logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவான்மியூர் அருட்புகழ்  - அருட்கவி சேதுராமன்

(அருட்கவி சேதுராமன்) 

 

காரிகா மாரிகா லாரிகோ வேறிகா பாலிதேர்ப்‌
பாரிபா மாரியாழ்‌ மூரிசா தாரிபாற்‌ பற்றினான்‌
வாரி பால்‌ மாகரை யோரமாய்ச்‌ சங்கமூர்‌ வான்மியூர்‌
நாரிபா கன்கழல்‌ நாடுவார்‌ தீவினை நாசமே

(காரி-மேகத்தைச்‌ சடையில்‌ கொண்டவன்‌. காம அரி,
கால அரி-மன்மதனுக்கும்‌, யமனுக்கும்‌ பகைவன்‌. கோ-பச
தேர்ப்பாரி-(பார்‌) பூமியாகிய தேரினன்‌, நாரி-பெண்‌)

2. காடவர்‌ கோன்கழற்‌ சிங்கர்கா ளத்தியார்‌ கண்ணப்பர்‌
ஆடவர்‌ கோன்குலச்சிறை திரு மங்கையர்க்‌ கரசியார்‌
கூடலர்‌ கோனிவர்‌ கும்பிட்டு வழிபடும்‌ கொள்கையான்‌
மாட்கூ டங்கள்‌ சேர்‌ வான்மியூர்‌ வாணனை மறவலே.

(கூடலா்‌-மதுரை மக்கள்‌. கோன்‌-நெடுமாற பாண்டியன்‌)

3. காசிசீ காழிகா னூர்கச்சி புக்கொளி யூரவி
நாசிநா கைநணா நல்லம்வல்‌ லம்நனி பள்ளியான்‌
வாசியா மாறுகோ மாயுவை வைத்தவன்‌ வான்மியூர்‌
மாசிலா மாமணி யீசனை வாழ்த்துதல்‌ வண்மையே

(வாசி-குதிரை. கோமாயு-நரி)

4. காளிகை யாளிமா வாகனி கூளிகள்‌ காணப்பூ
வாளிகைக்‌ கொண்டமா ரோனைவெல்‌ வாளைவென்‌ றாடினான்‌
மாளிகை சூளிகை மாமதில்‌ சூழ்திரு வான்மியூ
ராளிகைம்‌ மாவுரி போர்த்தவற் கன்பர்க்கா ளாவதே.

(காளிகை- காளி. யாளிமா வாகனி-காளி, கூளி-பேய்‌,
பூவாளி-மலர்ப்பாணம்‌, மாரோனை-மன்மதனை)

5. காமனைக்‌ காய்ந்தவன்‌ காளகண்‌ டன்முக்கட்‌ காரணன்‌
பூமனைத்‌ தண்டனை செய்தவன்‌ பொற்சடைப்‌ பொற்பினான்‌
மாமனைத்‌ தண்டித்தாட்‌ டுத்தலை வைத்தவன்‌ வான்மியூர்ச்‌
சோமனைச்‌ சூடிதன்‌ தொண்டுகொள்‌ ளாவிடிற்‌ றுன்பமே.

6. கீளுலாம்‌ கோவணம்‌ கீழரைக்‌ கேயசைத்‌ திட்டவன்‌
கோளுலாம்‌ வேணிமேற்‌ கோளராக்‌ கூவிளம்‌ கொண்டவன்‌
வாளுலாம்‌ நீள்விழி மாதராள்‌ பங்கினான்‌ வான்றியூர்த்‌
தேளுலாம்‌ செஞ்சடைக்‌ தேசிகன்‌ சேவடி சேர்மினே.

