logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )

kanchip puranam of civanjana munivar 
payiram & patalam 61 -65 /verses 2023 - 2742


Acknowledgements
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of Singapore for the preparation of the etext. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 
© Project Madurai, 1998-2008. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/  
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை யாதீனம் 
சிவஞான சுவாமிகள் அருளிய 
காஞ்சிப் புராணம் 

படலம் 61 - 65: (2023 -2742)

61. தழுவக்குழைந்த படலம்

2023-2449

62. திருமணப்படலம்

2450-2531

63. விம்மிதப்படலம்

2532-2553

64. ஒழுக்கப்படலம்

2554-2621

65. சிவபுண்ணியப்படலம்

2622-2742

61. தழுவக்குழைந்த படலம் (2023- 2449)
 

2023

எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
கம்ப மால்கரி யுரித்தவர் சிரமேற் கம்ப 
      தித்தவர் பசும்பொழில் தலத்துக்
கம்ப லம்விரித் தெனமலர் பரப்புங் கம்பம் 
      மேவிய தொருசிறி துரைத்தாம்
கம்ப லைத்ததிர்த் தெழுந்துமீக் கடுகுங் 
      கம்பை மாநதிப் பெருக்கினைக் காணூஉக்
கம்பம் உற்றுமை தழுவ மெய் குழைந்த 
      கருணை மேன்மையுங் கட்டுரைத் திடுவாம் 
கம் பதித்தவர்.-நீரை வைத்தவர். கம்- நீர்.

1

2024

பொற்ற தாமரைப் பொகுட்டனைக் கிழவன் 
      புகுத லுற்றதற் புருடகற் பத்தில்
பற்றும் வைகறைத் துயிலொழிந் திமயப் பாவை 
      பாகனார் அடிதொழு தெழுந்தான்
முற்றும் வெள்ளநீர்ப் பரப்பிடை யவனி 
      முழுது மாழ்ந்தது கண்டுளங் கவன்று
மற்றி னிச்சக வகிலமும் படைக்கும் 
      வண்ணம் யாதென மயங்குறும் பொழுது

2

2025

பூதி மேனியார் திருவருள் கூடிப் புரிந்த 
      முன்னிகழ் உணர்ச்சிவந் தெய்த
ஆதி கற்பத்தில் எதிரெழுந் தருளி யண்ண 
      லார்கற்பந் தொறுந்தொறும் நின்பால்
சோதி சேரெழிற் குமாரநல் வடிவால் தோன்றி 
      நாமுனக் கருளுது மென்னாப்
பேதி யாவகை தனக்கு முன்னளித்த 
      பெருவ ரத்தினைத் தெளிந்தனன் பிரமன்

3

2026

அன்ன தன்மையி னின்றுமங் கவரே யருள்செய் 
      வாரெனத் துணிபுடை மனத்தால்
தன்னு தற்றலத் தடியிணை கருதித் 
      தவங்கள் பல்பக லாற்றுழித் திகழுஞ்
சென்னி யாற்றின ருத்திர காயத் திரியி 
      னோடெழிற் குமாரநல் வடிவாய்
முன்ன ரெய்திட நோக்கியம் மனுவான் 
      முதல்வ னார்தமை யுணர்ந்துகை தொழுது 

உருத்திர காயத்திரி- ருத்திர காயத்திரி மந்திரத்துக்குரிய தேவி. அம்மந்திரம்- 'தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ தந்நோருத்ர ப்ரசோதயாத்'` தற்புருடற்கு... ... அருளுக` என்பது இதன்பொருள்

4

2027

ஏற்ற தற்புரு டற்குற நினைது மெமக்கு 
      ருத்திர னருளுக வென்னும்
ஆற்றல் சான்றகா யத்திரி மனுவை யனைத்து 
      மாக்குவான் முறையுளி கணித்துப்
போற்ற வார்ந்திழி யருவியங் குவட்டுப் பொருப்பு 
      வில்லவர் கருணைகூர்ந் துலகந்
தோற்று மாறருள் கொடுத்தெழுந் தருளத் 
      தோட்டு வெண்மலர்க் கலைமகள் துணைவன்

