7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் | 445 - 500 |
8. புண்ணிய கோடீசப்படலம் | 501 - 534 |
9. வலம்புரி விநாயகர் படலம் | 535 - 582 |
10. சிவாத்தானப்படலம் | 583 - 631 |
11. மணிகண்டேசப் படலம் | 632 - 698 |
12. சார்ந்தாசயப் படலம் | 699 - 750 |
13. சத்த தானப்படலம் | 751 - 763 |
14. பராசரேசப் படலம் | 764 - 791 |
15. ஆதிபிதேசப் படலம் | 792 - 797 |
16. முத்தீசப் படலம் | 798 - 814 |
17. பணாதரேசப் படலம் | 815 - 821 |
18. காயாரோகணப் படலம் | 822 - 835 |
19. சித்தீசப் படலம் | 836 - 839 |
20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் | 840 - 863 |
21. இட்ட சித்தீசப் படலம் | 864 - 888 |
22. கச்சபேசப் படலம் | 889 - 901 |
23. சகோதர தீர்த்தப் படலம் | 902 - 911 |
24. சுரகரேசப் படலம் | 912 - 956 |
25. தான்தோன்றீசப் படலம் | 957 - 970 |
26. அமரேசப் படலம் | 971 - 991 |
27. திருமேற்றளிப் படலம் | 992 - 1002 |
28. அனேகதங்காவதப் படலம் | 1003 - 1014 |
29. கயிலாயப்படலம் | 1015 - 1056 |
445 | மெய்த்தவர் யாவரும் அங்கது கேட்டு விழித்துணை நீர்வாரக் கைத்தலம் உச்சி முகிழ்த்து மயிர்ப்புள கங்கள் மலிந்தயர்வார் முன்தி பெறற்குயர் காரணம் இன்று தொகுத்து மொழிந்தனைநீ அத்தல மேன்மை அனைத்தும் விரித்தரு ளென்றலும் அச்சூதன் (மலிந்து - நிறைந்து. அயர்வார் - பரவசப்படுவார். அயர்வாராகி எனப்பொருள் கொள்க) |
1 |
446 | கச்சியுள் எண்புறு தீர்த்தம் நிறைந்துள காமுறு பலதானம் பொச்சமில் போகமும் வீடும் அளிப்பன போக்கரு மேன்மையவாம் அச்சம் அறுத்து வியாதன் எனக்கருள் செய்த முறைப்படியே இச்சையின் ஓதுவல் அந்தணிர் கேண்மின் எனச்சொல லுற்றனனால் (காமுறு - விரும்புகின்ற. தானம் - இடம். பொச்சம் - பொய். கோக்கரும் - நீக்குதலில்லாத ) |
2 |
447 | இந்நக ரிற்புகல் சத்திய மாவிர தப்பெயரிற் குணபால் தன்னிகர் மெய்த்தலம் ஒன்றுள தங்கமர் சத்திய விரதீசர் என்னை யுடைப்பெரு மாட்டியும் ஓரிரு மைந்தரும் உடன்மேவ மன்னி இருத்தலின் அத்தல மேன்மையை யாவர் வகுக்கவலார் (குணபால் - கிழக்குப் பக்கம். ) |
3 |
448 | சத்திய சத்தியர் சத்திய சோதகர் சத்திய சங்கற்பர் சத்திய காமர் இருத்தலின் அப்பதி சத்திய விரதமதாம் சத்திய நன்னெறி யார்க்கும் விரைந்தருள் செய்துறு தானமதிற் சத்திய மாவிர தத்தடம் ஒன்றுள தத்தட நீராடி (சத்தியம் - உண்மை. சத்திய சத்தியர் - அழியாத உண்மையை உடையவர். சத்திய சோதகர் - உண்மையைத் தொழிற்படுத்துபவர். சத்திய சங்கற்பர் - உண்மை நினைவுடையவர். நினத்ததை நினைத்தவாறே முடிப்பவர் என்றும் பொருள். சத்திய காமர் - உண்மையை விரும்புபவர். நன்னெறி - முத்திக்கு வாயிலாகிய நெறி; ஞானம். |
4 |
449 | புதனமர் நாளினில் நீர்க்கட னாதி பொருந்த முடித்தங்கண் இதமுறு சத்திய மாவிர தீசரை ஏத்தி வணங்குநர்தாம் கதவினை தீர்த்தருள் உண்மை உணர்ந்து கலநநபர்கள் முத்தியினை மதமுறு காம மயக்கம் அனைத்தும் அறுத்துயர் முனிவீர்காள் (அமர் - விருப்பம். இதம் - இன்பம். கதம் - கொடுமை) |
