logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )Om symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


திருச்சிற்றம்பலம் இரட்டைப்புலவர் இயற்றிய காப்பு நேரிசை வெண்பா சாற்றரிய வாயிரக்கான் மண்டபத்தின் சார்வாக ஏற்ற முடனே யினிதிருந்து - போற்றும் விறல்விகட சக்ர விநாயகனை யேத்துந் திறல்விகட சக்ரா யுதம். கலிவெண்பா ஏகாம்பரநாதர் இயற்பெருமை 1. நிலம்போற்றும் பைந்துளப நீலப் பொருப்பும் பொலம்போற்றும் போதிற் பொருப்பும்:-நலம்போற்றும் 2. மேருப் பொருப்பொருதன் வெள்ளிப் பொருப்பிலிரண் டாரப் பொருப்புடைய வன்னமுடன் :- சேர 3. விருந்து மனமகிழ்வுற் றெப்போது மின்பம் பொருந்தி யுறைகின்ற போதிற் :- கரந்தையினி(து) 4. தேந்துமுடி யோனுடனே யின்பநகை யாடிவளைக் காந்தளிணை கொண்டுதிருக் கண்புதைப்ப:-வாய்ந்த 5. படியும் விசும்பும் பரிதிமதி காணா(து) அடையு மிடையிருளே யாகி : நெடிதூழிக் 6. காலஞ் சிறிது பொழுதிற் கழிதலாற் சீல முனிவர்க்குந் தேவர்க்குஞ் :- சால 7. மறையவர்க்கும் வேதம் வகுத்த தொழிலெல்லாங் குறைவுபட்ட தென்றிறையுட் கொண்டு :- செறியளக 8. ஓவியமே நின்னா லுலக நெறிமுறைமை யாவுங் குறைவுபட்ட தீங்கதற்கு :- மேவியநல் “அம்பிகை செய் பூசனை" 9. வேதா கமத்தில் விதித்தபெரும் பூசைதனைப் போதார் குழலாய் புரிகென்ன :- வீதெமக்கு 10. வாய்த்த தெனவிரும்பி வானோரை நஞ்சுண்டு காத்தபெருமான் கழலிறைஞ்சி :- யேத்தி 11. மடமாது நின்னை வழிபடுவதற் கான விடமாவ தேதருள் செய்கென்ன :- விடையோனுந் 12. தென்பால தான திசையிற் றிரைவீசு நன்பாலித் தண்டகநன் னாட்டகத்து :- முன்பாக 13. வோது திருநகரி யோரேழி னுஞ்சிறந்த ஆதி நகர்காஞ்சி யந்நகரிற் :- போதநலம் 14. மன்னி வளர்வதொரு மாவுண்டு) அதன்நிழற்கீழ்க் கன்னி யெமையுனக்குக் காணலாஞ் :- சொன்னபடி 15. யாகம பூசை புரியவினி தவ்விடத்துப் போகவென வமரர் போற்றிசைப்ப :- வேகிப் 16. பொருப்பரைய னேவலொடு போந்துபல கோடித் திருத்தகு மாதருடன் சேர :- விருப்புடனே 17. தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்தவுயர் நன்றுதிகழ் காஞ்சி நகரெய்தி :- வென்றியிபம் 18. ஒன்று குறுமுயக் கோடு மிடம்பார்த்து நின்றுவிடுங் காஞ்சி நிழல்பார்த்து:- சென்றடைந்தோர் 19. தாம்பிறரைக் காணலாந் தம்மையவர் காணாமல் ஆம்பரிசு நல்கு மகம்பார்த்துக் :- காம்பொன்றின் 20. மூன்று முளரி முகிழ்க்குந் தடம்பார்த்துத் தோன்றுமலர்த் தீபச் சுடர் பார்த்துத் :- தான்றன் 21. இடத்து நிழனோக்கி யாவருங் காணாப் படுத்து மொருகிணறு பார்த்துக் :- குடக்கோடிக் 22. காண வரிதாய்க் கரக்குநதி பார்த்தமரர் பேணுலகத் துய்க்கும் பிலம்பார்த்துக் :- காணரிய 23. செம்பொனிற நல்குஞ் சிலைபார்த்துத் திண்காரி வெம்பரியூர் செண்டு வெளிபார்த்துக் :- கொம்பிற் 24, கடிக்கமலப் போதுங் கழுநீருஞ் சேரப் படைக்குமொரு பாடலமும் பார்த்து :- நடுப்புகுந்தோர் 25. தோற்றங் குரங்காக்குந் தொல்லையிடம் பார்த்ததனை மாற்றுங் கடவுண் மடுப்பார்த்துக் :- கூற்றால் 26. இறவா இடம்பார்த் திறந்தவர் பின்வந்து பிறவா விடம்பார்த்த பின்னர் :- செறிதரங்கக் 27. கம்பை நதியின் கரையணுகிக் காண்டகைய பைம்பொழில்சூழ் எம்மருங்கும் பார்த்தருளி:-யெம்பிரான் 28. யாமா தரவோ டிருப்போ மெனச்சொன்ன தேமா வடிநிழலைச் சேர்ந்தருளிக் :- கோமானை 29. நாமினிது பூசிக்க நல்லவிட மீதென்று பூமருவு தெய்வப் புனலாடித் :- தாமாகக் 30. கம்பை மணலைக் குவித்துக் கசிந்துள்ளம் எம்பெரு மாட்டி யினிதிறைஞ்சித் : தம்பழைய 31. சேடியர்க ணிற்பத் திருச்சூ டகக்கையாற் றோடவிழ்பூக் கொய்து தொடுத் தணிந்து :- கூட 32. விரவுந் திருவுருவில் வெண்ணீறு நெஞ்சிற் றிருவஞ் செழுத்துந் திகழ :- வுரிமையுடன் 33. அந்தமில் பூசையின்மே லாளுடைய நாயகிக்குச் சிந்தை யொருப்படவே செல்லுநாள் :- இந்துநுதல் “தழுவக்குழைந்த பிரான்" 34. ஆதிக் குலமடந்தை யன்புடைமை முன்புபோற் சூதத் திருநிழலோன் சோதிப்ப :- மோதிக் 35. கரைபொருது கம்பைநதி கற்பாந்தந் தன்னில் விரிகடல் போற்றரங்கம் வீசி :- யிருசுடரும் 36. விண்ணும் பொலன்சக்ர வெற்புங் குலகிரியு மண்ணும் புதையவரப் பண்ணி :- யெண்ணிறந்த 37. வாரிடத்து மெவ்விடத்து மெப்போது முள்ளபிரா னோரிடத்துத் தாமு மொளித்திருப்பப்:-பாரிடமு 38. மேனை யமர்நாடு மேகோ தகமாக வானபெரும் பெருக்குக் கஞ்சாதே:-வானவர்கோன் 39. செச்சை நிகருடம்பிற் செம்பாதி யாகியதன் பச்சை யுடம்பருமை பாராதே :- யிச்சையுடன் 40. றேசுதரும் பழைய திவ்யா கமப்படியே பூசைதனை யொழிந்து போகாதே :- மாசிலா 41. வன்புடைமை தன்னை யகன்றா லரன்மேனி யென்படுமோ வென்பதனை எண்ணியோ:-தன்பழைய 42. பெண்மையோ வன்போ பிறப்போ பெருங்காதற் றிண்மையோ கற்போ தெரிகிலேம் :- உண்மை 43. மறைபடைத்த மேனி வளையான் முலையாற் குறிபடுத்தி மார்பு குழைய : நறைபடைத்த 44. தாழ்ந்த புரிகுழலா டானாக வம்மணல்மேல் வீழ்ந்து தழுவ வெளிப்பட்டோன் :- சூழந்தமரர் 45. மீளா வடிமை விலையா வணங்கொடுக்குந் தாளான் அரிபிரமர் தம்பிரான் :- ஆளாய "அருளழகன்" 46. தொல்லைத் திருக்குறிப்புத் தொண்டன்றலைமோதக் கல்லிற் புறப்பட்ட கையுடையோன் :- வில்லால் 47. வசையின் முடிமேன் மதியாமன் மோத விசையனோடு பொருத வீரன் :- பசியாற் 48. பதறியொரு சிறுவன் பால்வேண்டப் பாலின் உததி கொடுத்த வுதாரன் :- துதிபெருகத் 49. தேவர் நெருங்குந் திருப்பங் குனித்திருநாண் மேவிய வேத விழாவொலியிற் :- றாவிக் 50. குலாவு பலபொற் கொடிவீதி யெங்கும் உலாவிவரு நாளி லொருநாள் :- நிலாவியசீர் 51. எவ்வா னவரு மிறைஞ்சும் பெரும்பூசை திவ்யா கமப்படியே செய்ததற்பின் :- மைவானி 52. லாறு தொடவுயர்ந்த வாயிரக்கான் மண்டபத்தி லேறி யருளி யினிதிருந்து :-சீறியெழக் 53. காணுந் தொறுமொருதன் கண்மூன் றினிலிரண்டு நாணுந் திருக்காப்பு நாணணிந்து :- சேணுலவு 54. மைவாரி மேகம் வளரும் பிறைபடைத்த செவ்வான மீது திகழ்ந்ததென :- வெவ்வாயுந் 55. தோடு விரியிதழிச் சூழறனிற் பல்கோடிப் பாட லளிகள் படிந்ததென :- நீடுமிரு 56. பாலும் வெயிலுதவு பத்மரா கக்கிரிமே னீல வொளிபோய் நிறைந்ததெனக் :- கோலமுடன் 57. அன்றுதிருச் செங்காட் டணிந்ததிருச் சட்டைதனை யின்று மணிந்தா ரினிதென்ன :- வொன்றாக 58. வெம்மை யுடையா னிருபா கமுமெங்கள் அம்மை திருமேனி யானதெனத் :- தம்மின் 59. முயங்கக் கிரிமான் முலைகுழைத்த மெய்யிற் றயங்கத் திருச்சாந்து சாத்தி :- யுயர்ந்த 60. நனைத்தண் டுழாய்மௌலி நாபியில்வா ழன்ன மெனைத்து மறியா விடத்தே :-தனக்கடையச் 61. சம்பு குலத்தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்துத் :- தம்போ 62. னிகரற் றவரிவர் நீங்கா விடத்தே மகரக் குழையங்கு வைத்துத் :- திகழமரர் 63. சாத லொழித்தற்குச் சான்றிருக்கு மவ்விடத்தே சோதிமணிக் கட்டுவடஞ் சூழ்வித்துப் :- போதப் 64. பதும வளைத்தழும்பு பட்ட விடத்தே புதுவயிரக் கேயூரம் பூட்டித் :- திதலை 65. பரந்து வளர்கடவுட் பச்சைக் குரும்பை யிரண்டுகுறி யிட்ட விடத்தே :- குனிப்பின் 66. காணிப் பிறைநிலவோ கங்கா நதிப்புனலோ வேணிப் புரையிருபால் வீழ்ந்ததெனச் :- சேணிற் 67. பனித்தா ரகையின் பரிசன்ன