logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருக்கோவையார் பேராசிரியர் உரையும் பழைய உரையும்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

என வழங்கும்

திருச்சிற்றம்பலக்கோவையார்

மூலமும் பேராசிரியர் உரையும் பழைய உரையும்

 

 

விநாயக வணக்கம்
            ------------------
    எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக் 
    கண்ணிறைந்து நின் றருளுங் கற்பகமே ! -நண்ணியசீர்த் 
    தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற 
    நானூறும் என்மனத்தே நல்கு.     1

            நூற் சிறப்பு*
            -----------
    ஆரணங் காணென்பர் அந்தணர்;
        யோகியர் ஆகமத்தின்
    காரணங் காணென்பர்; காமுகர்
        காமநன் னூலதென்பர்; 
    ஏரணங் காணென்பர் எண்ணர்
        எழுத்தென்பர் இன்புலவோர்; 
    சீரணங் காயசிற் றம்பலக்
        கோவையைச் செப்பிடினே.     2

*இச்செய்யுட்கள் இரண்டும் பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டன என்பர்.

 1. எண் - புகழ். கற்பகம் - கற்பக விநாயகர், நானூறு - நானூறு செய்யுட்கள்

2. ஆரணம் - வேதம், யோகியர்- சிவயோகியர், ஏரணம்- தருக்கம், எண்ணர் - தருக்க நூலார்,
   எழுத்து - இலக்கண நூல், அணங்கு - தெய்வத் தன்மை காண் மூன்றும், அசைகள்.

        அதிகார வரம்புகள்
        -----------------

    இயற்கை பாங்க னிடந்தலை மதியுட 
    னிருவரு முளவழி யவன்வர வுணர்தன் 
    முன்னுற வுணர்தல் குறையுற வுணர்த 
    னன்னிலை நாண நடுங்க நாடன் 
    மடல்குறை நயப்பு வழிச்சேட் படுத்த 
    லிடமிகு பகற்குறி யிரவுக் குறியோ 
    டொருவழித் தணத்த லுடன்கொண் டேகல் 
    வரைவு முடுக்கம் வரை பொருட் பிரிதன் 
    மணஞ்சிறப் போதல் வார் புவி காவ 
    லிணங்கலர்ப் பிரிதல் வேந்தற் குற்றுழி 
    பொருள்வயிற் பிரிதல் பரத்தையிற் பிரிதலென் 
    றருள்வயிற் சிறந்த வகத்திணை மருங்கி 
    னிருளறு நிகழ்ச்சி யிவையென மொழிப.

    இதன் பொருள் : இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல், 
இருவருமுளவழி யவன் வரவுணர்தல், முன்னுறவுணர்தல்,  குறையுறவுணர்தல், நாணநாட்டம், 
நடுங்க நாட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல், 
உடன் போக்கு, வரைவு முடுக்கம், வரை பொருட்பிரிதல், மணஞ் சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல், 
காவற்பிரிதல், பகை தணிவினைப் பிரிதல், வேந்தற் குற்றுழிப்பிரிதல், பொருள் வயிற் பிரிதல் , 
பரத்தையிற்பிரிதல் என விவ்விருபத்தைந்தும் இந்நூற்குக் கிளவிக் கொத்தெனப்படு 
மதிகாரங்களாமென்று கூறுவர் அகத்திணை யிலக்கண* முணர்ந்தோர் என்றவாறு. அவற்றுள்,

* அகத்திணை இலக்கணம் - இன்பமாகிய ஒழுக்கத்தின் இலக்கணம். அகம்-இன்பம்.  திணை- ஒழுக்கம், 
ஒத்த அன்பினராகிய ஒரு தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து ,அக்கூட்டத்தின் 
பின்பு அவ்விருவராலும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் 
எப்போதும் அகத்துணர்வாலே அறியப்படும் இன்பம் அகம் எனப்பட்டது. இன்பம் பற்றி அகத்தே நிகழும் 
ஒழுக்கத்தை அகம் என்றது ஆகுபெயர்.

            1. இயற்கைப் புணர்ச்சி *
            -----------------------

*இதன் பேரின்பக்கிளவி, "இயற்கைப் புணர்ச்சித் துறையீரொன்பதுஞ் சத்திநிபாத மொத்திடுங் காலத்(து), 
உத்தம சற்குரு தரிசனமாகும்"  என்பதாம் (திருக்கோவையார் உண்மை ).

    இயற்கைப் புணர்ச்சி என்பது பொருளதிகாரத்திற்** கூறப் பட்ட தலைமகனும், தலைமகளும், 
அவ்வாறொரு பொழிலிடத்தெதிர்ப்பட்டுக் தெய்வமிடை நிற்பப் பான்மை வழியோடி ஒராவிற் கிருகோடு 
தோன்றினாற்போலத் தம்முளொத்த வன்பினராய் அவ்விருவரொத்தார் தம்முட்டாமே கூடுங் கூட்டம். 
அது நிகழுமாறு-

**பொருளதிகாரம் இங்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும்.

    காட்சி யையந் தெளித னயப்பே 
    யுட்கோ டெய்வந் துணிதல்கைக் கிளையொடு
    கலவி யுரைத்த லிருவயி னொத்தல்
    கிளவி வேட்ட னலம்புனைந் துரைத்தல் 
    பிரிவுணர்த் தல்லொடு பருவர லறித
    லருட்குண முரைத்த லணிமை கூற
    லாடிடத் துய்த்த லருமை யறிதல் 
    பாங்கியை யறித லெனவீ ரொன்பா
    னீங்கா வியற்கை நெறியென மொழிப.

    இதன் பொருள்: காட்சி, ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், புணர்ச்சி துணிதல், 
கலவியுரைத்தல், இருவயினொத்தல், கிளவிவேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பருவரலறிதல், 
அருட்குணமுரைத்தல், இடமணித்துக்கூறி வற்புறுத்தல், ஆடிடத்துய்த்தல்,  அருமையறிதல், பாங்கியையறிதல், 
எனவிவை பதினெட்டும் இயற்கைப் புணர்ச்சியாம் எ-று அவற்றுள் -

            1. காட்சி *
            ---------
* இதன்  பேரின்பப் பொருள் "குருவின் திருமேனி காண்டல்'' என்பதாம்.  
    
காட்சி : என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொரு வியப்பென்னென்றல் . 
அதற்குச் செய்யுள்

    திருவளர் தாமரை சீர்வளர் 
        காவிக ளீசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
        காந்தள் கொண் டோங்கு தெய்வ
    மருவளர் மாலையொர் வல்லியி 
        னொல்கி யனநடைவாய்ந்
    துருவளர் காமன்றன் வென்றிக்
        கொடிபோன் றொளிர்கின்றதே
     மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
    கதிர்வேலவன் கண்ணுற்றது**

**இஃது அகவின்பக் கொளு ஆகும். இதுபோல் ஒவ்வொரு செய்யுளின் கீழும் அகவின்பக் கொளு 
தரப்பெற்றுள்ளது;  பழைய உரையில் செய்யுளுக்கு முன் காணப் பெறுகின்றது.

திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக்கொண்டா ரோவெனின்,

    அறிவோ னறிவில தெனவிரண் டாகு 
    நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த 
    மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ 
    வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ 
    வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந் 
    
    தோற்ற நிலை யிறுதி கட்டுவீ டென்னு                 (ஐயம்: சுட்டு?  கட்டு?)
    மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு 
    வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய் 
    யிருவினைப் பயன் றுய்த்து மும்மல னொரீஇப் 
    பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு 
    
    மேனைய தத்தங் குணநிலை யுணரவு
    நிலைஇ யவ்வயி னிமித்த மாகி 
    யலகு தவிர்த்த பலவகை யண்டமு
    மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
    தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு
    நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற் 

    சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப் 
    போக்கும் வரவும் புணர்வு மின்றி 
    யாக்கமுங் கேடு மாதியு மந்தமு 
    நடுவு மிகந்து ஞானத் திரளா 
    யடியு முடியு மளவா தயர்ந்து 

    நெடியோ னான்முக னான்மறை போற்ற 
    வெரிசுடர்க் கனலியி னீங்காது விரிசுடர் 
    வெப்பமும் விளக்கமு மொப்பவோர் பொழுதினிற் 
    றுப்புற வியற்றுவ தெனவெப் பொருளுங் 
    காண்டலு மியற்றுலு மியல்பா மாண்டுடன் 

    றன்னினீங் காது தானவின்று விளங்கிய 
    வெண்ணெண் சுலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
    பண்ணமை தேமொழிப் பார்ப்பதி காண
    வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட 
    மையில் வான்கலை மெய்யுடன் பொருந்தித் 

    தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி 
    யெல்லையி லானந்த நடம்புரி கின்ற 
    பரம காரணன் றிருவரு ளதனால்
    திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர் 
    ஐம்பொறி கையிகந் தறிவா யறியார் 

    செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
    அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென 
    இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர் : 
    ஆங்கவ் விரண்டனுள்,
    ஆகம நூல் வழியி னுதலிய ஞான

    யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி 
    துலக நூல் வழியி நுதலிய பொருளெனு 
    மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
    புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி 
    துலையா மரபி னுரைக்கற் பாற்று.

    அஃதியாதோவெனின் எழுவாய்க்கிடந்த பாட்டின் பொருளுரைக்கவே விளங்கும்.
அஃதேல், இப்பாட்டென் னுதலிற்றோவெனின் அறம் பொருள் இன்பம் வீடென்னு  நான்கு பொருளினும் 
இன்பத்தை நுதலி இத்திருக்கோவையின் கணுரைக்கின்ற களவியற் பொருளினது பொழிப்பிலக்கணத்தையும்
அதற்குறுப்பாகிய கைக்கிளைத்* திணையின்கண் முதற்கிடந்த காட்சி யென்னும் 
ஒருதலைக்காம**த்தினையும், உடன்னிலைச் சிலேடையாக வுணர்த்து தனுதலிற்று.

*கைக்கிளை ஒருமங்கு நிகழும் கேண்மை, **ஒருதலைக்காமம்- ஓரிடத்துள்ள காமம்.         (ஐயம்: ஒருமங்கு? ஒருமருங்கு?)

    திருவளர்தாமரை போன்றொளிர்கின்றதே. 
        மதிவாணுதல் கண்ணுற்றது.

    இதன் பொருள் : திருவளர் தாமரை - திருமளருத் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் -         (ஐயம்: திருமளருத் ? திருவளருத்?)
அழகு வளரு நீலப்பூக்களையும்;  ஈசர் தில்லை குருவளர் பூ குமிழ்-ஈசர் தில்லை வரைப்பின் கணுண்டாகிய 
பூங்குமிழினது நிறம் வளரும் பூவினையும் கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு; - 
செவ்விக் காந்தட் பூக்களையும் உறுப்பாகக் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலை ஓர் வல்லியின் ஒல்கி - 
மேம் பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒரு வல்லி போல நுடங்கி அன நடை, வாய்ந்து- அன்னத்தினடை 
போல நடை வாய்ந்து; உருவளர் காமன் தன்வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது-வடிவு 
வளருங் காமனது வெற்றிக் கொடி போன்று  விளங்கா நின்றது; என்ன வியப்போ ! எ-று.

    திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் எ-று. திருமகடங்குத் தாமரையெனினு 
மமையும். பூங்குமிழென்பது முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்றதோ ராகுபெயர். 
ஈசர் தில்லை யென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால் 
நில மயக்கங் கூறியவாறாயிற்று.

    ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்குமின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே 
துய்ப்பரென்பது போதரும்,  போதர இம்மையின் பத்திற்குத் தில்லையே காரண மென்பது கூறியவாறாயிற்று. 
ஆகவே ஈசர்தில்லை, யென்றதனான் மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும் .
செய்யுளாதலாற் செவ்வெண்ணின் றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலை யெனவியையும். 
தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றான் இயன்ற பிறமாலையோடு 
இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு 
முதல் வினையோடு முடிந்தது. உருவளர் காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத் தோற்று 
உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை, அனநடைவாய்ந் தென்பதற்கு 
அவ்வவ்வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.

    திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை. நோக்கமென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோ 
வெனின், யாவனொருவன் யாதொருபொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற 
விருப்பத்தோடே கூடியவழகு. அதன் மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் 
ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால் திருவென்றது - அழகுக்கே பெயராயிற்று. 
அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோ வெனின், உண்டு;
கோயிலைத் திருக்கோயிலென்றும்; கோயில் வாயிலைத் திருவாயிலென்றும், அலகைத் திருவலகென்றும், 
பாதுகையைத் திருவடி நிலையென்றும் வழங்கும் இத்தொடக்கத்தன வெல்லாந் திருமகளை நோக்கி 
யெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. 
அதனாற் றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே அல்லதூஉந் தான் கண்ட வடிவின் பெருமையைப் 
பாராட்டு வானாகலான், ஒருத்தியிருந்த தவிசை  இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். 
ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானமெனக் கொள்க.

    வளரென்பதற்கு வளருமென் றும்மைகொடுத்து உரைவாய்பாடு காட்டிய தெற்றிற்கு, மேலாலோ 
வளரக்கடவ தென்பது கடா. அதற்கு விடை, வளர்ந்த தாமரை வளரா நின்ற தாமரையென்று கழிகாலத்தையும் 
நிகழ்காலத்தையுங்கூறாது, மேல் வருங் காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக்
கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழுதுள்ளதனைக்  கூறிற்றாம் . ஆகலான் 
வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார்.
 ஆயின் உம்மைச் சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை?  இது செய்யுட் சொல்லாதலால் 
வந்தது. செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும், 
யாறொழுகும், மலை நிற்கும் என்றற்றொடக்கத் தனவற்றானறிக. அன்றியும் "முன்னிலைக் காலமுந் தோன்று 
மியற்கை - யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து - மெய்ந் நிலைப் பொதுச் சொற் கிளத்தல்வேண்டும்'' 
(தொல் - சொல் - வினை, 43) என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும் 
பொதுவாய் நிற்குமென்றே யறிக.

    இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்த தென்னை , இதனை
யுவமையாக்கக் குறையென்னை யெனின்,  திருமகளாலே தாமரையுயர்ந்த தாம்,  தாமரையினது சிறப்புக் 
கூறிற்றில்லையாம். என்னை எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று 
பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியே யிதனிலிருந்தாளல்லது
தன்னாலே யிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந்தாளல்லள் .  ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை. 
அங்ஙனம்  பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால் 
விரும்பப்படுந்தன்மை நோக்கமென்பது பெற்றாம்.

    இனித் திருவளர் தாமரை சீர்வளர்காவி யென்றன போல இதனையுங் குருவளர் குமிழென்னாது 
பூங்குமிழென்ற தெற்றிற்கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவை நோக்கி யன்று 
ஈண்டுச் செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகு பெயரை நோக்கியுமென வறிக. அஃதென் போலவெனின், 
"தளி பெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று-முளிமுதற் பொதுளிய முட்புறப்பிடவமும்” 
(கலித்தொகை, முல்லை, 1 ) என்பது போல. கோங்கென இதனையொழிந்த நான்கிற்குமடை கொடுத்து 
இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுத னோக்கி, என்னை, பாலைக்கு நிலமின்றாதலான், ஆயின் 
மற்றைய நிலம் போலப் பாலைக்கு நிலமின்மையாற் கூறினாராகின்றார்.  மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய 
முலைக்குவமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக்  கடவதன்றோவெனின்,  அடைகொடுப்பிற் 
பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம்.ஆதலான் இதற்கடை கொடாமையே  முலைக்கேற்றத்தை 
விளக்கி நின்றது. அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு நாயகராகிய 
நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க. 

    இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. 
அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்க ணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடி போன்று 
விளங்கி அன்னநடைத் தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப் பூக்களாற் 
றொடுக்கப்பட்டோங்குந் தெய்வமரு வளர் மாலையின் வரலாறு விரித்துரைக்கப்படுகின்றதென்பது; 
என்றது என் சொல்லியவாறோவெனின், தாமரை மருத நிலத்துப் பூவாதலான் மருதமும், நெய்தல் 
நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லை நிலத்துப் பூவாதலான் முல்லையும், 
கோங்கு பாலை நிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் 
குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். 

    ஆகலாற் றாமெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமை கூறாது தில்லைநகரின் பெருமை கூறினார். 
நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்தலென்னுந் 
தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார்.  என்னை பைங்காந்தளென்று 
குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான் அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக் கோவையின்கண் 
முன்னர்க் "குறப்பாவை நின்குழல் வேங்கை யம்போதொ டுகோங்கம்விராய்” என்னும் ( திருக்கோவை 205)
பாட்டினுட்  கண்டுகொள்க. அல்லதூஉஞ் ''சினையிற்கூறு முதலறிகிளவி" (தொல். வேற்றுமை மயங்கியல், 31) என்னு 
மாகுபெயரானுமாம், 

    ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற் கெனின், ஓரிடத்தொரு 
கலியாண முண்டானால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத்துக் கூடி 
அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக் குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன.
 உருவளர் காமன்றன் வென்றிக்கொடி யென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச் 
சுட்டினார். யாருங் கேட்போரின்றித்  தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கக்தையே யொத்த 
களவொழுக்கத்தையே சுட்டினார். ஈசர் தில்லையென்றமையின், வீடு பேற்றின் பயத்ததெனச் சுட்டினார்.

    களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்
பொருணுதலிக் கந்தருவரொழுக்கத் தோடொத்துக் காமனது வென்றிக்கொடி போன்று ஐந்திணையின்கண்ணும்         (திருத்: ஜந்து/ஐந்து)
வென்று விளங்கா நின்ற கடிமலர் மாலையின் வரலாறு இத்திருக்கோவையின் கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. 
களவொழுக்கத்தினை ஒரு மாலையாக வுட்கொண்டு உருவக வாய்பாட்டானுணர்த்தினா ரென்பது. இன்பத்தை 
நுதலிய தென்றாராயினும், இன்பத் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையு நுதலிற்று. 

    அவற்றுள் வீடு நுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலியவாறென்னையெனின், 
ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாரு மில்லை 
இழிந்தாரல்லது;  இவளுமன்னள், இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான் இவர் 
கண்ணே அம்மூன்றுமுளவாம், இவ்வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவுவிடுத்த விழுமியோருள்ளமும் 
விழைவின் கட்டாழுமாதலின், காமனது வென்றிக்கொடி யெனவே வென்றி கொள்ளா நின்ற தென்றானென்பது 
முதற்கட்கிடந்த இப்பாட்டுக் காட்சியின் மேற்று, இப்பாட்டால் வேட்கை இவன்க ணுண்டாயவாறென்னை 
பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக் கொடி யென்றமையிற் பெற்றாம்.

    உவகை மிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம் ; 
அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக் குறி; உவப்பித் தலி னுவகையாயிற்று 
உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடி 
யோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையா மாறு. "பூப்புனைமாலையு மாலைபுனை மாதருந்- 
தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங்- கோச்சேரன் பெயருங் கோதையென்றாகும்” ( திவாகரம். 11ஆவது) 
என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் ,
பாதாதி கேசமாதல் வருணிக்க வேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப்பட்டது. 
என்னை திருவளர் தாமரை யென்று முகமுதலாக வெடுத்துக்கொண்டு அன்ன நடையென்று பாதத்திலே முடித்தலான். 
ஆயின், இதில் நடை கண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவாமெனின் இவன் நடை கண்டானல்லன். 
இம்மாலை நடக்குமாயின் அன்ன நடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின்வினை யாகலிற் 
சினை வினைப் பாற்பட்டு முதல் வினையோடு முடிந்ததென்றது ; அன்னத்திற்குச்சினை கால், 
காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை.

    அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற்  பயன் மகிழ்தல் என்னை "சொல்லெதிர் பெறாஅன்  சொல்லி யின்புறுதல் 
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல். பொருள். அகம், 50)  என்று அகத்திணையியற் சூத்திரத்திற் 
சொன்னாராகலினென்பது. அஃதேல் உவகையென்னு மெய்ப்பாட்டானே மகிழ்ச்சிபெற்றாம்- இனி யிச்சொற்கள் 
விசேடித்து மகிழ்வித்தவா றென்னையெனின் நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து  தான்  வேட்டபொருள்வயிற்றன் 
குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்;  நிகழுந்தோறு  மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், 
ஒருவன் தான் வழிபடுந் தெய்வத்தைப்பரவிய செய்யுட்களை யோதி யுணர்ந்திருந்தா னெனினும் அவற்றான் 
அத்தெய்வத்தை வழிபடும் போழ்து கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும்; 

    அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது 
துன்பமீதூரக்கலுழக் காண்டும்; இவைபோல வென்பது.  ஆகலின் நினைப்பின்வழிய துரையாயினும் நினைப்பின் 
உரைப்பயன் விசேடமுடைத் தென்பது. நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து சொன்னிகழு  மென்பதனை இக்கோவையின் 
எண்வகை மெய்ப்பாட்டின் * கண்ணுந் தந்துரைத்துக்கொள்க. 

* எண்வகை மெய்ப்பாடு - நகை,அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என்பன.

    பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன் வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. 
மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின்கட் டோன்றிய விகாரத்தின் விளைவு. 
எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான் புகின் 
வரம்பின்றிப் பெருகு மென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: பிறையை ஒத்து ஒளி சிறந்த நெற்றியினையுடைய 
இளைய வஞ்சிக் கொம்பை நிகரானவளை ஒளிசிறந்த வேலினையுடையவன் கண்டது.

    செய்யுள்: அழகுமிக்க தாமரைப் பூவையும் சிறப்புடைய நீலப் பூவையும் சிவனுடைய சிதம்பரத்தில், 
நிறமிகுந்து பொலிவினையுடைத்தாகிய குமிழம் பூவையும் கோங்கரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும்
இப்புட்பங்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப்பூவை முகமாகவும், செங்கழுநீர்ப்பூக்களைக் 
கண்களாகவும் குமிழ மலரை நாசியாகவும், கோங்கரும்புகளை முலைகளாகவும், செவ்விக்காந்தட் பூவைக்
கரங்களாகவும், இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனைமிக்க மாலை ஒரு வல்லி சாதகக்
கொடிபோல் நுடங்கி அன்னத்தின் நடை போல நடையும் வாய்ந்து வடிவு மிகுந்த மாரவேளின்
வெற்றிக் கொடியை ஒத்து விளங்காநின்றது, என்ன அதிசயமே.

            2. ஐயம்  *
            -------

*பேரின்பப் பொருள்: 'திருமேனியை வியந்து ஐயமுறுதல்'

    ஐயம் என்பது கண்ணுற்றபின்னர் இங்ஙனந்தோன்றா  நின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ 
அன்றி மக்களுள்ளாள் கொல்லோவென் றையுறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

    போதோ விசும்போ புனலோ
        பணிக ளதுபதியோ 
    யாதோ வறிகுவ தேது
        மரிதி யமன்விடுத்த 
    தூதோ வனங்கன் றுணையோ
        விணையிலி தொல்லைத்தில்லை 
    மாதோ மடமயி லோவென
        நின்றவர் வாழ்பதியே

    தெரியவரியதோர் தெய்வமென்ன 
    அருவரைநாடன் ஐயுற்றது                (திருத்: ஜயுற்றது/ ஐயுற்றது)

    இதன் பொருள்: யமன் விடுத்த தூதோ -யமன் விடுக்கப்பட்ட தூதோ; அனங்கன் துணையோ - 
வசித்தற்கரியாரை வசித்தற்கு அனங்கற்குண்டாயிற்றோர் துணையோ இணையிலி  - தொல்லைத்தில்லை 
மாதோ- ஒப்பில்லாதானது பழையதாகிய இத்தில்லைக்கண் வாழ்வாரோர் மாதரோ; மடமயிலோ என நின்றவர் 
வாழ்பதி - மடப்பத்தையுடைய மயிலோ வென்று சொல்லும் வண்ணம் நின்றவரது வாழ்பதி; 
போதோ -தாமரைப் பூவோ; விசும்போ -ஆகாயமோ; புனலோ - நீரோ; பணிகளது பதியோ - பாம்புகளது பதியாகிய 
நாகருலகமோ; யாதோ ஏதும் அறிகுவது; அரிது - யாதோ சிறிதுந் துணிதலரிது எ-று.

    யமன் தூதும், அனங்கன்றுணையும், மடமயிலும் ஐயநிலை யுவமைக்கணுவமையாய் நின்றன. 
தில்லைமாது; உவமிக்கப் படும் பொருள் ஐய நிகழ்ந்தது திருமகள் முதலாகிய தெய்வமோ மக்களுள்ளாளோ 
வென்றென்க. மக்களுள்ளாளாதல் சிறுபான்மையாகலிற் கூறிற்றிலர்.

    தில்லைமாதோ வென்பதற்குத் தில்லைக்கண் வாழ்வாரோர் மானுட மாதரோ வென்றுரைப்பாருமுளர். 
தில்லை மானுடமாது மகளிர்க்குவமையாகப் புணர்க்கப்படுவனவற்றி னொன்றன்மையால் உவமையாகாது. 
உவமிக்கப்படும் பொருளெனின் ,ஐயமின்றித் துணிவாம். அதனால் தில்லை மாதோவென்பது மானுடம்              (திருத்:ஜய/ஐய)
தெய்வமென்னு வேறுபாடு கருதாது மகளிரென்னும் பொதுமை பற்றி நின்றது. தில்லை நின்றவரெனக் 
கூட்டினுமமையும்.

    தெய்வமென்ன- தெய்வமோ அல்லளோவென. மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த மருட்கை . 
என்னை, "புதுமை பெருமை , சிறுமை யாக்கமொடு - மதிமைசாலா மருட்கை நான்கே (தொல், பொருள்,     
மெய்ப்பாட்டியல் 7) என்றாராகலின். ஈண்டு  வனப்பினது பெருமையை வியந்தானென்பது.         (திருத்:பட்டியல்/பாட்டியல்)
அவ்வியப்பு மருட்கைப் பாற்படும்,     பயன்: ஐயந்தீர்தல்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: (அறிவதற் கருமையானதொரு) தெய்வமென்று 
(அரிய மலை நாட்டையுடைவன் ) சந்தேகித்தது.

    செய்யுள்:  பூமியிலுள்ள இளைஞரை யெல்லாம் கொல்ல வேண்டிக் காலன் வரவிட்ட தூதோ? 
வசித்தற்கரியாரை வசிக்க அனங்கற்கு உண்டாயிற்றோர் துணையோ? தன்னை நிகரில்லாத 
திருவம்பலவாணனுடைய சிதம்பரத்தில் வாழும் மாதரோ? மடப்பத்தையுடைய மயிலோ?  என்று யாம்
சொல்லும்படி - நின்ற இவர் வாழுமிடம், தாமரைப் பூவோ ஆகாயமோ நீரோ பாம்புகளின் பதியாகிய 
நாகருலகமோ இன்னவிடம் என்று அறிதற்குச் சிறிதும் அறியாதிருந்தது.**

** இச்செய்யுளின் பொருள் ஏட்டில் மிகவும் சிதைந்துள்ளது; கிடைத்த பகுதி, பேராசிரியருரையின் 
துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது என்று பழைய உரைப்பதிப்பிலுள்ளது.

            3. தெளிதல்*
            ------------
*பேரின்பப் பொருள்: " பார்வை போலும் வடிவென்றறிந்தது"

    தெளிதல் என்பது ஐயுற்ற பின்னர் அவயவ மியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று 
தெளியா நிற்றல், அதற்குச் செய்யுள்

    பாயும் விடையரன் றில்லையன் 
        னாள்படைக் கண்ணிமைக்குந்
    தோயு நிலத்தடி தூமலர் 
        வாடுந் துயரமெய்தி
    ஆயு மனனே யணங்கல்ல 
        ளம்மா முலைசுமந்து
    தேயு மருங்குற் பெரும்பணைத் 
        தோளிச் சிறுநுதலே

    அணங்கல்லளென் றயில்வேலவன் 
    குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.

    இதன் பொருள்: பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்து செல்லும் விடையையுடைய 
அரனது தில்லையை யொப்பாளுடைய;   படைகண் இமைக்கும்- படைபோலுங் கண்கள் இமையா நின்றன; 
நிலத்து அடிதோயும் - நிலத்தின் கண்அடி தீண்டா நின்றன;  தூமலர் வாடும் - தூய மலர்கள் வாடா நின்றன; 
ஆதலின்; துயரம் எய்தி ஆயும் மனனே- துயரத்தை யெய்தி ஆராயும் மனனே; அம்மா முலை சுமந்து - 
அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயா நின்ற மருங்குலையும்; 
பணைபெருந்தோள் - பணைபோலும் பெரிய தோள்களையுமுடைய. இச்சிறு நுதல் அணங்கு அல்லள் -
இச்சிறு நுதல் தெய்வமல்லள் எ-று.

    துயரமெய்தி யாயுமனனே யென்றதனால், தெளிதல் கூறப்பட்டதாம். மெய்ப்பாடு மருட்கையினீங்கிய 
பெருமிதம் என்னை, கல்வி தறுகணிசைமை கொடையெனச் - சொல்லப்பட்ட பெருமித நான்கே' 
(தொல், பொருள், மெய்ப்பாட்டியல், 9) என்றாராகலின் தெளிதலுங் கல்வியின் பாற்படும், பயன்: தெளிதல். 

    அவ்வகை தெய்வங்கொல்லோவென் றையுற்று நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள்
மக்களுள்ளாளெனத் துணிந்தானென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் இனையன குறியே 
வேற்றுமையில்லை யென்பது துணிவு.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : தெய்வமல்லள் என்று கூரிய வேலினை உடையவன்
 அவயவங்களை  ஆராய்ந்து கருதிச் சொன்னது.

    செய்யுள்: பாய்ந்து செல்லுகின்ற இடபத்தை உடைய  சிவனின் சிதம்பரத்தை நிகரானவள் வேல் போலும் 
கண் இமையா நின்றது; பாதங்களும் பூமியிற் பொருந்தா நின்றன; செவ்விப்புட்பங்களும் வாடா நின்றன; 
வருத்தமுற்று ஆராய்கின்ற மனமே! தெய்வமல்லள் காண்: அழகிய பாரதனங்களைச் சுமந்து தேயாநின்ற 
இடையினையும்: பெருத்து வளர்ந்த வேயினை நிகர்த்த தோளினையும் உடைய இந்தச் சிறு நெற்றியினை
உடையவள் தெய்வமல்லள் காண் .

            4. நயப்பு*
            ---------
* பேரின்பப் பொருள்; "திருமேனியாற் பயன் பெறலா மென்றறிந்தது"

    நயப்பு என்பது தெய்வமல்லளென்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாளென்று நயந்து 
இடையில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி இடையுண்டென்று சென்றெய்த 
நினையாநிற்றல், அதற்குச் செய்யுள் :

    அகல்கின்ற வல்குற் றடமது 
        கொங்கை யவையவநீ
    புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
        யிடையடை யார்புரங்கள் 
    இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
        யீசனெம் மானெதிர்ந்த
    பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ 
        னம்மன்ன பல்வளைக்கே

    வண்டமர் புரிகுழ லொண்டொடி மடந்தையை 
    நயந்த அண்ணல் வியந்துள் ளியது

    இதன்பொருள் : அகல்கின்ற அல்குல் தடம் அது-அகலாநின்ற வல்குலாகிய் தடம் அது: 
கொங்கை அவை-முலை அவை ; நெஞ்சு அவம் நீ புகல்கின்றது என்னை- நெஞ்சே காரணமின்றி நீ 
சொல்லுகின்றதென்; அடையார் புரங்கள் இகல் குன்றவில்லில் செற்றோன்-அடையாதார் புரங்களது 
இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை ஈசன் - தில்லைக்கணுளனாகிய வீசன்; 
எம்மான்-எம்முடைய விறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன்-மாறு பட்ட ஆதித்தனது 
பெருமைகுன்றப் பல்லை யுகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு - அவனது 
திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று

    தடம்-உயர்ந்தவிடம், அல் குற்றடமது கொங்கை யவை என்புழி அல்குற்பெருமையானும் 
முலைப்பெருமை யானும் இடையுண்டு என்றவாறன்று,  அல்குலும் முலையுமுண்மையான் இடையுண்டு 
என்றவாறு: அல்குற்றடமது வென்றும்  முலையவையென்றும் பெருமைகூறியது அவை விளங்கித் 
தோன்றுதனோக்கி, இகல் குன்ற வில்லிற் செற்றோ னென்பதற்கு இகல் குறைய வில்லாற் செற்றோனெனினும் 
அமையும். நயந்த அண்ணல் - மக்களுள்ளாளென்று துணிதலால் நயந்த அண்ணல், உள்ளியது-கூட்டத்தை 
நினைந்தது. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை வியந்துரைத்தலின் பயன்: ஐயந்தீர்ந்து மகிழ்தல்.

    இந்நான்கு பாட்டும் ஒருவருள்ளக் கருத்தை யொருவரறியாத வொருதலைக் காமமாதலிற் 
கைக்கிளைப்பால, அகத்திணையின்கட் கைக்கிளை வருதல் திணை மயக்காம். பிறவெனின் கைக்கிளை 
முதற் பெருந்திணையிறுவாயெழு திணையினுள்ளுங் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச்சார்ந்த
புறமாயினும் கிளவிக் கோவையின் எடுத்துக்கோடற்கட் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமை 
நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை* தழுவுதல் சிறப்பின்மையினீக்கினார். இது நலம் பாராட்டல்.

*பெருந்திணை-பொருந்தாக் காமம்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வண்டுகள் ஆர்க்கின்ற நெறித்த கூந்தலினையும் அழகிய 
வளைகளையுமுடைய நாயகியை விரும்பி நாயகன் அதிசயப்பட்டு நின்றது.

    செய்யுள்: அகலா நின்ற அல்குலின் பெருமை இருந்தபடி அது.  தனங்களும் அங்ஙனே கதித்திருந்தன; 
நெஞ்சமே! ஒரு காரணமு மின்றியே நீ சொல்லுகின்றதென்ன?  தன்னைச்சேராத அசுரர்களுடைய 
திரிபுரங்களினுடைய மாறுபாடு கெட வில்லாலே அழித்தவன் திருவம்பலத்திலே உள்ளவனாகிய பரமேசுவரன் 
(எம்முடைய இறைவன்) (மாறுபட்ட சூரியனுடைய) வலியழியப் பல்லைத் தகர்த்தோன். அவனுடைய 
திருப்பழனமென்ற திருப்படை வீட்டையொத்த பலவளைகளை உடையாளுக்கு இடை உண்டோ ?     14


            5. உட்கோள்**

**பேரின்பப் பொருள் "தன்னிடத்திற் கருணையுண்டென்றறிந்தது"

    உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையா நின்றவன் 
தன்னிடத்து அவளுக்குண்டாகிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட்கொள்ளா நிற்றல்.
அதற்குச் செய்யுள் -

    அணியு மமிழ்துமென் னாவியு 
        மாயவன் றில்லைச்சிந்தா 
    மணியும்ப ராரறி யாமறை
        யோனடி வாழ்த்தலரிற்
    பிணியு மதற்கு மருந்தும் 
        பிறழப் பிறழமின்னும்
    பணியும் புரைமருங் குற்பெருந்
        தோளி படைக்கண்களே

    இறைதிருக் கரத்து மறிமா னோக்கி 
    யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.

    இதன்பொருள் : மின்னும் பணியும் புரைமருங்குல் பெருந்தோளி படை கண்கள் - மின்னையும் 
பாம்பையுமொக்கு மிடையினையும் பெருந்தோளினையுமுடையாளது படை போலுங் கண்கள் 
பிறழ பிறழ பிணியும் பிறழுந்தோறும், பிறழுந்தோறும் பொது நோக்கத்தாற் பிணியும்; 
அதற்கு மருந்தும் - உள்ளக்கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு             (திருத்:உள்ளக் வெளிப் கருத்து படுக்கு/
                                                உள்ளக்கருத்து வெளிப்படுக்கு)
மருந்து மாகாநின்றன எ-று; அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்- எனக்காபரணமும் 
அமிழ்தும் என்னுயிருமாயவன்;  தில்லைச் சிந்தாமணி-தில்லைக்கட் சிந்தாமணி போல் அன்பர்க்கு 
நினைத்தவை கொடுப்போன்; உம்பரார் அறியா மறையோன் - அன்பரல்லாத தேவர்களறியாத 
வந்தணன்; அடிவாழ்த்தலரின் பிணியும் - அவனுடைய திருவடிகளை வழுத்தாதவரைப் போல 
உறும் பிணியுமெனக் கூட்டுக.

    அணி யென்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழிபெருஞ் சுவையோடுறுதி பயத்தலுடைமையான்.
ஆவியென்றார் காதலிக்கப்படும் பொருள்களெல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கு மிறைவனோடு 
சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவேயாயினும், "பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின், 
மருளற வரூஉ மரபிற்றென்ப" என்பதனான் ஈண்டுச் சொல்லுவானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள்களுள்
அவற்றினூங்கு மிக்கனவின்மையானும், உயர்ந்தனவா யுவமையாயின. உம்பராலென்பது ** பாடமாயின், 
உம்பரானறியப் படாதவெனவுரைக்க . பிறழப் பிறழுமென்பது பாடமாயின், பிணியுமருந்தும் மாறி மாறி வரப்
படைக்கண்கள் பிறழுமெனவுரைக்க, இஃது உட்கோள் இவை யைந்துங் கைக்கிளை.

**இது பழையவுரைகாரர் கொண்டபாடம்.

    திணை: குறிஞ்சி. கைகோள் : களவு. கூற்று: தலைமகன் கூற்று.  கேட்பது: நெஞ்சு நெஞ்சென்பது 
பாட்டின் கண் இல்லையாலோ வெனின் எஞ்சிற்றென்பதாம்; வறிதே கூறினானெனினுமமையும். 
இடம்: முன்னிலை. காலம்: நிகழ்காலம், எச்சம்:  இப்பெருந்தோளி படைக்கண்களென்புழி இவ்வென்னுஞ் 
சுட்டுச் சொல்லெஞ்சிற்று. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம் ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் 
கண்ணினான் யாப்புற வறிதல் என்னை.  "கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதினுணரு-முணர்வுடை 
மாந்தர்க்கல்லது தெரியி-னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே"  (தொல், பொருள் மெய்ப்பாட்டியல், 7 ) 
என்றாராகலின். பயன்: தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல்.  பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி 
படைக்கண்களென்றமையின், அவளுடம்பாட்டுக் குறிப்பு அவள் நாட்டத்தானுணர்ந்தனனென்பது. என்னை , 
'நாட்டமிரண்டு மறிவுடம் படுத்தற்குக் - கூட்டி யுரைக்குங் குறிப்புரையாகும்'' (தொல், பொருள், களவியல், 5 )
என்றாராகலின்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  சுவாமியினுடைய திருக்கரத்து மான் மறி(யின் நோக்கினை உடையாளின்) 
மனத்தின் நினைவை நாயகன் அறிந்தது.

    செய்யுள் : * தேவர்களாலும் அறியப்படாத வேதிய வடிவன் பாதங்களை வாழ்த்த மாட்டாதாரைப் போலப் 
பார்க்கப் பார்க்க நோயுமாய் நோய்க்கு மருந்து மாகாநின்றன, மின்னையும் அரவின் படத்தையும் நிகர்த்த 
இடையினை உடையளாய்ப் பெரிய தோளினை உடையாள் வேல்போலும் கண்கள்.

*இச்செய்யுள் உரையின் முற்பகுதி ஏட்டில் சிதைந்திருந்தது.

    கண்கள் (பிறழப் பிறழ) பார்க்கப் பார்க்க நோயும் அதற்கு மருந்துமாக நின்றது: எங்ஙனென்னின், 
பொது நோக்கத்தாலே பார்க்க நோயாகாநின்றது; உள்ளக் கருத்து வெளிப்படு (வத) னோடு கூடிய நோக்கத்தாலே 
பார்த்தபோது அதற்கு மருந்தாக நின்றது.        5

            கைக்கிளை முற்றிற்று

            6. தெய்வத்தை மகிழ்தல்**
            ---------------------

**பேரின்பப்பொருள்:  “தன்றவத்தினை வியந்தது"

    தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு நின்று என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத் தந்த 
தெய்வத்தையல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல். 
அதற்குச் செய்யுள்:

    வளைபயில் கீழ்கட னின்றிட 
        மேல்கடல் வான்நுகத்தின்
    துளைவழி நேர்கழி கோத்தெனத் 
        தில்லைத்தொல் லோன்கயிலைக்
    கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் 
        கண்ணியைக் கொண்டுதந்த
    விளைவையல் லால்விய வேன்நய 
        வேன் தெய்வ மிக்கனவே

    அன்ன மென்னடை அரிவையைத் தந்த 
    மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது

    இதன் பொருள் : வளை பயில் கீழ் கடல் நின்று இட-சங்கு நெருங்கின கீழ்த்திசைக் கடலிலே நின்று இட; 
நேர்கழி மேல் கடல் வான் நுகத்தின் துளைவழி கோத்தென அவ்வொத்த கழி மேற்றிசைக் கடலிலிட்ட பெரிய 
நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற்போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி 
தில்லையிடத்துப் பழையோனது கைலைகண் ஆயத்தாரிடத்து நின்று நீக்கி; இக்கெண்டை கண்ணியைக் 
கொண்டு தந்த விளைவை அல்லால் - இக்கண்டை போலுங் கண்ணையுடையாளைக் கைக்கொண்டு தந்த 
நல்வினையின் விளைவாகிய தெய்வத்தையல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன் - மிக்கனவாகிய 
பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.

    கைலைக்கட் கொண்டு தந்த வெனவியையும், இவளைத் தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று 
அவளது நலத்தை மிகுத்தமையின், இதுவும் நலம் பாராட்டல். பயந்தோர் பழிச்சற்* பாற் படுத்தினுமமையும். 
மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை பயன்: மகிழ்தல்

*பயந்தோர் பழிச்சல்-தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு;  அன்னத்தின் நடையைப் போன்ற மதுர நடையினையுடைய 
நாயகியைக்  கூட்டின நிலைபெற்ற பெரிய தெய்வத்தைச் சந்தோஷித்துச் சொன்னது.

    செய்யுள்: சங்கு செறிந்த கீழைச் சமுத்திரத்தினின்று கழியைப் போக்கிட மேலைக்கடலிலே 
போகட்ட பெரிய நுகத்தின் துளை இடத்தே அத்துளை கோத்த கழி சென்று கோப்புண்டா போலப், 
பெரும்பற்றப்புலியூர்க்குப் பழையவனாகி முதலியாருடைய ஸ்ரீ கயிலாயத்திருமலையின் ஆயக் 
கூட்டத்தாரிடத்து நின்றும் பிரித்துக் கெண்டை போலும் நயந்த கண்ணினையுடையாளை 
நான் கண்டு கூடுவதாகக் கூட்டின இப்படிக்கு விளைந்த விளைவையல்லது கொண்டாடுவதில்லை: 
வேறு தெய்வங்களையும் விரும்புவதில்லை .


            7. புணர்ச்சி துணிதல்*
            ---------------------

*பேரின்பப் பொருள்: " இன்பம் பெற நினைந்தது"

    புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சியெனத் 
தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்;

    ஏழுடை யான்பொழி லெட்டுடை 
        யான்புய மென்னைமுன்னாள்
    ஊழுடை யான்புலி யூரன்ன 
        பொன்னிவ் வுயர்பொழில் வாய்ச்**
    சூழுடை யாயத்தை நீக்கும் 
        விதி துணை யாமனனே
    யாழுடை யார்மணங் காணணங் 
        காய்வந் தகப்பட்டதே

    கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத் 
    தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது

** 'வுயர்வரைவாய்ச்' என்பது பழையவுரைகாரர் பாடம்.

    இதன் பொருள்: பொழில் ஏழு உடையான்- பொழிலேழுடையான் ;புயம் எட்டு உடையான் -புயமெட்டுடையான்
முன் என்னை ஆள் ஊழ் உடையான் - எனக்கு ஆட்படுந்தன்மை யுண்டாவதற்கு முன்னே என்னையாள்வதொரு 
புதிதாகிய முறைமையை யுடையான்; புலியூர் அன்னபொன் - அவனது புலியூரை யொக்கும் பொன்னனையாள்; 
இஉயர் பொழில் வாய் சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணை ஆக - இவ்வுயர்ந்த பொழிலிடத்து ஒரு பொழுதும் 
விடாது சூழ்தலையுடைய ஆயத்தை நீக்குதற்குக் காரணமாகிய விதி துணையாக; மனனே- மனமே; 
யாழ் உடையார் மணங்காண் அணங்கு ஆய் வந்து அகப்பட்டது - கந்தருவர் மணங்காண் முன் வருத்துவதாய் 
வந்து அகப்பட்டது; இனிக்கூட்டத்துக்குடன் படுவாயாக எ-று

    பொன்னீக்குமெனவியையும் ஆகவென்பது  ஆவெனநின்ற செய்யுண் முடிபு; புறனடையாற் கொள்க. 
அணங்காய் வந்தென்றான். உள்ளஞ்செல்லவும் இது தகாதென்று விலக்குதலால் முன் வருத்தமாயினமையின்; 
தெய்வத்தன்மையுடைத்தாய் வந்தெனினுமமையும். அகப்பட்டதென்று இறந்த காலத்தாற் கூறினான், 
புணர்ச்சிதுணிந்தமையான். இதுவும் உட்கோட்பாற்படும்.

    இவை யிரண்டும் ஒருதலைக் காமமல்லவெனினும் புணர்ச்சி நிகழாமையிற் கைக்கிளைப்பாற்படும்.
புணர்ச்சி நிகழாமை தெய்வப்புணர்ச்சி செம்மல் துணிந்த தென்பதனானறிக. பேதையைப் புணர்ச்சி துணிந்தது. 
விதி துணையாகக் கந்தருவர் மணம் ஒரு பெண் வடிவு கொண்டு எனக்கெய்திற் றென்றமையின். 
இவனோ டிவளிடையுண்டாய அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம்.  பாங்கற் கூட்டந் 
தோழியிற் கூட்டமென்று இவற்றில் அவர் துணையாயவாறு போல விதியும் இவரை ஆயத்தினீக்கிக் கூட்டின 
மாத்திரையே யன்றி  அன்பிற்குக் காரணமன்றென்பது. அல்லதூஉம்;  விதியாவது செயப்படும் வினையினது 
நியதியன்றே, அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும்;

     அது மறுத்தற்பொருட்டன்றே தொல்லோரிதனை இயற்கைப் புணர்ச்சியென்று குறியிட்டது. அல்லதூஉம், 
நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும், இவர்களன்பு துய்த்தாலு முடிவெய்தாது, எஞ்ஞான்று மொரு பெற்றியே 
நிற்குமென்பது. அல்லதூஉம் "பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்'' (திருக்கோவை. 205) 
என்றலானும், இவர்களன்பிற்குக் காரணம் விதியன்றென்பது. பல பிறப்பினுமொத்த அன்பென்றாராகலின், 
பல பிறப்பினுமொத்து நிற்பதோர் வினையில்லை யென்பது. அஃதேல், மேலைச் செய்யுளில் வினை விளைவே 
கூட்டிற்றாக விசேடித்துச் சொல்லவேண்டிய தென்னையெனின்.  இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங் 
குறையுற  அவர்கள் தங்களினாகிய கூட்டங்கூட்டினார்கள்;  உம்மை நல்வினையைக்  குறையுற்று வைத்து 
இம்மை அதனை மறந்தான் ; 

     மறப்புழியும், அது  தான்  மறவாது இவர்களையுங் கண்ணுறுவித்து இவர்க்குத் துப்புமாயிற்றாகலான், 
விசேடிக்கப்பட்டது. அல்லதூஉம், “பாங்கனை யானன்ன பண்பனை' (திருக் கோவை. 19) என்று அவனை விசேடித்தும் 
"முத்தகஞ்சேர் மென்னகைப் பெருந்தோளி" (திருக்கோவை 106) என்று அவளை விசேடித்தும், அவர்களினாலாய 
கூட்டத்திற்குக் கூறினமையின், நல்வினைப் பயனும் அம்மாத்திரையே விசேடித்த தென்பது. 

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொவ்வைக் கனியை ஒத்த சிவந்த வாயினையும் கொடி போலும்
இடையினையுமுடைய நாயகியைக் கந்தருவ மணமென்று நாயகன் அறுதியிட்டது . 

    செய்யுள்: புலி ஏழுக்கு முடைவைன், எட்டுத் திக்கையும் திருக்கரங்களாக உடையவன். நான் தனக்கு         (ஐயம்: முடைவைன்??)
அடிமை செய்வதற்கு முன் விதியுடையவன் சிதம்பரத்தை ஒத்த பொன் போன்றவளை இந்த உயர்ந்த 
மலையிடத்துச்  சுற்றிப் பிரியாத ஆயக் கூட்டத்தாரிடத்தினின்றும் நீக்கின விதியே துணையாகிய 
நெஞ்சமே (கந்தருவ மணம்  கை கூட ஒரு பெண்ணாக வந்து என் கைக்குள்) சிக்கிக் கொண்டது.

            8. கலவியுரைத்தல்**
            -------------------
**பேரின்பப் பொருள்: "பெற்ற வின்பத்தை வியந்தது".

    கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி யின்பத்தியல்பு 
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    சொற்பா லமுதிவள் யான்சுவை
        யென்னத் துணிந்திங்ஙனே 
    நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
        நானிவ ளாம்பகுதிப்
    பொற்பா ரறிவார் புலியூர்ப்
        புனிதன் பொதியில் வெற்பிற் 
    கற்பா வியவரை வாய்க்கடி
        தோட்ட களவகத்தே,

    கொலைவேலவன் கொடியிடையொடு
     கலவியின்பங் கட்டுரைத்தது.

    இதன் பொருள்: சொல்பால் அமுது இவள் யான் சுவை துணிந்து என்ன இங்ஙன் நல்பால் வினை 
தெய்வம் தந்து எ-து, சொல்லும் பகுதியில் அமுதிவள் யானதன் சுவையென்று துணிந்து சொல்ல 
இவ்வண்ணமே நல்ல கூற்றின் வினையாகிய தெய்வந்தர எ-று. என்றது சுவையையுடைய பொருட்குஞ் 
சுவைக்கும் வேறுபாடில்லாதவாறு போல எனக்கும் இவட்கும் வேறுபாடில்லை எ-று. இன்று நான் இவள் ஆம் 
பகுதி பொற்பு ஆர் அறிவார் எ-து. இவ்வாறு வேறுபாடில்லையாயினும் புணர்ச்சியான் வரும் இன்பந்துய்த்தற் 
பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும் வேறுபாட்டோடு கூடிய அழகையாரறிவார். இதனை 
யனுபவிக்கின்ற யானே யறியினல்லது எ-று. புலியூர் புனிதன் பொதியில் வெற்பில் கல்பாவிய வரை வாய் 
கடி தோட்ட களவகந்து எ- து .புலியூர்க் கணுளனாகிய தூயோனது பொதியிலாகிய வெற்பிற் கற்பரந்த 
தாழ்வரையிடத்துக் காவலை வாங்கிய களவிடத்து எ-று.

    களவகத்துப் பொற்பெனக் கூட்டுக. தந்தென்பது தரவெனத் திரிக்கப்பட்டது. தந்தின்றென்பது 
தந்ததென்னும் பொருள் படாமையறிந்து கொள்க. தந்தன்றென்பதூஉம் பாடம் போலும் . கடிதோட்ட 
வென்பதற்குக் கடியப்பட்ட தொகுதியையுடைய களவென் றுரைப்பினுமமையும். தோட்ட வென்றது 
தலைமகளாயத்தையுந் தன்னிலைஞரையும், கடி தொட்ட வென்பது பாடமாயின், மணந் தொடங்கிய 
களவென்றுரைக்க. கொடியிடையொடு கலவி-கொடியிடையொடு நிகழ்ந்த கலவி. மெய்ப்பாடு உவகை. 
பயன்: மகிழ்ச்சி; தலைமகளை மகிழ்வித்தலுமாம், நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட் கூட்ட 
அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையுமென்ன என்னெஞ்சம் இவள் கண்ணே யொடுங்க 
யானென்பதோர் தன்மை காணாத தொழிய இருவருள்ளங்களும் ஒருவே மாமாறு கரப்ப ஒருவே மாகிய 
ஏகாந்தத்தின் கட்பிறந்த புணர்ச்சிப்பேரின்ப வெள்ளம் யாவரானறியப்படு மென்று மகிழ்ந்துரைத்தான்;
உரைப்பக் கேட்ட தலைமகளும் எம் பெருமான் என்கண்வைத்த அருளினானன்றோ இவ்வகையருளியதென்று 
இறப்பவு மகிழ்வாளாம்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: (விலங்குகளின் ) உயிரை வேட்ட வேலினை உடைய நாயகன்        (திருத்: உடயை/உடைய)
 பொன் மருங்குலையுடைய நாயகியுடனே கூட்டத்தால் படும் இன்பம் இசையச் சொன்னது.

    செய்யுள் : சொல்லு பகுதியில் அமுது இவள் (யான் அதன் சுவை யென்று) சொல்லும்படி அறுதியிட்ட 
படியே நகல் கூறு பாட்டையுடைய விதியாகிய தெய்வம் தந்தின்று (தந்தது): நான் என்றும் இவள் என்றும் 
வேறுபட்ட இவ்வழகை யாராலே அறியப்படும்? பெரும்பற்றப் புலியூரிலே உளனாகிய தூயவன் அவனுடைய 
பொதியமா மலையில் கல் பாய்ந்தகன்ற மலையிடத்துக் காவலை நீங்கின களவகத்தே (தொட்ட களவகத்தே 
என்பது இவர் பாடம்).

    நானென்றும் இவளென்றும் வேறுபட்ட இவ்வகை, யாராலே அறியப் படும் என்ன, ஓருயிர்க் கோருடம்பானால் 
இன்பம் அனுபவிக்க ஒண்ணா தென்று ஓருயிர்க்கிரண்டுடம்பானால்: இவ்வாழ்க்கை யாராலே அறியப் படும்? 
அனுபவிக்கிற நானே அறியு மித்தனை என்றுபடும்.

            9. இருவயினொத்தல்*
            --------------------
* பேரின்பப் பொருள்: "பெற்ற வின்பம் புதிதாய்ப் பேணியது''

    இருவயினொத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கை யன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே 
நின்று வளர்ந்து சேறலால் தலைமகளை மகிழ்ந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் 
        சிற்றம் பலத்தொருத்தன்
    குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் 
        வாயிக் கொடியிடைதோள்
    புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும்
        போகம்பின் னும்புதிதாய் 
    மணந்தாழ் புரிகுழ லாளல்குல் 
        போல வளர்கின்றதே 

    ஆராவின்பத் தன்புமீதூர
    வாரார்முலையை மகிழ்ந்துரைத்தது.

    இதன் பொருள் : உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன்.  ஒருகாற் றன்னையுணர்ந்தவர்கட்குப் 
பின்னுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியு மொடுங்குதலான் மீட்டுணர் வரியோன் ; தில்லை 
சிற்றம்பலத்து ஒருத்தன். தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளானாகிய ஓப்பில்லாதான்; குணம்         (திருத்:கணுளானகிய/கணுளானாகிய)
வெளிப்பட்ட கொவ்வை செவ்வாய் இகொடி தோள் புணர்ந்தால்- அவனது குணமாகிய ஆனந்தம் 
வெளிப் பட்டாற்போலுங் கொவ்வைக் கனிபோலுஞ் செவ்வாயையுடைய  இக்கொடியிடை தோளைக் 
கூடினாலும் : புணருந் தொறும் பெரும் போகம் பின்னும் புதிது ஆய்-கூடுந் தோறும் பெரிதாகிய வின்பம் 
முன்புபோலப் பின்னும் புதிதாய் மணம் - தாழ்புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றது- மணந்தங்கிய 
சுருண்ட குழலையுடையாளது அல்குல் போல வளரா நின்றது எ-று.

    உணர்ந்தார்க்குக் குணந்தான் வெளிப்பட்ட வென இயைத்துரைப்பினு மமையும். உணர்ந்தார்க் 
குணர்வரியோனென்பதற்குத் தவத்தானுந் தியானத்தானும் எல்லாப் பொருள்களையு முணர்ந்தவர்க்கும் 
உணர்வரியோனெனினுமமையும் . இப்பொருட்டு - உணர்ந்தார்க்குமென உம்மை வருவித்துரைக்கப் பட்டது. 
குணந்தான் வெளிப்பட்ட கொடியிடை யென்புழி உவமையோடு பொருட் கொற்றுமை கருதி உவமைவினை 
உவமிக்கப்படும் பொருண்மேலேற்றப்பட்டது. புணர்ந்தாற் புதிதாயென வியையும். புணர்ந்தாலுமென 
இதற்கும் உம்மை வருவித் துரைக்கப்பட்டது . இன்பத்தன்பு-இன்பத்தான் வந்த செயற்கை யன்பு மெய்ப்பாடும்     (திருத்: வருவிந்/வருவித்)
பயனும் : அவை புணர்ச்சிக்கட் டோன்றி ஒரு காலைக்கொருகாற் பெருகாநின்ற பேரின்ப வெள்ளத்தைத் 
தாங்கலாற்றாத தலைமகன் ஆற்றுதல் பயனெனினுமையும்.

    வளர்கின்ற தென்றமையிற் புணர்ந்ததனாற் பயனென்னை யெனின், புணராத முன்னின்ற வேட்கை 
புணர்ச்சிக்கட் குறைபடும். அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கட் டம்மிற் பெற்ற குணங்களினானாகிய அன்பு 
நிறைக்கும், நிறைக்க எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்பது. அல்குல் போல வளர்கின்ற தென்ற வழி 
ஒரு காலைக் கொருகால் வளருமென்றாரல்லர், என்னை குறை பாடுள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது; 
அல்லதூஉம் எஞ்ஞான்றும் வளருமெனின், அல்குற்கு வரம்பின்மையுந் தோன்றும்; மற்றென்னை கருதியதெனின்,     (திருத்:அலகுற்கு/அல்குற்கு)
இயற்கைப் புணர்ச்சி புணர்கின்றகாலத்து இவள் பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்காள் ஆகலின்
இவளது அல்குல் இலக்கணக் குறைபாடின்றியே வளராநின்றது; வளர்ந்து பன்னீராண்டு நிரம்பினால் ஒரு 
பெற்றியே நிற்கும்; அதுபோல இவன் காதலும் உள்ளமுள்ளளவு நிறைந்து பின்னைக் குறைபாடின்றி 
ஒருபெற்றியே நிற்குமென்பது. 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அமையாத இன்பத்தாலே அன்பு மிகுந்து செல்லக் கச்சார்ந்த 
தனங்களை உடையாளை விரும்பிச் சொன்னது.                                (திருத்: உடயாளை/உடையாளை)                                
    செய்யுள்: தன்னை உணர்ந்தவர்களுக்கு உணர்வானவன் ; அத்தன்மை உணராதார்க்கு அரியவன்;
பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தேயுளனாகிய ஒப்பில்லாதவன்; அவனுக்குக்குணமாகிய சிவானந்த 
மகிமை வெளிப்பட்டாற்போல வெளிப்பட்ட கொவ்வைக் கனிபோல் சிவந்த வாயினை உடைய வஞ்சிக்கொடி 
போன்ற இடையினையுடை இவளுடைய தோள்கள் கூடினால்  கூடுந்தோறும் பெரிய போகமானது. பின்னும் 
ஒரு காலைக் கொருகால் புதிதாய் மணம் செறிந்த அளகத்தினை யுடையவள் அல்குலினது பெருமைக்குவமை 
இல்லாததுபோல இவ்வின்பத்திற்கு உவமையில் (லாமல்) பெருகாநின்றது: இதென்ன வியப்போ?     9

            10. கிளவிவேட்டல்*
            -----------------
*பேரின்பப் பொருள்; "குருமொழி வேண்டிக் குறையிரந் துரைத்தது.''

    கிளவி வேட்டல் என்பது இரு வயினொத் தின்புறாநின்ற தலைமகன் உறுதன் முதலாகிய 
நான்கு புணர்ச்சியும் பெற்றுச் செவிப்புணர்ச்சி ** பெறாமையின்  ஒருசொல் வேட்டு வருந்தா நிற்றல், 
அதற்குச் செய்யுள் - 

** இதனை. ''கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" 
என வரும் திருக்குறளால் அறிக.

    அளவியை யார்க்கு மறிவரி
        யோன்றில்லை யம்பலம் போல் 
    வளவிய வான் கொங்கை வாட்டடங் 
        கண்ணுதல் மாமதியின்
    பிளவியல் மின்னிடை பேரமை 
        தோளிது பெற்றியெனறற்
    கிளவியை யென்றோ வினிக்கிள்ளை 
        யார்வாயிற் கேட்கின்றதே

    அன்னமன்னவ ளவயங்கண்டு 
    மென்மொழிகேட்க விருப்புற்றது.

    இதன் பொருள் : அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம்போல் வான்கொங்கை வளவிய- 
அளவை யார்க்கும் அறிவரியவனது தில்லையம்பலம்போலப் பெருங்கொங்கைகள் வளத்தையுடையன;
தடங்கண் வாள் - பெரியகண்கள் வாளோடொக்கும் நுதல் மாமதியின்பிளவு இயல்-நுதல் பெரிய மதியின் 
பாகத்தினியல்பை  யுடைத்து இடைமின் -இடைமின்னோ டொக்கும் ; தோள் பெருஅமைதோள்கள்  பெரிய 
வேயோடொக்கும்;  பெற்றி இது என்றால்-இவற்றது தன்மை இதுவானால் ,கிள்ளை யார்வாயில் கிளவியை 
இனி கேட்கின்றது  என்- கிள்ளை  போல்வாள் வாயின் மொழியை இனிக்கேட்க வேண்டுகின்றதென் ?
இப்பெற்றிக்குத் தக்கதேயிருக்கும் எ-று.

    துறவு துறவியென நின்றாற்போல அளவு அளவியென நின்றது மொழி கிளிமொழியோ
டொக்குமென்பது போதரக் கிள்ளையாரென்றான், வயினென்பது பாட மாயின் வாயினென்பது குறுகி 
நின்றதாகவுரைக்க. வயின் இடமெனினுமமையும் அவயவங்கண்டென்புழி உறுதன் முதலாகிய 
நான்கையுங் கண்டென்றார் மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப்புணர்த்துதல்

    (பழைய வுரைப் பொழிப்பு) கொளு: நடையால் அன்னத்தை ஒத்தவள் அவயத்தைப்பார்த்து 
மெல்லிய வார்த்தையினைக் கேட்டதாக விரும்பினது.

    செய்யுள்: தன்னுடைய திருவெல்லை யாவராலும் அறிதற்கு அரியவன் திருவம்பலத்தை ஒத்த 
வளப்பத்தை உட்கொண்டிருந்தன கனதனங்களும்: பெரிய கண்கள் வாள் போன்றிருந்தன; நெற்றியும் 
பாதிமதியின் இயல்பாய் இருந்தன. இடையும் மின் போன்று இருந்தது; பெரிய தோள்களும் வேய்தாமாகி 
இருந்தன. அவயவங்களின் இயல்புகள் இவையானால் கிளியை ஒப்பார் வாயில் வார்த்தையைக் கேட்கும் 
தரந்தான் என்ன ? அவயவங்களின் இயல்புகள் இவையானால் அவர் வார்த்தையும் இவற்றிற்குத் 
தக்கன வல்லவோ ?      10

            11. நலம்புனைந்துரைத்தல் *
            -------------------------

*பேரின்பப் பொருள்: "அன்பால் நலங்கொண்டாடியது"

    நலம்புனைந்துரைத்தல் என்பது கிளவிவேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன்முறுவல் 
செய்யத் தலைமகன் அது பெற்றுச் சொல்லாடாமையா னுண்டாகிய வருத்த நீங்கி, நுமதகன்ற 
மருத நிலத்துக் குறிஞ்சி நிலத்து இவள் வாய் போல நாறும் ஆம்பற் பூக்களுளவோவென அந்நிலத்து 
வண்டோடு வினவா நிற்றல் அதற்குச் செய்யுள்: -

    கூம்பலங் கைத்தலத் தன்பரென் 
        பூடுரு கக்குனிக்கும்
    பாம்பலங் காரப் பரன்றில்லை
        யம்பலம் பாடலரின்
    தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
        தீங்கனி வாய்கமழும்
    ஆம்பலம் போதுள வோஅளி 
        காள்நும் அகன்பணையே.

    பொங்கிழையைப் புணைநலம்புகழ்ந் 
    தங்கதிர்வேலோன் அயர்வு நீங்கியது.

    இதன் பொருள் : அளிகாள் நும்அகன் பணை- வண்டுகாள் நுமதகன்ற மருத நிலத்து; தேம்பு சிற்றிடை
 ஈங்கிவள் - தேம்புஞ் சிறிய விடையையுடைய இவளது; தீம் கனி வாய் கமழும் ஆம்பல் போது உளவோ - 
இனியதாகிய கனிந்த வாய் போல நாறும் ஆம்பற் பூக்களுளவோ? சொல்லுமின் எ-று. கூம்பு கைத்தலத்து         (திருத்: சனிந்த/கனிந்த)
அன்பர் என்பு ஊடு உருக குனிக்கும்-கூம்புங் கைத்தலங்களையுடைய அன்பரது என்பும் உள்ளுருகக் 
கூத்தாடநின்ற; பாம்பு அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின் தேம்பு- பாம்பாகிய அணியையுடைய 
பரமனது தில்லையம்பலத்தைப் பாடாதாரைப் போலத் தேம்புமெனக் கூட்டுக.

    அல்லும் அம்மும் : அல்வழிச் சாரியை. பாம்பலங் காரம் மெலிந்து நின்றது. ஈங்கிவளென்பது ஒரு சொல், 
கனிவாய்-கனி போலும் வாயெனினுமமையும், புனைநலம் என்றது புனையப் பட்ட வியற்கைநலத்தை. 
அயர்வு நீங்கியது- சொல்லாடாமையி னுண்டாகியவருத்த நீங்கியது. மெய்ப்பாடு: உவகை. பயன்.
 நயப்புணர்த்துதல் . இயற்கை யன்பினானும் அவள் குணங்களாற்றோன்றிய செயற்கையன்பினானும் 
கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனதன்பு மிகுதியை யுணர்த்துதல் நயப்புணர்த்துதல் என்பது.

    (பழைய வுரைப் பொழிப்பு) கொளு: மிகுந்த ஆபரணங்களை யுடையாளை (அவள் புனைந்த 
நலன்களைப் புகழ்ந்து) அழகிய ஒளியினையுள்ள வேலினையுடையவன் வருத்த மகன்றது.

    செய்யுள்: கூம்புதலை யுடைத்தாகிய அழகிய கைத்தலங்களையுடைய அடியார் என்புகளெல்லாம் 
கரைந்து உருகும்படி ஆடி அருளுகின்ற அரவாபரண அலங்காரச் சிவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில்
திருவம்பலத்தைப் பாடமாட்டாதாரைப் போலத்தளர்ச்சியையுள்ள அழகிய சிற்றிடையினையுடைய 
இவளுடைய நெய்த்த நிறமுடையதாகிய கனிவாய் விரிமை (?) போலே நாறுவன ஆம்பற் பூவும் சிலவுண்டோ ? 
வண்டுகாள்! நும்முடைய அகன்றமருத நிலத்துண்டாகிற் சொல்லுவீராக.     11

            12. பிரிவுணர்த்தல்*
            -------------------
* பேரின்பப் பொருள், "திருமேனிப் பிரிவான் மயங்கியது."

    பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப்புணர்ச்சி**யும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்தபின்னும் 
ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறென்னையெனின், இப்புணர்ச்சி நெடுங் காலஞ்செல்லக்
கடவதாக இருவரையுங் கூட்டிய தெய்வந்தானே பிரியாமற் பிரிவிக்கும். அதுபிரிவிக்குமாறு. தலைமகன் 
தனதாதரவினா னலம்பாராட்டக் கேட்டு. எம்பெருமான் முன்னின்று வாய் திறந்து பெரியதோர் நாணின்மை 
செய்தேனெனத் தலைமகள் நாணி வருந்தாநிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான் பிரிவேனாக 
நினைந்ததாக வேண்டுமென் றுட்கொண்டு, அவளுக்குத்தான் பிரிவின்மை கூறாநிற்றல், அதற்குச் செய்யுள் -

** ஐ வகைப் புணர்ச்சி - கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிதல் என்பன.

    சிந்தா மணிதெண் கடலமிர்
        தந்தில்லை யானருளால் 
    வந்தா லிகழப் படுமே
        மடமான் விழிமயிலே
    அந்தா மரையன்ன மேநின்னை
        யானகன் றாற்றுவனோ
    சிந்தா குலமுற்றென் னோவென்னை
        வாட்டந் திருத்துவதே

    பணிவளரல்குலைப் பயிர்ப்புறுத்திப் 
    பிணிமலர்த்தாரோன் பிரிவுணர்த்தியது. 

    இதன்பொருள்: சிந்தாமணி தெள்கடல் அமிர்தம் தில்லையான் அருளால் வந்தால்-ஒருவன் 
தவஞ்செய்து பெறுஞ் சிந்தாமணியும் தெளிந்த கடலினமிர்தமும் வருத்தமின்றித் தில்லையானருளாற் 
றாமே வந்தால் : இகழப்படுமே - அவை அவனாலிகழப்படுமா; மடமான் விழி மயிலே - மடமான் விழி 
போலும் விழியையுடைய மயிலே; அம் தாமரை அன்னமே - அழகிய தாமரைக்கண் வாழு மன்னமே : 
நின்னை யான் அகன்று ஆற்றுவனோ - நின்னை யான் பிரிந்தாற்றி யுளனாவனோ?: சிந்தாகுலம் 
உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ- சிந்தையின் மயக்கமுற்று என்னை வாட்டுவதென்னோ? எ.று

    அந்தாமரையன்னம் திரு வென்பாரு முளர், நின்னை யென்புழி உயிரினுஞ் சிறந்த நின்னையென்றும், 
யானென்புழி இரு தலைப் புள்ளினோருயிரேனாகிய யானென்றும், அச்சொற்களான் விளங்கின.
வாட்டந்திருத்துவதே யென்னுஞ்சொற்கள் ஒரு சொன்னீரவாய், வாட்டுவதேயென்று பொருள்பட்டு, 
இரண்டாவதற்கு முடிபாயின. வாட்டத் திருத்துவதென்று பாடமாயின் வாட்டத்தின் கணிருத்துவதென்றுரைக்க, 
பயிர்ப்பு - பயிலாத பொருட் கண் வந்த அருவருப்பு. ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல்- 
அகன்றாற்றுவனோவெனப் பிரிவென்பது மொன்றுண்டென்பதுபட மொழிதல். மெய்ப்பாடு அச்சத்தைச்
சார்ந்த பெருமிதம் பயன்: பிரிவச்ச முணர்த்துதல். 

    (பழையவுரை பொழிப்பு ) கொளு : பாம்பினது படத்தை ஒத்து மிக்க அல்குலையுடையாளைப் 
பயிலாத பொருளாகிய பிரிவுக்கு அருவருக்கப் பண்ணிக் கட்டப்பட்ட மாலையையுடையவன் பிரிவு அறிவித்தது.

    செய்யுள்: சிந்தாமணி என்கின்ற வள்ளலும், தெளிந்த கடலிலே உண்டாகிய அமுதமும், 
திருவம்பல நாதன் திருவருளினாலே இவை சிலர்க்குண்டானால் வேண்டா என்று இகழப்படுமோ? 
மெல்லிய மானோக்கம் போன்ற நோக்கினையுடையாய்! சாயலால் மயிலை ஒப்பாய். அழகிய தாமரைக்கண் 
வாழும் அன்னமே! உயிரினும் சிறந்த நின்னை இருதலைப் புள்ளின் ஓருயிரன்ன யான் பிரிவாற்றுவனோ? 
சிந்தையானது வருத்தமுற்று ஏன்தான் என்னை நோய் செய்கிறது? சொல்லுவாயாக வேண்டும்.      12

            13. பருவரலறிதல்*
            -----------------

*பேரின்பப் பொருள் : ''திருவுளத் திரக்கங் கண்டது"

    பருவரலறிதல்: என்பது பிரிவின்மை கூறக்கேட்ட தலைமகள், பிரிவென்பது மொன்றுண்டு போலுமென 
வுட்கொண்டு முன்னாணினாற் சென்றெய்திய வருத்த நீங்கிப் பெரியதோர் வருத்த மெய்த அதுகண்டு, 
'இவள் மேலு மேலும் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதலரிதென்று நினைந்தோ, நெடும்பொழு திவ்வாறிருந்தால் 
அவ்விடத்துக் குடிப்பழியாமென்று நினைந்தோ, அறிகிலேனென் அவள் வருத்தமறியா நிற்றல். 
அதற்குச் செய்யுள் :-

    கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
        பங்கன் குறுகலரூர் 
    தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் 
        சிற்றம் பலமனையாள் 
    நீங்கிற் புணர்வரி தென்றோ
        நெடிதிங்ங னேயிருந்தால் 
    ஆங்கிற் பழியா மெனவோ 
        அறியே னயர்கின்றதே.

