logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

श्रीशान्तिविलासः - ஸ்ரீ சாந்தி விலாஸ: - ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியது - தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ Y. மகாலிங்க சாஸ்திரிகள்

|| ओं ||

महाकवि श्रीनीलकण्ठदीक्षित विरचितः

ஓம்

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இயற்றிய

ஸ்ரீ சாந்தி விலாஸ:

(தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ Y. மகாலிங்க சாஸ்திரிகள் )


    वंशे कस्मिन्नजनिषि कयोः पुत्रतामग्रहीपं
        कत्यौपं तदपि कतिधा तच्च सद्भयः कतिभ्यः ।
    किं नाद्राक्षं व्यसनमपि वा किं सुखं नान्वभूवं
        नोपारंसीत्तदपि हृदयं कीदृशो मे विपाकः ॥ १ ॥

    வம்ஶேகஸ்மின்னஜனிஷிகயோ: புத்ரதாமக்3ரஹீஷம்
        கத்யஶ்ரெளஷம்தத3பிகதிதா4தச்சஸப்4தகதிப்4ய: |
    கிம்நாத்3ரக்ஷம்வ்யஸனமபிவாகிம்ஸுக2ம்நான்வபூ4வம்
        நோபாரம்ஸீத்தத3பிஹ்ருத3யம்கீத்3ருஶோமேவிபாக: ||    (1)

    கஸ்மின் வம்ஸே = எந்த வம்சத்தில்; அஜனிஷி = பிறந்தேன்;கயோ: = எந்த மாதா பிதாக்களுக்கு; புத்ரதாம் = புத்ரனாயிருத்தலை; அக்3ரஹீஷம் = அடைந்தேன்; கதி அஸ்ரெளஷம் = எவ்வளவு (நல்லவிஷயங்களை) கேட்டிருக்கிறேன்; தத3பி கதிதா4= அதுவும்எத்தனை விதமாக; தச்ச கதிப்4ய: ஸப்4த்ய = அதுவும் எத்தனைபெரியோர்களிடமிருந்து; வ்யஸனம் = கஷ்டத்தை பார்க்கவில்லையா?; ஸுக2மபி வா = ஸுகத்தையும் தான்; கிம் நான்வபூ4வம் = நான்அனுபவிக்கவில்லையா?; தத3பி =  ஆனாலும்; ஹ்ருதயம் = மனம்; நோபாரம்ஸீத் = அடங்கவில்லையே; மே விபாக: கீத்3ருஶோ = என்முதிர்ச்சி எவ்விதமானது?
    நான் பரிசுத்தமான வம்சத்தில் பிறந்தேன்.மஹாத்மாக்களானமாதா பிதாக்களுக்கு புத்திரனானேன், எவ்வளவோ அரிய பெரிய விஷயங்களை எவ்வளவு தடவையோஎத்தனையோ பெரியோர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டேன், உலக வாழ்க்கையில் சுகம் துக்கம் எல்லாம்பார்த்தாகி விட்டது. இன்னமும் என் மனம் சாந்திநிலைபெறவில்லை என்றால் என் பரிபாகம் மிகவும் இகழத்தக்கதே.
    குறிப்பு:-ஸ்ரீமான் நீலகண்ட தீக்ஷிதர் ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர்அவர்களின் தம்பி பேரன். ஸ்ரீ நாராயண தீக்ஷிதா அவர்களுக்குபூமிதேவியிடம் பிறந்தவர். வேங்கடமகி,கீர்வாண யோகீந்திரர்முதலியவர்களின் சிஷ்யர். மதுரையில் திருமலை நாயகருக்கு மந்திரிபதவி வஹித்தவர்.
    पादौ मे स्तः परमचतुरौ कीकटानेव गन्तुं
        वागप्यास्ते निभृतमनृतान्येव वक्तं वांसि ।
    मीमांसन्ते मम च मतयो दोपदृष्टौ परेपां
        पॉर्मूकः पशुरपि भवाम्यात्मनीने तु कृत्ये ॥ २॥

    பாதெ3ளமேஸ்த: பரமசதுரெளகீகடானேவக3ந்தும்
        வாக3ப்யாஸ்தேநிப்4ருதம்ந்ருதாந்யேவவக்தும்வசாம்ஸி |
    மீமாம்ஸந்தேமமசமதயோதோ3பத்3ருஷ்டெளபரேஷாம்
        பங்கூ3ர்மூக: பஶுரபிப4வாம்யாத்மநீனேதுக்ருத்யே ||        (2)

    மே=என்; பாதெ3ள = கால்கள்; கீகடான் ஏவ = சந்து வழிகளிலேயே; க3ந்தும் = செல்வதற்கு; பரமசதுரெள = மிக்க திறமையுள்ளவைகளாக; ஸ்த: = இருக்கின்றன; நிப்4ருதம் = கள்ளத்தனமாக; அன்ருதாநி = பொய்யான; வசாம்ஸிஏவ = மொழிகளையே; வக்தும் = உரைப்பதற்கு; வாக3பி = பேசும் திறமையும் இருக்கிறது; மம = எனது; மதயக்ஷ்ச = யோசனைகளும்; பரேஷாம் = பிறருடைய; தோஷத்ருஷ்டெள = தோஷங்களைக் கண்டுபிடிப்பதில்; மீமாம்ஸந்தே = ஆழ்ந்த கருத்துடையவைகளாயிருக்கின்றன; ஆத்மநீனே = நான் நலம்பெற உதவும்; க்ருத்யே து = காரியத்திலோ; பங்கூ3: = முடவனாயும்; மூக: = ஊமையாயும்; பஶுரபி = நாற்கால் ஜந்துவாயும் (அஃறிணைப் பொருளாயும்); பவாமி = இருக்கிறேன்.
    மனோ வாக் காயங்களால் நான் தீய விஷயங்களையேநாடினேனே யொழிய நல்ல காரியங்களைச் செய்யவில்லை.கெட்ட பாதைகளில் ஸாமர்த்தியமாய் ஸஞ்சாரம் செய்தேன். யாரும் அறியாவண்ணம் பொய்யுரையாடுவதில்திறமைவாய்ந்த வாக்கு எனக்கு உண்டு.என் புத்தியோபிறர் பிழையை ஆராய்ந்தறிவதில் வெகு தீவரமாக வேலைசெய்கிறது. ஆனால், என் நல்லகதிக்கான காரியங்களுக்கு,நான் முடவனாயும், ஊமையாயும், மிருகமாயும்ஆனேன்.
    குறிப்பு:-சரீரத்தினால் தேவஸேவை குருஸேவைகளையும், வாக்கினால்
ஸத்திய விரதத்தையும். மனதினால் ஈச்வர தியானத்தையும் அனுஷ்டித்து என்னுடைய பரலோக ஹிதத்தைத் தேடிக் கொள்ளவில்லை.
    

    यामाराद्धं न गणितमिदं जीवितं वा धनं वा
        यस्याः प्रीतिर्मनसि कलिता ज्यायसी मोक्षतोऽपि ।
    सैवेदानी वयसि चलिते संग्रहीणे च वित्ते
        तूलायापि त्रिपुरहर मां मन्यते नैव भार्या ॥ ३ ॥
    
    யாமாராத்3து4ம்நக3ணிதமித3ம்ஜீவிதம்வாத4னம்வா
        யஸ்யா: ப்ரீதிர்மனஸிகலிதாஜ்யாயஸீமோக்ஷதோSபி |
    ஸைவேதா3நீம்வயஸிசலிதேஸம்ப்ரஹீணேசவித்தே
        தூலாயாபித்ரிபுரஹரமாம்மந்யதேநைவபா4ர்யா ||        (3)

    யாம் = எவளை; ஆராது4ம் = திருப்தி செய்து வைப்பதன்; பொருட்டு;இத3ம் =இந்த; ஜீவிதம் வா = உயிரோ; த4னம் வா = செல்வமோ; ந க3ணிதம் = (பெரிதெனப்) பாராட்டப்படவில்லையோ; யஸ்யா = எவளுடைய; ப்ரீதிர் = அன்பு; மோக்ஷதோSபி = மோக்ஷத்தைக் காட்டிலும்; ஜ்யாயஸீ = பெரிதாக; மனஸி =  மனதில்; கலிதா = கருதப்பட்டதோ; ஸா ஏவ பா4ர்யா = அதே மனைவி; இதா3னீம் = இப்பொழுது;  வயஸி = வயதும்; சலிதே = சென்று; வித்தே ச = செல்வமும்;  ஸம்ப்ரஹோணே = குறைந்தவுடன்; த்ரிபுரஹர = ஏ ஈச்வர (திரிபுரங்களை யெரித்த
வரே)| மாம் = என்னை; தூலாய அபி = இலவம்பஞ்சிற்குச் சமானமாகக் கூட; நைவ மந்யதே = மதிக்கவேயில்லை.
    உயிரையும் பணத்தையும் லக்ஷியம்செய்யாமல்எவளைத் திருப்தி செய்வித்து வந்தேனோ, எவள் காட்டும்அன்பை மோக்ஷசுகத்திற்கு மேற்பட்ட சுகம் கிடைத்தது என்று எண்ணியிருந்தேனோ, அந்தப் பெண்டாட்டியே இப்போது பணமும் குறைந்து வயதும் ஆகிவிட்டபடியால்என்னைப் பஞ்சிற்கும் தாழ்ந்தவன் என்று நினைக்கிறாள்.ஈச்வரா! நான் என்ன செய்வேன்?
    कृत्वा पापान्यपि खलु मया पोषिताशैशवे ये
        निद्राहारावपि विजहता शिक्षिता ये कलासु ।
    प्रादुर्भूताम्स्वयमिव हि ते प्राक्तनादृष्टलब्ध-
        प्रज्ञोन्मेषा इव च तनया न स्मरन्त्यात्मनोऽपि ॥ ४ ॥

    க்ருத்வாபாபாந்யபிக2லுமயாபோஷிதாஶ்ஶைஸவேயே
        நித்3ராஹாராவபிவிஜஹதாஶிக்ஷிதாயேகலாஸு |
    ப்ராது3ர்பூ4தாஸ்ஸ்வயமிவஹிதேப்ராக்தநாது3ருஷ்டலப்3த4
        ப்ரஜ்ஞோந்மேஷாஇவசதநயாநஸ்மரந்த்யாத்மனோSபி ||    (4)

    
    பாபாந்யபி க2லு = பாவச் செயல்களையும்; க்ருத்வா=  செய்து; மயா = என்னால்; யே = எவர்கள்; ஸெளஷாவே = இளைமைப் பருவத்தில்;போஷிதா: = வளர்க்கப்பட்டார்களோ; நித்3ராஹாரெளஅபி = தூக்கம்ஊண் இவற்றையும்; விஜஹதா = துறந்த (என்னால்); யே = எவர்கள்; கலாஸு ஶிக்ஷிதா = வித்யாப்யாஸம் செய்விக்கப்பட்டனரோ; தே ஹி தனயா: = அந்தப்பிள்ளைகளோ என்றால்; ஸ்வயம் = தாமாகவே; ப்ராது3ர் பூ4தாஇவ = உதித்தவர்கள் போலவும்; ப்ராக்தனா த்3ருஷ்ட லந்த4ப்ரஷோன்மேஷாஇவ ச = ஜன்மாந்தர புண்ணியத்தால் கிடைத்த புத்தி மலர்ச்சியை யுடையவர்கள் போலவும் (பாவித்துக்கொண்டு);ஆத்மனோபி = தங்களையே; ந ஸ்மரந்தி = மறந்திருக்கின்றனர்.
    பாபத்தொழில்களைப் புரிந்து பணம் சம்பாதித்து எந்தப்புத்திரர்களை வளர்த்தேனோ, எவர்களுக்கு மிக்க சிரத்தையெடுத்துக்கொண்டு என் சரீர சிரமத்தையும் பார்க்காமல்வித்யாப்யாஸம் செய்வித்தேனோ, அந்தப் புத்திரர்கள் தாங்களே ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போலவும் ஜன்மாந்தர வாஸனையாலேயே தாங்கள் வித்வத்தை யடைந்தவர்கள்போலவும் தங்களை பாவித்துக்கொண்டு நன்றி மறந்தவர்களாய் இருக்கிறார்கள்.
    दाराः पुत्राः परमसुहृदो बान्धवाः किंकरा वा
        स्वमावस्थास्वपि च विरहं ये मया न क्षमन्ते ।
    अत्यासन्ने तपनतनयस्याज्ञया दृतवर्गे
        तेष्वेकोऽपि स्मरहर न मे गन्तुमन्वस्ति जन्तुः ॥५॥
    
    தா3ரா: புத்ரா: பரமஸுஹ்ருதோ3பா3ந்த4வா: கிங்கராவா
        ஸ்வப்னாவஸ்தா2ஸ்வபிசவிரஹம்யேமயாநக்ஷமந்தே |
    அத்யாஸன்னேதபநதநயஸ்யாஜ்ஞயாதூ3தவர்கே3
        தேஷ்வேகோSபிஸ்மரஹரநமேக3ந்துமந்வஸ்திஐந்து: ||    (5)
    
    யே தா3ரா: = எந்த பார்யை;புத்ரா: = புத்திரர்கள்;பரமஸுஹ்ருத3: = நெருங்கிய நண்பர்கள்;பா3ந்த4வா: = பந்துக்கள்;கிங்கரா: வா = அல்லது சேவகர்கள்;ஸ்வப்னாவஸ்த்2ஸு அபி = ஸ்வப்னத்திலே கூட;மயா விரஹம் = என் பிரிவை;ந க்ஷமந்தே = ஸஹிக்கமாட்டார்களோ;ஸ்மரஹர = ஏ ஈச்வர (மன்மதனை எரித்தவரே)!;தேஷு ஏகோSபி ஜந்து: = அவர்களில்ஒருபிராணிகூட;தபநதநயஸ்ய= (சூரியனின் புத்திரனான)யமனின்; ஆஞ்ஞயா = கட்டளையினால்;தூ3தவர்க3= தூதர்கள்;அத்யாஸன்னே= கிட்ட நெருங்கும் தருணத்தில்;[அத்யா ஆஸன்னே = என்றும் பாடம்,பொருள் ‘இப்போது கிட்ட நெருங்குகையில்’];அனுக3ந்தும் = பின்தொடர்வதற்கு;மே = எனக்கு;நாஸ்தி = இல்லை.
    பிள்ளை, பெண்டாட்டி, பந்துமித்திரர்கள் முதலியவர்கள் என் மேலுள்ள அபிமானத்தால் என்னைவிட்டுப்பிரியமாட்டார்கள் என்றாலும், யமதூதர்கள் வந்து என்னைஅழைக்கும்போது அவர்களில் ஒருவர்கூட என் பின்னேவரமாட்டார்கள்.
    குறிப்பு:-‘ஸ்மரஹா' என்றதால் காமனை யொழித்த நீரே என்னுடைய மோஹாதிகளை நீக்கி நற்கதியளித்துக் காக்க வேண்டும் என்பது தோன்றும்.
    राज्ञो भृत्या यदि परिचिता देशिकस्यैष लाभो
        राजद्वारे यदि खलु गतं नैमिशे तत्प्रविष्टम् ।
    राजा दृष्टोऽथ च यदि परं ब्रह्म साक्षात्कृतं त-
        त्यक्तो देहो यदि नृपकुले मादृशां सोऽपवर्गः ॥६॥

    ராஜ்ஞோப்4ருத்யாயதி3பரிசிதாதே3ஶிகஸ்யைஷலாபோ4
        ராஜத்3வாரேயதி3க2லுக3தம்நைமிஶேதத்ப்ரவிஷ்டம் |
    ராஜாத்3ருஷ்டோத2சயதிபரம்ப்ரஹ்மஸாக்ஷாத்க்ருதம்தத் –
        த்யக்தோதே3ஹோயதி3ந்ருபகுலேமாத்3ருஶாம்ஸோSபவர்க3: ||                                             (6)

    மாத்3ருஸாம் = என் போன்றவர்களுக்கு;ராஜ: = அரசனுடைய;ப்4ருத்யா = வேலைக்காரர்கள்; பரிசிதா: யதி3 = பழகியவர்களானால்; ஏஷ: = இதுவே; தே3ஸிகஸ்ய லாப4: = ஸத்குருவையடைந்ததாகின்றது.; யதி3 க2லு ராஜத்3வாரேக3தம்= அரசன் இருப்பிடத்தின் வாயிலில்புகுந்துவிட்டாலோ;தத்= அதுவே;நைமிஸே ப்ரவிஷ்டம் = நைமிசாரண்யப்ரவேசமாகும்;அத2 ச = இன்னமும்;ராஜா யதி3 த்ருஷ்ட: = அரசனைதரிசனம் செய்துவிட்டாலோ;தத் = அதுவே; பரம் ப்3ரஹ்ம:  ஸாக்ஷாத்க்ருதம் = பரப்பிரும்மத்தைக் கண்ணெதிரிலேகண்ணெதிரிலே கண்டதாகும்.; ந்ருமகுலே = ராஜக்ருஹத்தில் (ஸேவையில்); யதி3 தே3ஹ: த்யக்த: = சரீரம்விட்டகன்றால்; ஸ: அபவர்க3: = அதுவே மோக்ஷமாகும்.
    ராஜஸேவைசெய்துகொண்டிருந்தஎனக்கு, அரண்மனைஉத்யோகஸ்தர்களின் நட்பே குருவையடைதல்;அரண்மனை வாசலில் நுழைதலே நைமிசாரண்யம் புகுதல்;ராஜதரிசனமே பிரும்ம ஸாக்ஷாத்காரம்; அரசன் வீட்டில்
பிராணனை விடுவதே மோக்ஷமாகும்.
    பிரும்ம ஸ்வரூபத்தை யுபதேசம் செய்யும் ஸத்குருவை யடைந்துஉபதேசம் பெற்று, புண்ணியாத்மாக்கள் இருக்கும் நைமிசாரண்யத்தில் தியான ஸமாதியை ஸாதித்து, பிரும்மத்தை யறிந்து முக்தனாகஆகவேண்டியிருக்க, நான் ராஜஸேவையைப் பெரிதாக எண்ணிகாலங்கழித்து விட்டேன் என்றுபரிதபிக்கின்றார் கவி.
    நைமிசாரண்யம் - மஹாத்மாக்கள் வசிக்குமிடம்; அங்கு பாரதம்முதலிய புண்ய கதைகளைச் சொல்லிக்கொண்டு, அவர்கள் ஞானவைராக்யங்களை ஸாதிப்பார்கள்.
    

