logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சபாநாதர் பேரில் மாரிமுத்தாப்பிள்ளை பாடிய கீர்த்தனங்கள்

திருச்சிற்றம்பலம்

 

வ. எண்.

கீர்த்தனை

ராகம்

தாளம்

  1.  

தில்லைச் சிதம்பரமே

ஆனந்தபைரவி 

ஆதி

  1.  

தெரிசித்த பேரைப்

சவுராஷ்டிரம்

ஆதி

  1.  

தெய்வீக ஸ்தலம்

பூர்விகலியாணி

ஏக 
  1.  

எந்தத் தலத்தையும்

தேவகாந்தாரி

ஆதி

  1.  

எந்நாளும்

பியாகடை

ஆதி

  1.  

பல மந்திரத்திற்கும்

மத்தியமாவதி

ஏகம்
  1.  

பரந்தனை

மோகனம்

சாப்பு
  1.  

ஒருக்கால் சிவ சிதம்பரம்

ஆரபி

ஆதி

  1.  

சிவ சிதம்பரமென்று

பைரவி 

ஆதி

  1.  

இன்னமுமொரு ஸ்தலம்

செஞ்சுருட்டி

ஆதி

  1.  

காலைத் தூக்கி

எதுகுல காம்போதி

ஆதி

  1.  

உன்முகம் பார்த்து

புன்னாகவராளி

ஏகம்
  1.  

ஏதுக்குதவு மிந்த

சாவேரி

திரிபுடை 
  1.  

என்னத் துணிவாய்

ஆரபி

ஆதி

  1.  

வீடுமம்பலமாகி

காம்போதி

ஆதி

  1.  

உம்மைப் போலாட்டை

புன்னாகவராளி ரூபகம்
  1.  

இன்னம் வயிர

மத்தியமாவதி

ஆதி
  1.  

எந்நேரமும் ஒருகாலை

தோடி

ஆதி

  1.  

இதைவிடக் குதித்து

தேவகாந்தாரி

சாப்பு
  1.  

அம்பலத்தாடி

ஆனந்தபைரவி

ஆதி

  1.  

ஏதுக்கித்தனை மோடி

சுருட்டி

சாப்பு 
  1.  

பாருங்கள் வந்து

கேதார கௌளம்

ஆதி

  1.  

என்ன காரியத்துக்கிந்த

பைரவி

ஆதி

 

            கீர்த்தனம்-1 

        இராகம்- ஆனந்தபைரவி - ஆதிதாளம்.

            பல்லவி.

    தில்லைச் சிதம்பரமே- அல்லாமல்-வேறில்லை சுதந்தரமே

            அநுபல்லவி.


    சொல்லுக்கெளிது நெஞ்சே    சொல்லுவாய் சிவகாம
    வல்லிக்கன்புளசபை வாணன் வீற்றிருக்கும்-        (தில்லை)

            சரணங்கள்.

1.    தோற்று மும்மல வேரைக் காற்றிலிடு பஞ்சாகத் தூற்றியொழி
    த்துக்குறை யாற்றி மயக்கந் தீரத் - தேற்றியணியுந் திருநீற்றினா 
    லிருவினை- மாற்றிப் பரகதியி லேற்றிவைப்பதற்கு     (தில்லை)

2.     தத்துவநிலை தெரிந்தொத்த மனதோடிரு கைத்தல மெதிரே குவி
    த்தே முடிமீதில்வைத்த பிறகு பயபத்தியுடனே தெரிசித்தபொ
    ழுதிலுயர் முத்திதந்தாளத்                (தில்லை)

3.      காசினி தனிற் கயிலாச ரென்றொரு நடராஜரிருந்து பாவநாசஞ்
    செய்வதிதுவே வாசஞ்செய்வோருக்கு மோசம் வராது கிலேச
    ம் வராது எமபாசம் வராது                (தில்லை)


            கீர்த்தனம்- 2

        இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.

            பல்லவி

    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ
    
            அநுபல்லவி 

    விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து நடந் தெதிர்
    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு, கோபுரத்தைக்
    கண்ணாரவே கண்டு                (தெரிசி)

            சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி
    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி
    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு
    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா
    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா
    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று
    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி
    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்
    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ
    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு
    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.
    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி 
    லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ
    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா
    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான
    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)


            கீர்த்தனம்-3

        இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்

            பல்லவி.

    தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை

            அநுபல்லவி,

    துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி
    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை
    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)

            சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்
    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து
    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு
    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்
    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல
    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி
    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ
    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்
    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்
    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ
    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்
    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா
    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்
    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)


            கீர்த்தனம்-4 

        இராகம்-தேவகாந்தாரி - ஆதிதாளம்

            பல்லவி

    எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை சொல்லக் கூடாதே ஐயன்

            அநுபல்லவி

    சொந்தத்தலஞ் சிதம்பரமென்று மனதினிற் சிந்தித்து கருமலைப் போலே
    எதிர்வந்திட்ட முயலகன் மேலே ஆனந்தக் கூத்தாடினதாலே          (எந்த)

            சரணங்கள்

1.     ஆதியில் வெண்குட்டந் தீர்ந்து கவுட தேசத்தரசன் பொன்னிற
    மானான் தேகம் நீசச் சாதியின் மூவர் புலைத் தன்மை போய்க்கதி
    சார்ந்தாரதுவே தெய்வீகம் ஒரு வேதியன் வாயிலோர் சோறிட்டு
    க்கூடு போய் வீட்டிற் புகுந்தது காகம் பின்னுந் தீதறு தவத்தாலெ
    ப்போதுந் தரிசனம் செய்திடுமோர் புலிநாகம், முன்னம் பெய்த
    துபொன்மழைமேகம் இந்த வைபோக மின்னமநேகம்            (எந்த)