5

2028

ஒருமை யன்பினப் புருடனை நினைந்தாங் 
      குலக மாக்குழி யாண்மையே தோன்ற
முருகு லாங்குழற் பெண்மையும் படைப்பான் 
      முயன்றும் எய்திலன் புந்தியின் தேர்ந்து
புருட னுக்கெனத் தற்பொருட் டெய்தும் 
      பொருண்மை நீத்தனன் சகத்திர நயனப்
புருடன் றன்னுடைப் பேரருள் நினைகே
      முருத்தி ரப்பிரா னெமக்கருள் புரிக 
அப்புருடன் - தன் முன் தோன்றிய குமாரவடிவ இறைவனை. 
ஆண் என்னாமல் `ஆண்மை` என்றார், எப்பிறப்பினும் ஆண் பெண் என வேறு 
நிற்பனவன்றி, அவ்விருதிறப் பொருள்களில் தனித்தனியும் ஆண்மை பெண்மை என்னும் 
இருதன்மையும் உள;அவ்விருதன்மையின் கலப்பினாலேயே எப்பொருளும் 
நிலைபெறும். இப்பொழுது, பிரமன் இறைவனது குமாரவடிவே நினைவில் நின்றதால், 
பெண்மை தோன்றாது ஆண்மையே தோன்றிற்று. தற்பொருட்டு எய்தும் 
பொருள் என்றது,’தனக்கு’ என நான்காம் வேற்றுமையாகப் பொருந்தும் பொருள் என்க.

6

2029

என்னும் வேறுகா யத்திரி மனுவை யெழிற்பு 
      ணர்ச்சியி னுலகமுண் டாக்க
மன்னு சீர்க்கிழ மைப்பொருள் வாய்ப்பக் 
      கணித்து மாதவம் புரிவுழி வகிர்நாப்
பன்ன கம்புனை சடைமுடிப் பிரானார் பாதி 
      பெண்ணுருத் திகழ்தரு வடிவான்
முன்ன ரெய்தியிம் மனுவினைக் கணித்தாய் 
      முளரி வாழ்க்கைநீ வேட்டது தெளிந்தேம்.

கிழமைப் பொருள்- சம்பந்தப் பொருள். இது ஆறாம் வேற்றுமைக்குரியது. தற்புருடனுக்கு 
என்னும் பொருளுடைய காயத்திரியைச் செபிக்குங்கால் ஆண் கூறாகிய 
இறைவனையே நினைத்தமையின் ஆண் தன்மையே தோன்றிப் பெண் தன்மை 
தோன்றிலது. அதனை அறிந்து புருடனுடைய அவ்விறைவனுடைய சத்தியையும் 
உடன் நினைத்து இம் மந்தரத்தைக் கூறினார். இறைவன் அமையப்பராகத் 
தோன்றி பிரமன் விரும்பியவரத்தை அருளினார் என்க

7

2030

நினக்கு நாயகி யிவளெம திடப்பால் 
      நின்று நீங்குபு தன்னொரு கூற்றால்
உனக்குப் பெண்ணுருப் படைத்திடு 
      மாற்ற லுதவு மென்றுரைத் தருளவக் கணமே
தனக்கு நேர்வரும் பிராட்டியு மங்குத் 
      தணந்து தோன்றுபு தன்னொரு கூற்றின்
வனப்பு மிக்கவே றணங்கினைப் படைத்து 
      மலர்ப்பொ குட்டனை யவற்கிது வகுப்பாள்

8

2031

இவளை நாள்தொறும் நீவழி பட்டுப் பெண்கள் 
      யாரையும் படைத்தியென் றியம்பி
அவளை நோக்கிநின் கூற்றினிற் பெண்க 
      ளனைத்தும் நீபகுத் திடுகென வருளித்
தவள முண்டகக் கிழத்திதன் கொழுநன் 
      றனக்கு நல்கித்தன் தலைவரை மணந்தாள்
கவள வெங்கரி யுரித்தவர் தாமுங் கருணை 
      செய்துபோயக் கயிலையைப் புக்கார்

9

2032

புக்க பின்தனைத் தொழுதுபோற் றிசைக்கும் 
      போதி னானையவ் வளைக்கையாய் நோக்கி
நெக்க சிந்தையோய் நினக்கியான் புரியும் 
      நிகழ்ச்சி யாதென மலரவன் வணங்கித்
தொக்க பேரருள் எந்தையாரிடத்துத் தோன்று 
      மன்னைநீ பெண்ணுரு முழுதுந்
தக்க வாபடைத் தருள்கதில் லன்றேற் படைக்கு 
      மாற்றலென் றெனக்கருள் புரியாய்

