logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )Om symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


kanchip puranam of civanjana munivar payiram & patalam 61 -65 /verses 2023 - 2742 Acknowledgements: Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of Singapore for the preparation of the etext. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. திருவாவடுதுறை யாதீனம் சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65: (2023 -2742) 61. தழுவக்குழைந்த படலம் 2023-2449 62. திருமணப்படலம் 2450-2531 63. விம்மிதப்படலம் 2532-2553 64. ஒழுக்கப்படலம் 2554-2621 65. சிவபுண்ணியப்படலம் 2622-2742 61. தழுவக்குழைந்த படலம் (2023- 2449) 2023 எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் கம்ப மால்கரி யுரித்தவர் சிரமேற் கம்ப தித்தவர் பசும்பொழில் தலத்துக் கம்ப லம்விரித் தெனமலர் பரப்புங் கம்பம் மேவிய தொருசிறி துரைத்தாம் கம்ப லைத்ததிர்த் தெழுந்துமீக் கடுகுங் கம்பை மாநதிப் பெருக்கினைக் காணூஉக் கம்பம் உற்றுமை தழுவ மெய் குழைந்த கருணை மேன்மையுங் கட்டுரைத் திடுவாம் கம் பதித்தவர்.-நீரை வைத்தவர். கம்- நீர். 1 2024 பொற்ற தாமரைப் பொகுட்டனைக் கிழவன் புகுத லுற்றதற் புருடகற் பத்தில் பற்றும் வைகறைத் துயிலொழிந் திமயப் பாவை பாகனார் அடிதொழு தெழுந்தான் முற்றும் வெள்ளநீர்ப் பரப்பிடை யவனி முழுது மாழ்ந்தது கண்டுளங் கவன்று மற்றி னிச்சக வகிலமும் படைக்கும் வண்ணம் யாதென மயங்குறும் பொழுது 2 2025 பூதி மேனியார் திருவருள் கூடிப் புரிந்த முன்னிகழ் உணர்ச்சிவந் தெய்த ஆதி கற்பத்தில் எதிரெழுந் தருளி யண்ண லார்கற்பந் தொறுந்தொறும் நின்பால் சோதி சேரெழிற் குமாரநல் வடிவால் தோன்றி நாமுனக் கருளுது மென்னாப் பேதி யாவகை தனக்கு முன்னளித்த பெருவ ரத்தினைத் தெளிந்தனன் பிரமன் 3 2026 அன்ன தன்மையி னின்றுமங் கவரே யருள்செய் வாரெனத் துணிபுடை மனத்தால் தன்னு தற்றலத் தடியிணை கருதித் தவங்கள் பல்பக லாற்றுழித் திகழுஞ் சென்னி யாற்றின ருத்திர காயத் திரியி னோடெழிற் குமாரநல் வடிவாய் முன்ன ரெய்திட நோக்கியம் மனுவான் முதல்வ னார்தமை யுணர்ந்துகை தொழுது உருத்திர காயத்திரி- ருத்திர காயத்திரி மந்திரத்துக்குரிய தேவி. அம்மந்திரம்- 'தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ தந்நோருத்ர ப்ரசோதயாத்'` தற்புருடற்கு... ... அருளுக` என்பது இதன்பொருள் 4 2027 ஏற்ற தற்புரு டற்குற நினைது மெமக்கு ருத்திர னருளுக வென்னும் ஆற்றல் சான்றகா யத்திரி மனுவை யனைத்து