடாமல் தொடர்ந்து தாரையாக ஏற்படும் ப்ரஹ்மாகார விருத்தி என்ற ஞான தாரை தான் பரிசுத்தமான ஆதிகங்கை உற்பத்தியாகுமிடத்தில் உள்ள கங்கா பிரவாஹம். என்னிடம் மணிகர்ணிகை இருப்பதால் ஆத்மஞான ரூபமான காஶி நான்தான். காஶிகா என்னும் சொல் காஶீ க்ஷேத்ரத்தைக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல்லுக்கு பிரகாசம் என்பதுதான் பொருள். ஆத்மஞானம் ப்ரகாச ரூபமானதால் அதையே காசி யாகக் கூறுகிறார்.
यस्यामिदं कल्पितमिन्द्रजालं चराचरं भाति मनोविलासम् ।
सच्चित्सुखैका परमात्मरूपा सा काशिकाऽहं निजबोधरूपा ॥ २ ॥
யஸ்யாமித³ம் கல்பிதமிந்த்³ரஜாலம்
சராசரம் பா⁴தி மனோவிலாஸம் ।
ஸச்சித்ஸுகை²கா பரமாத்மரூபா
ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோ³த⁴ரூபா ॥ 2 ॥
यस्यां = எதில்,
யஸ்யாம்
मनोविलासं = மனதின் தோற்றமும்,
மனோவிலாஸம்
इन्द्रजालं = இந்திரஜாலம்போல் பொய்யானதுமான,
இந்த்³ரஜாலம்
इदं = இந்த,
இத³ம்
चराचरं = ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம்,
சராசரம்
कल्पितं = ஆரோபிக்கப்பட்டு,
கல்பிதம்
भाति = தோன்றுகிறதோ,
பா⁴தி
सा = அந்த,
ஸா
सच्चित्सुखैका = ஸச்சிதானந்தம் ஒன்றையே ஸ்வரூபமாகக்
ஸச்சித்ஸுகை²கா கொண்டதும்,
परमात्मरूपा = பரமாத்ம ஸ்வரூபமானதும்,
பரமாத்மரூபா
निजबोधरूपा = ஆத்மஞான ரூபமானதுமான,
நிஜபோ³த⁴ரூபா
काशिका = காஶி,
காஶிகா
अहं = நான்,
அஹம்
(அவதாரிகை) காசியில் பவானிக்கு ஆலயம் உள்ளது. அங்கு அவள் ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாள். காசியில் விச்வேச்வர பரமாத்மா என்ற ப்ரஹ்மம் ஸச்சிதாநந்தத்தையே ஸ்வரூபமாகக் கொண்டது. அதில் ஸ்தாவரமாயும் ஜங்கம மாயுமுள்ள பிரபஞ்சம் முழுவதும் கல்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்திரஜாலம் போல் பிரபஞ்சம் பொய்யானது. வாஸ்தவமல்ல. உள்ளே மனோராஜ்யம்போலும் ஸ்வப்னம் போலும் வெளி பிரபஞ்சமும் மனதின் தோற்றம்தான். ஆகவே பிரபஞ்சத் திற்கு அதிஷ்டானமான ஸச்சிதானந்த பரப்ரஹ்மஸ்வரூபமான சுத்த ஞான ஸ்வரூ பனான பிரகாச வடிவமான அந்த காசி நான் (ப்ரஹ்மத்தையே காசியாக வர்ணித்து நானே அந்தக்காசி என்று ஜீவப்ரஹ்மைக்யத்தைக் கூறுகிறார்) (2)
(அவதாரிகை) காசியில் பவானிக்கு ஆலயம் உள்ளது. அங்கு அவள் ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாள். காசியில் விசுவேசுவர ஸந்நிதியும் உள்ளது. இவர்க ளையும் ஞானியின் சரீரத்தில் காட்டுகிறார்: -
कोशेषु पञ्चस्वधिराजमाना बुद्धिर्भवानी प्रतिदेह गेहम् ।
साक्षी शिवः सर्वगतोऽन्तरात्मा सा काशिकाऽहं निजबोधरूपा ॥ ३ ॥
