1692
|
தண்காமர் புனல்குடையுந் தையலார்
திமிர்ந்தநறுந் தகர ஞாழல்
எண்காதங் கமழிலஞ்சி மகாலிங்கத்
தளிபுகன்றாம் இதன்வ டாது
விண்காவ லுடையார்மன் இளநகைபூத்
திவ்வாலம் விடுக்கா அன்றி
உண்காவென் றருள்செய்தான் வீராட்ட
காசநகர் உரைத்து மாலோ
விடுக்கா -விடுக்கவோ. உண்கா - உண்கவோ
|
1
|
1693
|
சர்வசம்மாரக்காலத் திருக்கூத்து
வள்ளவாய் நறைக்கமல வெண்பீடத்
தரசிருக்கும் மாதர் அன்னப்
புள்ளவாம் நடைநல்லாள் முலைமுகட்டிற்
கோட்டியபூங் களபந் தோய்ந்த
கள்ளவாந் தொடைத்திண்டோள் மறைக்கிழவன்
ஒருவனுக்குக் கடையேன் உள்ளத்
துள்ளவாம் இறைவகுத்த பராத்தங்கள்
ஓரிரண்டும் ஒழிந்த காலை
|
2
|
1694
|
ஐவண்ண நிறம்படைத்த திருமுகமைந்
துடையபிரான் அருளால் அந்திச்
செவ்வண்ணக் காலத்தீ உருத்திரப்புத்
தேள்நுதற்கண் செந்தீப் பொங்கி
மொய்வண்ண அண்டமெலாம் முழங்கிநிமிர்ந்
தெழுந்துருக்கி உண்டு தேக்கி
மெய்வண்ண மனத்தன்பர் வினைப்பறம்பின்
நீறாக்கி விட்ட தாக
வினைப்பறம்பின் நீராக்கி - மலையைச் சாம்பலாக்கியதைப் போல
வினைமலையை நீறாக்கி.
|
3
|
1695
|
ஆயநாள் இரவில்லை பகலில்லை
அயனில்லை அரியு மில்லை
மேயவான் முதல்பூதம் இலையேனைப்
பவுதிகத்தை விளம்பு மாறென்
பாயபே ரண்டமெலாம் இவ்வாறு
படநீற்றிப் புரமூன் றட்ட
காய்க ணையோன் ஆனந்த மேலீட்டின்
தன்னியல்பு கருத்துட் கொள்ள
|
4
|
1696
|
கடைநாளும் அழியாது தன்னொருபாற்
பெருமாட்டி காப்ப வைகும்
நடைமாறாத் திருக்காஞ்சி நகர்மன்னி
உலகீன்ற நங்கை காண
இடையாம இரவெல்லாம் திருக்கூத்து
நவின்றருளி எறுழ்கால் வெள்ளை
விடையாளுந் தனிப்பாகன் ஆர்த்தார்த்து
வீரநகை விளைத்தான் மேன்மேல்
|
5
|
1697
|
அவ்விரவு புலர்காலை திருநடனம்
நீத்திலிங்க வடிவ மாகி
அவ்வரைப்பின் விளங்கினான்
ஆதலினால் வீராட்ட காசத் தேவாம்
அவ்விலிங்கம் வழிபட்டுச் சிலர்சித்தர்
அற்புதமாம் சித்தி பெற்றார்
அவ்வியல்பு தனைக்கேட்டுக் கொங்கணமா
முனிச்செல்வன் அங்கண் எய்தி
|
6
|
1698
|
கொங்கணமுனிவர் வழிபாடு
அவ்விலிங்க மேன்மையினை அளந்தறிவான்
ஆங்கதன்றன் சென்னி மீது
செவ்வனே தன்குளிகை ஈந்திட்டான்
மற்றவற்றின் சிரமேல் வைப்பின்
எவ்வமுற நீறாக்கும் அனையதையக்
கணமேயவ் விலிங்கம் உள்ளால்
வௌளவியது தனைக்கண்டான் வியப்பெய்தி
அவ்விலிங்க முன்னர் வைகி
|
7
|
1699
|
மெய்த்தவங்கள் இனிதாற்றிப் பேறுற்றான்
இன்னுமவண் மேவிச் சீர்சால்
சித்திகளை உழவாது பெறுகின்றோர்
எல்லையிலர் செந்நீர் தேக்கும்
முத்தலைவேல் வீராட்ட காசேசன்
மேன்மையெவர் மொழிவார் மாயன்
அத்தலத்தே வழிபட்டுப் பவளநிறம்
பெற்றானவ் வகையுஞ் சொல்வாம்
|
8
|
1700
|
திருமால் பவளநிறம் பெற்ற வரலாறு
எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
விரிதிரை சுருட்டிக் கரைமிசை எறியும்
வெள்ளிவெண் பாற்கடல் வரைப்பின்
எரிமணி மாடப் போகமா புரத்தின்
எய்தருந் தனியிடத் திருந்து
புரிமுறுக் குடைந்து நறவுகொப் புளிக்கும்
பூந்தவி சணங்கினோ டிணங்கி
வரிவளைக் குடங்கை வானவன் விளையாட்
டியற்கையின் மகிழ்வுறும் ஒருநாள்
|
9
|
1701
|
மாயிரு ஞால முழுதுமீன் றளித்து
மனைவியும் மணாளனு மாயோர்
ஆயிடைப் பொழுது கழிப்பிய தம்முட்
கதைசில அறைகுவா னமைந்தார்
பாயபாப் பணையில் அறிதுயில் அமர்வோன்
பனிமலர்க் கிழத்தியை நோக்கித்
தேயும்நுண் நுசுப்பின் அகன்றபே ரல்குல்
ஒருகதை கேளெனச் செப்பும்
|
10
|
1702
|
நன்னிறம் படைத்த நாமநீர்ப் பரவை
நளிதிரைப் பாற்கடல் மாமை
புன்னிறந் தோற்ற வெள்ளொளி விரிக்கும்
புகரறு கயிலையெம் பெருமான்
மின்னிடை மருங்குல் உமையுடன் ஒருநாட்
கறங்குவெள் ளருவியஞ் சாரல்
தன்னிறம் மாண்ட மந்தரப் பறம்பின்
தனியிடத் தினிதுறும் ஏல்வை
|
11
|
1703
|
எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட் டுண்ண
ஈர்ந்தொடை நறாவிரி ஐம்பால்
கழாமணி மேனிப் பிராட்டியை நோக்கிக்
காளியென் றெம்பிரா னழைப்ப
வழாநிலைக் கற்பின் உள்ளகம் வெதும்பி
வரிவிழி நித்திலம் உகுத்துக்
குழாமுடை இமையோர் ஏத்தெடுத் திறைஞ்சுங்
கோமளை யின்னது கூறும்
|
12
|
1704
|
விடுந்தகைக் காள நிறம்படைத் துளன்யான்
வெண்ணிறம் படைத்துளை நீயே
நெடுந்தகாய் நமக்குப் புணர்ச்சி யெவ்வாறு
நிகழும்மற் றிங்கிது காறும்
கடுந்தகை என்மாட் டருளினால் இன்பக்
கலவியில் திளைத்தனை இனிநான்
அடுந்தகைப் படையோய் கவுரியாம் வண்ணம்
பெறுமுறை அருடியென் றிரந்தான்
கடுந்தகை- விரும்புதற்கேலாத இயல்பு. கவுரி - பொன்னிறம்
|
13
|
1705
|
பொலங்குவட் டிமயப் பனிவரைப் பிராட்டி
புகன்றன திருச்செவி சாத்தி
இலங்குவெண் ணீற்றுச் சுந்தரக் கடவுள்
இயம்புவான் வரிவிழி கேட்டி
கலங்கஞர் எய்தேல் கடவுளர் கருமப்
பொருட்டுனை இம்முறை அழைத்தேம்
நலங்கொள உலகம் நாள்தொறும் புரத்தல்
நங்கட னாதலின் கண்டாய்
|
14
|
1706
|
மற்றது பின்னர்த் தெளிதிநீ கவுர
நிறம்பெறு மாறுனக் குரைப்பல்
வெற்றிடம் இன்றி எங்கணும் நிறைந்து
பரவெளிப் பரப்பிடை மேவும்
பெற்றியன் யானே யாயினுந் தகைசால்
பீடுயர் தலங்களின் மாட்டும்
அற்றமில் மறையோர் அகத்திலு முலவா
வருள்சுரந் தினிதுவீற் றிருப்பேன்
|
15
|
1707
|
மேம்படும் அவற்றின் உத்தமத் தளிகள்
விதியுளி மறைநெறி ஒழுக்கம்
ஓம்பிமிக் குயர்ந்தோர் உள்ளமும் எனக்குச்
சிறந்தன அவற்றினும் மேலாய்த்
தேம்பொழில் வேலிக் காசிமா நகரும்
யோகிகள் சிந்தையுஞ் சிறந்த
வாம்பகர் அவற்றிற் காஞ்சியும் உண்மை
