logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)

திருச்சிற்றம்பலம்.

சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய

காப்பு    1-2 

கடவுள் வாழ்த்து      3-30

திருநாட்டுப் படலம் 31-203 

திருநகரப் படலம் 204- 342

நைமிசப் படலம் 343- 353

புராண வரலாற்றுப் படலம் 354- 367 

பிச்சாடனப் படலம் 368-411

தேவதாருவனப் படலம் 412-481

அனந்தப் படலம் 482-527

புண்டரீகபுரப் படலம் 528-546

வியாக்கிர பாதப் படலம் 547- 578

திரு நடனப் படலம் 579-674

ஏமவன்மப் படலம்  675- 757

தீர்த்த விசேடப் படலம் 758- 867

யாத்திரோற்சவ படலம்  868-893
 

 

            காப்பு.

1.ஞானமிக வளரினஃறிணைய வுயர்திணையாகு நவிலஞ்ஞான
வீனமிக வளரினுயர் திணைய வஃறிணை யாகுமென்று தேற்றன்
மான வஃறிணை மேலுமாண்டவுயர் திணைகீழும் வடிவிற்காட்டித்
தேனமரும் பொழிற்றில்லைச் சிகரிவாழ் கற்பகத்தை வணக்கஞ் செய்வாம்.

            வேறு.

2.கற்பகநாட்டும் வைவேற்கந்த வேடுணை விண்ணோர்க்குக்
கற்பகநாட்டில் வாழ்வு கண்ட வவிடுவசேனன்
கற்பக நாட்டியத்திற் காதல வென்னிற் றில்லைக்
கற்பகநாட்டின் றேகுஞ்சமன் வலிகடப்பிக்கும்மே.

        கடவுள்வாழ்த்து.

        சபாநாயகர்.

3.பொன்பூத்த மணிமன்று ளானந்த நடங்காணப் புகுவோர்க்கிந்தக்
கொன்பூத்த குஞ்சிதமென்பாத தரிசனத்தினே கூடுமுத்தி
மென்பூத்த பிறமுயற்சி வேண்டலெனுங் குறிவர தாபயத்தின் மேவ
மன்பூத்து நடங்குனிக்கும் பெருவாழ்வைப் பணிந்தேத்தி வாழ்வாமன்னோ.   (1)

        சிவகாமியம்மை.

4. நிறைந்திடும் பரனைந் தொழின்முறை குயிற்ற நிகரிலாச் சிவமுதலாக
வறைந்திடு மேழுபேதமாய் மன்னியடை தரற்கேற் றிடத்தானு
முறைந்திடு சத்திமுன் னெழுவகையா யுயிரொடெப் புவனமு மளித்துச்
சிறந்தசிற் சபையினிருத்த சான்றாகித் திகழ் சிவகாமியைப் பணிவாம். (2)

        தக்ஷிணாமூர்த்தி,

5. அனகாரணமு மறிதற்கரிய
மனவாசக நீங்கிய மாணருண்மெய்ச்
சனகாதியர் தேறிய சற்குருவாய்
முனமானிழன் மேவியை முன்னிடுவாம்.   (3)

        கற்பகவிநாயகர்.

6. கற்பகப்பிரா, னற்புதத்திருச்
சிற்பதம்வினைக், கிற்பழிக்குமே.   (4)

        வைரவக்கடவுள்.

7. இருந்துழி யிருந்தே யிருநிலமுழுது மிறைமகனாணை செய்ம்முறையின்
விரிந்திடுமீ சனிறைந்த சன்னிதியின் விதியுளியைந் தொழினடாத்த
வரந்தைசெய் தண்டத்தலைவர்களங் கங்கடைந் தரசாணை செய்ம்முறையிற்
பரந்த பேருலகந் தொறுமடைந் தீசன்பணிபுரி வடுகனைப் பணிவாம்.   (5)

        அறுமுகக்கடவுள்.

8. தன்னிகரில் பெருங்கருணைத் தடங்கடலாஞ் சிவபிரான் றழற்கட்டோன்றிக்
கொன்னுனை கொள்வேற் படையாற் சூரபன்ம னங்கமிரு கூறாச்செய்து
துன்னு விபுதரை விண்ணங்குடியேற்றித் தோமின் மணம்புணர்ந்த வென்றிப்
பன்னிரண்டு திருக்கரங்களுடைய வறுமுகக்கடவுள் பாதம் போற்றி.   ( 6)

        திருநந்திதேவர்.

9. திருக்கயிலை மலையிலருட் கல்லால நிழலிருந்து தேவதேவன்
பெருக்கமுடை யாகமத்துட் பிறங்குரௌரவத் தெழுந்த பீடார் ஞானஞ்
சுருக்கமறப் போதிக்க மலைவு தீர்ந்தருளி முதற்குருவாய்த் தோமி
லருட்குரியர்க் கதனையளித் தருணந்தி பெருமானுக் கடிமை செய்வாம்.   (7)

        அகத்திய முனிவர்.

10. பரந்தபுகழ் வடமொழிக்குப் பாணினிய முதற்பல நூல்பண்ணுமாட்சி, 
விரிந்தபுகழ்த் தமிழ்க்கொரு தான்வகுத்த விலக்கண நூலேவிளைக்கும் வாய்மை
நிரந்தபல வுருத்திரர் விண்ணவர் முனிவர் பணித்த புவிநீங்கித் தென்பா
லிருந்துசமப் படுத்தி யறிவுறுத்தருளுங் குறுமுனியை யேத்தி வாழ்வாம்.   (8)

    திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.

11. மண்பரவு சீகாழிக்கௌணியர் தங்குல வாழ்வை மறையோர் தேவை
விண்பரவு பெரியநாயகி ஞானங் குழைத்தூட்ட விரும்பியுண்டு
பண்பரவு, தமிழ் வேதம்பாடிய வெம்பெருமானைப் பரமஞான
நண்பருளி யடியாரை யாண்டருள் வள்ளலைப் பணிந்து நலிவு தீர்வாம்.   (9)

        திருநாவுக்கரசு நாயனார்.

12. பாயுடுத்துத் தலைமயிரைப் பறித்தெறிந்து நின்றுண்ணு மமணர்பாழி
போயடுத் தங்கவர் புரிந்த வஞ்சமெலாஞ் சிவானந்த நிறைந்து பொங்கி
வாயிடத்து வருஞானப் பதிகத்தா லறுத்தருள் வாகீசர் சீர்த்தி
நோயெடுத்த கொடும்பிறவிப் பிணியொழிய வெந்நாளு நுவல்வா மன்றே. (10)

        சுந்தரமூர்த்தி நாயனார்.

13. திருந்து புகழ்த் தமிழ்நாடு செய்த பெருந்தவத்தினாற் றிகழுமேன்மை, 
பொருந்தியுயர் நாவலூர்ச் சிவமறையோர்குலம் விளங்கப்போந்துவான, 
நிரந்தபொழி றிகழ்வெண்ணெய்ப் பரஞ்சோதியருள் வாரிநிறையவுண்டெம்,
மரந்தைகெடத் திருத்தொண்டத் தொகை வகுத்த பெருமாளுக்கன்பு செய்வாம். (11)

        மாணிக்கவாசக சுவாமிகள்.

14. வன்றொடையாற் பொருள்விரவி மயங்கவுயர் நால்வேதம் வகுத்தானீச
னென்றருளா லவற்றை வடித்தானந்த வெள்ளமிகுந் தேறயாரு, 
மன்றுடைய பெருமானே பரம்பொருளென் றுணர்ந்து யமாமணி நேர்வாக்கின், 
மென்றொடை யாற்றமிழ்வேதம் வாய்மலர்ந்த வித்தகர் தாள் விரும்பி வாழ்வாம். (12)

        தில்லை வாழந்தணர்.

15. எல்லை காண்டற்கரிய தியாகேசப்பிரான் சுருதி யியம்பும் வாயாற்
றில்லை வாழந்தணர் தமடியாற்குமடி யேனென் றெடுத்தசீரார்
நல்லவே தாகமங்கள் கரைகண்டோர் நாமிவரி லொருவரென்று
சொல்லமா நடராசற்பெறு மூவாயிரமுனிவர்த் தொழுது வாழ்வாம். (13)

        அறுபத்துமூவர்.

16. உறுமாலகன்று புறமொதுக்கி யுலப்பிலருளே பெருக்கியொரு
சிறுமானேந்தி சேவடிக்கீழ்ச் சென்றங்கடங்கி நின்றுமிக
விறுமாந்தின்பப் பெருவெள்ள மிடையறாமே நுகர்ந்துவா
ழறுபான்மும்மை நாயன்மா ரடிப்போது ளத்தேயலர்விப்பாம். (14)

        சேக்கிழார் நாயனார்

17. ஞாலமலை கடறன்னிற் பெரியதெது வெனவெடுத்து ஞாலமாள் செங்
கோலரச னனபாயன் வினவிய முத்திறக்குறிப்பைக் குறிப்பினோர்ந்து
சாலவுயர் திருக்குறண் மூன்றிறையாக வெழுதியவ னரசுதாங்கி
வாலறிவாற் றிருத்தொண்டர் புகழ்விரித்த சேக்கிழார் மலர்த்தாள் போற்றி. (15)

        மெய்கண்டசிவாசாரியர்.

18. மைகண்டர் வகுத்துரைத்த சிவஞான போதமெனும் வடநூறன்னைக்
கைகண்டு தமிழுலகமுய்ய மொழிபெயர்த் தருளிக் கலை நூல்காட்டும்
பொய்கண்ட வுளத்தினர் காணாத புனிதாத்துவிதப் பொலிவுகாட்டு
மெய்கண்டதேவனடியகந் தழீஇப் பணிந்தேத்தி வினையை வெல்வாம். (16)

        அருணந்தி சிவாசாரியர்

19. தவமாருந் திருத்துறையூர்ச் சார்ந்தருளிப் பொய்யினைமெய்த்
தவமாகக் கொண்டுழன் முப்புறத்தினருஞ் சாய்ந்திரியச்
சிவஞான போதநூ றமிழுலகந் தெளிந்துய்யச்
சிவஞானசித்தியரு டேசிகனைப் பணிகுவாம்.   (17)

        மறைஞான சம்பந்த சிவாசாரியர்.

20. முரண்டரும் புறச்சமய நூன்முழுப் பொயென் றகற்றி
யரண்டருஞ் சிவஞான நூல்கேட்டினி தாய்ந்து
தெருண்டு நிட்டைசேர் கடந்தையூர்ச் சம்பந்ததேவ
னிரண்டு பாதமு முடிக்கணிந் திடுக்கண் வேரறுப்பாம்.   (18)

        உமாபதி சிவாசாரியர்.

21. முட்டுமார்க்க மாங்களை களையருளினான் முரணிக்
கட்டருட்புடை நூல் சிவந் திகழ்தரக் கண்டு
நிட்டைமேவி வீற்றிருந் தருளுமாபதி நிமலன்
மட்டறாவடிக் கமலமென் மனத்தட மலரும்.   (19)

        ஏனை நாயன்மார்.

22. ஈனமாகிய புறப்பகை யகப்பகை யெறிந்து
ஞானமாகிய சித்தாந்த நன்னெறிதேறி
மோனவாழ் வினிலமர்ந்து வீற்றிருந் தருண் முதன்மை
யேனை நாயன்மார் தமையுமன் பணிந்துவாழ்த் தெடுப்பாம்.   (20)

    நமச்சிவாயதேசிகர் முதலிய குரவர்.

23. தன்னிகரில் கைலாய பரம்பரையிற் சிவஞானபோதந் தந்த
மன்னுபுகழ் மெய்கண்டான் சந்ததிக்கோர் பானுவாய் வயங்கி ஞானந்
துன்னிவளர் துறைசை நமச்சிவாய குருவுடனவன் மெய்த்தூய்மை சான்ற
நன்னர்வழி வந்தெமையாள் குரவர் பலரையும் பழிச்சி நலிவு தீர்வாம்.    ( 21)

        திராவிட மாபாடியகாரர்.

24. குறியமுனி யருளிய மெய்வரத்தினா லவதரித்துக் கோதின் ஞானத்
துறைசை நமச்சிவாய குருவருட்கடலும் வடமொழி தென்மொழிப் பேர்த்தூய
நிறைகடலு முண்டு புனிதாத்துவித சித்தாந்த நிலவப்பூமேன்
மறைமொழி மெய்ச்சிவஞான பாடியஞ் செந்தமிழ் வகுத்த யோகிவாழி.   (22)

            அவையடக்கம்.

25. அருள் பெருக்குமேம சபாநாத மான்மியமதனை யாய்ந்து நீநற்
பொருள் பெருக்குமுயர் தமிழிற் புராணமுறை கூறுகெனப் புலமைசான்ற
தெருள் பெருக்கு நடராசன் றிருவடிக் கன்புடை மறையோர் செப்புமாற்றா
லொருவழிப் பட்டெழுமாசை நனிதூண்டத் தமியேனீ துரைக்கலுற்றேன்.  (23)

26. வேல்கொண்ட கருந்தடங்கட் சிவகாமசுந்தரியை விளங்கவோர் தன்
பால்கொண்டொர் சபைவாழு நடராசப் பெருமான்றன் பரந்த சீர்த்தி
மால்கொண்ட மனத்தினேன் சிற்றுணர்வு கொடுயாக்க வலித்தலோர்புன்
னூல்கொண்டு மதக்களிற்றைப் பிணிக்க வலியில் லொருவ னோக்கல் போலும்   (24)

27. இலக்கண மில்லா தியலும் போலிமரூஉ வென்பவியல் வழக்காய்மாணப்
புலக்கணமாடரு தொல்காப்பியர் முதலோ ரெடுத்தாள்வரது போற்புந்தி
விலக்குவிதியறியா தேன்விளம்புறு பாவினையுமிக மேற்கொண்டான்றோர்
நலக்குவரென் றுளங்கொண்டு நடராசன் புகழ்கூற நயந்தேன் மன்னோ.   (25)

28. கழிமுடைப் புன்புலையுடலங் கரிசில் சிவஞானமுடையவரை மேவின்
முழுமுதற் பண்ணவன் வடிவேபோன்று வழிபடப் பெறூஉ முந்நீர்வைப்பிற்
பழியுடைப் புன்புலை நாயேன் பிதற்றுரையு நடராசன் பரந்த சீர்த்தி
தழுவிடப் பெற்றிடலினலத்தமிழ் போலப் பாராட்டத் தக்கவாமே.    (26)

29. வரஞானத்துயர் தில்லைவாழ் தருமந்தணர் விதிசேர் வழிபாடொப்பத்
திருநாளைப் போவார் தம்புன்றொண்டு மகிழ்ந்து கொளுந் தில்லைவாணர்க்
கருள்சாலப் பெரியோர் தங்காப்பிய நூல்போலறிவு சிறிதுமில்லேன்
புரைசாலப் பொதிபாவுங் கொண்டருடல் வழக்காகும் புவியின்மீதே.    (27)

        சிறப்புப் பாயிரம்

30. இருந்துதியுற் றொளிர்வட நூலேம சபாநாத மான்மியத்தை யாணர்
திருந்து சிதம்பர சபாநாத புராணப்பேரிற் றமிழாற் செய்தான்
பெருந்துறைசைச் சிவஞானயோகிகள் பொன்னடிக்கமல முளத்திற் பேணி
யருந்தகை நற்கலைகடெளி சபாபதி நாவலன் மாண்பாரறிஞர் கோனே.   (28)

        கடவுள் வாழ்த்து முற்றிற்று.


        திருநாட்டுப்படலம்.

31. கொன்றையந் தொடை மிலைச்சிய சடைமுடிக்கூத்த
ரொன்று பேரருட் பிராட்டியொ டுலகெலாமுய்ய
நின்றவம் பலத்தில்லையை யகந்தழீஇ நீடி
மன்றவோங்குறு பொன்னிநாட் டணிநலம் வகுப்பாம்.   (1)

32. நலங்கொள் வான்முகிற் குலங் கலைநிறைவுடை நல்லோர்
குலங்கொள்வா லுணர்வெனநனி வெளிறிவிண் குலாய்ப்போ
யிலங்கு மாழிநீர் குழிதரக் குறைத் தறிவில்லோர்
கலங்குநெஞ் செனவுற விருண்டெழுந்த விண்கடுகி.   (2)

33. எங்கணாயக னெரிநிற மேனியுமிமயத்
துங்கநாயகி கருநிற மேனியுந் தொகுபு
வங்கொர் பேருரு வமைந்தென மின்னுடனகல்வா
னெங்கணும் பரந்தே கருமுகில் கஞலினவே.   (3)

34. மல்லன் ஞாலத்தி னுயிரெலாம் விழியொளி மாளத்
தொல்லை வான்சுடர் மறைத்து மற்றவை யொளிதுவன்ற
வொல்லை மின்னியும் விண்ணெலாம் பொதிந் துயிர்களுக்குப்
பல்ல கேவல சகலங்கள் பண்ணின முகிலே.   (4)

35. தொல்லை வான்முகி றடித்தெனச் சூழொளித்தோற்ற
மொல்லை வல்லிருளணை தரவுடன் மறைந்தொடுங்க
னல்லமா தவத்தெய்திய சிவனருண வைசே
ரல்ல தீவினைத் தொடர்ச்சியினுடன் மறைந்தனைய.   (5)

36. வானகங்களுமெண்டி சாமுகங்களும் வௌவித்
தானொருங்கர சரணமுகிறழற் பகைதணந்தே
யேனை மாநிலத்திறுத்தல் கண்டெரி சினந்தழுவி
மான வில்வளைத் தனுகரணத் தொனிவழங்கி.    (6)

37. படித்தலம் வெடிபடப் பஃறலையுடைச்  ..........
றுடித்தயர்ந் திடமாந்தர் கடுணைக் கையாற்  செவிகண்
மடித்தழுங் கிடப்படபட வொலிசெய்து வானத்
திடித்தமர்த் தொழின் முயன்றுநீரப் பெனவிணக்கி.   (7)

38. விண்மிதித் துயர் சையமாம் வியன்மலை யரணை
யண் மிமற்றதை முற்றுபு பொதிந்துநின் றங்கேழ்
வெண்மணித் தொகையுதிர் தலினாலிகள் விரவத்
தண்மழைக்கணை தடங்குவடுடை தரச்சொரிந்து.   (8)

39. வரைவளாகமு மாலதிபொலி தருமாட்சித்
தரைவளாகமுந் தண்டலை விண்டொடு மருதத்
துரைவளாகமுந் துளங்கெரி யரசு வீற்றிருக்கும்
பரைவளாகமும் வாரியின் மயமெனப் பண்ணி.   (9)

40. வெம்மையாலுயிர் வெதுப்புறுங் கோடையாந்  தூசி
தம்மைமுற்றவு முருக்கிவெந் தழல்கரந் தொளிப்பச்
சும்மைமா முரசறைந்தெனத் தொனிசெய்து சலம்போய்ச்
செம்மைமேவி வெண்ணிறம் படைத்தன நனிதிகழ்ந்தே.   (10)

41. மிக்கி ருண்டுற விளங்கியுமே தக மீண்டுச்
செக்கர் மேவியுந் திசையெலாந் திகழ்தர வெளுத்துந்
தொக்க மூவர் முத்தொழிலையும் புரிதரு தொடர்பான்
முக்கு ணங்களுந் தம்வயிற் காட்டின முகிலே.   (11)

42. முடி விராவிய மலையிடமெங்கணு முகிழ்த்தே
கடிவிராவிய காந்தள்கள் போது செய்காட்சி
நெடியமால்வரை குளிர்பொறா தழுங்கி நீன்முகிலுக்
கடியனேன் பொருட்டொழி கெனவங்கை கூப்பிய போன்ம்.   (12)

43. வேலையிற் படுதுகிரினை வெண்மணியோடு
சாலவௌவி வானீரொடு சொரிந்திடத் தடவு
ஞாலமெங்கணுங் கிடந்தவிர்ந் தெனநளி பசும்புற்
கோல நுண்டுளி கோபங்க ணிறைந்தொளி செயுமே.   (13)

            வேறு

44. மழைப்பெயறவிர்ந் துமாருதத் தசைந்து மரக்கிளை யாவுமன் புரியுந்
தளிப்பெயறன் னான்மாநிலத்துயிர் கடணந்து துன்பணைந் திலவின்ப
முழுத்துயர்புரியும் புறப்பகையொழிந்து முரணகந் தழுவி வாழினத்தாற்
களிப்பொருசிறி துமின்றி யெஞ்ஞான்றுங் கவலையுண் மூழ்குநர் கடுப்ப.    (14)

45. நிலத்திரு மடந்தை கதித்தெழு முலையினி லவுறவணிந்திடு வயிரக், 
கலத்தினை விழையக் குவடெலாம் பொதிந்துகடுத்து வெவ்வே றிழியருவி, 
தலத்தினி லொன்றாய்ப் பொன்னிமாநதியின் வழிப்படல் சாற்று நீண்மறைகள், 
புலத்துறை பலவாய் விரிந்துபநிடதப் பொருளொடொன்றா யுறல்போலும்.    (15)

46. அலையுடைப் புனனாட்  டொருபுகழ்ச் சோழரடுபடை யதிகன் வாழரண
மலையிடத்துள்ள பொருள்பல கவர்ந்து வழிக்கொளன் மானவான் றோயுஞ்
சிலைமுடிப் பிறங்கி யிழிதரு மருவித் திரளெலாங் கல்லெனக் கறங்கி
நிலையியற் பொருளு முலவியற் பொருளும் வாருபு நெறிக்கொளு நிலத்தே.   (16)

47. இருவினைக் கீடாப் பிறந்திறந் துழலு மிமையவர் தமை மதி மயக்காற்
பரமெனக் கொண்டுசெயும் வழிபாடவ் வனாதியம் பகவனாமீசன்
சரணபங்கயத் தேவந்தொருவந் தஞ்சார்ந்திடல் போலுமாற்சையப்
பெருவரைப் பெங்கும் வழிதருஞ் சலிலங் காவிரிப்பெயர் தருபிறக்கம்.    (17)

48. போகமே யுதவிப் புலப்பகை வளர்த்துப் பொருவிலா ஞானத்தைத் தடுக்கு
நாகநாடி தற்குத்துணை யெனவமர் தனலம்படாதென வெணிக்கங்கை
மாகநின் றிழிந்திப் புண்ணியபூமி யுறுதலை மானவான் காறும்
போகிய சிமயச்சிகர நின் றருவியிழிந்து காவிரிவயிற் புகுமே.   (18)

            வேறு.

49. கைம்மாறின்றி யுலகளிக்குங் கடவுட் கொண்டற் பெரியவேந்
திம்மாநிலத் தேயுயர் சையமிருந்து விளங்குமுடி சூட்டித்
தெம்மான் வித்துப் புனனாட்டைத் திருத்தியாள்க வெனவிடுப்ப
வம்மா பொன்னிப்பேரியா றெடுக்கனீங்கி வழிக்கொண்டு.   (19)

50. தேறன்மடுத்துத் தேக்கெறிந்து திகழுமா ரமணிபூண்டு
நாறுவேங்கை சண்பகவீயெனும் பொற்றூசு நலக்கவுடீஇ
மாறிலருப்புப் பகழி மதமாக் கோட்டொரு வன்சிலை யெடுத்துப்
பாறுகொடி கள்பந்தராய் நிழற்ற வையம் படர்தந்து.    (20)

51. அத்தியாதி மாத்தொகுதி யணிசெய் திரண்டுபால் போகத்
தத்து திரைவான் பரிபூண்ட தடவு வையமூர்ந்தொரீஇக்
கொத்தகொடிகள்பல துவன் றக்கொண்டு குரைப்பிற் பறையறைந்து
முத்தமூரற் குறமின்னார் படையாத்துவன்ற முடுகியே.    (21)

        வேறு.

52. குறிச்சி புகுந்து குரங்கு தினைத்தா
ளறுத்துடன் வாரியி தண்களலைத்துச்
செறுத்தெதிர் வேடர்கள் சிந்தினரோட
மறத்துடன் மண்டுபு வெட்சிமலைந்து.   (22)

53. கானவர் வாழ்குடியிற் கடுகிச்சென்
றியானை யெயிற்றொடி லங்குபுலிப்பன்
மானவடிக் கணைவார் சிலைவேன்முன்
னானதிறப் பொருள் வௌவியகன்று.   (23)

54. ஆயர் தமுல்லை யடைந்தவண் வாழும்
பாயநிரைத் தொகை பற்றியகத்த
காய் தயிராதிய கௌவிய மாந்தி
யேய்தரு பல்வளமும் மிறைகொண்டு.    (24)

55. அண்டர் கரந்தை யழிந்திட வென்றி
கொண்டவர் பாடி புகுந்து குலாவி
மண்டிய பல்வளம் வாரிவிளங்கு
மெண்டிசை போற்றிட வஞ்சியை யெய்தி.    (25)

        வேறு.

56. வழியிடைச் செல்வோர்க் கிட்டிப்பதைப்புற வருத்திநாளும்
பழிமலைந் தீட்டி வைத்த பல்வகை வளமுமாங்கட்
குழுமிய மறவர்நோவக் கொள்ளை கொண்டழுமா கொண்ட
வழுதிடப் போமென் வாய்மை விளக்கியாண் டகன்றுபோகி.    (26)

57. மருதவைப் பெய்திமள்ளர் வயின்வயினீண்டி யாற்றுங்
கரைகளை யிடித்து நொச்சி கட்டழித் தவர்மலைந்த
விரையுறு நொச்சி வாட வியத்தகு தும்பை சூடித்
தெரிவையர் வணங்கி நல்குந் திருமிகக் கொண்டுலாவி.   (27)

58. செழுவயனீங்கி நெய்தலுறீஇ யவணுமணர்செய்த
கழிவளம் யாவுமன் னோர்கரம் விதிர்த்தரற்ற வீட்டிக்
கெழுவளம் பலகொண்டாழி கிடைத்தெதிரடி வணங்கத்
தழுவியா தரமலிந்து கலந்துடன் சார்ந்ததாலோ.   (28)

59. புண்ணியப் புனனாட்டுள்ள பொருவிலாக் குறிஞ்சி முன்னா
வெண்ணிடு நிலங்கள் யாவுமிவ்வகை குறும்பெறிந்து
திண்ணிதினடிப் படுத்துத் திருந்துறச் செங்கோலோச்சித்
தண்ணளி மிகுந்தெஞ்ஞான்றுஞ் சராசர மோம்பும் பொன்னி.   (29)

60. திட்பமார்ந் திலங்குஞானச் செல்வர் கடங்கைக் கொண்ட
தெட்பிள வளவைத் தேனும்பயன் பெரிதீத லேய்ப்பப்
பெட்புறக் கவர்ந்து கொண்ட பொருளினும் பிறங்கமீட்டு
நட்புறப்பதின் மடங்கு பெருவள நல்கும் பொன்னி.   (30)

61. திருப்பயில் சங்கமேவிச் செம்பொனின் வண்ணமாகிப்
பருப்பத முலவி யாடல் பயின்ற பாரிடம் வழுத்த
விருப்பொடுமேவி வேட்ட வேட்டவா றுதவலாலே
பொருப்புறை குமரவேளைப் பரமனைப் பொருவும் பொன்னி.   (31)

62. அறந்தனை வளர்க்கு நீராலரி றபவுயிர்க்குச் சுத்தி
சிறந்தருள் செய்யுஞ் சீராற் சிமயத்தில் வளருந்தேசா
விறந்திடல் பிறத்தல் கூடாவிறையிடம் பிரியா மாண்பாற்
பிறந்திடா வாழ்வு நல்கும் பிராட்டியை மானும் பொன்னி.   (32)

63. நான்முகம் பொருந்தி நன்னீர்மிகுந் தஞ்சமேவி நாடார்
மேன்முறை யொழுக்க மோம்பியங்குசந்  தாங்கி வீறார்
மான்மதந் தழுவி நாளும் விதிபுரி மாட்சியாலே
தேன்மலி கமலத்தேவிற்கணே சனிற்றிகழும் பொன்னி.    (33)

64. வாரணமேற் கொள்கின்ற மாட்சியால் வானோரோடு
தாரணி போற்றநின்ற தகுதியால் வரத்தினோங்கிக்
காரண வரைகடந்து பசுத்துயர் களையுநீரா
னாரணன் வலாரிபோலு நன்னல மன்னும் பொன்னி.   (34)

65. உயர்ந்தநால் வருணத்தாரு மொழிந்துளோர் தாமுந்தொன்னூ
னயந்தரு ணெறியிற் செல்லச் சிறந்ததோர் துணையாய் நன்கு
பயந்திடு மொழுக்கம் பூண்ட பரிசினாற் பலவாசாரம்
வியந்திட வோம்பு நீதி முனிவரை விழையும் பொன்னி.   (35)

66. தென்றிசை யிடமுமேனை வடதிசை யிடமுஞ்சீர்த்தி
துன்றுபல் சிவாலயங்கள கந்தழீஇச் சுலவுநீரான்
மன்றமர் பெருமான் றன்னை மனத்தளி யுள்ளே கண்டு
நன்றுற வழிபாடற்று ஞானிகட் பொருவும் பொன்னி.   (36)

67. அளிமிக வுடையோர் தங்களாக்கை நோவுறவும் யார்க்குங்
களிசெய வுரியரென்ற கட்டுரை தேற்றிக்கார்க
ணளிபெய லொழிந்த வேனிற்பருவத்து நாட்டோருண்ணத்
தெளிபுன லகடுகீண்டு நல்கிடுஞ் செல்வப் பொன்னி.   (37)

68. தேவரு முனிவர் தாமுந் திருந்து மானுடரு மற்றை
யாவரும் வேட்ட சித்தியெய்தி வீடுறற் பொருட்டான்
மூவர் தமுதல்வ னெண்ணி முந்தை நாளளித்த பொன்னிக்
காவிரி மகிமை யெம்மாற் கரைந்திடற் பாலதாமோ.   (38)

            வேறு.

69. இனநாடி யம்புமேன்மை பலவியைந்த பொன்னியாறுலகு
கனனா டென்னும்படி பொதிந்த கடியகோடை தபமுருக்கிப்
புனனாடென்று தன்பெயராலாளு மேன்மை பூண்டறிஞர்
மனநாடு வென்றிபல கொண்டு வயங்குநாடு சோணாடு.   (39)

70. இறைநூ லுறுதிப் பொருள்களென வெடுத்து மொழியு மாண்புடைய
வறமே பொருளேயின்ப மேயரிய வீடேயெனு நான்கு
முறுமா றெண்ணி முயல்வாருக் குறையளாகிப் பலவளமுங்
குறையா தென்று மிகுந்தோங்கிக் குலவுநாடு சோணாடு.   (40)

71. வானோர்க் கிறைவனாகி யுயர்மகவான் மனையாளுடன் றுறக்க
மேனாட்டணந்து வந்திருந்து விரும்பு வாழ்வு பெறுநாடும்
பாநாக் கெண்ணில் படைத்த புகழ்ப்பாந்தட் கிறைவன் பாதலநீத்
தானாப் பெருவாழ் வடைவதனுக் கணைந்த நாடுஞ் சோணாடு.    (41)

72. மனுவென் றுரைக்குமொரு வேந்தன் வழியே தோன்றிப் பலசோழர்
முனைவென் றரசுவீற்றிருந்து முழுமாநிலமு மனுநீதி
நனிநன் றோங்கச் சைவநெறி நன்குவளர்த்து நடராச
வனகன் கருணைக்கடன் மூழ்கற் கமைந்த நாடு சோணாடு.,   (42)

73. ஒருமூவுலகுந் திருநீற்றினொளியே விளங்க வோங்கு தமிழ்
பெருநீர்வரைப் பிலெம்மொழிக்கு மரசாய்ச்சிறந்து பெரிதோங்கத்
திருஞானப் பேரருளமுதந் தெவிட்டவுண்டு தேவாரந்
தருமாளுடை முத்தமிழ் விரகர் சார்ந்த நாடு சோணாடு.   (43)

74. கலைநீ டுணர்வாற் கேள்வியாற் கருதற்கரிய பலநூற்குந்
தலைநூல் வேதாகம முழுதுஞ் சடங்கந்தாமும் பிறகலையு
மலைநீர்புகுதா துணர்ந்துரைக்கு மறிவாற் றமக்கு நிகரிலருட்
புலவோ ரென்று நீங்காதே வாழுநாடு புனனாடு.    (44)

75. முந்நீ ரடையுமாறெல்லா மூழ்கியருந்தி நலந்தேர்ந்த
நன்னாவலர்கள் காவிரியினல முஞ்சுவையு முலகிலுள
வெந்நீர் தமக்கு மிலாமையாலிது வேபுன லென்பது தோன்றச்
சொன்னார் போலுஞ் சோணாட்டுக் கொருபேர் புனனாடெனத் தொனியால்   (45)

        வேறு.

76. செப்புபுக ழாரியத்தின் சிறப்பெழுத்துப் பலதிரிந்து
தப்பில்வட மொழியாகித் தன்னொ டுறவாட வருந்
துப்புடைய தமிழென்றுந் துரிசொரீஇ யரசிருக்கு
மப்பொலிவிற் சோணாடு செந்தமிழ் நாடாகுமால்.    (46)

77. வடமொழிக்குந் தென்மொழிக்கும் பொதுவாக வழங்குதலிற்
றிடமுடைய ளகரத்தைக் கடிந்தொரு தென்சிறப்பெழுத்தை
யிடமுடைய தன் பெயரு ளிசைவித்துத் தமிழ் தன்கட்
கடல்வரைப்பிற் சிறந்தோங்கல் காட்டுமன்ற புனனாடு.   (47)

78. பூவிரியு நறுஞ்சாரற் பொதியமலைக் குறியமுனி
நாவிருந்து வருந்தமிழை நனிபயிற லானன்றே
தேவிரிசெந் தமிழாண்டுச் செவிமடுக்கும் பொருட்டந்தக்
காவிரியுஞ் சோணாட்டை நீங்காது கலந்துறையும்.    (48)

        வேறு.

79. மலையெங்கும் வெறியாட்டு மதிலெங்கும் விழவாட்டு
முலையெங்கு நிரையாட்டு முரம்பெங்கும் பரையாட்டு
வலையெங்குஞ் சுறவாட்டு வயலெங்கும் பலவாட்டுக்
குலையெங்குஞ் சேல்காட்டுங் குலவுபுகழ் நீர் நாட்டு.   (49)

80. கரையெங்குங் கருங்குவளை கடலெங்கு நெருங்குவளை
வரையெங்கு முற்பலங்கண் மரமெங்கு நற்பலங்க
டரையெங்கும் பூமரங்கள் சாரெங்குங் காமரங்கள்
புரையெங்குஞ் சொலற்கரிய பொங்குபுகழ்ப் புனனாட்டு.   (50)

81. ஊரெல்லாஞ் சிவாலயங்க ளுரையெல்லாந் தமிழ்வேத
நீரெல்லாஞ் சிவதீர்த்த நெறியெல்லாஞ் சைவநெறி
பேரெல்லாஞ் சிவநாமம் பீடெல்லாஞ் சிவனடிமை
யேரெல்லாஞ் சிவவேடஞ் சோணாட்டுக் கிணையாதோ .   (51)

82. நிறைந்தபுகழ்ப் புனனாட்டு நீடுவரை திகழ்குறிஞ்சி
யறைந்தசுரங் கெழுமுல்லை யவிர்பசலை வயன்மருத
முறைந்தகழி நெய்தலென வுரைக்குமொரு நானிலத்துஞ்
சிறந்ததிணை வளமைந்துஞ் சிறிதறிந்தபடி சொல்வாம்.   (52)
  
83. உறுபயனைத் தருபொரு விறவ வினையை யுளத்தகற்றிச்
சிறுபயனைத் தருவேள்வி செய்துவக்கு நீரர்களி
னறியவகில் சந்தனத்தை நாவேழுக் குணவாக்கிப்
பொறியில்வன சரர்புனத்துப் புன்பயிர் செய்துவப்பரால்.   (53)

84. புலந் திருந்து நெறியெண்ணிப் பொதுளுறு பலசிலையொப்ப
வலந்திருந்து மாமணிகளரித் தெறியுமாகுலவர்
பலந்திருந்து பன்மணியும் பயனில் வறுங்கல்லொப்ப
நலந்திருந்த வெடுத்தெறியு நாவரசை விழைவரால்.   (54)

85. அணிதிகழுங் கொடி வள்ளியணைய வொளிர் பலசாகைக்
கணிதிகழு மலர்கஞலிக் கருவரையின் புறநிற்றல்
பணிதிகழு மடக்குறவர் பாவை மதகரி யஞ்சி
மணியுறழ் திண்புய மருவ முருகனிலையு தன்மானும்.   (55)

86. புனங்காவல் கொண்டுறையுங் குறமினார் புள்ளோப்பப்
பினும்பூவை கிளிமகிழ்ந்து பெயர்ந்து மிகவணை தோற்ற
முனங்கூடு நோய்தீர மருந்துண்ண முன்னையினு
மனுங்காக மலிநோய்க ளடைகின்ற நெறிமானும்.   (56)

            வேறு.

87. கோகிலங் கிளி மென்பூவை கொடிய வேட்கின மென்றேகொல்
பாகுலவின் குரற்குப் பகையென்று கொல்லோ தேற்றா
மாகுல வல்லியன்ன குறமினார் கவண் கைவாங்கி
யாகுல மவை கொண்டோட வடிபெயர்த் தோச்சுவாரால்.   (57)

88. கயல்விழிக் குறமினார்கள் கதிர்ப்பொருட் டணையா நிற்குங்
குயின் முதற் பறவையோப்புங் கொள்கைய ரேனுந் தங்க
ளயிலுடைப் பெருமாற்கூர் தியாமுறை நோக்கிநாளு
மயிலினைக் கடியார் காணிற்றினை கடூய் வணக்கஞ்செய்வார்.   (58)

89. சிறுகுடிக் குறவரானோர் தினைப்புனத் துலவும் போழ்து
மறைவினிற் கிடந்தவள்ளி மாமுதலெடுத்துக் காட்டிப்
பெறுவினைப் பகுதியுந்த வேட்டமேற் பெயர்வார் தங்கட்
கிறைவியர்ப் புணர்த்து நீர்மையிற் றெனக்குறிஞ்சி தேற்றும்.   (59)

90. கறையடித் தொகுதி சீயங்கரடி பாய்மா வேயாதி
மறுகிடப் போகி வேட்டம் வருத்திடு மறத்தரேனு
மறுமுகப்பெருமான் றேவிக்காய் முறைநோக்கி நாளு
மறியினுக் குறுகண் செய்யார் வயச்சிலை வேடர்மன்னோ.   (60)

91. ஒரு தனிச்சுடர் வேலண்ணற் குயிரெனச் சிறந்தவரட்கட்
டிருநுதற் றேவிமாரைச் சிறப்புட னளித்த மேன்மைப்
பெருமிடற் கடவுண் மேனிபிறக்கு வவென்றே யங்கட்
கருமுகிற் குலங்கடம்மைக்  காண்டொறு மகவு மஞ்ஞை.   (61)

92. பாசடை பொதுளிமேற் செல்பராரை நீள்சினை வருக்கை
தேசுடைக்கனி கடூக்கி விண்ணுறீஇத் திகழுங்காட்சி
வாசநீர் தனக்குநல்கு நன்றியை நினைந்து வானுக்
காசையிற் கொடுக்கச் செம்பொற்கிழி யெடுத்தணை தல்போலும்.   (62)

93. தாக்கணங் கமர்ந்தெந்நாளுந் தங்குபைம் புனத்திற்போகித்
தூக்கணங்குரீஇ யினங்கள் கதிர்கொய்து தொகுபல் கோட்டின்
மேக்கணங்கு டம்பைசேர்தல் வேட்டதொன் றெய்திச்சித்த
மாக்கணங் காயநாடி யடைதலை மானுமன்னோ.   (63)

94. சேவினம் பரியிலேறுந் தினைப்பகை யாகும் வேங்கை
தாவியோர் நரிப்புறத்தைத் தடவிடு மெகின மெல்லா
மேவிடு முற்குளத்தை மேலுறீஇ யாண்களெல்லாம்
பாவியோர் தாசி தன்னைப் புணர்ந்து மேம்படுவ வங்கண்.   (64)

            வேறு.

95. வானைமுட்டிடு செண்பகவியன் சினைவதியுங்
கூனல்வானர மாரலைக் கனியெனக் குறித்து
மேனிமிர்ந்து வாய்வைத்தது கொளுந்திடவி திர்ப்புற்
றூன நீங்கிட வொய்யெனத் தேத்திறா லுண்ணும்.   (65)

            வேறு.