மாக்குவான் முறையுளி கணித்துப் போற்ற வார்ந்திழி யருவியங் குவட்டுப் பொருப்பு வில்லவர் கருணைகூர்ந் துலகந் தோற்று மாறருள் கொடுத்தெழுந் தருளத் தோட்டு வெண்மலர்க் கலைமகள் துணைவன் 5 2028 ஒருமை யன்பினப் புருடனை நினைந்தாங் குலக மாக்குழி யாண்மையே தோன்ற முருகு லாங்குழற் பெண்மையும் படைப்பான் முயன்றும் எய்திலன் புந்தியின் தேர்ந்து புருட னுக்கெனத் தற்பொருட் டெய்தும் பொருண்மை நீத்தனன் சகத்திர நயனப் புருடன் றன்னுடைப் பேரருள் நினைகே முருத்தி ரப்பிரா னெமக்கருள் புரிக அப்புருடன் - தன் முன் தோன்றிய குமாரவடிவ இறைவனை. ஆண் என்னாமல் `ஆண்மை` என்றார், எப்பிறப்பினும் ஆண் பெண் என வேறு நிற்பனவன்றி, அவ்விருதிறப் பொருள்களில் தனித்தனியும் ஆண்மை பெண்மை என்னும் இருதன்மையும் உள;அவ்விருதன்மையின் கலப்பினாலேயே எப்பொருளும் நிலைபெறும். இப்பொழுது, பிரமன் இறைவனது குமாரவடிவே நினைவில் நின்றதால், பெண்மை தோன்றாது ஆண்மையே தோன்றிற்று. தற்பொருட்டு எய்தும் பொருள் என்றது,’தனக்கு’ என நான்காம் வேற்றுமையாகப் பொருந்தும் பொருள் என்க. 6 2029 என்னும் வேறுகா யத்திரி மனுவை யெழிற்பு ணர்ச்சியி னுலகமுண் டாக்க மன்னு சீர்க்கிழ மைப்பொருள் வாய்ப்பக் கணித்து மாதவம் புரிவுழி வகிர்நாப் பன்ன கம்புனை சடைமுடிப் பிரானார் பாதி பெண்ணுருத் திகழ்தரு வடிவான் முன்ன ரெய்தியிம் மனுவினைக் கணித்தாய் முளரி வாழ்க்கைநீ வேட்டது தெளிந்தேம். கிழமைப் பொருள்- சம்பந்தப் பொருள். இது ஆறாம் வேற்றுமைக்குரியது. தற்புருடனுக்கு என்னும் பொருளுடைய காயத்திரியைச் செபிக்குங்கால் ஆண் கூறாகிய இறைவனையே நினைத்தமையின் ஆண் தன்மையே தோன்றிப் பெண் தன்மை தோன்றிலது. அதனை அறிந்து புருடனுடைய அவ்விறைவனுடைய சத்தியையும் உடன் நினைத்து இம் மந்தரத்தைக் கூறினார். இறைவன் அமையப்பராகத் தோன்றி பிரமன் விரும்பியவரத்தை அருளினார் என்க 7 2030 நினக்கு நாயகி யிவளெம திடப்பால் நின்று நீங்குபு தன்னொரு கூற்றால் உனக்குப் பெண்ணுருப் படைத்திடு மாற்ற லுதவு மென்றுரைத் தருளவக் கணமே தனக்கு நேர்வரும் பிராட்டியு மங்குத் தணந்து தோன்றுபு தன்னொரு கூற்றின் வனப்பு மிக்கவே றணங்கினைப் படைத்து மலர்ப்பொ குட்டனை யவற்கிது வகுப்பாள் 8 2031 இவளை நாள்தொறும் நீவழி பட்டுப் பெண்கள் யாரையும் படைத்தியென் றியம்பி அவளை நோக்கிநின் கூற்றினிற் பெண்க ளனைத்தும் நீபகுத் திடுகென வருளித் தவள முண்டகக் கிழத்திதன் கொழுநன் றனக்கு நல்கித்தன் தலைவரை மணந்தாள் கவள வெங்கரி யுரித்தவர் தாமுங் கருணை செய்துபோயக் கயிலையைப் புக்கார் 9 2032 புக்க பின்தனைத் தொழுதுபோற் றிசைக்கும் போதி னானையவ் வளைக்கையாய் நோக்கி