சிவமயம்
இவ்வகராதியிற் பல முக்கியமான விஷயங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக்
கொண்டு அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பெருக்கிக் கொள்ளவும். இந்நூலில் பல அகராதிகளிருத்தலால்
இது மிகச் சுருக்கமாகவே உள்ளது. எண்கள் பாட்டெண்கள். முதல் நான்கு பாட்டுகளில் மட்டும்
அடியெண்ணும் தரப்பட்டுள்ளது.
அவனருளால் அவன்தாள் வணங்கி 1.18,
அழுதால் உன்னைப் பெறலாமே 94,
ஆயக்கடவன் நானோதான் என்னதோ இங்கதிகாரம் 503,
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே 158
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 4.164-165,
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே 502,
மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே 530,
வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ 501
உனக்கன்ப ருள்ளாஞ் சிவமே பெருந்திரு எய்திற்றிலேன் 9,
நள்ளேன் நினதடியாரோடல்லால் நரகம் புகினும் 6,
நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் 15.
அந்தோ அந்தோ 614,
ஆட ஆட 204,
ஆடி ஆடி 495,
ஆர்ப்ப ஆர்ப்ப 201,
ஆர்மின் ஆர்மின் 3.142,
உணராய் உணராய் 159,
உருகி உருகி 445,
ஊடி ஊடி 495,
என்று என்று 499,
ஒத்தன ஒத்தன 7,
கூடிக்கூடி 495,
சய சய 4.8,
சரண் சரண் 473,
சாதல் சாதல் 473,
சிவனே சிவனே 159,
தென்னா தென்னா 243,
நாத நாத 2.136,
நெக்கு நெக்கு 439,
பாடிப்பாடி 447,
போற்றி போற்றி 4.223,
மாண்டு மாண்டு 78,
வந்து வந்து 78,
வர வர 233,
வாடி வாடி 495,
விம்மி விம்மி 155,
வேண்டும் வேண்டும் 488
பட்டமங்கையிற் பாங்காயிருந்தங்கு அட்டமாசித்தி அருளிய அதுவும் 2.62; 63
வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண்கெடினும்...... ஊன் கெட்டு, உயிர் கெட்டு ,
உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய் நான் கெட்டு 252
அதெந்துவே 458 - 467,
அவிதா 8,
இறவு 541,
கல்லேன் 37,
கிறி 36,
கிற்பன் 45,
கிற்றவா 38,
கிற்றிலேன் 45,
குமண்டை 559,
சட்டோ 221,
சிறவு 4.182,
துவந்துவங்கள் 561,
பளகு 39,
முகேர் 165.
இல்நுழை கதிர் 3.5,
எய்ப்பினில் வைப்பு 3.105,
கயிலை மாமலை மேவிய கடல் 407
நினைப்பற நினைத்தல் 394
ஆனந்தக்கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து 591,
இருமுச்சமயத்தொரு பேய்த்தேர் 3.79,
திருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகையோர்க்கும் 3.16-17
ஆகமமாகி நின்றண்ணிப்பான் 1.4,
மன்னுமாமலை மகேந்திரமதனிற்சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 2.10,
கேவேடராகிக் கெளிறதுபடுத்து மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும் 2.17-18.
