(பாதத்திலிருந்து கேசம் வரை ஒவ்வோர் அங்கமாக வர்ணிப்பதையே “பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம்” எனப்படும்.)
கல்யாணம் நோ வித4த்தாம் கடகதடலஸத்கல்பவாடீ நிகுஞ்ஜ-
க்ரீடா3ஸம்ஸக்த வித்2யா த3ர நிகரவதூ4 கீ3தருத்3ராபதா3ந: |
தாரை: ஹேரம்ப2நாதை: தரலித நினத3த்தாரகாராதிகேகீ
கைலாஸ: சர்வநிர்வ்ருத்யபிஜனகபத3: ஸர்வதா3 பர்வதேந்த3ர: || 1
தாழ்வரையில் விளங்கும் கற்பகமரக் கூட்டங்களில் இருக்கும் புதருக்குள் விளையாடுவதில் ஈடுபட்ட வித்யாதரப் பெண்களின் கூட்டத்தால் பாடப்பட்ட பரமசிவனுடைய வீரச்செயலை உடையதும், உர்த்த, வினாயகருடைய ஒலிகளால் சஞ்சலமானதும், ஒலிக்கின்றதுமான தாரகனை வென்ற முருகனின் மயிலை உடையதும், பரமசிவனுக்கு ஆனந்தத்தை விளைவிக்கும் சுற்று பிரதேசத்தை உடையதுமான, மலைகளுக்கு அரசனாகிய, கைலாஸம், எப்பொழுதும், நமக்கு மங்களத்தை செய்யட்டும்.
யஸ்ய ப்ராஹு: ஸ்வரூபம் ஸகலதி3விஷதா3ம் ஸாரஸர்வஸ்வயோக3ம்
யஸ்யேஷு: சார்ங்கத4ன்வா ஸமஜனி ஜக3தாம் ரக்ஷணே ஜாக3ரூக: |
மெளர்வீ த3ர்வீகரணாமபி ச பரிப்3ருட4: பூஸ்த்ரயீ ஸா ச லக்ஷ்யம்
ஸோ அவ்யா த4வ்யாஜமஸ்மாநசிவபி4த் அனிசம் நாகினாம் ஸ்ரீபினாக: ||2
எந்த பினாகத்தினுடைய உருவத்தை எல்லா தேவர்களுடைய முக்கிய ஸாராம் சங்கனின் சொல்லுகின்றார்களோ, உலகங்களின் ரக்ஷணையில், விழிப்போடு கூடிய (சார்ங்கம் என்னும் வில்லை உடைய) மஹாவிஷ்ணு எதற்கு பாணமாக ஆனாரோ, மேலும் பாம்புகளுக்கு அரசனாகிய வாஸுகி நாண்கயிறானானோ, உலகத்தை துன்புறுத்திப் புகழ்பெற்ற அந்த பட்டண உருவம் கொண்ட மூன்று அசுரர்களும் குறியாகவும் ஆனார்களோ, தேவர்களுக்கு எப்பொழுதும் அமங்களத்தை அகற்றும், அந்த காந்தி பொருந்திய பினாகம் என்ற வில் கபடமின்றி (காரணம் பாராமல்) காப்பாற்ற வேண்டும்.
ஆதங்காவேக3ஹாரீ ஸகலதி3விஷதா3ம் அங்க்4ரிபத்3மாச்ரயாணாம்
மாதங்காத்யுக்3ர தை3த்யப்ரகரதனு க3ளத்3 ரக்ததா4ராக்ததா4ர: |
க்ரூர: ஸூராயுதா நாமபி ச பரிப4வம் ஸ்வீயபா4ஸா விதன்வன்
கோ4ராகார: குடா3ரோ த்3ருட4தர து3ரிதாக்3யாடவீம் பாடயேந்ந: || 3
தாமரை போன்ற திருவடியைத் தஞ்சமாய் அடைந்த எல்லா தேவர்களுடையவும், கவலையையும், துன்பத்தையும் அகற்றுகின்றதும் மாதங்கள் முதலிய கொடிய அசுரக்கூட்டத்தின் சரீரத்தினின்று பெருகுகின்ற இரத்தப் பெருக்கால் பூசப்பட்ட நுனியை உடையதும், கொடியதும், தன் ஒலியால் பதினாயிரம் சீரியர்களுக்கும் அவமதிப்பை செய்வதும், பயங்கர வடிவம் கொண்டதுமான, (சிவபெருமான் கையில் உள்ள) கோடலி, மிகவும் வலிமையான எங்களுடைய பாபம் என்னும் காட்டை, பிளந்து அழிக்க வேண்டும்.
காலாராதே: கராக்3ரே க்ருதவஸதி: உரச் சாணசாதோ ரிபூணம்
காலே காலே குலாத்3ரிப்ரவர தனயயா கல்பிதஸ்னேஹலேப: |
பாயாந்ந: பாவகார்சி: ப்ரஸரஸக2முக2: பாபஹந்தா நிதாந்தம்
சூல: ஸ்ரீபாதஸேவாப4ஜன ரஸஜுஷாம் பாலனைகாந்தசீல: || 4
யமனை வென்ற பரமசிவனுடைய கை நுனியில் வாஸம் செய்வதும், எதிரிகளுடைய மார்பாகின்ற சாணைக்கல்லில் தீட்டப்பட்டதும், அவ்வப்பொழுதும், குல பர்வதங்களில் சிறந்த ஹிமவானின் பெண்ணாகிய பார்வதி அன்னையால், செய்யப்பட்ட எண்ணெயின் பூச்சொடு கூடியதும், நெருப்பின் ஜ்வாலை போன்ற நுனியை உடையதும், முற்றிலும் தீவினையை ஒழிப்பதும், சிவனின் திருவருடியின் சேவையாகின்ற பக்தியின் ரஸத்தை அனுபவிப்பவர்களை, தவறாமல் காக்கும் இயல்புடையதுமான, சூலம் நம்மை காக்கவேணும்.
தேவஸ்யாங்கா3ச்ரயாயா: குலகி3ரி து3ஹிது: நேத்ரகோணப்ரசார
ப்ரஸ்தாரானத்யுதா3ரான் பிபடி2ஷுரிவ யோ நித்யமத்யாத2ரேண |
ஆத4த்தே ப4ங்கி3துங்கை3 ரநிசமயவை: அந்தரங்க2ம் ஸமோத3ம்
ஸோமாபீட3ஸ்ய ஸோயம் ப்ரதிசது குசலம் பாணிரங்க2 குரங்க2 || 5
எந்த மான், பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும், குலாசலமான ஹிமவானுடைய பெண்ணாகிய பார்வதியினுடைய பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்வதில் மிக்க தாராளமான, கடைக்கண்களின் பலவிதமான பரவுதல்களை என்றும் மிகுந்த ஆவலோடு, படிக்க விருப்பம் கொண்டதுபோல், வளைவுகளால் உயர்வுற்ற உறுப்புக்களால், (தேவியின் பார்வையை கற்பதற்காக ஈசனின் கை மான் பல விதங்களில் அங்கங்களை நெளிக்கிறது) சந்திரனைத் தலைக்கு அணியாகக் கொண்ட பரமசிவனுடைய உள்ளத்தை மகிழ்வோடு கூடியதாக செய்கின்றதோ, அந்த பரமசிவன் கையை ஆடலரங்காகக் கொண்ட மான், நன்மையை எப்பொழுதும் கொடுக்கட்டும்.
குறிப்பு: - (பரமசிவன் கையில் வேதம் மானுருவம் கொண்டிருப்பதாகப் புராணம் கூறுகிறது. அது உடம்பை பலவிதத்தில் பங்கம் (நர்த்தனத்திற்கேற்றபடி அசைத்தல்) செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் பார்வதியின் கடைக்கண் பார்வையில் அசைத்தலை கவனித்துக் கற்றுக்கொள்வதற்கு அதற்கேற்றபடி உடம்பை அசைத்துக் கொள்வது போல் இருப்பதாக இந்த ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.)