நெக்க சிந்தையோய் நினக்கியான் புரியும் நிகழ்ச்சி யாதென மலரவன் வணங்கித் தொக்க பேரருள் எந்தையாரிடத்துத் தோன்று மன்னைநீ பெண்ணுரு முழுதுந் தக்க வாபடைத் தருள்கதில் லன்றேற் படைக்கு மாற்றலென் றெனக்கருள் புரியாய் 10 2033 இறைவி தக்கன் மகளாதல் உம்பர் போற்றுநின் திருவடிப் பொடியை யுச்சி மேற்கொண்டு நான்படைக் கின்றேன் அம்பை யின்னமோர் விண்ணப்ப முளதா லடிய னேன்பெறு தக்கன்றன் மகளாய் இம்பர் நீயவ தரித்திடல் வேண்டு மென்று வேண்டலு முலக மீன்றளித்த கொம்பர் நுண்ணிடை யெம்பெரு மாட்டி கூர்த்த பேரருட் கருணையி னுணர்த்தும் 11 2034 முழுது மாயுயிர்க் குயிரெனத் திகழும் முதலு ருத்திர னென்றிடுஞ் சுருதி தழுவி யாங்கவ னிடப்புறம் மேவுஞ் சத்தி யானவன் சத்தி யனதனால் தொழுத குந்திற லவன்திரு வடிவாம் தொல்ச கங்களி னிடப்புற மெனதாம் பழுதி லாளநின் வடிவினைப் பகுத்துப் பாதி பெண்மையாண் பாதியில் திகழ்தி 12 2035 அண்ண லாரருட் சத்தியுஞ் சிவனு மாய தன்மையி னன்றுதொட் டுலகம் பெண்மை யாண்மையென் றிருவகைப் புணர்ப்பாற் பெண்ணு மாணுமாய்ப் பிறங்குமென்றியம்பிப் பண்ணை மாமறைக் கடவுளுக் கருளிப் பாவை யம்பிகை யாயிடைக் கரந்து மண்ணெ லாமுய்யச் சதியெனும் பேரால் வயங்கு தக்கனுக் கொருமக ளானாள் 13 2036 ஆய நங்கையை விதியுளி யரனார்க் களித்து நான்முகன் அன்னணந் திகழ மாயி ருஞ்சக மாணொடு பெண்ணா வயக்க முற்றன அகிலநா யகியும் பாயும் வெள்விடைப் பாகரை மணந்து பழித்த தக்கனை வெறுத்தவன் மகண்மை மேய மேனியை நீத்திம கிரிக்கு மேனை பால்மக ளாயவ தரித்து 14 2037 அங்கண் மேவிய பிஞ்ஞக னேவற் பணியின் மேவின ளாகமற் றந்நாள் பங்க யத்தவன் நல்கிய வரத்தால் தாரு காசுர னெனெனப்பயில் கொடியோன் பொங்கு மாண்மையி னுலகெலாம் வருந்தப் பொன்ந கர்க்கிறை குரவனை முதலோர் தங்கு ழாத்தொடு முசாவிநான் முகத்தோன் றன்னை யெய்தியக் கொடுந்தொழி லியம்பி 15 2038 எந்தை நீயிது தீர்திறம் புகலென் றிறைஞ்சி வேண்டலுந் திசைமுகப் புத்தேள் அந்த வெந்திறல் தாருகன் செருக்கை யடக்கு மாண்மையன் முருகவே ளன்றிக் கந்த மென்றொடைக் கடவுள ரேனோர் வல்ல ரல்லரக் கந்தனைத் தருவான் இந்து சேகர னுமையினை மணக்கு முபாயம் நீபுரி கெனவிடை கொடுத்தான் 16 2039 மீண்டு வாசவன் மாரனை நினைப்ப வேனில் வேள்சிலை பகழிகைக் கொண்டு காண்ட குங்கவி னிரதியும் மதுவும் மருங்கு மேவரக் கடுகிவந் திறைஞ்சி ஈண்டு நின்னரு ளாணையின் வலியால் யாது மாற்றுவல் செய்பணி யருளாய் மாண்ட புப்புரம் பொடித்தவர் தமையும் வெல்ல வல்லுநன் மற்றுரை யெவனோ . மது -வசந்தன். இவன் மன்மதனின் தோழன். 