logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்

சங்கரர் அருளிய

(தக்ஷிணாமூர்த்தியின் சின்முத்ரை, புன்சிரிப்பு, வீணை தரித்துக் கொண்டிக்கின்ற எழில், கடைக் கண் பார்வை அருள் இவற்றைப்பாடித் துதிக்கின்ற ஸ்தோத்ரம்.)

 உபாஸகானாம் யத2 உபாஸனீயம்

       உபாத்தவாஸம் வடசாகி2 மூலே |

தத்2தா4ம தா3க்ஷிண்ய ஜுஷா ஸ்வமூர்த்யா

       ஜாக3ர்து சித்தே மம போ3த4ரூபம் ||                                      1

             எது உபாஸகர்களுக்கு எப்பொழுதும் நினைக்கப்படவேண்டியதோ, எது ஆலமரத்தின் கீழ் இருக்கையை ஏற்படுத்திக் கொண்டதோ, அந்தப் பரம பதமான பொருள் விருப்பமோடு தெற்கு நோக்கிய தனது வடிவத்தால் எனது மனத்தில் அறிவின் தோற்றத்தை விழிப்புறச்செய்யட்டும்.

அத்3ராக்ஷம் அக்ஷண – த3யா நிதா4னம்

       ஆசார்யம் ஆத்3யம் வடமூல பா4கே3 |

மௌனேன மந்த3 ஸ்மிதபூ4ஷிதேன

       மஹர்ஷிலோகஸ்ய தமோ நுத3ந்தம் ||                                  2

                குறைவிலாத தயையின் இருப்பிடமாயும், புன்சிரிப்பினால் அணி செய்யப்பட்ட மௌனத்தினால் முனிவர்களின் கூட்டத்தினுடைய இருளை அழிப்பதாயும் உள்ள ஆதிகுருவை ஆலமரத்தினடியில் கண்டேன்.

வித்3ராவித அசேஷதமோக3ணேன

       முத்3ராவிசேஷேண முஹுர்முனீனாம் |

நிரஸ்ய மாயாம் த3யயா வித4த்தே

       தே3வோ மஹான் தத்த்வமஸீதி போ3தம் ||                              3

                மிச்சமில்லாமல் இருட்கணங்களை விரட்டிய சிறந்த சின்முத்திரையினால் அடிக்கடி முனிவர்களுடைய மாயையை மாய்த்து, பெரியவனான இறைவன் “நீயே பிரம்மம்'' என்ற மெய்யறிவைத் தயையோடு அளிக்கிறான்.

அபாரகாருண்யஸுதா4 தரங்கை3:

       அபாங்க3 பாதைரவலோகயந்தம் |

கடோ2ர ஸம்ஸார நிதா3க4தப்தான்

       முனீன் அஹம் நௌமி கு3ரும் கு3ரூணாம் ||                            4

                கடுமையான பிறவி என்னும் சூட்டினால் எரிக்கப்படுகின்ற முனிவர்களை கரைகாணாக் கருணையமுத அலைவீச்சுக்கள் கொண்ட கடைக்கண் பார்வைகளால் நோக்குகின்ற குருக்களுக்கெல்லாம் குருவானவரை நான் வணங்குகின்றேன்.

மம ஆத்3ய தே3வோ வடமூலவாஸீ

       க்ருபாவிசேஷாத் க்ருதஸந்நிதா4ன: |

ஓம்காரரூபாம் உபதி3ச்ய வித்3யாம்

       ஆவித்3யகத்4 வாந்தம் அபாகரோது ||                                    5

               ஆலின் கீழ் எழுந்தருளியிருக்கின்ற என்னுடைய முதற்கடவுள், தன்னுடைய கருணைச் சிறப்பினாலே என் முன்வந்து, ஓங்காரமாகிய வித்யையை உபதேசித்து அறியாமை என்னும் இருளை அழிக்கட்டும்.

கலாபி4: இந்தோ3ரிவ கல்பிதாங்க3ம்

       முக்தாகலாபைரிவ பத்3த4மூர்த்திம் |

ஆலோகயே தேசிகம் அப்ரமேயம்

       அநாதி3 அவித்3யா திமிர ப்ரபா4தம் ||                                     6

                சந்திரனின் கலைகளைப் போன்ற அங்கங்களை உடையவரும் முத்துச் சரத்தினால் பின்னப்பட்டது போன்ற உருவம் கொண்டவரும், அநாதியான அவித்யை என்னும் இருட்டுக்கு விடிவானவரும், அறிய முடியாதவருமான குருவைக் கண்கொண்டு பார்க்கிறேன்.

