logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாசகம் தமிழ் உரை & Thiruvasagam English Translation

சிவமயம்

(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)

சிவபுராணம்

( சிவனது அநாதி முறைமையான பழமை)
திருப்பெருந்துறையில் அருளியது

            கலிவெண்பா

            1. CIVAPURANAM

The Beginningless Ancientry of Lord Civan (Sung whilst in Thirup-Perun-Thurai)

            திருச்சிற்றம்பலம்

    திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் குரு வடிவாக எழுந்தருளி மணிவாசகப்
பெருந்தகைக்கு அருளாரமுதத்தை வழங்கிய சிவபெருமான், அருட்கண்பாலித்துச் “சிதம்பரத்தில்
ஆன்மாக்களுய்ய அனவரதமும் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அருளுகின்றோம்; அவ்விடம் வருக"
என்று ஆணை தந்து மறைந்து அருளினார். கேட்ட வாதவூரடிகள் திடுக்கிட்டு, குருவின் திருமேனி 
காணும் இணையில்லா இன்பத்தை இழக்கின்றோமே என்று இரங்கி, அன்பரோடு மருவுதலாகிய 
சிவநெறியில் தலைப்படுவாராக அடியார் கூட்டத்தை அடைந்தார் . அங்கு அடியார்களும்
தாமுமாகக் குருந்தமரத்தடியில் தெய்வப் பீடிகை ஒன்று செய்து, அதில் குருநாதனுடைய திருவடித்
தாமரைகளை அமைத்து வணங்கி வந்தார். ஒருநாள் இவர் உள்ளத்து, “இறைவன் அடியடைந்தார் 
அன்பிலர் ஆயினும் பாடிப் பரவுவாராயின் இறைவன் அவர்க்கு இரங்கி அருள் செய்வான்” என்ற
எண்ணம் திருவருள் விளக்கத்தால் தோன்றியது . உடனே மங்கலச் சொல் யாவற்றிற்கும்
தலையாயதும், தான் மங்கலமாதலேயன்றித் தன்னைச் செபிப்பார்க்கும் தியானிப்பார்க்கும் 
பெருமங்கலம் தரவல்லதும், வேதவிருட்சத்து வித்தாய் உள்ளதும் ஞானசம்பந்தப் 
பெருந்தகையாரால் “வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது” என்றும் “செந்தழல் ஓம்பிய செம்மை 
வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்" ஆவது என்றும், திருநாவுக்கரசு சுவாமிகளால் "கற்றுணைப்        
 பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது" என்றும், "நாவினுக் கருங்கலம்", “நல்லக
 விளக்கு" என்றும் பாராட்டப் பெறுவதும், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்று மூன்று
முறைகளால் பரிபாக நிலைக்கு ஏற்ப ஓதப்பெறுவதும் ஆகிய திருவைந்தெழுத்தை முதலாக வைத்து 
"நமச்சிவாய வாழ்க” என இக்கலிவெண்பாவை அருளிச் செய்தார்கள்.

    சிவபுராணம் - சிவனது அநாதி முறைமையான பழைமை . "அநாதியுடனாம் நின்மல 
சிவனுடைய அநாதி முறைமையான பழைமை" என்பது அகத்திய மாமுனிவர் அருளிய திருவாசக
அனுபவச் சூத்திரம்.

    புராணம் - பழைமை.  சிவபுராணம்-  சிவனது பழைமை. பழைமையில் காலத்தொடு பட்ட
பழைமையும்,  காலம் கடந்த பழைமையும் என இருவகை உண்டு.  அவற்றுள் சிவனது பழைமை
காலாதீதமானது. காலத்தொடு கற்பனை கடந்தது.  ஆதலின், அநாதி நித்திய முறைமையான
பழைமை எனப்பட்டது. சிவனது பெருங்கருணையாகிய அநாதியான சச்சிதாநந்த முறைமை;
இதனுள்  வேதாகம  புராண சாத்திர சுத்த சைவ அபேத அத்துவித சித்தாந்த சம்பிரதாயம் முழுதும்
அடங்குந் தன்மைக்குச் சிவபுராணம் என்று பெயராயிற்று என்பது பழைய உரை. இதன் கருத்து
இறைவனுடைய உண்மை அறிவானந்தப் பழைமையே சிவ புராணம், இதனுள் ஞானவாயில்களாகிய
வேதாகம விதிகளும் அவற்றின் விளைவும் அனைத்தும் அடங்கும் என்பதாம்.

    இது சிவனது அருவநிலை கூறுவது என்பர் சிலர். 

    "தேசுறுமா ணிக்கமெனச் சிறந்ததிரு வாசகத்தில் 
    பேசுதிருச்  சிவபுரா ணத்தகவற் பெருமைசொலில் 
    ஈசர்தமக் கியல்பான திருநாம  முதலெவையும்
     மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட்குறிப்பாம்"

என்பது பழைய திருப்பெருந்துறைப் புராணம்.

    இது கலிவெண்பாவால் ஆனது. சிலர் இதனை அகவல் என வழங்குவதைக் காண்கிறோம்.
பழைய திருப்பெருந்துறைப் புராண ஆசிரியரும் சிவபுராணத்தகவல் என்கிறார். ஆகவே
கலிவெண்பாவை அவர்கள் தவறி அகவல் என்கின்றார்கள் அல்லர். முதற்கண் உள்ள நான்கினில்
இது நீங்க ஏனையவை அகவலாக இருத்தலின் பெரும்பான்மை பற்றிய வழக்காகக் கூறினார்கள்
என்று கொள்க.

    இது தொண்ணூற்றைந்து அடிகளால் அமைந்த ஒரு கலிவெண்பா. இதனுள், "நமச்சிவாய
வாஅழ்க" என்பது, திருவாசக முழுதும் மணிமாலையுள் நூலிழைபோல ஊடுருவி நின்று ஒளிதரும்
பொருள் திருவைந்தெழுத்தாகலின் அது எம் மனத்துள் என்றும் நிலவுக என்னும் பொருளும், சிவ
ஞான போதப் பன்னிரண்டாம் சூத்திரத்து அணைந்தோர் தன்மையாக அமைந்ததன் கருத்தும்
அடங்க உணர்த்துகிறது.

    "நாதன் தாள் வாழ்க' என்பது முதல் 'இறைவனடி வாழ்க' என்பது வரையுள்ள அடிவாழ்த்து
 ஐந்தும் சிவன் நாதாதி நின்று அருள்வழங்கும் முறைமையை அறிவிக்கிறது.

    "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்பது முதல் உள்ள  "வெல்க" எனத் திருவடி
வெற்றி கூறும் பகுதி ஐந்தும் பஞ்சமல நிவிருத்தியை அறிவிப்பன.

    "ஈசனடி போற்றி" என்பது முதல் திருவடி போற்றிகள் எட்டும் இறைவனுடைய
காருண்யமாகிய எண்குணங்களைத் துதிப்பன.

    " சிந்தை மகிழ..... உரைப்பன் யான்' என்பது இச்சிவபுராணத்தை உயிர்கள் ஐம்புலக்
கட்டினின்றும் அகன்று, பேரானந்தம் பெற்று,  இன்பமெய்துக என்று இயற்றுதற்குக் காரணம்
இயம்புகின்றது.

    "கண்ணுதலான் தன் கருணை......... இறைஞ்சி" என்பது ஆசாரிய வணக்கம் அறிவிக்கின்றது. 

    "விண்ணிறைந்து....... எல்லையிலாதானே" என்பது இறைவனியல்பு உபதேச வாயிலான்
உணரத் தக்கது என்பது  உரைக்கின்றது.

    "நின் பெருஞ்சீர்..... பணிந்து" என்பது துதியும், இதன் பெருமையும், இதன் பொருட்பயனை 
உணருவோர் உணர்த்துவோர் எய்தும் பயனும் உணர்த்துகிறது.

    இவ்வண்ணம் இச்சிவபுராணம் பொருட்பேற்றினால் எட்டு பகுதியாக அமைந்துள்ளது.         
இவற்றின் அமைப்பையும் அழகையும் உரைக்கிடையில் காண்க. இப்பகுதி முழுதும் பழையவுரை 
தந்த கருத்துக் கருவூலமாகும்.

    "God Head is not a being full of Bliss, but Bliss itself"

    Poet, Sage and Saint Maanikkavaachakar affirms the above truth through his poetry 
Thiruvaachakam. It is a spirit. It is an outpouring of love to the Supreme by the soul. Saint 
Maanikkavaachakar composed these gems of divine utterances on Lord Civan and of man's 
relationship with Him, with the world and with fellow beings, so that all who read his psalms
may experience the divine greatness of His grace at work in all the activities of human life 
and in the universe.

    Civaprakasa Swamigal in his poem of praise on Thiruvaachakam exclaimed thus:

    " Oh Beloved of Vaathavoorar
    Thy Thiruvaachakam is the essence of exalted love and life"

    Mrs.Ma Ratna Navaratnam writes, "If poetry is the resonance of greatness of soul,
Thiruvaachakam stands unchallenged, as one of the finest gems of poetry in the literature of the
world. Maanikkavaachakar is acclaimed as one of the renowned poet, sage and saint".

    Ramachandra Deekshithar, the author of "Studies in Tamil Literature and History" says:
"The Thiruvaachakam relates an autobiographical story of the different stages of
Maanikkavaachakar's spiritual life and experience which ultimately enabled him to attain Bliss
ineffable and eternal. It is a torrential outflow of ardent religious feelings and emotions in
rapturous songs and melodies. The work may be regarded as a convenient hand book on
mystical theology".

    The first chapter in Thiruvaachakam is captioned as "CIVAPURAANAM".
Civapuraanam means Lord Civan's way of old or the beginningless ancientry of Civan, whose
acts of grace which give solace and redemption to souls, transcending all calculations of time.

    This may be generally termed as a prologue, corresponding to the Tamil word
"PAAYIRAM". It is a poem of praise on Lord Civan. It begins with the famous five-letter
mystic word "NAMACHCHIVAAYA". The word "NAMACHCHIVAAYA" is not only a five letter 
mystic word but also stands as the name of Lord Civan.  Similarly, the word "NAATHAN"
in the same line also stands for Lord Civan. Thus, Maanikkavaachakar starts the poem by paying 
salutations to the God head Lord Civan with an auspicious word.

    The antiquity and importance of this five-letter mystic word can be further explained by
quoting Yajur Veda. Among the three Vedas - Ruk, Yajur and Sama (Vedas are only three in number, 
Atharvana veda was added in a later period; That is why Vedas are called Thirayee (த்ரயீ) 
i.e, Three in number). Among the three Vedas, the middle one is Yajur. In the middle of 
Yajur veda is Thiru Vuruthiram (திருவுருத்திரம்). In the central piece of Thiru Vuruthiram, 
the following lines appear.

            "NAMACHCHIVAAYASA CIVATHARAAYASA"

            "நமச்சிவாயச சிவதராயச"

    The world famous scientist Darwin discovered the theory known as "Theory of Evolution".
The present day discovery of this scientific theory finds a place in Thiruvaachakam lines 26-31 
of this first poem:

    "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"

written by Maanikkavaachakar, thousands of years ago.  Of course, these six lines have been
made not in the order of evolution, but for the sake of consonance and alliteration the order 
has been altered.

    It will not be out of place here to quote the following lines from a poem writen by 
Jalal Ad-Din Rumi (1207-1273) a Persian mystic and poet.

    "I died as mineral and became a plant
     I died as plant and rose to animal
     I died as animal and I was man
     Why should I fear?
     When was I less by dying?
     Yet, once more I shall die as man to soar
     With angels blessed, but even from angelhood
     I must pass one; all except God death perish
     When I have sacrificed my angel-soul
     I shall become what no mind ever çonceived 
     Oh! Let me not exist"


    The penultimate lines in this poem reads:

    " பொருள் உணர்ந்து சொல்லுவார்
      செல்வர் சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்,
     பல்லோரும் ஏத்தப் பணிந்து"

i.e.one should conceive what he consumes, then he must realise, then he must comprehend

what Maanikkavaachakar has meant and then try to adhere to the pathway towards God that
he suggested in the poem"

    Thiru Muruga Kirubaanantha Vaariyaar, an exponent of Hindu religious scriptures in
Tamil, says, "The Civapuraanam is the essence of all the 108 upanishads".

    Similarly, there are many more aspects in the first poem itself, which is left to 
readers to conceive and appreciate.

1.1      நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
     இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
     கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

5.    ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க !
    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
     பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
     புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
    கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

10.     சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
    ஈசன் அடிபோற்றி ! எந்தை அடிபோற்றி !
     தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி! 
     நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
     மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி!

15.    சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி !
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!
    சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
     அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
     சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை,

20.     முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் 
    கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி 
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
     விண் நிறைந்து மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய் 
    எண் இறந்து, எல்லை இலாதானே!  நின் பெரும்சீர்

25.     பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன், 
    புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
    பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக்
    கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்
    வல்லசுரர் ஆகி முனிவர் ஆய், தேவர் ஆய், 

30.    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் !
    மெய்யே உன்பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
     உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற 
    மெய்யா! விமலா!  விடைப்பாகா!  வேதங்கள்

35.     "ஐயா"என,ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
    வெய்யாய்! தணியாய்!  இயமானன் ஆம்விமலா!
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி, 
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே !
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

40.     அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
    ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்!  அனைத்து உலகும் 
    ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய், 
    போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில் 
    நாற்றத்தின் நேரியாய்!  சேயாய் ! நணியானே!

45.     மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
     கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் 
    சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று 
    பிறந்தபிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த

50.     மறைந்து இருந்தாய், எம்பெருமான்!  வல்வினையேன் தன்னை!
     மறைந்திட மூடிய மாய இருளை
     அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,
    புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 

55.     மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 
    விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் 
    கலந்த அன்புஆகி, கசிந்து உள் உருகும் 
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
    நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி,

60.     நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு 
    தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! 
    மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! 
    தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
    பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே !

65.    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட 
    பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
     ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! 
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
     நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

70.     இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! 
    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
    சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே! 
    ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!

75.     கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் 
    நோக்கு அரிய நோக்கே!  நுணுக்கு அரிய நுண் உணர்வே!
     போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! 
    காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே!
    ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற

80.    தோற்றச் சுடர் ஒளி ஆய்ச், சொல்லாத நுண் உணர்வு ஆய்
     மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவுஆம்
     தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் 
    ஊற்று ஆன உண்ஆர் அமுதே! உடையானே! 
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

85.     ஆற்றேன்; "எம் ஐயா! அரனே! ஓ!" என்று என்று 
    போற்றி, புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்ஆனார்,
    மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே 
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
    நள் இருளில் நட்டம்பயின்று ஆடும் நாதனே!

90.     தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
     அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ!' என்று 
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார். சிவன் அடிக்கீழ்,

95.     பல்லோரும் ஏத்தப் பணிந்து.

            திருச்சிற்றம்பலம்

1.1      நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க 
    விமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
     கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க 
    வாகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க

    நமச்சிவாய வாஅழ்க!  நாதன் தாள் வாழ்க !
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
     ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

    namasivaya vaazkha naathanthaaL vaazka
    imaipoluthum en nenjil neengkaathaan thaaL vaazka 
    kookaziy aaNda kurumaNithan thaaL vaazka
    aakamam aaki ninRu aNNippaan thaaL vaazka

பொழிப்புரை 1 - 4:   தலைவனது பெருமையை உணர்த்தும் நாமமாகிய நமச்சிவாய என்னும் 
திருவைந்தெழுத்தானது என்றும் நிலை பெறுக. தலைவனது திருவருட் சத்தியானது என்றும் 
விளங்குக.  கண்ணை மூடி விழிக்கும் நேரமளவுங்கூட அடியேனுடைய உள்ளத்தை விட்டு 
அகலாதவனுடைய திருவடிகள் வாழ்வனவாக. திருவாவடுதுறை அல்லது 
திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியார்க்கு மெய் உணர்த்தி ஆட்கொண்டு அருளிய 
தலைமை அருட் பேராசிரியராகிய முதல்வனின் திருவடிகள் என்றும் விளங்குக.
வீட்டு நூல் கூறும் தனிப்பொருளாய் நின்று இனிமை தருவானுடைய திருவடிகள், உள்ளத்தில் என்றும் 
நிலை பெறுக. தன்னிலையில் ஒருவனாய், அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய்
உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக.

 குறிப்புரை 1 - 4:  "நமச்சிவாய" என்னும் சொல் வடமொழியில் "வணக்கம் சிவனுக்கு" என்று 
பொருள்படும். நமஸ்= வணக்கம். சிவாய= சிவனுக்கு,  சித்தாந்த நூல் முறைப்படி, "நமச்சிவாய" 
என்பதற்கு எழுத்துப் பொருள் கொள்ளுமிடத்து, நகரம், உயிர்கள் உலகியலில் செல்லுதற்குத் துணை
புரிந்து நிற்கும் கடவுளது மறைப்புச் சக்தியைக் குறிக்கும். மகரம், மலமாகிய உலகப் பாசத்தைக் குறிக்கும் .
சிகரம், சிவமாகிய கடவுளைக் குறிக்கும். வகரம், வீடடைதற்குத் துணைபுரியும் அருட்சத்தியைக் குறிக்கும்.
யகரம் உயிரைக் குறிக்கும். ஆணவத்துள் கிடக்கும் உயிரினைப் பிறவிக் கட்டினுள்  படுத்தி, உலகியலில் 
செலுத்தியும், ஆணவம் நீங்குதற்குரிய பக்குவம் வந்த போது கட்டுக்களை ஒழித்து அருட்சத்தி 
வாயிலாகத் தன்பால் வீடு பெறுவித்தும், உயிருக்கு நன்மை புரியும் கடவுளின் பெருந்தன்மையைத்
திருவைந்தெழுத்து விளக்குதலால், "நாதன் நாமம் நமச்சிவாய" எனப்பட்டது. நாதனை அவன் நாமத்தால் 
வழுத்தியபின், நாதனது சத்திக்கு வாழ்த்துக் கூறப்பட்டது. 

நமசிவாய என்பதைப் பெரிய ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் எனவும் , சிவாயநம என்பதை நுண்ணிய 
ஐந்தெழுத்து சூக்கும பஞ்சாக்கரம் எனவும் கூறுப.  கட்டு நிலையை நமசிவாய என்பதும், வீட்டு நிலையை 
சிவாயநம என்பதும் குறிக்கும். நாதன் என்பதற்கு நாத தத்துவ  முதல்வன் என்று பொருள் கொள்வதும் உண்டு.
தாள்= அருளாற்றல், இமைத்தல்= இயற்கையாகக் கண்மூடி விழித்தல், இமைப்பொழுது மிகச் சிறிய  கால
அளவைக் குறிக்கும். கோகழி = பசுத் தன்மை கழிதல். இப்பொருளில்  அது திருவாவடுதுறையைக் குறிக்கும் .
கோ= பெரிய, கழி= துறை. இப்பொருளில் திருப்பெருந்துறையைக்  குறிக்கும்.  

அடிகள் காலத்திற்கு முன்னமே நவகோடி சித்தபுரம் என்னும் திருவாவடுதுறையிலே இறைவன் பலர்க்கு அருள் 
புரிந்திருக்கக் கூடும். கோகழி இத்திருப்பதிக்கே பெரு வழக்கமான பெயர். திருப்பெருந்துறை என்ற பொருள், 
அடிகள் வரலாற்றிற்கு மிகவும் பொருத்தமானது. மணி= மாணிக்கம். அது  இரத்தினங்களுள் சிறந்ததாதல் பற்றித் 
தலைமையையும்  குறிக்கும். ஆகமம் = ஆகமப் பொருள். ஆகமம் வீட்டு நூலாதலின் கடவுள்,ஆகமப் 
பொருளாயினமை கூறினார்.  அண்ணிப்பான் என்பதற்கு அணுகி நிற்பான் என்று  பொருள் கொள்வாரும் உளர்.
 இறைவன்,  இறு என்பதனடியாகப் பிறந்தது. இறு = தங்கு.

5.      வேக னநேக னிறைவ னடிவாழ்க 
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க 
    கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

    ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க 
    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
     பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க !
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க !
    கரம் குவிவார்  உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க!

    ekan aneekan iraivan adi vaazka
    veekang keduththaaNda veenthan adi velka 
    pirapaRukkum pinjakanRan peykazalkaL velka 
    puRaththaarkku seyoonRan puungkazalkaL velka 
    karanguvivaar uLmakizhung koonkazalkaL velka

பொ-ரை: 5 - 10; உய்தி கூடுதற்கு அருட்குரவனை நாடி அலைந்த மனத்தின் விரைவைத் 
தொலைத்துத் திருவருள் தந்து ஆட்கொண்ட மன்னனது திருவடிகள் மேம்படுக. பிறவியை
வேரறுக்க வல்ல தலைக்கோலப் பெருமானுடைய வீரச் சிலம்பு நிறைந்த திருவடிகள் சிறந்து 
விளங்குக. அன்பிற்குப் புறமாய் உள்ளவர்கள் அணுக ஒண்ணாத  தூரத்தில் உள்ளவனுடைய
அழகிய மெல்லடிகள் வெற்றியுடன் திகழ்க . கை கூப்பித் தொழுவார் தமது நெஞ்சத்தில் 
நினைந்து நினைந்து களிப்படைவதற்கு ஏதுவாகிய அரசனுடைய திருவடிகள் நிலைபெற்றுச்
சிறக்க; தலை குவித்து வணங்குவாரை மேன்மை அடைவிக்கும் புகழுடையானது திருவடிகள் 
வெற்றியுடன் மிளிர்க. 

1 - 10: "Namachchivaaya" the sacred and mystic five-lettered name of Lord Civan which extols
 His greatness be hallowed for ever. May the holy Feet of the Lord which symbolise His divine
 grace (Paraa Caththi or primal energy) be hallowed. Hallowed be the Feet of Civan who never 
quits my heart even for the twinkling of an eye. Let me praise the holy Feet of Civan, gem 
among all preceptors, who appearing in the place called "Kokazhi", made me realise the truth
and graciously accepted me as His (Some authors interpret the place "Kokazhi" as 
Thiruvaavaduthurai and some others claim that it refers to Thirup Perun-Thurai). My 
prostrations to the holy Feet of Lord Civan who, in the form of aagamaas draws the souls 
towards Him and blesses them with the sweetness of His grace. Hail the holy Feet of Civan who 
is One in His original stature, but who takes many forms as desired by His devotees and as 
necessitated by the circumstances, as He is immanent. Victory to the holy Feet of the King who
stilled the tumult of my mind, showered His grace on me and made me His. Victory to the 
anklet-girt Feet of Civan who wears the moon on His head (Pinahan) and who stops the cycle of 
my birth in this world. Victory to the beautiful soft Feet of Civan who is not accessible to those
who have distanced themselves from Him as they have no love for Him. Victory to the holy Feet 
of Civan, the King, who delights in the hearts of those who adore Him with joined palms.
Victory to the Feet of the glorious one who exalts those who bow their heads down at His Feet.

கு-ரை: 5 - 10 வேகம்= விரைவு, பிஞ்ஞகம்= தலைக்கோலம், பிஞ்ஞகம் = பின்னகம் = பின்+நகம்; 
(தலையின்) பிற்பகுதியில் விளங்கும் அணி . இறைவனுக்குப் "பிறை" அவ்வணியாகும் என்ப .'பெய்கழல்' 
என்பதில், 'பெய்' மிகுதியாகச் சாத்தப்படுதலைக் குறிக்கும். இறைவனது ஒப்பற்ற வெற்றிச் செயல்களைக்
 கண்ட விண்ணவரும் வீர அன்பர்களும் அவன் திருவடிக்கண் கழல்களைச் சாத்தினமை
 குறிப்பித்தவாறாம்.  கழல், திருவடிக்கு ஆகுபெயர். உள்=உள்ளம். கரங்குவித்தல் பெரும்பாலும்
 நெஞ்சிற்கு நேரே புறத்து நிகழ்தலின், அது அக மகிழ்வின் விளைவாயிற்று. சிரம், உயர்ந்த உறுப்பாகலின்
 ஓங்குவித்தல், சிரங்குவிதலின் பயனாகக் கூறப்பட்டது.

10.     சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க 
    வீச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி 
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி 
    மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி

    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !
    ஈசன் அடிபோற்றி! எந்தை அடி போற்றி!
    தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி!
     நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
     மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

    sirangkuvivaar oongkuvikkunj seeroonkazal velka
    iisan adi pooRRi enthaiy adi pooRRi
    theesanadi pooRRi sivanseevadi pooRRi
    neeyathee nindRa nimalan adi pooRRi.
    maayap piRappaRukkum mannanadi pooRRi

பொ-ரை 11-16:  ஆண்டவனுடைய திருவடிகள் நம்மைக் காப்பனவாக;  நம் அப்பனுடைய 
 திருவடிகள் காக்க; ஒளி மேனியனுடைய திருவடிகள் காக்க ; மங்கலப் பொருளாகிய
 சிவபெருமானுடைய செவ்விய பாதங்கள் காப்பனவாக; அன்பிலே விளங்கி நின்ற 
மாசில்லாதவன் திருவடிகள் காக்க; வஞ்சப் பிறவியை வேரறுக்கும் வேந்தன் திருவடிகள் 
காக்க; அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நம் இன்பன் திருவடிகள் நம்மைக்
காக்க; தெவிட்டாத இனிமையை ஆறாக நல்கும் மலைபோலும் பெருமான் நம்மைக் காக்க. 

கு-ரை 11 - 16:  ஈசன், ஆளுதல் என்று பொருள்படும் வினையடியாய்ப் பிறந்தது. தேசு= ஒளி,
நிமலன்=மலமில்லாதவன், மாயம் = வஞ்சனை, நிலையாமை;  எடுத்த பிறவி நிலையாமையானும், 
வரும் பிறவி யாதென்று அறியப்படாமையானும் "மாயப்பிறப்பு" என்றார். தேவன் = தே+அன்= இனிமையன்,
தேவன் என்னுஞ் சொல் வடமொழியிலே ஒளி உருவினன் என்று பொருள்படும் என்க, ஆராத= உண்டு நிரம்பாத,
'மலை' என்றமையால், உரையுள், இன்பம் ஆறெனப்பட்டது.

15.     சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி
     யாராத வின்ப மருளுமலை போற்றி 
    சிவனவனென் சிந்தையு ணின்ற வதனா 
    லவனரு ளாலே யவன்றாள் வணங்கிச்
     சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

    சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி !
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
     சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
    சிந்தை மகிழச், சிவ புராணம் தன்னை,

    seerar perunthuRai nam devanadi pooRRi
    aaraatha inpam aruLumalai pooRRI 
    sivan avan en sinthaiyul ninRa athanaal 
    avan aruLaalee avan thaaL vaNangki
    sinthai makiza sivapuraaNam thannai            

பொ-ரை 17-22 : சிவபெருமானாகிய முழுமுதற் கடவுள் எனது நினைவின் கண் நிலை 
பெற்றிருந்த காரணத்தால், என் செயலற்று அவனது திருவருள் துணை கொண்டு அவனது 
திருவடிகளைத் தொழுது இயற்றிய நல் தவத்தின் பயனாக, நெற்றிக்கண் முதல்வன்
ஆசிரியனாக எழுந்தருளி வந்து தனது அருட்பார்வை நல்கவே சிவ ஞானம் பெற்று, 
மனத்தாற்கிட்ட ஒண்ணாத மாறிலா அழகு நிறைந்த அவனது திருவடிகளைப் பணிந்து,
எனது நெஞ்சம் மகிழ்ச்சியடையவும், முற்பிறவியில் செய்த எனது ஊழ்வினை முற்றிலும் 
ஒழிந்து போகவும், சிவனது பழமையான அருட்செயல் முறையினை யான் சொல்லுவேன்,

கு-ரை:17- 22:  “சிவனவன்" என்பதில் "அவன்" என்பது பல்சமயத்தாரும் பொதுவாகக் குறிக்கும்
முழுமுதற் கடவுள் என்று பொருள் படுவதாகும். திருவருள் பெற்ற காலையும் எடுத்த உடம்பு கொண்டு 
நுகர்வதற்கு உரிய முன்வினைப்பயன் எஞ்சி நிற்றலின் "முந்தை வினை முழுதும் மோய" என்றார்.
சிவஞானம் பெற்ற பெரியோர்க்கு  அறிவு புறத்தே சென்ற காலை  இறைப்புகழ் பாடுதல் எண்ணத்திற்கு 
இன்பம் பயத்தலின், “சிந்தை மகிழ" என்றார். இறைவனது ஞானத்தைப் பெறுதற்கு முன்னேயே, சரியை,
கிரியை, யோகம் என்னும் நல் தவ வழியில் நிற்றற்கு அவன் திருவருள் வேண்டப்படும் ஆதலின் 
"அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்றார். ஞானம் பெற்றபின் ஆற்றப்படும் சுட்டு இறந்த 
வணக்கம் "எண்ணுதற்கு எட்டா" என்பதால் உணர்த்தப்பட்டது.

20.     முந்தை வினைமுழுது மோய வுரைப்பன் யான்             
    கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி 
    யெண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி 
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியா
    யெண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

    முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான். 
    கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
     எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி 
    விண் நிறைந்து மண் நிறைந்து  மிக்காய் விளங்கு ஒளியாய், 
    எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர்,

    munthai vinai muzuthum moya uraippan yaan
    kaNNuthalaan than karuNai kaN kaadda vantheythi
    eNNuthaRku eddaa ezilaar kazal iRainji 
    viNNiRainthu maNNiRainthu mikkaay viLangkoLiyaay
    eNNiRaNthu ellai illathaanee ! ninperunjseer

பொ-ரை 23-25; மேலுள்ள வானுலகெங்கும் நிறைந்தும், கீழுள்ள மண்ணுலகெங்கும்
 நிறைந்தும், அவற்றிற்கு அப்பாலுமாய் விளங்குவோனே, எங்கும் திகழ்கின்ற ஒளி
மேனியனே, கணிக்கப்படும் சுட்டுப் பொருள் அனைத்தையும் கடந்து நிற்கும் அளவிலாத்
தன்மையனே, நினது ஒப்புயர்வற்ற பெரிய புகழினை, அறிவு விளக்கத்தைத் தடை 
செய்யும் தீயவினை உடையேன் எடுத்தோதும் வகை யாதும் தெரியாதேன்.

கு-ரை 23-25:  "நிறைந்து" என்பது இறைவனது பூரணமான அறிவும் செயலும் விளங்குவதைக்
குறிக்கும். அது காற்று வான் முதலிய சடப்பொருளின் வியாபகம் போன்ற விரிவினைக்  குறியாது,
இறைவனது வியாபகத்தின் ஒரு பகுதியுள் உலகெலாம் அடங்குதலின் “மிக்காய்" என்றார். 
"தேசமார் ஒளிகளெல்லாம் சிவனுருத் தேசது" என்ற கருத்துப் பற்றி, "விளங்கொளியாய்" என்றார். 
தத்துவம் புவனம்  முதலியன எல்லாம் நூல்களால் கணிக்கப்படுவன. அவற்றைக் கடந்த இறைநிலை, 
"எண் இறந்து" என்பதாற்  குறிக்கப் பட்டது. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின்," என்றமையால் 
வினை ,அறிவு  விளக்கத்திற்குத் தடையென உரையுள் கூறப்பட்டது. உயிர்  இயற்கையாகவே 
சிறு தொழில் உடையது.  தன் சிறுசெயல் கொண்டு இறைவன் பெருஞ்செயலை அளக்க வல்லதன்று
 என்பார், "பொல்லா வினையேன்" என்றார்.

25.     பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

    பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல் ஆகி , பூடு ஆய், புழு ஆய் , மரம் ஆகி
    பல்விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக்
    கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
    வல்லசுரர் ஆகி ,முனிவர் ஆய், தேவர் ஆய்

     polla vinaiyeen pukazumaaRu onRu aRiyeen
     pullaaki puudaay puzuvaay maramaaki 
     pal virukamaaki paRavaiyaay paampaaki
         kallaay manitharaay peeyaay kaNngkaLaay        
     vallasuraraaki munivaraith theevaraay            

உரைநடை 26 - 31 எம்பெருமான்! கல்லாய்ப் புல்லாகிப் பூடாய் மரமாகிச் 
செல்லாஅ நின்ற இத் தாவரத்துள், புழுவாய்ப் பாம்பாய்ப் பறவையாய்ப்
பல்விருகமாகி மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி 
முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இச்சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் 
பிறந்திளைத்தேன், 

பொ-ரை  26 - 31:  உலகத் தோற்றத்தில் கற்பாறை அணுக்களில் அடங்கிக் கிடந்து, 
பின் புல்லாகியும் அடர்ந்த புற்செடிகளாகியும், மரங்களாகியும் படைக்கப்பட்டு நிகழ்கின்ற
பல்கோடி நிலையியற் பொருள்களுள்ளும், புழு, பாம்பு முதலிய ஊர்வனவாகியும்
பறப்பனவாகியும், விலங்குகளாகியும், மக்களாயும், பேயினங்களாயும், பூதகணங்களாயும்,
வலிய அசுரராயும், முனிவராயும், விண்ணவராயும், படைக்கப்பட்டு இயங்குகின்ற பல்கோடி
பிராணிகளுள்ளும் அடங்கிய எல்லா வகையான பிறப்பிலும் உடலெடுத்து இறந்து உழன்று
அலுத்தேன்.

11 - 31: Adoration to the holy Feet of Civan who is the Ruler of all (Eesan), Adoration to the 
holy Feet of my Father, Adoration to the holy Feet of the effulgent one, Adoration to the rosy 
Feet of Civan: Adoration to the holy Feet of Civan who stands rooted in the love of the devotees 
and who is devoid of any sin (Malam), Adoration to the holy Feet of the King who severs the 
cycle of delusion- bringing births, Adoration to the holy Feet of our Lord who manifested
Himself in the beautiful hamlet called Perunthurai, Adoration to the holy Feet of Civan who is
the mountain of grace from which flows unsatiating bliss. As He, Civan the auspicious Lord, 
abides in my mind, I, having lost my petty individuality, am empowered to worship His Feet,
through His own grace.

As a result of this good deed of worshipping His holy Feet, Civan who has an eye on his forehead 
appeared before me as my Master to turn His gracious and dazzling look on me which made me attain 
the highest wisdom - Civagnaanam. I prostrated at His feet, whose unmatched beauty is beyond 
the conception of thought, and my heart filled with ecstatic joy and all my last karma disappearing. 
I start to narrate the "Ways of Old of Lord Civan. Oh! Lord! You have not only filled the heaven 
and the earth, but also transcend them both, in the form of a dazzling effulgence! Thou boundless 
one who cannot be measured by any norms! I , a man of evil karma, do not in the least know 
how to sing thy glory.  Oh! my noble Lord ! I have been born several times as stone, as grass,
as shrub, as tree, as worm, as snake, as bird, as beast, as man, as demon, as goblin, as mighty giant, 
as ascetic, as devas - in fact in all the forms of existence as the moving and the non-moving
and am wearied of it all. 

கு-ரை: 26 - 31 உயிர்த் தோற்ற நூல் முறைப்படி, பிறவிகளைத் தொகுத்துப் பொருள் கூறப்பட்டது.
 விருகம்= மிருகம் = விலங்கு "பல்" என்ற அடையை எங்கும் கூட்டலாம். 

30.     செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து 
    ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றே 
    னுய்யவென் னுள்ளத்து ளோங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்க

    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
     எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
     மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; 
    உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற 
    மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்

    sellaaa ninRa iththavara sangamaththuL 
    ella piRappum piRanthiLaitheen emperuman
    meyye un ponadigal kaNdinRu viiduRReen            
    uyya en uLLathuL oongkaaramaai ninRa
    meyyaa vimala vidaippakaa veethangkaL

பொ-ரை: 32 - 35: ஆணவ இருளில் கிடந்த யான் உடம்பெடுத்து உழன்று, பக்குவம் வந்த
காலை உன் திருவடியைக் கூடிப் பிழைக்கும் வண்ணம், எனது நெஞ்சத்துள், ஐந்தொழிற்கும்
காரணமான ஓம் என்ற முதுமொழி வடிவாய் நின்ற உண்மையனே!  கட்டு இலாதவனே,
அறவுருவாகிய காளை மேல் எழுந்தருள்பவனே, அறிவு நூல்கள் நின்னுடைய
பேரளவினைக்  காணமாட்டாது. ஐயனே என்று அலற, அவற்றின் எல்லையைக் கடந்து
உயர்ந்தும் தாழ்ந்தும் விரிந்தும் விளங்குகின்ற  பெருமையனாய் அவற்றால்
காணவொண்ணாத நுட்பப்  பொருளாய் எவற்றினும் கலந்துள்ளவனே, பிறவியில் உழலாது
நிலைப்பாயிருப்பதற்கு ஏது ஆய உனது அழகிய திருப்பாதங்களை இப்போது காணப்
பெற்றுப் பாச நீக்கம் அடைந்தேன், 

32-35: Oh! Reality! having seen Your golden Feet this day I am redeemed from the birth cycle. 
That I may be redeemed, You ever abide in my heart as "Om"! Oh! Truth! Oh! Spotless one
(Vimalaa) Oh! Rider of the bull! oh! Lord! the Vedas which cannot perceive Your greatness,
wail "Oh! Sire' You soar, sink, and spread beyond everything, while being the subtlest of the
subtle.

கு-ரை:  32 - 35 உயிர்கள் உய்யுமாறு  இறைவன் ஐந்தொழில் இயற்றுமிடத்து, உயிர்க்குயிராய் நின்று
ஓங்காரத்தின் பிரிவாகிய அகரம், உகரம், மகரம், விந்து, நாதமென்பவற்றின் வாயிலாகக் கருவிகளை 
இயக்குவதாலும், ஓங்காரம், இறைவனது சிறந்த மந்திர வடிவமாதலாலும், "உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற" என்றார். இறைவன் ஐந்தொழில் இயற்றினாலும் தனது மெய் இயல்பில் 
மாற்றமில்லாதவன் ஆகலின், "மெய்யா" என்றார். அங்ஙனம் இருந்ததற்குக் காரணம் இயல்பாகவே 
கட்டிலாமையாகலின், "விமலா" என்றார். வி=இன்மை. மலம் = கட்டு.  இறைவன் நடு நிலையன் என்பார், 
"விடைப்பாகா" என்றார். அவன் பெரியதில் பெரியதாய்,  சிறியதில் சிறியதாய், எங்கும் கலந்து 
நிற்குமுறை  நூலுணர்வான் அறியப்படாமையின், "வேதங்கள் ஐயா என" என்றார். "மெய்யே உன்" என்பதில்,
மெய்= நிலைப்பு, ஏய்=பொருந்து, பொன் மாற்றமிலா ஒளி நயம் உடையது. வீடு= பாசத்தினின்று விடுபடுதல்.

35.     ளையா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே 
    வெய்யாய் தணியா யியமான னாம்விமலா 
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி 
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே 
    யெஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே

    "ஐயா"என,  ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே! 
    வெய்யாய் ! தணியாய் ! இயமானன் ஆம்விமலா !
    பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, 
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
     எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
 
    aiyaa ena oongki aaznthakanRa nuNNiyanee
        veeyyaay thaNiyaay iyamaananaam vimala
        poyyayna ellam pooyakala vantharuLi
        meyngnganam aaki miLirkinRa meyssudaree 
    enjnjaanam illatheen inpap perumaanee

பொ-ரை 36-40  வெப்பமுடையவனே, குளிர்ச்சியுடையவனே, அத்துவிதக் கலப்பால் 
உயிரோடு தொடர்புடைய மாசிலாதவனே.  யான் பற்றிய நன்மையிலாதனவும் 
நிலையாதனவும் ஆகிய இவைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி ஒழியுமாறு குருவாய் வந்து 
அருள் புரிந்து மெய்யறிவாய் விளங்குகின்ற உண்மை ஒளியே, எவ்வகையான அறிவும் 
விளங்கப் பெறாத எனக்குப் பேரறிவின் பயனாய்ப் பேரின்பம் ஈந்தருளும் பெருந்தன்மையனே,
 பொய்யை மெய்யென உணரும் திரிபுணர்ச்சியை நீங்கச் செய்யும் தூய அறிவானவனே.

36 - 40: Oh!  Lord Civa ! You are the heat, You are the cold. You are the Master of 'yagnyaas'!
 You are the spotless one (Vimalan)! By your grace all thoughts of unreality (nescience) fled 
from me. The true godly wisdom gleaming bright You are, Oh! blissful Lord of mine who am 
devoid of all wisdom still with the result of your wisdom I acquired bliss. You are the
embodiment of true wisdom that dispels all nescience 

கு-ரை: 36-40 "வெய்யாய்" என்றது ஞாயிறுபோல ஆண் தன்மை உடையனாதல் குறித்தற்கு;
"தணியாய்" என்றது திங்கள் போலப் பெண் தன்மையுடன் ஆதல் குறித்தற்கு. இயமானன்=உயிர்.
இது வடமொழியில் , வேள்வி இயற்றுவானுக்குச் சிறப்புப் பெயராய் உயிர்க்குப் பொதுப் பெயராய்
வழங்குவது. உயிர்க்கு உயிராய்க் கலந்து , உயிர்களை ஆணாகவும் பெண்ணாகவும் பிறப்பித்தற்குரிய
சிவமும் சத்தியுமாய இறைநிலை  குறிக்கப்பட்டது. அங்ஙனம் உயிரோடு கலந்து நின்றும், தனது தூய 
 இயல்பு மாறாதவன் என்பார், "விமலா" என்றார், பொய் தீயவற்றையும், நிலையாதவற்றையும் குறிக்கும்.
பாச நீக்கத்தில் விளங்கும் மெய்யறிவு பதிஞானம் எனப்படும். இறைவன் கதிரவன் போலவும் ,
மெய்ஞ்ஞானம் கதிர்போலவும் இருத்தலின், "மெய்ஞ்ஞானமாகி" என்றார். எவ்வகை அறியும் இல்லா
நிலை, ஆணவத்தோடு கிடந்த உயிரின் தனிநிலை. அஞ்ஞானம் என்பது, நல்லறிவுக்கு மாறாய புல்லறிவு. 
நல்லறிவு  என்பதில் "நல்" என்பது "பெரும் பயன் தரும்" என்ற பொருள் உடைத்து என்றலும் ஒன்று .
"நற்றாள்"என்பது போன்று.

40.     யஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே 
    யாக்க மளவிறுதி யில்லா யனைத்துலகு
     மாக்குவாய் காப்பா யழிப்பா யருடருவாய் 
    போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பி
    னாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே

    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !
    ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் 
    ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய் 
    போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்
     நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே !

    anjnjaanam thanai akalvikkum nallaRivee 
    aakkam aLaavu iRuthi illaay anaithu ulakum 
    aakkuvay kaappaay azippaay aruL tharuvaay
        pookkuvaay ennai pukuvippaay ninthoozumpin
    naaRRaththin neeriyaay seeyaay naNiyaanee

பொ-ரை: 41-43: படைக்கப்படுதல், ஒருகால அளவாக  நிலைபெறுத்தப் படுதல்,
ஒடுக்கப்படுதல் என்பன இல்லாதவனே, எல்லா உலகங்களையும்  நீயே படைப்பாய்,
நிறுத்துவாய், ஒடுக்குவாய். மலபரிபாகம் வரும்வரை என்னைப் பிறவியில் செலுத்துவாய்.
உய்தி கூடுங்காலம் வருங்கால் நின் திருத்தொண்டாகிய நற்றவத்தில் புகுவிப்பாய். பின்னர்
பிறவி அறுதற்கு ஏதுவாய நின் திருவருளைத் தருவாய்.

கு-ரை: 41-43  தொழும்பு=தொண்டு.
இறைவனது ஐந்தொழிலும், அவற்றை ஆற்றவல்ல அவனது தனிச்சிறப்பும் இங்கே கூறப்பட்டன.

45.     மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே 
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
    சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று 
    பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமா 
    னிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

    மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
     கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் 
    சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் !
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த

    maaRRam mananjkaziya ninRa maRaiyoonee 
    kaRantha paal kannalodu neykalnthaaR poolas 
    siRanthadiyaar sinthanaiyuL theenuuRi ninRu              
    piRantha piRappaRukkum engkal peruman 
    niRangkaLoor ainthudaiyaay viNNoorkaL eeththa

பொ-ரை: 44-48:  பூவின் மணம்போல் நுட்பமாயிருப்பவனே, நீ தூரத்திலிருப்பவனும் ஆவாய்,
அருகே இருப்பவனுமாவாய்.  எவ்வாறெனில் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்கின்ற
 இரகசியப் பொருளாயுள்ளாய். எனினும், நின் மெய்யடியார்கள் உள்ளத்திலே சிறப்பாக
விளங்கிப் பசுவில் இருந்து உடன் கறந்த புனிதமான பாலோடு சருக்கரையும் நெய்யும்
கலந்து இனிமை பயத்தாற்போல், இன்பம் ஊற்றெடுக்குமாறு நிலை பெற்றருளி எடுத்த
 பிறவியை ஒழிக்கும் எங்கள் பிரானாய் உள்ளாய். 

பொ-ரை 49-50:  எங்கள் பிரானே, பூதங்களைத் திருமேனியாகக் கொண்ட நீ அவற்றிற்குரிய
ஐந்து நிறங்களையும்  உடையாய் ; அன்பர்க்குப் பூத நிறங்களோடு தோன்றும் நீ
செருக்குடைய வானோர் உன்னைத் துதித்த போதும், நீ அவர்கட்குத் தோன்றாது ஒளித்திருந்தனை.

41 - 48: Of Lord Civa! You are not created. You have no life span: You have no end; yet You 
create all worlds, sustain them, dissolve them; You cause me to be born again and again till the
end of my karma, and at the ripe moment prompt me to serve you. Oh Lord Civa! You are one 
with me like fragrance in flowers! You are afar to those who do not love You. You are near,to
those who are devoted to You. You are the mystic content of the Vedas transcending word and 
thought. You are in the thoughts of your glorious devotees like honey drops, giving them 
sweetness like the mixture of fresh milk, sugar candy and ghee (clarified butter). You, our Lord,
cut asunder the knots of my karma in this very birth itself and grant me release.

கு-ரை: 44-48:  கண்ணிற்குத் தோன்றும் பூவிலே அதன் மணமானது தோன்றாது கலந்திருந்தால் போல
உலகுயிர்களிலே இறைவன் தோன்றாது கலந்திருத்தல் குறித்தவாறாம். நேர்= நுட்பம். ஒப்பு என்றும் பொருள்படும்.
"மணம் போன்றிருப்பவனே" என்றும் பொருள் கொள்க. தேன்= இன்பத்திற்கு அறிகுறி என்க . ஊறி=ஊற.
 அறிவிற்குப் பாலையும், செயலுக்குக் கன்னலையும், விழைவிற்கு நெய்யையும் உவமை கூறுவதுண்டு.

கு-ரை: 49-50; பொன்னிறம், வெண்ணிறம், செந்நிறம், கருநிறம், புகை நிறம் என்பன நிலம், நீர், தீ, காற்று,
வான், என்பவற்றிற்கு முறையே நிறமாகக் கொள்க . இறைவன் ஓர் இயக்கன் போலத் தோன்றி நின்ற
காலை, விண்ணவர் அவனை அறிந்திலர் என்ற கதை கேந உபநிடதத்துள் காண்க.

50.     மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை 
    மறைந்திட மூடிய மாய விருளை 
    யறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்குமூடி
     மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை

    மறைந்து இருந்தாய், எம்பெருமான் ! வல்வினையேன் தன்னை
     மறைந்திட மூடிய மாய இருளை
    அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி 
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

    maRainthirunthai emperuman valvinaiyeen thannai
    maRainthida muudiya maaya iruLai
    aRampaavam ennum arungkayiRRaaR kaddi
    puRanthool poorthuenkum puzuazukku muudi 
    malanjsoorum onpathu vaayiR kudilai

55.     மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
    விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் 
    கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகு 
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
     நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி

    மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் 
    கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
     நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, 
    நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி

    malangkap pulanainthum vanjsanaiyai seyya        
    vilanjku manaththal vimala unakku 
    kalantha anpaakik kasinthu uLL urukum
    nalanthan ilaatha siRiyeRku nalki
    nilanthanmeel vantharuLi neeLkazalkaL kaaddi

உரைநடை: 51-61: விமலா, வல்வினையேன் தன்னை , மறைந்திட மூடிய இருள்
மாய, அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி, புழுவழுக்குப் புறம்தோல்
போர்த்து மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை நல்கி, மலங்கப் புலன்
ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் உனக்குக் கலந்த அன்பாகிக்
கசிந்துள்ளுருகும், நலந்தான்  இலாத சிறியேற்கு நிலம்தன் மேல் வந்தருளி....

பொ-ரை 51-61: தத்துவனே!  குற்றமிலாதானே!  கொடிய வினையேனது அறிவிச்சை
செயல்கள் மறையும்படி மூடிய இருளாகிய ஆணவம் மாயும் வண்ணம், நல்வினை, தீவினை
என்னும் காண்டற்கும் கடத்தற்கும் அரிய இருவகைக் கயிறுகளிலே பிணிப்புற்றுத்
தன்னகத்து எங்குமுள்ள புழுக்களும், மாசுகளும், புறத்தேயுள்ள தோலினாற் போர்த்து
மூடப் பெற்றுத் தனது நவத்துவாரங்களிலும் அழுக்கு வடியும் குடிலை எனக்குக்
கொடுத்தருளி, யான் கலங்கும்படி ஐம்பொறியறிவு தத்தம் வழியில் என்னை இழுத்துத்
தந்திரமாகக் கேடு செய்தலினாலும், அவற்றின் சார்பாய் நின்று உன்னை அணுகவொட்டாது
தடை செய்யுமனத்தின் இடர்ப்பாட்டினாலும், உன்னோடு கலந்து உறவாகி உள்ளமுருகி, 
அழுது தொழுதலாகிய நற்செயல் யாதுமில்லாத சிறியனேன் பொருட்டு, இந்நில வுலகத்தே
அருட்குருவாய் எழுந்தருளி வந்து உனது புகழ்மிக்க திருவடிகளை எனக்குக் காட்டியருளி
நாயினும் கீழ்ப்பட்டவனாய்க் கிடந்த அடியனேற்குத் தாயினும் மேம்பட்ட கருணை
வடிவான மெய்யனே.

49-61: Oh! Lord Civa! You are the five basic colours. You are invisible to the egoistic heaven
dwellers though they adore You! (The five colours are attributed as under. Earth - Golden,
Water- White, Fire - Red, Wind- Black; Ether - Smoke colour. As God is immanent in the five
elements, their colours are ascribed to Him also). Oh Lord Civa, the Pure One! You graciously
gave me the nine-gated hovel of this body which, secreting foul through its nine holes, does
cover with skin, the filth and worms within and is bound with the rare cords of virtue and sin, yet
which is the means for the destruction of the enshrouding gloom of ignorance amidst which I lay
hidden. I am bewildered and betrayed by the five senses which lead my mind astray. Lowly am
I indeed who cannot merge with You in love that thaws the heart within. For the sake of this
wretched one, who is meaner than a cur, You came in grace on this earth as Guru and showed
Your grand bejewelled Feet and bestowed Your grace on this slave of Yours. Surpassing the
love of the mother indeed is your grace, Oh! The Truth!

கு-ரை: 51-61:  இருளை என்பதில் ஐ-சாரியை. அதனை வேற்றுமை  உருபாகக் கொள்ளின் "மாய"
என்பதைப் பிறவினைப் பொருளில் வந்ததாகக் கொள்க. தான் மலத்தின் வேறாதல் குறிப்பார்,
வல்வினையேன் தன்னை என்றார். "குடிலை" என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு.
மலங்க= கலங்க, விலங்கு = தடை, கசிந்து = அழுது, நீள் = நீண்ட = புகழாற் சிறந்த, நாய், உடையானைச்
சார்ந்தொழுகும். உடையானைத் தான் சார்ந்தொழுகாமை கருதலின், " நாயிற்கடையாய்" என்றார். 
தாய்-கைம்மாறு கருதாது உதவும் இயல்பினள். அவள் என்றும் யாண்டும் உதவ இயலாமையின், 
என்றும் யாண்டும் உதவும் மெய்யன் தாயிற் சிறந்தானாதல் காண்க.

60.     நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் 
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே 
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
     பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே

    நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
     தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
     மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
     தேசனே!  தேன் ஆர் அமுதே!  சிவபுரனே!
     பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

    naayiR kadaiyaay kidantha adiyeeRku 
    thaayiR siRantha thayaavaana thaththuvanee 
    maasaRRa soothi malarntha malarssudaree
    theesanee! theenar amuthee sivapuranee
    paasamaam paRRaRuththup paarikkum aariyanee

65.     நேச வருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
    யாரா வமுதே யளவிலாப் பெம்மானே 
    யோராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே 
    நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே

    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட 
    பேராது நின்ற பெரும் கருணைப்பேர்-ஆறே !
    ஆரா அமுதே!  அளவு இலாப் பெம்மானே!
     ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
     நீராய் உருக்கி, என் ஆர்உயிர்ஆய் நின்றானே!

    neesa aruL purinthu nenjsil vanjsam keda
    peeraathu ninRa perungkaruNaip peeraRee 
    aara amuthee aLavilaap pemmaanee 
    ooraathaar uLLathool oLikkum oLiyaanee
    neeraay uruki en aaruyiraai ninRaanee

பொ-ரை: 62-69 குற்றமில்லாத ஒளியானது இதழ்களாக மலரப்பெற்ற பூப்போன்ற
ஒளி மேனியனே, குரு முதல்வனே, இனிமை நிறைந்த பிறவி மருந்தே சிவலோகனே,
கட்டுப்படுதற்கு ஏதுவாகிய அவாவினை வேரறுத்து அறிவினை விரிவுறச் செய்யும்
மேலோனே, காதலொடு கூடிய இரக்கம் வைத்து என் மனத்துள்ள களங்கம் ஒழியும்படி
எனது உள்ளத்தை விட்டு நீங்காது விளங்கிய பேரருள் வடிவாகிய  வற்றாது ஓடும் பெரிய
ஆறு போன்றவனே, உண்ண உண்ணத் தெவிட்டாத இன்னமுதம் போன்றவனே,
அளவிலடங்காத பெருமை உடையவனே, ஆய்ந்து அறியாதார் உள்ளத்திலிருந்தும்
அவர்கட்குப் புலனாகாத சோதியே, எனது கல் மனத்தைக் கரைத்துத் தண்ணீராக
உருகும்படி செய்து பிரிவாற்ற எண்ணாத உயிர்க்குயிராய் நின்றவனே.

கு-ரை: 62-69:  இறைவனது திருமேனி ஒளிநயமும் மென்மையும் உடைமையால் ஒளியாலாகிய பூவிதழ்
போன்ற உறுப்புடைய திருவடிவமென்று குறித்தார். தேசன்= ஆசிரியன். தேன்=இனிமை. அமுது=சாவாமருந்து. 
பாரிக்கும்= விரிக்கும், வளர்க்கும்; ஆரியன் = மேலோன். நேசம் = தாயன்பு போன்ற விருப்பம்.

70.     யின்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே 
    யன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    யாதியனே யந்த நடுவாகி யல்லானே 
    யீர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே

    இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே !
    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
    சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
    ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!

    inpamum thunpamum illanee uLLaanee
    anparukku anpanee yaavaiyumaay allaiyumaam 
    soothiyanee thuniruLee thonRaap perumaiyanee
    aathiyanee antham naduvaaki allaanee
    iirththu ennai aadkkoNda enthai perumanee

75.     கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற்  கொண்டுணர்வார் தங்கருத்தி 
    னோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே 
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    யாற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற 

    கூர்த்த மெய்ஞ் ஞானத்தால்  கொண்டு உணர்வார் தம் கருத்தின் 
    நோக்கு அரிய நோக்கே!  நுணுக்கு அரிய நுண் உணர்வே!
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே !
    காக்கும் எம் காவலனே!  காண்பு அரிய பேர் ஒளியே!
    ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா!  மிக்காய் நின்ற

    kuurththa meynjnjaanaththal koNduNarvaar thangkaruththin 
    nookkuariya nookkee nuNukkariya nuN uNarvee 
    pookkum varavum puNarvum ilaap puNNiyanee 
    kaakkum em kaavalanee kaaNpariya peeroLiyee            
    aaRRinpa veLLamee aththa mikkaay ninRa

பொ-ரை 70-78, உலகுயிர்களினால் வரும் இன்பமும் துன்பமுமில்லாதவனே,  அன்பர்
பொருட்டு அவற்றையுடையவனே, கலப்பினால் எப்பொருளுமாய், பொருள் தன்மையால்
ஒன்றும் அல்லாதவனாயும் இருக்கின்ற அறிவுருவனே, அடர்ந்த இருள் போன்றவனே, 
தோன்றாத பெருமையை உடையவனே, எப்பொருளின் தோற்றத்திற்கும் மூலகாரணனே,
எவற்றையும் ஒடுக்கும் இறுதிக் கடவுளாயும், எப்பொருளினும், உள்ளீடாயும் இருந்து,
தனக்கொரு  முதலும் முடிவும் நடுவும்  இல்லாதவனே, என்னை வலிய  இழுத்து
ஆட்கொண்டருளிய எங்கள் அப்பனாகிய பெருந்தன்மையனே, கூரிய மெய்யறிவினாலே 
கேட்டுக் சிந்தையுட்கொண்டு தெளிந்து உணர்வாருடைய உள்ளத்தே சுட்டிறந்தறியப்படும் 
பொருளே சுட்டப்படாத அநுபவப் பொருளே, நுகரப்படும் நுட்பப் பொருளே, ஒன்றை 
நாடிப் போதலும் அதனை யடைதலும், அதன் கண் நின்று மீளுதலுமில்லாத நன்மையனே,
உயிர்களை உய்தி கூட்டுவிக்கும் எங்கள் அரசனே, நீ அங்ஙனம் செய்வதை உயிர்கள் தமது 
அறிவாற் காணுதற்கரிய பெரிய அறிவே.

கு-ரை: 70-78:  இறைவன் தானே இன்பமுடையவன், பிற பொருளால் வரும் இன்பத்தை நாடுபவன்
அல்லன். அவன் துன்பம் இல்லாதவன் என்பது தெளிவு . தம் செயலற்ற அன்பர்க்கு வரும் இன்ப 
துன்பங்களைத் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளும் இயல்பு இறைவற்குக் கூறப்படுதலின்
" அவையுள்ளானே" என்றார். இதற்குக் காரணத்தை "அன்பருக்கு அன்பனே" என்பதாற் குறித்தார்.
சோதி= அறிவு.  உலகப்பற்று விட்டு இறைவனைப் பற்றக் கருதும் பரிபாகமுடையார்க்கு அவன் கதிரவன்
உதயத்திற்கு முன் உளதாங் காரிருள் போல்வானாதலின், "துன்னிருளே" என்றாரென்பதும் உண்டு.

ஐம்புலனால் ஒரு சிறிதும் அறியப்படாமை  பற்றித் "துன்னிருளே" என்றாரென்ப. "உன் தனை யெதிரே
கண்டும் அம்புயத் தோனுணர்ந்திலன், மால் சொலவுணர்ந்தான்" என்றபடி இறையன் வெளிப்படையாகத்
தோன்றினாலும் தன்னை உயிர்கட்கு அறிவித்தாலன்றி, உயிர்கள் அவனை அறிய மாட்டாத
 இயல்பினவாதலின்," தோன்றாப் பெருமையன்"  என்றார்.  இறைவன் பல அருள் உருவமெடுத்துத் தோன்றி
மறைதலின், ஆதியும் நடுவும் அந்தமும் உடையானென்பாரும் உளர். நடு என்ற சொல்
அந்தரியாமித்துவம் குறிக்குமென்பர். இறைவன் எவற்றினுள்ளும் இருத்தலின் அவை  காக்கப்படுகின்றன
என்ப.  குதிரை வாங்கப் போன அடிகளை வலியத் தன்பால் வருவித்து ஆட்கொண்டமையின் "ஈர்த்து"
என்றார். வினையிலே கிடந்தேனைப் பக்குவகாலம் வருமுன்னரே ஆட்கொண்டானென அடிகள்
பிறவிடங்களில் கூறுதல் காண்க. தீவிர உணர்ச்சியைக் "கூர்த்த மெய்ஞ்ஞானம்' என்றார் போலும்.
நோக்கு அறிவையும், உணர்வு அனுபவத்தையும் குறிக்கும் என்ப . "நோக்கு" என்பது இறைவனது 
அகண்ட இயல்பையும், "நுண்ணுணர்வு" என்பது அவனது அதிநுட்ப இயல்பையும் குறிக்கும் என்பாருமுளர்.
"போக்கும் புணர்வும் வரவுமிலா" என உரை நடை கொள்க.

80.     தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்
    தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையு
    ளூற்றான வுண்ணா ரமுதே யுடையானே 
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப 

    தோற்றச் சுடர் ஒளி ஆய்ச் சொல்லாத நுண் உணர்வு ஆய்
    மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
    தேற்றனே ! தேற்றத்தெளிவே!  என் சிந்தனையுள் 
    ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! 
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

    thooRRa sudaroliyay soollaatha nuNuNarvaay
    maaRRamaam vaiyakaththin vevveeRee vanthaRivaam 
    theeRRanee theRRath theLivee en sinthanaiyuL 
    uuRRana uNNaar amuthe udaiyaanee 
    veeRRu vikaara vidakkudampin udkidappa 

85.     வாற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று 
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் 
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே 
    நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே

    ஆற்றேன்;  "எம் ஐயா!  அரனே! ஓ! " என்று என்று 
    போற்றி, புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே !
    நள் இருளில்  நட்டம் பயின்று ஆடும் நாதனே!

    aaRReen em aiyaa aranee oo enru enru 
    pooRRip pukaznthirunthu pooykeddu meyyaanaar
    miidduingku vanthu vinaippiRavi saaraamee
    kaLLap pulakkurampaik kaddu azikka vallaanee
     naLiruLil naddam payinRu aadum naathanee

பொ-ரை : 79-83:  ஆற்றின் தூய  புனல் போலத்  துன்பங்கலவாத இன்பப் பெருக்கே, அப்பனே, 
மாறுபாடு அடைகின்ற உலகத்திற்கு  அப்பாற் பட்டவனாய் நிலைபெற்ற விளக்கமுடைய 
கதிரொளிப் பிழம்பாய், மொழியால் உணர்த்துதற்கு அரிய நுட்ப அனுபவமாய், உலகத்தே 
வெவ்வேறாகக் காணப்பட்டு வந்து முடிவாக அறிவாய்த் தெளியப்படும் தெள்ளியனே ,
கேட்டுச் சிந்தித்துத்  தெளிந்தவிடத்தே விளங்கும் தெளிவான பரம்பொருளே, எனது 
உள்ளத்திலே ஊற்றாகத் ததும்பிய உண்ணத் தெவிட்டாத அமுதமே, கட்டிலும் வீட்டிலும்
என்னை அடிமையாக உடையவனே.

62 - 83: Oh! spotless effulgence who blossomed in my heart as a flower of flame! Oh My 
Master! sweet ambrosia, Lord of Civapuram! Oh! venerable one, who severs the hold of the 
fetters of desire and thus sets free my knowledge You showered your loving grace on me like
water flowing in a perennial river and flushed away the delusions of my mind. Oh! One of 
exceeding grace who leaves not my heart. Oh! unsatiating ambrosia! Infinite and mighty Lord!
You are the light unseen in the hearts of those who do not contemplate You! You melt my hard 
heart into water and abide in me as the life of my life! Oh! Lord Civa! You have neither pleasure 
nor pain, yet You have them both for the sake of Thy devotees. You love those who love You.

Oh effulgence! You are everything but simultaneously You are nothing! Oh dense darkness! 
Oh! You who have the distinction of having no birh. Oh beginning! Oh end! Oh middle! You 
have none of these! Oh! My Father and my noble Lord! You drew me unto You and made me 
Your own.  Oh! Rare-to-be-viewed vision in the conception of those who intuit You with one 
pointed true wisdom. Oh! Subtlest of subtle experience! Oh! Pure one who have no going or 
coming or mingling, as You are omnipresent. Oh our safeguarding King! Oh! blazing light that
cannot be gazed upon! Oh! food stream of bliss! Oh! My Father! Oh! You who are greater than
everything! Oh! Clarity! Oh! Quintessence of clarity! You are the light of the flame of stable
aspect!  You are the ineffably subtle experience! You come in the form of diverse things in this
changing world, yet You are in the final analysis realised as the subtle awareness! In my 
thoughts You are the fountain of unsatiating ambrosia. Oh! My Owner! 

90.     தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    யல்லற் பிறவி யறுப்பானே யோவென்று 
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் 

    தில்லையுள் கூத்தனே!  தென்பாண்டி நாட்டானே! 
    அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ' என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்,

    thilaiyuL kuuththanee thenpaaNdi naaddaanee 
    allaR piRavi aRuppaanee o enRu
    sollaRku ariyaanai sollith thiruvadikkiiz 
    solliya paaddin poruL uNarnthu solluvaar 
    selvar sivapuraththin uLLar sivan adikkiiz

பொ-ரை: 84-92 : எங்கள் தலைவனே, வெவ்வேறு திரிபுகளுடைய ஊனுடம்பினுள்ளே
கிடத்தலை யான் பொறுக்கமாட்டேன். அவ்வுடம்பைத் தொலைக்கவல்ல அரனே, ஓலம்
என்று கூவிக்கூவி, வழிபட்டுப் பாடி நினைத்திருந்து நிலையாதவற்றின் பற்றற்று
 நிலைப்பொருளோடு ஒன்று பட்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைக்கீடாய்
 பிறப்பினை அடையாமே, வஞ்சராகிய ஐம்புல அவாக்களுக்கு இடமாகிய, சிறு மனையாய
 உடம்பை முற்றிலும் தொலைக்கும் திறமையனே, நடு இரவு போன்ற, முழுதும் முடிவுற்ற
 காலத்தே தனது திருக்கூத்தினைப் பழகிப் பின் தோற்றக்காலத்தே பெருநடம் புரியும்
 முதல்வனே, நிலவுலகில் தில்லை மன்றினுள் ஆடுவோனே, தெற்கின் கண் உள்ள பாண்டி
நாட்டை உடையவனே, துயருடைய இப்பிறப்பினை ஒழிப்பானே ஓலம் என்று 
சொல்லாற் கூறவொண்ணாதானை வழுத்தி.

கு-ரை -84-92 : வேற்று விகாரம் - அறிவு நிலைக்கு மாறாயுள்ள திரிபு என்று பொருள்
கொள்ளுவாருமுளர். விடக்கு=ஊன், கட்டழித்தல்= முற்றிலுமழித்தல். தென்=இயற்கையடை
அரன்= பாசத்தை அழிப்பவன்.

95.     பல்லோரு  மேத்தப் பணிந்து 

    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    palloorum eeththap paNinthu

பொ-ரை: 92-95:   அவனது திருவருள் வயமாய் நின்று மொழிந்த இக்கலி வெண்பாட்டின்
பயன் தெரிந்து ஓதுபவர்கள் சிவலோகத்தினுள்ளே புகுவார்கள். அங்கு சிவ பெருமான்        
திருவடிக் கீழ்  அன்பர் பலரும் வணங்கிப் புகழுமாறு  இருப்பார்கள்.

84- 95: Your devotees, who, saluting and praising You crying constantly, " Oh! My Father! Oh!
Hara (Lord Civa) I can not endure any longer the stay in the fleshly human body which is subject 
to various changes" were freed from falsehood and became one with You the Reality. You are 
the mighty Lord who are capable of destroying the bonds of the physical frame which is the seat
of the five deceitful senses so that the devotees may not come back any more into this world and
get involved in the cycle of karmic birth. Oh! Lord! You ceaselessly dance in the midst of dense 
cosmic darkness! You mystic dancer in Thillai ! Sovereign of the southern land of Paandiyan! 
Oh Lord! You are the one who can cut off the evil birth cycles. Devotees adore You in these 
words, Oh! The ineffable one! Those who sing this psalm of praise sung at the sacred Feet of
Civan, feeling well all its import will gain entry into Civapuram, beneath His holy Feet,
surrounded by the holy band of His devotees who adore Him.

கு-ரை: 92-95:  அடி= அருள். பயன் உணர்ந்து இயம்புவார் பயனைப் பெறுதற்குரியர் ஆவர். திருவடி,
என்பது இறைவன் அறிவு ,செயல்களைக் குறிக்கும். உயிரின் அறிவு செயல்கள் இறைவனுடையவற்றில்     
அடங்கி நிற்றலே திருவடிக் கீழிருத்தலாம் என்பர், சிவபுரம் என்பது வீட்டினை உருவகமாகக் குறிப்பதாய்,
சிவனொடு பேரின்பம் பெறுதலைக் குறிக்கும் என்பர்.

                THIRUCHCHITRAMBALAM

 

2. கீர்த்தித் திருவகவல்            2. KEERTHITH THIRU AHAVAL

(சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை)       Sacred Verse in praise of Civa's Grace and His Glory 
தில்லையில் அருளியது                 Compiled whilst in Thillai
நிலைமண்டில ஆசிரியப்பா


    இறைவன் ஆணையின் வண்ணம் புலியூரை அடைந்த வாதவூரடிகள், கண்ட பத்தைக்
கருத்தார உரைத்தபின், ஆனந்தக் கூத்தரின் திருமேனி அனுபவத்தில் ஈடுபட்டு அநுபூதி விஞ்சத்
தம்மையும் மறந்து கனக சபையிலேயே அசைவற்று நின்றார்.

    இந்நிலை அறியாத கோயில்காப்பார் “கனக சபையை விட்டுக் கீழேயிறங்கும்" எனக் கடிந்து
கூறினர். அவ்வுரை அடிகளாருடைய திருச்செவியில் புகுந்திலது . அடிகளார் சிதானந்தப்
பெருவெளியில் ஓங்காது குறையாது விளங்குகின்ற சிவானந்தப் பிரகாசத்தில் திளைத்து
அசைவற்று நின்றார். கண்ட காவலர்கள் "என்ன; இவர் போம் என்றாலும் போகிலர்; உரையும்
ஆடார்; பித்துக் கொண்டார் போலும்” என்று இரங்கி நின்றபோது, அடிகளார் வாய் "சிவ சிவ” என்று
அசைந்தது. கைகள் தலைமேல் குவிந்தன. குஞ்சித பாதத்தை மீட்டும் தலையால் வணங்கி        
திருப்புலீச்சரம் சார்ந்தார். அங்கிருந்து அனந்தேச்சரத்தையும் வணங்கிக் கொண்டு திருவீதியை
வலம் வருகின்றபோது கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்ற
மூன்றையும் சொல்லிக் கொண்டே வந்தார். இதனாலேயே, இன்றும் சைவத் தமிழுலகம்  இந்த 
மூன்றையும் பாராயணம் செய்துகொண்டே திருவீதியையும் திருக்கோயிலையும் வலம் வருதலை
மரபாகக் கொண்டு உள்ளது.

    கீர்த்தி - சிவனது திருவருட்புகழ்ச்சி, அதனை முறைமையாக அறிவிக்கும் அகவல் 
கீர்த்தித் திருவகவல்.

    உரை மனம் கடந்து நின்ற தன்னியல்பை இடைவிடாது நினைந்து நினைந்து உருகும்
அடியார்கள் கண்ணாரக் கண்டு மனங்குளிரத் தியானித்து உய்யும் வண்ணம் பெருங்கருணை
கொண்டு தலங்கள்தோறும் எழுந்தருளி, அருளுருவைக் காட்டி ஆண்ட புகழ் அனைத்தையும்
தொகுத்துக் கூறலின் இப்பெயர் பெற்றது இவ்விளக்கங்கள் அனைத்தும்,  "புகழ்பெருகும்
செய்கையெல்லாம் புகல் அகவல் ஒன்றாகும்"  என்ற பழைய திருப்பெருந்துறைப் புராணம் பகுதியின்
விரிவாகும்.

    இந்நூல் முழுவதையும் அகப்பொருட்டுறை அமைதிபெற வகுத்தார் என்று உரைப்பார் சிலர்.
 தலைமகனுடன் ஊடிய தலைமகளின் ஊடல் தணியும் வண்ணம் தலைவன் இயலைப் புகழ்ந்து
கூறிய வாயில்களை மறுத்துத் தலைவி இயற்பழித்தது என்பது அவர் கருத்து.

    பழைய உரைகாரராகிய காழித் தாண்டவ ராயர், சிவபுராணத்தில் அநாதி முறைமையான 
நிட்கள சொரூப வியாபகத்தின் பழைமையை அருளி, இதில் சகளமாய் இவ்வுலகில் எழுந்தருளி
அருள் வழங்கும் தடத்த தரிசன முறைமையை அனுக்கிரகிக்கின்றார் மணிவாசகர் என்பர்.

    அகளமாய் யாரும் அறிவரிதாய் நின்ற அப்பொருள் சகளமாய்த் தலங்கள் தோறும் 
எழுந்தருளினாலும், உருகிய நெய் உறைந்தாலும் நெய்யாமே அன்றிப் பிறிதாகாத வண்ணம்
அகளமாய் அறிவாய் நின்ற சிவம் சகளமாய் வடிவு கொள்ளினும் அவ்வடிவு மாயா காரியம் அன்று.
அநாதியாகிய பரையே அருள் திருமேனி கொண்டு ஆன்மாக்களது பரிபாக நிலைக்குத் தக
குருவடிவாக எழுந்தருளிச் சிவானந்த அனுபவ உண்மை உணர்த்திய பொழுது, அச்சிவம்
எவ்விடத்து எவ்வுரு மேற்கொண்டு எம்முறையால் உணர்த்திற்று என்று தன் அனுபவம் சித்திக்கச் 
சொல்லுவதே இக்கீர்த்தித் திருவகவலின் கருத்தாகும் என்க.

    "தில்லை மூதூர்" என்பது முதல் "கொள்கையும் சிறப்பும்" என்பது முடிய எட்டடிகளும்
இறைவன் எங்கும், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து, அறிவுருவாகக் காட்சி
வழங்கியதைத் தெரிவிப்பது.

    ஒன்பதும் பத்துமாகிய அடிகள், அறிவுருவாய் விளங்கிய இறைவன் அடியார்கள் ஈடேறப் 
பிரமாண நூல்களை அருளிச் செய்த உருவ அருவ இயல்பு உணர்த்துவன.

    "கல்லாடத்து" என்பது முதல் "மகேந்திர வெற்பன்" (100ஆவது அடி) என்பது முடிய 
இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களும் அவற்றில் அவன் நிகழ்த்திய அற்புதத்
திருவிளையாடல்களும் உணர்த்தப் பெறுகின்றன.

    "அந்தமில் பெருமை" (101ஆவது அடி) என்பது முதல் "ஆண்டு கொண்டருளி" ( 126 ஆவது அடி) 
என்பது முடிய அடிகளார் தம்மை ஆட்கொள்ள இறைவன் தசாங்கங்களுடன் போந்து ஆண்ட
சிறப்பு உணர்த்தப் பெறுகின்றது.

    "நாயினேனை" (127ஆவது அடி) என்பது முதல் “ஏங்கவும்" (139ஆவது அடி) என்பது முடிய
தன்னைக் “கனக சபைக்கு வருக” என ஆணை தந்து இறைவன் மறைய, அடியார்கள் பலரும்
எரியில் பாய்ந்தும், மயங்கியும், அலறியும், அரற்றியும், ஏங்கியும் பாதம் எய்த, கைலைக் கிழவோன்
தன் அடியார்களோடு புலியூர்ப் புகுந்து இனிதாக வீற்றிருந்த சிறப்பைத் தெரிவிக்கின்றது.

    தொகுத்து நோக்கினால், கைலை நாதனாகிய இறைவனே எம்மை ஆட்கொண்டு , இங்கு
இருத்தி, பல தலங்களிலும் பல காலங்களில் பலருக்கு அருள் வழங்கி, அடியாரோடு புலியூர்ப் புக்கு 
இனிது இருந்தான் என்பதை அறியலாம். இதனையே சிவனுடைய அருளின் முறைமை என
அகத்தியச் சூத்திரம் அறிவிக்கின்றது.

    The title of the second chapter of Thiruvaachakam means as under 
        Keerthi - Glory: Thiru - Sacred; Ahaval- Blank verse that is the sacred blank
        verse on the glory of Lord Civan. It consists of 146 lines of four feet each. This
        verse was sung in Thillai (Chidambaram Temple).

    The quintessence of this verse is adoration of Lord Civan's glorious grace.

    The poem deals with the general scheme of the working of the grace or sakti in the
universe. The Lord can be understood by man only through the force of His grace. In  this
garland of homage are woven poetically the manifold acts of glorious grace of Lord Civan as
recounted in the sacred love of saivaite Hindus. As many as 45 incidents of grace are thus
related here. The Almighty Lord reveals Himself to the devotees in their diverse walks of life,
and moves with them in accordance with the varied stages of their spiritual development, so that
His faithful ones may be drawn towards His light.