17 2040 ஈதி யம்புழி யிந்திர னுவகை யெய்தி விண்ணவ ரிடும்பையு மவுணன் நீதி யில்லன புரிவதும் மலரோன் நிகழ்த்தும் மாற்றமும் வகுத்துரை செய்து பேதி யாவகை பெருந்தகை யின்னே பிஞ்ஞ கன்றனை யுமையொடுஞ் சேர்த்தி போதி யென்றலு மைங்கணைக் கிழவன் பொன்ந கர்க்கிறை விடைகொடு மீண்டான் 18 2041 இறைவன் இறைவியை மணத்தல் மீண்டு செம்மலா ரிருந்துழி யணுகி மெல்ல வெஞ்சிலை வாங்கலு மவனை மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின் மடுத்து வார்குழ லிரதிநின் றிரப்பக் காண்ட காவகை யுருவிலி யாக்கிக் கடுந்த வம்புரி மலைமகள் மணந்து தூண்டு வேற்படைக் குரிசிலை யுதவித் தாரு கன்றனைத் தொலைத்தருள் செய்தார் 19 2042 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் ஆங்கதன் பின்னர்ச் செங்கே ழலங்கொளி வடிவின் நஞ்சந் தூங்கிய மிடற்றி னாருஞ் சுரிகுழ லிமய மாதும் ஓங்குயர் பலவுஞ் சந்தும் வேரொடு மொடியத் தள்ளி வீங்கொலி யருவி தாழும் மந்தர வெற்பின் மேலால் 20 2043 உலகெலா முய்யு மாற்றா லுவளகத் தைந்து மூன்றாச் சிலதிய ரடுக்கி யிட்ட செழுந்தவி சணையின் மன்னி விலகரு மகிழ்ச்சி மீதூர் திருவிளையாடற் செய்கைக் கலவியின் நயந்து தம்முட் களித்தினி திருக்கு மேல்வை. உவளகம் -அந்தப்புரம் 21 2044 கலிநிலைத்துறை மும்மைப்புவ னங்களுஞ் செய்தவப் பேறு முற்றச் சும்மைத்திரை நீருடை மேதினி தோற்றம் எய்தச் செம்மைத்திசை யெட்டினுந் தென்றிசை மிக்கு வெல்ல மம்மர்த்தொகை நூறிய வண்டமிழ் நாடு வாழ 22 2045 நலம்மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப் பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக் குலவுஞ்சம யங்களொ ராறும் மகிழ்ச்சி கூர உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன 23 2046 எவ்வெத்தவத் துஞ்சிவ பூசனை யேற்ற மென்னப் பௌளவப்புனல் சூழ்படி மேலவர் தேறி யுய்யத் தெவ்வுத்தொழில் பூணு மறக்கடை தேய நல்கூர் எவ்வத்திறம் நீங்கி யுயிர்ப்பயி ரெங்கு மோங்க 24 2047 முப்பான்முத லிட்ட விரண்டற முந்த ழைப்ப எப்பாலுல கத்தொளி யாவையு மெம்பி ரானார் தப்பாவிழி யின்னொளிச் சால்பென யாருங் காண அப்பார்சடை யாரடித் தொண்ட ரகங்க ளிப்ப அப்பு ஆர் சடை- கங்கைநீர் பொருந்திய சடை 25 2048 இறைவன் திருக்கண்களை இறைவி புதைத்தல் கைமிக்கெழு காதல் விருப்புமீ தூர்கு றிப்பின் விம்மிப்பணைத் துப்புடை வீங்கி யெழுந்த கொங்கைப் பொம்மற்பெரு மாட்டி வெரிந்புறத் தெய்தி வல்லே செம்மற்பிறை வேணிய னார்திருக் கண்பு தைத்தாள் 26 2049 அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் இருண்டபூங் குழலாள் செங்கை இறுகுறப் புதைத்த லோடும் இருண்டகந் தரத்தார் நோக்கின் இருசுடர் மறைந்த