    यत्तीर्थानामटनमथ यत्पूजनं देवताना-
        मिष्टापूर्तव्यसनमपि यद्यच्च दाक्ष्यं कलासु ।
    अर्थप्राप्त्यौपायकमखिलं जायते मादृशा त-
        त्ते चाप्या धरणिशरणा भूमिभृत्सात्कृता वा ॥७॥

    யத்தீர்தா2னாமடனமத2யத்பூஜனம்தே3வதானா –
        மிஷ்டாபூர்(த்)தவ்யஸனமபியத்ருபச்சதா3க்ஷ்யம்கலாஸு |
    அர்தப்ராப்த்ரெளபயிகமகி2லம்ஜாயதேமாத்ருஸாம்தத்
        தேசாப்யர்தா2த4ரணிஶரணாபூ4மிப்4ருத்ஸாத்க்ருதாவா ||     (7)

    மாத்ருஷாம் = என்போன்றவர்களுக்கு;யத்தீர்தா2னாம் அடனம் = தீர்த்தாடனமென்ன;யத் தே3வதானாம் பூஜனம் = தெய்வ பூஜையென்ன;யத் அபி இஷ்டாபூர்தவ்யஸனம் = யக்ஞம் செய்தல் குளம்வெட்டுதல் முதலியனவற்றில் ஆவல் அடைவதென்ன; யச்ச கலாஸு தா3க்ஷ்யம் = வித்யைகளில்ஸாமர்த்தியமென்ன; தத் அகி2லம் = அவ்வளவும்; அர்த்த2ப்ராப்த்யெளபயிகம் = பணம் ஸம்பாதிப்பதற்கே உபாயமாக;ஜாயதே = ஆகின்றது; தே சாபி அர்த்தா2: = அந்தப்பணங்களோ;த4ரணிஶர்ணா:= பூமியில் அடைக்கலம்; பூ4மிப்4ருத்ஸாத்க்ருதா: வா = பூமியை யாள் பவருக்காவது அர்ப்பணம்.
    பணத்தைப் பிரதானமாக எண்ணும் என் போன்றவர்களுக்குக்ஷேத்திரங்களைச் சுற்றுவது, பகவானைப் பூஜிப்பதுயக்ஞம் செய்வது, குளம் வெட்டுவது முதலிய தரும காரியங்கள் செய்வதும், சாஸ்திரப்பயிற்சி முதலிய யோக்யதையும்,பணத்தை ஸம்பாதிப்பதற்கு உபாயமாயிற்றே தவிர,ஆத்மார்த்தமாகப் பிரயோஜனப்படவில்லை. அப்படிச்சேர்த்த பணம் தான் என்ன வாயிற்று? பூமியில்(திருடர்களுக்கு பயந்து) புதைக்கப்பட்டது; அல்லது, அரசர்களுக்கு (காணிக்கையாகவோபறிமுதல்செய்யப்பட்டோ)அர்ப்பணம்செய்யப்பட்டது.
    குறிப்பு:- இக்கலியில், நற்காரியங்களைச் செய்து ஈசுவரர்க்குஅர்ப்பணஞ் செய்யாமல் நற்காரியங்களைக்கொண்டே பணம் சம்பாதிக்க எத்தனிக்கிறார்கள்; அது புத்தியீனம் என்பது கருத்து.
    
    आकौमाराद्गुरुचरणशुश्रूषया ब्रह्मविद्या-
        खास्थायास्थामहह महतीमार्जितं कौशलं यत् ।
    निद्राहेतोर्नीशिनिशि कथाः शृण्वतां पार्थिवानां
        कालक्षेपौपयिकमिदमप्याः कथं पर्यणसीत् ।। ८॥

    ஆகெளமாராத்க்கு3ருசரணஶுஶ்ரூஷயாப்3ரஹ்மவித்4யா –
        ஸ்வாஸ்தா2யாஸ்தாமஹஹமஹதீமார்ஜிதம்கெளஶலம்யத் |
    நித்3ரோஹேதோர்நிஶிநிஶிகதா2ஸ்ருண்வதாம்பார்தி2வானாம்
        காலக்ஷேபெளபயிகமித3மப்யா: கத2ம்பர்யணம்ஸீத் ||       (8)

    ஆகெளமாராத் = வாலியப் பிராயத்திலிருந்து;கு3ருசரண ஶுஶ்ரூஷயா = குருக்களுக்குப் பணிவிடைசெய்து;மஹதீம் = பெரிய;ஆஸ்தா2ம் = ஆவலை;ஆஸ்தா2ய = அடைந்து;ப்3ரஹ்ம வித்யாஸு = வேதாந்த சாஸ்திரத்தில்;ஆர்ஜிதம் யத் கெளஶலம் = ஆஸம்பாதிக்கப்பட்ட யாதொருபயிற்சியுண்டோ;இத3மபி = இதுவும் கூட;ஆ: கத2ம் = அந்தோகஷ்டம்;நித்3ராஹேதோ: = தூக்கம் வரும்பொருட்டு;நிஶிநிஶி = இரவுகளில்;கதா: = கதைகளை;ஸ்ருண்வதாம் = கேட்கின்ற;பார்தி2வானாம் = அரசர்களுக்கு;காலக்ஷேபெளபயிகம் = பொழுதுபோக்கிற்குச்சாதனமாக வல்லவா;பர்யணம்ஸீத் = முடிந்தது.
    வெகு சிரமப்பட்டு வித்யைகளை அப்யஸித்து முடிவில்அரசர்கள் தூக்கத்திற்குக் கதைசொல்லும் ரீதியில் அவைகளை உபயோகித்து வருகிறோம், என்ன பரிதாபம்!
    छाया तोयं वसनमशन वाहनं दीपिका वा
        केतुं यस्मिन् किल न सुलभं किंचिदप्येषु मत्यैः ।
    तस्मिन् दूरे पथि तनुभृतां सर्वथैवाभिगम्ये
        प्रस्थानाह कमपि तु विधि घसरा न स्मरामः ॥९॥

    சாயாதோயம்வஸனமஶனம்வாஹனம்தீ3பிகாவா
        க்ரேதும்யஸ்மின்கிலநஸுலப4ம்கிஞ்சித3ப்யேஷுமர்த்யை: |
    தஸ்மின்தூ3ரேபதி2தனுப்4ருதாம்ஸர்வதை2வாமிக3ம்யே
        ப்ரஸ்தா2னார்ஹம்கமபிதுவிதி4ம்க4ஸ்மராநஸ்மராம: || (9)

    சா2யா = நிழல்;தோயம் = நீர்;வஸனம் = ஆடை;அஶனம் = ஆகாரம்;வாஹனம் = வாகனம்;தீ3பிகா வா = விளக்கு;ஏஷு = இவைகளில்;கிஞ்சித3பி= ஒன்றுகூட;யஸ்மின் கில = எந்த (வழியில்) இடத்தில்;க்ரேதும் = வாங்குவதற்கு;மர்த்யை: = மனிதர்களால்;ந ஸுலப4ம் = முடியாதோ;தனுப்4ருதாம் = மனிதர்களால்;ஸர்வதா2 = அவச்யம்;அபி4க3ம்யே = செல்லவேண்டிய;தஸ்மின் = அத்தகைய;தூ3ரே பதி2 = நீண்ட வழியில்;ப்ரஸ்தா2னார்ஹம் = பிரயாணத்திற்கு வேண்டிய; கமபி து வித4ம் = ஒருவிதமான ஏற்பாட்டையும்;க4ஸ்மரா: = தின்பதே தொழிலாகவுடைய நாம்;ந ஸ்மராம: = சிந்திக்கவில்லை.

    உண்டுகளித்துவரும் நாம் ஜீவனுக்கு முக்கியமான பசியாறுதல், தாகசாந்தி,வஸிக்க நிழல், உடை, வெளிச்சம்,வாஹனம் முதலிய ஸௌகரியங்கள் இன்று இருப்பவைபோல் இறந்த பின்பும் நமக்கு ஏற்படும்படியாக, தேச காலங்களை யனுஸரித்து ஸத்பாத்திரங்களில் தானம் செய்து வைக்காதது அறியாமை. இங்கு கொடுத்தால் மட்டுமே இவைஅங்கு கிடைக்குமேயொழிய, அங்கு சென்று விலைக்கு வாங்கிக் கொள்ள முடியாது. அவ்வழி செல்வதும் செல்லாததும்நம் இஷ்டப்படி அன்று, போய்த்தான் தீரவேண்டும்.
    आकर्ण्यन्ते तपनतनयग्रामसंलापघोषा
        मन्दं मन्दं हसति निहितः कालपाशोऽपि कण्ठे ।
    आपृच्छन्ते कृतजिगमिषासंभ्रमाः प्राणवाता:
        नैवेदानीमपि विषयवैमुख्यमभ्येति चेतः ॥१०॥

    ஆகர்ண்யந்தேதபனதனயக்3ராமஸல்லாபதோ4ஷா
        மந்த3ம்மந்த3ம்ஹ்ரஸதிநிஹித: காலபாஶோSபிகண்டே2 |
    ஆப்ருச்ச2ந்தேக்ருதஜிக3மிஷாஸம்ப்4ரமா: ப்ராணவாதா:
        நைவேதா3நிமாபிவிஷயவைமுக்2யம்ப்4யேதிசேத: ||       (10)

    தபனதனய க்3ராமஸல்லாப கோ4ஷா: = யமபுரத்தில் தூதர்கள் பேசிக்கொள்ளும் சத்தங்கள்;ஆகர்ண்யந்தே = காதில் விழுகின்றன; கண்டே2 = கழுத்தில்;நிஹித: = போடப்பட்ட;காலபாஶோSபி = யம பாசமும்;மந்த3ம் மந்த3ம் = கொஞ்சம் கொஞ்சமாக;ஹ்ரஸதி = குறுகி வருகிறது;[க்3ரஸதிஎன்று பாடமானால், பொருள் 'பிடித்திழுக்கின்றது'];க்ருதஜிக3மிஷாஸம் ப்4ரமா: = வெளியேறத் துடிக்கும்;ப்ராணவாதா: = பிராணன்கள்;ஆப்ருச்ச2ந்தே = உத்தரவு கேட்கின்றன;இதா3னீம் அபி = இப்பொழுது கூட;சேத: = மனது;விஷயவை முக்2யம் = சிற்றின்பப்பற்றுதலிலிருந்து ஒழிவை;ந அப்4யேதி = அடையவில்லை.
    வாஸனா பலத்தால் இந்திரிய விஷயங்களில் உழலும்சித்தத்திற்கு, யமதூதர்களின் ஆரவாரம் காதில் விழும்போதும் காலபாசம் கழுத்தை இறுக்கி நெருக்கும் போதும்பிராணன்கள் வெளிக் கிளம்பத் துடிக்கும்போதும் கூட,விரக்தி யேற்படுவதில்லை.
    चक्षुष्यन्धे चलति दशने श्मश्रुणि श्वेतमाने
        सीदत्यङ्गे मनसि कलुपे कम्पमाने कराग्रे ।
    दुतरेतैर्दिनकरभुवः शश्वदुबोध्यमाना-
        स्वातुं देहं तदपि भिषजामेव सान्त्वं वदामः ॥११॥

    சக்ஷுஷ்யந்தே4சலதித3ஶனேஶ்ம்ஶ்ருணிஶ்வேதமானே
        ஸீத்3யங்கே3மனஸிகலுஷேகம்பமானேகராக்3ரே |
    தூ3தைரேதைர்தி3னகரபு4வஶஶ்வது3ப்3த்4யோயமானா–
        ஸ்த்ராதும்தே3ஹம்தத3பிபி4ஷஜாமேவஸாந்த்வம்வதா3ம: || (11)

    சக்ஷுஷி அந்தே4 = கண் ஒளியிழந்து; த3ஸனே சலதி=  பல் ஆட்டம்கண்டு; ஶ்மஶ்ருணி ஸ்வேதமானே = மீசை வெளுத்து; அங்கே3ஸீத3தி =  அங்கம்சோர்வடைந்து; மனஸி கலுஷே = மனம் கலங்கி; கராக்3ரே கம்பமானே = நுனிக்கை நடுக்கமுற்றுப் போன போது; ஏதை: தி3னகரபு4வ:தூ3தை: = இந்த யமதூதர்களால்; ஶஶ்வத் = அடிக்கடி; உத்3வோத்4யமானா: = (காலம்குறுகியதென்று) ஞாபகப்படுத்தப்பட்ட நாம்; தத3பி = அப்படிஇருந்தும்; தே3ஹம் = சரீரத்தை; த்ராதும் = ரக்ஷிக்க; பி4ஷஜாம் ஏவ = வைத்தியர்களுக்கே; ஸாந்த்வம் = நல்லவார்த்தையை; வதா3ம: = சொல்லுகிறோம்.
    இந்திரியங்கள் ஒடுங்கிவிட்டன; கண்ணை மறைத்து,பற்களை ஆட்டிவைத்து, தலை நரையைத் தந்து, உடம்புக்குபல ஹீனத்தைக் கொடுத்து, மனதைக் குழப்பி, கைகளைநடுங்கச்செய்து, விருத்தாப்பியம் மேலிட்டபோது, தினம்வந்து யமதூதர்கள் எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருக்கும்காலத்திலும், சரீரத்தை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற கொள்கையினால் வைத்தியர்களையுபசரித்து நல்ல வார்த்தை சொல்லுகிறோமேயொழிய,ஈச்வரனை நினைப்பதே யில்லை.
    शान्तो बहिर्जठरपिठरे संस्थिता कामवार्ता
        धावं धावं दिशि दिशि शनैरिन्द्रियाश्वा निपेतुः ।
    एवं दैवादुपरममगादेष मे वैरिवर्ग-
        श्वेतस्त्वेकं न वशमयते किं करोमि व यामि ॥१२॥

    ஶாந்தோவன்ஹிர்ஜட2ரபிட2ரேஸம்ஸ்தி2தாகாமவார்(த்)தா
        தா3வம்தா3வம்தி3ஶிதி3ஶிஶனைரிந்த்3ரியாஶ்வாநிபேது: |
    ஏவம்தை3வாது3பமமகா3தே3ஷமேவைரிவர்கஶ்
        சேதஸ்த்வேகம்நவஶமயதேகிம்கரோமிக்வயாமி ||       (12)

    ஜட2ரபிட2ரே= வயிற்றில்; வஹ்னி = (ஜாடர) அக்னி; ஶாந்த = அணைந்துவிட்டது; காமவார்த்தா = ஸ்திரீ சபலம் என்ற பேச்சே; ஸம்ஸ்தி2தா = அற்றுப்போய்விட்டது; தி3ஸி தி3ஸி = பல திசைகளில்; தா3வம் தா3வம் = ஓடியோடி; ஸாநை: = வரவர; இந்த்3ரியாஶ்வா: = புலன்களாகிறகுதிரைகள்; நிபேது: = விழுந்துவிட்டன; ஏவம்= இவ்விதமாக; தை3வாத் = தெய்வச் செயலாகர்; மே  = எனது; ஏஷ: வைரிவர்க3: = இந்த விரோதிக் கூட்டம்; உபரமம்= ஒழிவை; அகா3த் = அடைந்தது; சேத: ஏகம் து = மனம் ஒன்று மட்டும்; ந வஶம் அயதே = கட்டுப்படவில்லை; கிம் கரோமி = என்ன செய்வேன்?; க்வ யாமி = எங்கு செல்வேன்?
    மூப்பில் இந்திரியங்கள் ஒருவாறு திறம் குன்றித் தாமாகவே சோர்ந்து விழுந்துவிட்டன. ஜீரணசக்தி போய்விட்டது. காமபோகங்களை யனுபவிப்பதில் ஆசையும் ஒழிந்துவிட்டது. இவ்விதம் விரக்திக்குவிரக்திக்கு இடையூறுகளாயிருந்தபுலன்கள் அடங்கிவிட்டன என்றாலும், சித்தம் ஒன்றுமட்டும் கட்டுப்படாமல் பலவாறு கெட்டலைந்து திண்டாடுகிறது. இதற்கு என்ன பரிஹாரத்தைத் தேடுவேன்?
    
