logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்

(திருவாலவாயான படலம் முதல் வலை வீசின படலம் வரை)

49. திருவாலவாயான படலம்

2322.	பாய் உடையார் விடுத்த பழி அழல் வழுதி உடல் குளிப்பப் 
                              பதிகம் ஓதும் 
சேய் உடையார் அணைந் திளைக்கும் செவியுடையார் 
                   அளவு இறந்த திசைகள் எட்டும் 
தோய் உடையார் பொன் இதழித் தொடையுடையார் விட 
                              அரவும் சுற்றும் ஆல 
வாய் உடையார் புகழ் பாடப் பெறு வேமேல் வேண்டுவது 
                              இம் மனித யாக்கை. 	

2323.	வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத 
                                    யோகர் 
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி 
                                    மாடக் கூடல் 
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல் 
                     வைத்தகையான் நாட்டச் செல்வி 
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று 
                                    இலாதோர். 	

2324.	ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச் 
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம 
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல் 
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம். 	

2325.	சித்திர மேரு வென்ற திரண்ட தோள் சுகுணன் பின்பு 
சித்திர விரதன் சித்ர பூடணன் திண்தேர் வல்ல 
சித்திர துவசன் வென்றிச் சித்திர வருமன் வன் தோள் 
சித்திர சேனன் சீர்சால் சித்ர விக்கிரமன் என் போன்.	

2326.	மணி கெழு தேரி இராச மார்த்தாண்டன் இராச சூடா 
மணி அணி முடி இராச சார்த்தூல வழுதி சிந்தா 
மணி நிகர் துவிசராச குலோத்தமன் மடங்கா வென்றி 
மணிதிகழ் பொலம் பூண் ஆய் அயோதனப் பிரவீணன் 
                                     மன்னோ. 	

2327.	இயம்பரும் திறலி ராச குஞ்சரன் பரவி ராச 
பயங்கரன் கைக்கும் பைந்தார் உக்கிர சேனன் பாரைச் 
சயம் கெழு தோள் மேல் ஏந்து சத்துரும் சஞ்சயன் 
                                     வீமத்தேர் 
வயம் கெழு மன்னன் வீம பராக்கிரம வழுதி மாதோ. 	

2328.	பெய் வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண்டப் பேர்த் 
தெவ்வடு சிலையான் தேர் விக்கிரம கஞ்சுகன் தேரார் 
                                       போர்த் 
வெளவிய சமர கோலாகலன் எனும் வாகை வேலான் 
அவ்வியம் அவித்த சிந்தை அதுல விக்கிரமன் என்போன். 

2329.	எழில் புனை அதுல கீர்த்தி என இருபத்திரண்டு 
வழி வழி மைந்தர் ஆகி வையகம் காத்த வேந்தர் 
பழி தவிர் அதுல கீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம் 
பொழிதர உதித்த கீர்த்தி பூடணன் புரக்கும் நாளில்.	

2330.	கரும் கடல் ஏழும் காவல் கரை கடந்து ஆர்த்துப் 
                                      பொங்கி 
ஒருங்கு எழுந்து உறுத்துச் சீறி உம்பரோடு இம்பர் எட்டுப் 
பொரும் கட கரியும் எட்டுப் பொன் னெடும் கிரியும் நேமிப் 
பெருங் கடி வரையும் பேரப் பிரளயம் கோத்தது அன்றே. 	

2331.	அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத 
எப்பெரும் பொழிலும் ஏழு திபமும் இவற்றுள் தங்கி 
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னி 
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண். 	

2332.	தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி 
                                      கோயில் 
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த 
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம் 
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத. 	

2333.	வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல் 
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப் 
புள்ளடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர் 
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் 
                                      தந்தான். 	
2334.	அங்கியை மதி மரபு எனும் ஆழியுள் 
தங்கிய கலை எண் நான்கு இரட்டி தன்னொடும் 
பொங்கிய நிலா மதி போலத் தோன்றினான் 
வங்கிய சேகர வழுதி மன்னனே.	

2335.	தாள் அணி கழலினான் தங்கள் நாயகன் 
கோள் அணி புரிசை சூழ் கோயில் சூழ ஓர் 
வாள் அணி கடி நகர் சிறிது வைக வைத்து 
ஆள் அரி யேறு என அவனி காக்கும் நாள்.	

2336.	செய்யகோன் மனு வழி செலுத்து நீர்மையால் 
பொய் கெழு கலிப்பகை புறம் தந்து ஓடத்தன் 
வையகம் பல்வளம் சுரப்ப வைகலும் 
மெய் கெழு மன்பதை மிக்காஅல் அரோ. 	
2337.	பல்கு உறு மானுடப் பரப்பு எலாம் ஒருங்கு 
கல் குற விடங்குறைவாக வாய் மதுப் 
பில்குறு தாரினான் பிறை முடித்தவன் 
மல்குறு கோயிலின் மருங்கர் எய்தினான்.	

2338.	கறை அணி கண்டனைத் தாழ்ந்து கை தொழுது 
இறையவ நின் அருள் வலியின் இந்நிலப் 
பொறையது ஆற்று வேற்கு ஈண்டு இப்போது ஒரு 
குறையது உண்டாயினது என்று கூறுவான்.	

2339.	இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதாப் 
பத்தனம் காணவிப் பதிக்கண் ஆதியே 
வைத்து அறை செய்திடும் வரம்பு காண்கிலேன் 
அத்தம் அற்று அதனை இன்று அறியக் காட்டு என்றான். 	

2340.	நுண்ணிய பொருளினும் நுண்ணிது ஆயவர் 
விண் இழி விமான நின்று எழுந்து மீனவன் 
திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தராய்ப் 
புண்ணிய அருட் கடல் ஆகிப் போதுவார்.	

2341.	பாம்பினால் கடி சூத்திரம் கோவணம் பசும் தாள் 
பாம்பினால் புரிநூல் சன்ன வீரம் வெம் பகு வாய்ப் 
பாம்பினால் குழை குண்டலம் பாத கிண் கிணி நாண் 
பாம்பினால் கர கங்கணம் பரித்தனர் வந்தார்.	

2342.	வந்த யோகர் மா மண்டப மருங்கு நின்று அம்கைப் 
பந்த ஆலவாய் அரவினைப் பார்த்து நீ இவனுக்குக் 
இந்த மாநகர் எல்லையை அளந்து காட்டு என்றார் 
அந்த வாள் அரா அடிபணிந்து அடிகளை வேண்டும்.	

2343.	பெரும் இந் நகர் அடியனேன் பெயரினால் விளங்கக் 
கருணை செய்தி என்று இரந்திடக் கருணை அம் கடலும் 
அருள் நயந்து நேர்ந்து அனையதே ஆகெனப் பணித்தான் 
உருகெழும் சின உரகமும் மெல் எனச் செல்லா. 	

2344.	கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை 
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக் 
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை 
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில். 	

2345.	சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன் 
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச் 
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து 
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி. 	

2346.	தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக் 
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால் 
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும் 
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான். 	

2347.	அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர் 
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம் 
புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக் 
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான். 	

2348.	கொடிகள் நீள் மதில் மண்டபம் கோபுரம் வீதி 
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு 
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து 
அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான். 

2349.	பல்வகைப் பெரும் குடிகளின் பரப்பு எலாம் நிரப்பிச் 
செல்வ வானவர் புரந்தரன் புரத்தினும் சிறப்ப 
மல்லன் மா நகர் பெருவளம் துளும் பிட வளர்த்தான் 
தொல்லை நாள் குலசேகரன் போல் வரு தோன்றல்.	

திருவாலவாயான படலம் சுபம் 	 	 

 

50. சுந்தரப் பேரம்பெய்த படலம்

2350.	அம் கணர் உரகம் அணிந்து அருள் வடிவம் அடைந்து 
                            அரசு அகம் மகிழக் 
கங்கண விட அரவம் கொடு கடி நகர் கண்டு அருண் 
                                முறை இதுவாம் 
சங்கு அணி குழையினர் பஞ்சவன் வழிபடு தம் பெயர் 
                                   எழுதிய கூர் 
வெம் கணை கொடு வன் படை முடுகிய வென்றியை 
                               இனி மொழிவாம். 

2351.	வெம் கயல் நீள் கொடி வங்கிய சேகரன் வெண்குடை 
                                    நீழலின் வாய் 
வங்கம் உலாவிய தெண் கடல் ஞாலம் அடைந்து ஐயுள் 
                                    மாசு அறு சீர்ச் 
செம் கமல ஆலய மங்கையும் வாலிய திண் பதும அலயம் 
                                    மேல் 
நங்கையும் ஓவற மங்கல மான நயம் பெற வாழ்வு உறு 
                                    நாள். 	

2352.	வேழ மறப்படை சூழ எதிர்த்தவர் வீறு கொடுத்து அடியில் 
தாழ அடர்த்தி கல் வாகை தொடுத்து அலர் தார் புனை 
                                    விக்கிரமச் 
சோழன் மதிக்குல நாயகனைப் பொரு சூள் கருதிக் 
                                    தொலையா 
ஆழ் கடலுக்கு இணை ஆம் அனிகத் தொடு மாட 
                               அமருக்கு எழுவான். 	

2353.	கயபதி காய்சின நரபதி பாய் துரகத பதியே முதலா 
வயமிகு தோள் வட திசையின் நராதிபர் வலி கெழு 
                                 சேனையினோடு 
இயம் இடி ஏரி இமிழ் இசை என வாய்விட விரதம் ஏறி 
                                       நடாய்ப் 
பயன் மலி காவிரி நதி அருகே உறை பதி கொடு 
                                 மேயினன் ஆல். 	

2354.	சிலைத்து எழு செம்பியன் வெம் படை மள்ளர் செயிர்த்து 
                                   மதிக் கடவுள் 
குலத்தவன் நாட்டில் இருந்து எழில் ஆன் நிரை கொண்டு 
                                   குறும்பு செய்து 
மலர்த்தம் ஏரி உடைத்து நகர்க்கு வரும் பல பண்டமும் 
                                   ஆறு 
அலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்து அமர்க்கு அடி 
                                   இட்டனர் ஆல். 	

2355.	மாறன் அறிந்து இனி என் செய்தும் நேரியன் வன் 
                            படையோ அளவு இன்று 
ஏறி எதிர்ந்து அமர் ஆடல் எனக்கு அரிது இக் குறையைப் 
                                      பிறையோடு 
ஆறு அணி பூரண சுந்தரன் எந்தை அடித்தல முன் 
                                      குருகாக் 
கூறி இரந்து வரம் பெறுகென் இறை கோயில் அடைந்தனன் 
                                      ஆல். 	

2356.	அடைந்து பணிந்து அருள் நாயகனே அடியேனொடு 
                                 விக்கிரமன் 
தொடர்ந்து அமர் ஆடல் அயல் புல மன்னர் 
                   தொகையொடு பாசறை வாய்ப் 
படர்ந்து இறை கொண்டனனே பொர ஒத்த பதாதி எனக்கு 
                                 இலையே 
மிடைந்து வரும் படை மிக்க விடத்து அரண் வேறு 
                                 உளதோ இறைவா. 	

2357.	என்னை இனிச் செயும் ஆறு என மாறன் இரந்து 
                                   மொழிந்திடலும் 
முன்னவன் வான் இடை நின்று அசரீரி மொழிந்து 
                              அருள்வான் முதல் நீ 
அன்னவனோடு அமர் ஆடு பின் நாமும் அடைந்து 
                              உதவித் துணையாய் 
நின்னது வாகை எனப் பொருகின்றனன் நீ இனி அஞ்சல் 
                                   என. 	

2358.	சிந்தை களித்து இரு கண் துளித்து இரு செம்கை குவித்து 
                                       இறைவன் 
அந்தி மதிச்சடை அந்தணனைத் தொழுது அன்று புறப்பட 
                                       முன் 
வந்தனன் ஒற்றுவன் அந்தி வரைக்கயல் வந்தது விக்கிரமன் 
வெம் தறு கண் படை என்று அரசற்கு விளம்பினன் 
                                    அப்பொழுதே. 	

2359.	அரசனின் இயம் பல அதிர வலம்புரி அலற வலங்கு உளை 
                                       மான் 
இரதம் அணைந்திட விசை கொடு சிந்தை பினிட வலவன் 
                                       கடவப் 
புரசை நெடும் கரி திரை எறியும் கடல் பொரு 
                               பரிவிண்தொடு தேர் 
விரைசெய் நறும் தொடை விருதர் கணம் புடைவிரவ 
                               நடந்தனன் ஆல். 	

2360.	அளந்து சூழ் திரு ஆலவாய் மதில் இன்புறத் தக 
                                    ஆழிபோல் 
வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து 
                                    எழு பஞ்சவன் 
கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு 
                                    படைஞரும் 
களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர் 
                                    செய்வர் ஆல். 	
2361.	சையம் ஒத்து எழு தேரினாரொடு சையம் ஒத்து எழு 
                                        தேரரும் 
மையன் மைக்கரி வீர ரோடு எதிர் மையன் மைக்கரி 
                                        வீரரும் 
கொய்யுளைப் பரி வயவரோடு இகல் கொய்யுளைப் பரி 
                                        வயவரும் 
கை அழல் படை வீசி மின் விடு கார் எனப் பொருவார் 
                                        அரோ. 	

2362.	முடங்கு வெம் சிலை வில்லவ ரோடு முடங்க வெம் சிலை 
                                      வில்லரும் 
விடங்கலுழ்ந்திடு வேலரோடு விடம் கலுழ்ந்திடும் வேலரும் 
இடம்கை தோல் வல வாளரோடு இடங்கை தோல் வல 
                                      வாளரும் 
மடங்கல் ஏறு மடங்கல் ஏறு மலைப் பது என்ன மலைப்பர் 
                                      ஆல். 	

2363.	அரவினன் நில அம்புயம் பொறை ஆற்று மீனவன் 
                                    ஆற்றல் கூர் 
புரவியின் நிரை வையம் மேல் கொடு போந்த நேரியர் 
                                    வேந்தன் நேர் 
விரவி மின்னிய முரசு இயம்ப மிடைந்து வெம்சமர் ஆடு 
                                           மாறி 
இரவி தன்னொடு மதியவன் பொர ஏகினான் நிகர் ஆகும் 
                                           ஆல். 	
2364.	துள்ளு மா ஒலி தான யாரு துளும்பும் மா ஒலி தூண்டு 
                                         தேர் 
தள்ளு மா ஒலி படையொடும் படை தாக்கும் மா ஒலி 
                              பொருநர் ஆர்த்து 
தௌ¢ளு மா ஒலி மள்ளர் பைம் கழல் ஏங்கு மா ஒலி 
                                   வீங்கி அந் 
தௌ¢ளு மா ஒலி வேறு பாடு திரிந்து கல் எனல் ஆயதே. 

2365.	துடித்த வாள் அரவு என்ன வீசிய தூங்கு கையின வீங்கு 
                                      நீர் 
குடித்த காரொடு கார் மலைந்திடும் கொள்கை போல 
                                  உடன்று உடன்று 
இடித்த ஆயின அசனி ஏறு இன் இருப்பு உலக்கை எடுத்து 
                                      எறிந்து 
அடித்த சோரி யொடு ஆவி சோர விழுந்த வெம் சின 
                                      ஆனையே. 	

2366.	எய்த வாளி விலக்குவார் பிறிது எய்யும் வாளிதம் மார்பு 
                                    தோள் 
செய்த போது அவர் ஆண்மை கண்டு சிரித்து வென்றி 
                                    வியப்பரால் 
வைத வா வடி வேல் எறிந்திட வருவதைக் குறி வழியினால் 
கொய்த தார் மற வாள் எறிந்து குறைத்து வேறு படுத்துவார். 	

2367.	பின்னிடாது இருபடையும் ஒத்து அமர் ஆடும் எல்லை 
                                   பெரும் படைச் 
சென்னி தன் துணை ஆன உத்தர தேய மன்னவர் 
                                   படையொடும் 
துன்னி ஞாலம் முடிக்கு நாள் எழு சூறை தள்ள அதிர்ந்து 
                                   எழும் 
வன்னி என்ன உடன்று எதிர்ந்தனன் வழுதி சேனை 
                                   உடைந்ததே. 

2368.	மின்னல் அங்கு இலை வாளடும் சிலை வில் இழந்தனர் 
                                     வீரரே 
பன்னல் அம் புனை தேரொடும் கரி பரி இழந்தனர் 
                                     பாகரே 
தென்னவன் பொருவலி இழந்தனன் என்று செம்பியன் 
                                     வாகையும் 
தன்னது என்று தருக்கு மேல் கொடு சங்கு எடுத்து 
                                     முழக்கினான். 	
2369.	அந்த வேலையின் முன் அரும் தமது அருள் எனக்குளிர் 
                                         கடிபுனல் 
பந்தர் நீழல் அளித்தும் ஓடை படுத்தியும் பகை சாயவே 
வந்த வேடர் அவ்வண்ணமே ஒரு மான வேட அரசாய் 
                                         வலம் 
சிந்த ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவலர் ஆயினார். 	