10

2033

இறைவி தக்கன் மகளாதல்
உம்பர் போற்றுநின் திருவடிப் பொடியை யுச்சி 
      மேற்கொண்டு நான்படைக் கின்றேன்
அம்பை யின்னமோர் விண்ணப்ப முளதா 
      லடிய னேன்பெறு தக்கன்றன் மகளாய்
இம்பர் நீயவ தரித்திடல் வேண்டு மென்று 
      வேண்டலு முலக மீன்றளித்த
கொம்பர் நுண்ணிடை யெம்பெரு மாட்டி 
      கூர்த்த பேரருட் கருணையி னுணர்த்தும்

11

2034

முழுது மாயுயிர்க் குயிரெனத் திகழும் 
      முதலு ருத்திர னென்றிடுஞ் சுருதி
தழுவி யாங்கவ னிடப்புறம் மேவுஞ் 
      சத்தி யானவன் சத்தி யனதனால்
தொழுத குந்திற லவன்திரு வடிவாம் 
      தொல்ச கங்களி னிடப்புற மெனதாம்
பழுதி லாளநின் வடிவினைப் பகுத்துப் 
      பாதி பெண்மையாண் பாதியில் திகழ்தி

12

2035

அண்ண லாரருட் சத்தியுஞ் சிவனு மாய 
      தன்மையி னன்றுதொட் டுலகம்
பெண்மை யாண்மையென் றிருவகைப் புணர்ப்பாற் 
      பெண்ணு மாணுமாய்ப் பிறங்குமென்றியம்பிப்
பண்ணை மாமறைக் கடவுளுக் கருளிப் 
      பாவை யம்பிகை யாயிடைக் கரந்து
மண்ணெ லாமுய்யச் சதியெனும் பேரால் 
      வயங்கு தக்கனுக் கொருமக ளானாள்

13

2036

ஆய நங்கையை விதியுளி யரனார்க் 
      களித்து நான்முகன் அன்னணந் திகழ
மாயி ருஞ்சக மாணொடு பெண்ணா 
      வயக்க முற்றன அகிலநா யகியும்
பாயும் வெள்விடைப் பாகரை மணந்து 
      பழித்த தக்கனை வெறுத்தவன் மகண்மை
மேய மேனியை நீத்திம கிரிக்கு 
      மேனை பால்மக ளாயவ தரித்து

14

2037

அங்கண் மேவிய பிஞ்ஞக னேவற் பணியின் 
      மேவின ளாகமற் றந்நாள்
பங்க யத்தவன் நல்கிய வரத்தால் தாரு 
      காசுர னெனெனப்பயில் கொடியோன்
பொங்கு மாண்மையி னுலகெலாம் வருந்தப் 
      பொன்ந கர்க்கிறை குரவனை முதலோர்
தங்கு ழாத்தொடு முசாவிநான் முகத்தோன் 
      றன்னை யெய்தியக் கொடுந்தொழி லியம்பி

15

2038

எந்தை நீயிது தீர்திறம் புகலென் றிறைஞ்சி 
      வேண்டலுந் திசைமுகப் புத்தேள்
அந்த வெந்திறல் தாருகன் செருக்கை யடக்கு 
      மாண்மையன் முருகவே ளன்றிக்
கந்த மென்றொடைக் கடவுள ரேனோர் 
      வல்ல ரல்லரக் கந்தனைத் தருவான்
இந்து சேகர னுமையினை மணக்கு 
      முபாயம் நீபுரி கெனவிடை கொடுத்தான்

16

2039

மீண்டு வாசவன் மாரனை நினைப்ப 
      வேனில் வேள்சிலை பகழிகைக் கொண்டு
காண்ட குங்கவி னிரதியும் மதுவும் 
      மருங்கு மேவரக் கடுகிவந் திறைஞ்சி
ஈண்டு நின்னரு ளாணையின் வலியால் 
      யாது மாற்றுவல் செய்பணி யருளாய்
மாண்ட புப்புரம் பொடித்தவர் தமையும் 
      வெல்ல வல்லுநன் மற்றுரை யெவனோ .
மது -வசந்தன். இவன் மன்மதனின் தோழன்.