அடியவர் உள்ளமுஞ் சிறந்த
|
16
|
1708
|
தகைபெறும் அவற்றின் வேறெனக் கினிய
தானம்மற் றெங்கணும் இல்லை
நகைமலர்க் கொடியே அந்நகர் எய்தி
நயந்தெனை அருச்சனை யாற்றி
மிகையறு தவத்தான் வேட்டவா பெறுதி
என்றலும் விளங்கிழை உமையாள்
பகைவினை துரக்குங் காஞ்சியின் எய்திப்
பஞ்சதீர்த் தக்கரை ஞாங்கர்
|
17
|
1709
|
மாதவம் இயற்றிப் பொன்னுருப் பெற்றுக்
கவுரியாய் வயங்கினள் இனைய
மேதகும் இறும்பூ தென்னெனப் புகல்வேன்
வெறிமலர்ப் பங்கயத் தவிசின்
மாதர்வாள் நகையாய் என்றெடுத் துரைத்தான்
மந்தரம் அலமரச் சுழற்றி
ஓதநீர் அளக்கர் அமுதெடுத் திமையோர்க்
கூட்டிய பெருந்திறற் குரிசில்
|
18
|
1710
|
செய்யவள் கேட்டு வியப்புமீக் கூர்ந்து
செப்புவாள் என்னையா ளுடையாய்
ஐயவிச் செயலைக் கேட்டொறும் உலவா
அற்புதம் பயக்குமால் மன்ற
மெய்யுணர் வின்பச் சத்தியும் சிவனும்
விளைக்குமிவ் விளைவுக ளெல்லாம்
மையறத் தெளிந்தோர் திருவிளையாட்டின்
வண்மையென் றியம்புவார் மன்னோ
|
19
|
1711
|
இற்றலாற் காமற் காய்ந்துமுற் றுணர்ந்து
வரம்பிலின் புடைய வீசனுக்கு
மற்றெவன் உளதோ அவ்விளை யாட்டும்
உலகெலாம் உய்யுமா றன்றே
அற்றென உணராக் கயவர்கள் காமத்
திறமெனக் கருதுவர் அனையர்
பெற்றியை யாரே தெளிதரற் பாலார்
பிறங்கொளி மணிநிறக் குரிசில்
|
20
|
1712
|
திருமகள் வேண்டுகோள்
நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்
நிலைபெறத் தொழிற்படுத் துடைய
தலைவனங் கவனே பனிவரைப் பிராட்டி
தன்னையும் நின்னையும் இடப்பால்
மலரணைப் புத்தேள் தன்னையும் எனையும்
வலப்புடைக் காலருத் திரனைக்
கலைமகள் தனையும் உளத்திடைத் தந்தான்
காத்துயிர்த் தழிப்பது கருதி
|
21
|
1713
|
அகிலமுந் தானே அருள்தொழில் நடாத்தும்
ஆங்கவற் கெவற்றினும் சால
மிகுபெருங் காத லுமையவ ளிடத்தும்
விரவும்நின் னிடத்தினும் அன்றே
முகிலுறழ் கூந்த லவளென் நீயும்
முதல்வனே யுன்னடி யேற்கு
மகிழ்வுமீக் கிளைப்ப அவ்வுரு பெறுதி
என்றனள் மலரணைக் கிழத்தி
|
22
|
1714
|
விளங்கிழை மாற்றம் அச்சுதன் கேளா
வெகுண்டுநின் மனக்கருத் திதுவேல்
களங்கனை அனையேன் றன்னுடன்
இந்நாள் காறும்நீ பொலஞ்சுடர் நிறத்தாய்
வளங்கெழும் இன்பம் என்னணம் நுகர்ந்தாய்
மற்றினிச் செக்கர்வான் உருவம்
உளங்கொளப் பெறுகேன் என்றவட் கியம்பிக்
கதுமெனக் கரந்தனன் ஊங்கு
|
23
|
1715
|
கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட
காசநல் வரைப்பினுக் கெதிரா
அச்சிவன் வீர நகைதிரண் டனைய
சக்கர தீர்த்த முண்டாக்கி
முச்சகம் ஏத்துங் கங்கையிற் சிறந்த
அத்தடம் மூழ்கிநோன் பியற்றிப்
பச்சைமால் வதிந்தான் வதிந்திடம் பச்சை
வண்ணனா லயமெனப் படுமால்
|
24
|