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இப்பரிசேபுவன் எம்பிரான் தெரியும் பரிசாவதியம் புகவே 13,
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் 62
இன்னிசை வீணையி லிசைந்தோன் 3.35,
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்.....பாகத்தான் 182
கறந்தபால் கன்னலோடு நெய் கலந்தாற்போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் 1.46 - 48,
அடியாருள்ளத் தன்புமீதூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் 2.7 - 8,
பத்திசெய் யடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் 2.119,
தீர்ந்த அன்பாய அன்பர்க்கவரினும் அன்பன் 73
ஏறுடையீசன் இப்புவனி உய்யக் கூறுடை மங்கையும் தானும் வந்தருளி 2.25 - 26,
ஏகம்பத்தின் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடாயின பரிசும் 2.77 - 78,
மாதிற் கூறுடை மாப்பெருங்கருணையன் 2.107,
குவளைக்கண்ணி கூறன் 3.64,
பாகம் பெண்ணுருவானாய் 4.152
பஞ்சேரடியாள் பங்கன் 4.184,
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள் ஒருபாகம் 21,
மான் அன நோக்கிதன்கூறன் 42,
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூறன் 71,
மைகலந்த கண்ணி பங்கன் 77,
ஏலம் ஏலுநற்குழலி பங்கன் 98,
மாதிருக்கும் பாதியன் 181,
பெண்சுமந்தபாகத்தன் 182,
கிளி வந்த மென்மொழியாள் கேள்கிளரும் பாதியன் 192,
கயல் மாண்ட கண்ணிதன்பங்கன் 245
மாவடுவகிரன்ன கண்ணிபங்கன் 415,
பஞ்சேரடியாள் பாகத்தொருவன் 427,
பாதிமாதொடுங்கூடிய பரமன் 429,
பண்ணினேர் மொழியாள் பங்கன் 452,
பந்தணை விரலாள் பங்கன் 455
பழுதில் தொல்புகழாள் பங்கன் 457,
காவிசேரும் கயற்கண்ணாள் பங்கன் 489,
கொடியேரிடையாள்கூறன் 497,
தையலிடம் கொண்ட பிரான் 652
எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் 207
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் 1.42-43,
போற்றியெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றியெல்லா வுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்,
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் 174
நீற்றுக்கோடி நிமிர்ந்து காட்டியும் 2.104,
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும் 2.110,
கழுநீர்மாலை ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும் 2.114,
ஏனத்தொல்லெயிறு அணிந்தோன் 3.31,
கானப்புலியுரி அரையோன் 3.32,
கரும்பணக் கச்சைக் கடவுள் 3.96,
நதிசேர் செஞ்சடை நம்பன் 4.109,
தாளி அறுகின் தாராய் 4.201,
சந்தனச் சாந்தின் சுந்தரன் 4.203,
சிவனவன் திரள்தோள் மேல் நீறு நின்றது 37,
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்பொலிபவன் 113,
வெண்தலை மிலைச்சிக் கொத்துறுபோது மிலைந்து குடர்நெடுமாலை சுற்றித் தத்துறு நீறுடனாரச் செஞ்சாந்தணிந்த சச்சையன் 134,
வலக்கையேந்தும் ஊனகமாமழுச்சூலம் 211,
நரம்போடெலும்பணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் 265,
காதடுகுண்டலங்கள் தாதாடுகொன்றைச் சடையான் 334,
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திருமுண்டத்தர் 344
தாளிஅறுகினர் சந்தனச் சாந்தினர்.... அடிகளார் தங்கையில் தாளமிருந்தவாறன்னே என்னும் 345
கொன்றை மதியமுங்கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் 347,
அங்கி தங்கிய கையாய் 406
நிறங்களோர் ஐந்துடையாய் 1.49,
தூயமேனிச் சுடர்விடு சோதி 2.112,
திருமுகத்தழகுறு சிறுநகை 2.148,
மின்ஆர் உருவவிகிர்தன் 4.96,
வண்ணந்தான் சேயதன்று வெளிதேயன்று 29
செந்தாமரைக் காடனைய மேனித்தனிச்சுடர் 30,
செச்சைமாமலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் 33,
அரத்தமேனியாய் 97,
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்னதோற்றச் செழுஞ்சுடர் 108,
நீறுபட்டே யொளிகாட்டும் பொன்மேனி நெடுந்தகை 115,
திருநீற்றை உத்தூளித் தொளிமிளிரும் வெண்மையனே 126,
வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே 135
வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் 150,
செம்பவள வெற்பின் தேசுடையாய் 154,
கண்டங்கரியான் செம்மேனியான் வெண்ணீற்றான் 183,
தோலுந்துகிலும் குழையும் சுருள்தோடும் பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையுமுடைத்தொன்மைக்கோலம் 232
நீண்டகரத்தர் நெறிதரு குஞ்சியர் 342,
செந்தழல்போல் திருமேனித் தேவர்பிரான் 357