2.1     தில்லை மூதூர் ஆடிய திருவடி 
    பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 
    எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி
     மண்ணும், விண்ணும், வானோர் உலகும்

5.    துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் 
    என்னுடை இருளை ஏறத் துரந்தும் 
    அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
    குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்
    மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

10.     சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 
    கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி 
    நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
    பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
     எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

15.     கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நல் தடம் படிந்தும் 
    கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்
    மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 
    மற்று, அவை தம்மை மகேந்திரத்து இருந்து

20.     உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்; 
    நந்தம் பாடியில் நான் மறையோன் ஆய், 
    அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும்
     வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் 
    நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி

25.     ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக் 
    கூறுஉடை மங்கையும் தானும் வந்தருளிக்
     குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச்
     சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும்
    வேலம்புத்தூர் விட்டேறு அருளிக் 

30.     கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 
    தர்ப்பணம்  அதனில் சாந்தம் புத்தூர் 
    வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
    மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி 
    சொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும்

35.     அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
     நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் 
    ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி
    பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
    ஈண்டு கனகம் இசையப் பெறா அது 

40.     ஆண்டான் எம்கோன் அருள்வழி  இருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 
    அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி
     இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் 
    மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

45.     குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 
    ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆகப் 
    பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும்
     உத்தர கோச மங்கையுள் இருந்து
    வித்தக வேடம் காட்டிய இயல்பும்

50.     பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும் 
    வாதவூரினில் வந்து, இனிது அருளிப் 
    பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
    திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக் 

55.     கருஆர் சோதியில் கரந்த கள்ளமும்
     பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப்
    பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
     தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து 
    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

60.     விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில், 
    குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும் 
    பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு 
    அட்டமா சித்தி அருளிய அதுவும் 
    வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு

65.     காடு அது தன்னில், கரந்த கள்ளமும் 
    மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
     தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்,
     ஓரியூரில் உகந்து, இனிது அருளிப்
    பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்

70.      பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
    தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
    கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் 
    தேன் அமர் சோலைத் திருவாரூரில் 
    ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

75.      இடைமருது அதனில் ஈண்ட இருந்து 
    படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
    ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
    திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

80.     மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்: 
    சேவகன் ஆகித் திண்சிலை ஏந்தி
     பாவகம் பல பல காட்டிய பரிசும்
     கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் 
    ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

85.     ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 
    துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
     திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் 
    கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 
    கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்

90.     புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 
    குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
     அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து 
    சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு 
    இந்திர ஞாலம் போல வந்து அருளி,

95.     எவ் எவர் தன்மையும் தன்வயின் படுத்துத்
    தானே ஆகிய தயாபரன், எம்இறை 
    சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி 
    அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
    சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும்

100.     மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 
    அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 
    எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
    ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு
     நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்

105.     ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் 
    ஆனந் தம்மே, ஆறா அருளியும்
    மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் 
    நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 
    அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

110.     கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 
    மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் 
    தூய மேனி, சுடர்விடு சோதி
    காதலன் ஆகிக், கழுநீர் மாலை 
    ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்

115.     அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 
    பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
    மீண்டு வாராவழி அருள் புரிபவன் 
    பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
    பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

120.      உத்தரகோச மங்கை ஊர்  ஆகவும்
     ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய 
    தேவ தேவன் திருப்பெயர் ஆகவும் 
    இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
    அருளிய பெருமை அருள்மலை ஆகவும் 

125.     எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும்
     அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி
     நாயினேனை நலம் மலி தில்லையுள் 
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென
    ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி

130.     அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் 
    ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 
    எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 
    மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்
    பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் 

135.     கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி
    'நாத! நாத! ' என்று அழுது அரற்றி 
    பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 
    'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று 
    இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்

140.     எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்
     பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம்நவில் 
    கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு
     அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை
    இறைவன், ஈண்டிய அடியவரோடும்

145.     பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் 
    ஒலிதரு கைலை உயர் கிழவோனே.

                திருச்சிற்றம்பலம்

2.1     தில்லை மூதூ ராடிய திருவடி 
    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி 
    யெண்ணில் பல்குண மெழில்பெற விளங்கி 
    மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்

    தில்லை மூதூர் ஆடிய திருவடி
    பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
    எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி 
    மண்ணும், விண்ணும், வானோர் உலகும்

    thillai muuthur aadiya thiruvadi
    palluyirellaam payinRanan aaki 
    eNNil palkuNam ezilpeRa viLangki
    maNNum viNNum vaanoor ulakum

5.     துன்னிய கல்வி தோற்றியு மழித்து 
    மென்னுடை யிருளை யேறத் துரந்து 
    மடியா ருள்ளத் தன்புமீ தூரக்
    குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
     மன்னு மாமலை மகேந்திர மதனிற்

    துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் 
    என்னுடை இருளை ஏறத் துரந்தும் 
    அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
    குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்
     மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

    thunniya kalvi thooRRiyum aziththum 
    ennudai iruLai eeRath thuranthum 
    adiyaar uLLaththu anpu miithuurak
    kudiyaak koNda koLkaiyum siRappum 
    mannum maamalai makeenthiram athanil

பொ-ரை: 1-10: சிவபெருமான் தில்லை என்னும் பண்டைத் திருப்பதியின்கண் கூத்து 
இயற்றுபவன்.  அவன் தனது பொற்பாதங்களைப் பல்வகைப்பட்ட உயிர்கள்
எல்லாவற்றிலும் பொருந்துமாறு செய்த அருளாளன். கணக்கில் அடங்காத தனது பலகோடி 
அருட்பண்புகளும் சிறந்து தோன்றுமாறு அவன் வெளிப்படுகிறான். மண்ணுலகிலும்
விண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட வானவர் உலகிலும் பொருந்திய பல கலைகளைத் 
தோற்றுவித்தும் ஒடுக்கியும் விளங்குகிறான். என்னை மேற்கொண்ட அறியாமையை
முற்றிலும் ஒழித்து அருளினான். அன்பர்கள் நெஞ்சத்தில் மெய்யன்பு பொங்கிப் பெருகும் 
பொருட்டு அதனைத் தன் இருக்கையாகக் கொண்ட உறுதியும் தலைமையும் உடையவன் 
அவன்.  புகழால் நிலைபெற்ற பெருமலையாகிய மகேந்திரம் என்னும் இடத்தில்
உமையம்மையாருக்கு அருளிய வீட்டு நூலை உலகினர் நலன் பொருட்டு எமக்குக் காட்டி
அருளினான்.

1 - 8: Lord Civan's holy Feet which danced in the age old temple in Thillai also dances
unceasingly in the hearts of countless devotees. This mystic dance revealed the beauty of His
myriad qualities. (Concised into eight qualities - See Story No. 23). Lord Civan unfolds the rich
lore of knowledge in this earth, in the skies (Indira's abode) and also in the world of the heavenly
ones (world of Brahma, Vishnu, Rudran, Ananthar, Sadaacivan and others) and then conceals
them also. He dispelled in its entirety my own ignorance. It is the firm principle and glory of 
Civan that He dwells within the inner-most soul of His loved ones, wherein wells up intense love
towards Him.

9- 10: In the great firm Mahendra Hill (situated in Ganjam district, Orissa), He revealed in grace
the Aagamaas, which were earlier recounted by Him to goddess Uma (See Story No. 14  of how 
the Aagamaas were first told to goddess Uma and were destroyed).

கு-ரை: 1- 8: பயின்றனன் என்பதில், பயிலுதல் - பொருந்துதல். ஏற - முற்றிலும். கொள்கை - உறுதி.
தில்லையானது ஐம்பூதங்களுள் வானைக் குறிக்கும் திருப்பதி . வான் வெளியிலே பிற  பூதங்கள்
அடங்குவது போல, அருள் வெளியிலே தத்துவம், புவனம் முதலிய யாவும் அடங்கும். அவ்வருள் வெளியில்
நடமாடும் அப்பன், படைப்புக் காலத்தில் உடம்பெடுக்கும் உயிர்களின் நெஞ்சத் தாமரையிலும் பொருந்திக்
கூத்து இயற்றுங்கால் எவ்வுயிரும் இயங்குவனவாம்.  தில்லை, உலகிற்கு இதயமென்றும் கூறுப.

தில்லை மரங்கள் நிறைந்த இடமாய் இருந்தமை பற்றி அப்பெயர் ஏற்பட்டதென்ப.  இறைவனின்
பல்குணங்கள் நல்லுயிர்கட்கு அங்கங்கே தோன்றுவன. கலைகள் சிறப்பாக அவனை அடையும் வழியை
உணர்த்துவன. உய்திபெறத் தகுதியுற்ற காலத்தே அவனே அறியாமையை முற்றிலும் ஒழிப்பான். பின்னர்
அன்பர் நெஞ்சில் குடிகொண்டு அதனை நீங்காது தலைமை பூண்டிருப்பான். இக்கருத்து இப்பகுதியில்
தெரிவிக்கப்பட்டது. இருள் - ஆணவமாகிய மூலமலம். மலநீக்கத்தின் பின் சிவப் பேற்றிற்குரிய அயரா
அன்பே, மீதூரும் அன்பாகும். தன்னைப்பற்றிய அன்பரைக் கைவிடாத உறுதியும் ஆட்கொள்ளும்
தலைமையும் உடையான் என்பது கருத்து.

கு-ரை: 9-10: மகேந்திரம், பொதிகைக்குத் தெற்கேயுள்ளதெனச் சிவதருமோத்தரம் கூறும். 'சொன்ன' 
என்பதற்கு மேலுலகிற் கூறப்பட்ட எனவும், 'தோற்றுவித்து'  என்பதற்கு எழுதுவித்து எனவும்  பொருள்
கொள்ளுவதும் உண்டு.

10.     சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியுங்
    கல்லா டத்துக் கலந்தினி தருளி
     நல்லா ளோடு நயப்புற வெய்தியும் 
    பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடு 
    மெஞ்சா தீண்டு மின்னருள் விளைத்துங்

    சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 
    கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி 
    நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் 
    பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் 
    எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

    soonna aakamam thooRRuviththu aruLiyum
    kallaadaththuk kalanthu inithu aruLi
    nalla Loodu nayappuRavu eyuthiyum 
    panja paLLiyil paalmoozi thannoodum
    enjaathu eeNdum innaruL viLaiththum

15.     கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நற்றடம் படிந்துங் 
    கேவேட ராகிக் கெளிறது படுத்தும் 
    மாவேட் டாகிய வாகமம் வாங்கியும் 
    மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்

    கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நல் தடம் படிந்தும் 
    கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும் 
    மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 
    மற்று, அவை-தம்மை மகேந்திரத்து இருந்து

    kiraatha veedamoodu kinjsuka vaayavaL 
    viraavu koongkai nalthadam padinthum 
    keeveedar aakik, keLiRu athu paduththum
    maaveeddu aakiya aakamam vaangkiyum 
    maRRu avai thammai makeenthiraththu irunthu

பொ-ரை: 11-22: கல்லாடமென்னும் பதியில் இயற்கை நல்லியல்புடைய அம்மை வழிபட்ட 
திருவடிவிற் கலந்து தோன்றினான்.  இன்னருள் புரிந்து அவளோடு பேரின்ப நட்புக் 
கொண்டும் விளங்கினான். பஞ்சப் பள்ளி எனும் ஊரில் பால்போல் தூய மொழியளாம்
உமையம்மையுடன் கலந்திருந்து அடியவர்கட்குக் குறையாது வளரும் இனிய கருணையைப் 
பெருக்கினான். வேடன் வடிவம் கொண்டு முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினையுடைய 
அருட்சத்தியின் நெருங்கிய நகிலாகிய புனிதப் பொய்கையில் மூழ்கி இருந்தான். வலைஞர் 
வேடம் பூண்டு வலை வீசிக் கெளிற்று மீன் ஒன்றை வலையில் வீழ்த்தினான். அதன்
பாலிருந்த பெரிய ஏட்டின் உளவாகிய அருள்நூலை மீளப் பெற்றான். இருபத்தெட்டு
ஆகமங்களாகிய அவைகளை மகேந்திர மலையில் ஐந்து திருமுகங்களோடு வீற்றிருந்து
ஐந்து பெரும் முனிவர்களுக்கும் ஓதி அருளினான், நந்தம்பாடி என்னும் இடத்தில்  நான்மறை
உணர்த்தும் ஈறில்லாப் பேராசிரியனாகி வீற்றிருந்து அருளினான்.

11 - 14: Goddess Uma was worshipping Lord Civan in the icon of His Holy Feet in a place 
called "Kallaadam".  Lord Civan showered His bounteous grace on Uma by appearing before
Her and was happy in Her company. In another place known as "Panchapalli" Lord Civan
along with His divine consort Uma, whose voice is as sweet as pure milk, granted lavishly His
unstinting grace on those who humbly sought Him there (See Story No. 70). 

15 - 16: In the guise of a hunter and huntress Lord Civan and Uma appeared in the forest where
Arjuna was doing penance to get darshan of Lord Civan to get Civan's divine missile 
(Paasupathaasthram - பாசுபதாஸ்திரம்) to fight against the Kauravaas. This incident which is
narrated in Maha Bhaarata, is alluded to, by Maanikkavaachakar in lines 15 and 16 . It is but 
natural that hunters will feel thirsty while roaming in the forest. Metophorically these two lines
indicate that Lord Civan gets grace (அருட்சத்தி) by diving into the tank of Uma's bosom (from
where her grace Shakti - energy flows), whose lips are as crimson as the flower of holy-leaved
berberry (Erithrina Indica - முள்ளு முருங்கை - கிஞ்சுகம்) 

17 - 20: Lord Civan took the form of a fisherman and spread his net and succeeded in catching
the fiddler fish (Macro Nes Vittatus) which was carrying the big scrolls of Aagamaas and
recovered them. (See Story No.14). Taking the Aagamaa scrolls to Mount Mahendra, He
explained the 28 Aagamaas on this second occasion to His five disciples viz., Agastyar,
Kaasibar, Gauthamar, Bharadwaajar and Kaucikar (அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர்,
கௌசிகர்) through His five faces. 

Note: Five faces are Eesaanam, Thathpurusham, Aghoram, Vaamadevam and Sathyojaatham.

கு-ரை: 11-20: நயப்பு - இன்பம். உறவு - நட்பு. வீட்டினை நல்குவான் புரியும் கருணை, குறையாது மிகும் 
இயல்பிற்று. இன்பம், அதன் விளைவாகும். கிராதன் = வேடன். கிஞ்சுகம் = முள்முருக்கு. விராவு=நெருங்கு. 
தடம் = பொய்கை. படிதல் = மூழ்குதல். தவங்கிடந்த அருச்சுனனுக்கு அருள்புரியச்  
சென்ற காலை இறைவனும் இறைவியும் வேட்டுவ வடிவம் கொண்டு சென்றமை பாரதத்துள் காண்க.
வேட்டை ஆடுகிறவனுக்கு நீர் வேட்கை மிகுதியும் உளதாகும் ஆதலின், அதனைத் தீர்த்தற்குரிய பொய்கை
இஃதென அடிகள் கவிநயம்பற்றி ஓதியருளினர். உய்தி கூட்டும் ஞானம் தருவது முலைப்பால்; ஞானத்துள்
காணப்படுவது சிவமாதல்பற்றி, 'கொங்கை நற்றடம் படிந்த' தென்றார். கேவேடர்= வலைஞர். மாவேட்டு
என்பதற்குப் பெரிய விருப்பத்தைத் தருவதாகிய என்றும் பொருள் கொள்ளுதலுண்டு. வேட்டு=விருப்பம் .

அவை தம்மை' என்றமையால் ஆகமம் பல ஆதல் தெளிவு.  முதற்கண், உமையம்மைக்கு ஆகமம் ஓதுவித்த
காலை, அம்மை, நந்தி முதலியோர் செய்த பிழைக்காக, அவர்கள் வெஞ்சொற் பெற்றனரென்றும், கெளிற்று
மீனான நந்தி பெருமான் ஆகம ஏட்டைக் கடற்கண் சுமந்து திரிந்தார் எனவும், இறைவன் வலைஞனாய் 
ஏட்டை மீளக் கொண்டான் எனவும் திருவிளையாடற் புராணம் கூறுவது காண்க. இரண்டாவது முறை 
அகத்தியர் முதலிய ஆதிசைவக் குடிமுதல்வராகிய ஐவர்க்கும், ஐம்முகங்கள் வாயிலாக ஆகமங்கள்
கூறப்பட்டன. ஐவரும், ஐந்து திருமுகங்களிலே ஒவ்வொன்றில் இறைவனை வழிபட்டமையால் 'உற்ற
ஐம்முகங்களால்' என்றார். ஐம்முனிவராவார்:- அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர், கௌசிகர்.


20.     துற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியு
    நந்தம் பாடியி னான்மறை யோனா 
    யந்தமி லாரிய னாயமர்ந் தருளியும் 
    வேறுவே றுருவும் வேறுவே றியற்கையு
     நூறுநூ றாயிர மியல்பின தாகி

    உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் 
    நந்தம் பாடியில் நான்ம றையோன் ஆய்,
    அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும் 
    வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் 
    நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

    URRA aimmukangkaLaal paNith tharuLiyum 
    nantham paadiyil naanmaRai yoonaay
    anthamil aariyanaay amarnthu aruLiyum 
    veeRu veeRu uruvum veeRu veeRu iyaRkaiyum 
    nuuRu nuuRu aayiram iyalpinathu aaki

பொ-ரை: 23-26: அறமாகிய காளையை ஊர்தியாகக் கொண்டவன் எம் பெருமான்.
இவ்வுலகினரை உய்வித்தற்பொருட்டு, தன் திருமேனியில் ஒரு பகுதியாகச் சத்தியைக் 
கொண்டனன்.  அடியாரின் பக்குவ வேறுபாட்டுக்கேற்ப மாதொருபாகன் வெவ்வேறு 
திருவடிவமும், வெவ்வேறு தன்மைகளும் கோடிக்கணக்கில் அமையுமாறு தோன்றி அருளினான்.

21 - 22: Lord Civan, the eternal Guru (preceptor), was graciously seated in the place called
"Nandampaadi" as a matchless exponent of the four Vedas (See Story No. 67).

23- 26: Civan, the Lord of the Universe who has the bull as His vehicle,assuming multi diverse
forms, and multi diverse attributes, with myriad such mutations suited to the maturity of the
devotees, came graciously with His spouse (divine consort) who is His half, to redeem this world.

கு-ரை: 21-22 நமது பாடியென்று பொருள் கொள்ளின், நந்தம் பாடியென்பது திருவாதவூரைக்
குறிக்கலாம். ஆரியன் - ஆசிரியன், நான்மறையாய பொது நூல் வெளிப்படுத்தினவனும் இறைவன்
என்பது இங்கே குறிக்கப்பட்டது. இறைவன் பொதுச் சிறப்பு நூல்களை வெளிப்படுத்தினமை கூறி
அவனுடைய திருவிளையாடல்களை விதந்தோதுவான் தொடங்குகின்றார்.

கு-ரை: 23-26: 'ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமுமாதி மாண்புங் கேட்பான் புகில் அளவில்லை' என்ற
கருத்தே இங்கு வந்தமை காண்க, உய்ய= உய்விக்க, சக்தி இறைவனது திருமேனியாதலின், ''மங்கையும்
தானும்' என்றார். அருட்சக்தி வாயிலாகவே உய்தி கூட்டுமுறை நிகழ்த்தற்பாலது, நூறு நூறாயிரம்
என்பது கோடி என்ற எண்ணைக் குறித்தாலும், 'பலப்பல' என்ற பொருளில் வந்ததாகும்.
அளவிலையென்பதே கருத்து.

25.     யேறுடை யீசனிப் புவனியை யுய்யக்
    கூறுடை மங்கையுந் தானும்வந் தருளிக் 
    குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் 
    சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
    வேலம் புத்தூர் விட்டே றருளிக்

    ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக்
     கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
     குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச்
     சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும் 
    வேலம்புத்தூர் விட்டேறு அருளிக்,

    eeRudai iisan ippuvaniyai uyyak
    kuuRudai mangkaiyum thaanum vantharuLik
    kuthiraiyai koNdu kudanaadu athanmisai
    sathurpada saaththaayth thaan ezuntharuLiyum
    veelam puththuur viddeeRu aruLi

பொ-ரை: 27-32: வேலம்புத்தூர் என்னுமிடத்திலே உக்கிரகுமாரனுக்கு வேல் கொடுத்தருளித்
தன் திருவடிச் சிறப்பைக் காட்டிய அருட்செயல் மிகப்பெரியது. சாந்தம்புத்தூரில் வில்லாற்
போர்புரியும் வேடனுக்குக் கண்ணாடியில் தோன்றி அவன் செய்த தவப்பயனாக வாள்
கொடுத்து அருள் செய்தான். குதிரைகளை நடத்திக் கொண்டு மேலை நாட்டிடத்தே
வணிகர் கூட்டத்தினனாய்த் திறமையுடன் தானே புறப்பட்டு வந்தருளினான்.

27 - 32: Lord Civan appeared in grace as an able dealer of horses and, mingling with the horse
traders very cleverly, brought the horses to the western part of the land (Madurai is in the
western direction of Thiru-Perun-Thurai). In a place called "Velam Putthoor" Lord Civan 
showed the splendour of His form to King Ukkira Kumaara Paandiyan and gave him the Javelin 
(Sec Story No. 93), In another place known as "Saantham Puthhoor" Lord Civan appeared in a
mirror to an archer - devotee and gave him the bow and arrows and similar weapons as prayed for.

கு-ரை: 27-32:  திருப்பெருந்துறைக்கு மேற்கே மதுரைக்குப் போகும் வழியிலுள்ள நாடு குடநாடு
எனப்பட்டது. (கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய 'குட்ட நாடு' வேறு. இது திசை நோக்கிக் கூறப்பட்டது)
குடக்கு= மேற்றிசை. சதுர் = திறமை, தன்னைப் பிறரறிய முடியாத சதுரப்பாடு. பட= பொருந்த, 
சாத்து= வணிகர் கூட்டம். விட்டேறு=வேல். கொள்கை =செயல், தர்ப்பணம் = கண்ணாடி. 'ஈந்த விளைவும்'
என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றுக

30     கோலம் பொலிவு காட்டிய கொள்கையுந் 
    தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் 
    விற்பொரு வேடற் கீந்த விளைவு 
    மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
    சொக்க தாகக் காட்டிய தொன்மையு

    கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 
    தர்ப்பணம்  அதனில் சாந்தம் புத்தூர்
    வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் 
    மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
    சொக்கு  அது ஆகக் காட்டிய தொன்மையும்

    koolam polivu kaaddiya koLkaiyum 
    tharppaNam athanil saantham puththuur
    vilporu vedaRku eentha viLaivum
    mokkaNi aruLiya muzuththazal meeni
    sokku athu aaka kaaddiya thonmaiyum

35.     மரியொடு பிரமற் களவறி யொண்ணான் 
    நரியைக் குதிரை யாக்கிய நன்மையு 
    மாண்டுகொண் டருள வழகுறு திருவடி 
    பாண்டி யன்றனக் குப்பரி மாவிற்
    றீண்டு கனக மிசையப் பெறாஅ

    அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 
    நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
    ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி 
    பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
    ஈண்டு கனகம் இசையப் பெறா அது

    ariyodu piramaRku aLavu aRi oNNaan
    nariyai kuthirai aakkiya nanmaiyum
    aaNdu koNdu aruLa azkuRu thiruvadi
    paNdiyan thanakkup parima viRRu
    iiNdu kanakam isaiyap peRaa athu

பொ-ரை: 33-41: இறைவனாகிய தலைவன் குதிரை வாயில் கொள்ளுப் பையைக்  கட்டும்
விதமாகக் கீழே இறங்கி நின்றனன். அவ்வமயம் நெருப்பையொத்த சிவந்த திருமேனியை
அவன் அழகுறக் காட்டிய முறைமை மிகப் பழமையானதாகும். திருமாலோடு பிரமனும்
அளந்தறிய இயலாத எம்பெருமான், நரிகளைப் பரிகளாக்கிய நற்செயல் செய்தவன்.
பாண்டியனை ஆட்கொண்டு, அழகு மிகுந்த திருவடிவுடன் அவனுக்குக் குதிரைகளை விற்று
அவன் தந்த திரண்ட பொருளை ஏற்றுக் கொள்ள மறுத்தவன்; அதனால் பாண்டியன் 
சற்றுநேரம் செயலற்று தன் திருவருள் வழி நிற்குமாறும் செய்தனன். அங்ஙனம், அவன்
பாண்டியனது உள்ளத்தை ஊக்கும் அருளொளி காட்டி நின்றது பாண்டியன் பெற்ற
பண்டைய பரிசாகும்.

33 - 41: Lord Civan showed His beautiful form of grace as a full Flame of Fire to the Paandiyan 
King while He was handling the horse-gram bag. He who could not be perceived even by
Brahma and Thirumaal did the good deed of transforming the jackaals into horses. Lord Civan
sold the horses to the Paandiyan King, but refused to accept the large quantity of gold he gave.
But to make the king His own my Lord displayed gracefully His beautiful holy Feet,which
impelled the king to stay in the holy path of my King (Civan) who then manifested in the ancient
brightening ray.

கு-ரை: 33-41:  மொக்கணி = கொள்ளுப்பை; அருளிய = அருளும் பொருட்டு, தூய செம்மேனி என்பார் .
'முழுத்தழல் மேனி' என்றார். சொக்கது= அழகுடையது. ஆட்கொள்ளக் கருதிய அடியார்க்குத் தன் அருள் 
வடிவம் காட்டுதல், இறைவனது வழக்கமான பழைய முறை என்பார் 'தொன்மை' என்றார். முழுத்தழல் 
மேனி அடிகட்குக் காட்டப்பட்டது . 'தூண்டு சோதி' பாண்டியற்குத் தோற்றுவிக்கப்பட்டது. திருவடி=
 திருவடிவு (கொடு); ஈண்டு கனகம் = திரள் பொன், வினைத்தொகை, இறைவனது திருமேனியைக் கண்ட
அளவிலே பாண்டியன் தன் செயலற்றுத் தலை மேல் கை குவித்தனனாதலின், 'அருள்வழி இருப்ப'
என்றார்.

40.     தாண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையு
    மந்தண னாகி யாண்டுகொண் டருளி
    யிந்திர ஞாலங் காட்டிய வியல்பு 
    மதுரைப் பெருநன் மாநக ரிருந்து

    ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 
    அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி, 
    இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
    மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

    aaNdaan engkoon aruLvazi iruppa
    thuuNdu soothi thooRRiya thonmaiyum
    anthaNan aaki aaNdu koNdaruLi 
    inthira njaalam kaaddiya iyalpum
    mathurai perunan maanakar irunthu

பொ-ரை: 42-47: அழகிய தண்ணருள் நிறைந்த முனி வடிவினனாகி என்னை ஆட்கொண்டு 
அருளியவன்; உடனே மறைந்தமையாகிய இந்திர ஜாலம் போன்ற திருவிளையாடல் (மாயம்) 
காட்டிய இயல்புடையவன்; சுந்தர சாமந்தன் என்ற அன்பனுக்காக மதுரைப் பெருநகரில்
வீற்றிருந்தவன்; குதிரை வீரனாகி வெளிப்போந்த அருட்செயலுக்குரியவன்; அம்மதுரை 
நகரில் தனது மெய்யன்பினள் செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி பொருட்டு
உரிமையாக மண் சுமந்து அருளிய பண்பினன் அவன்.

42 - 47: Lord Civan took the form of a Brahmin and graciously made me (Maanikkavaachakar)
His own, when He manifested His mystic powers by assuming a physical form and vanishing at
will. (The incident which happened at Thirup-Perun-Thurai where Maanikkavaachakar had his 
first vision of Lord Civan, under the "Kuruntha" tree, who disappeared after giving initiation to
Maanikkavanchakar, is quoted here). 

In another instance Lord Civan became the chief horse breeder in the great city of 
Madurai to save His devotee "Soundara Saamanthan". The  latter, a commander-in-chief
of the Paandiyan King, spent the money given to him by the king in feeding
the disciples and devotees of Civan and in renovating Civan Temples. Lord Civan gave darshan
to the Paandiyan King as well to Soundara Saamanthan as the captain of the cavalry and later
disappeared along with His entire army. In the same city of Madurai, Lord Civan condescended
to carry sand on his head as a labourer, to prevent the breach of the flooded river Vaigai. This
He did on behalf of a faultless and sincere devotee 'Vandhi' (செம்மனச் செல்வி என்னும்
பிட்டு வாணிச்சி). He came as a labourer belonging to her own community and took the responsibility
of undertaking her share of the work as ordered by the king.

கு- ரை: 42-47: இந்திர ஞாலம்= இந்திர ஜாலம்= இந்திரன் வலை=  இந்திரன் தன்னெதிரிகளை வெல்லச் 
செய்த சூழ்ச்சிகள். அவை போல்வனவற்றையும் அச்சொற்றொடர் குறிப்பதாயிற்று. சௌந்தர சாமந்தன்
என்ற பாண்டிய அமைச்சன் அரசன் பொருளை அடியார்க்கு அமுதளிக்கப் பயன்படுத்தினவன். அவன்
கதை திருவிளையாடற் புராணம் மெய்க்காட்டிட்ட படலத்துள் காண்க, திருவாதவூரடிகளுக்குக் கீழ்த்திசை
நின்று குதிரை கொணர்ந்தனர். சௌந்தர சாமந்தனுக்கு மதுரையிலிருந்தே குதிரைப் படை காட்டினர்.
மண் சுமந்த வரலாறு வெளிப்படை, பாங்கு= உரிமை, அவளினத்தான் போல வந்து அவள் செய்யவேண்டிய
வேலையைச் செய்தமையின் அவ்வாறு கூறினர்.

45.     குதிரைச் சேவக னாகிய கொள்கையு 
    மாங்கது தன்னி லடியவட் காகப் 
    பாங்காய் மண்சுமந் தருளிய பரிசு 
    முத்தர கோச மங்கையு ளிருந்து 
    வித்தக வேடங் காட்டிய வியல்பும்

    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 
    ஆங்கு, அதுதன்னில், அடியவட்கு ஆகப் 
    பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும் 
    உத்தர கோச மங்கையுள் இருந்து 
    வித்தக வேடம் காட்டிய இயல்பும்

    kuthirai seevakan aakiya koLkaiyum
    aangku athu thannil adiyavadku aaka 
    paangkaay maNsumanthu aruLiya parisum       

    uththara koosa mangkaiyuL irunthu 
    viththaka veedam kaaddiya iyalpum

50.     பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும் 
    வாத வூரினில் வந்தினி தருளிப் 
    பாதச் சிலம்பொலி காட்டிய பண்புந்
    திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்

    பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும்
    வாதவூரினில் வந்து, இனிது அருளிப்
    பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
    திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்

    puuvaNam athanil polinthirunthu aruLi
    thuvaNa meeni kaaddiya thonmaiyum
    vaatha uurinil vanthu inithu aruLi
    paatha silambu oli kaaddiya paNpum 
    thiruvaar perunthuRai selvan aaki


பொ-ரை: 48-55: உத்தர கோச மங்கை எனும் பதியில் எழுந்தருளி, போதக ஆசிரிய வடிவம் 
காட்டி அருள் செய்தவன் எம்பெருமான், திருப்பூவணம் எனும் திருப்பதியில் சித்தர் வடிவம்
கொண்டு அடியவர் வீட்டில் எழுந்தருளினான்.  ஆங்கு அவன், தன் பொன் வண்ணத் 
திருவடிவத்தை அடியவருக்குக் காண்பித்து அருளினான். மேலும், பாண்டியனுக்குக் 
குதிரை கொண்டு வரும் வழியில் திருவாதவூருக்கு வந்து, தங்கி, தன் திருவடிச் சிலம்பின் 
ஓசையை நன்கு காண்பித்த நயமும் அவனது அருட்சிறப்பேயாகும்: அழகு நிரம்பிய
திருப்பெருந்துறையில் கலைவல்லவனாகி அருள் புரிந்து பின் பெருமை பொருந்திய
ஒளிப்பிழம்பில் மறைந்ததுவும் அவன் செய்த தந்திரமாகும்.

48 - 55: In the place known as "Uththara-Kosa-Mangai” (உத்தர கோச மங்கை ) Lord Civan
appeared as preceptor and explained the Aagamaas as requested by sages. (Sixty-four sages
prayed to Lord Civan exercising their wish to learn the  Aagamaas directly from Him, who
granted their request, as well as Uma Devi's)

     In a place called 'Thirup-Poovanam' (திருப்பூவணம்) situated towards east of Madurai
Lord Civan appeared as a mystic (சித்தர்) to a lady devotee and converted all the iron materials in
her house into gold. The story goes that a lady devotee by name 'Ponnanaiaal' (பொன்னனையாள்)
was feeding many devotees of Lord Civan with sumptuous tasty food. She had a desire to 
worship Lord Civan in a golden icon. But she had not the wherewithal to make the icon in gold.
Lord Civan appeared before her and showed His pure and graceful form and converted the iron
pieces she had in her house into gold. With this gold she made an icon of Civan (Civa Lingam)
and worshipped it. Lord Civan reached the village Vaadavoor (வாதவூர்) (the birth place of
Maanikkavaachakar) and happily showered His grace on Maanikkavaachakar. Also, He caused
the tinkling of His anklet to be heard by Maanikkavaachakar.

Note:     Maanikkavaachakar was waiting for Lord Civan's arrival with horses as promised by
        Him. The Paandiyan king got wild at this delay. In this embarassing situation,
     Maanikkavaachakar prayed for Civan's arrival with the horses. Maanikkavaachakar
     not seeing the horses, in Madurai went up to Vaadavoor (வாதவூர்) awaiting the arrival of
     Civan with horses. It is then that he heard the tinkling of Lord Civan's anklets. In the
     beauty-brimming Perunthurai (பெருந்துறை) Lord Civan appearing as a Preceptor
     initiated Maanikkavaachakar and then disappeared in the effulgence which is the 
     source of everything.

கு-ரை: 48-55:  இறைவனே தமக்குக் குருவாய் வந்து ஆகமம் கற்பிக்க வேண்டும் என்று உத்தர கோச
மங்கையில் தவங்கிடந்த அடியவர் அறுபத்து நால்வர் பொருட்டு, அவன் அவ்வாறு உபதேசித்தான் என்ப.
வித்தகம்= ஞானம், கல்வி. உத்தரகோசம்= உயர்ந்த நூல் (வெளியான இடம்). மங்கை - நிலமடந்தையின்
பொதுப்பெயர் ஊர்க்காயிற்று.

திருப்பூவணத்திலே பொன்னனையாள் என்னும் நன்மாது கடவுளிடத்தும் அடியாரிடத்தும் மெய்யன்பு 
உடையளாய் விளங்கினாள். இறைவழிபாடியற்ற ஒரு பொன் திருவுருச் சமைப்பிக்க விரும்பினள். 
அவள் கைப் பணம் அடியார்க்கு அமுதளிக்கவே போதியதாக இருந்தமையால் திருவுருவத்திற்குப் 
பொன்னின்றி வருந்தினள். அப்போது, இறைவனே ஒரு சித்த வேடங்கொண்டு  அவள் 
வீட்டிற்குச் சென்று அங்கிருந்த இரும்புச் சாமான்கள் பலவற்றையும் எடுப்பித்து அவற்றைக் குளிகையாற்
பொன்னாக்கி விட்டு மறைந்தனர். திருவருள் திறத்தை அடியவள் பெரிதும் வியந்து தான் கருதியபடி
பொன் திருவடிவம் சமைப்பித்து வழிபாடியற்றினள். 

இனிது= நன்கு, சிலம்பு = வீரக்கழல், கரு= பெருமை,மேன்மை. கரு= காரணம், வித்து. 
உருவப்பொருள் எவற்றிற்கும் காரணமாகிய சோதி எனவும் கூறலாம்.
இறைவனது அருஉருவத் திருமேனி சோதியாதலின், அது உருவங்கட்குக் கருவாயிற்று. 
செல்வன்= ஞானச் செல்வமுடையான். திருப்பெருந்துறையில் அடிகட்கு அருள் புரிந்த பின், 
சோதியில் இறைவன் மறைந்தமை வேம்பத்தூரார் திருவிளையாடலிற் காண்க.

55.     கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
    பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் 
    பாவ நாச மாக்கிய பரிசுந் 
    தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து 
    நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்

    கருஆர் சோதியில் கரந்த கள்ளமும் 
    பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப்
    பாவம் நாசம் ஆக்கிய பரிசும் 
    தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து 
    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

    karuvaar soothiyiR karantha kaLLamum 
    puuvalam athanil polinthu inithu aruLi 
    paava naasam aakkiya parisum 
    thaNNiir panthar sayam peRa vaiththu
    nanniir seevakan aakiya nanmaiyum

பொ-ரை: 56-63 பூவலம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் விளங்கியருளி, தன் அடியவரின்
தீவினை தொலைத்தது அவன் திறனாகும். பாண்டியன் ஒருவன் போர் செய்த காலத்து
அவன் படைகளுக்குத் தாகவிடாய் தீர்த்தற்பொருட்டு, தானே தண்ணீர்ப் பந்தல் 
அமைத்தான் இறைவன். அப்பந்தலில் அமர்ந்து நல்ல நீரை வழங்கி, பணியாளனாகப் 
பேருபகாரம் செய்து பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கும்படியாகச் செய்தனன். முன்னொரு 
காலம் திருவெண்காட்டில் விருந்தினனாய்க் குருந்த மரத்தடியில் அமர்ந்து அருள் செய்தான்;
பட்ட மங்கை என்ற ஊரில் உரிமையுடன் வீற்றிருந்து ஆங்கு இயக்கிகள் அறுவருக்கு
அட்டமா சித்திகளை அளித்த நயமும் அவனது அருட்திறமேயாகும்.

56 - 63: Lord Civan appeared in a place called "Poovalam" (பூவலம்) and destroyed the evil karma
(bad deeds) of all souls. As there is no place called "Poovalam" now, it is to be construed that
Civan showered His grace to Maanikkavaachakar in all the temples he visited on his way from
Madurai to Chidambaram. The earlier place "Poovanam" (பூவணம்) is different from this 
"Poovalam"(பூவலம்). Lord Civan created a drinking-water booth in the battlefield where a 
Paandiyan King who was an ardent devotee of Lord Civan was attacked by his own brother who
along with a Chola King waged war against him. Civan condescended to be the attendant and 
Himself served water to the tired soldiers of the devotee king which paved for the victory of
Paandiyan King (See Story No. 61).

    In a place called “Thiru Ven Kaadu" (திருவெண்காடு) Lord Civan turned up as a stranger
guest and was seated under the "Kuranda" tree (The details of the story of the guest who came to
"Thiru Ven Kaadu" are not known).

    In the place called "Patta Mangai" (பட்ட மங்கை) Lord Civan bestowed graciously to His 
former hand maidens the eight great supernatural powers (அட்டமா சித்தி )

    The story goes like this. The six maidens who fed Lord Karthik requested Lord Civan to
impart the eight great supernatural powers called as "Attamaa Siddhi" (அட்டமா சித்தி). Civan
asked them to learn it from goddess Uma. They were very inattentive while listening and hence 
Civan imprecated them to become stones and remain so under a banyan tree in the place  called 
"Patta Mangai" (பட்டமங்கை). When they repented and prayed for mercy Civan agreed to give 
deliverance from the curse after 1000 years. As Civan was ruling in Madurai as "Soma Sundarar" 
(சோமசுந்தரக் கடவுள்), He went to "Patta Mangai" (பட்ட மங்கை ) and graciously revealed 
to the six maidens the eight super natural powers. The eight super natural powers are:
"Animaa" (அணிமா): "Mahimaa" (மகிமா); "Garimaa" (கரிமா); "Lakimaa" (லகிமா); "Praathi" (பிராத்தி); 
"Piraakaamiyam" (பிராகாமியம் ); "Eechath-thuvam" (ஈசத்துவம்); "Vacith-thuvam  (வசித்துவம்):

Definition of the above eight super natural powers:

1"Animaa"          Supernatural power of becoming as small as an atom. அணுப்  போலாகுதல்.

2."Mahimaa"        Increasing the size at one's will. விருப்பம் போல் உருவத்தைப் 
              பெரியதாகச்  செய்யும் பேராற்றல்.

3."Garimaa"        Making oneself heavy at will.

4."Lakimaa"        Super natural power of levitation. கனமற்றதாகும் ஆற்றல்.

5."Praathi"        The power of obtaining anything one likes.

6."Piraakamiyam"   The power of satisfying all desires by irresistible will force. 

7."Eechath-thuvam" Supremacy or Superiority considered as a super natural power.

8."Vacith-thuvam"  The super natural power of subduing all to one's own will.
               எல்லாவற்றையும் தன் வசமாக்கும் சக்தி.

கு-ரை: 56-63: இனிது= சிறப்பாக, பொலிந்து = விளங்கி. திருவிளையாடற்புராணம் தண்ணீர்ப்பந்தல்
வைத்த படலத்திலே சோழனோடு சேர்ந்து தன்னொடு போர்க்கு வந்த தனது தம்பியை வெல்வதற்கு
இராசேந்திர பாண்டியன் கடவுள் துணையை நாட, அவர் தண்ணீர்ப்பந்தல் வைத்ததாகக் கூறினமை
காண்க. சயம் = வெற்றி,  சேவகன் = வேலையாள். விருந்து = புதிதாக வந்தோன், பட்டமங்கையில்
உபதேசம் பெற்ற நங்கையர், முன்னர்க் கயிலையினின்று இழிந்து ஒரு சாபத்தாற் கல்லாய்க் கிடந்து 
சாபம் நீங்கப் பெற்று இறைவன் உபதேசம் கேட்டனர். முன் தொடர்பிருத்தல் பற்றிப் 'பாங்காய்' என்றார். 
எட்டுப் பெருஞ்சித்திகளாவன: அணுவாதல், மேருவாதல், எளிதாதல், பளுவாதல், எங்கும் இயங்குதல்,           
விரும்பிய இன்பம் பெறுதல், முத்தொழில் புரியும் முதன்மை, தன்வயப்படுத்தல் என்பனவாம்.

60.     விருந்தின னாகி வெண்கா டதனிற்
    குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் 
    பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
    கட்டமா சித்தி யருளிய வதுவும் 
    வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு

    விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்
    குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும்
     பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
    அட்டமா சித்தி அருளிய அதுவும் 
    வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,

    virunthinan aaki veNkaadu athanil 
    kurunthin kiiz anRu iruntha koLkaiyum
    padda mangkaiyiR paangkaay irunthu angku
    addamaa siththi aruLiya athuvum
    veeduvan aaki veeNduruk koNdu

பொ-ரை: 64-67: பாண்டியனுக்காக, சோழனுக்கு எதிராகப் போர் புரிதற் பொருட்டு
குதிரைமேல் வேடனாக அச்சமயத்திற்கேற்ப வேடம் தரித்து வந்தான். மன்னன் அவனைத்
தொடர்ந்து வர, காட்டினுள் சென்று மறைந்து விட்டது இறைவனது தந்திரச் செயலாகும்.
உண்மையைக் காட்டி விடுவதற்கு இறைவன் தான் வேண்டிய வடிவமெல்லாம் எடுக்கும்
 நீதிமானாகவும் விளங்குகிறான்.

64 - 65: Assuming any form at will, the Lord Civan took the form of a hunter, fought against the
Chola King to protect His devotee the Paandiyan King and disappeared in the forest. These two 
lines (64 and 65) allude to a story that at the request of His devotee, a Paandiyan King, 
Lord Civan appeared in the battlefield as a hunter riding on a horse and engaged the Chola King in
direct fight. When the Chola King challenged that he would capture Him along with His horse,
Lord Civan fled fast, as if in fear, into a forest, the Chola King chasing him all the while.
Abruptly Lord Civan dived into a deep pond along with His horse while the chasing Chola King
also fell into the pond and perished. Thus Civan made His devotee the Paandiyan King victorious.

66 - 67: Lord Civan assumed at pleasure the form of a commander-in-chief suitable to the 
circumstance and proved to the Paandiyan King the truth of his army chief Soundara Saamanthan.
(சௌந்தர சாமந்தன்). The story goes that a Paandiyan King one day heard from his secret agent
that a hunter chieftain, by name "Sethipar Kone" (சேதிபர் கோன்) was coming to wage war against
him with a big army. The king immediately asked his army chief to take enough money from the
treasury and to recruit soldiers. The army chief spent all the money in feeding the devotees of 
Lord Civan every day. The king came to know of this and ordered the army chief to show the
entire army he had recruited by next day. The army chief went to the temple and prayed to Lord
Civan who revealed through an astral voice that He would bring a big army the next day.

Lord Civan Himself took the guise of a Commander-in-Chief and led a huge army to the wonderment
of the king. At that moment, news reached the king that the hunter chieftain was killed in the
forest by a lion. Simultaneously, the entire army and its chief, Lord Civan disappeared.The king, 
his army chief and all the others assembled, praised and worshipped Lord Civan for his
gracious deed.

கு-ரை: 64-67: வேடுவன் ஆகி = வேடனாக, இக்கதை திருவிளையாடற்புராணம் சோழனை மடுவில்
வீழ்த்திய படலத்திற் காண்க. சோழன் தொடர்ந்து வந்தபோது, தான் காட்டகத்தே உள்ள ஒரு குளத்திலே
குதிரையொடு வீழ்ந்து மறையவே, சோழனும் அதனுள் வீழ்ந்து இறந்தான். மடு இருந்த இடம் காடு
மூடிக்கிடந்தமையால் 'காடது தன்னில்' என்றார். காட்டிட்டு=காட்டிட= காட்டி விட, ஒருவன்= ஒப்பற்றவன்,
தக்கான் = நீதிமான் = நடுவன். சிவபத்தியிற் சிறந்த வாளாசிரியன் ஒருவனது மனைவியை 
விழைந்த அவன் மாணவனது உண்மைத் தன்மையை வெளியிட்டு அவனை ஒறுக்கவேண்டி இறைவனே
வாளாசிரியனாகத் தோன்றி அம்மாணவனோடு பொருது நீதி செலுத்திய வரலாறு, திருவிளையாற்
புராணம் அங்கம் வெட்டிய படலத்துட் காண்க.  அகவலின் இப்பகுதி மெய்க்காட்டிட்ட படலத்தைக்
குறிக்கும் என்பாரும் உளர்.

65.     காடது தன்னிற் கரந்த கள்ளமு
    மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
    தக்கா னொருவ னாகிய தன்மையு
    மோரி யூரி னுகந்தினி தருளிப்
    பாரிரும் பாலக னாகிய பரிசும்

    காடு அது தன்னில், கரந்த கள்ளமும்
    மெய்க் காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு
    தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
    ஓரியூரில் உகந்து, இனிது அருளிப்
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்

    kaadu athu thannil karantha kaLLamum
    mey kaaddiddu veeNduru koNdu
    thakkaan oruvan aakiya thanmaiyum 
    oori uuril ukanthinithu aruLi                
    paar irum paalakan aakiya parisum

பொ-ரை: 68-69: ஓரியெனும் தலத்தில் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி 
அவளுக்கு அருள் செய்த இனியவன்; அவள் மகிழ்ச்சியடையவும், இந்நிலவுலகம் பெருமை 
அடையவும் தாலாட்டக்கூடிய பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய பண்பும் அவனுடையது.

68 - 69: In a hamlet called "Ori" (ஓரி) Lord Civan became a child of greatest glory on earth, 
in order to bless a devotee and make her His own (See Story No. 35)

கு-ரை : 68-69: திருவிளையாடற் புராணம் விருத்த குமார பாலரான படலத்தில் இக்கதையைக் காண்க.
சைவ மறையோன் ஒருவன் சிவனடியார் பத்தியிற் சிறந்த தன் மகளைத் திருமால் வழிபாடுடைய ஓர்
அந்தணனுக்கு மணஞ் செய்வித்தான். அப்பெண்ணின் மாமியார் அவளை ஓர் ஒதுக்கிடத்தே வைத்துக்
கொடுமையாய் நடத்தி வந்தாள். ஒரு நாள் தன் கணவனும் மாமி முதலியோரும் வீட்டைப் பூட்டிவிட்டு 
அயலூருக்குப் போய்விட, சிவனடியார் ஒருவர் அப்பெண்ணிருந்த ஒதுக்கிடத்திற்கு வந்து உணவு
கேட்டார். மாமி உணவுப் பொருள்களை எல்லாம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயினதை அவருக்கு 
அவள் தெரிவிக்கவும், அவர் அவளை நோக்கி "நீ கதவின் பக்கம் போ, அது திறக்கும்" என்றார். உடனே 
அவள் அவ்வாறு போய்க் கதவு திறந்ததைக் கண்டு வியந்து உட்சென்று உணவு சமைத்து 
அவ்வடியார்க்கிட்டாள். வயது சென்ற அவ்வடியார் உண்டபின், ஓர் இளைஞன் வடிவம் கொண்டார்.
பெண்மணி அத்திருக்கோலத்தைக் கண்டு வியந்து நடுங்கி நிற்கும்போது வெளியே போன மாமியார்
திரும்பி வந்துவிட்டாள். அப்போது இளைஞராயிருந்தவர், குழந்தையாய் ஒரு தொட்டிலிற் கிடந்தனர்.
மாமியார் சினங்கொண்டு மருமகளையும் குழந்தையையும் வெளியே தள்ளி விடவே குழந்தையாயிருந்த
அடியவர் விடைப்பாகராகத் தோன்றி அப்பெண்மணியை உமை வடிவினள் ஆக்கிச் சிவலோகம்
புக்கனரெனப் புராணம் பகர்கின்றது. பார்= நிலவுலகம், இரும்= பெருமை உடைய.

70.     பாண்டுர் தன்னி லீண்ட விருந்துந் 
    தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற் 
    கோவார் கோலங் கொண்ட கொள்கையுந்
    தேனமர் சோலைத் திருவா ரூரின்
    ஞானந் தன்னை நல்கிய நன்மையு

    பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் 
    தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் 
    கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் 
    தேன் அமர் சோலைத் திருவாரூரில்
     ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

    paaNduur thannil iiNda irunthum 
    theevuur thenpaal thikaztharu thiivil 
    koovaar koolam koNda koLkaiyum 
    theen amar soolaith thiruvaaruuril
    njaanam thannai nalkiya nanmaiyum

75.     மிடைமரு ததனி லீண்ட விருந்து 
    படிமப் பாதம் வைத்தவப் பரிசு 
    மேகம் பத்தி னியல்பா யிருந்து 
    பாகம் பெண்ணோ டாயின பரிசுந் 
    திருவாஞ் சியத்திற் சீர்பெற விருந்து

    இடைமருது அதனில் ஈண்ட இருந்து 
    படிமப் பாதம் வைத்த அப்பரிசும் 
    ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து 
    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் 
    திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

    idaimaruthu athanil iiNda irunthu 
    padimap paatham vaiththa apparisum 
    ekampaththin iyalpaay irunthu 
    paakam peNNoodu aayina parisum 
    thiruvaanj siyathil siirpeRa irunthu

பொ-ரை: 70-80; பாண்டூர் என்னும் பதியில் அடியவர்க்கு விளங்குமாறு நெருங்கியிருந்து 
அருள் செய்தனன்.  தேவூர்க்குத் தென்புறத்தே விளங்கும் தீவில் அரசியல் தன்மை 
பொருந்திய திருவடிவம் கொண்டருளினான். வண்டுகள் தங்கும் பொழிலினையுடைய 
திருவாரூரில் முனிவர் பலருக்கு உயர்ந்த பெரும் சிவஞானத்தைத் தந்தருளிய உபகாரி
அவன். திருவிடைமருதூரில் அடியார்க்கு விளங்க வீற்றருளி தன் தூய திருவடிகளை அவர் 
சென்னி மீது வைத்த கருணைத் திறம் அவனுடையதாகும்.  காஞ்சிபுரத்தில் தன் 
இயற்கையான அருஉருவத் திருமேனியில் வீற்றிருந்தான். தம்மை வழிபட்ட
உமையம்மையை இடப்பாகத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டது அவனது
பெருஞ்சிறப்பாகும்.  திருவாஞ்சியம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் இருந்து
இயற்கையில் மணமுடைய கூந்தலினையுடைய அம்மையோடு கலந்து மகிழ்ந்து
இருந்ததுவும் அவன் திருவிளையாடல் ஆகும்.

70 - 72: In the place called "Paandoor" (பாண்டூர்) Lord Civan came in order to dwell to give
darshan to His devotees. In the resplendant island situated in the south of "Thevoor" (தேவூர்)
Lord Civan assumed the form of a glorious king and ruled the island.

73 - 74: In the place called “Thiruvaaroor" (திருவாரூர்)  which is surrounded by groves full of
honeycombs, Lord Civan imparted enlightenment to His devotees.

75 - 76: In "Thiru Idai Maruthoor" (திரு இடை மருதூர்) Lord Civan surrounded by his devotees
blessed them by placing His holy Feet on their heads.

77 - 78: In the town of "Ekambam" (திரு ஏகம்பம்) (present day Conjeevaram) Lord Civan was
worshipped in His natural Linga form by Uma. There, He became Ardhanaareeswarar, 
the half male-half-female form, His left half of His form being occupied by His never-sundered 
queen Goddess Uma (See Story No. 29).

79 - 80: In the place called "Thiruvaanchiyam" (திருவாஞ்சியம்)  Goddess Uma was in Her bridal 
beauty with Her naturally fragrant trusses of hair, when Civan joined Her and delighted in Her.

கு-ரை: 70-80: பாண்டூர், தேவூர் என்பன, பாண்டி நாட்டிலுள்ளன. தேவூர்க்குத் தெற்கே கடலில் இருப்பது தீவு.
ஈண்ட = நெருங்க, விளங்க. கோ = அரசத்தன்மை. தேன் = வண்டு . இங்கே கூறிய ஞானம் வீடு
பயக்கும் உணர்வாதலின், 'தன்மை ' யெனச் சிறப்பித்தார். படிமம் = ஒளி வடிவம், தூய்மை . ஏகம்பநாதர் 
காஞ்சிப்பதியமர்ந்த சிவபிரான். திருக்கயிலையில் இறைவர் திருக் கண்களைப் பொத்தி உலகிற்கு இருள் 
உண்டாக்கிய குற்றம் நீங்க, உமையம்மையார் காஞ்சியில் ஒரு மாமரத்தினடியில் மணலாற் சிவலிங்க
வடிவமைத்து வழிபட்டகாலை, வெள்ளம் வரவே சிவபெருமானைத் தழுவிப் பின்னர் அவரது இடப்பாகங்
கொண்டனரென அறிக, மரு = இயற்கை வாசனை. கற்புடை நங்கை  கூந்தலுக்கு இயற்கை மணமுண்மை,
நக்கீரர் கதையால் விளங்கும். திருவாஞ்சியம், சோழ நாட்டில் உள்ளது 

80.     மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமுஞ்
    சேவக னாகித் திண்சிலை யேந்திப்
    பாவகம் பலபல காட்டிய பரிசுங்
    கடம்பூர் தன்னி லிடம்பெற விருந்து
    மீங்கோய் மலையி லெழிலது காட்டியு

    மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்; 
    சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் 
    பாவகம் பல பல காட்டிய பரிசும் 
    கடம்பூர்-தன்னில் இடம்பெற இருந்தும்;
     ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

    maruvaar kuzaliyodu makizntha vaNNamum            
    seevakan aaki thiNsilai eenthi 
    paavakam palapala kaaddiya parisum 
    kadampuur thannil idam peRa irunthum
    iingkooy malaiyil ezilathu kaaddiyum 

85.     மையா றதனிற் சைவ னாகியுந் 
    துருத்தி தன்னி லருத்தியோ டிருந்துந்
    திருப்பனை யூரில் விருப்ப னாகியுங்
    கழுமல மதனிற் காட்சி கொடுத்துங்
    கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்

    ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் 
    துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் 
    திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் 
    கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 
    கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்

    aiyaaRu athanil saivan aakiyum 
    thuruththi thannil aruththiyoodu irunthum 
    thiruppanai uuril viruppan aakiyum 
    kazumalam athaniR kaadsi koduththum
    kazukkunRu athanil vazukkaathu irunthum

பொ-ரை: 81-91: பாண்டிய அரசன் ஒருவனுக்கு வெற்றி உண்டாக்குதற் பொருட்டு வில்வீரர்
வடிவம் கொண்டு வலிமிக்க வில்லைக் கைக்கொண்டு, பல்வேறு இயல்புகளைத்
தோற்றுவித்தனன் எம்பெருமான். திருக்கடம்பூரில் கோயில் கொண்டு வீற்றிருந்தனன்.
ஈங்கோய் மலையில் அழகுமிக்க மரகதத் திருமேனியைக் காண்பித்து அருளினான்.
திருவையாற்றில் பூசனைபுரியும் சைவ ஆசாரியன் வேடத்தில் தோன்றினான்.
திருத்துருத்தியில் அடியவர்க்கு அருள்புரியும் ஆசையுடன் வீற்றிருந்து அருளினான்.
திருப்பனையூரில் வேண்டுவார் வேண்டுவன ஈயும் விருப்பத்தினனாய் அமர்ந்திருந்தனன்.
சீகாழிப் பதியில் திருக்கோலம் காட்டி அருளினான். திருக்கழுக்குன்றத்தில் ஞானவடிவோடு
தவறாது எழுந்தருளினான். திருப்புறம்பயத்தில் தருமச் செயல்கள் பல ஆற்றினான்.
திருக்குற்றாலத்தில் சிவலிங்க வடிவில் அருள் வழங்கினான்.

81 - 82: To help a Paandiyan King who was Civan's devotee He became a soldier carrying a 
mighty bow and manifested Himself in various Forms (See Story No. 57).

83: Lord Civan dwelt in the temple in "Kadamboor” (கடம்பூர்)  and made it His abode.

84: On the hill of "Eengoi" (திரு ஈங்கோய் மலை)  He showed His beautiful emerald form
(மரகதத் திருமேனி)  to His devotees.

85: Lord Civan assumed the form of a civaacharya priest in the place called "Thiruvaiyaaru'
(திருவையாறு (See Story No. 34)

86: To bestow His grace on His devotee Lord Civan happily abided in his place called "Thirup-
Poon-Thuruththi" (திருப்பூந்துருத்தி).

87 - 91: In “Thirup-Panaiyur" (திருப்பனையூர்) Lord Civan was the bestower of things yearned by
devotees. In "Kazhumalam" (திருக்கழுமலம்) present-day “Seerkaazhi" (சீர்காழி), He gave darshan
to His devotees in all the three forms of "Guru", "Linga" and "Sangamam" (குரு, லிங்க, சங்கமம்).
Guru - Thoniappar (குரு - தோணியப்பர்), Linga - Brahmapureeswarar (லிங்கம் - பிரமபுரீசுவரர்) .
Sangamam - Chattainathar; (சங்கமம்-சட்டைநாதர்). He was abiding unfailingly in 
Thiruk-Kazhuk-Kundram (திருக்கழுக்குன்றம்). In "Thirup-Purampayam" (திருப்புறம்பயம்). He was witness 
to many virtuous deeds. In “Thiruk-Kutralam" (திருக்குற்றாலம்) He appeared in Linga form to
give darshan to sage Agasthiya (அகத்திய முனிவர்). The story goes that sage Agasthiya was sent 
to the south from the mount Kailas (கைலாசம்) in the north to balance the earth, as the entire host
of devas and other celestials had assembled in mount 'Kailas' to witness the marriage of Lord
Civan. The sage came to 'Pothigai' hills (பொதிகை மலை) where he saw the statue of Maha 
Vishnu in the sanctum sanctorum of a temple at the foot of the hill. By his divine powers he
placed his hands on Maha Vishnu's head and uttered "Kuru Kuru Kutralam" (குறு குறு குற்றாலம்)
(May you become small). The statue became a "Linga" (Symbol of Civa).

கு-ரை: 81-91 :  திருவிளையாடற் புராணம், யானை எய்த படலத்துள், சோழன் விடுத்த யானையைக்
கொல்லுதற் பொருட்டு, இறைவன் வில் வீரராய்த் தோன்றி யானை எய்தமை கூறப்பட்டது.  இடம்=கோயில், 
'எழிலது' என்பதில், அது திருமேனியைக் குறிக்கும். திருவையாற்றிலே இறைவனைப் பூசனை
புரியும் சைவாசாரியருள் ஒருவர் காசிக்குப் போய், நெடுநாளாக மீண்டு வராமையால், அவர் மனைவி
மக்கட்குரிய பொருளைப் பிறர் கவர்ந்து கொள்ளக் கருதிய போது, அதனைத் தடுத்தற் பொருட்டு,
காசிக்குப் போன சைவரின் வடிவத்தோடு இறைவன் தோன்றியருளினமை இங்கே குறிக்கப்பட்டது.

திருக்கழுமலத்திலே அடிகட்கு இறைவன் காட்சி நல்கியமையும், திருக்கழுக்குன்றிலே கணக்கிலாத்
திருக்கோலம் அடிகட்குக் காட்டியமையும் அடிகள் வரலாற்றானறிக. 'வழுக்காது', என்பதற்கு மறவாது
என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. திருக்குற்றாலத்திலே விண்டு வடிவமே அகத்தியர்
வேண்டுகோளால் சிவ வடிவமாக மாறினமை திருக்குற்றாலத் தலபுராணத்துட் காண்க. திருக்கடம்பூர்,
ஈங்கோய்மலை, திருப்பனையூர் ஆகியவை சோழ நாட்டிலுள்ளவை. திருத்துருத்தி இப்போது சோழநாட்டிலே
குற்றாலம் எனப்படும் இடமென்ப . திருக்குற்றால மென்பது, பாண்டி நாட்டிலேயுள்ளதென்பது வெளிப்படை.
திரிகூட பருவதத்தினடியில் அழகிய அருவியுடன் கூடியது.

90.     புறம்பய மதனி லறம்பல வருளியுங் 
    குற்றா லத்துக் குறியா யிருந்து 
    மந்தமில் பெருமை யழலுருக் கரந்து 
    சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் 
    டிந்திர ஞாலம் போலவந் தருளி

    புறம்பயம்-அதனில் அறம்பல அருளியும் 
    குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
     அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து 
    சுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டு 
    இந்திர-ஞாலம் போல வந்து அருளி,

    puRam payam athanil aRampala aruLiyum 
    kuRRaalathu kuRiyaay irunthum 
    anthamil perumai azaluru karanthu 
    sunthara vedaththu oru muthal uruvukoNdu 
    inthira njalam poola vanthu aruLi

95.     யெவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
     தானே யாகிய தயாபர னெம்மிறை
    சந்திர தீபத்துச் சாத்திர னாகி
    யந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
    சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியு

    எவ்எவர் தன்மையும் தன்வயின் படுத்துத்
    தானே ஆகிய தயாபரன், எம்இறை
    சந்திர தீபத்துச், சாத்திரன் ஆகி 
    அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் 
    சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும்

    evvevar thanmaiyum thanvayiR paduththu 
    thanee aakiya thayaaparan emiRai 
    santhira thiipaththu saaththiran aaki 
    antharaththu izinthu vanthu azaku amar paalaiyuL 
    sunthara thanmaiyoodu thuthainthu irunthu aruLiyum

பொ-ரை : 92-99: தனது அளவற்ற பெருமையுடைய சோதியுருவை மறைத்து அழகிய பிரணவ
வடிவமான காதணியோடு ஒப்பற்ற ஞான முதல்வனாக வடிவம் கொண்டான். இந்திர ஜால 
வித்தையில் பொருள்கள் எதிர்பாராது தோன்றுதல் போல திடீரென எழுந்தருளி வந்தான்.
எவ்வகைப்பட்டவர் இயல்பையும் தன்பாலாக்கித் தானே எல்லாமாய் விளங்கும்
கருணையாளன் எம் தலைவன், சந்திர தீபமென்னும் பதியில் வானின்று இறங்கி அழகிய
பாலை என்னுமிடத்தில் கலைவல்ல ஆசிரியனாய் வனப்பு நிறைந்த இயல்புடனே
வீற்றிருந்து அருளினான்.

92 - 99: Lord Civan concealed His endless and glorious form of fire and assumed the beautiful
form of matchless supreme Lord with ear rings. Taking each one's nature unto Himself, our
Lord of infinite grace descended as though by magical powers and landed in the beautiful place 
called "Paalai" (பாலை)  situated in the island of "Chandra Deepam" (சந்திர தீபம்) and abided there,
filling it with his sweet grace and beauty. Here, as an exponent of all arts. He was in his fairest
form full of grace.

கு-ரை: 92-99: அழலுருவென்பது இறைவனது தெய்வ வடிவை அல்லது அடிமுடியறியாச் சோதியாய் நின்ற 
வடிவைக் குறிக்கும். வேடம் = காதணி.  வட்டவடிவாய்ச் சைவ ஆசாரியர்களால் அணியப்படுவது.             
'சுந்தரம் துதைந்த தன்மையோடு இருந்து அருளியும்' என உரைநடை கொள்க.  துதைதல்= நெருங்குதல்,நிறைதல்; 
பாலை நிலத்திற்குரிய மரங்களடர்ந்ததாய் அழகு வாய்ந்ததாயிருக்கலாம். அல்லது, இடத்தின்
பெயர் பாலையாதல் கூடும். ஒரு காலத்துப் பாலையாயிருந்து பின்னர்  பொழிலாய பின்னும்,
அப்பெயர் அதற்கு வழங்குதல் கூடும்.

100.     மந்திர மாமலை மகேந்திர வெற்ப
    னந்தமில் பெருமை யருளுடை யண்ண 
    லெந்தமை யாண்ட பரிசது பகரி 
    னாற்ற லதுவுடை யழகமர் திருவுரு 
    நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியு
    
    மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
    அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 
    எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் 
    ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உரு 
    நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்

    manthira maamalai makeenthira veRpan 
    anthamil perumai aruLudai aNNal 
    emthamai aaNda parisu athu pakarin 
    aaRRal athu udai azaku amar thiru uru
    neeRRu koodi nimirnthu kaaddiyum

105.     மூனந் தன்னை யொருங்குட னறுக்கு 
    மானந் தம்மே யாறா வருளியு 
    மாதிற் கூறுடை மாப்பெருங் கருணைய
    னாதப் பெரும்பறை நவின்று கறங்கவு 
    மழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்

    ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் 
    ஆனந் தம்மே, ஆறா அருளியும்
    மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் 
    நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
    அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

    uunam thannai orungkudan aRukkum 
    aananthammee aaRaa aruLiyum 
    maathiR kuuRudai maapperung karuNaiyan
    naathap perumpaRai navinRu kaRangkavum
    azukku adaiyaamal aaNdu koNdu aruLpavan

110.     கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியு 
    மூல மாகிய மும்மல மறுக்குந் 
    தூய மேனிச் சுடர்விடு சோதி 
    காதல னாகிக் கழுநீர் மாலை
    யேலுடைத் தாக வெழில்பெற வணிந்து

    கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்
    மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
    தூய மேனி, சுடர்விடு சோதி
    காதலன் ஆகிக், கழுநீர் மாலை
    ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்

    kazukkadai thannai kaikkoNdu aruLiyum
    muulam aakiya mummalam aRukkum
    thuuya meeni sudarvidu soothi 
    kaathalan aaki kazhuneer maalai
    eel udaiththu aaka ezilpeRa aNinthum

பொ-ரை: 100-114: எல்லையற்ற ஆற்றலும் அருளும் உடைய எம்பெருமான் மந்திர நூலாகிய
ஆகமம் வெளிப்பட்ட பெருமலையாகிய மகேந்திர மலையின் தலைவன். அத்தகையோன் 
எங்களை ஆட்கொண்ட வகையைச் செப்பவேண்டும். வலிவும் வனப்பும் பொருந்திய 
திருமேனியில் (நெற்றி, மார்பு, புயம் முதலிய இடங்களில்) திருநீற்றுக் கொடியினை 
எடுப்பாக, இடையிட்டுத் தரித்து, தரிசனம் அளித்தனன். பாசமாகிய குற்றம் முழுவதையும் 
ஒரு சேர, ஒரே காலத்தில் வேரறுத்துக் களையும் பேரின்பத்தையே ஆறாக அருளினான்.

உமையம்மையை ஒரு பாகத்தே உடைய, கைம்மாறு வேண்டாப் பேரருளாளன் அவன். 
நாத தத்துவமாகிய பெரும்பறை இடைவிடாது ஒலிப்பக் கொண்டுள்ளவன் அவன். வாசனா மலம்
தாக்கா வண்ணம் அன்பர்களைத் தடுத்தாட் கொள்ளுபவன்.  மூவிலைச் சூலத்தைத்         
திருக்கைகளிற் கொண்டருளி, உயிர்களை அநாதியே பற்றிய (இருள், வினை, மருள்),
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைப் பாசங்களையும் வேரறுக்கவல்ல
திருமேனியுடன் எழுந்தருளி உள்ளான். அறிவுக்கதிர் பரப்பும் ஒளியுருக் கொண்ட 
முதல்வன்.  அடியாரிடம் அன்பு பூண்ட அருளாளன்.  அடியார் உள்ளங்கள்
பக்குவமெய்தற்குப் பொருத்தமாக, அவருள்ளம் கவருமாறு செங்கழுநீர் மாலை சூடிக்
காட்சி அளிப்பவன் அவன்.

100 - 114: Lord Civan, Chieftain of the great Mahendra Mountain of mystic lore (where the
Aagamas were re-told by Him) and whose endless greatness and grace made me His own. I shall
now narrate how His victorious way enslaved me. He showed His sacred form of power and
grace with the three interspaced parallel lines of holy ash in several places of His body (form). 
In grace He caused to flow the river of rapture which swept away all the human vileness that is 
Aanava Malam (ஆணவ மலம்). With great mercy, He concorporated Uma on the left side of His
body. He happily created the cosmic sound form out of His hour-glass-shaped drum (பறை,உடுக்கை)
To enslave and protect me from the primal bond of the three Malams- Aanavam,
Kanmam and Maayai (மும்மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை), He was holding the trident in His
hand. He is of pure fire, like the sparkle emitting effulgence and was wearing a lovely garland of 
blue lotus (Kazhuneer; கழுநீர்ப் பூ ). Thus, He came to sever from me the three Malams which are
the root cause of all misery, and became my beloved.

கு-ரை: 103-114: கொடி என்பது கோடியென நீண்டது. எல்லாவற்றையும் ஒடுக்கும்  ஆற்றலையும்
அருளொளியையும் திருநீறானது குறித்தலின், 'ஆற்றலது வுடை அழகமர் திருவுரு' என்றார் போலும்.
நிமிர்ந்து= (முக்குறியாக) இடையிட்டுத் தரித்து திருமேனியிற் பல பாகங்களில், கொடியிலங்குவது  போல
நீற்றுக் குறி துலக்கமாய்த் தோன்றியது என்றவாறாம். பேரின்பவுணர்ச்சியில் உயிர் ஈடுபட்ட இடத்து
வாசனா மலமும் தொலைதலின், மலம் முழுவதையும் ஒருங்கு அறுக்கும் என்றார். ஆனந்தமே, என்பது
ஆனந்தம்மேயென விரிந்தது. அது, ஆனந்த மேலீட்டைக் குறிக்கும். 'மாதின்' என்பதில், இன்-சாரியை.
'மாப்பெரு' என ஈரடை கொடுத்தது கைமாறின்மையும் அளவின்மையும் குறித்தற்கென்க. 

நாத தத்துவத்தில் உள்ள சூக்கும வாக்கு என்றும் ஒலித்துக் கொண்டிருப்பதனாலே உலகெலாமியங்குமாதலின்
அதனைப் பெரும்பறை என்றார். நவிலுதல் - இடையின்றிப் பயிலுதல். இறைவன், உயிர்கள் மேல் வைத்த
கருணையாலே, தூயமாயையின் நின்று, சிவ தத்துவமாகிய நாத தத்துவத்தைத் தோற்றுவித்தலின்
' கருணையன்' என்பதோடு, நாதப் பெரும்பறையென்பதை உடன்புணர்த்துக் கூறினர், அழுக்கு நீங்கிய
பின்னும், அது அடையாமற் காத்தலின், அழுக்கு, உரையுள், வாசனா மலம் எனப்பட்டது. 

மலமூன்றாதலின் இறைவன் அதனை நீக்குவதற்கு மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்டனர்  போலும். 
கழுக்கடை= மூவிலைவேல், ஆணவம் உள்ளவிடத்தே, வினையும் மாயையும் நுட்பமாக உண்மையின்
மூன்றையும் மூலமாகியவை என்றார். மலங்காரணமாக வரும் உடம்பு இறைவற்கின்மையின், "தூய மேனி"
என்றார். தூய மேனி உடையவனே, அழுக்கை நீக்க வல்லவன் ஆவான் என்பது கருத்து, சுடர்=சிவஞானம்,
தலைவியின் உள்ளத்தைத் தனது மாலையால் கவரும் தலைவன் போல, இறைவன்
அன்பருள்ளத்தைத் தமது தூய அடையாள மாலையால் கவர்வான் ஆதலின், 'காதலனாகி ஏலுடைத்தாக
எழில்பெற' என்றார். ஏல்= பொருத்தம். எழில்= எழுச்சி, கிளர்ச்சி.

115.     மரியொடு பிரமற் களவறி யாதவன்
    பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமு
    மீண்டு வாரா வழியருள் புரிபவன்
    பாண்டி நாடே பழம்பதி யாகவும்
    பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவ

    அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
    பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
    மீண்டு வாராவழி அருள் புரிபவன் 
    பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
    பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

    ariyodu piramaRku aLavu aRiyaathavan        
    parimaa vinmisai payinRa vaNNamum 
    miiNdu vaaraa vazi aruL puripavan 
    paaNdi naadee palampathi aakavum
    paththisey adiyarai paramparaththu uyppavan

பொ-ரை :115-120: செருக்கினால் திருமாலும் நான்முகனும்  அடிமுடி தேடி 
அளந்தறியவொண்ணாத சிறப்புடையவன் எம்பெருமான். தாழ்மனமுடைய அடியாரின்
பொருட்டுக் குதிரையாகிய விலங்கின் மீது ஏறிவந்தது அவனது அருள் திறமேயாகும்.
 வீடு பேற்றிற்குரிய அன்பர், திரும்பப் பிறவாத வகையாய் அருள் செய்யும் பெருமான். 
பாண்டி நாட்டைப் பழமை நாடாகக் கொண்டு மெய்யன்பராகிய பத்தர்களை பர, அபர 
முத்திகளில் சேர்ப்பவன். உத்தர கோச மங்கையை ஊராகக் கொண்டவன்.

115 - 124: Civan, whom even Hari (Thirumaal) and Brahma could not fathom, came riding on a
horse, for the sake of his devotee (See Story No.1). He who showers His grace on His devotees
by showing them the path of no return (the cycle of birth) redeemed the Paandiyan Kingdom as 
His ancient domain. He lifted His pious saints to the loftiest of lofty states and had 
"Uththara Kosa-Mangai" (உத்தர கோச மங்கை ) as His town. Lord Civan having showered His grace to the 
primal deities, came to be named as "Mahaa Devan" (God of gods). The bliss that dispels the 
darkness of ignorance is his mount, the sacred bull, and the grace granting greatness is his
mountain.

கு-ரை: 115-120: பாண்டிய நாட்டிலே இறைவன் முதற்கண் தக்க தவத்தினர்க்கு ஞானமும் வீடும்
நல்கியதால், நிலவுலகிலே அதனைப் பழையபதி என்றார். பதி நாட்டையுங் குறிக்கும். உத்தர கோச மங்கையில் 
அறுபத்து நால்வர்க்கு இறைவன் சிறப்பாக ஆகமம் அறிவுறுத்தினமையின், அதனை ஊரென்றார்.

120.     னுத்தர கோச மங்கையூ ராகவு 
    மாதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
    தேவ தேவன் றிருப்பெய ராகவு 
    மிருள்கடிந் தருளிய வின்ப வூர்தி
     யருளிய பெருமை யருண்மலை யாகவு

    உத்தரகோச மங்கை ஊர் ஆகவும்
    ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
    தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
    இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி 
    அருளிய பெருமை அருள் மலை ஆகவும்

    uththar koosa mangkai uur aakavum 
    aathi muurthikadku aruLpurinthu aruLiya      
    theva thevan thiru peyar aakavum
    iruL kadinthu aruLiya inpa uurthi
    aruLiya perumai aruL malai aakavum        

பொ-ரை: 121-126: காரணேசுவரர்களாகிய முதல்வர்கட்குத் திருவருள் புரிந்து அதிகாரம்
நல்கியதால் மகாதேவன் என்னும் திருநாமம் பெற்றவன் எம்பிரான். அடியார்க்கு
ஆணவத்தை நீக்கி, பேரின்ப வாகனம் அருளிய அவனது அருட்பெரும் தன்மையே கருணை
மலையாக உள்ளது.  எவ்வகைப் பட்டவர்களையும், எத்தகைய பேரியல்பையும்
பக்குவத்தையும் அறிந்து, அவரவர்க்கேற்ற முறைமையினால் அவரவர்களை ஆட்கொண்டு
அருளுகிறான்.