முத்தின் றனித்தாழ் வடம்விளங்கச் சாத்திக் :- குனிப்பில் 68. தீதிருந்து மபினயமுந் தெய்வத் துடியு மிருங்கனலும் வாழு மிடத்தே :- பொருந்தப் 69. பிறந்த விளம்பரிதிப் பேரழகு மட்கச் சிறந்த கடகஞ் செறித்து :- நுறுங்கப் 70. பிசைந்துபிசைந் துண்ணவொரு பிள்ளையறுத் தாக்க விசைந்துபசி தோன்று மிடத்தே :- விசும்பின் 71. முதிரு மிருளை முனிபதும ராகக் கதிருதர பந்தனமுங் கட்டி :- மதுரைப் 72. புரவி திகழிடத்தே பொற்பதும ராகத் திருவுடை யாடை திருத்தி : பரதவிதக் 73. குஞ்சிப்பும் நல்லநிலைக் கூத்துந் திகழிடத்தே செஞ்சித்ர ரத்னச் சிலம்பணிந்து :- துஞ்சிச் 74. செலவுற்ற வானோர் சிரந்தொடுக்கு மாலை யிலகிக் கிடக்கு மிடத்தே :- குலவு 75. மதுமிக்க கல்லார மாலை யுடனே யிதழித் திருமாலை யிட்டு :- மதில்பொருத 76. தம்பொற் சிலையைத் தலைக்கொண் டனரென்னச் செம்பொற் றிருவா சிகைசேர்த்து :- விம்ப 77. விரவி யிடைதா னிலங்குவதே யென்னப் பரவுமணிக் கண்ணாடி பார்த்துச் :- சுருதியினான் “இசைப்பா விருப்பன்" 78. மூவாத பேரன்பின் மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும் :-பாவனையாற் 79. போதவூர் கண்ணீர் புளகத் துடனணிந்த வாதவூ ராளிதிரு வாசகமும் :-பாவனையாற் 80. வேட்டென் றெழுதா விருபிறப்போர் கற்கத்தான் பாட்டுண்ட நாலு பழங்கவியுங் :- கேட்டருளி “சூழவருந்தெய்வத்தொளி" 81. ஐங்கைப் பவளநிறத் தானைப் பெருமானுஞ் செங்கைச் சுடர்வடிவேற் சேவகனு :- மெங்கு 82. நிறைபூதஞ் சூழ நிலமெல்லாங் காப்ப மறைஞாளி யேறிவரு வானும் :- நிறையருளாற் 83. றுண்ணெனத்தே வர்க்குச் சுதைபகுத்த மோகினியாம் பெண்ணிடத்தில் வந்து பிறந்தோனும் :-பண்ணுமக 84. மங்கும் படிக்கழற்கண் வாய்ந்திலங்குந் தம்முடைய திங்கணுதல் வேர்விற் செனித்தோனுந் :- துங்கமுடி 85. கொண்ட கடவுட் குளிர்கொன்றைத் தாருமுடித்து உண்ட பரிகலத்தி லுண்டோனுந் :- தண்டமிழான் 86. மண்புகழப் பாடி மறையூரி லாண்பனையைப் பெண்பனை யாக்கிய பிள்ளையுந் :- திண்பிடித்துப் 87. பாழி யமணரிடும் பாரச் சிலையுடனே யாழி தனின்மிதந்த வன்பனுஞ் :- சூழுமிருட் 88. பாதி யிரவிற் பரவைக்குஞ் சங்கிலிக்குந் தூது நடப்பித்த தோழனுந் :- தீதில் 89. வழுக்கில் பெருந்துறையில் வாழ்வித்த கோலங் கழுக்குன்றிற் கண்ட கவியும் :- வழுத்துநர்க்குப் 90. போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி யாதியுலாவோ டமைத் தோனுஞ் :- சோதிமணி 91. மன்றி னருகு மலர்த்துழாய் நாறுமிடங் கொன்றை கமழ்வித்த கொற்றவனு :- மென்றும் 92. புடைமருவு தன்னிழலிற் போகாத பேயை யிடைமருதி லிட்ட விறையு :- மடையத் 93. துயர்கடந்த தொண்டத் தொகையதனி லேனைச் செயல்சிறந்த தொண்டத் திரளுங் :- கயிலைதனிற் 94. றந்தாள் படாமற் றலையால் நடந்துபோ யந்தாதி யாற்புகழ்ந்த வம்மையு :-மிந்தநிலங் 95. கோட்டி வளைத்தெடுத்துக் கூட்டிக் குலைத்தடுக்கிக் காட்டவல்ல பூத கணவரு :- மீட்டுநல 96. மெண்ணு மொருநாற்பத் தெண்ணா யிரவரெனும் புண்ணிய வேடப் புனிதரு :- நண்ணரிய 97. வோரா யிரத்துத் தொளாயிரரென் றூழிமுதற் பேரா நிமந்தப் பெருமையருஞ் :- சேர 98. வுரிய விதிமுறையோ டுள்ள முருகிப் பொருவரிய வன்புடனே போதச் - கரரைத் "வாசலில் நந்தி" 99. திருவா சலினந்தி செங்கைப் பிரம்பால் நிரையாக வெங்கு நிறுத்தி :- வருவார் 100. கழற்சே வடிபணிந்து கண்களிப்ப முன்னே யெழச்சே வியுநீங்க ளென்ன :- முழக்க 101. விருப்பதுவும் வெள்ளிமலை யென்னாமற் செம்பொற் பொருப்பினும் மேறினார் போல :- விருப்பால் “திருத்தேரில் மேவினார்" 102. வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன் கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு :- முடித்தநதி 103. யாடும் விசையி லலையெழுந்து தன்மீதில் நீடும் வகைசுழித்து நின்றதெனக் :- கூட 104. விருகதி ரஞ்ச வெறிக்கு நிலாவின் ஒருதனி வெண்குடை யோங்க :- விருபாலுங் 105. கங்கை நதியிற் கரைபுரண்ட சீகரம்போன் மங்கையர்கள் வெண்சா மரையிரட்ட:- வெங்களையும் 106. இட்டாலோ பூணாக வென்றுரக மாடுவபோற் பட்டால வட்டம் பணிமாற :- விட்ட 107. வெருது மராமரமு மெவ்வேழுஞ் சாயப் பொருத விடைக்கொடிமுன் போத :- வருவதொரு 108. மேருக் கிரிதொடரும் வெள்ளிக் கிரியென்ன மூரிவிடை யெம்பிரான் முன் போதப் :-பேரிகை "பல்லியம் முழக்கம்" 109. சல்லிகை மத்தளி தண்ணுமை பண்ணமை பல்லிய மெங்கும் பரந்தார்ப்ப :- வல்லபடி 110. வாணன் குடமுழா வாசிப்ப மாமதுர வீணை யுததி மிகவுயிர்ப்ப :- பேணும் 111. பரிசி றமதுசெவிப் பாண்சேரி பெற்ற விருவ ரிசைபாடி யேத்தச் :- சுருதியெழு 112. மின்னரம் பேழு மிசை ததும்ப வெம்மருங்குங் கின்னரர் தங்கள் கிளைபாட :- முன்னரிடும் 113. பேரிகை யோசை பிறங்கமிகத் தாரையுடன் மூரி வலம்புரி முன்முழங்க :- வாரங் "திருச்சின்னம் முழக்கம்" 114. குளித்தவதி பாரக் கொங்கைத் தழும்பும் வளைத்தழும்பும் பெற்றபிரான் வந்தான் :- கிளைத்தசடை 115. யேகாம் பரநாதன் வந்தா னிகல்விடையின் பாகாம் பழையபரன் வந்தான் :-மாகத் 116. தெழுமிரண்டு பேரொளியு மெப்போது மஞ்சி வழிவிலங்கு மூருடையான் வந்தான் :-சுழிகொண் 117. டலையும் பகீரதிநின் றார்க்கின்ற சென்னி மலையன் றிருமருகன் வந்தான் :-கலைதேர் 118. பரிசிலிரு வர்க்கும் பகல்விளக்குங் கண்ணும் வரிசையுட னளித்தான் வந்தா :- னொருவயிற்றில் 119. வாரா வுடம்புடையான் வந்தா னெனமறுகிற் சீரார் திருச்சின்னஞ் சேவிப்ப :-வேரிமிகத் “தேவர் தம் ஊர்திமேல் சூழ வந்தல்" 120. தேங்கு மலரோன் சிறையோதிம மீது மோங்கு திருமா லுவணத்துந் :- தாங்குபடை 121. வாசவன் வெள்ளைமத வாரண மீது மீசர்பதி னொருவ ரேறிடத்துந் :- தேசுதரு 122. மாறிருவ ரெவ்வே ழடர்புரவித் தேர்மீதும் வேறிருவ ரெண்மர் விமானத்துஞ் :- சீறியடுங் 123. கூற்றுக் கடவுள் கொடிய கடாமீதும் போற்று மளகேசன் புட்பகத்துங் :- காற்றுறவாம் 124. வேகமிகு தழலோன் வெற்றித் தகர்மீதும் வாகை வருணன் மகரத்து :- ஆகமத்தின் 125. நீதி தெரியு நிருதிநர வாகனத்துங் காது பனவன் கலைமீதுஞ் :-சோதிதிகழ் 126. சீதமதி முத்தின் றேர்மீது மோரேழு வேத முனிவர் விமானத்தும் :-போதவுயர் 127. விஞ்சையர் சாரணர் சித்தர் வியன்கருடர் செஞ்சுடிகை நாகருடன் சேவிப்ப :-மஞ்சுகவித் 128. தாடுங் கொடிக ளருக்கன் பரிதடுக்க மாட நெடிய மணிமறுகி :- னீடருளாற் “சூழவருந் தெய்வக் குழாங்கள்" 129. பொன்னான சூடகக்கைப் போதன்ன மும்புனலு மெந்நாளு மெவ்வுயிர்க்கு மீந்தருளி :- மன்னு 130, மறச்சாலைப் பெண்டி ரருகுவரக் கங்கை புறக்காவற் பெண்டிருடன் போதச் :- சிறக்கும் 131. வரையர மாதரும் வாரா கரத்திற் றிருவுடன் வந்த திரளுந் :- திருவுங் 132. கலையை யகலாத கன்னிமட மானு மலையை யகலா மயிலுங் :- கலைமகளும் 133. பொன்னி னுலகாளும் பூவையரு மாநதிக ளென்னு மடவா ரெழுவரு :- மன்னமயில் 134. சீறும் விடைகளிறு சேனங் கடாயாளி யேறு மடவா ரெழுவருங் :- கூறுங் 135. குலநாக மாதர் குழாமும் பணிந்து பொலமாட வீதி புகுத :- நிலமாதர் “திருவுலாக்காணும் திருமகளிர்" 136. தாணு நுதல்விழிமேற் றாவடிபோ கத்திரண்ட பாண மலரோன் படையென்னப் :- பூணரவஞ் 