30. வீரராகவேசப் படலம் | 1057 - 1087 |
31. பலபத்திர ராமேசப்படலம் | 1088 - 1105 |
32. வன்மீகநாதப் படலம் | 1106 - 1124 |
33. வயிரவேசப் படலம் | 1125 - 1162 |
34. விடுவச்சேனேசப் படலம் | 1163 - 1193 |
35. தக்கேசப் படலம் | 1194 - 1270 |
36. முப்புராரி கோட்டப்படலம் | 1271 - 1281 |
37. இரணியேசப் படலம் | 1282 - 1303 |
38. நாரசிங்கேசப் படலம் | 1304 - 1318 |
39. அந்தகேசப் படலம் | 1319 - 1350 |
40. வாணேசப் படலம் | 1351 - 1461 |
41. திருவோணகாந்தன் தளிப்படலம் | 1461 - 1470 |
42. சலந்தரேசப் படலம் | 1471 - 1493 |
43. திருமாற்பேற்றுப் படலம் | 1493 - 1511 |
44. பரசிராமேச்சரப் படலம் | 1512 - 1573 |
45. இரேணுகேச்சரப் படலம் | 1574 - 1608 |
46. யோகாசாரியர் தளிப்படலம் | 1609 - 1618 |
47. சர்வ தீர்த்தப்படலம் | 1619 - 1644 |
48. நவக்கிரகேசப் படலம் | 1645 - 1650 |
49. பிறவாத்தானப் படலம் | 1651 - 1660 |
50. இறவாத்தானப் படலம் | 1661 - 1668 |
51. மகாலிங்கப்படலம் | 1669 - 1691 |
1057 | புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற அத்தனா ரினிது வைகுங் கயிலையி னடைவு சொற்றாம் இத்தகு வரைப்பின் கீழ்பால் இள்நறாக் கொப்பு ளித்துத் தொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம் |
1 |
1058 | இராமன் முறையிடல் ஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவே லிராம னென்பான் தன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள் கொன்னுடைத் தறுகண் சீற்றக் கொடுந்தொழி லரக்கன் வௌளவித் துன்னரு மிலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான். |
2 |
1059 | பெய்கழல் கறங்கு நோன்றாள் பெருவிற லிராம னந்நாள் எய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி யேங்கிக் கொய்தழை வனங்க ளெங்குங் கொட்புறீஇக் கமல வாவிச் செய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான். |
3 |
1060 | இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ ரெழிற்சிவ கங்கை யாடி நெடும்பணை யொருமா மூல நின்மலக் கொழுந்தை யேத்திக் கொடும்படைச் சனக னீன்ற கோதையைப் பெறுவான் கூற்றை அடும்புகழ்ச் செய்ய தாளை யிரந்துநின் றழுது வேண்டி |
4 |
1061 | தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர் வாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான் சூழ்ந்தவெந் துயரத் தோடு மோடினன் துணைத்தாள் மீது வீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரே லென்னத் தேற்றி |
5 |
1062 | இத்துணை யிடும்பைக் கேது எவனென வினாவுஞ் செல்வ முத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான் மைத்தவார் கரிய கூந்தற் கௌளசலை மணந்த திண்டோள் சத்துவ குணத்தான் மிக்க தசரத னீன்ற செம்மல். |
6 |
1063 | கலிநிலைத்துறை எம்பி ரானிது கேட்டரு ளேழிரண் டாண்டு வெம்பு காடகத் துறைதிநீ வியனிலந் தாங்கி நும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று கம்பி யாதெனை யெந்தையிக் கானிடை விடுத்தான் |
7 |
1064 | ஏய வாணையைச் சிரமிசைக் கொண்டெழு மெனையே தூய சீரிலக் குமணனுஞ் சீதையுந் தொடர்ந்தார் ஆய மூவருந் தண்டக வனத்தமர்ந் திடுநாள் மாய மானெனத் தோன்றினன் அங்கண்மா ரீசன் |
8 |