125 - 129: Thus He enslaved each of the people according to their varying merit and varying        
capabilities and made them His own. He bade me, this cur, to come in course of time to the
beauteous court in Thillai, (Chidambaram) rich in goodness, abandoning me to live on this earth.

கு-ரை: 121–126: சுத்த தத்துவங்களிலுள்ள, அயன், அரி, அரன், அனந்தர், அணுசதாசிவர்  முதலியோர்
கீழ்ப்பட்ட தத்துவங்களில் உள்ளோரை இயக்குவதால் காரணேசுரராய் ஆதி மூர்த்திகள் எனப்பட்டார்.
சிலர், மும்மூர்த்திகளை ஆதி மூர்த்திகள் எனக் கொண்டு, அவர்கள் தலைவனாகிய சிவபெருமானைத்
தேவதேவன் என்பர். பேரின்ப உணர்ச்சியானது பரமுத்தி அடைதற்கு உயிர்களை மேற்கொண்டு சேரலின்
அதனை 'ஊர்தி' என்றார். ஈற்றடிகளிலே இறைவனது வரம்பிலாற்றல் கூறப்பட்டது, மேற்போந்த அடிகளில்
அரசர்க்குரிய கொடி, ஆறு, பறை, படை, மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை எனப்படும் பத்துறுப்பும்
பகரப் பட்டமை காண்க.

125.     மெப்பெருந் தன்மையு மெவ்வெவர் திறமு 
    மப்பரி சதனா லாண்டுகொண் டருளி 
    நாயி னேனை நலமலி தில்லையுட் 
    கோல மார்தரு பொதுவினில் வருகென 
    வேல வென்னை யீங்கொழித் தருளி

    எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும் 
    அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி
    நாயினேனை நலம் மலி தில்லையுள் 
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென 
    ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி

    epperun thanmaiyum evvevar thiRamum
    apparisu athanal aaNdu koNdaruLi 
    naayineenai nalamali thilaiyuL             
    koola maartharu poothuvinil varuka ena
    eela ennai iingku oziththu aruLi        

130.     யன்றுடன் சென்ற வருள்பெறு மடியவ
    ரொன்ற வொன்ற வுடன்கலந் தருளியு 
    மெய்தவந் திலாதா ரெரியிற் பாயவு
    மாலது வாகி மயக்க மெய்தியும் 
    பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியுங்

    அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 
    ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 
    எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 
    மால் அது ஆகி, மயக்கம் எய்தியும் 
    பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்

    anRudan senRa aruL peRum adiyavar 
    onRa onRa udan kalanthu aruLiyum         
    eytha vanthilaathaar eriyiR paayavum 
    maal athuvaaki mayakkam eythiyum 
    puuthalam athaniR puraNdu viiznthu alaRiyum

135.     கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 
    நாத நாத வென்றழு தரற்றிப் 
    பாத மெய்தினர் பாத மெய்தவும் 
    பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்
    றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவு

    கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி.
    'நாத! நாத!' என்று அழுது அரற்றி
     பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
    'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
    இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்

    kaalvisaithu oodi kadalpuka maNdi
    naatha naatha enRu azuthu araRRi
    paatham eythinar paatham eythavum 
    pathanjalikku aruLiya parama naadaka enRu           
    etham salippu eitha ninRu eengkinar eengavum         

பொ-ரை: 127-139: நாய்போலும் கடையேனாகிய என்னை நன்மை மிகுந்த தில்லைப் பதியின்
கண்ணே அழகு நிறை அம்பலத்தில் வந்து கலப்பாயாக என்று பணித்தான். என் வினைக்குப்
பொருத்தமாக என்னை இந்நிலவுலகத்தே கழித்து ஒதுக்கி என்னை ஆட்கொண்டான்.
அன்றே, வீடுபேற்றுக்கு உரியவராய் தன்னுடன் போந்த அடியார்கள் தன்னுடன் வந்து சேரச் சேர
அவர்களுடன் இரண்டறக் கலந்து அருளினான்.  அங்ஙனம் தன்னோடு கலக்கப் பெறாதவர் சிலர் 
நெருப்பில் விழுந்து தன்னுடன் வந்து சேருமாறு அருளினான். சிலர் வீடெய்தும் ஆசையால்
மயங்கி உயிர்நீத்து, தன்னை வந்தடைய அருளினான். இன்னும் சிலர் விரைந்து கடலிடைச் சேர்ந்து, 
தலைவனே தலைவனே என்று அரற்றி, அழுது  உடம்பை நீத்து, தன் திருவடி அடையவும் உதவினான். 
மற்றும் சிலர், "பதஞ்சலி முனிவர்க்கருள்  புரிந்த மேலான அற்புதக் கூத்தனே" என்று தொழுது உள்ளம்
ஏக்கமுற்று, அவ்வாறு ஏங்கியதன் மூலம் தன்னை அடைய வைத்து அருள் பாலித்தவன் அவன்.

130 - 139: However those devotees, who gained His grace to accompany Him on that day,
mingled in perfect union with Him. Those who could not leap into the fire and who longed to
reach Him wailed, rolled on the earth and swooned; while still others rushed, with hurrying feet
to fall into the sea, weeping and wailing 'Oh! Lord! Oh! Lord!' and succeeded in reaching and
gaining His holy Feet. Some others who were longing for Him became heart wearied. They
hailed and cried, Oh! Supreme Dancer! who showered grace to "Pathanjali" and continued to
yearn for His bliss.

140.    மெழில்பெறு மிமயத் தியல்புடை யம்பொற் 
    பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில் 
    கனிதரு செவ்வா யுமையொடு காளிக்
    கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை 
    யிறைவ னீண்டிய வடியவ ரோடும்

    எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்
    பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
    கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு 
    அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை
    இறைவன், ஈண்டிய அடியவரோடும்

    ezilperum imayaththu iyalpudai ampon
    politharu puliyuur pothuvinil nadam navil         
    kanitharu sevvaay umaiyoodu kaaLikku 
    aruLiya thirumukaththu azakuRu siRunakai
    iRaivan iiNdiya adiyava roodum

பொ-ரை: 140-143: எம்பெருமான், மந்திர ஒலிகள் பயிலும் புகழ்மிக்க கயிலை மலையின் 
தலைவனாவான். எழுச்சிமிக்க பனிமலைபோல் அழகிய பொன்னொளி தவழும் புலியூராகிய 
தில்லை அம்பலத்தின்கண் திருநடனம் புரிகின்றான்.  இனிமையான சிவந்த வாயினையுடைய
உமையம்மையும், காளியம்மையும் அவனோடு கூத்து பயில்கின்றனர்.  அவர்கட்கு 
அருள் புரிதல் பொருட்டு, தன் திருமுகத்தில் கவின் மிகுந்த புன்சிரிப்பைக் காட்டி நின்றனன்.

கு-ரை: 140-143: சுத்த தத்துவச் சார்புடையது கயிலையாதலின், அத்தத்துவத்திலெழும் மந்திர ஒலி 
ஆண்டு பயிலுதல் கூறப்பட்டது. கயிலையிற் பிற அதிகார மூர்த்திகள் உளராயினும், இறைவனே 
முழு முதலாட்சியுடையன் ஆதலின், 'உயர்கிழவோன்' என்றார். இமயமலை, மிக்க உயர்வுடையது வெளிப்படை. 
அது பொன்னிறத்ததென்ற கொள்கையுண்டு.  'நடம்நவில்' என்பதை 'இறைவன்' என்பதொடுங்
கூட்டலாம். பாணி தந்து உடன் உலவுதலின் உமை நடம் பயில்கிறாள் எனலாம். காளி இறைவனொடு வாதாடி 
நடம் பயின்று ஊன நடனமியற்ற இயலாது தோற்றனளென்ப. அருளிய - 'செய்யிய'  வாய்ப்பாட்டு வினையெச்சம்,
மகிழ்ச்சிபற்றி உமைக்கும், இகழ்ச்சிபற்றிக் காளிக்கும் புன்னகை காட்டினன் என்றலும் உண்டு.

145.     பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளின 
    னொலிதரு கைலை யுயர்கிழ வோனே.

    பொலிதரு புலியூர்ப்புக்கு, இனிது அருளினன்
     ஒலி தரு கைலை உயர் கிழவோனே.

    politharu puliyuurp pukku inithu aruLinan
    olitharu kayilai uyar kizavoonee

பொ-ரை: 144-146: மெய்ஞ்ஞான விளக்கம் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்துள் எம்
வேந்தனாகிய இறைவன், தன்னை நெருங்கிய அடியாருடன் புகுந்தருளினான்.
எனக்கு இன்பம் மிகுமாறு பேரருள் புரிந்தருளினான்.

140 - 146: Civan the supreme lord of Mount Kailas in the beautiful Himaalayaas, reverberating
with the sacred and raptuous songs, came down to the golden-roofed shimmering hall of
"Puliyoor' (another name for Chidambaram) to dance and to grace Uma, of sweet and rosy lips,
and Kaali showing to them His blessed countenence with the beauteous smile. Thus Lord Civan
graciously entered the resplendent Tiger Town (Puliyoor) along with His band of saints.

கு-ரை: 144-146: அம்பலம் ஆதலின், தனியே செல்லாது அடியாரோடு சென்றான் போலும் .
'மெய்ஞ்ஞானமே' அம்பலமெனப்படுதலின், பொலிதருதல் ஞானத்தால் என்பது குறிக்கப்பட்டது. கயிலை
கலைஞானச் சிறப்பெய்திய புலியூர், பரஞானச் சிறப்பெய்தியமை கூறப்பட்டது. கீர்த்தித் திருவகவல்
 இயற்றுவித்தமையும் அருளின்பாற்படும் வீடு, தமக்குத் தில்லையில் அருளும் உறுதிபற்றி,
'  இனிது அருளினன்' என்றாரென்றலுமொன்று. புலி, உபாயத்தாற் பாய்ந்து தன் இரையைப் பற்றுதல் போலப்
பேரின்பத்தை உயிர் முயன்று விரைவிற் பற்றுதற்குரிய இடமென்ற கருத்து புலியூர் என்பதால் புலனாகும்.

            THIRUCHCHITRAMBALAM
 


3.  திருவண்டப்பகுதி                     3. THIRU-ANDAP-PAKUTHI

(சிவனது தூல சூக்குமத்தை வியந்தது )            The Nature and Development of the Universe            
தில்லையில் அருளியது                     Compiled whilst in Thillai
இணைக்குறள் ஆசிரியப்பா

                திருச்சிற்றம்பலம்

     இது, "அண்டப்பகுதியின்" எனத் தொடங்கும் இவ்வகவலின் முதற்குறிப்பால் பெயர் பெற்றது. 
"ஆத்திசூடி", “கொன்றைவேந்தன்" என்பன முதற்குறிப்பால் அந்தந்த நூலுடைய பெயரானாற்போல,         
“கண்ணிநுண் சிறுத்தாம்பு" அப்பாடலை முதலாகக் கொண்ட பத்துக்கும் பெயரானாற்போல, 
இது அதனை முதலாகக் கொண்ட அகவலுக்குப் பெயராயிற்று . இது இணைக்குறள் ஆசிரியப்பாவால் 
அமைந்தது. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் என்பன போலப் பாடற்பெயரும் பாடற்கருத்தும் 
ஒருநோக்குடையனவாக அமையவில்லை. பாடற்பெயர் முதலான் அமைந்தது. 
பாடற்கருத்து அது நுதலிய பொருளான்  அமைந்தது.

    இவ்வகவலின்கண், இறைவன் சிறியவாகப் பெரியோனாகியும், கருதாக் கருத்துடைக் 
கடவுளாகியும், உலகமே தானாய் எங்கும் பரந்தும், அவற்றைக் கடந்தும், அணுத்தரு தன்மையின் 
அமைந்தும், பிரமன் மாலறியாப் பெற்றியனாக - தமக்கு எளிவந்த தலைவனாக விளங்கும் இயல்பும்
விரித்துரைக்கப் பெறுகின்றன. பழைய புராணம்,

    "திகழ் திருவண்டப்பகுதி திருவகவல் செப்பியது
    தகுசிருட்டி திதியொடுக்கம் சாற்றுதிரோ தம்பொதுவாய்
    அகலமுறத் தெரிந்திடவே யருளியநற் பொருளாகும்"

எனச் சிவபெருமானுடைய ஐந்தொழிலில் அநுக்கிரகம் நீங்கலான நான்கன் இயல்புகளை
விளக்குவதாம் என்கின்றது.

    இவ்வகவல் முதற்கண் பல அண்டங்களையும் அவற்றின் பிரிவுகளையும் உணர்த்துகின்றது 
ஆதலின் "அண்டப்பகுதி" என ஆயிற்று எனலுமாம். அது அடைமொழி ஏற்றுத் திருஅண்டப்பகுதியாயிற்று.

    இது, "அந்தச் சொரூப தடத்தத்தின் பெருமையும், நுட்பமும், பெருங்கருணையும்
பெறுதற்கருமையும் தூல சூக்குமங்களில் வைத்துச் சொல்கிறது" என்ற விளக்கம் பழைய
உரையினது. பகுதி-  மூலப்பகுதி, அண்டப்பகுதி-  அண்டங்கள் அனைத்திற்கும் 
மூலப்பகுதியாகிய சிவபுரம். அதுவே, திருவாகிய வீடுடையது. ஆதலால், அது “திருவண்டப்பகுதி"
என வழங்கப்படுவதாயிற்று என்பது பழையவுரை.

    இவ்வண்ணம் எல்லார் கருத்துக்களையும் தொகுத்து எண்ணும்போது, முதற்குறிப்பால்
பெயர் பெற்றது உண்மையாயினும் அம்முதற்குறிப்பு இறைவன் பெருமையை உணர்த்த 
உதவலானும், அவன் விசுவரூபியாகவும், விசுவாதிகனாகவும், விசுவாந்தர்யாமி ஆகவும் 
விளங்குகிறான் என்று உபநிடதம் உரைப்பது போல இப்பகுதியும் இறைவன் அண்டங்களாயும்
அவற்றின் பெரியனாயும் விளங்குகின்றான் என்று அண்டத்தின் இயல்பு உணர்த்துதலின்
அண்ட பகுதியாயிற்று எனல் பொருந்தும்.  அண்டத்தின் பொதுவியல்பு மாயையின் காரியமாய்ச்
சடமாய் இருப்பதாம். சிறப்பியல்பு இறைவன் அந்தர்யாமியாக இருக்கப் பெறுகையும், அவனது
விராட் சொரூபத்தில் தாம் பரமாணுக்களின் கூட்டமாக விளங்குகையும் ஆம், இவற்றை இப்பகுதி
விளக்குதலால் இப்பெயர் பெற்றது எனல் தெளிவு.

    முதல் 28 அடிகள், இயங்குவ நிற்பவான - சித்தும் சடமுமான எல்லாவற்றையும் அவற்றின்
இயல்பின்படி இறைவன் நடத்திக் கடந்திருத்தலை உணர்த்துவன.  "முன்னோன் காண்க", (29 ஆவது அடி)
என்பது முதல் "அவளுந் தானும் உடனே காண்க” என்பது (65வது அடி) முடிய  இறைவனுடைய 
அருட்செயல் இயல்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, உலகவர்களை விளித்து 
காணுமாறு பணிக்கின்றது. "காண்க" என நாற்பது முறை கூறியதை நோக்குக.

    "பரமானந்த பழங்கடல்” (66ஆவது அடி) என்பது முதல் “மேகன் வாழ்க” (95ஆவது அடி)
என்பது முடிய இறைவனை மேகத்திற்கு முற்றுருவகமாக்கிச் சுவைத்தது. “மேகன்  வாழ்க" 
(95 வது அடி) என்பது முதல் “எய்ப்பினில் வைப்பு வாழ்க” (105ஆவது அடி) என்பது முடிய
இறைவனை வாழ்த்திய “வாழ்க" எனப் பதினொரு முறை கூறப்பட்டுள்ளதை நோக்குக.

    "நச்சர வாட்டிய” (106 வது அடி) என்பது முதல் “களிப்போன் போற்றி” (121ஆவது அடி)
என்பது முடிய இறைவனைப் போற்றிக் கூறிய “போற்றி” ஆறு முறை கூறப்பட்டுள்ளதைக்
கவனிக்கவும். "ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல்
புகலேன்" (122 - 123 ஆவது அடிகள்) என்ற பகுதி தனது ஆற்றாமை கூறல் காண்க. 

    "மரகதக்குவா அல்" ( அன் என்றும் பாடபேதம் உண்டு) (124 ஆவது அடி வரை) என்பது முதல் 
"பற்று முற்றொளித்தும்" (145ஆவது அடி) என்பது முடிய, பசு போத முனைப்பால் தேட முயன்ற
தேவர்களுக்கு ஒளித்தமை கூறப்பட்டது. ("ஒளித்தும்" என ஒன்பது முறை வருவதை நோக்குக) 
"தன்னேரில்லோன்” (146 ஆவது அடி) என்பது முதல் இறுதிவரை பிரமன் மாலறியாப் பெற்றியோன் 
அறைகூவி ஆட்கொண்டதும், அதனால் விளைந்த அனுபவங்களும், ஆனந்தமும் 
ஆனந்தாதீதமும், பரவசமும் ஆகியன கூறப்பட்டுள்ளன.

    இவ்வண்ணம் இவ்வகவல் எட்டுப் பகுதிகளாக நூற்று எண்பத்திரண்டு அடிகளான் அமைந்தது.          

    In this hymn, Maanikkavaachakar deals with the God-Head immanent in gross as well as 
subtle manner in all created things. It will be better to quote here what Dr. G. U. Pope has
written about this chapter.

    "The very first phase in the first line of this hymn has given it its heading or nomenclature.
This poem has an introduction of 28 lines, after which the praises of Civan are inter-mingled with 
somewhat intricate but ingenious allegories. The whole partakes of the nature of a rhapsody-not
without some sublimity - and can be fully appreciated by only those who has studied the whole 
saiva system, It is an imitation, it would seem, of the Sanskrit Satarudriya, or Hymn to Rudra. 

Yet,Civan, the auspicious is imagined by the Tamil saivites quite otherwise than by the northern and 
more ancient authorities. Civan in the south is the Guru, the friend, almost the familiar companion 
of His votaries, and is addressed with a mixture of awe and of simple affection that has a peculiar 
effect. Through all Maanikkavaachakar's poems this personal relation of the God as manifested 
Guru to His devotees or disciples is, of course, most prominent. I am not aware of anything quite
like this in the mythology of the north, though among the worshippers of Vishnu in His various
incarnations something analogous may exist".

3.1     அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
    அளப்பு அரும் தன்மை , வளப் பெரும் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் 
    நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;

5.     இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் 
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின் 
    வேதியன் தொகையொடு மால்-அவன் மிகுதியும்
    தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய 
    மாப் பேர் ஊழியும் நீக்கமும், நிலையும் 

10.     சூக்கமொடு, தூலத்துச் சூறை மாருதத்து 
    எறியது வளியின் 
    கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை

15.     கரப்போன்; கரப்பவை கருதாக்
    கருத்துடைக் கடவுள்: திருத்தகும் 
    அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 
    வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி 
    கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்

20.      அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு 
    மதியில் தண்மை வைத்தோன்: திண்திறல்
    தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர்
    வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
    காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ் 

25.     நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
    மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று 
    எனைப்பல கோடி, எனைப்பல பிறவும் 
    அனைத்து அனைத்து, அவ்வயின் அடைத்தோன் - அஃதான்று
     முன்னோன் காண்க! முழுதோன் காண்க!

30.     தன் நேர் இல்லோன்-தானே காண்க!
    ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
     கானப் புலி உரி அரையோன் காண்க!
     நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
    ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!

35.     இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க !
    அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
     பரமன் காண்க! பழையோன் காண்க!
     பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
    அற்புதன் காண்க! அநேகன் காண்க!

40.     சொல்-பதம் கடந்த தொல்லோன் காண்க!
     சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
     பத்தி வலையில் படுவோன் காண்க!
     ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
     விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!

45.     அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க!
     இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க!
     அரியதில் அரிய அரியோன் காண்க!
     மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க!
    நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!

50.     மேலோடு, கீழாய், விரிந்தோன் காண்க!
     அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
     பந்தமும், வீடும், படைப்போன் காண்க !
    நிற்பதும், செல்வதும் ஆனோன் காண்க!
    கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!

55.     யாவரும் பெறஉறும் ஈசன் காண்க! 
    தேவரும் அறியாச் சிவனே காண்க! 
    பெண், ஆண், அலி எனும் பெற்றியன் காண்க!
    கண்ணால் யானும் கண்டேன் காண்க !
    அருள் நனிசுரக்கும் அமுதே காண்க! 

60.     கருணையின் பெருமை கண்டேன் காண்க!
     புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
    சிவன் என யானும் தேறினன் காண்க!
    அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
    குவளைக் கண்ணி - கூறன் காண்க!

65.      அவளும், தானும், உடனே காண்க!
    பரம - ஆனந்தப் பழம் கடல் - அதுவே 
    கருமா முகிலின் தோன்றித்
    திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித் 
    திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய

70.     ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய 
    வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப 
    நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர 
    எம்-தம் பிறவியில் கோபம் மிகுத்து,
    முரசு எறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கி

75.     பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 
    எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள 
    செம்சுடர் வெள்ளம் திசை-திசை திட்ட, வரை உறக்
    கேதக்குட்டம் கையற ஓங்கி
    இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை, 

80.     நீர்நசை தரவரும், நெடும் கண், மான் கணம்
    தவப் பெரு வாயிடைப் பருகித், தளர்வோடும்
    அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன 
    ஆயிடை வானப்பேர் யாற்று அகவயின்
    பாய்ந்து எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்து

85.     சுழித்து    எம்பந்தம் மாக்கரை பொருது. அலைத்து, இடித்து
    ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
     இருவினை  மாமரம் வேர் பறித்து எழுந்து
    உருவ, அருள் நீர் ஒட்டா அருவரைச்
    சந்தின் வான்சிறை கட்டி மட்டு அவிழ் 

90.     வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் 
    மாப்புகைக் கரைசேர் வண்டுஉடைக் குளத்தின் 
    மீக்கொள  மேல் மேல் மகிழ்தலின் நோக்கி
    அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
    தொண்ட உழவர் ஆரத் தந்த

95.     அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!
    கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
     அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
     அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க!
     நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!

100.     சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க!
    எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன், வாழ்க !
    கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
    பேர் அமைத் தோளி காதலன் வாழ்க!
    ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!

105.     காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க!
     நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி !
    பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
    நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி! நால் திசை
    நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

110.     நிற்பன நிறீஇச்
    சொல்-பதம் கடந்த தொல்லோன்
    உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் 
    கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன் 
    விண்முதல்பூதம் வெளிப்பட வகுத்தோன்

115.     பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் 
    ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை 
    இன்று எனக்கு எளிவந்து, அருளி 
    அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்
    இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் - போற்றி!

120.     அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி !
    ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
     ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்யப்
     போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
     மரகதக் குவாஅல், மாமணிப் பிறக்கம்

125.     மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழத்
    திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
     முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் 
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து 
    உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்

130.     மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 
    'இத்தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு 
    அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும் 
    முனிவு அறநோக்கி, நனிவரக் கௌவி,
    ஆண் எனத் தோன்றி,  அலி எனப் பெயர்ந்து

135.     வாள்நுதல் பெண் என ஒளித்தும், சேண் வயின், 
     ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய்
    துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை 
    அரும் - தவர் காட்சியில் திருந்த ஒளித்தும் 
    ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்

140.     பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும், 
    ஒளிக்கும் சோரனைக் கண்டனம்
    ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
    தாள் தளை இடுமின் !
    சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!

145.     'பற்றுமின்!' என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 
    தன்நேர் இல்லோன் தானே ஆனதன்மை 
    என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி 
    அறைகூவி  ஆட்கொண்டு அருளி 
    மறையோர் கோலம் காட்டி அருளலும்

150.     உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு
    அலைகடல் திரையின் ஆர்த்து-ஆர்த்து ஓங்கித் 
    தலைதடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறிப் 
    பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
    நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும், 

155.     கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் 
    ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு 
    கோல்-தேன் கொண்டு செய்தனன் 
    ஏற்றார்-மூதூர் எழில் நகை எரியின்
    வீழ்வித்தாங்கு, அன்று

160.     அருள் பெரும் தீயின் அடியோம் அடிக்குடில் 
    ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; 
    தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;
    சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ!
    தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது 

165.     தெரியேன் ஆ! ஆ!  செத்தேன், அடியேற்கு 
    அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
    விழுங்கியும் ஒல்ல கில்லேன்; 
    செழும் தண் பால் கடல் திரை புரை வித்து
    உவாக்கடல் நள்ளும் நீர்உள் அகம் ததும்ப

170.     வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும், 
    தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை 
    குரம்பை தோறும், நாய் உடல் அகத்தே 
    குரம்பை கொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய
    அற்புதமான அமுத தாரைகள்,

175.           எற்புத் துளைதொறும் ஏற்றினன்; உருகுவது 
    உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு எனக்கு 
    அள்ளூறு ஆக்கை அமைத்தனன்: ஒள்ளிய 
    கன்னல் கனிதேர் களிறுஎனக் கடைமுறை 
    என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்

180.     கருணை வான் தேன் கலக்க 
    அருளொடு பரா-அமுது ஆக்கினன்
     பிரமன், மால் அறியாப் பெற்றியோனே.

            திருச்சிற்றம்பலம்

3.1     அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்க 
    மளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி 
    யொன்றனுக் கொன்று நின்றெழில் பகரி
     னூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், 
    அளப்பு-அரும் தன்மை , வளப் பெரும் காட்சி 
    ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் 
    நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

    aNda pakuthiyin uNdai piRakkam 
    aLapparun thanmai vaLapperung kaadsi 
    onRanukku onRu ninRezil pakarin
    nooRRoru koodiyin meeRpada virinthana

பொ-ரை: 1 - 6: ஆராயுமிடத்து, அண்டமாகிய பேருலகில் பகுதிகள் உருண்டை வடிவமாக 
விளங்குகின்றன. அவை எல்லையற்ற தன்னியல்புகளைக் கொண்டுள்ளன. பலவகை வளம்
பொருந்திய பெருமை மிக்க தோற்றங்களும் ஒன்றுக்கொன்று  மேலாகவும்
வேறுபாடுகளுடனும் விளங்குகின்றன. அவ்வேறுபாடுகள் நூற்றொரு கோடிக்கதிகமாக
அளவில்லாமல் பரந்து பெருகி உள்ளன. வீட்டின் பலகணி வாயிலாகப் புகும் கதிரவன்
கதிர்களில் சிறியனவாக அணுப் போன்ற தூசிகள் தென்படுகின்றன. பேருலகங்கள் எல்லாம் 
அவ்வணுக்களைப் போன்று சிறியனவாகத் தோன்றும்படியாகத் தான் பெரியவனாக 
விளங்குகின்றான் முதல்வன்.

கு-ரை: 1 - 6: தெரியின் என்பதை முதலில் கொள்க. அண்டம், பல உலகத் தொகுப்பு. கதிரவனைச்
சுற்றியுள்ள உலகங்களின் தொகுப்பை ஓர் அண்டம் எல்லாம். உலகங்கள் அண்டத்தின் பகுதிகளாய் 
உருண்டை வடிவினவாய் அமைதல் காண்க.  'நூற்றொரு கோடி' என்பது அளவின்மையைப் பெரிதாகக் 
குறித்து நின்றது. வானிலே முத்துக்கள் போலத் தோன்றும் விண்மீன்கள் வெவ்வேறு உலகங்களாகும்.
அவை எண்ணிலாதனவாய்ப் பரந்து தோன்றுதலின், 'அளப்பருந்தன்மை' என்றார். அவை பல்வகை
வடிவும், அளவும், தன்மையும் உடையனவாகலின், 'வளப்பெருங்காட்சி' யென்றார். அவற்றின் தூரம்
முதலியன அளவிலடங்காமையின், 'நூற்றொரு கோடியின் மேற்பட' என்றார். எல்லா உலகங்களும் 
இறைவன் திருமுன் அணுக்கூட்டம் போலுதலின், இறைவன் வியாபகப் பெருமை அளவிடற்பாலது அன்று
என்பது குறித்தவாறாம்.

5.     வின்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் 
    சிறிய வாகப் பெரியோன் றெரியின் 
    வேதியன் றொகையொடு மாலவன் மிகுதியுந்
    தோற்றமுஞ் சிறப்பு மீற்றொடு புணரிய 
    மாப்பே ரூழியு நீக்கமு நிலையுஞ்

    இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
    வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும், 
    தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய 
    மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்

    ilnuzai kathirin thunaNup puraiya             
    siRiya vaaka periyoon theriyin
    veethiyan thokaiyodu maal avan mikuthiyum        
    thooRRamum siRappum iiRRodu puNariya
    maappeer uuziyum neekkamum nilaiyum

10.     சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்
    தெறியது வளியிற்
    கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்குங் கடவுள்; காப்பவை

    சூக்கமொடு தூலத்துச், சூறை-மாருதத்து
    எறியது வளியின்
    கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும் 
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை

    suukkamodu thuulaththu suuRai maaruthaththu            
    eRiyathu vaLiyin
    kodkap peyarkkum kuzakan muzuvathum 
    padaipoon padaikkum pazaiyoon padaiththavai
    kaappoon kaakkum kadavuL kaappavai

பொ-ரை: 7 - 12: படைப்புக் கடவுளரின் கூட்டமும், காப்புக் கடவுளரின்  அதிக 
எண்ணிக்கையும் அவனால் இயங்குகின்றன. தோன்றுதலும், நிலைத்தலும், வளர்தலும்,
ஒடுங்குதலும் நிகழ்தற்குரிய காலப்பகுதிகள் அவனுள் அடங்கும். மிகப் பெரும் ஊழிக்
காலங்களின் தொடக்கமும், நிலைபேறும், முடிவும் அவனது இயக்கமே ஆகும்.சிறு
சுழற்காற்றுகளாகிய நுண் பகுதிகள் பல கொண்ட பெரிய சூறாவளியின் வீச்சுக் காற்றைப்
போல, இவை முழுவதையும் இயக்கும் இளைஞனாகவும் விளங்கும் முதல்வன் அவன். 

1-12: CIVAN'S GROSS AND SUBTLE NATURE

    A study of the development of the universe with its innumerable spheres is difficult,
indeed, for immeasurable is its nature and abundant its phenomena. If one were to tell the way in
which they excel each other in beauty, they spread widely, numbering a hundred crores 
(one thousand millions) and more. Such is the greatness of Lord Civan. All these universal bodies
look like the crowded specks that are floating in a ray of sunlight streaming into the house
through a hole in the roof.

    If one were to research into it (one would find that) the hordes of Brahmas and multitudes 
of Vishnus, along with the cosmic happenings of emergence, existence, and the very great
cataclysmic deluge associated with the end of all things, and the revival from this dissolution,
and sustenance following it - all these mighty universal occurrences are like small eddies of 
wind in the devastating tornado - spun and swirled about by the Eternal Youth - Civa.

கு-ரை : 7-12: அண்டங்கள் பலவாதலின், அவைதோறும், அவற்றைப் படைப்போரும் காப்போருமாய 
கடவுள் பலதிறப்பட்டனர். ஒடுங்குவோர் இறைவனோடு ஒன்றித்து ஓதப்பட்டனர். உலகம் யாவும்
தோன்றி யொடுங்கும் பேரூழிக் காலமானது பெரும் புயற்காற்றுப் போலவும், அண்டத்தின் கடவுளரின் 
காலங்கள் பெரும் புயலிலடங்கிய சிறு சுழல் காற்றுப் போலவும் கருதப்பட்டன. சூக்கம்=சூக்குமம்; நுட்பம்.
தூலம் = பருமை. சிறு புயல்கள் நுட்பப் பகுதிகளாகவும், பெரும் புயல் தூலமாகுவுங் கருதப்படும். சூறை 
மாருதம் = சுழற்பெருங் காற்று. எறிதல் = வீசுதல், என்றும் ஒருபடித்தாய் முதிர்ச்சியிலன் ஆகலின் ,
இறைவன் இளைஞன் ஆயினன். எல்லாம் தோன்றி முதிர்ந்து ஒடுங்கி யொழியத் தான் ஒருவனே
அம்மாறுபாடு இல்லாதவன் என்பது கருத்து. 'முழுவதும்' என்பதைக் 'கொட்க' என்பதனோடு சேர்க்க.
கொட்க= சுழல. மாப்பேரூழிக் காலமும், மீண்டும் மீண்டும் வருதலின் 'சுழல' என்றார்.

15.     கரப்போன் கரப்பவை கருதாக் 
    கருத்துடைக் கடவு டிருத்தகு
    மறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் 
    வீடு பேறாய் நின்ற விண்ணோர் பகுதி
    கீடம் புரையுங் கிழவோ னாடொறு

    கரப்போன்: கரப்பவை கருதாக்
    கருத்துடைக் கடவுள்: திருத்தகும்
    அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 
    வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி 
    கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்

    karappoon karappavai karuthaa 
    karuthudai kadavuL thiruththakum        
    aRuvakai samaiyaththu aRuvakai yoorkkum
    viidupeeRay ninRa viNNoor pakuthi 
    kiidam puraiyum kizavoon naaLthoRum

பொ-ரை: 13 - 19: படைப்புக் கடவுளைப் படைக்கும் பழமைப் பெரியோன் .
படைத்தனவற்றைக் காக்கும் கடவுளைக் காக்கும் மேலோன்; காக்கப் பட்டனவற்றை
உரியகாலத்தில் ஒடுக்குவோன். ஒடுக்கியன நன்கு இளைப்பாறும் வரை அவற்றை மீண்டும்
படைத்துக் காக்க எண்ணாத திருவுள்ளமுடையோன் எம்பெருமான். அறுவகைச் சமய 
நெறியின்கண் நிற்கும் அறுவகைப்பட்ட தவத்தினர்க்கும் முத்திப்பேறு அளித்தற்குரிய 
கடவுள் கூட்டம், முதல்வோன் முன்னே புழுக் கூட்டம் போல் சிறியதாய்த் தோன்றுகிறது.
அவனோ, தானே உயர் முத்தியளிக்கும் உயர்வுடையோனாய் விளங்குபவன்.

கு-ரை: 13 - 19: உலகங்களை ஒடுக்கம் செய்யும் உருத்திர வருக்கத்தார் தம் செயலற்று இறைவனோடு
அத்துவிதக் கலப்புடையராதலின், அவர் செயல் இறைச் செயலாகவே கூறப்பட்டது உணர்க .
கருத்து= திருவுள்ளம். அடிகள் காலத்துச் சமயங்கள், மணிமேகலையுள் கூறப்பட்டனவாக இருத்தல்  கூடும்.
அவற்றுள் சில, கடவுள் கொள்கையில்லாதன. கடவுட் கொள்கையுடைய அறுசமயங்களே 'திருத்தகும்'
எனச் சிறப்பிக்கப்பட்டன. சைவம், வைணவம், பிரமம், நையாயிகம், வைசேடிகம், ஆசீவகம் முதலிய
மதங்கள் ஒருவகையான கடவுட்கொள்கையொடு விளங்கின. ஆண்டுக் கூறப்பட்ட சைவம், உருத்திர 
வணக்கமாய் அமைந்திருத்தல் பற்றி, அறுவகைச் சமயத்துள் வைத்தோதப்பட்டது போலும். 
அச்சமயங்களின் தெய்வங்கள், அவை முடிவாகக் கூறும் தத்துவத் தலைவராகிய உயிர்களாய் அமைதலின்
அவை இறைவனை நோக்கப் புழுப்போன்றன. மெய்யான வீடுபேற்றைத் தரத்தக்க கடவுள் ஒருவனே
ஆதலின், அவனைக் 'கிழவோன்' என்றார்.

20.     மருக்கனிற் சோதி யமைத்தோன் றிருத்தகு
    மதியிற் றண்மை வைத்தோன் றிண்டிறற்
    றீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
    வானிற் கலப்பு வைத்தோன் மேதகு 
    காலி னூக்கங் கண்டோ னிழறிகழ்

    அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு 
    மதியில் தண்மை வைத்தோன், திண் திறல் 
    தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர் 
    வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
    காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ்

    arukkanil soothi amaiththoon thiruththaku         
    mathiyil thaNmai vaiththoon thiNthiRal 
    thiiyin vemmai seythoon poytheer
    vaanil kalappu vaiththoon meethaku 
    kaalin uukkam kaNdoon nizalthikaz

25.    நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
    மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென் 
    றெனைப்பல கோடி யெனைப்பல பிறவு 
    மனைத்தனைத் தவ்வயி னடைத்தோ னஃதான்று 
    முன்னோன் காண்க முழுதோன் காண்க

    நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 
    மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று 
    எனைப்பல கோடி, எனைப்பல பிறவும் 
    அனைத்து அனைத்து, அவ்வயின் அடைத்தோன் - அஃதான்று
    முன்னோன் காண்க! முழுதோன் காண்க!

    niiril insuvai nikaznthoon veLippada
    maNNil thiNmai vaiththoon enRu enRu
    enaippala koodi enaippala piRavum
    anaiththu anaiththu avvayin adaiththoon aqthaanRu
    munnoon kaaNka muzuthoon kaaNka

பொ-ரை: 20 - 28: ஞாயிறு மண்டலத்திலே தினந்தோறும் திகழும் படியான ஒளியினை 
அமைத்தவன். அழகு பொருந்திய திங்கள் மண்டலத்தில் குளிர்ச்சியை பொருத்தினவன்.
மிகுந்த ஆற்றலுடைய நெருப்புக்கு வெப்பத்தை உண்டாக்கினவன். நிலையாகவுள்ள 
வானத்திலே, எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து, தானும் கலந்து நிற்கும் இயல்பினை 
அமைத்தோன். மேலெழும் தன்மையுடைய காற்றிலே கிளர்ச்சியைப் பொருத்தினோன்.
பொருட்களின் தோற்றம் நிழலாய் விழும் நீரிலே இன்சுவை புலப்படுத்தும் தன்மையைப் 
படைத்தவன். நிலத்திலே கடினமாகிய திரட்சியை இயற்றினோன். இவ்வாறு எந்தக் 
காலத்திலும், எத்தனையோ கோடி பொருட்களிலும், ஏனைய பிறவற்றிலும் அவ்வவற்றின்
தன்மையை அவ்வவற்றுக்கு இடமாகப் பொருத்தினோன்.

13- 28: THE COSMIC OPERATIONS OF LORD CIVA

Lord Civan, the Supreme God, is the Ancient One,

Who creates the Creator of the entire universe,

Who preserves the Preserver of things created.

Who absorbs the things preserved. He is the mindful one who is keeping the souls, worlds etc.,       
unto Himself, thinks not of their bringing forth till the appointed time for them to reappear again
after the aeons of involution. He is the hoary One before whom the six categories of theology,
with their six diverse kinds of philosophies that are the goals and salvation to their followers, are
like mere worms. It is Lord Civan who, day by day, gave lustre to the Sun, placed coolness in
the sacred moon, kindled the heat in the mighty fire, gave the external ether its pervasiveness
endowed the ambient with energy, gave sweet savour to the clear and transparent water,
endowed the Earth with its conspicuous density.

Furthermore, He endowed, by His grace, many many millions of things with their relative
qualities in appropriate measure suitable to catch.

கு-ரை :  20 - 28: கொடிநிலை, கந்தழி வள்ளி என்றபடி ஞாயிறு, திங்கள், நெருப்பு ஆகிய மூன்றும்
முதற்கண் விதிக்கப்பட்டன. அவை முத்தொழிற்குரியன ஆதல்  காண்க. பொய்தீர்= நிலையாமை அற்ற,
நீரானது  கண்ணாடி போல வடிவங்களின் நிழல் காட்டுதலின் ' நிழல்திகழ்' என்றார். கடினப்
பொருள்களின் சுவையைப் புலப்படுத்துவது நீரே.   இன்சுவை= நல்ல சுவை, 
நிகழ்ந்தோன்= நிகழ்வித்தோன். 

30.     தன்னே ரில்லோன் றானே காண்க 
    வேனத் தொல்லெயி றணிந்தோன் காண்க 
    கானப் புலியுரி யரையோன் காண்க 
    நீற்றோன் காண்க நினைதொறு நினைதொறு
    மாற்றேன் காண்க வந்தோ கெடுவே

    தன் நேர் இல்லோன் தானே காண்க! 
    ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
    கானப்புலி உரி அரையோன் காண்க!
    நீற்றோன் காண்க! நினைதொறும் நினைதொறும்
    ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!

    thanneer illoon thaanee kaaNka 
    eenath tholeyiRu aNinthoon kaaNka
    kaana puliuri araiyoon kaaNka 
    niiRRoon kaaNka ninaithoRum ninaithoRum 
    aaRReen kaaNka anthoo keduveen

35.     ன்னிசை வீணையில் லிசைந்தோன் காண்க 
    வன்னதொன் றவ்வயி னறிந்தோன் காண்க 
    பரமன் காண்க பழையோன் காண்க
    பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க 
    வற்புதன் காண்க வனேகன் காண்க

    இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க !
    அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
    பரமன் காண்க! பழையோன் காண்க !
    பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
    அற்புதன் காண்க! அநேகன் காண்க!

    innisai viiNaiyil isainthoon kaaNka
    annathonRu avvayin aRinthoon kaaNka 
    paraman kaaNka pazaiyoon kaaNka 
    piraman maal kaaNaa periyoon kaaNka 
    aRputhan kaaNka aneekan kaaNka             


பொ-ரை: 29 - 38: அஃதன்றியும் படைப்புப் பொருள் யாவற்றுக்கும் முன்னே உள்ளவன்
அவன் என்றறிக. அவன் எல்லாவற்றையும் உடையவன் என்றறிக. யாரும் நிகரில்லாத
தனக்குத்தானே ஒப்பானவன் என்றறிக. தாருகா வனத்து முனிவர் வேள்வி செய்து விடுத்த
காட்டுப் புலியினைக் கொன்று அதன் தோலை உடையாக அரையில் அணிந்தவன் என்று 
அறிக.  திருநீறணிந்த எம்பெருமான் அருள் திறத்தை எண்ணுந்தோறும் அவனின் 
பிரிவாற்றாது வருந்தி, பிரிவு அதிகப்பட, ஐயோ! நான் கெட்டழிவேன். இனிய ஓசையானது
வீணையின் கண் நுட்பமாய்க் கலந்திருத்தல் போன்று அவன் நமது உயிரில் கலந்துளான்
என்று அறிக. அத்தகைய இசை ஒன்றினை அதனிடத்தில் அறிந்து அருள் புரிந்தான் என்று 
அறிக. எவற்றுக்கும் மேலானவன் என்று அறிக. அயனும் அரியும் அளந்தறிய ஒண்ணாப்
பெருமை உடையவன் என்று அறிக. 

கு-ரை: 29 - 38: 'காண்க' என்பதை அசையாகவும் கொள்ளுப. நோக்கியருள்க என்றும், நீயறிக என்றும்
இருவகையாகப் பொருள் கொள்ளுதலுமுண்டு.  ஆதியில்லாதவனென்பார், முன்னோன் என்றார். ஒரு 
காலத்திலே நிலத்தைப் பாதாளத்திற் சுருட்டிச் சென்ற இரணியாக்கனைக் கொன்று நிலத்தை மேலெடுத்த
போது, பன்றியுருவெடுத்த திருமால் அவன் குருதியைக் குடித்துப் பிறரைத் துன்புறுத்தினமையால்,
அப்பன்றியின் பல்லைப் பறித்துத் தன் மார்பிற் சிவபிரான் அணிந்த கதை சிவரகசியத்துள் காண்க.

தாருகாவனக் கதை வெளிப்படை.  எல்லாவற்றையும் ஒடுக்கி, அவற்றின் சாம்பலை அணிந்தமையால், 
'நீற்றோன்' என்றார். திருப்பெருந் துறையிலே நீறணிந்த பெருமான் பிரிந்த காலமுதல், வீடுபேற்றைத்
தலைப்பட அவாக்கொண்ட அடிகள் பிரிவாற்றாமை தெரிவித்தார். வீணையில் இன்னிசையொப்ப
இசைந்தோன், என்றது இறைவன் தோன்றாது சார்பாயிருக்கும் தன்மை குறித்தவாறாம். பயிற்சியினால் 
வீணையில் இசை தோன்றுவதொப்ப, அன்பினால் அறிவில் இறைவன் விளங்குவன் என்றலும் ஒன்று .
இராவணன் வரலாறு தெளிவு.  'பரமன்' என்றது மேலான முத்தியருள்பவன் என்று குறித்தற்கு.
எக்காலத்தும் வீடருள்பவன் அவனேயாதலின் 'பழையோன்' என்றார்.  யான், எனது என்னும்
செருக்குள்ளபோது இறைவன் தோன்றானாதலின், 'பிரமன் மால் காணா' என்றார்.

40.    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 
    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
    பத்தி வலையிற் படுவோன் காண்க
    வொருவ னென்னு மொருவன் காண்க 
    விரிபொழின் முழுதாய் விரிந்தோன் காண்க

    சொல்-பதம் கடந்த தொல்லோன் காண்க!
    சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க !
    பத்தி வலையில் படுவோன் காண்க!
    ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!

    sorRpatham kadantha tholloon kaaNka            
    siththamum sellaa seedsiyan kaaNka 
    paththi valaiyil paduvoon kaaNka
    oruvan ennum oruvan kaaNka
    viripozil muzuthai virinthoon kaaNka

பொ-ரை: 39 - 41: வியத்தகு அதிசயங்கள் புரியும் பல்வேறு வடிவம் உடையோன் இறைவன்.
புகழ் பதவிகளைக் கடந்து நிற்கும் பழமையோன். சொல்லும் மனமும் சென்று அடைய
ஒண்ணாத தொலைவில் உள்ளோன்.

கு-ரை: 39 - 41 : கடவுளின் அருஞ்செயல்களை உயிர்கள் கணக்கிடவல்லன அல்ல; அவை அவற்றிற்கு
வியப்பு விளைப்பனவே. சிலர் இயற்கைச் சட்டங்கள் அனைத்தையும் உணர்ந்தாற்போலக் கடவுள் செயல்
இயற்கைக்கு மாறாகாவெனப் பேசி, அற்புதங்களை மறுப்பார்.  அது பொருந்தாமை ஈண்டுக்
குறிக்கப்பட்டது எனலாம். வழிபடுவார்க்கு அவ்வவர் பொருளாய் நின்றருளுதலின், 'அநேகன்' என்றார்.
சொல்= புகழ்ச்சி.  புகழ்ச்சி மிக்க விண்ணவர் பதவிகளைத் தோற்றுவித்தவனாய்  அவற்றிற்கு
முற்பட்டவனாய் இறைவன் இருத்தலின், அவனைப் பதவிகளிலுள்ள தெய்வங்களோடொருவனாகக்
கணித்தல் தவறென்பார்.  

    அவன் பதங்கள் யாவையும் கடந்தவன் என்றார். பதங்களைக் கடந்து, உயிர்
பரமுத்தி அடையினும், அது பழைமை உடையது ஆகாது; இறைவனே 'தொல்லோன்' ஆவனென்பது பதம், 
என்பதற்குத் தாம் என்று பொருள் கொண்டு, சொல்லினாலே உணர்த்தப்படாது, 'சொல்' தோன்றுவதற்கு
முன்னே உள்ளோன் என்றார் என்றலும் ஒன்று.  'சித்தமும்' என்றமையால், வாக்கிற்கும் காயத்திற்கும்
எட்டாதவன் என்பது கூறியவாறாயிற்று. தம்மை மறந்து செய்யும் மெய்யன்பினுள் அகப்படுவனென்றது.
ஒன்றிற்கும் எட்டாதவன் என்றால், அவனால் பயன் பெறுதல் இயலாதோ என்ற ஐயத்தை நீக்குதல்
பொருட்டு என்க.

45.     வணுத்தருந் தன்மையி லையோன் காண்க 
    விணைப்பரும் பெருமையி லீசன் காண்க
    வரியதி லரிய வரியோன் காண்க
    மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க
    நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க

    அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!
    இணைப்பு-அரும் பெருமையில் ஈசன் காண்க!
    அரியதில் அரிய அரியோன் காண்க !
    மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க!
    நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!

    aNuththarum thanmaiyil aiyoon kaaNka 
    iNaipparum perumaiyil iisan kaaNka
    ariyathil ariya ariyoon kaaNka
    maruvi epporuLum vaLarppoon kaaNka 
    nuul uNarvu uNaraa nuNNiyoon kaaNka

பொ-ரை: 42 - 48: அன்பாகிய வலையில் அகப்படுபவன், ஒப்பற்றவன் என்று சொல்லப்படும் 
அக்கடவுள், விரிந்த உலகமெங்கும் பரந்து நின்றவன். அணுவைக் காட்டிலும் வியத்தகு
நுட்பம் கொண்டவன். ஒப்பிடுவதற்கரிய பெருமை உடையவற்றுள் தலைநின்றவன். ஆய்ந்து 
அறிதற்கும், பெறுதற்கும் அரிய பலவற்றுள்ளும் அருமையிலும் அருமையுடையோன் .
எல்லாப் பொருட்களையும் தழுவி நின்று அவற்றை வளர்த்துக் காப்பவன்.

கு-ரை: 42 - 48: அன்பர்பால் இறைவன் தானே வந்தருளுதல், மீன் மான் முதலியன வலையுள் தாமே
வந்து சிக்குதல் போலுதலின் , அவ்வாறு கூறினர் என்ப. வலையைப் பரப்பினவர் செயலற்றிருத்தல் போல
அன்பும் அன்பு மாத்திரமுடையராய்ச் செருக்கற்றுச் செயலற்றிருத்தல் குறித்தவாறாம். 'யானே கருத வர
நாடார், சும்மா வருவார்'  என்றதும் அது.  வலையிற் சிக்கியவை வெளிப்போகாமைபோல, அன்பில் ஈடுபட்ட 
கடவுள் அன்பு விட்டகலாமையும் குறித்தவாறாம். பொழில் = உலகம். விரிந்தோன் = இயல்பாகவே 
வியாபகமுடையோன். மிக நுண்ணியவற்றுள் நுண்ணியனாய்ப் பெரியவற்றுள் பெரியனாய் அரியவற்றுள் 
மிக அரியனாய் உள்ளவன், பெருங் கருணையால் எவற்றிற்கும் சார்பாய் அவற்றைப் பாதுகாப்பான் என்பது
பிற அடிகளிற் குறிக்கப்பட்டது. 

50.     மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க
    வந்தமு மாதியு மகன்றோன் காண்க 
    பந்தமும் வீடும் படைப்போன் காண்க
    நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க 
    கற்பமு மிறுதியுங் கண்டோன் காண்க

    மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க !
    அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
    பந்தமும், வீடும், படைப்போன் காண்க !
    நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
    கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!

    meelodu keezaay virinthoon kaaNka 
    anthamum aathiyum akanRoon kaaNka 
    panthamum viidum padaipoon kaaNka 
    niRpathum selvathum aanoon kaaNka 
    kaRpamum iRuthiyum kaNdoon kaaNka

55.     யாவரும் பெறவுறு மீசன் காண்க
     தேவரு மறியாச் சிவனே காண்க 
    பெண்ணா ணலியெனும் பெற்றியன் காண்க 
    கண்ணா லியானுங் கண்டேன் காண்க 
    வருணனி சுரக்கு மமுதே காண்க

    யாவரும் பெறஉறும் ஈசன் காண்க!
    தேவரும் அறியாச் சிவனே காண்க !
    பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க !
    கண்ணால் யானும் கண்டேன் காண்க !
    அருள் நனிசுரக்கும் அமுதே காண்க!

    yaavarum peRa uRum iisan kaaNka 
    theevarum aRiyaa sivanee kaaNka 
    peN aaN ali enum peRRiyan kaaNka
    kaNNaal yaanum kaNdeen kaaNka 
    aruL nani curakkum amutE kaaNka

பொ-ரை: 49 - 58: சுட்டியறியும் கல்வியறிவால் அறியப்படாத நுட்பமுடையோன் . மேலும் 
கீழுமாய் எங்கும் நிறைந்தவன். முடிவும் மூலமும் இல்லாதவன். பிறவிக் கட்டையும், பிறவி
நீக்கத்தையும் உண்டாக்குவோன். இயங்காப் பொருள், இயங்கும் பொருள்  யாவிலும் 
கலந்து அவையேயாய் நின்றவன். ஊழி முதலும் முடிவும் கண்டவன். பக்குவம் வந்த காலை
எல்லாரும் தன்னை அடையும்படியாக வந்து ஆட்கொள்ளும் முதல்வன். மலம் நீங்காத
எத்தகைய விண்ணவரும் காணவொண்ணாத  மங்கலப் பொருளாவான். பெண்ணாகவும்,
ஆணாகவும், இரு தன்மையும் இல்லாதவனாகவும் உள்ள வடிவோடும் தன்மையோடும் தோன்றுகிறான். 
அவனை ஒன்றுக்கும் பற்றாத அடியேனும் கண்ணாற் காணப் பெற்று மகிழ்ந்தேன்.

கு-ரை: 49 - 58; நூலறிவு தூய மாயையில் எழும் நால்வகை வாக்கிற்கு அப்பாற்பட்டதன்று. அதனால்
தூய மாயையும் கடந்த முதல்வனை அவ்வறிவால் அறிய முடியாது என்றலும் ஒன்று. 
மேன்மையுடையார்பாலும் தாழ்மையுடையார்பாலும் இறைச்செயல் காணப்படுதலின், 'மேலோடு கீழாய்
விரிந்தோன்' என்றாரென்க. கற்பம் - படைப்பு முதல் இறுதிவரையுள்ள பெரும்பொழுது. இறைவன் முன்
காலமனைத்தும் ஒருங்கே தோன்றுதலின், 'கற்பமுமிறுதியுங் கண்டோன்' என்றாரென்க. 'தேவர்' என்றது 
ஞானம் பெற்ற உருத்திர வருக்கத்தாருக்குக் கீழ்ப்பட்ட வானவரையே குறிக்கும். பெண், ஆண், அலி
என்ற வகைத் தோற்றங்கட்கும் காரணமாய பெருமானை, அத்துவிதக் கலப்புப்பற்றி, அத்தன்மைகளை 
உடையான் என்றலுமொன்று.  இறைவன் ஆண் மூர்த்தங்களாகவும், சத்தி மூர்த்தங்களாகவும் , 
அருவுருவமூர்த்தமாகவும் தோன்றுதலின், அவ்வாறு கூறினார் என்பாரும் உளர்.  அடிகட்கு இறைவன் 
திருவடிவு காட்டினமை தெளிவு. திருவருளை நாடா நிலைமை தன்பாலுளதாக அடிகள் கருதுதலின் 
'யானும்' என்றார். தன் சிறுமையும் இறைவன் பெருமையும் குறித்தவாறாம். 

60.     கருணையின் பெருமை கண்டேன் காண்க
    புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
    சிவனென யானுந் தேறினன் காண்க
    வவனெனை யாட்கொண் டருளினன் காண்க
    குவளைக் கண்ணி கூறன் காண்க

    கருணையின் பெருமை கண்டேன் காண்க!
    புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
    சிவன் என யானும் தேறினன் காண்க !
    அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
    குவளைக் கண்ணி - கூறன் காண்க!

    karuNaiyin perumai kaNtEn kaaNka
    puvaniyiR seevadi thiiNdinan kaaNka
    sivanena yaanum theeRinan kaaNka
    avanenai aadkoNdu aruLinan kaaNka
    kuvaLai kaNNi kuuRan kaaNka

பொ-ரை: 59 - 65: அருள் மிகுதியாக முகிழ்க்கும் அமுத ஊற்றானவன் அவன். அவனது 
கருணையின் பெருமையை உணர்ந்தேன். என்னை இந்நிலவுலகில் ஆட்கொள்ள வேண்டி
தன் செவ்விய பாதங்கள் பொருந்த வந்தவன். பேரின்பம் அளிக்கும் பரம்பொருள் ஆனவன்
என்று சிறியேனும் தெளிந்தேன்.  அவன் குவளை மலர் போலும் கண்களை உடைய 
உமையொருபாகன் . திருவருட்சத்தியும், தானும் ஒருங்கு வந்து என்னைப் பிறவிக்
கடலிலிருந்து எடுத்து, ஆட்கொண்டு, பேரருள் புரிந்தவன் அவன் என்று அறிக.

29-65: FORTY EPITHETS IN HIS PRAISE

Know Thou that, He is the primeval one,

Know Thou that, He is the whole one, 

Know Thou that, He is the incomparable,

Know Thou that, He adorned Himself with the tusk of the ancient wild boar,

Know Thou that, He wears the forest's tiger skin around His loins. 

Know Thou that, He besmears His body with the holy ash. The more and more  I bring Him to
my memory, I am unable to bear His separation. Alas! I shall perish if the separation lasts long.

Know Thou that, He is the melody in the sweet sound of the lute (Veena).           

Know Thou that, He plays a sweet tune in that Veena.

Know Thou that He is the supreme one! That He is the ancient one; That He is the great one
whom Brahma and Vishnu could not see. 

Know Thou that. He is the wonderful one, that He is the many.
 
Know Thou that, He is the ancient one transcending words.

Know Thou that, He is the farthest one whom human thought cannot reach.

Know Thou that, He gets trapped in the net of loving dedication.

Know Thou that, He is the only one adored as the peerless one.

Know Thou that, He extends throughout the wide expansive earth. 

Know Thou that, He is more subtle than the tiny atom.

Know Thou that, He is the "Eesan" (Supreme Being) of unparalleled greatness.

Know Thou that,
 He is the precious one, rarest of all that is rare.

Behold, Him who sustains each and everything, permeating them.

Behold, Him who is too subtle for book knowledge.

Behold, Him who spreads above, below and everywhere in the universe.

Behold, Him who has no end or beginning.

Behold, Him who ordains bondage and deliverance.

Behold, Him who has become all that moves and all that remains static.

Behold, Him who is a witness to the beginning and the end of aeons.

Behold, Him who is the supreme one whom all may attain.

Behold Civan who is not perceived even by devas.

Behold, Him whose glory is that He is the male, the female, and the "neither one"!

Behold, Him whom even I have seen with my own eyes. 

Behold, Him who is the fount of ambrosia yielding abounding grace.

Behold! I have seen the greatness of His mercy!

Behold, who (for my sake) trod on earth with His rosy Feet.

Behold! Even I am convinced that He was none other than Civan!

Behold! He showered His grace, making me His own!

Behold! the one who is concorporate with Uma whose eyes are purple, like Indian water lily.

Behold ! them both who came together

(Note: She is responsible for removal of bondage and He is responsible to bestow deliverance
and that is why they both come together whenever they want to grace their devotees).

கு-ரை: 59 - 65: மேலே 'தானும் தன் தையலும் தாழ்சடையோ னாண்டிலனேல்' என்றதும் காண்க. பாசம் 
நீங்கிய காலை, திருவருட்சத்தியின் துணை கொண்டு சிவத்தையடைதலின் அம்மையை உடன் கூறினர்.
குவளை - தண்ணருளைக் குறிக்கும். அது நீலோற்பலம் எனப்படும். பாச நீக்கத்திற்கு அவளும்
சிவப்பேற்றிற்கு அவளும் காரணராதலின், இரண்டையும் ஒருங்கு பெற்ற அடிகள் தம்மை அவளும் தானும்
உடனே ஆட்கொண்டருளினமை கூறினார்.

65.     வவளுந் தானு முடனே காண்க 
    பரமா னந்தப் பழங்கட லதுவே 
    கருமா முகிலிற் றோன்றித்
    திருவார் பெருந்துறை வரையி லேறித் 
    திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய

    அவளும், தானும், உடனே காண்க!
    பரம - ஆனந்தம் பழம் கடல் - அதுவே 
    கருமா முகிலின் தோன்றித்
    திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித்
    திருத்தகு மின் ஒளி திசை-திசைவிரிய,

    avaLum thaannum udanee kaaNka
    paramaanantha pazangkadal athuvee 
    karumaa mukilin thoonRi
    thiruaar perunthuRai varaiyil eeRi 
    thiruththaku min oLi thisai thisai viriya

பொ-ரை: 66 - 72: மேன்மையான பேரின்பக் கடல் முழுதும் சூல் கொண்ட மேகம் போல 
வடிவெடுத்து அவனது ஞான ஒளி விளங்குகிறது. அழகு நிறை திருப்பெருந்துறை என்னும்
மலை மேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்சமானது எல்லாத் திசைகளிலும் 
பரவுமாறு அந்த ஞான ஒளி காணக் கிடைக்கிறது. ஐவகை வேட்கைப் பிணிப்பு எனும் 
வாள்போல் கொடிய பாம்புகள் கெட்டு விட வந்த ஞான ஒளி அது. பிறவித் துன்பம்
என்னும் வெப்பமானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ளுமாறு வந்த  ஞான ஒளி 
அது. மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போல என்னை ஆட்கொள்ளத் தோன்றிய
ஆசிரியனது ஞான ஒளியாகும் அது.

கு-ரை: 66 - 72:  'அதுவே' என்பது பரமானந்தப் பழங்கடலில் ஒரு பகுதி மாத்திரமன்றி முழுதுமே
என்பதைக் குறித்து நின்றது. கரு= சூல்; நிறைநீர். புலம் = பொறியறிவாலாகிய அவா, பந்தனை=பந்தம்,
கட்டு விடமானது, உடம்பிலுள்ள குருதியைப் பிணித்தாற்போல ஐம்புல அவா உயிரைப் பிணித்து  அறிவைத்
தொலைத்தலின் அவை பாம்பிற்கு ஒப்பிடப்பட்டன. 'வெந்துயர்' என்பதில் வெம்மை, கடுமை குறித்தது.
துயர், பலதிறப்பட்டு விரிதலின் அதற்கு 'மாத்தலை' கூறினர். தோன்றி - மழைக் காலத்துச் செடி.
தோன்றிய ஆசிரியன் - தோன்றி எனப்பட்டனன். வாள், ஞானத்திற்கு அறிகுறி. 

70.     வைம்புலப் பந்தனை வாளர விரிய
    வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப 
    நீடெழிற் றோன்றி வாளொளி மிளிர 
    வெந்தம் பிறவியிற் கோப மிகுத்து
    முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்

    ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய
    வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப
    நீடு எழில்தோன்றி, வாள் ஒளி மிளிர 
    எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து 
    முரசு எறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கி

    aimpula panthanai vaaLaravu iriya 
    venthuyar koodai maaththalai karappa 
    needuezil thoonRi, vaaL oLi miLira
    entham piRaviyil koopam mikuththu 
    murasu eRinthu maapperung karuNaiyin muzangki

75.     பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட
    வெஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச் 
    செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையுறக் 
    கேதக் குட்டங் கையற வோங்கி
    யிருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

    பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 
    எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள
    செம்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
    கேதக்குட்டம் கையற ஓங்கி 
    இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை,

    puupurai anjsali kaanthaL kaadda 
    ensa inaruL nuN thuLi koLLa
    senjsudar veLLam thisaithisai thevidda varaiyuRa
    keetha kuddam kaiyaRa oongki
    irumus samayaththu oru peey theerinai

பொ-ரை: 73 - 82: எங்கள் பிறவிகளோ தம்பலப் பூச்சிகள் போல் செறிந்து தேன்றுகின்றன.
இறைவனின் கருணையோ முரசுபோலும் இன்முழக்கம் செய்கிறது. பூப்போன்ற அடியாரின்
கூப்பிய கைகள் காந்தள் மலர் போலும் விளங்குகின்றன. குறையாத இன்பம் தரும் 
அருளானது சிறுதுளியாக வடிவம் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம்
திக்கெங்கும் திரண்டோங்கியது. ஒரு வரையறைப்படுமாறு மக்கள் தம்தம் சிற்றறிவிற்கு 
ஏற்பக் கொண்ட கொள்கைகளின் கூட்டம் எல்லையற்று உயர்ந்து பரந்துள்ளது. கானல்
நீரை அணுகி, விடாய் தீரப் போந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போல,
சிற்றறிவுடைய உயிர்கள் அறுசமயம் எனும் கானல் நீரைத் தேடிச் சென்றன. கதியடையும்
விருப்பத்தால் ஆராய்ச்சியுடன் சென்ற அந்த சிற்றுயிர்கள் கானல் நீரைப் பருகிய மான்கள் 
போன்று தளர்ச்சியொடு நடந்து மிகக் கெடுதியான தாகம் நீங்கப் பெறாது உழன்றன.

66-82: THE SEA AND THE CLOUD

(Note: It is desirable to quote here the special remarks of Dr. G.U. Pope about these lines (66- 95)
to enable the readers to understand the inner mystical meaning of the allegory described
in these lines)

Dr. G.U. Pope remarks: "Lines 66 to 95 are well nigh untranslatable, for they contain a subtle and
intricate allegory by means of which the grace of manifested Civan, who is praised under the title of
"cloud" is set forth. The idea is (line 66) that the infinite sea of rapturous supreme felicity is Civan, 
but (line 67) as the cloud in the monsoon season sucks up water from the sea and rises in black masses
that cover the sky, while all the phenomenon of the wonderful outburst of the beneficent, but also
fearful monsoon are exhibited, so does the Supreme manifest Himself as the Guru, the object of love,
and giver of grace to His worshippers.

     In the monsoon season, lightning flash from one end of the sky to the other, 
crested torrents sweep down over the hills, bearing with them uprooted plants and trees,
and not unseldom, huge snakes that have been disturbed from their rocky mountain-hiding places. 
The various kinds of "Gloriosa' spread forth their beautiful flowers like supplicating hands, while every 
valley and hollow is filled with water. Meanwhile, as the heat is most intense just before the burst of
the monsoon, the poet pictures a troop of thirsty antelopes, deluded by the mirage which means to
offer them refreshing streams and shade and disappointed they are left to die of thirst in the wilderness. 

    Meanwhile the pain of the fierce heat has ceased. Down the gorges of the hills, the torrent
rushes, and is received into tanks prepared for it by the expected husbandmen. These lakes are 
fragrant with beautiful flowers, and on their banks the maidens have kindled fires with aromatic woods
at which they dry their hair and garments after the refreshing bath. The cultivators may now sow their
seed and expect a rich harvest. All this is the work of the black clouds, which draw water from the sea
to fertilize the earth. In these lines every detail of the description has its mystical meaning which
hardly needs illustration. The readers may compare lines 61 - 64 in decad VII".

    The entire ancient ocean of bliss got transformed into the cumulus cloud (Civan, the Lord of 
Mercy) and rising, reached the beautiful mountain in Tirup-Perun-Thurai. There the dazzling 
lightning of grace appropriate flashed forth in every direction, seeing which the bright serpents
of the binding five senses fled away in fear. The torturous summer of severe heat withdrew its 
mighty head, while the long stalked beauteous glory lily (Thondri - gloriosa superba) shone in
blazing white like the brilliance of knowledge of Civan who manifests Himself as the divine
teacher to make his devotees His own.

    Like my innumerable births the cochineals (ஈசல்- தம்பளப்பூச்சி) swarmed. The mighty grace of
Civan came as thunder and resounded as war drums, while the Kanthal flowers looked like the
open palms joined in supplication ready to offer flowers at the Feet of the Lord. Civan's sweet       
unfailing grace formed into tiny drops, and the gleaming torrents of the ruddy fresh floods
swelled on every direction rendering the ponds of misery ineffective, while the herd of long eyed 
thirsty deer (i.e., mankind of imperfect knowledge and understanding) crowded near the mirage
(of the six alien sects) to drink the non-existent water through their big mouths (their sincere but
misguided austerities) and being disappointed, ran hither and thither finding no relief from their
tortuous thirst.

The beautiful allegory in these lines can be summarized as under:

66: The ancient sea=Transcendent bliss

67-69: The cloud and lightning - Civan the Supreme.

70: The glossy snake = The five sense-organs (skin, tongue, eye, nose, ear) which binds mankind

to earthly things like coils of a snake binding its victim)

71: Cruel tortuous summer = The suffering of mankind.

72: The sudden flower of 'Thonri'= The sudden appearance of God in the guise of a Guru.

73: The myriad cochineals - The numerous births a soul takes,

74: The thundering drum = God's righteous wrath at mankind's endless cycle of births and deaths.

75: Kanthal flowers- The palms of devotees joined in grateful devotion.


கு-ரை :  73 - 82:  பிறவிகள் மழைத் தொடக்கத்தில் எழுந்து செத்தொழியும் பூச்சிகட்கு உவமிக்கப்பட்டன.
இடி முழக்கம் இங்கே கருணை முழக்கமாயிற்று. கருணையிடி, ஐம்புலப் பாம்பு சாதற்கிடமாயிற்று. முரசு,
வெற்றி குறிப்பது.  'மாப்பெருங் கருணை இன் முரசெறிந்து இன் முழங்கி' என உரைநடை கொள்க. 
அஞ்சலி = கைகூப்புதல், காந்தள், மழைக்காலத்துத் தோன்று மலர். அதற்கு உவமேயம், கை. பிற 
அடிகளில் விண்ணிலே வான்யாறு நிறைவதாகக் கூறியதென உணர்க. செஞ்சுடர் என்பதில், செம்மை,
நேர்மை எனப் பொருள்படும். சுடர் மெய்யறிவைக் குறிக்கும். கேதம்= சங்கேதம், ஏற்பாடு, கொள்கை.
குட்டம் கூட்டமென்பதன் முதற் குறுக்கம். கை = எல்லை. 'கேதம்' என்பதற்குத் துன்பமென்றும், குட்டம்
என்பதற்குக் குளமென்றும் பொருள் கொள்ளுதலும் உண்டு. நீர்நசை = அருள் வேட்கை, நெடுங்கண்=
ஆராய்ச்சி. மான்கணம் = சமயிகளின் கூட்டம். அறுவகைப் புறச் சமயங்களாற் கதி கைகூடாமையின் 
உயிர்கள் பெருநெறி நோக்கி உழன்றமை குறித்தவாறாம்.


80.    நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் 
    தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு 
    மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன 
    வாயிடை வானப் பேரியாற் றகவயின்
    பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்

    நீர்நசை தரவரும், நெடும் கண், மான் கணம் 
    தவப் பெரு வாயிடைப் பருகித், தளர்வொடும்
    அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன 
    ஆயிடை, வானப்பேர்-யாற்று அகவயின்
    பாய்ந்து, எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்து

    neer nasai tharavarum nedungkaN maan kaNam 
    thavappeeru vaayidai paruki thaLarvodum         
    avapperun thapam neengkaathu asainthana 
    aayidai vaana peeriyaaRRu akavayin 
    paaynthu ezunthu inpap perunjsuzi koziththu


85.     சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்
    தூழூ ழோங்கிய நங்க 
    ளிருவினை மாமரம் வேர்பறித்தெழுந் 
    துருவ வருணீ ரோட்டா வருவரைச்
    சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

    சுழித்து எம்பந்தம் மாக்கரைபொருது, அலைத்து, இடித்து 
    ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் 
    இருவினை மாமரம்வேர் பறித்து, எழுந்து
    உருவ, அருள்-நீர் ஓட்டா, அருவரைச் 
    சந்தின் வான்சிறை கட்டி, மட்டு அவிழ் 

    suziththu em panthamaa karai poruthu alaiththu idiththu
    uuz uuz oongkiya nangkaL
    iruvinai maamaram veerpaRiththu ezunthu 
    uruva aruLneer ooddaa aruvarai 
    santhin vansiRai kaddi maddu aviz

90.     வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் 
    மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் 
    மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி 
    யருச்சனை வயலு ளன்புவித் திட்டுத் 
    தொண்ட வுழவ ராரத் தந்த

    வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் 
    மாப்புகைக்கரைசேர் வண்டு உடைக் குளத்தின் 
    மீக் கொள மேல் மேல் மகிழ்தலின் நோக்கி 
    அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
    தொண்ட உழவர் ஆரத் தந்த

    veRi malar kuLavaay kooli niRai akil
    maappukai karaiseer vaNdudai kuLaththin 
    meekkoLa meel meel makizthalin nookki 
    arussanai vayaluL anpuviththu iddu 
    thoNda uzavar aarath thantha

பொ-ரை: 83 - 95: செஞ்சுடர் வெள்ளம் வானப் பேராற்றில் பெருக மான் கணம் 
பெருவிடாயால் அலமரும். அத்தருணத்தில் வான் ஆற்றிலே இறைவனாகிய மேகம் புகுந்து
அருள்மழை பெய்விக்கும். பேரின்பமாகிய பெரிய சுழலினைச் சுழித்து, பாசக் கட்டாகிய 
கரைகளை மோதி அசைக்கிறது. வரிசை வரிசையாக மேன்மேலும் வளர்ந்து நின்ற
நல்வினை தீவினை என்னும் இருவினைப் பெரு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது.
மிகுந்து வந்த அழகு மிகுந்த அருள் வெள்ளத்தைச் செலுத்தியது. தொண்டராகிய 
பயிர்த்தொழிலோர் கடத்தற்கரிய எல்லையுடைய சாந்தம் எனும் பெரிய கால்வாயைக்
கட்டியது. வாசனை வீசும் தேன் மலர் போன்ற இதயக் குளத்திற்கு உண்மையாகிய நீர் 
வாயினை அமைத்தது. பொறியடக்கம் என்ற சிறந்த அகிற்புகை  சேரும்படி ஓங்காரம் 
என்னும் சங்கு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்தில் அருள் வெள்ளம் பெருகியது. அதனை 
மகிழ்வோடு பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்ற வித்தை விதைத்து பயன் 
கொண்டு துய்க்கச் செய்த அருள் மழை அது.  ஆகவே உலகெங்கும் பெறுதற்கு
அரியவனாகிய முகில் போன்ற இறைவன் வாழ்க !

84: Whirlpool= Bliss

85: Shores = bonds of "Paasam".

86 & 87: Huge trees of great height = Good and bad Karmaa done life after life.

94: Ploughmen - devotees in the service of God. Rich harvest and feast - "Arul Amirtham",

Bliss of fulfilment.

83 - 95: Meanwhile the flood water of the heavenly mighty stream swelling up in huge 
whirlpools of bliss, dashed against the banks of our bonds of Paasam and demolished them. 
And, they uprooted the huge trees (of twin deeds - இருவினைகள்) which had shot up to great
heights (of life after life). The ploughmen (devotees) built a big dam of sandalwood logs grown
in mountains and guided therein the beauteous water (of grace). From the dam they further 
formed an outlet to a lake. In the lake fragrant lotus flowers were dripping honey. 
The ploughmen were watching with delight the water level rising higher and higher in the lake. In
the bunds of the lake bumble bees were buzzing over a huge pall of smoke which arose from the 
abundant piles of burning eagle-wood (Ahil). The ploughmen sowed seeds, of love in rich
abundance in the field of worship. Oh! Lord Civan, You are rare to be reached in the universe; 
You bestowed on these devotee-ploughmen an abundant harvest of bliss of fulfilment to feast on.
Hail to Thee!

கு-ரை: 83 - 95: வான் ஆற்றிலே இறைவனாகிய மேகம் புகுந்து அருள் மழை பெய்வித்து, அன்பர் பயன் 
கொண்டு இன்பம் நுகரும்படி செய்வித்தமை கூறப்பட்டது. உருவம் = அழகு, ஓட்டா = ஓட்டி, செலுத்தி,
சந்து = பொறை, சாந்தம், சிறை = எல்லை. நிறை = பொறியடக்கம், வண்டு= சங்கு, ஓங்காரத்திற்கு அறிகுறி, 
மகிழ்தலின்= மகிழ்ச்சியொடு, அண்டம் = உலகத் தொகுப்பு. தூய்மையாகிய வாசனையும் 
பற்றறுதலாகிய இனிமையுடையது நல்ல உள்ளம் என்பது.  வெறி - பற்றின்மையைச் சுட்டும்.
மலர்க்குளவாய்= மலரின் குளவாய்; வாய்மையாகிய என்பது வருவித்து உரைக்கப்பட்டது . 'ஓட்டா என்பது
 'தந்த' என்பதோடு முடிகின்றது. தொண்ட உழவர் கட்டி, கோலி, நோக்கி, இட்டு, ஆர என முடிக்க.