    பிரிவுணர்ந்த பெண் கொடிதன்
    பருவரலின் பரிசு நினைந்தது.

    இதன் பொருள்: கோங்கின்பொலி அரும்புஏய் கொங்கை பங்கன் - கோங்கின்க ணுண்டாகிய பொலிந்த 
வரும்பை யொக்கு முலையையுடையாளது பங்கையுடையான்; குறுகலர் ஊர் தீங்கில் புக செற்ற கொற்றவன் - 
குறுகாதார் புரங்கள் **பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை யுடையான்;
சிற்றம்பலம் அனையாள் அயர்கின்றது நீங்கின்புணர்வு அரிது என்றோ - அவனது திருச்சிற்றம்பலத்தை 
யொப்பாள் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதலரிதென்று நினைந்தோ; நெடிது இங்ஙன் இருந்தால் ஆங்கு 
இற்பழி ஆம் எனவோ.  நெடும் பொழுதிவ்வாறிருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியா மென்று 
நினைந்தோ; அறியேன் - அறிகிலேன் எ-று. 

**பாசண்டம் - வேதாசார விரோதம்

    தீங்கிற்புக வென்பதற்குத் துன்பமறியாதார் துன்பத்திற்புக வெனினு மமையும், ஆங்கென்றது 
சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்; ஆங்கு: அசைநிலையெனினு மமையும் பிரியலுறுகின்றானாகலின், 
இற்பழியாமென்று வேறுபட்டாளாயின் நன்றென்பது கருத்து. மெய்ப்பாடு. அச்சத்தைச் சார்ந்த மருட்கை,
பயன்:  ஐயந்தீர்தல் அவ்வகை தலைமகளது ஆற்றாமைத்தன்மை தலைமகற்குப் புலனாயிற்று; புலனாகத் 
தலைமகன் இவ்வகை தன்னெஞ்சோடுசாவி ஆற்றானாயினானென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: தன் பிரிவை அறிந்து பெண்ணுருக் கொண்ட வல்லிசாதகக் 
கொடியைப் போன்றவளுடைய துன்பத்தின் இயல்பை விசாரித்தது

    செய்யுள்:  கோங்கினது பொலிவு பெற்ற அரும்பை ஒத்த திருமுலைத் தடங்களையுடைய 
ஈசுவரியாரைப் பக்கத்திலேயுள்ளவன், தன்னை வந்து சேராதவருடைய முப்புரங்கள் தீங்காகிய புத்த சமயத்திலே 
புகுதலாலே அழித்த வெற்றியினை உடையவன் அவனுடைய திருச்சிற்றம்பலம் போன்றவள் பிரிந்தால் 
தன்னைக் கூடுதற்கு அரிதென்றோ , நெடும் பொழுது இங்ஙனம் தாழ்க்க இருந்தால் அவ்விடத்து 
(ஆவது, சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்) குடிப்பழியாம் என்றோ அறிகிலேன்; வருந்துகின்றது.     13

            14. அருட்குணமுரைத்தல்*
            -----------------------
*பேரின்பப் பொருள்: அருட்குப் பிரிவில்லை யென்றறிந்தது.

    அருட்குணமுரைத்தல் என்பது இற்பழியாமென்று நினைந்தோவென்று கூறக்கேட்ட தலைமகள் 
இது நந்தோழியறியின் என்னாங்கொல்லோவென்று பிரிவுட்கொண்டு பிரிவாற்றாது வருந்தா நிற்ப, 
அக்குறிப்பறிந்து அவள் பிரிவுடம்படுவது காரணமாகத் தலைமகன் யாம்பிரிந்தேமாயினும் 
பிரிவில்லையெனத் தெய்வத்தினருள் கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள் -

    தேவரிற் பெற்றநஞ் செல்வக்
        கடிவடி வார்திருவே 
    யாவரிற் பெற்றினி யார்சிதைப்
        பாரிமை யாதமுக்கண் 
    மூவரிற் பெற்றவர் சிற்றம்
        பலமணி மொய்பொழில்வாய்ப்
    பூவரிற் பெற்ற குழலியென் 
        வாடிப் புலம்புவதே

    கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம் 
    வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.

    இதன் பொருள் : தேவரில் பெற்ற நம் செல்வக்கடி - முயற்சியும் உளப்பாடுமின்றித் தேவராலே 
பெற்ற நமதழகிய மணத்தை ; வடிவு ஆர் திருவே - வடிவார்ந்த திருவே ; இனி யாவரின் பெற்று யார் சிதைப்பார் - 
இனிச் சிதைத்தற் கீடாகிய தன்மையை யாவராலே பெற்று யாவர் சிதைப்பார்; இமையாத
முக்கண் மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி-இமையாத  மூன்று கண்ணையும் மூவராலே பெற்றவரது 
சிற்றம்பலத்தை யழகு செய்த; மொய் பொழில் வாய் பூ அரில் பெற்ற குழலி - செறிந்த பொழிலிடத் 
துளவாகிய பூக்களது பிணக்கத்தைப் பெற்ற குழலையுடையாய்: வாடிப் புலம்புவது என் - நீ பொலி
வழிந்து துன்பப்படுகின்ற தென்னோ? எ-று. 

    மூவர்- சந்திராதித்தர் செந்தீக்கடவுள். பிரிவுணர்த்தினானாகலின் பிரிந்தாலென்னா 
மென்னும் ஐயநீங்கக் கூறினான். இக்கடியை யாவராற் பெற்றெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். 
பயன்: வன்புறை பெரியதோருவகை மீதூர இவ்வகை வற்புறீஇயினானென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு* : ( தெய்வத்தின் அருளினது செய்திக்குக் குறைவிலாமை உரைத்தது.)

* இக்கொளுவின் பொருள் ஏட்டில் சிதைந்துள்ளது.

    செய்யுள்: தேவர் தரப்பெற்ற நம் செல்வமுடைத்தாகிய மணத்தை அழகார்ந்த இலக்குமியை ஒப்பாய்! 
இதனை அழித்தற்கு யாவரிடத்திலே பதம் பெற்று யாவராலே அழிக்கலாம்? இமையாத மூன்று திருநயனங்களும் 
சந்திராதித்தர் அக்கினி தேவன் என்கிற மூவராலே யுடையவர், அவருடைய திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்து 
சேர்ந்த பொழிலிடத்து. (பூவினால் துற்றவள் அளகத்தினையுடையாய் என் தான் மெலிந்து வருந்துகின்றது.)     14

            15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல்*
            ---------------------------------
* பேரின்பப்பொருள்: பிரிதல் போலன்றிப் பிரிவில்லை என்றது

    இடமணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது அருட்குண முரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை 
நீங்காத தலைமகட்கு நும்மூரிடத்திற்கு எம்மூரிடம் இத்தன்மைத்தெனத் தன்னூரினணிமை கூறி 
வற்புறுத்தாநிற்றல்.  அதற்குச் செய்யுள் -

    வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை 
        யம்பல வன்மலயத்
    திருங்குன்ற வாண ரிளங்கொடி 
        யேயிட ரெய்தலெம்மூர்ப்
    பருங்குன்ற மாளிகை நுண்கள
        பத்தொளி பாயநும்மூர்க்
    கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக 
        மேய்க்குங் கனங்குழையே

    மடவலைர வற்புறுத்தி                     (ஐயம்: மடவலைர? மடவரலை?) 
    இடமணித்தென் றவனியம்பியது                    

    இதன் பொருள்:  வரும் குன்றம் ஒன்று உரித்தோன்- இயங்கு மலையொன்றை யுரித்தவன்: 
தில்லை அம்பலவன்- தில்லை யம்பலத்தை யுடையான்: மலயத்து இரு குன்ற வாணர் இளங்கொடியே - 
அவனது பொதியின் மலையிடத்துப் பெரிய குன்றத்தின் கண் வாழ்வாருடைய மகளே; இடர் எய்தல்-
வருத்தத்தை  விடு;   கனங்குழையே கனங்குழாய்; எம் ஊர் பரு குன்றம் மாளிகை நுண் கல பத்து
ஒளி பாய எம் மூரிடத்துப் பெரிய குன்றம்போலு மாளிகைகளின் நுண்ணிய தாகிய சாந்தினொளி பரந்து: 
நும் ஊர் கரு குன்றம்  வெண் நிறம்  கஞ்சுகம் ஏய்க்கும் - நும்மூர்க் கணுண்டாகிய கரிய குன்றம் 
வெள்ளை நிறத்தையுடைய சட்டையிட்டதனோடொக்கும் எ-று.

    கருங்குன்ற வெண்ணிறமென்பது *பாடமாயின் நுண் களபத்தொளிபரப்ப அவ்வொளி நும்மூர்க் 
கருங்குன்றத்திற் கிட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோ டொக்குமென்று உரைக்க. ஈண்டுரைத்தவாற்றால், 
தலைமகன் மிக்கோனாதல் வேண்டும். வேண்டவே ஒப்பு என்னை பொருந்துமா றெனின் 
"மிக்கோனாயினுங் கடிவரையின்றே" என்பது (தொல், பொருள், களவியல், 2) ஓத்தாகலிற் பொருந்துமென்க. 
 வற்புறுத்தி - வலியுறுத்தி, இடமணித்தென்றலே வற்புறுத்தலாக வுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம், 
பயன்: இடமணித்தென்று வற்புறுத்தல்.

*என்பது பழையவுரைகாரர் பாடம்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மடப்பத்தை வெற்றியாக உடையவளை வலியுறுத்தி, 
'உங்கள் இடத்துக்கு எங்கள் இடம் அண்ணிது', என்று நாயகன் சொன்னது.

    செய்யுள்; இருஷிகள் யாகத்திலே தோன்றி, மலைகால்படைத்தாற் போலே மேல்வருகின்ற யானையை 
உரித்தவன். பெரும் பற்றப் புலியூர்க்கு உளனாகிய திருவம்பலநாதன் வரையிடத்துப் பெரிய மலைக்குக் 
கர்த்தராகிய றெவாணர்க்கு மகளாகிய வஞ்சிக்கொம்பே! துக்கிக்க வேண்டா: எங்கள் ஊர்ப் பெரிய 
குன்றத்தையொத்த மாளிகைகளில் நுண்ணிய வெண் சாந் குதாளி பரக்க உங்கள் ஊர்க் கரிய குன்றத்துக்கிட்ட     (திருத்: யொதை/யொத்த)
வெள்ளை நிறச் சட்டையை ஒக்கும், கனத்த குழையினை யுடையாய்! வருந்தாதே என்றது.

            16. ஆடிடத்துய்த்தல்**
            --------------------
** பேரின்பப் பொருள் ; ''சிவமருளுடனே சேர்தலறிந்தது'.

    ஆடிடத்துய்த்தல்: என்பது அணிமை கூறி யகலாநின்றவன். 'இனி நீ முற்பட்டு விளையாடு, 
யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வாரா நின்றே' னென  அவளை ஆடிடத்துச்
செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -

    தெளிவளர் வான் சிலை செங்கனி
        வெண்முத்தந் திங்களின்வாய்ந் 
    தளிவளர் வல்லியன் னாய் முன்னி 
        யாடு பின் யானளவா
    ஒளிவளர் தில்லை யொருவன்
        கயிலை யுகு பெருந்தேன் 
    துளிவளர் சாரற் கரந்துவங்ங
        னேவந்து தோன்றுவனே

    வன்புறையின் வற்புறுத்தி 
    அன்புறுமொழியை யருககன்றது.

    இதன் பொருள் : வளர் வான் சிலை செம்கனி வெள்முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர் 
வல்லி அன்னாய்-கால் நிமிர்ந்த பெரிய சிலைகளும் சிவந்த கொவ்வைக்கனியும் வெள்ளிய முத்தங்களும் 
ஒரு திங்களின் கண்ணே வாய்ப்ப அளிகள் தங்கும் வல்லியை யொப்பாய்; தெளி - யான் சொன்னவற்றைத் 
தெளிவாயாக, முன்னி ஆடு-இனிமுற்பட்டு விளையாடுவாயாக; ஒளிவளர் தில்லை அளவா ஒருவன் 
கயிலை உகுபெரு தேன் துளி வளர் சாரல் கரந்து - ஒளி வளராநின்ற தில்லைக்கணுளனாகிய அளக்கப்படாத 
ஒருவனது கைலையிடத்து உகா நின்ற பெருந்தேன்றுளிகள் பெருகுஞ் சாரற் பொதும்பரிலொளித்து,
யான் பின் உங்ஙன் வந்து தோன்றுவன் - யான் பின்னும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன் எ-று. 

    தெளிவளர் வான்சிலை என்பதற்கு ஒளிவளருஞ் சிலையென் றுரைப்பினு மமையும் , திங்களை 
வல்லிக்கண்ணதாகக் கொள்க.  வாய்ந்தென்பது வாய்ப்பவென்பதன் றிரிபாகலின் அளிவள ரென்னும் 
பிறவினை கொண்டது. சாரலென்பது ஆகுபெயர், வன்புறையின் - வற்புறுத்துஞ் சொற்களால், 
மெய்ப்பாடு; அது, பயன்: இடங்குறித்து வற்புறுத்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு : வலியுறுத்தும் வார்த்தைகளாலே வலியுறுத்தி , விரும்பத்தக்க 
வார்த்தையினையுடையாள் அருகினின்று நீங்கியது.        16

    செய்யுள்: நான் முன்பு சொன்ன வார்த்தைகளைத் தெளிவாயாக; கால் நிமிர்த்த பெரிய 
சிலைகளையும், சிவந்த கொவ்வைக் கனியையும், வெண்மையுடைய முத்து நிரையினையும் 
ஒரு திங்களிடத்தே வாய்க்கக் கண்டு வண்டுச் சாதிகள் மிக்க வல்லிகாரத்தை  ஒப்பாய்!  முற்பட்டு 
விளையாடுவாயாக; அதற்குப் பின்னே நான் அளவிடப்படாத ஒளியாயுள்ளவன் மிக்க 
பெரும்பற்றப்புலியூரிலே ஒப்பில்லாதவன் அவனுடைய ஸ்ரீ கைலாயத்தில் உகா நின்ற பெரிய     (திருத்: கைலாயத்கில்/கைலாயத்தில்)
தேன் துளிகளால் மிகுந்த வரைச் சாரலிடத்து ஒளித்து ஒரு பக்கத்தாலே வந்து தோன்றக்கடவேன்.

            17. அருமையறிதல்*
            ------------------

* பேரின்பப் பொருள்:  கண்டவின்பங் கனவென வியந்தது.                    (திருத்: பேரின்ப்/பேரின்பப்)

    அருமை யறிதல் என்பது ஆடிடத் துய்த்து அகலா நின்றவன் ஆயவெள்ளத்தையும் 
அவ்விடத்தையும் நோக்கி, இவளை யானெய்தினேனென்பது மாயமோ கனவோ? இன்னதென்று 
அறியேன்; இனியிவள் நமக்கு எய்தற்கு அரியவ' ளென அவளது அருமையறிந்து வருந்தா நிற்றல், 
அதற்குச் செய்யுள்;-

    புணர்ப்போன் நிலனும், விசும்பும்
        பொருப்புந்தன் பூங்கழலின்
    துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் 
        லோன்தில்லைச் சூழ்பொழில் வாய்
    இணர்ப்போ தணிகுழ லேழைதன் 
        னீர்மையிந் நீர்மையென்றாற்
    புணர்ப்போ கனவோ பிறிதோ 
        அறியேன் புகுந்ததுவே.

    சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி 
    மற்றவ ளருமை மன்ன னறிந்தது

    இதன் பொருள்: போது இணர் அணி குழல் ஏழை தன் நீர்மை இந்நீர்மை என்றால் 
பூங்கொத்துக்களை அணிந்த குழலையுடைய ஏழை தனது நீர்மை இத்தன்மையாயின்; 
நிலனும் விசும்பும் பொருப்பும் புணர்ப்போன்- மண்ணையும் விண்ணையும் மண்ணின் கணுள்ள 
மலையையும் படைப்போன்; தன் பூ கழல் துணர்ப்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் - 
தன்னுடைய பொலிவினையுடைய திருவடியாகிய துணர்ப்போதுகளை எனக்கு முடியணி யாக்கும் 
பழையோன்; தில்லை சூழ் பொழில் வாய் புகுந்தது - அவனது தில்லைக்கணுண்டாகிய 
சூழ்பொழிலிடத்து இவள் புகுந்தது; புணர்ப்போ கனவோ பிறதோ அறியேன் - மாயமோ கனவோ 
இரண்டு மன்றி வேறொன்றோ! இன்னதென்றறியேன் எ-று.

    பூங்கழலென்பது பூப்போலுங் கழலென உவமைத் தொகையாய்க் கழலென்னுந் துணையாய் 
நின்றதெனினுமமையும்;  வீரக்கழலை யுடைய துணர்ப் போதென்று உரைப்பினுமமையும் . 
பொழில்வாயிணர்ப்போதென்பாருமுளர் * . பிரிதோ வென்பதற்கு நனவோ வென்பாருமுளர்-
புகுந்ததுவே யென்பதில் ஏகாரம் விகாரவகையான் வந்தது, சுற்றம்: ஆயம், இடம்: அந்நிலம், 
சூழல்: அந்நிலத்துள்ளும் புகுதற்கரிய அப்பொழில், மெய்ப்பாடு - மருட்கை பயன்: தலைமகள தருமையுணர்தல்.

*என்பவர் பழைய வுரைகாரர்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  ஆயக் கூட்டத்தாரையும் மடவரார் புகுதற்கரிய இடத்தையும்;     (திருத்: இடைத்தயும்/ இடத்தையும்)
சூழ்ந்த பொழிலையும் பார்த்து மற்றந்த நாயகியுடைய அருமையை நாயகன் அறிந்தது.

    செய்யுள்: பூமியையும் ஆகாயத்தையும் மலைகளையும் படைக்கின்றவன், தன் பொலிவினை
யுடைத்தாகிய ஸ்ரீ பாதங்களாகிய இணையொத்த பூக்களை என் முடிக்கு அணியாக்கும் தொல்லோன், 
அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்தே கொத்துப்பூ அணிந்த கூந்தலினையுடைய 
நாயகி தன்மை இத்தன்மையாயிருந்தது: ஆன பொழுது மாயமோ? தரிசனங் கண்டோமோ? அன்றி 
நாமறியாதன சிலவோ? இவளுடன் கூடின பின்பு தோன்றினது இன்னபடி என்று அறிகிலேனில்லை. 17

            18. பாங்கியையறிதல்*
            ---------------------
* பேரின்பப்பொருள் : சிவமறிவிக்கத் திருவருளைக்கண்டது.         (திருத்: பொருள்வ/பொருள், திருருளை/திருவருளை)

    பாங்கியை யறிதல் என்பது அருமையறிந்து வருந்தா நின்ற தலைமகன் 
ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண் அவளும் 
இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங்கொல்லோவென உட்கொண்டு எல்லாரையும் 
போலன்றித் தன்காதற்றோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக்கண்டு,
 'இவள் போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பா' மென வுட்கொண்டு 
அவள் காதற்றோழியை அறியா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    உயிரொன் றுளமுமொன் றொன்றே 
        சிறப்பிவட் கென்னொடென்னப் 
    பயில்கின்ற சென்று செவியுற
        நீள் படைக் கண்கள் விண்வாய்ச்
    செயிரொன்று முப்புரஞ் செற்றவன் 
        தில்லைச்சிற் றம்பலத்துப்
    பயில்கின்ற கூத்த னருளென 
        லாகும் பணிமொழிக்கே

    கடல்புரை யாயத்துக் காதற் றோழியை
    மடவரல் காட்ட மன்ன னறிந்தது.

    இதன் பொருள்: என்னொடு இவட்கு உயிர் ஒன்று ,உளமும் ஒன்று, சிறப்பு ஒன்று என்ன-
என்னோடு இவட்கு உயிருமொன்று  மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் 
ஒன்றென்று சொல்லி; பணிமொழிக்கு - தாழ்ந்த மொழியை யுடையாட்கு: செவி உற நீள்படை கண்கள் 
சென்று பயில்கின்ற - செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலுங் கண்கள் இவள்கட் சென்று பயிலா 
நின்றன: அதனால் இவள் போலு மிவட்குச் சிறந்தாள் எ- று. விண் வாய் செயிர் ஒன்று முப்புரம் 
செற்றவன்-விண்ணிடத்துக் குற்றத்தைப் பொருந்தின மூன்று புரத்தினையுங்கெடுத்தவன் : 
தில்லை சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன்- தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடைவிடாதாடுகின்ற 
கூத்தை யுடையான் ; அருள் எனல் ஆகும் பணிமொழிக்கு - அவன தருளென்று துணியலாம் 
பணிமொழிக்கெனக் கூட்டுக.

    அருளென்றது அவளான் வரும் ஆனந்தத்தை, மெய்ப்பாடு:  பெருமிதம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.

    இப்பதினெட்டுப் பாட்டும் இயற்கைப் புணர்ச்சியையும் அது நிமித்தமாகிய கிளவியையும் நுதலின. 
இதனை இயற்கைப் புணர்ச்சியெனினும், தெய்வப் புணர்ச்சியெனினும், முன்னுறு புணர்ச்சி யெனினும், 
காமப் புணர்ச்சி யெனினும் ஒக்கும்.

            இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு)  கொளு: கடலையொத்த ஆயக் கூட்டத்தாரிடத்து அன்புடைய தோழியை 
மடப்பத்தையுடையவள் காட்ட நாயகனறிந்தது.

    செய்யுள்: விசும்பிடத்தே குற்றமுடைய மூன்றுபுரத்தை வழித்தவன். பெரும்பற்றப்புலியூர் -             (திருத்: புரக்தை/புரத்தை)
திருவம்பலத்தே ஆடி யருளுகிற திருக்கூத்தை யுடையவன், அவனுடைய  திருவருளென்று சொல்லா  நிற்கின்ற     (திருத்: யுடயவன்/யுடையவன்)
தாழ்ந்த வார்த்தையினை யுடையாளுக்குக் காதை மோதி நீண்ட வேல் போலுங் கண்கள்; எனக்கும் இவளுக்கும் 
உயிரொன்று இவளுடைய கருத்தும் ஒன்று பட்டிருக்கும்: உடன் பயில்கின்ற இருவருக்கும் மாதா பிதாக்களால் 
செய்யப்படும் சிறப்புக்களும் ஒன்றுபட்டிருக்கும்,

    அதனால் இவளே  தலைவிக்குச் சிறந்தவள் போலும் என உட்கொண்டான்.     18

            இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று


                2. பாங்கற் கூட்டம் *
                ------------------

*பேரின்பக்கிளவி. "பாங்கற் கூட்டம் பதினெட்டின்பந், தாங்குதற் போதந் தான்கண் டகறல்', (திருக் . உண்மை)

    இனிப் பாங்கற் கூட்டம் வருமாறு. தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலை மகன், தெருண்டு வரைதல் தலை ; 
தெருளானாயின், தன் பாங்கனானாதல் இடந்தலைப்பாட்டானாதல் இரண்டனுளொன்றாற் சென்றெய்தல் 
முறைமையென்ப அவற்றுள் பாங்கற் கூட்டமாவது: -

    நினைதல் வினாத லுற்ற துரைத்தல் 
    கழறன் மறுத்தல் கவன்றுரைத் தல்லே 
    வழியழி வுரைத்தல் விதியொடு வெறுத்த 
    னொந்து கூற னோத னீங்கி 
    யியலிடங் கேட்டலிய லிடங் கூறல் 
    வற்புறுத்தல் குறிவழிச் சேறல் காண்டல் 
    வியந்து ரைத்தலம் மெல்லிய றன்னைக் 
    கண்டமை கூறல் கருத்துக் கேற்பச் 
    செவ்வி செப்ப லவ்விடத் தேக 
    லீங்கிவை நிற்க விடந்தலை தனக்கு
    மாங்கவண் மெலிதல் பொழில்கண்டு மகிழ்த 
    னீங்கா மகிழ்வொடு நிலைகண்டு வியத்த
    றளாவகன் றுரைத்தன் மொழிபெற வருந்தல்
    கண்புதை வருத்தங் காவ னாண்விட 
    னண்பொடு சென்று நன்மருங் கணைத 
    லின்றியமை யாமை யாயத் துய்த்த 
    னின்று வருந்த னிகழா றைத்துந் 
    துன்று பாங்கற் றுறையென மொழிப,

    இதன் பொருள்: பாங்கனை நினைதல். பாங்கன் வினாதல், உற்றுதுரைத்தல், கழறியுரைத்தல், 
கழற்றெதிர் மறுத்தல், கவன்றுரைத்தல், வலியழிவுரைத்தல், விதியொடுவெறுத்தல், பாங்கனொந்துரைத்தல்,
இயலிடங்கேட்டல்,  இயலிடங்கூறல் , வற்புறுத்தல், குறிவழிச்சேரல், குறிவழிக்காண்டல், தலைவனை வியந்துரைத்தல், 
கண்டமைகூறல், செவ்விசெப்பல், அவ்விடத்தேகல் இப்பதினெட்டுக் கிளவியு நிற்க, இடந்தலை தனக்கும் 
மின்னிடைமெலிதல், பொழில் கண்டு மகிழ்தல், உயிரௌவியத்தல், தளர்வகன்றுரைத்தல், மொழிபெறவருந்தல்; 
நாணிக்கண் புதைத்தல், கண்புதைக்க வருந்தல், நாண்விட வருந்தல், மருங்கணைதல், இன்றியமையாமை கூறல், 
ஆயத்துய்த்தல், நின்று வருந்தல் எனவிவை முப்பதும் பாங்கற் கூட்டமாம் எ-று. அவற்றுள் -

            1.பாங்கனை நினைதல்*
            -----------------------

*பேரின்பப் பொருள். அருள்போற் போத மாமென நினைந்தது.

    பாங்கனை நினைதல் என்பது தெய்வப்புணர்ச்சிய திறுதிக் கட்சென்றெய்துதற்கருமை 
நினைந்துவருந்தா நின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து, 
'இவள் அவட்குச் சிறந்த துணையன்றே: அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச் சிறந்தானைக் 
கண்டு இப்பரி சுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லை' யெனத் தன் காதற்பாங்கனை 
நினையாநிற்றல், அதற்குச் செய்யுள் -

    பூங்கனை யார்புனற் றென்புலி
        யூர்புரிந் தம்பலத்துள் 
    ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
        பிரானடித் தாமரைக்கே
    பாங்கனை யானன்ன பண்பனைக்
        கண்டிப் பரிசுரைத்தால்
    ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
        பாவையை யெய்துதற்கே

    எய்துதற் கருமை யேழையிற் றோன்றப் 
    பையு ளுற்றவன் பாங்கனை நினைத்தது

    இதன் பொருள்: பூ கனை ஆர் புனல் தென்புலியூர் அம்பலத்துள் புரிந்து - பூக்களையுடைத்தாய் 
முழங்குதனிறைந்த புனலை யுடைத்தாகிய தென்புலியூரம்பலத்தின் கண் விரும்பி; ஆங்கு எனை         (திருத்: புடைத்தாகிய/யுடைத்தாகிய)
ஆண்டுகொண்டு     ஆடும் பிரான் அடித் தாமரைக்கே பாங்கனை - அவ்வாறென்னை யாண்டு கொண்டு     (திருத்: அடி/அடித்)
ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை ; யான் அன்ன பண்பனை - என்னை 
யொக்கு மியல்புடையானை;  கண்டு இப்பரிசு உரைத்தால்- கண்டு நிகழ்ந்த விப்பரிசை யுரைத்தால்:
மடம் பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார் - மடப்பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின் கண் 
என்னைத் தடுப்பார் யாவர்? ஒருவருமில்லை எ-று.

    அம்பலத்துளாடும் பிரானெனவியையும் தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு 
கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார் ஆண்டவாறு சொல்லுதற் கருமையான். 
ஏழையினென்புழி, இன்: ஏழனுருபு; அதுபுறனடையாற் கொள்ளப்பட்டது . பையுள்: நோய்; மயக்கமெனினு 
மமையும், மெய்ப்பாடு: அசைவு பற்றி வந்த அழுகை. என்னை " இளிவே  யிழவே யசைவே வறுமையென ,
விளிவில் கொள்கை யழுகை நான்கே" என்றாராகலின் (தொல், பொருள், மெய்ப்பாடு, 5) பயன்: ஆற்றாமை 
நீங்குதல், மேற்றோழியால் என் குறை முடிக்கலாமென்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால் 
முடிப்பதெனக்  கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கருமம் முளவாயினன்றே பிறரைக் 
குறையுறவேண்டுவதென்பது. 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  கூடுதற்கரியபடி நாயகியிடத்தே தோன்ற அதனாதே             (ஐயம்: அதனாதே?அதனானே?)
கிலேசமுற்றவன் தோழனை நினைந்தது . 

    செய்யுள் ; பொலிவினையும் ஆரவாரத்தையும் உடைத்தாகிய நிறைந்த நீராலே சூழப்பட்ட 
தெற்குத் திருப்பதியாயிருந்துள்ள பெரும் பற்றப்புலியூரில் திருவம்பலத்திடத்தே அப்படியே என்னை 
அடிமை கொண்டு விரும்பி ஆடுகிற சுவாமி, அவனுடைய திருவடித் தாமரைகளிலே சார்புள்ளவனை, 
எனக்கு என்னையொத்த செய்தியுடையவனை, அவனைக்கண்டு இங்குப் புகுந்தபடியைச் சொன்னால் 
இவ்விடைத்து என்ன யாராலே தகப்படும்! மடப்பமுடைத்தாய ஓவியம் போன்ற இவளைக் கூடுமிடத்து.    (திருத்: முடத்தாய/முடைத்தாய)

* உரைப்பவர் பழைய வுரைகாரர்

            2. பாங்கன் வினாதல்*
            --------------------
*பேரின்பப்பொருள்:  மனத்தாற் கண்டிஃ தென்னென வருந்தல்.

    பாங்கன் வினாதல் என்பது தன்னை நினைந்து வாரா நின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு 
அடியிற்கொண்டு முடிகாறு நோக்கி, 'நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யிவ்வாறாதற்குக் காரணமென்னோ' 
வென்று பாங்கன் முந்துற்று வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் 
        பலத்துமென் சிந்தையுள்ளும்
    உறைவா னுயர்மதிற் கூடலின் 
        ஆய்ந்தவொண் டீந்தமிழின்
    துறைவாய் நுழைந்தனை யோவன்றி 
        யேழிசைச் சூழல்புக்கோ
    இறைவா தடவரைத் தோட்கென்கொ 
        லாம்புகுந் தெய்தியதே

    கலிகெழு திரள் தோள் மெலிவது கண்ட 
    இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது

    இதன் பொருள்: சிறைவான் புனல்தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் 
காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச் சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய 
தீயவிடத்தும் ஒப்பத் தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் 
நுழைந்தனையோ- உயர்ந்த மதிலை யுடைய கூடலின்கண் ஆராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து 
நுழைந்தாயோ அன்றி ஏழிசையினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா - இறைவனே ; தடவரை தோட்கு 
புகுந்து எய்தியது என்கொலாம் - பெரிய வரை போலு நின்றோள்கட்கு மெலியப் புகுந்தெய்தியது 
என்னோ? எ று

    தமிழின் றுறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசையாவன குரல் முதலாயின **
சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும் பாடலு முதலாயினவற்றை. கொல்: கொலாமென வீறுதிரிந்தது; 
ஆம் அசைநிலை யெனினுமமையும் கலி- புகழான் வரு மாரவாரம்; தழைத்த வெனினுமமையும் 
மெய்ப்பாடு அணங்கு பற்றி வந்த அச்சம், என்னை, "அணங்கே விலங்கே கள்வர் தம்மிறையெனப் 
பிணங்கல் சாலா வச்ச நான்கே'' (தொல், பொருள், மெய்ப்பாட்டியல், 8) என்றாராகலின். 
பயன்: தலைமகற்கு உற்றதுணர்தல்.

**குரல் முதலாயின - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,  விளரி, தாரம் என்பன            (திருத்: விளங் / விளரி)

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு : புகழார்வம் பொருந்தின தோள்கள் இளைத்தது. கண்டு 
இனிதாகிய சீவனை ஒத்த தோழன் நாயகனைக் கேட்டது.

    செய்யுள்: வான நீராலே ஊரைச் சுற்றிச் செய்யப்பட்ட மிக்கசெல்வம் பொருந்தின தில்லைச் 
சிற்றம்பலத்திலும், என்னுடைய மனமாகிய தூய்தலான விடத்தும், இவ்விரண்டிடனும் ஒக்க உறைபவன் 
அவனுயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவாலவாயிலில் இருந்து ஆராய்ந்த அகமும் புறமும்.... தாயோ ? 
அதுவல்லாதாகில் ஏழிசைச் சூழ்ச்சியாகிய பாடலு மாய்ந்தா ...........கொலோ சுவாமி. உன்னுடைய 
பெருவரை நிகர்த்த தோளுக்கு என்னதான் வந்துற்றது        20

            3. உற்றதுரைத்தல்*
            ------------------

*பேரின்பப்பொருள்: உயிருளத் துடனே யுற்றதுரைத்தது

    உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவா நின்ற பாங்கனுக்கு , நெருநலைநாட் கைலைப்பொழிற்கட் 
சென்றேன்: அவ்விடத்து ஒரு சிற்றிடைச் சிறு மான்விழிக் குறத்தியால் இவ்வா றாயினே' னெனத் தனக்குற்றது 
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
        குஞ்சரங் கோளிழைக்கும் 
    பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
        தாங்கப் பணைமுலைக்கே 
    தேம்பற்  றுடியிடை மான்மட
        நோக்கிதில் லைச்சிவன்றாள்
    ஆம்பாற் றடமலர் சூடுமென்
        னாற்ற லகற்றியதே

    மற்றவன் வினவ உற்ற துரைத்தது.

    இதன் பொருள் : கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை- ஓந்திக் கொதுங்கிப் புறப்பட் டிரை 
கவராத மயில்;  குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பைப் பிடித்துப் படம் கிழித்தாங்கு- குஞ்சரத்தைக்          (திருத்:குஞ்சரத்தைச்/குஞ்சரத்தைக்)
கோளிழைக்கவல்ல பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போல ; மான் மடம் நோக்கி 
அப்பணை முலைக்கு தேம்பல் துடி இடை -மானின் மடநோக்குப் போலும் நோக்கை யுடையாளுடைய 
அப்பணை முலையானே தேய்தலையுடைய துடிபோலுமிடை; தில்லை சிவன் தாள் ஆம் பொன் 
தடமலர் சூடும் என் ஆற்றல் அகற்றியது தில்லைக்கணுளனாகிய சிவனுடைய தாளாகிய 
பொன்போற் சிறப்புடைய பெரிய தாமரைப் பூவைச் சூடுகின்ற எனது வலியை நீக்கிற்று எ-று.

    குஞ்சரம் தான் உவமையன்றி உவமைக்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது. 
தடமலர் தான் உவமிக்கப்படும் பொருளன்றி உவமிக்கப்படும் பொருட்கடையாய் அதனாற்றல் 
விளக்கி நின்றது. அப்பணைமுலைக்கே யென்று இழித்தது, இவள் முலையை நோக்கியன்று 
முலையென்னுஞ் சாதியை நோக்கி. துடியிடையை யுடைய மான் மடநோக்கி என்னாற்ற லகற்றியது 
மஞ்ஞை பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற் போலுமெனக் கூட்டியுரைப்பாருமுளர்**
மெய்ப்பாடு! அழுகை . பயன்: பாங்கற் குணர்த்துதல்.

** உரைப்பவர் பழைய வுரைகாரர்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (வருந்தியதற்குக் காரணத்தைப் பாங்கன் வினவத் தலைவன் 
தலைவியால் தனக்குற்றதைக் கூறியது)

    செய்யுள் மானின் மெத்தென்ற நோக்கத்தினை உடையவளுடைய அந்தப் பணைத்த தனங்களின் 
பொறை ஆற்றாது தேம்புதலை உடையதாய் தமருக மொத்த இடையானது திருவம்பலநாதனுடைய         (திருத்: உடைதாய்/உடையதாய்)
சீ பாதங்களாகிய அழகிய பெரிய மலர்களைச் சூட்டவல்ல என் வலிமையை அழித்தது. பச்சோந்திக்குப் 
பயப்பட்டு ஒதுங்கிப் புறப்பட்டு இரை கவர மாட்டா மயில் யானையைக் கோட்செய்து கொல்லவல்ல 
பாம்பைப் பிடித்து அதனுடைய படத்தைக் கிழித்ததனோடொக்கும்.      21                    (திருத்: கிழிந்த/கிழித்த)

            4. கழறியுரைத்தல்* 
            -----------------
*பேரின்பப் பொருள் ; மனமுயிருடனே மயங்கியுரைத்தது.

    கழறியுரைத்தல் என்பது உற்றதுரைப்பக் கேட்ட பாங்கன். இஃது  இவன்றலைமைப்பாட்டிற்குப் 
போதாதென  உட்கொண்டு. 'நீ ஒரு சிறுமான் விழிக்கு யான் இவ்வாறா யினேனென்றல் நின் கற்பனைக்குப் 
போதா' தெனக் கழறிக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    உளமாம் வகைநம்மை யுய்யவந்
        தாண்டுசென் றும்பருய்யக் 
    களமாம் விடமமிர் தாக்கிய 
        தில்லைத்தொல் லோன்கயிலை
    வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
        நின்றொர் வஞ்சிம்மருங்குல்
    இளமான் விழித்ததென் றோஇன்றெம்
        மண்ண லிரங்கியதே

    வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன் 
    கற்பனையிற் கழறியது

    இதன் பொருள்: உளம் ஆம் வகை உய்ய வந்து நம்மை ஆண்டு-உளமாயும்  இலமாயும் 
மாறி வாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான் வந்து 
நம்மையாண்டு; உம்பர்  உய்ய- உம்பரெல்லாந் தன்கட் சென்று பிழைக்க; களம் ஆம் விடம் அமிர்து 
ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை மிடற்றின் கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய 
தில்லைக்கணுளனாகிய பழையோனது கைலையில்; வளம் மாபொதும்பரின் வஞ்சித்து நின்று-
வளவிய மாஞ்சோலைக் கண் வருத்துவதென்றறியாமல் நின்று, வஞ்சி மருங்குல் ஒரு இளமான் 
விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது - வஞ்சிபோலும் மருங்குலையுடையதோ ரிளமான் 
விழித்ததென்றோ எம் மண்ணல் இன்றிரங்கியது! இது நின் பெருமைக்குத்தகாது எ-று.

    நம்மையென்றது தம்மைப்போல்வாரை. களமார்விட மென்பதூஉம் பாடம் * மெய்ப்பாடு எள்ளல் 
பற்றி வந்த நகை. என்னை, "எள்ள லிளமை பேதைமை மடனென்றுள்ளப்பட்ட நகை நான் கென்ப" 
(தொல். பொருள், மெய்ப்பாட்டியல், 4) என்றாராகலின். பயன் : கழறுதல்.

*என்பது பழையவுரைகாரர் பாடம்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  நாயகன் தன் மெய்யான தோழன் நெருங்கிச் சொல்லும்         (திருத்:நாயகத்னத்/நாயகன்)
வார்த்தைகளாலே மறுத்தது.

    செய்யுள்: உள்ளோமாயும் இல்லோமாயும் பிறந்தும் இறந்தும் திரிகின்ற நம்மை (எப்பொழுதும் 
உள்ளோமாம்படி) பிழைக்கும்படி  தானே வந்தாண்டு   (அடிமை  கொண்டு) தன்னிடத்திலே சென்று தேவர்கள் 
பிழைக்கும்படிகண்டத்திலே  நிறைந்த விடத்தைத் திருவமுதாகக் கொண்ட பெரும்பற்றப்  புலியூரிற் 
பழையவன்,  அவனுடைய கயிலாய வரையின்  வளமுடைத்தாய மாமர நெருக்கத்திடத்தே துன்பம் 
செய்கிறவடிவை இன்பம் செய்கிற வடிவு போலே கரந்து நின்று வஞ்சிக் கொம்பினையொத்த 
இடையினையுடையாள் ஒருநோக்கத்தால் இளையமான் போல்வாள் பார்த்தாள் என்றோ, 
இப்பொழுது என்னுடைய நாயகன் வருந்தியது.         22


            5. கழற்றெதிர் மறுத்தல்*
            ----------------------
* பேரின்பப் பொருள் : 'போதத்தாற் காணும் பொருளன்றென்றது

    கழற்றெதிர் மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கை 
வயத்தனாய் நின்று 'என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை; கண்டனையாயிற் கழறா' யென்று 
அவனொடு மறுத்துரைத்து வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் 
        தில்லைச்சிற் றம்பலத்து 
    மாணிக்கக் கூத்தன் வடவான்
        கயிலை மயிலைமன்னும் 
    பூணிற் பொலிகொங்கை யாவியை 
        யோவியப் பொற்கொழுந்தைக்
    காணிற் கழறலை கண்டிலை** 
        மென்றோட் கரும்பினையே

    ஆங்குயி ரன்ன பாங்கன் கழறிலை 
    வளந்தரு வெற்பனுளந்தளர்ந் துரைத்தது

** கழறிலை, என்பது பழையவுரைகாரர் பாடம்

    இதன் பொருள் : சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லைச்சிற்றம்பலத்து சேய்மைக்கண்         (திருத்: தில்லை/தில்லைச்)
விளங்கித் தோன்றா நின்ற செம்பொனானியன்ற மாளிகையையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின் 
கணுளனாகிய மாணிக்கம் கூத்தன் வட வான் கயிலைமயிலை - மாணிக்கம்போலுங் கூத்தனது 
வடக்கின்கணுண்டாகிய பெரிய கைலைக்கண் வாழு மயிலை. மன்னும் பூணின் பொலி கொங்கை 
ஆவியை-பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையை யுடைய என்னுயிரை ஓவியம்             (திருத்: ஒவியம்/ஓவியம்)
பொன் கொழுந்தை காணின் கழறலை ஓவியமாகிய பொற் கொழுந்தைக் கண்டனையாயிற்             (திருத்: ஒவிய/ஓவிய)
கழறாய் மென்தோள் கரும்பினை கண்டிலை - மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ-று.

    மாணிக்கக் கூத்த னென்புழி மாணிக்கத்தைக் கூத்திற்குவமையாக வுரைப்பினுமமையும் 
பொற்கொழுந்து - பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து மென்றோட் கரும்பினை 
யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பை யுடையாளை யெனினுமமையும். மெய்ப்பாடு : 
அழுகையைச் சார்ந்து வருத்தம்பற்றி வந்த விளிவரல், என்னை , 'மூப்பே  பிணியே வருத்த மென்மையோ, 
டியாப்புற வந்த விளி வரனான்கே" (தொல். பொருள், மெய்ப்பாட்டியல், 6) என்றாராகலின், பயன்: பாங்கனை 
யுடம்படுவித்தல், பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத் துரைத்தானென்பது.                    (திருத்:பாங்கள்/பாங்கன்)

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  அவ்விடத்தை உயிரை நிகர்த்த தோழன் மறுத்துச் சொல்ல           (ஐயம்: அவ்விடத்தை?அவ்விடத்த?)
எல்லா வளப்பத்தினையும் தருகிற வரையினை யுடையவன் மனஞ்சலித்துச் சொன்னது.                (திருத்: சலித்துக்/சலித்துச்)

    செய்யுள் : அதிதூரத்தே பொலிந்து தோன்றுகிற செம்பொன் மண்டபங்களை உடைத்தாகிய 
பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் மாணிக்கம் போலும் அழகிய திருக்கூத்தினையுடையவன் 
அவனது வடக்கின்கண் உண்டாகிய கயிலாயத்தின் மயிலின் சாயலொப்பாளை நிலைபெற்ற 
ஆபரணங்களால் சிறந்த முலைகளையுடைய என் உயிரையொப்பாளைச் சித்திரமாகப் பொன்னாலெழுதிய 
வல்லிசாதம் போல்வாளைக் கண்டாயாகில் இங்ஙனே வெறுத்துச் சொல்லமாட்டாய்; மெல்லிய         (திருத்: போல்வாளைச்/போல்வாளைக்)
தோள்களையுடையாளாய், அக்கரும்பை ஒப்பாளைக் கண்டிலை காண் . - ஆனபடியால் 
சொன்னாயித்தனை.         23

            6. கவன்றுரைத்தல்*
            -------------------
* பேரின்பப்பொருள் : பின்னும் போதந் தன்னிலை சொன்னது.

    கவன் றுரைத்தல் என்பது மறுத்துரைத்து வருந்தாநிற்பக்கண்ட பாங்கன் ஒரு காலத்துங் 
கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரண மென்னோவெனத் தலைவனுடன் கூறா நிற்றல்.             (திருத்: வுவ்ளம்/வுள்ளம்)
அதற்குச் செய்யுள்--

    விலங்கலைக் கால்விண்டு மேன்மே 
        லிடவிண்ணு மண்ணு முந்நீர்க் 
    கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
        காய்கமழ் கொன்றை துன்றும் 
    அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
        தானரு ளில்லவர்போல்
    துலங்கலைச் சென்றி தென் னோவள்ள
        லுள்ளந் துயர்கின்றதே

    கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக் 
    கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.

    இதன் பொருள்: விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட-மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட ; 
விண்ணும் மண்ணும் முந்நீர் கலங்கலை சென்ற அன்றும் கலங்காய்-வானுலகும் மண்ணுலகும் முந்நீராற் 
கலங்குதலையடைந்த விடத்துங்  கலங்குந் தன்மையை யல்லை ; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த 
சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கலை சென்று - கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய 
மாலையை முடிமாலையாகச் சுற்றிய சிற்றம்பலத்தானது அருளை  யுடையரல்லாதாரைப் போலத் 
துளங்குதலை யடைந்து; வள்ளல் உள்ளம் துயர்கின்றது இது என்னோ - வள்ளலே நினதுள்ளந் துயர்கின்றது 
இஃதென்னோ! எ-று

    விண்டென்பது பிளந்தென்பதுபோலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன் றொழிற்கும் பொது. 
இவனது கலக்கத்திற்குக் காரணமாய் அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற் 
கூறினான். வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்தது.  இதென்னோ வென்பது வினாவுதல் கருதாது 
அவனது கவற்சியை விளக்கி நின்றது . கலக்கஞ் செய் பாங்கன் - கலங்கியபாங்கன்; தலை மகனைக் கலக்கிய
பாங்கனெனினுமையும், மெய்ப்பாடு: இளி வரல்.  பயன்: கழறுதல். மேற்பொதுவகையாற் கழறினான், 
ஈண்டு விசேட வகையாற் கழறினானென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொலைத் தொழிலை உடைய யானை அனைய நாயகன் 
குறைபெற விரும்பிச்  சொல்ல அதற்குக் கலக்கம்செய் பாங்கன் கிலேசத்தைச் சொன்னது. 

    செய்யுள்:  மேரு முதலாகிய மலைகளைக் காற்றானது மேல்  கீழாக்கி ஒடித்து  பென்மேல் போகட 
ஆகாயமும் பூமியும் கடலே கலங்குதல் அடைந்த அந்நாளினும் உனக்கொரு சலிப்பற்றிருப்பை நறு நாற்றம் 
கமழ்கின்ற கொன்றைப்பூவாலே நெருங்கின மாலையை அணிந்த திருச்சிற்றம்பலவன் அவனுடைய 
அருளில்லவர் போல் நடுக்கத்தை அடைந்து இங்ஙன் ஏன் தான் வள்ளலே! உன்னுடைய மனம் வருந்துகின்றதே !      24

            7.வலியழிவுரைத்தல் **
            ------------------

**பேரின்பப் பொருள்: உயிர் நெஞ்சுடன்பட் டுருகியுரைத்தது.

    வலியழி வுரைத்தல்:  என்பது பாங்கன் கவன்றுரையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான் 
இன்று ஒருசிறு  மான்விழிக்கு இவ்வாறாயினேனெனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தாநிற்றல். 
அதற்குச்  செய்யுள் :-

    தலைப்படு சால்பினுக் குந்தள
        ரேன்தசித்தம் பித்தனென்று 
    மலைத்தறி வாரில்லை யாரையுந்
         தேற்றுவ னெத்துணையுங்
    கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் 
        றம்பல வன்கயிலை 
    மலைச்சிறு மான்விழி யாலழி
        வுற்று மயங்கினனே*

* இப்பாடலைப் பழையவுரைகாரர் 26 ஆவதாகக்கொண்டார்.

    நிறைபொறை தேற்றம் நீதியோடு சால்பு 
    மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.

    இதன் பொருள்: தலைப்படு சால்பினுக்கும் தளரேன் - முன் தலைமையாய அமைதியானு முள்ளந் தளரேன்; 
சித்தம் பித்தன் என்று மலைத்து அறிவார் இல்லை - பிறழவுணர்ந்தாயென்று மாறுபாட்ட றிவாருமில்லை; 
யாரையும் எத்துணையும் தேற்றுவன்-பிறழவுணர்ந்தார் யாவரையும் மிகவுந் தெளிவியா நிற்பேன் ;         (திருத்: மிகவந்/மிகவுந்)
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினன் 
இப்பொழுது ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது கைலை மலைக்கணுண்டாகிய 
சிறுமானினது விழியால் அழிந்து மயங்கினேன் எ-று.

    சால்பழிந் துள்ளந்தளரே னென்பான் சால்பினுக்குந் தளரேனென்றான்; தலைப்படு சால்பென்பதற்கு 
எல்லாப் பொருளுஞ் சிவனைத் தலைபட்டுச் சென்றொடுங்கும் ஊழியிறுதி யென்றுரைப்பினுமமையும். 
நிறையும் பொறையுஞ் சால்பும் தலைப்படு சால்பென்றதனாற் பெற்றாம். பித்தனென்று மலைத்தறிவா 
ரில்லை யென்றதனால் தேற்றம் பெற்றாம், யாரையுந் தேற்றுவனென்றதனால் நீதிபெற்றாம். கலங்கினாரைத் 
தெளிவித்தல் நீதியாகலான். ஈண்டுத் தன்னையுயர்த்த லென்னுங் குற்றந்தங்காது, சால்பு முதலாயினவற்றை 
இப்பொழு துடையே னென்னாமையின் சால்பு “அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம்  வாய்மையோடைந்து சால் 
பூன்றிய தூண்" என்பதனானறிக.  நோக்கிற்கு - நோக்கினால். மெய்ப்பாடு : அழுகை . பயன் : ஆற்றாமையுணர்த்தல், 
இதுவும் மேலதேபோல மறுத்துரைத்தானென்பது. 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நிறைந்த புலன்களை நிறுத்தலும் பொறையுடைமையும் 
தெளிவுடைமையும் உலகத்தோடு ஒழுக்கமும் அமைவுடைமையும் இவ்வைந்து குணங்களையும் மான் 
கன்றின் நோக்கம் பெற்றவள் நயனா விகாரத்தாலே இழந்தேனென்றது.

    செய்யுள் : தலைமையான  சால்புடைமையானும் உள்ளம் குறைவு - படேன்; (தலைமையான சால்பென்னை? 
நிறையும் பொறையும் கூடிய சால்பென்றுபடும்): வேறுபட விசாரித்தாய் காண் என்று மாறுபட்டு அறிவாருமில்லை; 
தெளிவுடைமை தோன்றுகின்றது). எங்ஙனே கலங்கினவர்களையும் எவ்வளவும் செல்லத்தெளிவிப்பேன். 
(கலங்கினாரைத் தெளிவிக்கை உலக நீதியாகையால், நீதியுடைமை தோன்றுகிறது). ஒரு கலையாகிய 
சிறு பிறையைச் சூடின திருச்சிற்றம்பல நாதனுடைய கயிலாயத் திருமலையில் இளையமான் விழியால் 
(அயர்ந்து மயங்கினேன்)            25

            8. விதியொடு வெறுத்தல்*
            ------------------------
* பேரின்பப் பொருள் : பின்னு மனத்தொடு பேதுற்று நின்றது 

    விதியொடு வெறுத்தல் என்பது வலியழிந்தமை கூறி வருந்தாநின்ற தலைமகன் 
பாங்கனொடு புலந்து வெள்கி, யான் செய்த நல்வினையும் வந்து பயன்றந்த தில்லையெனத் 
தன் விதியொடு வெறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    நல்வினை யும்நயந் தந்தின்று **
        வந்து நடுங்குமின்மேற் 
    கொல்வினை வல்லன* கோங்கரும்
        பாமென்று பாங்கன் சொல்ல
    வில்வினை மேருவில் வைத்தவன் 
        தில்லை தொழாரின்வெள்கித்
    தொல்வினை யாற்றுய ரும்மென
        தாருயிர் துப்புறவே.

    கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச் 
    செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

**நல்வினை யுன்னை நயந்தின்று லவன்' என்பன பழையவுரைகாரர் பாடம்

* கழறிட என்பது பழையவுரைகாரர் பாடம் 

    இதன் பொருள்: கொல்வினை வல்லன நடுங்கு மின்மேல் கோங்கு அரும்புஆம் என்று பாங்கன் 
சொல்ல-கொல்லுந் தொழிலை வல்லன நடுங்கு மின்மேலுண்டாகிய கோங்கரும்புகளாமென்று யான் 
பற்றுக்கோடாக நினைந்திருந்த பாங்கன் றானே இகழ்ந்து சொல்லுதலால்; வெள்கிதொல்வினையால் 
துயரும் எனது ஆர் உயிர் துப்புற-நாணிப்பழையதாகிட தீவினையாற் றுயருறாநின்ற எனதரிய வுயிர் 
வலியுறும் வண்ணம் நல் வினையும் வந்து நயம் தந்தின்று-யான் உம்மைச் செய்த நல் வினையும் வந்து 
பயன்றந்ததில்லை எ-று

    வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி-வில்லின்றொழிலினை 
மேருவின் கண் வைத்தவனது  தில்லை தொழாதாரைப்போல வெள்கியெனக் கூட்டுக.

    உம்மை  எச்சவும்மை, கல்வியேயுமன்றி யென்றவாறு; நல்வினை  தீவினையைக் கெடுக்குமாயினும் 
யான் செய்த நல் வினை அது செய்ததில்லை என்பது கருத்து. நாணினார்மேனி வெள்குதலான் 
வெள்கியென்றான். துப்புறவென்னு மச்சம் தந்தின்றென்பதில் தருதலென்பதனோடு முடிந்தது,
 துப்புறத் துயருமென்றியைத்து மிகவுந் துயருமென முற்றாகவுரைப்பினு மமையும். நல்வினையுந் 
நயந்தந்ததென்பது பாடமாயின் குறிப்பு நிலையாகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கல்வியான் மிக்கபாங்கன் மறுப்பச் செல்வத்தாலே மிக்க 
மலையினையுடையவன் ஆராய்ந்து சொல்லியது.

    செய்யுள்:  *துளும்பா நின்ற மின்போன்ற இடையின் மேலே  கொலைத் தொழிலைக் கற்ற ..ஒத்த 
முலைகளாங்காணும் என்று  பாங்கன் என்னைத் துவளச் சொல்ல வில்லினது கொல்லுந் தொழிலை 
மேருவென்னும் மலையிடத்தே உண்டாக்கினவன். அவனுடைய திசை நோக்கிக் கும்பிடமாட்டாரைப் 
போல் மேனி வெளுத்து முன்பு செய்த தீவினையாலே வருந்துகிற எனது பெறுதற்கரிய உயிர் வலியுறும்படி, 
நான் இம்மையிற் செய்த புண்ணியமும் வந்து பயன்பட்டதில்லை.

*இப்பாடலைப் பழையவுரைகாரர் 25 ஆவதாகக் கொண்டார். முதல் வரியில் 'உன்னை' என்பதற்கேற்ப உரையுமில்லை
    
    முற்பிறப்பிற் செய்த தீவினையை இப்பிறப்பிற் செய்த நல்வினை கெடுக்கும் என்பார்கள்; 
என் அளவில் அதுவும் கண்டிலேன் என்பது கருத்து.         26

            9. பாங்கனொந்துரைத்தல்*
            -------------------------

*பேரின்பப் பொருள்: போதம்பின்னும் புகன்றுதானழிந்தது.

    பாங்கனொந் துரைத்தல் என்பது விதியொடு வெறுத்து வருந்தா நிற்பக் கண்ட பாங்கன், 
அமிர்தமும் மழையும் தங்குணங் கெடினும் நின்குணங்கெடாதநீ ஒருத்தி காரணமாக
நின்சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகிய எனது தீவினையின் பயனாம் இத்தனை 
யன்றோவெனத் தானும் அவனோடு கூட வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    ஆலத்தி னாலமிர் தாக்கிய
        கோன்தில்லை யம்பலம்போற் 
    கோலத்தி னாள் பொருட் டாக 
        வமிர்தங் குணங்கெடினுங் 
    காலத்தி னான்மழை மாறினும் 
        மாறாக் கவிகைநின்பொற் 
    சீலத்தை நீயும் நினையா 
        தொழிவதென் தீவினையே

    இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
     நின்னது தன்மை நினைந்திலை யென்றது.

    இதன் பொருள்: ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போற் கோலத்தினாள் 
பொருட்டு ஆக நஞ்சால் அமிர்தத்தை யுண்டாக்கிய இறைவனது தில்லையம்பலம் போலும் அழகையுடையா 
ளொருத்தி காரணமாக; அமிர்தம் குணம் கெடினும் காலத்தினான் மழைமாறினும்- அமிர்தம் தன்குணங் 
கெடினும் பெய்யுங் காலத்து மழை பெய்யாது மாறினும்: மாறாக் கவிகை நின் பொன் சீலத்தை - மாறாத 
வண்மையை யுடைய நினது பொன் போலப் பெறுதற்கரிய ஒழுக்கத்தை; நீயும்- அறிவதறிந்த நீயும்; 
நினையாது ஒழிவது என் தீவினை - அறியா தொழிகின்றது எனது தீவினைப்பயன் எ-று,

    நஞ்சின் றன்மையொழிந்து அமிர்தஞ் செய்யுங்காரியத்தைச் செய்தலின். அமிர்தாக்கிய வென்றார். 
ஆலத்தினாலென்னு மூன்றாவது பாலாற்றயிராக்கிய வென்பது போல நின்றது. நஞ்சினாலோர் 
போனகத்தையுண்டாக்கிய வெனினுமமையும் அம்பலம் போலுமென்னு முவமை பட்டாங்கு சொல்லுதற் கண்வந்தது; 
புகழ்தற்கண் வந்ததென்பார் அம்பலம் போற் கோலத்தினாள் பொருட்டே யாயினுமாக வெனமுற்றாக வுரைப்ப. 
மாறாக் கவிகையென வண்மை மிகுத்துக்கூறினான். தானுமொன்றிரக்கின்றானாகலின். மாறாக் கவிகை
நீயுமெனக் கூட்டினுமமையும். மெய்ப்பாடு: இளிவரல். பயன்:  தலைமகனைத் தெருட்டல் .

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை சிதைந்துள்ளது).

    செய்யுள் : ** நஞ்சையமுதஞ் செய்யும் [படி திருவுள்ளத்] துக் கொண்ட சுவாமி' அவனுடைய பெரும்பற்றப் 
புலியூரில் திருவம்பலத்தை [யொத்த] அழகினையுடையாள் காரணமாக அமுதமானது தன் சுவைமாறிக் கைப்பினும்,
பெய்யும் (காலத்து) மழை [பெய்யாதொ] ழியினுந் தவிராத கொடையினை யுடைய உன்னுடைய அழகிய ஆசாரத்தை 
நீயும் நினையாது மறக்க வேண்டினது நான் செய்த பாவம் இத்தனையென்றது.

**இவ்வுரை சிதைந்திருந்தது; இங்கு இருதலைப்பகரத்துள்ளவை இப்பதிப்பாசிரியரால் ஊகித்துச் சேர்த்தவையாம்


            10. இயலிடங் கேட்டல்*
            ---------------------

* பேரின்பப் பொருள் ; "உறுதிகண் டின்பிட மெங்கென்றுரைத்தது.'

    இயலிடங்கேட்டல் என்பது தலைமகனுடன் கூட வருந்தா நின்ற பாங்கன், 'யானும் இவனுடன் கூட 
வருந்தினால்  இவனை ஆற்றுவிப்பாரில்லை'யென அதுபற்றுக்கோடாகத் தானாற்றி நின்று அது கிடக்க, 
'நின்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் யாது? இடம் யாது? கூறுவாயாக?வென அவளுடைய இயலும் 
இடமுங் கேளா நிற்றல். அதற்குச் செய்யுள்: -

    நின்னுடை நீர்மையும் நீயுமிவ்
        வாறு நினைத்தெருட்டும் 
    என்னுடை நீர்மையி தென்னென்ப 
        தேதில்லை யேர்கொண்முக்கண் 
    மன்னுடை மால்வரை யோமல 
        ரோவிசும் போசிலம்பா
    என்னிடம் யாதியல் நின்னையின் 
        னேசெய்த ஈர்ங்கொடிக்கே

    கழும லெய்திய காதற் றோழன் 
    செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது

    இதன் பொருள்:  நின்னுடை நீர்மையும் இவ்வாறு- நின்னுடைய இயல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று: 
நீயும் இவ்வாறு-ஒரு காலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையை யாயினாய்; நினைத்தெருட்டும் என்னுடைய 
நீர்மையிது என் என்பதே - இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடைய வியல்புயாதென்று சொல்வதோ! அதுகிடக்க: 
சிலம்பா-சிலம்பா;  நின்னை இன்னே செய்த ஈர்ங்கொடிக்கு - நின்னையித் தன்மையாகச் செய்த இனிய கொடிக்கு;
தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது- தில்லைக் கணுளனாகிய 
அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய சைலை மலையோ தாமரைப் பூவோ வானோ 
இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக எ-று.

    என்னென்பதே யென்னும் ஏகாரம் வினா: அசைநிலை யெனினு மமையும், பிறர் கண் போலாது 
மூன்றாயிருந்தனவாயினும் அவை தாம் ஓரழகுடையவென்னுங் கருத்தால், ஏர்கொண் முக்கணென்றார். 
கழுமல்- மயக்கம். மெய்ப்பாடு : அச்சம்.  பயன் :  தலைமகனை யாற்றுவித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகன் கிலேசித்ததற்கு வருத்தமுற்ற காதற்றோழன் 
வளப்பமுடைய மலையின் மேலுண்டாகிய நாட்டினை யுடையவனை ஆராய்ந்து கேட்டது.

    செய்யுள்: நின்னுடைய தன்மையும் நீயும் இத்தன்மையாய் விட்டன என்றால் உன்னைத்தெளிவிப்பேன் 
என்கின்ற என்னுடைய தன்மை இது எதனில் ஏற்பட்ட தொன்று?  பெரும்பற்றப்புலியூரிலே உளனாகி அழகுக்கு 
அழகு கொண்ட மூன்று திருநயனங்களையுடைய பெருமலையோ? (வரையர மகளிர் என்றுபடும்); 
தாமரைப் பூவோ? (இலக்குமி என்றுபடும்) ஆகாயமோ? (வானவர் மகளிர் என்றுபடும்); நாயகனே இவையிற்றிலே 
அவளுக்கு இடம் எந்த இடம் தான்?  அவளுடைய இயல்பு எது? சொல்லுவாயாக .     28

            11. இயலிடங்கூறல்.*

* பேரின்பப் பொருள் : "மகிழ்ந்திட நெஞ்சுக்கு வாழ்வெடுத்துரைத்தது".

    இயலிடங்கூறல் என்பது இயலிடங்கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை யெய்தினாற் போலப் 
பெரியதோ ராற்று தலையுடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை, இடம் இது 
என்று இயலும் இடமுங்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    விழியாற் பிணையாம் விளங்கிய
        லான்மயி லாம்மிழற்று 
    மொழியாற் கிளியாம் முதுவா 
        னவர்தம் முடித்தொகைகள்
    கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
        கயிலை முத் தம்மலைத்தேன் 
    கொழியாத் திகழும் பொழிற்கெழி
        லாமெங் குலதெய்வமே

    அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச் 
    செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

    இதன் பொருள்: முதுவானவர் தம் முடித் தொகைகள் கழியாக் கழல் - தலைவராகிய இந்திரன் முதலாகிய 
தேவர்களுடைய முடித்திரள்கள் நீங்காத கழலையுடைய; தில்லைக் கூத்தன் கயிலை- தில்லைக் கூத்தனது 
கைலை மலையிடத்து; முத்தம் மலைத்தே கொழியாத்திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வம் - 
முத்துக்களைப் பெருந்தேன் கொழித்து விளங்கும் பொழிற்கு அழகாம் எம்முடைய நல்லதெய்வம்; 
விழியான் பிணை ஆம் - விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் - விளங்கா நின்ற 
இயலான் மயிலாம் ; மிழற்று மொழியான் கிளியாம்- கொஞ்சு மொழியாற் கிளியாம் எ-று.

    இயல் இன்னவென்றும் இடம் கைலைப் பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் - 
யானைக்கோட்டினும் வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் - இரக்கம், செழுமை- வளமை
மெய்ப்பாடு- உவகை. பயன்:  பாங்கற் குணர்த்தல் 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுடைய துக்கத்துக்கு வருந்தின அரிய உயிர்த்தோழனுக்கு 
வளமையும் ஒளியுமுள்ளதொரு வேலையுடையவன் ஆராய்ந்து சொன்னது.

    செய்யுள்: நோக்கத்தால் மானென்று சொல்லலாம். விளங்குகின்ற சாயலால் மயிலெனலாம்; 
கொஞ்சும் மழலையால் கிளி எனலாம்; மிக்க தேவர்கள் பலரும் வந்து வணங்குகையாலே' அவருடைய     (திருத்: கினி/கிளி)
முடித்திரள்கள் மரபு (தவறாமையையு) டைய கழலையுடைய பெரும்பற்றப் புலியூரில் முதலி யாருடைய 
கயிலாய மலையில் தோன்றும் தேன் அருவியானது முத்துக்களைக் கொழித்தாற் போல விளங்குகின்ற 
காவுக்கழகாய் நிற்பவள் எம்முடைய குலதெய்வம்.          29

            12. வற்புறுத்தல்*
            ----------------
*பேரின்பப் பொருள்: "போதம் போய்க் காணும் பொலிவெடுத்துரைத்தது"

    வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கைலையிடத்தே சென்று 
இப்பெற்றியாளைக் கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் 
தலைமகனை வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் 
        தில்லையெங் கூத்தப்பிரான்
    கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் 
        காக்குங் கருங்கட்செவ்வாய்
    மயிலைச் சிலம்பகண்டி யான் போய்
        வருவன்வண் பூங்கொடிகள் 
    பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
        நண்ணும் பளிக்கறையே.

    பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை 
    வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.

    இதன் பொருள்: சிலம்ப - சிலம்பனே ; குயிலை - குயிலை;  சிலம்பு அடிக்கொம்பினை - 
சிலம்படியை யுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில்                   (திருத்: கூத்தயிரான்/கூத்தப்பிரான்)
பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை-தில்லைக்கணுளனாகிய எம்முடைய         (திருத்: பனம்/புனம்)
கூத்தப் பிரானது கைலையாகிய  சிலம்பின்கட் பைம்பூம்புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ் 
சிவந்த வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை 
நண்ணும் , பளிக்கு அறையான் போய்-வளவிய பூவையுடைய கொடிகள் போலும் ஆயத்தார் நெருங்க 
அவரோடு சிலம்பிற் கெதிர்கூவித் தான் விளையாட்டைப் பொருந்தும் பளிக்கறைக்கண் யான் சென்று;
கண்டு வருவன் -கண்டு வருவேன், நீ யாற்றுவாயாக எ-று.

    கூத்தப்பிரான் என்பது கூத்தனாயினும் பிரானாயுள்ளான் என்றவாறு, பெயர்ந்துரைத்தல் - 
கழற மறுத்துரைத்தல்; ஆற்றாத் தன்மையனாய்ப் பெயர்ந்து இயலும் இடனுங் கூறிய வெனினுமமையும், 
வயமென்னு முரிச்சொல் விகார வகையால் வயமென நின்றது; சிறுபான்மை மெல்லெழுத்துப் 
பெற்றதெனினு மமையும்.  கெழு: சாரியை, மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : வற்புறுத்தல்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஆற்றாமையின் நீங்கி இடனியல்பு சொன்ன பெரிய மலை 
மேலுண்டாகிய (நாட்டிற்குத் தலைவனைப்) பூமியிலே பொருந்தின புகழுடைய பாங்கன் வலியுறுத்தியது.

    செய்யுள்:  வார்த்தையிற் குயிலை யொப்பாளை, சிலம்பை அடியிலே யுடையதொரு வஞ்சிக் 
கொம்பினை ஒப்பாளை, பெரும்பற்றப் புலியூரிற் கூத்தனாகிய எமது சுவாமியுடைய ஸ்ரீ கைலாய மலையில் 
பச்சென அழகிய புனங்காக்கிற கரிய கண்களையும் சிவந்த வாயினையும் உடையளாய மயிலைப் போன்ற 
சாயலையுடையாளை நாயகனே நான் போய்க் கண்டுவரக்கடவேன். வளவிய வல்லிசாதத்தை யொத்த 
பாங்கிமார்கள் பல காலம் சிலம்பெதிர் கூவிக் களிக்கிற விளையாட்டுப் பொருந்தின பளிக்கறை யிடத்து 
நான் போய்ப் பார்த்து வருவேன் நீ கிலேசியா தொழிக வேண்டும்.      30

            13. குறிவழிச் சேறல்*
            -------------------
* பேரின்பப் பொருள் : நெஞ்சாற் கண்ட வின்பந்தேடல்.

    குறிவழிச் சேறல் என்பது தலைமகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற 
பாங்கன் இத்தன்மையாளை யான் அவ்விடத்துக் காணலாங் கொல்லோவென அந்நினைவோடு 
செல்லாநிற்றல், அதற்குச் செய்யுள் -

    கொடுங்கால் குலவரை யேழேழ் 
        பொழிலெழில் குன் றுமன்று
    கடுங்கா தவனை நடுங்க
        நுடங்கு நடுவுடைய 
    விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
        லாந்தில்லை யீசன்வெற்பில் 
    தடங்கார் தருபெரு வான்பொழில்
        நீழலந் தண்புனத்தே

    அறைகழ லண்ணல் அருளின வழியே 
    நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

    இதன் பொருள்: கொடுங் கால் குலவரை ஏழு ஏழ்பொழில் எழில் குன்றும் அன்றும் 
நடுங்காதவனை- கொடிய காற்றாற் குலமலைகளேழும் பொழிலேழும் அழகுகெடும் ஊழி யிறுதியாகிய 
அன்றும் நடுங்காதவனை; நடுங்க நுடங்கும் நடுஉடைய விடம் கால் அயிற் கண்ணி- நடுங்குவிக்கும் 
இடையையுடைய நஞ்சைக் காலும் வேல் போலுங் கண்ணையுடையாள்; தில்லை ஈசன் வெற்பில் 
தடம் கார் தரு பெருவான் பொழில் நீழல் தண் புனத்து மேவும் கொலாம்- தில்லைக்கணுளனாகிய ஈசனது 
வெற்பிடத்துப் பெரியமுகில் போலும் மிகவும் பெரிய பொழிலினீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண் 
மேவுமோ மேவாளோ? எ-று

    கொடுங்காலெனச் சந்தநோக்கித் திரியாது நின்றது, கொடுங் காலுமென வெண்ணினுமமையும். 
நடுங்க நுடங்கு மென்னுஞ்சொற்கள் ஒரு சொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண்டாவதற்கு 
முடிபாயின. ஐகாரம்: அசை நிலை யெனினுமமையும். தருவென்பது ஒருவமை வாய்பாடு.  தடங்கார் தரு 
பெருவான் பொழிலென்பதற்குக் கார் தங்கும் பொழிலெனினுமமையும் . நிறை-ஐம்பொறிகளையு மடக்குதல். 
மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை, பயன்: உசாவி யுணர்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  ஆரவாரிக்கின்ற வீரக் கழலையுடைய நாய (கன்) ஏவிய (வழியே) 
புலனை நிறுத்தவல்ல பாங்கன் (நினைவொடு சென்றது)

    செய்யுள்:  கொடிய காற்றாலே அழகிய மலைகளேழும் பூமிகளேழும் அழகழிக்கின்ற ஊழியிறுதிக் 
காலத்தும் அன்றும் தனக்கொரு பயமில்லாதவன் ஒருவனை அவனும் நடுங்குவதாக அசைகின்ற 
இடையினையுடைய விடத்தைக் கான்று கொண்டிருக்கிற வேல் போன்ற கண்களையுடையவள் நிற்பள் 
கொல்லோ? (என்கிற ஐயத்தாலே நில்லாளோ என்றும்படும்), திருவம்பலநாதனுடைய மலையில் பெருங்கார் 
தங்குகிற பெரிதாகி நீண்ட பொழிலின் நிழலுடைத்தாகிய அழகிய குளிர்ந்த புனத்திடத்தே நிற்பளோ 
நில்லாளோ என்ற ஐயத்தில் போனான்.

