logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)

Kanchip puranam of civanjana munivar - part 1 
part 1a / payiram & patalam 1-6 /verses 1-444
In tamil script, Unicode format


திருவாவடுதுறை யாதீனம் 
சிவஞான சுவாமிகள் அருளிய 
காஞ்சிப் புராணம் 
பாகம் 1a / (1 - 444)

0. பாயிரம் 1 - 27
1. திருநாட்டுப்படலம் 28 - 172
2. திருநகரப்படலம் 173 - 298
3. பதிகம் 298 - 329
4. வரலாற்றுப் படலம் 330 - 357
5. சனற்குமாரப் படலம் 358 -413
6. தலவிசேடப்படலம் 414-444


  • திருச்சிற்றம்பலம்

     

    0. பாயிரம்

    • காப்பு
      1 கலிநிலைத் துறை
      இருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள்இங் குலிகக்
      குருநி றத்திழி தோற்றம்முன் குலாய்த்தவழ்ந் தேறிப்
      பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்
      திருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்
      1
      2 தல விநாயகர்
      அறுசீரடி யாசிரிய விருத்தம்
      விகட சக்கர வாரணந் தொடர்வரும் வித்தக முகில்வீற
      விகட சக்கர விந்தமன் னவன்றனக் கருளுமெய்த் தலைவாகு
      விகட சக்கர வாகமென் முலையுமை கான்முளை என்னாச்சே
      விகட சக்கர ரெந்திர மெனச்சுழல் வெம்பவக் கடல்நெஞ்சே
      2
      கடவுள் வாழ்த்து
      சபாநாயகர்
      3 வேறு
      சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும் 
            மறைக்கோவும் தழல்கால் சூலம்
      அங்கேந்தும் அம்மானும் தத்தமது 
            தொழில்தலைநின் றாற்றச் செய்தோர்
      பங்கேந்தும் பெருமாட்டி விழிகளிப்ப 
            இருமுனிவர் பணிந்து போற்றக்
      கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும் 
            பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம்.
      1
      4 திருவேகம்பநாதர் .

      தணந்தபெருந் துயர்க்கடல்மீக் கூர்தலினான் 
            மலைபயந்த தரளமூரற் 
      கணங்குழையாள் புரிபூசை முடிவளவுந் 
            தரியாமல் இடையே கம்பை 
      அணங்கினைத்தூ தெனவிடுத்து வலிந்திறுகத் 
            தழீஇக்கொள்ள அமையாக் காதல்
      மணந்தருளிக் குறிபூண்ட ஒருமாவிற் 
            பெருமானை வணக்கஞ் செய்வாம்.
      2
      5 காமாட்சியம்மையார் .

      ஊன்பிலிற்று மழுவாளி கலவிதனில் 
            ஒண்ணாதென் றோர்ந்து நஞ்சந்
      தான்பிலிற்றும் பாப்பணியை நீப்பவுங்கார் 
            வண்டினங்கள் ததைந்து மூசத்
      தேன்பிலிற்று நறுங்கடுக்கைத் தெரியலைப்பாம் 
            பெனமருண்டத் தெரியல் நாறுங் 
      கான்பிலிற்றத் தெருண்டணையும் காமக்கோட் 
            டத்துமையைக் கருத்துள் வைப்பாம்
      3
      6 கருக்காமக் கோட்டிமிர வினையனைத்தும் 
            ஒருங்கெய்திக் கலகஞ் செய்யுந்
      தருக்காமக் கோட்டியெலாம் அறஎறிந்தாம் 
            இனியென்றும் தகைசால் அன்பு
      சுருக்காமக் கோட்டினைச்சே யரைகரங் 
            கொண்டார்க்கு முலைச்சுவடு நல்குந்
      திருக்காமக் கோட்டியம்மை சேவடிப்போ 
            தெப்போதுஞ் சிந்திப் பாமால்.
      4
      7 விகடசக்கர விநாயகக் கடவுள்