137. சூடுந் தரங்கச் சுரநதியிற் றோய்ந்துவிளை யாடும் படிதிரண்ட வன்னமெனப் :- பாடலினாற் 138. றம்பெருமை பாடுந் தமிழோன் றனக்களித்த வெம்பகலிற் சேர்ந்த விளக்கென்ன :- நம்பருறை 139. சூதத் தெழுந்த துணர்ப்பல் லவப்படலங் கோதத் திரண்ட குயிலென்னத் :- தீதற்ற 140. வெந்தைபெரு மான்கரத்தி னேந்துமிள மான்கண்டு வந்து திரண்டசில மானென்னச் :- செந்தமிழின் 141. பாட்டுக் குழல்வோன் பசும்பாதி யின்வார்த்தை கேட்டுத்திரண்ட கிளியென்னக் :- கூட்டகிலார் 142. தாழ்ந்த சடைமுடியோன் றன்னுடம்பைக் காரென்று வாழ்ந்து திரண்ட மயிலென்னச் :- சூழ்ந்தரன்பால் 143. நன்புதிய தூதுக்கு செல்வேனான் செல்வேன் என்பனபோன் மென்குழல்வண் டெங்குமெழ :- நின்புயமேல் 144. எங்கள் தழும்பணிந்தா லென்செய்யு மென்பனபோற் செங்கை வளைகள் சிறந்தார்ப்பச் :- சங்கரன்மேற் 145. றள்ள வரியகுறித் தாமுமிடத் தாயங் கொள்வனபோற் கொங்கைக் குவடசைய :- வுள்ளமகிழ் 146. செம்பதுமைக் கேள்வன் றிருமல்லி நாதனுயர் சம்புபதி நல்குந் தடந்தேர்போல் :- கம்பரே 147. யித்தேருங் கண்டாலோ வென்பனபோ லல்குலெனு மத்தேரின் மேகலைக ளார்ப்பரிப்ப - வித்தெருவிற் 148. சீற்ற விடையோனைச் சேவிக்கப் பெற்றபதம் போற்றுவபோற் பொன்னூ புரஞ்சிலம்ப :- மேற்ககன 149. கூடம் வெளியடைத்த கோபுரத்துங் குன்றனைய மாட நெடுமத்த வாரணத்து :- மோடுகதிர் 150. விஞ்சு கொடிதடுக்கு மேனிலா முற்றத்து மஞ்சுதவழ் கங்கைகொண்டான்மண்டபத்தும் :- வெஞ்சமரிற் 151. றத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான் வைத்த துலாபார மண்டபத்துஞ் :- சித்ரமணிச் 152. சூளிகையின் மீதுஞ் சுறைநிலா முற்றத்து மாளிகையின் மீதும் மறுகிடத்தும் :- யாளி 153. செறியுமணித் தெற்றியினுஞ் செய்குன் றிடத்து நிறைய எவரு நெருங்க :- இறையவனை "திருக்காட்சியும் காண்மகளிர் காதலும்" 154. வந்து வணங்கி மதிக்கொழுந்துஞ் செஞ்சடையுஞ் சிந்தைகவர் கண்மலருஞ் செவ்வாயு :- மெந்தைபிரான் 155. தெய்வப் புரிநூலுந் திண்டோளு மார்பகமுஞ் சைவத் திருவான தாழ்வடமு :- மெய்வழியக் 156. கொண்ட திருநீறுங் குழைதுரந்த செங்கழுநீர் மண்டு திருக்கொன்றை மாலையு :- மெண்டிசையுந் 157. தாவில் சுருதித் தமருகமுந் தம்முடைய தேவி யறியுந் திருக்கூத்தும் :- யாவையுந்தம் 158. உள்ளத்தே கொள்ளா வுருக்காப் பெருகின்ப வெள்ளத்தே வீழா மிகவுயிராத் :- தள்ளியுறை 159. விட்டவாள் போல்விழியீர் மென்சுணங்கின் பொன்முலைமேற் பட்டவா பாரீர் பசப்பென்பார் :- கட்டழகன் 160. கோதை யகன்மார்பங் குழைவிக்க மாட்டாதால் ஏது படிலென் இவையென்பார் :- போத 161. நெருக்கி யரிதிட்ட நிரைவளைக ளெல்லா மிருக்கை யரிது கரத்தென்பார் :- நிருத்தன் 162. பரிக்குந் தழும்பு படுத்தா வளைகள் இருக்கிலென் போகிலென் என்பார் :- திருக்கண்கள் 163. வையார்நம் மேலென்பார் வைப்பா ரவர்கருணை மெய்யானவ ளொருத்திமே லென்பார் : ஐயோ 164. வருள்படைக்க வேண்டி யருமந்த கண்ட மிருள்படைத்த தேனிங்ங னென்பார்:- இருள்படைத்த 165. தின்றாகில் வானோ ரெனுஞ்சாதி யத்தனையும் பொன்றாதோ வென்று புகலுவார் :- வென்றிமதன் 166. ஏவானோ மேலென்பார் ஏவினால் இன்னமுந்தான் போவானோ போய்த்தோ விழியென்பார் - மேவனிலம் 167. செல்லாதோ மீதென்பார் சென்றால் வரவிடுமோ நல்லார் திருக்காப்பு நாணென்பார் : புல்லத் 168. திருக்கொன்றை மாலைபெறிற் சிந்தை குடியேறி யிருக்கின்ற மாலொழியு மென்பா :- ரொருத்திகுறி 169. யிட்டதிவர் மார்புபிற ரெய்துவதின் மாலுழன்று பட்டதமையும் படவென்பார் :- மட்டவிழும் 170. அம்பதுமப் போதி னயன்மா லறியாத வும்ப ரறியா வொருகிரியைச் :- செம்பவளப் 171. பாதி யுடம்பு பசப்பித்தாள் பைங்களபக் கோதை முலையாற் குழைவித்தா - ளாதலா 172. லுண்மை தனக்கிந்த வுமையாள் பிறந்ததற்பின் பெண்மைதனக் கேற்றம் பெரிதென்பார்:- பெண்மைக்கு 173. இறையா ளிவளன்றோ வென்பார்மற் றிங்ஙன் மறுகி லெதிர்வந்த மாத :- ரறுசமய 174. அண்டருக்குந் தாயா ரறச்சாலை யிப்படிபெற் றுண்டிருக்கு மூதூ ருடையானே:- கொண்டவிருட் 175. காவி விழியொருத்தி கட்டிக் குறியிட்டு மாவடியில் வைத்த வயிரமே :- தேவிமுகஞ் 176. செவ்வி பெருகத் திருச்சூ டகக்கையாற் றவ்வி பிடித்துச் சமைத்தன்ன :- மெவ்வுயிர்க்கு 177. மாரச் சொரிதருநெல் ஆட்டைக் கிருநாழி சேரப் படியளக்குஞ் சீமானே : மார்புபோற் 178. கண்ணுஞ் சிலர்படைத்த காணியோ காமவேள் பண்ணுந் துயர்தீரப் பார்த்தருளீர்:- வெண்ணிலவோடு 179. ஈரும் மிளந்தென்றல் ஈராமல் உம்முடைய வாரம் பசிதணித்தா லாகாதோ :- வாரவுளம் 180. வேவக் கறங்கும் விடைமணியை யும்முடைய சேவுக் கினிதளித்தாற் றீதாமோ :- மேவியவிக் 181. கொக்கி னிறகுடனே கூவுங் குயிற்சிறகை யொக்க வணியவுமக் கொண்ணாதோ :- மிக்க 182. வறஞ்செய்யு மூருடையீர் ஆகாது காணு மறஞ்செயல் என்று மயங்கா :- நிறந்திகழும் 183. விண்ட குவளைக்கும் விள்ளாத தாமரைக்குந் தண்டரள மும்பொன்னுஞ் சாத்துவா:-ரொண்டொடியீர் 184. பாகம் பிரியாத பச்சைமயில் காணாமல் ஏகம்பர் பார்த்தா ரெமையென்பார் :- ஆகமதன் 185. காதன் மலர்சொறிந்து கைசலிப்ப விவ்வண்ண மாதர் பலர்மயங்க மற்றொருத்தி :- பேதை பேதை 186. திரையுதவு பேரமுதின் சிற்றரும்பு முற்றி வருமுகைய தானதொரு வல்லி :- சுருதியளி 187. யூத மலரா வொருதா மரைமுகிளங் காத லுதவாத காமசரம் :- வேதத் 188. துழையா னகலா துறைகின்ற சூதங் குழையாத தென்றற் கொழுந்து :- பழைதாகக் 189. கம்ப ருறையுங் கடவுளிளஞ் சூதத்தின் கொம்பி லுறையாக் குயிற்பிள்ளை :- யின்ப 190. வலையா ரமுதத்தின் ஆரம்ப வித்து தொலையாத காமத்தின் றோற்றம் :- உலகிற் 191. சிறந்தபிரா னல்லாத தேவர்களைப் போல விறந்து பிறக்குமெயிற்றாள் நிறைந்துமைப்போல் 192. முத்தாரம் பூண முலையெனக்குச் சூட்டுமென்று கைத்தாயர் முன்னின்று கண்பிசைவாள்:- சுத்த 193. வியல்பு தனையொழிய வேதும் பிறழாக் கயலை யனையவிரு கண்ணாள் :- புயல்வரினு 194. மாடாத தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதுங் கூடாது மான குழலினாள் : நீடிமிக 195. வோங்கி வளர்தன் னுரியபரி ணாமமெல்லாந் தாங்கியவித் தன்ன தனத்தினாள் :- நீங்காத 196. வேகம்ப மென்னீ ரிமவான் மகள்தழுவ வாகங் குழைந்த வரனென்னீர் :- மாகம்பை 197. யாறென்னீ ரம்மை யறச்சாலை யென்னீர்நம் பேரென்னீ ரென்றுதமைப் பேசுவித்த :- வாறெல்லாம் 198. பாவைக் குரைத்தந்தப் பாவைபக ராததெல்லாம் பூவைக் கழுது புகலுவாள் :- மேவுபல 199. தீவிற் பிறந்த செழுமணியுந் தம்மூரின் வாவி பிறந்த மணிமுத்துங் :- காவிவிழி 200. யம்மை முதனா ளரனாரைப் பூசித்த கம்பை மணலுங் கலந்தெடுத்துக் :- கொம்பனையா 201. ளொண்டொடி மாத ருடனே கரஞ்சிவப்ப வண்ட லிழைத்து மகிழ்போதிற் :- பண்டொருநாள் 202. தெண்டிரையிற் பெற்ற திருவமுதச் செவ்வாயும் பண்டுகிராற் கொண்ட பரிகலமு :- மண்டுமெரி 203. தாழுஞ் சினத்துழுவை தான்கொடுத்த வுட்சாத்தும் வேழங் கொடுத்ததொரு மேற்சாத்துஞ்:- சூழ்பனியின் 204. ஓங்கல் கொடுத்த வொருபா கமுமுடையார் தாங்கு மணிமறுகு சாருதலு :- மாங்கவளும் 205. வண்ட தனையொழிந்து வந்தணுகிச் செந்துவர்வா யொண்டொடி மாத ருடனிறைஞ்சி :- யண்டருறை 206. நாகஞ் சிலையாக