2370.	குன்ற வில் வேடன் சாபம் குழைவித்துச் சுந்தரேசன் 
என்ற தன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி 
வென்றனம் என்று வாகை மிலைந்து வெண்சங்கம் ஆர்த்து 
நின்றவன் சேனைமீது நெறி படச் செலுத்தா நின்றான். 	

2371.	அம் முனை வாளி ஒவ் ஒன்று அடல் புனை நூற்று நூறு 
தெம் முனைவீரர் தம்மைச் செகுத்து உயிர் உண்ண நோக்கி 
இம்முனை வாளி ஒன்றுக்கு இத்துணை வலியாது என்னா 
வெம் முனை மற வேல் சென்னி வியந்து அனுமானம் 
                                         எய்தா. 	

2372.	அன்ன கூர் வாளி தன்னைக் கொணர்க என அதனை 
                                      வாசித்து 
இன்னது சுந்தரேசன் என வரைந்திருப்பது ஈது 
தென்னவற்கு ஆலவாயன் துணை செய்த செயல் என்று 
                                      அஞ்சிப் 
பொன்னி நாடு உடையான் மீண்டு போகுவான் 
                                  போகுவானை. 

2373.	செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் 
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் 
                                        என்று 
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது 
                                        உன் 
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் 
                                        என்னாம். 	

2374.	செல்லலை வருதி என்னாச் செயிர்த்து எழுந்து இடியின் 
                                      ஆர்த்துக் 
கல் எழு அனைய திண்தோள் கௌரியன் மடைமேல் 
                                        சென்று 
வில் இற வலித்து வாங்கி வேறு வேறு ஆகி நின்று 
சொல்லினும் கடிய வாளி தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார். 	

2375.	வடுத்தவா மருமச் செம்புண் மற மகனாகி நின்ற 
கடுத்தவா மிடற்று முக்கண் கண்ணுதல் சாமி தான் முன் 
எடுத்தவா அக வில் என்ன இரும் சிலை வாளி ஒன்று 
தொடுத்த ஆடவர் தாம் விட்ட சுடு சரம் தொலைத்துப் 
                                       பின்னும். 	

2376.	பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மான் தேரைச் 
                                   சாய்த்தான் 
பத்து அம்பு தொடுத்து நூற்று பத்து வெம் களிற்றை 
                                   மாய்த்தான் 
பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து வாம் பரியைக் 
                                   கொன்றான் 
பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மானுடரை 
                                    வென்றான். 	

2377.	நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம் பரிமேல் எய்தான் 
நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம் கரிமேல் பெய்தான் 
நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு தேர் சிதைய விட்டான் 
நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு சேவகரை அட்டான். 	

2378.	ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் பரியைக் கொன்றான் 
ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் கரியை வென்றான் 
ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் தேரைச் சாய்த்தான் 
ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் பேரைத் தேய்த்தான். 	

2379.	தடிந்தன தோளும் தாளும் தகர்ந்தன சென்னி மண்ணில் 
படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பைத் தாமம் 
மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான் 
ஒடிந்தன கொடிஞ்சி மான் தேர் ஒதுங்கின ஒழிந்த சேனை. 	

2380.	ஆவி முன் ஏகத் தாமும் அருக்க மண்டலத்து ஆரு ஏகத் 
தாவுவ என்ன ஆடும் தலை பல சிலைவாள் பட்டுக் 
கூவிளி எழுத்து விழும் குறைத்தலை ஆடப் பாதிச் 
சாவு உடல் நின்று கைகள் கொட்டுவ தாளம் என்ன. 	

2381.	தறை விழத் தனது சென்னி வீட்டினர் தம்மை நின்ற 
குறை உடல் கை வேல் குத்தி நூக்குவ குரவை பாடி 
எறி பது தலைகள் வாய்மென்று எயிறது கறித்து வீழ்ந்து 
கருவின மார்பம் தட்டி நிற்பன கவந்தயாக்கை.	

2382.	ஒரு வழிப் பட்டு வீழும் இருதலை ஒன்றற்கு ஒன்று 
மருவிய கேண்மைத்து ஆகி வால் எயிறு இலங்க நக்குப் 
பிரிவு அற வந்தாய் நீயும் என்று எதிர் பேசிப் பேசிப் 
பரிவு உற மொழிந்து மோந்து பாடி நின்று ஆடல் செய்த. 	

2383.	மாக வாறு இயங்கு சேனம் வல் இருட் குவை இன் 
                                     அன்ன 
காகம் வன் கழுகு வெம்போர்க் களன் இடை அவிந்து 
                                     வீழ்ந்தோர் 
ஆகம் மேல் சிறகு ஆதிக் கொண்டு அசைவன வேடை 
                                     நீக்கப் 
பாகம் நின்று ஆல வட்டம் பணிப்பன போன்ற அன்றே. 	

2384.	வெள்ளமாச் சோரி ஈர்ப்ப மிதக்கின்ற தேர்கள் 
                                   வெம்பேய்ப் 
பிள்ளைகள் மூழ்கிக் கீழ் போய் மறித்து என வீழ்வ 
தௌ¢ளுநீர்க் கடலின் மீதூர் சிதைக்கல நிரையும் தாக்கித் 
துள்ளி மற்று அவற்றைச் சாய்க்கும் சுறவமும் போன்ற 
                                   அன்றே. 	

2385.	கத்தி நின்று ஒருபால் ஈர்ப்பக் கருங் கொடி சேனம் 
                                     துண்டம் 
கொத்தி நின்று ஒருபால் ஈர்ப்பக் குட வயிற்று அழல் 
                                   கண் பூதப் 
பத்தி நின்று ஒருபால் ஈர்ப்பப் பட்டவர் ஆகம் கூளி 
பொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப அம் பொறி போல 
                                    மன்னோ. 	

2386.	துடுவை வான் முறம் கால் தள்ளும் துணைச் செவி அரிசி 
                                    கோட்டின் 
உடுவை நேர் மணியின் குப்பை உரல் அடி உலக்கை 
                                    திண்கோ 
அடுகலம் கடம் திச் சோரி மத்தக அடுப்பு என்று யானைப் 
படுகளம் விசயச் செல்வி அடுமடைப் பள்ளி மானும். 	

2387.	பிணத்தினைக் கோலி புண் நீர் ஆற்றினை பெருக்கி 
                                   உண் பேய்க்
கணத்தினை உதைத்து நூக்கிக் கரை உடைத்து ஒருவன் 
                                         பூதம் 
நிணத்தொடும் வரும் அந் நீத்தம் நேர் பட விருந்து 
                                      கையால் 
அணைத்து வாய் மடுக்கும் வைகை அருந்திய பூதம் 
                                       என்ன. 	

2388.	புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த 
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் 
                                         வந்த 
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் 
                                         நச்சு 
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன. 	

2389.	மாசு அறு காட்சியான் தன் வாளியால் அவிந்தோர் 
                                        தம்மை 
மூசு வண்டு என்னச் சூழ்ந்து மொய்த்தன பைத்த கூளி 
காய் சினச் சேனம் காகம் கழுகு இனம் பற்றி ஈர்த்துப் 
பூசல் இட்டு ஒன்றோடு ஒன்று போர் செய்வான் 
                            தொடங்கிற்று அம்ம. 	

2390.	வெம்சின மறக்கோன் நம்பி விடுகணை வெள்ளத்து 
                                      ஆழ்ந்து 
வஞ்சினம் உரு தன் சேனை மடிந்தது கண்டு மாழாந்து 
எஞ்சின படையும் சூழ ஏதிலார் நகையும் சூழத் 
துஞ்சின மறமும் சூழச் சோழனும் உடைந்து போனான். 	

2391.	வில்லொடு மேகம் அன்ன வெம்சிலை வேட வேந்தன் 
மல்லொடு பயின்ற தென்னவன் மலர் முகச் செவ்வி 
                                      நோக்கி 
அல்லொடு மதி வந்தது என்ன அருள் நகை சிறிது பூத்துச் 
செல்லொடு பகை போல் கொண்ட திரு உரு மறைந்து 
                                      போனான். 	

2392.	பாடுவாய் அளி தேன் ஊட்டும் பைந்தொடைச் செழியன் 
                                      வென்றிக் 
கோடுவாய் வைத்திட்டு ஆர்த்துக் குஞ்சர முகட்டில் ஏறித் 
தோடுவாய் கிழிக்கும் கண்ணார் மங்கலம் துவன்றி ஏந்த 
நீடுவார் திரை நீர் வேலி நீள் மதி நகரில் புக்கான். 	

2393.	சிலைவில் சேவகம் செய்து வாகை வாங்கித் திரு அளித்த 
                           சேவகற்குச் சிறந்த பூசை 
நிலை நித்தாய் மணிப் பொலம் பூண் இறு விச் சாத்தி 
     நிழல் விரிக்கும் வெயில் மணியான் நெடிய மேரு 
மலைவில் தான் என்ன வரிச் சிலையும் நாமம் நாமம் 
     வரைந்த கடும் கூர்ங் கணையும் வனைந்து சாத்தி 
அலைவித்து ஆழ் கடல் உலகுக் அகலச் செங்கோல் 
     அறம் பெருக்கும் வங்கிய சேகரன் ஆம் அண்ணல். 	

சுந்தரப் பேரம்பெய்த படலம் சுபம் 
  	  

51. சங்கப் பலகை கொடுத்த படலம்

2394.	வேடு உரு ஆகி மேரு வில்லி தன் நாமக் கோல் எய்து 
ஆடு அமர் ஆடித் தென்னன் அடுபகை துரந்த வண்ணம் 
பாடினம் சங்கத்தார்க்குப் பகை தந்து அவரோடு ஒப்பக் 
கூடி முத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை 
                                 சொல்வாம். 	

2395.	வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல் 
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில் 
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி 
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான். 	

2396.	நிரப்பிய வழி நாள் நவ் நீர் ஆடுவான் நீண்ட வீணை 
நரப்பிசை வாணி சாவித்திரி எனும் நங்கை வேத 
வரப்பிசை மநு ஆம் ஆயத்திரி எனும் மடவா ரோடும் 
பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் எல்லை.	

2397.	நானவார் குழலினாரம் மூவருள் நாவின் செல்வி 
வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி பாடும் 
கானவாறு உள்ளம் போக்கி நின்றனள் கமலயோனி 
ஆனவால் அறிவன் ஏகி அந் நதிக் கரையைச் சேர்ந்தான். 	

2398.	நாமகள் வரவு தாழ்ப்ப நங்கையர் இருவரோடும் 
தாமரைக் கிழவன் மூழ்கித் தடம் கரை ஏறும் எல்லைப் 
பாமகள் குறுகி என்னை அன்றி நீ படிந்த வாறு என் 
ஆம் என வெகுண்டாள் கேட்ட அம்பயத்து அண்ணல் 
                                    சொல்வான். 	

2399.	குற்றம் நின் மேலது ஆக நம்மை நீ கோபம் கொள்வது 
எற்று என வினைய தீங்கை எண்ணறு மாக்கள் தோற்றம் 
உன் தனை ஒழித்தி என்னா உரைத்தனன் சாபம் ஏற்கும் 
பொன் தொடி மடந்தை அஞ்சிப் புலம்பு கொண்டு 
                                அவலம் பூண்டாள். 	

2400.	ஊன் இடர் அகன்றோய் உன் ஆருயிர்த் துணை ஆவேன் 
                                           இந்த 
மானிட யோனிப் பட்டு மயங்கு கோ என்ன வண்டு 
தேனிடை அழுந்தி வேதம் செப்பும் வெண் கமலச் செல்வி 
தாள் இடர் அகல நோக்கிச் சதுர் முகத் தலைவன் சாற்றும். 	

2401.	முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத் 
                                    தொன்றில் 
திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச் 
புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி 
அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக. 	

2402.	அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின் 
மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற 
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர் 
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான் 
                                    மன்னோ. 	

2403.	தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்துச் சங்க 
மாமணிப் பீடத்து ஏரி வைகியே நாற்பத்து ஒன்பது 
ஆம் அவர் ஆகி உண்ணி நின்று அவர் அவர்க்கு அறிவு 
                                         தோன்றி 
ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப் புத்தேள். 	

2404.	அக்கரம் நாற்பத்து எட்டும் அவ்வழி வேறு வேறு 
மக்களாய்ப் பிறந்து பல் மாண் கலைகளின் வகைமை 
                                      தேர்ந்து 
தொக்க ஆரியமும் ஏனைச் சொல் பதினெட்டும் ஆய்ந்து 
தக்க தென் கலை நுண் தேர்ச்சிப் புலமையில் தலைமை 
                                    சார்ந்தார். 	

2405.	கழுமணி வயிரம் வேந்த கலன் பல அன்றிக் கண்டிக் 
கொழுமணிக் கலனும் பூணும் குளிர்நிலா நிற்று மெய்யர் 
வழுவறத் தெரிந்த செம் சொல் மாலையால் அன்றி ஆய்ந்த 
செழு மலர் மாலையானும் சிவ அர்ச்சனை செய்யும் நீரார். 	
2406.	புலம் தொறும் போகிப் போகிப் புலமையால் வென்று 
                                      வென்று 
மலர்ந்த தண் பொருனை நீத்த வளம் கெழு நாட்டில் வந்து 
நிலம் தரு திருவின் ஆன்ற நிறை நிதிச் செழியன் செம் 
                                          கோல் 
நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணும் எல்லை. 	

2407.	பல பல கலைமாண் தேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற 
அற்புத மூர்த்தி எந்தை ஆலவாய் அடிகள் அங்கு ஓர் 
கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வர் ஆகிச் 
சொற்பதம் கடந்த பாதம் இரு நிலம் தோய வந்தார். 	

2408.	அவ் இடை வருகின்றாரை நோக்கி நீர் யாரை நீவிர் 
எவ்விடை நின்றும் போது கின்றனிர் என்ன அன்னார் 
வெவ்விடை அனையீர் யாங்கள் விஞ்சையர் அடைந்தோர் 
                                        பாவம் 
வெளவிடு பொருனை நாட்டின் வருகின்றேம் என்ன 
                                        லோடும். 	

2409.	தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம் 
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல் 
                                    வேண்டும் 
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி 
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார். 	

2410.	மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட 
                                       கேள்வித் 
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக் 
                                       கூடல் 
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் 
                                       ஒற்றைப் 
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த 
                                       பெம்மான். 	

2411.	விம்மிதம் அடைந்து சான்றோர் விண் இழி விமானம் மேய 
செம்மலை வேறு வேறு செய்யுளால் பரவி ஏத்திக் 
கைம் மலை உரியினார் தம் கால் தொழுது இறைஞ்சி 
                                       மீண்டு 
கொய்ம் மலர் வாகைச் செவ்வேல் செழியனைக் குறுகிக் 
                                     கண்டார். 	
2412.	மறவலி நேமிச் செம்கோல் மன்னவன் வந்த சான்றோர் 
அறமலி கேள்வி நோக்கி அவைக்களக் கிழமை நோக்கித் 
திறமலி ஒழுக்கம் நோக்கிச் சீரியர் போலும் என்னா 
நிறை மலி உவகை பூத்த நெஞ்சினான் இதனைச் செய்தான். 	

2413.	திங்கள் அம் கண்ணி வேய்ந்த செக்கர் அம் சடில நாதன் 
மங்கலம் பெருகு கோயில் வட குட புலத்தின் மாடு ஓர் 
சங்க மண்டபம் உண்டாக்கித் தகைமை சால் சிறப்பு நல்கி 
அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர் 
                                         தம்மை. 	

2414.	வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல்கக் 
கண்டு உளம் புழுங்கி முன்னைப் புலவர் அக் கழகத் 
                                      தோரை 
மண்டினர் மூண்டு மூண்டு வாது செய் ஆற்றன் முட்டிப் 
பண்டைய புலனும் தோற்றுப் படர் உழந்து எய்த்துப் 
                                      போனார். 	

2415.	இனையர் போல் வந்து வந்து மறுபுலத்து இருக்கும் கேள்வி 
வினைஞரும் மதம் மேல் கொண்டு வினாய் வினாய் வாதம் 
                                          செய்து 
மனவலி இளைப்ப வென்று வைகுவோர் ஒன்றை வேண்டிப் 
புனை இழை பாக நீங்காப் புலவர் முன் நண்ணினாரே. 	

2416.	முந்து நூல் மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி 
                                       எம்மை 
வந்து வந்து எவரும் வாதம் செய்கின்றார் வரிசையாக 
அந்தம் இல் புலமை தூக்கி அளப்பதாம் எம் மனோர்க்குத் 
தந்து அருள் செய்தி சங்கப் பலகை ஒன்று என்று 
                                       தாழ்ந்தார். 	

2417.	பாடிய பாணற்கு அன்று வலியவே பலகை இட்டார் 
பாடிய புலவர் வேண்டில் பலகை தந்து அருளார் 
                                   கொல்லோ 
பாடிய புலவர் ஆகும் படி ஒரு படிவம் கொண்டு 
பாடிய புலவர் காணத் தோன்றினார் பலகை யோடும். 	