96. பரதனம் விரும்பா வாழ்க்கையடியவர் பழங்கண்டீர்க்கும்
விரதனம் பிகையொடென்றும் விருப்பொடு வீற்றிருக்கு
மரதன கிரியே யன்றி யறுமுகச்சாமி மேய
வரதவேரக முந்தன் கணுடையது வளக்குறிஞ்சி.   (66)

97. திருத்தகு மேருவென்னுந் திண்சிலைக் கூறாயெம்மா
னருத்தியொ டென்றுமேவியமர் சிராப்பள்ளி தானும்
விரித்திடற் கரியவீங்கோய் வியன்பெரும் பறம்புந் தன்க
ணிருத்தியொப் பெறியுமம்ம வெழிலி சூழ்தரு குறிஞ்சி.   (67)

98. கைவரை திரியுஞ் சாரற் கருவரை யோடுகாரை
மெய்வரை செய்யவொண்ணா வியத்தகு காட்சித்தாகி
யைவரை வென்றோர் தேறுமறுமுகச் செவ்வேண்மேவு
மைவரை யுலக மேன்மை வகுத்திட வல்லார் யாரே.   (68)

99. மன்னு தன்னிலங் காத்திட மடிவிலாணை யினாற்
கன்னி தன்வயிற் காளிகள் பலப்பல கண்டு
துன்ன வெங்கணு நிறுத்தியாங் கெரிபடுசூழற்
பன்னெடுங் குரவளித்திடு பாவைகள் பயிலும்.   (69)

100. ஈட்டு பேரெழி லரம்பை யரந்தரத் திழிந்து
நாட்டியத்திறம் விந்தையைக் காட்டிடு நயம்போல்
வீட்டிருந் திறன் மாருத மலைத்திட விமலை
கோட்டமுன் றினிலாடு பகுரவருள் பாவை.   (70)

101. குரவமாட்டிடு பாவைசெய் கூத்தினைப் பாராப்
பரிசிலாக நல்லிரணியம் பலவழங்கு தலி
னுரைபெறுந் திறமில்லவர் கல்வியை யொப்ப
விரையில்பன் மலரூழ்த்திடும் வியன்சினைக் கோங்கு.   (71)

102. நெருங்கு பாடல நீண்மலர் தூற்றிட நிரந்த
முருங்கை வெண்பொரி சொரிந்திட முதிர்சினை யிருப்பை
யொருங்கு முத்துக ளுதிர்த்திட வோமையொ டுழிஞ்சின்
மருங்கெலா நிழல்பரப்பிட வைகிடும் பாலை.    (72)

103. மாரிநாளெ லாமகங் குளிர்ந் தவிழுநீள் வரகும்
யாரும் வேண்டு பல்வளங்களு மீத்தற மிருக்குங்
கூரும் வேனிலிற் கொதித்தகங் கொளுந்திடப் பேயின்
றேரிலேறி வெஞ்சமம்பல செய்திடும் பாலை.    (73)

104. வாட்டும் வேனிலிற் புலவுணு மாசையின் மறவர்
கூட்டநீங்கிடா ஞமலியுங் கொடிய வெங்கழுகு
மீட்டுபே ரெழிலெயிற் றியரிள நடைபயில
வேட்டுவெய் யிலிற் கல்லுண்டு கபோதக மேவும்.    (74)

105. அடுத்த மாதரார் செலவழுங்கு வித்திட வவாசொற்
றடுத்து நீங்கி வெம்பகையினை நாமறத் தடிந்தே
யெடுத்த தம்வினை முடித்து மீண்டி கன்மறவீரர்
கொடுத்தி டும்பலி யரவங்கள் வயின்வயிற் குலவும்.   (75)

106. கானமெங்கணு நிரந்துறு தழைமிகக் கஞலி
மேனிறைந் தொளிர் மலரொடு தளவினம் விளங்கல்
வான் மிகுந்திடு தாரகா கணமொடு வழுவித்
தானிடம் புரண்டே தரைசாரு தன்மானும்.   (76)

107. தழைத்த மல்லிகை குல்லை மென்மலர் தலைமயங்கி
யுழைத்த தைந்திடப் பந்தர்க ளோங்கிடுங் காட்சி
மழைத்த டங்கண் மெல்லிடைச்சியர் பன்னிற மயிரா
லிழைத்த கம்பலம் பலப்பல விரித்தன வேய்க்கும்.   (77)

108. துன்று பூவையுந் தமாலமு மிருபுறந் தொடநீள்
கொன்றை பன்மலர் பொதுளு புகுலவிடுந் தோற்ற
மொன்று பேரரு ளுமையரியிடம் வலமுறப் பொன்
மன்றினாடுறு   சிவபிரானிலையு தன்மானும்.   (78)

109. ஆக்கமல்கிய மல்லிகை முல்லை களணைந்து
மீக்கிளர்ந்து போய்க்குமிழ் மலர்வயின் மலர்விரித்த
றேக்கமேவினா யிம்மலர் சிறந்த தென்றுனது
மூக்கின் மோந்துநீ மொழிகென வேண்டுதல் போலும்.   (79)

110. மாரிநாளினி லாய்ச்சியர்க் கடங்கு புவதிந்து
கூரும் வேனிலி லவர்க்குறு துயர்புரி குயில்கள்
பாரின்மாவளங் குறைந்துழிப் பகைவர்கட் கடங்கிச்
சீரின் மேம்படு காலையிற் றெறுகுநர்க் கடுப்ப.   (80)

            வேறு.

111. கயலினை முனிந்து வேலினைப் பழித்துக் காவியொடிகலு மாய்ச்சியர்க
ணியலினுக் கழிந்தோ லிடையறா தவர்கடயிர் கடைவுழி நனியெழுந்து
பயில்வுறு மோதை செவிடுறச் செவியிற் படுதலினஞ்சி யோவறியேந்
துயிலுறா தென்றுமொரு நிலையின்றி வாவுபுதிரி வன சூனம்.   (81)

112. நிறங்கிளர் பிடவம் பிறங்கிடு சாரினிரைபல மேய்க்குந ரொருபாற்
றிறங்கிளர் முதிரை யாதியவித்தித் தீம்பயன் கொள்ளுந ரொருபான்
மறங்கிளர் சேவினினம்பல தழுவிமைந் துறவார்க்கு நரொருபா
லறங்கிளர் கான்யாறாடு நரொரு பாலயர்குநர் குரவைக ளொருபால்.    (82)

113. பீடுறு தலைவர் தம்வயிற் காதல்பேணிடார்  வினைவயிற் பிரிய
வாடுதன் மிகுந்து தலைவிய ராற்றியிருந் தறம்வளர்த்திடும் வலத்தாய்ப்
பாடுசேர் முற்கபுரமுத லெம்மான் பயிலிடம் பலவகந் தழீஇய
காடுறை யுலக மேன்மையை விரித்துக் கட்டுரைத்திடு பவரெவரே.   (83)

114. வளவிதழ்க் கமலக் கொழுமதுக் குமட்டி வரிச்சிறைத் தும்பிபாட்டயர
வுளமிகக் களித்தங் கிளவனந் துயிலுமொளிர் புனற்றட நிறைமருத
மளவியிப் புறவமொரு புறந்திகழ வரும்பெறற் செவிலியிற் பொன்னி
வளைதலுற் றொழுகி வளம்பல திருத்தமக வினிற்றனி நனிவளரும்.   (84)

115. சைவலக் குழலுந் தாமரை முகமுந் தாவுசேல்விழியு மென்குமுதச்
செவ்வலர் வாயும் பூகமென் களனுஞ் செவ்விள நீரிளமுலையு
மொவ்வுறு முந்தி நாபியும் பரவைச்சகனமு மரம்பை யூருவும்வேய்ப்
பைவளைக் கரமு மாந்தளிர் நிறமும் பயிறர மருதமுற்றிடுமே.   (85)

116. ஒருமுதற்குடிலை யுயிர்வகைக் கியையவோ துபல்கலைகளாய்ப் பிரிந்து
பரவியெப் புவனந் தொறுமடைந் திடலிற் படுதிரைப் பொன்னி மாநதியுந்
திருவுறப்பொ துளுமலர் கெழுவயல் கடிகழ்தரப் பலப்பல காலாய்ப்
பிரிதலுற் றெங்குங் களமர்கள் குழுமி யொலிசெயப் பெருகியோடிடுமே (86)

117. ஒருமையிற் கிளர்ந்து சதுர்விதத் தினவா யொரோ வொன்றிற் சாகை பற்பலவாய்ப்
பிரிதலுற்றிடு மச்சாகையின் மறித்தும் பிறங்கனுவாகங்கள் பலவாஞ்
சுருதியிற் பொன்னி முதலினொன்றாகித் தொகுபெருங்கால் சிறுகாலாய்
விரிவுறக் கிளைத்து யாங்கணும் பரந்து வியன்பணை தோறுமுற்றிடுமே. (87)

118. கரையிற்ப் பொருது தடைபலமுறித்துக் கால்களிற்றாய் நனிகடுகுங்
குரைவளப் பொன்னிநீ ரெலா நெறியிற் குறுகிடச் செய்து கைவலியாற்
றிருவமிக்குடைய வயறொறுஞ் செலுத்துந் திறலுடை மள்ளர்க ளடங்காக்
கரிகளைக் குலவு மங்குசத்தடக்கிச் செலுத்துமா தோரணர்க் கடுப்பார். (88)

            வேறு.

119. திறம்படு முகிலாம் வேந்தனளித் திடுந்தெளி நீர்யாவும்
புறம்படா வகை பணைக்கே புகுத்திடு மள்ள ரானோர்
மறம்படா வழுதி யீந்தமாண் பொருண் முழுதுமீச
னறம்படு பணிக்கே யுய்க்கும் வாதவூரடிக ளொப்பார்.   (89)

120. சங்கின முழங்கு மோதை தண்ணுமை தழங்கு மோதை
துங்கமொ டொளிரும்பொன்னி துடுமெனப்பாயு மோதை
யங்குறை மள்ளரீண்டி யார்த்திடு மோதைஞால
மெங்கணு நிரம்பிவானத் தப்புறத் திறுக்குமன்னோ.   (90)

121. சிலைப்புய மள்ளரானோர் திகழ்மணி குயின்ற செம்பொற்
கலப்பையிற் பகடுபல்ல யாத்தனர் நிரைத்துக்காசி
னிலப்பெருமகள் பொன்வண்ணம் வெளிப்படநிணவழுக்கைத்
தலைப்பிரிதரசு செய்வாரிற் றடிக்கணே ருழுவர்மாதோ.   (91)

122. வலனுடை மன்னர் செங்கோன் மாணுறச் செய்வதன்னோ
ரிலையயிற் படையன்றிக் கோலெனக் கொடுகாட்டுவார் போற்
கொலைபு ரிகூர்ங்கோட்டானே ற்றினங்கடங் குறிப்பிற்போகப்
புலனுடைத்தொழுவர்  கோல்கைகாட்டி னருழுது போவார்.   (92)

123. தகட்டிள வாளையேறு தாளினாற் றம்மைத் தாக்கும்
பகட்டினஞ் சாய்ந்து வீழத் துடுமெனப் பாயும்வான
முகட்டுறுமீன் கடம்மை முடுகிடச் செல்வபோல
வுகட்டுணை யோடுவிண் போய்க்கங்கை புக்குலவு மொய்சேல்.   (93)

124. அலத்திரள் கிழித்தசால்க டொறுங்கிடந்த விரும்பொன்னுங்
குலத்தவின் மணியுமுத்துங் கனையிருண் மேயுங்கூர்த்த
புலத்தர்சத் திரத்தின் வல்ல வயித்தியர் போல மள்ளர்
நிலத்திடைப் பிரித்தசேறு குழப்பினர் பொருத்து நீரார்.    (94)

125. மன்னுறச் சமமாப் பூமி பரம்படித் துழவர் மாண்ட
தந்நிலக் கிழவனான விந்திரன் றனக்குச் சாறு
முன்னுறப்புரிந்து சாலமொய்த்தனர் நாறுகென்று
செந்நெலின் முளைகை வாரிவித்தினர் சிறந்த நாளால்.   (95)

126. அளவின் விஞ்சிடி னேநஞ்சாமமிர்தமு மென்றுஞாலங்
கிளவிடும் பழையவார்த்தை வாய்மையே கிளையினான்ற
களமர்கள் பெருக்கியாத்த கலங்கனீ ரளவின் விஞ்சி
முளைசெயுநாறு நோவ முழுத்துயர் புரிந்தமன்னோ.   (96)

127. சாத்தியமெய் தியாங்குச் சாதனமான போக்கு
மாத்தரின் முளைகணாறற் கருந்துணை யென்றுசெய்யுள்
யாத்தநீர் முழுது நாறுகிளர்ந்தென யாண்டுமள்ளர்
கோத்திடு கால்களா லேகவிழ்த்திடக் குறித்தாரன்றே.   (97)

128. நன்னருக்கென்று நட்டோர் நலந்தவிர்ந் துறுகண் செய்யிற்
றுன்னலர் போல வெண்ணித்து ரப்பராற் பெரியரற்றே
செந்நெலின் முளைகணாறத் தேக்குநீர் நாறுநாற்றைப்
பின்னுறக் கோறனோக்கிக் கவிழ்த்தனர் பெரிதுமள்ளர்.   (98)

129. பருவமேவா வுயிர்க்குப் பராபரன் கருணையாலே
யுரியதோர் சிறியபோக மளவறிந் தூட்டன்மானத்
திரமுடை மள்ளரானோர் முளைப்புனல் செவ்விநாடிப்
பெருவயற் பாய்த்தித் தத்தமகவெனப் பேணலுற்றார்.   (99)

130. ஆருயிரினையிங் கீட்டு மருவினை நாடியீசன்
சீரியபெரும் போகங்கணுகர்ந் திடச்சிறப்பி னான்ற
பேருலகத் தினாட்டும் பெற்றியின் மள்ளர்நாறு
வாரினர் கொடுபோயான்ற வள வயனடுதல் செய்வார்.   (100)

131. சரிமயிர் முடியவெண்ணித் தங்கை யாலவிழ்த்த நாற்றைப்
பரிவுடன் முடிவர் நாற்றின் பருமுடியவிழ்க்க வெண்ணிச்
சுரிமயி ரவிழ்ப்பர் சாலவொப்புமை தோன்றலாலே
பொருபுயத் தொழுவர் சில்லோர் தேறலினறிவு போனார் .   (101)

132. கானுறப் பொதுளி நீண்ட பாசடைக் கமலக்காட்டிற்
பானிறத் தூவியன்ன நுழைந்து செல்பான்மை யென்ன
மேனிமிர்ந் தேறும்பைங்கூழ் மிடைந்த பல்கழனிதோறுஞ்
சூன்முதிர் தவளச் சங்கந் துலங்குபு நுழைந்து போமால்.   (102)

133. பாசொளி விரித்து வீங்கு மரகதப் பசுங்காடென்னத்
தேசுடைத்தாய பைங்கூழ் செழித்துயர் வனமற்றங்க
ணாசையிற் புந்தி போகா தைம்புல மடக்கு வாரிற்
கூசியைந் துறுப்படக்கித் திரிவன கூர்மக்கொள்ளை.   (103)

134. களைகளை பருவங் காட்டப் பெருவிறற் கருங்கான் மள்ள
ரிளமயிலன்ன சாயலாற் றியர் யாரு மீண்டி
வளவய றோறுமெய் திமலிகளை களைவாரானா
ரொளிவளையறை போயங்கட்சல சரக்குறுதி செய்ய.   (104)

135. அம்புயங்களையும் போதிலங்கை முள்ளுறுத்து மென்பா
ரிம்பரிலிடர் செய்தாருக் கியாரிடர் செய்யா ரென்பார்
பம்புசை வலங்கள் சாலப்பறித்திடும் பொழுது கூந்த
றம்பெருமின மென்றெண்ணி வீழ்ந்துகை தடுக்குமென்பார்.   (105)

136. நாங்களை களைவான் கையாற் பற்றலு நந்நேர்வார் கீழ்த்
தாங்கர நீட்டிப் பற்றித்தடுத்த லென்னென் பார்சால
வோங்கிய கமல மாம்ப லுற்பலங்களை வான்பற்றத்
தாங்கணீர் சொரியுமென்பார் தளிர்க்கரஞ் சலிக்குமென்பார்   (106)

137. நட்டிடு  நாறியாவு நலிந்தன களையி னென்பார்
முட்டிடு களைகள் கட்டா மொய்பயிர் செழிக்குமென்பா
ரிட்டிடை  யிடைகணோவக் களைதுரீஇ யிளைத்தாமென்பார்
கட்டிடக் களைகளில்லைக் கரையினிற் போது மென்பார்.   (107)

138. அம்பக முழந்தாள் சாலவவிர்புற வடியாமங்கந்
தம்பெருமின மென்றண் முங்கயன் முதற்சலசரங்கள்
கம்பித முறுமா கொள்ளுங் கடைசியர் பார்வைகாட்டி
நம்பியண் மிருகங் கொள்ளு நலமில் வேட்டுவரை யொப்பார்.   (108)

139. பங்கயங் குமுத மாம்பலுற் பலம்பாசி வள்ளை
செங்கிடையா திதங்களு றுப்பினமென்று தேறார்
மங்கல வுழத்திமார்கள் களைந்தனர் பகையாய் வந்தோர்
தங்கிளை யேனுங்கோற் றருமநூல் வழக்கேயன்றோ.   (109)

140. உறப்பெரியார்களேனு மொருவரில் லொதுங்கிவாழி
னிறப்பவுமவமதிப் பொடெய்துவர் துயரமெல்லாஞ்
சிறப்புடைக் கமலமாதி திருந்து நெல்வயலுட்சேர
மறப்பிடி நடையார் புல்லின் மதித்தனர் களைந்தார் மன்னோ.   (110)

141. கருவிழிச் செவ்வா யாற்றுக் காலாட்டி மாதரானோர்
பெருவிறற் றொழுவரோடு புலவியிற் பிரிந்தாரேனுந்
திருவமிக்குடைய செய்யிற் சேர்ந்தனர் துருவிப் பைங்கூழ்க்
கொருதனிப் பகையா யீண்டுங்களையெலா மொருங்கு கட்டார்.   (111)

            வேறு.

142. களைந்திடு களையெலாங் கையின்வாரிவந்
திளம்பிடி யன்னவர் கரைதொ றேற்றியே
தளர்ந்தலை கூந்தல் கடாங்கிக் கையினின்
புளந்ததும்பிடக் கரையொல்லை யேறினார்.   (112)

143. வணர்க்கருங் குழலினார் வரம்பி லேற்றிய
கணக்கறுங் களைக்கிடைக் கமலமுற்பல
மணக்குநற் குமுதங்கள் வயங்க றொக்கபல்
பிணக்கிடை முகம் விழியிதழ் பிறங்கல் போன்ம்.   (113)

144. வெண்ணிற மலர்களும் விரவு செந்நிறக்
கண்ணிறை மலர்களும் போன கார்வய
லண்ணல்வான் சுடரெலாமகன் றநீனிற
விண்ணினைச் சாலவும் விழையு மென்பவே.   (114)

145. கானுறு மலரெலாந் தொலையக் கார்வயற்
றேனுக ரளியெலாந் தெரிவைமார் விழி
நானமென் கூந்தல் வாய்நகில மூசுவ
மேனிகழ்த்தினகொலைவிடாது சூழ்தல்போல்.   (115)

146. சிக்கறக் கையினெய் தீற்றி நீவிட
மிக்கிருண் டேகுழ றோற்ற மேவல்போ
னெக்குற வுழத்திய ருழக்கி நீவிடத்
தொக்க பைங்கூழெலாந் தோற்ற மிக்கவே.   (116)

            வேறு.

147. தண்ணெனீர் தமக்கு நல்கி வளர்த்திடுஞ் செவிலிக்காரை 
விண்ணுறீஇ முத்தமாட விரும்பி மேலுயர்வ போலப்
புண்ணியம் பயக்குஞ் செஞ்சொற் பயிரெலாம் புடையகன்று
கண்ணிறை காட்சிமேவக் கவின்றுவான் போயவம்மா. (117)

148. தன்னையர் முத்தமாடத் தம்முளங் களிசிறந்தே
யந்நலச் சிறுமகார்கள் வெண்ணகை யாடன்மான
மன்னிய செவிலிக்கார் தாம்வான்றளி முத்தமாட
நன்னரின் முதிர்ந்து பைங்கூழ் நற்கதிர் கால்வ மன்னோ.   (118)

149. நீரிடை நின்று பைங்கூழண்ணாந்து நெடுநாளாற்றுஞ்
சீரிய தவத்தாற்றிங் கட்டேவை நன்மணம் புணர்ந்திங்
கேருடைச் சூனன்றுற்றே யெழிலுடல் பசந்து வீங்கிப்
பாரெலாம் வழுத்த நன்னர்க் கதிர்மகப் பயந்தவம்மா.   (119)

150. காரணத் துள்ள யாவுங் காரியத் துளவா மென்று
சீர்நயப் புலமையோர்தாஞ் செப்பிடும் வார்த்தை தேற்றம்
பேரெழிற் றிங்களூற்று மமிர்தத்திற் பிறக்குஞ்சூல்க
ளேருற வெளுத்துத் தண்ணென் றெழுமிள மடல்கிழித்தே.   (120)

151. கொண்டலாஞ் செவிலித்தாயை விண்ணுறீஇ முத்தங்கொண்டு
மண்டுற வளவளாவி மகிழ்ச்சியின் முதிர்ந்தபின்னர்ப்
பண்டுறப் பயந்து தாங்கும் பாரெனு நற்றாய் தன்னைக்
கண்டிட விழைந்த போலக் கதிர்த் தலைவணக்குஞ் சாலி. (121)

152. பேதமைக் காலை மாந்தர் பெரிதுறச் செம்மாப்பெய்தி
மூதறி  வடைந்த காலை வணக்கமே முழுப்பூணாக
மேதகக் கோடல் போலவியன் கதிருள்ளீடில்லாப்
போதுறச் செம்மாந் துள்ளீடுற்றென வணக்கம் பூண்ட.   (122)

153. நிலவிட வேறுவேறு நிறவுருச் சித்தரானோர்
புலனுறக் காட்டுமாறு போல நெற்கதிர் கண் முன்னர்க்
கலைமக ளுருவங்காட்டி யதன் பினர்க் கருணை நீடு
மலைமகள் கோலந் தோற்றித் திருநிறம் வாய்ந்த பின்னர்.   (123)

154. அறிவுடைப் பெரியோர் வைகுமவையிடை வினயமின்றிப்
பொறியிலாப் பேதை போந்து செம்மாந்து நிற்றல் போல
நிறைபரங் கொண்டுசாயு நெடுங்கதிர்ச் சாலிக்குள்ளே
வறியபுன் பதடியாற்றத் தலைநிறீஇ நிலையு மன்னோ.   (124)

155. நின்றவர் குனிந்து குந்திப் படுத்தென நீடுசாலி
நன்று நின்றுற வணங்கி மடங்கி நற்றரை சார்பாக
வொன்றுபு கிடந்தவம் மாவுலகெலா மொடுங்குங் காலை
மன்றவொர் பரை சார்பாக வொடுங்குபு வைகன்மான.   (125)

156. தொடக்கமு மீறுஞ்சால வொத்தொன்றா யொழுகித் தோன்றி
னிடைப்பிற வரலவற்றின் பொருளொடு முடியுமென்பர்
மடற்பெருஞ் சாலிதோன்றும் பொழுதினு மடிந்தபோழ்து
மடுத்தன வெண்மை பச்சை வணமவைக்கு பாதியாமே.    (126)

157. தண்ணிய மதியின் பாங்கர்த் தாநுக ரமிர்தந் தன்னை
நுண்ணிய துளிகளாகச் சொரிந்தென நுவல வொண்ணாக்
கண்ணிறை கவின்கொள் சாலிக்கதிர் தருந்தரளக் கொள்ளை
பண்ணைக ளெங்குமீண்டிப் பரவுகால் சீக்குமன்னோ.   (127)

158. மன்னிய சிறப்பின் மிக்க வளங்கெழு வயல்களி யாண்டுஞ்
செந்நெலின் வண்ணமாகித் திகழுறுந் தோற்றமேலே
துன்னுபு விளங்காநின்ற சோதி சால்கின்ற மாட்சிப்
பொன்ன கரத்தின் சாயைபுடவி நீர்த்தோற்றல் போலும்.   (128)

159. ஆருயிர்க் கருள் விளங்க வணைத்திடு மாயைதன்னைப்
பேரருள் விளங்கியாங்குப் பெயர்த்திடு மீசனொப்பச்
சீரியபைங் கூழாக்கம் பெறீஇக் கதிர்சிறக்க யாத்த
வாரியைக் கதிர்பழுத்தாங்கே கவிழ்த்திட்டார் மள்ளர்.   (129)

160. வளவயல் யாண்டு மீரம்புலர நீர்வடிந்த பின்ன
ரளவில்சீர்க் குபேரனொக்கு மரும்புகழ் வேளாண்மாக்க
ணளிவயறோறு நின்றுநாவலோ வெனவிளிப்பக்
களமர்கள் யாருமீண்டிக்களித் தரிவினையின் மூண்டார்.    (130)

161. நிரைநிரையாக நின்று நிலவுகூனிரும் புகையி
லுரனுறப் பிடித்துவாழ் நாளுலந் திடுமுயிரின் கொள்ளை
வரமிகு மறலி தூதரரிதலின் மள்ளரானோ
ரரிதரும் வினையே சாலவமலுவ வயல்களெங்கும்.   (131)

162. மாவுறு வயல்களெங்கு மரியரிவாரியாயா
மேவுறத் தூக்கு தூக்கென் றுரைத்திடு சும்மைமிக்க
பாவகாரிய ரழுங்கப் பழியிலா நடுவனாணை
காவலரொறுக்கு மங்கணெழு மொழிகடுப்ப மன்னோ.   (132)

163. அரிகுந ரொருமருங்கங் கடுக்குந ரொருமருங்கு
வரிகுநர் சென்னி தூக்கி வைக்குந ரொருமருங்கு
விரிகளமுறத் தொகுப்போ ரொருமருங் கொளிகொண்மேருக்
கிரிபலவெனப் போர்யாண்டுங் கிடத்துந ரொருமருங்கு.   (133)

164. போரினை மலையென்றெண்ணி முகிலினம் போக மள்ளர்
சீருற யாத்தார் கொண்டு நடத்தலிற் றிறற்கடாக்க
ளேருறப் பிணைத்து விண்டுச் சாய்த்தென விரும்போர் சாய்த்து
நேருற வேற்றி நெல்லுப் பொலிகென நடத்துவாரால்.   (134)

165. பண்டியிற் கொண்டுசெல்லு மடிசிலின் பாரந்தன்னைத்
திண்டிறற் பகன்பினின்று குத்தவுந் திறள் கொள்வீம
னுண்டென மள்ளர் பின்னின்றோச்சவும் பகட்டினங்கள்
மண்டு மாதரவினாலே வாய்மடுத்திடுவ நெல்லே.   (135)

166. ஆறலைத்திடுவார் கையிற்பொருண் முழுதளித் திட்டாங்கே
யூறினைப்புரிதல் கைவிட்டொரு வல்போற் பலாலநெற்கள்
பேறுறக் கொடுத்திட்டென்ன வுழக்கிய பெருங்கடாக்கள்
சேறலுற்றன புறத்தேசிக்குறு தொடர்பு நீங்கி.   (136)

167. மெய்கொள் சித்தாந்த சைவ வியனருட்குரவர் முன்னர்ப்
பொய்கொள் புன்மதத்தர் மாற்றநிலையின்றிப் போதல்போல
வையினை யகற்றிக்கூட்டும் பொங்கழிவாரிக் கான்மு
னொய்யெனத் தூற்றமள்ள ரோடுவபதர் புறத்தே.   (137)

168. திருந்து சிற்றறிவினாலே சிறப்புடையுயிர் கடன்றாள்
பொருந் திடமனத் திருத்திச்செயுஞ்சிறு பூசைகொண்டு
பெருந்தனிப் போகமீசன் வழங்கலின் வயல்கள் பெட்பத்
தருஞ்சில வித்துக்கொண்டு மேருவிற் கொடுத்தசாலி. (138)

169. மாநிலங் காக்குமொள்வேன் மன்னவர் கரமிறுத்து
மேனிலை கொண்டதெய்வம் பிதிர் விருந்தொக்கன் மேற்கொ
டானெனு மைம்புலத்துஞ் செயுமறஞ் சலியாதாற்ற
வேனைநெற்குவைகளெல்லாங் குரம்பைக ணிறையவிட்டார். (139)

170. இலமெனு மெவ்வமென்று முரையாமை யிரவலர்க்கு
நலமுறக் கொடுப்பதன்றி நன்னெறிப் பாலர்தத்த
நிலையினிற் சலியார் சென்றுநீடுபல் பயனுமெய்தப்
புலனுறக் கொடுத்தலும் மன்பொருந்துறு குடிகளெங்கும்.   (140)

171. அறவரை யெதிர்கொண் டெய்தியடி கண்மீர் நீவிருற்ற
குறைமொழிந் தருள்கவென்று வணங்கி யின்மொழிகள் கூறி
யிறையுமோர் வழுவு பூணா தறத்தினிற் றிறம்பாதின்ப
முறநனி வழிபாடாற்றி யுவப்புறு குடிகளெங்கும்.   (141)

172. காஞ்சிகண் முகிலளக்கக் கமுகுகண் மதியளக்கப்
பூஞ்சினை மருதம்யாவும் பொருந்து பல்கோளளக்கத்
தீஞ்சுவை யிளநீர்தாங்கித் தெங்கு வான்முகடளக்கத்
தாஞ்சிறந் தெங்குஞ்சோலை தழைத்து மேனிமிருமாதோ.   (142)

173. தண்டலை பழனுதிர்த்துத் தடநிறை மலர்கிழிக்க
மிண்டுறுவாளை சோலைத் தேத்தடைகிழித்து மேற்போ
மண்டுகந் தடத்துச் சாயுமாச்சினை பற்றியேறிப்
பண்டுமார்க் கண்டர் காஞ்சிபற்றுத னினைப்பிக்கும்மே.   (143)

174. சுரும்புற மலர்ந்த வாசத்துடவைகண் மருங்கிலெங்குங்
கரும்புகள் வளர்ந்து காமன்பாசறைச் செவ்விகாட்டு
மரும்புகள் பொதுளும் வாவி யகன்கரைதோறு நீர்நாய்
விரும்புறு நெஞ்சிற்கீழ் நீர்ச்சுழலுவ வெழுந்து மேன்மேல்.   (144)

175. காமமீதூர நாளுங் காமவேள் பகழி தூண்டச்
சேமவில்லாத னோக்கி யொறுத்திடு திறமேபோல
மாமைசால் கழைகுறைத்து வலிகெழு மாலை நாப்ப
ணாமுறையிட் டழுங்க வாட்டுநர் கூட்டமெங்கும்.   (145)

176. மைந்தரு மாதராரு மாண்டக வூடிக்காம
ரிந்திர போகமாற்றி யில்லற முறையிற் பேணி
யந்தமின் மறைகடேறாவனா தியம்பகவனான
சந்திர மௌலிக்கன்பு பெருக்கினர் சார்பவெங்கும்.   (146)

177. காம்புறழ் தோளியோடுங் கந்தவேளோடுஞ் சம்பு
வேம்பலுற் றினிது மேவுங்கமலையே முதலாமெண்ணின்
மேம்படு தலங்கள் யாண்டும் விரவிடநனி விளங்குந்
தீம்புனலுலக மேன்மை தேவர்க்கு மரிது செப்பல்.   (147)

178. எண்டகு மருதந்தன்னை யடுத்துறுமெழில் கொணெய்தற்
கண்டகை தம்மைப்புன்னை தழீஇக் கிளர்காட்சி நஞ்ச
முண்டவர்க் கஞ்சாயென் போலுரைத்தனை பொய்ம்முனென்று
விண்டுற வளவளாவி மேவுதல் போலுமன்றே.   (148)

179. அலையெறி சங்கந் தாங்கியாழ் கடற்கரையிற் புன்னை
யிலையறப் பூத்து நீர்கீ ழியைதர நிற்குங்காட்சி
யுலகெலாங் காக்கு மாற்றலுறவரி யூக்கிமேனி
யிலகநீ றணிந்து நீர்நின் றிருந்தவ மியற்றல் போலும்.   (149)

180. நன்றியில் செல்வர் போலு நண்ணுவார் தாகந் தீர்க்காத்
துன்றுவர்ப் பெருநீராழி தோமி லொப்புரவாளர்ப் போன்
முன்றுறுவார்தாம் பெட்டுமுகந்து கொண்டினி தினுண்ண
வென்றுநன்னீர் சுரந்தே யிடையறா தீயுங்கேணி.   (150)

181. கலைக்கடன் முழுகி மேலாங் கண்டியுந் திருவெண்ணீறு
மிலக்கமில் பெருமைசா லைந்தெழுத்துங் கொண்டுவப்பார் போல
வலைக்கடன் முழுகி முத்தும் பவளமுஞ் சங்குமாய்ந்து
நலத்தகப் பெரிதுகொண்டு புலம்ப ருள்ளுவப்பர் நாளும்.   (151)

182. ஆயுயிர் கருவி கைவிட்டணை வுழியடை பாழ்வீய
மீயுயர் பரைதன் காட்சி வியத்தக வருளுமாபோன்
மாயிருங் கரைவிட் டாழிவயிற் செல்வார் மயக்கந்தீரச்
சேயிடை யுருவங்காட்டி மனத்திடஞ் செய்யுங்கண்டல். (152)

183. வரம்பிலாவனா தியீசன் மலரடி ஞானந் தங்க
ணிரம்பிட வடங்கியொன்றாய் நிலைபெறு முத்தரானோர்
திரம்பெறு சிவானந்தப் பேருததியுட் டிளைத்துத் தூங்குந்
தரம்பொரச் சலதியுள்ளே சுறவினஞ் சலியா தூங்கும். (153)

184. ஆசையங் கடலுட்பட்ட வாருயிர் தம்மைத் தொல்லூ
ழீசனதாணை யாற்றினியைந்து நின்றலைத்தல் போலப்
பாசொளி விரிக்கும் பௌவம் படர்பல பஃறி தம்மை
வீசிகள் வளியுறைப்ப வெழுந் தலைவிக்கு மன்னோ.   (154)

185. சென்றநாள் பலவா லெம்மைத் தணந்து சேட்டீபம் போனா
ரின்றும்வந் திலர்களென்னா வளத்தியர் புலம்பியேங்கி
நின்றுறு திசையை நோக்கி வருந்த நீளிடையில் வங்கந்
தன்றலை யினிதுகாட்டி யவர்துயர் தணிவிக்கும்மே.   (155)

186. பரநனி சுமந்து சாலவருந்தினர் பாரம் வீழ்த்தித்
தரையிடைக் கிடந்துடம்பை யாற்றிடுந் தன்மைபோலத்
திரைகட லோடி வேற்றுத்தீவிற் பல்பண்டந் தேக்கிக்
கரையடுத் திறக்கியேறி நெடுமுதுகாற்றும் வங்கம்.   (156)

187. மொய்வரி வண்டுமூச முறுக்குடைந் தொழுகத்தேற
னெய்தல் கணனி வாய்விண்டு நீள்கழிமலருந் தோற்ற
மைதிகழ் கண்ணீர் சோர நுளைச்சியர் புலம்பிமாழ்க
நைவொடு கழியுங் கண்ணீர் நட்பினிற் சொரிதல் போலும்.   (157)

188. அளத்திலுப் பமைக்கு மேல்வையு மணர்க ளார்க்கு மோதை
நுளைச்சிய ருணக்குமீன் கணுங்கிட வருநீர்க்காகந்
துளக்குற வோப்பு மோதை சுறவினம் பாயுமோதை
வளைக்குல முழங்கு மோதை கடலொலி மாற்றுமாதோ   (158)

189. மறைவழி பாடன்றாற்றி வரம்பெறு பதிநற்கோடி,
நிறைகட னாகை வேட்டகுடி முல்லை வாயினீடி
யுறைகழிப் பாலையாதி யொப்பிலாத் தளிகளோங்கு
மறைகட லுலக மேன்மை யளந்துரைக்குநர்கள் யாரே  (159)

            வேறு.

190. மணிகொண்ட நெடுங்கடல்சூழ் வையமெலா மெடுத்தேத்தும் வரம்பில் சீர்த்தி
யணிகொண்ட புனனாட்டு நானிலத்தைந் திணைவளனா வறிந்தவற்றுட், 
டுணிகொண்ட வளங்கள் சிலவெடுத் துரைத்தேமிப் பாலந்நிலத்திற் றொக்க, 
கணிகொண்ட திணைநிலைவிட் டொன்றொ டொன்று மயங்கி நிகழ் கதியுஞ் சொல்வாம்.   (160)

191. வரைப் புறத்துக் கறிக்கொடி கடுணர் பொதுளி மலர்ந்த புனமுருக் கிற்றாவி
யுரைப் பரிய திறற்காளி யுக்கிரனை யணைந்துறு மோலக்கங் காட்டும்
விரைப் புதியமலர்த் தளவுவிரை மலர்கள் செறிவேங்கை மிடைந்து சுற்றிப்
பரப்பு புகழ்க் கலைக்கிழத்தி சதுர்முகனை மருவியுறை பரிசு காட்டும்.    (161)

192. கானவாரணம் போந்து மலைச்சாரிற்றினைக் குரல்கள் கறித்துச் சிந்தத்
தானவாரணம் வெகுண்டு கானகம் போய்ப் புன்பயிர்க ளுழக்கிச் சாடும்
கூனல் வானரங்கள் குரவருள் பாவை முரம்படுத்துக் கொண்டு மீள
மானவேற் கருங்க ணெயிற்றியர் போந்துவரைப் பார்வை வௌவி மீள்வார்.   (162)

193. வயற்கரும்பை வரைக்களிறு பிடியொடுவந் தொடித்துண்டு மகிழ்ச்சி கூர்ந்து
கயற்றடத்துப் புகுந்து நனிகலக்கி மிகவிளையாடிக் கடிதுமீளப்
புயற்றொகுதி நடப்பதுபோற் கருமேதி நடந்தோடிக் குறிச்சிபுக்கு
நயப்பொடவண ரம்பை சிதைத்துண்டு மலர்ச்சுனை கலக்கு நயப்பு மோர்பால்   (163)

194. மலைக்கிள்ளை மருதத்துச் சினைவைத்துக் கான்முதிரை மகிழ்ந்து வாய்ப்பெய்
தலைப்புன்னை யொளியிருந்து நுளைச்சியர் புள்ளோப்பு மிசைமடுக்கு மன்றில்
குலப்பெண்ணை மடற்சினை வைத்தகன்றேகிக் கான்யாறு குளித்துக்கோடு
தலைப்பெய்து குரல்வௌவி மீண்டெய்திக் களிப்பினொடு சாருமங்கண். ( 164)

195. கடற்றாழை மடலேறக் கவைக்காஞ்சி தாய்ப்பசலைக்கொடி வன்கண்ட
லடுத்தேறி யதைப்புல்லி வாழ்வுற்று மகிழ்வெய்து மமைதியோர்பாற்
றிடப்பூக மடலேறத் திரைவேலைத் துகிற்கொடி நீள்புன்னை தாவித்
தொடுத்தேறி நீள்காஞ்சியதைப் புல்லிவாழ் வெய்துந் தொடர்ச்சி யோர்பால்   (165)

196. கடன்மன்னு கருங்காக்கை பகற்போதி லெழிற்காஞ்சிக் கனிகளுண்டு
தடமல்கு நீர்குடைந்து விளையாடி யிராப்போது தஞ்சாரெய்து
மடவன்னம் பகற்போதிற் கடற்சார்போய் மீனுண்டு நுளைச்சிமார்த
நடைகண்டு வெள்கின போற்றுயிலெண்ணித் தஞ்சேக்கை நண்ணு மங்கண்.   (166)

197. மருதத்துச் சிறைவண்டு விரைப்புன்னை மலர்த்தேறன் மாந்திக்கான் போய்ப்
பருமத்திற் சிவந்திடுங்கை யாய்ச்சியர் தங்குழலிருந்து பாடுங்கீதம்
நுரைதத்த விடைச்சியர்க டயிர்கடைய வெழுமோசை கேட்டு நொந்து
திருவத்த வரிணங் கணனி வாவிக்கடற்சாரிற் றிரியு மோர்பால்.   (167)

198. கானமுயல்பரன் முரம்பிலவிழ் வரகுகறித்து நனிமாந்திக் கண்ட
வூனையுணுங் கொடுஞமலி நனிதுரக்கக் கடற்றாழை யொதுங்கி வாழும்
வேனினடுப் பொழுதினிற் கல்லிரை தேருமடப் புறவுமேவிக் கொல்லை
தானிருந்து விளையாடி வரைச்சாரிற்றினை கொய்து சாருமோர் பால். (168)

199. குறவர்மினார் புள்ளோப்பல் குறித்து விசைகொண் டெறியுங் கவண்கல் கொல்லைப்
 புறவமணைந் தளைத்தாழி பிளவுபட வுடைத்திடலு மாயர் பொங்கிக்
கறுவொடுசென் றவரலற மதுக்குடங்கள் கோல்கொண்டு கடிதுமோதி
விறலெயினர் துரத்திடலு நனியோடி முரம்பொளிக்கும் வியப்பு மோர்பால்.   (169)

200. கொடிச்சியர்தங் குழனாறுங் கோங்கு தளவொடு குமுத நெய்தல்யாண, 
ரிடைச்சியர்தங் குழனாறுங் குரவொடு சண்பகந் தாழை கமல மேர்கொள், 
கடற்கிளரும்  புன்னைமராஅ வேங்கை பாதிரிகள் கடைசியர்பானாறு, 
மடற்கழுநீர் கொன்றை யொளிர்பாலையொடு காந்த ணுளைச்சியர் பான்மல்கும். (170)

201. மலைச்சந் தொடகில் பாடியூர் பாக்கமிக நாறுமலியுங் கானத்
தலைச்சிந்து பால்வெண்ணெய் தயிரூர் பட்டணம் வரையிற் சாலுமோங்குங்
குலைச்செய்யின் விளைசெந்நெல் கடல் கான மலை தம்மிற் குலவிநீடு
மலைச்சங்கு துகிர்முத்தம் வரைநீடு கானூர் தொறளவின் றோங்கும். (171)

202. நானிலத் தைந்திணை பிறவுமிவ்வாறு தலைமயங்கு மங்கணாகர்
வானிலத் திலருட் டிருவுந் தன்னிலத்திலுறக் கொண்டுமாட்சி நீடிப்
பாநிலத்தி லிணையெறியுஞ் சோணாட்டுச் சீர்பாடல் பரமஞானத்
தேநிலைத்த புகழுடைய நாயன்மார்க்கன்றி யொருசிறியேற் காமோ. (172)

203. தகைபெறுமிச் சோணாட்டுக் குயிராகி யுலகெலா முறுப்பாச்சாரு
மிகுபுகழ் துன்னிடும் விராட்டெனும் புருடற் கிருதயமாய் விளங்குங் கஞ்சக்
குகைமல ராயனைத் தினுக்கு மாதாரப் பரவெளியாய்க் குலவுந் தில்லை
நகரணிகள் சிலவெடுத்து நவின்றடர வருவினையி னடலை தீர்வாம்.   (173)

        திருநாட்டுப்படல முற்றிற்று.

        திருநகரப்படலம்.