(கோள்‌-ஒளி. தேளுலாம்‌ செஞ்சடை-சிவபிரான்‌ சடையில்‌
தேளும்‌ உண்டு ''பொற்கடுக்கை ஏடவாம்‌"*- (திருப்புகழ்‌-1857.)
*கபாலமாலா பரணம்‌ ஸர்ப்ப வ்ருச்சிக பூஷணம்‌''. அகோர
மூர்த்தி ரூபத்யானச்லோகம்‌)

7. காத்தருள்‌ கண்ணன்மால்‌ காமன்கா மன்றொழும்‌ காலினான்‌
பூத்தருள்‌ புன்னகைப்‌ புட்குரற்‌ செய்யலாய்‌ புந்தியான்‌
மாத்தருத் தண்டலை வண்டறை பொய்கைசூழ்‌ வான்மியூர்‌
ஏத்தலார்க்‌ கில்லையின்‌ பம்உண்டெந்‌ நாளுமில்லாமையே

(மால்‌-திருமால்‌. காமன்‌-இந்திரன்‌. காமன்‌-மன்மதன்‌.
செய்யவாய்‌-பார்வதி. (அன்மொழித்‌ தொகை)

8.  காட்டுவான்‌ கையடை யாளம்கல்‌ லாலின்கீழ்‌ நால்வருக்‌
கூட்டுவான்‌ மெய்யுபதேசங்கள்‌ உண்மையாய்‌ ஓதினான்‌
வாட்டுவான்‌ மெய்யடி யாரையே வஞ்சனாய்‌ வான்மியூர்‌
வேட்டுவான்‌ கங்கைவாழ்‌ வேணியான்‌ பேணினான்‌ மெய்ம்மையே

9. காதலாற் பாடுவார்‌ கண்கள்நீர்‌ தேக்குவார்‌ கண்ணியர்‌
வேதமே யோதுவார்‌ விண்ணவர்‌ மண்ணவர்‌ வேண்டவே
வாதவூரார்க்கருள்‌ செய்தவன்‌ வாழ்திரு வான்மியூர்‌
ஓதிவல்லார்கள்‌ தம்‌ ஊழொடு தொல்லினை யோயுமே.

10. காணரி தாகவோர்‌ காலரிக்‌ குன்றமாய்க்‌ கண்டவன்‌
பேணரி தாயவன்‌ பிஞ்ஞகன்‌ பித்தன்பேழ்‌ வாயணி
வாணன்மை வார்குழல்‌ மங்கைநல்‌ லாள்பணி வான்மியூர்‌
வாணனை வந்தனை செய்பவர்‌ சிந்தனை மன்னுமே

(அரி-நெருப்பு. பேழ்வாய்‌-பாம்பு)

11. காற்றனல்‌ மண்புனல்‌ விண்ணிவை ஐத்துமாய்க்‌ காண்பவன்‌
ஏற்றவன்‌ ஏற்பவன்‌ என்பவர்‌ தங்களுக்கேற்றவன்‌
மாற்றலர்‌ முப்புரம்‌ சுட்டவன்‌ வாழ்திரு வான்மியூர்ப்‌
போற்றலும்‌ சாற்றலும்‌ புண்ணியம்‌ நண்ணிய செய்கையே

(ஏற்றவன்‌- இடப வாகனத்தன்‌. ஏற்பவன்‌-பிச்சை எடுப்பவன்‌, ஏற்றவன்‌-உரியவன்‌ ]

12. காலனை யன்றுதை காலினான்‌ கஞ்சுகிக்‌ காதினான்‌
வேலனை யீன்றவள்‌ சுந்தர நாயகி வேட்டணை
வாலனாம்‌ மாதிவான்‌ மீகர்பூ சித்தவூர்‌ வான்மியூர்ப்‌
பால்வண்‌ ணன்மருந்‌ தீசன்பா தங்களைப்‌ பற்றுமே

(கஞ்சுகி-பாம்பு. சுந்தர நாயகி-அம்மை திருநாமம்‌.
பால்வண்ணார்‌, மருந்தீசர்‌-இறைவன்‌ திருநாமங்கள்‌,)

Related Content