திருநெறிய தமிழோசை
Please click this Icon to play Radio
Shaiva Lahari

||     செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை

  • share in Facebook
  • share in Google+
  • share in Twitter
  • share in whatsup

            சிவமயம்

            சிவபுராணம்

        ( சிவனது அநாதி முறைமையான பழமை)
         திருப்பெருந்துறையில் அருளியது

            கலிவெண்பா

            1. CIVAPURANAM

The Beginningless Ancientry of Lord Civan (Sung whilst in Thirup-Perun-Thurai)

            திருச்சிற்றம்பலம்

    திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் குரு வடிவாக எழுந்தருளி மணிவாசகப்
பெருந்தகைக்கு அருளாரமுதத்தை வழங்கிய சிவபெருமான், அருட்கண்பாலித்துச் “சிதம்பரத்தில்
ஆன்மாக்களுய்ய அனவரதமும் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அருளுகின்றோம்; அவ்விடம் வருக"
என்று ஆணை தந்து மறைந்து அருளினார். கேட்ட வாதவூரடிகள் திடுக்கிட்டு, குருவின் திருமேனி 
காணும் இணையில்லா இன்பத்தை இழக்கின்றோமே என்று இரங்கி, அன்பரோடு மருவுதலாகிய 
சிவநெறியில் தலைப்படுவாராக அடியார் கூட்டத்தை அடைந்தார் . அங்கு அடியார்களும்
தாமுமாகக் குருந்தமரத்தடியில் தெய்வப் பீடிகை ஒன்று செய்து, அதில் குருநாதனுடைய திருவடித்
தாமரைகளை அமைத்து வணங்கி வந்தார். ஒருநாள் இவர் உள்ளத்து, “இறைவன் அடியடைந்தார் 
அன்பிலர் ஆயினும் பாடிப் பரவுவாராயின் இறைவன் அவர்க்கு இரங்கி அருள் செய்வான்” என்ற
எண்ணம் திருவருள் விளக்கத்தால் தோன்றியது . உடனே மங்கலச் சொல் யாவற்றிற்கும்
தலையாயதும், தான் மங்கலமாதலேயன்றித் தன்னைச் செபிப்பார்க்கும் தியானிப்பார்க்கும் 
பெருமங்கலம் தரவல்லதும், வேதவிருட்சத்து வித்தாய் உள்ளதும் ஞானசம்பந்தப் 
பெருந்தகையாரால் “வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது” என்றும் “செந்தழல் ஓம்பிய செம்மை 
வேதியர்க்கு அந்தியுள் மந்திரம்" ஆவது என்றும், திருநாவுக்கரசு சுவாமிகளால் "கற்றுணைப்        
 பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது" என்றும், "நாவினுக் கருங்கலம்", “நல்லக
 விளக்கு" என்றும் பாராட்டப் பெறுவதும், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்று மூன்று
முறைகளால் பரிபாக நிலைக்கு ஏற்ப ஓதப்பெறுவதும் ஆகிய திருவைந்தெழுத்தை முதலாக வைத்து 
"நமச்சிவாய வாழ்க” என இக்கலிவெண்பாவை அருளிச் செய்தார்கள்.

    சிவபுராணம் - சிவனது அநாதி முறைமையான பழைமை . "அநாதியுடனாம் நின்மல 
சிவனுடைய அநாதி முறைமையான பழைமை" என்பது அகத்திய மாமுனிவர் அருளிய திருவாசக
அனுபவச் சூத்திரம்.

    புராணம் - பழைமை.  சிவபுராணம்-  சிவனது பழைமை. பழைமையில் காலத்தொடு பட்ட
பழைமையும்,  காலம் கடந்த பழைமையும் என இருவகை உண்டு.  அவற்றுள் சிவனது பழைமை
காலாதீதமானது. காலத்தொடு கற்பனை கடந்தது.  ஆதலின், அநாதி நித்திய முறைமையான
பழைமை எனப்பட்டது. சிவனது பெருங்கருணையாகிய அநாதியான சச்சிதாநந்த முறைமை;
இதனுள்  வேதாகம  புராண சாத்திர சுத்த சைவ அபேத அத்துவித சித்தாந்த சம்பிரதாயம் முழுதும்
அடங்குந் தன்மைக்குச் சிவபுராணம் என்று பெயராயிற்று என்பது பழைய உரை. இதன் கருத்து
இறைவனுடைய உண்மை அறிவானந்தப் பழைமையே சிவ புராணம், இதனுள் ஞானவாயில்களாகிய
வேதாகம விதிகளும் அவற்றின் விளைவும் அனைத்தும் அடங்கும் என்பதாம்.

    இது சிவனது அருவநிலை கூறுவது என்பர் சிலர். 

    "தேசுறுமா ணிக்கமெனச் சிறந்ததிரு வாசகத்தில் 
    பேசுதிருச்  சிவபுரா ணத்தகவற் பெருமைசொலில் 
    ஈசர்தமக் கியல்பான திருநாம  முதலெவையும்
     மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட்குறிப்பாம்"

என்பது பழைய திருப்பெருந்துறைப் புராணம்.

    இது கலிவெண்பாவால் ஆனது. சிலர் இதனை அகவல் என வழங்குவதைக் காண்கிறோம்.
பழைய திருப்பெருந்துறைப் புராண ஆசிரியரும் சிவபுராணத்தகவல் என்கிறார். ஆகவே
கலிவெண்பாவை அவர்கள் தவறி அகவல் என்கின்றார்கள் அல்லர். முதற்கண் உள்ள நான்கினில்
இது நீங்க ஏனையவை அகவலாக இருத்தலின் பெரும்பான்மை பற்றிய வழக்காகக் கூறினார்கள்
என்று கொள்க.

    இது தொண்ணூற்றைந்து அடிகளால் அமைந்த ஒரு கலிவெண்பா. இதனுள், "நமச்சிவாய
வாஅழ்க" என்பது, திருவாசக முழுதும் மணிமாலையுள் நூலிழைபோல ஊடுருவி நின்று ஒளிதரும்
பொருள் திருவைந்தெழுத்தாகலின் அது எம் மனத்துள் என்றும் நிலவுக என்னும் பொருளும், சிவ
ஞான போதப் பன்னிரண்டாம் சூத்திரத்து அணைந்தோர் தன்மையாக அமைந்ததன் கருத்தும்
அடங்க உணர்த்துகிறது.

    "நாதன் தாள் வாழ்க' என்பது முதல் 'இறைவனடி வாழ்க' என்பது வரையுள்ள அடிவாழ்த்து
 ஐந்தும் சிவன் நாதாதி நின்று அருள்வழங்கும் முறைமையை அறிவிக்கிறது.

    "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்பது முதல் உள்ள  "வெல்க" எனத் திருவடி
வெற்றி கூறும் பகுதி ஐந்தும் பஞ்சமல நிவிருத்தியை அறிவிப்பன.

    "ஈசனடி போற்றி" என்பது முதல் திருவடி போற்றிகள் எட்டும் இறைவனுடைய
காருண்யமாகிய எண்குணங்களைத் துதிப்பன.

    " சிந்தை மகிழ..... உரைப்பன் யான்' என்பது இச்சிவபுராணத்தை உயிர்கள் ஐம்புலக்
கட்டினின்றும் அகன்று, பேரானந்தம் பெற்று,  இன்பமெய்துக என்று இயற்றுதற்குக் காரணம்
இயம்புகின்றது.

    "கண்ணுதலான் தன் கருணை......... இறைஞ்சி" என்பது ஆசாரிய வணக்கம் அறிவிக்கின்றது. 

    "விண்ணிறைந்து....... எல்லையிலாதானே" என்பது இறைவனியல்பு உபதேச வாயிலான்
உணரத் தக்கது என்பது  உரைக்கின்றது.

    "நின் பெருஞ்சீர்..... பணிந்து" என்பது துதியும், இதன் பெருமையும், இதன் பொருட்பயனை 
உணருவோர் உணர்த்துவோர் எய்தும் பயனும் உணர்த்துகிறது.

    இவ்வண்ணம் இச்சிவபுராணம் பொருட்பேற்றினால் எட்டு பகுதியாக அமைந்துள்ளது.         
இவற்றின் அமைப்பையும் அழகையும் உரைக்கிடையில் காண்க. இப்பகுதி முழுதும் பழையவுரை 
தந்த கருத்துக் கருவூலமாகும்.

    "God Head is not a being full of Bliss, but Bliss itself"

    Poet, Sage and Saint Maanikkavaachakar affirms the above truth through his poetry 
Thiruvaachakam. It is a spirit. It is an outpouring of love to the Supreme by the soul. Saint 
Maanikkavaachakar composed these gems of divine utterances on Lord Civan and of man's 
relationship with Him, with the world and with fellow beings, so that all who read his psalms
may experience the divine greatness of His grace at work in all the activities of human life 
and in the universe.

    Civaprakasa Swamigal in his poem of praise on Thiruvaachakam exclaimed thus:

    " Oh Beloved of Vaathavoorar
    Thy Thiruvaachakam is the essence of exalted love and life"

    Mrs.Ma Ratna Navaratnam writes, "If poetry is the resonance of greatness of soul,
Thiruvaachakam stands unchallenged, as one of the finest gems of poetry in the literature of the
world. Maanikkavaachakar is acclaimed as one of the renowned poet, sage and saint".

    Ramachandra Deekshithar, the author of "Studies in Tamil Literature and History" says:
"The Thiruvaachakam relates an autobiographical story of the different stages of
Maanikkavaachakar's spiritual life and experience which ultimately enabled him to attain Bliss
ineffable and eternal. It is a torrential outflow of ardent religious feelings and emotions in
rapturous songs and melodies. The work may be regarded as a convenient hand book on
mystical theology".

    The first chapter in Thiruvaachakam is captioned as "CIVAPURAANAM".
Civapuraanam means Lord Civan's way of old or the beginningless ancientry of Civan, whose
acts of grace which give solace and redemption to souls, transcending all calculations of time.

    This may be generally termed as a prologue, corresponding to the Tamil word
"PAAYIRAM". It is a poem of praise on Lord Civan. It begins with the famous five-letter
mystic word "NAMACHCHIVAAYA". The word "NAMACHCHIVAAYA" is not only a five letter 
mystic word but also stands as the name of Lord Civan.  Similarly, the word "NAATHAN"
in the same line also stands for Lord Civan. Thus, Maanikkavaachakar starts the poem by paying 
salutations to the God head Lord Civan with an auspicious word.

    The antiquity and importance of this five-letter mystic word can be further explained by
quoting Yajur Veda. Among the three Vedas - Ruk, Yajur and Sama (Vedas are only three in number, 
Atharvana veda was added in a later period; That is why Vedas are called Thirayee (த்ரயீ) 
i.e, Three in number). Among the three Vedas, the middle one is Yajur. In the middle of 
Yajur veda is Thiru Vuruthiram (திருவுருத்திரம்). In the central piece of Thiru Vuruthiram, 
the following lines appear.

            "NAMACHCHIVAAYASA CIVATHARAAYASA"

            "நமச்சிவாயச சிவதராயச"

    The world famous scientist Darwin discovered the theory known as "Theory of Evolution".
The present day discovery of this scientific theory finds a place in Thiruvaachakam lines 26-31 
of this first poem:

    "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"

written by Maanikkavaachakar, thousands of years ago.  Of course, these six lines have been
made not in the order of evolution, but for the sake of consonance and alliteration the order 
has been altered.

    It will not be out of place here to quote the following lines from a poem writen by 
Jalal Ad-Din Rumi (1207-1273) a Persian mystic and poet.

    "I died as mineral and became a plant
     I died as plant and rose to animal
     I died as animal and I was man
     Why should I fear?
     When was I less by dying?
     Yet, once more I shall die as man to soar
     With angels blessed, but even from angelhood
     I must pass one; all except God death perish
     When I have sacrificed my angel-soul
     I shall become what no mind ever çonceived 
     Oh! Let me not exist"


    The penultimate lines in this poem reads:

    " பொருள் உணர்ந்து சொல்லுவார்
      செல்வர் சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்,
     பல்லோரும் ஏத்தப் பணிந்து"

i.e.one should conceive what he consumes, then he must realise, then he must comprehend

what Maanikkavaachakar has meant and then try to adhere to the pathway towards God that
he suggested in the poem"

    Thiru Muruga Kirubaanantha Vaariyaar, an exponent of Hindu religious scriptures in
Tamil, says, "The Civapuraanam is the essence of all the 108 upanishads".

    Similarly, there are many more aspects in the first poem itself, which is left to 
readers to conceive and appreciate.

1.1      நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
     இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
     கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

5.    ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க !
    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
     பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
     புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
    கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

10.     சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
    ஈசன் அடிபோற்றி ! எந்தை அடிபோற்றி !
     தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி! 
     நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
     மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி!

15.    சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி !
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!
    சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
     அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
     சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை,

20.     முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் 
    கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி 
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
     விண் நிறைந்து மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய் 
    எண் இறந்து, எல்லை இலாதானே!  நின் பெரும்சீர்

25.     பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன், 
    புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
    பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக்
    கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்
    வல்லசுரர் ஆகி முனிவர் ஆய், தேவர் ஆய், 

30.    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் !
    மெய்யே உன்பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
     உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற 
    மெய்யா! விமலா!  விடைப்பாகா!  வேதங்கள்

35.     "ஐயா"என,ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
    வெய்யாய்! தணியாய்!  இயமானன் ஆம்விமலா!
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி, 
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே !
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

40.     அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
    ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்!  அனைத்து உலகும் 
    ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய், 
    போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில் 
    நாற்றத்தின் நேரியாய்!  சேயாய் ! நணியானே!

45.     மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
     கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் 
    சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று 
    பிறந்தபிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த

50.     மறைந்து இருந்தாய், எம்பெருமான்!  வல்வினையேன் தன்னை!
     மறைந்திட மூடிய மாய இருளை
     அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,
    புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 

55.     மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 
    விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் 
    கலந்த அன்புஆகி, கசிந்து உள் உருகும் 
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
    நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி,

60.     நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு 
    தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! 
    மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! 
    தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
    பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே !

65.    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட 
    பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
     ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! 
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
     நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

70.     இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! 
    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
    சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே! 
    ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!

75.     கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் 
    நோக்கு அரிய நோக்கே!  நுணுக்கு அரிய நுண் உணர்வே!
     போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! 
    காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே!
    ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற

80.    தோற்றச் சுடர் ஒளி ஆய்ச், சொல்லாத நுண் உணர்வு ஆய்
     மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவுஆம்
     தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் 
    ஊற்று ஆன உண்ஆர் அமுதே! உடையானே! 
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

85.     ஆற்றேன்; "எம் ஐயா! அரனே! ஓ!" என்று என்று 
    போற்றி, புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்ஆனார்,
    மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே 
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
    நள் இருளில் நட்டம்பயின்று ஆடும் நாதனே!

90.     தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
     அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ!' என்று 
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார். சிவன் அடிக்கீழ்,

95.     பல்லோரும் ஏத்தப் பணிந்து.

            திருச்சிற்றம்பலம்

1.1      நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க 
    விமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
     கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க 
    வாகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க

    நமச்சிவாய வாஅழ்க!  நாதன் தாள் வாழ்க !
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
     ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

    namasivaya vaazkha naathanthaaL vaazka
    imaipoluthum en nenjil neengkaathaan thaaL vaazka 
    kookaziy aaNda kurumaNithan thaaL vaazka
    aakamam aaki ninRu aNNippaan thaaL vaazka

பொழிப்புரை 1 - 4:   தலைவனது பெருமையை உணர்த்தும் நாமமாகிய நமச்சிவாய என்னும் 
திருவைந்தெழுத்தானது என்றும் நிலை பெறுக. தலைவனது திருவருட் சத்தியானது என்றும் 
விளங்குக.  கண்ணை மூடி விழிக்கும் நேரமளவுங்கூட அடியேனுடைய உள்ளத்தை விட்டு 
அகலாதவனுடைய திருவடிகள் வாழ்வனவாக. திருவாவடுதுறை அல்லது 
திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியார்க்கு மெய் உணர்த்தி ஆட்கொண்டு அருளிய 
தலைமை அருட் பேராசிரியராகிய முதல்வனின் திருவடிகள் என்றும் விளங்குக.
வீட்டு நூல் கூறும் தனிப்பொருளாய் நின்று இனிமை தருவானுடைய திருவடிகள், உள்ளத்தில் என்றும் 
நிலை பெறுக. தன்னிலையில் ஒருவனாய், அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய்
உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக.

 குறிப்புரை 1 - 4:  "நமச்சிவாய" என்னும் சொல் வடமொழியில் "வணக்கம் சிவனுக்கு" என்று 
பொருள்படும். நமஸ்= வணக்கம். சிவாய= சிவனுக்கு,  சித்தாந்த நூல் முறைப்படி, "நமச்சிவாய" 
என்பதற்கு எழுத்துப் பொருள் கொள்ளுமிடத்து, நகரம், உயிர்கள் உலகியலில் செல்லுதற்குத் துணை
புரிந்து நிற்கும் கடவுளது மறைப்புச் சக்தியைக் குறிக்கும். மகரம், மலமாகிய உலகப் பாசத்தைக் குறிக்கும் .
சிகரம், சிவமாகிய கடவுளைக் குறிக்கும். வகரம், வீடடைதற்குத் துணைபுரியும் அருட்சத்தியைக் குறிக்கும்.
யகரம் உயிரைக் குறிக்கும். ஆணவத்துள் கிடக்கும் உயிரினைப் பிறவிக் கட்டினுள்  படுத்தி, உலகியலில் 
செலுத்தியும், ஆணவம் நீங்குதற்குரிய பக்குவம் வந்த போது கட்டுக்களை ஒழித்து அருட்சத்தி 
வாயிலாகத் தன்பால் வீடு பெறுவித்தும், உயிருக்கு நன்மை புரியும் கடவுளின் பெருந்தன்மையைத்
திருவைந்தெழுத்து விளக்குதலால், "நாதன் நாமம் நமச்சிவாய" எனப்பட்டது. நாதனை அவன் நாமத்தால் 
வழுத்தியபின், நாதனது சத்திக்கு வாழ்த்துக் கூறப்பட்டது. 

நமசிவாய என்பதைப் பெரிய ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் எனவும் , சிவாயநம என்பதை நுண்ணிய 
ஐந்தெழுத்து சூக்கும பஞ்சாக்கரம் எனவும் கூறுப.  கட்டு நிலையை நமசிவாய என்பதும், வீட்டு நிலையை 
சிவாயநம என்பதும் குறிக்கும். நாதன் என்பதற்கு நாத தத்துவ  முதல்வன் என்று பொருள் கொள்வதும் உண்டு.
தாள்= அருளாற்றல், இமைத்தல்= இயற்கையாகக் கண்மூடி விழித்தல், இமைப்பொழுது மிகச் சிறிய  கால
அளவைக் குறிக்கும். கோகழி = பசுத் தன்மை கழிதல். இப்பொருளில்  அது திருவாவடுதுறையைக் குறிக்கும் .
கோ= பெரிய, கழி= துறை. இப்பொருளில் திருப்பெருந்துறையைக்  குறிக்கும்.  

அடிகள் காலத்திற்கு முன்னமே நவகோடி சித்தபுரம் என்னும் திருவாவடுதுறையிலே இறைவன் பலர்க்கு அருள் 
புரிந்திருக்கக் கூடும். கோகழி இத்திருப்பதிக்கே பெரு வழக்கமான பெயர். திருப்பெருந்துறை என்ற பொருள், 
அடிகள் வரலாற்றிற்கு மிகவும் பொருத்தமானது. மணி= மாணிக்கம். அது  இரத்தினங்களுள் சிறந்ததாதல் பற்றித் 
தலைமையையும்  குறிக்கும். ஆகமம் = ஆகமப் பொருள். ஆகமம் வீட்டு நூலாதலின் கடவுள்,ஆகமப் 
பொருளாயினமை கூறினார்.  அண்ணிப்பான் என்பதற்கு அணுகி நிற்பான் என்று  பொருள் கொள்வாரும் உளர்.
 இறைவன்,  இறு என்பதனடியாகப் பிறந்தது. இறு = தங்கு.

5.      வேக னநேக னிறைவ னடிவாழ்க 
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க 
    கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

    ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க 
    வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
     பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க !
    புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க !
    கரம் குவிவார்  உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க!

    ekan aneekan iraivan adi vaazka
    veekang keduththaaNda veenthan adi velka 
    pirapaRukkum pinjakanRan peykazalkaL velka 
    puRaththaarkku seyoonRan puungkazalkaL velka 
    karanguvivaar uLmakizhung koonkazalkaL velka

பொ-ரை: 5 - 10; உய்தி கூடுதற்கு அருட்குரவனை நாடி அலைந்த மனத்தின் விரைவைத் 
தொலைத்துத் திருவருள் தந்து ஆட்கொண்ட மன்னனது திருவடிகள் மேம்படுக. பிறவியை
வேரறுக்க வல்ல தலைக்கோலப் பெருமானுடைய வீரச் சிலம்பு நிறைந்த திருவடிகள் சிறந்து 
விளங்குக. அன்பிற்குப் புறமாய் உள்ளவர்கள் அணுக ஒண்ணாத  தூரத்தில் உள்ளவனுடைய
அழகிய மெல்லடிகள் வெற்றியுடன் திகழ்க . கை கூப்பித் தொழுவார் தமது நெஞ்சத்தில் 
நினைந்து நினைந்து களிப்படைவதற்கு ஏதுவாகிய அரசனுடைய திருவடிகள் நிலைபெற்றுச்
சிறக்க; தலை குவித்து வணங்குவாரை மேன்மை அடைவிக்கும் புகழுடையானது திருவடிகள் 
வெற்றியுடன் மிளிர்க. 