    नानोपायैर्दिशि दिशि धनान्यर्जयित्वा व्ययित्वा
        सम्यक् संपादितमिदमहो स्थौल्यमेकं शरीरे ।
    श्रुत्वा श्रुत्वा बहुजनमुखादायुपैतावताऽपि
        प्राप्तं दर्शावधितिमिरवदाढमज्ञानमेकम् ॥ १३ ॥

    நானோபாயைர்தி3ஶிதி3ஶித4னான்யர்ஜயித்வாவ்ய்யித்வா
        ஸம்யக்ஸம்பாதி3தமித3மஹோஸ்த்2ரெளல்யமேகம்ஶரீரே |
    ஷ்ருத்வாஷ்ருத்வாப3ஹுஜனமுகா2தா3யுஷைதாவதாபி
        ப்ராப்தம்த3ர்ஶாவதி4திமிரவதா3ட4மஜ்ஞானமேகம் ||(13)

    நானோபாயை: = நபலவித உபாயங்களால்; தி3ஶி தி3ஶி = பல திக்குகளிலும்; த4னானி = தனங்களை; அர்ஜ்யித்வா = ஸம்பாதித்து; வ்யயித்வா = செலவும் செய்துவிட்டு; ஶரீரே = சரீரத்தில்; இத3ம் = இந்த; ஸ்தெ2ளல்யம் ஏகம் = பருமன் ஒன்றுமட்டும்; ஸம்யக் = நன்றாக; ஸம்பாதி3தம் = அடையப்பட்டது; அஹோ = கஷ்டம்; [இஹ = ‘இங்கே' என்றும் பாடமுண்டு] ஏதாவதா ஆயுஷ அபி = இவ்வளவு வயதில்; ப3ஹுஜனமுகா2த்= பலர் முகமாக; ஷ்ருத்வா ஷ்ருத்வா = அடிக்கடி (தேகம் நிலையற்றது,தர்மமே பெரிது என்று) கேட்டு;த3ர்ஶாவதி4தி மிரவத் =  அமாவாசையை முடிவாகவுடைய இருள் போன்ற; கா3ட4ம் = அடர்ந்த; அஞ்ஞானம் ஏகம் = அறிவீனம் ஒன்று மட்டும்; ப்ராப்தம் = அடையப்பட்டது.
    பல முறைகளில் ஈடுபட்டுப் பணங்களைச் சம்பாதித்துபல துறைகளில் செலவும் செய்து ஆகிவிட்டது. முடிவில்நம்மிடம் தங்கிய தென்னவெனில், இப்பெருந் தொந்திஒன்றே. மேலும் பல பேர்களிடம் பல சாஸ்திர தத்துவங்களையும் தெரிந்துகொண்டோம். ஆனால், அதனால் ஒருபலனையும் அடையவில்லை. அஞ்ஞானம் திரள் திரளாகக்குவிந்து நம்மை மூடிக்கொண்டிருப்பது தான் மிச்சம்.
    क्वक्षन्ते मां वचन शयितं किंकरा दण्डपाणे-
        रोक्षन्तां वा तदपि मयि किं कुर्युरुदामवृत्ते ।
    कुर्युः किंचित्प्रसभमपि वा घातयिष्यामि राजे-
        त्यन्तधैर्य परमिह वहन्नन्तकं न स्मरामि ॥ १४ ॥

    க்வேக்ஷந்தேமாம்க்வசனஶயிதம்கிங்கராத3ண்டபாணே –
        ரீக்ஷந்தாம்வாதத3பிமயிகிம்குர்யுருத்3தா3மவ்ருத்தே |
    குர்யு: கிஞ்சித்ப்ரஸப4மபிவாதா4தயிஷ்யாமிராஜ்ஞே –
        த்யந்தர்தை4ர்யம்பரமிஹவஹன்னந்தகம்நஸ்மராமி || (14)

    க்வசன ஶயிதம் மாம் = எங்கேயோ (ஒரு மூலையில்) படுத்திருக்கும் என்னை; த3ண்டபாணே = யமனுடைய; கிங்கரா: = தூதர்கள்; க்வ இர்க்ஷந்தே = எங்கு பார்க்கப்போகிறார்கள்?; இர்ஷந்தாம் வா = பார்க்கத்தான்பார்க்கட்டுமே; தத3பி = அப்படியும்; உஹமவ்ருத்தே மார்ய = யாருக்கும்அடங்காத செய்கையுள்ள என் விஷயத்தில்; கிம் குர்யு: = என்னசெய்வார்கள்?; கிஞ்சித் குர்யு:அபி வா= ஏதாவது அவர்கள்செய்வதாகவைத்துக் கொண்டாலும்; ராஜா = அரசனைக்கொண்டு; ப்ரஸப4ம் = உடனே; தா4வயிஷ்யாமி = கொன்றுவிடச் செய்கிறேன்; இதி = என்று; இஹம் = இந்த விஷயத்தில்; பரம் = அதிகமான; அந்தர்தை4ர்யம் = மனோதைரியத்தை; வஹன் = அடைந்து; அந்தகம் = யமனை; ந ஸ்மராமி = (நான்) கருதவில்லை.
    மிருத்யுபயமே இல்லாமல் நான் யதேச்சையாக ஸஞ்சரிக்கிறேன். ''நான் யமதூதர்கள் கண்ணில் படாமல் இருக்கலாமல்லவா? அவர்கள், என்னைக் கண்டுகொண்டாலும்,நான் தான் யாருக்கும் உட்படாத ஸாஹஸக்காரனாச்சுதே,
என்னை அவர்கள் என்ன செய்யமுடியும்? அப்படி அவர்கள்என்னை ஏதாவது ஹிம்ஸித்தால், நாம் அரசனிடம் முறையிட்டுக்கொண்டு அவர்களுக்குத் தக்க தண்டனை விதிக்கச்செய்யலாம்'' என்று இப்படியெல்லாம் தைரியம் செய்து
கொள்ளுகிறேன்.
    குறிப்பு:- இவ்விதமெல்லாம் மூடர்கள் நினைத்துக்கொண்டு அசட்டுத் தைரியத்துடன் கடவுளை நினையாமல் கெட்டுப்போகிறார்கள் என்பது கருத்து.
    वेदा वा स्युर्वितथवचना विस्मरेदीश्वरो वा
        धर्माधर्मस्थितिविरचनामन्तको वा मृषा स्यात् ।
    नित्यो वा स्यामहमिति बहूनुल्लिखन्तः समाधीन्
        मेदोवृद्ध्या मुदितमनसः सर्वतो निर्वृताः स्मः ॥१५॥

    வேதா3வாஸ்யுர்விதத2வசனாவிஸ்மரேதீஶ்வரேவா
        த4ர்மாத4ர்மஸ்த2திவிரசனாமந்தகோவாம்ருஷாஸ்யாத் |
    நித்யோவாஸ்யாமஹமிதிப3ஹுநுல்லிக2ந்த: ஸமாதீன்
        மேதோ2வ்ருத்3த4யாமுதி3தமனஸ: ஸர்வதோநிர்வ்ருதாஸ்ம: || (15)

    வேதா3: = வேதங்கள்; விதத2வசனா: = பொய்யுரைப்பவைகளாக; வாஸ்யு: = இருக்கலா மல்லவா?; ஈஶ்வர: = ஈச்வரன்; த4ர்மாத4ர்மஸ்த2திவிரசனாம் = தர்மம் அதர்மம் என்று செய்த முறைமையை; விஸ்மரேத்வா = மறந்து விடலாமல்லவா?; அந்தக: = யமன் (என்பவனே); ம்ருஷா ஸ்யாத் வா = பொய்யாயிருக்கலாமல்லவா?; அஹம் நித்யோவாஸ்யாம் = நான் என்றும் அழிவில்லாதவனாகஇருக்கலாமல்லவா?; இதி = என்று; ப3ஹுன் = பல; ஸமாதீன் = ஸமாதானங்களை; உல்லிக2ந்த: = கல்பனை செய்துகொண்டு; மேதோ2வ்ருத்3த4யா = தேகம் கொழுப்பேறுவதால்; முதி3தமனஸ: = மனமகிழ்ச்சியடைந்து; ஸர்வத: = எதைப்பற்றியும்; நிர்வ்ருதா: ஸ்ம: = சிந்தையற்றவர்களாய் இருக்கிறோம்.
    உடம்பில் திமிர் ஏறி, சித்தம் வெறிகொண்டு, ‘ஒன்றும்நமக்கு லக்ஷ்யம் இல்லை' என்று சுகித்திருக்கும் நாம், “வேதங்கள் பொய்யாயிருக்கலாம், ஈச்வரன் தான் செய்த ஏற்பாடுகளையே மறந்துவிடலாம், யமன் என்பது விளையாட்டுப்பேச்சாக இருக்கலாம், நாம் இந்த சரீரத்துடன் சிரஞ்சீவியாகவே இருக்கலாம்'' என்று இப்படியெல்லாம் மனப்பால்குடித்துக்கொண்டு அதர்மத்தில் மூழ்கியிருக்கிறோம்.
    यामे यामे गलति वपुषः स्रंसते सन्धिवन्धः
        श्वासे श्वासेऽपि च विचलति क्षीयते दीर्घमायुः ।
    भुक्ते भुक्तेऽपि च सुखलवे लुप्यते पुण्यराशिः
        कृत्ये कृत्ये निरवधि पुनर्वर्धते पातकं नः ॥ १६ ॥

    யாமேயாமேக3லதிவபுஷ: ஸ்ரம்ஸதேஸத்தி4ப3ந்த4:
        ஶ்வாஸேஶ்வாஸேபிசவிசலதிக்ஷீயதேதீ3ர்த4மாயு: |
    பு4க்தேபு4க்தேபிசஸுக2லவேலுப்யதேபுண்யராஶி:
        க்ருத்யேக்ருத்யேநிரவதி4புநர்வர்த4தேபாதகம்ந: ||        (16)

    யாமே யாமே க3லதி = ஒவ்வொரு ஜாமம் கழியும்போதும்; வபுஷ: = சரீரத்தின்; ஸத்தி4ப3ந்த4: =  மூட்டுகளின் கட்டு; ஸ்ரம்ஸதே = தளர்கின்றது; அபி ச =இன்னமும்; ஶ்வாஸே ஶ்வாஸே விசலதி = ஒவ்வொருமூச்சும் வெளிவரும் போது; தீ3ர்க4ம் ஆயு: = நீண்ட ஆயுளும்; க்ஷீயதே = குறைந்து வருகிறது;அபி ச = மேலும்; பு4க்தே பு4க்தேஸுக2லவே = சிறிதளவு சுகத்தை அனுபவிக்க அனுபவிக்க; புண்யராஶி: = புண்ணியக் குவியல்; லுப்யதே = குன்றுகிறது; ந: = நம்முடைய; க்ருத்யே க்ருத்யே = ஒவ்வொரு காரியத்திலும்; பாதகம்புந: = பாபம் மட்டும்; நிரவதி4= எல்லையில்லாமல்; வத4தே = வளர்கிறது.
    நாழிகைக்கு நாழிகை மூப்பு முதிருகிறது. அதனால்அவயவங்களின் தளர்ச்சி ஏற்படுகிறது. மூச்சுக்கு மூச்சுநீண்டதான ஆயுளும் குறுகிக்கொண்டே வருகிறது. அனுபவிக்க அனுபவிக்க பூர்வ புண்ணியத்தின் பெருங்குவியலும்நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பாபம் மட்டும் கணக்கில்லாமல் கூடிவருகிறது.
    


    गन्तव्योऽध्या सकलदुरवस्थानसंपातभूमि-
        र्गत्वा दृश्यस्त्रिभुवनजनायुष्कलान्तः कृतान्तः ।
    दृष्टा लभ्या निरयजनिता यातना नैकभेदा
        विस्मृत्येदं निखिलमपि तु व्यर्थमायुर्नयामः ।। १७ ॥

    க3ந்தவ்யோத்4வாஸகலது3ரவஸ்தா2னஸம்பாதபூ4மிர்
        க3த்வாத்3ருர்யஸ்த்ரிபு4வனஜனாயுஷ்கலாந்த: க்ருதாந்த: |
    த்3ருஷ்ட்வாலப்4யாநிரயஜனிதாயாதனாநைகபே4தா3
        விஸ்ம்ருத்யேத3ம்நிகிலமபிதுவ்யர்யமாயுர்நயாம: ||(17)

    க3ந்தவ்யோத்4வா = நாம் போகவேண்டிய வழி; ஸகலது3ரவஸ்தா2னஸம்பாத பூ4மி: = எல்லாவித அஸௌகரியங்களும் ஒருங்கே சேரும்இடம்;க3த்வா= போனபின்; த்ரிபு4வன ஜனாயுஷ்கலாந்த: = மூவுலகிலுமுள்ள ஜனங்களின் ஆயுஸ்ஸை முடிவு செய்யும்; க்ருதாந்த: = யமன்; த்3ருஷ்ய: = காணவேண்டியவன்; த்3ருஷ்டா = பார்த்தபின்; நைக பே4தா3: = பற்பல வகையான; நிரயஜனிதா: = நரகத்தில் உண்டாகும்; யாதனா: = வேதனைகள்; லப்4யா: = அனுபவிக்க வேண்டியவை; அபி து = ஆனால்; நிகிலம்இத3ம் = இதையெல்லாம்; விஸ்ம்ருத்ய = மறந்து; ஆயு: = வாழ்நாளை; வ்யர்த2 = வீணாக; நயாம: = கழிக்கின்றோம்.
    இறந்தபிறகு கொடூரமான தொந்தரவுகள் மிகுந்தபாழும் வழியே செல்லவேண்டும் என்றும், இறுதியில் யமதர்மராஜன் ஸபையில் போய் நிற்கவேண்டு மென்றும்,பின்பு அவரால் கட்டளையிடப்படும் பற்பல விதமான வேதனைகளைத் தரும் நரகவாஸத்தை யனுபவிக்க வேண்டுமென்றும்இதையெல்லாம் மறந்து ஆயுளை வீணாகக் கழித்து வருகின்றோம்.
    काले काले न किमुपनतं भुञ्जते भोज्यजातं
        गृह्णन्त्यम्भो न किमथ न किं संविशन्ति क्षपासु ।
    पुष्णन्ति स्वान्न किमु पृथुकान स्त्रीपु किं नो रमन्ते
        कृत्याकृत्यव्यपगतधियां कस्तिरश्चां च भेदः ॥१८॥

    காலேகாலேநகிமுபநதம்பூ4ஞ்ஜதேபோ4ஜ்யஜாதம்
        க்3ருஹ்ணந்த்யம்போ4நகிமதநகிம்ஸம்விஶந்திக்ஷபாஸு |
    புஷ்ணந்திஸ்வான்நகிமுப்ருது2கான்ஸ்த்ரீஷுகிம்நோரமந்தே
        க்ருத்யாக்ருத்தவ்யபக3ததி4யாம்கஸ்திரஶ்சாம்சபே4த3: ||  (18)

    காலே காலே = (மிருகங்கள்) அவ்வப்போது; உபநதம் = கிடைத்த; போ4ஜ்யஜாதம் = உணவுப் பொருள்களை; கிம் ந பூ4ஞ்ஜதே = உட்கொள்வதில்லையா?; அம்ப4: = ஜலத்தை; கிம் ந க்3ருஹ்னந்தி = பருகவில்லையா?; அத2 = மேலும்; க்ஷபாஸு = இரவுகளில்; கிம் ந புஷ்ணந்தி = படுத்துறங்குவதில்லையா?; ஸ்வான் = தங்களுடைய; ப்ருது2கான் = குட்டிகளை; கிம் ந புஷ்ணந்தி = போஷிப்பதில்லையா?; ஸ்த்ரீஷு = ஸ்திரீகளிடம்; கிம் நோரமந்தே = கிரீடிக்கவில்லையா?; க்ருத்யாக்ருத்வ்யபக3ததியாம் = செய்யத் தகுந்ததுசெய்யத் தகாதது என்ற விவரம்அறியாதவர்களுக்கும்; திரஶ்சாம் ச = மிருகங்களுக்கும்; க: பே4த3: = என்ன பேதம்?
    ஆஹாரம், தாகசாந்தி, நித்திரை, குழந்தைகளை வளர்த்தல், காமப் பிரவிருத்தி ஆகிய இந்த அம்சங்களில் மனுஷ்யனுக்கும் மிருகங்களுக்கும் என்ன பேதம் இருக்கிறது?இன்னது செய்யத் தக்கது இன்னது செய்யத் தகாததுஎன்ற பகுத்தறிவு இருந்தால் மட்டும் மனுஷ்யனேயன்றி,மேற்கூறிய ஆஹாராதிப் பிரவிருத்திகளில் மட்டும் ஈடுபட்டுவிவேகமில்லாமல் இருப்பவன் மிருகமே.
    कृच्छाल्लब्धं धनमपि शतांशाधिकप्राप्तिलोभात्
        पत्रे किञ्चिल्लिखितमुपलभ्यैव सर्व त्यजामः ।
    शास्त्रैः सिद्धे बहुशतगुणाधिक्यलाभे परत्र
        व्यर्थाशङ्काकलुषमनसो नोत्सृजामोऽर्थलेशम् ॥ १९ ॥

    குச்2ராலப்3த4ம்த4னமபிஶதாம்ஶாதி4கப்ராப்திலோபா4த்
        பத்ரேகிஞ்சில்லிகி2தமுபலப்4யைவஸர்வம்த்யஜாம: |
    ஶாஸ்த்ரை: ஸித்4தே3ப3ஹுஶதகு3ணாதி4க்யலாபேபரத்ர
        வ்யர்தாஶங்காகலுஷமனஸோநோத்ஸுஜாமோர்தலேஶம் ||  (19)

    குச்2ராத் லப்3த4ம்= பிரயாசைப்பட்டுசம்பாதிக்கப்பட்ட; த4னம்ஸர்வம் அபி = பணம் முழுவதையும்; ஶதாம்ஶாதி4க ப்ராப்தி லோபா4த் = நூற்றுக்கு ஒன்றைவிட அதிக வட்டி வாங்குவதில்ஆசையினால்; பதே லிகி2தம் = காகிதத்தில் எழுதப்பட்ட; கிஞ்சித் = ஏதோ ஒன்றை; உபலப்4ய ஏவ = வாங்கிக்கொண்டே; த்யஜாம: = கொடுத்து விடுகிறோம்; பரத்ர = பரலோகத்தில்; ப3ஹுஶதகு3ணாதி4க்யலாபே = அநேக நூறு மடங்கு அதிகமான லாபமானது; ஶாஸ்த்ரை: ஸித்4தே3 = சாஸ்திரங்களினால் உறுதி செய்யப்பட்டிருக்கையில்; வ்யர்தாஶங்காகலுஷமனஸ: = வீண் அவநம்பிக்கையால் கலங்கியமனத்தினர்களாய்; அர்த2லேஶம் =  சிறிதளவும் பணத்தையும்; நோத்ஸுஜாம்: = (நாம்) கொடுப்பதில்லை.
    ஸ்வல்ப வட்டித்தொகைக்கு ஆசைப்பட்டு, கடன்பத்திரத்தை நம்பி, தான் சிரமப்பட்டு வெகு காலமாய்ச்சேர்த்துவைத்த பணத்தை ஒருவன் பிறனுக்குக் கொடுத்துவிடவில்லையா? முதலைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பலன்
பரலோகத்தில் கொடுக்கப்படும் என்று சாஸ்திரங்கள்முறையிடுவதை நம்பி ஒருவனும் ஒரு காசுகூட தர்ம வழியில் செலவிட ஸம்மதிக்கவில்லை. கடன் பத்திரத்தை நம்புகிறவன் தர்ம சாஸ்திரங்களின் உறுதிமொழிகளைப் பற்றித்
தர்க்கங்கள் செய்து நம்பிக்கை யுண்டடாகாத மனமுடையவனாகிறான்.
    जीर्णे रुग्णे विकलकरणे शत्रुभिर्वा गृहीते
        स्वस्मिन् कोऽर्थो भवति सुखदः कश्च कामप्रसङ्गः ।
    मा भूदेतत् सकलमथवा स्वायुषः किं प्रमाणं
        निश्चित्यै दुरितनिचयश्चीयते निर्विशकैः ॥२०॥