            14. குறிவழிக்காண்டல்*
            ----------------------
*பேரின்பப் பொருள்: போதமருளாற் போயின்பங் கண்டது 

    குறிவழிக் காண்டல் என்பது குறிவழிச் சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல் 
தானவளைக் காண்பதோ ரணிமைக்கணின்று. 'அவன் சொன்ன இடமும் இதுவே ; இயலும் இவையே; 
இவளும் அவளே' யென்று ஐயமறத் தெளியக் காணா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    வடிக்க ணிவை **வஞ்சி யஞ்சும் 
        இடையிது வாய்பவளந்
    துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி 
        சேயான் றொடர்ந்துவிடா
    அடிச்சந்த மாமல ரண்ணல்விண் 
        ணோர்வணங் கம்பலம்போற்
    படிச்சந் தமுமிது வேவிவ
        ளேஅப் பணிமொழியே .

    குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
    தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது        (திருத்: மெல்லடிக் / மெல்லடித்) 

**வடுக்கணிவை என்பது பழையவுரைகாரர் பாடம்.

    இதன் பொருள்: வடிக்கண் இவை- அவன் கூறிய வடுவகிர் போலுங் கண்களும் இவையே, 
வஞ்சி அஞ்சும் இடை இது-வஞ்சிக் கொம்பஞ்சு மிடையும் இதுவே; வெற்பன் சொற் பரிசே-
வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்றவா - வாய்பவளந் துடித்தாற்போலத் துடிக்கின்றவாறென்! 
அதனால்;  யான் தொடர்ந்து விடா அடிச்சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் 
போல் படிச்சந்தமும் இதுவே-  ஓருணர்வு மில்லாத யானும் பற்றிவிடமாட்டாத அடியாகிய சந்த மாமலரை 
யுடைய தலைவனது விண்ணோர் வந்து வணங்கும் அம்பலம் போலும் ஒப்பும் இதுவே; 
அப்பணி மொழியும் இவளே; எ-று. 

    வெற்பன் சொற்பரிசே யென்றது. இதனை யவன் தப்பாமற் கூறியவாறென்னை என்றவாறு.
வடியென்பது வடுவகிருக்கோர் பெயர். அதரத்திற்குத் துடித்தல் இயல்பாகக் கூறுப. பவளந் 
துடிக்கின்றவா என்பதற்குப் பவளம்போலப் பாடஞ் செய்கின்றவாறு என்னென்றுரைப் பாருமுளர். 
படிச்சந்த மென்பது வடமொழித் திரிபு. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தெளிதல் 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  குளிர்ந்த மலைமேலுண்டாகிய நாட்டினை யுடையவன்
குறித்த இடத்து ஏறச்சென்று தளிரை ஒத்த மதுரமான அடியினையுடைய நாயகியைக் கண்டது.

    செய்யுள்: அவன் சொன்ன மாவடு ஒத்த கண்களுமிவையே வஞ்சிக் கொம்பைத் தோற்கச் செய்த
 இடையின் அழகும் இதுவே: வாயானது பவளம் போலும் துடிக்கின்றது; நாயகன் சொன்னபடியா விருந்தது : 
நான் பற்றிவிடாத திருவடியாகிய பெரிய மலர்களையுடைய சுவாமி அவனைத் தேவர்கள் வணங்குகின்ற 
திருவம்பலத்தை.. அது எய்துவான் ... இவளே : தாழ்ந்த வார்த்தையினை உடையாளும் இவளே ஆகவேண்டும். 32

        15. தலைவனை வியந்துரைத்தல்*

*பேரின்பப்பொருள் : நெஞ்ச முயிர்நினை வறிவெனப் புகழ்ந்தது.

    தலைவனை வியந்துரைத்தல் என்பது குறிவழிக்கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய 
இவளைக்கண்டு பிரிந்து இங்கு நின்று அங்குவந்து யான் கழறவும் ஆற்றி அத்தனையுந் தப்பாமற் சொன்ன 
அண்ணலே திண்ணியானெனத் தலைமகனை வியந்து கூறாநிற்றல் அதற்குச் செய்யுள் -

    குவளைக் களத்தம் பலவன் 
        குரைகழல் போற்கமலத் 
    தவளைப் பயங்கர மாகநின்
        றாண்ட அவயவத்தின் 
    இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
        தத்துணை யும்பகர்ந்த
    கவளக் களிற்றண்ண லேதிண்ணி 
        யானிக் கடலிடத்தே

    நயந்தவுருவும் நலனுங்கண்டு 
    வியந்தவனையே மிகுத்துரைத்தது

    இதன் பொருள்: குவளைக் களத்து அம்பலவன் குரை கழல் போற் கமலத்தவளை- குவளைப்பூப் 
போலுந் திருமிடற்றையுடைய அம்பலவனுடைய ஒலிக்குங் கழலையுடைய திருவடி போலுந் 
தாமரைப் பூவிலிருக்குந் திருமகளை ;  பயங்கரம் ஆக நின்று ஆண்ட அவயவத்தின்  இவளைக் கண்டு 
இங்கு நின்று   அடிமை கொண்ட  உறுப்புக்களையுடைய இவளைக் கண்டு பிரிந்து இங்கு நின்றும் 
அவ்விடத்து வந்து; அத்துணையும் பகர்ந்த கவளக் களிற்று அண்ணலே இக்கடலிடத்துத்  திண்ணியான் -
யான் கழறவும் ஆற்றி அவ்வள வெல்லாங் கூறிய கவளக் களிற்றை யுடைய அண்ணலே இவ்வுலகத்துத் 
திண்ணியான் எ-று.

    இவளைக் கண்டென்றது இவளுடைய நலத்தைக் கொண்டாடியவா றன்று; முன்னங்கே 
தலைவனுடைய பொலிவழிவு கண்டு இங்கே வந்தவன் இங்கு மிவளுடைய பொலிவழிவுகண்டு 
கிலேசித்து இவள் இத்தன்மையளாக இங்கே இவளைப் பிரிந்து அங்கே வந்து அத்துணையும் 
பகர்ந்தவனே திண்ணியானென்று இருவருடைய அனுராகமுங் கூறியவாறு. கவளக்களிறு தான் 
விரும்புங் கவளம் பெற்று வளர்ந்த களிறு. நயந்த- தலை மகனயந்த. மெய்ப்பாடு : மருட்கையைச் 
சார்ந்த அச்சம். பயன்:  தலைமகனை வியத்தல்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் விரும்பிய வடிவையும் நன்மையையும் 
பார்த்து ஆச்சரியப்பட்டு நாயகனையே மிகுத்துச் சொன்னது. 

    செய்யுள்: நீலம்பூவை யொத்த திருமிடற்றையுடைய திருவம்பல நாதன் அவனுடைய 
திருவீரக்கழல் ஆரவாரிக்கிற சீ பாதங்களை யொத்த தாமரைப் பூவில் உயர்ச்சியுடைய 
சீதேவியைப் பயப்படும்படி நின்று அடிமை கொண்ட அவயவங்களையுடைய இவளைப் பார்த்து 
இவ்விடத்தே நின்று, அவளை அம் சொல் ஆற்றிவந்து நான் கழறவும். எவ்வளவு மறுத்து சொன்ன 
வேண்டிய கவளம் கொள்ளுகிற யானையையுடைய நாயகனே, இந்தக் கடல் சூழ்ந்த புவியில் 
திடநெஞ்சன் அவனேயாய் இருந்தான் (என்றுபடும்).         33

            16. கண்டமை கூறல்*
            -------------------
*பேரின்பப் பொருள்: "போத நம்மாற் பொருந்துவ தன்றென ஆதர வாயுயிர்க் கறிய வுரைத்தது.

    கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான் 
அவளைக் கண்டமை தலை மகனுக்குப் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் :

    பணந்தா ழரவரைச் சிற்றம் 
        பலவர்பைம் பொற்கயிலைப்
    புணர்ந்தாங் ககன்ற பொருகரி
        யுன்னிப் புனத்தயலே 
    மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
        பரப்பி மடப்பிடிவாய்
    நிணந்தாழ் சுடரிலை வேலகண் 
        டேனொன்று நின்றதுவே

    பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை 
    அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது

    இதன் பொருள் : வாய் நிணம் தாழ்சுடர் இலை வேல வாய்க் கணிணந்தங்கிய சுடரிலை 
வேலை யுடையாய்; பணம் தாழ்  அரவு அரைச் சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை -பணந் தாழ்ந்த 
அரவையணிந்த அரையையுடைய சிற்றம்பலவரது பசும்பொன்னையுடைய கைலைக்கண்; 
புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னி-கூடி அவ்விடத்து நின்று மகன்ற பொருகரியை நினைந்து; 
புனத்து அயலே மணம் தாழ் பொழிற் கண் வடிக்கண் பரப்பி மடப்பிடி ஒன்று நின்றது கண்டேன்-
புனத்திற்கயலே மணந் தங்கிய பொழிற்கண் வடுவகிர் போலுங் கண்களைப் பரப்பி மடப்பிடி 
யொன்று நின்றதனைக் கண்டேன் எ-று.

    பணந்தாழ்தல் : முடிந்து விடுதலாற் றொங்கல் போலத் தாழ்தல்; தங்குதலெனி னுமமையும் 
ஆங்ககன்றவென்புழி நின்றென ஐந்தாம் வேற்றுமைப்பொருளுணர நிற்பதோர் இடைச் சொல் 
வருவித் துரைக்கப்பட்டது. புனத்தயலே யென்றான். புனத்து விளையாடும் ஆயத்தை நீங்கி 
நிற்றலின் வடிக்கண்பரப்பியென்றான் இன்ன திசையால் வருமென்றறி யாது சுற்றெங்கு 
நோக்குதலின் கைலைக்கணெண்பதூஉம் புனத்தய லென்பதூஉம் பொழிற்க ணென்பதூஉம் 
நின்றதென்னுந் தொழிற்பெயரோடு முடியும். நின்றதுவே யென்புழி வகாரஞ் சந்தநோக்கு வந்தது; 
விரிக்கும் வழி விரித்தற்பாற்படும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு : ஒரு பிடியானையைச் சொல்லுவாரைப்போல 
நாயகியுடைய நிலைமையைக் கொல்லும் வினயம் வல்ல வேலினையுடைய நாயகனுக்குச் சொன்னது.

    செய்யுள்: படம்மிக்க பாம்பைத் திரு அரைநாணாகவுடைய திருவம்பல நாதருடைய 
சோலையாற்பசுத்துப் பொலிவினை யுடைய கயிலை மலையில், தன்னுடனே கூடி ஆங்கு அகன்ற, 
பொருதல் இயல்பினையுடைய களிற்று யானையை நினைந்து, புனத்தின் ஒரு பக்கத்தே,
மணமிகுந்த பொழிலிடத்தே! மாவடுவகிரை யொத்த கண்களாலே பார்க்கப்பார்த்து, ஒரு மடப்பிடியானை 
வாயிலே நிணமிக்குக் கொலைத் தொழிலாற் சிறந்த வேலினையுடையவனே! நிற்கக்கண்டேன் காண்: 
எனவே, அவ்விடத்து ஏறச் செல்க என்றுபடும்.          34

            17. செவ்வி செப்பல்*
            -------------------
*பேரின்பப் பொருள்: "இன்ப மறியு மியல்பன்றெனினும், நெஞ்ச மணியெலா நின்றெடுத் துரைத்தது."

    செவ்வி செப்பல்: என்பது பிடிமிசை வைத்துக் கூறச்கேட்ட தலைமகன் அது தனக்குச்         (திருத்: செல்வி/செவ்வி)
செவ்வி போதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான்; அது கண்டு அவனை ஆற்றுவிப்பது 
காரணமாக அவனுக்கு அவளவயவங்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    கயலுள வேகம லத்தலர்
        மீது கனிபவளத்
    தயலுள வேமுத்த மொத்த 
        நிரையரன் அம்பலத்தின்
    இயலுள வேயிணைச் செப்புவெற்
        பாநின தீர்ங்கொடிமேற் 
    புயலுள வேமலர் சூழ்ந்திருள் 
        தூங்கிப் புரள்வனவே

    அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற் 
    கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.

    இதன் பொருள் ; வெற்பா - வெற்பா; நினது ஈர்ங்கொடி மேல் கமலத்து அலர் மீது கயல் உளவே - 
நினது ஈர்ங் கொடிக் கண் தாமரைப் பூவின் மேற் கிடப்பன சிலகயல்களுளவே; கனி பவளத்து அயல் 
ஒத்த நிரை முத்தம் உளவே- கனிந்த பவளத்திற்கு அயல் இனமொத்த நிரையாகிய முத்துக்களுளவே; 
இணைச்செப்பு அரன் அம்பலத்தின் இயல் உளவே - இணையாகிய செப்பு அரனது அம்பலத்தினியல்பை 
யுடையன வுளவே. மலர் சூழ்ந்து இருள் தூங்கிப் புரள்வன புயல் உளவே - மாலை சூழ்ந்து இருள் செறிந்து 
கிடந்து புரள்வன புயலுளவே? உளவாயின் யான்கண்ட வுருவம் நீ கூறிய வுருவமாம் எ-று.

    அரனம்பலத்தினியல்: ஆறாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. 
சூழ்ந்தென்பதூஉம், தூங்கியென்பதூஉம் சினை வினைப்பாற்பட்டு முதல் வினை கொண்டன. 
மலர் சினை போலக் குழற்கின்றி யமையாமையின் சினைப்பாற்பட்டது.  புயல் திரண்டாற் போலு 
மென்பது போதரப் புரள்வனவெனப் பன்மையாற் கூறினான். மெய்ப்பாடும் பயனும்: அவை.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகிய முதலியாருடைய ஸ்ரீ கயிலாயத் திருமலையில் 
வளப்பமிக்க மலையினையுடைய நாயகனுக்கு அவன் சொன்ன உருவைக்கண்டு வந்த பாங்கன் தான் 
கண்ட செவ்வி செப்பியது . 

    செய்யுள்: (உரை சிதைந்துள்ளது )         35

            18. அவ்விடத்தேகல் *
            -------------------
*பேரின்பப் பொருள் : " போத நீங்கப் பொற்பாங் குரவன் தெரிசனங் காணச் சென்ற தன்மை"

    அவ்விடத்தேகல் என்பது செவ்வி செப்பக்கேட்ட தலைமகன் இவ்வாறு காணப்பட்டதுண்டாயின் 
அது வென்னுயிரெனத் தானவ்விட நோக்கிச் செல்லா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    எயிற்குல மூன்றிருந் தீயெய்த 
        வெய்தவன் தில்லையொத்துக்
    குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
        வாய்க்குளிர் முத்தநிரைக்
    தயிற்குல வேல்கம லத்திற்             (திருத்: கம்ல/கமல)
        கிடத்தி அனநடக்கும்
    மயிற்குலங் கண்டதுண் டேலது 
        வென்னுடை மன்னுயிரே

    அரிவையது நிலைமை யறிந்தவனுரைப்ப 
    எரிகதிர் வேலோ னேகியது

    இதன் பொருள்: எயில் குலம் மூன்று இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து-எயிற்சாதி மூன்றும் 
பெரிய தீயை யெய்த அவற்றை யெய்தவனது தில்லையை யொத்து: குயில் குலம் கொண்டு - குயிலாகிய 
சாதியைக் கொண்டு: தொண்டைக் கனி வாய்க் குளிர் முத்தம் நிரைத்து-தொண்டைக் கனியிடத்துக் 
குளிர்ந்த முத்தங்களை நிரைத்து; அயில் குலவேல் கமலத்தில் கிடத்தி - கூர்மையையுடைய நல்லவேலைக்
கமலத்தின்கட் கிடத்தி; அனம் நடக்கும் மயில் குலம் கண்டது உண்டேல் - அது என்னுடை மன் உயிர் 
அன்னம் போல நடப்பதோர் மயிற்சாதி காணப்பட்டதுண்டாயின் அது எனது நிலைபெறுமுயிர் எ-று

    எயிற்குலமூன்றென்றார், அவை இரும்பும், வெள்ளியும், பொன்னுமாகிய சாதி வேறுபாடுடைமையின்,
 குயிற்குலங் கொண்டென்றான், மொழியாற் குயிற்றன்மையை யுடைத்தாகலின். தொண்டைக்கனிவாயென்பதற்குத் 
தொண்டைக்கனி போலும் வாயென்பாருமுளர்.** மெய்ப்பாடு : உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

** என்பவர் பழைய உரைகாரர். 
     
    இவை நிற்க இடந்தலை தனக்குமாமாறு சொல்லுமாறு.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: 'நாயகியுடைய நிலைமையை அறிந்து வந்த பாங்கன்
 சொல்ல, மிகுந்த பிரகாசத்தையுடைய வேலினையுடையவன் போனது.

    செய்யுள்: மதிற் சாதிகள் மூன்றையும் மிகுந்த தீயை அவை எய்தும் படி எய்தவனுடைய 
சிதம்பரம் போன்று, வார்த்தையால் குயிலை ஒத்துக் கொவ்வைக்கனி போன்ற வாயிலே மதுரமாகிய 
முத்தைநிரைத்துக் கூரிதாகிய அழகிய வேலினைக் கமலத்தின் மேலே கிடத்தி, அன்னம் போல் நடக்கிற 
சாயலால் மயிலை ஒப்பாளைக் கண்டாயாகில், அவளை என்னுடைய நிலைபெற்ற உயிர் ஆகும்.     36

            19 மின்னிடை மெலிதல்*
            ------------------------
* பேரின்பப்பொருள் ; சிவமுயிர் நோக்கித் திருவுளத்தெண்ணல்.

    மின்னிடை மெலிதல் என்பது நெருநலைநாளில் தலையளி செய்து நின்னிற் பிரியேன்
 பிரியினும் ஆற்றேனென்று கூறிப் பிரிந்தவர் வேட்கை மிகுதியால் இடமறியாது ஆயத்திடை வருவார் 
கொல்லோ வெனும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்து பட்டார் கொல்லோ வென்னும் 
பேரச்சத்தினானும் யாருமில்லொரு சிறைத் தனியே நின்று, தலைமகனை நினைந்து 
தலைமகள் மெலியா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    ஆவியன் னாய்கவ லேல்அக 
        லேமென் றளித்தொளித்த 
    ஆவியன் னார்மிக் கவாவின
        ராய்க்கெழு மற்கழிவுற் 
    றாவியன் னார்மன்னி யாடிடஞ்
        சேர்வர்கொ லம்பலத்தெம் 
    ஆவியன் னான்பயி லுங்கயி 
        லாயத் தருவரையே

    மன்னனை நினைந்து. மின்னிடை மெலிந்தது

    இதன் பொருள்: அளித்து அன்னாய் கவலேல் அகலேம் என்று என்று ஒளித்த ஆவி அன்னார் - 
தலையளிசெய்து ஆவியையொப்பாய் கவலாதொழி நின்னை நீங்கேமென்று சொல்லி மறைந்த 
என்னாவியை யொப்பார்; மிக்க அவாவினர் ஆய்க்கெழுமற்கு அழிவுற்று மிக்க விருப்பத்தையுடையராய்க் 
கெழுமுதல் காரணமாக நெஞ்சழிதலான் இடமறியாது; அம்பலத்து எம் ஆவி அன்னான் பயிலும் 
கயிலாயத்து அருவரை - அம்பலத்தின் கணுளனாகிய எம் மாவியை யொப்பான் அடுத்து வாழுங்        (திருத்: கனுள/கணுள)
கைலாயத்தின் கட்பிறரானெய்துதற்கரிய தாழ்வரையிடத்து; ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் 
சேர்வர் கொல்-ஆவியை யொக்கும் ஆயத்தார் நிலைபெற்று விளையாடும் அவ்விடத்து அவர் 
காண வந்து பொருந்துவரோ! எ - று.

    அளித்தல், பிரிகின்ற காலத்துச் செய்த தலையளியெனினு மமையும் மிக்கவென்பது 
கடைக் குறைந்து நின்றது. ஆயத்திடை வருவார் கொல்லென ஐயத்துள் ஒரு தலையே
கூறினாள், பெருநாணினளாதலின் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை . 
பயன்: உசாவி ஆற்றாமை நீங்குதல்.  ஆயவெள்ளத்துள்ளே வருவர் சொல்லோ வென்னும் 
பெரு நாணினானும், ஆற்றாமையால் இறந்து பட்டனர் கொல்லாவென்னும் பேரச்சத்தினானும் 
மீதூரப்பட்டுத் தன்றன்மை யளன்றி நின்று இவ்வகை  உசாவினாளென்பது .

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகனை நினைந்து மின்போன்ற இடையுடையாள் வாடியது.

    செய்யுள்: என்  ஆருயிரை ஒப்பாய்!  கவலேல், நாம் நம்மிற் பிரியோம் காண்' என்று தலையளி செய்து 
இப்பொழுது ஒளித்துப்போன அருஞ்சுரத்திலே நீர்வேட்டற்கு உதவும் தாமரைத்தடாகம் போன்றவர், 
என் பேரிலே மிகுந்த ஆசையுடையராய் என்னுடைய காரணமாக நெஞ்சழிந்து, என்னுடைய உயிர்த் 
தோழிமார்கள் நிலை பெற்று விளையாடுகிறவிடத்திலே செல்வரோ இங்கேற வருவரோ?

    கொல் என்ற ஐயத்தால் இங்கேற வருவரோ என்றுபடும் திருவம்பலத்தே உளனாகி 
என் உயிரையொத்த முதலியார் வாழ்கின்ற ஸ்ரீ கயிலாயமாகிய அரிய இடத்தே செல்வரோ? 
இங்கே வருவரோ? என்னும் நினைவுடனே நின்றான் (வாவியன்னார் என்பது இவ்வுரைகாரர் பாடம்)  37

            20. பொழில்கண்டு மகிழ்தல்*
            --------------------------

*பேரின்பப் பொருள்; பார்க்கு மிடமெங்கும் பரனாக் கண்டது.

    பொழில்கண்டு மகிழ்தல் என்பது தலைமகளை நோக்கிச் செல்லா நின்ற தலைமகன் 
முன்னைஞான்று அவளைக் கண்ணுற்ற பொழிலைச் சென்றணைந்து, அப்பொழிலிடை 
அவளுறுப்புக்களைக் கண்டு , இப்பொழில் என்சிந்தனைக்கு அவள் தானேயெனத் தோன்றா நின்றதென்று 
இன்புறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-

    காம்பிணை யாற்களி மாமயி 
        லாற்கதிர் மாமணியால்
    வாம்பிணை யால்வல்லி யொல்குத 
        வான்மன்னு மம்பலவன்
    பாம்பிணை யாக்குழை கொண்டோன்
        கயிலைப் பயில்புனமுந் 
    தேம்பிணை வார்குழ லாளெனத்
        தோன்றுமென் சிந்தனைக்கே

    மணங்கமழ்பொழிலின் வடிவுகண் 
    டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது

    இதன் பொருள்: காம்பு இணையால் - வேயிணையானும் : களிமா மயிலால் - களிப்பையுடைய 
கரிய மயிலானும்; கதிர்மா மணியால்- ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் - 
வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் - வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் 
சிந்தனைக்குத் தேம்பிணை வார்குழலாள் எனத் தோன்றும் - கைலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் 
இன்புறுத்துதலால் என் மனதிற்குத் தேம் பிணையையுடைய நெடிய குழலையுடையா ளென்றே தோன்றா நின்றது எ-று. 
மன்னும் அம்பலவன் பாம்பு இணையாக்குழை கொண்டோன் கயிலை - நிலைபெறு மம்பலத்தையுடையவன் 
பாம்பை ஒன்று மொவ்வாத குழையாகக் கொண்டவன் அவனது கைலையெனக் கூட்டுக.

    பாம்பையிணைத்துக் குழையாகக் கொண்டவனெனினுமமையும். தேம்பிணை - தேனையுடைய தொடை. 
தேம்பிணை வார் குழலாளெனத் தோன்று மென்பதற்கு அவளைப்போலப் புனமும் யானின்புறத் தோன்றா நின்ற
தென்பாருமுளர்*. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். நெருநலை நாளில் தலை மகளைக் கூடின பொழிலிடம் 
புகுந்து இவ்வகை சொன்னானென்பது. 

*என்பவர் பழையவுரைகாரர்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறுநாற்றம் கமழ்கின்ற பொழிலின் வடிவை ஆராய்ந்து 
தெய்வத்தை ஒத்த தன் நாயகியாக நினைந்து வருத்தம் நீங்கியது.

    செய்யுள்: வேய் இணைந்து நிற்றலால் தோள்களை ஒத்தும், களிப்பையுடைய கரிய மயில்களால் 
சாயலை ஒத்தும், ஒளியுடையதாகிய நீல மணிகளால் கூந்தலை ஒத்தும், இளமான் நோக்கத்தால் விழியை 
ஒத்தும் (இருத்தலானும்) வல்லிசாதத்தின் இடமாதல் இடை நுடங்கலானும், நிலைபெற்ற  புலியூர்த் 
திருவம்பலவன் பாம்பைத்தன் குழையாபரணமாகக் கொண்டவனுடைய கயிலாயத்தில் இவள் வாழ்கின்ற 
புனமும், தேனையுடைத்தாகிய மாலையினையணிந்த நீண்ட குழலை யுடையவள் என்னும்படி தோன்ற 
என் மனத்தை இன்புறுத்தா நின்றது             38

            21. உயிரென வியத்தல்*
            ----------------------
* பேரின்பப் பொருள் ''அநாதி யின்பம் அரனெனக் காண்டல்"

    உயிரெனவியத்தல் என்பது பொழில் கண்டு மகிழ்ந்து அப் பொழிலிடைச் சென்று புக்கு 
அவளைக் கண்ட துணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோ நிற்பதென வியந்து கூறாநிற்றல் 
அதற்குச் செய்யுள் :-

    நேயத்த தாய்நென்ன லென்னைப் 
        புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
    ஆயத்த தாயமிழ் தாயணங் 
        காயர னம்பலம்போல்
     தேயத்த தாயென்றன் சிந்தைய 
        தாய்த்தெரி யிற்பெரிது
    மாயத்த தாகி யிதோவந்து 
        நின்றதென் மன்னுயிரே.

    வெறியுறுபொழிலின் வியன்பொதும்பரின் 
    நெறியுறுகுழலி நிலைமைகண்டது.

    இதன் பொருள்: நென்னல் நேயத்தது ஆய் என்னைப் புணர்ந்து - நெருநல் உள்ள மகிழ்ச்சியை 
யுடைத்தாய் என்னைக் கூடி ; நெஞ்சம் நெகப் போய்-பின் நேயமில்லது போல என்னெஞ்சு உடையும் 
வண்ணம் நீங்கிப் போய்; ஆயத்தது ஆய் ஆயத்தின் கண்ணதாய்; அமிழ்து ஆய்-இன்பத்தைச் செய்தலின் 
அமிர்தமாய்; அணங்கு ஆய்-துன்பத்தைச் செய்தலின் அணங்காய் அரன் அம்பலம் போல் 
தேயத்தது ஆய்-புலப்பாட்டான் அரன தம்பலம் போலும் ஒளியை யுடைத்தாய்: என்றன் சிந்தையது ஆய்-
புலப்படாது வந்து என் சிந்தைக்கண்ணதாய்; தெரியின் பெரிதும் மாயத்தது ஆகிவந்து நின்றது இதோ 
என் மன் உயிர் - ஆராயிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர் எ-று.

    நேயமுடைமையும் நேயமின்மையும் இன்பஞ் செய்தலும் துன்பஞ் செய்தலும் புலப்படுதலும் 
புலப்படாமையும் ஒரு பொருட்கியையாமையின், பெரிது மாயத்ததாகியென்றான், தேயம்: வடமொழிச் சிதைவு. 
அம்பலம் போலுந் தேசத்தின் கண்ணதா யென்றுரைப்பினுமமையும். ஓகாரம்: அசைநிலை யெனினுமமையும்.
என்மாட் டருளுடைத்தாய் முற்காலத்து என்னை வந்துகூடி அருளில்லதுபோல என்னெஞ்சுடையும் வண்ணம் 
போய்த் தன் மெய்யடியார் குழாத்ததாய் நினைதோறும் அமிர்தம் போல இன்பஞ் செய்து கட்புலனாகாமையிற்
றுன்பஞ் செய்து அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என்மனத் தகத்ததாய் இத்தன்மைத்
தாகலிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் எனது நிலைபெறுமுயிர் வந்து தோன்றா நின்றதென 
வேறு மொரு பொருன் விளங்கியவாறு*  கண்டு கொள்க. பொழிலின் வியன்பொதும்பர்- பொழில் 
மரஞ்செறிந்தவிடம். மெய்ப்பாடும் பயனும் அவை:

* இது சைவ சித்தாந்தப் பொருள் ஆகும் 
    
    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறு நாற்றமிக்க கானிடத்து அகன்ற சோலையிடத்து 
நெறித்தல் பொருந்தின கூந்தலையுடையவள் நின்ற படியைக் கண்டது.

    செய்யுள்: அன்புடைத்தாய், நேற்று என்னுடனே கூடி என் நெஞ்சு  நெகிழும்படி கூடிப்போய்         (திருத்: நெழும்படி/நெகிழும்படி)
ஆயக்கூட்டத் .....தாய.... இப்பொழுதே....தாய் வந்து நின்ற இதுவோ என்னுடைய நிலை பெற்ற உயிர் 
என்றது. (இப் பாடலுரை மிகவும் சிதைந்துள்ளது)        39

            22. தளர்வகன்றுரைத்தல்*
            ------------------------
*பேரின்பப் பொருள்- நிருவி காரமாய் நிலைபெறல் கண்டது

    தளர்வகன் றுரைத்தல் என்பது உயிரென வியந்து சென்று, பூக்கொய்தன் முதலிய 
விளையாட்டை யொழிந்து யாரு மில்லொரு சிறைத் தனியே நின்று இவர் செய்யா நின்ற 
பெரிய தவம் யாதோ'வென அவளைப் பெரும்பான்மை கூறித் தளர்வு நீங்கா நிற்றல், 
அதற்குச் செய்யுள்:-

    தாதிவர் போதுகொய் யார்தைய                (திருத்: கொப்யார் / கொய்யார்) 
        லாரங்கை கூப்பநின்று
    சோதி வரிப்பந் தடியார் 
        சுனைப்புன லாடல் செய்யார் 
    போதிவர் கற்பக நாடுபுல்
        லென்னத்தம் பொன்னடிப்பாய் 
    யாதிவர் மாதவம் அம்பலத்
        தான்மலை யெய்துதற்கே.

     பனிமதிநுதலியைப் பைம்பொழிலிடைத் 
    தனி நிலைகண்டு தளர்வகன்றுரைத்தது

    இதன் பொருள் :  தாது இவர் போது கொய்யார் - தாது பரந்த பூக்களைக் கொய்கின்றிலர்;
 தையலார் அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்து  அடியார்-  ஆயத்தாராகிய தையலார் 
அங்கைகளைக் கூப்ப நின்று ஒளியையும் வரியையும் உடைய பந்தை அடிக்கின்றிலர்; 
சுனைப் புனல் ஆடல் செய்யார்-சுனைப்புனலாடுதலைச் செய்கின்றிலர் ; போது இவர் கற்பக நாடு 
புல்லெனத் தம் பொன் அடிப் பாய் அம்பலத்தான் மலை எய்துதற்கு இவர் மாதவம் யாது . அதனாற் 
போதுபரந்த கற்பகங்களையுடைய தேவருலகம் பொலிவழிய நிலந்தோயாத தமது பொன் போலு 
மடியை நிலத்தின் கட்பாவி அம்பலத்தானது கைலையை யெய்துதற்கு இவர் செய்யக் கருதுகின்ற 
பெரிய தவம் யாது! எ-று.

    தவஞ் செய்வார் புறத்தொழில்களை விட்டு அகத்தா னொன்றை யுன்னி 
மலைக்கட்டங்குவரன்றே. இவளும் பூக் கொய்தல் முதலாகிய தொழில்களை விட்டு 
மனத்தாற்றன்னை நினைந்து வரையிடத்து நிற்றலான் யாதிவர் மாதவ மென்றான்.
மெய்ப்பாடும் பயனும் அவை. 

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: குளிர்ந்த மதிபோன்ற நெற்றியை உடையாளை 
அழகிய பொழிலிடத்தே தனியே நிற்கின்ற நிலையைக் கண்டு சலிப்பறுத்துப் பேசினது.

    செய்யுள்: அல்லி பரந்த பூக்களைக் கொய்யார்: பாங்கிமார் அழகிய கைகளைக் கூப்ப நின்று 
ஒளியும் அழகுமுடைய பந்தடிக்கிறாரில்லை; சுனையில் நீர் குடைந்து விளையாடுகிறாரில்லை ; 
பூக்கள் பரந்த கற்பக முடைத்தயய  தெய்வலோகம் இவர் போதுகையினாலே அழகு அழியத்         (ஐயம்: முடைத்தயய? முடைத்தனைய?)
தம்முடைய பொலிவு பெற்ற அடிகள் நிலத்திலே பரவித் திருவம்பலநாதன் திருமலைக்கே வந்து 
தங்குதற்கு,  இவர் பண்ணப் புகுகின்ற தவம் எதுதான் என்ன, எல்லாத் தவமும் முடித்தன்றோ ?        (திருத்: தங்குகற்கு/தங்குதற்கு)

    இலக்குமி என்ற அதிகாரம் பெற்றார் எதுவெ ... பண்ணுகின்றார் எனப்படும் ...... ஒத்தபடி 
என் என்னின் , தவம் பண்ணுவாரும் எவ்லா நினைவுகளையும் போகவிட்டு, மனத்திலே ஒரு 
நினைவாகி ......(பண்) ணுவார்கள்; அப்படியே விரும்பும் பூப்ப (றித்தல் முதலிய நினைவுகளை யெல்லாம் 
போக விட்டு மனத்திலே ஒரு நினைவுடனே நிற்கையாலே............. இவர் பெரிய தவமென்றாரெனக் கொள்க

    .......................அரிதென மெலிந்துரைத்தது.        40

            23. மொழிபெறவருந்தல்*
            ------------------------

* பேரின்பப்பொருள் : திருவாய் மலராவிடின் உய்யேன் என்றது

    மொழிபெற வருந்தல் என்பது தளர்வு நீங்கிய பின்னர்ச் சார்தலுறா நின்றவன் ஒருசொற் 
பெறுமுறையாற் சென்று சாரவேண்டிப் பின்னும் அவளைப் பெரும்பான்மை கூறி ஒரு சொல்வேண்டி 
வருந்தாநிற்றல் அதற்குச் செய்யுள் --

    காவிநின் றேர்தரு கண்டர்வண்
        தில்லைக்கண் ணார்கமலத் 
    தேவியென் றேயையஞ் சென்றதன் 
        றேயறி யச்சிறிது
    மாவியன் றன்னமென் னோக்கிநின் 
        வாய்திற வாவிடினென் 
    ஆவியன் றேயமிழ் தேயணங்
        கேயின் றழிகின்றதே.

    கூடற் கரிதென, வாடி யுரைத்தது.

    இதன் பொருள்:  மா இயன்றன்ன மெல் நோக்கி மானோக்கத்தான் இயன்றாற்போலும் 
மெல்லிய நோக்கையுடையாய்; காவி நின்று ஏர் தரு கண்டர் வண் தில்லை கண்ஆர் கமலத் தேவி 
என்றே ஐயம் சென்றது அன்றே- நஞ்சாகிய நீலப்பூ நின்று அழகைக் கொடுக்கும் மிடற்றையுடையவரது 
வளவிய தில்லைக்க ணுண்டாகிய கண்ணிற்கு ஆருந் தாமரைப் பூவின் வாழுந் தேவியோவென்று 
ஐயநிகழ்ந்தது:  அறியச் சிறிது நின் வாய் திறவா விடின்- தெளிந்தறியச் சிறிதாயினும்  நின்வாய் 
திறவா தொழியின்  அமிழ்தே - அமிழ்தமே, அணங்கே -அணங்கே; இன்று அழிகின்றது. என் ஆவி அன்றே 
இப்பொழுதழிகின்றது என்னுயிரன்றே இதனை நீ கருதா தொழிகின்ற தென்னை ! எ-று.

    தேவி யென்பது பெரும்பான்மை யாகலின், தேவியென்றே யையஞ் சென்றதென 
ஐயத்துள் ஒருதலையே பற்றிக் கூறினான். அறியவென்னும் வினையெச்சமும் சிறிதென்னும்
வினை யெச்சமும் திறவாவிடி னென்னு மெதிர் மறையிற் றிறத்தலோடு முடிந்தன. 
அமிழ்தே யணங்கே யென்றான், இன்பமுந் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின். மெய்ப்பாடு- அழுகை.
பயன் : ஆற்றாமையுணர்த்துதல்.

    (பழையவுரைப் பொழிப்பு)  கொளு: ** சார்தற்கு அரிதெனமனம் வாடி யுரைத்தது.

** இத்துறையின் கொளுவும், அதனுரையும் ஏட்டிற் காணப்பெறவில்லை என்று பழையவுரைப் 
பதிப்பில் எழுதப்பெற்றுள்ளது .

    செய்யுள்: நீலமலர் நின்று ஒளி செய்கின்ற திருமிடற்றையுடையவர் அவருடைய வளமுடைய 
தில்லையில் இடமார்ந்த செந்தாமரைப் பூவிலுள்ள சிதேவி என்றே எனக்கு ஐயம் செல்லா நின்றது: 
அல்ல வென்னும் இடமறியும்படி சிறிதாகினும். மான் நோக்கத்தால் இயன்றாற் போலவே பார்க்கின்ற 
பார்வை யினையுடையாய்! உன்வாயால் ஒரு வார்த்தை சொல்லாத பொழுது, என் உயிர் அல்லதே; 
எனக்கு இன்பமும் துன்பமும் ஒருக்காலே செய்தலால் அமுதத்தையும் வருத்தத்தையும் ஒப்பாய்! 
இப்பொழுது அழிகின்றது என் உயிரன்றோ ?

    வேறொரு பொருள் அழிந்தால் மீட்டுக் கொளலாம். உயிர் அழிந்தால் யாராலே மீட்டுக் 
கொள்ளலாகும்? என்று படும்.        41

            24. நாணிக்கண்புதைத்தல்*
            -------------------------

* பேரின்பப் பொருள்:  இன்ப  நாணுதல் போலுயிர் இன்னல் எய்தியது.

    நாணிக் கண்புதைத்தல் என்பது தலைமகன் தன் முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட 
தலைமகள்  பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது நாணி ,  ஒரு கொடியினொதுங்கித் 
தன் கண்புதைத்து வருந்தா நிற்றல் அதற்குச் செய்யுள் -

    அகலிடந் தாவிய வானோ 
        னறிந்திறைஞ் சம்பலத்தின் 
    இகலிடந் தாவிடை யீசற்
        றொழாரினின் னற்கிடமாய்
    உகலிடந் தான்சென் றெனதுயிர்
        நையா வகையொதுங்கப் 
    புகலிடந் தாபொழில் வாயெழில் 
        வாய்தரு பூங்கொடியே

    ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து 
    வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது*

*பாடம்--அடைந்தது

    இதன் பொருள்: அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம் 
தாவிடை ஈசன் தொழாரின் - உலகத்தைத் தாவியளந்த வானவன் வணங்கப் படுவதென்றறிந்து 
வணங்கும் அம்பலத்தின் கணுளனாகிய இகலை யுடைய விடங்களிலே  தாவும் விடையையுடைய 
ஈசனைத் தொழா தாரைப் போல ; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று எனது உயிர் 
நையா வகை-துன்பத் திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனது உயிர் நையாத வண்ணம் : 
பொழில்வாய் எழில் வாய் தரு பூங்கொடியே- பொழிலிடத் துளவாகிய அழகு வாய்த்த 
பூவையுடைய கொடியே; ஒதுங்கப் புகலிடம் தா-யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ -று

     உகலிடம் - உகுதற்கிடம்; உகுதலையுடைய விடமெனினுமமையும். ஆயிடை--தலைவன்         (திருத்: தலைகன்/தலைவன்)
அவ்வாறு கூறிய விடத்து, தனி நின்று- ஆற்றுவிப்பாரையின்றி  நின்று, ஆற்றாது- நாணினா னாற்றாது, 
வேய் - வேய்த் தன்மை, மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  நாயகன் சொன்னவிடத்தில் தனியே நின்று ஆற்றாது 
அழிந்து வேயின் தன்மையால் சிறந்த தோள்களை யுடையவள் ஒரு வல்லி சாதக் கொடியில் ஒதுங்கியது.

    செய்யுள்: பூமியைத் தாவியளந்த புருஷோத்தமன், அவன் நம்மால் வணங்கப்படுவான் ஒருவன் 
என்று அறிந்து வணங்குகிற திருவம்பலத்தின் மாறுபாடுடைய இடங்களிலே தாவிச்செல்லுகிற 
இடபத்தினையுடைய முதலியாரைத் தொழாதவரைப் போலே கிலேசத்துக்கு ஒரு கொள்கலமாய் 
விசனப்படும் இடத்துச் சென்று என்னுடைய உயிரானது கிலேசியாபடி நான் ஒதுங்கும்படி எனக்குப் 
புகலிடம் தருவாயாக, பொழிலிடத்தே அழகு வாய்க்கப் பூத்தவல்லி சாதமே! 
எனக்குப் புகலிடம் தருவாயாக என்று அந்த வல்லிசாதத்து ஒதுங்கியது.         42

            25. கண்புதைக்க வருந்தல்* 
            -------------------------

பேரின்பப் பொருள் : உயிர்தன் வருத்த முற்றுற் றுரைத்தது.

    கண் புதைக்க வருந்தல் என்பது தலைமகள் நாணிக் கண் புதையா நிற்ப         (திருத்: பதையா/புதையா)
'இவள் கண் புதையா நின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச் 
செய்யுமென்றாகாதே'யென உட்கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின்
 நின்மேனி முழுதும் புதைப்பாயாக' வெனத் தலைமகன் தன் வருத்த மிகுதி கூறா நிற்றல், 
அதற்குச் செய்யுள் ;

    தாழச்செய் தார் முடி தன்னடிக்
        கீழ்வைத் தவரைவிண்ணோர் 
    சூழச்செய் தானம் பலங்கைத்                            (திருத்: பலங்கைப்/பலங்கைத்)
         தொழாரினுள் ளந்துளங்கப் 
    போழச்செய் யாமல்வை வேற்கண் 
        புதைத்துப்பொன் னேயென்னைநீ
    வாழச்செய் தாய்சுற்று முற்றும் 
        புதைநின்னை வாணுதலே

    வேற்றருழி கண்ணிணை மிளிர்வன வன்றுநின்
    கூற்றரு மேனியே கூற்றெனக் கென்றது.

    இதன் பொருள்: தாழச் செய்தார் முடி தன் அடிக்கீழ் வைத்து - தன் கட் டாழ்ந்தவர்களுடைய 
முடிகளைத் தன் திருவடிக்கீழ் வைத்து; அவரை விண்ணோர் சூழச்செய்தான் அம்பலம் கைதொழாரின்-
அவர்களை விண்ணோர் பரிவாரமாய்ச் சூழும் வண்ணஞ் செய்தவனது அம்பலத்தைக் கைதொழாதாரைப் 
போல: உள்ளம் துளங்க போழச் செய்யாமல் வைவேல் கண்  புதைத்து - நெஞ்சந்துளங்கப் போழாமற் கூரிய 
வேல்போலுங் கண்களைப் புதைத்து : பொன்னே - பொன்னே: நீ என்னை வாழச்செய்தாய்-நீ என்னை 
வாழும் வண்ணஞ் செய்தாய்' வாள் நுதலே-வாணுதலையுடையாய்;  நின்னைச் சுற்று முற்றும் புதை-
என்னுள்ளந் துளங்காமை வேண்டின் நின்னைச் சுற்று முழுதும் புதைப்பாயாக எ-று

    தாழச்செய்தா ரென்பதனை ஒரு சொல்லாக்காது தாழும் வண்ணம் முற்றவஞ் 
செய்தா ரென்றானும், தம்மைச் செய்தா ரென்றானும் ஒரு சொல் வருவித்தும் போழச் செய்யாம 
லென்புழியும் போழும் வண்ணமொரு தொழிலைச் செய்யாமலென் ஒருசொல் வருவித்தும் 
விரித்துரைப்பினுமமையும் . வாழச்செய்தா யென்பது குறிப்பு நிலை. புதைத்த வென்பதூஉம்* பாடம் .
வேற்றருங்கண் - வேல்போலுங்கண். மெய்ப்பாடு: அழுகை. பயன் : ஆற்றாமை யுணர்த்தல்.

* என்பது பழையவுரைகாரர் பாடம்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வேலொத்த கண்ணிணைகள் உலாவுவனவே அல்ல; 
கொல்லுதற்கரிய மேனியே எனக்குக் கூற்றுவனாகா நின்றது (என்றது)

    செய்யுள்: தன்னை வந்து வணங்கினவர்கள் தலையினைத் தன்னுடைய திருவடி நிழலிலே 
வைத்த அவர்களுக்குத் தேவர்களைப் பரிவாரமாகச் செய்தவன் திருவம்பலம் தொழாதவர்களைப் 
போல மனம் நடுங்கப் போழும் வண்ணம் செய்யாமல்  கூரியவேல் போன்ற கண்களை மூடிக்கொண்ட 
பொன்னை ஒப்பாய்! நான் பிழைக்கும்படி செய்தாய்:  ஒளி சிறந்த வெற்றியினையுடையாய்;
 என் மனம் நடுங்காமல் செய்யவேண்டியிருந்தாயாமாகில் மேனி முழுதும் புதைப்பாயாக.     43

            26. நாண்விடவருந்தல்*
            ---------------------

* பேரின்பப்பொருள்:  இன்ப நாணின்றி யெய்தல் கண்டின்புறல்

    நாண்விடவருந்தல் என்பது தலை மகன் தனது ஆற்றாமை மிகுதி கூறக்கேட்டு, ஒரு ஞான்றுந்
 தன்னை விட்டு நீங்காத நாண் அழலைச் சேர்ந்த மெழுகுபோலத் தன்னை விட்டு நீங்கா நிற்பத் 
தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
        கூத்தனை யேத்தலர் போல் 
    வருநாள் பிறவற்க வாழியரோ
        மற்றென் கண்மணி போன் 
    றொருநாள் பிரியா துயிரிற்
        பழகி யுடன் வளர்ந்த 
    அருநா ணளிய வழல்சேர்*
        மெழுகொத் தழிகின்றதே

    ஆங்ங னம்கண் டாற்றா ளாகி 
    நீங்கின நாணொடு நேரிழை நின்றது

* ணழியத் தழல்சேர்' என்பது பழையவுரைகாரர் பாடம்

    இதன் பொருள்: என் கண்மணி போன்று இன்றியமையாமையால் என் கண்மணியையொத்து: 
உயிரின்பழகி - உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப் பழகி;  ஒரு நாள் பிரியாது- ஒரு பொழுதும் பிரியாது; 
உடன் வளர்ந்த- என்னுடனே வளர்ந்த: அரு அளிய நாண்- பெறுதற்கரிய அளித்தாகிய நாண்:
அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது- அழலைச் சேர்ந்த மெழுகை யொத்து என்கணில்லாது 
அழியாநின்றது. அதனான் குருநாள் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர் போல் 
வருநாள் பிறவற்க - நிறத்தையுடையவாகிய நாண் மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட 
தில்லைக்கணுளனாகிய கூத்தனை யேத்தாதார்  துன்புறும் பிறவியிற் பிறப்பாரன்றே:
அவர்களைப்போல மேல் வரக்கடவ  நாளில் யான் இவ்வாறு பிறவா தொழிக எ-று,             (திருத்: பிறலா/பிறவா)

    வருநாள் பிறவற்க வென்பதற்கு ஏத்தாதாரைப் போல வருந்த இவ்வாறு பயின்றாரைப் 
பிரியவரு நாட்கள் உளவாகாதொழிக வெனினுமமையும். வாழியென்பது இத்தன்மைத் தாகிய 
இடுக்கணின்றி இந்நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும் அசை நிலை.
ஆங்ஙனங்கண்டு - அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு- அழுகை. பயன்-ஆற்றாமை நீங்குதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் அங்ஙனம் சொன்ன படியைக்கண்டு ஆற்றாத் 
தன்மையுடையளாய் நாண் நீக்கத்துடனே நுண் தொழிலாற் சிறந்த ஆபரணங்களையுடையாள் நின்றது.

    செய்யுள்: நிறமுடைத்தாகிய செவ்வி மலருடைத்தாகிய சோலை சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரில் 
கூத்தனாகிய முதலியாரை வாழ்த்தாரைப் போலே மேல்வரும் நாள்கள் இங்ஙனே நாணழியப் 
பெறாதொழிவேனாக; மற்றும் என் கண்ணினுள் சோதி போன்று ஒருநாளும் என்னை விட்டு நீங்காதே 
என் உயிர்போலப் பின்னமறப் பழகி நான் வளரத் தான் வளர்ந்த பெறுதற்கரிய நாணமானது             (திருத்: பெறுகற்/பெறுதற்)
அழியத்தக்க அக்கினியைச் சேர்ந்த மெழு (கைப்போல்) உருகி அழியா நின்றது.

    ஆதலால் மேல்வரு நாட்கள் இங்ஙனே நாணழியப் பிறவா தொழிய வேண்டும் என்றது. 
வாழியும் அரோவும் அசைகள் .     44

            27. மருங்கணைதல்*
            ------------------
* பேரின்பப் பொருள்: திருவுருப் பரிவாற் பெருகு சுகம்பெறல்.        (திருத்: பெகுரு/பெருகு)

    மருங்கணைதல் என்பது தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையின்         (திருத்: நிற்பக்/நிற்பச்)
தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து ஒருகையால் 
இறுமருங்குறாங்கியும், ஒருகையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும் , சென்று அணையா 
 நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
        கஃதே குறைப்பவர்தஞ் 
    சீலத் தனகொங்கை தேற்றகி
        லேஞ்சிவன் தில்லையன்னாள்
    நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் 
        ணாதநுண் தேன்நசையாற்
    சாலத் தகாதுகண் டீர்வண்டு
        காள் கொண்டை சார்வதுவே.

    ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம்விலக்கிக் 
    கரு களிற்றண்ணல் மருகணைந்தது.

    இதன் பொருள்: கோலத் தனிக் கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர் தம் சீலத் தனகொங்கை-         (திருத்: தம/தம்)
அழகையுடைய தனியாகிய கொம்பின் மேலேவேறி அதனையே அடிக்கட் குறைப்பார் தமது             (திருத்: மேலேவறி/மேலேவேறி)
தன்மையை யுடையாயிருந்தன கொங்கைகள். தேற்றகிலேம் - இவை இத் தன்மையவாயிருத்தலான் 
இது வீழுமென்றியாந் தெளிகின்றிலம்.  அதனால் ; வண்டுகாள்- வண்டுகாள்; சிவன் தில்லை  அன்னாள்  
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது-சிவனது தில்லையை யொப்பாளுடைய நூலையொத்த 
நேரிய விடையினது நொய்ம்மையைக் கருதாது; நுண் தேன் நசையால் கொண்டை சார்வது சாலத் தகாது - 
நுண்ணியதேன் மேலுண்டாகிய நசையால் நீயிர் கொண்டையைச் சார்தல் மிகவுந் தகாது எ-று.

    தேற்றகிலே மென்பது ''தேற்றாப் புன்சொ னோற்றிசின்'  புறநானூறு  (202) என்பதுபோலத் 
தெளிதற்கண் வந்தது முலைகளைத் தெளிவிக்கமாட்டே மென்பாரும்*  உளர், பின்  வரு மேதத்தை 
நோக்கின் நீயிர் பயனாக நினைக்கின்ற இஃது இறப்பச் சிறிதென்னுங் கருத்தால், நுண்டேனென்றான். 
கண்டீரென்பது: முன்னிலையசைச்சொல். அளிகுலம் வடமொழி முடிபு. விலக்கியணைந்தது-
விலக்கா நின்றணைந்தது. மெய்ப்பாடு உவகை. பயன்: சார்தல், அவ்வகை நின்றமை குறிப்பினா 
னுணர்ந்த தலைமகன் இவ்வகை சொல்லிச் சார்ந்தானென்பது 

* என்பது பழையவுரைகாரர்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒளியே மிகுத் (திருக்கின்ற) நீண்ட அளகத்தின்
வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போலே கரிய யானையையுடைய நாயகன் பக்கத்தே சென்று சேர்ந்தது .        (திருத்: ஒட்டு/ஓட்டு)

    செய்யுள்: அழகிய தனிக் கொம்பின் உச்சியின் நெறியிருந்து அடிக்கொம்பை             (திருத்: நெறியிருந்தது/நெறியிருந்து)
வெட்டுகிறவருடைய அந்தச் செய்தி போன்று இருந்த தனங்களும் இவையிற்றைத் தெளிவிக்கப் 
போந்தோமுமில்லை முதலியாருடைய திருவம்பலத்தை யொப்பவள் நூல் போன்ற இடையின் 
கனமில்லாதலை விசாரியாதே அற்புதத்தேனின் இச்சையாலே, சாலவும் தகாது காணும் 
வண்டுகாள் கொண்டையிலே சார்ந்திருக்குமது.

    நீங்(குங்) களென்று வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போலே சென்று அருகு சேர்ந்தது.

            28. இன்றியமையாமை கூறல் *
            ----------------------------
* பேரின்பப் பொருள்; "சித்தி யெவையுஞ் சேர்ந்திடு மாயினும் இத்தகை யின்ப மிகழேன் என்றது."

    இன்றியமையாமை கூறல் : என்பது புணர்ச்சி யிறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்குபெற 
வரினும் இக்கொள்கைகளை மறந்து அதன்கண் முயலேனெனப் பிரிவுதோன்றத் தலை மகன் 
தனது இன்றியமையாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:  -

    நீங்கரும் பொற்கழற் சிற்றம் 
        பலவர் நெடுவிசும்பும்
    வாங்கிருந் தெண்கடல் வையமு
         மெய்தினும் யான்மறவேன்
    தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
         தேனும் பொதிந்து செப்புங் 
    கோங்கரும் புந்தொலைத் தென்னையு 
        மாட்கொண்ட கொங்கைகளே        (திருத்: கொள்கை/கொங்கை)

    வென்றிவேலவன் மெல்லியல்தனக்
    கின்றியமையாமை யெடுத்துரைத்தது .

    இதன் பொருள்:  நீங்கரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடுவிசும்பும் வாங்கு இரும் தெண்கடல் 
வையமும் எய்தினும்  விடுதற்கரிய பொன்னானியன்ற கழலையுடைத்தாகிய திருவடியையுடைய 
சிற்றம்பலவரது நெடிதாகிய தேவருலகையும் வளைந்த பெரிய தெண்கடலாற் சூழப்பட்ட நிலத்தையும் 
ஒருங்கு பெற வரினும் தீங் கரும்பும் அமிழ்தும் செழுதேனும் பொதிந்து-இனிய கரும்பின் சாற்றையும் 
அமிர்தத்தையும் கொழுவிய தேனையும் உள்ளடக்கி; செப்பும் கோங்கு அரும்பும் தொலைத்து செப்பையுங் 
கோங்கரும்பையும் வென்று என்னையும் அடிமை கொண்ட கொங்கைகளை; யான் மறவேன்- யான் மறவேன் எ- று

    விசும்பும் நிலனும் ஒருங்கு பெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன் கண் முயலுமா 
றில்லையெனத் தன் னின்றியமையாமை கூறிய வாறாயிற்று. என்னையு மென்றவும்மை எச்சவும்மை; 
தொழிற்படுத்தலொற்றுமையால் தன்வினையாயிற்று. மெய்ப்பாடு அது. பயன்: நயப்புணர்த்துதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெற்றி வேலையுடையவன் மெல்லிய இயல்பினை 
யுடையாளை யின்றித் தனக்கொரு பொழிதும் சொல்லாமையை மிகுத்துச் சொன்னது.                (ஐயம்: பொழிதும்?)

    செய்யுள்:  கண்டால் விட்டு நீங்குதற்கரிய அழகிய சீபாதங்களையுடைய திருச்சிற்றம்பலநாதன் 
அவனுடைய மிக்க தெய்வலோகமும் வளைந்த பெரிய கடலால் சூழப்பெற்ற பூலோகமும் பெறினும் 
நான் மறக்கப்படாது. தீங்கரும்பு அமிழ்து செழுந்தேன் இவற்றைப் பரிகரித்துக் கொண்டு வடிவினால் 
பொற்செப்பையும் கோங்கரும்பையும் தோற்பித்து என்னையும் வசமாக்கிக் கொண்ட கொங்கைகளை.

    கொங்கைகளைத் தெய்வலோகமும் பூலோகமும் நான் பெறினும் மறவேன் என்றவாறு.     46

            29. ஆயத்துய்த்தல்*
            -----------------
*பேரின்பப் பொருள்:  "மெய்யடி யாரிடை வேறறக்கலந் தையமின்றி யமர்தலை யறிதல்''

    ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை கூறிப்பிரியலுறா நின்றவன், 'இனிப் பலசொல்லி 
யென்னை? என்னுயிர் நினக்கு அடிமையாயிற்று; இனிச் சென்று நின்னாயத்திடைச் சேர்வாயாக' வெனத்தன் 
பிரிவின்மை கூறித்தலைமகளை ஆயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    சூளா மணியும்பர்க் காயவன்
        சூழ்பொழிற் றில்லையன்னாய்க் 
    காளா யொழிந்ததென் னாருயிர்
        ஆரமிழ் தேயணங்கே
    தோளா மணியே பிணையே 
        பலசொல்லி யென்னைதுன்னும்
    நாளார் மலர்ப்பொழில் வாயெழி            (திருத்: மலர்ப்மொழில் /மலர்ப்பொழில்) 
        லாயம் நணுகுகவே.

    தேங்கமழ் சிலம்பன், பாங்கிற் கூட்டியது

    இதன் பொருள் : உம்பர்க்குச் சூளாமணி ஆயவன் சூழ்பொழில் தில்லை அன்னாய்க்கு 
என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது - வானவர்க்கு முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய 
தில்லையை யொக்கும் நினக்கு எனதாருயிர் அடிமையாயிற்று; பல சொல்லி என்னை - ஆதலாற் 
பலசொல்லிப் பெறுவதென்; ஆர் அமிழ்தே - நிறைந்த வமிர்தே; அணங்கே-அணங்கே; தோளா மணியே - 
துளைக்கப்படாத மாணிக்கமே ; பிணையே - மான் பிணையே: துன்னும் ஆர் நாள் மலர்ப் பொழில்வாய் 
எழில் ஆயம் நணுகுக-நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரை யுடைய பொழிற்கண்
விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ-று.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நறுநாற்றம் கமழ்கின்ற மாலையினை யுடையவன் 
பாங்கிமாரிடத்தே சேர விட்டது.

    செய்யுள்: தேவர்களுக்கு முடிமணியாய் உள்ளவன் பொழில் சுற்றிய சிதம்பரத்தின் இயல்பை 
உடையாட்கு (நினக்கு) என்னுடைய பெறுதற்கரிய உயிர் வசமாகி விட்டது. பெறுதற்கரிய அழகே போல்வாய்; 
தெய்வமாக நிற்பாய்; துளைக்கப்படாத இரத்தினத்தை யொப்பாய்;  நோக்கத்தால் மான் பிணைக்கு         (திருத்: யொப்யாய்/யொப்பாய்)
இறுப்பல சொல்லுவது என்னை? செறிந்த நாட்செவ்வி மலரால் மிக்க சோலையிடத்தே (அழகிய) 
கூட்டத்தாரிடத்தே சேர்வாயாக.                                        (திருத்: கூட்டந்தார்/கூட்டத்தார்)

    அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு விளங்கும். பலசொல்லி யென்னை யென்றது உயிர் 
நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில கூறலன்றே யென்றவாறு. சொல்யென்னும் 
வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. பொழில் வாய் நணுகுகவென 
இயைப்பினு மமையும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன்: பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல்.     47


            30. நின்று வருந்தல் *
            -------------------

*பேரின்பப் பொருள்: திருவுரு நீங்குத் திறமரி தென்றது.

    நின்று வருந்தல் என்பது தலைமகளை ஆயத்து உய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு 
கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-


    பொய்யுடை யார்க்கரன் போல்க
        லும்மகன் றாற்புணரின் 
    மெய்யுடை யார்க்கவன் அம்பலம் 
        போல மிகநணுகும்
    மையுடை வாட்கண் மணியுடைப்
        பூண் முலை வாணுதல்வான்
    பையுடை வாளர வத்தல்குல் 
         காக்கும்பைம் பூம்புனமே

    பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன்
    நீங்கற் கருமை நின்று நினைந்தது

     இதன் பொருள்: மை உடை வாட்கண் மணி உடைப்பூண் முலை வாள் நுதல் - மையையுடைய 
வாள் போலுங்கண்ணையும் மணியையுடைய பூணணிந்த முலையையுடைய வாணுதல் 
வான் பை உடை வாள் அரவத்து அல்குல் - பெரிய படத்தை யுடைத்தாகிய ஒளியையுடைய 
அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம் புனம்- அவள் காக்கும் பூக்களையுடைய 
பசிய புனம் அகன்றால்-தன்னை யானகன்றால்; பொய் உடையார்க்கு அரன் போல் அகலும்-
பொய்யை யுடையவர்க்கு அரன் றுன்பத்தைச் செய்து சேயனாமாறு போல மிக்க துயரத்தைச் 
செய்து எனக்குச் சேய்த்தாம் ; புணரின் - அணைந்தால் ; மெய் உடையார்க்கு அவன் அம்பலம் போல 
மிக நணுகும்- மெய்யை யுடையவர்க்கு அவனது அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்தாமாறுபோலக் 
கழியுவகை செய்து எனக்கு மிகவும் அணித்தாம்: ஆதலான் நீக்குதல் பெரிதும் அரிது எ-று.

    வாணுதலையு மென்றெண்ணினும் அமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீக்குதல்.

            பாங்கற் கூட்டம் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாங்கிமாரிடத்தே (அவளைச் சேரச் செய்து தன் பதியை நோக்கிப் 
பெயர்வோன் ) அவள் தன்னால் விட்டு நீங்குதற்கு அரிய படியை விசாரித்தது.

    செய்யுள்: (விட்டு நீங்கினால்) பொய்யன்பு பூண்டவர்க்கு மகாதேவர் அகன்றாற் போலே 
அகலாநிற்கும்; அணைந்தால், மெய்யன்பு உடையவர்க்கு அவன் அம்பலம் போல மிகவும் 
அணுகா நிற்கும் மை எழுதப்பட்ட ஒளி சிறந்த கண்ணினையும் முத்துமணி யணியப்பட்டு 
ஆபரணங்களாற் சிறந்த முலையினையும் பிரகாசம் செய்த நெற்றியினையுமுடைய பெரிய 
படத்தை யுடைய ஒளி பொருந்திய அரவம் போன்ற அல்குலினை யுடையவள் அவள் காவல் 
பச்சென்று பொலிவுடைத்தாகிய புனம் இப்படிச் செய்யாநின்றது.

            3. இடந்தலைப்பாடு*
            ------------------

*பேரின்பக் கிளவி: 'இடந்த லைப்பா டீராறு மொன்று, மருட்குரு தரிசனத் தன்பு மிகுதியாற், 
பேரா னந்தம் பெற்றனு பவித்தல் "(திருக்கோவையார் உண்மை ).
            
    பொழிலிடைச் சேற லிடந்தலை சொன்ன 
    வழியொடு கூட்டி வகுத்திசி னோரே

    இதன் பொருள்: பொழிலிடைச்சேற லொன்றும் இடந்தலைப்பாட்டிற்கே யுரியது. 
இதனையும் மேலைப் பாங்கற்கூட்ட முணர்த்திய சூத்திரத்தில் "ஈங்கிவை நிற்க இடந்தலை தனக்கும்'' 
எனக் கூறியவாறே மின்னிடை மெலிதல் முதல் நின்றுவருந்துதலீறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு 
கூட்டி இடந்தலைப்பாடா மென்று வகுத்துரைத்துக்கொள்க. அவை பாங்கற்கூட்டத்திற்கும் 
இடத்தலைப் பாட்டிற்கும் உரிய வாமாறு என்னை யெனில், பாங்கற் கூட்டம் நிகழாதாயின் 
இடந்தலைப்பாடு நிகழும், இடந் தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற் கூட்டநிகழும் ஆதலின்.

            1. பொழிலிடைச் சேறல்*
            -----------------------
*பேரின்பப் பொருள் : "கைம்மா றின்றிக் கருணை செய்தலால் இன்னமு மிவ்விடை யின்புறு மென்றது.''

    பொழிலிடைச்சேறல் என்பது இயற்கைப் புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்து தற்கருமை 
நினைந்து வருந்தா நின்ற தலை மகன், 'இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் 
வந்ததன்று; தெய்வந்தர வந்தது; இன்னும் அத்தெய்வந் தானே தரும்: யாம் அப்பொழிலிடைச் செல்வே' மெனத்
தன் நெஞ்சொடு கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    என்னறி வால்வந்த தன்றிது
        முன்னும்இன் னும்முயன்றால் 
    மன்னெறி தந்த திருந்தன்று 
        தெய்வம் வருந்தல் நெஞ்சே
    மின்னெறி செஞ்சடைக் கூத்தப் 
        பிரான்வியன் தில்லை முந்நீர்
    பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று 
        மின்றோய் பொழிலிடத்தே.

    ஐயரிக் கண்ணியை யாடிடத் தெசென் 
    றெய்துவ னெனநினைந் தேந்தல் சென்றது

    இதன் பொருள்: இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று - இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு 
கூடிய முயற்சியான் வந்ததன்று, தெய்வந்தர வந்தது; முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று - 
இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னுமிருந்தது;
அது முடிக்கும்,அதனான், நெஞ்சே நெஞ்சமே, வருந்தல்- வருந்தா தொழி; மின் எறிசெம் சடைக்கூத்தப் பிரான் 
வியன் தில்லை முந்நீர்- மின்னை வெல்கின்ற சிவந்தசடையையுடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் 
சூழ்ந்த கடற்றிரை: பொன் எறிவார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச்சென்றும் பொன்னைக் கொணர்ந் 
தெறிகின்ற நெடிய துறை யிடத்து மின்னையுடைய முகிலைத் தோயும் பொழிற்கட் செல்லுதும் எ-று.

    இன்னு மிருந்தன் றெனக்கூட்டி முயன்றா லென்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல் 
வருவித் துரைக்கப்பட்டது. மின்போலுநெறித்த சடை யெனினும் அமையும். கரையிற் பொன்னைத் 
திரையெறியுந்துறை யெனினுமமையும்) இருந்தின்றென்பது* பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம் 
வருவித்து இருந்ததில்லையோ வனவுரைக்க, மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடந்தலைப்படுதல்**

*என்பது பழையவுரைகாரர்.

** இடந்தலைப்படுதல் - இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின விடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்;

    இதற்குமின்னிடை மெலிதன்முதலாக நின்றுவருந்த லீறாக வருங்கிளவி யெல்லாம் எடுத்துரைத்துக் 
கொள்க. என்னை இவ்விரண்டனுள்ளும் ஒன்றே நிகழுமாகலின்.

            இடந்தலைப்பாடு முற்றிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  'அழகிய வரிபரந்த கண்ணினை யுடையாளை விளையாடிடத்தே 
சென்று சேரக் கடவேன்' என்று நினைந்து நாயகன் போனது.

    செய்யுள் : முன்பு நான் இதுவேண்டுமென்ன என்னுடைய நினைவினாலே வந்ததொன்றன்று: 
இன்னமும் நான் உற்சாயித்தால் நிலைபெற்ற இந்நெறியைத் தந்த தெய்வம் இருந்தது; ஆதலால் நெஞ்சமே!
நீ வருந்தாதே கொள்: ஒளியுடைத்தாகிய நெறித்த சிவந்த திருச்சடையினையுடைய கூத்தனாகிய 
சுவாமி இணையில்லாத திருவம்பலத்தைச் சூழ்ந்த கடலிடத்துப் பொன் கொழிக்கப்பட்ட நீண்ட 
துறையுடைத்தாகிய (இடத்தே) மின்னை அடைந்த காவிடத்தே சென்று இன்னும் உற்சாயிக்கக் கடவேன்.

    உற்சாயித்தால் நிலைபெற்ற இந்நெறியைத் தந்த  தெய்வம் இருந்தது. அது முடித்துத் தரும் 
என்பது கருத்து:                49

            இடந்தலைப்பாடு முற்றிற்று.

            4. மதியுடம்படுத்தல்*
            -------------------
*பேரின்பக் கிளவி : ' மதியுடம் படுத்தல் வருமீ ரைந்துங், குருவறிவித்த திருவருள் அதனைச் சிவத்துடன் 
கலந்து தெரிசனம் புரிதல்' (திருக்கோவையார் உண்மை ),

    மதியுடம்படுத்தல்** வருமாறு: இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த் 
தெருண்டுவரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை 
வழிப்பட்டுச் சென்றெய்துதல் முறைமை யென்ப.  வழிப்படுமாறு: தெற்றெனத் தன்குறை கூறாது
 இரந்து வைத்துக் கரந்தமொழியாற் றன்கருத்தறிவித்து அவளை ஐயவுணர் வினளாக்கி அது 
வழியாக நின்று தன் குறை கூறுதல்,

**மதியுடம்படுத்தல் : அறிவை யொருப்படுத்தல் 

    சேற றுணிதல் வேழம் வினாதல் 
    கலைமான் வழிபதி பெயர்வினா தல்லே 
    மொழிபெறா துரைத்தல் கருத்தறி வித்த 
    லிடைவி னாதலோ டிவையீ ரைந்தும் 
    மடவரற் றோழிக்கு மதியுடம் படுத்தல்

    இதன் பொருள்: பாங்கியிடைச்சேறல், குறையுறத்துணிதல், வேழம் வினாதல், கலைமான் வினாதல் ,
வழிவினாதல், பதி வினாதல், பெயர் வினாதல், மொழிபெறாது கூறல், கருத்தறிவித்தல், இடைவினாதல் 
என விவை பத்தும் மதியுடம்படுத்தலாம் எ-று அவற்றுள்-

            1. பாங்கியிடைச்சேறல்*
            -----------------------

* பேரின்பப்பொருள்: திருவரு ளாற்சிவம் பெறுத லறிந்தது. 

    பாங்கியிடைச்சேறல் என்பது இரண்டனுள் ஒன்றாற்சென் றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன்,
 'இனியிவளைச் சென்றெய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற்காட்டப்பட்ட காதற்றோழிக்கு 
நங்குறையுள்ளது சொல்வேம்' என்று அவளை நோக்கிச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்-

    எளிதன் றினிக்கனி வாய்வல்லி
        புல்ல லெழின்மதிக்கீற் 
    றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப் 
        பிரானையுன் னாரினென்கண்
    தெளிசென்ற வேற்கண் வருவித்த 
        செல்லலெல் லாந்தெளிவித்
    தளிசென்ற பூங்குழற் றோழிக்கு 
        வாழி யறிவிப்பனே

    கரந்துறை கிளவியிற் காதற் றோழியை 
    இரந்து குறை யுறுவலென் றேந்தல் சென்றது. 