17

2040

ஈதி யம்புழி யிந்திர னுவகை யெய்தி 
      விண்ணவ ரிடும்பையு மவுணன்
நீதி யில்லன புரிவதும் மலரோன் நிகழ்த்தும் 
      மாற்றமும் வகுத்துரை செய்து
பேதி யாவகை பெருந்தகை யின்னே பிஞ்ஞ 
      கன்றனை யுமையொடுஞ் சேர்த்தி
போதி யென்றலு மைங்கணைக் கிழவன் 
      பொன்ந கர்க்கிறை விடைகொடு மீண்டான்

18

2041

இறைவன் இறைவியை மணத்தல்
மீண்டு செம்மலா ரிருந்துழி யணுகி மெல்ல 
      வெஞ்சிலை வாங்கலு மவனை
மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின் 
      மடுத்து வார்குழ லிரதிநின் றிரப்பக்
காண்ட காவகை யுருவிலி யாக்கிக் 
      கடுந்த வம்புரி மலைமகள் மணந்து 
தூண்டு வேற்படைக் குரிசிலை யுதவித் தாரு 
      கன்றனைத் தொலைத்தருள் செய்தார்

19

2042

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
ஆங்கதன் பின்னர்ச் செங்கே ழலங்கொளி வடிவின் நஞ்சந்
தூங்கிய மிடற்றி னாருஞ் சுரிகுழ லிமய மாதும்
ஓங்குயர் பலவுஞ் சந்தும் வேரொடு மொடியத் தள்ளி
வீங்கொலி யருவி தாழும் மந்தர வெற்பின் மேலால்

20

2043

உலகெலா முய்யு மாற்றா லுவளகத் தைந்து மூன்றாச்
சிலதிய ரடுக்கி யிட்ட செழுந்தவி சணையின் மன்னி
விலகரு மகிழ்ச்சி மீதூர் திருவிளையாடற் செய்கைக்
கலவியின் நயந்து தம்முட் களித்தினி திருக்கு மேல்வை.
உவளகம் -அந்தப்புரம்

21

2044

கலிநிலைத்துறை
மும்மைப்புவ னங்களுஞ் செய்தவப் பேறு முற்றச்
சும்மைத்திரை நீருடை மேதினி தோற்றம் எய்தச்
செம்மைத்திசை யெட்டினுந் தென்றிசை மிக்கு வெல்ல
மம்மர்த்தொகை நூறிய வண்டமிழ் நாடு வாழ

22

2045

நலம்மன்னிய தண்டக நாடு செழித்து மல்கப்
பலரும்புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவுஞ்சம யங்களொ ராறும் மகிழ்ச்சி கூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மன்ன

23

2046

எவ்வெத்தவத் துஞ்சிவ பூசனை யேற்ற மென்னப்
பௌளவப்புனல் சூழ்படி மேலவர் தேறி யுய்யத்
தெவ்வுத்தொழில் பூணு மறக்கடை தேய நல்கூர்
எவ்வத்திறம் நீங்கி யுயிர்ப்பயி ரெங்கு மோங்க

24

2047

முப்பான்முத லிட்ட விரண்டற முந்த ழைப்ப
எப்பாலுல கத்தொளி யாவையு மெம்பி ரானார்
தப்பாவிழி யின்னொளிச் சால்பென யாருங் காண
அப்பார்சடை யாரடித் தொண்ட ரகங்க ளிப்ப 
அப்பு ஆர் சடை- கங்கைநீர் பொருந்திய சடை

25

2048

இறைவன் திருக்கண்களை இறைவி புதைத்தல் 
கைமிக்கெழு காதல் விருப்புமீ தூர்கு றிப்பின்
விம்மிப்பணைத் துப்புடை வீங்கி யெழுந்த கொங்கைப்
பொம்மற்பெரு மாட்டி வெரிந்புறத் தெய்தி வல்லே
செம்மற்பிறை வேணிய னார்திருக் கண்பு தைத்தாள்

26

2049

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
இருண்டபூங் குழலாள் செங்கை இறுகுறப் புதைத்த லோடும்
இருண்டகந் தரத்தார் நோக்கின் இருசுடர் மறைந்த வாற்றால்
இருண்டது புவனம் முற்றும் இருண்டவெண் டிசையும் என்றும்
இருண்டறி யாத விண்ணோர் இருக்கையும் இருண்ட தந்நாள்