2.     கழுகு புசிக்கத் தவறி யிறந்த கயலுமடைந்தது கதியே, நீரில் முழு
    கியெழும்ப விளமையைத் தந்து முதுமையைத் தீர்த்ததிப் பதியே
    கூவி, யழுத புலிக்குட்டி யுண்டிளைப்பாற வருகில் வந்தது பயோத
    தியே, கொலைப் பழிசெய்யும் பார்ப்பா னொருவனுக்கு முத்திபா
    லித்த தையன் சந்நிதியே அதனாலித்தையே தினந்துதியே செய்
    து மேலிட்டுச் சொல்லும் சுருதியே                    (எந்த)

3.     எங்கெங்குந் தானிதைப் பூலோகக் கயிலாசமென்றுரைப்பா ரொ
    ருபேரும், இதிலங்கமிறந்து திரும்பிப் பிறப்பாரோ வாடிய
    தாளைக் கண்டோரும், மலர்ப்பங்கயன் மால்முதலோர் வந்தருச்
    சனை பண்ணுகிறாரதைப் பாரும் ஒளிபொங்குந் தொளாயிரத்தொ
    ண்ணூற்றொன்பதுங்குக் கலையிதிலாருந், தலமெங்கெங்குமோ
    ர் கலைசாரு மதுவுமிங் கர்த்தசாமத்திற் சேரும்                (எந்த)


            கீர்த்தனம்-5

        இராகம்-பியாகடை- ஆதிதாளம்,
    
            பல்லவி.

    எந்நாளும் வாசமாய்ச் சிதம்பர ஸ்தலத்திலே இருக்கத் தவஞ்செய்தேனோ

            அநுபல்லவி.

    பன்னாகம் புலிகாகம் பார்ப்பான் புலையன் முதற்
    பத்தி செய்தே யிதின் முத்தி பெற்றிடலாலே         (எந்நாளும்)

            சரணங்கள்.

1.      முந்தியன்னை யுதரந்தனிலே கரு விருந்து திருவயிறுநொந்துபசி
    யொடுபிறந்து நிலமிசை தவிழ்ந்து தளர் நடை நடந்து பருவமாகி, இ
    ந்தமனை மனைவி மைந்தர் நிதிபலவு மெந்தனுடைமையிது சொந்
    தமெனவே சொல்லின்  சிந்தைதனின்மத மிகுந்து பலபல வகந்தை
    களே செய்து திரிந்த தல்லாமல்            (எந்நாளும்)

2.     வட்ட ஸ்தனத்திற் றொங்கலிட்ட பணியழகும் ஒட்டி வச்சிரமிழை
    த்த சட்டி யழகும் நுதற் பொட்டழகு மிடையிற் பட்டழகுமுடை
    ய கட்டழகியர் வலையிற் கிட்டி யறிவழிந்து மட்டியெனவே தொட
    ர்ந்-தொட்டினின் மொய்த்த சிறு சிட்டெனவே யவர்கள் தொட்
    டு முயக்கிலகப்பட்டு மிகவு மதிகெட்டு மெலிந்தலைந் 
    திட்டதல்லாமல்                    (எந்நாளும்)

3.      தேசமதற்கு ளொரு காசு கொடுக்கப் பிரையாச மனத்தர் தமை
    ப்போஜனெனத் துதிசெய், தாசுமுதற்கவிகள் பேசியலுத்து ம
    னங்கூசுவதேயல்லாம லீசனதிகப் பிரகாசனணி சருமத் தூசனு
    மைமகிழுல்லாசா னடியவர்கள், நேசனிலகு கயிலாசன் கனகசபை
    வாசன் புலிசை நடராசனைச் சேவித்து            (எந்நாளும்)


            கீர்த்தனம்- 6

        இராகம்-மத்தியமாவதி-ஏகதாளம்.

            பல்லவி.

    பலமந்திரத்திற்கும் பலமந்திரம் பொன்னம்
    பலமென்னும் மந்திரமே

            அநுபல்லவி.

    புலவர்க்கும் முநிவர்க்கும் பலவர்க்குந் தியானிக்கப்
    பொதுவாயிருக்கு மந்திர மதுவே சுருக்க மந்திரம்     (பல)

            சரணங்கள்.

1.    செனன மரண வாதை நீக்கிய மந்திரஞ்சேரு மும்மல மாயை போ
    க்கிய மந்திரம், மனதின் மெய்ஞ்ஞான முண்டாக்கிய மந்திரம்மந்
    திரத்திற் கெல்லாஞ் சிலாக்கிய மந்திரம்        (பல)

2.     முதுமைபோயிளமை கொடுத்திட்ட மந்திரம் மூன்று புலையர் நீ
    சம்விடுத்திட்ட மந்திரம், கதியிலோர்கண் காகமடுத்திட்ட மந்தி
    ரம் காட்டுப் புலியைப் பாம்பைத் தடுத்திட்ட மந்திரம்  (பல)

3.     அதுவே யெவர்க்குங் காயசித்திக்கு மந்திரம் அதுவே நினைவின்ப
    டி சித்திக்கு மந்திரம் அதுவே யழிவிலாத முத்திக்கு மந்திரம் அ
    துவே சிந்தித்த நெஞ்சிற் றித்திக்கு மந்திரம்    (பல)


            கீர்த்தனம் -7
 
        இராகம்-மோகனம்-சாப்பு தாளம்

            பல்லவி

    பரந்தனை யடைந்திட வேணுமென்றாற் சிதம்
    பரந்தனை யடையுங்கள் மாந்தர்களே

            அநுபல்லவி

    வரந்தனைத் தருமிந்தத் தலந்  தனிலே யிருந்த
    மாந்த ரெல்லாருந் தவ வேந்தரே     (பரந்தனை)

            சரணங்கள்

1.      காட்டிலிருக்கின்ற புலியும் பாம்பும் பெற்ற காட்சியுங் கேட்டிரு
    ப்பீர்களே, வீட்டினிலிருக்கின்ற நாகமு முயர்ந்த மேல் வீட்டினிற்
    சென்றதுங்  கேட்டிருப்பீர்களே         (பரந்தனை)

2.     சாதியிலீனமுள்ள புலையர் மூவரிதிற் றனித்தனியே புனிதராகினார்
    வேதியரி லதிக பாவி யொருவரிதின்  
    மேவிப் பரகதியி லேகினார்        (பரந்தனை)

3.     வெள்ளியினா லெங்களை யனிருக்கச் செய்த வீட்டை வடகயிலை
    வென்பாரே-தெள்ளிய செம்பொன்னினாற் செய்த வீடித்தைத்
    தென் கயிலாச மென்பாரே         (பரந்தனை) 


            கீர்த்தனம்-8 

        இராகம்-ஆரபி - ஆதிதாளம்.