95.     வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க
    கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
    வருந்தவர்க் கருளு மாதி வாழ்க
    வச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
     நிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க

    அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க !
    கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க! 
    அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
    அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க !
    நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!

    aNdaththu arumpeRal meekan vaazka
    karumpaNak kassai kadavuL vaazka         
    arunthavarkku aruLum aathi vaazka
    assam thavirththa seevakan vaazka
    nissalum iirththu aadkoLvoon vaazka

பொ-ரை: 96 - 98: கரிய படத்தையுடைய பாம்பை அரைப் பட்டிகையாக அணிந்த கடவுள்
வாழ்க!  செய்தற்கரிய பெருந்தவத்தோர்க்கு அருள்புரியும் முதல்வன் வாழ்க! பாண்டியன்
முதலியோருக்கு அபாயம் வந்தபோது, பயம் நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க! (அல்லது)
என் பிறவிப் பயத்தை நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க!

96 - 98: Hail Lord Civan who wears the black hooded snake for his waist-band!
Hail Lord Civan who is the beginning of all things and who bestows grace on devout ascetics.
Hail Lord Civan the guardian who removed my fear of birth and death.
(This can also be interpreted as "Hail Lord Civan" the knight who removed the fear of Paandiyan
Kings whenever they met with danger).

கு-ரை: 96 - 98; பணம்= படம், அதனையுடைய பாம்பிற்காயிற்று. பாம்பு, குண்டலி சத்திக்கு அறிகுறி.
உலகியக்கும் சத்தியைத் தன்பாற் கொண்டவன் என்பது கருத்து. அது வானில் நுட்பமாக உள்ளது.
வானிறம் புகை நிறம் என்பதால், அதற்குக் கருநிறம் கூறப்பட்டது என்பாரும் உளர். காணப்படும் 
உலகிற்கும் காணப்படா உலகிற்கும் நடுநிகர்த்தாய் உள்ள அச்சத்தி, இரண்டினும் நிறைந்த இறைவனுக்கு
அரைநாண் போலாயிற்று.

100.     சூழிருந் துன்பந் துடைப்போன்  வாழ்க
    வெய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க 
    கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க 
    பேரமைத் தோளி காதலன் வாழ்க 
    வேதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க

    சூழ்இரும் துன்பம் துடைப்போன், வாழ்க !
    எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன், வாழ்க !
    கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
    பேர்-அமைத்-தோளி-காதலன், வாழ்க! 
    ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!

    suuzirun thunpam thudaippoon vaazka
    eythinarkku aaramuthu aLippoon vaazka 
    kuuriruL kuuththodu kunippoon vaazka 
    peer amai thooLi kaathalan vaazka
    eethilarkku eethil em iRaivan vaazka

பொ-ரை: 99 - 105: நாள்தோறும் வினையிற்படாது இழுத்து, என்னை ஆண்டு அருளுபவன் 
வாழ்க! எதிர்பாராது வந்து கவியும் பெரும் துயரத்தை அறவே ஒழிப்பவன் வாழ்க! தன்னை 
அடைந்தோருக்குக் கிடைத்தற்கரிய அமுதமாகிய பேரின்பம் வழங்குவோன் வாழ்க! மிகுந்த 
இருளிலே வளைந்தாடுவோன் வாழ்க! பெரிய மூங்கிலை ஒத்த தோளுடைய 
அருட்சத்தியின் கணவன் வாழ்க! தன்னைச் சார்தலில்லாதார்க்கு இயைபு காட்டாத எம் 
தலைவன் வாழ்க! அன்பர்கட்கு இளைப்புக்காலத்துப் பயன்படும் ஈட்டிய பொருள்
போல்பவன் வாழ்க!

99: Hallowed be the One who draws me to Him every day by preventing me from doing evil

deeds.

100: Hallowed be Him who wipes out in full, the great sorrow that overwhelms beings, that seek

His grace.

101: Hallowed be Him who gives the rare ambrosia to those who gain access to Him.

102: Hallowed be Him who bends down while dancing in pitch darkness.

103: Hallowed be the lover of Her (Uma) whose shoulders are as fine and smooth as the big

solid bamboo.

104: Hail our Lord who has no attachment to those who have no attachment to Him. 

105: Hail Him who is the providence of help to His devotees in times of distress.

கு-ரை: 99 - 105: நிச்சல் = நித்தியல் = நித்தியம் = ஒவ்வொரு நாளும். சூழ்தல் - முன்வினைப் பயன்
எதிர்பாராது வந்து மூடுதல்.  உலகம் ஒடுங்கிய காலையும் இறைவன் நுட்பமாகிய (சூக்கும)
ஐந்தொழிலியற்றுதலின், 'கூரிருட் கூத்தொடு குனிப்போன்' என்றார்.  கூரிருட் கூத்து, சூக்கும
ஐந்தொழிலையும் , குனித்தல் தூல ஐந்தொழிலையும் குறிக்குமென்ப. கூரிருள், என்பதைக் காளிக்கு 
ஆகுபெயராகக் கொண்டு, அவளொடு நடம்புரிவோன் என்பாரும் உளர். மூங்கில், பசிய நிறம், மென்மை, ஒளி
இவற்றைக் குறிக்கும்.  கூரிருட்கூத்தில், இறைவனுக்குத் துணையாய் நிற்பவள் சத்தியேயாதல்
கூறினவாறாம். கலித்தொகைக்  கடவுள் வாழ்த்துள் அக்கருத்து கவினுறத் தெரித்தமை  காண்க.
இறைவன் நலம் கொடுப்பினும், அதனைத் துய்க்கும் இயைபில்லாதார், ஏதிலராவர். அவர்கட்கு இறைவன்
பேருதவி தெளிவாகப் பயன்படுமாறில்லை என்பது கருத்து. அடுத்த அடியில் அன்பர்க்கு உற்றவிடத்து
உறுபேருதவியா மென்றார். எய்ப்பு= முதுமை, நோய் முதலியவற்றால் உளதாகும் இளைப்பு . 
வைப்பு= சேமித்து வைத்த பொருள்.

105.     காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க
    நச்சர வாட்டிய நம்பன் போற்றி 
    பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி 
    நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி  நாற்றிசை 
    நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

    காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க!
    நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
    பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி !
    நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி!-நால்-திசை 
    நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

    kaathalarkku eyppinil vaippu vaazka 
    nassuaravu aaddiya nampan pooRRi 
    pissuemai eeRRiya periyoon pooRRi
    neeRRodu thooRRa valloon pooRRi, naal thisai
    nadappana nadaa ay kidappana kidaa ay            

110.     நிற்பன நிறீஇச்
    சொற்பதங் கடந்த தொல்லோ
    னுள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் 
    கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன் 
    விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்

    நிற்பன நிறீஇச்
    சொல்-பதம் கடந்த தொல்லோன்
    உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
    கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்! 
    விண்முதல்பூதம் வெளிப்பட வகுத்தோன்

    niRpana niRiii
    soRpatham kadantha tholloon
    uLLaththu uNarssiyil koLLavum padaaan 
    kaNmuthaR pulanaal kaadsiyum illoon
    viNmuthaR puutham veLippada vakuththoon

பொ-ரை: 106 - 114: திருப்புறம்பயத்தில் பாம்பு தீண்டி இறந்த ஒருவனை உயிர்ப்பிக்கக் 
கொடிய பாம்பொன்றை ஆட்டி வைத்து விடந்தீர்த்து உயிர்ப்பித்த எம்பெருமான் 
காத்தருளுக! விடத்தைத் தீர்த்தது போல எனக்கு மாலேற்றிய பெரியவன் காத்தருளுக! 
அகண்ட பொருளாக இருந்தும் அடியவரை ஆட்கொள்ளத் திருநீறு அணிந்த 
திருமேனியோடு தோன்றவல்லவன் அருளுக!  நான்கு திக்கிலும் நடப்பனவற்றை 
நடப்பித்தும், கிடப்பனவற்றைக் கிடப்பித்தும் நிற்பனவற்றை நிற்பித்தும் இன்ன தன்மையன்
எனச் சொல்லும் மொழியைக் கடந்த பழமையோன்; மனம் கொண்டு உணரும் உணர்வினால் 
பற்றப்படாதவன்; கண் முதலிய ஐம்பொறிகளாலும் காணப்பெறாதவன்; வான் முதலிய
பூதங்கள் ஐவகையாகத் தோன்றும்படி அவற்றை முறையாக வகுத்தவன்.

106: Praise to our Lord Civan who came as a snake charmer in Thirup-Purampayam
(திருப்புறம்பயம்) and restored life to a young lover who was dead by snake bite.

Note: In Thirup-Purampayam when a young lover was dead by snake bite, his fiancee prayed to     
Lord Civan who, hearing her sincere prayers, personally came as a snake-charmer and brought
her lover back to life.

107: Praise be to Lord Civan, the great one, who made me zealously in love with Him. 

108: Praise be to Lord Civan, who though immeasurable, is capable of appearing before His
devotees in His ash-smeared form.

109 - 110: In all the four corners of the earth He moves those that move, lays to rest the things
that lie still, and steadies those that stand.

111 - 113: Lord Civan is the ancient one, He transcends speech; He is the one who cannot be
experienced by the feelings of the mind; and He is the one who cannot be perceived by the sense
organs such as the eye either.

114: He is the one who ordained the ether and other elements to manifest.

கு-ரை: 106-114:  திருப்புறம்பயத்தில் கணவனை இழந்த காதலியின் பொருட்டு இறைவனே 
பாம்பாட்டியாக வந்து கணவன் உடம்பிலுள்ள விடத்தை இறக்கி உயிர்ப்பித்தான் என்பது குறித்தவாறு.
பிச்சு= பித்து= அன்பினாலாகிய பெரு விருப்பம்.  நீற்று, என்பதற்கு அழித்தல் என்று பொருள் கொண்டு
தோற்றம், என்பதற்குப் படைத்தல் எனப் பொருள் கொண்டு, அந்தமும் ஆதியுமாயிருக்க வல்லான் என்று
பொருள் கூறுவாரும் உளர். எவ்வகைச் செயலும் இறைவன் செய்விக்கவே நிகழ்கின்றது என்பது கருத்து.
ஆதலின் நடத்தல், கிடத்தல், நிற்றல், மூன்றையும் விதந்தனர். அப்படித் தொழிற்படுபவற்றிற்கு எல்லாம் 
முற்பட்டவனாதலின், 'பழையோன்' என்றார். மனமொழி மெய்களைக் கடந்தவன் என்பதைப் பிற அடிகளில்
குறித்தார். 

115.     பூவி னாற்றம் போன்றுயர்ந் தெங்கு 
    மொழிவற நிறைந்து மேவிய பெருமை
    யின்றெனக் கெளிவந் தருளி
    யழிதரு மாக்கை யொழியச் செய்த வொண்பொரு 
    ளின்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி

    பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் 
    ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை
    இன்று எனக்கு எளிவந்து, அருளி
    அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் 
    இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் - போற்றி

    puuvil naaRRam poonRu uyarnthu engkum
    ozivu aRa niRainthu meeviya perumai 
    inRu enakku eLivanthu aruLi 
    azitharum aakkai oziyasseytha oNporuL
    inRu enakku eLivanthu irunthanan pooRRi

பொ-ரை: 115 - 119. மலரின் மணம் போல் எழுந்து நிறைந்தவன். உலகில் நீக்கமற நிறைந்து,
எல்லாவற்றுக்கும் சார்பாய் பொருந்திய பெருந்தன்மையுடைய பெரியோன், இக்காலத்தே
எனக்கு எளிதில் வந்து அறிவுறுத்தி அருளி, அழியும் தன்மை உடைய உடல் எடுக்கும் பிறவி
நீங்கும்படி செய்த ஞான முதல்வன். இன்று என்பால் எளிதாக வந்து அமர்ந்தோன்.
அவனுக்கு வணக்கம். 

115 - 121: Like the fragrance of the flowers rising high and spreading everywhere,leaving no
space unfilled,  Lord Civan the supreme one pervades all things without exception. Supreme as
He is, this day He came out of compassion to bless me. He is the splendour of knowledge who
rid me of this body, which spells ruin. He is that same one who came today without any effort
on my part.

Obeisance to Him! - He made for me a body which melts in love -

Obeisance to Him! He is the one who abiding in me like a perennial fountain delights my mind;

Obeisance to Him!

கு-ரை: 115 - 119: மலர், தோன்றும் பொருள், நாற்றம் நுட்பமாய்த் தோன்றாது உள்ளது. முகர 
வல்லார்க்குத் தோன்றும். அங்ஙனமே, இறைவன் தோன்றாச் சார்பாயிருந்து அன்பர்க்கே புலப்படுவான்.
பிற பொருட்சார்பும், எளிதில் அறியப்படுதலுமிலன் என்பார், 'உயர்ந்து' என்றார்.  திருவாசகத்திற் 
பிறிதோரிடத்திலும் 'உற்ற வாக்கையினுறு பொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற் பற்ற லாவதோர் 
நிலையிலாப் பரம்பொருள்' என்றது காண்க. தனது அகண்ட வியாபகப் பெருமையை இறைவன்
தமக்கறிவுறுத்தினமை குறித்தார். சிவஞானத்தால் அது உணரப்படுதலின் பிறவியறுதற்கு ஏதுவாயிற்று.
தமதுள்ளத்தே வீற்றிருந்தமை கூறுவார் 'எளிவந்து இருந்தனன்' என்றார் . போற்றுதல் என்று 
பொருள்படும் தொழிற்பெயராகப் போற்றி என்பதைக் கொள்ளின், அது வணக்கம் என்று பொருள்படும்.

120.     யளிதரு மாக்கை செய்தோன் போற்றி 
    யூற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
    யாற்றா வின்ப மலர்ந்தலை செய்யப் 
    போற்றா வாக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க

    அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி !
    ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
    ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்யப் 
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மரகதக் குவாஅல், மாமணிப் பிறக்கம்

    aLitharum aakkai seythoon pooRRi 
    uuRRirunthu uLLam kaLippoon poRRI
    aaRRaa inpam alarnthu alai seyya 
    pooRRa aakkaiyai pooRuththal pukaleen 
    marakatha kuvaaal maamaNi piRakkam

பொ-ரை: 120 - 126:  உருக்கம் மிகுந்த உடம்பைத் தந்தவனுக்கு வணக்கம். இன்ப ஊற்றாக 
உள்ளத்தில் அமர்ந்து அதை மகிழ்விப்பவனுக்கு வணக்கம். தாங்கமுடியாத பேரின்பப் பெரு
வெள்ளம் பொங்கிப் பரந்து அலைவீச அதனைப் பேண இயலாத இந்த உடம்பை  நான் 
தாங்க விரும்பமாட்டேன். பச்சை மணிக் குவியலும் மாணிக்க ஈட்டமும் சேர்ந்தால்
காணப்படும் மின்னொளியைத் தன்னுள் கொண்டு, பொன்னொளி போல் சத்தியும் 
சிவமுமாகி விளங்குகிறான் அவன். நான்முகனும் திருமாலும் போய் முயன்று தேடியும்
அவர்கட்குத்  தன் மெய்யியல்பை மறைத்து நின்றான். 

122 - 123: I wish not to retain any longer this body that is incapable of containing the flood of
exquisite bliss which spreads and sours like waves.

Note: The poet turns his attention from the allegory and resumes the language of direct address.
Maanikkavaachakar describes the supreme one as eluding all knowledge (Lines 124-140) and
the repetition of the word (ஒளித்தும்) veiling - conveys the indescribability and the
inconceivability of His nature.

124 - 125: Similar to the dazzling bright light of the lightning, and with flashes from a heap of
emerald and of ruby

126: His form glows like gold; but He concealed Himself from the four-faced one (Brahma, the
Creator) and Mahaa Vishnu who both went to seek His Head and Feet.

கு-ரை; 120 - 126:  அளி = அன்பாலாய உருக்கம் , அன்பின் மிகுதியின் பயனாக இன்பப் பெருக்கம் 
எழுகின்றது. அதனை முற்றிலும் நுகர, உடம்பு தடையாதல் கூறியவாறு. இறைவியின் நிறம் பசுமையாதல்
பற்றி, 'மரகதக் குவாஅல்' என்றார். இறைவனுருச் செவ்விய தாகலின், மாமணிப் பிறக்கமென்றார்.
தூய்மை, மின்னொளியாலும், மாறின்மை, பொன்னொளியாலுங் குறிக்கப்படும் . 'தேடினர்' என்ற
பன்மையால் திருமாலையும் கொள்க . செருக்குப் பற்றி அயனரிக்கு இறைவன் வெளிப்பட்டிலர்.
நற்றவத்திற்குரிய வெவ்வேறு படிகளில் நிற்போர்க்கும், இறைவன் வெளிப்படாது, தவம் முற்றிய 
தாழ்மனத்தோர்க்கே அவன் தன் தன்மையைத் தானே காட்டுவான் என்பதைக் கீழ்ப்போந்த அடிகளில்
விளக்கினமை காண்க. 

125.     மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 
    திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்து 
    முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்து 
    மொற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்
    துற்றவர் வருந்த வுறைப்பவர்க் கொளித்து

    மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழத்
    திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
    முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் 
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து 
    உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்

    min oLi koNda pon oLi thikaza
    thisai mukan senRu theedinarkku oLiththum 
    muRaiyuLi oRRi muyanRavarkku oLiththum
    oRRumai koNdu nookkum uLLaththu 
    uRRavar varuntha uRaippavarkku oLiththum

130.    மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்து 
    மித்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க் 
    கத்தந் திரத்தி னவ்வயி னொளித்து 
    முனிவற நோக்கி நனிவரக் கௌவி 
    யாணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து

    மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
    'இத் தந்திரத்தில் காண்டும்' என்று இருந்தோர்க்கு
    அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்
    முனிவு அறநோக்கி, நனிவரக் கௌவி
    ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து

    maRaiththiRam nookki varunthinarkku oLiththum         
    iththanthiraththil kaaNdum enRu irunthoorkku
    aththanthiraththil avvayin oLiththum             
    munivaRa nookki nanivara kowvi                 
    aaNena thoonRi ali ena peyarnthu

பொ-ரை: 127 - 135: முறையாக நூல் வழியிற் பொருந்தித் தன்னைக் காண முயன்றவருக்குத்
தன்னை மறைத்தவன். உலகப் பொருள்களில் ஈடுபடாமல் அவனைக் காண விழையும் 
ஒருமைப்பாட்டுடன் நிற்பவரைக் கண்டு உலகத்தவர் வருந்துவர். ஆனால் இறைவனோ 
அவர்களுக்கும் தன்னை மறைத்து நிற்கிறான். மந்திர முறையினால் கடவுள் காட்சி காண 
வேண்டி, வருந்தி முயன்றவருக்கும் தன் மெய்த்தன்மையை ஒளித்து நிற்கிறான். இந்த
உபாயத்தால் அவனைக் காண்போம் என எதிர்பார்ப்போருக்கு அந்த உபாயத்தில்
அவ்விடத்திலேயே ஒளித்து இருக்கிறான்.  பரம்பொருளைச் சாந்தமாகப் பார்க்கவும்
மிகுதியாகப் பற்றவும் முயன்றவருக்கு ஆண் வடிவோடு அல்லது ஒளி மிகுந்த பெண் 
வடிவோடு அல்லது இரண்டுமற்ற வடிவோடு தோன்றியும் தன் மெய் இயல்பைக் காட்டாமல்
விளங்குகிறான். 

127: He hid himself from those who toiled to see Him through Yogic practices as described in
the scriptures.

128 - 129: He hid Himself from those who sought him with single minded devotion , unmindful
of the grief of their kinsmen.

130: He hid himself from those who laboriously sought him by staking their belief in the power 
of the vedas.

131: From those who boasted to see Him by means of some rare device,

132: He hid himself by that same device.

133 - 135: Regarding (the devout ones of other faiths) without malice,and gripping them well 
with growing grace, He appeared to them now as a male, anon changed to a neutral form and 
presently in female form with a shinning forehead and thus hid His true self from them.

கு-ரை: 127 - 135: முதலிலே நூலில் சொன்ன ஒழுக்க முறைப்படி நிற்றல் கூறப்பட்டது. மன அடக்கம்
அல்லது மனோலயம் அடைதற்கு முயலும் முறை பின் கூறப்பட்டது . மந்திர வகைகளைக்
கையாளுவதாலும், வேறு உபாயங்களைக் கையாளுவதாலும் இறைவன் வெளிப்படான். சூழ்ச்சிக்கு
மேற்பட்ட சூழ்ச்சியனாதலின், உபாயத்திலேயே ஒளிக்கவல்லான் என்றனர். சாந்தமாக அன்பு செய்தலின்
பயனாக, இறைவனது உருவத் திருமேனியின் காட்சி கிடைப்பினும், மெய்யியல்பு புலனாகாமை காண்க.

135.     வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயி 
    னைம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
    துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை 
    யருந்தவர் காட்சியுட்டிருந்த வொளித்து 
    மொன்றுண்டில்லை யொன்றறி வொளித்தும்

    வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின் 
    ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய் 
    துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
    அரும் - தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் 
    ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்

    vaaLnuthal peN ena oLiththum seeNvayin
    aimpulan selaviduththu aruvarai thoRumpooy         
    thuRRavai thuRantha veRRuyir aakkai 
    arunthavar kaadsiyuL thiruntha oLiththum 
    onRu uNdu, illai, enRa aRivu oLiththum

140.     பண்டே பயிறொறு மின்றே பயிறொறு
    மொளிக்குஞ் சோரனைக் கண்டன
    மார்மி னார்மி னாண்மலர்ப் பிணையலிற்
    றாடளை யிடுமின்
    சுற்றுமின் சூழ்மின் றொடர்மின் விடேன்மின்

    பண்டேபயில் தொறும், இன்றேபயில் தொறும்
    ஒளிக்கும் சோரனைக் கண்டனம்
    ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
    தாள் தளை இடுமின்!
    சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின் ! விடேன்மின்!

    paNdee payilthoRum inRee payilthoRum
    oLikkunj sooranai kaNdanam 
    aarmin aarmin naaLmalar piNaiyalil
    thaL thaLai idumin
    suRRumin suuzmin thodarmin videenmin

பொ-ரை: 136 - 145: செயற்கரிய தவத்தினர் ஐம்பொறி அறிவினை நெடுந்தூரத்தில் போகும்படி 
நீத்தனர். கடத்தற்கரிய மலைகள்தோறும் சென்று நுகர்வனவற்றை எல்லாம் வெறுத்தனர்.
உயிர் மாத்திரமுள்ள தசையற்ற வெற்றுடம்புடையராய் உள்ள அவர்கள் பார்வையில்
விளங்கினும் அவர்கள் திருத்தம் எய்தற்பொருட்டு முற்றிலும் தோற்றம் தராது ஒளிகிறான்.
"முன்னாட்களில் பயிலுந்தோறும், இந்நாட்களில் பயிலுந்தோறும் மறைந்து நிற்கிற 
கள்வனைக் கண்டோம். அனைவரும் கூடுங்கள்! அன்றலர்ந்த பின்னல் மாலையால் அவன்
திருவடிகளுக்கு விலங்கிடுங்கள்! வலம் வாருங்கள்! சூழுங்கள் !பின் தொடருங்கள்!
விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்!"  என்று ஓலம் இடுபவர்களுடைய பிடிக்கு 
அகப்படாமல் முழுவதும் ஒளித்துக் கொண்டான். 

136 - 138: Bidding the desires of the five senses remain far away from their minds, and 
travelling through trackless hills for long, giving up pleasures within and without, with only a
bony frame of the body breathing life, ascetics contemplate on him. Even to those ascetics He
appears in their vision but not fully, in order to make them more perfect. (Another version: From
the vision of such ascetics, He hid Himself completely.)

139: He hid himself from those who vacillate in their minds whether God exists or not.

140 - 145: Some cried in frenzy Ah! We have found that Thief who hid Himself whenever we
strove of old and whenever we strive now. However, I have seen that stealthy thief now at this
moment, gather in haste-gather in haste; bring the garland woven of fresh flowers picked this
morning; bind His Feet; surround Him; encircle Him; Follow Him; and leave not; catch hold of
Him; In spite of all this tumultuous cry, He eluded their grip and hid Himself!

கு-ரை: 136 - 145: பற்றற்ற யோகியர்க்கும், சிவஞானம் பெறாத விடத்து இறைவன் முற்றிலும்
வெளிப்படான். அவர்கள் திருந்துதலாவது, ஞானம் பெறுதற்குரிய பக்குவம் அடைதல். இறைவனைக் 
காணப் பெறாவிடத்து உயிரின் சிற்றறிவு முனைத்து, ஐயுறவு தோற்றுவிப்பின், அது ஞானப் பேற்றிற்குப் 
பெருந்தடையாகும். இறைவன் திருவருட் காட்சி ஒருகாற் பெறினும், செருக்கற்ற நிலையில்  நில்லாது
உயிரின் தற்போத முயற்சி மேற்பட்டெழுமாயின், இறைவன் வெளிப்படான் என்பது இறுதியாகக்
குறித்தவாறு. 

145.     பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந் 
    தன்னே ரில்லோன் றானே யான தன்மை 
    யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி 
    யறைகூவி யாட்கொண் டருளி 
    மறையோர் கோலங் காட்டி யருளலு

    பற்றுமின்!' என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்
    தன்நேர் இல்லோன் தானே ஆனதன்மை
    என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
    அறைகூவி, ஆட்கொண்டு அருளி
    மறையோர் கோலம் காட்டி அருளலும்; 

    paRRumin enRavar paRRu muRRu oLiththum 
    thanneer illoon thanee aanathanmai 
    enneer anaiyoor keedka vanthu iyampi 
    aRai kuuvi aadkoNdu aruLi 
    maRaiyoor koolam kaaddi aruLalum

150.     முளையா வன்பென் புருக வோலமிட் 
    டலைகடற் றிரையி னார்த்தார்த் தோங்கித் 
    தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறிப் 
    பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து 
    நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங்

    உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு 
    அலைகடல் திரையின் ஆர்த்து-ஆர்த்து ஓங்கித் 
    தலைதடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறிப் 
    பித்தரின் மயங்கி: மத்தரின் மதித்து 
    நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

    uLaiyaa anpu enpu uruka oolamiddu 
    alaikadal thiraiyin aarththu aarththu oongki 
    thalai thadumaaRaa viiznthu puraNdu alaRi         
    piththarin mayangki maththarin mathiththu
    naaddavar maruLavum keeddavar viyappavum

பொ-ரை: 146 - 157: தன்னிகரில்லாத அவனே எல்லாவற்றோடும் அத்துவிதமாய்க் கலந்து 
அவையேயான தன்மை உடையவன். தன்னில் தானாய் உள்ள தனி இயல்பையும் என்னைப்
போன்றவர்கள் கேட்கும்படி வந்து அறிவுறுத்தி அருளியவன்.  வலிய, போருக்கு 
அழைத்தாற்போல அழைத்து, அடிமையாக்கிக் கொண்டருளினான். அவ்வாறு அவன் 
அருளியதும் யான் சலிப்பில்லாத அன்பினாலே எலும்பும் உருகும்படி முறையிட்டேன்.
கொந்தளிக்கும் கடல்போலக் கூவிக்கூவி எழுந்து, தலை மயங்கி, கீழே விழுந்து உருண்டேன்.
பித்துக் கொண்டவர் போலக் கதறி, மால் கொண்டு, வெறி கொண்டது போலக் களித்து ,
நாட்டிலே பார்த்தவர் திகிலடையவும் கேட்டவர் அதிசயிக்கும்படியும் இருந்தேன். தன்மேல் 
பாகனை ஏற விடாத பெரு மதம் கொண்ட யானை போல இன்ப அன்பினைத் தாங்க 
இயலாதவன் ஆனேன். எனது உறுப்புக்களையெல்லாம் சுவைமிக்க கொம்புத் தேன் போன்ற
இன்ப உணர்ச்சியால் செய்து அமைத்தனன் இறைவன்.

146- 157: The incomparable Lord Civan, who eluded so many, made a clarion call so that even
people like me could listen to His spiritual instructions about His nature, which is that, He is in
everything, yet at the same time He is His own self. Coming in the form of a vedic sage to make
this revelation, He blessed me and made me His own, upon which my ceaseless love for Him
dissolved my bones. In that ecstatic mood, I wailed aloud, raising my voice above the billowing
sea's loud waves. I fell down head long, rolled, cried and yelled and became madder than a mad
man and more gleeful than frenzied men. The onlookers were puzzled and the hearers
wondered-Like the rutting tusker whose mad rage does not allow its mahout to ride on him,
I was unable to bear the infinite grace of His. It was then that He infused a horried sweetness
through all my limbs and made me blessed.

கு-ரை: 146 - 157: சிற்றறிவுடைய உயிர்க்குப் பேரறிவும் பேரின்பமும் தலைப்பட்டவுடன், அவற்றின் பாரம்
தாங்க இயலாவென்பதும், அவற்றினாலாய மெய்ப்பாடும் குறித்தவாறாம். அருளலும் என்பதை ஈற்றடியிற்
'செய்தனன்' என்பதோடு முடிக்க. 'உருக' என்பதோடு முடித்தலும் உண்டு.

155.      கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தி 
    னாற்றே னாக வவயவஞ் சுவைதரு 
    கோற்றேன் கொண்டு செய்தன 
    னேற்றார் மூதூ ரெழினகை யெரியின் 
    வீழ்வித் தாங்கன்

    கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின்
    ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
    கோல்-தேன் கொண்டு செய்தனன்
    ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
    வீழ்வித்தாங்கு, அன்று

    kadakkaLiRu eeRRaa thadapperu mathaththin 
    aaRReen aaka avayavam suvaitharu 
    kooltheen koNdu seythanan 
    eeRRaar muuthuur ezilnakai eriyin 
    viizviththangku anRu,

160.     றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடி 
    லொருத்தரும் வழாமை யொடுக்கினன் 
    றடக்கையி னெல்லிக் கனியெனக் காயினன் 
    சொல்லுவ தறியேன் வாழி முறையோ 
    தரியே னாயேன் றானெனைச் செய்தது

    அருள் பெரும் தீயின் அடியோம் அடிக்குடில் 
    ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; 
    தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் 
    சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ! 
    தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது

    arudperum thiiyin adiyoom adikkudil 
    oruththarum vazaamai odukkinan 
    thadakkaiyin nellikkani enakku aayinan 
    solluvathu aRiyeen vaazi muRaiyoo 
    thariyeen naayeen than enai seythathu

பொ-ரை: 158 - 167: திரிபுரத்தினை அழகுமிகுந்த தன் புன்னகையில் எழுந்த நெருப்பால்
சுட்டெரித்து முன்பு வீழ்த்தினான்.  அது போலவே தனது அருட் பெரும் தீயினால்
அடியோங்கள் ஒருத்தரும் தவறாத படி எங்கள் அடிமை உடம்பு எனும் குடில்களை 
ஒடுங்குவித்தான். வளைந்த உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக்கனி போல்  தவறிப்
போகாத கைகண்ட அமுதம் ஆகினான் -அந்த எம்பெருமான் வாழ்க!

 அவன் எவ்வாறு எனக்குக் கிட்டினான் என்பதை பிறருக்கு எடுத்துரைக்க அறிய மாட்டேன். அவன் என்னை
உருவாக்கிய விதத்தை நாய் போன்ற நான் தாங்க மாட்டேன். அதை அறியும் ஆற்றலும்
இல்லேன் ஆ! ஆ!! செருக்கு ஒழியப் பெற்றேன். அடியேனுக்கு நல்கிய பேரின்பத்தை 
அளந்தறிய வல்லவன் அல்லேன். அதை அருந்தியும் நிறைவெய்தல் பெறமாட்டேன்.
மிகுதியாக விழுங்கும் ஆற்றலும் உடையவன் அல்லேன். 

158 - 162: Lord Civan by his beauteous smile caused the ancient city of His foes to fall down.
similarly by His grace He drew the dwellings of the souls of all of us into His sphere. He came 
to me as the ripe gooseberry fruit in the folded palm of my hand. Hail to Lord Civan! 

163- 167: I know not how to explain to others my experience of His grace. I, a mere cur,
can not endure what he has done! I can not even understand that. Ah! Ah!! I am dead. 
I, His slave, know not what He has given me in this grace. Slipping it, I am not content, 
swallowing it. I do not feel full.

கு-ரை: 158 - 167: முப்புர தகனம், மும்மல நீக்கத்தைக் குறிக்குமென்ற திருமந்திரக் கருத்து இங்கே 
புலனாதல் காண்க. கையை வளைத்து உள்ளங்கையில் உள்ள பொருள் கீழே விழாதபடி வைத்த காலை.
அது தடக்கை எனப்படும்.  உருண்டு போகும் நெல்லிக்கனி உள்ளங்கையில் உருளவிடமில்லாது
இருப்பதோடு அதன் எப்பகுதியும் காட்சிக்குச் செவ்விதிற் புலனாமென்ப. நெல்லிக்கனி, கரு நெல்லியைக்
குறிப்பதாய்ச் சாவா மருந்தாகிய கற்பமாம் என்பர். அது பேரின்பம் ஈயும் இறைவனுக்கு உவமையாயிற்று. 
பேரின்ப அவா மேலீட்டினாற் 'பருகியுமாரேன்' என்றார். தனது ஆற்றலுக்கு ஏற்றவாறே அதனை 
உட்கொள்ள முடியுமன்றி மிகுதியாக முடியாது என்பார், 'விழுங்கியு மொல்லகில்லேன்' என்றார்.

165.     தெரியே னாவா செத்தே னடியேற் 
    கருளிய தறியேன் பருகியு மாரேன்
    விழுங்கியு மொல்ல கில்லேன்
    செழுந்தண் பாற்கடற் றிரை புரைவித் 
    துவாக்கட னள்ளுநீ ருள்ளகந் ததும்ப

    தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு 
    அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்; 
    விழுங்கியும் ஒல்ல கில்லேன் ;
    செழும், தண் பால் கடல் திரை புரைவித்து 
    உவாக்கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப

    theriyeen aa aa seththeen adiyeeRku
    aruLiyathu aRiyeen parukiyum aareen 
    vizungkiyum olla killeen 
    sezunthaN paaRkadal thiraipurai viththu
    uvaakkadal naLLuneer uLakam thathumpa            

170.     வாக்கிறந் தமுத மயிர்க்கா றோறுங்
    தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழைக்
    குரம்பை தோறு நாயுட லகத்தே
    குரம்பை கொண்டின்றேன் பாய்த்தினி ரம்பிய
    வற்புத மான வமுத தாரைக

    வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால் தோறும் 
    தேக்கிடச் செய்தனன்: கொடியேன் ஊன்-தழை 
    குரம்பை தோறும், நாய் உடல் அகத்தே 
    குரம்பை கொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய
    அற்புதமான அமுத-தாரைகள்

    vaakkiRanthu amutham mayirkkaal thooRum 
    theekkida seythanan kodiyeen uunthazai 
    kurampai thooRum naayudal akaththee 
    kurampai kooNdu intheen paayththi nirampiya
    aRputha maana amutha thaaraikaL

175.     ளெற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ 
    துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் 
    கள்ளூ றாக்கை யமைத்தன னொள்ளிய 
    கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை 
    யென்னையு மிருப்ப தாக்கின னென்னிற்

    எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது 
    உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு எனக்கு
    அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய 
    கன்னல் கனிதேர் களிறு எனக், கடைமுறை
    என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்

    eRpu thuLai thoRum eeRRinan urukuvathu 
    uLLam koNdu oruru seythaanku enakku         
    aLLuRu aakkai amaiththanan oLLiya 
    kannal kani theer kaLiRu ena kadaimuRai
    ennaiyum iruppathu aakkinan, ennil

பொ-ரை: 168 - 182: முழுமதிக் காலத்தே கடல் நடுவிற்பொங்கும் நீர் போல உள்ளத்தில்
பேரின்பம் நிறைந்தது.  வளமிக்க பாற்கடலைப் போல உள்ளம் ததும்பச் செய்தது.
சொல்லும் தன்மைகடந்த பேரமுதமானது உரோமத்தின் அடிதோறும் நிரம்பித் தங்கும்படி 
இறைவன் செய்தனன். நாய் போன்ற அடியேனின் உடம்பினகத்தே சிறு வீட்டிருக்கை 
கொண்டருளினான். தீயேனுடைய புலால் மிகுந்த உடம்பின் குருதிக் குழாய், நரம்புகளில் 
எல்லாம் இனிய தேனைப் பாய்ச்சினான். 

அதிசயிக்கத் தக்க நிறைவான அமுத ஒழுக்குகளை எலும்புத் துவாரங்களில் பாய்வித்தான்.
உருகும் தன்மையுள்ள உள்ளத்தினால் வடிவமைத்தது போல, ஒவ்வொரு பகுதிகளிலும் 
அமுதம் ஊறிக் கசிகின்ற உடம்பினைத் தந்தான். ஒளிமிக்க கற்கண்டின் இனிப்பினைக் 
கொண்ட கனியைத் தேர்ந்துண்கிறது இறுமாப்புடைய யானை. அதைப்போன்று 
முடிவான முறையாக  தகுதியற்ற அடியேனும்  இருக்குமாறு செய்தருளினான். 
அயன் அரி அறியாப் பெருந்தன்மையன் தனது மேலாம் திருவருள் தேனானது என்னில் 
கலக்கும்படி செய்து, அவ்வருளோடு மிக மேம்பட்ட பேரின்ப அமுதமும் அமைத்து அருளிச் செய்தான்.

168 - 170: On full moon nights, the billows heave tossing up tides- so too the felicity of His
grace rises up in my heart like rich cool waves, in a sea of milk. (At this juncture) Lord Civan
made the indescribable ambrosia enter the pores of my body.

171 - 177: Lord Civan made his abode in this vile fleshy body of this cur (i.e., me), and created a
bubbling physical frame of ecstatic delight for me.

கு-ரை: 168 - 177: பொருள் கொள்ளுமிடத்தே, இரண்டாவது அடியை முதலில் கொள்க. உயிரினறிவில்
தோன்றும் இன்பமாதலின் உள்ளகத்தே கடல் நடுநீர் என்றார். முழுமதி= பேரறிவைக் குறிக்கும். உயிரிற்
கலந்த பேரறிவின் நடுவே இன்பம் உதிப்பது என்று அறிக. பேரறிவுக்கு அறிகுறி = பாற்கடல். குரம்பை
என்பது உடம்பையும் அதன் பகுதியாய வரம்புகளையும் குறிக்கும். அள் ஊறு, எனவும் கள்ளூறு எனவும் 
பிரிப்பர். கள் = தேன். உடம்பு நினைவு வந்த போதும் உடம்பெங்கும் கலந்துள்ள முதல்வனது பேரின்ப
நிறைவே புலனாதலாலும், அதற்குக் காரணமாய அன்பும் மேற்படுதலாலும், உடம்பிலே அமுதம் ஊறுவது
என்றார். 

180.     கருணை வான்றேன் கலக்க 
    வருளொடு பராவமு தாக்கினன் 
    பிரமன்மா லறியாப் பெற்றியோனே.

    கருணை வான் தேன் கலக்க 
    அருளொடு பரா-அமுது ஆக்கினன்
     பிரமன், மால் அறியாப் பெற்றியோனே

    karuNai vaan theen kalakka             
    aruLodu paraa amuthu aakkinan 
    piraman maal aRiyaa peRRiyoonee.

178 - 182: Much like an elephant that revels avidly on choice sugarcane, He eventually sought
out for me - me, this lowly one, and made me live in eternal bliss, absorbed in the illimitable
honey of grace. He bestowed on me this, and the supernatural ambrosia. He, that is beyond the
comprehension of Brahma and Vishnu!

கு-ரை: 178 - 182: இறுதியடியைக் 'கருணைவான்' என்பதற்கு முன் கொள்க. அருள் விளக்கமும், சிவ
விளக்கமும் கூறியவாறு. ஒண்மை அருளையும், கனி சிவானுபவத்தையும் குறிக்கும். இனிமை நிலை
பெற்றிருத்தலின், கன்னற்கனி என்றார். கடைமுறை - கடையா முறையெனக் கொண்டு, அருள் பெற்ற
அடியாருள் கடை நின்ற முறையிலெனப் பொருள் கொள்வாரும் உளர். பரா = மேலான.

            THIRUCHCHITRAMBALAM


4. போற்றித் திருவகவல்                     4. POTRITH-THIRU AHAVAL

(சகத்தின் உற்பத்தி )                    Sacred Psalms of Supplication
தில்லையில் அருளியது                     Compiled whilst in Thillai
நிலைமண்டில ஆசிரியப்பா

  
                திருச்சிற்றம்பலம்

    இந்த அகவலில் 'போற்றி' என்னும் வணக்கத்தை அறிவிக்கும் சொல் மிகுதியாக 
வருதலின் போற்றித் திருவகவல் எனப் பெயர் பெற்றது (சகம் = உலகத்தில் உள்ள உயிர்கள்). இதில்
முதற்கண் உலகத்தில் உள்ள உயிர்கள் உடம்புகளோடு கூடித் தோன்றுமுறை கூறப்படுதலின் இது 
"சகத்தின் உற்பத்தி" என்னும் கருத்து தொல்லாசிரியரால் குறிக்கப் பெற்றது. சில அடிகளே 
இதனைக் கூறுகின்றன.  ஆயினும் சிறப்புக் கருதி இத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மிகுதியான அடிகள் சிவபெருமானை வணங்கியபடியே அமைந்துள்ளன. வடமொழியாளர் "நம" 
என்ற சொல்லால் எதைச் சுட்டினரோ அதையே "போற்றி" என்ற சொல்லும் குறிக்கும். ஓர் அறிவு 
முதல் ஆறு அறிவு வரை பல்வேறு பிறப்புக்களை எடுத்த இந்த ஆன்மா, தன்னுடைய குறிக்கோளை 
நோக்கிப் பயணம் புறப்படுவதை, இந்த நான்காவது போற்றித் திருவகவல் குறிப்பிடுகின்றது.
அந்தப் பயணத்தில் நேரும் பல இடையூறுகளும், அவற்றை வெற்றி பெற்றுக் கடந்து செல்லும் 
ஆன்மா தெய்வம் ஆகிய ஓர் சித்தம் உண்டாகிய நிலையை அடைதலும், அதன்மேல் தொடர்கின்ற 
இடையூறுகளும் விரிவாக எடுத்து ஓதப்படுகின்றன. முடிவாக, இறைவனிடத்துத் தன்னை
ஒப்படைக்கும் ஆன்மா பலவாறு அவன் பெருமைகளைக் கூறிப் போற்றி போற்றி என்று 
வழிபடுகின்றது. 225 அடிகளைக் கொண்ட இந்த நீண்ட பாடலே போற்றித் திருஅகவல் என்று
போற்றப்படுகின்றது.

    This chapter consists of 225 lines set in 'Ahaval' metre (an easy verse form), out of
which 140 lines are appeals to Lord Civan for his grace, and contain the term of incantation 
“Potri" at the end of each line. This term Potri connotes obeisance, to the Lord. This obeisance,
besides extolling the glory of Lord Shiva and expressing submission to Him, is an appeal
supplicating for protection, mercy and guidance. ("Potruthal" is both a hymn in the glory of
Lord Civan (adoration), and a prayer for protection {appeal}). The Lord protects them
(Potruthal = sustaining in good shape). 

    Thus, we note that this composition is eminently suited for use in all saivite 
rituals, as the devotees can easily comprehend what they implore. Much like
the Potrith-Thiruth-Thaandaham of Saint Appar, this composition highlights the multifarious
attributes of Lord Civa, even as it extends obeisance and supplicates for mercy and protection.
Grammarians would classify the term Potri as an exhortative appeal (Potri = pray, protect, 
Oh Lord). "Obeisance" is verily an implied petition for help and sustenance ("Hail, Oh Lord, 
Be Thou my Refuge").

    The opening lines contain notes on the creation of the universe and how the human
embryo passes through countless vicissitudes of fortune during its stay in the mother's womb and
in later life, in all of which the good Lord lends His protective shield and emancipates the
struggling mass of souls. The saint is overwhelmed by the sheer enormity of His grace and pours
forth in soulful numbers, his gratitude and indebtedness to the inimitable Lord Civa.

4.1     நான்முகன் முதலா வானவர் தொழுது எழ 
    ஈர்-அடியாலே மூ-உலகு அளந்து, 
    நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப் 
    போற்றிசெய் கதிர்முடி திருநெடுமால், அன்று

5.     அடி,முடி, அறியும் ஆதரவு-அதனில் 
    கடுமுரண் ஏனம் ஆகி, முன்கலந்து, 
    ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து
    ஊழி முதல்வ, சய ! சய ! என்று
    வழுத்தியும் காணா மலரடி இணைகள் 

10.     வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்
    யானை முதலா எறும்பு ஈறாய 
    ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும் 
    மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து 
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

15.     ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 
    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் 
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் 
    ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் 
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

20.     ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் 
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் 
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் 
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் 
    தக்க தச மதி தாயொடு தான்படும்

25.     துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 
    ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை 
    ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும் 
    காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
    வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும் 

30.     கரும் குழல், செவ்வாய், வெள் நகை; கார்மயில் 
    ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்துக் 
    கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து 
    எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து 
    ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர் தம்

35.     கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 
    பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் 
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் 
    கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் 
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

40.     நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 
    புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் 
    தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி 
    முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் 
    ஆறு கோடி மாயா-சத்திகள்

45.     வேறு வேறு தம்மாயைகள் தொடங்கின 
    ஆத்தம் ஆனார் அயலவர் கூடி 
    நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர் 
    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்

50.     விரதமே பரம் ஆக, வேதியரும் 
    சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர் 
    சமய வாதிகள் தம் தம் மதங்களே 
    அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர் 
    மிண்டிய மாயா வாதம் என்னும்

55.     சண்ட மாருதம் சுழித்து அடித்து, ஆஅர்த்து
     உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் 
    கலா பேதத்த கடுவிடம் எய்தி, 
    அதில்பெரு மாயை எனைப் பல சூழவும் 
    தப்பாமே, தாம் பிடித்தது சலியாத்

60.     தழல்-அது கண்ட மெழுகு அது  போலத்
    தொழுது, உளம் உருகி, அழுது, உடல்கம்பித்து, 
    ஆடியும், அலறியும் பாடியும் பரவியும், 
    கொடிறும், பேதையும் கொண்டது விடாது' எனும் 
    படியே ஆகி, நல்இடை அறா அன்பின்,

65.     பசு மரத்து ஆணி அறைந்தால் போலக்
     கசிவது பெருகிக், கடல்என மறுகி 
    அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய்விதிர்த்துச்
    சகம் பேய், என்று தம்மைச் சிரிப்ப 
    நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை

70.     பூண் அதுவாகக், கோணுதல் இன்றிச் 
    சதுர் இழந்து, அறி-மால் கொண்டு, சாரும் 
    கதியது பரமா அதிசயம் ஆகக் 
    கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்
     மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது

75.     அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 
    குருபரன் ஆகி, அருளிய பெருமையைச் 
    சிறுமை என்று இகழாதே, திருவடி-இணையைப் 
    பிரிவினை அறியா நிழல் அதுபோல,
    முன் பின் ஆகி, முனியாது,  அத்திசை 

80.     என்பு நைந்து உருகி, நெக்கு-நெக்கு ஏங்கி 
    அன்பு எனும் ஆறு கரை அது புரள 
    நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி
    உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக்,
    கர-மலர் மொட்டித்து, இருதயம் மலரக்,

85.     கண்களி கூர, நுண்துளி அரும்பச்
     சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் 
    தாயே ஆகி, வளர்த்தனை போற்றி !
    மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக்,
     கைதர வல்ல கடவுள், போற்றி!

90.     ஆடக மதுரை அரசே, போற்றி !
    கூடல் இலங்கு குருமணி, போற்றி !
    தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி !
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி !
    மூவா நான்மறை முதல்வா, போற்றி!

95.     சேஆர் வெல் கொடிச் சிவனே போற்றி !
    மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி !
    கல் நார் உரித்த கனியே, போற்றி !
    காவாய், கனகக் குன்றே, போற்றி!
    ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி !

100.     படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
     இடரைக் களையும் எந்தாய், போற்றி !
    ஈச, போற்றி! இறைவ, போற்றி!
    தேசப் பளிங்கின் திரளே, போற்றி ! 
    அரசே போற்றி !அமுதே போற்றி!

105.     விரை சேர் சரண விகிர்தா, போற்றி!
     வேதி, போற்றி! விமலா, போற்றி !
    ஆதி, போற்றி!  அறிவே, போற்றி!
     கதியே, போற்றி! கனியே, போற்றி!
     நதிசேர் செம்சடை நம்பா, போற்றி!

110.     உடையாய், போற்றி! உணர்வே, போற்றி !
    கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
     ஐயா, போற்றி ! அணுவே, போற்றி! 
     சைவா, போற்றி!  தலைவா போற்றி !
    குறியே, போற்றி!  குணமே, போற்றி!

115.     நெறியே, போற்றி!  நினைவே, போற்றி!
     வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
     ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி !
    மூஏழ் சுற்றம் முரண்உறு நரகிடை 
    ஆழாமே அருள் அரசே, போற்றி!

120.     தோழா, போற்றி! துணைவா, போற்றி !
    வாழ்வே, போற்றி! என் - வைப்பே, போற்றி!
     முத்தா, போற்றி ! முதல்வா, போற்றி ! 
    அத்தா, போற்றி! அரனே, போற்றி !
    உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!

125.     விரிகடல் உலகின் விளைவே, போற்றி!
     அருமையில் எளிய அழகே, போற்றி!
     கருமுகில் ஆகிய கண்ணே , போற்றி!
     மன்னிய திரு அருள் மலையே, போற்றி !
    என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்

130.     சென்னியில் வைத்த சேவக, போற்றி!
     தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி !
    அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
     அழிவதும் ஆவதும், கடந்தாய், போற்றி!
     முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!

135.     மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
    வானகத்து அமரர் தாயே, போற்றி!
    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!

140.      வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி !
    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
    அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி !
    கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி !
    நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!

145.     இடை மருது உறையும், எந்தாய் போற்றி!
    சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
    ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி !
    சீர்ஆர் திருவையாறா, போற்றி !
    அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!

150.     கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!
    ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
    பாகம் பெண்உரு ஆனாய், போற்றி !
    பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
    சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!

155.     மற்று ஓர்பற்று இங்கு அறியேன், போற்றி !
    குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
    கோகழி மேவிய கோவே, போற்றி!
    ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி !
    பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!

160.     கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!
    அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
    இத்தி தன்னின்கீழ் இரு-மூவர்க்கு 
    அத்திக்கு அருளிய அரசே, போற்றி!
    தென்நாடு உடைய சிவனே, போற்றி!

165.     எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
    ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
    மானக் கயிலை மலையாய், போற்றி!
    அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
    இருள் கெட அருளும் இறைவா, போற்றி !

170.     தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!
    களம்கொளக் கருத அருளாய், போற்றி!
    அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
    நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!
    அத்தா போற்றி!  ஐயா போற்றி!

175.     நித்தா, போற்றி!  நிமலா, போற்றி !
    பத்தா, போற்றி! பவனே, போற்றி !
    பெரியாய், போற்றி! பிரானே போற்றி!
    அரியாய், போற்றி! அமலா, போற்றி!
    மறையோர் கோல நெறியே, போற்றி!

180.     முறையோ? தரியேன்! முதல்வா போற்றி!
    உறவே போற்றி!  உயிரே, போற்றி !
    சிறவே போற்றி!  சிவமே போற்றி!
    மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி !
    பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி!

185.     அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி !
    இலங்குசுடர் எம்ஈசா, போற்றி!
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி!
    குவைப்பதி மலிந்த கோவே, போற்றி!
    மலை நாடு உடைய மன்னே, போற்றி!

190.     கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!
    திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!
    பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி !
    அருவமும் உருவமும் ஆனாய், போற்றி!
    மருவிய கருணை மலையே போற்றி!

195.     துரியமும் இறந்த சுடரே, போற்றி !
    தெரிவு-அரிது ஆகிய தெளிவே, போற்றி!
    தோளா முத்தச் சுடரே, போற்றி!
    ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி !
    ஆரா அமுதே அருளே, போற்றி!

200.     பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!
     தாளி அறுகின் தாராய், போற்றி!
    நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
     சந்தனச் சாத்தின் சுந்தர, போற்றி !
    சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி!

205.     மந்திர மாமலை மேயாய் போற்றி!
    எம் தமை உய்யக் கொள்வாய் போற்றி!
    புலிமுலை புல்வாய்க்கு அருளிளை, போற்றி!
    அலைகடல் மீமிசை நடந்தாய், போற்றி!
    கரும்குருவிக்கு அன்று அருளினை போற்றி!

210.     இரும் புலன் புலர இசைந்தனை போற்றி!
    படி உறப் பயின்ற பாவக, போற்றி!
    அடியோடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி !
    தரகொடு, சுவர்க்கம் நால் நிலம், புகாமல், 
    பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி!

215.     ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!
    செழுமலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி !
    கழுநீர் மாலைக் கடவுள், போற்றி !
    தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
    பிழைப்பு, வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்

220.     குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி!
    புரம் பல எரித்த புராண, போற்றி!
    பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
    போற்றி! போற்றி! புயங்கப் பெருமான் !
    போற்றி போற்றி புராண-காரண!

225.     போற்றி போற்றி சய, சய, போற்றி!

                திருச்சிற்றம்பலம்

4. 1     நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
    வீரடி யாலே மூவுல களந்து 
    நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப் 
    போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்

    நான்முகன் முதலா வானவர் தொழுது எழ 
    ஈர்-அடியாலே மூ-உலகு அளந்து
     நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் 
    போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

    naanmukan muthalaa vaanavar thozuthueza
    iir adiyaalee muuulaku aLanthu 
    naal thisai munivarum aimpulan malara
    pooRRisey kathirmudi thiruneedumaal anRu

5.     றடி முடி யறியு மாதர வதனிற் 
    கடுமுர ணேன மாகிமுன் கலந் 
    தேழ்தல முருவ விடந்து பின்னெய்த் 
    தூழி முதல்வ சயசய வென்று 
    வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்

    அடி முடி, அறியும் ஆதரவு-அதனில் 
    கடுமுரண் ஏனம் ஆகி, முன் கலந்து 
    ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து 
    ஊழி முதல்வ, சய! சய! என்று 
    வழுத்தியும் காணா மலர் அடி-இணைகள்

    adimudi aRiyum aatharavu athanil
    kadumuraN eenam aakimun kalanthu 
    eezthalam uruva idanthu pineyththu
    uuzi muthalva saya saya enru 
    vazuththiyum kaaNaa malar adi iNaikaL


பொ-ரை: 1 - 10: எம்பிரான் சிவபெருமானைப் படைப்புக் கடவுள் முதலாக உள்ள தேவர்கள் 
எல்லாம் வழிபட்டுத் தொழுகின்றனர். வாமன அவதாரத்தில் தனது இரண்டடிகளால்
மூவுலகும் அளந்தான் திருமால். அதனால் நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்கள், ஒளி 
வீசும் திருமுடியினை உடைய பெருமை மிக்க திருமாலைத் தம் ஐம்புலன்களும் 
மகிழ்வடையும்படி வணங்கினர். இறைவன் அனல் பிழம்பாய் நின்ற அக்காலத்தில், திருமால் 
ஈசன் திருமேனியின் அடியின் முடிவைக் காணும் விருப்பம் உடையவன் ஆனான். எனவே 
வலிமை மிகுந்த பன்றி வடிவம் எடுத்து அயனுக்கு முற்பட்டு கீழ் ஏழு உலகினும் புகுந்தான் .
ஆங்கு ஊடுருவித் தோண்டிப் பின்பு கீழே செல்ல இயலாது இளைப்படைந்து நின்றான். எம்
பெருமானை நோக்கி உலக முடிவுக்கு முதல்வனாய் உள்ளவனே உனக்கே வெற்றி! வெற்றி !
என்று துதித்து வணங்கியும் காணப் பெறாத திருவடிகள், வழிபடுவதற்கு எளிதாக 
நெடுங்கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தில் வெளிப்படுகிறது. 

1 - 10: The four faced creator god "Brahma" and other junior heavenly gods gathered around 
and prostrated before Vishnu who in the days of yore, measured by his two feet the three worlds. 
The seers of the four quarters of the world adored the tall and beautiful Vishnu whose crown was
glittering with flashes of bright light all around with such eagerness that in the act of adoration
all their five senses blossomed with joy.

    However, this self-same Thirumaal was engaged in a fierce argument with Brahma and
they both set out to spot the Head and Feet of Lord Civa. Vishnu challenged Brahma and said
that he would venture to see the holy Feet of Civan while Brahma would go to see Civan's
crown.  Vishnu took the form of a fierce mighty boar and started digging into the seven
underworlds to see Civan's holy Feet. The seven underworlds are Athala (அதல) , vithala (விதல),
Sudhala (சுதல), Nithala (நிதல), Tharaathala (தராதல),  Rasaathala (ரசாதல) and Mahaathala (மகாதல).         

    Being unsuccessful Mahaa Vishnu in weariness started to extol Lord 
Civan by saying "Oh Universal Lord! First in each Aeon, Victory! Victory! To Thee" and
worshipped Him. Even after this worship Vishnu could not see the holy twin flowery Feet of
Lord Civan. But that Lord Civan became easily accessible to me and to His devotees in this
earth, girdled by watery seas. (Mahaa Vishnu is head of all devas; while Brahma is below him;
those above Vishnu are called Rudras. Lord Civa is above all these Gods).

கு-ரை: 1- 10: இதனுள் தேவருள் சிறந்த திருமால், யான் எனது என்னும் செருக்கறாமையால், இறைவன்
திருவடிகளைக் காணப்பெறாமை கூறினர்.  அரி, ஒரு குள்ளப் பிராமண வடிவம் எடுத்துச் சென்று
மூவடி மண் வேண்டி, ஈரடியாலே உலகனைத்தும் அளந்து மூன்றாவது அடிமண் கிடையாமையால் , மாவலி 
தலையில் அடி வைத்த கதை வெளிப்படை. நிலைப்புக் கடவுளாதலின், ஐம்புலனும் தத்தம் நிறைவைப்
பெறுமாறு இயற்ற வல்லவனாதலின் 'ஐம்புலன் மலர' என்றார். திருமாலுக்குக் கீழாக உள்ள கடவுள்
அயனாதலின், அவன் முதலாக உள்ள பிற தேவரைக் கூறினர். திருமாலுக்கு மேற்பட்டவர்கள் உருத்திர
வருக்கத்தினர். அவர்கள் இறைஞானம் பெற்றவர்கள். அடிமுடி = அடியின் முடிவு.  உடல் வலிமையும்,
மனவலிமையும் உடைமையால், 'கடுமுரண்' என ஈரடை கொடுத்தார்.  அன்பர்க்கருள இறைவன்
புவனியிற்சேவடி தீண்டினன் என்பார், 'வழுத்துதற் கெளிதாய்' என்றார். 'எளிதாய' என்பது ' எளிதாய்'
எனக்குறைந்து நின்றது. (அல்லது 'எளிதாய்' என்பது எளிதாக, எனக் கொண்டு, எளிதாகவே அவற்றை
வழுத்துதற் பொருட்டு எனப் பொருள் கோடலும் உண்டு).

10.     வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில்
    யானை முதலா வெறும்பீ றாய 
    வூனமி லியோனியி னுள்வினை பிழைத்து
    மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்
    தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து

    வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்
    யானை முதலா எறும்பு ஈறாய
    ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும்
    மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து 
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

    vazuththuthaRku eLithaay vaarkadal ulakinil 
    yaanai muthala eRumpu iiRaaya 
    uunam il yooniyin uLvinai pizaiththum 
    maanuda piRappinuL maathaa utharaththu
    iinam il kirumi seruvinil pizaiththum

பொ-ரை: 11 - 14: பெரிய யானை முதல் சிறிய எறும்பு ஈறாக, பிறவிகள் எத்தனையோ வடிவாக
உள்ளன. இவ்வுயிர்கள் குற்றம் இல்லாத பொருந்திய கருப்பைகளில் நிகழக்கூடிய
கெடுதிகளுக்கு இறைவனருளால் தப்புகின்றன. மனிதப் பிறவியில் தாயின் கருப்பையில்
 நிகழும் குறைவிலாத புழுக்களின் போரில் சிதைவுபடாது தப்புகிறது.

கு-ரை: 11 - 14: யானையும் பெரிய பிராணிகளும்,  எறும்பினும் சிறிய பிராணிகளிருப்பினும், அவற்றையும்
இனம்பற்றிக் கொள்ளுக.  பெரு வழக்காய்க் கட்புலனா யுள்ளவற்றை விதந்தனர். 

15.     மொருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்து 
    மிருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும் 
    மும்மதி தன்னு ளம்மதம் பிழைத்து 
    மீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து 
    மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து

    ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 
    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் 
    ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் 
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் 

    orumathi thaanRiyin irumaiyil pizaiththum
    irumathi viLaivin orumaiyil pizaiththum
    mummathi thannuL ammatham pizaiththum
    iiriru thingkaLil peeriruL pizaiththum            
    anjsu thingkaLil munjsuthal pizaiththum

20.     மாறு திங்களி னூறலர் பிழைத்து 
    மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து 
    மெட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்து 
    மொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துந்
    தக்க தசமதி தாயொடு தான்படுந்

    ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் 
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் 
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தச-மதி தாயொடு தான்படும்

    aaRu thingkaLil uuralar pizaiththum
    eezu thingkaLil thazpuvi pizaiththum
    eddu thingkaLil kaddamum pizaiththum
    onpathil varutharu thunpamum pizaiththum
    thakka thasamathi thaayodu thanpadum

பொ-ரை 15-26:  தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன் கரு தான்றிக்காய் அளவு
ஆகிறது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவுபடுதலாகிய இருமையிலிருந்து
தப்புகிறது. இறை அருளால் இரண்டாவது மாதத்தில் பிற புழுக்களின் இடர்ப்பாட்டு
மிகுதியால் உருவெடாமையில் இருந்து பிழைக்கிறது .மூன்றாம் மாதத்தில் கரு
வளர்தற்கென்று பெருகும் கொழுப்பான நீர் மிகுதியிலிருந்து தப்புகிறது. கரு நீரினால்
நான்காம் மாதம் கருப்பையில் இருள் மிருந்த காலை அந்த இருளிலிருந்து தப்புகிறது.
ஐந்தாம் மாதம் கருப்பை நீர் மிகுதியால், இருள் மிகுதியால் சாவதிலிருந்து தப்புகிறது.
ஆறாம் மாதத்தில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்புகிறது. ஏழாம் மாதம்
கருப்பை தாங்காமல் காயாய்ப் பூமியில் விழுவதிலிருந்து தப்புகிறது. எட்டாவது மாதம்
கருப்பையில் உண்டாகும் வளர்ச்சி நெருக்கத்தினின்றும் தப்புகிறது. ஒன்பதாம் மாதம்
வெளிப்பட இயலாது வரும் துன்பத்தில் இருந்தும் தப்புகிறது. பத்தாவது மாதம் தாயும்
தானும் வெளிப்படுவதற்குப் படும் துயரக் கடலிலிருந்து தப்பி, நிலவுலகில் பிறந்து
வளருகிறது.

11 - 25: In this earth girdled by the watery ocean, I was saved from the matrices starting with
that of elephant down to that of ant. Finally, I descended in my mother's womb to obtain a
human form. Here also, I escaped from the attacks of microbes and germs. In the first month of 
my life (in my mother's womb), my foetus looking like a beleric myrobalam escaped from
splitting into two. My embryo was saved in their unification during the second month; saved in
the third month from profusion of the uterine fluid; saved in the fourth month from the great
darkness; saved in the fifth month from abortion; saved in the sixth month from myriad mishaps;
in the seventh month my developed embryo was saved from premature birth; in the eighth month
escaped the congestion and pain; in the ninth month the baby in order to come out will roll inside
the womb causing damages both to the baby and the mother. I was saved from these dangers. In 
the tenth month I was saved from the severe agony caused both to my mother and myself during
my exit of as a baby from the mother's womb.

25.     துக்க சாகரத் துயரிடைப் பிழைத்து 
    மாண்டுக டோறு மடைந்தவக் காலை 
    யீண்டியு மிருத்தியு மெனைப்பல பிழைத்துங்
    காலை மலமொடு கடும் பகற் பசி நிசி 
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்துங்

    துக்க-சாகரத் துயரிடைப் பிழைத்தும் 
    ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
    ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும் 
    காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி 
    வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்

    thukka saakara thuyaridai pizaiththum 
    aaNdukaL thooRum adaintha akkaalai
    iiNdiyum iruththiyum enaippala pizaiththum 
    kaalai malamodu kadumpakal pasinisi 
    veelai niththirai yaaththirai pizaiththum

30.     கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயி 
    லொருங்கிய சாய னெருங்கியுண் மதர்த்துக் 
    கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் 
    தெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந் 
    தீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங்

    கரும்குழல், செவ்வாய், வெள்-நகை; கார்மயில் 
    ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்துக் 
    கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து 
    எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து 
    ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்-தம்

    karungkuzal sevvaay veLnakai kaarmayil 
    orungkiya saayal nerungki uL matharththu 
    kassu aRa nimirnthu kathirththumun paNaiththu 
    eyththu idai varuntha ezunthupudai paranthu 
    iirkku idai pookaa iLamulai maathartham

35.     கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 
    பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்துங்
    கல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ் 
    செல்வ மென்னு மல்லலிற் பிழைத்தும்

    கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
    பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
    கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் 
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

    kuurththa nayana kooLLaiyiR pizaithum
    piththa ulakar perunthuRai parappinuL
    maththa kaLiRu enum avaavidai pizaiththum
    kalvi ennum palkadal pizaiththum
    selvam ennum allalil pizaiththum

பொ-ரை: 27-41:  நெருக்கியும் அழுத்தியும் துன்புறுத்தலாகிய எத்தனையோ பல 
இடையூறுகளில் இருந்தும் பிழைக்கிறது. காலையில் மலம் கழித்தல், நடுப்பகலில் கடும் பசி,
நள்ளிரவில் துயில் ஆகியவற்றின் சார்பான எல்லா துன்பங்களிலிருந்தும் காக்கப்படுகிறது.
ஊர்களுக்குப் போக்கு வரவு ஆகியவற்றால் வரும் இடையூறுகளினின்றும் தப்புகிறது.
பெண்கள் கருதிறமுடைய கூந்தலையும் சிவந்த வாயினையும் வெள்ளிய  பல்லினையும்
கொண்டு விளங்குகின்றனர்.  இப்பெண்களின் நகிலானது கார்கால மயில் கண்டு
 அடங்குதற்கு ஏதுவாய் மென்மையுடையதாக உள்ளது. அவை ஒன்றையொன்று நெருங்கி 
உள்ளே திரட்சி எய்தி கச்சு அற்று விழும்படி மேலெழுந்து உள்ளன. ஒளி வீசி, மற்ற 
அங்கத்திலும் அதிகமாக முற்பட்டுப் பருத்து இருப்பதால் பாரந்தாங்காமல் இடைமெலிந்து
வருந்தும்படி எழுச்சி பெற்று உள்ளன. பக்கத்தில் விரிந்து ஈர்க்கு (தென்னை இலையின் 
மெல்லிய நரம்பு) கூட இடையில் போகக் கூடாதபடி இளமை நயமிக்க நகிலையுடைய
 இந்தப் பெண்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் கவரப்படும் கொள்ளைக்கும்
 தப்புகிறது. மயக்கம் கொண்ட உயிர், உலக வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பில் நின்று , அதனைக்
கலக்கும் மதயானை போன்று உள்ளத்தில் எழும் பேராசையினின்றும் தப்புகிறது. கல்வி
எனப்படும் பலவாகிய கடல்களிலிருந்தும் உயிர் தப்பிப் பிழைக்கிறது. செல்வம் என்ற
துன்பத்தில் இருந்தும், வறுமை எனும் நஞ்சிலிருந்தும் சிறு எல்லைகளையுடைய பல்வேறு
முயற்சிகளிலும் தப்பி வருகிறது.

26 - 29: Escaped in the oncoming years from the various activities of mother towards the baby
such as feeding, bathing, medication, sitting, moving and other countless hardships.
Also, escaped from bother of morning ablutions, the midday acute hunger at work; in sleep, trite
maneuvers and slumbering nights. All these I escaped.

30- 35: I was saved from the havoc of darts from maiden's eyes, damsels of dark locks, rosy
lips, pearly teeth, and peacock gait. Also, I was saved from the sharp piercing glances of women
with buxom waist and bra bursting, and irradiant breasts having no space in between for even a
rib of palm to enter.

36 - 37: Similar to the wild elephant stirring the muddy waters, people of the world with mad
desires run helter-shelter-I was saved from these.

38 - 41: I escaped the perils that arise from the sea of erudition. Escaped from the distressing
ills of wealth. Escaped from the age-old strings of poverty, from the petty fetters of many mean 
customs and modes (After escaping all these.....).

கு-ரை: 15 - 41 நெருக்குதல், அழுத்துதல் முதலியன, பலவகையான வசதி இன்மைகளால் விளைவன.
காலை மலங்கழித்தல் உடற் புனிதத்திற்கும் சுகத்திற்கும் இன்றியமையாதது. பசியின் கடுமை வெம்மை 
மிக்க நண்பகலில் தான் தோன்றும், “சேமம் புகினும் யாமத் துறங்கு" என்றவாறு நிசிநித்திரை
அவசியமானது. அகப்பற்று கடத்தற்கு அரியது ஆதலின், மாதர் மயலை விரித்துரைத்தார். கண்கவர் 
வனப்பு, நகிற்குண்மைத் தெளிவு. ஒருங்குதல் அடங்குதல், கார்காலம் மயில் மகிழ்ச்சியுடன் வளமுறும் 
காலம், சாயல், மென்மை; கண்ணும் நகிலும் நங்கையரின் சிறந்த அங்கங்களாதலின் அவற்றை
விதந்தனர். செல்வமானது, பாதுகாப்புக் கவலை முதலிய பல இன்னல்களை விளைத்தலின் 'அல்லல்'  என்றார்.
“புல்வரம்பாய பலதுறை” என்பன, பொழுதுபோக்காகவும், மிக்க பயன் இல்லாதனவாயும் உள்ள 
சிறு முயற்சித் துறைகள். கல்வி= பல வகைப் படும். வீடு சேர்க்கும் கல்வியே பயனுடைய கல்வி. பிற
கல்விகளில் ஈடு பட்டால் அவை தவ முயற்சிக்கு இடையூறாகும்.

40.     நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 
    புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் 
    தெய்வ மென்பதோர் சித்த முண்டாகி 
    முனிவி லாததோர் பொருளது கருதலு
    மாறு கோடி மாயா சத்திகள்

    நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
    புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் 
    தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி 
    முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும் 
    ஆறு கோடி மாயா-சத்திகள்

    nalkuravu ennum tholvidam pizaiththum 
    pul varampaaya palthuRai pizaiththum 
    theyvam enpathoor siththam uNdaaki 
    munivu ilaathathu oor poruL athu karuthalum 
    aaRu koodi maayaa saththikaL

45.    வேறு வேறுதம் மாயைக டொடங்கின 
    ஆத்த மானா ரயலவர் கூடி 
    நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் 
    சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் 
    பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்

    வேறு வேறு தம்மாயைகள் தொடங்கின 
    ஆத்தம் ஆனார் அயலவர் கூடி 
    நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர் 
    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்

    veeRu veeRu tham maayaikaL thodangkina 
    aaththam aanaar ayalavar kuudi 
    naaththikam peesi naaththazumpu eeRinar 
    suRRam enum tholpasu kuzaangkaL 
    paRRi azaiththu pathaRinar perukavum

பொ-ரை: 42 - 47: கடவுள் ஒருவன் உளன் என்ற நினைவு ஏற்பட்டு வெறுப்பற்றதொரு பெரிய
பொருளை உயிர் நாடுகிறது. மயக்கம் தரவல்ல சட உலக ஆற்றல்கள் ஆறு கோடி என
கணக்கிட்டுக் கூறப்படுகின்றன.  அவை பல்வேறு திறப்பட்ட சூழ்ச்சிகளைக்  காட்டத் 
தொடங்கி விட்டன. உண்மையான நண்பர்களும், பக்தர்களும் கடவுளை நாடாதிருக்கும்படி
நாத்திகத்தைப் போதித்து அதனால் நாவில் தழும்பேறப் பெற்றனர் 

42 - 45: There arose, then, the thought of God who is unique and free from hate, when the ever
changing sixty millions of delusive thoughts started playing varied guiles of theirs.

46 - 47: Sincere friends and neighbors all gathered around and talked atheism until their 
tongue scarred.

கு-ரை: 42 - 47: ஆறுகோடி மாயா சக்திகள் இன்னவென்பது,

    "மாமாயை மாயை வைந்தவம் வைகரி
    ஓமாயை உள்ளொளி ஓர் ஆறு கோடியில் 
    தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
    ஆமா யலவாந் திரிபுரை யாங்கே"

என்னும் திருமந்திரப்பாவால் விளங்கும். மாமாயை - சுத்த மாயை. மாயை - அசுத்த மாயை .
வைந்தவம் சுத்த மாயைச் சார்ந்த பொருள்கள். ஈண்டு மத்திமையென்று கொள்ளலாம். 
வைகரி - செவிப்புலனாம் வாக்கின் மூலம், ஓமாயை- பைசந்தி, உள்ளொளி - சூக்குமை. 
பேரின்ப நாட்டத்தையே, முனிவிலாத பொருளென்றார். உலகப் பற்றுவிட்டு, மெய்நாட்டத்திற் 
செல்லுங்கால் உளவாகிய இடையூறுகளைத் தொகுத்து உரைத்தார். உலகியல் நெறியைத் தவிர்தல் 
கூடாதென்பதே, பக்குவம் வரப்பெறாத நண்பர் ,நொதுமலர், உறவினர் முதலியோரின் கருத்தாதலின், 
அக்கருத்திற்கு ஏற்ற முயற்சியை அவ்வவர் தம் தம் முறையிற் செய்வராயினர். உயர் ஞான நாட்டமில்லாத 
கிரியாவான்களும் புறச் சமயத்தாரும் தத்தங் கொள்கை விரித்தல் இயல்பே.

50.     விரத மேபர மாகவே தியருஞ்
    சரத மாகவே சாத்திரங் காட்டினர்
    சமய வாதிக டத்த மதங்களே
    யமைவ தாக வரற்றி மலைந்தனர்
    மிண்டிய மாயா வாத மென்னுஞ்

    விரதமே பரம் ஆக, வேதியரும்
    சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர் 
    சமயவாதிகள் தம் தம் மதங்களே 
    அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்
    மிண்டிய மாயா வாதம் என்னும்

    virathamee param aaka veethiyarum 
    saratham aakavee saaththiram kaaddinar 
    samaiya vaathikaL tham tham mathangkaLee        
    amaivathu aaka arRRi malainthanar
    miNdiya maayaa vaatham ennum

பொ-ரை: 48 - 53: உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் பழமையான பற்றுக் காரணமாகக்
கூட்டமிட்டுப் பதைபதைத்து ஒவ்வொரு பிறவியிலும் கடவுளை நாடச் செல்லாது தடுக்கிறார்கள். 
நோன்பிருத்தலே மேலான சாதனம் என்பதை மெய்ப்பித்தற் பொருட்டுக்
கிரியை நூல் உணர்ந்த வேதியரும் நூல் பிரமாணங்களைக் காட்டினர். வெவ்வேறு சமய நூல் 
வல்லவர், தம்தம் சமயங்களில் முடிந்த உண்மை நிரம்பியிருப்பதாக முழங்கி எதிர்த்தனர்.

48 - 49: Comparing relatives to cowherds, Saint Maanikkavaachakar says that, such relatives
called him brother, father and others and fretted on to divert his mind from the spiritual path.

50 - 51: The vedic scholars emphasized their points, quoting scriptures, that fasting only is the
supreme mode to reach His abode.

52 - 53: Sectarians asserted that their respective creed only was perfect 
and were confused and confounded.

கு-ரை: 48 - 53: சுற்றத்தார் - பாசத்தாற் கட்டப்பட்டவராதலின், பசுக்குழாங்களெனவும் பண்டைத்
தொடர்புடையராய் வருதலின் 'தொல்' எனவும் கூறினர். சரதம்= மெய்ம்மை .

