logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ நடேசாஷ்டகம்  - தமிழ் உரையுடன்

ஸ்ரீ சம்பு நடனம் 
ஸ்ரீ பதஞ்சலி  முனிவர் அருளிய


ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம்
    ஜலஜலஞ் சலித மஞ்ஜுகடகம்
பதஞ்ஜலி த்ருகஞ் ஜநமநஞ்ஜந
    மசஞ்சலபதம் ஜநந பஞ்ஜநகரம் |
கதம்பருசி மம்பரவஸம் பரமமம்புத 
    கதம்பக விடம்பக களம்
சிதம்புதி மணிம் புதஹ்ருதம் புஜரவிம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (1)


ஸதஞ்சிதம்- ஸாது ஜனங்களால் பூஜிக்கப்பட்டவரும், உதஞ்சித- மிகவும் பூஜிக்கப்பட்ட,
நிகுஞ்சித- வளைந்த, பதம்- இடது காலை உடையவரும், ஜலஜலஞ்சலித- சலசல என்று அசைகின்ற,
மஞ்ஜு- அழகான, கடகம்- வளைகளையுடையவரும், பதஞ்ஜலி- பதஞ்ஜலி மஹரிஷியின்,
த்ருகஞ்ஜனம்- கண்களுக்கு மைபோல ஸந்தோஷத்தைச் செய்பவரும், அனஞ்ஜனம்- தோஷமில்லாதவரும்,
அசஞ்சல- அசையாத, பதம்- ஸ்தானமாயிருப்பவரும், ஜனன- பிறப்புக்கு, பஞ்ஜனகரம்- நாசத்தைச் செய்பவரும்,
கதம்பருசிம்- கதம்பபுஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியையுடையவரும், அம்பரவஸம்- சிதம்பரத்தில்
வஸிப்பவரும், பரமம்- உத்க்ருஷ்டமானவரும், அம்புத- மேகங்களின், கதம்பக- கூட்டத்திற்கு,
விடம்பக- ஸத்ருசமான, களம்- கழுத்தையுடையவரும், சிதம்புதி- ஞான ஸமுத்திரத்தின்,  
மணிம்- ரத்னம்  போன்றவரும், புதஹ்ருதம்புஜ- யோகிகளின் ஹ்ருதயார விந்தத்திற்கு,
ரவிம்- ஸூர்யன் போன்றவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சிதம்பர ஸபையில், 
நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி- மனதில், பஜ- தியானம் செய். 

ஹரம்த்ரிபுர பஞ்ஜநமநந்த க்ருதகங்கண
    மகண்டதய  மந்தரஹிதம்
விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்திதபதம்
    தருண சந்த்ர மகுடம் |
பரம்பத விகண்டித யமம்பஸித மண்டிததநும்
    மதநவஞ்சநபரம்
சிரந்தநமமும் ப்ரணத ஸஞ்சித நிதிம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (2)

ஹரம்- ஸகல பாபங்களையும் அபஹரிப்பவரும், த்ரிபுர பஞ்ஜனம்- மூன்று புரங்களையும் 
நாசம் செய்தவரும்,  அநந்த க்ருத கங்கணம்- ஆதிசேஷன் என்ற ஸர்ப்பத்தால் செய்யப்பட்ட
வளைகளையுடையவரும், அகண்டதயம்- நிறைந்த கருணையையுடையவரும், 
அந்த ரஹிதம்- நாசம் இல்லாதவரும், விரிஞ்சி- பிரம்ம தேவராலும், ஸுரஸம்ஹதி- தேவக்
கூட்டத்தாலும், புரந்தர - தேவேந்திரனாலும், விசிந்தித- தியானம் செய்யப்பட்ட, 
பதம்- குஞ்சித சரணத்தையுடையவரும், தருண சந்த்ர மகுடம்- பாலச்சந்திரனை சிரஸில் 
உடையவரும், பரம்- எங்கும் நிறைந்தவரும், பத விகண்டித யமம்- காலால் அடிக்கப்பட்ட 
யமனையுடையவரும், பஸிதமண்டித தநும்- விபூதியால் அலங்கரிக்கப்பட்ட 
சரீரத்தையுடையவரும், மதன வஞ்சனபரம்- மன்மதனை வஞ்சிப்பதில் ஆசையுள்ளவரும், 
சிரந்தனம்- முந்தி உள்ளவரும், அமும்- ஹ்ருதயத்தில் இருப்பவரும், ப்ரணத ஸஞ்சித நிதிம்- 
நமஸ்கரித்த பக்தர்களால் ஸம்பாதிக்கப்பட்ட புதையலுமான, பர-ஸர்வோத்தமரான,
சிதம்பர - சிதம்பர ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில்,
பஜ- தியானம் செய்.