5 |
450 | மனைவியர் மக்கள் நிலங்கலை செல்வமும் மற்றெவை வேண்டிடினும் அனையவை முற்றும் அளித்துயர் வீடும் அளித்திடும் அத்தீர்த்தம் இணைய தடம்பதி இந்திர தீர்த்தமும் இந்திர புரமுமெனப் புனைபெய ரும்பெறும் அப்பெயர் எய்திய காரணமும் புகல்வேன் |
6 |
451 | இந்திரன் அரசிருக்கை மதுமல ராளிதன் மேதகு கற்பம் வராகம துறுமாறாம் முதுமனு வந்தர நாட்சிவி என்றொரு வாசவன் முன்னுளனால் விதுவினை யொப்பன் அரம்பைய ராகிய மென்குழு தங்களிடைப் பொதுவறு தானவ மாக்கட லுக்கு வடாதெரி கனல்போல்வான் (மலராளி - பிரமன். கற்பம் - ஒரு கால அளவை. அது நித்ய கற்பம், மகாகற்பம் என இரண்டு வகைப்படும். நித்ய கற்ப மென்பது பிரமனுக்கு ஒரு நாள். மகாகற்ப மென்பது பிரமனுக்கு வாழ்நாள். ஒவ்வொரு கற்பமும் அதன்கண் நிகழும் நிகழ்ச்சியாற் பெயர் பெறும். பிரளய வெள்ளத்தில் அழுந்திய உலகத்தைத் திருமால் வெள்ளைப் பன்றி வடிவங் கொண்டு தனது கொம்பினால் எடுத்து நிலைநிறுத்திய கற்பம் சுவேத வராக கற்பம் எனப்படும். மனுவந்தரம் - மனுவின் காலம். மனுக்கள் பதினால்வர் உளர் என்ப. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வோர் இந்திரராகப் பதினால்வர் இந்திரர் உலர் என்ப. இப்பொழுது நிகழ்வது வைவச்சுத மனுவந்தரம். இப்பதினான்கு இந்திரர்கலும் அழிந்தால் பிரமனது பகற்காலம் முடியும் என்ப. விது - சந்திரன். வடாதெரியகனல் - வடவாமுகக்கினி. |
7 |
452 | கடவுளர் சேனைப் பங்கய பானு கற்சிறை அரிவயிரப் படையவன் ஓர்நாட்கடவுள் அவைக்கட் பாசிழை வெதிர்பொருதோள் படவர லல்குற் சசிபுடை மேவப் பன்மணி அரியணைமேல் வடிவ மடங்கல் மேநநர் மடங்கல் போன்மென வைகினனால். கடவுளர் சேனை - தேவர்கள் கூட்டம். பங்கய பானு - தாமரைகளுக்குச் சூரியன். கல் - மலை. வயிரப்படை - வஜ்ராயுதம். கற்சிறை அரீ - ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன, அவற்றை இந்திரன் வஜ்ராயுதத்தல் அரிந்தனன் என்பது புராணக் கதை. பாசிழை - பசிய அணிகலன். வெதிர் - மூங்கில். சசி - இந்திராணி. |
8 |
453 | இருபுடை வெண்கவ ரித்தொகை துள்ள மிகைக்குடை எழில்செய்ய விருதுநநந மாகதர் சூதர் முழக்க வியன்மணி மாநிதியைந் தருவொடு தேனு விழிக்கடை நோக்கினை நோக்குபு தலைநிற்ப அருகுறு கின்னரர் யாழமிர் தஞ்செவி யார விருந்தயர. விருது - கீர்த்தி. மாகதர் - இருந்தேத்துவார். சூதர் - நின்றேத்துவார். மணி - சிந்தாமணி. ஐந்தரு - கற்பகம் முதலாய ஐந்து மரங்கள். தேனு - காமதேனு. இவை வேண்டியவற்றை அளிப்பன. இவை இந்திரனின் குறிப்பை நோக்கி நின்றன., அவனால் அன்பு செய்யப்பட்டோர் விரும்பியவற்றை அளிப்பதற்கு. அயர - செய்ய. |
9 |
454 | மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந் துணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம் அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி நுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக விழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத. உறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல. |