            பல்லவி

    ஒருக்கால் சிவசிதம்பரமென்று நீ சொன்னா லிருக்கா தூழ்வினையே

            அநுபல்லவி.

    கருக்காறருக்கிது தெரியும் பொதுவிலொரு
    காலைத் தூக்கி நின்ற கோலத்தை மனதில் வைத்து            (ஒரு)    

            சரணங்கள் .

1.      சூழ்வலியுடைய பஞ்சாக்கினி யிடை நின்று சொரூபமுங் கரிவானே
    ன், மனை வாழ்வை வெறுத்துக் கனிகாயுஞ்  சரகுந்தின்று மாதவம்
    புரிவானேன், பல வேள்விகள் செய்தந்த வோமகுண்டத்தி
    னெய்யை வீணிலே சொரிவானேன், காதுங் கேள்வியில்லாத மு
    ழு மோநிகளாய்த் தலையிற் கிளைத்திட்ட சடைதனை வளைத்திட்டு
    த்திரிவானேன்                        (ஒரு)

2.      வேதமந்திரஞ் சொல்லி  வாயிரத் தெண்டன் புவிமீதினில் விழுவா
    னேன், இரு-பாதமுஞ் சிவந்திடத் தலங்கடோறுந் திரிந்து பல
    தெய்வந் தொழுவானேன், கொல்லன் ஊதும் துருத்தி போலே
    வாயுவைக் கும்பித்துடல் யோகத்திலெழுவானேன், ஐந்துபூத
    ங்களுங் கலங்க வங்கப் பிரதட்சணமாய்ப் புரண்டு புரண்டு மதிமரு
    ண்டெழுந் தழுவானேன்                     (ஒரு)

3.     உருக்கி யுடலை மெத்த வருத்தி யுறக்கத்தையு மூனையுந் துறப்பா
    னேன் , சீலையரைக்கில்லா நிருவாணியாகி லோகவாழ்க்கையனை
    த்தையும் மறப்பானேன், வருநரைக்குந் திரைக்குங் கற்பமருந்
    திச் சித்தர்களாகி நாடெங்கும் பறப்பானேன் சபைத்திரைக்குள்
    ளே மறவாகி யிருக்கும் ரகசியத்தின் திறந்தெரியாமல்வீணே
    யிறந்தின்னம் பிறப்பானேன்                    (ஒரு)


            கீர்த்தனம்-9 

        இராகம்- பைரவி - ஆதிதாளம்.

            பல்லவி.

    சிவசிதம்பரமென்று நினைப்பாயே உனக்
    கபசெயம் வாரா தொன்று மனப்பேயே

            அநுபல்லவி

    கவசமு முனக்கி தென்றறிவாயே  நல்ல கனகசபையில் புலி
    பனக முனிவர்கள் தொழ வனவரத நடனந்தனை யரனாடுஞ்  ( சிவ)

            சரணங்கள்.

1.     கன்மவினை பொய்களை யாறலாமே பொல்லா மன்மதவாதை தீர்ந்
    து தேறலாமே, சென்ம சாகரக் கரை யேறலாமே யெழுந்துசெ
    ன்றபோதிலுஞ் சும்மாநின்றபோதிலு மொன்றைத் தின்ற
    போதிலும் படுக்கின்ற போதிலும்  நீ            (சிவ)

2.     மனிதருறவை மெய்யென்றிருக்காதே கதிர்முன் பனியான வா
    ழ்வைச் செல்வஞ் செருக்காதே தனிவேத மந்திர மிதைச்சுருக்
    காதே பசி தந்த வேளையு  மிடர் வந்தவேளையும் மனம்நொந்தவே
    ளையும் பின்னெந்தவேளையும் நீ            (சிவ)

3.     ஒருமந்திரத்தையும் நீ செபிக்காதே யிந்தத் திருமந்திரமன்றியொ
    ன்றும் லபிக்காதே, கருமந் தப்பிதஞ் செய்து தவிக்காதே தில்லை
    க்காட்டினி லையன் செய்த வாட்டினி லுறுதியை நாட்டிடு மொன்
    றிலு மாட்டி நில்லாதே                (சிவ)



            கீர்த்தனம்- 10

        இராகம்-செஞ்சுருட்டி-ஆதிதாளம்

            பல்லவி.