204. திருவளர் பிரமாண்டத்துச் செறிந்தபல் புவனம்யாவு
முருவளர் பலவுறுப்பா யொளிர்தர வுயருந்தில்லை
பெரியவவ் வுறுப்பியாவுந் தொழிற்படப் பிரேரகஞ்செ
யிருதய கமலமா மேலதன் புகழெண்ணற் பாற்றோ.   (1)

205. வியன் படைத்திட்ட வீசனண்டத்துக் குயிரா மேற்செய்ந்
நயன் படைத்திட்ட தில்லைநகரினுக் கவன்கீழ் வாழு
மயன்படைத்திட்ட வூருமரி படைத்திட்ட வூரு
மயன் படைத்திட்ட வூருநிகரெனல் மடமைப்பாற்றே.   (2)

206. விண்ணகர்தம் முட்டில்லை வியநகர்க்கொக்கு மாட்சி
நண்ணுறு நகரமின்றே னானில வளாகங் கொண்ட
மண்ணுறு நகருளொன்றை மற்றதற் குவமையாக
வெண்ணிடன் மடமைமேலு மடமையா யிழுக்குமன்றே.   (3)

207. திருவினாற் கவினாற்றே சாற்றிருத்தத்தாற் சிறப்புவாய்ந்த
வுருவினா லுயர்வான் மாண்பாலொழுக்கத்தா லோதவொண்ணா
வருமையாற் புகழானன் காலாக்கத் தாலறிவா னான்ற
பெருமையாற் றனக்குத்தானே யுவமையாம் பிறங்குதில்லை.   (4)

            வேறு.

208. மீத்திகழ்ந் தோங்கும்வாக்கியத் தொகையால் வேதங்களியாவு நன்கெடுத்துத்
தோத்திரம் புரியுநகர்ப் புறமுடுத்துத் தோன்றுபல் சாகைகொள் பொதும்பர்த்
தேத்தடைகஞலி விளங்குறு தோற்றந்திகழ் சுடர்ச்சூரியர் நகரேர்
பார்த்திட நினைந்து மண்டலத்தோடு வந்துறை பரிசு போன்றிடுமே.   (5)

209. மண்டு பேரொளி கொள் பலமணி குயிற்றி மரகத மணியினோர் பறம்பு
விண்டல மிறங்காவகை யயனமைத்து வியத்தக நிறுத்தி வைத்தென்ன
வெண்டிசாமுகத் துங்கவடுகள் போக்கி யெழிலுடைப் பலமலர் பொதுளி
யண்டமே லோங்கு பித்தியை மருவி யழகுறு மளிமிடை வனமே.   (6)

210. தாரகா கணங்கண் மலர்ந்தவான் போலுந் தவளவாண்மலர் ததைசோலை
நாரநீர் முகிலினொழுகுதல் போலுநறுமதுப் பொழிலினின் றிழிதல்
சேரவான் மீன்களுதிர்வன போலுஞ் செம்மல்கள் சோலையினுதிர்தல்
பாரவிந்திர விற்றிகழ்வது போலும் பலநிறமலர் நிரலொளிர்தல்.   (7)

211. தினகர கிரணம் வழங்குறா வண்ணஞ் சினையெலாந் தழைமிகப் பொதுளி
நனைமலர் வடுக்காய் பழமதுத்திரள்கள் குறைவறக் கொடுத்திடு நலத்தாய்த்
தனதெழில் காணப்பதித்த வாடிகளின் வாவிகள் பலவகந் தழுவிக்
கனகமா நகரிற் கற்பக நாணுங் கவினுடைத்தாயது பொழிலே.    (8)

212. தோடுறு மலர்கடுறு மெழில்வாவித் துடுமனப் பாய்ந்துநீர் குடையும்
பீடமைத் தோளாரான னாம்புயத்தோ டம்புயமலர்க் குறுபேதங்
கூடளியறியா தோங்கிரும் பொழிலிற் கூத்தியர்க்கும்மவர் கூந்த
லாடுறுமுகிலென் றகவுறுமயிற்கு மாடவர் வேற்றுமை யறியார்.   (9)

213. சேட்டிருந்தட நீரிடையறாது தவித்தினகர வெப்பினான் மிகுந்த
வாட்டமதகலச் செய்திடு நன்றி நினைந்தபோற் கரையுறு மரங்கள்
பாட்டளி யினங்கள் கால்களா லுழக்கப் பருமுகை யுடைந்திழி தேனுங்
கோட்டிறா லுடைந்து கூர்ந்திழி தேனும் வழங்கியத் தடக்குறை தீர்க்கும்.(10)

214. மந்தர மதனிற் றாப்பென விடங்கொள் வாசுகி பிணித்தனர் வானோர்
முந்தை நாட்பால்கொ ளுததியிலிட்டுக் கடைந்துழி முளரிமா தெழுந்தாங்
கந்தின்மாத் தொடரிற்பிணித் திருந்தடத்து ளழுத்தினர் மருங்கு நின்றீர்ப்பக்
கந்தநீர் மிகுந்தங்கழுந் திடுமடவார் களிப்புடன் கொம்மென வெழுவார். (11)

215. பரிதியங் கடவுட் கருக்கியங் கொடுக்கும் பரிசினிற் பனைக்கை நீர்முகந்து
கரியினங் ககனம் போதர வெற்றிக் கடுவளியென விருபுறஞ்சார்
தருவினஞ் சரித்துத் தாரணை கடக்கு மனமென வங்குசத் தடையை
யொருவு புகடுகித் திரிதரு தண்ட மளப்பில வியத்தகவுறுமே. (12)

        வேறு.

216. கரிதடத் திறங்கலிற் கரைபுரண்டு நீர்
சரிதர றேற்றிலர் தடவுக்கைம் மடூஉப்
பருகியுந் தடத்துநீர் பல்கலென் னெனத்
தெரிவையர் கழியிறும்பூது சேர்வரால்.   (13)

217. தாரணை நெறியினா னெஞ்சு தாவில்சீர்ப்
பேரொளிச் சிவத்தறிப் பிணிப்புற் றார்தலின்
வாரண நிரைபல தொடரின் வன்றறி
யேருறப் பிணித்துறு கூடமெண்ணில.   (14)

218. விண்ணிடை யுலவிடு மேகசாலங்கண்
மண்ணிடை யிழிந்தன வழிக்கொண் டேகுமென்
றுண்ணினைந் ததிசயித் துரைப்ப மாந்தர்க
ளெண்ணில மதகரி யேகும் வீதியே.   (15)

219. மாவளம் படவுமிழ் விலாழி மால் கொடந்
தாவளம் படவுமிழ் தானஞ் சேர்ந்துபல்
பூவளம் படமதுப் பொழியு நன்மணக்
காவளம் படநனி கடுகி யோடுமே.   (16)

220. காலகட்டு தித்தெனக் கடுகு தாளின
தாலநீண் மடலெனத் தயங்கும் வாலின
வேலையிற் றிரையெனத் தாவும் வெம்பரிச்
சாலைகள் வாசியைத் தாங்கி யோங்குமே.   (17)

221. இந்திரனூர் பரிநாணு மேரின
வைந்தொகை சேர்கதியணவி மாணுவ
மந்திரவாசியின் மேற்சென் மாட்சிய
கந்துக வீதிகள் கவர்வ கண்களே.   (18)

222. இரணியத்தியன் றனயாணர் மேயின
மரகதக் கொடிஞ்சிய வைரப்பாரின
தரள நற்றொங் கலமணி செய்தட்டின
குரகதத்தேர் செறிசாலை கோடியே .   (19)

223. நரலையின் மரக்கலமன்றி நண்ணுறு
மிரதமு மோடுவ கொல்லென் றெண்ணிடப்
பரியுமிழ் விலாழியுட் பாரழுந்திட
விரைவுட னோடுவ தேர்கள் வீதியே.   (20)

224. பல்வகை யுறுப்பினும் பதித்த மாமணி
வில்லுமிழ்ந் துருவினை மறைக்க வேகுநர்
செல்லுறு மோதையி னன்றித் தேறிடா
வெல்லை யில்வளத் தனவிரத வீதியே.   (21)

225. அடற்றனு நூல்வலோர திசயித்திடப்
படைக்கலம் பயில்பலவீரர் பந்திகள்
கடக்கருந் திறலுடைக் கடவுளர்க்கு முண்
ணடுக்குற வியத்தக வலத்தி னண்ணுமே.   (22)

226. தொடைகெழு விறற்படைக்குரிய தோமில்சீ
ருடையணி தேருறுப் புஞற்று சாலைக
ளடுசரஞ் சிலையயிலே தியாதிபல்
படைசெயுஞ் சாலைகள் பற்பலாயிரம்.   (23)

227. படைபல கெழுமிநேர் பகைஞ ரஞ்ச நீள்
புடைநகர் வளமிது புகன்ற னம்மினி
யுடைதிரை யகழியொடோங்கு பேரெழி
லிடைநக ரணிசில வியம்பு வாமரோ.   (24)

        வேறு.

228. கூழைகள் கொண்டல் காட்டக் குலவுரு மின்னல் காட்ட
வீழ்தரு வேர்வைத் தூ வன்மாரியின் மிகுதி காட்ட
மாழையுண் கண்ணார் செங்கை யுலக்கைகள் பற்றிவள்ளை
யேழிசை வாழ்நர் வீழவிசைத்து நின்றிடிப்ப சுண்ணம்.   (25)

229. வெள்ளி வீழுதலின் வெள்ளி யுலக்கை மேலுயர்ந்துமீள
வொள்ளிழை மாதரானோ ரிடித்தொறு மெழுந்திட் டோங்குங்
கொள்ளைகொள் செம்பொற் சுண்ணம் பொதிதலாற் குலவும் பல்சீர்
ஞெள்ளல்க ளெல்லா நாக வீதியை நிகர்க்கு மன்னோ.   (26)

230. ஈட்டிரு வினையினான் மாவிரு பயன்றுய்ப்பான் மேல்கீழ்
மீட்டுமீட் டுழிதர்கிற்றல் போன்மென மென்பூம்பந்து
சேட்பட வங்குமிங்குஞ் சென்று சென்றுழலும் வண்ணம்
வாட்டடங் கண்ணார் கூந்தலலைய நின்றடிப்ப மன்னோ.   (27)

231. பளிங்கினற் குன்றுபல்ல பாயொளி பரப்பு மோர்பால்
வளங்கெழு மெக்கர் பல்லவனப் புறத்தயங்கு மோர்பாற்
றுளங்கொளி மேடைபல்லசோதி விட்டெறிக்கு மோர்பால்
விளங்குசெய் குன்றுபல்ல வியத்தக வோங்கு மோர்பால்.   (28)

232. சைத்திர ரதமு நாணக் காமவேடனக்கு நாளு
மைத்திர மருவிப்பூக்கண் மலியுமுய்யான மோர்பா
னயத்துறு கீதம்பாடு மளிக்குல நயந்துண்டார
வியத்தக மதுவிருந்தீ வியன்மலரோடை யோர்பால்.   (29)

233. கந்திக ளுதிர்த்தபூவு மின்னனார் கழித்தபூணிற்
சிந்திய முத்தும் வில்லிட்ட றற்கரைத் திகழவாவி
சுந்தரமலிந் துட்டோன் றறொக்கவான் மீன்களோடுஞ்
சந்திரனிழிந் துவைகுந் தன்மையை நிகர்க்குமாதோ.   (30)

234. தேசுடைத் தமதுகாதின் சீரினுக் குடைந்த வாற்றாற்
கூசுறப்பெரிது மேறியலைத் திடக்கோளுற் றார்போன்
மாசையிற் குயின்ற சோதிமணி வடந்தொடுத் திட்டியாத்த
வூசலிற்றிருந் தவைகியுந் தியாடுவர் கண் மின்னார்.   (31)

235. சந்திர காந்தத்தா லேர்தவழ் தரச் சமைத்த குன்றி
லிந்துவின் கிரணமேவ வசும்பி நீரிழியும் யாண
ரந்திவானிகர்க்கு மேனியண்ணலார் கைலைக்குன்றிற்
கந்தநீரருவி மல்கிவழிந் திடுகாட்சி போலும்.   (32)

236. ஆடியிற் சமைத்த குன்றி லகவுறு மஞ்ஞையேறிப்
பீடுடைக் கலாபம் யாணர் பிறங்கிட விரித்துமேவ
லீடுடைக் குலிசப் புத்தேளியாணர் வெண்களிற் றொடண்மிப்
பாடுசேர் நகர்ச்சீர் நோக்கி வைகிடும் பரிசுபோலும்.   (33)

237. விலங்கலின் மீதுகார்கண் மின்னுபு தவழ்தன் மானத்
துலங்குசெய் குன்றுதோறுஞ் சுரிகுழ லவிழ்ந்து தூங்கக்
குலங்கொண் மின்னார் களியாண்டுங்குழீஇப் புடைபெயர்ந் தம்மானை
நலங்கொ ளின்னிசைகள் பாடியாடுப நயப்பின் மாதோ. (34)

238. மைக்கருங் கூந்தனல்லார் சேவடி வைப்பியாண
ரெக்கர்க டோறும் பூத்த தாமரைக்கான மேய்க்குங்
கைக்களிற னேகமாவிப் பிடியொடுங் களித்துலாவ
லொக்க மைந்தர்கண் மின்னாரோடு லாவுப வெழிலுய்யானம்.   (35)

239. அண்டத் தப்புறஞ் சேராழி சிவகங்கை யளவியாடி
மண்டுவ ரகற்றத் தில்லைமாநகர் வளைந்ததோ வென்
றெண்டரு மிறும்பூதெய்த வாழ்ந்தகன்றேர் குலாவிப்
பண்டரு நகரைச் சூழ்ந்து கிடந்ததாற் பழங்கிடங்கு.   (36)

240. திருக்கிள ருலகமெல்லா மகனுறத் தேங்கி வீங்கவ்
வருட்பெருங் கடலுக்கெல்லை கண்டவரில்லை யற்றே
யுருப்பெரு மிடங்கர் மாக்களொன்றொ டொன்றி கலிமோதுங்
குரைக்கிடங் காழங் கண்டோர் குவலயத் தில்லை மன்னோ.   (37)

241. கிடங்கய லிறங்கி நின்று கலக்கிட மறைந்து கீழுற்
றிடங்கர் தமுரற்றாள் பற்றி யீர்த்தலு மவற்றைக் கையா
லுடங்குறத் தூக்கி மோதிக் கயமுன மோல மென்னத்
தடங்கடி தோடிக் காத்தோற் சமழ்ப்புறுவிப்ப வேழம். (38)

242. வீங்கிடு மலங்கணீங்க மேலவன் குணங்களாறுந்  
தேங்குதம் மறிவினூடே விளங்கிமெய்ச் சீவன்முத்தி
பாங்குறப் பெற்றோர்த் தாக்கிப் பழவினை பாறல்போல
வாங்ககழ்க் கிளரும்வீசி மதின்மிசை மோதிச்சாயும்.   (39)

243. பிலத்துறு மகளிரானோர் பிறங்கு பேரகழினூடு
வலத்துட னெழுந் தண்ணாந்து மதில்கொள் பேரழகு நோக்கு
நலத்தினை விழையக் கஞ்ச நாம நீரகழி யெங்குங்
குலத்துட னளிகண் மாந்திக் குமட்டமேன்மலர்ந்து தோன்றும். (40)

244. பணங்கொள் பாப்பரசு முன்னாட் பதஞ்சலி யாகியிந்த
வுணங்கில்சீர் நகரமேவு மொருபிலத் துவாரந்தன்னை
யிணங்கவோர் மருங்குட் கொண்டிங்கிலங்கு சீரிருங்கிடங்கின்
கணங்கொள் பல்வளனு முற்றக்கரைந்திட வல்லர்யாரே.   (41)

245. விண்டு நேரிடினுஞ் சாடும் விறற்பொறித் தொகுதிமேவி
யண்டகோளகை கடந்தே யணிபல வுடைத்தாய்ச்சாலு-
மெண்டி சாமுகத்தும் வீங்குமிரு ளெலாமேயுங் காந்தி
கொண்ட மாமணி குயின்று வியத்தகக் குலவுமிஞ்சி.   (42)

246. கிடங்கினின்று கண்டுமீன்கள் கிட்டலும் வாயிற்கவ்வி
யடங்க வெம்பசி நோயுண்டங்க மர்மதிற் பொறிகணன்கு
திடம்பெறு ஞானந் தன்னாற் சிவன்கொணர்ந் தூட்டுமென்றோ
ரிடம்பிரியாது வைகியெய்து மூண் மிசைவார்ப் போலும்.   (43)

247. ஓடுவ மீள்வ வீழ்வ வெழுவ கொட்புறுவ வொன்னார்க்
கூடுவ தெழிப்ப தாளிற்றுவைப் பகைகொண்டு குத்திச்
சாடுவவென் கண்டுள்ளந் தழைப்ப சம்புவின் மெய்ச்சீர்த்தி
பாடுவ கிளப்ப தன்றம் மதிற்பொறிப் பரிசுமன்னோ.   (44)

248. கடுவளி யுறைப்ப விண்ணிற் கங்கை நீரிடைத் தரங்க
படலமிக் கெழுந்து மேன்மேற் புரண்டிடு பரிசு போல
நெடுமதிற் றலையினோங்கி நிரந்திடு துவசக்கான
முடுநிரையு திரவோவா தெறிவன வுலவைமோத.   (45)

249. நெடுமதிற் கிளைத்த போல நிமிர்ந்த வெண் ணிகேதனங்கள்
படுதிரைக் கங்கை வற்ற நக்கியிப் பாரிற் றெண்ணீர்
வெடிபடப் பருதிவெப்ப மலிதர வெறிவமின்னா
 திடிசெய்து வெள்ளை மேகமழை பெயுமென்னயாரும்.   (46)

250. நற்சிவ தருமமுற்றி நாததத் துவத்தின் காறு
நிற்புறு புவனந்தோறு நேர்ந்துயர் போகந் துய்ப்பார்
கற்பனை கடந்தகூத்துக் காண்பார்க்கிங் கிறங்க நாட்டும்
பொற்புறு சிமயமென்னக் கோபுரமிஞ்சி மேற்போம்.   (47)

251. நாற்றிசை களினுமிஞ்சி நலத்தகக் கிளர்ந்தெழுந்தே
யூற்றமாரண்ட மெல்லாங் கடந்துயர் சிகரியுச்சிக்
கேற்றதோரவதி கூறற்குவமை மற்றில்லை யெண்ணிச்
சாற்றின் மற்றொன்றற் கொன்றை யுவமையாச் சாற்றலாமே.   (48)

252. குருமணி குயின்ற கீழ்மேற் கோபுரக் கூடத்துள்ளா
னிரைகிள ரண்டந்தோறு நிலவிடுங் கதிரேயாதி
விரிகதிர் மண்டிலங்கண் மின்னனா ரெறியும் பந்திற்
றிரிபவால் வழியிளைப் புத்தீர்தரச் சிறிது தங்கி.   (49)

253. நாலு கோபுரத்தின் சீருநாடுவா னொருங்கு நச்சி
மேலைநாள் விரிஞ்ச னென்பான் சதுர்முகனானான் விண்டு
சால மற்றவற்றிலுள்ள கவினெலாஞ் சலியாநோக்கற்
பாலவா நயனங் கொள்வான் பரமன்பால் வரங்கிடந்தான்.   (50)

254. மயன் முதற்றெய்வத் தச்சர் மற்றவை கொண்ட நுட்பச்
செயலுடைச் சித்திரங்கள் கண்டு சித்திரங்களாவ
ரயின்முகக் குலிசப் புத்தேளாதி வானவர்கள் யாரும்
வியனுடைச் சிகரிநோக்கி விழியிமைப்பில ரானாரால்.   (51)

255. வாதையி லுணர்ச்சியோரும் வகுத்திடற் கரிய மாண்பால்
வேதமொர் நான்கு போலுங் கோபுர நான்குமேலா
மாதிநாயக னிருத்த தரிசன மடியர்காணப்
போதவுட் புகுத்து நீராற்பரை போலும் புதவவாயில்.   (52)

256. எண்ணுதற் கரியமாட்சி படைத்த சீரிஞ்சியோடு
நண்ணுபொற் கோபுரச்சீர் யாவரே நவிறற்பாலார்
பண்ணவர்க் கரியமாட்சி நண்ணகர்ப் பரிசு சொற்றாங்
கண்ணுதற் குரியசீர்த்தி யுண்ணகர்க் கவின் சொல்வாமால்.   (53)

257. நடையினா லுடையநற் சொல்லு நயத்தினால் வினயத்தாற்கட்
கடையினா லவினயத்தாற் கூத்தினாற் கவினாற் பண்ணா 
லுடையவா டவர்கணெஞ் சமயக்கி யொண்பொருள் கொண்டொள்வேள்
படையென வமரும் வஞ்சப்பரத்தையர் சேரிமல்கும்.   (54)

258. மாமணிச் சோதிச் செம்பொன் மாளிகைப் பத்தி தம்மி
லேமுறப் பித்திதோறுஞ் சித்திரமிலங்கு காட்சி
காமரிற் றமக்குத் தோற்ற கற்பக நாட்டார் தம்மைத்
தோமுறப் பரத்தைமார்கள் சிறையிடைத் தொகுத்தன் மானும்.   (55)

259. அகத்திலே நலம்பாடென்ப தணுத்துணை யேனுமின்மை
முகத்திலே விளங்கா வண்ண மரிசனம் பூசிமூடிச்
சுகத்திலே மயங்குமைந்தர்த் தொழும்பர்களாக்கி யன்னோர்க்
கிகத்தையே வீடாககாட்டி யிருமனப் பெண்டிர் வாழ்வார்.    (56)

260. காமநூற் பொருள்களெல்லாங் கருத்தெனுந் தூணிசேர்த்திட்
டேமுறக் கலவிப்போரி லாடவர்க்கெடுத் திட்டெய்வார்
நாமநீர்ப் புவியிலிவ்வூர்ப் பரத்தையர் நாட்டவைவே
னோமிகப் புகுந்துடற்றார் நோற்பவர் தமினுமில்லை.   (57)

261. உள்ளினிற் கலப்பிலாரா யுடம்பினிற்றானே புல்லி
யெள்ளினுக் கெண்ணெய்போலப் பொருளினுக் கிசையவின்பந்
தெள்ளிதிற் கொடுத்துச் சூதுமலர்ந்து பொய்காய்த்துத் தேறாக்
கள்ளமால் பழுத்து வஞ்சக் கணிகையர் களித்து வாழ்வார்.   (58)

262. துடியிடைக் கொலைசெய் வேற்கட் கவர்மனப் பெண்டிர்சோதி
வடமுலைக் குவட்டுணேரு மைந்தரைச் சொருகிமைய
லுடனுறப் புரிதந்தன் னோருடல் பொருளாவி வௌவி
யடலுடைக் கிரவுஞ்சத்தை யசித்தறத் தருக்கி வாழ்வார்.   (59)

263. மலைத் துணையாகச் செல்வ மைந்தர்பால் வாங்கலன்றித்
திலத் துணையேனு மொன்றையவர் கொளக் கொடுத்தறேற்றாங்
கலைத் துணைகண்ட செந்நாப்புலவரிக் கணிகையாரை
விலைத் தெரிவையர்க ளென்று வீண்பட மொழிந்தாரன்றே.   (60)

264. சொல்லுக்குத் தோற்றவென்று சுகங்களைக் கூட்டில் வைப்பார்
பல்லுக்குத் தோற்றவென்றே முத்தினைப் பணிப்பர் நாற்ற
வில்லுக்குத் தோற்றவென்றே வித்தத்தை யிடிப்பிப்பார் தம்
வல்லுக்குத் தோற்றாரென்று மைந்தரை வியங்கொண் டாள்வார்.    (61)

265. ஆட்டுச்சீர்க் கணிகை மாதரகப் பொருள் பகருஞ்சேரி
மாட்டுச்சீ ரளந்து கூறவல்லவர் யாவரிப்பா
னாட்டத்திற் குணவுமல் கவளகை நல்குரவுண்மூழ்க
வீட்டிப்பல் பொருளும் விற்குமா வணவியல்பு சொல்வாம்.   (62)

            வேறு.

266. விளங்கு பொன்னினிற் றலம்படுத்து விண்ணின்மீதுறப்
பளிங்கினிற் சுவர்த் தலமெடுத்து வாள்பரப்பிட
வளங்கொள் வச்சிரத்தினால் வகுத்த தூணிரைத்துமேற்
றுளங்கு பச்சையா லமைத்த போதிகை சுமத்தியே.   (63)

267. உத்திரந் துகிர்க்குலத் தமைத்திருத்தி யோளியா
முத்தினைப் பொடித்த சாந்துமீது பூசி மூடியே
சித்திரங்கள் செவ்வி திற்றிருத் திவாசமூட்டிநே
ரொத்த தொங்கனால விட்டுயர்த்த வாவணங்களே.   (64)

268. மலைத்தலைப் பிறந்தவும் வனத்திடைப் பிறந்தவு
மலைத்தலைப் பிறந்தவு மகன்பணைப் பிறந்தவுங்
குலத்துடன் றனித்தனி குவைபெறக் குலாவியே
நிலைத்தமாட கூடமன்ன நிற்ப வாவணங்களே.   (65)

269. எந்நிலப் பொருள்களுந் தலைமயங்க வீண்டல்போற்
பன்னிலக் கிளவியு மயங்குறப் பரந்தன
வின்னவுண் டிலையெனக் கிளந்திறாமல் யாவையு
நன்னரின் னிறைத்து யார்க்கு நல்கு மாவணங்களே.   (66)

270. ஏதிலூர்க ளில்லதாமிகத் தொகுத்திட் டீதலாற்
கோதிலாத தங்கணில்லவே திலூர் கொடாமையாற்
போதநீடு தம்பொருட் களவிலாமை பூணலால்
வேதவாக மங்களென்ன மேவு மாவணங்களே .   (67)

271. தமனியப் பொன்னாடை வர்க்கஞ் சந்திரத்தினன் மணி
யமைபடப் பதித்திழைத்த கஞ்சுகாதி யணிமுடி
யெமியுறக் குயின்ற கோசிகம் பல்லாடை யெழிலொளி
யுமிழ்மணிக் கலன்க ளின்னவுற்ற கூலமாயிரம்.   (68)

272. தெருக்க ளாலொர் நாலுபாலும் வந்துவந்து சேர்சன
நெருக்கி னெள்ளிட வெளியிலாது கூலநிறைவுறும்
பரக்குமோதை செவிகளைச் செவிடுறச் செய்பரிசினால்
வரப்பில் பண்டம் யாவருங் குறிப்பினோர்ந்து மாற்றுவார்.   (69)

273. பலமணிக் குலக்குவை பரந்துவில் விரித்தலிற்
குலவுமாவணத் தெருக்கள் கூடுமைந்தர் மாதர்தந்
நிலவுகண் சுழன்று மின்னி நீரிறைக்க வழிபிழைத்
துலவவுமிடம் பெறாமலோவியத் தினிற்பரால்.   (70)

274. வாதை யின்றியே திருத்தொகுத்து நல்கு மாட்சியாற்
போதநீள் புறப்பொருணுனித் துநாடு புந்தியாற்
றீதுறாது பொருளினுண்மை தூக்கி நன்று செய்தலா
னீதிமன்ன ரென்ன நாய்கர் நியமமுற்று நிலவுவார்.   (71)

275. ஐம்பொறிக்கு மேற்றயாவுங் குறைதலின்றி யமலலா
லிம்பருக்கொர் போகபூமி யென்னவோங்கு மாவணந்
தம்பெருக்க வளவு தாமறிந்திடாத தகுதியா
லும்பருக் கொரு வமையாகி யோங்குவார்கள் வணிகரே.   (72)

276. விளங்கிடும் பதார்த்தம் யாவுங் குற்ற மூன்று மேவுறா
துளங்கொளத் தெரித்தியல் வகுக்கு மொண்மையாளர் போல்
வளங்கொள் பன்மணிக் குவை வகுத்த நற்றிவாத் தொறுங்
களங்கறத் தெரிப்பர் நாய்கர் கையின் வேறுவேறதா.   (73)

277. மின்னனார் பரப்பி விற்குங் கோங்க மென்மிளிர் தொடை
பொன்னிறங் கஞற்ற நல்லபொன் செய்ம் மாலை யென்னவு
நன்மணங் கலக்கநல்ல நறியசம்பகத் தொடை
யென்னவு மயங்கி மைந்தரினிது கொண்டுவப்பரால்.   (74)

        வேறு.

278. கற்பகந் தேனு சிந்தாமணியொடு காருநாணச்
சிற்பர னருச்சனைக்காந் திரவியம் பலவுஞ் சேமித்
தற்பக லிடையறாமே யளித்திடும் வளமைசான்ற
பொற்ப மராவணச்சீர் புகன்றிடற் பாலர்யாரே .   (75)

279. சின்மயக் கோயிறன்னை யுடுத்தருட் சிறப்புவாய்ந்த
பொன்மயப் புரிசை நான்கின் புறத்தவாய் நான்குபாலுந்
தன்மையிற் சுத்தமாயா புவனமாய்த் தயங்கு மாட்சி
நன்மையிற் சிறந்தவீதி யணிசில நவில்வா மன்றே.   (76)

280. திருவருட் செல்வந்தம்பாற் சிவணிடச் சிவனூலாற்றிற்
புரியிடைத் தொகுவார் செய்யும் புண்ணியத் தாயசீர்த்தி
யுருகெழப் பரந்து மேலே யொளிர்தலிற் றரளப்பந்தர்
வருமுகி றடக்க விண்ணிற் றிகழ்தர வயங்கும் வீதி.   (77)

281. காரணி நுழைய வோங்குங் கதிர்விடு தரளப் பந்தர்ச்
சீரணி குயிற்றியாத்த பன்மணிச் செவ்விச் செம்பொற்
றோரண நிரையுஞ் செந்தேன் றுளித்திடத் தொடுத்த வாசத்
தாரணி நிரையு நான்று கவின்செயத் தயங்கும் வீதி.    (78)

282. அந்தணர் கரத்திற்றான மாதரத் தளித்து வாக்குங்
கந்தநீராறாய் மின்னார் சிதர்த்த குங்குமங் கலந்து
சுந்தரமிகுந்து தோன்றக் கொழித்திடு வண்டறொல்லைச்
சந்தநன் னகரோர் கால்கள் வழுக்கிடச் சாரும் வீதி.   (79)

283. கறையடிப் பனைக்கை நால்வாய்க் களிமத கரிகளூற்றும்
வெறியுடை மதமும் யாணர் விளங்கு நற்சுழி கொணீள்வாற்
புறமயிர்க் குரத்தாட் பாய்மாப் பொழிந்திடு விலாழிதானு
நெறிபடச் சகடூராற்றி னொழுகிட நிமிரும் வீதி.   (80)

284. விரைபடத் தெளித்த சந்து மிளிர்தர நாற்றுந் தார்வீழ்
பெருமதுப் பெருக்கு மொன்றாய்ச் சேறுபட்டிடப் பிறங்கு
மிரணியத் தகடும் யாணர்ப் பருமணித் திரளும்யாரு
மருவுறப் பதித்துக் கால்கள் வழுக்காம னடப்பர் வீதி.   (81)

285. மாலைக ளுகுக்குந் தேறன்மலிந்து செய்சேற்றை யந்த
மாலைக ளுகுக்குந் தாதே புலர்த்திடும் வாட்கட் சாயற்
கோலமங்கையர் நீர்வண்ட லாட்டினிற் குழம்பு சேற்றைக்
கோலமங்கையர் தூஉஞ்சுண்ணம் புலர்த்திடுங் கொடிநீள் வீதி.   (82)

286. அணங்கனார் களைந்துவீசு மாடகத்தாரும் யாணர்
மணங்கமழ் மலர்மென்றாரும் வரம்பில்பன் மணியின்றாருங்
கணங்கொண் மாக்கரி தேர்வீரர் கதிக்கு மற்றவர் போனாளு
மிணங்கிமிக் கிடையூறாற்றுந் தோற்றத்தா லிலங்கும் வீதி .   (83)

287. அரசிளங் குமரரூரு மணிமணித் தேரும் யாணர்
விரியொளி மணிப்பொன் மாடமேடையு மிடைந்து நாலும்
பருமணிப் பொலஞ்செய் தாருநெருங்கி வில்பரப்பலாலே
யிரவினும் பகலேபோல விருள் வரவறியா வீதி.   (84)

288. சீரணி விளக்கமாடி திருந்துறத் திகழ்தலாலும்
பூரண பசும்பொற் கும்பம் வரிசையிற் பொலிதலாலு
மேரணி யரம்பை பூகங்கனியுட னிணங்கலாலுந்
தோரணப் பொலிவினாலுந் துலங்குபு சிறக்கும் வீதி   (85)

289. ஆரணம் பரவு மேலோ னற்புதத் திருக்கூத்தன் பா
னேருறத் தொழுது வாழுநேயத்திற் புகுதாநின்ற
நாரணன் முதலாந் தேவரீட்டமு நரலை சூழ்ந்த
தாரணி மன்னரானோர் கூட்டமுந் தணவா வீதி.   (86)

290. அங்கண னணிவிழாவிற் றழங்கு துந்துபியு மன்பர்
சங்கரசிவ நடேச சம்புவென் றெடுத்துப் போற்றுந்
துங்கவின் னிசையுந் தோமில் சோபன வொலியுந் துன்று
மங்கல முரசம் விம்மு மோதையு மாறா வீதி.   (87)

291. அற்புதத் திருக்கூத்தாடு மண்ணலா ரகிலமீன்ற
தற்பரை குமாரரோடு தத்துவ மணித்தேரேறி
யிப்புவி யண்டமுய்ய வெழுந்தருள் ஞானானந்தப்
பொற்புறு வீதி மாட்சி யாவரே புகலுகிற்பார்.   (88)

292. அரியயற் ககந்தை போக வனாதி யம்பகவன் மேனாள்
விரிசுடர்க் கனலியாகி வியத்தக வுயர்ந்தா லொப்பப்
பரிபுரப் பதமின்னார்கள் பயிறரத் திருவினோங்கு
மெரிமணிப் பசும்பொன் மாட நிரைகள் விண்ணெழுந்திட் டோங்கும்.   (89)

293. இந்திர நீலத்தாலே யெழில்பெற வெடுத்தசோதிச்
சுந்தரமாடப் பந்தி தண்ணமு தூற்றுந் தூய
சந்திர மண்டலத்திற் கப்புறஞ் சார்வதொன்னாண்
விந்தமே லெழுந்து கோள்கள் கதிகெட விளங்கல் போல.   (90)

294. உமையிடத் தொருபேரண்ண லொப்பிலா நடங் காண்பார்க்குத்
தமனிய வுலகத்தாரிந் நகரிடைச் சாரநாட்டுஞ்
சிமயமற் றிவைகொலென்னத் திகழொளி வைரத்தாலே
ரமைதரச் சமைத்தமாட மளப்பில வெழுந்து விண்போம்.   (91)

        வேறு.

295. பத்தியிற் சித்திரம் பலவிளங்கு பொற்
பித்திகள் பலவுடன் பிறங்கு சோதிவெண்
ணித்தில மாளிகை நிரைகள் வேதன்வாழ்
சத்திய வுலக மீக்கிளர்ந்து சாலுமே.   (92)

296. இருடுரந் தொளிசெய யாணர் மேவுபல்
புருட ராகத்தினிற் புனைந்த மந்திரங்
கருடனூர் மாயவன் காமுற் றேயுறை
பொருடுறு வைகுண்டமீது போவவால்.   (93)

297. பளகறு மோவியப் பத்தி பஃறிக
ளொளி வைடூரியத் தியற்று மொப்பில்சீ
ரளவு பொன்மாளிகை யாதவன் கிளர்
தெளிதரு மண்டல மீது செல்வவால்.   (94)

298. புரைதபப் பவளத்திற் புனைந்த மாளிகை
யுரைகொள் கோமேதகத் துயர்த்த மண்டப
மரகத மணியினா லியற்று மண்டப
நிரை நிரையாக விண்ணிமிர்வ கோடியே.   (95)

299. பானுவின் சிலையினிற் குயின்ற பாயொளி
மேனிலமத னெதிர் காலும் வெய்ய தீ
வானில வின்சிலை பதித்த மாளிகை
மாநில வெதிருமிழ் நீரின் மாயுமே.   (96)

300. ஒண்ணு தன்மாதரார் குழலுக் கூட்டகிற்
றண்ணிய நறும்புகை தனக்குங் காருக்கும்
விண்ணுறு மாடமேல் வேறுபாட்டினைப்
பண்ணிட லரிதுமின் படுத லில்லையேல்.   (97)

301. பண்ணிறை மாடமே லாடும் பைந்தொடி
யொண்ணகை மாதரார் தமக்கு மூங்கணை
விண்ணவர் மாதரார் தமக்கும் வேற்றுமை
கண்ணிமை யாவழிக் காண லில்லையே.   (98)

302. பலகணி திறந்திடு சமயம் பார்த்துறை
கலைநிறை யம்புலி தனக்குங் காரிகைக்
குலமினார் முகமதி தமக்குங் கூடரா
விலைகளங் கெனிற் பகுப்பறித லில்லையே.   (99)

303. தண்மதிக் குடற்கறை சகசமன்று தான்
விண்ணுறு மிந்நகர் மாடமேவுதோ
றொண்ணகையார் முகச்செவ்விக் கொவ்வுறா
துண்ணிறை துயர்சுடக் கறுக்கு மொள்ளுரு.   (100)

304. புயறொடு மாடமே லுலவும் போழ்தினின்
மயல்சுரர் பெரிதுறு வாரென் றெண்ணியோ
வியலணி திருந்துற வெய்தியும் பினுஞ்
செயலணி யிந்நகர் மாதர் செய்வதே.   (101)

305. விஞ்சுபே ரழகுடை மின்னனார் மிளிர்
மஞ்சிவர் மாடமேல் வதியும் போழ்தினி
னஞ்சுமி ழெயிற்றரா நண்ணிக் கவ்வுமென்
றஞ்சனங் கண்ணினுக் கெழுத வஞ்சுவார்.   (102)

306. நன்னர் யாழ்நரம்பு கைவருடி நங்கைமார்
கின்னர மணைதரக் கீத நூன்முறை
பன்னிசை செவிமடுத் துவப்பர் பாணரப்
பொன்னக ரரம்பையர் நாணுட் பூப்பரால்   (103)

307. பண்ணுறு யாழிசைக் கிசையப் பாட்டிசை
தண்ணுமை யிசைவழி தழுவக் கானடை
கண்ணிணை கைவழி நெஞ்சங் கண்வழி
நண்ணிட வரங்கிடை நடிப்ப மின்னனார்.   (104)

308. கரங்க டாமரை மலரென்னக் காரளி
விரும்பி வீழ்ந் தெழுந்திடவீ நறுங்குழற்
குரும்பை மென்முலையவர் குழுமி யெங்கணு
மரும்பிட மகிழ் கழங்காடு வாரரோ.   (105)

309. இறந்து பேரின்ப வீடெய்தி னார்களும்
பிறந்து வாழ்வுற விழை பெரியவிந் நக
ரறந்த வாநரர் சிறப்படைந்து காண்கிலார்
சிறந்தவ ரமரரே யென்று செப்புவார்.   (106)

        வேறு.

310. மடவன நடையினார்க ளெதிரெதிர் வைகி வெள்ளைப்
படிகநாய் சிவப்புமேவக் கரமலர் தொட்டுப் பைந்தேன்
றொடையணி முதலவொட்டித் தோல்வி வெற்றிக ணோக்காராய்க்
கடிகை போக்கிட வட்டாடுங் கம்பலை மாடமல்கும்.   (107)

311. தங்களுக் கிறைவனானோன் பதஞ்சலியாகிச் சார்ந்தீண்
டங்கண னடனங் கும்பிட்டமர் சிறப்பறிந்து நாக
மெங்குவான் கிளர்ந்து துள்ளு மியற்கையின் யாணரின்ப
மங்கலக் குதலை மைந்தர் விடும்படம் வானினாடும்.   (108)

312. தொன்மறை வகுக்கு மேலா மறமெலா மவண சூழ்ந்து
நன்னெறி பிறழா தீட்டும் பொருளெலா மவண நாடிச்
செந்நெறி நின்று துய்க்கு மின்பெலா மவண தேர்ந்து
பன்னருஞ் சிறப்பின் வீடுபேறு மற்றவண பன்னில்.   (109)

            வேறு.

313. பல்கலையு நான்மறையு முழுதுணர்ந்து சிவவேள்வி பலசெய்ந்நீரா
ரெல்லைதவிர் நடராசனிணையடிக் கங்கணுக்கரா மிரும்பேறுற்றார்
சொல்லரிய ஞான முதனான்கு முணர்ந் துலகெலாந் தொழுமாநின்றார்
தில்லைவா ழந்தணர்கள் செம்பொன் மணிமாளிகைகள் சிறக்கு மோர்பால். (110)

314. அப்புனிதப் பெருந்திருக் கூத்தாடு மொருபெருமான் மன்றகலாராகி
யொப்பிலருட் பலபணி செய்யுரிமை தமதெனக் கொண்டே யொழுகு மாண்பார்
திப்பிய நற்கலைபலவு முணர்ந்து திருவருட் செல்வந் தேக்கு நீரார்
தப்பிலகம் படிமைமிகு வேதியர்தம் மாளிகைக டயங்கு மோர்பால்.   (111)

315. பலநீதி நனிதேறிப் பகையெலாங் கட்டறுத்துப் பரவை சூழ்ந்த
நீலமீது தமதாழி தனியுருட்டிக் குடிகளற நெறிநீங்காது
செலுமாறு நனிசெங்கோல் செலுத்தியொரைந் திறத்தினுறு தீங்குதீர்த்து
வலமேவு பெருங்கீர்த்தி வாளர சரரணிடங்கள் வயங்கு மோர்பால்.   (112)

316. வளம்படு தம்பொருளேபோற் பிறர்பொருளு மிகப்பேணி வாணிகஞ்செய்
துளம்படுதந் நடுவுநிலை புறத்தினிற் கோறூக்குபு நன்றுணர்த்தி முன்னூல்
விளம்புநெறி கடைப்பிடித்து மிக்கவிரு நிதிக்கிழவர் பலருண்டென்னத்
துளும்புபெருந் திருவினுயர் வசியர் மணிமாளிகைக டுலங்கு மோர்பால் (113)

317. இத்தரையிற் றுவிச ரொருமூவருந் தொன்மறைக ளினிதெடுத்துக் கூறுந்
தத்தநெறி சலியாது தலைநின்று கதிப்பவுழு தொழிலாற் றாங்கிச்
சத்திய மொப்புரவு பொறை வேளாண்மை கலையுணர்வு தம்மாற்சாரு
மெத்துபுகழ் தமதெனக் கொண்டாள் சதுர்த்தர் வளமனைகள் விறக்கு மோர்பால்.   (114)

318. ஓங்குபுகழ் நால்வருணத் துயர்ந்தோர் கடம்முண் மணம்புணர மாறிச்
சாங்கரிய முற்றுதித்தோர் தத்தமக்கு விதித்தவழி தலைநின்றாற்றி
வீங்குபுக ழொடுதழைத்தந் நால்வரும் வாழுறையிடங் கண்விறந்து சூழ்ந்து
பாங்குபெறத் தழுவி வளம்பட வாழு மணிவீதி பரக்குமெங்கும்.   (115)

            வேறு.