55.     சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்
    துலோகா யதனெனு மொண்டிறற் பாம்பின்
    கலாபே தத்த கடுவிட மெய்தி 
    யதிற்பெரு மாயை யெனப்பல சூழவுந்
    தப்பா மேதாம் பிடித்தது சலியாத்

    சண்டமாருதம் சுழித்து அடித்து, ஆஅர்த்து 
    உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின்
    கலா-பேதத்த கடுவிடம் எய்தி
    அதில்பெரு மாயை எனைப் பலசூழவும்
    தப்பாமே, தாம்பிடித்தது சலியாத்

    saNdamaarutham suziththu adiththu aarththu
    ulookaayathan enum oNthiRaR paampin 
    kalaapeethaththa kadu vidam eythi            
    athil perumaayai enaippala suuzavum 
    thappaamee thaam pidiththathu saliyaath

பொ-ரை: 54 - 59: திண்ணிய மாயா வாதம் என்று சொல்லப்படும் மதம், வேகம் மிக்க
சுழற் காற்றுப் போல சுழன்று வீசிய முழக்கமிடுகிறது. உலகாயதம் என்னும் மினுக்கங் காட்டும் 
வலிய கலை வேறுபாடுகள் உடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து, அதிலுள்ள எத்தனையோ
வஞ்சனைகள் தம்மை வந்து சுற்றித் தொடர்ந்தன.  அவ்வாறு தொடர்ந்தாலும்
சிவபெருமானுடைய அடியார்களோ அவற்றால் நெறி பிறழாது நிற்கின்றனர்.  தாம் கொண்ட
கடவுள் கொள்கையைக் கைவிட்டு விடாது நின்றனர்.

54 - 55: The haughty Maaya creed whirled, dashed, and roared-like a furious hurricane
(Maaya Vaatham is a doctrine that regards the material universe as an illusion-applied 
to the doctrines of the advaitins).

56 - 57: (Materialism is compared to a snake) The fierce, bright snake of materialism 
spat its venom amidst the conflict of sciences.

58 - 59: Thereafter great delusions encircled me and prevented me from escaping and grasped
me tight without letting me go.

கு-ரை: 54 - 58: அடிகள் காலத்திலே பௌத்தமே மாயாவாதம் எனப்பட்டது என்ப. பிற்காலத்திலே 
ஏகான்ம வாதத்துள் ஒரு பகுதி மாயாவாதம் எனப்பட்டது. மாயா = மயக்கம், மயல் விளைக்கு மதமென்பது
கருத்து. கடவுள், உயிர், தடை முதலியனவெல்லாம் உடன்பாடாகக் கூறி, முடிவில் அவை சூனியம் 
என்றலின் அது மருட்சி விளைப்பதாயிற்று. உலகாயத மதம், நிலம், நீர், தீ, வளி, என்பவற்றையே 
உண்மைப் பொருளாகக் கொண்டு, கடவுள், உயிர் முதலியவை இல்லை என்ற கொள்கை உடையது .
ஏகான்ம வாதம், ஓர் ஆன்மா தவிர, பிறவெல்லாம் இல்பொருள் எனக் கூறும். உலகாயதம் எல்லாஞ் 
சடப்பொருளே, சித்துப் பொருள் இல்லை எனக் கூறும் . அதுவும் பூதவாதம், பிராண வாதம்,
அந்தக்கரணவாதம் எனப் பல திறப்படுதலின், "கலாபேதத்த" என்றார். விடம் அறிவைக் கவர்தல் போல
உலகாயதம் அறிவுப் பொருள் இன்மையை வற்புறுத்தலின் 'கடுவிடம்' என்றார். விடம், உடம்பிற்குக்
கேடுவிளைப்பது. நாத்திகம், உயிர்க்குக் கேடு விளைப்பதாகலின், 'கடுவிடம்' என்றார்.

60.     தழலது கண்ட மெழுகது போலத் 
    தொழுதுள முருகி யழுதுடல் கம்பித் 
    தாடியு மலறியும் பாடியும் பரவியுங்
    கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் 
    படியே யாகிநல் லிடையறா வன்பிற்

    தழல் அது கண்ட மெழுகு-அது போலத்
    தொழுது, உளம் உருகி, அழுது, உடல்கம்பித்து
    ஆடியும், அலறியும், பாடியும், பரவியும் 
    'கொடிறும், பேதையும் கொண்டது விடாது' எனும் 
    படியே ஆகி, நல்இடை அறா அன்பின்,

    thazalathu kaNda mezuku athu poolath 
    thozuthu uLam uruki azuthu udal kampiththu 
    aadiyum alaRiyum paadiyum paraviyum 
    kodiRum peethaiyum kaNdathu vidaathu enum 
    padiyee aakinal idaiaRaa anpin

65.     பசுமரத் தாணி யறைந்தாற் போலக் 
    கசிவது பெருகிக் கடலென மறுகி
    யகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் 
    சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப 
    நாணது வொழிந்து நாடவர் பழித்துரை

    பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
    கசிவது பெருகிக், கடல் என மறுகி 
    அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய்விதிர்த்துச்
    சகம் பேய், என்று தம்மைச் சிரிப்ப
    நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை

    pasu maraththu aaNi aRainthaaR poolak
    kasivathu peruki kadal ena maRuki
    akam kuzainththu anukulamaay meyvithirththu      
    sakam peey enRu thammai sirippa
    naaN athu ozinthu naadavar paziththurai

பொ-ரை: 60 - 72: இறைவனை வழிபட்டு நெருப்பினில் பட்ட மெழுகு போல உள்ளம் உருகி
குறை உணர்ந்து அழுது தொழுதனர்.  உடல் நடுக்கமுற, ஆனந்தக் கூத்தாடினர். ஓலமிட்டும்
பாடல்களால் வாழ்த்தியும் உடம்பால் வணங்கியும் வழிபட்டனர். இடுக்கியும், மூடனும் தாம்
பிடித்ததை நெகிழ விடாமை போலவே உறுதி கொண்டு பயன் கருதாத இடையறாத  கடவுட்
பக்தியில் திளைத்து நின்றனர். பசிய மரத்தில் அறைந்த ஆணி திண்மையாகப் பற்றி நிற்பது 
போல உறைத்து நின்றனர். அதே சமயம் உருக்கம் மிகுந்து, கடல் அலை போல அலைவுற்று
மனம் வாடி அதற்கேற்ப உடல் அசைவுற்று இருந்தனர். இது கண்டு, உலகர் தம்மைப்
பேயரென்று இகழ்ந்து சிரிப்பதைப் பொருட்படுத்தாது வெட்கம் என்பதைத்  தவிர்த்து,
நாட்டிலுள்ளோர் குறைச் சொற்களை அணியாக ஏற்றுக் கொண்டனர். அவற்றால் மனம் 
கோணாது யாம் எல்லாவற்றிலும் வல்லேம் என்னும் திறமை உணர்ச்சி இழந்து, சிவஞானம்
பெறும் பேரவா மேலிடப் பெற்றனர் . அடைதற்குரிய வீடு பேற்றினையே மேலான வியப்பாகக் கருதினர்.

60 - 69: My heart melted in prayer like wax near fire, and I started weeping, trembling, dancing,
shouting, singing, praising and gripping firm in grasp as a nail driven into soft wood much like a 
crocodile and a dunce that (as the saying goes) never let go what they have clutched with pure
and ceaseless love. I became firm in faith; tears increasingly trickling and forming as big as a
sea, heart softening, body quivering in unison. The world laughed at me as a mad devil. 
I  eschewed shyness taking the ridicule of the people in the town as my ornament. Unperturbed by
all such extraordinary acts that seemingly defy common logic, but are characteristic 
of saintly folks engrossed in Civa worship.

70 - 72: My mind was fully absorbed in the reach to the goal I sought, of deliverance from birth
as the supreme miracle.

கு-ரை : 59-72 :  முதற்கண், உயர்ந்த கொள்கையில் நிலைபேறான உறுதியை வற்புறுத்தினார்.
உறுதியுற்ற பின்தான் அன்பு நிகழும் . அன்பின் இன்றியமையாமையும் இடைவிடா நிகழ்ச்சியையும்
வற்புறுத்துவார், மும்முறை அதன் மெய்ப்பாடுகளை இயம்பியருளினார். உறுதியையும் அன்பினையும்
பிணைந்து பிணைந்து கூறுவாராயினர். சலியாப் பிடிப்பொடு, ஆடி அலறி அன்பு செலுத்துதல் சரியை
எனவும், பசுமரத்தில் ஆணி அறைந்தாற்போல உறுதிகொண்டு அகங்குழைவது கிரியை எனவும், அறிமால்
கொண்டு சார்தல் யோகமெனவுங் கூறுப. 'நல்' என்ற அடைமொழி பயன் கருதாமை குறிக்கும். 

70.     பூணது வாகக் கோணுத லின்றிச் 
    சதுரிழந் தறிமால் கொண்டு சாருங் 
    கதியது பரமா வதிசய மாகக் 
    கற்றா மனமெனக் கதறியும் பதறியு 
    மற்றோர் தெய்வங் கனவிலு நினையா

    பூண்-அதுவாகக், கோணுதல் இன்றிச் 
    சதுர் இழந்து, அறி-மால் கொண்டு, சாரும் 
    கதியது பரமா-அதிசயம் ஆகக் 
    கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்
    மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது 

    puuN athu vaaka kooNuthal inRi
    sathur izanthu aRimaal kooNdu saarum        
    kathiyathu parama athisayam aaka 
    kaRRaa manam ena kathaRiyum pathaRiyum
    maRRuoor theyvam kanavilum ninaiyaathu

75.     தருபரத் தொருவ னவனியில் வந்து 
    குருபர னாகி யருளிய பெருமையைச் 
    சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
    பிரிவினை யறியா நிழலது போல
    முன்பின் னாகி முனியா தத்திசை

    அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 
    குருபரன் ஆகி, அருளிய பெருமையைச் 
    சிறுமை என்று இகழாதே, திருவடி இணையைப்
    பிரிவினை அறியா நிழல்-அதுபோல, 
    முன் பின் ஆகி, முனியாது, அத்திசை

    aruparaththu oruvan avaniyil vanthu
    kuruparan aaki aruLiya perumaiyai
    siRumai enRu ikazaathee thiruvadi iNaiyai
    piRivinai aRiyaa nizal athu poola
    munpin aaki muniyaathu aththisai

பொ-ரை: 73 - 79: கன்றினையுடைய பசுவானது கன்றினைக் காணாதபோது மனம் அலறிப்
பதைத்து நிற்கும். அதுபோல அடியார்களும் அலறி நடுங்கி, பிற தெய்வங்களைச்
சொப்பனத்திலும் நினையாது முழு முதற் கடவுளை வழுத்தினர். எட்டுதற்கரிய மேலாம்
வீட்டினையுடைய ஒரு பரம்பொருள் குருமூர்த்தியாகி இந்நிலவுலகில் தோன்றி வந்தது.
அவ்வாறு ஆட்கொண்டருளிய திருவருளின் பெருந்தன்மையை எளிமையாக எண்ணி 
அசட்டை செய்யாமல் அடியவர்கள் மதித்துப் போற்றி வணங்கினர். குருமுதல்வனின்
திருவடிகள் இரண்டையும், உருவை விட்டகலாத நிழல் போல், முன் வணங்கியும்
பின்தொடர்ந்தும் பிரிவின்றி நின்றார்கள். இடையூறுகள் வந்த போது, வெறுப்புற்றுச்
சலியாமல் குருபரன் அருளிய திசை நோக்கி வணங்கினர்.

73 - 79: Similar to a recently delivered cow mooing low in pain and bewilderment in search of
its missing calf; the soul is not thinking of other gods even in dream. Not despising me as a little
thing, the greatness of grace of the Peerless One, came over to the earth as Guru supreme;
clinging, like the inseparable shadow, of His sacred twin Feet that goes in front, rear and at every
point, I never grew tired, looking towards the Peaceful One at all times.

கு-ரை: 73 - 79: கன்றைக் காணப்பெறாத இடத்துக் கதறியழைத்தலும், கன்றிற்கு ஏதும் தீது வந்ததோ
என்று எண்ணி மனம் பதறுதலும் ஆவிற்கு நேரும். ஆவின் செய்கைகள் அதன் மனத்திற்கேற்றப் பட்டன.
அன்பர் இறைவனைக் காணவெண்ணிக் கதறுதலும், காட்சி கிடைக்குமோ கிடையாதோவென மனம்
பதறுதலும் உடையராவர். வீட்டினையே நாடுவார், பிற பயன்களை நாடுதல் கூடாதாகலின், பிற
பயனேயன்றி வீடளிக்க இயலாத பிற தெய்வங்களையும் நினைதல் கூடாது என்றார். இறைவன்
பொருளைப் பெருமையாகப் பாராட்டாத விடத்து, மெய்யன்பு நிகழாது. இறைவனது அறிவுச் செயல்களின்
வசம் தமது அறிவுச் செயல்களை ஒப்பித்து நிற்றலிற் சலித்தல் கூடாது என்பார், 'முன்பின்னாகி முனியாது'
என்றார். முன்னிகழ்வது அறிவு, பின்னிகழ்வது செயலென உணர்க. இறைவன் ஆட்கொண்ட செயலை
மறைத்தல் கூடாது என்பார், 'அத்திசை' என்றார்.

80.     யென்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 
    யன்பெனு மாறு கரையது புரள 
    நன்புல னொன்றி நாதவென் றரற்றி 
    யுரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் 
    கரமலர் மொட்டித் திருதய மலரக் 

    என்பு நைந்து உருகி, நெக்கு-நெக்கு ஏங்கி
    அன்பு எனும் ஆறு கரை அது புரள,
    நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி
    உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக்
    கர-மலர் மொட்டித்து, இருதயம் மலரக்

    enpu nainthu uruki nekkunekku eengki 
    anpu enum aaRu karai athu puraLa 
    nanpulan onRi naathaenRu araRRI 
    uraithadu maaRi uroomam silirppa 
    karamalar moddiththu iruthayam malara

85.     கண்களி கூர நுண்டுளி யரும்பச் 
    சாயா வன்பினை நாடொறுந் தழைப்பவர் 
    தாயே யாகி வளர்த்தனை போற்றி 
    மெய்தரு வேதிய னாகி வினைகெடக் 
    கைதர வல்ல கடவுள் போற்றி

    கண்களி கூர, நுண்துளி அரும்பச்,
    சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் 
    தாயே ஆகி, வளர்த்தனை-போற்றி !
    மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக் 
    கைதரவல்ல கடவுள், போற்றி!

    kaNkaLi kuura nuNthuLi arumpa 
    saayaa anpinai naaLthoRum thazaippavar 
    thaayee aaki vaLarththanai pooRRi 
    meytharu veethiyan aaki vinaikeda         
    kaithara valla kadavuL pooRRi

பொ-ரை: 80 - 87: அன்பால் எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கினர்.
பக்தியெனும் நதி இருகரையும் புரண்டோட நல்ல ஐம்பொறி அறிவுகள் அடங்கி 
ஒருமையுறப் பெற்றனர். எம் தலைவனே என்று கூவி அழைத்து, வாய் குழறி, மயிர் புளகங் 
கொண்டு விம்மி நின்றனர். கைம்மலர் குவித்து அகத்தாமரை எனும் நெஞ்சம் விரிய, கண்கள் 
மகிழ்ச்சி மிகுதியால் நீர்த்துளிகளைத் தோற்றுவிக்க, உருகி நின்றனர்.  நிலை தளராத
பேரன்பை ஒவ்வொரு நாளும் வளர்ப்பவர்களுடைய அடியார்களின் ஒப்பற்ற தாயாகிப்
பாதுகாத்தனை!  இறைவா! உனக்கு வணக்கம். 

80 - 87: My very bones softened and melted, my heart yearned sighing again and again. The
river of love overflowed its banks, and the five senses coalesced and lamented aloud "Oh Lord"
then my very words faltered. Hair on the body standing on its end, I clasped my hand in worship
like a lotus bud, my heart blossomed and eyes danced in delight, droplets dewing on them, when
you as a very Mother reared me daily fostered my unfading love; Glory to Thee.

கு-ரை: 80 - 87: 'கரையது புரள' என்றது, அன்பின் நிறைவைக் குறித்தற்கு, ஐம்பொறி அறிவும்
இறைவனையே நாடுதல் குறித்தார். மொட்டித்து= மொட்டுப் போலக் குவிந்து, கைகூம்ப,நெஞ்சம் மலர
என்று நயமுற உரைத்தமை காண்க. கண்ணீர், இன்ப அன்பைக் குறித்தலின், ஆனந்த உணர்ச்சியின் 
விளைவாயிற்று. அன்பினை வளர்ப்பாரை, இறைவன் வளர்க்கின்றான். 'தாய்' என்ற சொல்லிற்கு
முற்றிலும் தகுதி வாய்ந்தவன் இறைவனே என்பார், 'தாயே யாகி' என்றார். அன்பர்க்கு வரும்
எல்லாவற்றையும், இறைவனே ஏன்று கொள்வதறிக.

90.     யாடக மதுரை யரசே போற்றி 
    கூடல் இலங்கு குருமணி போற்றி 
    தென்றில்லை மன்றினு ளாடி போற்றி 
    யின்றெனக் காரமு தானாய் போற்றி 
    மூவா நான்மறை முதல்வா போற்றி

    ஆடக மதுரை அரசே, போற்றி !
    கூடல் இலங்கு குருமணி, போற்றி !
    தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி !
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
    மூவா நான்மறை முதல்வா, போற்றி!

    aadaka mathurai arasee pooRRi
    kuudal ilanku kurumaNi pooRRi 
    then thilai maRinuL aadi, pooRRi
    inRu enakku aaramuthu aanaay pooRRi
    muuvaa naanmaRai muthalva pooRRi

95.     சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 
    மின்னா ருருவ விகிர்தா போற்றி 
    கன்னா ருரித்த கனியே போற்றி 
    காவாய் கனகக் குன்றே போற்றி 
    யாவா வென்றனக் கருளாய் போற்றி

    சேஆர் வெல் கொடிச்சிவனே போற்றி!
     மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
     கல் நார் உரித்த கனியே,  போற்றி!
    காவாய், கனகக் குன்றே, போற்றி!
    ஆ! ஆ! என்-தனக்கு அருளாய், போற்றி!

    seevaar velkodi sivanee pooRRi 
    minnar uruva vikirthaa pooRRi
    kalnaar uriththa kaniyee pooRRi
    kaavaay kanaka kunRee pooRRi
    aa aa en thanakku aruLaay pooRRi

பொ-ரை: 88 - 99: மெய்யுணர்ச்சி நல்கும் அறிவனாகி, வடிவு கொண்டு எழுந்தருளி வந்தனை .
பண்டை வினையும், வருவினையும் ஒழிய உதவும் ஆற்றலுடைய தெய்வமே! வணக்கம்.
மதுரையில் விளங்கும் பொன் வண்ண மன்னனே வணக்கம். கூடலம்பதியில் விளங்கும்
நன்னிற மாணிக்கமே வணக்கம் . அழகிய தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே
வணக்கம்.  இற்றை நாளில் எனக்குப் பெறுதற்கரிய அமுதமானவனே! வணக்கம்.
நான்மறைகளை வெளிப்படுத்திய மூப்பில்லாத் தலைவனே வணக்கம். நந்தி வடிவம் 
பொருந்திய வெற்றிக் கொடியுடைய சிவனே வணக்கம். மின்னலொளி பொருந்திய அழகிய
பல்வேறு உருவங்கள் உடையவனே வணக்கம்.  கல்லில் நார் உரித்தாற் போல நெஞ்சினைப் 
பண்படுத்தி அதில் அன்பு எழுப்பும் கனிபோல மதுரமானவனே வணக்கம். பொன்மலை 
போன்றவனே காப்பாற்றுவாயாக, நினக்கு வணக்கம். ஆ! ஐயனே எனக்கு விரைவில் வீடு
அருள்வாயாக! நினக்கு வணக்கம். 

88 - 89: As a truth-dispensing sage you gave a helping hand to destroy my karma (residual and
acquired - Sanchitam and Aahaamiam) Glory to Thee. 

90-91: Glory to Thee, Oh Lord of Golden Madurai! Glory, Oh Gem among Gurus that shines 
in the courts of Koodal (Madurai).

92 - 93: Glory to the Dancer in the hall of Thillai of the south. This day you became my
delicious ambrosia.

94 - 97: Glory to Thee who is the source of the four-fold mystic scroll. Glory to Civan whose 
banner of conquest has the Bull. Glory to Thee whose varied forms gleam as the lightning. 
Glory to Thee, like peeling fine strings from solid rock, you softened my stony heart by your 
divine grace (softening such a hard hearted one as I, This is indeed a most difficult task, which
you alone can perform).

98: Glory to Thee - Thou hill of gold, guard me.

99: Glory to The - Ah! confer Thy grace on me. 

கு-ரை: 88 -99:  மெய் = மெய்யுணர்ச்சி, சிவஞானம். முற்பிறவிகளிற் செய்த சஞ்சிதம் எனப்படும்
தொகைவினையும் வரும் பிறவிக்கு ஏதுவாகிய ஆகாமியம் எனப்படும் எதிர்வினையும்  இறைவன்
ஆட்கொண்டபோது அவன் அருள் நோக்கால் எரிந்தொழிவன. ஆடகம்= பொன், ஆடிடமெனப் பொருள் 
கொள்ளுவாரும் உளர். குருமணி = வேதப் பொருளுரைக்கும் ஆசிரிய மாணிக்கம் எனவும் கொள்க.
போகம் அளிக்கும் ஆடக அரசாகவும், வீடளிக்கும் குருமணியாகவும் இறைவன் ஆலவாய்  அமர்ந்தனன்.
தென்= அழகிய 'மூவா' என்பதை, முதல்வனுக்கு அடை ஆக்காது “நான் மறைக்கு” அடையாக்கி என்றும்
 ஒரு தன்மையான நால்வகை வாக்கெனப் பொருள் கொள்ளுவாரும் உளர். உயிரை ஆட்கொள்ளுவதில்
 முதல்வனே வல்லான் என்பதை நந்திக்கொடி அறிவுறுத்தும்.  இறைவன் திருவடிவங்கள் ஒளி 
வண்ணமாதலின் 'மின் ஆர்' என்றார். அவை பலவாதலின் 'விகிர்தா' என்றார். விகிர்தன் =வேறுபாடு உடையவன். 
நார் = அன்பு: கல், நெஞ்சிற்கு அறிகுறி. கனகம் = பொன். என்றும் ஒரு படித்தாய் 
மாறிலாதவன் ஆதலின், பொற்குன்றம் என்றார். மாற்றமுடைய தன்னைக் காத்தல் மாறிலாதவனுக்கே
இயலும் என்பது கருத்து. தாம் சிவஞானம் பெற்றும், வீடு கூடவில்லை ஆதலின், 'அருளாய்' என்றார்.
அடிகள் தமது உடலை நீத்து வீடடைதலில் விருப்பமிக்கவர் என்பது தெளிக. 

100.     படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
     யிடரைக் களையு மெந்தாய் போற்றி
    யீச போற்றி யிறைவ போற்றி
    தேசப் பளிங்கின் றிரளே போற்றி
    யரைசே போற்றி யமுதே போற்றி

    படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
    இடரைக் களையும் எந்தாய், போற்றி !
    ஈச, போற்றி ! இறைவ, போற்றி!
    தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
    அரைசே, போற்றி ! அமுதே; போற்றி!

    padaippaay kaappaay thudaippaay pooRRi
    idarai kaLaiyum enthaay pooRRi
    iisa pooRRi iRaiva pooRRi            
    theesa paLingkin thiraLee pooRRi
    araisee pooRRi amuthee pooRRi

பொ-ரை: 100 - 105: எல்லாம் உண்டாக்குபவனே! நிலை நிறுத்துபவனே! ஒடுக்குபவனே!
வணக்கம். துன்பத்தை நீக்கும் எங்கள் தந்தையே! வணக்கம், ஆண்டவனே! வணக்கம்.
எங்கும் நிறைந்தவனே வணக்கம்.  ஒளிகாலும் படிகப் பிழம்பே வணக்கம். மன்னனே 
வணக்கம், சாவா மருந்தே வணக்கம். மணம் பொருந்திய புகலிடமாம் திருவடிகளையுடைய
நீதியாளனே, வணக்கம்.

100: Glory to Thee - who creates, protects and dissolves.

101: Glory to Thee - My father who removes my obstacles.

102: Glory to Thee - You, the Supreme Being and the Lord of the Universe.

103: Glory to Thee - You the cluster of lustrous crystals. 

104: Glory to Thee - You King, Glory to Thee - You the (Sportex) ambrosia.

105: Glory to Thee - You unfailing refuge, with fragrant holy Feet.

கு-ரை: 100 - 105: 'ஈச' என்பது ஆளுதல் என்று பொருள்படும் வினையடியாகப் பிறந்தமையால்
ஆண்டவன் என்ற கருத்தை உணர்த்தும். இறுத்தல்= தங்குதல். இறு என்னும் வினையடியாகப் பிறந்த
இறைவன், வியாபகன் என்ற பொருள் குறிப்பது. தேசு = ஒளி, அம், சாரியை.  
சரணம் = சரணம் புகுதற்குரிய திருவடி, விகிர்தம்= நீதி முறை

105.     விரைசேர் சரண விகிர்தா போற்றி
    வேதி போற்றி விமலா போற்றி 
    யாதி போற்றி யறிவே  போற்றி
    கதியே போற்றி கனியே போற்றி 
    நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

    விரை சேர் சரண விகிர்தா, போற்றி!
    வேதி, போற்றி! விமலா, போற்றி!
    ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
    கதியே, போற்றி! கனியே, போற்றி!
    நதிசேர் செம்சடை நம்பா, போற்றி!

    virai seer saraNa vikirthaa pooRRi
    veethi pooRRi vimala pooRRi
    aathi pooRRi aRivee pooRRi 
    kathiyee pooRRi kaniyee pooRRi
    nathiseer senjsadai nampaa pooRRi


110.     யுடையாய் போற்றி யுணர்வே போற்றி 
    கடையே னடிமை கண்டாய் போற்றி 
    யையா போற்றி யணுவே போற்றி 
    சைவா போற்றி தலைவா போற்றி 
    குறியே போற்றி குணமே போற்றி 

    உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!
    கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
    ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
    சைவா, போற்றி! தலைவா போற்றி!
    குறியே, போற்றி! குணமே, போற்றி!

    udaiyaay pooRRi uNarvee pooRRi 
    kadaiyeen adimai kaNdaay pooRRi         
    aiya pooRRi aNuvee pooRRi 
    saiva pooRRi thalaivaa pooRRi 
    kuRiyee pooRRi kuNamee pooRRi

115.     நெறியே போற்றி நினைவே போற்றி 
    வானோர்க் கரிய மருந்தே போற்றி 
    யேனோர்க் கெளிய விறைவா போற்றி 
    மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை 
    யாழா மேயரு ளரசே போற்றி

    நெறியே, போற்றி! நினைவே, போற்றி !
    வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
     ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
     மூஏழ் சுற்றம் முரண்உறு நரகிடை 
    ஆழாமே அருள் அரசே, போற்றி!

    neRiyee pooRRi ninaivee pooRRi
    vaanoorkku ariya marunthee pooRRi
    eenoorkku eLiya iRaivaa pooRRi            
    muuez suRRam muraN uRu narakidai
    aazaamee aruL arasee pooRRi

பொ-ரை: 106 - 117: அறிவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். முதல்வா வணக்கம்.
ஞானமே வணக்கம்.  வீட்டுநெறியே வணக்கம். பழம்போன்ற இன்பனே வணக்கம்.
கங்கையணிந்த செவ்விய சடையுடைய நம்பெருமானே வணக்கம் . எம்மை உடைமைப் 
பொருளாய்க் கொண்டவனே வணக்கம்.  உணர்ச்சியானவனே வணக்கம். கீழ்ப்பட்ட
என்னையும் நின்னடியவன் ஆக்கினவனே வணக்கம். ஐயனே வணக்கம். நுண்ணியனே
வணக்கம். சைவனே வணக்கம். தலைவனே வணக்கம். அடையாளம் ஆனவனே வணக்கம். 
பண்பனே வணக்கம். நல்வழியானவனே வணக்கம் . என் நினைவிற் கலந்துள்ளவனே  வணக்கம்.
செருக்குடைய விண்ணவர் அடைதற்கரிய அமுதமே வணக்கம். செருக்கில்லாத 
பிற அடியாருக்கு எளிவந்தருளும் அரசனே வணக்கம். 

106: Glory to Thee - One who knows, Glory to Thee - Spotless Love.

107: Glory to the Primal One! Glory to Thee - Oh! Wisdom Incarnate.

108: Glory to Thee - the goal I seek, Glory to Thee - Oh! Delicious fruit-like one!

109: Glory to Thee - You the receiver of heavenly Ganga in your holy locks! 
     Glory to Thee - you, the heart throb of the devotees!

110: Glory to Thee-  Oh! Master, Glory to Thee - Oh! Consciousness.

111: Glory to Thee - you took under servitude even me, this lowliest of men.

112: Glory to Thee - Oh Sire! Glory to Thee - Oh! minute atom.

113: Glory to Thee - Oh Civan! Glory to Thee - Oh Chief!

114: Glory to Thee - Oh You of the formless form! Glory to Thee - Oh Virtue Incarnate!

115: Glory to Thee - that art the right path and the right thoughts.

116: Glory to Thee - Oh You the Rare Medicine, hard to gain even for the celestial gods

(Note: Rare medicine is the elixir of immortality).

117: Glory to Thee - Oh Lord! Thou, easily accessible to those other than devas.

கு-ரை: 106 - 117: வேதம் = அறிவு, வேதி = அறிவுறுத்துவோன். கதி = வீட்டிற்குச் செல்லும் வழியையும் 
சென்று அடையும் இடத்தையும் குறிக்கும். அறிவு விழைவுடன் கலந்த காலை, உணர்ச்சி எனப்படும்.
சைவன், சிவ சம்பந்தம் உடையான். சிவம்= மங்கலம். மங்கலத்தைச் செய்வோன், சைவனாவன்.

120.     தோழா போற்றி துணைவா போற்றி 
    வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி 
    முத்தா போற்றி முதல்வா போற்றி
    யத்தா போற்றி யரனே போற்றி 
    யுரையுணர் விறந்த வொருவ போற்றி

    தோழா, போற்றி! துணைவா, போற்றி !
    வாழ்வே, போற்றி! என் - வைப்பே, போற்றி !
    முத்தா, போற்றி ! முதல்வா, போற்றி  !
    அத்தா, போற்றி ! அரனே, போற்றி !
    உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!

    thoozaa pooRRi thuNaivaa pooRRi 
    vaazvee pooRRi en vaippee pooRRi 
    muthaa pooRRi muthalva pooRRi 
    aththaa pooRRi aranee pooRRi 
    urai uNarvu iRantha oruva pooRRi

125     விரிகட லுலகின் விளைவே போற்றி
    யருமையி லெளிய வழகே போற்றி 
    கருமுகி லாகிய கண்ணே போற்றி 
    மன்னிய திருவருள் மலையே போற்றி
    யென்னையு மொருவ னாக்கி யிருங்கழற் 

    விரிகடல் உலகின் விளைவே, போற்றி !
    அருமையில் எளிய அழகே, போற்றி !
    கருமுகில் ஆகிய கண்ணே , போற்றி !
    மன்னிய திருவருள் மலையே, போற்றி!
    என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்

    virikadal ulakin viLaivee pooRRi 
    arumaiyil eLiya azakee pooRRi 
    karumukil aakiya kaNNee pooRRi 
    manniya thiru aruL malaiyee pooRRi 
    ennaiyum oruvan aakki irungkazal

130.     சென்னியில் வைத்த சேவக போற்றி 
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி 
    அழிவிலா வானந்த வாரி போற்றி 
    யழிவது மாவதுங் கடந்தாய் போற்றி 
    முழுவது மிறந்த முதல்வா போற்றி

    சென்னியில் வைத்த சேவக, போற்றி !
    தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி !
    அழிவு இலா ஆனந்த-வாரி, போற்றி!
    அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
    முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!

    senniyil vaiththa seevaka pooRRi
    thozuthakai thunpam thudaippaay pooRRi
    azivu ilaa aanathavaari pooRRi
    azivathum aavathum kadanthaay pooRRi
    muzuvathum iRantha muthalva pooRRi

பொ-ரை: 118 - 136: இருபத்தோரு தலைமுறையில் வருகிற சுற்றத்தார் அல்லது  மூவழியில்
வரும் ஏழு தலைமுறை சுற்றத்தார் மாறுபட்ட நரகங்களில் அழுந்தி  வருந்தாமே
ஆட்கொள்ளும் வேந்தனே வணக்கம். நண்பனே வணக்கம். துணை புரிபவனே வணக்கம்.

இன்ப வாழ்க்கையானவனே வணக்கம். ஈட்டி வைத்த நிதியம் ஆனவனே வணக்கம்.
வீடாயவனே வணக்கம். தம்வயம் உடையவனே வணக்கம். அப்பனே வணக்கம், பாசத்தை 
அழிப்பவனே வணக்கம். மொழியையும் மனவுணர்ச்சியும் கடந்த ஒப்பற்றவனே வணக்கம்.
விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே வணக்கம். அரிய பொருளாயிருந்தும் 
அன்பர்க்கு எளிதின் வந்தருளும் அழகனே வணக்கம். கார்மேகம் போல, அருள் புரிகின்ற 
கண் போன்றவனே வணக்கம். (தகுதியற்ற) அடியேனையும் அன்பருள் ஒருவனாக்கிப் 
பெருமையுடைய திருவடிகளை அடியேன் தலைமீது வைத்தருளிய பாதுகாப்பாளனே 
வணக்கம். கும்பிட்ட கையினரின் துயர் களைவோனே வணக்கம், கேடில்லாத இன்பக் 
கடலே வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் இல்லானே வணக்கம். எல்லாவற்றையும் கடந்து
அப்பாற்பட்டவனே வணக்கம். மான்போன்ற பார்வையுடைய உமையம்மையின் கணவனே 
வணக்கம். மேலுலகங்களிலுள்ள அடக்கமுடைய விண்ணவரின் தாயானவனே வணக்கம்.

118 - 119: Glory to Thee! Oh Lord, pray grant us shelter; save me and my kinsmen from the
        deluge of infernal hell.

120: Glory to Thee - Oh! My companion, Glory to Thee - Oh! My Helping Hand. 

121: Glory to Thee - Oh Bliss of my life! Glory to Thee - My Treasure Trove!

122: Glory to Thee - Oh You, free from the three kinds of bondage. Glory to Thee, the Primal Lord.

123: Glory to Thee - My Father! Glory to Thee - My Lord Civan. 

124: Glory to Thee - Thou, the Peerless One! Who transcends speech and sense perception. 

125: Glory to Thee - Thou, the Ultimate Reward of the souls in this wide sea-girt world!

126: Glory to Thee - Thou the Beauteous and the Rare yet easy of access to Thy devotees, 
            pray shelter me.

127: Glory to Thee - Thou, the Bounteous, much like dark rain clouds.

128: Glory to Thee - the Eternal Mountain of holy grace.

129 - 130: Glory to Thee- You the Protector, made even this unworthy me as a worthy man 
        among Your savants, placing Your two holy Feet on my head.

131: Glory to Thee - Thou that wipes off all sorrow of those who worship Thee with folded hands!

132: Glory to Thee - Oh! Imperishable sea of bliss.

133: Glory to Thee - Oh! Thou that art beyond beginning and dissolution.

134: Glory to Thee - Oh! Thou the First One, that hath surpassed everything else 

135: Glory to Thee - Oh! Thou, Consort of Goddess Uma, who has fawnlike eyes.

136: Glory to Thee - Oh! Thou, that art the Mother of all sky-borne gods in the heavenly abode.

கு-ரை: 118 - 136; சிவஞானிகளின் நல்லியல்பினை, இருபத்தொரு தலைமுறைச் சுற்றத்தாருடையராய்
நரகம் புகார் என்பது ஒரு கருத்து. தந்தை வழி, தாய் வழி, தன் வழியென்ற மூவழியிலுள்ள ஏழு
தலைமுறையார் என்பதும் உண்டு. மூவழிச் சுற்றத்தார்க்கும் அருள்க, அரசனே என்று  வேண்டுவதாகப்
பொருள் கொள்ளுவாரும் உளர். தோழன், ஒத்த உணர்ச்சி உடையவன். துணைவன் உடன் உதவி
செய்பவன். வைப்பு= சேமித்து வைத்த நிதியம். 'எய்ப்பினில் வைப்பு' என்று வந்ததும் ஓர்க. 
முத்தா= பாச நீக்கமுடையவனே. எவற்றிற்கும் முதல்வனாய்த் தனக்கு ஒரு முதல்வனிலான், 
தம் வயமுடையன் என்று  அறிக. மனித வாழ்வின் பயன், இறைவழிபாடே. உலகு ஓங்கி வளர்தற்குக் 
காரணமானவன் என்று பொருள் கோடலும் உண்டு. உள்ளங்கவர் வடிவினன் ஆதலின், 'அழகே' என்றார். 
கருமுகிலின் நீர் நிலையாதது. இறைவன் திருவருள், நிலைத்த தன்மையது. அமரர், அடக்கமுடையவர்.

135.     மானேர் நோக்கி மணாளா போற்றி 
    வானகத் தமரர் தாயே போற்றி
    பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி 
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி 
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

    மான் நேர் நோக்கி மணாளா, போற்றி !
    வானகத்து அமரர் தாயே, போற்றி!
    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி !
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி !
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!

    maanneer nookki maNaaLaa pooRRi
    vaanakaththu amarar thaayee pooRRi 
    paaridai ainthaay paranthaay pooRRi 
    neeridai naankaay nikaznthaay pooRRi
    thiiyidai muunRaay thikaznthaay pooRRi

பொ-ரை: 137 - 141: நிலமாகிய பூதத்தின் கண் ஐந்து தன்மையனாய் விரிந்தவனே  வணக்கம்.
நீரின் கண் நான்கு தன்மையனாய் விளங்கினவனே வணக்கம், நெருப்பின் கண் மூன்று
தன்மையனாய்த் தெரிபவனே வணக்கம். காற்றின் கண் இரண்டு தன்மையனாய்  விரும்பி 
நின்றாயே வணக்கம், வானின் கண் ஒரு தன்மையோடு தோன்றியவனே வணக்கம். 

137: Glory to Thee - Oh! Thou, that pervadeth the earth as all the five elements (smell, taste,
form, sense of touch and sound).

138: Glory to Thee - Oh! Thou, manifest in water as four elemental aspects (taste, form, sense of
touch and sound).

139: Glory to Thee - Oh! Thou, shining in fire as three elemental aspects (form, sense of touch
and sound).

140: Glory to Thee - Oh! Thou, delighting in air as two elemental aspects (sense of touch and
sound).

141: Glory to Thee - Oh! Thou, that art present in ether as the One (sound).

கு-ரை: 137 - 141:  போற்றி, போற்றுதல் என்ற பொருளில் வணக்கத்தைக் குறிக்கும் 'காக்க' என்ற 
பொருளுடைய வியங்கோளுமாம். ஆதலின், இருவகையாகவும் பொருள் கொள்ளப்பட்டது. நாற்றம்
சுவை, ஒளி, ஊறு, ஓசை என்பன ஐம்பூதத்தின் முறையே உள்ள தன்மைகள். நிலத்தில், பிற நாற்பூதமும் 
கலந்திருத்தலின், ஐந்து தன்மைகள் அதனில் காணப்படும். அவ்வாறே பிற பூதங்களுக்கும் கொள்க.

140.     வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
    வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி
    யளிபவ ருள்ளத் தமுதே போற்றி 
    கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
    நனவிலு நாயேற் கருளினை போற்றி

    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி !
    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
     அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி !
    கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
     நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!

    vaLiyidai iraNdaay makiznthaay pooRRi 
    veLiyidai onRaay viLainththaay pooRRi 
    aLipavar uLLaththu amuthee pooRRi
    kanavilum theevarkku ariyaay pooRRi         
    nanavilum naayeeRku aruLinai pooRRi

145.     யிடை மரு துறையு மெந்தாய்  போற்றி
    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
    யாரூ ரமர்ந்த வரசே போற்றி 
    சீரார் திருவை யாறா போற்றி 
    யண்ணா மலையெம் அண்ணா போற்றி

    இடை மருது உறையும், எந்தாய் போற்றி !
    சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
    ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி !
    சீர்ஆர் திருவையாறா, போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா, போற்றி !

    idaimaruthu uRaiyum enthaay pooRRi 
    sadaiyidai kangkai thariththaay pooRRi
    aaruur amarntha arasee pooRRi 
    seeraar thiruvai yaaRaa pooRRi 
    aNNaa malai em aNNaa pooRRi

150.     கண்ணா ரமுதக் கடலே போற்றி 
    யேகம் பத்துறை யெந்தாய் போற்றி 
    பாகம் பெண்ணுரு வானாய் போற்றி 
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி 
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

    கண் ஆர் அமுதக்கடலே, போற்றி!
    ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி !
    பாகம் பெண்உரு ஆனாய், போற்றி!
    பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
    சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!

    kaNNaar amutha kadalee pooRRi            
    eekam paththu uRai enthaay pooRRi
    paakam peN uru aanaai pooRRi 
    paraayththuRai meeviya paranee pooRRi 
    siraapaLLi meeviya sivanee pooRRi

பொ-ரை: 142 - 156: உருகுபவர் உள்ளத்தே அமுதமாயுள்ளவனே வணக்கம் . உருகாத்
தேவர்களுக்கு சொப்பனத்திலும் காண்பதற்கு அரியவனே வணக்கம். சாக்கிரமாகிய
நினைவாலும் நாய் போன்ற எனக்கு அருள் புரிந்தவனே வணக்கம். திருவிடை மருதூரில்
வீற்றிருக்கும் அப்பனே காத்தருளுக.  தனது சடையில் கங்கையை ஏற்று அமைத்துக்
கொண்டவனே காத்தருளுக. திருவாரூரில் தங்கி அருளிய மன்னனே காத்தருளுக!
செம்மை பொருந்திய திருவையாறு உடையவனே காக்க . திருவண்ணாமலை உறையும்
எமது மேலோனே காத்தருளுக. கண்ணில் நிறைந்த இன்பக் காட்சிக் கடலனையவனே
காத்தருளுக. திருஏகாம்பரமாகிய காஞ்சிப்பதியில் வீற்றிருக்கும் எங்கள் தந்தையே  காக்க.
அவ்விடத்தில் ஒரு பாகத்தில் பெண் வடிவம் கொண்டவனே காத்தருளுக. திருச்சிராப்பள்ளி
சிவபெருமானே காக்க. உன்னைத் தவிர வேறு ஆதரவு யாதுமிலாதேன், என்னைக் காத்தருளுக.
திருக்குற்றாலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமானே காத்தருளுக.

142: Glory to Thee - Oh! Thou, that art ambrosia for those whose minds melt in reverence.

143: Glory to Thee - Oh! Thou that art difficult even in dreams for celestial gods to perceive.

144: Glory to Thee - Oh! Thou, that graced me, this cur, even in my wakeful state.

145: Glory to Thee - Oh! My Father who abides in Thiru-Idai-Maruthoor. 

146: Glory to Thee - Oh! Thou, the Wearer of Goddess Ganga at Thy hair lock.

147: Glory to Thee - Oh! Thou, that abideth in Thiru Aaroor.

148: Glory to Thee - Oh! Thou the Lord of the bounteous Thiru-Iyaaru.

149: Glory to Thee - Oh! Thou, the pristine Lord of Thiru-Annaamalai.

150: Glory to Thee - Oh! The Sea of Ambrosia delighting the eye.

151: Glory to Thee - Oh! My Father abiding in Thiru-Ekambam.

152: Glory to Thee - Oh! Thou that holdeth a female form in your physical frame. 

153: Glory to Thee - Oh! Thou that art fond of Thirup-Paraaith-Thurai.

154: Glory to Thee - Oh! Thou that art fond of Chirappalli.

155: Glory to Thee - Oh! I know not here any other desire.

156: Glory to Thee - Oh! Thou, the dancing Lord of Kuttalam.

கு-ரை: 142 - 156: தேவர் பதவி, போக நோக்குடையது ஆகலின், இறை நினைவு அரிதாம். அதனால்
அவன் கனவிலும் தோன்றான். நினைவிலுள்ளது, கனவில் தோன்றலாம். நினைவே இல்லாதபோது
கனவிலும் தோற்றம் இராது. தனக்கு அருள்புரிந்தமை, வெளிப்படையாதலின், 'நனவிலும்' என்றார் .
அங்ஙனம் இறை அருள் செய்யப்பெறுந் தகுதி தமக்கின்மை தெரிவித்தல் அடிகளியல்பு. திருவிடைமருதூர்
முதலியன திருவாசகத்தின் வைப்புத்தலங்களாம். பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்திலே, கூத்தர்
கோயில் என்பது சித்திர சபை அடிவாரத்தில் உள்ளது. அதன்கண் சிவலிங்க வடிவமே உள்ளது.

155.     மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 
    குற்றா லத்தெங் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி 
    ஈங்கோய் மலையெம் மெந்தாய் போற்றி
    பாங்கார் பழனத் தழகா போற்றி

    மற்று ஓர்பற்று இங்கு அறியேன், போற்றி!
    குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
    கோகழி மேவிய கோவே, போற்றி !
    ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
    பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!

    maRRu oor paRRu ingku aRiyeen pooRRi 
    kuRRaalaththu em kuuththa pooRRi
    kookazi meeviya koovee pooRRi
    iingkooy malai em enthaay pooRRi 
    paangku aar pazanaththu azakaa pooRRi

பொ-ரை: 157 - 159: திருவாவடுதுறையில் அன்பரை ஆட்கொள்ளப் பொருந்திய  அரசே
வணக்கம். ஈங்கோய் மலையில் எழுந்தருளிய எங்கள் அப்பனே வணக்கம். வனப்பு மிகுந்த
திருப்பழனத்தில் இருக்கும் அழகனே வணக்கம்.

157: Glory to Thee - Oh Lord, that gladly abideth in Thirup-Perun-Thurai.

158: Glory to Thee - You, my father in Eengoi hills.

159: Glory to Thee-Oh! Thou, The Handsome One of the beauteous Thirup-Palanam. 

கு-ரை: 157 - 159: கோகழி, பெருந் துறையையுங் குறிக்கலாம். ஈங்கோய்மலை, கீர்த்தித் திருவகவலிலும்
கூறப்பட்டது. பாங்கு - அழகு

160.     கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
    யடைந்தவர்க் கருளு மப்பா போற்றி 
    யித்தி தன்னின் கீழிரு மூவர்க்
    கத்திக் கருளிய வரசே போற்றி
    தென்னா டுடைய சிவனே போற்றி

    கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!
     அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
    இத்தி தன்னின்கீழ் இரு-மூவர்க்கு 
    அத்திக்கு அருளிய அரசே, போற்றி!
    தென்நாடு உடைய சிவனே, போற்றி!

    kadampuur meeviya vidangkaa pooRRi
    adainthavarkku aruLum appaa pooRRi 
    iththi thannin kiiz iru muuvarkku 
    aththikku aruLiya arasee pooRRi 
    thennaadu udaiya sivanee pooRRi

165.     யெந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி 
    யேனக் குருளைக் கருளினை போற்றி 
    மானக் கயிலை மலையாய் போற்றி 
    யருளிட வேண்டு மம்மான் போற்றி
    யிருள்கெட வருளு மிறைவா போற்றி

    எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
    ஏனக்-குருளைக்கு அருளினை, போற்றி!
    மானக் கயிலை மலையாய், போற்றி !
    அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
    இருள் கெட அருளும் இறைவா, போற்றி!

    ennaaddavarkkum iRaiva pooRRi 
    eenak kuruLaikku aruLinai pooRRi 
    maanak kayilai malaiyaay pooRRi 
    aruLida veeNdum ammaan pooRRi 
    iruL keda aruLum iRaivaa pooRRi            

170.     தளர்ந்தே னடியேன் றமியேன் போற்றி 
    களங்கொளக் கருத வருளாய் போற்றி 
    யஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
    நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி 
    அத்தா போற்றி ஐயா போற்றி

    தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி !
    களம்கொளக் கருத அருளாய், போற்றி!
    ' அஞ்சேல்' என்று இங்கு அருளாய் போற்றி !
    நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி !
    அத்தா போற்றி! ஐயா போற்றி!

    thaLarntheen adiyeen thamiyeen pooRRi
    kaLam koLa karutha aruLaay pooRRi 
    anjseel enRu ingku aruLaay pooRRi 
    nanjsee amuthaay nayanthaay pooRRi
    aththaa pooRRi aiyaa pooRRi 

பொ-ரை: 160 - 176: திருக்கடம்பூரில் விளங்கிய வீரனே வணக்கம். தன்னை அன்பாற்
சேர்ந்தார்க்குப் பேரருள் புரியும் தந்தையே வணக்கம். கல்லால மரத்தின் கீழ்ப் 
பட்டமங்கையில் இயக்கிகள் அறுவருக்கும், கடம்பவனத்தில் வெள்ளானைக்கும் அருள்புரிந்த
வேந்தே வணக்கம். தென் தமிழ் நாட்டினைத்  தனது பழமையான பதியாக உடைய
சிவபெருமானே வணக்கம், எந்த நாட்டினருக்கும் வழிபடு தெய்வமானவனே வணக்கம்.
பன்றிக் குட்டிக்குப் பாலூட்டி வளர்த்து அருளியவனே வணக்கம். பெருமை பொருந்திய
கயிலை மலையை இடமாகக் கொண்டவனே வணக்கம். விரைவில் வீடு அருள் புரிந்திட
வேண்டுகிறேன் அம்மானே வணக்கம் . உனக்கு அடிமைப்பட்டவனாகிய தனியேன் 
தளர்ச்சியுற்றேன். காத்தருளுக. நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள் புரிவாய்,
நினக்கு வணக்கம். இவ்விடத்திலே அஞ்சாதேயென்று ஊக்கம் கொடுத்தருள்வாயாக. 
பெருமானே வணக்கம். விடத்தையே சாவா மருந்தாக விரும்பி உட்கொண்டாய் காத்திடுக.
அப்பனே வணக்கம். தலைவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். அன்பனே வணக்கம். 
எவற்றுக்கும் பிறப்பிடமானவனே வணக்கம். 

160: Glory to Thee - Oh Thou, gladly manifest as the uncreated form in Kadamboor.

161: Glory to Thee - Oh! Father who bestows grace on those who take refuge in you. 

162 - 163: Glory to Thee- Oh King! You have showered benign grace on the six goddesses of
virtue under the white fig tree and on the white elephant in Kadamba forest.

164 - 165: Glory to Thee -
    Oh Lord Civa who ruled over and owned the southern land of India; 
    Glory to Thee that art the only God for all people in every land.

166: Glory to Thee - Oh! Lord, that bestowed  grace on to a litter of young wild hogs and suckled
them fondly by acting like a mother to the young ones.

167: Glory to Thee - Oh! Thou, that resideth in the glorious Mount Kailas ( Kailash Hill in Himalayaas)

168: Glory to Thee - Oh! Father, grant me grace and liberation. 

169: Glory to Thee - Oh God! that showers grace in order to dispel my darkness of primordial bondage

170: Glory to Thee, Oh Lord, I am Your slave languishing all alone.

171: Glory to Thee - Oh God! Grant me grace that I may gain stability of mind and contemplate
on You always

172: Glory to Thee - Oh God! say to me "Fear Not" and bestow grace on me here and now.

173: Glory to Thee - Oh! Lord that delightfully consumed poison as very ambrosia.

174: Glory to Thee - You Sire, Oh Father. Glory to Thee - Oh! My Teacher.

175: Glory to Thee - Oh! You Eternal One: Glory to Thee - Oh! You the immaculate one

176: Glory to Thee -Oh! You chief headman, Glory to Thee - Oh! You the source of creation

கு-ரை: 160 - 176: விடங்கன்= வீரன். பிழை செய்தாலும் தன்னை வந்தடைந்தால் பிழையை மன்னித்து
அருள்புரிபவன் என்பது கருத்து. வெள்ளை யானை சாபந்தீர்ந்த படலம், திருவிளையாடற்புராணத்துள்
காண்க. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்ததும் அப்புராணத்துள் காண்க.  தென்னாட்டிலே சிவ 
வணக்கத் தோற்றங் குறித்தவாறு. எந்த நாட்டில் எத்தெய்வம் வழிபடப்படினும், அத்தெய்வமாய் நிற்போன்
சிவன் என அறிக. 'பத்தா' என்பதற்குப் பதியே, தலைவனே என்று பொருள் கோடலும் உண்டு.

175.     நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி 
    யரியாய் போற்றி அமலா  போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி

    நித்தா, போற்றி ! நிமலா, போற்றி !
    பத்தா, போற்றி! பவனே, போற்றி !
    பெரியாய், போற்றி ! பிரானே போற்றி!
    அரியாய், போற்றி! அமலா, போற்றி!
    மறையோர் கோல நெறியே, போற்றி!

    niththaa pooRRi nimalaa pooRRi
    paththaa pooRRi pavanee pooRRi
    periyaay pooRRi piraanee pooRRi
    ariyaay pooRRi amalaa pooRRi
    maRaiyoor koola neRiyee pooRRi

பொ-ரை: 177 - 182: எப்பொருளிலும் பெரிய பிரமமே வணக்கம். வள்ளலே வணக்கம்.
அரியவனே வணக்கம். பாசமிலானே வணக்கம். அந்தணர் வடிவோடு வந்த நீதியே
வணக்கம். என்னையாட் கொண்டது நீதியோ, யான் அதன் சிறப்பைத் தாங்க மாட்டேன். 
நீ காத்தருளுக. எனக்குச் சுற்றமானவனே வணக்கம். என் உயிர்க்குயிரே வணக்கம். சிறந்த
பொருளே வணக்கம். மங்கலப் பொருளே வணக்கம்.

177: Glory to Thee - Oh! You, greater than everything else. Glory to Thee - Oh! You the Liege Lord.

178: Glory to Thee - Oh! You rare one; Glory to Thee - Oh! You the immaculate one.

179: Glory to Thee - Oh! You the path of virtue who came in the guise of a vedic saint.

180: Glory to Thee - Oh! Is it just for you to leave me after accepting me as your vassal before?
I can no longer endure this situation. 

181: Glory to Thee - Oh! You my kinsmen; glory to you. Oh! You my very life of every life.

182: Glory to Thee Oh! You the Meritorious One, Glory to Thee - Oh! You the pure wisdom  (Civam)

கு-ரை: 177 - 182:  நீதியாளனே, முறையாக அருள் பெறத் தகுதிவரப் பெறாத என்னையும் ஆண்டது
முறையோ, அருள் புரிந்த சிறப்பை ஆற்ற வல்லேன் அல்லேன் என்றார். சிறவு =சிறப்பு;  வீடுமாம்.

180.     முறையோ தரியேன் முதல்வா போற்றி
    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றி மணாளா போற்றி 
    பஞ்சே ரடியாள் பங்கா போற்றி

    முறையோ? தரியேன்! முதல்வா போற்றி !
    உறவே போற்றி! உயிரே, போற்றி!
    சிறவே போற்றி !சிவமே, போற்றி!
    மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
    பஞ்சுஏர் அடியாள் பங்கா, போற்றி!

    muRaiyoo thariyeen muthalva pooRRi
    uRavee pooRRi uyiree pooRRi
    siRavee pooRRi sivamee pooRRi 
    manjsaa pooRRi maNaaLaa pooRRi
    panjsu eer adiyaaL pangkaa pooRRi        

185.     அலந்தே னாயே னடியேன் போற்றி
    இலங்கு சுடரெம் மீசா போற்றி 
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி 
    மலைநா டுடைய மன்னே போற்றி

    அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி !
    இலங்குசுடர் எம்ஈசா, போற்றி! 
    கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
    குவைப்பதி மலிந்த கோவே, போற்றி!
    மலை நாடு உடைய மன்னே, போற்றி!

    alantheen naayeen adiyeen pooRRi
    ilangku sudar em iisa pooRRi                 
    kavaiththalai meeviya kaNNee pooRRi            
    kuvaippathi malintha koovee pooRRi
    malainaadu udaiya mannee pooRRi

190.     கலையா ரரிகே சரியாய் போற்றி
    திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
    பொருப்பமர் பூவணத் தரனே போற்றி 
    அருவமு முருவமு மானாய் போற்றி 
    மருவிய கருணை மலையே போற்றி

    கலை ஆர் அரிகேசரியாய், போற்றி !
    திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!
     பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி !
    அருவமும் உருவமும் ஆனாய், போற்றி!
    மருவிய கருணை மலையே போற்றி !

    kalaiyaar arikee sariyaay pooRRi
    thirukkazuk kunRil selvaa pooRRi 
    poruppu amar puuvaNaththu aranee pooRRi
    aruvamum uruvamum aanaay pooRRi 
    maruviya karuNai malaiyee pooRRi

பொ-ரை: 183 - 196: அழகனே வணக்கம். மணவாளனே வணக்கம். பஞ்சு போல் மெல்லிய 
அழகிய சிற்றடியை உடைய அம்மை பாகனே வணக்கம்.  உடல் ஒழித்து வீடு 
எப்போதருள்வாய் என்றெண்ணி ஏக்கமுற்றேன்.  அடிமையாகிய நாயேன் தன்னைக் 
காத்திடுக. விளக்கமிக்க பெருஞ்சோதியான எங்கள் ஆண்டவனே வணக்கம். கவைத்தலை 
என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே வணக்கம். குவைப்பதி 
எனும் ஊரில் மகிழ்ந்திருந்த மன்னனே வணக்கம். மலை நாட்டினையுடைய வேந்தனே
வணக்கம்.  கல்வி மிகுந்த அரிகேசரியெனும் ஊரினை உடையாய் வணக்கம் . 
திருக்கழுக்குன்றத்தில் மேவிய ஞானச் செல்வனே வணக்கம். திருப்பூவணத்திலே குன்றிலே
அமர்ந்த ஒழுக்கக் கடவுளே வணக்கம். அருவமாய் நின்றும் உருவத் திருமேனி கொண்டவனே 
வணக்கம். அருள் நிறைந்த மலையே வணக்கம். நான்காம் நிலையைக்  கடந்த பேரறிவே 
வணக்கம். அறிதற்கரிதாய் சிவஞானத்தால் தெளியப்பட்ட பொருளே வணக்கம். 

183: Glory to Thee - You the white cloud; Glory to Thee - You that adorned yourself in 
wedding costume.

184: Glory to Thee - Oh! You the concorporate of Uma whose holy Feet glisten with crimson
red (by application of henna lotion).

185: Glory to Thee - Oh! I this cur of a slave, I am in great distress.

186: Glory to Thee - Oh! You my preceptor of glittering radiant light.

187 - 192: (Lines 187 to 192 Maanikkavaachakar mentions a few ancient temple towns,

where Lord Civan bestowed His grace, some of which could not be traced now).

Glory to Thee - Oh! You my very eyes, willingly residing in Kaviththalai. 

Glory to Thee - Oh King! Who reside in Kuvaippathi.

Glory to Thee - Oh King! Who owns the mountainous country.

Glory to Thee - Oh! You whose abode is Arikesari where men of wisdom reside

Glory to Thee - Oh! You the wealth of Thiruk-Kazhuk-Kundram,

Glory to Thee - Oh! You Civan abiding in Thirup-Poovanam situated amidst hills.

193: Glory to Thee - You the form and the formless.

194: Glory to Thee - Oh! You inseparably united to the soul of your savants and showering on 
them your mountain of grace.

195: Glory to Thee - Oh! Effulgence who have transcended even the fourth (Thuriyam) state.
(Thuriyam - The fourth state of the soul in which the soul is in the navel with the
'Piraanam' and is cognizant of itself alone).

196: Glory to Thee - Oh! Enlightenment known only by 'Civagnaanam' (Transcending man's
ordinary intelligence).

கு-ரை: 183 - 196: பஞ்சு என்பதற்குச் செம்பஞ்சுக் குழம்பூட்டிய எனலாம். குவைப்பதி என்பதற்குக்
குகைகளாகிய இடங்கள் எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். துரியம் மூன்றவத்தைக்கும் அப்பாற்பட்ட
நிலை.  அதனையே உபநிடத முதலிய நூல்களில் முடிவான நிலையாகக் கூறுவர். அதற்கும்
அப்பாற்பட்டவன் முதல்வன் என்பது சித்தாந்தக் கருத்து.

195.     துரியமு மிறந்த சுடரே போற்றி 
    தெரிவரி தாகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆளா னவர்கட் கன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி

    துரியமும் இறந்த சுடரே, போற்றி !
    தெரிவு-அரிது ஆகிய தெளிவே, போற்றி !
    தோளா முத்தச் சுடரே, போற்றி!
    ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி !
    ஆரா-அமுதே அருளே, போற்றி!

    thuriyamum iRantha sudaree pooRRi 
    therivu arithu aakiya theLivee pooRRi
    thooLaa muththa sudaree pooRRi
    aaL aanavarkadku anpaa pooRRi
    aaraa amuthee aruLee pooRRi

200.     பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 
    தாளி யறுகின் றாராய் போற்றி 
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி 
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 
    சிந்தனைக் கரிய சிவமே போற்றி

    பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி !
    தாளி அறுகின் தாராய், போற்றி !
    நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி !
    சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
    சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி !

    peer aayiram udai pemmaan pooRRi 
    thaaLi aRukin thaaraay pooRRi 
    niiL oLi aakiya niruththaa pooRRi 
    santhana saanthin sundara pooRRi         
    sinthanaikku ariya sivamee pooRRi

205.     மந்திர மாமலை மேயாய் போற்றி 
    யெந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி 
    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி 
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி 
    கருங்குரு விக்கன் றருளினை போற்றி

    மந்திர மாமலை மேயாய், போற்றி !
    எம்-தமை உய்யக் கொள்வாய் போற்றி!
    புலிமுலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
    அலைகடல் மீமிசை நடந்தாய், போற்றி !
    கரும்குருவிக்கு அன்று அருளினை போற்றி!

    manthira maamalai meeyaay pooRRi 
    emthamai uyya koLvaay pooRRi 
    pulimulai pulvaaykku aruLinai pooRRi 
    alaikadal miimisai nadanthaay pooRRi
    karungkuruvikku anRu aruLinai pooRRi

210.     யிரும்புலன் புலர விசைந்தனை போற்றி
    படியுறப் பயின்ற பாவக போற்றி 
    அடியொடு நடுவீ றானாய் போற்றி 
    நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
    பரகதி பாண்டியற் கருளினை போற்றி

    இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி !
    படி உறப் பயின்ற பாவக, போற்றி !
    அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
     நரகொடு, சுவர்க்கம் நால்-நிலம், புகாமல்
    பரகதி பாண்டியற்கு அருளினை, போற்றி!

    irumpulan pulara isainthanai pooRRi 
    padiyuRa payinRa paavaka pooRRi 
    adiyoodu nadu iiRu aanaay pooRRi
    narakoodu suvarkkam naanilam pukaamal
    parakathi paaNdiyaRku aruLinai pooRRi

பொ-ரை: 197 - 214: துளைக்கப்படாத தூய முத்தாகிய ஒளியே வணக்கம், ஆட்பட்டவர்க்கு
ஆதரவானவனே வணக்கம். தெவிட்டாத அமுதமே, அளவிடப்படாத அருளே வணக்கம்.
ஆயிரம் பேருடைய அண்ணலே வணக்கம். தாளிக்கொடியின் தழையும், அருகம் புல்லும்
கலந்து கட்டிய மாலை அணிந்தவனே வணக்கம். நெடிய சோதியாய கூத்தனே வணக்கம். 
சந்தனக் குழம்பை அணிந்த அழகனே வணக்கம். அடியேங்களாகிய எங்களை உய்யும்படி
ஆட்கொள்பவனே வணக்கம் . புலியின் பாலானது மானிற்குப் பயன்படும்படி 
அருளினவனே வணக்கம். அலையுடைய கடலின் மேலிடத்தே நடந்தவனே வணக்கம்.
கரிக்குருவிக்குப் பண்டைக் காலத்தே அருள் புரிந்தவனே வணக்கம்.  வலிய ஐம்புல
வேட்கைகள் அற்று ஒழியும்படி என் உள்ளத்தில் பொருந்தி அருளினாய்; உனக்கு வணக்கம். 
நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்றம் உடையவனே வணக்கம் . முதலும்
நடுவும் முடிவும் ஆனவனே வணக்கம். நரகம் விண்ணுலகம் நிலவுலகம் என்ற மூவிடத்தும்
புகாதபடி மேலான வீட்டுலகைப் பாண்டியனுக்கு நல்கி அருளினாய்; உனக்கு வணக்கம்.

197: Glory to Thee - Oh! You radiance of unpierced pearl.

198: Glory to Thee - Oh! You that art dear to those who have become your vassal

199: Glory to Thee - Oh! You unsatiating ambrosia, Oh! You embodiment of divine grace.

200: Glory to Thee - Oh! Lord bearer of thousand names (though you are nameless), 

201: Glory to Thee - Oh! You wearer of Thali and 'Aruhu' garland (Thali is a vine and 
Aruhu is a fine grass).

202: Glory to Thee - Oh! You tall pillar of effulgence the flame of which wafts about 
as in a dancing mode.

203: Glory to Thee -Oh! You handsome one smeared over with holy ash and sandal paste.

204: Glory to Thee - Oh! You bliss - rare to be conceived by mind.

205: Glory to Thee - Oh! You who delightfully reside in the Mahendra Mount from where you
revealed the scriptures four.

206: Glory to Thee - Oh! Lord, pray take us unto Thee and redeem (us).

207: Glory to Thee - Oh! You who graced a tiger and made it suckle an orphaned deer.

208: Glory to Thee - Oh! You who had trodden upon the billowing sea.

209: Glory to Thee - Oh! You graced the blackbird in the days of yore.

210: Glory to Thee - Oh! Lord that controlled the five senses making them shrivel, and let the
saints witness this.

211: Glory to Thee - Oh! You who have manifested in the earth in different forms.

212: Glory to Thee - Oh! You who are the beginning, the middle and the end.

213 - 214: Glory to Thee - Oh! Glory to You who without letting the Paandiyan King enter heaven 
or hell or come back into this world (of four divisions), graciously, bestowed Muththi on him.

கு-ரை: 197 - 214: முத்தம்-  முதன்மையான மணி என்று பொருள். 'தோளா' - குற்றமற்ற என்ற 
கருத்தைக் குறிக்கும். 'ஆரா' என்பதை அருளே என்பதோடும் சேர்ப்பதுண்டு. 'ஆயிரம்' என்பதற்குப் பல 
என்று பொருள் கொள்வாரும் உளர். அன்பர் சாத்திய பச்சிலை எதுவும் இறைவர்க்காம் என்பது கருத்து.
'தாளியறுகு' என்பது, அறுகின் ஒருவகை என்பாரும் உளர். நீளொளியாய் நின்று அயனரிகளைக் 
கூத்தாட்டுவித்தவன் ஆதல் பற்றி, 'நிருத்தா' என்றார் என்பாரும் உளர். மகேந்திரத்தை 'மந்திரமா மலை'
என்று முன்பு, கீர்த்தித் திருவகவலிற் கூறியதும் காண்க. புலிநிறைந்த காடொன்றிலே, பெண் மான் ஒன்று
குட்டியை ஈன்று, ஒரு புதரடியில் விட்டு நீர் பருகச் சென்ற இடத்தே வேடன் அம்பால் இறந்தபோது
குட்டியை நினைந்து வருந்திற்று.  சிவபெருமான், பெண் புலி ஒன்றையே அக்குட்டிக்குப் பால் 
கொடுக்குமாறு செய்வித்தனர். மான் குட்டி வளர்ந்து பிழைத்துக் கொண்டது. புல்வாய், ஒருவகை மான்.
வலைவீசிக் கெளிற்று மீன் கொண்ட காலை, இறைவன் அலைகடல் மிசை நடந்தான். கரிக்குருவி
ஆலவாயண்ணலைத் தொழுது உபதேசம் பெற்ற கதை, திருவிளையாடற் புராணத்துள் காண்க.
'சாந்து' என்பதற்குத் திருநீறு என்று பொருள் கொள்வாரும் உண்டு.

215.     ஒழிவற நிறைந்த வொருவ போற்றி 
    செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
    கழுநீர் மாலைக் கடவுள் போற்றி 
    தொழுவார் மைய றுணிப்பாய் போற்றி 
    பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

    ஒழிவுஅற நிறைந்த ஒருவ, போற்றி !
    செழுமலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி !
    கழுநீர் மாலைக் கடவுள், போற்றி !
    தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
    பிழைப்பு, வாய்ப்பு. ஒன்று அறியா நாயேன்

    ozivu aRa niRaintha oruva pooRRi 
    sezumalar sivapuraththu arasee pooRRi 
    kazuneer maalai kadavuL pooRRi
    thozuvaar maiyal thuNippaay pooRRi
    pizaippu vaayppu onRu aRiyaa naayeen            

பொ-ரை: 215 - 217: நீக்கமின்றி எங்கும் நிறைந்த ஒருவனே வணக்கம். செழுமை மிக்க மலர்
நிறைந்த சிவபுரத்துத் தலைவனே வணக்கம் . செங்கழுநீர் மாலையணிந்த கடவுளே வணக்கம்.

215: Glory to Thee - Oh! You unique one permeating everywhere without a void.

216: Glory to Thee - Oh! King of Thirup-Perun-Thurai which abounds, in luxurious red flowers.

217: Glory to Thee - Oh! God wearing the garland of purple Indian water lilly.

கு-ரை: 215 - 217: சிவபுரம், பார்மேல் உத்தர கோச மங்கை என்றும் திருப்பெருந்துறை என்றும் கூறுப.
சிவலோகம் என்பாரும் உளர். இறைவன் ஆசிரியனாய் வந்த போது செங்கழுநீர் மாலை அணிந்தமை
கீர்த்தித் திருவகவலுள் கூறப்பட்டது. 

220.     குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி
    புரம்பல வெரித்த புராண போற்றி
    பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றி போற்றி புராண காரண

    குழைத்த சொல்-மாலை கொண்டருள்  போற்றி!
    புரம் பல எரித்த புராண, போற்றி!
    பரம்-பரம் சோதிப் பரனே, போற்றி !
    போற்றி! போற்றி ! புயங்கப் பெருமான்!
    போற்றி! போற்றி! புராண-காரண!

    kuzaiththa solmaalai koNdaruL pooRRi         
    purampala eriththa puraaNa pooRRi 
    paramparanj soothi paranee pooRRi
    pooRRi pooRRi puyangka perumaan
    pooRRi pooRRi puraaNa kaaraNa

225.      போற்றி போற்றி சயசய போற்றி 
    
    போற்றி !போற்றி! சய, சய, போற்றி!

    pooRRi pooRRi seya seya pooRRi

பொ-ரை: 218 - 225: வழிபடுவோரது மயக்கத்தை அறுப்பாய்; உனக்கு வணக்கம். தவறு யாது 
பொருத்தம் யாது என்று அறியா நாயேன் தொடுத்த மொழித் தொடரை ஏற்றுக் 
கொண்டருள்வாய்; வணக்கம். ஊர்கள் பலவற்றை அழித்த பண்டையோனே வணக்கம்.
மேலானவற்றுக்கு மேலான ஒளியுடைய மேலோனே வணக்கம். வணக்கம். வணக்கம்.
பாம்பணிந்த பெரியோனே பழமையின் காரணனே வணக்கம். வணக்கம். வணக்கம்.
வெற்றி வெற்றி மிக்கோனுக்கு வணக்கம் .

218: Glory to Thee - Oh! You who dispels all delusions of thy worshippers.

219: Glory to Thee - Graciously accept this.

220: Garland of words strung (woven) by this cur who neither knows what is wrong nor knows
how to avoid wrong doings.

221: Glory to Thee - Oh! You the Ancient One who burnt down many cities (the agglomeration
of the three cities made out of iron, silver and gold).

222: Glory to Thee - Oh! Infinitely infinite effulgent infinity,

223: Glory to Thee! Glory to Thee!! Oh Lord adorned with snake- the lightning in the cloud is
metaphorically described as snake.

224: Glory to Thee! Glory to Thee! Oh! You, the Ancient Cause.

225: Glory to Thee! Glory to Thee! Victory, Victory to Thee, Glory to Thee. 

கு-ரை: 218 - 225; குழைத்தல் = கூட்டுதல், 'புரம்பல' என்பதற்கு முப்புரம் எனவும் பொருள் கொள்வது 
உண்டு. திரிபுர தகனம், பல்லூழிகளிற் பலவாம் என்பாரும் உளர். 'புரம்பல' - உடல் பல என்று கொண்டு
பல்பிறவியையும் 'அருட் பெருந்தீயால்' அழித்தவன் என்றும் கொள்க. எக்காலத்தும் எவ்வுயிர்க்கும் பிறவி 
அறுப்பவன் சிவனாதலின், அவன் 'புராணன்' எனப் பட்டான். புயங்கம் = பாம்பு, உலகை நடத்தும் பல
சடசத்திகளுக்கும் அது அறிகுறி. காரணேசுரராகிய ஐவர்க்கும் காரணனாய்த் தனக்கொரு காரணமும்
இல்லாதோன் ஆதலின், 'புராண காரண' என்றார். இறைவன் அருள் வெற்றியே நிலை பெறுதலின்
வெற்றி, வெற்றி போற்றி என்று அருளினார்.

            THIRUCHCHITRAMBALAM

    5. திருச்சதகம்                        5. THIRUCH-CHATHAHAM


(பக்தி வைராக்கிய விசித்திரம் )                     The Sacred Centad 
திருப்பெருந்துறையில் அருளியது                Composed whilst in Thirup-Perun-Thurai
                         திருச்சிற்றம்பலம்


    'சதகம்' என்பது நூறு பாட்டுக்களைத் தொகை  நிலையாகவேனும் ,
தொடர் நிலையாகவேனும் செய்யும் செய்யுள் வகை. எனவே, 'சதகம்' என்பது, எண்ணால் பெறும்
பெயராதல் தெளிவு, இனி, 'கலம்பகம், அந்தாதி' ஆகியவை அவற்றின் தொடக்கத்தாலும் பிற
காரணங்களாலும் இப்பெயர்கள் பெறும். 

    'தொகைநிலை, தொடர்நிலை' என்னும் இரண்டனுள் இச்சதகம் தொடர்நிலை,
'சொற்றொடர் நிலை, பொருள் தொடர்நிலை' என்னும் இருவகைத் தொடர் நிலைகளுள்
 அந்தாதியாகத் தொடர்தலின், இது சொற்றொடர் நிலையாதல் வெளிப்படை. தொகை நிலையாய்
வருவதனைச் 'சதகம்' என்றும் அந்தாதியாய் வருவதனை 'அந்தாதி' என்றும் வழங்கினர்.

    இவ்வந்தாதித் தொடர், பத்து வகையான பாட்டுக்களை வகைக்குப் பத்தாக உடையது.
அந்தாதியுள்ளும் இவ்வாறு வருவதனைப் பிற்காலத்தார் 'பதிற்றுப்பத் தந்தாதி' எனச் சிறப்புப் பெயர்
கொடுத்து வழங்கினர். இங்ஙனம் பெயர்களை வேறுதெரித்துக் கூறினாராயினும், 'சதகம்,  
அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி' என்னும் செய்யுள் வகைகளுக்கு எல்லாம் அடிகள் அருளிச்செய்த
இத் திருச்சதகமே முதன் முதலாக அமைந்தது. 

    சிவபுராணம் முதலிய நான்கும் மிகப் பல அடிகளையுடைய ஒவ்வொரு பாட்டாகிய
தனிநிலைச் செய்யுள்கள் ஆதலின் அவற்றை முன்வைத்து, நான்கும், ஆறும், எட்டும் ஆய
சீர் வரையறைகளை உடைய சில அடிகளை உடைய பல பாட்டுக்களின் திரட்சியாகிய தொகைநிலை
தொடர்நிலைச் செய்யுள்கள் ஆதலின், இத்திருச்சதகம் முதலியவற்றை அவற்றின் பின் வைத்துக்
கோத்தனர் முன்னோர். அவற்றுள்ளும், நூறு, ஐம்பது, இருபது முதலிய பாட்டின் தொகை பற்றி
அம்முறையே முறையாகக் கோத்தனர் என்க. 

    மிகப் பல அடிகளையுடைய தனிநிலைச் செய்யுட்களாதலின், சிவபுராணம் முதலிய நான்கும்
'தோல்' என்னும் வனப்புச் செய்யுட்கள் ஆகும். 

    "இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் 
    பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் 
    தோல் என மொழிப தொன்னெறிப் புலவர்"
                        -(தொல்காப்பியம், செய்யுளியல், 238)
என்னும் இந்நூற்பாவிற்கு உரையாசிரியர் உரைத்த உரையே கொள்ளத்தக்கது. 

    இத்திருச்சதகம் முதலிய பலவும், பலப்பல வகையான பாட்டுக்கள், நூறு, ஐம்பது, இருபது
முதலிய பல்வேறு தொகையினவாய், மகளிர் விளையாட்டு, புறக்கைக்கிளை ஆகிய வகையில் 
புகழ்தலும், பரவலும் முதலிய பல பொருள்கள்மேல் தொகை நிலையும், தொடர் நிலையுமாகப் 
பெரிதும் புதுமைப்பட வருதலின், 'விருந்து' என்னும் வனப்பு செய்யுட்களாம்.