    இன்னமுமொரு ஸ்தலமிருக்கு மென்றொருக்காலே
    ஏன் மலைக்கிறாய் மனதே

            அநுபல்லவி

    சொன்ன சொன்ன ஸ்தலங்க ளெங்குமோடிக் களைத்துச்
    சோதித்தறிந்தா லிந்த ஆதிச்சிதம்பரம் போல்        (இன்ன)

            சரணங்கள்

1.     சருக்கரையுந் தேன்பாகுஞ் சரியாய் நிறம் பெற்றாலுஞ் சருக்கரை
    ருசி மாவிலிருப்பது பிரயாசம், முருக்கஞ் செம்பரத்தையும் நிறமெ
    ன்றானாலுமந்த முருக்கினிலுண்டோ வாசம்            

    தரிக்கும் வச்சிரக்கல்லுந் தறிப்பு மொத்திருந்தாலும் தறிப்பைத் தள்
    ளிவச்சிரந் தனைத் தரிப்பதுல்லாசம், உரைக்கும் ஸ்தலமனந்தந் த
    ரைக்குளிருந்திட்டாலும் உம்பர் வந்து தொழும் பொன்னம் பலமே
    கயிலாசம்                        (இன்)

2.     உப்புங் கர்ப்பூரமு மொன்றைப் போலிருந்தாலு மூரெங்கும் பெரிய
    தாய்க் கர்ப்பூரந்தனைச் சொல்லாரோ, இப்புவியிலெவர்க்கும் யோக்
    கியந் தருங் காவிரிக் கேற்பது சணனாரோ             

    ஒப்பரிதாய் விளங்குந் தெய்வீக கங்கையாற்றுக் குவமை யெடுத்துரை
    ப்ப துவர்க்கழியாற்று நீரோ, அப்படிப் போலநேகம் ஸ்தலமிருந்தா
    லுமந்த வல்லல்வினை தொலைக்குந் தில்லைப்பதிக்கு நேரோ        (இன்)

3.     விண்ணுலகக்திலுடு மீனின மெல்லாங்கூடி வெண்மை நிறமாமொரு
    தண்மதிமுன்னில்லாது, தண்ணுலவிய வல்லித்  திரளாய்ப்  பூத்தாலு
    மொரு தாமரைக் கொவ்வாது                

    மண்ணுலகத்திலுள்ள தருக்களனைத்துங் கூடி மருவுலவுங் கற்பகத்த
    ருவுக்கிணை வராது, புண்ணிய ஸ்தலங்கள் பலவிருந்தும் நடேசன்வா
    ழும் புண்டரீகபுரம்போற் கண்டு சொல்லவேறேது        (இன்)



            கீர்த்தனம்-11

        இராகம்- எதுகுல காம்போதி - ஆதிதாளம்

            பல்லவி.

    காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே யென்னைக்
    கை தூக்கியாள் தெய்வமே 

            அநுபல்லவி.

    வேலைத் தூக்கும் பிள்ளை    தனைப் பெற்ற தெய்வமே
    மின்னும் புகழ்சேர் தில்லைப் பொன்னம்பலத்திலொரு     (காலை)

            சரணங்கள்

1.     செங்கையின்மான் தூக்கிச் சிவந்த  மழுவுந் தூக்கி அங்கத்திலொ
    ருபெண்ணையனு தினந் தூக்கி, கங்கையைத் திங்களைக் கதித்தசடை
    யிற்றூக்கி இங்குமங்குமாய்த் தேடி யிருவர் கண்டறியாத    (காலை)

2.     நந்தி மத்தளந் தூக்க நாரதர் யாழ் தூக்கத் தொந்தமென் றயன் றாள
    ஞ் சுதியொடு தூக்க, சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேற் கரந் தூ
    க்க முந்தும் வலியுடைய  முயலகனுனைத் தூக்க        (காலை)

3.     கும்ப மண்டத்தைத் தூக்கக்  கொடுங்கைக் கும்பத்தைத் தூக்கப்
    பைம்பொற் சுவர் கொடுங்கைப் பாரத்தைத்  தூக்க, எம்பிபாரத்தை
    விராட்டிதய தாமரை தூக்கச் செம்பொன்னம்பலத்திலே தெற்கு
    முகமாயொரு                        (காலை)


            கீர்த்தனம் -12 
 
        இராகம்-புன்னாகவராளி- ஏகதாளம்.

            பல்லவி

    உன் முகம்பார்த்த பயமென்றா லென் முகம் பார்த்தருளாமற்
    றென்முகமா யிருப்பதென்ன வைம்முகத் தையாவே

            அநுபல்லவி.

    மின்முகம் பார்த்தாடுந் தில்லை மேவும் நடேசரே யருக்கன்
    தன்முகம் பார்த்திட  விரும்புந் தாமரை போல் நான் விரும்பி (உன்)

            சரணங்கள்

1.     யார்க்கோ வந்த விருந்தெனவே யறியாது போலிருந்தால் பார்க்கிற
    வர் யாரினியென் பரிதாபம் முழுதுந்   தீர்க்கிற தெய்வமறு தெய்தமுனை
    யன்றி யுண்டோ, நீர்க்குமிழி யாக்கை தனை நீக்குமுன் வந்தாட்
    கொள்வையென்                        (உன்)

2.     தூக்கிய தாளிணை முடி மேற் சுமக்கு முயலகன் போலப் பாக்கியஞ்
    செய்யாத கொடும் பாதகனாதலினாலே, கூக்குரல் செய்தோலமிட்
    டுக் கூவியுன்றன் கோயில் தனைநோக்கி வலமாக வந்து நூறுதெண்ட
    னிட்டெ ழுந்து                        (உன்)

3.     காரினிற் பூங்கமுகு தொடுங் காவனந் தமேவு புலியூரினிற் காண்பவ
    ர்க்குமுத்தி யுதவும் நடராயா பாரினிலிவ் வுருவெடுத்துன் பதமலர்க்
    காளாகாம னீரினி லம்புலி போலே நிலைகலங்கித் தலைவணங்கி     (உன்)


            கீர்த்தனம் -13

        இராகம்-சாவேரி - திரிபுடை தாளம்.

            பல்லவி.

    ஏதுக்குதவு மிந்த காயம் சுமந்ததினால் வருவ தேதாயம்

            அநுபல்லவி.

    சீதப் பிறையணி சோதிச்சடை முடித் தேவன் புலிசையின்  மேவம் பலவ
    ன் பொற், பாதம்  பணிவிடைக் காகித் தவஞ்செய்து பவத்தை
    யொழிக்காம  லவத்திலே பிறந்             (தேது)

            சரணங்கள்.