1716
|
ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே
ழாயிரம் அளிகெழு பொகுட்டுத்
தேங்கமழ் கமலங் கொண்டுவீ ராட்ட
காசமா தேவனை அருச்சித்
தோங்குபே ரன்பின் தொழுதெழுந் திரப்ப
உலப்பருங் கருணைமீக் கூர்ந்து
மாங்குயில் பாகன் எதிரெழுந் தருளி
வழங்கினன் பவளம்நேர் வடிவம்
|
25
|
1717
|
பொரியரைக் காயாம் போதுறழ் வண்ணங்
கழீஇத்துகிர் புரைநிறம் எய்திப்
பெரிதுளம் மகிழ்ந்தான் ஆயிடைச் சிலநாள்
வைகிமீண் டரவணைப் பெருமான்
விரிதிரைத் தீம்பாற் கடலகத் தணுகி
விரைமலர்க் கிழத்தியோ டிணங்கித்
தெரியிழைத் திருவே காண்டிநீ பவளச்
சேயொளி தழைக்குமிவ் வடிவம்
|
26
|
1718
|
கச்சறப் பணைத்துப் புடைபரந் தெழுந்த
கதிர்மணி முலையினாய் இதுவென்
இச்சையாற் பெற்றேன் விழந்தவா றென்மாட்
டின்னலம் நுகரெனக் கேட்டுப்
பச்சிளந் தோகை இந்நிறம் அடிகள்
இச்சையாற் படைத்ததேல் மாய
விச்சையே போலும் நிலைமையன் றெனக்கீ
தென்பயன் விளைத்திடு மென்றாள்
|
27
|
1719
|
பாய்சிறைக் கலுழப் புள்ளர சுகைக்கும்
ப·றலைச் சேக்கையன் வெகுளா
நீயினி யிருந்தை வண்ணமா கென்னச்
சபித்தலும் நேரிழை மேனிச்
சேயொளி கருகக் கண்டுளம் பதைத்தாள்
சிறியனேன் செய்பிழை பொறுத்திங்
கேயுமிச் சாபம் தவிர்த்தருள் பொறையாள்
கொண்கனே யென்றடி பணிந்தாள்.
இருந்தை- கரி. பொறையாள்- பூமி
|
28
|
1720
|
திருமகள் காஞ்சியை யடைதல்
தெம்முனை கடந்த திகிரியோன் இரங்கிச்
சீற்றத்தால் விரைந்துனைச் சபித்தேன்
அம்முறை யாற்றாற் கரிநிறம் பெற்றாய்
ஆயினும் முன்னையின் விழைய
வெம்முலைப்போகம் எனக்குள தாகவெருவலை
எனத்தழீஇக் கொள்ளச்
செம்மலர்த் திருவும் அடியிணை இறைஞ்சித்
திருந்துதன் இருக்கையுட் புக்காள்
|
29
|
1721
|
புக்கபின் அங்கண் பாங்கியர் தம்மோ
டுசாவினள் புதுநறாக் கான்று
நக்கபூஞ் சோலைக் காஞ்சிமா நகரை
நண்ணியாங் கிணைவிழி களிப்பத்
திக்கெலாம் பரசத் திகழுல காணித்
தீர்த்தநீர்த் தடங்கரை மாடே
மைக்குழல் உமையாள் இனிதமர்ந் தருளித்
தவஞ்செயும் வரைப்பினைக் கண்டாள்
|
30
|
1722
|
அனையநல் வரைப்பு நுண்பில மாகி
அருட்பர வெளியதாய்த் திகழும்
கனைகடல் உடுக்கை நிலமகட் குந்தித்
தானமாம் கமழ்நறுங் கடுக்கைத்
தனிமுதற் பிரமந் தனக்கொரு வடிவாம்
தாழ்குழலுமையவட் கடியார்
வினைதபு மூலத் திருவுரு வதுவே
விளங்கொளிக் காஞ்சியம் பதியுள்
|
31
|
1723
|
குறைவிலா நிறைவாய் உண்மையாய்
அறிவாய்க் கொட்புறு மனமடங் கிடமாய்
மறைமுடிப் பொருளாய் இன்பமாய்ச்
சிவமாய் மாசற வயங்குபே ரொளியை
நிறைதவ யோகத் தலைவர் இவ்வாறு
நெஞ்சகத் தேவழி படுவார்
அறைகடற் பரப்பிற் காஞ்சிமா நகரின்
ஆயிடை வழிபடு வாரால்
|
32
|
1724
|
காமகோடி - பெயர்க்காரணம்