10 |
455 | அரம்பை உருப்பசி மேனகை நநதலிய அரிமதர் விழிமடவார் நிரம்பிய காம நலங்கனி அவிநய நெறிமுறை கரமசைப்ப பரம்பு மிடற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினோடும் வரம்பெறும் அற்புத மின்னவிர் கொடியென மகிழ்நடம் எதிர்புரிய அரி - செவ்வரி. மதர் - களிப்பு. பரம்பு - பரவிய. வரம் - மேன்மை |
11 |
456 | மருத்துவர் வானவர் கின்னரர் சித்தர் வசுக்கள் மருத்துக்கள் உருத்திரர் சாத்தியர் கந்தரு வத்தர் உடுக்கள் நவக்கோள்கள் திருக்கிளர் மெய்த்தவர் யோகிகள் கையிணை சென்னி மிசைக்குவியா நெருக்கினுள் எய்தி இறைஞ்சி மருங்குற நிரல்பட நிற்பவரோ. மருத்துவர் - தேவ வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள். மருத்துக்கள் - திதி என்பவன் வயிற்றில் இந்திரனால் கூறுபடுத்தப்பட்டுப் பிறந்து காற்று வடிவமாய்ச் சஞ்சரிக்கும் நாரிபத்தொன்பதின்மர் என்பர். ந[த்தியர்- தருமனின் புதல்வர் பன்னிருவர் என்ப. |
12 |
457 | கணங்கொள் தயித்தியர் யாவரும் வந்து கடைத்தலை வாய்தலின்மாட் டுணங்குபு செவ்வி கிடைத்திலர் நிற்ப ஒழிந்தவர் தங்குறைதீர்த் தணங்கரும் இன்பவெள் ளத்தில் அழுந்தி அளப்பரு செல்வத்தான் இணங்கலர் கோளரி இன்னணம் மேவுழி எண்ணினன் இவையெலாம் கணம் - கூட்டம். தயித்தியர் - அசுரர். கடைத்த்லை வாய்தல் - வாயிற்கடை. உணங்குபு - வாடி. செவ்வி - தக்க சமயம். அணங்கரும் - துன்பமற்ற. இணங்கலர்- இனக்கமில்லாத பகைவர்கள். கோளரி - சிங்கம். |
13 |
458 | இந்திரன் அரசியலை வெறுத்தல் வேறு இருவினை யொப்பு வாய்ந்த பருவம்வந் தெய்தலாலே மருவருந் துறக்க வைப்பின் அரசியல் வாழ்க்கை தன்னை அருவருத் துவர்த்துக் காவற் சிறையிடை யகப்பட் டோ ரின் வெருவரும் பதைக்கும் அஞ்சும் வேறிவை கருத்துட் கொள்வான் இருவினை ஒப்பு - நல்வினைப் பயனாக வரும் இன்பம், தீவினைப் பயனாக வரும் துன்பம் இரண்டினையும் இறயருளாக ஏற்றுக் கொள்ளும் மனவமைதி. மருவருந்துறக்கம் - அடைவதற்கு அரிதான சுவர்க்கலோகம். அருவருத்து - கூசி வெறுத்து. |
14 |
459 | அழியுமிவ் விடய வாழ்விற் களித்திருந் தந்தோ கெட்டேன் பழிபவக் கடலிற் காலப் பாந்தள்வாய்க் கிடந்தும் நாணேன் வழிமுறை அறியா மாய வல்லிருட் படுகர்ச் சேற்றுள் இழியும்ஊர்ப் பன்றி யேபோல் உழந்தவென் அறிவு நன்றால் பவக்கடல் - பிறவியாகிய கடல். காலப் பாந்தள் - காலமாகிய பாம்பு. படுகர் - குழி, பள்ளம்; பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை, கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினாயேஔ (திருமுறை 2:79:6) |
15 |
460 | அருவினை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் காலம் கருவுறும் எவையும் கால வயத்தவாம் காலந் தான்மற் றொருபொருள் வயத்த தன்றாலுந்தியோன் கற்பத் தீரேழ் பொருவிலிந் திரர்கள் மாய்வர் பொன்றுவர் மனுக்கள் தாமும் |