    ஜீர்ணேருக்ணேவிகலகரணேஶத்ருபி4ர்வாக்3ருஹீதே
        ஸ்வஸ்மின்கோர்தோப4வதிஸுக2த3: கஶ்சகாமப்ரஸங்க: |
    மாபூ4தேதத்ஸகலமதவாஸ்வாயுஷ: கிம்ப்ரமாணம்
        நிஶ்சித்யைவம்து3ரிதநிசயஶ்சீயதேநிர்விஶங்கை: ||       (20)

    ஸ்வஸ்மின் = தான்; ஜீர்ணே = கிழத்தன மடைந்தாலும்; ருக்ணே = வியாதியினால் பீடிக்கப்பட்டாலும்; விகலகரணே = இந்திரியங்களின் பலஹீனத்தை யடைந்தாலும்; ஶத்ருபி4:க்3ருஹீதே வா = அல்லது சத்ருக்களால் கைதி செய்யப்பட்ட போதிலும்; கோர்த: = எந்தப் பணம்; ஸுக2த3: = சுகத்தைத் தருவதாக; ப4வதி = ஆகிறது?; காமப்ரஸங்க3ச்வக: = போக ஸுகத்திற்கு இடமேது?; அத2வா = அல்லது; ஏதத் ஸகலம் = இதெல்லாமே; மா பூ4த் = போகட்டும்;ஸ்வாயுஷ: = தன் ஆயுஸுக்கு; கிம் ப்ரமாணம் = என்னநம்பிக்கை(உத்திரவாதம்)?; ஏவம் = இப்படி; நிஶ்சித்ய = நிச்சயித்து; நிர்விஶங்கை: = சிறிதும் அஞ்சாத நம்மால்; து3ரிதநிசய: = பாபக்குவியல்; ஶ்சீயதே = சேர்க்கப்படுகிறது.
    தற்கால வாழ்க்கையே நிஜமென்றிருப்பவன் “கிழத்தனமோ, வியாதியோ, அவயவங்களின் தளர்ச்சியோ,சத்ருக்களிடம் அடிமைத்தனமோ எதற்குள் வரவில்லையோஅதற்குள் பணத்தினாலும் ஸ்திரீகளினாலும் அடையக்கூடியசுகங்களை அனுபவித்துத் தீர்த்து விடவேண்டும்" என்ற தீர்மானத்துடன் எந்தப் பாபச்செயலுக்கும் துணிந்துவிடுகிறான்.தேகம் நன்றாயிருக்கும்போதே கர்மத்தைச்செய்து அழிவற்றஇன்பத்தைப் பெறவேண்டும் என்று நினைப்பதில்லை.
    आयान्त्यग्रे ननु तनुभवा उत्तमर्णा इवेमे
        शय्यालग्नाः फणभृत इवाभान्ति दारा इदानीम् ।
    कारागेहप्रतिममधुना मन्दिरं दृश्यते मे
        तत्र स्थातुं प्रसजति मनो न क्षणं न क्षणार्धम् ॥ २१ ॥

    ஆயாந்த்யக்3ரேநனுதனுப4வாஉத்தமர்ணாஇவேமே
        ஶய்யாலக்3னா: ப2ணப்4ருதஇவாபா4ந்திதா3ராஇதா3னீம் |
    காராகே3ஹப்ரதிமமது3னாமந்தி3ரம்த்3ருஶ்யதேமே
        தத்ரஸ்தா2தும்ப்ரஸஜதிமனோநக்ஷணம்நக்ஷணார்த4ம் ||(21)

    இமே தனுப4வா: = இதோ இந்தப் புத்திரர்கள்; உத்தமர்ணா இவ நனு = கடன் கொடுத்தவர்களைப் போலல்லவா; அக்3ரே ஆயாந்தி = எதிரில் வருகிறார்கள்; இதா3னீம் = இப்பொழுது; தா3ரா: = மனைவி; ஶ்யயாலக்3ரானா: = படுக்கையில் உறையும்; ப2ணப்4ருத இவ = ஸர்ப்பம்போல்; ஆபா4ந்தி= தோன்றுகிறாள்;அது4னா = இப்பொழுது; மே =  எனது; மந்தி3ரம் = வீடு; காராகே3ஹ ப்ரதிமம்= சிறையைப்போல்; த்3ருஶ்யதே = காணப்படுகிறது; தத்ர = அவ்விடத்தில்; க்ஷணம் =  ஒரு கணமும்; ஸ்தா2தும் =  தாமதிக்க; மன: = மனது; ந ப்ரஸஜதி = விரும்பவில்ல;க்ஷணார்த4ம் ஸ்தா2தும் = அரைக்ஷணங்கூடத்தாமதிக்க (மனம் விரும்பவில்லை).
    புத்திரகளத்திராதிகளைப் போஷிப்பதற்காகப் பாடுபட்டுப் பணத்தைத் தேடிய கிருஹஸ்தனுக்கு வயது மேலிட்டபின்பு, ஸம்பாதிக்கும் சக்தி குறைந்து வீட்டில்
அதிகாரமும் விலகிப் போகுந் தருணம், தன் பிள்ளைகளையெதிரில் கண்டால் கொடுத்த கடனைக் கேட்க வந்தவர்களைப்போல் தோன்றுகிறது; பக்கத்தில் உறையும் பெண்டாட்டியைப் பார்த்தாலோ படமெடுத்தாடும் பாம்பைப் பார்ப்பதுபோல் இருக்கிறது; இனி வீட்டில் என்ன ஸௌக்யம்?இந்தச் சிறையிலிருந்து வெளியில் போய்வெளியில் போய் விடவேண்டும்என்று தீர்மானம் செய்கிறான்.
    जातं जातं गतमपि गतं बाल्यतो लौल्यतो वा
        नेतः स्थेयं क्षणमपि गृहे मुञ्चतः को मुहूर्तः ।
    इत्यत्यन्तव्यवसितधियो निःसरन्तोऽपि गेहा-
        दावर्तन्ते झटिति रुदतां सान्त्वहेतोः शिशूनाम् ।। २२ ॥

    ஜாதம்ஜாதம்க3தமபிக3தம்பா3ல்யதோலெளல்யதோவா
        நேத: ஸ்தே2யம்க்ஷணமபிக்3ருஹேமுஞ்சத: கோமுஹூர்(த்)த: |
    இத்யத்யந்தவ்யவஸிததி4யோநிஸ்ஸரந்தோSபிகே3ஹா
        தா3வர்(த்)ந்தேஜடிதிருத3தாம்ஸாந்த்வஹேதோ: ஶிஶூனாம் || (22)

    பா4ல்யத: = சிறுபிள்ளைக் தனத்தினாலும்; லெளல்யத: = புத்திசபலத்தினாலும்; ஜாதம் ஜாதம் = நடந்தது நடந்துவிட்டது;க3தமபி க3தம் = போனது போய்விட்டது;இத: = இனிமேல்; க்ஷணமபி = ஒரு நிமிஷங்கூட; க்3ருஹே = வீட்டில்; ந ஸ்தே2யம் = தங்கக்கூடாது; முஞ்சத: = விட்டுப் போகிறவனுக்கு; கோ முஹுர்(த்)த: = நல்லவேளைஎதற்காகப் பார்க்கவேண்டும்?; இதி = என்று; அத்யத்ந்தவ்யவஸிததி4ய: = திடமான தீர்மானத்தோடு கூடிய மனத்தினர்களாய்; கே3ஹாத்= வீட்டிலிருந்து; நிஸ்ஸரந்தோSபி = வெளிக் கிளம்புகிறவர்கள்கூட; ருத3தாம் =அழுகின்ற; ஶிஶூனாம் = குழந்தைகளை; ஸாந்த்வஹேதோ: = சமாதானம் செய்யும் பொருட்டு; ஜடிதி = உடனே; ஆவர்தந்தே= திரும்பிவிடுகிறார்கள்.
    இவ்வித வெறுப்பைக் கொண்டவன் யோசிக்கிறான்: - ''போனதெல்லாம் போகட்டும்; சிறு பிராயத்தில் அறியாமையாலும் யௌவன தரையில் புத்தி சபலத்தாலும் எவ்வளவோ தவறுதல்கள் நடந்துவிட்டன. நடந்தது நடந்து
விட்டது. இனி ஒரு நிமிஷமும் வீட்டில் தங்கக்கூடாது.துறப்பவன் நல்ல முஹுர்த்தம் பார்க்கவேண்டியதில்லை.எந்த நிமிஷம் வைராக்யம் ஏற்படுகிறதோ, அந்த நிமிஷமேபுறப்பட வேண்டும்" என்று திடமான தீர்மானம் செய்து
கொண்டு புறப்படுகிறான். அந்த ஸமயம் வீட்டில் குழந்தைகளின் அழுகைக் குரல் காதிலே பட்டதும் அவர்களை ஸமாதானம் செய்யும் பொருட்டு விரைவாகத் திரும்பி வந்துவிடுகிறான். (இவ்வளவு தான் நம் வைராக்கியத்தின் உறுதி.)
    नैव मो वयमतिथयोऽभ्यागता बन्धुवर्गा
        दीनानाथाः सुहृद इति ये तेषु कार्या दयेति
    यं त्वं पोष्यं मनसि कुरुषे नित्यमात्मानमेकं
        जन्मन्यस्मिन्निव विभृहि तं सर्वदेत्युल्लपामः ॥ २३ ॥
    நைவப்3ரூமோவயமதித2யோப்4யாக3தாப3ந்து4வர்கா3
        தீ3னானாதா: ஸுஹ்ருத3இதியேதேஷுகார்யாதயேதி |
    யம்த்வம்போஷ்யம்மநஸிகுருஷேநித்யமாத்மானமேகம்
        ஜன்மன்யஸ்மின்னிவபி3ப்4ருஹிதம்ஸர்வதே3த்யுல்லபாம: || (23)

    அதித2ய: = அதிதிகள்; அப்4யாக3தா: = நாடிவந்தவர்கள்; ப3ந்து4வர்கா3: = பந்துஜனங்கள்; தீ3னானாதா: = ஏழைகள் திக்கற்றவர்கள்; ஸுஹ்ருத3: = நண்பர்கள்; இதியே = என்று எவர்கள் உண்டோ; தேஷு = அவர்களிடத்தில்; த3யா கார்யா இதி = அனுதாபம் காட்டவேண்டுமென்று; நைவ ப்3ரூம: = நாம் கூறவேயில்லை;யமேகம் நித்யம் போஷ்யம் = யாதொருவனைஎப்போதும் போஷிக்கவேண்டியதென்று; மநஸி த்வம் குருஷே = மனதில் நீ தீர்மானித்திருக்கிறாயோ; தமாத்மானம் = அத்தகைய
தன்னை; அஸ்மின் ஜன்மனி இவ = இந்த ஜன்மத்தில் போல; ஸர்வதா3= எந்த ஜன்மத்திலும்; பி3ப்4ருஹி = நீ போஷிப்பாயாக; இதி உல்லபாம: = என்று (தான்) சொல்லுகிறோம்.
    நீ அதிதி பந்து மித்திரர்கள் ஏழை யெளியவர்கள்இவர்களை உபசரித்துத் தான் ஆகவேண்டுமென்று ஒருவரும் சொல்லவில்லை. உன்னை நீ போஷித்துக் கொள்ள
வேண்டுமென்று நன்றாய்த் தெரிந்து கொண்டிருக்கிறாய்அல்லவா? அந்த உன்னையே நீ இந்த ஜன்மத்தில் மட்டுமன்று,வரப்போகிற ஜன்மங்களிலும் போஷித்துக் கொள் என்றுதான் கதறுகிறார்கள் தர்ம சாஸ்திர கர்த்தாக்கள்.
    को नु व्यासः क इव स मनुः कोन्वसौ याज्ञवल्क्यो
        यैरुद्धष्टं हितमसकृदस्मासु पित्रेव पुत्रे ।
    पश्यामस्तानिरुपधिकृपासागराल्लोकबन्धून्
        पश्यामोऽस्मानिरवधितमःक्ष्माधारान्ब्रह्मबन्धून् ॥२४॥

    

    கோனுவ்யாஸ: கஇவஸமனு: கோன்வஸெளயாஜ்ஞவல்க்யோ
        யைருத்3து4ஷ்டம்ஹிதமஸக்ருத3ஸ்மாஸுபித்ரவேபுத்ரே |
    பஶ்யாமஸ்தான்நிருபதி4க்ருபாஸாக3ரான்லோகப3ந்தூ4ன்
        பஶ்யாSமோஸ்மான்நிரவதி4தம: க்ஷ்மாத4ரான்ப்3ரஹ்மப3ந்தூ4ன் ||
                                        (24)
    யை: = (எந்த மஹான்களால்) எவர்களால்; அனக்ருத் = பன்முறை; அஸ்மாஸு = நம் விஷயத்தில்; பித்ரா புத்ரே இவ = ஒரு பிதாவினால் புத்ரன் விஷயத்திலே போல; ஹிதம் = நன்மையானது; உத்4ருஷ்டம் = உரத்த குரலில் போதிக்கப்பட்டதோ; ஸ: வ்யாஸ: கோனு = அந்த வியாஸர் என்பவர் யார்?; ஸ: மனு: க: இவ = அந்த மனுதான் யாரோ?; அஸெள யாஜ்ஞவல்க்ய: கோனு = இந்த யாக்ஞவல்கியர்யார்?; தான் = அவர்களை; நிருபதி4க்ருபாஸாக3ரான் = களங்க மற்றகருணைக் கடல்களாகவும்; லோகப3ந்தூ4ன் = உலகின் உறவினர்களாகவும்; பஶ்யாம: = அறிகிறோம்; அஸ்மான் = நம்மையோவென்றால்; நிரவதி4தம: க்ஷ்மாத4ரான் = எல்லையற்ற இருள் மலைகளாகவும்; ப்3ரஹ்ம ப3ந்தூ4ன் = பிராம்மண ஜன்மத்தில் இழிந்தவர்களாகவும்; பஶ்யாம: =அறிகிறோம்.
    வியாஸர், மனு, யாஜ்ஞவல்க்யர் என்ற பெரியோர்கள்யார், நாம் யார்? அவர்கள் ஞானிகள் ஆதலால், கருணைததும்பும் அந்தரங்கத்துடன், பிதா புத்திரனுக்கு உபதேசிப்பதுபோல் நமக்கு எது இகத்திலும் பரத்திலும்ஹிதமோ அதைப் பல வழிகளில் விளக்கி யிருக்கிறார்கள்.ஆனால் நாம் என்ன கூறியும் என்றும் நிகரற்ற அவிவேகிகளாகவும், ஆசாரம் இழந்தவர்களாகவும் இருந்து கொண்டிருப்பது தான் பரிதாபம்.
    यत्तामिस्र नरककुहरे यद्धहिश्चक्रवाला-
        द्यत्पाताले यदपि धरणौ वार्षिकीषु क्षपासु ।
    रूढं गाढं तम इति समस्तं च तचिन्त्यमानं
        नास्माकान्तःकरणतमसो दासभावेऽपि योग्यम् ॥२५॥

    யத்தாமிஸ்ரேநரககுஹரேயத்3வஹிஶ்சக்ரவாளா –
        த்3யத்பாதாலேயத3பித4ரணெளவார்ஷிகீஷுக்ஷபாஸு |
    ரூட4ம்கா3ட4ம்தமஇதிஸமஸ்தமசதச்சிந்த்யமானம்
        நாஸ்மாகாந்த: கரணதமஸோதா3ஸபா4வேபியோக்3யம் || (25)

    யத் = எது; தாமிஸ்ரே = தாமிஸ்ரம் என்ற; நரககுஹரே = நரகக்குழியிலும்; யத் = எது; சக்ரவாளாத் வஹி: = சக்ரவாள மலைத்தொடருக்குஅப்பாலும்; யத் பாதாலே = எது பாதாளத்திலும்; வார்ஷிகீஷு க்ஷபாஸு = மழைக்கால இரவுகளில்; யத் த4ரணை=  எது பூமியிலும்; கா3ட4ம் தம:இதி = காரிருள் என்று; ரூட4ம் = பிரஶித்தமோ; சிந்த்யமானே = யோசித்துப் பார்த்தால்; ஸமஸ்தம ச தத் = அது அவ்வளவும்; ஆஸ்மாகாந்த: கரணதமஸ: = நம் சித்தத்திலிருக்கும் இருளுக்கு; தா3ஸபா4வேSபி = அடிமைத்தனம் அடைவதற்குக் கூட; ந யோக்3யம் = யோக்யதையுள்ளதன்று.
    நம் ஹ்ருதயத்தில் குடிகொண்டிருக்கும் காரிருளுக்குஉவமையே சொல்லமுடியாது; இருள் மயமான நரகக் குழியில் கிடப்பதும், லோகாலோக பர்வதத்திற்குப் புறம்பேசூழ்ந்து நிற்பதும், பாதாள லோகத்திலுள்ளதும், கார்காலத்து நள்ளிரவுகளில் திரண்டு வருவதுமான இருள்கள்நம் அஞ்ஞான அந்தகாரத்திற்குக் கூலிவேலை செய்யக்கூடஅர்ஹதை யில்லாதவை.
    (குறிப்பு) லோகா லோக பர்வதம்-சக்ரவாள பர்வதமென்பதுஇப் பூமண்டலத்தைச் சுற்றி நிற்கும் சுவர் போன்றது. அதற்குவெளியில் சூரிய கிரணங்கள் எட்டுவதில்லை.
    सर्वानर्थप्रथमकरणे सर्वभावैर्जिहास्ये
        देहे मोहो यदि परिणतः पोषणीयो मयेति ।
    आस्तामेवं वपुरिदमिवागामि चासाकमेवे-
        त्येषाऽप्यास्तां मतिरिति परं धर्मशास्त्रेषु घोपः॥२६॥

    ஸர்வானர்த2ப்ரத2மகரணேஸர்வபா4வைர்ஜிஹாஸ்யே
        தே3ஹேமோஹோயதி3பரிணத3: போஷணீயோமயேதி |
    ஆஸ்தாமேவம்வபுரித3மிவாகா3மிசாஸ்மாகமேவே
        த்யேஷாப்யாஸ்தாம்மதிரிதிபரம்த4ர்மஶாஸ்த்ரேஷுகோ4ஷ: ||
                                    (26)
    ஸர்வானர்த2ப்ரத2மகரணே = எல்லாவித அனர்த்தங்களுக்கும் முதல்ஸாதனமானதும்; ஸர்வபா4வைர்: ஜிஹாஸ்யே = எப்படி யோஜித்துப்
பார்த்தாலும் தள்ளத் தகுந்ததுமான; தே3ஹே = சரீரத்தில்; மயாபோஷணீய: = (இது)என்னால் போஷிக்கப்பட வேண்டியது; இதி மோஹா: = என்ற அறிவீனம்; யதி3 பரிணத3: = முற்றியிருந்தால்; ஏவம் = இம்மாதிரி; ஆஸ்தாம் = இருக்கட்டும்; இதம் வபுரிவ = இந்த சரீரம்போலவே; ஆகா3மி ச = வரப்போகிற சரீரமும்; ஆஸ்மாகமேவ = நம்முடையது தான்; இதி = என்ற; ஏஷாSபிமதி: = இந்த எண்ணமும்; ஆஸ்தாம் = (நமக்கு) இருக்கட்டும்; இதி பரம் = என்பது தான்; த4ர்மஶாஸ்த்ரேஷு = தரும சாஸ்திரங்களில்; கோ4ஷ: = பறையறிவிக்கப்படுகிறது.
    வெறுக்கத் தக்கதான இந்த சரிரம் அவசியம் போஷிக்கத் தகுந்ததென்ற அறியாமை உனக்கு இருக்குமானால்,இந்த சரீரம் நம்முடையது ஆனதுபோல, வரப்போகிறசரீரங்களும் நம்முடையது தான்; அவைகளையும் போஷிப்பது அவசியம். அவைகள் நலம்பெற நாம் இப்போதேதர்மங்களைச் செய்யவேண்டும் என்ற ஞாபகம் இருக்கட்டும்" என்று தான் தரும சாஸ்திரங்கள் முறையிடுகின்றன.
    