    "விருந்தே தானும்
    புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"
                        - (தொல்காப்பியம், செய்யுளியல், 239)
என்னும் இந்நூற்பாவில் பின்னை உரையாளர், "புதுவது கிளந்த" எனப் பாடம் ஓதினார்.

    தொல்காப்பியத்திற்குப் பின்னர்ப் பலவகையில் நெறிப்பட வந்த செய்யுள் வகைகளை 
'அகலக்கவி' எனவும், 'பிரபந்த வகை' எனவும் வைத்துத் தொண்ணூற்றாறு என வரையறைப்
படுத்தி, அவற்றிற்கெல்லாம் தனித்தனி இலக்கணம் சொல்லிப் போந்தார் பிற்காலத்தார். அவை 
பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்களுள் காணப்படும். எனினும், அடிகள் அருளிச்செய்த 
சில செய்யுள் வகைகள் அவற்றுள் அடங்கவில்லை. தேவாரத் திருப்பதிகங்களும் பலவேறு 
கட்டளைப்படச் செய்யப்பட்டமையின், 'விருந்து' என்னும் வனப்பினவே ஆயினும், அவை 
இசையாகிய சிறப்புடைமை பற்றித் திருமுறைகளுள் முன் வைக்கப்பட்டன. இயற்பாட்டுக்களிலும் 
இசைப்பாட்டுக்கள் இனிமையிற் சிறந்தன. கடவுட் பராவலில் இயற்பாட்டினும், இசைப்பாட்டு
உணர்வு மிகச் செய்வனவாதல் அறிக.

    Chapter (5) of Thiruvaachakam, named as Thiruch-Chathaham, comprises one hundred
hymns in all, and is divided into two decads, each decade bearing a distinct title reflecting the 
predominant theme portrayed thereunder. Chatham is one hundred and hence, we name this 
chapter 'The Sacred Centad' - 'Centad' standing for one hundred verses - Chathaham (On the
analogy of Dyad, Triad, Pentad, Hexad, Octad and so forth).

    In this chapter, the last word of each verse is used the first in the following verse. Also
the last word of a decade becomes the first one in the ensuing decade. Such an arrangement ,
known as Anthaathi (antham = the last one; aathi= the first) is common in saivaite literature,
particularly in Arul Maalais glorifying God and godly saints. Thiruch- Chathaham is verily an 
outburst of the most profound emotions of the saint, who laments time and again, his forlorn
state after being left behind in this world by Lord Civan who gathered up all His other fellow
devotees in Thirup-Perun-Thurai and vanished from sight absorbing them into a state of blissful eternity.

       Having had personal benediction at the hands of Lord Civan Himself and then being 
denied redemption alongside his erstwhile holy companions must indeed have steeped him into a
pathetic mood of desolation and despondency often driving him to extremes of self pity and
remorse even as he tried to figure out what possible lapses in his regimen might have brought
about this sordid state of isolation. And yet, he rallies round soon enough and makes progress
taking comfort in the Lord's kindly and persuasive comments ordering him to serve for some
more time in this world and then come over to merge in Him at the golden hall of Thillai (c.f
line 126-129 of Keerthith-Thiru-Agaval).

    Saint Maanikkavaachakar is as well versed in the nuances of Tamil grammar and rhetoric 
as in the deep seated philosophical aspects of saivite theology, which is reflected in his deft
handling and strict observance of the rules of prosody in all of his composition. The first four 
chapters are set in agaval metre - a relatively easy one to handle, while the fifth chapter has
decad set in various other verse forms. The first decade of chapter V is in Kattalai-Kalith-Thurai
which has to conform to very strict rules of grammar , and has a special aura of its own, making it
an elegant format at the hands of many savants and scholars. 

    The soul can apprehend Godhead only by unstinting and undying love and tenacity of
purpose. This is the teaching of this decad; in fact, of the entire Tiruvaachakam. The entire set 
of poems are connected by a rule which requires that the last word of each verse shall begin the
following verse. All the ten lyrics with their hundred verses are thus linked together. This
arrangement in Tamil is called 'Anthaathi'. The nearest English word will be " Anaphoretic
Verse" This centad is intended to exhibit the progress of the soul through the successive stages
of religious experience till it loses itself in the rapture of complete communion with the Supreme.

                THIRUCHCHITRAMBALAM


5. 1. மெய்யுணர்தல்                    5.1. MEIY UNARTHAL


கட்டளைக் கலித்துறை                    Discrimination of the Real

                திருச்சிற்றம்பலம்

1.     மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் 
    கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் 
    பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் 
    கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே

    மெய்தான் அரும்பி, விதிர் விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என் 
    கை-தான் தலை வைத்துக், கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம் 
    பொய்-தான் தவிர்ந்து, உன்னைப் 'போற்றி, சய,சய, போற்றி' என்னும் 
    கை-தான் நெகிழ விடேன்; உடையாய் ! என்னைக் கண்டு கொள்ளே.

    meythaan arumpi vithirvithirththu un viraiyaar kazaRku en 
    kaithaan thalai vaiththu kaNNeer thathumpi vethumpi uLLam
    pooythaan thavirnthu unnai pooRRi saya saya pooRRi ennum 
    kaithaan nekizavideen udaiyaay ennai kaNdu koLLee


பொ-ரை: என்னை அடிமையாக உடையவனே! உனது பெருங்கருணைத் திறத்தை நினைந்து 
என் உடல் மயிர்க் கூச்செறிந்து நடுக்கமுற்றது. எனது கைகள் தாமாகவே தலை மேல்
ஏறப் பெற்று உனது மணம் பொருந்திய திருவடிகளை வணங்கலாயின. ஆனந்தக் கண்ணீர் 
என் கண்களினின்றும் அரும்பியது.  எனது உள்ளத்து எழுந்த ஆராக்காதலால் என் 
மனமானது குளிர்ந்த நிலையினின்றும் நீங்கியது. நிலை அல்லாதவைகளின் மீதிருந்த எனது
பற்று,
 தானே நீங்கி ஒழிந்தது. உனக்கு வணக்கம்! வெற்றி! வெற்றி ! மீண்டும் வணக்கம்!
இவ்வாறு ஓதும் ஒழுக்கத்தையே நழுவ விடாது சிக்கெனப் பிடித்து நிற்பேன். அடியேனை
உனது திருவருள் நோக்கினால் பார்த்து, ஏற்றுக் கொள்ளுக. 

    My actions thoughts and words - all to You - graciously accept
    Oh! My master, owner of Thy slave:

    Thinking of Your everlasting grace, my body trembles. I prostrate before Your ankletgirt
fragrance-laden Feet. In obeisance my palms join over my head, while my eyes are brimming 
with tears of joy. My mind is aglow with ardent longing towards you. My desire for the unreal
and the impermanent leaves me automatically. Obeisance to You! Victory, Victory to you! 
Obeisance to You!! Never shall I let slip this hailing of You. Therefore, graciously
acknowledge me as Your own.

கு-ரை: உடையாய் - எல்லாவற்றையும் உடையவனாகிய சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். 
மனம் - வெதும்புதலும், பொய் தவிர்தலும் செய்ய, உடம்பு - மெய்ப்பாடுகள் உணர்த்த,வாய்-போற்றி
செய செய போற்றி என்று கூற, ஆக முக்கரணங்களாலும் வழிபாடு செய்தல் அறியலாயிற்று.

2.     கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினு 
    நள்ளே னினதடி யாரொடல் லானர கம்புகினு 
    மெள்ளேன் றிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா
    வுள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ளுத்தமனே

    கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு: குடிகெடினும் 
    நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும் 
    எள்ளேன்  திரு அருளாலே இருக்கப்பெறின்; இறைவா !
    உள்ளேன் பிறதெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

    koLLeen purantharan maal ayan vaazvu kudikedinum 
    naLLeen ninathu adiyaaroodu allaal narakam pukinum
    eLLeen thiruvaruLaalee irukka peRin iRaivaa 
    uLLeen piRatheyvam unnai allaathu engal uththamanee

பொ-ரை: எங்கள் இருள் கடந்த முதல்வனே, அரசனே, இந்திரன், பிரம்மன், திருமால் 
என்போர் பதவிகளை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டேன், எனது வாழ்க்கைக்கு ஊறு
வந்தாலும், உன்னுடைய அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகம் 
புகுந்தாலும், அங்கே உனது திருவருள் உணர்ச்சியோடு இருக்கப் பெற்றால், அதனை இகழ
மாட்டேன். உன்னை ஒழிந்த வேறு கடவுளரை மனத்தாலும் நினைக்க மாட்டேன் .

    Oh Lord! Our Noblest One! Oh King! I shall not consider, the status of Indra, Vishnu or
Brahma as a prestigious one and try to acquire it. I shall associate myself only with your
devotees and certainly not with others, even if my family repute were to be ruined. Were I to go
to hell, I shall not shun that life either, provided I am conscious of Thy divine grace. I shall have
no regard for any other God except You.

கு-ரை:  புரந்தரன்-  பகைவர் ஊர்களை அழிப்பவன். அயன் - பிறப்பு இல்லாதவன் என்ற பொருளில்
பிரமனுக்கு உபசார வழக்கு. நள் - சிநேகம் கொள்ளல்.  திருவருளாலே-  திருவருளோடு .
"திருவருளாலே யிருக்கப் பெறின் " -  என்பதை முதற்கண் கொண்டு, "கொள்ளேன்" முதலியவற்றிற்கும்
அதனைச் சாரப் பொருள் கோடலுமுண்டு, வானவர் வாழ்வு பந்தத்தையும், அடியார் உறவு வீட்டையும்
பயப்பதாகலின் அவ்வாறு கூறினார். குடி - உடம்பு வாழ்க்கை. உத்தமன் என்பது இருளைக் கடந்தவன்,
முதலானவன் என்று பொருள்படும் வடசொல்.  திருவருள் உணர்ச்சியோடு நரகிடை இருத்தல் அரிதாகலின், 
'பெறின்' என்றார். திருவருளின் கட்டளையாலே அல்லது திருவருள் என்னை நரகிடை
இருக்குமாறு பணிப்பின், என்றும் பொருள் கொள்ளுக.

3.     உத்தம னத்த னுடையா னடியே நினைந்துருகி 
    மத்த மனத்தொடு மாலிவ னென்ன மனநினைவி 
    லொத்தன வொத்தன சொல்லிட வூரூர் திரிந்தெவருந்
    தத்த மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே

    உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்து உருகி 
    மத்த மனத்தொடு, 'மால்இவன்' என்ன, மனநினைவில் 
    ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும் 
    தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?

    uththaman aththan udaiyaan adiyee ninainthu uruki 
    maththa manaththoodu maal ivan enna mana ninaivil
    oththana oththana sollida uur uur thirinthu evarum 
    thaththam manaththana peesa enjnjanRu kol saavathuvee        (correction: kool/ kol)

பொ-ரை: தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் என் தந்தையும் , எம்மை 
உடையானுமாகிய இறைவா சிவபெருமானே! உன்னுடைய திருவடிகளையே எண்ணி 
எண்ணிக் கசிந்து, மனக்களிப்பு மிக்கு உடையவனாகி இருக்கின்ற என் நிலையை ஊரார்
பார்க்கின்றனர். எனது சிவானந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஆற்றல் 
இல்லாமையால் அவர்கள் என்னை நோக்கி, தங்கள் தங்கள் மனம் போனவாறு பித்தன்
என்றும், பேயன் என்றும், கள்ளன் என்றும், நல்லன் என்றும், அருளன் என்றும் 
பேசுகிறார்கள். நான் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்கு உள்ள தலங்களில் இறைவழிபாடு
செய்து வரும்பொழுது உலகவர் இவ்வாறு கூறுகின்ற இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும்
கேட்டு அவற்றால் சிறிதும் நலிவுறாது, செருக்கு என்னும் தன் முனைப்பு நீங்கப் பெற்று 
இருக்கும் அத்தகைய நல்லநாள் என்று வருமோ?

    Oh Lord Civa, the noblest and the highest of devas, My Father, My Possessor! My heart
melts in thoughts of Thy holy Feet, and is frenzied in ecstatic love of Thee, causing others to say
"This man is a madcap". Seducing me wandering from place to place prattling all that suits the 
excited state of my mind, everyone speaks whatever occurs to his mind. Hearing all this yet 
remaining unperturbed my only thought is, when shall my ego die? I long for that blessed day! 

கு-ரை: மத்தம்= பெருங்களிப்பு. மால்= மயக்கம். உலகர் பேசுவது பல திறப்படுதலால் "ஒத்தன ஒத்தன" 
என்றார். திருக்கோவில்தோறும் சென்று இறைவனை வணங்குதலையே "ஊரூர் திரிந்து" என்றார்.

4.     சாவமுன் னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி 
    யாவவெந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
    மூவரென் றேயெம்பி ரானொடு மெண்ணிவிண் ணாண்டு மண்மேற் 
    றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே .

    சாவ, முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி
    'ஆவ! எந்தாய்! ' என்று அவிதா இடும் நம்மவர்-அவரே
    மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு, மண்மேல் 
    தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!

    saava munnaL thakkan veeLvi thakar thinRu nanjsam anjsi 
    aava enthaay enRu avithaa idum nammavar avaree 
    muuvar enRee empiraanodum eNNi viN aaNdu maNmeel         
    theevar enRee iRumaanthu enna paavam thirithavaree        

பொ-ரை: தேவர்கள் முன்னொரு காலத்திலே தக்கன் இயற்றிய யாகத்திலே கொல்லப்பட்ட
ஆட்டின் ஊனைத் தின்று, பின்னர் வீரபத்திரர் தம்மைத் தண்டிக்க வந்தபோது சாவதற்குப்
பயந்து சிவனிடம் ஓடி ' அப்பனே காப்பாற்று' என்று ஓலமிட்டார்கள், அதே போன்று
பின்னொரு சமயம் பாற்கடலில் நஞ்சு எழுந்த காலத்தே, நஞ்சு தங்களைக் கொன்று விடுமே
என்று அஞ்சி, சிவபெருமான் இருக்கும் இடம் ஓடி, "ஐயோ! எங்கள் அப்பனே காப்பாற்று"
என முறையிடும் தன்மை உடையவர்கள் இந்தத் தேவர்கள். 

இவர்கள் தங்களை 'பிரம்மா','விஷ்ணு', 'உருத்திரன்' என்ற மூவர்களோடு ஒப்பாக எண்ணிச் 
செருக்கடைகிறார்கள்.  மேலும் மூவரில் ஒருவனாகிய உருத்திரன் குண ருத்திரனே அன்றி 
மகா ருத்திரனாகிய  சிவபெருமான் அல்லன் என்பதையும் உணரமாட்டார்கள். இதன் விளைவாக,
தங்களைச்  சிவபெருமானுக்கு இணையாகக் கருதி விண்ணுலகை ஆண்டு மண்ணுலகில் 
செருக்கடைந்து திரிகின்றார்கள். தங்கள் வாழ்வில் முன்னே கூறிய இரு சந்தர்ப்பங்கள்
போன்று பலமுறையும் தாழ்மைப்பட்டு வாழ்ந்தவர்கள் இவ்வாறு இறுமாந்திருந்ததற்குக்
காரணம் என்னே? இது என்ன பாவம்!

    In this verse Maanikkavaachakar pities the haughtiness of the "Devas". The devas equate 
themselves with the "Trinity" i.e., "Brahma", "Vishnu" and “Rudran”, while this 'Rudra' has
nothing to do with Lord Civa who is called "Maha Rudran" or "Gunaatheetha Rudran'. The
'Rudran' in the Trinity is "Guna-Rudran". Maanikkavaachakar assigns the devas the position of
our kinsmen to denote that they are no better than the noble mortals on earth. 

They, once upon a time, fearing death in the hands of "Veerabadran" (Lord Civa's chief guard) 
who came to punish them along with "Thakkan" for eating the flesh of 'Thakkan's sacrificial ram, 
ran to Lord Civa and begged to be excused and protected. Again on another occasion, fearing death 
from the poison that came out of the ocean of milk, the devas ran to Lord Civa for safety and 
entreated Him crying "Ah! Ah!! Our Father, save us from death". Those same devas assuming themselves
equal to Trinity now proclaim themselves as equal to Lord Civa, rule the heavens and haughtily
strut about on earth as gods. What a sin is this! (In sufferance they entreat Lord Civa;
while in their glory they neglect Him).

கு-ரை: அரி - விஷ்ணு, திருமால், மால்; அயன் - பிரம்மன். இந்த "அரி" "அயன் " இவர்களோடு வைத்து
மூவர் என்று சொல்லப்படும் "உருத்திரன்" என்பவன் குண ருத்திரன் ஆவான். இவன் குணாதீதனாகிய
மகா ருத்திரன் எனப்படும் சிவபெருமான் அல்லன் என்பதை நன்கு உணர்க. "ஆவ" என்பது "ஆவா"
என்பதின் குறுக்கம். அது இரக்கக் குறிப்பு "அவிதா" என்ற சொல் ஆபத்தினின்று காப்பாற்ற
முறையிடுங்கால் கூறும் சொல் . சிவஞானம் பெறாதவர்களும், "சகலர்" என்று சொல்லப்படும்
வருக்கத்தினராக உள்ளவர்களும் ஆகிய அயன், அரி முதலியவர்கள் பூவுலகத்தில் உள்ள நம்மவர்களைப் 
போலச் சுட்டு நிலையில் உள்ள உயிரினத்தவர்கள் ஆவார்கள். ஆதலால் அவர்களை மாணிக்கவாசகர்
"நம்மவரே” என்று கூறினார்.

5.     தவமே புரிந்திலன் றண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சே 
    னவமே பிறந்த வருவினை யேனுனக் கன்பருள்ளாஞ் 
    சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேனின் றிருவடிக்காம்
     பவமே யருளுகண் டாயடி யேற்கெம் பரம்பரனே

    தவமே புரிந்திலன்; தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் 
    அவமே பிறந்த அருவினையேன், உனக்கு அன்பர் உள் ஆம் 
    சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம் 
    பவமே அருளு-கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே!

    thavamee purinthilan thaNmalar idu muddaathu iRainjseen 
    avamee piRantha aruvinaiyeen unakku anparuLLaanj 
    sivamee peRum thirueythiRRileen nin thiruvadikkaam
    pavamee aruLukaNdaay adiyeeRku em paramparanee

பொ-ரை: எமது மேலோர்க்கும் மேலோனே! மெய், வாய், கண், மூக்கு,, செவி என்ற
ஐம்பொறிகளைத் தம் தம் வழிச்செல்ல விடாமல் அடக்கி ஒடுக்கும் திறனும் பிறர்க்கு இன்னா 
செய்யாமையுமாகிய தவத்தை அடியேன் மேற்கொள்ளவில்லை. நின் திருவடிகளில்
குளிர்ந்த மலர்களைத் தூவிக் குறையில்லாத முறையில் வழிபாடு செய்யேன். இவ்வுலகில்
தோன்றும் தீவினைகளை உடையவனாகி வீணாக வாழ்ந்து பிறவி என்னும்  கடலை
நீந்துதற்கு உரிய வழிகளைச் செய்யவில்லை. உனக்கு அன்பராக உள்ளவர்கள் நடுவில்,
இருப்பதற்கு வேண்டும் தூய நேர்மை உண்டோ எனின், அதுவும் இல்லை. சிவத்தைச்
சார்வதற்கு வாயிலாக உள்ள 'திரு' என்ற சிவஞானத்தைப் பெற நல்வினைப் பயனும்
இல்லாதவனாகிவிட்டேன், ஆதலால் இப்பிறவி வேண்டாம். அடியேனுக்கு நின்னுடைய 
திருவடிக்கு அடிமையாகின்ற பிறவியையே நீ அருள்வாயாக. 

    Oh! Our transcendentally transcendent one! I cannot really claim to have performed the
"Gnana Maarkkam" of penance and prayer (Thavam) by controlling the five senses and adhering
to strict discipline. I have not offered cool flowers at Your holy Feet in daily worship. I have
been born in vain in this world because of rare evil fate (bad Karma) that I had in store. I have
not gained the good fortune of receiving the bliss of being included in the band of Your devotees.
Graciously grant me, Your servitor, only such birth as will lead me to Your holy Feet.

கு-ரை: தவம் - சிவபூசை முதலிய கிரியைகளும், சிவயோகமும் ஆக இரண்டினையும் குறிக்கும் . சிவபூசை
அகத்தும் புறத்தும் செய்யப்பெறுவன. யோகம் அகப்பூசை. எடுத்த எடுப்பிலேயே ஞான வாயிலாகிய
சிவயோகத்தை இயற்ற முடியவில்லை ஆயினும், கிரியை என்று சொல்லப்படுகின்ற யாவும் ஞானவாயில்
எனக் கொள்ளப்படுவதால் செயலும், சிந்தையும் ஒத்துச் செய்யப்படும் சிவபூசையையும் செய்யேன் என்றார்.
விசேட தீக்கை பெற்றுச் சிவபூசை செய்துவரும் கிரியை யோகங்களைச் செய்ய வேண்டுவதன்
முக்கியத்துவத்தை உணர்த்தவே இவ்வாறு கூறினார் என்று கொள்க. நால்வகை நெறியில் நின்று
சிவபரம் பொருளை அடைவதே பிறவி எடுத்ததின் பயன் ஆகும். அவற்றுள்ளே ஒன்றும் எய்தாமையின்
இப்பிறவியே பயனற்றதாக ஆயிற்று என்பார், 'அவமே பிறந்த அருவினையேன்' என்றார்.

6.     பரந்து பல்லாய்மல ரிட்டுமுட் டாதடியே யிறைஞ்சி 
    யிரந்தவெல் லாமெமக் கேபெற லாமென்னு மன்பருள்ளங் 
    கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு
    நிரந்தர மாயரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே.

    பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது, அடியே இறைஞ்சி 
    'இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும் அன்பர் உள்ளம் 
    கரந்து நில்லாக் கள்வனே! நின்-தன் வார் கழற்கு அன்பு, எனக்கு 
    நிரந்தரமாய் அருளாய்-நின்னை ஏத்த முழுவதுமே.

    paranthu palaay malariddu muddaathu adiyee iRainjsi
    irantha ellaam emakkee peRalaam ennum anpar uLLam 
    karanthu nillaa kaLvanee ninthan vaar kazaRku anpu enakku 
    nirantharamaay aruLaay ninnai eeththa muzuvathumee

பொ-ரை: மெய்யன்பர்கள் உள்ளத்தில் மறைந்து நிற்காத கள்வனே! சிவபெருமானே! அந்த
 உனது மெய்யன்பர்கள் எல்லாத்தலங்களுக்கும் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று 
சொல்லப்படும் எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் உன்னை , அசுத்தமாகாத பலவிதமான
 நன்மலர்களைக் கொண்டு இடைவிடாது அருச்சித்து வணங்குகிறார்கள். அவர்கள் தங்கள் 
விருப்பங்களை இரந்து, விண்ணப்பித்து, நிச்சயமாக அவை அனைத்தையும் பெறமுடியும் 
என்ற முழுநம்பிக்கையோடு வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் உள்ளத்தில் நீ வீற்றிருந்து 
அவர்களுக்கு அருளுகின்றாய். அவர்களைப் போன்று அடியேனும் உன்னை வாழ்நாள் 
முழுவதும் துதிக்கவும், உனது திருவடிகள் மீது என்றும் நீங்காத அன்பு வைத்திருக்கும்
நிலையையும் அருள்வாயாக. 

    Oh! You who hide yourself from the vision of those who have no love for you, but who
manifest Yourself clearly in the hearts of saints who visit all Your holy places and offer sincere
unstinted worship with choice and varied flowers! Those saints know fully well that they will be 
blessed with, all that they pray for. In grace, kindly bestow upon me also, that state of mind to 
enable me to have an unflinching love for Thy glorious Feet, to sing Thy name and to worship
Thee uninterruptedly for ever in my life.

7.     முழுவதுங் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த் துமுன்னாள்
    செழுமலர் கொண்டெங்குந் தேடவப் பாலனிப் பாலெம்பிரான் 
    கழுதொடு காட்டிடை நாடக மாடிக் கதியிலியா 
    யுழுவையின் றோலுடுத் துன்மத்த மேற் கொண் டுழிதருமே

    முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடிசாய்த்து, முன்நாள் 
    செழுமலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்: இப்பால், எம்பிரான் 
    கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி-இலியாய் 
    உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே

    muzuvathum kaNdavanai padaiththaan mudi saayththu munnaaL      
    sezumalar kooNdu engkum theeda appaalan ippaal empiraan
    kazuthodu kaaddidai naadakam aadi kathi iliyaay         
    uzuvaiyin thool uduththu unmaththam meel kooNdu uzitharumee

பொ-ரை: முன்னாள் என்பதை முதலில் கொள்க. இப்பால் என்பதை 'கழுதொடு' என்பதோடு
கூட்டுக.  முற்காலத்திலே எல்லாவற்றையும் படைத்தவன் அயன் (பிரம்மா), அந்த அயனைப்
பெற்றவன் அரி (திருமால்), இந்தத் திருமால் தலை வணங்கி, வளமிக்க பூக்களைக் கையிற்
கொண்டு சிவனாரது திருவடியைத் தொழுவதற்காக எங்கும் தேடவும், அவனுக்குப்
புலனாகாது அப்பாற்பட்டவன் எமது வள்ளல், சிவபெருமான். இவன் இவ்விடத்தே
பிணந்தின்னும் பேயோடு சுடுகாட்டின் கண், கூத்து இயற்றி வறியனாய்ப் புலித்தோல்
உடுத்தி, பித்தனைப் போல அலைந்து திரிவான். இஃதென்ன வியப்பு!

    Brahma is the creator of the world, whose father is Maha Vishnu (Thirumaal) as the
former came out of the navel of Mahaa Vishnu. Thirumaal, to satisfy his wish of seeing and
worshiping the holy Feet of Lord Civa, carried choice flowers and roamed everywhere and
finally went to the underworld digging the earth, transforming himself into a boar. There also he
could not find Civa's holy Feet (Here, the story of Brahma seeking to see Civa's holy Face going
up in the sky transforming himself into a swan may be remembered). The same Lord Civa,
wearing the tiger skin, is dancing with ghouls in the cremation ground and wanders about with
mounting madness as a vagrant, with no friends and possession. Civa was not easily accessible
to Brahma, Maal and other devas who have no sincere love and regard for Him, while He is easy
of approach to His sincere devotees here on earth.

கு-ரை: பிரம்மனும், திருமாலும் அடி முடி தேடிய வரலாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது .தேவர்களுக்கு
அரியவனாகிய இறைவன் மண்ணுலகில் வாழும் மெய்யன்பர்களுக்கு எளியன் என்பது 'இப்பால் எம்பிரான்'
என்பதால் விளக்கப் பெற்றது. இப்பால் - இவ்வுலகத்து, அப்பாலன் - அப்பாலான் என்பதின் குறுக்கம்.
கண்டவன் - படைத்தவன். கழுது - பிணந்தின்னும் பேய். எல்லாம் ஒடுங்கிய இடத்தே தம்பாற்
பேரன்புடைய அன்பர்பால் நுட்ப ஐந்தொழில் இயற்றுவதையே 'கழுதொடு காட்டிடை' என்று ஆடுதலாகக் 
குறித்தனர் போலும். கதியிலி- போக்கில்லாதவன்; இறைவன் ஒன்றை நாடிச் செல்லும் அவசியமில்லாதவன் 
என்பதைக் குறிக்கும். பூரணப் பொருளாகிய அவனுக்குச் செல்கதி யாது ஒன்றும்  இல்லை. 

தாருக வனத்து முனிவர்கள் மீமாஞ்சக நெறியில் நின்று வேள்வி இயற்றி, அதனின்று
வெளிப்போந்த புலியைச் சிவபெருமான் மீது ஏவ, அவன் அப்புலியைக் கொன்று, அதன் தோலைப் 
போர்த்த கதையும் இங்கு, குறிப்பால் உணர்த்தப் பெற்றது காண்க. கூத்துக் களிப்பினை,            
"உன்மத்தம்" என்றார் என்றும் கூறுவர். அன்பர்க்கு அன்பர் ஆதலின் இறைவன் பித்தன்
எனப்படுதல் தெளிவு. செழுமலர் கொண்டு - “செழுமையான தாமரை மலர் போலும் திருவடிகளை
மனதில் எண்ணி” என்றும் பொருள் கொள்ளலாம். நாடகம் - பொருள் தழுவிய கூத்து. 

இறைவன் விளைத்த கூத்து, பஞ்ச கிருத்திய பொருள்களைத் தழுவி இருத்தலின் அதனை “நாடகம்" என்றார்.
இம்மரபு அறியாதவர் வேறு விதமாகக் கூறுவர். இதனை ஞான சாத்திரங்கள் ஞான நடனம், திருவருள் நடனம், 
பரமானந்த நடனம் என்றெல்லாம் பேசும். பொன்னாடையும் பட்டாடையும் உடுத்த வேண்டிய இவர் 
புலித்தோல் உடுத்தினார் என்ற இகழ்ச்சி ஒரு புறம் தோன்றுமாயினும், வேள்வித் தீயினின்று வெளி வந்த 
புலியைக் கொன்று அதன் தோலை வெற்றிக்குறியாக உடுத்தினார் என வீரத்தால் விளைந்த புகழும் 
தோன்றுதல் காண்க. உன்மத்தம் - பயித்தியம், உழிதரல் - திரிதல், வாழ்வில் மக்களால் துறக்கப்பட்டுத்
தனித்தவருக்கு உரையாடிக் களிக்க ஒருவரும் இன்மையால் பயித்தியம் பிடித்தல் இயல்பு. இறைவனும் 
எல்லாவற்றையும் அழித்து தனித்துப் பித்தேறி உள்ளார் என்ற பழிப்பும் அன்பர்கள் சூட்டிய ஊமத்த 
மலரைத் தன் தலையில் அணிந்து விளங்குகின்றார் என்ற புகழும் தோன்ற "உன்மத்தம் மேல் கொண்டு 
உழி தருமே" என்றார். பிரமன், திருமால் முதலிய அன்பிலாதார்க்கு இறைவன் அரியனாயும், பூவுலகத்தில்
உள்ள மெய்யன்பர்களுக்கு எளியனாயும் இருத்தலை, வனப் பேயோடு ஆடிக் கதியற்றுத் திரிகின்றான் என
அவனது இயல்பை அறிந்து கூறுதலின், இது மெய்யுணர்வு ஆயிற்று.

8.    உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணும் விண்ணு
    மிழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பி
    னுழிதரு காலத்த வுன்னடி யேன்செய்த வல்வினையைக் 
    கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே

    உழிதரு காலும், கனலும், புனலொடு மண்ணும், விண்ணும் 
    இழிதரு காலம், எக்காலம் வருவது? வந்ததன் பின், 
    உழிதரு காலத்த ! உள் அடியேன் செய்த வல் வினையைக்
    கழி, தரு காலமும் ஆய் அவை காத்து, எம்மைக் காப்பவனே!

     uzitharu kaalum kanalum punalodu maNNum viNNum        
     izitharu kaalam ekkaalam varuvathu vanthathaRpin
     uzitharu kaalaththa un adiyeen seytha valvinaiyai
     kazitharu kaalamumaay avai kaaththu emmai kaappavanee

பொ-ரை: மகா சங்கார காலத்தில் பஞ்ச பூதங்களான (1) அசையுந்தன்மையுடைய காற்றும் 
(2) நெருப்பும் (3) நீரும் (4) மண்ணும் (5) வானும் ஆகிய (இவ்வுலகம்) ஐந்தும் தத்தம் நிலையின் 
நீங்கி ஒடுங்கும். அந்தக்காலத்தும் அழியாப் பெரும் பொருளாக இருந்து அருட்கூத்து ஆடுபவனே! 
அடியேன் பல பிறவிகளில் ஈட்டிய வினைகள் யாவும் சருவ சங்கார காலத்தில் 
காரணமாயையில் சூக்குமமாய் ஒடுங்கி நின்று மீண்டும் புனர் உற்பவத்தில் சூக்கும
கன்மமாகக் கலந்து என்னைப் பற்றாத வண்ணம் அந்த வல்வினையைச் சுட்டு எரிப்பவனாக 
இருந்து காப்பவனே! என்னைக் காத்து அருள்வாயாக.

    At the time of the dissolution of the universe, when the five elements viz., the wandering
wind, the fire, the water, the earth and the ether - all become inactive and get dissolved one
within another till everything is absorbed in the great infinite. Oh! Father! You are then dancing
all alone and start creation afresh. Kindly shower Thy grace on this soul then, by removing all
my past sins (Sanchitham) so that they will not afflict me when I take birth again.

கு-ரை: ஐம்பூதங்களால் ஆகிய உலகம் ஒடுங்கிய போதும் சூக்கும ஐந்தொழிலை இறைவன் இயற்றி
வருவதை 'உழிதருகால்' என்றார். உலகம் ஒடுங்கிய காலை, ஞானிகளின் வினை ஒடுங்கவே திருவடியில்
கலத்தல் நிகழும். வினைகள் மூன்று; சஞ்சிதம் அல்லது தொகை வினை; பிராரப்தம் அல்லது  தொடக்க
வினை; ஆகாமியம் அல்லது ஏறுவினை; பிராரப்தத்தை அந்தந்த ஆத்மா அனுபவித்தே ஆகவேண்டும்.
சஞ்சிதத்தையும் ஆகாமியத்தையும் இறைவன் தக்க தருணம் வந்த காலத்து, சுட்டு எரித்து விடுவான்.
மகா சங்கார காலத்து வரும் அத்தருணத்திலும் அவைகளைச் சுட்டு எரித்து என்னை உன் திருவடிக்கு
ஆளாக்குவாயாக என்று வேண்டுகிறார். இதன் கண் இறைவனே அநாதி நித்தியன் என்பதும்
ஆன்மாக்கள் அவனைச் சார்ந்தே வினைகளைப் போக்கிக் கொள்ளத் தக்கன என்பதும் உணர்த்தப்
படுதலின் இது மெய்யுணர்வு ஆயிற்று.

9.     பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் 
    சிவனெம் பிரானென்னை யாண்டுகொண் டானென் சிறுமை கண்டு 
    மவனெம் பிரானென்ன நானடி யேனென்ன விப்பரிசே 
    புவனெம் பிரான்றெரி யும்பரி சாவதி யம்புகவே.

    பவன், எம்பிரான், பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான், 
    சிவன், எம்பிரான், என்னை ஆண்டு கொண்டான்-என் சிறுமை கண்டும் 
    அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே 
    புவன், எம்பிரான், தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

    pavan empiran pani maamathi kaNNi viNNoor peruman 
    sivan empiran ennai aaNdu koNdaan en siRumaikaNdum 
    avan empiran enna naan adiyeen enna ipparisee 
    puvan empiran theriyum parisaavathu iyampukavee

பொ-ரை: எங்கள் பெருமான், எல்லாம் தோன்றுவதற்கு இடமானவன். குளிர்ந்த சிறப்புடைய
சந்திரனைத் தன் தலை மீது குறுங்கண்ணியாக அணிந்த தேவர் தலைவன். சந்திரனின்
குற்றத்தைப் பொறுத்து, தனது திருமுடிக்கு அணி ஆக்கிய தன்மையால் அவன்
எல்லோரையும் காப்பவன் ஆகின்றான். எல்லாவற்றையும் ஒடுக்குவானாகிய தூயோனும் 
ஆகிய எம்பெருமான், எனது சிற்றறிவும் சிறு செயலுமுடைய சிறிய தன்மையை அறிந்தும் ,
அவனது கருணையினாலே என்னைத் தடுத்தாட் கொண்டான். என் வள்ளலாகிய அவன் 
தானே தோன்றிய சுயம்பு. அவன் எங்கள் தலைவனாகவும், நான் அவன் அடியவனாகவும் 
இருக்கின்ற இம்முறையே எனக்குத் தெரியும் வகையாக, யான் சொல்லுவேனாக.

    Our Lord "Bhavan" is the creator of this universe. He graced the great cool moon by 
wearing it on His Head as a chaplet. He is the head of all devas. He forgave the moon for his 
bad deeds and wore him in His Head. This proves His protective grace to everybody. Though
He knows my meanness, He had made me His. He is an uncreated Self-existent Being (Suyambu).
He is our Lord Supreme and I his lowly servant. This I declare to the world. Let 
the world understand this greatness of His and praise Him.

கு-ரை: பவன்- உலகத் தோற்றத்திற்கு நிலைக்களமாய் உள்ளவன். உலகிற்கு நிமித்த காரணமாதல் 
பரசிவத்திற்குரிய சிறப்பு இலக்கணங்களுள் ஒன்றாகும். பவன், சிவன் என்பன இறைவனின் பெயர்கள்.
இறைவனுக்கு ஆகமங்கள் கூறும் சிறப்பு மந்திரங்கள். பவாய - தேவாய, சிவாய - தேவாய, உக்கிராய-தேவாய 
என்பவைகளை இங்கே குறிப்பிடலாம் . சிவனுக்கு “பவன்" என்று சொல்லுவது போன்று
அம்பிகைக்கு "பவானி" என்ற பெயரும் உண்டு. பிரான் - வள்ளல், உபகாரி.  பூக்களால் ஆன கண்ணியை 
முடியில் அணிதல் போலச் சந்திரனை இறைவன் சடையில் அணிந்தமையால் “மதிக் கண்ணி" என்றார். 
மா - அங்ஙனம் அணியப்பெற்ற சிறப்பைக் குறிக்கும். என் சிறுமை- பெரியோரால் ஏற்றுக் கொள்ளத் தகாத 
நிலையைச் சிறுமை என்றார். புவன் - சுயம்பு ஆனவன், ஒளியுடையவன்.
சிவன் - தூயோன், ஒடுக்க முதல்வன். "புவனம்" என்பது புவனெம் என விகாரப் பட்டு உலகைக் 
குறிக்கும் என்று கூறுவாரும் உளர். "எம்பிரான்” என்று பலமுறையும் கூறுவது தன்னை
ஆட்கொண்டருளிய சிறப்பைத் தெரிவித்தற் பொருட்டு ஆகும்.

10.     புகவே தகேனுனக் கன்பருள் யானென் பொல்லாமணியே 
    தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை 
    மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்தியண் ணாவமுதே 
    நகவே தகுமெம் பிரானென்னை நீசெய்த நாடகமே

    புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!
     தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை
     மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி: அண்ணா,  அமுதே !
    நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.

    pukavee thakeen unakku anparuL yaan en poolla maNiyee 
    thakavee enai unakku aadkoNda thanmai ep punmaiyarai        
    mikavee uyarththi viNNoorai paNiththi aNNaa amuthee 
    nakavee thakum empiran ennai nee seytha naadakamee

பொ- ரை: தொளைபடாத என் முழு மாணிக்கமே!  நான் உன் அடியார் கூட்டத்தில்
புகுவதற்குத் தகுதி இல்லாதவன். அவ்வாறு இருந்தும் என்னை உனக்கு ஆளாக்கிக்
கொண்ட தன்மை உன் பெருமைக்குத் தக்கதா? எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச்
செய்கிறாய். மேலான தேவர்களைத் தாழ்த்துகிறாய்; அப்பனே! அமுதமே! எம் பெருமானே!
நீ என்பால் செய்த நாடகம் சிரித்து நகையாடுவதற்கே உரியதாகும்.

    Oh! my flawless, unpierced gem! I am not worthy of entering into the society of Your
loving devotees. Even then You enslaved me as Thine own! Is this action of Yours worthy of
Your dignity? You raise the very lowliest to an exalted place: You bring down the heavenly
ones. Oh My Father! ambrosia! My Lord! What You have done to me by raising me to the lofty
heights is a farce indeed! It is only fit to be laughed at by men.

கு-ரை: பொல்லாமணி - துளையிடப்படாத மணி. பொள்ளாமணி என்பது பொல்லா மணி என மறுவிற்று.
"குறைவில்லாத முழு மாணிக்கம் போன்ற பூரண ஆனந்த அறிவே" என்பது கருத்து. பச்சை (மரகதம்)
பவளம், முத்து முதலிய இரத்தினங்களை மாலையாகக் கோப்பவர்கள் அவைகளின் நடுவில் துளையிட்டுக்
கோப்பர். வைரத்தை மட்டும் துளைக்க முடியாமையினால் தங்கத்தில் செறித்து அதனுடன் சேர்ப்பர்.
நாடகம் : உண்மையைப் பொய்மையின் வாயிலாக வெளிப்படுத்துவது. உயிர்கள் எய்தும் உயர்வுக்கும்
தாழ்வுக்கும் இறையருளே காரணம் என்னும் மெய் உணரப்படுதலின் இது மெய்யுணர்வு ஆயிற்று.

            THIRUCHCHITRAMBALAM

                        

5.2 அறிவுறுத்தல்                        5.2. ARI VURUTHTHAL 


தரவு கொச்சகக் கலிப்பா                    The Impartation of Divine Consciousness
                திருச்சிற்றம்பலம்


11.     நாடகத்தா லுன்னடியார் போனடித்து நானடுவே 
    வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றே 
    னாடகச்சீர் மணிக்குன்றே யிடையறா வன்புனக்கென்
    னூடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே

    நாடகத்தால்  உன் அடியார் போல்  நடித்து, நான் நடுவே 
    வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப்பெரிதும் விரைகின்றேன் 
    ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் 
    ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள், எம் உடையானே!

    naadakaththaal un adiyaar pool nadiththu naan naduvee             
    viidakaththee pukunthiduvaan mikap perithum viraikinReen 
    aadaka siir maNikkunRee idaiyaRaa anpu unakku en 
    uudakaththee ninRu uruka thantharuL em udaiyaanee

பொ-ரை: எம்மை அடிமையாக உடையவனே! உன் மெய்யடியார் போலும் அன்புடையன் 
அல்லன் யான். ஆயினும் நின் அன்பர், வீடு செல்லுங்கால், வஞ்சனையாக நடந்து காட்டி
யானும் முத்தியடைய மிகவும் துரிதப்படுகிறேன். பொன்னின் நலமுடைய மாணிக்கமலை 
போலும் ஐயனே! உன்பால் எப்போதும் நிகழும் அன்பை என் நெஞ்சகத்தில் நிலைபெறச்
செய்து அதனால் என் நெஞ்சம் உருகவும் உதவி அருளுவாயாக.

    Oh Thou, bounteous gem of the holy hall of dance. I am here, putting up a mere show,
feigning that I am devotee of Thine! And in this way, I hope to hasten towards the goal of
liberation! Master, pray grant Thou, that I may ever stand in ceaseless dedication, with heart
melting for merger with Thee. 

கு-ரை: நாடகத்தால், என்பதனை 'நாட்டகத்தால்', என்பதன் திரிபாகக் கொண்டு, 'நாட்டகத்தில்', 
அதாவது 'இவ்வுலகில்' எனப் பொருள் கொள்ளுதல், வலிந்து பொருள் கோடலாகும்.  'நாடுகின்ற
அகத்தால்' , வீடு நாடும் அவாவினால், என்று பொருள் கொள்ளுவதும் உண்டு. அன்பின்மையைப் பிறர்
அறிய ஒண்ணாது நடப்பதே, நாடகத்தால் நடிப்பது, பிறர் அறிய நடப்பது, நடிப்பது மாத்திரையாகும் என்ப .
அன்பர் தாம் வீடு செல்லுதற்கு உரியர், அவர் நடுவே விரைதல் உரிமை இன்மையைக் குறிக்கும். அடிகள் 
உடல் நீத்து இறைவனோடு இரண்டறக் கலத்தலையே பெரிதும் விழைந்தவர் என்பதற்கு இதுவே
தெளிவான அகச்சான்று. ஆடகம் மாறின்மையையும், மாணிக்கம் செம்மேனியையும் குறிக்கும் .
அரன்கழல் செல்லுதற்குரிய அயரா அன்பினையே அடிகள் வேண்டினர். நின்று = நிற்க

12.     யானேதும் பிறப்பஞ்சே னிறப்பதனுக் கென்கடவேன் 
    வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் 
    றேனேயு மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம் 
    மானேயுன் னருள்பெறுநா ளென்றென்றே வருந்துவனே.

    யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன் ?
    வானேயும் பெறில் வேண்டேன்: மண் ஆள்வான் மதித்தும் இரேன்
    தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம் 
    மானே! "உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே, வருந்துவனே.

    yaan eethum piRappu anjseen iRappathanukku en kadaveen
    vaaneeyum peRil veeNdeen maNNaaL vaan mathithum ireen 
    theen eeyum malarkkondRai sivanee emperumaan em
    maanee un aruL peRum naaL enRu enRee varunthuvanee        

பொ-ரை: இறைவா! அடியேன் பிறப்பதற்கும் இறப்பதற்கும் அஞ்சமாட்டேன்.
விண்ணுலகைக் கொடுத்தாலும் விரும்பமாட்டேன். உலகாளும் மன்னனைச் சார்ந்து நின்று
வாழமாட்டேன், தேன் பொருந்திய கொன்றை மலரணிந்த மங்கலப் பொருளானவனே! 
எம் தலைவா! பெரியோனே! உன்னோடு இரண்டறக் கலக்க ஏதுவான திருவருளை யான்
பெறுங்காலம் எப்போது என்றெண்ணி மனம் உளைகின்றேன்.

    I fear not, taking birth again! Neither am I afraid of death! I just yearn for the day I will
receive Thy grace, and keep crying out (in anxiety), "when, when shall it be', oh Lord Civa, our
Sire, our Chief, bedecked with honey-filled cassia flowers, even if I were to get the gift of all the
heavens above, I will not want this. Nor shall I hold in esteem the kingship over the world.

கு-ரை: பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சாமையே குறித்தார். இறப்புக்கு யாது  செய்யக் கடவேன், என்று
அஞ்சியதாகக் கூறுதல் தவறு . தேன் போன்ற இன்பம் நல்கும் மங்கலம் உடையானைச் சார்ந்த போது 
பிறப்பு இறப்பின்மையும், இறைவனைத் தலைவனாகப் பெற்றபோது, தாம் விண்ணவர் தலைவனாதலை 
விரும்பாமையும், இறைவனைப் பெரியனாகக் கொண்டவிடத்தே, மன்னனை மதித்து வாழாமையும், ஏற்படும்
என்பது குறிப்பு. எம்மவன், எம்மான் என்றாயது என்பாரும் உளர். மான் என்பதற்கு மகான் என்று
பொருள் கொள்ளுவர்.

13.     வருந்துவனின் மலர்ப்பாத மவைகாண்பா னாயடியே 
    னிருந்துநல மலர்புனையே னேத்தேனாத் தழும்பேறப் 
    பொருந்திய பொற் சிலைகுனித்தா யருளமுதம் புரியாயேல் 
    வருந்துவனத் தமியேன்மற் றென்னேநா னாமாறே.

    வருந்துவன், நின் மலர்ப்பாதம் அவை காண்பான்; நாய்-அடியேன் 
    இருந்து நலமலர் புனையேன்; ஏத்தேன் நாத்தழும்பு ஏற ;
    பொருந்திய பொன்சிலை குனித்தாய் ! அருள் அமுதம் புரியாயேல்,
    வருந்துவன் அத்தமியேன்; மற்று என்னே நான் ஆம்ஆறே?

    varunthuvan ninmalar paatham avaikaaNpaan naay adiyeen 
    irunthu nalamalar punaiyeen eeththeen naaththazumpu eeRa 
    porunthiya poRsilai kuniththaay aruL amutham puriyaayeel     
    varunthuvan aththamiyeen maRRu ennee naan aamaaRee

பொ-ரை: நாய் போலும் அடியேன், நின் பெருமை மிகுந்த திருவடி மலர்களைக் காண 
வருந்தி நிற்கிறேன். இவ்வுலகில் வாழ்ந்திருந்தும் உனக்கு ஒரு மலர் மாலை தொடுத்தும்
சாத்த மாட்டேன். நாவில் தழும்பேறும்படி உன்னை வாழ்த்தவும் மாட்டேன். பொன் 
பொருந்திய மேருமலையை வளைத்தவனே!  நின் அருள் எனும் பேரின்ப அமுதம் நீ 
தந்தருளவில்லை எனில், ஆதரவின்றித் தனியாய் நான் துன்பமுறுவேன். அவ்வாறு
துன்பமுறாது நான் உய்யுமாறு ஏதும் செய்யவும் வல்லேன் அல்லன்.

    Pining for the sight of the flower like feet of Thine, stand I here, Thy cur like devotee. 
Yet I do not string together flowers for Thee. Neither do  I hail Thy glories till my tongue gets
furrowed with ovation. Oh Lord! that bent Mount Meru, should Thou not grant Thy grace
ambrosia, I shall only rue in solitude. What else shall I become in such forlorn state? 

கு-ரை: மலையை வளைத்த நீ, என் மனத்தை வளைத்தல் அரிதில்லையே , என்றவாறு.
நலம் - மிகுதி குறிக்கும். தனிமை மிகுதி கூறினார். 

14.     ஆமாறுன் றிருவடிக்கே யகங்குழையே னன்புருகேன் 
    பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் 
    கோமானின் றிருக்கோயி றூகேன்மெழுகேன் கூத்தாடேன் 
    சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே

    ஆம்ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன் ;
    பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்: புத்தேளிர் 
    கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன், 
    சாம் ஆறே விரைகின்றேன்-சதுராலே சார்வானே!

    aamaaRu un thiruvadikkee akangkuzaiyeen anbu urukkeen 
    puumaalai punainthu eeththeen pukaznthu uraiyeen puththeeLir 
    koomaannin thirukkooyil thuukeen mezukeen kuuththaadeen            
    saamaaRee viRaikinReen sathuraalee saarvaanee

பொ-ரை: தேவர் பிரானே! திறமையான பணிக்கு நின் ஆதரவை அளிப்பவனே! நின் 
திருவடிப்பேறு அடையும் வண்ணம் மனம் நெகிழப் பெறமாட்டேன். அன்பால் உருக மாட்டேன்.
பூமாலை தொடுத்து, சாத்தி, வழிபட மாட்டேன். உன் புகழை எடுத்துப் பேச மாட்டேன். 
ஆனந்தமுற்று ஆட மாட்டேன். நற்செயலற்று, வீணே உயிர் விடுதற்கே துரிதப்படுகிறேன்.

    Alas! I do not pine for permanent merger with Thy holy Feet, with my heart melting 
(in affection) for Thee. Neither do I adore Thee in dedication with strings of flowers. Lord of all
gods! I spruce not Thy holy temple, nor wash it clean, nor dance in ecstasy. Instead, I hasten
towards death, using my wits alone. Oh Lord of eminence approached by worthy folks .

கு-ரை: சதுர்= திறமை, பணியைக் குறிக்கும்;  சதுர் = அறிவு, அறிவிலே மன்னுபவனே, என்பதே  'சதுராலே 
சார்வானே' என்பதின் பொருள் எனக் கொள்ளுதலும் உண்டு. குழைதல் = இளகுதல், நெகிழ்தல்,
முக்கரணங்களாலும் வழிபடாமை கூறினார். 'சாதல்' பயன்பெறாது போதல் என்றும் கூறுப.

15.     வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி 
    யூனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்க் 
    கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு 
    வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே

    வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி 
    ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்க் 
    கோன் ஆகி, 'யான் எனது' என்று அவர் அவரைக் கூத்தாட்டு 
    வான் ஆகி நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே!

    vaanaaki maNNaaki vaLiyaaki oLiyaaki 
    uunaaki uyiraaki uNmaiyumaay inmaiyumaay 
    koonaaki yaan enathu enRu avar avarai kuuththaaddu
    vaanaaki ninRaayai ensolli vaazththuvanee        

பொ-ரை: விண், மண், காற்று, நெருப்பு, நீர், உடம்பு, உயிர் ஆகிய யாவற்றிலும்  கலந்தும்
அவையே ஆகியும் நின்றவனே!  மெய்யர்க்கு மெய்ப் பொருளாயும், பொய்யர்க்குப்
பொய்ப்பொருளாயும் விளங்குபவனே!  அல்லது, தோன்றும் பொருளாகவும், தோன்றாப்
பொருளாகவும், அப்பொருட்களின் வசப்படாது தன்வயமுடைய முதல்வனாகியும்
திகழ்பவனே ! பல்வகைப்பட்ட உயிர்களும் யான் செய்தேன், என்னுடையது என்று
புல்லறிவால் மயங்கி, கூத்தாடும்படி, அவ்வவற்றையும் இயக்கியும் நின்ற நின்னை யான் யாது
சொல்லிப் புகழ முடியும்?

    How shall I adore Thee in words, my Lord? Thou that are manifest as the earth, air and 
soul, and as the sky, and the light, as flesh and also as the real and the unreal also the King of all;
You as a puppeteer playing on all folks leading everyone to identify himself and all things, as
'Me' and 'Mine'.

கு-ரை: 'முற்றுநீ புகழ்ந்து முன் உரைப்பதென்', என்ற தேவாரமும் காண்க . இன்மையாதல்,
தோன்றாமையே.  'அவரவர்' என்று உயர்திணையாற் கூறினும், அஃறிணை உயிர்களையும் உடன் கொள்க. 
'யான் எனது' என்னும் உணர்ச்சி, சிறப்பாக மக்களிடைக் காணப்படுதலின், உயர்திணையாற் கூறினர்.
உயிர்கட்குக் கூத்தாட்டாவது 'போக்கும் உணர்வும் வரவுமே'. பிற்காலத்தோருள் குமரகுருபரர் 'கூத்தாட்டு'
என்பதை அக்கருத்தில் வழங்கியுள்ளார். 

16.     வாழ்த்துவதும் வானவர்க டாம்வாழ்வான் மனநின்பாற்
    றாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் 
    சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன் 
    பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே

    வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால் 
    தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழ வேண்டி;
    சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய்-அடியேன், 
    பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.

    vaazthuvathum vaanavarkaL thamvaazvaan manam ninpaal 
    thaazthuvathum thaamuyarnthu thammai ellaam thozha veeNdi        
    suuzththu mathukaram muralum thaarooyai naay adiyeen 
    paazththa piRappu aRuththiduvaan yaanum unnai paravuveenee.

பொ-ரை: வண்டுகள் ரீங்காரமிடும் மலர் மாலை அணிந்த நின்னை வானவர்கள் வாழ்த்துவது
தாங்கள் குறைவின்றி வாழ்தற் பொருட்டே.  தாங்கள் மேன்மை அடைந்து, தங்களை 
மற்றவர் வழிபட விரும்பியே உன்னிடத்தில் உள்ளத்தைப் பணிவிக்கிறார்கள். நாய்போலும் 
அடியேனின் பயனற்ற பிறப்பினை அழித்தல் பொருட்டு யானும் உன்னைப் போற்றித்
துதிப்பேன் (வானவர்கள் ஆயுள் அதிகாரம் முதலிய பயன்கருதி இறைவனை 
வழிபடுகிறார்கள். அடிகளைப் போன்ற ஞானிகள் பிறவி நீக்கத்திற்காக இறைவனை
வழுத்துகிறார்கள் என்பது கருத்து)

    Lord with garlands swarming with honeybees! All the heaven-dwelling gods shower
praise on Thee and bow before Thee, in order to secure a life of glory to themselves, to rise high,
so as to bring all others under their servitude, and to ensure that all folks worship them. I, this
lowly cur of Thy devotee, pray to Thee, with just an appeal that my dreary birth cycles may
cease to be.

கு-ரை: வானவர்கள், ஆயுள், அதிகாரம் ஆகிய பயன் கருதி இறைவனை வழிபடுகிறார்கள்  என்பதும்,
அடிகள் போன்ற ஞானிகள், பிறவி நீக்கத்திற்காக இறைவனை வழுத்துகின்றார்கள் என்பதும்
அறியற்பாலன. வண்டுகள் மலரிலுள்ள தேன் பொருட்டு ரீங்காரம் செய்து மாலையைச்  சூழ்தல் போல
இனிய பயனைக் கருதி இறைவனை விண்ணவர் முதலியவர்கள் அடுத்து வழிபடுகின்றார்கள் என்பது கருத்து.

17.     பரவுவா ரிமையோர்கள் பாடுவன நால்வேதங்
     குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் 
    விரவுவார் மெய்யன்பி னடியார்கண் மேன்மேலுன் 
    னரவுவார் கழலிணைகள் காண்பாரோ வரியானே.

    பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம் ;
    குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம் ;
    விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன் 
    அரவுவார் கழல்-இணைகள் காண்பாரோ? அரியானே!

    paravuvaar imaiyoorkaL paaduvana naalveetham 
    kuravuvaar kuzalmadavaaL kuuRudaiyaaL orupaakam         
    viravuvaar meyyanpin adiyaarkaL meen meel un
    aravuvaar kazal iNaikaL kaaNpaaroo ariyaanee

பொ-ரை: தேவர்கள் உன்னை வாழ்த்துகிறார்கள்.  அறிவுக்கு முதலாகிய  நால்வகை
வாக்காகிய நான்மறையும் உன் புகழையே ஒலிக்கின்றன. நறுமணம் பொருந்திய நீண்ட
கூந்தலையுடைய இளம்பெண்ணான உமையம்மை உன்னுடைய ஒரு  பகுதியான 
இடப்பாகத்தைப் பெற்றிருக்கிறாள். உண்மை பக்தியுடைய அடியார்கள் அணி  அணியாக 
உன்னை வழிபடக் கூடுகிறார்கள். யாரும் அறிதற்கரியவனே! ஒலிக்கின்ற பெரிய கழல்கள்
அணிந்த நினது இரு திருவடிகளையும் காண்பது யாரோ? ("நின்னை வழிபடுகிற  இவர்கள்
அனைவரும் திருவடியைக் காண்பார்களோ?" என்றும் பொருள் கொள்ளலாம் )

    The gods of heaven offer prayers to Thee! The four scriptures sing on Thy glories! Thou,
with Thy consort of flower-bedecked long locks occupying Thy (left) half! Rows of devotees
come over and pay obeisance to Thee. And yet, can all of them see Thy snake clad, jewelled
Feet, Oh Rarest of the Rare?!

கு-ரை: தேவர்களும் மறையும் இறையடி காணாமை கூறப்பட்டன. உமையம்மை, சிவத்தின் பகுதியாவாள் 
ஆதலின், அடியிணை காணுங் கடப்பாடு உடையள்  அல்லள். மெய்யடியார் காண்பர் என்பது கருத்து என்ப. 
குரவு - குரவமலரையும், மணத்தையும் குறிக்கும். விரவுதல்- கலத்தல், கூடுதல். அரவு என்பது அராவு
என்பதன் நடுக் குறையாகக் கொள்ளப்படும். அழுத்தல் என்ற பொருளில், கழல்கள் அழுந்திய
திருவடி எனக் கூறுவர். விண்ணவர் முடிபட்டு அழுத்தமுற்ற திருவடிகள் என்பதும் உண்டு. அரவு, ஒலி 
எனப் பொருள்படும் என்று கொண்டு, ஒலிக்கின்ற கழல்கள் அணிந்த திருவடிகள் என்றும் கொள்க.
காண்பு= காண்டல், காண்பது.

18.     அரியானே யாவர்க்கு மம்பரவா வம்பலத்தெம் 
    பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழற்கீழ்
     விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறே னயந்துருகேன் 
    றரியேனா னாமாறென் சாவேனான் சாவேனே

    அரியானே யாவர்க்கும் அம்பரவா! அம்பலத்து எம் 
    பெரியானே ! சிறியேனை ஆட்கொண்ட பெய்-கழல்கீழ் 
    விரை ஆர்ந்த மலர்தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன் ;
    தரியேன்; நான் ஆம் ஆறுஎன்? சாவேன்; நான் சாவேனே!

    ariyaanee yaavarkkum amparavaa ampalaththu em 
    periyaanee siRiyeenai aadkoNda peykazaRkiiz                
    virai aarntha malarthuuveen viyanthu alaReen nayanthu urukeen 
    thariyeen naan aamaaRu en saaveen naan saaveenee

பொ-ரை: எத்தகையோரும் அறிதற்கரியவனே! அருள் வாளினை உடையவனே! தில்லை
அம்பலத்தில் நடனமாடும் எங்கள் பெருமானே! சிறுமை மிக்க அடியேனை ஆளாக்கிக் 
கொண்டாய்! செறிந்த கழலினை உடைய நின் திருவடிகளில் மணம் நிறைந்த மலர்களிட்டு 
வழிபட மாட்டேன்; புகழ்ந்து பாடித் துதியேன்; உள்ளம் விரும்பி உருகவும் மாட்டேன்.
இவ்வாறு கரணங்களால் வழிபடாது இருத்தலைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன்.
நான் உய்வதற்குத் தகுதியாகும் வகைதான் யாது? நான் இறப்பேன், இறப்பேன், இறந்து
படவே துணிந்தேன்.

    Rare one, abiding at the expansive space above! Thou, the great Lord of the hall of
dance! I do not spray flowers of fragrance at Thy ornamented Feet that took me, this little one,
under Thy tutelage. Neither do I cry in adoration , nor melt in affection. I shall not bear this state.
How shall I attain reality? Indeed I shall just perish, merely perish. 

கு-ரை: மிகப் பெரியனாகிய கடவுள் மிகச்சிறியனாகிய என்னை ஆட்கொண்டும், அவனை
வழிபடுகின்றேன் இல்லை. வழி படாது உயிர் வாழ்வு முடியவில்லை . இறப்பதே நலன் என்பது கருத்தாக
அடிகள் கொண்டார். அடிகளின் தீவிர பக்குவத்தையே இத்திருப்பாடல் உணர்த்தும். மலர் தூவல்,
அலறுதல், உருகுதல்- முறையே உடம்பு, மொழி, மனம் என்பவற்றின் செயலாதல் காண்க.

19.     வேனில்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய 
    பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே 
    யூனெலா நின்றுருகப் புகுந்தாண்டா னின்றுபோய் 
    வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே

    வேனில்-வேள் மலர்க்கணைக்கும், வெள்-நகை, செவ்-வாய்க் கரிய 
    பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே !
    ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்றுபோய் 
    வான் உளான்; காணாய்; நீ, மாளா வாழ்கின்றாயே

    veenilveeL malarkkaNaikkum veNnakai sevvaaykkariya 
    paanal aar kaNNiyarkkum pathaiththu urukum paaznenjsee 
    uun elaam ninRu uruka pukunthu aaNdaan inRu pooy 
    vaan uLaan kaaNaay nii maaLaa vaazkinRaayee

பொ-ரை: இளவேனிலாகிய வசந்த காலத்தில் மன்மதன் பூவகைகளாகிய அம்பினை
விடுகிறான். வெள்ளிய ஒளியுடைய பற்களையும், கருநிறக் குவளை போலும் கண்களும்
உடைய மகளிருக்காக ஈடுபட்டுத் துடிக்கிற, நெகிழ்கிற என் பயனற்ற மனமே! எம்பெருமான் 
நம் உடம்பெலாம் கனிந்து அமுதூறி உருகும்படியாக எழுந்து அருளினான். உள்ளத்தே 
நிலைபெற்று ஆட்கொண்டருளிய அப்பெருமான் இப்போது சென்று ஞான ஆகாயத்தின் 
கண் இருக்கிறான். அவனைக்காண நீ முயலமாட்டாய். நீ இறந்தொழியாது இன்னும் ஏன்
நிலைத்திருக்கிறாய்? (உலகப் பற்றில் ஈடுபடக் கூடாதென நெஞ்சுக்கு அறிவுறுத்தும்
பொருட்டு அடிகள் இங்ஙனம் புகன்றனர் போலும்)

    Ah you wretch of my mind, that in tremulous longing, doth ever crave for the bright
smile, dark eyes and rosy lips of dames, goaded by the flowery spike of cupid (the god of love)!
Note that the good Lord who entered our domain in order to steep our physique in bliss, has left
us this day, and is now in the realms of the sky. What great pity, you are not dead and gone,
but still happen to exist in vain!

கு-ரை: மூன்றாம் அடியில், 'உருகப்புகுந்து நின்று' எனக் கொண்டு கூட்டுக. வாசனா மலத்தால், 
உலகப்பற்றில் ஈடுபடக் கூடாதென நெஞ்சிற்கு  அறிவுறுத்துவார். இங்ஙனம் புகன்றனர் போலும்.
இளவேனிற்காலம், காமனுக்கு உகந்த பெரும்பொழுது, காம எண்ணத்தையே, மதன் அம்பிற்கு 
ஈடுபடுவதாகச் செப்பினர். பானல்= நீலோற்பலம்= குவளை, கரியபானல்= கருங்குவளை. புகுந்து என்பது
உடலுள்ளும் உள்ளத்துள்ளும் உயிருள்ளும் புகுந்து எனவும், நிலவுலகிற் புகுந்து எனவும் இருவகையாகப் 
பொருள்படும். மாளா= மாளாது, வான்= சிதாகாசம், தில்லைக்குத் தம்மை வரப் பணித்தமையால்
சிதம்பரமாகிய சிதாகாசத்தைக் குறித்தனர் என்பாரும் உளர்.

20.     வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்
    டாழ்கின்றா யாழாமற் காப்பானை யேத்தாதே 
    சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் 
    வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே

    வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டு 
    ஆழ்கின்றாய்: ஆழாமல் காப்பானை ஏத்தாதே,
    சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன், பல்காலும் 
    வீழ்கின்றாய் நீ, அவலக் கடல் ஆய வெள்ளத்தே.

    vaazkinRaay vaazaatha nenjsamee valvinaippaddu 
    aazkinRaay aazaamal kaappaanai eeththaathee 
    suuzkinRaay keedu unakku solkinReen palkaalum 
    viizkinRaay nii avala kadal aaya veLLaththee.

பொ-ரை: பேரின்ப வாழ்க்கையைப் பெற்று வாழக் கருதாத மனமே! நீ வீணாக இவ்வுலகில்
நிலைத்திருக்கிறாய். இதனால் கொடிய வினையில் அகப்பட்டுத் துயரத்தில் அழுந்துகிறாய்.
அங்ஙனம் அழுந்தாமற் காக்கின்ற கடவுளை வழிபடாமல் உனக்குக் கெடுதியையே 
உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறாய். பலமுறையும் உனக்கு அறிவுரை இயம்புகிறேன்! நீ 
அதனைக் கேளாது துன்பக் கடலில் எழுந்த பெருவெள்ளத்தில் வீழ்ந்தொழிகின்றாய் என் செய்வது?

    What kind of life do you lead here, Oh dullard of my mind? Not adoring Him that saves
you from drowning in sorrows, you are getting steeped into abysmal depths, as a result of your
vile deeds in the past. Mark my words, harmful to you indeed, are your scheming acts (of indifference). 
What pity, time and again, you keep falling into the ever burgeoning flood of woes!

கு-ரை: தமது அறிவு இறைவன் பால் ஈர்ப்ப,  மனமானது உலகை அவாவி நிற்பதாகக் கருதி அதனைத்
தடுத்து அறிவுரை பகர்தல் இச்செய்யுளின் நோக்கம்.

                THIRUCHCHITRAMBALAM

5.3 சுட்டறுத்தல்                        5.3. CHUTTARUTHTHAL


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்            Obliteration of the Self

                திருச்சிற்றம்பலம்

21.     வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
        பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
    பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப்
        பதைத்துருகு மவர்நிற்க வென்னை யாண்டாய்க்
    குள்ளந்தா ணின்றுச்சி யளவு நெஞ்சா
        யுருகாதா லுடம்பெல்லாங் கண்ணா யண்ணா
    வெள்ளந்தான் பாயாதா னெஞ்சங் கல்லாங்
         கண்ணிணையு மரமாந்தீ வினையி னேற்கே

    வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்
        பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்
    பள்ளம் தாழ்உறு புனலில், கீழ்மேலாகப்
        பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு 
    உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால்
        உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
    வெள்ளம்-தான் பாயாதால், நெஞ்சம் கல் ஆம்
        கண்-இணையும் மரம் ஆம்-தீவினையினேற்கே.

    veLLanthaaz virisadaiyaay vidaiyaay viNNoor            
        perumaanee enakkeeddu veedda nenjsaay 
    paLLanthaaz uRupunalil kiiz meelaaka
        pathaiththu urukum avar niRka ennai aaNdaaykku 
    uLLanthaaL ninRu ussi aLavum nenjsaay urukaathaal
        udampellaam kaNNaay aNNaa                 
    veLLanthaan paayaathaal nenjsam kallaam
        kaNiNaiyum maramaam thiivinaiyi neeRkee


பொ-ரை: வானின்று இறங்கிய கங்கை விழுந்து தங்குவதற்கேற்ற விரிந்த சடை உடையாய்!
 காளையை ஊர்தியாய் உடைய தேவர் தலைவனே! இவ்வாறு அன்பர்கள் சொல்லக் 
கேட்டவுடன் நின் சிறந்த அடியார்கள் ஆர்வமிகுந்த மனத்தினராய் உன் அருளை 
எதிர்பார்த்து நிற்கிறார்கள். பள்ளத்தில் விழுகிற நீர் போல மேல் கீழாக விழுந்து வணங்கி 
நெஞ்சம் துடிதுடித்து உருக்கம் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கு உன் அருளைக் 
கொடாமல் தகுதியற்ற என்னை நின் பெருங்கருணையால் ஆட்கொண்டாய் . என்
உள்ளங்கால் முதல் உச்சிவரை உள்ளத்தின் இயல்பு போல உருகவேண்டும். ஆனால் 
உருகவில்லை. மேலோனே! உடம்பு முழுவதும் கண்ணின் இயல்பு கொண்டு நீர்பெருக்கி
வெள்ளம் பாய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. ஆகவே, கொடிய வினையை உடைய 
எனக்கு நெஞ்சம் கல்லால் ஆனது. இரு கண்களும் மரத்தாலானவையாம்.

    Bull mounted Lord! with expansive matted locks, whereat plentiful waters of Ganga river 
abide! Whilst many an ardent sage did, in adulation, go into shivers and melt down like "Valley
seeking" waters, Thou Chief of "heaven dwelling" gods, made all gods wait outside, and took me 
in under Thee. Nevertheless, alas! Unto Thee my mind does not melt from head to foot. My
whole physique does not shed tears of dedication. I am a stony-hearted, evil one with wood-like
(senseless) eyes! What irony is this!

கு-ரை: அடிகளது ஆர்வமிகுதியை இச்செய்யுள் குறிக்கும். இறைவன் பெருங்கருணையை நோக்கத் 
தமக்கு அன்பின்மையும், அதற்குக் காரணம் தனது தீவினையும் என அடிகள் அறிவுறுத்தியவாறாம். 
சடை, இறைவனது பேராற்றலைக் குறிக்கும். பகீரதன் கங்கை கொண்டுவந்த கதை வெளிப்படை.
பெருவெள்ளம், ஒரு நீர்த்துளியாகச் சடையில் தங்கியது என்ப. விடை, நீதியை உணர்த்தும். 
வேட்ட= ஆசைப்பட்ட. அண்ணா என்பதற்கு அண்ட முடியாத என்றும் பொருள் கொண்டு, வெள்ளந்தான்
என்பதற்கு அதனை அடையாக்குவர் ஒரு சாரார்.

22.     வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 
        போதுநான் வினைக்கேட னென்பாய் போல
    வினையனா னென்றுன்னை யறிவித் தென்னை
         யாட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
    யனையநான் பாடேனின் றாடே னந்தோ 
        வலறிடே னுலறிடே னாவி சோரேன்
    முனைவனே முறையோநா னானவாறு 
        முடிவறியேன் முதலந்த மாயி னானே

    வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 
        'போது, நான் வினைக்கேடன்' என்பாய் போல
    'இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை 
        ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு, இரும்பின் பாவை 
    அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
        அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
    முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு ?
        முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே.

    vinaiyilee kidantheenai pukunthu ninRu                
        poothu naan vinaikkeedan enpaay poola
    inaiyan naan enRu unnai aRiviththu ennai
        aadkoNdu empiran aanaaykku irumpin paavai        
    anaiya naan paadeen ninRu aadeen anthoo
        alaRideen ulaRideen aavi sooreen
    munaivanee muRaiyoo naan aanavaaRu
        mudivu aRiyeen muthal antham aayinaanee

பொ-ரை: தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக்
கிடந்த என்னுள் புகுந்து வலிய எதிர்ப்பட்டு வந்து  நின்றாய். நான் வினையை
அழிக்கவல்லேன், நான் இத்தன்மையன் என உன் இயல்பை, எனக்கு அறிவுறுத்தி அருளினாய். 
என்னை அடிமையாக்கிய என் தலைவனாகிய உன்பால் இரும்புப் பதுமை போலும் யான் 
நின் புகழினைப் பாட மாட்டேன். நிலைபெற்று ஆனந்தக் கூத்திடவும் மாட்டேன். 
ஐயோ! கதற மாட்டேன்! பதறி வற்ற மாட்டேன். உயிர் தளர மாட்டேன். முதல்வனே! 
நான் இவ்வாறாம் முறை நியாயமாமோ? எனக்கு என்ன கதி வருமோ? அறிகிலேன். !

    Even as I was sulking under the weight of past evil deeds, Thou didst call me over and 
Thyself revealed Thy true nature to me and took me under Thee, as if to show that Thou art
indeed the destroyer of evil. Unto Thee, Oh Lord, that art at once the first and the last; alas I sing 
no praise, but stay as a mute metallic toy. Neither do I dance in glee, nor cry, nor faint in fatigue.
What great pity, oh primal Lord! Is it meet for me to stay like this? I know not what is in store
for me.

கு-ரை: புகுந்து என்பது உள்ளத்திற் புகுந்து, உலகில் வடிவொடு புகுந்து, என இரு பொருள்படும்.
போது=வா, வினைவழி நின்று வெளியே போ, அதாவது, என்னிடைவா, என்று விரிபொருள் கொள்க.
ஆசிரியனது பிரிவு ஆற்றாமையால், 'அலறிடேன், உலறிடேன்; ஆவி சோரேன்' என்றார் . தனது
கடப்பாட்டுக் குறையால், உய்தி கூடாது போமோ என்ற ஐயப்பாட்டினால், 'முடிவறியேன்' என்றார் . 
இறைவன் கருணைச் சிறப்பை அறிவுறுத்தியவாறு. 

23.     ஆயனான் மறையவனு நீயே யாத 
        லறிந்தியா னியாவரினுங் கடைய னாய
    நாயினே னாதலையு நோக்கிக் கண்டு 
        நாதனே நானுனக்கோ ரன்ப னென்பே 
    னாயினே னாதலா லாண்டு கொண்டா
        யடியார்தா மில்லையே யன்றி மற்றோர்
    பேயனே னிதுதானின் பெருமை யன்றே 
        யெம்பெருமா னென்சொல்லிப் பேசு கேனே

    ஆய நான் மறையவனும் நீயே ஆதல் 
        அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய
    நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் 
        'நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன்' என்பேன்
    ஆயினேன்; ஆதலால், ஆண்டு கொண்டாய் ;
        அடியார் தாம் இல்லையே ? அன்றி மற்றுஓர்
    பேயனேன்? இது தான் நின்பெருமை அன்றே!
        எம்பெருமான்! என்சொல்லிப் பேசுகேனே?

    aayanaan maRaiyavanum niiyee aathal
        aRinthuyaan yaavarinum kadaiya naaya
    naayineen aathalaiyum nookki kaNdum
         naathanee naan unakku oor anpan enpeen
    aayineen aathalaal aaNdu koNdaay             
        adiyaar thaam illaiyee anRi maRRu oor
    peeyaneen ithu thaan nin perumai anRee            
        emperumaan ensolli peesu keenee            

பொ-ரை: தலைவனே! நான்கு வேதப் பொருளானவனும் நீயே! அங்ஙனம் நின் பெருமை 
அறிந்து அடியேன் எல்லோரினும் கீழ்ப்பட்ட நாயியல்பு உடையேன் என்பதையும் ஆய்ந்து 
பார்த்து உனக்கு ஒரு வகையான அன்பன் என என்னை சொல்லிக் கொள்ளுவேன் 
ஆயினேன். அக்காரணம் பற்றி நீ என்னை ஆட்கொண்டு அருளினாய். மனித வடிவம் 
கொண்ட பேயென்று சொல்லத் தக்கவனான என்னையன்றி, நீ ஆட்கொள்ளத் தக்க 
அடியார்கள் தாம் வேறு இல்லையோ ? தகுதியில்லாத என்னை ஆட்கொண்ட 
இக்கருணைதான் நின் பேராற்றலை உணர்த்தும் அல்லவா? எம்பெருமானே! யான் நின் 
கருணைத் திறத்தை என்ன சொல்லிப் பாராட்டுவேன்?

    I am aware that Thou art verily the Lord of the four vedas. Also I am aware of my own 
"cur like" low state that assigns me the very last place in the row. And yet, I have come to say
'Oh my Lord, I am Thy favourite ward; That being so, Thou didst take me under Thee. Though
Thy other pupils are here no more, this mad wretch, me, stayeth here as thine own. Such indeed 
is Thy glory, Oh Lord! In what words shall I speak on Thee?