நண்ணார் புரமெரித்த ஏகம்பர் தம்பெருமை யெண்ணாதே :- கோகநக 207. வுந்திக் கணையோ னொருபாக முஞ்சடையு மந்தப் புரமென் றறியாதே :- யிந்தப் 208. பெருத்த மணக்கோலப் பிள்ளையுடன் றேர்மேல் இருத்து மெனைக்கொடுபோ யென்ன:- வொருத்தியிவர் 209. பூணத் தவரிருவர் பொன்முடியுஞ் சேவடியுங் காணக் கிடையாத கம்பர்காண் :- வாணுதலாய் 210. பாய வுலகம் பதினாலையும் பரந்தொன் றாய பெருமா னருகிருக்கத் :- தோயுமகிற் 211. பச்சைக் கிரியாற் பவளத் திருமார்பி லச்சிட்ட வர்க்கொழிந்துண் டாகுமோ :- வச்சமுடன் 212. மீதெடுத்துக் கம்பை மிகுபெருக்குக் கஞ்சாத மாதவத்தாட் கன்றியிது வாய்க்குமோ :- மூதண்ட 213. மெல்லாம் பெறநெல் லிருநாழியால் வளர்க்க வல்லாள் தனக்கன்றி வாய்க்குமோ : சொல்லாய் 214. குறைவின் மடமயிலே கூசாதே யாமே யிறைவரரு கேறி யிருப்போம் :- மறவிதனை 215. யென்ன இளையா ளிருகண்கள் முத்தரும்ப வன்னையர்தங் கையா லணைத்தாற்றி:- மின்னேபோ 216. தென்று பகர்வதன்முன் ஏகம்பர் தேருடனே தென்றலந் தேருந் தெரிவித்து :- வென்றி 217. மதன்கை வரிசாபம் வாங்காமல் வாசம் பொதிந்தகணை பூட்டாமற் போந்தான் :- பெதும்பை பெதும்பை 218. யிவண்மற் றொருத்தி யெவர்க்குந் தெரியாப் பவளத் தமுதுதரும் பாவை :- தவளத் 219. திருப்பாற் கடற்பிறந்து செந்தா மரைமேல் இருப்பார்க்கு நேரே யிளையாள்:-விருப்புடனே 220. ஆர்க்கும் அளிகள் அவிழ்பத மீதென்று பார்க்குமுகை போலும் பருவத்தாள்:-ஆக்கமுடன் 221. போராக்கு மாமதனன் போதும் பவனிக்குத் தேராக்க வெண்ணுஞ் செழுந்தென்றல் :- வேரிநறு 222. போது புனைவதற்கும் பூணாரம் பூண்பதற்கும் ஆதரவு வைக்கு மளவினாள் :- ஆதிமதன் 223. பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும் வீறுஞ் சிறிதரும்பு மெய்யினாள் :- சீறியெரி 224. யூட்ட மதின்மூன் றுழிநிகழ்ந்த வண்ணம்போற் கூட்டி முடிக்குங் குழலினாள் :- வேட்டவர்தம் 225. புந்திகவர் வஞ்சனையும் பொய்யுங்கொலையுமிடம் வந்துவந்து பார்க்கு மதர்விழியாண் :- மைந்தர் 226. உகமை யழகோடே யுள்ளரும்புங் கஞ்ச முகையின் முகைபோல் முலையாள் :-இகுளையர்தம் 227. மீளாத காதல் விழைவுரைக்கும் போததனைக் கேளா தவர்போலக் கேட்டிருப்பாள் :- கேளாய 228. மாதரு மானு மயிலும் பசுங்கிளியும் ஓதிமஞ் சூழ வுடன்போத :- மாதவிப்பூம் 229. பந்தரிட்ட நீழற் பளிக்குச் சிலாதனத்து வந்திருப்ப வெற்றி மடமாதர் :- உந்திக் 230. குவளை மலரிருகண் கொங்கைக் குறியிட்ட பவள மலையினையும் பாடித் :- தவளநகை 231. யன்னை யறஞ்செய் அறச்சா லையும்பாடிக் கன்னி யினிதாடுங் கழங்கென்னக் :- கன்னிதனக் 232. காழி தருமுத்த மாகாதென் றவ்வூரில் ஏழுநதி முத்த மினிதெடுத்துச் :- சூழ்தேரிற் 233. றட்டு நிகரல்குற் சங்கிலிபாற் றூதுதமை விட்டவர்பாற் பெற்ற விழியொன்றும் :- வட்டித்துப் 234. பாத மலர்துதித்த பட்டவா ணன்றனக்குக் காத லுடனளித்த கையிரண்டும் :- பூதத்து 235. இகலொழிய நின்று மிருந்துங் கிடந்து முகிலுறையுந் தானங்கண் மூன்று :- நகிலால் 236. இலங்கு வரிவளையா லிவ்விரண் டாய்த்தம்மேல் நலங்கொள் தழும்பொரு நான்குந் :- துலங்க 237. வுமைக்கமைத்த பொற்கோயி லூழி முதல்நாள் அமைத்தன கோணங்கள் ஐந்தும் :- அமைத்தோள் 238. இளைக்கு மருங்குல் ருநாழி நெற்கொண் டளிக்குஞ் சமயங்க ளாறுங் :- குளிப்பார் 239. செறியும் பவக்கடலைச் சிந்தித் திரையால் எறியும் புனிதநதி யேழும் :- பிறைநுதலாள் 240. அன்பொடுபா டிக்கழங்கை யாடுகின்ற வெல்லைக்கண் என்பொருபெண் ணான வெழினகரும்:- அன்பனுளம் 241. அன்றொருத்திக் குண்மை யறிவித்துத் தாமகிழ்க்கீழ்ச் சென்றொளித்து நின்ற திருநகருஞ் :- சென்று 242. முதுககன கோளத்து முற்பட்ட கூத்தின் பதும மலர்ந்த பதியுங் :- கதிராழிக் 243. காவித் திருநிறத்தோன் கைகுவித்து நின்றெதிரே சேவித்து நிற்குந் திருப்பதியுந் :- தாவுபரி 244. மல்லற் றொடைத்தொண்டை மான்கடவுந் தேரையொரு முல்லைக் கொடிதடுத்த மூதூரு :- நெல்விலைக்குச் 245, சற்றளந்த நாட்புகலிச் சைவப் புலவனுக்குக் கொற்றளந்த மாடக் கொடிநகரும் :- பெற்றதொரு 246. தாயுமிலை யென்னுந் தமது குறையையொரு தூய கழைதவிர்த்த தொன்னகரும் :- வாய்கலசம் 247. ஆட்டி யினிமை யறிந்தவூ னெச்சிறனை யூட்டிய வேட னுறைபதியுஞ் :- நாட்டிலுள 248. வெண்ணி லமணரெலா மேறக் கழுவிலொரு பெண்ணை யியலறிந்த பேரூரும் :- விண்ணவர்தஞ் 249. சாத லுறைநாளுஞ் சாகாத புள்ளிரண்டுந் தீதகல வாழுந் திருமலையுந் :- தூதுதமை 250. யோட்டுந் திருநாவ லூராற் கிரந்திட்டுப் பாட்டுண்ட வூரும் படைத்துடையான் :- சூட்டு 251. வெருவும் வரியரவும் வெண்டலையு மாறு மருவு முடிக்கம்ப வாணன் :- ஒருபுத்தன் 252. செங்கல் லெறிக்குச் சிவலோக மீந்தபிரான் றுங்க மணிமறுகு தோன்றுதலும் :- பைங்கொடியும் 253. ஆடுங் கழங்குதவிர்த் தாயத் துடன்கனக மாட நெடுவீதி வந்தணுகிக் :- கூடப் 254. பணிந்து பரவிப் பகுவா யரவ மணிந்த திருத்தோ ளழகு :- மணங்கமழும் 255. பொன்னான மார்பும் புனையும் புரிநூலு மன்னான காதல் வரநோக்கி :- மின்னுந் 256. திருந்திழையீ ரிந்தத் திருமேனி தன்னில் இருந்ததழும் பென்னதழும் பென்றாள் :- புரிந்தவரும் 257. மின்னே கிளியே விளங்கிழையே யன்னமே யன்னே யிதனை யறியாயோ :- தன்னருளாற் 258. பாராட்டி வையம் பதினாலையும் வளர்க்கும் பேராட்டி மாதவத்தின் பேறுகாண் :- வாரிதிசூழ் 259. வைய முழுதறிய வாங்குஞ் சிலைமாரன் எய்யுங் கணைபடைத்த வேற்றங்காண் :- துய்யகுழற் 260. பண்பிறந்த சொல்லாய் பலசொல்லி யேனிந்தப் பெண்பிறந்தார்க் கெல்லாம் பெருமைகாண்:-மண்பரவி 261. யேத்து மிறையா ளிருகொங்கை யால்வளையாற் சாத்திய கோலத் தழும்புகாண் :- பார்த்தருளாய் 262. என்னு மளவி லிலங்குமனத் துட்காதல் பொன்னனைய மெய்யிற் புறம்பொசியக்:-கன்னிவெயில் 263. தீண்ட மலர்வதொரு செந்தா மரைமுகைபோற் காண்டகைய செவ்விக் கவின்படைத்தாண்:-மீண்டரனுங் 264. கோல மயிலைக் குறிப்பாற் கடைக்கணித்தாற் போல முறுவலுடன் போயகன்றான் :- மாலைமதன் 265. செங்கை வரிசிலையைச் சேரத் தொடைமடக்கி யெங்கள் பெருமானோ டேகினான் :- மங்கை மங்கை 266. புடையோத ஞாலமெலாம் போர்மதனன் வேதக் கிடையோதி விக்குமொரு கிள்ளை :- விடமும் 267. வளருங் கொடுங்கொலையும் வஞ்சனையும் பொய்யுங் களவுங் குடிபுகுதுங் கண்ணாள் :- தெளிதேனுஞ் 268. சீல வுததி யமுதுஞ் செழும்பாகும் பாலு முதவும் பனிமொழியாள் :- மாலுதவு 269. மிக்க திருவழகின் வெள்ளத் தெழுந்தவிரு மொக்கு ளனைய முலையினாள் :- மைக்குழலிற் 270. பூவின் மிகுபொறையாள் பூணார மென்முலையாள் நோவ வடியிட்ட நுண்ணிடையாள் :- ஆவிபெற 271. வார்வ முளதாக வாடவர்தன் மேல்வைத்த பார்வை யறியும் பருவத்தாள் :- சேரச் 272. சுடருற்ற பூவளைக்கைத் தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று :- விடையோன்பால் 273. அன்னத்தைத் தூதுவிடவங்கையிற் கொண்டனள்போற் பன்னித் திலநிரைத்த பந்தேந்தி :- யன்னதுதான் 274. பாவை யொருபாகன் பாலணுக மாட்டாமற் போவதுவு மீள்வதுவும் போற்றோன்ற :- மேவி 275. நெறிந்திருள் கொண்டை நெகிழ்ந்து ததும்ப நறும்புழு கின்கண் நனைந்து :- செறிந்து 276. சுரும்பி னினங்கள் சுழன்று