ஒருமுறை யங்கட் காமமாம் தருமம்
உஞற்றுநர் தமக்குமத் தருமம்
தருபயன்கோடி யாதலிற் கரடத்
தடத்திழி கடாம்படு கலுழிப்
பெருவரை வதனப்பிள்ளையைக் குகனைப்
பெற்றவள் அமர்பிலம் அதுதான்
கருதரு காமக் கோடியென் றுலகிற்
காரணப் பெயரினால் வயங்கும்
|
33
|
1725
|
அன்றியும் காமக் கிறையவர் தனத
ரனையவர் கோடியர்த் தரலால்
என்றுமோ ரியல்பின் எங்கணும் விரவி
யெவற்றினுங் கடந்தபே ரொளியைக்
குன்றுறழ் கொம்மைக் குவிமுலைத் தடத்தாற்
குழைத்தருள் கருணையெம் பிராட்டி
நன்றுவீற் றிருக்கும் பேரொளிப் பிலத்திற்
கப்பெயர் நாட்டலும் ஆமால்.
|
34
|
1726
|
இன்னுமிப் புவனப் பரப்பினிற் காம
மென்பன மனைவியர் மக்கள்
பொன்னணி யிருக்கைப் பூண்முதற் பலவாம்
பூந்தளிர் அணிநலங் கவற்றுந்
தன்னடி வணங்கி இரந்தவர் தமக்குத்
தடங்கிரி பயந்தபே ராட்டி
அன்னவை கோடி யளித்திட லானு
மப்பெய ரெய்துமங் கதுவே
|
35
|
1727
|
அல்லதூங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி
அடுதொழிற் கூற்றினைக் குமைத்த
கொல்லையேற் றண்ணல் நுதல்விழிச்
செந்தீக் கோட்படும் ஒருதனிக் கருப்பு
வில்லியை விளையாட் டியற்கையிற் கோடி
காமரா விழித்துணைக் கடையால்
அல்லியங் கோதை யாங்களித் திடலால்
அப்பெயர் பூண்டது மாமால்
|
36
|
1728
|
மற்றுமா ருயிர்சேர் நாற்பொருட் பயனில்
வகுத்தமூன் றாவது காமம்
பற்றுகா மத்திற் கோடியா முடிவிற்
பயில்வது வீடுபே றாகும்
உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கும்
உண்மையி னானுமப் பெயராற்
சொற்றிடப் படுமால் உலகெலாம் ஈன்றா
ளமர்ந்தருள் சுடரொளி விமானம்
|
37
|
1729
|
பின்னரும் ஒன்று ககரமே அகரம்
மகரமாப் பிரிதரும் மூன்றும்
அன்னவே றுகைக்கும் அயனரி ஈசன்
ஆயமுத் தேவரைப் பகரும்
இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி
முறையெழில் விழிகளிற் படைத்தாள்
மின்னிடைப் பிராட்டி யென்பத னானும்
அப்பெயர் விளங்கு மென்பதுவே
|
38
|
1730
|
வேறுமொன் றாங்கட் காவெனப் படுவாள்
வெண்மல ராட்டிமா வென்பாள்
ஊறுதேங் கமலப் பொகுட்டணை யணங்காம்
ஊங்குவர் இருவரும் முகிலை
மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி
தன்னிடை வருமுறை யானும்
ஏறுமத் திருப்பேர் எம்பெரு மாட்டிக் கென்றெடுத்
தியம்புவர் உணர்ந்தோர்
|
39
|
1731
|
விந்துவின் வயங்கி யம்பைவீற் றிருக்கும்
வியன்திருச் சக்கர வடிவாம்
அந்தவான் பிலந்தான் இயம்பிய காமம்
அனைத்திற்கும் ஆதர மாகிப்
பந்தமில் காமக் கோட்டமென் றொருபேர்
பரித்திடும் மற்றெவற் றினுக்கும்
முந்திய பீட மாதலின் ஆதி பீடமும்
மொழிந்திடப் படுமால்
|
40
|
1732
|
இனைய தாகிய திருப்பிலம் அதனை