1065 | தோன்றி மற்றெனைச் சேயிடைக் கொண்டுபோய்ச் சுலவி மான்ற வம்பினிற் பொன்றுவான் சீதையை வலியான் ஆன்ற வெம்பியை விளித்துவீழ்ந் தனனது கேளா ஏன்ற சீதையை விடுத்தெனைத் தொடர்ந்தன னிளவல். |
9 |
1066 | அனைய காலையி லிராவண னவட்கவர்ந் தகன்றனன் புனைம லர்க்குழற் பூங்கொடி தணத்தலிற் புலம்பி இனையு மென்னுயிர் பொன்றுமு னிரங்குதி யெந்தாய் உனைய டைந்தனன் சரணமென் றழுதழு துரைத்தான் |
10 |
1067 | அகத்தியர் இராமனைத் தேற்றித் தத்துவோபதேசம் செய்தல் உரைத்த வாய்மொழி கேட்டெதிர் அகத்திய னுரைப்பான் விரைத்த தார்ப்புய வேந்தகேள் வீங்குநீர் உலகின் நிரைத்த வைம்பெரும் பூதத்தின் நிலைபெறு முடலம் தெரிக்கில் யாவையு முடன்பிறந் தவையெனத் தெளிநீ |
11 |
1068 | மற்று யிர்க்குவே றாணலி பெண்ணென வழக்கஞ் சற்று மில்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின் பெற்றி போலுமிப் பூதத்தின் கூட்டமும் பிரிவும் கற்று ளோயிவை யிருமைக்கும் மாயைகா ரணமாம். |
12 |
1069 | செய்வி னைப்பய னுள்ளது வருமெனத் தெளிதி எவ்வ முற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு வெனலும் பௌளவ முற்றுமோ ருழுந்தள வாக்கிமுன் பருகுஞ் சைவ மாமுனி மொழிக்கெதி ரரசனுஞ் சாற்றும் |
13 |
1070 | அத்த நின்னுரை முழுவது முண்மையே யானும் இத்த லக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான் கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன் பித்த னென்றுல குரைத்திடு மாதலிற் பெரியோய் |
14 |
1071 | பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச் சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும் உறந்த தத்துவ ஞானத்துக் குரியவ னாவேன் அறைந்த வாறல தென்னுள மடங்கிடா தென்றான் |
15 |
1072 | மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு கலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்குமக் கதிர்ப்பூண் முலைம டந்தையை யிராவணன் கவர்ந்துபோ முறைமை இலைகொள் வேலினாய் எவருனக் கியம்பின ரென்றான் |
16 |
1073 | சடாயு வென்றுயர் கழுகிறை சானகி பொருட்டு விடாது போருழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன் கடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும் வடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி. |
17 |
1074 | நின்க ருத்திது வேலுயர் நெடுவரை குழைத்து வன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள் புன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி யவனே உன்க ருத்தினை முடித்திட வல்லனென் றுணராய். |
18 |
1075 | உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினி லழிப்போன் நிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா அலகி லாற்றல னுருத்திர னொருவனே யன்றி இலையெ னப்புகன் றோலிடு மியம்பருஞ் சுருதி |
19 |
1076 | தென்தி சைக்கிறை யிராவணன் திருவடி விரலின் ஒன்ற னாலிறக் கண்டன னொருசிறு துரும்பால் அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான் வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான் |
20 |
1077 | அனைய னாகிய தனிமுதல் பாற்சர ணடைந்தோர் எனைய வேட்பினு மெண்மையி னெய்துவ ரதனாற் கனைகொள் பூந்தடம் உடுத்தவிக் காஞ்சிமா நகரிற் புனைம லர்க்குழல் பாகனை யருச்சனை புரிவாய் |
21 |