அவந்தமகிலம் ஜகதபங்ககுண துங்கமமதம்
    த்ருதவிதும் ஸுரஸரித்
தரங்க நிகுரும்ப த்ருதிலம்பட ஜடம்
    சமநடம்ப ஸுஹரம் பவஹரம் |
சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம்
    கரலஸந் ம்ருகசிசும் பசுபதிம்
ஹரம் சசிதனஞ்சய பதங்கநயநம்
    பரசிதம்பர நடம் ஹ்ருதிபஜ ||        (3)

அகிலம்- ஸமஸ்தமான, ஜகத்- உலகத்தை, அவந்தம்- ரக்ஷிப்பவரும், அபங்ககுண துங்கம்- 
உயர்ந்த குணங்களால் மேலானவரும், அமதம்- மனதுக்கு எட்டாதவரும், த்ருதவிதும்- தரிக்கப்பட்ட
சந்திரனையுடையவரும், ஸுர ஸரித்- கங்கையின், தரங்க- அலைகளுடைய, நிகுரும்ப- கூட்டத்தை,
த்ருதி- தரிப்பதில், லம்பட- ஸாமர்த்தியமுள்ள, ஜடம்- சடைகளையுடையவரும், சமன- யமனுடைய,
டம்ப- கர்வத்தை, ஸுஹரம்- அபஹரிப்பவரும், பவஹரம்- ஸம்ஸார ரோகத்தை நாசம் செய்பவரும், 
சிவம்- மங்கள ரூபியும், தச திகந்தர - பத்துத் திக்குப் பிரதேசங்களிலும், விஜ்ரும்பித- பரவிய,
கரம்- கைகளையுடையவரும், கரலஸன் ம்ருக சிசும்- கையில் பிரகாசிக்கும் மான் குட்டியையுடையவரும், 
பசு- ஸகல பிராணிகளுக்கும், பதிம்- நாயகரும், ஹரம்- ஸகல பாபங்களையும் போக்கடிப்பவரும், 
சசி- சந்திரன், தனஞ்ஜய - அக்னி , பதங்க- ஸூரியன் இவர்களை, நயனம்- கண்களாக உடையவரும், 
பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சிதம்பர ஸபையில்,   நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில்,
பஜ- தியானம் செய்.

அநந்தநவ ரத்நவிலஸத் கடக கிங்கிணி
    ஜ்ஜலம் ஜ்ஜல ஜ்ஜலம் ஜ்ஜலரவம்
முகுந்தவிதி ஹஸ்தகத மத்தல லயத்வநி
    திமித்திமித நர்(த்)தந பதம் |
சகுந்தரத  வஹ்னிரத நந்திமுக தந்திமுக
    ப்ரிங்கிரிடி ஸங்கநிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுகவந்திதபதம்
    பரசிதம்பர நடம் ஹ்ருதிபஜ  ||        (4)