1 - 10: "Namachchivaaya" the sacred and mystic five-lettered name of Lord Civan which extols
 His greatness be hallowed for ever. May the holy Feet of the Lord which symbolise His divine
 grace (Paraa Caththi or primal energy) be hallowed. Hallowed be the Feet of Civan who never 
quits my heart even for the twinkling of an eye. Let me praise the holy Feet of Civan, gem 
among all preceptors, who appearing in the place called "Kokazhi", made me realise the truth
and graciously accepted me as His (Some authors interpret the place "Kokazhi" as 
Thiruvaavaduthurai and some others claim that it refers to Thirup Perun-Thurai). My 
prostrations to the holy Feet of Lord Civan who, in the form of aagamaas draws the souls 
towards Him and blesses them with the sweetness of His grace. Hail the holy Feet of Civan who 
is One in His original stature, but who takes many forms as desired by His devotees and as 
necessitated by the circumstances, as He is immanent. Victory to the holy Feet of the King who
stilled the tumult of my mind, showered His grace on me and made me His. Victory to the 
anklet-girt Feet of Civan who wears the moon on His head (Pinahan) and who stops the cycle of 
my birth in this world. Victory to the beautiful soft Feet of Civan who is not accessible to those
who have distanced themselves from Him as they have no love for Him. Victory to the holy Feet 
of Civan, the King, who delights in the hearts of those who adore Him with joined palms.
Victory to the Feet of the glorious one who exalts those who bow their heads down at His Feet.

கு-ரை: 5 - 10 வேகம்= விரைவு, பிஞ்ஞகம்= தலைக்கோலம், பிஞ்ஞகம் = பின்னகம் = பின்+நகம்; 
(தலையின்) பிற்பகுதியில் விளங்கும் அணி . இறைவனுக்குப் "பிறை" அவ்வணியாகும் என்ப .'பெய்கழல்' 
என்பதில், 'பெய்' மிகுதியாகச் சாத்தப்படுதலைக் குறிக்கும். இறைவனது ஒப்பற்ற வெற்றிச் செயல்களைக்
 கண்ட விண்ணவரும் வீர அன்பர்களும் அவன் திருவடிக்கண் கழல்களைச் சாத்தினமை
 குறிப்பித்தவாறாம்.  கழல், திருவடிக்கு ஆகுபெயர். உள்=உள்ளம். கரங்குவித்தல் பெரும்பாலும்
 நெஞ்சிற்கு நேரே புறத்து நிகழ்தலின், அது அக மகிழ்வின் விளைவாயிற்று. சிரம், உயர்ந்த உறுப்பாகலின்
 ஓங்குவித்தல், சிரங்குவிதலின் பயனாகக் கூறப்பட்டது.

10.     சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க 
    வீச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி 
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி 
    மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி

    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !
    ஈசன் அடிபோற்றி! எந்தை அடி போற்றி!
    தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடி போற்றி!
     நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
     மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

    sirangkuvivaar oongkuvikkunj seeroonkazal velka
    iisan adi pooRRi enthaiy adi pooRRi
    theesanadi pooRRi sivanseevadi pooRRi
    neeyathee nindRa nimalan adi pooRRi.
    maayap piRappaRukkum mannanadi pooRRi

பொ-ரை 11-16:  ஆண்டவனுடைய திருவடிகள் நம்மைக் காப்பனவாக;  நம் அப்பனுடைய 
 திருவடிகள் காக்க; ஒளி மேனியனுடைய திருவடிகள் காக்க ; மங்கலப் பொருளாகிய
 சிவபெருமானுடைய செவ்விய பாதங்கள் காப்பனவாக; அன்பிலே விளங்கி நின்ற 
மாசில்லாதவன் திருவடிகள் காக்க; வஞ்சப் பிறவியை வேரறுக்கும் வேந்தன் திருவடிகள் 
காக்க; அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நம் இன்பன் திருவடிகள் நம்மைக்
காக்க; தெவிட்டாத இனிமையை ஆறாக நல்கும் மலைபோலும் பெருமான் நம்மைக் காக்க. 

கு-ரை 11 - 16:  ஈசன், ஆளுதல் என்று பொருள்படும் வினையடியாய்ப் பிறந்தது. தேசு= ஒளி,
நிமலன்=மலமில்லாதவன், மாயம் = வஞ்சனை, நிலையாமை;  எடுத்த பிறவி நிலையாமையானும், 
வரும் பிறவி யாதென்று அறியப்படாமையானும் "மாயப்பிறப்பு" என்றார். தேவன் = தே+அன்= இனிமையன்,
தேவன் என்னுஞ் சொல் வடமொழியிலே ஒளி உருவினன் என்று பொருள்படும் என்க, ஆராத= உண்டு நிரம்பாத,
'மலை' என்றமையால், உரையுள், இன்பம் ஆறெனப்பட்டது.

15.     சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி
     யாராத வின்ப மருளுமலை போற்றி 
    சிவனவனென் சிந்தையு ணின்ற வதனா 
    லவனரு ளாலே யவன்றாள் வணங்கிச்
     சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

    சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி !
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
     சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
    சிந்தை மகிழச், சிவ புராணம் தன்னை,

    seerar perunthuRai nam devanadi pooRRi
    aaraatha inpam aruLumalai pooRRI 
    sivan avan en sinthaiyul ninRa athanaal 
    avan aruLaalee avan thaaL vaNangki
    sinthai makiza sivapuraaNam thannai            

பொ-ரை 17-22 : சிவபெருமானாகிய முழுமுதற் கடவுள் எனது நினைவின் கண் நிலை 
பெற்றிருந்த காரணத்தால், என் செயலற்று அவனது திருவருள் துணை கொண்டு அவனது 
திருவடிகளைத் தொழுது இயற்றிய நல் தவத்தின் பயனாக, நெற்றிக்கண் முதல்வன்
ஆசிரியனாக எழுந்தருளி வந்து தனது அருட்பார்வை நல்கவே சிவ ஞானம் பெற்று, 
மனத்தாற்கிட்ட ஒண்ணாத மாறிலா அழகு நிறைந்த அவனது திருவடிகளைப் பணிந்து,
எனது நெஞ்சம் மகிழ்ச்சியடையவும், முற்பிறவியில் செய்த எனது ஊழ்வினை முற்றிலும் 
ஒழிந்து போகவும், சிவனது பழமையான அருட்செயல் முறையினை யான் சொல்லுவேன்,

கு-ரை:17- 22:  “சிவனவன்" என்பதில் "அவன்" என்பது பல்சமயத்தாரும் பொதுவாகக் குறிக்கும்
முழுமுதற் கடவுள் என்று பொருள் படுவதாகும். திருவருள் பெற்ற காலையும் எடுத்த உடம்பு கொண்டு 
நுகர்வதற்கு உரிய முன்வினைப்பயன் எஞ்சி நிற்றலின் "முந்தை வினை முழுதும் மோய" என்றார்.
சிவஞானம் பெற்ற பெரியோர்க்கு  அறிவு புறத்தே சென்ற காலை  இறைப்புகழ் பாடுதல் எண்ணத்திற்கு 
இன்பம் பயத்தலின், “சிந்தை மகிழ" என்றார். இறைவனது ஞானத்தைப் பெறுதற்கு முன்னேயே, சரியை,
கிரியை, யோகம் என்னும் நல் தவ வழியில் நிற்றற்கு அவன் திருவருள் வேண்டப்படும் ஆதலின் 
"அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்றார். ஞானம் பெற்றபின் ஆற்றப்படும் சுட்டு இறந்த 
வணக்கம் "எண்ணுதற்கு எட்டா" என்பதால் உணர்த்தப்பட்டது.

20.     முந்தை வினைமுழுது மோய வுரைப்பன் யான்             
    கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி 
    யெண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி 
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியா
    யெண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

    முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான். 
    கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
     எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி 
    விண் நிறைந்து மண் நிறைந்து  மிக்காய் விளங்கு ஒளியாய், 
    எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர்,

    munthai vinai muzuthum moya uraippan yaan
    kaNNuthalaan than karuNai kaN kaadda vantheythi
    eNNuthaRku eddaa ezilaar kazal iRainji 
    viNNiRainthu maNNiRainthu mikkaay viLangkoLiyaay
    eNNiRaNthu ellai illathaanee ! ninperunjseer

பொ-ரை 23-25; மேலுள்ள வானுலகெங்கும் நிறைந்தும், கீழுள்ள மண்ணுலகெங்கும்
 நிறைந்தும், அவற்றிற்கு அப்பாலுமாய் விளங்குவோனே, எங்கும் திகழ்கின்ற ஒளி
மேனியனே, கணிக்கப்படும் சுட்டுப் பொருள் அனைத்தையும் கடந்து நிற்கும் அளவிலாத்
தன்மையனே, நினது ஒப்புயர்வற்ற பெரிய புகழினை, அறிவு விளக்கத்தைத் தடை 
செய்யும் தீயவினை உடையேன் எடுத்தோதும் வகை யாதும் தெரியாதேன்.

கு-ரை 23-25:  "நிறைந்து" என்பது இறைவனது பூரணமான அறிவும் செயலும் விளங்குவதைக்
குறிக்கும். அது காற்று வான் முதலிய சடப்பொருளின் வியாபகம் போன்ற விரிவினைக்  குறியாது,
இறைவனது வியாபகத்தின் ஒரு பகுதியுள் உலகெலாம் அடங்குதலின் “மிக்காய்" என்றார். 
"தேசமார் ஒளிகளெல்லாம் சிவனுருத் தேசது" என்ற கருத்துப் பற்றி, "விளங்கொளியாய்" என்றார். 
தத்துவம் புவனம்  முதலியன எல்லாம் நூல்களால் கணிக்கப்படுவன. அவற்றைக் கடந்த இறைநிலை, 
"எண் இறந்து" என்பதாற்  குறிக்கப் பட்டது. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின்," என்றமையால் 
வினை ,அறிவு  விளக்கத்திற்குத் தடையென உரையுள் கூறப்பட்டது. உயிர்  இயற்கையாகவே 
சிறு தொழில் உடையது.  தன் சிறுசெயல் கொண்டு இறைவன் பெருஞ்செயலை அளக்க வல்லதன்று
 என்பார், "பொல்லா வினையேன்" என்றார்.

25.     பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

    பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல் ஆகி , பூடு ஆய், புழு ஆய் , மரம் ஆகி
    பல்விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகிக்
    கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
    வல்லசுரர் ஆகி ,முனிவர் ஆய், தேவர் ஆய்

     polla vinaiyeen pukazumaaRu onRu aRiyeen
     pullaaki puudaay puzuvaay maramaaki 
     pal virukamaaki paRavaiyaay paampaaki
         kallaay manitharaay peeyaay kaNngkaLaay        
     vallasuraraaki munivaraith theevaraay            

உரைநடை 26 - 31 எம்பெருமான்! கல்லாய்ப் புல்லாகிப் பூடாய் மரமாகிச் 
செல்லாஅ நின்ற இத் தாவரத்துள், புழுவாய்ப் பாம்பாய்ப் பறவையாய்ப்
பல்விருகமாகி மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி 
முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இச்சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் 
பிறந்திளைத்தேன், 

பொ-ரை  26 - 31:  உலகத் தோற்றத்தில் கற்பாறை அணுக்களில் அடங்கிக் கிடந்து, 
பின் புல்லாகியும் அடர்ந்த புற்செடிகளாகியும், மரங்களாகியும் படைக்கப்பட்டு நிகழ்கின்ற
பல்கோடி நிலையியற் பொருள்களுள்ளும், புழு, பாம்பு முதலிய ஊர்வனவாகியும்
பறப்பனவாகியும், விலங்குகளாகியும், மக்களாயும், பேயினங்களாயும், பூதகணங்களாயும்,
வலிய அசுரராயும், முனிவராயும், விண்ணவராயும், படைக்கப்பட்டு இயங்குகின்ற பல்கோடி
பிராணிகளுள்ளும் அடங்கிய எல்லா வகையான பிறப்பிலும் உடலெடுத்து இறந்து உழன்று
அலுத்தேன்.

11 - 31: Adoration to the holy Feet of Civan who is the Ruler of all (Eesan), Adoration to the 
holy Feet of my Father, Adoration to the holy Feet of the effulgent one, Adoration to the rosy 
Feet of Civan: Adoration to the holy Feet of Civan who stands rooted in the love of the devotees 
and who is devoid of any sin (Malam), Adoration to the holy Feet of the King who severs the 
cycle of delusion- bringing births, Adoration to the holy Feet of our Lord who manifested
Himself in the beautiful hamlet called Perunthurai, Adoration to the holy Feet of Civan who is
the mountain of grace from which flows unsatiating bliss. As He, Civan the auspicious Lord, 
abides in my mind, I, having lost my petty individuality, am empowered to worship His Feet,
through His own grace.

As a result of this good deed of worshipping His holy Feet, Civan who has an eye on his forehead 
appeared before me as my Master to turn His gracious and dazzling look on me which made me attain 
the highest wisdom - Civagnaanam. I prostrated at His feet, whose unmatched beauty is beyond 
the conception of thought, and my heart filled with ecstatic joy and all my last karma disappearing. 
I start to narrate the "Ways of Old of Lord Civan. Oh! Lord! You have not only filled the heaven 
and the earth, but also transcend them both, in the form of a dazzling effulgence! Thou boundless 
one who cannot be measured by any norms! I , a man of evil karma, do not in the least know 
how to sing thy glory.  Oh! my noble Lord ! I have been born several times as stone, as grass,
as shrub, as tree, as worm, as snake, as bird, as beast, as man, as demon, as goblin, as mighty giant, 
as ascetic, as devas - in fact in all the forms of existence as the moving and the non-moving
and am wearied of it all. 

கு-ரை: 26 - 31 உயிர்த் தோற்ற நூல் முறைப்படி, பிறவிகளைத் தொகுத்துப் பொருள் கூறப்பட்டது.
 விருகம்= மிருகம் = விலங்கு "பல்" என்ற அடையை எங்கும் கூட்டலாம். 

30.     செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து 
    ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றே 
    னுய்யவென் னுள்ளத்து ளோங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்க

    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
     எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
     மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; 
    உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற 
    மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்

    sellaaa ninRa iththavara sangamaththuL 
    ella piRappum piRanthiLaitheen emperuman
    meyye un ponadigal kaNdinRu viiduRReen            
    uyya en uLLathuL oongkaaramaai ninRa
    meyyaa vimala vidaippakaa veethangkaL

பொ-ரை: 32 - 35: ஆணவ இருளில் கிடந்த யான் உடம்பெடுத்து உழன்று, பக்குவம் வந்த
காலை உன் திருவடியைக் கூடிப் பிழைக்கும் வண்ணம், எனது நெஞ்சத்துள், ஐந்தொழிற்கும்
காரணமான ஓம் என்ற முதுமொழி வடிவாய் நின்ற உண்மையனே!  கட்டு இலாதவனே,
அறவுருவாகிய காளை மேல் எழுந்தருள்பவனே, அறிவு நூல்கள் நின்னுடைய
பேரளவினைக்  காணமாட்டாது. ஐயனே என்று அலற, அவற்றின் எல்லையைக் கடந்து
உயர்ந்தும் தாழ்ந்தும் விரிந்தும் விளங்குகின்ற  பெருமையனாய் அவற்றால்
காணவொண்ணாத நுட்பப்  பொருளாய் எவற்றினும் கலந்துள்ளவனே, பிறவியில் உழலாது
நிலைப்பாயிருப்பதற்கு ஏது ஆய உனது அழகிய திருப்பாதங்களை இப்போது காணப்
பெற்றுப் பாச நீக்கம் அடைந்தேன், 

32-35: Oh! Reality! having seen Your golden Feet this day I am redeemed from the birth cycle. 
That I may be redeemed, You ever abide in my heart as "Om"! Oh! Truth! Oh! Spotless one
(Vimalaa) Oh! Rider of the bull! oh! Lord! the Vedas which cannot perceive Your greatness,
wail "Oh! Sire' You soar, sink, and spread beyond everything, while being the subtlest of the
subtle.

கு-ரை:  32 - 35 உயிர்கள் உய்யுமாறு  இறைவன் ஐந்தொழில் இயற்றுமிடத்து, உயிர்க்குயிராய் நின்று
ஓங்காரத்தின் பிரிவாகிய அகரம், உகரம், மகரம், விந்து, நாதமென்பவற்றின் வாயிலாகக் கருவிகளை 
இயக்குவதாலும், ஓங்காரம், இறைவனது சிறந்த மந்திர வடிவமாதலாலும், "உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற" என்றார். இறைவன் ஐந்தொழில் இயற்றினாலும் தனது மெய் இயல்பில் 
மாற்றமில்லாதவன் ஆகலின், "மெய்யா" என்றார். அங்ஙனம் இருந்ததற்குக் காரணம் இயல்பாகவே 
கட்டிலாமையாகலின், "விமலா" என்றார். வி=இன்மை. மலம் = கட்டு.  இறைவன் நடு நிலையன் என்பார், 
"விடைப்பாகா" என்றார். அவன் பெரியதில் பெரியதாய்,  சிறியதில் சிறியதாய், எங்கும் கலந்து 
நிற்குமுறை  நூலுணர்வான் அறியப்படாமையின், "வேதங்கள் ஐயா என" என்றார். "மெய்யே உன்" என்பதில்,
மெய்= நிலைப்பு, ஏய்=பொருந்து, பொன் மாற்றமிலா ஒளி நயம் உடையது. வீடு= பாசத்தினின்று விடுபடுதல்.

35.     ளையா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே 
    வெய்யாய் தணியா யியமான னாம்விமலா 
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி 
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே 
    யெஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே

    "ஐயா"என,  ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே! 
    வெய்யாய் ! தணியாய் ! இயமானன் ஆம்விமலா !
    பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, 
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
     எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
 
    aiyaa ena oongki aaznthakanRa nuNNiyanee
        veeyyaay thaNiyaay iyamaananaam vimala
        poyyayna ellam pooyakala vantharuLi
        meyngnganam aaki miLirkinRa meyssudaree 
    enjnjaanam illatheen inpap perumaanee

பொ-ரை 36-40  வெப்பமுடையவனே, குளிர்ச்சியுடையவனே, அத்துவிதக் கலப்பால் 
உயிரோடு தொடர்புடைய மாசிலாதவனே.  யான் பற்றிய நன்மையிலாதனவும் 
நிலையாதனவும் ஆகிய இவைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி ஒழியுமாறு குருவாய் வந்து 
அருள் புரிந்து மெய்யறிவாய் விளங்குகின்ற உண்மை ஒளியே, எவ்வகையான அறிவும் 
விளங்கப் பெறாத எனக்குப் பேரறிவின் பயனாய்ப் பேரின்பம் ஈந்தருளும் பெருந்தன்மையனே,
 பொய்யை மெய்யென உணரும் திரிபுணர்ச்சியை நீங்கச் செய்யும் தூய அறிவானவனே.

36 - 40: Oh!  Lord Civa ! You are the heat, You are the cold. You are the Master of 'yagnyaas'!
 You are the spotless one (Vimalan)! By your grace all thoughts of unreality (nescience) fled 
from me. The true godly wisdom gleaming bright You are, Oh! blissful Lord of mine who am 
devoid of all wisdom still with the result of your wisdom I acquired bliss. You are the
embodiment of true wisdom that dispels all nescience 

கு-ரை: 36-40 "வெய்யாய்" என்றது ஞாயிறுபோல ஆண் தன்மை உடையனாதல் குறித்தற்கு;
"தணியாய்" என்றது திங்கள் போலப் பெண் தன்மையுடன் ஆதல் குறித்தற்கு. இயமானன்=உயிர்.
இது வடமொழியில் , வேள்வி இயற்றுவானுக்குச் சிறப்புப் பெயராய் உயிர்க்குப் பொதுப் பெயராய்
வழங்குவது. உயிர்க்கு உயிராய்க் கலந்து , உயிர்களை ஆணாகவும் பெண்ணாகவும் பிறப்பித்தற்குரிய
சிவமும் சத்தியுமாய இறைநிலை  குறிக்கப்பட்டது. அங்ஙனம் உயிரோடு கலந்து நின்றும், தனது தூய 
 இயல்பு மாறாதவன் என்பார், "விமலா" என்றார், பொய் தீயவற்றையும், நிலையாதவற்றையும் குறிக்கும்.
பாச நீக்கத்தில் விளங்கும் மெய்யறிவு பதிஞானம் எனப்படும். இறைவன் கதிரவன் போலவும் ,
மெய்ஞ்ஞானம் கதிர்போலவும் இருத்தலின், "மெய்ஞ்ஞானமாகி" என்றார். எவ்வகை அறியும் இல்லா
நிலை, ஆணவத்தோடு கிடந்த உயிரின் தனிநிலை. அஞ்ஞானம் என்பது, நல்லறிவுக்கு மாறாய புல்லறிவு. 
நல்லறிவு  என்பதில் "நல்" என்பது "பெரும் பயன் தரும்" என்ற பொருள் உடைத்து என்றலும் ஒன்று .
"நற்றாள்"என்பது போன்று.

40.     யஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே 
    யாக்க மளவிறுதி யில்லா யனைத்துலகு
     மாக்குவாய் காப்பா யழிப்பா யருடருவாய் 
    போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பி
    னாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே

    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !
    ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் 
    ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய் 
    போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்
     நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே !

    anjnjaanam thanai akalvikkum nallaRivee 
    aakkam aLaavu iRuthi illaay anaithu ulakum 
    aakkuvay kaappaay azippaay aruL tharuvaay
        pookkuvaay ennai pukuvippaay ninthoozumpin
    naaRRaththin neeriyaay seeyaay naNiyaanee

பொ-ரை: 41-43: படைக்கப்படுதல், ஒருகால அளவாக  நிலைபெறுத்தப் படுதல்,
ஒடுக்கப்படுதல் என்பன இல்லாதவனே, எல்லா உலகங்களையும்  நீயே படைப்பாய்,
நிறுத்துவாய், ஒடுக்குவாய். மலபரிபாகம் வரும்வரை என்னைப் பிறவியில் செலுத்துவாய்.
உய்தி கூடுங்காலம் வருங்கால் நின் திருத்தொண்டாகிய நற்றவத்தில் புகுவிப்பாய். பின்னர்
பிறவி அறுதற்கு ஏதுவாய நின் திருவருளைத் தருவாய்.

கு-ரை: 41-43  தொழும்பு=தொண்டு.
இறைவனது ஐந்தொழிலும், அவற்றை ஆற்றவல்ல அவனது தனிச்சிறப்பும் இங்கே கூறப்பட்டன.