சுழன்று நரம்பென வெங்கு நணுங்க :- விரும்பி 277. யிடுங்குழை யஞ்ச வெறிந்திரு கண்கள் நெடுங்குமி ழின்க ணெருங்க :- வடங்கொள் 278. மனங்கமழ் குங்கும வண்ட லணிந்து கணங்கணி கொங்கை துளங்க :- வணங்கி 279. மருங்கு தளர்ந்து வருந்த வருந்த இருங்கலை கொஞ்சி யிரங்க :- நிரம்பி 280. யிலங்கு பதங்க ளிடுந்தொறு நின்று சிலம்பு சதங்கை சிலம்ப :- நலந்திகழும் 281. வல்லியினி தாட மடவா ரணைந்துமலர் வில்லி புரிவித்த மெய்த்தவமே :- நல்லமட 282. மானே கலாப மயிலே மலர்பொதியாத் தேனே திரையளித்த தெய்வமே :- கானேயுங் 283. கோதை யிதழ்வாய்க் கொடியே நமக்கிந்தப் பாவியிடை செய்த பகையுண்டோ :- மேவியுடன் 284. மன்னுஞ் சிறையன்றின் மன்றிற் பனைமடன்மே லின்னஞ் சிலநா ளிருந்தாலோ :- முன்னமே 285. வென்றே யிருக்கும் விழியுடனே யுள்ளபகை யின்றே மதன்முடிக்க வெண்ணமோ:-வென்றிமதன் 286. சேரும் வளைமலராற் றீண்டப் பெறும்வாழ்வில் ஆரமணிப் பந்துக் கமையாதோ :- பாருலகில் 287. தாவில் தகைமைத் தபோதனர்தங் காலத்தே யாவி யுடனிருந்தா லாகாதோ :- பாவா 288. யமையும் மையுமெனு மவ்வளவிற் றேர்மே லுமையொரு பாக முடையோன் :- சமரமுக 289. வீரனுக்கு மெய்யன்பான் மேவுந் திருநீற்றுச் சேரனுக்குஞ் சோழனுக்குந் தென்னனுக்கும்:-ஊரனுக்கும் 290. ஆரணற்கும் வாசவற்கு மல்லாத தேவருக்கு நாரணற்கும் மேனோர்க்கும் நாதனார் :- போர்முகத்தி 291. லாமநாட் கொண்டதலை யாட்டுத் தலையாக மாமனார்க் கீந்த மருகனார் :- தாமாக 292. விங்கெமையாட் கொள்ள வெழுந்தருளப் பெற்றோமென் றங்குளமின் னார்கண் டகமகிழச் :- செங்கேழ் 293. வயங்கு மணிமாட மாமறுகிற் றோன்ற வியந்தமணி பந்தாடல் விட்டு :- நயந்தணுகித் 294. திண்டோளு மார்புந் திருநீல கண்டமுங் கண்டோரை வாழ்விக்குங் கண்மலருங்:-கண்டிறைஞ்சித் 295. தூய பவளந் துவளுற்றா டோழியருந் தாயரு நிற்கத் தலைப்பட்டாள் :- தீய 296. வெறியு மழுவுடையா ரிம்மாதின் காதல் சிறிது முணரார்போற் செல்லக் :- குறைவில் 297. மறை புகலும் பூசை மனுவா லயத்தி லுறைதிரு வேகம்ப முடையீர் :- செறியிருளிற் 298. பந்தணுகுஞ் செங்கைப் பரவைபாற் சங்கிலிபால் வந்துழலுந் தூது மறந்தீரோ :- நொந்தொசியுஞ் 299. சிற்றிடை புல்லத் திருமார் பகங்குழைந்தீர் நெற்றி விழியுடையீர் நீரன்றோ :- வொற்றியூர்ப் 300. பெண்ணோ வறிவார்தம் பேரின்று தொட்டுமக்கு விண்ணோர் பெருமானே வேண்டாவோ:-வண்ணம் 301. அமைந்தாரார் காதலினா லார்தலையிற் பெண்ணைச் சுமந்தாரார் மற்றுமைபோற் சொல்லீ :- ரமைந்து 302. துகைத்து மதுகரத்தாற் றோடுழுதார் தந்து நகைத்துமுகம் பார்த்து நடவீர் :- முகத்திலிவை 303. கண்ணன்றோ வெப்படியுங் காதலித்தா டானுமொரு பெண்ணன்றோ கச்சிப் பெருமானே :- யெண்ணில் 304. இருக்கிலறஞ் சொன்னீ ரெனுமாதை விட்டுத் திருக்கடைக்கண் வைத்தவர்போற் செல்ல:-வொருக்காலு 305. மேவுண் டறிகிலளென் றெண்ணாதே யேவுண்டால் ஆவி படுவ தறியாதே :- பாவி 306. விறல்வேள் சிலையம்பு விட்டான்றன் னம்பின் மறல்வேல் விழியாண் மனத்தே :- பிறைமுடியார் 307. பாதி கருகப் படுபஞ்ச பாணமதிங் கேது படுத்தா திளையாளைக் :- காதலுக்குச் 308. சங்கம் விழுமென்றுந் தாழ்கலைநில் லாதென்றும் அங்கம் பசலைநிற மாமென்றுந் :- திங்கணிலா 309. ஈரஞ் சுடுமென்று மேழிசைவேய் தீயென்று மாரஞ் சுடுமென்று மன்றறிந்தாள் :- சோர்வுற் 310. றடங்கு மறிவினளா யன்னையர்தந் தோண்மேற் றடங்கண் மயிறளர்ந்து சாய்ந்தாள் :- மடந்தை மடந்தை 311. இளையார் மனம்வளைய வெய்யுமதன் செங்கோல் வளையா வகையசையும் வல்லி :- யளகநறை 312. தேங்கு கருமுகிலுஞ் செவ்வாய் முருக்குமொளி தாங்குபுரு வத்திந்த்ர சாபமு :- மாங்கழையும் 313. வாய்ந்த மொழிக்குயிலு மைக்கட் கருவிளையும் பூந்தரளஞ் சேர்கழுத்துப் பூங்கமுகு :- ஏய்ந்தநகை 314. முல்லை நகையு முலைக்கோங்குங் கைக்காந்தள் மல்லல் மலரும் வரிச்சுணங்கா :- மல்லிமல 315. வேங்கையுஞ் சாயல் மயிலும் வியனழகுந் தாங்கு திருநிறத்த சண்பகமும் :- வாங்குமிடை 316. மின்னும் பதச்சூத மென்குழையுங்கொண்டொன்றாய் மன்னியகார் வேனிலுடன் வந்ததென:-மின்னுசுதை 317. பக்க நிலவெறிக்கப் பத்மரா கத்துவெயின் மிக்க வரங்கத்து மேனின்று :- முக்கணனைத் 318. தேவர் நெருங்குந் திருமயா னம்பார்த்துத் தாவில் திருமேற் றளிபார்த்து :- மேவி 319. யரன்விடா தாளு மனேகதங்கா பார்த்துப் பரவுங்கா ரைக்காடு பார்த்துப்:-பெரிதிறைஞ்சிக் 320. கங்கைகொண்டான் மண்டபமுங் கண்டு மனமகிழந்து மங்கைகொண்டான் வாழு மனைபார்த்துத் :-திங்கண் 321. முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன் படைத்துலா மண்டபமும் பார்த்து:-விடைக்கொடியோன் 322. கச்சா லையும்பார்த்துக் கம்பர்தம் பாடியெனும் பொற்சா லையும்பார்த்துப் பூவைமொழிப் :- பச்சைநிறச் 323. சைவ முதல்வி தவஞ்செய்யப் பெற்றதொரு தெய்வவுல காணித் திருக்குளமுந் :- துய்ய 324. வறச்சாலை யும்பார்த் தறுசமயம் வாழும் புறச்சாலை யும்பார்த்துப் பூவை :- சிறப்புடைய 325. விந்நகர்போ லெந்நகரு மில்லையிமை யோர்பதியு முன்ன வரிதிதனுக் கொப்பென்ன :- வன்னநடை 326. மானே யிதன்பெருமை வல்லவரார் சொல்லுகைக்குத் தானே யுவமை தனக்கல்லான் :- மானார்கட் 327. பொற்றொடியாள் கண்ணுதலைப் பூசித் தறஞ்செய்யப் பெற்ற திதுபோற் பிறிதுண்டோ :- மற்றிவளுக் 328. கந்தமுத லில்லாத வாதியொரு மாவடிக்கீழ் வந்துவெளிப் பட்டநகர் மற்றுண்டோ :- நந்தா 329. மருக்காவின் மூன்று மணிவிளக்கு மன்னி யொருக்காலு நீங்கா துறையுந் :- திருக்காமக் 330. கோட்ட மெனிலிங்கே குலவுங் கனகமழை யீட்ட முகில்பொழிந்த திவ்விடத்தே :- கூட்டியபே 331. ராசையுடன் மால்பத் தவதாரந் தம்மிலும்வந் தீசனைப் பூசித்த திவ்விடத்தே :- பேசுநல 332. மொன்று புரிந்த தொருகோடி யாகுமிதில் என்று மொழிகின்ற வெல்லைக்கண் :- மன்றற் 333. றிருக்கொன்றை மாலையளி செவ்விமண முண்டு தருக்கிய நாதந் ததும்ப :- வெருக்கமலர் 334. பாயுஞ் சடாடவிமேற் பாகீ ரதிமுகங்க ளாயிரமும் வீசி யலையெடுப்ப :- வோயா (து) 335. அருகிலிரு பாலு மருமறைக ணான்கும் பரிகலமு மாலையுடன் பாட :- வொருதன் 336. றிருக்கைத் தமருகத்துத் தெய்வச் சுருதி பெருக்கத் திசைமுகத்திற் பெய்ய :-விருப்பொடரி 337. தேடுந் திருவடியிற் செம்பொற் சிலம்போசை யூடுங் ககனத் துலாய்நிமிர :- நீடு 338. நடஞ்செய் தருள்காக்கு நாயகரும் வானந் தொடும்பொன் மணித்தேருந் தோன்ற:-கொடுங்குழையாள் 339. கோதை யசையக் குழலசையக் கோல்வளைக்கை மாதர் பலருடனே வந்திறைஞ்சிச் :- சோதி 340. மிகக்கருணை யெப்போதும் வீற்றிருந்த செவ்வி முகத்தழகைக் கண்ணால் முகந்தாள் :- நிகர்ப்பில் 341. தவளத் திருநீறுஞ் சந்தனமுந் தோய்ந்த பவளத் திருத்தோள்கள் பார்த்தா :- ளிவளும் 342. மலர்மார்பி லாசையெலாம் வைத்தாள்மைக் கண்ணீர் புலராம னெஞ்சம் புலர்ந்தா :- ளுலகுண்ட 343. திண்பால் விடையீர் திருத்தோ ணலங்கண்ட பெண்பாவி யாவி பெறுமாறு :- கண்பாரீர் 344. என்றபொழு திற்கச்சி யேகம்ப ரேகுதலு மன்றன் மலர்சொரிய மாரவேள் :- நின்றயர்ந்த 345. தத்தை மொழிக்குயிலைத் தாய ரெடுத்தணைத்துச் சித்ரமணி மண்டபத்திற் சேர்வித்து :- முத்தினொரு 346. பந்தரு