வாற்றால் இருண்டது புவனம் முற்றும் இருண்டவெண் டிசையும் என்றும் இருண்டறி யாத விண்ணோர் இருக்கையும் இருண்ட தந்நாள் 27 2050 அழுங்கவே தன்னை நாளுங் காய்ந்துலாம் அருக்கர் தம்மோ டொழுங்குறத் திரட்டி நீட்டிச் செருகிவைத் திட்டா லொக்குஞ் செழுங்கதிர் மதியஞ் செந்தீ உடுமணித்திரளை யெல்லாம் விழுங்கித்தன் வீறு காட்டிப் படர்ந்தது திமிர வீக்கம் 28 2051 சிறைபடு கூகை யாதி கருங்கொடித் திரள்க ளொத்த மறமலி புலிக ளாதி வானரக் குலங்க ளொத்த நறைகமழ் குமுதப் போதும் நளினமுந் தம்மு ளொத்த உறுதுயர் நேமிப் புள்ளுஞ் சகோரமு மொருங்கே யொத்த நேமிப்புள் - சக்கரவாளப் பறவை 29 2052 அலர்தலை யுலகங் காணா ரதற்படு பொருள்கள் காணார் நிலைபெறு தத்தம் யாக்கை நீர்மையுங் காணார் முந்நீர்க் கலிதிரை வரைப்பி னோருங் கண்டறி யாத வானத் தலைவருந் திமிரம் ஒன்றே தணப்பறக் காண்டல் பெற்றார். 30 2053 இறந்தது படைப்பி னாக்க மிகந்தன வேள்விச் செய்கை பறந்தன தவந்தா னங்கள் பறைந்தன கடவுட் பூசை துறந்தன கலவி யின்பந் தொலைந்தன அறிவின் தேர்ச்சி மறந்தன மறைநூற் கேள்வி மயங்கின வுலக மெல்லாம். 31 2054 இறைவி கைநீப்ப இறைவன் கண்திறத்தல் கடவுளர் முனிவர் மக்கள் யாவருங் கவன்றாங் காங்குப் படலைவல் லிருளின் மூழ்கிப் பதைபதைத் தாவா வென்னக் கடலொலிக் கிளர்ச்சி நாண முறையிடுங் காலை வெற்பின் மடவரல் கரங்கள் நீப்ப மலர்விழி திறந்தார் ஐயர் 32 2055 அல்கின வொளிக ளெங்கு ம·கிய திருளின் வீக்கம் மல்கின படைப்புங் காப்பும் வயங்கின அறத்தி னீட்டம் பல்கின வேள்வி யெங்கும் பரந்தன யிறைவர் சீர்த்தி புல்கின வேத வாய்மை பொலிந்தன வுயிர்க ளெல்லாம் 33 2056 வெறிமலர்த் தளவ மூரல் விழியிணை மறைத்து நீக்குஞ் சிறுபொழு துலகுக் கெல்லா மெண்ணில்பல் லூழி சென்று மறைநெறி படைப்புச் செய்கை யாதிய மறுத்த வாற்றால் இறைவிதன் வதனம் நோக்கி யேந்தலா ரருளிச் செய்வார் 34 2057 இறைவன் இறைவிக்குப் பணித்தல் இருசுடர் நமக்கா தார மாகிய வெமது கஞ்சத் திருவிழி புதைத்த வாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி உருகெழு தீமை நின்னையுற்றதா லதற்குத் தீர்வு மருமலர்க் குழலி னாய்நீ மரபுளி யியற்ற வேண்டும் 35 2058 இகப்பருங் கருணை பூண்ட வெமக்கும்நின் றனக்கும் நந்தம் அகத்தடி யவர்க்கும் பாவ மணுகுவ தில்லை யேனும் வகுத்தவா புரிதி யெல்லாக் கருமமும் மரபி னால்யாம் நிகழ்த்திய வாறே பற்றி நிகழ்த்திடு முலகங் கண்டாய் 36 2059 என்றருள் செய்யக் கேட்டு நடுக்கமுற் றிறஞ்சி நின்று மன்றலங் குழலாள் கூறும் வள்ளலே கழுவாய்ச் எய்கை என்றதி யாது செய்யுங் காலமே திடமே தெல்லாம் நன்றெனக் கருளா யென்ன