45.     மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே 
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
    சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று 
    பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமா 
    னிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

    மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
     கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தால் போலச் 
    சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் !
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த

    maaRRam mananjkaziya ninRa maRaiyoonee 
    kaRantha paal kannalodu neykalnthaaR poolas 
    siRanthadiyaar sinthanaiyuL theenuuRi ninRu              
    piRantha piRappaRukkum engkal peruman 
    niRangkaLoor ainthudaiyaay viNNoorkaL eeththa

பொ-ரை: 44-48:  பூவின் மணம்போல் நுட்பமாயிருப்பவனே, நீ தூரத்திலிருப்பவனும் ஆவாய்,
அருகே இருப்பவனுமாவாய்.  எவ்வாறெனில் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்கின்ற
 இரகசியப் பொருளாயுள்ளாய். எனினும், நின் மெய்யடியார்கள் உள்ளத்திலே சிறப்பாக
விளங்கிப் பசுவில் இருந்து உடன் கறந்த புனிதமான பாலோடு சருக்கரையும் நெய்யும்
கலந்து இனிமை பயத்தாற்போல், இன்பம் ஊற்றெடுக்குமாறு நிலை பெற்றருளி எடுத்த
 பிறவியை ஒழிக்கும் எங்கள் பிரானாய் உள்ளாய். 

பொ-ரை 49-50:  எங்கள் பிரானே, பூதங்களைத் திருமேனியாகக் கொண்ட நீ அவற்றிற்குரிய
ஐந்து நிறங்களையும்  உடையாய் ; அன்பர்க்குப் பூத நிறங்களோடு தோன்றும் நீ
செருக்குடைய வானோர் உன்னைத் துதித்த போதும், நீ அவர்கட்குத் தோன்றாது ஒளித்திருந்தனை.

41 - 48: Of Lord Civa! You are not created. You have no life span: You have no end; yet You 
create all worlds, sustain them, dissolve them; You cause me to be born again and again till the
end of my karma, and at the ripe moment prompt me to serve you. Oh Lord Civa! You are one 
with me like fragrance in flowers! You are afar to those who do not love You. You are near,to
those who are devoted to You. You are the mystic content of the Vedas transcending word and 
thought. You are in the thoughts of your glorious devotees like honey drops, giving them 
sweetness like the mixture of fresh milk, sugar candy and ghee (clarified butter). You, our Lord,
cut asunder the knots of my karma in this very birth itself and grant me release.

கு-ரை: 44-48:  கண்ணிற்குத் தோன்றும் பூவிலே அதன் மணமானது தோன்றாது கலந்திருந்தால் போல
உலகுயிர்களிலே இறைவன் தோன்றாது கலந்திருத்தல் குறித்தவாறாம். நேர்= நுட்பம். ஒப்பு என்றும் பொருள்படும்.
"மணம் போன்றிருப்பவனே" என்றும் பொருள் கொள்க. தேன்= இன்பத்திற்கு அறிகுறி என்க . ஊறி=ஊற.
 அறிவிற்குப் பாலையும், செயலுக்குக் கன்னலையும், விழைவிற்கு நெய்யையும் உவமை கூறுவதுண்டு.

கு-ரை: 49-50; பொன்னிறம், வெண்ணிறம், செந்நிறம், கருநிறம், புகை நிறம் என்பன நிலம், நீர், தீ, காற்று,
வான், என்பவற்றிற்கு முறையே நிறமாகக் கொள்க . இறைவன் ஓர் இயக்கன் போலத் தோன்றி நின்ற
காலை, விண்ணவர் அவனை அறிந்திலர் என்ற கதை கேந உபநிடதத்துள் காண்க.

50.     மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை 
    மறைந்திட மூடிய மாய விருளை 
    யறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்குமூடி
     மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை

    மறைந்து இருந்தாய், எம்பெருமான் ! வல்வினையேன் தன்னை
     மறைந்திட மூடிய மாய இருளை
    அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி 
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

    maRainthirunthai emperuman valvinaiyeen thannai
    maRainthida muudiya maaya iruLai
    aRampaavam ennum arungkayiRRaaR kaddi
    puRanthool poorthuenkum puzuazukku muudi 
    malanjsoorum onpathu vaayiR kudilai

55.     மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
    விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் 
    கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகு 
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
     நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி

    மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் 
    கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
     நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, 
    நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி

    malangkap pulanainthum vanjsanaiyai seyya        
    vilanjku manaththal vimala unakku 
    kalantha anpaakik kasinthu uLL urukum
    nalanthan ilaatha siRiyeRku nalki
    nilanthanmeel vantharuLi neeLkazalkaL kaaddi

உரைநடை: 51-61: விமலா, வல்வினையேன் தன்னை , மறைந்திட மூடிய இருள்
மாய, அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி, புழுவழுக்குப் புறம்தோல்
போர்த்து மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை நல்கி, மலங்கப் புலன்
ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் உனக்குக் கலந்த அன்பாகிக்
கசிந்துள்ளுருகும், நலந்தான்  இலாத சிறியேற்கு நிலம்தன் மேல் வந்தருளி....

பொ-ரை 51-61: தத்துவனே!  குற்றமிலாதானே!  கொடிய வினையேனது அறிவிச்சை
செயல்கள் மறையும்படி மூடிய இருளாகிய ஆணவம் மாயும் வண்ணம், நல்வினை, தீவினை
என்னும் காண்டற்கும் கடத்தற்கும் அரிய இருவகைக் கயிறுகளிலே பிணிப்புற்றுத்
தன்னகத்து எங்குமுள்ள புழுக்களும், மாசுகளும், புறத்தேயுள்ள தோலினாற் போர்த்து
மூடப் பெற்றுத் தனது நவத்துவாரங்களிலும் அழுக்கு வடியும் குடிலை எனக்குக்
கொடுத்தருளி, யான் கலங்கும்படி ஐம்பொறியறிவு தத்தம் வழியில் என்னை இழுத்துத்
தந்திரமாகக் கேடு செய்தலினாலும், அவற்றின் சார்பாய் நின்று உன்னை அணுகவொட்டாது
தடை செய்யுமனத்தின் இடர்ப்பாட்டினாலும், உன்னோடு கலந்து உறவாகி உள்ளமுருகி, 
அழுது தொழுதலாகிய நற்செயல் யாதுமில்லாத சிறியனேன் பொருட்டு, இந்நில வுலகத்தே
அருட்குருவாய் எழுந்தருளி வந்து உனது புகழ்மிக்க திருவடிகளை எனக்குக் காட்டியருளி
நாயினும் கீழ்ப்பட்டவனாய்க் கிடந்த அடியனேற்குத் தாயினும் மேம்பட்ட கருணை
வடிவான மெய்யனே.

49-61: Oh! Lord Civa! You are the five basic colours. You are invisible to the egoistic heaven
dwellers though they adore You! (The five colours are attributed as under. Earth - Golden,
Water- White, Fire - Red, Wind- Black; Ether - Smoke colour. As God is immanent in the five
elements, their colours are ascribed to Him also). Oh Lord Civa, the Pure One! You graciously
gave me the nine-gated hovel of this body which, secreting foul through its nine holes, does
cover with skin, the filth and worms within and is bound with the rare cords of virtue and sin, yet
which is the means for the destruction of the enshrouding gloom of ignorance amidst which I lay
hidden. I am bewildered and betrayed by the five senses which lead my mind astray. Lowly am
I indeed who cannot merge with You in love that thaws the heart within. For the sake of this
wretched one, who is meaner than a cur, You came in grace on this earth as Guru and showed
Your grand bejewelled Feet and bestowed Your grace on this slave of Yours. Surpassing the
love of the mother indeed is your grace, Oh! The Truth!

கு-ரை: 51-61:  இருளை என்பதில் ஐ-சாரியை. அதனை வேற்றுமை  உருபாகக் கொள்ளின் "மாய"
என்பதைப் பிறவினைப் பொருளில் வந்ததாகக் கொள்க. தான் மலத்தின் வேறாதல் குறிப்பார்,
வல்வினையேன் தன்னை என்றார். "குடிலை" என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை உருபு.
மலங்க= கலங்க, விலங்கு = தடை, கசிந்து = அழுது, நீள் = நீண்ட = புகழாற் சிறந்த, நாய், உடையானைச்
சார்ந்தொழுகும். உடையானைத் தான் சார்ந்தொழுகாமை கருதலின், " நாயிற்கடையாய்" என்றார். 
தாய்-கைம்மாறு கருதாது உதவும் இயல்பினள். அவள் என்றும் யாண்டும் உதவ இயலாமையின், 
என்றும் யாண்டும் உதவும் மெய்யன் தாயிற் சிறந்தானாதல் காண்க.

60.     நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் 
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே 
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
     பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே

    நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
     தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
     மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
     தேசனே!  தேன் ஆர் அமுதே!  சிவபுரனே!
     பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

    naayiR kadaiyaay kidantha adiyeeRku 
    thaayiR siRantha thayaavaana thaththuvanee 
    maasaRRa soothi malarntha malarssudaree
    theesanee! theenar amuthee sivapuranee
    paasamaam paRRaRuththup paarikkum aariyanee

65.     நேச வருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
    யாரா வமுதே யளவிலாப் பெம்மானே 
    யோராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே 
    நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே

    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட 
    பேராது நின்ற பெரும் கருணைப்பேர்-ஆறே !
    ஆரா அமுதே!  அளவு இலாப் பெம்மானே!
     ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
     நீராய் உருக்கி, என் ஆர்உயிர்ஆய் நின்றானே!

    neesa aruL purinthu nenjsil vanjsam keda
    peeraathu ninRa perungkaruNaip peeraRee 
    aara amuthee aLavilaap pemmaanee 
    ooraathaar uLLathool oLikkum oLiyaanee
    neeraay uruki en aaruyiraai ninRaanee

பொ-ரை: 62-69 குற்றமில்லாத ஒளியானது இதழ்களாக மலரப்பெற்ற பூப்போன்ற
ஒளி மேனியனே, குரு முதல்வனே, இனிமை நிறைந்த பிறவி மருந்தே சிவலோகனே,
கட்டுப்படுதற்கு ஏதுவாகிய அவாவினை வேரறுத்து அறிவினை விரிவுறச் செய்யும்
மேலோனே, காதலொடு கூடிய இரக்கம் வைத்து என் மனத்துள்ள களங்கம் ஒழியும்படி
எனது உள்ளத்தை விட்டு நீங்காது விளங்கிய பேரருள் வடிவாகிய  வற்றாது ஓடும் பெரிய
ஆறு போன்றவனே, உண்ண உண்ணத் தெவிட்டாத இன்னமுதம் போன்றவனே,
அளவிலடங்காத பெருமை உடையவனே, ஆய்ந்து அறியாதார் உள்ளத்திலிருந்தும்
அவர்கட்குப் புலனாகாத சோதியே, எனது கல் மனத்தைக் கரைத்துத் தண்ணீராக
உருகும்படி செய்து பிரிவாற்ற எண்ணாத உயிர்க்குயிராய் நின்றவனே.

கு-ரை: 62-69:  இறைவனது திருமேனி ஒளிநயமும் மென்மையும் உடைமையால் ஒளியாலாகிய பூவிதழ்
போன்ற உறுப்புடைய திருவடிவமென்று குறித்தார். தேசன்= ஆசிரியன். தேன்=இனிமை. அமுது=சாவாமருந்து. 
பாரிக்கும்= விரிக்கும், வளர்க்கும்; ஆரியன் = மேலோன். நேசம் = தாயன்பு போன்ற விருப்பம்.

70.     யின்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே 
    யன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    யாதியனே யந்த நடுவாகி யல்லானே 
    யீர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே

    இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே !
    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
    சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
    ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!

    inpamum thunpamum illanee uLLaanee
    anparukku anpanee yaavaiyumaay allaiyumaam 
    soothiyanee thuniruLee thonRaap perumaiyanee
    aathiyanee antham naduvaaki allaanee
    iirththu ennai aadkkoNda enthai perumanee

75.     கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற்  கொண்டுணர்வார் தங்கருத்தி 
    னோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே 
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    யாற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற 

    கூர்த்த மெய்ஞ் ஞானத்தால்  கொண்டு உணர்வார் தம் கருத்தின் 
    நோக்கு அரிய நோக்கே!  நுணுக்கு அரிய நுண் உணர்வே!
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே !
    காக்கும் எம் காவலனே!  காண்பு அரிய பேர் ஒளியே!
    ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா!  மிக்காய் நின்ற

    kuurththa meynjnjaanaththal koNduNarvaar thangkaruththin 
    nookkuariya nookkee nuNukkariya nuN uNarvee 
    pookkum varavum puNarvum ilaap puNNiyanee 
    kaakkum em kaavalanee kaaNpariya peeroLiyee            
    aaRRinpa veLLamee aththa mikkaay ninRa

பொ-ரை 70-78, உலகுயிர்களினால் வரும் இன்பமும் துன்பமுமில்லாதவனே,  அன்பர்
பொருட்டு அவற்றையுடையவனே, கலப்பினால் எப்பொருளுமாய், பொருள் தன்மையால்
ஒன்றும் அல்லாதவனாயும் இருக்கின்ற அறிவுருவனே, அடர்ந்த இருள் போன்றவனே, 
தோன்றாத பெருமையை உடையவனே, எப்பொருளின் தோற்றத்திற்கும் மூலகாரணனே,
எவற்றையும் ஒடுக்கும் இறுதிக் கடவுளாயும், எப்பொருளினும், உள்ளீடாயும் இருந்து,
தனக்கொரு  முதலும் முடிவும் நடுவும்  இல்லாதவனே, என்னை வலிய  இழுத்து
ஆட்கொண்டருளிய எங்கள் அப்பனாகிய பெருந்தன்மையனே, கூரிய மெய்யறிவினாலே 
கேட்டுக் சிந்தையுட்கொண்டு தெளிந்து உணர்வாருடைய உள்ளத்தே சுட்டிறந்தறியப்படும் 
பொருளே சுட்டப்படாத அநுபவப் பொருளே, நுகரப்படும் நுட்பப் பொருளே, ஒன்றை 
நாடிப் போதலும் அதனை யடைதலும், அதன் கண் நின்று மீளுதலுமில்லாத நன்மையனே,
உயிர்களை உய்தி கூட்டுவிக்கும் எங்கள் அரசனே, நீ அங்ஙனம் செய்வதை உயிர்கள் தமது 
அறிவாற் காணுதற்கரிய பெரிய அறிவே.

கு-ரை: 70-78:  இறைவன் தானே இன்பமுடையவன், பிற பொருளால் வரும் இன்பத்தை நாடுபவன்
அல்லன். அவன் துன்பம் இல்லாதவன் என்பது தெளிவு . தம் செயலற்ற அன்பர்க்கு வரும் இன்ப 
துன்பங்களைத் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளும் இயல்பு இறைவற்குக் கூறப்படுதலின்
" அவையுள்ளானே" என்றார். இதற்குக் காரணத்தை "அன்பருக்கு அன்பனே" என்பதாற் குறித்தார்.
சோதி= அறிவு.  உலகப்பற்று விட்டு இறைவனைப் பற்றக் கருதும் பரிபாகமுடையார்க்கு அவன் கதிரவன்
உதயத்திற்கு முன் உளதாங் காரிருள் போல்வானாதலின், "துன்னிருளே" என்றாரென்பதும் உண்டு.

ஐம்புலனால் ஒரு சிறிதும் அறியப்படாமை  பற்றித் "துன்னிருளே" என்றாரென்ப. "உன் தனை யெதிரே
கண்டும் அம்புயத் தோனுணர்ந்திலன், மால் சொலவுணர்ந்தான்" என்றபடி இறையன் வெளிப்படையாகத்
தோன்றினாலும் தன்னை உயிர்கட்கு அறிவித்தாலன்றி, உயிர்கள் அவனை அறிய மாட்டாத
 இயல்பினவாதலின்," தோன்றாப் பெருமையன்"  என்றார்.  இறைவன் பல அருள் உருவமெடுத்துத் தோன்றி
மறைதலின், ஆதியும் நடுவும் அந்தமும் உடையானென்பாரும் உளர். நடு என்ற சொல்
அந்தரியாமித்துவம் குறிக்குமென்பர். இறைவன் எவற்றினுள்ளும் இருத்தலின் அவை  காக்கப்படுகின்றன
என்ப.  குதிரை வாங்கப் போன அடிகளை வலியத் தன்பால் வருவித்து ஆட்கொண்டமையின் "ஈர்த்து"
என்றார். வினையிலே கிடந்தேனைப் பக்குவகாலம் வருமுன்னரே ஆட்கொண்டானென அடிகள்
பிறவிடங்களில் கூறுதல் காண்க. தீவிர உணர்ச்சியைக் "கூர்த்த மெய்ஞ்ஞானம்' என்றார் போலும்.
நோக்கு அறிவையும், உணர்வு அனுபவத்தையும் குறிக்கும் என்ப . "நோக்கு" என்பது இறைவனது 
அகண்ட இயல்பையும், "நுண்ணுணர்வு" என்பது அவனது அதிநுட்ப இயல்பையும் குறிக்கும் என்பாருமுளர்.
"போக்கும் புணர்வும் வரவுமிலா" என உரை நடை கொள்க.

80.     தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்
    தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையு
    ளூற்றான வுண்ணா ரமுதே யுடையானே 
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப 

    தோற்றச் சுடர் ஒளி ஆய்ச் சொல்லாத நுண் உணர்வு ஆய்
    மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
    தேற்றனே ! தேற்றத்தெளிவே!  என் சிந்தனையுள் 
    ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! 
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

    thooRRa sudaroliyay soollaatha nuNuNarvaay
    maaRRamaam vaiyakaththin vevveeRee vanthaRivaam 
    theeRRanee theRRath theLivee en sinthanaiyuL 
    uuRRana uNNaar amuthe udaiyaanee 
    veeRRu vikaara vidakkudampin udkidappa 

85.     வாற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று 
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் 
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே 
    நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே

    ஆற்றேன்;  "எம் ஐயா!  அரனே! ஓ! " என்று என்று 
    போற்றி, புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே !
    நள் இருளில்  நட்டம் பயின்று ஆடும் நாதனே!

    aaRReen em aiyaa aranee oo enru enru 
    pooRRip pukaznthirunthu pooykeddu meyyaanaar
    miidduingku vanthu vinaippiRavi saaraamee
    kaLLap pulakkurampaik kaddu azikka vallaanee
     naLiruLil naddam payinRu aadum naathanee

பொ-ரை : 79-83:  ஆற்றின் தூய  புனல் போலத்  துன்பங்கலவாத இன்பப் பெருக்கே, அப்பனே, 
மாறுபாடு அடைகின்ற உலகத்திற்கு  அப்பாற் பட்டவனாய் நிலைபெற்ற விளக்கமுடைய 
கதிரொளிப் பிழம்பாய், மொழியால் உணர்த்துதற்கு அரிய நுட்ப அனுபவமாய், உலகத்தே 
வெவ்வேறாகக் காணப்பட்டு வந்து முடிவாக அறிவாய்த் தெளியப்படும் தெள்ளியனே ,
கேட்டுச் சிந்தித்துத்  தெளிந்தவிடத்தே விளங்கும் தெளிவான பரம்பொருளே, எனது 
உள்ளத்திலே ஊற்றாகத் ததும்பிய உண்ணத் தெவிட்டாத அமுதமே, கட்டிலும் வீட்டிலும்
என்னை அடிமையாக உடையவனே.

62 - 83: Oh! spotless effulgence who blossomed in my heart as a flower of flame! Oh My 
Master! sweet ambrosia, Lord of Civapuram! Oh! venerable one, who severs the hold of the 
fetters of desire and thus sets free my knowledge You showered your loving grace on me like
water flowing in a perennial river and flushed away the delusions of my mind. Oh! One of 
exceeding grace who leaves not my heart. Oh! unsatiating ambrosia! Infinite and mighty Lord!
You are the light unseen in the hearts of those who do not contemplate You! You melt my hard 
heart into water and abide in me as the life of my life! Oh! Lord Civa! You have neither pleasure 
nor pain, yet You have them both for the sake of Thy devotees. You love those who love You.

Oh effulgence! You are everything but simultaneously You are nothing! Oh dense darkness! 
Oh! You who have the distinction of having no birh. Oh beginning! Oh end! Oh middle! You 
have none of these! Oh! My Father and my noble Lord! You drew me unto You and made me 
Your own.  Oh! Rare-to-be-viewed vision in the conception of those who intuit You with one 
pointed true wisdom. Oh! Subtlest of subtle experience! Oh! Pure one who have no going or 
coming or mingling, as You are omnipresent. Oh our safeguarding King! Oh! blazing light that
cannot be gazed upon! Oh! food stream of bliss! Oh! My Father! Oh! You who are greater than
everything! Oh! Clarity! Oh! Quintessence of clarity! You are the light of the flame of stable
aspect!  You are the ineffably subtle experience! You come in the form of diverse things in this
changing world, yet You are in the final analysis realised as the subtle awareness! In my 
thoughts You are the fountain of unsatiating ambrosia. Oh! My Owner! 

90.     தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    யல்லற் பிறவி யறுப்பானே யோவென்று 
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் 

    தில்லையுள் கூத்தனே!  தென்பாண்டி நாட்டானே! 
    அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ' என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் 
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்,

    thilaiyuL kuuththanee thenpaaNdi naaddaanee 
    allaR piRavi aRuppaanee o enRu
    sollaRku ariyaanai sollith thiruvadikkiiz 
    solliya paaddin poruL uNarnthu solluvaar 
    selvar sivapuraththin uLLar sivan adikkiiz

பொ-ரை: 84-92 : எங்கள் தலைவனே, வெவ்வேறு திரிபுகளுடைய ஊனுடம்பினுள்ளே
கிடத்தலை யான் பொறுக்கமாட்டேன். அவ்வுடம்பைத் தொலைக்கவல்ல அரனே, ஓலம்
என்று கூவிக்கூவி, வழிபட்டுப் பாடி நினைத்திருந்து நிலையாதவற்றின் பற்றற்று
 நிலைப்பொருளோடு ஒன்று பட்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைக்கீடாய்
 பிறப்பினை அடையாமே, வஞ்சராகிய ஐம்புல அவாக்களுக்கு இடமாகிய, சிறு மனையாய
 உடம்பை முற்றிலும் தொலைக்கும் திறமையனே, நடு இரவு போன்ற, முழுதும் முடிவுற்ற
 காலத்தே தனது திருக்கூத்தினைப் பழகிப் பின் தோற்றக்காலத்தே பெருநடம் புரியும்
 முதல்வனே, நிலவுலகில் தில்லை மன்றினுள் ஆடுவோனே, தெற்கின் கண் உள்ள பாண்டி
நாட்டை உடையவனே, துயருடைய இப்பிறப்பினை ஒழிப்பானே ஓலம் என்று 
சொல்லாற் கூறவொண்ணாதானை வழுத்தி.