1.     தருமராசன் தறிக்குங் கட்டை பிரமன் தைக்குமொன்பது பீற்றச்
    சட்டை, கிருமிகட்கொரு கன்ம குட்டை காலன் கிட்டும் போதினி
    லொடலொட்டை வருமேயிதை மெய்யென்போர்க்கும் பெரும்பழி
    மாங்கி ஸமுஞ்சீயும் வழும்பும்  நிறை குழி  அருமையினி யிடுமதனை
    யொழியொழி யாரும் நம்பொண்ணாது நீரின் மேற்குமிழி    (ஏது)

2.     விஞ்சும் மும்மலஞ் சேரும்வீடு புலவேடரை வரிருக்குங்காடு சஞ்சி
    தப் பறவைக் கோர்கூடு இதைச் சதமென்றெண்ணுவ தெல்லாங் கேடு
    மஞ்சின் மேலிடு வானவில்லிணை கூறும், வாழ்வை நிலையென்று மயங்
    கித் தினந்தோறுந், துஞ்சிலைம் பொறிகலங்கி மதிமாறுஞ் சுவாசமட
    ங்கினாற் றொடக் கூடாது நாறும்             (ஏது)

3.     கெடுவினை முளைக்குந் தோல்மூட்டங் கழுகு கொடும் நாய் நரிக்
    கும் விருந்தூட்டஞ், சுடுகாட்டக்கினிக் கிடுதாட்ட  மந்தச் சூக்ஷம்
    பார்த்திடில் பொம்மலாட்டம், விடுவி டுருவெடுத்திடு வதனை முன்னை
    வினைக்குக் கிருபை மருந்தளிக்க வல்லவன்னை படரும் மெய்யன் பொ
    ன்னம்பலவ னடி தன்னைப் பணிந்தாற்  பிறவி நோய் தணிந்து போம்
    பின்னை                         (ஏது)


            நிந்தாஸ் துதி

            கீர்த்தனை-14 

        இராகம்- ஆரபி- ஆதிதாளம்

            பல்லவி

    என்னத் துணிவாய் நான் பயப்படாமல் வந்துன்
    னிணையடி பணிவேன் ஐயா
    
            அநுபல்லவி

    பொன்னம்பல வாணனே முன்ன முன்றனைப் பாடும்
    புலவனை நீவிழுங்கும் புதுமையைக் கேட்டிருந்தும்        (என்ன)

            சரணங்கள்

1.     பாய்கிற மாடொன்று வாயிலில் மேவுதே  பாம்பும் புலியிமிரு பக்க
    முந் தாவுதே, பேயும் பூதமும்  முன்னும்  பின்னுமுலாவுதே பிடித்த
    கைமா னண்டம்  வெடித்திடக் கூவுதே             (என்ன)

2.     கொழுந்து விட்டோங்கு மழற் பிழம்பாகு முன்னுறுப்பு கொடிய
    தில்லைக்காடு நீ குடியிருக்கப் பொறுப்பு ஒழிந்திருக்கா தெப்போ
    து முனது நெஞ்சிற் கறுப்பு வுனைத்தான் பித்தனென்பதை நினைத்
    தாற் றோன்றும் வெறுப்பு                (என்ன)

3.     ஆதியின் மாலயனு மடி முடி தேடுவோனே யாதியந்த மில்லா நி
    ன் றருமறைபாடு வோனே பாதி மதியைச்  சடை மீதினிற் சூடுவோ
    னே பாதத்தைத்  தூக்கிப் பொன்னம்பலத்தி னின்றாடு வோனே. (என்ன)


            கீர்த்தனம் -15

        இராகம்-காம்போதி - ஆதி தாளம்

            பல்லவி.

    வீடுமம்பலமாகி நீருமந்தரமானீர் வேளை பொல்லாப்பாகியோ

            அநுபல்லவி

    காடுங் காணியாகியோரோடுங் கையிற் கொண்டீரே
    கனக சபை நாதரே பனக பூஷணனாரே             (வீடு)

            சரணங்கள்

1     உளக்களியாய் பல வுயிர்களுக்கும் படி தானளக்கிற  மைத்துன
    ன்வந்தருகினிலிருந்தும் இளக்கரியாமற் செந்நெலீ ராழியா லறத்தை
    யளக்குஞ் சீமாட்டி சொந்த மனையாட்டியா யிருந்தும்    (வீடு)

2.     ஈட்டும் பற்பல நிதிக்கெல்லாந் தலைவனாச் சூட்டுங் குபேரனீங்
    காத் தோழனென் றிருந்தும், பூட்டகம் வெளியாச்சே புலிபாம்
    புக்குள்ளேயுன்ற னாட்டமல்லா மடங்கி யரை யுடம்பானீரையா(வீடு)

3.     வெள்ளைப் பிலுக்கைப் பார்த்தான் மேல்பூச்சல்லாம லுள்ளிலும்
    புறம்பிலு மொன்றிலுமிலையே, எள்ளிலெண்ணெய் போலெங்
    குமிருப்பேனென் றொருக்காலே துள்ளிக் கூத்தாடி னீரே சொர்
    ண சபைநாதரே                     (வீடு)



            கீர்த்தனம்-16

        இராகம்- புன்னாகவராளி- ரூபகதாளம்,

            பல்லவி

    உம்மைப் போலாட்டை யெடுத்தம்பலத்தினிற் பா
    ரொருவரைக் காணேனையா

            அநுபல்லவி

    செம்மை மலர்த் திருவாழுஞ் சிதம்பரநாதரே
    தின்னாமலொரு பிள்ளை கொன்ற பழிகாரரே     ( உம்)

            சரணங்கள்

1.     யானைத்தோல் புலித்தோலாடை யுண்டத்தாட்சி யதுவல்லா
    லெலும்பைக் கோர்த்தணிந்ததற்குச் சாட்சி மானைக் கையிற்பிடி
    த்த வாறே யுமக்குத்தாட்சி- மழுவெடுத்து மெய்யாச்சோ
    கழுகுக்கேற்ற கண்காட்சி            (உம்)