    कामी कामव्रणपरिगतः कामिनीरेव हित्वा
        भुङ्क्ते पश्चादपगतभयं कामिनीनां सहस्रम् ।
    इत्थंकारं विषयसुखभोगैकतानैनरैर-
        प्यस्सिन्देहे कतिपयदिनान्येष भोगो विवर्यः॥२७॥
    காமீகாமவ்ரணபரிக3த: காமினீரேவஹித்வா
        பூ4ங்க்தேபஶ்சாத3பக3தப4யம்காமினீனாம்ஸஹஸ்ரம் |
    இத்த2ம்காரம்விஷயஸுக2போ4கைகதானைர்நரைர –
        ப்யஸ்மின்தே3ஹேகதிபயதினான்யேஷபோ4கோ3விவர்ஜ்ய: || (27)

    காமவ்ரணபரிக3த: = ஸ்திரீமூலமான ரோகங்களால் பீடிக்கப்பட்ட; காமி = துன்மார்க்கன்; காமினீ: ஏவ = ஸ்திரீகளையே; ஹித்வா =(சிலகாலம்) விட்டுவிட்டு; பஶ்சதம் = பின்பு; காமினீனாம் ஸஹஸ்ரம் = வேண்டிய மட்டும் ஸ்திரீகளை; அபக3தப4யம்= பயம் நீங்கியவனாக; பூ4ங்க்தே= அனுபவிக்கிறான்; இத்த2ம்காரம் = இவ்விதம்; போ4கைகதானைரபி நரை: = சிற்றின்பமே முக்கியமென்றுகொண்ட
மனிதர்களாலே கூட; அஸ்மினம் தே3ஹே = இந்த சரீரத்தில்; கதிபயதினானி =  சில நாட்கள் வரையில்; யேஷ போ4கா3: = இந்த இன்பத்தை யனுபவிப்பது; விவர்ஜ்ய: = ஒதுக்கத் தக்கதாகிறது.
    காமரோகத்தால் வருந்துகிற ஒரு காமி சிகித்ஸையின்பொருட்டு சிலகாலம் ஸ்த்ரீகளை விலக்கியிருந்து பிறகு பயமின்றி அநேகம் ஸ்த்ரீகளை அனுபவிப்பதுபோல, இவ்வுலகில் சரீர ஸுகத்தைச் சிறிது காலம் விட்டு சாஸ்திரங்களிற்கூறிய நற்காரியங்களைச் செய்துவந்தால் பின்பு ஸ்வர்க்கம்
முதலிய வேறு உலகத்தில் பயமின்றி அநேக ஸுகங்களையடையலாம் என்பது கருத்து.
    न्याय्यादर्थादपि किमधिकं लभ्यमुन्मार्गवृत्त्या
        वैधादनादपि किमधिकं पर्युदस्तेषु भोज्यम् ।
    भार्याभोगादपि भवति कः पण्यकान्तासु भोगः
        प्रायो नेति श्रुतिविषयता विश्वमाधुर्यहेतुः ॥ २८ ॥

    ந்யாய்யாத3ர்தா2த3பிகிமதி4கம்லப்4யமுன்மார்க3வ்ருத்யா
        வைதா4த3ன்னாத3பிகிமதி4கம்பர்யுத3ஸ்தேஷுபோ4ஜ்யம் |
    பா4ர்யாபோ4கா3த3பிப4வதிக: பண்யகாந்தாஸுபோ4க3:
        ப்ராயோநேதிஶ்ருதிவிஷயதாவிஶ்வமாது4ர்யஹேது4: ||    (28)
    
    ந்யாய்யா த3ர்தாத3பி = நியாயமான வழியில் சம்பாதிக்கப்படும்பணத்தைக் காட்டிலும்; உன்மார்க3வ்ருத்யா = அக்ரம வழியில்; அதி4கம் = அதிகம்; கிம்லப்4யம்=  அடையக்கூடியதா என்ன?; வைதா4த3ன்னாத3பி = பரிசுத்தமான அன்னத்தைக் காட்டிலும்; பர்யுத3ஸ்தேஷு = தள்ளுபடியான அன்னங்களில்; அதி3கம் = அதிகம்; கிம் போ4ஜ்யம் = சாப்பிடக்கூடியதா என்ன?; பா4ர்யாபோகா3த3பி = தன் பத்தினியை
யனுபவிப்பதைக் காட்டிலும்; பண்யகாந்தாஸு = விலைமாதர்களிடம்; க: போ4க3: = எவ்விதமான (மேலான) ஸுகம்; ப4வதி = ஏற்படுகிறது?; நேதி = வேண்டாமென்று; ஶ்ருதிவிஷயதா = வேதங்களில்கூறப்பட்டிருப்பதே; ப்ரய: = அநேகமாய்; விஶ்வமாது4ர்ய ஹேது4: = ஜனங்களுக்கு ருசியை யுண்டுபண்ணக்கூடியதா யிருக்கிறது.
    (ஆழ்ந்து யோசிக்குங்கால்) ருஜுவான வழியில் ஸமபாதிப்பதைவிட அதிகம் அநியாய வழியில் சம்பாதிக்க முடியாது. விதிப்படி தயார்செய்து புசிக்கப்படும் அன்னத்தைக்காட்டிலும் கண்ட இடங்களில் கண்டவர்கள் தயார்செய்த அசுத்தமான பக்ஷயபோஜ்யங்களை அதிகமாகப்புசித்துவிட முடியுமா? தன் பாரியையின் ஸம்போகத்தைவிட வேசியர் ஸங்கமம் எவ்விதத்தில் சிலாக்கியமானது?
ஜனங்களுக்குக் குற்றமுள்ள விஷயங்களில் ருசியேற்படுவதற்கு வேதங்கள் அவைகளை நிஷேதிப்பதே காரணம் என்று நினைக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் வேண்டாமென்று தடுத்தால் அதில் ஜனங்களுக்குச் சபலம் உண்டாவது ஸஹஜம்.
    आस्तिक्यं चेद्धनमखिलमप्यर्थिसात्कर्तुमर्ह
        नास्तिक्यं चेत्तदपि सुतरां भोगहेतोरपास्यम् ।
    अस्पृष्वाऽपि स्वयमतिरहः स्थाप्यते यत्तदन्त-
        स्तस्मिन् हेतुः क इति निभृतं तर्कयामो न विद्यः ।।२९॥

    ஆஸ்திக்யம்சேத்3த4னமகி2லமப்யர்தி2ஸாத்கர்(த்)துமர்ஹம்
        நாஸ்திக்யம்சேத்தத3பிஸுதராம்போ4கஹேதோரபாஸ்யம் |
    அஸ்ப்ருஷ்ட்வாபிஸ்வயமதிரஹ: ஸ்தா2ப்3யதேயத்தத3ந்தஸ்
        தஸ்மின்ஹேது: கஇதிநிப்4ருதம்தர்(க்)கயாமோநவிஹ்ம: || (29)

    ஆஸ்திக்யம் சேத் = நம்பிக்கையிருந்தால்; அகிலமபி த4னம் = எல்லா திரவியமும்; அதி2ஸாத்கர்தும் அர்ஹம் = வேண்டுபவர்களுக்குஅர்ப்பணம் செய்துவிடத் தக்கது; நாஸ்திக்யம் சேத்த3பி = நம்பிக்கையில்லாவிடிலோ; தத் =  அந்த திரவியம்; ஸுதராம் = மிகவும்; போ4கஹேதோ: = (தான்) அனுபவிப்பதின் பொருட்டு; அபாஸ்யம் = செலவிடத்தகுந்தது; க2யம் அபி = தானும்; அஸ்ப்ருஷ்டா = தொடாமல்; தத் =  அது; அத்த: = உள்ளே; அதிரஹ: = வெகு மறைவாக; யத்ஸ்தா2ப்3யதே = வைக்கப்படுகிறதே; தஸ்மின் = அதற்கு; ஹேது: க: இதி = என்ன காரணம் என்று; நிப்4ருதம் சிந்தயாம: = தனித்து யோசனை செய்து பார்க்கிறோம்;ந விஹ்ம: = (ஆனால்) (நாம் அதை) அறியவில்லை.
    ச்ருதி ஸ்ம்ருதி புராணங்களில் சொல்லப்பட்ட தருமங்களை நம்பினால் பரலோகத்தில் க்ஷேமமடைவதன் பொருட்டுஸம்பாதித்த திரவியத்தை ஸத்பாத்திரத்தில் தானம் செய்து விடவேண்டும். அப்படி நம்பிக்கையில்லாவிடில், தான் அனுபவிக்கும் பொருட்டு அந்த திரவியத்தைச் செலவு செய்துவிடவேண்டும். சில லோபிகள் இரண்டுமில்லாமல் அதைமறைத்து வைப்பதன் காரணம்புலப்படவில்லை.
    श्वानः पुच्छाश्चलकुटिलतां सूकराः कुक्षिपोषं
        कीशा दन्तप्रकटनविधि गर्दभा रूक्षघोषम् ।
    मा वक्षःश्वयथुमपि च स्त्रीषु दृष्टा रमन्ते
        तत्सौन्दर्य किमिति फलितं तत्तदज्ञानतोऽन्यत् ॥ ३०॥

    ஶ்வான: புச்சா2ஞ்சலகுடிலதாம்ஸூகரா: குக்ஷிபோஷம்
        கீஶாத3ந்தப்ரகடனவிதி4ம்க3ர்த3பா4ரூக்ஷகோ4ஷம் |
    மர்த்யாவக்ஷ:ஶ்வயது2மபிசஸ்த்ரீஷுத்3ருஷ்ட்வாரமந்தே
        தத்ஸெளந்த3ர்யம்கிமிதிப2லிதம்தத்தத3ஜ்ஞானதோன்யத் || (30)

    ஶ்வான் = நாய்கள்; புச்சா2ஞ்சல குடிலதாம் = வால் நுனியின்கோணலையும்; ஸூகரா: = பன்றிகள்; குக்ஷிபோஷம் = வயிற்றின் உப்புதலையும்; கிஶா: = குரங்குகள்; த3ந்தப்ரகடனவிதி4ம் = பல் இளிப்பதையும்; க3ர்தா3பா4: = கழுதைகள்; ருக்ஷகோ4ஷம் = வரட்டுச் சத்தத்தையும்; மர்த்யா: = மனிதர்கள்; வக்ஷ:ஶ்வயது2மபி = மார்வீக்கத்தையும்; ஸ்த்ரீஷு = ஸ்திரீஜாதியினிடத்தில்; த்3ருஷ்டா = பார்த்து; ரமந்தே = காமவெறியடைகின்றனர்; தத்தத3ஜ்ஞானதோன்யதம்= அந்தந்தப்பிராணிகளின் அறிவீனத்தைத் தவிர; தத்ஸெளந்த3ர்யம் = அந்தந்த ஸ்திரீ ஜாதியின்அழகு; கிமிதி = எவ்விதத்தில்; ப2லிதம் = ஏற்பட்டது.
    பிராணிகள் தன் தன் இனத்திற்குத் தக்கபடி சிற்சிலஅம்சங்களை ஸ்திரீ ஜாதியினிடத்தில் கண்டு காமத்தை யடைகின்றன. விசாரிக்குங்கால், அந்தந்த அம்சங்களால் அந்தந்தஸ்திரீ ஜாதியின் அழகு புமானை மோஹிக்கும்படி செய்யத்
தக்கதாக எற்பட்டுவிட்டதாய் சொல்லஇடமில்லை. ஆனாலும், இந்த மோஹம் ஏற்படுவது வாஸ்தவம். இஃதுஅந்தந்தப் பிராணிகளின் அறிவினத்தைத் தவிர வேறு
யாதொன்றுமில்லை என்று விவேகிகள் அறிவார்கள்.
    रन्तुं प्राप्तो दशति दशनैराननं चेत्प्रियाया
        भोक्तुं प्राप्तः किमिति न दशेदग्रहस्तं प्रदातुः ।
    इत्थं व्यक्त हृदयजनुपः पामरोन्मादकत्वे
        हातुं सद्यः प्रभवति न कोऽप्यन्ततो लजितुं वा ॥३१॥

    ரந்தும்ப்ராப்தோத3ஶதித3ஶனைரானனம்சேத்ப்ரியாயா
        போ4க்தும்ப்ராப்த: கிமிதிநதஶேத3க்3ரஹஸ்தம்ப்ரதா3து: |
    இஸ்த2ம்வ்யக்தேஹ்ருதயஜனுஷ: பாமரோன்மாத3கத்வே
        ஹாதும்ஸத்4ய: ப்ரப4வதிநகோSப்யந்ததோலஜ்ஜிதும்வா || (31)
    ரந்தும் ப்ராப்த: = கிரீடிக்க வந்தவன்; ப்ரியாயா: = காதலியின்; ஆனனம் = முகத்தை; த3ஶனை: = பற்களால்; தஶதி சேத் = கடிப்பதென்றிருந்தால்; போ4க்தும் ப்ராப்த: = சாப்பிடவந்தவன்; ப்ரதா3து: அக்3ரஹஸ்தம் = பரிமாறுபவனுடைய கைவிரலை; கிமிதி ந தஶேத் = ஏன் கடிக்கக் கூடாது?; இஸ்த2ம் = இவ்விதம் (பார்க்குங்கால்); ஹ்ருதய ஜஞ்ஷ: பாமரோன்மாத3 கத்வே = மன்மதன் அறிவில்லாதவர்களை மயக்குகிறவன் (என்பது); வ்யக்தே = நன்கு விளங்கினாலும்; கோபி = ஒருவனும்; ஸத்4ய: = உடனே; ஹாதும் = விட்டுவிட; ந ப்ரப4வதி =  சக்தியுள்ளவனாவதில்லை; அந்தத: = கடைசி பக்ஷத்தில்; லஜ்ஜிதும் வா (ந ப்ரப4வதி) =  வெட்கப்படக்கூடியவனாகவுமில்லை.
    ஸ்திரீ ஸம்போகத்திற்கும் உதட்டைக் கடிப்பதற்கும்என்ன ஸம்பந்தம்? அப்படியானால் சாப்பிட வந்தவன்அன்னம் வழங்குபவரின் கையைக் கடிக்கலாமே. யோசித்துப்பார்த்தால் மன்மதக் குழப்பம் மதியீனமே. ஆனால்,அதைத் தவிர்க்க யாரால் ஸாத்தியமாகின்றது? யார்தாம்அதனால் லஜ்ஜையை மட்டுமாவது அடைகிறார்கள்?
    दाराः पुत्राः शयनमशनं भूषणाच्छादने वा
        यच्चेदृक्षं पुमभिलषितं तेषु माशब्दिकः कः।
    किं त्वेतेषां भवति नियमः सेवने कोऽपि कोऽपि
        द्वेपस्तस्मिन्नपि यदि भवेत्तत्र वक्ता कृतान्तः॥३२॥

    தா3ரா: புத்ரா: ஶயனமஶனம்பூ4ஷணாச்சாத3னே வா
        யச்சேத்3ருக்ஷம்புமபி4லஷிதம்தேஷுமாஶப்3தி3க: க: |
    கிம்த்வேதேஷாமப4வதிநியம: ஸேவனேகோSபிகோSபி
        த்4வேஷஸ்தஸ்மின்னபியதி3ப4வேத்வக்த்தாக்ருதாந்த: ||(32)