கு-ரை -84-92 : வேற்று விகாரம் - அறிவு நிலைக்கு மாறாயுள்ள திரிபு என்று பொருள்
கொள்ளுவாருமுளர். விடக்கு=ஊன், கட்டழித்தல்= முற்றிலுமழித்தல். தென்=இயற்கையடை
அரன்= பாசத்தை அழிப்பவன்.

95.     பல்லோரு  மேத்தப் பணிந்து 

    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    palloorum eeththap paNinthu

பொ-ரை: 92-95:   அவனது திருவருள் வயமாய் நின்று மொழிந்த இக்கலி வெண்பாட்டின்
பயன் தெரிந்து ஓதுபவர்கள் சிவலோகத்தினுள்ளே புகுவார்கள். அங்கு சிவ பெருமான்        
திருவடிக் கீழ்  அன்பர் பலரும் வணங்கிப் புகழுமாறு  இருப்பார்கள்.

84- 95: Your devotees, who, saluting and praising You crying constantly, " Oh! My Father! Oh!
Hara (Lord Civa) I can not endure any longer the stay in the fleshly human body which is subject 
to various changes" were freed from falsehood and became one with You the Reality. You are 
the mighty Lord who are capable of destroying the bonds of the physical frame which is the seat
of the five deceitful senses so that the devotees may not come back any more into this world and
get involved in the cycle of karmic birth. Oh! Lord! You ceaselessly dance in the midst of dense 
cosmic darkness! You mystic dancer in Thillai ! Sovereign of the southern land of Paandiyan! 
Oh Lord! You are the one who can cut off the evil birth cycles. Devotees adore You in these 
words, Oh! The ineffable one! Those who sing this psalm of praise sung at the sacred Feet of
Civan, feeling well all its import will gain entry into Civapuram, beneath His holy Feet,
surrounded by the holy band of His devotees who adore Him.

கு-ரை: 92-95:  அடி= அருள். பயன் உணர்ந்து இயம்புவார் பயனைப் பெறுதற்குரியர் ஆவர். திருவடி,
என்பது இறைவன் அறிவு ,செயல்களைக் குறிக்கும். உயிரின் அறிவு செயல்கள் இறைவனுடையவற்றில்     
அடங்கி நிற்றலே திருவடிக் கீழிருத்தலாம் என்பர், சிவபுரம் என்பது வீட்டினை உருவகமாகக் குறிப்பதாய்,
சிவனொடு பேரின்பம் பெறுதலைக் குறிக்கும் என்பர்.

                THIRUCHCHITRAMBALAM

 

2. கீர்த்தித் திருவகவல்            2. KEERTHITH THIRU AHAVAL
(சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை)       Sacred Verse in praise of Civa's Grace and His Glory 
தில்லையில் அருளியது                 Compiled whilst in Thillai
நிலைமண்டில ஆசிரியப்பா


    இறைவன் ஆணையின் வண்ணம் புலியூரை அடைந்த வாதவூரடிகள், கண்ட பத்தைக்
கருத்தார உரைத்தபின், ஆனந்தக் கூத்தரின் திருமேனி அனுபவத்தில் ஈடுபட்டு அநுபூதி விஞ்சத்
தம்மையும் மறந்து கனக சபையிலேயே அசைவற்று நின்றார்.

    இந்நிலை அறியாத கோயில்காப்பார் “கனக சபையை விட்டுக் கீழேயிறங்கும்" எனக் கடிந்து
கூறினர். அவ்வுரை அடிகளாருடைய திருச்செவியில் புகுந்திலது . அடிகளார் சிதானந்தப்
பெருவெளியில் ஓங்காது குறையாது விளங்குகின்ற சிவானந்தப் பிரகாசத்தில் திளைத்து
அசைவற்று நின்றார். கண்ட காவலர்கள் "என்ன; இவர் போம் என்றாலும் போகிலர்; உரையும்
ஆடார்; பித்துக் கொண்டார் போலும்” என்று இரங்கி நின்றபோது, அடிகளார் வாய் "சிவ சிவ” என்று
அசைந்தது. கைகள் தலைமேல் குவிந்தன. குஞ்சித பாதத்தை மீட்டும் தலையால் வணங்கி        
திருப்புலீச்சரம் சார்ந்தார். அங்கிருந்து அனந்தேச்சரத்தையும் வணங்கிக் கொண்டு திருவீதியை
வலம் வருகின்றபோது கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்ற
மூன்றையும் சொல்லிக் கொண்டே வந்தார். இதனாலேயே, இன்றும் சைவத் தமிழுலகம்  இந்த 
மூன்றையும் பாராயணம் செய்துகொண்டே திருவீதியையும் திருக்கோயிலையும் வலம் வருதலை
மரபாகக் கொண்டு உள்ளது.

    கீர்த்தி - சிவனது திருவருட்புகழ்ச்சி, அதனை முறைமையாக அறிவிக்கும் அகவல் 
கீர்த்தித் திருவகவல்.

    உரை மனம் கடந்து நின்ற தன்னியல்பை இடைவிடாது நினைந்து நினைந்து உருகும்
அடியார்கள் கண்ணாரக் கண்டு மனங்குளிரத் தியானித்து உய்யும் வண்ணம் பெருங்கருணை
கொண்டு தலங்கள்தோறும் எழுந்தருளி, அருளுருவைக் காட்டி ஆண்ட புகழ் அனைத்தையும்
தொகுத்துக் கூறலின் இப்பெயர் பெற்றது இவ்விளக்கங்கள் அனைத்தும்,  "புகழ்பெருகும்
செய்கையெல்லாம் புகல் அகவல் ஒன்றாகும்"  என்ற பழைய திருப்பெருந்துறைப் புராணம் பகுதியின்
விரிவாகும்.

    இந்நூல் முழுவதையும் அகப்பொருட்டுறை அமைதிபெற வகுத்தார் என்று உரைப்பார் சிலர்.
 தலைமகனுடன் ஊடிய தலைமகளின் ஊடல் தணியும் வண்ணம் தலைவன் இயலைப் புகழ்ந்து
கூறிய வாயில்களை மறுத்துத் தலைவி இயற்பழித்தது என்பது அவர் கருத்து.

    பழைய உரைகாரராகிய காழித் தாண்டவ ராயர், சிவபுராணத்தில் அநாதி முறைமையான 
நிட்கள சொரூப வியாபகத்தின் பழைமையை அருளி, இதில் சகளமாய் இவ்வுலகில் எழுந்தருளி
அருள் வழங்கும் தடத்த தரிசன முறைமையை அனுக்கிரகிக்கின்றார் மணிவாசகர் என்பர்.

    அகளமாய் யாரும் அறிவரிதாய் நின்ற அப்பொருள் சகளமாய்த் தலங்கள் தோறும் 
எழுந்தருளினாலும், உருகிய நெய் உறைந்தாலும் நெய்யாமே அன்றிப் பிறிதாகாத வண்ணம்
அகளமாய் அறிவாய் நின்ற சிவம் சகளமாய் வடிவு கொள்ளினும் அவ்வடிவு மாயா காரியம் அன்று.
அநாதியாகிய பரையே அருள் திருமேனி கொண்டு ஆன்மாக்களது பரிபாக நிலைக்குத் தக
குருவடிவாக எழுந்தருளிச் சிவானந்த அனுபவ உண்மை உணர்த்திய பொழுது, அச்சிவம்
எவ்விடத்து எவ்வுரு மேற்கொண்டு எம்முறையால் உணர்த்திற்று என்று தன் அனுபவம் சித்திக்கச் 
சொல்லுவதே இக்கீர்த்தித் திருவகவலின் கருத்தாகும் என்க.

    "தில்லை மூதூர்" என்பது முதல் "கொள்கையும் சிறப்பும்" என்பது முடிய எட்டடிகளும்
இறைவன் எங்கும், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து, அறிவுருவாகக் காட்சி
வழங்கியதைத் தெரிவிப்பது.

    ஒன்பதும் பத்துமாகிய அடிகள், அறிவுருவாய் விளங்கிய இறைவன் அடியார்கள் ஈடேறப் 
பிரமாண நூல்களை அருளிச் செய்த உருவ அருவ இயல்பு உணர்த்துவன.

    "கல்லாடத்து" என்பது முதல் "மகேந்திர வெற்பன்" (100ஆவது அடி) என்பது முடிய 
இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களும் அவற்றில் அவன் நிகழ்த்திய அற்புதத்
திருவிளையாடல்களும் உணர்த்தப் பெறுகின்றன.

    "அந்தமில் பெருமை" (101ஆவது அடி) என்பது முதல் "ஆண்டு கொண்டருளி" ( 126 ஆவது அடி) 
என்பது முடிய அடிகளார் தம்மை ஆட்கொள்ள இறைவன் தசாங்கங்களுடன் போந்து ஆண்ட
சிறப்பு உணர்த்தப் பெறுகின்றது.

    "நாயினேனை" (127ஆவது அடி) என்பது முதல் “ஏங்கவும்" (139ஆவது அடி) என்பது முடிய
தன்னைக் “கனக சபைக்கு வருக” என ஆணை தந்து இறைவன் மறைய, அடியார்கள் பலரும்
எரியில் பாய்ந்தும், மயங்கியும், அலறியும், அரற்றியும், ஏங்கியும் பாதம் எய்த, கைலைக் கிழவோன்
தன் அடியார்களோடு புலியூர்ப் புகுந்து இனிதாக வீற்றிருந்த சிறப்பைத் தெரிவிக்கின்றது.

    தொகுத்து நோக்கினால், கைலை நாதனாகிய இறைவனே எம்மை ஆட்கொண்டு , இங்கு
இருத்தி, பல தலங்களிலும் பல காலங்களில் பலருக்கு அருள் வழங்கி, அடியாரோடு புலியூர்ப் புக்கு 
இனிது இருந்தான் என்பதை அறியலாம். இதனையே சிவனுடைய அருளின் முறைமை என
அகத்தியச் சூத்திரம் அறிவிக்கின்றது.

    The title of the second chapter of Thiruvaachakam means as under 
        Keerthi - Glory: Thiru - Sacred; Ahaval- Blank verse that is the sacred blank
        verse on the glory of Lord Civan. It consists of 146 lines of four feet each. This
        verse was sung in Thillai (Chidambaram Temple).

    The quintessence of this verse is adoration of Lord Civan's glorious grace.

    The poem deals with the general scheme of the working of the grace or sakti in the
universe. The Lord can be understood by man only through the force of His grace. In  this
garland of homage are woven poetically the manifold acts of glorious grace of Lord Civan as
recounted in the sacred love of saivaite Hindus. As many as 45 incidents of grace are thus
related here. The Almighty Lord reveals Himself to the devotees in their diverse walks of life,
and moves with them in accordance with the varied stages of their spiritual development, so that
His faithful ones may be drawn towards His light.


2.1     தில்லை மூதூர் ஆடிய திருவடி 
    பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 
    எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி
     மண்ணும், விண்ணும், வானோர் உலகும்

5.    துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் 
    என்னுடை இருளை ஏறத் துரந்தும் 
    அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
    குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்
    மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

10.     சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 
    கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி 
    நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
    பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
     எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

15.     கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நல் தடம் படிந்தும் 
    கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்
    மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 
    மற்று, அவை தம்மை மகேந்திரத்து இருந்து

20.     உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்; 
    நந்தம் பாடியில் நான் மறையோன் ஆய், 
    அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும்
     வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் 
    நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி

25.     ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக் 
    கூறுஉடை மங்கையும் தானும் வந்தருளிக்
     குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச்
     சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும்
    வேலம்புத்தூர் விட்டேறு அருளிக் 

30.     கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 
    தர்ப்பணம்  அதனில் சாந்தம் புத்தூர் 
    வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
    மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி 
    சொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும்

35.     அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
     நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் 
    ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி
    பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
    ஈண்டு கனகம் இசையப் பெறா அது 

40.     ஆண்டான் எம்கோன் அருள்வழி  இருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 
    அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி
     இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் 
    மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

45.     குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 
    ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆகப் 
    பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும்
     உத்தர கோச மங்கையுள் இருந்து
    வித்தக வேடம் காட்டிய இயல்பும்

50.     பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும் 
    வாதவூரினில் வந்து, இனிது அருளிப் 
    பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
    திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக் 

55.     கருஆர் சோதியில் கரந்த கள்ளமும்
     பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப்
    பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
     தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து 
    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

60.     விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில், 
    குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும் 
    பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு 
    அட்டமா சித்தி அருளிய அதுவும் 
    வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு

65.     காடு அது தன்னில், கரந்த கள்ளமும் 
    மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
     தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்,
     ஓரியூரில் உகந்து, இனிது அருளிப்
    பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்

70.      பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
    தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
    கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் 
    தேன் அமர் சோலைத் திருவாரூரில் 
    ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

75.      இடைமருது அதனில் ஈண்ட இருந்து 
    படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
    ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
    திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

80.     மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்: 
    சேவகன் ஆகித் திண்சிலை ஏந்தி
     பாவகம் பல பல காட்டிய பரிசும்
     கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் 
    ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

85.     ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 
    துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
     திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் 
    கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 
    கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்

90.     புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 
    குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
     அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து 
    சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு 
    இந்திர ஞாலம் போல வந்து அருளி,

95.     எவ் எவர் தன்மையும் தன்வயின் படுத்துத்
    தானே ஆகிய தயாபரன், எம்இறை 
    சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி 
    அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
    சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும்

100.     மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 
    அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 
    எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
    ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு
     நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்

105.     ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் 
    ஆனந் தம்மே, ஆறா அருளியும்
    மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் 
    நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 
    அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

110.     கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 
    மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் 
    தூய மேனி, சுடர்விடு சோதி
    காதலன் ஆகிக், கழுநீர் மாலை 
    ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்

115.     அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 
    பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
    மீண்டு வாராவழி அருள் புரிபவன் 
    பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
    பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

120.      உத்தரகோச மங்கை ஊர்  ஆகவும்
     ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய 
    தேவ தேவன் திருப்பெயர் ஆகவும் 
    இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
    அருளிய பெருமை அருள்மலை ஆகவும் 

125.     எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும்
     அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி
     நாயினேனை நலம் மலி தில்லையுள் 
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென
    ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி

130.     அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் 
    ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 
    எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 
    மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்
    பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் 

135.     கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி
    'நாத! நாத! ' என்று அழுது அரற்றி 
    பாதம் எய்தினர் பாதம் எய்தவும் 
    'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று 
    இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்

140.     எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்
     பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம்நவில் 
    கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு
     அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை
    இறைவன், ஈண்டிய அடியவரோடும்

145.     பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன் 
    ஒலிதரு கைலை உயர் கிழவோனே.

                திருச்சிற்றம்பலம்

2.1     தில்லை மூதூ ராடிய திருவடி 
    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி 
    யெண்ணில் பல்குண மெழில்பெற விளங்கி 
    மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்

    தில்லை மூதூர் ஆடிய திருவடி
    பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
    எண்இல் பல்குணம் எழில் பெற விளங்கி 
    மண்ணும், விண்ணும், வானோர் உலகும்

    thillai muuthur aadiya thiruvadi
    palluyirellaam payinRanan aaki 
    eNNil palkuNam ezilpeRa viLangki
    maNNum viNNum vaanoor ulakum

5.     துன்னிய கல்வி தோற்றியு மழித்து 
    மென்னுடை யிருளை யேறத் துரந்து 
    மடியா ருள்ளத் தன்புமீ தூரக்
    குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
     மன்னு மாமலை மகேந்திர மதனிற்

    துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும் 
    என்னுடை இருளை ஏறத் துரந்தும் 
    அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் 
    குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்
     மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

    thunniya kalvi thooRRiyum aziththum 
    ennudai iruLai eeRath thuranthum 
    adiyaar uLLaththu anpu miithuurak
    kudiyaak koNda koLkaiyum siRappum 
    mannum maamalai makeenthiram athanil

பொ-ரை: 1-10: சிவபெருமான் தில்லை என்னும் பண்டைத் திருப்பதியின்கண் கூத்து 
இயற்றுபவன்.  அவன் தனது பொற்பாதங்களைப் பல்வகைப்பட்ட உயிர்கள்
எல்லாவற்றிலும் பொருந்துமாறு செய்த அருளாளன். கணக்கில் அடங்காத தனது பலகோடி 
அருட்பண்புகளும் சிறந்து தோன்றுமாறு அவன் வெளிப்படுகிறான். மண்ணுலகிலும்
விண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட வானவர் உலகிலும் பொருந்திய பல கலைகளைத் 
தோற்றுவித்தும் ஒடுக்கியும் விளங்குகிறான். என்னை மேற்கொண்ட அறியாமையை
முற்றிலும் ஒழித்து அருளினான். அன்பர்கள் நெஞ்சத்தில் மெய்யன்பு பொங்கிப் பெருகும் 
பொருட்டு அதனைத் தன் இருக்கையாகக் கொண்ட உறுதியும் தலைமையும் உடையவன் 
அவன்.  புகழால் நிலைபெற்ற பெருமலையாகிய மகேந்திரம் என்னும் இடத்தில்
உமையம்மையாருக்கு அருளிய வீட்டு நூலை உலகினர் நலன் பொருட்டு எமக்குக் காட்டி
அருளினான்.

1 - 8: Lord Civan's holy Feet which danced in the age old temple in Thillai also dances
unceasingly in the hearts of countless devotees. This mystic dance revealed the beauty of His
myriad qualities. (Concised into eight qualities - See Story No. 23). Lord Civan unfolds the rich
lore of knowledge in this earth, in the skies (Indira's abode) and also in the world of the heavenly
ones (world of Brahma, Vishnu, Rudran, Ananthar, Sadaacivan and others) and then conceals
them also. He dispelled in its entirety my own ignorance. It is the firm principle and glory of 
Civan that He dwells within the inner-most soul of His loved ones, wherein wells up intense love
towards Him.

9- 10: In the great firm Mahendra Hill (situated in Ganjam district, Orissa), He revealed in grace
the Aagamaas, which were earlier recounted by Him to goddess Uma (See Story No. 14  of how 
the Aagamaas were first told to goddess Uma and were destroyed).

கு-ரை: 1- 8: பயின்றனன் என்பதில், பயிலுதல் - பொருந்துதல். ஏற - முற்றிலும். கொள்கை - உறுதி.
தில்லையானது ஐம்பூதங்களுள் வானைக் குறிக்கும் திருப்பதி . வான் வெளியிலே பிற  பூதங்கள்
அடங்குவது போல, அருள் வெளியிலே தத்துவம், புவனம் முதலிய யாவும் அடங்கும். அவ்வருள் வெளியில்
நடமாடும் அப்பன், படைப்புக் காலத்தில் உடம்பெடுக்கும் உயிர்களின் நெஞ்சத் தாமரையிலும் பொருந்திக்
கூத்து இயற்றுங்கால் எவ்வுயிரும் இயங்குவனவாம்.  தில்லை, உலகிற்கு இதயமென்றும் கூறுப.

தில்லை மரங்கள் நிறைந்த இடமாய் இருந்தமை பற்றி அப்பெயர் ஏற்பட்டதென்ப.  இறைவனின்
பல்குணங்கள் நல்லுயிர்கட்கு அங்கங்கே தோன்றுவன. கலைகள் சிறப்பாக அவனை அடையும் வழியை
உணர்த்துவன. உய்திபெறத் தகுதியுற்ற காலத்தே அவனே அறியாமையை முற்றிலும் ஒழிப்பான். பின்னர்
அன்பர் நெஞ்சில் குடிகொண்டு அதனை நீங்காது தலைமை பூண்டிருப்பான். இக்கருத்து இப்பகுதியில்
தெரிவிக்கப்பட்டது. இருள் - ஆணவமாகிய மூலமலம். மலநீக்கத்தின் பின் சிவப் பேற்றிற்குரிய அயரா
அன்பே, மீதூரும் அன்பாகும். தன்னைப்பற்றிய அன்பரைக் கைவிடாத உறுதியும் ஆட்கொள்ளும்
தலைமையும் உடையான் என்பது கருத்து.

கு-ரை: 9-10: மகேந்திரம், பொதிகைக்குத் தெற்கேயுள்ளதெனச் சிவதருமோத்தரம் கூறும். 'சொன்ன' 
என்பதற்கு மேலுலகிற் கூறப்பட்ட எனவும், 'தோற்றுவித்து'  என்பதற்கு எழுதுவித்து எனவும்  பொருள்
கொள்ளுவதும் உண்டு.

10.     சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியுங்
    கல்லா டத்துக் கலந்தினி தருளி
     நல்லா ளோடு நயப்புற வெய்தியும் 
    பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடு 
    மெஞ்சா தீண்டு மின்னருள் விளைத்துங்

    சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 
    கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி 
    நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் 
    பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் 
    எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;

    soonna aakamam thooRRuviththu aruLiyum
    kallaadaththuk kalanthu inithu aruLi
    nalla Loodu nayappuRavu eyuthiyum 
    panja paLLiyil paalmoozi thannoodum
    enjaathu eeNdum innaruL viLaiththum

15.     கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நற்றடம் படிந்துங் 
    கேவேட ராகிக் கெளிறது படுத்தும் 
    மாவேட் டாகிய வாகமம் வாங்கியும் 
    மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்

    கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 
    விராவு கொங்கை நல் தடம் படிந்தும் 
    கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும் 
    மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 
    மற்று, அவை-தம்மை மகேந்திரத்து இருந்து

    kiraatha veedamoodu kinjsuka vaayavaL 
    viraavu koongkai nalthadam padinthum 
    keeveedar aakik, keLiRu athu paduththum
    maaveeddu aakiya aakamam vaangkiyum 
    maRRu avai thammai makeenthiraththu irunthu

பொ-ரை: 11-22: கல்லாடமென்னும் பதியில் இயற்கை நல்லியல்புடைய அம்மை வழிபட்ட 
திருவடிவிற் கலந்து தோன்றினான்.  இன்னருள் புரிந்து அவளோடு பேரின்ப நட்புக் 
கொண்டும் விளங்கினான். பஞ்சப் பள்ளி எனும் ஊரில் பால்போல் தூய மொழியளாம்
உமையம்மையுடன் கலந்திருந்து அடியவர்கட்குக் குறையாது வளரும் இனிய கருணையைப் 
பெருக்கினான். வேடன் வடிவம் கொண்டு முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினையுடைய 
அருட்சத்தியின் நெருங்கிய நகிலாகிய புனிதப் பொய்கையில் மூழ்கி இருந்தான். வலைஞர் 
வேடம் பூண்டு வலை வீசிக் கெளிற்று மீன் ஒன்றை வலையில் வீழ்த்தினான். அதன்
பாலிருந்த பெரிய ஏட்டின் உளவாகிய அருள்நூலை மீளப் பெற்றான். இருபத்தெட்டு
ஆகமங்களாகிய அவைகளை மகேந்திர மலையில் ஐந்து திருமுகங்களோடு வீற்றிருந்து
ஐந்து பெரும் முனிவர்களுக்கும் ஓதி அருளினான், நந்தம்பாடி என்னும் இடத்தில்  நான்மறை
உணர்த்தும் ஈறில்லாப் பேராசிரியனாகி வீற்றிருந்து அருளினான்.