கோஶேஷு பஞ்சஸ்வதி⁴ராஜமானா
பு³த்³தி⁴ர்ப⁴வானீ ப்ரதிதே³ஹ கே³ஹம் ।
ஸாக்ஷீ ஶிவ꞉ ஸர்வக³தோ(அ)ந்தராத்மா
ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோ³த⁴ரூபா ॥ 3 ॥
प्रतिदेह गेहम् = ஒவ்வொரு சரீரமாகிற ஆலயத்திலும்,
ப்ரதிதே³ஹ கே³ஹம்
पञ्चसु कोशेषु = ஐந்து கோசங்களில்,
பஞ்சஸு கோஶேஷு
अधिराजमाना = விளங்குகிற,
அதி⁴ராஜமானா
बुद्धि: = அந்த:கரணம்,
பு³த்³தி⁴:
भवानी = பவானீ தேவி,
ப⁴வானீ
साक्षी = ஸம்பந்தப்படாமல் நேரில் பார்த்துக் கொண்டிருக்
ஸாக்ஷீ கும்,
अन्तरात्मा = உள்ளே விளங்கும் ஆத்மா,
அந்தராத்மா
सर्वगतः = எங்குமுள்ள,
ஸர்வக³த꞉
शिवः = விச்வேச்வரர் (ஆகவே),
ஶிவ꞉
निजबोधरूपा = ஆத்மஞான ரூபமான,
நிஜபோ³த⁴ரூபா
सा = அந்த,
ஸா
काशिका = காஶி,
காஶிகா
अहं = நான்,
அஹம்
ஒவ்வொரு தேஹமும் ஒவ்வொரு ஆலயம். ஒவ்வொரு தேஹத்திலுமுள்ள புத்திதான் பவானி. இந்த புத்தி அன்ன மயம் முதலான ஐந்து கோசங்களிலும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. இந்த கோசங்களை தான் என்று ஜீவன் பாவனை செய்யும்படி புத்தி செய்கிறது. புத்தியுடன் அக்ஞானத்தால் ஓன்றாகக் கலந்த ஆத்மா ஜீவன் ஐந்து கோசங்களுடன் ஒன்றாகக் கலந்து ஜீவன் ப்ரகாசிப்பதால் புத்தியும் அவற்றில் பிரகாசிப்பதாகக் கூறுகிறார். புத்தியாலேயே அநாத்மாவான கோசங்களை ஆத்மா என்று ஜீவன் எண்ணுவதால் புத்தியை மாயா சக்திரூபிணியான பவானியா கக் கூறினார். உள்ளே இருந்துகொண்டு எல்லாவற்றையும் நேரில் பார்த்துக்கொண் டிருக்கும் பிரத்யகாத்மா, எங்குமுள்ள சிவம் (பிரஹ்மம்). அவர் சுத்த ஞானஸ்வரூ பமாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். நான்தான் சுத்த ஞானப்ரகாச வடிவ பரப்ரஹ்ம
ரூபமான காசி. நான் கோசங்களுமல்ல மாயாகார்யமான புத்தியுமல்ல. நானே ப்ரஹ்மம். (3)
काश्यां हि काशते काशी काशी सर्वप्रकाशिका |
सा काशी विदिता येन तेन प्राप्ता हि काशिका ॥ ४ ॥
காஶ்யாம் ஹி காஶதே காஶீ காஶீ ஸர்வப்ரகாஶிகா |
ஸா காஶீ விதி³தா யேன தேன ப்ராப்தா ஹி காஶிகா ॥ 4 ॥
काश्यां = ஆத்மப்ரகாசத்துடன் கூடிய சரீரத்தில்,
காஶ்யாம்
काशी = பிரத்யகாத்மா,
காஶீ
काशते = பிரகாசிக்கிறது,
காஶதே
काशी = பிரத்யகாத்மா,
காஶீ
सर्वप्रकाशिका = எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும்
ஸர்வப்ரகாஶிகா பரமாத்மா,
सा = அந்த,
ஸா
काशी = ப்ரயாத்ம ரூபமான பரமாத்மா,
காஶீ
येन = எவரால்,
யேன
विदिता = அறியப்பட்டதோ,
விதி³தா
तेन = அவரால்,
தேன
काशिका = ப்ரஹ்ம காஶி,
காஶிகா
प्राप्ता = அடையப்பட்டது.