    இதன் பொருள்: கனி வாய் வல்லி புல்லல் இனி எளிது அன்று-தொண்டைக்கனிபோலும் வாயையுடைய 
வல்லியைப் புல்லுதல் இனி எளிதன்று அதனால்; எழில் மதிக்கீற்று ஒளி சென்ற செம்சடைக் கூத்தப்பிரானை 
உன்னாரின்-எழிலையுடைய மதியாகிய கீற்றினொளிபரந்த சிவந்தசடையையுடைய கூத்தப்
பிரானை நினையா தாரைப் போலவருந்த;  என் கண் தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம்-
என்னிடத்துத் தெளிதலையடைந்த வேல் போலுங் கண்கள் வருவித்த இன்னாமை முழுதையும் ; அளி சென்ற 
பூங்குழல் தோழிக்குத் தெளிவித்து அறிவிப்பன்- வண்டு அடைந்த பூங்குழலை யுடைய தோழிக்குக் 
குறிப்பினாலே தெளிவியா நின்று சொல்லுவேன் எ-று

    இரண்டாவது விகாரவகையாற் றொக்கது; வல்லியது புல்ல லெனினு மமையும். வருந்தவென 
வொருசொல் வருவித் துரைக்கப்பட்டது. கண்ணோடாது பிறர்க்குத் துன்பஞ் செய்தலின், உன்னாதார் 
கண்ணிற்கு உவமையாக வுரைப்பினு மமையும். செல்ல லெல்லாந் தெளிவித் தென்பதற்குச் 
செல்லலெல்லாவற்றையு நீக்கியென்பாருமுளர். வாழி: அசைநிலை கரந்துறைகிளவி உள்ளக் குறிப்புக்
கரந்துறையுமொழி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம், பயன்: தோழிக்குணர்த்தி 
அவளான் முடிப்பலெனக்கருதி ஆற்றாமை நீங்குதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கரந்து சொல்லும் வார்த்தையினாலே உயிர்த்தோழியைத்
தொழ ஒழுகி, 'என் குறையைச் சொல்லக் கடவேன்' என்று நினைந்து நாயகன் போனது.            (திருத்: சொல்வக்/சொல்லக்)

     செய்யுள்: தொண்டைப் பழத்தை யொத்த வாயினையுடையளாய் வல்லிசாதம் போல்வாளைக் 
கூடுவது இனி எளியதன்று. அழகிய மதியின் பிளவாகிய திரு இளம்பிறையின் பிரகாசம் பரந்து சிவந்த 
திருச்சடையினையுடைய கூத்தனாகிய சுவாமியை நினையாதாரைப்போல் என்னிடத்துத் தெளியக் 
கடைந்த வேலை ஒத்தகண்கள் உண்டாக்கின் வருத்தம் எல்லாம் தாழ வொழுகி நறுநாற்றத்தாலே 
வண்டுகள் சென்றடைந்த பொலிவுடைய கூந்தலையுடைய தோழிக்கு அறிவிக்கக்கடவேன். 50

            2 குறையுறத் துணிதல்*
            ----------------------

* பேரின்பப் பொருள்: சிவமே காட்டத் திருவருளையுணர்தல்

    குறையுறத்துணிதல் என்பது பங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால் 
அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக் கண்டு 'இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறையுள்ளது 
சொல்லுவேனெனத் தன்குறை கூறத்துணியா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    குவளைக் கருங்கட் கொடியே
        ரிடையிக் கொடிகடைக்கண் 
    உவளைத் தனதுயி ரென்றது
        தன்னோ டுவமையில்லா
    தவளைத்தன் பால்வைத்த சிற்றம் 
        பலத்தா னருளிலர்போல்
    துவளத் தலைவந்த இன்னலின் 
        னேயினிச் சொல்லுவனே

    ஓரிடத்தவரை யொருங்குகண்டுதன் 
    பேரிடர்பெருந்தகை பேசத்துணிந்தது.

    இதன் பொருள் : குவளைக் கருங்கண் கொடி ஏர் இடை இக்கொடி கடைக்கண் - குவளைப்பூப்போலுங் 
கரிய கண்ணிணையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; 
உவளைத் தனது உயிர் என்றது- உவளைத் தன்னுடையவுயிரென்று சொல்லிற்று, அதனால்; 
தன்னோடு உவமை இல்லாதவளைத் தன்பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர்போல் 
துவளத் தலைவந்த இன்னல் - தனக்கொப்பில்லா தவளைத் தன்னொருகூற்றின் கண் வைத்த 
சிற்றம்பலத்தானது அருளை யுடையரல்லாதாரைப் போல் யான் வருந்தும் வண்ணம் என்னிடத்துவந்த 
இன்னாமையை; இனி இன்னே சொல்லுவன்- இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ-று.

    கடைக்கணுவளை யுயிரென்றது எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந் 
தானேகூறிற்றென்றவாறு.  இன்னேயென்பது இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது 
இவளிவட் கின்றியமையாமையறிந்த பின்னென்பது படநின்றது. ஒருங்குகண்டு - ஒருகாலத்துக் கண்டு, 
மெய்ப்பாடு- அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தற் கொருப்படுதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஓரிடத்தில் நாயகியையும் பாங்கியையும் உறவிருக்கக்கண்டு 
தன்னுடைய பெரிய கிலேசத்தைப் பெரிய தலைமைப் பாட்டையுடையவன் சொல்லுவதாக அறுதியிட்டது.

    செய்யுள்:  நீலமலர்களை யொத்த கரிய கண்களையும் வல்லிசாதக் கொடியை யொத்த 
இடையினையுமுடைய இந்த வல்லி சாதத்தை ஒப்பாளுடைய கடைக்கண்களானவை தன் பக்கத்திலே 
இருக்கிறவளைத் தனது உயிர் என்றது. தனக்கொப்பில்லாத தம்பிராட்டியைத் தன்னுடைய பாகத்திலே 
வைத்த திருச்சிற்றம்பலநாதன் அவருடைய திருவருளில்லாதவரைப் போலே நான் வாடும்படி 
விதிவந்து என்னிடத்திலே உண்டான என் கிலேசத்தை இனிச் சொல்லக் கடவேன்.     51


            3. வேழம் வினாதல் *
            -------------------

* பேரின்பப் பொருள்: அருள் சிவங் கலந்த அருமையுயிர் தேர்தல்.

    வேழம் வினாதல் என்பது குறைகூறத் துணியா நின்றவன் என் குறை யின்னதென்று
இவளுக்கு வெளிப்படக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, என் குறை இன்னதென்று 
இவடானேயுணரு மளவும் கரந்தமொழியாற் சில சொல்லிப்பின் குறையுறுவதே காரியமென, 
வேட்டை கருதிச் சென்றானாக அவ்விருவருழைச் சென்று நின்று, தன்காதறோன்ற இவ்விடத்தொரு 
மதயானை வரக் கண்டீரோவென வேழம் வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    இருங்களி யாயின் றியானிறு 
        மாப்ப இன் பம்பணிவோர் 
    மருங்களி யாவன லாடவல்
        லோன்றில்லை யான்மலையீங் 
    கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் 
        மதத்திரு கோட்டொரு நீள்
    கருங்களி யார்மத யானையுண் 
        டோவரக் கண்டதுவே.

    ஏழையரிருவரு மிருந்தசெவ்வியுள் 
    வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

    இதன் பொருள்: பணிவோர் மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா 
அனல் ஆடவல்லோன்-அடியவரிடத்தே அவரொடு கூடிப் பெரியகளிப்பையுடையேனாய் 
யானின்றிறுமாக்கும் வண்ணம் இன்பத்தை யெனக்களித்துத் தீயாடவல்லோன்; தில்லையான்-தில்லையான்;
மலைஈங்கு- அவனது மலையின் இவ்விடத்து; அளி ஒருங்கு ஆர்ப்ப - அளிக ளொருங்கார்ப்ப; 
உமிழ் மும்மதத்து இருகோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு மதயானை வரக்கண்டது உண்டோ -
உமிழப்படா நின்ற மூன்றுமதத்தையும் இரண்டு கோட்டையுமுடைய நீண்ட கரிய களிபார்ந்த 
ஒருமதயானை வாரா நிற்பக் கண்டதுண்டோ ? உரைமின் எ-று.

    மருங்கிறுமாப்பவெனக் கூடிற்று. அனலாடலென்பது அனலோடாடவென விரியும் 
ஆர்ப்ப வரவெனக் கூட்டுக. ஆர்ப்ப வுமிழு மெனினுமமையும் நீட்சி - விலங்குண்டாகிய நெடுமை, 
களி - உள்ளச் செருக்கு மதயானை மதமிடையறாத யானை.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகியும் பாங்கியும் இருந்த பக்குவத்தே ஆனையை 
வினாவி நாயகன் சென்றது.

    செய்யுள்: சிவாநந்த மகிமையாகிற பெரிய களிப்பையுடையவனாய் இப்பொழுது நான் 
செம்மாந் திருக்கும்படி வணங்குவாருடைய பக்கமாகிய இன்பத்தை எனக்குத்தாரார்: அக்கினியை
 ஏந்திக் கொண்டு ஆடவல்லோன் சிதம்பரத்திலே உள்ளவன். அவனுடைய திருமலையாகிய 
இடத்து ஒருவழிப் பட்டு வண்டுகள் ஆரவாரித்துச் செல்லச் சொரியா நின்ற மூன்று மதத்தினையும் 
இரண்டு கொம்பினையும் உயரத்தினையும் கருத்துக் களித்துச் செல்லும் ஒரு யானை 
உண்டோ வரக்கடவது? உண்டாகில் சொல்லுவீராக வேண்டும்,         52

            4.கலைமான் வினாதல்*
            ----------------------

*பேரின்பப் பொருள் : அருள் விடை பெறாமற் பின்னும் புகறல்

    கலைமான் வினாதல் என்பது வேழம் வினாவி உட்புகுந்த பின்னர்த் தான் கண்ணாலிடர்ப்பட்டமை
தோன்ற நின்று 'நும்முடைய கண்கள் போலுங் கணை பொருதலா னுண்டாகிய புண்ணோடு இப்புனத்தின் 
கண் ஒருகலைமான் வரக் கண்டீரோ வென்று கலைமான் வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:--

    கருங்கண் ணனையறி யாமைநின்
        றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் 
    வருங்கண் ணனையவண் டாடும்
         வளரிள வல்லியன்னீர்
    இருங்கண் ணனைய கணைபொரு
        புண்புண ரிப்புனத்தின் 
    மருங்கண் ணனையதுண் டோவந்த
        தீங்கொரு வான் கலையே

    சிலைமா ணண்ணல், கலைமான் வினாயது.

    இதன் பொருள் : கரும்கண்ணனை அறியாமை நின்றோன் தில்லைக்கார்ப் பொழில்வாய்- 
கரியமாலை அவனறியாமற் றன்னை யொளித்து நின்றவனது தில்லை வரைப்பி னுண்டாகிய 
கரிய பொழிலிடத்து; வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இளவல்லி அன்னீர்-புறப்படா நின்ற 
கள்ளாற்றம்மேனி நனையும் வண்ணம் வண்டுகளாடும் வளரா நின்ற இளையவல்லியை யொப்பீர்; 
இரும்கண் அனையகணை பொரு புண்புணர் ஒருவான் கலை அனையது இப்புனத்தின் மருங்கண் 
ஈங்கு வந்தது உண்டோ- நும்முடைய பெரிய கண்கள் போலுங் கணைபொருதலா லுண்டாகிய 
புண்ணைப்புணர்ந்த ஒருவான் கலை- அத் தன்மையது இப்புனத்தின் மருங்கு ஈங்கு வந்ததுண்டோ? 
உரைமின் எ-று.

    கண்ணன் என்பது: கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு 
குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார். சேற்றிற் பங்கயமென்றாற்போல 
அறியாமை நின்றோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் ஒளித்தோ னென்னும் பொருள் பட்டு, 
இரண்டாவதற்கு முடிபாயின, ஐகாரம்: அசைநிலை யெனினுமமையும் .வருங்கண்ணனைய வென்பதற்கு 
உண்டாகக்கடவ கள்ளையுடைய அரும்புகளை யுடைமையான் வண்டு காலம் பார்த்து ஆடுமாறுபோல, 
நும்முள்ளத்து நெகிழ்ச்சி யுண்டாமளவும் நுமது பக்கம் விடாது உழல்கின்றேனென்பது பயப்ப 
வருங்கண்ணனை யையுடையவென்று ரைப்பினுமமையும். மருங்கென்பது மருங்கண்ணென 
ஈறு திரிந்து நின்றது. அணித்தாக வென்னும் பொருட்டாய், அணி அண்ணெனக் குறைந்து நின்ற 
தெனினுமமையும்.  மருங்கண் ணனையதுண்டோ வென்பதற்கு அண்ணல் நைய தென்று, 
புனத்தின் மருங்கு தலைமை நைதலையுடைய தெனினுமமையும்.                 (திருத்: தெனினுமையும்/தெனினுமமையும்)

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிலைத் தொழிலினாலே மாட்சிமைப்பட்ட நாயகன் 
கலையாகிய மான் வந்ததோ என்று கேட்டது

    செய்யுள்:  கரிய நிறத்தையுடைய புருஷோத்தமனையும் அறியாமல் ஒளித்து நின்றோன் 
அவனுடைய திருவம்பலஞ் சூழ்ந்த இருண்ட சோலையிடத்து உண்டாகிற மதுவிலே மேனிமுழுதும் 
நனையும்படி வண்டுகள் வியாபாரிக்கிற வளர்கிற இளைய வல்லிசாதம் போல்வீர்! உங்கள் பெரிய 
கண்களை ஒத்த அம்புபட்ட புண்பொருந்தின இந்தப் புனத்தின் பக்கத்து அத்தன் மையது 
(அப்படி வந்தது என்றுமாம்; அப்படி என்றது தன் தலைமையழிந்தது) ஒரு பெருங்கலை வந்ததுண்டோ? 
(உண்டாகிற் சொல்லவேண்டும்) (அண்ணனைய என்றது அண்ணலை நைந்தது என்றபடி )

            5. வழிவினாதல்*
            ----------------

*பேரின்பப் பொருள் : வழிமேல் வைத்துப் புகலிலை யென்றது

    வழிவினாதல் என்பது கலைமான் வினாவா நின்றவன், இவன் கருத்து வேறென்று தோழியறிய, 
அதனோடு மாறுபட நின்று, அது கூறீராயின் நும்மூர்க்குச் செல்லுநெறி கூறுமினென்று வழிவினாவா நிற்றல். 
அதற்குச் செய்யுள் : - 

    சிலம்பணி கொண்டசெஞ் சீறடி 
        பங்கன் றன் சீரடியார்
    குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் 
        தோன்கொண்டு தானணியுங்
    கலம்பணி கொண்டிடம் அம்பலங் 
        கொண்டவன் கார்க்கயிலைச் 
    சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க்
        குரைமின்கள் சென்னெறியே

    கலைமான் வினாய கருத்து வேறறிய**
     மலைமானண்ணல் வழிவினாயது

** 'கருத்து முற்றிய' என்பது பழையவுரைகாரர் பாடம்

    இதன் பொருள்: சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் சிலம்புதானழகு  பெற்ற  செய்யசிறிய 
அடியையுடையாளது கூற்றையுடையான்; தன் சீர் அடியார் குலம்பணி கொள்ள எனைக் கொடுத்தோன் - 
தன் மெய்யடியாரது கூட்டங் குற்றேவல் கொள்ள என்னைக் கொடுத்தவன் ; தான் கொண்டு அணியும்
கலம் பணிகொண்டு அம்பலம் இடம் கொண்டவன் - தான் கொண்டணியும் அணிகலம் பாம்பாகக் 
கொண்டு அம்பலத்தை இடமாகக் கொண்டவன்; கார்க் கயிலைச் சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்குச் 
செல்நெறி உரைமின்கள் - அவனது முகில்களையுடைய கைலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது
சிறியவூர்க்குச் செல்லு நெறியை உரைமின் எ-று.

    கொண்டு கொடுத்தோனென இயைப்பாரு முளர். தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந் 
தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை 
அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டானென்றும் மாறுபாட்டொழுக்கங் 
கூறியவாறாம். கருத்து வேறறிய வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னு மொன்றை வினவுதலான் 
இவன் கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறியென்று பாடமாயின் சிறிய நெறி யென்றுரைக்க. 
சின்னெறியென்பது அந்நிலத்துப்பண்பு.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: 'கலையாகிய மான் வந்ததோ என்று கேட்ட கருத்து முற்றிய 
நினைவுவேறுபட்ட படியை அறிய மலையை ஒத்த நாயகன் வழிகேட்டது.

    செய்யுள்: சிலம்பு தன் அழகு பெற்ற சிற்றடியையுடைய ஈசுவரியை வாமபாகத்திலே யுடையவன்.
தன் சீரடியார் திரள என்னை ஏவல் கொள்ளும்படிக்கு அடிமையாக என்னைக் கொடுத்தவன்,
தான் கொண்டு அணிகிற ஆபரணமாகப் பாம்பைப் பண்ணிக் கொண்டு சிதம்பரம் இடமாகக் 
கொண்டவன். தழைந்து இருட்சியுடைய சோலையதனால் கார்பரந்த ஸ்ரீ கயிலாயத் திருமலையில் 
அழகு கொண்ட உங்கள் ஊர்க்குச் செல்லும் வழியைச் சொல்லுவீராக  54

            6. பதிவினாதல்*
            ---------------

* பேரின்பப் பொருள் : அருளறி யாவிடின் அறியேன் என்றது

    பதிவினாதல் என்பது மாறுபட நின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை 
எதிர்முகமாக நின்று 'வழிகூறீராயின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமின் ' என்று 
அவர்பதி வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-

    ஒருங்கட மூவெயி லொற்றைக் 
        கணைகொள்சிற் றம்பலவன்
    கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் 
        கரியுரித் தோன்கயிலை 
    இருங்கடம் மூடும் பொழிலெழிற் 
        கொம்பரன் னீர்களின்னே 
    வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி 
        யோவிங்கு வாழ்பவர்க்கே.

    பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து 
    மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.**

**இதற்குப் பழைய உரைகாரர் பாடம் வேறு.

    இதன் பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணை கொள் சிற்றம்பலவன் - மூவெயிலையும் 
ஒருங்கே அடவேண்டித் தனியம்பைக்கொண்ட சிற்றம்பலவன்; கரும் கடம் மூன்று உகு நால்வாய்க் கரி 
உரித்தோன் - கரிய மத மூன்று மொழுகா நின்ற நான்றவாயையுடைய கரியையுரித்தவன்; கயிலை 
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே வருங்கள் - அவனது கைலைக்கட் 
பெரிய காட்டான் மூடப்படும் பொழிற் கணிற்கின்ற எழிலையுடைய கொம்பை யொப்பீராகிய 
நீங்கள் இங்கே வாரும்; தம் ஊர் பகர்ந்தால் இங்கு வாழ்பவர்க்குப் பழியோ- தமதூரை
யுரைத்தால் இம்மலை வாழ்வார்க்குப் பழியாமோ? பழியாயின்  உரைக்கற்பாலீரல்லீர் எ-று

    இரண்டு மதங் கடத்திற் பிறத்தலிற் பன்மைபற்றிக் கடமென்றார், கொம்பரன்னீர்களென்பது: 
முன்னிலைப்பெயர். இன்னே வருங்களென்பது எதிர்முக மாக்கியவாறு, வாருமென்பது குறுகி நின்றது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பதியொடு பிறவினாய். மொழிபல மொழிந்தது. 
ஊருடனே பலவற்றையும் வினவி வார்த்தையைப் பலகாலும் சொன்னது:

    செய்யுள் ; (எயில் மூன்றையும்) ஒருக்காலே அழிப்பதாக அம்பை வாங்கின திருச்சிற்றம்பலநாதன், 
பெருமதம் மூன்றும் சொரியப்பட்ட நான்ற வாயினையுடைய யானையை உரித்தவன். அவனுடைய 
கயிலாய மலையின் பெருங்காட்டினால் சூழப்பட்ட பொழிலிலுண்டாகிய கொம்பை ஒப்பீர்காள்! 
இங்ஙனே வாருங்கள்: (என்று எதிர்முகமாக்கிக் கொண்டபடி) தங்கள் ஊரின் பெயரைச் சொன்னால் 
இந்த நிலத்தில் வாழ்பவர்க்குக் குற்றமாமோ!- குற்றமாகிற் சொல்ல வேண்டுவதில்லை.     55

            7. பெயர் வினாதல்*
            ------------------
* பேரின்பப் பொருள்; "இன்பரு ணாம மேதென வினாயது.

    பெயர் வினாதல் என்பது பதிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை, 'நும்மதிகூறுதல் 
பழியாயின் அதனை யொழிமின்; நும்பெயர் கூறுதல் பழியன்றே; இதனைக் கூறுவீராமின் என்று 
அவரது பெயர் வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள் ;-

    தாரென்ன வோங்குஞ் சடைமுடி 
        மேற்றனித் திங்கள் வைத்த 
    காரென்ன வாருங் கறைமிடற் 
        றம்பல வன்கயிலை
    யூரென்ன வென்னவும் வாய்திற
        வீரொழி வீர்பழியேற்
    பேரென்ன வோவுரை யீர்விரை 
        யீர்ங்குழற் பேதையரே

    பேரமைத் தோளியர் பேர்வி னாயது

    இதன் பொருள் : ஓங்கும் சடை முடிமேல் தார் என்னத்தனித் திங்கள் வைத்த உயர்ந்த 
சடையா னியன்முடி மேல் தாராக ஒரு கலையாகிய திங்களை வைத்த; கார் என்ன ஆரும் கறைமிடற்று 
அம்பலவன் கயிலை கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய 
மிடற்றையுடைய அம்பலவனது கைலைக்கண் ; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் - நும்முடைய
ஊர்கள் பெயர் முதலாயினவற்றான் எத்தன்மையவென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்; 
பழியேல் ஒழிவீர் - ஊர் கூறுதல் பழியாயின் அதனை யொழிமின். பேர் என்னவோ விரை ஈர்ங் குழல் 
பேதையரே உரையீர் - நும்முடைய பெயர்கள் எத்தன்மையவோ?  நறு நாற்றத்தையும் நெய்ப்பையு 
முடையவாகிய குழலையுடைய பேதையீர், உரைப்பீராமின் எ-று.

    தனித் திங்கள்: ஒப்பில்லாத திங்களெனினு மமையும். ஓகாரம் வினா. தலைமகளுந்தோழியும் 
ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற் கூறினான். என்னை "இரந்து 
குறையுறாது கிழவியுந் தோழியு' மொருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப், பதியும் பெயரும் பிறவும் 
வினாஅய்ப் புதுவோன் போலப் பொருந்த புகிளந்து, மதியுடம் படுத்தற்கு முரியனென்ப” (இறையனார் 
அகப்பொருள், 6) என்பதிலக்கண மாதலின். பேதையரேயெனச் சிறுபான்மை ஏகாரம் பெற்றது. 
ஊருஞ் சொல்லாதாரைப் பெயர் கேட்கவே வேறு கருத்துடைய னென்பது விளங்கும். 
வாய்திறவா தொழிவீரென்பதூஉம் பாடம்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பெருத்த வேயொத்த தோளியர் பெயர் கேட்டது

    செய்யுள் . நெற்றிமாலை என்னும்படி உயர்ந்த சடைமுடி மேலே ஒரு கலையாகிய   திரு இளம்பிறையை 
வைத்த மேகமென்னும் படி நிறைந்த கரிய திருமிடற்றை உடைய திருவம்பலநாதன், 'அவனுடைய கயிலாயத்தில் 
உங்கள் ஊர் எத்தன்மையது' என்று கேட்கவும் வாய் திறவாமல் இருக்கிறீர்களே.  (உங்கள் ஊரின் பெயர் சொன்னால் 
அது பழியாமாகிலும்..... பெயராகிலும் சொல்லுங்கள்;  நறு நாற்றத்தையுடைய கூந்தலினையும் 
பேதைத் தன்மையும் உடையீர்)          56

            8. மொழிபெறாதுகூறல்*
            ---------------------

* பேரின்பப்பொருள்: திருவாய் மலராத் திறமெடுத் துரைத்தது

    மொழிபெறாது கூறல் என்பது பெயர் வினாவவும் வாய்திற வாமையின், இப்புனத்தார் 
எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு வாய்திறவாமையை விரதமாக வுடையராதல். அதுவன்றி 
வாய் திறக்கின் மணி சிந்து மென்பதனைச் சரதமாகவுடையராதல். இவ்விரண்டனு ளொன்று 
தப்பாதென்று கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    இரத முடைய நடமாட்
        டுடையவ ரெம்முடையர்**
    ## வரத முடைய வணிதில்லை 
        யன்னவ ரிப்புனத்தார்
    விரத முடையர் விருந்தொடு
        பேச்சின்மை மீட்டதன்றேற் 
    சரத முடையர் மணிவாய்
        திறக்கிற் சலக்கென்பவே

    தேமொழியவர் வாய்மொழிபெறாது 
    மட்டவிழ் தாரோன் கட்டுரைத்தது

** ரெம்முடைய' என்பது பழையவுரைகாரர் பாடம்

## இரண்டாவது வரியில் 'வரதா நம்முடைய' என்பது பழையவுரைகாரர் கொண்ட பாடம் போலும்

    இதன் பொருள் : இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர்-- இனிமையை யுடைய கூத்தாட்டை 
யுடையவர்; எம் உடையவர்-எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப் புனத்தார் 
விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர்-அவரது வரதமுடைய அழகிய தில்லையை யொப்பராகிய 
இப்புனத்து நின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையார்; 
அது அன்றேல்-அதுவன்றாயின் ; மீட்டு வாய் திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர்-
பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாக வுடையார் எ-று.

    இரத மென்றது நாட்டியச் சுவையையன்று, கட்கினிமையை நடமென்றது நாட்டியத்தையன்று, 
கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண்டென்பது பட வினைமாற்றாய் 
நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு இளிவரலைச் சார்ந்த பெருமிதம், 
பயன்: மதியுடம்படுத்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: தேனையொத்த வார்த்தையினை யுடையவர்களிடம் 
ஒரு வார்த்தையும் பெறாதபடியாலே, மதுவிரிகின்ற மாலையினை யுடையவன் இயல்பைச் சொன்னது. 

    செய்யுள்:  கண்டார்க்குக் கண்ணுக்கினிதாகிய திருக்கூத்தினை யுடையவர். எம்முடைய மேலானவர் 
அவருடைய திருவம்பலத்தை ஒத்தவர்கள் இப்புனத்திடமாக இருக்கும் அவர்கள் விருந்தினராய்
வந்தாருடனே பேசாமைக்கு விரதம்பூண்டு ஒழுகினார்களாக வேண்டும்; திரியவும் அதுவல்லாமல் 
நிசிதமாகவுடையவர்கள் சலக்கென விழுபவ முத்துமணிகளைச் சாதகமாக வுடையவர் : (ஆகையாலே வாய் 
திறவா (மல் வா) ழ்கிறார் (கள்) அல்லது... வாய்திறந்துவாயு குற்றமாமோ வென்று 
.....வாயாது கருத்த....தது .        57

            9. கருத்தறிவித்தல்*
            ------------------

*பேரின்பப் பொருள்:  "சாத்தும் பச்சிலை தான் கொண்டருளி,அருளுந் திறத்தை அறியவுரைத்தது".

    கருத்தறிவித்தல் என்பது 'நீயிர்' வாய் திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க, 
இத்தழை நும்மல்குற்குத் தகுமாயின் அணிவீராமின்'  எனத்தழைகாட்டி நின்று தன் கருத்தறிவியா         (திருத்:கருத் அறிவியா/கருத்தறிவியா)
நிற்றல், அதற்குச் செய்யுள் :-

    வின்னிற வாணுதல் வேனிறக் 
        கண்மெல் லியலைமல்லல்
    தன்னிற மொன்றி லிருத்திநின்
        றோன்றன தம்பலம் போல்
    மின்னிற நுண்ணிடைப் பேரெழில் 
        வெண்ணகைப் பைந்தொடியீர்
    பொன்னிற வல்குலுக் காமோ
        மணிநிறப் பூந்தழையே

    உரைத்த துரையாது, கருத்தறி வித்தது .

    இதன் பொருள்:  வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்லியலை வில்லினியல்பையுடைய 
வாணுதலையும் வேலினியல்பையுடைய கண்களையுமுடைய மெல்லியலை; மல்லல் தன் நிறம்         (திருத்: வேலினிஎல்பை/வேலினியல்பை)
ஒன்றில் இருத்திநின்றோன் தனது அம்பலம் போல் அழகையுடைய தன் திருமேனி யொன்றின் கண் 
இருத்தி நின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப்பேர் எழில் வெள் நகைப் 
பைந்தொடியீர்- மின்னினியல்பை யுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும் 
வெள்ளிய முறுவலையு முடைய பைந்தொடியீர்; மணி நிறபூந் தழைபொன் நிற அல்குலுக்கு ஆமோ-
மணியினது நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ? 
தகுமாயின் அணி வீராமின் எ-று.

    பொன்னிறத்திற்கு மணி நிறம் பொருத்தமுடைத் தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று 
அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று. 
ஆமோ வென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும் கொள்வாரது தலைமையையும் விளக்கி 
நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒரு (முறை) சொன்ன வார்த்தையைப் பின் ஒருகால் 
சொல்லாது, தன் கருத்தினை அறிவித்தது.

    செய்யுள்: வில்லையொத்த ஒளி சிறந்த நெற்றியினையும், வேலை யொத்த திருநயனங்களையும், 
மதுரவியல்பினையும் (உடைய) தம்பிராட்டியை வளவிய தன்னுடைய திருமேனியில் ஒரு பாகத்தில் 
வைத்து நின்றோன்; அவனுடைய திருவம்பலத்தை ஒத்த வாக்கினால் உரைக்கவும் அரிதாகிய நுண்ணிய 
இடையினையும் கனகத் தனங்களையும் அழகிய வளைகளையுமுடையீர்! பொன்னை யொத்த 
அல்குலுக்கு மாணிக்கம் போன்ற பூந்தழையாமோ?  (ஆமாகில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து).

    எனவே,பொன்னுக்கு மாணிக்கம் பொருந்துதலானும் உங்களுடைய அல்குலுக்கும் 
இந்தத்தழை பொருந்தும் காண் என்றவாறு.         53

            10. இடைவினாதல்*
            ------------------

*பேரின்பப் பொருள் : "சிவத்திடையன்பு செல்லுத லன்றி வேறிலையென்று விரும்பி யுரைத்தது.''

    இடைவினாதல் என்பது தழை காட்டித் தன் கருத்தறிவித்து அது வழியாக நின்று, 
நும்மல்குலும் முலையும் அதிபாரமாயிரா நின்றன! இவை இவ்வாறு நிற்றற்குக் காரணம் யாதோ' வென்று
அவரிடை வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    கலைக்கீ ழக லல்குற் பாரம
        தாரங்கண் ணார்ந்திலங்கு 
    முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
        றாதன் றிலங்கையர் கோன்
    மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்
        பலவர்வண் பூங்க யிலைச்             (திருத்: சிற்றம்லவர்/ சிற்றம்பலவர்)
    சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
        எது நுங்கள் சிற்றிடையே .

    வழிபதி பிற வினாய், மொழிபல மொழிந்தது

    இதன் பொருள்: கலைக் கீழ் அகல் அல்குல் பாரமது -மேகலைக்குக் கீழாகிய அகன்றவல்குலாகிய 
பாரமது; ஆரம் கண் ஆர்ந்து இலங்கு முலைக் கீழ்ச் சிறிது இன்றி நிற்றல் முற்றாது - முத்து வடம் 
கண்ணிற்கு ஆர்ந் திலங்கா நின்ற முலையின் கீழ் இடை சிறிதின்றித் தானே நிற்றல் முடிவு பெறாது; 
அன்று இலங்கையர் கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்பலவர் - இவ்வரைக்கயை யெடுத்த அன்று 
இலங்கையர்கோன் இவ்வரைக் கீழ் வீழும் வண்ணஞ் செற்ற சிற்றம்பலவரது; வண் பூ கயிலைச் சிலைக் 
கீழ்க்கணை அன்ன கண்ணீர் - வளவிய பொலிவையுடைய  கைலையினிற்கின்ற சிலையின் 
கீழ்வைத்த கண்ணையுடையீர்; நுங்கள் சிற்றிடை எது- நும்முடைய சிற்றிடை யாது?  
கட்புலகின்ற தில்லை எ- று

    பாரமது நிற்றலெனவியையும். பாரம் அதுவென எழுவாயும் பயனிலையுமாக்கி, 
முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்றின்றி இவ்வுரு நிற்றல் முற்றாதென்றுரைப்பாருமுளர் *. 
அதுவென்றும் எதுவென்றும் சாதி பற்றி ஒருமையாற் கூறினான். மெய்ப்பாடு அது. 
பயன்:  விசேடவகையான் மதியுடம்படுத்தல்.

* உரைப்பவர் பழையவுரைகாரர்.

    மேலைப் பட்டாறனானும் வம்பமாக்கள் வினாவும் பெற்றியே கதுமெனத் தனது 
குறைதோன்றாவகை வினாவினான், இப்பாட்டிரண்டினானும், இவன் குறை நங்கண்ணதே
யென்பது தோழிக்குப் புலப்பட இத்தழை நல்ல கொள்ளீரென்றும், நும்மிடை யாதென்றும் 
வினாவினானென்பது.

            மதியுடம்படுத்தல் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வழிபதி பிற வினாய். மதியுடன் படுக்க மன்னன் மலிந்தது : 
வழியையும் பதியையும் பிறவற்றையும் வினாவித் தன் புத்தியை ஒருப்படுத்துவதாக நாயகன் அறுதியிட்டது.

    செய்யுள்: மேகலா பாரத்திடத்து அகன்ற அல்குலின் பாரம் இருந்தபடியது; முத்து வடம் 
கண்ணுக்கு நிறைந்து விளங்குகிற முலையின் கீழே ஏதேனும் சிறிது இடையில்லாத பொழுது 
நிற்றல் முற்றுப்பெற மாட்டாது: அன்று இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மலைக்கீழ் விழும்படி 
அடர்த்த திருச்சிற்றம்பலநாதனின் வளவிய பொலிவினை யுடைத்தாகிய ஸ்ரீ கயிலாயத்தில் 
வில்லோடே சேர்ந்த அம்புகளை யொத்த கண்களை யுடையீர்! உங்களுடைய சிறிய இடை எதுதான்? 
சொல்லுவீராக வேண்டும்.             59


            5. இருவரு முள்வழி அவன் வரவுணர்தல் *
            -------------------------------------
*பேரின்பக் கிளவி. "இருவரு முள்விழி யவன்வர வுணர்தற்  றுறையோ ரிரண்டுஞ் 
சிவமுயிர் விரவிய, தருளே உணர்ந்திட லாகுமென்ப' 
    
    இருவருமுள்வழி யவன்வரவுணர்தல் என்பது தலைமகளுந் தோழியு முள வழிச் சென்று, 
தலைமகன் கரந்த மொழியாற்றன் கருத்து அறிவிக்கத் தோழி அவனினைவறியா நிற்றல் .
அது வருமாறு-

    ஐய நாட லாங்கவை யிரண்டு 
    மையறு தோழி யவன்வர வுணர்தல்

    இதன் பொருள் : ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவை யிரண்டும் இருவருமுள்வழி             (திருத்: ஜயுறுதல்/ஐயுறுதல்)
யவனவரவுணர்தலாம் எ - று அவற்றுள்:

                1. ஐயுறுதல்**                            (திருத்: ஜயுறுதல்/ஐயுறுதல்)
                -------------

**பேரின்பப் பொருள்: சிவமுயிர் கலத்த லருடேறி வினாயது

    ஐயறுதல் என்பது தலைமகன் தழை கொண்டு நின்று கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க,         (திருத்: ஜயுறுதல்/ஐயுறுதல்)
மேனியொளியிலனாய் இப்புனத்தினின்றும் போகாது யானையோடு ஏனம் வினாவி இவ்வாறு
பொய் கூறா நின்ற இவன் யாவனோ வெனத் தோழி அவனை யையுற்றுக் கூறா நிற்றல். அதற்குச்செய்யுள் -

    பல்லில னாகப்ப கலைவென்
        றோன் தில்லை பாடலர் போல் 
    எல்லிலன் நாகத்தொடேனம் 
        வினாவிவன் யாவன்கொலாம்
    வில்லிலன் நாகத் தழைகையில் 
        வேட்டைகொண் டாட்டமெய்யோர்
    சொல்லில னாகற்ற வாகட
        வானிச் சுனைப்புனமே

    அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித் 
    தையற் பாங்கி ஐய முற்றது

    இதன் பொருள்: பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர் போல் எல் இலன் - 
பல்லிலனாம் வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல் ஒளியை 
யுடையனல்லன்; வினா நாகத்தொடு ஏனம் - ஆயினும் வினாவப்படுகின்றன யானையும் 
ஏனமுமாயிருந்தன; வில்  இலன்- வில்லையுடையனல்லன்: கையில் நாகத் தழை-கையின் நாக 
மரத்தின்றழைகளாயினும், கொண்டாட்டம் வேட்டை- கொண்டாடப் படுகின்றது வேட்டை - 
மெய் ஓர் சொல் இலன்; கண்ட வற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன்; 
கற்றவா ஆ - இவன் பொய்யுரைப்பக் கற்றவாறு எ பொய்யுரைத்து வறிது போவானுமல்லன்; 
இச் சுனை புனம் கடவான் - ஈண்டொரு குறையுடையான் போல இச்சுனைப் புனத்தைக் கடவான்; 
இவன் யாவன் கொலாம் - இவன் யாவனோ ? எ-று.

    வினாவென்பது : ஆகுபெயர். ஆ : வியப்பின்கட் குறிப்பு ஆகத்தொரனமென்று பாட மோதி 
ஆகத்தொளியிலனென வுரைப்பாருமுளர். வினாய் என்பது பாட மாயின், வாரா நின்றவென ஒரு சொல் 
வருவித்து முடிக்க, வினாய்க்கடவா னென்று கூட்டுவாருமுளர். தையல் -புனையப்படுதல். 
மெய்ப்பாடு : மருட்கை, பயன்: உசாவி யையந்தீர்தல்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெற்றியினையும் ஒளியையும் உடைத்தாகிய வேலினை
யுடையவன் இடை விடாது வருகிற வரவைப் பார்த்து ஒப்பனையுடைய பாங்கி சந்தேகித்தது.

    செய்யுள்: ஆதித்தனைப் பல்லிழக்கும் படி வெற்றி செய்தவன் அவனுடைய சிதம்பரத்தைப் 
பாடமாட்டாதாரைப்போல ஒளி இழந்தான்; யானையுடனே கருவாவினையும் வினாவி வந்தான்; 
இவன் யாவன் தான்?  கையில் வில்லுடையவனு மல்லன்; இவன் கையில் சுரபுன்னைத் தழை இருந்தது; 
இப்படி இருகையிற்றிலும் கொண்டாட்டம் வேட்டையாயிருந்தது; உண்மையாகச் சொல்லுவதொரு 
வார்த்தையு முடையனல்லன்; ஐயோ, இவன் கற்ற மரம்பென் தான்? இந்தச் சுனைப் புனத்தை 
நீங்குகிறானுமில்லை.         60

            2. அறிவுநாடல்*
            ---------------
*பேரின்பப் பொருள் : "உயிர் சிவங் கலந்த தருளே தேறியது''.

    அறிவுநாடல் என்பது இவன் யாவனோவென் றையுறா நின்ற தோழி பேராராய்ச்சிய ளாதலின், 
அவன் கூறிய வழியே நாடாது வந்து தங்களிடைக்கே முடிதலின், இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் 
ஆழமுடைத்தாயிருந்ததென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    ஆழமன் னோவுடைத் திவ்வையர் 
        வார்த்தை யனங்கன்நைந்து
     வீழமுன் னோக்கிய வம்பலத்
        தான்வெற்பி னிப்புனத்தே 
    வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற 
        வாய்ப்பின்னும் மென்றழையாய்
    மாழைமென் னோக்கி யிடையாய்க்
        கழிந்தது வந்துவந்தே

    வெற்பன் வினாய சொற்பத நோக்கி 
    நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது

    இதன் பொருள் :முன் அனங்கன் நைந்து வீழநோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப்புனத்து - 
முற்காலத்து அனங்கன் அழிந்து பொடியாய்வீழ நோக்கிய அம்பலத்தானது வெற்பின் இப்புனத்தின் 
கண்ணே கூறுவது;  முன் வேழமாய்-முன் வேழமாய்; கலையாய்- பின் கலையாய்;  பிறவாய்- பின் வேறு சிலவாய் ;
பின்னும் மெல் தழையாய்-  பின்னும் மெல்லிய தழையாய். வந்துவந்து - வந்து வந்து; மாழை மெல் நோக்கி 
இடையாய்க் கழிந்தது - முடிவிற் பேதைமையை யுடைய மெல்லிய நோக்கத்தை யுடையாளது இடையால் விட்டது; 
இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து - அதனால் இவ்வையர் வார்த்தை இருந்த வாற்றான் ஆழமுடைத்து எ- று

    மன்னும் ஓவும் : அசைநிலை, இப்புனத்தே யென்றது இவளிருந்த புனத்தே யென்றவாறு. மெல்லிய 
நோக்கத்தை யுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர். பின்னுமென் முன்னை         (திருத்: தென்பாமுளர்/தென்பாருமுளர்)
வினாவே ஐயந்தரா நிற்பப் பின்னுமொன்று கூறினா னென்பதுபட நின்றது. தன்கண் வந்து முடிதலின் 
வந்து வந்தென்றாள். சொற்பதம் - சொல்லளவு. அறிவுநாடியது - அறிவானாடியது. 
மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந்தீர்தல்.

        இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் முற்றிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  நாயகன் கேட்ட சொல்லினது முடிவைப் பார்த்து 
நெறித்த கூந்தலினையுடைய பாங்கி புத்தியினால் விசாரித்தது.

    செய்யுள்: இந்தச் சுவாமிகளுடைய வார்த்தை மிகவும் ஆழமுண்டாயிருந்தது: முற்காலத்துக் 
காமன் பொடியால் வீழும்படி பார்த்த திருவம்பல நாதனுடைய திருமலையின் இந்தப் புனத்திடத்தே
முன்பு யானையை வினாவி- அதற்குப்பின்பு கலையை வினாவிப் பின்பு (பிறவற்றைப் பேசி) பின்பு 
மெல்லிய தழைகளையும் உடுப்பீர்களோ? என்னும்படியாய் மெல்லமெல்ல வந்து குளிர்ந்த மெல்லிய 
நோக்கினையுடையாளுடைய இடையை வினவும்படியாய் விட்டது இந்தச் சுவாமிகளுடைய 
வார்த்தை மிகவும் ஆழமுடையதாயிருந்தது.

            6. முன்னுறவுணர்தல் *
            --------------------
*பேரின்பக் கிளவி; "முன்னுற வுணர்த லெனவிஃ தொன்றுஞ், சிவமுயிர் கூடலருள்வினா வியது"

    வாட்டம் வினாதன் முன்னுற வுணர்தல் 
    கூட்டி யுணருங் குறிப்புரை யாகும்

    இதன் பொருள்:  வாட்டம் வினாதல் எனவிஃதொன்றும் முன்னுறவுணர்தலாம் எ-று

    அது தலைமகன் இங்ஙனம் வினாயதற்கெல்லாம் தோழி மறுமொழி கொடாளாகத் 
தலைமகன் வாடினான்; வாடவே தலைமகளும் அதுகண்டு வாடினாள்; ஆதலால் இருவரது வாட்டமும் 
வினாவப்படுதல். அன்றியும் முன்னர்த் தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வினாயது போலத் 
தலைவியது வாட்டத்தையும் பாங்கி வினாதலாம்.

    முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு முன்னுறவுணர்தல்  என்று பெயராயிற்று. அஃதாவது 
தலைமகனைப் பாங்கன்  வினாயவாறு போலத் தலைமகளையும் யாதனானோ இவள் வாடியதென 
ஐயுற்றுணர்தல். இவள் தலைமகளை வினாவுவது இயற்கை யிறுதி இடந்தலை யிறுதியி னெனக்கொள்க.
என்னை தோழியும் பாங்கனைப் போலப் பிற்றைஞான்றே தலைமகளை வினாவப்பெறாளோவெனின் , 
வினாவாள். எற்றிற்கு? தலைமகளை ஒரு பொழுதும் விடாத தோழி இவளை இத்தினங்காறுங் 
காணாளோ வெனின், காணும். 

    காணின், இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்து இவளது வாட்டம் தோழி காணாதொழிவாளே னெனின், 
இவரைக்கூட்டி முடித்த விதி தோழிக்குத் தலைமகளது வாட்டம் புலனாகாமை மறைக்கும். என்னை? 
பாங்கற் கூட்டமும் இடந்தலைப்பாடும் நடக்க வேண்டி. அல்லதூஉம், தலை மகனுக்குந் தலைமகளுக்கும் 
வாட்டம் ஒக்க நிகழினும் இயற்கைப்புணர்ச்சியது இறுதிக்கட் டலைமகனைப் பாங்கன் கூடியும் 
தலைமகளைப் பாங்கி கூடியும் செய்தாராயினும், தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வினாவுதல் 
தலைமையாதலான் முன் வினாவப்படும். பாங்கன் வினாவிய பின்னர்ப் பாங்கி வினாவப் படும் .
ஆதலால் இடந்தலைப்பாட்டினிறுதியே தோழிக்கு வாட்டம் வினாதற்கு இடமாயிற்றெனவறிக.

    கூட்டியுணருங் குறிப்புரையாகு மென்றது இந்த வாட்டம் வினாதற்குப் பக்கக்கிளவியாகச் 
சேறல் துணிதல் முதலாக முன்னுரைக்கப்பட்ட கிளவியெல்லாங் கூட்டியுரைத்துக் கொள்ளப்படு மென்றவாறு.
என்னை பக்கக்கிளவியாமாறு? தலை மகன் தனது வாட்டத்தால் அங்ஙனம் பலவும் வினாயனவெல்லாம் 
தலைமகள் தனது வாட்டத்தாலுரைத்தாற் போலாயின் என்னை அவ்வளவெல்லாம் அவன் வினாயற்குத் 
தோழி மறுமொழி கொடாது நிற்றலா னெனவறிக.

                1. வாட்டம் வினாதல்*
                --------------------

*பேரின்பப் பொருள் : சிவனது கருணையு முயிரது தெளிவும், அருளே கண்டின்பதனுடன் வினாயது...
    
    வாட்டம் வினாதல் என்பது தலைமகன் மதியுடம் படுத்து வருந்தா நிற்பக் கண்டு. எம்பெருமான்
என் பொருட்டான் இவ்வாறு இடர்ப்படாநின்றானெனத் தலைமகன் தன்னுள்ளே கவன்று வருந்தாநிற்க; 
அதுகண்டு சுனையாடிச் சிலம்பெதி ரழைத்தோ பிறிதொன்றினானோ நீ வாடிய தென்னோ வெனத்தோழி 
தலைமகளது வாட்டம் வினாவா நிற்றல் அதற்குச் செய்யுள்-

    நிருத்தம் பயின்றவன் சிற்றம் 
        பலத்து நெற்றித்தனிக்கண்
    ஒருத்தன் பயிலுங் கயிலை 
        மலையி னுயர்குடுமித்
    திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
        தாடிச் சிலம்பெதிர்கூய் 
    வருத்தம் பயின்றுகொல் லோவல்லி 
        மெல்லியல் வாடியதே.

    மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி 
    வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது

    இதன் பொருள்: சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன். சிற்றம்பலத்தின் கண் நிருத்தத்தை யிடை 
விடாதேயாடியவன்! நெற்றித் தனிக்கண்- ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக் கண்ணையுடைய  
ஒப்பில்லாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி - அவன் பயிலுங் கைலையாகிய மலையினது 
உயர்ந்த வுச்சியில் திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி-புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் 
குடைந்தாடி சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து : வருத்தம்   பயின்று சொல்லோ-இவ்வாறு 
வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப்  பயின்றோ பிறிதொன்றினானோ; வல்லி மெல்லியல்  வாடியது-
வல்லி போலும் மெல்லிய வியல்பினை   யுடையாள் வாடியது எ-று.

    வருத்தம் ஆகுபெயர். மெய்ப்பாடு : மருட்கை  பயன்: தலைமகட்குற்ற வாட்டமுணர்தல்

        முன்னுறவுணர்தல் முற்றிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: மின்னை ஒத்த இடையினையுடைய நாயகி தன்னுடைய 
இயல்பைப் பார்த்துப் போதுக்குப்போது விம்முகிற மதுரமான முலையினையுடைய பாங்கி சொன்னது

    செய்யுள் : திருச்சிற்றம்பலத்திலே நடனமாடுகிறவன். நெற்றியிலே ஒரு திருநயனத்தையுடைய 
ஒப்பில்லாதவன். அவன் வாழ்கிற ஸ்ரீ கயிலாய மலையில் உயர்ந்த உச்சி நின்று நதியாக நீர் அறாமல் 
விழுகிற சுனைநீர்  குடைந்து விளையாடியும், வரையெதிர் நின்று அழைத்தும் இவற்றினாலே 
வருத்தம் மிக்கோ தான். வல்லிசாதத்தை ஒத்து மெல்லிய இயல்பினை உடையாள் வாடியது?      62

            7. குறையுறவுணர்தல் *
            --------------------

*பேரின்பக் கிளவி, 'குறையுற வுணர்தற் றுறையொரு நான்கு முயிர்சிவத் திடைச்சென் றொருப்படுந் தன்மை,
 பணியாற் கண்டு பரிவால் வினாயது''.

    குறையுற வுணர்தலாவது தலைமகன் குறையுறத் தோழி அதனைத் துணிந்துணரா நிற்றல், 
அது வருமாறு....

    குறையுற்று நிற்ற லவன்குறிப் பறித 
    லவள் குறிப் பறிதலோ டவர் நினை     வெண்ணல் 
    கூறிய நான்குங் குறையுற வுணர்வெனத் 
    தேறிய பொருளிற் றெளிந்திசினோரே.

    இதன் பொருள்: குறையுற்றுநிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல்,  இருவர் நினைவு 
மொருவழி யுணர்தல் என விவை நான்கும் குறையுறவுணர்தலாம் எ-று அவற்றுள் -

            1. குறையுற்றுநிற்றல் *
            --------------------

*பேரின்பப் பொருள் : 'ருதிவுளப் பணியைச் செய்வே னென்றல்' 

    குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங் கண்டு ஐயுறா நின்ற தோழியிடைச் சென்று, 
'யான் உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டுவ தொன்று சொல்லுமின்; யான் அது 
செய்யக் குறையில்லை' யென இழிந்த சொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற ஐயுறக் 
கூறா நிற்றல்.  அதற்குச் செய்யுள் ---

    மடுக்கோ கடலின் விடுதிமி 
        லன்றி மறிதிரைமீன்
    படுக்கோ பணிலம் பலகுளிக்
        கோபரன் தில்லை முன்றிற் 
    கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
        காயற் றேவல் செய்கோ            (திருத்: செயேகா /செய்கோ, உரையை நோக்க)
    தொடுக்கோ பணியீ ரணியீர் 
        மலர்நுஞ் சுரிகுழற்கே ..

    கறையுற்ற வேலவன் குறை யுற்றது.

    இதன் பொருள்: விடு திமில் கடலின் மடுக்கோ -விடப்படுந் திமிலைக் கடலின்கட் செலுத்துவேனோ; 
அன்றி மறிதிரை மீன் படுக்கோ-அன்றிக் கீழ்மேலாந் திரையையுடைய கிளர்ந்த கடலிற் புக்கு 
மீனைப்படுப்பேனோ;  பலபணிலம் குளிக்கோ-ஒரு குளிப்பின்கட் பல பணிலங்களையு மெடுப்பேனோ; 
பரன் தில்லை முன்றில் வளை கொடுக்கோ - பரனது தில்லை முற்றத்திற் சென்று எல்லாருங்காணச் 
சங்க வளைகளை விற்பேனோ; மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றவேல் செய்கோ - அன்றி நும் மையன்மார்க்குப் 
பொருந்தின குற்றேவல்களைச் செய்வேனோ; அணி ஈர் மலர் நும் சுரி குழற்குத் தொடுக்கோ-அணியப்படுந் 
தேனாலீரிய மலரை நுஞ்சுரி குழற்குத் தொடுப்பேனா; பணி நீயிர் வேயீண்டியது  சொல்லுமின் எ- று

    மற்று: வினைமாற்று, இவன் உயர்ந்த தலை மகனாதலின் அவர் தன்னை வேறுபட வுணராமைக் 
கூறியவாறு. முன்னிரந்து குறையுறுதற் கிடங்காட்டிக் குறையுற வுணர்தற்கு இயைபுபடக் குறையுறுமாற்றை 
ஈண்டுக் கூறினான். இது திணை மயக்கம் என்னை, ' 'உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே'' 
(தொல். பொருள். அகத்திணையியல். 13) எ-ம். , புனவர் தட்டை புடைப்பி னயல, திறங்குகதி ரலமருங் 
கழனியும், பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே' ( புறநானூறு, 49) எ-ம் சொன்னாராகலின். 
மெய்ப்பாடு: இளிவரல்.  பயன்: குறையுறுதல்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரத்தம் பொருந்தின வேலை உடையவன் தன் குறையைச் 
சொன்னது (வேவன் என்றது இவர் பாடம்.)

    செய்யுள்:  விடக்கடவ தொரு மரத்தோணியைக் கடலிலே விடுப்பேனோ? அதுவன்றாகில்
கீழது மேலதுவாக மறுகு திரையிலே புக்கு மீன் படுப்பேனோ? முத்துக்கள் பலவற்றையும் ஒரு குளியிலே 
எடுப்பேனோ? சிவனுடைய புலியூர் முற்றங்களிலே புகுந்து வளை விற்று வருகேனோ? மற்றும்
உங்களுடைய அண்ணன் மார்க்குப் பொருந்தின குற்றேவல் செய்து நிற்பேனோ? அணியத்தக்க 
தேனிருக்கும் மலர்களை உங்களுடைய நெறித்த கூந்தலுக்குத் தொடுப்பேனோ? இந்த ஊழியங்களிலே 
ஒன்றேனும் எனக்கு ஏவுங்கள்.         63.

            2. அவன் குறிப்பறிதல்
            ---------------------

பேரின்பப் பொருள்: "பளிங்குபோன்ற சிவத்திடைப் பதிந்ததுயிரென்றது"

    அவன்குறிப்பறிதல் என்பது குறையுறா நின்றவன் முகத்தே தலைமகளது செயல் புலப்படக்கண்டு. 
இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத் தோழி தலைமகனது நினைவுதுணிந் துணரா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    அளியமன் னும்மொன் றுடைத்தண்ண 
        லெண்ணரன் தில்லையன்னாள் 
    கிளியைமன் னுங்கடி யச்செல்ல
        நிற்பிற் கிளரளகத்
    தளியமர்ந் தேறின் வறிதே 
        யிருப்பிற் பளிங்கடுத்த
    ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று 
        தோன்று மொளிமுகத்தே 

    பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப்பாங்கி 
    வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்பறிந்தது

    இதன் பொருள்: அரன் தில்லை அன்னாள் மன்னும் கிளியை கடியச் செல்ல நிற்பின் - அரனது         (திருத்: கடியக்/கடியச்)
தில்லையை யொப்பாள் புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும், கிளர் அளகத்து 
அளி அமர்ந்து ஏறின் - இவளுடைய விளங்கா நின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவியேறினும்; 
வறிதே இருப்பின் இவள் வாளாவிருப்பினும்;  ஒளிமுகத்து பளிங்கு அடுத்த ஒளி * அமர்ந்தாங்கு - 
இவன தொளியையுடைய முகத்தின் கண்ணே பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த
நிறத்தை மேவினாற்போல ; ஒன்று போன்று ஒன்று தோன்றும்-முன் வேறொன்று போன்றிருந்து
பின்னிவள் குறிப்பாகிய வேறொன்று தோன்றா நின்றது அதனால்; அளிய அண்ணல் எண் மன்னும் 
ஒன்று உடைத்து -அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்று உடைத்து; அஃதிவள் கண்ணதே போலும் எ-று;

* பளிங்கு அடுத்த ஒளி;- ''அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்'' (திருக்குறள்-706)

    கிளியை மன்னுமென்புழி மன்னும்: அசை நிலையெனினுமமையும். ஒன்றுபோன்றொன்று 
தோன்றுமென்றது கிளியைக் கடியச் சிறிது புடைபெயரின் நெட்டிடை கழிந்தாற்போல ஆற்றானாகலானும் 
வண்டு மூசப் பொறாளென்று வருந்தி வண்டையோச்சுவான் போலச் சேறலானும், வாளாவிருப்பிற் 
கண்டின்புறுதலானும், இவள் கண்ணிகழ்ச்சி இவன் , முகத்தே புலப்படா நின்றது என்றவாறு.             (திருத்: முகததே/முகத்தே)
ஏறிவறிதேயிருப்பினென்பது பாடமாயின், அளியேறி அளகத்தின்கட் சிறிதிருப்பினுமெனவுரைக்க. 
ஒளிர்முகமே யென்பதூஉம் பாடம். 

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகிய வளைகளையுடையாளுடைய சிறிய இடையையுடைய 
தோழி நறுநாற்றமுடையத்தாகிய பூக்களாற் சிறந்த மாலையையுடையவன் நினைவையறிந்தது.

    செய்யுள்: அளிக்கத் தக்கவ னுடைய விசாரமானது நிலைபெற்ற ஒன்றை உடைத்தாயிருந்தது: 
அரனுடைய சிதம்பரத்தைப் போன்றவள். புனத்திலே நிலைபெற்று வாழ்கிற கிளிகளை ஓட்டுவதாகச்         (திருத்:ஒட்டுவதாக/ஓட்டுவதாக)
சிறிதேறச் சென்றாலும் விளங்குகிற கொண்டையிலே வண்டுகள் விரும்பி ஏறினும், இவை இரண்டும் 
செய்யா தொழுகினும், ஒளி சிறந்த முகத்திலே அன்பிலாதாரைப் போலே இருக்கையிலும், 
இவற்றில் இரண்டிலும் அன்பு தோன்றா நின்றது.

    எங்ஙனே என்னின், அப்புனத்திலே நிலைபெற்று வாழ்கின்ற கிளிகளை ஓட்டுவதாகச்             (திருத்:ஒட்டுவதாக/ஓட்டுவதாக)
சிறிதே நீங்கில், 'இவள் வருந்துகின்றாள். என்று கொண்டும். கொண்டையிலே வண்டுகள் விரும்பி ஏறின். 
'இடை ஒடிந்திடும்' என்றும், வருந்தாநின்றது. இவை இரண்டும் செய்யாத இனி ஒரு கிலேசமில்லை             (திருத்: ஓடிந்திடும்/ஒடிந்திடும்)
என்று வாடா நின்றது.          64

            3. அவள் குறிப்பறிதல்*                            (திருத்: குறிப்படுதல்/குறிப்பறிதல்)
            --------------------

*பேரின்பப்பொருள்: ''கருணை யுயிரிடத்துக் கண்டரு டேறல்.''

    அவள் குறிப்பறிதல் என்பது தலைமகளது நினைவறிந்த தோழி இவனிடத்து இவள் நினைவேயன்றி 
இவளிடத்து இவன் நினைவுமுண்டோவெனத் தலைமகளை நோக்க, அவண் முகத்தேயும் அவன் செயல் 
புலப்படக்கண்டு, இவ்வொண்ணுதல் குறிப்பு மொன்றுடைத்தென அவணினைவுந் துணிந் துணரா நிற்றல். 
அதற்குச் செய்யுள் -

    பிழைகொண் டொருவிக் கெடாதன்பு 
        செய்யிற் பிறவியென்னும்
    முழைகொண் டொருவன் செல் லாமைநின் 
        றம்பலத்தாடு முன்னோன்
    உழைகொண் டொருங்கிரு நோக்கம்
        பயின்ற எம் மொண்ணுதல்மாந் 
    தழை கொண் டொருவனென் னாமுன்ன
        முள்ளந் தழைத்திடுமே

    ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது

    இதன் பொருள்:  பிழை கொண்டு ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் பிழைத்தலைப் 
பொருந்தித் தன் கட் செல்லாது நீங்கி இவ்வாறு கெடாதே ஒருவன் அன்பு செய்யுமாயின் பிறவி 
என்னும் முழை கொண்டு செல்லாமை - அவன்; பிறவி யென்னா நின்ற பாழியை யடைந்து 
செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் - அம்பலத்தின்க ணின்றாடும் 
எல்லாப் பொருட்கும் முன்னாயவனது; உழை கொண்டு - உழைமானை மருணோக்கத்தாலொத்து;
இரு நோக்கம் ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் - வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத 
கள்ளநோக்கமு மாகிய இரு நோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்; 
மாந்தழை கொண்டு ஒருவன் என்னாமுன்னம் - மாந் தழையைக் கொண்டொருவனென்று 
சொல்லாதவன் முன் உள்ளம் தழைத்திடும்-உள்ளந் தழையா நின்றாள்; அதனால் இவள் குறிப்பு 
இவன் கண்ணதே போலும் எ-று

    அடைந்தார் பிழைப்பின்' தலையாயினார் பிழையையுட் கொண்டமைதலும், 
இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக் கெடுத்தலும் உலகத்துண்மையின்
அம் மூவகையுஞ் செய்யாதெனினுமமையும்.  பிறிதுரைப்பாருமுளர். ஒருவி யென்னும் 
வினையெச்சம் கெடாதென்னும் எதிர்மறை வினையெச்சத்திற் கெடுதலோடு முடிந்தது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:   அவ்விடத்து நாயகியுடைய நினைவைத் தோழி சொன்னது.

    செய்யுள்: பிழையவான காரியத்தைக் கொண்டு, தன்னை விட்டுக் கெட்டுப் போகாதே அன்பு 
செய்வானாகில், பிறத்தற்கிடமாய்க் கர்ப்பக் கொள்கையை இடங்கொண்டு செல்லாதபடி திருவம்பலத்தில் 
நின்றாடி அருளுகிற பழையவன் ஸ்ரீ அத்தத்திலே ஏந்தின மானின் நோக்கத்தை ஒத்து ஒரு காலே 
இருவகைப் பார்வையும் கற்ற எம்முடைய அழகிய நெற்றியினை யுடையவள், மாந்தழை கொண்டு 
வாராநின்றான் என்று நான் சொல்லுவதற்கு முன்னே, தானே கண்டு உள்ளம் தழையாநின்றாள்.         65

            4. இருவர் நினைவு மொருவழி யுணர்தல் *
            --------------------------------------
* பேரின்பப் பொருள் : இன்புயி ரொன்றென் றருளதி சயித்தது

    இருவர் நினைவு மொருவழி யுணர்தல் என்பது இருவர் நினைவுங்கண்டு இன்புறா நின்ற 
தோழி இவ்விருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள் கண்ணாகிய 
வண்டு இன்பத்தேனையுண்டு எழில் பெற வந்த அத்துணையல்லது பிறிதில்லை' யென அவ்விருவரது 
நினைவுந் துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    மெய்யே யிவற்கில்லை வேட்டையின் 
        மேன்மன மீட்டிவளும்
    பொய்யே புனத்தினைக் காப்ப
        திறைபுலி யூரனையாள் 
    மையேர் குவளைக்கண் வண்டினம்
        வாழுஞ்செந் தாமரைவாய்
    எய்யே மெனினுங் குடைந்தின்பத் 
        தேனுண் டெழிறருமே

    அன்புறுநோக் காருகறிந், தின்புறுதோழி யெண்ணியது

    இதன் பொருள்:  இறை புலியூர் அனையாள் மை ஏர் குவளைக் கண் வண்டு  இனம் - இறைவனது 
புலியூரை யொப்பாளுடைய மையழகையுடைய குவளை போலுங் கண்ணாகிய வண்டினம் வாழும் செந்தாமரை வாய் . 
தான் வாழ்வதற்குத் தகும்  இவன்  முகமாகிய செந்தாமரை மலர்க்கண்;  எய்யேம் எனினும் யாமறியேமாயினும்;
குடைந்து  இன்பத்தேன்  உண்டு - குடைந்து இன்பமாகிய தேனையுண்டு; எழில் தரும் எழில்பெறா நின்றது. அதனால் ;
இவற்கு மெய்யே வேட்டையின் மேல் மனம் இல்லை; இவற்கு இவளும் புனத்தினைக் காப்பது பொய்யே.
மெய்யாகவே வேட்டையின் மேலுள்ளமில்லை இவளும் புனத்தினைக் காப்பது பொய்யே எ று

    மீட்டென்பதற்கு மீட்ட தன்றே லென்புழி கூரைத்த துரைக்க  (செ. 57) ஏர்குவளை யென்னுமியல்பு 
புறனடையாற் கொள்க. வண்டினமென்றாள். நோக்கத்தின் பன்மை கருதி. எய்யேமெனினு மென்பதற்கு 
ஒருவரையொருவ ரறியே மென்றிருப்பினு மெனினுமமையும். எழிறருதல் - எழிலைப் புலப்படுத்துதல்.
இன்புறு தோழி இருவர் காதலையுங் கண்டின்புறு தோழி ஐய நீங்கித்தெளிதலான் இன்புறு மெனினுமமையும்.
அன்றியும் இவளுடைய நலத்திற் கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டின்புறுந்தோழி             (திருத்: கண்டின்யுறு/கண்டின்புறு)
என்னை களவொழுக்கத்தில் எழினல முடையா னொருவனைக் கண்டு இன்புறக் கடவளோ வெனின். 
எழினலமேயன்று. பின் அறத்தொடு நிலை நின்று கூட்டுகை. அகத்தமிழின திலக்கணமா தலால் 
தன் குரவர் வினவத் தானறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமே சென்று மகட் கொடுக்குங் 
குடிப்பிறப்பினால் உயர்ச்சியை யுடையனா தலானும் இன்புற்றாள் . இவை மூன்றற்கும் மெய்ப்பாடு : 
பெருமிதம். பயன்:  துணிந்துணர்தல். இவை மூன்றும் குறையுறவுணர்தல் என்னை, "இருவரு முள் 
வழியவன் வரவுணர்தன், முன்னுறவுணர்தல் குறையுறவுணர் தலென்றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி' ; 
( இறையனாரகப் பொருள், 7) என்பவாகலின் :

            குறையுறவுணர்தல் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அன்புமிக்க பார்வையை அவ்விடத்திலே அறிந்து 
இத்தன்மையாலே இன்புற்ற தோழி விசாரித்தது

    செய்யுள்:  உண்மையாக இவர்க்கு வேட்டையின் மேல் மனமில்லையாயிருந்தது: மீண்டு இவளும் 
புனத்தினைக் காப்போம் என்னுமிது வெறும் பொய்யாயிருந்தது; சுவாமியினுடைய பெரும்பற்றப் புலியூரை 
யொப்பாள்  மை யெழுதப்பட்ட நீல மலர்களை யொத்த கண்களாகிய வண்டுச் சாதிகள் வாழும் 
தாமரைப் பூவிடத்தே நாமொன்றை அறியே மாகிலும், அந்தப் பூவை மலர்க்கதிர் (?) இன்பத் தேனுண்டு         (திருத்: தேணுண்டு/தேனுண்டு)
அழகினை விளக்கா நின்றது.         66

            8. நாணநாட்டம்*
            ----------------

*பேரின்பக் கிளவி. ''நாண நாட்டத் துறையோ ரைந்து மருளே சிவத்தை யதிசயத் துயிரின், 
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது. " 

    இனி முன்னர் ** "நன்னிலை நாணம்" என்றோதப்பட்ட நாண நாட்ட மென்பது இருவர் நினைவும் 
ஐயமறத்துணிந்த  தோழி அவரது கூட்ட முண்மை அறிவது காரணமாகத் தலைமகளை நாண 
நாடா நிற்றல். நன்னிலை நாணமென்றது  நல்ல நிலை பெற்ற நாணம். நல்லநிலையாவது 
நாணவும் நடுங்கவு நாடுதல். அகத்தமிழிலக்கண மன்றாதலான் இக் கோவை இஃதாமென்னுமிடம் 
பெற்றதாம். என்னை, தலை மகள் தனக்குத் தலைமகனோ டுண்டாகியபுணர்ச்சியொழுக்கத்துக்கு 
இவள் காவற்றோழி யாகையான் இடையூறாமென்னும் உள்ளத்தாளாய்  நின்று இவ்வொழுக்கத்தைத் 
தோழியறியின் நன்றென்னும் நினைவு வாராநிற்க, அவ் விடத்திலே இவள் நாண நாடுகையின்,
நன்னிலை நாணமென்றார். என்னை, நாணவு நடுங்கவு நாடா டோழி, காணுங் காலைத் 
தலைமகடேத்து"  என்பவாகலின்.

**பக்கம் 2 அதிகார வரலாறு 4 அடி

    பிறைதொழு கென்றல் பின்னு மவளை
    யுறவென வேறு படுத்தி யுரைத்தல் 
    சுனையாடல் கூற றோற்றங் கண்டு 
    புணர்ச்சி யுரைத்தல் பொதுவெனக் கூறி 
    மதியுடம் படுதல் வழிநாண னடுங்கல் 
    புலிமிசை வைத்தல் புகலுங் காலே.

    இதன் பொருள்:  பிறைதொழுகென்றல்;  வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல்,
புணர்ச்சியுரைத்தல், மதியுடம்படுதல் என விவையைந்தும் நாணநாட்டமாம் ; புலி மிசை வைத்தல் 
எனவிஃதொன்றும் நடுங்கநாட்டமாம் எ- று அவற்றுள் -

            1. பிறைதொழுகென்றல்*
            -----------------------

*பேரின்பப் பொருள்: "அருள்சிவத் திடையுயி ரார்ந்த தன்மை வெளிப்பட நின்று வினாவி யுரைத்தது''

    பிறைதொழு கென்றல் :  ஒன்பது பிறையைக் காட்டித் தான்றொழுது நின்று, நீயும் இதனைத் 
தொழுவாயாக வெனத்தோழி தலைமகளது புணர்ச்சி நினைவறியா நிற்றல் அதற்குச் செய்யுள்-

    மைவார் கருங்கண்ணி செங்கரங்
        கூப்பு மறந்து மற்றப்
    பொய்வா னவரிற் புகாதுதன் 
        பொற்கழற் கேயடியேன்
    உய்வான் புகவொளிர் தில்லைநின்
        றோன்சடை மேலதொத்துச் 
    செவ்வா னடைந்த பசுங்கதிர்
        வெள்ளைச் சிறுபிறைக்கே

    பிறைதொழு கென்று பேதை மாதரை 
    நறுநுதற் பாங்கி நாண நாட்டியது

    இதன் பொருள்:  மறந்தும் பொய் அவ்வ்வ வானவரில் புகாது மறந்தும் பொய்ம்மையையுடைய         (ஐயம்: அவ்வ்வ?? )
அவ்வானவரிடத்துப் புகாதே; தன் பொன் கழற்கே  அடியேன் உய்வான் புக- தன்னுடைய  பொன்னானியன்ற         (திருத்: தன்ணுடைய/தன்னுடைய)
கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்ய வேண்டிப்புக- ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது 
ஒத்து விளங்குந் தில்லைக்கட் கட்புலனாய் நின்றவனுடைய சடைக்கண்ணதாகிய பிறையை யொத்து;
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு - செக்கர்வானை யடைந்த செவ்விக் கதிரையுடைய 
வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மைவார் கருங்கண்ணி -மையையுடைய நெடிய கரிய கண்ணினை யுடையாய்; 
செங்கரம் கூப்பு - நினது செய்ய கைகளைக் கூப்புவாயாக எ-று 

    மறந்துமென்து ஈண்டு அறியாதுமென்னும் பொருட்டாய்  நின்றது. மற்று அசை நிலை.
மற்றை யென்பது பாடமாயின் அல்லாத பொய்வானவரென்றுரைக்க, இனமல்லராயினும்
இனமாக  உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார், "மூவரென்றே யெம்பிரானோடு மெண்ணி"
 (திருவாசகம், திருச்சாழல், 4) என்பதூஉம் அக்கருத்தே பற்றிவந்தது. பிறர் கூறும் பெருமை அவர்க்கின்மையிற் 
பொய்வானவரென்றார். எனக்குப் பொறியுணர்வல்ல தின்மையிற் கண்கவருந் திருமேனி காட்டி என்னை 
வசித்தானென்னுங் கருத்தான் உய்வான் புகத்தில்லை நின்றோனென்றார். சடை: செக்கர் வானத்திற் குவமை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பிறையைத் தொழுவாயாக என்று பேதைத் தன்மையையுடைய 
நாயகியை நல்ல நெற்றியினை யுடைய தோழியை நாணும்படி சொன்னது.

    செய்யுள்: மையெழுதப்பட்ட கரிய கண்களை யுடையாய்! சிவந்த கைகளைக் கூப்பித் 
தொழுவாயாக. அரிதேயும் மறந்தும் பொய்யான தேவர்களிடத்தே செல்லாது தன்னுடைய அழகிய 
திருவடிகளிலே அடியேன் பிழைப்பது காரணமாக ஆட்புகவிளங்கா நின்ற பெரும்பற்றப் புலியூரிலே 
எழுந்தருளி நின்றவன். அவனுடைய திருச்சடைமேலே வைத்த திருவிளம்பிறையை நிகர்த்துச் செக்கர் 
வானத்திலே சேர்ந்த செவ்விக் கதிர்களை யுடைத்தாகிய வெள்ளிய சிறுபிறைக்கு நின்னுடைய சிவந்த 
கைகளைக் கூப்பித் தொழாய் நாயகியே!             67

            2. வேறுபடுத்துக் கூறல்*
            ----------------------

*பேரின்பப் பொருள்: உயிர்க்கின் பிச்சைகண்டு வந்தருள் வினாயது.