11 - 14: Goddess Uma was worshipping Lord Civan in the icon of His Holy Feet in a place 
called "Kallaadam".  Lord Civan showered His bounteous grace on Uma by appearing before
Her and was happy in Her company. In another place known as "Panchapalli" Lord Civan
along with His divine consort Uma, whose voice is as sweet as pure milk, granted lavishly His
unstinting grace on those who humbly sought Him there (See Story No. 70). 

15 - 16: In the guise of a hunter and huntress Lord Civan and Uma appeared in the forest where
Arjuna was doing penance to get darshan of Lord Civan to get Civan's divine missile 
(Paasupathaasthram - பாசுபதாஸ்திரம்) to fight against the Kauravaas. This incident which is
narrated in Maha Bhaarata, is alluded to, by Maanikkavaachakar in lines 15 and 16 . It is but 
natural that hunters will feel thirsty while roaming in the forest. Metophorically these two lines
indicate that Lord Civan gets grace (அருட்சத்தி) by diving into the tank of Uma's bosom (from
where her grace Shakti - energy flows), whose lips are as crimson as the flower of holy-leaved
berberry (Erithrina Indica - முள்ளு முருங்கை - கிஞ்சுகம்) 

17 - 20: Lord Civan took the form of a fisherman and spread his net and succeeded in catching
the fiddler fish (Macro Nes Vittatus) which was carrying the big scrolls of Aagamaas and
recovered them. (See Story No.14). Taking the Aagamaa scrolls to Mount Mahendra, He
explained the 28 Aagamaas on this second occasion to His five disciples viz., Agastyar,
Kaasibar, Gauthamar, Bharadwaajar and Kaucikar (அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர்,
கௌசிகர்) through His five faces. 

Note: Five faces are Eesaanam, Thathpurusham, Aghoram, Vaamadevam and Sathyojaatham.

கு-ரை: 11-20: நயப்பு - இன்பம். உறவு - நட்பு. வீட்டினை நல்குவான் புரியும் கருணை, குறையாது மிகும் 
இயல்பிற்று. இன்பம், அதன் விளைவாகும். கிராதன் = வேடன். கிஞ்சுகம் = முள்முருக்கு. விராவு=நெருங்கு. 
தடம் = பொய்கை. படிதல் = மூழ்குதல். தவங்கிடந்த அருச்சுனனுக்கு அருள்புரியச்  
சென்ற காலை இறைவனும் இறைவியும் வேட்டுவ வடிவம் கொண்டு சென்றமை பாரதத்துள் காண்க.
வேட்டை ஆடுகிறவனுக்கு நீர் வேட்கை மிகுதியும் உளதாகும் ஆதலின், அதனைத் தீர்த்தற்குரிய பொய்கை
இஃதென அடிகள் கவிநயம்பற்றி ஓதியருளினர். உய்தி கூட்டும் ஞானம் தருவது முலைப்பால்; ஞானத்துள்
காணப்படுவது சிவமாதல்பற்றி, 'கொங்கை நற்றடம் படிந்த' தென்றார். கேவேடர்= வலைஞர். மாவேட்டு
என்பதற்குப் பெரிய விருப்பத்தைத் தருவதாகிய என்றும் பொருள் கொள்ளுதலுண்டு. வேட்டு=விருப்பம் .

அவை தம்மை' என்றமையால் ஆகமம் பல ஆதல் தெளிவு.  முதற்கண், உமையம்மைக்கு ஆகமம் ஓதுவித்த
காலை, அம்மை, நந்தி முதலியோர் செய்த பிழைக்காக, அவர்கள் வெஞ்சொற் பெற்றனரென்றும், கெளிற்று
மீனான நந்தி பெருமான் ஆகம ஏட்டைக் கடற்கண் சுமந்து திரிந்தார் எனவும், இறைவன் வலைஞனாய் 
ஏட்டை மீளக் கொண்டான் எனவும் திருவிளையாடற் புராணம் கூறுவது காண்க. இரண்டாவது முறை 
அகத்தியர் முதலிய ஆதிசைவக் குடிமுதல்வராகிய ஐவர்க்கும், ஐம்முகங்கள் வாயிலாக ஆகமங்கள்
கூறப்பட்டன. ஐவரும், ஐந்து திருமுகங்களிலே ஒவ்வொன்றில் இறைவனை வழிபட்டமையால் 'உற்ற
ஐம்முகங்களால்' என்றார். ஐம்முனிவராவார்:- அகத்தியர், காசிபர், கௌதமர், பரத்துவாசர், கௌசிகர்.


20.     துற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியு
    நந்தம் பாடியி னான்மறை யோனா 
    யந்தமி லாரிய னாயமர்ந் தருளியும் 
    வேறுவே றுருவும் வேறுவே றியற்கையு
     நூறுநூ றாயிர மியல்பின தாகி

    உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் 
    நந்தம் பாடியில் நான்ம றையோன் ஆய்,
    அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்து அருளியும் 
    வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும் 
    நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

    URRA aimmukangkaLaal paNith tharuLiyum 
    nantham paadiyil naanmaRai yoonaay
    anthamil aariyanaay amarnthu aruLiyum 
    veeRu veeRu uruvum veeRu veeRu iyaRkaiyum 
    nuuRu nuuRu aayiram iyalpinathu aaki

பொ-ரை: 23-26: அறமாகிய காளையை ஊர்தியாகக் கொண்டவன் எம் பெருமான்.
இவ்வுலகினரை உய்வித்தற்பொருட்டு, தன் திருமேனியில் ஒரு பகுதியாகச் சத்தியைக் 
கொண்டனன்.  அடியாரின் பக்குவ வேறுபாட்டுக்கேற்ப மாதொருபாகன் வெவ்வேறு 
திருவடிவமும், வெவ்வேறு தன்மைகளும் கோடிக்கணக்கில் அமையுமாறு தோன்றி அருளினான்.

21 - 22: Lord Civan, the eternal Guru (preceptor), was graciously seated in the place called
"Nandampaadi" as a matchless exponent of the four Vedas (See Story No. 67).

23- 26: Civan, the Lord of the Universe who has the bull as His vehicle,assuming multi diverse
forms, and multi diverse attributes, with myriad such mutations suited to the maturity of the
devotees, came graciously with His spouse (divine consort) who is His half, to redeem this world.

கு-ரை: 21-22 நமது பாடியென்று பொருள் கொள்ளின், நந்தம் பாடியென்பது திருவாதவூரைக்
குறிக்கலாம். ஆரியன் - ஆசிரியன், நான்மறையாய பொது நூல் வெளிப்படுத்தினவனும் இறைவன்
என்பது இங்கே குறிக்கப்பட்டது. இறைவன் பொதுச் சிறப்பு நூல்களை வெளிப்படுத்தினமை கூறி
அவனுடைய திருவிளையாடல்களை விதந்தோதுவான் தொடங்குகின்றார்.

கு-ரை: 23-26: 'ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமுமாதி மாண்புங் கேட்பான் புகில் அளவில்லை' என்ற
கருத்தே இங்கு வந்தமை காண்க, உய்ய= உய்விக்க, சக்தி இறைவனது திருமேனியாதலின், ''மங்கையும்
தானும்' என்றார். அருட்சக்தி வாயிலாகவே உய்தி கூட்டுமுறை நிகழ்த்தற்பாலது, நூறு நூறாயிரம்
என்பது கோடி என்ற எண்ணைக் குறித்தாலும், 'பலப்பல' என்ற பொருளில் வந்ததாகும்.
அளவிலையென்பதே கருத்து.

25.     யேறுடை யீசனிப் புவனியை யுய்யக்
    கூறுடை மங்கையுந் தானும்வந் தருளிக் 
    குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் 
    சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
    வேலம் புத்தூர் விட்டே றருளிக்

    ஏறு உடை ஈசன், இப்புவனியை உய்யக்
     கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
     குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச்
     சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும் 
    வேலம்புத்தூர் விட்டேறு அருளிக்,

    eeRudai iisan ippuvaniyai uyyak
    kuuRudai mangkaiyum thaanum vantharuLik
    kuthiraiyai koNdu kudanaadu athanmisai
    sathurpada saaththaayth thaan ezuntharuLiyum
    veelam puththuur viddeeRu aruLi

பொ-ரை: 27-32: வேலம்புத்தூர் என்னுமிடத்திலே உக்கிரகுமாரனுக்கு வேல் கொடுத்தருளித்
தன் திருவடிச் சிறப்பைக் காட்டிய அருட்செயல் மிகப்பெரியது. சாந்தம்புத்தூரில் வில்லாற்
போர்புரியும் வேடனுக்குக் கண்ணாடியில் தோன்றி அவன் செய்த தவப்பயனாக வாள்
கொடுத்து அருள் செய்தான். குதிரைகளை நடத்திக் கொண்டு மேலை நாட்டிடத்தே
வணிகர் கூட்டத்தினனாய்த் திறமையுடன் தானே புறப்பட்டு வந்தருளினான்.

27 - 32: Lord Civan appeared in grace as an able dealer of horses and, mingling with the horse
traders very cleverly, brought the horses to the western part of the land (Madurai is in the
western direction of Thiru-Perun-Thurai). In a place called "Velam Putthoor" Lord Civan 
showed the splendour of His form to King Ukkira Kumaara Paandiyan and gave him the Javelin 
(Sec Story No. 93), In another place known as "Saantham Puthhoor" Lord Civan appeared in a
mirror to an archer - devotee and gave him the bow and arrows and similar weapons as prayed for.

கு-ரை: 27-32:  திருப்பெருந்துறைக்கு மேற்கே மதுரைக்குப் போகும் வழியிலுள்ள நாடு குடநாடு
எனப்பட்டது. (கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய 'குட்ட நாடு' வேறு. இது திசை நோக்கிக் கூறப்பட்டது)
குடக்கு= மேற்றிசை. சதுர் = திறமை, தன்னைப் பிறரறிய முடியாத சதுரப்பாடு. பட= பொருந்த, 
சாத்து= வணிகர் கூட்டம். விட்டேறு=வேல். கொள்கை =செயல், தர்ப்பணம் = கண்ணாடி. 'ஈந்த விளைவும்'
என்பதை விளைவு ஈந்ததும் என மாற்றுக

30     கோலம் பொலிவு காட்டிய கொள்கையுந் 
    தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் 
    விற்பொரு வேடற் கீந்த விளைவு 
    மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
    சொக்க தாகக் காட்டிய தொன்மையு

    கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 
    தர்ப்பணம்  அதனில் சாந்தம் புத்தூர்
    வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் 
    மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
    சொக்கு  அது ஆகக் காட்டிய தொன்மையும்

    koolam polivu kaaddiya koLkaiyum 
    tharppaNam athanil saantham puththuur
    vilporu vedaRku eentha viLaivum
    mokkaNi aruLiya muzuththazal meeni
    sokku athu aaka kaaddiya thonmaiyum

35.     மரியொடு பிரமற் களவறி யொண்ணான் 
    நரியைக் குதிரை யாக்கிய நன்மையு 
    மாண்டுகொண் டருள வழகுறு திருவடி 
    பாண்டி யன்றனக் குப்பரி மாவிற்
    றீண்டு கனக மிசையப் பெறாஅ

    அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 
    நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
    ஆண்டு கொண்டு அருள அழகுஉறு திருவடி 
    பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
    ஈண்டு கனகம் இசையப் பெறா அது

    ariyodu piramaRku aLavu aRi oNNaan
    nariyai kuthirai aakkiya nanmaiyum
    aaNdu koNdu aruLa azkuRu thiruvadi
    paNdiyan thanakkup parima viRRu
    iiNdu kanakam isaiyap peRaa athu

பொ-ரை: 33-41: இறைவனாகிய தலைவன் குதிரை வாயில் கொள்ளுப் பையைக்  கட்டும்
விதமாகக் கீழே இறங்கி நின்றனன். அவ்வமயம் நெருப்பையொத்த சிவந்த திருமேனியை
அவன் அழகுறக் காட்டிய முறைமை மிகப் பழமையானதாகும். திருமாலோடு பிரமனும்
அளந்தறிய இயலாத எம்பெருமான், நரிகளைப் பரிகளாக்கிய நற்செயல் செய்தவன்.
பாண்டியனை ஆட்கொண்டு, அழகு மிகுந்த திருவடிவுடன் அவனுக்குக் குதிரைகளை விற்று
அவன் தந்த திரண்ட பொருளை ஏற்றுக் கொள்ள மறுத்தவன்; அதனால் பாண்டியன் 
சற்றுநேரம் செயலற்று தன் திருவருள் வழி நிற்குமாறும் செய்தனன். அங்ஙனம், அவன்
பாண்டியனது உள்ளத்தை ஊக்கும் அருளொளி காட்டி நின்றது பாண்டியன் பெற்ற
பண்டைய பரிசாகும்.

33 - 41: Lord Civan showed His beautiful form of grace as a full Flame of Fire to the Paandiyan 
King while He was handling the horse-gram bag. He who could not be perceived even by
Brahma and Thirumaal did the good deed of transforming the jackaals into horses. Lord Civan
sold the horses to the Paandiyan King, but refused to accept the large quantity of gold he gave.
But to make the king His own my Lord displayed gracefully His beautiful holy Feet,which
impelled the king to stay in the holy path of my King (Civan) who then manifested in the ancient
brightening ray.

கு-ரை: 33-41:  மொக்கணி = கொள்ளுப்பை; அருளிய = அருளும் பொருட்டு, தூய செம்மேனி என்பார் .
'முழுத்தழல் மேனி' என்றார். சொக்கது= அழகுடையது. ஆட்கொள்ளக் கருதிய அடியார்க்குத் தன் அருள் 
வடிவம் காட்டுதல், இறைவனது வழக்கமான பழைய முறை என்பார் 'தொன்மை' என்றார். முழுத்தழல் 
மேனி அடிகட்குக் காட்டப்பட்டது . 'தூண்டு சோதி' பாண்டியற்குத் தோற்றுவிக்கப்பட்டது. திருவடி=
 திருவடிவு (கொடு); ஈண்டு கனகம் = திரள் பொன், வினைத்தொகை, இறைவனது திருமேனியைக் கண்ட
அளவிலே பாண்டியன் தன் செயலற்றுத் தலை மேல் கை குவித்தனனாதலின், 'அருள்வழி இருப்ப'
என்றார்.

40.     தாண்டா னெங்கோ னருள்வழி யிருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையு
    மந்தண னாகி யாண்டுகொண் டருளி
    யிந்திர ஞாலங் காட்டிய வியல்பு 
    மதுரைப் பெருநன் மாநக ரிருந்து

    ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்
    தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 
    அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி, 
    இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
    மதுரைப் பெருநல் மாநகர் இருந்து

    aaNdaan engkoon aruLvazi iruppa
    thuuNdu soothi thooRRiya thonmaiyum
    anthaNan aaki aaNdu koNdaruLi 
    inthira njaalam kaaddiya iyalpum
    mathurai perunan maanakar irunthu

பொ-ரை: 42-47: அழகிய தண்ணருள் நிறைந்த முனி வடிவினனாகி என்னை ஆட்கொண்டு 
அருளியவன்; உடனே மறைந்தமையாகிய இந்திர ஜாலம் போன்ற திருவிளையாடல் (மாயம்) 
காட்டிய இயல்புடையவன்; சுந்தர சாமந்தன் என்ற அன்பனுக்காக மதுரைப் பெருநகரில்
வீற்றிருந்தவன்; குதிரை வீரனாகி வெளிப்போந்த அருட்செயலுக்குரியவன்; அம்மதுரை 
நகரில் தனது மெய்யன்பினள் செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி பொருட்டு
உரிமையாக மண் சுமந்து அருளிய பண்பினன் அவன்.

42 - 47: Lord Civan took the form of a Brahmin and graciously made me (Maanikkavaachakar)
His own, when He manifested His mystic powers by assuming a physical form and vanishing at
will. (The incident which happened at Thirup-Perun-Thurai where Maanikkavaachakar had his 
first vision of Lord Civan, under the "Kuruntha" tree, who disappeared after giving initiation to
Maanikkavanchakar, is quoted here). 

In another instance Lord Civan became the chief horse breeder in the great city of 
Madurai to save His devotee "Soundara Saamanthan". The  latter, a commander-in-chief
of the Paandiyan King, spent the money given to him by the king in feeding
the disciples and devotees of Civan and in renovating Civan Temples. Lord Civan gave darshan
to the Paandiyan King as well to Soundara Saamanthan as the captain of the cavalry and later
disappeared along with His entire army. In the same city of Madurai, Lord Civan condescended
to carry sand on his head as a labourer, to prevent the breach of the flooded river Vaigai. This
He did on behalf of a faultless and sincere devotee 'Vandhi' (செம்மனச் செல்வி என்னும்
பிட்டு வாணிச்சி). He came as a labourer belonging to her own community and took the responsibility
of undertaking her share of the work as ordered by the king.

கு- ரை: 42-47: இந்திர ஞாலம்= இந்திர ஜாலம்= இந்திரன் வலை=  இந்திரன் தன்னெதிரிகளை வெல்லச் 
செய்த சூழ்ச்சிகள். அவை போல்வனவற்றையும் அச்சொற்றொடர் குறிப்பதாயிற்று. சௌந்தர சாமந்தன்
என்ற பாண்டிய அமைச்சன் அரசன் பொருளை அடியார்க்கு அமுதளிக்கப் பயன்படுத்தினவன். அவன்
கதை திருவிளையாடற் புராணம் மெய்க்காட்டிட்ட படலத்துள் காண்க, திருவாதவூரடிகளுக்குக் கீழ்த்திசை
நின்று குதிரை கொணர்ந்தனர். சௌந்தர சாமந்தனுக்கு மதுரையிலிருந்தே குதிரைப் படை காட்டினர்.
மண் சுமந்த வரலாறு வெளிப்படை, பாங்கு= உரிமை, அவளினத்தான் போல வந்து அவள் செய்யவேண்டிய
வேலையைச் செய்தமையின் அவ்வாறு கூறினர்.

45.     குதிரைச் சேவக னாகிய கொள்கையு 
    மாங்கது தன்னி லடியவட் காகப் 
    பாங்காய் மண்சுமந் தருளிய பரிசு 
    முத்தர கோச மங்கையு ளிருந்து 
    வித்தக வேடங் காட்டிய வியல்பும்

    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 
    ஆங்கு, அதுதன்னில், அடியவட்கு ஆகப் 
    பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும் 
    உத்தர கோச மங்கையுள் இருந்து 
    வித்தக வேடம் காட்டிய இயல்பும்

    kuthirai seevakan aakiya koLkaiyum
    aangku athu thannil adiyavadku aaka 
    paangkaay maNsumanthu aruLiya parisum       

    uththara koosa mangkaiyuL irunthu 
    viththaka veedam kaaddiya iyalpum

50.     பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும் 
    வாத வூரினில் வந்தினி தருளிப் 
    பாதச் சிலம்பொலி காட்டிய பண்புந்
    திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்

    பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 
    தூவண மேனி காட்டிய தொன்மையும்
    வாதவூரினில் வந்து, இனிது அருளிப்
    பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
    திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்

    puuvaNam athanil polinthirunthu aruLi
    thuvaNa meeni kaaddiya thonmaiyum
    vaatha uurinil vanthu inithu aruLi
    paatha silambu oli kaaddiya paNpum 
    thiruvaar perunthuRai selvan aaki


பொ-ரை: 48-55: உத்தர கோச மங்கை எனும் பதியில் எழுந்தருளி, போதக ஆசிரிய வடிவம் 
காட்டி அருள் செய்தவன் எம்பெருமான், திருப்பூவணம் எனும் திருப்பதியில் சித்தர் வடிவம்
கொண்டு அடியவர் வீட்டில் எழுந்தருளினான்.  ஆங்கு அவன், தன் பொன் வண்ணத் 
திருவடிவத்தை அடியவருக்குக் காண்பித்து அருளினான். மேலும், பாண்டியனுக்குக் 
குதிரை கொண்டு வரும் வழியில் திருவாதவூருக்கு வந்து, தங்கி, தன் திருவடிச் சிலம்பின் 
ஓசையை நன்கு காண்பித்த நயமும் அவனது அருட்சிறப்பேயாகும்: அழகு நிரம்பிய
திருப்பெருந்துறையில் கலைவல்லவனாகி அருள் புரிந்து பின் பெருமை பொருந்திய
ஒளிப்பிழம்பில் மறைந்ததுவும் அவன் செய்த தந்திரமாகும்.

48 - 55: In the place known as "Uththara-Kosa-Mangai” (உத்தர கோச மங்கை ) Lord Civan
appeared as preceptor and explained the Aagamaas as requested by sages. (Sixty-four sages
prayed to Lord Civan exercising their wish to learn the  Aagamaas directly from Him, who
granted their request, as well as Uma Devi's)

     In a place called 'Thirup-Poovanam' (திருப்பூவணம்) situated towards east of Madurai
Lord Civan appeared as a mystic (சித்தர்) to a lady devotee and converted all the iron materials in
her house into gold. The story goes that a lady devotee by name 'Ponnanaiaal' (பொன்னனையாள்)
was feeding many devotees of Lord Civan with sumptuous tasty food. She had a desire to 
worship Lord Civan in a golden icon. But she had not the wherewithal to make the icon in gold.
Lord Civan appeared before her and showed His pure and graceful form and converted the iron
pieces she had in her house into gold. With this gold she made an icon of Civan (Civa Lingam)
and worshipped it. Lord Civan reached the village Vaadavoor (வாதவூர்) (the birth place of
Maanikkavaachakar) and happily showered His grace on Maanikkavaachakar. Also, He caused
the tinkling of His anklet to be heard by Maanikkavaachakar.