319. அனாதி சைவனாஞ் சிவபிரான் முகமைந் திலடைந்து
பினாதி மாறின்றி யாகம மறைநெறி பேணி
மனாதி மூன்றினுஞ் சிவனருட் பணிபுரி மாண்பா
ரினாவகன்ற நல்வேதிய ரிருக்கைக ளிண்டும்.   (116)

320. அரியஞானிக டிருமட மொருபுடை யணவும்
பெரியயோகியர் திருமட மொருபுடை பிறழுங்
கிரியைபேணுநர் திருமட மொருபுடை கெழுமுஞ்
சரியையாளர்க டிருமட மொருபுடை தழுவும்.   (117)

321. அன்ன சாலைக ளொருபுடை யரியமா முனிவர்
பன்ன சாலைக ளொருபுடை பலகலை விதங்க
ணன்னர் நான்மறை யாகம முறைப்பட நாடும்
பொன்னின் மாமுடிப் பட்டிமண்டப மொருபுடையே.   (118)

322. பேதை நீர்மையிற் கலாய்க்கு மாணாக்கரைப் பெரியோ
ரோதிடும் பிரதிஞ்ஞையே யதை வலியுறுத்து
மேதுவே யதைநிறுத்திடு முதாரண மிவற்றான்
வாதைதீர் பொருடெருட் டறப்புற மெங்கு மலியும்.   (119)

323. இரண்டினைத் தலைமேற்கொண் முப்பானென விசைக்கு
மரண்டருந் திறத் தறமெலா நானென தென்னு
முரண்டுரந் தருட்கூத்தையர் சேவடிமுன்னித்
தெருண்டுளோர் செயுஞ்சீ ரறச்சாலைகள் பலவால்.   (120)

324. கீதமேம்படு நான்மறையோது பல்கிடையு
நாதமேம்படு நால்வர் செந்தமிழ் பயில்களனும்
போதமேம்படு தொண்டர்தம் புராணமு நடேசன்
வேதமான்மிய மைந்துமோ திடங்களு மிகுமே.   (121)

325. உம்பர் நாயக னொருதனிக் கோயிலை யடுத்த
பைம்பொன் மாமதின்மிசை யிடபம் பலபயிலும்
வெம்பறன் கடையெண்டி சாமுகத் தினுமேவி
யிம்பர் நல்லற மிறுத்திடாதோம்ப வெண்ணின போல்..   (122)

        வேறு.

326. நவந்தரு மைந்தொழி னடத்த நாதனார்
நவந்தரு பேதமாய் நண்ணிடச் சபை
நவந்தரச் சமைந்தெனச் சிகரி நான்குமொண்
ணவந்தரு கூடங்க ணண்ணி யோங்குமே.   (123)

327. அண்ணலார் திருவபிடேகமாடு சீர்
வண்னவாயிர மணிக்கால் செய்ம்மண்டபம்
புண்ணிய முனிவருஞ் சுரரும் பூதரும்
மண்ணகத் தடியரு நெருங்கு மாட்சித்தால்.   (124)

328. நீற்றொளி திகழ் திருமேனி நின்மலன்
மாற்றரு மறை நெறியுயிர் மணந்திட
வேற்றசீர்ப் பரைதனை ஞானமா மண
மாற்று பொன்மண்டபங் கவினுமாங் கொர்பால்.   (125)

329. புங்கவ ரமிர்தினைப் பொதிந்த பெட்டியி
னங்கண னருள்வடிவாய் மலப்பிணி
சிங்கிடத்து மிக்குமொர் தீர்த்தமாஞ் சிவ
கங்கைசூழ் மண்டபங் கவினுமாங் கொர்பால்.   (126)

330. அமரர் வாழ்வுறத் திருவுளங் கொண்டன்றொரு
சமரம்வேட் டயிற்படை தாங்கு செங்கை நங்
குமரவேள் சின்மயக் கோட்டமன்பர் தந்
திமிர வெவ்வினைகெடத் திகழுமாங் கொர்பால்.   (127)

331. அநாமய னைங்கர னாகு வாகனன்
விநாயக னெம்பிரான் விமலக் கோயினன்
மனாதியின் வழிபடு மடியர் வாழ்வுற
வினாதுரந் தருள்கொழித் திலங்குமாங் கொர்பால்.   (128)

332. அம்பிகை பரைசிவகாமி யன்னையா
ரிம்பர் வாழடியரை யாத்திட் டின்னல் செய்
வெம்புறு பிறவிநோய் வீட்டிமேவுசீர்ப்
பைம்பொ னாலய மொளி பரப்புமாங் கொர்பால்,   (129)

            வேறு,

333. பரசிவன் கருணையாலே பல்லுயிர்க்கருள் வழங்க
வருவுருவாய ஞானமேனிகொண் டளப்பில் சாகைச்
சுருதியொர் வடிவாயோங்குந் தூயவானீழன் மேவு
மொருதிரு மூலட்டான முரையிறந் தொளிரு மோர்பால்.   (130)

334. மாதவன் விரிஞ்சனாதி வானவர் முனிவரேனோ
ராதரம் பெருகவேத்த வளப்பிலா ஞானானந்த
நாதனோ லக்கமேவு நலங்கிளர் தேவமன்றென்
றோதுபே ரம்பலம் வானுற்றொளி விரிக்கு மோர்பால். (131)

335. கார்த்திரு மேனிமாயோன் முதலியோர் கலங்கியோட
வார்த்தெழு மாலங்கண்டத் தடைத்தருள் சுரந்தவண்ண
லூர்த்துவநடங் குயிற்று மொருபெரு நிருத்தமன்றம்
வார்த்தைகட் கதீதமான திருவினால் வயங்கு மோர்பால். (132)

336. வேற்றுப்புன் சமயத்தெய்வம் யாவையும் வினையுட்பட்டுத்
தோற்றுத் தன்னாணை தாங்கத் தொலைவின்றி நிலவலாலே
நீற்றுச் செஞ்சடைப் பிரானே பதியென நிறுவுந் தம்ப
மேற்றுச் சீர்க்கொடி வான்போகப் பொதுவின் முன்னெழுந் திலங்கும்   (133)

            வேறு.

337. கவினெலா மொருவழிப்படத் திரண்டரோ காமர்
நவமணிக் குவை குயின்று சித்திரமுயிர் நண்ணச்
சிவணியோர் பசும்பொற்சபைக் கெதிருறீஇத் திகழு
மவதிநீர் பெருந்தெய்வ மாமண்டப மதுவே.   (134)

338. காதனந்தியம் பெருந்தகை காவல் வீற்றிருப்பாய்
வேதமோதினர் தில்லைவா ழந்தணர் மிடைந்தே
போதொராறினு நிருத்தர் பூசனைபுரியிடனாய்ச்
சோதிமேவு பொன்னம்பல மலவிரு டுரக்கும்.   (135)

339. சுத்தமாயை முன்னான தத்துவம் பலசூழ்போம்
பித்தியாதி பல்லுறுப்புமாய்ப் பிறங்கிடப் பெரிய
சத்தியொன்பதுந் தூபிகளாகி மேற்றயங்க
வித்தையாவு மைம்பீடத்துந் தம்பமாய் மிளிர.   (136)

340. ஏற்றமாகு மைஞ்செழுத்து மைம்படிகளா யிலங்கச்
சாற்றொணா மனுரகசியஞ் சதாசிவபீட
மேற்றிகழ்ந்திட மகேச னைங்கரன் சூலிவிசாக
னாற்றனந்தி சண்டேசுரனகன் புடை யடுப்ப.   (137)

341. ஆடகப் பெருங்கிரி மிசையணவு தென்சிகர
மாடொர் சிற்சபை விளங்குமற் றதன்பெரு மகிமை
நாடியிற்றென வுரைப்பரிதெவர்க்கு மெய்ந்நடன
மாடுமப்பொது நியத மாவளப்பருஞ் சிவமே.  (138)

342. மோனஞானிக டேறிடு முடிவில்சீர்த் தில்லை
மாநகர்ச் சிறப்பெனது சிற்றறிவிற்கு வசமோ
வானவாதரத் தொருசில் வறைந்தன னணிப்பொன்
ஞானமன்றுடை நாதன் மான்மியமினி நவில்வேன்.   (139)

        திருநகரப்படல முற்றிற்று.

            நைமிசப்படலம்

343. பூமகட்கொரு நிலயமாய்ப் போக்கறு சீர்த்தி
நாமகட் கணியரங்கமாய் நவிலு மெண்ணான்காஞ்
சேமநல்லறக் குயிரதாய்ச் சிறப்புறுந் தகைத்தான்
மாமலர்த் திருப்படப்பை சூழ்நைமிச வனமே.   (1)

344. வில்லமாதுளை பாதிரி யாத்தி மாவிலிங்கை
குல்லை சண்பகஞ் சாதிமாலதி கொன்றை பலாசு
நெல்லி சூதம் புன்னாகந் தாடிமம் வன்னிநீப
மல்லிகா தியிற்கிளர்ந்  திடுநைமிச வனமே.   (2)

345. தருப்பை வல்லியச் சருமமேர் மரவுரி மான்றோல்
சிருக்கொடேர் பெறுசிருவ நூல்சமிதை தொன்முறைகோ
விருப்பினீந் திடுகௌவியம்வே திகையங்கி
வரத்தின்மேவுட சத்தது நைமிசவனமே.   (3)

346. தேவபாடையின் மாதவச் சிறுவர்க ளோதும்
பாவுமூவறு வித்தையும் பலமுறை கேட்டுக்
காவின்மேவுறு பூவையுங் கிள்ளையுங் கனிவா
னாவினோதிடக் கிளர்வுறு நைமிசாரணியம்.   (4)

347. ஓமத்தீப் புகை மேகத்தினுரு மிகக்காட்டச்
சாமப்பே ரொலியதன் பெருமுழக்கத்தைத் தயக்க
வாமத்தீப் பொறிமின்னுரு வயக்க வாக்குறுநெய்
நாமத்தூவலாக் கிளர்வுறு நைமிசாரணியம்.   (5)

348. ஒருவனாகிய சிவபிரா னிருகழ லொருமுக்
கரணமார நான்மறை வழிகசிந்து பாசித்துத்
திருகு மைம்புலங்கடிந்து செய்தறு தொழில் சிவஞ்சா
ரரியமாதவ ரிருப்பது நைமிசவடவி.   (6)

349. ஏற்றின் மேல்வரும் யாகவேந்தாகு மீசனுக்குப்
போற்றுமூவெழு வேள்வியும் பூர்வ மீமாஞ்சை
சாற்றுநீதியாற் றேவர்தம் பசிப்பிணி தணப்ப
வாற்றுமாதவர் வாழ்வது நைமிசவடவி.   (7)

350. பாசவேரறத் தரித்திடு கண்டி சாபாலம்
பேசுமுத்திற விபூதி சங்கர னுமைப்பிராட்டி
தேசுகாட்ட மெய்ப்புற மகத்தைஞ் செழுத்தெண்ணு
மாசிறாபதர் வசிப்பது நைமிசவடவி.   (8)

351. அத்தகைப்பெரு நைமிசாரணியம் வாழாசில்
சுத்தமாதவர் தொல்புகழ் வசிட்டனை யெதிர்ந்து
தத்தமன்பினிற் பணிந்து பொற்றவி சிடையிருத்திப்
பத்திமேம்படப் பாத்தியா திகடந்து பழிச்சி.    (9)

352. நூலமைப்பினிற் பூசனை நுனித்து நன்காற்றிச்
சீலமாதவச் செல்வனேநின் றரிசனத்தால்
வாலுணர்ச்சி யுற்றியாமெலாம் வாழ்வுபெற்றனமென்
றேல்வுறப்பினும் பலமுறை யிறைஞ்சினர் விருப்பால்.   (10)

353. வணங்கு மாதவர்க் கருமறை வசிட்டமா முனிவ
னிணங்கு மோகையினாசி சொற்றிருக்க வென்றருளக்
கணங்கொண் மாதவரிருந்தனர் கை தலை குவியா
நுணங்கு கேள்வியோற் பார்த்தொன்று நுவறன் மேயினரால்.   (11)

        நைமிசப்படல முற்றிற்று,

        புராணவரலாற்றுப்படலம்.

354. அரிய பல்கலையு மங்கமோராறு மரிறப வுணர்ந்தனை ஞானம்
பெரிது நன்கடைந்தே வுரைசெயவல்ல பெரியருட் சிறந்தனை பிறங்கு
மிருவகையாகிப் பரவுறு காண்டத் தியலும் வேதாகம புராணம்
வரன்முறை தெரிந்து மேம்படு புலமை மன்னினை மாதவரேறே.   (1)

355. ஆதலிற்பெரிது மேம்படு பொருளா யனைத்தினு முயர்ந்த தாயாய்ந்திட்
டோதுதற்கரிதா நுண்ணியபொருளொன் றுன்வயிற்கேட்டினி துணருங்
காதன்மிக் கடைந்தே மாயினம் வார்த்தைக் கதீதமாய்க் கதித்துயர்ந்தோங்கு
மேதகுதெய்வத் தலங்களுட் கலியை வென்று மேம்படு முயர்தலத்தே.   (2)

356. மறைமுடி புணர்ந்த ஞானிகளறிந்து வழிபடுந் தரத்ததா யாண்டு
முறைதரு மெல்லாப் பொருளினு மடங்கா துயர்ந்ததாய்த் தனதியலுணர்ந்து
முறையுளி வழிபாடாற்றுநர் வேட்டவேட்டவாறுடன் முழுதருளுங்
குறைவி லானந்தம் வழங்கருண் மூர்த்தியாது நீ கூறெமக்கென்றார்.   (3)
 
357. அவ்வுரைகேட்டு வசிட்டனா மேலோ னகமகிழ்ந் தாரிடர் வதனஞ்
செவ்விதி னோக்கி முனிவிர் நீர்கேட்டசிவரகசிய முரைக்கின்றா
மிவ்வகலிடத்துப் புண்ணியம் பயக்கு மெழிற்சிவ தலங்களுள் வீடுந்
திவ்வியபோகந் தானுநன்களிக்குந் திருக்கோயில் சிதம்பரமாமால். (4)

358. அத்தகு தலத்தி னோங்குசீர்த் தேவர்க்கரிய மெய்ஞ்ஞான வாகாய
நித்திய மன்றிற் சிவபிரானிய தவானந்த நிருத்தநன் கியற்றுஞ்
சித்த நற்கமலத்தே மறைபொருளாய்ச் சிறந்த காரணமதாய் வேதாந்
தத்தினாற் றெரிக்குஞ்சோதி புண்டரீக புரத்திடைத் தரிசிக்கப் படுமால்.   (5)

359. என்றுரைத் தருளும் வசிட்டனை நோக்கி முனிவர ரியம்புவ ரெந்தாய்
நன்றுநீ யுரைத்த மறைப்பொருள் கேட்டு நாமெலா முளமகிழ் சிறந்தே
மன்றவப் பதியின் மகிமையு மீசன் மற்றவண் மாநடங் குயிற்ற
நின்றவப் பெரியவே துவுமறிய விரும்பின நிகழ்த்துதி யென்றார்.   (6)

360. நற்றவர்க் கரசா யறிவினிற் சிறந்த வசிட்டனம் முனிவர்க ணயந்து
சொற்றிடு முரை கேட்டறிவினிற் சிறந்தீர் தூயநும் மறிவெலா நலத்தை
யுற்றுநோக்குவவா யிருந்தன நலஞ்சேரும் முடையிவ் வினாவுலக
முற்றுமுய்ந்திடு தற்கேதுவாம் வகுத்து மொழிகுதுங் கேண்மினீர் முறையால்  (7)

        வேறு.

361. அங்கண் மாநிலத்துள்ள பஃறலங்களு ளறவீ
ரிங்கு நாமெடுத் தியம்பிய சிதம்பர மிதுதான்
மங்கை பாகனா ரெவற்றிற்கு மேலென வகுத்த
துங்கமேவிய பழம்பதி யென்பது துணிவீர்.   (8)

362. நலத்தினுக் கொரு வீடதாய் ஞான நன்குணர்ந்தார்
புலத்தினுக் கதிசயந் தருஞ்சிதம்பர புரமெய்ப்
பலத்தினைத் தருமதன் பெருமகிமையைப் பரமன்
மலத்தினைத் தெறுமறுமுகக் கடவுட்கு வகுத்தான் .   (9)

363. வலங்கொள் வேலுடைக் குமரவேள் மகிமையா னிறைந்தே
யிலங்குமற் றதைநந்தியம் பெருந்தகைக் கிசைத்தான்
கலங்கிடாது மெய்யுணர்ந்த வந் நந்தியங் கடவுள்
புலங்கடிந்திடு சனற்குமாரற்கதைப் புகன்றான் .   (10)

364. அருளினீடிய சனற்குமாரப் பெயரண்ணல்
பொருளின் மேம்படு புராணங்கள் பதினெட்டும் வகுத்துத்
தெருளி னீடுயர் வாதராயண முனி தேறி
யிருளினீங்குமா றன்னதை யினிதருளினனால்.   (11)

365. போதநீடிய வாதராயண முனிபுராண
மோதுநீரருட் டலைமைசேர் சூதனுக் குரைத்தான்
மேதையாளர்க டேறிட வதனையம் மேலோன்
காதலிற் சிவாலயந் தொறுங் கட்டுரைத் திட்டான்.   (12)

366. தூயமா முனிவீர் தலந் தீர்த்தங்க டுலங்குந்
தேயமெங்கணும் யாத்திரை செய்தியான் சென்று
பாயசீர்த்திகொள் சனற்குமாரப் பெயர் படைத்தோன்
மேயமாதவ வனத்தினை மேயின னொருநாள்.   (13)

367. கணையா லவனூ றிதிகாசத் தொடிலங்கும்
பொருவிலாத விப்புராணத்தை யெனக்கெடுத் தியம்பத்
திரமுறச் செவிமடுத்து நன்குணர்ந்தனன் றெளிவு
மருவமற் றுமக்குரைத்தவா சுருக்கினன் வகுப்பேன் .   (14)

        புராண வரலாற்றுப்படல முற்றிற்று.

        பிச்சாடனப்படலம்.

368. முன்னர் மாதவத்திரோர் பன்முனிவர்க டேவதாரு
நன்னர் மாதவ வனத்தின் வைகின ரன்னோர் ஞானந்
துன்னு மாதவங்கடேறப் பெறாமையி னிகமஞ் சொல்லுங்
கன்மமே பிரமமென்று கடைப்பிடித் தொழுகலுற்றார்.   (1)

369. உத்தம தவத்தினாலே தாமிக வடைந்த வொப்பில்
சித்தியினானு ஞானத் திருவிழி யிலாமையானும்
புத்தியிற் றருக்குமிக்குப் பொருவிறந் தொளிர்சிவப்பேர்த்
தத்துவம் போற்றார் நெஞ்சிற் சாலவு மவமதித்தார்.   (2)

370. வியன் றிரவியங் கொண்டன்னோர் வேட்டுமன் வேள்விவேள்விப்
பயன்றரு சிவபிரான் றாட்பத்தியை மறந்தொழிந்தார்
நயன்படா நெறியினிங்ஙனாள் பலகழிக்கு நீரான்
மயன் முதிர்ந்தனராய்ச் சாலமனத் தருக்குறு வாரானார்.   (3)

371. ஒழுக்கத்தாற் றவத்தா லோம்பும் வேள்வியால் யோகந்தன்னால்
விழுப்பத்தைத் தருங்குணத்தாற் பொறுமையாற் றுறவான் மெய்ந்நூற்
பழக்கத்தாற் சதாசாரத்தாற் சாங்கியப் பயிற்சி தன்னா
லிழுக்கின் மந்திரத்தாற் சாபவருளினாற் பெரியம் யாமே.   (4)

372. வாசக வாச்சியத்தை யுணர் பெருவலி யினாலும்
பேசிடுஞ் சொல்லின் முட்டைப்பெரிது நன்கொழிக்கு நூலின்
மாசுதீ ரறிவினாலு மகங்கள்செய் வலியினாலுங்
காசினி தன்னிலெம்மை யொப்பவர்க் காண்கிலேமால். (5)

373. விளங்கிடு முலகமெல்லாம் வெறும் பொயென் றுணருமாறு
களங்கற வுணர்த்து ஞானங் கலைஞர்க்கு மரிதாமந்த
வளங்கெழு ஞானந் தானுங் கருமமே பற்றி மாணுந்
துளங்கிடுநீழல் செல்வோற் பற்றியே தொடர்தல் போல. (6)

374. கன்மமே சித்தியெல்லாங்  கொடுத்திடுங் காயந் தன்னாற்
பன்னு வாக்கதனா னெஞ்சாற் பண்ணுவானல னுயர்ந்தோர்க்
கின்னறீர்  கருமத்துண்மை யறிந்தவனாகு மின்னோன்
றுன்னிடு மிணைமற் றில்லாச் சுகத்தை யெஞ்ஞான்று மன்னோ.   (7)

375. ஆதலிற் கருமநிட்டைபெற்றளப்பிலரா யாழ்ந்த
வேதபாரகர்க ளானோ மெம்மினும் வலிமிக்குள்ளோ
ரோதின் மற்றி யாண்டுமில்லை யெனவுளத் துன்னினாரம்
மாதவர் பன்னிமாருந் தமையங்ஙன் மதிக்கலுற்றார்.  (8)

376. திருமக ளென்னுமாது மனத்திடஞ் சிறிதுமில்லாள்
பொருவில் சீர்வாணி யெல்லார் நாவிலும் பொருந்து நீராள்
சுரகுரு மனைவி சோமப்பிரபையைக் கௌதமப்பே
ரிருடிதன் மனைவி தன்னை யினையரென் றறிது நன்றே.   (9)

377. பாற்றுமைம் புலத்தரான முனிவர் தம்பன்னிமாரு
ணூற்றின் மேம்படுவோர் தம்மை யினையரென் றறிது நோன்பு
போற்றுபு கணவர் சேவை புரிதரு பெண்டிர்யாவ
ரேற்றசீர்  வசிட்டன் றேவியொருத்தியே யெமை நேர்கிற்பாள் (10)

378. அந்தகா சுரனுக்கஞ்சி யன்று சங்கரனார் சீர்கொ
ளிந்த மாதவ வனத்தி லெம்மிடத்தினி லிருத்தச்
சந்தமங்கல நிறைந்த கௌரியுந் தணந்தாளென்னி
லெந்தமங்கையர் தங்கேள்வர் பணிகெடத் தணந்திராதார்.   (11)

379. நாம் பதிவிரதம் பூண்டே நற்குண முடையேங் கேள்வர்க்
காம் பணியவையே யன்றிப் பிறசெய லறியே மென்னா
வோம்புறு விரத சீலமுடைய வம்முனிவ ரில்லார்
தாம்பெரி தகந்தைகொண்டு தருக்கு மிக்குற்றார் மன்னோ.   (12)

380. கருமமே பொருளாக் கொண்ட முனிவர்க்குங் கற்பின்மிக்க
திருமனையார்க்கு மிங்ஙன் சித்தத்திற் கிளர்செருக்கங்
கொருபகற் கொருநா ளேற்றமாய் மிகுந்தேறிற் றும்பர்
நரரவர் தருக்கு நோக்கிப் பொறாதுள நடுக்க மிக்கார்.   (13)

381. உலகெலா நடத்து மாற்றலுடைய பேரீசனாயு
நிலவு மாசாரம் யாவு  நிறுவுவோனாயு மெல்லாம்
வலியினிச் சித்தாங் காற்றுஞ் சுதந்திரனாயும் வானோர்
தலைமைசேர் கடவுளாயுந் தனிப்பெரும் பகவனாயும்.   (14)

382. சித்தசித் தனைத்தையுந் தன்றிரு மேனியாகக் கொண்ட
வித்தக னாயுந்தானே விளங்கிடு பிரபுவாயும்
பத்தியில் பாபாசாரம் பாற்றுவோனாயு மான்ம
தத்துவ நாதனாயுந் தடையில் பேரறிவனாயும்.   (15)

383. கயிலை வீற்றிருக்கு மொப்பில் கறைமிடற் றிறைவ னன்னோர்
செயலழித் தகந்தை நீக்கு நெறியினாற் றேவர் முன்னாப்
பயிலுயிர்க் குறுதியொன்று பயந்திடத் திருவுளத்து
நயனுடை யருளினாற்றா னினையன நாடலுற்றான்.  (16)

384. வரம்பெறு தேவதாரு வனத்துவாழ் முனிவரானோர்
பரம்பொருள் கருமமென்றும் பயனையக் கருமந்தானே
திரம்பெறீஇக் கொடுக்குமென்றுஞ் சித்தியிற் றருக்கு மிக்குப்
புரம்பொடி படுத்த நஞ்சீர் போற்றிலர் மறந்தொழிந்தார் . (17)

385. தருக்கின தின்மையன்றோ தருமசாதன மாமன்னோர்
பெருக்குறு செயற்குவேதப் பிரமாண மில்லையின்னுஞ்
செருக்குட னிடம்பமென்ப தீவினைக்கிரண்டு கண்ணா
யிருக்குமிங் கிவைகெடா வேலுயிர்க்கறி வுதித்தலில்லை. (18)

386. தருக்கினைப் பெருக்குகின் றவந்தணர் தம்மை வன்மீ
னிருக்குமொர் தடாகம்போற் கொண்டி யாவருமஞ்சி மேவார் 
திருக்கிளர் தருமமோங்கத் தீவினைப் பாலயாவுஞ்
சுருக்குறவவர் தருக்கைத் தொலைத்திடன் முறை நமக்கே. (19)

387. ஆதலான் முனிவர் முன்னரவர்கள் பத்தினிமாரெல்லாம்
பேதுறீஇக் கற்புநீங்கிப் பெரிதுமோகத்தி னாழக்
கோதில்சீர் வடிவமொன்று கொண்டு போகுவ மென்றெண்ணி
நாதர் பிச்சாடனச் சீர்வடிவொன்று நயப்பிற் கொண்டார்.   (20)

388. வரநதியோடு கூடிவயங்கு செஞ்சடையை வாசம்
விரவுமல்லிகை மென்றொங்க லாக்கினன் வேணிமேவும்
பொருவிலாப் பிறையைத் தாழைப் பூந்துணர் மலராச் செய்தான்
பிரமர் தங்கபாலந் தம்மை யாடியாய்ப் பிறங்கக் கண்டான்.   (21)

389. மும்மையிற் பிரிந்த கங்கை யொழுக்கினை யுலகமூன்றுந்
தம்வயமாக்கு நெற்றிக்குறிகளாய்த் தயங்கச் செய்தான்
வெம்மையைச் செய்யு நெற்றி விழியினை விளக்கமேவ
வம்மையொ டப்பனா னோன்றிலக மாயமரச் செய்தான் .    (22)

390. அச்சுவ தரனற் கம்பளன்னென வழைக்க நின்ற
நச்செயிற் றரவிரண்டை நகுமணிக் குழையிரண்டா
வைச்சனன் செவியிற் சங்கின் வயங்கிடு களத்து நஞ்சை
முச்சகம் வியக்கக்  காலேயகமதாக் கண்டான் முன்னோன்.   (23)

391. மங்கையர் கலசக்கொங்கை வயங்கு குங்குமம் போலன்பர்
தங்கணெஞ்சினை வசிக்கச் சண்ணித்த நீற்றின் போர்வை
பொங்குறு சீதவாசச் சந்தனப்பூச் சாமல்கத்
துங்கமால் விடையுயர்த்த சோமசேகர னினைந்தான்.   (24)

392. சததள மருவுங் கஞ்ச நடுவுறத் தயங்குஞ் சோதி
விதுவின் மண்டல மதென்ன விளங்கிடக் கபாலந் தன்னைக்
கதுமென விடக்கரத்தி லேந்தியே வலப்பாற்கையி
லிதமுற வொலிக்கும் யாணர்த் தமருக மெடுத்தா னெங்கோன்.   (25)

393. கடிய கார்க்கோடகப் பேர் நாகத்தைக் கடியிற் காமர்
நெடிய சூத்திரமதாக வணிந்தனன் புள்ளி நீள்வாற்
கொடிய வல்லியத்தோறன்னைக் கோல நுண்டுகிலதாக்கி
யுடையெனக் கொண்டான் யாவுமுடைமையாக் கொண்ட நம்பன். (26)

394. வேதத்துக் காதியாகி விளங்குசீர்ப் பிரணவத்தைப்
பாதத்தின் மிளிர்சிலம்பாத் தரித்தனன் பகரவொண்ணாப்
போதத்தைக் கொடுக்கும் வாய்மைச் சுருதியைச் சரணப்போதிற்
றாதர்க் கானந்தமூறப் பாதுகையாத் தரித்தான்.   (27)

395. எந்தை தானிங்ஙன்கொண்ட விணையிலா தோங்கு மாட்சிச்
சுந்தர மேனியாலுந் துலங்குசீர் நீற்றிற் றீட்டுஞ்
சந்தமெய்க் குறியினாலுந் தனிவிழிப் பார்வையாலு
முந்து மூவுலகு மோகமூழ்கச் செய்கிற்பா னானான்.   (28)

396. எம்பிரானாணை யாற்றால் யௌவன குலத்துக் கெல்லா
நம்புறு தெய்வமா நாராயணியெனுஞ் சீர்நாமக்
கொம்பனாள் சத்தியாகிக் குலவின ளவடன்மேனி
வெம்புறுசீரை யெங்ஙன் விளம்புவன் றவத்தின் மிக்கீர்.   (29)

397. செக்கர் வானிறத்துச் சாயறிருந்து பொற்றுகி லுடுத்தான்
மிக்கமா தவர்க்குங் காமம் விளைக்குஞ் சீருருவ மைந்தா
ளிக்குவின் மதன்றனுத் தியானத்தி னிலங்குஞ் சோதி
மிக்கபூங் கொடியே போலவிளங்குறு காட்சி மிக்காள்.   (30)

398. சாயலண் மந்தகாச பல்லவத் தானிலங்கும்
வாயினள் சிலம்பினோசை வருவிக்க வணையா நின்ற
தூயமென் றூவியன்னப் பறவையை யிழுத்துத் தோன்றுஞ்
சேயமென் சோதிவாய்ந்த திருப்பதாம் புயத்தண் மன்னோ. (31)

399. சித்தசன் சீர்த்தியோடு திறற் பிரதாபந் தன்னை
யொத்தசெம் பஞ்சுதோய்ந்த வெண்ணக வொளியண்மார
னத்திரம் பொதிந்த தூணிபோன் மெனவழகு வாய்ந்த
மெத்தொளி மணிகொள் சங்கவியனுறுப் புடையண் மாதோ. (32)

400. சீருடைத் திறல்கொள் வேழத் துதிக்கையிற் சிறப்புவாய்ந்த
வூருவின் சலனந் தன்னை யுடையண் மிக்கொளி செய்கின்ற
வேருடை யெகினப்புள்ளொ டிலங்குசீர்ப் புளினம் போலுஞ்
சாருமேகலை பொருந்துஞ் சகன தேசத்தண் மன்னோ. (33)

401. வழுவலுநீ விபந்தமெழில் கொண் மும்மடிப்பு வாய்ந்து
குழிதரு நாபிச் செவ்வி குலவு தன்னு தரநேர்வார்
விழிதமக் கிலக்காகின்றதென வெழுநாணம் விஞ்சிக்
கழியிறக் குற்று மேவுங்காட்சி சாறலையண் மாதோ .   (34)

402. வயிற்றுட னொட்டித் தோன்றுங் கருமைசாலு ரோமவல்லி
புயற்பெருந் தோற்றங் காட்ட வதன்றலை முளைத்துப்பூத்த
வியத்தகு பூங்கொத்தென்ன விளங்கு பொற்றனத்தள் காந்தி
நயப்புறு நதியிற் றோன்றும் வீசியினகு பொற்றோளள் .   (35)

403. வரைகண் மூன்றுறப் பொருந்தி மங்கலம் வாய்ந்துகற்றோ
ருரைகளுக் கடங்காதி யாணர்ச் சங்கு போன்றொளிர் கழுத்தா
டிருநலங் கனிந்தசோதி முகமதி காலுஞ்சீத
மருவுவெண்ணிலவு போல வயங்கு புன்சிரிப்பு வாய்ந்தாள். (36)

404. காமசாகரத்திற் றோன்றுங் கதிர்கிள ரதரமென்னும்
வாமமார் பவளவாயள் வதனச்சீர் கனிந்து தூற
லாமென வயங்கு மூக்கேரணியினிற் றூங்குமுத்தா
ணாமவேணிலைக் கண்ணாடி போன்மென நகு கதுப்பாள். (37)

405. கண்ணொளி கடிதுபாய மண்டலா காரமாகி
நண்ணுவபோல் விளங்கு நகுமணித் தோடுபூண்டா
ளெண்ணிலா மதனபாணங்களுக் குறுவலியையீயப்
பண்ணுகாரணமா யோங்குங் கடைக்கணேர்ப் பணைப்பு வாய்ந்தாள்.   (38)

406. அட்டமிப் பிறையைச் சால வவமதித்திடு நுதற்கட்
பட்டிகையொடு வயங்குந் திலகத்தள் கழுநீர்ப் பைந்தா
ருட்பொதிந் திலங்கு தம்மிலத்தினா லோவாதேவில்
லிட்டெழு மேகந் தன்னைச் சாலவு மெள்ளா நின்றாள்.   (39)

407. மதிகளொர் நூறுகோடி வழங்கிடு பிரபைமானப்
புதுநில வுமிழும் யாணர் கனிந்த பூரண முகத்தா
ணதிவளர் சடிலத் தெம்மா னன்னுதல் விழித்தீச்சுட்ட
சுதனைமுன்போல வாக்குந் தோற்ற மாதுமை சிறந்தாள்.   (40)

408. காமவேள் முனிவர் தம்மை யகப்படுத்திடு வான்கண்ட
மாமைசேர் மொகுபோன்று மாமாயை மயக்கும் வண்ண
நாமவிச்சைக ளனைத்து மொருவழித் தொகுத்து நல்கு
மேமமா ருருவு போன்று மிறப்பவு முருச் சிறந்தாள்.   (41)

409. திருமகன் மாயமோக நாட்டியஞ் செயவமைத்த
பிரதம வரங்கந் தன்னைப் பெரிதலங்கரிப்பா ளானாள்
சுரதவின் கரணமெல்லாந் தோற்று காரணமாய் மிக்க
விரதர் யாவருக்கு மிச்சைமிக விளைவிக்க லுற்றாள்.   (42)

410. மாதர் சாலின்ப லீலையே வடிவெடுத்த தென்னக்
காதலாங் கடலுட்டாழ்ந் தாடவரெலாங் களித்துத் தத்தம்
போதமாண்டி டுமாறிங்ஙன் வடிவொன்று பொருந்தி நின்றா
ளாதி நாராயணிப் பேர் மோகினிச் சத்தியம்மா.   (43)

411. ஒருபரிக்கிரக சத்தியாகிய மாயோனுற்ற
திருவுருவதனைக் காமற்றெறு பிரான் றிருக்கண் சாத்திப்
பெரிதுள மகிழ்ச்சி பூத்துப் பிறங்குசீர்த் தேவதாருப்
பொருவின் மாதவ வனத்துப் போதரப்புந்தி செய்தான்.   (44)

        பிச்சாடனப்படல முற்றிற்று.

        தேவதாரு வனப்படலம்.

412. விருப்பொடு வெறுப்பிலாச் சம்பு மேதகு
திருப்பயி றருப்பை சாறேவ தாருவென்
றுரைப்புறு வனத்தினை யுயவ லூர்தியான்
மருக்குழ லவளொடும் வல்லை யெய்தினான்.   (1)

413. உய்திற முணர்கிலா வுறுவர் காலையிற்
செய்திடு கருமநூன் முறையிற் செய்யியர்
மெய்திக ழாசிரமத்தை விட்டகன்
றெய்தி யவற்றமோர்ந் திறையுட் போயினான் .   (2)

414. கருமமே பரமதாக் கொண்ட காமர் நற்
பிரம சாரியர்க ளெம்பிரான் றன்றேசுசால்
பொருவிலாத் திகம்பரப் புனிதக்கோலங் கண்
டருநகை நிலவெழ வயர்தந் தாரரோ.   (3)

415. ஆசிரமத்தி னுளுறையு மாரெழிற்
பாசிழைச் சாயன் மாதவத்தர் பன்னியர்
தேசினிற் கற்பினிற் சிறந்துளார் செலு
மீசர் பேரெழி லுருவினிது நோக்கினார்.   (4)

416. தடையிலா வறிவுடைச் சம்பு மோகினி
யுடனவ ணேகிடா முன்னரோர் மதன்
றொடர்புறு மோகன குணங்கடுன்னின
மடமிகு மவர்கடம் மனத்தி னென்பவே.   (5)

417. பனவர்தம் பன்னிமார் பயிக்க மூர்த்தித
னினிய பேரெழி லுருவினிது நோக்குகண்
ணனிய தன்வயத்தவாய் நடப்பப் பேர்கிலர்
மனமிக வுருகிட வியப்பின் மன்னினார்.   (6)

418. மறை முடிவினிற் றிகழ் பரமன் வாணுத
லிறைவி நாராயணியோடங் கெய்தலாற்
குறைவில்சீர் முனிவ ராசிரமங் கோதகன்
றுறுநலமுறீஇப் பரிசுத்த முற்றதால்.   (7)

419. கைக் கபாலத்தினர் விழிகள் காமுறு
நக்கரா மிவரொரு நாரியோடுறீஇப்
புக்கன ரென்கொலோ புந்திகொள்குறிப்
பிக்கண்வந் திடற்கென வெண்ணுற் றாரரோ.   (8)

420. முனிவர் தம்பன்னியர் முடுகி வீதியி
லனகர்தம் மெழிலுரு வமைய நோக்குறும்
வினையின ராயினர் விமலரன்னுழி
யினிதுற வெழுப்பினர் தமருகத் திசை.   (9)

421. கன்ன மூலங்களை வசிக்கக் கண்ணுத
வின்னிசைப் படத் தமருகத் தெழுப்பிசை
மன்னுசீ ராசிரமத்தைச் சாலவுந்
தன்வசமாக்கி யெவ்வழியுஞ் சார்ந்ததால்.   (10)

422. சதிபடத் திருவடி பெயர்த்துந் தற்பரன்
விதியுளி யபினயம் விதம்படச் செய்தும்
பதிவிர தத்தினிற் றருக்கும் பாசிழை
மதிமுகத் தியர்க்குமால் வருவித் தேகினான்.   (11)

423. ஒருபெரும் பிச்சகரு வந்துவந்தன
ரிருடிகள் பன்னிகாள் பயிக்க மேந்திநீர்
விரைவின் வந்திடுகென விளித்தல் போலிசை
திரையினிற் றமருகத் தெழுந்து சென்றதே.   (12)

424. துடியொலி தாபதத் துறையுந் தோமில்சீர்
மடவன நடையுடை மாதரார் செவிப்
படுதலுங் காதன்மீதூரப் பண்வழிக்
கடிதுசென் றண்மினர் கபால மூர்த்தியை.   (13)

425. ஒருபொழுதினு முனருறப் பெறாதவோர்
வரமுறு மோகன விசையின் மாதவர்
திருமனைக் கிழத்தியர் சித்தம் யாவையும்
பெரிதிசை வயத்தனவாய்ப் பிறழ்ந்தவே.   (14)

426. மங்கையர் கூட்டமிக்குறலின் மாரற்கா
யெங்கணாயகன் றுடியிசை யடக்கியே
துங்க நாராயணித் தோகைமீது கண்
ணங்கு சாத்தினன் மயலவர்க்குச் செய்யவே.   (15)

427. நிருமலன் றிருக்குறிப் பறிந்த நேரிழை
பெரிது மாயத் திறத்துறுவர் பெண்டிர்த
மரியகற் பழித்தனளாசை மேம்படப்
பருவரலுழந்தி வைபகர் தன் மேயினார்.   (16)

428. நம்வசத் தன்றியெந் நெஞ்ச நக்கனார்
தம்வசத்தாகுவ தடைகடந் தென்பா
ரம்மவீத ததிசயமா மென்பார் குழீஇ
வம்மினாடுது மிதன் வண்ணம் யாமென்பார்.   (17)

429. நந்தம் வாள்விழிக் கிவணண்ணு நக்கனா
ரிந்திரப் பேருரு விலக்குறா முனம்
புந்தியின் வலியுநல் லொழுக்கும்போனதிங்
கெந்த மாதிரத்தி லென்றறி கிலேமென்பார்.   (18)

430. சவியினை யிருணனி வசிக்குந் தன்மைபோ
லிவர்மயல் பெரிது மெம்மறிவை யீடழித்
தவசம தியற்றிடு மாகுலங் கொடும்
பவமிதின் மேலது பார்த்திலோ மென்பார்.   (19)

431. யாவர்கொ லறிகிலெம் பயிக்க மேற்றிட
மேவின ரொருவர் நாம்விலக்க வெண்ணுதல்
பாவமென் பார்முறை பயிக்க மீவதே
யாவதென் பாரினு மாய்வ துண்டென்பார்.   (20)

432. அதிதியைக் கண்களா னோக்கலா மென்பா
ரதிதியினோடு பேச்சாடலா மென்பா
ரதிதியை யினிதுப சரிக்கலா மென்பா
ரதிதிபூ சையினரி லணுகுறா தென்பார்.   (21)

433. மன்றநங் கணவர்கள் வகுக்க வித்திற
நன்றுமுன் கேட்டன நாமெலா மென்பா
ரின்றுநாமைய முற்றிதன் றிறத்திவ
ணின்றுநாடு தன்மிகை நிச்சயம் மென்பார்.    (22)

434. இனையன பலமொழிந் திதயந் தேற்றியம்
முனிவரர் பன்னியர் வீ தி முந்தியும்
மனைகளுட் பலகணி வந்து நின்றுமப்
புனிதர் பொற்பினை விழிபுதைய நோக்கினார்.   (23)

435. இற்பணி மறந்தன ராகியெம் பிரான்
சிற்பர வடிவமே நோக்கிச் சேயிழைக்
கற்பக வல்லி யன்னார்கள் கண்கடா
மற்பமு மிமைப்பிலரா யினாரரோ,   (24)

436. தங்க ளுள்ளத் துறச் சாருமாதர
மங்கணுந் திடமிக வரிமதர்க் கணார்
செங்கையிற் பயிக்கமீந் திடற்குச் சேறல்போ
லெங்க ணாயகன்புடையெய்தி னாரரோ.   (25)

437. பண்டெலா மிம்முனி பன்னிமார் மயல்
கொண் டழிதர நிலை மயக்கல் கூடிலாத்
திண்டிறற் காமனச் செவ்வி நோக்கிச்சேர்ந்
தண்டவாணன் சரணம்பு தூவினான்.   (26)

438. விரக சோகம் மிக விமலனார்புடை
மருவி யங்கவர் புரிகிறியின் மங்கையர்
பெரிது மால்கொண்டரோ பிறங்கு மன்னவ
ரரியபேருரு வெழில்விழியி னார்ந்தனர்.   (27)

439. நிருமலர் பேரெழி னோக்கி நீடுறப்
பரவச மடைந்தனர் பயிக்கஞ்சிந் திடக்
கரவளை கழலுறக் கலன்க ளோடுடை
யுருவினின் றுகுதர வுருகினாரரோ,    (28)

        வேறு.