16 |
461 | ஓதுமிக் கற்பம் வேதற் கொருதினம் அந்நாள் முப்ப தாதலோர் மதியாம் திங்க ளாறிரண் டாயி னாண்டாம் ஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்த மாகப் போதரும் போதில் அன்னான் பொன்றுவன் மன்ற மாதோ பரார்த்தம் - பிரமன் வாழ்நாளிற் பாதி |
17 |
462 | அம்மலர்க்கிழவன் காலம் அரிக்கொரு தினமன் னோனும் அம்முறைத் திங்கள் கூடு மாண்டுநூ றெய்திற் பொன்றும் அம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன் இம்மையில் வீடு பேற்றிற் குபாயமே அறிதல் வேண்டும். |
18 |
463 | அவையகத் துள்ளார்க் கெல்லாம் விடையளித் தெழுந்து போந்து நவையற விரைவின் அந்தப் புரநநதினை நணுகி அங்கநந புவிபுகழ் குரவற் கூவிப் போற்றிநின் றிதனை விள்வான் சிவியெனத் திசைபோங் கீர்த்தித் தேவர்கட் கிறைவன் மன்னோ |
19 |
464 | இந்திரன் தேவகுருவிடம் முறைகூறல் இவ்வர சியற்கை தன்னில் இனியெனக் காசை யில்லை அவ்விதி முகுந்தன் ஏனோர் வாழ்க்கையும் அவாவு கில்லேன் மெய்வகை உணர்ந்து முத்தி மேவுதற் குபாயம் ஒன்று செவ்வனோர்ந் துரைத்தி என்னத் தேசிகன் தேர்ந்து சொல்வான் |
20 |
465 | இந்திரனுக்குத் தேவகுரு உபதேசித்தல் நன்றுநீ வினாய முத்தி நற்றவம் வேள்வி தானம் கன்றுபட் டினிவே றொன்றாற் காண்பரி தாகும் மைந்தா துன்றிய மாய வாழ்க்கைத் தொடக்கறுத் துய்யக் கொள்வான் என்றுமெம் பெருமான் உள்ளான் அவநநதிறம் இயம்பக் கேட்டி |
21 |
466 | கலிவிருத்தம் குறைவிலா மங்கல குணத்த னாதலின் நிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின் அறைகுவர் சிவனென அறிவின் மேலவர் இறையவன் பெருமையை யாவர் கூறுவார் |
22 |
467 | மேலெனப் படுவன எவைக்கும் மேலவன் மாலெனப் படுவன எவையும் மாற்றுவான் நூலெனப் படுவன எலாம்நு வன்றவன் வேலெனப் படும்விழி பாகம் மேயினான் |
23 |
468 | பங்கயன் றன்னைமுன் படைத்து மால்முதல் புங்கவர் தம்மைப்பின் உதவும் பொற்பினான் அங்கவன் இலனெனில் அகில லோகமும் பொங்கிய வல்லிருள் பொதிந்த நீரவே |
24 |
469 | பகலிர விளதுள தெனும்ப குப்பிலா அகலரு மிருள்பொதி அநாதி காலையில் உகலரும் பரசிவன் ஒருவனே உளன் மிகுமுணர் வவனிடை வெளிப்பட் டோ ங்குமால் (மிகுமுணர்வு - தடையிலா ஞானமாகிய பராசத்தி) |
25 |
470 | எங்குள யாவையும் இவன்வ யத்தவாம் எங்கணு மிவனொரு வயத்தின் எய்திடான் எங்கணும் விழிமுகம் எநநநநம் கால்கரம் எங்கணுந் திருவுரு இவனுக் கென்பவே |
26 |
471 | அரியயன் அமரர்கள் அசுரர் யோகிகள் இருளறு வேதவே தாந்தம் யாருமிப் பெரியவன் அடியிணை காணும் பெட்பினால் தெரிகிலா மாறுகொண் டின்னுந் தேடுவார் ) |
27 |
472 | அவனவன் அதுவெனும் அவைதொ றொன்றுமிச் சிவனலான் முத்தியிற் சேர்த்து வாரில்லை துவலரும் இம்முறை சுருதி கூறுமால் இவனடி வழிபடின் முத்தி எய்துவாய் |
28 |
473 | பன்னுவ தெவன்பல பரிந்த நெஞ்சினும் அந்நியர் தமையொநநத் தரனை ஏத்துதி இன்னதே வீட்டினுக் கேது வாமெனும் பொன்னுரை மனங்கொடு புகலு வான்சிவி |