மிட்டார் பனிநீ ரையுஞ்சொரிந்தார் செந்தளிரின் பாயலின்மேற் சேர்த்தினார் :- சந்தனமும் 347. பூசினார் கொண்டமயல் போமோவென் றாயிரமும் பேசினார் தாயார் பெரிதிருந்து :- கூசாதே 348. தண்ணென் கழுநீருஞ் சாத்தினார் பார்த்தயலார் எண்ண முமக்கொன்று மில்லையோ :- வொண்ணுதலீர் 349. முத்தினொரு பந்தன் முழுநிலா வீசுநிழல் நித்தருறை தேமா நிழலாமோ :- பித்துளதோ 350, வாசப் பனிநீர் மணலை யவராகப் பூசித்த வாற்றின் புனலாமோ :- பாசிழைக்குப் 351. பாயல் குளிரி படுத்தாலப் பாய்விடையோன் கோயிலிள மாவின் கொழுந்தாமோ :- நேயமுள 352. பொற்றொடி நல்லீர் புனைசந் தனச்சேறு நெற்றி விழியவர்த னீறாமோ :- கற்றறிவி 353. னூற்றா யிரநீர் நொடித்தா லவையிவளுக் கேற்றார் திருவஞ் செழுத்தாமோ :- மேற்றான் 354. பிணைந்த வணிகழுநீர் பெய்வளைக்குக் கம்ப ரணிந்த திருக்கொன்றை யாமோ:-வணங்கனையீ 355. ரென்று மொழிய இவையவை யாயினபோல் நின்றதிவ ளாவி நீங்காம :- லன்றே 356. தெரியவே யாவர்க்குஞ் சிந்தா குலமு முரையுந் தெளிவுதர லுற்றாள் :- அரிவை அரிவை 357. கமல மலர்சுமந்தாள் கட்டழகு மேனாள் அமுதமுடன் வந்தா ளழகுஞ் :- சிமயமிசைக் 358. கூசி மழைதவழுங் கொல்லிக் கிரிபடைத்தாள் பேச வரியதொரு பேரழகும் :- வீசுமிளந் 359. தென்றலும் வென்றிச் சிலைமாரன் னைங்கணையு மன்றலுமொன் றான வடிவினாள்:-பொன்றுமொரு 360. காலமும் பர்த்துக் கயிறும் பிடித்தொருவன் சூலமு மேந்திச் சுழலாமன் :- மால்செய்(து) 361. உலவா நகையா வொசியா வசையா குலவா வுயிருண்ணுங் கூற்று:-தலைவிக்கைங் 362. கோணம் பெறவகுத்த கோயில்போல் யாவரையுங் காணுந் தொருமயக்குங் காட்சியாள் :- பேணி 363. மகிழ்வுற்ற வாயமுடன் வண்டரள மாலை திகழ்சித்ர மண்டபத்திற் சேர்ந்து :- மகர 364. விடந்தோய் விழியங் கெழுதி யவையெல்லாம் நெடும்போது பார்த்தகலா நிற்ப:-வடைந்தெவரு 365. மின்ன திதுவிதுவென் றெங்களுக்குக் காட்டியரு ளன்ன நடையா யடைவிலென :- மின்னிடையீர் 366. வெள்ளிமலை நீங்கி விண்ணோரு மண்ணோரு முள்ளும் பிரானை யுமையாள்போ :- யுள்ளமிகத் 367. தாங்காத பூசைக்குத் தக்கவிட மீதென்று நீங்காது நின்ற நிலைபாரீர் :- தேங்கமழும் 368. காவி புடைசூழ்ந்த கம்பா நதிப்புனலிற் பாவை படியும் படிபாரீர் :- கோவையிதழ் 369. ஓசை யளிக ளுலவம்பி காவனத்தில் வாசமலர் கொய்யும் வகைபாரீர் :- பேசரிய 370. வாதி யமர ரறியா வவராக மாதுகுவித்த மணல் பாரீர் :- கோதை 371. யணியு மிருளோதி யன்பொடு பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர்:- இணையிலிமுன் 372. மேவு புளகமுடன் வெண்ணீறு மெய்க்கணிந்து தேவி யிருந்த செயல்பாரீர் :- பூவிற் 373. கரந்து மழைபொழியாக் காலத்தே கம்பை பரந்து வரும்பெருக்கைப் பாரீர் :- விரிந்தபுனல் 374. மாகம் புதைய வரப்பண்ணித் தம்மையொளித் தேகம்பர் நின்ற விடம்பாரீர் :- தோகை 375. யரும்புனல்கண் டஞ்சியவ ராகமுறச் சென்று பரிந்து தழுவியது பாரீர் :- புரிந்து 376. மலைக்கு மகடன் வழிபாடு வந்து பலித்த பெரும்பேறு பாரீர் :- கலப்பொற் 377. றெரிவையுட னிந்தத் தேமா னிழலிற் பரம னிருந்தவிடம் பாரீர் :- பொருவில் 378. றிருக்கைவளை யான்முலையாற் றிண்டோளு மார்பும் பரித்த திருத்தழும்பு பாரீர் :- விரித்தசடை 379. யண்ணல் வெளிப்பட் டருள்வரங்கள் பாரீரென் றெண்ணும் புதுமை யிவையெல்லா:- மொண்ணுதலாள் 380. காட்ட வவருங் களிகூர் பொழுதிலொரு தேட்ட முளதாய சிந்தையளாய்க் :- கூட்டி கிளியிடம் வேண்டினாள் 381. இருங்கரத் தேந்தி இருந்த கிளியை வருந்திவினை யேன்பெற்ற வாழ்வே :- யருந்தவமே 382. தேமென் குதலைதருந் தெள்ளமுதே கம்பரணி தாமந் தருவாய் தவிருவா :- யாமெல்லாஞ் 383. சூழு நிலவிற் சுதைநிலா முன்றிலின்யான் வாழும் படிநினைக்க மாட்டாயோ :- வேழந் 384. திகழும் வரிசிலையான் சேவகங்கள் காட்டும் பகழி நறும் பூவாகப்பண்ணா :- யிகழ்வார்முன் 385. என்னன்னை யேது மிரங்கா ளிரவுபகல் உன் அன்னை யுன்னை யொறுக்குமோ :- தென்னன் 386. பொருப்பிற் பிறந்து புகையாக வீசு நெருப்பு குளிர நினையாய் :- நிரைத்தளரத் 387. தாருங் கழுநீருஞ் சந்தனமுந் தோய்ந்தபனி நீருங் குளிர நினைத்திடாய்:- பேரரவச் 388. சேவின் மணிவருத்தந் தீர்த்தருளா யென்றிருந்து பூவை யினிதுரைக்கும் போதின்கண் :- டேவருய்ய 389. ஆலமினிய வமுதாக வுண்ட பிரான் கோல மறுகு குறுகுதலு :- நீலவிழி 390. தூதுவிடக் கிள்ளைக்குச் சொல்லுவதெல் லாமறந்து காதலுடன் வந்தவனைக் கைதொழுது :- நீதிபுரி ஏகம்பரை வேண்டுகின்றாள் 391. யிந்தமலைப் பாவை யிடப்பாகங் கொண்டுமக்குத் தந்தவலப் பாகந் தரலாமோ :- வெந்தைபிரான் 392. கங்கைத் திருமுடிமேற் கண்ணியலால் வெண்ணீறு தங்குபுயக் கொன்றை தரலாமோ :- சங்கரா 393. வெம்பாக நீரணைந்தா லிவ்வுடம்பிற் பச்சென்ற செம்பாகம் வந்து சிவக்குமோ :- நம்பாநின் 394. சோதி மணிமுடிமேற் சோமப் பனிக்கொழுந்தை மோது முதுதரங்க மோதாதோ :- வோதாயென் 395. றாதியுடன் சொல்ல வறம்வளர்க்கு மூருடையா னேது முரையா னெழுந்தருள :- மாத 396. ரறிந்து மகவை யளித்தவர்க ளாக்கிச் சொரிந்த கறியமுதுஞ் சோறு :- மருந்தா 397. விருப்பினொடு செங்காட்டில் வேண்டும் பொழுதோ திருப்பவளச் செவ்வாய் திறப்பீர் :- விருப்பால் 398. வளைந்த திரிபுரத்தை மாள்விக்கும் போதே குளிர்ந்த திருமுறுவல் கொள்வீர் :- துளங்குநில 399. முத்த வரிசிலையான் மொய்ம்பூங் கணைபுகுந்து தைத்தபொழு தோதிருக்கண் சாத்துவீர் :- மெய்த்தக் 400. கொடிய விடஞ்சுரரைக் கொல்லும் பொழுதோ வடைய வருளுடையீ ராவீர் :- மடமாத 401. ருற்றதுயர் கேட்பதற்கொன் றோதாது போகின்றீர் கற்றதிது வோகள்ளக் கம்பரே :- பெற்றவர்தாள் 402. வீசுமழு வாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது வாசமலர்க் கொன்றை வழங்கீரோ :- பூசித்து 403. வல்லபங்கள் செய்து வழிபடுவார்க் கல்லாது புல்ல வொருவர் பொருந்தீரோ :- சொல்லீர் 404. ஒருவா சகமென்ன வோராது போலப் பொருமா ரனைநிறுத்திப் போனார் :- தெரிவை தெரிவை 405. யொருத்தி தவக்குறும்பை யோட்டியுல கெல்லாந் திருத்தி மதனடத்துஞ் செங்கோ :- னிருத்தனார் 406. தூதுவிடச் சங்கிலிபாற் றோழனுக்குத் தாமுழன்ற போதிதுவென் றெண்ணும் புரிகுழலாள்:-ஆதிரையான் 407. வெண்டிரைநீர் வேணிக்கு வேறுமொரு திங்கணமக் குண்டெனவென் றெண்ணு மொளிநுதலாள்:-துண்டமதி 408. வேணி யுடையோன் மிடற்றி லடக்குதற்கும் பாணி மிசையசையப் பண்ணுதற்கும் :- பாணந் 409. தொடுப்பதற்கும் பார்ப்பதற்குஞ் சூழ்கழற் காலன்மேல் விடுப்பதற்கு மெண்னும் விழியாள் :- விடைக்கொடியோ 410. ராய பிறப்பை யணுகா தவருடைய தூய பிறப்புணர்த்துந் தோளினாள் :- நாயனார் 411. சேமச் சிலையுஞ் சிலையு மிவையென்று தாமுட் குறிக்குந் தனத்தினாள் :- மாமழுவோன் 412. தென்றல் படக்குழைந்த தேமாவின் கொம்பரிது வென்று திருவுள்ளத் தினிதெண்ண :- வொன்றாகத் 413. துய்யவளைக் கையுந் துவர்வாயுஞ் சோதிதிகழ் மெய்யு நிறமும் விளங்குவான் :- மொய்யமரிற் 414. றாவும் விடையுடையான் றன்மேன் மலர்வாளி யேவுமதனை யெரித்த நாண் :- மேவுற் 415. றெழும்புகையும் வானமு மென்ன வுரோம வொழுங்கு மிடையு முடையாள் :- தொழுஞ்சுரரைக் 416. காக்கு