ஸ்வத3 க்ஷஜானுஸ்தி2 தவாமபாத3ம்

       பாதோ3த3ராலம்க்ருத யோக3 பட்டம் |

அபஸ்ம்ருதேராஹித பாத3 மங்கே3

       ப்ரணௌமி தேவம் ப்ரணிதா4னவந்தம் ||                                7

                தனது வலது துடையின் மேல் இடது பாதத்தை வைத்தவரும், பாம்பினால் அணி செய்யப்பட்ட யோக வஸ்த்ரத்தை அணிந்தவரும், அபஸ்மார புருஷனின் முதுகில் காலை ஊன்றியவரும், பூஜ்யருமான இறைவனை வணங்குகிறேன்.

தத்த்வார்த2ம் அந்தேவஸதாம் ரிஷீணாம்

       யுவாபி ய: ஸன் உபதேஷ்டுமீஷ்டே |

ப்ரணௌமி தம் ப்ராக்தன புண்யஜாலை:

       ஆசார்யம் ஆஸ்சர்யகுணாதிவாஸம் ||                                  8

            சீடர்களான ரிஷிகளுக்கு; தான் இளையவனான போதிலும், உண்மையின் விளக்கத்தை உபதேசிக்க யார் முனைந்தாரோ, அந்த வியத்தகு குணங்களையுடைய ஆசார்யனை முன்பிறவியில் செய்த புண்ணியத்தின் பெருக்கினால் வணங்குகிறேன்.

 ஏகேன முத்ராம் பரசும் கரேண

       கரேண ச அன்யேன ம்ருகா3ம் ததா4ன: |

ஸ்வஜானு வின்யஸ்தகர: புரஸ்தாத்

       ஆசார்ய சூடா3மணி: ஆவிரஸ்து ||                                       9

              ஒருகையினால் சின்முத்ரையும், மற்றொன்றினால் கோடலி ஆயுதமும் இன்னொரு கையினால் மானையும் தாங்கி, தனது துடையில் வைக்கப்பட்ட நான்காவது கையையுமுடைய ஆசார்ய சிரோன்மணி என் முன் தோன்றட்டும்.

ஆலேபவந்தம் மத3னாங்க3 பூ4த்யா

       சார்தூ3லக்ருத்த்யா பரிதா4ன வந்தம் |

ஆலோகயே கஞ்சன தே3சிகேந்த்3ரம்

       அஞ்ஞான வாராகர பா3ட3 வாக்3னிம் ||                                  10

               மன்மதனின் சாம்பலைப் பூசியவரும், புலித்தோலைப் போர்த்தியிருப்பவரும், மிகுந்த அஞஞானமாகிய கடலுக்கு வடவாக்கினியானவருமான, ஒரு தேசிக முதல்வனைக் கண்முன் காண்கிறேன்.

சாருஸ்மிதம் ஸோமகலாவதம்ஸம்

       வீணாத4ரம் வ்யக்த ஜடா2கலாபம் |

உபாஸதே கேசன யோகினஸ் - த்வாம்

       உபாத்த – நாதா3னுபவ – ப்ரமோத3ம் ||                                    11

    இனிய புன்சிரிப்புடையவரும். சந்திரக்கலையைச் சூடியவரும் வீணையை ஏந்தியவரும், வரித்த செஞ்சடைக்கற்றையை, எழுந்த இன்னிசையில் திளைத்து  மகிழ்ந்தவருமாக உம்மைச் சில யோகிகள் உபாஸிக்கிறார்கள்.

உபாஸதே யம் முனய: சுகாத்3யா

       நிராசிஷோ நிர்மமதாதிவாஸா: |

தம் தக்ஷிணாமூர்த்திதனும்

       உபாஸ்மஹே மோஹமஹார்திசாந்த்யை ||                             12

    பற்றற்றவர்களும், அபிமானமற்றவர்களுமான சுகர் முதலிய முனிவர்கள் யாரை உபாஸிக்கிறார்களோ அந்த மஹேசனான தக்ஷிணாமூத்த ரூபத்தை, மோஹம் என்ற பெரிய துன்பத்திலிருந்து அமைதி பெறும் பொருட்டு வழி படுகிறேன்.

காந்த்யா நிந்தி3த குந்த3 கந்த3லவபுர் -

       ந்யக்3ரோத4 மூலே வஸன்

காருண்யாம்ருதவாரிபிர் முனிஜனம்

       ஸம்பா4வயன் வீக்ஷிதை: |

மோஹத்4 வாந்த விபே4த3னம் விரசயன்

       போ3தே4ன தத்தாத்3ருசா

தேவஸ் - தத்த்வமஸீதி போ3த4யதுமாம்

       முத்3ராவதா பாணி நா ||                                                 13

            ஒளியினாலே மல்லிகை மலரைப் பழிக்கும் திருமேனியோடு ஆலின் கீழே அமர்ந்து கருணையமுதவெள்ளமான பார்வைகளால் முனிவர் பெருமக்களை அருளிக்கொண்டு சின்முத்திரையோடு கூடிய கையினால் மோகம் எனும் இருட்டை 'நீ பிரம்மமே' என்ற மெய்யுபதேசத்தினால் பிளந்து கொண்டு விளங்கும் தேவன் என்னையும் அறிவிக்கட்டும்.