    தா3ரா: = மனைவி; புதர: = பிள்ளை; ஶயனம் = படுக்கை; அஶனம் = சாப்பாடு; பூ4ஷணாச்சாத3னே வா = ஆபரணம் ஆடை; ஈட்ருக்ஷம் = இதுபோன்ற; புமபி4லஷிதம் யச்ச = மானிடர்கள் வேண்டுவது எது எதுவோ; தேஷு = அவைகளில்; க: மாஶப்3தி3க: = வேண்டாமென்று யார் தடுத்தார்கள்?; கிம்து = ஆனால்; ஏதேஷாம் ஸேவனே = இவைகளை அனுபவிப்பதில்; கோSபி கோSபி = ஒவ்வொரு; நியம: = அளவு; ப4வதி = ஏற்பட்டிருக்கிறது; தஸ்மின் அபி = அதில்கூட; யதி3 த்4வேஷ: ப4வேத் = வெறுப்பு உண்டானால்; தத்ர = அவ்விஷயத்தில்; க்ருதாந்த: = யமன்; வக்த்தா = பதில் சொல்வான்.
    மனிதன் இச்சைப்படும் எந்த ஸௌக்கியத்தையும் சாஸ்திரங்கள் நிஷேதிக்கவில்லை. ஆனால் அவைகளை யடைவதிலும் அனுபவிப்பதிலும் சில விதிகளை, நம் க்ஷேமத்தையுத்தேசித்தே, அவைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.அவ்விதிகளைஇடையூறுகளாய்எண்ணி உல்லங்கனம் செய்வாயானால், உனக்கு யமன்முன்னிலையில் தண்டனை ஏற்படுமென்பது திண்ணம்.
    वेदाभ्यासव्यसनरसिकैः स्थीयते तावता किं
        सूक्ष्मा बुद्धिः श्रुतमिव विशत्यश्रत तावता किम् ।
    जल्पारम्भे जयति नियतं वादिनस्तावता किं
        निर्वेदात न यदि हृदयं शान्तिमभ्येति पुंसः ॥ ३३ ॥

    வேதா3ப்4யாஸவ்யஸனரஸிகை: ஸ்தீ2யதேதாவதாகிம்
        ஸூக்ஷ்மாபு3த்4தி3: ஶ்ருதமிவவிஶத்யஶ்ருதம்தாவதாகிம் |
    ஜல்பாரம்பே4ஜயதிநியதம்வாதி3னஸ்தாவதாகிம்
        நிர்வேதா3ர்தம்நயதி3ஹ்ருத3யம்ஶாந்திமப்4யேதிபும்ஸ: ||     (33)

    வேதா3ப்4யாஸவ்யஸன ரஸிகை: ஸ்தீ2யதே = வேதங்களைப் படிப்பதில்ஊக்கமுள்ளவர்களாக இருந்து; தாவதா கிம் = என்ன பிரயோஜனம்?; ஸூக்ஷ்மா பு3த்4தி3: = கூர்மையான புத்தி; ஶ்ருதமிவ = கேட்டதைப்போல; அஷுதம் விஶதி = கேட்காததையும் அறிகிறதென்றாலும்; தாவதா கிம் = என்ன கிடைத்துவிட்டது; ஜல்பாரம்பே4 = பேசஆரம்பிக்கும்போதே; நியதம் = நிச்சயமாய்; வாதி3ன: = எதிர்வாதம் செய்கிறவர்களை; ஜயதி = ஜயித்துவிடுகிறான் என்றாலும்; தாவதா கிம் = என்ன ஸாதித்துவிட்டான்?; நிர்வேதா3ர்தம் பும்ஸ: ஹ்ருத3யம் = வைராக்கியத்தினால் மனுஷ்யனுடைய மனம் ஒழிவடைந்து; ஶாந்திம் = அமைதியான நிலையை; ந அப்4யேதி யதி3 = அடையவில்லையென்றால் (மற்றவைகளினால் என்ன பலன்?)
    வேதம் ஓதியும் சாஸ்திர வல்லமை இருந்தும் பேச்சுத்திறமை இருந்தும் முடிவில் ஒன்றும் பயனில்லை. மனுஷ்யனுக்கு முக்கியமானது வைராக்கியத்தினால்மனம்அடங்கவேண்டியது.இதன்றி மற்ற புகழெல்லாம்வீணே.
    यस्त्वत्यन्तव्यवसितमतिः संजिघृक्षेत धर्म
        खटाङ्गादेवि न किमलं तस्य यामार्धमायुः ।
    दुष्पाण्डित्यादपहृतमतिर्यः पुनः संशयात्मा
        कस्मै तस्य प्रभवतु वृथा काकवदीर्घमायुः॥३४॥

    யஸ்த்வத்யந்தவ்யவஸிதமதி: ஸம்ஜித்4ருக்ஷேதத4ர்மம்
        கட்வாங்கா3தே3ரிவநகிமலம்தஸ்யயாமார்த4மாயு: |
    து3ஷ்பாண்டி4த்யாத3பஹ்ருதமதிர்ய: புன: ஸம்ஶயாத்மா
        கஸ்மைதஸ்யப்ரப4வதுவ்3ருதா2காகவத்3தீ3ர்க4மாயு: ||        (34)

    ய: து = எவனொருவன்; அத்யந்தவ்ய வஸிதமதி: = திடமானபுத்தி தீர்மானத்துடன்; த4ர்மம்= தருமத்தை; ஸம்ஜித்4ருக்ஷேத = ஸம்பாதிக்க ஆவலுடையவனோ; தஸ்ய = அவனுக்கு; கட்வாங்கா3தே3ரிவ = கட்வாங்கர் முதலியவர்களுக்குப்போல; யாமார்த4 = பாதியாமம்; ஆயு: = ஆயுள்; கிம் ந அலம் = போகாதா?; ய: புன: = எவனொருவன்; து3ஷ்பாண்டி4த்யாத் = வித்தை கற்றவன் என்ற அகம்பாவத்துடன்; அபஹ்ருதமதி: = புத்தி கெட்டு; ஸம்ஶயாத்மா = பலவிதங்களில் தடுமாறுகிறானோ; தஸ்ய = அவனுக்கு; காகவத் = காக்கைக்கு இருப்பதுபோல; வ்3ருதா2 = வியர்த்தமான; தீ3ர்க4ம் ஆயு: = நீண்ட ஆயுள் (இருந்தும்); கஸ்மை ப்ரப4வது = எதற்கு ஆகப்போகிறது?
    சாஸ்திரம் படித்து கோணக்கக்ஷிகளில் புத்தியைத் தீட்டிஊர்ஜிதமான தருமப் பிரவிருத்தியில்லாமல் ஸந்தேஹங்கள்பல வளர்த்துவரும் பண்டிதர்களுக்கு காக்கைக்கு இருப்பதுபோல் எண்ணிறந்த வாழ்நாள்கள் இருப்பினும் ஒன்றுக்கும் உதவாது. நிச்சய புத்தியுடையவன் கட்வாங்கரைப்போல ஸ்வல்ப காலத்திலேயே சிரேயஸ்ஸை அடையக்கூடும்.
    குறிப்பு:-கட்வாங்கர் என்ற ராஜர்ஷி தேவர்களிடமிருந்து தம்ஆயுள் ஒருமுஹூர்த்த காலம் தான் பாக்கியிருக்கிறதென்று தெரிந்துகொண்டு, அதற்குள்ளேயே வைராக்யத்தை வஹித்து, ஹரியைச்சரணமாக அடைந்து முக்தியைப் பெற்றார் (பாகவதம் 2 ஸ்கந்தம்முதல் அத்தியாயம்).
    अर्था न म्युर्यदि विजहिमो धर्ममर्थैकसाध्यं
        कायक्लेशैः कतिकतिविधः साधनीयो न धर्मः ।
    कायः श्रान्तो यदि भवति कस्तावता धर्मलोप-
        श्चित्तं दत्त्वा सकृदपि शिवे चिन्तितं साधयामः॥३५॥

    அர்தா2நஸ்யுர்யதி3விஜஹிமோத4ர்மமர்தை2ர்கஸாத்4யம்
        காயக்லேஶை: கதிகதிவித4: ஸாத3னீயோநத4ர்ம: |
    காய:  ஶ்ராந்தோயதி3ப4வதிகஸ்தாவதாத4ர்மலோப
        சித்தம்த3த்வாஸக்ருத3பிஶிவேசிந்திதம்ஸாத4யாம: ||      (35)

    அர்தா2: யதி3 நஸ்யு: = பணம் இல்லையென்றால்; அர்த்தைகஸாத்4யம் =  பணத்தினாலேயே ஆகக்கூடிய; த4ர்மம் = தருமத்தை; விஜஹிம: = விட்டுவிடுவோம்; கதிகதிவித4: =  எத்தனை விதமான; த4ர்ம: = தருமம்; காயக்லேஶை:ந ஸாத்4:= சரீரப் பிரயாசையினால் ஆகக்கூடியதாக இல்லை?; யதி காய: ஶ்ராந்த: ப4வதி = சரீரம் களைப்படைந்துவிடுமேயானால்; தாவதா = அதனால் மட்டும்; க: த4ர்மலோப: = தர்மம்அற்றுப் போய்விடுமா?; ஸக்ருத3பி = ஒருதடவையாவது; ஶிவே = ஈச்வரனிடத்தில்; சித்தம் = மனதை; த3த்வா = அர்ப்பணம் செய்துவிட்டு; சிந்திதம் = அபீஷ்டத்தை; ஸாத4யாம: = அடையலாம்.
    தரும காரியங்களைச் செய்யப் பணம் அவசியமில்லை.தருமம் பணத்தினால் மட்டுமன்று, சரீரப் பிரயாஸையினாலும்ஸம்பாதிக்கத் தக்கது. சரீரத்தைச் சிரமப்படுத்த முடியாதென்றால், மனதை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்துவிடலாமல்லவா? ஒரு கணமாவது பரமேச்வரனைச் சரணமடைந்தால், அவர் நம் ஸர்வ அபீஷ்டங்களையும் பூர்த்தி செய்வார்.
    குறிப்பு:- உலகத்தில் சாக்குப் போக்குகள் சொல்லிக்கொண்டுசுயேச்சையாய் ஜனங்கள் இருக்க விரும்புகிறார்கள். நிச்சய புத்தியேற்பட்டுவிட்டால் நற்கதியடையலாம்.
    स्वेनैवोक्तं निगमवचसा बोधनीयास्तु जीवा
        जीवैरेवेत्यपि च मुनिभिः कारित धर्मशास्त्रम् ।
    उत्पश्यन्तु स्वयमिति भवो दारुणश्चान्यतेऽसा-
        वद्यापि सो यदि खलु जडाः किं विधत्तां शिवोऽपि ॥३६॥

    ஸ்வேனைவோக்தம்நிக3மவசஸாபோ4த3னீயாஸ்துஜீவா
        ஜீவைரேவேத்யபிசமுனிபி4: காரிதம்த4ர்மஶாஸ்த்ரம் |
    உத்பஶ்யந்துஸ்வயமிதிப4வோதா3ருணஶ்சால்யதேSஸா
        வத்3யாபிஸ்மோயதி3கலுஜடா4: கிம்வித4த்தாம்ஶிவோSபி || (36)

    நிக3மவசஸா = வேதவாக்கியங்களால்; ஸ்வேனைவ உக்தம் = தானாகவேவெளிப்படுத்தியிருப்பதை; ஜீவா: = மானிடர்கள்; ஜீவைரேவ து = மானிடர்களாலேயே; வைத4னீயா: = உபதேசிக்கத்தகுந்தவர்கள்; இத்யபிச = என்றும் (எண்ணி); முனிபி4: = ரிஷிகளைக்கொண்டு; த4ர்மஶாஸ்த்ரம் = தர்மசாஸ்திரம்; காரிதம் = செய்விக்கப்பட்டது; ஸ்வயம் = தனக்குத்தானே; உத்பஶ்யந்து = தெரிந்து கொள்ளட்டும்; இதி = என்று; அஸெள = இந்த; தா3ருண: ப4வ: = பயங்கரமான உலகவாழ்க்கை; சால்யதே = நடத்திவைக்கப்படுகிறது; அத்3யாபி கலு = இப்பொழுது
கூட; யதி3 ஜடா4: ஸ்ம: = நாம் மூடர்களா யிருப்போமானால்; ஶிவோபி = ஈச்வரன் தான்; கிம் வித4த்தாம் = என்ன செய்யக்கூடும்?
    ஈச்வரன் வேதங்களை யுபதேசித்தார். பின்பு வேதங்களின் அர்த்தத்தை மனுஷ்யர்களைக் கொண்டே மனுஷ்யர்களுக்குச் சொல்லவேண்டுமென்று மஹர்ஷிகளைக் கொண்டுலோகத்தில் விளங்கச் செய்தார். மனுஷ்ய வாழ்க்கையில்ஸாரமில்லையென்று காண்பிக்கவே அவர் இந்த கோரமான
ஜனன மரணக் கிலேசங்களை நம்முன் பரப்புகிறார். இன்னும்நமக்கு விவேகம் உண்டாகவில்லை. . சிற்றின்பத்திலேயேஉழலுகிறோம் என்றால் அவர் தான் என்ன செய்வார் ?
    येनाचान्ताः सलिलनिधयो येन सृष्टा प्रतिद्यौः
        शस्त्राण्यस्त्राण्यपि कवलितान्येकया यस्य यष्टया ।
    कस्तादृक्षः प्रभवतु जनो देवभूदेववर्ग
        कालः कीटानिय कबलयामास तानप्ययनम् ॥ ३७॥
    யேனாசாந்தா: ஸலிலநித4யோயேனஸ்ருஷ்டாப்ரதித்4யெள:
        ஶஸ்த்ராண்யஸ்த்ராண்யபிகப3லிதான்யேகயாயஸ்யயஷ்ட்யா |
    கஸ்தாட்ருக்ஷ: ப்ரப4வதுஜனோதேவபூ4தேவவர்கே3
        கால:கீடானிவகப3லயாமாஸதானப்யயத்னம் || (37)

    யேன = எவரால்; ஸலில நித4ய: = ஸமுத்திரங்கள்; ஆசாந்தா: = ஆசமனம் செய்யப்பட்டனவோ; யேன = எவரால்; ப்ரதித்4யெள: =  வேறு
சுவர்க்கம்; ஸ்ருஷ்டா = ஸ்ருஷ்டிக்கப்பட்டதோ; யஸ்ய =  எவருடைய; ஏகயா யஷ்ட்யா = ஒரு தண்டத்தினால்; ஶஸ்த்ராணி அஸ்த்ராணி அபி = ஆயுதங்களும் அஸ்திரங்களும்; கப3லிதானி = விழுங்கப்பட்டனவோ; தேவ பூ4தேவ வர்கே3 = தேவர்களின் இடையிலும் பிராம்மணர்களின்இடையிலும்; தாட்ருக்ஷ: ஜன: = அப்படிப்பட்டவன்; க: ப்ரப4வது = எவன்இருப்பான்?; தானபி = அவர்களைக்கூட; கால: = காலம்; கீடான் இவ = புழுக்களைப்போல; அயத்னம் = லகுவாக; கப3லயாமாஸ = விழுங்கி
    ஸமுத்திரத்தைப் பானம் செய்த அகஸ்தியரும் புதியஸ்வர்க்கலோகத்தை சிருஷ்டித்த விசுவாமித்திரரும் விசுவாமித்திரரின் அஸ்திர சஸ்திரங்களைத் தன் பிரம்மதண்டத்தினால்வியர்த்தமாகச்செய்த வசிஷ்டரும்,காலத்திற்குஇரையானார்கள். அவர்களுக்குச் சமானமானவர்கள் தேவலோகத்திலும் பூலோகத்திலும் ஒருநாளும் கிடையாது. அவர்களின் கதியே அவ்விதம் என்றால், நாம் சாச்வதம்என்றுநினைத்துக்கொண்டிருப்பது பேதைமை அல்லவா? ஆகையால்இந்ததேகமுள்ளபோதே நம் நன்மைக்கு முயலவேண்டும்.
    कायस्थैर्य करणपटुतां बन्धुसंपत्तिमर्थं
        चातुर्य वा किमिव हि बलं बिभ्रतो निर्भराः स्मः।
    अन्त्यः श्वासः किमयमथवोपान्त्य इत्यामृशन्तो
        विस्मृत्येशं निमिषमपि किं वर्तितुं पारयामः ॥ ३८॥

    காயஸ்தை2ர்யம்கரணபடுதாம்பந்து4ஸம்பத்திமர்த2ம்
        சாதுர்யம்வாகிமிவஹிப3லம்பி3ப்4ரதோநிர்ப4ரா: ஸ்ம: |
    அந்த்ய: ஶ்வாஸ: கிமயமத2வோபாந்த்யஇத்யாம்ருஸந்தோ
        விஸ்ம்ருத்யேஶம்நிமிஷமபிகிம்வர்(த்)திதும்பாரயாம: ||    (38)

    காயஸ்தை2ர்யம் = சரீரதிடத்தையும்; கரணபடுதாம் = இந்திரியங்களின் சுறுசுறுப்பையும்; பந்து4ஸம்பத்திம் = பந்துக்களின் சேர்க்கையையும்; அர்த2ம் = பணத்தையும்; சாதுர்யம் வா = ஸாமர்த்தியத்தையும்; ப3லம் கிமிவ ஹி = இன்னும் என்னென்னவோ பலத்தையும்; பி3ப்4ருத: =  உடையவர்களாகி; நிர்ப4ரா: ஸ்ம: = (நாம்)கவலையற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம்; அயம் = இது; அந்த்ய: ஶ்வா: கி = கடைசி மூச்சோ; அத2வா = அல்லது; அபாந்த்ய: = அதற்குமுந்தியதோ; இதி ஆம்ருஸந்த: = என்று யோசித்தால்; நினிஷமபி = ஒரு கணமேனும்; ஈஸம் விஸ்ம்ருத்ய: = ஈசனை மறந்து; வர்திதும் = இருக்க; கிம் பாரயாம: = நம்மால் முடியுமா?
    நாம் சரீரபலம், ஐம்புலன்களின் வன்மை, பந்துக்களின்கூட்டுறவு, ஐச்வர்ய மிகுதி, புத்தி சாதுரியம் முதலிகளினால் லோகத்தில் பெருமையடைந்து பரிபூர்ணமானவாழ்வில் மகிழ்கின்றோம் ஆனால், மரணம் உண்டென்றும்அது இந்த நிமிஷமோ அல்லது அடுத்த நிமிஷமோ நம்மைக்கொண்டேபோய்விடும் என்றும் சற்று ஆலோசித்துப்பார்த்தோமேயானால் ஒவ்வொரு நிமிஷத்திலும் பரமேஸ்வரனைத் தியானித்து நாம் நற்கதியடைய வேண்டுவோம்.
    अभ्यस्यादौ श्रतिमथ गृह प्राप्य लब्ध्वा महार्था-
        निष्टा यज्ञैर्जनिततनयः प्रव्रजेदायुषोऽन्ते ।
    इत्याचष्टे य इह स मनुर्याज्ञवल्क्योऽपि वा मे
        तावत्कालं प्रतिभवति चेदायुषस्तत्प्रमाणम् ॥ ३९ ॥