ப்ராப்தா
ஆத்ம ப்ரகாசம் உள்ளேயிருந்துகொண்டு சரீரத்திற்கும் பிரகாசத்தைக் கொடுப் பதால் சரீரமும் காசிதான். சரீரமாகிற காசியில் ஞானஸ்வரூபமான ஆத்மா தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே ஸ்வயம்பிரகாசமான ஆத்மா தான் வாஸ்தவமான காசி. சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிற ப்ரத்யகாத்மா என்ற காசி வாஸ்தவத்தில் எல்லா சரீரங்களையும் பிரபஞ்சமெல்லா வற்றையும் பிரகாசிக்கச்செய்கிற பரப்ரஹ்மமே. பரப்ரஹ்மரூபமான காசியை 'நான்தான்’ என்று அபிந்நமாக எவன் அறிகிறானோ அவன் அந்த ப்ரஹ்ம காசியை யடைந்துவிடுகிறான். ப்ரஹ்மமாக ஆய்விடுகிறான். இங்கு சரீரத்தை கௌணமாக காசி என்று கூறினார். காசி என்ற சொல் முக்ய வ்ருத்தியால் பிரத்யகாத்மாவையும்,
பரமாத்மாவையும் ப்ரஹ்மபாவம் என்ற மோக்ஷத்தையும் குறிப்பிடுகிறது. ஆகவே மூன்றும் ஒன்றுதான் வெவ்வேறு அல்ல என்று தாத்பர்யம். (4)
काशीक्षेत्रं शरीरं त्रिभुवनजननी व्यापिनी ज्ञानगङ्गा
भक्तिः श्रद्धा गयेयं निजगुरुचरणध्यानयोगः प्रयागः ।
विश्वेशोऽयं तुरीयः सकलजनमनः साक्षिभूतोऽन्तरात्मा
देहे सर्वं मदीये यदि वसति पुनस्तीर्थमन्यत्किमस्ति ॥ ५ ॥
காஶீக்ஷேத்ரம் ஶரீரம் த்ரிபு⁴வனஜனனீ வ்யாபினீ ஜ்ஞானக³ங்கா³
ப⁴க்தி: ஶ்ரத்³தா⁴ க³யேயம் நிஜகு³ருசரணத்⁴யானயோக³꞉ ப்ரயாக³꞉ ।
விஶ்வேஶோ(அ)யம் துரீய꞉ ஸகலஜனமன꞉ ஸாக்ஷிபூ⁴தோ(அ)ந்தராத்மா
தே³ஹே ஸர்வ மதீ³யே யதி³ வஸதி புனஸ்தீர்த²மன்யத்கிமஸ்தி ॥ 5 ॥
शरीरं = எனது சரீரம்,
ஶரீரம்
काशीक्षेत्रं = காஶீ க்ஷேத்ரம்,
காஶீக்ஷேத்ரம்
ज्ञानगङ्गा = ஆத்ம ஞானம் என்னும் கங்கை,
ஜ்ஞானக³ங்கா³
त्रिभुवनजननी = மூவுலகையும் போஷிக்கும் தாயாராக,
த்ரிபு⁴வனஜனனீ
व्यापिनी = எங்கும் பரவியுள்ளது,
வ்யாபினீ
भक्तिः = பக்தியும்,
ப⁴க்தி:
श्रद्धा: = சிரத்தையும்,
ஶ்ரத்³தா⁴:
इयं = இந்த,
இயம்
गया = கயா - க்ஷேத்ரம்,
க³யா
निजगुरुचरणध्यानयोगः = தனது ஆசார்யரின் பாதாரவிந்தங்களை தியானம்
நிஜகு³ருசரணத்⁴யானயோக³꞉ செய்வதில் மனதைச் செலுத்துவது,
प्रयागः = பிரயாக க்ஷேத்ரம்,
ப்ரயாக³꞉
तुरीयः = துரீயமாகவும்,
துரீய꞉
सकलजनमनःसाक्षिभूतः = எல்லா ஜனங்களுடைய மனதிலும் ஸாக்ஷியாக
ஸகலஜனமன꞉ஸாக்ஷிபூ⁴த꞉ இருப்பவருமான,
अयं = இந்த,
அயம்
अन्तरात्मा = உள்ளே விளங்கும் பிரத்யகாத்மா,
அந்தராத்மா
विश्वेशः = விச்வேச்வரர் (இவ்வாறு),
விஶ்வேஶ꞉
मदीये देहे = என்னுடையதான சரீரத்தில்,
மதீ³யே தே³ஹே
सर्वं = எல்லாம்,
ஸர்வம்
यदि वसति = வஸிக்குமானால்,
யதி³ வஸதி
अन्यत् = வேறு,
அன்யத்
तीर्थं = தீர்த்தம்,
தீர்த²ம்
किमस्ति = என்ன இருக்கிறது?
கிமஸ்தி
ஆத்ம சைதன்ய பிரகாசத்துடன் கூடியிருப்பதால் நம் சரீரமே காசீ க்ஷேத்ரம். ஆத்மஞானம், மூவுலகங்களிலும் பரவி பிரவஹித்து எல்லோரையும் போஷிக்கும் மாதாவான கங்காதேவி. பக்கியும் சிரத்தையும் கயை, தனது ஆசார்யரின் பாதகமலங்களை த்யானம் செய்வதில் மனதைச் செலுத்துவது ப்ரயாகை. ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளையும் தாண்டி தரீயமாக விளங்குவதும் எல்லா ஜனங்களுடைய மனதிலும் ஸாக்ஷியாக இருப்பதுமான பிரத்யகாத்மா விச்வேச்வரர். இவ்வாறு என் சரீரத்திலேயே எல்லாம் (க்ஷேத்ரம், தீர்த்தம், தேவதை) வஸிக்கும்பொழுது எனக்கு வெளியில் வேறென்ன தீர்த்தம் இருக்கிறது? சரீரத்திலுள்ள இவைகளாலேயே உத்தம பலன் எனக்கு கிடைத்து விட்டபடியால் நான் வெளியிலுள்ள தீர்த்தங்களுக்கு எதற்காகப் போகவேண்டும்? (5)
காஶீ பஞ்சகம் முற்றும்.