1078 | வீரம் வேண்டினை யாதலின் விதியுளி வழாது வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி வீர னேதொழு தேத்துதி யெனமுனி விளம்ப வீரர் வீரனு மம்முறை பூசனை விளைப்பான் |
22 |
1079 | இராமன் சிவபூசைசெய்து வரம் பெறல் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் வெண்ணீறுங் கண்டிகையு முடல்விரவப் பாசுபத விரதம் பூண்டு தண்ணிடு மலர்க்கடுக்கை வீரரா கவமுதலைத் தாபித் தன்பால் எண்ணூறு மிருநூறு மாயதிருப் பெயரியம்பி யருச்சித் தேத்தி உண்ணிடு பெருங்காதல் வளர்ந்தோங்கத் தொழுதுநயந் துருகுங்காலை |
23 |
1080 | எவ்வமறப் புரிபூசைக் கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும் அவ்விலிங்கத் திடைநின்று மெழுந்தருளி விடைமேற்கொண் டமரர்சூழ நவ்விவிழி யுமையோடுங் காட்சிகொடுத் தருளுதலும் நலியா வென்றித் தெவ்வடுதிண் புயத் தோன்றல் பலமுறையுந் தொழுதேத்திச் செப்ப லுற்றான். |
24 |
1081 | அண்ணலே யடியேனுக் கெளிவந்த பெருங்கருணை யமுதே அன்பர் புண்ணியமே இராவணனாம் அரக்கர்கோன் பொலந்தொடித் தோட்சீதை யென்னும் பெண்ணரசைக் கவர்ந்தெடுத்துப் போயினான் முறைபிறழு மவனை யின்னே நண்ணலரும் பறந்தலையிற் கிளையோடு முடிக்கவரம் நல்கு கென்றான். |
25 |
1082 | எனப்புகலச் சிவபெருமான் திருவருள்கூர்ந் தெமக்குநீ யின்று தொட்டு மனக்கினிய னாயுலகில் வீரரா கவனெனும்பேர் மருவி வாழ்வாய் உனக்கிகலி எதிர்ந்தோர்கள் எனைத்துணைய ரேனுமவ ருடையக் காண்டி பனித்தநறுந் தொடையோயென் றருள்செய்து பாசுபதப் படையு நல்கி |
26 |
1083 | முள்ளரைக்காம் பணிமுளரிப் பொகுட்டணையோன் தனிப்படையும் முரன்று மாக்கள் கொள்ளையிடு நறைத்துளவோன் படையுமவர் தமைக்கொண்டு கொடுப்பித் தேனைக் கள்ளவிழ்தார்க் கடவுளர்தம் படைபிறவும் நல்குவித்துக் கருணை கூர்ந்து நள்ளலரைப் பொடிபடுக்கும் பெருவரமு மளித்தருளி நவிலு கிற்பான். |
27 |
1084 | கவற்றிநெடும் பகைதுரக்கு மிவையுனக்குக் கருணையினா லளித்தேங் கண்டாய் இவற்றினொடு மிளவலொடும் கிட்கிந்தை யிடத்தமர்சுக் கிரீபன்சேனை அவற்றொடும்போய்ப் பரவைகடந் திராவணனைக் கிளையோடு மறுத்து வீரஞ் சுவற்றியபின் சீதையொடும் மீண்டரசு புரிந்துகலி துரந்து வாழ்வாய் |
28 |
1085 | என்றரு ளெதிரிறைஞ்சி யிராகவன்மற் றிதுவொன்று வினாத லுற்றான் அன்றினார் புரமெரித்தோய் குறுமுனிவ னாருயிர்கட் காண்மை பெண்மை யொன்றுமிலை யாக்கையெலா முடன்பிறந்த வாகுமென வுரைத்தல் செய்தான் மன்றவெனக் கவைமுழுதுந் தேறவிரித் தருளென்று வணங்கி வேண்ட |
29 |
1086 | வேதாந்த நிலையனைத்து மவன்தெளிய விரித்துரைத்து வரங்கள் நல்கிக் காதார்ந்த குழையுமையா ளுடனாக விலிங்கத்துட் கரந்தா னெங்கோன் நாதாந்தப் பரஞ்சுடராம் இவ்விலிங்கந் தனைத்தொழுது நயந்தோ ரெல்லாம் கோதார்ந்த பகைவென்று பெருஞ்செல்வ மெய்தியருள் கூடு வாரால். |
30 |
1087 | கற்கீச வரலாறு எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் தகைபெருமிக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித் தடங்கரையில் கற்கீசத் தலமா மங்கண் உகமுடிவில் கயவர்தமை யழிப்ப மாயோ னுயர்பிருகு சாபத்தால் கற்கி யாகி இகழருஞ்சீர்க் காஞ்சியில்வந் திலிங்கந் தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள் பெற்றான் புகழுறுமவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப் புனலாடு மவர்பெறுவார் போகம் வீடு |
