logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவ பூஜா பலம்

 

            யே வாஞ்சந்தி மஹாபோகான் ராஜ்யம் வா த்ரிதசாலயம் |

            தே () ர்சயந்து ஸதா பக்த்யா ஹரஸ்ய சரணாம்புஜம் ||               1

                ப்ரஹ்மணஸ்ஸ்ருஷ்டிகர்த்ருத்வம் விஷ்ணோர்தாவை மர்தனம் |

      ஸுராதிபத்யமிந்த்ரஸ்ய சிவபூஜாவிதே: பலம் ||                        2

 

      வ்யாஸஸ்ய கபிலஸ்யாபி வித்யாவாப்திர்யதத்புதம் |

      அப்ராப்யம் ப்ராப்யதேயைஸ்து சிவபூஜாவிதே: பலம் ||                  3

 

      யத்வாரே மத்தமாதங்கா: வாயுவேகாஸ்துரங்கமா: |

      பூர்ணேந்துவதநாநார்ய: சிவபூஜாவிதே: பலம் ||                         4

 

      பவநாநி மனோக்ஞானி விப்ரமாபரணா ஸ்த்ரிய: |

      தன்ஞ்ச த்ருப்தி பர்யந்தம் சிவபூஜாவிதே: பலம் ||                      5

 

      ஸெளபாக்யம் காந்திமத்ரூபம் ஸத்யம் த்யாக ப்ரவகத்ருதா |

      செளர்யம் ஜகதிக்யாதி: சிவபூஜாவிதே: பலம் ||                       6

 

      வித்யா ரூபம் தனம் ஸெளம்யம் ஸத்குலம் ரோகநாசிதா |

      ஸ்வர்கோ ராஜ்யம் மோக்ஷச்ச சிவபூஜாவிதே: பலம் ||               7

 

      ஸஸ்நாத: ஸர்வதீர்த்தேஷு ஸர்வயக்ஞேஷு தீக்ஷித: |

      : பூஜயேத் மஹாதேவம் ஸகச்சேத் பரமாம் கதிம் ||            8

 

      ஸததம் பூஜஸேத்யோஹி மாநவஸ்து தினேதினே |

      நதஸ்ய புனராவ்ருத்தி: ஸம் ஸாரே பவதி க்வசித் ||

 

1)     எவர்கள் தேவலோகத்தை ஆள ஆசை கொண்டாலும் இந்த லோகத்தையும் ஆண்டு சுகமாக இருக்க ஆசை கொண்டாலும் அவர்கள் சிவபெருமானுடைய சரண கமலங்களைப் பக்தியுடன் அர்ச்சனை செய்ய வேண்டும்.

2)     பிரம்மதேவனுக்கு ஸ்ருஷ்டி ஸாமர்த்தியமும், விஷ்ணுவுக்கு அசுரர்களைத் தண்டிப்பதற்கான திறமையும், இந்திரனுக்கு ஸ்வர்க்காதிபத்யமும் கிடைத்தது சிவபூஜையின் பலனாகும்.

3)     வியாஸர் கபிலர் முதலான மஹாகவிகள் அற்புதமான வித்யையை அடைந்ததும் சிவபூஜையின் பலன். அடைய முடியாததை அடையவைப்பதும் சிவபூஜையின் பலன் ஆகும்.

4)     ஒருவருடைய வீட்டு வாசலில் மதம்பிடித்த யானைகளும், காற்றுப் போல் வேகமாகப் பறக்கும் குதிரைகளும், வீட்டுக்குள் பூர்ணசந்திரனையொத்த முகம் உடைய பெண்களும் (இருப்பது) சிவபூஜையின் பலன்.

5)     தோட்டங்களுடன் நல்ல நிலையில் உள்ள வீடுகளும், நல்ல ஆபரணங்கள் உடைய பெண்களும், கஜானாவில் நிறைய பொருள் இருப்பதும் சிவபூஜையின் பலன்.

6)     நல்ல ஸெளபாக்கியமும், காந்தியையுடைய ரூபமும், வாக்கிய ஸத்யமும், கையில் தானமும், பேச்சுத்திறனும், பராக்கிரமும், உலகத்தில் கீர்த்தியும் அடைவது சிவபூஜா பலன்.

7)     வித்யை, அழகு, தனம், இனிமை, நல்ல குலத்தில் பிறப்பது, நோயில்லாமல் இருப்பது, ராஜ்யத்தைப் பரிபாலிப்பது, ஸ்வர்கம், மோக்ஷம் அடைவது முதலானவை சிவபூஜையின் பலன்.

8)     எல்லா புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்வதாலும் ஸர்வ யாகங்கள் செய்வதாலும் என்ன பலனோ அந்த பலனை மஹாதேவனைப் பூஜித்து உத்தம் கதியை அடைவர்.

      இந்த செய்யுளில் ஒவ்வொரு நாளும் சிவபூஜை செய்கின்றவன் திரும்ப இந்த லோகத்தில் பிறக்க மாட்டான் என்று உறுதி கூறுகின்றார்.

 

Related Content

Shivamanasa Puja - Romanized script

शिवमानस पूजा - Shivamanasa Puja

शिवमानस पूजा - Shivamanasa Puja

শিৱমানস পূজা - Shivamanasa Puja

ਸ਼ਿਵਮਾਨਸ ਪੂਜਾ - Shivamanasa Puja