2418.	சதுரமாய் அளவின் இரண்டு சாண் அதிப் பலகை அம்ம 
மதியினும் வாலிது ஆகும் மந்திர வலியது ஆகும்
முதிய நும் போல் வார்க்கு எல்லாம் முழம் வளர்ந்து 
                              இருக்கை நல்கும் 
இது நுமக்கு அளவு கோலாய் இருக்கும் என்று இயம்பி 
                                      ஈந்தார். 	

2419.	நாமகள் உருவாய் வந்த நாவலர் தமக்கு வெள்ளைத் 
தாமரை அமளி தன்னைப் பலகையாத் தருவது என்னக் 
காமனை முனிந்தார் நல்கக் கைக் கொடு களிறு தாங்கும் 
மாமணிக் கோயில் தன்னை வளைந்து தம் கழகம் புக்கார். 	

2420.	நாறு பூம் தாமம் நாற்றி நறும் பனி தோய்ந்த சாந்தச் 
சேறு வெண் மலர் வெண் தூசு செழும் புகை தீபம் ஆதி 
வேறு பல் வகையால் பூசை வினை முடித்து இறைஞ்சிக் 
                                        கீரன் 
ஏறினான் கபிலனோடு பரணனும் ஏறினானே. 	

2421.	இரும் கலை வல்லோர் எல்லாம் இம் முறை ஏறி ஏறி 
ஒருங்கு இனிது இருந்தார் யார்க்கும் ஒத்து இடம் கொடுத்து 
                                         நாதன் 
தரும் சிறு பகை ஒன்றே தன் உரை செய்வோர்க்கு எல்லாம் 
சுருங்கி நின்று அகலம் காட்டி தோன்று நூல் போன்றது 
                                         அன்றே. 	

2422.	மேதகு சான்றோர் நூலின் விளை பொருள் விளங்கத் 
                                      தம்மில் 
ஏதுவும் எடுத்துக் காட்டும் எழுவகை மதமும் கூறும் 
போதவை தௌ¤ந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து 
வாது செய்வார்கள் வந்தான் மறுத்து நேர் நிறுத்து 
                                    மன்னோ. 	

2423.	ஆய ஆறு எண் புலவரும் ஆய்ந்து உணர் 
பாய கேள்விப் பயன் பெற மாட்சியால் 
தூய பாடல் தொடங்கினர் செய்து கொண்டு 
ஏய வாரு இருந்தார் அந்த எல்லை வாய். 	
2424.	பலரும் செய்த பனுவலும் மாண் பொருள் 
மலரும் செல்வமும் சொல்லின் வளமையும் 
குலவும் செய்யுள் குறிப்பும் ஒத்து ஒன்றியே 
தலை மயங்கிக் கிடந்த அத் தன்மையால்.	

2425.	வேறு பாடு அறியாது வியந்து நீர் 
கூறு பாடல் இது என்றும் கோது இல் என 
தேறு பாடல் இது என்றும் செஞ் செவே 
மாறு பாடு கொண்டார் சங்க வாணரே.	

2426.	மருளு மாறு மயக்கு அற வான் பொருள் 
தெருளு மாறும் செயவல்ல கள்வர் சொல் 
பொருளும் ஆம் மதுரேசர் புலவர் முன் 
அருளும் நாவலராய் வந்து தோன்றினார்.	

2427.	வந்த நாவலர் வந்திக்கும் நாவலர் 
சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும் 
பந்த யாப்பைக் கொணர்க எனப் பாவலர் 
எந்தை ஈங்கு இவை என்று முன் இட்டனர்.	

2428.	தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும் 
ஆய நாவலர் அவ் அவர் தம் முது 
ஆய பாடல் வகை தெரிந்து அவ் அவர்க்கு 
ஏயவே எடுத்து ஈந்தனர் என்பவே.	

2429.	வாங்கு சங்கப் புலவர் மனம் களித்து 
ஈங்கு நீர் எமரோடு ஒருத்தராய் 
ஓங்கி வாழ்திர் என்று ஒல் எனத் தங்களைத் 
தாங்கு செம் பொன் தவிசில் இருத்தினார்.	

2430.	பொன்னின் பீடிகை என்னும் பொன் ஆரமேல் 
துன்னு நாவலர் சூழ் மணி ஆகவே 
மன்னினார் நடு நாயக மாமணி 
என்ன வீற்றிருந்தார் மது ரேசரே.	

2431.	நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன் 
பதின்மர் என்னப் படும் புலவோர் எலாம் 
முதிய வான் தமிழ் பின்னு முறை முறை 
மதி விளங்கத் தொடுத்து அவண் வாழும் நாள்.	

2432.	வங்கிய சேகரன் வங்கிய சூடா மணி தன்னைப் 
பொங்கி தேசார் முடி புனை வித்துப் புவி நல்கி 
இங்கு இயல் பாச வினைப் பகை சாய இருந்து ஆங்கே 
சங்கு இயல் வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான். 	

சங்கப் பலகை கொடுத்த படலம் சுபம் 
 	  

52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்

2433.	சொற்குவை தேரும் பாவலர் மேவத் தொகு பீடம் 
அற் குவை கண்டத்து அண்ணல் அளித்தது அறைந்தேம் 
                                         ஆல் 
தற்குவை தந்தால் உய்குவல் என்னும் தருமிக்குப் 
பொற் குவை நல்கும் வண்ணம் எடுத்துப் புகல்கிற்பாம். 	

2434.	மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன் 
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல் 
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப் 
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்.	

2435.	மாதவி பாதிரி தாதகி கூவிளம் மந்தாரம் 
தாது அவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடம் கோங்கம் 
வீதவழ் கொன்றை கரந்தை செழுங்கரம் வீரம் தண் 
போது அவிழ் நந்தி செருந்தி குருந்தம் புன்னாகம். 	

2436.	முண்டகம் மென்கடி நீலம் முதல் பல முப்போதும் 
எண் திசையும் கமழும் படி நந்தன மெங்கும் தேன் 
உண்டு இசை வண்டு படிந்து முரன்றிட உண்டாக்கி 
வண்டு இமிர் சண்பக நந்தனமும் தனி வைத்தான் ஆல். 	

2437.	பொய்த்திடு நுண் இடை மங்கல மங்கையர் பொன் 
                                      பூண்டார் 
ஒத்து எழு சண்பகம் மொய்த்து அரும்பு உடைந்து எங்கும் 
வைத்திடு நந்தன வாசம் விழுங்கி மணம் கான்று 
பைத்து மலர்ந்தன கண்டு மகிழ்ந்து பரித்தேரான். 	

2438.	செருக்கிய வண்டு விழா மலர் கொய்து தெரிந்து ஆய்ந்து 
செருக்கிய இண்டை நிரைத் தொடை தொங்கல் நெடும் 
                                          தாமம் 
மருக்கிளர் கண்ணி தொடுத்து அணிவித்து வணங்கு ஆரூர் 
கருக்கிய கண் நுதலார் திருமேனி கவின் செய்தான். 	

2439.	அன்ன வியன் பொழில் மா மதுரேசர் அடித்தாழ் வோன் 
பொன் அவிர் சண்பக மாலை புனைந்த புதுக் கோலந் 
தன்னை வியந்து இவர் சண்பக சுந்தரர் தாம் என்னா 
முன்னர் இறைஞ்சினன் நிம்பம் அணிந்த முடித் தென்னன். 	

2440.	அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல் 
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும் 
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர் 
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.	

2441.	சண்பக மாறன் சண்பக சுந்தரர் தம் மாடே 
நண்பக மாறா நல் பணி செய்யும் நல் நாளில் 
பண்பகர் சொல்லார் தம் புடை மாரன் படுபோர் மூண்டு 
எண்பக வெய்யவான் ஆகிய வந்தது அன்று இளவேனில். 	

2442.	மனிதர் வெம் கோடை தீர்க்கும் வசந்த மென் காலும் 
                                        வேறு 
துனிதவிர் இளம் கால் வேண்டும் சோலையும் சோலை 
                                    வேண்டும் 
புனித நீர்த் தடமும் வேறு புது மலர் ஓடை வேண்டும் 
பனி தரு மதியும் வேறு பால் மதி வேண்டும் காலம். 	

2443.	அண்ட வான்தரு மேல் சீறிச் சிவந்து எழுந்தாங்குத் 
                                     தேமாத் 
தண் தளிர் ஈன்று வானம் தைவர நிவந்த காசு 
கொண்டு இடை அழுத்திச் செய்த குழை அணி மகளிர் 
                                      போல 
வண்டு இறை கொள்ளப் பூத்து மலர்ந்தன செருந்தி 
                                    எல்லாம். 	

2444.	செம்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம் 
மங்குல் ஊர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சித் திங்கள் 
புங்கவன் போலப் பூத்த பூம் சினை மர அம் செங்கை 
அம் கதிர் ஆழியான் போல் அலர்ந்தன விரிந்த காய. 	

2445.	தரை கிழித்து எழுநீர் வைகைத் தடம் கரை எக்கர் 
                                     அல்குல் 
அரமே கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது உகுப்ப 
                                     ஞாழல் 
மரகதம் தழைத்து வெண் முத்து அரும்பிப் பொன் 
                                மலர்ந்து வாங்கும் 
திரை கடல் பவளக்காடு செய்வன கன்னிப் புன்னை. 	

2446.	ஊடினார் போல வெம்பி இலை உதிர்ந்து உயிர் 
                                 அன்னாரைக் 
கூடினார் போல எங்கும் குழை வரத் தழைத்து நீங்கி 
வாடினார் போலக் கண்ணீர் வார மெய் பசந்து மையல் 
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்கள் 
                                    எல்லாம். 	

2447.	விழைதரு காதலார் தாம் மெலிவுற மெலிந்து நெஞ்சம் 
குழைவுறக் குழைந்து நிற்கும் கோதிலாக் கற்பினார் போல் 
மழை அறும் கோடை தீப்பமரம் தலை வாட வாடித் 
தழைவுறத் தழைத்து நின்ற தழீஇய பைங் கொடிகள் 
                                    எல்லாம். 	

2448.	சேட்டிகைத் தென் காற்று தள்ளத் தௌ¢ மதுச் சிதறத் 
                                       தும்பி 
நீட்டிசை முரலச் சாயா நின்று பூம் கொம்பர் ஆடல் 
நாட்டியப் புலவன் ஆட்ட நகை முகம் வெயர்வை சிந்தப் 
பாட்டிசைத்து ஆடா நின்ற பாவைமார் போன்ற அன்றே. 	

2449.	மலர்ந்த செவ் அந்திப் போதும் வகுளமும் முதிர்ந்து வாடி 
உலர்ந்து மொய்த்து அளி தேன் நக்க கிடப்பன 
                                 உள்ளமிக்க 
குலம் தரு நல்லோர் செல்வம் குன்றினும் தம்பால் 
                                  இல்லென்று 
அலந்தவர்க்கு உயிரை மாறி யாயினும் கொடுப்பர் 
                                    அன்றோ. 	
2450.	நாறிய தண் அம் தேமா நறும் தளிர் கோதிக் கூவி 
ஊறிய காமப் பேட்டை உருக்குவ குயில் மென் சேவல் 
வீறிய செம்கோல் வேந்தன் வெளிப்படத் தேயம் காவல் 
மாறிய வேந்தன் போல ஒடுங்கின மயில்கள் எல்லம். 	

2451.	பொங்கரின் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப் 
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக் 
கொங்கு அலர் மணம் கூட்டு உண்டு குளிர்ந்து மெல் 
                               என்று தென்றல் 
அங்கு அங்கே கலைகள் தேரும் அறிவன் போல் 
                             இயங்கும் அன்றே. 

2452.	தாமரை களாஞ்சி தாங்கத் தண் குயின் முழவம் ஏங்க 
மா மருது அமரும் கிள்ளை மங்கலம் இயம்பத் தும்பி 
காமரம் இசைப்ப முள் வாய்க் கைதை வாள் எடுப்ப 
                                        வேனில் 
கோமகன் மகுடம் சூடி இருப்பது அக் குளிர் பூம் சோலை. 	

2453.	கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த 
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத் 
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம் 
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர். 	

2454.	நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல் 
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக 
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப் 
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான் 
                                        போவார். 	

2455.	மாத் தாண் மதமான் எருத்தின் மடங்கல் எனச் செல்வாரும் 
பூத்தார் ஒலிவாம் பரிமேல் புகர் மா எனப் போவாரும் 
பார்த்தார் பரிதி என வாம் பரித்தேர் உகைத்து ஊர்வாரும் 
தேத்தார் உளர் வண்டு அலம்பச் சிலம்பின் நடக்கின்றாரும். 	

2456.	நீலப் பிடிமேல் பிடிப்போன் நெறிக் கொள்வாரும் தரள 
மாலைச் சிவிகை மிசை வெண் மலராள் எனச் செல்வாரும் 
ஆலைக் கரும்பன் துணை போல் அணித்தார்ப் 
                                 பரியூர்வாரும் 
கோலத் தடக்கை பற்றிக் கொழுநருடன் போவாரும். 	

2457.	சுருப்புக் கமழ் தேம் கண்ணித் தொடுபைங் கழல் 
                                    ஆடவரும் 
கருப்புச் சிலை மன்னவனால் கருவிப் படை அன்னவரும் 
விருப்புற்று எறிநீர் வையை வெள்ளைத் தரளம் தௌ¢ளிப் 
பொருப்பில் குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார். 	
2458.	கூந்தல் பிடியும் பரியும் ஊர் வார் கொழுநர் தடம் தோள் 
ஏந்தச் சயமாது என்னத் தழுவா இழிந்து பொழில் வாய்ப் 
பூந் தொத்து அலர் பொன் கொடி தாது உகு மாறு என்னப் 
                                        புனைந்த 
சாந்தக் கலவை புகப் போய் வனமங்கையர் போல் 
                                   சார்ந்தார். 	

2459.	ஏமா சல மென் முலையார் நடை ஓவியமே என்னப் 
பூ மாதவி சேர்வாரும் புன்னை நிழல் சேர்வாரும் 
தேமா நிழல் சேர்வாரும் செருந்தி நிழல் சேர்வாரும் 
காமாயுத சாலைகள் போல் கைதை நிழல் சேர்வாரும்.	
2460.	கோடும் பிறை வாண் நுதலார் குழலைக் கருவிக் கார் 
                                       என்று 
ஆதும் தோகை அவர் கண் நோக்கிக் கணை என்று 
                                      அஞ்சி 
ஒடும் கொடியின் அன்னார் உரு மாந்தளிர் என்று 
                                 அயில் வான் 
நாடும் குயில் அன்னவர் பண் இசைக் கேட்டு ஒதுங்கி 
                                      நாணும். 	
2461.	நீடும் தரங்கம் இரங்கு நிறைநீர் நிலையே அன்றிப் 
பாடும் சுரும்பு உண் கழுநீர் பைந்தாள் குமுதம் பதுமம் 
கோடும் பூத்த என்னக் கொடியேர் இடையார் குழையும் 
தோடும் கிடந்த வதனத் தொகையால் பொலிவ சோலை.	

2462.	பிடிகள் என்ன நடந்தார் உடன் போய்க் கொழுநர் பெரும் 
                                            தண் 
கொடிகள் மிடைந்த வில்லில் இயக்கர் போலக் குறுகிக் 
கடி கொள் பனிநீர் தௌ¤த்து வேடை தணித்தும் கன்றும் 
அடிகள் பிடித்தும் சேடியவர் கைக்கு உதவி ஆவார். 	
2463.	மைவார் தடம் கண் மடவார் வளைப்பர் கொம்பின் 
                                        மலரைக் 
கொய்வார் குமிழ் போந்து உயிர்ப்பார் குழையும் 
                                  செவியும் குழலும் 
பெய்வார் மகிழ்ச்சி செய்வார் பேரா மையல் கூர 
எய்வார் கணைபோல் தைப்பக் கொழுநர் மார் பத்து 
                                        எறிவார். 	

2464.	முத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங் 
                                  கொம்பர்ப் 
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலில் புகுந்து 
தெத்தே எனப் பாண் செய்து தீந்தேன் அருந்தும் 
                                  துணையோடு 
ஒத்து ஏழ் இசை பாதிக் கள் உண்ணும் பாணர் ஒத்தே. 	

2465.	இம்பர் வீடு அளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம் 
வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் 
                                     தாழ்ந்து 
கம்பம் உற்று அடிப் பூச் சிந்தி மலர் முகம் கண்ணீர் 
                                      சோரக் 
கொம்பரும் பணிந்தது என்றால் உலகியல் கூறல் பாற்றோ. 	

2466.	மைக் கணாள் ஒருத்தி எட்டா நிமிர் கொம்பை வளைக்கும் 
                                      தோறும் 
கைக்கு நேர் படாமை வாடும் கடிமலர்க் கொடிபோல் 
                                      நிற்பத் 
தைக்கும் பூம் கணை வேள் அன்ன ஒருமகன் தலைபட்டு 
                                      என்னை 
எய்க்கின்றாய் தோள் மேல் ஏறிப் பறி என ஏந்தி 
                                      நின்றான். 	

2467.	தையலாள் ஒருத்தி எட்டா மலர்க் கொம்பைத் தளிர்க்கை 
                                         நீட்டி 
ஐய நுண் மருங்குல் நோவ வருந்தலும் ஆற்றாக் கேள்வன் 
ஒய் யென இதுவும் என்னை யூடிய மகளிர் ரேயோ 
கொய் என வளைத்து நின்றான் கண் முத்தம் கொழிப்ப 
                                         நின்றாள். 	