கண்ட2ப்ராந்தாவஸஜ்ஜத்கனகமய மஹாக4ண்டிகாகோ4ரகோ4ஷை:
கண்டா2ராவைரகுண்டை2ரபி ப4ரித ஜக3ச்சக்ரவாலாந்தரால: |
சண்ட3: ப்ரோத்3த4ண்ட3ச்ருங்க2: ககுத3கப3லிதோத்துங்க3 கைலாஸச்ருங்க3:
கண்டே2காலஸ்ய வாஹ: சமயது சமலம் சாச்வத: சாக்வரேந்த்3ர: || 6
கழுத்தின் ஓரத்தில் தொங்கும் பெரிய தங்க மணியினுடைய பயங்கரமான முழக்கங்களாலும், மழுங்காத (அதிக ஒலியோடு கூடிய) ஹம்பா காரங்களாலும் உலக வட்டத்தின் நடுவை நிரப்பியதும், மிகக் கொடியதும், பயங்காமான கொம்பை உடையதும், முதுகில் இருக்கும் ககுதத்தால் (திமிலால்) உயர்ந்த கைலாயத்தின் சிகரத்தை வென்றதும், கழுத்தில் கறுப்பை உடையவரான பரமசிவனுடைய வாகணமுமான அழிவற்ற விருஷபராஜன் பாவத்தை அகற்றட்டும்.
நிர்யத்3தா3னாம்சுதா4ராபரிமளதரலீ பூ4தரோலம்ப3பாலீ
ஜ2ங்காரை: சங்கராத்3ரே: சிகரசதத3ரீ: பூரயன் பூ4ரிகோ4ஷை: |
சார்வ: ஸௌவர்ணசைலப்ரதிமப்ருது2வபு: ஸர்வவிக்4னாபஹர்தா
சர்வாண்யா: பூர்வஸூநு: ஸ பவ4து ப4வதாம் ஸ்வஸ்திதோ3
ஹஸ்திவக்த்ர: || 7
பெருகுகின்ற மத நீர்ப்பெருக்கின் மணத்தால் கவரப்பட்ட சஞ்சலமான வண்டுகளின் வரிசைகளின் ஜம் என்ற ஒலிகளாலும், மிக்க வீரிடுதல்களாலும், பரமசிவனின் மலையாகிய கைலாயத்தின் நூற்றுக்கணக்கான சிகரங்களில் இருக்கும் குகைகளை நிரப்பிக்கொண்டுள்ள பரமசிவனின் பிள்ளையும், தங்க மலை
எனப் படும் மேரு மலைக்கு ஒப்பான பருத்த உடலை உடையவரும், எல்லா இடையூறுகளையும் அகற்றுபவரும், பார்வதியின் முதற் பிள்ளையான வருமான, அந்த யானை முகம் உடைய கணபதி, உங்களுக்கு நன்மையைக் கொடுப்பவராக இருக்கட்டும்.
ய: புண்யைர் தே3வதானாம் ஸமஜனி சிவயோ: ச்லாக்4யவீர்யை-கமத்யாத்
யன்னாம்நி ச்ரூயமாணே தி3திஜப4டக4டா பீ4 திபா4ரம் ப4ஜந்தே |
பூ4யாத்ஸோ (அ)யம் விபூத்யை நிசிதசர சிகா2பாடிதக்ரௌஞ்சசைல:
ஸம்ஸாராகா3த4கூபோத3ரபதித ஸமுத்தாரகஸ்தாரகாரி: || 8
எந்த ஸ்கந்தன் தேவர்களுடைய புண்ணியங்களால், பார்வதீபரமேஸ்வரர் களுடைய புகழத்தக்க ஒற்றுமையினால் உண்டானாரோ, எவருடைய பெயர் கேட்கப்படும் பொழுது, அசுர வீரர்களின் கூட்டங்கள் அதிக பயத்தை அடைகின்றார்களோ, கூரிய பாணத்தின் நுனியால் க்ரௌஞ்சமலையைப் பிளந்தவரும், ஸம்ஸாரம் என்ற ஆழமான கிணற்றினுள் விழுந்தவர்களைக் கரையேற்றுபவருமான அந்த தாரகனை வென்ற ஸ்கந்தன் ஐச்வர்யத்தின் பொருட்டு ஆகவேண்டும். (ஐஸ்வர்யங்களை அளிக்க வேண்டும்)
ஆரூட4: ப்ரௌட4 வேக3ப்ரஜவிதபவனம் துங்க3 துங்க3ம் துரங்க3ம்
சேலம் நீலம் வஸான: கரதலவிலஸத் காண்ட3 கோத3ண்ட3 த3ண்ட3: |
ராக3 த்3வேஷா தி3நாநாவித4 ம்ருக3படலீ பீதிக்ருத்3 பூ4தபார்த்தா
குர்வன்னாகே2ட்டலீலாம் பரிலஸது மன: கானனே மாமகீனே: || 9
அதிகமான வேகத்தால் காற்றைத் தோற்கடிக்கும் உயரமான குதிரையில் ஏறிக் கொண்டவரும், கறுப்பான வஸ்திரத்தை கட்டிக்கொண்டவரும், கையில் விளங்கும் அம்பு வில்லை உடையவரும், பிரமதகணங்களை ஆட்சி செய்பவருமான
சாஸ்தா, என்னுடையதான மனதாகிற காட்டில் ஆசை, வெறுப்பு முதலிய பற் பல விலங்குகளின் கூட்டத்திற்கு பயத்தைச் செய்து கொண்டு, வேட்டை என்னும் விளையாட்டை செய்கிறவராக விளங்கட்டும்.
அம்போ4 ஜாப்4யாம் ச ரம்பா4ரத2 சரண லதாத்3 வந்த்3வ கும்பீ4ந்த்2ரகும்பை4:
பி3ம்பேனேந்தோ3ச்ச கம்போ3ருபரி விலஸதா வித்3ருமேணோத்-
பலாப்4யாம் |
அம்போ4தேனாபி ஸம்பா4விதமுப ஜனிதா ட3ம்ப3ரம் சம்ப்3ராரே:
சம்போ4: ஸம்போ4கயோக்யம் கிமபி த4னமித3ம் ஸம்ப4 வேத் ஸம்பதே3 ந:
|| 10
இரண்டு தாமரைகளாலும், வாழை. தேர்ச்சக்கரம், கொடி, சிறந்த யானையின் இரண்டு கும்பங்கள் இவைகளாலும், சங்கினுடைய மேலே விளங்குகின்ற சந்திரனுடைய பிம்பத்தாலும், பவழத்தாலும், இரண்டு அல்லி மலர்களாலும், மேகத்தாலும் கௌரவிக்கப்பட்டதும், உண்டாக்கப்பட்ட ஆடம்பரத்தை உடையதும், பரமசிவனுக்கு சேர்க்கைக்குத் தக்கதுமான சம்பரன் என்ற அஸுரனை வென்ற மன்மதனுடைய, இன்னது என்று சொல்ல இயலாத, இந்த தனம் நமக்கு செல்வத்திற்காக ஏற்பட வேண்டும்.
குறிப்பு: -
இந்த ச்லோகத்தில் தேவியை மன்மதனுடைய தனமாக வர்ணித்திருக்கிறது. தேவியினுடைய அவயவங்களைத் தாமரை, வாழை முதலானவற்றோடு சமமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறது. ஆனால் தேவியையோ, தேவியின் அவயவங்களையோ குறிக்கும் சொற்கள் இங்கு காணப்படவில்லை. ஸம்ஸ்க்ருத காவ்யம் படித்து பழக்கமிருப்போருக்கு இந்த ச்லோகத்தை வாசித்த உடனேயே தேவியையும், தேவி உருப்புக்களையும் தான். இந்த ச்லோகத்தில் குறிக்கிறார் கவி என்று அறிய முடியும். இவ்விதம் வர்ணிப்பது ரூபகாதிசயோக்தி என்று வழங்கும் சிறந்த அலங்காரமாகும்.