    அப்4யஸ்யாதெ3ளஸ்ருதிமத2க்3ருஹம்ப்ராப்யலப்3த்4வாமஹார்தா2
        னிஷ்ட்வாயஜ்ஞைர்ஜனிததனய: ப்ரவரஜேதா3யுஷோSந்தே |
    இத்யாசஷ்டேயஇஹஸமனுர்யாஜ்ஞவல்க்யோSபிவாமே
        தாவத்காலம்ப்ரதிப4வதிசேதா3யுஷஸ்தத்ப்ரமாணம் ||        (39)

    ஆதெ3ள = முதலில்; ஸ்ருதிம் அப்4யஸ்ய = வேதம்பயின்று; அத2=  பின்பு; க்3ருஹம் ப்ராப்ய = வீட்டையடைந்து; மஹார்தா2ன் லப்3த்4வா = அதிகப்பணத்தைச்
சம்பாதித்து; ஜனிததனய: = புத்திரனை உண்டுபண்ணிவிட்டு; ய்ஜ்ஞ: இஷ்டா = யாகங்களைச் செய்து; ஆயுஷோSந்தே = ஆயுள் இறுதியில்; ப்ரவரஜேத் = ஸந்யாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும்; இதி = என்று; இஹ = இங்கு; ய: மனு: யாஞ்ஞவல்க்யோ வா = எந்த மனுவோ யாக்ஞவல்கியரோ; ஆசஷ்டே = சொல்லுகிறாரோ, ஸ: = அவர்; தாவத்காலம் = அவ்வளவுநீடித்தகாலம்; மே ஆயுஷ: = என் ஜீவதசைக்கு; ப்ரதிப4வதி சேத் = பொருப்பாளியானால்; தத் = அவர் வாக்கியம்; ப்ரமாணம் = அனுஷ்டிக்கத் தக்கது தான்.
    மனு யாஜ்ஞவல்க்யர் முதலிய தரும சாஸ்திரக்காரர்கள்,ஆச்ரம விதிகளை விவரிக்குங்கால், பிரம்மசரியத்தில் வேதங்களை அப்யஶித்து, பின்பு கிருஹஸ்தனாகி புத்திரர்களையும்பெற்று, யாகங்களை அனுஷ்டித்துக் கடைசியாக எல்லாவற்றையும் துறக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார்களே,அவ்வளவு
நீண்டகாலம் உயிரோடிருப்பதற்குஇவர்கள் ஜவாப்தாரிகள் ஆவார்களா?
    குறிப்பு:-ஆயுள் பிரமாணம் நிச்சயம் இல்லை ஆதலால் வெகுசீக்ரமே பந்தங்களைக் களைந்து முக்தி மார்க்கத்தைத் தேடவேண்டியதுஅவசியம்.
    

    अन्नं धान्यं वसु वसुमतीत्युत्तरेणोत्तरेण
        व्याकृष्यन्ते परमकृपणाः पामरा यद्वदित्थम् ।
    भूमिः खं द्यौहिणगृहमित्युत्तरेणोत्तरेण
        व्यामुह्यन्ते विमलमतयोऽप्यस्थिरेणैव धाम्ना ॥४०॥

    அன்னம்தா4ன்யம்வஸுவஸுமதீத்யுத்தரேணோத்தரேண
        வ்யாக்ருஷ்யந்தேபரமக்ருபணா: பாமராயத்3வதி3த்த2ம் |
    பூ4மி: க2ம்த்4யெளர்த்3ருஹிணக்3ருஹமித்யுத்தரேணோத்தரேண
        வ்யாமுஹ்யந்தேவிமலமதயோப்யஸ்தி2ரேணைவதா4ம்னா || (40)

    அன்னம் = ஆஹாரம்; தா4ன்யம் = விளைபொருள்; வஸு = செல்வம்; வஸுமதி = பூமி; இதி இத்த2ம் = என்றிப்படி; உத்தரேண உத்தரேண = மேல் மேல்; பரமக்ருமணா: பாமரா: = மிக வருந்தத் தக்க அற்ப ஜனங்கள்; யத்3வத் = எப்படி; வ்யாக்ருஷ்யந்தே = இழுக்கப்படுகிறார்களோ; தத்வத் = அப்படியே; பூ4மி: = பூலோகம்; க2ம் = ஆகாயம்; த்3யெளர்: = ஸ்வர்க்கம்; த்3ருஹிணக்3ருஹம் =  பிரும்மலோகம்; இதி = என்று; உத்தரேண உத்தரணே = மேல் மேல்; அஸ்தி2ரேணைவ = நிலையில்லாத; தா4ம்னா = பதவியாலேயே; விமலமதய: அபி = அறிவாளிகள் கூட; வ்யாமுஹ்யந்தே = மோசம் போகிறார்கள்.
    பாமர ஜனங்கள் அன்னம், தான்யம், பணம், பூமிஎன்று மேல் மேல் எப்படிப் பேராசையை வளர்க்கிறார்களோ அப்படியே வித்வான்களான கர்ம மார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் பூமி, அந்தரிகம், ஸ்வர்க்கம், பிரும்ம லோகம்என்று மேல் மேல் ஆசைப்படுகிறார்கள்.
    குறிப்பு:- ஞான மார்க்கமே உண்மையான மார்க்கம், மற்றவைநிலையற்ற பதவிகளையே தருவன.
    प्रायश्चित्तं सकृदुपनते वा प्रमादात्कृते वा
        भूयो भूयोऽप्यवहिततरैः साधिते कः समाधिः ।
    कारुण्याब्धियदि पुरहरः सत्सु कामं दयेत
        भ्रष्टे मादृश्यपि स दयते चेत्क्षतो धर्मसेतुः ॥४१॥

    ப்ராயஶ்சித்தம்ஸக்ருது3பனதேவாப்ரமாதா3த்க்ருதேவா
        பூ4யோபூ4யோSப்யவஹிததரை: ஸாதி4தேக: ஸமார்தி4: |
    காருண்யாப்3தி4ர்யதி3புரஹர: ஸத்ஸுகாமம்த3யேத
        ப்4ரஷ்டேமாத்3ருஶ்யபிஸத3யதேசேத்க்ஷதோத4ர்மஸேது: ||  (41)

    ஸக்ருது3பனதே வா = ஒரு தடவை நடந்திருந்தாலும்; ப்ரமாதா3த்க்ருதே வா = அஜாக்கிரதையினால் செய்யப்பட்டிருந்தாலும்; ப்ராயஶ்சித்தம் =  பிராயச்சித்தம் உண்டு;அவஹிததரை: = மிகவும் கவனத்தைச் செலுத்தி; பூ4யோ பூ4யோSபி = திரும்பவும் திரும்பவும்; ஸாதி4தே = செய்யப்பட்ட காரியத்தில்; க: ஸமார்தி4: = என்ன ஸமாதானம்(சொல்லுகிறது)?; காருண்யாப்3தி4: = கருணைக்கடலான; புரஹர: =  பரமசிவன்; ஸத்ஸு = ஸாதுக்கள் விஷயத்தில்; காமம் யதி3 த3யேத = தயவுசெய்யக்கூடும் என்றாலும்; ப்4ரேஷ்டே மாத்3ருஶி அபி = பதிதனான என்போன்றவன் விஷயத்திலும்; ஸ த3யதே சேத் = அவர் தயவு செய்வாரானால்; த4ர்மஸேது: = தர்மத்தின் எல்லை; ஷத: = உடைப்பட்டுப் போகும்.
    ஈச்வரனுடைய கருணையைப் பெற ஸாதுக்களே உரியவர்கள்; என் போன்றவர்கள் ஏதோ அறியாமையால் ஒருதடவை பாபம் செய்பவர்கள் அல்லர்; இடைவிடாமல்வேண்டுமென்றே பாபம் செய்பவர்கள். எங்களுக்குப் பிராயச்சித்தமே கிடையாது. எங்கள் விஷயத்தில் இரங்குவாரேயானால் ஈச்வரனே தருமவரையறைகளை அவமதித்தவராவர்.
    साध्या शंभोः कथमपि दयेत्यप्यसाध्योपदेशः
        कोपं तस्य प्रथममपनुधैव साध्यः प्रसादः ।
    कोपो वर्णाश्रमनियमिताचारनिर्लङ्घनोत्थः
        शान्तिं नेयः स कथमधुनाऽप्यव्यवस्थाप्रवृत्तैः ॥ ४२ ॥

    ஸாத்4யாஶம்போ: கத2மபித3யேத்யப்யஸாத்4யோபதே3ஸா:    
        கோபம்தஸ்யப்ரத2மமபநுத்4யைவஸாத்4ய: ப்ரஸாத3: |
    கோபோவர்ணாஶ்ரமநியமிதாசாரநிர்லங்க4னோத்த2:
        ஶாந்திம்நேய: ஸகத2மது4னாSப்யவ்யவஸ்தா2ப்ரவ்ருத்தை: ||  (42)

    கத2மபி = எப்படியாவது; ஶம்போ: = ஈச்வரனுடைய; தயா = தயவு; ஸாத்4யா = ஸம்பாதிக்கப்பட வேண்டியது; இதி = என்பது; அஸாத்4யோபதே3ஸா: = நடைபெறாததை யுபதேசிப்பதாகும்; தஸ்ய கோபம் = அவருடைய கோபத்தை; ப்ரத2மம் = முதலில்; அபநுத்4யைவ = போக்கடித்துத்தானே; ப்ரஸாத3: ஸாத்4ய: = அனுக்கிரகத்தைப் பெறவேண்டும்; வர்ணாஶ்ரமநியமிதாசார நிர்லங்க4னோத்த2: = வர்ணம் ஆச்ரமம் இவைகளில் ஏற்படுத்தப்பட்ட ஆசாரங்களை மீறினதால்உண்டான;ஸ: கோப: = அந்தக் கோபம்; அது4னாபி = இப்போதுகூட; அவ்யவஸ்தா2ப்ரவ்ருத்தை: = வரையறைகளை மீறி நடந்துவரும் நம்மால்; கத2ம் ஶாந்திம் நேய: = எப்படிப் போக்கடிக்கக் கூடியதாகும்?
    ஈச்வரனுடைய தயவை அடைய நாங்கள் எவ்விதத்திலும் தகுதியில்லாதவர்கள்; ஏனெனில் வர்ணம், ஆச்ரமம்என்ற வரையறைகளை லக்ஷ்யம் செய்யாமல் தோன்றியபடிதுஷ்டச் செயல்களைச் செய்துகொண்டு அவருக்குக் கோபத்தையுண்டுபண்ணி யிருக்கிறோம். அவர் கோபத்தைப்போக்கடித்த பிறகு அல்லவா, அவருடைய தயவை எதிர்பார்க்கலாம். எங்கள்நடையை இன்னமும் திருத்திக்கொள்ளாத நாங்கள் அவருடைய கோபத்தை எப்படித்தணியவைக்கப் போகிறோம்?
    इष्टापूर्तेनिगमपठनैः कृच्छ्चान्द्रायणाथैः
        स्वामिन्नन्यैरपि तव मनः काममावर्जयेम ।
    मध्ये मध्ये यदि न निपतेत् कर्मणा चोदितानां
        ज्ञानं श्रद्धेत्युभयमपि नो जातिवैर्यर्गलेव ॥ ४३ ॥

    இஷ்டாபூர்(த்)தைர்நிக3மபடனை: க்ருச்ச2சாந்த்3ராயணாத்4யை:
        ஸ்வாமின்னன்யைரபிதவமந: காமமாவர்ஜயேம |
    மத்4யேமத்4யேயதி3நநிபதேத்கர்மணாசோதி3தானாம்
        ஜ்ஞானம்ஶ்ரத்3தே4த்யுப4யமபிநோஜாதிவைர்யர்க3லேவ ||      (43)
    
    ஸ்வாமின்னம் = பிரபுவே; இஷ்டா பூர்(த்)தைர்: = யஜ்ஞம் செய்தல் குளம் வெட்டுதல் முதலிய தருமங்கள் மூலமும்; நிக3மபடனை: = வேதாத்யயனம் செய்வதாலும்; க்ருச்ச2சாந்த3ராயணாத்4யை: = கிருச்ரம் சாந்திராயணம் போன்ற விரதங்களை யனுஷ்டிப்பதாலும்;அத்யைரபி = மற்ற வழிகளாலும்; தவ மன:= உன் மனதை; காமம் ஆவர்ஜயேம = ஒருவாறு கவர்ந்துவிடலாம்;(எப்போது என்றால்); கர்மணாம் சோதி3தானாம்ந: = பூர்வ வினையாலே தூண்டப்பட்ட நமக்கு;ஜாதிவைரி ஞானம் = பிறவிப் பகையான ஞானம்; ஶ்ரத்3தா4 = சிரத்தை; இதி உப4யமபி = என்ற இவ்விரண்டும்; அகி3லேவ = தாழ்ப்பாள்போல; மத்4யே மத்4யே = நடுநடுவே; யதி3 ந நிபதேத் = விழுந்துவிடாமல் இருக்குமேயானால். [கர்மணாம் சோதி3தானாம் = என்ற பாடமும் உண்டு.]
    கர்மாக்களைச் செய்து ஈச்வரனை ஆராதிப்போம் என்றால் விவேகம், சிரத்தையென்ற இவ்விரண்டும் கூடியிருந்தால் அல்லவா கர்மாக்களை ஈச்வரன் ஏற்றுக்கொள்வார்.நமக்கோ ஜன்மாந்தர துர்வாஸனைகளால் இவ்விரண்டும் நடுநடுவே நழுவி விடுகின்றன. தாழ்ப்பாள் - கட்டை விழுவதால் வழி அடைபட்டுப் போவது போல், அவிவேகம் சிரத்தையின்மை இவையிரண்டும் குறுக்கே வந்து கர்மாக்களைநிஷ்பலமாகச் செய்துவிடுகின்றன. (பழைய காலத்து மணித்தூழ்ப்பாளை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.அதில் இரண்டு நாக்குகள் உண்டு. அவைகளை விழாமல்திறவுகோலால் தாங்கிக்கொண்டு கட்டையை மெள்ளத்தள்ள வேண்டும்.)
    निमयादः परमचपला निःसमाज्ञानराश-
        दृक्षोऽन्यः क इति भुवने मार्गणीयं त्वयैव ।
    ईदृक्षेऽपि क्वचिदिह दयेयेति कौतूहलं चेत
        स्वामिन् विश्वेश्वर तव भवं निस्तरेयं तदाऽहम् ॥ ४४ ॥
    நிர்மர்யாத3: பரமசபலோநி:ஸமாஜ்ஞானராஶிர் -
        மார்த்3ருக்ஷோSன்ய: கஇதிபு4வனேமார்க3ணீயம்த்வயைவ |
    ஈத்3ருக்ஷேSபிக்வசிதி3ஹத3யேயேதிகெளதூஹலம்சேத்
        ஸ்வாமின்விஶ்வேஶ்வரதவப4வம்நிஸ்தரேயம்ததா3ஹம் || (44)
    நிர்மர்யாத3: = வரம்பு கடந்தவனும்; பரமசபல: = மிகவும் நிலையற்றமனதையுடையவனும்; நிஸ்ஸமாஞானராஶி: = நிகரற்ற அறிவீனக்குவியலுமாய்; பு4வனே = பூலோகத்தில்; மார்த்3ருக்ஷ: = என்னைப்போல்; அத்ய: க: = வேறு எவன் இருக்கிறான்?; இதி = என்று; த்வயைவ மார்க3ணியம் = நீரே தேடிப் பார்க்கலாம்; ஸ்வாமினம் வ்ஶ்வேஶ்வர = விச்வேச்வரப்பிரபுவே!; இஹ =  இந்த லோகத்தில்; க்வசித் = எங்கேயாவது; ஈத்3ருக்ஷேSபி = இத்தகையவன் விஷயத்திலே கூட; த3யேய இதி = தயவுகாட்டுவேன் என்று; தவ = உமக்கு; கெளதுஹலம் சேத் = உற்சாகம்உண்டாகுமேயானால்; ததா3 =  அப்போது; அஹம் = நான்; ப4வம் = ஸம்ஸாரத்தை; நிஸ்தரேயம் = தாண்டுவேன்.
    ஈச்வர கிருபை எனக்கும் உண்டாக வேண்டுமானால்,பின் வருமாறு ஏற்படலாம்:- எல்லாவித துர்குணங்களும்சேர்ந்து முற்றிலும் நிராகரிக்கத்தக்க ஜீவன் ஒருவனிடம்நம் தயவைக் காண்பிக்கவேண்டும் என்ற குதூஹலம் ஒரு
வேளை பரமேச்வரனுக்கு ஏற்பட்டால் உலகமெங்கும் தேடினாலும் அவருக்குஎன்னைத் தவிர வேறு மனிதன் கிடைக்கமாட்டான்.அப்போதுநான்நற்கதியடைவேன்.
    पश्चात्तप्ताः कथमपि विधेः किंकरीभूय कुर्मः
        सेवां शम्भोरिति च नियमं वापि संकल्पयामः ।
    आयुः किं मे किमिव करणं दुस्तरे संकटेऽस्मिन्
        स्वामिन् गौरीरमण शरणं नस्त्वमेव त्वमेव ॥४५॥

    பஶ்சாத்தப்தா: கத2மபிவிதே4: கிங்கரீபூ4யகுர்ம:
        ஸேவாம்ஶம்போ4ரிதிசநியமம்வாSபிஸங்கல்பயாம: |
    ஆயு: கிம்மேகிமிவகரணம்து3ஸ்தரேஸங்கடே2Sஸ்மின்
        ஸ்வாமின்கெ3ளரீரமணஶரணம்நஸ்த்வமேவத்வமேவ || (45)