31 |
1088 | பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப் படைவேளைப் பொடிபடுத்த பழையோ னென்றுந் திகழ்வீர ராகவேச் சரத்தி னோடு திருத்தகுகற் கீச்சரமும் புகன்றா மிப்பால் புகழுறுகற் கீச்சரத்தின் மேற்பால் கண்டோர் பொருவலித்திண் பகட்டூர்தி யுடையக் காணும் நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது நீடுதிருத் தானவளம் பாட லுற்றாம் |
1 |
1089 | கலிவிருத்தம் மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ் கண்ணன் முன்வரு காலை அலப்படை அண்ண லாம்பல பத்திர வாண்டகை பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள் |
2 |
1090 | கார்த்த டக்கை கடும்புசெய் கைதவப் போர்த்தொ ழிற்குப்பொறாத மனத்தனாய்த் தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான் ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான் |
3 |
1091 | அங்கண் முப்புரம் அட்ட பிரான்றளி எங்கு முள்ளன நோக்கி யிறைஞ்சியத் துங்க வைப்பினில் தொக்க முனிவரர் தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான் |
4 |
1092 | ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந் தேசின் மிக்க திருநகர் யாவது பேசு கென்ன முனிவரர் பேசுவார் |
5 |
1093 | பருவ ரைத்தோட் பரதன் வருடமே கரும பூமி யெனப்படுங் காணது மருவு மெவ்வுல கத்தினும் மாண்டதாம் திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே பரதன் வருடம் - பாரதவர்ஷம், பரதகண்டம் |
6 |
1094 | கரும பூமி வரைப்பிற் கடவுளர் மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய் அருள்வி ளைக்கு மவற்றினும் மேலவாம் தரும சக்கர பாணி தலங்களே. |
7 |
1095 | அவற்றின் மிக்கன மானிட ராக்கிய சிவத்த லங்கள் கடவுளர் செய்தன அவற்றின் மேலன வாகுஞ் சயம்புவாம் சிவத்த லங்கள் அவற்றின் சிறந்தன |
8 |
1096 | சயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம் வியந்தெ டுத்து விளம்பப் படுமவை நயந்த வங்கவற் றுள்ளும்நற் காசிமிக் குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே |
9 |
1097 | ஓத காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும் பூத லத்திடை யில்லை புகலுமம் மாத லத்தி னுகத்தின் வருத்தமும் பாத கப்பய னும்பட ராவரோ |
10 |
1098 | பிறந்து ளோர்கள் வதியப் பெறுநரங் கிறந்து ளோருளத் தெண்ணுநர் யாவரும் அறந்த ழைக்குமே கம்ப ரருளினாற் சிறந்த முத்தி யுறுவது தேற்றமே. |
11 |
1099 | மேற்படி வேறு என்றறி வுறுத்திய வியல்பின் மாதவர் மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன் அன்றவர் ஏவலிற் காஞ்சி யண்மியங் கொன்றிய வளனெலா முவந்து நோக்கினான் |
12 |
1100 | தெறுமப் படைச்சிவ தீர்த்தம் யாவையும் முறைமையின் ஆடினான் முரசு கண்படா இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண் டறைபொழி லேகம்ப மருச்சித் தேத்தினான் |
13 |
1101 | அந்நகர் வயினமர்ந் தருளுஞ் சீருப மன்னிய னிணையடி வணங்கித் தொண்டுபூண் டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன் தன்னுடைப் பெயரினோர் இலிங்கம் தாபித்தான் |
14 |
1102 | உண்ணிறை காதலி னருச்சித் தோகையால் பண்ணிசை மொழிகளிற் பழிச்சு மேல்வையின் கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர் வண்ணவர் தொழவிடை மீது தோன்றியே |