2.     கிடையிற்கிடைந்த வாயனடியை மெள்ளத்தேடிக் கிட்டும் போது
    மச்சானென்றொட்டினீருறவாடி அடவிப்புலிப் பாம்பு மறிந்
    தொருமித்துக்கூடி யாட்டுக்காலுக் கொட்டுப் போட்டிருக்குதே
    நாடி                     (உம்)

3.     வெற்றி விஜயன் பன்றி விரும்பியடிபட்டீரே - வேடன் வாய்த்
    தசையெச்சில் வேண்டி ருசிகண்டீரே - சிற்றிடைச்சியைப் பாகஞ்
    சேர்த்துத் தானே கொண்டீரே சிதம்பரேசரே யாட்டாற்றிருமே
    னி துவண்டீரே                (உம்)


            கீர்த்தனம் 17

         இராகம்-மத்தியமாவதி-ஆதிதாளம்.

            பல்லவி.

    இன்னம் வயிரமுன்ற நெஞ்சிலே யிருப்ப
    தென்ன காரணத்திற்கையா

            அநுபல்லவி.

    தன்னந் தனியனாகிப் பொன்னம்பல நேசனே நீ
    சலப்பிரளயக் காலத்திற் சர்வ சங்காரஞ் செய்தும் (இன்)

            சரணங்கள்

1.     கருப்புவில் மதன் சண்டைக் கெதிர்த்தபோது மனக் கறுப்புத்
    தீரக் கண்ணால் வதைத்ததுவும் நெருப்புப் போலே சீறி வந்திடுங்
    கொடுங்காலனிலத்தி லலறிவிழ வுதைத்ததுவும் மருப்புக்கரி வ
    யிற்றைக்கிழித்துப் போர்த்ததும் பொல்லா - மருத்துவனாருயிர்
    சிதைத்ததுவும், பொருப்பைப் பறித்தசைக்கு மரக்கனைக் கால்
    நகத்தாற் பூமிதனிலழுந்தப் புதைத்ததுவும் போதாமல்     (இன்)

2.     சேரலர் திரிபுரம் வெந்து நீறு நீறாகச் சிரித்து மனதின்படி முடித்
    ததுவும், வேருட னருக்கன் பல் முறிந்து பலபலென்று விழுந்
    திடக் கன்னத்திலடித்ததுவும், யாரையுஞ் செயம்பண்ணித் திக்
    குவிசையம் பெற்ற வந்தகாசூரனை மடித்ததுவுங், கோர நரசிங்
    கத்தை வீரசிம்புள்ளாய் வந்து கொத்தி யிழுத்து ரத்தங் குடி
    த்ததுவும் பற்றாமல்                    (இன்)

3.     தன்னை மறந்து மதமிகுந்து மகஞ்செய் தக்கன் தலையை யரிந்து
    தழலிற்றீத்ததுவும், பின்னும் தக்கனுக்கு மருகனென்னுஞ் சந்
    திரன் பிலனொடுங்கிடக் காலாற் றேய்த்ததுவும், அன்னந் தனைப்
    பரியா யேறும் பிரமன்றலை யைந்திலொன்றை யறுத்துச் சாய்த்
    ததுவும், வன்னம்பலவாயுள்ள பொன்னம்பலவாணரே வலிய
    ச்சலந்தரனை மாய்த்ததுவு மல்லாமல்            (இன்)



            கீர்த்தனம்-18

        இராகம்-தோடி- ஆதிதாளம்

            பல்லவி

    எந்நேரமு மொருகாலைத் தூக்கி நொண்டிக்கொண்
    டிருக்கிற வகை யேதையா

            அநுபல்லவி

    பொன்னாடர் போற்றுந் தொல்லை நன்னாடரேத்துந் தில்லைப்
    பொன்னம்பலவாணரே யின்னந்தானு மூன்றாமல்     (எந்)

            சரணங்கள்

1.     எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டினடந்தோ- எமனை வுதை
    த்த போதெதிர் சுளுக்கேறி நொந்தோ சிக்கெனவே பிடித்துச் சந்
    திரனை நிலத்திற் றேய்த்தபோதினி லுறைந்தோ, உக்கிர சாமுண்
    டியுடன்வாதுக் காடியசைந்தோ உண்ட நஞ்சுடம்பெங்கு மூறிக்
    கால்வழி வந்தோ தக்கபுலி பாம்பிருவர்க்குங் கூத்தாடியாடிச்
    சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர் (எந்)

2.     பொருட்பெண்ணிடத்திற்தூது போனதினாற் றுவண்டோ
    பொல்லா-முயலகன் மேல்வைத்த போதினில் வலி கண்டோ, அ
    ருச்சுனனுடன் கட்டிக் கீழ்மேலாய் விழுந்தபோததிர்ந்து நரம்பு
    புரண்டோ ,சிரசிற்றண்ணீரேறித் தேகத்தில் வாதங் கொண்டோ
    சேர்க்குந் தோழன் போலுமக் கேற்கவே முடமுண்டோ எருத்தி
    ன் மேலே பெண்சாதிதனையுந் தூக்கிக் கொண்டு பாய்ந் தேறும் 
    போதிலொரு காற் றாறுமாறாய் புரண்டோ        (எந்)

3.     மலைவில்லி லடிவைத்து வளைக்க மக்களித்திட்டோ வானோர்வண
    ங்கும்போது மகுட முடிகள் பட்டோ நலமிகு கயிலை விட்டெழுந்
    தருளித் தில்லையி னடந்த வருத்தத்தைத் தொட்டோ கலகலெனு
    ம் பொற்சிலம்பழுந்திக் கால்வலித்திட்டோ - கடிய வரக்கன் பத்
    துமுடி மேலுறுத்தி நட்டோ பலபலவிதத்தி லெவ்விதமோ வ
    றியேன் பொன்னம்பல விலாசரே தில்லைத் தல நடேசரே நீர்
    தான்                        (எந்)