வேணீஸௌபா4க்3யவிஸ்மாபித தபனஸுதாசாருவேணீவிலாஸான் -
வாணீநிர்தூ4தவாணீகரதல வித்4ருதோதா3ரவீணாவிராவான் |
ஏணீநேத்ராந்தப4ங்கீநிரஸன நிபுணாபாங்க3 கோணானுபாஸே
சோணான்ப்ராணானுதூ3ட4 ப்ரதிநவ ஸுஷமாகந்த2லானிந்து3-மௌளே: ||
11
பின்னலின் அழகால் வியக்கும்படி செய்யப்பட்ட சூரியன் பெண்ணாகிய யமுனையின் அழகிய பெருக்கின் விலாஸங்களை உடையவளும், சொல்லால் உதறித் தள்ளப்பட்ட ஸரஸ்வதியின் கையில் தாங்கிய உயர்ந்த வீணையின் நாதத்தை உடையவளும், பெண் மானுடைய கடைக்கண்ணின் பங்கங்களை விரட்டுவதில் திறமை பூண்ட கடாக்ஷங்களை உடையவளும், புதிது புதிதாய்த் தளிர்க்கும் காந்தியை உடையவைகளுமான, பரமசிவனுடைய சிவந்த உயிர் நிலைகளை (ப்ராணன்களைப் போன்ற பார்வதியை) ஸேவிக்கின்றேன்.
குறிப்பு: -
'தேவியின் பின்னல் கருநீர்ப் பெருக்கான யமுனையையும், அவளது குரல் ஸரஸ்வதியின் வீணை நாதத்தையும், வீணை கடாக்ஷம் மானின் பார்வையையும் வெல்வன என்பது கருத்து)
ந்ருத்தாரம்பே4ஷு ஹஸ்தாஹதமுரஜ தி4மித்3 தி4ங்க்ருதைரத்யுதா3ரை:
சித்தானந்த3ம் வித4த்தே ஸத3ஸி ப4கவத: ஸந்ததம் ய: ஸ நந்தி2 |
சண்டீ3சாத்யாஸ்ததா2 (அ)ன்யே சதுரகு3ண க3ணப்ரீணிதஸ்வாமிஸத்கார
உத்கர்ஷோ த்3யத்ப்ரஸாதா3: ப்ரமத2பரிப்ருடா4: பாந்து ஸந்தோஷிணோ ந:
|| 12
எவர் பகவானுடைய நிருத்தம் தொடங்கும் பொழுது, மிகவும் புகழத்தக்க அவையில் கையால் அடிக்கப்பட்ட மிருதங்கத்தின் திமி திமி என்ற சப்தங்களால் எப்பொழுதும் பகவானுடைய மனதிற்கு ஆனந்தத்தை செய்கின்றாரோ அந்த நந்தியம் அப்படியே உயர்ந்த குணக்குவியல்களால் திருப்தி செய்யப்பட்ட பகவான் செய்த ஸத்காரத்தினால் உண்டான ஸந்தோஷமுடைவர்களும், எப்பொழுதும் இன்புற்றிருப்பவர்களும், மற்ற சண்டீசர் முதலிய பிரமத கணங்களில் சிறந்தவர்களும் நம்மைக் காக்கட்டும்.
முக்தாமாணிக்யஜாலை: பரிகலிதமஹாஸாலமாலோகனீயம்
ப்ரத்யுப்தாநர்க4ரத்னைர் தி3சிதி3சி ப4வனை: கல்பிதைர் தி3க்பதீனம் |
உத்3யானைரத்3ரிகன்யாபரிஜன வனிதா மானனீயை: பரீதம்
ஹ்ருத்3யம் ஹ்ருத்3யஸ்து நித்யம் மம பு4வனபதேர்தா4ம
ஸோமார்த4மௌலே: || 13
முத்துக்கள், மாணிக்கங்கள் இவைகளால் கட்டிய பெரிய கோட்டை மதிலை உடையதும், பார்க்கத்தக்கதும், விலை மதிக்க முடியாக ததும், விலை மதிக்க முடியாத இரத்தினங்களால் இழைத்தவைகளும், ஒவ்வொரு திக்கிலும் திக்பாலகர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளாலும், பார்வதி தேவியின் வேலைக்காரப் பெண்களால் அன்போடு வளர்க்கப்பட்ட தோட்டங்களாலும் சூழப்பட்டதுமான உலகத்திற்கே பதியாகிய அர்த்த சந்திரனைத் தலையில் அணிந்த பரமசிவனுடைய அழகிய இருப்பிடம் எப்பொழுதும் என்னுடைய உள்ளத்தில் இருக்கட்டும்.
ஸ்தம்பை4ர்ஜம்பா4ரிரத்னப்ரவரவிரசிதை: ஸம்ப்4ருதோபாந்தபா4க3ம்
சும்ப3த்ஸோபானமார்க3ம் சுசிமணிநிசயை: கும்பி4தானல்பசில்பம் |
கும்பை4ஸ்ஸம்பூர்ணசோப4ம் சிரஸி ஸுக4டிதை: சாதகும்பை4ரப4ங்கை3:
சம்போ4: ஸம்பா4வனீயம் ஸகலமுனிஜனை: ஸ்வஸ்தி3தம் ஸ்யாத்
ஸதோ3 ந: || 14
சிறந்த இந்திர நீலக் கற்களால் செய்யப்பட்ட தூண்களால் சூழப்பட்ட சுற்று பிரதேசத்தை உடையதும், தூயமணிகளின் கூட்டங்களால் விளங்கும் படிக்கட்டை உடையதும், மேல் பக்கத்தில் நன்றாக அமைக்கப்பட்டவைகளும், மாசற்றவைகளும் ஆன, தங்கமயமான குடங்களால் காந்தி நிறைந்ததும், எல்லா முனிவர்களாலும் மதிக்கத்தக்கதுமான பரமசிவனுடைய ஸபை, நமக்கு நன்மைகள் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ந்யஸ்தோ மத்4யேஸபா4யா: பரிஸரவிலஸத் பாத3 பீடா2பி4ராமோ
ஹ்ருத்3ய: பாதை3ச்சதுர்பி4: கனகமணிமயை: உச்சகைருஜ்ஜ்வலாத்மா |
வாஸோரத்னேன கேனாப்யதி4கம்ருது3தரேண ஆஸ்த்ருதோ விஸ்த்ருத ஸ்ரீ:
பீட2: பீடா3ப4ரம் ந: சமயது சிவயோ ஸ்வைரஸம்வாஸயோக்3ய || 15
ஸபையினுடைய நடுவில் போடப்பட்டதும், அருகில் விளங்குகின்ற பாதம் வைத்துக்கொள்ளும் பீடத்தினால் அழகுற்றதாயும், கவர்ச்சி வாய்ந்ததும், உயர்ந்தவைகளும் தங்கம் இரத்தினங்கள் இவைகளால் ஆனவைகளுமான நான்கு கால்களால் துலங்குகின்றதும், மிகவும் மெல்லிய, சொல்ல இயலாத மேன்மை கொண்ட தொரு, சிறந்த ஆடையினால் மூடப்பட்டதும், பரவிய ஒளியை உடையதும், பார்வதீ பரமேச்வரர்களுக்கு தனிமையில் இச்சைப்படி இருப்பதற்கு ஏற்றதும் ஆன பீடம் நம்முடைய துன்பத்தின் பளுவை ஒடுக்கட்டும்.