    பஶ்சாத்தப்தா: = பச்சாதாபம் அடைந்தவர்களாய்; விதே4: கிங்கரீபூ4ய = சாஸ்திர விதிகளுக்குக் கட்டுப்பட்டு; கத2மபி = எப்படியாவது; ஸேவாம் குர்ம: = ஈச்வரனின்; = உபாஸனையைச் செய்வோம்; இதி ச= என்றுகூட; ; நியமம் வாSபிஒரு நிபந்தனையை வேண்டுமானாலும்; ஸங்கல்பயாம: = மனதில் ஏற்றுகொள்வோம்.; மே ஆயு: கிம் = (ஆனால்) என் ஆயுள் எவ்வளவு?; கரணம் கிமிவ = ஸாதனந்தான்எது?; அஸ்மின் து3ஸ்தரே ஸங்கடே2 = இந்த வெல்ல முடியாத இடைஞ்சலில்; ஸ்வாமின் கெ3ளரீரமண = ஏ பிரபோ, பார்வதீபதே!; ந: = எமக்கு; த்வமேவ த்மேவ = நீர்தான் நீர்தான்; ஶரணம் = கதி.
    ஆகமங்களில் சொல்லியபடி, உன் ஸேவையைச் செய்யவேண்டுமென்ற ஸங்கல்பமானது பச்சாக்காபத்தினால் நல்லபுத்தியுண்டாகி ஒருகால் எனக்கு ஏற்பட்டாலும், என்ஸங்கல்பத்தை நிறைவேற்ற எனக்கு ஆயுஷ் காலமும் மற்ற ஸாதனங்களும் எங்கு கிடைக்கப்போகின்றன? ஆகையால்,ஏ பார்வதீபதியே, நீயே சரணம் சரணம்.
    सम्यङ्मुक्ताखिभिरपि मलैचिद्विकासकरूपा-
        स्त्वन्निध्यानप्रवणमनसः सूरयस्त्वत्पुरे ये ।
    तेषां सन्दर्शयितुमपरिज्ञातपूर्व कदाचि-
        जन्तुं मुग्धं शिव नयसि किं विश्वपारं पुरं माम् ॥ ४६॥

    ஸம்யங்முக்தாஸ்த்ரிபி4ரபிமலைஶ்சித்3விகாஸைகரூபாஸ் –
        த்வன்னித்3யானப்ரவணமநஸ: ஸூரயஸ்த்வத்புரேயே |
    தேஷாம்ஸந்த3ர்ஶயிதுமபரிஜ்ஞாதபூர்வம்கதா3சித்
        ஜந்தும்முக்3த4ம்ஶிவநயஸிகிம்விஶ்வபாரம்புரம்மாம் ||    (46)

    ஸிவ = ஹே சிவ!; த்ரிபி4ரபி மலை: = மும்மலங்களினால்; ஸம்யங்முக்தா: = முற்றிலும்விடுபட்டவர்களும்; சித்3விகாஸைகரூபாஸ்: = ஞானப்ரகாச ஸ்வரூபமாகவே யிருப்பவர்களும்; த்வன்னித்3யானப்ரவணமநஸ: = உன்னை தியானிப்பதில் செலுத்திய மனதோடுகூடியவர்களும் ஆக; த்வத்புரே = உன் பட்டணத்தில்; யே ஸூரய: = எந்தப் பெரியோர்கள் இருக்கிறார்களோ; தேஷாம் = அவர்களுக்கு; அபரிஜ்ஞாதபூர்வம் = முன் தெரியாத; முக்3த4ம் ஜந்தும் = மூடனான ஒரு ஜீவனை; ஸந்த3ர்ஶயிதும் = காண்பிக்க; மாம் = என்னை; விஶ்வபாரம் புரம் = இவ்வுலகிற் கப்பாலுள்ள உன் பட்டணத்திற்கு; கதா3சித் = ஒருவேளை; கிம் நயஸி = அழைத்துப் போவாயா?
    முக்தி க்ஷேத்திரமாகிய உன் நகரத்தில் வஶிக்கும்ஞான ரூபிகளான உன் பக்தர்களுக்குஎன்றும் கண்டறியாத பரம மூடமான ஒரு ஜந்துவை வேடிக்கைக்காக நீகொண்டுபோய்க் காண்பிக்க நினைத்து என்னை யழைத்துப்போவாயானால், எனக்கு உன் ஸ்தானத்தை யடையும்அதிர்ஷ்டம் ஏற்படலாம். வேறு வழியில் கிடையாது.
    குறிப்பு:- ஆணவம், மாயிகம், கார்மிகம் இவை மும்மலங்கள்; வாசிகம், காயிகம், மானஸம் எனச் சிலர் கூறுகின்றனர்.
    दिष्टया लब्धं द्विजवरकुले जन्म तत्रापि दिष्टया
        धर्माधर्मस्थितिखगतैव प्रसादाद्गुरूणाम् ।
    जन्मन्यस्मिन्नपि यदि न मे संभवेदास्तिकत्वं
        निस्तारः किं निरयभवनात् सर्वमोक्षेऽपि लभ्यः॥४७॥

    தி3ஷ்ட்யாலப்3த4ம்த்3விஜவரகுலேஜன்மதத்ராபிதி3ஷ்ட்யா
        த4ர்மாத4ர்மஸ்தி2திரவக3தைவப்ரஸாதாகு3ருணாம் |
    ஜன்மன்யஸ்மின்னபியதி3நமேஸம்ப4வேதா3ஸ்திகத்வம்
        நிஸ்தார: கிம்நிரயப4வனாத்ஸர்வமோக்ஷேSபிலப்4ய: ||  (47)
    த்3விஜவரகுலே = பிராம்மண சிரேஷ்டர்கள் குலத்தில்; தி3ஷ்ட்யா = தெய்வாதீனமாக; ஜன்ம = பிறப்பு; லப்3த4ம் = கிடைத்தது; தத்ராபி = அதிலும்; தி3ஷ்ட்யா = அதிர்ஷ்ட வசத்தால்; கு3ருணாம் = குருக்களின்; ப்ரஸாதாத் = அனுக்கிரஹத்தால்; த4ர்மாத4ர்மஸ்தி2தி: = தர்மம் அதர்மம்இவைகளின் வரன்முறை;அவக3தாஏவ = அறியப்பட்டது; அஸ்மின் ஜன்மனி அபி = இந்த ஜன்மத்திலே கூட; மே = எனக்கு; அஸ்திகத்வம் = பரலோக நம்பிக்கை; யதி3 ந ஸம்ப4வேத் = உண்டாகவில்லையானால்; நிரயப4வனாத் = நரகத்திலிருந்து; நிஸ்தார: = கரையேறல்; ஸர்வமோக்ஷேSபி = எல்லா ஜீவர்களுக்கும் மோக்ஷம் கிடைக்கும்காலத்திலேகூடக்; கிம் லப்4ய: = கிடைக்குமா?
    பிராம்மண சிரேஷ்டர்களின் வம்சத்தில் அதிர்ஷ்டவசத்தால் பிறந்து தெய்வானுகூல்யத்தாலும் குருக்களின்அனுக்கிரஹத்தாலும் தர்மம் எது அதர்மம் எது என்றவிவேகமும் ஏற்பட்டிருக்கிற இந்த ஜன்மத்திலே கூடபரலோக சிரத்தை எனக்கு உண்டாகவில்லை யென்றால்,ஸர்வமோக்ஷம் என்று சொல்லக்கூடிய காலத்திற் கூடஎனக்கு மோக்ஷம் கிடைக்க நியாயமில்லை.
    भव्ये देहे पटुषु करणेष्वालये श्रीसमृद्धे
        कौमारान्ते वयसि कथमप्यप्रवृत्ते च दुःखे ।
    प्रत्यक्पुष्पीप्रसवविधया यस्य पुंसो निसर्गात्
        प्रत्यग्वक्त्रं भवति हृदयं कस्ततोऽप्यम्ति धन्यः॥४८॥

    ப4வ்யேதே3ஹேபடுஷுகரணேஷ்வாலயேஶீரிஸ்ம்ருத்3வே
        கெளமாராந்தேவயஸிகத2மப்யப்ரவ்ருத்தேசது3:கே2 |
    ப்ரத்யக்புஷ்பீப்ரஸவித4யாயஸ்யபும்ஸோநிஸர்கா3த்
        ப்ரத்யக்3வக்த்ரம்ப4வதிஹ்ருத3யம்கஸ்ததோSப்யஸ்தித4ன்ய: ||48
    
    ப4வ்யே தே3ஹே = சரீரம் திடமாயிருக்க; கரணேஷு படுஷு = இந்திரியங்கள் சுறுசுறுப்பாயிருக்க; ஆலயே ஶீரிஸ்ம்ருத்3வே = இருப்பிடத்தில்லக்ஷ்மீ விலாஸமிருக்க; கெளமாராந்தே வயஸி = பால்யம் கடந்த(யௌவன) வயதில்; கத2மபி = கார் எவ்விதத்திலும்; து3: கே2 ச அப்ரவ்ருத்தே = கஷ்டம் வராமலிருக்கும்போதே; யஸ்ய பும்ஸ: = எவனுக்கு; ப்ரத்யக்புஷ்பீப்ரஸவித4யா = தலைகீழாய்ப் பூக்கிற நாயுருவியின் பூக்காம்புமாதிரியாய்; நிஸர்கா3த் = தானாகவே; ஹ்ருத3யம் = மனது; ப்ரத்யக்3 வக்த்ரம் = உள்நோக்க முடையதாக; ப4வதி = ஆகிறதோ; ததோSபி = அவனைக்காட்டிலும்; த4ன்ய: = பாக்கியசாலி; க: அஸ்தி = எவன் இருக்கிறான்?
    புண்ணியாத்மாக்களான சிலர்க்கே சரீர திடமும்மற்றுமுள்ள வாழ்க்கை ஸௌகரியங்களும் நிரம்பியிருக்கும் போதே, யௌவனப் பருவத்திலேயே நாயுருவிப் பூக்களைப்போல் உள்நோக்கமுடையதான வைராக்யம் ஏற்பட்டு விடுகிறது. அத்தகையோரே பாக்கியசாலிகள்.
    नाहं याचे पदमुडुपतेर्नाधिकारं मघोनो
        नापि ब्राह्मीं भुवनगुरुतां का कथाऽन्यप्रपञ्चे।
    अन्यस्यान्यः श्रियमभिलपनस्तु कस्तस्य लोको
        मां शंभो दिश मसृणितं मामकानन्दमेव ॥४९॥

    நாஹம்யாசேபத3முடு3பதேர்நாதி4காரம்மதோ4னோ
        நாபிப்4ராஹ்மீம்பு4வனகு3ருதாம்காகதா2Sன்யப்ரபஞ்சே |
    அந்யஸ்யான்ய: ஶ்ரியமபி4லஷன்னஸ்துகஸ்தஸ்யலோகோ
        மஹ்யம்ஶம்போ4தி3ஶமஸ்ருணிதம்மாமகானந்த3மேவ ||    (49)

    அஹம் = நான்; உடுபதே: பத3ம் ந யாசே = சந்திரனுடையலோகத்தை விரும்பவில்லை;மதோ4ன: அதி4காரம் ந = இந்திரனுடையஅதிகாரம் வேண்டுமென்று கேட்கவில்லை; ப்4ராஹ்மீம் பு4வனகு3ருதாம் நாபி = பிரும்மாவினுடைய லோகபூஜ்யராயிருக்கும்பெருமையையும் கோரவில்லை;அன்யப்ரபஞ்சே கா கதா2 = வேறுஉலகங்களின்விஷயத்தில் சொல்ல வேண்டுவதென்ன?; அந்யஸ்ய ஶ்ரியம் = மற்றவனுடைய ஸம்பத்தை; அந்ய:அபி4லஷன் = வேறொருவன் ஆசைப்பட்டால்; தஸ்ய க: லோக:அஸ்து = அவனுக்கு எந்த உலகம் கிடைக்கும்?; ஶம்போ4 = ஈச்வரா!; மஹ்யம் = எனக்கு; மஸ்ருணிதம் = அதிக ஸுகத்தைக் கொடுக்கக்கூடிய; மாமகானந்த3ம் ஏவ = எனக்குச் சொந்தமான ஆனந்தநிலையையே; தி3ஶ =கொடுப்பீராக.
    இந்திரன் சந்திரன் பிரம்மா முதலியவர்களின் பதவிகளுக்கே நான் ஆசைப்படவில்லை. மற்ற அற்ப பதவிகளைஎங்கு விரும்பப்போகிறேன்? பிறர் பதவியை விரும்புகிறவன்நல்ல கதியை அடைவானா? நான் கேட்பது என்னுடையதான பதவியையே; சம்போ! அதைக் கொடுத்தருளும்.
    இதனால் ஆத்மானந்தத்தைக் கேட்கிறார்.
    आगर्भादाकुलपरिबृडादा चतुर्वक्त्रतोऽपि
        त्वत्पादाब्जप्रपदनपरान् वेत्सि नश्चन्द्रमौले ।
    मायायाश्च प्रपदनपरेष्वप्रवृत्तिं त्वमात्थ
        स्वामिन्नेवं सति यदुचितं तत्र देवः प्रमाणम् ॥ ५० ।।

    ஆக3ர்பா4தா3குலபரிப்ருட3தா3சதுர்வக்த்ரதோSபி
        த்வத்பாதா3ப்3ஜப்ரபத3னபரான்வேத்ஸிநஶ்சந்த்3ரமெளளே |
    மாயாயாஶ்சப்ரபத3னபரேஷ்வப்ரவ்ருத்திம்த்வமாத்த
        ஸ்வாமின்னேவம்ஸதியது3சிதம்தத்ரதே3வ: ப்ரமாணம் ||   (50)

    சந்த்3ரமெளளே = சந்திரசேகரரே!; ஆக3ர்பா4த் = நான் உண்டானதுமுதல்; ஆகுலபரி ப்3ருடாத் = என் குல கூடஸ்தர் முதற்கொண்டு; ஆசதுர்வக்த்ரத: அபி = பிரும்மா முதற்கொண்டு எங்கள் வம்சத்தைக் கணக்கிட்டுப் பார்த்தாலும்; ந: = எங்களை; த்வத்பாதா3ப்3ஜப்ரபத3னபரான் = உம் பாதகமலங்களே கதியென்று அடைக்கலம்புகும் விரதமுடையவர்களாக; வேத்ஸி = நீர் அறிவீர்; ப்ரபத3ன பரேஷு ச = உன்னைச் சரணம் அடைபவர்கள்விஷயத்தில்; மாயாயா: = மாயையின்; அப்ரவ்ருத்தி = பரவுதலின்மையை; த்வம் ஆத்த2 = நீர் சொல்லியிருக்கிறீர்; ஸ்வாமின் = பிரபுவே!; ஏவ ஸதி = இவ்விதமிருக்க; யத்உசிதம் = எது நியாயமோ; தத்ர = அதுவிஷயத்தில்; தே3வ: ப்ரமாணம் = தங்களிஷ்டமே திட்டம்.
    பரம மாஹேச்வரர்களுடைய வம்சத்தில் பிறந்த என்னைநீர் ரக்ஷிக்கத்தான் வேண்டும்; பிரும்மா முதல் எங்கள் பரம்பரையில் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைவரை நாங்கள் எல்லோரும் உம்மையே சரணமடைந்தவர்கள் என்பது உமக்குத்தெரியும்; உம்மைச் சரணமடைந்தவர்களுக்கு மாயையென்ற திரை இடையூறாகாது என்று நீர் வாக்குக் கொடுத்திருக்கிறீர். இருக்கிற விஷயங்களை உள்ளபடி உம்மிடம்தெரிவித்துவிட்டேன். இனி உம் இஷ்டம்; உசிதம்போல்நடத்தும்.
    दण्डं धत्ते सकलजगतां दक्षिणो यः कृतान्तो
        नामाप्यस्य प्रतिभयतनोनॊपगृह्णीमहीति ।
    प्राप्ताः स्मस्तं निगमवचसामुत्तरो यः कृतान्तो
        यद्वा तद्वा भवतु न पुनस्तस्य पश्येम वक्त्रम् ॥५१॥

    தண்ட3ம்த4த்தேஸகலஜக3தாம்த3க்ஷிணோய: க்ருதாந்தோ
        நாமாப்யஸ்யப்ரதிப4யதநோர்நோபக்3ருஹ்ணீமஹீதி |
    ப்ராப்தா: ஸ்மஸ்தம்நிக3மவசஸாமுத்தரோய: க்ருதாந்தோ
        யத்3வாதத்3வாப4வதுநபுநஸ்தஸ்யபஶ்யேமவக்த்ரம் ||     (51)

    த3க்ஷிணா: = தெற்கேயுள்ள; ய: க்ருதாந்த: = எந்த யமன்; ஸகலஜக3தாம் = எல்லாபிராணிகளுக்கும்; தண்ட3ம் த4த்தே = தண்டம் விதிப்பவனோ; ப்ரதிப4யதணோ: = பயங்கர ரூபமுடைய; அஸ்ய = இவனுடைய; நாமாபி = பெயரைக்கூட; நோபக்3ருஹ்ணீமஹி= நாங்கள் ஸ்மரிக்க மாட்டோம்; இதி = என்று; ய: = எவர்; நிக3மவசஸாம் = வேதவாக்கியங்களுக்கு; உத்தர: = எட்டாத (அப்பாலுள்ள); க்ருதாந்த: = கிருதாந்தரோ (முடி வானபொருளோ); தம் ப்ராப்தா: ஸ்ம: = அவரைச் சரணம்அடைந்திருக்கின்றோம்;யத்3வா தத்3வாப4வது = எது வந்தாலும்வரட்டும்;தஸ்ய வக்த்ரம் = அவனுடைய (யமனுடைய) முகத்தை; புந: ந பஶ்யேம = மறுபடி பார்க்காமலிருப்போமாக.
    தெற்கே வசிக்கும் யமன் முகத்தில் விழிக்கக் கூடாதுஎன்று (வடக்கே அவனுக்கும் யமனாக இருக்கும்) வேதங்களுக்கெட்டாத ஸர்க்கஸ்திதிப்ரளயப் பிரபுவான உம்மைச்சரணமடைந்தோம்.இனி என்ன ஆனாலும், யமனுடைய
முகதரிசனம் எமக்குக் கிடையாது என்பது மட்டும் நிச்சயம்.
    (மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சிவதூதர் முகம் பார்ப்பேனே ஒழிய, யமதூதர்கள் என்னிடம்அணுகமாட்டார்கள்.)

ஶ்ரீஶாந்திவிலாஸம் முற்றிற்று.

 

Related Content