440. அச்சுதனாதி வானோர் தேறரு மமலவீச
னிச்சையை யெழுப்ப மோகவிருங் கடற்படிந்து மீட்டுப்
பொச்சமி லறிவெழுப்பச் சிவானந்தப் புணரிதோய்ந்தும்
பிச்சர்களானார் கற்பிற் றருக்குமப் பேதை மின்னார்.   (29)

441. இந்த நீர்மையினான் மாதரிரு திறத்துணர்வு மெய்தச்
சுந்தர மேனி வள்ளறோமி லாட்டயர்ந்து சூழ்ந்திட்
டந்தமா மோகவாழி யழுந்திடு கின்றவன்னோர்
புந்தியை வவ்வி நீங்கி யப்புறம் போயினானால்.   (30)

442. பாதுகை பெயர்த்திட் டையனாடலே பயின்றவ் வண்ணம்
வீதிகடோறு மேகி யையந்தேர் விருப்பினான் போ
னாதமிக் கெழுந்துசெல்லத் துடியறைந் துறநடந்தான்
மாதரங் கவனைக் காணார் துணுக்குற்று வறிது நின்றார்.   (31)

443. அனிர்வசனீய ராற்ற வெகுளுறு நீரரம்ம
தினையளவேனு நங்கண் விருப்பிலர் கடிதுசென்றா
ரினையரை விரும்பியில் விட்டெய்திய தறிவன்றென்று
புனையிழை மாதர்யாரும் புலம்புற்றுச் சாம்பினாரால்.   (32)

444. சுத்தமெய்ஞ் ஞான மேனிச்சோதி தன்பாலில் வைத்த
சித்தமாமைய றம்மைச் செலுத்திடத் தெரிவைமார்க
ணித்தர் போந்திசையை நோக்கிப் போகிநீளிடையி லன்னோர்
தத்துவாதீத மேனி தரிசித்தங் கணித்தாச் சார்ந்தார்.   (33)

445. பயிக்கத்துக் கென்று வந்தெம் மறிவினைப் பலிகொண்டுள்ள,
மயக்கத்தை மாறீந் தெங்குப்போகின்றீர் மாயம் வல்லீர்
முயக்கத்தை யருளீ ராகிற்செலவொட்டோ மென்று முந்திக்
கயக்கத்துப் பலநிகழ்த்திக் கபாலியைத் தடுத்து நின்றார். (34)

446. சலமிலரான ஞானசங்கரர் தருக்குமாதர்
குலமட நாணமச்சம் பயிர்ப்புறக் கொண்டுபின்னு
நலமிலர் போலப் போக நாரியர் காதல் கூர்தந்
துலைமெழு கென்ன வுள்ளமுருகினர் தொடர்ந்து போனார்.   (35)

447. காந்த சன்னிதியை மேவு மயமெனக் காமற் காய்ந்த
வேந்தல் சன்னிதியை மேவுமிளமுலைத் துவர்வாய் வேற்கண்
மாந்தளிர்மேனி முத்தநகை மதிவதன மஞ்சங்
கூந்தல் வேய்த்தோளார் சாலவசிப்புண்டு நிலைகுலைந்தார். (36)

448. இலைநமக் கொப்பென் றெண்ணி யிறுமாந்த விலைகொள் வேற்கட்
குலமடமாதர் காமக் குரவையிற் படிய வஞ்ச
மலிபெருமாயை நீரான் மயக்கினன் மயக்கநீக்கி
யலகில் சின்மய வானந்த முயிர்க்கரு ளமல வள்ளல்.   (37)

449. பலியிடுங் கருத்துப் பொச்சாந் தருந்தவர் பன்னிமார்கண்
மலிபெருங் காமலீலை நோக்கியே மயங்கிநிற்ப
விலைமலி சூலத்தெந்தை யீந்திலிர் பயிக்கமென்று
சொலிநகை யாடியன்னோர் துயர்தரக் கரந்து போனான்.   (38)

450. கரந்தருண் ஞானானந்த வள்ளலார் வடிவங் கண்ணுந்
திரிந்த தம்மனமு நீங்கா மரபினாற் றெரிவைமார்க
ளரந்தையினோடு மீண்டங் கடைந்து மந்திரங்க டோறும்
வரந்தரு பணிமறந்து மயல்கோட் பட்டார் போன்றுற்றார்.   (39)

451. வேலையங் கதிற் புறம்போம் விழுத் தவமுனிவர் யாருங்
காலையினியதி முற்றிமனைப்புரி கரும மோம்பச்
சாலுமுட் டருக்கினோடு தவவனந் தணந்தங் கெய்தி
வாலறிவிழந்து சாம்பு மனைவியர் தம்மைக் கண்டார்.   (40)

452. காண்டலுங் கதமுட்டோன்ற நிகழ்ந்ததென் னென்றார் காதன்
மாண்டசீர் மக்களிங்குப் பலிதேருவான் போல் வந்தொ
ராண்டகை யிவர்க்கு மாலீந்தகன்றன னென்றா ரன்னோர்
யாண்டைய னென்று நேடியேக மாதருந் தொடர்ந்தார்.   (41)

453. போனமாதவர்க ணாராயணியொடு பொருந்தி யொப்பின்
ஞானவாரிதி யோர்தூய மரநிழனண்ணக் கண்டார்
மானமுள் வெதுப்பச் சொல்வார் மதன லீலைகளினாலு
மேனியி னொளியினாலும் வியத்தகு நீரனின்னோன்.   (42)

454. இவனொரு மருங்கு நின்றாளிணையில் பேரழகு வாய்ந்தா
டவமயல் பெருக்கிக் கண்ணாற் சாலவும் வசிக்கின்றாளென்
றுவமையி லிருவர் சீரை யொருவருக் கொருவரோதி
யவணனி சினந்து போந்தா ரறவு மாலடைந்து நின்றார்.   (43)

455. தணிவிலா வெகுளி தூண்டத் தம்முன நின்றார் தம்மை
மணிவிழிக் கடையான் மாய விலாசத்தான் மயக்கி நாரா
யணிமிகு மோக வாழியழுந்திடச் செயலுமன்னோர்
குணமிகத் திரிந்து காமக் குரைகடற் படிந்தார் மன்னோ.   (44)

456. கற்றநூன் மறந்தா ரோம்புந் தவவொழுக்கங் கண்விட்டார்
மற்றிவ ளெனக்கெனக்கே யுரியளாமென மாறாடிச்
சிற்றிடைக் குறுகண் செய்யும் பெருமுலைத் தெரிவைமாட்டுப்
பற்றுவைத் தவசரானார் காமத்திற் பழி வேறுண்டோ.   (45)

457. அரன் வசமானாரந்த வெழின்மிகு மமர்செய்வாட்கட்
டெரிவை நல்லார்க ளெல்லாந் திறம்பிடச் சித்தமங்கட்
பெரிதுமம் முனிவர் யாருமரி வசமானார் பெட்பாற்
றிருவமாவனம் வேள் சாலையீதெனத் திரிந்ததாலோ .   (46)

458. இருடிகள் யாருந் தத்தமகளிரி னிழுக்குற் றிங்ஙன்
விரத வாசாரம் விட்டுத் துயருற விமலமூர்த்தி
பெரிதவண் மயக்கும் யாணர் மோகினிப் பெண்டினோடு
விரைவினின் மறைந்தா னன்னோர் வியப்பொடு துணுக்கமெய்த.   (47)

459. மயக்க மென்மெல வகன்று தொல்லுணர்வெய்தி மற்றக்
கயக்கெடு மதியராய முனிவரர் கைதவத்தாற்
பயிக்கமே கொண்டுபோந்து விரதத்தைப் பங்கஞ்செய்த
வயக்கருமத்தை யெண்ணி மானத் தீச்சுட வெகுண்டார்.   (48)

460. பழியினுக் கஞ்சான் போந்து விரதத்தைப் பங்கஞ் செய்த
விழிதகை தருக்கு நீங்க வபிசாரவிட்டி வேத
வழியுறப் புரிதுமென்று வல்லையிற் கலப்பை கோலிக்
கழிசினத் தயர்ந்தார் வேள்வி யெழுந்தது கைம்மா வொன்றே.   (49)

461. கரியது தன்னைக் காலாற் காலனைக் காய்ந்த சீர்த்தி
யரனுழை விடுத்தாரையன் வெளிநின்றங் கதைக் கிழித்தே
யுரியை யுத்தரீயமாக வணிந்தன னுறுவர் காணூஉ
வெரிவிழித் தரக்கை யோமக் கனலிடை யெழுப்பி விட்டார்.   (50)

462. தழல்விழிச் சொரியவந்த தறுகண் வள்ளுகிர்கொள் பேழ்வா
யுழுவையைக் கிழித்துத் தோலையுடையெனத் தரித்தா னெந்தை
யெழிலுடைச் சூலமொன்றை யிருடிக ளெழுப்பி யேவ
வழகுடைக்கர மற்றொன்றி லையனேற் றருளினானால்.   (51)

463. உருத்தவ ரெழுப்பிவிட்ட வுரகங்கள் சீறியெய்த
விருப்பி னாபரணமாக வுருத்திரன் றரித்தான் வெய்ய
நெருப்பினைப் பிறப்பித் தன்னோர் விடுத்திட நிமலமூர்த்தி
திருக்கர மொன்றி லன்னோர் திடுக்கிடவேந்தி நின்றான்.   (52)

464. உறுவர் பின்னுயர நோக்கி யெரியெழ விழிக்கு மோர்வெந்
தறுகண் மாபூதமொன்றைத் தழலினின் றெழுப்பி விட்டார்
மறமிகுந்தது விரைந்து வருதலுமொரு தன்றாளா
லிறையவன் மிதித்து நின்றா னிருடிக ணடுக்க முற்றார்.   (53)

465. அவிசாரத்தானே செய் தவபிசார கருமம் யாவுஞ்
சிவனார் தம்வலியினானே சிதைந்து வீண்செயலாய் மாளத்
தவமோக நீங்க ஞானந் தலைப்பட்டு முனிவரீது
நவமாகி விளங்குகின்றதென விறும்பூது நண்ணி.   (54)

466. மந்திரத்தோடு சாலப்பயன் றருமாட்சித்தாய
தந்திரக் கிரியை யாவுங் கடந்தது சாற்ற நின்ற
முந்து தத்துவமா யுள்ளதனைத்திற்கும் வேறாய்மூத்த
திந்தமெய்ச் சிவமென் றுண்மையறிந்து நன்கேத்த லுற்றார்.   (55)

467. இச்சையா லெல்லாந் தோற்றி நிறுத்தி மீட்டொடுக்கு ஞான
விச்சையோய் நமவனாதி விமலனே நமவிளங்குஞ்
சச்சிதானந்த ரூபநமநம சம்புதாவில்
பொச்சமார் மாயாதீத நமநம பொருவில் சோதீ.   (56)

468. மாயிரு ஞால நீயே வாரியா னதுவு நீயே
காய்தரு மங்கி நீயே வாயு வாகாய நீயே
பாயிரும் பரிதி நீயே பனிமதிக் கடவுணீயே
மேயவா ருயிர்கணீயே நீயலாற் பிரபு வேறியார்.   (57)

469. தக்கனார் வேள்விப்புக்க தேவர்கள் யார்க்குந் தண்ட
மிக்குறப் புரிந்து காத்தா யந்தகாசுரன் வெகுண்டு
திக்குளார் நடுங்கத் தீமை திருத்திடச் சூலந் தன்னாற்
புக்கடர்த்தவன் வணங்கப் பூதநாயகப் பேறீந்தாய்.   (58)

470. மதத்தினாற் கயிலைவெற்பை யெடுத்த வாளரக்கன்வட்கப்
பதத்திரு விரலானூன்றிப் பாடல்கேட் டுய்யக்கொண்டா
யதத்தினை யிழைத்த வேள்விக் கிறையவன் றுயர வன்னாட்
கதத்தவன் றனது வாகுத்தம்பனங் கண்டு காத்தாய்.   (59)

471. அகத்தினின் மறமிகுந் தங்ககங் கரித்தெழுந்து சாலச்
சகத்தினை வருத்துந் தீயசலந்தரற் றடிந்தா யன்னாண்
மிகத்துயர் விளைத்து வாய்மை வேந்தர்க்குக் கொலைசூழ் பொல்லாப்
பகைத்திறற் பரசுராமற் கருள்வரும் பரிசு செய்தாய். (60)

472. அளவைகட் கதீதமான வுனதிய லறிவினாயே
முளமதித் துணர்வ தெங்ஙன் கருமவாதனை யினுற்ற
பளகறுத் தருள்வாயென்று பழிச்சினர் முனிவர் நஞ்சைக்
களனடைத் தமரர்க் காத்த சிவபிரான் கருணை கூர்ந்தே.   (61)

473. வாங்கிய நுசுப்பின் வீங்கு மணிமுலை மகடூஉ யாக்கை
நீங்கியம் மாயனென்பா னிகரிலா வொருதொன் மேனி
தாங்கி னன்றுதித்து நிற்பச் சராசர மனைத்து நீங்கா
தோங்குதன் சொரூபந் தன்னை யுறுவர்க்குக் காட்டியோதும்.   (62)

474. தூயரா முனிவீருங் கடருக்கினைத் தொலைத்தாட் கொள்ள
மாய நீர்மையினா லிங்ஙன் மற்றியா மாடல் செய்தே
நேய நீர்மையினா னீவிர் நிகழ்த்திய துதிகொண்டேமெய்
யாயநஞ் சொரூபங் காட்டி வெளிநின்றேமும் முனம்மா.    (63)

475. நித்தியானந்த மேவி வாழ்க நீரேவநேர் போ
மத்தமால் யானை ரூப மதத்தினை யழித்தோ மற்றைச்
சித்திர காயரூபவும தகங்காரஞ் செற்றா
மெய்த்துநும் மோகரூப வியாளத்தை யணியாக் கொண்டேம்.   (64)

476. நீர்படைத் துந்துங் கோபவடிவமா நெருப்பை நந்தஞ்
சீர்படைத் திலங்கு கையிற் றரித்திட்டே முங்கடீமைப்
பேர்படைத் தொளிரு மானை யங்கையிற் பிடித்தேம் பாவப்
போர்படை த்திடும்பூதத்தை மிதித்திட்டேம் பொருமத் தாளால்  (65)

477. அவகன்ம மகங்காரம் பொய்யறிவெலா மகன்றீர் ஞானச்
சிவதன்மம் பேணியெம்பாற் பத்திமைசெய்து ஞானந்
தவநன்கு பெறுக நுந்தந் தருமபத்தினி களெல்லாம்
பவமன்ற நீங்கி யுங்கட் குரியராய்ப் பயின்று வாழ்க.   (66)

478. இன்னண மருளி யெங்கோன் முனிவரர் ஞான சித்தி
துன்னி மெய்வாழ்வு கூடத் தூயவானந்த நித்த
சின்மய நிருத்தந் தன்னைத் தெரிதரத் தரிசிப்பித்தான்
பன்மறை முனிவர்கண்டு சிவானந்தக் கடற் படிந்தார்.   (67)

479. மோகமா சகலஞானம் விளங்கியொர் முடிவிலாமெய்ப்
போகவாழ் வுடையரான முனிவரர் பொய்தீர் சித்தப்
பாகமார் குகையுணிர்த்த மூர்த்தியைப் பதிட்டை செய்தா
ரேகனாய் மயக்கலுன்னி யிருஞ்சிறை யிடுவார்போல.   (68)

480. அவநெறி யகற்றி ஞான வானந்த  வாழ்வு கூட்டுஞ்
சிவநெறி நிறுத்தி யொப்பின் முனிவரைத் தேவதாருத்
தவநிறை வனத்தினின்றுஞ் சாரத கணங்கள் சூழப்
பவநெறி யனுக்கு மாதிபகவன் மாலொடு மறைந்தான் .   (69)

481. மூவரு மறிதறேற்றா முழுமுதற் பரமன்றாரு
காவனத் தவரையாண்ட வியத்தகு காதை சொற்றா
நாவலர் பரவுசீர்த்தி நாகர்கோனடங் காண்பார்க்குத்
தாவற வினிது நோற்று வரம்பெறு சரிதஞ் சொல்வாம்.   (70)

        தேவதாருவனப்படல முற்றிற்று.

        அனந்தப்படலம்.

482. அமரர் போற்றிடத் திருக்கயிலாயத்தை யடைந்து
கமலை கேள்வனைப் பதிசெலக் கடைக்கணித் தருளிச்
சமலருய்ந் திடத்தனிப் பெருங்கருணை யங்கடலாம்
விமலநாயக னோலக்க மேவி வீற்றிருந்தான் .   (1)

483. துங்கமேவு மால் கயிலையைத் தணந்துபோய்த் தொல்லைப்
பொங்குபாற் கடலமளியை யடைந்தொளி பொதுளுங்
கங்கைசூடியத் தாருகவனத்திடைக் காட்டுஞ்
சங்கைதீர் நடவசத்தனாய்ச் சார்ந்து வீற்றிருந்தான்.   (2)

484. தாண்டவப் பெருங்காட்சியிற் சார் பசுபோத
மாண்டு நித்தியானந்த யோகத்திடை மன்னி
நீண்ட மாயவ னிட்களாதீத நேர்ந்தமர 
வாண்டுவாழ் திருமாது கண்டதிசய மடைந்தாள்.   (3)

485. ஒலிவழங்குறா விடத்துறு தீபமோரசைவற்
றிலகு நீர்மையிற் சலிப்பற நிட்டை வீற்றிருக்குஞ்
சலசலோசன மூர்த்தியைத் தன்னிக ரனந்தன்
பலநெடுங் கணாற் பார்த்ததிசயித் திவைபகரும்.   (4)

486. உரைவழங்கில னென்னுடன் றேவியை யுற்றுப்
பரிவினோக்கில னெம்பிரா னசைவறப் பயில்வா
னொருபகற்கணு முன்னியான் காண்கிலா வொருபே
ரரிய காட்சியாம் புதுமையீதாகிடு மம்மா.   (5)

487. இன்ன நீர்மையி னிருவரு மகத்து ளெண்ணுற்றுப்
பின்னர் மாதவன் றிருமுக நோக்கி யெம்பெரும
வுன்னை யாவருந் தியானமுற் றானந்த முறுவா
ரென்னை காரணந் தியானமுற் றிருத்தி நீ யென்றார்.   (6)

            வேறு.

488. பனித்துழாய் மோலி வண்ணப் பண்ணவனவர் சொற்கேளா
வெனக்கினியவரே கேண்மி னிணையில்சீர்த் தேவதாரு
வனத்தொரு சிவபிரான் செய்மாநடங் கண்டேன் மற்றத்
தனிப்பெருஞ் செவ்வி தொட்டென் கருத்ததிற் றங்கிற் றென்றான். (7)

489. விண்டிவ் வாறுரைப்பக் கேட்ட வனந்தனுந் திருவுமேலோய்
பண்டு தாருக வனத்திற் பரன்புரி நடனங் கேட்பான்
மண்டுமாதரவு கொண்டேம் வகுத்தருளென்று வேண்டக்
கொண்டன் மேனிய னிருத்த வரலாறு கூறியிட்டான்.   (8)

490. ஆனந்தக்கூத்தின் வாய்மை யரிசொலக் கேட்டனந்தன்
றானந்தக்கூத்துக் காணவா தரங்கொண்டான் சாலப்
பானந்தக் கமலச் செங்கைப் பண்ணவன் பரிசோர்ந்தீச
னூனந்தீ ரெழுத்தோரைந்து மவன் செவியறி வுறுத்தான்.   (9)

491. வேதமந்திரங்கட் கெல்லா மாதியாய் மேலைவீடங்
கோதுவார்க் கீயுமுத்தி யொப்பி லைந்தெழுத்து முள்ளக்
காதலிற்பெற்றனந்தன் விடைகொண்டு கைலையெய்தி
யோதுமற்ற தன்றாழ்வைகி யருந்தவ முஞற்றலுற்றான்.   (10)

492. காலினை யுட்கொள்ளாமே யாயிரத் திரட்டி கண்ணு
மேலுயர்த் தொளிசெய் பானுமண்டல மேவ வைத்து
நாலுபாலினுஞ் செந்தீயை  வளர்த்தத னாப்பண் மேவிச்
சால நூறாண்டு காறுந் தவமரி துழந்தான் மன்னோ.   (11)

493. அருந்தவ மினைய நீராலுழந் திடுமனந் தனுள்ளந்
திரிந்திடா நிலையை யிந்த வுலகொரு மூன்றுந் தேறப்
புரிந்திட நினைந்து நாதன் விதியுருக் கொண்டுபோந்து
பெருந்தவம் புரியுமன்னோ னெதிருற்றுப் பிறங்க நின்றான். (12)

494. அஞ்சத்தினேறிப் போந்து தன்னெதிர் நிற்குமந்தக்
கஞ்சத்தோன் றன்னைச் சேடன் கண்டனன் மதியானாகி
நெஞ்சத்திற் சிவன்றாளூன்றி நேயத்தா னோற்பானானான்
வஞ்சத்தை மேற்கொண்டங்கண் மறைமுதல் வகுக்கலுற்றான். (13)

495. யாதுவேண்டினை நீ சேடயாரு நோற்பரிய விந்த
மாதவ முழக்கா நின்றாய் வரந்தர வந்தேம் வேண்டிற்
றோதுதி யென்னவுன்னாற் கொடுப்பதற் கொல்வதன்று
போதிநீ வந்தவாறே யென்று பின்னரும் புகன்றான்.   (14)

496. சம்புவின் பரமானந்த தாண்டவந் தரிசிப்பான்யா
னிம்பர்மா தவஞ்செய்கின்றேனிப் பிறப்பினிலப் பேறு
நம்புமெற் கெய்தா தாயினடுத்த சன்மத்து நண்ணும்
வெம்பு பாவனை தப்பாது சித்திக்கு மென்னும் வேதம்.   (15)

497. அனந்த னிவ்வாறு கூறக்கேட்டிடு மயனசித்து
மனந்தனக் கதீதமான வானந்த நடனமற்றுன்
சினந்தவிர் தவத்துக் கெய்தப்பெறுங் கொன்மற் றதனைச்சேர
நினைந்தது மதியன்றென்று நிந்தித்து மறைந்து போனான். (16)

498. இறையவன் மறைந்துபோக விணையில்சீ ரனந்தனென்பா
னுறுதிகொண் மனத்தனாகி யுக்கிர தவத்தைச் செய்தான்
கறைமிட றணிந்த மேலோன் றரிசனங் கொடாமை கண்டு
குறைசெய்து தலைகடம்மைக் கொழுங் கனலிடையோமித்தான். (17)

499. செயற்கரு முறையாலிங்கன் சேடன்மன் செய்யாநின்ற
வியத்தகு தவத்தை யெம்மான் கண்டுள மகிழ்ச்சிமேவி
வயப்பெரு விடைமேல் கொண்டு மலைக்கொடியோடுந் தோன்றி
நயப்புறத் தரிசனத்தை நாகர்கோற் கருளினானால்.   (18)

500. சயிலாதி முதலாம் பூதகணம் புடைசாரத் தோன்றுங்
கயிலாய நாதன்றன்னைக் கண்ணுறக் காணாமுன்ன
மெயினீங்கு தலைகண் முன்போன் முளைத்தன வியாளப்புத்தே
ளுயலானே னென்று விம்முற் றிறைஞ்சினன் றுதிக்க லுற்றான். (19)

501. திகழி ராசதகுணத்தாற் சகத்தினைச் சிருட்டி செய்துந்
தகுதமோ குணத்தினாலே யனைத்தையுஞ் சங்கரித்து
மிகுதரு சத்துவப்பேர் வியன்குணத்தா னிறுத்து
நிகழ்திரி மூர்த்தியான நின்மலப் பொருளே போற்றி.   (20)

502. ஏகமாங் ககனங் காலவுபாதியி னிலங்கி வெவ்வே
றாகவே காணல்போல வகண்டசின்மய மாமேனி
பாகமார் தொழிலின் பேதம்பற்றி வெவ்வேறு கொண்டு
மோகநீங்கினருக் கென்று மறிவேயா முதல்வ போற்றி.   (21)

503. நிரஞ்சன போற்றி மாயை நீரினா லுலகம் யாவுந்
தரும்பர போற்றி பொல்லா வாணவந் தகைவாய் போற்றி;
பரம்பொருள் போற்றி யொப்பில் பசுபதி போற்றி வீடு
விரும்பினர்க் கருள்வாய் போற்றி வினையெலாஞ் செய்வாய் போற்றி.   (22)

504. அட்டமூர்த்திகளா யாண்டு மணித்தாகி விளங்கியான்ற
மட்டில் வேதாகமங்கள் பயன்பட வைத்தாய் போற்றி
கட்டழல் சொலித்தற் கேற்றகாம காட்டத்தாய் போற்றி
வட்ட வாணுதலுக் கீந்த வாமபாகத்தாய் போற்றி.   (23)

505. தானவப் பிறங்க லெல்லாம் பொடிபடத் தகர்க்கத் தக்க
மானவச் சிரமே போற்றி கருணை வாரிதியே போற்றி
வானவர்க் கிறைதோள் யாத்த மந்திர விறையே போற்றி
பானல்போற் பிறங்க நஞ்சை மிடற்றினிற் பதித்தாய் போற்றி. (24)

506. கொடிய வந்தகனென்றோதுந் திமிர நாமறக் கொதித்துக்
கடியுமாதித்த போற்றி யரியயன் ககுபநாதர்
முடிகளில் விளங்கு ஞான முளரித்தா ளுடையாய் போற்றி
படியில் கைவல்லியப் பூங்கொடிக் கொருபற்றே போற்றி.   (25)

507. ஆயிரத்தொகை கொள் வாயாலிச் சித்த பிதற்றியந்தோ
பேயனேன் பிழைத்தேனின்பப் பேரறிவுருவா முன்னை
நாயக வறிந்து போற்ற னாயினேற் கெளிதோ வென்று
பாயிரும் பணங்கொள் சேடனிவ்வாறு பழிச்சலோடும்.   (26)

508. நாரிக்கொர் பதியாமீசன் றிருவுள மகிழ்ந்து நாட்சேர்
வேரித்தண் கமலம்போல விளங்கருண் முகத்தாற்சேட
யாருக்கும் புரியலாகா விருந்தவமுழந் தாயற்றாற்
பூரித்த மகிழ்ச்சியேமாய்ப் போந்துன் முன் வெளிப்பட் டேமியாம். (27)

509. காரிபில் கெயிற்றுப் பேழ்வாய்க் கட்செவிக் கரசகண்டோ
ரியாரு மஞ்சிட வுருத்த திரிபுரம் படுப்ப வேந்து
மேருவென் றுரைக்குமொப்பில் வேதண்டங் குனிக்கமேனா
ணாரியா யமைந்து சீர்த்தி படைத்தனை நாகர்போற்ற. (28)

510. வெண்டிரை சுருட்டுங் கங்கை நதியென வேணிமீது
மண்டல வடிவமாக மணிப்பணாமுடி விரித்தேர்
கொண்டவா பரணமாதி கோலநம் மவய வந்தொ
றெண்டகு பணிகள்பல் வேறாகுதி சேடவின்னும்.   (29)

511. ஆதிகூர் மத்தினாலு மட்ட நாகங்களாலு
மோதுமேழ் வெற்பினாலு மூனறிடற்கரிதா நந்தங்
கோதில்சீர் வடிவாயோங்குங் குவலயந்தன்னைச் சென்னித்
தீதுதீர் வகையொர் நீயே திடமுறப் பரித்து நின்றாய்.   (30)

512. நிசிசரற் கிறைவன் மேனாணிகரிறன் றலைகடம்மை
வசியினா லரிந்தோமித்தான் மற்றெம தருளை வேண்டிக்
கசிவினா யிரமானின் சீர்த்தலைகளைக் கனலின்மாடே
யசியினா லரிந்திட்டோம மாற்றினை யதிகனீயே.   (31)

513. நீசெயுக் கிரதவங் கண்டுன்னெதிர் நினைந்த தீவா
னாசையின் வெளிநின்றேமியா மகன்றிடே நினையெஞ் ஞான்றும்
பேசினீ தானுமெம்மைப் பிரிதராய் வேட்டபேசென்
றீசனாரருளச் சேடனிதனை விண்ணப்பஞ் செய்வான்.   (32)

514. பண்டொரு தேவதாரு வனத்திடைப் பத்திநீடுந்
தண்டுழாய் மௌலியந்தச் சதுர்முகன் முதலாந்தேவ
ரெண்டகு முனிவர் பூதரியாவருந் தரிசித்துய்வா
னண்டர்நாயக நீகாட்டு மற்புத நடனந்தன்னை.   (33)

515. ஒருசிறு நாயினேனுங் கண்டிட விழைந்தே னுன்றன்
றிருநடங் காணா நாட்டமாயிரத் திரட்டி செவ்வே
பரமுறக் கொண்டெ னுன்றன் பரமவானந்த நிர்த்தம்
வரமுறப் போற்றா நாக்கள் பற்பல வொருங்கு வாய்ந்தென்.   (34)

516. நித்திய நடனத்துண்மை யறிந்திடா திருந்துநீடும்
வித்தைகள் பதினெட்டும் யான் மேம்பட வறிந்தென்மேலா
மத்திரு நடனங் காணினல்லது செல்வனாகே
னுத்தம கணங்களுள்ளு மொருவனா யுய்தி சேரேன்.   (35)

517. நான்முகக் கடவுள் வல்லனாடு சாகித்தியத்திற்
கூன்முகச் சங்கமேந்தி கீதத்தில் வல்லன் கோல
நீன்மலி மிடற்றினெந்தாய் நீயவை யிரண்டினோடு
மேன்மையிற் றிகழானந்த நிருத்தமும் வல்லைமேலும்.   (36)

518. மானங் கைக்கொண்ட ஞானவாரிதி விசுவான்மாவா
நீநம்புற் றென்றுமாடு நீர்மையா னிகரின் ஞான
வானந்தக் கூத்தே மேலதசைவொடு தொனிகளெல்லாம்
பானங்கைக் கீந்தோ யுன்றன் பாடலொ டாடலேயாம்.   (37)

519. திருமிகப் பெற்றோர் மீட்டுந் திருவினைத் தேடுமாறு 
பெருவிருப் புறுதல்போலப் பிறைமுடிப் பெருமயாருந்
தெரிதரக் காணாவுன்றன் றிருவுருக் கண்டுநாயே
னுருகியுட் கரைகின்றேனுன் றிருநடக் காட்சியுன்னி.   (38)

520. பாடு  சீருலகுக் கெல்லா நாயக கௌரிபங்க
நாடுசீ ரணிமாவாதி சித்தியெட்டினு நன்றாகும்
வீடுபேற தனினுஞ் சீர்மேவு நின்னடங் காட்டென்று
சேடனா தரவினோடும் பிரார்த்தித்துத் திருமுன் னின்றான்.   (39) 

521. ஈசர் புன்முறுவலோடு மனந்தனை யினிது நோக்கி
நேசவாருயிர் கட்கெல்லா மானந்த நமித்தமான
தேசுசானட முனக்குக் காட்டுதுஞ் சேடவென்றா
ராசைமீதூரக் கேட்டங்கனை யனங்கணனுக் கோதும்.   (40)

522. வரம்பிலா வுயிர்களீன்ற வருள்வளி ரிமையவல்லிக்
கருங்கொழு கொம்பே நாயேன் விழிகளான் முகந்துண்டாரப்
பரங்கெழு மிந்த நன்னரிடத்தொருபரம வின்பந்
திருந்துசீர் நடனமெந்தாய் திகழ்தரக் காட்டிடென்றான்.   (41)

523. பாப்பரசிங்ஙன் வேண்டக் கேட்டருள் பரமவள்ளன்
மாப்பெருங் கருணைகூர்ந்து வாய்மலர்ந் தருள்வான் யாணர்
மீப்பொலிந் திலங்குசோதிப் பணாமுடிச் சேடமேலோர்
நாப்புகல் சீர்த்தி பூண்ட நாடுபேர் மனுக்கடம்முள்.   (42)

524. இணையிலா விரைவ தப்பேரெண்டி சாமுகத்து மேவ
வணையுமொர் நீதியைந் தாமனு வினந்தரத் திலாங்க
ணணுகுபு நிகழாநின்றகிருத நல்லுகத்து ஞான
மணமலி முதற்பாதத்து வருபிரபவப் பேராண்டில். (43)

525. பரவு வைகாசித் திங்கட் சுக்கில பக்கந் தன்னின்
மருவிடுங் குருவாரத்திற் றசமியில் வந்துகூடு
மிருகசீரிடத்து மேவும் புண்ணிய யோகந் தன்னிற்
பொருவி றாண்டவங் காண்பிப்பாம் புண்டரீகப்புரத்தே. (44)

526. மன்னுயிர்த் தொகைக ளெல்லாம் வயங்கு பேரருளா லீன்றுங்
கன்னிகைப் பருவநீங்காக் கௌரிதன் கணவனிங்ஙன்
பன்னிடக் கேட்டசேடன் வெளிப்படப் பரமமுத்தி
துன்னுமிக் கயிலைதன்னின தற்குயர்வெனன் சொல்லென்றான். (45)

527. அறிஞருக் கரசனான வனந்தனீ துரைப்பக்கேட்டு
மறியினைக் கரத்திலேந்து மொருபெருங் கருணைவள்ளல்
குறைவில் வேதாகமத்தும் புராணத்துங் கூறிவைத்த
நிறைவுடைப் புண்டரீகபுர மேன்மை நிகழ்த்தலுற்றான்.   (46)

        அனந்தப்படல முற்றிற்று.


        புண்டரீகபுரப் படலம்.

528. பரவுகால் சீத்து நிலவுகால் யாணர் நித்திலப் பருமணி வரன்றுந்
திரைகொ ளேழ்கடலு மேகலையாகித் திகழ்தரப் பூண்டுயிர் புரக்கு
முரவுசால் சீர்த்திப் பெருநிலமடந்தை யொருமைசான்  மனத்தளா யனந்த
மருவுபே ரன்பாலெமை நினைந்தரிய மாதவ நெடும்பக லுழந்தாள்.   (1)

529. நெடும்பகல் கழிந்து நீணிலமடந்தை நியதியின் வழுவுறா ளுஞற்றுங்
கொடுந்தவ மகிழ்ந்தேமாகி முன்குறுகிக் கொள்வர முணர்த்து நீயென்றாந்
தடம்புவி மடந்தை தாழ்ந்தனளெழுந்து தனிப்பெருங் கருணையங்கடலே
மடம்படுநாயேன் விழிக்கிலக்காய்  நீ வந்ததே மாதவப்பேறாம்.   (2)

530. ஆயினு நாயேனகத்துறு நினைவை யடிகளுக்கெடுத் துரைக்கின்றேன்
டாயிருங் கலைதேர் யோகிகளுடைய பன்னிரண்டங்குல விறுவாய்
மேயதோர் சிகையி னக்கிரமதனின் விமலமா நிருத்த நீ புரிதி
நேயவென் னிதயகமலத்துமந்த நிருத்தத்தைக் குனித்திடல் வேண்டும். (3)

531. என்மனக் கஞ்சத் தெம்பிரா நீசெய் திருநடமிப் புவியாவு
நன்னரிற்கண்டு வழிபடப்பெற்றுப் போகமுத்திகளை நன்கடைய
வன்மலி மிடற்றோ யடியனேற் கிதனையருடி யென்றிரந்தன ளதனாற்
பன்மறைத் தொகைகள் பாடயாமவ டனிதயத்துத் தாண்டவம்  பயில்வேம்.   (4)

532. அந்தநற் கமல விதயம திடை பிங்கலைகளுக் கரியதாய் நடுவின்
வந்தமெய்ப் பெரிய சுழுமுனை நாடி மார்க்கத்துக் கெளியதாய வயங்கு
முந்துமா திருகாக்கரங்கள் கேசரமா முயங்கி முக்கோண முள்ளுடைத்தாய்ச்
சந்தவெட் டிதழ்கள் பொருந்தியே களங்கந்தணந்து சுத்தியு மிகவுடைத்தாம் (5)

533. பரமஞானிகளா லறிதரப்படு மப்பங்கயஞ் சச்சிதானந்தப்
பெருமுதற் பொருளாய் விளங்கு மத்துவிதப் பெற்றித்தாஞ் சிதம்பரமாக
வுரைசெய் மற்றதுதான் பரமதாய்த் தகரத்துறு பொருளாயுயர் வீடாய்ப்
பிரமமா யதற்குக் கோசமாய் வியப்பைத் தருவதாய்ப் பிறங்கிடு மின்னும். (6)

534. பேதநாற்சா லஞ்சுகோதயந்  தகரவித்தை மாயாபுரப் பேர்த்தாய்ப்
போதவப் புரத்தினுட் பொருளாகிக் கோதிலாத் தேகமா புரமா
யோது புண்ணியமாய்ப் பவித்திரமாகி மகத்துமாயுற்றிடு மொப்பில்
வேதமே யாதி வித்தை பன்னெட்டுமரிறப விரித்து நன்குணர்ந்தோய்.   (7)

535. பிரணவ வடிவா யமிர்தமாய் மூன்றாய்ப் பிறங்கிதழ்த்தாகி யவ்வியத்த
பரசிவமாகியக் கரவடிவாய்ச் சிந்தனைக் கதீதமாய்ப் பயிலு
மருவினதாகி விகோசமா யட்டப்பிராசாத ரூபமாய்ச்சாந்தி
மருவிநுண் பொருளாய்ப் பழம்பொருளாகி வயங்கிடுங் கமலமற் றதுவே. (8)

536. தாரகமனந்தஞ் சூக்குமந்  தீபதஞ்சனாதனம் பிரணவஞ்சோதி
பூரணவியாபி பிரமமோங்காரம் வேதமூலம் மெனப்புகன்ற
சீருடைப் பதினோர் பிரணவ நாமங்களைச் சிதேந்திரியனாய் விராகங்
கூரிதயத்த னாகியே கணிப்போன் கோதின் முக்கோணத் தினடுவே.   (9)

537. ஒளிர்பரை மகிழநாம் புரிகின்ற வுவமையி லானந்த நடன
மெளிதினிற் கண்டு முத்தனாகின்றான் சிதம்பரமெனப் படுமிதுவே
வளனுடைத் தேகமற்றது நாமே தேகியாய்ப் பிரபுவாய் மன்னி
மிளிர்குவ மிங்ஙன் விளம்புவதன்றி வேதமுநடங் கண்டதிலையால்.   (10)

538. பொருவிலாப் புண்டரீக மாபுரந்தான் போகமோக்கங்களைப் புருடர்க்
கொருதலையாகக்  கொடுத்திடுங் கைவல்லியந் தரும் பரிசினாலொப்பி
றிருவளர் கயிலை மலையின் மற்றதுமன் சிறந்ததாற்றென் கடற்கரையில்
வரனுடைச் சோணாட் டொளிர்புனற் பொன்னி மாநதி வளைஇய ததுவே. (11)

539. மேதகு தில்லை வனமெனும் புனித வியன்பெய ருடைத் தஃதனந்த
தீதிலப்புரத்தி னியக்கர் கந்தருவர் சித்தர் வித்தியாதரர் சுரரே
யோதுசாரணர் கின்னர ரரம்பையர்களுயர் பெருநிகும்பன் மாகும்ப
னாதிய கணங்கண மதடியார்களாகம மனைத்து நன்குணர்ந்தோர். (12)

540. சனகனே முதலாம் யோகியரென்றும் தவம்புரிந்துறைகு வரதாஅன்று
தினகர னென்பான் றக்கிணாயனத்தி னூர்தியைத் திருப்பி யெஞ்ஞான்றுங்
கனிதரு மனத்தச் சிதம்பர தலத்தை வலம்புரிந் தேகுவன் காண்டி
யினுமதன் பெருமை பலவுள வனந்தவெடுத்தி யாமியம்புதுங் கேண்மோ. (13)

541. மிகுபிரளயத்துங் கரையினைக் கடக்க வருணனஞ்சிட மெதுவிளையும்
பகையொரு சிறிதுமின்றியே யெவருந் தவம்புரியிட மெதுபாரிற்
றொகுமிடமெங்குமெய் துறாச்சுகுணஞ் சுலபமா யுறுமிடமெதுமற்
றகமகிழ்தரக் காவேரியா றென்றுமணவியே பெருகிட மெதுவே. (14)

542. பதிவிரதத் திற்றவறிடார் மடவார் பயிலிட மெதுதொகு புருடர்
விதியுளியறத் தாறோம்பிட மெது கோநிரையெலாந் தேனுவாய்வேட்ட
திதமுறக் கொடுக்கு மிடமெது மரங்கள் கற்பக தருக்களா யீண்டி
யதிகமாப் பலனீ யிடமெது நதிகள் கங்கையா யமரிட மெதுவே. (15)

543. மனிதர்க ளெல்லாந் தேவராய் வாழுமிடமெது வனிதையர் தெய்வப்
புனித மெல்லியர்கள் விரும்புறுமழகு பொருந்துறு மிடமெது புடவி
யினிது நல்லுறுதிப்பயன் மிகவுடைத்தா யிலங்கிட மெதுவியல்பாக
வனக மேலோங்கு மிடமெது வதுபுண்டரீக மாபுரமென வறிவாய். (16)

544. புண்டரீகப்பேர் பொருந்து மத்தலத்துப் பொருவி லற்புதத் திருநடன
மண்டர்கள் முதலோர் கண்டுயவென்று மகல்கிலமாய் நனிவிளங்கி
மண்டுபேரருளாற் புரிதருகின்றே மகிதலத் தெப்பதி தனக்கு 
விண்டவிப் பெருமையனைத்து முண்டின்னும் விளம்பநின்றது வம்மவொன்றே   (17)

        வேறு.

