logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)Om symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


திருச்சிற்றம்பலம் திருவண்ணாமலையின்கண் எழுந்தருளியிருந்த குகைநமசிவாய சுவாமிகள் அருளிச்செய்த சொன்னந் தருங்குருவே சோணா சலத்தானே இன்னம் பிறந்தாலு மிப்படிநின் - சன்னிதியை நாடக் கிடைத்திடுமோ நன்னெஞ்சே நாமவரைக் கூடக் கிடைத்திடுமோ கூறு. 1 சம்பா வமுதும் சருக்கரைத்தே னெய்பாலும் தென்பாகத் தந்தருளுந் தேசிகா-என்பார்க்கே வந்தருள் சோணேச வயதுநூ றுங்கொடுத்துத் தந்தருள்வாய் நின்பதமே தான். 2 ஆரிருக்க லாமே யருணேசரே யுலகில் நீரொருத்த ரல்லாமல் நேடுங்கால் -நீரும் பிறவா மலேயிருந்தீர் பின்பிறந்தா ரெல்லாம் இறவாரோ மண்மீ தினில். 3 வானவரு மிந்திரனு மாலொடய னுஞ்சென்று போனவிடம் புன்முளைத்தும் போகாதோ-தானமுதாய் அத்த ரருணேச ரன்பாக நஞ்சுதனை புத்தியுட னுண்ணாத போது. 4 சோணா சலனைத் துதியாமற் றொல்லுலகில் வீணாசை கொண்டிருந்து விட்டோமே-பூணாரம் பெண்டிர்மக்கள் சுற்றம் பெருவாழ் வெனக்கருதி உண்டி தனக்கா யுழன்று. 5 ஓதி யுரைத்தாலு மூண்படுக்கை யற்றாலும் மாதசைத்தன் னெஞ்சின மறந்தாலும்- நீதி வழுவாமற் சோணகிரி வள்ளலே யன்பு தழுவாம லாமோ தவம். 6 அங்கனையார் மேல்வைத்த வாசையிலே நூற்றிலொரு பங்கருணை யீசன்மேற் பற்றினால்-சங்கையற வத்தவின் பம்பெறலா மாராய்ந்து நெஞ்சமே நித்தந் தவம்பெறலா நீ. 7 இந்தவரந் தானே யெமக்கமைய நீகுருவாய் வந்ததிருக் கோலத்தை மாறாமல்-சிந்தைதனில் வைச்சிருக்க வுச்சியிலே வைத்தபதத் தைக்கருத்தில் தைச்சிருக்க சோணாச லா. 8 உண்ண வுடுக்க வொருகுடைக்கீழ் வையமெலாம் பண்ணப் பணந்தேடப் பாவிக்க- எண்ணியிடும் அந்தநாள் பின்னிட் டடியே னுனைத்துதிப்ப தெந்தநாள் சோணேச னே. 9 மண்ணுபொன் னாகாதோ மாற்றான் விலகானோ பண்ணுந் தவங்கள் பலியாவோ-நண்ணுபுகழ் விண்ணும் பரவும் விமல வருணகிரி அண்ணல் புரிந்தா லருள். 10 மானமிலி பொய்யன் மனங்கனிவி லாதபுத்தி யீனனிவ னென்று மிகழாதே-ஞான உருவே யருணகிரி ஓநமசி வாய குருவே யெனையாண்டு கொள். 11 ஆதிமறை தேடரிய அண்ணா மலையாருக் கேதுமுடி யேதடியென் றேத்துவே-நீதி ஒளியே திருமேனி யும்பருக்கு மெட்டா வெளியே யவரிருக்கும் வீடு. 12 ஆயாசந் தீர்க்கு மருணேச ரேதமியேன் மாயாம லொன்றுதர மாட்டீரோ-ஓயாமல் ஊசலுக்கு நேரா யுழலுமனந் தானொருவர் வாசலுக்குப் போகா வரம். 13 பல்லுயிரைக் கொன்ற பழிநீங்கு நீங்காத புல்லறிவு நீங்கும் புலைநீங்கு-கொல்லவந்த கூற்றுவனு நீங்கும் குவலயத்திற் சோணகிரி போற்றுந் தவத்தோர்க்கப் போது. 14 சிந்தையினால் வாக்கினால் செய்தொழிலால் பார்வையினால் வந்தபிறப் பிறப்பும் வன்பிணியும்-எந்தைகுரு நாதனெனச் சோணகிரி நம்பனென மால்தேடும் பாதனெனப் போமே பறந்து. 15 பொல்லாத வென்பிறவிப் புண்ணுக் கொருமருந்து சொல்லா யருணகிரிச் சோதியே- எல்லாரும் போற்ற நடம்புரியும் புண்ணியா நான்மறைகள் ஏற்றுஞ் சிவலோக னே. 16 சூலங் கரத்திருக்கச் சோதிமழு மானிருக்க ஆலமுண்ட கண்டத் தழகிருக்க-வேளை விழித்த விழியிருக்க மெய்போக ராயா தரித்ததென்ன தாமதமோ தான். 17 அடைக்கலமாச் சோணகிரி யப்பனடி சார்ந்தோம் கடைப்பிறவி முந்நீர் கடந்தோம் -படைக்குமந்த முண்டகனை யும்மதியோம் மூரிக் கடாவெறும் கண்டகனை யும்மதியோங் காண். 