எழால்மி டற்றிளஞ் சுருப்பினம் முரலும்
நனைக லுழ்ந்தலர் மலர்த்தவி சிருக்கை
நகைமலர்க்கொடி கண்டுகை தொழுதே
அனைய சூழலின் இடப்புறம் வைகி அடங்க
லார்புரம் அழலெழச் சிரித்த
முனைவ னார்க்கொரு சத்தியாய் இன்பாய்
முழுது மாகிய அகில காரணியை
|
41
|
1733
|
பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால் தரைக்கண்
பதமி ரண்டொடு பதிட்டையால் புனற்கண்
பாதம் நான்கொடு வித்தையால் கனற்கண்
பதங்கள் எட்டொடு சாந்தியால் வளிக்கண்
பாதம் ஒன்பத னொடுவெளிப் பரப்பிற் பகருஞ்
சாந்தியின் அதீதமாங் கலையாற்
பாதம் ஆயிரத் தொடுபர வெளிக்கண்
பயிலும் அக்கரத் தனிமுதற் பரையை
|
42
|
1734
|
திருமகள் வழிபாடு
எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
கருமை செம்மைவெண் ணிறமுடை யாளைக்
காமக் கோடிவான் பிலவடி வாளை
அருவி தாழ்குவட் டணிமலை மகளை மாயை
யோடுல கனைத்துமீன் றாளை
உருகி நெக்குநெக் குளப்பெருங் கோயி லுள்ளு
றுத்தியென வுடம்பினைப் பொதிந்து
மருவு மிக்கரு நிறஞ்செதிள் எடுப்பான்
கருணை செய்கென வழிபட லுற்றாள்
|
43
|
1735
|
வருண னாருனை வாருணி யெனப்பிருகு
மாதவற் கருளிய வாற்றால்
பிருகு வாரநா ளுனைவழி படுவார் பெருவ
ளத்தொடு வாழ்வாரென் றுரைப்ப
அருவி னைப்புலக் குறும்பெறிந் துயர்ந்த
பிருகு மாமுனி மகளடி யேற்கும்
கருணை செய்வது கடனுனக் கன்றே கருப்பும்
வில்லியைக் காய்ந்தவர்க் கினியாய்
|
44
|
1736
|
காஎ னப்பெய ரியகலை மகளைமுந்தை
ஞான்றுநின் கண்ணெனப் புரந்தாய்
மாஎ னப்பெய ருடையமற் றெனையும் மலர்ந்த
நின்விழி போற்புரந் தருளி
ஏஎ னப்பிறழ் தடங்கணாய் காமக்கண்ணி
யாம்பெயர் எய்துவை என்னாப்
பூஎ னப்பயில் அணைமிசைக் கிழத்தி போற்றி
சைத்தலும் எதிரெழுந் தருளி
|
45
|
1737
|
திருமகள் வரம் பெறல்
எம்பி ராட்டிவான் கருணைகூர்ந் தருளி யேட
விழ்ந்தபூந் தவிசுறை யணங்கே
கம்பி யாதிமற் றுன்னுடற் கருமை கரிய
சாந்தமாக் கழிகமுன் னையினும்
நம்பு நல்லுருப் பெறுதியிப் பொழுதே நார
ணற்குமிக் குரியவ ளாவாய்
வம்ப றுத்தெழுந் தோங்கியண் ணாந்து மதர்த்து
வீங்கிய வனமுலைத் தோகாய்
|
46
|
1738
|
அழகு வாய்ந்தநின் வடிவினிற் கழியும்
அனைய சாந்தணி நுதலினர் தமக்கு
விழவும் இன்பமுஞ் செல்வமும் புகழும்
மேக லின்மையும் இகழுமற் றொழிக
பழைய வேதமுற் றுணர்ந்துயர் சிறப்பிற்
பனுவ லாட்டியு மிவணமர் செயலாற்
கழிவில் அன்பின்நீ வேட்டவா றெனக்குக்
காமக் கண்ணியாம் பெயருறு கென்ன
|
47
|
1739
|
இறைவி திருமாலுக்குக் கட்டளை யிடுதல்
இனைய வாறிவண் நிகழ்வுழிச் சுரும்பர்
இமிருந் தாமரை உந்தியங் கடவுள்
மனைய கத்துமா மடந்தையைக் காணான்
மனமழுங்கினன் பிரிவுநோய் வருத்தக்