545. தன்னிகர் புண்டரீகபுரத்து வாழ் தவத்தர்க் கெல்லா
மன்வியாக்கிரபாதப் பேர் படைத்தவன் மற்றெம்பத்திக்
குன்னையே நிகர்வானெம்மை யுன்னினன் புலன் வேறின்றிப்
பன்னெடுங் காலமாக வருந்தவம் பயிலுகின்றான்.   (18)

546. மற்றவன் யாவனென்றும் பன்னெடுங் காலமாக
நற்றவம் யாதுவேண்டி நவையறப் புரியுமென்று
முற்று நீயறிய வேண்டி னுணர்த்துவ முகந்துகேட்டி
கற்றவர் தங்கட் கெல்லா மரசனாய்க் கதித்து நின்றோய்.   (19)

    புண்டரீகபுரப் படல முற்றிற்று.


        வியாக்கிர பாதப் படலம் 

547. சித்தர் சாரணர் சேர்தரு
சுத்தமாரி மத்தொல்கிரி
மித்தை நீங்கி விளங்கினான்
மத்தியந்தின மாமுனி.   (1)

548. அத்தகைப் பெயரந்தண
னித்தலத்தினி லெம்வயிற்
பத்திநன்கு பழுத்துளான்
புத்திரத்தவம் போற்றினான்.   (2)

549. நந்தநல் லருளாலவற்
கிந்தமாநில மேத்திட
வந்தில்வந் துதித்தானொரு
மைந்தன் வல்வினை மாற்றுவான்.   (3)

550. பாலனாய் வளரும்பதத்
தேலுநல்லறி வெய்தியே
ஞாலவாழ்வினை நச்சிடான்
மேலைவீடு விரும்புவான்   (4)

551. பிறவிவேலை பிழைத்துநல்
லுறுதிசேர வுனிப்பெரு
மறையின்வல்ல பிதாக்கழன்
முறைவணங்கி மொழிகுவான்.   (5)

552. யோகவாதன முற்றுறை
வாகை சேர்தவ வத்தகே
டேகவாதனை செற்றிடற்
காகுநற்றவ மாற்றவே.   (6)

553. எண்ணினே னிணையில் தவம்
புண்ணியப்புர முத்தியைத்
திண்ணமீயிறை சீர்க்கதி
பண்ணு மாமனுப் பன்னுவாய்.   (7)

554. என்றுகூறு மிரும்புதல்
வன்றன்மா முகமன்பொடு
நன்றுநோக்கின னாடியே
யொன்ற மாமுனி யோதுவான். (8)

        வேறு.

555. என்குலம் பவித்திர மெய்தி யுய்ந்தது
தன்பெருந் துயர்கெடத் தரணி மங்கையு
மன்பய னடைந்தனள் யானு மாண்டன
னுன்கருத் தருந்தவத் துறுதி கூடலால்.   (9)

556. பலபொருள்படப் பரம் பகர்ந்த வேதமு
மலகின் மெய்ப்பொரு டெளித்தறையு மாகமக்
கலைகளும் பரகதிக் குரிய காட்சிசே
ருலைவி னற்றவஞ் சிவார்ச்சனை யென்றோதுமே.   (10)

557. செய்திடுந் தவமெலாஞ் சித்தி முத்திகண்
மெய்பெறக் கொடுத்திட விளங்கு நற்றலம்
பொய்தவிர்ந் திலங்குமொர் புண்டரீகப் பே
ரெய்துமச் சிதம்பரமெனு மத்தொல்லை நூல்.   (11)

558. தேவருந் தேவர்கடம்மிற் சீர்த்தி சான
மூவருந் தொழப்படு முழுமுதற் பொரு
டாவில் புண்டரீக மாபுரத்திற் றங்கிய
மாவருட் பரசிவ னென்னு மற்றவை.   (12)

559. அந்தமில் சித்தியொ டரிய வீடுநற்
சிந்தையிற் கணிப்பவர் சேரநல்கு மா
மந்திர மைந்தெழுத் தென்ப மற்றவை
புந்தியிற் றெளிகவீ துண்மை பத்திர.   (13)

560. ஆதலிற் புத்திர வரிய வீடுறக்
காதலிற் புண்டரீகப் புரத்தொளிர்
வேதரூபத்தினின் விளங்கவ் வானிழற்
சோதிலிங்கத்தினை யடைதி துண்ணென.   (14)

561. வேண்டிய வேண்டியாங்கருளி மேன்மையோ
டாண்டு வீற்றிருந்திடு மனாதி யெண்குணக்
காண்டகு சிவபிரானகைக்கொண் டுன்பணி
மாண்டிட வினை யருள்வழங்கும் போவென்றான்.   (15)

562. தந்தை யிங்ஙன முபதேசந் தந்திட
மைந்தனு மனத்திடங் கொண்டு மற்றவற்
சிந்தை யன்பினிற் றொழுதெய்தச் சென்றனன்
கந்தமார் புண்டரீகப் புரத்தரோ.   (16)

        வேறு.

563. திருத்தகு புண்டரீக புரத்தினைச் சேர்ந்தொரால
மரத்திரு மூலந்தன்னின் மன்னிய சிவபிரானை
யருத்தியிற் பணிந்து போற்றி யருச்சித் தங்கிருப்பா னோர்நாள்
விரைப்புது மலர்கள் கொய்ய விடியன் மேவுமு னெழுந்தான்.   (17)

564. வரன்முறை நியதிமுற்றிக் கரண்டகமெடுத்து வண்பூத்
தருமர மொன்றின் மீது தாளுற மிதித்திட் டேறி
விரைமலர் குற்குமேல்வை வியன்றருப் பனி நனைந்து
சரண வழுக்குற்று மற்றோர் பற்றிலன் றரையைச் சார்ந்தான்.   (18)

565. சிவசிவ வென்று சொல்லி மழமுனி சேராமுன்பூ
வவனெதிர் தோன்றி நின்றேய பயமீந்தருளி யைய
விவணெதை விரும்பினுந் நீயீகுவ மென்றாங்கேட்ட
தவமுனி பணிந்து நாத சாற்றும் விண்ணப்பங் கேளாய்.   (19)

566. அடியனேன் விடியுமுன் னரணையும் வைகுறுத்தொறண் மிக்
கடிமலரினம் பறித்தல் கருதியே கொன்றை புன்னை
நெடிய பாதிரி யசோகஞ் சண்பகம் பகநீள் கோட்டுப்
படியில் கேசரமே யாதி மரங்களி லேறும்பண்பன் .   (20)

567. அரித்திர ளுழுது மூக்காலரித்திடா முன் பூக்கொய்யும்
விருப்பின னாதலாலே விமல நீ வழுக்காக் கால் கை
மருப்புது மலரின் மேவும் வழுக்களை நோக்கச் சோதி
பரப்பு நுண்ணோக்கவாகப் படைத்தருள் குறையீதென்றான் .   (21)

568. அளப்பரு மறைக்கு மெட்டா வனாதி யம்பகவனா நீ
வெளிப்படநின்று வேண்டிற் றுரையெனக் கொள்ளான் வேறொன்
றுளப்பரிவா லுன்பூசைக் குறுவதே நயந்தானென்று
களிப்பினா லிமயவல்லி பிரேரிக்கக் கருணை கூர்ந்தியாம்.   (22)

569. பத்தியெம்வயிற் பழுத்தோய் வழுக்குறாமே நின்பாதங்
கைத்துணை வியாக்கிரத்தின் கால் கை போலாகக் கண்கள்
சுத்தியா நோக்கவீகள் விரல்களிற் றோற்றவென்று
சத்தியோடே கரந்தாஞ் சகலவித்தையு முணர்ந்தோய்.   (23)

570. அம்முனி கையுங்காலு மங்ஙன மேவப்பெற்று
விம்மிதமெய்தி யாரும் வியாக்கிர பாதனென்னச்
செம்மை சேருளத் தினோடு தில்லைமா வனத்தின் மேவி
யெம்மை யெப்பொழுது மர்ச்சித் திருக்கின்றான் விருப்பின் மன்னோ.   (24)

571. ஆங்கவன் வியாக்கிரேசப் பெயரினா லாராதுள்ளத்
தோங்கு பேரன்பின் மேல்பா லொப்பில் சீரிலிங்க மொன்றைப்
பாங்குறப் பதிட்டைசெய்து பூசனை பயில்வா னோர்நாள்
வீங்கருண் மூலத்தான மேவி வீற்றிருக்கு நம்மை.   (25)

572. விதியுளி யருச்சித்தேத்தி யாதர மிகுந்தெம் முன்னர்ப்
பதுமவாதனத் திருந்து பாவனா யோகமுற்றா
னது பொழுததனி லன்னான மலமார் மனக்கண்ணாடிக்
கதுமென வெமதானந்த தாண்டவங் கதுவிற்றன்றே.   (26)

573. விருப்புறச் சமாதி தன்னில் வெளிப்படு பரமானந்த
நிருத்த மென்விழிக் கிலக்காய் நேர்தரக் காண்பலென்றே
யொருப்படு முளத்தினாலே யோங்காரேசுரற் பதிட்டை
யருத்தியிற் புரிந்து பூசையாற்றினன் போற்றியாண்டே.   (27)

574. மாணாக்கரோடு கூடி மறப்பிலராகி நஞ்சீர்
பூணாக்கொண் டொழுகு மூவாயிர மறைமுனிவர் பூமேற்
காணாக்க வேள்வியோம்புங் காட்சியர் தம்மோ டேகா
லூணாக்கொள் சேடயோக பாவனை யுற்றிருந்தான்.   (28)

575. அப்பெயர்ப் புண்டரீகபுரத்தி லானந்தக் கூத்தை
யொப்பிலப் புலிப்பாதற்கு முனக்குங் காட்டிடுது மிந்த
வைப்பிலிப் பிலத்துவார வழியினான் மறைந்து போந்து
திப்பியமான தீர்த்தஞ் சேர்ந்ததின் மூழ்கி மன்னோ.   (29)

576. ஆயிரந் தலையையுங்கண் டாண்டையோ ரஞ்சாவண்ண
நீயிருந்தலை யைந்தோடு பதஞ்சலியாய் நேர்ந்தங்க
ணேயிரென்றோதி நாதனேகின னிறைஞ்சி யன்பாற்
பாயிரும் பணங்கொள் சேடன் பரனருள் சிரமேற் கொண்டே.   (30)

577. கழியுளக் காதறூண்டக் கடிதினிற் பிலத்துவார
வழியுருத் தெரியா வண்ண மறைந்துபோய் மாசிறீர்த்தங்
கெழுமிநற் றேகமெய்தி யாவருங் கேளாய் நண்ணப்
பழவுருத்தணந் தாண்டுற்றான்பதஞ்சலியென வெழுந்தே.   (31)

            வேறு.

578. அனந்தனார் நோற்று வரம்பெறு பரிசு மனையவற் கெம்பிரா னங்கண்
மனந்தவிர்ந் திலங்கு புண்டரீகப்பேர்  மாபுர மாட்சியினோடு
சினந்தவிர் புலிக்கான் முனிவரனிலையைச் செவியறிவுறுத்ததும் புகன்றா
முனந்தனக் கெட்டா முதல்வனத்தில்லை நடந்தரு முறையினி மொழிவாம். (32)

        வியாக்கிரபாதப்படல முற்றிற்று.

        திருநடனப்படலம்.

579. நாகதீர்த்தத்தி னின்றெழு நாடுசீர்ப்
போகிவேந்தன் பொருவிறவம்புரி
பாகமாரும் வியாக்கிர பாதப்பேர்
யோகிதன்னை யுவகையொ டண்மினான்.   (1)

580. பாயசீர்த்தி வியாக்கிர பாதப்பேர்
மேயினானைப் பதஞ்சலி மேவுத
லாயிரங்கதிர்ப் பானுவை யாங்கொளித்
தேயுகூடுந் திறத்தினை யொக்குமால்.   (2)

581. மேதைநீடு வியாக்கிரபாதன் மெய்ப்
போதநோக்கிற் புரிந்துணர்ந் தீங்கிவன்
மாதொர்பாகன் மலர்க்கழற் கன்பனென்
றாதிசேடனிடத் தன்ப னாயினான் .   (3)

582. ஓகைவிஞ்ச வுறுவ ரிருவரு
மேகநாயக னெங்கள் விழிக்கிலக்
காகவந்து நடந்தரு மாருநஞ்
சோக நீங்கவெனத் துணிந்தாரரோ.   (4)

583. மாநடந் தரிசித்திடு மாசையா
னூனடைந்த வுடம்பினை யோம்பிலர்
வானடைந்து மகழ்ந்து மரியயன்
றாமயங்க வெழுந்தனித் தாணுவை.   (5)

584. தங்களுள்ளத் தவிசி லிருத்தியே
பொங்கு மன்பிற் புரிந்தனர் பூசனை
கங்குலும் பகலும் புலங்காதியே
வெங்கொடுந் தவமாற்று தன்மேயினார்.   (6)

585. கமலமார் சிவகங்கையின் மூழ்கியு
மமலசர்வ சிவவென வன்பொடு
குமலநீங்க வரன் பெயர் கூறியும்
விமலநீற்றினை மெய்யுறப் பூசியும்.   (7)

586. சிற்பரன் விழித்தோன்றுந் திருவருட்
பொற்புடைத் திருக்கண்மணி பூண்டுஞ்சீர்
வற்கலை யுடுத்துஞ் செபமாலை கொண்
டுற்பவங்கெட வைந்தெழுத் தோதியும்.   (8)

587. பாடுருத்திர சூத்த பாராயணம்
பீடுறச்செய்துந் தத்தம் பெயரினான்
மாடுறப் பிரதிட்டைசெய் மாலிங்க
நாடியர்ச்சனை நன்குற வாற்றியும்.   (9)

588. மூலத்தான முதல்வனை யோர்ந்தறு
காலத்துங்க மலாதி கடிகமழ்
கோலத்தூமலர் கொண்டருச் சித்துமா
வாலத்தண்டுடை வாழை வருக்கையே.   (10)

589. நாளிகேர முதற்பல நாடொறு
நீளுமன்பி னிவேதித்து நேரிலா
வாளிருங் கதிர்ச்சூரிய மண்டலத்
தாளு மீசனடி வழிபட்டுமே.   (11)

590. சிவதருப்பணஞ் செய்துந் திருந்துமெய்ச்
சிவமிகுந் துறயோகஞ் செலுத்தியுஞ்
சிவனுவக்குந் துதிபல செப்பியுஞ்
சிவனடித் தொண்டர் கூட்டத்தைச் சேர்ந்துமே.   (12)

591. அண்டர் நாயக னாலயம் போய்வலங்
கொண் டிறைஞ்சியுந் தாருக் குலவடிக்
கண்டிருந்த விருந்துங் கந்தம்பல
முண்டுநாள்க ளொருசில போக்கியும்.   (13)

592. நீரருந்திச் சிலபக னீக்கியுஞ்
சேருங்கா லுண்டு சில்பகல் போக்கியுங்
கோரவைங்கன னாப்பண் குலவியே
சாருறும்பகல் சிற்சில தள்ளியும்:   (14)

593. சிற்சில் வைகறிகழ் புனனின்று மோர்
சிற்சில் வைகலொர் காவினிற் சேர்தந்துஞ்
சிற்சில் வைகல் பிராணற்சிறை செய்துஞ்
சிற்சில் வைகல் சிரங்கிழக் குற்றுமே.   (15)

594. மாரியும் பனியுங் குளிர்வாடை மீக்
கூருங் கூதிருந் தாங்கியுங் கோரமாய்ச்
சேரும் வேனிலின் வெய்யிலிற் செந்நின்று
பாரும் வானமு மேத்தப் பயின்றுமே.   (16)

595. அத்துவாக் களொராறையுஞ் சோதித்து
மெய்த்திடும் பசி தாக மோகம்மிகு
சித்தசோகஞ் சரையொடு சேரிறப்
பித்திறத்தடை யூர்மி யெய்தாதுமே.   (17)

        வேறு.

596. இந்திரன் முதலாந் தேவரெம் பதமெமை நீத்திந்த
வந்தணர் தம்மைச் சாருங்கொல் லென வையமெய்தத்
தந்தம துறுதியானே யொருவருக் கொருவர் தாழார்
முந்தன் வந்தருளு நிர்த்தமென முன்னி முயன்று நோற்றார்.   (18)

597. வேதநாயகன் மொழிந்த வேலையை நோக்கி யன்னோர்
மாதவ மளப்பில்கால மருத்தியிற் புரிந்தார் மற்றம்
மேதையர்க் கருள வேண்டி மேலவன் கைலைநீங்கிச்
சோதிமால் விடைமேற் கொண்டங் குமையொடுங் கணங்கள் சூழ. (19)

598. தில்லைமா நகரை நோக்கித் திருந்து பேரருண் மீக்கூர்ந்து
பல்லிய வகைகள் யாவுந் தழங்கிடப் படரு மேல்வைத்
தொல்லை மாதவர்களானோ ரிருவர்க்குந் தொல்லோனெய்த
லொல்லை முன்னுரைத்தல் போன்று திருச்சின்னத் துறுஞ்சீரோதை,   (20)

599. திருக்கயிலாய மேயசிவபிரான் வந்தான் றெய்வ
மருக்குழ லிமையவல்லி மணமகன் வந்தான் வேத
வுரைக்கடங் காதசீர்த்தி யும்பர்தம் பெருமான் வந்தான்
கருப்பிறவியி னான்மாவைக் கடப்பிக்குங் கடவுள் வந்தான். (21)

600. மந்திரமைந்து மேனியாகினோன் வந்தான் வந்தா
னந்தமி லெழுத்தைந்தான வண்ணறான் வந்தான் வந்தான்
பந்தம தகற்றி யாளும் பராபரன் வந்தான் வந்தான்
வந்தனன் சம்புவென்னா வெழுந்தது வானமீதே.   (22)

601. சின்னத்தி னோசை யிங்ஙன் றிசையெலாம் விழுங்கித் தங்கள்
கன்னத்தி னுழையக்கேட்ட கட்செவிக் கிறையுஞ் சீர்த்தி
யன்னத்தற் குவமை கூருமம் புலிப்பாதத்தானு
மென்னைத் தீந்தொனி யீதென்றேயு சாய்த்தெளிந் திறும்பூதெய்தி. (23)

602. அண்ணாந்து நின்று செங்கை சிரமுகுழ்த்தாடும் வேலை
யெண்ணார்ந்த மரீசி யாதி யேழ்பெருமுனிவர் தாமும்
விண்ணாளு மிந்திராதி யெண்மரும் வேதன் விண்டுத்
தண்ணாரம் மதியம் பானுச் சித்தர் கந்தருவர் சார.   (24)

603. தேவர்கள் பரவுசீர்த்தி படைத்த வைங்கரத்துச் செம்மன்
மூவிரு முகத்துப் புத்தேள் முன்னெழுந்தருள வெள்ளைத்
தூவணமேனி வாய்ந்து திசை செவிடுறத் தொனிக்குந்
தாவில்சீர் மணிகள் சோதித்தாடி நால்கழுத்திற் பூண்டும்.   (25)

604. திரண்டுயர்ந் தொளிர்செ யாணர்த்  திவளொளி மணிப்பூண் பூண்ட
விரண்டு கொம்பினுந் தூவெள்ளை யருவியி னிரண்டு பாலும்
புரண்டசைந் திலங்க வெள்ளைக் கவரிகள் புனைந்தும் பொன்செ
யரண்டருகுதை செம்மேக மடுத்தென வெரிநணிந்தும்.   (26)

605. எழில்வள ரிமையமீது சிகரமேக் கெழுதன்மான
வழகுறு ககுபங் கண்டமதற்கு மேல் விளங்கக் கொண்டு
மொழுகிடு நுரையென்றோது முறுமலரணிவா யேய்ந்துங்
கெழுமுறு தடித்திற் சோதி கிளர் சிலம்படி யணிந்தும்.   (27)

606. விண்ணவர் வழுத்தி வீசும் பூமழை மேனியெங்கும்
வண்ணமா ரணிகளாகப் பொருந்தியு மாட்சி மேவும்
புண்ணிய வடிவமெய்திய திட்டானமாகிப் பொன்றா
வண்ணல்வான் கயிலையென்ன வணைதரு விடையின்மீதே. (28)

607. அருட்பெருங் கடலாய் நீங்கா வானந்த வடிவாயானா
விருப்பருள் வியப்புக்கெல்லா நிலைக்களமான மேலோன்
பரப்புசீர் வியாளப் புத்தேள் வியாக்கிரபாத னென்பார்
தருக்கிலா வன்பிற் காற்ற வெளிவந்து தான் முனின்றான் .   (29)

608. புண்டர மூன்றினா லேர்ததும் பொளிநுதலும் பொற்பின்
வெண்டிரு நீறுபோர்த்து விளங்கு செம்மேனி தானு
மண்டலப் பணங்கொடுத்தி மாசுணத்தான கோதில்
குண்டலத் திலங்கும் யாணர்க் குருமணிக் காதிரண்டும்.   (30)

609. ஆலத்திற் சிறப்பு வாய்ந்த வழகுறு மிடறுஞ் சோதிப்
பாலத்திற் செந்திநோக்கும் பானு வெண்மதி யென்றோதுங்
கோலச்சீர் விழியு மன்ப ரகக்கண்ணுக் கினிமைகூருஞ்
சீலச்செஞ் சோதிமேனி விளக்கமுந் திருச்சொல வாய்ப்பும்.   (31)

610. புன்சிரிப்பொடு பொருந்துந் திருமுகப் பொலிவு மால்வே
தன்சிரக் கோவை யார்ந்து தயங்குபொன் மார்புஞ்சூல
மன்சுடர்க் கபாலம் வாவுமான் றுடி மழுக் கோதண்ட
மின்செயத் தரித்தே யச்சந்தெறூஉ வரமிகவீகையும்.   (32)

611. கருணையூற் றிருந்து பாயுந் திருக்கடைக்கண்ணும் வேணிச்
சுரநதி யலைப்பினாலே துயல்வரு பிறைக்கொழுந்தும்
வரனுற வுடையனாகி வாக்கிற் கண்களிற் சிரிப்பி
னரியயன் ககுப நாதர்க்கருள் சுடர்ப்பெருமான் றன்னை.   (33)

612. வலம்பெறு பரார்த்தமென்னு மளவிறந் தொளிர மணிப்பொற்
சிலம்புபூண் டொளிரிரண்டு திருவடிப் போதுஞ்சோதி
நலம்படு கோசிகப் பொற்பட்டின் மேற்சுற்று நல்ல
குலம்படு மணிகொள் யாணர் கொழித்திடு காஞ்சிச்சீரும்.   (34)

613. விளங்கிரு ஞானமென்னச் சுணங்குபூத் தெழுந்து விம்மும்
வளங்கெழு தனமென் றோதுஞ் சக்கர வாகத்தின் மே
லிளங்கதிர்க் கமலநாளம் போன்மென வணிந்த யாணர்க்
களங்கறு சோதிமுத்த வெண்மணி வடக் கதிர்ப்பும்.   (35)

614. வரமிகுந் தொளிருஞ் சோதிமணிகொள் கங்கணஞ்சேர் வண்மைக்
கரமல ரிரண்டும் வண்ணக்கழுத்தின் மூன்றிரேகை தம்மோ
டொருமையுற் றொளிரு மூன்றுநித்திலத் தொடையு மொப்பி
லிருநில வுமிழ்புன்மூர லிலங்கிடு வதனப்போதும்.   (36)

615. இளந்தளிர்ச் சோதிவாய்ந்து விம்ப நற்கனியை யெள்ளி
வளம்படு பவளவாயும் மான்பிணை நோக்கினோடு
விளங்கு நீலோற்பலத்தை வெனறிருங் கருணையூறிக்
கிளர்ந்து பாய்ந் துயிராம் பைங்கூழ் கிளர்விக்கும் விழியின் சீரும். (37)

616. கந்தநற்றாழைப் போதுஞ் சுகந்தமுங் காசில்சோதிச்
சந்திர கலையுங் கொண்டு தயங்கு தம்மில்லச்சீரும்
வந்துமின் சூழ்ந்தாலன்ன வண்ணமு முடையளாகிச்
சுந்தர முறப்பின் பாலுற் றுறத்தழீஇத் தோற்றமேவ.   (38)

617. இருந்திடு மவினாபூத விணையில் சிற்சத்தியோடு
புரிந்தமெய்த் தவத்தாற் கண்டு பதஞ்சலி புலிக்காலண்ணல்
சுரந்த வானந்த வாரிப்படிந்து மெய்துளங்க வன்பால்
விரைந்து தாழ்ந்தெழுந்து பலகாற் புளகமெய்யரும்ப மிக்கே.   (39)

618. அடிபெயர்த்திட மாட்டாமற் பரவசராய்ச் சலிப்பி
னெடுவிழி நோக்க மும்பர்நாயக னிமல ஞான
வடிவினிலழுந் தவங்கண் மன்னின ரதீதமன்னோர்
படிதவிர் கருத்துச் சென்றவவதியார் பகரற் பாலார்.   (40)

            வேறு.

619. தாவிறத்துவம் யாவுந் தணந்தொளிர்
தேவதேவன் றரிசன சித்தியான்
மேவுமானந்த வெள்ளத்து மூழ்கியே
யேவுமன் பிலினைய பழிச்சுவார்.   (41)

620. பூதம் யாவையுந் தந்த புராதன
வேதம் யாவும் விளம்பரும் வித்தக
போதம் யாவும் விளக்கு புராணமெய்
யாதி மெய்யறி வானந்த போற்றியே.   (42)

621. பத்தருக் கெளிதாம் பரபோற்றி யா
றத்துவாவு மகல் பரபோற்றி யோர்
சத்தினோடசத்தான விரண்டினு
மொத்துநிற்கு மொருபொருள் போற்றியே.   (43)

        வேறு.

622. செய்பவன் றானுஞ் செய்திப்பயன் கொளுவானுந் தேறி
யெய்திடு பொருளுமாகி யிலங்குமப் பொருளே போற்றி
பொய்தவி ரட்டாங்கச் சீர்யோகத்தாற் புறத்துமுள்ளு
மெய்பெற வறிஞர் காண விளங்கு மெய்ச்சுடரே போற்றி.   (44)

623. பார்முதற் குடிலையீறாய்ப் பரந்தபல் பொருளுமாகிச்
சீருரு வாதியாம் பல்குணங்களாய்ச் சேதனத்தாற்
சார்தரு கருமஞ் சாமானியஞ் சிறப்பாதியாயு
மோர்பெய ருருவமின்றி யோங்கு சின்மயனே போற்றி.   (45)

624. வருபிரமாதாமேயமி திமான மென்னு நான்கு
பிரிவுகளானாய் போற்றி பிறங்கு மந்திரத்தினோடு
கிரியை பாவனை தமக்குநிலைக் களமாகிக் கிட்டுஞ்
சொரூபனே போற்றி சூழுஞ் சொற்பதங் கடந்தாய் போற்றி.   (46)

625. செய்வினை முயற்சியாலே யுயிர்த்தொகை தேடிக்காண
மெய்பெற நின்றாய் போற்றி தியானத்தில் விளைவாய் போற்றி
பொய்தவிர் சுவர்க்கமாதி பயனெலாம் பூப்பாய் போற்றி
யைதரு பரையே யாதி வாக்கு நான்கானாய் போற்றி.   (47)

626. பலந்தரு பகுதியோடு விகுதியாய்ப் பரந்தாய் போற்றி
புலந்தரு மறிவுமற்றை யறிவுமாய்ப் பொலிவாய் போற்றி
வலந்தரு தொழில் களைந்து மெய்ப்பின்றி வகுப்பாய் போற்றி
நலந்தரு பரமானந்த முயிர்க்கரு ணாதா போற்றி.   (48)

627. சச்சிதானந்தமாகித் தயங்கு முன்னிடத்திற் றங்கி
யிச்சகம் போக்கினோடு வருதலுற் றியலுமென்று
மெய்ச்சிவ நீயேயென்று மேலவரறிவர் கல்லாப்
பொச்சர்களுன் றனீர்மை யறிந்து மெய்பொருந்த லெங்கே.   (49)

628. நாயக நாயினே மெய்ஞ்ஞான வானந்தமேவ
நீயெழுந் தருளிக் காட்சி புரிதந்து நின்றாய் நந்த
மாய வல்வினைகள் யாவும்மாய மாநடங் காட்டென்று
நேயமொடங்கட் போற்றி யிருவருந் தொழுது நின்றார்.   (50)

629. உறுவரிங்ஙனம் விளம்புந் துதிமகிழ்ந் தொப்பின் மேலா
மறுகுணக் குன்றமான சிவபிரானருளி னீராற்
றுறுமு வெண்ணிலவின் கற்றை திசையெலாந் துலக்கவாங்குச்
சிறிதருணகை வழங்கித் திருவாய் விண்டருளு மன்னோ.   (51)

630. எம்வயிற் பதிந்த பத்திக்கிணையிலா முனிவர் கேண்மி
னும்வயிற் கிளர்ந்திட் டோங்குங் கருணையா லுமையினோடுஞ்
செம்மையிற் றோன்றி நின்றோஞ் சிரத்தையானீர் பழிச்சும்
பொய்ம்மையிற் றணந்த ஞானத் துதிமாலை புனைந்து கொண்டேம்.   (52)

631. அடியவர் தம்மிலேவரித் துதியாய்வோரன்னார்
படிதவிர் செல்வம்யாவு மொருங்கு பெற்றுயர்க பண்பா
லொடிதலி லுண்மை வாழ்வி னோங்கவென் றருளித் தன்ம
விடபநின் றிலங்கு தாதான்மிய சத்தியுட னெழுந்தான்.   (53)

632. எல்லையின் ஞானத்தானே யுருவான வீசன்ஞான
வல்லியோ டங்கணீங்கா தமர்ந்தினி தருளும்வண்ண
நல்லருள் கொண்டான் கொண்ட நன்னரச் செவ்விச் சான்றீர்
தில்லைமா வனந்தலங்க ளெவற்றினுஞ் சிறந்தோங் கிற்றால்.   (54)

633. பரமனா ராணையாற்றாற் படர்தரு பணியரான
பிரமனே முதலாந் தேவர்கூட்டமும் பிரமஞான
வரமலி முனிவர் பூதரீட்டமுங் கீதம்வல்ல
திருமிகு மமரர் மாதராட்டமுஞ் செறிந்த வங்கண்.   (55)

634. களிமயிற் சாயல் வேய்த்தோட் கற்பகவல்லிச் செவ்வி
யிளமுலைத் தெய்வமின்னாரீண்டி மேனோக்கலாலே
வளிமிகுத் துலவுநீல வானமா வளாக மெல்லா
மொளிகொ ளுற்பலம் வாரீசமலர் தடத் தோற்றமொத்த.   (56)

635. நந்தியெம்பிரான் முழக்குந் தண்ணுமை நாதஞாலத்
தெந்தவாருயிர்ச் செவிக்கு மானந்த  மயமா யெய்தத்
துந்துபி யோவாதேங்கத் தும்புருவோடு கூடி
முந்துநாரதனச் செவ்விக்கிசை கீத முயன்றுபாட.   (57)

636. புகழ் விசுவாவசுப் பேர்படைத்திடும் புலமை சான்ற
பகுதி சாலிசை நூல்வல்லான் கின்னரப் பண்கள் பன்ன
மிகுதிசேர் விமானந்தோறும் விண்ணவர் மிடைந்து நின்று
தொகுதிசால் பஞ்சதாருப் பூமலர் தூவிவாழ்த்த.   (58)

637. அளப்பி லானந்தத் தன்பர் சயவொலி யெழுப்ப வங்கண்
வளப்பட மாட்சிமேவிப் புண்ணிய மயமா யின்பந்
திளைப்புறச் சிறந்தபாணிப் பரையொடுஞ் சிவபிரானார்
துளக்கறத் தில்லைஞானத் தூயவம்பலத்தை யுற்றார்.   (59)

638. திருமுடிக் கங்கை வெள்ளமலைந்து மேற்கிளரச் சீர்சால்
பொருபுலித் தோலினாடை யரையினிற் பொலிவுற்றாட
வரையினுங் கரத்து நாக மழகுறப் பொருந்தி யார்ந்து
புரையில் சூத்திரமும் யாணர்க் கடகமுமாகிப் பொற்ப.   (60)

639. வரைக் குபமானமாகு மார்பில் வாசுகியென் றோது
முருக்கிளர் நாகம் பூணாயொளிர்தர நுதல்விபூதிக்
குருக்கிளர் குறிகண் மூன்றுங் குலவிடச் செந்தீ நோக்கந்
திருக்கிளர் சோதிகான்று திசையெலாம் விளக்கஞ் செய்ய.   (61)

640. மணியின் மாண்டொளிருஞ் சோதி வயங்கு தோட்டணியு மாமைப்
பணியின் மாண்டொளிருஞ் செவ்விபடைத்த குண்டலமு மேய்ந்திட்
டணியின் மாண்டொளிருஞ் சோதியானன மாணவத்தீப்
பிணியின் மாண்டுழலுஞ் சீவர்க்கரு ளமிர்தம் பெருக்க.   (62)

641. காசினிற் குயின்ற மஞ்சீரத்தொடு கடகம் பாதத்
தேசிறந் தொளிர யாணர் திருந்து புன்சிரிப் பானந்த
மாசிறப் பருளப் பாதமலர் சதுரசசிரம்வாய்ந்
தாசையிற் காணுமன்பர்க் கானந்த வாழ்வு கூட்ட.   (63)

642. வலத்திருவடிப் போதாற்றன் முயலகன் முதுகின்மன்னி
நிலைத்திட வாமபாத முயர்ந்து குஞ்சிதமாய் நேர
நலத்துட னிடக்கை வாமபாத நேர்குறுக்கே நண்ணப்
பலத்துடன் வலக்கை யாண ரபயமுத்திரை பரிக்க.   (64)

643. ஒளிமிகுத் துமிழ் சீர்க்காஞ்சி யொலித்திட வுதரமாடே
கிளருமும்மடிப்பு மாணப்புரள் தரக்கிளர்ந்திட் டோங்கு
முளரியைப் பரித்து மேலாய் விளங்க வோரிடக்கை முந்து
மளவிலப் பிரணவச்சீர்த் தமருகம் வலக்கையார.   (65)

644. விளம்பிடு தாளமூன்றி னடுவணதாகி மேவும்
வளம்படு திரச்சிரப்பேர்த் தாளத்தை மண்டலம் வாய்ந்
துளங்களியூறத் தோற்றித் திருவடியிரண்டு மொன்றத்
துளும்புசீ ரவினயங்கடோண் முதலுறுப்புத் துன்ன.   (66)

645. பரம்புசீர்ப் பதஞ்சலிப்பேர் முனிவரன் பணச்சிரத்தி
னிரம்பொளி மணியினீ ராஞ்சன முனமெடுப்ப நின்றே
விரும்பு பன்மலர் கடூவி வியாக்கிரபாத யோகி
யரும்பு மாதரவினாலே யருமறைத் துதியெடுப்ப.   (67)

646. புண்ணிய நிருத்தானந்தப் புணரியிற் படிவான் போந்த
வெண்ணில் சத்திகளினோடு மிணைதவிர் சிவகாமிப்பேர்
நண்ணிடு ஞான சத்தி நடத்திறங் காணுந்தோறும்
பண்ணிறை மொழிவாய் விண்டு துதித்திடப் பாங்கர் நிற்ப.   (68)

647. மாயமுக் குணங்கடந்து மனமொழிக் கதீதமாகி
நேயவைந் தொழிற்கும் வித்தாய் நியதபூரண மெய்ஞ்ஞானத்
தூயவற்புத வானந்த சுகாதீத சொரூபமாகி
மேயதாண்டவத்தைச் சம்பு வியத்தகப் புரிதலுற்றான் .   (69)

648. அருள்வளர் நீலகண்டப் பொருளருட்பரை யென்றோதுந்
தெருள்கிளர் மின்னினோடு தில்லைமா வனத்தின் மேவி
யிருண்மலந் துமிய வாடுமிணையி லானந்தக் கூத்தைப்
பெருமைசேர் நாகவேந்து பெட்டுநோக்குதல் வியப்பாம்.   (70)

649. அளப்பிலா மறைக்கு மெட்டா வனாதியம் பரமவள்ளல்
வெளிப்படநின்று செய்யும் வியப்புறு நடனவின்பக்
களிப்பு தவமிர்தந் தன்னைக் கண்களாஞ் சகோரந்தம்மா
லுளப்பரிவோடு மன்னோர் தெவிட்டிட வினிதி லுண்டார்.   (71)

650. உண்ணிறைந் தோங்குகின்ற சிவானந்த வோதவெள்ளங்
கண்ணிணை வழியாலோடக் கையிணை தலைமேற்கூடப்
புண்ணிய வடிவமெங்கு முரோமங்கள் பொடிப்ப வாக்கு
நண்ணிடத் தழுதழுப்பு நடச்சிவபோகந் துய்த்தார்.   (72)

651. பரதநூலுரைக்கு மாட்சி யிலக்கணப் பகுதி முற்று
மருவவாச்சிய பேதங்களனைத்து மிக்கார்ப்ப வானோர்
விரைமலர் தூவிநின்று மிகவுமேத்தெடுப்ப வண்ணல்
புரிநடவின்ப வேலைப் புலங்களிப்புறப் படிந்தார்.   (73)

652. தற்பர ஞானானந்த தாண்டவங் குயிற்றுமைய
னற்புதச்  செய்யபாத கமலங்க ளன்பினான்ற
பொற்புடைப் புலிக்கா லண்ணல் பதஞ்சலி யென்னும் போத
நற்பெரு முனிவரா னோருளத் தடமலர்ந்த நன்கே.   (74)

653. எழுதுசித்திர விளக்கி னிடப்பாகத்தி யைந்துநிற்கு
முழுதுயிரீன்ற வன்னை கரங்களா முளரிப் போதார்
செழுமணிக் கங்கணத்தி னெழுமிசை  சிவனார் கூத்துக்
கழகுடை யியமாயிற்றென் றருந்தவர் பழிச்சியிட்டார்.   (75)

654. அம்பக மிமையாடாம லளப்பிலெண்குணச் சீர்வாய்ந்த
நம்பனார் நடனந்தன்னை நயப்புடன் புறம்போலுள்ளுந்
தம்பெரு மறிவாற்கண்டு சிவானந்தச் சலதிமூழ்கி
யெம்பெருமா னீகேளென் றெடுத்து விண்ணப்பஞ் செய்வார்.   (76)

655. ஒப்பில்சீர்த் தில்லையின்க ணோங்குமிஞ் ஞானமன்றத்
தெப்பொழுதும் மிவ்வண்ண மிணையி லானந்தக் கூத்தை
யிப்புவி யண்டமுய்ய வெம்பிரானாடல் வேண்டும்
தப்பிலா வடிமை பூண்டேம் பொருட்டிது தருக வென்றார்.   (77)

656. கலக்கமின் ஞானயோகக் கண்ணினர் காட்சிக்கன்றிப்
புலப்படா நடன நீவிர் கண்டிடப் புரிந்தாம் பொல்லா
மலக்குறும் பெறிந்திருங்கள் பொருட்டிந்த ஞானமன்றி
லுலப்பி லானந்தவாட லொழியாது புரிதுமன்னோ.   (78)

657. உலக மூன்றினு மெந்நாமஞ் சிவகாமனென்று மோவா
மலைமகடனது நாமஞ் சிவகாமியென்று மன்ற
விலகுக வென்றிவ்வாறு திருவருள் புரிந்தானென்ப
வலைவிலா வடியர்க்கென்று மெளிவருங்கருணை யண்ணல்.   (79)

658. கருணையே வடிவமான கௌரி யொர்காமர் ஞானத்
திருவடிவுடைய மூத்தவிநாயகக்கடவுள் செவ்வேள்
முருகவேண் முதலாயுள்ள முதற்பெருங் கணத்தர் சூழப்
பரசிவன் றில்லைமன்றம் பிரியாது பயிலுமாடல்.   (80)

659. பானிறச் சங்கமேந்தும் பவளவாய்க் கமலக்கண்ண
னான்முகக்கடவுள் பூர்வமுதலொரு நாலிரண்டென்
றான திக்கிறைவரோடு பதஞ்சலியரும் புலிக்கான்
ஞானமெய்த் தவனேயாதி முனிவரர் நயப்பான் மன்னோ.   (81)

660. தில்லையம் பலத்திலெம்மான் றிரோதான நீங்கநின்றே
யெல்லைதீர் கருணையாற்றா லியற்று மானந்தக்கூத்தை
நல்லவாதரத் தாலென்றுந் தரிசித்து நயந்து போற்றிச்
சொல்லரும் பரமானந்தந் துய்த்தன ரிருந்தாரங்கண்.   (82)

661. வரநதி முதலாந் தீர்த்த வகைமிகு வளமை சான்ற
பரிமளங் கமழும் பாரிசாதமே முதலாம் பஞ்ச
தருவொடு மேனகாதி யரம்பையர் தாவிறெய்வப்
பொருவில்சீர்த் தில்லைத் தத்தங் கூற்றினாற் பொருந்தியுற்றார்.   (83)

662. மிளிர்புலிப் பாதத்தண்ணல் வியாக்கிர சங்கரப்பேர்
கொளுமெழிலி லிங்கமொன்றைக் குடதிசைப் பதிட்டை செய்தா
னொளிமணிச் சுடிகை நாகர்க்கிறையதன் குடபாலோவா
தளிமிகு மனந்தீசப் பேர்க்குறிநிறீஇ யருச்சித்திட்டான்.   (84)

663. தந்நிகர் சௌனகாதி முனிவருந் தத்தம் பேராற்
பன்னிட விலிங்கமூர்த்தி பற்பல பதிட்டை செய்தார்
மன்னுசீர் வியாக்கிரத் தாண் மாதவன் றொடர்பாற் றில்லை
நன்னர்வான் புலியூரென்றோர் நாமமுற்றது தவத்தீர்.   (85)

664. சின்மய வியோம ரூபமா யென்றுந் திகழ்தலாலே
நன்மைசால் சிதம்பரப்பேர் நண்ணிடுந் தில்லைஞால 
மின்னகக் கஞ்சமாகி விளங்கலானது தான்மேலுந்
தென்மலி புண்டரீகபுரமெனுந் திருப்பே ரெய்தும்.   (86)

665. தேவர்க டேவனான சிவபிரா னடத்துக் கெல்லை
மேவிடாப் பெற்றியாலே வியனடக்கிட மாமன்றந்
தாவில்சீருடன் விளங்குந் தப்பிரசபை யென்றிந்த
மூவுலகத் துளாரு மொழிந்திடத் திகழ்ந்து முந்தும்.   (87)

666. மூன்றினைத் தலைமேற் கொண்ட முப்பது கோடிதேவர்
மான்ற பஞ்சாக்கராங்க பட்டமாய் மருவலானுங்
கோன்றிருக் கூத்தினென்று மணிபெறீஇக் குலவலானு
மேன்ற வுற்சவத்தினானு மேம மன்றெனும் பேரெய்தும்.   (88)

667. இந்தவைந் திருப்பேர் தம்மைச் சிரத்தையா லெவன்கணிக்கு
மந்தமா புருடன் மன்றவற முதற்பொருள்க ணான்கும்
புந்தியினி னைந்தாங்கெய்தும் புனிதவிப் பேர்களுள்ளே
சிந்தைமாசறுத்தீர் தேர்மின் சிதம்பர மதிகமென்றே.   (89)

668. கூத்துடைப் பிரானுக் கொப்பில் வடிவமாய்க் கோதிலன்பர்க்
கேத்துசீர் முத்தியீயுந் திருவெழுத்தைந்து மெங்ங
னாத்த மந்திரங்கட்கெல்லா மதிகமாமங்ங னிந்தச்
சீர்த்தவைந் திருப்பேர் தம்முட் சிதம்பர நாமமேலாம்.   (90)

669. ஆரணச் சிரசில் யோகவந்தண ரிதயப் போதில்
யாரணித் திருக்கூத்தாடு மிறைவர் மற்றவ ரித்தில்லைக்
காரணச் சிதம்பரத்தே கணிப்பில் பல்லுயிரு முத்திப்
பூரணப் பெருவாழ்வெய்தத் திருநடம் புரிவரென்றும்.   (91)

670. எவ்வுலகத் துளாரு மேத்திடப் படுதலாலுங்
கவ்வைசேர் பாவமெல்லாங் கட்டறுத் திடுதலாலுஞ்
செவ்விதி னறத்தை நல்கிச்சிவகதிக் கூட்டலாலுந்
திவ்வியமான தில்லை மகத்தெனப்படுஞ் சிறந்தீர்.   (92)

671. சம்புவி னடனந்தன்னைத் தன்னிகரில்லாத் தில்லை
யம்பலந் தன்னிற் கண்டுதுதிக்கு நரணிமாவாதி
நம்புமெண் சித்தியோடு நண்ணருஞ் சிவசொரூப
மும்பெறீஇ வீடுசேர்வ ருண்மை மற்றுண்மையீதே.   (93)

672. நிருமல வியாபியான சிவபிரா னிருத்தமன்பி
னொருபொழுதேனுங் காணப்பெறுபவர் கடத்தற்கொண்ணாப்
பெரிய வெம்பிறவி நீந்தி யவன்றிருவடிக்கீழ்ப் பேரா
வரிய பேரின்பவாழ்வை யடைகுவர றவீர்மன்ற.   (94)

673. அண்டர்கள் தமக்குப்போலத் திருநடந் தொழுமாறண்மு
மண்டலத்தவர்க்கு மன்ற வரந்தரு மன்றவாணன்
றண்டுளி வழங்கு மேகந்தா மிடபேத நோக்கா
வெண்டகை முனிவீர் சாதி விகற்பஞ் சங்கரனுக்கில்லை.   (95)

674. தாண்டவப் பெருமானாகுஞ் சம்புவி னருளினாலே
நீண்டவிப் புவியி னன்ப ரளப்பிலர் பிறவி நீந்தி
மாண்டமெய்ச் சிவப்பேறுற்றார் மற்றவர் குழுவுண் மாட்சி
பூண்டமெய்ப் புகழொருத்தர் திருத்தொண்டு புகறுங் கேண்மின். (96)


        திருநடனப்படல முற்றிற்று.