நம்பனார் வகுத்துச் சொல்வார் 37 2060 கலிநிலைத்துறை வில்லிழை பூண்டிறு மாந்தெழு கொங்கை விரைக்கோதாய் அல்லன செய்துபின் னஞ்சுப வர்க்குறு கழுவாய்தாம் நல்லற நூல்களின் மாதவர் நாட்டின ரவையெல்லாஞ் சொல்லிய தீர்வு மிகச்சிறு மைத்திது துணிவாயால் 38 2061 எத்துணை வன்மை யறக்கடை முற்று மிறச்செய்யும் அத்தகு சீர்க்கழு வாயெமை யன்பி னருச்சித்தல் சித்த மொருக்கி நினைத்தல் பழிச்சுதல் பேர்செப்பல் பத்தியி னெம்மடி யார்வழி பாடெனு மிவையாமால் 39 2062 முற்றிய சீரிரு முப்பரு வங்களும் முறையானே அற்றமில் கால மெனப்படும் யாம்பெரி தானந்தம் உற்றுறை கின்ற விடங்க ளிடங்க ளெம்முறு மன்பர் பற்றிய தானமு மத்தகை மைத்தென அறிவாய் 40 2063 ஆதலின் நாமுறை வைப்பிடை யாயினு மெம்மன்பர் மேதக வைகும் வரைப்பிடை யாயினும் மீப்பொங்குங் காதலி னாலெமை யர்ச்சனை யாற்றுதி யிதுகாணூஉப் பாதலம் மண்னகம் விண்ணக முய்வது பண்பென்றார் 41 2064 என்றலு மங்கணர் பங்கய பாத மிறைஞ்சித்தாழ்ந் தொன்றிய சிந்தையி னாளுடை நாயகி யுரைசெய்வாள் அன்றிய நெஞ்சுரை செல்லருநீ யவரவர் தத்தம் பொன்று முணர்ச்சியி னர்ச்சனை பூணவு மெளிவந்தாய் 42 2065 நானும் மகிழ்ந்துனை யர்ச்சனை செய்யும் நலம்பெற்றேன் தேனமர் கொன்றை மிலைச்சிய செஞ்சடை வள்ளால்நின் ஊனமில் பூசனை செய்திற மெத்திற முரையென்ன ஆனுடை யூர்தி யருட்கட லன்னவர் புகல்கிற்பார் 43 2066 கரிசறு நித்தநை மித்திக காமிய மெனமூன்றாம் உரிமையி னெம்மடி யர்ச்சனை யேனைய வுலகத்துப் புரிதரு பூசனை நித்திய பூசனை யாமன்றித் தெரிதரி லின்னவை காமியம் நைமித் திகமாகா 44 2067 பொருவறு மூன்று முறும்கரு மம்புரி நிலமீதே கரும நிலந்திகழ் பாரத மாம்வரு டங்கண்டாய் திரைகெழு கீழ்க்கடல் மேற்கடல் சேதுவொ டிமயத்துள் மருவிய மேதினி பாரத மால்வருடம் மாமால் 45 2068 இத்தகு பாரத மாம்வரு டத்தி னெமக்கான உத்தம வைப்பின் விதிப்படி யெம்மை யிலிங்கத்தின் முத்துறழ் வெண்ணகை முற்றிழை மூதுல கெல்லாமெய்ச் சித்தி பெறும்படி வல்லை யருச்சனை செய்கிற்பாய் 46 2069 காஞ்சியே தவம் செயற்கு இடமெனல் என்றலு மாவயி னெண்ணில் தலங்களு ளெம்மான்நீ நன்று மகிழ்ந்துறை மிக்குயர் நற்றலம் யாதென்னக் குன்று குழைத்து வடிக்கணை பூட்டினர் கோல்கோடி அன்றின ரிஞ்சி யழித்தரு ளங்கணர் தாம்சொல்வார் 47 2070 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் ஆயிடை நாமகிழ்ந் துறையும் திருப்பதிகள் பலகோடி யவற்றுள் மேலாம் ஆயிரத் தெட்ட வற்ற திகமொரு நூற்றெட் டவற்றதிக மறுபத் தெட்டாம் ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனு மிரண்டதிகம் அறிவான் மிக்கோர் ஆயினவை