அனந்த- அளவில்லாத, நவரத்ன- நவமணிகளால், விலஸத்- பிரகாசிக்கின்ற, கடக- தோள்வளைகளின்,
கிங்கிணி- சலங்கைகளுடைய,  ஜ்ஜலம் ஜ்ஜல ஜ்ஜலம் ஜ்ஜல - சலசல சலசல என்கிற, ரவம்- ஸப்தத்தை
உடையவரும், முகுந்த விதி- மோக்ஷத்தையளிக்கின்ற விஷ்ணுவின், ஹஸ்த கத- கையிலிருக்கின்ற,
மத்தள- மத்தள வாத்யத்தின், லயத்வனி- உயர்ந்த சப்தத்தால்,  திமித்திமித- திமி திமி என்ற சப்தத்தோடு
கூடிய , நர்த்தன- தாண்டவத்தோடு கூடிய, பதம்- சரணத்தையுடையவரும்,  சகுந்தரத- பிரம்மதேவர்,
வஹ்னிரத- ஸுப்ரமண்யர், நந்திமுக - நந்திதேவர், தந்திமுக - விநாயகர், ப்ருங்கிரிடி- பிருங்கி
மஹரிஷி இவர்களின், ஸங்க- கூட்டத்தை, நிகட- ஸமீபத்தில் உடையவரும், ஸனந்த ஸனக 
ப்ரமுக வந்தித பதம்- ஸனந்தர் , ஸனகர் முதலிய மஹரிஷிகளால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட 
சரணத்தையுடையவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம்
செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அநந்த மஹஸம் த்ரிதச வந்த்யசரணம்
    முநிஹ்ருதந்தர வஸந்தமமலம்
கபந்தவிய திந்த்வவநி கந்தவஹ
    வஹ்னிமக பந்துரவி மஞ்சுவபுஷம் |
அநந்தவிபவம் த்ரிஜகதந்தர  மணிம்
    த்ரிணயநம் த்ரிபுரகண்டநபரம்                
ஸநந்தமுநி வந்திதபதம் ஸகருணம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (5)


அநந்தமஹஸம்- அளவில்லாத காந்தியை உடையவரும், த்ரிதசவந்த்ய சரணம்- தேவர்களால் நமஸ்கரிக்கத்
தகுந்த பாதங்களையுடையவரும்,  முநிஹ்ருதந்தர வஸந்தம்- யோகிகளின் மனதில் வஸிப்பவரும், 
அமலம்- பரிசுத்தமானவரும், கபந்த- ஜலம், வியத்- ஆகாயம், இந்து- சந்திரன், அவனி-பூமி, கந்தவஹ- காற்று,
வஹ்னி- அக்னி, மகபந்து- யாகம் செய்கிறவர், ரவி- ஸூர்யன் இவர்களால், மஞ்ஜு- அழகிய, 
வபு : - சரீரத்தையுடையவரும், அனந்தவிபவம்- அளவற்ற ஐச்வர்யத்தையுடையவரும்,  த்ரிஜகதந்தரமணிம்-
மூவுலகங்களுக்கும் ரத்னம் போலிருப்பவரும், த்ரிணயனம்- மூன்று கண்களையுடையவரும், 
த்ரிபுரகண்டனபரம்- த்ரிபுர ஸம்ஹாரத்தில் முக்யமானவரும், ஸனந்தமுனி வந்திதபதம்-
ஸனந்தர் முதலான மஹரிஷிகளால் நமஸ்கரிக்கப்பட்ட பாதங்களை உடையவரும், 
ஸகருணம்- இரக்கமுள்ளவருமான, பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம்
செய்கின்ற பரமசிவனை, ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அசிந்த்ய மளிப்ருந்தருசி பந்துரகளம்                
    குரிதகுந்த நிகுரும்பதவளம்
முகுந்தஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தந
    லஸந்தமஹி குண்டலதரம் |
அகம்ப மநுகம்பித ரதிம் ஸுஜந
    மங்கலநிதிம் கஜஹரம் பசுபதிம்
தநஞ்ஜயநுதம் ப்ரணத ரஞ்ஜனபரம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||         (6)

