logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சோகாமாஏவாதா

                                                                             è   காளமேகப்புலவர்

சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை

        பாகார்ந்த தில்லைப் பரமேசர்வாகாய்த்

      திரித்தார் எரித்தார் தறித்தார் உதைத்தார்

      உரித்தார் கணைபடைத்தார் ஊர்க்கு.

     

      சோ, கா, மா, , வா, தா என்ற ஒவ்வொன்றோடும்மனைஎன்ற சொல்லைக் கூட்டி, அவற்றுடன் முறையே, ‘தரித்தார்’ ‘எரித்தார்’ ‘தறித்தார்’ ‘உதைத்தார்’, ‘உரித்தார்ஊர்க்குக் கணைபடைத்தார்என்பதைச் சேர்த்தால், உமையம்மையார் ஒரு பக்கத்தில் அமரப்பெற்ற தில்லைப் பரமேச்வர்ர் செய்த அரிய வீரச்செயல்கள் புலப்படும். அதாவது, சோமனைத் (சந்திரனை) தரித்தார், காமனை (மன்மதனை) எரித்தார், மாமனை (தக்ஷனை) யாகத்தில் வெட்டித் தள்ளினார், ஏமனை (இயமனை) உதைத்துத் தள்ளினார், வாமனை (யானை வடிவினனாகிய கஜாசுரனை) உரித்துத் தோலைப் போர்த்திக் கொண்டார், தாமனை (திருமாலை) முப்புறம் எரிக்கக் கணையாகக் கொண்டார் என்ற ஆறு வீரச் செய்கைகள் இவ்வொரு பாடலிலேயே நலம் பெறக் கூறப்பட்டது கண்டு இன்புறுக.

Related Content