            கீர்த்தனம் - 19

        இராகம் - தேவகாந்தாரி -சாப்புதாளம்

            பல்லவி


    இதைவிடக் குதித்து கூத்தாடினாலு
    மூவாயிரத்திலோர் பங்குமக்கே

            அநுபல்லவி

    பொதுவினி லாடினால் விடுவரோ நாகத்தைப்-பூண்டவரே தில்
    லைத் தாண்டவரே யுமக் கதிகப்பங்குக் கிடங் காணோ மும்மிடப்பங்கி 
    லரைப்பங்கு தனையுமோர் வரைப் பெண்ணுக் களித்தீரே     (இதை)

            சரணங்கள்

1.     தெண்டிசைக் கங்கையைச் சிரசின் மேலே தேக்கித் - திங்களைக்க
    திரைச் செந்தீயை முக்கண்ணாக்கி எண்டிசைத் தலைவருந் தொழு
    திடமான் மழு-வேந்தித் தென்றிசை நோக்கி, விண்டலத்தோட
    ண்டமெங்கு மோசை போக்கி மிகவுங் குமுறு வீரவிருதாங் கிண்
    கிணிவீக்கி - அண்டரரிய முயலின் மேலோரு காற்றாக்கி - யசைந்
     தசைந்தொரு காலை யுசந்து தூக்கித் தூக்கி        (இதை)

2.     படர்ந்த சடைகளிரு பக்கமுந் துவண்டோடப் பாதிப் பிறைகுலு
    ங்கக் காதிற் குழையுமாட நடந்து கட்டியஞ் சொல்லி நந்தி மத்த
    ளந்தட்ட நாரதர் யாழ் பாட தொடர்ந்து  நான் முகன் தாளந் தூக்
    கிப்பண்ணொடு போடச் சுமக்குஞ் சேடனுமுடி துளக்கி நெளித்
    துவாட, இடந்தெரியாதெங்கு மடர்ந்து பூமழை மூட விந்திரா
    திபரும் பார்க்க வந்து கூட்டங்கூட                (இதை)

3.      வெம்புலித் தோலாடை விளங்கி யரையிற்றோண மெலிவு தீர்ந்
    தொரு பாம்பும் புலியும்  மகிழ்ச்சி பூண் கம்பீரமாய் வாதுக்காடுகி
    ன்ற பத்ரகாளி மனது நாண, பம்பை மல்லாரி துந்துபி யாதியாய்
    வேண-பல்லிய மார்ப்பரிக்கப் பலரும் வந்தடி பேண, நம்பினவரை
    க்காக்குஞ் செம்பொன் னம்பலவாண நாதரே நீர்கொண்டகாதலி
    கண் காண                         (இதை )


        
            கீர்த்தனம்-20

        இராகம்-ஆனந்தபைரவி - ஆதிதாளம்

            பல்லவி.

    அம்பலத்தாடி மடிப்பென்பதையும் மிடத்தி
    லறிந்தே னறிந்தேன் ஐயா

            அநுபல்லவி.

    வம்பவிழ்  கொன்றை சூடுஞ் சிதம்பரேசரே யுமது
    மார்க்கத்தை யெல்லா மூன்றிப் பார்க்கப் போனால் கூத்தாச்சே (அம்ப)

            சரணங்கள்.

1.     பெண்டீருடன்  பிறந்த மைத்துனனுக் கருமைப் பிள்ளையைப் பார்த்துக்
    கண்ணாற் சுட்டீரே யின்னுங் கண்டோர் நகைப்பதற்குப்பெண் 
    கொடுத்த மாமனைக் கழுத்தை யறுத்தழலி லிட்டீரே உமக்
    குண்டான குணந் தானோ வேதமெல்லாங் கற்றோன்றன் னொருத
    லைதனைக் கொய்து விட்டீரே சடைப் பண்டாரம் போல வந்து குழ
    ந்தையை யறுத்துண்ட பசியாளி யென்றெவரும் பழிக்கத் தலை
    ப்பட்டீரே                            (அம்ப)

2.     போரிட்டெதிர்த் தருகில் வந்த முப்புரத்தாரைப் - புன்சிரிப்பா
    லே குடி கெடுத்தீரே, வயதீரெட்டும் நிறைந்தபின் மார்க்கண்ட
    னைத் தொடர்ந்த வேமனைச் சொற்புரட்டினாற் றடுத்தீரே, முநி
    வோரிட்டமுடன் சேரு மாதர்கண் மயக்கங்கொண்டுடை குலைந்
    திட வேடமெடுத்தீரே பன்றி வீரிட்டு வரும் போது கூரிட்டக
    ணை கொண்ட விஜையனுடன் வேடன் போல் வீண்சண்டை தொடுத்
    தீரே                             (அம்ப)

3.     செம்மனக் கிழவி தந்திடும் பிட்டைத் தின்று வேலைசெய்யாமல் வி
    ளையாடிக் குதித்தீரே, அதற்கும்மைப் பிரம்பினாலே யரசனடித்தா
    லனைத்துயிர்க்குமடி படவிதித்தீரே, எங்களம்மை சிவகாமியினை
    பிரியா திருந்து மழுந்தச் சிரசிலோர் பெண்மதித்திட்டீரே, அன்பர்
    தம்மை வந்தாண்டருளுஞ் சிதம்பரேசரே நீர்தான் தாண்டி முய
    லகனைத்  தீண்டியே மிதித்தீரே                 (அம்ப)


            கீர்த்தனம்-21

        இராகம் - சுருட்டி - சாப்பு தாளம்

            பல்லவி

    ஏதுக் கித்தனை மோடிதானுமக் கென்றன் மேலையா

            அநுபல்லவி

    பாதிப் பிறையைச் சடை யிற்றரித்த பரமரே தில்லைப்பதி நடேசரே    (ஏது)