15 |
1103 | வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம் பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன் தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற் காண்டகை யிடையறா வன்பு நல்குதி |
16 |
1104 | இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு நிச்சலு மினிதமர்ந் தருளி நின்னடி நச்சினோர்க் கிருமையும் நல்கு வாயென அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான் |
17 |
1105 | காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத் தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய சீருடை யிலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம் ஏருடைக் கைலையி னினிது வாழ்வரால் |
18 |
1106 | தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்றதோள் வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்திர ரஞ்சொற்றனம் மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர் கோன்தாழ் நிலைபெற்ற வன்மீக நாதத்தின் இயல்கூறுவாம் |
1 |
1107 | திருமால் தலையிழந்த வரலாறு புத்தேளிர் முன்னாள் ஒருங்கே குழீஇக்கொண்டு புகழெய்துவான் முத்தீ வளர்த்தோர் மகம்வேட்க லுற்றார்கள் மொழிகின்றனர் இத்தால் வருங்கீர்த்தி யெல்லாம் நமக்கும் பொதுத்தானெனக் கொத்தார் மலர்க்கூந்தல் பங்கன்துணைத்தாள் குறிக்கொண்டரோ |
2 |
1108 | குருக்கேத் திரத்தே மகஞ்செய்யும் ஏல்வைக் கொழுங்கொன்றைவெள் ளெருக்கோ டணைக்குஞ் சடைச்செம்ம லார்தம்மின் அருள்கூர்தலால் உருக்கூர் பளிக்குப் பறம்பிற் பெருங்கீர்த்தி யுண்டாதலும் தருக்கான் முகுந்தன் கவர்ந்தான் நடந்தான் தடுப்பக்கொடான் தருக்கான் - செருக்கினால். |
3 |
1109 | ஓடுந் திறங்கண்டு விண்ணோர் தொடர்ந்தெய்த லுற்றாரவன் பீடொன்று வில்லம்பு கைக்கொண்டு வெம்பூசல் பெரிதாற்றுபு நீடும்பர் தம்மைப் புறங்கண்டு பின்நீ ளிடைச்சென்றுநின் றீடின்றி யெல்லீரும் ஒருவேற் குடைந்தீர்க ளெனநக்கனன் |
4 |
1110 | நக்கான் முகத்தா லவன்தேசு முற்றும் நறுஞ்சாமையாய் அக்காலை நீங்குற்ற வாற்றா லடல்விற் கழுத்தூன்றுபு மைக்காள மன்னான் நெடும்போது வாளாது நின்றான்குண திக்காளி யன்னான்றன் நிலைகண்டு புகழ்வௌளவு திறமெண்ணினான் |
5 |
1111 | கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி யங்கண் கடுக்கைப்பிரான் இச்சித்த கயிலாய நிருதித் திசைக்க ணிலிங்கந்நிறீஇ நச்சித்தொ ழுங்காலை யெங்கோ னணைந்தென்னை நவில்கென்றலும் பச்சைத் துழாயண்ணல் கவர்கீர்த்தி விண்ணோர் பெறப்பாலியாய் |
6 |
1112 | என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பி ரானோதுவான் வன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு வார்வில்லுடை அந்நா ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன வருள்செய்தலும் பொன்நாடர் கோமானும் விடைகொண்டு மீண்டான் பொருக்கென்றரோ |
7 |
1113 | அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப் பைவாய்ப் பணிப்பாய லான்சென்னி யறுபட்டு வீழ்ந்தவ்விடம் இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால் செவ்வே குறைச்சென்னி யாறங்கணோடுந் திருத்தக்கதே |
8 |