முத்துமாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி 434
கேவேடராகிக் கெளிறதுபடுத்து மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும் 2.17-18,
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்தருளியும் 2.27-28
வேலம்புத்தூர் விட்டேறருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 2.29-30,
தர்ப்பணமதனிற் சாந்தம் புத்தூர் விற்பொருவேடற்கீந்த விளைவும் 2.31-32,
நரியைக் குதிரையாக்கிய நன்மையும் 2.36
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று 2.38,
மதுரைப் பெருநன்மா நகரிலிருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும் 2.44-45,
ஆங்கது தன்னில் அடியவட்காகப் பாங்காய் மண்சுமந்தருளிய பரிசும் 2.46-47,
தண்ணீர்ப் பந்தர் சயம்பெறவைத்து நன்னீர்ச் சேவகனாகிய நன்மையும் 2.58-59,
வேடுவனாகி வேண்டுருக் கொண்டு காடது தன்னிற் கரந்த கள்ளமும் 2.64- 65,
ஓரியூரின் உகந்தினி தருளிப்பாரிரும் பாலகனாகிய பரிசும் 2.68-69,
பதஞ்சலிக்கருளிய பரம நாடக 2.138,
இத்திதன்னின் கீழிருமூவர்க் கத்திக்கருளிய அரசு 4.162-163,
ஏனக்குருளைக் கருளினை 4.166,
நஞ்சேயமுதாய் நயந்தாய் 4.173,
புலிமுலைப் புல்வாய்க்கருளினை 4.206
அலைகடல் மீமிசை நடந்தாய் 4.207,
கருங்குருவிக்கன்றருளினை 4.209,
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற்கருளினை 4.212-213,
கொடுங்கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக்கொம்பினையே 123,
அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசைவாரியன் 176,
கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டக் கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி 182,
சந்திரனைத் தேய்த்தருளி தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டெச்சன்
தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து 189,
கொற்றக்குதிரையின்மேல் வந்தருளி 194,
அயன்தலைக் கொண்டு செண்டாடல், காலனைக் காலால் உதைத்தல் 212,
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன்தன்னைப் பணிகொண்ட புண்பாடல் 290,
பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச்சடையான் 311,
தேரை நிறுத்தி மலையெடுத்தான் சிரம் ஈரைந்தும் இற்றவாறுந்தீபற 313,
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண்குணம் செய்த ஈசன் 474.
பரிமேற்கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே 526
நரிகளெல்லாம் பெருங்குதிரையாக்கியவாறன்றே உன்பேரருளே 546,
மதிக்குந்திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்கும் திருவடி 565,
இடக்கும் கருமுருட்டேனப் பின்கானகத்தே நடக்கும் திருவடி 566,
சங்கங்கவர்ந்து வண்சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை 598
திருநாமம் - தேவதேவன் 2.122, தேவர்பிரான் 358
நாடு - தென்பாண்டி நாடு 2.118; 359,
ஊர் - உத்தரகோசமங்கை 2.120; 360,
ஆறு - ஆனந்தம் 2.106; 361,
மலை - முத்தியருளுமலை 2.124; 362
ஊர்தி - வான்புரவி 2.116; 363,
படை - கழுக்கடை 2.110; 364,
முரசு - நாதப்பறை 2.108; 365,
தார் - தாளியறுகுதார் 366,
கழுநீர்மாலை 2.113-114,
கொடி - ஏறாங்கொடி 367,
வேற்றுவிகார விடக்குடம்பு 1.84,
அழிதரும் ஆக்கை 3.118,
அளிதரும் ஆக்கை 3.120,
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்போற்றா ஆக்கை 3.122-123,
ஊண்தலை குரம்பை நாயுடலகம் 3.171- 172,
கள்ளூராக்கை அல்லது அள்ளூராக்கை 3.177,
படிற்றாக்கை 48,
மலமாக்குரம்பை 58,
ஊனார்புழுக்கூடு 59,
முடையார் புழுக்கூடு 60,
செடிசேர் உடலம் 87,
துயர் ஆக்கையின் திண்வலை 143,
விடக்கூன் மிடைந்த சிதலைச் செய்காயம் 145,
புழுக்கணுடைப் புன்குரம்பை 408
இருள்புரியாக்கை 412,
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்புதோல் போர்த்த குப்பாயம் 419,
சீவார்ந்தீ மொய்த்தழுக்கொடு திரியுஞ்சிறுகுடில் 420,
மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக்கூறல் வீறிலிநடைக்கூடம் 421,
அளிபுண்ணகத்துப் புறந்தோல்மூடி அடியேனுடையாக்கை 422
செடியாராக்கை 416,
பொத்தைஊன் சுவர் புழுப் பொதிந்துளுத் தசும்பொழுகிய பொய்க்கூரை 434,
இருள்திணிந் தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் 437,
ஊன்பாவிய உடல் 515
முடைவிடா.. முழுப்புழுக்குரம்பை 537,
வெந்து விழும் உடல் 655
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் 1.26-29.