யிரண்டுள்ளும் சால நமக்கினி யநகர் அணிநீர்க் காஞ்சி 48 2071 இவ்வண்ணம் தானங்கள் பலவகுத்த தெற்றுக்கேல் இயம்பக் கேளாய் மைவண்ண இருள்ம லத்தின் இருவினையாற் பிணிப்புண்டு மருளின் மூழ்கி உய்வண்ணம் அறியாத பசுக்கள்தமை அம்மலத்தின் உறாத நாமே மெய்வண்ணப் பெருங்கருணைத் தன்மையினால் விடுவிக்க வேண்டு மாற்றான் 49 2072 மருவாரும் பூங்குழலாய் ஐவகைய சத்திகளை வகுத்துப் பின்னர் அருநான்கும் உருநான்கும் அருவுருவந் தானொன்றுமாக ஒன்பான் திருமேனி தோற்றுவித்துத் தோற்றமுதல் ஐந்தொழிலும் செய்வான் உன்னி இருவேறு மாயைகளின் உடல்கருவி இடமனைத்தும் உயிர்கட் கீந்து 50 2073 உள்ளமுதல் விகாரத்தின் எய்துமிரு வினைக்குரிய பிறவி காட்டிப் பள்ளநீர் நடுக்கீழ்மே லூசலெனக் கொட்புறுத்துப் பருவம் நோக்கி மெள்ளவினைப் பயனூட்டி நஞ்சோடு சுவையமிழ்தம் விரவித் தீற்றித் தெள்ளுதவம் அறிந்தறியா துபாயத்தும் உண்மையினும் சேரச் செய்வேம் 51 2074 தீக்கையின் வகை சரியையெனக் கிரியையென யோகமென ஞானமெனச் சாற்று நான்காம் இரியமலத் துகளறுத்து நமைக்காட்டும் அருந்தவங்கள் இவற்றிற் சேறற் குரிமைதரும் உயர்தீக்கை சமயமுதல் மூன்றவை தாமுதவும் முத்தி அரிலகன்ற எம்முலகத் துறலாதி நான்கென்ன அறையும் நூல்கள் 52 2075 தேக்கூறு தேமொழியாய் மலம்சீக்கும் தீக்கைபல விதமாம் அங்கண் நோக்கூறு மொழியெண்ணம் நூல்யோகம் அவுத்திரியா நுவலும் ஏழுள் மீக்கூறும் அவுத்திரிதான் வியன்கிரியை ஞானமென விருபா லாய்முப் பாற்கூறு படுஞ்சமய விசேடநிரு வாணமெனும் பகுப்பி னாலே 53 2076 மருவுபுற மகமென்னும் மதத்துழன்று வருணநிலை வழாது நின்று மிருதிமறை நெறிவேள்வி பலபுரிந்து வேதாந்தப் பொருண்மை தேறி வருமுறையா னிவையனைத்தும் முற்றியபின் மேனோக்கும் மதியான் மிக்கோர் தெருளுதவு சைவநெறிப் படுஞ்சமய தீக்கைதனக் குரிய ராவர் 54 2077 சரியா பாதமும் அதன்பயனும் அவ்வாற்றான் யாமருவும் திருக்கோயி லலகிடுதல் மெழுகல் அன்பின் செவ்வாற்றான் மலர்கொய்து தார்மாலை தொடுத்தணிதல் தீப மேற்றல் மெய்வாய்ப்பச் சிவனடியார் பணித்தபணி தலைநின்று மேவ லாதி இவ்வாற்றில் தாதநெறிச் சரியையினைப் புரிவோரெம் உலகின் வாழ்வார் 55 2078 கிரியாபாதமௌம் அதன் பயனும் ஈதியற்றி முற்றியபின் மகநெறிக்காம் விசேடத்தை யெய்திப் பூசைக் கோதியகொண் டாதார சத்திமுதல் சத்தியீ றோங்கு கஞ்சத் தாதனமே மூர்த்திமுதல் பாவித்தா வாகித்தா வரண பூசை ஆதியசெய் தழலோம்பு மிக்கிரியை வழாதாரெம் மருகு வாழ்வார் 56 2079 யோகபாதமும் அதன்பயனும் இக்கிரியை முற்றியபின் இயமாதி யெட்டுறுப்பின் இயல்பு வாய்ந்து பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி யாறா தாரந் தொக்கபொரு ளுணர்ந்தேகி மதிவரைப்பின் அமுதுண்டு சோதி யுள்ளால் புக்கழுந்துஞ் சகமார்க்க யோகுழப்போ ரெம்முருவம் பொருந்தி வாழ்வார் 57 2080 ஞானபாதமும் அதன் பயனும் முறையானே யிம்மூன்றும் முற்றியருள் பதிந்துவினை யொப்புவாய்ந்து நிறைவாய பருவத்தி னுயிர்க்குயிராய் நின்றருளும் யாமே தோன்றி மறைவாய்மை நிருவாண விதியாற்றால் வழியாறும் தூய்மை செய்து குறையாத பேரருளி னறிவுறுக்கு மஞ்செழுத்தின் கொள்கை தேற்றி 58 2081 அருவுருவங் குறிகுணங்கள் முதலீறு கட்டுவீ டனைத்து மின்றிப் பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வா யானந்தப் பிழம்பா யெங்கும் ஒருமுதலா யழிவின்றி யோங்கொளியாய் நிறைந்துளதா யுயிர்கள் தோறும் விரவியுடன் தொழிற்படுத்துப் புலங்கொளுத்தி வீடுய்க்கும் பதியா மெம்மை 59 2082 எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல் பற்றியவை தாமா யென்றும் உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்சத்தா யிருளுமொளியு மல்லாக் கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாயெம் மருளாற்கட்டறுத்து வீடு நண்ணுபவாய் உணர்த்தவுணர் சிற்றறிவிற் பலவாம்நற் பசுக்கள் தம்மை 60 2083 ஒன்றாகி யழிவின்றிப் பலவாற்ற லுடைத்தாய்ச்செம் புறுமா சென்னத் தொன்றாகி யருள்விளைவின் நீங்கு மிருள்ம லத்துடனத் தொடக்கு நீப்ப மின்றாவு முடலாதி நல்குமிரு மாயை யிருவினைகட் கேது என்றோது கருமமிவை நிகழ்த்து திரோதமு மெனுமை வகைப்பா சத்தை 61 2084 திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல் பானுணர்ந் தெண்ணித் தெளிந்து தேறும் அரியபெறற் சன்மார்க்க ஞானநிலை யிதுகிடைத்த வறிவான் மிக்கோர் பெரியமலப் பிணியவிழ்த்துச் சிவானந்தப் பெரும்பேறு மருவிப் பாசம் இரிவதூஉம் புகுவதூஉம் இன்றியொரு நிலையாமவ் வியல்பு தன்னில் 62 2085 உணர்பொருளு முணர்வானு முணர்வுமெனும் பகுப்பொழியா தொழிந்து பானுப் புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும் புனலுவரும் பரிதி மீனுந் துணையவிரண் டறுகலப்பின் னெம்முடனாய்ப் பேரின்பம் துய்த்து வாழ்வார் இணர்விரைந்த மலர்க்கோதா யவர்வடிவே யெமக்கினிய கோயி லாமால் 63 2086 முத்திமுடி பிதுகண்டாய் முன்னியம்பு மூன்றும் முத்திப் பதங்களாகும் இத்தகைய முத்திகளை யிம்முறையான் முயன்றவரே யெய்தற் பாலார் அத்தகைய வலியில்லோ ரெளிதாக வீடுபே றடைவா னெண்ணி வைத்தபெருங் கருணையினான் மேதினிமேற் பலதானம் வயங்கச் செய்தேம் &nb

Related Content

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (169

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30