2468.	மைக்குழல் ஒருத்தி காதில் வட்டப் பொன் ஒலை யூடே 
திக் கயம் அனையான் கொய்த செருந்திப்பூச் செருகி 
                                      நோக்கி 
இக் குழை அழகிது என்றான் இடும் எம் கைக்கு இடுதி 
                                      என்னா 
அக் குழை யோடும் வீசி அன்பனுக்கு அலக்கண் 
                                     செய்தாள். 	
2469.	மயில் இளம் பெடை அன்னாள் ஓர் மாதர் மாங் குடம்பை 
                                      செல்லும் 
குயில் இளம் பெடை தன் ஆவிச் சேவலைக் கூவ நோக்கி 
அயில் இளம் களிறு அன்னானைக் கடைக் கணித்து 
                                  அளியும் தேனும் 
பயில் இளம் சோலை மாடு ஓர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள். 	

2470.	பாசி இழை ஒருத்தி ஆற்றாப் புலவியாள் பைந்தாரான் 
                                        முன் 
பூசு அகில் வாசம் காலில் போக்கியும் புனைபூண் காஞ்சி 
ஓசையைச் செவியில் உய்த்தும் கலவியின் உருவம் தீட்டும் 
தூசினை உடுத்தும் போர்த்தும் தூது விட்டவள் போல் 
                                     நின்றாள். 

2471.	வாய்ந்த நாள் மலர் கொய்து ஈவான் மெய்யில் அம் மலர்த் 
                                      தேம் தாது 
சாந்த மான் மதம் போல் சிந்திக் கிடப்ப ஓர் தையல் 
                                      யாரைத் 
தோய்ந்த சாந்து என்றாள் உள்ளத்து உன்னையும் சுமந்து 
                                      கொய்த 
ஆய்ந்த சண்பகத் தாது என்றான் நெய் சொரி அழலின் 
                                      நின்றாள். 	

2472.	பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி தன் 
                                      ஊடல் 
தணிய வந்து அடியில் வீழத் தன்னிழல் அனையான் 
                                     சென்னி 
மணி இடைக் கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மைப் 
பணிவது என் என்று நக்குப் பரிவு மேல் பரிவு செய்தாள். 	

2473.	மதுகை வாள் ஒருவன் அங்கு ஓர் மங்கை தன் வடிவை 
                                    நோக்கிப் 
பதுமமே அடிகை காந்தள் பயோதரம் கோங்கு காவிப் 
புது மலர் விழிவாய் ஆம்பல் போது நும் மூரல் 
                                   ஒப்பபோது 
அதனை வாய் திறந்து காட்டிப் போமின் என்று 
                              அடுத்து நின்றான். 	

2474.	விடைத் தனி ஏறு அன்னான் ஓர் விடலை ஓர் வேற் 
                               கண்ணாள்முன் 
கிடைத்து நும் இடத்து என் நெஞ்சம் கெட்டு வந்து 
                            ஒளித்தது அல்குல் 
தடத் திடை ஒளித்ததேயோ தனத்திடை ஒளித்ததோ 
                                        பூம் 
படத்தினைத் திறந்து காட்டிப் போ கெனப் பற்றிச் 
                                   சென்றான். 	

2475.	மாந்தளிர் அடியார் சாய்ப்ப வளைந்த பூம் சினை வண்டு அன்னார் 
கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் 
ஏந்திழை அவரை நீத்துப் பலர் நுகர்ந்து எச்சில் ஆக்கும் 
பூந்தொடியவரைத் துய்க்கும் பேதையர் போன்ற தன்றே. 	

2476.	புல்லி மைந்தர் பொருள் கவர்ந்தார் என 
வல்லி அன்ன மடந்தையர் கொய்தலின் 
அல்லி நாண்மலர் அற்றபின் கைப் பொருள் 
இல்லி என்ன விளைத்தன கா எலாம்.	

2477.	மை உண் கண்ணியர் மைந்தரோடு அம்மலர் 
கொய்யும் செல்வ நுகர்ந்து கொழுங்கணும் 
மெய்யும் தோயில் கொழுநரின் வேற்றுமை 
செய்யும் பொய்கை திளைப்பச் சென்றாரரோ.	

2478.	அன்ன மன்னவர் ஆடும் கயம் தலை 
நன்னர் நீல நளினம் குமுதம் என்று 
இன்ன அன்றி எழில் முல்லை சண்பகம் 
பொன் அம் கோங்கமும் பூத்தது போன்றதே.	

2479.	குரவ ஓதியர் கயம் தலை குறுகுமுன் கயலும் 
அரவும் ஆமையும் அலவனும் அன்ன அமும் அகன்ற 
பருவரால் களும் இரிந்தன பகைஞர் மேல் இட்டு 
வருவரேல் எதிர் நிற்பரோ வலி இழந்தவரே.	

2480.	பண் எனும் சொலார் குடை தொறும் பல் மலர் வீழ்ந்த 
தண் எனும் திரை அலை தொறும் நிரை நிரை தாக்கல் 
கண்ணும் நீலமும் முகங்களும் கமலமும் வாயும் 
வண்ண ஆம்பலும் தத்தம்மின் மலைவன அனைய.	

2481.	குழை பாசியின் விரிந்திட மகிழ்ந்து நீர் குடையும் 
மாழை உண் கணார் கொங்கையும் முகங்களும் மருங்கர் 
சூழ் அரும் பொடு மலர்ந்த செந்தாமரைத் தொகுதி 
ஆழ் தரங்க நீர் இடைக் கிடந்து அலைவன அனைய. 	

2482.	தூய நீர் குடைந்து ஏரும் தன் துணைவியைத் துணைவன் 
வாயும் கண்களும் வேறு உற்ற வண்ணம் கண்டு என் கண் 
ஏய இன்னுயிர் அனையவள் எங்கு உளாள் என்றான் 
காயும் வேல் கணாள் முலை குளிப் பாட்டினாள் கண்ணீர். 	

2483.	மங்கை நல்லவள் ஒருத்தி நீர் ஆடுவான் மகிழ் நன் 
அங்கை பற்றினள் ஏகுவாள் அவன் குடைந்து ஏறும் 
பங்கயக் கணாள் ஒருத்தியைப் பார்த்தலும் சீசீ 
எங்கை எச்சில் நீர் ஆடலேன் எனக் கரை நின்றாள்.	

2484.	வனைந்த பைங் கழலான் புனல் ஆடலின் மார்பின் 
நனைந்த குங்குமத் தலை எறி நளின மொட்டு அழுந்தப்
புனைந்த கொங்கையால் வடுப் படப் பொறித்தவள் யார் 
                                          என்று 
இனைந்து அழுகினாள் நெய் சொரி எரி என ஒருத்தி. 	

2485.	வீழ்ந்த காதலன் செய்த தீங்கு ஆகிய வேலால் 
போழ்ந்த நெஞ்சினாள் புலவி நோய் பொறாள் அவன் 
                                       காண 
ஆழ்ந்த நீர் இடை அமிழ்த்து வாள் போன்று அயர்ந்து 
                                      அயலே 
தாழ்ந்த அன்னத்தை நோக்கிக் கை தா என இரந்தாள். 	

2486.	கரும்பு போல் மொழியாள் ஒரு காரிகை வதனம் 
சுரும்பு சூழ் கமலங்களுள் கமலமாய்த் தோன்ற 
விரும்பு காதலன் ஐயுற்று மெலிந்தனன் மெல்ல 
அரும்பு முல்லை கண்டு ஐயத்தின் நீங்கிச் சென்று 
                                 அணைந்தான். 	

2487.	களித்த காதலன் மொக்குள் வாய்த் தன் நிழல் கண்டு 
தௌ¤த்து வாள் நகை செய்ய மாற்றாள் என்று சீறித் 
தளிர்க்கை நீட்டினாள் கண்டிடல் தடவினள் சலத்துள் 
ஒளித்தியோ எனா உதைத்தனள் பேதை மாது ஒருத்தி.	

2488.	நாறு சுண்ணம் மென் கலவையும் நானமும் தம்மின் 
மாரி வீசி நின்று ஆடுவார் மாலை தாழ் அகலத்து 
ஊறு பாடு அற வந்து அந்தரத்து அளிகவர்ந்து உண்ப 
ஆறு செல்பவர் பொருள் வெளவும் ஆரட்டரே போல.	

2489.	கொய்யும் நீலமும் கமலமும் கொண்டு கொண்ட நங்கன் 
எய்யும் வாளியின் எறிவரால் எறிந்திடு மலரைக் 
கையினால் புடைத்து எறிந்தவர் கதிமுகம் படக்கண்டு 
ஐது வாள் நகை செய்து அக மகிழ்ச்சியுள் ஆழ்வார். 	

2490.	வாச மென் பனி நீரோடு சுண்ணமும் வாரி 
வீசுவார் இளம் பிடியொடு வேழ மா நிரை போல் 
காசு உலாந் தொடி வில்லிடக் கைகளால் அள்ளிப் 
பூசு சாந்து அவை அழிந்திடப் புனித நீர் இறைப்பார்.	

2491.	அப் பெரும் புனல் தடம் குடைந்து ஆடுவார் ஆயத்து 
ஒப்ப அரும் தனி ஒருமகள் ஒருவன் தன் முகத்துத் 
துப்பை வென்ற செம் துவர் இதழ்ச் செய்ய வாய்த் தூநீர் 
கொப்பளித்தனள் ஆம்ப அம் தேன் எனக் குடித்தான். 	


2492.	ஆழம் அவ்விடைச் செல்லலை நில் என அடுத்தோர் 
வேழ மன்னவன் விலக்குவான் போல் ஒரு வேல் கண் 
ஏழை தன்னைக்கையால் வளைத்து ஏந்தி வண்டு அறை 
                                           தார் 
சூழு மார் பணைத்து இரதி தோள் தோய்ந்தவன் ஒத்தான். 	

2493.	மாசுஇல் நானமும் சூடிய மாலையும் மெய்யில் 
பூசு சாந்தமும் ஆரமும் பொய்கைக்குக் கொடுத்து 
வாச மெய்யினில் அம்புய வசமும் மயங்க 
ஆசை மைந்தரோடு இளையவர் அகன் கரை அடைவார். 

2494.	தையலார் சிலர் நனைந்த நுண் தானையுள் பொதிந்த 
மெய் எலாம் வெளிப் படக் கரை ஏறுவான் வெள்கி 
ஐய தா பொலம் துகில் என அன்பரைக் கூய்க் கண் 
செய்ய மாயனைக் கேட்கும் ஆய்ச் சிறுமியர் ஒத்தார்.	

2495.	உலத்தை வென்ற தோள் ஆடவர் உச்சிமேல் பொறித்த 
அலத்து அகத்தொடு குங்குமம் அனைந்து செம் புனலாய் 
மலர்த் தடம் குடைந்து அவர்க்கு நீராஞ்சன வட்டக் 
கலத்தை ஒத்தன சுற்றி நின்றார் ஒத்த கடிக்கா. 	

2496.	பட்டும் பல் நிறக் கலிங்கமும் பன் மணிக் கலனும் 
கொட்டும் சாந்தமும் நானமும் குங்குமச் சேறும் 
கட்டும் தாமமும் தமது கட்டழகு எலாம் கவர 
மட்டு உண் கோதையர் ஆடவர் மனம் எலாம் கவர்ந்தார். 

2497.	காவியும் கமலப் போதும் கள் ஒழுகு ஆம்பல் போதும் 
வாவியுள் பூத்த போல வாடி உள் பூப்ப நோக்கி 
ஏய் இரண்டு அன்ன கண்களால் அனங்கனை ஏவல் 
                                      கொள்ளும் 
பூவிரி பொலம் கொம்பு அன்னார் புது மது நுகரப் 
                                      புக்கார். 	

2498.	பொன்னினும் வெள்ளியானும் பளிங்கினும் புலவன் செய்த 
நன்னிறக் கலத்தில் கூர் வாள் நட்டு என ஆக்கிச் சேடி 
மின் அனார் அளித்த தேறல் சிறு துளி விரலில் தௌ¢ளித் 
துன்னி வீழ் களி வண்டு ஒச்சி தெண்டை அம் கனிவாய் 
                                         வைப்பார். 	


2499.	வள்ளத்து வாள் போல் வாக்கு மதுக் குடம் தன்பால் 
                                         பெய்த 
கொள்ளைத் தேன் மதுவைக் கொள்ளைக் கொள வந்த 
                               வள்ளம் ஈது என்று 
உள்ளத்து வெகுண்டு வை வாள் ஊன்றி மார் பிடப்பது 
                                         ஒத்த 
கள்ளைச் சூழ் காளை வண்டு செருச் செயல் காண்பது 
                                         ஒத்த. 

2500.	தணியல் உண்டு உள்ளம் சோரும் ஒருமள் தன் இயல் 
                                   உண்பான் 
பிணி அவிழ் கோதையாள் ஒர் பெண் மகள் கலத்தில் 
                                    வாக்கும் 
துணிமதுத் தாரை தன்னை வாள் எனத் துணிந்து பேதாய் 
திணிகதிர் வாளால் வள்ளம் சிதைத்தியோ என்று நக்காள். 

2501.	மலர் தொறும் சிறு தேன் நக்கித் திரிவண்டு மடவார் 
                                         தம்கைத் 
தலம் எடுத்து ஓச்ச ஓடா தழி இத் தடம் சாடி மொய்ப்ப 
இலம் எனப் பல்லோர் மாட்டும் இரந்து இரந்து தன்மை 
                                          நீங்கா 
அலமரும் வறியோர் வைத்த நிதி கண்டு அகல்வரே யோ. 

2502.	உண்டவள் ஒருத்தி கள்வாய் உதிக்கும் தன் முகமும் 
                                    கண்ணும் 
கண்டு தாமரைகள் வேலை முளைத்தக் கள்ளை ஆர 
மொண்டு உணாப் பேதைத் தும்பி அம்மது முளரி வார் 
                                      தேன் 
நுண் துளி செறிவது என்னா நொடித்துக் கை புடைத்து 
                                     நக்காள். 	

2503.	மங்கையாள் ஒருத்தி தான் உண்டு எஞ்சிய மதுவுள் 
                                   தோன்றும் 
திங்களை நோக்கி என்னைப் பிரிவின்கண் தீயாய்ச் 
                                     சுட்டாய் 
இங்கு வந்து அகப் பட்டாயே இனி விடேன் கிடத்தி 
                                      என்னா 
அங்கு ஒரு வள்ளம் கொண்டு சேமித்தாள் அருந்தல் 
                                    செய்யாள். 	

2504.	வெவ்விய நறவம் உண்ட விளங்கு இழை ஒருத்தி கையில் 
கௌவிய வாடி தன்னில் கரும் கயல் நெடும் கண் சேப்பும் 
கொவ்வை வாய் விளர்ப்பு நோக்கி என் நலம் கூட்டு 
                                     உண்டு ஏகும் 
ஓளவிய மனத்தான் யார் என்று அயர்கின்றாள் அயலார் 
                                     எள்ள. 	

2505.	ஒருத்தி கள் உண்கின்றாள் தன் உருவம் அந் நறவுள் 
                                        தோன்ற 
ஒருத்தி என்னுடன் வந்து உண்பாள் காண் என உண்ட 
                                        தோழி 
ஒருத்தி வந்து என் செய்வாள் தன் உருவமும் நோக்கிப் 
                                        பேதாய் 
ஒருத்தியோ இருவர் என்றாள் எச்சில் என்று உகுத்து 
                                        நக்காள். 	

2506.	சாடி உண் நறவம் உண்டாள் தன் உரு வேறு பாட்டை 
ஆடியுள் நோக்கி நானோ அல்லனோ எனைத்தான் 
                                    கைக்கொண்டு 
ஓடினர் பிறரும் உண்டோ உயிர் அன்னான் வந்து இங்கு 
                                    என்னைத் 
தேடி என் செய்கேன் என்னைத் தேடித்தா சேடி என்றாள். 	


2507.	களித்தவள் ஒருத்தி நின்ற வாடியுள் கணவன்றன் பின் 
ஒளித்தவன் உருவும் தானு நேர் பட உருத்து நோக்கித் 
துளித்த கண்ணீர் ஆகி ஏது இலாள் தோய் தோய்ந்து 
                                      இன்பம் 
குளித்தனை இருத்தியோ என்று உதைத்தனள் கோபம் 
                                    மூண்டாள். 	

2508.	இளம் புளிந்தயிர் விராய இன் சுவை பொதிந்த சோறு 
வளம் பட விருத்தினோடும் அருந்துவார் வசந்த வீணை 
களம் படும் எழாலினோடும் கைவிரல் நடாத்திக் காமன் 
உளம் புகுந்து அலைப்ப வெண்ணெய்ப் பாவை போல் 
                             உருகிச் சோர்வார். 	

2509.	இவ் இள வேனில் காலத்து இன்னுயிர்த் துணைவி யோடும் 
செவ்விய செங்கோன் நேமிச் செண்பக மாறன் ஓர் நாள் 
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில் 
வெவ்விய வேடை நீப்பான் இருந்தனன் வேறு வைகி. 	