    வேறுபடுத்துக் கூறல் என்பது பிறைதொழாது தலைசாய்த்து நாணி நிலங்கிளையா நிற்பக் கண்டு, 
பின்னும் இவள் வழியே யொழுகி இதனை யறிவோமென உட்கொண்டு, நீபோய்ச்  சுனையாடி வாவென்ன,         (திருத்: போய்க்/போய்ச்)
அவளும் அதற்கிசைந்து போய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறியறிந்து அவளை வரையணங்காகப் 
புனைந்து வேறுபடுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்-

    அக்கின்ற வாமணி சேர்கண்டன் 
        அம்பல வன்மலயத்
    திக்குன்ற வாணர் கொழுந்திச் 
        செழுந்தண் புனமுடையாள் 
    அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் 
        றாளங்க மவ்வவையே 
    ஒக்கின்ற வாரணங் கேயிணங்
        காகு முனக்கவளே.

     வேய்வளைத்தோளியை வேறுபாடு கண் 
    டாய்வளைத்தோழி யணங்கென்றது

    இதன் பொருள்: அக்கு தவா மணிசேர் கண்டன் - அக்காகிய நல்ல மணிபொருந்திய 
மிடற்றையுடையான்: அம்பலவன்- அம்பலவன்; மலயத்து இக்குன்றவாணர் கொழுந்து செழும் 
இத்தண்புனம் உடையாள்- அவனது பொதியின் மலயத்தின்  கணுளராகிய  இக்குன்றவாணருடைய 
மகளாகிய வளவிய இத்தண்புனங் காவலுடையாள்: அக்குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள் - 
அக்குன்றத்தின்க ணுண்டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள். அங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆறு -
நின்னுறுப்புக்கள் அவளுறுப்புகளாகிய அவற்றையே யொக்கின்றபடி : அணங்கே - என்னணங்கே, 
உனக்கு அவள் இணங்கு ஆகும் -நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ - று.  

    இன்: அல்வழிச் சாரியை , மலயத்திக்குன்றமென்று இயைப்பாருமுளர்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: மூங்கில் போன்று வளைகளை அணிந்த தோள்களையுடையாளை 
மேனி வேறுபாடானது கண்டு அழகிய வளைகளை அணிந்த தோளினையுடையவள் தெய்வமென்றது.

    செய்யுள் : அக்கினது மணிநீங்காது பொருத்தின திருமிடற்றை உடையவன் திருவம்பலநாதன்,
 அவனுடைய பொதியின் மலையிடத்து இக்குன்ற வாணரா நிலையவர் பெற்ற இளையவல்லி சாதத்தை 
யொப்பாள். இந்த அழகிய குளிர்ந்த புனத்தையுடையவள் அந்த மலையருவியை விரும்பி ஆடுவதாகப் 
போனால் அவளுடைய அவயவங்கள் தன்மை ஒக்கின்...... தெய்வமே உனக்கவள்........ ஆதலால், 
அவள் நீ நின்று அவனைக் கண்டு போவாயாக.         68

            3. சுனையாடல் கூறி நகைத்தல் *
            ------------------------------

* பேரின்பப் பொருள் : "கருணை யுயிர்க்குக் காட்டும் பரிவு, தானறிற் தறியாத் தன்மை யுரைத்தது.'

    சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல் கண்டு, 'சுனையாடினால் 
இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந் தருமாயின் யானுஞ் 
சுனையாடிக் காண்பே' னெனத் தோழி தலைமகளோடு நகையாடா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    செந்நிற மேனிவெண் ணீறணி
        வோன்தில்லை யம்பலம்போல் 
    அந்நிற மேனிநின் கொங்கையி
        லங்கழி குங்குமமும் 
    மைந்நிற வார்குழல் மாலையுந்
        தாதும் வளாய்மதஞ்சேர் 
    இந்நிற மும்பெறின் யானுங் 
        குடைவ னிருஞ்சுனையே

    மாண நாட்டிய வார்குழற்பேதையை 
    நாணநாட்டி நகை செய்தது.

    இதன் பொருள்: செந்நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல்  - செய்ய 
நிறத்தையுடைய மேனிக்கண் வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லையம்பலத்தை யொக்கும்; 
அம் நிறமேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் - அழகிய நிறத்தை யுடைத்தாகிய 
மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத்தழிந்த குங்குமத்தையும் மைநிற வார்குழல் 
மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும் ; தாதும் - அளகத்தப்பிய 
தாதையும்; வளாய் மதம் சேர் இந்நிறமும் பெறின் - மேனி முழுதையுஞ் சூழ்ந்து மதத்தைச் சேர்ந்த             (திருத்: நிறமூம்/நிறமும்)
இந்நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ்சுனை யானும் குடைவன் - நீ குடைந்த பெரிய சுனையை 
யானுங் குடைவேன் எ-று.

    அம்பலம்போன் மேனியெனவியையும் அங்கழிகுங்கும மென்றது முயக்கத்தான் அழியும்
 அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு மைந்நிறவார்குழற்கண் மாலையுந் தாதும் வளாவ 
இதனையும் பெறினென எச்சந் திரித் துரைப்பினும் அமையும் வளாவுதல் புணர்ச்சிக் காலத்தில் 
மாலையின் முறிந்தமலரும் அளகத் தப்பிய தாதுஞ்சிதறிக் குங்குமத்தினழுந்தி வாங்குதற் 
கருமையாக விரவுதல் மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை .

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு : மாட்சிமை உடைத்தாகச் சொல்லப்பட்ட 
நீண்ட கூந்தலினையுடைய நாயகியை நாணும்படி சொல்லிச் சிரித்தது.

    செய்யுள்: சிவந்த திருமேனியிலே வெள்ளிய திருநீற்றைச்சாத்தி யருளுகிறவன் 
பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தை ஒத்த அழகிய மேனியை யுடையாய்! நின் 
கொங்கையிடத்துக் கூட்டமாகிய அவ்விடத்தே யழிந்த குங்குமமும், இருண்ட நிறமுடைய 
கூந்தலிலே யணிந்த மாலையும், செருகுழுவும் (தாதும்) உன் மேனி முழுதும் சூழ்ந்த கந்தம் சேர்ந்த 
மணவொளியும், யானும் பெறுவனாகில் நீ ஆடினேன் என்கிற பெரிய சுனையை யானும் ஆடக்கடவேன்.

    என்ன, இது சுனையாட்டில் வந்ததன்று காண்.        69

            4. புணர்ச்சியுரைத்தல் *
            ----------------------

* பேரின்பப் பொருள் ; ''சிவனது கருணை யருளே தேறி , இந்த அதிசயம் எங்குமில் லென்றது"

    புணர்ச்சியுரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, 'அது கிடக்க நீயாடிய 
அப்பெரிய சுனை தான் கண் சிவப்ப வாய் விளர்ப்ப அளிதொடரும் வரை மலரைச் சூட்ட வற்றா 
சொல்வாயாக' வெனப் புணர்ச்சி உரையா நிற்றல். அதற்குச் செய்யுள்-

    பருங்கண் கவர்கொலை வேழப் 
        படையோன் படப்படர்தீத் 
    தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
        தோன் தட மால் வரை வாய்க்
    கருங்கண் சிவப்பக் கனிவாய் 
        விளர்ப்பக்கண் ணாரளிபின்
    வருங்கண் மலைமலர் சூட்டவற் 
        றோமற்றவ் வான்சுனையே

    மணக்குறி நோக்கிப், புணர்ச்சி யுரைத்தது.

    இதன் பொருள்: பருங்கண் கவர் கொலை வேழப்படை யோன்படபரிய கண்ணையும் 
விரும்பப்படுங் கொலையையு முடைய கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள; 
படர்த்தீ தருமகண் நுதல் தில்லை அம்பலத்தோன் தடமால்வரை வாய்- செல்லுந் தீயைத்தருங் 
கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம்பலத்தானது பெரியமால் வரையிடத்து 
அவ்வான் சுனை - நீயாடிய அப்பெரிய சுனை கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்ப- கரியகண் 
சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப அளி பின்வரும் கண் ஆர்கள் மலைமலர் 
சூட்டவற்றோ-அளிகள் பின்றொடர்ந்துவருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய மலை 
மலரைச்சூட்ட வற்றோ சொல்வாயாக எ-று

    பருங்கண்ணென மெலிந்து நின்றது. தடமும் மாலும் பெருமையாகலின் மிகப்பெரிய 
வென்பது விளங்கும். தடம் தாழ் வரை யெனினுமமையும், வருங்கண் வரை மலரென்பது* பாடமாயின் 
அளிதொடருமிடத்தையுடைய வரைமலரென்க.  இடமென்றது பூவினேகதேசத்தை.  இன்னும் 
வரைமலரென்பது ஒரு பூவை முழுதுஞ் சூட்டினானாயின். தலைவி அதனையறிந்து பேணவேண்டி 
வாங்குவதாகச்கூடும். ஆகையால் இவளிஃதறியா மற்றோழியறிவது பயனாக ஒரு பூவின் முறித்ததொரு 
சிறிய விதழைச் சூட்டினான்; ஆகையான் வரைந்த மலரென்றாளாம். மற்று அசைநிலை . இவை நான்கும் 
நாணநாட்டம். மெய்ப்பாடு- நகை. பயன்: கரவுநாடியுணர்தல்.

*என்பது பழைய வுரைகாரர் பாடம்.

    இவை முன்னூறவுணர்தலின் விகற்பம், இவை நான்கும் பெருந்திணைப் பாற்படும் 
என்னை அகத்தமிழ்ச் சிதைவாகலான்; என்னை, 'கைக்கிளை பெருந்திணை யகப்புறமாகும்".        (திருத்: லான் என்னை/என்னை)
இவற்றுள் கைக்கிளை யென்பது ஒரு தலைக்காமம்; பெருந்திணை யென்பது பொருந்தாக் காமம். 
என்னை, "ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமுஞ், செப்பிய வகத் தமிழ்ச் சிதைவும் பெருந்திணை' 
என்பவாகலின். நாண நாடலாகாமை; இவள் பெருநாணினளாதலான், தான் மறைந்து செய்த 
காரியத்தைப் பிறரறியின் இறந்துபடும்; ஆதலான் நாண நாட்டமாகாது நடுங்க நாட்டமுமாகாது 
இருவர்க்கும் உயிரொன்றாகலான் இறந்துபடு மாதலின். ஆதலால், அகத்தமிழிற்கு இவை வழுவாயின. 
இனி இதற்கு வழுவமைதி "நன்னிலை நாணம்" என்பதனானறிக.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மணவொளியைப் பார்த்துக் கூட்டம் உண்டென்று சொன்னது.

    செய்யுள்: பரிய கண்ணினையும் விருப்பத்தாலே கொல்லும் கொலையினையுமுடைய         (திருத்: கொலையியுமுனைடைய/      கருப்பு வில்லையுடைய காமன் பட்டு விழும் படி வர்த்திக்கிற அக்கினியைத் தருகிற திருநயனம்             கொலையினையுமுடைய)
நெற்றியிலே யுடைய பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தே யுள்ளவன் மிகவும் பெரிய மலையிடத்துக் 
கரிய கண்கள் சிவப்பவும், கனிவாய் வெளுப்பவும், கண்ணுக்கு நிறைந்த வண்டுகள் பின்தொடர்கிற 
தேனுடைத்தாகிய மலர்களைச் சூட்டத்தக்கதோ அப் பெரியசுனை?

            5. மதியுடம்படுதல் *
            ------------------

*பேரின்பப் பொருள்; உயிர்சிவ மொன்ற றொழிலா வறிந்தது.

    மதியுடம்படுதல் என்பது பலபடியும் நாண நாடிக்கூட்ட முண்மை யுணர்ந்த தோழி , 
'இம் மலையிடத்து இவ்விருவர்க்கும்  இன்ப துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால்
 இவ்விருவர்க்கும் உயிரொன்றே' யென வியந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    காகத் திருகண்ணிற் கொன்றே                (திருத்: காகத்தி/காகத்திரு)
        மணிகலந் தாங்கிருவர் 
    ஆகத்து ளோருயிர் கண்டனம் 
        யாமின்றி யாவையுமாம்
    ஏகத்தொருவ னிரும்பொழி
        லம்பல வன்மலையில்
    தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் 
        வருமின்பத் துன்பங்களே.

    அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென 
    மயிலியற் றோழி மதியுடம் பட்டது.

    இதன் பொருள்: யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் - எல்லாப் பொருள்களுமாய் விரியும் 
ஒன்றையுடைய வொருவன்; இரும் பொழில் அம்பலவன் - பெரிய பொழில்களாற் சூழப்பட்ட 
அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும் தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும்.-
அவனது மலையில் இத்தோகைக்கும் இத்தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய்* வாரா நின்றன.
அதனால்; காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர்** யாம் இன்று 
கண்டனம் - காகத்திரண்டு கண்ணிற்கும் மணியொன்றே லந்தாற் போல இருவர் யாக்கையுள்
ஓருயிரை யாமின்று கண்டேம் எ.று.

*'இன்ப துன்பம் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வருதலின்  தன்றுயர் காணா வென்றார்''         (திருத்: வருதன்லி/வருதலின்)
(சிலப்பதிகாரம்- அடைக்கலக்காதை 141-ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை).

**தலைவியுடனே தலைவனுக்கும் ஓருயிராயிருக்க உடம்பு மட்டும் இரண்டாயிருத்தல்; 
" ஆனந்த வெள்ளத் தழுந்துமா ராருயிரீருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்'' 
(திருக்கோவையார். 307): ''பாவை நீ புலவியி னீடல் பாவியேற் காவியொன்றிரண்டுடம் பல்லது (சீவக. 1017).

    யாவையுமாமேகம்: பராசத்தி. அம்பலவன் மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி, 
வேறோரிடத்து வேறொரு காலத்து வேறொருவர் இது கண்டறிவ ரில்லை என்பது படவுரைப்பினுமமையும்.         (திருத்: வேறாரு/வேறொரு)
கலந்தா ரிருவரென்பது பாட மாயின், 'காகத்திரு கண்ணிற் கொன்றே மணி* யென்பதனை 
எடுத்துக் காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல்.

*இவள்வயிற் செலினே இவற்குடம்பு வறிதே. இவள் வயிற்செலினே இவட்கு மற்றே, காக்கை யிருகணி 
னொருமணி போலக், குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கு, மொன்றுபோன் மன்னிய சென்று வாழுயிரே" 
(தொல் களவியல், சூ. 114 மேற்கோள்)

            நாணநாட்டம் முற்றிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கூரிய வேல்களை ஒத்த கண்களையுடையாளுடனே நாயகனுக்கும் 
ஓருயிர் என்னும்படியை மயில் போன்ற பாங்கி அறுதியிட்டது.

    செய்யுள் : காக்கையி னுடைய இரண்டு நயனத்துக்கும் ஓரொளி கலந்து, நின்றாற்போல இருவருடம்பிற்கும் 
ஓருயிர் என்கின்றதை இப்பொழுது திட்டமாகக் கண்டோம். அதுவன்றியும், எல்லாப் பொருளுமாகிய ஒன்றாகிய 
பராசக்தியையுடைய ஒப்பில்லாதவன். பெரிய காவினால் சூழப்பட்ட திருவம்பலநாதனுடைய திருமலையில் 
மயிலை ஒத்த சாயலையுடையாளுக்கும் நாயகனுக்கும் இன்பம் துன்பம் ஒருப்பட்டு வாராநின்றன.

    என்று பொருளாகி ஒருகாலத்து ஒருவரும் கண்டறியாத இந்தப் புதுமையை இப்பொழுது 
சிதம்பர நாதன் திருமலையிடத்துக் கண்டோம் என்றுபடும்.             71


            9. நடுங்க நாட்டம்*
            -----------------
*பேரின்பக் கிளவி:"நடுங்க நாட்ட மொன்றுஞ் சிவமே, யுயிரிடைக் கருணையென் றுற்றருணோக்கல் "

    மேல் ''நடுங்கல், ', புலிமிசை வைத்தல் புகலுங்காலே''** என்றோதப்பட்ட நடுங்கநாட்ட மென்பது 
கூட்ட முண்மை யுணர்ந்தனளாயினும், தலைமகள் பெருநாணினளாகலானும்  தான் அவள் குற்றேவன் 
மகளாகலானும் பின்னும் தான் சொல்லாடாது அவடன்னைக் கொண்டே கேட்பது காரணமாக             (திருத்: சேட்பது/கேட்பது)
நெருங்கி நின்று, ஒரு புலி ஒருவனை யெதிர்ப்பட்டதெனத் தோழி அவளை நடுங்க நாடாநிற்றல், 
அதற்குச் செய்யுள்-

**பேரின்பப் பொருள் : "கருணை யளவின்மை யருள் கண்டு மகிழ்தல், ' பக்கம்-128, சூத்திரம் அடி 5-6        (திருத்: ஆடி/அடி)

    ஆவா விருவ ரறியா
        அடிதில்லை யம்பலத்து 
    மூவா யிரவர் வணங்கநின்
        றோனையுன் னாரின்முன்னித்
    தீவா யுழுவை கிழித்ததந் 
        தோசிறி தேபிழைப்பித்
    தாவா மணிவேல் பணிகொண்ட 
        வாறின்றொ ராண்டகையே

    நுடங்கிடைப் பாங்கி, நடுங்க நாடியது.

    இதன் பொருள்:  இருவர் அறியா அடி மூவாயிரவர் வணங்கத் தில்லை அம்பலத்து நின்றோனை 
உன்னாரின் - அயனும் அரியுமாகிய இருவரறியாத அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத் 
தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல வருந்த;  முன்னித் தீ வாய் 
உழுவை கிழித்தது - எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது, அங்காப்ப; சிறிதே
பிழைப்பித்து இன்று ஒரு  ஆண்டகை மணிவேல் பணி கொண்ட ஆறு - அதனைச் சிறிதே தப்பு வித்து 
இன்றோராண்டகை மணியையுடைய வேலைப்பணி கொண்டவாறென் எ-று.                (திருத்: மணியைடைய/மணியையுடைய)

    அயனும் அரியுந் தில்லையம்பலத்திற் சென்று வணங்குமா றறிந்தில ரென்னுங் 
கருத்தினராகலின். ஆவா வென்பது அருளின் கட் குறிப்பு இரக்கத்தின் கட் குறிப்பாய்த் 
தீவா யுழுவை கிழித்த தென்பதனை நோக்கி நின்றதெனினுமமையும் வருந்தவென 
ஒரு சொல் வருவித்து உரைக்கப்பட்டது. கொடிய வுள்ளத்தராகலின் உன்னாதார் 
புலிக்குவமையாக வுரைப்பினு மமையும்.  தீவாயையுடைய வுழுவை அவனைக் 
கிழித்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். 

     அந்தோ வென்பது இரக்கத்தின் கட்குறிப்பு. இறுதிக்கண் ஆவா வென்பது 
வியப்பின் கட் குறிப்பு. இதனுள் தலைமகளை நடுங்க நாடிய தெவ்வாறெனின் :
 தன் கொடிய வாயைப் புலி அங்காந்தது, உழுவையினது தீவாயை வேறொன்று கிழித்தது, 
உழுவையினது தீவாய் பிறிதொன்றனைக் கிழித்தது, என இம்மூன்று பொருளும் படுகையான், 
இது நடுங்க நாட்டமா யிற்று. 

    என்னை, தலைமகள் இங்ஙனம் நடுங்கியாராயும் வண்ணம் தோழி நாடுகையான். 
தீவாயுழுவை கிழித்ததென்ற இம்மூன்று பொருளும் வினா இங்ஙனந் தோழி யுரைப்பத் தலை.
மகள் நாடி நடுங்காநிற்கக்கண்டு, ஓராண்டகை வேலை பணி கொண்டவாறென்னென 
நடுங்கத் தீர்த்தாயிற்று. இது கரவு நாடுதல். அஃதாவது வெளிப்படச் சொல்லுஞ் சொல்லன்றிப் 
பிறிதொன்றன் மேல் வைத்துச் சொல்லுதல். இதுவும் பெருந்திணைப்பாற்படும். 
மெய்ப்பாடு: நகை, பயன்: நடுங்கநாடிக் கரவு நாடி யுணர்தல்;

    நிருத்தம்பயின்றவன் (62) என்பது தொட்டு மெய்யேயிவற் கில்லை (66) 
என்பதன் காறும் வர ஐந்துபாட்டினும் முன்னுற வுணர்தலையும் ஐயுறவாக்கி, இருவருமுள்வழி
யவன்வர வுணர்வினைத் துணிந்துணர்வாக்கினார். மைவார் (67) என்பது தொட்டு இதன்காறும்வர 
இவையாறினும் முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவருமுள் வழி அவன் வரவுணர்தலென்னும் 
மூன்றனையுந் துணிந்துணர்வாக்கினார். ஈண்டிவ்விகற்பங் கண்டு கொள்க.

            நடுங்க நாட்டம் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  தளர்கின்ற இடையினை யுடைய பாங்கி 
நாயகி நடுங்கும்படி சொல்லியது

    செய்யுள்: ஆவா! ஐயோ! ஐயோ! பிரம விட்டுணுக்கள் அறியாத ஸ்ரீ பாதங்களைப் 
பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்திலே மூவாயிரம் இருடிகள் வணங்கும்படி அளியனாகி 
நின்றவனை நினையாதாரைப்போல அவனை எதிர்ப்பட்டுப் புலியானது தன்னுடைய பொல்லாத 
வாயை அங்காத்து, 'ஐயோ' (என்னுமளவில் நாயகி அறிந்து படும்படி ஆனது)

    (இனி மீளும்படி சொல்லுகிறாள் ) "சிறிது போதிலே. இதனைத் தப்புவித்து - 
(ஆவா என்றது கொண்டாட்டம் :) "இப்பொழுது ஓர் ஆண்மைப்பட்டுத் தக்கவன் மணி பொருந்திய 
வேலைப் பணி கொண்டபடி!  (என்ன அவன் புலியை எறிந்தான் எறிந்தான் என்றுபடும்)     72

            10. மடற்றிறம் *
            ---------------

*பேரின்பக் கிளவி: ' 'மடற்றுறை யொன்பதுஞ் சிவத்திடை மோகமுற்ற வுயிரருள் பற்றி யுரைத்தது.''

    மடற்றிறம் என்பது நடுங்க நாடவும் பெருநாணினளாதலின், தலைமகள் தன் குறை 
சொல்லமாட்டாது நிற்ப,  இனி இவளிறந்து படவுங்கூடுமென உட்கொண்டு தலைமகனுடன் 
சொல்லாடத் தொடங்காநின்ற தோழி, தானும் பெருநாணினளாதலிற் பின்னுந் தலைமகன் 
குறையுறவேண்டி நிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகன்  சென்று,  'இந்நாளெல்லாம் என் குறை 
நின்னான் முடியுமென்று நின்னை வந்திரந்தேன்; இது நின்னான் முடியாமையின், யான் 
மடலூர்ந்தாயினும் இக்குறைமுடித்துக் கொள்வே'  னெனத் தோழிக்குக் கூறா நிற்றல். 
என்னை , "முன்னுறவுணரினு மவன் குறையுற்ற, பின்னரல்லது கிளவி தோன்றாது'' 
(இறையனாரகப் பொருள்,9) என்பவாகலின்.

    ஆற்றா துரைத்த லுலகின்மேல் வைத்த 
    றன்றுணி புரைத்த லொடுவகை யுரைத்த
    லருளா லரிதென னடையா லரிதென 
    லவயவ மெழுத லரிதென விலக்க 
    லுடம்படாது விலக்க லுடம்பட்டு விலக்க
    றிடம்பட வொன்பதுஞ் செப்புங் காலை 
    வடம்படு முலைமேன் மடலா கும்மே.

    இதன் பொருள்: ஆற்றா துரைத்தல், உலகின் மேல் வைத்து உரைத்தல், தன்றுணிபுரைத்தல், 
மடலேறும் வகை யுரைத்தல் , அருளாலரிதென விலக்கல், மொழி நடையெழுதலரிதென விலக்கல்,
அவயவமெழுதலரிதென விலக்கல், உடம்படாது விலக்கல், உடம்பட்டு விலக்கல் எனவிவை ஒன்பதும் 
மடற்றிறமாம் எ-று அவற்றுள் -

            1. ஆற்றாதுரைத்தல்*
            --------------------

*பேரின்பப் பொருள்: அருளை நம்பியுயிர் மிகவு மிரங்கியது

    ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன் மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட 
அவ்விருவருழைச் சென்று நின்று, 'நீயிர் அருளாமையின் என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமி' னெனத் 
தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    பொருளா வெனைப்புகுந் தாண்டு 
        புரந்தரன் மாலயன்பால்
    இருளா யிருக்கு மொளிநின்ற 
        சிற்றம் பலமெனலாஞ்
    சுருளார் கருங்குழல் தெண்ணகைச் 
        செவ்வாய்த் துடியிடையீர் 
    அருளா தொழியி னொழியா
        தழியுமென் னாருயிரே

    மல்லற்றிரள் வரைத்தோளவன் 
    சொல்லாற்றாது சொல்லியது 

    இதன் பொருள்: புகுந்து என்னைப் பொருளா ஆண்டு தானே வந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு;
புரந்தரன் மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் - இந்திரன் மால் அயனென்னும் 
அவர்களிடத்து இருளாயிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங்குழல் 
வெள்நகைச் செவ்வாய்த் துடி இடையீர் - சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய 
வாயினையுமுடைய துடியிடையீர்; அருளா தொழியின்  என் ஆருயிர் ஒழியாது அழியும் - நீயிர் அருளாதொழியின் 
என தாருயிர் தப்பாமலழியும்: அதனான் அருளத் தகும் எ-று.

    தொகையின்மையிற் பாலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக.  சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை
 மடற்றிறங் கூறிகின்றானாகலின், அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது. சொல்லுதற்கும் 
ஆற்றாது. மெய்ப்பாடு; அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வளப்ப முடைத்தாகிய திரண்ட மலையை நிகர்த்த தோள்களையுடையவன் 
தன் குறையைச் சொல்லுதற்கு மறாமல் சொன்னது.

    செய்யுள்: ஒரு பொருளல்லாத என்னை மதித்து வந்து அடிமை கொண்டு, தேவேந்திரனிடத்திலும், 
அரி, அயனிடத்திலும், அவர்களிடத்து இருளாய்த் தோன்றுகிற ஒளியாயுள்ளவன் எழுந்தருளி நிற்கின்ற 
திருச்சிற்றம்பலமென்று சொல்லத் (தகும்) நெறித்த மிகக்கரிய குழலினையும், வெள்ளிய முறுவலினையும், 
சிவந்த வாயினையும், துடியொத்த இடையினையுமுடையீர் நீங்கள் அருளாதே விடின் என்னுடைய 
பெறுதற்கரிய உயிர் தப்பாமே அழியும் .         73

            2. உலகின் மேல் வைத்துரைத்தல்*
            -------------------------------

*பேரின்பப் பொருள் : இன்பம் பெறார்க்குடல் வம்பெனவுரைத்தது

    உலகின் மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமை கூறி அது வழியாக நின்று, 'ஆடவர் தம்முள்ளமாகிய 
மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுவதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும் 
அதனைப் பெறுவர்'  என உலகின் மேல் வைத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் - 

    காய்சின வேலன்ன மின்னியல் 
        கண்ணின் வலைகலந்து
    வீசின போதுள்ள மீனிழந் 
        தார்வியன் தென்புலியூர் 
    ஈசன சாந்தும் எருக்கு 
        மணிந்தோர் கிழிபிடித்துப் 
    பாய்ச்சின மாவென ஏறுவர் 
        சீறூர்ப் பனைமடலே

    புலவேலண்ணல் புனைமடலேற் 
    றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது

    இதன் பொருள்: காய்சினவேல் அன்னமின் இயல் கண் வலை - காய்சினத்தையுடைய 
வேல் போலும் ஒளியியலுங் கண்ணாகிய வலையை; கலந்து வீசினபோது உள்ளம் மீன் இழந்தார் 
மகளிர் கலந்து வீசின போது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனை யிழந்தவர்கள் ; வியன் 
தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து- பெரிய தென்புலியூர்க் கணுளனாகிய - ஈசனுடைய 
நீற்றையும் எருக்கம் பூவையும் அணிந்து, ஓர் கிழி பிடித்து- ஒரு கிழியைக் கையிற் பிடித்து;
பாய் சினமா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர்-பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனை மடலைச் 
சீறூர்க் கணேறுவர். தம்முள்ளம் பெறுவதற்கு வேறுபாய மில்லாத விடத்து எ-று.

    மின்னியல் வேலென்று கூட்டினுமமையும். இன்:  அல்வழிச்சாரியை. கண்ணென்வலையென்பதூஉம் 
பாடம்: மகளிரென ஒரு சொல்வருவியாது கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும் .  உள்ளமிழந்தவர் 
உள்ளம் பெறுமளவும் தம்வயமின்றி மடலின் வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தா வாகக் கொள்க. 
சாந்தும் எருக்கு* மென இரண்டாகலின் ஈசனவெனப்பன்மையுருபு கொடுத்தார். பாய் சினமென்புழிச் சினம்: 
உள்ளமிகுதி. உய்த்துரைத்தது - குறிப்பாலுரைத்தது.

*மடலேறுவார் எருக்கமாலையை அணிதல் முறை : ''மடலே காமந் தந்த தலரே, மிடைபூ வெருக்கி 
னலர்தந் தன்றே'' (நற்றிணை, 152) "எருக்கின் பிணையலங் கண்ணிமிலைந்த மணியார்ப்ப, ஓங்கிரூம் 
பெண்ணை மடலூர்ந்து"  (கலித்தொகை, 139, 8-10) : ''எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை இடப்பான் 
மடந்தை நொடிப்போழ்து தணப்பினும், மடலூர் குறிப்புத் தோன்ற (திருவாரூர் நான்மணிமாலை 24-12-4).)

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: புலாலை நாறும் வேலினையுடைய நாயகன் செய்யப்பட்ட 
மடலின் மேல் ஏறுகின்றதனை உலகத்தார் மேல் வைத்து உற்சாகத்தினைச் சொன்னது.

    செய்யுள்: கொல்லும் சினத்த வேலையொத்த ஒளியுடைத்தாகிய கண்ணாகிய வலையைக் 
கலந்து மகளிர் வீசினபோது உள்ளமாகிய மீனை இழந்தவர்கள். பெரிய பெரும்பற்றப் புலியூரையுடைய 
சிவன் அணியும் சாந்தும் (திருநீறும்) எருக்க மாலையும் இவற்றாலே அலங்கரித்து ஒரு கிழியும் 
கையிலே பிடித்துப் பாய்ந்து செல்லுகிற சினத்துப்பிரவியென்னும் படி  சீறூரிடத்தும்             (திருத்: சொல்லுகிற/செல்லுகிற)
பனை மடலேறநிற்பார்கள்.

            3. தன் துணிபுரைத்தல்*
            ---------------------

 *பேரின்பப் பொருள்: "சிவம் பெறாவிடில் உய்யேனென்றருளுடன் செப்பல்"

    தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின் மேல் வைத்துணர்த்தி அது வழியாக நின்று,         (திருத்: வைத்துணிர்த்தி/வைத்துணர்த்தி)
'என்னையும் ஒரு பெண் கொடி பிறரிகழ மடலேறப் பண்ணா நின்றது' என முன்னிலைப் 
புறமொழியாகத் தன்றுணிபு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:

    விண்ணை மடங்க விரிநீர்
        பரந்துவெற் புக்கரப்ப 
    மண்ணை மடங்க வருமொரு
        காலத்து மன்னிநிற்கும் 
    அண்ணல் மடங்க லதளம்
        பலவ னருளிலர் போற் 
    பெண்ணை மடன்மிசை யான்வரப்
        பண்ணிற்றொர் பெண்கொடியே.

     மானவேலவன் மடன்மாமிசை 
    யானுமேறுவ னென்னவுரைத்தது

    இதன் பொருள்:  விண் மடங்க -விண் மடங்கவும்; விரி நீர் பரந்து வெற்புக் கரப்ப- விரிநீர்            (திருத்: கரபப்/கரப்ப)
பரத்தலான் வெற்பொளிப்பவும் : மண் மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் அண்ணல் 
மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய ஒரு காலத்தின் கண்ணும் நிலைபெற்று நிற்கும் அண்ணல்: 
மடங்கல் அதன் அம்பலவன் - சிங்கத்தினது தோலையுடைய அம்பலவன்; அருள் இலர்போல் 
பெண்ணை மடல் மிசை யான்வரப் பண்ணிற்று ஓர் பெண் கொடி - அவன தருளில்லா தாரைப் 
போலப் பிறரிகழப் பனை மடன்மேல் யான்வரும் வண்ணம் அறிவின்மையைச் செய்தது ஒரு பெண் கொடி எ-று.

    விண்ணை மண்ணை என்புழி ஐகாரம்: அசை நிலை. மடங்குதல் - தத்தங் காரணங்களி னொடுங்குதல் 
மடங்கல் - புலி எனினுமமையும். மானம் - கொண்டாட்டம் வேலையுடையவனது மானமாகிய குணம் மேன் 
மேலேற்றப்பட்டதெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு : இளிவரல், பயன்: ஆற்றாமையுணர்த்துதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வீரவேலை யுடையவன் பனை மடலாகிய புரவியின் மேலே 
நானும் ஏறக்கடவேன் என்று சொன்னது.

    செய்யுள்: தேவலோக மழியவும், விரி நீரான் பரந்து மலைகளழியவும், இந்த மண்ணுலகழியவும், 
இப்படிக்கு வருகிற ஊழி இறுதியான காலத்தும் (அன்று) நிலைபெற்று நிற்கும் சுவாமி சிங்கத்தின் 
தோலைத் திருவுடையாக வுடைய திருவம்பலநாதன் திருவருளில்லாதாரைப் போலப் பனை மடற் 
புரவியினாலே நானும் ஏறுவதாகப் பண்ணுவித்தது, ஒருபெண் வடிவாகிய வல்லிக்கொடிச்சாதி.

            4. மடலேறும் வகையுரைத்தல்*
            ---------------------------
*பேரின்பப் பொருள்; "இவன் சிவ னடிமையென் றெவருஞ் செப்ப, இழிபா யெங்குந் திரிவே னென்றது" .

    மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும் பெரு நாணினளாதலிற் சொல்லாடாத 
தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமை தோன்ற நின்று, 'யான் நாளை நின்னூர்த் தெருவே 
மடலுங்கொண்டு வருவேன்; பின் வருவது காண்' எனத் தலைமகன் தான் மடலேறும் வகை கூறா நிற்றல் .
அதற்குச் செய்யுள்:-

    கழிகின்ற வென்னையும் நின்றநின்
        கார்மயில் தன்னையும்யான் 
    கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் 
        கொண்டென் பிறவிகெட்டின் 
    றழிகின்ற தாக்கிய தாளம்
        பலவன் கயிலையந்தேன் 
    பொழிகின்ற சாரல்நுஞ் சிறூர்த் **
        தெருவிடைப் போதுவனே

    அடல்வேலவ னழிவுற்று 
    மடலேறும் வகையுரைத்தது.

** பாடம்: சீருர்த்                     (திருத்: பா-ம்/பாடம்)

    இதன் பொருள்: கழிகின்ற என்னையும் - கழியா நின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில் 
தன்னையும் - யானித்தன்மையனாகவுந் தன்றன்மையளாய் நின்ற நின்னுடைய கார்மயிறன்னையும்; 
கிழி ஒன்ற நாடி எழுதி - கிழிக்கட் பொருந்த ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு - யான் அதனைக் 
கையிற்கொண்டு -  என் பிறவி இன்றுகெட்டு அழிகின்றது ஆக்கியதாள் அம்பலவன் கயிலை- என்பிறவியை 
இன்று கெட்டழியா நின்றதாகச் செய்த தாளை யுடைய அம்பலவனது கைலையின்;  அம்தேன் பொழிகின்ற 
சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் - அழகிய தேன் பொழியா நின்ற சாரற்கணுண்டாகிய நுமது 
சீறூர்த் தெருவின் கட்டிரிவேன்; பின் வருவது காண். எ-று.

    தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய் நின்கார் மயிலென்றான். என்னையும் நின் 
கார்மயிறன்னையும் மடலிடத் தெழுதுவே னென்றது என்னை, கார்மயினை யெழுதுவதன்றித்
தன்னையு மெழுதுமோ : வெனின், மடலெழுதிக் கையிற் கொண்டால் உரையாடுகை யின்றி இவனும்
ஓவியமாகலின் மடலின் றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும் அவள் பேரையும் 
எழுதுகையால் என்னையு மென்றான். கார்மயில் - கார் காலத்து மயில் . அழிகின்றதென நிகழ்காலத்தாற் 
கூறினார், பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே 
வினை நின்றமையின் மெய்ப்பாடும் பயனும் அவை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வெற்றி வேலினையுடையவன் நெஞ்சழிந்து மடலேறும் 
கூறுபாட்டைச் சொன்னது.

    செய்யுள்: நெஞ்சழிகின்ற என்னையும், இதற்குச் சிறிதும் இரங்காதே நின்ற நின்னுடைய 
கார்காலத்து மயிலை ஒப்பாளையும் நான் கிழியிலே பொருந்தும்படி (க்கீடாக). அவருடைய 
அவயவங்களுக்கு உறுப்பானவற்றை விசாரித்தெழுதி என் கையிலே பிடித்துக்கொண்டு. என் சனனம் 
கெட்டழியும்படி செய்த சீபாதங்களையுடைய திருவம்பலநாதனுடைய ஸ்ரீ கயிலாயத்தில் அழகிய 
தேன் பொழின்ற சாரலின் உம்முடைய சிறிய ஊர்த் தெருவுக்கு நடுவே போதக்கடவேன்.     76

            5. அருளாலரிதென விலக்கல்*
            ---------------------------

*பேரின்பப் பொருள் : ''அருளே யுயிரை யழுத்தி நிந்தை, வருமோ பக்குவ வகையா லென்றது''.

    அருளாலரிதென விலக்கல் என்பது தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று 
கூறக் கேட்ட தோழி, இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை 
விட்டுவந்து எதிர் நின்று, நீர் மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று அவன தருளை 
யெடுத்துக்கூறி விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
        நான்முகன் மாலறியாக்
    கடனாம் உருவத் தரன்தில்லை
        மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
    உடனாம் பெடையொடொண் சேவலும் 
        முட்டையுங் கட்டழித்து
    மடனாம் புனைதரின் யார்கண்ண 
        தோமன்ன இன்னருளே.

    அடல்வேலண்ண லருளுடைமையின் 
    மடலேற்றுனக் கரிதென்றது

    இதன் பொருள்:  நடன் - கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன்- நாம் வணங்கும் பழையோன்; 
நான்முகன் மால் எல்லை அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் - நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய 
எல்லைகளை அறியாத இயல்பாகிய வடிவையுடைய அரன் ; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை - அவனது 
தில்லைக் கணுண்டாகிய  வளத்தையுடைய கண்ணிற் சார்ந்த பெண்ணைக்கண்;  உடன் ஆம் பெடையொடு 
ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடல் நாம் புனை தரின் - உடனாகும் பெடையோடும் ஒள்ளிய 
சேவலையும் முட்டையையுங் காவலை யழித்து மடலை நாம் பண்ணின்: மன்ன-மன்னனே; இன் அருள் 
யார் கண்ணது- இனிய அருள் இவ்வுலகத்தில் யார் கண்ணதாம்? எ-று

    அறியாவுருவமென வியையும்; அறியாத அக்கடனுளதா முருவமெனினுமமையும். மடல்விலக்கித் 
தழீஇக் கொள்கின்றாளாதலின் நாமென உளப்படுத்துக் கூறினாள். நின்னருளென்பது பாடமாயின், 
யார் கண்ணருளுவையென்றுரைக்க, அண்ணல்; முன்னிலைக்கண் வந்தது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வெற்றி வேலையுடையவனே? நீ அருளுடையை யாகையாலே 
மடலேறுமது உனக்கு அரிது என்றது.

    செய்யுள்: திருக்கூட்டத்தாடி அருளுகிறவன் நம் போல்வாரும் வணங்குதற் கெளிய பழையவன். 
அவனுடைய திருமுடி திருவடியினெல்லையும் அயனும் மாலும் அறியப்படாத அந்தக் கடப்பாட்டற் 
சிறந்த தலைவன், அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் அழகிய இடம் மிக்க பனையில் அதனுடன் 
ஒன்றப்பட்ட பெடையுடனே அழகிய சேவலையும் முட்டையையும்  காவலழித்து, நாமே மடல் பண்ணுவோமாகில், 
மன்னனே! இனிதாகிய அருள் யாவரிடத்துண்டு? என்று சொல்லியது.          77

            6. மொழிநடை யெழுதலரிதென விலக்கல் *
            ---------------------------------------

*பேரின்பப் பொருள்: ''அருள் சிவத் தருமை யறியப்படாதெனல் (அருமை-குணம், குறி முதலியன.)

    மொழிநடை யெழுதலரிதென விலக்கல் என்பது அருள்  எடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமை கண்டு 
அவன் வழி யொழுகி விலக்குவாளாக  'நுமதருள் கிடக்க மடலேறுவார் மடலேறுதல் மடலேறப்படுவா ருருவெழுதிக்
கொண்டன்றே: நுமக்கு அவள் மொழி நடையெழுதல் முடியா தாகலின் நீயிர் மடலேறுமாறென்னோ ' வென 
விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-

    அடிச்சந்த மால்கண் டிலாதன
        காட்டிவந் தாண்டுகொண்டென் 
    முடிச்சந்த மாமல ராக்குமுன்
        னோன்புலி யூர்புரையுங்
    கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் 
        கன்னி யனநடைக்குப்
    படிச்சந்த மாக்கும் படமுள
        வோநும் பரிசகத்தே

    அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும் 
    இவையிவை தீட்ட லியலா தென்றது

    இதன் பொருள்: சந்தம் மால் கண்டிலாதன அடிகாட்டி வந்து ஆண்டு கொண்டு - மறையும் 
மாலுங் கண்டறியாதன வாகிய அடிகளை எனக்குக் காட்டித் தானே வந்தாண்டு கொண்டு; என் முடிச்சந்த 
மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் அவ்வடிகளை என் முடிக்கு நிறத்தையுடைய பெரிய 
மலராகக் செய்யும் முன்னோனது புலியூரையொக்கும்;  சடிச்சந்த யாழ் கற்ற மென்மொழி-சிறந்த 
நிறத்தையுடைய யாழோசையின் றன்மையைக் கற்ற மென்மொழியையுடைய ; கன்னி அன நடைக்கு-
கன்னியது அன்னத்தினடைபோலு நடைக்கு ; படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்து-
படிச்சந்தமாகப் பண்ணப்படும் படங்கள் உளவோ நுமது சித்திர சாலையின் கண் எ-று.

    கடுச்சந்த யாழ் கற்ற மென்மொழி யென்பதற்குச் சிறந்தவோசையையுடைய யாழ் வந்தினிதாக 
வொலித்தலைக் கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர். படிச்சந்த மென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய் 
அதுவென்றே கருதப்படு மியல்பையுடையது. படிச்சந்த மென்பது : பிரதிச்சந்தமென்னும் வடமொழிச்சிதைவு.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவயவங்களை அரிதாக நாயகனே! நீ எழுதினாய்; ஆகிலும் 
இவற்றை உன்னாலே எழுதவொண்ணாது என்றது .

    செய்யுள்: வேதமும் மாலும் கண்டறியாத ஸ்ரீ பாதங்களை எனக்குக் காட்டி என்னை வந்து அடிமை 
கொண்டு அத்திருவடிகளை என் தலைக்கே பெரிதாகிய மலர்களாகச்  செய்கின்ற பழையவன். அவனுடைய 
புலியூரை யொத்த சிறந்த நிறமுடைத்தாகிய யாழோசையைக் கற்ற  மென்மொழிக் கன்னி அன்னம் போலே 
நடக்கிற நடைக்கும் (அது எழுத வராது) எழுதுகிற சித்திரங்களுமுண்டோ உன்னுடைய சித்திரசாலையிடத்து?     (திருத்: சித்ரதிங்கள்/சித்திரங்கள்)
உண்டாமாகில், கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக.         78

            7. அவயவமெழுத லரிதென விலக்கல்*
            -----------------------------------

* பேரின்பப் பொருள். சிவனது கருணையுஞ் செயலுமொருவரால், அறியப்படாதிஃதரிதே யென்றது.        (திருத்: மொவரூரால்/மொருவரால்)

    அவயவ மெழுதலரிதென விலக்கல் என்பது 'அவளது மொழிநடை கிடக்க இவை தாமெழுத 
முடியுமோ?  முடியுமாயின் யான் சொன்ன படியே தப்பாமலெழுதிக் கொண்டு வந்தேறும்' என்று 
அவளதவயவங் கூறா நிற்றல் , அதற்குச் செய்யுள் -

    யாழுமெழுதி யெழின்முத்
        தெழுதி யிருளின்மென்பூச் 
    சூழு மெழுதியொர் தொண்டையுந்
        தீட்டியென் தொல்பிறவி 
    ஏழு மெழுதா வகைசிதைத்
        தோன்புலி யூரிளமாம் 
    போழு மெழுதிற்றொர் கொம்பருண் 
        டேற்கொண்டு போதுகவே.

    அவயவ மானவை. யிவையிவை யென்றது

    இதன் பொருள்: யாழும் எழுதி - மொழியாக மொழி யோடொக்கும் ஓசையையுடைய 
யாழையு மெழுதி ; எழில் முத்தும் எழுதி -முறுவலாக எழிலையுடைய முத்துக்களையுமெழுதி;             (திருத்: முத்துக்கனை/முத்துக்களை)
இருளில் மென்பூச் சூழும் எழுதி குழலாக இருளின் கண் மெல்லிய பூவானியன்ற குழையு மெழுதி: 
ஓர் தொண்டையும் தீட்டி-வாயாக ஒரு தொண்டைக் கனியையுமெழுதி, இளமாம் போழும் எழுதிற்று 
ஓர் கொம்பர் உண்டேல் -- கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர் கொம்ப 
ருண்டாயின்; கொண்டு போதுக - அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ-று. 
என் தொல் பிறவி ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இளமாம் போழும் - என்னுடைய 
பழைய வாகிய பிறவிகளேழையும் கூற்றுவன் தன் கணக்கிலெழுதாத வண்ணஞ் சிதைத்தவனது 
புலியூரிளமாம் போழுமெனக் கூட்டுக.

    முத்து மென்னு மும்மை விகார வகையாற் றொக்கு நின்றது. சூழென்றது சூழ்ந்த மாலையை .
செய்தெனெச்சங்கள் எழுதிற் றென்னுத் தொழிற் பெயரின் எழுதுதலோடு முடிந்தன. எழுதிற்றென்பது 
செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறி நின்றது. வினையெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு
மமையும்.  மொழியும் இவளதாகலின் அவயவமென்றாள்.  இவை மூன்றற்கும் மெய்ப்பாடு நகை.
பயன்: மடல் விலக்குதல்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவளுக்கு அவயவங்களாவன இன்னதின்ன தென்று 
குறித்துச் சொன்னது.

    செய்யுள்: அவர் வார்த்தைக்கு ஒக்க இசை எழுகிற யாழோசையும் எழுதி முறுவலாக அழகிய 
முத்து நிரையும் - எழுதி, கூந்தலும் மாலையுமாக இருளிடத்தே மெல்லிய பூவாலே தொடுக்கப்பட்ட 
மாலையும் எழுதி வாயாக ஒருவகைக் கோவைக் கனியும் எழுதி, என்னுடைய பழைய பிறவிகள் 
ஏழையும் கூற்றுவன் கணக்கிலே எழுதாதபடி அழித்தவன் அவனுடைய புலியூரில் இளமாவடு 
வகிரையும் எழுதினதொரு வஞ்சிக் கொம்புண்டாமாகில் கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக .     79

            8. உடம்படாது விலக்கல்*
            -----------------------
*பேரின்பப் பொருள் : ''சிவத்திடை யாமே சேர்த்து மென்று, வன்மை யொழியும் வகையை யுரைத்தது".

    உடம்படாது விலக்கல் என்பது எழுதலாகாமை கூறிக் காட்டி 'அதுகிடக்க. நும்மை யாம் 
விலக்குகின்றே மல்லேம்; யான் சென்று அவணினைவறிந்து வந்தாற் பின்னை நீயிர் வேண்டிற்றைச் 
செய்யும்; அவ்வளவும் நீயிர் வருந்தா தொழியு' மெனத் தானுடம்படாது விலக்கா நிற்றல், அதற்குச் செய்யுள் -        (திருத்: அதற்கு/அதற்குச்)

    ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
        திண்மடல் நின்குறிப்புச் 
    சீர்வாய் சிலம்ப திருத்த
        இருந்தில மீசர்தில்லைக்
    கார்வாய் குழலிக்குன் னாதர 
        வோதிக்கற் பித்துக்கண்டால்
    ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
        செய்க அறிந்தனவே

    அடுபடையண்ண லழிதுயரொழிகென 
    மடநடைத்தோழி மடல்விலக்கியது.

    இதன் பொருள்: உயர் பெண்ணைத் திண் மடல் ஊர்வாய்; உயர்ந்த பெண்ணையினது திண்ணிய
மடலையூர்வாய் - ஒழிவாய்-அன்றியொழிவாய்; சீர்வாய் சிலம்ப - அழகு வாய்த்த சிலம்பை யுடையாய்; 
நின் குறிப்புத் திருத்த இருந்திலம் நின் கருத்தை யாந்திருத்த விருந்தேமல்லேம்;  ஈச; தில்லைக் கார்வாய் 
குழலிக்கு உன் ஆதரவு ஓதி- ஈசரது தில்லைக் கணுளளாகிய கருமை  வாய்த்த குழலையுடையாட்கு உனது 
விருப்பத்தைச் சொல்லி; கற்பித்துக் கண்டால் - இதற்கு அவளுடம்படும் வண்ணஞ் சிலவற்றைக் கற்பித்துப் 
பார்த்தால்; வாய்தரின் ஆர் அறிவர்- இடந்தருமாயினும் யாரறிவார்; பின்னை அறிந்தன செய்க-
 இடந்தாராளாயிற் பின் நீயறிந்தவற்றைச் செய்வாயாக எ-று. 

    கார் போலுங் குழலெனினுமமையும். வாய்தரினென்பதற்கு வாய்ப்பினெனினுமமையும்,
 பின்னைச் செய்கவென்றது நீ குறித்தது செய்வாயாயினும் என் குறிப்பிது வென்றவாறு.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொல்லுகின்ற படைகளை வுடைய அண்ணலே உன்னை 
அழித்தற்குக் காரணமான வருத்தத்தை ஒழிப்பாயாக' என்று மடப்ப நடையை உடைய தோழி கூறி 
மடல் விலக்கியது.

    செய்யுள்: "உயர்ந்த பனையிற் சிக்கென்ற மடலை நீ ஊரினும் ஆம்; ஒழியினும் ஆம்
 நின்னுடைய நினைவை: சிறப்பு வாய்ந்த மலையினை யுடையவனே! நாங்கள் திருத்த 
விருந்தோமல்லோம்; முதலியாருடைய தில்லையில் கருமை மிகுந்த கூந்தலையுடையாளுக்கு 
உன் ஆசையைச் சொல்லி, அவள் உடன்படும்படி கற்பித்துப் பார்த்தால், அவள் அதற்கு இடம் தரினும், 
யாராலே அறியப்படும்? பின்பு நீ அறிந்தனவற்றைச் செய்து கொள்'' என்று மடல் விலக்கினது.

    நான் போய் அவள் நினைவு அறிந்து வருவேன். அது வரையில் நீ வருந்தாதொழி
என்றது கருத்து.             80

            9. உடம்பட்டு விலக்கல்*
            ---------------------

*பேரின்பப் பொருள் : ''என் வழிச் சிவமே யிருத்தலால் உன்றன் குறையுங் கூறிக் கூட்டுவ னென்றது."

    உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது முன் பொதுப்பட விலக்கி முகங்கொண்டு பின்னர்த் 
தன்னோடு அவளிடை வேற்றுமையின்மை கூறி, 'யான் நின் குறை முடித்துத் தருவேன்: நீவருந்த வேண்டா' 
வெனத்தோழி தானுடம்பட்டு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    பைந்நா ணரவன் படுகடல்
        வாய்ப்படு நஞ்சமுதாம்
    மைந்நாண் மணிகண்டன் மன்னும்
        புலியூர் மணந்தபொன்னிம்
    மொய்ந்நாண் முதுதிரை வாயா 
        னழுந்தினு மென்னின்முன்னும்
    இந்நா ளிதுமது வார்குழ 
        லாட்கென்க ணின்னருளே.

    அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென் 
    னுள்ளக் கருத்து விள்ளா ளென்றது.

    இதன் பொருள்: பை நாண் அரவன் - பையையுடைய அரவாகிய நாணையுடையான்; 
படு கடல்வாய் படு நஞ்சு அமுது ஆம் மை நாண் மணிகண்டன் - ஒலிக்குங் கடலிடத்துப் பட்ட 
நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; மன்னும் புலியூர் 
மணந்த பொன்- அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; நாள் மொய் 
இம் முது திரை வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் - நாட்காலத்தாடும் பெருமையையுடைய 
இம்முதிய கடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; மது வார் குழலாட்கு 
என்கண் இன் அருள் இந் நாள் இது - தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள் 
இப்பொழு தித்தன்மைத்தாயிரா நின்றது எ-று

    அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு நிலப்பெயர் கொண்டது, மைந்நாணுங் 
கண்டமெனவியையும், மணிகண்டனென்பது வடமொழி யிலக்கணத்தாற் றொக்குப்பின் றிரிந்து
 நின்றது.  மொய் வலி;  ஈண்டுப் பெருமை மேனின்றது. குற்றேவல் செய்வார்கட் பெரியோர் செய்யும் 
அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள், 
எனவே தலைமகளது பெருமையுந் தன் முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று.  அரா குரா 
வென்பன குறுகி நின்றன. வருமென்பது : உவமைச்சொல். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன் : தலைமகனை யாற்றுவித்தல்.

            மடற்றிறம் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாம்பின் படம் போன்ற அல்குல் சேர்ந்த நுண்ணிய 
இடையினையும், மணம் பொருந்தின கூந்தலையு முடையவள் எம்மனத்து நினைவை நீங்காள் 
எனச் சொல்லியது.

    செய்யுள்: படமுடைய பாம்பைத் திருவரை ஞாணா உடையவன் சத்திக்கிற கடலிடத்தே 
யுண்டாகி நஞ்சமுதாகிற கருமை நாணத் தக்க நீலமணியை யொத்த திருமிடற்றை யுடையவன். 
அவன் நிலைபெற்ற பெரும்பற்றப்புலியூரிலே பொருந்தின பொன்னை யொப்பாள்; நாட்கடலாடுமிடத்தே 
இந்தச் செறிந்த முதிர்ந்த திரையுடைத்தாகிய கடலிடத்தே நான் அழுந்தினும், எனக்கு முற்பட்டுத் 
தான் அழுந்தா நிற்பாள்: இற்றைவரை (தேன் ஒழுகும் கூந்தலையுடையாளுக்கு என்னிடமுள்ள 
இனிய அருள்) இப்படியிருக்கும், இனித் தெரியாது.          81

            11. குறைநயப்புக் கூறல்*
            -----------------------

*பேரின்பக் கிளவி: "குறைநயப் புத்துறை யவையிரு நான்குஞ் சிவத்தோ டுயிரைச் சேர்க்க வேண்டி.
 உயிர்ப்பரி வெடுத்தெடுத் துரைத்தறி வுறுத்தல்".

    குறைநயப்புக் கூறல் என்பது தலைமகனை மடல் விலக்கிக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் 
குறைநயப்பிக்க அவன் குறை கூறா நிற்றல், அது வருமாறு:-

    குறிப்பறித லோடு மென்மொழி கூறல்
        விரவிக் கூற லறியாள் போறல்
    வஞ்சித் துரைத்தல் புலந்து கூறல் 
        வன்மொழி கூறன் மனத்தொடு நேர்தல்
    சொன்னவிரு நான்குந் துறைகுறை நயப்பென
         மன்னிய பொருளியல் வகுத்திசி னோரே

    இதன் பொருள்: குறிப்பறிதல், மென்மொழியாற் கூறல், விரவிக்கூறல், அறியாள் போறல், 
வஞ்சித்துரைத்தல், புலந்து கூறல், வன்மொழியாற் கூறல், மனத்தொடு நேர்தல் எனவிவை யெட்டுங்
குறை நயப்பித்தலாம் எ.று அவற்றுள் :

            1.  குறிப்பறிதல்*
            ---------------
*பேரின்பப் பொருள் : ''சிவத்தோ டுயிரைச் சேர்பரி வுரைத்தவ், வருள்சிவக் குறிப்பை யாராய்ந்தது"

    குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத்  துணியா நின்றதோழி தெற்றெனக் கூறுவேனாயின் 
இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, 'நம்புனத்தின் கட்சேயினது வடிவை யுடையராய்ச் 
சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்: வந்து நின்று ஒன்று சொல்லுவதுஞ் செய்கின்றிலர்:
அவரிடத்து யாஞ் செய்யத்தக்க தியாது' எனத்தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி, 
அவணினை வறியா நிற்றல். என்னை, ' ஆங்குணர்ந்தல்லது கிழவோ டேத்துத், தான்குறை யுறுத 
றோழிக்கில்லை" (இறையனாரகப் பொருள், 8) என்பவாகலின். அதற்குச் செய்யுள் : -

    தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை 
        வண்டுதண் டேன்பருகித்
    தேதே யெனுந்தில்லை யோன்சே
        யெனச்சின வேலொருவர்
    மாதே புனத்திடை வாளா 
        வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
    யாதே செயத்தக் கதுமது
        வார்குழ லேந்திழையே

    நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற் 
    குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.

    இதன் பொருள்: மாதே - மாதே, தாது ஏய் மலர்க்குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி - 
தாது பொருந்திய மலரையுடைய குஞ்சிகளின் கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் 
தண்டேனைப் பருகி: தேதே எனும் தில்லையோன் சேய் என -தேதேயெனப்பாடுந் தில்லையையுடை
யானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சினவேல் ஒருவர் புனத்திடை 
வாளா வருவர்- சினவேலையுடையா ரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாரா நிற்பர்; 
வந்து யாதும் சொல்லார் - வந்து நின்று ஒன்று முரையாடார்; மதுவார் குழல் ஏந்திழையே- 
மது வார்ந்த குழலையுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து 
நாஞ்செய்யத் தக்கது யாதென்றறி கின்றிலேன் எ-று. 

    குஞ்சி- தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென் றுரைப்பினு 
மமையும். சேயோடொத்தல், பண்பு வடிவு முதலாயினவும், சின வேலேந்தி வரையிடத்து வருதலுமாம்.
வேட்டை முதலாகிய பயன் கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம் புகுகின்றாளாதலின், 
பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்கு நின்றது; என்னை, 
மேலே 'புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்" (திருக்கோவையார், 83) 
என வருதலான் யாதே யென்னுமேகாரம்: வினா. மாதே  ஏந்திழையே என்புழி ஏகாரம்; விளியுருபு.
அறிகுற்ற வென்பது அறியவேண்டிய வென்னும் பொருட் கண் வந்த ஒரு மொழிமுடிபு.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நறு நாற்றமிக்க மாலையினை யுடையாளைக் குறையை 
விரும்ப விருப்பது காரணமாக மனத்தின் நினைவை அறிவதாகவுற்ற அழகிய ஆபரணங்களை 
யுடையாள் சொன்னது.

    செய்யுள்: பெரும்பற்றப்புலியூரி வாழ்வாருடைய மயிரிலேயுள்ள அல்லி பொருந்தின பூக்களிலே
அழகிய நிறத்தை யுடைத்தாகிய வண்டுச் சாதிகள் குளிர்ந்த தேனையுண்டு 'தே தே' என்று இசை 
யெழுப்புகிற பெரும்பற்றப் புலியூரில் முதலியாருடைய மகனாகிய கந்தச்சுவாமி என்னும் படி 
சினத்த வேலையுடையார் ஒருவர், "மாதே! நம்புனத்திடத்தே வேட்டை முதலாயின வொன்றும் குறியாதே 
வருவர்; வந்து ஒரு மாற்றமும் சொல்லார்; அவர் திறத்து நாம் செய்யக் கடவதெது? தேனார்ந்த கூந்தலினையும் 
மிக்க ஆபரணங்களையும் உடையாய்!" (வேலினையுடையவர் தளர்ச்சியுறுகின்றமையை அவர் திறந்து 
நாம் செய்யக் கடவதெது? சொல்வாயாக.)

            2. மென் மொழியாற் கூறல்*
            -------------------------
*பேரின்பப்பொருள்: அருள்பணி மொழியா லரற்கறி வுறுத்தல்.

    மென்மொழியாற் கூறல் என்பது நினைவறிந்து முகங் கொண்டு அது வழியாக நின்று,
'ஒருபெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம்புனத்தை விட்டுப் பேர்வதுஞ் 
செய்கின்றிலன்; தன் குறை இன்னதென்று வெளிப் படச்சொல்லுவதுஞ் செய்கின்றிலன்; 
இஃதென்ன மாயங் கொல்லோ: அறிகின்றிலே' னெனத் தோழி தான் அதற்கு நொந்து 
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் 
        மிக்கென்ன மாயங்கொலோ
    எரிசோ தளிரன்ன மேனியன்
         ஈர்ந்தழை யன்புலியூர்ப்
    புரிசேர் சடையோன் புதல்வன் கொல் 
        பூங்கணை வேள் கொலென்னத் 
    தெரியே முறையான் பிரியா 
        னொருவனித் தேம்புனமே

    ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை 
    இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

    இதன் பொருள் : வரிசேர் தடங்கண்ணி- வரிசேர்ந்த பெரிய கண்ணையுடையாய்; ஒருவன் மம்மர் 
கைம்மிக்கு- ஒருவன் மயக்கங் கைம்மிக்கு; எரிசேர் தளிர் அன்ன மேனியன் எரியைச் சேர்ந்த தளிரை யொக்கும்     (திருத்: கைக்மிக்கு/கைம்மிக்கு)
மேனியையுடை யனுமாய் ஈர்ந்தழையன் -வாடாத தழையையுடையனுமாய்; இத்தேம் புனம் பிரியான்- 
இத் தேம்புனத்தைப் பிரிகின்றிலன்; உரையான் ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர் 
சடையோன் புதல்வன் கொல் பூங்கணை வேள் கொல் என்னத் தெரியேம் - அவன்றன்னைப் 
புலியூர்க்கணுளனாகிய புரிதலைச் சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய 
அம்பையுடைய காமவேளோ வென்று யாந் துணிகின்றிலேம் ; என்ன மாயம் கொலோ - ஈதென்ன மாயமோ! எ-று.

    அவ்வாறு இறப்பப் பெரியோன் இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்த
முடைத்தென்னுங் கருத்தால் என்னமாயங்கொலோ வென்றாள். புலியூர்ப் புரிசேர் சடையோன் 
புதல்வன் கொலென்றதனால் நம்மை யழிக்க வந்தானோ வென்றும், பூங்கணை வேள் 
கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர் சடையோன் 
புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்:ஐயம். மேனியன் தழையனென்பன
வினையெச்சங்கள். மென்மொழி மொழிந்தது - மென்மொழியான் மொழிந்தது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : விளக்க மிக்க வேலினை யுடையவன் தளர்ச்சி        (திருத்: வேவிலை/வேலினை)
யுறுகின்றமையை இனிய வார்த்தையுடைவளுக்கு மெல்லிதாகச் சொல்லிக் குறையை நயப்பித்தது. 

    செய்யுள்: வரி பொருந்தின பெரிய கண்களையுடையாய்! மயக்கம் மிகுந்து,  இதுவென்ன 
மாயந்தான் !  நெருப்பைச் சேர்ந்த  தளிரை யொத்த நிறத்தையுடையனாய்க் குளிர்ந்த தழையையு
முடையனாய்ப் பெரும்பற்றப்புலியூரில் நெறித்த திருச் சடையினை யுடைய முதலியார் புத்திரனாகிய 
முருகவேளோ? பூவினை அம்பாக வுடைய காமவேளோ?' என்னத்தெளியேம்; இருவரில் ஒருவராக;
 நிச்சயித்தறிய மாட்டோம்.  தன் குறை இன்னதென்று சொல்லான் இத்தன்மையனான ஒருவன் 
இத்தேனுடைத்தாகிய புனத்தை விட்டு நீங்குவதும் செய்திலன்; (இது என்ன மாயந்தான்!)     89

            3. விரவிக்கூறல்*
            --------------

*பேரின்பப் பொருள் : உயிர்ப்பரி வுவமையா லுவந்தரு ளுரைத்தது,

    விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மன மெலியுமென்றஞ்சி ஓரலவன் தன்பெடைக்கு 
நாவற் கனியை நல்கக்கண்டு ஒரு பெருந்தகை பேய்கண்டாற் போல நின்றான்; அந்நிலைமையை நீ 
கண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலான் ஆற்றி யுளேனாய்ப்  போந்தே'னென 
மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் - - 

    நீகண் டனையெனின்  ** வாழலை
        நேரிழை யம்பலத்தான்
    சேய்கண் டனையன்சென் றாங்கோ 
        ரலவன்றன் சீர்ப்பெடையின்
    வாய்வண் டனையதொர் நாவற்
        கனிநனி நல்கக்கண்டு*
    பேய்கண் டனையதொன் றாகிநின் 
        றானப் பெருந்தகையே

    வன்மொழியின் மனம் மெலிவதஞ்சி 
    மென்மொழி விரவி மிகுத்துரைத்தது

**பாடம்- டனையென்னில்,  *நல்கல் கண்டு

    இதன் பொருள்:  நேர் இழை- நேரிழாய், அம்பலத்தான் சேய் கண்டனையன்-அம்பலத்தான் புதல்வனைக் 
கண்டாற் போன்றிருக்கும் ஒருவன்; ஆங்கு ஓர் அலவன் தன் சீர்ப் பெடையின் வாய்கண்டு அனையது ஓர் நாவல் 
கனி சென்று நனிநல்கக் கண்டு - அவ்விடத்து  *ஓரலவன் தனதழகையுடைய பெடையின் வாயின்கண் 
வண்டனையதொரு நாவற்கனியைச் சென்று மிகவுங் கொடுப்ப அதனைக்கண்டு- அப்பெருந்தகை 
பேய் கண்டனையது ஒன்று ஆகிநின்றான்- அப்பெருந்தகை பேயாற் காணப்பட்டாற் போல்வதோர்
வேறுபாட்டை யுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை-அந்நிலையை நீ கண்டாயாயின்
உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலின், அதனைக் கண்டும் ஆற்றியுளேனாயினேன் எ- று 

 *இதனோடு திருக்கோவை, 155-ஆம் பாடல் ; அகம் 380, வரி 4-7 ஒப்பிடுக.

    பேய்கண்டனைய தென்பதற்குப் பேயைக் கண்டாற் போல்வதோர் வேறுபாடென் 
றுரைப்பினுமமையும்.பேய் கண்டனைய தொன்றை யுடையனா யென்னாது ஒற்றுமை நயம்பற்றி 
ஒன்றாகி யென்றாள். நாவற்கனியை நனி நல்கக்கண்டு தன்னுணர்வொழியப் போயினான். இன்று  
வந்திலனென்னாது பேய்கண்டனைய தொன்றாகி  நின்றானென்று கூறினமையான் மென்மொழியும்,       (ஐயம்: மென்வன் மொழியிடமாறியுள்ளதோ ?)
சேய்கண்டனைய   னென்றதனால் வன்மொழியும் விரவியதாயிற்று . மிகுத்தல்- ஆற்றாமை மிகுத்தல் 
இவை மூன்றற்கும் மெய்ப்பாடு; இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை 
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வலிதாகச் சொல்லிக் குறை நயப்பிக்குமிடத்து ,
நாயகியுடைய மனம்  வாடுமென்று பயப்பட்டு மென்மையினையும் கலந்து நாயகனுடைய  
ஆற்றாமையைச் சொன்னது .

    செய்யுள் : நேரிழை! நுண் தொழில்களாற் சிறந்த ஆபரணங்களையுமுடையாய் ! நான் முன்பு
சொன்ன பெரிய தகைமைப் பாட்டையுடையவன் ,   திருவம்பல    நாதனுடைய பிள்ளையாகிய
முருகவேளைக் கண்டாலொப்பன்;  அவனுடைய சன்னதியிலே ஒரு சேவல் நண்டு தன்னுடைய 
சீரிய பெடை நண்டின் வாயிலே வண்டு போல் கரியதொரு நாவற்கனியைக்  கொடுக்கக்  கண்டு, 
பேயைக்கண்டவர்கள் தங்கள் உணர்வு இழந்து நின்றாற்போலத் தன்னுணர்வு   இழந்து நின்றான்;
காண்   இத்தன்மையை; நீ கண்டாயாமாகில் உயிர் வாழமாட்டாய் காண்.

    சென்று-தான் பழமெடுத்த இடத்தினின்றும் சென்று நனி உணர்விழத்தலும் கூடும் (?)     84

            4. அறியாள் போறல்*
            --------------------

* பேரின்பப் பொருள்: சிவமருட் கறியமற் றொன்றாற் செப்பல்

    அறியாள் போறல் என்பது பேய்கண்டாற்போல நின்றானெனத் தலைமகனிலைமை 
கேட்ட தலைமகள் பெரு நாணினளாதலின் இதனையறியாதாளைப்போல, "இஃதொரு கடல் 
வடிவிருந்தவாறு காணா' யெனத் தானொன்று கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -

    சங்கந் தருமுத்தி யாம்பெற
        வான்கழி தான்கெழுமிப் 
    பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
        பொலிகலிப் பாறுலவு
    துங்க மலிதலை யேந்தலி
        னேந்திழை தொல்லை ப்பன்மா
    வங்கம் மலிகலி நீர்தில்லை 
        வானவன் நேர்வருமே

    அறியாள் போன்று, குறியாள் கூறியது .

    இதன் - பொருள்: ஏந்திழை ஏந்திழாய்; பல்மா வங்கம் மலி தொல்லைக் கலி நீர் தில்லை 
வானவன் நேர் வரும் இத் தன்மைத்தாகலிற் பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற 
பழையதாகிய கடல் தில்லைவானவற் கொப்பாம் எ - று; சங்கம் தரு முத்து யாம் பெற வான்கழிதான் 
கெழுமி- சங்கு தரு முத்துக்களை யாம்பெறப் பெரிய கழிகளைத் தான் பொருந்தி; பொங்கும் புனற் 
கங்கை தாங்கி -பொங்கும்  புனலையுடைய  கங்கையைத் தாங்கி; பொலி கலிப்பாறு உலவு துங்கம் 
 மலிதலை  ஏந்தலின் -  பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்க ளியங்குந் 
திரைகளின் மிகுதியை யுடைத்தாகலின், எனக் கடலிற்கேற்பவும்-

    சங்கம் தரும் முத்தி யாம் பெற வான் கழி தான் கெழுமி. திருவடிக்கணுண்டாகிய 
பற்றுத் தரும் முத்தியை யாம் பெறும் வண்ணம் எல்லாப் பொருளையும் அகப்படுத்தி நிற்கும் 
ஆகாயத்தையுங் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்தி; பொங்கும் புனற்கங்கை
தாங்கி- பொங்கும் புனலையுடைய கங்கையைச் சூடி; பொலி கலிப்பாறு உலவு துங்கம்  மலிதலை 
ஏந்தலின்- மிக்க ஆரவாரத்தையுடைய பாறாகிய புட்கள் சூழா நின்ற உயர்வுமிக்க தலையோட்டை
யேந்துதலின், எனத் தில்லை வானவற் கேற்பவும் உரைக்க.

    வான்கழி - சிவலோக மெனினு மமையும். குறை நயப்பாற்றலை மகனிலைமை கேட்ட
தலைமகள் பெரு நாணினளாகலின், மறுமொழிகொடாது பிறிதொன்று கூறியவாறு.

     ஒரு சொற்றொடர் இரு பொருட்குச் சிலேடையாயினவாறு போலத் தோழிக்கும் 
ஓர்ந்துணரப்படும். ஓர்ந்துணர்தலாவது இவ்வொழுக்கங் களவொழுக்க மாகையாலும்        (திருத்: ஓர்ந்துணர்தாலவது/ஓர்ந்துணர்தலாவது)
தலைமகள் பெருநாணின ளாகையாலும், முன்றோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு 
வெளிப்படையாக மறுமொழி கொடாது, ஓர்ந்து கூட்டினால் மறுமொழியாம்படி கடலின் 
மேல் வைத்துக் கூறினாள். 