மிடற்றார்க்குக் கச்சாதல் காப்பாதல் ஆக்க நினையுமக லல்குலாள் :- நோக்கிதய 417. தூவி மயிலனையார் சூழ வொருகமல வாவி யருகு மகிழ்ந்திருப்ப :- மேவியயில் 418. உண்கண் விறலி யொருத்தி செழுங்களபக் கொங்கை யிணைப் படைத்த கூற்றமே:- யெங்குமளி 419. நின்றோ லிடுகின்ற நீள்வனசக் கோயிறனக் கின்றோ குடிபுகுத விட்டநாள் :- ஒன்றாக 420. விஞ்ச வழகுடையார் வீற்றிருப்ப தல்லாது கஞ்ச மலரொருத்தி காணியோ :- வஞ்சாதே 421. யிந்த வழகல்லா லேந்துமோ கஞ்சமலர் தந்த வழகு தனையென்று :- செந்திருமுன் 422. சென்று பணியத் திருவால வாயுமணி மன்றுமொரு கடவுண் மாநிழலும் :- என்றும் 423. விரும்பி யுறைமழுவாள் வீரன் றசாங்கம் இருந்து விறலிபா டென்னத் :- தெரிந்தபெரும் 424. பாகுபல வுடையான் பாட்டுக் கொருவடிவான் றியாக முதவுந் திருமலையு :- மாகம் 425. பெருக்கு மறுகும் பிறைக்கொழுந்தும் பாம்பும் எருக்கு முடித்தமண லியாறும் :- விருப்பொடர 426. னந்தண் பெருந்துறையி லாளுடையா ரம்மணலில் வந்து சிறந்த வளநாடுஞ் :- சந்தும் 427. வடங்கொ ளிளமுலையால் வானோ ரறியா வுடம்பு குறிபெற்ற வூரும் :- தொடர்ந்தவரி 428. நீலம்போற் கண்ணார் நிறமெல்லாந் தன்னுடைய கோலம்போ லாக்குங் குளிர்தாரும் :- ஆலிலையிற் 429. சேக்கைப் புயலின் றிருநாபி யிற்பனவன் வாக்கிற் பிறந்த வயப்பரியு :- நோக்கித் 430. திரண்டா யிரங்கயிலை செல்வதெனத் தோன்று மிரண்டா யிரங்கோட் டிபமும் :- நெருங்கு 431. கடிக்கற் பகவனத்தைக் காசினிமே லாயர் கொடிக்குக் கொடுத்த கொடியுங் :- துடிக்கண் 432. தழங்கு சதியுடையான் றாண்டவத்துக் கேற்ப முழங்கு திருக்கை முரசுந் :- தொழும்பா 433. லடுத்து சுரர்பரவ வண்டாண்ட மெல்லாம் படுத்ததிரு வாணையுமே பாடத் :- துடிக்கவிதழ் 434. நெஞ்சு தளர்ந்து நெறிமயங்கி நீடுயிர்த்து வஞ்சி யறிவழிந்து மாலாகி :- யஞ்சாதே 435. ஆகம் பிரியா வவளை யறியாமல் ஏகம்பர் தாமேவந் தெய்திலேம் :- மோகங்கொண் 436. டார மருவி யகன்மார்பி லென்னையவர் சேர வரவணைக்கத் தேடிலேம் :- பாரடையத் 437. தாவும் விடையுடையோன் றன்மேற் றனத்தழும்பு மேவுங் கலவி விளைக்கிலேம் :- பூவின்றும் 438. பாகி லணுநலம் பாராட்டி யென்னையவர் ஆராய புலவி யகற்றிலேம் :- நேயமுடன் 439. போக வுததியினிற் புக்கழுந்தி நெக்குருகி யாக மிருவருமொன் றாகிலேம் :- ஆகத் 440. தணைத்த தறிய வவரணிந்த நீறென் பணைத்த முலைமேற் படிலேம் :- மணிக்களத்தா 441. ரின்று மணந்தபடிக் கென்னுடம்பு சான்றாகக் கொன்றை மணநாறக் கூடிலேம் :- என்றிருந்து 442. வாழும் படிதன் மனத்திற் பிறந்ததெல்லாந் தோழி யுடனிருந்து சொல்லுங்காற் :- சூழு 443. நெருக்கார மாலை நெடுநிலா வீசுந் திருக்காவண நிழலிற் சேயுந் :- திருத்தாள்சேர் 444. சீலம் படைத்துத் திருநீ றிடவயிற்றிற் சூலை கொடுத்தாண்ட தொண்டனும் :- ஓலையுடன் 445. சென்று தடுத்து திருவெண்ணெய் நல்லூரி லன்று படைத்த வடியானுங் :- கொன்றை நறுந் 446. தேன்பாய் முடிமேற் றிருச்சேய்ஞலூர் தன்னி லான்பால் சொரிந்தாட்டு மந்தணனுந் :- தேன்போலத் 447. தித்திக்கு மாறு திருவா சகஞ்சொன்ன பத்திப் பெரும்பெருக்குப் பாலனு :- மெத்திசையுஞ் 448. செல்ல வரிய சிவதத் துவமல்லா தில்லையென வெழுதி விட்டோனு :- நல்லதவஞ் 449. சூழ்வாருஞ் சூழ்ந்துவரச் சூதத் திருநிழலின் வாழ்வோன் மணிமறுகில் வந்தணுகத் :- தாழ்குழலு 450. முற்ற நினைந்தவெல்லாம் முன்வந்து கைபுகுதப் பெற்றவள்போல் வந்து பெரிதிறைஞ்சி:-பொற்றொடியாள் 451. துய்ய புரிநூலும் தோளும் திருமார்பும் மையல் பெருக வரநோக்கித் :- தையலாள் 452. ஈசன்தன் மார்புநல் எண்தோளும் நீங்காத வாச நறுங்கொன்றை மாலையே :- பாசறையில் 453. வீசு பனிநீரும் மிக்க அகில் சந்தனமும் பூச உனக்குப் பொறுக்குமே :- வீசிவரும் 454. போதாரும் தென்றல் புகுதுகைக்கு மாளிகையின் வாதா யணந்திறந்து வைப்பையே :- நாதம் 455. அளவே அளவேயென்(று) ஆயரிரா ஏதும் துளைவேய் உனக்குச் சுடாதே :- குளிர 456. அடுத்த செழுங்கரீ ராலே படுத்த படுக்கை சருகு படாதே - கடக்கவரி (து) 457. ஆயவிரி கங்குல் அடல்மா மதன்சொரியும் சாயகங்கள் உன்மீது தையாவே :- மாய இரா 458. வெண்ணிலா ஊழி எரித்தாலும் இங்குனக்குத் தண்ணிலா ஏதுந் தழலாதே :- நண்ணுமயல் 459. அய்ய விடையாரும் அன்னையரும் தாமொறுக்கும் வெய்ய உரைகேட்க வேண்டாவே :- பையவரும் 460. சேவின் மணியிசைக்கும் தீரா அலைகடற்கும் கூவும் குயிலுக்கும் கூசாயே :- மேவியநின் 461. முன்றில் உயர்பனையின் மூரி மடற்குடம்பை அன்றில் அரிக்குரற்கும் அஞ்சாயே :- என்றாலும் 462. வெய்ய பசலை விளைவானேன் மேனியெங்கும் துய்யமலர்க் கண்ணீர் சொரிவானேன் :- செய்யவங்கை 463. வண்டு விழுவானேன் மற்றெனக்குச் சொல்லென்று கெண்டை விழிமாது கேட்பளவில் :- திண்டிறல்வேள் 464. காவி ஒழிந்த கணைசொரிந்தான் அவ்வளவில் தேவர்கள் நாதன் தெருவகன்றான் :- பாவைமேல் 465. ஆர வடமும் அணிந்தார் குளிர்ந்தபனி நீரும் மடவார் நிரப்பினார் :- பேரிளம்பெண் பேரிளம்பெண் 466. திண்மை மதனன் செலுத்துகின்ற பேராண்மை பெண்மை யழகின் பெரும்பெருக்குத் :- தண்மலரோன் 467. நாவுமளவிறந்த ஞானத்தாற் பேரழகாற் பூவுமரசாளப் போதுவாள் :- தேவர் 468. அரச னிமையாத வாயிரங்கண் சூழத் தருநிழலில் வாழத் தகுவாள் :- விரவி 469. யினிய கலவி நலமெல்லா மதனன் மனைவியையுங் கற்பிக்க வல்லாள் :- கனைகடல்சூழ் 470. பாரைப் பெரிதுழைக்கப் பண்ணிப் பழையசுர ரூரைப் பெரிதுழைக்க வொட்டாமல் :- வாரிட்டுக் 471. கட்டுண் டனமென்று நாணிக் கவிழ்ந்துதலை யிட்டனபோற் சாய்ந்த விளமுலையால் :- கிட்டரிய 472. சைவப் பெருமை தமிழ் நாடறிவித்த தெய்வப்புலவன் றிருமுறையுஞ் :- வெவ்வமணர் 473. ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத் தேருமரசன் றிருமுறையுஞ் : சேரனுடன் 474. அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற் சென்றபெருமான் றிருமுறையுந் :- தென்றிசையின் 475. மாடப் பெருந்துறையில் வந்த வருட்கோலந் தேடித் திரிந்தோன் றிருமுறையுங் :- கூடவினி 476. தோதி யவர்கரு வுள்ளக் கருத்தினுள கோதி னிலைமையெல்லாங் கும்பிட்டுச் :- சோதிதிகழ் 477. அஞ்செழுத்தும் ஏகம்ப ராடுந் திருக்கூத்து நெஞ்சழுத்தி வைக்கு நிலைமையாள் :- மஞ்சு 478. பொருந்துமணி மாளிகையிற் பூங்கவரி வீசு விரும்புமணி யாசனத்தின் மீதே :- யிருந்தெவரும் 479. பேச வரிய பிரானார் திருவார்த்தை யாசையுடன் கேட்புழிவந் தாங்கொருத்தி :- வாசலின்க 480. நின்றா னொருமறையோ நீறணிந்த கோலமுடன் என்றாள் வரவிடுவை யென்றுரைத்துச் :- சென்றெதிர்கொண் 481. டங்கை குவித்தோ ரரியா சனத்தில்வைத் (து) எங்கடவம் வந்தவா ரென்றுரைசெய்து :- அங்கமுடன் 482. முன்னை மறைநூல் முதலாய வெக்கலையு நின்னி லறிவார் நிலத்தில்லை :- மின்னுசடை 483. மீச னிலைமைக்கு மேனையிமை யோர்நிலைக்கும் வாசி யுரைதெளியும் வாறென்னப் :- பூசுரனும் 484. என்னிலைமை சோதிக்க வென்றோ விதுசொன்னாய் நன்னுதலே யென்று நகைசெய்யா :- வுன்னி 485. யிதனை யிதனுடனே யெண்ணலா மென்னு மதனை வினவுதலே யன்றி :- மதியதனில் 486. எண்ணமிலா தார்போல வெல்லா மினிதுணர்ந்த பெண்ணமுதே கேட்கப் பெறுதியோ :- மண்ணுலகிற் 487. குன்றி