ஆஸீனஸ்யாதி4பீட2ம் த்ரிஜக3த3தி4 பதேரங்க்4ரிபீடா2 நுஷக்தெள
பாதோ2ஜாபோ4க3பா4ஜௌ பரிம்ருது3ல தலோல்லாஸி பத்3மாதி3 ரேகௌ2|
பாதாம் பாதா3வுபௌ4 தௌ நமத3 மரகிரீடோல்லஸச்சாருஹீர-
ச்ரேணீசோணாயமானோன்னத நக2 த்3சகோத்பா4ஸமானௌ ஸமாநௌ ||
16
பீடத்தில் உட்கார்ந்தவரான, மூன்று உலகங்களுக்கும் இறைவனாகிய பரமசிவனுடைய பாதங்கள் வைத்துக்கொள்ளும் பீடத்தில் அமைந்திருப்பவைகளும்; தாமரைகளின் உருவத்தை தரிப்பவைகளும், மிகவும் மென்மையான உள்ளங்காலில் விளங்கும் தாமரை முதலிய ரேகைகளை உடையவைகளும், வணங்கும் தேவர்களுடைய கிரீடங்களில் விளங்கும் அழகிய இரத்தினங்களின் வரிசைகளால் சிவந்து உயர்ந்த பத்து நகங்களோடு பிரகாசிப்பவைகளும், ஒன்றுக்கொன்று சமானமானவைகளுமான புகழ்பெற்ற அந்த பரமேச்வரனின் இரண்டு பாதங்கள் நம்மை காப்பாற்றட்டும்.
யன்னாதோ3 வேத3 வாசாம் நிக3த3 தி நிகி3லம் லக்ஷணம் பக்ஷிகேதோ:
லக்ஷ்மீஸம்போ4கஸௌக்யம் விரசயதி யயோச்சாபரோ ரூபபே4த3: |
சம்போ4ஸ்ஸம்பா4வனீயே பத3கமல ஸமாஸங்க3 தஸ்துங்க3 சோபே4
மாங்க3ல்யம் ந: ஸமக்3ரம் ஸகலஸுக2கரே நூபுரே பூரயேதாம் || 17
எவைகளுடைய ஒலி வேதவாக்குடைய எல்லா லக்ஷணத்தையும் சொல்லுகின்றதோ, எவைகளுடைய மற்றொரு உருவச்சிறப்பு, கருடனைக் கொடியாகக் கொண்ட மஹாவிஷ்ணுவிற்கு லக்ஷ்மியோடு சேருவதால் உண்டான இன்பத்தைச் செய்கின்றதோ, எல்லோராலும் மதிக்கத்தக்கவைகளும், பரமசிவனுடைய தாமரை போன்ற பாதங்களின் சேர்க்கையால் உயர்ந்த ஜாதியை உடையவைகளும் எல்லோருக்கும் இன்பமூட்டுகின்றவர்களுமான காற் சிலம்பு நமக்கு நிறைந்த மங்களத்தைத் தரட்டும்.
கருத்து: -
ஆதிசேஷன் பரமசிவனின் காற்சிலம்பாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். பதஞ்ஜலிமுனி ஆதிசேஷனுடைய அவதாரம். அந்தப் பதஞ்சலி முனியே வேதங்களுக்கு இலக்கணம் கூறும் வியாகரணத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இதே ஆதிசேஷன் லக்ஷ்மியோடு கூடிய மஹாவிஷ்ணுவுக்கு படுக்கையாக உள்ளார். இவ் விஷயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த ச்லோகத்தை பரமாச்சாரியர் இயற்றியுள்ளார்.
எவைகளின் சப்தம் வேதங்களின் இலக்கணத்தைக் கூறுகின்றதோ, மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்துகொண்டு எவைகள் அவருக்கு லக்ஷ்மியின் சேர்க்கையால் உண்டாகும் சௌக்கியத்தை உண்டாக்குகின்றனவோ, பரமசிவனின் பாத கமலங்களோடு சேருவதால் எவைகள் அதிக ஒலி பெற்று விளங்குகின்றனவோ, எல்லோரும் பூஜிக்கத்தக்கதும், எல்லா சுகத்தைக் கொடுப்பவைகளுமான அந்தப் பாத கமலங்களில் அணிந்த சலங்கைகள் நமக்கு மங்களத்தை உண்டாக்க வேண்டும்.
அங்கே3 ச்ருங்கா3ரயோனே: ஸபதி3 சலப4தாம் நேத்ரவஹ்னௌ ப்ரயாதே
சத்ரோருத்3த்4ருத்ய தஸ்மா தி3ஷுதி4 யுக3 மதோ4ந்யஸ்தமக்3 ரேகிமேதத் |
சங்காமித்த3ம் நதானாமமர பரிஷதா3 மந்தரங்கூரயத் தத்
ஸங்கா4தம் சாரு ஜங்கா4யுக மகி2லபதேரம்ஹஸாம் ஸம் ஹரேன்ன: || 18
சிவனது கண்ணிலிருந்தெழுந்த அக்னியில் மன்மதன் விட்டிற்பூச்சிபோல் நொடிப் பொழுதில் நீறியபொழுது, அவனுடைய இரண்டு அம்புறாத் துணிகள் தனியாக எடுக்கப்பட்டு கீழே வைக்கப்பட்டிருக்கின்றனவோ என்று காலில் விழுந்து பணிந்த தேவர்களெல்லாம் சந்தேகமுறக்கூடிய அழகு வாய்ந்த பரமசிவனுடைய ஜங்கைகள் நமது தீச்செயல்களை அழிக்க வேண்டும்.
ஜானுத்3 வந்த்3வேன மீனத்4வஜந்ருவர ஸமுத்3கோ3பமானேன ஸாகம்
ராஜந்தெள ராஜாம்பா4கரிகாகநக ஸ்தம்ப4 ஸம்பா4 வநீயௌ |
ஊரூ கௌ3ரீகராம்போருஹஸரஸ ஸமாமர்த3னாநந்த3பா4ஜௌ
சாரூ தூ3ரீக்ரியாஸ்தாம் து3ரித முபசிதம் ஜன்மஜன்மாந்தரே ந: || 19
மச்சத்தைக் கொடியாகக் கொண்ட மதனராஜனுடைய தாம்பூலப் பெட்டிக்கு ஒப்பான இரண்டு முழங்கால்களோடு கூட விளங்குவதும், இராஜவாழை, (ஈசனின் கணுக்கால் முதல் முழங்கால் வரையிலான பகுதி அம்பறாத்துணி போலுள்ளது.) யானையின் துதிக்கை, தங்கத் தூண் இவைகளால் மதிக்கத் தகுந்தவைகளும் (அதாவது இவைகளுடன் ஒப்பிடுங்கால் அவைகளைக் காட்டிலும் மேன்மை பொருந்தியது) பார்வதியினுடைய தாமரை போன்ற கைகளால் இன்பமாயிருக்கும்படி பிடித்துவிடுவதினால் உண்டான இன்பத்தை அடைந்தவைகளுமாகிய அழகிய துடைகள், நம்முடைய பிறப்பையும் இதற்கு முந்தைய மற்றுமுள்ள பிறப்புக்களி லும் சேமித்த பாபத்தை அகற்ற வேண்டும்.
ஆமுக்தாநர்க4ர தனப்ரகரகர பரிஷ்வக்த கல்யாண காஞ்சீ-
தா3ம்நா ப3த்3தே4ன து3க்3த4 த்3யுதிநிசயமுஷா சீனபட்டாம்ப3ரேண |
ஸம்வீதே சைலகன்யாஸுசரித பரிபாகாயமாணே நிதம்பே3
நித்யம் நர்நர்த்து சித்தம் மம நிகி3லஜகத் ஸ்வாமின: ஸோமமௌலே: ||20
விலையற்ற இரத்தினங்களின் கூட்டத்தின் கிரணங்களால் சூழப்பட்ட மங்களமான தங்க அரைஞாணால் கட்டப்பட்டதும், பாலின் ஒளிக்கூட்டத்தைக் கவருகின்றதுமான சீன தேசத்துப் பட்டாடையினால் மூடப்பட்டதும், பார்வதியின் புண்ணிய பலம் போன்றவைகளுமான அகில அண்ட கோடிகளுக்கும் தலைவனாகிய சந்திரனைத் தலையணியாகக் கொண்ட பரமசிவனுடைய இடுப்பில் என்னுடைய மனது எப்பொதும் நர்த்தனம் செய்யட்டும்.