        ஏமவன்மப் படலம்.

675. சரையு மாநதி
விரவ யோத்தியா
னைரு தன்னெனும்
பொருவின் மாமனு.   (1)

676. காம னேருமத்
தோம னுககுமந்
தாமனுக் கெழிற்
பூமினொத் துளாள்.   (2)

677. மேரு வின்மகள்
யாரு மேத்துசீர்
நாரி யின்முதற்
பாரி யாயினாள்.   (3)

678. காந்தி யென்னும்பேர்
வாய்ந் துளாள்புனல்
வேந்தன் மாமக
ளேந்து சீரினாள்.   (4)

679. அன்ன நன்மனு
மன்ன னுக்கொரு
பின்னை மாமனைப்
பன்னி யாயினாள்.   (5)

680. பிரபை யென்னுமுற்
றெரிவை தன்வயி
னைரு தற்கொரு
குரிசி றோன்றினான்.   (6)

681. மற்றை மாமனைப்
பொற் றொடிக்கணு
முற்று ளாரிரு
கொற்ற மைந்தரே.   (7)

682. முந்தை நன்மனை,
தந்த மாமகன்
விந்தை மிக்கருட்
சிந்தை யொத்துளான்.   (8)

683. குணங்க ளாற்சிறந்
துணங்கில் சீர்த்திபெற்
றிணங்க லார்கழல்
வணங்க மேயினான்.   (9)

684. அங்கவன் பெயர்
சிங்கவன் மன்பிற்
றுங்க மைந்தரும்
பொங்கு சீர்த்தியார்.   (10)

685. தன்ம மேவுசு
வன்மெ னென்பவொர்
மன்மதன் னிகர்
நன்மகன் பெயர்.   (11)

686. தாவில் சீர்த்திசேர்
தேவ வன்மனென்
றோவி னற்பெயர்
மேவு மற்றவன்.   (12)

687. முந்துசெய் வினையாற் காயம் வெண்ணிற முற்றானேனுந்
தந்தையும் ரவி திருட்டா முதலிய வேந்தர் தாமும்
புந்தியா லருளால் வீரத்திறலினாற் பொருவின் மூத்த
மைந்தனை யிளவேந்தாக்கன் மரபென மனத்துட் கொண்டார்.   (13)

688. மற்றஃதுணர்ந்து சிங்கவன் மனம் மனுவாந் தந்தை
பொற்கழல் வணங்கி யெந்தாய் பூமியைப் புரக்கும் வேட்கை
யுற்றில னரசுக்கேற்ற மாணெழி லுறாமையாலே
கொற்ற வெம்பியர்க்கே யுன்ற னரசினைக் கொடுத்தி யென்றான்   (14)

689. மனுவெனும் வேந்தனானோன் மற்றது கேட்டுமாழாந்
தனையனுக் கிளையரான வடுதிறற் சிங்கமன்ன
வினைவல சுவன்மன் றேவதன்மனென் றிசைக்கு மேன்மைத்
தனையர்கட் களித்தான் பாத்துத் தன்னரசுரிமை தன்னை.   (15)

690. அறிவுடைச் சிங்கவன் மன்பூமியை யறத்தினாற்றான்
முறைசெயத் தம்பியர்க்கு மொழிந்து தன்றாதை பொற்றா
ணெறியினிற் பணிந்து நின்று நிருபர்கட்கேறே சம்பு
வுறை திருத்தலங்க ளெங்கும் யாத்திரை செயவுட் கொண்டான். (16)

691. நல்விடை தருகவென்றானை ருதனதுகேட் டைய
வொல்வதன் றுனக்கீதென்னத் தடுத்தன னுரைப்பக் கேளான்
செல்வதே துணிபாக் கொண்டான் றிருமகன் றாதைமைந்தற்
புல்லி யாத்திரை செய்திங்குப் போகென விடைகொடுத்தான். (17)

692. வெண்குட்டந் தீர்ப்பா னெண்ணி விடைபெற்றுச் சிங்கவன்மன்
றிண்பெற்ற புடவித் தீர்த்தந் திருத்தலமெங்குஞ் சேர்ந்து
மெண்பெற்ற மறையோராசி மனுமருந் தெய்தப்பெற்று
மண்குட்டந் தீரக்காணான் மற்றுஞ் சாந்திக ளயர்ந்தான். (18)

693. அருட்சிவ தீர்த்தமெல்லாம் விதியுளி யாட்டயர்ந்தான்
றெருட்சிவ ஞானயோகர்க் களப்பில தானஞ் செய்தான்
முரட்கொடும் பாவநீக்குந் தவம்பல முயன்றான் மூடுங்
குருட்டக விருணீக்கீசன் றளிபல குறுகிச் சூழ்ந்தான். (19)

694. பரிகார மினையவாற்றாற் பலசெய்துங் குட்டநோய்தா
னிரியாது நிலவக்கண்ட விளந்திறற் சிங்கவன்மன்
கரியா நெஞ்சழன்று மாழ்கிக் கவன்றன னிருக்குமேல்வைச்
சரியானேர் வேடர்சில்லோர் சடுதியி லவனைக்கிட்டி.   (20)

695. மடங்கலே றனையாய் துட்டவன்றி யொன்றிங்ஙனோடு
முடங்கு நீயோடிக் கொல்லென் றுரைத்தன ரதுகேட் டன்னோன்
கடுங்கணை சிலையிற்கோத்து மாவேறிக் கடிதுபோந்து 
கொடுங்கனல் சொரிகட்பேழ்வாய்க் குரோட்டத்தைத் தொடர்ந்து போனான்.   (21)

696. பொன்னிறக் காயவேனங் கடுகியே பொருவில்சிங்க
வன்மனை நீண்டதூரவரை யிழுத்தலைத்து நேருஞ்
சின்மயத் தடாகமொன்றிற் றுடுமெனப் பாயச்சீறி
யன்னனு மதனைக்கொல்வா னரியொடுமதிற் குதித்தான். (22)

697. வாவியிற் குதித்தமைந்தன் கொம்மென வெழுந்து வன்கட்
டீவிழிக் கேழறன்னைத் தேடி மற்றியாண்டுங் காணான்
றூவுடைக் காயமேம வண்ணமாய்த் தோன்றக்கண்டா
னாவியப் பிதுவா மென்றே யகன்கரைமீது வந்தான்.   (23)

698. கரைக்கணங் கேறுமைந்தன் விம்மிதக் கடலுண்மூழ்கி
யுரைக்கடங்கா மகிழ்ச்சியுற் றிதுவென் கனாவோ
புரைக்கழி மயக்கோ வன்றி யிந்திரசாலப் பொய்யோ
திரைக்கடற் புவியில்யாருந் தேறரும் புதுமைத்தீதால்.   (24)

699. மனத்துயர்க் கடலைக் காணேன் மலியுட லிளைப்பைக் காணேன்
வினைத்துடக் கதனானேர்ந்த வெண்குட்ட நோயைக்காணே
னினித்தரைக்கண்ணே யாவரெனக்கிணை யென்றானங்க
மனைத்தையும் பல்கானோக்கி விழி யிமைப்பொழிந்தா னம்மா. (25)

700. விடற்கரு நோயைப் போக்கிப் பொன்னிற மீந்தவந்தத்
தடப்புன லேமவண்ண மாகியே தயங்கறானு
மடுத்ததை வாழும்புள்ளுஞ் சலசரந் தாமுமங்கேழ்
மடற்கம லாதியாவு மாழையா யுறலுங் கண்டான்.   (26)

701. மற்றிதி லிறங்கி மூழ்கலா லெனக் கேமவண்ண
முற்றது மன்றவென்று துணிந்ததை வலம்வந் தொப்பில்
பெற்றிசேர் பேறொன் றெய்தற்கிது குறியென்று பேணி
நற்றட விசேடந் தேர்வான் குதிரை மேற்கொடு நடந்தான்.  (27)

702. பரியினை நடத்திச் செம்ம னாலுபக்கமும் பார்த்தங்கு
வருகையி லோமதூம மலிதர மறைந்து தோன்றுந்
திருமலி பன்னசாலை யிரண்டினங் கணத்திற்றெய்வ
விருடிகளிருவர் நிட்டையேறி வீற்றிருப்பக் கண்டான்.   (28)

703. காண்டலும் பரியினின்று மிழிந்து கை தலைமேற் கூப்பி
மாண்ட பேரன்பினாலே கோத்திரப்பேர் வாய்விண்டு
நீண்ட தண்டென விழுந்து நிலனுறப் பணிந்தானேயத்
தாண் டுறையிருடி வேந்தரிருவரு மாசிசொற்றார்.   (29)

704. அதிசய மனத்தனாகிப் பொன்னொளி பரப்பவாகந்
துதிமலி நாவினோடுந் தொழுதெழுங் குமரரேற்றை
மதிதரு மினியவாக்கா லுபசரித்தன ரம்மாண்ட
விதிவிளைவெல்லா மன்னோன் விண்ணப்பஞ் செய்தான் மன்னோ. (30)

705. அரசிளங் குமரன் சொற்ற வதிசய விளைவைக் கேட்டுத்
திருவுள மகிழ்ச்சி பூத்துச் சிவகங்கை மகிமையெல்லா
முரைபுரிந் தறவ ரேமவன்மனென் றனையற்கோர் பேர்
பரவைசூழ் ஞாலம் போற்றக் காரணம்பற்றி யிட்டார்.   (31)

706. சேடரா தரத்தாலேவ வியாக்கிரபாதர் செவ்வி
நாடினர் தேர்ந்து மேலாஞ் சிவதீக்கை தன்னை நாளாற்
பீடுசே ரேமவன்மப் பெருந்தகை பெட்பவாற்றி
நீடுசீ ரைந்தெழுத்தை நெறிப்பட வுபதேசித்தார்.   (32)

707. அவத்தினை விளைக்கும் பொல்லா வாணவ விருடான் வீயச்
சிவத்துவ வபிவியத்தி பெருக்கினர் சிவனூலாற்றிற்
பவத்துய ரொழிக்குந் தீக்கைப் பெரும்பேறு படைத்தவாற்றாற்
றவத்திரு வுடையவேந்த னிறப்பவு மேன்மை சான்றான்.   (33)

708. முத்திபஞ் சாக்கரத்தை முறைமையிற் கணித்திட் டன்பான்
மெய்த்திரு மன்றவாண னடிக்கீழா தரமிகுந்து
சுத்தமார் புலியூர் மேவியிருந்தன னிப்பாற் றொல்சீ
ரத்தன் மாநடனங் கும்பிட்டவன் பெறுமேன்மை சொல்வாம்.   (34)

            வேறு.

709. படிதவிர் வியாக்கிர பாதப் பேரனு
முடிவில்சீர்ப் பதஞ்சலி முனியு மோர்பக
லடி நடுமுடிவிலா நடேசவங்கண
னடநவில் சேவடி வணங்க நண்ணினார்.   (35)

710. நண்ணிய முனிவரர் நம்பர் தாண்டவங்
கண்ணிணை களிப்புறக் கண்டு தாழ்ந்து நின்
றண்ணலே யிரணியவன்மற் கானந்தப்
புண்ணிய நடன மெம்பொருட்டுக் காட்டென்றார்.   (36)

711. அன்பர் காணும் பொருட் டரியவானந்த
வின்பமார் தாண்டவ மேமவன்மற்குத்
துன்பெலா மகன்றிடக் காட்டுதும் மெனா
மின்புரி மன்றிறை யாடன் மேயினான் .   (37)

712. பாட்டியற் கூத்தனார் பரமர் பார்ப்பதி
நாட்டியத் திறந்தெரி ஞான நாயகி
கூட்டுயிர்த் தொகை யின்பவீடு கூடுற
வாட்டுமத் திருநட மவர்க் கியற்கையாம்.   (38)

713. நாட்ட மானந்த நீர்பொழிய நாயக
னாட்டினிற் கிளர்ந்த பேரின்ப வாழியுள்
வாட்டிற லிரணிய வன்மன் மூழ்கியே
வீட்டினன் வினை யெனவிளம்பித் தாழ்ந்திட்டான் .    (39)

714. இரணிய வன்மகே ளிவர்பொருட் டுனக்
கருநடங் காட்டின மன்பு நம்வயிற்
பெரிதுநீ யடைந்து நல்வரங்கள் பெற்றனை
யரியவாழ் வடைகென வமலன் கூறியே.   (40)

715. முனிப்பெரு வேந்தர்காண் முதிரு மன்புடைத்
தனிப்பெரு மிரணியவன்மத் தாதற்குப்
பனிப்பெருஞ் சலதிசூழ் பார்வணங்கலின்
னினிப்பெருஞ் சீரபிடேகஞ் செய்கென்றான்.   (41)

716. பெருந்தவர் சிவபிரா னாணை பேணியே
யிருந்தகை வினயனா மேமவன்மற்கு
வருந்திரைப் புவிக்கெலா மன்னனாகெனத்
திருந்தபி டேகநாட் செய்திட் டாரரோ.   (42)

717. கங்கைநீர் கொண் டபிடேகங் காசில்சீர்த்
துங்கமா தவரிரு வோருந் தூய்துற
வங்கண்மா மனுவினுக் காட்டு மன்னுழி
யெங்குநன் னிமித்தங்க ளெழுந்த சாலவே.   (43)

718. மன்னுயிர்த் தொகையெலாந் தரும மார்க்கத்தைத்
துன்னின குடியெலாந் துன்பகன்றன
பன்னெடுந் திசையெலாம் பரந்த பேரொளி
நன்னறுங் குளிர்வளி நயந் துலாயதே.   (44)

719. தேவருக் காகவே திருந்து சீரவி
நாவினாற் கொளு மரபுடைய நல்லழ
லோவற வலஞ்சுழித் தெழுந்திட் டோங்கிற்று
நோவகன் றுயிரெலா நோன்மை யுற்றவே.   (45)

720. நற்றவர் பின்னர் மாஞால வேந்தனா
மற்றடந் தோளுடை யேமவன்ம நீ
கொற்றமொ டோங்கியே வாழ்வு கூர்கெனச்
சொற்றன ராசிமே லினைய சொல்வரால்.   (46)

        வேறு.

721. வென்றிவேன் மன்ன கேண்மோ தீக்கிதர் மேன்மை சான்றோர்
துன்றுசீர்ப் பிரமயோக விருடிகள் சுருதி வல்லா
ரொன்றுசீர் முப்பானூ றந்தணர்க ளெம்முடனித் தில்லை
மன்றமர் பெருமானாட றரிசித்திங் கிருந்தார் மன்னோ.    (47)

722. இருந்திடு காலை வேதா யாகமொன் றந்தர்வேதிப்
புரிந்திடுவிக்க வன்னோர் தமையெலா மழைத்துப் போனான்
றிருந்துசீர் மறையோ ரீரைந்தாயிரம் யாண்டு சென்றும்
வருந்திறங் காணகில்லே மறனுடை யரசரேறே.   (48)

723. மலரயன் வேள்வி நீட்டித்திடுதலான் மாசில்வேள்வி
நலனுறப் புரியுமந்த நல்வினைக் கண்ணே நின்றார்
விலகிடப் பெறமாட்டாராய் விளம்பனமுற்றார் மன்ன
குலமணிப் பொற்றேரூர்ந்து பிரயாகை குறுகிநீயே.   (49)

724. இரணிய கருப்பன் மாடே யனுமதி யியையப்பெற்று
விரதநன் ஞானயோக விப்பிரேந்திரர்க டம்மைத்
தருதியீண் டழைத்து வல்லேயென்றனர் தடந்தோண் மன்னன்
புரிவனும் பணியென்றோதிப் பணிந்து தேரேறிப் போனான்.   (50)

725. உலகெலாம் போற்றுஞ் சீர்த்திப் பிரயாகை தன்னை யொல்லை
வலனுடைத் திகிரிவேந்த னெய்திவான் கங்கையோடங்
கலகில்சீர் யமுனைசேர் சங்கமம் படிந்தளப்பில் காலஞ்
சொலலருந் தவமுழந்தான் சுயம்பு மற்றவன்மு னுற்றான்.   (51)

726. என்பெற விரும்பி நோன்பிங் கியற்றுதி யென்னமன்னன்
றன்பெருங் குறையை யன்னோற் கிறைஞ்சினன் சாற்றியிட்டான்
மின்பிறழ் கமலப் புத்தேள் வேள்வியை நிரப்பிவல்லே
யின்புற வந்தணாளர் தக்கிணை பலவுமீந்தே.   (52)

727. எல்லைதீர் மறையீர் நீவி ரிரணிய வன்மனோடு
வல்விரைந் தடைமின் றில்லை மாவனந்தன்னை யென்று
நல்விடை யீந்தானென்ப நற்றவ மறையோர் வேந்தற்
புல்லினர் பொற்றே ரேறிச் சடுதியிற் புலியூர் வந்தார்.   (53)
 
728. வந்திடு மந்தணாளர்க் கிரணிய வன்ம வள்ளன்
முந்துசீர் முனிவரானோ ரிருவரு மேவுமுன்னர்
மந்திரம்பல பொன்னாலு மாமணியாலுஞ் செய்வித்
திந்திர திருவுநல்கி யினிதுபசாரஞ் செய்தான்.   (54)

729. மும்மை யாயிரவர் தம்மு ளொருவரைக் காணான் மூத்த
செம்மைசேர் திகிரிமன்னன் றெருமரலடையுஞ் செவ்வி
யெம்மையு மொருவராக வெண்ணிடென் றினியவாக்கா
லம்மையோ டப்பனான நடராசனருள் புரிந்தான்.   (55)

730. மீதவத் தில்லைவா ழந்தணர் செயும் வேள்வியாலு
மோதரு மறைத்தனிப் பேரோதையி னாலுஞ்சூழு
மாதிரத் தொகை விளக்கு மாண்டவேள்வித்தீயாலும்
பாதவத் தில்லைமூதூர் விளங்கிற்றுப் பாரினோங்கி.   (56)

731. சிவன் றிருவடிக்கீழ்ப் பத்தி செழுமறைச் சைவநீதி
பவன்றிருப்  பூசையாதி யுலகெலாம் பயின்றிட் டோங்கத்
தவந்திக ழேமவன்மச் சக்கிரவர்த்தி யென்பா
னிவந்தெழுகடற் பார்முற்று நிகரறச் செங்கோ லுய்த்தான்.   (57)

732. இந்நெறி யுயிர்களோம்பி  யிருந்தன னேமவன்மன்
முன்னவன் கனாவிற் றோன்றி யிவன்பெறு பேறுமுற்றும்
பன்னிட வுணர்ந்த தேவவருமனும் பரம்புசீர்ச்சு
வன்மனுந் தானைசூழத் தில்லை மாவனத்தை யுற்றார்.   (58)

733. சார்ந்த தம்பியர்க டம்முன்றபனிய வடிவங்கண்டே
யார்ந்த பேரழகு வாய்ந்த வமரரைக் கண்டாலொப்பக்
கூர்ந்திடு வியப்பினோடு களிப்புளங் குதிகொண் டோங்கச்
சேர்ந்து கைகுவித்துச் சென்னி சிரத்தையின் வணக்கஞ் செய்தார்.   (59)

734. வணங்கு பின்னவரை மன்னன் கரங்களா லெடுத்து மார்பி
லிணங்குறப் புல்லிச் சேமம்வினா யுபசரித்தா னின்னோன்
குணங்குறி கடந்த மேலோ னருளினாற் கோளார் சீயக்
கணம்பதி னாயிரத்தின் வலிபெற்றுக் காட்சி மிக்கான்.   (60)

735. அளவில் பேரழகினால் வேளனங்கனாய் மறையவென்றே
யிளவரி யேறுபோல விளங்கிள வேந்தலான
வொளிமிகு மேமவன்மப் பெருந்தகை தன்னையொப்பில்
களிமயிற் சாயல் வேந்தர் கன்னியர் காமுற்றாரால்.   (61)

736. குலவுபல் வளங்கொண் டண்மும் யாறுகளோடுகூடி
நிலவுபல் வளங்கொளாழி விளங்கி மேனிமிர் தன்மான
வலகில்பல் வளங்கொண் டண்மு மரச கன்னியரோ டொன்றி
யுலகமன் னவர்கோனானோ னவனிமேல் விளக்கமுற்றான்.   (62)

737. வளங்கெழு மேமமன்ற வாணர் பேரருளினாலே
விளங்குசீ ரணிமாவாதி சித்திகளெட்டும் வீறா
ரிளங்கிள ரரியேறன்ன விரணிய வன்மன் றன்னைக்
களங்கற வொருங்குவந்து கலந்தன நிலந்தன்மாடே.   (63)

738. சித்திசா ரேமவன்மன் றிங்கள் வாண்முகத் தாண்மந்தன்
புத்திரியான சீர்த்திச் சித்திரை புகரில் வேற்கண்
வித்தக மயன்குமாரி சுமித்திரை விறற்குபேரன்
பத்திசா றவத்தாற் பெற்ற பழிப்பில்சீர்க் குந்தியென்பாள்.   (64)

739. புனற்பெரு வேந்தனீன்ற பொம்மல் வெம்முலை வசந்தி
பனிக்களி யமுத மூற்றும் பான்மதி பயந்த வாட்கட்
டனிக்கண் மாமலர்க் கொம்பன்ன விபுலையத் தழல்பயந்த
குனிக்கும் வின்னுதற் காரோதிச் சுலோசனை யெனும்பேர் கொண்டாள்.   (65)

740. பருதியின் மகளாம் யாண ரிராதையப் பழிப்பில் சீர்த்தி
நிருதியின் மகடூ முத்தவாணகை நியதி யென்பாள்
பொருதிறற் பவனனீன்ற பொற்றடமுலைச் சீராசை
திருமயித்திரி மந்தார மஞ்சரித் திருமாதன்றே.   (66)

741. மாசில் வாசுகி பயந்த பத்திரை யெனும்பேர் மங்கை
தேசுடைச் சங்கபாலன் றிருமகள் சுபத்திரைப் பெண்
ணாசில்வேள் பயந்த மாமை மாலதி மதுவினன் பா
ரேசில்சீர்த் தங்கையான மாதவியெனும் பேரேய்ந்தாள்.   (67)

742. வருட பர்வங்களீன்ற வித்தரை விசாலவக்கி
திருநிகர் வரேணி மிக்க திறல்கொ ளாயுடன்றன் றங்கை
பொருவில்சீர்ச் சாமையோடு புகழ் விசுவாவசுப் பேர்
மருவினோன் புதல்வி சாயையெனு மிளிர்வடி வேற்கண்ணாள் .   (68)

743. நற்குலக் கன்னிமார்க ளெனைப் பிறரையு நன்னாளாற்
பொற்புடை யியங்களேங்கக் கடிமணம் புரிதந்திட்டா
னற்புடன் மகம்பல் வேட்டேயறப் பகையாகி வாழும்
பற்பல தீபமன்னர் பகைகெடப் பொருதான் மன்னோ.   (69)

744. திறன்மிகு மாபத் தம்பரொடு சயத்தம்பற் சேர்ந்தே
யறமிகப் பொருது வாகை மாலிகை மலைந்தா னன்றே
யிறை நடராசமூர்த்திக் கியாவரு மிறும்பூதெய்த
மறைசிவ நூலாற் செல்வ விழவெலா மலியச் செய்தான்.   (70)

745. சின்மய மானவம்மை சிவகாமித் தேவியார்க்கு
நன்மை சாலுற்சவங்க ளனைத்து நன்னூலா லேம
வன்மனார் புரிந்தா ரோர்பேர் மாழையின் வண்ணந்தந்த
தன்மையா லிட்டா ரேமசரசெனச் சிவகங்கைக்கே.   (71)

746. இன்னணம் பணிக ளன்பா னியற்றிடு மேமவன்ம
மன்னவர் பெருமானுக்கு நடராசப் பெருமான் மாண்பார்
வின்மலி புட்பகப்பேர் விமானத்துக் கிணையாம் யாணர்
துன்னுசந்திரக நற்பேர்ச்சோதி நீள்விமான மொன்றும்.   (72)

747. வாடுத லின்றி யென்று நறுமணங் கஞற்றும் வண்சீ
ரேடவிழ் கழுநீர்ப் பூவுமமிர்த மாலையு மிருஞ்சீர்
கூடுநீள் சிலையு மம்புக்கூடு நன்னவ விதங்கொள்
பாடுசான் மணிகொளாரப் பரம்பொளி வடமற் றொன்றும்.   (73)

748. மாளுத லில்லா யாணர் மணிகொள் கங்கணமும் வாய்ந்த
காளகூடப் பேர்வாளுங் கருணையா லளித்தானென்ப
வாளுடை வியாக்கிரேச ரருளினாற் புலிக்கா லண்ணல்
வாளுடை மன்னவற்கு வயப்பெருங் கொடியொன் றீந்தான்.   (74)

749. அருளுடைப் பதஞ்சலிப் பேரறிஞர்கள் கோமான் மாண்பாற்
றெருளுடைத் திகிரி மன்னற் கவனியைத் தாங்குந் திட்பம்
வரனுறக் கொடுத்தான் வேந்தன் வசுந்தரை நகர்களிற் போ
லுருளுடைத் தடந்தேர் வானமீது முய்த்தாடி யுற்றான்.   (75)

750. சக்கரவாளந் தொட்டுப் பூமிசக்கரத்தின் காறுந்
தொக்கபல் சனங்களெல்லாந் துன்பொரீஇ நடராசன்சீர்
மிக்கபாதார விந்தப்பத்தியின் விளங்கி யோங்கப்
பொக்கநீங்கிட மாஞாலம் பொதுநீக்கிப் புரந்தானம்மா.   (76)

751. விலைவரம் பறியலாகா மணிகளி னாலுமிக்க
நிலவுசெம் பொன்னினாலு நிருத்தர் சன்னிதியி லெட்டைத்
தலைமிசைக் கொண்டநூறு துலைகொளும் புருடதானம்
பலவிசேடங்கொ டானவகையொடும் பணினான் மன்னன்.   (77)

752. மீதலத் தேவரோடு பூதலத் தேவர்விஞ்சு
மாதரத் தாரவேள்வி யளப்பில செய்தானென்று
மாதனத்தி யாத்திரோற்சவத்தினைச் சிவகாமிக்கு
நாதனற்புத நடேசமூர்த்திக்கு நயப்பிற் செய்தான்.   (78)

753. முருக வேளெனச் சீர்வாய்ந்து முதுக்குறை வுடையநூறு
திருமகார் தம்மைப் பெற்றுச் சீருடை யயோத்தியாதி
வரமிகு தேயந்தோறு மனுநெறி யோம்ப வைத்தான்
விரிகடற் புவியாள் வேந்தர் வேந்தனா மேமவன்மன்.   (79)

754. அந்த நற்குமரரானோ ரனைவரு மளப்பில் சீர்த்தி
யிந்திரச் செல்வமெய்தித் தாமுறை யிடங்கடோறு
முந்தனற்புத நடேசமூர்த்தியைப் பதிட்டை செய்தார் 
சந்ததிக் குழுவினோங்குந் தபனிய வன்ம னென்பான்.   (80)

755. இம்முறை விதியாற் பூசை நடராசப் பிரானுக் கென்றுஞ்
செம்மையிற் புரிவித் தன்பாற் சிவதன்மந் தவந்தியான
மம்மமிக் குஞற்றி நல்லவிராகமுற் றரியஞானங்
கைம்மிகத் தூக்கியாடுங் கழலின்கீழ்க் கலந்தொன் றானான்.   (81)

756. இச்சுப சரிதந்தன்னைச் சிரத்தையி னினிதுதேரு
மெய்ச்சிவ பத்தரானோர்க் களப்பில் சங்கரரா மேலாஞ்
சச்சிதானந்த நித்த தாண்டவ நடேசரானோர்
துச்சவல் வினைகணீக்கிச் சுகானந்தம் வழங்க  நன்றே.   (82)

            வேறு.

757. பதஞ்சலி யிரணிய வன்மன் பாய்புலிப்
பதஞ்சலிப்பறப் பெறுமுனிவன் பார்த்துய
விதஞ்சலி லம்புனை விமலர் செய்ந்நட
விதஞ்சொலி னாமினித் தீர்த்தம் விள்ளுவாம்.   (83)

        ஏமவன்மப்படல முற்றிற்று.

        தீர்த்த விசேடப்படலம்.

758. திகழ் சிதம்பர மகிமையுந் தாண்டவத் திறமு
மகிழ் வொடிங்கு நீவாய்மலர்ந் துரைசெயக் கேட்டியா
முவகையங் கடற்படிந் தனமுரை மனங்கடந்து
மிகுசிதம்பர தீர்த்த மான்மிய முணர்விருப்பேம்.   (1)

759. ஆதலானமக் கருந்தவர்க் கரச வத்தில்லை
மாதலத்துள தீர்த்தங்க ளனைத்துங் கொண்மகிமை
போதமேவுறத் தனித்தனி புரைதப விரித்திங்
கோதுவாயென முனிவரர் வசிட்டன் கேட்டுரைக்கும்.   (2)

760. நன்றுநன்று நீர்கேட்டது முனிவிர்கா ணன்கு
துன்றிமேம்படு மறம் பொரு ளின்பொடு தூய்மை,
யொன்று வீட்டினை யுதவியெவ் வுலகுக்கு மினிதாய்
நின்ற தீர்த்த மான்மிய முமக்கியம்புது நெறியால்.   (3)

            வேறு.

761. தில்லைமா வனத்திற் பாவமனுக்கிடுஞ் சிவதீர்த்தங்கள்
பல்லவுண் டவற்றின் மிக்க பிரசித்தி படைத்து மாண்பார்
சில்ல தீர்த்தங்கள் கொண்ட மான்மியந் தேறநீவிர்
சொல்ல லுற்றன மிப்போழ்து சிரத்தையிற் றொடர்ந்து கேண்மின்.(4)

        ஏமபுட்கரணி.

762. சுருதி மந்திரங்கட் குள்ளே தூய வைந்தெழுத்து மெங்ங
னரிய பேறெல்லா நன்கு பயந்திடவல்ல தங்ஙன்
பெருமைசேர் தீர்த்தந்தம்மு ளேமபுட்கரணிப் பேர்கொள்
வரமலி தீர்த்த மெல்லாச் சித்தியு முடன் வழங்கும்.   (5)

763. ஏம புட்கரணி தன்னின் மார்கழி மாதத்தெய்துந்
தோமி லாதிரை நன்னாளிற் சூரியவுதயப் போழ்திற்
காம மாதிகணீத் தன்பான் முழுகிக் கோதானங் காசின்
மாமை சாலேம தானம் விதியுளி வழங்கி மன்னோ.   (6)

764. மௌனியா யெங்குமாகி வயங்கிடு ஞானானந்தச்
சிவபிரா னடனந்  தன்னைத் தரிசனஞ் செய்வாரீங்கே
யுவமையில் சீவன்முத்தராகுவ ருண்மையீதா
லவமெலா மகற்றி மேலாமருந் தவந் தனமாக் கொண்டீர்.   (7)

765. கரைந்திடற் கரியசீர்கொ ளேமபுட்கரணி தன்னி
னிரந்தபே ரன்பான் மூழ்கித் தென்றிசை யதன்பானீடிப்
பரந்தமா மறையான் மூலத்தானவீசுரரைப் பத்தி
புரிந்து கண்டிறைஞ்சு நல்லோர் புண்ணிய புருடராவார்.   (8)

        பாச விமோசனம்.

766, திகழ்சிவ கங்கையென்று செப்புமித் தீர்த்தக்கீழ்பா
லிகழ்வறு பாசமோசனம் மெனவிசைக்கும் பேர்கொள்
புகழ்பெறு தீர்த்தமொன்று பொருந்துமற் றதுதான் றன்னை
மகிழ்வுடன் மனனஞ்செய்வோர் பவப்பிணி முழுதுமாற்றும்.   (9)

767. வீறுசான் மாசிமாத மகத்தினில் விதியாலந்தப்
பேறுசா றீர்த்தந் தன்னுட் படிந்துறப் பிராகாரத்தை
மாறிலா மௌனியாகி வலம்வந்து மூலத்தானத்
தாறுசான் முடியினானைத் தரிசிப்பா னறுக்கும் பாசம்.   (10)

768. மேலொரு காலத்தின்கண் விப்பிர சித்தியென்னு
ஞாலவேந்தனுந் தரங்க நளிகடற் கிறைவன் றானும்
வேலிரும்படை கைக்கொண்டு கொடுஞ்சமர் விளைத்தார்வென்றி
சாலும் விப்பிர சித்திக்குச் சமுத்திர வேந்தன் றோற்றான். (11)

769. தோற்றவவ் வருணனென்பான் பகைஞனைத் தொலைவு செய்தற்
கேற்றிடு சூழ்ச்சி யாதென் றெண்ணமுற் றிருந்த காலைப்
போற்று மாண் டளப்பானன்ன தறிந்தந்தப் பொல்லா வேந்தற்
பாற்றவோ ருபாயநாடித் துணிந்துற்றான் வருணன் பாங்கர்.   (12)

770. வருணன்மற் றதனையோரான் விப்பிர சித்தி மன்னன்
பொருவதற் கடைந்தானென்று கலங்கினன் பொருவில்பாச
முரனுறக் கொண்டு மாற்றாற் கொல்கின்றேனென் றுள்ளூக்கிக்
குருவின் மேற்கொதித் தெறிந்தான விசார முயிர்க்குக் கூற்றாம். (13)

771. கொடுந்திறற் பாசந்தன்னாற் குரவனெற்றுண்டு மாண்டு
நெடுந்திரைக் கடலில் வீழ்ந்தான் குருகத்தி நேமிவேந்தை
யடர்ந்ததப் பொழுது பன்னீராண்டு காறாலியின்றிக்
கடுந்துயர்க் கடலுண் மூழ்கி யுயிரெலாங் கலக்கமுற்ற.  (14)

772. இப்படி நிகழுங்காலைத் தேவர்களியாரு ஞான
தப்பிரசபையின் மேவுந் தாண்டவப் பெருமான் றன்னை
மெய்ப்பரி வோடடைந்து வணங்கி விண்ணப்பஞ் செய்தா
ரப்பெருங்குறை கேட்டெம்மான் வாய்மலர்ந் தருளிக்கூறும்.   (15)

773. மாசி மாதத்து மூலத்தானத்துக் கெதிரே மன்னும்
பாச மோசனத்தி னீவிர் விப்பிர சித்தி பாறித்
தேசின் மேம்படுமா வேண்டிற் றிரைக்கடற் கரசன்றன்னை
நேசமோ டாடுவிக்க நீங்கிடுங் குருவின் கத்தி.   (16)

774. எம்முடை யாணை யாற்றாற் பொன்னவனுயிர் பெற்றெய்திக்
கொம்மென வெழுமென் றிவ்வா றருள் செய்தான் குழீஇய தேவர்
தம்மனவன் பாற்றாழ்ந்து திருவிடை பெற்றுத்தாவில்
சும்மைசேர் பாவநீக்கத் தூயதீர்த்தத்தை யுற்றே.   (17)

775. மதிமுடி யாணை யாற்றான் மலிபுனற் கிறைவன் றன்னை
விதியின் மூழ்குவித்தா ரங்கண் மிக்கெழு குருவின் கத்தி
கதுமென நீங்கிற்றம்ம வமைச்சனுங் கடிதெழுந்தா
னிதுவியப் பிதுவியப் பென்றி யாவரு மிறும்பூதுற்றார்.    (18)

776. அன்று தொட்டந் தத்தீர்த்த மடர் பாசவிமோசனப் பேர்
நன்றுபெற் றுலகமூன்றுந் துதித்திட னண்ணு ஞானந்
துன்றுசீர் முனிவிரிந்தத் தீர்த்தத்தைத் தொடருங்காதை
யொன்றுளதது பிதிர்ப் பிரீதியை யோங்குவிக்கும்.   (19)

777. மன்னுயிர்த் தொகுதி யண்டப் பரப்பெலாம் வயங்க வீன்றுங்
கன்னிகைப் பருவ நீங்காக் கருணைகூர் சிவபிராட்டி
முன்னொர் நற்பொழுது புண்டரீக மாபுரத்து முன்னோ
னன்னர் மெய்ப்பாதப் போதில் வணங்கினண விலலுற்றாள்.   (20)

778. நீக்கம தின்றி யெங்குநிறைந்திடு நாதகாலப்
போக்கினெவ் வுலகுளாரும் பொருந்துவ ரரியவீடிங்
கூக்கிடிற் பிதிரர் முத்தியுறு நெறிகாணேன் றூய
வாக்கினா லவர்தாம் வீடுமருவுறு மார்க்கஞ் சொல்வாய்.   (21)

779. என்றருட் சிவபிராட்டி யெடுத்திது வினவ ஞான
மன்றமர் பெருமா னன்பு வாய்ந்தமா தேவியேகே
டுன்றுசீர்ப் புரட்டாதிப் பூரட்டாதியு வாவிற்றொக்கே
யுன்றனோ டியாமப் பாச விமோசனத்து தயமாவேம்.   (22)

780. கங்கை காவிரி நற்றுங்கைக வேந்திரசையேர் வாய்ந்து
பொங்கு கோதாவிரிப் பேர்ப் புண்ணியநதி பெருஞ்சீர்த்
துங்கமார்பேனரேகை தூய்மைசால் கிருட்டிணைப்பேர்
தங்குமா நதியே வேகவதி முதற் சரித்தியாவும்.   (23)

781. கொடுத்திடற் கரியசித்தி யெவையவை யெல்லாங் கூறும்
வடுத்தவிர் தீர்த்த மந்தச் செவ்வியில் வழங்கவற்றா
மடுத்ததின் மூழ்கியப் போழ்தெவன் பிதிர்கரும மாற்றுந்
திடத்தவன்பிதிரர்சேர்வர் நம்முருச் சிவையே யென்றான்.   (24)

782. இன்னண மெம்பிராட்டிக் கீசனா ரருளுநீரா
லன்னவேலையிலத் தீர்த்தத்தாடியே கருமஞ் செய்வோன்
றன்னுடைப் பிதிரர் நன்மைதழீஇச் சிவபதத்தைச் சார்வர்
பின்னர் மற்றனைய னெய்துஞ் சிவமென்கை பேசல்வேண்டா.   (25)

        நூபுரநதி.