கு-ரை: 'ஆயநான் மறையவனும் நீயே யாத லறிந்து' = என்னை ஆட்கொள்ள உருவெடுத்து வரலான
நான்மறை வல்லான் பரம்பொருளாகிய நீயே என்பது அறிந்து என்று கோடலுமுண்டு. ஓர் பேயனே அன்றி
மற்று அடியார் தாம் இல்லையே என்று கொள்க. பேய் அன்னேன் பேய் போன்றேன் என்று பேயனேன்
என்பதைப் பிரித்துப் பொருள் கோடலுமுண்டு. சொல்லிப் பேசுதல்= பாராட்டுதல்.

24.     பேசிற்றா மீசனே யெந்தா யெந்தை
        பெருமானே யென்றென்றே பேசிப் பேசிப்
    பூசிற்றாந் திருநீறே நிறையப் பூசிப் 
        போற்றியெம் பெருமானே யென்று பின்றா
    நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
        யாண்டானே யவாவெள்ளக் கள்வ னேனை
    மாசற்ற மணிக்குன்றே யெந்தா யந்தோ
        வென்னைநீ யாட்கொண்ட வண்ணந் தானே

    பேசின், தாம் 'ஈசனே, எந்தாய், எந்தை
         பெருமானே!' என்று என்றே பேசிப்பேசி
    பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி 
        போற்றி எம்பெருமானே' என்று; பின்றா
    நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார்-தம்மை 
        ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை
    மாசு அற்ற மணிக்குன்றே! எந்தாய்! அந்தோ ! 
        என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?

    peesin thaam iisanee enthaay enthai
        perumaanee enRu enRee peesi peesi
    puusin thaam thiruniiRee niRaiya puusi
        pooRRi emperumaanee enRu pinRaa
    neesaththaal piRappu iRappai kadanthaar thammai
        aaNdaanee avaa veLLa kaLva neenai
    maasu aRRa maNikkunRee enthaay anthoo 
        ennai nii aadkoNda vaNNam thaanee.        

பொ-ரை:  குற்றமற்ற மாணிக்க மலையே!  எங்கள் அப்பனே!  நின் அன்பர்கள் தாம்
பேசுவதானால் ஆண்டவனே ! அப்பனே!  எங்கள் அப்பனுக்கும் தலைவனே  என்று 
நின்னைத் துதித்துப் பேசுவார்கள். ஏதாவது பூசுவதானால் திருநீற்றினையே உடலெங்கும் 
நிரம்பப் பூசி "எம் பெருமானே! காத்தருளுக" என்று மொழிவார்கள். பேரன்பு மிகுதியால் 
பிறவியையும் சாவையும் கடக்கும் தகுதியடைந்தாரை ஆட்கொண்டவனே! உலக ஆசை 
வெள்ளத்தில் அகப்பட்டு உன் அடியவன் போல் நடிக்கும் வஞ்சகனாகிய என்னை நீ
ஆட்கொண்ட வகைதான் என்ன?

    Coming to talk of it. Oh Lord, Thou didst bring under Thee, all those that respectfully 
called out, "Oh Father, our peerless Lord", with unflinching attachment. Wearing white ash
profusely, they paid obeisance to Thee, and crossed the cycle of births and deaths. And yet, 
Thou didst take me too in Thy realm - me, this furtive one that am steeped in the floods of greed,
Oh Faultless One! Strange indeed are Thy generous deeds!

கு-ரை: மெய்யடியார், பேசுவதானால், ஈசன் புகழே பேசுவர், பூசுவதானால், திருநீறே பூசுவர் என்பது 
குறிக்கப்பட்டது. பின்றா= பின்னிடாது. 'கடந்தார்' - நடக்கும் தகுதியடைந்தார். இறைவன் ஆட்கொண்ட 
பின்னரே, மெய்யாகப் பிறப்பு இறப்பைக் கடந்தவராவர். உறுதிபற்றிக் கடப்பாரைக் கடந்தார் என்றார்
என்க. வாசனாமலம் தோன்றுதல் பற்றிப் போலும், தம்மை அடிகள் ' அவா வெள்ளக் கள்வ' னென்றார்.

25.     வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
        நேகனேக னணுவணுவி லிறந்தா யென்றங் 
    கெண்ணந்தான் றடுமாறி யிமையோர் கூட்ட 
        மெய்துமா றறியாத வெந்தா யுன்றன்
    வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி 
        மலர்க் கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
    திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டா 
        யெம்பெருமா னென்சொல்லிச் சிந்திக் கேனே.

    வண்ணம் தான், சேயது அன்று; வெளிதே அன்று ;
        அனேகன்; ஏகன்: அணு அணுவில் இறந்தாய்; என்று அங்கு 
    எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
        எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன்-தன் 
    வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி
        மலர்க்கழல்கள் - அவை காட்டி, வழி அற்றேனைத்
    திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்; 
        எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

    vaNNam thaan seeyathu anRu veLithee anRu
        aneekan ekan aNu aNuvil iRanthaay enRu angku
    eNNam thaan thadumaaRi imaiyoor kuuddaam         
        eythumaaRu aRiyaatha enthaay unthan
    vaNNam thaan athu kaaddi vadivu kaaddi
        malar kazalkaL avaikaaddi vazi aRReenai
    thiNNam thaan piRavaamal kaaththu aadkoNdaay        
        emperumaan ensolli sinthikkeenee.

பொ-ரை: வானவர் கூட்டம் நீ சிவப்பன்று, வெள்ளையன்று, நீ பலவாயும் ஒன்றாயும்
அணுவாயும் இருப்பவன் என்று பேசுகிறது.  பிறகு அணுவினையும் கடந்த
அதிநுட்பமுடையோன் என்றெல்லாம் வியந்து தமது நினைவுதானும் தடுமாறப் பெற்று
உன்னை அடையும் ஏது அறியாது நிற்கிறார்கள். எந்தையே! உன் மெய் இயல்பாகிய
நுட்பத்தை, ஆட்கொள்ள வந்த திருமேனியை, பூப்போன்ற நின் திருவடிகளைக் காட்டி,
கதியின்றி நின்ற என்னை ஆட்கொண்டாய். இனி உறுதியாகப் பிறவாதிருக்கும் படி
தடுத்தாட் கொண்டருளினாய். எம் தலைவனே! உன் கருணைத் திறத்தை யாது கூறி வியப்பேன்?

    The gods of heaven know not how to reach Thee. Mired in shaky thoughts,they conjure 
up visions of Thy physical state neither red nor white! They view Thy form as one and yet as so 
many, holding that Thou art inside the minutest of atoms. While such is the case, thou didst 
show me Thy colour and Thy form and Thy flowery Feet; to me, this resourceless one. And took
me unto Thy lordly state, firmly rooting out all future births. Oh my Chief, in what manner of
words shall I meditate on Thee? 

கு-ரை: விண்ணோர் இறைவனது வெளிப்படையான பல்வகைக் காட்சிகளை நினைந்து மெய் இயல்பு
அறியாது மயங்கினமை கூறியவாறு. வண்ணந்தான் 'அது' என்பது மெய் இயல்பைச் சுட்டி நின்றது. '
'மலர்க் கழல்கள் அவை' என்பதில், 'அவை' என்பது திருவடிகளாகிய அருட்சத்திகளைக் குறிக்கும்.
காத்து= தடுத்து. 

26.     சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் 
        கண்ணிணைநின் றிருப்பாதப் போதுக் காக்கி
    வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன்
        மணிவார்த்தைக் காக்கியைம் புலன்க ளார 
    வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
         மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத்
    தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் 
        தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே

    சிந்தனை நின்-தனக்கு ஆக்கி, நாயினேன்-தன் 
        கண்-இணை நின்-திருப்பாதப் போதுக்கு ஆக்கி 
    வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன் 
        மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர 
    வந்தனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை 
        மால் அமுதப் பெரும் கடலே! மலையே! உன்னைத்
    தந்தனை; செம்-தாமரைக்காடு அனைய மேனித் 
        தனிச்சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே

    sinthanai ninthanakku aakki naayineen than
        kaNNiNai ninthiruppaatha poothukku aakki         
    vanthanaiyum ammalarkkee aakki vaakku un
        maNivaarththaikku aakki aimpulankaL aara 
    vanthanai aadkoNdu uLLee pukunthavissai             
        maal amutha perunkadalee malaiyee unnai
    thanthanai senthaamarai kaadu anaiya meeni 
        thanisudaree iraNdum il ith thaniyaneeRkee.        


பொ-ரை; நாய் போலும் என் எண்ணத்தை மாற்றினாய். உன்னையே நினைக்கும்படி செய்து,
என் இரு கண்களையும் உன் திருவடிகளில் சாத்தும் மலர்களாக்கினாய். உன்
திருவடியினைப் பார்த்து இன்பமுறும்படிச் செய்து, எனது வணக்கமும் அத்திருவடிக்கே
உரியதாகச் செய்தாய். எனது ஐம்பொறி அறிவும் உன்னையே துய்க்கும்படி எழுந்தருளி 
வந்து என்னை ஆளாகக் கொண்டாய்.  எனதுள்ளத்தின் கண் புகுந்த அருஞ்செயலை உடைய 
அன்பு மயமான ஞானப் பெருங்கடலே ! சத்தாகிய மலையே!  சிவந்த தாமரைக் காடு 
போலும் திருமேனியுடைய ஒப்பற்ற ஒளி உருவனே. கேடும் ஆக்கமும் (அல்லது) 
இருவினையும் கெட்ட தனிமையன் ஆன எனக்கு நின்னையே தந்தருளினாய். உன் 
பெருமை எத்துணைச் சிறப்புடையதாகும்!!?

    Thou didst direct all my thoughts on to Thee. Thou didst direct the eyes, of me this cur, 
on to Thy flowery Feet directing me to greet those very flower-like Feet, transforming all my
utterances into Thine own holy speech. Thus earnest Thou, to the fulfilment of my five senses,
entering into me, Thou took me as vassal, Oh mighty sea of ambrosia, mount of bliss, shining
like lotus form in full bloom. Thou gavest Thyself to me, even me that am devoid of wit and skill.

கு-ரை: மணி = அழகிய, சிறந்த; வார்த்தை = புகழ்: கண் மலர், திருவடி மலரிலே பொருந்தும் இயைபு 
உடையது, மலர் மலரோடு இனம் பற்றிச் சேர்தலால், நீயே சிந்தனை மயமாகவும், திருவடி மலர், 
கண் மலராகவும், புகழ்ச்சொல்லே வாக்காகவும் அமைந்தன என்பதும் ஒரு பொருள். சிந்தனை, வந்தனை,
வார்த்தை முக்கரண வழிபாடு. இனி ஐம்புலன்களுக்கும் இறைவன் மாட்டே உரியன கிடைக்கப் பெற்றன
என்பது கருத்து. அவையாவன: திருமேனி காண்டல், திருவடி மலர்த்தேன் பருகல், புகழ் கேட்டல், தெய்வ
வாசனை முகரல், திருவடி சென்னிமிசை தீண்டப் பெறுதல், இரண்டுமிலி = இருவினையும் இல்லாதவன்,
இகபரம் பயனற்றவன். மூன்றாம் அடியில் வந்தனை = வந்து, விச்சை = வித்தை, வியத்தகு செயல்,
மால்=அன்பு. இறைவன் செம்மேனியன் ஆதலின் செந்தாமரைக் காடனையமேனி. எல்லா ஒளிகட்கும்
தோற்றமாய்ச் சிறத்தலின் 'தனிச்சுடர்' என்றார். 'இரண்டுமிலித் தனியனேற்கே' என்பதை 'உன்னை'
என்பதன் முன் வைக்க.

27.     தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் 
        தடந்திரையா லெற்றுண்டு பற்றொன் றின்றிக்
    கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற்
        கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
    டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி
        யஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
    முனைவனே முதலந்த மில்லா மல்லற்
        கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே

    தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வத் 
        தடம் திரையால், எற்றுண்டு, பற்று ஒன்று இன்றிக்
    கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் 
        கலக்குண்டு, காம வான்சுறவின் வாய்ப்பட்டு 
    'இனி,என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி 
        அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
    முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல் 
        கரை காட்டி ஆட்கொண்டாய், மூர்க்க னேற்கே

    thaniyaneen perumpiRavi powvaththu evvath             
        thadanthiraiyaal eRRuNdu paRRu onRu inRi        
    kaniyaineer thuvarvaayaar ennum kaalaal 
        kalakkuNdu kaama vaan suRavin vaayppaddu        
    iniennee uyyumaaRu enRu enRu eNNi
        anjsezuththin puNai pidiththu kidakkinReenai
     munnaivanee muthal antham illaa mallal
        karaikaaddi aadkoNdaay muurkka neeRkee.

பொ-ரை: கேவல அவத்தையில் தனியனாய்க் கிடந்து, பிறவிப் பெருங்கடலில் விழுந்து
இருவினையாகிய இன்ப, துன்பப் பேரலைகளால் தாக்கப்பட்டேன் . ஆதரவு 
ஒன்றுமில்லாது கனிவாய்ப் பெண்டிர் என்று சொல்லப்படும் புயற்காற்றால் அலைக்கப் பட்டு
மனக்குழப்பம் உற்றேன். ஆசையெனும் பெரிய சுறா மீனின் வாயில் அகப்பட்டு இனி உய்யும்
வழி யாதோ என வாடினேன். திருவைந்தெழுத்தின் தெப்பத்தைப் பிடித்து  அதை
மேற்செலுத்தி, கரை சேர இயலாமல் தவித்தேன், முரண்பட்ட குணமுடைய எனக்கு, ஆதி 
அந்தம் இல்லா முத்திக் கரையைக் காட்டி என்னை ஆட்கொண்டருளினாய்!  உன் கருணைத்
திறம் தான் என்னே?

    This lonesome forlorn me,  tossed about by the tall billows of the sea of birth have no
other attachment; but am caught in the jaws of the whales of lust, swirled by the awesome lurid
stance  of fair dames. And lie here hopelessly ruminating on what avenues of redemption could         
there possibly exist for me now. Nevertheless,I held on to the raft of the five-letter incantation 
(the chanting of pentad), Upon which Oh primal Lord, Thou showed me the shores of Thy
boundless weal and took me under Thee.

கு-ரை: 'தனியனேன்' என்பது உடம்பெடாத தனிநிலையைக் குறிக்கும். பிறவிக் கடலிற் பொருந்திய நிலை 
சகல நிலையாகும். எவ்வம்=துன்பம், எற்று=மொத்து, தாக்கு, பற்று= ஆதரவு, 'கனி'  கொவ்வைக் கனியைக் 
குறிக்கும் என்ப. துவர்- பவளம் என்னும் பொருளில், சிவப்பைக் குறித்தலால், 'கனி' சுவைக்கு
உவமையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  புணை =தெப்பம், மிதவைக் கட்டை என்றும் கொள்ளலாம். 
மூர்க்கன்- கோபம் உடையவன், கீழ்ப்பட்டவன், பிடிவாதம் உடையோன். அஞ்செழுத்தின் சிறப்பையும், அதன் கண் 
தமக்குள்ள உறுதியையும் அடிகள் குறித்தனர். வீட்டிற்கு முதலீறின்மை தெளிவு, மல்லல்= வளம்.

28.     கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் 
        கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டா
    னாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே 
        நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே 
    காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் 
        கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
    மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா 
        னெம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.

    கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;
        கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்;
    நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே 
        நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே 
    காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் 
        கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை
    மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் -
         எம்பெருமான் செய்திட்ட விச்சை - தானே!

    keeddaarum aRiyaathaan keedu onRu illaan        
        kiLaiyilaan keeLaathee ellaam keeddaan 
    naaddaarkaL viziththu iruppa njaalath thuLLee
        naayinukku thavisu iddu naayineeRkee
    kaadaa thane ellaam kaaddi pinnung 
        keeLa thana ellaam keedpithu ennai        
    miiddeeyum piRavaamal kaaththu aadkoNdaan
        emperumaan seythidda vissai thaanee

பொ-ரை: எவராலும் கேள்வியால் அறியப்படாதவன். அழிவும் இல்லாதவன். உறவினர்
இல்லாதவன். கருவிகளின் உதவி இன்றிக் கேட்பனவெல்லாம் கேட்டவன். உலகத்தார்
பார்த்திருக்க, உலகிற் புகுந்து, நாயேனுக்கு இருக்கையளித்து, சிறியவனான எனக்குக் 
காட்டக் கூடாதனவெல்லாம் காட்டி, கேட்கக் கூடாதன எல்லாம் கேட்பித்து  என்னை
மீண்டும் பிறவாதபடி ஆட்கொண்டருளிய எம்பெருமான் செய்த மாய வித்தையாகும் இது.

    He that none can know through the sense of hearing; He that never doth decay. He that
hath none as His kin; He that hears all without listening to any. Such a one gave an exalted
pedestal to this lowly cur of me and revealed unto me all that are not revealed yet, for all the
world to see, made me hear all that is not heard of yet, and saved me from further births. Such is
the wonder that He has wrought! Lo! What magic, is this!

கு-ரை: இறைவனே குருவாக நேரில் வந்து அறிவு நல்கப் பெற்று அறியுந் தரத்தனேயன்றிப்
பிறர்பாற்கேட்டு அறியப்படாதான் என்பார், 'கேட்டாரு மறியாதான்' என்றார். உபதேசம் பெற்றாராலுங்கூட
முற்றிலும் அறியப்படாதான் என்றுங் கூறுப. தந்தை தாய் முதலிய உறவினரில்லாதான் தம் வயமும்
பற்றின்மையும் உடையனாதலின் என்க. கேளாதே என்பதற்குப் பிறர் வாயிலாகக் கேட்டறியாதே என்றும்
பொருள் கொள்வர். உயிர்கள் கூறும் எல்லாவற்றையும் தானே கேட்டு அருள் புரிபவன் என்பதுங் கொள்க.
யாரும் அறியத் தெளிவாகவே, பக்குவம் வந்த காலை இறைவன் திருப்பெருந்துறையில்  ஆண்டான்.
அந்நுட்பத்தை உலகில் நாட்டினர்கள் விழித்திருந்தும் அறிந்திலர் என்பது. தவிசு = ஆசனம், இருக்கை.
இறையாசான், தன்பக்கம் அடிகளை இருக்கும்படி செய்து மெய்யறிவு நல்கினன்.  இருக்குமிடம் 
கொடுத்ததையே 'தவிசிட்டு' என்றார். ஞானிகள் இறையறிவாற் காண்பன, கேட்பன , பிறரால் 
அறியப்படாமையின், அவ்வாறு கூறினர். வித்தை = வியத்தகு அற்புதச் செயல். 

29.     விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின் 
        மிகுகாத லடியார்தம் மடிய னாக்கி
    யச்சந்தீர்த் தாட்கொண்டா னமுத மூறி 
        யகநெகவே புகுந்தாண்டா னன்புகூர
    வச்சனாண் பெண்ணலியா காச மாகி
        யாரழலா யந்தமா யப்பா னின்ற 
    செச்சைமா மலர்புரையு மேனி யெங்கள் 
        சிவபெருமா னெம்பெருமான் றேவர் கோவே.

    விச்சை தான் இது ஒப்பது உண்டோ ? கேட்கின் 
        மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி
    அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி 
        அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்பு கூர;
    அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம் ஆகி 
        ஆர் அழல்-ஆய், அந்தம்-ஆய், அப்பால் நின்ற
    செச்சை மா-மலர் புரையும் மேனி, எங்கள்
        சிவபெருமான், எம்பெருமான், தேவர்-கோவே!

    vissai thaan ithu oppathu uNdoo keedkin         
        mikukaathal adiyaar tham adiyan aakki 
    assam thiirththu aadkoNdaan amutham uuRi
        akamneekavee pukunthu aaNdaan anpu kuura 
    assan aaN peN ali aakaasam aaki 
        aar azalaay anthamaay appaal ninRa 
    sessai maamalar puraiyum meeni engkaL 
        sivaperumaan emperumaan theevar koovee.


பொ-ரை: இது போன்ற மாய வித்தைதான் உண்டோ ? தம்பால் மிகுந்த அன்புடைய
அடியாருக்கு என்னை அடியனாக்கினான்.  பிறப்பு, இறப்பு பயத்தை நீக்கி என்னை 
ஆட்கொண்டருளினான்.  பேரின்ப அமுதம் ஊற்றெடுத்து, நெஞ்சம் கரைந்து, அன்பு 
மிகுதிப்படும் வண்ணம் என் உள்ளத்தில் புகுந்து ஆண்டருளினான் . அவன் யார் எனில் 
யாவருக்கும் அப்பன்.  ஆண், பெண், அலி என்பவையாய் எல்லாவற்றுக்கும் இடம் 
கொடுக்கும் வானாகி, கடத்தற்கரிய சோதி வடிவாகி, முடிந்த முடிவாய் அதற்கு 
அப்பாற்பட்டு நின்றான். வெட்சிப் பூப்போல் செம்மேனி படைத்த எங்கள் சிவபரம்பொருள்
எம் தலைவன் - அவனே விண்ணவர்க்கரசன் ஆவான்.

     Say, is there any other art like this? He removed my fear and took me under His tutelage,
making me a page of the closest of His pages! He entered into me, to the thawing of my heart,
ambrosia springing forth in kindly gusts. He, our sire, stands out as male, female, neuter, the sky
and the unique fire. He is the end of all and goes beyond all!. This is our Lord, of flower like 
reddish frame, Lord of all gods! Lord Civa our Chief.

கு-ரை: அடியர்க்கு அடியனாதல், அயரா அன்பினை வளர்த்தற்குக் கருவியாம். அச்சன்=அப்பன்.
நுண்ணிய வடிவன் என்று பொருள் கொள்வாரும் உளர். ஆரழல் = கடத்தற்கரிய நெருப்பு அல்லது ஒளி.
ஆகாசம் என்பதை மூலப்பகுதி எனவும், ஆரழல் என்பதை ஒளிமயமான நாதக்கலையுடைய சுத்தமாயை
எனவும் கூறுப. இறைவன் அப்பாற்பட்டவனாயினும், அடியார்க்குச் செம்மேனியனாய் வெளிப்பட்டு
அருளுதலின், 'செச்சை மேனி' என்றார். செச்சை = வெட்சி. மா=சிறந்த.

30.     தேவர்கோ வறியாத தேவ தேவன்
        செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை
    மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
        மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
    யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான்
        யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ 
    மேவினோ மவனடியா ரடியா ரோடு
        மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே

    தேவர் கோ அறியாத தேவ தேவன்
        செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
     மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி 
        மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
    யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் 
        யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும் அஞ்சோம்
    மேவினோம் அவன் அடியார் அடியாரோடும்
         மேன்மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

    theevar koo aRiyaatha theva thevan
        sezum pozilkaL payanthu kaaththu azikkum maRRai
    muuvarkoonaay ninRa muthalvan muurththi
        muuthaathai maathu aaLum paakaththu enthai
    yaavarkoon ennaiyum vanthu aaNdu koNdaan 
        yaam aarkkum kudialloom yaathum anjsoom
    meevinoom avan adiyaar adiyaroodum
        meen meelum kudainthu aadi aadu voomee


பொ-ரை: விண்ணவர் தலைவனான இந்திரன் அறியாத மகாதேவன்; உலகங்களைப்
படைத்துக் காத்து ஒடுக்குகின்ற அயன், அரி, அரன் என்பவர்க்குத் தலைவனாய் நின்ற ஈசன்
எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவன்; எல்லோருக்கும் பாட்டன். உமையொரு பாகனான
எம் அப்பன் யாவருக்கும் அரசன்.  கடையனான என்னை ஆட்கொண்டான்.
அடியேங்களாகிய நாங்கள் அவனைத் தவிர பிறருக்கு ஆட்பட மாட்டோம். எதற்கும் அஞ்ச மாட்டோம். 
அவனது அடியாருக்கும் அடியாரிடம் பொருந்தி நடப்போம். அவனது ஆனந்தக் கடலில் மேன்மேலும் 
மூழ்கித் திளைத்துக் கூத்தாடுவோம்.

    This our Lord is beyond the comprehension of even the leader (Indra) of gods. He is 
Chief of the three entities. Confer Basma Jabala Upanishad: 'Adwaitham Chathurththam Brahma 
Vishnu Rudra Teethmeha Machashyam Bagawantam Civam' (Brahma, Thirumaal and Rudran)
who respectively (are ordained to) create, protect and dissolve the worlds. He is the first one and
has no one above Him. He is the head, the primordial 'Self existing' one - One Half Mother, 
and is Sire of our Sire. Head of all, He came over to me and made me His own. C.f. St.Appar,
Thandakam decad 312- Note the use of the same phrase 'No one's vassal am I'. Henceforth, I
am vassal to no one else. I have nothing to fear. Along side the devotees of His devotees, ever 
more do we abide, bathing and playing in the splashing waters of bliss!

கு-ரை: இந்திரன், அயன், அரி, அரன் இவர்க்கு அப்பாற்பட்டவன். அவர்க்கு மேல் அப்பெயருடைய 
காரணேசுரர் உளரெனின், அவர்க்கும் இறைவன் தந்தையாதலின், இவர்கட்கு அவன் பாட்டனாயினன்.
யார்க்கும் முற்பட்ட தகப்பன் என்று மூதாதை என்பதற்குப் பொருள் கொள்வாரும் உளர். சிவம் சத்தியாய் 
யாவற்றையும் மேற்கொண்டு நிற்பான் என்பார், 'மாதொரு பாகத்தெந்தை' என்றார். அப்பர் சுவாமிகள்
நாமார்க்கும் குடியல்லோம் என்றதை இது நினைவுறுத்துகின்றது. 'அஞ்சுவதி யாதொன்று மில்லை' என்றதும்
காண்க. இறுமாந்து இருப்போம் என்பதுபோல, 'குடைந்தாடி யாடுவோ' மென்றார். பேரின்ப 
நுகர்ச்சி எப்போதும் தொடர்தலின், அதற்கு எல்லையின்மை குறித்தவாறு.

                THIRUCHCHITRAMBALAM

5.4 ஆத்தும சுத்தி                 5.4. AATHUMA SUTHTHI


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்        Aspects of Soul Cleansing
                        Tossed about by the Vicissitudes of Life


                திருச்சிற்றம்பலம்

31.     ஆடுகின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை யென்புருகிப் 
    பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை, பணிகிலை பாதமலர் 
    சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே
    தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.

    ஆடுகின்றிலை; கூத்து உடையான கழற்கு அன்பு இலை; என்பு உருகிப் 
    பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாதமலர்
    சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை! துணை இலி பிண நெஞ்சே!
    தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.

    aadu kindRilai kuuththu udaiyaan kazaRku anpilai enpu uruki 
    paadu kinRilai pathaippathum seykilai paNikilai paathamalar 
    suudu kinRilai suuddukinRathum ilai thuNai ili piNanenjsee 
    theedu kinRilai theruvu thooRu alaRilai seyvathu onRu aRiyeenee

பொ-ரை: யாதொரு துணையுமில்லாத சவம் போன்ற மனமே! நினது கூத்தாட்டினை
இயற்றுவிக்கும் முதல்வனது திருவடிக்கண் அன்பில்லாது இருக்கிறாய் . அவன்பால்
ஆனந்தக் கூத்தியற்ற மாட்டாய். எலும்புருகப் பாடவும் செய்கிறாயில்லை.  அஞ்சி
நடுங்குவதும் இல்லை. தாழ்ந்து வணங்குவதும் இல்லை. அவனது திருவடிக் கமலங்களைச்
சென்னி மேல் அணிந்து கொள்கின்றாயில்லை. திருவடிகட்கு மலர் மாலை சாத்துவதும்
செய்ய மாட்டாய். அவன் திருவடியிணைகளைத் தேடி நாடுவதும் இல்லை. தெருவுதோறும் 
அலைந்து தேடிக் காணாத இடத்துக் கதறுவதும் இல்லை. நீ இவ்வாறு பிணம் போல்
பயனற்றுக் கிடப்பின் செய்யத் தக்கதொன்றும் யான் அறிய மாட்டேன்.

    Ah, you wretch of my mind, that stands forlorn, having no friend! You do not dance in 
prayerful glee, neither have you devotion to the dancing Lord's jewel-clad Feet. Nor sing on
Him with thawing heart, nor do you throb and tremble, nor pay obeisance by prostrating before 
Him, nor place your head on His flowery Feet. You do not wander from street to street, crying
out in search of Him. Verily I know not what to do (in order to achieve salvation)

கு-ரை: நெஞ்சு, அறிவினைக் குறித்து நின்றது. அறிவின் துணைகொண்டே நற்செயல்கள் நிகழ்கின்றன.
அவற்றிற்கு அது தூண்டித் துணை செய்யாவிடத்துப் பயனிலை என்றவாறு. அறிவு, இறைவனையே நாடி
நிற்றலை வற்புறுத்தினார். உலகியல் பற்றற்ற விடத்தே, அறிவு இறைவனைச் சென்று பற்றாது
பிணம்போற் கிடத்தல் தவறு என்பது கருத்து.

32.     அறிவி லாத வெனைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமே 
    னெறியெ லாம்புல மாக்கிய வெந்தையைப் பந்தனை யறுப்பானைப் 
    பிறிவி லாதவின் னருள்கள் பெற்றிருந்து மாறாடுதி பிணநெஞ்சே 
    கிறியெ லாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்னைக் கெடுமாறே

    அறிவு இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மேல் 
    நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப், பந்தனை அறுப்பானைப் 
    பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி; பிண நெஞ்சே !
    கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.

    aRivu ilaatha enaippukunthu aaNdukoNdu aRivathai aruLimeel 
    neRielaam pulam aakkiya enthaiyai panthanai aRuppaanai 
    piRivu ilaatha inaruLkaL peRRirunthum maaRaaduthi piNanenjsee 
    kiRi elaam mika kiizppaduththaay keduththaay ennai kedumaaRee        

பொ-ரை: இறைவனை அறியும் ஞானமில்லாத என்னை, வலிய வந்து தடுத்தாட் கொண்டான். 
இறைவன் தன்னை அறியும் ஞானத்தையும் வழங்கினான். வீட்டுவழி முழுதும் அறிவித்த என்
அப்பன் பிறவித் தளையைத் தொலைப்பவன். அவனைப் பிரியாதிருக்க ஏதுவான 
அருட்செயல்கள் என் பொருட்டுச் செய்யப் பெற்றும், அவனைப் பிரியாமைக்கு மாறாக 
இயங்குகிறாயே, சவம் போன்ற மனமே! உன் மாறுபாட்டால் பொய்கள் மிகுதிப்பட 
என்னைத் தாழ்த்திவிட்டாய். யான் கெட்டுப் போகும் வழியாகக் கெடுதிகளைச் செய்தனை.

    Eh, wretch of my mind! How come, you revel in many antiques, despite the fact that I
have received gifts of grace from my Sire, Lord Civa, who erased all bonds that I had acquired. 
The many gifts that lit me up the right path. He that taught me in Grace, all that is to be learnt.
Although I am a witless one, He came over and took me as His own. And yet, oh faltering mind, 
you ignored all this. Pulling me down this way. You ruined me, oh wretch, so that I now just lie
here in desperation. What great mischief, this! 

கு-ரை: மெய்ந்நெறி நில்லாது, பொய் வழிபுகின், பாசத் தொடர்பு மீளும். அதனால் உய்தி கூடாமையாகிய
கேடும் இழிவும் உளவாம் என்பது குறித்தவாறு. கிறி = பொய்; மாறாடுதி = தடுமாறுகிறாய்; 
கெடுத்தாய்=காரியக் கேடு விளைத்தாய்.

33.     மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையெம் மதியிலி மடநெஞ்சே 
    தேறு கின்றில மினியுனைச் சிக்கெனச் சிவனவன் றிரடோண்மே 
    னீறு நின்றது கண்டனை யாயினு நெக்கிலை யிக்காயங் 
    கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே

    மாறி நின்று எனைக் கெடக்  கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே!
    தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கெனச் சிவன் - அவன் திரள் தோள் மேல் 
    நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம் 
    கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு-இது; கேட்கவும் கில்லேனே.

    maaRi ninRu enaikkeda kidanthanaiyai em mathi ili mada nenjsee        
    theeRu kinRilam iniunai sikkena sivanavan thiraL thooL meel 
    neeRu ninRathu kaNdanai aayinum nekkilai ikkaayam
    kiiRu kinRilai keduvathu un parisu ithu keedkavum killeenee        (correction: kedkavum / keedkavum)

பொ-ரை: எம் அறிவிலாத மூட மனமே! என்னைப் பகைத்து நின்று யான் கெடும்படியாகக்
கிடந்தாய். இனிமேல் திட்டமாக உன்னை நம்ப மாட்டோம். தூய முதல்வனது திரட்சிமிக்க
தோள்களின் மேலே திருநீற்றுக்குறி நிலையாக இருந்ததை நீ பார்த்த போதும் உணர்வு
கனிவடைந்து உருகவில்லை. கெட்டொழிவதே உன் தன்மை. இதைக் கேட்கவும் நான்
பொறுக்க மாட்டேன். 

    Eh, witless mind, you turned hostile and stayed on to ruin me. Henceforth I Will not take
note of you. For, although you had seen the white ash on the shoulders of Lord Civa, you did not
melt away in ecstasy, nor let this physical frame strain and fall apart! This way leads you but to
a disastrous end. I shudder even to hear of such a state.

கு-ரை; யான் கூறும் அறிவுரையை ஏற்கமாட்டாய், ஆதலால் எம் மதியிலி. இயற்கையன்பும் 
அறிவுமில்லாதாய், ஆதலால், 'மடநெஞ்சே' என்றார் என்க. கெட=கெடுக்க. கிடந்தாலனையை
கிடந்தனையை எனத் தொக்கு நின்றது. தேறுகின்றிலம் = தெளிகின்றிலம் = நம்புகின்றிலம்,  சிக்கென=
 உறுதியாக, திட்டமாக, கீறுதல் = கிழித்தல், வகிர்தல். பரிசு= தன்மை. கில், ஆற்றல் உணர்த்தும் சொல்.

34.     கிற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை 
    விற்றெ லாமிக வாள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத 
    முற்றி லாவிளந் தளிர்பிரிந் திருந்துநீ யுண்டன வெல்லாமுன் 
    னற்ற வாறுநின் னறிவுநின் பெருமையு மளவறுக் கில்லேனே

    கிற்றவா மனமே! கெடுவாய்; உடையான் அடி-நாயேனை 
    விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம் 
    முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து, நீ உண்டன எல்லாம் முன் 
    அற்ற ஆறும், நின் அறிவும், நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.

    kiRRavaa manamee keduvaay udaiyaan adi naayeenai
    viRRu elaam mika aaLvathaRku uriyavan viraimalar thirupaatham 
    muRRilaa iLam thaLir pirinthirunthu nii uNdana ellaam mun 
    aRRavaaRum nin aRivum nin perumaiyum aLavaRu killeenee

பொ-ரை. இறைவனது மணம் பொருந்திய திருவடிக் கமலங்கள், முதிராத இளம் தளிர்போல் 
உள்ளன. அடிமையான நாய் போன்ற நான் பிரிந்திருந்தாலும் என் உடல், பொருள், ஆவி 
மூன்றும் கொண்டு என்னை முழுவதும் விலைப்படுத்தியாவது சிறப்பாக ஆளும் உரிமை 
உடையவன். ஆயினும் உலகப் பாசங்களில் செல்வதில் ஆற்றல் கெடாத நெஞ்சமே! நீ 
கெட்டு ஒழிதல் திண்ணம். நீ முன் நிகழ்ந்தன எல்லாம் கெட்டொழிந்த விதத்தையும், உன் 
அற்ப அறிவையும், உன் போலிப் பெருமையையும் அளந்தறியும் ஆற்றல் இல்லாதவன் நான்.

    Perish thee, oh my mind that is ever drawn towards worldly life. You did go away from 
fragrant feet of our Lord who has every right to hold sway over me! You went away from His
feet that resemble tender leaves shooting apart! Eh, how shall I gauge this strange irony, when 
all your past evil was extinguished by Him and yet you run away from Him! Great indeed is 
your wisdom and glory, that is (laughable) beyond measure!

கு-ரை: இறைவன், தன் பெருங்கருணையால், என்னை எவ்வாறாயினும் ஆட்கொள்வான். ஆனால், நீ
அருள்பெற்ற போதே, உலகப் பற்று ஒழிந்தனை என எண்ணுதற்கு இடமில்லாமையின், உன் பற்று அற்றதா 
இல்லையா என்பதையும், உன்செருக்குச் செயலையும் அளந்தறியக் கூடவில்லை. ஏனெனில், நீ இன்னும்,
உலகப்பற்றில் செல்லும் ஆற்றல் கெடாதிருக்கின்றாய் என்றவாறாம். கில் = ஆற்றல், தவா = கெடா.
'கெடுவாய்' என்பது, அட பாவி, என்பதுபோல வியப்புக் குறிப்பு. பற்றியதை விடாது பற்றுமனவியல்பு
குறித்தவாறாம். 

35.     அளவ றுப்பதற் கரியவ னிமையவர்க் கடியவர்க் கெளியானங் 
    களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும் 
    உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்தது மிலைநெஞ்சே
    பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே

    அளவு அறுப்பதற்கு அரியவன், இமையவர்க்கு; அடியவர்க்கு எளியான்; நம் 
    களவு அறுத்து நின்று ஆண்டமை, கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும் 
    உள கறுத்து, உனை நினைந்து, உளம் பெரும்களன் செய்ததும் இலை; நெஞ்சே !
    பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை-பரகதி புகுவானே.

    aLavu aRuppathaRku ariyavan imaiyavarkku adiyavarkku eLiyaan nam 
    kaLavu aRuththu ninRu aaNdamai karuththinuL kasinthu uNarn thiruntheeyum 
    uLa kaRuththu unai ninainthu uLam perungkaLan seythathum ilai nenjsee
    paLaku aRuththu udaiyaan kazal paNinthilai parakathi pukuvaanee

பொ-ரை: விண்ணோராலும் அளந்து முடிவு செய்ய இயலாத பெருமையனாகிய இறைவன்
அடியவர்க்கு எளிதில் அருள்பவன். அவன் நம் வஞ்சப் பிறவியை ஒழித்து, ஆட்கொண்ட
தன்மையை உருகி உணர்ந்திருந்த போதிலும், வீடு அடைதற்கு, உள்ளத்து உள்ளனவாகிய 
காமம் முதலிய ஆறுபகைகளையும் கோபித்துத் தள்ளி, மனமே, உன் தகுதியை எண்ணி
உள்ளத்தைச் சிவபெருமான் தங்குதற்குரிய பெரிய இடமாகச் செய்தாயில்லை. குற்றங்களை
நீக்கி இறைவன் திருவடியை வணங்கினாயுமில்லை; என்னே உன் இயல்பு!

    Though the gods of the sky are unable to gauge His size, He is easy to approach for his
devotees. Destroying all our falsehood, He stands out as our Lord. Knowing all this, Oh mind
you did not discard your foibles and build for him a worthy abode. Nor did you bow before Him
and land Him with a view to gaining access to the haven of eternity.

கு-ரை: களவு= வஞ்சம் 'பிறவிக்கு ஆகுபெயர்';  உள = உள்ள பற்றுக்கள். கறுத்து= கோபித்து , வெறுத்து;
களன்= இடம். பளகு= குற்றம்.

36.     புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்
    குகுவதாவது மெந்தையெம் பிரானென்னை யாண்டவன் கழற்கன்பு 
    நெகுவ தாவது நித்தலு மமுதொடு தேனொடு பால்கட்டி
    மிகுவ தாவது மின்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே

    புகுவது ஆவதும், போதரவு இல்லதும் பொன் நகர் புகப் போதற்கு
    உகுவது ஆவதும், எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு
    நெகுவது ஆவதும், நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி 
    மிகுவது ஆவதும், இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?

    pukuvathu aavathum, pootharavu illathum ponnakar pukappoothaRku 
    ukuvathu aavathum enthai empiraan ennai  aaNdavan kazaRku anpu 
    nekuvathu aavathum niththalum amuthodu theenodu, paalkaddi         
    mikuvathu aavathum inRu enin maRRu ithaRku en seykeen vinaiyeenee

பொ-ரை: சென்று அடைதற்குரியவன் நிறைந்திருக்கும் இடமும் அடைந்தார் மீளுதல்
இல்லாததும், பொன்னகரம் ஆகிய வீடாகும். அதனுள் செல்லுதற்குப் பற்று ஒழிவதும்
எங்கள் அப்பனும் தலைவனுமாய் என்னை ஆட்கொண்டவனுடைய திருவடிக்கு
அன்பினால் நெஞ்சம் உருகுதலும், நாள்தொறும் அமுதம், தேன், பால், கல்கண்டு இவற்றை
விட அதிகமாகப் பேரின்ப உணர்ச்சி சிறப்பதும் இல்லையெனில், தீவினையுடையேன்
இவ்விடையூற்றை நீக்க யாது செய்ய வல்லேன்?

    Alas! what can this sin ridden me do, if I am not to receive the boon of getting past the
golden gates of heaven! The gates that allow only entry and bar all return! If I cannot melt for 
the love of His Feet, He that is Father and Lord that drew me to Him, if I am not to get daily, the 
bliss of heavenly ambrosia that far exceeds in sweetness all milk and honey, if I am not to get 
these boons for me, what shall I do, alas, what pity! 

Note: "Gates of no return" c.f. Swatesvadara Upanishad "Na cha punaravarthathe" - மீட்டிங்கு வாரா நெறி

கு-ரை: பொன்னகர், மாறுபாடில்லாத வீட்டிற்கு உருவகம். உகுதல் = கழலுதல், நெகுதல் = உருகுதல், 
கட்டியினுமிகுவது = பேரின்பம், ஆவதும்= உணர்ச்சி சிறப்பதும், நாள்தோறும் என்றது நாளுக்கு நாள்
பக்குவ மிக வேண்டும் என்று குறித்தவாறாம்.

37.     வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத்
    தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே 
    முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் றலைகீறே 
    னினையன் பாவனை யிரும்புகன் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 

    வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத் 
    தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று ; மற்று அதனாலே
    முனைவன் பாத நல்-மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன் 
    இனையன் பாவனை, இரும்பு: கல், மனம், செவி, இன்னது என்று அறியேனே

    vinai enpool udaiyaar piRar aar udai yaan adi naayeenai 
    thinaiyin paakamum piRivathu thirukkuRippu anRu maRRu athanaalee 
    munaivan paatha nalmalar pirinthirunthum naan muddileen thalai kiiReen 
    inaiyan paavanai irumpu kalmanam sevi innathu enRu aRiyeenee

பொ-ரை: என்னைப் போன்று தீவினைப் பயனுடையவர் யார் ? என் முதல்வனுக்கு 
அடிமையாகிய நாய் போன்ற என்னைப் பிரியும் திருவுளக் குறிப்பு சிறிதுமில்லை .
தினையளவு கூட இல்லை. ஆகவே பிரிந்து இருத்தல் என் தவறே!  முன்னவனுடைய நல்ல
திருத்தாள்களைப் பிரிந்திருந்தும், நான் தலையை மோதவும், பிளக்கவும் மாட்டேன்.
இத்தகைய எனது எண்ணம் இரும்பாலானது. மனம் கல்போன்றது. செவி இன்னதால்
ஆயிற்று என்று அறிய மாட்டேன்.

    Who else can there be in this world that carries such loads of sin as I ? I know it is not in
His traits to desert this lowly cur even for a moment. For having been away from the sacred
flowery Feet of our primordial Lord Civa, I should have hit myself hard, and torn my head apart
(as punishment). And yet, I did nothing of that sort! Alas, what pity! Hence, my nature is very
like that of a stone. As for my ears, I do not know how to criticise it!

கு-ரை: உயிர்விடாது, உடம்போடு நிலைத்திருத்தல், பிராரத்த வினைப்பயன்  என்று குறித்தனர்.
இறைவன், தகுதியிருப்பின், உடனே வீடளிக்க விருப்பமுடையன் என்ற கருத்துப்பற்றிப் 'பிரிவது
திருக்குறிப்பன்று' என்றார். பாவனை, புத்தியின் பகுதி.  மனம், அதனின் வேறு.  எண்ணம் முத்தியை
நாடவேண்டும். மனம், உலகப்பற்று ஒழித்தல் வேண்டும். செவி, இறைவன் அறிவுரையையே பற்றி
நெஞ்சத்தை ஊக்கவேண்டும். அவற்றை அவை செய்யாமையின், பழிப்புக்கு உரியவாயின போலும்.

38.     ஏனை யாவரு மெய்திட லுற்றுமற் றின்னதென் றறியாத 
    தேனை யானெயைக் கரும்பினின் றேறலைச் சிவனையென் சிவலோகக்
    கோனை மானன நோக்கிதன் கூறனைக் குறுகிலே னெடுங்கால
    மூனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே

    ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத 
    தேனை, ஆன் நெயைக், கரும்பின் இன் தேறலைச், சிவனை, என் சிவலோகக் 
    கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன்; நெடும் காலம் 
    ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.

    eenai yaavarum eythidal uRRu maRRu innathu enRu aRiyaatha
    theenai aanneyai karumpin intheeRalai sivanai en sivalooka          
    koonai maan ana nookki than kuuRanai kuRukileen nedungkaalam 
    uunai yaan irunthu ompukinReen kedu veen uyir ooyaathee.        

பொ-ரை: அன்பரல்லாத பிறர் இறைவனை அடைய முயன்றும் இத்தன்மையினன் என்று
அறியப்படாத தேன் போல்பவன், பசு நெய் போல்பவன்; கருப்பஞ்சாற்றின் தெளிவு  போல்பவன்;
என் சிவலோக மன்னன். மானின் பார்வையொத்த அம்மையை  ஒரு பாகம் 
உடையவன். அவனை நீண்டகாலமாக நான் அடைந்திலேன். யான் இவ்வுலகில் தங்கி
தசையாலாகிய இந்த உடம்பினைப் பாதுகாத்து இருக்கிறேன். கெட்டொழிகின்றேன். 
என் பிராணன் ஒடுங்காதோ?

    All other devotees merged into the Lord (while in Perunthurai), whereas I could not reach
Him for a very long time; Him, who is very like inscrutable honey, like the ghee of that cow and 
like nectar of sugarcane. Lord Civa, Chief of the saivite world (Civa Loka), Consort of the
goddess with deer-like eyes! I am here merely pampering my body of flesh. I waste away and 
perish, with all my breath extinguished.

கு-ரை: சிவஞானம் பெறாது, முதல்வனை அறியக் கூடாமையின், 'இன்னதென்றறியாத' என்றார்.
விழைவிற்கு இன்பம் தருவதால் தேன், அறிவிற்கு இன்பம் தருவதால் ஆன் நெய், செயலுக்கு இன்பம்
தருவதால் 'கரும்பின் தெளிவு' என்றார். உயிர்= பிராணன், அன= அன்ன என்பதன் குறுக்கம்.

39.     ஓய்வி லாதன வுவமனி லிறந்தன வொண்மலர்த் தாடந்து 
    நாயி லாகிய குலத்தினுங் கடைப்படுமென்னை நன்னெறி காட்டித் 
    தாயி லாகிய வின்னருள் புரிந்தவென் றலைவனை நனிகாணேன் 
    தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே

    ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள்-மலர்த் தாள் தந்து 
    நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை , நல்-நெறி காட்டித்
    தாயில் ஆகிய இன்-அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன் ;
    தீயில் வீழ்கிலேன் : திண் வரை உருள்கிலேன்; செழும் கடல் புகுவேனே?

    ooyvu ilaathana uvamanil iRanthana oNmalar thaaL thanthu 
    naayil aakiya kulaththinum kadaippadum ennai nanneRi kaaddi 
    thaayil aakiya in aruL purintha en thalaivanai nanikaaNeen
    thiiyil viizkileen thiNvarai uruLkileen sezungkadal pukuveenee        

பொ-ரை: அழிவற்றனவாய், உவமிக்கப்படும் பொருள் யாவும் கடந்தனவாய் இருக்கின்ற
ஒளிமிக்க திருவடிக்கமலங்களைக் காட்டி அருளி, நாயெனும் படைப்பு வகையினும் 
கீழ்ப்பட்ட எனக்கு நல்ல முத்தி நெறியைக் காண்பித்துத் தாய் போலும் இரக்கம் காட்டி 
இன்னருள் புரிந்த எனது நாதனை நன்கு தரிசிக்கப் பெற்றேன். அவன் பிரிவினைக் கண்டு
நெருப்பிலும் விழமாட்டேன்; மலையிலும் உருண்டு விழமாட்டேன். வளமிக்க கடலிலும்
பாய்வனோ? அதுவும் செய்ய மாட்டேன்.

     Eternal and beyond compare are His bright flowery Feet so rare. He is in His grace,
revealed to me, me, this lowly cur, the right path to salvation, much like a mother offering solace
(to her child). Such is my chief. Since, I am not able to see Him (now), why do I not (in 
desperation), scorch myself in fire, or roll down the hill. Perhaps I will be drowned and lost in
the deep waters of the sea.

கு-ரை: ஓய்வு = ஒழிவு ,அழிவு. உவமன் = உவமை. குலம் = படைப்பு விசேடம். விசுவாசத்தில் நாயினும்
கீழெனக் குறிப்பார், நாயினுங் கடைப்படுமென்றார். ஆட்கொண்டபோது கண்டு, பின், காணாமையால்
'நனிகாணேன்' என்றார்.

40.     வேனில் வேள் கணை கிழித்திட மதிசுடு மதுதனை நினையாதே 
    மானி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் 
    தேனி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகே 
    னூனிலாவியை யோம்புதற் பொருட்டினு முண்டுடுத் திருந்தேனே.

    வேனில்-வேள் கணை கிழித்திட, மதி சுடும் அது-தனை நினையாதே 
    மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகித் 
    தேன் நிலாவிய திரு அருள் புரிந்த, என்சிவன்-நகர் புகப் போகேன்;
     ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு,  இனும் உண்டு உடுத்து இருந்தேனே

    veenil veeL kaNai kiziththida mathisudum athu thanai ninaiyaathee 
    maan nilaaviya nookkiyar padiRu idai maththu idu thayiraaki 
    theen nilaaviya thiruaruL purintha en sivan nakar pukappookeen 
    uunil aaviyai oomputhal poruddinum uNdu uduththu iruntheenee

பொ-ரை: தேன் போலும் இனிமை நிலைக்கப் பெற்ற திருவருள் நல்கிய என் இன்பனின் வீட்டு 
நகரத்தையடையச் செல்லமாட்டேன். மான் போலும் பார்வையுடைய மாதர் வஞ்சனையால்
மத்தில் அகப்பட்ட தயிர் போலக் கலங்கினேன்.  இளவேனிற் காமனுடைய அம்பு
நெஞ்சைப் பிளந்து உடம்பைச் சுடும். அக்கெடுதியை நினையாது உடலில் உயிரை வைத்துக்
காக்க உணவுண்டு, உடையுடுத்து வாழ்ந்திருந்தேன். என்னே என் அறியாமை?

    Not relishing the fact that the mind will get lost, pierced by Cupid's arrows,I become like 
the curd churned by the agitating rod, driven towards damsels of deer like eyes. I do not go
forward to enter the city of Lord Civa who bestowed honeyed bliss on me. I merely stay here,
eating and clothing afresh, in order to preserve my life in body. What pity!

                THIRUCHCHITRAMBALAM


5.5 கைம்மாறு கொடுத்தல்                5.5. KAIMMAARU KODUTHTHAL


       கலிவிருத்தம்                    What return to render to thee
            திருச்சிற்றம்பலம்
 

41.     இருகை யானையை யொத்திருந் தென்னுளக் 
    கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே 
    வருக வென்று பணித்தனை வானுளோர்க் 
    கொருவ னேகிற்றி லேன்கிற்ப னுண்ணவே

    இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக் 
    கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே ;
    'வருக' என்று பணித்தனை: வான் உளோர்க்கு 
    ஒருவனே! கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

    iru kai yaanaiyai oththirunthu en uLa
    karuvai yaan kaNdileen kaNdathu evvamee
    varuka enRu paNiththanai vaan uLoorkku
    oruvanee kiRRileen kiRpan uNNavee

பொ-ரை: விண்ணவர்க்கெல்லாம் தலைவனாகிய ஒருவனே! பெரிய துதிக்கையுடைய 
யானையைப் போன்று இருக்கிறேன். என்னுடைய உள்ளத்தின் மூலத்தை அடியேன் 
காணாதிருந்தேன். யான் கண்டு அனுபவித்தது எல்லாம் துன்பமே. அங்ஙனம் ஆயினும் நீ 
என்னை 'வா' என்று கட்டளை இட்டு அருளினை. நீ தரும் இன்பத்தை நுகர வல்லேன் 
அல்லேன். துன்பத்தையே நுகர வல்லேன்.

    I am verily a glutton, much like a (strange) pachyderm with a double trunk! I do not see
the glittering germ that resideth in my mind but see only utter misery around. Yet, Thou called
out to me, asking me to come over unto Thee! Oh Thou, that standeth without any parallel 
among heaven dwellers! I stay here, merely for eating, (and am not oriented towards Thee).
(What return for Thy grace, this, indeed!)

கு-ரை: இருகை என்பது அறிவு, செயல் என்ற இரண்டையும் குறிக்கும். இருகை= இருங்கை = பெரிய 
துதிக்கை என்று பொருள் கொள்வாரும் உளர். யானை, மதத்தால், தன்னையும் பிறரையும் அறியாமை 
போலச் செருக்கினால், என்னை மாத்திரமின்றி உன்னையும் அறியாது இருந்தேன். 'உள்ளக்கரு'
என்பதற்கு உயிர்க்கு உயிர் எனவும் பொருள் கொள்ளலாம். உயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய
முதல்வன் என்பது கருத்து. மனம் முதலிய கருவிகள் தோன்றுதற்குக் காரணமானவனும் அவனே. கரு
என்பதற்குக் காரணம் என்றும், நடு என்றும் பொருள் உண்டு. நடு என்பது அந்தரியாமித்துவம் குறிக்கும்
எனக் கொண்டு, 'உளக்கருவை' என்பதற்கு உள்ளத்திற்கு உள்ளீடாய்க் கலந்திருப்பதை என்று  பொருள்
கொள்ளுவதும் உண்டு. துதிக்கையால் தடவி அறிதல், யானையின் தொழில் போலும். இறைவனுடைய
தன்மை, அறிவிலும் செயலிலும் புலனாவது. அதனைக் காணாமைக்குக் காரணம் செருக்கே  என்பது
கருத்து. நீ தரும் இன்பத்தை உண்ணவே கிற்றிலேன், (எவ்வத்தை) உண்ணவே கிற்பேன், என்று
பிரித்துக் கூட்டுக. அல்லது, வருக கிற்றிலேன், உலகத் துன்பத்தை உண்ணவே கிற்பேன் என்று
உரைநடை கோடலும் உண்டு. 

42.     உண்டொ ரொண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
    பெண்டி ராணலி யென்றறி யொண்கிலை 
    தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் 
    கண்டுங் கண்டிலே னென்னகண் மாயமே

    'உண்டு ஒர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம் 
    பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை 
    தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் ;
    கண்டும் கண்டிலேன்; என்ன கண் மாயமே!

    uNdu or oNporuL enRu uNarvaarkku elaam         
    peNdir aaN ali enRu aRi oNkilai
    thoNdaneeRku uLLavaa vanthu thoonRinaay     
    kaNdum kaNdileen enna kaN maayamee

பொ-ரை: உலகிற்கு முதல்வனாகிய ஓர் அறிவொளிப் பெரும் பொருள் உண்டென்று
உணர்ந்து அன்பர் உன்னை நாடுவர். நீ பெண்ணோ , ஆணோ, அலியோ என்று உறுதியாக
அறிய முடியாமல் இருக்கின்றனர். ஆனால் அடியேனுக்கு நீ உண்மையாக இருக்கிறவாறே
தானே வந்து காட்சி கொடுத்தாய். உன் திருவருட் காட்சி பெற்றும் உன்னை அனுபவிக்கப்
பெற்றிலேன். இது என்ன கண் மயக்காக உள்ளது?

    Even for those that are aware of there being an effulgent one, it is not posssible to know
Thee. Yet, Thou camest in front of me- me, Thy devoted vassal, and clearly revealed Thee.
Having thus seen Thy grace light (before), alas!, I do not now see Thee. 
What elusive magical plight.!

கு-ரை: இறைவன் தானே வந்து தன்னியல்பு உணர்த்தும்வரை, அவன் மெய்த் தன்மை உயிர்கள் தாமே 
அறியும் தரத்தன அல்ல என்றனர். அருள் ஆசிரியனாய் வந்த இறைவனோடு உடன் செல்லாமை பற்றிக்
'கண்டிலேன்' என்றார். மாயம்= தந்திரம், வியப்பு, மயக்கம். உள்ளவா= உள்ள முறை.

43.     மேலை வானவ ரும்மறி யாததோர் 
    கோல மேயெனை யாட்கொண்ட கூத்தனே 
    ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் 
    கால மேயுனை யென்றுகொல் காண்பதே

    மேலை வானவரும் அறியாதது ஓர் 
    கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே
    ஞாலமே, விசும்பே, இவை வந்து போம் 
    காலமே !-உனை என்று-கொல் காண்பதே?

    meelai vaanavarum aRiyaathathu oor 
    koolamee, enai aadkoNda kuuththanee 
    njaalamee visumpee ivai vanthu poom 
    kaalamee unai enRu kol kaaNpathee.

பொ-ரை: மேலான பதவிகளிலுள்ள வானவரும் அறியக் கூடாத ஒப்பற்ற திருவுருவனே!
அடியேனை ஆட்கொண்ட வியத்தகு செயலுடையானே ! நில உலகானவனே !
வானானவனே! மண்ணும்-விண்ணுமாய் இவைகள் தோன்றி ஒடுங்குதலை வரையறுத்து 
நிற்கும் கால தத்துவம் ஆனவனே! உன்னை எந்த நாள் இனி நான் காணக் கூடும்?

    Oh Thou, of a form that is beyond the wits of sky borne gods, Oh Lord of the cosmic 
dance, that took me under Thy care! Thou art verily the earth and the sky, and art the evolute 
time, into which all things come and merge (appear and disappear). I long for the day when I 
would have the chance to see Thee (again)!

Note: Our Saint often refers to the fact that the Lord manifests Himself through the evolutes, the
earth, the sky, etc.

கு-ரை: மேலை = மேலாகிய இடத்திலுள்ள, இறைவன் ஆசிரிய வடிவம் கொண்டு நல்கானாயின், வானவர் 
அவன் மெய்த்தன்மை அறியார், ஆதலிற் 'கோலமே' என்றார். தன்னை ஆட்கொண்டது ஒரு வினோதம் 
என்பார் 'கூத்தனே' என்றார். 'ஞாலமே, விசும்பே', என்பதில் படைப்புப் பொருள் அனைத்தும் அடங்கும்.
கால முதலிய தத்துவங்கள் இறைவன் திருமேனி ஆதலின், அவையாய் அவன் இருப்பதாகக் குறித்தார்.

44.     காண லாம்பர மேகட் கிறந்ததோர் 
    வாணி லாப்பொரு ளேயிங்கோர் பார்ப்பெனப்
    பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் 
    பூணு மாறறி யேன்புலன் போற்றியே

    காணல் ஆம் பரமே, கட்டு இறந்தது ஓர் 
    வாள் நிலாப் பொருளே, இங்கு, ஓர் பார்ப்பு எனப் 
    பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்
    பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.

    kaaNalaam paramee kadku iRanthathu oor 
    vaannilaa poruLee ingku oor paarppu ena 
    paaNaneen padiRRu aakkaiyai viddu unai    
    puuNumaaRu aRiyeen pulan pooRRiyee

பொ-ரை: அடியார் காணும்படியான திரு உருவம் காட்டும் மேலான தன்மையனே! ஊனக்
கண்ணால் அன்றி ஞானக் கண்ணாலே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ ! பறவைக் குஞ்சு
கூட்டை விட்டுப் பறக்கமுடியாது இருப்பது போன்று, பாழாய்ப் போன நான் பொய்யுடலை
விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். 
 ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே இதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து
போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!

    Oh Lord of the universe, manifest before me in visible form of effulgent one! I know not
the path towards Thee, leaving behind this faulty physical frame, much like the young one of a 
bird which cannot fly out of its nest.

கு-ரை: பரம் = மேன்மை வாள் = ஒளி, அறிவு.  பார்ப்பு = குஞ்சு குட்டியெனப் பொருள்  கொண்டு
குரங்குக்குட்டி தன் தாயைப் பற்றுவதுபோல உன்னை விடாதுபற்ற அறியேன் என்றார் என்பாரும் உளர்.
'புலன்போற்றியே' என்பதற்கு ஐம்புல அவாவினை மேற்கொண்டு எனவும் கொள்ளலாம். 
பாணன்=பாழ்நன். வாழ்நன், வாணன் என்றாயினாற் போல.

45.     போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்துநின் 
    றாற்றன் மிக்கவன் பாலழைக் கின்றிலே 
    னேற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் 
    கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே

    'போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று 
    ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
    ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும் 
    கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே.

    pooRRi enRum puraNdum pukaznthu ninRu 
    aaRRal mikka anpaal azai kinRileen 
    eeRRu vanthu ethir thaamarai thaaL uRum
    kuuRRam annathu or koLkaien koLkaiyee        

பொ-ரை: காத்தருள்க என்று நினைந்தும், நிலத்தே புரண்டு வலம் வந்தும், நின் புகழ் பாடியும்
செய்யக் கடவதாகிய உனது திருத்தொண்டிலே நிலைபெற்று, திண்மை மிகுந்த பேரன்பால் 
உன்னைக் கூவுகின்றேனில்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை
எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடி அடைந்தான். என்னுடைய போக்கும்
அத்தகையதாய் இருக்கும்.

    I do not call out to Thee in intense dedication, nor in ecstasy roll down on the ground,
singing on Thy glorious Feet with shouts of joy. Well doth my attitude therefore, resemble that 
of Yama, the Lord of death, who was put to death when he confronted against Civa's devotee
Maarkandeya, but later came back to life by the grace of Lord Civan Himself (What 
Maanikkavaachakar means is that he is as dead in soul as Yama was, but, by the grace of Civan's
holy Feet, he will be restored to become His sincere devotee).

கு-ரை: எதிர் - மாறு, பகை, நீயே வந்து யமனை உதைத்துத் திருத்திக் கொண்டது போலத் 
திருத்தப் பெறுவதே என்னியல்புக்கு ஒத்ததாம். அயரா அன்பு செலுத்த கில்லேன் என்றார்.

46.     கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி
    கள்ளும் வண்டு மறாமலர்க் கொன்றையா
    னள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளு 
    மெள்ளு மெண்ணெயும் போனின்ற வெந்தையே

    கொள்ளுங்-கில், எனை அன்பரில் கூய்ப் பணி 
    கள்ளும், வண்டும். அறா மலர்க் கொன்றையான் ;
    நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும் 
    எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே!

    koLLum kilenai anparil kuuyppaNi 
    kaLLum vaNdum aRaamalar konRaiyaan
    naLLum kiizuLum meeluLum yaavuLum
    eLLum eNNeyum poolninRa enthaiyee

பொ-ரை; தேனும் வண்டும் நீங்காத கொன்றைப் பூவினையுடையான் சிவபெருமான். அவன் 
எப்பொருளினுள்ளும் நடுவிலும், கீழும் மேலுமாய் எப்பக்கத்தும் எள்ளில் எண்ணெய் போல்
வியாபித்து நின்றவனாகிய எம் அப்பன், அவனது மெய்யன்பர் போல என்னையும் வலிய
அழைத்துப் பணி கொள்ளும் ஆற்றலுடையவன்.

    How I wish that He calls me into service as He did in the case of other devotees! He
wearing Konrai (Cassia) flowers ever full of honey and bees. He, our Sire, that is immanent in all
things above, things in the middle and things below, merged together like sesame and its oil!

கு-ரை: பேரின்பமும் இன்பத்தை நாடும் உயிரும் தன்னை விட்டகலாத ஞால முதல்வன், எங்கும் நிறைந்து
எல்லாம் வல்லவன் ஆதலாலே, தகுதியற்ற என்னையும் பணிகொள்ள வல்லவன் என்றவாறு.
கொள்ளுங்கில்= கொள்ள வல்லவன்.

47.     எந்தை யாயெம் பிரான்மற்று மியாவர்க்கும் 
    தந்தை தாய்தம் பிரான்றனக் கஃதிலான் 
    முந்தி யென்னுள் புகுந்தனன் யாவரும்
    சிந்தை யாலு மறிவருஞ் செல்வனே

    எந்தை, ஆய், எம்பிரான் மற்றும் யாவர்க்கும் 
    தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;
    முந்தி என்னுள் புகுந்தனன்-யாவரும் 
    சிந்தையாலும் அறிவு-அரும் செல்வனே

    enthaiyaay empiraan maRRum yaavarkkum 
    thanthai thaay thampiraan thanakku aqthu ilaan
    munthi ennuL pukunthanan yaavarum
    sinthai yaalum aRivu arum selvanee

பொ-ரை: எங்கள் அப்பனாகவும் அன்னையாகவும் இருக்கும் எம் தலைவன் பிற 
எல்லோருக்குமே தாயும் தந்தையும் ஆனவன். தலைவனும் ஆனவன். தனக்குத் தாய்
தந்தையும் மேலோனும் இல்லாதவன். சொல்லாலன்றி மனத்தாலும் யாவரும் அறிதற்கரிய
முத்திப் பெருஞ்செல்வனாகிய  கடவுள், எனக்குப் பக்குவ காலம் வருமுன்னே என் உள்ளத்தே 
பெருங் கருணையாற் புகுந்தருளினான்.

    Our Lord, Our Father, He that is Father, Mother and Lord for all as for Himself, He has
no such, as Father, Mother or Lord. auspicious Lord, beyond even the thoughts of all! He entered
into me (and is there) since long before.

கு-ரை: ஆய் = தாய். பிரான் = எசமானன் = தலைவன். முந்தி' யென்றதுபோலத் திருக்கோவையாரிலும்
'என்னை முன்னாள் ஆள் உடையான்' என்றது காண்க.

48.     செல்வ நல்குர வின்றிவிண் ணோர்புழுப் 
    புல்வ ரம்பின்றி யார்க்கு மரும்பொரு 
    ளெல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
    கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே

    செல்வம், நல்குரவு இன்றி விண்ணோர், புழுப் 
    புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள் 
    எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன் ;
    கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

    selvam nalkuravu inRi viNNoor puzu 
    pul varampu inRi yaarkkum arumporuL        
    ellai il kazal kaNdum pirinthanan 
    kalvakai manaththeen padda kaddamee

பொ-ரை: சிவபிரான் செல்வம், வறுமை, தேவர், புழு, புல் என்ற வரையறையின்றி
எல்லோருக்குமே அறிதற்கரியவன், யானோ பரம்பொருளின் அளவற்ற திருவடிகளைக் 
காணப்பெற்றும் அவற்றைப் பிரித்திருப்பேனாயினன் . கல்லின் இனத்தைச் சார்ந்த
மனத்தினை உடையேன். நுகரக் கிடந்த துன்பம் எத்தன்மையது பாருங்கள்.

    I had a chance to see His rare and boundless holy Feet (Once before). Feet that are
beyond the high and the low! Beyond celestial folks and lowly ones. A priceless treasure for all.
Despite this (early encounter), alas, I had (perforce) to stay away from Him. I, a stony hearted
fellow- what agony I suffered!

Note: Here we have the saint's biographical note recalling how he was left behind, when all 
other devotees vanished into the light of grace in Perunthurai and merged with the Lord.

கு-ரை: எப்பிறவி எடுப்பினும், எந்நலம் எய்தினும், இறைவனை அடைவது மாத்திரம்  தனியே வேறாக
உள்ளது. எளிதிற் கிட்டத் தக்கதன்று. இறைவனது அகண்ட அறிவும் செயலுமே, 'எல்லையில் கழல்' 
எனப்பட்டன. மனத்தைப் புறத்தே தோன்றும் கல்லின், வேறாய ஒருவகைக் கல்லினாலாயது என்பார்
'கல் வகை மனத்தேன்' என்றார்.

49.     கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ 
    றிட்ட வன்பரொ டியாவருங் காணவே
    பட்டிமண்டப மேற்றினை யேற்றினை
    எட்டி னோடிரண் டும்மறி யேனையே

    கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு 
    இட்ட அன்பரொடு, யாவரும், காணவே 
    பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை -
    எட்டினோடு இரண்டும் அறியேனையே

    kaddu aRuththu enai aaNdu kaNNaara neeRu 
    idda anparodu yaavarum kaaNavee
    paddi maNdapam eeRRinai eeRRinai        
    eddi noodu iraNdum aRiyeenaiyee            

பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீ
என்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவே
நாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய 
சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?

    Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- 
smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thou
didst to me, although I have come to know nothing of the scriptures.

Note: Our Saint had to engage in many a verbal battle with the Buddhists of the time who 
dragged him into debate in public halls, in order to settle the veracity of  several
recondite metaphysical issues. In all these subtle encounters, the Saint came off in flying
colours, as ordained by the Lord (much to the delight of fellow saivites). He was well
versed in the scriptures and the nuances of logic, so necessary for such debates.

கு-ரை: பட்டி = நாய். 'நாய் சிவிகை யேற்றுவித்த' என்றதும் காண்க. திருக்கோத்தும்பி (8) 
பட்டி= கள்வன் என்பாரும் உளர். எட்டு = அ. இரண்டு=உ.  சிலர், அ + உ= ய அதாவது ஆன்மா, ஆன்ம
நிலையறியாதேனை என்றார் என்ப.  இரண்டாவது ஏற்றினை = ஏறூர்ந்தவனே. ஏற்றினை உடையவனே
என்பாரும் உண்டு. 

50.     அறிவ னேயமு தேயடி நாயினே
    னறிவ னாகக்கொண் டோவெனை யாண்டது 
    வறிவி லாமையன் றேகண்ட தாண்டநா 
    ளறிவ னோவல்ல னோவரு ளீசனே.

    அறிவனே! அமுதே! அடி நாயினேன் 
    அறிவன் ஆகக் கொண்டோ , எனை ஆண்டது?
    அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள் ?
    அறிவனோ, அல்லனோ, அருள், ஈசனே!

    aRivanee amuthee adi naayineen 
    aRivanaaka koNdoo enai aaNdathu 
    aRivu ilaamai anRee kaNdathu aaNdanaaL        
    aRivanoo allanoo aruL iisanee.

பொ-ரை: எல்லாம் அறியும் முற்றறிவினனே! சாவா மருந்தே! அடிமையாகிய நாயனையேன்
நினதுரையை அறிய வல்லவன் என்று கருதியோ என்னை ஆட்கொண்டது? ஆண்ட நாள் 
அறிவில்லாமையை அல்லவா என்பால் நீ கண்டது?  இனி உண்மைகள் அறிவேனோ
அறியேனோ, ஆண்டவனே அருள் செய்ய வேண்டும்.

    Lord Omniscient! ambrosial honey! Was it in consideration of my erudition that Thou 
took me in under Thee? Was it not my ignorance only, that Thou saw in me? When thou took me
in, pray tell me Oh Lord, whether I knew or knew not anything about anything. I beseech Thee,
Lord, kindly grant me Thy grace.

Note: The Saint is agreeably surprised to see that the good Lord accepted him inspite of his
      collossal ignorance.

கு-ரை: தனது அறிவின்மையைப் பொறுக்க வேண்டும் என்பார் இவ்வாறு கூறினர்.

                THIRUCHCHITRAMBALAM

5.6 அநுபோக சுத்தி                     5.6 ANUBOHA SUTHTHI

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்            The Untrammeled Inhibition of Civam

                    திருச்சிற்றம்பலம்

51.     ஈச னேயென் னெம்மானே யெந்தை பெருமா னென்பிறவி 
    நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான 
    நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே 
    தேச னேயம் பலவனே செய்வ தொன்று மறியேனே

    ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி 
    நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன 
    நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே ;
    தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

    iisanee en emmaanee enthai perumaan en piRavi
    naasanee naan yaathum onRu allaa pollaa naayaana
    neesaneenai aaNdaaykku ninaikka maaddeen kaNdaayee         
    theesanee ambalavanee seyvathu onRum aRiyeenee

பொ-ரை: அரசனே! என் தலைவனே! எங்கள் அப்பனாகிய பெரியோனே ! எனது
பிறப்பினை ஒழிப்பவனே! நான் யாதானுமொரு சிறு பொருளுக்கும் ஈடாக மாட்டேன். தீய
நாய்த் தன்மையுடைய இழி தகைமை உடையேன். என்னை ஆட்கொண்டருளிய உன்னை
நன்றி உணர்வுடன் எண்ணித் துதிக்க மாட்டேன். அது நீ அறிந்தாயன்றே, ஒளி மேனியனே,
மன்றில் ஆடுவோனே, செய்யத்தக்க ஒன்றையும் அறிகிலேன்.

    Lord, my chief that destroyed my birth cycle! See, how I, a wily worthless cur, think not 
of Thy grace in accepting me. Despite this (this indifference of mine), Thou took me unto Thee,
Oh effulgent one of the public hall of dance! I know not what it is that I can do!

கு-ரை: எம்மான் = தலைவன், ஒவ்வோர் உயிரும் தனிவேறு இயல்புடைமையிற் பிறிது ஒன்றாகாது என்ற
உண்மை கருதற்பாலது. பொல்லா = திருத்தமடைய மாட்டாத; அருள்பெற்ற நிலைக்கேற்றவாறு நடவாது
கீழ்ப்பட்டமை கருதி, 'நீசனேன்' என்றார். நீயே அறிவொளி கொடுத்து வியத்தகு என்னை நல்வழியில்
இயக்கி உய்யக் கொள்ள வேண்டும் என்பார், 'தேசனே அம்பலவனே' என்றார்.

52.     செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் 
    பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா 
    மெய்யர் வெறியார் மலர்ப்பாத மேவக் கண்டுங் கேட்டிருந்தும் 
    பொய்ய னேனா னுண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே

    செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்
     பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா 
    மெய்யர் வெறி-ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும் 
    பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்; போர் ஏறே!

    seyvathu aRiyaa siRunaayeen sempon paatha malar kaaNaa             
    poyyar peRumpeeRu aththanaiyum peRuthaRku uriyeen poyilaa         
    meyyar veRi aar malarppaatham meeva kaNdum keddirunthum 
    poyyaneen naan uNdu uduththu ingku iruppathu aaneen pooreeRee

பொ-ரை: போரில் ஆண் சிங்கத்தை ஒப்பவனே! நிலையாதனவற்றில் பற்றில்லாத உண்மை 
அடியார், தேனூறும் பூப்போன்ற உன் திருவடிகளைப் பொருந்தினமையைப் பார்த்தும்
கேட்டும் இருக்கிறேன். ஆனால் பொய்த் தன்மையில் ஈடுபட்ட யான் இந்நிலவுலகத்தே
வயிறார உணவு கொண்டு, உடை உடுத்தி வாளா வாழ்ந்திருப்பேன் ஆயினன். ஆதலிற் 
செய்யத்தக்கன ஒன்றுமறியாத கீழ்ப்பட்ட நாயனையேன், நினது செவ்விய பொன்னடிக் 
கமலங்களைக் காணப்பெறாத பொய்வழி நிற்பார் அடையக்கூடிய துன்பப் பேறு 
அனைத்தும் அடைதற்குரியவன்.

    This lowly cur (me), that knows not what to do, deserves all the punishment that is justly 
due to all insincere folks who cannot see Thy sacred holy Feet. I had seen and heard of truly 
holy saints merging into Thy fragrant Feet, Oh valiant Lord! Yet, I, full of falsehood, have come
down to stay back here, merely eating and dressing well. 

Note: An autobiographical note on the Saint's first encounter with the Lord of Thirup-Perun-Thurai. 

கு-ரை: அருளாசானோடு வந்த அடியார் அவனடி சேர்ந்தமையைக் குறித்தார். பாசப்பகையைத்
தொலைக்கும் போரில், ஒப்பற்ற கடவுளாதலின், 'போரேறே' என்றார்.

53.     போரே றேநின் பொன்னகர்வாய் நீபோந் தருளி யிருணீக்கி 
    வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள வருள்பெற்ற 
    சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண் கெட்ட 
    ஊரே றாயிங் குழல்வேனோ கொடியே னுயிர்தா னுலவாதே.