29 |
474 | குரவனே அயனரி குரவ னேசிவன் குரவனே தந்தைதாய் குரவ னேயெலாம் குரவனே என்றுநூல் கூறும் உண்மையைக் குரவனேயென்னிடை இன்று காட்டினாய் |
30 |
475 | உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன் இன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி பொன்பொதி சடையனைப் போற்று மாறிது அன்பொடும் அடியனேற் கருளு கென்றலும் |
31 |
476 | கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர் இடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம் விடலருஞ் சத்திய விரத தானத்தின் முடிவில்சத் தியவிர தீசன் முன்பரோ. |
32 |
477 | மேற்றிசை சத்திய விரத தீர்த்தமொன் றாக்கவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப் போற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென் றூற்றெழுந் துறுதடத் துதந மாடியே. |
33 |
478 | விதியுளி முடித்துநித் தியநை மித்திகம் புதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம் மதிநுதல் விளங்கிட அக்க மாமணி நிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே. 35 |
34 |
479 | தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால் வெள்ளொளிச் சத்திய விரத நாதனை நநள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான் நள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய் |
35 |
480 | என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ வென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால் தொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம் சென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான் (விரதங் கேள்வியால் -விரதத்தைக் கேள்வியால்) |
36 |
481 | உள்ளது கூறினை உம்மை யாயிடை அள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள் வெள்ளச்சீர்ச் சத்திய விரதம் மூழ்கியீண் டெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய். 38 (மும்மை - முற்பிறப்பு. அள் - கூர்மை. குலிசி - வஜ்ராயுதத்தை உடையவன். புந்தி நாள் - புதன் கிழமை) |
37 |
482 | ஒருபொழு தாடினார் உம்பர் கோனிடம் இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே மருவுவர் யாரதன் வண்மை கூறுவார் |
38 |
483 | புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின் அந்தநாள் மூழ்கலின் அரச நீயுமிப் பந்தமில் வீடுறற் பாலை யாயினை மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன் (மந்தணம் - இரகசியம். வாசவன் - இந்திரன்) |
39 |
484 | இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும் அப்புத வாரநாள் அதிக மாயதென் செப்புதி என்றலும் தேசி கப்பிரான் ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான். |
40 |