2510.	மாந்தளிர் ஈன்று கோங்கு வண்டள அரும்பித் தண்தேன் 
காந்தள் செம் கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் புத்துச் 
சாய்ந்த மென் கொடியும் தானும் தனி இடத்து இருப்பான் 
                                         நேரே 
வாய்ந்த ஓர் நாற்றம் தோன்ற அசைந்தது வசந்தத் 
                                         தென்றல். 	

2511.	வெவ்விய வேலான் வீசும் வாச மோந்து ஈது வேறு 
திவ்விய வாசம் ஆக இருந்தது தென்றல் காவில் 
வெளவிய வாசம் அன்று காலுக்கும் வாசம் இல்லை 
எவ்வியல் வாச மேயோ இது என எண்ணம் கொள்வான். 

2512.	திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான் தேவி 
                                     ஐம்பால்
இரும்பித்தை வாசம் ஆகி இருந்தது கண்டில் வாசம் 
சுரும்பிற்கும் தெரியாது என்னாச் சூழ்ந்து இறும் பூது 
                                     கொண்டீ 
தரும்பிதைக் இயல்போ செய்கையோ என ஐயம் 
                                   கொண்டாள். 	

2513.	ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல் 
செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்றக் 
கையுறை வேலான் ஈந்த பொன் கிழி கைக் கொண்டு ஏகி 
மெய் உணர் புலவர் முன்னாத் தூக்கினார் வினைசெய் 
                                        மாக்கள். 	

2514.	வங்கத்தார் பொருள் போல் வேறு வகை அமை கேள்வி 
                                        நோக்கிச் 
சங்கத்தார் எல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து 
துங்கத் தார் வேம்பன் உள்ளம் சூழ் பொருள் துழாவி 
                                        உற்ற 
பங்கத்தார் ஆகி எய்த்துப் படருறு மனத்தர் ஆனார். 	

2515.	அந்த வேலையில் ஆதி சைவரில் 
வந்த மாணவன் மணம் செய் வேட்கையான் 
முந்தை ஆச்சிம முயலும் பெற்றியான் 
தந்தை தாய் இலான் தருமி என்று உளான்.	

2516.	ஒருவன் நான் முகத்து ஒருவன் மார்பு உறை 
திருவன் நாடரும் தேவனாலும் உரு 
அருவ நாலகன் தானைத் தன் கலி 
வெருவ நாடி முன் வீழ்ந்து வேண்டுவான்.	

2517.	தந்தை தாய் இலேன் தனியன் ஆகிய 
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன் 
சிந்தை நோய் செயும் செல்ல தீர்ப்பதற்கு 
எந்தையே இது பதம் என்று ஏத்தியே. 	

2518.	நெடிய வேத நூல் நிறைய ஆகமம் 
முடிய ஓதிய முறையினில் நிற்கு எனும் 
வடி இல் இல்லற வாழ்க்கை இன்றி நின் 
அடி அருச் சனைக்கு அருகன் ஆவனோ.	

2519.	ஐய யாவையும் அறிதியே கொலாம் 
வையை நாடவன் மனக் கருத்து உணர்ந்து 
உய்ய ஓர் கவி உரைத்து எனக்கு அருள் 
செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்.

2520.	தென்னவன் குல தெய்வம் ஆகிய 
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ் 
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார் 
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.	


2521.	பொன் தனிச்சடைப் புவன நாயகன் 
சொற்ற பாடல் கைக் கொண்டு தொல் நிதி 
பெற்று எடுத்தவன் போன்று பீடு உறக் 
கற்ற நாவலர் கழகம் நண்ணினான்.	

2522.	கல்வியாளர் தம் கையில் நீட்டினான் 
வல்லை யாவரும் வாங்கி வாசியாச் 
சொல்லின் செல்வமும் பொருளும் தூக்கியே 
நல்ல நல்ல என்று உவகை நண்ணினார்.	

2523.	அளக்கு இல் கேள்வியார் அரசன் முன்பு போய் 
விளக்கி அக்கவி விளம்பினார் கடன்
உள்ளக் கருத்து நேர் ஒத்தலால் சிரம் 
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.	

2524.	உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப் 
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ் 
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என 
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.	

2525.	வேந்தன் ஏவலால் விபுதர் தம் ஒடும் 
போந்து மீண்டு அவைப் புறம்பு தூங்கிய 
ஆய்ந்த பொன் கிழி அறுக்கும் நம்பியை 
நேர்ந்து கீரன் நில் என விலக்கினான். 	

2526.	குற்றம் இக் கவிக்கு என்று கூறலும் 
கற்றிலான் நெடும் காலம் வெம் பசி 
உற்றவன் கலத்து உண்ணும் எல்லை கைப் 
பற்ற வாடினான் பண்பு பற்றினான்.	

2527.	உலர்ந்த நெஞ்சு கொண்டு ஒதுங்கி நாயகன் 
நலம் தரும் கழல் நண்ணினான் அவன் 
மலர்ந்தபாடல் கொண்டு அறிஞர் வைகிடத்து 
அலர்ந்த சிந்தை கொண்டு அடைந்த மைந்தனே.	

2528.	செய்யுள் கொண்டு போய்த் திருமுன் வைத்து உளப் 
பையுள் கொண்ட அப் பனவன் என்னை நீ 
மையுள் கண்ட இவ் வழுவுப் பாடலைக் 
கையுள் நல்கினாய் கதி இலேற்கு எனா.	

2529.	வறுமை நோய் பிணிப்பப் பல் நாள் வழிபடு அடியேன் 
                                     நின்பால் 
பெறு பொருள் இழந்தேன் என்று பேசில் என் யார்க்கும் 
                                     மேலாம் 
கறை கெழு மிடற்றோய் நின்றன் கவிக்குக் குற்றம் சில் 
                                     வாழ்நாள் சிற் 
அறிவு உடைப் புலவர் சொன்னால் யார் உனை மதிக்க 
                                     வல்லார். 	

2530.	எந்தை இவ் விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது 
                                     என்னாச் 
சிந்தை நோய் உழந்து சைவச் சிறுவன் இன்று இரங்க 
                                     யார்க்கும் 
பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனும் ஆன 
சுந்தர விடங்கன் ஆங்கு ஓர் புலவனாய்த் தோற்றம் 
                                     செய்தான். 	

2531.	கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த 
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம் 
                             கொள்ளைக் கொள்ளத் 
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் எனக் குறி இட்டு 
                                       ஆங்கே 
புண்டர நுதலில் பூத்துப் பொய் இருள் கிழித்துத் தள்ள. 	

2532.	விரிகதிர்ப் படாத்திற் போர்த்த மெய்ப் பையுள் அடங்கிப் 
                                      பக்கத்து 
எரி மணிக் கடகத்திண் தோள் இளையவர் 
                               அடப்பையோடும் 
குருமணிக் களாஞ்சி அம் பொன் கோடிகம் தாங்க 
                                      முத்தால் 
புரிமதிக் குடைக் கீழ்ப் பொன் கால் கவரி பால் புரண்டு 
                                      துள்ள. 	

2533.	சொல் வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற வேத 
நல்ல பாதுகையாய்ச் சூட நவின்றன கற்றுப் பாட 
வல்லவர் மறையின் ஆறு மனு முதல் கலை போல் பின்பு 
செல்ல நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்து அவைக் 
                         களத்தைச் சேர்ந்தான். 	

2534.	ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி 
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா 
                                       முன்னம் 
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற 
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன். 	

2535.	சொல் குற்றம் இன்று வேறு பொருள் குற்றம் என்றான் 
                                       தூய 
பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை 
                                       என்றான் 
தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர்ச் சார்பால் அன்றி 
அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன். 	

2536.	பங்கய முக மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன 
அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான் 
                                        தெய்வ 
மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின் 
கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து 
                                       என்றான். 	

2537.	பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி 
அரவு நீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப் 
                                    பூங்கோதை 
இரவி நீர்ங் குழலும் அற்றோ என அ•தும் அற்றே 
                                    என்னா 
வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு 
                                    நோக்கான். 	

2538.	கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே 
                                      காட்டப் 
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல் 
                                       ஆகம் 
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம் 
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான். 	

2539.	தேய்ந்த நாள் மதிக் கண்ணியான் நுதல் விழிச் செம் தீப் 
பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்கயத் தடத்துள் 
ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனைக் 
காய்ந்த நாவலன் இம் எனத் திரு உருக் கரந்தான். 	

சங்கப் பலகை கொடுத்த படலம் சுபம் 	 	 


53. கீரனைக் கரையேற்றிய படலம்

2540.	மாரனைப் பொடி கண்டவர் அந்தண மைந்தனுக்கு 
ஆர நல் கனகக் கிழி ஈந்தது அறைந்தனம் 
ஏர் அனத்திரள் சூழ் மலர் ஓடை இடத்தினும் 
கீரனைக் கரை ஏற்றிய வாறு கிளத்துவாம். 	

2541.	தாழ்ந்த வேணியன் நெற்றி முளைத்த அழல் கணால் 
போழ்ந்த நாவலன் ஆடக பங்கயப் போய்கைவாய் 
வீழ்ந்து அரும் படர் வேலையில் வீழ்ந்தனன் விம்முறச் 
சூழ்ந்த நாவலர் கண்டு போறாது துளங்குவார்.	

2542.	ஏன்ற வேந்தன் இலாக்குடி ஈட்டமும் மின் கதிர் 
கான்ற நாயக மாமணி போகிய கண்டியும் 
ஆன்ற நானம் இலாதவர் கல்வியும் ஆனதே 
சான்ற கீரன் இலாத அவை கூடிய சங்கமே.

2543.	ஐய சொல் பொருள் தன் வடிவானவர் ஆலவாய் 
மை தழைத்த மிடற்றினார் தம்மொடும் வாது தான் 
செய்த இப்பிழையோ பெரிது எப்படி தீருமோ 
உய்வது அற்பதமே என யாவரும் உன்னினார்.	

2544.	எய்தி வெள்ளி மலை பெயர்த்தானும் இறுத்த தன் 
கையில் வீணைத் தொட்டு இன்னிசை பாடக் கனிந்தவன் 
செய்த தீங்கு பொறுத்ததும் அன்றித் திண் தேரோடும் 
மொய் கொள் வாளும் கொடுத்தனன் புண்ணிய மூர்த்தியே. 	

2545.	யாவராலும் அகற்ற அரிது இப்பிழை யாவர்க்கும் 
தேவர் ஆம் அவரே திரு உள்ளம் திரும்பினால் 
போவதே இதுவே துணிபு என்று புகன்று போய்ப் 
பாவலோர் பரன் தாள் நிழலில் பணிந்து ஏத்துவார்.	

2546.	திருத்தனே சரணம் சரணம் மறைச் சென்னி மேல் 
நிருத்தனே சரணம் சரணம் நிறை வேத நூல் 
அருத்தனே சரணம் சரணம் திரு ஆலவாய் 
ஒருத்தனே சரணம் சரணங்கள் உனக்கு நாம்.	

2547.	பாயும் மால் விடை மேல் வருவோய் பல் உயிர்க்கு எலாம் 
தாயும் தந்தையும் ஆகும் நின் தண் அளி தாமரைக்கு 
ஏயும் மாதவன் போல் அல்ல தீய இயற்றினார்க்கு
ஆயும் இன்பமும் துன்பமும் ஆக்குவது ஆதலால். 

2548.	அத்த கற்ற செருக்கின் அறிவழி கீரனின் 
வித்தகக் கவியைப் பழுது என்ற விதண்டையான் 
மத்தகக் கண் விழித்து வெதுப்பின் மலர்ந்த பொன் 
முத்தகக் கமலத்து இடை வீழ முடுக்கினாய்.	

2549.	இருள் நிறைந்த மிடற்று அடிகேள் இனி இப்பிழை 
கருணை செய்து பொறுத்து அருள் என்று கபிலனும் 
பரணனும் முதல் ஆகிய பாவலர் யாவரும் 
சரணம் என்று விழுந்து இரந்தார் அடி சாரவே.	

2550.	அக்கீர வேலை ஆலம் அயின்ற எம் கருணை வள்ளல் 
இக்கீர மழலைத் தீம் சொல் இறைவியோடு எழுந்து போந்து 
நக்கீரன் கிடந்த செம் பொன் இனப் பூந் தடத்து ஞாங்கர்ப் 
புக்கீர மதுரத் தீம் சொல் புலவர் தம் குழாத்துள் நின்றான். 	
2551.	அனல் கணான் நோக்கினான் பின் அருள் கணால் நோக்க வாழ்ந்த 
புனல் கணே கிடந்த கீரன் பொறி புலன் கரணம் எல்லாம் 
கனல் கணார் தமவே யாகக் கருணை மா கடலில் ஆழ்ந்து 
வினைக் கணே எடுத்த யாக்கை வேறு இல் அன்பு உருவம் ஆனான். 	

2552.	போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞானப் பூம் 
கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின் 
தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றித் 
                                திருக்காளத்திக் 
காதையார் குழையினாரைக் காளத்தி கயிலை என்னா. 	

2553.	எடுத்த சொல் மாறி மாறி இசைய நேரிசை வெண்பாவால் 
தொடுத்த அந்தாதி சாத்தத் துணைச் செவி மடுத்து நேர் 
                                           வந்து 
அடுத்தவன் கையைப் பற்றி அகன் கரை ஏற்றினார் தாள் 
கொடுத்து எழு பிறவி வேலைக் கொடுகரை ஏற்ற வல்லார். 

2554.	கை தந்து கரையேறிட்ட கருணை அம் கடலைத் தாழ்ந்து 
மை தந்த கயல் கணாளை வந்தித்துத் தீங்கு நன்கு 
செய் தந்தோர்க்கு இகலும் அன்பும் செய்தமை பொருளாச் 
                                        செய்யுள் 
பெய் தந்து பாடுகின்றான் பிரான் அருள் நாடுகின்றான். 	

2555.	அறன் இலான் இழைத்த வேள்வி அழித்த பேர் ஆண்மை 
                                       போற்றி 
மறன் இலாச் சண்டிக்கு ஈந்த மாண் பெரும் கருணை 
                                       போற்றி 
கறுவி வீழ் கூற்றைக் காய்ந்த கனைகழல் கமலம் 
                                       போற்றி 
சிறுவனுக்கு அழியா வாழ் நாள் அளித்து அருள் செய்தி 
                                       போற்றி. 	

2556.	சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி 
வலம் தரும் அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் 
                                      போற்றி 
அலர்ந்த செம் கமலப் புத்தேள் நடுச் சிரம் அரிந்தாய் 
                                      போற்றி 
சிலந்தியை மகுடம் சூட்டி அரசு அருள் செல்வம் 
                                      போற்றி. 	

2557.	திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்கு 
அருளிய தலைமை போற்றி அனங்கனை ஆகம் தீய 
எரி இடு நயனம் போற்றி இரதி வந்து இரப்ப மீளக் 
கரியவன் மகனுக்கு ஆவி உதவிய கருணை போற்றி.	

2558.	நகைத்தட வந்த வந்த நகுசிரம் திருகி வாங்கிச் 
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி கோயில் 
அகத்து அவி சுடரைத் தூண்டும் எலிக்கு அரசாள மூன்று 
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி. 	

2559.	பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் சென்னி புயம் இற 
                            மிதித்தாய் போற்றி 
இருக்கு இசைத்து அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய் 
                                     போற்றி 
தருக்கொடும் இருவர் தேடக் அழல் பிழம்பு ஆனாய் 
                                     போற்றி 
செருக்கு விட்டு அவரே பூசை செய்ய நேர் நின்றாய் 
                                     போற்றி. 	

2560.	பரும் கை மால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம் 
இரும் குறள் ஆமை கொண்ட இகல் வலி கடந்தாய் 
                                      போற்றி 
குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி ஆண் அலவன் 
                                      தேரை 
கருங்குரீஇ கழுகின் அன்புக்கு இரங்கிய கருணை 
                                      போற்றி. 	

2561.	சாலநான் இழைத்த தீங்குக்கு என்னையும் தண்டம் செய்த 
கோலமே போற்றி பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன் 
                                        சொல் 
மாலை கேட்டு என்னை ஆண்ட மலைமகள் மணாள 
                                        போற்றி 
ஆலவாய் அடிகள் போற்றி அம்மை நின் அடிகள் 
                                        போற்றி. 	

2562.	ஆவல் அலந்தனே அடியனேற்கு அருளல் என்னாக் 
கோவமும் பிரசாதமும் குறித்து உரை பனுவல் 
பா அலங்கலால் பரனையும் பங்கில் அம் கயல் கண் 
பூவை தன்னையும் முறை முறை போற்றி என்று ஏத்தா.	

2563.	தேவ தேவனானப் பின் பெரும் தேவ பாணியொடும் 
தாவில் ஏழ் இசை ஏழுகூற்று இருக்கையும் சாத்திப் 
பூவர் சேவடி சென்னி மேல் பூப்ப வீழ்ந்து எழுந்தான் 
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்.	