      விழிமலர்ப்பூ சனையுஞற்றித் திருநெடுமால் 
            பெறுமாழி மீள வாங்கி
      வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 
            முடைநாற்றம் மாறு மாற்றால்
      பொழிமதநீர் விரையேற்றி விகடநடப் 
            பூசைகொண்டு புதிதா நல்கிப்
      பழிதபுதன் தாதையினும் புகழ்படைத்த 
            மதமாவைப் பணிதல் செய்வாம்.
      5
      8 குமாரக் கடவுள்.
      முருகோட்டந் தரப்பாயும் மும்மதமும் 
            ஊற்றெடுப்ப முரிவிற்கோட்டும்
      ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு 
            முதுகளிறா உலவக் காட்டிப் 
      பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் 
            தினைப்புனத்துப் பரண்மேற்கொண்டு
      குருகோட்டும் பெடைமனந்த குமரகோட் 
            டத்தடிகள் குலத்தாள் போற்றி.
      6
      9 வயிரவக் கடவுள்
      வேறு
      எளியவரை வலியர் வாட்டின் 
            வலியரை இருநீர் வைப்பின் 
      அளியறத் தெய்வம் வாட்டும்ஔ 
            எனுமுரைக் கமைய வன்றே
      தெளியுமா வலியைச் செற்றோற் 
            செகுத்துரிக் கவயம் போர்த்த
      வளியுளர் கச்சி காவல் வயிரவர்க் 
            கன்பு செய்வாம்
      7
      10 திருநந்திதேவர்
      அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
      நங்குரு மரபுக் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்
      பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த
      செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி
      8
      11 அகத்திய முனிவர்
      காசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று
      மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல்
      அசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட
      தேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி 