    என்னை , முன்னர் நீ புரிசேர் சடையோன் புதல்வனென்றும், பூங்கணைவேளென்றும் 
உயர்த்துக் கூறியவெல்லாம் அவனுக்குரிய, அங்ஙனம் பெரியவன் தன் மாட்டுண்டான புணர்ச்சியான 
பேரின்பத்தை நாம்பெறுகை காரணமாக இங்ஙன மெளிவந்து உன்னை வந்து சேர்ந்தான்;
அஃதென் போலவெனின், பெறுதற்கரிய சங்கு தருகிற முத்தை நாம் பெறுவான் எளிதாகக் கடல் 
பெரியகழியை வந்து பொருந்தினாற்போல, இனி உனக்கு வேண்டியது செய்வாயாகவென 
மறுமொழி யாயிற்று. மெய்ப்பாடு : மருட்கை, தோழி சொன்ன குறை யறியாள் போறலிற் 
பயன்: அறியாள் போறல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பாங்கி சொன்ன வார்த்தையை அறியாதாள் போன்று 
தன் நெஞ்சில் நினையாதொன்றைச் சொல்லியது.

    செய்யுள்:  மிக்க ஆபரணங்களையுடையாய் !  பழையதாய்ப் பலவாய மிக்க மரக்கலங்களால் 
சிறந்த கடல் பெரும்பற்றப் புலியூரில் தேவனாகிய முதலியாரை ஒக்கும் காண்:

    அதற்குக் காரணம் என் எனில், சிலேடையினாலே ஒக்கும்:

    அன்பு தருகிற முத்தியை அன்பிலாத நாமும் பெறும்படி ஆகாயத்தையும் கழிந்துள்ளதான 
ஒரு திருவடியிலே பொருந்தி மிக்க நீருடைத்தாகிய கங்கையையும்  திருச்சடையிலே  தரித்துப் 
பொலிந்தவர் வார்த்தை யுடைத்தாகிய பற்றென்னும் புட்கள் உலாவப்பட்ட பெருமை மிக்க 
தலையோட்டைத் தரித்தலானும்:

    சங்குதரும் முத்துக்களை முத்துக் கொழிப்பாரே யன்றி நாமும் பெறும்படி மிக்க கழிகளைத் 
தான் பொருந்தி மிக்க நன்னீரை யுடைத்தாகிய கங்கை முதலாகிய ஆறுகளையும் தரித்து மிக்கவர் 
வார்த்தை உடைத்தாகியவாறு  படகுகள் உலவப்பட்ட பெருமை மிகுதலையும் தரித்தலாலே: -

    தில்லை வானவனையொக்கும்.         85

            5. வஞ்சித்துரைத்தல்*
            --------------------

*பேரின்பப் பொருள் : சிவமுயிர்க் கொன்றாற் பின்னுஞ் செப்பல்

    வஞ்சித்துரைத்தல் என்பது நாணினாற் குறை நேரமாட்டாது வருந்தா நின்ற தலைமகள், 
'இவளும் பெருநாணின ளாதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப்  பின் முடிப்பாளாயிரா நின்றாள்;
இதற்கியானொன்றுஞ்  சொல்லா தொழிந்தால் எம்பெருமான்  இறந்துபடுவனென உட்கொண்டு, 
தன்னிடத்து நாணினை விட்டுப்  பாங்கற்கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத் துவளா 
நின்றானென்பது தோன்றப், பின்னும் வெளிப்படக்கூறமாட்டாது மாயவன் மேல் வைத்து வஞ்சித்துக் 
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் : - 

    புரங்கடந் தானடி காண்பான் 
        புவிவிண்டு புக்கறியா
    திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் 
        னீரடிக் கென்னிரண்டு
    கரங்கடந்தானொன்று காட்டமற் 
        றாங்கதுங் காட்டிடென்று
    வரங்கிடந் தான்தில்லை யம்பல
        முன்றிலம் மாயவனே

    நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை 
    செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக் குரைத்தது.

    இதன் பொருள்: புரம் கடந்தான் அடி காண்பான்- புரங்களைக் கடந்தவனது அடிகளைக் 
காணவேண்டி; 'புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்ப- நெறியல்லா நெறியான் 
நிலத்தைப் பிளந்து கொண்டு புக்குக் காணாது பின் வழிபட்டு நின்று எந்தாய் அருள வேண்டுமென்றிரப்ப, 
தன் ஈரடிக்கு என் இரண்டு  கரங்கள் தந்தான் ஒன்று காட்ட  - தன்னுடைய இரண்டு திருவடிகளையுந் 
தொழுதற்கு  என்னுடைய  இரண்டு கரங்களையுந் தந்தவனாகிய அவன் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்ட; 
மற்று ஆங்கதும் காட்டிடு என்று தில்லை அம்பல முன்றில் அம் மாயவன் வரம் கிடந்தான்- மற்றதனையுங் 
காட்டிடல்  வேண்டுமென்று தில்லையம்பல முற்றத்தின் கண் முன்னர்  அவ்வாறு யானென்னுஞ் செருக்காற் 
காணலுற்ற மாயவன் வரங்கிடந்தாற் போலும் எ-று.

    விண்டென்பதற்கு முன்னுரைத்ததே (திருக்கோவையார், 24) உரைக்க. மாயவன் முதலாயினார்க்கு 
அவ்வாறரியதாயினும் எம்மனோர்க்கு இவ்வாறெளிவந்தன வென்னுங் கருத்தால், - தன்னடிக் கென்னிரண்டு 
கரங் கடந்தானென்றார். ஆங்கதென்பது ஒரு சொல், இன்னும்  வரங்கிடக்கின்றானாகலின், முன்கண்டது 
ஒன்று போலு மென்பது கருத்து, புரங்கடந்தா  னடிகளைக் காணுமாறு வழிபட்டுக்  காண்கையாவது: 
அன்னத்திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடுமாதலால் இவரிங்ஙனந் தத்த நிலைப்பரிசே தேடுதல்.

     இவ்வாறு தேடாது தமதகங்காரத்தினால் மாறுபட்டுப் பன்றி தாமரையும், அன்னங் காடுமாகப் 
படர்ந்து தேடுதலாற் கண்டிலர்.  இது நெறியல்லா நெறி யாயினவாறு. இனி இது தோழிக்குத் தலைவி
மறுமொழியாகக் கூறியவாறு என்னை?  ஒன்று காட்டவென்றது முன்னர்ப் பாங்கற் கூட்டம் பெற்றான். 
அதன் பின் நின்னினாயகூட்டம் பெறுகை காரணமாக  நின்னிடத்து வந்திரந்து குறையுறா நின்றான்; 
அஃதென் போல வெனின், மற்றாங்கதுங் காட்டிடென்று மால் வரங்கிடந் தாற்போல என்றவாறு.

    வஞ்சித்தல்- மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல். 
இவையிவை - முன்னர்ப் பாட்டும் இப்பாட்டும். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்.
இவையிவையென்னு மடுக்கானும், இனி 'உள்ளப்படுவன வுள்ளி' எனத் தலைமகளோடு புலந்து 
கூறுகின்றமையானும் இவ்விரண்டு திருப்பாட்டும் மகள் கூற்றாதலே பொருத்தமுடைத் தென்பதறிக. 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  நெஞ்சத்தில் நிகழ்கிற படியைக் கரந்து செஞ்சடையோன் 
புகழாகியவற்றைத் தோழிக்குச் சொன்னது.

    செய்யுள்:  முப்புரங்களையும்  செயித்தவனுடைய திருவடிகளைக் காண வேண்டிப் பூமியை இடந்து 
புகுந்து, அகங்கார முகத்தினால் அறியப்படாமையாலே திருவம்பலத்திலே புகுந்து' நீயே இரங்க வேண்டும், 
எந்தாய்' என்று வேண்டிக் கொள்ளத் தன்னுடைய இரண்டு திருவடிகளையும் (தொழுவதற்கு எனக்கு இரண்டு 
கைகளையும் கொடுத்தவன் ) அவனுக்குச் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்டியருள, மற்றத் திருவடியையும் 
காட்டியருள வேண்டுமென்று அங்ஙனே அகங்கரித்த மாயவன் தில்லையம்பல முன்றில் புகுந்து வரங்கிடந்தான். 89

            6. புலந்து கூறல்*
            ---------------
*பேரின்பப் பொருள் : அருடனை வெறுத்தரற் கறிய வுரைத்தது

    புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாது வஞ்சித்துக் கூறுதலான், 'என்னோடிதனை வெளிப்படக் 
கூறாயாயின் நின்காதற் றோழியர்க்கு வெளிப்படச் சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்குற்றது செய்வாய்; 
யான் சொன்ன அறியாமையை நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக ; யான் வேண்டுவதிதுவே' யெனத் 
தோழி தலைமகளோடு புலந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : -

        உள்ளப் படுவன வுள்ளி
            யுரைத்தக் கவர்க்குரைத்து 
        மெள்ளப் படிறு துணிதுணி 
            யேலிது வேண்டுவல்யான்
        கள்ளப் படிறர்க் கருளா
            அரன்தில்லை காணலர்போற் 
        கொள்ளப் படாது மறப்ப
            தறிவிலென் கூற்றுக்களே.

    திருந்திய சொல்லிற் செவ்வி பெறாது 
    வருந்திய சொல்லின் வகுத்துரைத்தது

    இதன் பொருள் : உள்ளப்படுவன உள்ளி-இதன் கண் ஆராயப்படுவனவற்றை ஆராய்ந்து; 
உரைத் தக்கவர்க்கு உரைத்து- இதனை வெளிப்படவுரைத்ததற்குத் தக்க நின் காதற்றோழியர்க்குரைத்து ;
படிறு மெள்ளத்துணி - அவரோடுஞ் சூழ்ந்து நீ படிறென்று கருதிய இதனை மெள்ளத் துணிவாய்; துணியேல் - 
அன்றித் துணியாதொழிவாய்;  கள்ளப் படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் - நெஞ்சிற் 
கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு அருள் செய்யாத அரனது தில்லையை ஒருகாற் காணாதாரைப்போல; 
அறிவிலென்  கூற்றுக்கள் கொள்ளப் படாது - அறிவில்லாதேன், சொல்லிய சொற்களை உள்ளத்துக் 
கொள்ளத்தகாது: மறப்பது- அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவல் இது-யான் வேண்டுவதிதுவே எ-று.

    தில்லை காணலர் தோழிகூற்றிற்குவமை. கொள்ளப் படாதென்பது வினை முதன் மேலுஞ் 
செயப்படு பொருண் மேலுமன்றி வினை மேனின்ற முற்றுச் சொல்: "அகத்தின்னா வஞ்சரை யஞ்சப்படும்'' 
(திருக்குறள் - கூடா நட்பு 4) என்பது  போல. மறப்பதென்பது; வியங்கோள். வருந்திய சொல்லின் - 
வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான்; சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது - 
வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற்கேட்குமளவுஞ் சொல்லுஞ்சொல்: அஃதாவது நீ சொல்லத் தகுங்
காதற்றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: திருந்திய சொற்களால் இடம்பெறாது வலிதாகச் சொல்லுகிற 
சொற்களினாலே கூறுபடுத்துச் சொன்னது

    செய்யுள்: என்னைக் கரந்து போகிற காரியத்துக்கு விசாரிக்கத் தகுவனவற்றையும் விசாரித்து,        (திருத்: என்னைச்/என்னைக்)
 உரைக்கத்தக்க போக்குரைத்துச் சொல்லத் தக்க நின் காதற்றோழிமார்க்கும் சொல்லி, எனக்கு வஞ்சித்துப்     (திருத்: உரைக்கத்தக்த/உரைக்கத்தக்க)
போகிற இதனை மெல்லத்துணிவாய்; (அல்லது துணியாது) ஒழிவாய்; வஞ்சகராய் வஞ்சகந்தன்னை 
ஒளிப்பார்க்கு ஒருநாளும் அருளாத கர்த்தர், அவனுடைய  திருவம்பலத்தைத் தெரியாதாரைப்  போல 
அறிவில்லாது என்னுடைய வார்த்தைகளை மனத்திற்  கொள்ளாதே மறப்பாயாக; இத்தனையும் உன்னை 
வேண்டிக் கொள்கின்றேன் யான், 87

            7. வன்மொழியாற் கூறல் *
            ------------------------

*'பேரின்பப் பொருள் "அருள்செயா விடிலுல கலராமழிவா மலரெனல் ' (மலர் அருள்செய்.)

    வன்மொழியாற்கூறல் என்பது புலந்து கூறாநின்ற  தோழி ' அக்கொடியோன் அருளுறாமையான் 
மெய்யிற் பொடியுங்  கையிற்கிழியுமாய் மடலேறத் துணியா நின்றான்; அக்கிழிதான்   நின்னுடைய வடிவென்று 
உரையுமுளதாயிருந்தது; இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக; யானறியே'னென வன்மொழியாற் 
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    மேவியந் தோலுடுக் குந்தில்லை 
        யான்பொடி மெய்யிற்கையில்
    ஓவியந் தோன்றுங் கிழிநின் 
        னெழிலென் றுரையுளதால்
    தூவியந் தோகையன் னாயென்ன 
        பாவஞ்சொல் லாடல் செய்யான்
    பாவியந் தோபனை மாமட 
        லேறக்கொல் பாவித்ததே.

    கடலுல கறியக் கமழலந் துறைவன் 
    மடலே றும்மென வன்மொழி மொழிந்தது

    இதன் பொருள்: மெய்யில் மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி-மெய்க்கட் பூசியது 
விரும்பி நல்ல தோலைச் சாத்துந் தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி-கையின்க 
ணுண்டாகியது சித்திரம்விளங்குங்கிழி; நின்  எழில் என்று உரை உளது- அக்கிழி தான் நின் வடிவென்று 
உரையுமுளதாயிருந்தது;  தூவி அம் தோகை அன்னாய், தூவியையுடைய அழகிய  தோகையையொப்பாய்.
என்ன பாவம்-இதற்குக் காரணமாகிய தீவினை யாதெனின்றறியேன்; சொல் ஆடல் செய்யான் -ஒன்றுமுரையாடான் : 
பாவி - இருந்தவாற்றான் அக் கொடியோன்; அந்தோ பனைமா மடல் ஏறக் கொல் பாவித்தது-அந்தோ 
பனையினது  பெரிய மடலேறுதற்குப்  போலு நினைந்தது எ-று .

    கிழியென்றது கிழிக்கணெழுதிய வடிவை, தன்குறை யுறவுகண்டு உயிர் தாங்கலேனாக 
அதன் மேலும் மடலேறு தலையுந் துணிய நின்றா னென்னுங் கருத்தால் பாவியென்றாள். எனவே, 
அவனாற்றாமைக்குத் தானாற்றாளாகின்றமை கூறினாளாம்.  கமழலந்துறைவ னென்பதற்குக் 
கூம்பலங் கைத்தல மென்பதற் குரைத்தது உரைக்க.(திருக்கோவையார், 11 ) இவை மூன்றற்கும் 
மெய்ப்பாடு: இளி வரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள (மக்கள் அறிய) 
நறுநாற்றம் கமழ்தலை யுடைத்தாகிய அழகினையுடைய துறைவன் மடலேறப் புகாநின்றான் 
என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது.

    செய்யுள் : விரும்பி, அழகிய தோலையுடுக்கிற திருவம்பல நாதனுடைய திருநீற்றை 
மெய்முழுதும் பூசிக் கையிற் பிடிக்கிற சித்திரம் விளங்குகிற படம் உன் வடிவாயிருந்ததென்று 
வார்த்தை உண்டாகியிருந்தது: ஆதலால், தூவியாற் சிறந்த அழகினையுடைய மயிலையொப்பாய்
தன் குறை சொல்வதும் செய்யானாய்த் தான் என்னை வந்து குறை வேண்டவும் நான் மறுக்கும்
பாவத்தைப் பண்ணினவன், பனைத் துண்டாகிய மிக்க மடலேறுவதாகவோ நினைந்து நின்றது: 
ஐயோ. பாவி.          88

            8.மனத்தொடு நேர்தல் *
            ---------------------
*பேரின்பப் பொருள்: "சிவமுயிர்க் கின்பஞ் சேர விரங்கல்,

    மனத்தொடுநேர்தல் என்பது ஆற்றாமையான் மடலேறத் துணியா நின்றானெனத் 
தோழியால் வன்மொழி கூறக் கேட்ட தலைமகள் அதற்குத் தானாற்றாளாய்த் தலைமகனைக் 
காணவேண்டித் தன் மனத்தொடு கூறி நேரா நிற்றல். அதற்குச் செய்யுள் :--

    பொன்னார் சடையோன் புலியூர்
        புகழா ரெனப்புரி நோய்
    என்னா லறிவில்லை யானொன் 
        னுரைக்கிலன் வந்தயலார்
    சொன்னா ரெனுமித் துரிசு துன் 
        னாமைத் துணைமனனே 
    என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
        நீர்மை இனியவர்க்கே

    அடல்வேலவ னாற்றானெனக் 
        கடலமிழ்தன்னவள் காணலுற்றது. 

    இதன் பொருள்: பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என- பொன் போலும் நிறைந்த
சடையை யுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; புரி நோய் என்னால் அறிவு இல்லை - 
எனக்குப் புரிந்த நோய் என்னா லறியப்படுவதில்லை;  யான்  ஒன்று உரைக்கிலன்- ஆயினும்  இதன் றிறத்து 
யானொன்றுரைக்க மாட்டேன்; துணை  மனனே - எனக்குத் துணையாகிய மனனே; வந்து அயலார் 
சொன்னார் எனும் இத்துரிசு துன்னாமை - அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற 
இக்குற்றம் என் கண் வாராமல்; என் ஆழ் துயர் வல்லையேல்- அவராற்றாமை கூறக் கேட்டலா னுண்டாகிய 
என தாழ் துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின் ; நீர்மை இனியவர்க்குச் சொல்லு- நீர்மையையுடைய 
இனியவர்க்கு நீ சொல்லுவாயாக எ.று.

    புரிதல் - மிகுதல். அயலார் சொன்னாரென்றது, ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென் றுரையுளதால் ”     (திருத்: ஒவியந்/ஓவியந்)
( செ.88) என்றதனைப்பற்றி அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை 
அயலார் வந்து சொன்னாரென்னும் இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப் பொருட்கு அயலாரென்றது 
தோழியை நோக்கி, ஆழ்துயர் ஆழ்தற்கிடமாந் துயர். இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றாளாய் நிற்றலின்: 
தோழி குறை நேர்ந்தமை யுணரு மென்பது பெற்றாம்; ஆகவே  இது  தோழிக்கு வெளிப்பட மறுமொழி 
கூறியவாறாயிற்று. சொல்லு நீர்மை  யினியவர்க்கென்றவதனால் தன்றுயரமும்  வெளிப்படக் கூறி 
மடலால் வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று.  மெய்ப்பாடு- அச்சம். 
ஆற்றானெனக் கேட்டலிற் பயன்: குறை நேர்தல்.

            குறைநயப்புக் கூறல் முற்றிற்று

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : கொலைத் தொழிலாற் சிறந்த வேலினையுடையவன் 
ஆற்றான் என்று சொல்லக்கேட்டுக் கடலிற் பிறந்த அமுதத்தை ஒப்பாள் காண நினைந்தது.

    செய்யுள் : பொன்னை யொத்த திருச்சடையினை யுடையவன் அவனுடைய புலியூரை 
வாழ்த்தாதாரைப் போலே வருந்தும்படி வந்த நோயானது என்னால் அறியப்பட்டதில்லையாகிலும் 
(இதற்கு நான் அல்லன் என்று) யான் மறுமாற்றம் சொல்லேன்; அயலார்கள் வந்து சொன்னார்கள் என்ற 
இக்குற்றம் என்னிடத்துச் சேராதபடி, துணையாகிய மனமே, குணங்களாலே நல்லவற்கு, நான் அழுந்த 
நின்ற கிலேசத்தை நீயே அறிவிப்பாய்.         89

            12. சேட்படை*
            --------------

*பேரின்பக் கிளவி:  சேட்படை யிருபத் தாறு துறையுங் கிடையா வின்பங் கிடைத்தலாலுயிரை, 
யமை காட்டி யறியாள் போலப் பலபல வருமை பற்றி யுரைத்த, வருளே சிவத்தோ டாக்கவருளல்!..

    சேட்படை யென்பது  தலைமகளைக் குறைநயப்பித்துத்  தன்னினாய கூட்டங் கூட்டலுறுந் 
தோழி தலைமகளது பெருமையும் தனது முயற்சியதருமையும் தோன்றுதல் காரணமாகவும், 
இத்துணை யருமையுடையாள் நமக்கெய்துதற் கருமையுடையளென இதுவே  புணர்ச்சியாக 
நீட்டியாது விரைய வரைந்து கோடல் காரணமாகவும். தலைமகனுக்கியைய மறுத்துக் 
கூறா நிற்றல். அது வருமாறு:-

    தழை கொண்டு சேற றகாதென்று மறுத்த 
    னிலத்தின்மை கூற னினைவறிவு கூறல் 
    படைத்து மொழிதலொடு பனிமதி நுதலியை 
    யெடுத்துநா ணுரைத்த லிசையாமை கூறல் 
    செவ்வியில ளென்றல் சேட்பட நிறுத்த 
    லவ்வினிய மொழி யவட்குரை யென்றல் 
    குலமுறை கிளத்தல் கோதண்டத் தொழில் 
    வலிசொல்லி மறுத்தன் மற்றவற் கிரங்கல் 
    சிறப்பின்மை கூறல் சிறியளென் றுரைத்தன் 
    மறைத்தமை கூறி நகைத்துரை செய்த 
    னகைகண்டு மகிழ்த ளானவ டன்னை 
    யறியே னென்ற லவயவங் கூறல் 
    கண்ணயந் துரைத்தல் கையுறை யெதிர்தன் 
    முகம்புக வுரைத்தன் முகங்கண்டு கூறல்
    வகுத்து ரைத்தலொடு வண்டழை யவட்கு 
    மிகுத்துரை செய்து விரும்பிக் கொடுத்த 
    றழைவிருப் புரைத்த றானிரு பத்தா 
    றிழை வளர் முலையா யிவைசேட் படையே

    இதன் பொருள்: தழைகொண்டுசேறல், சந்தனத் தழை தகாதென்று மறுத்தல், நிலத்தின்மைகூறி  மறுத்தல்,
நினைவறிவு கூறி மறுத்தல்,  படைத்து  மொழியான் மறுத்தல், நாணுரைத்து மறுத்தல்,   இசையாமை கூறி மறுத்தல், 
செவ்வியிலன் என்று மறுத்தல்,  காப்புடைத்தென்று மறுத்தல்,  நீயே கூறென்று மறுத்தல் , குலமுறை கூறி மறுத்தல் , 
நகையாடி  மறுத்தல்,  இரக்கத்தொடு மறுத்தல், சிறப்பின்மை கூறி மறுத்தல்,  இளமை கூறி மறுத்தல்,         (திருத்: நயாடி/நகையாடி)
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்,  நகை கண்டு மகிழ்தல்,  அறியாள் போன்று நினைவு கேட்டல்,
அவயங்கூறல், கண்ணயந்துரைத்தல், தழையெதிர்தல், குறிப்பறிதல்,  குறிப்பறிந்து கூறல், 
வகுத்துரைத்தல், தழையேற்பித்தல், தழைவிருப்புரைத்தல் என விவையிருபத்தாறும் சேட்படையாம் எ-று. 
அவற்றுள் - 

            1. தழைகொண்டுசேறல்*
            -----------------------

*பேரின்பப் பொருள் : மலரெடுத் துயிரருள் வழியே சென்றது

    தழை கொண்டுசேறல் என்பது மேற் சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச் சென்று 
அவளது குறிப்பறிந்து, பின்னுங் குறையுறவு தோன்ற நின்று நும்மா லருளத் தக்காரை அலையாதே 
 இத் தழை வாங்கிக்கொண்டு என் குறை முடித்தருளுவீரா'மென்று , மறுத்தற்கிடமறச் 
சந்தனத் தழை கொண்டு தலைமகன் செல்லா நிற்றல்.  அதற்குச் செய்யுள் -

    தேமென் கிளவிதன் பங்கத் 
        திறையுறை தில்லையன்னீர்
    பூமென் தழையுமப் போதுங்கொள் 
        ளீர்தமி யேன்பு லம்ப
    ஆமென் றருங்கொடும் பாடுகள் 
        செய்துநுங் கண்மலராங்
    காமன் கணைகொண் டலைகொள்ள
        வோமுற்றக் கற்றதுவே.

    கொய்ம்மலர்க்குழலி குறைநயந்தபின் 
    கையுறையோடு காளை சென்றது.

     இதன் பொருள்:  தேமென் கிளவி தன் பங்கத்து இறை உறைதில்லை அன்னீர் - தேன் போலும் 
மெல்லிய மொழியை யுடையானது கூற்றையுடை யுய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; பூமெல்     (திருத்: யுடையாடனது/யுடையானது)
தழையும் அம்போதும் கொள்ளீர் - யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய 
பூக்களையும் கொள்கின்றிலீர்; தமியேன் புலம்ப அருங்கொடும் பாடுகள் ஆம் என்று செய்து- உணர்விழந்த  
யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகுமென்று துணிந்து செய்து 
நும் கண்மலர் ஆம் காமன் கணைகொண்டு அலை கொள்ளவோ முற்றக் கற்றது. நுங்கண் மலராகின்ற
காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது. 
நும்மால் அருளுமாறு கற்கப்பட்டதில்லையோ! எ-று. 

    பங்கத்துறையிறை யென்பதூஉம் பாடம்' தமியேன் புலம்பவென்பதற்குத் துணையிலாதேன் 
வருந்தவெனினுமமையும். மேற் சேட்படை கூறுகின்றமையின் அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறவு 
கூறினான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல். அவ்வகை தோழிக்குக் குறைநேர்ந்த     (திருத்: தோழிக்குத்/தோழிக்குக்)
நேரத்துத் தலைமகன் கையுறை யோடுஞ் சென்று இவ்வகை சொன்னா னென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பறித்த பூவை அணிந்த அளகத்தினை உடையவள் 
இறைக்கு உடன்பட்டபின், கையுறை ஏந்திக் கொண்டு காளையாகிய நாயகன் எதிர் சென்றது.

    செய்யுள்: தேனை ஒத்து மெத்தென்ற திருவார்த்தைகளையுடைய பரமேசுவரியை 
பாகத்திலேயுள்ள சுவாமி, அவன் வாழ்கின்ற புலியூரை யொப்பீர்! பூவுடைத்தாகிய மெல்லிய 
தழையையும் அழகிய பூவையும் வாங்கிக் கொள்ளுகின்றீரில்லை; அஃதிருக்க இழிந்து தனித்து நான்
வருந்த 'இது பொறும்' என்று பொறுத்தற்கரிய கொடுமைப் பாட்டினைச் செய்து, உங்களுடைய 
நயன (மலர்களாகிய) காமபாணத்தைக் கொண்டு வருத்தும் அதுவேயோ முழுதும் கற்றது' 
(துறையுறை என்பது இவர் பாடம் )         90


            2. சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்*
            ------------------------------------

*பேரின்பப் பொருள்:  "உன்னறி வாமல ரொவ்வா தென்றது."

    சந்தனத் தழை தகாதென்று மறுத்தல் என்பது தலைமகன் சந்தனத் தழை கொண்டு செல்ல, 
அதுவழியாக நின்று, சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறென்னோ வென்று ஆராயப்படுதலான் இத் தழை 
எமக்காகாதெனத் தோழி மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :--

    ஆரத் தழையராப் பூண்டம் 
        பலத்தன லாடியன்பர்க் 
    காரத் தழையன் பருளிநின் 
        றோன் சென்ற மாமலயத்
    தாரத் தழையண்ணல் தந்தா 
        லிவையவ ளல்குற்கண்டால்
    ஆரத் தழை கொடு வந்தா
        ரெனவரும் ஐயுறவே

    பிறைநுதற் பேதையைக் குறைநயப்பித்தபின் 
    வாட்படை யண்ணலைச் சேட்படுத்தது.*

*இதற்குப் பழையவுரைகாரர் பாடம் வேறு

    இதன் பொருள்:  ஆரத் தழை அராப்பூண்டு அம்பலத்து அனலாடி- ஆரமாகிய தழைந்த அரவைப்பூண்டு 
அம்பலத்தின் கண் அனலோடாடி : அன்பர்க்கு ஆரத் தழை அன்பு அருளி நின்றோன் - அன்பராயினார்க்குத் 
தானும் மிக்க அன்பைப் பெருகச்செய்து நின்றவன்; சென்ற மாமலயத்து ஆரத் தழை அண்ணல் தந்தால்-
சேர்ந்த பெரிய பொதியின் மலையிடத் துளவாகிய சந்தனத் தழைகளை அண்ணல் தந்தால்: இவை அவள் 
அல்குற் கண்டால் - இத்தழைகளைப் பிறர் அவளல்குற்கட் காணின்; அத்தழை கொடு வந்தார் ஆர் என 
ஐயுறவு வரும்- ஈண்டில்லாத அத்தழை கொண்டுவந்தார் யாவரென ஐயமுண்டாம். அதனால் இவை கொள்ளேம் எ-று. 

    ஆரத்தழையரா பூண்ட காலத்து ஆரத் தழைத்த அரவெனினுமமையும்.  அன்பர்க்காரத் தழையன்பருளி 
நின்றோ னென்பதற்கு அன்பர்க்கு அவர் நுகரும் வண்ணம் மிக்க அன்பைக் கொடுத்தோ னெனினுமமையும், 
அன்பான் வருங் காரியமேயன்றி அன்பு தானும் ஓரின்பமாகலின் நுகர்ச்சி யாயிற்று. அண்ணலென்பது ஈண்டு 
முன்னிலைக் கண்வந்தது, அத்தழையென்றது அம்மலயத்தழை எ-று

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிறை நுதற் பேதையைக் குறை நயப்பித்தது உள்ளறி குற்றம் 
ஒள்ளிழை யுரைத்தது: பிறையைப் போன்ற நெற்றியினையுடைய நாயகியைக் குறையை விரும்புவிப்பது 
காரணமாக, மனத்து நினைவை அறிவதாக உற்று அழகிய ஆபரணங்களை யுடையாள் சொன்னது,

    செய்யுள் : ஆரமாகிய தழைந்த அரவைப் பூண்டு திருவம்பலத்திலே அனலை அங்கையிலே ஏந்தி 
ஆடியருளித் தனக்கன்பு செய்வார்க்கு மிகுதியாகத் தழைத்த அன்பைக் கொடுத்து அவருடைய இருதயத்திலே 
நிலைத்து நின்றவன். அவனுடைய திருவுள்ளம் சென்றிருக்கின்ற பொதியின் மலையிடத்துச் சந்தனத் 
தழையை நாயகனே ! நீ தந்தாயாமாகில் இந்தத் தழையை அவள் அல்குலிலே கண்டகாலத்து யார்தான் 
அப்பொதியமலையில் (உள்ள ) தழை (களை) இங்கே கொண்டு வந்து கொடுத்தவர்கள்' என்று பலர்க்கும் 
ஐயம் தோன்றும் (ஆதலால் இத்தழை தகாது.)         91

            3. நிலத்தின்மை கூறி மறுத்தல்*
            -----------------------------

*பேரின்பப் பொருள்: உன்னறி வடியார் உருவாகா தென்றது.

    நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது சந்தனத் தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென 
மற்றொரு தழை கொண்டு செல்ல, அது கண்டு. 'இக்குன்றிலில்லாத தழையை எமக்கு நீர் தந்தால் எங்குடிக்கு 
இப்பொழுதே பழியாம் ;   ஆதலான் அத்தழை யெமக்காகாது' என்று, மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-

    முன்றகர்த் தெல்லா விமையோரை 
        யும்பின்னைத் தக்கன் முத்தீச்
    சென்றகத் தில்லா வகைசிதைத் 
        தோன்றிருந் தம்பலவன் 
    குன்றகத் தில்லாத் தழையண்
        ணறந்தாற் கொடிச்சியருக் 
    கின்றகத் தில்லாப் பழிவந்து
        மூடுமென் றெள்குதுமே:

    கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை 
    எங்குலத் தாருக் கேலா தென்றது.

    இதன் பொருள் : முன் எல்லா இமையோரையும் தகர்த்து முன் வேள்விக்குச் சென்ற  எல்லாத் தேவர்களையும்
புடைத்து; பின்னைச் சென்று தக்கன் முத்தீ அகத்து இல்லாவகை சிதை த்தோன் - பின்சென்று தக்கனுடைய
மூன்று தீயையும் குண்டத்தின்கண் இல்லையாம் வண்ணம் அழித்தவன்;  திருந்து அம்பலவன்-திருந்திய 
வம்பலத்தை யுடையான்: குன்றகத்து இல்லாத் தழை அண்ணல் தந்தால் - அவனுடைய இம்மலையிடத் 
தில்லாத தழையை அண்ணல் தந்தால், கொடிச்சியருக்கு அகத்து இல்லாப் பழி இன்று வந்து மூடும் 
என்று எள்குதும். கொடிச்சியருக்கு இல்லின்கண் இல்லாத பழி இன்று வந்து மூடுமென்று கூசுதும்; 
அதனால் இத்தழை கொணரற்பாலீரல்லீர் எ-று

    குன்றகத்தில்லாத் தழை யென்றது குறிஞ்சி நிலத்தார்க்கு உரிய வல்லாத தழையென்றவாறு. 
அண்ணலென்பது  முன்னிலைக்கண்ணும், கொடிச்சியரென்பது தன்மைக் கண்ணும் வந்தன. 
இல்லாவென்பது பாடமாயின், இல்லையாம் வண்ணம் முன்றகர்த் தென்றுரைக்க.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அல்லி விரிகின்ற மாலையை யுடையவனே! நீ 
கொண்டு வந்த கொய்யப்பட்ட தழை எம் குடியிலுள்ளார்க்குப் பொருந்தாது என்றது.

    செய்யுள்: எல்லாத் தேவர்களையும் முற்பாடு இல்லா வகைச் சங்கரித்துப் பின்பு சென்று 
தக்கனுடைய மூன்று அக்கினிகளையும் குண்டத்திலே இராதபடி அழித்தவன். அழகிய திருவம்பல நாதன், 
அவனுடைய திருமலையிலே இல்லாத தழை, நாயகனே! நீ தந்தால் குறத்தியராகிய எங்களுக்கு 
இப்பொழுது எங்கள் குடியிலில்லாத பழிவந்து சூழ்ந்து கொள்ளும் என்று பயப்படா நின்றோம்; 
அல்லது தழை ஏற்கக் குற்றமில்லை .         92

            4. நினைவறிவு கூறி மறுத்தல்*
            ----------------------------

*பேரின்பப் பொருள்: சிவத்துளங் கண்டுனைத் தேற்றுவேனென்றது.

    நினைவறிவு கூறி மறுத்தல் என்பது இத்தழை தந்நிலத்துக் குரித்தன் றென்ற தல்லது 
மறுத்துக் கூறியவாறன்றென உட்கொண்டு  அந்நிலத்திற்குரிய  தழை கொண்டு செல்ல , 
அது கண்டு தானுடம்பட்டாளாய், 'யான் சென்று அவணினைவறிந்தால் நின்னெதிர் வந்து கொள்வேன்;
அதுவல்லது கொள்ள அஞ்சுவே' னென மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    யாழார் மொழிமங்கை பங்கத்
        திறைவன் எறிதிரைநீர்
    ஏழா யெழுபொழி லாயிருந் 
        தோன்நின்ற தில்லையன்ன
    சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்         (திருத்: குழார் / சூழார்)
        வாய்நவ்வி சொல்லறிந்தால் 
    தாழா தெதிர்வந்து கோடுஞ்
        சிலம்ப தருந்தழையே.

    மைதழைக் கண்ணி மனமறிந் தல்லது 
    கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது

    இதன் பொருள்:  யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் - யாழோசை போலும் 
மொழியையுடைய மங்கையது கூற்றையுடைய இறைவன்; எறி திரை நீர் ஏழ் ஆய்எழு பொழில் 
ஆய் இருந்தோன் - எறியா நின்ற திரையையுடைய கடலேழுமாய் ஏழுபொழிலுமாயிருந்தவன்.
 நின்றதில்லை அன்ன சூழ் ஆர்குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் - 
அவனின்ற தில்லையை ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக்கனி போலும் 
எழிலையுடைய செவ்வாயினையு முடைய நவ்வி போல் வாளது மாற்ற மறிந்தால் ; 
சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் - பின் சிலம்பனே நீ தருந்தழையைத் தாழாது 
நின்னெதிர்வந்து கொள்வோம் ; அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும் எ-று.

    சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து முடித்தலெனினுமமையும், தில்லையன்ன நவ்வியென வியையும்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கருமை மிக்க கண்களை யுடையாள் மனமறிந்தல்லது 
கொய்யப்பட்ட தழையைத் தந்தாலும் வாங்கிக் கொள்ளோம் (என்றது).

    செய்யுள்: யாழிசை போன்ற வார்த்தையுள்ள பரமேசுவரியைப் பாகத்திலே உடைய சுவாமி,
கரையை மோதப்பட்ட திரையினையுள்ள கடலேழுமாய்ப் பூமிகளேழுமாய் இருந்தோன். அவன் எழுந்தருளி 
யிருந்த சிதம்பரம் போன்ற மாலையணிந்து, சுருண்டு நீண்ட குழலினையும் கொவ்வைக்கனி போன்று 
அழகும் சிவப்பும் உடைய வாயினையும் மானின் (நயனம் போன்ற நயனத்தையும் பெற்ற ) அவளுடனே 
பேசிக்கொண்டு வந்தபின் (பல்லது) சற்றும் தாழாது எதிரே வந்து வாங்கிக் கொள்ளக் கடவோம்( அல்லோம்)
 நாயகனே, நீ தருகின்ற தழையை.         93

            5. படைத்து மொழியான் மறுத்தல்*
            -------------------------------

*பேரின்பப் பொருள்; சிவங்கொளு முன்னுணர் வாகா தென்றது. 

    படைத்து மொழியான் மறுத்தல் என்பது நினைவறிந்தல்லது ஏலேமென்றது மறுத்துக் 
கூறியவாறன்று;  நினைவறிந்தால் ஏற்பேமென்றவாறா;மென உட்கொண்டு நிற்பச் சிறிது 
புடை பெயர்ந்து அவணினை வறிந்தாளாகச் சென்று 'இத்தழை யானேயன் றி அவளும் விரும்பும்; 
ஆயினும் இது குற்றாலத்துத் தழையாதலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோ வென்று 
ஆராயப்படும்: ஆதலான் இத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-

    எழில்வா யிளவஞ்சி யும்விரும் 
        பும்மற் றிறைகுறையுண் 
    டழல்வா யவிரொளி யம்பலத் 
        தாடுமஞ் சோதியந்தீங்
    குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் 
        றாலத்துக் கோலப்பிண்டிப்
    பொழில்வாய் தடவரை வாயல்ல 
        தில்லையிப் பூந்தழையே

    அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப் 
    படைத்து மொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.

    இதன் பொருள்: எழில்வாய் இள வஞ்சியும் விரும்பும் நின்பாற்றாழை கோடற்கு யானேயன்றி 
எழில் வாய்த்த இளைய வஞ்சியை யொப்பாளும் விரும்பும்; மற்று இறை சிறிது குறை உண்டு; -
ஆயினுஞ் சிறிது குறையுண்டு; அழல்வாய் அவிர் ஒளி -  அழலிடத்துளதாகிய விளங்கு மொளியாயுள்ளான்: 
அம்பலத்து ஆடும் அம்சோதி - அம்பலத்தின் கணாடும் அழகிய சோதி; அம் தீம் குழல் வாய் மொழி 
மங்கை பங்கன் - அழகிய வினிய குழலோசை போலும் மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்;
குற்றாலத்துக் கோலப் பிண்டிப் பொழில்வாய்- அவனது குற்றாலத்தின் கணுளதாகிய அழகையுடைய 
அசோகப் பொழில் வாய்த்த தடவரைவாய் அல்லது இப்பூந்தழை இல்லை பெரிய தாழ்வரையிடத்தல்லது 
வேறோரிடத்து இப்பூந்தழையில்லை; அதனால் இத் தழை இவர்க்கு வந்தவாறென்னென்று ஆராயப்படும்;        (திருத்: வத்தவாறு/வந்தவாறு)
ஆதலான் இவை கொள்ளோம் எ-று. 

    இத்தழையை யிளவஞ்சியும் விரும்பு மெனினுமமையும் அவிரொளியையுடைய அஞ்சோதி 
யென்றியைப்பினுமமையும் பிறவிடத்து முள்ளதனை அவ்விடத்தல்லது இல்லையென்றமையின்,         (திருத்: இல்லல /இல்லை)
படைத்து மொழியாயிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அரிய தழையை மேன் மேலும் பெரிய தகைமைப் 
பாட்டையுடையவன் கொண்டு வரச் சிவட்டித்து (சிருட்டித்து) ச் சொல்லும் வார்த்தையாலே         (திருத்: செல்லும்/சொல்லும்)
அத்தழையை வாங்காது விலக்கிப் பாங்கி சொல்லியது.                        (திருத்: சொல்வியது/சொல்லியது)

    செய்யுள்: அழகினால் வாய்ந்த இளைய வஞ்சிக் கொம்பினை யொப்பாளும் விரும்புவாள்: 
சுவாமி! மற்றோர் குறையுண்டு;  அழலிடத்தே வாய்ந்த பாடம் செய்கிற பிரகாசத்தினை நேரானவன். 
திருவம்பலத்திலே ஆடியருளுகிற அழகிய ஒளியாயுள்ளவன், அழகினையும் இனிமையையும் உடைய 
குழலினோசையை நிகர்த்த சங்கரி பங்கன்; அவனுடைய குற்றாலத் துண்டாகிய அழகிய அசோகின் 
பொழில் வாய்ந்த பெரியமலைச் சாரலி லல்லது இல்லைகாண், இந்தப் பொலிவுடைத்தாகிய தழை.     94

            6. நாணுரைத்து மறுத்தல்*
            ------------------------

*பேரின்பப் பொருள்: அடியா ரறிவுக்குன் னறிவுபிறி தென்றது.

    நாணுரைத்து மறுத்தல் என்பது பலபடியுந் தழை கொண்டு செல்ல மறுத்துக் 
கூறிய வழி இனித் தழையொழிந்து கண்ணியைக்  கையுறையாகக் கொண்டு சென்றால் அவள்
மறுக்கும் வகையில்லை'யெனக் கழுநீர் மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல, 
அதுகண்டு, 'செவிலியர் சூட்டிய கண்ணியின்மேல் யானொன்று சூட்டினும் நாணா நிற்பள் : 
நீர் கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனஞ் சூடுமெனத் தலைமகள் நாணுரைத்து 
மறுத்துக் கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள் :

    உறுங்கண்ணி வந்த கணையுர
        வோன் பொடி யாயொடுங்கத்
    தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல 
        வன்மலைச் சிற்றிலின்வாய்
    நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் 
        வாணுதல் நாகத்தொண்பூங்
     குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் 
        நாணுமிக் குன்றிடத்தே.

    வாணுதற் பேதையை , நாணுத லுரைத்தது.

    இதன் பொருள்: நிவந்த உறும் கள் கணை உரவோன் பொடியாய் ஒடுங்க எல்லார் கணையினும்
 உயர்ந்த மிகுந்த தேனையுடைய மலர்க்கணையையுடைய பெரிய வலியோன் நீறாய்க்கெட;
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன்- தெறவல்ல கண்ணோங்கிய சிற்றம்பலவனது; மலைச் சிற்றிலின் வாய் 
-மலைக்கணுண்டாகிய சிற்றிலிடத்து; நறுங் கண்ணி சூடினும் என்  வாணுதல்  நாணும் - செவிலியர் சூட்டிய 
கண்ணி மேல் யானோர் நறுங்கண்ணியைச் சூட்டினும் அத்துணையானே என்னுடைய வாணுதல்  புதிதென்று 
நாணா நிற்கும்;  இக்குன்றிடத்து  நாகத்து ஒண்பூங்குறுங் கண்ணி வேய்ந்து இளமந்திகள் நாணும் மகளிரைச் 
சொல்லுகின்றதென் !  இக் குன்றிடத்து நாகமரத்தினது ஒள்ளிய பூக்களானியன்ற குறுங் கண்ணியைச் 
சூடி அச் சூடுதலான் இள மந்திகளும் நாணா நிற்கும் எ.று 

    கண்ணிவந்தவென்பதற்குக் கள் மிக்க கணையெனினுமமையும். தெறுங்கண் ணிவந்தவென்றார்,
அக்கண் மற்றையவற்றிற்கு மேலாய் நிற்றலின் மேனோக்கி நிற்றலா னெனினுமமையும். முதலொடு 
சினைக்கொற்றுமை யுண்மையான் நிவந்தவென்னும் பெயரெச்சத்திற்குச் சிற்றம்பலவனென்பது 
வினைமுதற் பெயராய் நின்றது. மந்திகணாணுமென்பது பெயரெச்சமாக மலைக்கண் இக்குன்றிடத்துச் 
சிற்றிலின் வாயெனக் கூட்டியுரைப்பினுமமையும் . இப்பொருட்கு குன்றென்றது சிறுகுவட்டை. யானொன்று 
சூட்டினும் நாணும் பெருநாணினாள் நீர் கொணர்ந்த இக்கண்ணியை யாங்ஙனஞ் சூடுமென்பது கருத்து. 
நாணுதலுரைத்த தென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு இரண்டாவதனையமைத்தன.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஒளி சிறந்த நெற்றியையுடைய நாயகி மிகவும் நாணுவள் 
என்று சொன்னது.

    செய்யுள்: மிக்க தேனுள்ள புறப் (புஷ்ப) பாணத்தாலே அதிகமான காமன் நீறாகி  வீழ்ந்தொடுங்கச் 
சுடுகிற திருநயனம் நின்று விளங்குகிற திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய மலையில் நாங்கள் 
சிற்றிலிழைத்து விளையாடுகிற விடத்துச் செவிலித்தாய்மார் சூட்டின மாலையொழிய நாங்கள் 
நறு நாற்ற முடையதொரு மாலையைச் சூட்டினோமாகிலும் எம்முடைய ஒளி சிறந்த நெற்றியினை
யுடையாள் 'இது புதுமை என்று அதற்கு நாணா நிற்கும். இவள் நாணுவதற்குக் கேட்கவேண்டுமோ?          (திருத்: யடையாள்/யுடையாள், யுதுமை/புதுமை)
இம் மலையின் இயல்புதானிப்படி இருக்கும்.

    சுரபுன்னையில் அழகிய பூவினாலே தொடுத்த நெற்றி மாலையைச் சூட்டினபொழுது இளைய
மந்திக் குரங்குகள் முதலாக இலச்சியா நிற்கும் (இலஜ்ஜை அடையும் இம்மலையிடத்து என்றால் இவள் 
நாணுவதற்குக் கேட்க வேண்டுமோ?

            7. இசையாமை கூறி மறுத்தல்*
            ---------------------------

* பேரின்பப் பொருள் : அடியார் அறிவு போலுன்னறி வாகாதென்றது.

    இசையாமை கூ றி மறுத்தல் என்பது தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க        (திருத்: ணுரைந்து/ணுரைத்து)
யாங்கள் வேங்கை மலரல்லது தெய்வத்திற்குரிய வெறி மலர் சூட அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி 
எங்குலத்திற் கிசையாது' என மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    நறமனை வேங்கையின் பூப்பயில் 
        பாறையை நாகநண்ணி
    மறமனை வேங்கை யெனநனி 
        யஞ்சு மஞ் சார்சிலம்பா 
    குறமனை வேங்கைச் சுணங்கொ 
        டணங்கலர் கூட்டுபவோ
    நிறமனை வேங்கை யதளம் 
        பலவன் நெடுவரையே.

    வசை தீர் குலத்திற் கிசையா தென்றது

    இதன்பொருள்: நற மனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகம் நண்ணி-தேனிற்கிடமாகிய
 வேங்கைப் பூக்கள்  பயின்ற பாறையை யானை சென்றணைந்து மறம் மனை வேங்கை என நனி அஞ்சும் 
மஞ்சு ஆர் சிலம்பா-அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று மிகவுமஞ்சும் மஞ்சாருஞ் 
சிலம்பையுடையாய்; நிறம் மன் வேங்கை அதன் அம்பலவன் நெடுவரை - நிறந்தங்கிய புலியதளையுடைய 
அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ - 
குறவர் மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்கு போலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர் 
முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார் எ-று.

    நறமனை வேங்கை யென்பதற்கு நறாமிக்க பூவெனினு மமையும். குறமனை கூட்டுபவோ 
வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோவென் றுரைப்பாருமுளர். நிறமனை யென்புழி 
ஐகாரம் அசை நிலை : வியப்பென்பாருமுளர் நிறம் அத்தன்மைத்தாகிய அதளெனினுமமையும்
ஒன்றனை ஒன்றாக ஓர்க்கு நாடனாதலான்  அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவோமாக 
ஓர்ந்தாயென்பது இறைச்சிப் பொருள் ஒப்புமையான் அஞ்சப்படாததனையும் அஞ்சும் நிலமாகலான் 
எங்குலத்திற் கேலாத அணங்கலரை யாமஞ்சுதல் சொல்ல வேண்டுமோ வென்பது இறைச்சி 
யெனினுமமையும். இப்பொருட்கு ஒருநிலத்துத் தலைமகளாகக் கொள்க. வேங்கைப் பூவிற்குச் 
சுணங்கணிந்திருத்தல் குணமாதலால் சுணங்கணியப்பட்டதனைச் சுணங்கென்றே கூறினாள்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: குற்றமற்ற எங்கள் குலத்துக்கு இது பொருந்தாது என்றல்.

    செய்யுள்: தேனுக் கிடமாகிய வேங்கைப்பூ நெருங்குதலுள்ள பாறையை யானையானது 
குறுகித் தறுகண்மைக் கிடமாகிய கொடுவரியையுடைய புலியென்று மிகவும் பயப்படுகின்ற 
மேகங்கெட வளர்ந்த வரையினை யுடையவனே! குறவரிட மனையிடத்து நிற்கிற வேங்கையில் 
சுணங்கையொத்த பூவோடே தெய்வத்துக்குரிய செங்கழுநீர் மலரைச் சூட்டப்பெறுமோ? 
 நிறம் நிலைபெற்ற புலித்தோலுடைய திருவம்பல நாதனுடைய நீண்டு பெருத்த வெற்பிடத்து: 
(இங்ஙனே செய்யாது செய்யத்தகுமோ என்பது கருத்து ).

    நாலாம் அடியில் ஐகாரம் அசைநிலை!

            8. செவ்வியிலளென்று மறுத்தல்*
            -----------------------------

*பேரின்பப் பொருள் : ''சிவக்கனி பழுத்த திலையுனக் கென்றது.''

    செவ்வி யிலலென்று மறுத்தல் என்பது அணங்கலர் தங்குலத்திற் கிசையாதென்றதல்லது 
மறுத்துக் கூறியவாறன்றென மாந்தழையோடு மலர் கொண்டு செல்ல, அவைகண்டு உடம்படாளாய், 
'அன்னம் பிணைகிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றனவில்லை; அது கிடக்க,
என்னுழை நீர்வந்த வாறும் யானுமக்குக் குறை நேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்;
அதனாற் செவ்வி பெற்றாற் கொணரு'மென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-

    கற்றில கண்டன்னம் மென்னடை                             (திருத்: கன்டன்னம்/கண்டன்னம்)
        கண்மலர் நோக்கருளப்
    பெற்றில மென்பிணை பேச்சுப்
        பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
    றுற்றில ளுற்ற தறிந்தில 
        ளாகத் தொளிமிளிரும்
    புற்றில வாளர வன்புலி 
        யூரன்ன பூங்கொடியே

    நவ்வி நோக்கி, செவ்வியில ளென்றது.

    இதன் பொருள்: கண்டு அன்னம் மெல் நடை கற்றில - புடை பெயர்ந்து விளையாடாமையின் 
நடை கண்டு அன்னங்கள் மெல்லிய நடையைக் கற்கப் பெற்றனவில்லை; கண்மலர் நோக்கு அருள 
மென்பிணை பெற்றில - தம்மாற் குறிக்கப்படுங் கண்மலர் நோக்குக்களை அவள் கொடுப்பமென் 
பிணைகள் பெற்றனவில்லை; பேச்சுக் கிள்ளை பெறா- உரையாடாமையின் தாங் கருதுமொழிகளைக் 
கிளிகள் பெற்றனவில்லை; பிள்ளை இன்று ஒன்று உற்றிலள் - இருந்த வாற்றான் எம்பிள்ளை இன்றொரு 
விளையாட்டின் கணுற்றிலள்; ஆகத்து ஒளி மிளிரும் புற்றில் வாள் அரவன்-அதுவேயுமன்றி ஆகத்தின் 
கட்கிடந்தொளி விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது ;
புலியூரன்ன  பூங்கொடி-புலியூரை யொக்கும் பூங்கொடி: உற்றது அறிந்திலள் -என்னுழை நீர் வந்தவாறும் 
யானுமக்குக் குறை நேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்வி பெற்றுச் சொல்லல் வேண்டும். எ-று.

    கண்டென்பது கற்றலோடும், அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன.  புற்றிலவென்பதற்கு 
வேள்வித் தீயிற் பிறந்து திருமேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென்றுரைப்பினு மமையும். 
ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை யேழிற்கும் மெய்ப்பாடு; அச்சத்தைச் சார்ந்த பெருமிதம்; 
 முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடும் எனும் அச்சமும், முடிக்கக் கருதலின் பெருமிதமும் ஆயிற்று. 
பயன்: செவ்வி பெறுதல், மேற்றலை மகளைக் குறை நயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய 
கூட்டங் கூட்டலுறுந் தோழி தலைமகன் றெருண்டு வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக 
முன்னர் விண்ணிறந்தார் (107) என்னும் பாட்டீறாக இவையெல்லாங் கூறிச் சேட்படுத்தப் பெறுமென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: மானினது நோக்கம் போன்ற பார்வையினை யுடையவள் 
பக்குவி யல்லாள் என்றது.

    செய்யுள்: இவள் புறம் போந்து விளையாடாத படியாலே இவள் நடையைக் கண்டு இப்படி நடக்கக் கற்றன 
வில்லை அன்னங்களும்; கண்ணாகிய மலர்கள் பார்வையைக் கொடுக்க இப்படிப் பார்க்கக் கற்றன வில்லை 
மானினமும்; இவள் வார்த்தையைக் கேட்டு அப்படியே பேசக் கற்றனவில்லை கிளிகளும்; இளையவளாகையாலே 
இன்னொரு விளையாட்டினு முயன்றிலள்: நீ குறையுற்றாயாகவும் யானதற்கு மறுத்தேனாகவும் இப்படிப் 
புகுந்தவனையறிந்திலள்; திருமார்பிலே கிடந்து ஒளி மிளிறும் புற்றிலிருக்கப்பட்ட பெரிய பாம்பை ஆபரணமாக 
உடையவனுடைய புலியூரை நிகர்த்துப் பூத்த வல்லிசாத மொத்த மின்னிளயாள்,     97

            9.  காப்புடைத்தென்று மறுத்தல்.*
            -----------------------------

*பேரின்பப் பொருள்: மேலா மின்பத்துக்குக் காலமிலையென்றது.

    காப்புடைத்தென்று மறுத்தல் என்பது செவ்வியிலளென்றது செவ்விபெற்றாற் குறையில்லை
யென்றாளாமென உட்கொண்டு நிற்ப, "கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து; நும்மிடஞ் சேய்த்து ; 
எம் மையன்மாருங் கடியர் ; யாந்தாழ்ப்பின் அன்னையு முனியும்; நீரும் போய் நாளை வாரு" மென இசைய 
மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :                                (திருத்: செய்புள்/செய்யுள்)

    முனிதரு மன்னையு மென்னையர்
        சாலவும் மூர்க்கரின்னே
    தனிதரு மிந்நிலத் தன்றைய                    (திருத்: தனி    நிலத் / தனிதரு மிந்நிலத்)
        குன்றமுந் தாழ்சடைமேற் 
    பனிதரு திங்க ளணியம்
        பலவர் பகைசெகுக்குங்
    குனிதரு திண்சிலைக் கோடுசென் 
        றான்சுடர்க் கொற்றவனே

    காப்புடைத் தென்று, சேட்படுத்தது.

    இதன் பொருள்: சுடர்க் கொற்றவன் சுடர்களுட்டலைவன் : தாழ் சடை மேல் பனிதரு திங்கள் 
அணி அம்பலவர் - தாழ்ந்த சடைமேற் குளிர்ச்சியைத் தருந் திங்களைச் சூடிய அம்பலவர்; பகை 
செகுக்கும் குனிதரு திண் சிலைக்கோடு சென்றான். பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய 
சிலையாகிய மேருவினது கோட்டை யடைந்தான்; அன்னையும் முனிதரும்-இனித் தாழ்ப்பின்         (திருத்: மனிதரும்/முனிதரும்)
அன்னையும் முனியுங், என்னையர் சாலவும் மூர்க்கர் - என்னையன்மாரும் மிகுவுமாராயாது 
ஏதஞ்செய்யுந் தன்மையர் ; இன்னே தனிதரும் - இவ்விடமும் இனி யியங்குவா ரின்மையின் 
இப்பொழுதே தனிமையைத் தரும்' ஐய-ஐயனே; குன்றமும் இந்நிலத்து அன்று-நினது குன்றமும் 
இந்நிலத்தின் கண்ணதன்று; அதனால் ஈண்டு நிற்கத் தகாது எ-று.

    அம்பலவர் பகைசெகுத்தற்குத் தக்க திண்மை முதலாகிய இயல்பு அதற்கெக்காலத்து 
முண்மையால், செகுக்குமென நிகழ்காலத்தாற் கூறினார்.  இந்நிலைத் தன்றென்பது பாடமாயின், 
இக்குன்றமும் இவ்வாறு மகளிரும் ஆடவருந் தலைப்பெய்து சொல்லாடு நிலைமைத் தன்றென வுரைக்க, 
மெய்ப்பாடும் பயனும் அவை. இவ்விடம் மிக்க காவலையுடைத்து இங்கு வாரன்மினென்றாளென 
இவ்விடத்தருமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட் கிடந்த பரிவினானன்றே; இத்துணையும் 
பரிவுடையாள் எனதாற்றாமைக்கிரங்கி முடிக்குமென ஆற்றுமென்பது.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இவ்விடம் காவலுடையதென்று நீளம் பார்த்துச் சொன்னது. 

    செய்யுள்: சுவாமியே! நீ இவ்விடத்தில் தாழ்க்கத் தாயாரானவரும் குரோதம் பண்ணுவார்கள்; 
எங்கள் ஐயன்மார்கள் மிகவும் மூர்க்கராய் இருப்பார்கள்.  இவ்விடந்தான் இயங்குவாரில்லாத 
இடமாகையாலே இப்பொழுதே தனிக்கும்; சுவாமி, உன்னுடைய மலையும் இந்நிலத்திலுள்ள 
தொன்றன்று; நீண்டு தாழ்ந்த திருச்சடாபாரத்தின் மேலே குளிர்ந்த திருவிளம்பிறையைச்             (திருத்: பாரந்தின்/பாரத்தின்)
சாத்தியருளுகிற திருவம்பலநாதர் நமக்குப் பகையாகிய முப்புரங்களையும் அழித்த வளைந்து 
சிக்கென்ற சிலையாகிய மேருவிற் சிகரமிடமாகச் சென்றடைந்தான், சுடர்களின் தலைவனாகிய        (திருத்:சுடர்சுளின்/சுடர்களின்)
சூரியன்;  ஆதலால் இவ்விடத்தில் நிற்க வொண்ணாது.         98

            10. நீயே கூறென்று மறுத்தல் *
            ---------------------------
*பேரின்பப் பொருள்; "உன்னறி வாலின் புறுவைநீ யென்றது'',

    நீயே கூறென்று மறுத்தல் என்பது, 'இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது 
என் கட் கிடந்த பரிவினானன்றே !  இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமையில்லை' யெனத் தலைவன் 
உட்கொண்டு போய்ப் பிற்றைஞான்று செல்லத்தோழி, 'யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்து சொல்ல 
மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறை யுள்ளது சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக் 
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    அந்தியின் வாயெழி லம்பலத்
        தெம்பரன் அம்பொன்வெற்பிற் 
    பந்தியின் வாய்ப்பல வின்சுளை
        பைந்தே னொடுங்கடுவன் 
    மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
        சிலம்ப மனங்கனிய
    முந்தியின் வாய்மொழி நீயே 
        மொழிசென்றம் மொய்குழற்கே

    அஞ்சு தும்பெரும பஞ்சின்மெல்லடியைக் 
    கூறுவ நீயே கூறு கென்றது

    இதன் பொருள்: அந்தியின் வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் -அந்தியின்க ணுண்டாகிய 
செவ்வா னெழிலை யுடைய அம்பலத்தின் கணுளனா கிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது 
அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியின் வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை - பந்தியாகிய 
நிரையின்கட் செவ்வித் தேனொடும் பலாச்சுளையை: கடுவன்  மந்தியின் வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப - 
கடுவன் மந்தியின் வாயின் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ்  சிலம்பை யுடையாய்; மனம் கனிய             (திருத்: சுடுவன்/கடுவன்)
முந்தி இன் வாய்மொழி அம் மொய் குழற்கு நீயே சென்று மொழி-அவள் மனநெகிழ விரைந்து நாவினிய 
வாய்மொழிகளை அம்மொய்த்த குழலை யுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ-று

    எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும் எமக்கண்ணியனென்னுங் கருத்தான், எம்பரனென்றார். 
வெற்பிற் சிலம்ப வெனவியையும் பந்தி, பலாநிரை யென்பாருமுளர். சிலம்பு என்றது வெற்பினொரு 
பக்கத்துளதாகிய சிறு குவட்டை . வாய்மொழி, மொழி யென்னுந் துணையாய் நின்றது. மனங் கனியு 
மென்பதூஉம் நின் வாய்மொழியென்பதூஉம் பாடம்.  மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் 
கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல, அவள் உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய 
நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மன மகிழ்விப்பாயாகவென உள்ளுறையுவமங் கண்டு கொள்க. 
மெய்ப்பாடும் பயனும் அவை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரியோனே! நாங்கள் அஞ்சாநின்றோம்; பஞ்சு போன்ற 
மெல்லிய அடியினையுடையாளுக்குச் சொல்லக் கடவன வெல்லாம் நீயே சொல்வாயாக என்றது .

    செய்யுள்: அந்திச் செக்கரின் எழிலையொத்த திருவம்பலத்தே உளனாகிய எம்முடைய சுவாமி,
 அவனுடைய அழகிய பொதியின் மலையில் குரக்கு நிரையிடத்துப் பலாப்பழங்களின் இனிய சுளைகளைச் 
செவ்வித் தேனிலே கொடுத்துக் கடுவன் குரங்கானது பெண் குரங்கின் வாயிலே கொடுத்துப் பரிகரிக்கின்ற 
மலையினையுடைய நாயகனே !  மனம் நெகிழும்படி அவளை எதிர்ப்பட்டு உன்னுடைய இனிய வார்த்தைகளை 
அந்தச் செறிந்த கூந்தலினையுடையாளுக்கு நீதானே சென்று சொல்லுவாயாக.          99

            11. குலமுறை கூறி மறுத்தல் *
            ---------------------------

*பேரின்பப் பொருள்: உன்றனக்கின்ப மொக்குமோ வென்றது.

    குலமுறை கூறி மறுத்தல் என்பது நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, 'உலகத்து ஒருவர்கண் ஒருவர் 
ஒரு குறை வேண்டிச் சென்றால் அக்குறை நீயே  முடித்துக்கொள் ளென்பாரில்லை ; அவ்வாறன்றி 
இவளிந்நாளெல்லாம் என் குறைமுடித்துத் தருவெனென்று என்னை யுடையையுழற்றி இன்று நின் குறை 
நீயே முடித்துக்கொள் ளென்னா நின்றாளெனத் தலைமகன் ஆற்றாது நிற்ப, அவனை யாற்றுவிப்பது 
காரணமாக ' நீர் பெரியீர்; யாஞ்சிறியோம்' ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாது' எனக் 
குலமுறை கூறி மறுத்துரையா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    தெங்கம் பழங்கமு கின்குலை
        சாடிக் கதலிசெற்றுக் 
    கொங்கம் பழனத் தொளிர்குளிர்
        நாட்டினை நீயுமைகூர்
    பங்கம் பலவன் பரங்குன்றிற் 
        குன்றனன் மாபதைப்பச்
    சிங்கந் திரிதரு சீறூர்ச்
        சிறுமியெந் தேமொழியே.

    தொழுகுலத்தீர் சொற்காகேம் 
    இழிகுலத்தே மெனவுரைத்தது

    இதன் பொருள் : தெங்கம்பழம் கமுகின் குலை சாடி- மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது
குலையை உதிர மோதி; கதலி செற்று - வாழைகளை முறித்து; கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ - 
பூந்தாதையுடைய பழனத்துக் கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய் நீ எம் தேமொழி - எம்முடைய 
தேமொழி;  உமைகூர்பங்கு  அம்பலவன் பரங்குன்றில்- உமை சிறந்த பாகத்தையுடைய அம்பலவனது பரங்குன்றிடத்து; 
குன்று அன்னமா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி- மலைபோலும் யானைகள் நடுங்கச் சிங்கங்கள் 
வேட்டந் திரியுஞ் சீறூர்க் கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது எ.று. 

    நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாக வுடையை யென இரண்டாவது பொருள்பட உரைப்பினுமமையும்.
பரங்குன்றிற் சீறூரெனவியையும், பெருங்காட்டிற் சிறுகுரம்பை யென்பது போதரச், சிங்கந் திரிதரு சீறூரென்றாள்.          (திருத்:சீறு/சீறூ)
மெய்ப்பாடும் பயனும் அவை;

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  "தொழத்தக்க உயர்ந்த குலத்துள்ளீர்! நீர் சொல்லுகிற சொற்களுக்கு 
நாங்கள் போதோம். நாங்கள் இழிகுலத்தவர்' என்று சொன்னது.

    செய்யுள்: தென்னம் பழமானது கமுகந்தாறுகளை மோதி வாழைக் குலைகளை முறித்துப் 
பூந்தாறுகளை யுடைத்தாகிய தடாகங்களிலே கிடந்து விளங்குகிற குளிர்ந்த மருத நிலத்தினையுடையன் 
ஒருத்தனாக விருந்தனை நீ; பரமேசுவரி சிறந்த பாகத்தினையுடைய திருவம்பலநாதன் திருப்பரங் குன்றின்
மலை யொத்த யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டமாக உலாவுகிற சிறுமலையிடத்திருந்தாள், எம்முடைய 
தேனை நிகர்த்த வசனத்தையுடையவள் என்றாக இறப்ப உயர்ந்தார்க்கு இறப்ப இழிந்தோருடனே என்ன 
பொருத்தமுண்டு என்றுபடும்.          100

            12. நகையாடி மறுத்தல்*
            ----------------------

*பேரின்பப் பொருள்:  உன்னறி வின்ப முறலரி தென்றது 

    நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறை கிளத்தலான் மறுத்துக்கூறியவா றன்றென 
மன மகிழ்ந்து நிற்ப, இனி யிவனாற்றுவானென உட்கொண்டு, பின்னுந் தழை எதிராது,
'எம்மையன் மாரேவுங் கண்டறிவோம்;  இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற் றிண்ணியது 
கண்டறியேமென அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
        றம்பல வன்கயிலை 
    மலையொன்று மாமுகத்தெம்மையர்
        எய்கணை மண்குளிக்குங் 
    கலையொன்று வெங்கணை யோடு
        கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
    கொலையென்று திண்ணிய வாறையர்
        கையிற் கொடுஞ்சிலையே

    வாட்டழை யெதிராது சேட்படுத் தற்கு 
    மென்னகைத் தோழி யின்னகை செய்தது.

    இதன் பொருள்: சிலை ஒன்று வாணுதல் பங்கன்-சிலையை யொக்கும் வாணுதலை யுடையாளது 
கூற்றையுடையான் ; சிற்றம்பலவன் - சிற்றம்பலவன் ; கயிலை  மலை ஒன்று மாமுகத்து எம் ஐயர் எய்கணை 
மண்குளிக்கும் - அவனது கைலைக் கண் - மலையையொக்கும் யானைமுகத்து எம்மையன்மார் 
எய்யுங்கணை அவற்றையுருவி மண்ணின்கட் குளிப்பக் காண்டும்; கலை ஒன்று வெம் கணையோடு 
கடுகிட்டது என்னில் - அவ்வாறன்றி ஒரு கலை இவரெய்த வெய்யவம்பினோடு விரைந் தோடிற்றாயின் 
ஐயர் கையில் கொடுஞ் சிலைகெட்டேன் கொலை ஒன்று திண்ணிய ஆறு இவ்வையர் கையில் வளைந்த 
சிலை, கெட்டேன்,  கொலையாகியவொன்று திண்ணியவாறென்! எ-று.

    கைலைக்கண் மண் குளிக்கு மெனவியையும், கொடுஞ்சர மென்பதூஉம் பாடம்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : ஒளி சிறந்த தழையைப் பெற்றுக் கொள்ளாதே தூரத்த 
னாக்குவதாகப் புன்முறுவலையுடைய பாங்கி இனிமை தோன்றச் சிரித்தது.

    செய்யுள்:  வில் போன்று ஒளி சிறந்த நெற்றியினையுடைய உமா தேவியைப் பாகத்திலேயுடையவன் 
திருச்சிற்றம்பலநாதன் கயிலாய வரையிடத்துத் திரண்ட யானை அணியிலே எங்கள் அண்ணன்மார் எய்த 
அம்பு யானை அணியில் பட்டுருவி மண்ணிலே மூழ்கும்; கலை தான் ஒன்(று) இருந்தது; அது தான் எய்த 
பொழுதே விழுகையற்று எய்த அம்பையும் கொண்டு கடுக ஓடிற்றாயிருந்தது; என்றால் இந்தச்         (திருத்:ஒடிற்று/ஓடிற்று)
சுவாமியினுடைய கையில் வளைந்த வில்லானது கொலைத்தொழிலான ஒன்றுக்குத் 
திண்ணிய படி! (எனத்தான் கொண்டாடுகின்றாள்.)

    கயிலை மலையொக்கும் யானை முகத்தென் றுமாம்     101

            13. இரக்கத் தொடு மறுத்தல்*
            --------------------------

*பேரின்பப் பொருள்: என்னறி விலையென்றெய்த்தற் கிரங்கியது.

    இரக்கத்தொடு மறுத்தல் என்பது இவள் என்னுடனே நகை யாடுகின்றது தழை வாங்குதற் பொருட்டென 
உட்கொண்டு நிற்பப் பின்னையுந் தழையேலாது, 'இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையா நிற்றற்குக் 
காரணமென்னோ ' வென்று அதற்கிரங்கி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-

    மைத்தழை யாநின்ற மாமிடற் 
        றம்பல வன்கழற்கே
    மெய்த்தழை யாநின்ற வன்பினர்
        போல விதிர்விதிர்த்துக் 
    கைத்தழை யேந்திக் கடமா
        வினாய்க்கையில் வில்லின்றியே
    பித்தழை யாநிற்ப ராலென்ன 
        பாவம் பெரியவரே

    கையுறை யெதிராது காதற் றோழி 
    யைய நீபெரி தயர்ந்தனை யென்றது.

    இதன் பொருள் :  மைத்தழையா நின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே - கருமை மிகா நின்ற கரிய மிடற்றை        (திருத்:மை/மைத்)
யுடைய அம்பலவனது கழற்கண்ணே :  தழையா நின்ற மெய்அன்பினர் போல விதிர் விதிர்த்து - பெருகா நின்ற 
மெய்யன்பை யுடையவரைப் போல மிகநடுங்கி; கை தழை ஏந்தி- கைக்கண்ணே தழையை ஏந்தி: கடமா வினாய் - 
இதனோடு மாறுபடக் கடமாவை வினாவி' கையில் வில் இன்றியே - தன் கையில் வில்லின்றியே: பெரியவர்
பித்தழையா நிற்பர் - இப் பெரியவர் பித்தழையா நின்றார்; என்ன பாவம் - இஃதென்ன தீவினையோ! எ-று 

    மா-கருமை மாமிடறென்பது. பண்புத்தொகையாய் இன்னதிது வென்னுந் துணையாய் நிற்றலானும்,
மைத்தழையா நின்ற வென்பது   அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும், கூறியது கூறலாகாமை 
யறிக. அது "தாமரை மீமிசை"  எனவும் "குழிந்தாழ்ந்த கண்ண " (நாலடியார் - தூய்தன்மை, 9) எனவும்,
இத்தன்மை பிறவும் வருவன போல. மெய்த்தழையா நின்ற வன்பென்பதற்கு மெய்யாற் றழையா நின்ற 
அன்பெனினுமமையும் பித்தென்றது ஈண்டுப் பித்தாற் பிறந்த அழைப்பை. அழைப்பு - பொருள் புணராவோசை

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கையுறையை ஏற்றுக் கொள்ளாதே சுவாமி மிகவும் 
மயங்கினையோ என்றது.