27

2050

அழுங்கவே தன்னை நாளுங் காய்ந்துலாம் அருக்கர் தம்மோ
டொழுங்குறத் திரட்டி நீட்டிச் செருகிவைத் திட்டா லொக்குஞ்
செழுங்கதிர் மதியஞ் செந்தீ உடுமணித்திரளை யெல்லாம்
விழுங்கித்தன் வீறு காட்டிப் படர்ந்தது திமிர வீக்கம்

28

2051

சிறைபடு கூகை யாதி கருங்கொடித் திரள்க ளொத்த
மறமலி புலிக ளாதி வானரக் குலங்க ளொத்த
நறைகமழ் குமுதப் போதும் நளினமுந் தம்மு ளொத்த
உறுதுயர் நேமிப் புள்ளுஞ் சகோரமு மொருங்கே யொத்த 
நேமிப்புள் - சக்கரவாளப் பறவை

29

2052

அலர்தலை யுலகங் காணா ரதற்படு பொருள்கள் காணார்
நிலைபெறு தத்தம் யாக்கை நீர்மையுங் காணார் முந்நீர்க்
கலிதிரை வரைப்பி னோருங் கண்டறி யாத வானத்
தலைவருந் திமிரம் ஒன்றே தணப்பறக் காண்டல் பெற்றார்.

30

2053

இறந்தது படைப்பி னாக்க மிகந்தன வேள்விச் செய்கை
பறந்தன தவந்தா னங்கள் பறைந்தன கடவுட் பூசை
துறந்தன கலவி யின்பந் தொலைந்தன அறிவின் தேர்ச்சி 
மறந்தன மறைநூற் கேள்வி மயங்கின வுலக மெல்லாம்.

31

2054

இறைவி கைநீப்ப இறைவன் கண்திறத்தல்
கடவுளர் முனிவர் மக்கள் யாவருங் கவன்றாங் காங்குப்
படலைவல் லிருளின் மூழ்கிப் பதைபதைத் தாவா வென்னக்
கடலொலிக் கிளர்ச்சி நாண முறையிடுங் காலை வெற்பின்
மடவரல் கரங்கள் நீப்ப மலர்விழி திறந்தார் ஐயர்

32

2055

அல்கின வொளிக ளெங்கு ம·கிய திருளின் வீக்கம்
மல்கின படைப்புங் காப்பும் வயங்கின அறத்தி னீட்டம்
பல்கின வேள்வி யெங்கும் பரந்தன யிறைவர் சீர்த்தி
புல்கின வேத வாய்மை பொலிந்தன வுயிர்க ளெல்லாம்

33

2056

வெறிமலர்த் தளவ மூரல் விழியிணை மறைத்து நீக்குஞ்
சிறுபொழு துலகுக் கெல்லா மெண்ணில்பல் லூழி சென்று
மறைநெறி படைப்புச் செய்கை யாதிய மறுத்த வாற்றால்
இறைவிதன் வதனம் நோக்கி யேந்தலா ரருளிச் செய்வார்

34

2057

இறைவன் இறைவிக்குப் பணித்தல்
இருசுடர் நமக்கா தார மாகிய வெமது கஞ்சத்
திருவிழி புதைத்த வாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி
உருகெழு தீமை நின்னையுற்றதா லதற்குத் தீர்வு
மருமலர்க் குழலி னாய்நீ மரபுளி யியற்ற வேண்டும்

35

2058

இகப்பருங் கருணை பூண்ட வெமக்கும்நின் றனக்கும் நந்தம்
அகத்தடி யவர்க்கும் பாவ மணுகுவ தில்லை யேனும்
வகுத்தவா புரிதி யெல்லாக் கருமமும் மரபி னால்யாம்
நிகழ்த்திய வாறே பற்றி நிகழ்த்திடு முலகங் கண்டாய்

36

2059

என்றருள் செய்யக் கேட்டு நடுக்கமுற் றிறஞ்சி நின்று
மன்றலங் குழலாள் கூறும் வள்ளலே கழுவாய்ச் எய்கை 
என்றதி யாது செய்யுங் காலமே திடமே தெல்லாம் 
நன்றெனக் கருளா யென்ன நம்பனார் வகுத்துச் சொல்வார்