783. பரிசித்த மாத்திரத்திற் பவங்கெடுத் தான்ம சுத்தி
வரசித்தி யளிக்க வற்றாய் நூபுரநதிப் பேர்வாய்ந்த
பிரசித்த தீர்த்தமொன் றக்கினிதிசைப் பிறங்குமான்றீர்
திரசித்த மேவி மூழ்குஞ் சீரியோர் தமக்குச்சித்தி.   (26)
 
784. உடங்குறவுடனே நல்கு மொப்பிலா நடராசன்றா
நடஞ்செயும் பொழுதொர் ஞான்று நற்றிருவடி யினின்றுந்
திடங்கொ ணூபுரங் கழன்று திருவருளா லிதன்கட்
கிடங்குற வீழ்ந்த தற்றாற் கிடைத்ததிப் பெயரிதற்கே.   (27)

785. ஆடிமாதத்தி லோங்குமணை யிறக்கடுகிப்பேனப்
பீடுசேர் பொன்னிதேங்கிப் பிரவாகித்திடு நற்போழ்திற்
பாடல்சால் குமரனள்ளும் பார்ப்பதி யிடமுமாகக்
கூடுமெம்பிரான் முன்னீதிலாடுவான் வீடுகூடும்.    (28)

        யமதீர்த்தம்.

786. தக்கிண திசையின் மாடே யம தீர்த்தமெனப் பேர்சாலு
மிக்க நற்றீர்த்தமொன்று மேவுமற் றதிலோர் போழ்து
புக்குமூழ் குநர்கண் முன்னர்ப் புரிந்த மாபாதகங்க
ளக்கணந் தன்னின் மாயு மருஞ்சிவப்  பேறுகூடும்.   (29)

787. அந்தகன் மார்க்கண்டேய முனிவனை விரோதித்தந்நா
ணிந்தை  சாறரப்புரிந்த தீவினை யடரநீங்கு
முந்தைநல் லதிகாரத்தை முன்புபோற் பெறுமாறூக்கி
யிந்தநற் றீர்த்தமாடி யெம்பிரா னருளினாலே.   (30)

788. தன்னதி காரமெய்தித் தன்பத மடைந்தா னற்றான்
மன் யமதீர்த்த மென்ன வழங்கிடும் பெயரிதற்கோர்
நன்னர்மா சரிதமுண்டு நற்றவ முனிவிரன்ன
துன்னன் மாத்திரையிற் பத்தியுறுவிக்கு நடராசன்கண்   (31)

789. சீர்த்திசான் முனிவிரந்தத் திப்பிய சரிதங் கேண்மி
னூர்த்துவ பாத தேயத்தோதமிக் கொழுகுங் கோள
மாத்திரு நதியின் மாடத்தி யாசன்னபுரப் பேர்வாய்ந்த
நாத்துதிப் பரியசீர் சானற்பதி மற்றொன் றுண்டால்.   (32)

790. சந்தைசால் வேதநான்கு மோதிடுந் தகுதிசான்ற
வந்தணர் துன்றிவாழுங் கிராமமற் றதனுக்கோர்பான்
முந்துநீளிடையி னீசபதியொன்று முற்பட்டோங்கு
நந்தரென் றொருவ ரந்தச்சேரிக்கு நாதராவார்.   (33)

791. பிறந்தநாட் டொடங்கி யீசன்பிரச நன்மலர்த் தாளின்கட்
சிறந்த வன்புடையராகிச் செய்வினை திருந்தச் செயவே
யறந்தவா மரபினாற்றி யொழுகுவார் பேரியாதி
திறந்தரு தோலியங்கள் சிவாலயங்களுக் கமைப்பார்.   (34)

792. சங்கர னடிக்கீழ்ப் பேணும் பத்தியே தனமதாக
விங்குறப் புரிந்து வாழ்வார் கெடுநெறி யாதுமில்லா
ரங்கணனடியார் தம்மை யவனெனக் கருதியன்பு
பொங்கிட வழிபாடாற்றி யொழுகிடும் புலமை மிக்கார்.   (35)

793. நிருமலன் றிருக்கோயிற்கு நீளிடை வெளியே முன்னின்
றொருமையிற் பாடலாடல் செவிமடுத் துவப்பா ரன்னோர்
திருமலி தில்லை மேன்மை சிவனடியார்கள் சொல்லப்
பரிவுடன் கேட்டுக் கூத்தப்பிரான் கழல்பணிவே னென்பார்.   (36)
--------------------------------------
794. நாடொறு முதயப் போழ்தி னடராசற் றொழுமாதில்லை
கூடுவனென் றெழுந்துந் தொழிறடையாகிக் கூர்த
னேடினர் நாளைப் போவேனென்று நாணீப்பார் நாமம்
பீடுசா றிருநாளைப் போவாரெனப் பெற்றாரற்றால்.   (37)

795. இறைவனார் தில்லைகாணு மாசைமிக் கேறலாலே
கறையிலா நாளைப்போவா ரொருபகற் கடிதெழுந்து
பறழ்கெழு மனையைவிட்டுப் புறப்பட்டா ரதனைப்பார்த்த
வுறவராம் புலையோர்கூடி யினையன வுரைக்கலுற்றார்.   (38)

796. தில்லை மாமறையோர் வைகுந் திப்பிய தல மற்றங்குச்
செல்லுத னீசராய வுமக்கடா திரும்புகென்று
சொல்லினர் தடுத்தார் தொண்டர் பத்தியாற் கேளார் தில்லை
யெல்லையை வல்லையெய்தி யிறைஞ்சின ரெழுந்துநின்றார்.   (39)

797. விரிந்தசீர்த் தில்லைவா ழந்தணர் செயும் வேள்வித்தூமம்
பரந்தெழல் கண்டும் வேதவொலி கேட்டும் பதைபதைத்தே
யிருந்தகை யிதன்கணாயே னேகுதல் கடனன்றென்று
திருந்தத னெல்லையின்க ணின்றனர் சிறந்தவன்பர்.   (40)

798. பத்தியின் மிகுதியாலே விதிநெறி பாராராகிச்
சித்திசா றில்லையுள்ளே சிறிதிடம் போய் வீதிக்கண்
மெய்த்தகை நாளைப்போவார் நின்றிட்டார் கண்டமேலோ
ரொத்ததன் றுமக்கீதுள்ளே சென்றிடவொட்டே மென்றார்.   (41)

799. முற்றுணர் முப்பானூற்று முனிவரரது கண்டுள்ளே
யுற்றிடறகாது வேதவேள்விக ளோம்புவார் சேர்
நற்றல மிதுவாமென்று நயம்பட வுரைத்தா ரன்னோர்
சொற்றிடு முரைகேட் டன்பர் துணுக்குற்றுச் சிறிதுநின்றார்.   (42)

800. எப்படியாலு முள்ளே யேகுவனென்று பின்னுந்
தப்பிலா நாளைப்போவா ரூக்கியு மறைச்சடங்கா
லொப்பில் வேதாகமத் தோடுயர் சூதனொலிமாலைப் பேர்த்
திப்பிய வொலியாலுள்ளே செலப்பெறார் திரும்பியிட்டார்.   (43)

801. திரும்பிய நாளைப்போவார் சிதம்பரத்தினைத் தூரத்தே
யரும்பி மிக்காரு மன்பால் வலங்கொண் டோரிடத்தை யண்மி
நிரம்பிய கவலையோடு மிருந்திந்த  நீசயாக்கை
பரம்பரன் றரிசனத்துக் கிடையூறாய்ப் பவித்ததென்பார்.   (44)

802. ஆகுலக் கடலுளிங்ஙன் றிருநாளைப் போவா ராழ்தல்
சேகுடைக் கனகமன்றிற் றிருநடம் புரிவா ரோர்ந்து
பாகமிக் குடைய வன்னோர் பயில் கனாவிடை வெளிப்பட்
டோகைமிக் கரும்பு மூரன் முகத்தினொன் றுரைப்பா ரானார்.   (45)

803. பத்தியெம் பாலினன்கு பழுத்தமெய் யடியகேட்டி
யித்தனுவோடு முள்ளேயே கன்மாதுமை யன்றானீ
மொய்த்தசீ ரியமதீர்த்தம் படிந்து செந்தீயுண் மூழ்கிச்
சுத்திசே ருடலம் யாருந் துதித்திடப் பெற்றெழுந்தே.   (46)

804. அந்தண ரோடுகூடி யளப்பி லானந்த நீடு
நந்தமா நடனந்தன்னை நயப்பினால் வியப்புநீட
வந்தனை காண்டியென்று மறைந்தனர் நாளைப்போவா
ருய்ந்தன னென்று துள்ளி யுவகையங் கடலுட் டாழ்ந்தார்.   (47)

805. அந்தணர் தமக்குந் தில்லை மன்றுளார் கனவிலண்மி
நந்தனென் றுளனோர் நீச னமக்கன்பு மிக்கானாளைச்
செந்தழற் குளிக்க வேட்டான மன்பெயர்த் தீர்த்தமாடே
வெந்தழ னீவீர்யாரும் வளர்க்கநம் விதியா லென்றார்.   (48)

806. நடராச னாணையீதா நாமெலா மங்கியோம்பக்
கடவேமென் றந்தணாளர் சாதி சங்கற்ப நீத்தன்
புடன் யாருமெழுந்து காலைக்கடன் முறையுஞற்றி நந்த
ரிடமேவி நம்பராணை யெடுத்தவர்க் கினிது கூறி.   (49)

807. அந்தகன் றீர்த்தமாடே  யங்கியை வளர்த்து நன்கு
வந்தவர்க்கூவி யன்பா லையரே மற்றுமக்கா
வெந்தழல் வளர்த்து விட்டேமென்றனர் கேட்டமெய்ய
ருய்ந்தன னென்றன்னோரை வணங்கின ரொருமை யன்பால்  (50)

808. தொழுதெழு நாளைப்போவார் மறலியின் றீர்த்தந் தோய்ந்தே
யெழிலதன் சேதுவின்கண் ணந்தணர் வளர்த்த யாகச்
செழிய தீச்சுவாலை தன்னை வலங்கொண்டு சிவபிரான்றா
ளுழுவலன் பானினைந்தவ் வோங்கு தீயுட்புகுந்தார்.   (51)

809. புக்கவந் நாளைப்போவார் புலையுட லொழித்துச்சோதி
மிக்கமேனியு முந்நூலும் விளங்கு மான்றோலும் யாணர்
தொக்கநற் பலாசத்தண்டுமுஞ் சீபந்தனமுந் தோற்றத்
தக்கநற் பிரமசாரி முனியெனத் தாமெழுந்தார்.   (52)

810. அருமறை வாக்கியத்தோ டளப்பில்சீர்ப் பெரியபஞ்சப்
பிரம மந்திரமும் வாயாற் பிறங்க வுச்சரித்து வேள்வி
யெரியினின் றெழுவார் தம்மை யாக மாபுருட னென்று
திருமலி தில்லைவா ழந்தண ரெலாஞ் சிந்தை செய்தார்.   (53)

811. அந்தர நிரந்து தேவ ரலர்மழை பொழிந்தார் தேவ
துந்துபி முழங்கியெல்லாத் திசையினுந் துன்னிற்றப்போழ்
திந்தமா தீர்த்த மேன்மை யெவைக்குண்டென் றிறும்பூதெய்திச்
சந்தமா மறையோர் யாருந் தரையுற வதைப் பணிந்தார்.   (54)

812. தில்லைமா மறையோர் யாரும் பூசுரச் சிரேட்டராகி
யொல்லையங் கெழுந்த வேதமுனிவரைப் புகழ்ந்தா ரொப்பி
னல்லமா முனிவரன்னோ ருடன்வரநடந் துள்ளேபோய்ச்
செல்வர் வாழ்கின்ற தூயசிதம்பரத்திடை மறைந்தார்.   (55)

813. மறைந்திடக் கண்ட வன்பர் துதியெடுத் தார்த்தார் மற்றச்
சிறந்தமா முனிவரானோர் தூக்கிய சேவடிக்கீழ்
நிறைந்த சாரூப்பியத்தை யடைந்தனர் நேயமிக்க
வறைந்தசீ ரறுபான்மும்மை யடியரு ளொருவரானார்.   (56)

814. சிவபிரா னுடனெஞ் ஞான்றுந் திகழ்கின்றார் சிவணியன்னோ
ரெவர்களித் தீர்த்தந் தன்னை யெய்திமூழ்கிடுவ ரின்னு
முவமை யிலிதனை யாவருளத்தில் வைத்து பாசிக்கின்றா
ரவர்சிவப் பிரசாதத்தை யடைகுவ ரறிவான் மிக்கீர்.   (57)

815. இந்தநல் லியம தீர்த்த மகிமைதா னியாவருக்கும்
புந்திசெய் திடற்பாற்றன்று புகன்றிடி னியாவன் மிக்கு
முந்து மன்பாலிதன் சீர்கேட் டுவக்கின்றான் முன்செய்
நிந்தை வல்வினையினீங்கிச் சிவம்பெறு மவனிறைந்தே.   (58)

816. யாவன்மற் றிதன்கண் மூழ்கி யிணையிலா நடேசன்றன்னை
யோவி லன்போடு சென்று தரிசிக்க லுறுகின்றான் மற்
றாவனற் சாலோகாதி நான்கையு மடையுந் தேவ
தேவன் மெய்யறிவானந்த நடராசனருளின் சீரால்.   (59)

    யௌவன தீர்த்தம்.

817. பொருவில் சீர்த்திசால் யௌவன தீர்த்தமிப் புலியூ
ரொருதென் மேற்றிசை யுளதுமற் றஃதிளம்பருவ
மருவமூழ்குவோர் பருகுவோர் தமக்கெலாம் வழங்கு
மருமருந்து நேரதற்குமோர் காதையுண் டறவீர்.   (60)

818. தம்மைக் கண்டிடு ஞானக் கண்ணுடையர்க டம்மா
லம்மெய்க் காதைதான் புகழ்ந்திடப் பட்டதொன் றறவீர்
செம்மைச்சீர்த் திருநீலகண்டப்பெயர் சிவணு
மெய்ம்மைத் தொண்டரால் விளக்கமுற்றிடுமது மிகவே.   (61)

819. பரந்தசீர்ச் சிதம்பரத்திலே பலகண்ட குலத்தில்
வருந்தகைத் திருநீலகண்டப் பெயர்மருவுந்
திருந்து சீர்த்தியா ரொருவர் மற்றுள ரவர்சிவனார்
பொருந்து கோயிற்கு மட்கலம் வனையு மொப்புரவோர்.   (62)

820. கூறுமற்றவர் சம்புவின் கோயிற்கு முந்நூற்
றாறுபத்து நற்பாண்ட நாடொறும் வனைந்தளிக்கு
மாறிலிப் பெருநியதியர் வனையுமத் தொழிலா
லூறுநற் பொருள் கொண்டு சீவனஞ் செயுமொழுக்கார்.   (63)

821. வெற்பின் மேதக விளங்கு தோற்றத்தராய் விமல
னற்பின் மேம்படு மற்றிவர்க் கன்பினாற் சிறந்த
பொற்பின் மேம்படுகுண விரத்தினாசலை பொருந்துங்
கற்பின் மேம்படு கடிமனைக் கிழத்தி யாயினரால்.   (64)

822. அனைய தொண்ட ரில்லறந் திறம்பாவகை யாற்றி
வினயமோ டரனடியரை மிகவுபசரித்து
முனைவனார் திருப்பணிகளை மரபுளி முயன்றே
யெனைவரும் புகழ் பான்மையிற் செய்துவந்திட்டார்.   (65)

823. அண்டர் நாயக னன்பினிற் சிறந்திடுநீல
கண்ட ரோரிரவினிற் சிவாலயம் புகூஉக்காதல்
கொண்ட வன்பு மேம்படப் பரற்றரிசித்துக் கொண்டு
மண்டுபல் வளமனைக்கு மீண்டனர் புகவந்தார்.   (66)

824. வந்திடும் பொழுதிற் பெருமழையினா னனைந்து 
சிந்தையின்றி யோர்கணிகையின் மனையினிற் சென்று
முந்துவாயிலி னோர்புடை யொதுங்கி முன்னின்றா
ரந்தநீர்மையக் கணிகையின் றாசிமற் றறியாள் .   (67)

825. உண்ட பாத்திரங் கழீஇய நீரினை மனையுண்ணின்
றண்டநாயகர் தொண்டர் மேனியிற்பட வங்கைக்
கொண்டு வீசினள் பலகணியாற் குணநீல
கண்டனார் நனைந் திதுசெய்தார் யாரெனக் கனன்றே.   (68)

826. உரப்பினா ரந்த வோதைகேட் டொளிவளைத் தளிர்க்கைப்
பொருட்பெண் டொய்யென வெளிவந்து புகுந்ததை நோக்கித்
திருச்ச பேசரே நீரென்று திருநீலகண்டர்
விரைக்கண் மென்மலரடி பணிந்தொதிங்கினள் விளம்பும்.   (69)

827. அறிவிலாது செய் யபராத மிதனை யெம்மடிகேள்
குறிகொளா திவண் பொறுத்தருள் புரிகெனக் கூறிப்
பொறுதி யாளரை யழைத்தன ளுட்கொண்டு போந்து
நறியமஞ்சன மாட்டின ணறுஞ்சாந்து திமிர்ந்தாள்.   (70)

828. பின்னும் பன்முறை பணிந்தனள் பெருநீலகண்ட
ரின் முகத்தராய் மகிழ்ந்தவட் கின்மொழி வழங்கி
மன்விரைந்து தம்மனையிடைப் போயினார் மறுவி
னன்மனைத் தையலார் வருநாயகர்க் கண்டார்.   (71)

829. காலம் வைகிட வந்ததுங் கடிகமழ் களபஞ்
சால மேனியிற் றிகழ்வதுங் கண்டு நெஞ்சழன்று
வேலவிங் கலங்கரித்தவர் யாரென வினவ
நீலகண்டனார் புகுந்ததை நிகழ்த்தினர் நெறியால்.   (72)

830. கணவர் கூறிய வார்த்தையை நம்பிலர் காதற்
குணமனைக் கொடியார் குற்றம் புரிந்திட்டீ ரெம்மை
யணுகலீ ரெனவுரைத் தகன்றணித் துகிறன்னால்
வணமிகுத்த தம்மேனியை மறைத்தனர் சினந்தே.   (73)

831. ஆசை மேம்படத் திருநீலகண்ட ரம்மனையார்
வாச மங்கையாற்பற்றி யீர்த்தன ரந்தமனையார்
கூசி யெம்மைநீர் தொடுவிரேற் கோதிலா வாணை
யீசனார் திருநீலகண்டத்தின் மேலென்றார்.   (74)

832. எம்மைநீர் தீண்டிலாணை திருநீலகண்டத் தென்றீ
ரும்மை யோர்காலுந் தீண்டேனினி யென்றாருயர்ந்த வன்பர் 
மும்மை சேருயிர்கள் யாவுமளித் தருண் முதல்விக் கன்பு
செம்மையே பழுத்தமாதர்த் தீண்டிடாமே துயின்றார். (75)

        வேறு.

833. அசிதார விரதமிங்ஙனவ் விருமோரு மோம்பிக்
கசிவோ டில்லற நன்றாற்றிக் கழிந்திட விளமை வாளா
சசிவாழுஞ் சடிலத்தெம்மான் றிருத்தொண்டு தவாதுபேணி
யொசியா வன்புடையராகி யொழுகி வாழ்நாளி லோர் நாள் .   (76)

834. இனையர் மாவிரதந் தன்னை யாவர்க்கு  முணர்த்த வேண்டி
நனையவிழ் கொன்றைவேணி நடராசப்பெருமான் யோகி
யென வடிவொன்று கொண்டு திருநீலகண்ட ரென்பார்
மனைவயிற் போந்தா ரையர்மற் றவர்க்கண்டு தாழ்ந்தார்.   (77)

835. இருந்தகை யுடையீர் நீரென் னிற்கெழுந் தருளலாலே
திருந்து நல்வாழ்வு பெற்றேன் வருந்திறஞ் செப்புவீரென்
றருந்திரு நீலகண்டர் வினாயினாரரிய யோகர்
கரந்தனி லோடுகாட்டிக் கட்டுரை புகலலுற்றார்.   (78)

836. இத்திருவோடு நீண்டகால மெம்பாலிலேயும்
வைத்திருந்தியாங் கேட்கும்போழ்தீகுவீ ரென்றுமாசின்
மெய்த்திரு நீலகண்டர் கரத்தினிற் கொடுத்தார் மேலோ
ரத்திறமாக வென்று திருவோட்டை யங்கை யேற்றார்.   (79)

837. ஏற்றிடுந் திருவோட்டின்கண் முத்திரை யியைய விட்டுப்
போற்றினர் கொண்டுசென்று மனைவயிற் புறம்போந் தன்பர்
நீற்றினால் விளங்குமேனி யோகர்பின் னெடிது சென்றார்
சாற்றிநீர் நில்லுமென்று சிதம்பரஞ் சார்ந்தார் யோகர்.   (80)

838. சிலபகல் கழிந்தபின்னர்ச் சிவயோகியார் தாம்வந்து
மலர்புகழ் நீலகண்டர் தமைக்கண்டு வைத்த வோட்டை
நலமுறக் கொடுக்க வென்றார் நாயனார் வணங்கிப் போந்தே
யிலனிடை முன்னர்வைத்த விடத்தினி லோட்டைக் காணார்   (81)

839. மற்றிது வியப்பா நானோ டெடுத்திலன் வாய்மையீது
சிற்சபை வாணருக்கே தெரியுமிச் செய்தியென்று
நிற்பதற் கிசையார் நெஞ்சம் வருந்தியே வெளியே நின்ற
நற்றவர்க் குறுகித் தாழ்ந்து நடந்த வுண்மையினைச் சொல்வார்.   (82)

840. நாயனீர் நீயிர்தந்த வோட்டினை நானில் வைத்தேன்
மாயமாய் மறைந்ததோடு புதிதொன்று வழங்குகின்றே
னாயது கொள்க வென்றார் சிவயோக ரவண் வெகுண்டு
தீயதிம் மாற்ற நந்தந் திருவோட்டுக் கொப்பின் றென்றார்.   (83)

841. அடியனே னோடு தன்னைத் திருடினே னல்லே னன்ன
கெடுவினை யென்மாட் டின்மை யாவருமறிவர் கெட்ட
படியஃதறியே னெந்தாய் பயமிகவுடைய னாயேன்
கொடுமை மற்றிஃ திதற்கியான் செய்வதென்னெக் குலைந்தார்.   (84)

842. மெய்த்தனி யோக மேலோ ரன்பர் விண்ணப்பங் கேட்டுப்
பத்திநன்குடையீ ரந்தப்பாத்திரங் கவர்ந்திலீரேன்
முத்தவாணகை யில்லாளைக் கைப்பற்றிக் குளத்துண்மூழ்கிச்
சத்தியஞ் செய்கவென்று சாற்றினர் சீற்றமூள .   (85)

843. திருநீலகண்டர் யோகர் செப்பிய மாற்றங் கேட்டுப்
பெருநீர்மை யோகரே நீர் பேசிடும் வண்ணமெல்லாம்
பரிவோடு செய்வே னில்லாள் கையினைப் பற்றலொன்றும்
புரியேனென் னுரைத்தார் கேட்ட புராதனர் புகலலுற்றார்.   (86)

844. மனைவியின் கையைப்பற்றி முழுகிட மாட்டேனென்றீ
ரனைய காரணத்தா னீரே யவ்வோட்டை யபகரித்தீ
ரெனுமிதற் கையமில்லை யினியும்மை விடமாட்டே மியாந்
தனிமறையவர் சபைக்கு வருகவென் றிழுத்தார் தாமே.   (87)

845. இழுத்தனர் கொண்டு வல்லே தில்லை யந்தண ரிருக்கும்
விழுச்சபை தனையடைந்திவ் வேட்கோப ரோட்டைவௌவிப்
பிழைத்தன ரென்றார் நீலகண்டரைப் பெரிய தில்லை
விழுத்தவ வந்தணாளர் பார்த்திது விளம்பலுற்றார்.   (88)

846. திருநீலகண்டரே நீர் சிவபத்த ரென்றுந் தீதில்
பெருவாய்மையாள ரென்றும் பெரிதும் யாமறிது மிந்த
வருயோகர் கொடுத்த வோட்டை யபகரித் திட்டிலீரேல்
விரைவோ டிங்கிவர் சொல்வண்ணஞ் செய்வதே விதியா மென்றார்.   (89)

847. அறிவுடைப் பெரியீர் நீவிர் விதித்திடு மாணை தன்னைச்
சிறியனேன் கடக்கமாட்டேன் சிற்சபை யுடையாரென்ற
னுறுதியைப் பெரிதுந் தேர்வர் சிவயோகியா ருரைத்த
முறைவழிச் செய்வேனென்று மொழிந்தனர் விரைந்து போந்தார்.   (90)

848. பத்தினியோடும் யாரும் பார்த்திடக் குளத்திறங்கி
மெய்த்தகை யாளர் தாஞ்செய் விரதத்தை யெடுத்துச் சொல்லி
யொத்த வேய்த்தண்டு பற்றியுடங்கு நீருள்ளே மூழ்கி
யெத்திறத் தோருங்காண விளமைபெற் றெழுந்தாரம்மா.   (91)

849. ஏமமின் முதுமை நீங்கியாவரும் விரும்பு மின்பக்
காமர்சால் யௌவனம்பெற் றிருவரு மெழுதல்கண்ட
தேமலி தில்லைவா ழந்தணர் சிவனடியாரோடு
தாமதிசயித்தார் தேவர் பூமழை தவச்சொரிந்தார்.   (92)

850. தப்பிர சபேசரானோர் தனிப்பெருஞ் சத்தியோடு
திப்பிய விடைமேற் றோன்றித் திருத்தகக் காட்சியீந்தா
ரப்பெரு நீலகண்ட ரருமனைக் கிழத்தியாரோ
டொப்பிலா வம்மையப்பர் தமைத்தொழு துவகை பூத்தார். (93)

851. அருட்செல்வம் பெற்றோமென்றென் றானந்தக் கடலுண் மூழ்குந்
திருத்தொண்டர் தம்மை நோக்கிச் சிவபிரா னருளிச்செய்யு
மருட்பந்தந் துமிய நீர்செய் மாவிரதத்தை நன்று
பொருட்கொண்டு நுமக்கு முன்னர் வெளிப்பட்டோம் புரையிலன்பீர். (94)

852. நாமே மண்ணோடு கொண்டு சிவயோகியாகி நண்ணி
யேமாற வும்மை வஞ்சித்திட்டன மென்று மிந்தத்
தூமேனி யோடிருந்து சுகவாழ்வு பெறுகவென்று
மாமாதரா ளோடையர் மறைந்து மன்றிடத்த ரானார்.   (95)

853. திருநீலகண்டர் முன்செய் திடவிரதத்தை நீக்கி
யொருவா வன்புடையரான வுயர்மனையா ரோடங்கட்
பொருணீடு தம்மில்லெய்திப் புனித போகங்களாற்றித்
தெருணீடு மக்கடம்மைச் சிறக்கப் பெற்றினிது வாழ்ந்தார். (96)

854. புவிவாழ்வி னினிதுவைகிப் புகலருஞ் சிறப்பு வாய்ந்த
சிவஞானம் விளங்கப் பெற்றுச் சீவன் முத்தியினை யெய்தி
யுவமானமில்லா வீசரெடுத்த சேவடிக் கீழொன்றித்
தவமார் நன்மனையாரோடு தனிப்பெரு வாழ்வு பெற்றார். (97)

855. இன்றுமத் தீர்த்தமெய்தி மூழ்குவோர்க் கிளைமையோடு
நன்றுமெய்ப் பேறுநல்கு நவையிலாத் தானம் பூசை
யொன்றுறப் புரிவோர் மூழ்கியுயர் நடராசன் றன்னை
மன்றடைந் தென்றுமெல்லாப் பெரும்பேறு மருவி வாழ்வார்.    (98)

856. வரம்பில்சீர் நீலகண்டர் வரலாற்றி னோடுகூடி
விரும்புசீர் படைத்தவிந்த வியன்கதை தன்னைச்சுத்தி
யரும்பு முள்ளத்தினோடு கேட்பவரற முன்னான
விரும்பொரு ணான்குமன்ற வெளிதினிற் பெறுவார் மன்னோ.   (99)

857. பாவிப்பார்க் கெளிதிலென்றும் வெளிப்படும் பரிசராகிச்
சேவிப்போர்க் கணியராகிப் பரம்பொருளாகிச் சீர்சால்
வாவித்தா மரைப்போ தொக்குந் திருமுக மலர மன்றார்
தேவுற்ற ஞானக்கூத்தர் திருவருள் பெருக மன்னோ.   (100)

        நாகதீர்த்தம்.

        வேறு.

858. பெரியதாய்ப் பெரும்புண்ணியம் யாவையுந்
தருவதாய் விடந்தன்னைத் தவிர்ப்பதா
யரியநாக தீர்த்தம்மறி வான் மிக்கோர்
பரவ வுற்றது பச்சிம திக்கிலே.   (101)

859. சிறந்த சீர்த்திகொ டீர்த்த மதன்கணே
யறந்தவா மறை யாதிய நன்குதேர்
துறந்துளோர் தொழுந் தூய பதஞ்சலி
யிறந்திடா வரமெய்தினன் மூழ்கியே.   (102)

860. போகி வேந்தன் பிலத்தின் வழிப்புகூஉ
மோக நீக்குமித் தீர்த்தத்தின் மூழ்கியே
யேக நாதன் றிருவரு ளெய்தலா
னாக தீர்த்தப்பேர் நண்ணிற் றஃதரோ.   (103)

        சுவேதநதி.

        வேறு.

861. தூயசீர் படைத்து நீடுஞ் சுவேதமாநதிப் பேர்த் தீர்த்தம்
வாயுவின் றிசையின்மேவு மற்றதன் கரையின் மேனாட்
பாயசீர்ச் சுவேத மேலோன் பகரருந் தவஞ்செய் தான்ம
நாயகனான ஞான நடராசற் கணுக்க னானான்.   (104)

862. பார்திகழ் புரட்டாதிக்கட் சுக்கில பக்கந் தன்னி
னேர்தசமியிற் பொருந்துந் திருவோண நிகரினாளிற்
கூர்சிவபத்தியோ டித்தீர்த்தத்திற் குளிப்போர் போகஞ்
சார்சிவப்பே றிரண்டு மெய்துவர் தவத்தின் மிக்கீர்.   (105)

        குபேரதீர்த்தம்.

863. சீர்த்திசால் குபேர தீர்த்தந் திகழ்தரும் வடாது திக்கி
லார்த்தியோ டாடுவாருக் காயுதப் புண்கண் மாற்று
மேத்துசீ ரதன்கரைக்கட் குபேரன் மெய்த்தவ மியற்றிப்
பேர்த்தனி யீசனார்க்குத் தோழனாம் பெரும்பே றுற்றான்.   (106)

864. தவலருந் திருவில் வைகுஞ் சுராசுரர் தன்னேரில்லாச்
சிவபிரா னாணையா லித்தீர்த்தத்திற் செவ்வாய் மூழ்கிக்
கவலற வுடம்பி னுற்றகழி பெரும்புண்க ணீங்கி
யுவமையில் பரையை யர்ச்சித் துய்ந்தன ரந்தணாளீர்.   (107)

        சிவகங்கை.

865. திருந்து மீசான திக்கிற் சிவகங்கை யென்னுந் தீர்த்த
மிருந்திடு மூழ்குவார்க் கஃதீந்திடுஞ் சித்த சுத்தி
பொருந்துமத் தீர்த்தந் தன்னாற் பொருவிலா மூலத்தானம்
பரிந்து வீற்றிருக்கு மாதிபகவற் காட்டிடுக பண்பால்.   (108)

866. சித்திரை மாதந் தன்னிற் சிறந்த சித்திரை நன்னாளிற்
பத்தியி லிதன்கண் மூழ்குவார் பகைபணிய வாழ்வர்
புத்தியின் சலனம் போக்கிப் புண்ணிய மெய்துவார்கண்
மெய்த்து கோதானஞ் செய்வோர் விளங்கு கோவுலகு சேர்வார். (109)

867. சிதம்பரந் தன்னிலுள்ள தீர்த்த மான்மியத்தை யிங்ஙன்
விதம்படப் புகன்றாந் தீர்த்தமான்மிய மிதனை வேண்டி
யிதம்படக் கேட்போர் கற்போர் புண்ணியராவரே ரற்
புதம் பயிலின்ப யாத்திரோற்சவம் புகல்வா மிப்பால்.   (110)

        தீர்த்தவிசேடப்படல முற்றிற்று.

        யாத்திரோற்சவப் படலம்.

868. சம்புவாகிய தாண்டவப் பிரானுக் கித்தலத்தி
லும்பர் போற்றுசீ ருற்சவம் பன்னிரண் டுளவா
னம்புசீர்ப் பரமானந்த நல்விழா வவற்றை
யிம்பர் நீரறிதர வெடுத்திசைக்குது முறையால்.   (1)

869. மார்கழித் திருவாதிரை நாண் மன்றவாண
ரார்வமிக்க நற்றில்லை வாழந்தண ரமலச்
சீர்கொளத் தனிக்காவிரித் தீர்த்தத்தின் மறைசொற்
றேருறப்புரி யபிடேக மினிதுவந் தாடி.   (2)

870. அனக மன்றினில் விலைவரம் பறிவதற்கரிய
கனகவாதன மேவியே கருணை மீக்கூர்ந்து
புனித நூன்முறை பூசைகொண்டருளி யேழ்திறத்து
முனிவ ரஞ்சலி முகிழ்த்தனர் முன்னின்று பரச.   (3)

871. ஒருதனிப் பராசத்தியாஞ் சிவகாமியுடனே
திருமிகுத்திடு புனிதமா வீதியிற் செல்வ
வருமறைத் தில்லையந் தணரண்மினர் குழுமி
யுரிமையிற் புரியுபசார முவந்து கொண்டருளி.   (4)

872. சிறப்பு மேம்படத் திருவுலாப் போதந்து சீர்சா
லறப்பெருந் தனிக்கனக சிற்சபையினை யடைந்தே
யிறப்பில் பேரின்ப தரிசனங் கொடுத்தினி தமர்வார்
துறப்பின் மேம்படு முனிவிர்கா ளின்னுமத் தொல்லோர்.   (5)

873. இந்தமூ வுலகேத்து தைப்பூசத்தி லுலாப்போ
தந்து மன்றினை யடைந்தமர்ந் தருளியே தந்நே
ரந்தணாளர் கொண் டுவந்து வந்தனர் நிவேதிக்குங்
கந்தமாலிய மடியவர் கொளச் செய்வர் கருணை.   (6)

874. மாசிமூலத்திற் றுவசவாரோகண மன்றா
ரீசராற்றி யீரொன்பதுதின மெழில்வீதித்
தேசுறத் திருவுலாப் போந்து திகழுத் தியான
வாசமண்டபத் துலகெலாம் வாழ வீற்றிருந்தே.   (7)

875. பத்தர்செய் யுபசாரங்க ளேற்றருள் பாலித்
தத்தியைத் தலைக்கூடி மாமகத்து நீராடி
யெத்திறத் தவர்க்கும் பிரசாத மீந்தருளிச்
சுத்தமா மணிச்சோதி மன்றடைந் தருடுறுப்பார்.   (8)

876. சிறந்த பங்குனி யுத்திரஞ் சிதம்பரநாத
ரறந்தவா மறையந் தணர் பூசைகொண்டருளி
யிறந்திடா வளவீதி போந்தி யாவர்க்குங் காட்சி
மறந் தணந்திட வழங்கினர் மன்றணைந் தருள்வார்.   (9)

877. ஏர்மிகுத்திடு சித்திரையின் னிளவேனிற்
சீர்மிகுத்திடு சித்திரை முதற்றிரு வவிட்டப்
பேர்மிகுத்திடு நாளிறுவாய்ப் பெருவீதி
யூர்மிகுத்திடு திருவுலாப் போவர் மன்றுடையோர்.   (10)

878. புண்ணியந் திகழ் வைகாசிப் புனர்பூச முதலா
வெண்ணிடுஞ் சுபவிசாக நாள்காறு மெல்லையில்சீர்
நண்ணிடுஞ் சிதம்பர  சபாநாதனார் வசந்தக்
கண்ணிறைந்திடு முற்சவங் கருணையிற் கொண்டே.   (11)

879. அந்தமில் பலவாலயங்க ளினின்று மாண்டு
வந்தமங்கல பாடகர் முதலியோர் வளஞ்சேர்
சந்த மானந்த மேம்படப் பாடினர் சாரச்
சிந்துசேர்ந் துலகுய்ய வாடினர் மன்று சேர்வார் .   (12)

880. ஆனிமாதத் தினத்தரா மம்பலவாணர்
வானளாவு பொற்றம்பத்தான் வரைந்த மாத்துவச
மேனிலாவிட வேற்றி மாலயன்முதல் விண்ணோர்
ஞானயோகியர் முனிவரர் நாடினர் வழுத்த.   (13)

881. சித்திரந் திகழ் வீதியிற் றிருவுலாப் போதந்
துத்திரத் திருநாளின் மஞ்சனமு வந்தாடி
யெத்திறத் தினர்தமக்கு மானந்த வாழ்வீந்து
மெத்துசீர் மன்றமேவியே தரிசன மீவார்.   (14)

        வேறு.

882. தக்கிணா யணத்துநேரு மாடிமாதத்திற் சாரும்
பக்கமார் கரையின் முத்தப்பருமணி வரன்றி யோங்கு
மிக்க நூபுரப்பேர் யாணர் வியன திக்கரையின் மேவுந்
தொக்கசீர் மண்டபத்தி லுலகெலாந் தொழவமர்ந்தே.   (15)

883. பரிமள தயிலந் தோய்ந்து பகருமந் நதியிலாடி
வரமுறு முனிவர் வானோர் மானிடர் தங்கட் கெல்லாம்
புரைதபச் சுத்தியீந்து பொன்னினம் பலத்தைச்சேர்வ
ருரையொடு மனங்கடந்தே யோங்கு மன்றுடைய வீசர்.   (16)

884. அணிமிகு மாவணிக்கட் டிருவோணத் தச்சபேசர்
மணிவளர் பவித்தி ரோற்சவங் கொள்வர் புரட்டாதிக்கட்
டணிவற வொலிக்குமோதத் தனிப்பாச விமோசனத்தை
னணியருந் தீர்த்தமீந்து சிற்சபை சேர்வர் நம்பர்.   (17)

885. ஐப்பசிப் பூரத்தின்க ணம்பிகைப் பிராட்டியானா
டப்பிலாவற மெண்ணான்கும் வியத்தகத் தானன்காற்ற
வெப்பொருளும் மாந்தில்லை யீசர்பா னிதிகள் பெற்றே
யொப்பிலா வடியரோடு முலாப்போந்து திருவீதிக்கண்.   (18)

886. விளங்குநற் றானம்யாவும் விதியுளி மேவச்செய்து
துளும்புசீர் மறையோராதி யடியர்க்கங் கருள்சுரந்து
வளங்கெழு கோயினண்ணி வானவர் முனிவர் போற்றக்
களங்கறுத் தமரர்க்காத்த நடராசர்க் கலந்து வாழ்வார்.   (19)

887. நாடுகார்த்திகைப் பேர்வாய்ந்த நன்மதியுவாவொ டணமும
பீடுசேரா ரனாளிற் பெரிய தீபோற்சவங் கொண்
டாடுவார் தில்லை நாதரனையர் நல்விழவீ தன்பிற்
பாடுவொ ரென்று நீங்கார் நல்விழாப் பரமவாழ்வே.   (20)

888. பஞ்சவா வரணத்தோடு விளங்கிடும் பைம்பொன் மன்றத்
தஞ்சுபேரறிவு நாடுமன்பர்தங் கண்ணேயாரக்
கஞ்சவாண் முகத்தானந்தக் கௌரி கண்டுவப்ப வாடுஞ்
செஞ்சடைக் கூத்தர் மேலாந் திருவருள் பெருகமன்னோ.   (21)

889. மேதைசான் முனிவிரேமவியன் சபாநாதர் மேன்மை
காதலானீவிர் தேறவியம்பி னாமிதனைக் கற்போ
ராதரவதனாற் கேட்போரடுத்த பல்வினை யனுக்கித்
தீதில்சித்திகளினோடு சிவப்பேறு கூடிவாழ்வார்.   (22)

890. இந்த மான்மியத்தை யோர்காலெனினு மாதரவிற் கேட்போ
ரந்தமா போகம் யாவுமிம்மை துய்த் தளப்பிலா மெய்
விந்தை மூவாறுமுற்று மேலவராகி நீடி
முந்துசீர் படைத்து மேலாம் பயனெலா முறையினெய்தி.   (23)

891. தவந் தானந் தியானம் பூசை தனியோக நியமந் தம்மா
னிவந்துசேர் பயனொடெல்லா விட்டந்தா நினைந்தாங் கெய்தி
யவந்தாழ மன்றவாணர் திருவடிக்கீ ழங்கண்மிச்
சிவந் தாமேயாகி யொன்றி யானந்தந் திளைத்து வாழ்வார்.   (24)

892. மாமறைத் தொகையு மின்னுமளப்பரு மாட்சித்தாய
வேமசிற் சபையில் வாழு நடராசரிணையின் மேன்மை
நாமெடுத் துரைக்கற் பாற்றோ ஞானமாமுனிவீ ரன்னோர்
சேவடிக் கமலங் காட்டுந் திறத்தொரு சில சொற்றேமால்.   (25)

        வேறு.

893. துன்றி வான்முகில் வழங்குக புனனனி சுரந்து
வென்றி வேந்தர் செங்கோன் முறை திறம்பிடார் விளங்க
வென்று மாருயி ரிடரகன் றின்புற விணையின்
மன்றொ டோங்குக வைதிக சைவ மாநிலமே.   (26)

    யாத்திரோற்சவப் படல முற்றிற்று.

    சிதம்பர சபாநாத புராண முற்றிற்று.

 

Related Content

तत्त्वार्यास्तवः - Tattvaryastavah Hymn on Lord Nataraja a

Ardra Darsanam* – The Day Of Mercy

Chidambaram

Song On Lord Nataraja - English Translation

The Symbology Of Sri Nataraja By Sri J. M. S.