    போர் ஏறே! நின் பொன் நகர் வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி, 
    வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற 
    சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட 
    ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர்-தான் உலவாதே!

    pooreeRee nin ponnakarvaay nii poonthu aruLi iruL niikki 
    vaar eeRu iLamen mulaiyaaLoodu udan vanthu aruLa aruL peRRa 
    siireeRu adiyaar ninpaatham seera kaNdum kaNkedda         
    uureeRaay ingku uzalveenoo kodiyeen uyirthaan ulavaathee

பொ-ரை: போரில் ஏறு போன்ற பெருமானே! நீ வீடாகிய உனது அழகிய ஊரிலிருந்தும்
புறப்பட்டருளினாய். கச்சை மிஞ்சிய இளமையும் மென்மையும் உடைய நகிலினளாகிய
திருவருட் சத்தியோடு ஒருங்கு எழுந்தருளினாய். அடியவர் ஆணவ இருளை ஒழித்தருள
உன் திருவருள் பெற்ற சிறப்பு மிகுந்த அன்பர் நினது திருவடியை அடைதலை நேரே
பார்த்திருந்தும் பார்வையற்ற ஊர்மாடு போன்று இவ்வுலகில் திரிவேனோ? தீவினையேனது
ஆயுள் முற்றி ஒழியாதோ?

    Valiant Lord, all Thy worthy devotees merged into Thy Feet, even as Thou camest out,
alongside Thy consort, and blessed them. I had seen this (Thy devotees merging into Thee) and
yet, even after seeing this, am I to slog around here (in vain) and rue like  a blind bull going 
astray? And this, with the life of this wicked me, not withering away!

கு-ரை: திருவருட் சத்தியின் துணைகொண்டே பாச நீக்கம் நிகழுதலின், அம்மையோடு எழுந்தருளினமை
கூறினார். உலப்பிலா கருணையமுதம் உயிர்களுக்கீவான் முற்படும் அருள் அன்னையாதலின் 
'வாரேறிள மென்முலையாள்' என்றார். அகண்ட நிலை நின்று அன்பர்க்கருள் செய்ய உருக்கோடலின்
'பொன்னகர்வாய் போந்தருளி' என்றார். 'உயிர்' என்பது உடலில் நிற்கும் பொழுதைச் சுட்டியது.

54.     உலவாக் காலந் தவமெய்தி யுறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
     பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் 
    மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே யுனைக்காண்பான் 
    அலவா நிற்கு மன்பிலே னென்கொண் டெழுகே னெம்மானே

    உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,
     பல மா முனிவர் நனி வாடப், பாவியேனைப் பணி கொண்டாய் ;
    மல மாக் குரம்பை - இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான் ,
    அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?

    ulavaa kaalam thavam eythi uRuppum veRuththu ingku unaikkaaNpaan 
    palamaa munivar nanivaada paavi yenai paNikoNdaay
    malamaa kurampai ithu maaykka maaddeen maNiyee unaikkaaNpaan 
    alavaa niRkum anpu ileen en koNdu ezukeen emmaanee

பொ-ரை: எங்கள் தலைவனே! அளவில்லாத காலம் நற்றவம் கிடந்து உடம்பை ஒரு 
பொருளாகப் போற்றாது பெரிய முனிவர் பலர் இருக்கிறார்கள். எடுத்த இப்பிறவியிலேயே
உன்னைக் காணும் பொருட்டு அவர்கள் மிகவும் கவலையுற்றுத் தளர, அவர்கட்குப் போய் 
அருள் புரியாது தீவினையேனை ஆட்கொண்டு அருளினாய். அழுக்கு மிகுந்த இவ்வுடலை
அழித்தொழிக்க மாட்டேன். மாணிக்கமே ! உன்னைக் காண்பதற்குக் கவலையுற்று 
ஆசைப்படும் அன்பில்லாதேன்; இனி அன்பொழிந்த பிற எதனைக் கருவியாகக் கொண்டு
மேற் செல்ல வல்லேன்?

    Whereas many a struggling saint (in the past), in order to see Thee, went into penance for 
endless years, hurting their limbs, and got so wearied in spirit, Thou took me, this sinner, under
Thy servitude. I am unable to cast off this morbid physical frame, oh my Chief! How then shall 
I rise up to reach Thee, my priceless gem, although I have longing for Thee?

கு-ரை: குரம்பை = உடல், கூடு. அலவா நிற்றல்= கவலையுற்று ஆசைப்படுதல், அங்கலாய்த்தல், 
எழுகேன்=உயர்வேன். அயராவன்பே, அரன் கழல் சேர்ப்பிக்கும் என்பது குறிக்கப்பட்டது.

55.      மானேர் நோக்கி யுமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட 
    தேனே யமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்றில்லைக் 
    கோனே யுன்றன் றிருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட 
    ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானே னுடையானே

    மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட 
    தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக் 
    கோனே! உன்-தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட, 
    ஊன் ஆர் புழுக்கூடு - இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!

    maanneer nokki umaiyaaL pangkaa vanthu ingku aadkoNda
    thenee amuthee karumpin theLivee sivanee thenthillai 
    konee unthan thirukkuRippu kuuduvaar nin kazal kuuda
    uun aar puzukkuudu ithu kaaththu ingku iruppathu aaneen udaiyaanee

பொ-ரை: மான் போலும் விழியுடைய உமை நங்கையை இடப்பாகம் கொண்டவனே!
மேல்நின்று இழிந்து இந்நிலவுலகில் வந்து ஆட்கொண்டருளிய, தேன் போலும் கெடாத
இன்பமளிப்பவனே! சாவா மருந்தே! கருப்பஞ்சாறு போலும் தித்திப்பவனே ! மங்கலப்
பெருமானே! அழகிய தில்லை அதிபதியே! முதல்வனே! உன்னுடைய திருவுளப்பாங்கிற்கு
ஏற்றவாறு நடந்து, உன் திருஉளக் குறிப்பிற் சார்ந்தவர்கள் உன் திருவடியைக் கூடினார்கள்.
ஆனால் யானோ தசை நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுடம்பை இவ்வுலகில் வீணே
காத்திருத்தலை உடையவன் ஆனேன்.

    Oh Lord, consort of the fawn-eyed Uma, held on Thy left part, Thou, like honey,
ambrosia and clear cane juice! Thou that took me in! Oh Lord Civa, Chief of southern Thillai!
All those that were drawn towards Thee, merged into Thy bejewelled Feet, while alas,I happen
to stay here alone, guarding my foul fleshy frame!

56.     உடையா னேநின் றனையுள்கி யுள்ள முருகும் பெருங்காத
    லுடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் 
    கடையா னேனெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
    முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.

    உடையானே! நின்-தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல் 
    உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின் 
    கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,
    முடை ஆர் புழுக் கூடு-இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே!

    udaiyaanee ninthanai uLki uLLam urukum perungkaathal 
    udaiyaar udaiyaay ninpaatham seera kaNdu ingku uurnaayin 
    kadaiyaaneen nenjsu urukaatheen kallaa manaththeen kasiyaatheen
    mudai aar puzukkuudu ithukaaththu ingku iruppathu aaka mudiththaayee

பொ-ரை: உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு
உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என்
நெஞ்சம் உருகவில்லை. அதனைக் கண்ணுற்றும் அவர்களைப் போல் உன்னிடம் அன்பு
கொள்ளவில்லை. மனம் கனிந்திடவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. துர்நாற்றம் வீசும்
உடலில் அபிமானம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாய் இங்கு வாழ்ந்திருக்கிறேன் .

    Lord, my Chief, Thou hast under Thee devotees with intense dedication to Thee:
devotees who melt at heart, thinking of Thee. I had seen such devotees merge into Thy feet.
And yet, here I am, a lonely street cur, not melting at heart. Stony hearted, I just stand here,
guarding this physical frame of mine that is so full of foul vermin!

Note: Tearful outpourings, bemoaning his exclusion from the other saints who merged into the 
      Lord at Thirup-Perun-Thurai. Such feelings are atonement for past inequities.
      Effect of past deeds gets washed out in this way.

கு-ரை: ஊர் நாய், திரிந்து அற்பப் பயனாவது கொள்ளும். அதுவுமின்றி வறிதே திரிதலின், 
அதனினுங் கடையேன் என்றார். 

57.     முடித்த வாறு மென்றனக்கே தக்க தேமுன் னடியாரைப் 
    பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் 
    துடித்த வாறுந் துகிலிறையே சோர்ந்த வாறு முகங்குறுவேர் 
    பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே

    முடித்த ஆறும், என்-தனக்கே தக்கதே; முன், அடியாரைப் 
    பிடித்த ஆறும், சோராமல் - சோரனேன்-இங்கு, ஒருத்திவாய் 
    துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர் 
    பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே

    mudiththa aaRum en thanakkee thakkathee mun adiyaarai
    pidiththa aaRum sooraamaR soraneen ingku oruththi vaay 
    thudiththa aaRum thukil iRaiyee soorntha aaRum mukangkuRuveer 
    podiththa aaRum ivai uNarnthu keedu en thanakkee suuzntheenee

பொ-ரை: உன்னை நாடிய மெய்யடியாரை நீ தளர விடாமல் பற்றிக் கொண்டனை. 
கள்வனாகிய என்னை இங்கு உடல் காத்திருக்க நீ முடிவு செய்தது தக்கதுதான் .
உலகப்பற்றில் ஈடுபட்ட வஞ்சனேன் இங்கு மாயாசக்தியாம் பெண்ணின் கவர்ச்சியில் 
ஈடுபட்டேன். பெண்ணின் இதழ்த்துடிப்பும், சிறிது நேர்ந்த ஆடைக்கலைவும், முகச் 
சிறுவியர்வையின் தோற்றமும் நிகழ்ந்த முறையில் அவற்றில் ஈடுபட்டு, உலக உணர்ச்சி எய்தி,
எனக்கே தீங்கு இழைக்கக் கற்றுக் கொண்டேன். 

    Well do I deserve this penitence! For, even though close to Thy devotees, I did not keep 
off the worldly lore. When depraved folks were harping on lascivious themes, detailing many
carnal proclivities, like the trembling of the lip and other lurid acts, I lent ears to obscene talk,
and by such listening, I put myself in great distress.

Note: Even listening to descriptions of enticing events and behaviour should be avoided, says 
the saint, for, they too deprive one of the chances for redemption.

கு-ரை: முன் = நாடிய; முன் அடியார் - வினைத்தொகை. இறை = மிகச் சிறிய அளவு, பொடித்தல்= தோன்றுதல். 
துகில் = ஆடை.  வாய்த்துடியாற் சொல்லும், ஆடைக் கலைவால் உடம்பும், உள்ளத்தின் 
நிலைகாட்டும் முகவியர்வையால் மனமும் உலக நிகழ்ச்சிகளில் அழுந்தி ஈடுபட்டதெனக் குறித்தவாறாம். 
இறைப்பற்று உடையார்க்கு வீடும், உலகப் பற்றுடையார்க்கு உடம்பில் நிலைப்பும் அருளியது பொருத்தம்
என்றார்.  உலக வாதனை, உயிரறிவைக் கவர்தல் கூடுமாதலின், பெண்ணின் மயல்விளை செய்கைகளின் 
வைத்து அதனை விளக்குவார் ஆயினர். இவ்வாறு கொள்ளாது, ஒரு பெண்ணினைக் கண்டு  அடிகள்
மோகமுற்றார் என்பது, அத்துணை பொருந்தாமை அறிக.  பெண்டிரைக் கூறுமிடத்துப் பன்மையாகக் 
கூறினமையும், இங்கே 'ஒருத்தி' என்றதும் உற்று நோக்குக. அவள் செயல்களை உணர்ந்தமையே 
கேடென்றாரே யொழிய, உணர்ந்து, பின்வேறு செயலாகிய கேடு சூழ்ந்தனர் என்று கருதற்க. கடவுள்
ஒருபுறமும், உடம்புபற்றி நிகழும் பிராரத்தவாதனை ஒருபுறமும் இழுப்பப் பின்னதை விட்டு முன்னதைப்
பற்றாமையே அடிகள் தன் குற்றம் என்றாரென உய்த்துணர்க. 

58.     தேனைப் பாலைக் கன்னலின் றெளியை யொளியைத் தெளிந்தார்தம்
    ஊனை யுருக்கு முடையானை யும்ப ரானை வம்பனே
    னானின் னடியே னீயென்னை யாண்டா யென்றா லடியேற்குத்
    தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் றன்மையே

    தேனைப், பாலைக் கன்னலின் தெளியை, ஒளியைத், தெளிந்தார்-தம் 
    ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன் 
    'நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத் 
    தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே

    theenaip paalai kannalin theLiyai oLiyai theLinthaar tham
    uunai urukkum udaiyaanai umpa raanai vampaneen 
    naan nin adiyeen nii ennai aaNdaay enRaal adiyeeRku 
    thaanum siriththee aruLalaam thanmai yaam en thanmaiyee

பொ-ரை: தேன் போன்ற இனிமையும், பால் போன்ற தூய்மையும் கரும்பின் சாறு போன்ற
அருட்செயலும் உடைய சோதியானவனே!  நின் அருள் அறிவின் கண் தெளிந்த
அடியார்களின் உள்ளம் மட்டுமன்றி உடம்பையும் உருகுவிக்கும் முதல்வனை 
வேண்டியதெல்லாம் எளிதின் ஈயும் விண்பசுவாகிய காமதேனு ஒப்பானை நோக்கி ,
வீணனாகிய நான் உன் அடியேன், நீ என்னை ஆட்கொண்டாய். என்று நான் கூறினால் 
அடியேனைப் பார்த்து அப்படியா நல்லது என்று அவன் இகழ்ந்து நகையாடி
அருளுதற்குரிய இயல்பே என் இயல்பாயிற்று.

    Thou art like unto honey, sugarcane juice, bright light, Oh Lord, that melts the hearts of
devotees with clear knowledge! Unto such Lord, in the high above, I, this recalcitrant me,
declare thus: “I Thy vassal, Thou my over Lord". Hearing this, shouldst Thou then smile on me,
that too would show my absorption to Thee.

கு-ரை: தன்னை மெய்யடியானாக இறைவன் ஏற்றுக் கொள்ளத் தகுதியில்லை யெனினும், அவன் 
நகையாடுவதும் தமக்கு ஓர் ஆறுதல் என்று குறித்தவாறு காண்க.

59.     தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயான 
    புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ 
    என்னை நோக்கு வார்யாரே யென்னான் செய்கே னெம்பெருமான்
    பொன்னே திகழுந் திருமேனி யெந்தா யெங்குப் புகுவேனே

    தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன 
    புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ ?
    என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!
    பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

    thanmai piRaraal aRiyaatha thalaivaa pollaa naayaana 
    punmai yeenai aaNdu aiyaa puRamee pooka viduvaayoo
    ennai nookkuvaar yaaree ennaan seykeen emperumaan 
    ponnee thikazum thirumeeni enthaay engku pukuveenee

பொ-ரை: அன்பரன்றி, மற்றோரால் அறியப்படாத இயல்புடைய தலைவனே!  தீய நாய் 
போன்ற சிறியேனை ஆட்கொண்டு, ஐயனே! உன் அருளுக்குப் புறம்பாகச் செல்ல விட்டு 
விடுவையோ? அங்ஙனமாயின் அடியேனைக் கண்பார்ப்பார் வேறு யார் ?  எங்கள்
பெரியோனே! நான் என்ன செய்வேன்? மாறில்லாத பொன்போல விளங்கும் அழகிய
திருவுருவ முடையவனே! எந்தையே! நான் எங்கே அடைக்கலம் புகுவேன் ?

    Oh Chief, beyond comprehension, having taken me in earlier, will Thou now let me 
down? If Thou abandon this lowly cur, who else will care for me? What (on earth) can I do?
Oh Lord and my Sire, of holy golden frame, whereto can I then go? 

Note: We note these repeated wails of the saint in verse after verse, revealing his extreme 
anxiety in catching up with his previous associates who merged into Lord Civa in Perunthurai.

கு-ரை: தலைவனே, உனக்கே மீளாவடிமை, தூய அருள் ஒளியுடையானே, பிழை பொறுப்பது உன்கடன்.
பெரியோனே, நீயே கண் பார்க்க வேண்டும், உனக்கே அடைக்கலம், என்று அடிகள் செப்பியவை,
உருக்கத்தின் தலை நின்றவை.

60.     புகுவே னெனதே நின்பாதம் போற்று மடியா ருண்ணின்று 
    நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினே 
    னெகுமன் பில்லை நினைக்காண நீயாண் டருள வடியேனுந் 
    தகுவ னேயென் றன்மையே யெந்தா யந்தோ தரியேனே

    புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று 
    நகுவேன், பண்டு தோள் நோக்கி, நாணம் இல்லா நாயினேன் 
    நெகும் அன்பு இல்லை, நினைக்காண நீ ஆண்டு அருள, அடியேனும் 
    தகுவனே? என் தன்மையே! எந்தாய்! அந்தோ! தரியேனே!

    pukuveen enathee ninpaatham pooRRum adiyaaruL ninRu 
    nakuveen paNdu thooLnookki naNam illaa naayineen        
    nekum anpu illai ninaikkaaNa nii aaNdu aruLa adiyeenum
    thakuvanee en thanmaiyee enthaay anthoo thariyeenee

பொ-ரை: நீ காட்சி கொடுத்த முன்நாளில் உன்னை வணங்கும் அன்பர் நடுவே நின்று
வெட்கமற்ற நாய் போலும் யான், நின் திருத்தோள்களைக் கண்டு நகையாடிக்
கொண்டிருந்தேன். உன் திருக்காட்சி பெறுதற்குரிய உள்ளம் உருக்கும் அன்பு  என்னிடம்
இருந்ததில்லை. அங்ஙனமாயினும் ஆட்கொண்டு அருளும் தகுதி உடையவன் ஆயினேன்;
எந்தையே, என் இயல்புதான் என்னே! அன்பற்ற என் இயல்பை நான் பொறுக்க மாட்டேன்.
 நீ ஆண்டமையால் நின் பாதம் எனக்குரியதே! நான் அதன் கண் அடைக்கலம் புகுவேன்.

    Lord, I take refuge under Thy Feet, for these are just for me. I will stand amidst Thy
devotees, filled with gladness at heart. As in the past, this cur of me, will take delight in eyeing
Thy shoulders shedding all semblance of modesty. Yet I am devoid of intense keenness.
Wouldst Thou still bless me, Oh Sire? Alas! No more can I be in this strife.

            THIRUCHCHITRAMBALAM


5.7 காருணியத்து இரங்கல்                5.7. KAARUNIYATHTHU IRANGAL

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்            Pining for Grace

                    திருச்சிற்றம்பலம்

61.     தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான 
    விருத்தனே போற்றி யெங்கள் விடலையே போற்றி யொப்பி 
    லொருத்தனே போற்றி யும்பர் தம்பிரான் போற்றி தில்லை 
    நிருத்தனே போற்றி யெங்க ணின்மலா போற்றி போற்றி

    தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா, போற்றி ! வான 
    விருத்தனே போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்புஇல் 
    ஒருத்தனே, போற்றி!  உம்பர் தம்பிரான் போற்றி! தில்லை 
    நிருத்தனே, போற்றி ! எங்கள் நின்மலா, போற்றி ! போற்றி!

    tharikkileen kaaya vaazkkai sankaraa pooRRi vaana
    viruththanee pooRRi engkaL vidalaiyee pooRRi oppuil 
    oruththanee pooRRi umpar thampiraan pooRRi thillai 
    niruththanee pooRRi engkaL ninmalaa pooRRi pooRRi

பொ-ரை: இவ்வுடலோடு வாழ்ந்திருத்தலைப் பொறுக்க முடியவில்லை. சுகத்தைக் 
கொடுப்பவனே! காத்தருளுக! சிதாகாசத்தில் உறையும்  பழையோனே ! காத்தருளுக!
 அடியாருடைய அண்ணலே  காத்தருளுக! ஒப்பற்ற ஒருவனே! காத்தருளுக! வானவர் 
தலைவனே காத்தருளுக! தில்லை மன்றில் நடனமாடுவோனே காக்க! எங்கள் தூயவனே
காக்க ! காக்க!

    Oh Lord Sankara, I am unable to bear this embodied existence (to this world). Pray, save 
me from this (sordid) ordeal. Save me, Oh primordial Lord, our mighty Chief. Oh Thou
unparalleled one, Lord of heavenly gods, Lord of the cosmic dance at Thillai, Thou free of all
afflictions.I beseech Thee. Pray save me, do save me:

கு-ரை: போற்றி என்பதற்கு வணக்கம் எனவும், காக்க எனவும் பொருள் கொள்ளலாம், விடலை=ஆண்மகன்

62.     போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் 
    போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை 
    போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் 
    போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி

    போற்றி ! ஓ, நமச்சிவாய! புயங்கனே, மயங்கு கின்றேன் ;
    போற்றி ! ஓ, நமச்சிவாய ! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை ;
    போற்றி!  ஓ, நமச்சிவாய!  புறம் எனைப் போக்கல், கண்டாய்; 
    போற்றி! ஓ, நமச்சிவாய ! சய! சய ! போற்றி! போற்றி!

    pooRRyoo namassivaaya puyangkanee mayangku kinReen 
    pooRRyoo namassivaaya pukalidam piRithu onRu illai 
    pooRRyoo namassivaaya puRam enai pookkal kaNdaay         
    pooRRyoo namassivaaya saya saya pooRRi pooRRi

பொ-ரை: ஓம் நமச்சிவாய ! பாம்பணிந்தவனே! அடியேன் திகைப்புறுகின்றேன். 
காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனுக்கு நின்னைத் தவிர தஞ்சமான இடம் வேறு
எதுவுமில்லை. காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனைப் புறம்பே போக விடாதே
காத்திடுக. ஓம் நமச்சிவாய! காத்தருளுக! நின் வெற்றி ஓங்குக! வணக்கம் ! வணக்கம்!

    Glory be to Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA,Pray grant me
refuge, Thou (shining) with garlands of snakes! I stand here bemused, Thou of the five-letter
form NAMACHIVAAYA, pray grant refuge, I have none to shelter me except Thee. Glory be to
Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA pray grant refuge. Shunt me not out of
here. Glory be to Thee! Thou of the five-letter form NAMACHIVAAYA pray grant refuge. 
Oh victorious one, Glory be to Thee!; Glory be to Thee!

கு-ரை: 'நமச்சிவாய' என்பதற்கு நமச்சிவாயனே எனப் பொருள் கொள்ளுவாரும் உளர். அங்ஙனமாயின்
ஓ, நமச்சிவாயனே என்று கூறுவதாகக் கருதவேண்டும். கண்டாய், முன்னிலை அசை. போக்காதே
என்பதை வற்புறுத்துவது.  இருவினையை வெல்வதால், இருமுறை வெற்றி என்றனர். வெற்றி
இருமுறையாகவே, வணக்கமும் இருமுறையாயிற்று.

63.     போற்றியென் போலும் பொய்யர் தம்மையாட் கொள்ளும் வள்ளல் 
    போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி 
    போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவன நீர்தீக் 
    காற்றிய மானன் வான மிருசுடர்க் கடவு ளானே

    போற்றி ! என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் 
    போற்றி ! நின்பாதம் போற்றி ! நாதனே, போற்றி ! போற்றி! 
    போற்றி!  நின்கருணை வெள்ளப் புதுமதுப் புவனம், நீர், தீக் 
    காற்று, இயமானன், வானம், இருசுடர்க் கடவுளானே!

    pooRRi en poolum poyyar thammai aadkoLLum vaLLal 
    pooRRi nin paatham pooRRi naathanee pooRRi pooRRi 
    pooRRi nin karuNai veLLap puthumathu puvanam neer thii 
    kaaRRu iyamaanan vaanam irusudar kadavuLaanee

பொ-ரை: நிலையல்லாதவற்றில் பற்றுடைய என்னைப் போன்றவரையும் ஆட்கொள்ளும்
ஈகை மிக்க பெருந்தகை நீ! உனக்கு வணக்கம்! உனது திருவடிக்கு வணக்கம். தலைவனே
வணக்கம். வணக்கம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான், உயிர், ஞாயிறு, திங்கள் ஆகிய
எட்டினையும் வடிவாகக் கொண்டு அவையாகிய கடவுள் தன்மை கொண்டவனே ! உன் 
கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. அருள் வெள்ளம் எம்மைக் காக்க என்பது பொருள். 

    Obeisance to Thee, Oh munificent Lord that takes in even pretentious folks like me.
Obeisance to Thy Feet, obeisance Oh Lord. Prayer grant me refuge, Oh grant refuge. Lord of
ambrosial flood of grace, Thou, manifest as the earth, water, fire, air, soul and the sky, as also,
the sun and the moon.

Note: Thevaram hymns also refer to the Lords' manifestation in the five elements - earth, 
water, fire, air and the sky - as also the soul, the sun and the moon - vide Saint Thiru 
Gnana Sambandar (153.2) (பாருமாகி வானுளோர்க்குப்). Also Saint Kumara Kuru Para 
Swamigal (17th Century AD) - Verse 54. சிதம்பர மும்மணிக்கோவை:  மருவருக்கன், மதி, வளி, 
வான், இயமானன், தீ, நீர், மண் எனும் எண்வகை உறுப்பின் வடிவு கொண்ட.

கு-ரை: இயமானன்= உயிர். புவனம் = பிருதிவி. வள்ளல்= வரையாது கொடுப்போன். கூறிய எட்டையும் 
அட்டமூர்த்த மென்ப . பொய்யர்க்கும் மெய்யர்க்கும் அருள் வழங்குதலால் 'வள்ளல்' என்றார்.
'நின் கருணை வெள்ளப் புதுமது போற்றி' என்பதை இறுதியிற் கொள்க.

64.      கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி 
    விடவுளே யுருக்கி யென்னை யாண்டிட வேண்டும் போற்றி 
    உடலிது களைந்திட் டொல்லை யும்பர்தந் தருளு போற்றி 
    சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி

    கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி !
    விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி !
    உடல்-இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி !
    சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!

    kadavuLee pooRRi ennai kaNdu koNdu aruLu pooRRi 
    vida uLee urukki ennai aaNdida veeNdum pooRRi 
    udal ithu kaLainthiddu ollai umpar thanthu aruLu pooRRi 
    sadaiyuLee kangkai vaiththa sangkaraa pooRRi pooRRi

பொ-ரை: மனம், மொழி, மெய்களைக் கடந்த பெருமானே! வணக்கம் அடியேனைக் 
கண்பார்த்து இரங்குக வணக்கம். உலகப்பற்றை விடுதற்கு, என் உள்ளத்தை அன்பால்
உருகுவித்து என்னை அடிமை கொண்டிட வேண்டுகிறேன். வணக்கம். இந்த உடலினை
நீக்கி, விரைவாக வீட்டினைக் கொடுத்தருளுக வணக்கம். உலகினர்க்கு இரங்கி
கங்கையானது உலகை அழிக்கவொட்டாமல் சடையின் கண்ணே கங்கையை ஏற்று
அமைத்துக் கொண்ட இன்ப வள்ளலே! வணக்கம்! வணக்கம்!

    Obeisance to Thee, Oh Lord, pray take note of me and bestow benediction. Lord! pray
melt my heart and make me thine. Grant salvation soon, weeding out this physical frame of 
mine. Obeisance to Thee, Oh Lord Sankara that holdeth the Ganges on the matted hair.
Obeisance to Thee, Obeisance to Thee. 

கு-ரை: 'கடவுளே' என்பதற்கு, காணப்பட்ட எல்லாவற்றையும் கடந்த பொருளே என்றும் கூறலாம்.
புறக்கணியாது போற்ற வேண்டும் என்பார், 'கண்டு கொண்டருளு' என்றார், ஒல்லை = விரைவாக.
உம்பர்= மேலிடம் - முத்தி.  கங்கையைத் தடுத்தமை போல, துன்ப வெள்ளத்தைத் தடை செய்தருளுக, என்றவாறு.

65.     சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் 
    பொங்கரா வல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் 
    மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
    யிங்கிவ்வாழ் வாற்ற கில்லே னெம்பிரா னிழித்திட் டேனே

    சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப் 
    பொங்கு அரா அல்குல், செவ்வாய், வெள் நகைக் கரியவாள் கண், 
    மங்கை ஓர்பங்க, போற்றி ! மால்விடை ஊர்தி, போற்றி !
    இங்கு, இவ்வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.

    sangkaraa pooRRi maRRu oor saraN ileen pooRRi koola 
    pongku araa alkul sevvaay veNnakai kariya vaaL kaN 
    mangkai oor pangka pooRRi maalvidai uurthi pooRRi 
    ingku ivvaazvu aaRRakilleen empiraan iziththiddeenee

பொ-ரை: சுகம் கொடுப்பவனே வணக்கம். நின்னைத்தவிர வேறு ஒரு புகலிடம் இல்லேன்
வணக்கம். சீற்றம் கொண்ட பாம்பின் அழகிய படத்தை ஒத்த நிதம்பத்தையும், சிவந்த
இதழையும், வெள்ளிய பல்லினையும், ஒளியுடைய கருங்கண்ணையும் உடைய மங்கைப்
பருவத்தினளாகிய உமையைப் பாகமாக உடையவனே வணக்கம் ! அரியைக் காளை
வாகனமாகக் கொண்டவனே வணக்கம்! இவ்வுலகில் பொய் வாழ்வைச் சகிக்கிலேன். 
இதை அருவருத்து விட்டேன்.

    Obeisance to Thee, Oh Lord Sankara, I have no refuge but Thee. Obeisance, Oh Lord,
that on one side of Thy frame, holdeth the Goddess with slim waist, red lips, black eyes and
bright smile Lord, riding on Thirumaal who came in the form of a bull (during the war on
Thiripuram)! I bear not this accursed earthly life.

Note:    During the destruction of Trifort (Thiripuram) of the recalcitrant asuras, Thirumaal 
    came forward to carry Lord Civa and took the shape of a bull. This anecdote is 
    recounted in almost all saivite works- Also see Chapter XII, verse 15 of
    Thiruchchaazhal in Thiruvaachakam.

கு-ரை: சரண்= புகலிடம், சீற்றங்கொண்ட காலையே, பாம்பு படமெடுத்தலின், 'பொங்கரா' என்றார்.
படத்தையே அல்குலுக்கு உவமையாகக் கொண்டார். அல்குலென்பது, பெண்குறி. 'வாட்கண்' என்பதற்கு
வாள் போன்ற கண் என்பாரும் உளர்.

66.     இழித்தன னென்னை யானே யெம்பிரான் போற்றி போற்றி 
    பழித்திலே னுன்னை யென்னை யாளுடைப் பாதம் போற்றி 
    பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி
    ஒழித்திடிவ் வாழ்வு போற்றி யும்பர்நாட் டெம்பி ரானே 

    இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி ! போற்றி !
    பழித்திலேன் உன்னை: என்னை ஆளுடைப் பாதம் போற்றி!
    பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி!
    ஒழித்திடு இவ்வாழ்வு: போற்றி ! உம்பர் நாட்டு எம்பிரானே!

    iziththanan ennai yaanee empiraan pooRRi pooRRi 
    paziththileen unnai ennai aaLudai paatham pooRRi
    pizaiththavai poRukkai ellaam periyavar kadamai pooRRi
    oziththidu ivvaazvu pooRRi umpar naaddu empiraanee        

பொ-ரை: யானே என்னை மிகவும் வெறுத்து விட்டேன். எங்கள் வள்ளலே வணக்கம்!
 வணக்கம்! உன்னை யான் குறை கூறேன். அடியேனை அடிமையாக உடைய திருவடிக்கு
வணக்கம். இயற்றிய தவறுகளை எல்லாம் மன்னித்தல் பெரியோரின் கடப்பாடு ஆகும்.
ஆகவே பெரியோனான நீ சிறியோனான என் பிழையெல்லாம் பொறுத்தருளுக. 
வீட்டுலகின் எங்கள் தலைவனே! இவ்வாழ்க்கையை விரைவில் தொலைத்தருள்க!
வணக்கம்!

    I degraded myself, Oh Lord, and yet I beseech Thy grace. Pray grant refuge. I did not 
blame Thee for anything. May Thy Feet take me in and grant refuge. Is it not natural for noble
folks to bear with our inequities? Pray end my earthly state, Oh Thou, Lord of heavens, pray
grant refuge.

கு-ரை: உம்பர் = வானுலகம் என்பாரும் உளர்.

67.     எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி
    கொம்பரார் மருங்குன் மங்கை கூறவெண் ணீற போற்றி 
    செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி 
    உம்பரா போற்றி யென்னை யாளுடை யொருவ போற்றி

    எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி !
    கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள்-நீற, போற்றி !
    செம்பிரான் போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி !
    உம்பரா, போற்றி ! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!

    empiraan pooRRi vaanaththu avar avar eeRu pooRRi 
    kompar aar marungkul mangai kuuRa veNNiiRa pooRRi 
    sempiraan pooRRi thillai thirussiRRam palava pooRRi
    umparaa pooRRi ennai aaLudai oruva pooRRi

பொ-ரை: எங்கள் வள்ளலே வணக்கம்! வானுலகிலுள்ள தேவர் பலருள் அவரவருக்குத்
தக்கவாறு அருளும் சிங்கமே வணக்கம்! கொடி போன்ற இடையுடைய மாதினை ஒரு பாகம்
உடையவனே! திரு வெண்ணீறுடையாய் வணக்கம்! செம்மேனியுடைய பெருமானே
வணக்கம். அழகிய தில்லை ஞானப் பொதுவினையுடையாய் வணக்கம். வீடுடையானே
வணக்கம். என்னை அடிமையாக உடைய ஒப்பற்றோனே வணக்கம்.

    Obeisance to Thee! Oh Lord! you are like a lion for all gods of the sky! Thou, part
female, with a waist, lean and stately. Thou, besmeared with ash to white; Oh noble Lord of 
Thillai's golden hall, pray grant refuge. Obeisance to Thee! Oh Lord of heavens. Obeisance to
Thee! Oh Peerless one, that hast taken me in servitude.

கு-ரை: “ஏறு" என்றது தலைவன் என்னும் பொருட்டாய் நின்றது.

68.     ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானோர் 
    குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து போற்றி 
    வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி 
    தருகநின் பாதம் போற்றி தமியனேன் றனிமை தீர்த்தே

    ஒருவனே போற்றி ! ஒப்புஇல் அப்பனே, போற்றி ! வானோர் 
    குருவனே, போற்றி ! எங்கள் கோமளக் கொழுந்து போற்றி !
    'வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி !
    தருக நின் பாதம் போற்றி!  தமியனேன் தனிமை தீர்த்தே.

    oruvanee pooRRi oppu il appanee pooRRi vaanoor 
    kuvanee pooRRi engkaL koomaLak kozunthu pooRRi             
    varuka enRu ennai ninpaal vaangkida veeNdum pooRRi 
    tharuka nin paatham pooRRi! thamiyaneen thanimai thiirththee

பொ-ரை: கடவுளாகிய ஒருவனே வணக்கம். தன்னிகரில்லாத தந்தையே வணக்கம்.
தேவருடைய பரமாச்சாரியனே வணக்கம். அடியோமுடைய இளமைச் செவ்வி நிறைந்த 
சோதியே வணக்கம். 'இங்கே வா' என்று அடியேனை உன்னிடம் நீ அழைத்து ஏற்றுக்
கொள்ளவேண்டும். ஐயா வணக்கம், ஆதரவின்றித் தனிப்பட்ட எனது துணையின்மையை 
ஒழித்து உன் திருவடித் துணையைக் கொடுத்தருளுக! வணக்கம்.!

    Obeisance to Thee! Thou the unique unparalleled Lord! Preceptor for all sky borne
gods. Thou, fair and tender like a shoot! Pray, call out to me and absorb me unto Thee. 
grant Thou, Thy Feet to me, thus ending my lonesome state! (state of separation).

கு-ரை: தேவர் குருவாதல், 'திருமால் இந்திரன் பிரமன் உபமனியன் தபனன் நந்தி செவ்வேளாதித் தரும
முதுகுரவர்க்கும் தனதருளால் ஆசிரியத் தலைமை நல்கி' என்றமையாலறிக. என்றும் மாறாத 
எழிலுடைமை பற்றி 'கோமளக் கொழுந்தே' என்றார். கொழுந்து= சோதி 'தமியனேன் தனிமை தீர்த்தே
நின்பாதம் தருகபோற்றி' என மாற்றுக.

69.     தீர்ந்தவன் பாய வன்பர்க் கவரினு மன்ப போற்றி 
    பேர்ந்துமென் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி 
    வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி 
    யார்ந்த நின்பாத நாயேற் கருளிட வேண்டும் போற்றி

    தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி !
    பேர்ந்தும், என்பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி !
    வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி !
    ஆர்ந்த நின்பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!

    thiirntha anpaaya anparkku avarinum anpa pooRRi 
    peernthum en pooymmai aadkoNdu aruLidum perumai pooRRi 
    vaarntha nanjsu ayinRu vaanoorkku amutham ii vaLLal pooRRi 
    aarntha nin paatham naayeeRku aruLida veeNdum pooRRi

பொ-ரை: முடிந்த அன்புருவமாகிய அடியாரிடத்தே அவரைப் பார்க்கிலும் மிகுந்த
அன்புடையவனே வணக்கம் . எனது பொய்ம்மையை நீக்கியும் என்னை அடிமையாகக்
கொண்டு அருள் செய்யும் பெருந்தன்மையனே வணக்கம். பாற்கடலில் பெருகிய விடத்தை
உண்டு, விண்ணவர்க்கு அமுதத்தைக் கொடுத்த பேருதவியாளனே வணக்கம். எங்கும்
நிறைந்த நின் திருவடிகளை நாயனைய எனக்கு ஈந்திட வேண்டுகிறேன், வணக்கம்!

    Obeisance to Thee, Oh Lord! To those that have intense love for Thee, Thou art an even
more loving one. Obeisance to Thy glory that took me in, condoning my falsehood, despite the
fact that I slid away from Thee. Thou, the munificent that drank the frothing venom but served
elixir to sky borne gods. Obeisance to Thee, prayer grant Thy graceful Feet to me, this lowly cur.

கு-ரை: தீர்ந்த, என்றது மிக மேலாகிய, சத்திநிபாதத்து உத்தமர்களுடைய உயர்ந்த, பயன் கருதாத 
பேரன்பை. அன்பர்க்கு அன்பே முடிந்த கருவியும் பயனுமாம். இரண்டாம் அடியில், என் பொய்மையைப்
பேர்ந்தும் என உரை நடை கொள்க. பேர்த்தும் = பெயர்ந்தும். வார்ந்த = நீண்ட, பெருகிய. 
அயிற்று=உண்டு. ஈவள்ளல்= ஈந்த வள்ளல், வினைத்தொகை, ஆர்ந்த= நிறைந்த.

70.     போற்றியிப் புவன நீர்தீக் காலொடு வான மானாய் 
    போற்றியெவ் வுயிர்க்குந் தோற்ற மாகி நீ தோற்ற மில்லாய் 
    போற்றி யெல்லா வுயிர்க்கு மீறாயீ றின்மை யானாய் 
    போற்றியைம் புலன்க ணின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே

    போற்றி! இப்புவனம், நீர் தீ காலொடு, வானம் ஆனாய் ;
    போற்றி ! எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய் ;
    போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறுஇன்மை ஆனாய் ;
    போற்றி ! ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.

    pooRRi ippuvanam niir thii kaalodu vaanam aanaay 
    pooRRi evvuyirkkum thooRRam aaki nii thooRRam illaay     
    pooRRi ellaa uyirkkum iiRu aay iiRu inmai aanaay 
    pooRRi aimpulankaL ninnai puNarkilaa puNarkkai yaanee

பொ-ரை: இந்த நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பூதத்திலும் கலந்து அவையானவனே
வணக்கம். எல்லா உயிர்களும் பிறத்தற்குக் காரணமாகி, நீ பிறப்பில்லாது இருப்பவனே
வணக்கம். எல்லா உயிர்களும் ஒடுங்கும் முடிவிடமாயும் நீ முடிவில்லாதவனும் ஆனவனே
வணக்கம்! ஐம்புலன் ஆசை உன்னை அடையாத மாயமுடையவனே, உனக்கு வணக்கம்.

Thou, manifest as the earth, water, fire, air and sky, Obeisance to Thee. 
Thou, origin of all life and yet Thyself without origin, Obeisance to Thee.
Thou, the end of all life and yet Thyself having no end, Obeisance to Thee. 
Thou immanent in the five senses and yet Thyself beyond the bondage of the senses, 
Obeisance to Thee.

Note: The term போற்றி  means போற்றுவாயாக  pray grant refuge: போற்றுதி.  In certain instances
போற்றி  is equivalent to வணக்கம்.  I pay obeisance to Thee.

கு-ரை: வான், பிற பூதங்களிலும் நுட்பமாய், அவற்றிற்கு இடங் கொடுத்தலின், அதனை 'ஒடு' என்பது
கொடுத்து வேறு பிரித்தனர். பிறப்புக்குக் காரணமாய உடல், அகக்கருவிகள், உலகம், நுகர் பொருள்
என்பன தோற்றுதற்கிடமாய மாயையோடு அத்துவிதமாய்ச் சிவசத்தி கலந்து எல்லாவற்றையும் 
தோற்றுவித்தலின், 'தோற்றம் ஆகி' என்றார். ஒடுக்கம் செய்வானை 'ஈறு' என்றார். சிவஞான போதமுதற்
சூத்திரத்துள் சங்காரக் கடவுளை 'அந்தம்' என்றது காண்க . புணர்க்கை = மாயம், சேர்க்கை.
'புணர்க்கையானே' என்பதற்குக் கலப்பு, என்ற பொருளில், 'தொடக்குறாது எல்லாவற்றிலும்
கலந்திருப்பவனே' என்றும் பொருள் கொள்ளலாம்.

                THIRUCHCHITRAMBALAM

5.8 . ஆனந்தத்து அழுந்தல்                     5.8. AANANTHATHTHU AZHUNTHAL

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்                Steeped in Bliss

                    திருச்சிற்றம்பலம்

71.     புணர்ப்ப தொக்க வெந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய் 
    புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம் 
    புணர்ப்ப தாக வன்றி தாக வன்பு நின்க ழற்கணே 
    புணர்ப்ப தாக வங்க ணாள புங்க மான போகமே

    புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்: 
    புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம் 
    புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணே
    புணர்ப்பு அது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே!

    puNarppathu okka enthai ennai aaNdu puuNa nookkinaay 
    puNarppathu anru ithu enRa poothu ninnoodu ennoodu ennithaam 
    puNarppathu aaka anRu ithu aaka anpunin kazalkaNee 
    puNarppathu aaka angkaNaaLa pungkam aana pookamee

பொ-ரை: அழகிய கண்ணாளனே! நீ ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து அருள் புரிதற்குரிய 
பக்குவம் ஒத்து வந்தது . என் அப்பனே!  என்னை ஆட்கொண்டு நான் உன்னை
அடையும்படி திருவருட் பார்வை நல்கினாய். இவ்வுடம்பானது நின்னோடு என்னை
இணக்குவதன்று என்று அறிந்த பின்பு, இதனால் என்ன பயன்? இது ஒழிவதாக! நின்
திருவடிக் கண்ணே அன்பானது என்னைச் சேர்ப்பதாக! உயர்ந்த சிவானந்த போகமானது
என்னை நின்னோடு பொருத்துமாக!

    Sire, when the time was ripe for me to be united with Thee, Thou took me in, and cast
Thy benign sight on me. Later, Thou left me and I remained all alone. Of what use was the
union therefore, if I have to stand here forlorn? Whether or not it be time to unite with Thee, let 
my devotion be to Thy Feet, oh Lord of grace, unite me with Thy bliss so high.

கு-ரை: கண்ணாளன்= கணவன், தோழன். பூண= அடைய, புங்கம் = உயர்வு. என்னொடு=என்னை-உருபுமயக்கம்.

72.     போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி யின்பமு 
    மேக நின்க ழலிணை யலாதி லேனெ னெம்பிரா 
    னாகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே 
    ஆக வென்கை கண்க டாரை யாற தாக வையனே

    போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர-ஆதி இன்பமும் 
    ஏக!  நின்கழல்-இணை அலாது இலேன், என் எம்பிரான் ;
    ஆகம் விண்டு, கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே 
    ஆக, என்கை; கண்கள் தாரை-ஆறு அது ஆக; ஐயனே!

    pookam veeNdi veeNdileen purantharaathi inpamum
    eeka ninkazal iNai yalaathu ileen en empiraan
    aakam viNdu kampam vanthu kunjsi anjsali kaNee 
    aaka enkai kaNkaL thaarai aaRu athu aaka aiyanee

பொ-ரை: சிவபோகத்தை விரும்பி, இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களை
விரும்ப மாட்டேன். ஒருவனே! என் தலைவனே! உன் திருவடி இரண்டுமன்றி வேறு யாதும்
துணையில்லேன். அப்பனே! உடம்பு புளியம்பழ ஓடு போல என்னின் வேறாகப் பெற்று
நடுநடுங்க, எனது கைகள் சிரமீது கும்பிடும் தொழிலின்கண் பொருந்துக. கண்களின் நின்று
விழும் நீரொழுக்கு ஆறாகப் பெருகுவதாக.

    I do not seek the pleasures of gods like Indra. Oh unique Lord, I have no reguge other
than Thine twin Feet. With splitting chest and shivering physique, may my hands fold up on my
head in order to worship Thee, Oh my Chief! May tears well up and stream down on me.

கு-ரை: 'போகம் வேண்டி' என்பதற்கு உலக போகங்களை விரும்பி என்றும் பொருள் கொள்வர். ஏக
என்பதற்கு, செல்வதற்கு எனவும் பொருள் கொண்டு, நின்கழலிணையன்றிச் செல்வதற்கு வேறிடமில்லேன் 
என்றும் உரைப்பர். விண்டு= வேறுபட்டு.  கம்பம்= நடுக்கம். வந்து= வர, குஞ்சி= ஆண் தலைமயிர்; 
தாரை=ஒழுக்கு.                                                 

73.     ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று வஞ்சனேன் 
    பொய்க லந்த தல்ல தில்லை பொய்மை யேனெ னெம்பிரான் 
    மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணே 
    மெய்க லந்த வன்ப ரன்பெ னக்கு மாக வேண்டுமே.

    ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன் 
    பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன், என் எம்பிரான் 
    மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்-கணே
    மெய் கலந்த அன்பர் அன்பு, எனக்கும் ஆக வேண்டுமே.

    aiya ninnathu allathu illai maRRu oor paRRu vanjsaneen 
    poy kalanthathu allathu illai poymmai yeen en empiraan             
    mai kalantha kaNNi pangka vanthu nin kazalkaNee 
    mey kalantha anpar anpu enakkum aaka veeNdumee

பொ-ரை: ஐயனே, உன்னுடைய ஆதரவின்றி வேறொரு ஆதரவு இல்லை. அப்படியிருந்தும் 
கள்வனேன் பொய்யினைச் சார்ந்திருப்பதன்றிப் பிறிதில்லை. என் தலைவனே! மை தீட்டிய 
கண்ணையுடைய அம்மை பாகனே! நின் திருவடிக் கண்ணே மெய்யைச் சார்ந்த 
அன்பர்களுடைய அன்பு, பொய்மை உடையேனாகிய எனக்கும் வந்து அமைதலை வேண்டுகிறேன். 

    I have no other hold, except Thee, Oh my Chief! I, this treacherous thief, have nothing 
but falsehood in all deeds. Oh Lord, consort of the goddess with decorated eyes, pray, grant that
I may have the same dedication as Thy devotees ever true to Thee.

74.     வேண்டு நின்க ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே
    யாண்டு கொண்டு நாயி னேனை யாவ வென்ற ருளுநீ 
    பூண்டு கொண்ட டியனேனும் போற்றி போற்றி யென்று மென்று
    மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே

    வேண்டும், நின் கழல் கண் அன்பு: பொய்ம்மை தீர்த்து, மெய்ம்மையே 
    ஆண்டுகொண்டு, நாயினேனை, 'ஆவ' என்று அருளு, நீ ;
    பூண்டு கொண்டு அடியனேனும் 'போற்றி ! போற்றி! ' என்றும், என்றும் 
    மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன ! நின் வணங்கவே.

    veeNdum nin kazaRkaN anpu poymmai thiirththu meymmaiyee 
    aaNdu koNdu naayineenai aava enRu aruLu nii
    puuNdu koNdu adiyaneenum pooRRi pooRRi enRum enRum 
    maaNdu maaNdu vanthu vanthu manna nin vaNangkavee

பொ-ரை :  அரசனே! பொய்யினை நீக்கி உண்மையாகவே  ஆட்கொண்டருளி
நாயனையேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள வேண்டும். உன் திருவடிகளைச் சென்னி
மேற்கொண்டு கடையேனாகிய யானும் வணக்கம் வணக்கம் என்று எப்போதும்
சொல்லவேண்டும். பிறவி வரினும் இறந்து இறந்து மீண்டும் உன்னையே வணங்குவதற்கு
உன் திருவடிக் கண் அயரா அன்பினை வேண்டுகிறேன்.

    Grant, that I may truly dedicate myself to Thy bejeweled Feet. Grant Thee Thy  Grace and    
take me, this cur, under Thee. I request the favour of letting me pay obeisance to Thee over and
over again - even death after death I shall always come back to offer obeisance to Thee, Lord.

கு-ரை: ஆவ, இரக்கக் குறிப்பு. ஐயோ என்று இரங்கி அருளுகின்ற என்றும் கொள்ளலாம்.

75.     வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கு மோலமிட் 
    டுணங்கு நின்னை யெய்த லுற்று மற்றொ ருண்மை யின்மையின்
    வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற் 
    கிணங்கு கொங்கை மங்கை பங்க வென்கொ லோநி னைப்பதே.

    வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு 
    உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஒர் உண்மை இன்மையின்
    வணங்கி, யாம் விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு 
    இணங்கு கொங்கை மங்கை பங்க! என் - கொலோ நினைப்பதே?

    vaNangkum ninnai maNNum viNNum veetham naankum oolam iddu 
    uNangkum ninnai eythal uRRu maRRoor uNmai inmaiyin
    vaNangki yaam videengkaL enna vanthu ninRu aruLuthaRku         
    iNangku kongkai mangkai pangka enkoloo ninaippathee

பொ-ரை: நெருங்கிய நகில்களையுடைய மாதினை ஒரு  பாகமாக உடையவனே !
உன்னையன்றி வேறொரு மெய்ப்பொருள் இல்லை.  அதனால் மண்ணுலகமும்
விண்ணுலகமும் உன்னை அடைய விரும்பி வழிபடுகின்றன. மறைகள் நான்கும் உன்னைக்
காண ஓலமிட்டுக் காணப் பெறாமையால் வாடுகின்றன. அடியோங்களாகிய நாங்களும்
உன்னை வணங்கி, 'விடமாட்டோம்' என்று கூறவும் நீ வெளிப்போந்து அருள் செய்வதற்குத் 
தடையாக எதனை நினைக்கிறாய்?  அவ்வாறு நினையாமல் இணங்குவாயாக. 

    Why doest Thou delay Thy grace, Oh Lord, consort of Goddess Uma? Why this delay to 
those of us who pay obeisance and declare that they will not relent on this, as there is no truth
other than Thyself. The earth and the sky (ever) do pay obeisance to Thee. The four scriptures
cry out for Thee and feel exhausted, unable to see Thee.

கு-ரை: 'இணங்கு' என்பதைக் கொங்கை என்பதோடு கூட்டுதல் ஒரு முறை, 'அருளுதற்கு' என்பதோடு
கூட்டிப் பொருளுரைப்பது உண்டு.  'மற்றொருண்மை யின்மையின் என்கொலோ நினைப்பதே' என 
இயைத்து, வேறு மெய்ப்பொருளின்மையின், நின்னைத் தவிர எதனை நாங்கள் நினைப்பது, என்றும் கூறுப.


76.     நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாக்கினாற் 
    றினைத்த னையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே 
    அனைத் துலகு மாய நின்னை யைம்பு லன்கள் காண்கிலா 
    வெனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை பாத மெய்தவே.

    நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால் 
    தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல்; ஆவ கேட்பவே 
    அனைத்து உலகும்; ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா ;
    எனைத்து, எனைத்து அது, எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே? 

    ninaippathu aaka sinthai sellum ellai eeya vaakkinaal 
    thinai thanaiyum aavathu illai sollal aava keedpavee        
    anaiththu ulakum aaya ninnai aimpulankaL kaaNkilaa 
    enaiththu enaiththu athu eppuRaththu athu enthai paatham eythavee        

பொ-ரை: நின்னை மனம் நினைத்து, அறிவதற்காக மேற்பட்டுச் செல்லும். அது செல்லும்
அளவைப் பொருந்துவதற்கு, சொல்லினால் சிறிதும் கூடவில்லை. சொல்லக்கூடியன 
எல்லாம் காதினாற் கேட்கப் பட்டவையே. எல்லா உலகுமான உன்னை இந்த உடம்பின் கண்
உள்ள ஐம்பொறி அறிவுகள் அறியமாட்டா.  எமது தந்தையாகிய நினது திருவடியை அடைய
அது எவ்வளவினதோ, எவ்விடத்துள்ளதோ தெரிகிலேன் .

    No one can describe Thee as within the possible bounds of human thought. It is only
what is commonly heard of about Thee, that is brought to our notice. The five senses cannot
realize Thee that art verily manifest as the entire cosmos. Hence of what kind,oh of what kind 
and in what locale, are Thy Feet, that I seek to reach, my Father?

கு-ரை: தினை - சிற்றளவிற்கு அறிகுறி . உலகினில் இறைவன் கலந்து இருந்தாலும் அவன் தன்னைக்
காட்டினாலொழிய, அறியக் கூடாமையின், 'ஐம்புலன்கள் காண்கிலா' என்றார். அசுத்த மாயையும் சுத்த
மாயையும் கடந்து நின்றமையால், 'எனைத்தெனைத்து' என்றார் போலும்.

77.     எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ் வஞ்சனேற் 
    குய்த லாவ துன்க ணன்றி மற்றொ ருண்மை யின்மையிற் 
    பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் 
    கீத லாது நின்க ணொன்றும் வண்ண மில்லை யீசனே

    எய்தல் ஆவது என்று நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு 
    உய்தல் ஆவது உன்கண் அன்றி, மற்று ஒர் உண்மை இன்மையின் 
    பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு 
    ஈது அலாது, நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ; ஈசனே !

    eythal aavathu enRu ninnai empiraan ivvanjsaneeRku 
    uythal aavathu unkaN anRi maRRu or uNmai inmaiyin         
    paithal aavathu enRu paathukaaththu irangku paaviyeeRku     
    iithu alaathu nin kaN onRum vaNNam illai iisanee

பொ-ரை: எம்பெருமானே! உன்னை அடைதல் என்பது எப்போது? இக்கள்வன் ஆகிய 
எனக்கு உன்னிடமின்றி உய்யும் வழிக்கு வேறொரு மெய்ம்மை இல்லாமையால்
ஆண்டவனே! சிறுவனென்று கருதி பாவியேனைக் காப்பாற்றி, இரங்கி அருளுக!  நீ 
இரங்கி அருள்கின்ற இச்செயலன்றி உன்பால் வந்து ஒன்றாகும் வழி வேறில்லை.

    For this wily me, there is no redemption save through Thee. Hence, when shall I reach Thee, 
Oh my Chief? Pray protect me there is no other way for me, this sinner, to merge with Thee.

கு-ரை: பைதல் = குழந்தை, சிறுவன். ஒன்றும் வண்ணம் = ஒன்று சேரும் விதம்.

78.     ஈச னேநீ யல்ல தில்லை யிங்கு மங்கு மென்பதும் 
    பேசி னேனொர் பேத மின்மை பேதை யேனெ னெம்பிரா 
    னீச னேனை யாண்டு கொண்ட நின்ம லாவொர் நின்னலாற் 
    றேச னேயொர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே

    ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் ,
    பேசினேன் - ஒர்பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் !
    நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா!  ஒர் நின் அலால், 
    தேசனே! ஒர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே 

    iisanee nii allathu illai ingkum angkum enpathum        
    peesineen oru peetham inmai peethaiyeen en empiraan   
    niisaneenai aaNdu koNda ninmalaa oru ninnalaal 
    theesanee oru theevar uNmai sinthiyaathu sinthaiyee.

பொ-ரை: எமது தலைவனே! ஆண்டவனே! இகத்திலும் பரத்திலும் உன்னையன்றி யாதும்
இல்லையென்பதும், நீ வேறுபாடின்றி யாண்டும் கலந்துள்ளாய் என்பதும் அறிவில்லாத யான்
எடுத்துரைத்தேன். உரைத்தலாற் பயன் என்ன?  புலையனேனை ஆட்கொண்ட
மாசற்றவனே! ஒளியானவனே ! ஒப்பற்ற உன்னை அல்லாமல் பிறிதொரு கடவுள்
உண்டென்பதை என் உள்ளம் நினையாது.

    Lord, although I am an ignorant one, I have been talking thus: "There is nothing here or 
anywhere else but Thee, and that all life is merged in Thee, undifferentiated. Thou, free of all
affliction, took me under Thee". Lord effulgence, my mind does not think of any other god than Thee.

Note: The nature of god and the state of the soul in liberation. God is all pervasive and the 
    soul enjoys bliss in the state of release.

79.     சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரி லைம்பு லன்களான்
     முந்தை யான கால நின்னை யெய்தி டாத மூர்க்கனேன்
     வெந்தை யாவி ழுந்தி லேனெ னுள்ளம் வெள்கி விண்டிலே
     னெந்தை யாய நின்னை யின்ன மெய்த லுற்றி ருப்பனே

    சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச், சீர் இல் ஐம் புலன்களால் 
    முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் 
    வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்; 
    எந்தை ஆய நின்னை , இன்னம் எய்தல் உற்று, இருப்பேனே.

    sinthai seykai keeLvi vaakku siiril aimpulankaLaal 
    munthai aana kaalam ninnai eythidaatha muurkkaneen
    venthu aiyaa vizunthileen en uLLam veLki viNdileen 
    enthai aaya ninnai innam eythal uRRu iruppanee

பொ-ரை: நீ என்னை ஆட்கொண்ட முன்நாளில் மனம், வாக்கு, செயல், உலகக் கேள்வி, 
நயமில்லாத ஐம்புலன்கள் முதலிய தடைகளாலே உன்னை அடைந்திடாத மூடன் யான்.
உடனேயே உடல் தீயிற் பொருந்தப் பெற்று இறந்து வீழ்ந்தேனில்லை. மனம் நாணி, நாண
மிகுதியால் இறந்தேனில்லை. எங்கள் அப்பனாகிய உன்னை இன்னும் கூட வந்தடையாது, 
அடையக் கருதி இங்கு இருப்பேன் ஆயினேன் (இது எவ்வளவு பரிதாபம்!)

    I, this wicked me, in previous times, did not get to Thee by thought, word, deed and 
discourse, due to the wayward nature of the five senses. For this lapse, I did not burn myself out,
nor in shame break down (as in atonement). Nevertheless, I shall wait, longing to get at Thee,
my Father!

கு-ரை: சிந்தை முதலியன மாயா காரியங்களாய்த் தடை விளைத்தன என்பதே கருத்து. அவை
கருவியாகாமை தெளிக.  அடிகளின் தீவிரப் பக்குவம் குறிப்பது, இச்செய்யுள்.

80.     இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னதாட்
    கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க லந்து போகவும் 
    நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த துண்ட தாயினும் 
    விருப்பு முண்டு நின்க ணென்க ணென்ப தென்ன விச்சையே

    இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள் 
    கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும் 
    நெருப்பும் உண்டு; யானும் உண்டு இருந்தது, உண்டது-ஆயினும், 
    விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது, என்ன விச்சையே!

    iruppu nenjsa vanjsaneenai aaNdu koNda ninnathaaL         
    karuppu maddu vaay maduththu enai kalanthu pookavum 
    neruppum uNdu yaanum uNdu irunthathu uNdathu aayinum 
    viruppum uNdu ninkaN enkaN enpathu enna vissaiyee

பொ-ரை: இரும்பு போலக் கடுமையான மனமுடைய கள்வனேனை ஆட்கொண்டருளினாய்.
நின் திருவடியில் எழும் கரும்புத்தேன் என்னை விழுங்கி உடன் கலந்து செல்லவும் (உடல் விடுவதற்கு)
நெருப்பிருந்தது. அடியேனும் உணவு கொண்டு இங்கு இருந்தது உண்டு;  எனினும் உடலை நீத்து 
உன்னை அடையாத நான் உன் மீது அன்பும் உண்டென்று கூறுவது என் அறியாமையே.

    I had tasted Thy sugary Feet that absorbed me, this wily one of iron-like heart. After this 
tasting and Thy departure, I stay here in anguish. I did not burn myself out though there was fire
(on hand). I continue eating and living here, with no other care. It is indeed ignorance for me to
declare that I have yet any desire for merger with Thee.

கு-ரை: உடம்பு நிலைத்தற்குக் காரணமாய உலகப்பற்றிருப்பதாகக் கருதித் தம்மை 'வஞ்சனேன் ' என்றார்.
கருப்புமட்டு = கருப்பஞ்சாறு. அது வாய் மடுத்தமை திருவண்டப்பகுதியில் காண்க.

                    THIRUCHCHITRAMBALAM

5.9 ஆனந்த பரவசம்                5.9. ANANDA PARAVASAM

கலிநிலைத்துறை                    Ecstatic Bliss

            திருச்சிற்றம்பலம்

81.     விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய்
    இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன் றாள்சேர்ந்தா 
    ரச்சத் தாலே யாழ்ந்திடு கின்றே னாரூரெம் 
    பிச்சைத் தேவா வென்னான் செய்கேன் பேசாயே

    விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய் ;
    இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார் ;
    அச்சத்தாலே, ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்
     பிச்சைத்தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.

    vissu keedu poykku aakaathu enRu, ingku enai vaiththaay 
    issaikku aanaar ellaarum vanthu un thaaL seernthaar
    assaththaalee aaznthidu kinReen aaruur em 
    pissai theevaa en naan seykeen peesaayee

பொ-ரை: பொய் என்னும் வித்து இவ்வுலகில் கெட்டொழிதல் கூடாது என்பதற்காக ,
பொய்யன் ஆகிய என்னை இவ்வுலகில் இருத்தினாய். உன் விருப்பத்துக்கு ஒத்தவர்கள் 
போய் உன் திருவடிப்பேறு பெற்றார்கள். திருவாரூரில் வீற்றிருக்கும் எமது ஐயங்கொள் 
பிரானே! நான் பயத்தால் அழுந்துகின்றேன். நான் உய்வதற்கு யாது செய்வேன், கூறி
அருள்வாயாக!

    Lord! Thou made me stay back here, casting me away as a damaged seed that cannot 
sprout, while all others who pleased Thee, moved up and reached Thy Feet. I am now sinking 
down in fear, Oh mendicant Lord of Thiruvaaroor. Kindly speak out, what is it that I can do
here, now.

கு-ரை: ஆரூராகிய இதயத்திலுறையும் பிச்சைத் தேவா, எனக்கு அருட் பிச்சைபோடு என்று குறித்தவாறு 
காண்க. விச்சு=வித்து, பொய்க்கு= பொய்யின் - உருபு மயக்கம்

82.     பேசப் பட்டே னின்னடி யாரிற் றிருநீறே 
    பூசப் பட்டேன் பூதல ராலுன் னடியானென் 
    றேசப் பட்டே னினிப்படு கின்ற தமையாதால் 
    ஆசைப் பட்டே னாட்பட் டேனுன் னடியேனே

    பேசப்பட்டேன் நின் அடியாரில்;  திருநீறே 
    பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று 
    ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமை யாதால் 
    ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.

    peesappaddeen nin adiyaaril thiru neeRee        
    puusappaddeen puuthalaraal un adiyaan enRu         
    eesappaddeen inippadukinRathu amaiyaa thaal
    aasaippaddeen aadpaddeen un adiyeenee

பொ-ரை: உனது அடியாருள் ஒருவனாகப் பெரியோரால் எடுத்துரைக்கப் பெற்றேன்.  திருநீறு
பூசுதலைப் பொருந்தினேன். உலகரால் என் அமைச்சு நிலைமாறி உன் அடியான் என்று 
இகழப்பட்டேன். இனி இவ்வுலகில் பொருந்தி இருத்தல் கூடாது என்று வீடு அடைய
ஆசைப்பட்டேன். உனக்கு அடிமையானேன். உனக்கே ஆட்பட்டவன் ஆனேன். உன்
அடியேனை நீ காத்திட வேண்டும். 

    I was earlier counted as one of Thy devotees. I then got smeared all over with holy white 
ash. And, I was jeered at by worldly folks as Thy slave. I cannot bear any more of these (Oh
Lord!). I Thy vassal sincerely yearn for Thee, yearn to be in servitude under Thee:

கு-ரை: பெரியோர் பேச, உலகம் ஏசினமை கூறினர். படுகின்றது = உலகிற் பொருந்துகின்றது.
அமையாது=பொருந்தாது. ஆல் - அசை

83.     அடியே னல்லேன் கொல்லோ தானெனை யாட்கொண் டிலைகொல்லோ 
    அடியா ரானா ரெல்லாரும் வந்துன் றாள் சேர்ந்தார்
    செடிசே ருடல மிதுநீக்க மாட்டே னெங்கள் சிவலோகா 
    கடியே னுன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே

    அடியேன் அல்லேன்-கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை-கொல்லோ? 
    அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார்;
    செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா !
    கடியேன் உன்னைக், கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.

    adiyeen alleen kolloo thaan enai aadkoNdilai kolloo 
    adiyaar aanaar ellaarum vanthu un thaaL seernthaar
    sedi seer udalam ithu niikka maaddeen engaL sivalookaa         
    kadiyeen unnai kaNNaara kaaNumaaRu kaaNeenee

பொ-ரை: நான் உன் அடியான் அல்லனோ? நீ, தானே வந்து என்னை ஆட்கொள்ள 
வில்லையோ?  உன் அடியார்கள் யாவரும் உன் திருவடியைச் சேர்ந்து விட்டார்களே?
சிவலோக முதல்வனே! தீவினை பொருந்திய இவ்வுடலை நீக்க மாட்டேன்; கடினமான 
நெஞ்சுடையேன்; உன்னை நேரே கண் குளிரப் பார்க்கும் வழியை அறிய மாட்டேன்.

    Lord, am I not Thy devotee? Didst thou not take me in as Thy vassal? Lord of Civa 
Loka, all those that became Thy devotees went over to Thee and reached Thy Feet. But, I am
unable to shake off this foul physical frame of mine. I, of mind so hard, do not find the right way
to see Thee to my eye's delight.

Note: St.Ramalingar in his Arutpa echoes similar thoughts in his verse "வாழையடி வாழையென.. ..
    யானொருவனல்லனோ". St. Ramalingar followed strictly the foot steps of Saint 
    Maanikkavaachakar whom he took as his preceptor par excellence.

கு-ரை: பிற அடியாரடைந்த வீட்டினைத் தலைப்படாமையால் அடிகள், தம்மை அவன் ஆண்டமையும், தாம்
அடிமையானதும் இல்லையோ என்று ஐயுறுவார் போன்றனர். செடி= பாவம், குணமின்மை, தீவினை.
கடியேன் - கடுமை யுடையேன். காணும் ஆறு= காணும் வழி.

84.      காணு மாறு காணே னுன்னை யந்நாட் கண்டேனும் 
    பாணே பேசி யென்றன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி 
    ஆணே பெண்ணே யாரமுதே யத்தா செத்தே போயினே 
    னேணாணில்லா நாயினே னென்கொண் டெழுகே னெம்மானே

    காணும் ஆறு காணேன்; உன்னை அந்நாள் கண்டேனும் 
    பாணே பேசி, என்-தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி !
    ஆணே பெண்ணே, ஆர் அமுதே, அத்தா செத்தே போயினேன் 
    ஏண் நாண் இல்லா நாயினேன், என்கொண்டு எழுகேன், எம்மானே?

    kaaNumaaru kaaNeen unnai annaaL kaNdeenum              
    paaNee peesi en thannai paduththathu enna paranjsoothi
    aaNee peNNee aar amuthee aththaa seththee pooyineen 
    eeN naaN illaa naayineen enkoNdu ezukeen emmaanee

பொ-ரை: எங்கள் பெரியோனே! அறியும் வழியாக உன்னை அறிய மாட்டேன். என்னை 
ஆட்கொண்ட நாளில் உன்னை நான் காணப் பெற்றும் பாழானவற்றைப் பேச 
என்னை ஆட்படுத்தியது எதுவோ? மேலான ஒளிப் பிழம்பே!  ஆணாகவும்
பெண்ணாகவுமான தெவிட்டாத அமுதமே! அப்பனே ! நான் பயனற்று ஒழிந்தேன். வலியும் 
மானமுமில்லா நாயனையேன் எதனைத் துணையாகக் கொண்டு மேற்செல்வேன்?

    I do not find the way to see Thee (now, Oh Lord!), Even when I saw Thee earlier 
(in Thirup-Perun-Thurai), how come thou spoke sweet words to me then and let me stay back in this
world? Light effulgence, Thou male, female, rare ambrosia, Oh Sire, I am virtually dead and
gone now. How shall I, this weak shameless cur, rise up my Lord?

Note:   Our Saint felt much pained at having been left out, when all the other devotees were
    taken up by the Lord in Thirup-Perun-Thurai to get absorbed in Him.  This soulful 
    refrain is seen in many decads of the Saint. Confer, the lines "கோலமார் தரு பொதுவினில்    
    வருகென".  The good Lord, however consoled him with sweet diplomatic words , which
    was a matter of solace for the saint- vide line 12 கீர்த்தி திருஅகவல்.

கு-ரை:  பாண்= பாழ் . பேசி பேச, பேசி யொழிய , ஏண் =வலி

85.     மானேர் நோக்கி யுடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
    தேனே யமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங் 
    கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர் குறுகப் 
    போனா ரடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

    மான்நேர் நோக்கி உடையாள் பங்கா, மறைஈறு அறியா மறையோனே 
    தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும் 
    கோனே, சிறிதே கொடுமை பறைந்தேன்; சிவ மாநகர் குறுகப் 
    போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.

    maanneer nookki udaiyaaL pangkaa maRai iiRu aRiyaa maRaiyoonee
    theenee amuthee sinthaikku ariyaay siRiyeen pizai poRukkum 
    koonee siRithee kodumai paRaintheen siva maanakar kuRuka
    poonaar adiyaar yaanum pooyyum puRamee poonthoomee

பொ-ரை: மான் போலும் விழியுடைய, எம்மை உடையாளாகிய அருட்சத்தி பாகனே ! வேத 
முடிவும், அறியவொண்ணா இரகசியப் பொருளாவானே!  தேன் போல இனியவனே!
அமுதம் போல் சாவா மருந்தே! மனத்தால் கிட்டுவதற்கு அரியவனே! சிறுமை உடையேனது 
குற்றத்தை நின் பெருமையால் பொறுத்தருளும் அரசனே!  அடியேன் ஒரு  சிறிது
கொடியவற்றைக் கூறினேன். அடியார் சிவபெரும்-புவனமடையச் சென்றனர். அடியேனும்
பொய்யும் அவர்க்குப் புறம்பாக உலகில் தங்கினோம்.

    Consort of Goddess Uma of deer like eyes, Lord that is beyond scriptures,Lord that is 
like honey and elixir, Lord that cannot be comprehended by us, Oh our Chief that condones the
faults of this little me, I spoke somewhat harsh words. Hence, while Thy other devotees went over 
to the exalted city of Civa Loka, I and my load of falsehood stay here behind.

கு-ரை: அடிகள் 'சிறிது கொடுமை பறைந்தது'  யாதெனத்  தெரியவில்லை. அடியார் பலரும் சிவபுரம் 
புகுதலை விரும்பத் தாம் உலகில் சின்னாளிருக்க இசைந்தமையை அவ்வாறு கூறி யிருத்தல் கூடும்.
'ஏலத்தன்னை ஈங்கொழித் தருளித்' தில்லைக்கு வரும்படி இறைவன் பணித்ததை ஒப்புக் கொண்டது,
 உடனே சிவபுரம் சேர இயலாமைக்கு ஏதுவாயிற்று. நேர்மைக்கு மாறு, கொடுமை; நேரே சிவபுரம்
போவதற்கு மாறாக உலகில் இருத்தல் கொடுமையாயிற்றுப் போலும்.

86.     புறமே போந்தோம் பொய்யும் யானு மெய்யன்பு 
    பெறவே வல்லே னல்லா வண்ணம் பெற்றேன்யா 
    னறவே நின்னைச் சேர்ந்த வடியார் மற்றொன் றறியாதார் 
    சிறவே செய்து வழிவந்து சிவன் நின்றாள் சேர்ந்தாரே

    புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு
    பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் 
    அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் ;
    சிறவே செய்து வழிவந்து, சிவனே ! நின் தாள் சேர்ந்தாரே.

    puRamee poonthoom poyyum yaanum mey anpu             
    peRavee valleen allaa vaNNam peRReen yaan 
    aRavee ninnai seerntha adiyaar maRRu onRu aRiyaathaar 
    siRavee seythu vazivanthu sivanee ninthaaL sernthaaree

பொ-ரை: நிலையா உடம்பும் யானும் நினக்குப் புறம்பே போயினோம். உண்மையன்பு 
பெறுதற்கே உரியன் அல்லா முறைமையை யான் அடைந்தேன். முற்றிலும் உன்னை
அடைந்த அன்பர் உன்னைத் தவிர வேறொன்றையும் கருத்தில் கொள்ளாமல், சிறப்பாக 
வீட்டுக்குரியதைச் செய்து, செந்நெறியில் சென்று, சிவபெருமானே உன்னடி அடைந்தனர்.

    Falsehood and I stayed out and stayed away. I became unworthy of true love. Thy pure 
devotees, knew not falsehood, clung to Thee and through deeds of glory reached Thy Feet, Oh!
Lord Civa.

கு-ரை: உடலிருத்தலைக் கருதாத அன்பர் வீட்டிற்குரியவாறே செய்வன செய்து அதனைப் பெற்றார் 
என்பது குறிப்பு. உடலையும் கடவுளையும் கருதாது, கடவுளையே கருதி மற்றவற்றை ஒழித்தனர் என்பார்
'அறவே நின்னைச் சார்ந்த' என்றார். சிறவு= சிறப்பு

87.     தாரா யுடையா யடியேற் குன்றா ளிணையன்பு 
    பேரா வுலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யா 
    னூரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங் குன்றா ளிணையன்புக் 
    காரா யடியே னயலே மயல் கொண் டழுகேனே

    தாராய், உடையாய் ! அடியேற்கு உன் தாள்-இணை அன்பு: 
    பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன்யான் ;
    ஊர் ஆ மிலைக்கக், குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள்-இணை அன்புக்கு 
    ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு அழுகேனே.

    thaaraay udaiyaay adiyeeRku un thaaL iNai anpu
    peeraa ulakam pukkaar adiyaar puRamee poontheen yaan 
    uur aa milaikka kuruddu aa milaiththu aangku un thaaL iNai anpukku
    aaraa adiyeen ayalee mayal koNdu azukeenee. 

பொ-ரை: என்னை உடையவனே! அடியேனுக்கு உனது இரண்டு திருவடிகளிலும் செய்ய
வேண்டிய அன்பைத் தருவாயாக!  மீளாத உலகமாகிய வீட்டினுள் உன் மெய்யடியார்
போய்ப் புகுந்தனர். யான் வெளியே போய் ஒழிந்தேன். ஊரிலுள்ள நல்ல பசு நற்புலங்களில்
புல் மேய்ந்திட அதனோடு சென்ற குருட்டுப் பசுவும் மேய்ந்தது. அடியார்கள் உன்னை
அடைந்துவிட, அன்புக் கண் இல்லானாகிய யான், இனி யார் பக்கம் எப்படிச் சென்று
பயனடைதல் கூடும்?

    Oh my Chief, pray grant me the grace of union with Thy Feet. Thy devotees entered 'the
world of No Return', whereas I had to step back and await my turn to unite with Thee. Take me
Oh Lord on to the grace of Thy Feet. Just as a blind cow trails behind and follows after the other
bellowing cows of the village, I follow Thee and long to serve Thee and cry out in desperation.

கு-ரை: ஊர்ப் பசுவொடு சென்ற குருட்டுப் பசு மேய்ந்தது. உன் மெய்யடியாரோ, வீடு  சென்றனர்.
அன்புக்கண் இலனாகிய நான் அவரோடு சேர்ந்து போதற்கு இடமில்லை. இனி யார் பக்கமாக , எப்படி
நான் சென்று பயனடைதல் கூடும் என்றார். மிலைத்தல் = மேற்கொள்ளுதல் - ஈண்டுப் புல்லினை
மேற்கொண்டு தின்றலாம். 'போரா' என்ற பாடமும் உண்டு, அதனைப் போதா என்பதன் மரூஉவாகக் கொள்வர்.

88.     அழுகே னின்பா லன்பா மனமா யழல் சேர்ந்த 
    மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு 
    தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே&nbs