      அகத்தியர் தென்னாடு போந்த வரலாறு , இப்புராணத்தில் தழுவக் குழைந்த படலத்தில் 185 முதல் 247 வரையிலுள்ள செய்யுட்களால் கூறப்படுகின்றது
      9
      12 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
      வேறு
      பரசமய கோளரியைப் பாலறா 
            வாயனைப்பூம் பழனஞ் சூழ்ந்த
      சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் 
            பெருமானைத் தேய மெல்லாம்
      குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளுங் 
            கவுணியர்தங் குலதீ பத்தை
      இரவியெமை யாளுடைய வென்றிமழ 
            விளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.
      10
      13 திருநாவுக்கரசு நாயனார்
      இடையறாப் பேரன்பும் மழைவாரும் 
            இணைவிழியும் உழவா ரத்திண்
      படையறாத் திருக்கரமும் சிவ்பெருமான் 
            திருவடிக்கே பதித்த நெஞ்சும் 
      நடையறாப் பெருந்துறவும் வாகீசப் 
            பெருந்தகைதன் ஞானப் பாடல்
      தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் 
            பொலிவழகும் துதித்து வாழ்வாம்
      11
      14 சுந்தரமூர்த்தி நாயனார்
      ஒருமணத்தைச் சிதைவுச்செய்து 
            வல்வழக்கிட் டாட்கொண்ட உவனைக் கொண்டே
      இருமணத்தைக் கொண்டருளிப் 
            பணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப்
      பெருமணச்சீர்த் திருத்தொண்டத் 
            தொகை விரித்த பேரருளின் பெருமாள் என்றுந்
      திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள் 
            எமதுகுல தெய்வமாமால்
      12
      15 மாணிக்கவாசக சுவாமிகள்
      பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் 
            பெருங்கருணைப் பெற்றி நோக்கிக்
      கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத் 
            ற்றியநிலை கடந்து போந்து
      திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் 
            வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்
      திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர 
            டிகளடி யிணைகள் போற்றி
      13
      16 அறுபத்துமூவர்
      கலி விருத்தம்
      தத்து மூவெயில் மூன்றுந் தழலெழ
      முத்து மூரல் முகிழ்த்த நிராமய
      சித்து மூர்த்திதன் தாளிணை சேரறு
      பத்து மூவர் பதமலர் போற்றுவாம்
      14
      17 சேக்கிழார் நாயனார்
      தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
      வாக்கி னாற்சொல்ல வல்ல பிரான் எங்கள்
      பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
      சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்
      15
      18 திருக்கூட்டத்தார்
      அறுசீரடி யாசிரிய விருத்தம்
      பேயன்ன புறச்சமயப் பிணக்குநூல் 
            வழியனைத்தும் பிழையே யன்றி 
      வாயன்மை தெளிந்துசைவ சித்தாந்த 
            வழிதேறி அதீத வாழ்வில் 
      போயண்மி அஞ்செழுத்தும் திருநீறும் 
            கண்டிகையும் பொருளாக் கொண்ட
      நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் 
            பெரும்பேறு நான்பெற் றேனால்
      16
      19 பஞ்சாக்கர தேசிகர்
      கயிலாய பரம்பரையிற் சிவஞான 
            போதநெறி காட்டும் வெண்ணெய்
      பயில்வாய்மை மெய்கண்டான் 
            சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
      குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் 
            குருநமச்சி வாய தேவன்
      சயிலாதி மரபுடையோன் திருமரபு 
            நீடூழி தழைக மாதோ
      17
      20 பின்வேலப்பதேசிகர்
      எவ்வெவர்கோட் படுபொருளும் அன்செழுத்தின் 
            அடக்கியவற் றியல்பு காட்டி
      மெய்வகையஞ் சவத்தையினும் நிற்குமுறை 
            ஓதுமுறை விளங்கத் தேற்றி
      அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச்சிவபோகத் 
            தழுத்தி நாயேன் 
      செய்வினையும் கைக்கொண்ட வேலப்ப 
            தெசிகந்தாள் சென்னி சேர்ப்பாம்
      18
      21 மற்றைய சிவநேசர்கள்
      மறைநான்கும் பயின்றொழுகி இட்டிகளும் 
            பலவியற்றி மல்லல் ஞாலத் 
      திறவாத புகழ்படைத்தும் ஈசனிடத் 
            தன்பிலரை எண்ணாதுளம்
      புறமோதிக் கொலைபயின்று மதுமாந்துங் 
            கொடும்பாவப் புலையரேனும்
      அறவாணன் திருவடிக்கீழ் அன்பினரேல் 
            அவரெம்மை அடிமை கொள்வார்
      19
       
      22 நூல் செய்தற்குக் காரணம் 
      கலிநிலைத்துறை
      பொருவில் கச்சியம் புரானம் வண் டமிழினிற் புகலென்
      றிருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர்
      திருவ ருட்குரி யான்றவர் கூறிய சிறப்பால்
      உரிமை மற்றெழு மாசையான் உரைத்திட லுற்றேன்
      1
       