1114 | திருமால் தலை பெற்ற வரலாறு மேற்படி.வேறு ஆய காலையி லவன்புடை நின்று மப்புகழைப் பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார் மாயி ரும்புவி மிசைவள ரிருபிறப் பாளர்க் கேயு மெச்சனாம் மாயவ னின்மையி னுயங்கி எச்சன் - யக்ஞன், யாகவடிவினன். |
9 |
1115 | மீட்டு மெய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட் டீட்டு மன்பினுக் கெம்பிரா னெதிரெழுந் தருளப் பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான் தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில் |
10 |
1116 | கலிவிருத்தம் அறுபதம் முரன்றிசை முழக்கு மாயிதழ் நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக எறுழ்வலிச் சிலையினா லெச்ச னாகிய சிறுமலர்த் துளாவினான் சென்னி யற்றதால் |
11 |
1117 | உறப்புறு மெங்களுக் குதவு முண்டியும் மறத்தொழில் பயிலிய மானர்க் கேன்றவான் துறக்கமு மில்லையாய் விட்ட துட்கென இறத்தலி னெச்சனிவ் வுலகி னெம்பிரான் உறப்பு -நெருக்கம். |
12 |
1118 | ஆதலி னெச்சனுக் களித்தி சென்னியென் றோதினன் வேண்டலு முரைத்தல் மேயினான் மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப் போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன் |
13 |
1119 | எம்புடை வரம்பெறு மிரும ருத்துவ உம்பரி னவன்தலை யொன்றிக் கூடுக நம்புமிவ் விருவரும் நந்தம் ஆனையால் பம்பிய வேள்வியில் பாகம் எய்துக இரு மருத்துவ உம்பர் - வைத்திய தேவர்கள் இருவர், அசுவினி தேவர்கள். |
14 |
1120 | என்றருள் மழுவலான் சரண மேத்திமற் றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே மன்றநின் னருளினால் புற்றின் வாயெழூஉத் தின்றுநாணரச்செயுந் திறல்பெற் றேனரோ |
15 |
1121 | ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்குமிம் மேதகு வரைப்புவன் மீக நாதமென் றோதவும் கண்டவர் பிறவி யோவவும் ஈதிநீ வரமென விடையி னேந்தலும். |
16 |
1122 | தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான் இந்திரன் மீண்டன னிரும ருத்துவத் தந்திரத் தலைவரா லெச்சன் றன்சிரம் முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான் |
17 |
1123 | தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக் கொவ்வைச்செவ் வாயுமை கூறன் தாள்தொழு தவ்வத்த னாணையா லவியின் பாகமங் குய்வித்தோர்க் கமைத்துத்த னுலகம் புக்கனன். |
18 |
1124 | இகழரு முகுந்தனே இந்த வாறிழி தகவுற விடும்பையில் தங்குநீர்மையால் உகலருஞ் செல்வத்தை உடம்பை யல்லது புகழினை விரும்பலும் போதத் துன்பமே. |
19 |
1125 | வயிர வாளினான் வணங்கி வெந்துயர் வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம் வயிர மாடமற் றதற்குத் தென்திசை வயிர வேச்சர மரபி யம்புவாம் |
1 |
1126 | பிரமன் செருக்கு வடவ ரைத்தலை முஞ்ச மானெனும் தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர் படிம வுண்டியர் பாங்கின் நோற்றுழி அடல னப்பிரா னருளி னெய்தினான் |
2 |
1127 | வதன மைந்தொடும் வந்து தோன்றினான் பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார் துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக் கதம றுத்தவ ரிதுக டாயினார். |
3 |
1128 | இலகு மிச்சகம் யார்மு தற்றுமன் உலகெ வன்புடை யுயிர்த்தொ டுங்கிடும்? பலப சுக்களின் பாசம் நீத்தருள் தலைவன் யாரிது சாற்று கென்றனர். |