Note:     Maanikkavaachakar was waiting for Lord Civan's arrival with horses as promised by
        Him. The Paandiyan king got wild at this delay. In this embarassing situation,
     Maanikkavaachakar prayed for Civan's arrival with the horses. Maanikkavaachakar
     not seeing the horses, in Madurai went up to Vaadavoor (வாதவூர்) awaiting the arrival of
     Civan with horses. It is then that he heard the tinkling of Lord Civan's anklets. In the
     beauty-brimming Perunthurai (பெருந்துறை) Lord Civan appearing as a Preceptor
     initiated Maanikkavaachakar and then disappeared in the effulgence which is the 
     source of everything.

கு-ரை: 48-55:  இறைவனே தமக்குக் குருவாய் வந்து ஆகமம் கற்பிக்க வேண்டும் என்று உத்தர கோச
மங்கையில் தவங்கிடந்த அடியவர் அறுபத்து நால்வர் பொருட்டு, அவன் அவ்வாறு உபதேசித்தான் என்ப.
வித்தகம்= ஞானம், கல்வி. உத்தரகோசம்= உயர்ந்த நூல் (வெளியான இடம்). மங்கை - நிலமடந்தையின்
பொதுப்பெயர் ஊர்க்காயிற்று.

திருப்பூவணத்திலே பொன்னனையாள் என்னும் நன்மாது கடவுளிடத்தும் அடியாரிடத்தும் மெய்யன்பு 
உடையளாய் விளங்கினாள். இறைவழிபாடியற்ற ஒரு பொன் திருவுருச் சமைப்பிக்க விரும்பினள். 
அவள் கைப் பணம் அடியார்க்கு அமுதளிக்கவே போதியதாக இருந்தமையால் திருவுருவத்திற்குப் 
பொன்னின்றி வருந்தினள். அப்போது, இறைவனே ஒரு சித்த வேடங்கொண்டு  அவள் 
வீட்டிற்குச் சென்று அங்கிருந்த இரும்புச் சாமான்கள் பலவற்றையும் எடுப்பித்து அவற்றைக் குளிகையாற்
பொன்னாக்கி விட்டு மறைந்தனர். திருவருள் திறத்தை அடியவள் பெரிதும் வியந்து தான் கருதியபடி
பொன் திருவடிவம் சமைப்பித்து வழிபாடியற்றினள். 

இனிது= நன்கு, சிலம்பு = வீரக்கழல், கரு= பெருமை,மேன்மை. கரு= காரணம், வித்து. 
உருவப்பொருள் எவற்றிற்கும் காரணமாகிய சோதி எனவும் கூறலாம்.
இறைவனது அருஉருவத் திருமேனி சோதியாதலின், அது உருவங்கட்குக் கருவாயிற்று. 
செல்வன்= ஞானச் செல்வமுடையான். திருப்பெருந்துறையில் அடிகட்கு அருள் புரிந்த பின், 
சோதியில் இறைவன் மறைந்தமை வேம்பத்தூரார் திருவிளையாடலிற் காண்க.

55.     கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
    பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் 
    பாவ நாச மாக்கிய பரிசுந் 
    தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து 
    நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்

    கருஆர் சோதியில் கரந்த கள்ளமும் 
    பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப்
    பாவம் நாசம் ஆக்கிய பரிசும் 
    தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து 
    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்

    karuvaar soothiyiR karantha kaLLamum 
    puuvalam athanil polinthu inithu aruLi 
    paava naasam aakkiya parisum 
    thaNNiir panthar sayam peRa vaiththu
    nanniir seevakan aakiya nanmaiyum

பொ-ரை: 56-63 பூவலம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் விளங்கியருளி, தன் அடியவரின்
தீவினை தொலைத்தது அவன் திறனாகும். பாண்டியன் ஒருவன் போர் செய்த காலத்து
அவன் படைகளுக்குத் தாகவிடாய் தீர்த்தற்பொருட்டு, தானே தண்ணீர்ப் பந்தல் 
அமைத்தான் இறைவன். அப்பந்தலில் அமர்ந்து நல்ல நீரை வழங்கி, பணியாளனாகப் 
பேருபகாரம் செய்து பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கும்படியாகச் செய்தனன். முன்னொரு 
காலம் திருவெண்காட்டில் விருந்தினனாய்க் குருந்த மரத்தடியில் அமர்ந்து அருள் செய்தான்;
பட்ட மங்கை என்ற ஊரில் உரிமையுடன் வீற்றிருந்து ஆங்கு இயக்கிகள் அறுவருக்கு
அட்டமா சித்திகளை அளித்த நயமும் அவனது அருட்திறமேயாகும்.

56 - 63: Lord Civan appeared in a place called "Poovalam" (பூவலம்) and destroyed the evil karma
(bad deeds) of all souls. As there is no place called "Poovalam" now, it is to be construed that
Civan showered His grace to Maanikkavaachakar in all the temples he visited on his way from
Madurai to Chidambaram. The earlier place "Poovanam" (பூவணம்) is different from this 
"Poovalam"(பூவலம்). Lord Civan created a drinking-water booth in the battlefield where a 
Paandiyan King who was an ardent devotee of Lord Civan was attacked by his own brother who
along with a Chola King waged war against him. Civan condescended to be the attendant and 
Himself served water to the tired soldiers of the devotee king which paved for the victory of
Paandiyan King (See Story No. 61).

    In a place called “Thiru Ven Kaadu" (திருவெண்காடு) Lord Civan turned up as a stranger
guest and was seated under the "Kuranda" tree (The details of the story of the guest who came to
"Thiru Ven Kaadu" are not known).

    In the place called "Patta Mangai" (பட்ட மங்கை) Lord Civan bestowed graciously to His 
former hand maidens the eight great supernatural powers (அட்டமா சித்தி )

    The story goes like this. The six maidens who fed Lord Karthik requested Lord Civan to
impart the eight great supernatural powers called as "Attamaa Siddhi" (அட்டமா சித்தி). Civan
asked them to learn it from goddess Uma. They were very inattentive while listening and hence 
Civan imprecated them to become stones and remain so under a banyan tree in the place  called 
"Patta Mangai" (பட்டமங்கை). When they repented and prayed for mercy Civan agreed to give 
deliverance from the curse after 1000 years. As Civan was ruling in Madurai as "Soma Sundarar" 
(சோமசுந்தரக் கடவுள்), He went to "Patta Mangai" (பட்ட மங்கை ) and graciously revealed 
to the six maidens the eight super natural powers. The eight super natural powers are:
"Animaa" (அணிமா): "Mahimaa" (மகிமா); "Garimaa" (கரிமா); "Lakimaa" (லகிமா); "Praathi" (பிராத்தி); 
"Piraakaamiyam" (பிராகாமியம் ); "Eechath-thuvam" (ஈசத்துவம்); "Vacith-thuvam  (வசித்துவம்):

Definition of the above eight super natural powers:

1"Animaa"          Supernatural power of becoming as small as an atom. அணுப்  போலாகுதல்.

2."Mahimaa"        Increasing the size at one's will. விருப்பம் போல் உருவத்தைப் 
              பெரியதாகச்  செய்யும் பேராற்றல்.

3."Garimaa"        Making oneself heavy at will.

4."Lakimaa"        Super natural power of levitation. கனமற்றதாகும் ஆற்றல்.

5."Praathi"        The power of obtaining anything one likes.

6."Piraakamiyam"   The power of satisfying all desires by irresistible will force. 

7."Eechath-thuvam" Supremacy or Superiority considered as a super natural power.

8."Vacith-thuvam"  The super natural power of subduing all to one's own will.
               எல்லாவற்றையும் தன் வசமாக்கும் சக்தி.

கு-ரை: 56-63: இனிது= சிறப்பாக, பொலிந்து = விளங்கி. திருவிளையாடற்புராணம் தண்ணீர்ப்பந்தல்
வைத்த படலத்திலே சோழனோடு சேர்ந்து தன்னொடு போர்க்கு வந்த தனது தம்பியை வெல்வதற்கு
இராசேந்திர பாண்டியன் கடவுள் துணையை நாட, அவர் தண்ணீர்ப்பந்தல் வைத்ததாகக் கூறினமை
காண்க. சயம் = வெற்றி,  சேவகன் = வேலையாள். விருந்து = புதிதாக வந்தோன், பட்டமங்கையில்
உபதேசம் பெற்ற நங்கையர், முன்னர்க் கயிலையினின்று இழிந்து ஒரு சாபத்தாற் கல்லாய்க் கிடந்து 
சாபம் நீங்கப் பெற்று இறைவன் உபதேசம் கேட்டனர். முன் தொடர்பிருத்தல் பற்றிப் 'பாங்காய்' என்றார். 
எட்டுப் பெருஞ்சித்திகளாவன: அணுவாதல், மேருவாதல், எளிதாதல், பளுவாதல், எங்கும் இயங்குதல்,           
விரும்பிய இன்பம் பெறுதல், முத்தொழில் புரியும் முதன்மை, தன்வயப்படுத்தல் என்பனவாம்.

60.     விருந்தின னாகி வெண்கா டதனிற்
    குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் 
    பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
    கட்டமா சித்தி யருளிய வதுவும் 
    வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு

    விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்
    குருந்தின்கீழ், அன்று, இருந்த கொள்கையும்
     பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
    அட்டமா சித்தி அருளிய அதுவும் 
    வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,

    virunthinan aaki veNkaadu athanil 
    kurunthin kiiz anRu iruntha koLkaiyum
    padda mangkaiyiR paangkaay irunthu angku
    addamaa siththi aruLiya athuvum
    veeduvan aaki veeNduruk koNdu

பொ-ரை: 64-67: பாண்டியனுக்காக, சோழனுக்கு எதிராகப் போர் புரிதற் பொருட்டு
குதிரைமேல் வேடனாக அச்சமயத்திற்கேற்ப வேடம் தரித்து வந்தான். மன்னன் அவனைத்
தொடர்ந்து வர, காட்டினுள் சென்று மறைந்து விட்டது இறைவனது தந்திரச் செயலாகும்.
உண்மையைக் காட்டி விடுவதற்கு இறைவன் தான் வேண்டிய வடிவமெல்லாம் எடுக்கும்
 நீதிமானாகவும் விளங்குகிறான்.

64 - 65: Assuming any form at will, the Lord Civan took the form of a hunter, fought against the
Chola King to protect His devotee the Paandiyan King and disappeared in the forest. These two 
lines (64 and 65) allude to a story that at the request of His devotee, a Paandiyan King, 
Lord Civan appeared in the battlefield as a hunter riding on a horse and engaged the Chola King in
direct fight. When the Chola King challenged that he would capture Him along with His horse,
Lord Civan fled fast, as if in fear, into a forest, the Chola King chasing him all the while.
Abruptly Lord Civan dived into a deep pond along with His horse while the chasing Chola King
also fell into the pond and perished. Thus Civan made His devotee the Paandiyan King victorious.

66 - 67: Lord Civan assumed at pleasure the form of a commander-in-chief suitable to the 
circumstance and proved to the Paandiyan King the truth of his army chief Soundara Saamanthan.
(சௌந்தர சாமந்தன்). The story goes that a Paandiyan King one day heard from his secret agent
that a hunter chieftain, by name "Sethipar Kone" (சேதிபர் கோன்) was coming to wage war against
him with a big army. The king immediately asked his army chief to take enough money from the
treasury and to recruit soldiers. The army chief spent all the money in feeding the devotees of 
Lord Civan every day. The king came to know of this and ordered the army chief to show the
entire army he had recruited by next day. The army chief went to the temple and prayed to Lord
Civan who revealed through an astral voice that He would bring a big army the next day.

Lord Civan Himself took the guise of a Commander-in-Chief and led a huge army to the wonderment
of the king. At that moment, news reached the king that the hunter chieftain was killed in the
forest by a lion. Simultaneously, the entire army and its chief, Lord Civan disappeared.The king, 
his army chief and all the others assembled, praised and worshipped Lord Civan for his
gracious deed.

கு-ரை: 64-67: வேடுவன் ஆகி = வேடனாக, இக்கதை திருவிளையாடற்புராணம் சோழனை மடுவில்
வீழ்த்திய படலத்திற் காண்க. சோழன் தொடர்ந்து வந்தபோது, தான் காட்டகத்தே உள்ள ஒரு குளத்திலே
குதிரையொடு வீழ்ந்து மறையவே, சோழனும் அதனுள் வீழ்ந்து இறந்தான். மடு இருந்த இடம் காடு
மூடிக்கிடந்தமையால் 'காடது தன்னில்' என்றார். காட்டிட்டு=காட்டிட= காட்டி விட, ஒருவன்= ஒப்பற்றவன்,
தக்கான் = நீதிமான் = நடுவன். சிவபத்தியிற் சிறந்த வாளாசிரியன் ஒருவனது மனைவியை 
விழைந்த அவன் மாணவனது உண்மைத் தன்மையை வெளியிட்டு அவனை ஒறுக்கவேண்டி இறைவனே
வாளாசிரியனாகத் தோன்றி அம்மாணவனோடு பொருது நீதி செலுத்திய வரலாறு, திருவிளையாற்
புராணம் அங்கம் வெட்டிய படலத்துட் காண்க.  அகவலின் இப்பகுதி மெய்க்காட்டிட்ட படலத்தைக்
குறிக்கும் என்பாரும் உளர்.

65.     காடது தன்னிற் கரந்த கள்ளமு
    மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
    தக்கா னொருவ னாகிய தன்மையு
    மோரி யூரி னுகந்தினி தருளிப்
    பாரிரும் பாலக னாகிய பரிசும்

    காடு அது தன்னில், கரந்த கள்ளமும்
    மெய்க் காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு
    தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
    ஓரியூரில் உகந்து, இனிது அருளிப்
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்

    kaadu athu thannil karantha kaLLamum
    mey kaaddiddu veeNduru koNdu
    thakkaan oruvan aakiya thanmaiyum 
    oori uuril ukanthinithu aruLi                
    paar irum paalakan aakiya parisum

பொ-ரை: 68-69: ஓரியெனும் தலத்தில் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி 
அவளுக்கு அருள் செய்த இனியவன்; அவள் மகிழ்ச்சியடையவும், இந்நிலவுலகம் பெருமை 
அடையவும் தாலாட்டக்கூடிய பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய பண்பும் அவனுடையது.

68 - 69: In a hamlet called "Ori" (ஓரி) Lord Civan became a child of greatest glory on earth, 
in order to bless a devotee and make her His own (See Story No. 35)

கு-ரை : 68-69: திருவிளையாடற் புராணம் விருத்த குமார பாலரான படலத்தில் இக்கதையைக் காண்க.
சைவ மறையோன் ஒருவன் சிவனடியார் பத்தியிற் சிறந்த தன் மகளைத் திருமால் வழிபாடுடைய ஓர்
அந்தணனுக்கு மணஞ் செய்வித்தான். அப்பெண்ணின் மாமியார் அவளை ஓர் ஒதுக்கிடத்தே வைத்துக்
கொடுமையாய் நடத்தி வந்தாள். ஒரு நாள் தன் கணவனும் மாமி முதலியோரும் வீட்டைப் பூட்டிவிட்டு 
அயலூருக்குப் போய்விட, சிவனடியார் ஒருவர் அப்பெண்ணிருந்த ஒதுக்கிடத்திற்கு வந்து உணவு
கேட்டார். மாமி உணவுப் பொருள்களை எல்லாம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயினதை அவருக்கு 
அவள் தெரிவிக்கவும், அவர் அவளை நோக்கி "நீ கதவின் பக்கம் போ, அது திறக்கும்" என்றார். உடனே 
அவள் அவ்வாறு போய்க் கதவு திறந்ததைக் கண்டு வியந்து உட்சென்று உணவு சமைத்து 
அவ்வடியார்க்கிட்டாள். வயது சென்ற அவ்வடியார் உண்டபின், ஓர் இளைஞன் வடிவம் கொண்டார்.
பெண்மணி அத்திருக்கோலத்தைக் கண்டு வியந்து நடுங்கி நிற்கும்போது வெளியே போன மாமியார்
திரும்பி வந்துவிட்டாள். அப்போது இளைஞராயிருந்தவர், குழந்தையாய் ஒரு தொட்டிலிற் கிடந்தனர்.
மாமியார் சினங்கொண்டு மருமகளையும் குழந்தையையும் வெளியே தள்ளி விடவே குழந்தையாயிருந்த
அடியவர் விடைப்பாகராகத் தோன்றி அப்பெண்மணியை உமை வடிவினள் ஆக்கிச் சிவலோகம்
புக்கனரெனப் புராணம் பகர்கின்றது. பார்= நிலவுலகம், இரும்= பெருமை உடைய.

70.     பாண்டுர் தன்னி லீண்ட விருந்துந் 
    தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற் 
    கோவார் கோலங் கொண்ட கொள்கையுந்
    தேனமர் சோலைத் திருவா ரூரின்
    ஞானந் தன்னை நல்கிய நன்மையு

    பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் 
    தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் 
    கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் 
    தேன் அமர் சோலைத் திருவாரூரில்
     ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

    paaNduur thannil iiNda irunthum 
    theevuur thenpaal thikaztharu thiivil 
    koovaar koolam koNda koLkaiyum 
    theen amar soolaith thiruvaaruuril
    njaanam thannai nalkiya nanmaiyum

75.     மிடைமரு ததனி லீண்ட விருந்து 
    படிமப் பாதம் வைத்தவப் பரிசு 
    மேகம் பத்தி னியல்பா யிருந்து 
    பாகம் பெண்ணோ டாயின பரிசுந் 
    திருவாஞ் சியத்திற் சீர்பெற விருந்து

    இடைமருது அதனில் ஈண்ட இருந்து 
    படிமப் பாதம் வைத்த அப்பரிசும் 
    ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து 
    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் 
    திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

    idaimaruthu athanil iiNda irunthu 
    padimap paatham vaiththa apparisum 
    ekampaththin iyalpaay irunthu 
    paakam peNNoodu aayina parisum 
    thiruvaanj siyathil siirpeRa irunthu

பொ-ரை: 70-80; பாண்டூர் என்னும் பதியில் அடியவர்க்கு விளங்குமாறு நெருங்கியிருந்து 
அருள் செய்தனன்.  தேவூர்க்குத் தென்புறத்தே விளங்கும் தீவில் அரசியல் தன்மை 
பொருந்திய திருவடிவம் கொண்டருளினான். வண்டுகள் தங்கும் பொழிலினையுடைய 
திருவாரூரில் முனிவர் பலருக்கு உயர்ந்த பெரும் சிவஞானத்தைத் தந்தருளிய உபகாரி
அவன். திருவிடைமருதூரில் அடியார்க்கு விளங்க வீற்றருளி தன் தூய திருவடிகளை அவர் 
சென்னி மீது வைத்த கருணைத் திறம் அவனுடையதாகும்.  காஞ்சிபுரத்தில் தன் 
இயற்கையான அருஉருவத் திருமேனியில் வீற்றிருந்தான். தம்மை வழிபட்ட
உமையம்மையை இடப்பாகத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டது அவனது
பெருஞ்சிறப்பாகும்.  திருவாஞ்சியம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் இருந்து
இயற்கையில் மணமுடைய கூந்தலினையுடைய அம்மையோடு கலந்து மகிழ்ந்து
இருந்ததுவும் அவன் திருவிளையாடல் ஆகும்.

70 - 72: In the place called "Paandoor" (பாண்டூர்) Lord Civan came in order to dwell to give
darshan to His devotees. In the resplendant island situated in the south of "Thevoor" (தேவூர்)
Lord Civan assumed the form of a glorious king and ruled the island.

73 - 74: In the place called “Thiruvaaroor" (திருவாரூர்)  which is surrounded by groves full of
honeycombs, Lord Civan imparted enlightenment to His devotees.

75 - 76: In "Thiru Idai Maruthoor" (திரு இடை மருதூர்) Lord Civan surrounded by his devotees
blessed them by placing His holy Feet on their heads.

77 - 78: In the town of "Ekambam" (திரு ஏகம்பம்) (present day Conjeevaram) Lord Civan was
worshipped in His natural Linga form by Uma. There, He became Ardhanaareeswarar, 
the half male-half-female form, His left half of His form being occupied by His never-sundered 
queen Goddess Uma (See Story No. 29).

79 - 80: In the place called "Thiruvaanchiyam" (திருவாஞ்சியம்)  Goddess Uma was in Her bridal 
beauty with Her naturally fragrant trusses of hair, when Civan joined Her and delighted in Her.

