logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌

வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌ எழுதிய

 

காப்பு - வெண்பா

திருவான்மியூர்ச்‌ சிவனே சீதரனும்‌ போற்றும்‌
ஒருவா! புலித்தோல்‌ உடையாய்‌ -- மருவார்‌
கடுக்கை யணிவானே! நின்கண்ணருளால்‌ என்றன்‌
இடுக்க ணெலாம்‌ தீர்த்தருளின்றே.

அங்கமுற்றும்‌ வெண்ணீ(று) அணியும்‌ உன(து) அடியார்பால்‌
வெங்கலிதோய்‌ மருலிலுன்றன்‌ வியன்புகழ்க்கோர்‌ இழிவன்றோ 
பங்கமில்‌ சீர்தென்னளகைப்‌ பதியுடையான்‌ ௨யிர்போல்வாய்‌
செங்கண்‌ விடைப்பரி யூர்வாய்‌! திருவான்மியூர்ச்‌ சிவனே.     1

மெளவந்‌ தோட்புரவலர்தம்‌ வாழ்வினையும்‌ மதியார்தாம்‌
எவ்வ முறக்காணிலும்‌ சற்‌(று)மிரங்காதல்‌ முறைகானோ?
பெளவவிடம்‌ உண்டோனே! பரமாய பண்ணவனே!
செவ்வரிக்‌ கண்‌ உமைபங்கா! திருவான்மியூர்ச்‌ சிவனே.     2

இருக்கு முதலாய மறை ஈரிரண்டும்‌ ஏத்தரிதாப்‌
பெருக்கும்‌ உன்றன்‌ புகழ்சிறிது பேசும்நலம்‌ பெறுவேனோ?
மருக்கமழ்‌ பூங்கொன்றை யணிவார்‌ சடையில்‌ மதிவைத்தாய்‌!
திருக்‌ கொழியத்‌ தடுத்தாள்வாய்‌! திருவான்மியூர்ச்‌ சிவனே.     3

நாவேறுமவள்‌ கேள்வன்‌ நடுத்தலையில்‌ பலிகொள்வாய்‌
பாவேறப்‌ புனைவார்க்ருப்‌ பரிசளித்த விதம்‌ யாதோ?
தாவேறும்‌ வல்லவுணர்‌ தமக்கும்‌ அருள்வானே!
சேவேறும்‌ பெருமானே! திருவான்மியூர்ச்‌ சிவனே.       4

புத்தர்‌ முதற்பகர்கின்ற புலைச்‌ சமயத்தினர்‌ முன்னென்‌
சித்தமொல்கித்‌ தளராமற்‌ திருவருள்‌ வாழ்வடையோனோ?
மத்தமெருக்‌ காத்திதும்பை வன்னிமு தற்‌ சென்னியிற்கொள்
சித்தனே! ஈடில்புகழ்த்‌ திருவான்மியூர்ச்‌ சிவனே.     5

புணராமுலை மின்னார்‌ பொய்ப்போக மயல்‌ கொண்டு
நாணாமற்‌ றிரிவேற்கு நலம்சிறி(து) ஈந்தருள்வாயோ?
ஆணாதி ஒரு மூன்று ஆகியொன்றும்‌ ஆகானே!
சேணாடர்‌ பணிகொள்ளும்‌ திருவான்மியூர்ச்‌ சிவனே!     6

கரியவனும்‌ காணாநின்‌ கழல்பாடிக்‌ சுசித்துருகா(து)
உரியவினைப்‌ போகத்தூ(டு) உழல்வேனும்‌ உய்வேனோ?
கிரியினை வில்லெனக்‌ கொண்டு கிளர்‌ ஒளிப்‌ புன்னகை தன்னால்‌
திரிபுரம்‌ நீறெழச்‌ செய்தாய்‌! திருவான்மியூர்ச்‌ சிவனே!     7
 
மிக்கபுகழ்ப்‌ பார்த்தன வில்லடிக்கு விறல்வாளி
அக்கணத்‌ தன்‌ (று) அருள்‌ செய்தாய்‌! அடியேனுக்‌ கிரங்காயோ?
முக்கண்ணுடைப்‌ பெம்மானே! மூவருக்கும்‌ முதலானாய்‌!
திக்கடங்க உணர்சீலத்‌ திருவான்மியூர்ச்‌ சிவனே!      8

அத்திமுகத்தினன்‌ செவ்வேள்‌ ஆகும்‌ இருவரைப்‌ பெ ற்றாய்‌!
நத்தியுனைப்‌ போற்றிசைக்கும்‌ நாயடியேற்(கு) இரங்காயோ?
பத்திவலைப்‌ படல்‌ கூறிப்‌ பணிந்தானுக்‌(கு) அருள்‌ செய்தாய்‌!
சித்தியொடு முத்தி நல்கும்‌ திருவான்மியூர்ச்‌ சிவனே!      9

நால்வர்களுக்கு அருள்‌ செய்த நலம்கேட்டு நண்‌ ணியுன்றன்‌
பால்வரும்‌ என்றனக்கான பரிசின்னே தரவேண்டும்‌!
கோல்வனப்புக்‌ கண்ணாளைச்குல விடைமேற்‌ கூடவைத்தாய்‌
சேல்வள நீர்வயல்‌ காட்டும்‌ திருவான்மியூர்ச்‌ சிவனே .     10

செல்வமலி தருபான்மைத்‌ திருவான்மியூர்ச்‌ சிவன்பால்‌
நல்வரம்‌ பெற்றுய்வ தெண்ணி நறுந்தமிழ்த்‌ தென்மலய மெனும்‌
கல்வரைப்பால்‌ அவிர்கின்ற கழைவனத்தோன்‌ கழறுமிவை
சொல்வதனிற்‌ துணிவுற்றோர்‌ துயர்சிறிதும்‌ தோயாரே!      11

Related Content