logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)

திருச்சிற்றம்பலம்

 கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி என்ற மலைமருந்தன் இயற்றிய

            கலவிமகிழ்தல் துறை

            சந்தக் குழிப்பு

தத்த னத்தத் தந்த னந்தன
தத்த னத்தத் தந்த னந்தன
தத்த னத்தத் தந்த னந்தன
தத்த னத்தத் தந்த னந்தன

    தந்த னந்தன தந்த னந்தன
    தந்த னந்தன தந்த னந்தன

தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன

    தான தந்தன தான தான தந்தன தான
    தான தந்தன தான தான தந்தன தான

                -தனதனாந் தந்ததன தானனா.

                நூல்

கற்ப கத்தைத் தந்து ணர்ந்துபின்
றர்ப்பு தத்திற் சண்மு கன்தனை
பெற்று முத்தித் தந்தி டும்பர
ரற்பு தத்திற் பண்ப யின்றிடு

    சுந்த ரந்தனை வந்த னங்கொள
    வந்த அந்தனன் தந்த ரந்தனில்

கடிய விடமது முடுகி வளரவே
அடிய ரமரர்க ளடிகள் பரவவே

    காள கண்டந்தக ராகி மேலி ருந்தவு லாசர்
    வேளை வந்தடி யேனை யாள வந்திடுநேசர்

சிற்ச பைக்குள் தன்ப தஞ்சலி
மெச்சி நத்திக் கொண்டி றைஞ்சவே
தித்தி மித்திந் தொந்த திங்கண
தத்தி மித்தித் திந்த ணங்குசெ
    
    செங்க ணங்கண டிங்கு டிங்குகு
    திந்தி மிந்திமி தொந்த திங்கண

திமித திமிதிமி தகத தகதக
யெனவு முயலகன் முதுகு நெளிபட

    ஆடு கின்றனர் சோதி வேத ரம்பல வாணர்
    பாத பங்கய மீதில் சீத ரன்பணி நீதர்.

கற்ற வர்க்குத் தன்ப தந்தனை
யுற்ற ளித்துப் பின்வி ளங்குவர்
பத்தர் சித்தத் தில்நி றைந்திடு
கர்த்தர் நிர்த்தத் தில்நி றைந்தவ

    ரந்த னுந்திரு விந்தை மாயனும்
    வந்து வேறுரு முந்து மாறிட

அடியு முடியுமே நெடிது முடிகிய
கடிதி லயன்மொழி கொடிது குறள் சொல
    
    நாத னந்தழல் மேனி யாக நின்றவர் கோபம்
    மேல் வளர்ந்திட வேத னார்ப ணிந்தெதிர் கூற
                        -அடியனேன் செய்ததப சாரமே.


கர்த்தர் சித்தத் தில்வ ளர்ந்திடு
வெப்பொ ழித்துப் பின்ன யன்சொன
தப்பு ரைக்குப் பின்ப ணிந்தெதிர்
நிற்ப வர்க்குச் சொன்மொ ழிந்தனர்.

    கங்கு லும்பக லுந்த வந்தொழும்
    பங்க யன்கொடி யெங்கு மங்கிட

கழறி யடவிள ரருண கிரியினர்
கருது மடியவர் துயர்க ளடுபவர்
    
    கார ணங்கண ணாதர் ஆரணன் தொழு நீதர்
    ஏறு கந்தவி லாசர் நீற ணிந்திடு மீசர்

பத்தி முத்திக் கொண்டு ணர்ந்திட
அப்ப ருக்குத் தன்னு ழைந்தெழு
குத்த லுத்துக் கொண் டுளைந்திட
யுத்தி கற்பித் துங்க ளம்பெறு

    வந்த முந்திட நொந்த வெம்பணி
    சிந்தி முந்தின ரந்த ழந்தனில்

அரிய தமிழ்ருசி பெருக மொழிகுவர்
சலதி சிலையர சிலையை நிகரவே

    தாமெ ழுந்தருள் வாரும் ஞான சிந்தையி னாரே
    யானை வந்தெதிர் பாய வேயெ ழுந்தது வோடி,

கக்கி ஷத்தில் தன்ஜ னங்களை
மொத்தி யெத்திப் பின்பி ளந்தெறிந்
துக்கி மக்கிச் சென்ற ழுந்திட
வெட்கி முக்கிக் கொண்டொ ருங்கினர்

    சிந்தை நொந்துத ளர்ந்து வந்திடு
    தந்தி கள் (யின்) மெ(வெ) ருண்டு வண்டர்கள்

தறுக ணமணர்கள் பறியர் புலையர்கள்
பதறி மனமது சிதறி வெருவினர்

    வேத மன்றிசை வாச லேதி றந்திட வாயி
    லோது செந்தமி ழாசை யாலு கந்தஸர் வேசர்
                        -அசலமேல் லிங்கவடி வாகினோர்.