தனையொருபொற் குன்ற முடனிகரும் என்று திரிவாரை யென்செயலாந் :- துன்றிருள்போம் 488. விஞ்சு சுடருடைத்தாய் மின்மினியே வந்துதிக்குஞ் செஞ்சுடரி னென்பாரைச் செய்யுமதென் :- றஞ்சமென 489. கல்லா னிழலிருந்த கண்ணுதலார் தம்முடனே எல்லா ரையுந்தேவ ரென்றுரைத்த :- னல்லாயொப்(பு) 490. ஏதும் நிகரா விரும்பினையும் பொன்னினையுந் தாது வெனவுரைக்குந் தன்மைகாண் :- மீதுலவு 491. நீடு சுடராழி நிலத்தேரி லீரிரண்டு பாடு சுருதிப் பரிபூட்டித் :- தோடார் 492. நளினத்துப் பாக னடத்த வெரிவாய்த் துளவப் பகழி தொடுத்துக் :- கொளுவியநாண் 493. மூரி யரவாக மூதண்ட முந்தாங்கு மேரு வெனுஞ்சயிலம் வில்லாக :- வார்வமுள 494. மூவ ருயிர்வாழ முப்புரமு நீறாக யாவர் பொருதா ரிமையோரிற் :- றேவர் 495. பழித்த பெருவேள்வி பழாக வாள்விட் டழித்த விமையவர்வே றார்தான் :- இழைத்து 496. வதைப்பான் வருங்கூற்றை மார்க்கண்டர்க் காக வுதைத்தா ரிவரல்லா துண்டோ :- வெதிர்த்த 497. கழற்கான் மதன்மாளக் கண்மலரால் வெய்ய வழற்றானை யேவினா ரார்தான் :- நிழற்பொற் 498. கலையா னிடந்திட்ட கண்ணுக்கோ ராழி விலையாக நல்கினார் வேறார் :- நிலையாகத் 499. துன்னு மொருசிலந்தி சோணாடுங் காவிரியு மன்னி யரசாள வைத்தவரார் :- பன்னெடுநாள் 500. தேடி யிருவர் திரியத் தெரியாமல் நீடு சுடர்வடிவாய் நின்றவரார் :- ஆடலென 501. வுங்காரஞ் செய்தே யுலகுண்ட மாலயனைச் சங்காரஞ் செய்துபின்னுந் தந்தவரார் :- பங்கயன்மால் 502. வீந்த சுடலை விபூதி தரித்திருவர் ஆர்ந்ததலை மாலை யணிந்தவரார் :- மாய்ந்திடவே 503. நாரா யணருடலு நாலுமுக னாருடலுங் கூராய சூலமிசைக் கொண்டவரார் :- சேர 504. வெரிந்த பிறையெயிற்றி னீரைந்து வாயும் பரந்து செழுங்குருதி பாய :- நெரிந்தொருவன் 505. மான்று கிடக்க மலையான் மகளுடனே யூன்று விரலொன் றுடையவரார் :- தோன்றியடல் 506. ஓத விடமுன் டுபயநிறத் தாமரைமேற் கோதையர்க்குத் தாலி கொடுத்தவரார் :- மாதவனைக் 507. கூடி யயனைக் கொடுத்தவரார் மோகினிபால் நாடுமெழிற் சாத்தனைமு னல்கினரார் :- பாடார்ந்த 508. புத்தேளி ரென்பைப் புனைந்தவரா ரல்லினுமை கைத்தாளங் கொட்டநடங் காண்பவரார் :- மத்தமுறும் 509. ஆதிநெடு மாலுதிர மத்தனையுங் கைக்கலத்திற் பாதிதனி லேநிறையப் பண்ணினரார் :- வேதமுடன் 510. றுண்ணெனவே யாழிபுகுஞ் சோமுகனைச் செற்றிடுமீன் கண்ணை யுகிறாற் களைந்தவரார் :- கண்ணனார் 511. ராமைவடி வந்தனிலு மாதிவரா கந்தனிலு மாமுதுகோட் டைக்கரத்தால் வாங்கினரார்:- தூமறையும் 512. பேசரிய சிம்புளாய்ப் பேரா டகனையடுங் கேசரியை வள்ளுகிறால் கீண்டவரார் : கூசா(து) 513. தடருஞ் சலந்தரனை யன்றாழி சூட்டி யுடலம் பிளந்தவர்வே றுண்டோ :- படிவிண் 514. முழுதளந்த மாயன் முதுகெலும்பைச் செந்நீ ரொழுகவே வாங்கினர்வே றுண்டோ:- பழுதென் 515. தடமலரோ னுச்சித் தலையை யுகிரால் உடனே குறைத்தவர்வே றுண்டோ :- நெடுவிசும்பு 516. முற்றும் புதைத்தலையான் மோதுஞ் சுரநதியைச் சுற்றுஞ் சடையிற் சுவறுவித்து :- மற்றும் 517. பகீரதனின் றூழிநாட் பாதமலர் போற்ற மகீதலத்தே போதுவித்தார் மற்றார் :- புகழைச் 518. செலுத்தச் சிறுத்தொண்டர் தேவியறுத் தாக்கிக் கலத்திற் படைத்த கறியைத் :- தலைக்கிட்ட 519. சுட்டியு மாலைச் சுரிகுஞ் சியுமுத்துங் கட்டியை நல்குங் கனிவாயு :- மிட்டதொரு 520. வாளியுங் காது மருங்கும் மணிவடமுந் தாளிணையஞ் செம்பொற் சதங்கையுமாய் :- மீளப் 521. பிறப்பித் தவர்தம் பெரும்பிறப்பை யெல்லா மறுப்பிக்க வல்லவர்தா மற்றார் :- நறைக்கொன்றை 522. யாதி தனையொழிய வாறாறு தத்துவத்தின் மீது மகிழ்ந்திருக்கும் விண்ணவரார் :- மாதிற் 523. பொருந்தி விடையாகப் பூந்துழாய் மாலை விரும்பு நடத்தினார் வேறார் :- அரன்பெருமை 524. யின்னம் பலகோடி யில்லையோ யாமிருந்து சொன்ன பொழுதே தொலையுமோ :- வுன்னரிய 525. மூவா முதலா முதல்வனையு மூவுலகிற் சாவார் பிறப்பார்கள் தங்களையுந் :- தேவாக 526. வொக்க நினைவாருக் கல்லவோ வோரேழு மிக்க நரகம் விதித்ததுகாண் :- மைக்கண் 527. மருவார் குழலியென மற்றவளு மந்தப் பெருவாழ் வுடைய பிரானைப் :- பரவியவர் 528. தெய்வ வெழுத்தைந்து மோதித் திருநீறு மெய்யி லணிய விதியற்று :- மையறரும் 529. எட்டெழுத்தை யோதி யிடுவார்மண் ணெப்பொழுதுங் கட்டுரைக்க வென்னக் கவுதமனா :- ரிட்டபெருஞ் 530. சாபத் தியல்பு தருமா மறையோர்செய் பாபக் கலிகாலப் பண்புகாண் :- கோபவிதழ் 531. மின்னே யெனச்சிறந்தும் வேதியரா கிப்பிறந்தும் என்னே பெருமை யிருந்தவா :- முன்னை 532. மறையினெழுத் தைந்தும் வாயார வோதி நிறைய வணிந்துதிரு நீறும் :- பிறவிதனை 533. வாட்ட வறியாமல் வாளாப் பிறவிதனை யீட்டுவதே பாவ மெனவுரைத்து :- வேட்டவெலா 534. மொண்டொடியும் வேதியனுக் குள்ள மகிழ்ந்தளித்து வண்டணையும் பூவணைமேல் வந்திருப்ப :- பண்டுவிட 535. முண்ட பிரான் பாகத்தொருத்தி முலைத்தழும்பு கொண்ட பிரானாடக் குழுவெல்லாந் :- தண்டகமா 536. நன்னாட்டுத் தேவர்க ணாயகனார் சோணாட்டின் முன்னாட்டு மன்றின் முதலியார் :- தென்னாட்டிற் 537. சூடு மபிடேகச் சொக்கனார் துங்கமணி மாட நெடுவீதி வந்தணுக :- வாடகப்பூஞ் 538. சோதிச் சிலம்புக்குஞ் சூழ்பா டகத்துக்கும் பாதத் தழகைப் பகிராதே :- மோதிளநீர் 539. ஆன முலையழகை யாரவிள வண்டலுக்கும் நானநறுந் தொய்யலுக்கு நல்காதே :- வானநிலா 540. ஆர மணித்தோ ளழகைக் கரும்புக்கும் ஈரமிலா வல்லிக்கு மீயாதே :- தாரைப் 541. பலவுநிரைத் தன்னதொடைப் பாளைக் களகம் குலவு மழகைக் கொடாதே :- கலவிநலம் 542. கொண்டதிரு மார்புங் குளிர்ந்த திருச்சாந்தும் வண்டணியுங் கொன்றை மலர்த்தாரும்:- தொண்டருள 543. அந்தா மரைமலரை யானந்தத் தாண்டவஞ்செய் செந்தா மரையுந் திருச்சிலம்பும் :- சிந்தை 544. மகிழ மகிழ வணங்கிவளை யெல்லாம் நெகிழ நெகிழவெதிர் நின்று :- சகமேற் 545. பிறவாம லெண்ணிறந்த பேரண்டம் மாய்ந்தும் இறவாத மேனி யிறைவா :- உறவாய்ச் 546. சிரித்து முகம் பார்த்துத் திருக்கொன்றை மாலை தரித்ததிருத் தோளழகைத் தாரீர் :- ஒருத்திகுறி 547. ஆக மிசையில்லை யாமாகி லிப்பொழுதே ஏக வுமைவிட் டிருப்பேனா :- ஆகிலுநான் 548. கட்டி யிறுகக் கலந்துருகி ஒன்றாகி இட்ட குறியழித்தால் யார்தவிப்பார் :- பட்டதுபண்டு 549. ஆவல்கெடப் புல்லி அகலாமல் யான்வளைத்தால் ஏவரெனைத் தள்ளியுமை ஏகுவிப்பார் :- மேவியெனைப் 550. புல்லி ஒருக்காலும் போகா வகைபிணித்து வல்ல படிகாண மாட்டேனோ :- நல்லமட 551. நாண்கொண்ட தாருவன நங்கையரைப் போலமனம் வீண்கொண்டு போக விடுவேனோ :- மாண்கொண்டு 552. பூத்ததிரு நீறும் புயமும் திருமார்பும் ஏத்து மவர்க்கருளீர் என்னென்று :- வாய்த்தசொலால் 553. ஆவதெல்லாம் பார்த்தால் அவளும் தழுவுகைக்கங்(கு) ஆவதெல்லாம் பார்த்தால் லவைவருமோ :- ஆவி 554. உருகும் வகைகாதத் துண்டாக நோக்கி விரவுநகை கொண்டேகி விட்டார் :- தரளம் 555. இடையும் நகையார் வரெழுவர் ரிங்ஙன் கொடிய பெருங்காதல் கொள்ள :- முடிமேல் 556. நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன் உலாவுடையான் போந்தா னுலா. முற்றும்.

Related Content

Sundarar Thevaram - 7.061 - Kachiekambam - Alanthan Ugandhu