ஸந்த்4யாகாலானுரஜ்யத்கநகரஸருசா காலதௌ4தேன கா3ட4ம்
வ்யானத்3த4: ஸ்னிக்3த4 முக்த: ஸரஸமுத3ர ப3ந்தேன வீதோபமேன |
உத்3தீ3ப்தை: ஸ்வப்ரகாசைருபசிதமஹிமா மன்மதா2ரேருதா3ரோ
மத்4யோ மித்2யார்த் த3ஸ த்4ர்யங் மம தி4சது ஸதா3 ஸங்க3திம் மங்க3லாநாம் || 21
அந்திப்பொழுதின் சிவந்த, உருக்கிய, தங்கத்தின் காந்தியை உடையதும், உவமையில்லாததுமான வயிற்றில் கட்டிக்கொள்ளும் பட்டையினால் அழகாக இருக்கும்படி வெகு நெருக்கமாய் கட்டப்பட்டதும், வழவழப்பாயும் அழகாயும் இருக்கின்றதும், உயர்ந்தோங்கி விளங்கும் தன்னொளிகளால் வளர்ந்த மேன்மையை உடையதுமான பொய்யெனக் கருதக் கூடியதும் பெருந்தன்மை வாய்ந்ததுமான இடை எனக்கு எப்பொழுதும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.
நாபீ4சக்ராலவாலாத் நவநவஸுஷமா தோ3ஹதஸ்ரீபரீதாத்
உத்3க3ச்சந்தீ புரஸ்தாது3த3ரபத2மதி க்ரம்ய வக்ஷ: ப்ரயாந்தீ |
ச்யாமா காமாக3மார்த2 ப்ரகத2னலிபிவத் பா4ஸதே யா நிகாமம்
ஸா மா ஸோமார்த4 மௌலே: ஸுக2யது ஸததம் ரோமவல்லீ மதல்லீ ||
22
புதிது புதிதான காந்தியாகின்ற எருவின் சம்பத்து நிறைந்த நாபியாகின்ற பாத்தியிலிருந்து உயர்ந்து வளர்ந்து வருகின்றதும், வயிறாகிய வழியைக் கடந்து, மார்பை நோக்கிச் செல்லுகின்றதும், கறுப்பானதுமான எந்த ரோம வரிசை காம சாஸ்திரத்தின் கருத்தை விளக்கும் எழுத்துபோல் விளங்குகின்றதோ பாதி சந்திரனை தலை அலங்காரமாக உடைய பரமேச்வரனுடைய அந்த சிறந்த ரோம வரிசை என்னை எப்பொதும் மிகவும் சுகமடையச் செய்யட்டும்.
ஆச்லேஷேஷ்வத்3ரிஜாயா: கடி3னகுசதடீ லிப்தகாச்மீரபங்க -
வ்யாஸங்கா3துத்3யத3ர்கத்3யுதிபி4ருபசித ஸ்பர்த4முத்3தா3 மஹ்ருத்3யம் |
த3க்ஷாராதேருதூ3ட4ப்ரதிநவமணி மாலாவலீபா4ஸமானம்
வக்ஷோ விக்ஷோபி4தாக4ம் ஸததநதிஜு ஷாம் ரக்ஷதாத3 க்ஷதம் ந: || 23
மலைமகளாகிய பார்வதியினுடைய ஆலிங்கனத்தால் கடினமான ஸ்தன பிரதேசங்களில் பூசிய குங்குமப்பூவாலானன சேற்றின் சேர்க்கையால் உதிக்கின்ற சூரியனுடைய காந்திகளோடு சண்டை செய்கின்றதும், மிகவும் அழகியதும், அணிந்து கொண்ட புதிய இரத்தின மாலைகளின் வரிசைகளால் விளங்குகின்றதும் எப்பொழுதும் வணங்குகின்றவர்களுடைய பாபத்தை ஒழிக்கிறதுமான தக்ஷனின் பகைவனான பரமசிவனுடைய மார்பு நம்மை குறைவின்றி காக்க வேண்டும்.
வாமாங்கே விஸ்பு2ரந்த்யா: கரதலவிலஸச் சாருரக்தோத்பலாயா:
காந்தாயா வாமவக்ஷோருஹப4ர சிக2ரோன்மர்த3னவ்யக்3ரமேகம் |
அன்யாம்ஸ்த்ரீனப்யுதா3ரான் வரபரசு ம்ருகா3லங்க்ருதீநிந்து3 மௌலே:
பாஹூநாபத்3த4 ஹேமாங்க3த3மணிகடகாந் அந்தராலோகயாம: || 24
இடது பக்கத்தில் விளங்குகின்றவளும், கையில் விளங்கும் அழகிய செங்குவளைப்பூவை உடையவளுமான மனைவியின் இடது கொங்கையின் மேல் பக்கத்தை மர்த்தனம் செய்வதில் ஈடுபட்ட ஒரு கையையும், வரம், பரசு, மான் இவைகளால் அலங்கரிக்தப்பட்டவைகளும், தங்கத் தோள்களையும் இரத்தின வளைகளையும் அணிந்துகொண்டிருப்பவைகளுமான பிறைசூடிய பரமசிவனின் மற்ற மூன்று கைகளையும் உள்ளத்தில் பார்க்கிறோம்.
ஸம்ப்4ராந்தாயா: சிவாயா: பதிவிலயபி3யா ஸர்வலோகோபதாபாத்
ஸம்விக்3 நஸ்யாபி விஷ்ணோ: ஸரப4 ஸமுப4யோ:
வாரணப்ரேரணாப்யாம் |
மத்4யே த்ரைசங்கவீயாமனுப4 வதி த3சாம் யத்ர ஹாலாஹலோஷ்மா
ஸோயம் ஸர்வாபதா3ம் ந: சமயது நிசயம் நீலகண்ட2ஸ்ய கண்ட: || 25
கணவனுக்குத் தீங்கு ஏற்படுமோ என்ற பயத்தால் பரபரப்புற்ற பார்வதியும், எல்லா உலகங்களும் எரிந்துவிடுமோ என கவலையுமுற்ற விஷ்ணுவும் (ஆக) இரண்டு பேர்களும் தடுப்பதாலும், தூண்டுவதாலும் இடையில் திரிசங்குவினுடைய நிலையை, எந்தக் கழுத்தில் ஆலாகால விஷாக்கனி அனுபவிக்கின்றதோ அந்தக் கருப்பான கழுத்தை உடைய பரமசிவன் எல்லா ஆபத்துக்களுடைய கூட்டத்தை அழிக்கவேண்டும்.
குறிப்பு: -
பாற்கடலில் நின்று ஆலாகாலம் என்ற விஷம் கிளம்பி உலகை எரிக்கத் தொடங்கியது. அப்பொழுது பகவான் அதை விழுங்க, பார்வதிதேவி விஷம் வயிற்றினுள் சென்றால் நாதனுக்குக் கெடுதல் வந்துவிடுமோ என்று அஞ்சி, அதை வயிற்றில் இறங்காதபடி தடுத்து வெளியில் தள்ள முயற்சித்தாள். அப்பொழுது மஹாவிஷ்ணு விஷம் வெளியில் வந்தால் உலகம் அழிந்துவிடுமோ என்ற பயத்தால் உள்ளே தள்ளிவிட்டார். இவ்விதம் பார்வதியும், விஷ்ணுவும் வெளியேயும் உள்ளேயுமாய்த் தள்ளுவதால் நடுவில் திரிசங்குவைப்போல் நிற்கும் விஷத்தோடு கூடிய நீலகண்டருடைய கழுத்து நமது ஆபத்துக்களின் கூட்டத்தை ஒழிக்கவேண்டும்.