      23 அவையடக்கம்
      மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவ
      மாய வேலவை அருள்மய மாகுமற் றதுபோல்
      பேயனேன்பிதற் றுரையுமே கம்பர்தம் பெருமை
      தூய காதையுள் ளுறுதலால் துகளறத் தோன்றும்
      1
      24 இழித்த சொற்புணர்த் தெளியனேன் இயம்பிய கவியுங்
      கழித்த ஐவகை இலக்கண வழுவுக்குக் காட்டாப்
      பழித்தி டாதெடுத்தாளுவர் பல்வகைச் சுவையுங்
      கொழித்த நாவின ராகிய வழுத்தபு குணத்தோர்
      2
      25 எழுத்துப் போலியும் எழுத்தென வாளுவர் அதுபோல்
      புழுத்த நாயினேன் பிதற்றிய செய்யுட்போ லியையும் 
      பழுத்த கேள்வியோர் கைக்கொள்வர் என்பது பற்றி
      விழுத்த நாணினேன் சிவகதை விளம்புதற் கிசைந்தேன்
      3
      26 நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி பிறழ்ந்தோன்
      எறித ருங்கலுங் கைக்கொளுங் கச்சியெம் பெருமாற்
      கறிவின் மேலவர் காப்பியப் பனுவல்போல் அறிவின்
      குறியி லேன்கவிப் புன்சொலுங் கொள்வது வழக்கால்.
      4
      27 சிறப்புப் பாயிரம் 
      எழுசீரடியாசிரியவிருத்தம்
      அருட்பணிக் குரிய மகேச்சுரர் முதலா 
            நால்வருந் தருகவென் றறைய
      மருட்பகை துமிக்குங் காஞ்சிமான் மியத்தை 
            வழங்குதென் மொழியினா லுரைத்தான்
      கருப்பகை யிரிக்கும் ஞானமும் ஏனைக் 
            கலைகளும் கரிசறப் பெப்யின்ற
      மருப்பொழி லுடுத்த வாவடு துறையில் 
            வாழ்சிவ ஞானமா தவனே
      5
      ------------

      1. திருநாட்டுப்படலம் (28-172)