18 இந்தப் பிறப்பி லிரங்காத தேவரீர் எந்தப் பிறப்பி லிரங்குவீர்-சிந்தைக் கனியே யருணகிரிக் கண்ணுதலே பொல்லாத் தனியே னிடர்தீரத் தான். 19 ஆயபிணி முந்நூற் றறுபதுக்குங் கூடாகி மாயுமுட லைச்சுமக்க மாட்டேனே -தோயுமதி அப்பணியும் வேணி யருணேசரே தமியேற் கிப்பிறவி மாற்றீ ரினி. 20 பொழுதுதிக்கச் சாமமெனும் போதே யெழுந்து முழுகிவெண் ணீற்றினின் மூழ்கி- தொழுதுனது பொன்னான சேவடியைப் போற்ற விறைஞ்சருணை மன்னா தருவாய் வரம். 21 வையமுழு தும்படைத்து வாழு மருணகிரி ஐய னமைத்தபடி யெல்லாம்- நொய்யமனம் நூறா யிரமாக நோக்கிடினு மெள்ளளவு பேறா ததிற்குறை யாது. 22 ஆகா வழியே யடியேன் பிறந்திருந்து போகா வழியருளப் போகாதோ-வாகா வருணையனே யன்பர்க் கனவரத மான கருணையனே கண்பார்த் தருள். 23 சையிலே நீயிருக்கக் கன்னெஞ்ச னேனுலகப் பொய்யிலே வீழ்ந்தழிந்து போவேனோ-மெய்யிலே நீறா வுனைத்துதிக்கு நேசருளத் திற்கருப்பஞ் சாறா மருணா சலா. 24 நெற்றிவிழி கண்மூன்று நித்திரையோ சோணேசா பற்றுமழு சூலம் பறிபோச்சோ-சற்றும் அபிமான மின்றோ வடியார்க ளெல்லாம் சபிமாண்டு போவதே தான். 25 ஆண்ட குருவை யறியாத மானிடர்கள் தூண்டி லிடவொருத்தி தோன்றினாள்- நீண்டபுகழ் திக்கெல்லாம் போற்றுதிரு வண்ணா மலைதனில்வாழ் எக்கலா தேவி யிவள். 26 குற்ற லரிசி குறைந்தநாட் போதாதோ வெற்றிலைக்குங் கேடுவர வேண்டுமோ-நித்தநித்த மண்ணா மலைநாதா வைம்ப தரைக்காசுக் கெண்ணிவிற்ற தற்குவந்த தென். 27 கோள ரிருக்குமூர் கொன்றாலுங் கேளாவூர் காளையரே நின்று கதறுமூர்-நாளும் பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூ ரழியாவூ ரண்ணா மலை. 28 வீடுதருஞ் சோணகிரி வித்தகனார் சத்தியுடன் நீடுதே ரேறியவர் நிற்கின்றார்- ஓடி வடம்பிடிக்க வாருங்கள் வந்தவர்க்கு முத்தி யிடங்கிடைக்கும் பாருங்க ளின்று. 29 பூமாலை சாத்திப் புவிபுகழ்சோ ணாசலர்க்குப் பாமாலை சூட்டிப் பலகாலு-நாமாலை பண்ணா யிரம்பாடிப் பார்த்திருக்க நாயேற்குக் கண்ணா யிரம்வேண்டுங் காண். 30 எனக்குத் தனக்கென் றிகலியைந்து பூதம் தனக்குத் தனக்கே தலையாய்-மனக்குவசம் ஆவதில்லை சோணகிரி யையர் விதைநீக்கப் போவதில்லை போகாப் பொறி. 31 போகாப் பொறியாய்ப் புலனைந்துங் கூடியவித் தேகாதி தள்ளுகைக்குந் தேட்டமா-யோகா விருக்கு மருணகிரி யீசா விதனை யுருக்கும் வகையே துரை. 32 தாயிலுநல் லாரினிய தந்தையினுந் தானல்லார் ஆயிலரு ணேச ரடியேற்கு-மாயவுடல் நோகப் பொருந்துவரோ நூறு வயதிருந்தும் சாகப் பொருந்துவரோ சாற்று. 33 பத்தர்களை வரவென்றும் பாவிகளைப் போவென்றும் முத்திவழி யீதென்று மூதலிக்கும் -சத்தியமே அன்னவயல் சூழருணை யண்ணாமலை நாதர் சன்னிதியி றூதுதிருச் சங்கு. 34 நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுதவன்றன் இச்சையிலே தானு மிருப்பதுவும்-பிச்சைதனை வாங்குவது முண்பதுவும் வந்துதிரு வாசலிலே தூங்குவதுந் தானே சுகம். 35 திருவருணைத் தனிவெண்பா முற்றும். திருச்சிற்றம்பலம்

Related Content

திருவருணைக் கலம்பகம்

அண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)

உண்ணாமுலையம்மன் பதிகம்

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சு

திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த