அசிந்த்யம்-  மனதிற்கு எட்டாதவரும், அளிப்ருந்த- வண்டுக்கூட்டத்தினுடைய , ருசி- காந்தி போல்,
பந்துர- அழகான, களம்- கழுத்தையுடையவரும், குரித குந்தநிகுரும்ப தவளம்- மலர்ந்த முல்லை மலர் 
ஸமூஹம் போல் வெளுத்தவரும், முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருத- விஷ்ணு,  தேவஸமூஹம்,
தேவேந்திரன் இவர்களால் செய்யப்பட்ட, வந்தனலஸந்தம்- நமஸ்காரத்தால் பிரகாசிக்கின்றவரும்,
அஹிகுண்டலதரம்- ஸர்ப்பமயமான கர்ணபூஷணத்தைத் தரிப்பவரும், அகம்பம்- அசைவற்றவரும், 
அனுகம்பிதரதிம்- தயவு செய்யப்பட்ட ரதி தேவியையுடையவரும், ஸுஜன மங்கள நிதிம்- ஸாதுக்களுடைய
சுபகார்யங்களுக்கு இருப்பிடமும், கஜஹரம்- கஜாஸுரனை ஸம்ஹரித்தவரும், பசுபதிம்- ஸகல
ப்ராணிகளுக்கும் நாயகரும், தனஞ்ஜயநுதம்- அர்ஜுனனால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டவரும், 
ப்ரணத ரஞ்ஜனபரம்- நமஸ்கரித்தவர்களைத்  திருப்தி செய்வதில் ஆசையுள்ளவருமான , 
பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, 
ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

பரம்ஸுரவரம் புரஹரம் பசுபதிம்
    ஜநிததந்திமுக ஷண்முகமமும்            
ம்ருடமகனக பிங்களஜடம் ஸனக
    பங்கஜாவிம் ஸுமநஸம் ஹிமருசிம் |
அஸங்கமநஸம் ஜலதிஜந்மகரலம்
    கபலயந்தமதுலம் குணநிதிம்
ஸநந்த வரதம் சமிதமிந்துவதநம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (7)

பரம்- எங்குமுள்ளவரும், ஸுரவரம்- தேவர்களுள்  சிறந்தவரும், புரஹரம்- த்ரிபுரர்களை  
நாசம் செய்தவரும்,  பசுபதிம்- விருஷபவாஹனரும், ஜனித தந்திமுக ஷண்முகம்- 
உண்டுபண்ணப் பட்ட விநாயகர், ஸுப்ரமண்யர் இவர்களையுடையவரும், 
அமும்- ஸமீபத்திலிருப்பவரும், ம்ருடம்- சுகத்தைக் கொடுப்பவரும், 
கனகபிங்கள ஜடம்- தங்கம் போல் மஞ்சளான சடைகளையுடையவரும், 
ஸனகபங்கஜரவிம்- ஸனக மஹரிஷியாகிய தாமரைப்பூவிற்குச் சூரியனும்,
ஸுமனஸம்- கருணையோடு கூடிய மனதையுடையவரும், ஹிமருசிம்- பனி போன்ற
வெண்மை நிறமுடையவரும், அஸங்கமனஸம்- ஆசையற்ற மனஸையுடையவரும், 
ஜலதிஜன்மகரளம்- பாற்கடலில்  உண்டான காலகூட விஷத்தை , கபளயந்தம்- சாப்பிட்டவரும், 
அதுலம்- ஸாத்ருச்யமில்லாதவரும், குணநிதிம்- ஸகல மங்கள குணங்களுக்கும் இருப்பிடமானவரும்,
ஸனந்த வரதம்- ஸனந்த மஹரிஷியின்  இஷ்டத்தைப் பூர்த்தி செய்தவரும்,  சமிதம்- சாந்தகுணமுள்ளவரும்,
இந்து வதனம்- சந்திரன் போன்ற முகத்தையுடையவருமான ,   பர- ஸர்வோத்தமரான, 
சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, 
ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அஜம் க்ஷிதிரதம் புஜகபுங்க வகுணம்
    கநகச்ருங்கிதநுஷம் கரலஸத்
குரங்க ப்ருதுடங்கபரசும் ருசிர
    குங்குமருசிம் டமருகம்ச தததம் |
முகுந்தவிசிகம் நமதவந்த்ய பலதம்
    நிகமப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டி கமமும் ஜடிதிஸம்ஹ்ருதபுரம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ  ||        (8)