ஹருத்3யைரத்3ரீந்த்3ரகன்யாம்ருது3த3சநபதை3: முத்3ரிதோ வித்3ருமஸ்ரீ:
உத்3யோதந்த்யா நிதாந்தம் த4வளத4 வளயா மிச்ரிதோ தந்தகாந்த்யா |
முக்தாமாணிக்ய ஜாலவ்யதிகரஸத்ருசா தேஜஸா பா4ஸமான:
ஸத்3யோஜா தஸ்ய த3த்3யாத3த4ரமணிரஸௌ ஸம்பதா3ம் ஸஞ்சயம் ந: ||
26
மனத்தைக் கவரும் வனப்பு வாய்ந்த பர்வதராஜன் மகளாகிய பார்வதிதேவி மெதுவாய்ப் பற்களால் கடிப்பதால் அடையாளம் செய்யப்பட்டதும் பவழத்தின் ஒளிவீசுவதும், மிகவும் ஒளிருகின்றதும், அதிவெண்மையான துமான பற்களின் காந்தியோடு கலந்ததும், முத்துக்களும், மாணிக்கங்களும் சேர்ந்ததற்கொப்பான சோபையினால் பிரகாசிப்பதுமான ஸத்யோஜாதம் என்று அழைக்கப்படும் சிறந்த கீழ் உதடு நமக்கு செல்வங்களுடைய கூட்டத்தைக் கொடுக்கட்டும்.
கர்ணாலங்காரநாநாமணி நிகரருசாம் ஸஞ்சயைரஞ்சிதாயாம்
வர்ண்யாயாம் ஸ்வர்ணபத்3 மோத3ரபரிவிலஸத் கர்ணிகாஸன்னி
பாயாம் |
பத்3த4த்யாம் ப்ராணவாயோ: ப்ரணதஜன ஹ்ருத3ம்போ4ஜவாஸஸ்ய சம்போ4:
நித்யம் நச்சித்தமேதத் விரசயது ஸுகே2நாஸிகாம் நாஸிகாயாம் || 27
காதில் அணிந்த அணிகளிலிருக்கும் இரத்தினங்களின் ஒளியோடு கலந்ததும் கவிஞர்கள் வியந்து போற்றுவதும், தங்கத் தாமரைக்குள் கர்ணிகை போன்றதும், பிராணவாயுவின் மார்க்கமாயுமிருக்கின்ற அடியார்கள் உள்ளத்தில் வாசம் செய்யும் பரமசிவனின் மூக்கில் என்றும் நம்முடைய மனது இன்பமாய் பற்றுதலுடன் இருக்க வேண்டும்.
அத்யந்தம் பாஸ்4மானே ருசிரதரருசாம் ஸங்க3 மாத்ஸன்மணீநாம்
உத்3யச்சண்டா3ம்சுதா4மப்ரஸர நிரஸன ஸ்பஷ்டத்3ருஷ்டாபதா3னே |
பூ4யாஸ்தாம் பூ4தயே ந: கரிவரஜயின: கர்ணபாசாவலம்பே3
பக்4தாலீபா4லஸஜ்ஜஜ்ஜனி மரணலிபே: குண்ட3லே குண்ட3லே தே || 28
மிக்க அழகு வாய்ந்த உயர்தர இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதால் துலங்கிக்கொண்டு ஆதித்தனின் கிரணங்களையும் ஒதுக்கும் திறன் பூண்டவைகளும், அடியாரைக் காப்பாற்றுதல் முதலிய உயர்ந்த செய்கைகளை உடையவை களும், பக்தர்களுக்கு பிறக்கவும், இறக்கவும், பிரம்மாவால் தலையில் எழுதப்பட்ட எழுத்தை குண்டலரேகையிட்டு உபயோகமற்றதாக்குவதும், யானை வடிவம் கொண்டு எதிர்த்துவந்த அந்தகாசூரனை வென்ற பரமசிவனுடைய காதில் தொங்குவதுமான குண்டலங்கள் நமக்கு நன்மையை அருளவேண்டும்.
யாப்4யாம் காலவ்யவஸ்தா2 ப4வதி தனுமதாம் யோ முக2ம் தே3வதானாம்
யேஷாமாஹு: ஸ்வரூபம் ஜக3தி முனிவரா தே3வதானாம் த்ரயீம் தாம் |
ருத்3ராணீவக்த்ரபங்கேருஹஸதத விஹாரோத்ஸு கேந்திந்3தி3ரேப்ய:
தேப்4யஸ்த்ரிப்ய: ப்ரணாமாஞ்ஜலிமுபரசயே த்ரீக்ஷணஸ்யேக்ஷணேப்ய: ||
29
ஈசனின் நெற்றிக்கண் அக்னியாகவும், மற்ற இரு கண்கள் சூரிய சந்திரராகவும் உள்ளன. மாந்தர்களுக்கு இரவு, பகல் முதலிய சமயங்களின் வரையறுப்பு வலது இடதாக இருக்கின்ற எந்த இரண்டு கண்களால் ஏற்படுகின்றதோ, எந்த மூன்றாவதான நெற்றிக்கண் அக்னி மயமாக இருந்துகொண்டு தேவதைகளுக்கு ஆகாரம் அளிக்கின்றதோ, பார்வதியின் தாமரையை ஒத்த முகத்தில் வண்டுகளைப் போல் இடைவிடாமல் களிகூர்ந்து விளையாடும் முக்கண்ணனுடைய ஸர்வதேவதா ரூபங்களாகிய அந்த மூன்று கண்களையும் கை கூப்பி வணங்குகிறேன்.
குறிப்பு: -
தேவர்கள் அக்கினியை முகமாக உடையவர்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகவே, அக்கினியாகிற பரமசிவனது மூன்றாவது நேத்திரத்தை இங்கு தேவதைகளுக்கு முகமாய் கூறப்பட்டிருக்கிறது.
வாமம் வாமாங்ககா3யா வத3னஸரஸிஜே வ்யாலகத் வல்லபா4யா
வ்யானம்ரேஷ்வன்யத3 ன்யத்புனரலிகப்4வம் வீதநிச்சேஷரௌக்ஷ்யம் |
பூ4யோ பூ4யோzபி மோதா3ன்னிபதத3தித3யா சீதலம் சூதபாணே
த3க்ஷாரேரீக்ஷணானாம் த்ரயம்பஹாதாத் ஆசு தாபத்ரயம் ந: || 30 -
இடது மடியில் வீற்றிருக்கும் பார்வதி தேவியின் தாமரை போன்ற முகத்தில் பற்றிய இடது கண்ணும், திருவடியில் வணங்குவோரிடத்தில் பற்றிய வலது கண்ணும், முன்பு மன்மதனிடம் கோபங்கொண்டு கொடுமையாய் எரித்தும், பார்வதியை மணம் புரிந்த ஆனந்தத்தால் சற்றும் கொடுயிைன்றி பன்மடங்கு கருணையோடு அடிக்கடி அவன்பால் விழுவதுமான் நெற்றிக்கண்ணுமாகிய பரமசிவனுடைய மூன்று நேத்திரங்களும் தாமதமின்றி நம்முடைய மூன்று தாபங்களையும் ஒழித்தருளவேண்டும்.
யஸ்மின்னர்தே4ந்து முக்தத்3யுதி நிசய திரஸ்காரநிஸ்தந்த்3ரகாந்தெள
காச்மீரக்ஷோதஸங்கல்பிதமிவ ருசிரம் சித்ரகம் பா4தி நேத்ரம் |
தஸமின்னுல்லோலசில்லீநடவரதரூணீ லாஸ்யரங்கா3யமாணே
காலாரே: பா2லதேசே விஹாது ஹ்ருத3யம் வீதசிந்தாந்தரம் ந: || 31
இளம் சந்திரனைப் பழிக்கும் எழில் வாய்ந்த நெற்றியில் மூன்றாவது கண் குங்குமப்பூவாலான அழகிய திலகத்தைப்போல் பிரகாசிக்கின்றது. மஹா புருஷ லக்ஷணமாக ஸாமுத்ரிகா சாஸ்திரத்தில் கூறிய அழகிய ரேகைகள் ஈசனின் நெற்றி யில் காணப்படுவதால், இளம் நடனப்பெண்மணிகள் நர்த்தனம் செய்யுமிடம் போன்றும் நெற்றி துலங்குகிறது. பரமசிவனுடைய அந்த நெற்றியில் மற்ற கவலைகள் யாவற்றையும் ஒழித்து என் உள்ளம் எப்பொழுதும் விளையாடட்டும்.