    செய்யுள்:  இருள் தழைத்துச் செல்லா நின்ற காள கண்டத்தையுடைய திருவம்பலநாதன் 
அவனுடைய சீர்பாதங்களிலே சத்தியம் தழைந்துச் செல்லுகிற அன்பரைப் போல மிகவும் நடு நடுங்கிக் 
கையிலே தழையையும் ஏந்திக் கொண்டு, அதற்கு மறுதலையாக மதம்பட்ட யானையையும் வினவிக் 
கையில் வில்லு மின்றியே இப்பெரியவர் பித்தான வார்த்தைகளைச் சொல்லா நின்றார், 
இப்பாவத்திற்குக் காரணமென்ன? (என்றுபடும்)

    பெரியோரிடத்துத் தீவினை வந்தால் அதற்குக் காரணம் ஆராயப்படு மாதலால், 
இதற்குக் காரணம் என் என்றது         102

            14 சிறப்பின்மை கூறி மறுத்தல்*
            -----------------------------

*'பேரின்பப் பொருள் : சிவத்திடைச் சேருந் திறமுயிர்க்கிலையெனல்',

    சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது 'என் வருத்தத்திற்குக் கவலா நின்றனள் இவளாதலின் 
எனக்கிது முடியாமையில்லை'  யென உட்கொண்டு நிற்பத் தோழி, 'இக்குன்றிடத்து மாவுஞ் சுனையும் 
இவள் வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா ஆதலான் ஈண்டில்லாதனவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர்” 
என மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    அக்கும் அரவும் அணிமணிக் 
        கூத்தன்சிற் றம்பலமே
    ஒக்கு மிவள தொளிருரு 
        வஞ்சிமஞ் சார்சிலம்பா
    கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
        ருங்கொழும் போதுகளும் 
    இக்குன்றி லென்றும் மலர்ந்தறி 
         யாத வியல்பினவே

    மாந்தளிரும் மலர்நீலமும் 
    ஏந்தலிம்மலை யில்லையென்றது

    இதன் பொருள்: மஞ்சு ஆர் சிலம்பா- மஞ்சார்ந்த சிலம்பையுடையாய்; அக்கும் அரவும் அணி மணிக்
கூத்தன் சிற்றம்பலம் ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி அக்கையும் அரவையும் அணியும் மாணிக்கம் போலுங் 
கூத்தனது சிற்றம்பலத்தை யொக்கும் இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி கொக்கும்* சுனையும்-
மாக்களுஞ் சுனைகளும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் - குளிர்ந்த தளிர்களுங் கொழுவிய போதுகளும். 
இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியா இயல்பின- இக்குன்றில் எக்காலத்தும் விரிந்தறியாத தன்மையையுடைய, 
அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர் எ.று.

* கொக்கு-மாமரமுமாம்.

    தளிர் மலர்ந்தறியாத வென்னுஞ் சினைவினை முதன் மேலேறியும், போது மலர்ந்தறியாத வென்னும் 
இடத்து நிகழ்பொருளின் வினை இடத்து மேலேறியும் நின்றன .

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை கிடைக்கவில்லை)

    செய்யுள்: அக்குவடத்தையும் பாம்பையும் சாத்தியருளுகிற மாணிக்கம் போலும் அழகிய 
திருக்கூத்தினையுடையவன் அவனுடைய திருவம்பலத்தை ஒக்கின்ற இவளுடைய விளங்கா நின்ற 
மேனிக்கு நிகர் வருமோ வென்று, மேகங்களார்ந்த மலையினையுடையவனே! மாமரங்களும் சுனையும் 
குளிர்ந்த தளிரும் அழகிய புட்பங்களும் இந்த மலையிடத்து இவள் தோன்றின நாளே தொடங்கி 
எந்தக்காலத்திலும் தளிர்த்து அலராத இயல்பின; (இவள் மேனிக்குப் பயந்து மரங்களும் தளிரீன்றறியா; 
ஆதலால் இந்நிலத்தி லில்லதொன்றை நாங்கள் ஏற்றால் பலர்க்கும் வினாவுதற்கிடமாகும்.) 103        (திருத்: ஆதலாய்/ஆதலால்)

            15. இளமை கூறி மறுத்தல்*
            ------------------------

*பேரின்பப் பொருள் : ''இன்ப முதிர்ந்த திலையுனக் கென்றது.

    இளமை கூறி மறுத்தல் என்பது 'அவளது வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா வென்றதல்லது மறுத்துக் 
கூறியவாறன்று;  சிறப்பின்மை கூறியவாறு என உட்கொண்டு சிறப்புடைத் தழை கொண்டு செல்ல,
அதுகண்டு குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிது 
மியைபுடைத்தன்று' என அவளதிளமை கூறி மறுத்து உரையாநிற்றல். அதற்குச் செய்யுள்:-            (திருத்: அவதிளமை/அவளதிளமை)

    உருகு தலைச்சென்ற வுள்ளத்தும் 
        அம்பலத் தும்மொளியே
    பெருகு தலைச்சென்று நின்றோன் 
        பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
    முருகு தலைச்சென்ற கூழை 
        முடியா முலைபொடியா
    ஒருகு தலைச்சின் மழலைக்கென் 
        னோவைய வோதுவதே

    முளையெயிற் றரிவை, விளைவில ளென்றது.

    இதன் பொருள்: உருகுதலைச் சென்ற உள்ளத்தும்- அன்பருடைய உருகுதலை யடைந்த 
உள்ளத்தின் கண்ணும்; அம்பலத்தும் - அம்பலத்தின் கண்ணும்; ஒளிபெருகுதலைச் சென்று நின்றோன் - 
இரண்டிடத்து மொப்ப ஒளி பெருகுதலை யடைந்து நின்றவனது; பெருந்துறைப் பிள்ளை - பெருந்துறைக்
கணுளளாகிய எம்பிள்ளையுடைய; கள் ஆர் முருகுதலைச் சென்ற கூழை முடியா , தேனார்ந்த நறுநாற்றம்         (திருத்: நிசன்ற/சென்ற)
தம்மிடத் தடைந்த குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா - முலைகள் தோன்றா; ஒருகுதலைச் சின்மழலைக்கு - 
ஒருகு தலைச் சின்மழலை மொழியாட்கு ; ஐய-ஐயனே; ஓதுவது என்னோ- நீ சொல்லுகின்றவிது யாதாம்! 
சிறிதுமியைபுடைத்தன்று எ- று

    ஏகாரம்-அசை நிலை. கள்ளார்-கூழையெனவியையும், குதலை மை-விளங்காமை, மழலை-இளஞ்சொல், 
சின்மழலை திறத்தென  நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்த தெனினுமமையும்.
இவை நான்கற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: முளைக்கின்ற பல்லுடைய நாயகி விளைவையறியாள் என்றது.

    செய்யுள்: உருகுதலைச் செய்து தன்னை நினைந்தவர்களின் நெஞ்சினும் அம்பலத்தினும் 
ஒளி பெருகும் தன்மையினையுடையனாய் எழுந்தருளி  நின்றவன், அவனுடைய திருப்பெருந்துறையிலே 
உள்ள இளையவளுடைய தேனிடத்தே உண்டாகிய நிறைந்த நாற்றம் உண்டாய மயிரும் கடைமுடிய 
எழுந்ததில்லை; முலைகள் இன்னும் புறப்படவில்லை. எப்போது பேசினாலும் ஒரு சொற்போல இருக்கிறது.... 
(ஒரு குதலை) மழலைச் சொல்லையுடையாளுக்குச் சுவாமி சொல்லுகிறது ஏதோ தான்?      104

            16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் *
            -------------------------------------

* பேரின்பப் பொருள்: "அருளன்றிச் சிவம் அமையா தென்றது''

    மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது இவளதிளமை கூறுகின்றது தழை வாங்குதற் 
பொருட்டன்றாக வேண்டும்;  அதுவன்றி இந்நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று 
இயையாமை கூறி மறுக்க  வேண்டிய தென்னை? இனியிவ் வொழுக்கம் இவளையொழிய வொழுகக் கடவேன்'
என உட்கொண்டு நிற்ப, நீயென்னை மறைத்த காரியம் இனி நினக்கு முடியாது' என அவனோடு நகைத்துக் 
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    பண்டா லியலு மிலைவளர் 
        பாலகன் பார்கிழித்துத் 
    தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
        லோன்தொல்லைத் தில்லையின்வாய்
    வண்டா லியலும் வளர்பூந்
        துறைவ மறைக்கினென்னைக் 
    கண்டா லியலுங் கடனில்லை 
        கொல்லோ கருதியதே

    என்னை மறைத்தபின் எண்ணியதரிதென 
    நன்னுதல் தோழி நகை செய்தது

    இதன் பொருள்: பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன்-முற்காலத்து ஆலின்கணுளதாம் 
இலையின் கட்டுயின்ற பாலகனாகிய மாயோன்; பார்கிழித்து தொண்டால் இயலும் சுடர்க் கழலோன்- 
நிலத்தைக் கிழித்துக் காணாமையிற் பின் றொண்டா லொழுகுஞ் சுடர்க் கழலையுடையானது; தொல்லைத்
தில்லையின் வாய் வண்டு - பழையதாகிய தில்லை வரைப்பினுண்டாகிய வண்டுகள் ; ஆல்இயலும் வளர்பூந்        (திருத்: வளர்பூ/வளர்பூந்)
துறைவ- ஆலிப்போடு திரிதரும் மிக்க பூக்களையுடைய துறையையுடையாய்; கண்டால்- ஆராய்ந்தால்; 
என்னை மறைக்கின் கருதியது இயலும் கடன் இல்லை கொல்-என்னை மறைப்பின் நீ கருதியது 
முடியுமுறைமையில்லை போலும் எ-று.

    பண்டு தொண்டாலியலு மெனவும், தில்லைவரைப்பிற் றுறை யெனவுமியையும். தில்லைகட் டுறைவ 
னெனினுமமையும்.  மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த நகை. இவள் நகுதலான் என் குறை யின்னதென 
உணர்ந்த ஞான்று தானே முடிக்குமென நினைந்து ஆற்றுவானாவது பயன்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: எனக்குக்  கரந்தவிடத்து நினைத்த காரியம் முடிக்கை 
அரிதென்று நல்ல நெற்றியினையுடைய பாங்கி சிரித்தது,

    செய்யுள்:  முற்காலத்து வட (விருக்ஷ) த்தினின்றும் புறப்படுகிற தளிரிலே கண் வளர்ந்த 
புருஷோத்தமன் பூமியையிடந்து கொண்டு புக்கு , அங்ஙனம் அகங்கார முகத்தானறியப் படாமையாலே 
அவன் தொண்டு செய்து காண்கைக்கு முயல்கிற சுடர்க் கழலோன், அவனுடைய பெரும்பற்றப் புலியூரிடத்து 
வண்டுகள் ஆலித்தலைச் செய்கிற மிக்க பூவுடைத்தாகிய துறையினையுடையவனே! எனக்கு மறைத்தவிடத்து,
விசாரித்துப் பார்த்தால், நீ நினைத்த காரியம் முடித்துப் போகை அரிது போல இருந்தது, 
என்றதால் எனக்கு மறைப்பதேன் என்றுபடும்.        105

            17. நகை கண்டு மகிழ்தல்*
            ------------------------

*பேரின்பப் பொருள் ; அருணோக்க மின்றியின் பாமோ வென்றது

    நகை கண்டு மகிழ்தல் என்பது "இவள் தன்னை மறைத்தால் முடியாதென்றது, மறையா தொழிந்தால் 
முடியுமென் றாளா 'மெனத் தலைமகன் உட்கொண்டு நின்று, 'உன்னுடைய சதுரப்பாட்டைச் சேர்ந்த 
மெல்லென்ற நோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை அல்லது வேறு துணையுண்டோ'வென அவனது 
நகை கண்டு மகிழா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    மத்தகஞ் சேர்தனி நோக்கினன் 
        வாக்கிறந் தூறமுதே
    ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
        றோன் தில்லை யொத்திலங்கு 
    முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் 
        தோளி முகமதியின்
    வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன் 
        றோஎன் விழுத்துணையே.

    இன்னகைத் தோழி மென்னகை கண்டு 
    வண்ணக் கதிர்வேலண்ண லுரைத்தது.

    இதன் பொருள்: மத்தகம் சேர் தனி நோக்கினன் - நெற்றியைச் சேர்ந்த தனிக்கண்ணையுடையான்;
வாக்கு இறந்து ஊறு அமுது ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் - சொல்லளவைக் கடந்து
 ஊறுமமுதத்தையொத்து மனத்தைச் சேர்ந்து என்னையுய்ய நின்றவன்; தில்லை ஒத்து இலங்கு - 
அவனது தில்லையை யொத்திலங்கும்;  முத்து அகம்சேர் மெல்நகைப் பெருந்தோளி - முத்துப் போலும்
எயிறுக  ளுள்ளடங்கிய  மூரன்  முறுவலையுடைய பெருந்தோளியது ; முகமதியின் வித்தகம்சேர் மெல்லென் 
நோக்கம் அன்றோ என் விழுத்துணை - முகமாகிய மதியின் கணுண்டாகிய சதுரப்பாட்டைச் 
சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனது சிறந்த துணை! அதனால் ஆற்றத்தகும் எ-று .

    வாக்கிறந் தென்பதூஉம், அமுதொத் தென்பதூஉம் அகஞ்சேர்ந் தென்பதனோ டியையும் 
உய்ய நின்றோனென்னுஞ் சொற்கள் உய்வித்தோனென்னும் பொருளவாய் ஒரு சொன்னீர்மைப்பட்டு 
இரண்டாவதற்கு முடிபாயின. இலங்கு முகமதியெனவியையும், மறுத்தாளாயினும் நங்கண்மலர்ந்த
முகத்தளென்னுங் கருத்தான் இலங்கு முகமதியினென்றான் உள்ளக்குறிப்பை நுண்ணிதின் விளக்கலின்
வித்தகஞ்சேர் மெல்லெனோக்க மென்றான்.  உள்ளக்  குறிப்பென்றவா றென்னை? 

    முன்னர்ச் “சின்மழலைக் கென்னோ ஐய வோதுவது" (திருக்கோவை, 104) என்று இளையளென 
மறுத்த விடத்து இந்நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளைய ளென்று இயையாமை மறுத்தாள்; 
இவ்வொழுக்கம் இனி இவளையொழிய வொழுகக் கடவே' னென்று தலைமகன் தன் மனத்திற் குறித்தான்; 
அக்குறிப்பைத் தோழி அறிந்து கூறினமையின் 'வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை, 
பிறிதில்லை' யெனத் தனதாற்றாமை தோன்றக் கூறினான், மெய்ப்பாடு: உவகை, பயன்: ஆற்றாமை  நீங்குதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய மூங்கிலை நிகர்த்த தோளினையுடைய பாங்கி (யின்) 
மெல்லிய சிரிப்பைப் பார்த்து அழகினையும் ஒளியினையும் உடைத்தாகிய வேலினையுள்ள நாயகன் சொன்னது.

    செய்யுள்: திருநெற்றியிலே சேர்ந்ததொரு திருநயனத்தையுடையவன் சொல்லளவைக் கடந்து வந்து 
ஊறுகின்ற அமுதத்தை  யொத்து என் நெஞ்சிலே பொருந்தி யென்னைப் பிழைக்கும்படிக்கு ஈடாக நின்றோன் 
அவனுடைய சிதம்பரத்தை யொத்து விளங்கும், முத்து நிரையை ஒத்து உள்ளடங்கின வெள்ளிய 
முறுவலினையுடைய பெரிய தோள்களையுடையாய்! உன் முகமாகிய சந்திரனில் சதுரப்பாடு பொருந்தின 
மெத்தென்ற பார்வையல்லவோ எனக்குரிய துணையாவது?

    என்றால், உனக்கு நான் மறைப்பேனோ என்றது.

    உள்ளக்கருத்து நுண்ணிதின் விளக்கலின் வித்தகஞ்சேர் மெல்லிய நோக்கமென்றார்.    106


            18. அறியாள் போன்று நினைவு கேட்டல் *
            ------------------------------------

*'பேரின்பப் பொருள் : இன்பம் பலவதி லெங்ஙனஞ் சிவமெனல்.

     அறியாள் போன்று நினைவு கேட்டல் என்பது தலைமகனது மகிழ்ச்சிகண்டு 'இவன்  வாடாமற் 
றழைவாங்குவே 'னென உட்கொண்டு, 'என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர்; அவருள் நின்னுடைய 
நினைவு யார் கண்ணதோ'வெனத்தான் அறியாதாள் போன்று அவனினைவு கேளா நிற்றல். அதற்குச் செய்யுள்:

    விண்ணிறந் தார்நிலம் விண்டவ 
        ரென்றுமிக் காரிருவர்
    கண்ணிறந் தார்தில்லை யம்பலத் 
        தார்கழுக் குன்றினின்று
    தண்ணறுந் தாதிவர் சந்தனச்
        சோலைப்பந் தாடுகின்றார்
    எண்ணிறந் தாரவர்** யார்கண்ண 
        தோமன்ன நின்னருளே

    வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை 
    வெறியார் கோதை யறியே னென்றது.

**' எண்ணிறந்தாரிவர்' என்பது பழையவுரைகாரர் பாடம்.

    இதன் பொருள்: விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார் - விண்ணைக் 
கடந்தவர் நிலத்தைப் பிளந்தவரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக் கடந்தார்: 
தில்லை அம்பலத்தார்- தில்லையம்பலத்தின் கண்ணார்; கழுக்குன்றில் நின்று தண் நறுந் தாது இவர் 
சந்தனச் சோலைப் பந்து ஆடுகின்றார் எண் இறந்தார் - அவரது கழுக்குன்றின் கணின்று தண்ணிதாகிய 
நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்: மன்ன-மன்னனே: நின் அருள்
 அவர் யார் கண்ணதோ - நினதருள் அவருள் யார் கண்ணதோ? கூறுவாயாக எ-று.

    விண்டவரென்பதற்கு முன்னுரைத்ததுரைக்க (திருக் கோவை, 24) அன்னோர்க்கு அரியராயினும் 
எம்மனோர்க்கு எளிய ரென்னுங் கருத்தால் தில்லையம்பலத்தா ரென்றார், சோலைக்க ணின்றென்று 
கூட்டினு மமையும். எண்ணிறந்தார் பலரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு மருட்கையைச் சார்ந்த பெருமிதம், 
நும்மாற் கருதப்படுவாளை அறியேனென்றாளாக, என்குறை இன்னாள் கண்ணதென அறிவித்தால் 
இவள் முடிக்குமென நினைந்து ஆற்றுவானாமென்பது பயன்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் சொன்ன மாந்தளிர் போன்ற சரீரத்தையுடையாளை 
நறுநாற்றமிக்க மாலையினையுடையவள் அறியேனென்றது.

    செய்யுள்: அன்னமாய் ஆகாசம் கடந்தாரும், வராகமாய்ப் பூமியை இடந்தாரும் என்று (சொல்லப்பட்ட) 
அயனும் மாலுமாகிய இவ்விருவரிடத்தையும் கடந்து நின்ற திருவம்பலத்திலேயுள்ளவர், அவருடைய திருக்கழுக் 
குன்றம் நின்று திட்பமும் நறுநாற்றமும் உடைத்தாகிய பூப்பரந்த சந்தனச் சோலையில் பந்தாடுகின்றவர்கள் ;
இவர்கள் எண்ணிறந்த பேராய் இருந்தார்கள். இவர்களில் மன்னனே! நின்னுடைய அருள் யாரிடத்தே 
என்று சொல்லுவாயாக.             107

            19. அவயவங்கூறல்*
            ------------------

*'பேரின்பப் பொருள் : இன்பக் கனமரன் திருமேனியென்று'   இன்பக்கனம்-ஆனந்தமயம்

    அவயவங் கூறல் என்பது 'இன்னும் அவளை யிவள் அறிந்திலள்' அறிந்தாளாயிற் றழை வாங்குவா'ளென 
உட்கொண்டு நின்று, என்னாற் கருதப்பட்டாளுக்கு அவயவம் இவை' யெனத் தோழிக்குத் தலைமகன் 
அவளுடைய அவயவங் கூறா நிற்றல் : அதற்குச் செய்யுள் :-

    குலவின கொங்கை குரும்பை 
        குழல்கொன்றை கொவ்வை செவ்வாய்
    கவவின வாணகை வெண்முத்தங் 
        கண்மலர் செங்கழுநீர்
    தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்*
        சிற்றம் பலமனையாட் 
    குவவின நாண்மதி போன்றொளிர்
        கின்ற தொளிமுகமே.

    அவயவ மவளுக் கிவையிவை யென்றது. 

*'சூழ்பொழிற்' என்பது பழையவுரைகாரர் பாடம்

     இதன் பொருள்: தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு - விரதங்களான் 
வருந்தாமற்றவத்  தொழிலை நீக்கி அன்பர்க்கு இன்புறு நெறியருளி யவனது தாழ்ந்த பொழிலையுடைய
சிற்றம்பலத்தை யொப்பாட்கு குவவின கொங்கை குரும்பை - குவிந்த கொங்கைகள் குரும்பையையொக்கும்,
 குழல் கொன்றை -குழல் கொன்றைப் பழத்தை யொக்கும்; செவ்வாய் கொவ்வை- செய்ய வாய் கொவ்வைக் 
கனியை யொக்கும்; கவவின வாள் நகை வெண் முத்தம் - அதனகத்திடப்பட்ட வாணகை வெண் முத்தையொக்கும் 
கண் மலர் செங்கழுநீர்-கண்மலர்கள் செங்கழுநீரை யொக்கும்; ஒளி முகம் உவாவின நாள் மதிபோன்று 
ஒளிர்கின்றது-ஒளிமுகம் உவாவின் கணுளதாகிய செவ்விமதிபோன் றொளிரா நின்றது எ-று

    தவ வினை தீர்ப்பவனென்பதற்கு மிகவும் வினைகளைத் தீர்ப்பவ னெனினுமமையும். 
உவவின நாண்மதி யென்றது "காலகுருகு” ( குறுந்தொகை, 26) என்பது போலப் பன்மை யொருமை மயக்கம். 
எப்பொழுதுந் தன்னுள்ளத்து இடையறாது விளங்குதலின், ஒளிர்கின்றதென நிகழ்காலத்தாற் கூறினான். 
உவவினமதி பல கலைகள் கூடி நிறைந்த தன்மையையுடைய மதி நாண்மதி உவாவான நாளின் மதி.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  என்னாற் காதலிக்கப் பட்டவளுக்கு அவயவங்கள் 
இப்படியே இருக்குமென்றது.

    செய்யுள் : குவிந்த முலைகள் குரும்பையை யொக்கும்; மயிர் கொன்றைப் பழநெற்றுக் தானாயிருக்கும்! 
சிவந்த வாயானது கொவ்வைப்பழம் போன்றிருக்கும் .உள்ளடங்க ஒளிசிறந்த முறுவல் வெள்ளிய முத்துப் 
போன்றிருக்கும்: கண்ணானது செங்கழு நீர் மலரையொக்கும். தவத்தொழிலை முடிவு செய்கிறவன், 
அன்பர் விரதங்களினால் வருந்தாமல் இன்புற்று நெறியை அருளுகிறவன் அவனுடைய நீண்ட பொழில் 
சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தை யொப்பாளுக்கு உவா நாளின் மதியை ஒத்து விளங்கா நின்றது 
ஒளி சிறந்த முகமானது. 

    இப்படிக்கு அவயவங்களை உடையாளையும் அல்லாதாரையும் தெரியாதோ? என்றுபடும்.     108

            20. கண்ணயந் துரைத்தல் *
            -------------------------

*பேரின்பப் பொருள் : ' திருநோக் கின்பச் சேதன மென்றது'

    கண்ணயந் துரைத்தல் என்பது அவயவங் கூறியவழிக் கூறியும் அமையாது. தனக்கு அன்று 
தோழியைக் காட்டினமை நினைந்து, பின்னுங் கண்ணயந்து கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள் :

    ஈசற் கியான்வைத்த வன்பி
        னகன்றவன் வாங்கிய வென்**
    பாசத்திற் காரென் றவன்தில்லை
         யின்னொளி போன்றவன்தோள்
    பூசத் திருநீ றெனவெளுத்
        தாங்கவன் பூங்கழல்யாம் 
    பேசத் திருவார்த்தை யிற்பெரு 
        நீளம் பெருங்கண்களே

    கண்ணிணை பிறழ்வன, வண்ணமுரைத்தது.

** 'வாங்கியவெம்' என்பது பழையவுரை காரர் பாடம் . 'வாங்கியவெண்' என்றும் பாடம் .

    இதன் பொருள்:  ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று- ஈசனிடத்து யான் வைத்த அன்பு போல அகன்று 
அவன் வாங்கிய என் பாசத்தின் காரென்று - அவனால் வாங்கப்பட்ட எனது பாசம் போலக் கறுத்து;  அவன் 
தில்லையின் ஒளி போன்று - அவனது தில்லையினொளியை யொத்து; அவன் தோள் பூசு அத்திருநீறு 
என வெளுத்து - அவன்றோள்களிற்சாத்தும்  அத்திருநீறு போல வெளுத்து; அவன் பூங்கழல் யாம் பேசு 
அத்திரு வார்த்தையின் பெருநீளம் பெருங்கண்கள் - அவனுடைய பூப்போலுந் திருவடிகளை யாம் பேசும் 
அத் திருவார்த்தை போல மிகவு நெடிய வாயிக்கும் என்னாற் காணப்பட்டவளுடைய பெரிய கண்கள் எ-று.

    அன்பி னகன்றென்பதற்குப் பிறிதுரைப்பாரு முளர். தில்லையினொளி போறல், தில்லையினொளி 
போலும் ஒளியை யுடைத்தாதல். ஆகவே தில்லையே உவமையாம். பூசத் திருநீறு வெள்ளிதாய்த் தோன்றுமாறு
போல வெளுத்தென்றும், பேசத் திருவார்த்தை நெடிய வாயினாற் போலப் பெரு நீளமாமென்றும் , வினையெச்சமாக்கிச் 
சில  சொல்வருவித் துரைப்பினும் அமையும். பெரு நீளமாமென ஆக்கம் வருவித்துத் தொழிற்பட வுரைக்க. 

    கண்களாற் பெரிது மிடர்ப்பட்டானாகலானும், தோழியைத் தனக்குக் காட்டின பேருதவியை 
யுடையனவாகலானும், முன்னர்க் கண் மலர் செங்கழுநீ ரென்றும் அமையாது, பின்னும் இவ்வாறு கூறினான்.

    கண்ணிற்குப் பிறிது வகையான் உவமங்கூறாது இங்ஙனம் அகல முதலாயின கூறவேண்டியது 
எற்றிற்கெனின் , அவை கண்ணிற் கிலக்கணமுங் காட்டியவாறாம், என்னை இலக்கணமாமாறு? 
"கண்ணிற் கியல்பு சசடறக் கிளப்பின், வெண்மை கருமை செம்மை யகல நீள மொளியென 
நிகழ்த்துவர் புலவர். ஆயின் இதனுட் செம்மை கண்டிலே மென்பார்க்குச் செம்மையுங் கூறிற்று.
அவன்றோளிற் பூசத் திருநீறென் றதனால் சிவப்புஞ் சொல்லிய தாயிற்று, அது செம்மையாற் றோன்றும் 
வரியென வறிக. 

    யான் பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னை யெனின், திருவார்த்தை பேசுமன்பர் 
பலராகலான் யாமென்று பலராகக் கூறினார், இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம்,
பயன்: ஐயமறுத்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  கண்ணிணைகள் உலவுகிற வடிவைச் சொன்னது.

    செய்யுள்: சிவனிடத்திலே யான்வைத்த நேசம்போலே விரிந்து அவனாலே வாங்கப்பட்ட வெய்ய 
பாசம்போலே கருமையுடைத்தாய் அவனுடைய தில்லையின் ஒளிபோன்று ஒளிபெற்று அவனுடைய 
திருப்புயங்களிலே சாத்துகிற திருநீறு போலே வெள்ளிதாய், அவனுடைய பொலிவுடைத்தாகிய 
சீபாதங்களை நாம் சொல்லுகிற திருவார்த்தை போலே பெரிய நீளமுடைத்தாய் இருந்தன. பெரிய கண்களும். 

    கண்ணினாற் பெரிதிடர்ப் பட்டானாதலின் கண்மலர் செங்கழுநீர் என்று அமையாதாதலின்,
 இவ்வாறு கூறினார்.         109

            21. தழையெதிர்தல் *
            --------------------

*'பேரின்பப் பொருள் : "அடிமைத் திறத்தாற் சிவத்தாக்குவனென்றது."

    தழை யெதிர்தல் என்பது கண்ணயந்துரைப்பக் கேட்ட தோழி, 'இவ்வாறு ஏற்றல் எங்குடிக் கேலாவாயினும் 
நீ செய்த வுதவிக்கும் நின்பேரன்புக்கும் ஏலா நின்றே' னெனக் கூறித் தலைமகன் மாட்டுத் தழை யெதிரா நிற்றல்.
 அதற்குச் செய்யுள்:-

    தோலாக் கரிவென்ற தற்குந் 
        துவள்விற்கு மில்லின் தொன்மைக்
    கேலாப் பரிசுள வேயன்றி
        யேலேம் இருஞ்சிலம்ப
    மாலார்க் கரிய மலர்க்கழ 
        லம்பல வன்மலையிற் 
    கோலாப் பிரசமன் னாட்கைய
        நீதந்த கொய்தழையே.

    அகன்றவிடத் தாற்றாமைகண்டு 
    கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.

    இதன் பொருள் : இருஞ் சிலம்ப-இருஞ் சிலம்பா; தோலாக் கரிவென்ற தற்கும் - எம்மை யேதஞ்செய்ய 
வருந்தோலாக் கரியை நீ வென்றதற்கும்; துவள்விற்கும் - யான் குறை மறுப்பவும் போகாது பேரன்பினையுடையாய்,
 நீ விடாது துவண்ட துவட்சிக்கும்; இல்லின் தொன்மைக்கு ஏலாப் பரிசு உளவே - எமது குடியின்  பழமைக் கேலாத
இயல்பை யுடையவென்று எம்மாற் செய்யப் படாதனவுளவே; ஐய-ஐயனே ; மாலார்க்கு அரிய மலர்க் கழல் 
அம்பலவன் மலையில் - மாலார்க்குமரிய மலர் போலுங் கழலையுடைய அம்பலவனது மலையின் கண்; 
கோலாப் பிரசம் அன்னாட்கு நீ தந்த கொய்தழை- வைக்கப்படாத தேனையொப்பாட்கு நீ தந்த கொய்தழையை; 
அன்றி ஏலேம்-பிறிதோராற்றானேலேம் எ.று.

    உளவே யென்னு மேகாரம், எதிர் மறை . அஃதென் போலவெனின்,"தூற்றாதே தூர விடல்” 
(நாலடியார்-பொறையுடைமை, 5) என்றது தூற்றுமென்று பொருள் பட்டவாறு போல வென்றறிக. 
அன்றியும் ஏலாப்பரி சுளவே யென்பதற்கு நாங்கள் இத்தழை வாங்குவதன் றென்றது கருத்து.
எமது குடிப்பிறப்பின் பழமை பற்றி அது சுற்றத்தார் கூடிவாங்குவ தொழிந்து நாங்களாக வாங்கினாற் 
குடிபிறப்புக்குப் பழிவருமென்பதனைப் பற்றியென்றவாறு. வழிபட்டுக் காணலுறாமையின்
மாலாரென இழித்துக் கூறினாரெனினுமமையும்.
     
    உளவேலன்றி யேலேமென்பது பாடமாயின், தழைவாங்குகின்றுழி என்பொருட்டால் நீர் 
நுங்குடிக்கேலா தனவற்றைச் செய்யா நின்றீரென்று தலைமகன் கூறியவழி, நீ செய்ததற்குக் 
கைம்மாறு செய்ய வேண்டுதுமாதலின் இற்பழியாங் குற்றம் இவற் குளவாயினவல்லது 
இதனை யேலேமென்று கூறினாளாக வுரைக்க. என்றது இற்பழியாங் குற்றம் இதற்குளவாகலான் 
ஏற்கின்றோம். நீ செய்த வுதவியைப் பற்றி அல்லதேலே மென்றவாறெனவறிக. 

    கோலாற்பிரச மென்பது  பாடமாயின், கோலிடத்துப் பிரசம் , என்றது கோற்றேன். 
இது சுவைமிகுதி யுடைமை கூறியவாறென வுரைக்க. தோலாக்கரி வென்றது முதலாயின நிகழ்ச்சி 
செய்யுளின் கட் கண்டிலே மென்பார்க்கு இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்தின்கண் நிகழ்ந்தனவென 
வுரைக்க. அன்றியும் படைத்து மொழி வகுத்துரை யென்பன வற்றானுமறிக. அகறல் - அவன் 
கருத்திற் ககறல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநேர்தல்;

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் குறைக்கு உடன் படாமல் அகன்ற விடத்துத் 
தான் ஆற்றாமையைக் கண்டு அத்தன்மையாலே துன்பமுற்ற தோழி கையுறை எதிர்ந்தது.

    செய்யுள் : ஒருவருக்கும் தோலாத கரியை நீ வென்ற படிக்கும், நாங்கள் குறை மறுக்கவும் 
நீ போகாது துவண்டதற்கும், எம்குடியாயின் பழமைக்கும் ஏலாத் தன்மையுண்டோ ? பெரிய 
மலையை யுடையவனே !  நாங்கள், புருஷோத்தமனார்க்கரிய மலரையொத்த சீபாதங்களையுடைய 
திருவம்பலநாதன், அவனுடைய திருமலையில் ஈ முதலானவற்றாற் கொல்லப்படாத தேனையொப்பாளுக்கு: 
சுவாமி! நீ தந்த கொய்யப் பட்ட தழையை இவற்றாலே ஏற்கிறோம்: இதனையல்லது தழையேற்பார் 
சிலரல்லோம் காண்.         110

            22. குறிப்பறிதல்*
            ----------------

* பேரின்பப் பொருள் :  'பரிவுயிர்க் கருளெனப் பகரருள் கூறல்'

    குறிப்பறிதல் என்பது தலைமகன் மாட்டுத் தழை யெதிர்ந்த தோழி: 'இவளுக்குத் தெற்றெனக் 
கூறுவேனாயின் இவள் மறுக்கவுங் கூடு 'மென உட்கொண்டு, 'இந்நாள் காறுந் தழையேலாமைக்குத் 
தக்க பொய் சொல்லி மறுத்தேன்; இன்று அவனது நோக்கங்கண்டபின் பொய் சொல்லு நெறி அறிந்திலேன்; 
இனியவனுக்குச் சொல்லுமாறென்னோ'வெனத் தழை யேற்பித்தற்குத் தலைமகளது குறிப்பு அறியா நிற்றல், 
அதற்குச் செய்யுள்:-

    கழைகாண் டலுஞ்சுளி யுங்களி 
        யானையன் னான்கரத்தில்
    தழைகாண் டலும் பொய் தழைப்பமுன் 
        காண்பனின் றம்பலத்தான்
    உழைகாண் டலும் நினைப் பாகுமென்
        நோக்கிமன் நோக்கங்கண்டால்
    இழைகாண் பணைமுலை யாயறி 
        யேன்சொல்லும் ஈடவற்கே

    தழையெதிரா தொழிவதற்கோர் 
    சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.

    இதன் பொருள்: கழை காண்டலும் சுளியும் களியானை அன்னான் - குத்து கோலைக் காண்டலும் 
வெகுளுங் களி யானையை யொப்பானுடைய; கரத்தில் தழைகாண்டலும் பொய் முன் தழைப்பக் காண்பன் - 
கையிற் றழையைக் காண்டலும் அப்பொழுது சொல்லத் தகும் பொய்யை முன் பெருகக் காண்பேன்; 
அம்பலத்தான் உழைகாண்டலும் நினைப்பு ஆகும் மெல் நோக்கி அம்பலத்தானுடைய கையிலுழை மானைக்
காண்டலும் நினைவுண்டாம் மெல்லிய நோக்கத் தையுடையாய்; மன் நோக்கம் கண்டால் - அம்மன்னனுடைய
புன்கணோக்கத்தைக் கண்டால் ; இழை காண்பணை முலையாய் இழை விரும்பிக் காணப்படும் பெரிய 
முலையையுடையாய்; இன்று அவற்குச் சொல்லும் ஈடு அறியேன் - இன்று அவற்குப் பொய் சொல்லு 
நெறியறிகின்றிலேன்; இனியாது செய்வாம்?  எ-று.

    குத்துகோல் வரைத்தன்றி யானை களிவரைத் தாயினாற்போலக் கழறுவார் சொல் 
வயத்தனன்றி வேட்கை வயத்தனாயினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங் 
களியானையன்னா னென்றாள். ஈண்டுக் கழறுவாரென்றது  தோழிதன்னை. அஃதாவது 
கையுறை பலவற்றையும் ஆகாவென்று தான் மறுத்ததனை நோக்கி. தலைமகளை முகங்கோடற்கு 
இழைகாண் பணை முலையாயெனப் பின்னும் எதிர் முகமாக்கினாள். தழையெதிர்ந் தாளாயினும் 
தலைமகளது குறிப்பறியாமையின், அவனைக் கண்டிலள் போலக் கண்டாலென எதிர்காலத்தாற்
கூறினாள். இதனை முகம்புக வுரைத்தல் எனினும் குறிப்பறிதல் எனினு மொக்கும்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : தழை ஏற்றுக் கொள்ளாதொழிவதற்கு ஒரு வார்த்தையும் 
அறியே னென்று பல வளைகளையுமுடை யாளுக்குச் சொன்னது.

    செய்யுள்: பரிக்கோலைக் காணுமளவில் விரிகின்ற மதயானையை யொத்த நாயகனுடைய 
கையில் அத்தழையைக் காணுமளவில், அத்தழை ஏலாமைக்குச் சொல்லும் பொய்யான வார்த்தைகளை
முன்பு மிகவும் காண்பேன்.  இப்பொழுது திருவம்பலநாதனுடைய அத்தத்திலே ஏந்தின மானின் 
நோக்கத்தைக்காணுமளவில் நினைப்பாகிற மெத்தென்ற பார்வையினை யுடையாய்! நாயகனுடைய 
புன்னோக்கத்தைப் பார்த்தால் ஆபரணங்களை விரும்பிக் காணத்தக்க பெரிய முலைகளையுடையாய்! 
அத்தழை ஏலாமைக்குச் சொல்லும் பெரிய வார்த்தைகளை ஒன்று மறிந்திலேன் காண்;
எனத் தழையேற்க வேண்டிற்றென்றுபடும்.             111

            23. குறிப்பறிந்து கூறல் *
            ----------------------

*'பேரின்பப் பொருள்: ' வேறறியா வுயிர்க்கருள வேண்டுமென்றது',

    குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து முகங் கொண்டு அது வழியாக நின்று, 
'யானை கடிந்த பேருதவியார் கையிற் றழையுந் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது
 குறைமுடிக்க வேண்டாவோ' வெனத் தோழி நயப்பக் கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள்:-

    தவளத்த நீறணி யுந்தடந் 
        தோளண்ணல் தன்னொருபால் 
    அவளத்த னாம்மக னாந்தில்லை 
        யானன் றுரித்ததன்ன
    கவளத்த யானை கடிந்தார்
        கரத்தகண் ணார்தழையுந்
    துவ ளத் தகுவன வோசுரும் 
        பார்குழல் தூமொழியே

    ஏழைக் கிருந்தழை, தோழிகொண் டுரைத்தது.

    இதன் பொருள்: சுரும்பு ஆர் குழல் தூ மொழி- சுரும்பார்ந்த  குழலையுடைய தூமொழியாய்;
தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் - வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய 
தோள்களையுடைய அண்ணல் ; தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு 
பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த
யானை - அவன் அன்றுரித்த யானையையொக்குங் கவளத் தையுடைய யானையை: கடிந்தார் கரத்த 
கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ - நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கையவாகிய கண்ணிற்
காருந் தழையும் வாடத் தகுவனவோ?  தகா எ-று.

    தவளத்த நீறு கவளத்த யானை என்பன; பன்மையொருமை மயக்கம். சிவ தத்துவத்தினின்றுஞ் 
சத்தி தத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும், சத்தி தத்துவத்தினின்றுஞ் சதாசிவ தத்துவந் 
தோன்றலின் மகனாமென்றும் கூறினார். " இமவான் மகட்குத் தன்னுடைக்கேள்வன் மகன் றகப்பன்' 
என்பதூஉமப் பொருண்மேல் வந்தது. *

* திருவாசகம், திருப்பொற்சுண்ணம், 13: இன்னும் ''கனகமார்  கவின்செய் மன்றில் அனக நாடகற்கெம் மன்னை,    (திருத்:கண்ணம்/சுண்ணம்)
மனைவி தாய் தங்கை மகள்"  (சிதம்பரச் செய்யுட் கோவை 33) : 'சிவஞ் சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் 
சிவத்தை யீன்றும், (சிவஞான சித்தியார்) : ''சத்தியீன்ற சதாசிவம்" (திருமந்திரம்) : "அம்மனையாயவர் 
தம்மனை யானவள்" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அம்மானை-9) என வருவனவும் காண்க.

     கவளத்த யானை யென்பதனால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானை யென்பதூஉம் 
கூறப்பட்டதாம். அது ஒருவராற் கட்டப்பட்டு பிடிபட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது' அப்படிப்பட்ட
யானையையும் வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ
வென்றதனால் அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள். 
உம்மை சிறப்பும்மை ஏழைக் குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு; அழுகையைச் 
சார்ந்த பெருமிதம். பயன்:  குறைநயப்பித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகிக்கு மிக்க தழையைப் பாங்கி கொண்டு சென்றது. 

     செய்யுள்: வெள்ளிய திருநீற்றைச் சாத்தியருளுகிற பெரிய திருப்புயங்களை யுடைய சுவாமி 
தனக்கொரு பாகமாகிய  தன்  தேவிக்குத் தகப்பனும் மகனுமான திருவம்பலநாதன் முற்காலத்திலே 
உரித்த யானையை யொத்ததான வேண்டிய கவளங்களைக் கொள்ளுகிற யானை நம்மைக் கொல்லாமை 
வென்றவர். அவர் கையிலுள்ளனவாகிய கண்ணுக்கு நிறைந்த தழையும் வாட (விடப்படு) வனவோ?
வண்டு நிறைந்த கூந்தலினையும் தூய வார்த்தையினையும் உடையாய்!         112

            24. வகுத்துரைத்தல் *
            -------------------

*பேரின்பப் பொருள்:  "சிவமுயிர்ப் பரிவரு டனக்குச் செப்பியது."

    வகுத்துரைத்தல் என்பது உதவி கூறவும் பெருநாணின ளாதலின் தழை வாங்க மாட்டாது நிற்ப, 
அக்குறிப்பறிந்து இருவகையானும் நமக்குப் பழியேறும்; அது கிடக்க, நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி 
செய்யுமாறென்னோ' வெனத் தலை மகள் தழை யேற்குமாறு வகுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :

    ஏறும் பழிதழை யேற்பின்மற் 
        றேலா விடின்மடன்மா
    ஏறு மவனிட பங்கொடி 
        யேற்றிவந் தம்பலத்துள்
    ஏறு மான்மன்னும் ஈங்கோய் 
        மலைநம் மிரும்புனம்காய்ந்
    தேறு மலைதொலைத் தாற்கென்னை 
        யாஞ்செய்வ தேந்திழையே

    கடித்தழைகொணர்ந்த காதற்றோழி 
    மடக்கொடிமாதர்க்கு வகுத்துரைத்தது.

    இதன் பொருள் : ஏந்திழை- ஏந்திழாய்; தழை ஏற்பின் ஏறும்- தழையையேற்பின் தாமேயொரு நட்புச்  
செய்தாரென்று பிறரிடத்து நமக்குப் பழியேறும்;  ஏலாவிடின் அவன் மடல்மா ஏறும்-அதனையேலாதொழியின் 
பிறிதோ ருபாயமில்லை யென்று அவன் மடலாகிய மாவையேறும் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும் - 
தரும வடிவாகிய இடபத்தைக் கொடியின் கண் வைத்து நமது  பிறவித் துன்பத்தை நீக்க ஒருப்பட்டு வந்து 
அம்பலத்தின் கணேறும்: அரன் மன்னும் ஈங்கோய் மலை-அரன்றங்கும் ஈங்கோய் மலையின், நம் இரும் புனம் 
காய்ந்து - நமது பெரிய புனத்தை யழித்து; ஏறும் மலை தொலைத் தாற்கு-நம்மை நோக்கி வந்தேறும் மலைபோலும் 
யானையைத் தோற்பித்தவற்கு; யாம் செய்வது என்னை - யாஞ்செய்வதென்னோ? அதனை யறிகின்றிலேன் எ-று.

    மற்று: வினைமாற்று. மடன் மா வேறுமவனென்று தழை யேலாவிடினும் பழியேறுமென்பதுபடக் 
கூறினமையானும்,  ஏறுமலை தொலைத்தாற்கென அவன் செய்த உதவி கூறினமையானும், தழையேற்பதே 
கருமமென்பதுபடக் கூறினாளாம். அன்றியுந் தழை யேற்றால் நமக்கேறும்பழியை அறத்தொடு நிலை 
முதலாயின கொண்டு தீர்க்கலாமென்றும், ஏலாவிடின் அவன் மடன்மாவை யேறுதலான் வரும் பழி 
ஒன்றானுந் தீர்க்கமுடியாதென்றும் கூறியவாறாயிற்று. வகுத்துரைத்தல்- தழையேற்றலே கருமமென்று 
கூறுபடுத்துச் சொல்லுதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாற்றமுடை (யதழையை) ஏற்றுக்கொண்டு வந்த உயிர்த்தோழி 
மடப்பத்தால் தக்க நாயகிக்குக் கூறுபடுத்திச் சொன்னது.

    செய்யுள்: தழை  ஏற்போமாகில் பழி ஏறாநிற்கும்; மற்று நாம் தழை ஏற்காத போது, மடலாகிய புரவியை 
(அவன்) ஏறாநிற்பன்; இடபத்தைக் கொடியிலே எழுதிப் பிடித்து வந்து, 'பிறவித் துன்பம் தீர்க்கக் கடவேன்' என்று 
திருவம்பலத்தே ஏறிநின்ற தலைவன் மன்னும் நிலை பெற்ற திருஈங்கோய் மலையில் நம் பெரும் 
புனத்தையுமழித்து நம்மையும் கொல்வதாக வந்தேறுகின்ற மலையை நிகர்த்த யானையைத் தோற்பித்தவர்க்கு ,
மிகுந்த ஆபரணங்களை யுடையாய்! நாம் என் செய்வோம் ?

    என்ன தழையேற் (காமலிருப்பது) சிவ பழியாம்; தழை ஏலாத பொழுது அவன் மடலேறுதலாலே,
உலகெலாம் அறிந்து பெரும்பழியாகுமாதலால் உபகாரம் செய்தாரொருவற்கு, உபகார குன்னியம் செய்து 
பெரும் பழி பெறுவதின், பிரதியுபகாரம் செய்து சிறுபழி பெற அமையாதோ என்று படும்.

            25. தழையேற்பித்தல்*
            --------------------

* பேரின்பப் பொருள் : அருளே யுயிர்ப்பணி சிவத்துக் காக்கல். 

    தழை யேற்பித்தல் என்பது தழையேலாதொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென 
உட்கொண்டு நிற்ப, அக்குறிப்பறிந்து, 'இத்தழை நமக்கெளிய தொன்றன்று.  இதனை யேற்றுக் கொள்வாயாக,' 
வெனத் தோழி தலைமகளைத் தழை யேற்பியா நிற்றல். அதற்குச் செய்யுள் :-

    தெவ்வரை மெய்யெரி காய்சிலை
        யாண்டென்னை யாண்டுகொண்ட*
     செவ்வரை மேனியன் சிற்றம்
        பலவன் செழுங்கயிலை 
    அவ்வரை மேலன்றி யில்லைக்கண்
        டாயுள்ள வாறருளான்
    இவ்வரை மேற்சிலம் பன்னெளி
        திற்றந்த ஈர்ந்தழையே

    கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி 
    இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது

*பா-ம்-யாக்கிவந் தாண்டு கொண்ட.

    இதன் பொருள்: அருளான் - நம்மாட் டுண்டாகிய அருளான்;  இவ்வரைமேல் சிலம்பன் எளிதில் தந்த 
ஈர்ந்தழை - இம்மலைக்கட் சிலம்பன் எளிதாகக் கொணர்ந்து தந்த வாடாத இத்தழை; செழும் கயிலை 
அவ்வரைமேல் அன்றி இல்லை- வளவிய கைலையாகிய அம்மலையிடத்தல்லது பிறிதோரிடத்தில்லை; 
இதனைக் கொள்வாயாக எ-று. உள்ளவாறென்பது யான் கூறிய இது மெய்ம்மையென்றவாறு, தெவ்வரை         (திருத்:உள்ளள/உள்ள)
மெய் எரி காய்சிலை ஆண்டு - பகைவரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணி கொண்டு; 
என்னை ஆண்டு கொண்டபின் என்னை யடிமை கொண்ட; செவ்வரை மேனியன் சிற்றம்பலவன் செழுங்கயிலை - 
செவ்வரை போலுந் திருமேனியை யுடையனாகிய சிற்றம்பலவனது செழுங்கைலையெனக் கூட்டுக.

    மெய் எரியென்பன ஒரு சொல்லாய்த் தெவ்வரையென்னும் இரண்டாவதற்கு முடிபாயின. 
மெய்யெரித்த காய்சிலை மெய்யெரி காய்சிலையென வினைத்தொகை யாயிற்று. காய் சிலை: சாதியடை.
 ஐகாரத்தை அசைநிலை யாக்கித்தெவ்வர் மெய் யெரித்தற்குக் காரணமாஞ் சிலை யெனினுமமையும். 
வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னை யாண்டா னென்பது போதரக் காய்சிலை 
யாண்டென்னை யாண்டு கொண்டவென்றார். 

    என்னைத் தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை
வளைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொரு பகையுண்டாய்ச் 
செய்ததன்று போலும் என்பது கருத்து. " கல்லை மென்கனி யாக்கும் விச்சை கொண்டென்னை 
நின் கழற் கன்ப னாக்கினாய்" (திருவாசகம், திருச்சதகம், 94) என்பதுமது. கைலைத் தழையை 
எளிதிற்றந்தா னென்றதனான் வரைவு வேண்டிய வழித்தமர் மறுப்பின் வரைந்து கொள்ளுந் 
தாளாண்மையனென்பது கூறினாளாம். கண்டா யென்பது ; முன்னிலை யசைச்சொல். 
இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: கையுறையேற்பித்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை கிடைத்திலது.)

    செய்யுள்: வடமேருவை வில்லாக வளைத்துத் தனக்கு மாறுபாடானவர்கள் புரங்களுடனே
அவர்கள் சரீரமும் எரியச் செய்தும் என் நெஞ்சக் கல்லை யுருக்கியும், இவ்விரு சிலையையும் 
தன் வசத்திலே வரப்பண்ணிக் கொண்ட பவளமலை போன்ற திருமேனியையுடையவன்; 
(என்றது வசமாக்க வொண்ணாத மலை முதலானவற்றை வசப்படுத்தின சிரிப்பாலே என் 
நெஞ்சக் கல்லைக் கரைத்து, வசமாக்கினான் என்பது கருத்து); திருச்சிற்றம்பலநாதன் ஸ்ரீ கயிலாய 
மலையாகிய வரையின் மேலன்றி வேறொரிடத்தும் கிடையாது காண்; இவ்வார்த்தை உள்ளது காண்; 
நாயகன் தன்னுடைய அன்பினாலே இம்மலையிடத்தே நமக்கெளிதாகக் கொண்டுவந்து தந்த 
குளிர்ந்த தழை அந்த வரையிடத்தன்றி வேறொரு மலைக்கும் (மலையிலும்) கண்டதில்லை காண்.     114


            26. தழைவிருப்புரைத்தல் *
            ------------------------

*பேரின்பப் பொருள்: உன்பணி சிவத்துக்குவப்பென வுரைத்தது:

    தழை விருப்புரைத்தல் என்பது தலைமகளைத் தழையேற் பித்துத் தலைமகனுழைச் சென்று,
 நீ தந்த தழையை யான் சென்று கொடுத்தேன்; அது கொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகு மெனத் 
தலைமகளது விருப்பங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:

    பாசத் தளையறுத் தாண்டுகொண் 
        டோன்தில்லை யம்பலஞ்சூழ்
    தேசத் தனசெம்மல் நீதந்
        தனசென் றியான் கொடுத்தேன் 
    பேசிற் பெருகுஞ் சுருங்கு
        மருங்குல் பெயர்ந்தரைத்துப் **
    பூசிற் றிலளன்றிச் செய்யா             (திருத்: பூசிற்றிலர்ளன்றிச்/பூசிற்றிலளன்றிச்)
        தனவில்லை பூந்தழையே.

    விருப்பவள் தோழி, பொருப்பற் குரைத்தது

** பா-ம்-பெயர்ந்துரைத்துப் பூசித்தில.

    இதன் பொருள்:  பாசத்தளை அறுத்து - பாசமாகிய தளையிற்பட்டுக் கிடப்ப அத்தளையை யறுத்து: 
ஆண்டு கொண்டோன் தில்லையம்பலம் சூழ்தேசத்தன - தனக்குக் குற்றேவல் செய்ய என்னை யடிமை         (திருத்: தனக்கு/தனக்குக்)
கொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த தேசத்தின்கணுள்ளன : செம்மல் நீ தந்தன- அச்சிறப்பே 
யன்றிச் செம்மல் நின்னாற் றரப்பட்டன; சென்று யான் கொடுத்தேன் - அவற்றைச் சென்று யான் கொடுத்தேன் ;
பேசில் பெருகும் - கொடுப்ப ஆண்டு நிகழ்ந்தனவற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல் - 
சுருங்கிய மருங்குலையுடையாள்; பூந்தழை- அப்பூந்தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து 
செய்யாதன இல்லை, அரைத்துத் தன் மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதன வில்லை எ-று.

    என்றது இவை வாடுமென்று கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன் மேனி முழுதும் படுத்தாள் 
என்றவாறு, பெயர்த்தென்பது பெயர்ந்தென மெலிந்து நின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர். 
மெய்ப்பாடு: உவகை. பயன்:  தலைமகனையாற்றுவித்தல்.

                சேட்படை முற்றிற்று.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகியுடைய விருப்பத்தை அவளுடைய உயிர்த்தோழியானவள் 
நாயகனுக்குச் சொல்லியது.

    செய்யுள் : பிறவிச் சாகரமாகிய பாசத்தளையாகிய விலங்கை வெட்டி என்னையும் தன் வசமாக்கிக் 
கொண்டவன், அவனுடைய திருவம்பலத்தைச் சூழ்ந்த இடத்திலுள்ளன; பெரியவனே! உன்னாலே தரப்பட்டன;
அதிலே கொண்டு சென்று யான் கொடுத்தேனாயிருந்தது. (அதனை நான் எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தேன் :) 
அவள் தழையைக் கொண்டு செய்தனவற்றைச் சொல்லிற் பெருகாநிற்கும்; சிறிய இடையினை யுள்ளவள் 
அத்தழையை அரைத்துப் பூசிற்றிலள்; தன்னை அல்லது பொலிவுடைத்தாகிய தழையைக் கொண்டு 
பெயர்த்துச் செய்யாத பாவகமெல்லாம் செய்தாள் காண்.

            13. பகற்குறி*
            -----------

*பேரின்பக் கிளவி:  பகற்குறித் துறைமுப் பாடிரண்டுக போற் இயற்கை சிவத்தோ டியலுறக் கூட்டிப் 
பிரித்த வருளின் பகற்குறியே''

    பகற்குறி என்பது தலைமகளைத் தழையேற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் பகற்குறிக்கட் 
டலைப்பெய்வியா நிற்றல். அது வருமாறு-

    குறியிடங் கூற லாடிடம் படர்தல் 
    குறியிடைச் சேற லிடத்துய்த்து நீங்க 
    லுவந்துரைத் தலொடு மருங்கணை தல்லே 
    யறிவறி வித்த லவனுண் மகிழ்த 
    லாயத் துய்த்த றோழி வந்து கூட 
    லாடிடம் புகுத றனிகண் டுரைத்த 
    றடமென் முலையாள் பருவங் கூறி 
    வரவு விலக்கல் வரைவுடம் படாது 
    மிகுத்துரைத் தலொடு மெய்ம்மை யுரைத்தல் 
    வருத்தங் கூற றாயச்சங் கூற 
    லிற்செறி வறிவித்த றமர்நினை வுரைத்த 
    லெதிர்கோள் கூற லேறுகோள் கூற 
    லேதிலார் தம்முரை கூற லவளொடு 
    கூறுவாள் போன்று தினைமுதிர் வுரைத்தல் 
    பகல் வரல் விலக்கல் பையு ளெய்தித் 
    தினையொடு வெறுத்தல் சிறைப்புறமாக 
    வேங்கையொடு வெறுத்தல் வெற்பமர் நாடற்குக் 
    கழுமலுற் றிரங்கல் கடிப்புனங் கையறக் 
    கொய்தமை கூறல் பிரிவருமை கூறன்
     மயிலொடு கூறல் வறும்புனங் காண்டல்
    பயில் பதி நோக்கிப் பதிமிக வாடல்
    சொன்னநா லெட்டுந் தோன்று மியற்கை 
    மன்னிய பகற்குறி வகையா கும்மே

    இதன் பொருள் : குறியிடங்கூறல், ஆடிடம்படர்தல், குறியிடத்துக் கொண்டு சேறல், இடத்துய்த்து நீங்கல்,
உவந்துரைத்தல், மருங்கணைதல், பாங்கியறிவுரைத்தல், உண் மகிழ்ந்துரைத்தல், ஆயத் துய்த்தல், தோழிவந்து கூடல்,
ஆடிடம்புகுதல், தனிகண்டுரைத்தல், பருவங்கூறி வரவுவிலக்கல், வரைவுடம்படாது மிகுத்துக்கூறல்,
உண்மை கூறி வரைவு கடாதல், வருத்தம் கூறி வரைவுகடாதல், தாயச்சங் கூறி வரைவுகடாதல்,  
இற்செறிவறிவித்து வரைவுகடாதல், தமர் நினைவுரைத்து வரைவு கடாதல், எதிர்கோள் கூறி வரைவு கடாதல்,
ஏறுகோள் கூறி வரைவு கடாதல், அயலுரை யுரைத்து வரைவுகடாதல், தினை முதிர்வுரைத்து வரைவுகடாதல்,
பகல் வரல் விலக்கிவரைவுகடாதல், தினையொடு வெறுத்து வரைவுகடாதல், வேங்கையொடு வெறுத்து                     (திருத்: தினையொடுலெறுத்து/ 
வரைவு கடாதல்,  இரக்கமுற்று வரைவுகடாதல், கொய்தமை கூறி வரைவு கடாதல்,  பிரிவருமை கூறி         தினையொடு வெறுத்து)
வரைவுகடாதல், மயிலொடு கூறி வரைவு கடாதல், வறும்புனங் கண்டு வருந்தல், பதி நோக்கி வருந்தல் 
என விவை முப்பத்திரண்டும் பகற்குறியாம் எ-று அவற்றுள் :-

            1. குறியிடங் கூறல்*
            -----------------

*பேரின்பப் பொருள்; அருளுயிர்க் கின்ப மாமிட முரைத்தது.

    குறியிடங் கூறல் என்பது தழை விருப்புரைத்த தோழி ஆங்கவள் விளையாடுமிடத்து ஒரு கரியபொழில் 
கதிரவன் நுழையா விருளாய் கடுவண் ஒரு பளிக்குப் பாறையை யுடைத்தாயிருக்கும்; அவ்விடத்து 
வருவாயாக ' வென்று தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:--

    வானுழை வாளம்ப லத்தரன்
        குன்றென்று வட்கிவெய் யோன்
    தானுழை யாவிரு ளாய்ப்புற 
        நாப்பண்வண் தாரகைபோல்
    தேனுழை நாக மலர்ந்து 
        திகழ்பளிங் கான்மதியோன்
    கானுழை வாழ்வு பெற் றாங்கெழில்
        காட்டுமொர் கார்ப்பொழிலே

    வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள் 
    ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது

    இதன் பொருள்:  ஓர் கார்ப்பொழில் - ஒரு கரிய பொழில் : புறம் வெய்யோன் தான் நுழையா இருளாய் - 
புறமெங்குங் கதிரோன் றான் சென்று நுழையாத விருளாய் - நாப்பண்வண் தாரகை போல் தேன் நுழை 
நாகம் மலர்ந்து - நடுவண் வளவிய வான் மீன் போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழ் பளிங்கான்- 
திகழும் பளிங்கால் ; மதியோன் கான் உழை வாழ்வு பெற்றாங்கு எழில் காட்டும்- திங்கட்கடவுள் வானிடத்து 
வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும் எ-று. 
வான் உழைவாள் - இருட்கு அப்பாலாகிய வான் இடத்து உண்டாகிய ஒளி; அம்பலத்து அரன் - இவ்வண்ணஞ் 
சேயனாயினும் அணியனாய், அம்பலத்தின் கண் உளனாகிய அரன்;  குன்று என்று வட்கி வெய்யோன் 
தான் நுழையா - அவனது மலையென்று கூசினாற்போல வெய்யவன் நுழையாவெனக் கூட்டுக.

    "அண்ட மாரிருளூடு கடந்தும்ப, ருண்டுபோலுமோ ரொண் சுடர்" என்பதூஉம் அப்பொருண்மேல் 
வந்தது. வட்கி யென்பதனால் முன் பற்பறியுண்டானால் விளங்கும்.  வானுழை வாளென்பதற்குக் 
கற்பவிறுதிக்கண் தோன்றிய முறையானே வான்சென்றொடுங்கும் ஒளியென்றுரைப்பாருமுளர். 
புறம் இருளாயெனவும் நாகமலர்ந்தெனவும் சினைவினை முதன் மேலேறி நின்றன. புறம்  இருளா யென்பது 
இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேலேறி நின்றது. இது குறிப்பெச்சமாதலான், ஆண்டு 
வாவென்பது கருத்து. மெய்ப்பாடு: உவகை.  பயன்:  குறியிடமுணர்த்துதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் வாடினவிடத்து அழகிய தழையைப் பெற்றுக் 
கொண்டவள் விளையாடுகிற இடத்தின் இயல்பை அறியும்படி சொல்லியது.

    செய்யுள்: ஆகாயத்தினிடத்திலே உண்டாகிய ஒளியாயுள்ளவன் ,திருவம்பலத்தேயுளனாகிய 
தலைவன்: (அவனுடைய) திருமலையென்று கூசிப் புறச்சோலையெல்லாம், ஆதித்தன் புகுந்து நுழையாத 
இருளாய் வன்மையுடைய நக்கத்திரங்கள் போல.......சுரபுன்னைகள் மலர்ந்து விளங்கா நின்ற பளிக்குப் 
பாறைகளான சந்திரனானவன் வானிடத்து வாழ்வை யொழித்துக் கானிடத்து வாழ்வு பெற்றாற்போலத் 
தன்னழகை விட்டு விளங்காநின்றது கரிய பொழிலானது: என்ன; அவ்விடத்தேற வா ' என்றது.     116

*அப்பர் தேவாரம், சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை, 2

            2. ஆடிடம் படர்தல் *
            -----------------

*'பேரின்பப் பொருள் : இன்பந் தனைக்கொண் டேகாந்தத் தேகல்,

    ஆடிடம் படர்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி, 'யாம் புனத்தின்கட் போய்
ஊசலாடி அவியேற்று விளையாடுவேம், போதுவாயாக' வெனத் தலைமகளை ஆயத்தொடுங் கொண்டுசென்று 
ஆடிடம் படரா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன் 
        னேபின்னைப் போய்ப் பொலியும் 
    அயல்வளர் குன்றில்நின் றேற்றும் 
        அருவி திருவுருவிற்
    கயல் வளர் வாட்கண்ணி போதரு 
        காதரந் தீர்த்த ருளுந்
     தயல்வளர் மேனிய னம்பலத்
        தான் வரைத் தண்புனத்தே: 

    வண்தழை யெதிர்ந்த வொண் டொடிப் பாங்கி 
    நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது

    இதன் பொருள்:  பொன்னே பொன்னே;  காதரம் தீர்த்து அருளும் தயல் வளர் மேனியன் - பிறவி 
காரணமாக வருமச்சத்தை நீக்கி அருள் செய்யுந் தையல் தங்குந் திருமேனியை யுடையவனாகிய; 
அம்பலத்தான் வரைத்தண்புனத்து- அம்பலத்தானது மலையிற் குளிர்ந்த புனத்தின்கண்; புயல் வளர் 
ஊசல்முன் ஆடி-புயல் தங்குமூசலை முன்னாடி;  பின்னைப்போல் - பின் போய்; அயல் பொலியும் 
வளர் குன்றில் நின்று அருவி ஏற்றும் - அதற்கயலாகிய பொலியும் உயர்ந்த குன்றின்கணின்று 
அருவியை ஏற்போம்; திரு உருவின் கயல் வளர் வாள் கண்ணி போதரு - திருப்போலும் உருவினையும் 
கயல் போலும் வாட் கண்ணையுமுடையாய், நீ போதுவாயாக எ.று. 

    உயர்ந்த வழைமரத்திற் றொடுத்தலால், புயல் வளரூசலென்றாள். வளர்கண்ணென வியையும்; 
ஈண்டு வளர் என்பது; உவமை யுருபு , வாள் உவமை : ஒளியெனினுமமையும். தண்புனத்துப் போதருவென 
இயைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்; உவகையுமாம். பயன்: குறியிடத்துப் போதருதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  அழகிய தழையைப் பெற்றுக் கொண்ட அழகிய வளையணிந்த 
பாங்கி நீண்ட வேயையொத்த தோள்களை யுடையாருடனே விளையாடுகிற விடத்திற் சென்றது.

    செய்யுள்: பொன்னை யொப்பாய்! கயலை யொத்த ஒளி சிறந்த கண்களையுடையாய்! போதுவாயாக, 
பிறவியினாலே வருகின்ற அச்சத்தைத் தீர்த்தருளுகிற சங்கரி தங்குகிற திருமேனியை யுடையவன், 
திருவம்பலநாதன் அவனுடைய திருமலையிற் குளிர்ந்த புனத்திடத்தே முன்பு மேகங்கள் தங்குகிற 
ஊசலையாடிப் பின்பு அருவி நீரை யேற்று விளையாடக் கடவேம்; போதுவாயாக.      117

            3. குறியிடத்துக்கொண்டு சேறல்'*
            ------------------------------

*'பேரின்பப் பொருள் : அருமையாற் சிவத்தை யுயிரிடத் தாக்குதல்.                (திருத்: யுயிரிடத் தாக்குகதல்/யுயிரிடத் தாக்குதல்)

    குறியிடத்துக்கொண்டு சேறல் என்பது ஆடிடம்படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான் 
சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்றுய்க்கும் பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தினின்று 
நீக்கவேண்டுதலின் தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ் 
விளையாட்டிற்குரியார் தலைமகள் அவ்வவ்விடங்களிலே வருவளென்று கருதித் தோழி சொன்ன 
வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினான் எல்லாரும் பிரிவர்; அவ்வகை ஆயவெள்ளத்தைப் 
பிரிவித்துத் தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு யாமும்போய் மயிலாடல் காண்பேமென 
அக்குறியிடத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    தினைவளங் காத்துச் சிலம்பெதிர் 
        கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச் 
    சுனைவளம் பாய்ந்து துணைமலர்
        கொய்து தொழுதெழுவார்
    வினைவளம் நீறெழ நீறணி
        யம்பல வன்றன்வெற்பிற் 
    புனைவளர் கொம்பரன் னாயன்ன 
        காண்டும் புனமயிலே

    அணிவளராடிடத் தாயவெள்ள 
    மணிவளர்கொங்கையை மருங்ககன்றது.

    இதன் பொருள்: தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ- தொழா நின்று துயிலெழுவாருடைய 
வினையினது பெருக்கம் பொடியாக: நீறு அம்பலவன்றன் வெற்பில் தன்றிரு மேனிக்கண் நீற்றையணியும் 
அம்பலவனது வெற்பில்: புனை வளர் கொம்பர் அன்னாய் - கைபுனையப்பட்ட வளர் கொம்பை யொப்பாய்: 
தினை வளம் காத்து - தினையாகிய வளத்தைக் காத்து; சிலம்பு எதிர்கூஉய் - சிலம்பிற் கெதிரழைத்து 
சிற்றில் முற்று இழைத்து - சிற்றிலை மிகவுமிழைத்து; சுனை வளம் பாய்ந்து - சுனைப்புனலிற் பாய்ந்து: 
துணை மலர் கொய்து - ஒத்த மலர்களைக் கொய்து ; அன்னபுனமயில் காண்டும் - அத்தன்மையவாகிய 
புனமயிலைக் காண்பேம் யாம் எ-று.

    மலைக்கு வளமா தனோக்கித் தினை வளமென்றாள் தினையினது மிகுதி யெனினு மமையும். 
தொழுதெழுவாரென்றது துயிலெழுங்  காலத்தல்லது முன்னுணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து 
மறவாது நினைவார் என்றவாறு.  நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்குமெழிலுடைமையான் 
அக்கோலந் தொழுதெழுவாருள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறாமென்னுங் 
கருத்தான் வினைவள நீறெழ நீறணியம்ப லவனென்றார், புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற் 
போலத்*  தொழுதெழுவார்  வினைக்குத் தானீறணிந்தா னென்பாருமுளர். வெற்பினென்புழி வெற்பைத் 
தினைகாத்தல் முதலாகிய தொழிற்கு இடமாக வுரைப்பினுமமையும், அத்தன்மையவாகிய மயிலென்றது 
பொருளதி காரத்திற் கூறப்பட்ட தலைமகள் தான்றமியளாய்  நின்று கண்ட மயிலை. இயற்கைப், புணர்ச்சிய 
திறுதிக் கட்டோழி தனது வாட்டத்தை வினவியபோது  யானோரிள மயிலாலுவது கண்டேன்; அதனை நீயுங் 
காணப்பெற்றிலை யென வாடினே' னென்று  உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப்பற்றி அம் மயிலைக் 
காண்டு மென்றளாயிற்று.  மெய்ப்பாடு: அது  பயன்: ஆயம் பிரிதல்.

*புதல்வன் பிணிக்குத் தாய் மருந்துண்டல்; பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து 
தாயுண்டாங்கு" (சிதம்பர மும்மணிக் கோவை 1 14-15): "இளங்குழவிப் பிணிக்கீன்ற தாய் மருந்து 
நுகர்வது போல்' (திருவானைக்காப்புராணம் செய்யுள் 7) , 

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அழகுமிக்க விளையாட்டிடத்தே ஆயக் கூட்டத்தா ரிடத்தினின்று, 
முத்துமணி அணியப்பட்ட ஆபரணங்களை யுடையாளுடனே ஒரு பக்கத்திலே சேர்ந்தது.

    செய்யுள் : தினையாகிய வளத்தையும் காவலாகி யிருந்து சிலம்பிற் கெதிரழைத்துச் சிறு வீடுகளை 
நெடும் போதெல்லாம் எடுத்து விளையாடிச் சுனைக்கு வளமாகிய நீரையும் குடைந்து, இணையொத்த 
புட்பங்களையும் பறித்துத் தன்னைத் தொழுது செல்வாருடைய இருவினைகளும் நுண் பொடி யாம் படி 
திருதீறணி அம்பலவன் திருமலையில் கைசெய்து வளர்க்கப்பட்ட வஞ்சிக்கொடியை யொப்பாய் !
அத்தன்மையாகிய புனத்தின் மயில்களையும் காணக் கடவோம்' என்று அங்கு ஏறப்போனது. 118

            4. இடத்துய்த்து நீங்கல்*
            --------------------

*பேரின்பப் பொருள்: அருள்சிவத்திடைச் சேர்த்தகன்று நின்றது.