37

2060

கலிநிலைத்துறை
வில்லிழை பூண்டிறு மாந்தெழு கொங்கை விரைக்கோதாய்
அல்லன செய்துபின் னஞ்சுப வர்க்குறு கழுவாய்தாம்
நல்லற நூல்களின் மாதவர் நாட்டின ரவையெல்லாஞ்
சொல்லிய தீர்வு மிகச்சிறு மைத்திது துணிவாயால்

38

2061

எத்துணை வன்மை யறக்கடை முற்று மிறச்செய்யும்
அத்தகு சீர்க்கழு வாயெமை யன்பி னருச்சித்தல்
சித்த மொருக்கி நினைத்தல் பழிச்சுதல் பேர்செப்பல்
பத்தியி னெம்மடி யார்வழி பாடெனு மிவையாமால்

39

2062

முற்றிய சீரிரு முப்பரு வங்களும் முறையானே
அற்றமில் கால மெனப்படும் யாம்பெரி தானந்தம்
உற்றுறை கின்ற விடங்க ளிடங்க ளெம்முறு மன்பர்
பற்றிய தானமு மத்தகை மைத்தென அறிவாய்

40

2063

ஆதலின் நாமுறை வைப்பிடை யாயினு மெம்மன்பர்
மேதக வைகும் வரைப்பிடை யாயினும் மீப்பொங்குங்
காதலி னாலெமை யர்ச்சனை யாற்றுதி யிதுகாணூஉப்
பாதலம் மண்னகம் விண்ணக முய்வது பண்பென்றார்

41

2064

என்றலு மங்கணர் பங்கய பாத மிறைஞ்சித்தாழ்ந்
தொன்றிய சிந்தையி னாளுடை நாயகி யுரைசெய்வாள்
அன்றிய நெஞ்சுரை செல்லருநீ யவரவர் தத்தம்
பொன்று முணர்ச்சியி னர்ச்சனை பூணவு மெளிவந்தாய்

42

2065

நானும் மகிழ்ந்துனை யர்ச்சனை செய்யும் நலம்பெற்றேன்
தேனமர் கொன்றை மிலைச்சிய செஞ்சடை வள்ளால்நின்
ஊனமில் பூசனை செய்திற மெத்திற முரையென்ன
ஆனுடை யூர்தி யருட்கட லன்னவர் புகல்கிற்பார்

43

2066

கரிசறு நித்தநை மித்திக காமிய மெனமூன்றாம்
உரிமையி னெம்மடி யர்ச்சனை யேனைய வுலகத்துப்
புரிதரு பூசனை நித்திய பூசனை யாமன்றித்
தெரிதரி லின்னவை காமியம் நைமித் திகமாகா

44

2067

பொருவறு மூன்று முறும்கரு மம்புரி நிலமீதே
கரும நிலந்திகழ் பாரத மாம்வரு டங்கண்டாய்
திரைகெழு கீழ்க்கடல் மேற்கடல் சேதுவொ டிமயத்துள்
மருவிய மேதினி பாரத மால்வருடம் மாமால்

45

2068

இத்தகு பாரத மாம்வரு டத்தி னெமக்கான
உத்தம வைப்பின் விதிப்படி யெம்மை யிலிங்கத்தின்
முத்துறழ் வெண்ணகை முற்றிழை மூதுல கெல்லாமெய்ச்
சித்தி பெறும்படி வல்லை யருச்சனை செய்கிற்பாய்

46

2069

காஞ்சியே தவம் செயற்கு இடமெனல் 
என்றலு மாவயி னெண்ணில் தலங்களு ளெம்மான்நீ
நன்று மகிழ்ந்துறை மிக்குயர் நற்றலம் யாதென்னக்
குன்று குழைத்து வடிக்கணை பூட்டினர் கோல்கோடி
அன்றின ரிஞ்சி யழித்தரு ளங்கணர் தாம்சொல்வார்

47

2070

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
ஆயிடை நாமகிழ்ந் துறையும் திருப்பதிகள் 
      பலகோடி யவற்றுள் மேலாம்
ஆயிரத் தெட்ட வற்ற திகமொரு நூற்றெட் 
      டவற்றதிக மறுபத் தெட்டாம்
ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனு 
      மிரண்டதிகம் அறிவான் மிக்கோர்
ஆயினவை யிரண்டுள்ளும் சால 
      நமக்கினி யநகர் அணிநீர்க் காஞ்சி