485 | புதன் வழிபட்ட வரலாறு - கொச்சகக் கலிப்பா மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப் பதிக்கணணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ்செய்தான் |
41 |
486 | மேதகுசத் தியவிரதப் பெருமானும் வெள்விடைமேல் மாதுமையா ளுடனேறி வயக்கரிமா முகனிளையோன் காதல்புரி அருள்நந்தி கணநாதர் புடைசூழ வாதரமோ டெழுந்தருளித் திருக்காட்சி அளித்தருள |
42 |
487 | கண்டுபர வசனாகிக் கைதொழுது பெருங்காதல் மண்டியெழு மயிர்சிலிர்ப்ப மனத்தடங்காப் பேருவகை கொண்டுநில முறவீழ்ந்து குழைந்துருகி விழிதுளிப்பத் தொண்டனேன் உய்ந்தேனென் றெழுந்தாடித் துதிசெய்வான். |
43 |
488 | நெடியோனும் மலரவனும் நேடரிய திருவடிகள் அடியேனுக் கெளிவந்த அருட்கருணைத் திறம்போற்றி ஒடியாத எண்குணங்கள் உடையானே எனையுடையாய் கடியார்சத் தியவிரத நாயகநின் கழல்போற்றி |
44 |
489 | என்றேத்தி எந்தையென யான்கிரக நிலைபெறவுங் குன்றாதுன் திருவடிக்கீழ் மெய்யன்பு கூர்ந்திடவும் இன்றாதி யென்வாரத் தித்தீர்த்தம் படிந்துபொறி வென்றோர்முன் னையின் இரட்டிப் பயனெய்தி வீடுறவும் |
45 |
490 | வேண்டுமென இரந்தேற்ப அளித்தருளி வெள்விடைமேல் யாண்டகையங் ககன்றனனால் அன்றுமுதல் அத்தீர்த்தம் பூண்டபுத வாரத்துச் சிறப்பெய்தும் புந்தியுறக் காண்டியெனுங் குரவனுரை காரூர்தி செவிமடுத்தான் புந்தியுற - புத்தியில் பொருந்த. காரூர்தி - மேக வாகனத்தை உடையவன், இந்திரன் |
46 |
491 | இந்திரன் சத்தியவிரதம் அடைந்து வழிபடுதல் அப்பொழுதெ அரசுரிமை அம்மநநயோன் புநநவைத்துச் செப்பருஞ்சத் தியவிரதத் திருநகரின் விரைந்தெய்தி முப்பொழுதும் நீராடி முழுநீறு மெய்பூசி மெய்ப்படுகண் டிகைபூண்டு புண்டரமும் நுதல்விளங்க 48 |
47 |
492 | உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன் திருப்பதங்கள் சிந்தித்துக் கோயிலினுள் சென்றெய்தி அருத்தியொடும் பூசனைசெய் தாராமை மீக்கொள்ளப் பெருத்தெழுந்த பேரன்பிற் பெருமானைத் துதிக்கின்றான் |
48 |
493 | இந்திரன் துதித்தல் - அறுசீரடியாசிரிய விருத்தம் நநநநநடி வினும் தேறா மலர்சிலம் படியாய் போற்றி அறைபுனல் உலகம் எல்லாம் படைத்தளித் தழிப்பாய் போற்றி சிறைநிறை வாசத் தெண்நநர் சத்திய விரத தீர்த்தத் துறைகெழு வரைப்பின் மேய சுந்தர விடங்கா போற்றி மலர் சிலம்படி - விரிந்தும் சிலம்பை அணிந்தும் உள்ள திருவடி. அறி - ஒலிக்கின்ற. சிறை - கரை. சுந்தர விடங்கன் - பேரழகன். |
49 |
494 | அண்ணலே விடயத் துன்ப மாற்றிலேன் ஓலம் ஓலம் எண்ணறும் யோனி தோறுந் திரிந்தலைந் தெய்த்தேன் ஓலம் கண்ணினுள் மணியே வேறு கண்டிலேன் களைகண் ஓலம் புண்ணிய முதலே இன்பப் பூரணா ஓலம் ஓலம் எய்த்தேன் - இளைத்தேன். களைகண் - பற்றுக்கோடு. புண்ணிய முதல் - புண்ணியங்களுக்குக் காரணமானவன். |
50 |
495 | புழுப்பொதிந் தநநம்பு பாயும் புன்புலை உடலே ஓம்பிக் கழித்தனன் கால மெல்லாம் கடையனேன் பொறிகள் யாண்டும் இழுத்திழுத் தலைப்ப நொந்தேன் இனித்தினைப் பொழுது மாற்றேன் சழக்கறுத் தருள்வாய் உன்றன் சரணமே சரணம் ஐயா அசும்பு- அழுக்குநீர்க் கசிவு. புலை ? இழிவு. சழக்கு - பொய்.. சரணமே சரணம் - திருவடிகளே புகலிடம். இந்திரனுக்குச் சத்திய விரதர் காட்சி கொடுத்தல் |