2564.	துதித்த கீரனுக்கு இன்னருள் சுரந்து நீ முன் போல் 
மதித்த நாவலர் குழாத்து இடை வதி என மறைநூல் 
உதித்த நாவினார் கருணை செய்து உருக்கரந்து அயன் 
                                         சேய் 
விதித்த கோயில் புக்கு அமர்ந்தனர் விளங்கு இழையோடும். 	

2565.	கற்ற கீரனும் கலைஞரும் கழக மண்டபத்தில் 
உற்ற ஆடகக் கிழி அறுத்து அந்தணற்கு உதவி 
கொற்ற வேந்தனும் வரிசைகள் சில செயக் கொடுப்பித்து 
அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார். 	

2566.	சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல் 
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை 
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து 
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.	

கீரனைக் கரையேற்றிய படலம் சுபம்	 	 


54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

2567.	கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் 
                                      செம்பொன் 
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை 
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் 
                                      இப்பால் 
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் 
                                      சொல்வாம். 	

2568.	முன்பு நான் மடக் கூடல் முழு முதல் ஆணையால் போய் 
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன் 
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில் 
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச் 
                                   செய்வான். 	

2569.	கட்டு அவிழ் கடுக்கை அண்ணல் கண்ணினால் அவிந்த 
                                      காளை 
மட்டு அவிழ் மலரோனாலும் மாயவனாலும் காக்கப் 
பட்டவன் அல்லன் நல் நுதல் விழிப்படு தீ நம்மைச் 
சுட்ட போது உருப்பம் தீர்த்துக் காத்தது இச் சுவணக் 
                                      கஞ்சம். 	

2570.	இப் பெரும் தடமே எம்மை எம்மையும் காப்பது என்னாக் 
கப்பிலா மனத்தான் மூன்று காலமும் மூழ்கி மூழ்கி 
அப்பனை ஆலவாய் எம் அடிகளை அடியார் சேம 
வைப்பினை இறைஞ்சி நித்தம் வழிபடும் நியமம் பூண்டான். 	

2571.	மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப் 
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல் 
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று 
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத் 
                                   தேர்வான். 	

2572.	இலக்கணம் இவனுக்கு இன்னும் தௌ¤கில இதனால் 
                                        ஆய்ந்த 
நலத்த சொல் வழூச் சொல் என்பது அறிகிலன் அவை தீர் 
                                        கேள்விப் 
புலத்தவர் யாரைக் கொண்டு போதித்து இவனுக்கு என்னா 
மலைத் தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னும் 
                                        எல்லை. 	

2573.	பங்கயச் செங்கை கூப்பிப் பாலின் நேர் மொழியாள் 
                                      சொல்வாள் 
அங்கணா அம்கை நெல்லிக் கனி என அனைத்தும் கண்ட 
புங்கவா நினது சங்கைக்கு உத்தரம் புகல வல்லார் 
எங்குளர் ஏனும் என் நெஞ்சு உதிப்பது ஒன்று இசைப்பேன் 
                                      ஐயா. 	

2574.	பண்டு ஒரு வைகல் வெள்ளிப் பனிவரை இடத்து உன் 
                                    பாங்கர்ப் 
புண் தவழ் குலிசக் கோமான் பூ மகன் மாயப் புத்தேள் 
அண்டரும் சனகன் ஆதி இருந்தவர் பிறரும் ஈண்டிக் 
கொண்டனர் இருந்தார் இந்தக் குவலயம் பொறாது மாதோ. 	

2575.	தாழ்ந்தது வடகீழ் எல்லை உயர்ந்தது தென் மேற்கு எல்லை 
சூழ்ந்தது கண்டு வானோர் தொழுது உனைப் பரவி ஐய 
ஊழ்ந்திடும் அரவம் பூண்டோய் ஒருவன் நின் ஒப்பான் 
                                     அங்கே 
வாழ்ந்திட விடுத்தால் இந்த வையம் நேர் நிற்கும் என்றார். 	

2576.	பைத்தலை புரட்டு முந்நீர்ப் பௌவம் உண்டவனே எம்மை 
ஒத்தவன் அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா 
முத்திரை இமவான் பெற்ற முகிழ் முலைக் கொடி ஒப்பாள் 
                                          என்று 
இத்திரு முனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே. 	

2577.	விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் 
                                       தேயம் 
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின் 
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து 
                                      கேள்வி 
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் 
                                     வேண்டும். 

2578.	சித்தம் மாசு அகல அந்தச் செம் தமிழ் இயல் நூல் 
                                        தன்னை 
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற 
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தௌ¤ந்த 
                                        பின்னும் 
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான். 	

2579.	கடம்பமா வனத்தில் எம்மைக் கண்டனை இறைஞ்சி 
                                       உள்ளத்து 
திடம் பெற யாது வேட்டாய் அவை எலாம் எம்பால் 
                                       பெற்றுத் 
திடம் பெற மலயத்து எய்தி இருக்க என விடுத்தாய் 
                                       சென்று 
குடம் பெறு முனியும் அங்கே இருக்கின்றான் 
                                  கொடியினோடும். 	

2580.	இனையது உன் திரு உள்ளத்துக்கு இசைந்ததேல் இவற்குக் 
                                        கேள்வி 
அனைய மாதவனைக் கூவி உணர்த்தென வணங்கு கூற 
இனைய நாண் இகழ்ச்சி எல்லா மறந்திடாது இன்று 
                                      சொன்னாய் 
அனையதே செய்தும் என்னா அறிவனை நினைத்தான் 
                                        ஐயன். 

2581.	உடைய நாயகன் திருவுளம் உணர்ந்தனன் முடிமேல் 
அடைய அஞ்சலி முகிழ்த்தனன் அரும் தவ விமானத்து 
இடை புகுந்தனன் பன்னியோடு எழுந்தனன் அகல்வான் 
நடையன் ஆகி வந்து அடைந்தனன் நற்றமிழ் முனிவன்.	

2582.	இயங்கு மாதவத் தேரினும் பன்னியோடு இழிந்து 
புயங்கன் ஆலயம் புகுந்து நாற்புயம் புடை கிளைத்துத் 
தயங்கு செம் பவளா சலம் தன்னையும் அதன்பால் 
வயங்கும் இந்திர நீலமால் வரையையும் பணியா.	

2583.	பெருகும் அன்பு உளம் துளும்ப மெய் ஆனந்தம் பெருக 
அருகு இருந்தனன் ஆவயில் கீரனும் அம் பொன் 
முருகு அவிழ்ந்த தாமரை படிந்து இறைவனை முன்போல் 
உருகு அன்பினால் இறைஞ்சுவான் ஒல்லை வந்து 
                                   அடைந்தான். 

2584.	இருந்த மாதவச் செல்வனை எதிர் வர நோக்கி 
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால் 
தெரிந்த நீ அதை அரி தபத் தெருட்டு எனப் பிணியும் 
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான். 	

2585.	வெள்ளை மாமதிப் பிளவு அணி வேணி அம் கருணை 
வள்ளலார் பணி சிரத் தினு மனத்தினும் தாங்கிப் 
பள்ளம் ஏழையும் பருகினோன் பணியும் நக்கீரன் 
உள்ளம் மாசு அற வியாகரணத்தினை உரைக்கும்.	

2586.	இருவகைப் புற உரை தழீஇ எழுமதமொடு நால் 
பொருளடும் புணர்ந்து ஐ இரு குற்றமும் போக்கி 
ஒரு விலை இரண்டு அழகொடு முத்தி எண் நான்கும் 
மருவு ஆதி நூலினைத் தொகை வகை விரி முறையால்.	

2587.	கருத்துக் கண் அழி ஆதிய காண்டிகை யானும் 
விருத்தியான் நூல் கிடைப் பொரு துளக்கற விளக்கித் 
தெரித்து உரைத்தனன் உரைத்திடு திறம் கண்டு நூலின் 
அருத்த மே வடிவு ஆகிய ஆதி ஆசிரியன். 	

2588.	தருக்கு இன்பமும் கருணையுந் தழைய மா தவனைக் 
திருக்கரங் களான் மகிழ்ச்சியுள் திளைத்திடத் தடவிப் 
பெருக்க வேண்டிய பேறு எலாம் பீடுற நல்கி 
இருக்கையில் செல விடுத்தனன் ஆலவாய் இறைவன்.	

2589.	பொன்னாளடும் குறு முனி விடை கொடு போன 
பின்னை ஆர் உயிர்க் கிழத்தி தன் பிரானை நேர் நோக்கி 
என்னை நீ இவற்கு உணர்த்திடாது இத் தவப் பொதியின் 
மன்னனால் உணர்த்தியது என மதுரை நாயகனும். 	

2590.	தன்னை நித்தலும் வழிபடும் தகுதியோர் சாலப் 
பொன் அளிப்பவர் தொடுத்த மற்சரம் இலாப் புனிதர் 
சொன்னசொல் கடவாதவர் துகள் தவிர் நெஞ்சத்து 
இன்னவர்க்கு நூல் கொளுத்துவது அறன் என இசைப்ப.	

2591.	இவன் மடுத்த மற்சரத்தினால் யாம் உணர்த்தாது அத் 
தவனை விட்டு உணர்த்தினம் எனச் சாற்றினான் கேட்டுக் 
கவலை விட்டு அக மகிழ்ச்சி கொண்டு இருந்தனள் கதிர் 
                                           கால் 
நவ மணிக்கலம் பூத்தது ஓர் கொடி புரை நங்கை. 	

2592.	கற்ற கீரனும் பின்பு தான் முன் செய்த கவிகண் 
முற்றும் ஆய்ந்து சொல் வழுக்களும் வழா நிலை முடிபும் 
உற்று நோக்கினான் அறிவின்றி முழுதொரும் உணர்ந்தோன் 
சொற்ற பாடலில் பொருள் வழுச் சொல்லினேன் என்னா. 	

2593.	மறையின் அந்தமும் தொடாத தாள் நிலம் தொட வந்த 
நிறை பரம் சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன் 
சிறிய கேள்வியோர் கழியவும் செருக்கு உடையோர் என்று 
அறிஞர் கூறிய பழம் சொல் என் அளவிற்றே அம்ம. 	

2594.	அட்ட மூர்த்தி தன் திருவடிக்கு அடியனேன் பிழைக்கப் 
பட்ட தீங்கினால் எனை அவன் நுதல் விழிப் படுதீச் 
சுட்டது அன்றி என் நெஞ்சமும் சுடுவதே என்று என்று 
உட்டதும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான். 	

2595.	மகவை ஈன்ற தாய் கைத்திடு மருந்து வாய் மடுத்துப் 
பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் என்னை 
இகல் இழைத்து அறிவுறுத்தினாற்கு ஏழையேன் செய்யத் 
தகுவது யாது என வரம்பிலா மகிழ்சியுள் தாழ்ந்தான்.	

2596.	மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால் 
போதகம் செய்த நூலினைப் புலவரே னோர்க்கும் 
ஆதரம் செயக் கொளுத்தி இட்டு இருந்தனன் அமலன் 
பாத பங்கயம் மூழ்கிய பத்திமைக் கீரன்.	

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் சுபம்


55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

2597.	காமனைப் பொடியாக் கண்ட கண் நுதல் தென் நூல் கீர 
நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம் 
                                   கொன்றைத் 
தாமனச் சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற 
ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் 
                                   சொல்வாம். 	

2598.	அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு 
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித் 
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல 
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து 
                                    எய்தினாரே. 	

2599.	தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த இப் பாடல் தம் 
                                        முள் 
விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டிப் 
பழுதறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் கேட்டு 
முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண் 
                                        மூர்த்தி. 	

2600.	இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும் 
உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு 
                                     எல்லாம் 
கரு என முளைத்த மூல இலிங்கத் துணின்றும் காண்டற்கு 
அரிய தோர் புலவனாகித் தோன்றி ஒன்று அருளிச் 
                                    செய்வான். 	

2601.	இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று 
அம் மா நிதிக் கிழவோன் மனை குண சாலினி அனையார் 
தம் மாதவப் பொருட்டால் வெளிற்று அறிவாளரைத் 
                                     தழுவும் 
பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள். 	

2602.	ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச் 
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம் 
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று 
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான். 	

2603.	வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன் 
என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும் 
நன்று ஆனவும் தீது ஆனவும் நயந்து ஆய்ந்து அதன் 
                                        தன்மை 
குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன். 	

2604.	மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசையக் 
சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டான் முடி 
                                   துளக்காக் 
கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம் 
எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம் 
                                   சென்றான். 	

2605.	பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை 
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை 
                                     இருந்தா 
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் 
                                     நயந்தே 
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை 
                                     கேளா. 	

2606.	மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர் 
                                     பொருளை 
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர் 
                                     பொருளைப் 
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும் 
                                     ஒருங்கே 
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும் 
                                     தேர்ந்தே. 	

2607.	இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம் 
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன் 
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும் 
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் 
                                      எல்லாம். 

2608.	நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம் 
                                    சுவை உண்டே 
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம் 
                                    பனித்தான் 
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை 
                                    அளித்தான் 
விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி 
                                    திளைத்தான். 	

2609.	பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம் 
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன் 
சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க 
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார். 	
2610.	உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல் 
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள் 
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து 
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் 
                                      போலும். 	
கத்தார் கலகம் தீர்த்த படலம் சுபம்  	 	 


56. இடைக் காடன் பிணக்குத் தீர்த்த படலம்

2611.	குடைக்காடன் பசிக்கு அன்னக் குழி அருத்தி வேட்கை 
                           அறக் கொடுத்த கங்கைச் 
சடைக் காடன் புலவர் இகம் தணிவித்த முறை இது மேல் 
                                  தன்னைப் பாடும் 
தொடைக் காடன் பகன் திகழ்ந்த தென்னவனை முனிந்து 
                           தன்னைத் தொழுது போன 
இடைக் காடன் உடன் போய்ப் பின்பு எழுந்து அருளிப் 
                   பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம். 	

2612.	இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்துப் பின்பு கதி 
                                   இன்பம் ஈந்த 
சுந்தரன் பொன் அடிக்கு அன்பு தொடுத்து நறும் 
                  சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி 
வந்தனை செய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்பச் சண்பகப் 
                                   பூமாற வேந்தன் 
அந்தர சூட மணியாம் சிவ புரத்து நிறை செல்வம் 
                             அடைந்தான் இப்பால். 	

2613.	ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல் 
                                   சீர்த்தி 
சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன் 
                                   தான் வென்றி 
மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி 
                                   கேசன் 
தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன் 
                                   தான் மன்னோ. 	
2614.	துணிவுடைய குலத்துவசன் வங்கிச பூடண மாறன் 
                                 சோம சூடா 
மணிகுல சூடா மணியே இராச சூடா மணியே மாற்றார் 
                                     போற்றிப் 
பணிய வரும் பூப சூடா மணியே குலேச பாண்டியனே 
                                     என்னக் 
கணிதம் உறு பதினைவர் வழி வழி வந்து உதித்து நிலம் 
                                 காவல் பூண்டோர். 	

2615.	அத்தகைய பாண்டியருள் குலேச பாண்டியன் என்னும் 
                               அரசன் தோள் மேல் 
வைத்தவன் இத்தலம் புரபோன் இலக்கணமும் இலக்கியமும் 
                               வரம்பு கண்டோன் 
எத்தகைய பெருநூலும் எல்லை கண்டோன் ஆதலினால் 
                               இவனுக்கு ஏற 
முத்தமிழோர் பயில் சங்கம் இடங்கொடுத்தது அனைய மணி 
                               முழவுத் தோளான். 	

2616.	கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது 
                        உணர்ந்த கபிலன் தன் பால் 
பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக் 
                        காட்டுப் புலவன் தென் சொல் 
மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த 
                        பனுவலோடு மூரித் தீம் தேன் 
வழிந்து ஒழுகு தாரனைக் கண்டு தொடுத்து உரைப் 
                        பனுவல் வாசித்தான் ஆல். 	

2617.	வழுக்காத சொல் சுவையும் பொருள் சுவையும் பகிர்ந்து 
                        அருந்த வல்லோன் உள்ளத்து 
அழுக்காற்றால் சிரம் துளக்கான் அகம் மகிழ்ச்சி சிறிது 
                        முகத்து அலர்ந்து காட்டான் 
எழுக்காயும் திணி தோளான் ஒன்றும் உரையான் வாளா 
                             இருந்தான் ஆய்ந்த 
குழுக்காதன் நண்புடையான் தனை மானம் புறம் தள்ளக் 
                             கோயில் புக்கான். 	

2618.	சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே 
                              தன்னைச் சார்ந்தோர் 
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் 
                                      வேம்பன் 
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் 
                              என்று புகலக் கேட்டுச் 
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது 
                              முடி துளக்கான் ஆகி. 	

2619.	பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க்கு அகம் 
                          மகிழ்ந்தோர் பயனும் நல்கா 
விரிவாய தடம் கடலே நெடும் கழியே அடும் கான 
                              விலங்கே புள்ளே 
பொரிவாய பராரை மரநிரையே வான் தொடு குடுமிப் 
                              பொருப்பே வெம்பும் 
எரிவாய கொடும் சுரமே என இவற்று ஓர் அ•ரிணை 
                          ஒத்து இருந்தான் எந்தாய். 	