அறம்பாவம் என்னும் அருங்கயிறு 1.52,
மலஞ்சோரும் ஒன்பது வாயிற்குடில் 1.54
பரமானந்தப்பழங்கடல் 3.66,
இன்பப்பெருஞ்சுழி - பந்தமாக்கரை - இருவினை மாமரம் - அருள்நீர் --சந்தின் வான்சிறை -
வெறிமலர்க்குளவாய் - நிறையகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக்குளம் -
அருச்சனை வயல்- அன்பு வித்து - தொண்ட உழவர் 3.84 - 94,
அருட்பெருந்தீ 3.160
கருணைவான்தேன் 3.180,
மிண்டிய மாயாவாதமென்னும் சண்டமாருதம் 4.54-55.
உலோகாயதனனெனு மொன்திறற் பாம்பின் கலாபேதத்த கடுவிடம் 4.56-57.
அன்பெனும் ஆறு 4.81,
பெரும்பிறவிப் பௌவம் - எவ்வத்தடந்திரை - கனியை நேர் துவர் வாயாரென்னுங்கால் -
காம வான்சுறவு - அஞ்செழுத்தின் புணை - முதலந்தமில்லா மல்லற்கரை 31,
பாவனையிரும்பு கல்மனம் 41,
திணியார் மூங்கிலனையேன் வினை 93,
கருணைவெள்ளம் 95,
வல்வினைக் காடு 123,
வியன் கங்கைப் பொங்கிவருநீர் - மடுவுள் மலைச்சிறு தோணிவடிவின் வெள்ளைக்குருநீர் மதி 130
அடற்கரிபோல் ஐம்புலன்கள் 136,
கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போடிரறப்பென்னும் அறம்பாவம் 242,
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது 401
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளம்- கழற்புணை- இடர்க்கடல்வாய்ச்சுழி - மாதர்த்திரை- காமச்சுறவு 411,
சித்தமெனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த 481,
திணியார் மூங்கிற் சிந்தையேன் 492,
வாழ்வெனும் ஆழி 569,
ஞானவாள் - நாதப்பறை - மானமா - மதிவெண்குடை - நீற்றுக் கவசம் - வானவூர் மாயப்படை 615,
அல்லற்படை 616
நமச்சிவாய வாழ்க 1.1,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை 31,
போற்றியோ நமச்சிவாய.. போற்றி போற்றி 66,
நமச்சிவாய என்னுன்னடி, பணியாப்பேயன் 404,
எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் 433,
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் 555,
நான் இயல்பொடு அஞ்செழுத்தோதித் தப்பிலாது 575
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 1.55,
கள்ளப் புலக்குரம்பை 1.88,
ஐம்புலப்பந்தனை வாளரவு 3.70,
நன்புலன் ஒன்றி 4.83,
இரும்புலன் புலர இசைந்தனை 4.210,
சீரில் ஐம்புலன்கள் 83,
ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் வேருறுவேனை 107,
புலனாலரிப் புண்டலந்தவெறுந் தமியேன் 129,
ஐம்புலன் தீக்கதுவக் கலங்கி 134,
பிறவி ஐவாயரவம் 139
மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்து 388,
ஐம்புலனாய சேறு 439,
ஐவர் கோக்களையும் வென்று 535,
கடக்குந்திறல் ஐவர்கண்டகர் 566.
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே 6,
ஓர் நின்னலால் தேசனேயொர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே 82
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ 457,
கற்றைவார்சடை எம்மண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வந்தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே 546,
தம்பிரானாந் திருவுருவன்றி மற்றோர் தேவரெத்தேவரென்ன அருவராதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே 517,
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என் சித்தத்தாறுய்ந்த வாறன்றே உன்திறம் நினைந்தே 549,
மற்றறி யேன்பிற தெய்வம் 550.
உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யன் 1.33-34,
ஓங்காரத்துட்பொருளை 656
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் 1.2,
ஏகன் அநேகன் 1.5,
வேகங் கெடுத்தாண்ட வேந்தன் 1.6,
புறத்தார்க்குச் சேயோன் 1.8,
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் 1.7,
கரங்குவிவார் உள்மகிழும் கோன் 1.9,
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் 1.10,
நேயத்தேநின்ற நிமலன் 1.13,
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் 1.14,
ஆராத இன்பம் அருளும் மலை 1.15,
உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யன் 1.33-34,
வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன் 1.35
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடர் 1.38,
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் 1.41,
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் 1.45,
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் 1.49,
தாயிற் சிறந்த தயாவான தத்துவன் 1.61,
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் 1.64,
ஓராதாருள்ளத்தொளிக்கு மொளியான் 1.68,
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 1.70,
அன்பருக்கன்பன் 1.71,
யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியன் 1.71-72,
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 1.73,
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன் 1.77
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லான் 1.88,
அல்லற் பிறவியறுப்பான் 1.91,
அரியோடு பிரமற் களவறி யொண்ணான் 2.35,
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் தானேயாகிய தயாபரன் 2.95-96,
மீண்டுவாராவழியருள் புரிபவன் 2.117,
எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரிசதனால் ஆண்டுகொண்டருளி 2.125-126
நாடொறும் அருக்கனிற் சோதியமைத்தோன் 3.19-20,
திருத்தகுமதியில் தண்மை வைத்தோன் 3.20-21,
திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன் 3.21-22,
பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் 3.32-23,
மேதகு காலின் ஊக்கம் கண்டோன் 3.23-24,
நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் 3.24-25,
வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் 3.25-26,
சொற்பதங் கடந்ததொல்லோன் 3.40,
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் 3.41,
பத்திவலையிற் படுவோன் 3.42,
அருள் நனிசுரக்கும் அமுது 3.59,
உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் 3.112,
தொழுதகை துன்பம் துடைப்பாய் 4.131
அழிவிலா ஆனந்தவாரி 4.132
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு மிறைவன் 4.164-165
அருவமும் உருவமும் ஆனாய் 4.193,
துரியமு மிறந்தசுடர் 4.195,
பேராயிரமுடைப் பெம்மான் 4.200,
புவனம் நீர் தீக்காற்றிய மானன்வான மிருசுடர்க் கடவுள் 67,
எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் - எல்லாவுயிர்க்கும் ஈறாய் ஈறின்மையானாய் -
ஐம்புலன்கள் புணர்கிலாப் ... புணர்க்கையன் 73,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன் 163,
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளான் 181,
சேர்ந்தறியாக் கையான் 187,
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யை 206,
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் 216,
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன் 223,
பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடல் 249,
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் 257,
தம் பெருமை தானறியாத் தன்மையன் 273,
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் 351,
அருள்நிதி தரவரும் ஆனந்தமாலை 369,
எல்லா உயிர்கட்கும் உயிர் 391,
தீதிலா நன்மைத் திருவருட் குன்று 396,
பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா இன்பமாகடல் 490
பொருளுடைக் கலையே 539,
முடிவில்லா ஓத்தானே பொருளானே 553,
குணங்களுங் குறிகளுமிலாக் குணக்கடல் 574
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 218,
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்து 317.
துன்னிய கல்வி 2.5,
கல்வியென்னும் பல்கடல் 4.38,
பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்கு மனத்தடியேன் 408
நல்வேலன் 197,
குமரன் 311.
சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேன் 479
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் 1.32,
நலந்தா னிலாத சிறியேற்கு... நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி 1.58-59,
நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார் தருபொதுவினில் வருகென 2.126-127,
கண்ணால் யானுங்கண்டேன் 3.58,
இன்றெனக் கெளிவந்தருளி அழிதரும் ஆக்கை யொழியச் செய்த வொண்பொருள்
இன்றெனக் கெளிவந்திருந்தனன் 3.117-119,
ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை என்னையும் இருப்பதாக்கினன்;
என்னிற் கருணை வான்தேன் கலக்க அருளொடு பரா அமுதாக்கினன் 3.178- 181,
என்னையு மொருவனாக்கி யிருங்கழல் சென்னியில் வைத்த சேவகன் 4.129-130
ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டாதன வெல்லாங் காட்டிப்
பின்னும் கேளாதன வெல்லாங் கேட்பித்தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் 32
தொண்டனேற்குள்ளவா வந்து தோன்றினாய் 46,
ஈறிலாதநீ எளியை யாகிவந்தொளிசெய் மானுடமாக நோக்கியுங் கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் 95,
சிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக் கணிந்தென் உளம்புகுந்த 239,
content incomplete ...