48

2071

இவ்வண்ணம் தானங்கள் பலவகுத்த 
      தெற்றுக்கேல் இயம்பக் கேளாய்
மைவண்ண இருள்ம லத்தின் 
      இருவினையாற் பிணிப்புண்டு மருளின் மூழ்கி
உய்வண்ணம் அறியாத பசுக்கள்தமை 
      அம்மலத்தின் உறாத நாமே
மெய்வண்ணப் பெருங்கருணைத் 
      தன்மையினால் விடுவிக்க வேண்டு மாற்றான்

49

2072

மருவாரும் பூங்குழலாய் ஐவகைய 
      சத்திகளை வகுத்துப் பின்னர்
அருநான்கும் உருநான்கும் அருவுருவந் 
      தானொன்றுமாக ஒன்பான்
திருமேனி தோற்றுவித்துத் தோற்றமுதல் 
      ஐந்தொழிலும் செய்வான் உன்னி 
இருவேறு மாயைகளின் உடல்கருவி 
      இடமனைத்தும் உயிர்கட் கீந்து

50

2073

உள்ளமுதல் விகாரத்தின் எய்துமிரு 
     வினைக்குரிய பிறவி காட்டிப்
பள்ளநீர் நடுக்கீழ்மே லூசலெனக் 
     கொட்புறுத்துப் பருவம் நோக்கி
மெள்ளவினைப் பயனூட்டி நஞ்சோடு 
     சுவையமிழ்தம் விரவித் தீற்றித்
தெள்ளுதவம் அறிந்தறியா துபாயத்தும் 
     உண்மையினும் சேரச் செய்வேம்

51

2074

தீக்கையின் வகை
சரியையெனக் கிரியையென யோகமென 
     ஞானமெனச் சாற்று நான்காம்
இரியமலத் துகளறுத்து நமைக்காட்டும் 
     அருந்தவங்கள் இவற்றிற் சேறற்
குரிமைதரும் உயர்தீக்கை சமயமுதல்
      மூன்றவை தாமுதவும் முத்தி
அரிலகன்ற எம்முலகத் துறலாதி 
     நான்கென்ன அறையும் நூல்கள்

52

2075

தேக்கூறு தேமொழியாய் மலம்சீக்கும் 
     தீக்கைபல விதமாம் அங்கண்
நோக்கூறு மொழியெண்ணம் நூல்யோகம் 
     அவுத்திரியா நுவலும் ஏழுள்
மீக்கூறும் அவுத்திரிதான் வியன்கிரியை 
     ஞானமென விருபா லாய்முப் 
பாற்கூறு படுஞ்சமய விசேடநிரு 
     வாணமெனும் பகுப்பி னாலே

53

2076

மருவுபுற மகமென்னும் மதத்துழன்று 
     வருணநிலை வழாது நின்று
மிருதிமறை நெறிவேள்வி பலபுரிந்து 
     வேதாந்தப் பொருண்மை தேறி
வருமுறையா னிவையனைத்தும் 
     முற்றியபின் மேனோக்கும் மதியான் மிக்கோர்
தெருளுதவு சைவநெறிப் படுஞ்சமய 
     தீக்கைதனக் குரிய ராவர்

54

2077

சரியா பாதமும் அதன்பயனும் 
அவ்வாற்றான் யாமருவும் திருக்கோயி 
     லலகிடுதல் மெழுகல் அன்பின்
செவ்வாற்றான் மலர்கொய்து தார்மாலை 
     தொடுத்தணிதல் தீப மேற்றல்
மெய்வாய்ப்பச் சிவனடியார் பணித்தபணி 
     தலைநின்று மேவ லாதி
இவ்வாற்றில் தாதநெறிச் சரியையினைப் 
     புரிவோரெம் உலகின் வாழ்வார்

55

2078

கிரியாபாதமௌம் அதன் பயனும்
ஈதியற்றி முற்றியபின் மகநெறிக்காம்
      விசேடத்தை யெய்திப் பூசைக்
கோதியகொண் டாதார சத்திமுதல் 
     சத்தியீ றோங்கு கஞ்சத்
தாதனமே மூர்த்திமுதல் பாவித்தா 
     வாகித்தா வரண பூசை
ஆதியசெய் தழலோம்பு மிக்கிரியை 
     வழாதாரெம் மருகு வாழ்வார்