2620.	என்னை இகழ்தனனோ சொல் வடிவாய் நின்னிடம் பிரியா 
                                 இமையப் பாவை 
தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் 
                       என் தனக்கு ஆகியது என்னா 
முன்னை மொழிந்து இடைக் காடன் தணியாத முனி ஈர்ப்ப 
                                 முந்திச் சென்றான் 
அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப 
                                 அருளின் மூர்த்தி. 	

2621.	போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை 
                              பொலியும் ஆற்றான் 
ஞான மயம் ஆகிய தன் இலிங்க உரு மறைத்து உமையா 
                              நங்கை யோடும் 
வானவர் தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின் 
                              நேர் வடபால் வைகை 
ஆன நதித் தென்பால் ஓர் ஆலம் கண்டு அங்கண் இனிது 
                              அமர்ந்தான் மன்னோ. 	

2622.	சங்கவான் தமிழ்த் தெய்வப் புலவரோடும் உடன் எழுந்து 
                              சைல வேந்தன் 
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ் 
                              வழி நாள் வைகல் 
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர் 
                              காலாத்து எய்தி 
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு 
                              அங்குக் காணார். 	

2623.	என்ன அதிசயமோ ஈது என்று அயிர்த்தார் இரங்கினார் 
                                  இதனை ஓடி 
மன்னவனுக்கு அறிவிப்பான் வேண்டும் எனப் புறப்பட்டு 
                                  வருவார் ஆவி 
அன்னவரைப் பிரிந்து உறையும் அணங்கு அனையார் 
                        எனவும் மலர் அணங்கு நீத்த 
பொன் அவிர் தாமரை எனவும் புலம்பு அடைந்து பொலிவு 
                        அழிந்த புரமும் கண்டார். 	

2624.	அரசன் இடை புகுந்து உள்ளம் நடு நடுங்கி நா உணங்கி 
                             அரசே யாம் ஒன்று 
உரை செய அஞ்சுதும் உங்கள் நாயகனைத் திருப்பள்ளி 
                             உணர்ச்சி நோக்கி 
மரை மலர் சேவடி பணியப் புகுந்தனம் இன்று ஆங்கு 
                       அவன் தன் வடிவம் காணேம் 
புரமும் நனி புலம் படைந்தது என்று அழல் வேல் எனச் 
                             செவியில் புகுதலோடும். 	

2625.	வழுதி அரியணையிலிருந்து அடி இற வீழ் பழுமரம் போல் 
                               மண்மேல் யாக்கை 
பழுது உற வீழ்ந்து உயிர் ஒடுங்க அறிவு ஓடுங்கி மண் 
                   பாவை படிந்து ஆங்கு ஒல்லைப் 
பொழு கிடந்து அறிவு சிறிது இயங்க எழுந்து அஞ்சலிக் 
                               கைப் போது கூப்பி 
அழுது இரு கண்ணீர் வெள்ளத்து ஆழ்ந்து அடியேன் என் 
                   பிழைத்தேன் அண்ணா அண்ணால். 	

2626.	கொலையினை ஓர் அவுணர் புரம் நோடி வரையில் 
                         பொடியாகக் குனித்த மேருச் 
சிலையினையோ பழைய சிவ புரத்தினையோ அருவி மணி 
                             தெறிக்கும் வெள்ளி 
மலையினையோ தம்மை மறந்து உனை நினைப்பார் 
                   மனத்தினையோ வாழ்த்தும் வேதத் 
தலையினையோ எங்கு உற்றாய் எங்கு உற்றாய் என்று 
                             என்று தளரும் எல்லை. 	

2627.	சிலர் வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் வைகைத் 
                                     தென் சாராக 
அலர் வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு காலமும் 
                           கண்டது அன்று கேள்வித் 
தலை வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே 
                                     செம்பொன் 
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை 
                           கின்றான் மாதோ என்றார். 	

2628.	அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப எழுந்து 
                           அரசன் அச்சத்து ஆழ்ந்து 
தெவ்வர் முடித் தொகை இடறும் கழல் காலான் அடந்து 
                           ஏகிச் செழுநீர் வைகை 
கௌவை நெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப 
                      பணியத் தென் கரைமேல் வந்து 
மௌவல் இள முகை மூரல் மாதி னொடும் இருக்கின்ற 
                           மணியைக் கண்டான். 	

2629.	படர்ந்து பணிந்து அன்பு உகுக்கும் கண்ணீர் சோர்ந்து 
                     ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து 
கிடந்து எழுந்து நாக்குழறித் தடுமாறி நின்று இதனைக் 
                              கிளக்கும் வேதம் 
தொடர்ந்து அறியா அடி சிவப்ப நகர்ப் புலம்ப உலகு 
                     ஈன்ற தோகை யோடு இங்கு 
அடைந்து அருளும் காரணம் என் அடியேனால் பிழை 
                              உளதோ ஐயா ஐயா. 	

2630.	அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால் 
                             அரிய கானத்து 
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் 
                             நாட்டில் எய்திற்றலோ 
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் 
                             தருமம் சுருங்கிற்றாலோ 
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் 
                             எந்தாய் எந்தாய். 	

2631.	கள் ஏறு கடுக்கை நறும் சடையானே போற்றி பெரும் 
                                  கருணை போற்றி 
வெள்ஏறு கொடி உயர்த்த விடையானே போற்றி அருள் 
                                  விகிர்தா போற்றி 
புள் ஏறு கொடி உயர்த்த புனிதன் அயன் அன்று தேறாத 
                                  புனிதா போற்றி 
வள் ஏறு சிறு குழவி மதி நுதல் அம் கயல் கண்ணி 
                                  மணாள போற்றி. 	

2632.	பாத மலர் இணை போற்றி பன்னிரண்டு கையானைப் 
                                 பயந்தாய் போற்றி 
வேத முடி கடந்த பர ஞானத்தில் ஆனந்த விளைவே 
                                    போற்றி 
போத வடிவாய் நால்வர்க்கு அசைவிறந்து நிறைந்த பரம் 
                                 பொருளே போற்றி 
மாதவள நீறு அணிந்த மன்னா அம் கயல் கண்ணி 
                                 மணாள போற்றி. 	
2633.	பொக்கம் உடையார் செய்யும் பூசை தவம் கண்டு நகும் 
                               புராண போற்றி 
தக்கன் மகம் பொடி ஆகத் திருப் புருவம் நெரித்த 
                         கொடும் தழலே போற்றி 
செக்கமலக் கண்ணிடந்த கண்ணனுக்குத் திகிரி அருள் 
                               செல்வா போற்றி 
மைக் குவளை அனைய மணிகண்ட அம் கயல் கண்ணி 
                               மணாள போற்றி. 	

2634.	தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் 
                                       கூடல் 
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட 
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று 
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் 
                                    செய்வான். 	

2635.	இயம்ப அரும் பதிகள் தம்முள் ஆலவாய் ஏற்றம் ஈங்குச் 
சயம்புவாய் அனந்தம் உள்ள தானவர் இயக்கர் சித்தர் 
வயம் புரி அரக்கர் வானோர் முனிவரர் மனிதர் உள்ளார் 
நயம் பெற விதியால் கண்ட நம் குறி அனந்தம் உண்டு 
                                       ஆல். 	

2636.	அக் குறிகளின் மேம் பட்ட குறி அறுபத்து நான்காம் 
இக் குறிகளின் மேம் பட்ட குறிகள் எட்டு இனைய எட்டுத் 
திக்கு உறை வானோர் பூசை செய்தன அவற்றில் யாம் 
                                     வந்து 
புக்கு உறை குறி நம் தோழன் பூசித்த குறிய தாகும். 	


2637.	அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் 
                                    காலத்து 
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச் 
சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம். 	

2638.	ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ 
                                    தேனும் 
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு 
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே 
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் 
                              வந்தேம் என்னா. 	

2639.	பெண்நினைப் பாகம் கொண்ட பெரும் தகைப் பரம யோகி 
விண் இடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர் 
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ 
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான்இறைஞ்சி 
                                      னானே. 	

2640.	அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு 
                                      மின்னுக் 
கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும் 
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான் 
வட திரு ஆல வாயில் வந்து வீற்று இருந்த வள்ளல். 	

2641.	மின் மதிச் சடையினான்பின் அடைந்து போய் விடை 
                                    கொண்டு ஏகும் 
மன்னவன் தன்னைப் பாடி வந்தவன் தன்னை மாட்சித் 
தன்மை சால் சங்க வாணர் தம் மொடும் கொடுபோய் 
                                    என்றும் 
பொன்மகள் காணி கொண்ட புரிசை சூழ் கோயில் புக்கான். 	
2642.	விதி முறை கதலி பூகம் கவரி வால் விதானம் தீபம் 
புதிய தார் நிறை நீர்க் கும்பம் கதலிகை புனைந்த மன்றல் 
கதிர்மணி மாடத் தம் பொன் சேக்கை மேல் கற்றோர் சூழ 
மதி புனை காடன் தன்னை மங்கல அணி செய்து ஏற்றி. 	

2643.	சிங்கமான் சுமந்த பொன் அம் சேக்கை மேல் இருந்து 
                                    வெள்ளைக் 
கொங்கு அவிழ் தாமம் தூசு குளிர் மணி ஆரம் தாங்கி 
மங்கல முழவம் ஆர்ப்ப மறையவர் ஆக்கம் கூற 
நங்கையர் பல்லாண்டு ஏத்த நல் மொழிப் பனுவல் கேட்டு. 	

2644.	அறிவுடைக் காடனுக்கும் அருமை மாண் புலமை 
                                    யோர்க்கும் 
முறைமையால் ஆரம் தூசு முகிழ் முலைக் கொடியின் 
                                    அன்னார் 
நிறை நிதி வேழம் பாய்மான் விளை நிலம் நிரம்ப நல்கி 
அறை கழல் காலில் பின்னே ஏழடி நடந்து இதனை 
                                    வேண்டும். 

2645.	புண்ணியப் புலவீர் யான் இப்போது இடைக் காடனார்க்குப் 
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க என பரவித் 
                                     தாழ்ந்தான் 
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் 
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா. 	

2646.	இன்னமும் ஆலவாய் எம் இறைவன் கருணை நோக்கால் 
பன்னரும் புகழ்மை குன்றாப் பாக்கியம் உனக்கு உண்டாக 
என்ன நல் வாக்கம் கூறி ஏகினார் ஆக அந்தத் 
தென்னவன் குலேசன் செய்த தவம் உருத் திரிந்தால் 
                                      என்ன. 	

2647.	எரி மருத்து அவனி முன்னா எண் வகை மூர்த்தி அன்பு 
புரி மருத்துவனைச் சூழ்ந்த பொரு பழி துடைத்தோன் 
                                      சோதி 
விரிமருத்து உடல் வான் திங்கள் மிலைந்தவன் அருளின் 
                                      வந்தான் 
அரி மருத்தனன் ஆம் தென்னன் அரிக் குருளை 
                                      அன்னான். 	

2648.	பரிசிலைப் புலவருக்கு அருள் குலேசன் பல பகல் கழீஇத் 
திரி மருப்பு இரலை வெம் மழு எடுத்தவன் மதிச் 
                                 சென்னிமேல் 
வரிசிலைப் படை பொறித்தவன் எனப் பெறு வர 
                                 மைந்தனாம் 
அரி மருத் தனன் இடத்து அவனி வைத்து அரன் அடி 
                                 எய்தினான். 	
இடைக் காடன் பிணக்குத் தீர்த்த படலம் சுபம்


57. வலை வீசின படலம்

2649.	மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின் 
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த 
                                      வண்ணம் 
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் 
                                      சொல்வாம். 	

2650.	அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல 
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம் 
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு 
                                    இடத்து வைகி 
மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் 
                                    மாதோ. 	

2651.	நாதனின் அருளால் கூறு நான் மறைப் பொருளை எல்லாம் 
யாது காரணத்தான் மன்னோ அறிகிலை எம் பிராட்டி 
ஆதரம் அடைந்தாள் போலக் கவலையும் சிறிது தோன்ற 
ஆதரம் இலள் ஆய்க் கேட்டாள் அ•து அறிந்த அமலச் 
                                          சோதி. 	

2652.	அரா முகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி 
                                       ஏனை 
இரா முகம் அனைய உள்ளத்து ஏழைமார் போல எம்பால் 
பரா முகை ஆகி வேதப் பயன் ஒருப் படாது கேட்டாய் 
குரா முகை அவிழ்ந்த கோதாய் உற்ற இக்குற்றம் தன்னால். 	

2653.	விரதமும் அறனும் இன்றி மீன் படுத்து இழிஞர் ஆன 
பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்தலோடும் 
அரதன ஆரம்தாழ்ந்த வார மென் முலையாள் அஞ்சி 
வரத நிற் பிரிந்து வாழ வல்லனோ என்று தாழ்ந்தாள்.	

2654.	வீங்கு நீர்ச் சடையான் நீங்கு மெல்லியல் பரிவு நோக்கி 
வாங்கு நீர்க் கானல் வாழ்க்கை வலைஞர் கோன் மகளாய் 
                                         வைகி 
ஆங்கு நீர் வளர் நாள் யாம் போந்து அரும் கதி 
                                 முடித்தும் என்னாத் 
தேங்கு நீர் அமுது அன்னாளைச் செல விடுத்து இருந்தான் 
                                         இப்பால். 	

2655.	அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை 
முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி 
                                        எல்லாம் 
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் 
                                        எல்லாம் 
தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல். 	

2656.	வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில் 
உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே 
திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல் 
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா. 	

2657.	அடுத்து நாம் இருக்கும் செவ்வி அறிந்திடாது இவரை 
                                    வாயில் 
விடுத்து நீ இருந்தாய் தீங்கு விளைந்தது உன் தனக்கும் 
                                    இந்தத் 
தொடுத்த தீங்கு ஒழிய இன்று ஓர் சுற உரு ஆகி 
                                    வையம் 
உடுத்த காரோத நீர் புக்கு உழல்க எனப் பணித்தான் 
                                   மன்னோ. 	

2658.	வெரு வரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப் 
பெருவலி தன்னைச் சாரும் பெற்றியால் சாபம் கூறான் 
அருவரை நெஞ்சு போழ்ந்த வள் இலை வடிவேல் செம் 
                                        கை 
முருகனை வணிகர் தம்மின் மூங்கை யாகு என்றன் 
                                     இப்பால். 	

2659.	நாயகன் ஏவலாலே நாயகி வலைஞர் மாதர் 
ஆயது நந்திப் புத்தேள் அடுசுற ஆகி முந்நீர் 
மேயதும் கருணை வள்ளல் மீன் படுத்து அணங்கை 
                                   வேட்டுப் 
போயதும் அவட்குக் கேள்வி புகன்றது முறையில் 
                                   சொல்வாம். 	

2660.	சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள் 
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர் 
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த 
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.	

2661.	முடங்கு முள் இலையார் புதைந்து எதிர் எதிர் மொய்த்து 
நுடங்கு கைதை போதொடு வளி நூக்க நின்று அசைவ 
மடங்கு மெய்யராய்க் கையிரும் கேட்க வட்டத்து 
அடங்கி வாள் பனித்து ஆடம் அரற்றுவார் அனைய. 	

2662.	புலவு மீன் உணக்கு ஓசையும் புட்கள் ஓப்பு இசையும் 
விலை பகர்ந்திடும் அமலையும் மீன் கொள் கம்பலையும் 
வலை எறிந்திடும் அரவமும் வாங்கும் மா அரவமும் 
அலை எறிந்திடும் பரவை வாய் அடைப்பன மாதோ. 	

2663.	வாட்டு நுண் இடை நுளைச்சியர் வண்டல் அம் பாவைக் 
கூட்டுகின்ற சோறு அருகு இருந்து உடைந்த பூம் கைதை 
பூட்டுகின்றன நித்திலம் பொரு கடல் தரங்கம் 
சூட்டுகின்றன கடிமலர் சூழல் சூழ் ஞாழல். 	
2664.	நிறைந்த தெண் கடல் ஆதி நீள் நெறி இடைச் 
                                   செல்வோர்க்கு 
அறம் தெரிந்த போல் பொதிந்த சோறு அவிழ்ப்பன தாழை 
சிறந்த முத்தொடு பசும் பொனும் பவளமும் திரட்டிப் 
புறம் தெரிந்திடக் கொடுப்பன மலர்ந்த பூம் புன்னை. 	

2665.	கொன்று மீன் பகர் பரதவர் குரம்பைகள் தோறும் 
சென்று தாவி மேல் படர்வன திரை படு பவளம் 
மன்றல் வார் குழல் நுளைச்சியர் மனையின் மீன் 
                                உணக்கும் 
முன்றில் சீப்பன கடல் இடு முழு மணிக் குப்பை. 	

2666.	கூற்றம் போன்ற கண் நுளைச்சியர் குமுத வாய் திறந்து 
மாற்றம் போக்கினர் பகர் தரும் கயற்கு நேர் மாறாம் 
தோற்றம் போக்கு அவர் விழித் துணைகள் அக் கயல்மீன் 
நாற்றம் போக்குவது அவர் குழல் நறு மலர்க் கைதை. 	