            சரணங்கள்

1.     ஆட்டுக்காலெடுத் தம்பலத்தினின்றீ  ரதனைச் சொன்னேனோ
    ஒற்றை மாட்டுக்கார னென்றாருட- னாகிலும் வாய்மதஞ் சொன்
    னேனோ தலை ஓட்டிலே யிரந்துண்டீரென் றந்த வுண்மையைச்
    சொன்னேனோ, பல்லைக் காட்டி முப்புரத்தார் முன்னே நின்
    ற கதையு மெச்சி லுண்டதையுஞ் சொன்னேனோ            (ஏது)

2.     சாதியுந் தாயுந் தகப்பனுமில்லாத் தனியரென்றேனோ, பெண்ணாற்பாதி
    யுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட பறையரென்றேனோ  சாதிபேத
    மாய்ப் பிள்ளைக்குக்  குறவர் வீட்டிற், பெண் கொண்டீ ரென்றேனோ,
    மறையோதி வணங்கு நடேசரே யும்மை நா னொப்பாரு மில்லாத
    தப்பிலியென்றேனோ.                    (ஏது)

3.     அழுந்தவே பிரம்படிபட்ட கூலியாள ரென்றேனோ - தசை-கழி
    ந்த வெள்ளெலும்பணிந்த பயித்தியக்கார ரென்றேனோ, கட்டப்
    பழந்துணியின்றித் தோலுடுத்ததைப் பழிப்புச் சொன்னேனோ,
    சிறுகுழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த குட்டெல்லாம்
    வெளிவிட்டுச்சொன்னேனோ                     (ஏது)


            கீர்த்தனம்-22

        இராகம்-கேதார கௌளம்-ஆதிதாளம்.

            பல்லவி

    பாருங்கள் வந்து பாருங்களாட்டுது பாம்பு பிடாரனையே

            அநுபல்லவி

    ஆருங்காணவே தில்லை யம்பலத்தில் வாடிக்கை
    யாலே பத முயலோன் மேலே வைத்த வேடிக்கை         (பாரு)

            சரணங்கள்.

1.     ஆரூரிற் புற்றிடமமர்ந் திருந்ததும் போச்சு ஆபரணமாய் மெய்யில
    ணிந்ததும் வீண்பேச்சு, காரூறில் விடமுண்ட கதையைச்சொன்
    னாலேச்சு கையைச் சிலைக்குக் கயிறாய்க் கட்டியது மென்னாச்சு    (பாரு)

2.     ககனத் தகரவித்தை கற்றதனாலென்ன கற்றுமெல்லாம் வல்லசித்
    தனாகியுமென்ன, சகல மந்திரத்திற்குந் தலைவனாயுமென்ன த
    லையிற்  கடிக்கேற்ற பச்சிலை வைத்திருந்து மென்ன        (பாரு)

3.     மைக்கண் மடந்தை காணக் கைக்குண் மழுவை வைத்து மாயவுயி
    ராம் பந்தைக் காயச்செப்பின் மறைத்துத், தக்கதொழிலுக்கேற்
    ற கொக்கிறகைத் தரித்துச் சபைக்கேற்ற கூத்தாடச்  சமர்த்தனெ
    ன்பதையுற்றுப்                         ( பாரு)


            நிந்தா ஸ்துதி

            கீர்த்தனம்-23

        இராகம் -பைரவி - ஆதி தாளம் 

            பல்லவி.

    என்ன காரியத்துக்கிந்த பேயாண்டி மேல்
    இச்சை கொண்டாய் மகளே

            அநுபல்லவி

    தன்னே ரொருவரில்லாப் பொன்னம்பலவன் கண்ணில்
    தழலைக் காட்டி யெவர்க்குங் கழலைக் காட்டுவானேன்     (என்ன)

            சரணங்கள்.

1.     காடு சஞ்சாரம் வீடொன்றில்லாமல் வேறே காணே னாஸ்தியொரு
    மாடேயல்லாமல், ஓடியிரந்தான் பசிநில்லாமற் பின்னுமுண்டா
    னெச்சிலை வேண்டானென்று சற்றுஞ் சொல்லாமல் ஓர்ந்துபா
    ர்த்தா லுரு வருவந் தங்கெடுவானே-பேர்ந்த பிட்டை விரும்பிப்பிர
    ம்படி படுவானே, சார்ந்தவரை யம்பலந் தனிலேற்றி விடுவானே -
    தீர்ந்த பட்சம் நெற்றியிற் றிருநீற்றை யிடுவானே        (என்ன)

2.     சமர்த்தாய்த் தோட்டாண்மைத் தேடவறியாயோ - இந்தத் தப்பிலி
    மேலாசையை யெறியாயோ இமப்புறட்டனென்பதுங் குறியா
    யோ-மழுவெடுக்கும் வன்னெஞ்சனென்பதெண்ணித் தான் பிரி
    யாயோ, ஏலாது சொன்னேனி சமென்றெண்ணுவாயென் சொல்
    லை-மாலே கொள்ளாதே கொண்டால் வருமே யதிக சல்லை போலே
    யல்லாமலுள்ளே புட்டுக்காட்டினாற் சொல்லை  தோலே யல்லாலுடு
    க்கத் துணியொன்றவனுக்கில்லை.            (என்ன)

3.     குதிரை மாறாடின யெத்தனடி மெத்தக் கொஞ்ச மதியுடைய பித்
    தனடி, முதுமை யிளமையில்லாச் சித்தனடி சடை முடிக்குளொ
    ரு பெண்டீரை யடக்குஞ் சமர்த்தனடி முன்னம் நகைத்துச் செய்
    தான் முப்புரத்தாரை மோசம் என்ன சொல்லியுமுமக்கே னவநு
    டனேசம் அன்னங் கண்டறிவதற் கநு தினம் பிரயாசம்பொன்ன
    ம்பலவனை யுட்புகுந்து பார்த்தா லாகாசம்         (என்ன)

 

Related Content