    இடத்துய்த்து நீங்கல் என்பது குறியிடைக் கொண்டு சென்ற தோழி, "யான் அவ்விடத்துச் சென்று
 நின் குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் 
நீ என்னோடு வாராது இங்கே நின்று பூக்கொய்வாயாக' வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் 
தானீங்கா நிற்றல். அதற்குச் செய்யுள் :-

    நரல்வே யினநின தோட்குடைந்
        துக்கநன் முத்தஞ்சிந்திப் 
    பரல்வே யறையுறைக் கும்பஞ் 
        சடிப்பரன் தில்லையன்னாய்
    வரல்வேய் தருவனிங் கேநிலுங் 
        கே சென்றுன் வார்குழற்கீர்ங்    
    குரல்வே யளிமுரல் கொங்கார் 
        தடமலர் கொண்டு வந்தே.

    மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
    நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது . 

    இதன் பொருள் : உங்கே சென்று - யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு 
ஆர் தட மலர் கொண்டு வந்து; தேனானீரிய பூங்கொத்தை மூடிய அளிகள் முரலுந் தாது நிறைந்த 
பெரிய மலர்களைக் கொய்து கொண்டு வந்து உன் வார் குழற்கு வேய்தருவன் - நின்னுடைய
நெடிய குழற்கண் வேய்வேன் ; பரன் தில்லை அன்னாய்- பரனது தில்லையை யொப்பாய்; 
நரல் வேய் இனம் நினதோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி காற்றானொன்றோடொன்று 
தேய்ந்து நரலும் வேய்த் திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள் சிதறுதலால்; 
பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் - பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக்கணுறைக்கும்;
வரல் இங்கே நில் - அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலை யல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.

    யான்றருவன் நீ வேயென்றும் பிறவாற்றானு முரைப் பாருமுளர். குரலென்பது. பூங்கொத்தை 
தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாரு முளர். பரல்வேயறையுறைக்கும் வரல்; வேய்தருவன்: 
இங்கே நில்' லென்று தலைமகளைத் தோழி கூறி இவ்விடத்தே நில்லென்றாள் . மெய்ப்பாடு :அது 
பயன்:  தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல்,

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  மடப்பத்தால் தகுதியுடைய நாயகியை தன் குறியிடத்து 
(செலுத்தித் தான் நீங்கிய) பூத்த வல்லி சாதம் போன்ற தோழி சொன்னது .

    செய்யுள்: நாதம் பண்ணுகிற மூங்கிலினம் உன்னுடைய தோளுக்குத் தோற்று உகுத்த நன் முத்தானது 
பரந்து அந்தப் பரலாலே மூடப்பட்ட கற்பாறையானது உன் காலுக்கு உறுத்தா நிற்கும். அடியும் பஞ்சு 
தானாக விருந்தது. சிவனுடைய புலியூரையொப்பாய் !  வாராதே கொள்; நான் சூட்டக் கடவேன்: இங்கே நில்;
அவ்விடத்திலேபோய் யான் உன்னுடைய நீண்ட கூந்தலுக்கு ஈரபார முடைத்தாகிய பூங்கொத்துக்களை மூடி, 
வண்டுச் சாதிகள் ஆரவாரிக்கிற வாசனை நிறைந்த பெரிய புட்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து 
நான் சூட்டக் கடவேன்: அவ்வளவும் நீ இங்கு நிற்பாயாக.         119

            5. உவந்துரைத்தல்.*
            ------------------

*பேரின்பப் பொருள் : உயிர் சிவந் தரிசித் துண்மகிழ்ந் துரைத்தது.

    உவந்துரைத்தல் என்பது தோழி தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத் தலைமகன் 
சென்றெதிர்ப்பட்டு, 'இக் குவட்டை மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ
 நீ இப்பொழிற்கண் வந்து நின்ற தெனத் தலை மகளை உவந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    படமா சுணப்பள்ளி யிக்குவ 
        டாக்கியப் பங்கயக்கண் 
    நெடுமா லெனவெ ன்னை நீநினைந்
        தோநெஞ்சத் தாமரையே
    இடமா விருக்கலுற் றோதில்லை 
        நின்றவன் ஈர்ங்கயிலை
    வடமார் முலைமட வாய்வந்து 
        வைகிற்றிவ் வார்பொழிற்கே

    களிமயிற்சாயலை யொருசிறைக்கண்ட 
    ஒளிமலர்த்தாரோ னுவந்துரைத்தது.

    இதன் பொருள்: வடம் ஆர் முலை மடவாய்:-வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன் 
ஈர்ங் கயிலை வார் பொழிற்கு வைகிற்று - தில்லைக்கணின்றவனது  குளிர்ந்த கைலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து
வந்து தங்கியது; இக் குவடு பட மாசுணப் பள்ளி ஆக்கி- இக்குவட்டைப் படத்தையுடைய மாசுணமாகிய பள்ளியாக்கி ;
என்னைப் பங்கயக் கண் அந் நெடுமால் என நீ நினைந்தோ- என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும் 
பங்கயம் போலுங் கண்ணையுடைய அந்நெடிய மாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத் தாமரையே இடம் ஆ 
இருக்கல் உற்றோ - நெடுமாலின் மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய 
தாமரையே  நினைக்கிடமாக  இருக்க நினைந்தோ ? கூறுவாயாக எ-று

    மாசுணப்பள்ளி மாசுணத் தானியன்ற பள்ளியெனினு மமையும். என்னெஞ்சத் தாமரைக்கணிருக்க 
லுற்றோ வென்றதனான், இப்பொழிற்கண் வந்து  நின்ற நிலை ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென 
உவந்து கூறினானாம். கைலை மடவாவென் றியைப்பினுமமையும். வான்பொழி லென்பதூஉம் பாடம். 
மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக்கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய பேருவகையை 
ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: கர்ச்சிதமான மயில் போன்ற சாயலையுடையாளை ஒரு புறமாக 
நிற்கக்கண்ட பிரகாசமுடைய மாலையை அணிந்த நாயகன் சந்தோஷித்துச் சொன்னது.

    செய்யுள் : இந்த மலையைப் படமுடைத்தாகிய அராவணையாக நியமித்துச் செந்தாமரைக்கண்ணனாகிய 
நெடிய மாலாக என்னை நிச்சயித்தோ? என் இருதயத் தாமரைப் பூவை (யே) இடமாகக் கொண்டிருப்பதாக 
எண்ணித் துணிந்தோ? புலியூரிலே எழுந்தருளி நின்றவனுடைய கயிலை மலையில் முத்துவட மார்ந்த 
முலையினையுடைய பெண்ணே! நீண்ட கா(வகத்தே) வந்து அவதரித்தது.     120


            6. மருங்கணைதல் *
            ------------------

*'பேரின்பப் பொருள்: இன்பங் கண்டத னியல்பெடுத் துரைத்தது.

    மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக் கேட்ட தலை மகள் பெருநாணினளாதலி கண் புதைத்து
ஒரு கொடியி னொதுங்கி வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையிற் றலை மகன் அவ்வருத்தந் தணிப்பான் 
போன்று, முலையொடு முனிந்து அவளிறு மருங்கு றாங்கி யணையா நிற்றல். அதற்குச்செய்யுள் :-

    தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் 
        லோனரு ளென்னமுன்னி
    முத்தீன் குவளைமென் காந்தளின் 
        மூடித்தன் ஏரளப்பாள்
    ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் 
        றாள்மருங் குல்நெருங்கப்
    பித்தீர் பணைமுலை காளென்னுக் 
        கின்னும் பெருக்கின்றதே .

    வாணுதல் அரிவை நாணுதல் கண்ட 
    கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

    இதன் பொருள்: தொத்து ஈன் மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி-
 கொத்துக்களை யீனும் மலர்ப் பொழிலை யுடைய தில்லையிற் றொல்லோன தருள் போல 
வந்தெதிர்ப்பட்டு ; முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி - கண்ணீர்த் துளியாகிய முத்தை விடாநின்ற 
கண்ணாகிய குவளைகளைக் கையாகிய மெல்லிய காந்தட் பூவான் மூடி தன் ஏர் அளப்பாள் ஒத்து: 
அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள் போன்று ; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள் 
மருங்குல் நெருங்க - குளிர்ந்த கொடியின் கண் நாணி மறைகின்றவளது மருங்குலடர்ப் புண்ண; 
பித்தீர் பணை முலைகாள்- பித்தையுடையீர் பணை முலைகாள்; இன்னும் பெருக்கின்றது என்னுக்கு-
 நும் பெருமை மேல் இன்னும் நீர் பெருக்கின்ற தெற்றிற்கு? இது நன்றன்று எ-று

    தமக்கு ஆதாரமென்று கருதாது அடர்க்கின்றமை நோக்கிப் பித்தீரென்றான்.  பெருக்கின்ற 
தெற்றிற்கு ஓர் பித்தை யுடையீரென வினைக்குறிப்பு முற்றாக வுரைப்பினும் அமையும். இவ்வாறு 
தானாதரவுரைத்து இறுமருங்குறாங்குவானாய்ச் சென்று சாருமென்பது. ஈன்கொடி, ஈன்பணைமுலை 
யென்பனவும் பாடம் ஈன்கொடி - மலரீன்றகொடி அரிவையை யென்பது பாடமாயின் நாணுதல் கண்ட 
வென்பனவற்றை ஒரு சொல்லாக்கி முடிக்க. மெய்ப்பாடு அது. பயன்- சார்தல்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒளி சிறந்த நெற்றியினையுடைய நாயகியை நாணினபடியைக் 
கண்டு மாலையணிந்த வேலினையுடையவன் ஆதரவினாலே சொல்லியது.

    செய்யுள்: கொத்துப்பூவாக வளையப்பட்ட (?) அழகிய பொழில் சூழப்பட்ட தில்லையிற் 
பழையவனாகிய முதலியாருடைய அருளென வந்து நேர்ப்பட்டு, முத்துப் போன்ற கண்ணின் 
நீர்த்துளித்தாரை விடுகிற நீலப் பூவை ஒத்த கண்களை மகுரமாகிய காந்தட், பூவொத்த கரங்களாலே 
மறைத்துத் தன்னழகை ஒப்பிட்டுப் பார்ப்பாரையொத்துக் குளிர்ந்த வல்லிசாதக்கொடியிலே             (திருத்: மறைந்து/மறைத்து)
மறைந்து நின்றவள் இடை ஒதுங்க? (நெருங்க) பித்தையுடையீராகிய பெரிய முலைகாள்! இவ்விடை 
இத்தன்மை ஆகியபடி கண்டும் இன்னமும் நீங்கள் பெருக்கின்றதென்ன காரணத்தான்? (என்றுபடும்).    121

            7. பாங்கியறிவுரைத்தல்*
            ----------------------

*'பேரின்பப் பொருள்: இன்பங்கண்ட பின்னருட் டெரிசியித. 

    பாங்கியறிவுரைத்தல் என்பது மருங்கணை விறுதிக்கட் டலைமகள தையந்தீர, அவளைக் கோலஞ் 
செய்து, "இது நின்றோழி செய்த கோலமே ; -கலங்கா தொழி'கெனத் தலைமகன் தான்றோழியொடு 
தலைப்பெய்தமை தோன்றக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    அளிநீ டளகத்தின் அட்டிய 
        தாதும் அணியும் 
    ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
        மாலையுந் தண்நறவுண்
    களிநீ யெனச்செய் தவன்கடற்
        றில்லையன் னாய்கலங்கல் 
    தெளிநீ யனையபொன் னேபன்னு**
         கோலந் திருநுதலே                            (திருத்: சோலந்/கோலந்,நுததுலே/நுதலே)

    நெறிகுழற்* பாங்கி, அறிவறி வித்தது.                            (திருத்: அறிளறி /அறிவறி)

**பா-ம் - னேமன்னு,  * செறிகுழற்

    இதன் பொருள்: நீ தண் நறவு உண் களி எனச்செய்த வன்கடல் தில்லை அன்னாய் - நீ குளிர்ந்த    (திருத்: குளிர்ந்வ/குளிர்ந்த)
 நறவையுண்ணுங் களிமகனென்று பிறர் சொல்லும் வண்ணம் ஓரின்பத்தையெனக்குச் செய்தவனது                      (திருத்: யுண்னுங்/யுண்ணுங்,                                                     யெளக்கு/யெனக்கு)
கடலையுடைய தில்லையை யொப்பாய்; அளிநீடு அளகத்தின் அட்டிய தாதும்-அளிகள் விடாது தங்கு 
மளகத்தின்கண் இட்டதாதும்; அணி அணியும்-அணிந்தவணிகளும்; ஒளி நீள் சுரிகுழல் சூழ்ந்த         (திருத்: மளகத்ன்/மளகத்தின்)
ஒண் மாலையும்-ஒளியையுடைய நீண்ட சுரிகுழலிடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; 
நீ அனைய பொன்னே பன்னு கோலம் - நின்னோடொரு தன்மயளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் 
கோலமே; திருநுதலே திருநுதலாய்; கலங்கல்-யான் பிறிதோர் கோலஞ் செய்தே னென்று கலங்க வேண்டா; 
தெளி- தெளிவாயாக.  எ-று

    தண்ணறவுண்களி தீயெனச் செய்தவனென்பதற்குப் பிறிதுரைப்பாருமுளர். பொன்னே யென்னு 
மேகாரம்: பிரிநிலை யேகாரம். அணி மணியு மென்ப நூஉம் பாடம். பாங்கியறிவு - பாங்கி யவ்வொழுக்கத்தை 
யறிந்த வறிவு மெய்ப்பாடு : பெருமிதம். பயன். பாங்கி யறிந்தமை தலைமகட் குணர்த்தல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு : தாழ்ச்சியினையுடைய கூந்தலையுடைய பாங்கி இக்கூட்டத்தை 
அறிந்தபடியை அறிவித்தது. 

     செய்யுள்: வண்டுகள் மிக்க கூந்தலிலே இட்ட செருகு பூவும், ஆபரணங்களணிந்த படியும் ஒளி மிக்க 
நீண்ட கூந்தலிலே சுற்றின அழகிய மாலையும் மகுரமான தேனையுண்டு களிக்கும்படி செய்தவன் 
கடல்சூழ்ந்த பெரும்பற்றப் புலியூரனையாய்! கலங்காதே, தெளிந்து விடு.  நீ உனக்கு உன்னை யொத்த 
பாங்கியாலே ஆராய்ந்தணியப்பட்ட கோலந்தானே காண். ஆதலால் நானணிந்த கோலம் வேறுபட்டதென்று 
கலங்காதே தெளிந்து விடுக.          122

            8. உண்மகிழ்ந்துரைத்தல்*
            -----------------------

* பேரின்பப் பொருள் : "கண்ட வின்ப மருட்கியம் பியது"

     உண்மகிழ்ந் துரைத்தல் என்பது பாங்கி யறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு 
குறையில்லையென வுட்கொண்டு முகமலரா நிற்ப, அம்முக மலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர் மலராகவும், 
தான் அதனினறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமான் றன்ணுண் மகிழ்ந்து கூறா நிற்றல் .
அதற்குச் செய்யுள்:-

    செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் 
        பலவன் திருக்கழலே
    கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி 
        வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
    கழுநீர் மலரிகள் யானதன்
        கண்மரு விப்பிரியாக்
    கொழுநீர் நறப்பரு கும்பெரு 
        நீர்மை யளிகுலமே . 

    தண்மலர்க் கோதையை
    உண்மகிழ்ந் துரைத்தது. 

     இதன் பொருள்: செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்பலவன் திருக்கழலே - வளவிய நீர்மையையுடைய 
மதியாகிய கண்ணியை யுடைய சிற்றம்பலவனது திருக்கழல்களையே; கெழுநீர்மையின் சென்று 
கிண்கிணி வாய்க்கொள்ளும். பொருந்து நீர்மையான் உண்மகிழ்ந்து முகமலர்வது போலப் போதாகிய 
நிலைமையை விட்டு மலராம் நிலைமையை யடைந்து சிறிதே மலரத்தொடங்கும்; கள் அகத்த கழுநீர்         (திருத்: டைந்து/யடைந்து)
மலர் இவள்- தேனையகத்துடைய கழுநீர் மலர் இவள்: யான் அதன் கண் மருவிப்புரியாக் கொழுநீர் 
நறப்பருகும் பெரு நீர்மை அளிகுலம் - யான் அக்கழுநீர் மலர்க்கண் மருவி ஒருகாலும் பிரியாத
கொழுவிய நீர்மையையுடைய அந்நறவைப்பருகும் பெருந்தன்மையை யுடையதோ ரளிசாதி எ-று

    செழுநீர்மதிக்கண்ணி யென்பதற்கு வளவியநீரு மதியாகிய கண்ணியு மென்பாருமுளர் 
திருக்கழலே யென்னும் ஏகாரம், பிரிநிலையேகாரம். செழுநீர்மையையுடைய கழுநீர் மலரென் 
றியைப்பினு மமையும். சென்று கிண்கிணி வாய்க்கொள்ளு மென்பதனால், பேதைப்பருவங் 
கடந்து இன்பப்பருவத்த ளாயினாளென்பது விளங்கும். கள்ளகத்த வென்பதனால், புலப்படா 
துண்ணிறைந்த காதலளென்பது விளங்கும் . கள்ளகத்த கழுநீர் மலரென்பது 'காலகுருகு" 
(குறுந்தொகை, 26) என்பது போல நின்றது. பெயரெச்சமெனினுமமையும். யான் மருவிப் பிரியாத 
அளிகுல மெனினுமமையும். நறா : குறுகி நின்றது. பெரு நீர்மை யளிகுலமென்றான், கழுநீர் மலரல்ல 
தூதாமையின். அதனால், பிறிதோரிடத்துந் தன்னுள்ளஞ் செல்லாமை விளங்கும். மெய்ப்பாடு: உவகை.
பயன்: நயப்புணர்த்துதல் .

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குளிர்ந்த பூமாலையுடையாளை உள் மகிழ்ந்துரைத்து.

    செய்யுள்: அழகிய, நீர்மையுடைத்தாகிய மதியைத் திருநெற்றி மாலையாகவுடைய 
திருவம்பலநாதன் சீபாதங்களை ஒக்கவேண்டுமென்கின்ற தன்மையாலே, போதாகிய தன்மையை 
விட்டுப் பூவாகிய ' தன்மையாலே சென்றடைந்து சிறிதே மலரத் தொடங்கும் தேனையுள்ளடக்கின 
கழுநீர் மலரை ஒப்பாள் இவள்: நான் செங்கழு நீர் மலரிடத்தே எப்பொழுதும் பழகி அதைவிட்டு 
நீங்காத அழகிய நீர்மையுடைத்தாகிய தேனையுண்கிற வண்டினை ஒப்பன்.

    செங்கழுநீர் மலரை ஒப்பதென்றதனால் இவளும் பேதைப் பருவம் கடந்து இளமைப் இன்பப் 
பருவத்தளானவள் என்றது கள்ளகத்த கழுநீர் என்றதனால் இவளும் உள்ளடக்கின காதலையுடையவள், 
அது வெளிப்படுவதற்கு முன்னே வரைந்துகொள்ள வேண்டுமென்னும் நினைவுடையள் என்றுபடும், 
அச்செங்கழுநீர் மலரிடத்தேபழகி அதை விட்டு நீங்காத வண்டுச் சாதியை ஒப்பனென்றதனால், 
வரைந்து கொள்ள வேண்டுமென்கின்ற நினைவொழிய வேறு நினைவுடையேனல்லன் என்றும்படும். 
பெரு நீர்மை யளிகுலம்: பெரு நீர்மை என்றது ஒருவருக்குப் பெருந்தன்மையாவது, அது தம்மாற் 
பாதுகாக்கப் படுவாரைப் பாதுகாக்கை.     123

            9. ஆயத்துய்த்தல்*
            ----------------

*பேரின்பப் பொருள்: 'அடியார் கூட்டத் தன்பாலுய்த்தது'

    ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து மகிழ்வுற்றுப் பிரியலுறாநின்ற தலைமகன், 
'யாமித்தன்மையே மாதலின் நமக்குப் பிரிவில்லை; இனியழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் 
பொலிவு பெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடுவா' யெனத் தலைமகளை யாயத்துச் 
செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

    கொழுந்தா ரகைமுகை கொண்டலம் 
        பாசடை விண்மடுவில் 
    எழுந்தார் மதிக்கம லம்மெழில்
        தந்தென இப்பிறப்பில்
    அழுந்தா வகையெனை ஆண்டவன்
        சிற்றம் பலமனையாய்
    செழுந்தா தவிழ்பொழி லயத்துச் 
        சேர்க திருத்தகவே.

    கனைகடலன்ன கார்மயிற்கணத்துப் 
    புனைமடமானைப் புகவிட்டது.

    இதன் பொருள்: இப்பிறப்பில் அழுந்தா வகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய்-
இப்பிறவியின் கண் அழுந்தாதவண்ண மென்னை யடிமை கொண்டவனது சிற்றம்பலத்தை ஒப்பாய்; 
கொழுந்தாரகை முகைகொண்டல் பாசடை  விண் மடுவில் - கொழுவிய தாரகையாகிய முகையையுங் 
கொண்டலாகிய பசிய  விலையையுமுடைய விண்ணாகிய மடுவின் கண்; எழுந்து ஆர்மதிக் கமலம் 
எழில் தந்தென-எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத் தனதெழிலைப் புலப்படுத்தினாற்போல; 
செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச்சேர்க-வளவியதாது அவிழா நின்ற பொழிற்கண் 
விளையாடுகின்ற ஆயத்தின் கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக. எ று.

    முகையோடு தாரகைக்கொத்தபண்பு வெண்மையும் வடிவும் பன்மையும், தாரகையோ 
டாயத்தார்க்கொத்த பண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு 
மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும் . மதியோடு தலைமகட்கொத்த பண்புகட் கினிமையும் 
சுற்றத்திடை அதனின் மிக்குப்   பொலிதலும், இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான்  உவமைக்குவமை 
யாகாமையறிந்து கொள்க.  கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது;
அம்-அழகெனினுமமையும். புனைமடமான் கைபுனையப் பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம். 
பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல்.

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஆரவாரிக்கின்ற கடலையொத்த கார்காலத்து மயிலையொத்த
ஆயக் கூட்டத்தாரின் திரளிலே ஒப்பினையுடைய பார்வையால் மான் போல்வாளைப் புக விடுத்தது.

    செய்யுள்: அழகிய தாரகைகளாகிய முகை விரியா அரும்புகளையும் மேகங்களாகிய அழகிய 
பச்சென்ற இலைகளையுமுடைய ஆகாயமாகிய மடுவில் எழுந்து நிறைந்த சந்திரனாகிய வெண்டாமரைப் பூ         (திருத்: எழுத்து/எழுந்து)
அத்தாரகைகளுக்கு அழகளித்தாற்போல, இப்பிறப்பிலே வருந்தாதபடி அடிமை கொண்டவன் 
திருச்சிற்றம்பலத்தை யொப்பாய்: அழகிய தாது விரிகின்ற சோலையிடத்தே, ஆயக்கூட்டத்தாரிடத்தே 
சேர்வாயாக, திருத்தகவே.

    அந்த ஆயக்கூட்டம் அழகு பெறும்படி செய்வாயாக: அது எங்ஙன மெனில் சந்திரன் அன்றி (யிருக்கும் போது) 
பொலி வழிந்து கிடக்கிற நட்சத்திரங்களுக்கு அழகளிக்கச் சந்திரன் உதய மானாற்போல உன்னை யன்றி ... 
வெ...........பொலிவழிந்து கிடக்கிற ஆயக்கூட்டம் பொலிவு பெறும்படி சென்று சேர்வாயாக என்ற பொருளாய்,
வெண்டாமரையை ஒத்த தாரகைகள் என்றும், தாரகைகளைப் போன்ற பாங்கிமார் என்றும் வெண்டாமரைப் 
பூவை யொத்த மதியென்றும் சொன்னால், உவமைக்கு உவமையாகாதோ வெனின், ஒத்த பண்பு 
வேறுபடுகையாலே உவமை யாகாது; வேறுபட்டபடி என்னெனின் வெண்டாமரை முகையுடன் 
தாரகைக்கு உவமை வெண்மையும் வடிவும்:  தாரகையுடன் பாங்கிமார்க்கு உவமை பன்மையும் 
ஒன்றுக்குச் சுற்றமாய் அதில் தாழ்ந்து  நிற்கையும்;  வெண்தாமரைப் பூவுடன் மதிக்கு உவமை 
வடிவும் பொலிவும்: சந்திரனுடன் நாயகிக்குவமை கண்ணுக்கினிமையும் சுற்றத்திடை மேலாய்த் 
தோன்றுகையும் ; ஆகையாலே உவமைக்குவமையாகாது: உவமைக்குவமை இல்லென மொழிப.      124

            10. தோழிவந்து கூடல்*
            -------------------
*பேரின்பப் பொருள் : 'அருள் சிவங் கலந்த அபேதம் கண்டது'
    
    தோழி வந்து கூடல் என்பது தலைமகனைப் பிரிந்த தலைமகடானும் பூக்கொய்யா நின்றாளாகப் 
பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியா நிற்ப 'யானின்குழற்காம் 
பூக்கொண்டுவந்தேன், நீ விரல்வருந்த மொட்டுக்களைப் பறிக்க வேண்டா' வெனத் தோழி வந்து 
கூடாநிற்றல், அதற்குச் செய்யுள் -

    பொன்னனை யான்தில்லைப் பொங்கர
        வம்புன் சடைமிடைந்த
    மின்னனை யானருள் மேவலர் 
        போன்மெல் விரல் வருந்த
    மென்னனை யாய்மறி யேபறி 
        யேல்வெறி யார்மலர்கள்
    இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
         தாழ்குழற் கேய்வனவே.

    நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப் 
    பிறை நுதற் பாங்கி பெயர்ந்தவட் ** குரைத்தது.

** பா-ம் - பெயர்ந்திவட்.

    இதன் பொருள்: ஆய் மறியே - அசைந்த மான்மறி போல்வாய்: பொன் அனையான் - பொன்னையொப்பான்; 
தில்லைப் பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான்- தில்லைக்கணுளனாகிய வெகுளா நின்றவரவம்
புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல்விரல் வருந்த - அவனதருளைப் 
பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனைபறியேல்-மென்னனைகளைப் பறியா
தொழிவாயாக, மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னனயான் கொணர்ந்தேன் - 
நின்மணந்தங்கிய குழற்குப் பொருந்துவனவாகிய நறுநாற்ற நிறைந்த மலர்களித் தன்மையன வற்றை 
யான் கொணர்ந்தேன் எ-று.

    மிடைந்த வென்னும் பெயரெச்சம் மின்னனையானென்னு நிலப்பெயர் கொண்டது . 
அரவஞ் சடைமிடை தலை மின்மேலேற்றி, இல்பொருளுவமையாக வுரைப்பாரு முளர்.  இல்பொருளுவமை 
யெனினும் அபூதவுவமையெனினு மொக்கும்.  இவள் மலரைப் பறியாமல் மொட்டைப் பறிப்பானே னென்பது
கடா. அதற்கு விடை: இவள் தலைமகனைப் பிரிந்து அப்பிரிவாற்றாமையானும், தலைமகன் புணர்ச்சி நீக்கத்துக்கட் 
டன்னைக் கோலஞ்செய்த அக்கோலத்தைத்தோழி காணா நின்றாளென்னும் பெரு நாணினானும் ஆற்றாளாய்,
மலரைப் பறிக்கின்றவள் மயங்கி மொட்டைப் பறித்தாளென வறிக. " மெல்லிய   மொட்டுக்களைப்  பறியாதொழி ,
இத்தன்மைய நறு மலரை நின் குழற்கணிதற்கு யான் கொணர்ந்தே' னென்பதனான், இவ்வொழுக்கம் 
யானறியப் பட்டது காணென்றுடம்பாடு கூறியவாறாயிற்று. என்னனையாய் கொணர்ந்தே னென்பதூஉம் 
பாடம். நின்றிடத்துய்த் - இடத்துய்த்து நீங்கி நின்று, பெயர்ந்து மீண்டு சென்று.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நெறித்தலுடைய அளகத்தினையுடைய நாயகியைத்தன் 
குறியிடத்தே - நிறுத்தி, நீங்குகின்ற பிறை போன்ற நெற்றியையுடைய பாங்கி மீண்டு வந்து நாயகிக்குச்         (திருத்: நெறி/நெற்றி)
சொன்னது.

    செய்யுள்: பொன்னையொப்பவன், புலியூரில் மிக்க பாம்பையும் கங்கையையும் சிவந்த 
திருச்சடையிலே நெருங்கும்படி வைத்த மின்னை நிகர்ப்பான். அவன் திருவருளைப் பொருந்தாதவரைப் 
போலே மெல்லிய விரல்கள் வருத்த மெல்லிய அரும்புகள் வருந்த (?) பார்வையினால் மான் கன்றை நிகர்ப்பாய்! 
பறியாதே கொள், நறுநாற்றமிக்க புட்பங்களை ; இத்தன்மையன யான் கொண்டுவந்தேன் காண். மிகுந்த 
வாசனையுள்ள கூந்தலுக்குப் பொருந்துவன என்றுபடும்.         125

            11. ஆடிடம்புகுதல்*
            -----------------

* பேரின்பப் பொருள் : "அன்பர்க் கின்பமருளே யாக்கல்"

    ஆடிடம் புகுதல் என்பது கொய்து வந்த மலருங் குழற் கணிந்து, 'இனி நின் சிறுமருங்குல் வருந்தாமல் 
மெல்லச் செல்வாயாக' வெனத்தோழி தலைமகளையுங் கொண்டு ஆடிடம் புகா நிற்றல். அதற்குச் செய்யுள் :-

    அறுகால் நிறைமல ரைம்பால்
        நிறையணிந் தேன் அணியார்
    துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
        லாயமெல் லப்புகுக
     சிறுகால் மருங்குல் வருந்தா
        வகைமிக என் சிரத்தின் 
    உறுகால் பிறர்க்கரி யோன்புலி 
        யூரன்ன வொண்ணுதலே

    தனிவிளை யாடிய தாழ்குழற்** றோழி 
    பனிமதி நுதலியொ டாடிடம் படர்ந்தது

** பா-ம்-தார்குழற்

    இதன் பொருள்:  என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு மிக அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே"- 
என்றலைக்கணுற்ற கால் பிறர்க்கு மிகவரியவனது புலியூரை யொக்கு மொண்ணுதலாய்; அணி ஆர்துறுகான் 
மலர்த்தொத்து - அழகார்ந்த நெருங்கிய நறுநாற்றத்தை யுடைய மலர்க்கொத்துக்களை; அறுகால் நிறை 
மலர் ஐம்பால் நிறை அணிந்தேன்-வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய
வணிந்தேன்; தோகை-தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை-சிறிய விடத்தை 
யுடைய மருங்குல்  வருந்தாத வண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக - பழைய தாகிய ஆயத்தின் கண் 
மெல்லப் புகுவாயாக எ-று.

    அறுகானிறை மலரை யணிந்தே னென்றும், மலர்க் கொத்துக்களையுடைய தோகாயென்றும், 
உரைப்பாரு முளர். நிறையவென்பது குறைந்து நின்றது. காலென்னுஞ் சினை பிறர்க்கரியோனெனத்  
தன்வினைக்கேலா வெழுத்துக் கொண்டது. இவையிரண்டற்கும்  மெய்ப்பாடு: பெருமிதம் ,
பயன்: தலைமகளையாற்றாமை நீங்குதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தனியே விளையாடிய நீண்ட கூந்தலினையுடைய 
தோழி குளிர்ச்சி பொருந்தின பிறை போன்ற நெற்றியினை யுடையாளுடனே விளையாடுகிற 
விடத்தேறப் போனது.

    செய்யுள் : (முன் சொன்ன மொழியை மாற்றி ) அழகார்ந்த நறுநாற்றம் நெருங்கின பூக் கொத்துக்களை 
வண்டுகள் நிறைந்த பூவையுடைய ஐம்பால் வகுத்த கூந்தலிலே நிறைய வணிந்தேன் : தோகை நல்லாய்! 
சிறிய தென்றல் வரின்  இடை தளர்ந்து வருந்தாத படி, பழைய ஆயக் கூட்டத்தாரிடத்தேற மெல்லச் சென்று 
புகுவாயாக;  மிக என்னுடைய சிரத்திலே பொருந்தின சீபாதங்களைப் பிறர் மிகவும் பெறுதற்கரியவன்,
 அவனது பெரும் பற்றப் புலியூரினை யொத்த நுதலினை யுடையாய்!     126

            12. தனிகண்டுரைத்தல்*
            ---------------------

*பேரின்பப் பொருள் : அருளுயிர் தனைக்கண் டகமகிழ்ந் துரைத்தது.

    தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று' 
'இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி 
நாளை நின்னூருக்குப் போவாயா' தென உலகியல் கூறுவாள் போன்று வரைவு மயப்பக் கூறாநிற்றல்.
 அதற்குச் செய்யுள் :-

    தழங்கு மருவியெஞ் சீறூர்
        பெரும இதுமதுவுங்
    கிழங்கு மருந்தி இருந்தெம்மொ 
        டின்று கிளர்ந்துகுன்றர் 
    முழங்குங் குரவை இரவிற்கண்
        டேகுக முத்தன் முத்தி 
    வழங்கும் பிரானெரி யாடிதென்
        தில்லை மணிநகர்க்கே.

    வேயொத்த தோளியை ஆயத் துய்த்துக் 
    குனிசிலை யண்ணலைத் தனிகண் டுரைத்தது.

    இதன் பொருள்: பெருமை-பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர்- தழங்காநின்ற அருவியையுடைய 
விஃதெ மதுசீறூர்; மதுவும் கிழங்கும் அருந்தி இன்று எம்மொடு இருந்து - இதன் கண் யாமருந்துந் தேனையுங் 
கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடு தங்கி; குன்றர் கிளர்ந்து முழங்கும் குரவை இரவில் கண்டு மணிநகர்க்கு 
ஏகுக. குன்றரெல்லாருமெழுந்து முழங்கு மிந்நிலத்து விளையாட்டாகிய குரவையை யிரவிற்கண்டு
நாளை நினது நல்ல  நகர்க்கேகுவாயாக எ-று. முத்தன்*- இயல்பாகவே முத்தன்; முத்தி வழங்கும் பிரான்-முத்தியை 
யேற்பார்க்கு வழங்கு முதல்வன்:  எரியாடி ஊழித்தீயின்கணாடுவான்; தென் தில்லை மணி நகர்- அவனது தெற்கின் 
கட்டில்லையாகிய மணிநகரெனக் கூட்டுக. 

*முத்தன் : முத்தராவார் மகாதேவர் (தக்கயாகப்பரணி, 610 உரை )

     ஏற்பார்மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்கு மென்றார். உலகியல் கூறுவாள் போன்று ஒருகானீ வந்து
போந்துணையால் இவளாற்றுந் தன்மையளல்லளென்பது பயப்பக் கூறி வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: பெருமிதம்.
 பயன் : குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவு கடாதல் .

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: மூங்கிலை நிகர்த்த தோளினையுடைய நாயகியை ஆயக் 
கூட்டத்தாரிடத்திலே விட்டு வளைந்த வில்லினையுடைய நாயகனைத் தனியே நிற்கக் கண்டு சொல்லியது.

    செய்யுள்: பெரியோனே! முழங்கப்படா நின்ற அருவிகளையுடைய எங்கள் சிறிய ஊர் இதுதானாயிருக்கும்; 
தேனும் கிழங்குமாக நுகர்ந்து இன்றைக்கு எங்களோடும் கூடவிருந்து குன்றவரானவர் ....... எழுந்து ஆரவாரிக்கின்ற 
குரவைக் கூத்தையும் கண்டு போவாயாக: அழிவில்லாதவன் அழியாத சுகத்தை நம்பின அடியார்க்கும் 
மற்றுள்ளவரான மக்களுக்கும் கொடுக்கிற சுவாமி, ஊழித்தீயிடத்தாடி தக்ஷிணத்துக்குப் பெரிய 
திருப்பதியாகிய அழகிய (தில்லை) நகருக்குள் இற்றைக்கு எங்களுடன் அவதரித்து, உதய காலமே 
போவாய் (என்பது கருத்து).      127

            13. பருவங்கூறி வரவு விலக்கல்*
            -----------------------------

*'பேரின்பப் பொருள் : அருள் சிவத் தின்படுத் தறிவுறுத்தியது.

    பருவங்கூறி வரவு விலக்கல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவு கடாவி, '
இனியிவ்வாறொழுகாது வரைவொடு வருவாயாக' வெனத் தலைமகளது பருவங்கூறித் தலைமகனைத் 
தோழி வரவு விலக்கா நிற்றல்.  அதற்குச் செய்யுள்: 

    தள்ளி மணிசந்த முந்தித் 
        தறுகட் கரிமருப்புத்
    தெள்ளி நறவந் திசைதிசை 
        பாயும் மலைச்சிலம்பா
    வெள்ளி மலையன்ன மால் விடை 
        யோன்புலி யூர்விளங்கும் 
    வள்ளி மருங்குல் வருத்துவ
        போன்ற வனமுலையே.

    மாந் தளிர்மேனியை வரைந்தெய்தா 
    தேந்தலிவ்வா றியங்கலென்றது.

    இதன் பொருள்: மணி தள்ளி-மணிகளைத் தள்ளி; சந்தம் உந்தி-சந்தன மரங்களை நூக்கி; 
தறுகட் கரி மருப்புத் தெள்ளி - தறுகண்மையையுடைய யானையின் மருப்புக்களைக் கொழித்து நறவம் 
திசை திசை பாயும் மலைச்சிலம்பா- தேன் றிசைதோறும் பரக்கும் மலையையுடைய சிலம்பனே ; 
வெள்ளிமலை அன்னமால் சிலம்பனே; வெள்ளிமலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும்- 
தனது வெள்ளி மலையாகிய கயிலையை யொக்கும் பெரிய விடையை யுடையவனது புலியூர் போல 
விளங்கும்; வள்ளி மருங்குல் கொடிச்சியது மருங்குலை; வனமுலை வருத்துவ போன்றன - நல்ல முலைகள் 
வளரா நின்றபடியால் வருத்துவன போன்றன; இனி வரைந்தெய்து வாயாக எ-று.

    சிலம்பனென்பது அதனை யுடையனென்னும் பொரு ணோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது. 
புலியூர் புரையுமென்பதூஉம் பாடம் யாவருமறியா விவ்வரைக்கண் வைத்ததேன் முதிர்ந்துக்கு அருவிபோன் 
றெல்லாருங் காணத் திசைதிசை பரந்தாற்போலக், கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டாற் 
புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படா நின்றதென உள்ளுறை யுவமை யாயினவாறு கண்டு கொள்க. 
மெய்ப்பாடு அச்சம். இவ்வொழுக்கம் புறத்தாரறியின் இவளிறந்து படும்; இறந்து பட இவனு மிறந்துபடுமென்னு 
நினைவினளாதலால், பயன்:  வரைவு கடாதல்

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மாந்தளிர் போன்ற மேனியையுடைய நாயகியை வரைந்து 
கொள்வதன்றி  நாயகனே இவ்வழியில் வாராதே கொள் என்றது.

    செய்யுள் : மாணிக்கங்களைத் தள்ளிச் சந்தன மரங்களைத் தூக்கித் தறுகண்மையுடைய 
கரியின் கோடுகளைக் கொழித்துத் தேனானது திசைதிசை தோறும் பெருக்கெடுக்கிற மலை. - 
பக்க முடையவனே; வெள்ளி மலை போன்ற பெரிய இடபத்தையுடையவன். அவனது புலியூரினை 
யொத்து விளங்குகின்ற கொடிச்சி இடையை வருத்துவன போன்றிருந்தன, அழகிய முலைகளானவை; 
ஆதலினாற் கடுக வரைந்து கொள்வாயாக.         128

            14. வரைவுடம்படாது மிகுத்துக்கூறல் *
            --------------------------------

* பேரின்பப் பொருள் : ''இன்ப மெளியேற் கெய்துமோ வென்றது.

    வரைவுடம்படாது மிகுத்துக்கூறல் என்பது பருவங்கூறி வரைவு கடாய தோழிக்கு, அமராவதிக்கண்ணும்                (திருத்: மிகுத்து/மிகுத்துக்)
இம்மாதர்க் கொப்பில்லையென நான்முகன் பயந்த பிள்ளையையான் வரையுந்துணை யெளியளாக நீ கூறுகின்ற 
தென்னோ'வெனத் தலைமகன் வரைவுடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -

    மாடஞ்செய் பொன்னக** ரும் நிக 
        ரில்லையிம் மாதர்க்கென்னப் 
    பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற 
        பிள்ளையை யுள்ளலரைக்
    கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் 
        தில்லைநின் றோன் மயிலைக்
    கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் 
        றோநின்று கூறுவதே.

    வரைவுகடாய வாணுதற்றோழிக்கு 
    விரைமலர்த்தாரோன் மிகுத்துரைத்தது

** பொன்னக ரில்லைபிம் மாதருக் கென்னமன்னும்' 
 
    இதன் பொருள்: மாடம் செய் பொன் நகரும் இம்மாதர்க்கு நிகர் இல்லை என்ன - மாடமாகச் செய்யப்பட்ட 
பொன்னகராகிய அமராவதிக்கண்ணும் இம்மாதர்க்கொப்பில்லை யென்று சொல்லும் வண்ணம்; பீடம் செய் தாமரையோன் 
பெற்ற பிள்ளையை பீடமாகச் செய்யப்பட்ட தாமரையையுடைய நான்முகன் பயந்த பிள்ளையை ; கயிலைக் கூடம் செய் 
சாரற் கொடிச்சி என்றோ நின்று கூறுவது - கயிலை மலைக்கட் கூடஞ் செய்யப்பட்ட சாரலிடத்து வாழுங் 
கொடிச்சியென்றோ நீ நின்று சொல்லுவது? இவ்வாறு சொல்லற்பாலையல்லை எ-று. உள்ளலரைக் கீடம் செய்து- 
தன்னை நினையாதாரைப் புழுக்களாகச்செய்து; என் பிறப்புக்கெடத் தில்லை நின்றோன் கயிலையான்றன்னை 
நினைவேனாகச் செய்து என் பிறப்புக்கெடத் தில்லைக்கணின்றவனது கயிலை யெனக் கூட்டுக

    கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை. கூடஞ்செய்சார லென்பதற்கு மரத்திரளாற் 
கூடஞ்செய்தாற் போலுஞ் சாரலெனினு மமையும். கூடஞ்செய்தாற் போலு முழைகளை யுடைய சார லெனினுமமையும். 
வரைவுடம்படாது மிகுத்துக் கூறியது. மெய்ப்பாடு: இளிவரல், பயன்:  தலைமகனது விருப்புணர்த்துதல்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வரைவை உயர்த்திச் சொன்ன ஒளியையுடைய நுதலையுடைய 
பாங்கிக்கு அரிய மலை மேலுண்டாகிய நாட்டுக் கதிபதியானவன் ஆற்றாது சொன்னது*

*அருவரை நாடன் அற்றா துரைத்தது' என்பன பழையவுரை காரர் பாடம்.

    செய்யுள் : தெய்வலோகத்திலுள்ள பெண்களும் இந்த மாதர்க்கு ஒப்பல்ல ரென்னும்படி தாமரைப்பூவை 
நிலைபெற்ற பீடமாகக் கொண்டிருக்கிற பிரமனாலே பெறப்பட்ட இவளை, தன்னை நினையாதவரான மாக்களைப் 
புழுக்கள் மாத்திரந்தாளே (என்பதற்காகமம்? ) செய்து வைத்து என் பிறவியானது கெடும்படி பெரும்பற்றப்புலியூரிலே 
எழுந்தருளி, நின்றவன் கயிலை மலையில் கூடமாகச் செய்யப்பட்ட சாரல் குறத்தியென்றோ நின்று சொல்லுவதுதான்?

    கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தெய்வக்கோட்டத்தை. மரத்திரளாற் கூடம் செய்தாற் போலும் 
முழைகளையுடைய சாரலென்றுமாம். வரைவுடன் படாமை மிகுத்துச் சொன்னது.         129.

            15. உண்மை கூறி வரைவு கடாதல் *
            ---------------------------------

*'பேரின்பப் பொருள், ''அன்புக் கருளு மின்பெளி தென்றது.''

    உண்மைகூறி வரைவு கடாதல் என்பது வரைவுடம்படாது மிகுத்துக் கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத் 
தாயுந் தந்தையுங் கானவர் ; யாங்கள் புனங்காப்போஞ்சிலர் ; நீர் வரைவு வேண்டாமையி னெம்மைப்புனைந்து     (திருத்: புனஞ்சுப்/புனங்காப்)
கூறல் வேண்டுவதில்லை' யெனத் தோழி தங்களுண்மைகூறி வரைவுகடாவா நிற்றல்'. அதற்குச் செய்யுள்:-

    வேய்தந்த வெண்முத்தஞ்  சிந்துபைங்
         கார்வரை மீன்பரப்பிச்
    சேய்தந்த வானக மானுஞ்
        சிலம்பதன் சேவடிக்கே 
    ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
        அம்பல வன்மலையில் 
    தாய்தந்தை கானவ ரேனலேங்
        காவலித் தாழ்வரையே .

    கல்வரைநாடன் இல்லதுரைப்ப
    ஆங்கவளுண்மை பாங்கிபகர்ந்தது.

    இதன் பொருள் : வேய் தந்த வெண் முத்தம் சிந்துபைங்கார் வரை மீன் பரப்பி -வேயுண்டாக்கிய 
வெள்ளிய முத்துக்கள் சிந்திய சோலைகளாற் பசிய கரிய தாழ்வரை மீன்களைத் தன்கட் பரப்பி; 
சேய் தந்த வான் அகம் மானும் சிலம்ப- சேய்மையைப் புலப்படுத்திய வானிடத்தை யொக்குஞ் சிலம்பை
யுடையாய்; தாய் தந்தை-எமக்குத் தாயுந் தந்தையும் ; தன் சேவடிக்கே ஆய் தந்த அன்பு தந்து- தன்னுடைய 
சிவந்த திருவடிக்கே ஆராயப்பட்ட வன்பைத் தந்து; ஆட்கொண்ட அம்பலவன் மலையிற் கானவர்- என்னை 
யடிமை கொண்ட அம்பலவனது மழையிற் கானவரே! இத் தாழ் வரை ஏனல் எம் காவல்-இத்தாழ்வரையி
னுண்டாகிய தினை யெமது காவலாயி யிருக்கும் ; அதனானீவரைவு வேண்டாமையிற் புனைந்து 
கூறவேண்டுவதில்லை எ-று.

    வினைமுத லல்லாத கருவி முதலாயின அவ்வினை முதல் வினைக்குச் செய்விப்பனவாமாதலில், 
பரப்பியெனச் செய்விப்பதாகக் கூறினார். சேவடிக்கே அன்புதந்தெனவியையும். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன் : வரைவுகடாதல்.                                        (திருத்: கடதல்/கடாதல்)

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மலையின் மேலுண்டாகிய நாட்டினையுடையவன் இல்லாத 
ஒன்றைச் சொல்ல அவ்விடத்து அவள் உண்மை பாங்கி பகர்ந்தது.

     செய்யுள் : வேயீன்ற முத்துக்கள் பரந்த சோலைகளாற் பச்சென்ற  கரிய மலையானது நக்ஷத்திரங்களைப் 
பரப்பி அதிதூரத்திலே விளங்கித் தோன்றுகிற ஆகாயப் பரப்பை யொத்த மலையினையுடையவனே; தன் சிவந்த 
சீபாதங்களிலே அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன், மாதாவுக்குப் பிள்ளையிடத்தே உண்டான அன்பை 
எனக்குத் தன்னுடைய சீபாதங்களிலே உண்டாக்கி அடிமை கொண்ட திருவம்பலவன் திருமலையில்
எங்களுக்கு மாதாவும் பிதாவும் குறவராக இருந்தார்கள்; நீண்ட மலையிடத்து நாங்கள் காப்பது தினையாயிருந்தது.

    எனறு பேராக இருத்தற்குச் செற்றியுமிதுவானால் வசவப்படாது? மாதாவாலும் பிதாவாலும்         (ஐயம்: எனறு?என்று?)
செய்தொழிலாலும் செற்றியாலும் கண்டு எங்களைப் புகழ்ந்தாய் என்றது. 130

            16. வருத்தங்கூறி வரைவுகடாதல்*
            ------------------------------

*பேரின்பப் பொருள் : இன்புறா திருத்த லென்பிழை யென்றது.

    வருத்தங்கூறி வரைவுகடாதல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாயதோழி,  'வரையாமை நினைந்து 
அவள் வருந்தா நின்றாள்; வரைவென்று நினைக்க நினைக்க நீயிர்வருந்தா நின்றீர்; இவ்வாறு நும்முள்ளம்         (திருத்: நீனைக்க/நினைக்க)
மாறுபட நிகழ்தலின் இருவர்க்கு மிடையே யான் வருந்தா நின்றே'னெனத்  தலைமகனுக்கு வருத்தங்கூறி 
வரைவுகடாவா நிற்றல்.  அதற்குச் செய்யுள்:-

        மன்னுந் திருவருந் தும்வரை
            யாவிடின் நீர்வரைவென்
        றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
            வாடுதி ரும்பரெலாம்
        பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் 
            சோதிசிற் றம்பலத்தான்
        பொன்னங் கழல்வழுத் தார்புல
            னென்னப் புலம்புவனே

    கனங்குழை முகத்தவன் மனங்குழை வுணர்த்தி 
    நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

    இதன் பொருள்: வரையா விடின் மன்னும் திருவருந்தும் வரையா தொழியிற் பெரும்பான்மையும் திருவை
யொப்பாள் வருந்துவள்; நீர்வரைவு என்று உன்னுமதற்குத் தளர்ந்து ஒளி வாடுதிர்- நீயிர் வரைவென்று நினைக்குமதற்கு 
மனந்தளர்ந்து மேனியொளி வாடா நின்றீர்; பொன்னங் கழல் வழுத்தார் புலன் என்னப் புலம்புவன். இவ்வாறு 
நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் யான் பொன்னையொக்குங் கழலை வாழ்த்த மாட்டாதாரறிவு போலத் 
தனிமையுற்று  வருந்தா நின்றேன் எ-று. உம்பர் எல்லாம் பன்னும் புகழ்ப்பரமன் - அறிதற்கருமை யான் 
உம்பரெல்லாமாராயும் புகழையுடைய பரமன் :பரஞ்சோதி எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய வொளி: 
சிற்றம்பலத்தான் ஆயினும் அன்பர்க்கு இப்பாலாய்ச் சிற்றம்பலத்தின் கண்ணாயவன்; 
பொன்னங்கழல் - அவனுடைய பொன்னங் கழலெனக் கூட்டுக.

    மன்னு மென்பது ஒரிடைச்சொல். நிலைபெறுந் திருவென் றுரைப்பாருமுளர். *முன்னர் இவட்குத் 
திருவை யுவமங் கூறுதல் தக்கதன்றென்று ஈண்டுவமித்த தென்னையெனின் ஆண்டுத் தெளியாமையிற் 
கூறலாகாமைகூறி, மக்களுள்ளாளென்று தெளிந்த பின்னர்க் கூறலா மென்பதனாற் கூறிய தெனவுணர்க.
பொன்னங் கழலென்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடையதென அன்மொழித் தொகைப்பட 
வுரைப்பினுமமையும். புலனென்ன வென்பதற்குச்சுவை முதலாகிய தம்பொருள் பெறாது வழுத்தாதா
ரைம்பொறியும் புலம்புமாறு போல வெனினுமமையும், இருவருள்ள நிகழ்ச்சியுங் கூறுவாள் போன்று, 
தலைமகள தாற்றாமை கூறி வரைவுகடாயவாறு, மெய்ப்பாடு: அச்சம் - பயன்: வரைவுகடாதல்.

*உரைப்பவர் பழைய வுரைகாரர்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு:  கனத்த மகரக்குழைக் கிசைந்த முகத்தையுள்ளவள் மனம் 
வாடுகிறபடியை அறிவித்து நிறைந்த வளைகளை யணிந்த தோளினை யுடையவள் வரைவை
வற்புறுத்திச் சொன்னது.

    செய்யுள்: நீ வரைந்து கொள்ளாத பொழுது அம்புயம் நிலைபெறும் சீதேவியையொப்பாளும் 
வருந்தா நிற்பள்; நீ வரைவு என்று நினைக்கும் அளவில் உள்ளந் தளர்ந்து மேவியொளிவாடா நின்றாய்; 
தேவர்களெல்லாம் இற்றையளவும் ஆராயும் வண்ணம் நின்ற புகழையுடைய மேலானவன், 
சுயம்பிரகாசமானவன். திருச்சிற்றம்பல நாதன் அவனுடைய பொற்பு மிக்க பாதமலர்களை 
வாழ்த்தமாட்டாதவருடைய அறிவுபோலே வருந்தா நின்றேன்.             131

            17. தாயச்சங்கூறிவரைவுகடாதல்*
            --------------------------------

*பேரின்பப் பொருள்: 'பரையு முயிரின் பக்குவங் கண்டது' 

    தாயச்சங்கூறி வரைவு கடாதல் என்பது வருத்தங்கூறி வரைவு கடாய தோழி, எம்முடைய வன்னை 
அவள் முலை முதிர்வு கண்டு இவள் சிற்றிடைக்கு ஒருபற்றுக் கண்டிலே மென்று அஞ்சா நின்றாள்: 
இனி மகட்பேசுவார்க்கு மறாது கொடுக்கவுங் கூடு' மெனத்தாயச்சங் கூறி வரைவு கடாவா நிற்றல். 
அதற்குச் செய்யுள்:-

    பனித்துண்டஞ் சூடும் படர்சடை 
        அம்பல வன்னுலகந்
    தனித்துண் டவன்தொழுந் தாளோன் 
        கயிலைப் பயில்சிலம்பா
    கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
        பாரிப்புக் கண்டழிவுற் 
    றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் 
        கென்றஞ்சு மெம்மனையே **

     மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா 
    வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.

**பா-ம் - மெம்மனைக்கே

    இதன் பொருள்: பனித்துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் - பனியையுடைய துண்டமாகிய பிறையைச் 
சூடும் பரப்பிய சடையையுடைய வம்பலவன்; தனித்து உலகம் உண்டவன் தொழும் தாளோன்-எஞ்சுவான் 
றானேயாய்த்  தானல்லாத உலக முழுதையுமுண்டவன் றொழுந் தாளையுடையவன்; கயிலைப் பயில் சிலம்பா - 
அவனது  கயிலைக்கட் பயிலுஞ் சிலம்பனே தொண்டைக்கனி வாய்ச்சி கதிர் முலைப் பாரிப்புக்கண்டு -
தொண்டைக்கனி போலும் வாயை யுடையாளுடைய கதிர் முலைகளது ஒருப்பாட்டைக்கண்டு: 
அழிவு உற்று-நெஞ்சழிந்து, எம் அன்னை சிற்றிடைக்கு இனிப்பற்றுக் கண்டிலம் என்று அஞ்சும் - 
எம்மன்னை இவள் சிற்றிடைக்கு இனியொரு பற்றுக் கண்டிலமென்று அஞ்சாநின்றாள்;
 இனியடுப்பனவறியேன் எ-று.

    துண்டம்: ஒரு பொருளினது கூறு. பாரிப்பு அடியிடு தலெனினுமமையும். இளமைப்பருவம் புகுந்தமையான் 
மகட் கூறுவார்க்கு அன்னை மறாதே கொடுக்கும்: நீ முற்பட்டு வரைவாயாக வென்று தோழியேற்கக் கூறியவாறு. 
மெய்ப்பாடு:  அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: செறிப்பறிவுறுத்து வரைவு கடாதல்.                 (திருத்:பயுன்/பயன்)

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு:  மடப்பத்தாலே தகுதியையுடைய நாயகிக்கு வந்து             (திருத்: வுரை/வுரைப்)
பொருந்துவதறியாதே  வேலினை நிகர்த்த விழியுடைய பாங்கி பொருந்தும்படி சொன்னது.

    செய்யுள்:  குளிர்ந்த பிறையைச் சாத்தியருளுகிற விரிந்த திருச் (சடையையுடைய) திருவம்பலநாதன், 
பதினாலுலகையும் ஒரு காலே அமுது செய்த விட்டுணு வந்து வணங்குகின்ற நாயகன் (அவனுடைய கயிலைப் 
பதியிலுள்ள சிலம்பனே!) கொவ்வைக் கனியை நிகர்த்த வாயினையுடையவள். ஒளியுடைத்தாகிய தனங்களின் 
ஒருமைப் பாட்டைக் கண்டு நெஞ்சழிந்து இப்பொழுது சிறிய இடைக்கொரு ஆதாரம் கண்டிலோம் என்று 
பயப்படா நின்றாள். எங்களுடைய தாயானவள்.

    ஆதலாற் கடுக வரைந்து கொள்வாயாக என்றது. இளமைப் பருவம் புகுந்தமையான் மகட் கூறுவார்க்கு 
அன்னை மறாது கொடுக்கும்; நீ அதற்கு முற்பட வரைந்து கொள்ள (வேண்டும்) என்றது.         132

            18. இற்செறி வறிவித்து வரைவு கடாதல் *
            -------------------------------------

* பேரின்பப் பொருள் : ''அருளினி லின்ப மரிதென விரைதல்.'

    இற்செறி வறிவித்து வரைவுகடாதல் என்பது தாயச்சங் கூறி வரைவு கடாய தோழி எம்மன்னை அவளை 
யுற்று நோக்கித் திருமலைக்கட் புறம் போய் விளையாட வேண்டாவெனக் கூறினாள் : இனி யிற்செறிப்பாள் போலு'மென 
இற்செறி வறிவித்து வரைவு கடாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-

    ஈவிளை யாட நறவிளை
        வோர்ந்தெமர்** மால்பியற்றும் 
    வேய்விளை யாடும்வெற் பாவுற்று
        நோக்கியெம் மெல்லியலைப்
    போய்விளை யாடலென் றாளன்னை
        அம்பலத் தான்புரத்தில்
    தீவிளை யாடநின் றேவிளை 
        யாடி திருமலைக்கே.

    விற்செறி நுதலியை, இற்செறி வுரைத்தது.

**' நறவினை யோர்ந்தெமர்' என்பது பழைய வுரைகாரர் பாடம்.

    இதன் பொருள் :  ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து; தேனீக்கள் பறந்து விளையாட அவற்றினது விளையாட்டாற்     (திருத்:ஒர்ந்து/ஓர்ந்து)
றேனினது விளைவையோர்ந்தறிந்து; எமர் மால்பு இயற்றும் வேய் விளையாடும் வெற்பா-எம்முடைய தமர் கண்ணேணியைச் 
செய்யும் வேய் விளையாடும் வெற்பையுடையாய்; உற்றுநோக்கி குறித்து நோக்கி; அன்னை எம் மெல்லியலைத் 
திருமலைக்குப் போய் விளையாடல் என்றாள் - அன்னை எம்முடைய மெல்லியலைத் திருமலைக்கட் புறம்போய் 
விளையாட வேண்டாவென்று கூறினாள்; இனி இற்செறிக்கும்போலும் எ-று. அம்பலத்தான் - அம்பலத்தின் கண்ணான்; 
புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி முப்புரத்தின் கட் டீவிளையாட நின்று ஏத்தொழிலால் விளையாடுவான்; 
திருமலை -அவனது திருமலையெனக் கூட்டுக.

    எமர் மால்பியற்றும் வெற்பா வென்றதனால், தாமந்நிலத்து மக்களாதலும் அவன் றலைவதனாலுங் கூறினாளாம். 
போய் விளையாடு கென்றாளென்பது பாடமாயின், உற்றுநோக்கி இன்று போய் விளையாடுக வென்றாள்; அக்குறிப்பால் 
நாளை யிற்செறிப்பாள் போலுமென வுரைக்க; ஈ விளையாட்டாற்றேன் விளைவை யோர்ந்து எமர் மால்பியற்றுமாறு போலக் 
கதிர்ப்பு வேறு பாட்டால் இவளுள்ளத்துக் கரந்த காம முணர்ந்து மேற்செய்வன செய்யக்கருதா நின்றாளென உள்ளுறை 
காண்க. இச்செறிவித்ததென்பது** பாடமாயின், இன்னார் கூற்றென்னாது துறை கூறிற்றாகவுரைக்க.

**என்பது பழையவுரைகாரர் பாடம்

    (பழையவுரைப் பொழிப்பு) கொளு: வில்போன்ற நெற்றியினை யுடையாளை இல்லிலே செறிவித்தது.

    செய்யுள்: (தேனை யொத்த படியாலே) ஈக்கள் புறப்பட்டு விளையாட நறவினையோர்ந்து விசாரித்து 
எங்கள்  உறவின்முறை யானவர்கள் கண்ணேணியை இயற்றுகிற மூங்கில் விளையாடும் மலையினை யுடையவனே! 
உற்றுப் பார்த்து எம்முடைய மெல்லிய இயல்பினையுடையாளைப் புறம்பே போய்   விளையாட வேண்டா வென்றாள்: 
திருவம்பலநாதன் ,புரத்தில் தீப்புக்கு விளையாடும்படி எத்தொழில்களையும் கண்டு நின்று விளையாடினவன். 
(அவனுடைய) திருமலையிடத்துப் புறம்போய் விளையாட வேண்டா என்றாள் அன்னையானவள்.

    எங்கள் அண்ணன்மார் ஈக்கள் ஒழுக்கத்தை அறிவார்கள்: ஈக்கள் புறப்பட்டு விளையாடத் தேன் 
நெய்த்தபடியை அறிந்து சிலர் கண்ணேணியை ஏற்றுவார்கள்; அதற்கு முன்னே கடுக வரைந்து கொள்வாயாக 
வேண்டும் என்றவாறு. விளையாடல் என்றாளதனால் நாளை யிற்செறிவிப்பாள் போலுமென்க.      133

            19. தமர்நினை வுரைத்து வரைவு கடாதல் *
            -------------------------------------
* பேரின்பப் பொருள்: இன்பம் பெறாவிடி லிகழுமுல கென்றது.

    தமர்நினைவுரைத்து வரைவுகடாதல் என்பது இற்செறி வறிவித்து வரைவுகடாயதோழி, 'அவண் முலை 
தாங்கமாட்டா திடை வருந்துவதனைக்கண்டு எமரிற்செறிப்பாராக நினையா நின்றார்; அயலவரு மகட்பேச 
நினையா நின்றா' ரெனத் தமர் நினைவுரைத்து வரைவுகடாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:-

    சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
        பலவற் றொழாது தொல்சீர் 
    கற்று மறியல ரிற்சிலம்
        பாவிடை நைவதுகண்
    டெற்றுந் திரையின் னமிர்தை 
        யினித்தம ரிற்செறிப்பார்
    மற்றுஞ் சிலபல சீறூர் 
        பகர்பெரு வார்த்தைகளே

    விற்செறி நுதலியை இற்செறி விப்பரென் 
    றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.

    இதன் பொருள்: சிலம்பா- சிலம்பா; சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்பலவற் றொழாது-சுற்றப்பட்ட சடைத்திரளை
யுடைய சிற்றம்பலவனை முற்பிறவியிற் றொழாமையான்; கற்றும் தொல்சீர் அறியலரின் - நூல்களைக் கற்று வைத்தும்
அவனது பழைய புகழையறியாதாரைப் போல : இடை நைவது கண்டு முலை தாங்ககில்லா திடை வருந்துவதனைக் 
கண்டு: எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார்-எற்றுந்திரையை யுடைய கடலிற் பிறந்த இனிய வமிர்தத்தை 
யொப்பாளை இப்பொழுது தமர் இற்செறிப்பார்: மற்றும் சீறூர் பகர் பெரு வார்த்தைகள் சிலபல-அதுவுமன்றி 
இச்சீறூராற் பகரப்படும் பெரிய வார்த்தைகள் சிலபலவுள எ-று.

    எற்றுந்திரை யென்பது சினையாகிய தன் பொருட்கேற்ற வடையடுத்து நின்றதோராகு பெயர். 
இற்செறிப்பாரென்பது ஆரீற்று முற்றுச் சொல்: வினைப்பெய ரென்பாருஞ் செறிப்பரென்று பாடமோதுவாருமுளர். 
சிலபலவென்பது பத்தெட்டுளவென்பதுபோலத் துணிவின்மைக்கண் வந்தது. சீறூர்ப்பக ரென்பதூவும் பாடம். 
இவற்றிற்கு மெய்ப்பாடும் பயனும் அவை, இவற்றுண் மேலைப்பாட்டிற் குறிப்பினானே செறிப்பறிவுறுத்தாள்.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (வில் போன்ற நெற்றியுடை யாளை) நிபத்தியாக (நிச்சயமாக) நாளை 
இல்லிலே செறிவிப்பார்கள் என்கிறவதனை ஒளி வேலவற்கு வெளியே உரைத்தது.

    செய்யுள்: சுற்றிக் கட்டப்பட்ட சடைத்திரளை யுடைய திருச்சிற்றம்பல நாதனை முற்பிறப்பில் தொழாத
 படியினாலே, எல்லா நூல்களையும் கற்றிருந்தும் அவனுடைய பழைய சீரை அறியாதாரைப்போலே, நாயகனே! 
இடை கிலேசிக்கிற அதனைக் கண்டு, கரையோடே மோதுகிற திரையையுடைத்தாகிய கடலிலே பிறந்த
அமுதத்தை ஒப்பாளை இப்பொழுதே உறவான பேர் இல்லிலே செறிப்பார்களாயிருந்தது. சிறிய ஊரிடத்துச் 
சொல்லுகிற பெரிய வார்த்தைகள் மற்றும் சிலவும் பலவுமாயிருந்தன; (சிலவென்பது. தாங்கள் இன்ன வார்த்தை 
யென்றறியாமையான்: பலவென்பது எல்லாம் சொல்லுதலான் ; பெருவார்த்தை யென்றது வெளிப்பட்ட காலத்துப் 
பெரும் பழியைத் தருவது போலே என்றது)             134

            20. எதிர்கோள் கூறி வரைவுகடாதல் *
            ---------------------------------

*'பேரின்பப் பொருள் : திரோதையும் பரையுஞ் சேர்ந்திடுமென்றது.

    எதிர்கோள் கூறி வரைவுகடாதல் என்பது தமர் நினைவுரைத்து வரைவுகடாயதோழி, 'நீ வரைவொடுவரின்; 
அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின்வர வெதிர்கொள்ளாநிற்பர் ; இனிப் பல நினையாது பலருமறிய வரைவொடு 
வருவாயாக' வென எதிர்கோள்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள் :

    வழியும் அதுவன்னை யென்னின்
        மகிழும்வந் தெந்தையும் நின்
    மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
        னேவய மம்பலத்துக் 
    குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
        றாலமுற் றும்மறியக்
    கெழியும்ம வேபணைத் தோள் பல
        வென்னோ கிளக்கின்றதே. 

    ஏந்திழைத்தோழி ஏந்தலை முன்னிக் 
    கடியாமாறு நொடிகென்றது.

    இதன் பொருள்: வழியும் அது- இவளை நீ யெய்துதற்கு முறைமையும் வரைவு வேண்டுதலே: 
அன்னை என்னின் மகிழும் - இவணலத்திற்குத் தக்கானோர் கணவனை வேண்டுவாளா கலின் நீ வரைவு 
வேண்டுமிடத்து அன்னையென்னைப்போல மகிழும்; வந்து எந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் .
உலகியலாள் மறுத்தகன்று நின்றானாயினுந் தகுதி நோக்கிவந்து எந்தையு நின் மொழியைக் கடவாது 
அதன் வழியே நிற்கும்: முன்னே சுற்றம் வயம்-இவளோடு நின்னிடை நிகழ்ந்தது குறிப்பானறிந்த தாகலின்
நீ வரைவு வேண்டுவதன் முன்னே சுற்றம் நினக்கு வயமாயிருக்கும்: பல கிளக்கின்றது என்-பல சொல்லுகின்றதென்: 
குழி உம்பர் ஏத்தும் அம்பலத்து எம் கூத்தன் - திரண்டு உம்பரான் ஏத்தப்படுமம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய 
கூத்தனது குற்றாலம் முற்றும் அறியக் கெழி உம்மவே பணைத் தோள்- குற்றால முழுதுமறியப் பொருந்திய 
உம்மனவே தோள்கள் : ஐயுற வேண்டா எ-று.

    வழியுமென்னுமும்மை: எச்சவும்மை உபாயமாதலேயன்றி என்றவாறு. எந்தையு மென்பது இறந்தது தழீஇய
வெச்சவும்மை.  முன்னே வயமென வேறுபடுத்துக் கூறுதலால், சுற்றமுமென வும்மைகொடாது கூறினாள். 
 நலமுங் குலமு முதலாயின வற்றானேராராயினும், வடுவஞ்சி நேர்வ ரென்பது பயப்பக் குற்றால முற்றுமறியக் 
கெழீஇயவென்றாள், கெழீஇய வென்பது கெழியெனக் குறைந்து நின்றது.  நின்மொழியென்று உம்மவே என்றது. 
' என்னீ ரறியாதீர் போல விவைகூற, னின்னீர வல்ல நெடுந்தகாய்"  (கலித்தொகை, பாலை-5) என்பது போல ஈண்டும் 
பன்மையு மொருமையு  மயங்கி நின்றன. குற்றால முற்றுமறியக் கெழியென்பதற்கு மறைந் தொழுகா தெல்லாரு 
மறிய வரைவொடு வருவாயாக வென்றுரைப்பாருமுளர் **. இப்பொருட்குக் கெழுமுவென்பது விகார வகையாற் 
கெழியென நின்றது  மெய்ப்பாடும் பயனும் அவை. வரைவின்கட் டலைமகனை யொற்றுமை கொளுவுதலுமாம்.

**உரைப்பவர் பழையவுரைகாரர்

    தழங்கு மருவி (127) என்னும் பாட்டுத்தொட் டிதன்காறும் வர இப்பாட்டொன்பதுஞ் செறிப்பறிவுறுத்து 
வரைவு கடாயின வென்பது. இவையெல்லாந் தோழியிற் கூட்டமுந் தோழியிற் கூட்டத்தின் விகற்பமுமெனவறிக.

    (பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஏந்திழைப் பாங்கி யேந்தலை முன்னிக், கடியாமாறு நொடிதே கென்றது. 
மிக்க ஆபரணங்களையுடைய தோழி நாயகனை எதிர்ப்பட்டுக் கலியாணத்திற்காம்படி விரை(வா)யாக வென்று 
சொல்லியது.

    செய்யுள்: தாயானவள் என்னைப்போலே விரும்புவாள்: (எனவே தன் விருப்பம் சொல்லாதே விளங்குகிறது) ;
 (உலகியல்பான் மறுத்து நின்றானே யாகில்) வந்து என் பிதாவானவன் நீ சொன்ன வழியிலே நிற்பன்; 
சுற்றத்திலுள்ளார் (க்கு) முன்னே வசப்படுவார்கள்: திரண்டு தேவர்கள் ஏத்துகிற அம்பலக்கூத்தனாயுள்ளவன் 
அவனுடைய திருக்குற்றாலத்தி லுள்ளவர்கள் அறிய வேயை யொத்த தோளினையும் பொருந்துமதே காரியம்:     (திருத்: குற்றாலதி/குற்றாலத்தி)
(பலரறியப் பொருந்துகையாவது, கலியாணம் செய்து கூடுகை) இனிப் பலபடச் சொல்வது ஏன் தான்? 
உலகத்தின் வழி அதுவே யல்லவோ?         135

            21. ஏறுகோள் கூறிவரைவு கடாதல்*
            ------------------------------

* பேரின்பப் பொருள்: "அன்பு புரிபவர்க் கின்பெளி தென்றது."

    ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்பது எதிர்கோள் கூறி வரைவுகடாயதோழி, 'எம்முடைய 
வையன்மார் அவளுடைய முலையின் பெருமையும் இடையின் சிறுமையுங் கண்டு எம்மூர்க்கண் 
விடையின் மருப்பைத் திருத்தி விட்டார்; இனியடுப்பன வறியே' னென ஏறுகோள் கூறி வரைவு கடாவா 
நிற்றல். ஈண்டுக் கூறுவானுதலுகின்றது முல்லைத் திணையாகலின், அந்த முல்லைத் திணைக்கு மரபாவது, 
ஓரிடத்தொரு பெண் பிறந்தால் அப்பெண்ணைப் பெற்றவர் தந்தொழுவில் அன்று பிறந்த சேங்கன்றுள்ளன 
வெல்லாந் தன் னூட்டியாக விட்டு வளர்த்து அப்பரிசினால் வளர்ந்த வேற்றைத் தழுவினா னொருவனுக்கு 
அப்பெண்ணைக் கொடுத்தல் மரபென்ப. அதற்குச் செய்யுள்:-

    படையார் கருங்கண்ணி வண்ணப்
        பயோதரப் பாரமும் நுண்
    இடையார் மெலிவுங்கண் டண்டர்க
        ளீர் முல்லை வேலியெம்மூர்
    விடையார் மருப்புத் திருத்திவிட் 
        டார்வியன் தென்புலியூர்
    உடையார் கடவி வருவது