      <
      28 கலிநிலைத்துறை
      பணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த 
      அணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்
      உணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்
      வணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம்
      1
      29 மழைச்சிறப்பு
      கடல்க டைந்திடச் செல்லுறூஉம் 
            வெள்ளைமால் கடுப்பப்
      படலை வெண்முகில் பரவைநீ 
            ருழக்கிவாய் மடுத்து
      விடமெ ழுந்தென மீண்டவம் 
            மாயனை விழைய
      உடல்க றுத்துவிண் நெறிப்படர்ந் 
            தொய்யென மீண்டு
      2
      30 அற்றை ஞான்றுமால் கயிலையைச் சரணடைந் தாங்குப்
      பொற்ற நந்தியஞ் சாரல்சூழ் பொருப்பினைக் குறுகிக்
      கற்றை வார்சடைச் சுந்தரன் கடவவான் மதுரை
      முற்று நான்முகி லெனவரை முழுவதும் பொதிந்து
      3
      31 முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து
      விரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக்
      கரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத்
      தெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறும் சிதறி
      4
      32 கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி
      வான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி
      ஏன்ற நீயினி எதிர்த்தனை யாயிடின் இன்னே
      ஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி
      5
      33 அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர்
      உடுத்த பாரிலுன் கிளையெலாம் முதலற ஒருங்கே
      படுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை 
      தொடுத்த வன்சினங் கொண்டழல் மேலமர் தொடங்கி.
      6
      34 விச்சை மந்திர வலியினால் வீங்குநீர் மழையை
      வச்சி ரக்கணை யாக்கிமெய் வளமெனக் கருளும்
      பொச்ச மில்மறை வேள்வியும் புனிதனேந் தழலும்
      எச்ச மாகமற் றெவையுமீண் டிறுகென இயம்பி
      7
      35 காட்ட கங்களுங் கழைநரல் கதிர்மணிச் சிமயக்
      கோட்ட கங்களுங் குளிர்புனற் கழனிசூழ் குலவு
      நாட்ட கங்களும் பரல்முரம் படுத்தெரி நடஞ்செய்
      மோட்ட கங்களும் முழுவதுங் குளிர்கொளச் சொரிந்து
      8
      36 இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய எரிபோய்க்
      கற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுட் கரப்ப
      உற்ற வாகண்டு தன்சினக் கனலையும் ஒருவி
      வெற்றி மாமுர செனமறைப் பேரொலி விளக்கி
      9
      37 தனது கீர்த்தியுந் திறற்பிர தாபமுந் தரைமேல்
      அனல்செய் கோபமும் முல்லையு மெனஎங்கும் அமைத்துப் 
      புனித மாம்அவை தன்னையும் பொதிந்துகொண் டென்னப்
      பனிவி சும்பினிற் சிவந்துவெண் ணிறம்படைத் தன்றே
      10
      38 அறுசீரடியாசிரிய விருத்தம்
      உடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யும்
      கொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி
      நெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி 
      விடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே.
      11
      39 போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்
      வாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங் 
      காதல்செய் துறையும் புள்ளும் மாக்களுங் கவன்று நெஞ்சம் 
      நோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ.
      12
      40 கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த
      நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர்