அற்பு தத்திற் செங்க ரும்பெனும்
விற்பி டித்துக் கைய ரும்பிய
உற்ப லத்தைக் கொண்டெ ழுந்தென
பொற்ப ழுக்கு மென்ற றிந்திலன்

    வெம்பி வம்பினி டும்ப ழிந்திட
    முன்பு வந்திவ ரம்பு சிந்தவே

சனகா முதலினர் பரவ வடதரு
நிழலி னுறைபவர் நுதலில் விழுமழ

    லாலெ ரிந்தனன் மாரன் மாத ழுங்கிய போது
    யீட ழிந்தவன் மீள வேயி ரங்கிய நாதர்

முப்பு ரத்தைக் கண்டி ருந்தவ
ரட்ட திக்குக் கும்மி ருந்தவர்
சித்த மெத்தப் பின்க லங்கியே
கத்தல் முத்தத் திற்ப தந்தனை

    வந்து கந்தனை கொண்டு நின்றவர்
    நொந்தெ ழுந்துமொ ழிந்து நின்றிட

பருதி மதியிரு சகடு கடவிய
சுருதி பரியுயர் சிகர பிரணவ

    மாயெ ழுந்திடுதேரி லேயெழுந்தருள் வார்கை
    மேரு வின்சிலை நாணி யூரு கின்றவன் சேடன்

அச்சு தத்தத் தன்ச ரந்தெரி
வெற்றி பத்தித் தன்ன கண்டெழும்
மந்தி ரத்தைக் கொண்டெ ழும்பவே
சித்த முற்றுத் தன்ன கந்தையால்

    எந்த சிந்தையி றிந்தி டாமலே
    உந்தி மாயனும் வந்த தேவரும்

பதறி வெருவிட லழலின் நகைபுரி
முதல்வர் திரிபுர மெரியு வடிவினர்

    வான விந்திர தேவர் மோன சிந்தையர் கோடி
    சேனை யும்பல ராதி தாள்ப ணிந்திட வீறு
                        -விடையின்மேல் வந்தவி னோதனர்.


அத்தி முத்துக் கும்வ ளர்ந்தவேய்
துத்த முத்துக் கும்வு டும்பகன்
பெத்த முத்துக் குஞ்ச லஞ்சல
நத்து முத்துக் கும்அ ரம்பையர்

    வந்து கந்துயர் கந்து கம்பயில்
    விந்தை கண்டும் கிழ்ந்து மந்திகள்

கரண மொடுபல கனிக ளுதிர்தர
ரமர ரரிவையர் சமர்கள் புரியவே

    பூக செண்பக நாகம் வாழை யிஞ்சி யனேகம்
    பூவி ருந்திடு தேறல் ஆறெ னும்படியோட

மிக்க வெற்புக் குண்த டஞ்சுணை
கொக்கு முக்கிக் கொண்டெ ழுங்கயல்
விக்கி யெக்கிக் கொண்ட ணைந்திட
பக்க முற்றுப் பண்ப யின்றிடும்

    வண்டி னங்கள் மெ ருண்டி ரைந்துப
    ரந்து வந்துபு குந்த விந்தைகள்

அரிவை கருவிழி புருட ருடலது
உருக பகழிநேர் மதன சரமென

    ஓங்கு சுந்தர மேடை பாய்கொ டுங் கொடி யாட
    ஏங்கி நின்றன பானு வாங்கி யங்கெதி ரோட

அட்ட திக்குக் கும்வி ளங்கவே
வட்ட மிட்டுக் கொண்டெ ழும்பிவிண்
முட்டி யெட்டிக் கொண்டு யர்ந்தவர்
சிட்ட ருக்குத் தன்ப தங்களை

    வந்து தந்தும கிழ்ந்தி டும்பர
    நந்தி வண்ணர்சு கந்த மேனியர்

-----------------------
-----------------------

    ----------------------
    சோதி யம்கி நேசர் சோணை யங்கிரி வாசர்

                    -விசையமே கொண்டவரை மேவுமான்


உற்ப லத்தைக் கண்சி யங்கொளு
மற்பு தத்திற் பொன்னி ளங்கொடி
உத்தி தத்திற் பங்க யந்தனை
னத்தி யுத்திக் கொண்டி ருந்திடும்