அஜம்- உண்டாகாதவரும், க்ஷிதிரதம்-  பூமியை ரதமாக உடையவரும், புஜங்கபுங்க வகுணம்- ஆதி சேஷன் என்ற
ஸர்ப்ப ராஜனை நாண்கயிறாக   உடையவரும், கனக ச்ருங்கிதனுஷம்- மஹாமேரு பர்வதத்தை வில்லாக உடையவரும்,
கரலஸத் குரங்க ப்ருதுடங்கபரசும் - கையில் பிரகாசிக்கின்ற மான், பெரிய உளி, கோடரி இவைகளை உடையவரும்,
ருசிரகுங்குமருசிம் - அழகான குங்குமத்தின் காந்தியை உடையவரும்,  டமருகஞ்ச- டமருக வாத்யத்தையும், 
தததம்- தரிப்பவரும், முகுந்தவிசிகம்- மஹா விஷ்ணுவை பாணமாக உடையவரும், 
நமதவந்த்யபலதம்- நமஸ்கரிப்பவர்களுக்கு உயர்ந்த பலத்தைக் கொடுப்பவரும், நிகமப்ருந்ததுரகம்- வேதக்
கூட்டங்களாகிற குதிரைகளை உடையவரும், நிருபமம்- உவமையில்லாதவரும், ஸசண்டிகம்- உமையுடன் கூடினவரும்,
ஜடிதி- சீக்கிரமாக, ஸம்ஹ்ருதபுரம்- நாசம் பண்ணப்பட்ட த்ரிபுரத்தை உடையவருமான , அமும்- இந்த,
பர- ஸர்வோத்தமரான, சிதம்பர- சித்ஸபையில், நடம்- தாண்டவம் செய்கின்ற பரமசிவனை, 
ஹ்ருதி-மனதில், பஜ- தியானம் செய்.

அனங்க பரிபந்திநமஜம் க்ஷிதிதுரந்தரம்
    அலம் கருணயந்த மகிலம்
ஜ்வலந்தமனலம் தததமந்தகரிபும்
    ஸததமிந்த்ரஸுர வந்திதபதம் |
உதஞ்சதரவிந்தகுல பந்துசதபிம்பருசி
    ஸம்ஹதி ஸுகந்திவபுஷம்
பதஞ்சலிநுதம் ப்ரணவபஞ்ஜரசுகம்
    பரசிதம்பர நடம்ஹ்ருதிபஜ ||        (9)