கனைக டற்பரம் பெங்கணுந் தேடிக்
காஞ்சி மாநகர் ஆவயின் கண்டான்
அனைய தாரமும் இறைவியும் தம்முள் அறைவ
கேட்டவண் ஒளித்துநின் றனனால்
|
48
|
1740
|
ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை யுணர்ந்து
நோக்கினர் என்னையா ளுடையாள்
கள்வன் ஒத்திவண் நிற்பவன் யாரே யெனக்க
டாயினள் கடிமலர் அணங்கும்
வெள்க லுற்றுமுன் இறைஞ்சினள் மாயோன்
விரைவின் அம்பிகை திருவடி வணங்கி
உள்ள கம்பெரு மகிழ்ச்சியின் திளைப்ப
ஒரும ருங்குற ஒடுங்கிநின் றனனே
|
49
|
1741
|
நங்கை நாகணைக் குரிசிலை நோக்கி
நன்று வந்தனை யோவென வினவி
அங்கண் முச்சகம் நீபுரந் தளிக்கும் ஆரு
யிர்த்தொகை இனிதுவாழ்ந் தனவே
பங்க யக்கணாய் என்றலும் கலுழப் பாகன்
நின்னருட் கருணைபெற் றுடையேம்
எங்கள் வாழ்வினுக் கெவன் குறையானும்
இவளும் உய்ந்தனம் எனத்தொழு துரைத்தான்
|
60
|
1742
|
இறைவி பின்னரும் ஒன்றவற் கியம்பும்
ஈண்டு முப்பதிற் றிரண்டறம் வளர்க்கும்
முறையின் என்னறச் சாலையீ திங்கோர்
மூரிப்பாரிடம் இதற்கிடை யூறாய்க்
குறைவி லாற்றலி னுழிதரு மதனைக்
குறும்ப டக்குதி நீயென யேவ
நறைம லர்த்துழாய் மோலியும் இறைஞ்சி
நயந்து பஞ்சதீர்த் தத்தடங் கரைப்பால்
|
51
|
1743
|
மூரிப் பாரிடம் - வலிய பூதம்
திருமால் பூதத்தை யடக்கல்
அன்று பாரிடம் பாரிடை வீழ்த்தி யாற்ற
லான்மிதித் ததன்மிசை நின்றான்
நின்ற வன்றனை உந்திமேல் எழும்ப நெரித்தி
ருந்தனன் இருந்தவன் றனையும்
வென்றி சால்விறற் பூதம்மேல் உந்த நீண்டு
மற்றதன் மிசைப்படக் கிடந்தான்
கன்று பூதமும் வலிமுழு திழந்து கமலக்
கண்ணனை வணங்கியொன் றிரக்கும்
|
52
|
1744
|
வள்ள லேமலர்த் திருவிளை யாடு மார்ப
னேபெரும் பசியெனை வருத்த
உள்ளு டைந்துளேன் ஆண்டுதோ றடிமேற்
கொரும கன்றனை உயிரொடும் உதவின்
கொள்ளும் அப்பலி யேற்றுளம் மகிழ்வேன்
கொடுத்தி யிவ்வரம் எனக்கென வரவப்
பள்ளி யோனுமற் றாகென விளம்பிப் பத்தர்
போற்றவத் தலத்தினி திருந்தான்
|
53
|
1745
|
கள்வன் நின்றவன் இருந்தவன் கிடந்தவன்
என்னும் நால்வகைக் கரிசறு வடிவால்
வெள்வ ளைக்கரக் கடவுளங் கமர்ந்தான்
விமல நாயகி ஆணையி னாற்றான்
முள்ளெ யிற்றராப் பணம்புரை அல்குல்
முளரி மாதுமப் பிலத்தயல் இருந்தாள்
புள்ளு யர்த்தவற் கினியவாம் அங்கட்
போற்றப் பெற்றவர் வைகுந்தம் புகுவார்
|
54
|
1746
|
கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட காச
மேன்மையின் தொடர்ச்சியால் இங்கே
அறைக ழல்திரு நாயகன் வரலா
றனைத்துங் கூறினாம் அத்திரு நகரை
நிறைவி ருப்பினால் வழிபடப் பெறுவோர்
நிலமி சைப்பெரு வாழ்வின ராகிப்
பிறைமு டிப்பிரான் திருவடிக் கலப்பிற்
பெறல ரும்பர போகமுற் றிருப்பார்
|
55
|