ஸ்வாமின் க2ங்கா3மிவாங்கீ குரு தவ சிரஸா மாமபீத்யர்த2 யந்தீம்
த4ன்யாம் கன்யாம் க2ராம்சோ: சிரஸி வஹதி கின்வேஷ காருண்ய சாலீ|
இத்த4ம் சங்காம் ஜனானாம் ஜனயத்திக4னம் கைசிகம் காலமேக4
ச்சா2யம் பூ4யாது3 தா3ரம் த்ரிபுரவிஜயின: ச்ரேயஸே பூ4யஸே ந: || 32
அகில அண்டங்களுக்கும் நாதனாகிய சிவபெருமானே, மஹாவிஷ்ணுவின் திருவடிகளினின்று உண்டான கங்கையைத் தாங்கள் தலையில் வைத்துக் கொண்டாடவில்லையா? அப்படியே தங்களுடைய ஒரு கண்ணாக இருந்து உலகை விளங்கவைக்கும் கதிரவனுடைய பெண்ணாகிய என்னைத் தாங்கள் ஏன் சிரசில் வைத்துக்கொண்டு அநுக்கிரகம் செய்யக்கூடாது?'' என்று யமுனை செய்த பிரார்த்தனைக்கிணங்கி அவளைத் தன் திருமுடியில் அணிந்துகொண்டிருக்கிறாரோ என்று காண்போரனைவரும் ஐயமுறும்படி உள்ளது, ஈசனின் கரிய ஜடாபாகம் நீருண்ட மேகம்போல் அடர்ந்து கறுத்திருப்பதும், பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் மிகத் தாராளமாயுமிருக்கின்ற பரமசிவனின் ஜடாபாரம் நமக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யட்டும்.
ச்ருங்கா3ராகல்பயோக்3யை: சிக2ரிவரஸுதா ஸத்ஸகீஹஸ்தலூனை:
ஸூனைராபத்3த4மாலாவலிபரிவிலஸத் ஸௌரபா4க்ருஷ்ட ப்4ருங்க3ம் |
துங்க3ம் மாணிக்யகாந்த்யா பரிஹஸித ஸுராவாஸசைலேந்த்3ரச்ருங்க3ம்
ஸங்க4ம் ந: ஸங்கடானாம் விகடயது ஸதா3 காங்கடீகம் கிரீடம் || 33
பார்வதியின் உற்ற தோழிகள் தன் கைகளாலேயே நந்தவனம் முதலிய தோட்டங்களிலிருந்து பறித்துத் தொடுத்த அழகிய சிருங்கார ரஸத்திற்கு உவந்த மாலைகளின் வாசனையால் கட்டுண்டு மயங்கிச் சுற்றிவரும் வண்டுகளோடு கூடியதும், உயரமானதும், தக்க இடத்தில் இழைத்த இரத்தினங்களின் ஒளியால் மேரு மலையின் உச்சியையும் பரிகாசம் செய்வதுபோல விளங்குவதும், தன்னைப் பணிந்த அடியார்களுக்கு இன்பமூட்டுவதும், உலோகத்தாலானதுமான சிவபெருமானுடைய கிரீடம் நம்முடைய துன்பக் கூட்டத்தை எப்பொழுதும் அகற்ற வேண்டும்.
வக்ராகார: கலங்கீ ஜட3தனுரஹமப்யங்க்4ரி ஸேவானுபா4வாத்
உத்தம்ஸத்வம் ப்ரயாத: ஸுலப4தரக்4ருணா ஸ்யந்தி3னச்சந்த்3ர
மௌலே: |
தத்ஸேவந்தாம் ஜனௌகா4: சிவமிதி நிஜயாவஸ்த2யைவ ப்3ருவாணம்
வந்தே3 தே3வஸ்ய சம்போர்முகுட ஸுக4டிதம் முக்தபீயூஷபா4னும் || 34
பாவங்களுக்கு இருப்பிடமாகிய அறிவேயில்லாத வளைந்த இடுப்பையுடைய நான்கூட எளிதில் கருணையைப் பெருக்கும் பரமசிவன் மலரடிகளை வணங்கிச் சேவித்து அவருக்குத் தலைக்கு அலங்காரமாக ஆகிவிட்டேன். ஜனங்களே நீங்கள் ஏன் துன்புறவேண்டும்? 'பரமசிவனை சேவித்து அழியாத ஆனந்தமடையுங்கள்' என்று தன் அனுபவத்தையே ஆதாரமாகக்கொண்டு எல்லோருக்கும் உபதேசம் செய்வதைப்போல் தோற்றுகிறான் சந்திரன். சிவபெருமான் கிரீடத்தில் சேர்ந்திருக்கின்ற அமிருதகிரணனான அந்த இளம் சந்திரனை நான் வணங்குகிறேன்.
காந்த்யா ஸம்பு2ல்லமல்லீ குஸுமத4 வளயா வ்யாப்ய விச்வம் விராஜன்
வ்ருத்தாகாரோ விதன்வன் முஹுரபி ச பராம் நிர்வ்ருதிம் பாத3பா4ஜாம் |
ஸானந்த2ம் நந்தி3 தோ3ஷ்ணா மணிகடகவதா வாஹ்யமான புராரே:
ச்வேதச்ச2த்ராக்2 யசீதத்3 யுதிரபஹரதாத் ஆபத3 ஸ்தாபதா3 ந: || 35
புதிதாய் மலர்ந்த மல்லிகை மலர் போல் கண்ணைக்கவரும் வெண்மைவாய்ந்து தன்னொளியால் உலகம் முழுவதையுமே துலங்கச் செய்வதும், வட்டமானதும், பரமசிவனுக்கு நிழல் கொடுப்பதால் அவருடைய மலரடிகளை அண்டினோர்களுக்கு பரமானந்த ரூபமான மோக்ஷத்தைக்கூடக் கொடுப்பதும், இரத்தினமிழைத்த வளைகள் பூண்டு ஒளிரும் நந்தியின் கைகளால் உற்சாகத்தோடு தாங்கிப் பிடிக்கப் பட்டதுமான பரமசிவனுடைய வெண்பட்டாலான குடையாக அமைந்த சந்திரன் நம்மை எப்பொழுதும் வாட்டிக்கொண்டிருக்கும் கொடிய ஆபத்துக்களை விலக்கி அருளவேண்டும்.
தி3வ்யாகல் போஜ்ஜ்வலானாம் சிவகி3ரிஸுதயோ: பார்ச்வயோராசரிதானாம்
ருத்3ராணீ ஸத்ஸகீனாம் மத3தரள கடாக்ஷாஞ்சலைரஞ்சிதானாம் |
உத்3வேல்லத்3 பா3ஹுவல்லீவிலஸனஸமயே சாமராந்தோ3லனீனாம்
உத்3பூ4த: கங்கணாலீவலயகலகலோ வாரயேதா3பதோ3 ந: || 36
தேவர்களுக்கேற்ற அணிகள் அணிந்து பார்வதீ பரமேச்வரர்களின் பக்கத்தில் நிற்பதால் உண்டான ஆனந்த மதத்தால் திளைத்த கடைக்கண்களை உடையவர் சாமரத்தைக் கையிலேந்தி வீசுகிறவர்களுமான பார்வதி தேவியின் தோழிகள் சாமரம் வீசும்பொழுது மேலுங்கீழுமாய் அழகாய் அசையும் கைகளில் இருக்கும் கங்கணங்கள், வளைகள் இவைகளுடைய இனிய ஒலி நம்மை ஆபத்துக்களினின்றும் காக்க வேண்டும்.