அனங்கபரிபந்தினம்- மன்மதனுக்குச் சத்துருவும், அஜம்- ஆதியற்றவரும், க்ஷிதிதுரந்தரம்- பூமியின் பாரத்தை
வஹிப்பவரும், அகிலம்- எல்லா ஜந்துவைக் குறித்து, அலம்- மிகவும், கருணயந்தம்- தயைபுரிபவரும், 
ஜ்வலந்தம்- ஜ்வலிக்கின்ற , அனலம்- அக்னியை, தததம்- (இடது கையில்) தரிப்பவரும், 
அந்தகரிபும்- யமனுக்குச் சத்துருவும்,  ஸததம்- எப்பொழுதும், இந்த்ரஸுர வந்திதபதம்- தேவேந்திரனாலும்,
தேவர்களாலும் நமஸ்கரிக்கப் பட்ட  சரணத்தையுடையவரும், உதஞ்சத்- உத்க்ருஷ்டமானவரும், 
அரவிந்தகுல- தாமரைப்புஷ்ப ஸமூஹத்திற்கு, பந்து- பந்துவான ஸூர்யனுடைய,
சதபிம்ப- அனேக மண்டலத்தின், ருசிஸம்ஹதி- காந்திக் கூட்டத்தையுடையவரும், ஸுகந்தி- உயர்ந்த வாஸனையுள்ள,
வபுஷம்- சரீரத்தை உடையவரும், பதஞ்சலி நுதம்- பதஞ்சலி மஹரிஷியால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டவரும், 
ப்ரணவ பஞ்ஜரசுகம்- ஓங்காரமாகிற கூண்டிற்குக் கிளி போன்றவருமான, பரசிதம்பர நடம்- பரமாத்ம ஸ்வரூபியான
சிதம்பரத்தில் தாண்டவம் புரிகின்ற ஸ்ரீ நடராஜமூர்த்தியை, ஹ்ருதி- மனதில், பஜ- தியானம் செய். 

இதிஸ்தவமமும் புஜகபுங்கவக்ருதம்
    ப்ரதிதினம் படதி ய : க்ருதமுக:
ஸத: ப்ரபுபதத்விதய தர்சநபதம்
    ஸுலலிதம் சரணச்ருங்கரஹிதம் |
ஸர:ப்ரபவஸம்பவ ஹரித்பதிஹரி
    ப்ரமுகதிவ்யநுத சங்கர பதம்
ஸகச்சதி பரம்நது ஜநுர்ஜலநிதிம்
    பரம் து:க ஜநகம் துரிததம் ||        (10)

இதி- இவ்விதம், புஜக புங்கவக்ருதம்- பதஞ்ஜலி மஹரிஷியால் செய்யப்பட்டதும், 
ஸத: ப்ரபு - ஸபா நாயகருடைய, பதத்விதய- இரண்டு சரணங்களுடைய , தர்சனபதம்- பார்ப்பதற்கு மார்க்கமாயும், 
ஸுலலிதம்- அர்த்தத்திலும், பதத்திலும் மிகச்சுலபமாயும், சரண ச்ருங்கரஹிதம்- கால் கொம்பு இல்லாத
எழுத்துக்களை உடையதுமான, அமும்- இந்த, ஸ்தவம்- ஸ்தோத்திரத்தை, க்ருதமுக: - முகஸ்தமாய்ச் 
செய்து கொண்ட, ய: - எவன், ப்ரதி தினம்- நாள்தோறும், படதி- ஸ்தோத்திரம் செய்கிறானோ , ஸ: - அந்த பக்தன்,
ஸர:ப்ரபவஸம்பவ:  - நாபிக் கமலத்தில் உண்டான பிரம்மாவினாலும், ஹரித்பதி- திக்பாலகர்களாலும், 
ஹரிப்ரமுக- நாராயணன் முதலான தேவர்களாலும், திவ்யநுத- நன்றாய் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட , 
பரம்- மிகவும் உத்க்ருஷ்டமான, சங்கர பதம்- சிவ ஸ்தானத்தை, கச்சதி- அடைகிறான், பரம துக்க ஜனகம்- 
அதிக துக்கத்தை உண்டு பண்ணுகிறதும், துரிததம்- பாபத்தைக் கொடுப்பதுமான, ஜநுர்ஜலநிதிம் து- 
பிறவி ஸமுத்திரத்தையோ என்றால், ந கச்சதி - அடைவதில்லை. ( மோக்ஷம் அடைகிறான்)


ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் செய்யப்பட்ட ஸ்ரீ சம்பு நடனம் என்னும் ஸ்ரீ நடேசாஷ்டகம் தமிழ் உரையுடன் 
                    முற்றிற்று.

                    சிவம்.
     

Related Content