4 |
1129 | ஐம்மு கத்தயன் அனைய காலையின் மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான் இம்ம றைப்பொருள் உஆரு முய்வகை நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ |
5 |
1130 | உலகி னுக்கியான் ஒருவ னேயிறை உலக மென்கணே யுதித்தொ டுங்கிடும் உலகெ லாமெனை வழிபட் டும்பர்மேல் உலகி னைத்தலைப் படுங்க ளுண்மையே |
6 |
1131 | வேதங்கள் உரைத்தல் கலிநிலைத்துறை என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம் முன்றோன்றி யங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின் வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும் குன்றான்ற வில்லான் றனையே முதலென்று கூறும். |
7 |
1132 | அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன் அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும் அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன் அவனேயென ஓதிவெவ் வேறு முரைப்ப அங்கண் |
8 |
1133 | இருக்கு வேதங் கூறல் எச்சன் றனக்கு மிமையோர்க்குமெவ் வேதி யர்க்கும் அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர் நச்சுமுனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும் மெய்ச்சித்துரு என்றறி என்ற திருக்கு வேதம் |
9 |
1134 | யசுர் வேதங் கூறல் தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக் கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர் வன்காழ்வலி செற்றவன் யாரவ னேம திக்கு நன்காரண னேதென்று நவின்ற தடுத்த வேதம் |
10 |
1135 | சாமவேதங் கூறல் தோலாவவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன் ஆலாலம் உண்டோன் அவனேயகி லங்களுக்கு மேலாய வேதுஎன விண்டது சாம வேதம் |
11 |
1136 | அதர்வண வேதங் கூறல் வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர் உளரேல்புடை வீங்கி யெழுந்து திரண்டு ருண்ட இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி அளவிற்பெற லாமென விண்ட ததர்வ வேதம் |
12 |
1137 | முனிவோரெதிர் அந்தணன் வேதம் மொழிந்த கேட்டுத் தனிநாயகன் மாயையின் வெகுண்டு சாற்றும் சினநீடு தமோகுண சீலனுருத்தி ரன்றான் மனமோடுரை செல்லரு நிட்களம் வான்பிரமம் |
13 |
1138 | பிரணவம் உரைத்தல் சால்பானுயர் ஓமென் மொழிப்பொருள் சம்பு வென்றல் ஏலாதென வம்மனு வேவடி வெய்தி வந்து மாலாலுரை செய்தனை நீகம லப்பொ குட்டின் மேலாயிது கேண்மதி யென்றுமுன் நின்று சொல்லும். |
14 |
1139 | வேதத்தலை யிற்புக லுற்றுயர் வேத ஈற்றும் போதச்சுர மாய்நிறு வப்படு பொற்பி னேன்யான் மாதர்ப்பகு திக்குள் அடங்கி வயங்கி னேற்கும் ஆதிப்பரம் யாரவ னாகும் மகேச னம்மா |
15 |
1139 | r> எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் என்றிது விளம்பும் பிரணவந் தனையும் இகழ்ந்துதன் பெருமையே வியப்ப மன்றலந் துளவோன் ஆயிடைத் தோன்றி மன்றயான் கருத்தனென் றுரைத்தான் குன்றருங் கொடுநோய் ஆணவக் குறும்பாற் கோட்படு மிருவரும் இவ்வா றொன்றிய செருக்கான் மீமிசை யிகலி யோவறப் பிணங்குமவ் வேல்வை |
16 |
1140 | வயிரவ சம்பவம் - பிரமன் சிரமிழத்தல் அலர்ந்தசெங் கமல நிகரிணை விழியும் அதுமுகிழ்த் தனையதோர் விழியும் மலர்ந்தபொன் நிறந்த கேச�� |