2667.	அலர்ந்த வெண் திரைக் கருங் கழிக் கிடங்கரின் அரும்பர் 
குலைந்து அழிந்து தேன் துளும்பிய குமுதமே அல்ல 
கலந்து அரும் கடல் எறி கருங்கால் பனம் கள்வாய் 
மலர்ந்து அருந்திய குமுதம் மொய்ப்பன வண்டு. 	

2668.	ஆய பட்டினத்து ஒருவன் மேல் ஆற்றிய தவத்தால் 
தூய வானவர் தம்மினும் தூயனாய்ச் சிறிது 
தீய தீவினைச் செய்தியால் ஆற்றி திண் திமில் வாணர் 
மேய சாதியில் பிறந்துளான் மேம்படும் அனையான்.

2669.	செடிய கார் உடல் பரதவர் திண் திமில் நடத்தா 
நெடிய ஆழியில் படுத்த மீன் திறை கொடு நிறைக்கும் 
கடிய வாயிலோன் அவர்க்கு எலாம் காவலோன் ஏற்றுக் 
கொடிய வானவன் அடிக்கு மெய் அன்பு சால் 
                                  குணத்தோன். 	

2670.	மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப் 
புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது 
தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான் 
அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார். 

2671.	தக்க மேரு மலைமகனோடு அடையில் தவத்தான் 
மிக்க மீனவன் வேள்வியில் விரும்பிய மகவாய்ப் 
புக்க நாயகி தன்பதி ஆணையால் புலவு 
தொக்க மீன் விலை வலைஞன் மேல் தவப் பயன் துரப்ப. 	

2672.	இச்சையால் அவன் அன்பினுக்கு இரங்குவாள் போலச் 
செச்சை வாய் திறந்து அழுது ஒரு திரு மகவு ஆகி 
நெய்ச்ச பாசிலைப் புன்னை நல் நீழலில் கிடந்தாள் 
மைச்ச கார் உடல் கொடும் தொழில் வலைஞர் கோன் 
                                     கண்டான். 	

2673.	கார் கொல் நீர்த் திருமாது கொல் கரந்து நீர் உறையும் 
வார் கொள் பூண் முலை மடந்தை கொல் வனத் துறை 
                                    வாழ்க்கைத் 
தார் கொள் பூம் குழல் அணங்கு கொல் தடங்கணும் 
                                      இமைப்ப 
ஆர் கொலோ மகவு ஆகி ஈண்டு இருந்தனள் என்னா. 	

2674.	பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் 
                                       கூடல் 
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள் 
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித் 
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான். 	

2675.	பிறவி அந்தகன் தெரிந்து கண் பெற்றெனக் கழிந்த 
வறியன் நீள் நிதி பெற்றென வாங்கினாள் வலைஞர் 
எறியும் வேலையின் ஆர்த்தனர் கை எறிந்து இரட்டிக் 
குறிய வாள் நகை வலைச்சியர் குழறினார் குரவை.	

2676.	பிழை இல் கற்பு உடை மனைவியும் பெறாது பெற்று எடுத்த 
குழவியைத்தடம் கொங்கையும் கண்களும் குளிரத் 
தழுவி முத்தம் இட்டு உச்சி மோந்து அன்பு உளம் ததும்ப 
அழகிது ஆகிய மணி விளக்காம் என வளர்ப்பாள். 	

2677.	புலவு மீன் விலைப் பசும் பொனால் செய்த பல் பூணும் 
இலகு ஆரமும் பாசியும் காசி இடை இட்டுக் 
குலவு கோவையும் சங்கமும் குலத்தினுக்கு இசைய 
அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள். 	

2678.	தொண்டை வாய் வலைச் சிறுமியர் தொகையொடும் துறை 
                                        போய் 
வண்டல் ஆடியும் நித்தில மாமணி கொழித்தும் 
கண்டன் ஞாழல் சூழ் கானல் அம் கடி மலர் கொய்தும் 
கொண்டல் ஓதி பின் தாழ்தரக் குரை கடல் குளித்தும். 	

2679.	தளர்ந்த பைங்கொடி மருங்குலும் தன் உயிர்த் தலைவன் 
அளந்த வைகலும் குறை பட அவனிடத்து ஆர்வம் 
கிளர்ந்த அன்பு ஒண் கொங்கையும் கிளர நாள் சிறிதில் 
வளர்ந்து வைகினாள் வைகளும் உயிர் எலாம் வளர்ப்பாள். 	

2680.	ஆலவாய் உடை நாயகன் ஏவிய வாறே 
மாலை தாழ் இள மதிச் சடை மகுடமும் கரங்கள் 
நாலும் ஆகிய வடிவு உடை நந்தியும் சுறவக் 
கோலம் ஆகி வெண் திரைக் கடல் குளித்து இருந்தான். 	

2681.	குன்று எறிந்த வேல் குழகனும் கரி முகக் கோவும் 
அன்று எறிந்த தந்திரம் எலாம் சிரமிசை அடக்காக் 
கன்று எறிந்தவன் அறிவரும் கழல் மனத்து அடக்கா 
நின்று எறிந்த கல் மத்து என உழக்கிடா நிற்கும்.	

2682.	கிட்டும் தோணியைப் படகினைக் கிழிபட விசை போய்த் 
தட்டும் சோங்கினை மேலிடு சரக் கொடும் கவிழ 
முட்டும் சீறி மேல் வரும் பல சுற வெலாம் முடுக்கி 
வெட்டும் கோடு கோத்து ஏனைய மீன் எலாம் வீசும். 	

2683.	தரங்க வாரி நீர் கலக்கலால் தந்திரம் கொடு மேல் 
இரங்குவான் புலவோர்க்கு அமுது ஈகையால் எண்ணார் 
புரங்கண் மூன்றையும் பொடித்தவன் ஆணையால் புனலில் 
கரங்கள் நான்கையும் கரந்த மீன் மந்தரம் கடுக்கும். 	

2684.	தள்ளு நீர்த்திரை போய் நுளைச் சேரிகள் சாய்ப்பத் 
துள்ளு நீர் குடித்து எழு மழை சூல் இறப் பாயும் 
முள்ளு நீர் மருப்பு உடைய மீன் மொய் கலம் அந்தத் 
தௌ¢ளு நீர்த் துறை நடையற இன்னணம் திரியும்.	

2685.	எற்றித்தால் எனத் துறை மகன் யாம் இது பிடிக்கும் 
பெற்றி யாது எனக் கிளையொடும் பெருவலைப் பாசம் 
பற்றி ஆழி ஊர் படகு கைத் தெறிந்தனன் படகைச் 
சுற்றி வாய் கிழித்து எயிற்று இறப் பாய்ந்தது சுறவம்.	

2686.	பட உடைப்ப ஓர் தோணி மேல் பாய்ந்து அத் தோணி 
விடவுறத் தெறித்து எறிந்திட விசைத்து ஒரு சோங்கின் 
இடை புகுந்து நீள் வலை எறிந்து இங்ஙனம் வெவ்வேறு 
உடல் புகுந்து உழல் உயிர் எனப் பரதனும் உழல்வான்.	

2687.	முன்னர் வீசினால் பின்னுற முளைத்து எழும் முயன்று 
பின்னர் வீசினால் முன்னுற பெயர்த்து எழும் வலத்தில் 
உன்னி வீசினால் இடம் பட உருத்து எழும் இடத்தின் 
மன்னி வீசினால் வலத்து எழும் மகர வேறது தான்.	

2688.	எறி வலைப் படு அகம் மலர்ந்து ஈர்ப்பவன் உள்ளம் 
மறு தலைப் பட வலையினும் வழீஇப் பொருள் ஆசை 
நெறி மலர்க் குழல் நல்லவர் நினை வென நினைவுற்று 
அறிபவர்க்கு அறிதாம் பரம் பொருள் என அகலும்.	

2689.	ஏவலாளரோடு இன்னவாறு இன்ன மீன் படுத்தற்கு 
ஆவதாம் தொழில் இயற்றவும் அகப் படாது ஆக 
யாவரே இது படுப்பவர் என்று இரும் கானல் 
காவலாளனும் பரதரும் கலங்கஞர் உழந்தார்.	

2690.	சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் இச் சலதித் 
துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரும் சுறவை 
இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற 
மங்கை மங்கலக் கிழான் என மனம் வலித்து இருந்தான். 	

2691.	நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து 
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத் 
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து 
உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.	

2692.	உயர்ந்த சாதியும் தம்மினும் இழிந்த என்று உன்னிக் 
கயந்த நெஞ்சுடை வலைக்குலக் கன்னியை வேட்பான் 
வியந்து கேட்பது எவ்வாறு அவர் வெறுக்குமுன் அவருக்கு 
இயைந்த மீன் வலை உரு எடுத்து ஏகுதும் என்னா. 	

2693.	கருகிருள் முகந்தால் அன்ன கச்சினன் கச்சோடு ஆர்த்த 
சுரிகையன் தோள்மேல் இட்ட துகிலின் குஞ்சி சூட்டும் 
முருகு கொப்பளிக்கும் நெய்தல் கண்ணியன் மூத்த 
                                     வானோர் 
இருவரும் மறையும் தேடி இளைப்ப ஓர் வலைஞன் 
                                     ஆனான். 	

2694.	முழுது உலகு ஈன்ற சேல் கண் முதல்வியை அருள் இலார் 
                                          போல் 
இழி தொழில் வலை மாதாகச் சபித்தவாறு என்னே என்றும் 
பழி படு சாபம் ஏறார் பரதராய் வரவும் வேண்டிற்று 
அழகிது நன்று நன்று எம் ஆலவாய் அடிகள் செய்கை. 	

2695.	தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி 
                                       வாணன் 
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு 
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப் 
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான். 	

2696.	கழித்தலைக் கண்டற் காடும் கைதை அம் கானும் நெய்தல் 
சுழித்தலைக் கிடங்கும் நீத்துச் சு•றெனும் தோட்டுப் 
                                    பெண்ணை 
வழித்தலை சுமந்து வார் கள் வார்ப்ப வாய் அங்காந்து 
                                    ஆம்பல் 
குழித்தலை மலர் பூம் கானல் கொடு வலைச் சேரி 
                                    சேர்ந்தான். 	

2697.	பெருந்தகை அமுது அன்னாளைப் பெறாது பெற்று 
                              எடுப்பான் நோற்ற 
அருந்தவ வலைஞர் வேந்தன் அதிசயம் அகத்துள் தோன்ற 
வரும்தகை உடைய காளை வலை மகன் வரவு நோக்கித் 
திருந்து அழகு உடைய நம்பி யாரை நீ செப்புக என்றான். 	

2698.	சந்த நால் மறைகள் தேறாத் தனி ஒரு வடிவாய்த் தோன்றி 
வந்த மீன் கொலைஞன் கூறு மதுரையில் வலைஞர்க்கு 
                                        எல்லாம் 
தந்தை போல் சிறந்து உளான் ஓர் தனி வலை உழவன் 
                                        நல்ல 
மைந்தன் யான் படைத்து காத்துத் துடைக்கவும் வல்லன் 
                                        ஆவேன். 	

2699.	அல்லது வான் மீன் எல்லாம் அகப்பட வலை கொண்டு 
                                         ஓச்ச 
வல்லவன் ஆவேன் என்ன மற்று இவன் வலைஞன் 
                                       கோலம் 
புல்லிய மகன் கொல் முன்னம் புகன்ற சொல் ஒன்றில் 
                                       இப்போது 
சொல்லியது ஒன்று இரண்டும் சோதனை காண்டும் என்னா. 	

2700.	தொண்டு உறை மனத்துக் கானல் துறைமுகம் அ•தேல் 
                                       இந்தத் 
தண் துறை இடத்து ஓர் வன்மீன் தழல் எனக் கரந்து 
                                       சீற்றம் 
கொண்டு உறைகின்ற ஐய குறித்தது பிடித்தியேல் என் 
வண்டு உறை கோதை மாதை மணம் செய்து தருவேன் 
                                       என்றான். 	

2701.	சிங்க ஏறு அனையான் காலில் செல் நடைப் படகில் 
                                         பாய்ந்து 
சங்கு எறி தரங்கம் தட்பத் தடம் கடல் கிழித்துப் போகிக் 
கிங்கரன் ஆன காளை வரை எனக் கிளைத்த தோள் மேல் 
தொங்கலில் கிடந்து ஞான்ற தொகு மணி வலையை வாங்கி. 	

2702.	செவ்விதின் நோக்கி ஆகம் திருக நின்று எறிந்தான் பக்கம் 
கௌவிய மணிவில் வீச இசை ஒலி கறாங்கிப் பாயப் 
பை விரித்து உயிர்த்து நாகம் விழுங்க வாய்ப் பட்ட மீன் 
                                        போல் 
வெவ் வினைச் சுறவேறு ஐயன் விடு வலைப் பட்டது 
                                        அன்றே. 	

2703.	மாசு அறு கேளிர் அன்பின் வலைப் படும் வலைஞர் 
                                  கோன் தாய் 
வீசிய வலையில் பட்ட மீனினைச் சுருக்கி வாங்கிக் 
காசு எறி தரங்க முந்நீர்க் கரை இடை இட்டான் கள் 
                                  வாய் 
முசு தேன் என்ன ஆர்த்து மொய்த்தன் பரதச் சாதி. 	

2704.	கிளையும் நம் கோனும் வீசு வலைஞராய்க் கிளர் தோள் 
                                       ஆற்றல் 
விளைவொடு முயன்று பல் நாள் வினை செயப் படாத 
                                       மீன் இவ் 
இளையவன் ஒருவன் தானே ஒரு விசை எறிந்தான் 
                                       ஈத்தான் 
அளிய நம் குலத்தோர் தெய்வ மகன் இவன் ஆகும் 
                                       என்றார். 	

2705.	கைதை சூழ் துறைவன் ஓகை கை மிகப் பம்பை ஏங்க 
நொய்து எனும் நுசுப்பில் கள்வாய் நுளைச்சியர் குரவை 
                                        தூங்கப் 
பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவன் கலங்கன் ஞாழல் 
செய்த பூம் கோதை மாதைத் திருமணம் புணர்த்தினானே. 

2706.	அந்நிலை வதுவைக் கோலம் ஆயின மருகனாரும் 
மின் நிலை வேல் கணாளும் விண் இடை விடை மேல் 
                                       கொண்டு 
தன் நிலை வடிவாய்த் தோன்றத் தடம் கரை மீனம் தானும் 
நல்நிலை வடிவே போன்று நந்தியாய் முந்தித் தோன்ற. 	

2707.	கொற்ற வெள் விடை மேல் காட்சி கொடுத்தவர் கருணை 
                                       நாட்டம் 
பெற்றலின் மேலைச் சார்பால் பிணித்த இப் பிறவி 
                                       யாக்கைச் 
சிற்றறிவு ஒழிந்து முந்நீர்ச் சேர்ப்பன் நல் அறிவு தோன்றப் 
பொன் தனு மேரு வீரன் பூம் கழல் அடிக்கீழ்த் தாழ்ந்தான். 	

2708.	இரக்கம் இல் இழிந்த யாக்கை எடுத்து உழல் ஏழை 
                                        ஏனைப் 
புரக்க இன்று என்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி 
அறக்கு எறி பவளச் செவ்வாய் அணங்கினை மணந்து என் 
                                        பாசம் 
கரக்க வெள் விடை மேல் நின்ற கருணையே போற்றி 
                                        என்றான். 	

2709.	அகவிலான் பரவி நின்ற அன்பனை நோக்கிப் பல் நாள் 
மகவு இலா வருத்தம் நோக்கி உமை நாம் மகளாத் தந்து 
தகவினான் மணந்தேம் நீ இத் தரணியில் தனதன் என்ன 
நகவிலாப் போகம் மூழ்கி நம் உலகு அடைவாய் என்ன. 	

2710.	பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப்பற்கு 
                                      அன்று 
தண் அளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேல் தோன்றி 
விண் இடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா 
                                      னோடும் 
உள் நிறை அன்பரோடு உத்தர கோச மங்கை. 	

2711.	அங்கு இருந்த அநாதி மூர்த்தி ஆதி நால் மறைகள் 
                                    ஏத்தும் 
கொங்கு இரும் கமலச் செவ்விக் குரை கழல் வணங்கிக் 
                                    கேட்பப் 
பங்கு இருந்து அவட்கு வேதப் பயன் எலாம் திரட்டி 
                                    முந்நீர்ப் 
பொங்கு இரும் சுதை போல் அட்டிப் புகட்டினான் 
                                    செவிகள் ஆர. 	

2712.	அவ்வேலை அன்புடையார் அறு பதினாயிரவர் 
                          அவர்க்கும் அளித்துப் பாச 
வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி 
மைவ் வேலை அனைய விழி அம் கயல் கண் 
                      நங்கையொடு மதுரை சார்ந்தான் 
இவ் வேலை நிலம் புரக்க முடி கவித்துப் பாண்டியன் 
                           என்று இருந்த மூர்த்தி. 	
 வலை வீசின படலம் சுபம்  

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Thiruvilaiyatar puranam

திருவிளையாடற் புராணம்

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Discovery of the god to mortals

தல புராணங்கள்