அகெள3ர கா3த்ரை அல்லாட நேத்ரை:

       அசாந்தவேஷை : அபு4ஜங்க3பூ4ஷை: |

அபோ3த4 முத்3ரை: அனபாஸ்த நித்3ரை:

       அபூர்ண காமை: அமரைரலம் ந: ||                                       14

 வெண்மை ஒளியில்லாத உடலுடையவரும், நெற்றிக் கண்ணில்லாதவரும், சாந்தரூபமில்லாதவரும், பாம்பணியாதவரும், சின்முத்ரையில்லாதவரும், தூக்கத்தை ஒழிக்காதவரும், ஆசைகள் அறாதவருமான தேவர்களால் எங்களுக்கு ஒன்றும் ஆகவேண்டியதில்லை.

 தை3வதானி கதி ஸந்தி ச அவனௌ

       நைவ தானி மனஸோ மதானி மே |

தீ3க்ஷிதம் ஜ3ட3 தி4யாமநுக்3ரஹே

       த3க்ஷிணாபி4 முக2 மேவவதைவதம் ||                                   15

 அவனியில் எத்தனையோ தெய்வங்கள். அவையெல்லாம் என் மனத்தால் நினைக்கப்படவில்லை. அறிவற்ற மூடர்களுக்கு அருள் செய்வதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற தெற்கு நோக்கியிருப்பதுதான் தெய்வம்.

 முதி3தாய முக்3த4 சசி நாவதம்ஸினே

       ப4ஸிதாவலேப ரமணீய மூர்த்தயே |

ஜக3தி3ந்த்3ரஜால ரசனாபடீயஸே

       மஹஸே நமோஸ்து வடமூலாஸினே ||                                16

      மகிழ்வுற்றவரும், அழகிய சந்திரனைத் தலையில் சூடியவரும், விபூதி அணிந்த அழகான உருவமுள்ளவரும், இந்திரஜால வித்தையாக இந்த உலகத்தைப்படைக்கும் ஆற்றலுள்ளவரும் , பெரியவருமான அந்த ஆலமர் கடவுளுக்கு நமஸ்காரம்.

 வ்யாலம்பி3னீபி4: பரிதோ ஜடாபி4:

       கலாவசேஷேண கலாத4ரேண |

பச்யல் லலாடேன முகே2ந்து3னா ச

       ப்ரகாசஸே சேதஸி நிர்மலானாம் ||                                     17

      சுற்றும் தொங்குகின்ற சடைகளாலும், ஒருகலைமிஞ்சிய பிறைச் சந்திரனாலும், கண்ணையுடைய நெற்றியினாலும் முகசந்திரனாலும் தூய்மையான மனங்களில் விளங்குகிறாய்!

 உபாஸகானாம் த்வம் உமாஸஹாய:

       பூர்ணேந்து3 பா4வம் ப்ரகடீகரோஷி |

யத3த்3ய தே த3ர்சனமாத்ரதோ மே

       த்3ரவத்யஹேர மானஸசந்த்3ரகாந்த: ||                                  18

       உமையொருபாகனான நீ பக்தி செய்பவர்களுக்குச் சந்திரனின் தன்மையை வெளிப்படுத்துகின்றாய். அது உன்னை இன்று பார்த்த மாத்திரத்தில், ஆஹா! என் மனமாகிற சந்திரகாந்தக்கல்லை உருக்கிவிடுகிறது.

 யஸ்தே ப்ரஸன்னாம் அநுஸந்த3தா4னோ

       மூர்த்திம் முதா3 முக்த4சசாங்க மௌலே: |

ஐச்வர்யமாயுர் லப4தே ச வித்யாம்

       அந்தே ச வேதாந்த மஹாரஹஸ்யம் ||                                  19

       எவர்கள் அழகிய சந்திரனை முடியிலணிந்த ஒளியுள்ள உன்னுடைய மூர்த்தியை மகிழ்வோடு எப்போதும் சிந்திக்கிறார்களோ அவர்கள் செல்வத்தையும், ஆயுளையும், கல்வியையும், முடிவில் வேதாந்தமென்னும் பெரிய ரஹஸ்யத்தையும் அடைகிறார்கள்.

Related Content

The Dakshinamurti Stotra Of Sankaracharya

दशश्लोकि - Adishankara's dashashloki

அத்வைத பஞ்சரத்னம் - தமிழ் உரையுடன்

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை

சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்