56

2079

யோகபாதமும் அதன்பயனும்
இக்கிரியை முற்றியபின் இயமாதி யெட்டுறுப்பின் 
     இயல்பு வாய்ந்து
பக்கவளி தனையடக்கி நடுநாடி
      யுறப்பயிற்றி யாறா தாரந்
தொக்கபொரு ளுணர்ந்தேகி மதிவரைப்பின் 
     அமுதுண்டு சோதி யுள்ளால்
புக்கழுந்துஞ் சகமார்க்க யோகுழப்போ 
     ரெம்முருவம் பொருந்தி வாழ்வார்

57

2080

ஞானபாதமும் அதன் பயனும்
முறையானே யிம்மூன்றும் முற்றியருள் 
      பதிந்துவினை யொப்புவாய்ந்து
நிறைவாய பருவத்தி னுயிர்க்குயிராய் 
      நின்றருளும் யாமே தோன்றி
மறைவாய்மை நிருவாண விதியாற்றால் 
      வழியாறும் தூய்மை செய்து
குறையாத பேரருளி னறிவுறுக்கு 
      மஞ்செழுத்தின் கொள்கை தேற்றி

58

2081

அருவுருவங் குறிகுணங்கள் முதலீறு 
      கட்டுவீ டனைத்து மின்றிப்
பெருமையதாய் நுண்ணியதாய்ப் 
      பேருணர்வா யானந்தப் பிழம்பா யெங்கும்
ஒருமுதலா யழிவின்றி யோங்கொளியாய் 
      நிறைந்துளதா யுயிர்கள் தோறும்
விரவியுடன் தொழிற்படுத்துப் புலங்கொளுத்தி 
      வீடுய்க்கும் பதியா மெம்மை

59

2082

எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல் 
      பற்றியவை தாமா யென்றும்
உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்சத்தா
      யிருளுமொளியு மல்லாக்
கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாயெம் 
      மருளாற்கட்டறுத்து வீடு
நண்ணுபவாய் உணர்த்தவுணர் சிற்றறிவிற் 
      பலவாம்நற் பசுக்கள் தம்மை

60

2083

ஒன்றாகி யழிவின்றிப் பலவாற்ற 
      லுடைத்தாய்ச்செம் புறுமா சென்னத்
தொன்றாகி யருள்விளைவின் நீங்கு 
      மிருள்ம லத்துடனத் தொடக்கு நீப்ப
மின்றாவு முடலாதி நல்குமிரு 
      மாயை யிருவினைகட் கேது
என்றோது கருமமிவை நிகழ்த்து 
      திரோதமு மெனுமை வகைப்பா சத்தை

61

2084

திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல் 
      பானுணர்ந் தெண்ணித் தெளிந்து தேறும்
அரியபெறற் சன்மார்க்க ஞானநிலை 
      யிதுகிடைத்த வறிவான் மிக்கோர்
பெரியமலப் பிணியவிழ்த்துச் 
      சிவானந்தப் பெரும்பேறு மருவிப் பாசம்
இரிவதூஉம் புகுவதூஉம் 
      இன்றியொரு நிலையாமவ் வியல்பு தன்னில்

62

2085

உணர்பொருளு முணர்வானு முணர்வுமெனும் 
      பகுப்பொழியா தொழிந்து பானுப் 
புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும் 
      புனலுவரும் பரிதி மீனுந்
துணையவிரண் டறுகலப்பின் னெம்முடனாய்ப் 
      பேரின்பம் துய்த்து வாழ்வார்
இணர்விரைந்த மலர்க்கோதா 
      யவர்வடிவே யெமக்கினிய கோயி லாமால்

63

2086

முத்திமுடி பிதுகண்டாய் முன்னியம்பு 
      மூன்றும் முத்திப் பதங்களாகும்
இத்தகைய முத்திகளை யிம்முறையான் 
      முயன்றவரே யெய்தற் பாலார்
அத்தகைய வலியில்லோ ரெளிதாக 
      வீடுபே றடைவா னெண்ணி
வைத்தபெருங் கருணையினான் 
      மேதினிமேற் பலதானம் வயங்கச் செய்தேம்

&nb

Related Content

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (169

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம்

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30