    நங்கை யென்றெவ ரும்பு கழ்ந்திட
    பெண்கள் வந்துப ணிந்து நின்றிட

சொருகு குழல்மிசை மலரின் சிறுமிகள்
யிசைகள் பயில்தர ரசனை யொழுகிட

    ஏம சுந்தர மேரு வாமெ னும்படி சீறி
    யேயெ ழுந்தவி சால மான கொங்கைகள் மீறு

சித்தி ரத்துக் கும்வ ளம்பெறு
விக்ர கத்துக் கும்மி சைந்திட
ஒப்ப மிட்டுப் பங்க யன்கயன்
மெத்த வொத்துப் பண்பி ழந்ததொர்

    இந்தி ரன்பதி யந்த ணன்பதி
    சந்தி ழைந்தவை குந்த மங்கையர்

இரதி சசியுர குலகி லரிவையர்
எவளு மிவளுட வடிவு தெரிதர

    யீட  ழிந்தனர் வாடி நாடி நின்றனர் கோடி
    பானு வின்குல மோவெண் ணாசை கொண்டயர் வார்கள்.

உத்தி ரத்துக் கும்ந டந்தவி
சித்தி ரத்துக் கும்அ னங்கிளி
மெத்த னத்திக் கொண்டெ னச்சில
நத்தி நத்திக் கொண்ட ரங்குல

    குங்கு மங்கள பங்கள் சந்தண
    மிங்கி தம்பெறு கொங்கை தங்கிட

குலவு வெளிதனி லுலவு நடைபயி
லரிவை துரைமகள் சுரத மயிலவள்

    சோலை வந்தெதிர் காண நாணி நின்றவு லாச
    வேளை கண்டடியேனும் தாள்பணிந் தெதிர் கூற
                        -வடிவேலர் கண்டுமயிலேறுமே.


எட்டி யெட்டிக் கொண்டி தஞ்சொல
எட்டி யெட்டிப் பின்ந டந்தனள்
கிட்டி கிட்டிக் கொண்டி தம்பெற
சட்ட மிட்டுப் பின்ந டந்தனள்

    வந்த னங்கென வந்த சுந்தரி
    விந்தை விந்தைவ ளர்ந்த சிந்துகள்

சரச வயிரவி சொகுசு வளரவே
யுரைசெய் துளமதி லழகு மணவறை

    வீடு சென்றவி லாஸ மாயி ருந்தணை மீதி
    லேயி ருந்துகு லாவி யோது மின்சொல்லி னோத

சக்க ரைக்கொக் கும்வ ளம்பெரு
கக்க னிக்கொக் கும்யி ணங்கிலன்
வெக்க முற்றுக் கொண்டொ டுங்கினள்
பக்க முற்றுக் கொண்டி தஞ்சொலி

    வங்க ணங்கொள யிங்கி தம்பல
    வங்கி ருந்துமொ ழிந்த னஞ்செல

எனது மனதினில் வளரு நிணர்முழு (நினைவுகள்)
முழுது மளவிடை தெரிவள் சருவுவள்

    மேல்வி ழுந்துற வாடி மோக மிஞ்சுவள் பேசி
    ஆக முங்குழை வாக சோக மிஞ்சிய வேளை

உச்சி தத்திற் பண்ப யின்றனள்
மெச்சி மெச்சிக் கொண்டி தம்பெற
முத்த மிட்டுப் பின்ந கம்பட
நித்தி லத்தில் பண்ண ழுந்திட

    நெஞ்சு கத்திற முண்டு கண்டுடன்
    இன்று சென்றது வண்ட ழுந்திட

விரைகொள் பரிமள சுருள்கள் பகருவ
ளொருகை யொருகன பெருகை தழுவுவள்

    ஓசை கண்டுகு லாவி பாத தண்டைக ளாட
    தான ணிந்திடுசேலை யேநெ கிழ்ந்தயல் வீழ
                    - மதனவேள் சண்டைமிக வாகவே

சர்ப்ப மொத்துத் தன்னி தம்பமென்
பொற்ப தற்குக் கண்தொ டர்ந்திட
வெட்க முற்றுத் தன்க ழங்களை
வைத்தொ ளித்துக் கொண்டு ணங் கினள்.