51 |
496 | அடைக்கலம் அடியேன் என்றென் றழுதிரந் தயருங் காலை விடைத்தனிப் பெருமான் அன்னோன் பத்தியின் விளைவு நோக்கி நடைப்பிடி உமையா ளோடு நண்ணிநீ வேண்டிற் றென்னை எடுத்துரை தருதும் என்றான் இந்திரன் தொழுது வேண்டும் |
52 |
497 | வினைவழிப் பிறந்து வீந்து மெலிந்தநாள் எல்லை இல்லை அனையவற் றடிகேள் உன்றன் அடிதொழப் பெற்றி லேனால் நினவரும் தவத்தால் இன்று நின்னருட் குரிய னாயினேன் இனிவரும் பிறவி மாற்றி என்றனை உய்யக் கோடி |
53 |
498 | இத்தலந் தீர்த்தம் என்றன் பெயரினான் இலக வேண்டும் அத்தனே என்ன லோடும் அவ்வகை அருளி மீளா முத்திசேர் கணநா தர்க்குள் முதல்வனாந் தன்மை நல்கிப் பைத்தபாம் பாரம் பூண்ட பண்ணவன் இலிங்கத் தானான் 55 |
54 |
499 | அற்றைநாள் முதலச் சூழல் இந்திர புரமாம் அங்கண் கற்றைவார் சடையீர் ஓர்கால் கண்ணுறப் பெற்றோர் தாமும் வெற்றிவேற் காலன் றன்பால் விரவிடார் கருவில் எய்தார் இற்றதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார். |
55 |
500 | சத்திய விரதம் காநநத் தருவளஞ் செறித லாலே சித்திசேர்ந் தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென் றித்திருப் பெயரின் ஓங்கும் எநநபரால் மாசு தீர்ந்த உத்தமக் கேள்வி சான்ற உணர்வடை உம்பர் மேலோர் காரைத் தருவனம் - காரை என்னும் ஒருவகை மரங்கள் பொருந்திய காடு |
56 |
501 | செச்சைச்சடை அந்தணர் தேமலர் சூழ்ந்த மெய்ச்சத்திய மாவிரத்தத்தல மேன்மை சொற்றாம் கச்சிப்பதி யிற்கவர் புண்ணிய கோடி மேன்மை நச்சிப்புகல் கின்றனம் நன்கு மதித்துக் கேண்மின் (செச்சைச்சடை - சிவந்த சடை) |
1 |
502 | மின்பாய்பொழிற் சத்திய மாவிர தத்த லத்தின் தென்பாலது புண்ணிய கோடிநந் தேவன் வைப்பு வன்பாலர்கள் எய்தரும் புண்ணிய தீர்த்த மாடே என்போலி கட்கும் சிவப்பேறெளி தெய்து மங்கண். |
2 |
503 | இறைவனிடத்துத் திருமால் வரம் பெறல் மலர்மேயவன் மேகநல் வாகன கற்பம் ஒன்றில் தலமேழ்புகழ் நாரணன் தாமரை யாளி யாதி உலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர் கோனைப் பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான். |
3 |
504 | நம்மான் இரங்கிக் கடைக்கண்ணருள் நல்கி மாலோய் வம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங் கிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும் அம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன் |
4 |
505 | எந்தாயொரு நின்திருமேனி யிடப்புறத்து வந்தேன் அடியேன் உயர்நின்னருள் வண்மை தன்னால் நந்தாதயிவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும் பைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன் |
5 |