      புனைமறை வசிட்ட மேலோன் செருத்தலான் பொழிந்த தீம்பால்
      வனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த தன்றே.
      13
      41 பாலியாற்று வளம்
      கண்ணகன் குடுமிக் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து
      விண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந் 
      தண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று
      புண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ.
      14
      42 பாரிடங் குழித்து வீழும் பல்வயின் அருவி யெல்லாம்
      ஓரிரும் பாலி யாற்றின் ஒருங்குசென் றணையுந் தோற்றம்
      சீரிய புவனந் தோறுஞ் சிதறிய வினைக ளெல்லாம்
      ஓரிடத் தொருவன் றன்பால் உடங்குசென் றுறுதல் போலும்.
      15
      43 விலகிவீழ் அருவித் தாரை வேறுவே றாகஓடிக்
      குலநதிப் பாலி வைப்பின் ஏகமாய்க் கூடுந் தோற்றம்
      அலகில்பல் வழியும் மூதூர் அணிமையின் ஒன்றா மாறும்
      பலபல மதமும் ஈற்றின் ஒருவழிப் படலும் போலும்
      16
      44 மலைநகைத் தனைய காட்சி வயின்வயின் அருவித் தாரை
      சிலையினின் றிழிந்து மண்மேல் திரண்டுசென் றணையுந் தோற்றம்
      உலவையோ டிகலிச் சேடன் உயர்வரைக் குடுமி யெல்லாம்
      பலதலை விரித்துப் பொத்திக் கிடந்தவப் பான்மை போலும்.
      17
      45 குரைபுனல் தொண்டை நாட்டைக் குறும்பெறிந் தடிப்ப டுத்துப்
      புரைதப நடாத்து கென்னாப் புதுமுகி லரசன் நந்தி
      வரைமிசை யிருந்து வேந்தா மணிமுடி சூட்டி உய்ப்பத்
      திரைபடு பாலி வல்லே சிலையினின் றிழிந்து போந்து
      18
      46 அரசுகள் சூழ்ந்து செல்ல அருங்கணி மலர்வாய் விள்ளச்
      சரிகுழற் குறமின் னார்கள் பற்பல தானை வெள்ளம்
      விரவிடப் பரிய காலாண் மேதகு மாக்கள் அத்தி 
      இருபுடை தழுவிப் போத இகல்கொடு வையம் ஊர்ந்து
      19
      47 அணிவகுத் தெழுந்து குன்றர் அரும்பெறற் குறிச்சி புக்கு
      மணிவகை ஆரம் பூண்டு மதுக்குட விருந்து மாந்தித்
      தணிவற வெளிக்கொனண் டேகித் தலைதலை வேட்டம் போகித்
      துணிபட மாக்க ளெல்லாந் தொலைதுடன் ஈர்த்துச் சென்று
      20
      48 கலிவிருத்தம்
      மண்டமர் மேல்கொடு வந்தனம் இன்னே
      தண்டக நாட்டுறை தாபதர் நோயோர்
      பெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பெட்டென்
      றெண்டிசை யார்ப்ப இசைப்பறை சாற்றி
      21
      49 இறாற்றிகி ரிப்படை தாங்கி இபக்கோ
      டறாத்திறல் வெஞ்சிலை காந்தள் அரும்பு
      நறாப்பயில் கோலென ஏந்திநல் வீர
      மறாப்பகை மாய்த்துறை வெட்சி மலைந்து
      22
      50 முல்லையின் வேந்து முடித்த கரந்தை
      ஒல்லை அலைதுயர் ஆநிரை பற்றி
      மெல்லிதழ் தின்று சிவந்தெழு வேய்த்தோள்
      நல்லவர் கற்பை யழித்து நடந்து
      23
      51 வஞ்சி மலைந்தழல் பாலையை வாட்டி
      அஞ்சி யிடாதுதன் ஆணை யிருத்தி
      எஞ்ச லுறாமரு தத்திறை யோடும்
      வெஞ்சம ரேற்றுழி ஞைத்துணர் வேய்ந்து
      24
      52 தடுத்தெதிர் நின்ற தடங்கரை யெல்லாம்
      படுத்து மதன்பயில் பாசறை வீட்டி
      மடுக்குளம் ஏரியின் வாட்ட மனைத்தும் 
      கெடுத்தனம் என்று தழீஇக்கிளர் வுற்று
      25
      53 வீறி யடாவகை வெஞ்சிறை கோலித்
      தூறிடு மள்ளர் தொலைந்தழி வெய்தச்
      சீறி யடர்ந்து தெழித்துமுள் வேலி
      கீறி வளைந்து கிடங்கினை நீங்கி
      26
      54 நொச்சியை முற்றியந் நொச்சியி னுள்ளார்
      பச்சிள நொச்சி பறித்தணி யாமே
      நச்சிய தும்பை நறுந்துணர் சூடி
      அச்செழு மாமதில் முற்றும் அகழ்ந்து அழித்து 
      விட்டமையால் நொச்சியணியாமே என்றார்.
      27
      55 வேறு
      இடித்துவெளி செய்துந ரெங்கணும் நுழைந்தாங்
      கடுத்தமட வார்வயி றலைத்தனர் இரங்கக்
      கொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின்
      எடுத்துவரு வெள்வரகு கொள்ளுடன் இறைத்து
      28
      56 வெற்றிபுனை மாலிகை மிலைச்சியிரு பாலுஞ்
      சுற்றிவரு புட்குல நிரைத்தொழுதி தன்னால்
      கொற்றமிகும் ஆர்கலியை நோக்கியறை கூவி 
      எற்றுசுழி நெய்தல்வழி எய்துறுத லோடும்
      29
      57 பௌளவம துணர்ந்துபவ ளந்தரள மாதி
      வௌளவுதிரை ஏந்தியெதிர் கொண்டடி வணங்கச்
      செவ்விதின் உவந்துபயம் ஈந்துசின மாறிக்
      கௌள்வியமெய் யன்பொடு கலந்துளதை யன்றே
      30
      58 அறுசீரடியாசிரிய விருத்தம்
      தன்னடிப் படுத்து மேலைத் தண்டக நாடு முற்றும்
      முன்னுறக் கவர்ந்து கொண்ட வளத்தினும் மூவி ரட்டி
      பின்னுற அளித்து வானிற் புலவரும் பெட்கு மாற்றால்
      அந்நிலை உயிர்கள் ஓம்பி அரசுசெய் துறையும் பாலி.
      31
      59 “காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம்” என்ன
      ஆரணப் பனுவல் கூறும் அரும்பொருள் தெளியத் தேற்றும்
      பேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே
      சீரிதிற் கொடுக்குந் தேனுந் தரவருஞ் செழுநீர்ப் பாலி.
      32
      60 வறுமையுற் றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள்
      இறுமுடல் வருத்தி யேனும் ஈவதற் கொல்கார் அற்றே
      தெறுகதிர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா
      துறுமணல் அகடு கீண்டும் ஒண்புனல் உதவும் பாலி
      33
      61 சொற்றவித் தீர்த்த மேன்மை சுவைபடும் பாலோ டொக்கும்
      மற்றைய தீர்த்த மெல்லாம் வார்தரு புனலோ டொக்கும்
      பெற்றிமை உணர்ந்து தொல்லோர் பெயரிடப் பட்ட சீர்த்தி
      பற்றிய தெனலாம் பாலிப் பெருமையார் பகரு நீரார்.
      34
      62 நாட்டு வளம்
      கலிநிலைத்துறை
      விளம்பும் இத்தகை மணிகொழி விரிதிரைத் தரங்க
      வளம்பு னற்றடம் பாலியான் வண்மைபெற் றோங்கி
      உளம்ப யின்றுநாற் பொருள்களும் உஞற்றுநர்க் கிடமாய்த்
      துளூம்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் னாடு
      35
      63 செக்கர் வார்சடைச் சிவபிரான் திருவருள் செய்யத்
      தக்க வாய்மையின் உயிர்க்கெலாந் தன்னிடத் திருந்து
      மைக்கண் எம்பெரு மாட்டியெண் ணான்கறம் வளர்க்குந்
      தொக்க மாப்புகழ் படைத்தடு தொண்டைநன் னாடு
      36
      64 பவம்வி ளைத்திடாப் பெரும்பதி யெனத்திசை போய
      சிவம்வி ளைத்திடு நகரங்கள் ஏழுளுஞ் சிறந்தது
      தவம்வி ளைத்திடு காஞ்சியைத் தன்னிடத் திருத்தி
      நவம்வி ளைத்திடும் பெருமைபூண் டதுதொண்டை நாடு
      37
      65 நானிலத்து ஐந்திணை வளம்
      தரைவி ளங்கிய தண்டக நாட்டினில் தகைசால்
      வரையுங் கானமும் புறம்பணைப் பழனமும் மணிநீர்த்
      திரையும் வேலையு மென்னுநா னிலத்தினுள் சிறந்த
      புரையில் ஐந்திணை வளஞ்சிறி தறிந்தவா புகல்வாம்
      38
      66 முருக வேட்கிடு தூமமோம் புறமுளி அகில்சந்
      துருவ வாரழற் பெய்துபுன் பயிர்விளைத் துவப்பார்
      பெருவ ளந்துறந் தூர்தொறும் இடுபலி பேணும் 
      பொருவில் வாழக்கையர் தஞ்செயல் போன்மெனப் பொருப்பர்.
      39
      67 ஏறு தன்னுடல் வருத்திய பகைமையெண் ணாது
      தூறு பன்மணி மாமுதல் பொறையெலாந் தொலைத்த 
      வேறு நன்றியே கடைப்பிடித் திதைவியன் பொருப்பர்
      கூறு நல்வளம் விளைத்திடும் உயர்ந்தவர் செயல்போல்
      40
      68 வேட்டை மேற்புகு வார்க்குநல் வினையுந்த மடவார்
      கூட்டம் வாய்க்குமச் சாரலில் தினைக்குரற் கெய்துஞ்
      சேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமார் ஓம்பும்
      பாட்டி சைத்திறம் ஒளியிருந் தனுதினம் பயிலும்
      41