    அங்கெ ழுந்துப தங்கள் ரெண்டினு
    மென்கு றங்குநெ ருங்க ரெண்டுகை

முலையின் முகமது நெருட வுடலது
யுரக வயிர்மயிர் விசிறு சிவடுரு

    வேடு கந்திடு தேரை தானு கந்துக டாவ
    நேசம் வந்துச லாப தான னம்பல போட

உச்சி பற்றிக் கைந கந்தனை
வச்சி ழுத்திக் கொம்பெ ழுந்திட
நச்ச யித்துக் கொண்டு ளந்தனில்
வெஞ்ச னப்ப க்ஷம்வ ளந்திட

    கொஞ்சி யஞ்சுக ரஞ்சு கம்மொழி
    கொஞ்சி நெஞ்சுக றைந்து மிஞ்சுவள்

குலவு கடிதட மதனி லிருவிரல்
முடுகு கரிகர நிலைமை சுழல்விட

    மோக மிஞ்சுத டாகை வேக மென்சொல டாயென்
    சாமி தஞ்சம டாவுன் த்ராணி கண்டன டாமுன்

சத்ர மொத்துக் கொண்டெ ழும்புவள்
வெட்க மிட்டுப் பின்ன லங்க்ருத
சப்ர மொத்துக் கொண்டி ருந்தனள்
சக்க னிக்கொக் கும்ந டஞ்செயில்

    தங்க ணங்கண தொந்தி மிந்திமி
    கெங்க ணங்கண திங்கு தோமென

திரளி னும்பமே மலர்கள் சிதறிட
வளைகள் கவரிட பனிகள் விலகிட

    நூலி னுஞ்சிறி தாக வேது வண்டிடை யாட
    மேரு வின்தன் மான பாத தண்டைகள் கூர
                    
                        -இடையிலே வந்ததிரி பானதே.


சத்தெ ழுப்பிக் கொண்டே னங்குயில்
தத்தை குக்கில் வண்ட னம்புறா
குக்கு டத்துக் கும்தொ டர்ந்தம
யில்கு லத்துக் கும்பொ ருங்குல

    தொண்டை நின்றெழு சங்கெ னும்படி
    மண்டு மென்குரல் கொண்டெ ழுந்தது

குமுத யிருவிழி சுழல முலைமுக
டசைய வரிவளை சிதற மொழி (பல)

    வேறு கண்டது வேர்வை யூறு கின்றது போக
    மாறு கண்டதன் னேரம் தேறு கண்டடை யோகம்

முத்தி றத்துக் கண்சி வந்திட
வத்தி ரத்தி ரள்ந னைந்திட
மெத்த தத்திக் கொண்டெ ழுந்தவி
சித்தி ரத்தைக் கண்ட லங்க்ருத

    மந்த ரங்கம் விளைந்த சொந்தமும்
    விந்தை விந்தை நடந்த போகமும்

அலரும லறியளி யெனவு மிருவர்கள்
ஒருமை வளரவே ரதியு மதனென

    ஓசை கொண்டவு லாஸ மாயி ருந்தஸை யோகம்
    மேத வஞ்செய்த யோக மேவி ளைந்ததின் னேரம்

ஸஜ்ஜ நர்க்குற்றேவி ளைந்துசு
கித்த சித்ரத் தைநி னைந்தும்
கிழ்ச்சி பெற்ற தைஜ கந்தனில்
மெத்த மெச்சிக் கொண்டு கந்தனர்

    யிந்த நங்கை புரிந்தி டுந்தவ
    மெந்த மங்கையர் கொண்டு கந்தனர்

யிருவர் சுரதமு மமரர் கருதினர்
எவர்கள் பெறுவர்க ளதில் அரிதென

    கேர ளிந்திடு னாரும் ஸீதை செந்திரு மாலும்
    வான சந்திர னாரும் மேபு கழ்ந்தஸை யோகம்
                    -இதுவலோ யின்பரஸ யோகமே.


            தொங்கற்றாழிசை

அடியனேன் செய்ததப சாரமே
    அசலமேல் லிங்கவடி வாகினோர்
விடையின்மேல் வந்தவி னோதனர்
    விசையவே கொண்டவரை மேவுமான்
வடிவுவேலர் கண்டுமயி லேறுமே
    மதனவேள் சண்டைமிக வாகவே
இடையிலே வந்ததிரி பானதே
    இதுவலோ யின்பரஸ போகமே.


        அருணாசலேசர் வண்ணம் முற்றும்.

 
            திருச்சிற்றம்பலம்

Related Content