506 | அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன் இவ்வாற்றல் கச்சிப் பதியெய்தி யிலிங்கந் தாபித் தொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை யாற்றின் செவ்வேபெறு கிற்பை யெனத்திருவாய்ம லர்ந்தான் |
6 |
507 | திருமால் காஞ்சியில் இறைவனை வழிபடுதல் அங்கப்பொழு தேவிடை கொண்டருட் காஞ்சி எய்திப் பொங்கிப்பொலி தீர்த்த நறும்புன லாடிச் சூழும் தெங்கிற்பொலி இந்திர நன்னகர்த் தென்தி சைக்கண் துங்கச்சிவ லிங்கம் இருத்தி மெய்யன்பு தோன்ற |
7 |
508 | தெண்ணீத்தடம் ஒன்று வகுத்துத் திருந்த மூழ்கி வெண்ணீற்றணி அக்க மணித்தொடை மெய்வி ளங்கக் கண்ணீர்க்கம லம்பல கொய்து கருத்து வாய்ப்ப வண்ணீர்ச்சிவ பூசனை நித்தலுஞ் செய்து வாழ்ந்தான் (கள்நீர்க்கமலம் - கண்ணீர்க்கமலம்- தெனாகிய நீறையுடைய தாமரை. வள்நீர் -வண்ணீர்- வளப்பத் தன்மை யுடைய) |
8 |
509 | கசேந்திரன் தொண்டு செய்தல் வேறு அன்னோன் ஏவல் மெய்ப்பணி ஆற்றும் அன்புந்தத் தன்னே ரில்லா வோர்மத வேழந் தானெய்தி என்நா யகனே என்பணி கொள்வாய் யென்றேத்திப் பொன்வாள் தோன்று முன்னர் எழுந்து புனலாடி |
9 |
510 | நாளலர் தாமரை பாதிரி வில்வம் நறும்புன்னை தாளுயர் சண்பகம் மல்லிகை தண்கழு நீர்மௌளவல் கோளறு கோங்கு முதற்பல கொய்து கொடுத்தென்றும் வேளை யளித்தவன் உள்மகிழ் வித்திடும் அந்நாளில் (வேளை அளித்தவன் - மன்மதனைப் பெற்றவன், திருமால்.) |
10 |
511 | கசேந்திரனை முதலை பற்றல் ஓர்பகல் நீர்நிறை பூந்தடம் ஒன்றுறு பூக்கொய்வான் சீர்தகு திண்கரி சேறலும் அங்கொரு வன்மீனம் நீரிடை நின்று வெகுண்டடி பற்றி நிமிர்ந்தீர்ப்பக் காரொலி காட்டி யகன்கரை யீர்த்தது காய்வேழம் (வன்மீனம் - முதலை. காரொலி - இடியொலி ) |
11 |
512 | இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை ஓவாமே தெவ்வுடன் ஈர்ப்புழி யாண்டுகள் எண்ணில சென்றேகக் கைவரை ஆற்றரி தாயல றிக்கரு மாமேகத் தவ்வடிவோனை யழைத்தது மூல மெனக்கூவி |
12 |
513 | திருமால் கசேந்திரனைக் காத்தல் அண்ட ரெலாம்யாம் மூல மலேமென் றகல்போழ்திற் புண்டரி கக்கட் புண்ணியன் நன்புள் ளரசின்மேல் கொண்டெதி ரெய்திக் கரியர செய்துங் கொடுவெந்நோய் கண்டுளம் நெக்கான் அஞ்சலை யஞ்சேல் களிறென்னா |
13 |
514 | ஆழி யெறிந்தான் அதன்உயிர் உண்டான் கரியோடும் வாழிய காஞ்சி மாநகர் எய்திச் சிவபூசை வேழம் அளிக்கும் மேதகு பள்ளித் தாமத்தால் ஊழ்முறை யாற்றித் தவம்நனி செய்தங் குறைகாலை |
14 |
515 | எண்ணரு வானோர் இன்னமும் நாடற்கரியானைக் கண்ணினை யாரக் காண்டகு காதல் கைமிக்கங் குண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப் புண்ணிய வேதப் பழமொழி யோதிப் புகழ்கிற்பான். |
15 |
516 | திருமால் துதித்தல் .கொச்சகக்கலிப்பா நீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய் ஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும் வேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம் பேராளா யெங்கள் பிரானே அடிபோற்றி |
16 |
517 | அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தட |