ஸ்வர்கெள3கஸ்ஸுந்த3ரீணாம் ஸுலலிதவபுஷாம் ஸ்வாமிஸேவாபராணாம்
வல்க3த்பூ4ஷாணி வக்த்ராம்பு3 ஜபரிவிக3லன் முக்3த4கீ3தாம்ருதானி |
நித்யம் ந்ருத்தான்யுபாஸே பு4ஜவித்4ருதி பத3ந்யாஸ்பா4வாவலோக
ப்ரத்யுத்3யத்ப்ரீதிமாத்3ய த்ப்ரமத2 நடநடீ த3த்தஸம்பா4வனானி II 37
அழகிய மேனியை உடைய தேவ கன்னிகைகள் பரமசிவனை சேவிப்பதற்கு ஆவல்கொண்டவர்களாய், அலங்காரங்கள் அசைந்து ஒலித்துக் கொண்டும், மலர்ந்த தாமரையினின்று பெருகும் தேன்போல இனிமையான பாட்டைப் பாடிக்கொண்டும் நர்த்தனம் செய்கிறார்கள். அதனிடையே ஹஸ்தாக்ஷேபம், பாதன்யாஸம், பாவங்களை இவைகளைக் கண்டு களிப்புற்றுத் தாங்காமல் மதங்கொண்டு தன்னை மறந்து பிரமத கணங்களே ஸாதுகாரம் செய்கின்றன. அந்த நர்த்தனங்களை நான் சேவிக்கின்றேன்.
ஸ்தா2னப்ராப்த்யா ஸ்வராணாம் கிமபி விசத3தாம் வ்யஞ்ஜயன் மஞ்ஜு வீணா -
ஸ்வானாவச்சி2ன்னதாலக்ரமமம்ருதமிவ ஆஸ்வா த்3யமானம்
சிவாப்4யாம் |
நாநாராகா3திஹ்ருத்3யம் நவரஸமது4ர ஸ்தோத்ரஜாதானுவித்3த4ம்
கா3னம் வீணாமஹர்ஷே: கலமதிலலிதம் கர்ணபூராயதாம் ந: || 38
ஸ்வரங்களை அதனதன் ஸ்தானங்களினின்று வழுவாமல் பாடுவதால் தேவர்களும் இதுவரையில் அறியாத ஒரு தெளிவை ஸ்வரங்களுக்கு விளக்கிக்கொண்டும் இனிய வீணாநாதத் தோடு வேறுபடாமல் கலந்து ஒழுகிவரும் தாளங்களை உடையதும், பார்வதீ பரமேச்வரர்கள் அமுதம் போல் ஆனந்தமாய்ப் பருகுவதும், பற்பல ராகங்கள் கலந்திருப்பதால் மிக மனோகரமாயிருப்பதும், சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம். பயாநகம், பீபத்ஸம், ரௌத்ரம், சாந்தி என்கிற ஒன்பது ரஸங்கள் கொண்ட ஸ்தோத்ரங்களோடு இணைந்ததும், எளிமைக்கு இருப்பிடம் போன்றதும், சொல்ல இயலாத இனிமை வாய்ந்தது மான நாரத முனிவரின் பாட்டு நம் செவிக்கு இன்பத்தை ஊட்ட வேண்டும்
.சேதோ ஜாதப்ரமோத3ம் ஸபதி1 வித3த4தீ ப்ராணினாம் வாணினீனாம்
பாணித்3 வந்த்3 வாக்3ரஜாக்3ரத்ஸுலலிதரணித–ஸவர்ணதாலானுகூலா |
ஸ்வீயாராவேண பாதோ2தர4ரவபடுனா நாத3 யந்தீ மயூரீம்
மாயூரீ மந்த3பா4வம் மணிமுரஜப4வா மார்ஜனா மார்ஜயேன்ன: || 39
தன்னைக் கேட்கும் பிராணிகளுக்கு உடனேயே இன்பத்தைக் கொடுப்பதும், நர்த்தகிகளின் கையில் துலங்கும் தங்கத்தாலான தாளமிடும் வாத்தியத்திற்கு இசைந்ததும், மேகத்தின் குடுகுடு என்ற சப்தத்திற்கு நிகரான தனது ஓசையால் மயிலை அகவச் செய்வதும், மயிலின் நடனத்திற்கு ஏற்றதுமான பசுபதியின் சபையில் வாசிக்கும் இரத்தினம் இழைத்த மிருதங்கத்தின் இனிய ஓசை நமது சோம்பலை அகற்றவேண்டும்.
தே3வேப்4யோ தா3னவேப்4ய: பித்ருமுனிபரிஷத்-ஸித்3த4வித்3யாத4ரேப்ய:
ஸாத்4 யேப்4 யச்சாரணேப்4யோ மனு ஜபசுபதஜ் – ஜாதிகீடாதி3 கேப்4ய: |
ஸ்ரீகைலாஸப்ரரூடா4 ஸ்த்ருணவிடபிமுகா2-ச்சாபி யே ஸந்தி தேப்ய:
ஸர்வேப்4யோ நிர்விசாரம் நதிமுபரசயே சர்வபாதா3ச்ரயேப்4ய: || 40
உலகில் பிறந்ததற்கு சிவனை வணங்கி வழிபடுவதே சிறந்த பலமாகும். தியானத்தாலோ, சரீரத்தாலோ எவ்விதமாகிலும் அவரை அணுகியவர்களே பெரியோர்கள். எந்தனையோ யாகங்களையும், தவங்களையும் செய்து தேவர் முதலிய பிறப்பு எடுத்தவர்களும் அந்தப் பரமசிவனைத்தான் தியானம் செய்து தரிசித்து இன்புறுகிறார்கள். சிவபெருமான் அத்தகைய தனது அடியாருக்கும் அடியானாக விளங்குகிறார். ஆகவே, பரமசிவன் கருணைக்குப் பாத்திரமாகிய சிவத் தியானம் செய்கின்ற இந்திரன் முதலிய தேவர்களுக்கும், பலி முதலிய அசுரர்களுக்கும், பித்ருக்களுக்கும், ஸனகாதி மஹரிஷிகளுக்கும், ஸித்தர்கள், ஸாத்யாள், வித்யா தரர்கள், சாரணாள் முதலிய தேவயோனியில் பிறந்தவர்களுக்கும், மனிதர்கள், நாற்கால் பிராணிகள், பறவைகள், புழுக்கள் முதலியவைகளுக்கும்; கைலாயத்தில் முளைத்து சிவபெருமான் திருவடிபடும் பாக்கியம் கொண்ட புற்களுக்கும், அவர் உலவும் சமயங்களில் அவருக்கு நிழல் கொடுக்கும் பேறுபெற்ற மரங்களுக்கும், மற்றும் கைலாயத்தில் உண்டான பொருள்களுக்கும் என் மனதை ஒருமுகமாய் வைத்து, வேறு கவலையில்லாமல் நமஸ்காரம் செய்கிறேன்.ச்ச்
த்யா4யன்னித்த2ம் ப்ரபா4தே ப்ரதிதி3 வஸமித3ம் ஸ்தோத்ரரத்னம் படே3த்ய:
கிம் வா ப்3ரூமஸ்த்தீ3யம் ஸுசரிதமத2வா கீர்த்தயாம: ஸமாஸாத் |
ஸம்பஜ்ஜாதம் ஸமக்3ரம் ஸத3ஸி பஹுமதிம் ஸர்வலோகப்ரியத்வம்
ஸம்ப்ராப்யாயுச்சதாந்தே பத3 மயதி பரப்3ரஹ்மணோ மன்மதா2ரே: || 41
பரமசிவனுடைய மகிமையை எடுத்து விளக்குவதால் சொல்லமுடியாத மகாத்மியம் நிறைந்த இந்த ஸ்தோத்திரத்தை பக்தியோடு எவன் அதிகாலையில் பாராயணம் செய்கின்றானோ அவனுடைய புண்ய விசேஷத்தை உரைக்க யாராலும் முடியாது. ஆனாலும் நாம் சுருக்கமாக வேண்டுமானால் இங்குக் குறிப்பிட முடியும். எல்லாவிதமான சம்பத்துக்களையும் அறிந்த பெரியோர்கள் நிறைந்த சபையில் வெகுமானத்தையும், உலகிலுள்ளோர் அனைவரும் அன்போடு பழகும் உத்தம குணத்தையும் அடைந்து, நூறு வருஷகாலம் இன்புற்று வாழ்ந்து, பிறகு பரப்பிரம்ம ரூபியாயும், மாயைக்கும் அப்பால் இருப்பவரும் மோட்சஸ்வரூபியாயும் இருக்கும் சதாசிவனுடைய நிலையை அடைகிறான்.