கு-ரை: 70-80: பாண்டூர், தேவூர் என்பன, பாண்டி நாட்டிலுள்ளன. தேவூர்க்குத் தெற்கே கடலில் இருப்பது தீவு.
ஈண்ட = நெருங்க, விளங்க. கோ = அரசத்தன்மை. தேன் = வண்டு . இங்கே கூறிய ஞானம் வீடு
பயக்கும் உணர்வாதலின், 'தன்மை ' யெனச் சிறப்பித்தார். படிமம் = ஒளி வடிவம், தூய்மை . ஏகம்பநாதர் 
காஞ்சிப்பதியமர்ந்த சிவபிரான். திருக்கயிலையில் இறைவர் திருக் கண்களைப் பொத்தி உலகிற்கு இருள் 
உண்டாக்கிய குற்றம் நீங்க, உமையம்மையார் காஞ்சியில் ஒரு மாமரத்தினடியில் மணலாற் சிவலிங்க
வடிவமைத்து வழிபட்டகாலை, வெள்ளம் வரவே சிவபெருமானைத் தழுவிப் பின்னர் அவரது இடப்பாகங்
கொண்டனரென அறிக, மரு = இயற்கை வாசனை. கற்புடை நங்கை  கூந்தலுக்கு இயற்கை மணமுண்மை,
நக்கீரர் கதையால் விளங்கும். திருவாஞ்சியம், சோழ நாட்டில் உள்ளது 

80.     மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமுஞ்
    சேவக னாகித் திண்சிலை யேந்திப்
    பாவகம் பலபல காட்டிய பரிசுங்
    கடம்பூர் தன்னி லிடம்பெற விருந்து
    மீங்கோய் மலையி லெழிலது காட்டியு

    மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்; 
    சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் 
    பாவகம் பல பல காட்டிய பரிசும் 
    கடம்பூர்-தன்னில் இடம்பெற இருந்தும்;
     ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;

    maruvaar kuzaliyodu makizntha vaNNamum            
    seevakan aaki thiNsilai eenthi 
    paavakam palapala kaaddiya parisum 
    kadampuur thannil idam peRa irunthum
    iingkooy malaiyil ezilathu kaaddiyum 

85.     மையா றதனிற் சைவ னாகியுந் 
    துருத்தி தன்னி லருத்தியோ டிருந்துந்
    திருப்பனை யூரில் விருப்ப னாகியுங்
    கழுமல மதனிற் காட்சி கொடுத்துங்
    கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்

    ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் 
    துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் 
    திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் 
    கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் 
    கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்

    aiyaaRu athanil saivan aakiyum 
    thuruththi thannil aruththiyoodu irunthum 
    thiruppanai uuril viruppan aakiyum 
    kazumalam athaniR kaadsi koduththum
    kazukkunRu athanil vazukkaathu irunthum

பொ-ரை: 81-91: பாண்டிய அரசன் ஒருவனுக்கு வெற்றி உண்டாக்குதற் பொருட்டு வில்வீரர்
வடிவம் கொண்டு வலிமிக்க வில்லைக் கைக்கொண்டு, பல்வேறு இயல்புகளைத்
தோற்றுவித்தனன் எம்பெருமான். திருக்கடம்பூரில் கோயில் கொண்டு வீற்றிருந்தனன்.
ஈங்கோய் மலையில் அழகுமிக்க மரகதத் திருமேனியைக் காண்பித்து அருளினான்.
திருவையாற்றில் பூசனைபுரியும் சைவ ஆசாரியன் வேடத்தில் தோன்றினான்.
திருத்துருத்தியில் அடியவர்க்கு அருள்புரியும் ஆசையுடன் வீற்றிருந்து அருளினான்.
திருப்பனையூரில் வேண்டுவார் வேண்டுவன ஈயும் விருப்பத்தினனாய் அமர்ந்திருந்தனன்.
சீகாழிப் பதியில் திருக்கோலம் காட்டி அருளினான். திருக்கழுக்குன்றத்தில் ஞானவடிவோடு
தவறாது எழுந்தருளினான். திருப்புறம்பயத்தில் தருமச் செயல்கள் பல ஆற்றினான்.
திருக்குற்றாலத்தில் சிவலிங்க வடிவில் அருள் வழங்கினான்.

81 - 82: To help a Paandiyan King who was Civan's devotee He became a soldier carrying a 
mighty bow and manifested Himself in various Forms (See Story No. 57).

83: Lord Civan dwelt in the temple in "Kadamboor” (கடம்பூர்)  and made it His abode.

84: On the hill of "Eengoi" (திரு ஈங்கோய் மலை)  He showed His beautiful emerald form
(மரகதத் திருமேனி)  to His devotees.

85: Lord Civan assumed the form of a civaacharya priest in the place called "Thiruvaiyaaru'
(திருவையாறு (See Story No. 34)

86: To bestow His grace on His devotee Lord Civan happily abided in his place called "Thirup-
Poon-Thuruththi" (திருப்பூந்துருத்தி).

87 - 91: In “Thirup-Panaiyur" (திருப்பனையூர்) Lord Civan was the bestower of things yearned by
devotees. In "Kazhumalam" (திருக்கழுமலம்) present-day “Seerkaazhi" (சீர்காழி), He gave darshan
to His devotees in all the three forms of "Guru", "Linga" and "Sangamam" (குரு, லிங்க, சங்கமம்).
Guru - Thoniappar (குரு - தோணியப்பர்), Linga - Brahmapureeswarar (லிங்கம் - பிரமபுரீசுவரர்) .
Sangamam - Chattainathar; (சங்கமம்-சட்டைநாதர்). He was abiding unfailingly in 
Thiruk-Kazhuk-Kundram (திருக்கழுக்குன்றம்). In "Thirup-Purampayam" (திருப்புறம்பயம்). He was witness 
to many virtuous deeds. In “Thiruk-Kutralam" (திருக்குற்றாலம்) He appeared in Linga form to
give darshan to sage Agasthiya (அகத்திய முனிவர்). The story goes that sage Agasthiya was sent 
to the south from the mount Kailas (கைலாசம்) in the north to balance the earth, as the entire host
of devas and other celestials had assembled in mount 'Kailas' to witness the marriage of Lord
Civan. The sage came to 'Pothigai' hills (பொதிகை மலை) where he saw the statue of Maha 
Vishnu in the sanctum sanctorum of a temple at the foot of the hill. By his divine powers he
placed his hands on Maha Vishnu's head and uttered "Kuru Kuru Kutralam" (குறு குறு குற்றாலம்)
(May you become small). The statue became a "Linga" (Symbol of Civa).

கு-ரை: 81-91 :  திருவிளையாடற் புராணம், யானை எய்த படலத்துள், சோழன் விடுத்த யானையைக்
கொல்லுதற் பொருட்டு, இறைவன் வில் வீரராய்த் தோன்றி யானை எய்தமை கூறப்பட்டது.  இடம்=கோயில், 
'எழிலது' என்பதில், அது திருமேனியைக் குறிக்கும். திருவையாற்றிலே இறைவனைப் பூசனை
புரியும் சைவாசாரியருள் ஒருவர் காசிக்குப் போய், நெடுநாளாக மீண்டு வராமையால், அவர் மனைவி
மக்கட்குரிய பொருளைப் பிறர் கவர்ந்து கொள்ளக் கருதிய போது, அதனைத் தடுத்தற் பொருட்டு,
காசிக்குப் போன சைவரின் வடிவத்தோடு இறைவன் தோன்றியருளினமை இங்கே குறிக்கப்பட்டது.

திருக்கழுமலத்திலே அடிகட்கு இறைவன் காட்சி நல்கியமையும், திருக்கழுக்குன்றிலே கணக்கிலாத்
திருக்கோலம் அடிகட்குக் காட்டியமையும் அடிகள் வரலாற்றானறிக. 'வழுக்காது', என்பதற்கு மறவாது
என்று பொருள் கொள்ளுதலும் உண்டு. திருக்குற்றாலத்திலே விண்டு வடிவமே அகத்தியர்
வேண்டுகோளால் சிவ வடிவமாக மாறினமை திருக்குற்றாலத் தலபுராணத்துட் காண்க. திருக்கடம்பூர்,
ஈங்கோய்மலை, திருப்பனையூர் ஆகியவை சோழ நாட்டிலுள்ளவை. திருத்துருத்தி இப்போது சோழநாட்டிலே
குற்றாலம் எனப்படும் இடமென்ப . திருக்குற்றால மென்பது, பாண்டி நாட்டிலேயுள்ளதென்பது வெளிப்படை.
திரிகூட பருவதத்தினடியில் அழகிய அருவியுடன் கூடியது.

90.     புறம்பய மதனி லறம்பல வருளியுங் 
    குற்றா லத்துக் குறியா யிருந்து 
    மந்தமில் பெருமை யழலுருக் கரந்து 
    சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண் 
    டிந்திர ஞாலம் போலவந் தருளி

    புறம்பயம்-அதனில் அறம்பல அருளியும் 
    குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
     அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து 
    சுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டு 
    இந்திர-ஞாலம் போல வந்து அருளி,

    puRam payam athanil aRampala aruLiyum 
    kuRRaalathu kuRiyaay irunthum 
    anthamil perumai azaluru karanthu 
    sunthara vedaththu oru muthal uruvukoNdu 
    inthira njalam poola vanthu aruLi

95.     யெவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
     தானே யாகிய தயாபர னெம்மிறை
    சந்திர தீபத்துச் சாத்திர னாகி
    யந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
    சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியு

    எவ்எவர் தன்மையும் தன்வயின் படுத்துத்
    தானே ஆகிய தயாபரன், எம்இறை
    சந்திர தீபத்துச், சாத்திரன் ஆகி 
    அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள் 
    சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும்

    evvevar thanmaiyum thanvayiR paduththu 
    thanee aakiya thayaaparan emiRai 
    santhira thiipaththu saaththiran aaki 
    antharaththu izinthu vanthu azaku amar paalaiyuL 
    sunthara thanmaiyoodu thuthainthu irunthu aruLiyum

பொ-ரை : 92-99: தனது அளவற்ற பெருமையுடைய சோதியுருவை மறைத்து அழகிய பிரணவ
வடிவமான காதணியோடு ஒப்பற்ற ஞான முதல்வனாக வடிவம் கொண்டான். இந்திர ஜால 
வித்தையில் பொருள்கள் எதிர்பாராது தோன்றுதல் போல திடீரென எழுந்தருளி வந்தான்.
எவ்வகைப்பட்டவர் இயல்பையும் தன்பாலாக்கித் தானே எல்லாமாய் விளங்கும்
கருணையாளன் எம் தலைவன், சந்திர தீபமென்னும் பதியில் வானின்று இறங்கி அழகிய
பாலை என்னுமிடத்தில் கலைவல்ல ஆசிரியனாய் வனப்பு நிறைந்த இயல்புடனே
வீற்றிருந்து அருளினான்.

92 - 99: Lord Civan concealed His endless and glorious form of fire and assumed the beautiful
form of matchless supreme Lord with ear rings. Taking each one's nature unto Himself, our
Lord of infinite grace descended as though by magical powers and landed in the beautiful place 
called "Paalai" (பாலை)  situated in the island of "Chandra Deepam" (சந்திர தீபம்) and abided there,
filling it with his sweet grace and beauty. Here, as an exponent of all arts. He was in his fairest
form full of grace.

கு-ரை: 92-99: அழலுருவென்பது இறைவனது தெய்வ வடிவை அல்லது அடிமுடியறியாச் சோதியாய் நின்ற 
வடிவைக் குறிக்கும். வேடம் = காதணி.  வட்டவடிவாய்ச் சைவ ஆசாரியர்களால் அணியப்படுவது.             
'சுந்தரம் துதைந்த தன்மையோடு இருந்து அருளியும்' என உரைநடை கொள்க.  துதைதல்= நெருங்குதல்,நிறைதல்; 
பாலை நிலத்திற்குரிய மரங்களடர்ந்ததாய் அழகு வாய்ந்ததாயிருக்கலாம். அல்லது, இடத்தின்
பெயர் பாலையாதல் கூடும். ஒரு காலத்துப் பாலையாயிருந்து பின்னர்  பொழிலாய பின்னும்,
அப்பெயர் அதற்கு வழங்குதல் கூடும்.

100.     மந்திர மாமலை மகேந்திர வெற்ப
    னந்தமில் பெருமை யருளுடை யண்ண 
    லெந்தமை யாண்ட பரிசது பகரி 
    னாற்ற லதுவுடை யழகமர் திருவுரு 
    நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியு
    
    மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
    அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் 
    எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் 
    ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உரு 
    நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்

    manthira maamalai makeenthira veRpan 
    anthamil perumai aruLudai aNNal 
    emthamai aaNda parisu athu pakarin 
    aaRRal athu udai azaku amar thiru uru
    neeRRu koodi nimirnthu kaaddiyum

105.     மூனந் தன்னை யொருங்குட னறுக்கு 
    மானந் தம்மே யாறா வருளியு 
    மாதிற் கூறுடை மாப்பெருங் கருணைய
    னாதப் பெரும்பறை நவின்று கறங்கவு 
    மழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்

    ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் 
    ஆனந் தம்மே, ஆறா அருளியும்
    மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன் 
    நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
    அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

    uunam thannai orungkudan aRukkum 
    aananthammee aaRaa aruLiyum 
    maathiR kuuRudai maapperung karuNaiyan
    naathap perumpaRai navinRu kaRangkavum
    azukku adaiyaamal aaNdu koNdu aruLpavan

110.     கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியு 
    மூல மாகிய மும்மல மறுக்குந் 
    தூய மேனிச் சுடர்விடு சோதி 
    காதல னாகிக் கழுநீர் மாலை
    யேலுடைத் தாக வெழில்பெற வணிந்து

    கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்
    மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
    தூய மேனி, சுடர்விடு சோதி
    காதலன் ஆகிக், கழுநீர் மாலை
    ஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்

    kazukkadai thannai kaikkoNdu aruLiyum
    muulam aakiya mummalam aRukkum
    thuuya meeni sudarvidu soothi 
    kaathalan aaki kazhuneer maalai
    eel udaiththu aaka ezilpeRa aNinthum

பொ-ரை: 100-114: எல்லையற்ற ஆற்றலும் அருளும் உடைய எம்பெருமான் மந்திர நூலாகிய
ஆகமம் வெளிப்பட்ட பெருமலையாகிய மகேந்திர மலையின் தலைவன். அத்தகையோன் 
எங்களை ஆட்கொண்ட வகையைச் செப்பவேண்டும். வலிவும் வனப்பும் பொருந்திய 
திருமேனியில் (நெற்றி, மார்பு, புயம் முதலிய இடங்களில்) திருநீற்றுக் கொடியினை 
எடுப்பாக, இடையிட்டுத் தரித்து, தரிசனம் அளித்தனன். பாசமாகிய குற்றம் முழுவதையும் 
ஒரு சேர, ஒரே காலத்தில் வேரறுத்துக் களையும் பேரின்பத்தையே ஆறாக அருளினான்.

உமையம்மையை ஒரு பாகத்தே உடைய, கைம்மாறு வேண்டாப் பேரருளாளன் அவன். 
நாத தத்துவமாகிய பெரும்பறை இடைவிடாது ஒலிப்பக் கொண்டுள்ளவன் அவன். வாசனா மலம்
தாக்கா வண்ணம் அன்பர்களைத் தடுத்தாட் கொள்ளுபவன்.  மூவிலைச் சூலத்தைத்         
திருக்கைகளிற் கொண்டருளி, உயிர்களை அநாதியே பற்றிய (இருள், வினை, மருள்),
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைப் பாசங்களையும் வேரறுக்கவல்ல
திருமேனியுடன் எழுந்தருளி உள்ளான். அறிவுக்கதிர் பரப்பும் ஒளியுருக் கொண்ட 
முதல்வன்.  அடியாரிடம் அன்பு பூண்ட அருளாளன்.  அடியார் உள்ளங்கள்
பக்குவமெய்தற்குப் பொருத்தமாக, அவருள்ளம் கவருமாறு செங்கழுநீர் மாலை சூடிக்
காட்சி அளிப்பவன் அவன்.

100 - 114: Lord Civan, Chieftain of the great Mahendra Mountain of mystic lore (where the
Aagamas were re-told by Him) and whose endless greatness and grace made me His own. I shall
now narrate how His victorious way enslaved me. He showed His sacred form of power and
grace with the three interspaced parallel lines of holy ash in several places of His body (form). 
In grace He caused to flow the river of rapture which swept away all the human vileness that is 
Aanava Malam (ஆணவ மலம்). With great mercy, He concorporated Uma on the left side of His
body. He happily created the cosmic sound form out of His hour-glass-shaped drum (பறை,உடுக்கை)
To enslave and protect me from the primal bond of the three Malams- Aanavam,
Kanmam and Maayai (மும்மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை), He was holding the trident in His
hand. He is of pure fire, like the sparkle emitting effulgence and was wearing a lovely garland of 
blue lotus (Kazhuneer; கழுநீர்ப் பூ ). Thus, He came to sever from me the three Malams which are
the root cause of all misery, and became my beloved.

கு-ரை: 103-114: கொடி என்பது கோடியென நீண்டது. எல்லாவற்றையும் ஒடுக்கும்  ஆற்றலையும்
அருளொளியையும் திருநீறானது குறித்தலின், 'ஆற்றலது வுடை அழகமர் திருவுரு' என்றார் போலும்.
நிமிர்ந்து= (முக்குறியாக) இடையிட்டுத் தரித்து திருமேனியிற் பல பாகங்களில், கொடியிலங்குவது  போல
நீற்றுக் குறி துலக்கமாய்த் தோன்றியது என்றவாறாம். பேரின்பவுணர்ச்சியில் உயிர் ஈடுபட்ட இடத்து
வாசனா மலமும் தொலைதலின், மலம் முழுவதையும் ஒருங்கு அறுக்கும் என்றார். ஆனந்தமே, என்பது
ஆனந்தம்மேயென விரிந்தது. அது, ஆனந்த மேலீட்டைக் குறிக்கும். 'மாதின்' என்பதில், இன்-சாரியை.
'மாப்பெரு' என ஈரடை கொடுத்தது கைமாறின்மையும் அளவின்மையும் குறித்தற்கென்க. 

நாத தத்துவத்தில் உள்ள சூக்கும வாக்கு என்றும் ஒலித்துக் கொண்டிருப்பதனாலே உலகெலாமியங்குமாதலின்
அதனைப் பெரும்பறை என்றார். நவிலுதல் - இடையின்றிப் பயிலுதல். இறைவன், உயிர்கள் மேல் வைத்த
கருணையாலே, தூயமாயையின் நின்று, சிவ தத்துவமாகிய நாத தத்துவத்தைத் தோற்றுவித்தலின்
' கருணையன்' என்பதோடு, நாதப் பெரும்பறையென்பதை உடன்புணர்த்துக் கூறினர், அழுக்கு நீங்கிய
பின்னும், அது அடையாமற் காத்தலின், அழுக்கு, உரையுள், வாசனா மலம் எனப்பட்டது. 

மலமூன்றாதலின் இறைவன் அதனை நீக்குவதற்கு மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்டனர்  போலும். 
கழுக்கடை= மூவிலைவேல், ஆணவம் உள்ளவிடத்தே, வினையும் மாயையும் நுட்பமாக உண்மையின்
மூன்றையும் மூலமாகியவை என்றார். மலங்காரணமாக வரும் உடம்பு இறைவற்கின்மையின், "தூய மேனி"
என்றார். தூய மேனி உடையவனே, அழுக்கை நீக்க வல்லவன் ஆவான் என்பது கருத்து, சுடர்=சிவஞானம்,
தலைவியின் உள்ளத்தைத் தனது மாலையால் கவரும் தலைவன் போல, இறைவன்
அன்பருள்ளத்தைத் தமது தூய அடையாள மாலையால் கவர்வான் ஆதலின், 'காதலனாகி ஏலுடைத்தாக
எழில்பெற' என்றார். ஏல்= பொருத்தம். எழில்= எழுச்சி, கிளர்ச்சி.

115.     மரியொடு பிரமற் களவறி யாதவன்
    பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமு
    மீண்டு வாரா வழியருள் புரிபவன்
    பாண்டி நாடே பழம்பதி யாகவும்
    பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவ

    அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
    பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
    மீண்டு வாராவழி அருள் புரிபவன் 
    பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
    பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்

    ariyodu piramaRku aLavu aRiyaathavan        
    parimaa vinmisai payinRa vaNNamum 
    miiNdu vaaraa vazi aruL puripavan 
    paaNdi naadee palampathi aakavum
    paththisey adiyarai paramparaththu uyppavan

பொ-ரை :115-120: செருக்கினால் திருமாலும் நான்முகனும்  அடிமுடி தேடி 
அளந்தறியவொண்ணாத சிறப்புடையவன் எம்பெருமான். தாழ்மனமுடைய அடியாரின்
பொருட்டுக் குதிரையாகிய விலங்கின் மீது ஏறிவந்தது அவனது அருள் திறமேயாகும்.
 வீடு பேற்றிற்குரிய அன்பர், திரும்பப் பிறவாத வகையாய் அருள் செய்யும் பெருமான். 
பாண்டி நாட்டைப் பழமை நாடாகக் கொண்டு மெய்யன்பராகிய பத்தர்களை பர, அபர 
முத்திகளில் சேர்ப்பவன். உத்தர கோச மங்கையை ஊராகக் கொண்டவன்.

115 - 124: Civan, whom even Hari (Thirumaal) and Brahma could not fathom, came riding on a
horse, for the sake of his devotee (See Story No.1). He who showers His grace on His devotees
by showing them the path of no return (the cycle of birth) redeemed the Paandiyan Kingdom as 
His ancient domain. He lifted His pious saints to the loftiest of lofty states and had 
"Uththara Kosa-Mangai" (உத்தர கோச மங்கை ) as His town. Lord Civan having showered His grace to the 
primal deities, came to be named as "Mahaa Devan" (God of gods). The bliss that dispels the 
darkness of ignorance is his mount, the sacred bull, and the grace granting greatness is his
mountain.

கு-ரை: 115-120: பாண்டிய நாட்டிலே இறைவன் முதற்கண் தக்க தவத்தினர்க்கு ஞானமும் வீடும்
நல்கியதால், நிலவுலகிலே அதனைப் பழையபதி என்றார். பதி நாட்டையுங் குறிக்கும். உத்தர கோச மங்கையில் 
அறுபத்து நால்வர்க்கு இறைவன் சிறப்பாக ஆகமம் அறிவுறுத்தினமையின், அதனை ஊரென்றார்.

120.     னுத்தர கோச மங்கையூ ராகவு 
    மாதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
    தேவ தேவன் றிருப்பெய ராகவு 
    மிருள்கடிந் தருளிய வின்ப வூர்தி
     யருளிய பெருமை யருண்மலை யாகவு

    உத்தரகோச மங்கை ஊர் ஆகவும்
    ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
    தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
    இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி 
    அருளிய பெருமை அருள் மலை ஆகவும்

    uththar koosa mangkai uur aakavum 
    aathi muurthikadku aruLpurinthu aruLiya      
    theva thevan thiru peyar aakavum
    iruL kadinthu aruLiya inpa uurthi
    aruLiya perumai aruL malai aakavum        

பொ-ரை: 121-126: காரணேசுவரர்களாகிய முதல்வர்கட்குத் திருவருள் புரிந்து அதிகாரம்
நல்கியதால் மகாதேவன் என்னும் திருநாமம் பெற்றவன் எம்பிரான். அடியார்க்கு
ஆணவத்தை நீக்கி, பேரின்ப வாகனம் அருளிய அவனது அருட்பெரும் தன்மையே கருணை
மலையாக உள்ளது.  எவ்வகைப் பட்டவர்களையும், எத்தகைய பேரியல்பையும்
பக்குவத்தையும் அறிந்து, அவரவர்க்கேற்ற முறைமையினால் அவரவர்களை ஆட்கொண்டு
அருளுகிறான்.

125 - 129: Thus He enslaved each of the people according to their varying merit and varying        
capabilities and made them His own. He bade me, this cur, to come in course of time to the
beauteous court in Thillai, (Chidambaram) rich in goodness, abandoning me to live on this earth.