      69 நங்கு லத்துரு வாழ்க்கையைக் கெடுத்துநம் இருக்கை
      தங்க ளுக்கெனக் கொண்டஇவ் வேனல்கள் தம்மை
      இங்கண் வாட்டுதும் என்பதோர் சூழ்ச்சிஎண் ணியபோல்
      அங்கண் எஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும்
      42
      70 என்னை ஊர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான்
      தன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி
      அன்ன தாமெனுங் கேண்மையா னளிமுகிற் குலத்தைக்
      கன்னி மாமயில் காண்தொறுங் களிசிறந் தகவும்
      43
      71 நெருங்கு பைந்தழை வருக்கைமேல் நெடுவளி யலைப்ப
      அருங்கண் மாமயில் வீற்றிருந் தசைதருங் காட்சி
      கருங்க ணாயிரச் செம்மல்தன் மருகனைக் காண
      மருங்கு வந்துதன் ஊர்தியை நிறுவுதல் மானும்.
      44
      72 சந்தும் ஆரமும் தாங்கிவம் பலர்ந்ததண் குவட்டான்
      மைந்தர் கண்ணையும் மனத்தையுங் கவர்ந்திடும் வனப்பின்
      முந்தும் ஓங்கலும் கொடிச்சியர் குழுக்களும் முகில்தோய்
      கந்த மார்குழை முகத்தலர் இலவங்கங் காட்டும்.
      45
      73 கொங்கை யேந்திய ஆண்களும் அவணகொம் புடைய
      துங்க வேங்கையின் குலமெலாம் அவனபால் சுரந்து
      பொங்கு நீடுசே வினங்களும் அவணவான் புனலை
      அங்கண் வேட்டுணும் ஒற்றைத்தாள் எகினமும் அவண
      46
      74 ஆணெ லாமொரு கன்னியை மணப்பவா னணையும்
      கோணை வேங்கைகள் யாட்டினோ டுறவுகொண் டோங்கும்
      பேணு சேவினஞ் சிங்கமேல் ஏறிடும் பிழையா
      தேணி னாற்பொலி எகினங்கள் இடபத்தை விழுங்கும்
      47
      75 வில்ல லர்ந்த உடுக்களும் விண்நெறிப் படருஞ்
      செல்லும் வெண்கதிர்க் கடவுளும் பானுவுந் திறல்சால்
      மல்லல் வானவக் குழுவுமெய்ப் பாறவந் திருக்கும்
      இல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடுங் குன்றம்
      48
      76 போது மூன்றினும் போதுசெய் காவிசூழ் பொருப்பும்
      மேத குந்தமிழ்க் கெல்லையாம் வேங்கட வரையுங்
      காதல் பூப்பவத் தாணிகொண் டறுமுகக் கடவுள்
      கோது நீத்தர சாட்சிசெய் குறிஞ்சிஅக் குறிஞ்சி
      49
      77 அன்பெ லாமொரு பிழம்பெனத் திரண்டகண் ணப்பன்
      எம்பி ராற்கொரு விழியிடந் தப்புகா ளத்திப்
      பொன்பி றங்கிய முகலிசூழ் கயிலையம் பொருப்பும்
      தன்பு லத்திடை யுடையது தடவரைக் குறிஞ்சி
      50
      78 நாவல் மன்னவர்க் கிரந்துசோ றளித்திடு நம்மான்
      தேவி யோடமர் திருக்கச்சூர் திருவிடைச் சுரமும்
      பாவ காரியர் எய்தொணாக் கழுகுசூழ் பறம்பும்
      மேவ ரத்திகழ் குறிஞ்சியின் பெருமையார் விரிப்பார்
      51
      79 2. பாலை 
      குராவ ளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப்
      பராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப
      மராம ரத்துளர் வண்டுபண் பாடவன் முருங்கை
      விராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பின தொருபால்
      52
      80 எயிற்றி மார்எழில் நலத்தினுக் கிரியல்போ யுடைந்தாங்
      கயற்பொ தும்பர்புக் கலர்குராப் பாவைகண் டவர்தந்
      துயிற்ர்று சேயெனக் கவன்றுபோய்த் தூதுணம் புறாக்கள்
      வெயிற்ற லைக்கண்ணின் றுயங்குவ நிலைமைவிண் டவர்போல்
      53
      81 தூது ணம்புற வினமெலாம் துணையுடன் கெழுமிப்
      போத ஊடியும் உணர்த்தியுந் தலைத்தலைப் புணர்ந்து
      காதல் அந்நலார் மொழியையுங் கடந்துசே ணிடைச்செல்
      ஏதில் ஆடவர் தமைச்செல வழங்குவித் திடுமால்
      54
      82

Related Content

திருமுல்லைவாயில் அந்தாதி

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (169

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (202

சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30