கு-ரை: 121–126: சுத்த தத்துவங்களிலுள்ள, அயன், அரி, அரன், அனந்தர், அணுசதாசிவர்  முதலியோர்
கீழ்ப்பட்ட தத்துவங்களில் உள்ளோரை இயக்குவதால் காரணேசுரராய் ஆதி மூர்த்திகள் எனப்பட்டார்.
சிலர், மும்மூர்த்திகளை ஆதி மூர்த்திகள் எனக் கொண்டு, அவர்கள் தலைவனாகிய சிவபெருமானைத்
தேவதேவன் என்பர். பேரின்ப உணர்ச்சியானது பரமுத்தி அடைதற்கு உயிர்களை மேற்கொண்டு சேரலின்
அதனை 'ஊர்தி' என்றார். ஈற்றடிகளிலே இறைவனது வரம்பிலாற்றல் கூறப்பட்டது, மேற்போந்த அடிகளில்
அரசர்க்குரிய கொடி, ஆறு, பறை, படை, மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை எனப்படும் பத்துறுப்பும்
பகரப் பட்டமை காண்க.

125.     மெப்பெருந் தன்மையு மெவ்வெவர் திறமு 
    மப்பரி சதனா லாண்டுகொண் டருளி 
    நாயி னேனை நலமலி தில்லையுட் 
    கோல மார்தரு பொதுவினில் வருகென 
    வேல வென்னை யீங்கொழித் தருளி

    எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும் 
    அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி
    நாயினேனை நலம் மலி தில்லையுள் 
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென 
    ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி

    epperun thanmaiyum evvevar thiRamum
    apparisu athanal aaNdu koNdaruLi 
    naayineenai nalamali thilaiyuL             
    koola maartharu poothuvinil varuka ena
    eela ennai iingku oziththu aruLi        

130.     யன்றுடன் சென்ற வருள்பெறு மடியவ
    ரொன்ற வொன்ற வுடன்கலந் தருளியு 
    மெய்தவந் திலாதா ரெரியிற் பாயவு
    மாலது வாகி மயக்க மெய்தியும் 
    பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியுங்

    அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 
    ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் 
    எய்த வந்திலாதார் எரியில் பாயவும் 
    மால் அது ஆகி, மயக்கம் எய்தியும் 
    பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்

    anRudan senRa aruL peRum adiyavar 
    onRa onRa udan kalanthu aruLiyum         
    eytha vanthilaathaar eriyiR paayavum 
    maal athuvaaki mayakkam eythiyum 
    puuthalam athaniR puraNdu viiznthu alaRiyum

135.     கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 
    நாத நாத வென்றழு தரற்றிப் 
    பாத மெய்தினர் பாத மெய்தவும் 
    பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்
    றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவு

    கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி.
    'நாத! நாத!' என்று அழுது அரற்றி
     பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
    'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
    இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்

    kaalvisaithu oodi kadalpuka maNdi
    naatha naatha enRu azuthu araRRi
    paatham eythinar paatham eythavum 
    pathanjalikku aruLiya parama naadaka enRu           
    etham salippu eitha ninRu eengkinar eengavum         

பொ-ரை: 127-139: நாய்போலும் கடையேனாகிய என்னை நன்மை மிகுந்த தில்லைப் பதியின்
கண்ணே அழகு நிறை அம்பலத்தில் வந்து கலப்பாயாக என்று பணித்தான். என் வினைக்குப்
பொருத்தமாக என்னை இந்நிலவுலகத்தே கழித்து ஒதுக்கி என்னை ஆட்கொண்டான்.
அன்றே, வீடுபேற்றுக்கு உரியவராய் தன்னுடன் போந்த அடியார்கள் தன்னுடன் வந்து சேரச் சேர
அவர்களுடன் இரண்டறக் கலந்து அருளினான்.  அங்ஙனம் தன்னோடு கலக்கப் பெறாதவர் சிலர் 
நெருப்பில் விழுந்து தன்னுடன் வந்து சேருமாறு அருளினான். சிலர் வீடெய்தும் ஆசையால்
மயங்கி உயிர்நீத்து, தன்னை வந்தடைய அருளினான். இன்னும் சிலர் விரைந்து கடலிடைச் சேர்ந்து, 
தலைவனே தலைவனே என்று அரற்றி, அழுது  உடம்பை நீத்து, தன் திருவடி அடையவும் உதவினான். 
மற்றும் சிலர், "பதஞ்சலி முனிவர்க்கருள்  புரிந்த மேலான அற்புதக் கூத்தனே" என்று தொழுது உள்ளம்
ஏக்கமுற்று, அவ்வாறு ஏங்கியதன் மூலம் தன்னை அடைய வைத்து அருள் பாலித்தவன் அவன்.

130 - 139: However those devotees, who gained His grace to accompany Him on that day,
mingled in perfect union with Him. Those who could not leap into the fire and who longed to
reach Him wailed, rolled on the earth and swooned; while still others rushed, with hurrying feet
to fall into the sea, weeping and wailing 'Oh! Lord! Oh! Lord!' and succeeded in reaching and
gaining His holy Feet. Some others who were longing for Him became heart wearied. They
hailed and cried, Oh! Supreme Dancer! who showered grace to "Pathanjali" and continued to
yearn for His bliss.

140.    மெழில்பெறு மிமயத் தியல்புடை யம்பொற் 
    பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில் 
    கனிதரு செவ்வா யுமையொடு காளிக்
    கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை 
    யிறைவ னீண்டிய வடியவ ரோடும்

    எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்
    பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
    கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்கு 
    அருளிய திருமுகத்து, அழகு உறுசிறு நகை
    இறைவன், ஈண்டிய அடியவரோடும்

    ezilperum imayaththu iyalpudai ampon
    politharu puliyuur pothuvinil nadam navil         
    kanitharu sevvaay umaiyoodu kaaLikku 
    aruLiya thirumukaththu azakuRu siRunakai
    iRaivan iiNdiya adiyava roodum

பொ-ரை: 140-143: எம்பெருமான், மந்திர ஒலிகள் பயிலும் புகழ்மிக்க கயிலை மலையின் 
தலைவனாவான். எழுச்சிமிக்க பனிமலைபோல் அழகிய பொன்னொளி தவழும் புலியூராகிய 
தில்லை அம்பலத்தின்கண் திருநடனம் புரிகின்றான்.  இனிமையான சிவந்த வாயினையுடைய
உமையம்மையும், காளியம்மையும் அவனோடு கூத்து பயில்கின்றனர்.  அவர்கட்கு 
அருள் புரிதல் பொருட்டு, தன் திருமுகத்தில் கவின் மிகுந்த புன்சிரிப்பைக் காட்டி நின்றனன்.

கு-ரை: 140-143: சுத்த தத்துவச் சார்புடையது கயிலையாதலின், அத்தத்துவத்திலெழும் மந்திர ஒலி 
ஆண்டு பயிலுதல் கூறப்பட்டது. கயிலையிற் பிற அதிகார மூர்த்திகள் உளராயினும், இறைவனே 
முழு முதலாட்சியுடையன் ஆதலின், 'உயர்கிழவோன்' என்றார். இமயமலை, மிக்க உயர்வுடையது வெளிப்படை. 
அது பொன்னிறத்ததென்ற கொள்கையுண்டு.  'நடம்நவில்' என்பதை 'இறைவன்' என்பதொடுங்
கூட்டலாம். பாணி தந்து உடன் உலவுதலின் உமை நடம் பயில்கிறாள் எனலாம். காளி இறைவனொடு வாதாடி 
நடம் பயின்று ஊன நடனமியற்ற இயலாது தோற்றனளென்ப. அருளிய - 'செய்யிய'  வாய்ப்பாட்டு வினையெச்சம்,
மகிழ்ச்சிபற்றி உமைக்கும், இகழ்ச்சிபற்றிக் காளிக்கும் புன்னகை காட்டினன் என்றலும் உண்டு.

145.     பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளின 
    னொலிதரு கைலை யுயர்கிழ வோனே.

    பொலிதரு புலியூர்ப்புக்கு, இனிது அருளினன்
     ஒலி தரு கைலை உயர் கிழவோனே.

    politharu puliyuurp pukku inithu aruLinan
    olitharu kayilai uyar kizavoonee

பொ-ரை: 144-146: மெய்ஞ்ஞான விளக்கம் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்துள் எம்
வேந்தனாகிய இறைவன், தன்னை நெருங்கிய அடியாருடன் புகுந்தருளினான்.
எனக்கு இன்பம் மிகுமாறு பேரருள் புரிந்தருளினான்.

140 - 146: Civan the supreme lord of Mount Kailas in the beautiful Himaalayaas, reverberating
with the sacred and raptuous songs, came down to the golden-roofed shimmering hall of
"Puliyoor' (another name for Chidambaram) to dance and to grace Uma, of sweet and rosy lips,
and Kaali showing to them His blessed countenence with the beauteous smile. Thus Lord Civan
graciously entered the resplendent Tiger Town (Puliyoor) along with His band of saints.

கு-ரை: 144-146: அம்பலம் ஆதலின், தனியே செல்லாது அடியாரோடு சென்றான் போலும் .
'மெய்ஞ்ஞானமே' அம்பலமெனப்படுதலின், பொலிதருதல் ஞானத்தால் என்பது குறிக்கப்பட்டது. கயிலை
கலைஞானச் சிறப்பெய்திய புலியூர், பரஞானச் சிறப்பெய்தியமை கூறப்பட்டது. கீர்த்தித் திருவகவல்
 இயற்றுவித்தமையும் அருளின்பாற்படும் வீடு, தமக்குத் தில்லையில் அருளும் உறுதிபற்றி,
'  இனிது அருளினன்' என்றாரென்றலுமொன்று. புலி, உபாயத்தாற் பாய்ந்து தன் இரையைப் பற்றுதல் போலப்
பேரின்பத்தை உயிர் முயன்று விரைவிற் பற்றுதற்குரிய இடமென்ற கருத்து புலியூர் என்பதால் புலனாகும்.

            THIRUCHCHITRAMBALAM
 


3.  திருவண்டப்பகுதி                     3. THIRU-ANDAP-PAKUTHI
(சிவனது தூல சூக்குமத்தை வியந்தது )            The Nature and Development of the Universe            
தில்லையில் அருளியது                     Compiled whilst in Thillai
இணைக்குறள் ஆசிரியப்பா

                திருச்சிற்றம்பலம்

     இது, "அண்டப்பகுதியின்" எனத் தொடங்கும் இவ்வகவலின் முதற்குறிப்பால் பெயர் பெற்றது. 
"ஆத்திசூடி", “கொன்றைவேந்தன்" என்பன முதற்குறிப்பால் அந்தந்த நூலுடைய பெயரானாற்போல,         
“கண்ணிநுண் சிறுத்தாம்பு" அப்பாடலை முதலாகக் கொண்ட பத்துக்கும் பெயரானாற்போல, 
இது அதனை முதலாகக் கொண்ட அகவலுக்குப் பெயராயிற்று . இது இணைக்குறள் ஆசிரியப்பாவால் 
அமைந்தது. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் என்பன போலப் பாடற்பெயரும் பாடற்கருத்தும் 
ஒருநோக்குடையனவாக அமையவில்லை. பாடற்பெயர் முதலான் அமைந்தது. 
பாடற்கருத்து அது நுதலிய பொருளான்  அமைந்தது.

    இவ்வகவலின்கண், இறைவன் சிறியவாகப் பெரியோனாகியும், கருதாக் கருத்துடைக் 
கடவுளாகியும், உலகமே தானாய் எங்கும் பரந்தும், அவற்றைக் கடந்தும், அணுத்தரு தன்மையின் 
அமைந்தும், பிரமன் மாலறியாப் பெற்றியனாக - தமக்கு எளிவந்த தலைவனாக விளங்கும் இயல்பும்
விரித்துரைக்கப் பெறுகின்றன. பழைய புராணம்,

    "திகழ் திருவண்டப்பகுதி திருவகவல் செப்பியது
    தகுசிருட்டி திதியொடுக்கம் சாற்றுதிரோ தம்பொதுவாய்
    அகலமுறத் தெரிந்திடவே யருளியநற் பொருளாகும்"

எனச் சிவபெருமானுடைய ஐந்தொழிலில் அநுக்கிரகம் நீங்கலான நான்கன் இயல்புகளை
விளக்குவதாம் என்கின்றது.

    இவ்வகவல் முதற்கண் பல அண்டங்களையும் அவற்றின் பிரிவுகளையும் உணர்த்துகின்றது 
ஆதலின் "அண்டப்பகுதி" என ஆயிற்று எனலுமாம். அது அடைமொழி ஏற்றுத் திருஅண்டப்பகுதியாயிற்று.

    இது, "அந்தச் சொரூப தடத்தத்தின் பெருமையும், நுட்பமும், பெருங்கருணையும்
பெறுதற்கருமையும் தூல சூக்குமங்களில் வைத்துச் சொல்கிறது" என்ற விளக்கம் பழைய
உரையினது. பகுதி-  மூலப்பகுதி, அண்டப்பகுதி-  அண்டங்கள் அனைத்திற்கும் 
மூலப்பகுதியாகிய சிவபுரம். அதுவே, திருவாகிய வீடுடையது. ஆதலால், அது “திருவண்டப்பகுதி"
என வழங்கப்படுவதாயிற்று என்பது பழையவுரை.

    இவ்வண்ணம் எல்லார் கருத்துக்களையும் தொகுத்து எண்ணும்போது, முதற்குறிப்பால்
பெயர் பெற்றது உண்மையாயினும் அம்முதற்குறிப்பு இறைவன் பெருமையை உணர்த்த 
உதவலானும், அவன் விசுவரூபியாகவும், விசுவாதிகனாகவும், விசுவாந்தர்யாமி ஆகவும் 
விளங்குகிறான் என்று உபநிடதம் உரைப்பது போல இப்பகுதியும் இறைவன் அண்டங்களாயும்
அவற்றின் பெரியனாயும் விளங்குகின்றான் என்று அண்டத்தின் இயல்பு உணர்த்துதலின்
அண்ட பகுதியாயிற்று எனல் பொருந்தும்.  அண்டத்தின் பொதுவியல்பு மாயையின் காரியமாய்ச்
சடமாய் இருப்பதாம். சிறப்பியல்பு இறைவன் அந்தர்யாமியாக இருக்கப் பெறுகையும், அவனது
விராட் சொரூபத்தில் தாம் பரமாணுக்களின் கூட்டமாக விளங்குகையும் ஆம், இவற்றை இப்பகுதி
விளக்குதலால் இப்பெயர் பெற்றது எனல் தெளிவு.

    முதல் 28 அடிகள், இயங்குவ நிற்பவான - சித்தும் சடமுமான எல்லாவற்றையும் அவற்றின்
இயல்பின்படி இறைவன் நடத்திக் கடந்திருத்தலை உணர்த்துவன.  "முன்னோன் காண்க", (29 ஆவது அடி)
என்பது முதல் "அவளுந் தானும் உடனே காண்க” என்பது (65வது அடி) முடிய  இறைவனுடைய 
அருட்செயல் இயல்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, உலகவர்களை விளித்து 
காணுமாறு பணிக்கின்றது. "காண்க" என நாற்பது முறை கூறியதை நோக்குக.

    "பரமானந்த பழங்கடல்” (66ஆவது அடி) என்பது முதல் “மேகன் வாழ்க” (95ஆவது அடி)
என்பது முடிய இறைவனை மேகத்திற்கு முற்றுருவகமாக்கிச் சுவைத்தது. “மேகன்  வாழ்க" 
(95 வது அடி) என்பது முதல் “எய்ப்பினில் வைப்பு வாழ்க” (105ஆவது அடி) என்பது முடிய
இறைவனை வாழ்த்திய “வாழ்க" எனப் பதினொரு முறை கூறப்பட்டுள்ளதை நோக்குக.

    "நச்சர வாட்டிய” (106 வது அடி) என்பது முதல் “களிப்போன் போற்றி” (121ஆவது அடி)
என்பது முடிய இறைவனைப் போற்றிக் கூறிய “போற்றி” ஆறு முறை கூறப்பட்டுள்ளதைக்
கவனிக்கவும். "ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல்
புகலேன்" (122 - 123 ஆவது அடிகள்) என்ற பகுதி தனது ஆற்றாமை கூறல் காண்க. 

    "மரகதக்குவா அல்" ( அன் என்றும் பாடபேதம் உண்டு) (124 ஆவது அடி வரை) என்பது முதல் 
"பற்று முற்றொளித்தும்" (145ஆவது அடி) என்பது முடிய, பசு போத முனைப்பால் தேட முயன்ற
தேவர்களுக்கு ஒளித்தமை கூறப்பட்டது. ("ஒளித்தும்" என ஒன்பது முறை வருவதை நோக்குக) 
"தன்னேரில்லோன்” (146 ஆவது அடி) என்பது முதல் இறுதிவரை பிரமன் மாலறியாப் பெற்றியோன் 
அறைகூவி ஆட்கொண்டதும், அதனால் விளைந்த அனுபவங்களும், ஆனந்தமும் 
ஆனந்தாதீதமும், பரவசமும் ஆகியன கூறப்பட்டுள்ளன.

    இவ்வண்ணம் இவ்வகவல் எட்டுப் பகுதிகளாக நூற்று எண்பத்திரண்டு அடிகளான் அமைந்தது.          

    In this hymn, Maanikkavaachakar deals with the God-Head immanent in gross as well as 
subtle manner in all created things. It will be better to quote here what Dr. G. U. Pope has
written about this chapter.

    "The very first phase in the first line of this hymn has given it its heading or nomenclature.
This poem has an introduction of 28 lines, after which the praises of Civan are inter-mingled with 
somewhat intricate but ingenious allegories. The whole partakes of the nature of a rhapsody-not
without some sublimity - and can be fully appreciated by only those who has studied the whole 
saiva system, It is an imitation, it would seem, of the Sanskrit Satarudriya, or Hymn to Rudra. 

Yet,Civan, the auspicious is imagined by the Tamil saivites quite otherwise than by the northern and 
more ancient authorities. Civan in the south is the Guru, the friend, almost the familiar companion 
of His votaries, and is addressed with a mixture of awe and of simple affection that has a peculiar 
effect. Through all Maanikkavaachakar's poems this personal relation of the God as manifested 
Guru to His devotees or disciples is, of course, most prominent. I am not aware of anything quite
like this in the mythology of the north, though among the worshippers of Vishnu in His various
incarnations something analogous may exist".

3.1     அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
    அளப்பு அரும் தன்மை , வளப் பெரும் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் 
    நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;

5.     இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் 
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின் 
    வேதியன் தொகையொடு மால்-அவன் மிகுதியும்
    தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய 
    மாப் பேர் ஊழியும் நீக்கமும், நிலையும் 

10.     சூக்கமொடு, தூலத்துச் சூறை மாருதத்து 
    எறியது வளியின் 
    கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை

15.     கரப்போன்; கரப்பவை கருதாக்
    கருத்துடைக் கடவுள்: திருத்தகும் 
    அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 
    வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி 
    கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்

20.      அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு 
    மதியில் தண்மை வைத்தோன்: திண்திறல்
    தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர்
    வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
    காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ் 

25.     நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
    மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று 
    எனைப்பல கோடி, எனைப்பல பிறவும் 
    அனைத்து அனைத்து, அவ்வயின் அடைத்தோன் - அஃதான்று
     முன்னோன் காண்க! முழுதோன் காண்க!

30.     தன் நேர் இல்லோன்-தானே காண்க!
    ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
     கானப் புலி உரி அரையோன் காண்க!
     நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
    ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!

35.     இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க !
    அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
     பரமன் காண்க! பழையோன் காண்க!
     பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
    அற்புதன் காண்க! அநேகன் காண்க!

40.     சொல்-பதம் கடந்த தொல்லோன் காண்க!
     சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
     பத்தி வலையில் படுவோன் காண்க!
     ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
     விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!

45.     அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க!
     இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க!
     அரியதில் அரிய அரியோன் காண்க!
     மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க!
    நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!

50.     மேலோடு, கீழாய், விரிந்தோன் காண்க!
     அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
     பந்தமும், வீடும், படைப்போன் காண்க !
    நிற்பதும், செல்வதும் ஆனோன் காண்க!
    கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!

55.     யாவரும் பெறஉறும் ஈசன் காண்க! 
    தேவரும் அறியாச் சிவனே காண்க! 
    பெண், ஆண், அலி எனும் பெற்றியன் காண்க!
    கண்ணால் யானும் கண்டேன் காண்க !
    அருள் நனிசுரக்கும் அமுதே காண்க! 

60.     கருணையின் பெருமை கண்டேன் காண்க!
     புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
    சிவன் என யானும் தேறினன் காண்க!
    அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
    குவளைக் கண்ணி - கூறன் காண்க!

65.      அவளும், தானும், உடனே காண்க!
    பரம - ஆனந்தப் பழம் கடல் - அதுவே 
    கருமா முகிலின் தோன்றித்
    திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறித் 
    திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய

70.     ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய 
    வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப 
    நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர 
    எம்-தம் பிறவியில் கோபம் மிகுத்து,
    முரசு எறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கி

75.     பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 
    எஞ்சா இன் அருள் நுண்துளி கொள்ள 
    செம்சுடர் வெள்ளம் திசை-திசை திட்ட, வரை உறக்
    கேதக்குட்டம் கையற ஓங்கி
    இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை, 

80.     நீர்நசை தரவரும், நெடும் கண், மான் கணம்
    தவப் பெரு வாயிடைப் பருகித், தளர்வோடும்
    அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன 
    ஆயிடை வானப்பேர் யாற்று அகவயின்
    பாய்ந்து எழுந்து இன்பப் பெரும்சுழி கொழித்து

85.     சுழித்து    எம்பந்தம் மாக்கரை பொருது. அலைத்து, இடித்து
    ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
     இருவினை  மாமரம் வேர் பறித்து எழுந்து
    உருவ, அருள் நீர் ஒட்டா அருவரைச்
    சந்தின் வான்சிறை கட்டி மட்டு அவிழ் 

90.     வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் 
    மாப்புகைக் கரைசேர் வண்டுஉடைக் குளத்தின் 
    மீக்கொள  மேல் மேல் மகிழ்தலின் நோக்கி
    அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
    தொண்ட உழவர் ஆரத் தந்த

95.     அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!
    கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
     அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
     அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க!
     நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!

100.     சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க!
    எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன், வாழ்க !
    கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
    பேர் அமைத் தோளி காதலன் வாழ்க!
    ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!

105.     காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க!
     நச்சு அரவு ஆட்டி